(1) பூர்வ த்,விகம் – ஸூரி வைபவம் 1 முதல் 186 வது ஸூத்ரம் வரை (186)
(2) உத்தர த்,விகம் – ஸூரி ஸுக்த்தி வைபவம்– 187 முதல் 284 முடிய (48)
(1) ப்ரத, மோத், யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம் 1-38 (38)
(2) த்,விதீயோத், யாய: – க்,ரந்த, கர்த்ரு வைப,வம் 39 – 186 (148)
(3) த்ருத்யோத், யாயம் – க்,ரந்தாந்தர தார தம்ய வைப,வம் 187-207 (21)
(4) சதுர்த்தே ரத், யாயம் -கிரந்த, ப்ரதிபாத்,ய க்ரம வைப,வம் 208-284 (27)
6 — ப,க்திபாதம் -—97–121—-25-இதிலே 2 அதிகரணங்கள்
8–ஜ்ஞாந ப,க்த்யதி கரணம் 97 –117—மொத்தம் -21 —ஸூரணைகள்—பகுதி -1-97-101-ஸூரணைகள்–பகுதி -2–102–117-ஸூரணைகள்-
9-ஜ்ஞாந ப,க்த் யவஸ்தா ஸூக்தி அதிகரணம் –118-121—மொத்தம் –4 —ஸூரனைகள் –
—
இங்கன் அன்றிக்கே ,இவருடைய இந்த பரம பக்தி -கர்ம ஞான பக்திகள் ஆகிய சாதன த்ரயத்தையும் ,
இஜ் ஜென்மத்திலே அனுஷ்டிக்கையாலே யாதல் , பூர்வ ஜென்மங்களில் அப்யாசத்தாலே ஆதல் ,
உண்டானதாலோ என்கிற சங்கையில் , இரண்டு படியாலும் வந்தது அன்று என்னும் இடத்தை இவர் தம்முடைய உத்திகளாலே சாதிக்கிறார்-இவருடைய பரபக்தி ஜந்மாந்தரங்களிலே கர்ம ஜ்ஞாநாதிகளை அநுஷ்டித்து தத் பலமாய்க் கொண்டு வந்ததானாலோ என்னில், ஜந்மாந்தரங்களில் அவை தமக்கு இல்லை என்னுமிடம் தாமே அருளிச் செய்தார் என்கிறார்–
இடகிலேன்-நோன்பறிவிலேன் கிற்பன் கீழ் நாள்கள்-என்கையாலே சாதன த்ரய பூர்வ அப்யாசஜம்
அல்ல-சூரணை-102-
(இடகிலேன் என்கையாலே-நோன்பறிவிலேன் என்கையாலே-கிற்பன் என்கையாலே-கீழ் நாள்கள் என்கையாலே-சாதன த்ரய ஜம் அல்ல -பூர்வ அப்யாச ஜம் அல்ல- அப்யாஸ ஜம் -செய்து போந்த வாற்றால் உண்டாவது )-இடகிலேன் என்கையாலே –அதாவது –இடகிலேன் ஓன்று அட்டகிலேன் ஐம்புலன் வெல்லகில்லேன் கடவனாகிக் காலம் தோறும் பூப்பறித்து ஏத்தகில்லேன் —
தடவுகின்றேன் எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே திருவாய் -4-7-9--பசித்தாருக்கு சோற்றை இடுதல் ,தாஹித்தாருக்கு தண்ணீர் வார்தல் செய்தேன் ஆகில்-யஜ்ஞோ தான தப கர்ம -ஸ்ரீ கீதை -18-5–என்கிற படியே ,–தானமும் கர்ம யோக அந்தர் பூதமாகையாலே கர்ம யோகத்திலே நிவேசிப்பிக்கலாம் ,,அது செய்ய மாட்டுகிறேலேன் – இந்திரியங்களை விஷயத்தில் போகாத படி நியமித்தேன் ஆகில் ,
ஞான யோகத்தில் நிவேசிப்பிக்கலாம் –அதுவும்செய்ய மாட்டுகிறலேன்,-நியதனாய் கொண்டு சாஸ்த்ரோக்தமான காலங்களிலே , புஷ்பயாதி உப கரணங்களை சம்பாதித்துக் கொண்டு ஆராதித்து ஸ்துத்திதேன் ஆகில் பக்தி சரீரத்தில் நிவேசிப்பிக்கலாம் அதுவும் செய்ய மாட்டுகிறலேன் என்றும் –
““இடகிலேன் ஒன்றட்டகில்லேன் ஐம்புலன் வெல்லகில்லேன் கடவனாகிக் காலந் தோறும் பூப்பறித்தேத்த கில்லேன்’” (திருவா. 4 – 7 – 9) என்று பகவத் விபூதி பூதர் என்று அந்ந பாநாதிகளை பூதங்களுக்கு இட்டுக்கொடுபோரில் கர்ம யோகத்திலே நிவேஸிப்பிக்கலாம், இந்த்ரிய ஜயம் பண்ணினேனகில் ஜ்ஞாந யோகத்திலே நிவேஸிப்பிக்கலாம். ஸாஸ்த்ரோக்தமான ப்ரகாரங்களிலே புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு பகவத் ஸமாராதநம் பண்ணினேனாகில் பக்தி யோகத்திலே நிவேஸிப்பிக்கலாம். இவை இத்தனையும் செய்யப் பெற்றிலேன் என்றும்,
இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்; ஐம்புலன் வெல்லகிலேன்;
கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;
மடவல் நெஞ்சம் காதல் கூர, வல்வினையேன் அயர்ப்பாய்த்
தடவுகின்றேன்; எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே?–4-7-9—இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்-பசித்தார்க்கு சோற்றை இடுதல் -தாஹித்தார்க்கு தண்ணீர் வார்த்தல் செய்ய மாட்டு கிறிலேன்-யஞ்ஞா தான தப கர்ம – என்கிறபடியே தானம் கர்ம யோகாந்தர்பூதமாய் இருக்க -அதுக்கு ஆள் ஆகிறிலேன்-என்கை –ஐம்புலன் வெல்லகிலேன்;-அர்த்த லோபத்தாலே அவை செய்யா விட்டால் இந்திரியங்கள் விஷயத்தில் பட்டி புகாத படி நியமிக்க மாட்டிற்று இலேன்-கடவனாகிக் -நியதனாய்
காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;-சமாராதனத்துக்கு விஹிதமான காலத்தில் -திருப் பள்ளித் தாமம் பறித்தல் பரிமாறுதல் செய்யப் பெற்றிலேன் –சததம் கீர்த்த யந்த-என்கிறபடி திரு நாம சங்கீர்த்தனம் பண்ணிற்று இலேன்-இவை உண்டாயிற்றாகில் பக்தி சரீரத்தில் நிவேசிக்கலாம் -அதுவும் இல்லை என்கிறார் -இவற்றினுடைய ஸ்வரூப நிஷேதம் பண்ணுகிறது அன்று –உபாயத்வத்தை நிவேதிக்கிறது –மட வல் நெஞ்சம்-மட வென்று மென்மை-பகவத் குண பிரசங்கத்தில் சிதிலமாகை
வல் நெஞ்சம் -பகவத் குணங்களில் விழுந்தால் ஈஸ்வரனாலும் மீட்க முடியாது இருக்கை –காதல் கூர, -ஸ்நேஹம்-மிக வல்வினையேன் – பிரேம அனுரூபமாக காணப் பெறாத படி பாபத்தை பண்ணின நான் –காதலுக்கு விஷயம் பெற்றேன் அல்லேன்-இத்தை அகஞ்சுரிப் பகுத்தப் பெற்றேன் அல்லேன் –
ஆசா லேசம் உடையோருக்கு முகம் கொடாதவனாய் இழந்தேன் அல்லேன் -என் பாபம் இருந்தபடி என்
அயர்ப்பாய்த் தடவுகின்றேன்-அறிவு கேட்டை உடையேனாய் முன்னே வந்து நின்றாலும் காண முடியாத படி தடவா நின்றேன்-நத்வா பச்யாமி கௌசல்யே -என்கிறபடியே-எங்குக் காண்பன்--ஒரு கைம்முதல் இன்றிக்கே இருக்க கூப்பிடா நின்றேன் -எங்கே காணப் பெறுகிறேன்-சக்கரத்து அண்ணலையே?– கையும் திரு வாழியுமான சேர்த்தியிலே யாயிற்று இவர் அகப்பட்டது –
நோன்பு அறிவிலேன் என்கையாலும் –அதாவது நோற்ற நோன்பிலேன் ,நுண் அறிவிலேன்–5-7-1–என்று
பல வ்யப்தமாம் படி அனுஷ்டிதமான கர்ம யோகம் உடையவன் அல்லேன் -அது இல்லாமையாலே ,
சூஷ்ம ரூபமான ஜீவ பர விஷய ஞான யோகத்தை உடையேன் அல்லேன் –ஆகையால் உபய சாத்யை யான பக்தி இல்லை என்னும் இடம் அர்த்தா சித்தம் என்று அருளிச் செய்கையாலே வர்த்தமான ஜென்மத்தில் கர்ம ஞான பக்திகள் ஆகிய சாதன த்ரய அனுஷ்டானத்தால் உண்டானது அல்ல –
”நோற்ற தோன்பிலேன நுண்ணறிவிலேன்”’ (திருவா. 5 – 7 – 1) என்று பலத்தோடே வ்யாப்தமாய் இருப்பதொரு கர்மத்தை அநுஷ்டிக்கப் பெற்றிலேன்; ஆத்ம யாதாத்ம்ய ஜ்ஞாந பூர்வகமான பகவஜ் ஜ்ஞாநத்தை உடையேனல்லேன்- ஆக இவை இல்லாமையாலே உபய ஸாத்யமான பக்தியை உடையேனல்லேன் என்றும்–
நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1—நோற்ற நோன்பிலேன்-நோன்பிலேன் என்னாதே-நோற்ற நோன்பிலேன் -என்கிறது -பல வியாப்தமாம் படி யனுஷ்டித்தமாய் இருபத்தொரு கர்மம் இல்லை என்கிறது -என் ஆற்றாமையால் சில யுண்டானாலும் சக்ரவர்த்தியுடைய புத்ர காமேஷிடி போலே யாதல் -ஸ்ரீ வஸூ தேவருடைய அநந்த விரதம் போலே பல வியாப்தமாய் இருபத்தொரு தர்மம் இல்லை –ந தர்ம நிஷ்டோஸ்மி-என்கிற இடத்தில் தர்மம் இல்லை என்னாதே தர்ம நிஷ்டை இல்லை என்றால் போலே –நுண்ணறிவிலேன்-அறிவிலேன் என்னாதே –நுண்ணறிவிலேன்-என்றது ஸ்வரூப ஞான பூர்வகமாக பர ஸ்வரூபத்தை சாஷாத்கார பர்யந்தமாக அறியும் அறிவை அறிவை யுடையேன் அல்லேன் –கர்மம் இல்லை என்ற போதே -தத் சாத்தியமான ஞானம் இல்லை என்னும் இடம் அர்த்த ஸித்தமாய் இருக்க ஞானம் இல்லை என்றது என் என்னில்-பூர்வ ஜென்மத்தில் கர்மத்தை அனுஷ்ட்டித்து தத் பலமான ஞானம் இந்த ஜென்மத்தில் நைசர்க்கிகமாக பிறக்கலாம் இறே -அத்தாலே சொல்லிற்று –அன்றிக்கே-புராணங்களில் தனித் தனியே கர்ம ஞானங்களே சாதனமாக சொல்லுகையாலே சொல்லிற்று ஆகவுமாம்-பக்தி இல்லை என்னாது ஒழிவான் என் என்னில் –பக்தி யாகிறது ஞான விசேஷம் ஆகையாலே ஞானத்தை சொன்ன போதே அத்தையும் சொல்லிற்று ஆயிற்று
கிற்பன் என்கையாலே-அதாவது கிற்பன் கில்லேன் என்று இலன் முன நாளால் -3-2-6–என்று முன்பு உண்டான காலம் எல்லாம் -குர்யாத்-( செய்யத்தகும் ) -என்று நன்மை செய்ய அடுக்கும் என்றால் ,வல்லேன் என்று இசைந்திலேன் –-ந குர்யாத் ( செய்யத்தக்கது )-என்று தீமை செய்யல் ஆகாது என்றால் ,மாட்டேன் என்று தவிர்ந்திலேன் — இப்படி விஹிதத்தை செய்யாமல், நிஷிதத்தை செய்து போந்தேன் என்றும் –
(கிற்பன் கீழ்நாள்கள் என்கையாலே) “கிற்பன் கில்லேன் என்றிலன் முனநானால்”’ (திருவா. 8 – 2 – 6] விஹிதததைச் செய்து அவிஹிதத்தைத் தவிர்’ என்கிற விடத்தில் அப்படிச் செய்கிறேன் என்னாதே விஹிதத்தைத் தவிரந்து அவிஹிதத்தைச் செய்து போந்தேன் நெடுங் காலம் என்றும்-
கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6—கிற்பன்-அல்ப யத்னமாய் பஹு பலமான ஸூ க்ருதத்தைச் செய் என்றால் ஓம் என்று இசைந்து இலேன்-மித்ர பாவத்தாலே அபுநாவ்ருத்தி லக்ஷணமான போகத்தை பெறலாம் என்றால் அத்தைச் செய்வேன் என்று இலேன்-கில்லேன் என்றிலன்--இப்போது அல்பமாய் மேலே பஹ்வநர்த்தமாய் இருக்கிற விஷய ப்ராவண்யத்தை தவிர்க்கும் என்றால் -அத்தை தவிர்வேன் -என்று இலேன் – இப்படி செய்கிறது எத்தனை நாள் போரும் என்ன-முன நாளால் -நீ விசேஷ கடாக்ஷம் பண்ணுவதற்கு முன்பு எல்லாம்
கீழ் நாள் என்கையாலே – அதாவது –-தெரிந்து உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் –ஆழி அம் கையானை ஏத்தாது அயர்த்து —வாழா இருந்து ஒழிந்தேன் கீழ்–பெரிய திருவந்தாதி -82–என்று பகவத் விஷயத்தை அறியும் ஆராயும்-ஞானம் ஒன்றையும் இல்லாமையாலே , பகவத் அனுபவ போக்யமான காலத்தை பாழே போக்கிய பாவியேன் – பிராட்டி சொன்னது செய்தல் அல்லது ,நிற்க மாட்டாமையாலே ,மாயா மிருகத்தை அன்று பின் பற்றிப் போன –அருகாழியை திருகையிலுடைய சர்வேஸ்வரனை மங்களாசாசனம் பண்ணப் பெறாதே அறிவு கெட்டு வ்யர்தமே இருந்து விட்டேன் கீழ் உள்ள காலம் எல்லாம்-என்று அருளிச் செய்கையாலே பூர்வ ஜென்மங்களில் அப்யாசத்தால் உண்டானதும் அல்ல என்கை-
”ஆழியங்கை அம்மானை ஏத்தாதயர்த்து – தீவினையேன் வாளா விருந்தொழிந்தேன் கீழ் நாள்களெல்லாம்’” (பெரியதிருவ. 82) என்றும், ஸர்வாதிகனான ஸர்வேஸ்வரனை மங்களாஸாஸநம் பண்ணாதே விஸ்மரித்து அநாதி காலம் வ்யர்த்தமே இருந்தேன் என்கையாலும், இப்படி ஜந்மாந்தரங்களில் தமக்கு கர்ம ஜ்ஞாநாதிகளில் அந்வயமில்லை என்று அருளிச் செய்கையாலே. (ஸாதந த்ரய பூர்வாப்யாஸ ஜமல்ல) ஐத்மாந்தரங்களில் கர்ம ஜ்ஞாந பக்த்திகளை அநுஷ்டி,த்து தத்பலமாய் வந்த பக்தியன்று என்கிறார் –
தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா
இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்த உருவின்
அம் மானை அந் நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து–82—அது பத்து-இது எட்டு என்னும் ஞானம் இத்தனை அல்லது
பகவத் விஷயத்தை ஆராயும் ஞானம் ஒன்றும் இல்லாமையால்-தத் ஞானம் அஞ்ஞானம் அதோந்ய துக்தம் வித்யாந்யா சில்பநை புணம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-என்னும் ஞானம் யுண்டாகையால்-தீ வினையேன்-பகவத் அனுபவ யோக்யமான காலத்தைப் பாழே போக்கின பாபத்தைப் பண்ணினேன்-வாளா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் குனியக் குறுணி பற்றும் காலம் எல்லாம் வ்யர்த்தமே இருந்தேன் (ஆனுகூல்ய லேசம் இருந்தாலே பேறு என்றவாறு )அவதரித்து அல்ப அநுகூலயத்திலே விஷயீ கரிக்கும் காலம் போயிற்று என்று தாத்பர்யம்-வடிவைக் கரந்து வர்த்திக்கிற அம் மாய மானை
அன்று தொடர்ந்த அருகாழியைக் கையிலே யுடைய ஸர்வேஸ்வரனை இளைய பெருமாளும் உதவாத தசையில் ஏத்தப் பெறுவது அறிவு கெட்டுக் கிடந்த நான் பழுதே போக்கினேன்-
—
இன்னமும் இவர் தம்முடைய திவ்ய ஸூக்தி விசேஷத்தாலே இது தன்னை வ்யக்தீகரிக்கிறார்-ஜந்மாந்தரங்களிலே ஸாதித்துப் பெற்றதன்றாகிலும் இந்த ஜந்மத்திலே சில தாள் ஸாதித்துப் பெற்றதானாலோ என்னில், அதுவுமல்ல என்கிறார்–
இப் பிறப்பே சில நாளில் என்ற போதே இரண்டும் கழியும்-சூரணை-103-
அதாவது-இப் பிறப்பே–சில நாளில் என்ற போதே-குறிக் கொள் ஞானங்களால் எனை ஊழி செய்தவமும் , கிறிக் கொண்டு இப் பிறப்பே சில நாளில் எய்தினன் யான்—திருவாய் -2-3-8- -என்று
யம நியமாத்ய வஹிதராய் கொண்டு சம்பாதிக்க வேண்டும்-வேதன த்யாநோபாச நாத்யவஸ்தா விசேஷங்களான ஜ்ஞானங்களாலே அநேக கல்பம் கூடி ஸ்ரவணமாய் ,மனனமாய் , த்ருவ அனு ஸ்ம்ருதியாய் வரக் கடவ பக்தி யோகமாகிற தபசினுடைய பலத்தை ஒரு யத்னமும் இன்றிக்கே இருக்க –
நல் விரகானவனாலே -இஜ் ஜென்மத்திலே -அதிலும் அல்ப காலத்திலேயே பெற்றேன் என்கையாலே –இரண்டும் கழியும் –-அதாவது-ஜென்மாந்தர அப்யாசஜம் என்றும் ,-இஜ் ஜென்மத்திலே சாதன அனுஷ்டானஜம் என்றும்-சொல்லுகிற இரண்டும் போம் என்ற படி —-இப் பிறப்பே -என்றும் -சில நாள்களில் -என்றும் இரண்டையும் அருளிச் செய்தது ஜென்மாந்தர அப்யாசத்தையும் இஜ் ஜென்மத்தில் சிரகால சாத்தியமான வற்றில் அன்வயத்தையும் வ்யாவர்த்திக்கைக்கா இறே-
அன்றிக்கே –இடகிலேன்–நோன்பு அறிவிலேன் -கிற்பன் -சில நாளில் -இத்யாதி வாக்யத்தில் எடுத்த சந்தைகள் எல்லாத்தாலும் பூர்வ ஜென்ம சித்தமான சாதன த்ரய அப்யாச பலம் இல்லாமையை சாதித்தாகவும் , அது இல்லையாகில் ,இஜ் ஜென்மத்தில் அவற்றை அப்யசித்து ,வந்தததனாலோ என்கிற சங்கை வர- பூர்வ ஜென்மங்களிலும் இஜ் ஜென்மத்திலும் இவருக்கு அவற்றில் அன்வயம் இல்லை என்னும் இடத்தை-இப் பிறப்பே -இத்யாதி -யான இவருடைய ஸ்ரீ ஸூக்தி விசேஷத்தாலே தர்சிப்பியா நின்று கொண்டு ,-உபய சங்கையும் சேரத் தள்ளுகிறார் என்று இங்கனே யோஜிக்கவுமாம் ..
இந்த யோஜனையைப் பற்றவும் , பூர்வ யோஜனையே இதனுடைய பட்டோலையான பெரிய படிக்கு சேருவது-
““குறிக் கொள் ஞானங்களால் எனை யூழி செய்தவமும் கிறிக் கொண்டிப் பிறப்பே சிலநாளிலெய்தினன் யான்” (திருவா. 2 – 8 – 8) என்று யம நியமாத்யவஹிதராய்க் கொண்டு ஸம்பாதிக்க வேண்டும் வேதந-த்யாந-உபாஸநாத், யவஸ்தா விஸேஷங்களான ஜஞாநங்களாலே அநேக கல்பம் கூடி ஸ்ரவணாமாய், மநநமாய்-த்ருவாநுஸ்ம்ருதியாய், வரக் கடவதான தப பலத்தை ஒரு யத்நமின்றியிலே இருக்க நல் விரகனான அவனாலே இஜ் ஜந்மத்திலே, அது தன்னிலும் அல்ப காலத்திலே பெற்றேனென்கைஃ யாலே ஐந்மாந்தர ஸாத்யமுமல்ல; இஜ் ஜந்மத்திலும் ஸாதித்து வந்ததுமல்ல என்கிறார் –
குறிக் கொள் ஞானங்களால் எனை யூழி செய் தவமும்
கிறிக் கொண்டு இப்பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே –2-3-8—குறிக் கொள் ஞானங்களால் – யம நியமாதி க்ரமத்தாலே அவஹிதராய்க் கொண்டு சம்பாதிக்கும் பக்தி ரூபாபன்ன ஞானங்களாலே
வேதன உபாசன த்யாநாத்ய அவஸ்தா விசேஷங்களாலே -பலவாகச் சொல்லுகிறது-எனை யூழி செய்தவமும்-கிறிக் கொண்டு –அநேக கால சாத்தியமான புருஷார்த்தத்தை -அநாயாசேன பெறலாவது ஒரு நல் விரகைப் பெற்று-தபஸ் –என்று தத் பலத்தைச் சொல்லுகிறது-கிறி என்று பகவத் பிரசாதம்
இப்பிறப்பே சில நாளில் எய்தினன்--இஜ் ஜென்மத்தில் -அது தன்னிலும் அல்ப காலத்திலேயே பெற்றேன்-யான்--ஒரு புருஷார்த்தம் உண்டு என்று அறியாத நான்
—
ஆனால் இவருக்கு இந்த பக்தி உண்டாகுகைக்கு ஹேது என் என்னும் ஆ காங்க்ஷையிலே –பல போக்தாவான ஈஸ்வரன் கிருஷி பலன்-என்னும் அத்தை –ஷேத்ரமும் ,கர்ஷகனும் ,க்ருஷியும் ,தத் பலமுமாக ரூபித்து கொண்டு அருளிச் செய்கிறார் –ஆனால் இவர்க்கு இந்த பக்தி உண்டாகைக்கு ஹேது ஏதென்னில் பல போக்தாவான ஸர்வேஸ்வரனுடைய க்ருஷிபலம் என்னுமிடத்தை க்ஷேத்ரமும், கர்ஷகனும், க்ருஷியும், தத்பலமுமான வேஷத்தாலே அருளிச் செய்கிறார்–
1-பெரும்பாழில் ஷேத்ரஜ்ஞன் பெருஞ்செய் கலியாரேவ ஆளும் வன் குறும்பர் குடியேறிப் பெருங்குடியும் தங்கள் கருத்துள்ளே யாக்கிப் படிந்துண்ணும் போகத்தே தூராதே யொறுக்கெணுப் போகத்துக்குக் காவல் செய்து குமைத்துத் திரித்து வீழ்த்து வலித்தெற்றி அருவியறுத்துக் கடனாயின இறுப்பிக்கப் பாழ்த்த விதி யானவாறே –2-தன் பால் மனம் வைப்பிப்பதாகத் தேய்ந்தற மன்னி ஒள் வாளுருவி வினைத் தூற்றை வேரறுவித்துத் தீக் கொளீஇக் கவ்வை எருவிட்டு அமுதவாறு தலைப் பற்றி ஈரியாய்க் கசிந்ததிலே ஈரநெல் வித்தி –3-எழு நாற்றுக் களையையும் வேர் முதல் மாய்த்துப் பட்டிச் சேவதக்கி மீதுகொள்ளாமல் குறிக்கொள்வித்துக் கடல்புரைய விளைந்து தலை வணக்கினவாறே –4-நாளுநாள் கோட்குறையாக நின்றாரறியாமல் குணங்கொண்டு ஆராமை யுண்டு காலக்கழிவாலே திலத்துகாமல் பற்றறுத்துத் தண்டாலடித்துப் பதரறுத்துப் போர்த்த தோல் விடுத்து ஸுக்ஷ்மவொட்டும் நீரிலே கழுவி வேறோர் கலத்திட்டு பைந்தொடி மடந்தையரைக் கொண்டு ஷட் குண்ரஸாந்நமாக்கி வானோர்க்காரா வமுதானவாறே முற்றுமுண்ண முன்னம் பாரித்து –5-உழுவதோர் நாஞ்சில் கொண்டு பெருக முயலும் பத்தி யுழவன் க்ருஷி பலமிறே-சூரணை -104–
(பெரும் பாழ்-மூலப் பிரக்ருதி –ஷேத்ரஞ்ஞன் -ஆன்மா –பெரும் செய் -மனம் -வயலாக உருவகம் )பெரும் பாழில் ஷேத்ரஜ்ஞன் பெரும் செய் –அதாவது – முடிவில் பெரும் பாழ்–திருவாய் -10-10-10-என்று நித்தியமாய் -அபரிச்சேதமாய் , சேதனருக்கு போக மோஷங்களை விளைத்துக் கொள்ளலாம் நிலமான பிரகிருதி தத்வத்தில் –-ஷேத்ரஜ்ஞன் ஆகிற பக்த சேதனுடைய ,-நெஞ்சப் பெரும் செய் -5-3-4-என்று பக்திக்கு விளை நிலமான மனஸ் ஆனது –பாழ்த்த விதி ஆனவாறே -என்றதோடு இதுக்கு சம்பந்தம் -பாழ் படுகைக்கு அடி சொல்லுகிறது நடு உள்ளது அடங்கலும் –
(பெரும்பாழில் க்ஷேத்ரஜ்ஞன்) “முடிவில் பெரும்பாழேயோ”” (திருவா. 10 – 10 – 10) என்று அபரிச்சேத்,யமாய், சேதநர்க்கு போக மோக்ஷங்களை விளைத்துக் கொள்ளுகைக்கு நிலமான மூல ப்ரக்ருதியிலே பத்தனான சேதநன், “நெஞ்சப் பெருஞ் செய்யுள்” (திருவா. 5 – 3 – 4) என்று பகவத் பக்திக்கு விளை நிலமான சேதநருடைய நெஞ்சாகிற பெரும் செய்யிலே-
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10–ஸ்வ கார்யமான மஹத்தாதிகளைப் பத்துத் திக்கிலும் புக்கு எங்கும் வியாபிக்க -நித்தியமாய் அபரிச்சேதயமாய் -சேதனர்க்கு புருஷார்த்தத்தை விளைத்துக் கொள்ளலாம் நிலமான பிரகிருதி தத்துவத்துக்கு ஆத்மாவானவனே
ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4–நெஞ்சமாகிற பெரிய செய்யிலே. கலவியும் பிரிவும் என்னும் இவற்றாலே புடைபடுத்திப் பரமபதத்தைப் போன்று பரப்புடைத்தாம் படி பெருக்கினானாதலின் ‘நெஞ்சப் பெருஞ் செய்யுள்’ என்கிறாள்.-ஆக, ஊரார் அலராகிற எருவை இட்டு, தாயாராலே எப்பொழுதும் பேசப்படுகின்ற ஹித வசனமாகிற நீரை நிறுத்தி, ஆசையாகிய நெல்லை வித்தி முளைத்த நெஞ்சமாகிற பெரிய விளை நிலத்துக்குள்ளே என்றபடி.
கலியார் ஏவ ஆளும் வன் குறும்பர் குடி ஏறி –அதாவது – ஏவினார் கலியார் நலிக என்று என் மேல்—பெரிய திருமொழி -1-6-8-என்கிறபடியே கலியுகமாகிற வன்னியன் -இவனை நலியும் கோள் -என்று ஏவ ,
ஆளும் வன் குறும்பர் –அதாவது –மனம் ஆளும் ஓர் ஐவர் வன் குறும்பர் -பெரிய திருவந்தாதி -51-என்கிறபடியே – சேதன சேஷமான மனஸை -தங்களுக்கு சேஷம் ஆக்கி கொண்டு நடத்தும் அவர்களாய் –முன் கை மிடுக்கராய் -அத்வீதியராய் இருந்துள்ள இந்திரியங்களாகிய குறும்பர் –குடியேறி –-அதாவது –கோவாய் ஐயர் என் மெய் குடியேறி -பெரிய திருமொழி -7-7-9-என்கிற படியே இச் சேதனனுக்கு நியாமகராய் கொண்டு , தேஹத்திலே குடி புகுந்து ,-கலியார் ஏவ -என்றது-இந்திரியங்கள் உடைய நலிவுக்கு கலி காலம் பிரவர்தகம் ஆகையாலே –கலியார் -என்றும் -ஐவர்-என்றும் -சேதன சமாதியாலே சொல்லுகிறது .-தனக்கு என்ன ஆக்ரஹம் உடையாரைப் போலே ,நலிகிற கொடுமையைப் பற்ற —
கலியார் என்று -ரேபாந்தமாக ஆழ்வார் அருளிச் செய்தது கலி காலத்துக்கு அஞ்சினபடி யாலே இறே —
(கலியாரேவ) ““ஏவினார் கலியார் நலிக’” (திருமொழி 1 – 6 – 8) என்று கலியுகமாகிற வறியன் தன் படரான இந்த்ரியங்களை ப்ரேரிக்க. (ஆளும் வன் குறும்பர்) “’மனமாளுமோரைவர் வன்குறும்பர்”’ (பெ.திருவ.51) என்று ப்ரதாந கரணமான மநஸ்ஸையும் தங்கள் வஸமாக்கிக் கொண்டு ஆளுமவர்களுமாய் முன்கை மிடக்கருமாய் அநியாம்யருமான அத்விதீயரை வரும் ““பொய்யாலைவரென் மெய் குடி யேறி”” (திருமொழி 7 7 – 9) என்கிறபடியே குடியேறி-
ஏவினார் கலியார் நலிக வென்று என் மேல் எங்கனே வாழுமாறு ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல் வண்ணா
பாவினாரின் சொல் பன் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என்
நாவினால் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்–1-6-8–கலியார் என்கிறார் ஆயிற்று -கலி காலத்துக்கு அஞ்சினபடியாலே —
மனமாளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மை
சினமாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து -புனமேய
தண் துழாயான் அடியைத் தான் காணும் அஃது அன்றே
வண் துழாம் சீரார்கு மாண்பு –51–பள்ளிகள் கலஹம் போலே – ஈஸ்வரனுக்கு ஆத்மா சேஷமாய் –
ஆத்மாவுக்கு மனஸ்ஸூ சேஷமாய்-மனஸ்ஸூ போன வழியே போகக் கடவதான இந்திரியங்கள் இருக்கும் முறை அன்றிக்கே மனஸ்ஸை இந்திரியங்கள் ஆளும்படி இருக்கை-வன் குறும்பர்-மனஸ்ஸைத் தங்கள் போன வழியே கொடு போக வல்லராய் இருக்கை-இன்னதனை த்ரவ்யத்துக்கு அரசு செய்வாரைக் கிடைக்கும் என்னும் வன்னியரைப் போலே
கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தா என்று குமைத்துப்
போவார் நானவரைப் பொறுக்க கில்லேன் புனிதா புட் கொடியாய் நெடு மாலே
தீவாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே–7-7-9-நீ சேஷியாமது தவிர்ந்து இவை எனக்கு நியாமகமாய்க் கொண்டு வந்து என் சரீரத்திலே குடி புகுந்தது –
பெரும் குடியும் தங்கள் கருத்துள்ளே ஆக்கி –அதாவது –முன்னின்று முறை போக்கும் பெரும் குடி போலே (இங்கு பெரும் குடி என்றது மனத்தினை ) தங்களுக்கு பிரதானமான மனசையும் –
ஐம்புலன் கருதும் கருத்துள்ளே திருத்தினேன் மனத்தை –பெரிய திருமொழி -1-1-8–என்கிறபடியே –
தாங்கள் நினைத்த வழியே ஒழுகும் படியாகப் பண்ணி-படிந்து உண்ணும் போகத்தே –அதாவது
படிந்துண்டும் போகத்தே தூராதே பொருக் கொணா போகத்து காவல் செய்து –பெரிய திருமொழி -1-6-2-
புலன் படிந்து உண்ணும் போகம் -என்று விஷயங்களிலே அவஹாகித்து புஜிக்கிற போகத்தில் –தூராதே-தூராக் குழி-திருவாய்-5-8-6- -என்ற படி ஒரு காலும் பூர்ணம் ஆகாதே –பொருக் கொணா போகத்து-பொறுத்து கொண்டு இருந்தால் பொறுக்க ஓணாப் போகாமே நுகர்வான்-என்கிறபடியே –பெரிய திருமொழி -7-7-7-இவற்றால் வந்த நலிவை ஆற்றி இருப்போம் என்றால் ,ஆற்ற ஒண்ணாத படி ,
விஷய போகங்களை புஜிக்க வேணும் என்று –காவல் செய்து – கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக்காவலை -பெரிய திருமொழி -7-7-8– -என்கிற படி க்ரூரராய் ,நலிய நலிய- இளகிப் பதியா நின்ற பருவத்தை உடையராய்க் கொண்டு ,இவனைச் சிறை செய்து
பெருங்குடியும் தங்கள் கருத்துள்ளே யாக்கி) ““ஐம்புலன்கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை?” (திருமொழி 1 – 1 – 8) என்கிறபடியே ப்ரதாந கரணமான மநஸ்ஸாகிற பெருங்குடியும் தங்கள் கருத்துள்ளேயாம்படிபண்ணி. (படிந்துண்ணும் போகத்தே தூராதே) *’புலம்படிந்துண்ணும் போகமே பெருக்கிப் போக்கினேன்’ (திருமொழி 1 – 6 – 2) என்று ஸப்தாதி விஷயங்களிலே அவகாஹித்து பஜிக்கிற போகத்தை அபி வ்ருத்தமாக்கி. “’தூராக்குழி”’ (திருவா. 5 – 8 – 6) என்கிறபடியே அத்தால் ஒருகாலும் பர்யாப்தி பிறவாதே. (பொறுக்கொணுப் போகத்துக்குக் காவல் செய்து) ”பொறுத்துக் கொண்டிருந்தால் பொறுக் கொணாப் போகமே நுகர்வான் புகுந்து” (திருமொழி 7 – 7 – 7) என்று சேதநனாலே பொறுக்கப் போகாத ஸப்தாநுபவத்துக்கு, “கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த”” (திருமொழி 7 – 7 – 8) என்று நெஞ்சில் க்ரெளர்யத்தை உடையராய், பதிக்க பாதிக்க மேலே இளகிப் பதித்து வருகிற அந்த விஷயங்கள் {இந்த்ரியங்கள்] கீழே சொன்ன போகத்துக்கு விருத்,த,மான பகவத் ஸம்ரம்பமாகிற் ராஜபரிகரம் புகுராதபடி காவல்செய்து.
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை பெரு நிலத்தார் உயிர்க்கு எல்லாம்
செற்றமே வேண்டித் திரி தருவேன் தவிர்ந்தேன் செல் கதிக்கு உய்யுமாறு எண்ணி
நல் துணையாக பற்றினேன் அடியேன் நாராயணா என்னும் நாமம் —1-1-8–மனத்தை பர விஷயமாக்கி -விஷயங்களிலே ப்ரவணம் ஆகிற பாஹ்ய இந்திரியங்களை காதாசித்கதமாய் ஆகிலும் விஷயங்களில் நின்றும் மாற்றி -ப்ரத்யக் விஷயம் ஆக்கினால் நல் வழி போகுகைக்கு உறுப்பாம் இறே –ஸ்தோத்ராதி இந்திரியங்கள் விஷயங்களிலே இழிந்து தான் நினைத்த வழியிலே கொடு போய் –
மனசையும் அதுக்கு உறுப்பாக்கி போந்தேன்-விஷய ப்ரவணர் ஆனவர்கள் விஷய ப்ராவண்யம் போராது என்று ஔஷத சேவை பண்ணி இருப்பார்கள் இறே-அப்படியே விஷயங்களிலே மனசை வலிய மூட்டிப் போந்தேன்-
சிலம்படி யுருவில் கரு நெடும் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து
புலம்படிந்து உண்ணும் போகமே பெருக்கிப் போக்கினேன் பொழுதினை வாளா
அலம் புரி தடக்கை யாயனே மாயா வானவர்க்கு அரசனே வானோர்
நலம் புரிந்து இறைஞ்சுன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் -1-6-2—ஸ்திரீகளுக்கு வழி பறித்திடுமது மறக்க ஒண்ணாதே- தன்னுடைய உஜ்ஜீவனத்துக்கு உபாயமானத்தையே யாயிற்று வருந்தி மறப்பது –கொண்டி திரியும் பசுப் போலே-இந்த்ரியங்கள் தான் விஷயங்களில் மண்டி யாயிற்று இருப்பது முதல் தன்னிலே –அதுக்கு மேலே-விஷய சந்நிதி உள்ள இடத்திலே வர்த்தித்து
இந்த்ரியங்களுக்கு விஷயங்களிலே போக்யதா புத்தியைப் பிறப்பித்து-அவை அவற்றில் மேல் விழுந்து புஜிக்கும் படி – அத்தால் வந்த போகத்தைப் பெருக்கி –பகவத் விஷயத்தில் அடிக் கழஞ்சு பெற்று ( மதிப்பு பெற்று )செல்லக் கடவ காலத்தை வ்யர்த்தமே போக்கினேன்-
சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்துன்னடி சேறும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!
யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!–5-8-6—உன் திருவடிகளை சேரும் முறைமை கண்டு வைத்தே துஷ்பூரமான இந்திரியங்களுக்கு இரை தேடியிட்டு எத்தனை நாள் அகன்று இருக்கக் கட வேன் – இப்படி ஆறி இருக்கப் பார்த்தால் முறையை அறிவித்தது என் –மயர்வற மதி நலம் அருளிற்றிலை யாகில் நானும் ஆறி இருக்கலாயிறே-பூர்ணே சதுர்த்தசே-வர்ஷே -என்று ஓர் அவதி பெறினும் பெற்றதோடு ஒக்கும்
கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார் வண்ணா கடல் போல் ஒளி வண்ணா
இறுத்திட்டான் விடை ஏழும் முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழுமும் ஆனாய்
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் தின்ற வம்மானே–7-7-7-இவற்றால் வந்த நலிவை ஆற்றி இருப்போம் என்றால் ஆற்ற ஒண்ணாதபடி போகங்களைப் புஜிக்க வேணும் என்று ஐவர் நெருக்கி புஜிப்பிக்க அவர்களுக்கு அஞ்சி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –
நெடியானே கடியார் கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்
கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக் காவலைப் பிழைத்துக்
குடி போந்து உன்னடிக் கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி
அடியேனைப் பணி யாண்டு கொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே–7-7-8—நெஞ்சில் நன்மை இன்றிக்கே பிறரை நலிய நலிய இளகிப் பதியா நின்ற பருவத்தை யுடைய ஐவர் வந்து புகுந்து சிறை செய்கிற –த்யக்த்வா புத்ராம் ச தாராம் ச ராகவம் சரணம் கத –என்கிறபடியே-அவற்றைத் தப்பி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன்-
குமைத்து திரித்து வீழ்த்து வலித்து எற்றி அருவி அறுத்துக் கடனாயின இறுப்பிக்க –அதாவது –
குமைத்து – கூறை சோறு இவை தா என்று குமைத்துப் போகார்-பெரிய திருமொழி -7-7-9- -என்றும் ,
திரித்து-செக்கலிட்டு திரித்துக்கும் ஐவர் –திருவாய் -7-1-5–என்றும் ,-வீழ்த்து–கொடு வன் குழியினில் வீழ்க்கும் ஐவர் –திருவாய் -7-1-9-என்றும் ,வலித்து-எற்றி–ஐவர் திசை திசை வலித்து எற்றுகின்றனர் –திருவாய் -7-1-10–என்றும் ,-அருவி–ஐவர் அருவித் தின்றிட–பெரிய திருமொழி -7-7-1- என்றும் –
அறுத்து–ஐவர் அறுத்துத் தோன்றிட –பெரிய திருமொழி –7-7-7-என்றும் -என்கிறபடியே
தனக்கு அபீஷ்டமானவற்றை தா என்று துகைத்து இழுத்து , சரீரமாகிற செக்கிலே இட்டு ,சுழற்றி க்ரூரமாய் , கரையேற ஒண்ணாதபடி இருக்கும் விஷயங்கள் ஆகிற படு குழியில் தள்ளி ,
அவை தான் அநேகங்களாக ஸ்வ ஸ்வ விஷயங்களிலே கொடு போகைக்காக ,
நாலு திக்கிலும் இழுத்து ,நலிந்து அருவித் தின்னுமா போலேயும் ,அறுத்து தின்னுமா போலேயும் ,
என் விஷயத்தைக் காட்டு -என் விஷயத்தைக் காட்டு -என்று நெருக்கி , இப்படி பஹுவிதமாகத் தண்டித்து –
கடனாயின இறுப்பிக்க –-அதாவது –பொருள் இன்பம் என இரண்டும் இறுத்து என் ஐம்புலன்கட்குக் கடனாயின –பெரிய திருமொழி -6-2-1-என்று ஸ்ரோத்ராதிகளுக்கு ,பிராப்தமாய் இருக்கிற அர்த்த காமங்கள் என்று சொல்லப் படுகிற ,இரண்டையும் கடமை இருப்பாரை போலே அவற்றாலே பரி பூதனாய்க் கொடுத்துப் போந்தேன் என்னும் படி தங்களுக்கு பிராப்த கரங்களை இறுப்பித்து கொள்ள
(குமைத்துத்திரித்து வீழ்த்தி வவித்தெற்றி அருவியறுத்தென்றும்) ‘“கூறைசோறிவை தாவென்று குமைத்துப்போகார்” (திருமொழி 7 – 7 – 9) என்றும், ”செக்கிலிட்டுத திரிக்குமைவரை”’ (திருவா. 7 – 1 – 5) என்றும், ‘*கொடுவன்குழியனில் வீழ்க்குமைவரை” (திருவா. 7 – 1 – 9) என்றும், “(திசைதிசை வவித்தெற்றுகின்றனர்”” (திருவா. 7 – 1 – 10) என்றும், “’அருவித்தின்றிட அஞ்சி நின்னடைந்தேன்”’ (திருமொழி 7 – 7 – 1) என்றும், “ஐவரறுத்துத்தின்றிட அஞ்சி”? (திருமொழி 7 – 7 – 7) என்றும் சொல்லுகிறபடியே இப்படி ஆராய்ச்சியற்றுத் தங்கள் வறமானவாறே பலபடியாலும் தண்டித்து. (கடஞுயின இறுப்பிக்க) ““பொருளின்பமென இரண்டுமிறுத்தேன் ஐம்புலன்கட்கடனாயின”’ (திருமொழி 6 – 2 – 1) என்று ஸ்ரோத்ராதி,களுக்கு ப்ராப்தமாயிருக்கிற அர்த்த காமங்கள் என்று சொல்லப்படுகிற இரண்டையும் கடமை யிறுப்பாரைப் போலே அவற்றாலே பரிபூ,தனாய்க் கொடுத்துப் போந்தேன் என்று அவற்றுக்கு ப்ராப்தங்களை இறுப்பித்துக் கொள்ள.
கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தா என்று குமைத்துப்
போவார் நானவரைப் பொறுக்க கில்லேன் புனிதா புட் கொடியாய் நெடு மாலே
தீவாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே–7-7-9—நீ சேஷியாமது தவிர்ந்து இவை எனக்கு நியாமகமாய்க் கொண்டு வந்து என் சரீரத்திலே குடி புகுந்தது -நான் ( வகுத்த ப்ராப்தமான திருவடிகளையே )கூறையும் சோறுமாக நினைத்து இருக்கும் அது ஒழிய வேறு சிலவற்றைத் தா வென்று என்னை நெருக்கி ஒரு ஷணமும் கால் வாங்கு கிறிலர்கள் –
நான் அவர்களுடைய நலிவைப் பொறுக்க மாட்டு கிறிலேன் –
தீர் மருந்தின்றி ஐவர் நோயடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்தினி யாகுவார்! அடலாழிஏந்தி அசுரர் வன்குலம்
வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ!–7-1-5—ஐவர் நோயடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை-சப்தாதிகள் இவ்வாத்மாவை முடிக்கும் சரீரம் -அதிலே பிரவேசித்து நெருக்கும் ஸ்ரோத்ராதிகளை -சரீரத்தில் பிரவேசிப்பித்து சப்தாதிகளை காட்டி நெருக்குகிற ஸ்ரோத்ராதிகளை –
குல முதல் அடுந் தீவினைக் கொடு வன் குழியினில் வீழ்க்குமைவரை
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்
நில மு தல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப்பொருள்
பல முதல் படைத்தாய்! என்கண்ணா! என் பரஞ்சுடரே!–7-1-9–இப்படிப்பட்ட மஹா பாபங்களை விளைக்க வற்றாய் -கொடிதாய் -துஷ் பரிஹரமாய் –வலிய குழி -புக்கால் கால் வாங்க ஒண்ணாத சப் தாதிகளிலே -புகத் தள்ளும் ஸ்ரோத்ராதிகளை
என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை வலித்து எற்று கின்றனர்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–7-1-10-!–நீ தந்த பிரக்ருதியோட்டை கர்ம சம்பந்தமே ஹே துவாக துர்பரமான விஷயங்களை சுமத்தி ஐந்து இந்திரியங்களும் திக்கு தோறும் வலித்து நலியா நின்றன-
திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடராழி வல்லானே உலகுண்ட ஒருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை அன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே —7-7-1—ரஷகனான உன்னில் காட்டிலும் பாதக வர்க்கம் அணித்தாய் நின்று நலியா நின்றன – கர்ம வச்யன் ஆகையாலே கர்ம க்ருதங்கள் சேர்ந்தே இருக்கும்-நீ அவசரம் பார்த்து புகுந்தாய் -இவை சஹஜங்கள்–உண்ணிலாய 7-1–என்னுமா போலே ஒருவர் இருவர் இன்றிக்கே சேதன சமாதியால் நலியா நின்றுள்ள ஐந்து இந்த்ரியங்கள் என் பக்கல் வந்து புகுந்து என்னை நெருக்கி ஒரு ஷணமும் கால் வாங்குகிறவன வில்லை-என்னுடைய விஷயத்தைக் காட்டு -என்னுடைய விஷயத்தைக் காட்டு என்று இவை தனித் தனியே அலைத்து நெருக்க-அவற்றுக்கு அஞ்சி வந்து-சர்வ ஸ்வாமியான உன் திருவடிகளிலே சரண ரஷணத்தில் அதிகரித்த உனக்கு அத்தை முடிய நடத்த வேண்டாவோ –
கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார் வண்ணா கடல் போல் ஒளி வண்ணா
இறுத்திட்டான் விடை ஏழும் முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழுமும் ஆனாய்
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் தின்ற வம்மானே–7-7-7—இவற்றால் வந்த நலிவை ஆற்றி இருப்போம் என்றால் ஆற்ற ஒண்ணாதபடி போகங்களைப் புஜிக்க வேணும் என்று ஐவர் நெருக்கி புஜிப்பிக்க அவர்களுக்கு அஞ்சி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –
பொறுத்தேன் புன் சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன் ஐம்புலன் கட்கனாயின வாயிலொட்டி
யறுத்தேன் யார்வச் செற்றமவை தன்னை மனத் தகற்றி
வெறுத்தேன் நின் அடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே —6-2-1—சிலரை பந்துக்களாக நினைத்து இருந்தால் அவர்களுக்கு உபகரிக்கும் போது அர்த்தம் வேணுமே – பிறரைக் கவி பாடுவது அர்த்தத்துக்காக விறே-ஆகையால் ஸ்தோத்ராதிகளுக்கு பிராப்தமாய் இருக்கிற அர்த்த காமங்கள் என்று சொல்லப் படுகிற இரண்டையும் கடமை இருப்பாரைப் போலே அவற்றாலே பரி பூதனாய்க் கொடுத்துப் போந்தேன்–இப்படி அர்த்த க்ரஹணம் பண்ணப் புக்கால் அதுக்கு சஹாகரித்தவர்களுக்கு ஸ்நேஹித்து வாழ்விக்கக் கடவன் என்றும்-அதுக்கு விரோதத்தை பண்ணினாரைச் செற்று முடிக்க கடவன் என்றும்-பிரதிஞ்ஞை பண்ணி அந்த சங்கல்பத்தை அனுஷ்டானம் பர்யந்தம் ஆக்கி தலைக் கட்டிப் போந்தேன்-பொருள் இன்பம் இரண்டும் இறுத்தேன் –
பாழ்த்த விதி யானவாறே –அதாவது – இப்படி ஆகையாலே ,வாழ்த்தி அவன் அடியை பூ புனைந்து ,நின் தலையை தாழ்த்து , இரு கை கூப்பு என்றால் ,கூப்பாத பாழ்த்த விதி –பெரிய திருவந்தாதி –84-என்கிற படியே வகுத்த சேஷியானவனை வாழ்த்தி ஆராதித்து ,வணங்கி கும்பிடுகைகள் ஆகிற , இவற்றில் ஒன்றிலும் ,அன்வயியாமையாலே , தத் அங்கீகார பற்றாசான ஸூஹ்ருத கந்தம் அற்று ,மனஸ் பாழ் பட்டவாறே –—
(பாழ்த்த விதியானவாறே) “வாழ்த்தி அவனடியைப் பூப் புனைந்து நின் தலையைத் தாழ்த்திருகை கூப்பென்றால் கூப்பாத பாழ்த்த விதி’” (பெ.திருவ. 84) என்று இப்படி இந்த்ரிய பாரவஸ்யதையாலே ஒரு கரணமும் ப,க,வத், விஷயத்தில் ப்ர வணமாகாத படியாய், நெஞ்சில் ப,க,வத் ஸ்மரண லேஸமுமின்றிக்கே ஈஸ்வரன் எடுக்கைக்குப் பற்றாசாக ஒரு நன்மையும் இல்லாதபடி யானவாறே.
வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு–84—உன் தலையை அவன் திருவடிகளில் தாழ்ந்து இரண்டு திருக்கையையும் கூப்பு என்றால் கூப்பாதே-எங்குச் சென்றாகிலும் கண்டு -திருவாய் –6-8-5-என்னும்படி
ஆதரத்தோடே அவனை ஏத்தாத நெஞ்சமே அவனைப் பற்றாதே கால் பாவலாம் ஆகில் தங்கு-பாழ்த்த விதி என்று-தம்முடைய அகலுகையைச் சொல்லி வெறுக்கவுமாம்-பிராப்தி பிரதிபந்தகமான கர்ம வைகல்யத்தைச் சொல்லவுமாம்
2-தன் பால் மனம் வைப்பிபதாக தேய்ந்து அற மன்னி –( இது தொடங்கி -ஈர நெல் வித்தி முடிய -பயிர் செய்யும் இறைவன் பாழ் பட்ட மனமாகிய வயலைச் செப்பன் இட்டுப் பக்தியாகிற நெல்லை விதைத்தமை ) அதாவது –தன் பால் மனம் வைக்க திருத்தி –திருவாய் -1-5-10-என்கிறபடியே இந்திரிய அவஸ்தையாலே இப்படி பட்ட பாழ் பட்ட மனஸை –பயிர் படும் படி தன் பக்கல் வைக்கப் பண்ணுகைக்காக – தேய்ந்தற மன்னி– அதாவது –எனது ஏழை நெஞ்சாளும் திருந்தாத ஓர் ஐவரை தேய்ந்தற மன்னி இருந்தான் –திருவாய் -8-7-2-என்கிற படி-கண்டது எல்லாத்திலும் சபலமாய் இருக்கிற மனஸை ,அதுவே பற்றாசாக பொதி எடுத்து ஆளா நிற்ப்பராய், எத்தனையேனும் பலவான்கள் திருத்தப் புக்காலும் திருந்தாதே இனி இப்படி ஓர் ஐவர் இல்லை என்னும்படி இருக்கிற இந்திரியங்கள் ஆகிற ஐவர் ஷயித்து , முடிந்து போம் படி , ஆசன பலத்தாலே குறும்பரை அழிக்கும் ராஜாக்களைப் போலே ,
ஸ்தாவர பிரதிஷ்டையாய் இருந்து–
“தன்பால் மனம் வைக்கத் திருத்தி”” (திருவா. 1 – 5 – 10) என்கிறபடியே இந்த்ரியங்களாலே அபஹ்ருதமான மநஸ்ஸைத் தன் வஸமாக்குவதாக, ““எனதேழை நெஞ்சாளும் திருந்தாத ஓரைவரைத் தேய்ந்தற மன்னி’” என்று பிடித்தார்க்குப் பிழையாத படி சபலமான நெஞ்சைத் தங்கள் வஸமாக்கிக் கொண்டு ஆளுகிற அதிகரான இந்த்,ரியங்களாகிற கள்ளர் பள்ளிகளைத் தான் போக்கு வரத்தா யிருக்கில் ஜயிக்க வொண்ணாதென்று அவர்கள் க்ஷ்யித்து நஸிக்கும்படி ஸ்தாவர ப்ரதிஷ்டை,யாயிருந்து
சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10—விரோதியைப் போக்கும் அளவு அன்றிக்கே மனஸ்ஸூக்குத் தானே விஷயமாம் படி அண்ணி
இருந்தான் கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே-8-7-2—கண்டது எல்லாவற்றிலும் -சபலமாய் இருக்கிற என் நெஞ்சை -அதுவே பற்றாசாக இந்திரியங்கள் பணி கொள்ளாத தொடங்கிற்று – திருந்தாத-அநாதி காலம் சர்வ சக்தி திருத்தப் பார்த்த இடத்திலும் திருந்தாத வன்மையையுடைய திருந்தாத வன்மையையுடைய இந்திரியங்கள் – வோரைவரைத்-இப்படி பண்ணுகைக்கு இன்னம் ஓர் ஐவர் இல்லை -இவற்றால் பட்ட நலிவின் மிகுதியால் சேதன சமாதியால் சொல்லுகிறார்-தேய்ந்தற மன்னி-இருந்தான் -பிராகிருத விஷயங்களிலே பற்று அறும் படி வந்து புகுந்து இருந்தான் –பிராகிருத விஷயங்களில் பற்று நேராக க்ஷயிக்கும் படி தன் வடிவு அழகைக் காட்டிக் கொண்டு புகுந்து இருந்தான் விஷயாந்தரங்களிலும் வடிவு அழகிலே இறே இவன் துவக்குண்டு இருப்பது –ராஜாக்கள் சத்ருக்களை ஆசன பலத்தால் அழிக்குமா போலே இந்திரியங்களுக்கு விஷயங்களில் பற்று அரும்படி புகுந்து இருந்தான்–
ஒள் வாள் உருவி வினைத் தூற்றை வேர் அறுவித்து –அதாவது – நீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி—பெரிய திருமொழி -6-2-4-என்கிற படியே – மா மேகம் சரணம் விரஜ–ஸ்ரீ கீதை – -என்று என்னுடைய பிரசாதத்தையே ,உனக்கு உஜ்ஜீவன ஹேதுவாக அத்யவசி என்ன – ஸ்திதோஸ்மி கத சந்தேக–ஸ்ரீ கீதை -18–66 -என்னும் படி -சகல சந்தேகங்களையும் துணித்து பொகட வற்றாய் –சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி–ஸ்ரீ கீதை -என்று அருளிச் செய்த படி , சர்வ பாபங்களையும் சேதிக்கைக்கு சமர்ததுமான ஒண்மை உடைய கிருபை ஆகிற வாளை அப்ரிதகதமாக்கி பக்தி யாகிற பயிருக்கு விளை நிலமாகக் கல்பிதமாய் இருந்துள்ள மனஸ் பாழே கிடந்தது போம் படி-கொடு வினை தூறு -திருவாய்-3-2-9-என்கிற படியே -இவனால் அடி காணவும் அறுக்க ஒண்ணாதாகவும் மூடின பாபமாகிய தூற்றை –வினைகளை வேரற –திருவாய்-3-2-1–என்றும்-வல் வினை தொடர்களை முதல் அரிந்து -திருவாய்-3-2-2–என்றும் சொல்லுகிற படி மறு கிளை உண்டாகாத படி வாசனா ருசிகள் ஆகிற ஊசி வேரோடும் ,பக்க வேரோடும் ,அறுப்பித்து வினை தூற்றை ,வேர் அறுத்து -என்னாதே –வேர் அறுவித்து -என்கையாலே நிஜர்த்தமும் தோற்றுகிறது –-வினை அறுக்கையில் , பிரயோஜக கர்த்ருத்வம் ஈஸ்வரனுக்கும் ,சாஷாத் கர்த்ருத்வம் கிருபைக்கும் ஆகலாம் இறே-(மோக்ஷயிஷ்யாமி –னிச்சாலே நானும் வேண்டா -நீயும் வேண்டா -அவை தன்னடையே விட்டுப் போகும் காண் –முமுஷுப்படி -பிறவினையைக் காட்டும் விகுதி இருப்பதால் )
(ஒள் வாளுரூவி வினைத் தூற்றை வேரறுவித்து) இப்படி இந்த்,ரியங்களாகிற சோரராலே ஆக்ரமிக்கப் படுகையாலே பாபமாகிற தூறு மண்டின அந்த ஸ்தலத்தை, “நீ பணித்த அருளென்னும் ஒள் வாளுருவி எறிந்தேன்’‘ (திருமொழி 6 – 2 – 4) என்று “’மாமேகம்”‘ என்ற என்னுடைய ப்ரஸாதத்தையே உனக்கு உஜ்ஜீவந ஹேதுவாக அத்,யவஸி – என்ன, ““ஸ்தி,தோஸ்மி க.த ஸந்தேஹ கரிஷ்யே வசநம் தவ?” (கீதை 18 – 73) என்னும்படி ஸம்மயங்களை யடையத் துணித்துப் பொகட வற்றாய், ‘ஸர்வ பாபேப், யோ மோக்ஷ யிஷ்யாமி”’ என்று அருளிச் செய்தபடியே அந்த பாபமாகிற தூற்றை சே,தி,க்கைக்கு ஸமர்த்த,மான தன்னுடைய பரம க்ருபை யாகிற வாளை உருவி, “’கொடுவினைத் தூற்றுள் நின்று?’ (திருவா. 3 – 2 – 9) என்று இவனால் அடிக் காணவும் அடி யறுக்கவும் அரிதாய்ப் புகும் வழி அறியுமித்தனை யொழியப் புறப்பட வழி தெரியாதிருப்பதா யிருக்கிற தூற்றை, ““வினைகளை வேரற” ( திருவா. 3 – 2 – 1) என்றும், “தொன் மா வல் வினைத் தொடர்களை முதலரிந்து”” (திருவா. 3 – 2 – 2) என்றும் சொல்லுகிறபடியே மீண்டு கிளையாதபடி ருசி வாஸனை யாகிற ஊசி வேரோடும் பக்க வேரோடும் அறுத்துப் பொகட்டு
பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது
அறிந்தேன் நீ பணித்த வருள் என்னும் ஒள் வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து
செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே —6-2-4—அவன் பணித்த மாமேகம் -என்ற வார்த்தை ஆய்த்து-அருள் என்கிறது என் என்றால்-என்னுடைய பிரசாதத்தையே உன்னுடைய உஜ்ஜீவன ஹேதுவாக அத்யவசி என்றான் இறே–ஒள் வாள்-சம்சயங்களை அடைய துணித்துப் பொகட்டு-நஷ்டோ மோஹ -ஸ்ம்ரித் லப்த -ஸ்திதி தோஸ்மி கத சந்தேக கரிஷ்யே -என்னப் பண்ண வற்றாய் இருக்கை-
கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே –3-2-9–கொடிதான பாபத்தை விளைக்க வற்றாய் புக்க இடமும் புறப்பட்ட விடமும் தெரியாததான சம்சாரத்திலே யாயிற்று நிற்கிறது-
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1—வெந்நாள்--ஞானம் பிறந்தால் இப்பிரக்ருதி சம்பந்தத்தோடே இருக்கிற நாள் அசோகவ நிகையிலே பிராட்டி இருந்தால் போலே-நோய் வீய–நோய் என்று சரீர சம்பந்தம் ஆதல் -விஸ்லேஷம் ஆதல் -வீய முடிய-வினைகளை–சரீர சம்பந்தத்துக்கு அடியானை பாபங்களை-வேர் அறப் பாய்ந்து–சவாசனமாகப் போக்கி -பாய்ந்து என்று சினம் தோற்றுகிறது–ஒரு சர்வ சக்தி செய்யுமத்தை நான் செய்யவோ –
வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2––அநாதியாய் அநேகமாய் சர்வ சக்திக்கும் நெஞ்சு உளுக்க வேண்டும் படி பிரபலமான பாவத் தொடர்ச்சிகளை ஒன்றோடு ஓன்று அனுபந்தித்து இருக்கை –முதல் அரிந்து–வாசனையோடு போக்கி-நின் மா தாள் சேர்ந்து –-பிராப்தமாய் -ஸூ லபமாய் நிரதிசய போக்யமான திருவடிகளை கிட்டி -என்கிற ஸ்தானத்தில் சேர்ந்து என்கிறது கெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போலே இருக்கை –
தீக் கொளீ இ-அதாவது-வெட்டின காட்டை சுட்டிப் பொகட்டுமா போலே ,மோஷ இஷ்யாமி -என்கிற
கிருபா ப்ரயுக்த சங்கல்பத்தாலே ,முந்துற அடி அறுத்த வற்றை –-இறவு செய்யும் பாவக் காடு தீக் கொளீ வேகின்றதால் –பெரியாழ்வார் -5-4-2–என்று இவ் ஆத்மாவை முடிக்கிற கர்ம சந்தானம் நெருப்பு கொழுந்தி வேகா நின்றது என்னும் படி ..-யாதேஷீ கா தூல மக்னவ் ப்ரோதம் ப்ரதூயேத
ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மான ப்ரதூயந்தே -சாந்தோக்யம் -5-24–3 –என்கிற படி-( தீயிலிட்டு தூசு போலே )உரு மாய்ந்து போம் படி தக்த மாக்கி —கவ்வை எரு இட்டு-அதாவது-ஊரவர் கவ்வை எரு இட்டு–திருவாய் -5-3-4- -என்கிற படியே பகவத் ஆபிமுக்யம் பிறந்த அளவிலே , இவன் பாகவதன் ஆனான் என்று சம்சாரிகள் சொல்லும் பழி மொழியை பக்தி ஆகிற பயிருக்கு வர்த்தகமான எருவாக இட்டு –அமுதவாறு தலை பற்றி-அதாவது –அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய் கொண்டது –பெரியாழ்வார் -5-4-2–என்கிற படியே ,-ஜ்ஞானம் ஆகிற அமுத நதியை ,வாயளவாய் தலைக்கு மேலே போம் படி ,பெருகப் பண்ணி —
(தீக்கொளீஇ) ““இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்”” (பெரியா. தி. 5- 4- 2) என்று ‘அஸந்நேவ ஸ பவதி?” என்கிறபடியே இவ் வாத்மாவுக்கு விநாஸத்தைப் பண்ணுகிற பாபமாகிற காட்டை, ‘“இஷீகாதூல மக்,நெள ப்ரோதம் ப்ரதூ,யேத, ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாநஃ ப்ரதூ,யந்தே” (சா. 5 – 24 – 0), “போய பிழையும் புகுதருவானின்றனவும் தீயினில் தூசாகும்”’ (திருப்பாவை 5) என்கிறபடியே வேம்படி பண்ணி, ‘*ஊரவர் கவ்வை எருவிட்டு” (திருவா. 5 – 3 – 4) என்று ப,க,வதபி,முக்,யம் பிறந்தவளவிலே இவனை பாக, வதனென்று ஸம்ஸாரிகள் சொல்லுகிற பழி மொழியை ப,க,வத்,ப,க்தி வர்த்த, கமான எருவாக இட்டு. (அமுதவாறு தலைப் பற்றி) ”அறிவை யென்னு மமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டது’” (பெரியா. தி. 5 – 4 – 2) என்று ஜ்ஞாநமாகிற அம்ருத
பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின்
பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்
இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்
அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே -5- 4-2 ––இவ் ஆத்மாவை முடிக்கிற கர்ம சந்தானம் பெரு நெருப்பு கொழுந்தி வெந்திட்டதால்-ஸ்ரீ ஆழ்வாரும் ஸ்ரீ ஈஸ்வரனும் சம்ச்லேஷித்த அளவிலே அனுமதி வேண்டாதே வெந்தது ஆய்த்து – காண்டா வனம் வெந்தால் போலே-ஞானம் அம்ர்தமாகிற ஆறு பெருகி வாய் அளவாய் தலைக்கு மேல் போகா நின்றது-அதனில் பெரிய என் அவா -என்றபடி-அநு கூல ஞானம் ஆகிற பெருக்காறு-எல்லாம் மென்மேலே ஒரு முகமாய் பெருக்கிடா நின்றது –
மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்–5--உத்தர பூர்வாகக்ங்கள்-பால் குடித்து வியாதி போக்குமா போலே – இனியது அனுபவிக்க இன்னாதது குலையும்
ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4-ஊரார் சொல்லுகிற பழியை ப்ரேமத்துக்கு எருவாக இட்டு -பிராதி கூல்ய-நிவ்ருத்தி பிறந்து -இவ்விசயத்தே கை வைத்த அன்றே பழி சொல்லாத தொடங்கினார்கள் –விபீஷணஸ்து தர்மாத்மா நது ராக்ஷஸ சேஷ்டித்த -என்றாள் இறே ஒருத்தி -நான் மறக்கப் பார்த்தாலும் -அவர்கள் ஸ்மாரகராய் அவத்யக்கரராக நின்றார்கள் -இவர்களால் இறே எனக்கு தரித்து இருக்க லாயிற்று
ஈரி யாய் கசிந்ததிலே – அதாவது –கண்ணனுக்கு என்று ஈரி யாய் இருப்பாள் -திருவாய் -6-7-9–என்றும் ,-கசிந்த நெஞ்சினளாய் –திருவாய் -6-7-8–என்றும் சொல்லுகிற படி அந்த ஞான வாரியாலே -( வெள்ளத்தால் )– நல்லது கண்டால் அவனுக்கு என்னும் அனுசந்தானத்தாலே -ஆர்தரதை விளையும் படி ,–ஈர நெல் வித்தி--அதாவது –சங்கமாகிற நெல்லை விதைத்து .நெஞ்சு பதம் செய்து ,செவ்வி வாய்த்த வாறே அந் நெஞ்சிலே–3-எழு நாற்றுக்களையும் வேர் முதல் மாய்த்து ( எழு நாற்று -என்ற இதில் தொடங்கி தலை வணக்கினவாறே -வரை மனமாகிய வயலிலே விதைத்த பக்தியாகிற நெல் முளைத்துக் கருவிலே ஈன்று காய்த்து முற்றின படியை சொல்லிற்று )-அதாவது – செய்தலை எழு நாற்று –பெரியாழ்வார் -3-7-9-என்கிறபடியே ,-தத் பிரத்யாசன்னமாய் , ததேக பரதந்த்ரமாய் ,ததேக போக்யமாய் ,வளருகிற இப் பயிரில் ,–வேர் முதல் மாய்த்து–அதாவது –-கர்த்ருத்வ போக்த்ருத்வ புத்தியை விளைக்கும் அஹங்கார மம காரங்களாகிய களையையும் –நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து–திருவாய் -1-2 3–என்கிறபடியே வூசி வேரோடே பறித்து பொகட்டு–
(ஈரியாய்க் கசிந்ததிலே) “’கண்ணனுக் கென்று ஈரியா யிருப்பாள்”” (திருவா. 6 – 7 – 9) என்றும், ”கசிந்த நெஞ்சினளாய் ”” (திருவா. 6 – 7 – 8) என்றும், அந்த ஜ்ஞாந வாரியாலே நெஞ்சு பதஞ் செய்து செவ்வி வாய்த்தவாறே. (ஈர நெல் வித்தி) ஸங்க,மாகிற நெல்லை விரைத்து. (எழு நாற்றுக்களையையும் வேர் முதல் மாய்த்து) ‘“செய்த் தலை யெழு நாற்று”’ (பெரியா. தி. 3 – 7 – 9) என்று சொல்லுகிற அந்தப் பயிரிலுண்டான ““நீர் நுமதென்றிவை வேர் முதல் மாய்த்து ”’ (திருவா. 1 – 2- 3) என்று அஹங்கார மமகாரமாகிற களையை ஊசி வேரொடு பறித்துக் பொகட்டு
காரியம் நல்லனகள் அவைகாணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப்போய்ச்
சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9–கிருஷ்ணனுக்கு என்றால் மேல் ஒன்றும் சொல்ல மாட்டாதே -அவன் குணங்களை அனுசந்தித்து நீராய் இரா நின்றாள் -ஈரித்து இருக்கும் -ஆர்த்த ஹ்ருதையாய் இருக்கும்
கைத் தலத்துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்து இவளை
வைத்து வைத்து கொண்டு என்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும்
செய்த் தலை எழு நாற்றுப் போலே அவன் செய்வன செய்து கொள்ள
மைத் தட முகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே – 3-7-9—செய்த் தலையிலே விளைந்த நாற்று
உடையவன் வேண்டினபடி விநியோகம் கொள்ளுமா போலே இவளையும் அவன் வேண்டினபடி செய்து கொள்ள
நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர் மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லே–1-2-3—அனர்த்த கரமான அஹங்கார மமகாரங்களை-இவற்றை சவாசனமாகப் போக்கி-இது அக்னி நா சிஞ்சேத்-போலே துஷ்கரம்-இவை நேராக விடும் போது பகவத் விஷயத்தைப் பற்றி விட வேணும்-அவனைப் பற்றும் போது இவற்றை விட்டு அல்லது பற்ற ஒண்ணாது-ஆகையாலே இதரே தராஸ் ராயக்ரச்தம்-ஆனால் இதற்குப் பொருள் என் -என்னில் -ஆச்சார்ய சேவையாலும் சாஸ்திர அப்யாசத்தாலும் இவை அபுருஷார்த்தம் என்று அத்யவசிக்கை
இரண்டு வ்ருஷம் சேர நின்றால்-ஒன்றிலே குட்டமிட்டுப் பெருங்காயத்தை வைத்தால் மற்றையது நிற்க இது க்ரமத்தால்-உலர்ந்து போமா போலே –இந்த ஜ்ஞானம் பிறந்தால் இவை ஸ்வ கார்யம் செய்ய மாட்டாது
பட்டி சேவை அதக்கி-அதாவது – களை பறித்தாலும் போராதே , பட்டி புகாமல் நோக்கினால் இறே பயிர் தலைப் பெற்றுச் செல்லுவது –ஆகையாலே –வன் புலச் சேவை அதக்கி—பெரியாழ்வார் -5-2-3-என்கிற படி , விஷயாந்தரங்களிலே பிரவணமாய் ,பகவத் பக்தியை தலை அழிக்கை யாலே , பக்தி யாகிற இப் பயிருக்கு பட்டியான இந்திரியங்கள் ஆகிற சேக்கள் உடைய ஸ்வைர சஞ்சார ஹேதுவான கர்வத்தைப் போக்கி —மீது கொள்ளாமல் குறிக் கொள் வித்து –அதாவது – பயிர் பல பர்யந்தம் ஆனாலும் ,பலிதாம் சத்தை ,ராத்ரிசரர் அபஹரிக்க யோக்யதை உண்டாகையாலே ,ரஷை பண்ணுவிக்க வேணும் ஆயத்து ..-அப்படியே –விளைந்த தானியமும் ராக்கதர் மீது கொள்ள கிலார்கள்–பெரியாழ்வார் -4-4-8–என்கிற படி
அனந்யார்ஹமாம்படி–அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் –திருவாய் -5-2-5-என்று ராஷச பிரக்ருதிகளும் , ஆசூர பிரக்ருதிகளுமாகச் சொல்லலாம் படியான அபாகவாத ஜனங்கள் -எங்களுக்கும் இவன் ஸ்நேஹீ -என்று இருக்கும் அவ் வழியாலே ,-இத்தை அபஹரிக்கைக்கு அவகாசம் அற -பக்தியாகிற பயிர் விளைந்து இருக்கும் நெஞ்சுக்கு –-குறிக்கொள்வித்து –-அதாவது-பக்தியாகிற பயிர் விளைந்து கிடக்கிற நெஞ்சுக்கு – பறவை அரையா உறகல் பள்ளி அறைக் குறிக் கொள்மின் -பெரியாழ்வார் -5-3-9-என்கிற படியே காவல் அடைத்து —
(பட்டிச் சேவதக்கி ) வன் புலச்சேவை யதக்கி -பெரியா -5-2-3 என்கிறபடியே அந்தப் பயிருக்குப் பட்டியான இந்த்ரியங்களாகிற சேக்களினுடைய ஸ்வைர ஸஞ்சார ஹேதுவான கர்வத்தைப் போக்கி (மீது கொள்ளாமல் ) விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்கள் -பெரியா -4-4-8- என்று அந்த பக்தியாகிற தானியம் அப்ராப்த விஷயத்திலே போகாதே –பள்ளியறை குறிக்கொள் மின் -என்று காவலடைத்து –(கடல் புரைய விளைத்து )
வயிற்றில் தொழுவைப் பிரித்து வன் புல சேவை அதக்கி
கயிற்றும் அக்கும் ஆணி கழித்து காலிடை பாசம் கழற்றி
எயிற்றிடை மண் கொண்ட எந்தை யிராப் பகலா ஓதுவித்து என்னை
பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே -5- 2-3 –இந்திரியங்கள் ஆகிற வலிய சேக்களை அதக்கி -நெருக்கி – சேவதக்குவார் -போலே -என்னக் கடவது இறே-காவலில் புலனை வைத்து -(திருமாலை -1 )
நளிர்ந்த சீலன் நயாசீலன் அபிமான துங்கனை நாள் தோறும்
தெளிந்த செல்வனை சேவகம் கொண்ட செம்கண் மால் திருக் கோட்டியூர்
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினில்
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே -4- 4-8 ––இதுக்கு ஏகாந்தமான குணங்களை சிநேகத்தோடு சொல்லுவார் உள்ள நாட்டினுள்-அவர்கள் அளவல்ல-அவர்கள் சம்பந்தம் உடையவர் அளவல்ல-அவர்கள் இருந்த ஊர் அளவல்ல – அவ் வூரோடே சேர்ந்த நாட்டினுள் விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே–தனக்கும் தம் பந்துக்களுக்கும் என்னல் இறே அவர்கள் கொள்ளுவது-பகவத் பாகவத விஷயங்களுக்கு என்றால் அவர்களுக்கு கொள்ள சக்தி இல்லை
புனத்தினைக் கிள்ளி புதுவவி காட்டி வுன் பொன் அடி வாழ்க (5-3 )-என்று இறே இவர்கள் இருப்பது –
செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களே யாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.–5-2-5—அஸூர ராக்ஷஸரான நீங்கள் மனுஷ்ய வேஷத்தை கொண்டு பிறந்து கலந்து திரிகிறீர் உள்ளீர் ஆகில்-
கடல் புரைய விளைந்து தலை வணக்கினவாறே –அதாவது –காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி –திருவாய் -5-3-4–என்கிறபடியே எருவும் நீரும் உண்டானாலும் , மேல் வர்ஷம் இல்லாத போது பயிர் தலை குளிர்ந்து வளராது என்று ,காள மேக நிபஸ்யமான வடிவழகை , வர்ஷித்து வளர்க்கையாலே ,அந்த பக்தி ஆகிற பயிர் கடல் போலே ,அபரிசேத்யமாம்படி பலித்து .-தலை வணக்கினவாறே –அதாவது –வரம்பற்ற கதிர்ச் செந்நெல் தாள் சாய்த்துத் தலை வணக்கும் –பெரியாழ்வார் -4-9-8–என்கிற படி பலித்த பயிரானது பரி பக்குவமாய் தலை வணங்குமா போலே ,
பலிதமான அதனுடைய பரிபாக நிபந்தனமான ஆர்த்தியால் வந்த பாரவச்யம் பிறந்தவாறே —நாளு நாள் கோள் குறையாத நின்றார் அறியாமல் குந்தம் கொண்டு ஆராமை உண்டு-( நாளு நாள்-இது முதல் முன்னம் பாரித்து முடிய விளைந்த நெற்களை உரிய காலத்திலே அறுத்து –நெற்களை வேறாகப் பிரித்து-பின் அரிசியாக்கி -பின் சோறாக்கி – உண்டு பயன் பெற்றமயைச் சொன்னபடி ) –அதாவது –
பத்தி பரிமாணம் சொன்ன இத்தால் பலித்தது – தத் ஆஸ்ரயமான ஆத்ம வஸ்து பகவத் போக்யமாம் படி திருந்தினமை இறே –ஆகையால் –
காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி -5-3-4- என்று எருவும் நீரும் உண்டானாலும் மேல் வர்ஷம் இல்லாதபோது பயிர் அபி விருத்த மாகாமையாலே காளமேக நிபஸ்யமான வடிவழகாலே அபரிச்சேதயமான சமுத்திரம் போலே அந்தப் பக்தியாகிற பயிரை அபி விருத்தமாக்கி (தலை வணக்கினவாறே ) வரம்புற்ற கதிர்ச் செந்நெல் தாள் சாய்த்துத் தலை வணக்கும் -பெரியா -4-9-8-என்கிறபடியே அந்தப் பக்தி பரிபாகத்தாலே பலித்த பயிரானது தலை வணக்குமா போலே ஆர்த்தியால் வந்த பாரவஸ்யம் விளைந்தவாறே
ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4—ஊரார் பழியும் -தாயார் ஹித வசனமும் -கேளாத படியான காதல் -அமர்ந்த காதல் -தர்ம அனுபந்தியான காதல் -பெரிதான அமரை விளைத்த காதல் -உஊராரை பூசல் ஆக்கின காதல் என்னவுமாம் –ஈரம் -சங்கம் /காதல் -காமம் –சங்காத் சஞ்சாயதே காம கடல் புரைய விளைவித்த-அப்ரமேயோ மஹா த-என்ற கடல்தி ஒப்பாம் அத்தனை -கிடையா விடினும் விட மாட்டாத காதல் என்கை-கடல் புரைய என்றார் முதல் -அநந்தரம் கடலின் மிகப் பெரிதால் என்றார் –பின்னை மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றார் -முடிவில் அதனில் பெரிய என் அவா –என்றார் –இது இறே காதல் பெருகின படி -இது இறே பொய் நின்ற ஞானத்திற்கு பின்பு இவ்வளவும் வர விளைத்துக் கொண்ட கார்யம் –
உரம் பற்றி இரணியனை உகிர் நுதியால் ஒள்ளிய மார்பு உறைக்க ஊன்றிச்
சிரம் பற்றி முடி இடிய கண் பிதுங்க வாய் அலரத் தெழித்தான் கோயில்
உரம் பெற்ற மலர்க் கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட
வரம் புற்ற கதிர் செந்நெல் தாள் சாய்த்து தலை வணங்கும் தண் அரங்கமே -4- 9-8 –சேற்று வாய்ப்பாலே உரம்பெற்று இருக்கிற தாமரைப் பூவானது –திரு உலகு அளந்து அருளின போது-மேல் எடுத்த திருவடிகளைப் போலே கிளற வளர்ந்து பிரகாசியா நிற்க-அப்போது –லங்கைஸ் சூராணாம் -என்கிறபடியே தேவர்கள் முதலானவர்கள் திரண்டு காலை நீட்டி தலையை வணங்கி தண்டன் இட்டு கிடந்தால் போலே –
4-நாளு நாள் வந்து என்னை முற்றவும் தான் உண்டான்–திருவாய் -9-6-8- -என்றும் ,-கோட் குறை பட்டது என் ஆர் உயிர் —திருவாய் -9–6-7–என்றும் ,-நின்றார் அறியா வண்ணம் என் நெஞ்சும் உயிரும் அவை உண்டு-10-7-1- -என்கிற படியே-ஒரு நாள் புசித்து விடுகை அன்றிக்கே ,நாள் தோறும் வந்து புஜியா நிற்கச் செய்தே .பின்னையும் , பர்யாப்தன் அன்றிக்கே படுகிற அலமாப்பு கண்டு ,இத் தலையிலே சிறிது தொங்கிற்று உண்டு என்று நிரூபித்து அறிய வேண்டும் படியாக இப் பரிமாற்றத்தில் தலை நின்று- பிராட்டி ,திருவடி ,திரு அனந்த் தாழ்வான் -முதலானாரும் அறிய மாட்டாதபடி , பெரும் பசியர் ஆனவர்கள் விளைந்த நெல்லை சேர அறுத்து கொண்டு போய் , புஜிக்கப் பற்றாமே முற்றின வளைவுகளை குந்தம் கொண்டு புசிக்குமா போலே , முக்தனான வாறே ,பின்னை சேரப் புஜிக்க பற்றாத தன் அபிநிவேசத்தால், இந்த சரீரதோடே இருக்கச் செய்தே விளைந்த பரிபாக அனுகுணமாக – மனக்காராமை மன்னி உண்டிட்டாய் —திருவாய் -10-10-6-என்கிறபடியே , மனசுக்கு ஒரு காலும் திருப்தி பெறாதே மென் மேலும் விரும்பி புசித்து —
(நாளு நாள் கோள் குறையாக நின்றாரறியாமல் குந்தங் கொண்டு ) “நாளுநாள்வந்தென்னை முற்றவும் தானுண்டான்”’ (திருவா. 9 – 6 -8)என்றும், ““கோட் குறைபட்டது என்னாருயிர் கோளுண்டே’‘ (திருவா. 9 – 6 – 7) என்றும், ““என்னெஞ்சுமுயிரு முள் கலந்து நின்றாரறியா வண்ணம் என்னெஞ்சு முயிருமவை யுண்டு”” (திருவா. 10 – 7 – 1) என்றும் சொல்லுகிறபடியே நாள் தோறும் பு,ஜியா நிற்கச் செய்தே பர்யாப்தனன்றியிலே அவனுடைய அலமாப்புக் கண்டு இத் தலையிலே சிறிது உண்டென்று நிரூபிக்கலாம்படி யாயும், ப,க,வத,நுப, வத்தில் தலை நின்ற பிராட்டி திருவடி திருவநந்தாழ்வான் தொடக்கமானவர்களும் அறிய வொண்ணாதபடி குந்தங் கொண்டு பு,ஜித்தும். (ஆராமை யுண்டு) “மனக்காராமை மன்னி உண்டிட்டாய்’” (திருவா. 10 – 10 & 6) என்று இப்படிக் குந்தங் கொள்ளுகையாலே அபர்யாப்தனாம்படி புஜித்து ,
கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–9-6-8—ஒரு நாள் அனுபவித்து நம்மது அன்றோ என்று கை வாங்கி இருக்கை அன்றிக்கே நாள் தோறும் நாள் தோறும் அபூர்வமாக அனுபவியா நின்றான் –
என்னை முற்றவும் தானுண்டான்-சம்சாரத்திலே அணு பரிமாணமான இவ்வஸ்துவை விபுவான தான் விளாக்குலை கொண்டு அனுபவித்தான் என்கிற இது தனக்கு ஏற்றமாம் படி கௌரவியா நின்றான் –
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7—என்னாத்மாவை நிச்சேஷமாக புஜிக்க செய் தேயும் இத்தலையிலே சிறிது சேஷித்தது –அவன் சாபேஷனாய்ப் போகையாலே இத்தலையிலே சிறிது சேஷித்தது என்று இருக்கிறார் -இப்போது இருந்து கிலேசப்படக் காண்கையாலே சிறிது தொடங்கிற்று உண்டு என்கிறார் -ஒரு சர்வஞ்ஞான் இல்லாத ஒன்றிலே இத்தனை வியாமோஹம் பண்ணக் கூடாது என்று இருக்கிறார் –
செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–10-7-1-கலவிக்கு தேசிகரான பிராட்டி திருவனந்த ஆழ்வான் முதலானோர்க்கும் அபூமியாம் படி யாய்த்து என்னோடு கலந்து –ஆருயிர் பட்டது எனதுயிர் பட்டது -என்றார் இறே ––என்-நெஞ்சும் உயிரும் அவை உண்டு –தேஹாத்ம விவேகம் பண்ண அறியாதே யாய்த்து புஜித்தது–சேதனனையும் அசித்தோபாதி பரதந்தனாக்கி புஜித்தான் –உருவமும் ஆருயிரும் உடனே யுண்டான் -என்கிறபடியே எனக்கு என்ன மாட்டாமைக்கு -அசித்தோபாதி யாய்த்து சேதனனும் –-போகத்தில் இழிகிற போது இருவராய் இழிந்து -எதிர்த்தலையைத் தோற்பித்து -போக்தாவும் அபிமானியும் தானே யானான் –நிறைந்தானே–அவாப்த ஸமஸ்த காமன் ஆழ்வாரைப் பெறுவதற்கு முன்பு குறைவாளனாய் -இவரைப் பெற்ற பின்பு -பூர்ணன் ஆனான்-
எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-விரும்பி நிரந்தரமாக புஜித்தாய்-இனி உண்டு ஒழியாய்-நீ தொடங்கின காரியத்தை நடுவே குறை கிடைக்க விடாதே விஷயீ கரித்தே விடாய் -நீ ஆரம்பித்த காரியத்தில் குறை கிடப்பது உண்டோ -நீ இவ்வளவு புகுர நிறுத்துகைக்கு நான் சஹகரித்தது உண்டோ மேல் நான் ஓன்று செய்கைக்கு
காலக் கழிவாலே நிலத்து உகாமல் பற்று அறுத்து –அதாவது –காலக் கழிவு செய்யேல்–திருவாய் -2-9-2–என்றும் ,-மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல—பெரிய திருமடல் -என்றும் சொல்லுகிற படி பரிபக்வமான இவ் வஸ்து ,கால ஷேபத்தால் தரைப் பட்டு மங்கிப் போகாமல் ,-பற்று அறுத்து –
அதாவது – வினை பற்று அறுக்கும்-பெரிய திருமொழி -11-4-9- -என்கிற படி – பிராப்தி விரோதமான கர்மங்களை அறுத்து –தண்டால் அடித்து பதர் அறுத்து – அதாவது – அறுத்த நெல் கதிரை தடியாலே அடித்து பதறும் மணியும் பிறிக்குமா போலே-அருள் என்னும் தண்டால் அடித்து -பெரிய திருவந்தாதி -26-என்கிறபடி தன் உடைய கிருபை என்னும் த்ருட தர சாதனத்தாலே ,நெல்லோடு ஒக்க விளைந்து இருப்பதாய் , அசாரமான பதர் போல் இருக்கிற ஆத்ம அனுபவத்தில் ருசியை அறுத்து –போர்த்த தோல் விடுத்து –அதாவதுஅந் நெல்லில் உமியை விடுவிக்குமா போலே , போர்த்த பிறப்போடு நோயோடு மூப்பொடு இறப்பவை பேர்த்து ––திருவாய் -7-5-10- என்கிற படி , ஆத்மாவை பொதிந்து கொண்டு கிடப்பதாய் ,ஆதிவ்யாதிகளுக்கும் (மனத்தின் சோர்வும் சரீர நோயும் ) ,ஷட் பாவ விகாரங்களுக்கும் ,அடியான ஸ்தூல தேகத்தினுடைய ,விமோசனத்தைப் பண்ணி —
காலக் கழிவாலே நிலத்துகாமல் பற்றறுத்து) ‘”காலக் கழிவு செய்யேலே”’ (திருவா. 2-9 – 2) என்றும், மன்னும் வறுநிலத்து வாளாங் குகுத்தது போல்”‘ (பெ.மடல்] என்றும், இப்படி பக்வமான ஸமதந்தரம் கால க்ஷேபத்தாலே மங்கிப் போகாதபடி, ‘ வினை பற்றறுக்கும்”’ (திருமொழி 11 – 4 – 9) என்றும், “*வினைகள் பற்றறுதல்” (திருச்ச. 74) என்றும் சொல்லுகிறபடியே ப்ராப்தி விரோதி,யான கர்மங்களை அறுத்து, அருளென்னும் தண்டாலடித்து‘” (பெ.திருவ. 26) என்றும், அவனுடைய பரம க்ருபையாலே நெல்லோடே கூடி விளைந்திருப்பதாய், அஸாரமான பதர் போலே இருக்கிற ஆதமாநுப,வத்தில் ருசியை யறுத்து, (போர்த்த தோல் விடுத்து) “போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடிறப்பவை பேர்த்து” (திருவா. 7 – 5 – 10) என்கிறபடியே ஆதி,வ்யாதி, களுக்கும் ஷட்,பாவ விகாரத்துக்குமடியான ஸ்தூ,ல தே,ஹத்தையும் கழற்றி
ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
கைதா காலக் கழிவு செய்யலே –2-9-2--செய்கிறோம் என்ன ஒண்ணாது செய்து கொடு நிற்க வேணும் –
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல் ———-89
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்–தனக்காகக் கண்டது அன்றிக்கே பிறர்க்காக கண்ட வஸ்து பிறர்க்கு ஆகப் பெறாதே தானே நின்று –வெறு நிலத்திலே நிஷ் பிரயோஜனமாகப் பொகடுமா போலே விழுந்த தரை தன்னிலே – விநியோகம் கொள்ளுகைக்கு யோக்யமாய் இருப்பதொரு வஸ்துவும் இன்றிக்கே பாழே பொகட்டால் போலே நல் நறு வாசம் தான் இருக்கிறபடி –
துணை நிலை மற்று எமக்கோர் உளது என்று இராது தொழுமின்கள் தொண்டர் தொலைய
உண முலை முன் கொடுத்த வுரவோளதாவி உகவுண்டு வெண்ணெய் மருவி
பணை முலை யாயர் மாதர் உரலோடு கட்ட அதனோடும் ஓடி அடல் சேர்
இணை மருது இற்று வீழ நடை கற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே —11-4-9–ஓன்று என்னலாம் படி நின்ற மருதுகள் முறிந்து விழும்படியாக நடை கற்ற தெள்ளியவன் நம்முடைய பாபத்தை ச வாசனமாக போக்கும் இது நிச்சிதம் -கர்ம பலன்களை -ருசி வாசனைகள் உடன் போக்குவான் என்றபடி-
அறிந்து அறிந்து வாமனன் அடி இணை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்
மறிந்து எழுந்த தெள் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்
பறிந்து எழுந்து தீ வினைகள் பற்று அறுதல் பான்மையே –74—பகவத் ப்ராப்தி பந்தகங்களாய் -ஸ்வ ஆஸ்ரயித்தில் வேர் விழுந்தவை அவற்றை விட்டு-பறிந்து போய்-மறுவல் இடாதபடி வாசனையோடே போம்படி பண்ணுகை–அவன் ஓர் ஏற்றம் செய்தானாக அன்றிக்கே ப்ரக்ர்தியாய் இருக்கை-இதுவும் -சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்கிறபடியே கைங்கர்யத்துக்கும் உப லஷணம் –
யானும் என் நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம் வல் வினையைக்
கானும் மலையும் புகக் கடிவான் தானோர்
இருளன்ன மா மேனி எம் மிறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து —26-–மற்று ஓன்று காணாமல் ஸ்ரம ஹரமான வடிவை யுடைய என் ஸ்வாமியுடைய ப்ரஸாதமாகிற தண்டாலே ஹிம்ஸித்து (மற்று ஓன்று காணாமல்-வினையைப் போக்குகைக்கு வேறே ஒரு உபாயம் காணாமல் அவன் அருளாலே போக்கினான் என்றபடி )
வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே.–7-5-10—ஆத்ம ஸ்வரூபம் தெரியாத படி அறிவு கெடுக்கும் ஜென்மம் என்ன -அது புக்க இடத்தே புக்க கடவதான வியாதி என்ன -அத்தை பொறுத்தாலும் அவர்ஜனீயமாய் வரக் கடவதான மூப்பு என்ன -அதுக்கு எல்லையான மரணம் என்ன -இவற்றை அடைய –பேர்த்துப் –விரகர் நெடும் சுவ போக்க வேண்டும் படி இ றே அதின் கனம்-அஹம் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்றான் இறே –பெருந்துன்பம் வேரற நீக்கித -ஆத்ம அனுபவம் ஆகிற மஹா துக்கத்தை வாசனையோடு போக்கி -ப்ரக்ருதி ப்ராக்ருதங்களுக்கு அஸ்த்தர்ம் என்பதொரு நன்மை உண்டு -அபுருஷார்த்தம் ஸ்திரமானத்துக்கு மேல் இல்லை இறே மஹா துக்கம் –
தன் தாளின் கீழ்ச்-சேர்த்து -அதுக்கு மேலே நித்ய கைங்கர்யத்தை கொடுத்து அருளி
சூஷ்ம ஓட்டும் நீரிலே கழுவி-அதாவது – அநந்தரம் தண்டுலத்தை தவிடு அற கழுவுமா போலே ,ஸ்தூல தேஹம் போனாலும் , தான் போகக் கடவதன்றிக்கே ,சம்சரண ஹேதுவாய்க் கொண்டு , போந்ததாய் ,பகவத் அனுபவ விரோதியாய் இருக்க செய்தே ,விரஜா பர்யந்த கமன சாதனமாய் கிடந்த சூஷ்ம சரீரத்தையும் ,-தத்தோய ஸ்பர்ச மாத்ரென -என்கிற படியே –விரஜா ஜல ஸ்பர்சத்தாலே வாசனா ரேணுக்களுடன் போக்கி ,-கர்ம சம்பந்தம் அறுகையாலே ,சூஷ்ம சரீரம் இருக்கைக்கு ஹேது இல்லாமையால் ,இங்கே கழித்து விடலாய் இருக்க செய்தே ,விரஜா பர்யந்தம் இவனுக்கு கமன சாதனமாக ஈஸ்வரன் தன் இச்சையாலே வைத்து ,விரஜையிலே உள் புக்கவாறே கழித்து விடும் – -என்று இறே நம் ஆச்சார்யர்கள் அருளிச் செய்வது ..-சூஷ்ம பிரகிருதி சம்பந்தம் கிடக்கும் அளவும் ,வாசனா ரேணுவும் கிடக்கையாலே , அதுவும் அப்போது ஆய்த்து நிவ்ருத்தம் ஆவது ..-விரஜைக்கு சென்று கிட்டி , வன் சேற்று அள்ளலையும் வாசனா ரேனுவையும் கழுவி-என்றார் இறே (–ஸ்ரீ பிள்ளைலோகாச்சார்யாரும் அர்ச்சிராதி கிரந்தத்தில் )-வேறோர் கலத்து இட்டு-அதாவது-சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை வேரார் நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டு –சிறிய திருமடல் -30- என்கிறபடியே ,ஸ்தூல சூஷ்ம ரூபியான பிரக்ருதியில் நின்றும் விவேகித்து வாங்கின இவ் ஆத்ம வஸ்துவை அமானவ கர ஸ்பர்சத்தாலே ,அப்ராக்ருத தேஹத்திலே பிரவேசிப்பித்து-
ஸூஷ்ம வொட்டும் நீரிலே கழுவி) ஸ்தூ,ல தே,ஹம் போனாலும் ஸம்ஸரிக்கைக்கு யோக்,யமாகையாலே ப,க,வத,நுப,வ விரோதி,யுமாய், விரஜாதீர பர்யந்தமாக இவ்வாத்மாவுக்கு க,மந ஸாத,நமுமாய், துஷம் போலே ஸ்வரூபத்தைப் பற்றிக் கிடக்கிற ஸுக்ஷ்ம ப்ரக்ருதியையும் ‘*தத்தோய ஸ்பர்ஸ மாத்ரேண”‘ என்கிறபடியே விரஜா ஜல ஸ்பர்பத்தாலே வாஸநா ருசிகளோடே போம் படி கழுவி. (வேறோர் கலத்திட்டு) “சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை வேரார் நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டு”” (சி.மடல்) என்று ஸ்தூ,ல ஸூக்ஷ்மமான ப்ரக்ருதியினின்றும் விவேகித்து எடுக்கப் பட்டு ப,க,வத், விநியோக அர்ஹமான ஆத்ம ஸ்வரூபத்தை அமாநவ கர ஸ்பர்ஸத்தாலே அப்ராக்ருத விக்,ரஹ ப்ரவேஸத்தைப் பண்ணி வைத்து
சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேரார் நுதல் மடவாள் வேரோர் கலத்திட்டு
நாரார் உறி ஏற்றி நன்கமைய வைத்ததனை—வேரோர் கலத்திட்டு – வெண்ணெய் பரிமாறும் கலத்திலே இட்டு வைக்கில் நாற்றமே குறியாக அறியும் என்று த்ரவ்யாந்த்ரம் பரிமாறும் கலத்திலே இட்டு வைத்தாள் காணும்
பைம்தொடி மடந்தையரை கொண்டு ஷட் குண ரச அன்னமாக்கி-அதாவது –-அணைவர் போய் அமரர் உலகில் பைம்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணை–திருவாய் -10-2-11- -என்கிறபடியே ,
தம் பஞ்ச சதான்யப்சரசாம் பிரதிதாவந்தி சதம் மாலா ஹஸ்தா -இத்யாதி பிரகரேன-வந்து எதிர் கொண்டு -தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி -கௌஷீதகீ –1-35– என்று தங்கள் கையாலே இவ் ஆத்ம வஸ்துவுக்கு ப்ரஹ்ம அலங்காரத்தைப் பண்ணி , சத்கரிக்கும் திவ்ய அப்சரஸூகளைக் கொண்டு ,தன்னுடைய போகத்துக்கு அர்ஹகாம் படி ,அலங்கரிப்பியா நின்று கொண்டு ,-ஸ்வேன ரூபேண அபிநிஷ்பத்யதே -சாந்தோக்யம் -என்கிறபடி ஸ்வரூப ஆவிர்பாவம் பிறந்து ,முன்பு திரோஹிதமாய் கிடந்த ஆத்ம குணங்கள் எல்லாம் பிரகாசிக்கப் பெற்று இருக்கிற இத் ஆத்ம வஸ்துவை
ஞானாதி ஷட் குணங்களாகிற ஷட் ரச யுக்தமாய்-அஹம் அன்னம்–தைத்ரியம் –என்கிற அன்னம் ஆம் படி ,அவர்கள் கர ஸ்பர்சத்தால் பக்குவம் ஆக்கி , சேஷ வஸ்துகமான ஞான சக்த்யாதி ஷட் குணங்களும் ,சேஷி விநியோகத்துக்கு உறுப்பு ஆகையாலே ,இக் குணங்களோடு கூடி –அஹம் அன்னம் – என்று இருக்கும் இவ் வஸ்து அவனுக்கு அறுசுவை அடிசிலாய் இறே இருப்பது —
(பைந்தொடி மடந்தையரைக் கொண்டு ஷட்குண ரஸாந்நமாக்கி] ‘அணைவர் போயமருலகில் பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோளிணை”’ (திருவா. 10 – 2 -11) என்று “ஸதம் மாலா ஹஸ்தா?” (கெளஷீதகீ) இத்யாதியாலே சொல்லப்படுகிற திவ்யாப்ஸரஸ்ஸுக்களைக் கொண்டு பகவத் போக யோக்யமாம்படி அலங்கரித்து, “ஸ்வேந ரூபேணாபி நிஷ்பத்யதே”‘ என்று ஸ்வ ஸ்வரூபாவிர்பாவத்தைப் பெறுவிக்கையாலே ஸ்வருப கதமாயிருக்கச் செய்தே முன்பு திரோஹித மாயிருக்கிற ஜஞாந ஸக்தயாதிகளும், அபஹத பாப்மத்வாதிகளும் ப்ரகாஸித்து இவை ஸேஷவஸ்துகதமாகையாலே ஸேஷி விநியோகத்துக் குறுப்பாகையாலே அந்த குண விஸிஷ்டமான ஆத்ம வஸ்துவைத் தனக்கு போக்,யமாக்கி
அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11-–பரம பதத்தில் சதம் மாலா ஹஸ்தா -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே அப்சரஸ் ஸூ க்களுடைய கொண்டாட்டத்துக்கு விஷய பூதராவார் –முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள –என்றத்தோடு — வேய் மரு தோள் இணையை அணைவர்-என்கிற இத்தோடு வாசி இல்லை மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே -என்னக் கடவது இறே-
வானோர்க்கு ஆரா அமுதம் ஆனவாறே -அதாவது – வானோர்க்கு ஆரா அமுதே -திருவாய் -5-7-11-என்கிறபடி ,-வைகுந்தன் தமர் எமர் எமதிடம் புகுது -திருவாய் -10-9-9–என்பது –விதி வகை புகுந்தனர்-10 -9 -10—-என்பது-பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் -10-9-10-இத்யாதி படி ஆதரிக்கும் நித்ய ஸூரிகளுக்கு பரம போக்யமாம் படி ஆனவாறே —முற்றும் உண்ண முன்னம் பாரித்து -அதாவது-என்னை முற்றும் உயிர் உண்டு-10-7-3- -என்கிற படி இத் ஆத்ம வஸ்துவை முழுக்க புஜிப்பதாக –என்னில் முன்னம் பாரித்து -9-6-10–என்கிறபடி- இத் ஆத்ம வஸ்துவுக்கு ருசி பிறப்பதற்கு முன்னே பிடித்து பாரித்து –
(வானோர்க் காராவமுதான வாறே) நித்ய ஸூரிகளுக்கும் போக்யமானவாறே. (முற்றுமுண்ண முன்னம் பாரித்து) “என்னை முற்றுமுயிருண்டு” (திருவா, 10 – 9 -10) என்றும், “என்னில் முன்னம் பாரித்து”’ (திருவா. 9 – 6 -10) என்றும் சொல்லுகிறபடியே இவனை புஜிப்பதாக இவனிலும் முன்னே பாரித்து-
தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன்
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே.–5-7-11--சாபிப்ராயமாக கற்கும் அவர்கள் -சர்வ காலமும் நித்ய ஸூரிகளுக்கு போக்ய பூதராவார் -அதுக்கு அடி-உபாய உபேயங்கள் இரண்டும் ஈஸ்வரன் என்று இருக்குமது அவர்களுக்கு அபிமதம் ஆகையாலே-
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9—பரமபதத்தைச் சென்று கிட்டின அளவிலே திரு வாசல் காக்கிற முதலிகள் -ஸ்ரீ வைகுண்ட நாதனுடையார் எங்களுக்கு ஸ்வாமிகள் -எங்கள் பதத்தைக் கொள்ள வேணும் என்றாய்த்து அவர்கள் பாசுரம் -பயிலும் திருவுடையார் யாவராலும் எம்மையாளும் பரமர் -என்ற இவரைப் போலே யாய்த்து அங்குள்ளாரும் இருப்பது -திருவாசல் முதலிகள் எதிரே வந்து சத்கரித்து -கையைக் கொடுத்து -கொண்டு புக்கு தங்கள் கைபுடைகளிலே இருத்தி பிரம்பையும் கொடுப்பார்கள் ஆயத்து-சென்று புகுகிறவர்களுக்கும் கைங்கர்யமே உத்தேச்யம் -அங்கு இருக்கிறவர்களுக்கு கைங்கர்யமே யாத்திரை -ஆகையால் இவர்கள் கொள்வதும் அவர்கள் கொடுப்பதும் அது -புகுது என்றது -புகுதுக -என்றபடி
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10–தங்கள் ஆசனங்களில் இவர்களை வைத்து தங்கள் தாழ்ச்சி தோற்றது தறையிலே இருந்து -தங்கள் மஹிஷிகள் நீர் வார்க்க -இவர்கள் ஸ்ரீ பாதத்தை விளக்கினார்கள் –
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10—நான் பாரித்த அளவும் அன்றிக்கே நான் பாரித்த காலத்துக்கு முன்பே பாரித்து –ஆச்சார்ய விஷயீ காரத்துக்கு பின்பு இறே இவருடைய பாரிப்பு -சம்பந்தத்துக்கு திரஸ்கார ஹேது இல்லாமையால் -அவனுடைய பாரிப்பு சத்தா ப்ரயுக்தம் இறே
தான் என்னை–விபுவாய் ஸ்வதந்த்ரனான தான் -அணு பரிமாணனாய் பரதந்த்ரனான என்னை –
முற்றப் பருகினான்-தன் குண சேஷ்டிதாதிகளைக் காட்டி -என்னை நீராக்கி -நிச்சேஷமாகப் பருகினான் –வஸசா சாந்வயித்வைநம் லோச நாப்யாம் பிபன்நிவ -என்கிறபடியே -இத்தலையை அழித்துப் பரிமாறினான் -என்கிறபடியே –விழுங்குமவன் காணில் -என்று இறே இவர் பாரித்தது
5-உழுவதோர் நாஞ்சில் கொண்டு , பெருக முயலும் பக்தி உழவன் கிருஷி பலம் இறே -( இதுக்கு மேல் எல்லாம் சர்வேஸ்வரனை உழவனாக உருவகம் செய்து அருளிற்று )-அதாவது-உழுவதோர் படையும் –பெரியாழ்வார் -4-7-5–என்றும் ,-ஒற்றை குழையும் நாஞ்சிலும் –பெரிய திருமொழி -8-8-8–என்கிறபடி
இவர் கர்ஷகன் என்று தோற்றும் படி க்ருஷி சாதனத்தைக் கையிலே கொண்டு , அரியது எளியதாகும் ஆற்றலால் மாற்றி பெருக முயல்வாரைப் பெற்றால்–இரண்டாம் திருவந்தாதி -22-என்கிறபடியே ,அரிதான தன் திரு அடிகளில் பிராப்தியும் எளிதாகும் படி ,இவ் ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு மிகவும்
யத்னியா நிற்கும் ஸ்வபாவனாய்-பக்தி உழவன்–நான்முகன் -23–என்கிற படி .–இவ் ஆத்மாவுக்கு ஸ்வ விஷய பக்தியை விளைக்கைக்கு கிருஷி பண்ணித் திரியும் சர்வேஸ்வரனுடைய – கிருஷி பலமிறே இவ் ஆழ்வாருக்கு உண்டான இப் பக்தி- என்றபடி –இத்தால் இவருடைய பக்தி உத்பத்தி காரணம்- பகவத் கிருஷி -என்றது ஆய்த்து-
(உழுவதோர் நாஞ்சில்கொண்டு பெருக முயலும் பத்தி யுழவன் க்ருஷிபலமிறே) “உழுவதோர் படையும்” (பெரியா. தி. 4 – 7 – 5), “ஒற்றைக் குழையும் நாஞ்சிலும்”” (திருமொழி 8 – 8 – 9) என்று க்ருஷி ஸாதநத்தைக் கொண்டு, ‘“அரியதெளிதாகுமாற்றலால் மாற்றிப் பெருக முயல்வாரைப்பெற்றுல்” (இ.திருவ. 22) என்று அரிதான பகவத் ப்ராப்தியும் எளிதாம்படி இவனுடைய உஜ்ஜீவநத்துக்கு மிகவும் க்ருஷி பண்ணுகிற *பத்தி யுழவன்”‘ (நா. திருவ. 23) என்கிற பக்திக்கு க்ருஷி பண்ணுகிற ஸர்வேஸ்வரனுடைய க்ருஷி பலமாய்க் கொண்டு உண்டாய்த்து இவருடைய பக்தி என்கிறார். ஆக இத்தால் இவருடைய பக்தி போக்தாவான ஸர்வேஸ்வரனுடைய க்ருஷி பலம் என்றதாய்த்து-
உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடர் ஆழியும் சங்கும்
மழுவோடு வாளும் படைக்கலமுடைய மால் புருடோத்தமன் வாழ்வு
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப் பொழுது அளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – 4-7-5-கலப்பையும்–இவற்றை ஆயுதமாக உடைய–
ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒரு பால் தோன்றத் தான் தோன்றி
வெற்றித் தொழிலார் வேல் வேந்தர் விண் பால் செல்ல வெஞ்சமத்து
செற்ற கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் இல்லிருப்ப
கற்ற மறையோர் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-8–ஒரு காது குழையும்
கலப்பையும் ஒரு கால் தோன்ற தான் வந்து –
அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரைப் பெற்றால் –கரியதோர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தது அன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து—-22--அரியதாவது -பெறுதற்கு அரிதான பகவல் லாபமும் -பகவத் பஜனமும் – இவை இரண்டும் எளிதாகும் -என் செய்தால் -என்னில் –ஆற்றலாலே -என்கிறது-சக்தியாலே -என்னுதல் –பொறையாலே என்னுதல் –சக்தியான போது அவனுக்கு சக்தி வைகல்யம் இல்லாமையாலே இவன் பரத்தை தன் பக்கலிலே மாற்றிக் கொண்டு இவனுடைய பேற்றுக்கு பிரதி பந்தகங்கள் ஆனவற்றையும் போக்கி தன்னைக் கொடுக்கைக்கு யுடலாகிறது –-இவன் தலையிலே ஒரு தேவை இடுகிறது என் — எல்லாம் நாமே ஏறிட்டுக் கொண்டு செய்வோம் என்பான் ஒரு பர சக்தியைப் பெற்றால் – இவன் அசக்தி தீரத் தன் சக்தியைக் காட்டி ரஷிக்கை –அன்றிக்கே –பொறை யானபோது –
இவன் பெறாமைக்கு பண்ணி வைக்கும் ப்ராதி கூல்யங்களை தன் கிருபையாலே பொறுத்துக் கொடுக்கைக்கு யுடலாய் இருக்கை-இவனுடைய சர்வ ரஷணங்களையும் தன் தோளிலே ஏறிட்டுக் கொண்டு இவனுக்குப் பேற்றிலே அந்வயமாம் படி –தன் பேறாகக் கொண்டு ஆஸ்ரிதன் பக்கல் உள்ள அல்ப அனுகூல்யத்தை – அஜ்ஞனாய் அசக்தனானவன் இத்துணை செய்து உகக்கப் பெற்றோம் -என்று
மிகவும் உத்சாஹிப்பாரைப் பெற்றால் அரியது எளியதாகும்-இத்தாலே அவனாலே அவனைப் பெறுதல் -தம்மாலே அவனை இழத்தல் -என்றபடி–
வித்தும் இட வேண்டும் கொலோ விடை யடர்த்த
பத்தி யுழவன் பழம் புனத்து -மொய்த்து எழுந்த
கார்மேகம் அன்ன கருமால் திருமேனி
நீர் வானம் காட்டும் நிகழ்ந்து –23-–பகவத் விஷய பக்திக்கு இவன் செய்ய வேண்டுவது ஓன்று யுண்டோ –பிரதிபந்தகங்களைத் தானே போக்கி –ருசியைப் பிறப்பித்து –பக்தியை விளைப்பானான-எம்பெருமானுமாய்ப் பழையதான சம்சாரப் பரப்பில் பழம் புனம் என்கிறது – விளைந்து வருகிற நிலத்தில் உதிரியே முளைக்குமாபோலே ஈஸ்வரன் சம்சார பிரவாஹத்தைப் பண்ணி வைத்த படியாலே
யாத்ருச்சிகமாக ஸூஹ்ருதங்கள் பிறக்கும் என்று கருத்து –அவன் வடிவைக் காண வேணும் என்கிற அபேஷை பிறக்கிற பின்னோடே- திரண்டு எழுந்த கார் காலத்தில் மேகம் போலே கறுத்து இருக்கிற நிறத்தை யுடைய சர்வேஸ்வரன் திரு மேனியை நீர் கொண்டு எழுந்த காளமேகமானது காட்டும்-அன்றிக்கே – சம்சாரம் ஆகிற பழம் புனத்திலே ஈர நெல் வித்தி -என்கிறபடியே விஷய ருசி யாகிற விதையைத் தான் தேடி இட வேணுமோ-அவன் வடிவோடு போலியான தன் வடிவைக் காட்டி
தத் விஷய ருசியை வர்ஷூ கவலாஹம் தானே முன்னின்று ப்ராபிய நிற்கும் -என்றுமாம் –
—
இப்படி இத் தலையில் நன்மை அற்று இருக்கச் செய்தே ஈஸ்வர கிருஷி பலிக்கக் கண்ட இடம் உண்டோ என்ன -அருளிச் செய்கிறார் மேல் –இப்படி இத்தலையில் ஒரு நன்மை யின்றிக்கே யிருக்க ஈஸ்வரனுடைய கிருஷி பலித்தவிடமுண்டோ வென்னில், கோஸல தேஸத்திலுண்டான ஸ்தாவர ஜங்கமங்களையும் கோகுலத்திலுண்டான சராசரங்களையும் ஸ்வ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷைக ஸுக துக்கராம்படி பண்ணக் கண்டோமிறே என்கிறார்-
கோசல கோகுல சராசரம் செய்யும் குணம் ஓன்று இன்றியே அற்புதம் என்னக் கண்டோம்-சூரணை -105–
(கோசல சராசரம் ஓன்று இன்றியே என்னக் கண்டோம்-என்றும்-கோகுல சராசரம் செய்யும் குணம் அற்புதம் என்ன கண்டோம்-என்றும் )-கோசல சராசரம் ஓன்று இன்றியே என்னக் கண்டோம்-
அதாவது–த்வாம் ஆமனந்தி கவய கருணா ம்ருதாப்தே ஞான க்ரியா பஜன லப்யம் அலப்யம் அந்யை ஏதேஷு கேன ,வரத உத்தர , கோசலஸ்தா பூர்வம் சாதுர்வம் அபஜந்த ஹி ஜந்தவஸ் த்வாம்–ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -69–என்கிற படியே , அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் – ஓன்று இன்றியே நல் பாலுக்கு உய்த்தனன் –திருவாய் -7-5-1- என்று திரு அயோத்யாதி கோசல தேச வர்திகளான சராசரங்கள் எல்லாம் நிர்ஹேதுகமாக ,-ராமோ ராமோ ராம இதி ,பிரஜாநாம் அபவன் கதா , ராம பூதம் ஜகத பூத் ராமே ராஜ்யம் பிரசாசதி –யுத்த –131-96–என்றும் ,-அபிவிருஷா பரிம்லானாஸ் ச புஷ் பாங்குர கோரகா
விஷயேதே மஹா ராஜா ராம வியசன கர்சிதா உபதப் தோதகா நத்ய பல் வலானி சராம்சிச
பரிசுஷ்க பலாசாநி வநான் யுபவ நாசிச –அயோத்யா -59-4-5—(சுமந்திரன் தசரதனுக்கு சொன்னவை)–என்றும்-அகால புலினோ வருஷா சர்வேசாபி மதுரஸ் ரவா யுத்த –127-17–இத்யாதி படியே-ஸ்வ சம்ச்லேஷ விஸ்லேஷ ஏக சுக துக்கங்கள் ஆகிற நல்ல ஸ்வாபத்தை உடையதாம் படி நடத்தினான் என்றும் –
“த்வாமாமநந்தி கவய? கருணாம்ருதாப் தே, ஜ்ஞாந க்ரியா பஐந- லப்யமலப்யமந்யை
ஏதேஷு கேந வரதோரத்தர கோஸல ஸ்தா பூர்வம் ஸதூர்வ- மப ஜந்த ஹி ஜந்தவஸ்த்வாம்’” (வரத,.ஸ்த. 69) என்றும், “அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் – ஒன்றின்றியே நற் பாலுக்குய்த்தனன்” (திருவா. 7 – 5 – 1) என்றும் கோஸல தே,ஸத்திலுண்டான சராசரங்களடைய “அபி வ்ருக்ஷாச பரிம்லாநாஸ் ஸ புஷ்பாங்குர கோரகா? உபதப்தோதகா நத்ய பல்வலாநி ஸராம்ஸி ச ப பரிஸூஷ்க பலாஸாநி வநாந் யுபவநாநி ச (ரா. ௮. 59 – 8), ““விஷயே தே மஹாராஜ ராம வ்யஸந கர்ஸிதா?”, என்றும், “அகால பலிநோ வ்ருக்ஷா ச” (ரா. யு. 127 – 18) என்றும், “ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாமபவந் கதர? ! ராமபூ,தம் ஜகத பூத் ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி”? (ரா. உ.) என்றும் ஒரு ஹேது வின்றியிலே ஸ்வ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷைகஸுக துக்க ராகவும்.
கற்பார் இராம பிரானை அல் லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–7-5-1—நல்ல இடத்தை யுடைய திரு அயோத்யையில் -நில மிதி தானே ராம பக்தியை விளைப்பிக்கும் என்கை -தேசோயம் சர்வ காமதுக்–ராகவார்த்தே பராக் ராந்தா நபிராணே குருதேதயாம் -என்னுமவர்கள்-வாழும்-வர்த்திக்கும் என்னும் ஸ்தாநத்திலே வாழும் என்கிறது -தேச வாசம் தானே போக ரூபமாய் இருக்கை -ராம குணங்களையே அனுபவித்து இருக்கும் என்னுதல்-சராசரம் முற்றவும்-ஸ்தாவர ஜங்க மாத்மகமான சகல பதார்த்தங்களையும் –-நற்பாலுக்கு உய்த்தனன்-நல்ல ஸ்வ பாவத்தை யுடைத்தாம் படி பண்ணினவன் –தன் சம்ச்லேஷ விஸ்லேஷமே ஸூக துக்கமாம் படி பண்ணினான் -திர்யக் யோனி கதச்சாபி சர்வோ ராமம நுவரத–என்றும் – -அபி வ்ருஷா பரிம்லா நா -என்றும் -ராம மேவா நுகச்சத்வ மஸ்ருதிம் வாபி கச்சித -என்றும் -ராமேண ரஹி தா நாந்து கிமர்த்தம் ஜீவிதம் ஹிந-என்றும் -இப்படி ஸ்வ சம்ச்லேஷ விஸ்லேஷ ஸூ க துக்கமாம் படி பண்ணிற்று ஒரு தேச விசேஷத்திலேயோ -என்ன-நான்முகனார் பெற்ற நாட்டுளே.–ப்ரஹ்மாவுக்கு அடைத்த நாட்டுள்ளே-அவனுடைய நியாமகத்வத்தையும் தவிர்த்து -சேதனருடைய கர்ம வஸ்யத்தையும் தவிர்த்து தான் கைக்கு கொண்டு தன்னால் அல்லது செல்லாத படி பண்ணினான் –
கோகுல சராசரம் செய்யும் குணம்-அதாவது-கோகுலத்தில் உண்டான சராசரங்கள் எல்லாம் –அவன் ஒருவன் குழலூதின போது , மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் , வளர் கொம்புகள் தாழும் , இரங்கும் கூம்பும் , திரு மால் நின்ற நின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே -பெரியாழ்வார் –3-6-10–என்றும் ,-மருண்டு மான் கணங்கள் மேய்க்கை மறந்து மேய்ந்த புல்லும் கடை வாய் வழி சோர , இரண்டு பாலும் துளங்கா புடை பெயரா எழுது சித்திரங்கள் போல நின்றனவே –பெரியாழ்வார் -3-6-9–என்றும் ,-பறைவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப ,
கறைவையின் கணங்கள் கால் பரப்பிட்டு கவிழ்ந்து இறங்கி செவி யாட்ட கில்லாவே -பெரியாழ்வார் -3-6-8–என்றும்-கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகலிப்ப ,உடல் உளது வீழ்ந்து எங்கும்
காவலும் கடந்து கயிறு மாலையாகி வந்து கவிழ்ந்து நின்றனரே–பெரியாழ்வார் -3-6-1– -என்கிறபடி
சைதன்ய பிரசரணம் இல்லாத வ்ருஷங்களோடு சைதன்யம் லேசம் உள்ள திர்யக்கு களோடு ,
சைதன்ய விசேஷார்ஹா மனுஷ்ய ஜாதியாரான சிறு பெண்களோடு , (வலக்கை இடக்கை அறியாத இடைப்பெண்கள்–என்பதால் அர்ஹ சப்தம் ) வாசி அற நிர்ஹேதுகமாக பகவத் பிராவண்ய பரவசங்கள் ஆனவை கண்டு – நங்கை மீர்காள் ஓர் அற்புதம் கேளீர்-ஸ்ரீ பெரியாழ்வார் -3-6-1-என்று விஷேஷஜ்ஞர்-(ஸ்ரீ பெரியாழ்வார்-) வித்தராய் சொல்லும்படியாகக் கண்டோம் என்கை–
கோகுலங்களிலுண்டான சராசரங்களிலே சைதந்ய ப்ரஸரண மில்லாத வ்ருக்ஷங்களும், “அவனொருவன் குழலூதின போது மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும் இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே” (பெரியா.தி. 3 – 6 – 10) என்றும், சைதந்ய லேஸமுடைய திஸ்ர்யக்குக்களும் “மருண்டு மான் கணங்கள் – கால் பரப்பிட்டுக் கவிழ்ந்திரங்கிச் செவி யாட்டகில்லாவே”” (பெரியா. தி, 3 – 6 – 6) என்று திர்யக் ஸ்தாவரங்கள் அந்யோந்யம் ஸ்வபாவங்கள் மாறாடும்படி பண்ணி, “நங்கைமீர்களிதோரற்புதம் கேளீர்” (பெரியா-3 – 6 – 1) என்று இதோராஸ்சர்யமென்று விஸேஷஜ்ஞர் சொல்லும்படியாகக் கண்டோமிறே என்கிறார்.
கரும் கண் தோகை மயில் பீலி அணிந்து கட்டி நன்கு உடுத்த பீதக வாடை
அரும் கல வுருவின் ஆயர் பெருமான் அவன் ஒருவன் குழலூதின போது
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும்
இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி யவை செய்யும் குணமே -3- 6-10 ––தேவ மனுஷ்ய திர்யக் ஜாதிகள் உருகின அளவு அன்றிக்கே – அசேதனங்களான வ்ருக்ஷங்களானவை ஒரு படிப்பட நின்று – உள்ளுருகினமை தோற்ற மது தாரைகள் பாயா நிற்கும் –கொம்பில் நிற்கிற பூக்கள் எல்லாம் நிலை குலைந்து வீழா நிற்கும்-மேலே வளருகிற சாகைகள் ஆனவை கீழே படியா நிற்கும்-தன்னிலே நின்று அலைந்து ஈடுபடா நிற்கும்-ஸ்ரீ யபதி யானவன் உலாவி உலாவி நின்று குழலூதின வழியே அவன் நின்ற நின்ற பார்ஸ்வங்களை நோக்கி – – அஞ்சலி செய்வாரைப் போலே தாழ்ந்த கொம்புகளை குவியா நிற்கும் -அவை செய்தபடி குணம் இருந்தபடி -என் தான்-என்று ஆச்சர்யப் படுகிறார்-
திரண்டு எழு தழை மழை முகில் வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தால் ஊதுகின்ற குழலோசை வழியே
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடை வாய் வழி சோர
இரண்டு பாடும் துலுங்கா புடை பெயரா வெழுது சித்திரங்கள் போலே நின்றனவே -3-6-9-மான் திரள்கள் ஆனவை -சஜாதீய விஜாதீய விபாகாதிகள் தோன்றாபடி அறிவு அழிந்து – தனக்கு தாரகமாக எப்போதும் செய்து போரும் மேய்கையை தவிருகை அன்றிக்கே -விஸ்மரித்து – மேயக் கவ்வின புல்லும் -இறக்குதல் உமிழ்தல் செய்ய மாட்டாதே பார- பர-வச்யத்தால் கடை வாய் வழியே நழுவி விழ -முன்னும் பின்னுமான இரண்டு அருகும் அசையாதே – பக்கங்களிலும் போகவும் மாட்டாதே –சித்திரத்தில் எழுதினவை போல் – ஒரு வியாபாரம் அற்று நின்றன
சிறு விரல்கள் தடவி பரிமாற செம்கண் கோட செய்ய வாய் கொப்பளிக்க
குறு வெயர்ப் புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல் கொடூதின போது
பறைவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப
கறைவையின் கணங்கள் கால் பரப்பி இட்டுக் கவிழ்ந்து இறங்கி செவி ஆட்ட கில்லாவே -3-6-8 – பஷிகளினுடைய திரள்கள்-தம் தாமுடைய வஸ்தவ்ய ஸ்தலங்களை விட்டு-குழலோசை வழியே ஊதுகிறவன் அளவும் வந்து சூழ்ந்து கொண்டு – வெட்டி விழுந்த காடு போலே பரவசமாய் கிடக்க -பசுக்களினுடைய திரள்கள் ஆனவை-பாரவச்யத்தாலே கால்களை பரப்பி-தலைகளை மிகவும் நாற்றிக் கொண்டு-செவியை இசைக்கில் இசைக்கு பிரதிபந்தகம் ஆம் -என்று செவியை ஆட்டவும் மாட்டாதே நின்றன —
நாவலம் பெரிய தீவினில் வாழு நங்கைமீர்கள் இதோர் அற்புதம் கேளீர்
தூவலம் புரி உடைய திருமால் தூய வாயில் குழலோசை வழியே
கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகுலிப்ப வுடல் உள் அவிழ்ந்து எங்கும்
காவலும் கடந்து கயிறு மாலையாகி வந்து கவிழ்ந்து நின்றனரே -3 6-1 –கோ வல்லர் -கோ ரஷணத்திலே சமர்த்தர் ஆனவர்களுடைய சிறுப் பெண்கள்-தங்கள் வசத்தில் நில்லாதபடி பரிணதமான முலைகளானவை – தங்களைப் பிற்பாடராக்கி நாங்கள் முன்னே போகிறோம் -என்று கௌதூஹலம் பண்ண –இளம் கொங்கை -சொல் கேளா பிரஜைகள் ஆய்த்து -கொங்கையில் குதுகுலிப்பு மாத்ரம் அன்றிக்கே – கொங்கைக்கு ஆஸ்ரயமான சரீரமும் – சர்வேந்த்ரியங்களுக்கும் பிரதானமான மனசும் கட்டுக் குலைந்து –எங்கும் உள்ள காவலையும் கடந்து – அதாவது அறைக்குள்ளே இட்டு -தாய்மார் அணைத்துக் கொண்டு -கதவுகளையும் அடைத்து – புறக் காவலாக வேண்டும் பந்துக்களும் கிடக்க –
அந்த காவல்களை எல்லாம் – சூத்திர பாஷாணங்களைப் போலே ஒரு சரக்காக நினையாமல் கடந்து -கயிற்றிலே ஒழுங்கு பட சேர்த்த மாலைகள் போலே நிரை நிரையாக வந்து –இவனைச் சூழ்ந்து கொண்டு நின்றார்கள்-அன்றிக்கே – குழலோசை வழியே வந்து -இவனைக் கண்டவாறே -லஜ்ஜித்து –
கவிழ்தலை இட்டு -( சூழ்ந்து )-நின்றார்கள் என்னுதல் எதிர் செறிக்க மாட்டாமல் கவிழ்தலை இட்டு நின்றார்கள் -என்னுதல்-
இத்தால் பகவத் நிர்ஹேதுக ,விஷயீகாரம் இப்படி பலிக்கக் காண்கையாலே , ஆழ்வார் உடைய பக்தியும் ,பகவத் நிர்ஹேதுக கிருஷி பலம் என்னத் தட்டு இல்லை என்றது ஆய்த்து-ஆக இத்தால், சைதந்யாசைதந்யங்களிரண்டும் தன்னில் பதார்த்த வைஷம்யத்துக்கு ஹேதுவாமித்தனை யொழிய பகவத் விஷயீகாரத்துக்கு ஹேதுவாகக் காணாமையாலே இவர்க்குப் பிறந்த பக்தி பகவந் நிர்ஹேதுக விஷயீகாரத்தாலே என்றதாயிற்று.-
—
ஆனால் இப்படி நிர்ஹேதுகமாக -விஷயீகரிக்கும் அளவில் ,எல்லோரையும் விஷயீகரிக்கலாய் இருக்க ,
இங்கனே இவர் ஒருவரை விஷயீகரிக்கைக்கு அடி என்ன என்னும் அபேஷையிலே-நிரந்குச ஸ்வதந்த்ரனானவன் ஈச்வரஸ்த்வ செருக்காலே செய்யும் அவற்றுக்கு அடி ஆராயப் படாது என்னுமத்தை லௌகிக த்ருஷ்டாந்தத்தாலே தர்சிப்பிக்கிறார் மேல்– (ந்யோஜ்யம் -பர அநுயோஜ்யம்-இரண்டும் இல்லாதது அன்றோ நிரங்குச ஸ்வா தந்திரம் – இன்னத்தை செய் செய்யாதே என்றும் எதனால் இப்படி செய்தாய் என்று கேட்க முடியாது-சத்ருஞ்சயன் -அயோத்யா தேச யானை பெயர் )-ஆனால் ”ஸமோஹம் ஸர்வபூதேஷு ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய?” (கீதை 9 – 26) என்கிறபடியே ஸர்வ ஸமனுமாய், பரதுக்கம் ஸஹியாதபடியான பரம க்ருபையை உடையனான ஸர்வேஸ்வரன் ஸர்வரோடும் தனக்கு ஸம்பந்தம் ஒத்திருக்க, அவர்களிலே ஒருவனை நிர்ஹேதுகமாக விஷயீகரித்தான் என்றால் அவனுக்கு வைஷம்ய நைர்க்ருண்யங்கள் வாராதோ என்னில் நிருபாதிக ஸர்வ ஸேஷியுமாய், ஸ்வதந்த்ர ஸ்வாமியுமாய், அத ஏவ உபய விபூதியையும் ஸ்வாதீநமாகவும், ஸ்வார்த்தமாகவும் உடைய ஸர்வேஸ்வரன் ஸ்வகீயமான வற்றிலே ஒன்றை ஸ்வ விநியோகார்த்தமாக இப்படி நிர்ஹேதுகமாக விஷயீகரிக்கும் போது வைஷம்ய நைர்க்ருண்யங்களை யிட்டு நிவாரகர் இல்லை என்னும் அர்த்தத்தை லோக த்ருஷ்டாந்த த்வாரா அருளிச் செய்கிறார்.
பட்டத்துக்கு உரிய யானையும் அரசும் செய்யுமவை ஆராயாது-சூரணை -106-
(கழு மலத்து யாத்த களிறும் கருவூர் விழுமியோன் மேல் சென்றதனால் –
விழுமிய வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால தீண்டா விடுதல் அரிது )அதாவது
அராஜகமான தேசத்திலே ,பட்டத்துக்கு உரிய யானையைக் கண்ணைக் கட்டி விட்டால் ,
அவ் ஆனை எடுத்தவன் ஒருவன் ராஜாவாக்கும் அளவில் ,அல்லாதார் எல்லாரும் கிடக்க ,இவனை இப்படி அது எடுக்கைக்கு அடி என் என்றும் ,ராஜா ஆனவன் தன் செருக்காலே ஒருத்தியை தன் மகிஷியாக பரிக்ரஹிக்கும் அளவில் , இங்கன் ஒத்த ஸ்திரீகள் பலரும் உண்டாய் இருக்க ,இவளை இப்படிப் பரிகிரஹிக்க அடி என் என்றும் ஆராய்வார் இல்லை என்ற படி —இத்தால் சொல்லிற்று ஆயிற்று-ஸ்வாதந்தைர்யம் ஐஸ்வர்யம் அபர் அனுரோஜ்ய மாஹு –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்–55-என்கிறபடியே பர்யனுயோஜ்யம் அல்லாத ஐஸ்வர்ய ஸ்வாதந்தரனாய் – (ரூப பிரகாரம் பரிமாணம் க்ருத வியவஸ்தை அனைத்துக்கும் அனைவருக்கும் செய்த நீ- சத்தை அசத்தாக்கும் அசத்தை சத்தாகும் அபரிமித சக்தன் நீ – உனது செல்வமே ஸ்வாதந்தர்யம் தானே)
பவ மோஷண ,யோஸ் த்வயைவ ஜந்து கிரியதே—ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் உத்தர -88-என்கிறபடியே –
ஸூவாதீன பந்த மோஷனாய் ,( அடங்குவார் இல்லாத ஸ்வா தந்தர்யத்தால் )
வேண்டின போது வேண்டின வஸ்துவை வேண்டினபடி யாக்க வல்லனுமான சர்வேஸ்வரன் ,
அஹேதுகமாய் இருக்க ,ஆதார விஷயமாம் படி , பட்டத்துக்கு உரிய ஆனையும் ,அரசும் ,செய்யும் அவை போலே , ஸ்வாதீனமுமாய் ,ஸ்வார்தமுமாய்-( ஸ்வ பிரயோஜனமாய் ) ஆத்ம வஸ்துக்களில் ,ஓர் ஒன்றை ,
ஈஸ்வரத்துவ செருக்குக்கு அடியான ஸ்வ இச்சையாலே ,ஸ்வ விநியோக அர்ஹஹாம் படி , விஷயீகரித்தால் , அல்லாத ஆத்மா வஸ்துக்கள் எல்லாம் கிடக்க ,இவ் வஸ்துவை இவன் இப்படி விஷயீகரிப்பான் என் என்று இதுக்கு அடி ஆராயப் படாது என்கை –
தான் செய்தது தான் இட்ட வழக்காம்படி நிரங்குஸ ஸ்வதந்த்ரமான ஆனை, யாரேனுமொருவனை எடுக்க, அவனே ராஜாவாகவும் அந்த ராஜா பரிக்ரஹித்தவளே ராஜ மஹிஷியுமா மிடத்தில் இப்படி ஆவானென்? என்று ஆராய்வாரில்லை யிறே. அப்படியே-“’ரூபப்ரகார பரிணாம க்ருத வ்யவஸ்த,ம் விஸ்வம் விபர்யஸிதுமந்யத ஸச்ச கர்த்தும் | ஷாம்யந் ஸ்வபாவ நியமம் கிமுதீ க்ஷஸே த்வம் ஸ்வாதந்த்ர்ய மைஸ்வர மபர்யநு யோஜ்யமாஹு ” (வை.ஸ்த. 55), ““படுநைக வராடிகேவ க்லுப்தா ஸ்தலயோ? காகணிகா ஸுவர்ண கோட்யோ | பவமோக்ஷ்ண்யோஸ் த்வயைவ ஐந்து கரியதே ரங்க நிதே, த்வமேவ பாஹி”’ (ர. ஸ்த. உ. 88) என்று உபயமும் தானிட்ட வழக்காம்படி நிரங்குச ஸ்வதந்தரனானவன் செய்யுமவை ஆராயப் படாதிறே என்கிறார் –
—
இங்கன் சொல்லுவான் என் ?–இவர் தமக்கு ஜ்ஞாத ஸூஹ்ருதங்கள் அன்றோ இல்லை என்றது ..
யாத்ருச்சிகாத் யஜ்ஞாத ஸூஹ்ருதங்கள் அடியாக அங்கீகரித்தான் ஆனாலோ என்ன ,
அருளிச் செய்கிறார் – (யதேச்சையாக நடந்தது யாதிருச்சிகம் -ப்ராசங்கிக்கம் பேச்சுவாக்கில் ஏதோ சொன்னது – ஆனு ஷங்கிகம்-திருடன் வில்லாளி முன்பே போனவர் மூவருக்கும் அறியாமல் – காப்பாற்றப்பட்டதால் -அஞ்ஞாத ஸூஹ்ருதங்கள் ஆழ்வார் சர்வஞ்ஞர் -அனைத்தும் அறிந்து பாடியவர் -இவை இருந்தால் பாடி இருப்பார் –அனைத்தையும் திருப்புளிய மரம் அடியிலே காட்டி அருளினான் –
தெரியாமல் வந்து தலை மேல் விழும் ஸூஹ்ருதங்கள் இல்லை )-அப்படிச் சொல்லுவானென்? இவர் தமக்கு ஜ்ஞாத ஸுக்ருதமன்றோ இல்லை என்றது? யாத்ருச்சிகாதிகளான அஜ்ஞாந ஸுக்ருதமடியாக அவன் விஷயீகரித்தானாகத்தட்டென் ? என்னில், ஸ்வ பர விபாகமற ஸர்வத்தையும் ஸாக்ஷாத்கரித் தருளிச் செய்தவர்க்கு யாத்ருச்சிகாதிகள் உண்டாகில் ப்ரகாஸிக்குமிறே. இவர்க்கு அஜ்ஞாதமாவது பூர்வாவஸ்தையிலிறே. உத்தராவஸ்தையிலும் அஜ்ஞாதமாகில் மயர்வற மதிநலம் அருளப் பெற்றாரில்லையாவரிறே.-
முந்நீர் வாழ்ந்தார் சூட்டும் கோவை ஆழி என்கிற சாஷாத் க்ருத ஸ்வ பர வ்ருத்தந்தார்க்கு யாத்ருச்சிகாதிகள் உண்டாகில் தோன்றும் —சூரணை -107-
(முந்நீர் என்கிற ஸ்வ வ்ருத்தந்தார்க்கு–வாழ்ந்தார் -என்கிற பர வ்ருத்தந்தார்க்கு–சூட்டும்-என்கிற -பரம பதத்தில் உள்ளோர் வ்ருத்தாந்தையும்-கோவை ஆழி என்கிற ஈஸ்வர வ்ருத்தாந்தங்களையும் பர -பர ப்ரஹ்மத்தையும் பிறரையும் குறிக்கும் யாத்ருச்சிகாதிகள் பற்றி பாடவில்லை -ஆகையால் தோன்றவில்லை -ஆகையால் இல்லை என்றவாறு )-முந்நீர் என்கிற ஸ்வ வ்ருத்தந்தார்க்கு-அதாவது
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே-3-2-1- -என்று தொடங்கி சர்வேஸ்வரன்-விசித்ரா தேக சம்பத்தி ஈஸ்வராய நிவேதிதம் பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம்யுதா –ஸ்ரீ விஷ்ணு தத்வம் -இத்யாதிப் படியே-ஸ்வ சரண கமல சமாஸ்ரயணனே உபகரணமான கரண களேபரங்களை இவ் ஆத்மாவுக்கு உண்டாக்கி , உஜ்ஜீவிப்பைக்கையே பிரயோஜனமாக ஜகத் ஸ்ருஷ்ட்டியைப் பண்ண ,நான் அவன் தந்த சரீரத்தைக் கொண்டு , அவனை ஆஸ்ரயிக்கை அன்றிக்கே -( ஆக்கையின் வழி உழல்வேன் ),அதன் வழியே ஒழிகி சம்சாரித்து போந்தேன் என்று , ஸ்வ வ்ருத்தாந்தையும் ,
“முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே” (திருவா. 3 – 2 – 1) என்று தொடங்கி அவன் சேதநருடைய உஜ்ஜீவநார்த்தமாக ஜகத் ஸ்ருஷ்ட்யாதி வ்யாபாரங்களைப் பண்ணின படியையும், தாம் அவன் கொடுத்த தேஹத்தைக் கொண்டு அதன் வழியே ஒழுகி ஸம்ஸரித்துப் போந்த படியையும்,
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1—தய நீய தசையைக் கண்டு -இவை கரணங்களை பெற்று கரை மரம் சேர வேணும் -என்று தயா பரதந்த்ரனாய் ஸ்ருஷ்டித்த படி – கர்ம அனுகுணமாக ஸ்ருஷ்டியாகிலும் யவ்கபத்யம் அனுக்ரஹக்ருதம் என்கை-எம் – ஸ்ருஷ்ட்டி சர்வ சாதாரணம் ஆகிலும் இவர் தமக்காக என்று இருக்கிறார் -எங்கும் ஓக்க வர்ஷித்தாலும் அது கொண்டு விளைத்துக் கொண்டவன் -எனக்காக -என்று இருக்குமா போலே-எல்லாருக்கும் ஓக்க அவன் செய்தாலும் க்ருதஞ்ஞான் எனக்காக -என்று இருக்கும் இறே-முகில் வண்ணனே–மேகம் ஜல ஸ்தல விபாகம் இன்றிக்கே வர்ஷிக்கிறது பிரதியுபகாரம் கொள்ளுகைக்கு அன்று இறே-பஹுஸ்யாம் என்று தன் பேறாக ஸ்ருஷ்டிக்கை –-அந்நாள் –-அசித் விசிஷ்டானாய் சோஸ்ய தசா பன்னனான நாள்
நீ –என்று இழவு உள்ளதாய் முகம் காட்டின நீ-தந்த – திருவடிகளில் தலை சாய்த்து உன்னைப் பெறுகைக்கு உறுப்பாம் உடம்பை அபகரித்து –துர்லபோ மானுஷோ தேஹ -மானுஷ்யம் ப்ராப்ய -தன்னைப் பெறுகைக்கு உபகரணமும் தானே தர வேண்டி இருக்கிற படி-ஆக்கையின் வழி உழல்வேன்
விஷய ப்ராவண்யத்தை விளைத்துக் கொண்டு சரீரத்தின் வழியே போய் அநர்த்தப் பட்டேன் –-உழல்வேன்-சுழி தோறும் முழுகா நின்றேன் -கரை ஏற கொடுத்த தெப்பத்தைக் கொண்டு அதன் வழியே போய் கடலிலே புகுவாரைப் போலே உடம்பின் வழியே போய் சம்சார ஆர்ணவத்திலே புக்கு நசிக்கை
வெந்நாள்--ஞானம் பிறந்தால் இப்பிரக்ருதி சம்பந்தத்தோடே இருக்கிற நாள் அசோகவ நிகையிலே பிராட்டி இருந்தால் போலே-நோய் வீய- நோய் என்று சரீர சம்பந்தம் ஆதல் -விஸ்லேஷம் ஆதல் –வீய முடிய-வினைகளை-சரீர சம்பந்தத்துக்கு அடியானை பாபங்களை-வேர் அறப் பாய்ந்து–சவாசனமாகப் போக்கி -பாய்ந்து என்று சினம் தோற்றுகிறது–ஒரு சர்வ சக்தி செய்யுமத்தை நான் செய்யவோ –
எந்நாள்--இன்ன நாள் என்று ஓர் அவதி பெற்றார் ஆகிலும் அத்தை பற்றி கொண்டு இருப்பர்
யான் – உன்னை பெறுகைக்கு தந்த உபகரணத்தை அழித்துக் கொண்ட நான் –-உன்னை–என் பேற்றுக்கு போக்கடி சொல்ல வேணும் -என்று வளைக்கலாம் படி இருக்கிற உன்னை-இனி வந்து கூடுவேன்--நீ தந்த கைம்முதலையும் அழித்துக் கொண்ட பின்பு கிட்டுகைக்குப் போக்கடி உண்டாகில் சொல்ல வேணும் -என்கிறார்
வாழ்ந்தார் -என்கிற பர வ்ருத்தந்தார்க்கு-அதாவது-வாழ்ந்தார்கள் வாழ்ந்தது -4-1-6–என்று தொடங்கி ,முன்பு ஜீவித்தர்கள் வாழ்ந்த பிரகாரம் , மகா வர்ஷா ஜல புத் புத்தம் போலே -நசிந்து நசிந்து அதிபதித்தார்கள் என்னும் அது ஒழிய சிருஷ்டி காலம் தொடங்கி ,இன்றளவும் வர ஜீவித்தவர்கள் ஒரு படிப் பட ஜீவித்தே ,போந்தார்கள் என்னும் இவ் அர்த்தம் தான் இல்லை என்று – ஐஸ்வர்யவான்களாய் முன்பு ஜீவித்தவர்கள் வ்ருத்தாந்தையும் ,
“வாழ்ந்தார்கள் வாழ்ந்தது”” (திருவா. & – 1 – 6) என்கிற பாட்டிற்படியே முன்பு ஜீவித்தவர்களாகச் சொல்லுமவர்கள் ஜலபுத்புதம் போலே நஸித்து அதே கதியிலே போனார்கள் என்னுமதொழிய ஒருபடிப்பட ஜீவித்துப் போந்தார்கள் என்னுமர்த்தம் இல்லை என்னுமதுவும்,
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து
ஆழ்ந்தார் என்று அல்லால், அன்று முதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை ; நிற்குறில்
ஆழ்ந்தார் கடற் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.–4-1-6–லோகத்தில் ஜீவித்தவர்கள் ஜீவித்தது இவர் வி நாசமாக நினைத்து இருக்குமத்தை இ றே அவர்கள் வாழ்வாக நினைத்து இருக்கிறது
இன்னம் கெடுப்பாயோ -என்றார் இறே இவர் –-மாமழை மொக்குளின்பெரு மழைக் குமிழி போலே -ஜல புத்புத வத்சமம் -மா மழை என்கிறது அநந்தரம் விழும் துளியோடே வசிக்கும் என்கைக்காக-மாய்ந்து மாய்ந்து-நசித்து நசித்து-ஆழ்ந்தார் என்று அல்லால், அன்று முதல் இன்று அறுதியா-வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை ;-ஜீவித்த நாள் பண்ணின பாபத்தாலே அதோ கதியில் விழுமது ஒழிய ஸ்ருஷ்ட்டி காலமே தொடங்கி இற்றை அளவும் வர ஜீவித்தவர்கள் ஒருபடிப்பட ஜீவித்தார்கள் என்னும் அர்த்தம் தான் முதலிலே இல்லை -அர்த்தம் தான் முதலிலே உண்டாகில் இறே இவர்களுக்கு உண்டு இல்லை என்ன வேண்டுவது
சூட்டும்-அதாவது –-சூட்டு நன் மாலைகள் –திரு விருத்தம் -21–என்று தொடங்கி ,-பரமபத வாசிகள் சாமாராதன உபகரணங்களைத் தரித்துக்கொண்டு , சாமாராதனம் பண்ணி நிற்கச் செய்தே
அத்தை உபேஷித்து திரு ஆய்ப் பாடியிலே வெண்ணெயை விரும்பி வந்து அவதரித்ததை சொல்லுகையாலே , பரம பதத்தில் உள்ளோர் வ்ருத்தாந்தையும் –
“‘சூட்டு நன் மாலைகள்’” (திருவிரு. 20) என்று தொடங்கி – ஒரு விபூ,தியாக ஸமாராதநோந்முகராய் உப கரணங்களைக் கொண்டு நில்லா நிற்கச் செய்தே அத்தை உபேஷித்துத் திருவாய்ப்பாடியில் திரண்ட வெண்ணெயை அசிந்திதமாக புஜிக்கையிலுண்டான இச்சையாலே கருஷ்ணனாய் வந்தவதரித்து நப்பின்னைப் பிராட்டிக்காக ருஷபங்கள் ஏழையும் அடர்த்தான் என்றும்-
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –21-அங்கு நடந்தவற்றையும்-இங்கு நடந்தவற்றையும் பிரத்யக்ஷமாகக் கண்டு அன்றோ அருளிச் செய்கிறார்
கோவை –அதாவது-கோவை வாயாள் பொருட்டு-4-3-1- -என்று தொடங்கி –-தேச கால விப்ரக்ருஷ்டங்களான ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாத்வ்யவதாரங்களில் விரோதி நிரசன அபதானங்களை ,
தத் தத் தேச காலங்களில் போலே தர்சித்து ,நீ இப்படி விரோதி நிரசனம் பண்ணுகிற தசைகளில் ,
உதவி சிசிரோபசாரம் பண்ணப் பெற்றிலேன் ஆகிலும் , என்னுடைய ஹ்ருதயாதிகளே உனக்கு போக உபகரணனாம் படி என் பக்கலிலே வ்யாமுக்தனாவதே ! என்கையாலும் .
““கோவை வாயாள் பொருட்டு”’ (திருவா. 4 – 3 – 1) என்று தொடங்கி -ராமக்ருஷ்ணாத் யவதாரங்களைப் பண்ணி விரோதி நிரஸநம் பண்ணுகிற தஸைகளிலே உதவி ஸிஸிரோபசாரம் பண்ணப் பெற்றிலேனாகிலும் என்னுடைய ஸத்தாதிகளெல்லாம் தனக்கு போக உபகரணமாகக் கொள்ளும்படி என் பக்கலிலே வ்யாமுக்தனானானென்றும்.
கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள்இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்! குலநல் யானை மருப்பு ஒசித்தாய்!
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.–4-3-1-நப்பின்னை பிராட்டியையும் ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளையும் பிரணயிநி களாக உடையனாய் இருக்க என் சத்தையே தனக்கு எல்லாமாகக் கொள்வதே -என்கிறார்–புஷ்ப ஹாஸ ஸூகுமாரமான திருமேனிக்கு பூசும் சாந்து என் நெஞ்சமாய் விடுவதே –
ஆழி –அதாவது – ஆழி எழ-7-4-1- -என்று தொடங்கி , த்ரை விக்ரமணம் ,சமுத்திர மதனம் ,பூமி யுத்தரணம் ,ஜகன் நிகரணம் ,பாரத சமர நிர்வகணம் (கை அறவு -நிர்மாணம் என்றவாறு) ஹிரண்ய நிரசனம் ,ராவண வதம் ,பாணாகர சேதனம் ,ஜகத் ஸ்ருஷ்ட்டி ,கோவர்த்தன உத்தோரணம் ஆகிய பூர்வ சரிதங்களையும் , பத்துப் பத்தாக பேசுகையாலும் , ஈஸ்வர வ்ருத்தாந்தங்களையும் –
“ஆழியெழச்சங்கு’” (திருவா. 7 – 4- 1) என்று தொடங்கி – அவனுடைய த்ரைவிக்ரமாபதாநம்-அம்ருதமதநம், பூம்யுத்தரணம், மஹா ப்ரளயவ்ருத்தாந்தம், ஹிரண்ய நிரஸநம், ராவண வத,ம், பாணனுடைய பாஹாுவநச்சேதந ப்ரகாரம், ததநந்தரம் ஜகத் ஸ்ருஷ்டி ப்ரகாரம், கோவர்த்தநோத்தரணம் இப்படிப் பத்தும் பத்தான விஜய பரம்பரைகளையும்,
ஆழியெழச்சங்கு’” (திருவா. 7 – 4- 1) என்று தொடங்கி–தான் க்ரமத்தாலே பண்ணின அபதானங்களை ஒரு காலே காட்டி அருளக் கண்டு தரித்த ஆழ்வார் -திரு உலகு அளந்து அருளுகை தொடக்கமான அவனுடைய விஜய பரம்பரையை -மயர்வற மதி நலம் அருள பெற்றவர் ஆகையால் சமகாலத்தில் அனுபவித்தவர்களை போலே அனுபவித்து எம்பெருமானை ஏத்தி ஹ்ருஷ்டராகிறார் –அவனுடைய த்ரைவிக்ரம வியாபாரத்தையும்-அம்ருத மதனத்தையும்-பூமி உத்தரணத்தையும் -ஜெகன் நிகரணத்தையும் -பாரத சமர ப்ரவர்த்தகத்வத்தையும்- ஹிரண்ய வாதத்தையும்-லங்கா பங்கத்தையும்-பாண யுத்தத்தையும்-ஜகத் ஸ்ருஷ்ட்டி பிரகாரத்தையும்- கோவர்த்தன உத்தரணத்தையும்-அனுசந்தித்து -ஏவம்வித விஜய ஆபத்தான விசிஷ்டனான சர்வேஸ்வரனுடைய விரோதி நிரசன சாமர்த்தியத்தை அனுசந்தித்து அருளுகிறார்
என்கிற சாஷாத்க்ருத பர வ்ருத்தந்தார்க்கு-யாத்ருச்சிகாதிகள் உண்டாகில் தோன்றும் –அதாவது-ஒரு உபாதி அற ஒரு போகியாக சாஷாத்தாக அருளிச் செய்கிற இவருக்கு அஜ்ஞாதமான ஓன்று இல்லாமையாலே , தம்மை ஈஸ்வரன் அங்கீ கரிக்கைக்கு அடியான ,யாத்ருச்சிகாதி ஸூஹ்ருதங்கள் உண்டாகில் , அல்லாதவற்றோ பாதி பிரகாசிக்கும் இறே என்ற படி ..இத்தால் பிரகாசித்ததாகில் அருளிச் செய்வர் –அப்படி அருளிச் செய்யக் காணாமையாலும், கேவல நிர்ஹேதுக,பிரசாத பிரகாசக வசனங்கள் பலவும் அருளிச் செய்தமை காண்கையாலும் – ( வெறிதே அருள் செய்தமையை விளக்கும் அருளிச் செயல்கள் பல உண்டே ) அவையும்-யாத்ருச்சிகாதிகள்- இவர்க்கு இல்லை என்றது ஆய்த்து —
இப்படி ஸ்வ பர விபாகமற ஸர்வத்தையும் ஸாக்ஷாத்கரித்துப் பேசின இவர்க்குத் தம்மை விஷயீகரித்தது யாத்ருச்சிகாதி, ஸுக்ருதமடியாக என்னுமது உண்டாகில் ப்ரகாஸிக்குமிறே என்கிறார்
—
இப்படி அங்கீகார ஹேதுவாய் இருப்பதொரு ஸூஹ்ருதம் இல்லை யாகிலும் ,-அத்வேஷ ஆபிமுக்யங்கள் ,ஸூஹ்ருதம் அடியாக ஆனாலோ என்ன ,அருளிச் செய்கிறார் மேல் —இப்படி அங்கீ காரத்துக்கு ஹேதுவாயிருப்பதொரு ஸுக்ருதமில்லையே யாகிலும், அத்வேஷாபிமுக்,யங்கள் ஸுக்ருதமடியாக ஆனாலோ என்னில், அந்த அத்வேஷாபிமுக்யங்களும் அவனாலே உண்டாய்த்தென்று இவர் தாமே அருளிச் செய்தாரிறே–
செய்த நன்றி தேடிக் காணாதே-கெடுத்தாய் தந்தாய் என்ற அத்வேஷ ஆபிமுக்யங்களும் சத் கர்மத்தால்
அல்ல -சூரணை -108-
(கெடுத்தாய் என்ற அத்வேஷமும் ( மருவித் தொழும் மனம் உடைத்தாய் இருத்தல் )- தந்தாய் என்ற ஆபீமுக்யமும் ( தீ மனம் இல்லாதவனாக இருத்தல் )ஸத் கர்மத்தால் அல்ல என்றபடி
ஈஸ்வர ஸுஹார்த்தம் -யாதிருச்சா ஸூஹ் ருதம் -விஷ்ணு கடாக்ஷம்-அத்வேஷம் -ஆபி முக்கியம் –
போன்ற -8 -படிக்கட்டுகள் முன்பே பார்த்தோம் –ஸூஹ்ருத தேவர் அவனுக்கே அசாதாரணப் பெயர்- வார்த்தா மாலை )-செய்த நன்றி தேடிக் காணாதே –அதாவது – வாட்டாற்றாருக்கு என் நன்றி செய்தேனா என் நெஞ்சில் திகழ்வதுவே-10-6-8–என்று சர்வேஸ்வரன் தம்மை விஷயீகரிக்கைக்கு உடலாக தாம் செய்த ஸூஹ்ருதம் ஏதேனும் உண்டோ என்று ,தேடிக் காணாதே –கெடுத்தாய் என்ற அத்வேஷமும் -தந்தாய் என்ற ஆபீமுக்யமும்--அதாவது –என்னைத் தீ மனம் கெடுத்தாய் -2-7-8–என்றும் , மருவித் தொழும் மனமே தந்தாய்-2-7-7- -என்று (வரிசை கிரமும் இல்லாமல் அன்றோ அருளிச் செய்கிறார் -இவை அவன் மூலம் வந்தமையால் ) தீ மனம் போக்குகையாகிற அத்வேஷமும் , மருவித் தொழும் மனம் உண்டாக்குகை யாகிற ஆபிமுக்யமும் , இரண்டும் அவனாலே உண்டாய்த்து என்று ,தாமே நிஷ்கரிஷ்க்கையாலே , அத்வேஷ ஆபிமுக்யங்களும் சத் கர்மம் அடியாக வந்தது அன்று என்கை —
(ததாமி புத்தி யோகம் -தந்தாய் தேஷாம்–சதத யுக்தாயாம் ப்ரீதி பூர்வகம் மேல் விழுந்து தாதாமி புத்தி யோகம் -தந்தாய் அனுகம்பார்த்தம் -தமஸை -நாசயாமி -கெடுத்தாய் -ஞான தீபேண பாஸ்கரா- கீதையிலும் -இவை இரண்டும் உண்டே –-அருள் கொண்டு ஆயிரம் இந்த தமிழ் பாடினான் அன்றோ)
”வாட்டாற்றார்க்கெந்நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழ்வதுவே” (திருவா. 10 – 8 – 8) என்று ஸர்வேஸ்வரன் தம்மை விஷயீகரித்ததுக்கு ஹேது தேடிக் காணாதே. (கெடுத்தாய் தந்தாய் என்று) “என்னைத் தீ மனங்கெடுத்தாய்”” (திருவா. 2 – 7 – 8), “மருவித் தொழும் மனமே தந்தாய்” (திருவா. 2 – 7 – 7) என்று சொல்லுகிற அத்வேஷாபிமுக்யங் களிரண்டும் அவனாலே உண்டாய்த் தென்று தாமே அருளிச் செய்கையாலே அவையும் ஸத் கர்ம மடியாக வந்ததன்று என்கிறார்
மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–10-6-8-–என்ன நன்மை செய்தெனாக –பெரிய வுடையாரைப் போலே என்னை அழிய மாறினேனோ –திருவடியைப் போலே தனியிடத்தில் உதவினேனோ –தன்னுடைய ஆஞ்ஞா ரூபமான விஹிதங்களை அனுஷ்டித்தேனோ –என் நெஞ்சில் புகுந்த பின்பு விளங்கினான் என்னும் படி விரும்பிற்று —
திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7--இப்படி பலகாலும் நினைத்தும் அடைவு கெடப் பேசியும் குண பரவசனாய் வணங்கி இப்படி கால தத்வம் உள்ளதனையும்-போக்யமும் பிராப்தமுமாய் உன் திருவடிகளையே அநந்ய ப்ரயோஜனமாய்க் கொண்டு அடிமை செய்யும் மனசையே தந்தாய்-விஷயாந்தரங்கள் அஸ்திரமுமாய் அபோக்யமும் ஆகையால் சஞ்சலம் ஹி மன-என்னும் படி இறே இருப்பது –-வல்லை காண் என் வாமனனே — சுக்கிராதிகள் வார்த்தை செவிப்படாத படி மஹா பலியை வடிவு அழகால் வஞ்சித்தால் போலே என்னை அநந்யார்ஹனாக்கிக் கொள்ள வல்லை காண்
இச் சக்தியை உடையவனுக்கு முடியாதது உண்டோ –
வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-–பந்த ஹேது அன்றிக்கே குண அனுபவமே யாத்ரையாம் படியான நிர்தோஷ அந்தகரணாய் ஜென்மம் ஆகிற துழதி உண்டு -தூர்த்துக்கம் -அது போம்படியாக-விஷயாந்தர ஸ்பர்சியான நெஞ்சைப் போக்குவதும் செய்தாய்
ஸ்ரீ யபதியாகையாலே பூர்ணனான எனக்கு உன்னால் ப்ரத்யுபகாரமாக செய்யலாவது ஒன்றும் காண்கிறிலேன்- பிரதிபகாரம் பண்ணி அல்லது நிற்க மாட்டுகிறிலேன் –
—
ஆனால் பரம பக்திக்கு ,முகம் காட்டுமோ பாதி ,பரி கணனைக்கும் முகம் காட்டும் என்றார் இறே – இவர் தாம்-அந்த பரிகணனை தான் இவர்க்கு உண்டால் ஆய்த்தோ என்ன -அருளி செய்கிறார் மேல் —ஆனால் பரமபக்திக்கு முகம் காட்டுமாப் போலே பரிகணனைக்கும் முகம் காட்டும் என்றாரிறே இவர் தாமே-ஆகையாலே அந்த பரிகணனை இவர்க்கு உண்டாய்த்தானாலோ என்னில், அதுவுமில்லை என்று தாமே அருளிச்செய்தாரிறே என்கிறார் மேல்.
எண்ணிலும் வரும் கணனைக்கு எண்டானும் இல்லை –சூரணை -109-(கணனை–எண்ணுதல் )-
எண்ணிலும் வரும் கணனைக்கு—அதாவது –எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்–1-10-2-என்றது ,
ஈஸ்வரன் குண ஆதிக்யம் சொன்ன இத்தனை போக்கி , அந்த பரகணனைக்கு தம்மோடு அந்வயம் இல்லாமை கண்டு –எண்டானும் இல்லை –அதாவது –நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ,ஓர் எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு கண்டாயே -1-10-5-–என்று காரியங்கள் பலிக்கும் இடத்து ,எண்ணிலும் வரும் -என்றது தான் மிகை யாகும் படி ஓர் எண் தானும் இன்றி இருக்கச் செய்தே ,பலித்துக் கொடு நிற்கிறபடி கண்டாய் என்று , தம் திரு உள்ளத்துக்கு மூதலிக்கையாலே,அதுவும் இவர்க்கு இல்லை என்கை –
“எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்”” (திருவா, 1 – 10 – 2) என்று பரமபத்தி யுக்தர்க்கு முகம் காட்டுமாப் போலே பரிகணனைக்கு முகம் காட்டும் என்னுமிடம் ஈஸ்வரனுடைய குணாதிக்யம் சொல்லிற்றத்தனைபோக்கி, அந்த பரிகணனையும் தமக்கில்லை என்னுமிடத்தை “கருமங்கள் வாய்க்கின்று ஒரெண்டானுமின்றியே வந்தியலுமாறு – கண்டாயே” (திருவா. 1 – 10- 5) என்று – கார்யங்கள் ஸித்திக்குமிடத்தில் ”எண்ணிலும் வரும்” என்றது தானும் மிகையாம்படி ‘“ஓரெண்டானுமின்றியே”” என்று அந்த எண் தானுமின்றியே பலித்துக் கொடு நின்றபடி கண்டாயே என்று அதுவுமில்லை என்று தாமே பேசினாரிறே–
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2-கட படாதிகள் உடைய அஸ்தி பாவத்தை இசையும் -ஈசுவரனுடைய அஸ்தி பாவத்தை இசையான்–பஞ்ச விம்சதி தத்துவத்தையும் இசையும் -ஷட் விம்சகளை இசையான் – நம்முடைய உண்மையை இசைந்தான் இறே என்று அப்போதே வந்து முகம் காட்டும் இவன் எண்ணின் அளவுக்கு அவ்வருகே வரும் என்னவுமாம்-
கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5–எண்ணிலும் வரும் –என்று இது மிகையாம் படி வந்து பலித்துக் கொண்டு நிற்கிறபடி கண்டாயே-இயலுகை பலிக்கை-
—
அது தான் வேணுமோ ? தமக்கு அனுமதி இச்சைகள் உண்டாக அருளிச் செய்தாரே ? அவை தான் ஹேது ஆனாலோ என்ன -அதுவும் அவனாலே உண்டானது என்கிறார் —ஆனால் தமக்கு அநுமதீச்சைகள் உண்டாக அருளிச் செய்தாரே- அவைதான் ஹேதுவானாலோ என்னில், அவையும் அவனாலே உண்டானவையாகையாலே ஹேது அன்று என்கிறார்-
மதியால் இசைந்தோம் என்னும் அனுமதி இச்சைகள் இருத்துவம் என்னாத என்னை இசைவித்த
என் இசைவினது–சூரணை -110-
மதியால் என்னும் அனுமதி -என்றும் -இசைந்தோம் என்னும் இச்சை -என்று கொண்டு
அனுமதி இச்சைகள் இசைவினது-இசைவு தானாக இருக்கின்ற இறைவனுடையது -என்றபடி
என் இசைவு என்று ஈஸ்வரனைச் சொல்லி -என் இசைவினது-ஈஸ்வரன் கர்த்தவ்ய பலன் என்றபடி
ஆழ்வார் க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் போலே அவனும் ஆழ்வார் இசைவு -திரு நாமம் அவனுக்கு சாத்துகிறார் )
மதியால் என்னும் அனுமதி – அதாவது – வைத்தாய் மதியால் எனது உள்ளத்து அகத்தே-8-7-10- -என்று
அனுமதி மாத்ரத்தாலே அவனை என் நெஞ்சுக்குள்ளே வைத்தேன் என்று- தமக்கு உளதவாகச் சொன்ன அனுமதியும்–இசைந்தோம் என்னும் இச்சை-அதாவது – யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -பெரிய திருவந்தாதி-என்று விரோதியை போக்கும் படியாக நானும் என் நெஞ்சும் இசைந்தோம் என்றும் ,தமக்கு உளவாகச் சொன்ன இச்சையும் –
வைத்தேன் மதியால் எனதுள்ளத்தகத்தே”” (திருவா. 8 – 7 – 10) என்றும், “யானுமென்னெஞ்சு மிசைந்தொழிந்தோம் (பெ.திருவ. 26) என்றும், அனுமதி மாத்ரத்தாலே அவனை என் தெஞ்சுக்குள்ளே வைத்தேன் என்றும், விரோதியைப் போக்குவானாக யானும் என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம் என்றும் தமக்கு அநுமதீச்சைகள் உண்டாகச் சொன்னாரே என்னில்; அந்த அநுமதீச்சைகளும்–
வைத்தேன் மதியால் எனது உள்ளத்தக்கத்தே
எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும்
மெய்த்தேய் திரை மோது தண் பாற் கடலுளால்
பைத்ததேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே –8-7-10–அனுமதியாலே என்னெஞ்சினுள்ளே வைத்தேன் -அனுமதி மாத்ரத்துக்கு உள்ள பலாதிக்யம் என் -அவன் ஹ்ருதயஸ்த்தனான பின்பு பிரிந்து துக்கப் படுகிறேன் அல்லேன் -இது எத்தனை குளிக்கு நிற்கும் -என்ன –என்றும் எப்போதும்-சர்வ திவசத்திலும் -சர்வ அவஸ்தையிலும்
யானும் என் நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம் வல் வினையைக்
கானும் மலையும் புகக் கடிவான் தானோர்
இருளன்ன மா மேனி எம் மிறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து —26—இத் தலையில் குறைவற்றது-பொருந்தாத தலையும் பொருந்திற்று-பொருந்துமவன் பொருந்தச் சொல்ல வேண்டா இறே-அவன் மேல் விழ –
என்னுடைய விலக்காமையே கர்த்ருத்வம்
இருத்துவம் என்னாத என்னை –அதாவது யான் ஒட்டி என்னுள் இருத்துவம் என்றிலன் -1-7-7–என்று
அவன் தம்முள்ளே புகுந்து இருப்பதாக கேட்ட அளவிலே நான் இசைந்து , என்னுடைய ஹிருதயத்திலே இருத்துவோம் என்று இலேன் என்ற படி .. அவனை உள்ளே இருத்துவோம் என்று இசையாத தம்மை –இசைவித்த என் இசைவினது – அதாவது-இசைவித்து என்னை-5-8-9–என்கிற படி வருந்தி இசையப் பண்ணி –மயர்வறவற என் மனத்தே மன்னினான் தன்னை என் இசைவினை-1-7-4– நான் அல்லேன் என்று அகலாத படி என் இசைவு தானாய்ப் புகுந்தவனை என்னும் படி யத்தனித்த ஈஸ்வரனுடைய கிருஷி பலம் என்கை —(மன்னினான் தன்னை -இரண்டாம் வெறுமையாக சொல்லி வந்து அடுத்து – –என் இசைவினை-விடுவேனோ – பெருமாளையே இந்த சப்தத்தால் அருளிச் செய்கிறார் )
”யானொட்டி என்னுள் இருத்துவமென்றிலன்‘ (திருவா. 1 – 7- 7) என்று, நான் அவனை என்னுள்ளே இருக்க வொட்டேன் என்று ப்ரதிஜ்ஞை பண்ண, தான் “அத்ய மே மரணம் வாபிதரணம் ஸாகரஸ்ய வா”’ (ரா. யு. 21 – 87) என்று ப்ரதிஜ்ஞை பண்ணினாப் போலே ப்ரதிஜ்ஞை பண்ணி, ஸ்வதந்த்ரமான நெஞ்சை அபஹரித்து ஸரீரத்தோடே கலந்து, பின்பு ஆத்மாவோடே கலந்து, இப்படி யத்நம் பண்ணி, ““இசைவித்சென்னை” (திருவா. 8 – 8 – 9) என்று என்னை இசையும்படி பண்ணினான் என்றும், இசைவித்த மாத்ரமே யன்றியிலே, ‘“என்னிசைவினை”” (திருவா. 1 – 7 – 4) என்று இசைவு தானும் தானேயாய் நின்றவனுடைய க்ருஷி பலம் என்கிறார்
யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–1-7-7–நான் இசைந்து என் ஹிருதயத்திலே இருத்துவேன் என்றிலேன்-இசைவு என்னாலே வந்ததாகில் அன்றோ விடுகை என்னாலே வந்ததாவது-இசைவு இன்றிக்கே இருக்கக் கிட்டின படி என் என்னில் –
நிரபேஷனான தான் -உம்முடைய பக்கலிலே இருக்கை தவிரேன் -என்று ப்ரதிஜ்ஜை பண்ணி வந்து
அத்ய மே மரணம் வா அபி தரணம் ஸாகரஸ் யவா-எனக்கு பவ்யமாய் -தன்னாலும் திருத்த ஒண்ணாத படி ஸ் வ தந்திரமான நெஞ்சை வஞ்சித்து தன்னுடைய சீலாதி குணங்களாலும் வடிவு அழகாலும் என்னை அறியாமே அகப்படுத்தி-
இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–5-8-9—நெடுநாள் விமுகனான என்னையும் அடிமையிலே இசைவித்து -என் இசைவுக்கு எதிர் சூழல் புக்குத் திரிந்த உனக்கு அபேக்ஷிதம் செய்யக் குறை என் -நான் அர்த்தியாதே இருக்க என் கார்யம் செய்த நீ இன்று இரக்கச் செய்தே விளம்பிக்கிறது ஏன்-உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!-பரகு பரகு என்று திரியாத படி உன் திருவடிகளே விஷயமாம் படி பண்ணுமவனே -என்கை -நிழலும் அடி தாறுமானோம் என்கிறபடியே மிதியடியாம் படி ஸ்ரீ சடகோபனாக்கி -பெறும் காற்றில் பூளை போலே யாதானும் பற்றி நீங்கும் விரோதமாய் இறே முன்பு வர்த்தித்தது-அம்மானே –இசைவே தொடங்கி இவர் கார்யம் தானே செய்ய வேண்டும் பிராப்தி–
மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ –1-7-4–அப்படி இருக்கிறவன் என்னையும் அவர்களோடு ஒக்கப் பண்ணுகைக்கு இசைவும் தானாய் வந்து புகுந்தான்-என் சொல்லி யான் விடுவேனோ-என்ன கண் அழிவைச் சொல்லி -நான் கை வாங்குவது –
அஞ்ஞானம் அனுவர்த்தித்து விடவோ –-அஸந்நிஹிதன் என்று விடவோ –-அந்நிய பரன் என்று விடவோ – நன்மைகளை பண்ணித் தந்திலன் என்று விடவோ – பிரதியுபகாரம் கொள்ள இருந்தான் என்று விடவோ – மேன்மை போராது என்று விடவோ – இசைவுக்கு கிருஷி பண்ணினேன் நான் என்று விடவோ – எத்தைச் சொல்லி விடுவது –
–
இவை ஒன்றும் இல்லை ஆகிலும் ,-மாதவன்-என்றும் -திரு மால் இரும் சோலை மலை -என்றும் ,
சொன்ன உக்தி மாத்ரங்களை பற்றாசாக கொண்டு விஷயீகரித்தானாக அருளிச் செய்கையால் ,அவை தான் உண்டோ என்ன , அவை பேற்றுக்கு அடியாக சொல்ல தக்கவை அன்று என்னும் இடத்தை ,மற்றும் இவற்றோடு சக படிதங்களாக தக்க வற்றையும் கூட்டிக் கொண்டு அருளிச் செய்கிறார் மேல் —ஆனாலும் இவர் தம்முடைய ப்ரபந்தத்திலே ஹேது ஸூசகமாகச் சில உக்திகள் உண்டாயிரா நின்றதே என்னில், அவையும் ஹேது அன்றென்னுமிடத்தைப்பல படியாலும் உப பாதிக்கிறார் –
(திரு மால் இரும் சோலை ஊரைச் சொன்னாய் -பேரைச் சொன்னாய் -மாதவன் -இவற்றுடன் சக படிதங்களாக ஸ்ரீ வசன பூஷணத்தில் உள்ளவைஅடியார்க்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய் -அவர்கள் விடாய் தீர்த்தாய் -அஃஞ்ஞான ஸூ ஹ்ருதங்களாய் சக படிதங்களாக என்றவாறு -அபுத்தி பூர்வகமாக வைதிக புத்திரர்கள் திரும்ப -விரஜை அருகில் போனாலும் இவர்கள் உள்ளே போகாதது போக இச்சை இல்லாத காரணம் )
மாதவன் மலை நீர் நிழல் என்று ஏறிடுமது வ்யாவ்ருத்த் யுக்தி அன்யார்த்தம்-அ புத்தி பூர்வகம்
அ வி ஹிதம்-பல வி சத்ருசம் -பலாந்தர ஹேது —சூரணை -111-
(மாதவன் மலை-என்று ஏறிடுமது வ்யாவ்ருத்த் யுக்தி–வேறுபாட்டினை அறிவிக்கும் சொற்கள் –
நீர் நிழல் என்று ஏறிடுமது அன்யார்த்தம்-வேறு ஒன்றின் பொருட்டு – அ புத்தி பூர்வகம்-நினைவு இன்றிக்கே சொல்லுதல்-அ விஹிதம்-சாஸ்த்ரங்களால் விதிக்கப்படாதவை -பல விசத்ருசம்-பலனுக்கு ஒத்ததாகாதவை -பலாந்தர ஹேது –அல்ப பலன்களுக்கு ஹேது )-மாதவன் என்று-அதாவது –
மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது யாதவங்களும் சேர் கொடேன் என்று என்னுள் புகுந்து இருந்து தீது அவன் கெடுக்கும் அமுதம் –திருவாய் -2-7-3–என்று அந்தப் புர வாஸிகள் சொல்லும் -மாதவன்-என்கிற திரு நாமத்தை அஹ்ருதயமாக சொன்ன அளவில் , அத்தையே குவாலாக கொண்டு ,அல்லாத திரு நாமங்களுக்கும் – இதுக்கும் வாசி அறியாத என்னை விஷயீகரித்து ,
என்னுள்ளே புகுந்து (அதுக்கும் மேலே மன்னி )இருந்து , சகல கர்மங்களையும் போக்கினான் என்றும் –மலை என்று –அதாவது-திரு மால் இரும் சோலை மலை என்றேன் என்ன ,திரு மால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -10-8-1–என்று ஓர் ஓர் தேசங்களில் ,மலைகளை சொல்லா நின்றால் ,ஒரோ விசேஷங்களை இட்டுச் சொல்லுமோ பாதி ,யாத்ருச்சிகமாக (யஸ்ய கச்ச இதி யச்சா யதேச்சையாக)-திரு மால் இரும் சோலை மலை-என்னும் காட்டில் தான் உகந்து அருளின திருமலையின் பேரை விரும்பி சொன்னேன் ஆகக் கொண்டு நிரபேஷனான தான் பிராட்டி யோடு கூட வந்து என்னுள்ளே பரி பூரணமாக புகுந்தான் என்று சொல்லும் படி —(மானத்து வண்டலுழ வோர் எழுத்தின் வடிவுற்ற சீர் மானத் துவண்ட வினையாளராயினும் மால் வளர்வி மானத்து வண்டலமா மரங்கம் வழியா வரினும் மானத்து வண்டமர் தார் அண்டராம்பதம் வாய்க்கு மங்கே –திருவரங்கத்து மாலை ) மாதவன் என்று நம் பேரைச் சொன்னான் -என்றும் திரு மால் இரும் சோலை மலை என்று நம் ஊரைச் சொன்னான்– என்றும்
எறிடுகிற இவை –(பெருமாள் ஆழ்வார் தலையிலே ஸூஹ்ருதத்தை ஏறிடுகிறான் என்றபடி )- ஈஸ்வரன் உகந்த திரு நாமம் என்றும் , அவனுகந்து வர்த்திக்கிற திருமலை என்று சொன்னவை அல்ல – பேருக்கும் பேருக்கும் ,மலைக்கும் மலைக்கும் வ்யாவ்ருத்தி சொன்ன மாத்ரம் —
“மாதவனென்றதே கொண்டு என்னை யினி இப்பாற் பட்டது’” (திருவா. 2 – 7 – 3) என்றும், “திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்னத் திருமால் வந்தென் தெஞ்சு நிறையப் புகுந்தான் (திருவா. 10- 8- 1) என்றும் இப்படி அந்தப்புரத்திலுள்ளார் சொல்லும் பாசுரத்தை அஹ்ருதயமாகச் சொன்ன வளவிலே இத்திருநாமத்துக்கும் அல்லாத திருநாமத்துக்கும் வாசி யறியாத என்னை விஷயீகரித்து என் விரோதிகளைப் போக்கினான் என்றும், திருமலையின் பேரைச் சொன்னேனாக ஸ்ரீய பதியான ஸர்வேஸ்வரன் என்னுடைய அஹ்ருதயமான உக்தியையே பற்றாசாகக் கொண்டு விஷயீகரித்தான் என்றும்.
மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3—மாதவன் என்கிற யுக்தி மாத்ரத்தையே கொண்டு -என் பக்கல் அஹ்ருதயமான யுக்தி மாத்திரமே உள்ளது-அத்தை அந்தப்புரத்தில் உள்ளார் வார்த்தை யாகையாலே சஹ்ருதயமாகவும் -அநேக ஆயாச சாத்தியமான ஆச்ரயணமாகவும் கொண்டு
என்னை –-கேவல நாராயண சப்தத்துக்கும் இதுக்கும் வாசி அறியாத என்னை-இனி போன காலமே போரும் -இனி விடேன் என்னா நின்றான் –பழுதே பல காலும் போயின -என்று ஈஸ்வரனைக் கிட்டின சேதனர் இருக்கும் இருப்பை தான் இரா நின்றான் –இப்பால் பட்டது-அணைக்கு கிழக்குப் பட்ட நீரோ பாதி இறே போன காலம் -இனி மேல் உள்ள காலம் ஆகிலும் ஒரு பொல்லாங்கும் சேர வீட்டுக் கொடேன் என்று –
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1–சிலர் ஒரு மலையைச் சொல்லும் இடத்தில் ஒரு விசேஷணத்தை இட்டுச் சொல்ல வேணும் –அம் மாத்ரம் சொன்னேன் அத்தனை என்று இரா நின்றார் இவர் -இவ் விசேஷணத்தை இட்டுச் சொல்லிற்று தன் பக்கல் ஆதரத்தாலே என்று இரா நின்றான் அவன் –என்ன -மனஸ் சஹகாரம் இல்லை -யுக்தி மாத்திரமே என்று இருக்கிறார் –ராவணன் தம்பிக்கு மித்ர பாவமே அமையும் என்று இருக்கிறவன் -இவருக்கு உக்திக்கு அவ்வருகு ஓன்று வேணும் என்று இருக்குமோ –சேஷத்வம் ஸ்வரூபம் ஆகில் -உபாய பாவம் நம் தலையிலே கிடந்ததாகில் -அத்வேஷம் உண்டாகில் -நம் பேறாக விஷயீ கரிக்கைக்கு உக்திக்கு அவ்வருகு உண்டோ -என்று இரா நின்றான் அவன் –திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்—திருமால் –அஹ்ருதயமாகச் சொன்னது தன்னையும் சஹ்ருதயம் ஆக்குவாரும் அருகே உண்டு – வந்து -நம்மை அங்கே அழைத்துக் கார்யம் கொள்ளுகை அன்றிக்கே –நாம் இருந்த இடத்தே வருவதே –சாபேஷன் இருந்த இடத்திலே பூர்ணன் வருவதே -சர்வருக்கும் அபிகம்யனானவனுக்கு நான் அபிகமயனாவதே –ஸோ அப்யகச்சன் மஹா தேஜோ சபரீம் – என் நெஞ்சம் -உக்திக்கு அசஹகாரியான என் நெஞ்சம் — நிறையப் புகுந்தான்-–விஷயாந்தரங்களுக்கு அவகாசம் இல்லாத படி பாழ் தீரப் புகுந்தான் –
நீர் நிழல் என்று ஏறிடுமது-அதாவது-மற்றும் இவற்றோடு சஹபடிதமாய் போருமவையான –-என் அடியார் விடாயை தீர்த்தாய் –அவர்களுக்கு ஒதுங்க நிழலைக் கொடுத்தாய் –என்று ஏறுடுகிற இவை
அன்யார்த்தம்–அதாவது -தன் பயிர் தீயாமைக்காக நீர் உள்ள இடத்தில் நின்றும் நெடும் துலை இட்டு இறைக்கிறதும் , தனக்கு சூது சதுரங்கம் பொருகைக்கும் ,காற்று வரவுக்கு இருக்கையும் ஆக விரிவு உண்டாக புறம் திண்ணை கட்டி வைக்கிறதும் ஒழிய ,-பாகவதர்கள் விடாயைத் தீர்க்கைக்கும் , அவர்களுக்கு ஒதுங்க நிழல் ஆகைக்கும் செய்கிறது அல்லாமையாலே அன்யார்த்தம்-அபுத்தி பூர்வகம்
அதாவது-இவை தான் இத்தனையும் இத் தலையில் நினைவின்றி இருக்க , அவன் அடி தேறி இடுகிற அவை ஆகையாலே ,புத்தி பூர்வகமும் அல்ல.
(நீர் நிழல் என்று) “என்னடியார் விடாயைத் தீர்த்தாய் அவர்களுக்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய்” என்றாப் போலே இவை விஷயீகார ஹேது வானாலோ என்னில்; மாதவன், மலை என்றது இரண்டும் வ்யாவ்ருத்த் யுக்தி- அதாவது – இந்தத் திருநாமத்துக்கும் அல்லாத திருநாமங்களுக்கும் வாசி அறிந்து ஸ்ரீயப்பதியுடைய திருநாமம் என்று சொன்னதன்று-இப் பேருககும் அப்பேருக்கும் வேறுபாடு சொன்ன மாத்ரம். ”திருமாலிருஞ்சோலைமலை”’ என்றது – ஸர்வேஸ்வரனுக்கு இது வஸ்தவ்ய பூ,மி என்று சொன்னதன்று; ஒரோ தேஸங்களில் மலைகளைச் சொல்லுவார், “கொல்லி மலை”, *குலை மலை’ என்று சொல்லுவாரைப் போலே இம் மலைக்கும் அம் மலைக்கும் வேறுபாடு தோற்றச் சொன்னவித்தனை. (நீர் நிழல் என்னுமவை அந்யார்த்த,ம்) அதாவது – தன் பயிருக்காக ஏற்றமிரைத்தும் சூதுச துரங்கத்துக்காக விரிவுண்டாக அகம் கட்டியும் செய்கிறானத்தனைபோக்கி, பாகவதர்கள் விடாய் தீருகைக்கும், ஒதுங்குவார் ஓதுங்குகைக்குமன்றிறே; ஒரு வைஷ்ணவன் அந்நீரிலே துளி நீர் அள்ளக் காணுதல், அந்நிழலிலே ஒருவன் ஒதுங்கக் காணுதல் செய்யில் தடியிட்டு விலக்குவர்களிறே. இவை யெல்லாம் சேர அபுத்தி பூர்வம் இந்த உக்தி வ்ருத்திகளிரண்டும் இவர்க்கு புத்தி பூர்வமல்ல.
அவிஹிதம்-அதாவது-இவை தான் பல ஹேதுதயா சாஸ்திர விஹிதங்களும் அன்று-பல வித்ருசம் அதாவது-பகவத் விஷயமாகிற மகா பலத்துக்கு இவை சத்ருசம் அல்ல –பலாந்தர ஹேது-அதாவது
இவை உண்டாய்த்தாகில் இவ் அருகே சில அல்ப பிரயோஜனங்களுக்கு , ஹேதுவாம் இத்தனை என்கை –ஆகையால் இவை பகவத் அங்கீஹார ஹேதுவாக மாட்டாது என்று கருத்து
(அவிஹிதம்) இவை தான் மோக்ஷ ஹேதுக்களென்று ஸாஸ்த்ர விதியுமில்லை. (பல விஸத்ருஸம்) பகவத் விஷயீகார மஹா பலத்துக்கு இவை ஸத்ருஸமுமன்று. (பலாந்தரஹேது] இவை உண்டாயிற்றாகில் இப் பாலுண்டான அல்ப ப்ரயோஜநத்துக்கே ஹேதுவாமித்தனை போக்கி, அந்த மஹாபலத்துக்கு ஹேதுவாகவும் மாட்டாது. ஆகையால் இவை ஹேதுவாகமாட்டாது –
கீழே –யாத்ருச்சிகாதிகள் உண்டாகில் தோன்றும் -சூரணை -107–என்றதுவும்-இங்கே மாதவன்-இத்யாதியாலே -அவன் ஏறிடத் தக்கவை சில உண்டாக ,இவர் தம்முடைய உக்தியாலே , கண்டு எடுத்து கழிக்கிற இதுவும் தன்னில் சேரும்படி எங்கனே என்னில் ,-யாத்ருச்சிகாதிகள் தான் பலவும் உண்டாகையாலே ,-அத்யுத்கடங்கலாய் (உயர்ந்தவையாய் ), மகா பலத்துக்கு உறுப்பாய் , வந்து விழும் அவையும் , ஆபாசங்களாய் இருக்கும் அவையும் உண்டாகையாலே , அத்யுத்கடங்கலாய் , அவனுக்கு ஹேதுவாகக் கொள்ளலாம் படி இருக்கும் அவற்றை கீழே சொல்லிற்றாகி , ஆபாசங்களாய் ,அவன் ஆரோபித்து கொள்ளத் தக்கவற்றை இங்கே சொல்லிற்று என்று விபஜித்து கொள்ளும் அளவில் விரோதம் இல்லை–
இவற்றை ஹேதுவாக நினைத்திருந்தாராகில் ““மதிநல மருளினன்?” (திருவா. 1 – 1 – 1) என்றும், “ஓஒ? எண்டானுமின்றியே வந்தியலுமாறு’” (திருவா, 1 – 10 – 5) என்றும், ““எனதாவி யுள் கலந்த”” (திருவா. 2 – 3 – 4) என்றும், ”நீசனேன் நிறை வொன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச்சோதி” (திருவா. 3 – 3 – 4) என்றும், ‘“அதுவுமவனதின்னருளே” (திருவா. 8 – 8 – 3) என்றும், “வெறிதே அருள் செய்வர்”” (திருவா. 9 – 7 – 8) என்றும், “ இன்றென்னைப் பொருளாக்கித் தன்னை என்னுள் வைத்தான்”? (திருவார். 10 – 8 – 8) என்றும், “‘பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்” (திருவா. 5 – 7 – 3) என்றும், “நடுவே வந்துய்யக் கொள்கின்ற நாதன்” (திருவா. 1 – – 3) என்றும், ‘“என்னைத் தீ மனங் கெடுத்தாய்”’ (திருவா. 2 – 7 – 8) என்றும், மருவித் தொழும் மனமே தந்தாய்?” (திருவா. 2 – 7 – 7) என்றும், ““வரவாறொன்றில்லையால் வாழ்வினிதால்”” (பெ.திருவ. 56) என்றும் இப்படி நிர்ஹேதுகமாக விஷயீகரித்தான் என்றருளிச் செய்த ஸ்வ வாக்யங்கள் பலவற்றோடும் வ்யாஹதமாமே.-இப்படி இவரை அஹேதுகமாக விஷயிகரிக்க வேண்டுவானென் என்னில் “த்வம் மே அஹம் மே” என்று ஸம்பந்தத்தை ஏறிட்டு இவரை வலியப் பிடிக்க, இவர் இறாய்த்த விடத்திலும் வழக்குப் பேசி, அவ்வளவிலும் அகப்படா தொழிய, மஹாபலிக்குத் தன் வடிவழகைக் காட்டி வஸீ கரித்து லோகத்தை அதிக்ரமித்துக் கொண்டாப் போலே தன் வடிவழகைக் காட்டி இவரை வாய் மாளப் பண்ணி விஷயீகரிக்கும்படி அவனை க்ருபை கால் கட்டிற்று என்கிறார்
—
ஆனால் இவரை இப்படி நிர்ஹேதுகமாக விஷயீகரிக்க வேண்டுவான் என் என்னும் அபேஷையிலே அருளிச் செய்கிறார் மேல்-
இவன் நடுவே அடியான் என்று ஓலைப் படா பிரமாணம் பஷ பாதி ஸாஷி வன் களவில் அனுபவமாக
இந்திர ஞாலங்கள் காட்டிக் கொள்ள காப்பார் அற்று விதி சூழ்ந்தது–சூரணை -112-
(இவன் -சர்வேஸ்வரன் -ஓலைப் படா பிரமாணம்-வேதம்-இவன் நடுவே ( வந்து )அடியான் என்று-காட்டி-
நாம் ஓலைப் படா பிரமாணம்-என்று- சொல்ல-அவன் ஸாஷி-என்று-காட்டி–நாம் பஷ பாதி -என்று சொல்ல-இப்படி காட்டியதைக் கூட்டி வியாக்யானம்-வன் களவில் அனுபவமாக- இந்திர ஞாலங்கள் காட்டிக் கொள்ள-காப்பார் அற்று விதி சூழ்ந்தது–பகவத் கிருபாவையே விதி என்கிறார்)-அதாவது
இப்படி ஒன்றை ஆரோபித்தாகிலும் ,விஷயீகரிக்கும் இவன் ,-நடுவே –-அதாவது –-நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் -1-7-5–என்கிற படியே ,-நாதன் ஆகையால் நிர்ஹேதுகமாக வந்து –-அடியான் என்று –அதாவது –அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும் நெடியான் -9-4-10 –என்றும்-த்வம் மே -என்கிறபடியே-இவன் என் அடியான் என்று பிடிக்க ,-அஹம் மே -என்கிற படி -அதுக்கு இவர் இசையாமல் , என்னை நீ உன் அடியான் என்றது எத்தாலே -என்ன – (த்வம் மே அஹம் மே குதஸ் தத் ததபிகுதஸ் இதம் வேத மூல பிரமாணாத் ஏதச்சா நாதி ஸித்தாத் அநு பாவ விபவாத் ஸோபி சாக்ரோச ஏவ ஸ்யாத் க்வாக்ரோசஸ் கஸ்ய கீதா திஷு மம விவிதஸ் கோத்ர ஸாஷீ ஸூதீ அந்த த்வத் பக்ஷபாதீ ச இதி ந்ருகலஹே ம்ருக்யமத்யஸ்த வத்வம் –ஸ்ரீ பட்டர் ஸ்ரீ ஸூக்தி –) இதம் வேத மூல பிரமாணாத் -என்கிறபடியே இவரை இசைவிக்கைக்காக–ஓலைப் படா பிரமாணம்--அதாவது–பதிம் விச்வச்ய–புருஷ ஸூக்தம் -என்றும்-பிராதந ஷேத்ரஜ்ஞ பதி –ஸ்வேதா உபநிஷத் -என்றும்-ஷராத்மானாவ் வீஷதே தேவ ஏக–ஸ்வேதா உபநிஷத் -என்றும் இத்யாதிகளாலே சேதன அசேதனங்கள் அடைய தனக்கு சேஷம் என்னும் இடத்தை பிரதிபாதிக்கிற வேதத்தை பிரமாணமாக காட்ட , அது எழுதா மறை ஆகையாலே , அது ஓலைப் படா பிரமாணம் என்று இவர் அத்தை அந்யதாகரித்து , தம்முடைய அநாத்ய அனுபவத்தை பிரபலமாக கொண்டு நிற்கையாலே-
(இவன் நடுவே அடியான் என்று தொடங்கி). “நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன்” (திருவா. 1 – 7 – 5) என்றும், ”அடியானிவனென்றெனக்காரருள் செய்யும்” (திருவா. 9 – 4 – 10) என்றும் நாதனாகையாலே நிர்ஹேதுகமாக வந்து இவர்க்கிசைவின்றிக்கே இருக்கச் செய்தே “இவன் என் அடியான்” என்று பிடிக்க, அதுக்கு, இவர் இசையாதொழிய, இவர் இசைகைக்காக ‘“பதிம் விஸ்வஸ்ய” இத்யாதிகளைக் காட்ட, அது எழுதா மறையாகையாலே அது ஓலைப் படா ப்ரமாணம் என்று அத்தையும் இவர் அந்யதாகரிக்க,-
விடுவேனோ என் விளக்கை என் ஆவியை –நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே –1-7-5–அசன்னேவ ச பவதி-என்கிறபடியே உரு மாய்ந்து போன என் ஆத்மாவை-நடுவே வந்து-விஷய பிரவணனாய் போகா நிற்க நடுவே வந்து -நிர்ஹேதுகமாக என்னவுமாம்-வந்து– நான் இருந்த இடத்தே தானே வந்து-உய்யக் கொள்கின்ற-அஸத் கல்பனான என்னை -சந்தமேனன் ததோ விது-என்னப் பண்ணின படி-கொள்கின்ற-கொண்டு விட்டிலன்-மேன் மேல் எனக் கொள்ளா நிற்கிற அத்தனை-நாதனை-உய்யக் கொள்கைக்கு நிபந்தனம் சொல்லுகிறது-இழவு பேறு தன்னதான குடல் துடக்கைச் சொல்லுகிறது
அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும்
நெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின்
கொடியானைக் குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே–9-4-10—மேல் பண்ணப் புகு கிற உதார குணம் பிராப்தம் என்று தோற்றுகைக்காக –அடியான் -என்று ஒரு பேரை இட்டு யாயிற்று உபகரித்தது-எனக்கு ஆர் அருள் செய்யும்-நெடியானை -கொள்ளுகிற என்னளவு அன்றிக்கே தன்னளவில் உபகரித்த சர்வேஸ்வரனை-பெரிய திருவடியை விஷயீ கரித்தால் போலே என்னை விஷயீ கரித்தவன்-
பஷ பாதி ஸாஷி–அதாவது-ஆட்சியிலும் பிரபலமான துடர்ச்சியை முன்னிட்ட அளவிலே – அதுக்கும் ஸாஷி யார் என்று கேட்டவாறே –ஸூதீச்யாத்-என்கிறபடி ,-தத்வ தர்சிகளான ஞானிகளைக் காட்ட – த்வத் பஷ பாதி ச -என்கிறபடியே அவர்கள் உனக்கு பஷ பாதிகள் என்று அதுக்கும் இவர் கண் அழிவு சொல்லுகையாலே –வன் களவில் அனுபவமாக அதாவது-வன் கள்வனேன் –5-1-4-என்று விஷயீகார அநந்தரம்-அநாதி காலம் தாம் அஹம் மம -என்று இருந்து போன அனுபவம் ,-ஆத்மா அபஹாரம் ஆகிற வலிய களவாலே வந்தது என்று இவர் அனுதபிக்கும் படி –-இந்திர ஞாலங்கள் காட்டி இவ் எழ உலகும் கொண்ட -9-5-6–என்று-இந்திர ஞாலங்கள் போலே ,திருஷ்ட்டி சித்த அபகாரிகளான-வடிவழகையும் ,சீலத்தையும் , சேஷ்டிதையையும் காட்டி,வாய் மாளப் பண்ணி , ஆசூர பிரக்ருதியான மகா பலி-என்னது என்று இருந்த லோகத்தைத் தன்னதாக்கிக் கொண்டால் போலே இவரையும் வடிவழகையும் சீலாதிகளையும் காட்டி வாய் மாளப் பண்ணி இவர்-என்னது -என்று இருந்த ஆத்மாவை தன்னதாக்கிக் கொள்ளும் படியாக –காப்பார் அற்று –அதாவது-விதி வாய்க்கின்று காப்பார் யார்–5-1-1 -என்று
கிருபா ஜனிகையான இவள் காக்கவோ ?-கிருபா பரதந்த்ரனான நீ காக்கவோ ?-கிருபா பாத்ரமான நான் காக்கவோ -என்னும் படி ஒருவரால் நிவாகரிக்க ஒண்ணாத படி பெருகுவதாய் , ஸ்வதந்த்ரனான தன்னாலும் தப்ப ஒண்ணாத படி இருக்கையாலே , விதி சப்த வாச்யையாய் இருந்துள்ள கிருபை–விதி சூழ்ந்தது--அதாவது–எனைத்தோர் பிறப்பும் —-எதிர் சூழல் புக்கு எனக்கே அருள்கள் செய்ய – அம்மான் திரிவிக்ரமனை –விதி சூழ்ந்தது -2-7-6–என்று-அநேக ஜன்மங்கள் நான் பிறந்த பிறவிக்கு எதிராகப் பிறந்து கொடு வந்து , எனக்கு ஒருவனுக்கே தன் பிரசாதங்களை பண்ணும் படியாக – சர்வேஸ்வரனாய் வைத்து த்ரிவிக்ர அபதான முகத்தாலே எல்லார் தலையிலும் திரு அடிகளை வைத்த ஸூசீலனை ,
கிருபை சூழ்ந்தது என்னும் படி இவரை அங்கீகரித்து அல்லது நிற்க ஒண்ணாது வளைத்துக் கொண்டது என்கை–காட்டிக் கொள்ள -என்கிற இடத்தில்-காட்டி-என்கிற இது –-பிரமாணம் காட்டிக் கொள்ள-ஸாஷி காட்டிக் கொள்ள-இந்திர ஞாலங்கள் காட்டிக் கொள்ள – என்று-சர்வாந்தர அன்விதமாய் கிடக்கிறது–
இவர் அடியானானமைக்கு தத்த்வ தர்மிகளான ஜ்ஞாநிகள் ஸாக்ஷியாக உண்டீ என்ன; அவர்களும் உனக்கு பக்ஷபாதிகள் என்று ப்ரதி வசநம் பண்ண, ஆனால் “இவ் வஸ்து உம்மதானபடி எங்ஙனே?” என்று பகவதபிப்ராயமாக, “அநுபவவிபவாத்”” என்கிறபடியே “அஹம் மம” என்று அநாதி, காலம் அநுபவித்துப் போந்தேன் என்று ப்ரபல ப்ரமாணமான அநுபவத்தைக் காட்ட, ப்ரமாண ஸாக்ஷிகளும் ஆக்ரோஸ முண்டாயிருக்கச் செய்தே அநுபவித்துப் போந்த இது ““வன்கள்வனேன்” (திருவா. 5 – 1 – 4) என்று ஸர்வஜ்ஞனானவனையும் க்ருத்ரிமித்துப் போந்தேன் என்று விஷயீகாராநந்தரம் தாமே பேசும்படி இவர் க்ருத்ரிமத்திலே அநுபவித்தாராம்படி ‘*இந்திர ஞாலங்கள் காட்டி இவ்வேழுலகுங்கொண்ட. நந்திரு மார்வன்”! (திருவா. 9 – 5 – 5) என்று ஐந்த்ரஜாலிகம் காட்டுவாரைப் போலே சிறுப்பது பெருப்பதான வடிவழகைக் காட்டி, மன்னை மனங்கொள்ள வஞ்சித்து தெஞ்சுருக்கி’ ” (பெ. மடல் ) என்கிறபடியே ஆஸூர ப்ரக்ருதியான மஹாபலியை வாய் மாளப் பண்ணி ஸகல ஜகத்தையும் ஆக்ரமித்துக் கொண்டாப் போலே, வடிவழகைக் காட்டி வாய்மாளப் பண்ணி விஷயீகரிக்கும்படி, (காப்பாரற்று) ”விதிவாய்க்கின்று காப்பாரார் – ஐயோ கண்ண பிரான் அறையோ இனிப் போனாலே”’ (திருவா. 5 – 1 – 1) எனறு – கிருபை பெருகுமிடத்தில் க்ருபா பரதந்த்ரனான நீ காக்கவோ? க்ருபா ப்ரேரிகையான அவள் காக்கவோ? க்ருபா விஷயமான நான் காக்கவோ? இந்த கருபையைத் தப்பி நீ போனாயாகில் “அறையோ அறை” என்று நிவாரகரில்லாதபடி விதி சூழ்ந்தது. ”எதிர் சூழல் புக்கெனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய – அம்மான் திருவிக்கிரமனை விதி சூழ்ந்தது”” (திருவா. 2 – 7 – 6) என்று அநேக ஜந்மங்கள் இவர் பிறவிகளுக்கு எதிரே பிறந்து கொடு வந்து இவரை விஷியீகரிக்கும்படி விரோதி நிரஸந ஸீலனான ஸர்வேஸ்வரனை, இவரை விஷயீகரித்தல்லது நிற்க வொண்ணாத படியான க்ருபை கால் கட்டிற்று என்கிறார்-
என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே –5-1-4—களவாவது -பரத்வ வ்யாபஹாரம்-வலிய களவாவது –சோரேணாத் மாப ஹாரிணா-என்கிறபடியே பகவத் சேஷமான ஆத்மவஸ்துவை அபஹரிக்கை-த்ரவ்யங்களில் தலையான வஸ்து -ஆத்மவஸ்து -உடையவன் சர்வாதிகன் -அகவாய் இப்படி இருக்கையாலே யுக்தி மாத்ரமான ஆனு கூல்யம் கொண்டு என் விரோதியைப் போக்க ஷமன் அல்லேன் என்கிறார் மேல்-மனத்தை வலித்து--விஷயங்களின் நின்றும் மனசை நிவர்ப்பித்து -நான் இந்திரிய ஜெயம் பண்ண நினைக்கை யாவது -அவன் என்னை மேலிடுகை –இந்திரியாணி பிரமாதீ நீ ஹரந்தி பிரசபம் மன-–கண்ண நீர் கரந்து- விஷய அனுபவத்தால் வந்த கண்ண நீரை மாற்றி -விஷய ப்ராவண்யம் சாஸ்த்ர உபதேசத்தால் போமோ -உன் போக்யதையைக் காட்டினால் அன்றோ அந்தக் கண்ண நீர் மாறுவது –
அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேன்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட
நம் திரு மார்வன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்–9-5-5–கண்டார்க்கு விட ஒண்ணாத வடிவையும் -சீலத்தையும் -சேஷ்டிதத்தையும் காட்டி -இவை நிலை நில்லாமையாலே பொய் காண் -என்கிறாள் –-இவ் ஏழ் உலகும் கொண்ட-பிறர் உடைமை கொள்ளும் இடத்தில் சேஷியாத படி கொள்ளுமவன் –-நம் திரு மார்வன் -பிரணயித்தவத்தால் வந்த ப்ரஸித்தியை எனக்கு காட்டி –பிராட்டியோடு பழகிற்றும் பிரணயியாய் அன்று -அத்தைக் காட்டி கண்டாரை அகப்படுத்திக் கொள்ளுகைக்காக -சில பொய்களைக் காட்டி மஹா பலி பக்கலிலே நின்றும் பூமியைக் கொண்டால் போலே கலந்து பரிமாறுகிறான் என்று தோற்றும் படி சில பொய்களைச் செய்து விஸ்லேஷிக்கை -என்னை முடிக்கைக்கு உபாயம் என்றுமாம்
ஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி
மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத் ———112
தன்னுலக மாக்குவித்த தாளானை ––அவ்வளவிலே எதிரிட்டு வந்த நமுசிப் ப்ரப்ருதிகளை-ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி பண்ணி-அவனை ஆகாசத்திலே சுழற்றி எரிந்து அவ்வளவும் செல்லப் பரப்பி-பழையதாய் மகாபலி தான் அடி இட்டுப் போந்த ராஜ்யத்தை-சிறு காலைக் காட்டி மூவடி மண் தர வேணும் என்று இரந்து-கையிலே நீர் விழுந்த அனந்தரத்திலே பெரிய அடியாலே அளந்த வஞ்சனையைச் சொல்லுகிறது –
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1-–விதி என்று பகவத் கிருபை –கர்ம பரதந்த்ரனுக்கு கர்மம் அனுபவித்து அல்லது நிற்க ஒண்ணா தோபாதி -அவனுக்கும் கிருபா பரதந்த்ரன் ஆகையால் கிருபை பண்ணி அல்லது நிற்க ஒண்ணாமை யாலே விதி என்கிறது -பகவத் கிருபை கரை புரள புக்கால் நிவாரகர் உண்டோ –காப்பது ஏது என்னாதே காப்பார் யார் என்கிறது -பல போக்தாவான இவனாலும் -கிருபா ஜனகை யான அவனாலும் ஒண்ணாது என்கை –ஸ்வ தந்த்ரனான அவனாலும் ஒண்ணாது -ஸ்வ தந்தர்யத்திலும் விஞ்சி இ றே கிருபை இருப்பது -இவனால் கிருபையை விஞ்சைக் குற்றம் செய்ய ஒண்ணாது -அவனால் ஸ்வ தந்தர்யத்தால் குற்றம் கண்டு கை விட ஒண்ணாது -நிரங்குச மான ஸ்வ தந்தர்யத்தை யுடைய நம்மால் தடுக்கத் தட்டு என் என்ன-ஐயோ!-ஸ்வ தந்தர்யத்தை நினைத்தோ -கிருபையை விஞ்சி கால் வாங்கி காண் -இனி என்கிறார்-ஐயோ என்றது ஹர்ஷத்தாலே -கிருபையின் கீழ் குற்றம் காண ஞானம் இல்லை -விட சக்தி இல்லை-கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.–ஓர் இடைச்சி கையிலே கட்டுண்ட தசையில் அந்த பந்தத்தை தப்ப விரகு அறியாதே சக்தியும் இன்றிக்கே இருந்த நீயோ போகப் புகுகிறாய்-கண்ணபிரான் என்று சம்புத்தி -இனிப்போனால் அறையோவறை -அனுக்ரஹ சீலனான உனக்கும் -மெய் என்று பேரிடலாவதொரு பொய் என் பக்கலிலே உண்டான பின்பு போகலாமோ-மித்ர பாவம் பெற்றால் -நத்யஜேயம் என்னும் உனக்குப் போகலாமோ -ஸூ க்ரீவ மஹா ராஜரைப் போலே அறை கூவுகிறார் –
மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6—நான் இழவுக்கு யத்னம் பண்ணிப் போந்த காலம் எல்லாம் என்னைப் பெறுகைக்கு அவன் கிருஷி பண்ணிப் போருகையாலே பெற்றேன்
எதிரான சூழல் -என்னை அகப்படுத்திக் கொள்ளுகைக்கு ஈடான திரு வவதாரங்கள்-எனக்கே யருள்கள் செய்ய- எனக்கும் பிறருக்குமாக அன்றிக்கே எனக்கே அருள்கள் பண்ணும்படி –-யம்மான் திரிவிக்ரமனையே –-எனக்கு என்னவே விதி சூழ்ந்தது சர்வேஸ்வரனாய் வைத்து ஸ்ரீ வாமனனாய் சகல லோகங்களையும் திருவடியின் கீழே இட்டுக் கொண்டவனை – அது பரதசை என்னும்படி எனக்கு என்னவே விதி சூழ்ந்தது தம்மை விஷயீ கரித்து அல்லது அவனை இருக்க ஒட்டாமையாலே அவனுடைய க்ருபா குணத்தை விதி என்கிறது -ச தம் நிபதிதம் –
–
எல்லாம் செய்தாலும் ஏவம் பூத கிருபை தான் அநாதி காலம் இவாத்மா விஷயமாக பெருகாமல் ,இன்று பெருகும் அளவில் ,இதுக்கு ஓர் அடி வேண்டுகையாலே இதுக்கு உடலாகக் கற்பிக்க லாவதொரு ஸூஹ்ருதம் இல்லையோ என்ன-அருளிச் செய்கிறார்–ஆகையாலே இவர் தாமே “நிர்ஹேதுகமாக விஷயீகரித்தான்’ என்று அர்த்தத்தை அறுதியிட்ட பின்பு விஷயீகார ஹேதுவான ப்ரதம ஸுஹருதமும் அவனை யல்லதில்லை என்கிறார் மேல்-
வரவாறில்லை வெறிதே என்று அறுதி இட்ட பின் வாழ் முதல் என்கிற ஸூஹ்ருதம் ஓழியக்
கற்பிக்கலாவது இல்லை-சூரணை-113-
வரவாறு இல்லை என்று-அதாவது- வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால்—பெரிய திருவந்தாதி -56-என்று இது வந்த வழி இன்னது என்று இதற்க்கு சொல்ல லாவது ஒரு ஹேதும் இல்லை- பேறும் மிகவும் இனிதாய் இரா நிற்கும் என்றும் –வெறிதே அருள் செய்வர் செய்வார்கட்கு- திருவாய் -8-7-8-என்று-தாம் செய்ய நினைத்தவர்களுக்கு -நிர் ஹேதுகமாக கிருபை பண்ணுவர் என்றும் –இப்படி விஷயீகாரம் நிர் ஹேதுகம் என்று தாமே அறுதி இட்ட பின்பு –வாழ் முதல் என்கிற ஸூஹ்ருதம்-
அதாவது –தனியேன் வாழ் முதலே–திருவாய் -2-3-5- -என்று சம்சாரத்தில் ஒரு துணை இன்றிக்கே இருக்கிற என்னுடைய அனுபவத்துக்கு பிரதம ஸூஹ்ருதம் ஆனவனே -என்று தம்முடைய பேற்றுக்கு மூல ஸூஹ்ருதமாக இவர் அருளிச் செய்த அவன் தன்னை ஒழிய வேறு கற்பிக்கலாவதொரு ஸூஹ்ருதம் இல்லை என்கை–அன்றிக்கே – யாத்ருச்சிகளாதிகள் உண்டாகில் தோன்றும்–107–என்று அஜ்ஞாத ஸூஹ்ருதமும் இவருக்கு இல்லை என்றவாறே-இப்படி நேராகக் கழிக்க வேணுமோ ?-
அநாதி காலம் அங்கீகரியாதவன் இன்று செய்கையாலும் அல்லாத ஆத்மாக்கள் எல்லாம் கிடக்க , இவரை இப்படி விஷயீகரிக்கையாலும், இதற்கு உடலானது ஏதேனும் ஒரு ஸூஹ்ருதம் இவர்க்கு உண்டாகக் கூடும் என்று கார்யத்தை இட்டு அனுமித்ததாகிலும் , கல்பிக்க லாவது ஓன்று இல்லையோ என்ன- அப்படி கல்பிக்க லாவது இல்லை என்னும் இடத்தை ,விஸ்த்ரேண பிரதி பாதிக்கிறார் என்று சங்கதி ஆக்கி-—செய்த நன்றி தேடிக் காணாதே -சூரணை -108-தொடங்கி-வெறிதே என்று அறுதி இட்ட பின் 113-என்னும் அளவும் ஏக வாக்யமாய் கொண்டு-இவ் ஆழ்வார் கருத்தைச் சொல்லி கொண்டு செல்கிறதாய் –-1-என் நன்றி செய்தேனா -என்று பகவத் அங்கீகாரத்துக்கு உடலாக தாம் செய்த ஸூஹ்ருதம் உண்டோ என்றி தேடிக் காணாதே – அங்கீகாரத்துக்கு உடலானது இல்லை ஆகில் –
2-அத்வேஷ ஆபிமுக்யங்களுக்கு தக்க தான் உண்டோ என்னில் , அவையும் அவனாலே வந்தது –
3-சத் கர்மத்தால் வந்தது அல்ல–எண்ணிலும் வரும் -என்று பரிகணனை தான் உண்டோ என்னில்- அதுக்கு எண்டானும் இல்லை-.. 4-வைத்தேன் மதியால்-யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் –
என்கிற அனுமதி இச்சைகள் தானும் உண்டோ என்னில்-அவையும் அவன் உண்டாக்கினது —
5-மாதவன் என்றதே கொண்டு –திரு மால் இரும் சோலை மலை என்றேன் என்ன -இத்யாதிகளால் –
ஈஸ்வரன் வலியவே எறிடிகிறவைகள் இவை –வ்யாவ்ருத்தி யுக்தாதிகள் ..-இவன் நடுவே வந்து-அடியான் என்று பிடித்து-பிரமாண சாஷிகள் காட்டி அவை கார்யகரம் ஆகாத அளவில் வடிவு அழகைக் காட்டி இப்படி இவ் வஸ்துவை ஸ்வ தீனம் ஆக்கி கொள்ளும் படி இவனை நிவாகரர் அற்ற கிருபை சூழ்ந்தது –6-இவ் விஷயீகாரத்துக்கு-வரவாறு ஓன்று இல்லை -வெறிதே அருள் செய்த இத்தனை-என்று
இவர் தானே அறுதி இட்ட பின்பு –-7-தனியேன் வாழ் முதலே –என்று தம் பேற்றுக்கு மூல ஸூஹ்ருதமாக
இவர் அருளிச் செய்த ஈஸ்வரன் தன்னை ஒழிய இவருக்கு வேறு ஒரு கற்ப்பிக்க லாவதொரு ஸூஹ்ருதம் இல்லை -இங்கனே யோஜிக்கவுமாம் –-இந்த யோஜனை இதின் பட்டோலையான கிரந்தத்தில் இவர் அருளிச் செய்த மரியாதைக்கு சேரும் –
“வரவாறொன்றில்லையால் வாழ்வினிதால்”” (பெ. திருவ. 56) என்று பேற்றுக்கு ஒரு ஹேதுவின்றியிலே இருக்கச் செய்தே அப்பேறு மிகவும் இனிதாயிருந்ததென்றும், ““வெறிதே அருள் செய்வர் செய்வார்கட்குகந்து”” (திருவா. 8 – 7 – 8) என்று ”செய்வார்களுக்கு உகந்து வெறிதே அருள் செய்வர்’‘ என்கையாலே தான் அங்கீகரிக்க வேண்டினார்க்குத் திருவுள்ளத் தோடே உகந்து நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணுமென்று இப்படி இவ் விஷயீகாரம் திர்ஹேதுக மென்று தாமே அறுதி யிட்டபின் (வாழ்முதல் என்ற ஸுஹ்ருதமொழியக் கற்பிக்கலாவதில்லை) இவ் விஷயீகாரத்துக்கு ஹேதுவான மூல ஸூஹ்ருதம் *‘பொழிலேமழுமேனமொன்றாய் நுனியார் கோட்டில் வைத்தாய் – தனியேன் வாழ் முதலே”’ (திருவா. 2 – 3 – 5) என்று ப்ரளயார்ணவ மக்னையான ஸ்ரீபூமிப்பிராட்டியை நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு உத்தரிப்பித்து, தனியே ஸம்ஸாரார்ணவ மக்நனாய் ஒரு கைம்முதலில்லாத என்னுடைய உஜ்ஜீவநத்துக்கு ப்ரதம ஸுஹ்ருதமானவனே என்று அருளிச்செய்த ஞானப்பிரானை யொழிய வேறு கல்பிக்கலாவதில்லை என்கிறார்.
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே
ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம்
மாயவர் தாம் காட்டும் வழி–56—இன்ன வழியாக வந்ததென்று தெரியாது;—அடி இல்லை யாகில் பலம் சுருங்கி இருக்குமோ என்னில்–பலம் அதிகமாய் இருக்கும்-பலன் போக்யமாயிரா நின்றது;-ஆச்சரியம்-தன்னுடைய ஸ்வரூப ஸ்வ பாவங்களை அழியமாறும்-எல்லா உபாயங்களையும் விட்டு என்னையே பற்று என்கை-போக்தாவினுடைய உபாய அனுஷ்டானங்களை அவர்க்காகத் தான் அனுஷ்ட்டிக்கும் என்று கருத்து எல்லாம் விட்டு என்னைப் பற்று என்னும் இவர்–அன்று உலகம் தாயவர் தாம் மாயவர் தாம் காட்டும் வழி நினைத்த போது தாமே வந்து கிட்டுமவர்-இப்படி ஆச்சர்ய பூதரானவர் காட்டும் உபாயம் வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால்-
இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்
கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய் யுனபாதம் சேர்ந்தேனே –2-3-5—எனக்கு இப் பேற்றுக்கு அடியான பிரதம ஸூ க்ருதத்துக்கு உத்பாதகன் ஆனவனே-பந்துக்கள் நடுவே இருக்கிறவர் -தனியேன் -என்கிறார் இறே
வழி பறிக்காரர் நடுவே நின்றால் அவர்கள் துணை யாகார் இறே-எனக்கு என்று இருப்பார் நடுவே இருக்கை இறே இவருக்கு தனிமை நம்மை அத்தலைக்கு ஆக்கி வைக்கை இறே இவருக்கு வாழ்வு
ஆக இதுக்கு கீழ்-இவர் பிரபாவத்தையும் ,-அதுக்கடி பகவத் நிர்ஹேதுக கடாஷம் என்னும் அத்தையும்,
அத்தால் இவருக்கு உண்டான பக்தியின் வ்யாவர்த்தியையும் ,-அது தான் கர்ம ஜ்ஞான சாத்யை அல்லாமையையும் , இவரை ஈஸ்வர அங்கீகரித்ததற்கு கேவல கிருபை ஒழிய ஹேது அந்தரம் இல்லாமையையும் சொல்லிற்று ஆய்த்து-
ஆக, இதுக்குக்கீழ் இவருடைய ப்ரபாவத்தையும், ப்ரபாவத்துக்கடி பகவந் நிர்ஹேதுக கடாக்ஷம் என்னுமிடத்தையும், அந்த கடாக்ஷமடியாக இவர்க்குண்டான பக்தியினுடைய வ்யாவ்ருத்தியையும், அந்த பக்தி தான் கர்ம ஜ்ஞாந ஸாத்யையுமல்ல, அதுக்கடியான யாத்ருச்சிகாதிகளுமில்லை, கேவல நிர்ஹேதுக க்ருபையாலே உண்டாயிற்றென்னுமிடத்தையும் அருளிச் செய்து தலைக்கட்டினாராய்த்து –
—
இப்படி நிர்ஹேதுக விஷயீகார பாத்ர பூதரான இவருடைய பக்தி பகவத் கிருபை ஏக லப்தையாய் இருந்தாலும் , உபாகசனுக்கு கர்ம ஜ்ஞான ஜனிதையான பக்தியோபாதி இவருக்கு பிராப்தி சாதனம் இதுவோ என்ன -அருளிச் செய்கிறார் மேல்–ஆனால், உபாஸகனுக்கு கர்ம ஜ்ஞாநங்களாலே ஸாத்யையான பக்தி பகவத் ப்ராப்திக்கு ஸாதநமாகக் கண்டோம், இவர்க்கு நிர்ஹேதுக க்ருபையாலே பக்தி உண்டாயிற்றாகில் பகவத் ப்ராப்திக்கு இது ஸாதநமானாலோ என்னில், அந்த பக்த் யுத்பத்தி ஹேதுவான க்ருபை தானே ப்ராப்திக்கும் ஸாதநம் என்கிறார் மேல்–
நலம் அருளினன்-என் கொல் என்று-ஆமூல சூடம்-அருளால் மன்னும் இவர்க்கு-அன்புக்கு அடி யானதுவே-அடி சேருகைக்கும் சாதனம்-சூரணை-114-
(அன்புக்கு அடி என்றது பக்திக்கு அடி என்றவாறு-அன்புக்கு அடி -பக்திக்கு காரணம் ஈஸ்வர கிருபையே -அதுவே அடி -ஈஸ்வர திரு அடி- சேருகைக்கும் அடி-காரணம் ) நலம் அருளினான் என்று-அதாவது
மயர்வற மதி நலம் அருளினன்-1-1-1- -என்று தம்முடைய பக்தி உத்பத்தி காரணம் , கேவல பகவத் கிருபை என்று உபக்ரமித்து –என் கொல் என்று –அதாவது –என் கொல் அம்மான் திரு அருள்கள்-10-7-4–(பன்மை -உபகார பரம்பரைகள் -ஆ மூல -ஆதி அந்தமாக அருள்கள்) (நன்கு என் உடலம் கை விடான் -என் மகங்காரம் -இத்தை சாத்தியமாக கொண்டு அதனாலே கொண்டான் –நாங்கள் குன்றம் கை விடான் -இத்தை சாதன புத்தியாக கை விடான் ) என்னும் அளவாக –ஞான தசையோடு -வர்ண தசையோடு–பிராப்தி தசையோடு -வாசி அற-ஆமூலசூடம்-—அருளால் மன்னும் இவர்க்கு-அதாவது
மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்-1-5-11-என்று பிடி தோறும் நெய் ஒழிய செல்லாத சுகுமாரரை போலே , நின்ற நிலை தோறும் அவன் அருள் கொண்டே தரிக்க வேண்டும் ஸ்வபாவர் ஆன இவர்க்கு – ( இன்ப மாரிக்கு -அடி தோறும் அர்ச்சை -அருள் மாரிக்கு அடி தோறும் அருள் -அர்ச்சாவதாரமே அருளின் சரம தசை ) அன்புக்கு அடி யானதுவே அடி சேருகைக்கும் சாதனம்-
அதாவது-ஆரா அன்பில் அடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாய்-6-10-2–என்கையாலே ,-நலம் அருளினன் -என்று பக்தி காரணமாக சொன்ன கிருபையே-அடி சேருகை யாகிற பிராப்த்திக்கும் சாதனம் என்ற படி –
“மயர்வற மதிநலமருளினன் ”‘ (திருவா. 1 – 1 – 1), “ஆவா வென்றருள் செய்து” (திருவா. 5 – 1 – 9), “’தானே இன்னருள் செய்து” (திருவா. 5 – 1 – 10), ‘“அதுவுமவனதின்னருளே”‘ (திருவா. 0 – ப – 3), ”என்கொலம்மான் திருவருள்கள்”‘ (திருவா, 10 – 7 -4) என்று ஜஞாந தஸையோடு, உபாயதஸையோடு, ப்ராப்தி தஸையோடு வாசியற ஆமூலசூடம் அருளால் ”மன்னு குருகூர்ச் சடகோபன்”’ (திருவா, 1 – 5 -11) என்று தொடங்கி – ஸுகுமாரராயிருப்பார் பிடி தோறும் ‘நெய்’ என்னுமாப் போலே அவனுடைய அருளை யொழியச் செல்லாத இவர்க்கு. (அன்புக் கடியானதுவே அடி சேருகைக்கும் ஸாதநம்) ““அறியாக் காலத்துள்ளே அடிமைக் கணன்பு செய்வித்து’” (திருவா. 2- 3 – 3) என்று அறிவு நடையாடுகைக்கு யோக்யதை யில்லாத அதி பால்யததிலே அன்பை விளைத்தானென்றும், ““ஆராவன்பிலடியேனுன்னடி சேர் வண்ணமருளாயே” (திருவா. 6 – 10 – 2) என்கையாலே அந்த பக்திக்கடியான கிருபையே பகவத் ப்ராப்திக்கு சாதநம் என்கிறார் –
உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1–மயர்வு -அஜ்ஞானம் -இத்தால் ஜ்ஞான உதய -அந்யதா ஜ்ஞான -விபரீத ஜ்ஞான ரூபமான அஜ்ஞானத்தைச் சொல்லுகிறது-அற -சவாசனமாகப் போகும்படி-மதி நலம்-மதி என்று ஜ்ஞானம்-நலம் -என்று பக்தி -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் என்றபடி-அருளினன்-இத் தலையில் நன்மை தீமை பாராதே நிர்ஹேதுக கிருபையால் தந்து அருளினான்-முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுமா போலே –எனக்குத் தந்து அருளினான் -என்னாது ஒழிந்தது -பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே–எவன்–-இப்படி உபகாரகனான ஸ்ருதி பிரசித்தி ஆனவன்-
ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள்செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே.–5-1-10—என்னை அடிமை கொள்வான் ஆனான் என்கிற இந்த யுக்தி மாத்ரத்தையே குவாலாகக் கொண்டு -இப்படி சொல்லுகைக்கு தான் பண்ணின க்ருஷியை மறந்தான் -என்னுடைய யுக்தி மாத்ரத்தையே குவாலாக நினைத்தான் -பலம் பூஜிக்கிற நான் அன்றிக்கே உகப்பும் தன்னதே யாயிற்று-வந்து-தானே இன்னருள் செய்து- தான் இருந்த இடத்தே நான் செல்லுகை அன்றிக்கே நான் இருந்த இடத்தே தானே வந்து -அர்த்தியாது இருக்க தானே தன் பேறாக கிருபை பண்ணி –-என்னை முற்றவும் தானானான்-உள்ளொடு புறம்போடு வாசி அற கலந்தான் -என்னுதல்–சேலேய் கண்ணி யரும் பெரும் செல்வமும் -என்ற படியே சர்வவித பந்துவும் தான் ஆனான் என்னுதல் –
உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3—வைத்தேன் –மதியால் –என்றது தான் இறே -அவனை என்னுடைய ஞானத்துக்கு விஷயம் ஆக்கினேன் -இச்சித்தேன் என்கை -இச்சை தான் ஸ்வ ஆதீனமோ என்னில் –அதுவுமவன தின்னருளே-அந்த இச்சை தானும் பிறந்தது அவன் பிரசாதத்தாலே –நின்ற நின்ற வளைவுகள் தோறும் -இவ்வளவு அவனாலே பிறந்தது -என்னும்படியாய் யாயிற்று இருப்பது -அவனுடைய நிருபாதிக ஸுஹார்த்தம் -தன் பொன்னடிக்கு கீழ் இருத்தும் வியந்து -என்று ப்ராப்ய ப்ராபகன் அவனே என்று அருத்தித்து -என்றது இறே -அத்தை இ றே இங்குச் சொல்கிறது –
என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4—சர்வேஸ்வரனுக்கு என் பக்கல் யுண்டாய் இருந்துள்ள பிரசாத அதிசயத்துக்கு அவதி என்னா – உலகும் உயிரும் தானேயாய்-சகல லோகங்களும் சகல ஆத்மாக்களும் தான் இட்ட வழக்காய் இருக்கிறவன் தனக்கு ஒரு குறை யுண்டாய் -இப்படிப் படுகிறானோ –நன்கு என் உடலம் கை விடான்-செருக்கர் நீச ஸ்த்ரீகள் கால் கடையிலே துவளுமா போலே என்னுடம்பை விரும்பி விடுகிறிலன் –எனக்கு மமதா விஷயம் என்னுமதுவே ஹேதுவாக விடுகிறிலன்-ஞாலத்தூடே நடந்து உழக்கி--பூமி எங்கும் உலாவி -எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைத்து திரு உலகு அளந்து அருளிற்று -தம்மைப் பெறுகைக்கு கிருஷி பண்ணி என்று இருக்கிறார் -சர்வ சாதாரணன் வியாபாரம் ஆகையால் சம்பந்தம் அறிந்தால் எனக்கு என்னலாம் இறே –திரு உலகு அளந்து அருளுகை ஒரு வியாஜ்யமாய் -ஆழ்வாரை அனுபவிக்கைக்கு ஏகாந்தமான ஸ்தலம் ஏதோ என்று ஆராய்ந்து திரு மலையிலே நின்று அருளினான்–
மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –-1-5-11—அவனும் தன் வியாமோஹத்தால் யாயிற்று இவரைச் சேர்த்துக் கொண்டது-அவன் தன் செல்லாமையைக் காட்டி சேர்த்து கொண்ட படியைக் கண்டு ப்ரீதராய்-அது உள்ளடங்காமையாலே வழிந்து புறப்பட்ட இத் திருவாய்மொழி க்கு உண்டான லோக பரிக்ரஹத்தைச் சொல்லுகிறது-
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –2-3-3—அறிவு கேட்டைப் பண்ண வற்றாய்-துஸ்தரமான சம்சாரத்திலே இருக்கிற என்னை –அடியேன் -என்கிறது -அஹம் சப்த பர்யாயம் – அறிவுக்கு சம்பாவனை இல்லாத பால்யத்திலே -பிராப்தி பலமான அடிமையிலே ஸ்நேஹத்தை பிறப்பித்து வைத்தாய்–இங்கே வைத்து பகவத் விஷயத்தை அவஹாகிப்பித்தது-அத்தாலே ஒரு தேச விசேஷத்திலே பெறும் பேறு சாத்மிக்கைக்காகவும்- ப்ராப்யத்தில் த்வரை விஞ்சுக்கைக்காகவும் இறே-அந்நிய பரமான என் ஆத்மாவில் புகுந்து -தன் குண சேஷ்டிதாதிகளாலே வசீகரித்து –-அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று-அறியாமை வஞ்சித்தால் போலே – எனதாவியுள் கலந்தே-
அறியா மா மாயத்து அடியேனை-அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து- வைத்தாயால்-என்று அந்வயம்–
கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத்தா மரை செந்தீ மலரும் திருவேங் கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாயே.–6-10-2--சுனைகள் அறாக்கயம் ஆகிறாப் போலே யாயிற்று இவருக்கு அன்பு மாறாதே இருக்கிற படி -க்ரம பிராப்தி பற்றாத படியான ப்ரேமம் இறே-உன்னடி சேர் வண்ணம் அருளாயே.–உன் திருவடிகளிலே சேர்ந்து அடிமை செய்யும் படி என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும் –நீ வந்து திரு மலையிலே அவசர பிரதீஷனாய் இருக்க -உன்னைப் பெற வேணும் என்னும் ருசி எனக்கு உண்டாய் இருக்க நான் கூப்பிடுகை மிகை அன்றோ –
—
இப்படி ப்ராப்தி சாதனம் கிருபையே ஆகில் ,-இன் நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்ற போதே ,
இவர் அபேஷிதம் செய்து விடலாய் இருக்க ,இவரை வைத்து (உறாமை என்றாலும் சம்சாரத்தில் வைத்து ) ஸ்வ சம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாலே ,(ஆத்ம ஞானம் வந்த பின்பு -விஸ்லேஷத்தில் தானே பக்தி வளரும் ) ஞான பக்திகளை வளர்த்தது ஏதுக்கு ஆக என்னும் ஆ காங்ஷையாலே அருளி செய்கிறார் மேல் —இப்படி பரம க்ருபாவானானவன் இவர்க்கு ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களினாலே ஸோக ஹர்ஷங்களை விளைவித்ததுக்கு ப்ரேயாஜநம் என் என்னில், இவர்க்கு தேஸ விஸேஷத்தில் அநு பவம் ஸாத்மிக்கைக்காக ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களினாலே ஐஞாந பக்திகளை வளர்த்து ஸ்ரமம் செய்வித்தபடி என்கிறார்-
புணர் தொறும் என்னக் கலந்து பிரிந்து ஞான பக்திகளை வளர்த்தது கனம் குழை இடக் காது பெருக்குதலும் மாச உபவாசி போஜன புறப் பூச்சும் போலே ஆற்ற நல்ல மா போகச் சிரமமாக —சூரணை -115-
புணர் தொறும் என்னக் கலந்து பிரிந்து-அதாவது – தடமுலை புணர் தொறும் புணர்ச்சிக்கு ஆரா சுக வெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச் சூழ்ந்து அது கனவென நீங்கி ஆங்கே அகவுயிரகம் அகம் தோறும் உள் புக்கு ஆவியின் பரமல்ல வேட்கை அந்தோ –திருவாய் -10-3-2-(காலைப் பூசல் ) இத்யாதியாலே சம்ஸ்லேஷிக்கும் தொறும் ,சம்ஸ்லேஷத்தக்கு தக்க அளவில்லாத சுக சாகரமானது ,
அபரித்சேத்யமான ஆகாசத்தையும் கடந்து ,அவ் அருகு பட்டு ,விபூதி த்வயத்தையும்
விளாக் குலை கொள்ள வல்ல அறிவையும் முழுத்தும் படி பெருகி ,-இப்படிப் பெருகின இது —
விஸ்லேஷ பிரசங்கத்திலே (பிரியவே இல்லாமல் இருந்தாலும் )-பெருக்காறு வற்றி அடி சுடுமா போலே ,
ஸ்வப்ன கல்பம் என்னலாம் படி ,வற்றிப் போய் -அத் தசையில் பிராண ஸ்தானமான ஹிருதயத்தில் பூர்வ சம்ஸ்லேஷத்தால் உண்டான , புடை தொறும் உள்ளே புகுந்து ,ஆஸ்ரயமான ஆத்மாவுக்கு பொறுக்க ஒண்ணாத படி ,அபிநிவேசம் பெருகி வாரா நின்றது என்று ,சொல்லும் படியாக கலப்பது பிரிவதாய்- கலவியாலே ஜ்ஞானத்தையும் பிரிவாலே பக்தியையும் வளர்த்தது –( ஒரே பாசுரத்தாலே இரண்டையும் காட்டி அருளுகிறார் )கனம் குழை இடக் காது பெருக்குதல் போலே-அதாவது –-கனத்த பணி இடுகைக்கு இடமாம் படி ,நூல் இட்டு திரி இட்டு குதும்பை இட்டு காது பெருக்குமா போலேயும்-மாச உபவாசி போஜன புறப் பூச்சு போலே-அதாவது-மாசோ உபவாசிகளுக்கு ,பிரதமத்தில் போஜனத்தை இடில் பொறாது என்று, சோற்றை அறைத்து உடம்பிலே பூசி ,பொரி கஞ்சி கொடுத்து , பொரி கூழ் கொடுத்து ,ஒடுக்கத்திலே போஜனத்தை பொறுப்பிக்குமா போலவும்–
“புணர் தொறும்” (திருவா. 10 – 3 – 2) என்கிற பாட்டில் ஸம்ஸ்லேஷிக்குந் தோறும் அந்த ஸ்ம்ஸ்லேஷ்த்தின் அளவல்லாத ஸுக ஸாகரம், அபரிச்சிந்நமான ஆகாயத்தையும் கடந்து அது தானும் இதுக்குள்ளேயாம்படியான இவருடைய ஜஞாநமும் தனக்குள்ளேயாம்படி வ்யாப்தமான அந்த ஸுகம், அவனுடைய விஸ்லேஷத்திலே பெருக்காறு அடிச்சுடுமாப் போலே ஸ்வப்ந ஸமமாய்ப் போய் அந்த ஸுகம் போனவிடமெல்லாம் வ்யாப்தமாய்க் கொண்டு அணு பரிமாணமான ஆத்மாவின் அளவல்லாத அபிநிவேஸம் பெருகிற்றென்று சொல்லும்படி ஸம்ஸ்லேஷித்து ஜ்ஞாநத்தை வளர்த்து, விஸ்லேஷித்து பக்திகளை வளர்த்தது. (கனங்குழையிடக் காது பெருக்குதலும் மாஸோபவாஸி போஜநப் புறப் பூச்சும் போலே) கனத்த பணிகளிடுகைக்குக் காது பெருக்குவாரைப் போலேயும், மாஸோபவாஸிகளுக்கு அப்போதே அஸநத்தை இடில் ஸாத்மியா தென்று ஸரீரத்திலே அந்நத்தை அறைத்துப் பூசியும் கஞ்சியைக் கொடுத்தும், குழம்பு கொடுத்தும் ஸாத்மிப்பிப்பாரைப் போலேயும்-
தகவிலை தகவிலை யே நீ கண்ணா தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச்
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச் சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால் வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–10-3-2—அணைக்கிறது பிரிகைக்கு இறே -என்று கை நெகிழ்ந்த இடத்தில் உடம்பு வெளுக்கும் -அதுக்கு பரிஹாரார்த்தமாக திரிய அணைக்கும் -ஆக இப்படி அதிசங்கையும் பரிஹாரமுமாய் செல்லும் இத்தனை யாய்த்து--தடமுலை –என்றது -போக்தாவால் உண்டு அறுக்க ஒண்ணாத போக்யதா பிரகர்ஷம் -மலராள் தனத்து உள்ளான் –இத்யாதி –புணர்ச்சிக்கு ஆராச்-சுகவெள்ளம் -கலவியின் அளவில்லாத ஸூக சாகரம் -கலக்கும் இடத்தில் இருவருக்கும் அனுரூபமாய் இறே ஸூகம் இருப்பது –அவன் ஸ்வரூபம் இயத்தா ரஹிதமாய் இருக்குமா போலே யாய்த்து போக்யதா பிரகர்ஷமும்-அதனில் பெரிய அவா விறே இவளது –விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச்-சூழ்ந்து -அந்த ஸூகம் அபரிச்சின்னமான ஆகாசத்தைக் கடந்து -மயர்வற மதி நலம் அருள பெற்ற அறிவையும் மூழ்த்தும் படி பெருகிற்று என்னுதல் –-விசும்பு -என்று பரம பதம் –அறிவு -ஆகிறது -உபய விபூதியையும் விளாக் குலை கொள்ளும் தன்னறிவு என்னுதல்
அது கனவு என நீங்கி-ஸ்வப்ன கல்பம் என்னலாம் படி வற்றிப் போய் -இந்திர ஜாலங்கள் என்றும் கனவு என்றும் அஸ்திரங்களை சொல்லக் கடவது இறே -கலந்த போது ஸூகம் அபரிச்சின்னமாய் இருக்கும் –பிரித்விக் கண்டவாறே பெருக்காறு அடிச் சுடுமா போலே துக்கமும் அபரிச்சின்னமாய் இருக்கும் –
ஆங்கே-அத்தசையிலே-அக உயிர்-பிராண ஸ்தான மான ஹ்ருதயம்-அகம் அகம் தோறும் உள் புக்கு-ஹ்ருதயத்தில் உண்டான அவகாசம் தோறும்–முன்புள்ள சம்ச்லேஷ விஸ்லேஷங்களாலே ஹிருதயம் புடை பட்டு இறே இருப்பது -அவ்வவகாசகங்களின் உள்ளே சென்று புக்கு —=ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ– ஆச்ரயத்தின் அளவன்றிக்கே அபி நிவேசம் பெருகி வாரா நின்றது –சம்ச்லேஷ ஸூகம் புக்க இடம் எங்கும் ஆற்றாமை யாய்த்து -அணு பரிமாணமாக ஆத்மாவால் பொறுக்கும் அளவன்று ஆசை -ஸூ கமும் துக்கமும் ஸ்வரூபேணா வஸ்திதியும்-என்று மூன்று –ஸ்வரூபேணா வஸ்திதியில் நிற்கிறது இல்லை –அந்தோ -இது உனக்கு-உபதேசிக்க வேண்டுவதே —-கலவியில் இருவரும் கூடக் கலந்து பிரிவால் ஆற்றாமை உனக்கு உபதேச கம்யமாவதே-கலவிக்கு இருவராய் -நோவு ஒரு தலைக்கே யாவதே
ஆற்ற நல்ல மா போகச் சிரமமாக –அதாவது-ஆற்ற நல் வகை காட்டும் அம்மான் -திருவாய் -4-5-5–என்று-எனக்கு பொறுக்க பொறுக்க தன் குண சேஷ்டிதாதிகளைக் காட்டி ,(மஹா க்ரம மஹதி அநு பூர்வி -படிக்கட்டு ) அவ் வழியாலே என்னை அடிமை கொண்டவன் என்னும் படி , பகவத் அனுபவம் கனாக் கண்டு அறியாத இவர்க்கு-எம்மா வீடு-2-9-1–என்றும்-கட்டு எழில் வானவர் போகம்-6-6-1–என்றும் சொல்லுகிறபடியே எவ் வகையாலும் , விலஷணமாய் கொண்டு , கட்டடங்க (நிரஸ்தமான-யதா சைத்தனம் உப்புக்கட்டி போலே )நன்றாய் இருப்பதாய் அபரிசின்ன ஞான சக்திகரான நித்ய சூரிகள் அனுபவிக்கிற ,போகத்தை முதலிலே கொடுக்கில் சாத்மியாது என்று கருதி , அது சாத்மிக்கைக்காக சிரமம் செய்வித்த படி என்கை -(.மா போகத்தை சிரமம் செய்து கொடுத்தார் என்றவாறு )ஆன பின்பு ஞான பக்திகளை வளர்த்தது பிராப்தி சாதனதயா அன்று ( அனுபவத்துக்காக என்றபடி )என்று கருத்து ..-மாசோ உபாசிக்கு புறப் பூச்சு மாத்ரத்தால் ,போஜனம் பொறாமையால் ,புறப் பூச்சு சொன்ன இது மற்றைய வற்றுக்கும் உப லஷணம்–மா போகம் -என்றது -மா வீடு -வானவர் போகம்-என்கிறசந்தைகளில் ஆதி அந்தங்களை சேர்த்து சொன்ன படி —
(ஆற்றநல்ல மா போகச் சிரமமாக) “*ஆற்ற நல்ல வகை காட்டுமம்மான் ” (திரு-4-5-5) என்றும், அர்ஜுநனுக்கு ஸாத்மிக்க ஸாத்மிக்க அர்த்தம் அருளிச் செய்தாப் போலே எனக்கும் ஸாத்மிக்க ஸாத்மிக்கத் தன்னுடைய பரத்வாதிகளை அநுபவிப்பித்தான் என்று இவர் அருளிச் செய்தபடியே பகவதநுபவம் என்று கனாக் கண்டறியாத இவர்க்கு “எம்மா வீடு”’ (திருவா. 2 – 9 – 1) என்றும், “மா போகம்”’ என்றும் சொல்லுகிறபடியே எல்லாப்படியாலும் விலக்ஷணமாய், ““கொள்ள மாளா இன்ப வெள்ளம்”” (திருவா. 4 – 7 – 2) என்கிறபடியே அதிஸயித ஜ்ஞாந ஸக்திகரான நித்ய ஸூரிகளாலும் துலைத்தநுபவிக்க வொண்ணாதபடி அபரிச்சேத்யமாயிருக்கிற தன்னோட்டை அநுபவத்தை முதலிலே ப்ரகாஸிப்பிக்கில் இவரைக் கிடையாதென்றும், அவ்வநுபவம் ஸாத்மிக்கைக்காகச் சிரமம் செய்வித்தபடி என்கிறார்-
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–4-5-5—ஆற்ற-அமைய -பொறுக்க பொறுக்க
நல்ல வகை காட்டும் அம்மானை-தன் குண சேஷ்டிதங்களை அனுபவிப்பித்தவன் –-தன் படிகளை ஒரு காலே காட்டில் குளப் படியில் கடலை மறுத்தால் போலே இவருடைய ஆஸ்ரயம் சிதிலமாம்-இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை என்ற போதே வீற்று இருந்து ஏழு உலகை அனுபவிப்பித்தால்-இவரை கிடையாது என்று இறே இவ்வளவும் கொண்டு போந்தது –-அம்மானை அமரர் தம்-ஏற்றை-
சர்வேஸ்வரனாய் -நித்ய ஸூ ரிகளை போக்தாக்களாய் உடையனாய் வைத்து -தனக்கு ஒரு குறை உடையனாய் அன்று -போக்தாக்கள் இல்லாமை அன்று – ஷூ த்ரனாய் ஷூ த்ர விஷயங்களில் கால் கிடையிலே கிடந்த என்னை க்ரமேண அனுபவிப்பித்த மஹா உபகாரகனை–அர்ஜுனனுக்கு -உபதேஸித்தால் போலே தன் குண சேஷ்டிதங்களை எனக்கு சாத்மிக்க சாத்மிக்க அனுபவிப்பித்த மஹா உபகாரகனை-பண்ணின உபகாரகத்துக்கு பிரதிபகாரம் காணாமையாலே ஏத்தினேன் -அது திருவாய்மொழி யாயிற்று-நாள் தோறும் ஆனந்தத்தை உடையேன் ஆனேன் – வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவி -என்னும்படி யானேன்
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1—எம்மா வீட்டுத் திறமும் செப்பம்–வீடு -மோக்ஷம் மா வீடு -உத்க்ருஷ்டமான மோக்ஷம் -அவித்யா நிவ்ருத்தம் மாத்திரம் அன்று-எம்மா வீடு -எல்லா பிரகாரத்தாலும் உத்க்ருஷ்டமான மோக்ஷம் கிடீர் என்ன -ஆனாலும் அபேக்ஷை இல்லை –-வீட்டுத் திறமும் -வீட்டிடை யாட்டம் – செப்பம்-செப்போம்-சொல்லோம்- என் கருத்து அறிக்கைக்காக -நீ கொள் -என்றும் நாம் வேண்டா -என்றும் நிஷேத அர்த்தமாகவும் பிரசங்கிக்க காட்டுவோம் அல்லோம் – ஒரு தமிழன் –எம்மா வீட்டு விகற்பங்களும் செவ்வியவாம் -என்றான் -அப் பக்ஷத்தில் சாலோக்ய ஸாரூப்ய சாமீப்ய சாயுஜ்யம் -என்கிற இவை எல்லாம் இம் மோக்ஷத்தில் உண்டாகை–உமக்குச் செய்ய வேண்டுவது என் என்ன – நின்-செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்-ப்ராப்யமாய் -அகவாய் சிவந்து -அதுக்கு பரபாகமான புறா வாயில் கறுப்பை உடைத்தாய் -விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம்
இவற்றாலே நிரதிசய போக்யமான திருவடிகளை – ஆஸ்ரிதற்கு அருமைப் பட வேண்டாத படி செவ்வியதாய் பூஜ்யமான திருவடிகள் என்னவுமாம் என் தலையிலே கொக்குவாயும் படி கண்ணியும் போலே சேர்த்து அருள வேணும்–
கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ!’ என்று என்று
நள் இ ராவும் நன்பகலும் நான் இருந்து,ஓலம் இட்டால்
கள்ள மாயா! உன்னை என்கண் காணவந்து ஈயாயே.–4-7-2—கொள்ள மாளாத ஆனந்த சமுத்திரத்தை -அனுபவிக்க அனுபவிக்க குறையாது இருக்கை-வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் -என்றது இறே -அது ஆகிறது-கோது இல தந்திடும்-ஆனந்தத்துக்கு கோதாகிறது -அனுபவித்தால் அமையும் என்று இருத்தல் -புறம்பே ஒன்றை அபேக்ஷித்தல் செய்கை – அது இன்றிக்கே ஒழிகையாவது -மேன் மேல் என அபேக்ஷை வர்த்திக்கையும் -இதர விஷய வைராக்ய ஜனகமாகையும்–கோதில-வ்யதிரேகத்தில் மோஹிப்பிக்கை–என் வள்ளலேயோ – நிர்ஹேதுகமாக அபகரித்து வைத்து கூப்பிட பேசாது இருக்கிறது என்-உன் பேறாக அபகரித்து அபகரித்து இப்போது என் பேறாக கூப்பிடப் பண்ணுகிறது என் -இப்படிக் கூப்பிட பண்ண நினைத்தால் வீற்று இருந்து ஏழு உலகில் படியை அனுபவிப்பத்தது என்-வையம் கொண்ட வாமனாவோ!’-வையம் கொண்ட பின்பும் -வாமன வேஷமே யாய்த்து-இவருக்கு பட்டு இருப்பது –-உன்னை இந்திரன் இரக்க-அத்தியாய உபகரிக்குமவன் அல்லையோ-எனக்கு நீ இரந்து தந்து இன்று நான் இரக்க இருக்கிறது என்-என்று என்று
இந்திரனைப் போலே ஒரு பிரயோஜனாந்தரத்தைக் கொண்டு போகிறார் அல்லரே-அவ்வடிவும் நீர்மையையும் இறே இவர்க்குப் பேறு
கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்
கட்டெழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம் உண்பாரே.–6-6-11--பெரிய வானவர் -போக விசேஷணம் ஆகவுமாம் -சம்சாரத்தில் போகம் கர்ம நிபந்தம் ஆகையால் அல்பமாய் அஸ்திரமாய் இருக்கும் இறே -ஸ்வரூப அனுரூபம் ஆகையால் சம்ருத்தமாய் நித்தியமாய் இருக்கை –
—
ஆனால் ஞான பக்திகளை வளர்த்தது அதுக்காகிறது –முனியே நான் முகனே -அளவும் மானச அனுபவம் ஒழிய ,ப்ரத்யஷ அனுபவம் இல்லாத இவர்க்கு -இவற்றை வளர்க்கைக்கு உறுப்பாக
வரும் சம்ச்லேஷ விச்லேஷங்கள் ஆகிற இவை எவை என்ன அருளிச் செய்கிறார் மேல் -இவர்க்கு இங்கு ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாகச் சொல்லுகிறவை எவை என்னில், ப்ரத்யக்ஷ ஸமாநாகாரமான மாநஸாநுபவமும், அவ்வநுபவத்தை பாஹ்ய ஸம்ஸ்லேஷாபேக்ஷை பண்ண, அது கிடையாமையாலே மாநஸாநுபவத்துக்கு வந்த கலக்கமும் என்கிறார் மேல்
இவற்றால் வரும் சம்ஸ்லேஷ விஸ்லேஷங்கள் ஆகிறன எளியனாய் நிற்கும் அரியனாய் எய்தான் என்கிற தர்சன சமமான மானச அனுசந்தானமும் திண் கொள்ளப் பொறாத மனஸ் சைதில்யமும் -சூரணை -116-
(சம்ஸ்லேஷமாவது-எளியனாய் நிற்கும் அரியனாய் எய்தான் என்கிற தர்சன சமமான மானச அனுசந்தானம்-ஞானத்தால்-மானஸ சாஷாத்காரம்-மனசில் நினைவின் நீட்சியால்-
விஸ்லேஷமாவது திண் கொள்ள பொறாத மனஸ் சைதில்யம் -என்றவாறு
பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷையாலே -கலங்கி உள்ளத்தில் உள்ள சம்ச்லேஷ -மானஸ சாஷாத்காரமும் கலங்கி -விஸ்லேஷம் – கண்ணுக்கு தெரிந்து – புத்திக்கு எட்ட வில்லை -மண்டோதரி -த்வம் அப்ரமேய) அதாவது – கீழ்ச் சொன்ன இக் கார்யங்கள் அடியாக வரும் சம்ஸ்லேஷமும் , விஸ்லேஷமும் ஆகிறன-
எளியனாய் – அதாவது – கருத்துக்கு நன்றும் எளியனாய்-3-6-1- –என்றும் ,-நிற்கும் –-அதாவது –
நிற்கும் முன்னே வந்து –7-3-6–என்று , நெஞ்சுக்கு மிகவும் விசததம அனுபவ விஷயமாய் கொண்டு ,
என் முன்னே வந்து நிற்கும் என்றும் , அரியனாய்- அதாவது –-கண்கள் காண்டற்கு அரியனாய்-3-6-1- -என்றும் ,-எய்தான் –அதாவது –என் கைக்கும் எய்தான்-7-3-6–என்று-கண்ணுக்கு அவிஷயமாய் கொண்டு ,கையால் அணைக்கைக்கு எட்டு கிறிலன் என்றும் , சொல்லுகிற பிரத்யஷ அனுகூல்யமான மானஸ அனுசந்தானமும் ,-திண் கொள்ளப் பொறாத மனஸ் சைதில்யம்-அதாவது கண் கட்கு திண் கொள்ள ஒரு நாள் அருளாய் நின் திரு உருவே -5-10-7- -என்று (தாஹார்த்தன் நாக்கு நனைக்க கேட்பது போலே ஒரு நாள் அருளாய்- நின் திரு உருவே-இது உன்னதோ -அருளால் நோக்கிக் கொண்டு இருக்க –பக்தாநாம் அன்றோ ) அபேஷிதமான பாஹ்ய அனுபவம் பெறாமையாலே- ஆந்த்ர அனுபவமும் ,
அடி மண்டியோடே கலங்கும் படி அந்தக் கரண சைதில்யமும் என்கை-
அந்த ஜஞாந பக்திகளை வளர்த்தத்தால் வரும் ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாகிறனவை எவை என்னில், (எளியனாய் நிற்கும் அரியனாய் எய்தான் என்கிற தர்ஸந ஸமமான மாதஸாநுஸந்தாநமும்) “கருத்துக்கு நன்றுமெளியனாய்”‘ (திருவா. 8 – 6 – 11), “நிற்கும் முன்னே வந்து”‘ (திருவா-7 – 2 – 6), “கண்கள் காண்டற்கரியனாய்”’ (திருவா. 3 – 6 – 11), ““கைக்குமெய்தான்” (திருவா. 3 – 6 – 11) என்றும் சொல்லுகையாலே என்னுடைய ஹ்ருதயத்திலே மிகவும் எளியனாய்க் கொண்டு என் முன்னே நிற்கும் என்றும், என் கண்ணுக்கு அவிஷயமாய்க் கொண்டு கையாலே அணைக்கைக்கு எட்டுகிறிலன் என்றும் சொல்லுகிற ப்ரத்யக்ஷ ஸமாநாகார மாநஸாநுஸந்தாநமும், (திண் கொள்ளப் பெறாத மநஸ் ஸைதில்யமும்) அந்த மாநஸாநுபவ வைஸத்யத்தாலே “என் கண்கட்குத்திண்கொள்ள ஒருநாள் அருளாயுன் திருவுருவே”’ (திருவா. 5 – 10 – 7) என்று பாஹ்ய ஸம்ஸ்லேஷாபேக்ஷை பண்ணி அது கிடையாமையாலே அம் மாநஸாநுபவத்துக்கு வரும் குலைதலும் ் என்கிறார்.-
கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.–3-6-11–கண்ணுக்கு விஷயம் அன்றிக்கே அகவாயிலே மிகவும் பிரகாசிக்கிற படி –-இவருக்கு எங்கும் இதுவே சம்ச்லேஷ விஸ்லேஷங்களுக்கு பிரயோஜம்-சம்ச்லேஷம் ஆகிறது -மானஸ அனுபவம் -விஸ்லேஷம் ஆகிறது -பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷையாலே மானஸ அனுபவத்துக்கு வரும் குலைதல்-
காலம் பெற என்னைக் காட்டுமின்கள் காதல் கடலின் மிகப் பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம்பெருமான் நிற்கு முன்னே வந்தென் கைக்கும் எய்தான்
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த நான் மறை யாளரும் வேள்வி ஓவாக்
கோலச் செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல் திருப் பேரெயிற்கே.–7-3-6-சிரமஹரமான வடிவை காட்டி யாயிற்று ஆசையை வளர்த்தது -அவன் காதலுக்கு கிருஷி பண்ணா நிற்க என்னால் ஸ்த்ரீத்வத்தை நோக்கி இருக்கப் போமோ –முன்னே வந்து நிற்கை பொல்லாதோ என்ன –வந்தென் கைக்கும் எய்தான்-உரு வெளிப்பாடு அன்றிக்கே கையாலே அணைக்க எட்டினால் அன்றோ அழகிது –வார்த்தை சொல்லாமை அன்றிக்கே அணைக்கைக்கும் எட்டுகிறிலன் -தான் மேல் விழுந்து அணையாமை அன்றிக்கே நான் மேல் விழுந்து அணைக்கைக்கும் எட்டு கிறிலன்-ஆனால் செய்யப் படுவது என் என்ன -அவன் வந்து இருக்கிற ஊரிலே கொண்டு போய் விடாய் பாருங்கோள்
ஒண் சுடரோ டிருளுமாய் நின்றவாறும் உண்மை யோடின்மையாய் வந்து என்
கண் கொளா வகை நீ கரந்து எனைச் செய்கின்றன
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே! என் கண் கட்குத்
திண் கொள ஒருநாள் அருளாய் உன் திருவுருவே.–5-10-7-என் கண்ணுக்கு அவிஷயமாய்-மறக்க ஒண்ணாத படி நெஞ்சிலே விசதமாக நின்று என்னை நீ செய்கிறவற்றுக்கு அவதி இல்லை –-எண் கொள் சிந்தையுள் நைகின்றேன்-நினைக்க மநோ ரதிக்கிற அளவிலே சிதிலனாகா நின்றேன்
என் கரிய மாணிக்கமே!-ஸைதில்யத்தை பார்த்து மீள ஒண்ணாத வடிவு அழகு -அவ்வடிவை எனக்கு முற்றூட்டு ஆக்கினவனே-என் கண் கட்குத்-தமக்கு முன்னே என்று கொல் கண்கள் காண்பது என்னும்படி விடாய்க்கும் கண்கள்-திண் கொள ஒருநாள் அருளாய் உன் திருவுருவே.-த்ருடமாக காணலாம் படி -ஸ்வப்ன தர்சனம் போலே மானஸ அனுபவம் மாத்திரம் அன்றிக்கே ஸூ த்ருட ப்ரத்யக்ஷமாம் படி -விடாயான் ஒரு கால் நாக்கு நனைக்க வேணும் என்னுமா போலே -அப்ராப்த விஷயத்தையோ நான் ஆசைப்படுகிறது –பக்தா நாம் என்கிற வடிவை அன்றோ-
—
ஆனால் அபிமத விஷய சம்ஸ்லேஷ விஸ்லேஷங்கள் புண்ய பாப நிபந்தனமாக வன்றோ ,
லோகத்தார்க்கு வருவது ..லோக வ்யாவ்ருத்தரான இவருக்கு (மாறன் அன்றோ )இவை வருகைக்கு நிதானம் எது என்னும் அபேஷையிலே அருளி செய்கிறார்–அபிமத விஷயத்தில் ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களிரண்டும் நாட்டார்க்கு புண்ய பாப பலமாயன்றோ உண்டாகிறதென்னில்; அந்த பாபங்கள் வாஸனையோடே போகப் பெற்ற இவர்க்கு ப்ரிய ஹித பரனான ஈஸ்வரன் தானே நடத்தும் என்கிறார்.-
புண்ணியம் பாபம் , புணர்ச்சி பிரிவை அவை சரித்தவர்க்கு ப்ரிய ஹித பரன் தான் துளக்கற எங்கும்
தழைக்க நடத்தும் –சூரணை -117-
( புண்ணியத்தால் புணர்ச்சி–துளக்கற நடத்தும்-பாபத்தாலே பிரிவு -எங்கும் தழைக்க நடத்தும் -லோகம் எல்லாம் வாழ நான் படுகிறேன் என்றபடி-சரித்தவர் -இறைவனால் புண்ணிய பாபங்களை போக்கப் பட்டவர்-ப்ரிய ஹித பரன் தான் –பிரிய பரன் தான் -சம்ஸ்லேஷம் நடத்திக் காட்டி -என்றும் –-ஹித பரன் தான் என்றும்-விஸ்லேஷம் நடத்திக் காட்டி ஆழ்வாரது சம்ஸ்லேஷமும் விஸ்லேஷமும் புண்ய பாப பலனால் இல்லை -அவனது க்ருத்யம் என்றவாறு )-அதாவது
புண்ணியம் பாபம் புணர்ச்சி பிரிவு என்று இவையாய் –6-3-4- என்கிறபடி நாட்டார்க்கு புண்ணிய பாப பலமாய் கொண்டு வருகிற சம்ஸ்லேஷ விஸ்லேஷங்களை-அவை சரித்தவர்க்கு –அதாவது – சார்ந்த இரு வல் வினைகளையும் சரித்து -1-5-10–என்று-தில தைலவத் தாரு வஹ்னி வத் -கத்யத்ரயம் -என்கிறபடி ஆத்மாவோடு பிரிக்க ஒண்ணாத படி பொருந்திக் கிடக்கிற புண்ய பாப ரூபமான பிரபல
கர்மங்களை விரகர் நெடும் சுவர் தள்ளுவாரைப் போலே ,தான் போக்குகையாலே அவை இரண்டும் அற்று இருக்கும் இவர்க்கு ,-( கர்மங்கள் இல்லாமலே லீலா விபூதியில் இருப்பது ஈஸ்வர இச்சையால் அன்றோ )பிரியா பரன் ஹித பரன் தான்-அதாவது-ப்ரிய பரனும் ,ஹித பரனுமான ஈஸ்வரன் தான் ஞான பக்திகளை வளர்க்கையில் நினைவாலே —( நிரங்குச ஸ்வ தந்த்ரன் அன்றோ நியமன சாமர்த்யத்துக்காக ஈஸ்வர சப்தம் இங்கு ) துளக்கமற -அதாவது-துளக்கம் அற்று அமுதமாய் எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைம் தாமரை கண்ணன் -2-6-2–என்று விபூதி ரஷணத்தைப் பற்ற வரும் அந்ய பரதை கலசாத படி அத்தை ( கடாக்ஷத்தை-)ஒருங்க விட்டுக் கொண்டு வந்து , இனி போராதபடி என்னுளே புகுந்து அத்தாலே -விகஸித சஹஜ சார்வஜ்ஞனுமாய் – (இதுக்கு முன்பு ஆழ்வாரை பெறாமல் மழுங்கிய -சகஜம் இல்லாமல் -சர்வஞ்ஞனாய் இல்லாமல் ) அபி ஷிஷ்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்திரம் விபீஷணம் க்ருதக்ருத்தயஸ் ததா ராமோ விஜ்வர பிரமுமோத ஹா -கிஷ்கிந்தா –1-85—என்கிற படி – உள் நடுக்கமும் தீர்ந்து ,எனக்கு நிரதிசய போக்யனுமாய் , நாய்ச்சிமாரையும் புரிந்து பாராமல் ,என்னையே பார்த்து கொண்டு இதனாலே திரு கண்களும் செவ்வி பெற்று , (முன்பு வெறும் கண்ணனாக இப்பொழுது தானே பைம் தாமரைக் கண்ணன் ) இப்படி என்னுடன் கலந்து இருந்தான் என்று ,இவர் ப்ரீதராம் படியாகவும் ,-எங்கும் தழைக்க நடத்தும்–அதாவது –தழை நல்ல வின்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்க –9-5-10–என்று விஸ்லேஷ வ்யசனத்தாலே நான் முடியா நின்றேன் ..
இனி என் துக்கம் காணாமையாலே ,லோகம் எல்லாம் விஸ்தீரணமாய் ,நன்றான சுகத்தை பெற்று -சம்ருத்தமாகக் கடவது என்னும் படி அதி மாத்ர துக்க நிமக்னராம் படியாகவும் ,நடத்திக் கொண்டு போரும் என்ற படி-
(புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவை) “புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்றிவையாய்”’ (திருவா. 6 – 3 – 4) என்று நாட்டார்க்கு புண்ய பாப பலமாய்க் கொண்டு வருகிற ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களை, (அவை சரித்தவர்க்கு ) சார்ந்த இரு வல்வினைகளும் சரித்து மாயப் பற்றறுத்து”‘ (திருவா. 1 – 5 – 10) என்று ஆத்மாவோடே பிரிக்க வொண்ணாதபடி சேர்ந்திருக்கிற புண்ய பாப ரூபமான ப்ரபல கர்மங்களை விரகர் நெடுஞ்சுவர் தள்ளுமாப் போலே ஒருகாலே வாஸனையோடே போம்படி ஈஸ்வரன் போக்குகையாலே அவை இல்லாத இவர்க்கு, (ப்ரிய ஹித பரன் தான் துளக்கற எங்கும் தழைக்க நடத்தும்) ப்ரிய பரனாய்க் கொண்டு ஜ்ஞாநத்தை வர்த்திப்பித்தும் ஹித பரனாய்க் கொண்டு பக்தியை வர்த்திப்பித்தும் போருகிற ஈஸ்வரன் தானே.[சிக்கென இத்யாதி,]துளக்கற்றமுதமாய்க் கொண்டு “எங்கும் பக்க நோக்கறியான்”” (திருவா, 2 – 6 – 2) என்று விபூதி வ்யாபாரத்தை ஒருங்க விட்டுக் கொண்டு வந்து என்னுள்ளே சிக்கெனப் புகுந்து அத்தாலே விகஸித ஸஹஜ ஸார்வஜ்ஞ்யனுமாய், “விஜ்வர?? (ரா. பா. 1 -85) என்கிறபடியே உள் நடுக்கம் தீர்ந்து நிரதிஸய போக்யனுமாய் நாச்சிமாரையும் புரிந்து பராமல் என்னளவிலே நிரந்தரமாக கடாக்ஷிக்கையாலே திருக் கண்களும் செவ்வி பெற்று இப்படி என்னுள்ளே இருந்தான் என்றும், *‘தழை நல்ல இன்பம் தலைப்பெய்தெங்கும் தழைக்கவே” (திருவா. 9 – 5 – 10) என்று ‘விஸ்லேஷ வ்யஸநத்தாலே நான் முடியா நின்றேன், என்னுடைய க்லேஸம் கண்டு ஜகத்து கலேஸிக்க வேண்டாவே” என்றும், தீப்பாய்வார் “நாடு வாழ, நகரி வாழ ‘ என்று வாழ்த்துமாப் போலே “ஜகத்தெங்கும் ஆநந்தமானது அபிவ்ருத்தமாயிருக்க‘ என்று தாம் முடிகையிலே வ்யவஸிதராயும் இப்படித் தாமே பேசும்படி நடத்திக் கொண்டு போரும் என்கிறார்.
புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–6-3-4-ஸூ க துக்க ஹேதுவான புண்ய பாபங்களும் -தத் பல பூதமான அபிமத சம்ச்லேஷ விஸ்லேஷங்களும்–எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய்-அநு கூல விஷயமான எண்ணமும் -பிரதி கூல விஷயமான விஸ்ம்ருதியும் -ஸத்பாவ அஸத் பாவங்களுமாய் –அல்லனாய்-புண்ய பாவங்களை அனுபவியா நிற்க செய்தே தான் அகர்ம வஸ்யனாய்-
சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10-இவ்வாத்மாவுக்கு ஸ்வரூப அனுபந்தியோ என்னலாம் படி பொருந்தி இருக்கை-விரு வல்வினைகளும் சரிந்து
இருவகைப்பட்ட புண்ய பாப ரூபமான கர்மங்களை விரகர் நெடும் சுவர் தள்ளுமா போலே அநாயாசேன போக்கி-வல்வினை-சர்வ சக்தியானவனும் அனுசந்தித்தால் நெஞ்சு உளுக்க வேண்டும்படி இருக்கை
சார்ந்த-எள்ளும் எண்ணெயும் போலே சேர்ந்து இருக்கை-மாயப் பற்று அறுத்து விஷயங்களில் ருசி வாசனைகளைப் போக்கி மாயை -அஜ்ஞ்ஞானம் –அத்தாலே ருசியை நினைக்கிறது –பற்று -வாசனை
தீர்ந்து-க்ருதக்ருத்யனாய் என்னுதல் அநந்ய பிரயோஜனனாய் என்னுதல் –-தன்பால் மனம் வைக்கத் திருத்தி-விரோதியைப் போக்கும் அளவு அன்றிக்கே மனஸ் ஸூ க்குத் தானே விஷயமாம் படி பண்ணி
வீடு திருத்துவான்-பரமபதத்தை கோடிக்கத் தொடங்குவான்-அதாகிறது -ஆழ்வார் எழுந்து அருளி இருக்கிற மகோத்சவத்தாலே ஒரு புதுமை தோற்றி இருக்கை-
சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –2-6-2-–ஆடியாடியில் ஆற்றாமையால் வந்த உள் நடுக்கம் தீர்ந்தானாய் இரா நின்றான் -விஜ்வர என்னக் கடவது இறே-அமுதமாய்-
பிரமுமோத ஹ-என்கிறபடியே தன் உகப்பாலே எனக்கு நிரதிசய போக்யனாய் அவன் தன்னை அனுபவித்து இனியனாய் இருக்கும் இருப்பு இறே இவர்க்கு போக்யம்-எங்கும்-பக்க நோக்கு அறியான்-
பிராட்டி பின்னே வந்து அணைத்தாலும் விலங்கப் பார்க்கிறிலன் –-இங்கே ஆளவந்தாருக்கு குருகைக் காவல் அப்பன் அருளிச் செய்த வார்த்தை-என் பைந்தாமரைக் கண்ணனே–ஆடியாடியிலே ஆற்றாமையால் வந்த தாபம் தீர்ந்து திருக் கண்களும் குளிர்ந்த படி –
எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே-9-5-10-–ஈஸ்வர விபூதி சம்ருத்தமாக வேணும் என்கிறாள் –நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் -இறே -தாம் தாம் முடிய நினைப்பார் நாடு வாழ்க என்பாரைப் போலே -சொல்லுகிறாள் என்று ஆளவந்தார் நிர்வாஹம் -நான் பட்ட பாடு நாடு படாது ஒழிய வேணும் -என்று எம்பெருமானார் –நான் முடிய என்னார்த்தி காணாதே லோகம் அடைய பிழைக்கும் -என்று பட்டர் –
–——————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply