(1) பூர்வ த்,விகம் – ஸூரி வைபவம் 1 முதல் 186 வது ஸூத்ரம் வரை (186)
(2) உத்தர த்,விகம் – ஸூரி ஸுக்த்தி வைபவம்– 187 முதல் 284 முடிய (48)
(1) ப்ரத, மோத், யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம் 1-38 (38)
(2) த்,விதீயோத், யாய: – க்,ரந்த, கர்த்ரு வைப,வம் 39 – 186 (148)
(3) த்ருத்யோத், யாயம் – க்,ரந்தாந்தர தார தம்ய வைப,வம் 187-207 (21)
(4) சதுர்த்தே ரத், யாயம் -கிரந்த, ப்ரதிபாத்,ய க்ரம வைப,வம் 208-284 (27)
6 — ப,க்திபாதம் -—97–121—-25-இதிலே 2 அதிகரணங்கள்
8–ஜ்ஞாந ப,க்த்யதி கரணம் 97 –117—மொத்தம் -21 —ஸூரணைகள்—பகுதி -1-97-101-ஸூரணைகள்–பகுதி -2–102–117-ஸூரணைகள்-
9-ஜ்ஞாந ப,க்த் யவஸ்தா ஸூக்தி அதிகரணம் –118-121—மொத்தம் –3 —ஸூரனைகள் –
—
தன்னாக்குகை யாவது என் என்ன அருளி செய்கிறார்-
அதாவது மயர்வற மதி நலம் அருளுகை—சூரணை -97-
அது என்றது -தன்னாக்க – என்றதை பராமர்சிக்கிறது .. மயர்வற மதி நலம் அருளுகை -ஆவது அஞ்ஞானம் ச வாசனமாக போக்கி பக்தி ரூபாபன்ன ஞானம் கொடுக்கை – ( ஸ்வரூப ஐக்கியம் இல்லை -விபு இல்லை –கீழே தனக்கு ஒத்த ஞான சக்திகளைக் கொடுத்தார் – இங்கு ஞானம் கனிந்த நலம் )
அதாவது – தன்னாக்குகையாவது என்றபடி. தன்னாக்குகையாவது – தான் “*மயர்வறமதிநல மருளினன்” என்று தாமே அருளிச் செய்யலாம்படி அஜ்ஞாநத்தை ஸவாஸநமாகப் போக்கி பக்திரூபாபந்ந ஜ்ஞாதத்தைத் தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையாலே கொடுக்கை–
—
அது தன்னை விசதமாக அருளிச் செய்கிறார் மேல்- (அது -மயர்வற மதி நலம் அருளுகையாவது )-அஜ்ஞாநத்தைப் போக்கி பக்தி ரூபாபந்ந ஜ்ஞாநத்தைக் கொடுக்கையாவது – பகவஜ் ஜ்ஞாந விரோதியான நாலு வகைப்பட்டிருக்கிற அஜ்ஞாநம் போய் ஜ்ஞாந ப்ரஸரண த்வாரமான மநஸ்ஸு அவித்யாதி களாலே திரோஹித மாகையாலே குண்டிதமாய், தந் நிவ்ருத்தியிலே விகஸிதமாய்க் கொண்டு மேல் நோக்கிக் கிளருகிற ஜ்ஞாநத்தை பரம பக்தி பர்யந்தமாக வளர்க்கை என்கிறார்.
இருள் துயக்கு மயக்கு மறப்பு என்கிற (ஞானத்தை) அனுதய சம்சய விபர்யய விஸ்ம்ருதிகள் அற்று
மலர்மிசை எழுகிற ஞானத்தை-காதல் அன்பு வேட்கை அவா என்னும் சங்க காம அனுராக ஸ்நேகாத்ய அவஸ்தா நாமங்களோடே பரம பக்தி தசை ஆக்குகை –சூரணை-98-
அதாவது–மயர்வற மதி நலம் அருளுகை ஆகிறது தான் –இருள் தருமா ஞாலம் –-இருள் தீர்ந்து இவ் வையம் மகிழ -என்று இருள் என்கிற சப்தத்தால் சொல்லப் படும் ஞான அனுதயமும் –துயக்கன் மயக்கன்–இத்யாதி ஸ்தலங்களில் துயக்கு என்கிற சப்தத்தால் சொல்லப் படும் ஸ்தானுர்வா புருஷோவா -என்கிற படியே க்ராக்ய வஸ்துவை இன்னது என்று நிச்சயிக்க மாட்டாத சம்சயமும் –மயக்கு -என்கிற சப்தத்தால் சொல்லப்படும்-ரஜ்ஜு சுக்த்யாதி விஷய சர்ப்ப ரூப்யாதி புத்தி போலே
அதஸ்மின் தத் புத்தி ஆகிற விபர்யமும் -(கயிறை பாம்பாக / சுக்தி -முத்துச்சிப்பி – ரூப்யம் வெள்ளி )-மறுப்பும் ஞானமும் –திருவாய் -1-10-10-என்றும்-மறப்பற என்னுள் மன்னினான் -திருவாய் -1-10-10–இத்யாதிகளில் போலே-மறப்பு -என்று சொல்லப் படும் பூர்வ அனுபூத விஷயமாய் அனுபவ சம்ஸ்கார மாத்ரஜமான ஞானத்தின் உடைய அபாவம் ஆகிற விஸ்ம்ருதியும்-ஆக இந்த சதுர் வித -சங்கோச அவஸ்தையும் அற்று –
(இருள் துயக்கு மயக்கு மறப்பென்கிற) ”இருளார் வினை கெட”‘ (திருவிரு. 33), துயக்கின்றித் தொழுதுரைத்த’” (திருவா. 3 – 1 – 11), “மயக்குடை மாயைகள்” (திருவா. 1 – 3 – 10), “மறப்பற என்னுள்ளே மன்னினான்”” (திருவா. 1 – 10 – 10) என்கிற ஜ்ஞாநாநுதயமென்ன, ‘ஸ்தாணுர்வா புருஷோ வா’ என்று வஸ்துவை யதாவாக க்ரஹிக்க வொட்டாதிருக்கிற ஸம்ஸமயமென்ன, ரஜ்ஜுவில் ஸர்ப்ப புத்தியும், ஸ்தாணுவில் புருஷ புத்தியும் போலே வஸ்துவை விபரீதமாக க்ரஹிக்கை யாகிற விபர்யயமென்ன, அநுபூத விஷய ஜ்ஞாந திரோதாந ரூபமான விஸ்ம்ருதி யென்ன, இப்படிச் சொல்லுகிற அஜ்ஞாநத்தை வாஸனையோடே போக்கி.
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண் பால்
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
தெருளோம் அரவணையீர் ! இவள் மாமை சிதைக்கின்றதே –33–மோஹ அந்தகார ஸஹ சரிதமான விபரீத விருத்தங்கள் போம்படி ஸங்கல்ப ரூபமான ஆஜ்ஜையை நடத்தா நிற்புதீர்
வியப்பாய வியப்பில்லா மெய்ஜ்ஞான வேதியனை
சயப்புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன்
துயக்கின்று தொழுதுரைத்த வாயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே -3-1-11-துயக்காவது -மனம் திரிபு -சம்சய விபர்யய ரஹிதமான சம்யக் ஞானத்தால் கண்டு ப்ரீதி பிரேரிதரராய் தொழுது-அந்த ப்ரீதி வழிந்த சொல்லான ஆயிரத்திலும் இப்பத்து
துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
புயற்கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே —1-3-10-துயக்கறு மதியுண்டு -சம்சய விபர்யய ரஹிதமான அந்தக்கரணம்-அத்தை யுடையார் ஆகையாலே யதா ஜ்ஞானத்தை யுடைய தேவர்களை மதி கெடுக்கும் படி தெரியாத குண சேஷ்டிதங்களை யுடைய ஆச்சர்யமான அவதாரங்களுக்கு எல்லை இன்றிக்கே இருக்கை
மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பு என்றும் ஞானம் என்றும் ஒன்றும் அறிந்திலேன் நான்
மறப்பனோ இனி யான் என் மணியையே –1-10-10—ஒரு சேதனனாய் நினைத்தேனோ மறக்கைக்கு
நினைவு நான் அடியாக வரில் அன்றோ மறுப்பும் நான் அடியாக வருவது -அசித் கல்பன்–அறிவுக்கு அடைவு இன்றிக்கே இருக்கிற என் பக்கலிலே அறிவைப் பிறப்பித்து-மறக்கக் கூடும் என்று பார்த்து
அழகிய திருக் கண்களால் குளிர நோக்கிக் கொண்டு ஒரு நாளும் மறக்க ஒண்ணாத படி என்னுள்ளே ஸ்தாவர பிரதிஷடையாய் இருந்தவனை புறம்பு ஒரு அந்நிய பரதை தோற்ற இருக்கிறிலன்-மறவாமைக்கு பரிஹாரம் அவன் கையிலே உண்டாய் இருக்க இனி மறக்க உபாயம் உண்டோ
கீழ் அநாதி காலம் நினைக்க விரகு இல்லாதாப் போலே இறே மேல் உள்ள காலம் எல்லாம் மறக்க விரகு இல்லாத படியும்
மலர்மிசை எழுகிற ஞானத்தை-அதாவது – மனனகமல மற மலர் மிசை எழு தரும் –திருவாய் -1-1-2-என்கிற படியே (மனன் அகம் மலம் கீழ் சொன்ன நாலும் ) மன பரிசுத்தியாலே விகசிதமாய் கொழுந்து விட்டு – தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திருவந்தாதி -67–என்கிற படி
பிராப்த விஷயமான தன்னை நோக்கி கிளருகிற ஞானத்தை –காதல் என்னும் சங்கத்தை -(சினேகா அங்குரம் -தொடக்க நிலை அங்குரார்ப்பணம்– முளை ) அதாவது – உளப் பெறும் காதல் –திருவிருத்தம் -59- நேரிய காதல்-திருவாசிரியம் -2- காணக் கழி காதல் –இரண்டாம் திருவந்தாதி -56–கழிய மிக்கதோர் காதல் –திருவாய் -5-5-10–காதல் கடல் புரைய –திருவாய் -5-3-4- காதல் கடலினும் மிக்க பெரியதால் –திருவாய் -7-3-6- காதல் உரைக்கில்–நீள் விசும்பும் கழிய பெரிதால்-திருவாய் -7-3-8– மெய்யமர் காதல் –திருவாய் -6-8-2–என்றும்- (காதல் என்ற சொல்லால் சொல்லப்படும் -ஒரு பொருளைப் பார்க்கும் இடத்தில் முதல் முதலில் மனதில் தோன்றும் ஸ்நேஹத்தின் முளையாய் இருக்கும் சங்கமும் )
(மலர்மிசை எழுகிற ஜ்ஞாநத்தை) “’மனனகமலமற மலர்மிசை எழுதரும்” (திருவா, 1 1 – 2) என்று ஜ்ஞாந ப்ரஸரண த்வாரமான மநஸ்ஸைப் பற்றிக் கிடக்கிற “’காம ச க்ரோதஸ் ச லோப,ய்ச ஹர்ஷோ மாநோ மதோ க்ரூணா । விஷாதஸ்சாஷ்டம? ப்ரோக்த இத்யேதே மநஸோ மலா?” என்று சொல்லப்படுகிற காம க்ரோதாதி ரூபமாய் அஷ்டவிதமான மல நிவ்ருத்தியாலே விகஸிதமாய்க்கொண்டு மேல் நோக்கிக் கிளருகிற ஜ்ஞாநத்தை. (காதல் அன்பு வேட்கை அவா என்னும்) ““நொந்தாராக் காதல்’” (திருவா. 2 – 1 – 9) என்றும், ‘“ஆரா வன்பு”’ (திருவா. 6 – 10- 2) என்றும், “பெருகு மால் வேட்கை” (திருவா. 9 – 6 – 1) என்றும், “அதனில் பெரிய என்னவா?” (திருவா. 10 – 10 – 10) என்றும் சொல்லப்படுகிற – வஸ்து தர்ஸநத்திலே ப்ரதம பாவியாய், ஸ்நேஹாங்குரரூபமான ஸங்கமென்ன,
அன்பு என்னும் காமம் –அதாவது –அன்பு சூட்டிய –திருவிருத்தம் -2- அன்பில் இன்பு –திருவாசிரியம்-2-
அன்பே பெருகும் மிக –பெரிய திருவந்தாதி -8–என்றும்-ஆரா அன்பு –திருவாய் மொழி -என்றும்
அன்பு என்று சொல்லப்படும் –சங்காத் சஞ்சாயதே காம -ஸ்ரீ கீதை -2-62–என்றபடி (சங்கத்தின் பின் தோன்றும் பார்க்கப்பட்ட பொருளை அனுபவித்தால் அல்லது நிற்க ஒண்ணாதபடி
இருக்கும் முதிர்ந்த நிலையான காமம் )-வேட்கை என்னும் அநு ராகம்-அதாவது-வேவாரா வேட்கை நோய் –திருவாய் -2-1-10- பெருகுமால் வேட்கையும் –திருவாய் -9-6-1- ஆவியின் பரமல்ல வேட்கை–திருவாய் -10 -3 -2— -என்றும் (வேட்கை என்று சொல்லப்படும் -காமத்தின் காரியமாய் -அனுபவிக்கப்படுகின்ற பொருளின் மேல் ஆசையானது இடைவீடு இன்றியே இருக்கும் அநு ராகமும் -)அவா என்னும் ஸ்நேஹம்- அதாவது – அவா வொருக்கா வினையோடும் –திருவிருத்தம் -64–காண்பான் அவாவுவன் –திருவிருத்தம் -84–சூடுதற்கு அவா –திருவாசிரியம் -2-
அதனில் பெரிய என் அவா-திருவாய் -10-10-10- -என்றும் இப்படி பல இடங்களிலும் –காதல்-அன்பு- வேட்கை- அவா –என்று சொல்லப் படுகிற விஷய தர்சனத்தில் – (அப்பொருளை மேலும் மேலும் அனுபவிக்குமது ஒழிய விட்டுப் பிடிக்கப் பற்றாதபடி அந்த அநுராகத்தின் பின் விளையும் ஸ்நேஹமும் )
மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2–மலமற-யோக அப்யாசத்தாலே மனசில் உண்டான அவித்யாதி தோஷங்கள் கழியக் கழிய –அவை யாவன –காம க்ரோதச்ச லோபச்ச ஹர்ஷ மாநமதா குணா விஷாதச்சாஷ்டம ப்ரோக்த இத்யேத மனசா மலா-ஆத்ம ஸ்வரூபமும் நித்தியமாய் ஞானமும் நித்யம் ஆகையால் (உயிர்களும் அழிவற்றவை; ஞானமும் அழிவற்றது; ஆகையால்,) இத் தோஷம் ஸ்வரூப கதமுமல்ல -ஞான கதமும் அல்ல – ஆத்மாவினுடைய தர்மபூத ஞானத்துக்கு (தோற்றம் மறைவுகளை வழங்குவது-)உதய அஸ்தமய வியவஹாரம் பண்ணுகிறது-ஞானம் ப்ரஸ்ருதி த்வாரத்தைப் பற்ற வாயிற்று – ஆக,ப்ரஸ்ருதி த்வாரமான மனத்தினைப் பற்றிக் கிடக்கின்ற தோஷமானது –
அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல் அந் தண் அம் துழாய்க்கு
உளப் பெரும் காதலின் நீளிய வாயுள ஓங்கு முந்நீர்
வளப் பெரு நாடன் மது சூதன் என்னும் வல்வினையேன்
தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே -59–அழகிய குளிர்ந்த திருத் துழாய்க்கு என்னுள்ளத்திலே வளருகிற காதல் போலே நீளிய வாயுள்ளன–காதலுக்கு முடிவு காணாதவோ பாதி கங்குலுக்கும் முடிவு காண ஒண்ணாது என்கை (கங்குலும் காதலும் முடிவு காண ஓண்ணாமை -) அதனில் பெரிய என் அவா -10-10-10-பெரியத்தில் பெரியது என்னும் அத்தனை பகவத் தத்துவத்தையும் விளாக்குலை கொண்டது இறே இவ்வவா பகவத் ஆனந்தத்தைப் பரிச்சேதிக்கப் பார்த்து அவை பட்டது படும் அத்தனை யாயிற்று-
உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல் சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆர்
உயிர் உருகி யுக்க நேரிய காதல் அன்பில் இன்பீன் தேறல் அமுத
வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருள்க்கு அசைவோர் அசைக திரு வோடு மருவிய
இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம் மூன்றினோடு நல் வீடு பெறினும்
கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே ?-2––அத்தலையில் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்தவாறே அச்சேத்யமான ஆத்ம வஸ்து த்ரவ்ய த்ரவ்யமாய் ஓர் அவயவி யாக்கிக் காண ஒண்ணாத படி மங்கிற்று ஆயிற்று –பக்தி பரவசரான படியை அருளிச் செய்கிறார்–நேரிய காதல்
அந்த அவாவானது விலக்ஷணமான தொரு சங்கத்தையும் பிறப்பித்தது–அன்பில் இன்பு-த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் சங்கஸ் தேஷுப ஜாயதே சங்காத் சஞ்ஜாயதே காம -காமாத் க்ரோதோ அபி ஜாயதே –ஸ்ரீ கீதை -2-62- (விஷயங்களை இடைவிடாமல் எண்ணும் மனிதனுக்கு அவற்றில் அதிகமான சேர்க்கை –சங்கம் -உண்டாகிறது அந்த சங்கத்தினால் காமம் உண்டாகிறது காமத்தினால் கோபம் ஏற்படுகிறது) என்கிறபடியே அந்த சங்கம் தான் ஓர் அன்பைப் பிறப்பித்தது–
காணக் கழி காதல் கை மிக்குக் காட்டினால்
நாணப் படும் என்றால் நாணுமே –பேணிக்
கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும்
திருமாலை நாங்கள் திரு —56—சர்வேஸ்வரனை காண மிகா நின்ற காதல் விஞ்சிக் காட்டினால்
நீ சேஷி நான் சேஷபூதன் என்னும் முறையிலே நிற்கப் போமோ – கண்டால் அல்லது கழியாதே காதல் என்றுமாம் – ஸாபராதன் என்று மீளவும் போகாது
நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –2-1-9—இடைவிடாதே உருவ நலிகிற பிரேம வியாதி
பிரேம வியாதிக்கு உள்ளது ஓன்று இறே இது-மெல்லாவி – விளக்கின் பிரக்ருதியின் மார்த்வம் போலே இருக்கும் ஆத்மாவும் என்று இருக்கிறாள்-அதாகிறது -பகவத் குண அனுசந்தானத்தாலே நைந்து இருக்கை-உள்ளளுலர்த்த- தோல் புரை அன்றிக்கே -உள்ளே குருத்து வற்றாக வற்றுவிக்க–
கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10—அலைவு அற விஞ்சின காதல் என்னுதல் –நாள் கழிய கழிய விஞ்சின காதல் என்னுதல் -சோகச்சகில காலேந கச்ச தாஹ்யபக்கச்சதி -மம்ஸாபச்யதிச் காந்தா மஹான் யஹனி வர்த்ததே –
ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4—பேரமர் காதல்- ஊரார் பழியும் -தாயார் ஹித வசனமும் -கேளாத படியான காதல் -அமர்ந்த காதல் -தர்ம அனுபந்தியான காதல் -பெரிதான அமரை விளைத்த காதல் -உஊராரை பூசல் ஆக்கின காதல் என்னவுமாம் –-ஈரம் -சங்கம் -காதல் -காமம் –சங்காத் சஞ்சாயதே காம – கடல் புரைய விளைவித்த-–அப்ரமேயோ மஹா த-என்ற கடல்தி ஒப்பாம் அத்தனை -கிடையா விடினும் விட மாட்டாத காதல் என்கை-கடல் புரைய என்றார் முதல் -அநந்தரம் கடலின் மிகப் பெரிதால் என்றார் –பின்னை மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றார் -முடிவில் அதனில் பெரிய என் அவா -என்றார் –இது இறே காதல் பெருகின படி -இது இறே பொய் நின்ற ஞானத்திற்கு பின்பு இவ்வளவும் வர விளைத்துக் கொண்ட கார்யம் –
காலம் பெற என்னைக் காட்டுமின்கள் காதல் கடலின் மிகப் பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம்பெருமான் நிற்கு முன்னே வந்தென் கைக்கும் எய்தான்
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த நான் மறை யாளரும் வேள்வி ஓவாக்
கோலச் செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல் திருப் பேரெயிற்கே.–7-3-6—காதல் கடல் புரைய விளைவித்த என்ற அளவு அன்று –மடலூரப் புக்க போது விலக்கினவர்கள் தாங்களே கொண்டு போய் காட்ட வேண்டும் தசை இறே–
கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக் கார்க்கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டலர் தூற்றிற்றது முதலாக் கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ!
மண் திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;
தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த தென் திருப் பேரெயில் சேர்வன் சென்றே.–7-3-8—யதோ வாசோ நிவர்த்தந்தே -என்கிற பகவத் ஆனந்தத்துக்கு அவதி உண்டாகிலும் இக்காதலுக்கு பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது -தோழீ -அவன் காதலின் பெருமை சொல்லி அது அடியாக என் காதலுக்கு கிருஷி பண்ணின நீ படும் பாடு அறிவுதியே-மண் திணி ஞாலமும் ஏழ்கடலும்-நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;-உரைக்கில் என்கிறது என் –காதல் கடலில் மிகப் பெரிதால் என்றில்லையோ என்ன -அது முகப்பில் வார்த்தை -பெரியத்தில் எல்லா வற்றிலும் பெரியது என்னும் இத்தனை -மண்ணாலே நெருங்கின பூமி -கடினையான பூமி என்கிறபடி -அத்தையும் சூழ்ந்த கடல் ஏழும் -அவற்றுக்கு எல்லாம் அவகாசமான ஆகாசமும் இவை இத்தனைக்கும் அவ்வருகு பட்டு இருக்கை –
மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார் முன்பு என்கை இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?
கையமர் சக்கரத்து என் கனிவாய்ப்பெரு மானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–6-8-2—மெய்யமர் காதல் சொல்லிக்-திருமேனியில் அணைய வேண்டும்படியான காதல் -என் உடம்போடு அணைய வேண்டும் காதல் என்றுமாம் –காத்ரைச் சோகாபி கர்ச்சிதை சம்ஸ்ப்ருசெயம்-என்ன கடவது இறே –குண ஞானத்தால் தரிக்கும் அளவன்று என்று சொல்லுங்கோள் -என்று சீயர் அருளிச் செய்வர் -பிள்ளான் -தம்மை போல் பொய்யாய் நிலை நில்லாத காதல் அன்று என்று சொல்லுங்கோள் என்று பணிக்கும்
செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —-2—குண ஜிதரால் விழுவது காலில் இறே–சூட்டிய -என்பான் என் என்னில்-வாசகம் செய் மாலையே – என்னுமா போலே (சாத்தின- பாடிய- போல் இல்லாமல் சூட்டிய என்பதால் பா மாலை -அன்பு மாலை )-ஆழ்வார் அன்பு திருவடிகளுக்கு அலங்காரம் –சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன் மார்வம் என்பதோர் கோவில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு அரவர் தண்டத்தில் உய்யலும் ஆமே – 4-5 -3-
உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல் சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆர் உயிர் உருகி யுக்க நேரிய காதல் அன்பில் இன்பீன் தேறல் அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருள்க்கு அசைவோர் அசைக திரு வோடு மருவிய இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம் மூன்றினோடு நல் வீடு பெறினும் கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே ?-2–நேரிய காதல்-அந்த அவாவானது விலக்ஷணமான தொரு சங்கத்தையும் பிறப்பித்தது–அன்பில் இன்பு –த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் சங்கஸ் தேஷுப ஜாயதே சங்காத் சஞ்ஜாயதே காம -காமாத் க்ரோதோ அபி ஜாயதே –ஸ்ரீ கீதை -2-62-
(விஷயங்களை இடைவிடாமல் எண்ணும் மனிதனுக்கு அவற்றில் அதிகமான சேர்க்கை -சங்கம் -உண்டாகிறது-அந்த சங்கத்தினால் காமம் உண்டாகிறது காமத்தினால் கோபம் ஏற்படுகிறது) என்கிறபடியே அந்த சங்கம் தான் ஓர் அன்பைப் பிறப்பித்தது–
அருகும் சுவடும் தெரி யுணரோம் அன்பே
பெருகும் மிக இது என் பேசீர் -பருகலாம்
பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம் கண் காண்பரிய
நுண்புடையீர் நும்மை நுமக்கு –8—ஆகிலும் உமக்கு (உம் விஷயத்தில் ) அன்பு மிகா நின்றது
இதுக்கு அடி சொல்லீர்-(ஆழ்வார் கேள்வி இது பெருமாள் கேள்வி அல்ல -நஞ்சீயர் தெளிவிக்கிறார் )
கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத்தா மரை செந்தீ மலரும் திருவேங் கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன்உன்னடி சேர் வண்ணம் அருளாயே.–6-10-2—சுனைகள் அறாக்கயம் ஆகிறாப் போலே யாயிற்று இவருக்கு அன்பு மாறாதே இருக்கிற படி -க்ரம பிராப்தி பற்றாத படியான ப்ரேமம் இறே-
வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10—ஒரு கால் வெந்து சமையக் கடவது அன்றிக்கே –அக்னி நேவாக்நி பர்வத -என்கிறபடியே வெந்த இடமே இந்தநமாக தஹியா நிற்கிற காதல்
அளவில்லாத வேட்க்கை நோய்-மெல்லாவி –பாத்தம் போராத ஆத்மாவை -அதாஹ்யமாய் இருப்பது கேவல அக்னி யாகில் இறே-யுள்ளுலர்த்த- கூடோ அக்னி ரிவ பாதபம் -கோடாரத்தில் பற்றின அக்னி போலே குருத்து வற்றாக வற்றுவிக்க-
உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1—ஆத்மாவுக்கு பொறுக்க ஒண்ணாத படி அபி நிவேசம் பெருகா நின்றது -அணு பரிமாணமாக இவ்வஸ்துவின் அளவன்றிக்கே ஆறு பெருகுமா போலே மேன்மேல் என பெருகா நின்றது –ஆலும் ஓவும் விஷாத அதிசய ஸூ சகம் —நெஞ்சம் உருகுமால் –வேட்க்கையும் பெருகுமால்-என்று தம்மால் நியமிக்க ஒண்ணாத விஷாதம் தோற்றச் சொல்லுகிறார்-
தகவிலை தகவிலை யே நீ கண்ணா தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச்
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச் சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால் வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–10-3-2—ஆச்ரயத்தின் அளவன்றிக்கே அபி நிவேசம் பெருகி வாரா நின்றது –சம்ச்லேஷ ஸூ கம் புக்க இடம் எங்கும் ஆற்றாமை யாய்த்து -அணு பரிமாணமாக ஆத்மாவால் பொறுக்கும் அளவன்று ஆசை -ஸூகமும் துக்கமும் ஸ்வரூபேணா வஸ்திதியும்-என்று மூன்று –ஸ்வரூபேணா வஸ்திதியில் நிற்கிறது இல்லை –
அந்தோ -இது உனக்கு-உபதேசிக்க வேண்டுவதே —-கலவியில் இருவரும் கூடக் கலந்து பிரிவால் ஆற்றாமை உனக்கு உபதேச கம்யமாவதே-கலவிக்கு இருவராய் -நோவு ஒரு தலைக்கே யாவதே
இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே – -64–அவா ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து –சப்தாதி விஷயங்களில் உண்டான அவாவை –பகவத் விஷயத்தில் ஒருங்க பண்ண ஒட்டாத பாபத்தோடும்- அத்தை அனுஷ்டித்த என்னோடும் கூட நொந்து – இப்படி இருப்பதொரு பாபம் உண்டாவதே – இத்தை அனுஷ்டிக்கைக்கு-நான் ஒருவன் உண்டாவதே -என்று நொந்து–
தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம்
கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே – -84—அவாவுவன் நான் –ஆசைக்கு கண் உண்டோ -(யுக்த அயுக்த விவேக ஞானம் இருக்காதே ஆசைக்கு ) காண வேணும் -என்று ஆசைப்படும் இத்தனை போக்கி – காண அரிது -என்று அறிய மாட்டேன் –காண அரிதாகில் காண வேணும் என்று ஆசையைப் பிறப்பித்து உம்மை சிஷித்து விட்டாரா என்ன –மைய வண்ணா -இத்யாதி – விஷய தோஷம் இறே இதுக்கு அடி என்கிறார் –நல் சரக்கை இழந்து ஆறி இருப்பார்களோ –
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10--–தத்வ த்ரயத்தையும் விளாக் குலை கொண்டு அது குளப்படி யாம்படி பெரிதான என்னுடைய அபி நிவேசத்தை -அதிலும் பெரிய உன்னுடைய அபி நிவேசத்தைக் காட்டி வந்து சம்ச்லேஷித்தாயே -என்னுடைய கூப்பீடும் ஒருபடி போம்படி பண்ணுவதே –அங்கே பரதம் ஆரோப்ய முதித பரிஷஸ்வஜே -என்று மீண்டு புகுந்து ஸ்ரீ பரத ஆழ்வானை மடியிலே வைத்து உச்சி மோந்து உகந்தால் போலே யாய்த்து இவருடைய விடாயும் கெடும்படி வந்து கலந்தது–
அவஸ்தா நாமங்களோடே பரம பக்தி தசை ஆக்குகை – அதாவது – பிரதமபாவியாய்–ஸ்நேக அங்குரமான –சங்கமும் – சங்காத் சஞ்சாயாத காம -என்கிற படியே தத் அனந்தர ஜாதமாய்-அவ் விஷயத்தை அனுபவித்து அல்லாது நிற்க ஒண்ணாதபடி இருக்கும் தத் விபாக தசையான காமமும் –
தத் கார்யமாய் -அனுபாவ்ய விஷய ராக அவிச்சேத ரூபமான அனுராகமும் – தத் அநந்தரம் அவ் விஷயத்தை உத்தரோத்தரம் அனுபவிக்கும் அது ஒழிய விட்டுப் பிடிக்க பற்றாத படி விளையும் ஸ்நேஹமும் , முதலான அவஸ்தைகளுக்கு -அனுரூபமான நாமங்களை உடைத்தாய்க் கொண்டு
பரம பக்தி தசா பர்யந்தம் ஆகும் படி பண்ணுகை என்கை —காதல் அன்பு வேட்கை அவா -என்னும் இவை-சங்காத் உத்தர உத்தர அவஸ்தைகளுக்கு –வாசகமாய் இருக்க –முன் பின் கலந்து வந்ததே ஆகிலும் எல்லா அவஸ்தைகளும் இவருக்கு எப் பொழுதும் பிரகாசித்து இருக்கையாலே –
அப்போதைக்கு அப்போது தம் ஆற்றாமைக்கு ஈடாக பேசுகிறது ஆகையாலே விரோதம் இல்லை —ஆக இத்தால் சொல்லிற்று ஆய்த்து –மயர்வற மதி நலம் அருளுகை ஆவது – அஞ்ஞான அபிதையாக சாஸ்திர சித்தமான அனுதயாதி சதுர் வித சங்கோச அவஸ்தையும் அற்று – விகசிதமாய் கொழுந்து விட்டு -விஷய உன்முகமாக கிளருகிற ஞானத்தை – ஸ்நேக பிரதம அங்குரமான சங்கம் முதலான உத்தர உத்தர விபாக ரூப அவஸ்தைகளுக்கு அனுரூபமான காதல் இத்யாதி நாமங்களைப் பஜித்து ,
பிரேம சீமா பூமியான பரம பக்தி தசா பன்னமாகும் படி பண்ணுகை என்றது ஆய்த்து —ஆக கீழ்-
அத்ரி ஜமதக்னி -சூரணை -92 – இத்யாதி வாக்யத்தில் சொன்ன சங்கைக்கு மூலம்-இவர் பிரபாவம் என்றும்- அது தனக்கு ஹேது -பகவத் நிர்ஹேதுக கடாஷம் என்றும் கடாஷத்தினுடைய சக்தியும்
இவரை இப்படி கடாஷித்தது லோக ஹித அர்த்தமாக என்றும் – கடாஷிக்கை யாவது மயர்வற மதி நலம் அருளுகை என்றும் – அது தன்னின் பிரகாரமும் சொல்லப் பட்டது .
‘“ஸங்காத் ஸஞ்ஜாயதே காம?” (கீதை 2 – 62) என்கிற அதினுடைய பரிபாகமான காமமென்ன; அதினுடைய அவிச்சேத,ரூபமான அநுராகமென்ன, அநந்தரம் அவ் வஸ்துவை அநுபவித்தல்லது நிற்க வொண்ணாத அபி நிவேஸ ரூபமான ஸ்நேஹமென்ன, இவை தொடக்கமான இப்படி அவஸ்தராநுரூுபமான நாமங்களை உடைத்தாய்க் கொண்டு பரம பக்தி பர்யந்தமாக அபி,வ்ருத்தமாம்படி பண்ணுகை என்கிறார். ஆக- இதுக்குக் கீழ், பகவத் கடாக்ஷமடியாக இவருக்கு அஜ்ஞாந நிவ்ருத்தி பூர்வகமாய்க் கொண்டு உண்டான பக்தி ரூபாபந்ந ஜ்ஞாநம் பரமபக்தி பர்யந்தமாக அபி வ்ருத்தமான படி சொல்லிற்று
—
இனி மேல் இவருடைய இந்த பக்தி தான் கர்ம ஞான சாத்யையாய் – பகவத் பிராப்தி சாதன பூதையாய் இருக்கும் உபாசகர் பக்தியிலும் – பிரபன்னர் பகவான் பக்கல் அர்த்தித்து பெறும் கைங்கர்ய உபகரண பக்தியிலும் வ்யாவிருத்தை என்னும் இடம் அறிவிக்கைக்காக – பிரதமம் சாதன பக்தி வேஷத்தை தர்சிப்பிகிறார் இதில் –இனிமேல் இவருடைய இந்த பக்தி கர்ம ஜ்ஞாந ஸாத்யையாய், உபாஸந ரூபையான ஸாதந பக்தியோ? அன்றிக்கே ஸித்த,ஸாதந பரிக்ரஹம் பண்ணினவர்கள் கைங்கர்யோப கரணமாக அபேஷித்துப் பெற்ற பக்தியோ? என்னில்; உபயமுமன்று, ஸஹஜையாய், ஸத்தா ப்ரயுக்தையான வ்ருத்த்யுபகரண பக்தி என்கிறார்-(அதில்-ஜந்மாந்தர ஸஹ்ஸ்ர நற்றவங்களாலே) என்கிற சூர்ணையாலே உபாஸந ரூபையான பக்தி வுடைய வேஷத்தை அருளிச் செய்கிறார்.–
1-ஜென்மாந்தர சஹஸ்ர நல் தவங்களாலே க்யாத குலங்களிலே பிறந்து
2-எழுதி வாசித்து தத்வஜ்ஞராய்
3-குளித்து ஓதி உரு எண்ணும் அந்தி ஐ வேள்வி அறு தொழில்களால் மிக்கு
4-ஊன் வாடப் பொருப்பிடைத் தான் வருந்தி
5-துன்ப வினைகளை விடுத்து
6-விவேக சமாதிகள் வளர
7-எட்டு நீக்கி
8-எட்டும் இட்டு
9-எட்டினாய பேதப் பூவில் சாந்தோடு
10-தேவ கார்யம் செய்து
11-உள்ளம் தூயராய்
12-வாரி புன் புல வகத்தினுள் இளைப்பினை அடையவே விளக்கினைக் கண்டு
13-யோக நீதி நண்ணி அறம் திகழும் மறையோர் மனம் தன்னுள் அமர்ந்து உறையும் அரும் பெறும் சுடரை கண்கள் சிவந்ததிற்படியே மனவுட்கொண்டு
14-நிரந்தரம் மறவாமை தொடக்கறா ஸ்ம்ருதியாய் கனவில் மிக்க தர்சன சமமாய் ஆகத்து புல்கு மத்யர்த்த பிரியமாய் வைகும் சிறப்பு விட்டு குற்றேவல் என்னாத அநந்ய பிரயோஜனமாய்
வேதன உபாசன சேவாத்யானாதிகள் என்று சொல்லும் அது சாத்திய சாதன பக்தி யாக சாஸ்திர சித்தம்-சூரணை -99-
(க்யாத குலங்களில் -புகழ் நிறைந்த மேல் குலங்களில் –விளக்கினை -இங்கு ஆத்மாவை –அரும் பெரும் சுடர் -இங்கு பரமாத்மாவை-உள்ளம் தூயராய் –முடிய கர்மத்தைச் சொல்லி -யோக நீதி நண்ணி -முடிய ஞானத்தைச் சொல்லுகிறது)-1-ஜென்மாந்தர சஹஸ்ர நல் தவங்களாலே -அதாவது –
ஜென்மாந்தர சஹஸ்ரேஷு தபோ ஞான சமாதிபி : நராணாம் ஷீண பாபானாம் கிருஷ்ண பக்தி பிரஜாயதே –ஸ்ம்ருதி –என்றும்-ஒன்றி நின்று நல் தவம் செய்து ஊழி ஊழி தோறு எல்லாம்–திருச்சந்த –75 -என்றும் சொல்லுகிற படியே ஜென்மாந்திர சஹஸ்ரங்களிலே த்ரிவித பரித்யாக பூர்வமாக –பகவத் சமாராதன ரூபேண அனுஷ்டிதங்களான சத் கர்மங்களாலே –க்யாத குலங்களில் பிறந்து –-அதாவது
ஸூசினாம் ஸ்ரீ மதாம் கேஹே யோக ப்ரஷ்டோபி ஜாயதே-அதவா யோகிநாமேவ குலே மஹதி தீமதாம்-ஸ்ரீ கீதை -6-41– (-யோகத்தின் ஆரம்ப காலத்தில் யோகத்தில் நின்றும் நழுவினவன் பரிசுத்தர்களும் ஸ்ரீ மான்களுமானவர்களுடைய குலத்தில் பிறக்கிறான் – அன்றிக்கே யோகம் செய்கின்றவர்களும் சிறந்த ஞானிகளுமானவர்களுடைய பெரிய குலத்தில் பிறக்கிறான் ) என்றும்-ஜெனித்வாஹம் வம்சே மஹதி ஜகதி க்யாத யசசாம் சுசினாம் யுக்தாநாம் குண புருஷ தத்வ ஸ்திதி விதாம்—ஸ்தோத்ர ரத்னம் -61–
( நான் உலகில் பிரசித்தமான கீர்த்தியை யுடையவர்களும் பரிசுத்தர்களும் யோகம் செய்து கொண்டு இருப்பவர்களும் குணமயமான பிரகிருதி ஆத்மா இவற்றின் உண்மை நிலையை அறிந்தவர்களும் ஆனவர்களுடைய குலத்திலே பிறந்து ) என்றும் சொல்லுகிறபடி – தத்வ வித்துகளாய் -பரம யோகிகள் என்று ஜகத் பிரசித்தம் ஆனவர்கள் உடைய குலங்களில் பிறந்து –
(ஜந்மாந்தர ஸஹஸ்ர நற்றவங்களாலே) “’ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஜ்ஞாந ஸமாதிபி,ச | நராணாம் க்ஷீண பாபாதாம் க்ருஷ்ணே பக்தி? ப்ரஜாயதே“‘ (லக்வத்ரி ஸ்ம்ருதெள) என்றும், ‘“ஒன்றி நின்று நற்றவம் செய்தாழியூழிதோறெலாம்” (திருச்ச. 75) என்றும், “அநேக ஜந்ம ஸம்ஸித்த,?”’ (கீதை 6 – 45) என்றும் சொல்லுகிறபடியே ஜந்மாந்தர ஸஹஸ்ரங்களிலே பலாபிஸந்தி ரஹிதமாய், பகவத் ஸமாராதந ரூபமான ஸத் கர்மங்களாலே, (க்யாத குலங்களிலே பிறந்து) “*ஸூசீநாம் ஸ்ரீமதாம் கேஹே யோக,ப்ரஷ்டோ அபி,ஜாயதே” (கி,தை 6 – 41) என்றும், “ஜநித்வாஹம் வம்ஸே மஹதி ஜகதிக்யாத யமஸாம் ஸூசீநாம் யுக்தாநாம் குண புருஷ தத்த்வஸ்தி,திவிதாம்”‘ ( ஸ்தோ, 7.61) என்றும் சொல்லுகிறபடியே தத்த்வஜ்ஞாநிகளாய், பரமயோகிகள் என்றும் ப்ரஸித்தரானவர் ஸ்தலங்களிலே வந்து பிறந்து.
ஒன்றி நின்று நல் தவம் செய்து ஊழி ஊழி தோறேலாம்
நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி உள்ளம் தூயராய்
சென்று சென்று தேவ தேவர் உம்பர் உம்பர் உம்பராய்
அன்றி எங்கள் செங்கண் மாலை யாவர் காண வல்லரே –75—சஞ்சலம் ஹி மந க்ர்ஷ்ண -என்கிறபடியே விஷயாந்தரங்களிலே மண்டி -அவற்றில் நின்றும் மீட்க அரிதான நெஞ்சை -பகவத் விஷயத்தில் உத்தேச்ய புத்தியாலே மீட்ட –அம் மனஸ்சோடே பகவத் விஷயத்தில் ஒன்றி நின்று –நல் தவம் செய்து-
தபஸ் என்று –யஜ்ஞே நதாநேந தபஸா நாஸ கேந -என்றும் – யஜ்ஞோ தாநம் தபஸ் கர்மநத்யாஜ்யம் கார்யமே வதத் -என்றும் -சொல்லுகிற கர்மங்களுக்கும் உபலஷணம் –நல் தவம் என்று – ஜீவ பர யாதாம்ய ஜ்ஞான பூர்வகமாகவும் த்ரிவித பரித்யாக பூர்வகமாகவும் – அனுஷ்டிக்கும் கர்ம யோகத்தை சொல்லுகிறது –ஊழி ஊழி தோறேலாம் – புதுப் புடைவையில் அழுக்கு கழற்றுமா போலே -அந்த கர்மத்தாலே விரோதி பாபம் போகும் இடத்தில் –ஜந்மாந்தர சஹஸ்ரேஷூ -இத்யாதி படியே கால தைர்க்யத்தை சொல்லுகிறது-நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி- க்ரமத்தாலே பரம பாவநனாய் இருந்துள்ளவன் குணங்களை அனுசந்தித்து -இத்தால்- விவேக விமோகாதி சாதனா சப்தங்களில் அப்யாசத்தை சொல்லுகிறது –-க்ரமத்தாலே அநவரத பாவநையும் சொல்லுகிறது –உள்ளம் தூயராய் –
உக்தமான கர்ம யோகத்தாலும் பகவத் குண அப்யாசத்தாலும் மநஸா விசுத்தேந -என்றும்-மநஸா க்ராஹ்யா -என்றும் -சொல்லுகிறபடியே –சென்று சென்று-த்ருவாநு ஸ்ம்ர்தி -என்றும் -நிதித்யாஸிதவ்ய -என்றும் -சொல்லுகிறபடி க்ரமத்தாலே அநவரத பாவனை அளவும் சென்று –பரிசுத்த அந்த கரணராய்-சூரிகள் அளவும் செல்ல சோபன க்ரமத்தாலே -பரபக்தி பரஜ்ஞான பரம பக்தி ரூபத்தாலே
உத்க்ர்ஷ்டராய் பெறுவது ஒழிய
ப்ராப்ய புண்யக்ருதாம் லோகாநுஷித்வா ஸாஸ்வதீ: ஸமா:
ஸுசீநாம் ஸ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோऽபிஜாயதே--6-41-யோகத்தில் தவறியவன், புண்ணியம் செய்வோரின் உலகங்களை யெய்தி, அங்கு கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்து, தூய்மையுடைய செல்வர்களின் வீட்டில் பிறக்கிறான்.
ஜநித்வா’ஹம் வம்ஶே மஹதி ஜகதி க்யாதயஶஸாம்
ஶுசீநாம் யுக்தாநாம் குணபுருஷ தத்த்வ ஸ்திதி விதாம் |
நிஸர்கா தேவ த்வச்சரண கமலைகாந்த மநஸாம்
அதோ’த: பாபாத்மா ஶரணத! நிமஜ்ஜாமி தமஸி ||–61-புகலிடம் கொடுக்கும் ஸ்வாமியே! நான் பரிசுத்தமான, உன்னுடன் எப்பொழுதும் இருக்க விரும்புபவர்களான, சித் மற்றும் அசித் ஆகியவற்றின் ஸ்வரூபத்தையும் தன்மைகளையும் நன்கு உணர்ந்தவர்களான, உன் திருவடிகளிலேயே எப்பொழுதும் தன்கள் மனதை வைத்திருக்கும் சிறந்தவர்களான, ப்ரஸித்தமான புகழை உடைய பெரியோர்கள் அவதரித்த, உயர்ந்த வம்சத்தில் பிறந்திருந்தாலும், பாபமே வடிவெடுத்தவனாகையாலே, இந்த ப்ரக்ருதியில் ஆழமாக மூழ்கிக் கொண்டிருக்கிறேன்.
2-எழுதி வாசித்து தத்வஜ்ஞராய் –அதாவது –-தெரித்து எழுதி வாசித்து கேட்டும் -நான்முகன் -63-என்கிறபடியே பகவத் விஷயத்தை அனுசந்தித்து தத் விஷயமான சப்தங்களை லிகிப்பது வாசிப்பது பிறர் சொல்ல கேட்பதாய் கொண்டு இந்த சாஸ்திர அப்யாச முகேன பிறந்த தத்வ ஞானமுடையராய் –3-குளித்து ஓதி உரு எண்ணும் அந்தி ஐ வேள்வி அறு தொழில்களால் மிக்கு –அதாவது – குளித்து மூன்று அனலை ஓம்பும் –திருமாலை -25-என்கிறபடியே -உபாசன அங்கமான -நித்ய கர்ம அனுஷ்டான உபயுக்தமாய் இருந்துள்ள காய சுத்யர்த்தமான ஸ்நானத்தை பண்ணி –-ஓதி உரு எண்ணும் அந்தி–முதல் திருவந்தாதி -33- -என்றும் –ஐ வேள்வி —பெரிய திருமொழி -3-8-4-என்றும்-அறு தொழில் அந்தணர் –திரு எழு கூற்று இருக்கை -என்றும் -சொல்லுகிற சந்த்யாவந்தன காயத்ரி ஜபம் என்ன –
தேய யஜ்ஞம் -பித்ரு யஜ்ஞம் -பூத யஜ்ஞம் -மனுஷ்ய யஜ்ஞம் -ப்ரஹ்ம யஜ்ஞம் -ஆகிய பஞ்ச மகா யஜ்ஞங்கள் என்ன-அத்யயன –அத்யாபன -யஜன -யாஜன -தான -பிரதிக்ரகங்கள் -ஆகிய ஷட் கர்மங்கள் என்ன- இப்படி இருந்துள்ள நித்ய நைமித்திக கர்ம அனுஷ்டானங்களால் பரி பூரணராய்-
(எழுதி வாசித்து தத்த்வஜ்ஞராய்) “தெரித்தெழுதி வாசித்தும் கேட்டும்”” (நான்.திரு. 63) என்று ஸாஸ்த்ராப்யாஸத்துக்கு யோக்யமான அக்ஷர ஸிக்ஷையென்ன, அந்த அக்ஷர ராஸி க்ரஹண ரூபமான வேத அப்யாஸமென்ன, அந்த வேதத்தினுடைய அர்த்த,விஜ்ஞாநத்துக்குறுப்பான ஸாஸ்த்ராப்யாஸமென்ன, உபயத்தினுடையவும் அர்த்த ஸ்ரவணமென்ன; அவற்றாலே பிறந்த தத்த்வ ஜ்ஞாநத்தை யுடையராய். (குளித்து) உபாஸந அங்கமான நித்யகர்மாநுஷ்டாநத்துக்கு உபயுக்தமாக காய ஸூத்த், யர்த்த,மான ஸ்நாநத்தைப்பண்ணி. (ஓதி உருவெண்ணுமந்தி ஐவேள்வி) ஸந்த்யாவந்தந காயத்ரீ ஜப-பஞ்ச மஹா யஜ்ஞங்களைப்பண்ணி. (அறு தொழில்களால் மிக்கு) “அறு தொழி லந்தணர்” (திருவெழுகூ.)என்று யஜந-யாஜத-அத்யயந–அத்யாபந-தாந-ப்ரதிக்ரஹங்களென்கிற ஷட்கர்மங்களாலே பூர்ணராய்-
தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்துரைத்த வென்னாகத்துன்னை-தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது-63-–ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனை ஆஸ்ரித பஷபாதியான உன்னை –தெரித்து -இத்யாதி –அர்த்தத்தை நிர்ணயியா -அத்தை எழுதி வாசித்தும்-பிறர் சொல்லக் கேட்டும் திருவடிகளிலே நிர்மமனாய் வணங்கியும்-அதுவே ஸ்வ பாவமாம்படியும் தத்தத் காலங்களிலே சமாராதானம் பண்ணியும் போது போக்கினேன் தெரித்து -அனுசந்தித்து -என்றுமாம் –
குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தண்மை தன்னை
ஒளித்திட்டேன் என் கண் இல்லை நின் கணும் பக்தனும் அல்லேன்
களிப்பது என் கொண்டு நம்பி கடல் வண்ணா கதறுகின்றேன்
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் அரங்க மா நகர் உளானே –25-கர்ம ஜ்ஞானங்கள் இரண்டும் இல்லையாய் இருக்க – உபய சாத்யமான பக்தி இல்லை என்னும் இடம் சொல்ல வேணுமோ -என்னில் –
ஜன்மாந்தர சஹஸ்ரேஷூ தபோ ஜ்ஞான சமாதிபி நராணாம் ஷீண பாபாநாம் க்ர்ஷ்னே பக்தி பிரஜாயதே-என்கிறபடியே உண்டாகலாம் இறே – அதுவும் இல்லை என்கை –கதறுகின்றேன் –
அந் நிலையிலே தான் நிற்கப் பெற்றேனா –சாதன அனுஷ்டானம் பண்ணி பலம் தாழ்ந்தால் கூப்பிடுவாரைப் போலே ஸ்ரவண கடுகமாக கூப்பிடா நின்றேன் –
நகர மருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல்
பகர மறை பயந்த பண்பன் பெயரினையே
புந்தியால் சிந்தியா தோதி யுரு வெண்ணும்
அந்தியா லாம் பயன் அங்கு என் –33–ஸ்வா பாவிக சம்பந்தத்தை அனுசந்தித்து அவனை உகப்பியாதே
–எம்பெருமானை அகலுகையே பலித்து விடுவது —அவன் குணங்களுக்கு வாசகமான திரு நாமம்- ஓதி இத்யாதி – அஹ்ருதயமாகப் பண்ணும் ஆயாச ரூபமான கர்மத்தைப் பற்றுவதே –
சிறையார் உவணப் புள் ஓன்று ஏறி அன்று திசை நான்கும் நான்கும் இரிய செருவில்
கறையார் நெடு வேல் அரக்கர் மடியக் கடல் சூழ் இலங்கை கடந்தான் இடந்தான்
முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால் வேதர் ஐ வேள்வி யாறங்கர் ஏழின் இசையோர்
மறையோர் வணங்கப் புகழ் எய்து நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே !–3-8-4- நாலு வேதத்தை உத்தரிப்பாராய் பஞ்ச மகா யஞ்ஞாத்ய அனுஷ்டானங்களில் — சப்த ரசங்களையும் உள்ளபடியே அறிந்து இருக்கும் பிராமணர்-
முத்தீ நான்மறை ஐவகை வேள்வி அரு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை-அறு தொழில் –யஜனம் -யாஜனம் -அத்யயனம் -அத்யாபனம் -தானம் -ப்ரதிக்ரஹம் -என்கிற ஷட் கர்மங்களை யுடையரான-அத்யயனம் பண்ணுகை -பண்ணுவிக்கை-யஜிக்கை -யஜிப்பிக்கை -தானம் பண்ணுகை கொள்ளுகை-என்றால் போலே சொல்லுகிற இவற்றைத் தொழிலாக யுடையரான ப்ராஹ்மாணருக்கு ஆஸ்ரயணீயனாய் இருக்கும் படி சொல்லிற்று-
4-ஊன் வாட பொருப்பிடை தாம் வருந்தி –அதாவது-ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு -பெரிய திருமொழி -3-2-1-என்றும்-பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பிடையே நிற்கவும்–மூன்றாம் திருவந்தாதி -78–என்றும்-வீழ் கனியும் ஊழ் இலையும் என்னும் இவையே நுகர்ந்து -உடலம் தாம் வருந்தி—பெரிய திருமடல் -12-என்றும்-சொல்லுகிற படி நித்ய கர்மாதிகளை அவிகலமாக அனுஷ்டிக்கையாலே தபசர்ய யோக்யதை பிறந்தவாறே -காய சோஷன அர்த்தமாக -அசநத்தை குறைத்து – பிராண தாரணத்துக்கு தக்க அளவாக்கி -உஷ்ண காலத்திலேயே பர்வதாக்ரத்திலும் –
பஞ்ச அக்னியில் மத்தியிலும் நின்றும் -சீத காலங்களில் அகாக்யமான தடாகங்களில் மூழ்கிக் கிடந்தும் –ஜீர்ண பர்ண பல அசநராயும் –இப்படி தபச் சர்யையாலே சரீரத்தை சோஷிப்பித்து ( வாடச் செய்து )–
-“ஊன்வாட உண்ணாதுயிர்காவலிட்டு”” (திருமொழி 3 – 2 – 1) என்று அவிகலமான நித்யகர்மாநுஷ்ட,ாநத்தாலே தபம்சர்யைக்கு யோக்,யமானவாறே தத,ர்த்த, மான காயபோஷணார்த்த_மாக நிராஹாரராய், அவ்வளவிலும் ப்ராணத,ரணார்த்த, மாக அப், க்ஷ்ணவாயுப,க்ஷணங்களைப்பண்ணி. (பொருப்பிடைத்தாம் வருந்தி) ”பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும் ஐந்து நெருப்பிடையே நிற்க” (மூ.திருவ. 76) என்றும், ‘‘வீழ் கனியுமுழிலையுமென்னுமிவையே நுகர்ந்துடலம் தாம் வருந்தி” (பெ.திருமடல்) என்றும் சொல்லுகிறபடியே க்,ரீஷ்மகாலங்களில் பர்வதாக்,ரத்திலே நின்றும், பஞ்சாக,நிமத்,யே நின்றும், பபீதகாலங்களிலே அறாக்கயமான தடாகங்களிலே மூழுகிக்கிடந்தும், ஜீர்ணபர்ணப,லாரநராயும் இப்படி தபஸ்சர்யையாலே மாரீரத்தை ஸோஷிப்பித்து.
ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாள கிற்பீர்
கானாட மஞ்சைக் கண மாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடை போய்
தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே–3-2-1—மாம்சமானது குறைய-( இடை சிறுத்து வைராக்யம் மிக்கு ) அசன வசநாதிகளைக் குறைத்து பிராணங்களைப் போகாதபடி அப்பஷண வாயு பஷணங்களாலே கால் கட்டி சரீரத்தை விட்டுப் போகாத இந்திரியங்கள் ஐந்தும் ஸ்வ ஸ்வ விஷயங்களைப் பெறாமையாலே நொந்து ஈடுபடும் படி தாங்கள் மேன்மேலும் கிலேசிக்கும்படி தபஸு பண்ண வேண்டா
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா -விருப்புடைய
வெக்காவே சேர்ந்தானை மெய்ம் மலர் தூயக் கை தொழுதால்
அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——-76—பனி நாள் மலைகளில் (நின்றும் பனி நாளில் )பொய்கைளிலே புக்குக் குளித்து–கோடை நாள் பஞ்சாக்கினி மத்யஸ்தனாய் நிற்கவும் வேண்டா –(வேண்டா என்று முன்னிலையாகச் சொல்வதே போதுமே-நீர் வேண்டா என்று குறிப்பிட்டுச் சொல்வான் என்னில் நம்மைப் பெறவே அவன் கோர மா தவம் செய்கின்றான் என்பதை காட்டவே -)
தொன்னெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழிலையும் –12
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தித்
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெஞ்சுடரோன் —-13
மன்னு மழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்-
இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டு எழுந்து —-14—வீழ் கனியும் – தானே விழுந்து பசை அற்ற கனியும்-ஊழிலையும் – முளையிலே விழுந்த இலையும் – முற்றிப் பழுத்த சருகான இலையும் –என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தித்- அதாவது -சருகு இலை தின்றும் காயும் கிழங்கும் தின்றும் இ றே தபஸ் ஸூ அனுஷ்டிப்பது-அவதாரணத்தாலே-ஒரு வ்ரத சமாப்தி பிறந்து பின்னை ஒரு வ்ரத ஆரம்பித்ததின் முன்னே யாகிலும்-ஏகவாரம் அன்னம் புஜித்ததும் இல்லை என்று தோன்றுகிறது –
இத்தால் அநவரத காயக் கிலேசம் சொல்லுகிறது-நுகர்ந்து – அந்த சாதனத்தில் பண்ணின ஆதரம் தோற்ற போக்யதை உண்டானது போலே இருக்க புஜிககை-உடலம் தாம் வருந்தி – அபிமத விஷயத்தைக் கண்டு இங்கே அனுபவிக்கலாய் இருக்கிற சரீரத்தை கிலேசிப்பித்து-தாம் வருந்தி
இவனுடைய கர்மம் கொண்டு போய் கிலேசிப்பித்தல் தைவம் கொண்டு போய் கிலேசிப்பித்தல் செய்யும் அது ஒழிய தாமே கிலேசிப்பித்து-
5-துன்ப வினைகளை விடுத்து –அதாவது – கீழ் சொன்ன கர்ம அனுஷ்டானத்தாலே மேவு துன்ப வினைகளை விடுத்து -திருவாய் -3-2-8-என்கிற படியே-தில தைலாதிவத்-( எள்ளில் எண்ணெய் போன்று ) ஆத்மாவோடு பிரிக்க ஒண்ணாத படி பொருந்திக் கிடக்கிற துக்க ஹேதுவான பாபங்களை –தர்மேன பாப மபநுததி-தைத்ரியம் – ( நாள்தோறும் செய்யவேண்டிய கர்மங்களைச் செய்கையாலே பாவங்களை போக்குகிறான் ) -என்கிற படியே போக்கி –
(துன்ப வினைகளை விடுத்து) ““மேவுதுன்பவினைகளை விடுத்தும்”” (திருவா. 3 – 2 – 8) என்று கீழ்ச்சொன்ன கர்மாநுஷ்டாநத்தாலே ”திலதைலவத்,தாருவஹ்நிவத்’” (ஸர.க.த்,யம்) என்கிறபடியே ஆத்மாவோடு பிரிக்கவொண்ணாதபடி பொருந்திக் கிடக்கிற து,2க,ஹேதுவான பாபங்களை “த,ர்மேண பாபமபநுத,தி” (தை. உப.) என்கிறபடியே க்ஷயிப்பித்து.-
மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே
கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே –3-2-8—இவ்வாத்மாவுக்கு நிரூபகமோ என்னும்படி பொருந்தின சாம்சாரிகமான துக்கத்தை விளைவிப்பதான தத் பிராப்தி விரோதிகளை
-தர்மேண பாபமப நுதி-என்று விகித அனுஷ்டானத்தாலே போக்கவும் மாட்டிற்று இலேன்
நிதித்யாசி திவ்ய -என்கிறபடியே அனவ்ரத பாவன ரூபமான பக்தியை பண்ணப் பெற்றிலேன் –
6-விவேக சமாதிகள் வளர –விவேகாதிகள் -சமாதிகள் -வளர –அதாவது – இப்படி பிரதிபந்தக பாப நிவ்ருத்தியாலே மனசுத்தி ஹேதுவான விவேகாதி சப்தகமும் – சம தம நியதாத்மா சர்வபூதானுகம்பீ -(சமம் தமம் இவற்றில் நியமத்துடன் கூடிய மனத்தை யுடையவன் எல்லா உயிர்கள் இடத்திலும் அருள் பொருந்தினவன் )இத்யாத் யுக்த சம தமாதிகளும் அபிவிருத்தமாக .. ( விவேகம் -விமோகம் -அப்பியாசம் -கிரியை -கல்யாணம் -அநவசாதம் -அநுத் தர்ஷம் )–இதில் விவேகமாவது –( சரீரத்தின் தூய்மை )
ஜாத்ய ஆஸ்ரய நிமித்த அதுஷ்டாத் அன்னாத் காய சுத்திர் விவேக -போதாயன விருத்தி –(சாதி – ஆஸ்ரயம் – நிமித்தம் – என்ற மூன்று குற்றங்கள் இல்லாத அன்னத்தால் காயசுத்தி-சரீரத்தின் தூய்மை – ஏற்படும் ) என்கிறபடியே – ஜாதி துஷ்டமும் -ஆஸ்ரய துஷ்டமும் நிமித்த துஷ்டமும் இன்றிக்கே இருந்துள்ள அன்னத்தால் உண்டான காய சுத்தி –ஜாதி துஷ்டங்கள் ஆனவை -களஞஜ்க்ரஞ்ச நாதிகள் ( வெங்காயம் காளான் என்கிற நாய்க்குடை போல்வன ) ..ஆஸ்ரய துஷ்டங்கள் ஆனவை -அபிசச்த பதித சண்டாளாதிகள் உடைய த்ரவ்யம் –(அபிசஸ்தன்-பிறரால் இகழப்படுபவன் -பதிதன் -தன் நிலையில் நின்றும் இழிந்தவன் -சண்டாளாதிகள் -கர்ம ஜாதி சண்டாளர்கள் )ஆஸ்ரயம் என்றது -த்ரவ்ய ஸ்வாமியான புருஷனைச் சொல்லுகிறது ..-நிமித்த துஷ்டம் ஆவது -உச்சிஷ்ட கேசாத் யுபஹதம் ஆனது (எச்சில் மயிர் கல் முதலியவற்றுடன் கூடிய பொருள் ) இந்த த்ரிவித தோஷமும் இல்லாத ஆகாரத்தின் விவேசந பலமான காய சுத்தியிலே-விவேக சப்தம் உபசாரனோக்தம்–அன்றிக்கே – விவிக்த ஆகார சேவையாலே ராஜச தாமச ஹாராப்யாயித தேஹத்தில் காட்டில் ஸ்வ தேஹத்தினுடைய விவேசனம் விவேகம் என்னவுமாம் —சுத்தி யாவது -அகத்தே பயோ விவேசனம் இறே ( அசுத்தங்கள் நின்றும் பிரித்து அறிதல் ) காய சுத்தி -என்ற இடத்தில் காய சப்தத்தால் அந்த கரணத்தை சொல்லுகிறது –
ஆகார சுத்தவ் சத்வ சுத்தி-சாந்தோக்யம் -என்று சுருதி சொல்லிற்று –சத்வமாவது அந்த கரணம் இறே —
அபயம் சத்வசம் சுத்தி -ஸ்ரீ கீதை –16-1-( சத்துவத்துக்குத் தூய்மை பயம் அற்று இருத்தல் )என்றும் –
சத்வானுரூப சர்வஸ்ய ஸ்ரத்தா பவதி -ஸ்ரீ கீதை -17-3-–(எல்லாருக்கும் ஸ்ரத்தையானது சத்வத்துக்குத் தகுதியாக உண்டாகிறது ) என்றும் சொல்லுகிற இடங்களிலும் –சத்வ சப்தம் அந்த கரணம் வாசியாக ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தார் இறே — ஆகை இறே விவேகமாவது -ஆகார சுத்தவ் சத்வ சுத்தி-என்கிற படியே அந்த கரண சுத்திக்கு அடியான அன்ன சுத்தி என்று ஸ்ரீ ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தது .–விமோகமாவது -விமோக காமாநபிஷ்வங்க-போதாயன விருத்தி –என்கிற படி காமத்தில் அநபிஷ்வங்கம்..-யாதொரு விகாரத்தாலே விஷயத்தை புஜியாது நிற்க மாட்டான் -அந்த விகாரம்-அபிஷ்வங்கம் — காமத் க்ரோதோபீஜாயதே -ஸ்ரீ கீதை –2-62 –இத்யாதி வசனத்தாலே குரோத அத்யபாவமும் இவ் இடத்தில் பலிதம் –அப்யாசமாவது – ஆரம்பண சம்சீலனம் புன புன அப்யாசக-போதாயன விருத்தி – -என்கிற படி-த்யான அலம்பனமான வஸ்துவிலே பலகாலம் பரிசீலனம் பண்ணுகை –-ஆரம்பணம் என்றது -ஆலம்பனம் என்ற படி- இவ் இடத்தில் ஆலம்பனம் ஆவது-ஸூபாஸ்ரயம் –( தியானத்துக்கு உரிய பொருளை )–கிரியையாவது -பஞ்ச மகா யஜ்ஞாத்ய அனுஷ்டானம் -சக்தித க்ரியா-போதாயன விருத்தி – -என்கிறபடியே-பஞ்ச மகா யக்ஞாதி நித்ய கர்மங்களை வல்ல அளவும் அனுஷ்டிக்கை –கல்யாணமாவது -சத்யார்ஜவ தயா தான ஹிம்சாநபித்யா கல்யாண நி ”–போதாயன விருத்தி – –என்கிற படியே – சத்யம், ஆர்ஜவம் ,தயை தானம் ,அஹிம்சை, அனபித்யை – ஆகிற இவை கல்யாணம் எனப்படும் –-இதில் சத்யம் -பூத ஹிதம் ..ஆர்ஜவம்-மனோ வாக் காய ஏக ரூப்யம் . தயை-ஸ்வார்த்த நிரபேஷை–பர துக்க அசஹிஷ்ணுத்வம் –-தானம்-லோபராஹித்யம்-அஹிம்சை- கரண த்ரேயேண பர பீடா நிவ்ருத்தி அபித்யை-பர கீயே ஸ்வ புத்தி -பிறர் பொருளை தனது பொருளாகக் கருதுதல் )அன்றிக்கே நிஷ் பல சிந்தை யாதல் -பரக்ருத அபகார சிந்தை ஆதலுமாம் .-அது இல்லாமை- அநபிதியை—அனவசாதமாவது -தேச கால வைகுண்யாத் -சோக வஸ்த்வாத்ய நுசம்ருதேச்ச தஜ்ஜம் சைதன்யம் அபாஸ்வரத்வம் மனச அவஸாத-போதாயன விருத்தி -–என்கிறபடியே
தேச கால வைகுண்யத்தாலும்(குணக் கேட்டினாலும் ) சோக ஹேதுவாயும் பய ஹேதுவாயுமாய் உள்ள வஸ்துக்களில் அனுசம்ருதியால் உண்டான தைன்யமாகிற மனசினுடைய அபாஸ்ரத்வம் ,அவசாதம் ஆகையாலே ,அதனுடைய விபர்யயம்-சோக வஸ்து என்றது -சோக நிமித்த வஸ்து என்ற படி –அதாவது அதீதமான புத்ர மரண ஆதி- ஆதி சப்ததாலே -பய நிமித்தமான ஆகாமி வஸ்து விவஷிதம் – சோகம்-அதீத விஷயமாய்-பயம்-ஆகாமி விஷயமாய் இறே இருப்பது–அபாஸ்த்ரத்வம் என்கிற இது -தைன்ய சப்த விவரணம் ..தைன்யமாவது – அபீஷ்ட கார்ய பிரவர்த்ய ஷமத்வம் –பாஸ்வரத்வ விரோதி என்று தைன்ய விசேஷணம் ஆகவுமாம்– அனுத்தர்ஷம் ஆவது –தத்வி பர்யயஜா துஷ்டி ருத்தர்ஷ -என்கிற படி
தேச கால ஷாட் குண்யத்தாலும் பிரியவஸ்த்வாத்ய அனு ஸ்ம்ருதியாலும் உண்டான துஷ்டி உத்கர்ஷம் ஆகையாலே அதனுடைய விபர்யயம் –அதாவது ஹர்ஷ ஹேதுகள்–உண்டானாலும் அப்ரீதனாகது ஒழிகை- (பாஸ்வரம் -விளக்கம் -தெளிவு -அபாஸ்வரம் -தெளிவின்மை -தைன்யம் -வறுமைத் தன்மை )இனி–சமாதிகளில் – -அதாவது – சமம் ஆவது அந்த கரண நியமனம் – தமம் ஆவது பாஹ்ய கர்ண நியமனம் சமச் சித்த பிரசாந்திஸ் ஸ்யாத் தமச்சேந்திரிய நிக்ரஹ – என்னக் கடவதிறே–
ஷமா சத்யம் தமச் சம –என்கிற இடத்தில்-தமோ பாக்ய கரணானம் அநர்த்த விஷயேப்யோ நியமனம் -சம – அந்த கரணச்ய ததாவித நியமனம் –என்று இறே ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தது –-மாறி சொல்லும் இடங்களும் உண்டு ..-ஆத்ம குணங்களில் பிரதானங்கள் இறே இவை … சாந்தோ தாந்த உபரதஸ் திதிஷூ சமாஹிதோ பூத்வா ஆத்மன்யேவ ஆத்மானம் பச்யேத்–ப்ருஹதாரண்யம் -6-4-23-
( மனத்தினை அடக்கி புற இந்திரியங்களை அடக்கி காம்யகர்மங்களில் ஆசை இல்லாதவனும் பொறுமை யுள்ளவனும் சமாதானம் யுடைய மனத்தினையும் யுடையவனாகி இந்த உயிரினிடத்திலே பரம்பொருளை பார்க்கக் கடவன் )-என்கையாலே , உபாசனத்தில் இழியும் அவனுக்கு ,பிரதம அபேஷிதங்கள் இவையாக இறே சுருதியும் சொல்லிற்று ..-மற்றும் உள்ள ஆத்ம குணங்களுக்கும் எதா யோகம் அர்த்தம் கண்டு கொள்வது ..-ஆக இப்படி இருந்துள்ள விவேகாதிகளும் சமாதிகளும் மேன்மேலும் அபிவிருத்தமாய் வளர –
(விவேகமாமாதிகள் வளர) இப்படி பாப விமோசநம் பிறந்தவாறே மநோ நைர்மல்ய ஹேதுவான விவேக-விமோகாப்,யாஸ க்ரியா கல்யாணாநவஸா தநுத்த,ர்ஷங்களும், ““ஸமதம நியதாத்மா ஸர்வ பூதாநுகம்பீ விஷய ஸுக விரக்தோ ஜ்ஞாந த்ருஷ்டி ப்ரபந்ந ச । அநியதநியதாந்தோ நைவ ருஷ்டோ ந ஹ்ரூஷ்டச ப்ரவஸித இவ கேஹே வர்த்ததே யஸ்ஸ முக்தச”” என்கிற ஸமாதி,களும் அபி,வ்ருத்தமாக.-இதில் விவேகமாவது – “’ஜாத்யாஸ்ரய நிமித்தாது,ஷ்டாத,ந்நாத் காயமாத்திர் விவேக” (போதாயந) என்கிற காய ஸூத்திக்கடியான அந்ந ஸூத்தி,.-விமோகமாவது – காமாநபி,ஷ்வங்க,ம். அப்,யாஸமாவது -““ஆரம்பண ஸம்ஸபீலநம் புந புநரப்யாஸ?”’ என்று த்,பாநாலம்பநவஸ்துவிலே பலகாலும் பரிஸீலநம் பண்ணுகை. க்ரியையாவது “பஞ்ச மஹா யஜ்ஞாத்,யநுஷ்டாநம் ஸக்திதா க்ரியா?” என்று நித்ய கர்மங்களை வல்லவளவும் அநுஷ்டிக்கை, கல்யாணமாவது – ““ஸத்யார்ஜவத யாதாநா ஹிம்ஸாநபி,த்,பா கல்யாணாநி” என்கிற ஸத்யார்ஜவத, யாத,நா ஹிம்ஸாதி,கள். அநவஸாத,மாவது **ஸோக ஹேதுஷு மநஸ? கேத,ராஹித்யம் அநதவஸாத,” என்கிறபடியே ஸோகஹேதுக்கள் உண்டானாலும் நெஞ்சு தளராதிருக்கை. அநுத்தர்ஷமாவது – ““தத் விபர்யயஜா துஷ்டி: – உத்தர்ஷச தத்,விபர்யய? – அநுத்த.ர்ஷ?’” என்று ஹர்ஷ ஹேதுக்கள் உண்டானாலும் அதி ப்ரீதனாகாதொழிகை –
7-எட்டு நீக்கி-அதாவது-ஈனமாய எட்டும் நீக்கி –திருச்சந்த -114–என்று ஞான சங்கோசதயா ஆத்மாவுக்கு குறையான அவித்யாதிகள் ஐந்தும் ,( அவித்யை -செருக்கு -இராகம் -த்வேஷம் அபிநிவேசம் ) சரீர சம்பந்த பிரயுக்தமான தாப த்ரயங்களும் ஆகிற எட்டையும் போக்கி —துன்ப வினைகளை விடுத்து -அதாவது –கீழேயும் கர்ம விமோசனம் சொல்லிற்றே என்னில் – அங்கு சொல்லிற்று ஞான உத்பத்தி விரோத பிராசீன கர்ம மாதரம் ஆகையால் விரோதம் இல்லை – அன்றிக்கே ஆத்மாவுக்கு பொல்லாங்கை பண்ணுவதான-காம குரோத லோப மோஹ மத மாத்சர்ய அஞ்ஞான அசூயை ஆகிய எட்டையும் போக்கி என்னவாம்-–காமம் ஆவது-அர்தித்த பதார்த்தம் அனுபவித்து அல்லாது நிற்க ஒண்ணா தசை –குரோதமாவது -அதின் கார்யமாய் அர்தித்த பதார்த்த அலாபத்தில் சந்நிஹிதர் பக்கல் பிறக்கும் சீற்றம் ..-லோபம் ஆவது –சந்நிஹிதர் பதார்த்தத்தில் அதி பிராவண்யம் ..-மோஹம் ஆவது கர்தவ்ய அகர்தவ்யங்களை விவேகிக்க மாட்டாது ஒழிகை .-மதம் ஆவது அர்தாதி லாபத்தில் வரும் களிப்பு-மாத்சர்யம் ஆவது-பர சமிர்தியை பொறாமையை அனுஷ்டான பர்யந்தமாக நடத்துகை ..
அஞ்ஞானம் ஆவது -இவற்றால் மேல் வரும் அநர்த்தம் நிரூபியாமை ..அசூயை ஆவது -குணங்களில் தோஷத்தை ஆவிஷ்கரிக்கை ..-ஏவம் பூதங்களான இவற்றைப் போக்கி என்ற படி –
(எட்டு நீக்கி) ‘ஈனமாய எட்டு நீக்கி” (திருச்ச. 114) என்கிறபடியே ஆத்மாவுக்குப் பொல்லாங்கைப் பண்ணக் கடவதான ‘காம-க்ரோத,- லோப, -மோஹ-மத, -மாத்ஸர்ய-அஜ்ஞாத-அஸூயைகள் என்கிறவற்றை விட்டு. –
ஈனமாய எட்டும் நீக்கி ஏதமின்றி மீது போய்
வானமாள வல்லையேல் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
ஞானமாகி நாயிறாகி ஞாலம் முற்றும் ஓர் எயிற்றில்
ஏனமாய் இடந்த மூர்த்தி யெந்தை பாதம் எண்ணியே -114-சேதனர்க்கு குறையான அவித்யாதிகள் ஐந்தையும் சரீர சம்பந்த பிரயுக்தமான தாபத் த்ரயங்களையும் நீக்கி – இவை இவனுக்கு ஜ்ஞான சங்கோசம் என்கையாலே –ஈனம் -என்கிறது –
8-எட்டும் இட்டு-அதாவது –இன மலர் எட்டும் இட்டு –பெரிய திருமொழி -1-2-7-என்றும் –கந்த மா மலர் எட்டும் இட்டு –பெரிய திருமொழி -3-5-6-என்றும் -சொல்லுகிற படி ஓர் ஒரு அஷரங்கள் பரிமளோத்தரமான புஷ்பம் போலே அவனுக்கு போக்யமாம் படி இருக்கையாலே , அஷ்ட வித புஷ்பம் சமர்பிப்பாரை போலே திரு மந்த்ரத்தை அனுசந்தித்து ,-அவன் பெயர் எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே–திருச்சந்த –77 -என்றும் –ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும் வாரமாக ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –திருச்சந்த –78-என்றும் சொல்லக் கடவதிறே
அன்றிக்கே –அஹிம்சா பிரதமம் புஷ்பம் ,புஷ்பம் இந்திரிய நிக்ரக -சர்வ பூத தயா புஷ்பம் , ஷமா புஷ்பம் விசேஷத-ஞானம் புஷ்பம் தப -புஷ்பம் த்யானம் -புஷ்பம் தவைவச சத்யம் அஷ்ட வித புஷ்பம் விஷ்ணோ பிரதீகரம் பவேத் -என்கிற படியே அஹிம்சாத் அஷ்ட வித புஷ்பங்களையும் இட்டுமாம் —கீழே விவேக சமாதிகள் என்றதில் அந்தர் பூதங்களானவை இதிலும் வந்ததாகிலும் ஈஸ்வரனுக்கு இவற்றை போக்யத்வேன அனுசந்தித்து அனுஷ்டிக்கையைச் சொல்கிறது ஆகையாலே விரோதமில்லை –ஆகையிலே இவற்றை புஷ்ப சமர்பணமாக சொல்கிறது —
(எட்டுமிட்டு) “கந்தமாமலரெட்டுமிட்டு” (திருமொழி 3 – 5.- 6), “இனமலரெட்டுமிட்டு’” (திருமொழி 1 – 2 – 7) என்கிறபடியே “அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம் புஷ்பமிந்த்ரிய நிக்ரஹ?। ஸர்வபூததயா புஷ்பம் க்ஷமா புஷ்பம் விஸேஷத: । ஜஞாநம் புஷ்பம் தப? புஷ்பம் தயாநம் புஷ்பம் ததைவ ச ! ஸத்யமஷ்டவிதம் புஷ்பம் விஷ்ணோ: ப்ரீதிகரம் பவேத்” என்கிறபடியே அஹிம்ஸாதிகளான அஷ்டவித, புஷ்பங்களை இட்டு. இந்த அஹிம்ஸாதிகள் திருவுள்ளத்துக்கு உகப்பாகையாலே புஷ்பமென்கிறது –
கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய கறி வளர் கொடி துன்னி
போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய பூம் பொழில் இமயத்துள்
ஏர் கொள் பூஞ்சுனைத் தடம் படிந்து இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள்
பேர்கள் ஆயிரம் பரவி நின்றடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே —1-2-7—அஹிம்ஸாதிகளான புஷ்பங்கள் எட்டும் இட்டு(அஹிம்சா-பிரதமம் இந்திரிய நிக்ரஹம் சர்வ பூத ஹிதம் ஷமா தானம் தபஸ்
த்யானம் சத்யம் -அஷ்ட விதம் விஷ்ணுவுக்கு பிரிய தர்மம் )-அன்றிக்கே –செங்கழுநீர் செண்பகம் இருவாட்சி பாதிரி புன்னை குறுக்கத்தி கருமுகை தாமரை என்றாப் போலே பிரதானமாய் இருப்பன எட்டும் ஆதல்-அஷ்டாங்க பிரணாமத்தை சொல்லுதல் ஆதல் –-மனஸ் புத்தி அஹங்காரம் தலை கால்கள் கைகள்- அத்தை மலர் என்னும்படி என் – என்னில் பூவோபாதி அவனுக்கு ஸ்ப்ருஹா விஷயமாய் இருக்கும் ஆகில் இறே – சூட்டினேன் சொன் மாலை -என்னுமா போலே –
அன்றிக்கே கீழில் திரு மொழியில் திரு மந்த்ரம் பிரஸ்துதம் ஆகையாலே திரு வஷ்டாஷரத்தை சொல்லிற்று ஆதல் –
கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்
அந்தணாளரறா அணியாலியம்மானே –3-5-6—கந்த வத்தான விலஷண புஷ்பங்கள் எட்டையும் இட்டு –
அவை யாவன – கருமுகை -கற்பகம் -நாழல் -மந்தாரம் -சௌகந்தி -செங்கழுநீர் – தாமரை -கைதை –
ஸ்வாபதேசம் – பரம போக்யமான திரு மந்தரத்தால் பிரதிபாத்யமான வஸ்துவின் பக்கலில் தன்னை சமர்ப்பித்து – சர்வ கந்த -என்கிற வஸ்து ஆகையாலே – உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான சிவந்த திருவடிகளை கையாலே தொழுது உஜ்ஜீவிக்க வேணும் என்னும் அத்யவாசாயத்தை உடைய என்னுடைய ஹிருதயத்திலே –
எட்டும் எட்டும் எட்டுமாய் ஒரு ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டு மூன்று ஒன்றுமாகி நின்ற வாதி தேவனை
எட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்றவன் பெயர்
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –77-–கீழ்ச் சொன்ன ஜகத் அந்தராத்ம பாவத்துக்கு வாசகமான மந்த்ராந்தந்தரங்களில் காட்டில் திரு அஷ்டாஷரத்தை வாயாலே உச்சரிக்குமவர்கள் –வல்லர் வானம் ஆளவே –அர்த்தத்தை மனசாலே அனுசந்தித்தும் –வாயாலே சப்தத்தை உச்சரித்தும் –
சாரீரமான ப்ரணாமத்தை பண்ணியும்-இப்படி மநோ வாக் காயங்களாலே பஜிக்குமவர்கள் இட்ட வழக்கு பரமபதம் -என்கை-
சோர்விலாத காதலால் தொடக்கறா மனத்தராய்
நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல்
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும்
வாரமாக வோதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –78—ஷீராப்தி நாதன் திருநாமமான திருவஷ்டாஷரத்தையும் –-ஏஷ நாராயண ச ஸ்ரீ மான் -என்றும் – நாராயணனே நமக்கே பறை -தருவான் என்றும் – பவான் நாராயணோ தேவ -என்றும் – தர்மி புக்க விடம் எங்கும் இத்திருநாமம் பிரதம அபிதாநமாய் இருக்கும் -என்கை–நமோ நாராயணா யேதி மந்தரைக சரணா வயம் –என்கிறபடியே
தன் நிஷ்டராய்க் கொண்டு சொல்லுமவர்கள் – பரமபததுக்கு நிர்வாஹகராக வல்லர் -என்கிறார் –
9-எட்டினாய பேத பூவில் சந்தொடு தேவ கார்யம் செய்து –அதாவது – எட்டினாய பேதமோடு இறைஞ்சி -திருச்சந்த -77-என்கிற படியே-மநோ புத்ய அபிமாநேன சஹன்யச்ய தராதலே கூர்ம வச்சதுர : பாதான் சிரஸ் தத் ரைவ பஞ்சமம் -என்கிற படியே , பக்நாபிமானனாய் விழுகையும் , மநோ புத்திகளுக்கு ஈஸ்வரனே விஷயம் ஆகையும் , பாத த்வயங்களும் ,கர த்வயங்களும் ,சிரசும் பூமியிலே பொருந்துகுகை யாகிற அஷ்டாங்க பிரமாணத்தைப் பண்ணி ,-
(எட்டினாய பேதம்) –““எட்டினாய பேதமோடிறைஞ்சி’* (திருச்ச. 77) என்கையாலே “மநோ புத்தி அபிமாநேந ஸஹ ந்யஸ்ய தராதலே ! கூர்மவச் சதுர ச பாதந் ஸிரஸ் தத்ரைவ பஞ்சமம்” என்றும், “*உரஸா ஸிரஸா த்ருஷ்ட்யா வசஸா மநஸா ததா ॥ பத்ப்யாம் கராப்யாம் ஜாநுப்யாம் ப்ரணா மோஷ்டாங்க, ஈரித?‘ என்றும், பக்நாபிமாநனாய் விழுகையும், மநோ புத்திகளுக்கு ஈஸ்வரனையே விஷயமாக்குகையும், பாணித்வயமும், பாத த்வயமும், ஸிரஸ்ஸும் பூமியிலே பொருந்துகையாகிற அஷ்டாங்க ப்ரணாமத்தைப் பண்ணி.
எட்டும் எட்டும் எட்டுமாய் ஒரு ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டு மூன்று ஒன்றுமாகி நின்ற வாதி தேவனை
எட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்றவன் பெயர்
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –77-–எட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்று
அஷ்டாங்க ப்ரணாமத்தை பண்ணி அம்முகத்தாலே ஆஸ்ரயித்து நின்று பிரணாமத்துக்கு அஷ்டாங்கதை யாவது –-பக்ன அபிமாநியாய் விழுகையும் மநோ புத்திகளுக்கு ஈச்வரனே விஷயம் ஆகையும்-பத த்வய கர த்வயங்களும் கூர்மவத் பூமியிலே பொருந்துகையும்-
பூவில் புகையும் விளக்கும் சாந்தும் நீரும் மலிந்து –திருவாய் -5-2-9-என்றும் சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல வாய்ந்து கொண்டு –திருவாய் -10-2-10-என்கிற படியே புஷ்பாங்கராதிகளான சாமராதந உபகரணங்களைப் பல சங்க கர்துவங்களாகிற-துராலும் ,மயிரும் ,புழுவும் படாத படி ஆராய்ந்து மிகவும் சம்பாதித்து கொண்டு ,-10-தேவ கார்யம் செய்து–பெரியாழ்வார் -4-4-1 -என்கிற படியே பகவத் சமாராதனத்தை செய்து –11-உள்ளம் தூயராய் –அதாவது –-ஒன்றி நின்று நல் தவம் செய்து ,ஊழி ஊழி தோறு எல்லாம்நின்று , நின்றவன் குணங்கள் உள்ளி உள்ளம் தூயராய்—திருச்சந்த -75-என்கிற படியே , நித்ய கர்ம அனுஷ்டானம் தொடங்கி,பகவத் ஆராதன பர்யந்தமாக பண்ணும் , த்ரிவித பரித்யாக பூர்வகமான கர்ம அனுஷ்டானத்தாலும் ,பகவத் குண அனுசந்தாதாலும் – காஷயே கர்மபி :பக்வே ததோ ஜ்ஞானம் ப்ரவர்த்ததே –( கர்மங்களைச் செய்வதனால் பாபம் அழிந்த அளவில் பின்னர் ஞானம் தோன்றுகிறது )-என்கிற படி ஜ்ஞான யோகார்ஹமாம்படி ம்ருதீத கஷாயர் ஆகையாலே ,பரிசுத்த அந்த கரணராய்-
(பூவில் சாந்தொடு தேவ காரியம் செய்து) “பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து ” (திருவா. 5 – 2 – 9), “சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல ஆய்ந்து தொண்டு” (திருவா. 10 – 2 – 10) என்று ஸமாராதநோபகரணங்கள் மிகுத்துக் கொண்டு அநந்ய ப்ரயோஜநராய், ““தேவ காரியம் செய்து” (பெரியா. திரு. 4 – 4 – 1) என்கிறபடியே பகவத் ஸமாராதநத்தைப் பண்ணி -(உள்ளம் தூயராய்) ““ஒன்றி நின்று நற்றவம் செய்தூழியூழி தோறெலாம் நின்று நின்றவன் குணங்களூள்ளி உள்ளம் தூயராய்” (திருச்ச. 75) என்கிறபடியே நித்யகர்மாநுஷ்டாநம் முதலாக பகவத் ஸமாராதந மெல்லையாக பல சங்க கர்த்ருத்வ த்யாக பூர்வகமாக உண்டான கர்மாநுஷ்டாநத்தாலும் பகவத் குணாநுஸந்தாநத்தாலும் ““கஷாயே கர்மபிர் பக்வே ததோ ஜ்ஞாநம் ப்ரகாஸதே”” என்கிறபடியே கர்மாநுஷ்டாநத்தாலே ம்ருதிதகஷாயனானவாறே ஜ்ஞாந விகாஸத்துக்கடியான மநோ நைர்மல்யத்தை உடையராய்-
மேவித் தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9-பூவோடு கூடின புகையையும் -ஸமாராதன த்ரவ்யங்களையும் மிகுத்து –அநந்ய பிரயோஜனராய் தொழும் கைங்கர்ய நிஷ்டரும் ––அதுக்கு ஷமர் அன்றிக்கே குண அனுபவம் பண்ணும் குண நிஷ்ட்ருமாய்க் கொண்டு- லோகம் அடங்க சம்ருத்தம் ஆயிற்று –
மாய்ந்து அறும் வினைகள் தாமே மாவதா வென்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே–10-2-10-அங்குத்தைக்கு தகுதியான
மதிலை யுடைய திருவனந்த புரத்திலே வர்த்திக்கிற என் ஸ்வாமிக்கு என்று புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்க வல்லார் அந்தமில் புகழினாரே–அமரர் ஆவார் என்கிற அளவன்றிக்கே –விண்ணுளாரிலும் சீரியர் ஆவார் –
நா அகார்யம் சொல்லிலாதவர் நாள் தோறும் விருந்து ஒம்புவார்
தேவ கார்யம் செய்து வேதம் பயின்று வாழ் திருக் கோட்டியூர்
மூவர் காரியமும் திருத்தும் முதல்வனை சிந்தியாத அப்
பாவ காரிகளைப் படைத்தவன் எங்கனம் படைத்தான் கொலோ -4- 4-1 –இவர்களுக்கு உகப்பாக பகவத் சமாராதனம் பண்ணிப் போருமவர்கள் –திரி தந்தாகிலும் –என்னக் கடவது இறே
ஒன்றி நின்று நல் தவம் செய்து ஊழி ஊழி தோறேலாம்
நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி உள்ளம் தூயராய்
சென்று சென்று தேவ தேவர் உம்பர் உம்பர் உம்பராய்
அன்றி எங்கள் செங்கண் மாலை யாவர் காண வல்லரே –75-உக்தமான கர்ம யோகத்தாலும்
பகவத் குண அப்யாசத்தாலும் மநஸா விசுத்தேந -என்றும் –மநஸா க்ராஹ்யா -என்றும் -சொல்லுகிறபடியே பரிசுத்த அந்த கரணராய்
12-வாரிப் புன்புல வகத்தினுள் இளைப்பினை அடைவே விளக்கினை கண்டு – அதாவது பிரகீர்னே விஷயாரண்யே பிரதாவந்தம் பிரமாதிகம் , ஜஞாநான்குசேன க்ருஹ்நீயாத் வஸ்ய இத்திரிய தந்தினம் –
( பரந்து இருக்கிற விஷயமாகிற காட்டிலே ஓடிக் கொண்டு இருப்பதும் அகப்பட்டாரைக் கொல்லுவதுமான இந்த்ரியங்களாகிற யானையை த்யாஜ்ய உபாதேய ஞானம் ஆகிற அங்குசத்தால் வசப்படுத்த வேண்டும் ) என்று விஸ்தீரணமான விஷய அடவியிலே ஓடா நிற்ப்பதாய் ,அகப்பட்டாரை கொல்லுமதான இந்திரியமாகிற யானையை , த்யாஜ்யோ உபாதேய விவேக ஞானம் ஆகிற அங்குசத்தால் ,வஸ்யமாகப் பண்ணுவான் என்கிற படியே –-வாரிச் சுருக்கி மத களிறு ஐந்தினையும் சேரி திரியாமல் செந்நிறீஇ –முதல் திருவந்தாதி -47–என்று மதித்த யானைகளை தண்ணீரிலே செறுப்பிக்குமா போலே ,இந்திரியங்கள் ஆகிற மத ஹஸ்திகளை விஷய அனுபவம் ஆகிற போகத்தை குலைத்து -அவ்வவளவும் அன்றிக்கே – விஷயங்கள் நடமாடும் இடத்தில் போகாதே -பிரத்யக் வஸ்து விஷயமாகை ஆகிற செவ்வியிலே நிறுத்தி என்றும் –புன்புல வழி அடைத்து ,அரக்கு இலச்சினை செய்து ,நன் புல வழி திறந்து ,ஞான நல் சுடர் கொளீ இ-திருச்சந்த -76- -என்று அல்ப அஸ்த்ராதித்வ தோஷ துஷ்டமான சூத்திர விஷயங்களை பற்றிப் போகிற இந்திரிய மார்க்கத்தை நிரோதித்து ,
அவற்றினுடைய சூத்திர அனுசந்தத்தாலே ,வாசனா அனுவர்தியும் அறும் படி ,அத்தை உறைப்பித்து ,
விலஷண விஷயத்தில் இந்திரிய மார்க்கத்தைப் பிரகாசிப்பித்து நன்றான ஞான பிரபையும் மிகவும் உண்டாக்கி என்றும் –ஐம்புலன் அகத்தினுள் செறுத்து –திரு எழு கூற்று இருக்கை -என்று
ஸ்ரோத்ராதி இந்திரியங்கள் ,சப்தாதி விஷயங்களில் போகாமே உள்ளே அடக்கி என்றும் சொல்லுகிற படியே -நிக்ருஹிதேந்திரிய க்ராமராய்-( க்ராமம் கூட்டம் )-இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி அளைப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே விளக்கினை விதியில் காண்பார் மெய்மையைக் காண்கிற்பாரே–திருக்குறும் தாண்டகம் -18–என்கிற பாட்டில் சொல்லுகிற அடைவிலே –
அவித்யா அஸ்மித ரக த்வேஷா அபிநிவாச பஞ்ச கிலேச–யோக சூத்ரம் –
( அறியாமை செருக்கு ஆசை த்வேஷம் அபிமானம் -என்னும் இவை ஐந்து கிலேசங்கள் ) -என்று சொல்லுகிற கிலேசங்களின் சஞ்சாரத்தைத் தவிர்த்து ,
நாத்யுச்சரிதம் ..நாதிநீசம்–ஸ்ரீ கீதை –6-11–இத்யாதிகளில் சொல்லுகிற படியே ஓர் ஆசனத்தே இருந்து ,
சம்ப்ரேஷ்ய நாசிகாக்ரம் ஸ்வம் திசச்சா நவ லோகயன்-ஸ்ரீ கீதை -6-13- என்னும் படியே ,
நாசாக்ரன்யச்த ( நாச அக்ர ந்யஸ்த ) லோசனராய் ,ஓர் அளவில் நில்லாத இந்திரியங்களை பிரத்யக்கு ஆக்கி , த்யேயமான பகவத் விஷயத்தில் சிநேகத்தை வைத்து ,விடாமல் அனுசந்தித்து , சுடர் விட்டு தோன்றுகிற ஞானத்தாலே ,ஸ்வயம் பிரகாசமான ஆத்ம ஸ்வரூபத்தை , சாஸ்த்ரோத்ரா பிரகாரத்தாலே சாஷாத் கரித்து , சத் கர்ம அனுஷ்டானத்திலே ஷீண பாபனாய் நிர்மல அந்த கரணனானவனுக்கு பகவத் சாஷாத் கரத்துக்கு உறுப்பாக விளையும் யோக ஜன்ய ஞானம் தான் பிரதமம் ஆத்ம ஸ்வரூபத்தை தர்சித்து கொண்டிறே மேல் போவது ..விளக்கினை விதியில் காண்பார்-என்கிற இது பகவத் சாஷாத் காரமாக பூர்வர்கள் வியாக்யானம் பண்ணி வைத்தார்கள் ஆகிலும் ,இவர் ஆத்ம பரமாகவே அருளிச் செய்தார் என்று கொள்ள வேணும் – பகவத் த்யான தர்சனங்களை மேலே சொல்லுகையாலே —விதியில் காணும் பிரதம மத்திய தசைகளை சூரனை -23–என்று ஆத்ம பரமாகவே இறே கீழும் இவர் அருளிச் செய்தது .. யோஜனா பேதங்களும் உண்டாய் இருக்கும் இறே –
(வாரிப்புன்புலவகத்தினுள்) “வாரிசுருக்கி மதக்களிறைந்தினையும் சேரி திரியாமல் செந்நிரீ, ‘ (மூ.திருவ. 47) என்றும், ““புன்புலவழியடைத்தரக்கிலச்சினை செய்து நன்புல வழி திறந்து ஞானநற்கூடர் கொளீஇ”” (திருச்ச. 76) என்றும், ”ஐம்புலனகத்தினுள் செறுத்து” (திருவெழு.) என்றும், ”ப்ரசீர்ணே விஷயாரண்யே ப்ரத வந்தம் ப்ரமாதிநம் ! ஜ்ஞாநாங்குஸேந க்ருஹ்ணியாத் வஸ்யமிந்த்ரிய தந்திநம்”” என்கிறபடியே இந்த்ரியங்களாகிற மமூதிதமான ஆனைகளை த்யாஜ்யோபாதேய விவேக ஜ்ஞாநமாகீற அங்குஸத்தாலே வணக்கி, விஷயங்களாகிற சேரியில் திரியாதபடி பகவத் விஷயமாகிற யதா ஸ்தாநமாகிற தறியிலே சேர்த்தென்றும், இந்த்ரியங்களை ஷூத்ர விஷயங்களிலே போகாதபடி வாஸனையோடே விடுவித்து ப்ராப்த விஷயத்திலே மூட்டி ஜ்ஞாநமாகிற ப்ரகாஸமான தீபத்தைக் கொளுத்தி. இப்படி நிக்ருஹீதேந்த்ரிய க்ராமராய், (இளைப்பிணை யடைவே விளக்கினைக் கண்டு) “இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன்னிமையைக் கூட்டி அளப்பிலைம்புலனடக்கி அன்பவர் கண்ணே வைத்துத் துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டாங்கே விளக்கினை விதியிற்காண்பார்‘” (திருக்குறு. 18) . என்றும் சொல்லுகிறபடியே யோகாப்யாஸ விரோதியாயிருந்துள்ள யாதாயாதங்களை மாற்றி ஓர் ஆஸந விஸேஷங்களிலே இருந்து நாஸாக்ரந்பஸ்த லோசநனாய், இந்த்ரியங்களை நியமித்து த்யேய வஸ்துவின் பக்கலிலே நிரதிஸயமான ஸ்நேஹத்தைப் பண்ணி ததநந்தரம் ஸ்வயம் ப்ரகாஸமாய்க் கொண்டு தோற்றுகிற ஆத்ம ஸ்வரூபத்தை ஸாஸ்த்ரோக்த ப்ரகாரத்திலே ஸாக்ஷாத்கரித்து.
வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய
மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேலொரு நாள்
கைந்நாகம் காத்தான் கழல் —–47–மத்த கஜம் போலே தாம் கண்டபடி காடு பாய்கிற ஸ்ரோத்ராதிகளை –பின்னையும் கண்ணுக்கு இலக்காம் இடத்திலே திரியுமாகில் விழ விட்டுக் கொள்ளக் கடவதாய் இருக்கும் இறே-யானை-அப்படியே இவற்றை ஜெயித்தாலும் விஷயங்களுக்கு ஏகாந்த ஸ்தலங்களிலே
இவை போகாத படி ஒக்க நிறுத்தினால் பின்னைப் பிறக்குமது கூரிய மெய் ஞானமாய் இருக்குமாய்த்து -அதாவது ஸூஷ்மார்த்தத்தை க்ரஹிக்கவும் வற்றாய் தர்மி க்ராஹகமுமாய் இருக்கும் யாய்த்து –அது தான் விஹித கர்மங்களை பலாபிசந்தி ரஹிதமாக அனுஷ்டித்து ஷீண பாபனாய் – ஆத்மா யாதாம்ய ஞானம் உண்டாய் ஈஸ்வர பாரதந்த்ர்யமும் உண்டாம் என்னும் இடத்தையும் அறிந்து-உபாசனம் த்ருவாஸ்ம்ருதி -தர்சன சாமாநாகாரதா பிரத்யஷதாபத்தி என்றும்-விசதே தத நந்தரம்-கீதை -18-55-என்று சொல்லுகிறபடியே-அப்படிப் பட்ட ஜ்ஞானத்தை உடையவர்கள் அவனைக் காண்பார்கள் –
புன்புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து
நன் புல வழி திறந்து ஞான நற் சுடர் கொளீ இ
என்பில் எள்கி நெஞ்சு உருகி யுள் கனிந்து எழுந்தது ஓர்
அன்பில் அன்றி ஆழி யானை யாவர் காண வல்லரே –76-ஷூத்ர விஷயங்களைப் பற்றி போருகிற இந்த்ரிய வ்யாபாரத்தை நிரோதித்து –சப்தாதி விஷயங்களினுடைய ஷூத்ரதையை அனுசந்தித்து -வாசநையும் -அனுவர்த்தியாத படி –பலவான் இந்த்ரிய க்ராமோ வித்வாம் ஸம்பி கர்ஷதி –என்று ஜ்ஞானாதிகர்களையும் வாசனை நலியும் இறே -அதுவும் பிரவாதபடி பண்ணி –விலஷண விஷயத்தில் இந்த்ரிய மார்க்கத்தை பிரகாசிப்பித்தது இவ்வாத்மாவுக்கு ப்ராப்தமாய் –ஸூ ஸூ கம் கர்த்தும் -என்கிறபடியே சாதனை வேளையே தொடங்கி ரசிக்கும் பகவத் விஷயமே இந்த்ரியங்களுக்கு விஷயமாக்கி -என்கை-நன்றாக ஞானப் பிரபையை மிகவும் உண்டாக்கி ஈஸ்வரனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை -ஸ்வ ஜ்ஞானத்துக்கு விஷயமாம்படி பண்ணி –
ஐம்புலன் அகத்தினுள் செறுத்து நான்குடன் அடக்கி முக்குணத்து இரண்டவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை –கர்ம யோகத்தை அங்கமாக யுடைத்தான உபாயம் சொல்லப் படுகிறது –சஷூராதி இந்த்ரியங்களை சப்தாதி விஷயங்களிலே போகாமே உள்ளே அடக்கி-மநோ-புத்தி-சித்த அஹங்காரங்களையும்-செறுத்து-ஆஹார நித்ரா
பயம் ஐதுனங்கள் -உடல் உறவு -இவற்றைத் தவிர்த்து என்றுமாம் –
இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18-அவித்யா அஸ்மிதா ராக த்வேஷா அபிநிவேஸா க்லேஸா – என்றும் சொல்லுகிற கிலேசங்கள் உடைய சஞ்சாரத்தைத் தவிர்த்து –நாத்யுச்ச்ர்தம் -இத்யாதியில்-சொல்லுகிறபடியே ஓர் ஆசனத்தே இருந்து –அளவிறந்த இந்த்ரியங்களை பிரத்யக்காக்கி –அவிச்சின்ன ஸ்ம்ருதி ரூபமான பக்தியைப் பண்ணி –இப்படி சுடர் விட்டு தோன்றும்
ஜ்ஞானத்தாலே –வேதங்களாலே ஜோதி ரூபனாக பிரதிபாதிக்கப் பட்ட விளக்கை-சாஸ்த்ரங்களில் விதித்தபடியே உபாசித்து அவனைக் காண்பார் –என்றும் உளனாய் இருக்கிற சர்வேஸ்வரனை
காண வல்லரே -காண -மாட்டார் -என்றபடி –அதவா – இப்படி யோக சாஸ்த்ரத்தில் சொல்லுகிறபடியே
உபாசித்துக் காண்பாருக்கு காணலாம் -என்றுமாம் –அங்க பிரபத்தி இல்லாமல் காண மாட்டார் என்றபடி–
–
13-யோக நீதி நண்ணி-அதாவது –நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள்–திருச்சந்த -63- என்கிற படி யோகம் ஆகிற உபாயத்தாலே கிட்டி ,-அறம் திகழ் மறையோர் மனம் தன்னுள் அமர்ந்து உறையும் அரும் பெரும் சுடரை ,கண்கள் சிவந்ததில்-படியே மன உள் கொண்டு –-அதாவது மறம் திகழும் மனம் ஒழித்து ,,வஞ்சம் மாற்றி ,வன் புலன்கள் அடக்கி-இடர்பார துன்பம் துறந்து ,இரு முப்பொழுது ஏத்தி ,எல்லை இல்லா தொன் நெறிக் கண் நிலை நின்ற தொண்டரான அறம் திகழ் மனத்தவர் தம் கதியை–பெருமாள் திருமொழி -1-7-என்று கொலையும் சினமும் கொடுமையாகிய மறத்தால் விளங்கா நின்றுள்ள மனசை வாசனையோடு போக்கி , பொய்யை தவிர்ந்து ,வன் புல சேக்களை பட்டி புகாமே கட்டி ,மிக்க துக்கத்தை விளைப்பதான –பாரமாய பழ வினையை பற்று அறுத்து – ஸ்லாக்கியமாய் இருந்துள்ள -ஆதி நடு அந்தி -ஆகிய மூன்று பொழுதிலும் ஏத்தி ,அளவிறந்த பழைய மரியாதையிலே ,சிலவரால் கலக்க ஒண்ணாத படி ..நிலை நின்ற வைஷ்ணவர்களான ,ஆந்ரு சம்ச்யோஜ்வல சித்தருக்கு பரம ப்ராப்யன் ஆனவன் என்றும் –மறையோர் மனம் தன்னுள்-அதாவது – மறையோர் மனம் தன்னுள் விண்ணுளார் பெருமானை—பெரிய திருமொழி -7-3-7-என்று பிராமணர் ஹிருதயங்களை தனக்கு வாசஸ் ஸ்தானமாய் உடையனாய் இருக்கும் -அமரர்கள் அதிபதியை -என்றும் ,-மா தவமானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற எந்தை—பெரிய திருமொழி -2-1-1-என்றும் , மகா தபஸை உடையராய் இருக்கும் மனுஷ்யர்களுடைய ஹிருதயங்களில் , அநந்ய பிரயோஜனனாய் கொண்டு நித்ய வாசம் பண்ணுகின்ற ஸ்வாமி என்றும் -சொல்லுகிற படி , பரி சுத்த அந்த கரணரான பரம யோகிகள் ஹிருதயங்களிலே –அரும் பெரும் சுடரை –அதாவது ஆரமார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினைச் சேரும் நெஞ்சினர்–பெருமாள் திருமொழி -2-7-என்னும் படி , ஆபரணாத் அலங்குருதனாய் அத்யுஜ்வலமான விக்ரகத்தோடே எழுந்து அருளி இருக்கும் சர்வேஸ்வரனை —கண்கள் சிவத்தில் படியே –அதாவது – கண்கள் சிவந்து–திருவாய் -8-8-1- –என்கிற பாட்டில் சொல்லுகிற படி அவயவ சோபை–ஆபரண சோபை –ஆயுத சோபை களோடு காள மேக நிபஸ்யமாய் இருந்துள்ள திவ்ய விக்ரஹத்துடனே–-மன உள் கொண்டு-–கற்றவர் தம் தம் மன உள் கொண்டு – பெரிய திருமொழி -7-3-1–என்று அறிவு உடையரான யோகிகள் ஆனவர்கள் தம் தம் ஹிருதயங்களில் கொண்டு என்ற படி ..
ஹிருதய கமலத்தில் த்யானம் பண்ணி –
(யோக நீதி நண்ணி) என்று யோகம் தலை நின்று. (அறந்திகமும் மறையோர் மனந்தன்னுள் அமர்ந்துறையும் அரும்பெருஞ்சுடரை) ‘*மறந்திகழு மனமொழித்து வஞ்சமாற்றி ஐம்புலன்களடக்கி இடர்ப்பாரத்துன்பம் துறந்து இருமுப்பொழுதேத்தி எல்லை யில்லாத தொன்னெறிக் கண் நிலை நின்ற தொண்டரான அறந்திகழு மனத்தவர்தம் கதியை” (பெருமாள் திரு. 1 – 7) என்றும், “மறையோர் மனந்தன்னுள்” (திருமொழி 7 – 8 – 7) என்றும், ““மாதவமானவர் தங்கள் சிந்தை”’ (திருமொழி 2 – 1 – 1) என்றும், ”ஆரமார்வனரங்கனென்னுமரும்பெருஞ்சுடரொன்றினைச் சேரும் நெஞ்சினராகி’” (பெருமாள்திரு. 2 – 7) என்றும் சொல்லுகிறபடியே பரமயோகி,களுடைய ஹ்ருதயங்களிலே அதி ப்ரகாபமமான விக்ரஹத்தோடே எழுந்தருளியிருக்கிற ஸர்வேஸ்வரனை.
(கண்கள் சிவந்திற் படியே மனவுட் கொண்டு) ““கண்கள் சிவந்து’ (8-8 -1)-என்கிற பாட்டின் படியே அவயவ ஸோபையோடும் ஆபரண ஸோபையோடும் கூடி காளமேக நிபஸ்யாமமாயிருக்கிற விலக்ஷண விக்ரஹத்தை ““கற்றவர் தந்தம் மனவுட் கொண்டு” (திருமொழி 7 – 3 – 1) என்கிறபடியே ஹ்ருதய கமலத்திலே த்யாநம் பண்ணி.
மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி ஐம்புலன்கள் அடக்கி இடர் பார துன்பம்
துறந்து இரு முப் பொழுது ஏத்தி எல்லை இல்லா தொன் நெறி கண் நிலை நின்ற தொண்டரான
அறம் திகழும் மனத்தவர் தம் கதியை பொன்னி அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள் நீர் மல்க என்று கொலோ நிற்கும் நாளே ?—-1-7—மறம்–கொலையும் -சினமும் -கொடுமையும் – இவற்றால் விளங்கா நின்ற மனஸை வாசனையோடு போக்கி –பொய்யைப் போக்கி-வன்புலச் சேக்களை பட்டி புகாமே கட்டி-
பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன்னுள்
விண்ணுளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் மா மணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் யுரையாதே –7-3-7-தன் உள்-வாசஸ் ஸ்தானம்-பிராமணர் உடைய ஹிருதயங்களைத் தனக்கு வாசஸ் ஸ்தானமாய் உடையனாய் –
வானவர் தங்கள் சிந்தை போல என்னெஞ்சமே யினிதுவந்து மா தவ
மானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற வெந்தை
கான வரிடு காரகில் புகை ஓங்கு வேங்கடம் மேவி மாண் குற
ளான வந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-1—மஹா தபசை உடையவராய் இருக்கிற மனுஷ்யர்கள் உடைய ஹிருதயங்களிலே – அநந்ய பிரயோஜனனாய்க் கொண்டு
நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்வாமி –(நாம் செய்வதை அவன் அன்றோ செய்கிறான் )
கார் இனம் புரை மேனி நல் கதிர் முத்த வெண்ணகை செய்ய வாய்
ஆர மார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை
சேரும் நெஞ்சினராகி சேர்ந்து கசிந்து இழிந்த கண்ண நீர்களால்
வார நிற்ப்பவர் தாள் இணைக்கு ஒருவாரம் ஆகும் என் நெஞ்சமே –2-7—பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு -என்று -ஐஸ்வர்ய பிரகாசகமாம் படி இட்டுப் பூண வேண்டும்படி உள்ள ஹாரத்தையும்-திரு மார்பிலே உடையராய் இருக்கிற-ஸ்ரீ பெரிய பெருமாள் என்று -உபய விபூதியிலும் பிரசித்தராய்
நிரவதிக தேஜோ ரூபராய் அத்விதீயரானவரை-அவர் வந்து கிட்டும் போது விலக்காமை யடியாகப் -பிறந்த பக்தியை உடையராய்-அவனைக் கிட்டி நிரதிசய பக்தி உக்தராய் கண்ணும் கண்ண நீருமாய் இருக்கும் அவர்களுக்கு பக்தி பாரவச்யத்தாலே இறே என்று அங்குத்தைக்கும் இவர்களுக்குமாய் நில்லாதே இவர்களுடைய திருவடிகளுக்கு-அநந்ய பிரயோஜனமாய் நில்லா நின்றது என் நெஞ்சு –
கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து -உள்ளே
வெண் பலிலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே–8-8-1-தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-என்று கண்கள் ஆகிறது சிவந்து இறே இருப்பது –இப்போது சிவந்து -என்கிறது -மாயக் கூத்தனில் விஸ்லேஷத்தாலே விவர்ணம் ஆனது -சம்ச்லேஷித்த பின்பு தன் நிறம் பெற்ற படி -கண்ணிலே துவக்குண்டு கால் வாங்க மாட்டாதே இருக்கிற இருப்பு இசையில் காணும் இத்தனை-ஆஸ்ரித சம்ச்லேஷத்தில் அவிக்ருதனாகில் ஆஸ்ரயணீயன் அன்றிக்கே ஒழியும் இறே -அவனும் கடல் உடைந்தால் போலே தன்னளவில் விக்ருதனாகக் கடவது இறே-அலைந்து வருகை யாவது இவரைப் பெற்ற பெற்றாலே -இங்கனம் சம்பவிப்பதே -என்று திரு முடியை அசையா நிற்கை –உள்ளானே––யுவா குமாரா –என்று கேட்டே போம்படியான அழகு -வயிர பேழை திறந்தால் போலே அவயவ சோபையும் ஆபரண சோபையும் ஆயுத சோபையுமாய்-மிளிரா நின்றதாயிற்று –
சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தந்தம்
மனம் உட் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை
நனவில் சென்றார்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்பக் களித்தேனே -7-3-1–அறிவுடையரான யோகிகள் ஆனவர்கள் தம் ஹிருதயத்திலே கொண்டு-எல்லா காலத்திலும் எல்லா அவஸ்தையிலும்-ஒருபடிப்பட நின்று ஏத்த அவர்களுக்கு எல்லாம் செய்தும் பின்னையும் ஒன்றும் செய்யாதானாய் பெரும் தனிசு பட்டால் போலே -இவர்களுக்கு செய்யல் ஆவது என் -என்று
இவற்றை அனுசந்திக்குமவனை –
14-நிரந்தரம் மறவாமை துடக்கறா ஸ்ம்ருதியாய் –அதாவது-நிரந்தரம் நினைப்பதாக–திருச்சந்த -101- -என்றும் ,-மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாய்-பெரிய திருமொழி -3-5-4-என்றும் சொல்லுகிற படியே அந்த த்யானதுக்கு விச்சேதமும் விஸ்மிருதியும் அற்று –துடக்கறா மனத்தராய் – அதாவது –
சோர்விலாத காதலால் துடக்கறா மனத்தராய் -திருச்சந்த -78–என்று சர்வ காலமும் விஷயாந்தரங்களால் அபஹ்ருதம் ஆகாத பிரேமத்தை உடையார் ஆகையாலே , தத் சம்ச்லேஷ வியோகைக சுக துக்காராம் படி -சத்வ சுத்தவ் த்ருவா ஸ்ம்ருதி –சாந்தோக்யம் — ( அந்தக்கரணம் தூய்மை அடைந்தால் இடையறாத த்யானம் உண்டாகும் )-என்கிற படி , த்யேய வஸ்துவில் துடக்கறாமல் த்ருவ அனு ஸ்ம்ருதியாய் –கனவில் மிக்க தர்சன சமமாய்-அதாவது – கனவில் மிக கண்டேன்-இரண்டாம் திருவந்தாதி -81- -என்று இந்திரியங்களால் கலக்க ஒண்ணாதபடி மானச ஜ்ஞானத்தாலே ,அழகிதாக கண்டேன் என்னலாம் படி-ஸா ச ஸ்ம்ருதிர் தர்சன சமானகார – ஸ்ரீ பாஷ்யம் -லகு சித்தாந்தம் –( அந்த நினைவு தானும் கண்ணால் நேரே காண்பது போலே இருப்பது ஓன்று )என்கிற படி அது தான் பிரத்யஷா சாமானகாரமாய் –ஆகத்து புல்கும் அத்யந்த பிரியமாய்-அதாவது –அப்படி தர்சனம் ஆனது தான் –ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு-திருவாய் -10-4-6-என்றும் ,-ஆகத்து அணைப்பார் அணைவரே -முதல் திருவந்தாதி -32-என்றும் ,-எல்லையில் அந்நலம் புல்கு–திருவாய் -1-2-4 -என்றும்
ஆர்வம் புரிய பரிசினால் புல்கில்—முதல் திருவந்தாதி -50-என்னும் படி , அங்கனா பரிஷ்வங்கம் போலே -பிரியோ ஹி ஞானின அத்யர்தமஹம் -ஸ்ரீ கீதை -7-17–என்கிற ஸ்மிர்தவ்ய விஷய சாரத்தாலே ,தானும் அத்யர்த்த பிரியமாய் —
(நிரந்தரம் மறவாமை) “நிரந்தரம் நினைப்பதாக”’ (திருச்ச. 101) என்றும், “மன்னு சேவடிக்கே மறவாமை” (திருமொழி 3 – 5 – 7) என்றும் சொல்லுகிறபடியே அந்த த்யாநத்துக்கு விஸ்ம்ருதியும் விச்சேதமுமின்றிக்கே. (துடக்கு ஸ்ம்ருதியாய்) “சோர்விலாத காதலால் துடக்கறா மனத்தராய்”’ (திருச்ச. 78) என்கிறபடியே ஸர்வ காலமும் விஷயாந்தரங்களால் அபஹ்ருதமாகாத ப்ரேமத்தை உடையராகையாலே தத் ஸம்ஸ்லேஷ வியோகைக ஸூக துக்கராய், பகவத் ஸ்ம்ருதி ஸந்ததி ரூபேண செல்லா நின்றால் விச்சேதமில்லாத த்ருவாநு ஸ்ம்ருதி ரூபமாய், “ஸத்த்வாத் தெள த்ருவா ஸ்ம்ருதி: ஸ்ம்ருதிலம்பே, ஸர்வக்ரந்தீ நாம் விப்ரமோக்ஷி’‘ (சாந் 7 – 26 – 2) என்னக் கடவதிறே. (கனவில் மிக்க தர்ஸந ஸமமாய்) “கனவில் மிகக்கண்டேன்’” (இ. திருவ. 81) என்கிறபடியே அந்த ஸ்ம்ருதி ப்ரத்யக்ஷ ஸமாநாகாரையாய். (ஆகத்துப் புல்கும் அத்யர்த்த ப்ரியமாய்) ஆகத்தணைப் பாரணைவரே” (மு.திருவ. 32) என்றும், “ஆர்வம் புரிய பரிசினால் புல்கில்” (மூ.திருவ. 50) என்றும் சொல்லுகிறபடியே அந்த தர்சந ஸமாநாகாரையான ஸ்ம்ருதிதான் அந்த த்யேய வஸ்துவை ஹ்ருதயகமலத்திலே அணைக்கும்படி ஸ்மர்த்தவ்ய விஷய ஸாரஸ்யத்தாலே தானும் அத்யர்த்த, ப்ரிய ரூபையாய்
இரந்து உரைப்பது உண்டு வாழி ஏமம் நீர் நிறத்தம்மா
வரம் தரும் திருக் குருப்பில் வைத்ததாகில் மன்னு சீர்ப்
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம்
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே -101-சப்தாதி விஷயங்களில் போந்த என்னுடைய மனஸ் – மற்று ஒன்றில் போகாதே –உன் பக்கலிலே ஒன்றி நின்று –ப்ராப்தமுமாய் – நிரதிசய போக்யமும் ஆகையாலே -ஆகர்ஷகமுமான உன் திருவடிகளை-அம் மனஸ் நிரந்தரமாக நினைக்க வற்றாம்படி நீ திரு உள்ளமாக வேணும் –என் நினைவும் -என் செயலும் -அகிஞ்சித்கரம்–உன் நினைவுக்கே பல வ்யாப்தி உள்ளது -என்கை –
மின்னின் மன்னு நுடங்கிடை மடவார் தம் சிந்தை மறந்து வந்து நின்
மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்
புன்னை மன்னு செருந்தி வண் பொழில் வாய் அகன் பணைகள் கலந்து எங்கும்
அன்னம் மன்னு வயல் அணி யாலி யம்மானே–3-5-4-அப்ராப்த விஷயங்களில் உண்டான வாஞ்சையை தவிர்த்து பிராப்த விஷயத்தை ஆசைப்படப் பண்ணின இது தான் போரும் இறே உபகாரம்-அவற்றை நானே கை விட்டு உன் பக்கலிலே வந்து சதைகரூபமான உன் திருவடிகளிலே-எனக்கு மறவாமை யாகிற பேறு உண்டாம்படியாக – நான் அபேஷிக்க அன்றிக்கே தண்ணீர் பந்தல் வைப்பாரோபாதி நிர்ஹேதுகமாக செய்து அருளினாய் –
சோர்விலாத காதலால் தொடக்கறா மனத்தராய்
நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல்
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும்
வாரமாக வோதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –78—சர்வ காலமும் -விஷயாந்தரங்களால் அபஹ்ர்தம் ஆகாத பிரேமத்தை உடையவர் ஆகையாலே -அதாவது பிரேம அதிசயத்தாலே தத் சம்ச்லேஷ விஸ்லேஷ துக்க ரஹிதராகை –பகவத் ஸ்ம்ர்த்தி சந்ததி ரூபேண செல்லா நின்றால் விச்சேதம் இல்லாத நெஞ்சை உடையராய் –சத்வ சுத்தௌ த்ருவா ஸ்ம்ர்தி -என்றும் – ஸ்ம்ரதிலம் பேசர்வகரந்தீநாம் விபர மோஷ -என்கிற அளவைச் சொல்லுகிறது-நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல் –
இப்படி பிரேமத்தை விளைக்கும் விலஷண விஷயமான சுபாஸ்ரயத்தை சொல்லுகிறது –
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-–அஸ்தமிதியாத ஆதித்யனைக் கண்டேன்-பிரத்ய பிஜ்ஞார்ஹமாக கண்டேன் –வடிவில் திகழா நின்ற திரு ஆழியையும் ஒளி திகழா நின்றுள்ள திருவடிகளையும் உடையவனுடைய பரம பதத்தில் திகழா நின்ற ஜோயோதிசை உடைத்தான திருமேனியைக் கண்டேன்
இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல்
ஆகத் தணைப்பார் அணைவரே ஆயிர வாய்
நாகத் தணையான் நகர் -32––கீழ்ச் சொன்ன படியே இந்த்ரிய ஜெயம் பண்ணிற்று இலர்களே யாகிலும் சேஷத்வ ஜ்ஞானத்தை யுடையராய்க் கொண்டு அவனை ஹ்ருதயத்தில் வைத்துஅனுசந்திக்குமவர்கள் அன்றிக்கே அப்படி இந்த்ரிய ஜெயத்தை பண்ணாதே ஈஸ்வரன் ஒருவன் உளன் என்று மாத்ரம் உடையார்க்கு என்றதாகவுமாம்-அத் தேசத்தைச் சென்று ப்ராபிக்கலாமோ – அவன் மேல் விழா நின்றால் இறாயாதார்-என்றுமாம் –முக்த ப்ராப்ய வஸ்து இருக்கிறபடி-பர்யங்க வித்யையில் சொல்லுகிறபடியேயாய் இருக்கிறது – அங்கு உள்ளார் எல்லார் அடிமைக்கும் உப லஷணம்-
இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே –1-2-4-அபிமத விஷயத்தை அணைத்தால் போல் ஆஸ்ரயணம் தான் இனிதாய் இருக்கையாலே புல்கு என்கிறார்–
அரிய புலன் ஐந்தடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம்
புரிய பரிசினால் புல்கில் பெரியனாய்
மாற்றாது வீற்றிருந்த மாவலி பால் வண் கை நீர்
ஏற்றானைக் காண்பது எளிது ——50—ஸ்நேஹம் மிக்க பிரகாரத்தாலே-அணையில் – ஆஸ்ரயணம் தானே போக்ய்மாய் இருக்கிறபடியாலே-நல்லது கண்டால் ஆசைப் படுமோபாதி இவ் விஷயத்திலும் ஆசை பிறக்க அமையும்–தான் அர்த்தியாய்க் கொண்டு சென்று நிற்குமவன் ஆய்த்து – ஆகையாலே அவனை ஆஸ்ரயிக்கும் இடத்திலே ஒரு அருமை தட்டாது-என்கிறார் –
வைகும் சிறப்பு விட்டு குற்றேவல் என்னாத அநந்ய பிரயோஜனமாய் –அதாவது –-நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் ,மற்று இனிதோ நீ அவர்க்கு வைகுந்தம் என்று அருளும் வான்–பெரிய திருவந்தாதி -53- என்று உன்னுடைய கல்யாண குணங்களிலே விச்சேதம் இன்றியே செல்லுகிற சிந்தையிலும்
காட்டிலும் இனிதோ நீ அவருக்கு நன்றாக சொல்லிக் கொடுக்கும் பரம பதம் என்றும் –சிறப்பு விட்டு-
அதாவது – உலகு படைத்து இத்யாதி–அமுத வெள்ளத்ததானாம் சிறப்பு விட்டு –ஒரு பொருட்கு அசைவோர் அசைக நல் வீடு பெறினும் கொள்வது எண்ணுமோ தெள்ளியீர் குறிப்பு–-திருவாசிரியம் -2-என்று பரத்வ ஸுலப்யாதிகளாலே பரிபூர்ணனான சர்வேஸ்வரன் நிரதிசய போக்யமான திரு அடிகளை அனுபவிக்கையில் உண்டான அபிநிவேசத்தில் -த்ரவீபூதமாய் ,ஓர் அவயவியாக காண ஒண்ணாத படி மங்கின ஆத்ம வஸ்துவிலே , அந்த ஆதாரம் அடியாக பிறந்த விலஷணமான சங்க காமத்ய அவஸ்தைகளை உடைய பக்தியால் விளைகிற நிரதிசய ரசத்திலே உளனாகையாகிற லாபத்தை விட்டு -சூத்திர புருஷார்தங்களுக்கு கிலேசப் படுவார் அங்கனே கிலேசப் படுக – ஸ்லாக்கியமான ஐஸ்வர்யம் ,–அதில் விலஷணமான ஆத்ம அனுபவம் –அவ்வளவு இன்றிக்கே பர விலஷணமான மோஷம் -இவற்றைப் பெருமளவு ஆனாலும் ,சார அசார விவேக ஜ்ஞர்களுடைய ஹிருதயத்தில் அவற்றை ஸ்வீகரிக்கவும் நினைவு உண்டோ என்றும் —குற்றேவல் என்னாத அநந்ய பிரயோஜனமாய்-உனது பாலே போர் சீரில் பழுத்து ஒழிந்தேன் மேலால் பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு–பெரிய திருவந்தாதி -58-என்று உன்னுடைய ஸ்மர்யமான தசையே தொடங்கி இனிதான குணங்களிலே பழுத்து ஒழிந்தேன் –பின்பு ஒருகால் பிறவாமை பெற்று ,திரு அடிகளில் நித்ய கைங்கர்யம் பண்ணுகை அன்று எனக்கு வேண்டுவது .. பிறந்த ஞானத்துக்கு மறப்பின்மை எனக்கு வேண்டும் தனமானம் -என்றும் சொல்லுகிற படி-இவ் அனுசந்தானத்தாலே ,தேச விசேஷத்தில் அனுபவத்தையும் உபேஷிக்கும் படி தானே பரம பிரயோஜனமாய் ரசிக்கையாலே ,அநந்ய பிரயோஜனமாய்-வேதன உபாசன சேவா த்யானாதிகள் என்று சொல்லும் அது சாத்திய சாதன பக்தியாக சாஸ்திர சித்தம்-அதாவது-வேதனம் என்றும் , உபாசனம் என்றும் ,சேவை என்றும் ,த்யானம் என்றும் , ஏவமாதி சொற்களால் சொல்லப் படுகிற பக்தியானது – உபய பரிகர்மித ஸ்வாந்தச்ய –ஆத்மசித்தி( கர்மம் ஞானம் இரண்டாலும் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கரணத்தை யுடையவனுக்கு )-என்கிற படியே , கர்ம ஞான சம்ஸ்க்ருத அந்த கரணனுக்கு பிறக்கும் அது ஓன்று ஆகையாலே -சேதன சாத்தியமாய் – பகவத் பிரசாதந உபாயதயா – தத் பிராப்தி சாதனமான பக்தியாக – ச உப ப்ரும்ஹண வேதாந்த சாஸ்த்ரத்தில் ( இதிகாச புராணங்களுடன் கூடிய வேத சாஸ்திரத்தில் ) சொல்லப் பட்டது என்கை-
(வைகும் சிறப்பு விட்டுக் குற்றேவ லென்னாத அநத்ய ப்ரயோஜநமாய்) “’நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் மற்றினிதோ நீ அவர்க்கு வைகுந்தமென்றருளும் வான்?” (பெரியதிருவ. 53) என்றும், “’உலகு படைத்துண்ட வெந்தை”” (திருவாசி.2) என்று தொடங்கி, ”அமுத வெள்ளத்தானாம் சிறப்புவிட்டு ஒருபொருட்கசைவோரசைக நல்வீடு பெறினும் கொள்வதெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே” என்றும், “மேலால் பிறப்பின்மை பெற்றடிக்கீழ்க் குற்றேவலன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு’* (பெரியதிரூவ. 58) என்றும் சொல்லுகிறபடியே இவ்வநுஸந்தாந ரஸத்தாலே தேஸா விஸேஷத்திலநுபவத்தை உபேஷிக்கும்படி தானே பர மப்ரயோஜநமாம்படி இருக்கையாலே அநந்ய ப்ரயோஜநமாய்.. (வேத,ந-௨ பாஸந-ஸேவா-த்யாநாதி களென்னுமவை) வேதநம், உபாஸநம், ஸேவை, த்யாநம், த்ருவாநுஸ்ம்ருதி, தர்சந ஸமாநாகாரம், பக்தி என்றும் சொல்லப்படுகிறவை யாகையாலே இந்த ப,க்தி ஸாத்ய ஸாதந பக்தியாக ஸாஸ்த்ர ஸித்தம். ‘உபய பரிகர்மித ஸ்வாந்தஸ்ய ஐகாந்திகாத்யந்திக பக்தியோகைகலப்ய”(ஆத்மஸித்தி,) என்று கர்ம ஜ்ஞாந ஸம்ஸ்க்ருதாந்தா கரணனுக்குப் பிறக்கும தொன்றாகையாலே ஸாத்,யமாய், பகவத் ப்ரஸாதநோபாயமாகையாலே ஸாதநமான பக்தி என்று ஸாஸ்த்ரங்களாலே சொல்லப்பட்டதென்கிறார். ஆக இத்தால் சேதநனாலே ஸாத்யமாய், உபாய ரூபமான பக்தி விஸேஷம் சொல்லிற்று –
ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-–உன் புகழிலே தங்குகிற சிந்தையில் காட்டில் இனிதோ
நீ போரப் பொலியச் சொல்லிக் கொடுக்கிற பரமபதம்-ஸித்தத்துக்கு இடை நிற்குமோ ஸாத்யம்
இதுக்கு அது யுக்தி ஸாரமே காரணம்-குண அனுபவ யோக்கியமான இந்த ஜென்மத்தில் காட்டில் பரம பதம் ஸ்லாக்யம் என்கைக்குக் காரணம் பரமபதம் யுக்தி சாரமாய் இருப்பதே என்று யதா ஸ்ருத பங்க்தி தாத்பர்யம் –
உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல் சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆர்
உயிர் உருகி யுக்க நேரிய காதல் அன்பில் இன்பீன் தேறல் அமுத
வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருள்க்கு அசைவோர் அசைக திரு வோடு மருவிய
இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம் மூன்றினோடு நல் வீடு பெறினும்
கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே ?-2–-இம் மேன்மையாலும் நீர்மையாலும் வடிவு அழகாலும் விளைந்த பரபக்தியாதிகளை மேலே விளக்கி அருளுகிறார் –அவ்வுடம்போடே இருக்கச் செய்தே பெறக் கடவதான பரபக்தியாதிகளோடே இவை ஒவ்வாதே நிற்கிற இடம் -(ஒவ்வாது என்ற இடம் )- விசார விஷயமோ –சார அசார விவேகம் பண்ணி இருப்பார்க்கு மநோ ரதத்துக்கு விஷயம் அல்ல-சார அசார விவேகஞ்ஞர் நல்லதுக்கு தீயத்துக்கும் தரமிட்டுப் -பிரித்து அறிந்து – இருப்பார்கள்
மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் –மேலால்
பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று
மறப்பின்மை யான் வேண்டும் மாடு –58-–ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகமாகப் பரம பதத்திலே உன் திருவடிகளிலே அடிமை செய்கை யன்று எனக்கு தனம்-பரமபதத்தில் நீ இருக்கும் இருப்பை மறவாமை
பரமபதத்திலே போனால் அல்லது மறவாமை இல்லாமையாலே பரம பதமும் வேண்டினாராய்ப் பலித்தது-இவருக்கு மறப்புத் தான் உண்டோ என்னில் ப்ரக்ருதி ஸம்பந்தம் உடையார்க்கு வருமது நமக்கும் வாராதோ என்று பயப்படுகிறார்-ஊரடைய வெந்து கொண்டு வாரா நின்றால் நம் அகம் ஒன்றும் பிழைக்கும் -என்று பயம் கெட்டு இருப்பார் உண்டோ –
—
இப்படி உபாசன ரூபமாய் -உபாயமுமாயும் -இருந்துள்ள இது போல் அன்றிக்கே , உபேய பூத கைங்கர்ய உபகரணமாக பிரபன்னர் பகவான் பக்கல் அபேஷித்து பெரும் பக்தி விசேஷத்தை பிரதி பாதிக்கிறார் மேல் –இனி உபேயமான கைங்கர்யோப கரணமாய், ப்ரார்த்யமான பக்தி விஸேஷம் சொல்லுகிறது மேல்-
ஸ்வீக்ருத சித்த சாதனர்–இத்தை சாத்தியமாக இரக்க பிராப்திக்கு முன்னே சித்திக்கும்–சூரணை-100-(இத்தை -பக்தியை )
அதாவது
த்வத் பாத மூலம் சரணம் பிரபத்யே -ஸ்தோத்ர ரத்னம் -22-என்றும் ,-த்வத் பாதாரவிந்த யுகளம் சரண மஹம் பிரபத்யே–கத்யத்ரயம் – -என்றும் சொல்லுகிறபடி , ஸ்வீகரிக்க பட்ட சித்த சாதனத்தை உடையவர்கள்..-இத்தை –-அதாவது – இந்த பக்தியை போஜனத்துக்கு ஷூத்து போலே கைங்கர்யத்துக்கு உபகரணம் ஆகையாலே , பிராப்யமான கைங்கர்யத்தோபாதி இதுவும் நமக்கு பிராப்யம் என்று புத்தி பண்ணி , பகவத் பக்திம் அபீ பிரயச்சமே -ஸ்தோத்ர ரத்னம் -54-என்றும் ,
ஸ்தான த்ரயோதித பரபக்தி யுக்தம் மாம் குருஷ்வ-சரணாகதி கத்யம் -என்றும் ,-பரபக்தி ,பரஞான ,பரம பக்தி ஏக ஸ்வாபம் மாம் குருஷ்வ–சரணாகதி கத்யம் -என்றும் சொல்லுகிற படி பகவான் பக்கலிலே அர்த்திக்க-இமாம் பிரக்ருதிம் ஸ்தூல சூஷ்ம ரூபம் விஸ்ருஜ்ய ததா நீ மேவ-சரணாகதி கத்யம் –இத்யாதியிலே சொல்லுகிற படி – சரீர வியோகசம அநந்தரம் பகவத் பிராப்தி பண்ணுவதற்கு முன்னே சித்திக்கும் என்கை –
’த்வத் பாத மூலம் ஸரணம் ப்ரபத்யே”” (ஸ்தோ,ர.22) என்றும், ‘“ஸ்ரீமந் நாராயண சரணாரவிந்த,ம் ஸரணமஹம் ப்ரபத்யே”” (ஸ -கத்யம்) என்றும், “லோக விக்ராந்த சரணென ஸரணம் தே அவ்ரஜம் விபோ ”” (ப,வி.பு.) என்றும் சொல்லுகிறபடியே இப்படி ஸித்த ஸாதந ஸ்வீகாரம் பண்ணினவர்கள் இத்தை ஸாத்யமாக இரக்க, இந்த பக்தி கைங்கர்யோபகரணமாய்க் கொண்டு ப்ராப்யாந்தர் கதமாகையாலே “‘பகவத் பக்திமபி ப்ரயச்ச, மே!” (ஸ்தோ.ர.) என்றும், ‘பரபக்தி பரஜ்ஞாந பரமபக்த்யேக ஸ்வபாவம் மாம் குருஷ்வ”’ (ர.கத்யம்) என்றும் சொல்லுகிறபடியே இந்த பக்தியை ஸாத்யமாக அவன் பக்கலிலே அபேஷிகிக்க, ப்ராப்திக்கு முன்னே ஸித்திக்கும், இது கைங்கர்யத்துக்கு பூர்வ பாவியாகையாலே பகவத் பிராப்திக்கு முன்னே ஸித்திக்கும் என்கிறார்.
ந தர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ
நபக்தி மாம்ஸ்த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ’நந்யகதிஶ் ஶரண்ய!
த்வத் பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே ||–22–சரணடையத் தகுந்த ஸ்வாமியே! நான் கர்ம யோகத்தில் நிலையாக இல்லை; என்னிடத்தில் ஆத்ம ஞானமும் இல்லை;-என்னிடத்தில் உன் திருவடிகள் விஷயமான பக்தியும் இல்லை; இப்படி வேறு உபாயமும் புகலும் இல்லாத நான்,-உன் திருவடிகளையே உபாயமாக உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன்.
பர பக்தி பர ஜ்ஞான பரம பக்த்யேக ஸ்வபாவம் மாம் குருஷ்வ—சூரணை -15—பர பக்தியும் -அதன் கார்யமான பர ஜ்ஞானமும் -அதன் கார்யமான பரம பக்தியும் – எனக்கு யாவதாத்மா பாவியாக உண்டாக வேணும் -என்கிறார்
மச் சரணார விந்த யுகள ஐகாந்திக ஆத்யந்திக பர பக்தி பர ஜ்ஞான பரம பக்தி விக்ன – நிரதிசய போக்யமான என் திருவடிகளில் நித்தியமாய் ஏக ரூபமாய் செல்லுகிற பர பக்தி பர ஜ்ஞான பரம பக்தி களுக்கு இடைச் சுவரான முன் சொன்னவற்றை உடையீராய்–மச் சரணாரவிந்த யுகள ஐகாந்திக ஆத்யந்திக பர பக்தி பர ஜ்ஞான பரம பக்தி – இது காணும் பெரும் பேறு
அவபோதிதவாநிமாம் யதா
மயி நித்யாம் பவதீயதாம் ஸ்வயம் |
க்ருபயைததநந்ய போக்யதாம்
பகவந்! பக்திம் அபி ப்ரயச்ச மே ||--54-என் ஸ்வாமியே! எப்படி உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் என்னுடைய சேஷத்வத்தை எனக்கு அறிவுறுத்தினாயோ, அதேபோல வேறு எங்கும் கிடைக்காத, உன்னிடத்தில் பக்தி செய்யும் அந்த இனிய அனுபவத்தையும், நீயே அளிக்க வேண்டும்.
—
இனி இவ் ஆழ்வாருடைய பக்தி விசேஷம் இருக்கும் படியை அறிவிக்கிறார் …
இது உபயமும் அன்றிக்கே-அறியாக் காலத்தே-ஒக்கப் பிறந்து-தழுவி-நின்று-கட்டமே-நோயாய்
உலர்த்தி-வீழ்ந்து-அலப்பாய்-த்யாக ஸ்வீகார நிஷ்டா ஹானிகள் ஆக்கி சத்தா போக விருத்தி உபகரணம் ஆவது ஓன்று-சூரணை -101-
( இது -ஆழ்வாருடைய பக்தியானது -சாதன ஸாத்ய பக்திகள் போலே அன்றே –சத்தைக்கும் போகத்துக்கும் கைங்கர்ய உபகரணம் என்றவாறு )-அதாவது-கீழ் உக்தையான இவ் ஆழ்வார் உடைய பக்தி ,-ஸ்வ யத்தன சாத்யையாய் உபாய பூதையாய் இருக்கும் பக்தியும் ,-உபாய பரிக்ரஹ அனந்தர அபேஷிக்க உபாய பலமாய் வரும் பக்தியும் ஆகிற-நடுவில் சொல்லுகிற இரண்டும் அன்றிக்கே –
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து -திருவாய் -2-3-3–என்றும்
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த லஷ்மனோ லஷ்மி வர்த்தன –பால -18-27- -என்கிற படியே
அறிவுக்கு சம்பாவனை இல்லாத பால்யத்திலே ,பிராப்தி பலமான அடிமையிலே , அதி பிராவண்யத்தை பிறப்பித்தது என்னும் படி திருத் துழாய்க்கு மணம் போலே ஒக்கப் பிறந்து –
(இது உபயமுமின்றிக்கே) இவருடைய பக்தி உபாஸகர் கர்ம ஜ்நாநங்களாலே ஸாதித்து பகவத் ப்ரஸாதத்துக்கு ஸாதநமாகக் கொள்ளுகிற பக்தியுமன்றிக்கே, ஸித்த ஸாதந பரிக்ரஹம் பண்ணினவர்கள் கைங்கர்யோபகரணமாக அபேஷித்துப் போருகிற பக்தியுமன்றிக்கே; (அறியாக் காலத்தே ஒக்கப் பிறந்து] ‘அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து’” (திருவா. 2 – 8 – 3) என்றும், ““பால்யாத் ப்ரப்ரதி ஸுஸ்நிக்த.”” (ரா.] என்றும் சொல்லுகிறபடியே அறிவு நடையாடுகைக்கு யோக்யதை யில்லாத அதிபால்யத்திலே கைங்கர்யத்தைப் பெற்றல்லது நிற்க வொண்ணாத அதிமாத்ர ப்ராவண்யத்தை விளைத்தான் என்று சொல்லும்படி ”ஸஹஜ பக்திரஸ்மாகம்”‘ என்று ஸஹஜையாய்,
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –2-3-3-அறிவு கேட்டைப் பண்ண வற்றாய்-துஸ்தரமான சம்சாரத்திலே இருக்கிற என்னை – அடியேன் -என்கிறது -அஹம் சப்த பர்யாயம் – அறிவுக்கு சம்பாவனை இல்லாத பால்யத்திலே -பிராப்தி பலமான அடிமையிலே ஸ்நேஹத்தை பிறப்பித்து வைத்தாய்–இங்கே வைத்து பகவத் விஷயத்தை அவஹாகிப்பித்தது-அத்தாலே ஒரு தேச விசேஷத்திலே பெறும் பேறு சாத்மிக்கைக்காகவும்- ப்ராப்யத்தில் த்வரை விஞ்சுக்கைக்காகவும் இறே
போக்யதை மிக்கு இருக்கிறபடி
தழுவி நின்று –அதாவது — தழுவி நின்ற காதல் தன்னால் -திருவாய் -4-7-11–என்று விடுவேன் என்றாலும் ,விட ஒண்ணாத படி உடன் வந்தியாய்-கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும் –திருவாய் -7-2-4-என்றும் ,-வேட்கை நோய் கூர –9-6-7- என்று அநுபாவ்ய விஷயத்தை யதா மனோரதம் அனுபவிக்கப் பெறாத போது ,போஜனம் பெறாத தசையிலே பசி போலே , கஷ்டம் எனபது -வியாதி என்பதாம் படி -வெறுப்பை விளைத்து –உலர்த்தி –அதாவது –வேவரா வேட்கை நோய் மெல்லாவி உள் உலர்த்த –2-1-10-என்றும் ,-வீழ்ந்து –அதாவது – உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து –5-7-2-என்றும் ,-அலப்பாய்-
அதாவது –உன்னைக் காண்பான் நான் அலப்பாய் –5-8-4-என்றும் ,சொல்லுகிற படி அசோஷ்யமான ஆத்ம வஸ்துவைக் குருத்து வற்றாம் படி சோஷிப்பித்து ,-கடலிலே விழுந்தால் போல் கரை ஏற ஒண்ணாத படி அபிநிவேச ரூபமான தன்னுள்ளே ஆழ்ந்து போக்யமான ,அவ் விஷயத்தை காண வேண்டும் என்று அலமாக்கப் பண்ணி –
*‘தழுவி நின்ற காதல் ”” (திருவா. 4 – 7 -11) என்று உடன் வந்தியாய், கட்டமே காதல்” (திருவா. 7 – 2 – 4) என்றும், ““வேட்கை தோய் கூர” (திருவா. 9 – 6 7) என்றும் அபி, நிவேஸாநுகுணமாக அநுபவம் ஸித்தியாமையாலே இது கஷ்டம் என்று சொல்லும்படி வ்யாதி ரூபமாகையாலே பாத,கமாய், ““வேவாரா வேட்கை தோய் மெல்லாவி உள்ளுலர்த்த”” (திருவா. 2 – 1 – 10) என்றும், “உன்னைக் காணுமவாவில் வீழ்ந்து” (திருவா. 5 – 7 – 2) என்றும், ““உன்னைக் காண்பான் நானலப்பாய்”” (திருவா. 5 – 8 – 4) என்றும் அஸோஷ்யமான ஆத்ம வஸ்துவை ஸோஷிப்பித்து, அபி நிவேஸத்திலே ஆழ்ந்து, காண வேணுமென்று அலமாக்கப் பண்ணி.
இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்; எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்;
‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்; ‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்;
‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும் ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறத் தென் சிந்தித்தாயே ?–7-2-4—அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு -என்று ப்ரேமமே புருஷார்த்தம் என்று இருக்கிற இவள் -ப்ரேமம் போலே தண்ணிதாய் இருபத்தொரு இல்லை என்னா நின்றாள் -இது ரசிப்பது இவ்விஷயத்தின் உடைய லாப ஹேது வான போது இறே -விஸ்லேஷத்தில் நலிவுக்கு உடலாகையாலே தண்ணிது என்கிறாள் -இது கட்டம் என்னும் காட்டில் இதுக்கு பரிஹாரம் பிறந்தது ஆகாமையாலே மூர்ச்சிக்கும் –
தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.–4-7-11–நான் விடுவேன் என்னிலும் விட ஒண்ணாத உடன் வந்தியான–அதிமாத்ர ப்ரேமத்தாலே
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-அபி நிவேசம் மிகும் படி அனுசந்தித்து
கரைந்து உகும்--சிதிலமாய் -ஓர் அவயவி பிரதிபத்தி பண்ண ஒண்ணாத படி உகும் –
வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10—ஒரு கால் வெந்து சமையக் கடவது அன்றிக்கே -அக்னி நேவாக் நி பர்வத -என்கிறபடியே வெந்த இடமே இந்தநமாக தஹியா நிற்கிற காதல்
அளவில்லாத வேட்க்கை நோய்-மெல்லாவி –பாத்தம் போராத ஆத்மாவை -அதாஹ்யமாய் இருப்பது கேவல அக்னி யாகில் இறே-யுள்ளுலர்த்த- கூடோ அக்னி ரிவ பாதபம் -கோடாரத்தில் பற்றின அக்னி போலே குருத்து வற்றாக வற்றுவிக்க
அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2–சாதனம் அனுஷ்ட்டித்து முக்த பிராயனாய் இருக்கிறேன் அல்லேன் -சாதனம் அனுஷ்டானம் பண்ணுமவர்களில் ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன் -மேலும் சாதன அனுஷ்டானம் பண்ண ஒண்ணாத படி ஸுந்தரியாதிகளிலே ஈடுபட்டு உன்னைக் காண வேணும் ஆசையால் பலஹீனனாய் தளர்ந்து இனி உபாய அனுஷ்டான ஷமனும் அல்லேன் -இது பூர்வர்கள் நிர்வாகம் –அதவா – நீ இருந்த இடத்தே வந்து கிட்டி உன்னை அனுபவிக்கிறேன் அல்லேன் -உன் பக்கல் நிரபேஷராய் இருக்கிற சம்சாரிகளிலே ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன் -உன்னை ஒழிய தரித்து இருக்கிற சம்சாரிகளோடே பொருத்தம் யுடையேன் அல்லேன் –அங்கு வர மாட்டேன் -அபி நிவேசத்தால் இங்கு நிற்க மாட்டேன் -பிறரோடு பொருத்தம் உடையேன் அல்லேன் -என்றுமாம் –
செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.–5-8-4-க்ரம பிராப்தி பற்றாதபடி ஸ்நேஹித்து இருக்குமவர்கள் -அவர்களதான திருக் குடந்தையில் அவர்களை பிரிய மாட்டாமையாலே உடம்போடு கண்டு அனுபவிக்கலாம் படி கண் வளர்ந்து அருளுகிறவனே-ஆஸ்ரித வத்சலனான உன்னை காண் கைக்காக -அத்தலை இத்தலையாய் நீ என்னை காண பட்ட அளவன்று-நான் உன்னை காண் கைக்கு பட்டது-அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே-அலமந்து -விஷயம் சந்நிஹிதமாய் இருக்கச் செய்தே-ஆகாசத்தை பார்க்கிறது -நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு உதவ வந்து தோற்றினால் போலே -தம் தசையைப் பார்த்து தோற்றுகிறானோ என்று பார்த்து -என்னுடைய நிராலம்பநதையைப் பார்த்து என்னுமாம் ஆண்டான் வரக் காணா மையாலே ஸ்நே ஹிதிகள் செய்வதும் செய்யா நின்றேன் -க்ருபணர் செய்வதும் செய்யா நின்றேன் -சபலர் செய்வதும் செய்யா நின்றேன் -விரக்தர் செய்வதும் செய்யா நின்றேன் –
தியாக ஸ்வீகார நிஷ்டா ஹானிகளாக்கி –அதாவது –தியாக நிஷ்டைக்கு ஹானி யாக்கி – ஸ்வீ கார நிஷ்டைக்கு ஹானி ஆக்கி –என்று கொண்டு-தியாக நிஷ்டா ஹானியாக்கி-அதாவது –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-5-8-3- -என்கிற படியே இதர உபாய பரித்யாக பூர்வமாக அவனே உபாயம் என்று அறுதி இட்டு இருக்கும் இவரை–குதிரியாய் மடலூருதும்-5-3-9- -என்றும்-மடலூர்ந்தும் எம்மாழி அம் கைப் பிரானுடைத் தூ மடல் தண் அம் துழாய் மலர் கொண்டு சூடுவோம்-5-3-10- -என்னும்படி த்யஜித்த உபாயத்தில் மூட்டுகையாலே -த்யாக நிஷ்டா ஹானியையும் ,-
என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3—நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா என்கை -த்வம் ஏவ உபாயம் போதோ மே பாவ –
நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக்கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை
ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.–5-3-9-–என்னாலான மிறுக்குகள் செய்து –கோணை-மிறுக்கு-அதாவது மடல் கொண்டு புறப்பட்டவாறே எதிரே வரும் –சென்று கும்பிடக் கடவேன்-குதிரியாய்-என்று தடை இல்லாப் பெண் -அடங்கா ஸ்திரீயாய் –குதிரி என்று ஆபரணம் இட்டு வைக்கும் செப்பாய் -இவளுக்கு ஆபரணம் -நாணும் நிறையும் இ றே -அவை போகையாலேகேவல சரீர மாத்ரமாய் செல்லக் கட வேன்-குதிரி -குதிரையை யுடையவள்-பனை மடலை குதிரையாக யுடையவள் என்றுமாம் –மடல் ஊர்துமே.-இரண்டு தலையையும் நோக்கி இருந்தது அமையும் –இனி மடலூர்ந்தே விடக் கடவேன் –
யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்
நாமடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–5-3-10-செய்யக் கடவது அல்லாததை செய்தே யாகிலும் –தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்கக் கடவ நாம் மடலூர்ந்தே யாகிலும் -இங்கு மடலாக நினைக்கிறது -பெற்று அன்று தரியாத உபேய த்வரையும்-அதுக்கு அடியான உபாய வை லக்ஷண்ய அனுசந்தானமும் உபாயம் தன்னாலே பேறு என்ற துணிவும் -வேறு ஒன்றை உபாயமாக நினையாமையும் -க்ரம பிராப்தி பற்றாமையும் -மடலாய்ச் செல்லுகிறது-மடலைக் கொடு புறப்பட்டால்-எதிரே வந்து என் கையில் மடலை வாங்கி தன் தோளில் மாலையை வாங்கி என் தோளில் இடில் இறே அவனுக்கு நிறம் உள்ளது -இல்லையாகில் அவன் படும் பாடு பாராய் -செவ்வி மாலை சூடக் காண் நான் வேண்டி இருக்கிறது -என் தோளில் மாலை பாராய் சரு கான படி -அத்தலையை அழித்து ஆகிலும் பெற கடவோம்
ஸ்வீ கார நிஷ்டைக்கு ஹானி ஆக்கி —
அதாவது –ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -5-7-10–என்றும்-கழல்கள் அவையே சரணாகக் கொண்ட–5-8-11- -என்றும் ,-அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் -5-9-11-என்றும் ,
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -5-10-11–என்றும் ,-அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே-6-10-10 -என்று-நோற்ற நோன்பு-5-7– பதிகம் தொடங்கி அடுத்து அடுத்து பிரபத்தி பண்ணும்படி ஆக்குகையாலே
சக்ருதேவஹி ,சாஸ்த்தார்த்த க்ருதோயம் ,தாரயேன் நரம்-ஸ்ரீ லஷ்மீ தந்திரம் –-சக்ருதேவ பிரபன்னாய தவாஸ் மீதிசயாசதே அபயம் சர்வ பூதேப்ய தாதாமி ஏதத் விரதம் மம –யுத்த –18-33- –இத்யாதிகளில் சொல்லுகிற படியே சக்ருத் கர்தவ்யமான ஸ்வீகாரத்தில் ,நிஷ்ட ஹானியையும் உண்டாக்கி.-
(த்யாக ஸ்வீகார நிஷ்டா ஹாநிகளாக்கி) த்யஜித்த உபாயத்திலே மூட்டி, த்யாக நிஷ்டையைக் குலைத்து, ஸக்ருத் ஸ்வீகாரம் அமைந்திருக்க *நோற்ற தோன்பு தொடங்கி, அடுத்தடுத்து ப்ரபத்தி பண்ணுகையாலே ஸ்வீகாரத்தில் நிஷ்டையைக் குலைத்து.
ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-ஆறு -என்று உபாயம் -சரண் என்று உபேயம் -உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம் படி பண்ணினாய் என்று பிள்ளான் நிர்வஹிக்கும்--இவை இரண்டிலும் உபாயத்தையே சொல்லுகிறது என்று பட்டர் நிர்வஹிப்பர்-எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி பண்ணித் தந்தாய் –ஆறு -உபாயம் -உபாக்யார்த்தைக வாசக -என்கையாலே சரண் என்று உபாயம் –எனக்கு என்று -உபாயாந்தர நிஷ்டரைக் காட்டிலும் தமக்கு உள்ள வேறுபாடு சொல்லுகிறார் –நோற்ற நோன்பிலேன் என்று தொடங்கி-உபாயாந்தர சூன்யத்தையை முன்னிட்டு உபாய நிஷ்கர்ஷம் பண்ணுகிற திரு வாய் மொழி யாகையாலே அத்தையே நிகமிக்கிறது -அவதாரணத்தாலே ஏக பதத்தை நினைக்கிறது -ஈஸ்வரனை பற்றின ஊற்றத்தாலே உபாயாந்தரங்களை நெகிழ்கை ஒழிய -நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவாம் -ஒளஷத சேவை பண்ணினான் ஒருவன் சர்ப்பத்தின் வாயிலே கை கொடுத்தால் நிர்ப்பாதம் -ஒளஷத ஸ்பர்சம் இல்லாதவன் அத்தைச் செய்தால் மரண ஹேதுவாம் –
உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–5-8-11—தமக்கு உபாயமாக முன்பு பிரகாசிப்பித்த திருவடிகளையே அபிமத சித்திக்கு உபாயமாக புத்தி பண்ணிக் கொண்ட திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வாரானவர்-
நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.–5-9-11-தேவோ நாம சஹஸ்ரவான் என்கிறபடியே குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களை யுடையவன் ஆகையாலே சர்வேஸ்வரனாக பிரசித்தனானவன்-அவனைப் பெறாதே நோவு பட நோவு பட அவன் திருவடிகளே ரக்ஷகமாகப் பற்றும் ஆழ்வார் பிராட்டி ஆற்றாமை மிக்க இடத்திலும் ராவணனை சபியாதே பெருமாள் வரவை பார்த்து இருந்தால் போலே அவனுக்கு திரு நாமங்கள் போலே குண சேஷ்டிதங்களுக்கு ப்ரதிபாதகமான ஆயிரத்திலும்-ஆராய்ந்து உரைத்த இப்பத்தையும்-
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11—அனந்த சாயித்தவம் சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் ஆகையாலே -சர்வாதிகனே சரண்யன் என்கிறது -திரு வனந்த ஆழ்வானுடைய புருஷகார பாவம் சொல்லுகிறது என்றுமாம் –படுக்கையைச் சொல்ல படுக்கை யுடையாரைச் சொல்லிற்றாம் இறே
நம்பிரான் -ஆஸ்ரித விஷயத்தில் உபகார சீலனானவன் –சரணே சரண் நமக்கு என்று -நமக்கு திருவடிகளே உபாயம் என்று –அவதாரணத்தாலே உபாய நைரபேஷ்யம் சொல்லுகிறது -சம்சாரிக ஸ்வ பாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும் இது தவிர வேறு ஒன்றில் கால் தாழாது ஒழி கை -மஹா விச்வாஸம் ஆகிறது –நாடொறும் ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்-ஆக நூற்ற
நாள் தோறும் இதுவே மநோ ரதமான ஆழ்வார் -பகவத் குண பிரேரிதராய் தாம் உள்ராகைக்காக-
அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-உன்னடிக் கீழ் -விக்ரஹ யோகம் சொல்லுகிறது-அமர்ந்து -செறிந்து -சஹகாரி வ்யவதானம் இன்றிக்கே ஒழிகை
புகுந்தேனே.–போக்கு வரவு யுண்டாய் அன்று -புத்தி கதியாய் அத்யாவசாயத்தை சொல்லுகிறது
சத்தா போக விருத்த உபகரணம்-ஆவது ஓன்று–சத்தைக்கும் போகத்துக்கும் விருத்திக்கும் உபகரணமாவது ஓன்று உண்டு பகவத் விஷயத்தை நினையாமை என்றும் ,சத்தா ஹானி என்றும் இரண்டு இல்லை என்று இருக்கும் இவருக்கு –அநவரத தத் விஷய நினைவு -ஸ்மரண -ஹேது ஆகையாலே-சத்தைக்கும் – எல்லாம் கண்ணன்-6-7-1- -என்று இருக்கும் இவருக்கு தத் விஷய அன்பு ருசியை மென் மேலும் விளைக்கையாலே போகத்துக்கும் –-வழு இலா அடிமை செய்ய வேண்டும் -3-3-1-என்று இருக்கும் இவருக்கு , அசேஷ சேஷ தைக ரதித்வதுக்கு உடலாகையாலே வ்ருத்திக்கும் உபகரணமாய் இருக்கும் என்கை –அன்றிக்கே –சத்தா போகேத்யாதிக்கு -நா கிஞ்சித் குர்வதச் சேஷத்வம்—ஸ்தோத்ர ரத்னம் -46-என்று கிஞ்சித் கரியாத வஸ்துவுக்கு சேஷத்வம் இல்லை என்கையாலே ,சேஷத்வ ஏக நிரூபணியனான இவனுடைய சத்தை -கிஞ்சித் காரத்திலே ஆதலால் இவனுக்கு சத்தா ஹேதுவாய்-தனக்கே ஆக எனைக் கொள்ளும் ஈதே -2-9-4- -என்றும்-உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் -10 -3 -9—-என்றும்-கதா பிரகர்ஷா இஷ்யாமி- ,ஸ்தோத்ர ரத்னம் -46-இத்யாதிகளின் படியே – இது தான் பரம பிரயோஜனமாய் பண்ணும் அதாகையாலே அவனுக்கு போகமாய் இருக்குமதான கைங்கர்ய வ்ருத்திக்கு உபகரணமாய் இருப்பது என்றுமாம்–ஆக கீழ்ச் செய்தது ஆயிற்று –இவருடைய பக்தி சாதித்து பெற்றதும் அன்று-அபேஷித்து பெற்றதும் அன்று-
சஹஜையாய் ,சத்தாதிகளுக்கு ,உபகரணமாய் இருப்பது ஓன்று என்றது ஆய்த்து –
(ஸத்தா போக வ்ருத்த் யுபகரமானதொன்று) ““நாகிஞ்சித்குர்வதஸ் ஸேஷத்வம்”’ (வேதாஸம்) என்று ஸேஷத்வைக நிரூபணீயமான இவருடைய ஸத்தை கிஞ்சித்காரத்தாலே யாகையாலே இவருடைய ஸத்தா ஹேதுவாய், “’தனக்கேயாக”’ (திருவா. 2 – 9 – 4) என்றும், “உன்தன் திருவுள்ள மிடர்கெடுந்தோறும்”” (திருவா. 10 – 3 – 9) என்றும் “*கதாத், ரக்ஷ்யதி மாம் பதி” (ரா.ஸு.) என்றும், ”கதா ப்ரஹர்ஷயிஷ்யாமி” (ஸ்தோ.ர. ) என்றும், “உன்னாகமுற்றுமகத்தடக்கி ஆவி யல்லல் மாய்த்ததே”” (திருவா. 4 – 3 – 3) என்றும் ஸர்வேஸ்வரனை பலியாகச் சொல்லுகையாலே அவனுக்கு போகமாயிருக்கிற கைங்காயத்துக்கு உபகரணமாயிருப்பதொரு பக்தி என்கிறார். ஆக, இதுக்குக் கீழ் இவருடைய பரபக்தி ஸாதித்துப் பெற்ற பக்தியுமன்று, அபேக்ஷித்துப் பெற்ற பக்தியுமன்று, ஸஹஜையாய், ஸத்தா ப்ரயுக்தையான பக்தி என்றார் –
உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்
கண்ணன்எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–6-7-1–ஜீவித்து அல்லது தரிக்க ஒண்ணாத சோறு -தாஹித்தால் பானம் பண்ணி யல்லது நிற்க ஒண்ணாத தண்ணீர் -தின்றால் அல்லது புஷ்டனாக விரகு இன்றிக்கே இருக்கும் வெற்றிலையும் -தாரக போஷக போக்யம் ஆனவை எல்லாம் எனக்கு நாதனான கிருஷ்ணன் -வாஸூ தேவஸ் சர்வம் -என்று ஆயிற்று இவள் இருப்பது-
ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-சர்வ தேசத்திலும் -காட்டிலும் தொடர்ந்து அடிமை செய்த இளைய பெருமாளை போலே-மன்னி-சர்வ அவஸ்தையிலும் -உலகத்தோடு ஏகாந்தத்தோடு வாசி அற-வழு இலா அடிமை -சர்வ சேஷ வ்ருத்தியும் செய்ய வேண்டும்-சாஸ்த்ரங்களால் இதுவே புருஷார்த்தம் என்று அறிக்கை போராது-அனுஷ்டான பர்யந்தமாக வேணும் – நாம்-திரு உள்ளத்தைக் கூட்டிக் கொள்ளுகிறார் ஆதல் கேசவன் தமருக்கு பின்பு தனியர் அல்லாமை யாலே திரு உள்ளத்தோடு ஒக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு சொல்லுகிறார் ஆதல்–
எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4—சேஷ சேஷிகள் கலந்தால் சேஷ பூதனுக்கும் வருவதொரு ரசம் உண்டு இறே-அப்படியே அன்றியே நீ உகந்த அடிமை கொண்டு அருள வேணும்
ஸ்ரக் சந்த நாதிகளைப் போலே மிக்க அம்சம் கழிக்கலாய் இருக்கை- கீழ் முன்னிலையாய் போரச் செய்தே தனக்கே என்கிறது – முகத்தைப் பார்க்கில் நோக்கிலும் ஸ்மிதத்திலும் துவக்குண்டு அத்தாலே நிஷ்கர்ஷம் குலையும் என்று கவிழ்ந்து இருந்து கையோலை செய்து கொடுக்கிறார் –
எனக்கே ஆடச்செய் -என்கிற இடம் -அந்நிய சேஷத்வத்தை தவிர்க்கிறது
தனக்கே யாக என்கிற இடம் -தன்னோடு தனக்கு உள்ள அன்வயத்தைத் தவிர்க்கிறது-
உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம் எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9-எங்களை போல் அன்றிக்கே -நீ உகக்கும்படியான வி லக்ஷணை களோடு சஞ்சரித்து -அவர்களோடே பரிமாறப் பெற்றிலோம் என்று திரு உள்ளத்தில் யுண்டான விடாயால் வந்த துக்கம் கெடும் தோறும் –
நாங்கள்-வியக்க இன்புறுதும்–புறம்புள்ளாரைப் போல் அன்றியே -உன் உகப்பே பிரயோஜனமாக நாங்கள் -மிகவும் உகப்புதோம்-மிகுதி எதில் காட்டில் என்னில்-எங்களோடு கலக்குமதில் காட்டில் -என்னுதல்–உன்னில் காட்டில் நீ உகந்தவர்களை உகப்புதோம் -என்னுதல் –
எம் பெண்மை ஆற்றோம்-உன் உகப்புக்கு புறம்பாய் வரும் ஸ்த்ரீத்வம் எங்களுக்கு அஸஹ்யம் -அது வேண்டா –
பவந்த மேவாநுசரந் நிரந்தரம்
ப்ரஶாந்த நிஶ்ஶேஷ மநோரதாந்தர: |
கதா’ஹம் ஐகாந்திக நித்ய கிங்கர:
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாதஜீவித: ||–46-மற்ற எல்லா விஷயங்களிலுமிருக்கும் ஆசையை அடியோடு விட்டு உன்னையே தொடரும்படி இருந்து, எப்பொழுதும் உனக்கு நித்ய கைங்கர்யம் செய்து உனக்கு ஆனந்தத்தைக் கொடுத்து என் வாழ்கைக்கும் ஒரு பயனைப் பெறுவேன்?
–——————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply