(1) பூர்வ த்,விகம் – ஸூரி வைபவம் 1 முதல் 186 வது ஸூத்ரம் வரை (186)
(2) உத்தர த்,விகம் – ஸூரி ஸுக்த்தி வைபவம்– 187 முதல் 284 முடிய (48)
(1) ப்ரத, மோத், யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம் 1-38 (38)
(2) த்,விதீயோத், யாய: – க்,ரந்த, கர்த்ரு வைப,வம் 39 – 186 (148)
(3) த்ருத்யோத், யாயம் – க்,ரந்தாந்தர தார தம்ய வைப,வம் 187-207 (21)
(4) சதுர்த்தே ரத், யாயம் -கிரந்த, ப்ரதிபாத்,ய க்ரம வைப,வம் 208-284 (27)
6 — ப,க்திபாதம் -—97–121—-25-இதிலே 2 அதிகரணங்கள்
8–ஜ்ஞாந ப,க்த்யதி கரணம் 97 –117—மொத்தம் -21 —ஸூரணைகள்—பகுதி -1-97-101-ஸூரணைகள்–பகுதி -2–102–117-ஸூரணைகள்-
9-ஜ்ஞாந ப,க்த் யவஸ்தா ஸூக்தி அதிகரணம் –118-121—மொத்தம் –4 —ஸூரனைகள் –
—
இப்படி ஈஸ்வரன் வளர்த்துக் கொண்டு போருகிற ஞான பிரேமங்களை உடையரான இவருடைய ஞான தசையிலும் ,பிரேம தசையிலும் ,உண்டான பேச்சுக்கள் இருக்கும் படி எங்கனே என்ன அருளிச் செய்கிறார் மேல் .. (பக்தி என்பதை ப்ரேமம் என்று அருளி -பக்தி முற்றிய தசை -ப்ரேமம் என்ற உரு எடுத்து -)ஆனால் இவர்க்கு இந்த ஜ்ஞாந தஸையில் பேச்சேது? ப்ரேம தஸையில் பேச்சேது? என்னில்,-
ஜ்ஞானத்தில் தம் பேச்சு பிரேமத்தில் பெண் பேச்சு–சூரணை –118-
அதாவது -ஜ்ஞான தசையில் தாமான தன்மையிலே நின்று பேசுவர் .. பிரேம தசையிலே அவஸ்தாந்திர பன்னராய் பெண் பேச்சாய்ப் பேசுவர் என்கை-( ஞானத்தில் ஆண் பேச்சு என்னாமல்-தன் பேச்சு என்றது இந்த பிறவியில் கொண்ட ஆண் ரூபம் என்று-மேலே சொல்லப் போகும் கருத்துக்கு ஸூ சகம் -மணி வல்லிப் பேச்சு வந்தேறி இல்லையே )-ஜ்ஞாநத்தில் தம் பேச்சு, ப்ரேமத்தில் பெண் பேச்சு என்கிறார் –
—
இப்படி தெளிவும் கலக்க முமான இத் தசைகளிலே பேச்சில் பேதம் ஒழிய ஸ்வரூபத்திலும் பேதம் உண்டோ என்ன அருளிச் செய்கிறார் —பேச்சில் வைஷம்யமொழிய ஸ்வரூபத்தில் மாறாட்டமில்லை என்கிறார் –
தேறும் கலங்கி என்று தேறியும் தேறாது ஸ்வரூபம் குலையாது–சூரணை -119-
(ஞானம் ப்ரேமம் -தெளிவும் கலக்கமும் என்கிற வார்த்தைகளால் ) ஸ்வரூபம் -சேஷத்வ பாரதந்தர்யம்
ஆண் பெண் -ரூபம் தானே)–தேறும்-அதாவது-தேறும் கை கூப்பும் -7-2-5–என்றும்-(உய்ந்த பிள்ளை கெட்டேன்-என்பர் இவள் தேறும் என்பதே – சரம தசையில் பிறக்கும் தெளிவுக்கு அஞ்ச வேண்டும் என்பர் நஞ்சீயர் )கலங்கி –அதாவது – கலங்கிக் கை தொழும்-2-4-4- -என்றும்-தெளிந்த தசையிலும் ,கலங்கின தசையிலும் , சேஷத்வ பிரகாசமான அஞ்சலி மாறாமையாலே ,-தேறியும் தேறாதும் –
பிண்டத்வ கடத்வ கபாலத்வ சூர்ணத்வங்கள் ஆகிற அவஸ்தாந்தரங்களை பஜித்தாலும் , ம்ருத்தான ஆகாரத்துக்கு அழிவில்லாதால் போலே (மண் பிண்டம் குடம் ஓடு பொடி எல்லாமே மண் தானே )
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனள் இத் திருவே -4-4-7- -என்கிறபடியே , தெளிந்த தசையோடு கலங்கிய தசையோடு வாசி அற உபய அவஸ்தையிலும் ,சேஷத்வ ரூபமான ஸ்வரூபம் நிலை குலையாது என்ற படி –
“சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்’” (திருவா. 7 – 2 – 5), “கலங்கிக் கை தொழும் நின்றிவள்” (திருவா. 2 – 4 – 4) என்றும், ‘‘தேறியும் தேறாது மாயோன் திறத்தனளே இத் திருவே” (திருவா. 4 – 4- 7) என்றும் பிண்டத்வ-கடத்வ-கபாலத்வ காபாலிகத்வாத்,-யவஸ்தைகளில் ம்ருத்தான ஆகாரம் அநுவர்த்திக்குமாப் போலே தெளிந்த (தேறின – பா. போதோடு கலங்கின போதோடு வாசியற இரண்டவஸ்தையிலும் அஞ்ஜலி ஹஸ்தையாய்க் கொண்டு “அவனை யல்லதறியாள்” என்கையாலே ஜ்ஞாந தஸையில் தாமான தன்மையோடு ப்ரேம தஸையில் பிராட்டிமார் பேச்சான அவஸ்தையோடு வாசியற சேஷத்வத்தில் கலக்கமற்று ஏக ரூபமாயிருக்கு மென்கிறார் –
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் ‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
வந்திக்கும் ஆங்கே மழைக் கணீர் மல்க ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே! அலைகடல் கடைந்த ஆர் அமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய் தானே!–7-2-5–ஒரு ஹேது இன்றிக்கே இருக்க தேறா நின்றாள் -இது தானும் பயாவஹமாய் இருக்கிறதாய் யாயிற்று -மோஹம் செல்லா நிற்க அபேக்ஷிதம் பெற்றாரைப் போலே தேறுகை பயாவஹம் இறே -சரம தசையில் பிறக்கும் தெளிவுக்கு அஞ்ச வேணுமே-கை கூப்பும்-தேவர் படிகளை நினைத்து ஈடுபட்டுக் கும்பிடும் -கீழே மயங்கும் -கை கூப்பும் -என்றது -இங்கே தேறும் கை கூப்பும் என்றது -அல்லாதது சஞ்சாரியாய் செல்லா நிற்க இது ஒன்றும் ஸ்திரமாக செல்லா நின்றது –ஸ்வரூப அனுபந்தியான தர்மம் ஆகையால் -நித்யாஞ்சலி புடா -என்ன கடவது இறே –ஆற்றாமையாலே-
இலங்கை செற்றவனே யென்னும் பின்னும்
வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்க வெவ்வுயிர்க்கும் கண்ணீர் மிகக்
கலங்கிக் கை தொழும் நின்றிவளே –2-4-4-—கலங்கிக் கை தொழும் – பிரணயி கை தொழுவது கலங்கி இறே-நின்றிவளே –-நின்று -கை தொழுகை மாறாது ஒழிகை – இவள் -தொழுவித்துக் கொள்ளக் கடவ இவள் இறே தொழுகிறாள்
ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
நாறு துழாய்மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே.–4-4-7-—நீறு செவ்வே -என்ற இடம் -தேறாமை-நாரணன் கண்ணி ஈது என்ற இடம் -தேற்றம் ––கோவை வாயாள் திருவாய்மொழி -தேற்றம் -இத்திருவாய்மொழி -தேறாமை–மாயோன் திறத்தனளே-ஞானம் அப்ரயோஜனமாம் படி ஆச்சர்யமான பிரணயித்வத்தை உடையவன் திறத்தனள்-இத் திருவே-இத்திரு என்றும் அத்திரு என்றும் விகல்பிக்கலாம் படி இருக்கிறது-அநபாய நிகளாய் இருக்கிற ஆகாரம் இருவருக்கும் ஒக்கும்
அவளுக்கு அவனே உத்தேச்யன்-இருவரும் உத்தேச்யரான ஏற்றம் உண்டே இவளுக்கு
—
ஆனால் இவர்க்கு அவஸ்தாந்த்ரம் -ஆவது எது என்னும் அபேஷையில் அருளிச் செய்கிறார் .–ஆனால் பின்னை அவஸ்தாந்தரம் கூடின படி என் என்னில்-ஆனால் பின்னை அவஸ்தாந்தரம் கூடின படி என் என்னில் – ஸ்வரூபத்திலும் ஸ்வரூபாநுரூபமான வருத்தி ப்ரார்த்தனையிலும் வாசியில்லை. தம் பேச்சும் பிராட்டிமார்பேச்சுமான இவ்வளவே அவஸ்தாந்தரம்-
அடியோம் தொடர்ந்து குற்றேவல் அடிச்சியோம் அடிக் கீழ் குற்றேவல் ஆகை அவஸ்தாந்த்ரம்-சூரணை -120-
அடியோம்-அதாவது-அடியோம் போற்றி ஓவாதே -9-2-9-என்றும் ,-தொடர்ந்து குற்றேவல்--அதாவது-
தொடர்ந்து குற்றேவல் செய்து-9-2-3- -என்று தாமான தன்மையில் சொல்லுமோ பாதி–அடிச்சியோம்-
அதாவது- அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் –10-3-6–என்றும் , அடிக் கீழ் குற்றேவல்- அதாவது-
திரு அடிக் கீழ் குற்றேவல் முன் செய்த -1-4-2–என்று சொல்லுகையாலே , ஸ்வரூபத்திலும் ,ஸ்வரூப அநுரூப வ்ருத்தி பிரார்த்தனையிலும் பேதம் இல்லை ..-பிராட்டியான பாவனையாலே ,தம் பேச்சான இது போய் ,பெண் பேச்சாகை இவர்க்கு அவஸ்தாந்த்ரம் ஆவது என்ற படி .. அடியோம் தொடர்ந்து குற்றேவல் -என்று தம் பேச்சாலே சொல்லுகிற இது அடிச்சியோம் அடிக் கீழ் குற்றேவல்-என்று பெண் பேச்சாகை இவருக்கு அவஸ்தாந்த்ரம் ஆவது என்று வாக்யத்துக்கு சொல் படுத்தும் க்ரமம் –(வாக்ய அந்வயம் என்றவாறு )(ஸ்வரூபத்திலும் வ்ருத்தி கைங்கர்யத்திலும் பேதம் இல்லையே – ஆண் தன்மையில் பாடினாலும் நாயகி பாவமாக பாடினாலும் சேஷத்வத்துக்கும் கைங்கர்யத்துக்கும் இரண்டு அவஸ்தைகளும் ஆக நான்கு பாசுரங்கள் காட்டி வியாக்யானம் )
ஸ்வரூபத்திலும் ஸ்வரூபாநுரூபமான வ்ருத்தி ப்ரார்த்தனையிலும் வாசியில்லை. தம் பேச்சும் பிராட்டிமார் பேச்சுமான இவ்வளவே அவஸ்தாந்தரம்-
வீற்று இடம் கொண்டு வியன் கொள் மா ஞாலத்து இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி யோவாதே கண்ணினை குளிரப் புது மலர் ஆகத்தைப் பருக
சேற்றிள வாளை செந்நெலூடு களும் செழும் பணைத் திருப் புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குல முதலரிந்த கொடு வினைப் படைகள் வல்லானே–9-2-9—சேஷித்வத்தால் வந்த வேறுபாடு தோற்றும் படி விஸ்மய நீயமான மஹா பிருத்வியான இதிலேயும் இருந்திடாய் -உன்னைக் கொண்டு கார்யம் இன்றிக்கே அந்நிய பாரமான சம்சாரத்திலே -உன்னை ஒழிய செல்லாமை யுடையார் இருக்குமது உனக்கு ஏற்றமோ -இதில் உமக்கு பிரயோஜனம் என் என்னில் –-அடியோம்-அநந்ய பிரயோஜனரான நாங்கள் –-போற்றி –அவ்விருப்பு நித்யமாகச் செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணி –-யோவாதே-உச்சி வீடு விடாதே–கண்ணினை குளிரப்-கமர் பிளந்த கண்கள் விடாய் கெட்டுக் குளிரும் படி–புது மலர் ஆகத்தைப் பருக–செவ்விப் பூ போலே இருக்கிற திருமேனியை அனுபவிக்கும் படியாக –புஷ்ப்ப ஹாஸ ஸூ குமாரமான வடிவை -லோசநாப்யாம் பிபன் நிவ –என்கிறபடியே நிரந்தரமாக அனுபவிக்கப் பெறுகை –
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3—இத்தசையில் செய்யப்படுவது இது -என்று உணர்த்தி அந்தரங்க வ்ருத்தியைப் பண்ணி -பெருமாள் தமக்கு அபிமதங்களில் அவஹிதர் அன்றிக்கே இருந்த போதும் -இவ்வடிமையைக் கொண்டு அருள வேணும் -என்று வடிம்பிட்டு இளைய பெருமாள் அடிமை செய்தால் போலே –தொல்லடிமை-ஆத்மாவுக்கு ஸ்வாபாவிகமான வடிமை -மம சஹஜ கைங்கர்ய விதய -என்கிறபடியே வழி வரும் தொண்டரோர்க்கு அருளி-நெறி தப்பாதே வருகிற அடியோங்களுக்கு கிருபை பண்ணி – இம் மூன்று பாட்டிலும் தம்முடைய யோக்யதையைச் சொன்னால் போலே இருக்கும் -அது அன்று சொல்கிறது -ஒருவருக்கே சேஷமாய் இருப்பாரை வேறு முகம் பார்ப்பார் யுண்டோ என்று தம்முடைய அநந்ய கதித்வத்தை சொல்கிறார்
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்
பிடித்து அது நடுவு உனக்கு அரியையரும் பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம்
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே–10-3-6—அளவிட ஒண்ணாத ஸ்வ பாவத்தை யுடையையாய் தர்ச நீயனான ஸ்ரீ கிருஷ்ணனே – உன்னுடைய அலங்கார உத்தமமான திருவடிகளை அநந்யார்ஹைகளான எம் தலை மேலே நீ வைத்து அருள வேணும்
என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே –1-4-2–திருவடியின் கீழ் அந்தரங்க வ்ருத்தி பண்ணுகைக்கு ஏற்கவே ப்ரவர்த்திக்க பெறாத நான் அகன்றே போம் அத்தனையோ –-முன் செய்ய முயலுகை யாவது -அதுக்கு ஈடான பாக்யத்தைப் பண்ணுகை-க்ரியதாமித மாம்வத -என்றும் – முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -என்றும் சொல்லுகிறபடியே கண் வட்டத்தில் நின்று பண்ணுகைக்கு ஈடாக முயலாத நான் அகன்றே போம் இத்தனையோ என்றுமாம் -தந்தாமுக்கு என்ன ஓன்று இல்லாதார் தய நீயர் அன்றோ என்று கருத்து-த்வத்க்ருபா சங்கு சந்தீ-என்னக் கடவது இறே –
—
ஆனால் இவர்க்கு தம் பேச்சு அன்றோ ஸ்வாபாவிகம்– பிராட்டிமார் தசையை ப்ராபித்து பேசும் பெண் பேச்சு வந்தேறி அன்றோ என்ன- — பகவத் ஏக பரதந்த்ர்யமுமாய் பகவத் ஏக போகமுமாய் — இருக்கும் ஆத்ம வஸ்துவுக்கு ஸ்திரீ சாதர்ம்யம் ஸ்வரூப அனுபந்தி ஆகையாலே தத் பிரயுக்தமான பேச்சு
இவருக்கு வந்தேறி அன்று என்னும் இடத்தை ரூபகவத்வேன (உருவகப்படுத்தி) அருளிச் செய்கிறார் மேல் —(பவாடவி வர்ணனம் -பாரதம்-இருளில் சூழ்ந்து அவிவேகம் -விவாக ஞானம் இல்லாமல் –
பஹுதா சந்தத துக்க வர்ஷினி -ஆளவந்தார் திருவடி ஆச்சார்யர் -உப்புக்கடல் பாவ சாகரம் போன்ற உருவகங்கள் உண்டே )ஆனால் இவர்க்குத் தாமான தன்மை ஸ்வாவிகமாய், பிராட்டி மார் தன்மை வந்தேறி யாயிருக்குமோ? என்னில்; ப,க,வதே.க பரதந்தரமுமாய், ப,க,வதே,க போக,மூமாயிருக்கிற ஆத்ம வஸ்துவுக்கு ஸ்த்ரீத்வம் வந்தேறி யல்லாமையாலே பிராட்டிமார் தன்மை ஸ்வாபாவிகம் என்கிறார்–
வித்யை தாயாகப் பெற்று பாலுமமுதுமான திரு நாமத்தாலே திருமகள் போல வளர்த்த தஞ்சமாகிய தந்தை மற்றொருவர்க்குப் பேச்சுப் படாமல், விஸ்வபதி லோக பர்த்தா என்னும் மணவாளரை நாலிரண்டிழை கொண்டு முப்புரியான ப்ரஹ்ம ஸூத்ர பந்தத்தோடே வரிப்பிக்கப் பரம் புருடன் கைக் கொண்ட பின் சதுர்த்தியுள் புக்கு இடையீடு நடுக் கிடக்கும் நாள் கழித்து ஜந்ம பூமியை விட்டகன்று சூழ்விசும்பிற் படியே உடன் சென்று குடைந்து நீராடி வியன் துழாய் அஞ்சனத்தின் நீறு நானப் பொடி பீதக வாடை பல்கலன் கொண்டு நோக்கி அலங்கரித்துப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்ய நிறை குட விளக்கமேந்தி இள மங்கையர் எதிர் கொள்ள வைகுந்தம் புக்கிருந்து வாய் மடுத்துப் பெரும் களிச்சியாக வானவர் போக முண்டு கோப்புடைய கோட்டுக்கால் கட்டில் மிதித்து ஆரோஹித்து பரத-அக்ரூர-மாருதிகளை பரிஷ்வங்கித்த மணி மிகு மார்விலே குரு மா மணியா யணையும் வஸ்துவுக்கு மணிவல்லிப் பேச்சு வந்தேறியன்று.–சூரணை -121-
வித்யையைத் தாயாகப் பெற்று- அதாவது — சஹி வித்யாதஸ் தம் ஜனயிதி -ஆபஸ்தம்ப சூத்ரம்-16–17-என்கிற படியே ஆசார்யன் திரு மந்திர முகேன ஸ்வரூப ஞானத்தை உண்டாக்கின போது இவ் ஆத்மா சத்பாவம் ஆகையாலே , வித்தையை மாதாவாகக் கொண்டு இவ் ஆத்ம வஸ்துவை ஜனிப்பித்து-
‘“ஸ ஹி வித்,யாதஸ்தம் ஜநயதி தச் ச்,ரேஷ்ட,ம் ஜந்ம” (ஆப.தர்ம.) என்றும், “உத்பாத,க ப்,ரஹ்மபித்ரோ ர்க.,ரீயாந் ப்,ரஹ்மதா பிதா” என்றும் சொல்லுகையாலே ஆசார்யன் திருமந்த்ர முகத்தாலே ஸ்வரூப ஜ்ஞாநத்தை உண்டாக்க, தத,நந்தரம் இவனுடைய ஸத்,பாவமாகையாலே வித்,யை தாயாகப் பெற்று,
பாலும் அமுதுமான திரு நாமத்தாலே திரு மகள் போல் வளர்த்த –-அதாவது தேனும் பாலும் அமுதுமாய திரு மால் திருநாமம் -பெரிய திருமொழி -6-10-6–என்கிற போக்ய பதார்த்தமான திரு மந்த்ரத்தாலே
திரு மகள் போல் வளர்த்த–அதாவது — திரு மகள் போலே வளர்த்தேன் -பெரியாழ்வார் -3-8-4-என்கிற படி – அனந்யார்ஹ சேஷத் வாதிகளாலே ஸ்ரீ லஷ்மி சத்ருசமாக வளர்த்துக் கொண்டு போந்த-
“தேனும் பாலுமமுதுமாய திருமால் திருநாமம்”‘ (திருமொழி 7 – 10 – 6) என்ற போக்ய பதார்த்த,த்தாலே “திருமகள் போல வளர்த்தேன்”? (பெரியா. திரு. 3 – 8 – 4) என்கிறபடியே அநந்யார்ஹ அபேஷத்வாதி,களாலே பிராட்டியோ டொக்கச் சொல்லும்படி வளர்த்துக் கொண்டு போந்த–
கான வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே —6-10-6–எனக்கு சர்வ வித போக்யமுமான-ஸ்ரீ யபதி உடைய திரு நாமத்தை –மிதுனமான வேஷமே காணும் இவர்க்கு ரசிப்பது –
ரமா மாணா வநே த்ரய -என்னுமா போலே – (தண்டகாரண்யத்தில் –சித்ரகூடம் அடைந்து -அழகான இடம் பெருமாளும் பிராட்டியும் – சேர்ந்து இருப்பதை கண்டு இளைய பெருமாள் மகிழ்ந்து போல் இங்கும் )
ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போலே வளர்த்தேன் செம்கண் மால் தான் கொண்டு போனான்
பெரு மகளாய் குடி வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற யசோதை
மருமகளை கண்டு உகந்து மணாட்டுப் புறம் செய்யும் கொலோ -3-8-4—கடி மா மலர் பாவை ஒப்பாள் என்கிறபடியே (நாயனார் -ஸாம்ய ஷட்கம்)1-அநந்யார்ஹ சேஷத்வம்-2-அநந்ய சரண்யத்வம்-3-அநந்ய போக்யத்வம்-4-சம்ஸ்லேஷத்தில் தரிக்கை-5-விஸ்லேஷத்தில் தரியாமை-6-ததேக நிர்வாகத்வம் )
சர்வருக்கும் வை லஷணத்துக்கு உபமான பூமியாய் புருஷகார யுக்தையான-நாரீணா முத்தமையோடே சதர்ச -ஸ்வபாவ்யை யாம்படி வளர்த்தேன் –
தஞ்சமாகிய தந்தை--அதாவது-தேஹோத்பாதகனாய் -ச பித்ரா ச பரித்யக்த ஸூ ரைஸ்ச சமஹர்ஷபி த்ரீன் லோகான் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத –ஸூந்தர -38-32– -இத்யாதி படியே ஆபத் தசைகளில் கை விடும் பிதாவை போல் அன்றிக்கே –-பூதாநாம் யோவ்யய பிதா -சஹஸ்ர நாமம் -என்கிறபடி
சம்பந்தம் கண் அழிவு அற்று இருக்க – பவ மோஷண யோஸ் த்வ யைவ ஜந்து க்ரியதே–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -உத்தர -88- -என்னும் படி சம்சார மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கும் பிதாவைப் போலும் அன்றிக்கே – ஸ்வரூப உத்பாதகனாய் -ஒரு தசையிலும் கை விடாதே -ஹிதைஷியாய் – உஜ்ஜீவன ஏக பரனாய்க் கொண்டு மோஷைக ஏக ஹேதுவாய் இருக்கையாலே ஆபத் ரஷகனான ஆச்சர்யனான பிதா-
““தஞ்சமாகிய தந்தை தாய்’‘ (திருவா. 3 – 6 – 9) என்று தேஹோத் பாத,கனாய் ஆபத் காலங்களிலே *“ஸ பித்ரா ச” (ரா.ஸு. 38 – 32) இத்யாதிகளிற் படியே கை விடுமவனைப் போலன்றிக்கே ““பூ,தாநாம் யோவ்யய? பிதா’” (பாரதம்) என்கிற ஸம்ப,ந்த, முண்டாயிருக்கச் செய்தேயும் ஸம்ஸார மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவான பிதாவைப் போலுமன்றிக்கே மோஷ ஏக ஹேதுவாய் எல்லா அவஸ்தையிலும் இவனுடைய உஜ்ஜீவநத்திலே தோக்காய், இவனுடைய ஹிதைஷியாய்ப் போருகிற ஆசார்யனாகிற பிதா-
தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–3-6-9–ஷாம காலம் வந்தால் தூற்றடியிலே வைத்துப் போதல் -விற்று உண்ணுதல் செய்யுமவர்களைப் போல் அன்றிக்கே அழிய மாறி நோக்கும் தாயும் தந்தையாய்-அவ்யய பிதா -தந்தை யானவன் தாய் ஆக மாட்டான் –ஸர்வேஷாமேவ லோகா நாம் பிதா மாதாச மாதவ – தங்களை தஞ்சமாகிய தானுமாய் –
வயிறு நொந்த போதாக கழுத்திலே கயிற்றை இட்டு கொள்ளும் தானும் அன்ரியிலே இருக்கை
அவை அல்லனாய்- தந்தை தாய் தான் என்னும் இவ்வளவு அன்றியே அல்லாத பந்து வர்க்கமுமாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல்-எஞ்சல் ஆகிறது -சுருங்குதல் -பகவத் அனுபவத்தில் சங்கோசம் இல்லாத நித்ய ஸூ ரிகள் குலம் உண்டு -திரள் -அதுக்கு நிர்வாஹகனை – அவர்களுக்கு ஜீவன ஹேது வானவனை என்றுமாம் –
மற்று ஒருவருக்குப் பேச்சுப் படாமல் –அதாவது –மற்று ஒருவருக்கு என்னை பேசல் ஒட்டேன்–பெரியாழ்வார் -3-4-5- -என்றும் ,-மானிடவர்க்கு பேச்சுப் படில் –நாச்சியார் -1-5-என்கிற அந்ய சேஷத்வ பிரசங்கம் வாராதபடி —
மற்றொருவர்க்குப் பேச்சுப் படாமல்) “’மற்றொருவர்க் கென்னைப் பேச வொட்டேன்” (பெரியா. தி.3- 4.5), “மானிடவர்க்கென்னு பேச்சுப் படில் வாழகில்லேன்”‘(நா.தி. 1 – 5) என்று அந்ய சேஷத்வ ப்ரஸங்கமும் வாராதபடி.
சுற்றி நின்று ஆயர் தழைகள் இட சுருள் பங்கி நேத்ரத்தால் அணிந்து
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே பாடவும் ஆடவும் கண்டேன் அன்றிப்பின்
மற்று ஒருவர்க்கு என்னைப் பேசல் ஒட்டேன் மாலிரும் சோலை எம் மாயற்கு அல்லால்
கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக் கொடுமின்கள் கொடீராகில் கோழம்பமே – 3-4-5–இப்படிப் பட்டவனுக்கு ஒழிய -வேறு ஒருவர்க்கு என்று -என்னை சொல்ல ஒட்டேன் – நீங்கள் நினைத்து இருக்கிறது செய்யல் ஆவது இல்லை – நீங்கள் வாய் விடில் நான் முடிவன்-மனிடர்வர்க்கு என்று பேச்சு படில் வாழகில்லேன்(நாச்சியார் 1-5-) -என்னுமா போலே சொல்லுகிறாள் –
வானிடை வாழும் அவ் வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த வவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப
ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித் தெழுந்த என் தட முலைகள்
மானிடர்வர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே –1-5–நானும் அறியாது இருக்க –அவனும் அறியாது இருக்க – மனுஷ்யம் மாத்ரமாய் இருப்பாருக்கு என்று நாட்டிலே இங்கனே ஒரு சப்தம் பரிமாறும் ஆகில்- அது என் காதில் விழா விடிலும் – எனக்கு சத்தை இல்லை கிடாய் –என்கிறாள்
பிறருக்காய் இருக்கும் இருப்பு -சத்த்யா பாதகமாய் இருந்த படி —
விஸ்வபதி லோக பர்த்தா என்னும் மணவாளரை -அதாவது –பதிம் விஸ்வஸ்ய –புருஷ ஸூக்தம் -என்றும் ,-கௌசல்யா லோக பர்த்தாரம் –ஸூந்தர -38-55–என்று பதி சப்ததாலும் -பர்த்ரு சப்தத்தாலும் -சர்வ லோக நாயகராகச் சொல்லப் படுகிற-மணவாளரை – பணவாள் அரவணை பற்பல காலமும் பள்ளி கொள்ளும் மணவாளரை –நாச்சியார் -10-6- என்கிற அழகிய மணவாளரை –
(விஸ்வபதி லோக பர்த்தா வென்னும் மணவாளரை) ““பதிம் விஸ்வஸ்ய”’ (தை.நா. 11) என்றும், “கெளஸல்யா லோக பர்த்தாரம்”” (ரா.ஸு, 38 – 56) என்றும், ”பணவாளரவணைப் பற்பல காலமும் : பள்ளி கொள் மணவாளர்’‘ (நா.தி. 10 – 6) என்றும் சொல்லுகிறபடியே ப்ராப்த சேஷியாய், ஸர்வ ரக்ஷகனானவனை.-
கண மா மயில்காள் கண்ணபிரான் திருக் கோலம் போன்று
அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்கு அடி வீழ்கின்றேன்
பண மாடரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள்
மண வாளர் நம்மை வைத்த பரிசிது காண்மினே–10-6–தம்மோட்டை ஸ்பரசத்தாலே விகசிதமான பணங்களை உடையவனாய்-நித்ய அனுபவத்தாலே களித்து வர்த்திக்கிற திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாக உடையவர்-தம் உடம்போடு அணைய ஆசைப் பட்டாருக்கு உடம்பு கொடுக்குமவர் –பற்பல காலமும் பள்ளி கொள் மண வாளர் – அவர் அநாதி காலம் கூடிப் பண்ணின கிருஷி பலம் அன்றோ நானுங்கள் காலைப் பிடிக்கிறது-மணவாளர் -என்கையாலே – பெரிய பெருமாள் போலே காணும் இவளை இப்பாடு படுத்தினார் –
நால் இரண்டு இழை கொண்டு முப்பிரியான ப்ரஹ்ம ஸூத்திர பந்தத்தோடு வரிப்பிக்க –
அதாவது –எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்திரம் போலே -(முமுஷுப்படி )
எட்டு அஷரமாய் – மூன்று பதமாய் ,ஈஸ்வர சம்பந்த பிரகாசமான திருமந்தரம் ஆகிற மங்கள ஸூத்தர சம்பந்தத்தோடே-பாணிம் க்ருஹ்ணீஷ் வ பாணி நா -பால –73-26-என்கிறபடி வரிக்கும் படி பண்ண –
(நாலிரண்டிழை கொண்டு முப் புரியான ப்ரஹ்ம ஸுத்ர ப,ந்த,த்தோடே வரிப்பிக்க) “எட்டிழையாய் மூன்று சரடாயிருப்பதொரு மங்கல ஸத்ரம் போலே எட்டுத் திருவெழுத்தாய், மூன்று பதமாய், ஸர்வேஸ்வரனோடு அவிநாபூத ஸம்பந்த, ப்ரகஸகமான திருமந்த்ரமாகிற மங்கல ஸூத்ர ப ந்தத்தோடே “பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா” (ரா. படா, 23 – 27) என்று அவன் வரிக்கும்படி பண்ண-
பரம் புருடன் கைக் கொண்ட பின்-அதாவது –பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின் -பெரியாழ்வார் -5-4-2–என்கிறபடியே பரம புருஷனான மணவாளர் பரிக்ரஹித்த அநந்தரம் –சதுர்தியுள் புக்கு –அதாவது –விவாஹா அநந்தரம் சேஷ ஹோம பர்யந்தமான சதுர் திவசத்திலும் அகலுதலும் அணுகலும் அற்று,-அனந்யார்ஹ சேஷத்வ அனுகுணமாக பரிமாற்றத்துக்கு அர்ஹம் என்னும் அளவைப் பிரகாசித்துக் கொண்டு இருக்குமோபாதி,பிரணவோக்தமான அனந்யார்ஹ சேஷத்வத்தில்
கண் அழிவு அற அங்கீகரிக்கையாலும் , தத் அனுகுணமாக கிட்டிப் பரிமாறப் பெறாமையாலும் ,
அகலுதலும் அணுகலும் அற்று கைங்கர்ய பிரார்த்தனையோடு சொல்லும் சரம சதுர்த்தி யிலே உள் புக்கு –
(பரம்புருடன் கைக் கொண்ட பின்) ““பறவை யேறு பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின்” (பெரியா. தி. 8 – 4 – 2) என்று கருட வாஹநனான புருஷோத்தமன் கைக் கொண்ட அநந்தரம். (சதுர்த்தி,யுள் புக்கு) விவாஹாநந்தரம் ஸேஷ ஹோம பர்யந்தமான சதுர்திவஸம் போலே ப்ரதம சதுர்த்தி,யிலே சொல்லப்பட்ட ஸேஷத்வ ஜ்ஞாநாநந்தரம் சரம சதுர்த்தியில் சொல்லுகிற கைங்கர்ய ப்ரார்த்தனையில் அந்வயித்து.-
பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின்
பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்
இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்
அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே -5- 4-2 –பெரிய திருவடியை வாகனமாக உடைய புருஷோத்தமனே – திரு வேம்கடமுடையான் பெரிய திருவடி மேலே எழுந்து அருளி வந்து இவரை பரம பதத்துக்கு கொடு போகையிலே த்வரிக்கிற படி–விரோதி நிவ்ருத்தியை பிறப்பித்ததும்
திரு வேம்கடம் உடையான் பெரிய திருவடி மேல் வந்து இறே –நீ – ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வ-ஸ்வபாவனான நீ-என்னை – விளிக்கும் கண் இலேன் நின் கண் மற்று அல்லால் –என்றும்-உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் (5-3-2 )-என்றும் அங்கோர் நிழல் இல்லை நீரும் இல்லை -என்றும் – அநந்ய கதியுமாய் – அநந்ய உபாயனுமாய் – அநந்ய போகனுமான என்னை –அங்கீகரித்த பின்பு-நான் உன்னைப் பற்றும் போது இறே – ஜன்மாந்தர சஹஸ்ரங்களிலே தபோ ஞான சமாதி ரூபேண பிறப்பது-நீ என்னைக் கை கொண்ட பின் – எல்லாம் ஏக காலத்திலே பிறக்கும் இறே –
இடை ஈடு நடுக் கிடக்கும் நாள் கழித்து –அதாவது –தம்பதிகள் இருவரும் -ஏக சய்யைலே வர்த்திக்கச் செய்தே -அந்யோன்ய ஸ்பர்ச யோக்யதை இல்லாதபடி -இடையீடரான சோமாதிகள் நடுவே கிடக்கும் நாள் போலே – சேஷத்வ ஞானமும் சேஷவ்ருத்தி பிரார்த்தனையும் உண்டாகையாலே , இரண்டு தலைக்கும் அண்ணிமை உண்டாய் இருக்கவும் -சேர்ந்து பரிமாற ஒண்ணாதபடி – நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பில் இட்டு-திருவாய் -5-1-5- -என்கிறபடியே அனுபவ விரோதியாய் இடையீடான சரீரம் நடுவே கிடக்கிற நாலு நாளையும் –நாள் கடலை கழிமின் -திருவாய் -1-6-7- – என்கிற படியே கழித்து –
(இடையீடு நடுக் கிடக்கும் நாள் கழித்து) ஒரு படுக்கையிலே தம்பதிகளிருவரு மிருக்கச செய்தே ஸோமாதீகளான மூவர்களும் நடுவே இருக்கையாலே இவர்களுக்கு ஸ்பர்ஸ யோக்,யதை இல்லாதாப் போலே சேஷத்வ ஜ்ஞாநமும் சேஷ வ்ருத்தி ப்ரார்த்தனையும் உண்டாயிருக்கச் செய்தே, “நண்ணியும் நண்ணாகில்லேன் நடுவே யோருடம்பிலிட்டு”’ (திருவா, 5 – 1 5) என்று ப,க,வத_நுப,வ விரோதி,யாய், இடையீடான ஸரீரம் கிடக்கும் நாலு நாள் ப,க,வத,நுப,வம் கூடாமையாலே அந்நாலு நாளையும் “’நாள்கடலைக் கழிமின்”‘ (திருவா. – 7) என்று கழித்து.
கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பிலிட்டுத்
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே.–5-1-5—கிட்டியும் கிட்டாதார் கணக்கு ஆனேன் -பேறாக சொல்லுகிறது ஞான பலத்தை –பெறாமை யாகிறது -ஞான அனுகூலமான பிராப்தி இல்லாமை -அது இன்றிக்கே ஒழிகிறது என் என்னில் -அசித் சம்சர்க்கத்தாலே-சம்சாரத்திலே நீ வைக்கையாலே-என்கிறார் –-நடுவே ஓர் உடம்பிலிட்டுத்--சரீர சம்பந்தம் அநாதி யாய் இருக்க -நடுவே என்பான் என் என்னில் இவ்வாத்மாவுக்கு ஸ்வரூப அனுபந்தி இல்லாமையாலும் கர்ம உபாதிகம் ஆகையாலும்-பகவத் பிரசாதத்தால் விடக் காண்கையாலும் – முத்துக்கு மாலினியம் அநாதியாய் இருக்க ஒரு நாளிலே கடைந்து தெளியக் காண்கையாலே-ஸ்வரூப அதிரேகி -என்று தோற்றுமா போலே பகவத் அர்ஹமான வஸ்துவுக்கு மாம்ஸாஸ் ருங்மயமான அசித்தோடே என்ன சேர்த்தி உண்டு –
பெருமாளோடு அனுபவிக்கப் பாரித்த பிராட்டி முன்பே ராவணன் தோற்றினால் போலே இருக்கிறதாயிற்று இவருக்கு சரீர சம்பந்தம் -சம்சர்க்கம் ஒழிய ஆச்ரயத்தோடு ஒரு சம்பந்தம் இல்லை என்கை – திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்-பலவாய்ச் செய்யப்பட்டு வலிதான பாபம் ஆகிற பாசத்தால் த்ருடமாக நெருக்க கட்டி புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே.– சரீரகத தோஷம் தெரியாதபடி பண்ணி -அக்வாயைப் பார்த்தால் காக்கை நோக்கும் படியாய் இருக்கை-தோலின் கை பாணி புறத்தால் வந்த வழு மூட்சியைப் பார்த்து ஸ் ப்ருஹை பண்ணும் படி இறே பண்ணி வைத்தது –-என்னை -ஸ்வ ரக்ஷணத்தில் அப்ராப்தனாய் அசக்தனாய் இருக்கிற என்னை-போர வைத்தாய் புறமே.–அனுபவத்தில் பாரித்து இருக்கிற பிராட்டியை அசோகா வனிகையிலே வைத்தால் போலே -இவர்களுக்கு சம்சாரிகள் நடுவே இருக்கிற இருப்பு
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே –1-6-7—திருவடிகளிலே நிர்மமனாய் வணங்கி
நாள் கடலைக் கழிமினே –ஜ்ஞானம் பிறந்தால் ப்ராப்தி அளவும் -ஒரு பகல் ஆயிரம் ஊழி-என்னுமா போலே கால ஷேபம் அரிதாய் இறே இருப்பது-திருவடியைப் போலே தசரதாத் மஜனுடைய வீர சரிதத்தை அனுசந்தித்துக் காலத்தைப் போக்குவது-அன்றிக்கே சக்கரவர்த்தி திருமகனை ஆஸ்ரயித்து சம்சார ஆர்ணவத்தை மாற்றிக் கொள்ள பாருங்கோள் என்கிறார் என்றுமாம்
ஜன்ம பூமியை விட்டு அகன்று –அதாவது –முற்றிலும் பைம் கிளியும் பந்துமூசலும் பேசுகின்ற சிற்றில் மென்பூவையும் விட்டகன்ற செழும் கோதை -பெரிய திருமொழி -3-7-8-என்கிறபடியே ஒருவராலும் விட அரிதான ஜன்ம பூமியான சம்சார விபூதியை முன்பு ஆதரணீயமான போந்த வஸ்துக்களோடே கூடப் புரிந்து பாராமல் விட்டு நீங்கி ..-அன்றிக்கே–அன்று நான் பிறந்திலேன் -திருச்சந்த –64-என்னும் படி கிடந்த தனக்கு ஆசார்யன் திரு மந்தரத்தால் உண்டான ஜன்மம் பெற்றது இங்கே ஆகையாலே ஜன்ம பூமியான இவ் விபூதியை பகவத் அனுபவ ப்ராவண்யத்தாலே – முற்றிலும் பைம் கிளியே –இத்யாதி படியே –முன்பு ஆதரணீயமான போந்த வஸ்துக்களோடே கூட விட்டகன்று என்னவுமாம் ..
பிறந்தகம் விட்டு புக்ககத்துக்கு போகிறதாக சொல்லுகிற இந்த ரூபகத்துக்கு இது மிகவும் சேரும் இறே-
(ஜந்ம பூ,மியை விட்டகன்று) “முற்றிலும் பைங்கிளியும் பந்துமூசலும் பேசுகின்ற சிற்றில் மென் பூவையும் விட்டகன்ற செழுங்கோதை”‘ (திருமொழி 3 – 7 – 8) என்று ஒருவராலும் விட வொண்ணாத ஜந்ம பூ,மியான ஸம்ஸார விபூ,தியை விட்டகன்று.
முற்றிலும் பைங்கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற
சிற்றில் மென் பூவையும் விட்டகன்ற செழும் கோதை தன்னைப்
பெற்றிலேன் முற்றிழையை பிறப்பிலி பின்னே நடந்து
மற்றெல்லாம் கை தொழப் போய் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-8–சிறு கூட்டிலே நின்று பேசா நின்ற மிருது ஸ்வபாவமான பூவையையும் விட்டகன்ற-லிலோ உபகரணங்களை விட்டு அவனைப் பற்றின பின்பு உடம்பிலே பிறந்த பௌஷ்கல்யம்-முன்னே போக விட்டு கடைப் பணியும் கொக்கு வாய் கூட்டமும்
கண்டு பின்னே போகப் பெற்றிலேன்
நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே –64—நான் திருவடிகளில் தலை சாய்க்கைகாக ஸ்ர்ஷ்டி காலத்தில் நாம ரூபங்களை தந்து அருள –விஷயாந்தர ப்ராவண்யத்தால் அனுபவிக்கப் பெற்றிலேன் –ஆத்மாவுக்கு ஜன்மம் ஆகிறது ஜ்ஞான லாபம் ஆகையாலே அஜ்ஞனனாய்ப் போனேன்-பிறந்த பின்பு மறந்திலேன் – அவன் க்ர்ஷியாக எனக்கு அறிவு பிறந்தபின் மறந்து அறியேன் –
சூழ் விசும்பிற் படியே உடன் சென்று-அதாவது –-சூழ் விசும்பு-10-9-1–என்கிற திரு வாய் மொழியில் சொல்லுகிறபடியே அர்ச்சிராதி மார்க்கத்தாலே வழி உள்ளார் அடைய சத்கரிக்க – அங்கு அவனோடும் உடன் சென்று -நாச்சியார் -6-10-என்கிறபடி–நயாமி-ஸ்ரீ வராஹ சரமம்–என்கிற நாயகன் முன்பே போக -பின்னே போய் –குடைந்து நீராடி- –அதாவது – குள்ளக் குளிர குடைந்து நீராடி -திருப்பாவை -13-என்கிறபடியே பர்த்ரு கிருஹத்துக்கு போகிற பெண் அவ்வூர் எல்லையிலே சென்றவாறே அவர்கள் குளிப்பாட்ட குளிக்குமா போலே அம்ருத வாஹிநியான விரஜையிலே -இப்பால் உள்ள அழுக்கு அறும்படி நீராடி –
(சூழ் விசும்பிற் படியே) ““சூழ் விசும்பு’” என்கிற திருவாய்மொழியில் படியே அர்ச்சிராதி,மார்க்கஸ்த,ரா யிருக்கிற அர்ச்சிராதி,புருஷர்களடைய அடைவே ஸத்கரிக்க. (உடன் சென்று) “அங்கவனோடுடன் சென்று”? (நா. தி. 6 – 9) என்கிறபடியே அவன் முன்னே போகப் பின்னே போய். (குடைந்து நீராடி) “’குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே”” (திருப்பாவை 13) என்கிறபடியே பர்த்ரு க்,ருஹத்துக்குப் போம் பெண்ணை அவ்வூர்க்குளக் கரையில் குளிப்பாட்டக் கடவர்களிறே, அப்படியே விரஜைக் கரையிலே இப்பாலுள்ள அழுக்கறும்படி நீராடி–
சூழ் விசும்பு -பிரவேசம் –வேதாந்தங்களில் பிரசித்தமான அர்ச்சிராதி கதி மார்க்கத்தையும் -சரீர விஸ்லேஷ சமயத்தில் வரும் கிலேசம் எல்லாம் ஆறும் படி தானே வந்து முகம் காட்டும் படியையும் –
மார்க்கஸ்தரான புருஷர்களுடைய ஸத்காரங்களையும் -அம்மாக்கத்தாலே போய்ப் புகக் கடவ பரம பதத்தையும் நித்ய ஸூரிகள் வந்து ஆதரிக்கும் படியையும் -பிராட்டிமாரும் ஸ்ரீ வைகுண்ட நாதனும் எதிரே வந்து ஆதரிக்கும் படியையும் – நித்ய ஸூரிகள் சேவிக்க பிராட்டிமாரோடு வீற்று இருந்து அருளுகிற படியையும் –பரம ப்ராப்யரான நித்ய ஸூ ரிகள் நடுவே தாமே ஆனந்த நிர்ப்பரராய் இருக்கும் படியையும் காட்டி அருளக் கண்டு ப்ரீதராய் -அத்தை அந்யாபதேசத்தாலே பேசி அனுபவிக்கிறார்–
குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம் செய்து மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்
மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-10—அவற்றை வீதியிலே தானும் தோழன்மாருமாக ஆனை ஏறி வந்தான் என்றது இறே-இப்போது-தானும் அவனுமாக அங்கே ஆனைக் கழுத்திலே புக்கு வலமாக வந்து-இருவரையும் கூட வைத்து – உடன் மண நீராட்டினார்கள் யாய்த்து
புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்—குடைந்து நீராடாதே-கிருஷ்ண விரஹ ஆற நீராடப் போகாதே நமக்கு கிருஷ்ண விச்லேஷம் பிறவாமைக்கும் கிருஷ்ண குணங்களிலே அவஹாகித்து அனுபவிக்கப் பெறாதே–அவனைப் பிரிந்த வ்யசனம் எல்லாம் நிஸ் சேஷமாய் போம்படி கால ஷேப கூடத்திலே பிரவேசித்து பகவத் அனுபவத்தைப் பண்ணாதே –
வியன் துழாய் அஞ்சனத்தின் நீறு நானப்பொடி பீதகவாடை பல்கலன் கொண்டு நோக்கியர் அலங்கரித்து –அதாவது –-குளித்தேறின பெண்ணைப் பர்த்ரு பந்துக்களான ஸ்திரீகள் வந்து அலங்கரிக்குமா போலே –-வியன் துழாய் கற்பு என்று சூடும் -மூன்றாம் திருவந்தாதி -69-என்றும் ,
ஆரார் அயிர் வேல் கண் அஞ்சனத்தின் நீர் அணிந்து–சிறிய மடல் -10-என்றும் ,-மெய் திமிரு நானப் பொடி –பெரியாழ்வார் -1-4-9–என்றும் ,-உடுத்துக் களைந்த நின் பீதகவாடை-திருப்பல்லாண்டு -9-என்றும் ,-பல் கலனும் யாம் அணிவோம் -திருப்பாவை -27-என்கிறபடியே-அலங்கார உபகரணங்களான திவ்ய மால்ய -திவ்ய அஞ்சன -திவ்ய சூர்ண –திவ்ய வஸ்த்ர -திவ்ய ஆபரணங்களை –-தம் பஞ்ச சதான் யப்சரஸாம் பிரதிதாவந்தி சதம் மாலா ஹஸ்தா –சதம் அஞ்சன ஹஸ்தா -சதம் சூரண ஹஸ்தா
-சதம் வாசோ ஹஸ்தா -சதம் பூஷண ஹஸ்தா –கௌஷீதகி-என்கிறபடியே ஏந்திக் கொண்டு –
மானேய் நோக்கியரான-5-8-1– திவ்ய அப்சரஸ் ஸூக்கள் எதிரே வந்து –-தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி- கௌஷீதகி – என்கிறபடியே-போக்த்ரு பூத ஈஸ்வர போக்யமாம் படி அலங்கரித்து-
வியன்துழாய் அஞ்சனத்தின் நீறு என்று தொடங்கி) ““வியன்துழாய்க்கற்பென்று சூடும்” (மூ.திரூவ. 69), “’ஆராரயில் வேற்கணஞ்சனத்தின் நீறணிந்து’‘ (சி.மடல்),, “மெய்திமிரு நானப்பொடி “” (பெரியா.தி. 1-49), ‘“பெருமானரையில் பீதக வண்ணவாடை” (நா.தி. 13 – 1), “பல்கலனும் யாமணிவோம்”’ (திருப்பாவை 27) என்றும், “தம் பஞ்சஸ தாந்ய ப்ஸரஸாம் ப்ரதிதா வந்தி மதம் மாலா ஹஸ்தா? ஸதம் சூர்ண ஹஸ்தா? தம் வாஸோ ஹஸ்தா?”’ (கெளஷீ- உப.) என்று குளக்கரையிலே பர்த்தாவினுடைய பந்துக்கள் வந்து அலங்கரிக்குமாப் பாலே திவ்யாலங்காரோப கரணங்களை ஏந்திக் கொண்டு மானேய் நோக்கிகளான ஐந்நூறு திவ்யாப்ஸரஸ்ஸூக்கள் எதிரே வந்து “தம் ப்,ரஹ்மாலங்காரேணா லங்குர்வந்தி” (கெளஷீ- உப.) என்கிறபடியே பர விநியோகார்ஹமாம்படி அலங்கரித்து.
வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69—ஏதேனும் ஒரு பூவைச் சூட நினைத்தாள் ஆகில்-காட்டுப் பூ சூடாள்–தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்-என்கிறபடியே விஸ்மயமான திருத் துழாய் அல்லது குழலிலே வையாள்–கற்பு என்று பாதி வ்ரத்யம் –
ஆராயில் வேற்கண் – அஞ்சனத்தின் நீர் அணிந்து – சீரார் செழும் பந்து -கொண்டு அடியா நின்றேன் நான் –அழகும் கூர்மையும் ஆர்ந்த கண் –அழகுக்கு இடுகிறது அன்று இறே –மங்களார்த்த மாக அஞ்சனம் இட்டு –அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீர் அணிந்து – கடைந்த பாத்திரத்திலே நெய் இட்டால் போலே
மெய் திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும்
செய்ய தடம் கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்
வெய்ய கலைப்பாகிக் கொண்டு உவளாய் நின்றாள்
அய்யா அழேல் அழேல் தாலேலோ அரங்கத்து அணையானே தாலேலோ -1 3-9 –திருமேனியில் மர்திக்கைக்கு ( ஈசுவதற்கு ) ஈடான -சந்தன கஸ்தூரி கர்பூராதி சுகந்த தரவ்ய சமுதாய சூர்ணத்தோடே நிறம் பெற சாத்த தக்க மஞ்சள் பொடியும் –
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா வுன்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெரும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பல் கலனும் யாம் அணிவோம்
ஆடை யுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்–27–யாம் அணிவோம் –-ஆபரணங்களுக்கு அழகு கொடுக்க வல்ல அவயவங்களிலே கிடந்து தானும் நிறம் பெற்று – பூட்டின தானும் நிறம் பெற்று போம்படி வடிவு படைத்த நாங்கள் –இவ் வெல்லை வரும் வளவு இறே மலரிட்டு நாம் முடியோம் என்றது –
நாம் முடியோம் என்றால் பூட்ட மாட்டான்-அணிவோம் என்றால் பூட்டாது இருக்க மாட்டான் — அவன் அலங்கரிக்கைக்கு இவர்கள் அனுமதியே அமையும்-
பல்லாண்டு இசைத்து கவரி செய்ய –-அதாவது – தொக்கு பல்லாண்டு இசைத்து கவரி செய்வர் ஏழையரே –திருவாய் -7-6-11–என்கிறபடியே இவ் விஷயத்தில் கிஞ்சித் கரிக்கையில் உண்டான சாபலம் தோற்ற திரள நின்று மங்களாசாசனம் பண்ணி சாமரம் பணிமாற-நிறை குடம் விளக்கம் ஏந்தி இள மங்கையர் எதிர் கொள்ள –அதாவது –அலங்குருதையாய் உபலால நத்தோடே செல்லுகிற பெண் -பர்த்ரு கிருஹத்தை அணுகச் சென்றவாறே – அங்குள்ள ஸ்திரீகள் மங்கள தீபாதிகளை ஏந்திக் கொண்டு எதிரே வந்து சத்கரிக்குமா போலே – நிதியும் நற் சுண்ணமும் நிறை குட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்தினர் –10-9-10–என்கிறபடியே மங்கள அவஹமான பூர்ண கும்பாதிகளைத் தரித்துக் கொண்டு , சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர் கொள்ள-10-9-10- என்கிறபடியே நித்ய யவ்வன ஸ்வபாவைகளான வேறு சில திவ்ய அப்சரஸ்ஸூகள் எதிர் கொள்ள –
(பல்லாண்டிசைத்துக் கவரி செய்ய) இவர்கள் விஷயத்தில் சாபலத்தாலே மங்களாஸாஸநம் பண்ணிச் சாமரமிட. (நிறைகுட விளக்கமேந்தி இளமங்கையரெதிர் கொள்ள] “நிதியும் நற்சுண்ணமும் நிறைகுடவிளக்கமும் மதிமுக மடந்தையர்”‘ (திருவா. 10 – 9-10) என்று மங்களாவஹமான மங்கள தீப பூர்ண கும்பங்களையும் தரித்துக் கொண்டு. “சதிரிளமங்கையர் தாம் வந்தெதிர் கொள்ள”” (நா.தி. 6 – 5) என்று நித்ய நவயெளவந ஸ்வபாவைகளான வேறே சில திவ்யாப்ஸரஸ்ஸுக்கள் எதிர் கொள்ள.
புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல் லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்வர் ஏழையரே.–7-6-11-பகவத் விஷயத்தில் உள்ளன வெல்லாம் சொன்ன இப்பத்தை கற்றவர்களை-தொக்குப் -திரண்டு-பல்லாண்டிசைத்துக் -மங்களா சாசனம் பண்ணி-கவரி செய்வர் ஏழையரே.–ஈஸ்வரன் பக்கல் பண்ணக் கடவ அசாதாரண பரிசரியையும் பண்ணுவர்கள் மதி முக மடந்தையர் -நெடு நாள் சம்சாரத்தில் பட்ட கிலேசம் எல்லாம் போம்படி ஆதரிப்பர்கள் –
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-–அவ்வளவில் பகவத் பரி சாரிகைகள் வந்து எதிரே நிற்பார்கள் -வைஷ்ணவர்களுக்கு நிதியான திருவடி நிலைகளையும் -திருச் சுண்ண பிரசாதத்தையும் -நிறை குடங்களையும் -மங்கள தீபங்களையும் ஏந்தி-மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–தேசாந்திரம் போன பிரஜை வந்து கிட்டினால் தாய் முகம் குளிர்ந்து இருக்குமா போலே ஹர்ஷத்தாலே பூர்ண சந்திரனைப் போலே இருக்கிற முகங்களை யுடையவர்கள் வந்து எதிர் கொண்டார்கள் –
கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி
சதிரள மங்கையர் தாம் வந்து எதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டெங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்—-6-5–சதிரள மங்கையர் தாம் வந்து எதிர் கொள்ள
நிறை குட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே –திருவாய் மொழி -10-9-10-என்னக் கடவது இறே-தங்கள் பருவத்தாலும் வடிவு அழகாலும் தங்களையே எல்லாரும் கடாஷிக்கும் படி இருக்கிறவர்கள் தாங்கள் கவிழ்ந்து முன்னடியைப் பார்த்து கொடு வந்து எதிர் கொள்ள –
வைகுந்தம் புக்கிருந்து –அதாவது – உபலால நத்தொடு சென்ற பெண் பர்த்ரு க்ரஹத்திலே புகுருமா போலே – மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பார் -நாச்சியார் -3-10–என்கிறபடியே – ஸ்ரீய பதி யானவனுக்கு போக ஸ்தானமான ஸ்ரீ வைகுண்டத்தை ப்ராபித்து -அவனோடு கூடி இருந்து –வாய் மடுத்து பெரும் களிச்சியாக வானவர் போகமுண்டு-அதாவது – பர்த்ரு க்ரஹத்திலே பெண் வந்த பின்பு , தம்பதிகளும் மற்றும் உள்ள பந்துக்களும் கூடி இருந்து பெரும் களிச்சி உண்ணுமா போலே —
அடியார்கள் குழாங்களும்-2-3-10- அவனுமாக இருக்கிற சேர்த்தியிலே –அடியேன் வாய் மடுத்து பருகிக் களித்தேன் -2-3-9–என்று பெரும் களிச்சியாக பெரும் முழு மிடறு செய்து –கட்டு எழில் வானவர் போகம் உண்பாரே –6-6-11–என்கிறபடியே – நித்ய சூரிகள் புஜிக்கிற போகத்தை – சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ராஹ்மணா விபிச்சதா –தைத்ரியம் –என்கிறபடியே புஜித்து –
(வைகுந்தம் புக்கிருந்து) ‘“மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பார்” (நா.தி. 3 10) என்று ஸ்ரீயபதியான ஸர்வேஸ்வரனோடே தேஸ விஸேஷ ப்ராப்திபண்ணி. (வாய் மடுத்துப் பெருங் களிச்சியாக வானவர் போகமுண்டு) பின்பு பர்த்ரு க்ருஹத்திலே தம்பதிகளும் மற்றுமுள்ள பந்துக்களும் பெருங்களிச்சி யுண்ணக் கடவரிறே; அப்படியே ““அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேன்” (திருவா. 2 – 3 – 9) என்றும், ““கட்டெழில் வானவர் போகமுண்பாரே”” (திருவா, 6 – 6 – 11) என்றும் நித்ய ஸூரிகளுடைய போகத்தை அவர்களோடொக்க முழு மிடறு செய்து ““ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதா’‘ (தை. உப.) என்கிறபடியே புஜித்து.
கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாட்டை
பொன்னிய மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை
இன்னிசை யால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே–3-10—நித்தியமான ஸ்ரீ வைகுண்டத்திலே போய்
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் உடன் கூட நித்ய அனுபவம் பண்ணப் பெறுவர்-
களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10—இவன் தன்னையே அன்றிக்கே இவனுடைய ரக்ஷகத்வத்திலே தோற்று இருக்கும் ததீயர் திரள்களை –-குழாங்களையே –
திரளாக வேணும் -அது தான் அநேகமாக வேணும்-இவ்விஷயத்துக்கு உசாத் துணையாம் போது அசங்க்யாதராக வேணும் என்று இருக்கிறார் –
கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படிவானம் இறந்த பரமன் பவித்ரன் சீர்
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே –2-3-9—வாயும் திரையுகளில் தூறு மண்டின கிலேசம் எல்லாம் போம்படி சாம்சாரிக துரிதம் என்னவுமாம்-படிந்து -சென்று கிட்டி குடைந்து -எங்கும் புக்கு
ஆடி -அவகாஹித்து-அடியேன் வாய் மடுத்துப் பருகிக் -பெரு விடாயோடே அனுபவித்து
களித்தேனே-இதர விஷய ஸ்பர்சம் துக்கமே யானால் போலே-பகவத் குண அனுபவம் களிப்பே யாகக் கடவது –
கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்
கட்டெழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம் உண்பாரே.–5-6-11–பெரிய வானவர் -போக விசேஷணம் ஆகவுமாம் -சம்சாரத்தில் போகம் கர்ம நிபந்தம் ஆகையால் அல்பமாய் அஸ்திரமாய் இருக்கும் இறே -ஸ்வரூப அனுரூபம் ஆகையால் சம்ருத்தமாய் நித்தியமாய் இருக்கை –
கோப்புடைய கோட்டுக் கால் கட்டில் மிதித்து ஆரோஹித்து – அதாவது – பர்த்ரு சம்ச்லேஷத்துக்குப் படுக்கையிலே ஏறுமா போலே – கோப்புடைய சீரிய சிங்காசாசனம்-திருப்பாவை -23-என்றும்
கோட்டுக் கால் கட்டில் –திருப்பாவை 19-என்றும் சொல்லுகிற படி உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டு சர்வ ஆஸ்ரயமான திவ்ய பர்வங்கத்திலே – தமேவம் வித் பாதேநாத் யாரோஹதி -கௌஷீதகி -1-5-என்கிறபடியே பாத பீடத்திலே அடி இட்டு ஏறி –பாரத அக்ரூர மாருதிகளை பரிஷ்வங்கித்த மணி மிகு மார்பிலே –அதாவது – தம் சமுதாப்ய காகுஸ்தஸ் சிரஸ்யாஷிபதம் கதம்
அங்கே பாரதமா ரோப்ய முதித பரிஷச்வஜே –என்றும் –சோப்யேனம் த்வஜ வஜ்ராப்ஜக்ருத சிஹ்நேன பாணினா சம்ச்ப்ருஸ் யாக்ருஷ்யச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே –யுத்த -130-39–என்றும் ,
ஏஷ சர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹனுமதா மயா காலமிமம் ப்ராப்ய தத்தஸ் தஸ்ய மஹாத்மன -யுத்த -1–13– என்றும் சொல்லுகிறபடி , ஸ்ரீ பரத ஆழ்வானையும் அக்ரூரரையும் திருவடியையும் ஆதரித்து அணைத்துக் கொண்ட – மணி மிகு மார்பு-10-3-5– -என்று ஸ்ரீ கௌஸ்துபம் நிறம் பெரும் படி அழகிய திரு மார்பிலே ..
(கோப்புடைய கோட்டுக்கால் கட்டில் மிதித்து ஆரோஹித்து) பின்பு பர்த்ரு ஸம்ஸ்லேஷத்துக்குப் படுக்கையிலே ஏறக் கடவதிறே; அப்படியே ““கோப்புடைய சிங்காசனம்” ( திருப்பாவை 23) என்றும், ““குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் – மெத்தென்ற பஞ்ச சயனத்தின்மேலேறி”” (திருப்பாவை 19) என்றும் சொல்லுகிறபடியே உபய விபூ,தியும் தொழிலாக வகுப்புண்ட ஸர்வாஸ்சர்ய மயமான சீரிய சிங்காசனத்திலே “’தமேவம் வித்பாதே,நாத், யாரோஹதி” (கெளஷீ. 1 – 5) என்கிறபடியே பாத பீடத்திலே அடியிட்டேறி,(பரதாக்ரூரமாருதிகளைப் பரிஷ்வங்கித்த மணிமிகுமார்விலே) “அங்கே பரதமாரோப்ய முதித பரிஷஸ்வஜே”’ (ரா. யு. 130 – 41) என்றும், “ஸோப்யேநம் த்வஜ வஜ்ராப்ஜ க்ருத சிஹ்நேந பாணிநா । ஸம்ஸ்ப்ருஸ்யாக்ருஷ்ய ச ப்ரீத்யா ஸுகாட,ம் பரிஷஸ்வஜே”” (வி.பு. 5 – 18 – 2) என்றும், ““ஏஷ ஸர்வஸ்வபூ,தஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத?”’ (ரா. யு. 1 – 13) என்றும், ஸ்ரீபரதாழ்வானையும், அக்ரூரனையும், திருவடியையும் அணைத்த மணி மிகு மார்விலே – ஸ்ரீகௌஸ்துப,மும் நிறம்பெறும்படி அழகுமிக்க திருமார்பிலே,
மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா வுன்
கோயில் நின்று இங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்–23—சராசரங்களை அடைய தொழிலாக வகுப்புண்டிருக்கை – உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டிருக்கை -என்னவுமாம் தர்ம ஜ்ஞானாதிகளாலும் அதர்ம அஜ்ஞானாதிகளாலும் கோப்புடைய சிம்ஹாசனம் -என்றுமாம் –உபய விபூதியில் உண்டான சராசர பதார்த்தங்களை அடங்கலும் தொழிலாக வகுப்புண்டு இருக்கை-சீரிய சிங்கத்துக்கு சத்ருசமான ஆசனம்-ஓர் அணு சென்று அடியிடிலும் கிருஷ்ணனோடு ஸாம்யா பத்தியைக் கொடுக்கும் ஆசனம் –
குரு மா மணியாய் அணையும் வஸ்துவுக்கு –அதாவது –-குரு மா மணிப் பூண் –பெரியாழ்வார் -1-3-10-என்று ஸ்லாக்கியமாய் ஈஸ்வரத்வ சிஹ்நமான ஸ்ரீ கௌஸ்துபத்தோ பாதி போக்யமாய் தேஜஸ்கரமாய்க் கொண்டு அணிகிற ஆத்ம வஸ்துவுக்கு (திரு மார்பில் சம்பந்தத்தால் மணிக்கு ஏற்றம் -புருடன் மணி வரமாக -ஸ்ரீ தேசிகன்)–மணி வல்லி பேச்சு வந்தேறி அல்ல – அதாவது – வண் பூ மணி வல்லி –திருவிருத்தம் –9 -என்று உதாரமாய் போக்யமாய் தனக்குத் தானே ஆபரணமாம் படி அழகியதாய் கொள் கொம்பு பெறா விடில் தலை எடுக்க மாட்டாமை தரைப் பட்டு கிடக்கும் கொடி போன்றவள் என்கிற ஸ்த்ரீத்வ பிரயுக்தமாய் வரும் பேச்சு வந்தேறி அன்று —ஸ்வாபாவிகம் என்ற படி –
பெண் பேச்சு என்ன அமைந்து இருக்க மணி வல்லி பேச்சு என்றது – மணி மிகு மார்பில் மணியாய் அணையும் -என்றதோடு ஒக்க -மணி வல்லி –என்றால் சொற் கட்டளையால் வரும் ரசம் உண்டாகையாலே –இத்தால் ஸ்த்ரீத்வம் ஆத்மாவுக்கு ஸ்வபாவிகம் ஆகையாலே ,அத்தை
உள்ளபடி தர்சித்த இவர்க்கு தத் பிரயுக்தமான பேச்சு ஸ்வபாவிகம் என்று சொல்லிற்று ஆய்த்து-
(குருமாமணியாயணையும் வஸ்துவுக்கு) ஸ்லாக்யமாய், ஸர்வேஸ்வரத்வ சிஹ்நமான அந்த ஸ்ரீகெளஸ்துபத்தோபாதி அவனுக்கு போக்யமுமாய், தேஜஸ்கரமுமாய்க் கொண்டு அணைகிற ஆத்ம வஸ்துவுக்கு. (மணிவல்லிப் பேச்சு வந்தேறியன்று) ““வண்பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம்”’ (திருவிரு. 9) என்று உதாரமாய், அழகு மிக்கதாய், ஸ்லாக்யமான கொடி போன்றவள் என்கிற ஸ்த்ரீத்வ ப்ரயுக்தமாய் வருகிற பேச்சு வந்தேறி யன்று, ஸ்வாபாவிகம் என்கிறார்.
பெரு மா உரலில் பிணிப்பு உண்டு இருந்து அங்கு
இரு மா மருதம் இறுத்த இப்பிள்ளை
குரு மா மணிப் பூண் குலாவித் திகழும்
திரு மார்வு இருந்தவா காணீரே சேய் இழையீர் வந்து காணீரே -1-2-10–கௌஸ்துப ஆபரணம் -ஸ்ரேஷ்டமாய் ஸ்லாக்கியமான ஆபரணம் –கௌஸ்துபம் -நீல நாயகம் -ஜீவாத்மாவுக்கு பிரதிநிதி
அஸ்திர பூஷண அதிகாரம் – பரத அக்ரூர மாருத -பிரக்ருதிகளை ஆலிங்கனம்-திகழ்கின்ற திரு மங்கை திரு மார்பு -அலர்மேல் மங்கை உறை மார்பன்-துளஸீ பிராட்டி கௌஸ்துபம் -பரமன் பறை சாற்றும்
கூர்ம வியாக்ர ஐம்படைத்தாலி -எளிமை பறை சாற்றும் )
திண் பூஞ்சுடர் நுதி நேமி யஞ்செல்வர் விண்ணாடனைய
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் இவையோ
கண் பூங்கமலம் கருஞ்சுடராடி வெண் முத்தரும்பி
வண் பூங்குவளை மடமான் விழிக்கின்ற மாயிதழே–9–மணி வல்லி –தனக்குத் தான் ஆபரணமாய் இருக்கிற படி-நாயகன் கழுத்தைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டிய கொடி –-கழுத்தைக் கட்டிக் கொண்டு கண்ணும் கண்ண நீருமாய் இருக்கிறபடி –-ஒரு கொம்பிலே சேர்க்க வேண்டி இருக்க நிலக்கிடை கிடக்கிற படி –(துவண்டு அன்றோ கிடக்கிறாள் )ஆரே பிரிபவர் தாம்-பிரணயித்வம் இல்லாமை யாகிலும் சைதன்யம் இல்லையோ –வண் பூ மணி வல்லி-–ஆழ்வார் திரு நாமம் –மணி வல்லிப் பேச்சு வந்தேறி அன்றே–கோல் தேடி ஓடும் கொழுந்தே போன்றதே மால் தேடி ஓடும் மனம் -பாரதந்தர்யமே வடிவானவள்-வண் பூ மணி வல்லி-தர்ச நீயமான புஷ்போத் கமத்தை உடைத்தாய் ஸ்லாக்யமான கொடி போன்றவளை (பூ மலர்ந்த கொடி )
–——————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply