அவதாரிகை
இவ் விஷயத்தில் ப்ராவண்யத்தை தவிர்த்து
எங்களைப் போலே தேக யாத்ரா பரராய் வர்த்திக்கவே தரிக்கலாம் -என்ன
கண் வளர்ந்து அருளுகிற அழகைக் கண்டு வைத்து
இஸ் ஸ்மர்த்தி யடங்க எங்களுக்கு -என்னும்படியான ஸ்வரூப ஞானம் உடைய எங்களுக்கு
அஹம் மம –என்கிற உங்களைப் போலே
அகல விரகு உண்டோ –
என்கிறார் –
—————
பாயு நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திரு நன் மார்பும் மரகத வுருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவர் இதழ் பவள வாயும்
ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே–
பதவுரை
பாயும் நீர்–பாயா நின்றுள்ள காவிரி சூழ்ந்த
அரங்கம் தன்னுள்–கோயிலிலே
பாம்பு அணை–சேஷ சயநத்திலே
பள்ளி கொண்ட–கண் வளர்ந்தருளா நின்ற
மரகதம் உருவும்–மரகத மணி போன்ற திருமேனி நிறமும்
தோளும் –திருத் தோள்களும்
தூய தாமரை கண்களும்–பரிசுத்தமான தாமரை மலர் போன்ற திருக் கண்களும்
துவர் இதழ்–சிவந்த அதரமும்
பவளம் வாயும்–பவளம் போன்ற வாயும்
மாயனார்–ஆச்சரிய சக்தி வாய்ந்த எம் பெருமானது
திரு நல் மார்வும்–பிராட்டி வாழ்கின்ற விலக்ஷணமான மார்பும்.
ஆய சீர் முடியும் –வேலைப்பாடுள்ள அழகிய திருமுடியும்
தேசும்–(இவற்றாலுண்டான) தேஜஸ்ஸும்.
அடியரோர்க்கு–ஸ்வரூப ஜ்ஞான முடைய தாஸர்களுக்கு
அகலலாமோ–இழக்கத் தகுமோ?
—————————–
பாயு நீர் அரங்கம் –
அடைத்தேற்ற வேண்டாத படி நீருக்குப் பள்ள நாலியான கோயில் –
இது உப லஷணம் –
பாவனமாயும்
பிரசன்னமாயும் உள்ள பதார்த்தங்களுக்கு
பள்ள மடையாய் இறே கோயில் இருப்பது –
ரமணீயம் ப்ரஸன்நாம்பு சந் மநுஷ்ய நோயதா –
நீருக்கு சாத்விகர் நிதர்சனமாய் இறே இருப்பது –
தன்னுள் பாம்பணைப் –
அந் நீர் உறுத்தாமைக்கு படுத்த படுக்கையாய் யாய்த்து திரு வநந்த ஆழ்வான் –
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து -என்னக் கடவது இறே
பள்ளி கொண்ட மாயனார் –
கண் வளர்ந்து அருளும் போதை அழகு ஆச்சர்யமாய்த்து இருப்பது –
சமயா போதிதச் ஸ்ரீ மான் ஸூக ஸூப்த பரந்தப-என்னக் கடவது இறே –
நிற்றல் இருத்தல் செய்தார் ஆகிலும் அகலலாம் கிடீர்
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் -என்றும்
ஆனையில் கிடந்த கிடக்கை கண்டிடப் பெற்றிலேன் -என்றும்
என்றும் சொல்லக் கடவது இறே –
ஆனையில் கிடக்கை -ஆனை போல் கிடக்கை –
(வடி கொள் அஞ்சனம் எழுது செம் மலர் கண் மருவி மேல் இனிது ஒன்றினை நோக்கி
முடக்கி சேவடி மலர் சிறு கரும் தாள் பொலியும் நீர் முகில் குழவியே போலே
அடக்கி ஆர செஞ்சிறு விரல் அனைத்தும் அம் கை யோடு அணைந்து ஆனையில் கிடந்த
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ! கேசவா ! கெடுவேன் கெடுவேனே–பெருமாள் திருமொழி 7-2-
ஆனையில் கிடந்த கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ!
ஆனை தன் அவயவங்களை பொகட்டுக் கொண்டு ஸ்வைரகமாக கிடந்தால் போலே
தொட்டிலிலே கிடக்கும் போது அனுபவிக்கப் பெற்றிலேன் என்று ஐயோ -என்கிறாள்)
திரு நன் மார்பும்
பிராட்டியாலே லஷணமான மார்பும்
பிராட்டியினுடைய செம்பஞ்சின் சுவடுகளும்
கழித்த மாலைகளுமாய் கிடக்கும் யாய்த்து –
பிராட்டி –அகலகில்லேன் இறையும்-என்று -பிரிய மாட்டாத
வை லஷண்யத்தை உடைய மார்வு -என்னவுமாம்
மரகத வுருவும்-
கண்டார் கண் குளிரும்படி நீர் வெள்ளத்தை திறந்து விட்டாப் போலே யாய்த்து வடிவு இருப்பது
தோளும்-
கீழ் இலவை போலே
இடு சிவப்பு-ஆரோபிதாகாரம் -என்றபடி – இல்லாத தோளும்
அவ் வெள்ளத்திலே அழுந்துவார்க்கு தெப்பம் போலே
இருக்கிற திருத் தோளும் –
தூய தாமரைக் கண்களும்-
பிராட்டியோடு ஹிரண்யாதிகளோடு வாசி அற
குளிர நோக்குகிற திருக் கண்களும் –
நோக்குத் தூய்மை யாவது –
நிர்ஹேதுகமாக கடாஷிக்கை –
ஸூஹ்ருதம் சர்வ பூதானாம் -என்கிறபடியே –
அனுகூல பிரதி கூல விபாக ரஹீதமாய்த்து சௌஹார்த்தம் இருப்பது –
தேவாநாம் தாநவா நாஞ்ச சாமான்ய மதி தைவதம் -என்கிறபடியே
சம்பந்தம் ஒத்ததாய்த்து இருப்பது –
இப்படி இருக்க
சில பதார்த்தங்களுக்கு கடாஷம் அநர்த்த ஹேது வாகிறது -பிரகிருதி தோஷத்தாலே –
சர்வ அனுகூலமான தென்றல் ஆனது ஒரு பதார்த்ததில் வந்தால் சோஷகம் ஆகாது நின்றது இறே –
மென்மை குளிர்த்தி நாற்றம் இவற்றுக்கு தாமரை ஒரு போலியாம் இத்தனை -போக்கி
அகவாயில் தண்ணளிக்கு த்ர்ஷ்டாந்தம் ஆக மாட்டாதே
துவர் இதழ் பவள வாயும் –
சிறந்த திரு அதரத்தையும்
பவளம் போலே இருந்துள்ள தந்த பந்தியையும் உடைய வாயும் –
அவாக்ய அநாதர -என்கிற காம்பீர்யம் குலைந்து –
கிட்டினாரை சாந்தவ வாதனம் பண்ணுகிற திருப் பவளமும் –
ஸ்வ அபராதத்தை அனுசந்தித்து கிட்டி அஞ்சினவர்கள் உடைய அபராதத்துக்கு
நேர்த்தரவு கொடுக்க ஸ்மிதம் பண்ணும் திருப் பவளமும் -என்கை –
ஆய சீர் முடியும்-
பண்டே யாய்ச் சீர்மையை உடைத்தான முடியும் –
சித்தமாய் ஐஸ்வர்ய ஸூசகமான திரு அபிஷேகமும் –
இத்தனையாலுமாக அவயவ சோபை சொல்லிற்று –
தேசும் –
இத்தால் சமுதாய சோபையைச் சொல்லுகிறது –
அடியரோர்க்கு அகலலாமே –
இஸ் சமர்த்தியைக் கண்டால் ஸ்வரூப ஞானம் உடையார்க்கு அகலப் போமோ
இதற்குப் புறம்பாய் -அஹம் மம -நான் என்னது -என்று
இருப்பார்க்கு அன்றோ அகலல் ஆவது –
ஆமே -என்றது
எதிரிகளுக்கும் அகலப் போகாது என்ன வேண்டும் படியாய் இறே
அர்த்தத்தின் மெய்ப்பாடு இருப்பது-
(எம்பெருமானுடைய அதிஸயங்களை வெறும் ஏட்டுபுறத்தில் கேட்டுப் போகை யன்றிக்கே
பரம பாவநமான திருவரங்கந் திருப்பதியிலே திருவனந்தாழ்வான் மீது
“தன் தாளுந் தோளும் முடிவுகளும் சமனிலாத பல பரப்பி” என்றபடி
ஸகலாவயவ ஸெளந்தரியமும் நன்கு விளங்கும்படி சாய்தருள்கின்ற எம்பெருமானது திவ்ய தேஜஸ்ஸைக்
காணப் பெற்றவர்களும் மீண்டு கால் பேர்ந்து விலக முடியுமோ?)
———-
மரகத வுருவும்-தூய தாமரைக் கண்களும் -துவர் இதழ் பவள வாயும்–உபதேசம் அருளி -அழகைக் காட்டி -கடாக்ஷித்து -பேற்றை அளிக்கிறான்
யமாதி நியமங்கள் வேண்டாமே -இவை கொண்டே அறிந்து தியானித்து மனம் வாக் கார்யம் அவனிடம் ப்ரவணமாகி கடாக்ஷத்துக்கு இலக்காகலாமே
பூமாதி கரணம்-மற்ற ஒன்றைக் கேட்க்காதே -பேசாதே -நினைக்காதே-நான்யஸ்ய -பஸ்யதி -ஸ்ருணோதி -தியானாதி -மூன்றும் சேர்ந்தே பல பாசுரங்கள் –பச்சை மா மலை போல் மேனி -பவள வாய் -கமலச் செங்கண்
அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாமம் வாள்முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள
செந்தாமரை தடம் கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிகள் செம்பொன் திரு வுடம்பே –2-5-1–இங்கும் மூன்றும் சேர்ந்து அருளிச் செய்கிறார்-ஆழ்வார்கள் திவ்ய மங்கள விக்ரஹத்திலும் கல்யாண குணங்களிலுமே ஆழங்கால் பட்டு அருளிச் செய்துள்ளார்கள் -ரிஷிகள் ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் இழிந்து இருப்பார்கள் – ப்ருஹத்வாத் -ஞான ஆனந்த மயமாய் -அனுகூல ஞானமே ஆனந்தம் –ஸர்வ வ்யாபி -ஆகாசம் போல் -ஸர்வ நியந்தா -ஸர்வேஸ்வரேஸ்வரன் -ஸூபாஸ்ரயம் -நமக்கு கிட்டும்படி தியானத்துக்கு எளியதாய் -இடம் காலம் உருவம் அடக்கி –பஞ்ச பிரகாரம் –பச்சை மா மலை போல் மேனி என்பதே மரகத உரு-கட்டுண்ணப் பண்ணிய பெருமாள்-கிருபை அடியாக விகாரம் -தளிர் புரையும் திருவடிகள்-அல்பஸ்ருதே : -1-3-3- தஹராகாசம் அல்பமானது (சிறியது) என்று சொல்லப் படுகிறபடியால் அது பரமாத்மாவாக இயலாதே
இதி சேத் – என்று கேட்டால்
தது₃க்தம் – அதற்கான விடை முன்னமே 1.2.1 ஸர்வத்ர ப்ரஸித்தி அதிகரணத்தில் “அர்ப₄கோகஸ்த்வாத் தத்₃ வ்யபதே ₃சாத் நேதி சேத் ந நிசாய்யத்வாதே₃வம் வ்யோமவச்ச” என்கிற ஸூத்ரத்தில் சொல்லப்பட்டது. பரமாத்மா அளவற்றவராய் இருந்தாலும், உபாஸகனுக்கு அனுக்ரஹிப்பதற்காக அவர் ஹ்ருதயத்துக்குள்ளும் சிறிய வடிவத்வதாடு இருக்கிறபடியால் இதில் பொருந்தாமை இல்லை.
பரமேஷ்டி புமான் நிவ்ருத்த விஸ்வ ஸர்வ –பஞ்ச பூதங்கள் போல் இவை உண்டாக்கப்படுபவை அல்ல -அப்ராக்ருதம் -ஸுத்த ஸத்வம் -ஞானத்தை வளர்க்கும் -தானே விளங்கும் மற்ற அனைத்தையுமே விளக்கும் -ஸூயம் ப்ரகாஸம்-ஜெய் சிந்தானாம் -சிந்தா நல்ல விஷயம் -சிந்தை மற்ற நின் திறத்து அல்லால் அனைத்தும் -சிதை போல் ஆகும் -ஸாத்யமான த்யானம் —
ந தே ரூபம் ந சாகாரோ ந ஆயுதாநி ந ச ஆஸ்பதம்
ததா அபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே–5-
ந தே ரூபம் –
ரூபம் -எனபது திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –
ஆகார -என்று திவ்ய விக்ரஹத்தை மேலே சொல்லுகையாலே-
இஸ் ஸ்லோகத்தால்
ஸ்வரூபாதிகள் இவனுக்கு இல்லை என்கிறது -எங்கனே -என்னில்
தே -என்று
நிர்த்தேசித்து வைத்து -ஸ்வரூபாதிகளை நிஷேதிக்கையாலே
நிஷேதிக்கிறது எவ் வாகாரத்தாலே -என்னில்
ஸ்வரூபாதிகளாலே தேவர் கொள்ளுவது ஒரு கார்யம் இல்லை என்று ஸ்வார்த்தத்தை நிஷேதிக்கிறது –
தே ரூபம் ந தே –
உன்னுடைய திவ்யாத்ம ஸ்வரூபம் உனக்காய் இராது
ஆஸ்ரித ரஷணத்துக்கு அனுகூலமாய் இருக்கில்
ஸ்வ தந்த்ரமாய் இருக்கிற அது பர தந்த்ரமாய் இருக்கும் –
மயி ப்ருத்யே ஸ்திதே தேவா நா ஜ்ஞாபயத கிம் ந்ருபை -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-21-12-என்றும்
கிங்க ரௌ சமுபஸ்தி தௌ -பால -31-4-என்றும் சொல்லக் கடவது இறே-
தூய தாமரைக் கண்கள்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி
கண்கள் விரிவடைந்து நீண்ட அப்பெரியவாய கண்கள்–அதீர்க்கம்-அப்ரேம துகம்-க்ஷண உஜ்ஜ்வலம் -ந சோர அந்தக்கரணம் பஸ்யதாம் -கூரத் தாழ்வான்-தாமரை நின் கண் ஒவ்வாவே -யதா கப்யாஸம் ஏவ புண்டரீகம்–ததைவ அக்ஷிணீ–இரண்டு திருக்கண்கள் –
ஆறு நிர்வாகங்கள் –மூன்று பொருந்தாது -மூன்று பொருந்தும்
—————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply