ஸ்ரீ அருளிச் செயல்களில்-தாமரை-பத பிரயோகங்களும் வியாக்யான ஸ்ரீ ஸூக்திகளும்–

(கூரத்தாழ்வான் தாமும் வரதராஜஸ்தவத்தில் “அப்ஜபாணிபதம் அம்புஜநேத்ரம்“ என்றும்
ஸுந்தரபாஹுஸ்தவத்தில் “அப்ஜபாத மரவிந்தலோசநம் பத்மபாணிதலம்“ என்றும் இங்ஙனே பேசி யநுபவிக்கிறார்.
பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் “கமலபதகராக்ஷம்“ என்று சேரப் பேசியநுபவித்ததுமுண்டு.
உபமாந வ்யக்தி ஒன்றேயா யிருக்கச்செய்தேயும் தத்பர்யாயமான பல சொற்களையிட்டு
(தாமரை, கமலம், அரவிந்தம் என்றாற்போல)ச் சொல்லுதல்-வாக்ய பேதம் பண்ணுதலும்-அநுஸந்தாக போக்யதா ப்ரகர்ஷ ஸூசகமத்தனை.)

ஆக –
ஒருவாறு ஒப்புமை சொல்லவும்
படைத்ததை காட்டவும்
பெருமை சொல்லவும்
புண்டரீகனே -அவனை நேராகச் சொல்லவும்
அரவிந்தப்பாவை -அவளை நேராகச் சொல்லவும்
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்து -என்று அநந்யார்ஹத்வம் சொல்லவும்
எளிதில் குனிந்து பறித்து அர்ச்சிக்கும் படி அன்றோ தாமரை -ஸுலப்யம் காட்டவும்
பொற்றாமரைக் கயம் நீராடப் போவோம்

முற்றாரா வன முலையாள் பாவை மாயன் மொய்யகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள் தன் நிறைவு இழந்தாள் ஆவிக்கின்றாள் அணி யரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும்
பெற்றேன் வாய் சொல் இறையும் பேசக் கேளாள் பேர் பாடித் தண் குடந்தை நகரும் பாடிப்
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் பொருவற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே -19-பொற்றாமரைக் கயம் என்கிற விசேஷணங்களால் அனுபாவ்ய விஷய ஸ்வபாவத்தை சொல்லுகிறது –மகள் -அணி அரங்கம் ஆடுதுமோ -என்று ஊரைச் சொன்னாள் – தான் –பொற்றாமரைக் கயம் -என்று பெரிய பெருமாளை சொல்லுகிறாள் –தயரதன் பெற்ற மரகத மணித்தடம் -என்றும்-வாசத் தடம் போலே வருவானே -என்றும் தடாகமாக சொல்லக் கடவது இறே –பொற்றாமரைக்கயம் நீராடப்போனாள் =
கீழே திருக்குடந்தை ப்ரஸ்துதமாகையாலே அத்தலத்தில் புண்ணிய தீர்த்தமாக வழங்கி வருகின்ற பொற்றாமரை என்னும் புஷ்கரிணியிலே நீராடப்போனாள் என்று பொருள் கொள்ளப் பொருந்துமாயினும் எம்பெருமான் றன்னையே பொற்றாமரைக் கயமாகப் பேசுகிறாரென்றலும் பொருந்தும். தமிழர், ஸம்ச்லேஷத்தைச் சுனையாடலென்றும் நீராட்டமென்றும் சொல்லுவார்கள்.
எம்பெருமானோடு கலவி செய்ய விரும்புவதையே இங்குப் பொற்றாமரைக் கயம் நீராடப்போவதாகச் சொல்லிற்றென்க.

தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் எம் காலைக் கதுவ
விடத்தேள் எறிந்தாலே போலே வேதனை யாற்றவும் பட்டோம்
குடத்தை எடுத்து ஏறவிட்டுக் கூத்தாட வல்ல வெங்கோவே
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்து அருளாயே-–3-6-(529)-பொய்கையில் உண்டான ஜலசர சத்வங்கள் பாதகம் ஆகா நின்றது என்றால் –துணுக்  என்னுமோ பாதி –-தாமரைப் பொய்கையிலே தண்டுகளும் பாதகமாகா நின்றது கிடாய் என்றால்-கூடுமோ என்று பார்த்து அத்தை ஸ்மரிக்கிறார்கள்-பொய்கையில் தாமரைத் தண்டுகள் எங்களை நலியா நின்றது என்ன —ஆகில் கரையிலே போந்து ஏறும் கோள்-என்றான்-கரையிலேயோ தான் தாமரை இன்றிக்கே இருக்கிறது –செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செங்கனி வாய் அக்கமலத்து இலை போலும் திருமேனி யடிகளுக்கே -திருவாய்மொழி -9-7-3–தடம் –கரை -பரப்பு /பெருமை -பெரிய பொய்கை -இறே
கண்ணா கண் கை கால் தூய செய்ய மலர்களாய்ச் சோதிச் செவ்வாய் முகிழதா சாயல் சாமத் திரு மேனி தண் பாசடையா- தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே -திருவாய்மொழி -8-5-1— தாமரைத் தடாகம் போல் இருப்பவன் அன்றோ அவன் –கீழே இந்த தாமரைப் பொய்கை துன்புறுத்த மேலே அந்த தாமரைப் பொய்கை துன்புறுத்துகிறதே –

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –3-1-2-(1149)-சொல்லில் -கட்டுரை என்று முழுச் சொல்லாய் -சொல்லில் என்றபடி -நெஞ்சாலும் பரிச்சேதிக்க ஒண்ணாதாய் இருக்க பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது-தாமரை –தாமரை ஜாதியாக ஓர் அவயவத்துக்காக ஒப்பாக மாட்டாது என்கை –
நின் கண் பாதம் கை யொவ்வா-முதல் உறவு பண்ணும் கண் -அதுக்கு தோற்று ஜிதந்தே என்று விழும் திருவடிகள் -அவ் விழுக் காட்டுக்கு தோற்று அவன் தான் ஜிதந்தே என்று அணைக்கும் கை
நின் கண் -என்கையாலே –உனது முகச் சோதி -என்றத்தை நினைக்கிறது –-பாதம் -என்றது அடிச் சோதி என்றத்தை நினைக்கிறது-கை -என்று நடுவு தாம் அனுபவித்த அழகுக்கு உப லக்ஷணம்-சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது-பொன்னை உபமானமாக போராது என்கைக்காக சிக்ஷிக்கிறார் -காய்ச்சி உரைத்த வி லக்ஷணமான நன் பொன்-ருக்மஅபாம் -என்னக் கடவது இறே
உன் திருமேனி ஒளி ஒவ்வாது-பரஞ்சோதி ரூப சம்பத்ய–ஏஷ ஸர்வஸ்ய பூதஸ்து பரிஷ் வங்கோ ஹா நூ மத -என்று தான் மதித்து இருக்கும் வடிவு

பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி யின்மையில் படியோவி நிழல்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –3-1-3-தாமரை அரவிந்தம் பங்கயம் கமலம் பத்மம் பலவாறு ஒப்பிட்டும் பின்னையும் —

தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே
–9-7-3-(3849)-இக் குளிர்த்திக்கு அடியான அகவாயில் வாசத்தடம் இருக்கிற படி -சிவந்து அலர்ந்த தாமரை போலே இருக்கிற கண் முதலான திவ்ய அவயவங்களை யுடையவன் –முதல் உறவு பண்ணும் கண் -அந்நோக்குக்குத் தோற்றாரை அணைக்கும் கை -ஸ்பர்சத்துக்கு தோற்றார் விழும் திருவடிகள் -திருவடிகளில் விழுந்தாரை சாந்த்வனம் பண்ணி தரிப்பிக்கும் முறுவல் –அக் கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே––அவர்களுக்கு உஜ்ஜீவனமான வடிவு -அவயவங்களை பரபாகமான செந்தாமரை இலை போலே யாய்த்து திரு மேனி -வெண்டாமரை என்னில் விஜாதீயம் என்று –அக் கமலம் -என்கிறது —அடிகளுக்கு –வடிவு அழகையும் அவயவ சோபையையும் காட்டி எழுதிக் கொண்டவர்க்கு இவ் வடிவுக்குத் தோற்று வைவர்ணயத்தை தரித்து இருப்பார் யோக்யர் அல்லரோ என்று கேட்டுப் பாருங்கோள் –

என் தம்பிரானார் எழில் திரு மார்வற்கு
சந்தம் அழகிய தாமரை தாளர்க்கு
இந்திரன் தானும் எழிலுடை கிண் கிணி
தந்து உவனாய் நின்றான் தாலேலோ தாமரை கண்ணனே தாலேலோ -1-3 3- (43)–சிகப்பாலும் விகாசாதிகளாலும் நிறம் அழகிய தாமரைப் பூ போலே இருக்கிற திருவடிகளை உடையவனுக்கு –கிஞ்சித் கரித்தவர்களைக் குளிரக் கடாஷிக்கும் தாமரை போன்ற திருக் கண்களை உடையவனே -தாலேலோ –

தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம்படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து
படம்படு பைம்தலை மேல் எழப் பாய்ந்திட்ட
உடம்பை அசைத்தானால் இன்று முற்றும்
உச்சியில் நின்றானால் இன்று முற்றும் -2-10 3- (215)இடமுடைத்தான தாமரைப் பொய்கை என்று இறே பிரசித்தி காளியன் புகுவதற்கு முன்பு பின்பு இறே நச்சு அழல் பொய்கையாயிற்று-இப்படிப் பட்ட பொய்கையை – நிபபாத  ஹ்ரதே தத்ர   சர்ப்ப ராஜச்ய வேகத தேந அதிபததா தத்ர ஷோபித ச மகாக்ரத -என்கிறபடியே பெரிய விசையோடு உள்ளே  குதித்து கலங்க பண்ணி

நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால் 
நம்பும் பிம்பும் எல்லா நாலு நாளில் அழுங்கிப் போம் 
செம் பெரும் தாமரைக் கண்ணன் பேரிட்டு அழைத்தக்கால் 
நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – 4-6- 8-(388)–சிவந்த பெருத்த தாமரை போலே இருக்கிற திருக் கண்களை உடையவனுடைய  திரு நாமத்தை இட்டு அழைத்தக்கால் -அதாவது 
திரு நாமம் சொன்னவர்களுக்கு சகல சம்பத்துக்களும் உண்டாம்படி கடாஷிக்கும்  திருக் கண்களை உடையவன் திரு நாமத்தை – உங்கள் பிள்ளைக்கு இட்டு ஆதரம் தோற்ற – அழைத்தக்கால் -என்கை 

தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்
மன்னுடைய விபீடணர்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த
என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே   – 4-9 -2-(413)-குணத்தை தோஷமாக பிரமித்தாயோ -என்று இறே அவன் பாசுரம்-ஸ்ரீ பெரிய பெருமாளுடைய ஆஸ்ரித பஷ பாத அதிசயம் சொல்லுகிறது-இருவரும் -இசலி -ஸ்பர்த்தித்து -( பொய்ச் சண்டை இட்டு )-ஆஸ்ரிதரை நோக்கும்படி சொல்லுகிறது –-என் அடியார் அது செய்யார் -என்பதிலும் -சிதகுரைக்கும் -என்கிறது இறே உத்தேச்யம்-கைக் கொள்ளுகைக்கு சொல்லும் வார்த்தை போல் அன்றிக்கே கை விடாமைக்கு சொல்லும் வார்த்தை-அடியார் -என்று ஸ்வா தந்த்ரய நிவர்த்தி-தன்னடியார் -என்று அந்ய சேஷ நிவர்த்தி-திரு நாரணன் தொண்டர் -என்று இறே இவர்களுக்கு நிரூபகம்-ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆகிலும்-அபி சப்தம் –-ஆஸ்ரித விச்லேஷம் பொறுக்க மாட்டாத மார்த்த்வ பரம்

நல்லதோர் தாமரைப் பொய்கை நாள் மலர் மேல் பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகு அழிந்தால் ஒத்தது ஆலோ
இல்லம் வெறி ஓடிற்று ஆலோ என் மகளை எங்கும் காணேன்
மல்லரை அட்டவன் பின் போய் மதுரைப் புறம் புக்காள் கொலோ -3- 8-1 –(297)-பரப்பு மாற தாமரை பூத்துக் கிடக்கையாலே – அழகியதாய் – அத்விதீயமான பொய்கை யானது-சிகப்பு -விகாசம்-குளிர்த்தி -பரிமளம்-மார்த்தவம் – இவற்றை உடைத்தான நாள் பூவிலே அதற்கு வ்ருத்தமான பனியானது சொரிய-அத்தாலே அல்லியும் தாதும் -செவ்வி கெட்டு தீர்ந்து – அலங்காரமான பூ அழிகையாலே தான் அழகு அழிந்தால் போலே இரா நின்றது-ஸ்தாவர ஜாதிக்கு எல்லாம் உபகாரமாய் இருந்ததே ஆகிலும்
தாமரைக்கு பாதகமாகை நியத ஸ்வாபம் இறே பனிக்கு -அப்படி பனி ஏறுண்ட தமரையோடை போலே ஆய்த்து இத் திரு மாளிகை கிடக்கிறது-

வெள் நிறத் தோய் தயிர் தன்னை வெள் வரைப்பின் முன் எழுந்து
கண் உறங்காதே இருந்து கடையவும் தான் வல்லள்  கொலோ
ஒண் நிறத் தாமரை செம் கண் உலகு அளந்தான் என் மகளைப்
பண்ணறையாப் பணி கொண்டு பரிசற வாண்டிடும் கொலோ -3-8-9-(305)-அலர்ந்த போதை அழகிய நிறத்தை உடைத்தான தாமரை போலே சிவந்த திருக் கண்களை உடையவனாய் – சமஸ்த லோகங்களையும் தன் திருவடிக் கீழ்  ஆக்கிக் கொண்டவன் –இத்தால்-தன் கண் அழகாலே இவளை அனந்யார்ஹை ஆக்கி தன் கால் கீழ் இட்டுக் கொண்டவன் -என்கை –

நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால் 
நம்பும் பிம்பும் எல்லா நாலு நாளில் அழுங்கிப் போம் 
செம் பெரும் தாமரைக் கண்ணன் பேரிட்டு அழைத்தக்கால் 
நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – 4-6- 8-(388)-சிவந்த பெருத்த தாமரை போலே இருக்கிற திருக் கண்களை உடையவனுடைய  திரு நாமத்தை இட்டு அழைத்தக்கால் -அதாவது  திரு நாமம் சொன்னவர்களுக்கு சகல சம்பத்துக்களும் உண்டாம்படி கடாஷிக்கும்  திருக் கண்களை உடையவன் திரு நாமத்தை – உங்கள் பிள்ளைக்கு இட்டு ஆதரம் தோற்ற – அழைத்தக்கால் -என்கை –

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் (எம் கண்)மேல் நோக்குதியேல்
எங்கள்  மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்–(495)-ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே எங்கள் ஆற்றாமைக்கு அலருமவை இறே இவை – அர்த்திகளைக் கண்டால் அலருமவை இறே
இந்தத் தாமரைப் பூ –அலரவும் மாட்டாதே மொட்டிக்கவும் மாட்டாதே திருக் கண்கள் இருந்த படிக்கு
த்ருஷ்டாந்தம் சொல்லுகிறார்கள் –ஸ்வாதந்தர்யம் செம்பிளிப்பியா நின்றது – நப்பின்னை பிராட்டையோட்டை ஸ்பர்சம் அலரப் பண்ணா நின்றது –

பெய்யு மா முகில் போல் வண்ணா உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை
மையல் ஏற்றி மயக்க உன்முகம் மாய மந்திரம் தான் கொலோ
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்
செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே--2-4-(517)-பின்னையும் அழிப்பதாக ஒருப்பட்டது மாறாதே இருக்கச் செய்தேயும் சாதரமாகப் பார்த்தான் – செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே- கண்ணாலே எங்கள் அபிசந்தியைக் குலையாதே கொள் –-அபிசந்தி -அந்ய பரதை காலாலே எங்கள் சிற்றிலை அழியாதே கொள் -என்கிறார்கள்-

தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் எம் காலைக் கதுவ
விடத்தேள் எறிந்தாலே போலே வேதனை யாற்றவும் பட்டோம்
குடத்தை எடுத்து ஏறவிட்டுக் கூத்தாட வல்ல வெங்கோவே
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்து அருளாயே-–3-6-(529)-பொய்கையில் உண்டான ஜலசர சத்வங்கள் பாதகம் ஆகா நின்றது என்றால் –துணுக்  என்னுமோ பாதி –-தாமரைப் பொய்கையிலே தண்டுகளும் பாதகமாகா நின்றது கிடாய் என்றால்-கூடுமோ என்று பார்த்து அத்தை ஸ்மரிக்கிறார்கள்-பொய்கையில் தாமரைத் தண்டுகள் எங்களை நலியா நின்றது என்ன —ஆகில் கரையிலே போந்து ஏறும் கோள்-என்றான்-கரையிலேயோ தான் தாமரை இன்றிக்கே இருக்கிறது –செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செங்கனி வாய் அக்கமலத்து இலை போலும் திருமேனி யடிகளுக்கே -திருவாய்மொழி -9-7-3–தடம் –கரை -பரப்பு /பெருமை -பெரிய பொய்கை -இறே
கண்ணா கண் கை கால் தூய செய்ய மலர்களாய்ச் சோதிச் செவ்வாய் முகிழதா சாயல் சாமத் திரு மேனி தண் பாசடையா- தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே -திருவாய்மொழி -8-5-1— தாமரைத் தடாகம் போல் இருப்பவன் அன்றோ அவன் –கீழே இந்த தாமரைப் பொய்கை துன்புறுத்த மேலே அந்த தாமரைப் பொய்கை துன்புறுத்துகிறதே –

தீதில் நல் நெறி நிற்க அல்லாது செய்
நீதி யாரொடும் கூடுவதில்லை யான்
ஆதி ஆயன் அரங்கன் அம் தாமரை
பேதை மா மணவாளன் தன் பித்தனே
– 3-5-(672)-அழகிய தாமரைப் பூவைத் தனக்கு இருப்பிடமாக உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபர் ஆனவருக்கு பித்தனானேன் நான் ஓரடி இவன் புகுரா நின்றால்-அத்தைக் குவாலாக்கி -அவன் நெஞ்சிலே புண்படும்படி இவன் பண்ணின அபராதத்தை அவன் காணாத படி இருக்கிற புருஷகார பூதை-அப்ரமேயம் ஹி தத்தேஜ-இவளுக்கு வல்லபனாகையாலே வந்த பெருமை உடையவன்-பித்தன் நான் –

களி நிலா எழில் மதி புரைமுகமும் கண்ணனே ! திண் கை மார்வும் திண் தோளும்
தளி மலர் கரும் குழல் பிறை யதுவும் தடம் கொள் தாமரை கண்களும் பொலிந்த
இளமை இன்பத்தை இன்று என் தன் கண்ணால் பருவேற்க்கு இவள் தாய் என நினைந்த
அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த பாவியேன் எனது ஆவி நில்லாதே– 7-4-(711)–ஒரு தாமரைப் பூவே தடாகம் எல்லாம் விழுங்கும் படி அலர்ந்தாப் போலே-திரு மேனி எல்லாம் பரப்பு மாறும் படி அலர்ந்த திருக் கண்களும்-

தண் தாமரை கண்ணனே! கண்ணா ! தவழ்ந்து எழுந்து தளர்ந்த்ததோர் நடையால்
மண்ணில் செம் பொடி ஆடி வந்து என் தன் மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ !
வண்ண செஞ்சிறு கை விரல் அனைத்தும் வாரி வாய் கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ண பெற்றிலேன் ஓ! கொடு வினையேன் என்னை என் செய்ய பெற்றது எம்மோயே –7-6-(713)-குளிர்ந்து அழகிதான தாமரைப் பூப் போலே அலர்ந்த திருக்கண்களை யுடைய ஸ்ரீ கிருஷ்ணனே-

முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும் முகிழ் இளம் சிறு தாமரைக் கையும்
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ் வாயும்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும் அணி கொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட வசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே– 7-8-(715)-இளம் தளிர் போலேயும் நிறத்துக்கு -விகாசம் -செவ்விக்கு தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கைகளும் –

தாமரை மேல் அயன் அவனை படைத்தவனே! தயரதன் தன்
மா முதலாய்! மைதிலி தன் மணவாளா வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே!
ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ– 8-4–(722)-(திருநாபிக்) கமலத்திலே-பிரமனை உண்டாக்கினவனே!-

இனித் திரைத்  திவலை மோத வெறியும் தண் பரவை மீதே
தனிக் கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான்
கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள்
பனி யரும்பு திரு மாலோ  என் செய்கேன் பாவியேனே-18-(889)-தாமரைக் கண்ணன்--கையிலே ப்ரஹ்மாஸ்திரம் இருக்க வெல்ல ஒண்ணாத இடம் இல்லை இறே –-அங்கு உள்ளாரை வென்ற பரிகரத்தைக் கொண்டாய்த்து இங்கு உள்ளாரையும் வென்றது-தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலை மகனை -என்னக் கடவது இறே –அவர்களுக்கு போக உபகரணமான இத்தைக் கொண்டு கிடீர் இவர்களுடைய விரோதியைப் போக்குவது –(“அரசு செய்யுந் தாமரைக் கண்ணன் “என்ற சொற்போக்கால் எம்பெருமான் தனது திருக் கண்ணழகால் அனைவரையும் அகப்படுத்திக் கொள்ளுகிறான் என் விளங்கும்.)இப் ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு அகப்பாட்டார் யார் என்னில் – எம்மான் –
நான் தோற்று என்னை எழுதிக் கொடுத்தேன் –சம்சாரிகளுக்கும் இவ்வருகான என்னைத் தோற்பித்த
கண்களுக்கு இனி வெல்ல ஒண்ணாத நிலம் உண்டோ –

பாயு நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திரு நன் மார்பும் மரகத வுருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவர் இதழ் பவள வாயும்
ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே–20-(891)-பிராட்டியோடு ஹிரண்யாதிகளோடு வாசி அற குளிர நோக்குகிற திருக் கண்களும் –நோக்குத் தூய்மை யாவது – நிர்ஹேதுகமாக கடாஷிக்கை –ஸூஹ்ருதம் சர்வ பூதானாம் -என்கிறபடியே – அனுகூல பிரதி கூல விபாக ரஹீதமாய்த்து சௌஹார்த்தம் இருப்பது –தேவாநாம் தாநவா நாஞ்ச சாமான்ய மதி தைவதம் -என்கிறபடியே
சம்பந்தம் ஒத்ததாய்த்து இருப்பது –இப்படி இருக்க சில பதார்த்தங்களுக்கு கடாஷம் அநர்த்த ஹேது வாகிறது -பிரகிருதி தோஷத்தாலே – சர்வ அனுகூலமான தென்றல் ஆனது ஒரு பதார்த்ததில் வந்தால் சோஷகம் ஆகாது நின்றது இறே –மென்மை குளிர்த்தி நாற்றம் இவற்றுக்கு தாமரை ஒரு போலியாம் இத்தனை -போக்கி அகவாயில் தண்ணளிக்கு த்ர்ஷ்டாந்தம் ஆக மாட்டாதே

தொண்டாம் இனமும் இமையோரும் துணை நூல் மார்பில் அந்தணரும்
அண்டா வெமக்கே யருளாய் என்று அணையும் கோயிலருகெல்லாம்
வந்தார் பொழிலின் பழனத்து வயலினயலே கயல் பாய
தண்டாமரைகள் முக மலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-9–(996)–கூத்தாடுமவர்கள் அடி இட்டால் ததஸ்த்ரராய் -சதஸ்ஸிலே- இருப்பார் தம் முக விகாசத்தாலே கொண்டாடுமா போலே
தாமரைகள் முகம் மலர்த்தும் ஆயிற்று –

திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ தீ வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ்
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ
அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-1-(1238)–இடங்கள் தொறும் திகழ அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும்- மலர்கள் மிகு கைதைகள் தொடக்கமான வற்றை உடைத்தாய் இருக்கிற திரு நாங்கூர் என்னுதல்-வாழ் தரும் இடங்களிலே உண்டாய் அவர்களுக்கு உறுப்பாய்-சமாராதனத்துக்கு ஸாமக்ரியையாக – இருக்கிற மலர்கள் மிகு கைதைகள் தொடக்கமான வற்றை உடைத்தாய் இருக்கிற திரு நாங்கூர் என்னுதல்-பூக்கள் மிக்கு இருந்துள்ள தாழைகள்-செங்கழுநீர் -தாமரைகள் – இவை பரந்த பொய்கைகள் தோறும்
அவகாசங்கள் தோறும் விளங்க இங்கு இடம் இல்லாமையாலே சோலையானது ஆகாசத்தில் பரப்படைய இடம் அடைத்துக் கொண்டு ஓங்கி அழகு விளங்கா நின்றுள்ள அருமிடம் என்று ஸூஷ்மதையைப் பற்ற ஆகாசத்தை சொல்லுகிறது

கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான்
சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் பொங்கு நீர்ச்
செங்கயல் திளைக்கும் சுனைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே–1-8-1-(1018)-இவ் வதாரத்துக்கு அடியாக திருப் பாற் கடலிலே வந்து சந்நிதி பண்ணின படியைச் சொல்லுகிறது –-சங்கு என்று பேர் பெற்றவை அடைய சேரா நிற்பதாய் கண் வளர்ந்து அருளுகைக்கு ஈடான பரப்பை உடைத்தான திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவன் –

நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கை தொழும் இணைத் தாமரை யடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திடக் கடிதாநிரைக் கிடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே -1-8-3-(1020)-நித்ய ஸூரிகள் ஒரு நாடாக பரிய இருக்குமவன் கிடீர் தனியே புகுந்து அகப்பட்டான் –

கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய் என்னெஞ்சம் என்பாய் துணிந்து கேள்
பாடி யாடிப் பலரும் பணிந்து ஏத்திக் காண்கிலா
ஆடு தாமரை யோனும் ஈசனும் அமரர் கோனும் நின்றேதும் வேங்கடத்து
ஆடு கூத்தனுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-9-(1056)-1-ஆடு –என்று பெருமையாய் -அலர்ந்த தாமரை என்னுதல் –-அன்றிக்கே-2-ஆடுகை -நடையாடுகையாய்-அதிலே வர்த்திக்கிற -என்னுதல் –அன்றிக்கே –3-ஆடுகை உண்டாகையாய் –திரு நாபீ கமலத்தை உத்பத்தி ஸ்தானமாக உடையவன் -என்னுதல்-அன்றிக்கே-4-ஆடு –வெற்றியாய் – வெற்றியை உடையவன் -என்னுதல்-

பாலனாகி ஞாலமேழும் உண்டு பண்டாலிலை மேல்
சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில்
நீல மார் வண்டுண்டு வாழும் நெய்தலந்தண் கழனி
ஏல நாறும் பைம் புறவில் எவ்வுள் கிடந்தானே—2-2-5-(1062)-தனக்கு ஒரு பரிவர் இல்லாத
பிரளய காலத்திலே-ஒரு ஆலந்தளிரிலே – பிள்ளை அகாலத்திலே உறங்கா நின்றான்
என் செய்தான் என்று எழுப்புகைக்கு ஒரு யசோதாதிகளும் இல்லையே –

பட நாகத்தணைக் கிடந்து அன்று அவுணர் கோவை பட வெகுண்டு மருதிடை போய்ப் பழன வேலி
தடமார்ந்த கடல் மல்லை  தல சயனத்துத் தாமரைக் கண் துயில் அமர்ந்த தலைவர் தம்மை
கடமாரும் கருங்களிறு வல்லான் வெல் போர்க் கலி கன்றி யொலி செய்த வின்பப் பாடல்
திடமாக விவை யைந்தும் ஐந்தும் வல்லார் தீவினையை முதலறிய வல்லார் தாமே –2-5-10–(1097)-நீர் நிலங்களால் சூழப் பட்டு அழகிய தடாகங்கள் உடைத்தான திருக் கடல் மல்லை தல சயனத்திலே –யஞ்ஞே சோயஞ்ஞ புருஷ –என்கிறபடியே சர்வாதிகனான புண்டரீகாஷன் என்று தோற்றும் படி
கண் வளர்ந்து அருளினவனை ஆயிற்று கவி பாடிற்று – (ஸ்ரீ விஷ்ணு தர்மம் யஜ்ஜ ஈசன் யஜ்ஜ பிரபு புண்டரீ காஷன் விஷ்ணு மோக்ஷ ப்ரதன் )

முழுசி வண்டாடிய தண் துழாயின் மொய்ம் மலர்க் கண்ணியும் மேனி யஞ்சாந்து
இழுசிய கோலம் இருந்தவாறும் எங்கனம் சொல்லுகேன் ஓவி நல்லார்
எழுதிய தாமரை யன்ன கண்ணும் ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும்
அழகியதாம் இவரார் கொல் என்ன அட்ட புயகரத்தேன் என்றாரே–2-8-7-(1124)–சித்ரம் எழுதுகையில் குசலராய் இருக்குமவர்கள் எழுதின தாமரைப் பூ போலே இருக்கிற கண்களும்-அதாகிறது-கண்ட பின்பு இமையாதே இருந்தபடி – (பரகால நாயகியைக் கண்டபின்பு இமைக்க மாட்டானே )

கார் மன்னு நீள் விசும்பும் கடலும் சுடரும் நிலனும் மலையும் தன் உந்தித்
தார் மன்னு தாமரைக் கண்ணனிடம் தட மா மதிள் சூழ்ந்து அழகாய கச்சி
தேர் மன்னு தென்னவனை முனையில் செருவில் திரள் வாட்டிய திண் சிலையோன்
பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே–2-9-2-(1129)-இவை அடைய திரு நாபீ கமலத்திலே உண்டாம்படி இருக்கிற புண்டரீகாஷனுக்கு வாச்ஸ்தானம் –

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –3-1-2-(1149)-சொல்லில் -கட்டுரை என்று முழுச் சொல்லாய் -சொல்லில் என்றபடி -நெஞ்சாலும் பரிச்சேதிக்க ஒண்ணாதாய் இருக்க பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது-தாமரை –தாமரை ஜாதியாக ஓர் அவயவத்துக்காக ஒப்பாக மாட்டாது என்கை –
நின் கண் பாதம் கை யொவ்வா-முதல் உறவு பண்ணும் கண் -அதுக்கு தோற்று ஜிதந்தே என்று விழும் திருவடிகள் -அவ் விழுக் காட்டுக்கு தோற்று அவன் தான் ஜிதந்தே என்று அணைக்கும் கை
நின் கண் -என்கையாலே –உனது முகச் சோதி -என்றத்தை நினைக்கிறது –-பாதம் -என்றது அடிச் சோதி என்றத்தை நினைக்கிறது-கை -என்று நடுவு தாம் அனுபவித்த அழகுக்கு உப லக்ஷணம்-சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது-பொன்னை உபமானமாக போராது என்கைக்காக சிக்ஷிக்கிறார் -காய்ச்சி உரைத்த வி லக்ஷணமான நன் பொன்-ருக்மஅபாம் -என்னக் கடவது இறே
உன் திருமேனி ஒளி ஒவ்வாது-பரஞ்சோதி ரூப சம்பத்ய–ஏஷ ஸர்வஸ்ய பூதஸ்து பரிஷ் வங்கோ ஹா நூ மத -என்று தான் மதித்து இருக்கும் வடிவு

வையம் ஏழும் உண்டு ஆலிலை வைகிய மாயவன் அடியவர்க்கு
மெய்யனாகிய தெய்வ நாயகனிடம் மெய் தகு வரைச் சாரல்
மொய்கொள் மாதவி செண்பகம் முயங்கிய முல்லை யம் கொடி யாட
செய்ய தாமரைச் செழும் பணை திகழ் தரு திருவயிந்திரபுரமே–3-1-3-(1150)–சிவந்த தாமரையை உடைத்தான நீர் நிலங்களிலே உஜ்ஜ்வலமாக நின்றுள்ள திருவயிந்திரபுரமே –அகடிகடதங்களை கடிப்பித்தும் அவன் ஆஸ்ரித ரஷணம் பண்ணுமா போலே விருத்தமான தேசத்தில் அவை இரண்டையும் சம காலத்தில் கிட்டி அனுபவிக்கலாம் தேசம் ஆயிற்று-குறிஞ்சி நிலமான மலை சாரலிலே முல்லை நிலமும் மருத நிலமும் இருந்தது போலே-(மெய்த்து திருமேனி மார்த்வம்-முல்லை நிலம் -நிர்ஜலப் பிரதேசம் -முல்லைக்கொடி ஆட-செழும் பணை -நீர் நிலத்தில் தாமரை மலர -மருத நிலம்-மலைச்சாரல் குறிஞ்சி நிலம்-இப்படி அனைத்தும் சேர இருக்கும் தேசம் )

வளைக்கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப
தளைத்தவிழ் தாமரைப் பொய்கைத் தண் தடம் புக்கு அண்டர் காண
முளைத்த எயிற்று அழல் நாகத்து உச்சியில் நின்று அது வாட
திளைத்தமர் செய்து வருவான் சித்திர கூடததுள்ளானே–3-3-4-(1171)-கட்டவிழ்ந்து அலர்ந்த தாமரைப் பொய்கையினுடைய ஸ்ரமஹரமான கரையிலே சென்று இடையர் காண முளைத்த எயிற்றை உடைய பாம்பின் உடைய உச்சியிலே புக்கு நின்று அது வாடும்படி கூட விளையாடி அமர் செய்து வருமவன்-

உலவு திரைக் கடல் பள்ளி கொண்டு வந்து உன்னடியேன் மனம் புகுந்த அப்
புலவ புண்ணியனே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல் தண் தாமரை மலரின் மிசை மலி
அலவன் கண் படுக்கும் அணியாலி யம்மானே–3-5-7-(1194)–நித்தியமான மலரை உடைத்தாய் இருக்கிற புன்னை நாழல் இவற்றின் உடைய நிழலிலே பரந்த தாமரைகளின் மேலே அலவன் கண் படுக்கும் –
அப்பரப்புக்கு எல்லாம் போரும்படி பெரிய வடிவை உடைய ஆண் நண்டானது மற்று ஒரு நியமத்தை அறியாதே படுக்கை வாய்ப்பாலே கிடந்தது உறங்கா நிற்கும் ஆயிற்று –வயலாலி மணாளன் உடைய வியாபாரத்தோடு அங்கு உண்டான திர்யக்குகள் உடைய வியாபாரத்தோடு வாசி அற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு அந்நிலத்தில் உள்ள ஆசையாலே –

இழையோடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு இளங்கன்று கொண்டு விளங்காய் எறிந்து
தழை வாடவன் தாள் குருந்தம் ஒசித்துத் தடந்தாமரைப் பொய்கை புக்கான் இடந்தான்
குழை யாட வல்லிக் குலமாட மாடே குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு
மழை யாடு சோலை மயிலாலு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-5-(1222)-தனக்கும் பெண்களுக்கும் ஜலக் கிரீடை பண்ணுகைக்கு யோக்யமான இடத்தை-காளியன் புக்கு தூஷித்து கிடக்க அங்கே போய் புக்கான் ஆயிற்று-பெண்கள் நீராடப் புக்க இடத்தையும் உடைத்தாய்
தாமரையையும் உடைய பொய்கையிலே புக்கு அவர்கள் துகிலை வாங்கின படி ஆகவுமாம் –

தளைக் கட்டவிழ் தாமரை வைகு பொய்கைத் தடம் புக்கு அடங்கா விடங்கால் அரவம்
இளைக்கத் திளைத்திட்டு அதனுச்சி தன் மேல் அடி வைத்த அம்மானிடம் மா மதியம்
திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில் செழு முத்து வெண் நெற்கு எனச் சென்று முன்றில்
வளைக்கை நுளைப் பாவையர் மாறு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-7-(1224)-தளைத் தாமரையும் -கட்டவிழ் தாமரையும் –-மொட்டுத் தாமரையும் அலர்ந்த தாமரையும்-தங்குகிற பொய்கைக் கரையிலே புக்கு -என்னுதல் பொய்கையின் உள்ளே புக்கு என்னுதல் –

சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும் தாமரைக் கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில்
வங்கமலி கடலுலகில் மலி வெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகர் மேல் வண்டறையும் பொழில் சூழ்
மங்கையர் தம் தலைவன் மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன
சங்க மலி தமிழ் மாலை பத்து இவை வல்லார்கள் தரணியோடும் விசும்பாளும் தன்மை பெறுவாரே–3-9-10-(1237) ஆஸ்ரித அர்த்தமாக ஸ்ரீ பஞ்ச ஆயுதங்களையும் தரித்துக் கொண்டு இருக்கிற புண்டரீ காஷனான சர்வேஸ்வரன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்

கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள்  கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை   பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-1-(1318)-மாடங்கள் எப்பொழுதும் ஓக்க சாந்து பூசியே-தளம், வெண்மை ஓக்கமான மாடங்கள் நித்ய ஸந்நிஹிதனான ஸ்ரீ யபதி

கற்றா மறித்துக் காளியன் தன் சென்னி நடுங்க நடம் பயின்ற
பொற்றாமரையாள் தன் கேள்வன் புள்ளம் பூதங்குடி தன் மேல்
கற்றார் பரவும் மங்கையர் கோன் காரார் புயல் கைக் கலிகன்றி
சொல் தான் ஈரைந்து இவை பாடச் சோரா நில்லா துயர் தானே –5-1-10-(1357)-தன்னைப் பாராதே யாய்த்து அழிவுக்கு இட்டது ஸ்ரீ யபதியான தன் சௌகுமார்யத்துக்குச் சேராது இறே-இஸ் சாஹசம் –

ஆறினோடு ஒரு நான்குடை நெடு முடி யரக்கன் தன் சிரம் எல்லாம்
வேறு வேறு உக வில்லது வளைத்தவனே எனக்கு அருள் புரியே
மாறில் சோதிய மரகதப் பாசடைத் தாமரை மலர் வார்ந்த
தேறல் மாந்தி வண்டு இன்னிசை முரல்
திரு வெள்ளறை நின்றானே –5-3-7-(1374)-ஒப்பிலாத புகரை உடைய வாய் மரகதம் போலே இருந்துள்ள பச்சை இலையை உடைத்தான தாமரை மலரில் நின்றும் –ஒழுகா நின்றுள்ள தேனைப் பருகி வண்டுகள் ஆனவை இனிய இசையைப் பாடா நின்றுள்ள தேசம் –

கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணமோர் முழு வலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்பக்
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு உளது அறிந்து உன்
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே–5-8-3-(1420)-பொய்கை வைகு தாமரை -என்ன அமையும் இறே இவன் அதிகரித்த கார்யத்துக்கு பொழிலையும்  பொய்கையும் வர்ணனை செய்வதற்கு கருத்து என் என்னில்-அநாவ்ருஷ்டியாலே ஜகத் எல்லாம் நோவு பட்டு ஓர் இடத்திலும் ஒரு புஷ்பமும் இன்றிக்கே தட்டித் திரியா நிற்க இவனுக்கு முற்பட கண்ணிலே படுமது இறே சோலை-அந்த சோலை தான் தளிரும் முறியும் செருந்துமாய் நிற்கையாலே-கீழே ஒரு பொய்கை உண்டு என்று தோற்றிற்று-பரிமள பிரசுரமாய் பூவை உடைத்தான பொழில்-அச் சோலையை நோக்கிப் போக -என்று புக்கவாறே பரிமளம் வந்து பிராண விஷயமாய் அங்கே புஷ்பம் உண்டு என்று தோற்றிற்று    –ஆகர்ஷகமான பொய்கை-ஆகர்ஷகமாக இருக்கை யாவது-அகாதமாய்துஷ்ட சத்வங்களும் உண்டாய் இருக்குமோ -என்று விவேகியாதே மேல் விழும்படியாய் இருக்கை –அநாவ்ருஷ்டியாலே தாமரைப் பூக்கள் எங்கும் ஒக்க-இவ்வாதரத்தோடே புக்கு தாமரைப் பூவை பறித்த அளவிலே ஓர் ஆனைக் கால் காண வல்லோமே -என்று பார்த்துக் கொடு கிடக்கிற முதலை ஆனைக் கால் பற்றிற்று

போதார் தாமரையாள் புலவிக் குல வானவர் தம்
கோதா கோதில் செங்கோல் குடை மன்னரிடை நடந்த
தூதா தூ மொழியாய் சுடர் போல் என் மனத்து இருந்த
வேதா நின்னடைந்தேன் திரு விண்ணகரம் மேயவனே —6-2-9-(1466)-காலத்திலே அலர்ந்த செவ்விப் பூவை இருப்பிடமாக உடையவள் -என்னுதல்-அன்றிக்கே –-செவ்விப் பூவை உடைத்தான தாமரையை வாசஸ் ஸ்தானமாக உடையவள் -என்னுதல் –-போது என்று காலம் ஆதல் புஷ்பம் சொல்லிற்று ஆதல்-
(போது எல்லாம் போது கொண்டு உன் பொன் அடி புனைய மாட்டேன் )புலவி–ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு திரு நாமம் ஆகவுமாம் –-அன்றிக்கே-போதார் தாமரையாள் புலவி இடத்தில் குல வானவர் தம் கோதா -என்றுமாம்

விடந்தான் உடைய வரவம் வெருவச் செருவில் முன நாள் முன்
தடந்தாமரை நீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன்
இடந்தான் வையம் கேழல் ஆகி யுலகை ஈரடியால்
நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே  –6-10-2-(1539)–விஷத்தை உடைய காளியன் அஞ்சும்படியாக யுத்தத்தில் முன்பு ஒரு நாள் தன்னேராயிரம் பிள்ளைகளுக்கு முன்னே பரப்பு மாறாப் பூத்த தாமரைகளையும் நினைத்த வகைகள் எல்லாம் விநியோகம் கொள்ளலாம் படியான ஜல சம்ருத்தியையும் உடைய பொய்கையிலே போய்ப் புக்கு

தூயாய் சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம்
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா
ஆயா அலை நீர் உலகு ஏழும் முன்னுண்ட
வாயா உன்னை எங்கனம் நான் மறக்கேனோ  –7-1-9(1556)சகல தாபங்களும் ஆறும்படி ஸீதமான கிரணங்களை உடைய பூர்ண சந்தரனைப் போலே -சர்வ பிராணிகளையும் தாயாய் கொண்டு அளிக்கின்ற குளிர்ந்த திருக் கண்களை உடையவனே -என்று திருக் கண்களுக்கு விசேஷணம் ஆதல் –)

உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவர்க்காய்ச் சென்று
இரங்கி யூர்ந்தவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை வம்பார் புனல் காவிரி
அரங்கமாளி என்னாளி விண்ணாளி ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று
சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே –7-3-4(1571)-கடல் சூழ்ந்த அரணை உடைத்தாய் இருக்கிற இலங்கை ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படியாக எடுத்து விட்டு  அம்புகளை நடத்தின புண்டரீ காஷனான சர்வேஸ்வரனுக்கு அல்லது -ஆஸ்ரிதர்க்காக சாரத்தியம் பண்ணியும் மார்விலே அம்பு ஏற்றும் உபகரிக்கும் அவனுக்கு அல்லது வேறு சிலர் விஷயமாக என்னுடைய ஹிருதயத்தில் தாழ்ச்சி பிறவாது –

ஆங்கு வென்னரகத்து அழுந்தும் போது அஞ்சேல்  என்று அடியேனை அங்கே வந்து
தாங்கு தாமரை யன்ன பொன்னாரடி எம்பிரானை யும்பர்க்கு அணியாய் நின்ற
வேங்கடத் தரியை பரி கீறியை வெண்ணெய் உண்டு  உரலினிடை ஆப் புண்ட
தீங் கரும்பினைத் தேனை நன் பாலினை யன்றி என் மனம் சிந்தை செய்யாதே –7-3-5-(1572)ரஷிக்குமது செவ்வித் தாமரைப் பூ போலே ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை கொண்டாய்த்து – விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம் -இவற்றுக்கு தாமரையை ஒரு போலியாகச் சொல்லலாம் படியாய் அவ்வளவு அல்லாத படி அதி ஸூகுமாரமாய் -ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை-உடைய என் ஆயனே –

ஏடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்தருளி
மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும்
நீடு மாடத் தனிச் சூலம் போழ்கக் கொண்டல் துளி தூவ
ஆடல் அரவத் தார்ப் போவா அணியார் வீதி அழுந்தூரே–7-5-6-(1593)இதழ் விளங்கா நின்றுள்ள தாமரை போலே ஸ்மிதம் பண்ணி அருளி – என்னைப் பெறுகையால் வந்த அலாப்ய லாபம் தன்னது என்னும் இடம்  தோற்ற ஸ்மிதம் பண்ணி – அத்தாலே தான் செய்தது விலக்காத படியான தசையை எனக்கு பிறப்பித்து என் அருகே வந்து நின்று அது சாத்மித்தவாறே ஹிருதயத்திலே வந்து புகுந்து இனி இவருக்கு ஒரு போக்கு இல்லை என்று தோற்ற நிற்கிறவர் கண்ணுக்கு இலக்காகும்படி வந்து நிற்கிற தேசம் போலும் –

நந்தா நெடு நரகத்திடை நணுகா வகை நாளும்
எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறிநீர்ச்
செந்தாமரை மலரும் சிறு புலியூர்ச் சலசயனத்து
அந்தாமரை யடியாய் உனதடியேற்கு அருள் புரியே
—7-9-5-(1632)மிக்க ஜலத்தை உடைத்தான பொய்கைகளிலே அந்த நீர்ச் செறிவாலே தாமரைகள் போய் அலறுகிற  சிறு புலியூர்ச் சலசயனத்திலே –(சேஷ புஷ்கரணி -அநந்த சரஸ் இங்கு )செவ்விப் பூ போலே இருக்கிற திருவடிகளை உடையவனே –அல்லாதார் செய்தபடி செய்ய அநந்ய கதியான என் பக்கலிலே உன்னுடைய கண் அழிவற்ற கிருபையைப் பண்ணி அருள வேணும் –

அடித் தலமும் தாமரையே அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
முடித் தலமும் பொற் பூணும்  என் நெஞ்சத்து உள்ளகலாது என்கின்றாளால்
வடித் தடங் கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள்  என்கின்றாளால்
கடிக் கமலம் கள்ளுகுக்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-5-(1652)–அடித் தலமும் தாமரையே –நம்முடைய உத்தேச்யமும் நிரதிசய போக்யமாய் இரா நின்றது-அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால் –அத் திருவடிகளிலே தோற்று விழுந்தவர்களை எடுத்து அணைக்கும் கைகளும் தாமரை போலே இரா நின்றது -என்னா நின்றாள் –கடிக்கமலம் கள்ளுகுக்கும் – பரிமள பிரசுரமாய் இருந்துள்ள புஷ்பமானது மதுவை பிரவஹியா நிற்கும் ஆயிற்று –மது பானம் பண்ண விருந்த வண்டுகளுக்கு பிரயோஜனம் இல்லாத படியாகவும்-ஆஸ்ரயம் பொறாத படியாலும்-மதுவை உகா நிற்கும் –அவ் ஊரில் தாமரையில் படிந்த வண்டுகளால் அதில் மது வற்றப் பருகப் போகாது -என்கை –

வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன்
ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள்
கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே —8-8-1-(1718)-வியந்துய்யக் கொண்ட –
நாம் ரஷகமாக விட்ட கடல் தானே பாதகம் ஆவதே-இருந்த படி என் விஸ்மயப்பட்டு -என்னுதல் –
அன்றிக்கே-வேறுபட்டு ஜகத் காரண பூதனான தான் ப்ரஹ்மாதி அளவிலே தன்னை அமைய விட்டால்
தான் நின்ற நிலைக்கு இது சேராதாய் இருக்கும் இறே –(இணைவனாம் -ஸஜாதீயனாக -ஸூலபனாய்
சர்வ பிரகாரியாய் சர்வ சரீரீயாய் இருந்தும் எந்நின்ற யோனியுமாய் பிறந்து ) அங்கனும் அன்றிக்கே –
விஜா தீயமான வடிவை உடையவன் ஆகையாலே வந்த நெடு வாசியைச் சொல்லிற்று ஆகவுமாம் –மத்ஸ்ய கமல லோசன -என்னக் கடவது இறே –

கண்ணார் கண்ண புரம் கடிகை கடி கமழும்
தண்ணார் தாமரை சூழ் தலைச் சங்க மேல் திசையுள்
விண்ணோர் நாண் மதியை  விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ —8-9-9-(1736)-பரிமளத்தை புறப்படவிடா நிற்பதாய் ஸ்ரமஹரமான தாமரைகளாலே சூழப் பட்ட தலைச் சங்க காட்டில் மேல் பார்ஸ்வத்தில் –

வேயிரும்   சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இவ் வையம் எல்லாம்
தாயின நாயகராவர் தோழீ தாமரைக் கண்கள் இருந்தவாறு

சேயிரும் குன்றம் திகழ்ந்தது ஒப்பச் செவ்வியவாகி மலர்ந்த சோதி
ஆயிரம் தோளோடு  இலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-3-(1760)-பூமிப் பரப்பை அடைய அநாயாசேன அளந்து கொண்ட ஸ்வாமிகள் என்னலாய் இரா நின்றார்-நீர்மை பார்த்த வாறே –புண்டரீகஷனாய் இரா நின்றார் என்று சொல்லலாய் இரா நின்றார் –

வெஞ்சின வேழம் மருப்பொசித்த வேந்தர் கொல் ஏந்திழையார் மனத்தை
தஞ்சுடையாளர் கொல் யான் அறியேன்  தாமரைக் கண்கள் இருந்தவாறு
கஞ்சனை யஞ்ச முன் கால் விசித்த காளையராவர் கண்டார் வணங்கும்
அஞ்சன மா மலையேயும்  ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-6-(1763)தாமரைக் கண்கள் இருந்தவாறு –-அது தன்னை நோக்காலே தெரிவியா நின்றார் –-நானும் என்னுடைமையும் நீ இட்ட வழக்கு அன்றோ என்றாப் போலே இரா நின்றது -நோக்கிப் பார்த்த வாறே – (நயன பாஷை -கண்ணால் பேசியது இது )

பிணியவிழ் தாமரை மொட்டலர்த்தும் பேரருளாளர் கொல் யான் அறியேன்
பணியும் என்னெஞ்சம் இது என் கொல் தோழி  பண்டிவர் தம்மையும் கண்டறியோம்
அணி கெழு தாமரை யன்ன கண்ணும் அங்கையும் பங்கயம் மேனி வானத்து
அணி கெழு மா முகிலேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-7-(1764)-ஆதித்யன் தன்னுடைய உஷ்ண கிரணங்களாலேதாமரைகளில் உண்டான பூவை அலர்த்தக் கடவனாய் இருக்கும் இறே
அங்கன் அன்றிக்கே-ஷீண  பாபரானவர்கள் உடைய ஹிருதய கமலத்துக்கு விகாசத்தை பண்ணி
பண்ணிக் கொடுக்கும் பெரிய கருணை உடையராய் இரா நின்றார் –திரளச் செறியப் பூத்த தாமரை என்னலாய் இருக்கிறது –திருக் கண்களும் அணைக்கக் கணிசிக்கிற கைகளும் –(பக்தர்களாகிய தாமரையை அலர்த்தும் ஸூர்யனைப் போல் மட்டும் இல்லாமல் பக்தனான ஸூர்யனைக் கண்டு அலரும் தாமரைக் கண்கள் அன்றோ இவையும் )

எண்டிசையும் எறி நீர்க் கடலும் ஏழுலகும் உடனே விழுங்கி
மண்டியோர்  ஆலிலைப் பள்ளி கொள்ளும் ஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன்
கொண்டல் நன்மால் வரையேயும் ஒப்பர் கொங்கலர் தாமரைக் கண்ணும் வாயும்
அண்டத்தமரர் பணிய நின்றார் அச்சோ ஒருவர் அழகிய வா
—-9-2-9-(1766)–பரிமளத்தை புறப்பட விடா நின்றுள்ள தாமரை போலே இரா நின்றது திருக் கண்களும் திரு அதரமும் –மேன்மையைப் பார்த்த வாறே நித்ய ஸூரிகளும் வந்து ஆஸ்ரயிக்கும் படி இரா நின்றார்-மேன்மையை உடையார் கிட்டுகிற விஷயம்  என்று நமக்கு கை வாங்கலாய் இருக்கிறது இல்லை வடிவு அழகைப் பார்த்தவாறே –

இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரைப்
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்து அழகிய புல்லாணி மேல்

கலங்கல் இல்லாப் புகழான் கலியன் ஒலி மாலை
வலம் கொள் தொண்டர்க்கு இடமாவது பாடில் வைகுந்தமே –9-3-10-(1777)-இந்த தேச வை லஷண்யம் ஆயிற்று இவர் தம்மை இங்கன் கவி பாடுவித்தது –-உஜ்ஜ்வலமாகா நின்றுள்ள முத்தும்-அழகிய பவளக் கொழுந்தும் தன் பரப்பு மாறச் செவ்வி பெற அலர்ந்த தாமரைப் பொய்கைகளையும் உடைத்தான
சோலைகளாலே சூழப் பட்ட திருப் புல்லாணி மேலே யாயிற்று கவி பாடிற்று –

தாம் மோர் உருட்டித் தயிர் நெய் விழுங்கிட்டுத்
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாம் மோதரக் கையால்  ஆர்க்கத் தழும்பு இருந்த
தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரைக் கண்ணனே சப்பாணி —10-5-3-(1890)-உடம்பிலே தழும்பு கிடைக்கையாலே-தாமோதரன் என்னும் திரு நாமத்தை உடையவனே –-எனக்கு கட்டலாம்படி பவ்யனான நீ இத்தையும் செய்யப் பாராய் –

தூங்கார் பிறவிக்கள் இன்னம் புகப் பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சிப்
பாம்போடு ஒரு கூரையிலே  பயின்றாப் போலே
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா -11-8-3-(2024)தரியாதே ஹிருதயமானாது தடுமாறா நின்றது –அதற்கு நான் செய்ய வேண்டுவது என் என்ன –-என் தாமரைக் கண்ணா –-ஆஜகாம -என்று இலங்கையில் பொருந்தாதே போனவன் தானே-பெருமாளாதானவாறே–விபீஷண விதேயம் ஹி -என்னலாம் படி அங்கே பொருந்தினான் இறே –அப்படியே நீயே உன் திருக் கண்களால் நோக்கப் பெறில் நான் இது தன்னிலும் இருக்க வல்லேன் –ஸ்வம் சம்பந்தத்தாலே பார்த்த அன்று இறே  இவ்விடம் த்யாஜ்யம் ஆவது-அவன் சம்பந்தத்தை இட்டு பார்த்த போது இது தானே உத்தேச்யமாய் இருக்கும் இறே –இதில் அரை ஷணம் பொருந்தாத படியாய் இருக்கிற இவர் பாசுரத்துக்கும்-இது ஒழியச் செல்லாத படியாய் இருக்கிற நம் பாசுரத்துக்கும் வாசி அறியாதான் ஒருவன்
சரண்யனாகப் பெறில் நமக்கு அப் பேறு பெறலாவது-என்று அருளிச் செய்த தாமே-அநந்தரம் – மித்ர பாவேன சம்ப்ராப்தம் -என்கிறபடியே இத் தலையில் உள்ளது போட்கன் ஆனாலும் நான் அவனை விடேன் -என்று அருளிச் செய்த படியால் நமக்குப் பெறுகைக்கு தட்டில்லை -என்று அருளிச் செய்து அருளினார் நஞ்சீயர் –இது மெய்யாதல் -இல்லை யாகில்-பரிஹாரம் இன்றிக்கே போதல் -செய்யும் அத்தனை-இது பொய்யாகிலும் நமக்கு அஞ்ச வேண்டா –-இத்தால்  பொய்யாகாது என்ற படி –-இது பொய்யாகில்-நரகாத்ய அனுபவங்களை  சொல்லுகிறவையோ மெய்யாகப் புகுகிறது  –

நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும்
எந்தாய் தொண்டர் ஆனவருக்கு இன்னருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா
அந்தோ அடியேற்கு அருளாய் யுன்னருளே —11-8-9-(2030)-தலைமை பெற்று உபாஸ்யன் ஆனவனுக்கு லஷணம் என் என்ன –தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக மேவ மஷிணீ-என்று சொல்லிற்று இறே –

முற்றாரா வன முலையாள் பாவை மாயன் மொய்யகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள் தன் நிறைவு இழந்தாள் ஆவிக்கின்றாள் அணி யரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும்
பெற்றேன் வாய் சொல் இறையும் பேசக் கேளாள் பேர் பாடித் தண் குடந்தை நகரும் பாடிப்
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் பொருவற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே -19-பொற்றாமரைக் கயம் என்கிற விசேஷணங்களால் அனுபாவ்ய விஷய ஸ்வபாவத்தை சொல்லுகிறது –மகள் -அணி அரங்கம் ஆடுதுமோ -என்று ஊரைச் சொன்னாள் – தான் –பொற்றாமரைக் கயம் -என்று பெரிய பெருமாளை சொல்லுகிறாள் –தயரதன் பெற்ற மரகத மணித்தடம் -என்றும்-வாசத் தடம் போலே வருவானே -என்றும் தடாகமாக சொல்லக் கடவது இறே –பொற்றாமரைக்கயம் நீராடப்போனாள் =
கீழே திருக்குடந்தை ப்ரஸ்துதமாகையாலே அத்தலத்தில் புண்ணிய தீர்த்தமாக வழங்கி வருகின்ற பொற்றாமரை என்னும் புஷ்கரிணியிலே நீராடப்போனாள் என்று பொருள் கொள்ளப் பொருந்துமாயினும் எம்பெருமான் றன்னையே பொற்றாமரைக் கயமாகப் பேசுகிறாரென்றலும் பொருந்தும். தமிழர், ஸம்ச்லேஷத்தைச் சுனையாடலென்றும் நீராட்டமென்றும் சொல்லுவார்கள்.
எம்பெருமானோடு கலவி செய்ய விரும்புவதையே இங்குப் பொற்றாமரைக் கயம் நீராடப்போவதாகச் சொல்லிற்றென்க.

மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை யிருபாடு இலங்கியாட
எய்வண்ண வெஞ்சிலையே துணையாய் இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண்ணினையும் அரவிந்தம் அடியும் அக்தே
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே–21(2072)-அந்த சௌந்த்ர்ய சாகரத்தில் தான் அகப்பட்ட சுழிகளைச் சொல்லுகிறாள் – பாதாதி கேசாந்தமாகச் சொல்லுதல் -கேசாதி பாதாந்தமாக சொல்லுதல் செய்யாது ஒழிந்தது–தான் அனுபவித்த பிரகாரம் இதுவாகையாலே-கை வண்ணம் தாமரை —-1-பிரதமத்தில் தன்னை மேல் விழுந்து பாணி க்ரஹணம் பண்ணின கையைச் சொல்லுகிறாள் –2-வாய் கமலம் போலும் – கையைப் பிடித்து தன் செல்லாமை தோன்ற –இது ஒரு வடிவு அழகு இருந்தபடி என்-இது ஒரு முலை அழகு இருந்த படி என்-இது ஒரு கண் அழகு இருந்தபடி என் -என்று இவன் சொல்லுச் சொன்ன திரு வதரம் இருந்தபடி –3-கண் இணையும் அரவிந்தம்- இவன் சொல்லுச் சொல்லத் தொடங்கி அனுகூல தர்சனத்தாலே விக்கினால்
குறையும் தலைக் கட்டும் கண் –
இவன் சொல்லுச் சொல்லத் தொடங்கி குறையும் தலைக் கட்ட மாட்டாதே இடையிலே விக்கி குறையும் கண்ணாலே தலைக் கட்டின படி ஆதர ஸூசகம் இறே  இவன் சொல்லு – அவ்வாதரம் இத்தனையும் கண்ணிலே பிரகாசிக்கும்படி நின்றார் -என்கை –4-அடியும் அக்தே -அந் நோக்குக்குத் தோற்று – கண்ணும் வாயும் கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம் -என்று கீழ் சொன்னால் போலே இங்கும் சொல்ல அமைந்து இருக்க -போக்யதா அதிசயத்திலே அவயவங்கள் தோறும் தனித்தனியே தாமரையை த்ருஷ்டாந்தமாக  சொல்கிறாள் –அடியும் தாமரை -என்னாதே-
அடியும் அக்தே
 -என்றது-உபேஷா வசனத்தாலே கீழ் சொன்னவையும் சத்ர்சமான த்ருஷ்டாந்தம் அன்று என்னும் இடம் ஸூசகம் –

படை நின்ற பைம் தாமரையோடு அணி நீலம் -பெரிய திருமடல்    -(2027)

சரணா மறை பயந்த தாமரை யானோடு
மரணாய மன்னுயிர் கட்கெல்லாம் அரணாய
பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு —60–(2141)-அபிமத சித்திகளுக்கு அடைத்த உபாயங்களை உபபாதிக்கிற
வேதத்தை ஜகத்துக்கு அறிவித்ததாலே-ப்ரஹ்மா ப்ரஹ்ம விதாம் வர -என்கிற ப்ரஹ்மா
மந்திர க்ருதப்யோ  நம
-என்று தன்னைச் சால ஜ்ஞானாதிகனாக அபிமானித்து இருக்கிற ப்ரஹ்மாவோடே கூட –

பெயரும் கருங்கடல் நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவன் நோக்கும் –உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு
–67-(2148)–அப்படியே அறிவாகில் ஸ்ரீ யபதியைப் பற்றி யல்லது இராது-இவ் வாத்மா வாகிற தாமரைக்கு ஞானமாகிய விகாஸம் பிறக்கைக்கு-பாஸ்கரனும்
பிரபையும் இறே-ஒண் தாமரையாளும் கேள்வனும்
ஒருவனையே என்கிற அவதாரணைக்கு
வ்யாவ்ருத்தம் தான் அத்தலையாலே தோற்றும் தான் ஒழிய தனித் தோற்றம் தான் இன்றிக்கே இருக்கை

கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது -உண்டதுவும்
தான் கடந்த ஏழ் உலகே தாமரைக் கண் மால் ஒரு நாள்
வான் கடந்தான் செய்த வழக்கு–18-(2199)–தாமரைக்கண் மால் –புண்டரீ காஷனான சர்வேஸ்வரன் –அனைத்துலகும் உடைய அரவிந்த லோசன்னை -திருவாய் -6-5-10-

தாமுளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே -வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது—————–21–(2202)-தாமரை புறம்பே யுண்டே – அல்லோம் என்று இவன் போகிலும்-புறம்பே போக ஒண்ணாத படி பண்டே அவை யுண்டாய்த்தே –ஆகிறது -தான் புறம்பே போய் தேடுமதான புஷ்பமும் -தனக்கே தேட வேண்டாத படி -அவன் குறைவறுத்து வைத்தானே – இவனுடைய விபூதிக்கும் புறம்பு அன்றே பூ –

வந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்காம் மணி விளக்காம் –எந்தை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்

திருவல்லிக் கேணியான் சென்று   —-16–(2297)–நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியாரானவள்-ஒரின்னிள  வஞ்சிக் கொடி-பெரிய திருமடல் -என்னுமா போலே-கொள் கொம்போடு சேர்ந்தால் அல்லது தரிக்க மாட்டாமை-அவன் புருஷோத்தமன் ஆனாப் போலே இவள் நாரீணாம்   உத்தமை –மலர்மகள் விரும்புகையாலே சர்வாதிகத்வம் ஆகை-பஸ்யதாம் வரவா தேவா நாம் யயௌ வஷ ஸ்தலம் ஹரே  -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-105-அநாதரே சஷ்டி – பிரஜைகள் பார்த்து இருக்க-பர்த்தாவின் படுக்கையைக் கணிசித்து ஏறும் தாயைப் போலே-தேவர்கள் பார்த்து கிடக்கத் திரு மார்விலே ஏறினாள்

அடி வண்ணம் தாமரை அன்றுலகம் தாயோன்
படி வண்ணம் பார்க்கடல் நீர் வண்ணன் முடி வண்ணம்
ஓராழி வெய்யோன் ஒளியும் அக்தே அன்றே
ஆராழி கொண்டார்க்கு அழகு —-5–(2286)-திருவடிகள் உடைய படி தாமரை –

படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று
அடிவட்டத்தால் அளப்ப நீண்ட -முடிவட்டம்
ஆகாயமூடறுத்து அண்டம் போய் நீண்டதே
மாகாயமாய் நின்ற மாற்கு ——–13-(2294)-பூ வலயம் -என்னக் கடவது இறே –-பத்மாகார சமுத்பூதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-37-என்னக் கடவது இறே –-சர்வேஸ்வரன் சேஷ்டிதத்தைத் தாம் கண்டு அனுபவிக்கும் படியை அருளிச் செய்கிறார் –படிவட்டத் தாமரை –-திருவடிகள் பிரவேசிக்கப் பெறுகையாலே வந்த ஸ்லாக்யதை-பண்டுலகம் நீரேற்று – படிவட்டத் தாமரை யாகிற லோகத்தை முன்பு நீரேற்று –

பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் -பாற் பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் ——-32-(2313)-பத்ம கோச ப்ரதீகாசம் ஹ்ருதயஞ்சாப் யதோ முகம் -என்று
சாஸ்த்ரைக சமதி கம்யமான ஹ்ருதயக் கமலத்திலே அவனுக்கு இருப்பாக அனுசந்தித்து இருக்கும் அவர்கள் உடைய மனசும்-சாஸ்த்ரங்களிலே ஹ்ருதய கமலம் என்று சொல்லப் பட்ட-அதின் மேலே வைக்கப்பட்ட இந்த்ரியங்களை யுடையரான யோகிகள் உடைய மனசும் –

உளனாய நான் மறையினுள் பொருளை உள்ளத்து
உளனாகத் தேர்ந்து உணர்வரேலும் உளனாய
வண்டாமரை நெடுங்கண்  மாயவனை யாவரே
கண்டாருகப்பர் கவி
———–84-(2365)–ஆஸ்ரிதர்க்கு அனுபவ யோக்யமான விக்ரஹத்தை யுடைய
ஆச்சர்ய சக்தி யுக்தனை-யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-என்று சுருதி பிரசித்தமான கண் அழகை யுடையவனை தமக்குக் காட்டின  வடிவு –

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே -கேழ்ந்த
அடித் தாமரை மலர் மேல் மங்கை  மணாளன்
அடித் தாமரை யாமலர்
–96-(2377)–இவர்கள் மகுடம் தாழ்த்தி வணங்குவது பொறாமல் தழும்பாம்
ப்ரஹ்மாதிகள் ஐஸ்வர்ய ஸூசகமான அபிஷேக யுக்தமான தலைகளைத் தாழ்த்தி ஆஸ்ரயிக்கத் தழும்பாய் இருக்கும் –-கேழ்ந்த அடித்தாமரை மலர் மேல் – கிளர்ந்த வடித் தாமரை –பருத்த தாளை யுடைய தாமரை –இத்தால் பெரிய பிராட்டியார் எழுந்து அருளி இருக்கத் தாமரை பொறுக்கை – எழுச்சியையும் அழகையும் யுடைத்தான தாமரை -என்றுமாம் –ஸ்ரமஹரமாய்ச் சிவந்த நிறத்தை யுடைத்தான தாமரை–என்றுமாம் –இப்படிப் பட்ட தாமரைப் பூவிலே எழுந்து அருளி இருப்பதும் செய்து
நித்ய யௌவனத்தை யுடையளான பெரிய பிராட்டியாருக்கு –மணாளன் – அவளுக்கு போக்தாவானவன் –மணாளன் அடித் தாமரை –-அவளுடைய திருக் கைகளாலே தொடும் போதும்
கூசித் தொடும் படியான ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளை-இத்தால் நித்ய ஸூரிகளுக்கும்
ப்ரஹ்மாதிகளுக்கும்-உபாஸ்யம் ஒரு மிதுனம் -என்றபடி –அடித் தாமரை யாமலர் –-திருவடித் தாமரை யாகிற அலர் தழும்பாம் பூத் தழும்பு ஆகாதோ –

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்
தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்
தேனமரும் பூ மேல் திரு
——100-(2081)-ஆஸ்ரிதரை சஹ்ருதயமாகக் குளிர நோக்கா நின்ற
உதாரமான தாமரை போலே இருக்கிற ஒழுகு நீண்ட கண்ணை யுடையவள் –பஸ்யதாம் சர்வதேவானாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-105–அநாதரே ஷஷ்டி –தயா விலோகிதா தேவா ஹரி வஷச்தலஸ் தயா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-106-மார்விலே இருந்து அவர்கள் புறங்கால் வீக்கம் தீரக்
குளிர நோக்கினாள்-தேன் செறிந்து இருந்துள்ள பூவின் மேலே இருக்கிற பெரிய பிராட்டியார்-நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியார் –- நமக்கு எல்லாக் காலத்துக்கும் அபாஸ்ரயம் –

மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான் -திங்கள்
சடை ஏற வைத்தானும் தாமரை மேலானும்
குடை ஏறத் தாங்குவித்துக் கொண்டு-43-(2424)-மேக பதத்தளவும் உயர்ந்த சிகரங்களை யுடைத்தான-
வடக்கில் திருமலையிலே நின்று அருளினவனை- ராத்ரியிலே காப்பிடுகைக்காக புகுந்தார்கள்
சந்த்ரனை ஜடையிலே வைத்த ருத்ரனும்–திரு நாபி கமலத்திலே பிறந்த ப்ரஹ்மாவும்-பக்தி பாரவச்யத்தாலே திரு முத்தின் குடை தொடக்கமான சமாராதன உபகரணங்களைக் கொண்டு
தத் சர்வம் தர்ம வீர்யேண  யதாவத் சப்ரச்பச்யாதி -பால -3-4-என்னும்படி திருமலையிலே-வ்ருத்தாந்தத்தை அனுசந்தித்து சந்த்யா காலத்திலே ப்ரஹ்மாதிகள் பணி கண்டு அருளுகைக்கு-
சத்ராத் யுபகரணங்களைக்  குடையாகப் பிடித்துக் கொண்டு திரு வந்திக் காப்பு அணிகைக்குப்   புகா நிற்பார்கள் -என்கிறார் –

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே
 – 58-(2535)—பங்கஜம் -சேற்றுத் தாமரை -நீர் நிலையிலே இருந்து அலர்ந்து செவ்வி குன்றாத இருக்கும் தாமரை போன்ற திருக் கண்கள்–அழற்றிலே  நின்று அலர்ந்த தாமரைப் பூ போலே இருந்த உள்ள திருக் கண்களை உடையவன் –-தச்யதா கப்யாசம் புண்டரீகம் மேவ அஷணீ -என்னக் கடவது இறே

இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்
வடம் போதினையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்
தடம் போதொடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே 
– -76 (2553)-விஸ்மயநீயமான தாமரையினுடைய பெருத்த பூவானது ஒடுங்கவும் – ஷூத்ரமுமாய் புல்லிதமுமான ஆம்பல் அலரும்படியாகவும் பண்ணுமதான வெண் திங்கள்-சந்திரன் தாமரையை வருத்தி மூடச் செய்து ஆம்பலை அலர்த்துவது போலே -தாமரைக்கு தலைவன் ஸூரியன் மறைந்த இடத்தில் தலைவனை பிரிந்த என்னை வருத்தி கை வளைகள் கழல பண்ணுவதில் ஆச்சர்யம் இல்லையே-

தமராவர் யாவர்க்கும் தாமரை மேலார்க்கும்
அமரர்க்கும் ஆடு அரவத் தார்க்கும் -அமரர்கள்
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால் வண்ணன்
தாள் தாமரை அடைவோம் என்று-91-(2472)–தாளையுடைய தாமரைப் பூக்களை திருவடிகளிலே இட்டு வணங்கி சர்வேஸ்வரனுடைய திருவடித் தாமரைகளை அடைவோம் என்று-தாள் தாமரை அடைவோம் என்று தமராவார் தாமரை மேலாற்கும்  அமரர்க்கும் ஆடரவத்தாற்கும்-அச்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூ ரிகளுக்கும் மற்றும் எல்லாருக்கும் நிர்வாஹகரான தேவர்களாம் படி யான பெருமையை யுடையவர்கள் என்றுமாம்-மாமேகம் சரணம் வ்ரஜ -என்கிறபடியே கறுத்த  நிறத்தை யுடையனான கிருஷ்ணனுடைய திருவடித் தாமரைகளிலே செவ்விப் பூக்களைப் பணி மாறித் தங்கள் தலைச் சுமையை அங்கே வைத்து ஆஸ்ரயித்து அவன் திருவடிகளை அடைவோம் என்னுமவர்கள் என்றுமாம்
தாள் தாமரை அடைவோம் -என்று தமராவார் தாமரை மேலாற்கும் ஆடரவத்தாற்கும் அமரர்க்கும் இத் யந்வய –

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே
 – 58-(2535)-அழற்றிலே  நின்று அலர்ந்த தாமரைப் பூ போலே இருந்த உள்ள திருக் கண்களை உடையவன் –-தச்யதா கப்யாசம் புண்டரீகம் மேவ அஷணீ -என்னக் கடவது இறே–

செக்கர் மா முகில் உடுத்து மிக்க செம் சுடர் பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவள செவ்வாய் திகழ பசும் சோதி மரகத குன்றம்
கடலோன் கை மிசை கண் வளர்வது போல் பீதக ஆடை முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து சோதி வாயவும் கண்ணவும் சிவப்ப மீது இட்டு
பச்சை மேனி மிக பகைப்ப நச்சு வினை கவர் தலை அரவின் அமளி ஏறி
எறி கடல் நடுவுள் அறி துயில் அமர்ந்து சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த தாமரை வுந்தி தனி பெரு நாயக மூ வுலகு அளந்த சேவடியோயே –1–(2578)–சகல ஜகத் உத்பத்தி காரணமான திரு நாபி கமலத்தை உடையவனாய் இப்படி இருப்பார் அவ்வருகு யாரேனும் உண்டோ என்ன-இத்தால் அவ்வருகு இல்லை என்னும் இடத்தைச் சொல்லுகிறது
அவ்வருகு இல்லையாகில் தன்னோடு ஓக்க சொல்லலாவார் உண்டோ என்னில்-தனி அத்விதீய நாயகன் – புறம்பேயும் சிலரை நாயகராகச் சொல்லுவது ஓவ்பசாரிகம் ருத்ரம் ஸமாச்ரிதா தேவா ருத்ரோ ப்ராஹ்மணம் ஆஸ்ரித- ப்ரஹ்மாம் மாம் ஆஸ்ரிதோ ராஜன் நாஹம் கஞ்சித் உபாஸ்ரித-பாரதம் -ஆஸ் –118-37-தாமரை யுந்தி -தனி பெரும் -இவற்றால் –-நிமித்த -உபாதான -ஸஹகாரிகளும் தானே என்கை –சேவடியோயே – இழந்த இழவை மீட்டு ரஷியாதே காதுகனனே யானாலும் விட ஒண்ணாதபடியே யாயிற்று திருவடிகளின் போக்யதை இருக்கிறபடி-கண்ணழிவற்ற அழகையும் குணங்களையும் அனுபவித்தார் –

உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல் சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆர்
உயிர் உருகி யுக்க நேரிய காதல் அன்பில் இன்பீன் தேறல் அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருள்க்கு அசைவோர் அசைக திரு வோடு மருவிய இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம்
மூன்றினோடு நல் வீடு பெறினும் கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே ?-2–(2579)–தாமரை போலே இருக்கிற திருவடிகளை என்றவாறே-கதா புந சங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்த அங்குச வஜ்ர லாஞ்சனம்-த்ரிவிக்ரம த்வத் சரணம் புஜ த்வயம் மதீய மூர்த்தாநாம் அலங்க்ருஷ்யதி –ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -31- (திரிவிக்ரமனே சங்கு சக்கரம் கல்பக வ்ருக்ஷம் கொடி தாமரை அங்குசம் வஜ்ராயுதம் இவைகளை அடையாளமாக யுடைய திருவடித் தாமரை இணை என் தலையை எப்போது தான் அலங்கரிக்கப் போகிறதோ )–என்ன வேண்டி இருக்கும் இறே-

மா முதல் அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடி போது
ஓன்று விண் செலீ இ நான் முகப் புத்தேள் நாடு வியந்து உவப்ப வானவர் முறை முறை
வழி பட நெறீ இ தாமரை காடு மலர்க் கண்ணொடு கனி வாய் உடையது
மாய் இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன கற்பகக காவு பற்பல வன்ன
முடி தோள் ஆயிரம் தழைத்த நெடியோய் கல்லது அடியதோ வுலகே ?-5-(2582)–பரம காரணமானவனுடைய திருவடி என்னுதல் -திருவடி தனக்கேயாய் சேஷ பூதர் அடைய வந்து சேருவது திருவடிகளில் ஆகையால் அவர்களுக்குப் பரம ப்ராப்யமான திருவடி என்னுதல்-அடி யாகிற செவ்விப் பூ -என்றபடி –அடியாகிய அன்று அலர்ந்த செவ்விப்பூ -என்றபடி-அடி -திருவடி -திருவடி யாகிற செவ்விப் பூவை-ஒரு செவ்வித் தாமரைப் பூவை கவிழ்த்து அலர்த்தினால் அதினுள் அல்லிக்கு உள்ள நெருக்கு இறே-திருவடியின் கீழ்ப் பட்ட பதார்த்தங்கள் உள்ளது-ஆரேனுமாகத் தன திருவடிகளைத் தலையிலே வைத்தால் ஆதித்ய சந்நிதியில் தாமரை போலே திருக்கண் செவ்வி பெறுமாயிற்று–தாமரைக் காடு அலர்ந்தால் போலே இருக்கிற திருக் கண்ணோடே கனிந்த வாயையும் யுடைத்தாய் இருப்பதுமாய் –

முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே
புகரிலகு தாமரையின் பூ –
72-(2656)-ப்ரஹ்மாவுக்கு உத்பத்தி ஸ்தானமான தாமரைப்பூ உன் திரு நாபியதன்றோ-இத்தால் ப்ரஹ்ம ருத்ராதிகள் இவனுக்கு ஸமர் அல்லர் என்னும் இடமும் அவர்களில் ஒருவன் ஜகத்துக்குக் காரணம் என்னும் இடமும் மூவரையும் ஒழிய-மூவரில் பிரதானராய் இருக்கிற விஷ்ணுவையும் ஒழிய – வேறே ஓன்று ஜகத்துக்குக் காரணம் அன்று என்னும் இடமும் சொல்லுகிறது

தாரானை தாமரை போல் கண்ணானை எண் அரும் சீர்–சிறியதிருமடல் -5-(2708)-தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்-2(713)-மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர் மேல்(2715)

தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரை மேல் (2771)-பெரிய திருமடல்-

சார்ந்த தென் சிந்தை வுன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்த தத் தாமரைத் தாள்களுக்கு
உன்தன் குணங்களுக்கே
தீர்ந்த தென் செய்கை முன் செய்வினை நீ செய்வினையதனால்
பேர்ந்தது வண்மை யிராமானுசா ! எம் பெரும்தகையே !–71-(2861)-அன்பு தான் –தாமரைத் தாள்களுக்கு –
உன் தாளிணை-என்று சம்பந்தம் உள்ளமையின் சிந்தை சார்ந்தமை கூறினார் முன்பு .-இப்பொழுது சம்பந்தம் இல்லா விடினும் -விட ஒண்ணாத இனிமை-போக்யதை –கூறுகிறார் .-தாமரைத் தாள்கள் ஆதலின் -இனிமையை நுகர்ந்து -பக்தி தானே மிகவும் வளர்ந்து விட்டது -என்க –-சார்ந்து இனிமையை நுகர விசேஷ கடாஷம் ஹேது-அன்பு மிகவும் கூர்தல் -தானாக வந்தது -என்று அறிக-

தன்னை வுற்றாட் செய்யும் தன்மையினோர் மன்னு தாமரைத் தாள்
தன்னை வுற்றாட் செய்ய என்னை வுற்றானின்று தன் தகவால்
தன்னை வுற்றாரன்றித் தன்மை வுற்றாரில்லை என்றறிந்து
தன்னை உற்றாரை இராமானுசன் குணம் சாற்றிடுமே – – -97 –(2887)-மன்னு தாமரைத்தாள் தன்னை உற்றாள் செய்ய என்னை உற்றான் இன்று – த்ர்ணீ கர்த விரிஞ்சாதி நிரந்குச விபூதய -ராமானுஜ பதாம் போஜ சமாச்ரயண சாலி ந-என்றும் – ஸ்ரீ ராமாநுஜார்ய சரண த்வந்த்வ கைங்கர்ய வ்ர்த்தய-சர்வாவச்தாஸூ சர்வ ரஸூ -தாரக போஷகாஸ் சமே –என்றும் சொல்லுகிறபடி – இப்படி சர்வ பிரகாரத்தாலும் ஸ்லாக நீயராய் இருக்குமவர்கள் –-உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் ஸ்ரீ கண்ணன் எம்பெருமான் –என்று ஸ்ரீ ஆழ்வார் அத்யவசித்தால் போலே
தமக்கு தாரகாதிகளாக அத்யவசித்து –-கம்பீராம்பஸ் சமுத்பூதமாய் -செவ்வி பெற்று இருக்கிற செந்தாமாரை போலே-அதி ஸூ குமாரங்களாய் -ஒன்றுக்கு ஓன்று போலியாய் -பொலிந்து என்றும் –
மன்னு தாமரை தாள்கள் அன்றோ-அத்யந்த போக்யங்களாய் இருக்கிற அவர்களுடைய திருவடிகளை –

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே
 –1-4-2-(2933)-விஸ்லேஷ தசையிலே தான் வரும் தனையும் இவள் தரித்து இருக்கைக்காக -ஆத்மாத்யீங்கள் எங்கேனும் கிடக்கிலும்-உன்னது அன்றோ என்கிற வார்த்தையாலே என்னுடையவர் என்கிறாள்-ஐஸ்வர்யத்தாலும் வாத்சல்யத்தாலும் கலவியாலும் சிவந்த திருக் கண்களை யுடையவர்-இவை எல்லாம் இவள் அனுபவித்தவை இறே
முதல் திருவாய் மொழியிலே ஐஸ்வர்யமும் -மூன்றாம் திருவாய் மொழியிலே வாத்சல்யமும் இத் திருவாய் மொழியிலே கலவியும் –

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே –1-10-3-(3000)–தம் அளவேயாய் அடி அற்று இருக்கை அன்றிக்கே-என் குடி நாயன் -என்கிறார்-சமாசத்ரிய ஜெகந்நாதம் மமபூர்வேபிதா மஹா விபஷாபஹ்ருதம் ராஜ்ய மவாபு புருஷோத்தமம்-தண் தாமரைக் கண்ணனை-பிரயோஜன நிரபேஷமாக புகழுகிறார் -என்று உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணாலே குளிர நோக்கினான்-இந்நோக்குக்கு அடி சொல்லுகிறது மேல்-கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை-

தகும் சீர்த் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேலறிவார் யவரே –2-2-5-(3024)–தகும் என்னும் இடத்தை ஸ்பஷ்டம் ஆக்குவதாய் -ரக்ஷகத்வம் இல்லையே யானாலும் விடப் போகாதபடி தர்ச நீயமான-அக் கண் அழகாலே என்னை ஜிதம் என்னப் பண்ணினவன் –யதா கப்யாசம் புண்டரீக ஏவம் அஷிணி-ராம கமல பத்ராஷ

எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-(3056)-முன்பு சொன்ன சாமான்யம் ஒப்பாக மாட்டாது -அப்போது அலர்ந்தது ஆனால் யாயிற்று ஒப்பாவது-கண் பாதம் கை கமலம்–கண் -பந்தத்தை விளைக்கும் கண்-பாதம் -பந்தம் பிறந்தால் அனுபவிக்க இழியும் துறை –-கை கமலம் -தம்மோட்டை ஸ்பர்சத்தாலே செவ்வி பெற்ற படி-

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –
2-6-2-(3065)-பிராட்டி பின்னே வந்து அணைத்தாலும் விலங்கப் பார்க்கிறிலன் –-இங்கே ஆளவந்தாருக்கு குருகைக் காவல் அப்பன் அருளிச் செய்த வார்த்தை-என் பைந்தாமரைக் கண்ணனே–ஆடியாடியிலே ஆற்றாமையால் வந்த தாபம் தீர்ந்து திருக் கண்களும் குளிர்ந்த படி –

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப்
பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை
நாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –2-6-3-(3066)-ஒரு கால் நோக்கினால் நித்ய ஸூரிகள் ஜ்வர சந்நிபதரைப் போலே அடைவு கெடக் கூப்பிடுவார்கள் ஆயிற்று-தலைமகனை – இப்படிக் கூப்பிடா நின்றாலும் –நிரவத்ய பர ப்ராப்தே-என்கிறபடியே அவ்வருகாய் இருக்கும்

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-5-(3079)-விட்டு விளங்கா நின்றுள்ள சிவந்த தேஜஸை உடைத்தான தாமரைப் பூ போலே தலையிலே வைக்கப் புகுகிற திருவடிகளும் அணைக்கப் புகுகிற கைகளும் குளிர நோக்குகிற கண்களும்

சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –2-7-9-(3079)–நீர் பாய்ந்த பயிர் போலே -அவள் சந்நிதியாலே குளிர்ந்த திருக் கண்களை உடையவன்-வக்ஷஸ்தலேந ச்ரியம் உத்வஹம் விபு -விஸ்தாரி பத்மோத்பல பத்ர லோசன–மைய கண்ணாள் –என்று இறே அவனை அனுபவிக்கிறவள் கண் இருப்பது

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-(3082)-ஸுலப்யத்தையும்-ஸ்ரமஹரமான வடிவு அழகையும் -அதுக்கு பரபாகமாய் தன் பேறாக நோக்கின கண் அழகையும் உடையவன்-

சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –2-7-9-(3083)-ச்ரியா சார்த்தம் ஜகத் பத்தி ஆஸ்தே -என்று நித்ய ஸூ ரிகள் ஓலக்கத்திலே-பிராட்டியும் தானும் சேர இருக்கும்-இருப்பில் யாயிற்று இவர் ஊனில் வாழும் உயிரிலே ஆசைப்பட்டது –-செய்ய தாமரைக் கண்ணன்–நீர் பாய்ந்த பயிர் போலே -அவள் சந்நிதியாலே குளிர்ந்த திருக் கண்களை உடையவன்-வக்ஷஸ்தலேந ச்ரியம் உத்வஹம் விபு -விஸ்தாரி பத்மோத்பல பத்ர லோசன–மைய கண்ணாள் -என்று இறே அவனை அனுபவிக்கிறவள் கண் இருப்பது

முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –3-1-1-திரு முகத்தின் அழகு நிலை கொள்ள ஒண்ணாமையாலே திருவடிகளில் வர வீசிற்று-அங்கண் அல்லது அழகுக்கு ஆவது உண்டாயாயாதல் ஆசைக்கு அவதி உண்டாயாயாதல் அன்றே -திருவடிகளின் அழகு ஆசன பத்மமாய்க் கொண்டு விகசிதமாயிற்றோ-நீ நின்ற தாமரை அடிச்ச சோதியாய் அலர்ந்ததுவோ-திரு அபிஷேகத்தின் சம்சயம் இங்கே தீர வந்தார் -இங்கும் சம்சயமாய் இருந்தது

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –3-1-2-(3122)-சொல்லில் -கட்டுரை என்று முழுச் சொல்லாய் -சொல்லில் என்றபடி -நெஞ்சாலும் பரிச்சேதிக்க ஒண்ணாதாய் இருக்க பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது-தாமரை –-தாமரை ஜாதியாக ஓர் அவயவத்துக்காக ஒப்பாக மாட்டாது என்கை –
நின் கண் பாதம் கை யொவ்வா-முதல் உறவு பண்ணும் கண் -அதுக்கு தோற்று ஜிதந்தே என்று விழும் திருவடிகள் -அவ் விழுக் காட்டுக்கு தோற்று அவன் தான் ஜிதந்தே என்று அணைக்கும் கை
நின் கண் -என்கையாலே –உனது முகச் சோதி -என்றத்தை நினைக்கிறது –பாதம் -என்றது அடிச் சோதி என்றத்தை நினைக்கிறது-கை -என்று நடுவு தாம் அனுபவித்த அழகுக்கு உப லக்ஷணம்

ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–
3-3-9-(3151)-துக்க நிவ்ருத்திக்காக திருமலையில் வந்து நின்ற ஸூ லபன் ஆனவன்-நிரதிசய போக்யமான திருவடிகளை மநோ வாக் காயங்களால் அனுபவிக்கப் பார்ப்பார்க்க-இது இறே துக்க நிவ்ருத்திக்கு குடிக்கிற வேப்பங்குடி நீர் 

செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம் மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே.–3-6-1-(3176)–தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ-என்றும்-யஞ்ஜேசோ யஞ்ஞ புருஷ புண்டரீகாக்ஷ சம்ஞ்சித -என்றும் ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே செவ்வியை உடைத்தாய் சிவந்த தாமரைப் பூ போலே இருக்கிற கண் அழகை உடையனாய்-பிரளய ஆர்ணவத்திலே அந்தர படாத படி ஜகத்தை திரு வயிற்றில் வைத்தவன் கிடீர் –வடிவு அழகில் புண்டரீகாக்ஷத்வம் போலே குணங்களில் பிரளய ஆபத் ஸகத்வமும்

திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை
சுரியும் பல் கருங்குறிஞ்சி எங்கள் சுடர் முடி யண்ணல் தோற்றமே –3-6-5-(3180)-கரிய மேனியன்
அசாதாரண விக்கிரஹத்தை சொல்லுகிறது-செய்ய தாமரைக் கண்ணன்-வாத்சல்ய ஸூ சகமான கண் அழகை உடையவன்-கண்ணன்-சர்வ ஸமாச்ரயணீயன் ஆகைக்காக ஸூ லபன் ஆனவன்-விண்ணோர் இறை-அந்நிலையில் நித்ய ஸூ ரிகளும் வந்து ஆஸ்ரயிக்கலாம் படி பரத்வத்தை உடையவன்

கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே! நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே! சென்று செல்லாதன முன் நிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8-(3205)-அழகு என்றும் தாதாஸ்ரயம் என்றும் இரண்டு அன்றிக்கே அழகு தானே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கை-ஞான ஸ்வரூபன் என்றும் ஞான குணகன் என்றும் சொல்லக் கடவது இறே ஞாதாவை
தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே!-தாமரையை ஒரு போலியாகச் சொல்லலாம் படி யான திருக் கண்களை உடையையாய் அதுக்கு பரபாகமாய் சிரமஹரமான வடிவை உடையவனே-அஞ்சனம் என்றும் நீலம் என்றும் சொல்லுகையாலே ஓன்று ஒப்பாக மாட்டாமையாலே கதிர் பொறுக்குகிறார்
நீலம் தன்னை வடிவாக வகுத்தால் போலே இருக்கை –

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.–4-3-11-(3263)-ஆழ்வார் பிரணயித்வ குண அனுசந்தானத்தாலே தரித்தவாறே ஊரும் தளிரும் முறியுமாயிற்று –அகாலப்பலிநோ வ்ருஷா
சிவந்த தாமரையை உடைய பழனங்களை உடைத்தாய் தெற்குத் திக்குக்கு ஸ்லாக்யமான திரு நகரியை உடைய ஆழ்வார்-ந தே வாக ந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி -என்கிறபடியே திருவாய் மொழி எல்லாவற்றுக்கும் ஆதல்-அவாப்த ஸமஸ்த காமன் ஒரு சம்சாரியினுடைய சத்தாதிகளே தனக்கு போக உபகரணமாக இருந்தான் -என்கிற பிரணயித்வத்தில் ஒரு பொய் இன்றிக்கே இருக்கிற பத்து என்னுதல் –

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு

அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-(3282)-குளிர்ந்த ஆசன பத்மத்தாலே தரிக்கப் பட்ட திருவடிகளை உடைய சர்வேஸ்வரனை-திருவடிகளில் மென்மை குளிர்த்தி நாற்றம் தொடக்கமான போக்யதைக்கு தோற்று சுமக்கிற படி-ஆசன பத்மத்தால் அல்லது தனக்கு ஸ்திதி இல்லாதா போலே என் கவி அல்லாது தரிக்க மாட்டாது இருக்கை

காண வந்து,என் கண் முகப்பே தாமரைக் கண் பிறழ,
ஆணிச் செம்பொன் மேனி எந்தாய்! நின்று அருளாய் என்று என்று,
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனையே?–4-7-4-(3300)0மானஸ அனுபவம் மாத்திரம் அன்றிக்கே கண் எதிரே காணும் படி வந்து காணும் படி வர வேண்டும் என்றுமாம் –தாமரைக் கண் பிறழ,
தாமரை போன்ற திருக் கண்கள் கடல் கிடந்தால் போலே மிளிர –பிறழ,-விளங்க என்றுமாம் 

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.–4-7-11-(3307)–நான் விடுவேன் என்னிலும் விட ஒண்ணாத உடன் வந்தியான-அதிமாத்ர ப்ரேமத்தாலே-தாமரைக் கண்ணன்றனைக் –இக் காதலுக்கு கிருஷி பண்ணினாராய்ச் சொல்லுகிறார்-கண்ணாலே குளிர நோக்கி யாயிற்று -இவருக்கும் காதலை விளைவித்தது –செந்தாமரைக் கண்ணோடு மறப்பற என்னுள்ளே மன்னினான் -என்னக் கடவது இறே -இது இறே மதி நலம் அருளின படி

புறமறக் கட்டிக் கொண்டு இருவல் வினையார் குமைக்கும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண் டொழிந்தேன்
நிறமுடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
அறமுயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே
–5-1-6-(3346)-நிறமுடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்-வைத்த கண் வாங்க ஒண்ணாத படி அழகிய நிறத்தை உடைத்தாய் -சர்வ பூஷண பூஷார்ஹங்களாய் -கற்பக தரு பணித்தாள் போலே நாலாய்-பாஹுச்சாயாம் அவஷ்டப்த -என்று சகல லோக ஆபாஸ்ரயமான தோள் —செய்ய வாய் -சவிலாசஸ்ஸ்மிதாதாரம் பிப்ராணம் முக பங்கஜம் என்று முகமாகிறது முறுவல் எடுத்து வைக்க கொள் காலம் ஆயிற்று-செய்ய வாய் -தோளை அண்டை கொண்டார்க்கு -அபாயம் சர்வ பூதோப் யோ தாதாமி -என்னும் வாய்-செய்ய தாமரைக் கண் -ராம கமலா பத்ராஷ -என்கிறபடி இதுக்கு அடியான பிராப்தி எல்லாம் தோற்றும் படி விசேஷ கடாக்ஷம் பண்ணும் கண் – அறமுயல் ஆழி அங்கைக் – லஷ்மணஸ்ய தீமத-என்கிறபடி ரக்ஷகனான ஈஸ்வரனைக் காட்டிலும் ஆஸ்ரித ரக்ஷண தர்மத்தில் உத்யுக்தமான திரு வாழியைக் கையிலே உடையவன்-

என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறைகொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.–5-3-2-(3364)-கண்ணாலே தவாஸ்மி-என்று என்னை சொல்லி என்னை சர்வ ஸ்வபஹாரம் பண்ணினான் -கிட்டினால் என்னுடையவன் என்னும் படி இறே இருப்பது -வாத்சல்யத்தாலே குதறிச் சிவந்த கண்ணாலே -ஆத்மாத்மீயங்கள் நீ இட்ட வழக்கு அன்றோ -என்று சொல்லி என்னை உரி சூறை கொண்டான் –தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி -என்னக் கடவது இறே -சொலவு ஒன்றும் செயல் ஒன்றும் ஆயிற்று -அவனுக்கு புண்டரீகாக்ஷத்வம் போலே இவளுக்கு ஸ்த்ரீத்வம் –என்னை நிறைகொண்டான்-என்று வாய் விடப் பண்ணுகை -இழந்தவை இன்னவை என்கிறாள் -மேல

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–(3382)-இத்தசையில் புண்டரீ காஷனான ஸ்ரீயபதியும் வருகிறிலன் -சிவந்த ஒளியை யுடைய தாமரைப் பூ போல் இருக்கிற திருக் கண்களை யுடைய ஸ்ரீ யபதியும் வருகிறிலன் -இந்த துர்த்தசையிலே குளிர நோக்கிக் கொண்டு இருவருமாய் வர ப்ராப்தமாய் இருக்க அது கிட்டிற்று இல்லை -ஆதித்யன் உதித்தாலும் ராத்திரி வர சம்பாவனை யுண்டு -அஸ்தமியாத ஆதித்யன் வருகிறிலன் –பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்னக் கடவது இறே

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என்நெஞ்சமே.–5-5-1-(3385)ஒரு கலத்தில் உண்பாரைப் போலே வாகாம்ருத சாரஸ்யத்தை அறியும் ஸ்ரீ பாஞ்ச கண்ட பின் -மீட்கப் பார்க்கில் ஒக்கவே துடக்க வேண்டாவோ-சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்ஜன்யத்தோடு சாம்யம் உண்டே -ஸ்யாமளமான வடிவுக்கு பரபாகமான ஆழ்வார்களோடே யுண்டான சேர்த்தியோடும் -இரண்டிலும் வந்து அலை எறிகிற திருக் கண்களோடும் -விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம் என்கிற இவை யுண்டாய் இருக்கை

பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே.–5-5-5-(3389)–அப்புருவத்துக்குத் தகுதியாக தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கண்களும்-பாவியேன் -அவன் அழகை அனுசந்தித்தால் பிரியப்படுகை யன்றிக்கே நோவு படும் படியான பாபத்தை பண்ணினேன்-ஆவியின் மேலனவே-தோல் புரையிலே போகை யன்றிக்கே -உயிர் நிலையிலே நின்று நலியா நின்றது -உள்ளு வெளிச்சு இருக்கிறாப் போலே புறம்பும் ஆகப் -பெற்றோம் ஆகிறிலோம்-

மேலும் வன்பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
கோல நீள்கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.–5-5-6-(3390)-அழகு மிக்க கொடி போலே இருக்கிற மூக்கும் -அழகு கொழுந்து விட்ட தொரு கொடி போலே இருக்கை-அக் கொடி பூத்தால் போலே யாய் -தாமரைப் பூப் போலே இருக்கிற திருக் கண்களும் -அது ஒரு பலத்தை உண்டாக்கினால் போலே கனி போலே இருக்கிற திருவதரமும்-நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.
இவற்றுக்கு பரபாகமாய் -தாமரை இலை போலே இருக்கிற திரு மேனியும் –-கற்பக தரு பணைத்தால் போலே மநோ ஹரமாய்-அவ் வழகைக் காத்தூட்ட கடவ தோள்களும்-என் நெஞ்சம் நிறைந்தனவே.–ஹித வசனம் கேட்க்கைக்கு நெஞ்சில் இடம் இல்லை –

கையுள் நன்முகம் வைக்கும் நையும்என்று அன்னையரும் முனிதிர்
மைகொள் மாடத் திருக்கு றுங்குடி நம்பியை நான் கண்டபின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே.–5-5-8-(3392)-அநந்யார்ஹம் ஆக்கும் கண்ணும் -அதுக்குத் தோற்றார் இளைப்பாறும் அல்குலும் -கீழையும் மேலையும் கொண்டு எறி யும் படி உன்நேயமான இடையும் -இவற்றுக்கு ஆச்ரயமான வடிவும்-

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-(3407)-வரள் தாமரை யுண்டாகையாலே -சேற்றுத் தாமரை என்று விசேஷிக்கிறார் -செந்நெல்களூடே அலர்ந்த தாமரைகள் செந்நெலுக்கும் கூட நிழல் செய்யா நிற்கும் என்கை -வான மா மலைக்கு சத்ருசமாய் இருந்துள்ள போக்யதையைச் சொல்லுகிறது-பரமபதத்தில் காட்டில் தனக்கு நகரமாக விரும்பி வர்த்திக்கிற தேசம் -சம்சாரிகளுடைய ரக்ஷணத்துக்காக நித்ய வாசம் பண்ணுகிற தேசம்

காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.–5-9-6-(3434)-தன்னுடைமை பெறுகைக்கு தான் அர்த்தியாய் -வடிவை குறுக விட்டு மிக்க அழகை யுடையவனாய் -ஸுலப்யத்தையும் அழகையும் திரு வல்ல வாழிலே ஆஸ்ரிதரை அனுபவிப்பித்துக் கொண்டு நிற்கிறவனுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை காண்பது எஞ்ஞான்று கொலோ-மலர்த்தாமரை -அப்போது அலர்ந்த தாமரை –

பாதங்கள் மேலணி பூந்தொழக் கூடுங்கொல்? பாவை நல்லீர்!
ஓத நெடுந் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர்
மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்
நாதன் இஞ்ஞால முண்ட நம்பிரான் தன்னை நாடொறுமே.–5-9-7-(3435)-கடல் போலே பெருத்த பொய்கை களிலே யடி உயரத்தால் உயர்ந்த தாமரைகளும் செங்கழு நீரும் -ஸ்த்ரீகளுடைய ஒளியை யுடைத்தான முகத்தையும் கண்ணையும்-

பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்கப்
பையவே நிலையும்வந்து என்நெஞ்சை உருக்குங்களே.–5-10-3-(3442)-நெய்யைக் களவு கண்டான் என்னும் வார்த்தா பிரஸ்தாவத்திலே ஸ்நேஹ அதிசயத்தாலே தாயார் கையில் கோலை எடுத்தாள்-எதிரிகள் அஞ்சும் படி கோல் கொள்ளுமவன் கிடீர் இவள் கையில் கோலுக்கு அஞ்சுகிறான் -சத்ருக்களை அஞ்சப் பண்ணும் -ஆஸ்ரிதற்கு தான் அஞ்சும் -தாய் எடுத்த சிறு கோலுக்கு -என்ன கடவது இறே-நீ -வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டும் அழகை யுடைய நீ -சர்வ சக்தியான நீ என்றுமாம்-உனக்குத் தகுதியான கண்கள் –கண்ணில் பரப்பு அடங்க நீரிலே நிறையும் படி

திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய்; ஒண் சிறு பூவாய!
செருத்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திரு வண் வண்டூர்
பெருந் தண் தாமரைக் கண் பெரு நீண் முடி நாற்றடந்தோள்
கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே.–6-1-8-(3458)-அவனுடைய போக்யத்தையே அன்றிக்கே போக ஸ்தானமே அமைந்து இருக்கை -போக்தாக்கள் அளவன்றிக்கே பெருத்து சிரமஹரமாய விகாசம் செவ்வி குளிர்த்தி இவற்றையும் யுடைத்தான திருக் கண்கள் –

போகு நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
ஆகள் போகவிட்டுக் குழலூது போயிருந்தே.–6-2-2-(3463)-இவளுடைய அம்ருத உபமானமான நிஷேத வசனம் கேட்ட வாறே ஓர் நீர்ச்சாவியிலே ஒரு பாட்டம் மழை விழுந்தால் போலே அவயவங்கள் விக்ருதமாயிற்றன-ச மஹாத்மா ஸூ துர்லப-என்று கிட்ட உபேக்ஷிக்க கிடையாத சம்சாரத்தில் இவ்வளவு அவகாஹித்து -பிரளய ரோஷத்தால் போ என்பாரைப் பெற்றால் விக்ருதனாகச் சொல்ல வேணுமோ – தாமரை புரை கண்ணிணையும் –விகாசம் செவ்வி குளிர்த்தி பரிமளம் இவற்றை உடைத்தாகை-செவ்வாய் முறுவலும்-ஹர்ஷத்துக்கு போக்கு விட்டு அதரத்தில் பழுப்பு எறித்து தோற்ற ஸ்மிதம் பண்ணி நின்ற நிலை-

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9-(3470)-பிரிந்து நெஞ்சை புண் படுத்துகையால் வந்த உருகுதல் ஒழிய -எங்கள் உகவையால் நெஞ்சம் உள்ளுருகி-உன் தாமரைத் தடம்கண் விழிகளின்-அகவலைப் படுப்பான் –-தாமரைத் தடாகம் போலே மநோ ஹரமான உன்னுடைய கண்ணிலே நோக்கு ஆகிற வலையுள்ளே அகப்படுத்துகைக்காக -த்ருஷ்ட்டி பந்தத்தாலே இறே அநந்யார்ஹம் ஆக்குவது –

துவளில்மா மணி மாடமோங்கு தொலைவில்லி மங்கலம்தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண்சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-(3495)–தாமரையை ஒரு வகைக்கு ஒப்பாகச் சொல்லலாய்-போக்தாக்கள் அளவன்றிக்கே இரண்டு ஆழ்வார்கள் அளவும் அலை எறிகிற திருக் கண்கள்-என்றும் என்றும் என்கையாலே துர்பலன் மலையை எடுத்தால் போலே இருக்கிற படி-3499)

குழையும் வாண்முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழைகொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர்தொழும் அத்திசை உற்று நோக்கியே.–6-5-5-(3499)இழைகொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை காட்டினீர் ஆபரணங்களினுடைய ஒளியை யுடைத்தாய் இருக்கை என்னுதல் -வேறு ஆபரணம் வேண்டாதே தானே ஆபரணமான தேஜஸ் என்னுதல் -ஆபரண ஓளி தன்னுள்ளே அடங்கும்படி இருக்கும் இருக்கும் சோதி என்னுதல்-செந்தாமரைக்கண் -விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம் இவற்றால் தாமரையை ஒப்பாகச் சொல்லலாய் இருக்கும் திருக் கண் -அகவாயில் தண்ணளிக்கு பிரகாசகமான கண்கள்-பிரான் -பக்தானாம் என்கிற வடிவு-இருந்தமை காட்டினீர்-கிடையை காட்டுதல் -நின்றமையைக் காட்டுதல் -அன்றிக்கே இருந்தபடியை காட்டினி கோள் -கிடந்தான் ஆகில் -கிடந்ததோர் கிடக்கை -என்பார்கள் -நின்றான் ஆகில் நிலையாரே நின்றான் -என்பார்கள் -இருந்தான் ஆகில் பிரான் இருந்தமை காட்டினீர் என்பார்கள் -இருந்தபடியே உத்தேசியமாம் இத்தனை காட்டினீர் -தானே கண்டு மீள மாட்டாதே -நோக்கி இருந்த படி கண்டாயே -முறுவல் இருந்தபடி கண்டாயே -என்று காட்டிக் கொடுத்து கெடுத்தி கோளே

சங்குவில் வாள்தண்டு சக்கரக் கையற்கு
செங்கனி வாய்ச்செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்குஎன்
மங்கை இழந்தது மாமை நிறமே.–6-6-2-(3507)-ஸ்ரீ பஞ்சாயுதங்களின் சேர்த்தி அழகிலே யாயிற்று இவள் ஈடுபட்டது –இவளுடைய நிறம் கொள்ளுகைக்கு எத்தனை ஆபரணம் வேணும் -ஸ்மிதமும் நோக்கும் போலே ஆயுதச் சேர்த்தியும் தகுதியாய் இருக்கிற படி-

கற்பகக் காவன நற்பல தேளாற்கு
பொற்சுடர்க் குன்றன்ன பூத்தண் முடியற்கு
நற்பல தாமரை நாண்மலர்க் கையற்கு என்
விற்புரு வக்கொடி தோற்றது மெய்யே.–6-6-6-(3511)-நன்றாய் பலவாய் செவ்வித் தாமரை பூ போலே இருக்கிற திருக் கையை உடையவனுக்கு –

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9-(3547)-வரையாதே எல்லார்க்கும் கொடுக்கும் நிரதிசய போக்யமான திருவடிகளில் -அழைத்துக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –விஷயாந்தர தர்சன மாத்திரத்திலே முடியும் படி யானாலும் அணித்தாகாதோ -தாவி வையம் கொண்ட -என்கிறது உபாய அம்சம் –தடந்தா மரை கள் -என்கிறது உபேய அம்சம் –கூவிக் கொள்ளும் காலம்-என்று தாம் சென்று காண்கை அன்றிக்கே தானே அழைத்துக் காட்டுகை முறையாகையாலே கிட்டும் பிரகாரம் சொல்லுகிறது-

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத்தா மரை செந்தீ மலரும் திருவேங் கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன்உன்னடி சேர் வண்ணம் அருளாயே.–6-10-2-(3551)-அறாக்கயமான சுனைகளிலே அக்னி ஜ்வலிக்கிறால் போலே தாமரை பரப்பு மாற பூக்கையாலே நிரதிசய போக்யமான திருமலையில் நித்ய வாசம் பண்ணுகிறவனே-

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்
மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந்நான் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6-(3555)--நித்ய ஸூரிகள் பாசுரம் இருக்கிற படி -பரம பதத்தில் மேன்மையை அனுசந்திக்கிற நாம் சர்வ ஸூலபமான திருவடிகளைக் கிட்டுவது என்றோ -என்று -இங்குள்ளார் அங்குப் போவது மேன்மையை அனுபவிக்க -அங்குள்ளார் இங்கு வருவது சீல குண அனுபவம் பண்ண -விஷயம் உண்டாகையாலே வ்யக்தமாக அனுபவிக்க லாவது இங்கே -சங்கோசம் அற்றவர்களுக்கும்-எந்நாள் என்னும் படி இறே சீல குணத்தில் ஏற்றம்

என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை வலித்து எற்று கின்றனர்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–7-1-10-!–(3570) எனக்கு நிரதிசய போக்யனானவனே-அந்யோன்யம் ஒப்பாய் ஸ்ப்ருஹணீயமான உன்திருவடிகளில் உண்டான ப்ராவண்யத்தால் சிதிலனாய் நிற்கும் அந்த புருஷார்த்தத்தை ஒழிய-

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-(3572)-இரண்டு ஆழ்வார்கள் அளவும் வந்து அலை ஏறி கிற கண்களின் அழகை இடைவிடாதே சொல்ல நினைத்து தளரா நின்றாள் –தாமரைக் கண்களால் நோக்காய் -என்கிறபடியே திருக் கண்களால் நோக்கி அருள வேணும் -என்று உபக்ரமித்து -ஹஸ்த சேஷ்டையாலும் தலைக் கட்ட மாட்டாதே தளரா நின்றாள் –ராமம் ரக்தாந்த நயன மபஸ்யந்தீ ஸூ துக்கிதா -இங்கனம் தளரலாமோ-தத் தஸ்ய என்று இருக்க வேண்டாவோ என்ன –‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;-பர வ்யூஹ வைபவங்களில் ஆசைப்பட்டேனோ தூரஸ்தன் என்று ஆறி இருக்க ?-அவதாரங்களில் ஆசைப் பட்டேனோ சமகாலம் அன்று என்று ஆறி இருக்க ?உன்னை -என்கிறது வடிவு அழகையும் சீலாதிகளையும் -இவளை அறியாது ஒழிந்தால் உம்மையும் அறியாது ஒழிய வேணுமோ -உம்மைக் கண்ணாடி புறத்திலும் கண்டு அறியீரோ -அநந்தரம் வரக் காணாமையாலே

என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா! என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்! என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்! என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2-(3573) தாமரைக் கண் என்றே தளரும் -என்று தளர்த்திக்கு உடலானது இப்போது தாரகமாகச் செல்லுகிறது -நீர் ஏறுண்டார்க்கு அந் நீரைத் தெளித்து ஆஸ்வசிப்பிக்குமா போலே -எனக்கு ஆற்றாமையை விளைத்த கண்களாலே என் ஆர்த்தி தீர்க்கப் பார்த்தாயோ இல்லையோ -கண்களால் பிறர்க்கு ஆகாதபடி பண்ண அமையுமோ -சதா தரிசனத்தையும் பண்ண வேண்டாவோ -முதலிலே நானும் என் உடைமையும் நீ இட்ட வழக்கு அன்றோ -என்று கண்ணாலே சொன்ன வார்த்தை ப்ரதிஜ்ஜா மாத்ரமாய் அமையுமோ -அது அர்த்தகிரியாகாரியாக வேண்டாவோ

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்! என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும் அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-(3583)-ஸ்யாமமான வடிவுக்கு பரபாகமான வெண்மையையும் சுரியையும் யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -மற்றைக் கைக்கு ஆபரணமான திரு வாழி -இரண்டு ஆழ்வார்கள் அளவும் வந்து அலை எறிகிற கண்கள் -சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண் என்றே தளரும் -என்று கீழ் வாசிதமானது பிரகாசிக்கிற படி –ஜிதந்தே என்னப் பண்ணுகைக்கு திருக் கண்களோடு திவ்யாயுதங்களோடு வாசி இல்லை

செங்கனி வாயின் திறத்ததாயும் செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா வறாத தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ! நாணும் நிறையும் இழந்ததுவே.–7-3-3-(3585)ஆயுதமும் ஆபரணமு மாய் இருக்கிற ஆழ்வார்களுடைய சேர்த்தியைக் கண்டு உகந்தும்- தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்-தன்னோட்டை சம்பந்தம் எல்லாம் தோற்றும் படி நோக்கின கண் அழகிலே அநந்யார்ஹ சேஷமாயும்

பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1-(3616)–இத்தை உண்டாக்கி நோக்கின அளவேயோ –போக்யத்தை இல்லை என்று தான் ஆறி இருக்கிறேனோ -உமக்கு வேண்டுவது என் -என்ன –அவலோகந தாநேந பூயோ மாம் பாலய -என்கிறபடியே அழகிய திருக் கண்களால் நோக்கி அருள வேணும் –தாமரைக் கையாவோ! –ஸோ அப்யேநம் -என்றும் அப்யேஷ ப்ருஷ்ட்ட்டே மம ஹஸ்த பத்மம் கரிஷ்யதி என்றும் சொல்லுகிற படியே திருக் கையில் அடையாளங்கள் என் உடம்பிலே இலச்சினை பட திருக் கைகளால் ஸ்பர்சிக்கவும் பெற்றிலேன் –அக்ரூரனோ பாதியும் போரேனோ நான் -கரேணம் ருது நா தேவ பாபாந்நிர் மோசயன் ஹரிஉன்னை என்று கொல் சேர்வதுவே?பூர்ணே சதுர்தசே வர்ஷே ப்ஞ்சம்யாம் -என்று நாள் இட்டு கொடுக்கலாவது தம்பி மார்க்கோ -அடியார்க்குச் செய்யலாகாது –

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே.–7-7-1-(3627)பார்த்த பார்த்த இடம் எல்லாம் அதுவேயாய் இறாய்க்க பார்த்த இடத்தே வந்து நிற்கும் -நாண் மலர் என்று சம்ச்லேஷ தசையில் செவ்வியை சொல்லுகிறாள் –நைவ தம்சான் நமஸகான் -என்று பிரிந்த பின்பு அத்தலையில் உள்ளது எல்லாம் அறியாளே-வந்து தோன்றுங் உருவு வெளிப்பட்டால் வந்தது என்று இருக்கிறாள் அல்லள் -அத் தலையாலே வந்தது என்று இருக்கிறாள் –

கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே.–7-7-8-(3634)-கோளிழைத் தாமரையும்-முடிக்கையில் ஒருப்படுகிற தாமரை என்னுதல் -தன் ஒளியே தனக்கு ஆபரணமான தாமரை என்னுதல் -இழையைக் கொள்ளப் பட்ட தாமரை என்னுதல் –பொற்காற்றாமரை-நூற்காற்றாமரை -என்று சில பேதம் உண்டு -அந்த நூற்காற்றாமரைச் சொல்லுகிறது –

கள்ளவிழ் தாமரைக் கண் கண்ணனே!எனக்கு ஒன்று அருளாய்
உள்ளதும் இல்லதுமாய் உலப்பில்லனவாய் வியவாய்
வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவி
உள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!–7-8-4-(3641)அப்போது அலர்ந்த தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கண்களை யுடையனாய் –பவ்யனாய் இருக்கிறவனே -அவனுடைய திருக் கண்கள் போலே யாயிற்று இவருக்கு விபூதியும் ஆகர்ஷகமாய் இருக்கிறபடி -கீழில் திருவாய் மொழியில் –தாமரை நாண் மலர் போல் -என்று பாதகமானது தானே இறே இப்போது அனுகூலமாய் இருக்கிறது

வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில் என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-(3683)-காணத்தக்கு இருந்துள்ள கண்களை யுடையவன் -சதா தர்சன யோக்கியமான கண்கள் -விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம் இவற்றால் பங்கஜ சத்ருசமாய் இருக்கை –-கள்வன்-நானும் என் உடைமையும் உன்னதன்றோ என்று ஒரு கால் தன் செல்லாமையை ஆவிஷ்கரித்து ஆத்மாத்மீயங்களை அபஹரித்தவன்-

மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள்
வாசத்தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே
-8-5-1-(3715)-ஒளியை யுடைத்தாய் ஸ்யாமமான திருமேனி குளிர்ந்த பச்சிலையாக -புருஷ புண்டரீகாப -அக்கமலத்து இலை போலும் திரு மேனி -என்ன கடவது இறே-தாமரை நீள்-வாசத்தடம் போல் வருவானே-பரப்பு மாற தாமரை அலர்ந்து இருப்பதாய் ஏகார்ணவத்தை ஒரு தாமரை தடாகம் ஆக்கினால் போலே பரந்து இருப்பதாய் -அப்பரப்பு அடங்க பரிமளம் நிரம்பி இருபத்தொரு தடாகம் நடந்து வருமா போலே யாயிற்று -பரிமளம் முன்பே அலை எறிய வரும் போது இருப்பது -சர்வ கந்த என்ன கடவது இறே –வருவானே-வரும் ஸ்வ பாவனே-முன்பு தம் பக்கல் வரும்படியை யுபகார ஸ்ம்ருதியாலே சொல்லுகிறார்-

கொண்மின் இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து
நண்ணு திருக் கடித் தான நகரே-8-6-7-(3732)–சர்வ ஸூலபனானவனுடைய -சகல லோகங்களையும் அளந்த –ஒண் தாமரை-ஒரு செவ்விப் பூவைக் கொண்டாயிற்று அளந்தது-மண்ணவர் தாம் தொழ -ஸுலபயத்தையும் போக்யதையும் அறிய மாட்டாத அஞ்ஞர் தொழ-தாம் வந்து-பரமபதம் நித்ய ஸூரிகளுக்கே யாய் இருக்குமா போலே -உகந்து அருளின தேசம் சம்சாரிகளுக்கேயாய் இருக்கை -அந்தர்க்கு வைத்த இறையிலியில் கண்ணுடையார்க்குப்பிராப்தி இல்லை இறே

பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தருமேல் பின்னை யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்
திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே–
8-7-6-(3742)-கரு மாணிக்கக் குன்றத்துத் -ஆச்சர்யத்துக்கு துருதாந்தம் –-தாமரை போல்-அவயவ சோபைக்கு திருஷ்டாந்தம் –
திரு மார்வு -புருஷகாரமான பிராட்டி இருக்கிற திரு மார்வு-கால் -அச்சேர்த்திக்கு தோற்று விழும் திருவடிகள்-கண் -திருவடிகளிலே விழுந்தாரை குளிர நோக்கும் திருக் கண்கள்-கை -அவர்களை எடுத்து அணைக்கும் கை-செவ்வாய் -இந்த சொல்லுச் சொல்லும் திருவதரம்-யுந்தியானே–அவர்களுக்கு அனுபாவ்யமான திரு உந்தி –உந்தி மேலதன்றோ-என்ன கடவது இறே-

கருமாணிக்க மலை மேல் மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1-(3759)-குளிர்ந்து பிரகாசகமாய் -நிரதிசய போக்யமாய் இருக்கும் வடிவு -அனுபவிப்பாருடைய மனஸ்ஸூக்கு தாப ஹரமாய் -பிரகாசகமுமாய் -அபரிச்சின்ன போக்யமுமாய்-இருக்கை -கறுத்த இருள் நீக்குவதொரு மலை -என்றுமாம் –மணித் தடந் தாமரைக் காடுகள் போல்-தெளிந்த தடாகத்தில் பரப்பு மாற பூத்தால் போலே யாயிற்று -திவ்யயவங்களும் வடிவும் இருப்பது –-திரு மார்பு-திருமார்வுக்குச் சிவப்பு பிராட்டி சந்நிதானத்தாலே-வாய்-அவள் வழி யாலே உறவு பண்ணினார்க்கு அனுகூல பாஷணம் பண்ணும் திருவதரம்-கண் -இன் சொல்லு சொல்லப் புக்கு தடுமாறினால் குறையும் தலைக் கட்டிக் கொடுக்கும் கண் –-கை-அந்த நோக்குக்குத் தோற்றாராய் அணைக்கும் கை-உந்தி-உத்தேச்ய பூமியிலே விழா நின்றால்-நடுவே கால் கட்ட வற்றான யுந்தி –-கால் -இவை இத்தனைக்கும் தொற்று விழும் திருவடிகள்
உடை யாடைகள் -அங்கே கிடந்து அனுபவிக்கும் திருப் பீதாம்பரம் –திருக் கமல பாதம் -என்னா -சிவந்தவாடை -என்ன கடவது இறே –-செய்ய பிரான்-இவ்வவயவ சோபை யுடைய பக்தா நாம் -என்று இருக்குமவன் –-திருமால்-அழகே யன்று -இவளுக்கு ஈடான மேன்மையும் உண்டு –யஸ்ய சா ஜனகாத் மஜா –அப்ரமேயம் ஹி தத் தேஜஎம்மான் -இவளுக்கு இவன் போருமோ என்னாத படி வி லஷணனாய் பெற்ற ப்ரீதியாலே என்னாயன் என்கிறார்

புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மையதன்று இவட்கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப் புலியூர்
முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5-(3763)–பொய்கைகளிலே தாமரை மலரும் -பொய்கைகளில் தாமரை கண் செறி இட்டால் போலே பூத்து மலர்ந்து நிற்கும் வூர் -அவ் வூரில் பதார்த்தங்கள் பிறர்க்கு இடம் கூடாது என்கிறாள் –-தண் திருப் புலியூர்-முனைவன் மூவுலகாளி-அவ் வூருக்கு பிரதானம் -அவ்வளவு அன்றிக்கே ஸமஸ்த லோகங்களுக்கும் நிர்வாஹகன்-அப்பன் – ஐஸ்வர்யத்தாலும் குறைவறப் பெற்றேன் -என் தன் ப்ரீதியால் சொல்லுகிறாள் -அவனுடைய
திருவருள் மூழ்கினளே––கடல் கொண்ட வஸ்துவை யன்றோ நீங்கள் மீட்கப் பார்க்கிறது

பரவாள் இவள் நின்று இராப்பகல் பனி நீர் நிறக் கண்ணபிரான்
விரவாரிசை மறை வேதியரொலி வேலையின் நின்று ஒலிப்ப
கரவார் தடந்தொறும் தாமரைக்கயம் தீவிகை நின்றலரும்
புரவார் கழனிகள் சூழ் திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே–8-9-9-(3767)-முதலை மிக்கு இருந்துள்ள தடாகம் தோறும் —கரவு -முதலை /-தாமரைக் கயம் -தாமரை பெருமை –தாமரைத் திரள் -தடவும் கயவும் நளியும் பெருமை -என்ன கடவது இறே / தீவிகை நின்றலரும்-– நிலை விளக்கு எரியுமா போலே அலரா நின்றன –

பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-(3792)-அடிமை செய்கிற அடியோங்கள் பக்கலிலே கிருபை பண்ணி-சோதி வாய் திறந்து -பூ அலருமா போலே யாயிற்று வாய் திறந்து அருளிச் செய்யும் போது திருமுகத்தில் பிறக்கும் செவ்வி -மாமக்ரூரேதி வஹ்யதி என்று வார்த்தை அளவிலே யாயிற்று அக்ரூரன் அனுபவித்தது -தத் காலத்திலே திரு முகத்தில் செவ்வியும் உத்தேச்யமாய் இருக்கிறதாயிற்று இவர்க்கு –-உன்-தாமரைக் கண்களால் நோக்காய்--வார்த்தை யில் தோற்றாத பந்தமும் நோக்கிலே அனுபவிக்கும் படி குளிர நோக்கி யருள வேணும் –அவலோக நதா நேந பூயோ மாம்பால யாவ்யய

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-(3794)-வழி வரும் தொண்டரோர்க்கு அருளி-நெறி தப்பாதே வருகிற அடியோங்களுக்கு கிருபை பண்ணி – இம் மூன்று பாட்டிலும் தம்முடைய யோக்யதையைச் சொன்னால் போலே இருக்கும் -அது அன்று சொல்கிறது -ஒருவருக்கே சேஷமாய் இருப்பாரை வேறு முகம் பார்ப்பார் யுண்டோ என்று தம்முடைய அநந்ய கதித்வத்தை சொல்கிறார்-தடம் கொள் தாமரைக் கண் விழித்து-பொய்கையை விழுங்கின தாமரை போலே இடமுடைத்தான திருக் கண்களாலே குளிர நோக்கி-நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்-நீ எழுந்து அருளி இருந்து -உணர்ந்து அருளும் போதை செவ்வியை அனுபவிக்க வேணும் –மாரி முலை முழைஞ்சில் -என்கிறபடியே –உன் தாமரை மங்கையும் நீயும் -பிராட்டியும் தேவரும் சேர இருந்து -எனக்கு காட்டித் தர வேணும் –பங்கயத்தாள் திருவருளும் -என்று ஆஸ்ரயண தசையாகையாலே புருஷகார பாவத்தை சொல்லிற்று கீழ் -அடிமை செய்யும் இடத்திலும் இருவரும் சேர்ந்த சேர்த்தியிலே அடிமை செய்யக் கடவது -என்னுமத்தை பற்றச் சொல்லுகிறது இங்கு

பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல் தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5-(3796)கதிர் தவழும் படி -கதிர் புறப்படும் படி -முறுவல் செய்து-நின் திருக் கண்தாமரை தயங்க நின்று அருளாய்-திருக் கண்கள் ஆகிற தாமரை விளங்க நாலடி வந்து -முடிய வர மாட்டாதே ஸ்தப்தனாய் நிற்கும் நிலையைக் காண வேணும் -கண்ணினுடைய ஸ்மிதம் இருக்கும் படி –தயங்குகை -தத் காலத்தில் ஒளி யாதல் -கடல் சலித்தால் போலே அசைந்து வருகிறபடி யாதல் –

எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே இமையவர் தமக்கும் ஆங்கனையாய்
செம்மடல் மலரும் தாமரைப் பழனத் தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்

நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து நாம் களித்துள நலம் கூர
இம்மட வுலகர் காண நீ யொரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே–9-2-7-(3798)-எங்களுடைய சாம்சாரிக சகல துக்கங்களையும் போக்கி –-இங்கு – என்னை யாள்வானே-பகவத் ஞானத்துக்கு அடைவு இல்லாத இஹ லோகத்தில் அடிமை கொள்ளுகிறவனே –-இமையவர் தமக்கும் ஆங்கனையாய்-–அகிஞ்சனரான எங்களுக்கே அன்றிக்கே –ஈஸ்வரோஹம் -என்று இருக்கிற ப்ரஹ்மாதிகளுக்கும் அங்கு அப்படி நிர்வாஹகன் ஆனவனே –செம்மடல் மலரும் தாமரைப் பழனத்-தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்-சிவந்த மடல் -மலரா நின்றுள்ள தாமரையை யுடைய நீர் நிலங்களை யுடைத்தாய் ஸ்ரமஹரமான திருப் புளிங்குடியிலே கண் வளர்ந்து அருளுகிறவனே –

தாள தாமரையான் உனதுந்தியான்
வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள்
நாளும் என் புகழ் கோ உனசீலமே–9-3-10-(3812)–தாமரைப் பூவை உத்பத்தி ஸ்தானமாக யுடைய ப்ரஹ்மா உன் திரு நாபியைப் பற்றி வர்த்தியா நின்றான் -கமல யோனித்துவத்தாலே வந்த துர்மானத்தை யுடையவனுக்கு இறே உடம்பு கொடுத்தது-

கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7-(3831)-ஏக தத்வம் என்னும் படி கலந்து பிரிந்த பின்பு அவனுடைய அவயவ சோபை இருந்த படி என்னுதல் -இவளோடு கலக்கையால் வந்த சோபை என்னுதல் – கோலத் தாமரைக் கண் செவ்வாய்–தர்ச நீயமான தாமரை போலே இருக்கிற கண்ணையும் சிவந்த வாயையும் உடையவனாய் – வாட்டமில் என் கரு மாணிக்கம்-பிரிந்த பின்பும் மறக்க ஒண்ணாத படி ஸ்மாரகமாய் நலிகிற நீல ரத்னம் போலே இருக்கிற நிறத்தை யுடையனாய் –கலந்த போதை வடிவில் பிரிந்த செவ்வி பிரிந்த பின்பும் அப்படியே இருக்கிற படியைச் சொல்லிற்று ஆகவுமாம் –
இத்தலையை வெறும் தரை ஆக்கின பின்பு நிறம் இரட்டித்த படி –நைவ தம்சான் ந மசகான்-என்று அவன் இருக்க அரை க்ஷணம் தாழ்த்தான் என்னா இவ்வார்த்தையைச் சொல்லுகிறாள் இறே
கண்ணன் மாயன் போல்-ஆச்சர்ய பூதனான கிருஷ்ணனைப் போலே -கலந்த போது காலைக் கையைப் பிடித்து பரிமாறி பவ்யனாய் இருந்த படி-

பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்-
9-5-9-(3833)குளிர்ந்த பெரிய நீரை யுடைய பொய்கையிலே தாமரைப் பூ அலர்ந்தால் போலே யாய் அவ்வளவு இன்றிக்கே பெரிய கண்களை யுடைய கிருஷ்ணன்-நம் ஆவி உண்டு எழ நண்ணினான்–அவ் அழகைக் காட்டி என்னை முடித்துப் பிரிந்து போனான் –

ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9-(3844)-தம்மை நோவு படுத்தின வற்றை சொல்லுகிறார் -பெரிய இதழை யுடைய தாமரை போலே இருந்துள்ள கண்ணையையும் சிவந்த வாயையும் யுடையனாய் –-கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்--கறுத்த எழிலை யுடைத்தான மேகம் போலே வடிவை யுடையனாய் -திருக் காட்கரையை கோயிலாக யுடையனாய்

தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே
–9-7-3-(3849)-இக் குளிர்த்திக்கு அடியான அகவாயில் வாசத்தடம் இருக்கிற படி -சிவந்து அலர்ந்த தாமரை போலே இருக்கிற கண் முதலான திவ்ய அவயவங்களை யுடையவன் –முதல் உறவு பண்ணும் கண் -அந்நோக்குக்குத் தோற்றாரை அணைக்கும் கை -ஸ்பர்சத்துக்கு தோற்றார் விழும் திருவடிகள் -திருவடிகளில் விழுந்தாரை சாந்த்வனம் பண்ணி தரிப்பிக்கும் முறுவல் –அக் கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே––அவர்களுக்கு உஜ்ஜீவனமான வடிவு -அவயவங்களை பரபாகமான செந்தாமரை இலை போலே யாய்த்து திரு மேனி -வெண்டாமரை என்னில் விஜாதீயம் என்று –அக் கமலம் -என்கிறது —அடிகளுக்கு –வடிவு அழகையும் அவயவ சோபையையும் காட்டி எழுதிக் கொண்டவர்க்கு இவ் வடிவுக்குத் தோற்று வைவர்ணயத்தை தரித்து இருப்பார் யோக்யர் அல்லரோ என்று கேட்டுப் பாருங்கோள் –

மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –9-9-1-(3869)-அல்லி யம் தாமரைக் கண்ணன் -அல்லியை யுடைத்தான அழகிதான தாமரை போலே இருந்த திருக் கண்களை யுடையவன் -முதல் உறவு பண்ணுவது கண்ணாலே இ றே -த்ருஷ்ட்டி பந்தம் பிறந்தால் இறே சம்ச்லேஷம் யுண்டாவது -எம்மான் -அவ் வழகாலே என்னை அநன்யார்ஹை யாக்கினவன்
ஆயர்கள் ஏறு -அவ் வழ காலே இடையரைத் தோற்பித்தால் போலே -தன்னோடு ஒத்த ஆண்களை தோற்பிக்குமவன் -பெண் பிறந்தாரை நோவு படுத்தச் சொல்ல வேண்டாம் இ றே -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணம்-என்கிறபடியே-அரி ஏறு எம் மாயோன்-என்னை அநன்யார்ஹை யாக்கி-என்னோடே கலந்து அத்தாலே பெறாப் பேறு பெற்றானாய் மேநாணிப்பு தோற்ற இருக்கிற படி -ஸிம்ஹ ஸ்ரேஷ்டம் –எம் மாயோன் -சம்ச்லேஷ தசையில் காலைக் கையைப் பிடித்து தாழ நின்று பரிமாறினவன் -பேர நின்ற அநந்தரம் தரிப்பு அரிதாம் படி யாயிற்று பரிமாறிற்று –

இனி இருந்து என் உயிர் காக்குமாறு என் இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க
துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து துறந்து எம்மை விட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம்மாயன் வாரான் தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பனி இரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ–9-9-3-(3871)-வன் கண்ணுக்கு விஷயம் ஆகாது ஒழிந்தால் -இவை நெஞ்சுக்கு விஷயம் ஆகாது ஒழிந்தால் ஆகாதோ -தான் போகா நின்றால் -இவற்றை வைத்து போக வேணுமோ -கலந்த போது தன் பேறு என்று தோற்றும் படியான ஹர்ஷம் அடங்க கண்ணிலே தோற்றும் படியான திருக் கண்களை யுடையவன் என்னுதல் –பிரிவை நினைத்து வாய் விட மாட்டாதே ஆற்றாமை அடங்கலும் நோக்கிலே நின்ற நிலை என்னுதல் –செவ்வாயும் -பிரிவை பிரசங்கித்து முடியச் சொல்ல மாட்டாதே போதைச் சிவந்த அதரமும் –நீலப்-பணி இரும் குழல்களும்–கலவியாலே குலைந்து பிரிவை நினைத்து பேண மாட்டாதே போதை -கறுத்துக் குளிர்ந்த பெரிய திருக் குழல்களும் –

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-10-1-1-(3891)தாள தாமரைத் –-தாளையுடைய தாமரை -மலையைச் சுமந்தால் போலே பூவின் பெருமையைப் பொறுக்க வல்ல தாளையுடைய தாமரை -சென்டரின் நன்மையாலே உரத்த தாளையுடைய தாமரை -உரம் பெற்ற மலர்க்கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட -என்ன கடவது இறே –-தட மணி வயல் -பூவாலே அலங்கரிக்கப் பட்ட தடாகங்களை யுடைய வயல்-திரு மோகூர்-ஊரில் போக்யதை வயலின் நலத்திலே காணும் இத்தனை –

கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே–
10-1-6-(3896)–பரம பந்து -தான் தனக்கு அல்லாத மரண சமயத்தில் -அஹம் ஸ் மராமி மத்பக்தம் நயம்மி -என்னும் பரம ஆப்த தமன் –தன்னை அஞ்சின போது அவன் பக்கலிலே ந்யஸ்த பரனாம் படி யான ஆப்த தமன் –-தாமரை யடி யன்றி-அநாப்தன் ஆகிலும் விட ஒண்ணாத படி யாய்த்து -திருவடிகளில் போக்யத்தை –மற்று இலம் அரணே–வேறு சிலரை ரக்ஷகமாக யுடையோம் அல்லோம் -போக்யதை இல்லை யாகிலும் -அநாப்தன் ஆகிலும் புறம்பு புகல் இல்லை என்கை –

மாய்ந்து அறும் வினைகள் தாமே மாவதா வென்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே
–10-2-10-(3911)-அங்குத்தைக்கு தகுதியான
மதிலை யுடைய திருவனந்த புரத்திலே வர்த்திக்கிற என் ஸ்வாமிக்கு என்று புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்க வல்லார்-அந்தமில் புகழினாரே–அமரர் ஆவார் என்கிற அளவன்றிக்கே -விண்ணுளாரிலும் சீரியர் ஆவார் –

வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1-(3913)-நாம் பிரிந்திலோம் –பிரிய நினைத்திலோம் –இப்படி இருக்க போனோமுமாய் -போனால் நலியக் கடவ பதார்த்தங்களும் நலிந்ததாய் இருக்கிற இது ஒரு ப்ரேம ஸ்வபாவம் இருக்கும் படியே -என்று சாதரமாகப் பார்க்க –அழகிய திருக் கண்களால் நோக்கி -நோவு படுத்தா நின்றாய் என்கிறாள் -இந்நோக்கில் காட்டில் நீ பசு மேய்க்கப் போகை யமையும் என்கை முன்புத்தை நோக்கு -ஸ்ம்ருதி விஷயமாக சொல்லுகிறாள் என்பாரும் உண்டு –-ஈர்தி -என்கையாலே -இப்போது பார்த்தானாக வேணும் -இப்படி சொன்ன இடத்திலும் நோக்கை மாற வைத்திலன்–தகவிலை தகவிலையே நீ கண்ணா–தகவிலை-நீ இருந்த லோகத்தில் கிருபை இல்லை -கண்ணா நீ தகவிலை -ஜகத்தில் யுண்டாகிலும் கிருஷ்ணனே உன் பக்கல் கிருபை இல்லை என்னுதல் –வீப்சையாலே-உனக்கு கிருபை இல்லை என்று நான் கொடி எடுக்கிறேன் என்னுதல் —சீதா விவாஸ நபடோ கருணாகுதஸ்தே –சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்தருத்ய புஜமுச்யதே –விலக்காத அளவைக் கொண்டு பிறரை இன்னாதாகிறது என் –உன் பக்கல் கிருபை இல்லை –ஏவமார்த்தா ஸூ யோஜித் ஸூ க்ருபா கஸ்ய நஜாயதே —

பணி மொழி நினைதொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப் பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை யணியாய்-10-3-5-(3917)-ஆபரண பிரசுரமாய் -அது தான் மிகையாம் படி தனக்குத் தானே ஆபரணமான கையை –அந்தோ -சேர்ந்து குளிர்ந்து விடாயார்க்கு சமைத்து வைத்த தண்ணீரை வார்க்கச் சொல்ல வேண்டுவதே -என் ஆற்றாமையை நான் உனக்கு அறிவிக்க வேண்டும்படி யாவதே –

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று ஆழும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர் நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-10-3-8-(3920)-இனிப் பொருந்தோம் என்று பெண்கள் நெஞ்சில் பிறந்த மறம் எல்லாம் தீரும்படி வசீகரிக்க வல்ல கண்ணும் –
வாயும்-கண்ணாலே நினைத்ததை ஆவிஷ் கரிக்கிற வாயும் – கைகளும்-அந்நோக்குக்கும் ஸ்மித்துக்கும் தோற்ற அளவில் அனுவர்த்தித்து அணைக்கிற கைகளும்-பீதக வுடையும்-அவற்றுக்குத் தோற்று விழும் போது நடுவே தொகையும் திருப் பீதாம்பரமும் –பீதாம்பர தர ஸ்ரக்வீ –-காட்டி--உனக்கு அவர்களை அழைக்கைக்கு பணி யுண்டோ -வடிவைக் காட்ட அமையாதோ-

தலை மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்
மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–10-6-6-(3951)-திருவடிகளாலே என் தலையை அலங்கரியா நின்றான் –-தாமரைக் கண் என் அம்மான்–என் முன்னே நின்று கண் அழகைக் காட்டி ஜிதம் எண்ணப் பண்ணா நின்றான்-நிலை பேரான் என் நெஞ்சத்து -ஹிருதயத்தின் நின்றும் கால் வாங்கு கிறிலன்-

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-(3990)-இதுவும் ஒரு வியாவ்ருத்தி இருக்கிற படி -முறுவலும் கண்ணுமாய் இருபத்தொரு மாணிக்க மலை போலே யாய்த்து வடிவு இருப்பது -முறுவலையும் தப்பினாரையும் -அகப்படுத்த வற்றான கண் –-என் கள்வா-நான் அறியாமே இவ் வழகைக் காட்டி வஞ்சித்து என்னை அடிமை கொண்டவனே -உன்னதமான ஆத்ம வஸ்துவை அபஹரித்துக் கொண்டு இருக்கிற என்னை விஷயீ கரிப்பதே -நான் அபஹரிக்கைக்கு அடி -கர்மம் -நீ அபஹரிக்கைக்கு அடி வடிவு அழகு –உடையவன் உடைமை பெற்றாலும் அபகாரம் என்னும் படி யாய்த்து ஸ்வாதந்தர்யம் வயிரம் பற்றின படி -நிர்ஹேதுகமாக உன் வடிவு அழகைக் காட்டி என்னை விஷயீ கரித்தவனே -என்று ஆழ்வான் நிர்வாஹம் –

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading