ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-மூன்றாம் அத்யாயம்-ஸாதந அத்யாயம் – இரண்டாம் பாதம்-உபய லிங்க பாதம்–ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
 ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

————————-

இரண்டாம் பாதம் –உபய லிங்க பாதம் -8 அதிகரணங்கள்-40 ஸூத்ரங்கள்

முதல் அதிகரணம் -சந்த்யாதி கரணம்– 6 ஸூத்ரங்கள்-
கனவில் காணும் பொருள்கள் அனைத்தும் பரமாத்வால் படைக்கப் படுகின்றன -எனபது நிரூபிக்கப் பட்டுள்ளது-

இரண்டாம் அதிகரணம் -தத்பாவாதிகரணம் -2 ஸூத்ரங்கள்-
ஜீவன் உறங்கும் இடங்கள் எவை எவை என்று நிரூபிக்கப் படுகிறது-

மூன்றாவது அதிகரணம் -கர்மாநு ஸ்ம்ருதி சப்த வித்யதிகரணம் — 1 ஸூத்ரம்–
உறங்கிய ஜீவனே மீண்டும் விளித்து எழுகிறான் -வேறே ஜீவன் இல்லை என்று நிரூபிக்கிறது –

நான்காவது அதிகரணம் -முக்தாதிகரணம் – 1 ஸூத்ரம்-
விழிப்பு கனவு ஆழ்ந்த உறக்கம் மூன்றை விட மாறுபட்ட மூர்ச்சை நிலை-

ஐந்தாவது அதிகரணம் – உபய லிங்க அதிகரணம் -15 ஸூத்ரங்கள்–
அந்த்ர்யாமியாக இருந்தும் உடலின் தோஷங்கள் தட்டாதவன் பரப் ப்ரஹ்மம்-

ஆறாவது அதிகரணம் -அஹி குண்டலாதிகரணம் -4 ஸூத்ரங்கள்–
ப்ரஹ்மத்தின் ரூபம் அசேதன பொருள்களான மூர்த்தமும் -விக்ரகமும் -பிரபஞ்சமே ப்ரஹ்மத்துக்கு சரீரம் என்றும் கூறப்பட்டன –
அசேதனங்களின் தோஷங்கள் ப்ரஹ்மத்துக்கு ஏற்படாது என்று நிரூபிக்கப் படுகிறது –

ஏழாவது அதிகரணம் -பராதிகரணம் -7 ஸூத்ரங்கள்–
ப்ரஹ்மத்தை விட உயர்ந்த வஸ்து வேறு இல்லை என்றும் இவனை
தவிர அடைய வேண்டிய வஸ்து வேறு இல்லை என்றும் நிரூபிக்கப் படுகிறது –

எட்டாவது அதிகரணம்-பலாதிகரணம் – 4 ஸூத்ரங்கள்-
கர்மங்களின் அனைத்து பலன்களையும் பரமாத்மாவே அளிக்கிறான் என்று நிரூபிக்கப் படுகிறது

3-2-1-ஸந்த்₄யாதி₄கரணம்-நாம் கனவில் காணும் பொருள்களை யார் படைக்கிறார்? –பாதத்தின் ஸங்கதி-மூன்றாம் அத்யாயமான ஸாதந அத்யாயத்தில், பக்தி யோகம் என்ற ஸாதனத்தைப் பற்றிக் கூறுவதற்கு முன்னால், அதைச் செய்வதற்கான தகுதியை ஏற்படுத்த முதல் இரண்டு பாதங்கள் அமைந்துள்ளன. வைராக்ய பாதம் என்ற முதல் பாதத்தில் இந்த ஸம்ஸாரத்தில் ஜீவாத்மா படும் கஷ்டங்களைச் சொல்லி அதன் மூலம் உலகில் பற்றின்மையை ஏற்படுத்துகிறார் வ்யாஸர். அதைத் தொ டர்ந்து உபய லிங்க பாதம் என்ற இரண்டாவது பாதத்தில், பகவானிடம் ஆசையை வளர்ப்பதற்காக பரமாத்மாவின் இரண்டு அடையாளங்களைச் சொல்கிறார்
1-அகி₂ல ஹேய ப்ரத்யநீகத்வம் – எல்லா தாழ்ச்சிகளுக்கும் -தோஷங்களுக்கும் எதிர்த் தட்டாய் இருத்தல்
2-கல்யாண கு₃ண ஏக தாநத்வம் – அனைத்து கல்யாைண குணங்கள் -நற் பண்புகளுக்கும் இருப்பிடமாய் இருத்தல்.

ப்₃ரஹ்மைவ ஸ்வை ꞉ ஸ்வபா₄வை ꞉ ப₃ஹுமுக₂ம் அவத₃த் ப்ராக்தநாத்₄யாய யுக்₃மே
தஸ்யேஹ ஆக்ருஷ்ய சிந்தா கிமிதி புநரஸௌ ஸாத₄நாத்₄யாய மத்₄யே ।
மைவம் வித்₃யா꞉ ப்ரபே₄த்தும் விஶத₃யதி பரம் தத்₃தி₄ தத்₃ரூப பே₄தா₃த்
ஸித்₃தோ₄பாயாதி₃பா₄வம் ப்ரத₂யதி ச விபோ ₄꞉ ப்ராப்ய த்ருஷ்ணாய ப்ரதி₂ம் நே ॥

கேள்வி – முன் இரண்டு அத்யாயங்களில் ப்ரஹ்மத்தை அதன் குணங்களோடு கூடப் பல விதமாகச் சொல்லி விட்டாரே ? மறுபடியும் இதில் எதற்காக ஸாதனத்தைச் சொல்ல வேண்டிய இடத்தில் இழுத்து வைத்து ப்ரஹ்மத்தைப் பற்றிப் பேசுகிறார்?
பதில் – மேல் மூன்றாவது பாதத்தில் பக்தி யோகம் -உபாஸனத்தின் வகைகளை வேறுபடுத்திச் சொல்ல வேண்டும், உபாஸனத்தின் வேறுபாடு அதில் த்யானிக்கப்படும் குணங்களின் வேறுபாட்டால் தான், அதற்காக இந்த இடத்தில் ப்ரஹ்மத்துக்கு எண்ணிறந்த கல்யாண குணங்கள் உள்ளன என்று சொல்வது பொருத்தமானது தான். மேலும், மோக்ஷம் அடைவதற்கு பக்தி யோகம் என்ற ஸாத்₄ய உபாயம் (நம்மால் செய்யப்பட வேண்டிய வழி-உபாயம்) இருப்பது போல், ப்ரஹ்மமே ஸித்த உபாயமாக (நம்மால் செய்யப்படத் தேவை யில்லாமல் தானே ஸித்தமாக இருக்கும் உபாயமாக) இருப்பதால், ஸாதனத்தைச் சொல்ல வேண்டிய இந்த அத்யாயத்தில் ப்ரஹ்மத்தையும் சொல்வது பொருத்தமானதே –

பாதத்தின் சுருக்கம்
முன் பாதத்தில், ஜீவாத்மா விழித்திருக்கும் போதும் மரணமடைந்த பிறகும் அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றிச் சொன்னார் வ்யாஸர். இந்தப் பாதத்தில் கனவு, தூக்கம், மயக்கம் என்ற மூன்று நிலைகளைப் பற்றிப் பேசுகிறார்.

த்யக்தம் தோ₃ஷை ꞉ கு₃ணாட்₄யம் யதி₃ புநரிஹ தத் ப்₃ரஹ்ம சிந்த்யேத பாதே ₃
ஜீவ ஸ்வப்நாத்₃ யவஸ்தா₂ மநநம் அத₂ கத₂ம் ஸங்க₄டே தீதி சேந் ந ।
ஸ்வாப்நார்த₂ ஸ்ரஷ்ட்ருபா₄வ ப்ரப்₄ருதி ப₃ஹுவித₄ ப்₃ரஹ்ம மஹாத்ம்ய ஸித்₃த்₄யை
ஜந்தோரஸ்ய ஸ்வ முக்தௌ அதி பரவஶ தாஜ்ஞப்தேய ச ஏத த₃த்ர ॥

கேள்வி – ப்ரஹ்மம் தோஷங்களற்றவர், குணங்களுடையவர் என்று சொல்ல வந்த பாதத்தில் எதற்காக மறுபடியும் ஜீவனுடைய கனவு முதலானவற்றைப் பேச வேண்டும்? இதை முன் பாதத்திலேயே
சேர்த்திருக்கலாமே ?
பதில் – ஜீவாத்மாவின் கனவு முதலான நிலைகளைப் பற்றி ஆராய்ந்தாலும், அதில் முக்கியமாக ப்ரஹ்மத்தின் பல ஒப்பற்ற குணங்கள் சொல்லப் படுகின்றன – அவர் தான் நாம் கனவில் காணும் பொருள்களைப் படைக்கிறார் என்று தொடங்கி. எனவே , பரமாத்மாவின் பெருமைகளைச் சொல்ல வந்த இந்த பாதத்திலும் இது பொருத்தமானதே . மேலும், கனவு தூக்கம் முதலான நிலைகளில் எல்லாம் இந்த ஜீவாத்மா எவ்வளவு தூரம் பரமாத்மாவை அண்டியே இருக்கிறார் என்று காட்டுவதன் மூலம், இந்த ஸம்ஸாரத்தைத் தாண்டி மோக்ஷம் அடைவதற்கும் நாம் அந்த பரமாத்மாவைத் தான் எதிர்பார்த்து இருக்க வேண்டும், நாமாக அடைந்து விட முடியாது என்பதையும் உணர்த்துகிறார்.

3-2-1-ஸந்த்₄யாதி₄கரணம் – ஸங்கதி – முன் பாதத்தின் இறுதி வரை , ஜீவாத்மா பிறக்கும் போது அனுபவிக்கும் துக்கங்களைக் கூறினார். இந்த அதிகரணத்தில் ஸ்வப்நத்தில் ஜீவாத்மாவின் நிலையை ஆராய்கிறார்.

உபநிஷத்தில் ஸ்வப்நத்தைப்பற்றி
விஷய வாக்யம்
– ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் 4ஆவது அத்யாயத்தின் 3ஆவது கண்டத்தில் உள்ளது.-தஸ்ய வா ஏதஸ்ய புருஷஸ்ய த்₃ வே ஏவ ஸ்தா₂நே ப ₄வத இத₃ம் ச பரலோக ஸ்தா₂நம் ச |-இந்த ஜீவாத்மாவுக்கு இரண்டு இடங்கள் – இந்த உலகமும் ஸ்வர்கமும்-

ஸந்த்₄யம் த்ருதீயம் ஸ்வப்ந ஸ்தா₂நம் । தஸ்மிந் ஸந்த்₄யே ஸ்தா₂நே திஷ்ட₂ந் நேதே உபே ₄ ஸ்தா₂நே பஶ்யதி–ஸந்த்யம்-– (ஸ்வப்நம்) மூன்றாவது இடம். அந்த இடத்தில் இவன் இந்த உலகம் ஸ்வர்கம் இரண்டையும் காண்கிறான்.-ஸந்த்₄யம் என்றால் விழிப்புக்கும் தூக்கத்துக்குமான ஸந்தி₄யில் (இடையில்) உண்டானது – அதாவது ஸ்வப்நம்.

ந தத்ர ரதா₂ ந ரத₂யோகா₃ ந பந்தா₂நோ ப₄வந்த்யத₂ ரதா₂ந் ரத₂ யோகா₃ந் பத₂꞉ ஸ்ருஜதே ।-அங்கு தேர்கள், குதிரைகள், பாதைகள் இல்லை . தேர்களையும் குதிரைகளையும் பாதைகளையும் ஸ்ருஷ்டிக்கிறார்.

ந தத்ர ஆனந்தா₃ முத₃꞉ ப்ரமுதோ ₃ ப₄வந்தி அத₂ ஆனந்தா₃ந் முத₃꞉ ப்ரமுதோ ₃ ஸ்ருஜதே ।-அங்கு ஆநந்தம், மோதம், ப்ரமோதம் இல்லை . ஆநந்தத்தையும் மோதத்ணதயும் ப்ரவமாதத்தையும் ஸ்ருஷ்டிக்கிறார்.
பார்ப்பதால் இன்பமளிக்கும் பொருள்கள் தான் ஆநந்தம் என்றும், நம்முடையது என்று அறிவதால் இன்பமளிக்கும் பொருள்கள் மோதம் என்றும், பயன்படுத்துவதால் இன்பமளிக்கும் பொருள்கள் ப்ரமோதம் என்றும் கூறப் படுகின்றன-

ந தத்ர வேஶாந்தா꞉ புஷ்கரிண்ய꞉ ஸ்ரவந்த்யோ ப₄வந்த்யத₂ வேஶாந்தா₃ந் புஷ்கரிணீ꞉ ஸ்ரவந்தீ꞉ ஸ்ருஜதே ।ஸ ஹி கர்தா–அங்கு குட்டைகள், குளங்கள், நதிகள் இல்லை . குட்டைகளையும் குளங்களையும் நதிகளையும் ஸ்ருஷ்டிக்கிறான்.

பூர்வ பக்ஷியின் வாதம்
ஸந்தேஹம்
– இங்கு ஸ்வப்நத்தில் காணப்படும் பொருள்களைப் படைப்பவர் ஜீவாத்மாவா? பரமாத்மாவா?
பூர்வ பக்ஷம் – ஜீவாத்மா தான் இவற்றை ஸ்ருஷ்டிக்கிறார் என்று 2 ஸூத்ரங்களால் கூறுகிறார் பூர்வ பக்ஷீ.
1–ஸந்த்₄யே ஸ்ருஷ்டி: ஆஹ ஹி–
“ஸந்த்₄யத்தில் ஸ்ருஷ்டி (ஜீவாத்மாவால்), அப்படி யன்றோ கூறிற்று” ஸந்த்யத்தில் (ஸ்வப்னத்தில்) காணப்படும் பொருள்களின் ஸ்ருஷ்டி, அந்த ஸ்வப்நத்தைக் காணும் ஜீவனால் தான் செய்யப் படுகிறது என்கிறது வேதமே – ’-ஸ ஹி கர்த்தா’ (அவர் அன்றோ கர்த்தா) என்று ஜீவனையே சொல்வதால்.

2-நிர்மாதாரம் ச ஏகே புத்ராத₃ய: ச
ஏகே –
ஒரு சிலர், அதாவது க்ருஷ்ண யஜுர் வேதத்தைக் கற்பவர்கள், அதன் பகுதியான கடோபநிஷத்தில்
நிர்மாதாரம் – ஜீவாத்மா தான் ஸ்வப்நப் பொருள்களை உண்டக்குபவர் (நிர்மாதா) என்று கூறுகிறார்கள் – அதாவது(ய ஏஷு ஸுப்தேஷு ஜாக₃ர்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண : ) அதாவது “புலன்கள் எல்லாம் தூங்கும் போது இந்த ஜீவாத்மா மட்டும் விழித்துக் கொண்டிருந்து, தன்னுடைய காமங்களை
(ஆசைப்பட்ட பொருள்களை ) உண்டாக்குகிறார்” என்று கடோபநிஷத் கூறுகிறது.
புத்ராத₃ய: ச – புத்ரன் முதலானவை தான் (இங்கு காமங்கள் என்று சொல்லப் படுகின்றன). காமம் என்றால் பொதுவாக ’ஆசை ’ என்று பொருள் இருந்தாலும், இங்கு அந்தச் சொல் ஆசைப்படப்படும் பொருள்களையே காட்டுகிறது.-ஏனென்றால் இந்த கடோபநிஷத்தில் இதற்கு முன்னாலும் யமன் நசிகேதஸ்ஸிடம் பேசும் போது காமம் என்ற சொல்லால் பொருள்களையே குறிப்பிடுகிறார்.

யே யே காமா: து₃ர்லபா ₄: மர்த்ய லோகே ஸர்வாந் காமாந் ச₂ந்த₃த: ப்ரார்த₂ யஸ்வ-“எந்தெந்தப் பொருள்கள் எல்லாம் மனித உலகில் கிடைக்க அரிதானவையோ , அவற்றை ஆசைப்படி கேட்டுக் கொள்” அவன் அன்றோ கர்த்தா (செய்பவன்)

பரமாத்மா தான் படைக்கிறார்
ஸித்தாந்தம் –
தன் ஸித்தாந்தத்தை வ்யாஸர் 4 ஸூத்ரங்களால் சொல்கிறார்.
3–மாயா மாத்ரம் து கார்த்ஸ்ந்யேந அநபி₄ வ்யக்த ஸ்வரூ பத்வாத்
மாயா மாத்ரம் து –
“(ஸ்வப்நத்தில் காணப்படும் பொருள்கள் எல்லாம்) மாயமானவையே ”. மாயம் என்ற சொல்லுக்குப் பொய்யானது என்று பொருள் அல்ல, ஆச்சர்யமானது என்று தான் பொருள். ஸ்வப்நத்தில் நாம் காணும் பொருள்கள் எல்லாம் மிகவும் ஆச்சர்யமானவை , ஏனென்றால் அவற்றை நாம் மட்டும் தான் காண முடியும், அதுவும் அப்போது மட்டும் தான் காண முடியும். மற்றவர்களோ , நாமே விழித்த பிறகோ காண முடியாது.
வ்யாஸரின் கருத்து – இப்படிப்பட்ட ஆச்சர்யமான பொருள்களை பரமாத்மாவால் மட்டுமே ஸ்ருஷ்டிக்க முடியும்.

(ஜனகஸ்ய குலே ஜாதே தேவ மாயேவ நிர்மிதா -பால -2-27- ந பவந்தி -கனவில் காண்பவை அவன் ஒருவன் மட்டுமே காணுமாறு பரம் பொருள் படைக்கிறான் என்கிறது – இந்த ஆச்சர்யமே மாயா-சத்ய சங்கல்பன் அன்றோ –)

கேள்வி – உபநிஷத்தில் ஜீவாத்மாவும் ஸத்ய ஸங்கல்பன், அதாவது நினைத்ததை எல்லாம் நடத்தும் வல்லமை படைத்தவர் என்று சொல்லப்பட்டுள்ளதே ? அவர் ஏன் இந்த ஆச்சர்யமான ஸ்ருஷ்டியைச் செய்திருக்க முடியாது?
பதில் –
கார்த்ஸ்ந்யே
–முழுவதுமாக
அநபி₄வ்யக்த -வெளிப்படாத
ஸ்வரூபத்வாத் -தன்மைகளைக் கொண்ட படியால்
பரமாத்மாவைப் போல் ஜீவாத்மாவுக்கும் (1) பாபமின்மை , (2) மூப்பின்மை , (3) மரணமின்மை , (4) சோகமின்மை , (5) பசியின்மை , (6) தாகமின்மை , (7) எல்லா ஆசைகளும் நிரம்பி யிருத்தல், (8) நினைத்ததை நடத்தும் வல்லமை ஆகியவை இயற்கையான பண்புகள் தான். ஆனாலும், ஸம்ஸாரத்தில் இருக்கும் போது ஜீவாத்மாவின் இந்த இயற்கைத் தன்மைகள் மறைக்கப் பட்டுள்ளன. மோக்ஷம் அடையும் பொழுது தான் தன்னுடைய இயற்கையான தன்மைகளோடு ஜீவாத்மா முழுவதுமான வெளிப்படுகிறார் என்று வேதமே கூறுகிறது. எனவே ஸம்ஸாரத்தில் இருக்கும் ஜீவாத்மாவால் இப்படிப்பட்ட ஆச்சர்யமான ஸ்வப்நப் பொருள்களைப் படைக்க முடியாது.

ய ஏஷு ஸுப்தேஷு ஜாக₃ர்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண :” என்ற கடோபநிஷத் வாக்கியத்திலும்
“ஜீவாத்மாக்கள் அனைவரும் தூங்கும் போதும் பரமாத்மா விழித்திருந்து ஸங்கல்பித்து ஸங்கல்பித்து
ஸ்வப்நப் பொருள்களைப் படைக்கிறார்” என்று பரமாத்மா தான் சொல்லப் படுகிறார், ஏனென்றால் இதற்கு முன்னும் பின்னும் “இவரே ப்ரஹ்மம், இவரிடம் உலகப் பொருள்கள் எல்லாம் ஆச்ரயித்துள்ளன” என்று சொல்கிற படியால்.

(கட உபநிஷத் -5-8-7- ஏஷூ சுப்தேஷூ ஜாகர்தி –-இவை தூங்கும் பொழுது அவன் விழித்து உள்ளான்-மேலும் அதே வரியில் – தத் ஏவ சுக்ரம் தத் ப்ரஹ்ம தத் ஏவ அம்ருதம் உஸ்யதே தஸ்மின் லோகாஸ்ரித சர்வே தது நான்யேதி கச்சன -என்று அந்த ப்ரஹ்மமே ஒளி அமிர்தம் அனைத்தும் ஒடுங்கி உள்ளன –
அவனைக் கடந்து ஏதும் இல்லை என்கிறது-ப்ருஹத் உபநிஷத் -4-3-10-வேசாந்தா புஷ்கரிண்ய ஸ்ரவந்த்ய ஸ்ருஜதே ஸ ஹி கர்த்தா என்று பரம புருஷனைப் பற்றிக் கூறியது)

ஸ்வப்நப் பொருள்களும் உண்மையே
கேள்வி –
ஸத்ய ஸங்கல்பம் முதலானவை ஜீவாத்மாவுக்கு இயற்கையான பண்புகள் என்றால் அவை ஏன் ஸம்ஸாரத்தில் இருக்கும் பொழுது மறைக்கப் பட்டுள்ளன? பதில் – அடுத்த ஸூத்ரத்தில்
4-பராபி₄த்₄யாநாத் து திரோஹிதம் தத: ஹி அஸ்ய ப₃ந்த₄விபர்யயௌ
பராபி₄த்₄யாநாத் து
– (ஜீவாத்மா எண்ணிறந்த பிறவிகளாகத் தவறு செய்ததால்) பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் தான்
திரோஹிதம் – ஜீவாத்மாவுக்கு இயற்கையான இந்த பண்புகள் வெளிப்படாமல் மறைக்கப்பட்டுள்ளன.
தத: ஹி அஸ்ய – அந்த பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் அன்றோ இந்த ஜீவாத்மாவுக்கு
ப₃ந்த₄விபர்யயௌ- ஸம்ஸாரத்தில் பந்தமும் (கட்டுப் பட்டிருப்பதும்) அதற்கு எதிரான முக்தியும்.
ஸம்ஸாரத்தில் இருப்பதே பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் தான் என்றால், இங்கு இருக்கும் பொழுது இயற்கையான பண்புகள் மறைக்கப் பட்டிருப்பதும் அவர் ஸங்கல்பத்தால் தான் என்று தானாகவே அறியலாம்.

(தைத்ரியம் -2-7-1-யதா ஹி ஏவ ஏஷ ஏ தஸ்மின் அத்ருஷ்ய அநாத்ம்யே அநிருக்தே அநிலயநே
அபயம் பிரதிஷ்டாம் விந்ததே அத ச அபயம் கத பவதி யதா ஹி ஏவ ஏஷ ஏதஸ்மின் உதரம் அந்தரம் குருதே அத தஸ்ய பயம் பவதி -என்றும்ஏஷ ஹி ஏவ ஆனந்தயாதி -என்றும்2-8-1-பீஷாச்மாத் வாத பவதே -என்றும் கூறும்-கோஹ்யே வாந் யாத்க ப்ராண்யாத்-யதேஷ ஆகாஸ ஆனந்தோ நஸ்யாத்
ஏஷஹ் ஏவ ஆனந்தயாதி பரஞ்சோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே -முதலிய ஸ்ருதிகளால்-பரமாத்மாவின் மூலமே ஜீவனின் ஸூக துக்கங்களை பறை சாற்றுகின்றன)

கேள்வி – எதன் மூலம் பரமாத்மா இப்படி மறைக்கிறார்?
பதில் –5-தே ₃ஹ யோகா₃த் வா ஸ: அபி –
“அதுவும் (மறைக்கப் படுவதும்) உடலோடு சேர்க்கையாலோ (அல்லது மூல ப்ரக்ருதியோடு சேர்க்கையாலோ)”-ஸ்ருஷ்டி காலத்தில் உடலோடு உள்ள சேர்க்கையாலும், ப்ரளயத்தில் (நமக்கு உடலே இல்லாத பொழுது) ஸூக்ஷ்மமாக (பெயர் உருவத்தால் பிரித்துப் பார்க்க முடியாததான) மூல ப்ரக்ருதியோடு சேர்க்கையாலும் மறைக்கப் படுகின்றன.

(கட உபநிஷத் -5-8-தஸ்மின் லோகாஸ்ரித சர்வே தது நாத்யேதி கச்சன -என்பது
பரம் பொருளுக்கே பொருந்தும்-)

6– ஸூசக: ச ஹி ச்ருதே : ஆசக்ஷதே ஹி தத்₃வித₃:
ஸூசக: ச ஹி –
கனவில் வரும் காட்சிகள் உண்மையில் நடக்கப் போகும் நிகழ்வுகளைக் கோடி காட்டுகின்றன என்று
ச்ருதே : – வேதம் சொல்கிறது – ஒரு கர்மத்தைச் செய்யும் பொழுது கனவில் ஒரு பெண்ணைக் கண்டால் அந்தக் கர்மம் நன்கு பலனளிக்கும், கொலை செய்யப் படுவதைக் கண்டால் உண்மையில் செய்யப்படுவான், என்பது போல்.
ஆசக்ஷதே ஹி தத்₃வித₃: – ஸ்வப்நத்தின் உண்மைத் தன்மையை அறிந்த ஜ்ஞாநிகள் இவ்வாறே கூறுகிறார்கள்.

(சாந்தோக்யம் -5-2-8-யதா கர்ம ஸூ காம்யேஷூ ஸ்த்ரியம் ச்வப்நேஷூ பச்யதி ஸ்ம்ருத்திம் தத்ர ஜாநீயாத் தஸ்மின் ஸ்வப்ன நிதர்சனே —)

ஜீவாத்மா தான் ஸ்வப்நப் பொருள்களைப் படைக்கிறார் என்றால், நல்ல நிகழ்வுகளைக் கோடி காட்டும் பொருள்களை மட்டும் கனவில் ஸ்ருஷ்டித்துக் கண்டு விடலாம். துன்பம் தரும் காட்சிகளையே பார்க்க மாட்டார். எனவே ஜீவன் படைக்கவில்லை .-ஆக, ஸ்வப்நப் பொருள்களும் உண்மை யானவையே , நமது சிறு புண்ய பாபங்களைக் கழிப்பதற்காகப் பரமாத்மா படைக்கிறார்.

3-2-2-தத₃பா₄வாதி₄கரணம்– ஜீவாத்மா எங்கு தூங்குகிறார்?-அதிகரணத்தின் பின்புலம-ஸங்கதி–
முன் அதிகரணத்தில் ஸ்வப்நத்தைப் பற்றி ஆராய்ந்து விட்டு,இந்த அதிகரணத்தில் ஸுஷுப்தி அதாவது ஆழ்ந்த உறக்கம் என்ற நிலையைப்பற்றி ஆராய்கிறார்.-
விஷய வாக்யம்–
உபநிஷத்தில் ஜீவாத்மா எங்கு தூங்குகிறார் என்பது மூன்று விதமாகக் கூறப்படுகிறது
1- யத்ர ஏதத் ஸுப்த: ஸமஸ்த: ஸம் ப்ரஸந்ந: ஸ்வப்நம் ந விஜாநாதி, ஆஸு ததா₃ நாடீ₃ஷு ஸூ ப்தோ பவதி: –சாந்தோக்யம் -8-6-3--எப்போது இந்த ஜீவாத்மா எல்லாப் புலன்களும் செயலிழந்த நிலையில், புலன்களால் ஏற்படும் துன்பங்கள் இல்லாமல், கனவும் காணாமல், ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறாரோ அப்போது இந்த நாடிகளில் தான் சேர்ந்திருக்கிறார்.
2–அத₂ யதா₃ ஸுஷுப்த: ப₄வதி யதா₃ந கஸ்யசந வேத₃, ஹிதா நாம நாட்₃ய: த்₃வா ஸப்ததி-ஸஹஸ்ராணி ஹ்ருத₃யாத் புரீ ததம் அபி₄ப்ரதிஷ்ட₂ந்தே , தாபி₄: ப்ரத்யவ ஸ்ருப்ய புரீததி சேதே –ப்ருஹத் உபநிஷத் -2-1-19– எப்போது இந்த ஜீவாத்மா தூங்குகிறாரோ அப்போது இதயத்தில் பூரீதத் என்ற இடத்துக்குச் செல்லும் 72000 நாடிகளின் மூலம் சென்று அந்த புரீதத் என்பதில் சயனிக்கிறான்
3-யத்ர ஏதத் புருஷ: ஸ்வபிதி நாம ஸதா ஸோம்ய! ததா₃ ஸம்பந்ந: ப₄வதி –சாந்தோக்யம் -6-8-1--எப்போது இந்த ஜீவாத்மா உறங்குகிறானோ அப்போது ஸத் என்கிற பரமாத்மாவோடு சேர்ந்திருக்கிறார்.
ஆக உப்படி நாடிகள், புரீதத், பரமாத்மா என்ற மூன்று இடங்களில் ஜீவாத்மா உறங்குவதாகச் சொல்லப்படுகிறது.

ஸந்தேஹம்– இந்த மூன்று இடங்களுக்கும் விகல்பமா? ஸமுச்சயமா? விகல்பம் என்றால் ஒரே இலக்கை அடைய இருக்கும் பல வழிகளுள் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது–திருவரங்கம் செல்ல விழுப்புரம் கடற்கரை பாதையில் செல்வது. ஸமுச்சயம் என்றால் ஒரு இலக்கை அடைய பல பொருள்களைச் சேர்த்துப் பயன் படுத்துவது–அரிசி பருப்பு வெல்லம் முதலானவற்றைச் சேர்த்து சக்கரைப் பொங்கல் செய்வது போல்.

பூர்வ பக்ஷம் -இவற்றுக்குள் விகல்பம் தான்– அதாவது ஒரு ஸமயத்தில் இவற்றில் ஏதோ ஒன்றில் தான் ஜீவாத்மா தூங்குகிறார். ஏனென்றால் அந்த அந்த வாக்கியத்தில் நாடிகளும், புரீதத்தும், பரமாத்மாவும் தனித் தனியாகத் தான் சொல்லப்பட்டுள்ளார்கள். மேலும்,ஆத்மா அணுவான படியால் அவர் ஒரு காலத்தில் ஒரு இடத்தில் தான் இருக்கமுடியும். எனவே மூன்று இடங்களுக்குள் விகல்பம் தான்.

வியாசரின் ஸித்தாந்தம்-
1- தத₃பா₄வ: நாடீ₃ஷு தச் ச்₂ருதே : ஆத்மநி ச
தத₃பா₄வ: –
ஸ்வப்நம் இல்லாத நிலையான ஸுஷுப்தி என்ற ஆழ்ந்தஉறக்கம்
நாடீ₃ஷு நாடிகளிலும்
ஆத்மநி பரமாத்மாவிடத்திலும்
ச புரீதத் என்ற இதயப் பகுதியிலும் (ஏற்படுகிறது)
தச்ச்₂ருதே : – மூன்றை யுமே தூக்கத்துக்கான இடமாக வேதம் உபதேசிக்கிறபடியால்.

வ்யாஸரின் அபிப்ராயம்–விகல்பம் சொன்னால், ஒரு வாக்கியத்தின் படி நடக்கும் பொழுது மற்ற இரண்டு வாக்கியங்களும் தற்காலிகமாகப் புறக் கணிக்கப் பட வேண்டும். இது வேத வாக்கியத்துக்கு ஒரு குறை யாகும். எனவே ஸமுச்சயம் என்று தான் கொள்ள வேண்டும்.
ப்ராஸாத₃ க₂ட்வா பர்யங்க ந்யாயம்–ராமன் மேல் மாடியில்(ப்ராஸாத₃ம்) தூங்குகிறான்,-கட்டிலில்(க₂ட்வா) தூங்குகிறான், மெத்தையில் (பர்யங்கம்) தூங்குகிறான் என்று சொன்னால் எப்படி மூன்றுக்கும் ஸமுச்சயம்(சேர்க்கை ) கொள்கிறோமோ அதே போல் இங்கும் நாடிகள், புரீதத், பரமாத்மா என்ற மூன்று இடங்களிலும் சேர்த்துத் தான் சயனிக்கிறார் ஜீவாத்மா.

நேரடியாகத் தூங்குவது பரமாத்மாவிடம் – இந்த மூன்றிலும் வைத்துக் கொண்டு, நாடிகளும் புரீதத்தும் மேல் மாடியின் நிலையிலும் கட்டிலின் நிலையிலும் உள்ளன. பரமாத்மா தான் மெத்தையின் நிலையில் உள்ளார், அதாவது அவர் தான் நேரடியாக இந்த ஜீவாத்மா சயனிக்கும் இடமாக உள்ளார்.

ஏன் இப்படிக் கொள்ள வேண்டும் என்பதை அடுத்த ஸூத்ரத்தில் கூறுகிறார் வ்யாஸர்
2-அத: ப்ரபோ₃த₄: அஸ்மாத்
– “ஆகையால் தான் இதிலிருந்து விழிக்கிறான்”
வேதாந்தத்தில் (ஸத: ஆக₃ம்ய ந விது₃: ஸத ஆக₃ச்சா₂ம: இதி)-சாந்தோக்யம் -6-10-2— அதாவது “விழிக்கும் பொழுது ஸத் என்ற பரமாத்மாவிடமிருந்து எழுந்து வரும் இந்த ஜீவாத்மா ’நான் பரமாத்மாவோடு இவ்வளவு நேரம் கூடி இருந்தேன்’ என்று அறியாமலேயே விழிக்கிறார்” என்று கூறுகிறது.
இந்த வாக்கியம் பொருந்த வேண்டுமென்றால், ஜீவாத்மா உறங்கும் மெத்தை ஸ்தானத்தில் பரமாத்மா இருக்கிறார் என்று தான் கொள்ள வேண்டும். மூன்று இடங்களுக்குள் விகல்பமாக இருந்தால், ’பரமாத்மாவிலிருந்தோ நாடியிலிருந்தோ புரீதத்திலிருந்தோ எழுந்து வருகிறார்’ என்று வேதம் சொல்லி யிருக்க வேண்டும். அப்படிச் சொல்ல வில்லை . ஆக, ஜீவாத்மா தூங்கும் பொழுது இம் மூன்று இடங்களுக்கும் ஸமுச்சயம் தான், அதிலும் நேரடியாகப் பரமாத்மாவிடம் சயனிக்கிறார் என்று நிரூபிக்கப்பட்டது.

3-2-3-கர்மாநுஸ்ம்ருதி சப்₃த₃ வித்₄யதி₄கரணம் –தூங்குபவர் தான் விழிக்கிறாரா? (தூங்குபவரே விழிக்கிறார் )
ஸங்கதி–
முன் அதிகரணத்தில் தூக்கத்தைப் பற்றின பேச்சு எழுந்த படியால், அதோடு தொடர்புபட்ட வேறொரு விஷயத்தை இதில் ஆராய்கிறார்.
ஸந்தேஹம்– எந்த ஜீவாத்மா தூங்கச் சென்றாரோ அவரே தான் பிற்பாடு விழிக்கிறாரா? அல்லது வேறொரு ஜீவாத்மா விழிக்கிறாரா?

பூர்வ பக்ஷம்– தூங்கப் போகும் ஜீவாத்மா புலன்கள், மனது முதலானவற்றோடு தொடர்பை இழந்து, பரமாத்மாவோடு தூக்கத்தில் சேர்கிறார் என்று வேதத்தில் கூறப்படுகிறது. இதற்கும் முக்திக்கும் வேறுபாடே இல்லை . எனவே , அந்த ஜீவாத்மா திரும்பவும் விழிக்க இயலாது, எனவே வேறொரு ஜீவாத்மா தான் தூக்கத்திலிருந்து விழிக்கிறார்.

ஸித்தாந்தம்- 1– ஸ: ஏவ து கர்ம-அநு ஸ்ம்ருதி-சப்₃த₃-விதி₄ப்₄ய:
ஸ: ஏவ து–
“அவன் தான் அன்றோ ” –அதாவது, தூங்கப் போன அதே ஜீவாத்மா தான் விழிக்கிறார் அன்றோ-(இதற்கு நான்கு ஹேதுக்கள்-1-கர்ம-2-அநு ஸ்ம்ருதி-3-சப்₃த₃-4-விதி-)
கர்ம–இந்த ஜீவாத்மா சேர்த்து வைத்த புண்ய பாபங்களின் பயன்களை அவன் அநுபவித்தே ஆக வேண்டும், கர்மங்களை அழிக்க்கக் கூடிய பரமாத்மாவைப் பற்றின ஜ்ஞாநம் இவனுக்கு ஏற்படாதபடியால்.
அநு ஸ்ம்ருதி:–“நேற்று தூங்கப் போன நானே இன்று விழித்துள்ளேன்” என்கிற நினைவு உள்ள படியால்.
சப்₃த₃:– வேதச் சொல் அவ்வாறு சொல்வதாலும்-(சாந்தோக்யம் -6-10-2- த இஹ வ்யாகரோ வா சிம்ஹோ வா வ்ருகோ வா வரஹா வா கீடோ வா பதங்கோ வா தம்சோ வா மசகோ வா யத்யத் பவந்தி தத் ஆபவந்தி) அதாவது ’தூக்கத்துக்கு முன் புலியாகவோ சிங்கமாகவோ எதுவாக எந்த ஜீவாத்மா இருந்தானோ அதுவாகவே அவன் தூக்கத்துக்குப் பின் விழிக்கிறான்”
விதி₄: – வேதத்தில் மோக்ஷம் அடைவதற்குத் தியானம் செய்ய வேண்டும் என்று சொல்லும் கட்டளைகள் எல்லாம் வீணாகப் போகுமான படியால். – தூங்கினாலே முக்தி என்றால் எதற்குத் தியானம் செய்ய வேண்டும்?

தூக்கமும் முக்தியும்
முக்திக்கும் தூக்கத்துக்கும் எந்த வேறுபாடும் இல்லையே என்று பூர்வ பஷி கேட்டிருந்தார். அது தவறானது.
ஸுஷுப்தியைப் பற்றி உபநிஷத் சொல்லும் பொழுது, அது எந்த விதமான செயல்பாடுகளும் இல்லாமல், ஜீவாத்மாவின் ஜ்ஞாநம் மிகவும் சுருங்கி யிருக்கும் நிலை என்கிறது
சாந்தோக்யம் -8-11-1-தத் யத்ர ஏதத் ஸூ ஷூப்த –நாஹகலு அயம் ஏவம் சம்ப்ரதி ஆத்மானம் ஜா நாதி அயம் அஹம் அஸ்மி இதி நோ ஏவ இமானி பூதானி வி நாசமேவ அபீத பவதி நாஹம் அத்ர போக்யம் பச்யாமி-“இந்த ஸுஷுப்தி நிலையில், ஒரு ஜீவாத்மா’ நான் இன்னார்’ என்று தன்னையும் அறிவதில்லை , தன்னைச் சுற்றி இருக்கும் பொருள்களையும் அறிவதில்லை , அறிவின் வெளிப்பாடில்லாமல் அழிந்தது போல் இருக்கிறார்”

முக்தியைப் பற்றி உபநிஷத் சொல்லும் பொழுது, அதில் இந்த ஜீவாத்மா முழுவதுமாக அறிவின் மலர்ச்சியைப் பெற்று, எல்லா விதமான இன்பங்களையும் அநுபவிக்கிறார் என்கிறது
பரம் ஜ்யோதி: உப ஸம்பத்₃ய ஸ்வேந ரூபேண அபி₄நிஷ்பத்₃யதே — பரமாத்மாவை அடைந்து தன் இயற்கையான பண்புகளோடு கூட முழுவதுமாக வெளிப்படுகிறார்-

ஸர்வம் ஹ பச்ய: பச்யதி ஸர்வம் ஆப்நோதி ஸர்வ ச:-முக்தி அடைபவன் அனைத்தையும் அறிகிறான், அனைத்தையும் எல்லா விதத்திலும்அடைகிறான்-

சாந்தோக்யம் -8-12-3-பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே ச தத்ர பர்யேதி ஐ ஷத் கிரீடன் ரமமாண- என்றும்7-25-2-ஸ ஸ்வ ராட் பவதி தஸ்ய சர்வேஷூ லோகேஷூ காம சாரோ பவதி -என்றும்7-26-2-சர்வம் ஹ பச்ய பஸ்யதி சர்வம் ஆப் நோதி சர்வச -என்றும் கூறும் –

ஸ: தத்ர பர்யேதி ஜக்ஷத் க்ரீடன் ரமமாண:, ஸ: ஸ்வராட் ப₄வதி, தஸ்ய ஸர்வேஷு லோகேஷு காம சார: ப₄வதி--அவன் அந்த வைகுந்தத்தில் ஆநந்தமாக விளையாடிக் கொண்டு திரிகிறான், செயற்கையாக யாருக்கும் அடிமையாக இருப்பதில்லை , அவனுக்கு எல்லா உலகங்களிலும் அவன் ஆசைப்பட்டபடி இன்பங்கள் கிடைக்கின்றன
ஆக இப்படி தூக்கத்துக்கும் முக்திக்கும் பெருத்த வேறுபாடு உள்ளதால், களைப்படைந்து செயல்பட முடியாமல் தூங்கப்போன ஜீவாத்மா தான் பரமாத்மாவிடமிருந்து புத்துணர்ச்சி பெற்று திரும்பவும் விழிக்கிறார்.

3-2-4-முக்₃தா₄தி₄கரணம் –மயக்கம் ஒரு தனி நிலையா?(மரணத்தில் பாதி மயக்கம் )
முக்₃தா₄தி₄கரணம்–ஸங்கதி–
முன் அதிகரணங்களில் விழிப்பு, கனவு, தூக்கம், மரணம் முதலான நான்கு நிலைகளைப் பற்றி ஆராய்ந்தார் வ்யாஸர். இந்த அதிகரணத்தில், மயக்கம் என்ற நிலையைப் பற்றி ஆராய்கிறார்-

ஸந்தேஹம்– மயக்கம் என்பது முன் சொல்லப்பட்ட4 நிலைகளுக்குள் ஒன்று தானா? அல்லது தனி நிலையா?
பூர்வ பக்ஷம்– தனி நிலை என்று சொல்லத் தேவை யில்லை . மயக்கத்தில் ஜ்ஞாநம் வெளிப்படாமல் இருப்பது போல் தூக்க நிலையிலும் அறிவு வெளிப்படுவதில்லை . எனவே அதிலேயே இதை அடக்கி விடலாம்

ஸித்தாந்தம்- 1- முக்₃தே ₄ அர்த₄ ஸம்பத்தி: பரிசேஷாத்
முக்₃தே ₄-
மயக்க மடைந்த புருஷனிடம் யாதொரு நிலை உள்ளதோ , அந்த மயக்கம் என்ற நிலை
அர்த₄ஸம்பத்தி: – மரணத்தில் பாதியை அடைந்தது போன்றது (எனவே தனி நிலை என்று தான் ஏற்க வேண்டும்)
பரிசேஷாத்–மீதமிருக்கிற படியால்.

மயக்கம் என்ற நிலையில் ஜ்ஞாநம் வெளிப் படாதபடியால் இது விழிப்பு மற்றும் கனவு நிலைகளில் அடங்காது. இது ஆழ்ந்த உறக்கத்திலும் அடங்காது, காரணம் மாறுகிறபடியால். தூக்கத்துக்குக் காரணம் தமோ குணம், மயக்கத்துக்குக் காரணம் அடிபடுவது, –அத்யந்த அநிஷ்ட ஸ்ரவணாத்-மிகவும் அதிர்ச்சி தரும் கெட்ட செய்தியைக் கேட்பது, முதலானவை .

மரணத்திலும் இது அடங்காது–-நிமித்த வைரூப்யாத்தன்மை மாறுபடுகிற படியால். மரணத்தில் உடலோடும் ப்ராணனோடும் முழுவதுமாகத் தொடர்பு அற்று விடும். ஆனால் மயக்கத்திலோ அவை முற்றுமாக அறுவதில்லை , மிகவும் வலு விழந்தாலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதனால் –ஆகார வைரூப்யாத்-தன்மையில் மாறுபாடு உள்ளது.-ஆக, விழிப்பு தூக்கம் கனவு மரணம் என்று நமக்குத் தெரிந்த நான்கு நிலைகளில் இது அடங்காதபடியால், மயக்கம் என்பது ஒரு தனி நிலை என்று தான் கொள்ள வேண்டும்.

இந்த நான்கு அதிகரணங்களும் ஒரு பேடிகைஇதில் ஜீவனுக்கு நான்கு நிலைகளிலும் உள்ள துக்கங்கள் காட்டப்படுகின்றனஇனி ப்ரஹ்மம் ஜாக்ராதிகள் ஆகிய எந்த நிலையிலும் தோஷம் அற்றது என்றும் தானே நிர்த் தோஷமான கல்யாண குணம் மிக்கது என்றும் நான்கு அதிகரணங்களாலும் விளக்குகிறார் –

3-2-5-உப₄ய லிங்கா₃தி₄ கரணம் குற்ற மில்லாக் கல்யாண குணக் கடல் –அதிகரணத்தின் பின் புலம்–ஸங்கதி– இது வரை வைராக்யம் உண்டு செய்வதற்காக ஜீவாத்மா ஸம்ஸாரத்தில் படும் துன்பங்களைக் கூறினார் வ்யாஸர். இனி பரமாத்மாவிடம் ஆசை பிறப்பதற்காக-பகவத் ப்ராப்தி த்ருஷ்ணா -ஆர்த்தி பெருக- அவனுடைய பெருமைகளையும் குற்ற மின்மையையும் விரித்துரைக்கிறார்-

ஸந்தேகம்– விழிப்பு, கனவு முதலான நிலைகளில் உடலில் இருப்பதால் ஜீவாத்மாவுக்கு தோஷங்கள் ஏற்படுவது போல் பரமாத்மாவும் உடலில் இருப்பதால் அவருக்கும் தோஷம் உண்டா? அல்லது கிடையாதா?

பூர்வ பக்ஷம்– உடலில் வெவ்வேறு நிலைகளில் பரமாத்மா அவற்றில் உள்ளபடியால் அவருக்கும் தோஷம் உண்டு-

ஸம்போ₄க₃ ப்ராப்தி: இதி தேத் ந வைசேஷ்யாத்(அதிகரணம்1.2.1 ஸூத்ரம் 8)என்ற ஸூத்ரத்தில் பரமாத்மா தியானத்துக்காக இதயத்தில் இருப்பதால் அவருக்கு தோஷம் வருமா என்று கேட்டு, அவர் கர்மத்தால் அல்லாமல் கருணையால் இதயத்தில் இருக்கிற படியால் தோஷம் வராது என்று கூறப்பட்டது

போ₄க்த்ரா பத்தே: அவிபா₄க₃: ஸ்யாத் லோகவத் (அதிகரணம் 2.1.5 ஸூத்ரம் 1) என்ற ஸூத்ரத்தில் உலகத்தை ஸ்ருஷ்டிக்கும் பரமாத்மாவுக்கு மூல ப்ரக்ருதியே உடலானபடியால், உடல் என்பதே துக்கத்தைத் தரக் கூடியது என்று நாம் உலகில் ஜீவாத்மாக்களிடம் காண்கிறபடியால், பரமாத்மாவுக்கும் இந்த உடலால் தோஷங்கள் வருமே என்று கேட்டுக் கொண்டு, அப்படி யில்லை ,கர்மத்தால் ஏற்கப்பட்ட உடல் தான் துன்பங்களைக் கொடுக்கும், எல்லா உடல்களும் அப்படி அல்ல, முக்தர்கள் ஏற்கும் உடல்கள் துன்பங்களைக் கொடுப்பதில்லை , அதுபோல் பரமாத்மாவும் கர்மங்களின் காரணமாக உடல் எடுத்துக் கொள்ளாதபடியால் அவருக்கு தோஷம் இல்லை என்றார்

இப்போது பூர்வ பஷி கூறுவது–எந்தக் காரணத்தால் வேண்டுமானாலும் பரமாத்மா உடலை உடையவராக இருக்கட்டும். ஆனால் உடல் என்பதே தாழ்ந்தது, அதோடு தொடர்பு என்பதே தோஷம் தான். இதை வஸ்து ஸ்வபாவம்(பொருளின் தன்மை )என்பார்கள். சேற்றில் ஒருவன் தெரியாமல் விழுந்தாலும் தெரிந்தே விழுந்தாலும் அது உடலை அழுக்காக்கத் தான் செய்யும். அதுபோல் இந்த உடல்களோடு பரமாத்மாவுக்கு தொடர்பு இருப்பதாலேயே அவருக்கும் தோஷம் இருந்தேவாக வேண்டும்.

பரமாத்மாவின் இரண்டு அடையாளங்கள் 1- ந ஸ்தா ₂நத: அபி பரஸ்ய உப₄ய லிங்க₃ம் ஸர்வத்ர ஹி
ஸ்தா₂நத: அபி–
விழிப்பு முதலான நிலைகளில் இருக்கும் அந்தந்த உடல்களுக்குள் இருந்தாலும்
பரஸ்ய ந–பரமாத்மாவுக்கு எந்த தோஷங்களும் கிடையாது
ஸர்வத்ர ஹி–ஏனென்றால் எல்லா உபநிஷத்துக்களிலும் ஸ்ம்ருதிகளிலும்
உப₄ய லிங்க₃ம்–அவர் குற்றமின்மை குணமுடைமை என்ற 2 அடையளங்கள் உடையவராகவே கூறப் படுகிறார்-

வேதத்தில்–(அபஹத பாப்மா விஜர: விம்ருத்யு: விஸோக: விஜிக₄த்ஸ: அபிபாஸ: ஸத்ய காம: ஸத்ய ஸங்கல்ப:-சாந்தோக்யம் -8-1-5- ) அதாவது “பாப மற்றவர், மூப் பற்றவர், மரண மற்றவர், ஸோக மற்றவர், பசி யற்றவர், தாக மற்றவர், எல்லா ஆசைகளும் நிரம்பியவர், நினைத்ததை நடத்தும் வல்லமை படைத்தவர்” என்று கூறப்படுகிறது. இதில் முதல் 6 பண்புகளால் பரமாத்மாவுக்கு எந்தக் குற்றங்களும் இல்லை என்றும், கடைசி 2 பண்புகளால் பரமாத்மாவுக்குக் கல்யாண குணங்கள் உள்ளன என்றும் தெரிகிறது

ஸ்ம்ருதியில்-ஸமஸ்த கல்யாண கு₃ணாத்மக: அஸௌ ஸ்வ சக்தி லேச உத்₃த்₄ருத பூ₄த ஸர்க₃: | தேஜோ ப₃ல ஐச்வர்ய மஹாவபோத ₄ஸு வீர்ய சக்த்யாதி₃ கு₃ணை கராசி: || -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-84-)“எல்லாக் கல்யாண குணங்களும் உடையவர்; தன் சக்தியின் ஒரு சிறு பகுதியால் உலகத்தை எல்லாம் படைக்கிறது;தேஜஸ் பலம் ஐச்வர்யம் ஜ்ஞாநம் வீரம் சக்தி என்ற குணங்களின் கடல்”-

பர: பராணாம் ஸகலா: ந யத்ர க்லேசாத₃ய: ஸந்தி பராவரேசே -((ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-85)- பரமாத்மா உயர்ந்தவர்களை விட உயர்ந்தவர்; அவரிடம் எந்த விதமான தோஷங்களும் இல்லை-

ஸமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ண் வாக்₂யம் பரம் பதம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-51)–எந்த விதமான குற்றங்களும் அற்றவரான விஷ்ணு உயர்ந்த இலக்காவார்-

ஜீவாத்மாவுக்கு எப்படி குற்றங்கள்? கேள்வி–பரமாத்மாவைப் பற்றி’அபஹத பாப்மா’ என்று சொல்லும் வேதம், ஜீவாத்மாவைப் பற்றியும் இப்படி தான் கூறுகிறது. ஆனால் அது ஜீவாத்மாவின் இயற்கையான நிலை ஆகும். ஆனால் இப்போது ஜீவாத்மா தேவர் மனிதன் விலங்கு தாவரம் முதலான உடல்களை எடுத்துக் கொண்டு பிறப்பதால் இது வேறொரு நிலை ஆகும். இந்த நிலை வேறு பாட்டால் -அவஸ்தா பேதாத் –இப்போது ஜீவாத்மாவுக்குக் குற்றங்கள் உள்ளன என்று ஏற்கிறோம். அதே போல் பரமாத்மாவுக்கும் நிலை வேறு பாட்டால் இயற்கையில் தூய்மையானவரான அவருக்கும் தோஷம் உண்டு.

பதில்-2– பே₄தா₃த் இதி தேத் ந ப்ரத்யேகம் அதத்₃ வசநாத்
பே₄தா₃த்
– (நிலை ) மாறுபாட்டால் (பரமாத்மாவுக்கும் தோஷங்கள் வரலாமே )
இதி தேத் ந–என்று நீங்கள் கூறினால் அது தவறானது
ப்ரத்யேகம் அதத்₃ வசநாத்– ஒவ்வொரு முறையும் பரமாத்மாவுக்கு தோஷம் இல்லை என்று வேதம் சொல்வதால்-

ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ள அந்தர்யாமி ப்ராஹ்மணம் என்ற பகுதியில் தான் பரமாத்மா அனைத்துப் பொருள்களுக்குள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறார் என்று தெளிவாகச் சொல்லப்படுகிறது. ப்ருதிவீ, ஜலம், அக்நி, வாயு, வானம், ஸ்வர்கம், ஸூர்யன், திசைகள், சந்த்ரன், நக்ஷத்ரங்கள், மூல ப்ரக்ருதி, கண், காது, மனது, தோல், ஜ்ஞாநம் முதலானவற்றை ஒவ்வொன்றாக எடுத்து, “இதில் பரமாத்மா உள்ளார், இதற்குள் பரமாத்மா உள்ளார், இது அவரை அறிவதில்லை , இதுவும் அவருக்கு சரீரம், இதை அவர் இயக்குகிறார்” என்று தனித் தனியாகச் சொல்லி விட்டு, உடனடியாக ஒவ்வொரு முறையும் “குற்றமற்றவரான அவர் தான் உனக்கும் அந்தர்யாமீ” என்று வேதம் கூறுகிறது. எனவே , இந்த உடல்களுக்குள் இருப்பதால் வரக் கூடிய தோஷங்கள் அவருக்கு இல்லை என்பது தான் உபநிஷத்தின் கறுத்துஆகும்

ஜீவாத்மா இயற்கையாகக் குற்ற மற்றவரானாலும்,பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் அவர் ஸம்ஸாரத்தில் கட்டுப்படுவதை வேதம் சொல்வதால், அந்தக் குற்றமின்மை இப்போது இல்லை என்று சுருக்கிக் கொள்கிறோம். ஆனால் பரமாத்மாவுக்கு அப்படி எந்த வாக்கியமும் இல்லாத்தால் அவர் எப்போதும் குற்ற மற்றவரே .-

வஸ்து ஸ்வபாவத்தை ஆராய்தல்
பூர்வ பஷி ஒருவாதத்தை முன் வைத்தார்–உடல் என்பது அதன் ஸ்வபாவம் அதாவது இயற்கையாலேயே தாழ்ந்தது. எனவே அதோடு பரமாத்மாவுக்குத் தொடர்பு இருந்தாலேயே தோஷங்கள் வந்தே தீரும் என்று. இது தவறானது.– உலகில் எந்தப் பொருளும் இயற்கையில் துக்கமளிப்பதாகவோ ஸுகமளிப்பதாகவோ இருப்பதில்லை . அப்படி இருந்தால், ஒரு பொருள் எல்லா மனிதர்களுக்கும் எல்லா இடங்களிலும் எல்லாக் காலத்திலும் துக்கத்தையோ ஸுகத்தையோ மட்டும் தான் அளிக்க வேண்டும். ஆனால் உலகில் நாம் அப்படிக் காண வில்லை . ஒரே பாகற்காய் சிலருக்கு ஸுகத்தையும் சிலருக்குத் துன்பத்தையும் தருகிறது. கெட்டியான ஆடைகள் இமாலயத்தில் இன்பம் அளிக்கின்றன- ஆனால் சென்னையில் துன்பம் அளிக்கின்றன. ஒரு போர்வை ஒரே ஊரிலேயே குளிர் காலத்தில் இன்பத்தையும் வெயில் காலத்தில் துன்பத்தையும் தருகிறது. ஆகவே , ஒரு பொருள் இன்ப துன்பங்களை அளிப்பது அதன் தன்மையால் இருக்கவே முடியாது, அந்தந்த ஜீவாத்மாவின் பாப புண்யங்களுக்கு ஏற்பத்தான் சில சில பொருள்கள் அவனுக்கு சில சில காலங்களில் இன்பமோ துன்பமோ அளிக்கின்றன

(ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-6-46-48- நரக ஸ்வர்க்க சம்ஜ்ஞே வை பாப புனே த்விஜோத்தம -வஸ்து ஏகம் ஏவ துக்காய ஸூ காய ஈர்ஷ்யா கமாய ச – கோபாய ச யத தஸ்மாத் வஸ்து வஸ்தவாமகம் குத-தத் ஏவ ப்ரீதயே பூத்வா புன துக்காய ஜாயதே – தத் ஏவ கோபாய யத் பிரசாதாய ச ஜாயதே தஸ்மாத் துக்காத்மகம் நாஸ்தி ந ச கிஞ்சித் ஸூ காத்மகம் –என்றபடி)

(சீதா பிராட்டி-பெருமாளிடம் -ஸ்வர்க்கம் நரகம் -சேர்ந்து இருப்பதும் பிரிந்து இருப்பதும் -வஸ்துவின் தன்மையால் அல்ல -)

(நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே
.–6-3-1–தன் விருத்த விபூதி கத்வத்தைக் காட்டக் கண்டு -முன்பு பிரிவாலே வந்த அவசாதத்துக்கு உதவிற்றிலன் -என்று வெறுத்தவர் -சர்வ கதனாய்-தத்கத தோஷ ரசம் ஸ்ப்ருஷ்டனாய் ஸமஸ்த கல்யாண குணாத்மகனான இவனே நமக்கு ப்ராப்யமும் ப்ராபகமும் மற்றும் உள்ள சர்வ வித பந்துவும் என்று அவன் பெருமையை அனுபவித்து ப்ரீதராய் கொண்டு பேசுகிறார்)

ததே₃வ ப்ரீதயே பூ₄த்வா புநர் து₃꞉கா₂ய ஜாயதே । தஸ்மாத் து₃꞉கா₂த்மகம் நாஸ்தி ந ச கிஞ்சித் ஸுகா₂த்மகம் ॥ ஒரே பொருள் இன்பத்தை அளித்து விட்டு, பிறகு அதுவே துன்பத்தைத் தருகிறது. எனவே ஸுக வடிவமானது என்றோ துக்க வடிவமானது என்றோ ஒரு பொருளே கிடையாது. அது ஜீவாத்மாவின் பாப புண்யங்களால் ஏற்படுகிறது.-எனவே , உடல் என்பதே இயற்கையில் துன்பத்தையே அளிக்கக் கூடியது என்று பூர்வ பஷி சொன்னது பொருந்தாது. ஆகையால், பரமாத்மா கருணையால் இந்த உடலோடு தொடர்பு பட்டிருந்தாலும், அவருக்கு பாபங்களோ புண்யங்களோ இல்லாத படியால் அவருக்கு அது துன்பத்தையோ இன்பத்தையோ அளிக்காது. அவர் அந்தந்த பொருள்களுள் இருந்து கொண்டு அவற்றை இயக்குகிறார், அவ்வளவு தான்.

வேதம் உபதேசிப்பது ஜீவாத்மாவுக்கா? பரமாத்மாவுக்கா?
3- அபி ச ஏவம் ஏகே –
“மேலும் ஒரு சிலர் இவ்வாறு (கூறுகிறார்கள்)
வேதங்களில் ஒரு சாகையைச் சேர்ந்தவர்கள், ஒரே உடலில் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இருந்தாலும், ஜீவாத்மா மட்டும் தான் தோஷங்களை உடையவராகிறார், பரமாத்மாவுக்கு தோஷங்கள் கிடையாது என்று படிக்கிறார்கள்-
த் ₃வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா₂யா ஸமாநம் வ்ருக்ஷம் பரிஷஸ்வ ஜாதே| தயோ : அந்ய: பிப்பலம் ஸ்வாது₃ அத்தி அநச்நன் அந்ய:அபி₄சாக சீதி||(முண்டக உபநிஷத் -3-1-1-)
ஒரே தன்மைகளை உடையவர்களாக(அபஹத பாப்மத்வம் முதலான 8 பண்புகளை உடையவர்களான) இரண்டு பறவைகள் (ஜீவாத்மாவும் பரமாத்மாவும்) ஒரு மரத்தில்(உடலில்) உள்ளனர். அம் மரத்தில் உண்டாகும் பழங்களை (இன்ப துன்பங்களை ) ஒரு பறவை (ஜீவாத்மா) மட்டும் உண்டு ஒளி மங்கிப் போகிறது. மற்றொரு பறவை (பரமாத்மா) உண்ணாமல் ஒளி விஞ்சி இருக்கிறது

பூர்வ பக்ஷியின் கேள்வி– ’அநேந ஜீவேந ஆத்மநா அநு ப்ரவிச்ய நாம ரூபே வ்யாகரவாணி’ (சாந்தோக்யம் –)தாவது ’இந்த ஜீவாத்மாக்களை உடலாகக் கொண்ட நான் எல்லாப் பொருள்களுக்கும் புகுந்து பெயராலும் உருவத்தாலும் அவற்றை வேறு படுத்தப் போகிறேன்’ என்று பரமாத்மா கூறுவதால், எல்லாச் சொற்களுமே ஒரு அசேதனப் பொருளைச் சொல்லி, அதற்குள் இருக்கும் ஜீவாத்மாவைச் சொல்லி, அதற்குள் இருக்கும் பரமாத்மாவைச் சொல்கின்றன-(அபர்யாவஸ்யமான வ்ருத்தி). ஆகவே வேதத்தில் “ப்ரஹ்மசாரீ இப்படிச் செய்ய வேண்டும்”, “ஸந்யாஸீ இப்படிச் செய்ய வேண்டும்” என்று சொல்லும் வாக்கியங்களிலெல்லாம் பரமாத்மாவுக்குத் தான் கட்டளை இடப்படுகிறது என்றாகும். அப்படியானால் அவரும் கர்மங்களுக்கு வசப்பட்டவராக வேண்டுமே ?

பதில் (அடுத்த ஸூத்ரத்தில்) 4-அரூபவதே₃வ ஹி தத் ப்ரதா₄நத்வாத்–“அது உருவமற்றது போல; இயக்குவதால் பரமாத்மாவுக்கு உலகமே உருவமானாலும் அவர் உருவமற்றவர் போலத் தான் உள்ளார், அதாவது அந்தந்த உடலால் வரும் இன்ப துன்பங்களால் பாதிக்கப் படாமல் தான் உள்ளார்.ஏனென்றால் வேதமே “ஆகாதசோ ஹ வை நாம நாம ரூபயோ : நிர்வஹிதா , தே யத₃ந்ரா தத் ப்ரஹ்மம்- (சந்தோக்யம் -8-14-1) அதாவது “ஆகாசம் எனப்படும் பரமாத்மா பெயர்களையும் உருவங்களையும் நிர்வாஹம் செய்பவர், அவற்றுக்கு அப்பாற்பட்டவர்” என்று தெளிவாகக் கூறுகிறது.எனவே பரமாத்மா கர்மத்துக்கு வசப்படமாட்டார். வேதம் நமக்குத் தான் கட்டளை இடுகிறதே தவிற பரமாத்மாவுக்கு அல்ல

3-2-5-உப₄ய லிங்கா₃தி₄கரணம்– கல்யாண குணங்கள் இருப்பதை நிரூபித்தல் –ஒரு குணம் மற்றொன்றைப் பாதிக்காது –
பூர்வ பக்ஷியின் கேள்வி
– ப்ரஹ்மத்தைப் பற்றி (ஸத்யம் ஜ்ஞாநம் அநந்தம் ப்₃ரஹ்ம) அதாவது “ப்ரஹ்மம் என்றும் இருப்பது, ஜ்ஞாநமே வடிவமானது, எல்லை யற்றது” என்று ச்ருதி கூறுகிறது. இந்த வாக்கியத்தால், ‘ப்ரஹ்மம் ஜ்ஞாநமே வடிவானவர்’என்று சொல்வதன் மூலம் ப்ரஹ்மத்துக்கு ஜ்ஞாநம் முதலான எந்தப் பண்புகளும் கிடையாது என்று தெரிகிறது. எனவே அவருக்கு கல்யாண குணங்கள் இல்லாத படியால் அவருக்கு உபய லிங்கம் (இரண்டு அடையாளங்கள்) கிடையாது

வ்யாஸரின் பதில் – அடுத்த ஸூத்ரத்தில்– 5-ப்ரகாசவச் ச அவை யர்த்₂யாத் –
ச—மேலும்

ப்ரகாசவத்— ப்ரகாச ஸ்வரூபத்தைப் போலே
அவையர்த்₂யாத்— (மற்ற வாக்யங்களும்)வீண அல்லாததால்.-
பூர்வ பக்ஷீ கூறுவது போல் , ஞானம் ப்ரஹ்மம் என்ற வாக்கியம் ப்ரஹ்மம் ப்ரகாச ஸ்வரூபம் என்பதை உணர்த்துகிறது என்பது ஏற்றுக் கொள்ளப் படுகிறது. ஆனால், அதனால் ப்ரஹ்மத்தின் மற்ற தன்மைகள் மறுக்கப்பட வில்லை . ஏனெனில், ‘ப்ரஹ்மம் ப்ரகாச ஸ்வரூபமானவர்’ என்று கூறும் வேத வாக்கியம் வீண் அல்லாததால் ப்ரஹ்மம் ஜ்ஞாநமே வடிவமானவர் என்று ஏற்பது போல்,’ப்ரஹ்மம் உலகத்திற்குக் காரணமானவர், ஸர்வஜ்ஞர், ஸத்ய ஸங்கல்பர்’ என்றும் கூறும் ஸ்ருதி வாக்கியங்களும் வீண் அல்லாதபடியால் ப்ரஹ்மம் அந்தந்தக் கல்யாைண குணங்களை உடையவர் என்றும் ஏற்க வேண்டும்

(ஐந்து ஆறு ஏழு ஸூத்ரங்களும் இதே கருத்தையே காட்டுகின்றன)

6–ஆஹ ச தன் மாத்ரம் –
ச —
மேலும்;
ஆஹ— (ஸ்ருதி) கூறுகிறது
தந்மாத்ரம்— அதனை மட்டும்.
மேலும், ‘ஸத்யம் ஜ்ஞாநம்’ என்ற வாக்கியம் ப்ரஹ்மத்தின் ப்ரகாச ஸ்வரூபத்தை மட்டுமே கூறுகிறது; வேறு வாக்கியங்களில் கூறப்பட்ட ஸத்ய ஸங்கல்பத்வம் முதலான தன்மைகளை மறுப்பதில்லை .
எனவே , மற்ற வாக்கியங்களில் கூறப்பட்ட ஸத்ய ஸங்கல்பத்வம், ஸர்வ ஜ்ஞத்வம், ஜகத் காரணத்வம் போன்ற தன்மைகள் அனைத்தும் உண்மை யானவையே .-ஞானம் ப்ரஹ்மம் என்ற வாக்கியத்திற்கும், மற்ற குணங்களைக் கூறும் மற்ற ஸ்ருதி வாக்கியங்களுக்கும் எந்த முரண்பாடும் இல்லை . அனைத்தையும் ஒருங்கிணைத்தே புரிந்து கொள்ள வேண்டும்.

(அயோக விவச்சேதம் -அர்ஜுனன் வில்லாளியே மற்றவரும் வில்லாளியாக இருக்கலாம் -ஆனால் —அந்ய யோக விவச்சேதம் -அர்ஜுனனே வில்லாளி -வேறு யாரும் இல்லை -அதே போல் –ப்ரஹ்மம் அஜடம் அல்ல -ஞானமே வடிவானவர் -மற்ற குணங்கள் இல்லை என்று சொன்னதாகக் கொள்ள முடியாதே)

வேதம் காட்டும் உபய லிங்கம் –7-த₃ர்ஶயதி ச அதோ ₂ அபி ஸ்மர்யதே
மேலும்
அதோ ₂ முழுமையாக
த₃ர்ஶயதி (ஸ்ருதி) காட்டுகிறது;
அபி மே லும்
ஸ்மர்யதே ஸ்ம்ருதியிலும் கூறப்படுகிறது. மேலும், வேதாந்த வாக்கியங்கள் அனைத்தும் இருவகை லிங்கங்களும் இருப்பதை உணர்த்துகின்றன;ஸ்ம்ருதியும் கூறுகிறது

ஸ்வேதாஸ்வதார உபநிஷத் –-6-7-தம் ஈஸ்வரானாம் பரமம் மகேஸ்வரம் தம் தைவதாநாம் பரமம் ச தைவதம் -என்றும்“உலகத்தில் இயக்கும் தன்மை உடையவர்களையும் கூடஇயக்குபவர்,-தேவர்களுக்கும் தேவர் போன்றவர் பரமாத்மா”

6-9-ச காரணம் கரணாதி பாதிபோ ந சாஸ்ய கச்சித் ஜனிதா ந சாதிப -என்றும்–அவரே உலகுக்குக் காரணம், புலன்களை இயக்கும் ஜீவனுக்கும் தலைவர்”

6-8-ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்யதே ந தத் சமச் சாப்யதிகச்ச த்ருஸ்யதே பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச -என்றும்“பரமாத்மாவுக்கு உடலும் புலன்களும் தேவை யில்லை , அவருக்கு நிகரானவரோ உயர்ந்தவர்களோ இல்லை , இயற்கையான மிக உயர்ந்த பலவிதமான சக்திகள் அவருக்கு உள்ளன, அதே போல் ஜ்ஞாநம் ப₃லம் முதலான குணங்களும் உள்ளன”

முண்டக உபநிஷத் -1-1-9-ய சர்வஜ்ஞ சர்வவித் யஸ்ய ஞான மயம் தப -என்றும்-“யார் ஓருவர் எல்லாப் பொருள்களையும் ஸ்வரூபத்தாலும் தன்மைகளாலும் அறிவாரோ

2-9-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்சந-என்றும்–“பேச்சும் மனதும் எட்ட முடியாமல் திரும்பக் கூடிய உயர்ந்த ஆநந்தம் ப்ரஹ்மத்தினுடையது-

(மனிதர்களுக்குத் தேவர் போலே தேவர்களுக்கும் தேவர் -மிகுனரை இலனே -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்)

அதே சமயம் –ஸ்வேதாஸ்வதார உபநிஷத் -6-19-நிஷ்கலம் நிஷ்க்ரியம் சாந்தம் நிரவத்யம் நிரஞ்ஜனம் என்றும்–அதாவது“பகுதிகளோ குற்றங்களோ துன்பங்களோ பற்றுகளோ அற்றவர்”என்பது போன்ற நிவேத வாக்கியங்கள், ப்ரஹ்மத்திற்கு எந்த குணமும் இல்லை என்று கூற வில்லை . கல்யாண குணங்களைத் தவிர, அவற்றிற்கு எதிரான அனைத்து தோஷங்களும் அவரிடம் இல்லை என்பதற்கு

தைத்ரிய ஆனந்த வல்லி–2-8-1-பீஷாஸ்மாத்வாத பவதே பீஷோ தேதி சூர்ய -என்றும்-தைத்ரிய ஆனந்த வல்லி-2-8-ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த -என்றும்

ஸ்ரீ கீதையில் பல இடங்களில் – –
10-3-யோ மாம் அஜம் அநாதிம் ச வேத்தி லோக மகேஸ்வரம் –
–அதாவது “நான் பிறப்பற்றவன், தொடக்க மற்றவன் , உலகத்தின் ஈஸ்வரன்” என்றும், “
10-42-விஷ்டப்யாஹமிதம் க்ருத்ஸ் நம் ஏகாம் சேந ஸ்திதோ ஜகத் ––“என் சக்தியின் ஒரு சிறு பகுதியால் உலகனைத்தையும் தாங்குகிறவன்” என்றும்,

15-17-உத்தம புருஷ த்வன்ய பரமாத் மேத்யுதா ஹ்ருத யோ லோகத்ரயமா விஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர-அதாவது “பரமாத்மா என்று பெயர் பெற்றவர் ஜீவர்கள் அனைவரையும் காட்டிலும் உயர்ந்தவர்” என்றும்

9-10-மயா அத்ய ஷேண பிரகிருதி ஸூயதே ச சராசரம் ஹேது நா அநேன கௌந்தேய ஜகத்தி பரிவர்த்ததே -என்றும்

ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-1-46/47– சர்வஜ்ஞ சர்வக்ருத் சர்வ சக்தி ஞான பலர்த்திமான் அன்யூனஸ் சாபி அவ்ருத்திச்ச ஸ்வாதிநோ அநாதிமான் வசீ க்லமதந்த்ரீ பயக்ரோத காமாதி பிரசம்யூத நிரவத்ய பர ப்ராப்தே நிரதிஷ்டோ அஷர க்ரம-அதாவது “அனைத்தையும் அறிந்தவர், அனைத்தையும் உண்டாக்குபவர், சக்தி ஜ்ஞாநம் பலமுடையவரும் ஆவார்-தோஷங்கள் அற்றவர்-” என்றும் கூறப்படுகிறது.

(மேல் 8 -9-10-ஸூத்ரங்கள் ஒரே விஷயத்தை -உவமை காட்டி -ஒப்பிட்டு -விளக்குகிறார்)

ஸூர்யனோடும் சந்ரனோடும் ஒப்பிடல் –8-அத ஏவ ச உபமா ஸூர்யகாதி₃வத்
அத ஏவ—
அதனாலேயே ;
ச — மேலும்;
உபமா — உவமை ;
ஸூர்யகாதி ₃வத் — ஸூரியன் முதலியவற்றைப் போலே “அதனாலேயே , ஸூரியன் முதலியவற்றைப் போன்ற உவமையும் பொருந்துகிறது.”
யாஜ்ஞாவல்க்ய ஸ்ம்ருதி 3-144–ஆகாசம் ஏகம் ஹி யதா கடாதி ஷூ ப்ருதக் பவேத் –ததாத்மைகோ ஹ்ய நேகஸ்தோ ஜலாதாரேஷ்வி வாம்சுமான் – “ஒரே ஆகாசம் பல குடங்களில் தனித்தனியாக இருப்பது போலவும், ஒரே ஸூரியன் பல நீர் நிலைகளில் பிரதிபலிப்பது போலவும், ஒரே பரமாத்மா பல இடங்களில் இருக்கிறார்” –
அதே போல் –ஏக ஏவ ஹி பூதாத்மா பூதே பூதே வ்யவஸ்திதே ஏகதா பஹூதா ச ஏவ த்ருச்யதே ஜல சந்த்ரவத் “ஒருவரே அனைத்து ஜீவர்களிலும் உள்ளவராக இருந்தாலும், பல நீர் நிலைகளில் பிரதிபலிக்கும் சந்திரனைப் போலே , பலராகக் காணப்படுகிறார்.“என்றும் கூறுகிறது.

இங்கு ப்ரஹ்மத்தை ஸூரியனோடு ஒப்பிடுகிறது-ஒரே ஸூரியன் நீர், கண்ணாடி போன்ற பொருள்களில் பிரதிபலிக்கிறார். அந்த பிரதிபலிப்புகள் இருக்கும் இடங்கள் அசுத்தமாக இருந்தாலும், அவற்றின் தோஷங்கள் ஸூரியனைத் தீண்டுவதில்லை . அது போலவே , ப்ரஹ்மம் அனைத்து சேதன–அசேதனப் பொருள்களிலும் அந்தர்யாமியாக இருந்தாலும், அவற்றின் தாேஷங்கள் அவரைத் தீண்டுவதில்லை . இந்த ஒப்பிடல் பொருந்த வேண்டுமென்றால் பரமாத்மா குற்றங்களற்ற வராகத் தான் இருக்க வேண்டும்

பூர்வ பக்ஷியின் கேள்வி–ப்ரஹ்மம் ஸூரியனைப் போல் குற்றமற்றவர் என்ற எடுத்துக்காட்டே பொருந்தாது என்கிைறார் அடுத்த ஸூத்ரத்தில்.
9-அம்பு₃வத் அக்₃ரஹணாத் து ந ததா₂த்வம் –
து -ஆனால்

அம்பு₃வத் –நீரில் (இல்லாத ஸூரியனை இருப்பதாக அறிவது) போலே
அக்₃ரஹணாத் –க்ரஹிக்கப்படாததால்;
ந ததாத்₂த்வம் –பரமாத்மா அப்படி யல்ல “ஆனால், நீரில் காணப்படும் ஸூரியனைப் போல ப்ரஹ்மத்தை உண்மையில் கொள்ள முடியாததால், அந்த உவமை பொருந்தாது.” நீர் அல்லது கண்ணாடியில் ஸூரியன் இருப்பதாக நாம் காண்கிறோம். ஆனால், உண்மையில் ஸூரியன் அங்கே இல்லை . பார்ப்பவரின் ப்ரமை யினால் மட்டுமே அவர் அங்ககே இருப்பதாகத் தோன்றுகிறார். ஆகையால், பிரதிபலிப்பில் காணப்படும் அசுத்தம் போன்ற தாேஷங்கள் ஸூரியனைத் தீண்டாததற்குக் காரணம், ஸூரியன் உண்மையில் அங்கே இல்லாமை -.ஆனால், ப்ரஹ்மம் அனைத்துப் பொருள்களிலும் உண்மை யாகவே இருப்பதாக ஸ்ருதி கூறுகிறது.அப்படியானால், அவற்றின் தாேஷங்களும் அவருக்கு வருமே ? எனவே , ப்ரஹ்மத்தின் குற்ற மின்மையை நிறுவுவதற்கு, ஸூரியனின் உவமை பொருத்தமான எடுத்துக் காட்டு அல்ல என்று பூர்வபஷி கூறுகிறார்.எனவே ப்ரஹ்மத்துக்குக் குற்றங்கள் இருப்பதால் உபய லிங்கம்(இரண்டு அடையாளங்கள் உள்ளன)-என்பது தவறானது.

ஆகாசத்தோடு ஒப்பிடலின் கருத்து–ஸித்தாந்தியின் பதில்–10- வ்ருத்₃தி₄ ஹ்ராஸ பா₄க்த்வம் அந்தர் பா₄வாத் உப₄ய ஸாமஞ்ஜஸ்யாத் ஏவம் த₃ர்ஶநாச் ச
அந்தர்பா₄வாத்–
உள்ளிருப்பதன் காரணமாக;
வ்ருத்₃தி₄ ஹ்ராஸ பா₄க்த்வம் — வளர்ச்சியும் தேய்வும் உடையவனாக இருத்தல் (கண்டிக்கப்படுகிறது);
உப₄ய ஸாமஞ்ஜஸ்யாத் -இரண்டு எடுத்துக் காட்டுகளும் பொருந்துவதால்;
— மேலும்
ஏவம் த₃ர்ஶநாத்-இவ்வாறு பயன்பாடு உலகிலும் காணப்படுவதால்; “அனைத்திற்குள்ளும் இருப்பதால் ஸந்தேஹப் படப்படும் வளர்ச்சி, தேய்வு போன்றவை ப்ரஹ்மத்துக்கு இல்லை . ஏனெனில், இரண்டு எடுத்துக் காட்டுகளும் அப்போது தான் பொருந்துகின்றன; மேலும், இவ்வாறான எடுத்துக் காட்டுகள் உலகிலும் காணப்படுகின்றன”

பூர்வ பஷி , ஸூரியன் உண்மையில் நீரில் இல்லாததால் தான் நீரின் தாேஷங்கள் அவரைத் தீண்டுவதில்லை என்று கூறினார். ஆனால், அதுவே இந்த எடுத்துக் காட்டின் நோக்கம் அல்ல , ஏனெனில், ஸாஸ்த்ரம் ஆகாசத்தையும் எடுத்துக் காட்டாகக் கூறுகிறது.ஆகாஸம் அனைத்துப் பொருள்களுக்கும் உள்ளேயே இருந்தாலும், அவற்றின் தாேஷங்கள் ஆகாசத்தைத் தீண்டுவதில்லை . எனவே , ஸூரியனும் ஆகாசமும் ஆகிய இரண்டு எடுத்துக் காட்டுகளையும் சேர்த்துப் பார்க்கும் போது, ப்ரஹ்மம் உலகத்துடன் தொடர்புடையவராக இருந்தாலும், உலகத்தின் தாேஷங்கள் அவரைத் தீண்டுவதில்லை என்பதே அவற்றின் பொதுவான கருத்து என்பது தெளிவாகிறது. -ஸூரியனுக்குத் தாேஷங்கள் தீண்டாததற்குக் காரணம், அவர் அந்தப் பொருளில் உண்மையாக இல்லாமல் வேறு இடத்தில் இருப்பதால். ஆகாசத்திற்கு, தேச வேறுபாடு இல்ல விட்டாலும், ஸ்வபாவ வேறுபாடு உள்ளது, எனவே பொருள்களின் குற்றங்கள் அதைத் தீண்டுவதில்லை . அதே போல் ப்ரஹ்மத்திடமும், உலகத்தின் தாேஷங்கள் தீண்டாததற்குக் காரணம், இந்த ஸ்வபாவ வேறுபாடே

கேள்வி– அப்படியானால் சிறந்த எடுத்துக் காட்டான ஆகாசத்தை மட்டும் வேதம் கூறி யிருக்கலாமே ? ஸூரியனை ஏன் சொல் வேண்டும்?
பதில்-
எடுத்துக் காட்டின் ஒவ்வொரு அம்சமும் பொருந்த வேண்டும் என்பது அவசியமல்ல. சொல்ல வேண்டிய கருத்திற்குப் பொருந்தும் அம்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு உவமை கூறப்படுவது உலக வழக்கிலும் காணப்படுகிறது.உதாரணமாக, “சந்திரனைப் போன்ற முகம்”, “சிங்கத்தைப் போன்ற வீரன்” என்று கூறும் போது, சந்திரனுக்கும் முகத்திற்கும், சிங்கத்திற்கும் மனிதனுக்கும் உள்ள அனைத்து அம்சங்களும் ஒன்றாக இருப்பதில்லை . குறிப்பிட்ட ஒரு ஒற்றுமையை மட்டுமே எடுத்துக் கொண்டு இவ்வாறான உவமைகள் கூறப்படுகின்றன–அது போலே , ஸூரியன் மற்றும் ஆகாசம் ஆகிய எடுத்துக் காட்டுகளும், ப்ரஹ்மம் உலகத்துடன் தொடர்புடையவராக இருந்தாலும், உலகத்தின் தோஷங்கள் அவரைத் தீண்டுவதில்லை என்ற ஒரு கருத்தை உணர்த்துவதற்காகவே கூறப்பட்டுள்ளன.

நேதி நேதி என்ற வாக்கியத்தை ஆராய்தல் பூர்வ பக்ஷியின் கேள்வி – ப்ரஹ்மத்தின் ரூபம், குணங்கள் முதலியவற்றைக் கூறிய பிறகு, (சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் -மூர்த்தம் அமூர்த்தம் திருமேனியில் உள்ளவன் என்றும் ஸமஸ்த கல்யாண குணாத்மகன் என்று சொல்லிய பின்பு)” (அதா₂த ஆதே ₃ஶ: நேதி நேதி) என்று ச்ருதி கூறுகிறது. இதனால், இதற்கு முன் ப்ரஹ்மத்தைப் பற்றிக் கூறப்பட்ட அனைத்து விசேஷணங்களும் “நேதி நேதி” அதாவது“இவ்வாறு அல்ல, இவ்வாறு அல்ல”என்று மறுக்கப் படுகின்றன. எனவே , ப்ரஹ்மம் மட்டுமே உண்மை யானவர்; உருவம், குணம், ஸர்வஜ்ஞத்வம், ஜகத் காரணத்வம் போன்ற அனைத்து விசேஷணங்களும் உண்மை யானவை அல்ல. ப்ரஹ்மத்தின் உண்மையான ஸ்வரூபத்ணத அறியாதவர்களால் கற்பிக்கப்பட்டவையே அவை என்று பூர்வ பஷி கூறுகிறார்.

ஸித்தாந்தியின்பதில்–11-ப்ரக்ருதைைாவத்த்வம் ஹி ப்ரதிஷேதி₄ ததோ ப்₃ரவீதி ச பூ₄ய:
ஹி
— ஏனெனில்;
ப்ரக்ருதைைாவத்த்வம் — இதற்கு முன் கூறப்பட்ட அளவுக்கே ப்ரஹ்மம் உட்பட்டவர் என்பதையே ;
ப்ரதிஷேதி₄ — மறுக்கிறது;
— மேலும்;
தத — அதன் பிறகு;
பூ₄ய: — மீண்டும்;
ப்₃ரவீதி — கூறுகிறது;.
“ஏனெனில், ‘நேதி நேதி’ என்பது, ப்ரஹ்மம் இதற்கு முன் கூறப்பட்ட அளவுக்கே உட்பட்டவர் என்பதையே மறுக்கிறது. அதன் பிறகும், அவருடைய மேன்மையையே மீண்டும் ச்ருதி கூறுவதால், இப்படிப் பொருள் கொள்வதே பொருத்தமானது

பூர்வ பஷி கூறுவது போலே , “நேதி நேதி” என்பது “இவ்வாறு அல்ல, இவ்வாறு அல்ல” என்று ப்ரஹ்மத்தின் அனைத்து பண்புகளையும் மறுப்பதாக இருக்க முடியாது.ஏனெனில், ச்ருதி முதலில், வேறு எந்தப் ப்ரமாணத்தாலும் அறிய முடியாத ப்ரஹ்மத்தின் தன்மை களையும், அவருடைய விசேஷணங்களையும் விரிவாக உபதேசிக்கிறது. அவற்றைக் கூறி விட்டு, அதே ச்ருதி அவற்றை யெல்லாம் மறுத்து விட்டால், அது ப்ரமத்தால் உளறியது போல் ஆகி விடும்.எனவே , “நேதி நேதி” என்பதன் பொருள்“இவ்வளவு அல்ல, இவ்வளவு அல்ல”, அதாவது “ப்ரஹ்மம் இதுவரை கூறப்பட்ட தன்மைகளை மட்டும் உடையவர் அல்ல” என்பதே -அதனால் தான், “நேதி நேதி” என்று கூறிய உடனேயே ச்ருதி, –

(ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணும் கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே –2-5-10–காணப்படாதவன்.
இத்தால்,ஏகப் பிரமாண கம்யத்வ சாம்யமும் இல்லை என்கை.)

ப்ருஹத் உபநிஷத் -2-3-6–ந ஹி ஏ தஸ்மாத் இதி நேத்யன்யத் பரமஸ்தி அத நாமதேயம் சத்யச்ய சத்யமிதி ப்ராணா வை சத்யம் தேஷாம் ஏஷ சத்யம் இதி -என்கிறது (பிராணன் உள்ளதால் ஜீவன் -ஆகாயம் போல் அல்லாமல் நித்யம் சத்யம் – இப்படிப்பட்ட ஜீவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் பர ப்ரஹ்மம்-ஞானம் சுருங்குவதும் விரிவதும் இல்லை -பாபங்களால் தீண்டப் படாதவன் -கர்ம வச்யன் இல்லை – அதனால் இவர்களைக் காட்டிலும் மேலான சத்யம் என்கிறது –)-அதாவது, “இவ்வளவு மட்டும் அல்ல என்று கூறப்பட்ட ப்ரஹ்மத்தை விட உயர்ந்தவை வேறு எந்தப் பொருளும் இல்லை ” என்று ச்ருதி அறிவிக்கிறது. ஸ்வரூபத்திலும், குணங்களிலும் அவரை விட மேலானவர் இல்லை என்று கருத்து.
மேலும் (அத நாமதேயம் சத்யச்ய சத்யமிதி ப்ராணா வை சத்யம் தேஷாம் ஏஷ சத்யம் இதி -என்கிறது) என்றும் ச்ருதி கூறுகிறது.அதாவது, ஜீவர்களுக்கு அவரவர் கர்மத்திற்கு ஏற்ற வாறு ஜ்ஞானம் சுருங்குவதும் விரிவடைவதும் உண்டு. ஆனால், ப்ரஹ்மத்திற்கு அத்தகைய குறைவு எதுவும் இல்லை . அந்த வகையில், ஸத்யம் எனப்படும் ஜீவர்களுக்கும் மேலான ஸத்யமாக இருப்பவர் ப்ரஹ்மமே என்று ச்ருதி மேலும் அவருடைய மேன்மையைப் போதிக்கிறது.

பரமாத்மாவை அறியும் முறை – 12-தத் அ₃வ்யக்தமாஹ ஹி
தத்
— அந்தப் ப்ரஹ்மத்தை ;
அவ்யக்தம் — பிற ப்ரமாணங்களால் அறிய முடியாதவர் என்று;
ஆஹ — கூறுகிறது;
ஹி — ஏனெனில்.
“ஏனெனில், அந்தப் ப்ரஹ்மம் மற்ற ப்ரமாணங்களால் அறிய முடியாதவர் என்று சாஸ்த்ரமே கூறுகிறது.”
நேதி நேதி” என்பது, ப்ரஹ்மத்திற்கு முன்பு கூறப்பட்ட மூர்த்தம், அமூர்த்தம் போன்ற விசேஷணங்களை மறுப்பதாக இருக்க முடியாது. ஏனெனில், ஒரு பொருளை மறுக்க வேண்டும் என்றால், அது முன்பே ஏதோ ஒரு ப்ரமாணத்தால் அறியப்பட்டிருக்க வேண்டும். ப்ரஹ்மம் மற்ற எந்தப் ப்ரமாணத்தாலும் அறிய முடியாதவர் என்று ஸாஸ்த்ரமே கூறுகிறது

முண்டக உபநிஷத் -3-2-8-ந சஷூஷா க்ருஹ்யதே நாபி வாசா -என்று “அவரை கண்ணால் காண முடியாது; வாக்காலும் அறிய முடியாது” -எனவே , ப்ரஹ்மம் பிற ப்ரமாணங்களால் அறிய முடியாதவராக இருப்பதால், அவரைப் பற்றி ஏற்கெனவே தெரிந்த மூர்த்தம், அமூர்த்தம் போன்ற தன்மைகளை இங்கு இல்லை யென்று சொல்ல முடியாது. அவற்றைப் புதிதாக உணர்த்தி விட்டு, பின்னர் அவற்றையே மறுக்கிறது என்று தான் கொள்ள வேண்டும். அப்படி யானால் அது உளறலாக ஆகி விடும்.

13-அபி ஸம்ராத₄நே ப்ரத்யக்ஷ அநுமாநாப்₄யாம்
அபி —
மேலும்;
ஸம்ராத₄நே — முறையாக ஆராதனை செய்வதால் அதாவது பக்தி ரூபமான த்யானத்தால் தான்(பரமாத்மாவின் உருவத்தைக் காண முடியும் -தர்சன சாமானகாரம் -ஞானக் கண்ணால் சஷாத்காரம் செய்யலாம்-என்று தெரிகிறது)
ப்ரத்யக்ஷாநுமாநாப்₄யாம் — ச்ருதியாலும் ஸ்ம்ருதியாலும்.
ச்ருதியில்- முண்டக உபநிஷத் -3-2-3- நாயமாத்மா ப்ரவச நேன லப்யோ ந மேதயா ந பஹூ நா ஸ்ருதே ந யமேவைஷ வ்ருணுதே தேன லப்யஸ் தச்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்-என்று -“எந்த பக்தனை பரமாத்மா தேர்ந்தெடுக்கிறாரோ அவனுக்கே தன் திரு மேனியைக் காட்டுகிறார்”
அதே போல், ஸ்ம்ருதியிலும், (நாஹம் வேதை₃ர் ந தபஸா…) அதாவது “வேதத்தை ஓதுவதாலோ , தபஸ்ஸாலோ , தானத்தாலோ , யாகத்தாவலோ , நீ என் உருவத்தைக் கண்டது போலே யாரும் கண்டு விட முடியாது” என்றும்,
(ப₄க்த்யா த்வநந்யயா ஶக்ய:..) அதாவது “என்னிடம் மட்டும செலுத்தப் படும் பக்தியினால் மட்டும் தான் என்னை அறியவும் காணவும் அடையவும் முடியும்” என்றும் பகவத் கீதையில் கண்ணன் அர்ஜுனனிடம் கூறுகிறார்.
எனவே , ப்ரஹ்மத்தின் மூர்த்த அமூர்த்த வடிவங்கள் முன்னமே அறியப் பட்டிருக்க முடியாதலால் அவற்றை நிவேதிக்க இயலாது.

(3-1-8-ஜ்ஞான பிரசாதேன விசுத்த சத்த்வ ததஸ்து தம் பச்யதி நிஷ்கலம் த்யாய மாந-என்றும்ஸ்ரீ கீதையில் -11-53- நாஹம் வேதைர் ந தபஸா ந தாநேன ந சேஜ்யயா-என்றும்11-54-பக்த்யா த்வ நன்யயா சக்ய அஹம் ஏவம் விதோ அர்ஜுனா ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேன பிரவேஷ்டும் ச பரந்தப–என்றும் சொல்லுமே-)

உருவமும் கல்யாண குணங்களும் உண்மை யானவையே -14 ् ப்ரகாசாதி₃வச்ச அவை சேஷ்யம் ப்ரகாசஶ்ச கர்மணி அப்₄யாஸாத்
ப்ரகாசாதி₃வத்
—ப்ரகாச வடிவம் போலவே
அவை சேஷ்யம்—(ப்ரஹ்மத்தின் உருவத்துக்கும் குணங்களுக்கும்) வேறுபாடு இல்லை ;
ப்ரகாசஶ் ச —ப்ரகாச வடிவமாயிருப்பதும்;
கர்மணி— பக்தி ரூபமான ஆராதனையில்;
அப்₄யாஸாத் — பயிற்சியால் (அறியப் பட்டது)
“ப்ரகாசம் முதலான ஸ்வரூப குணங்களைப் போலவே , மூர்த்தம்–அமூர்த்தம் ஆகிய விசேஷணங்களும் வேறுபாடின்றி உண்மையானவையே . ஏனெனில், பக்தி ரூபமான ஆராதனையின் மூலம் இரண்டுமே ஒரே வகையில் அனுபவிக்கப் படுகின்றன.”

வாம தேவர் போன்ற மஹ ரிஷிகள் ப்ரஹ்மத்தை ஸாக்ஷாத்காரம் செய்த போது, ப்ரஹ்மத்தின் ஜ்ஞானமே ஸ்வரூபமாக (வடிவாக) இருப்பதை அநுபவித்தது போல், மூர்த்தம், அமூர்த்தம் ஆகிய உலகத்துடன் விசிஷ்டராக இருக்கும் அவருடைய நினைவையும் அனுபவித்தனர்.இதையே ச்ருதி, ப்ருஹத் உபநிஷத் -1-4-10-தத்தை தத் பஸ்யன் ருஷிர் வாமதேவ பிரதிபேத அஹம் மநுரபவம் ஸூர்யச்ச-என்று கூறுகிறது. ப்ரஹ்மத்தின் ஜ்ஞான வடிவு த்யானத்தில் நேரடியாக அனுபவிக்கப்படுவதால், அது உண்மையானது என்று ஏற்பது போலே , அதே த்யானத்தின் மூலம் ப்ரஹ்மம் உருவம் மற்றும் குணங்களோடு இருப்பதும் அறியப்படுகிறது.எனவே , ப்ரஹ்மத்தின் மூர்த்தம்–அமூர்த்தம் என்ற வடிவுகளும், பண்புகளும் உண்மை யானவையே என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.

(ஆக -11-12-13-14-ஆகிய நான்கு ஸூத்ரங்களால் நேதி நேதி ஸ்ருதியின் உண்மையான அர்த்தம் காட்டப்பட்டது)

15–அதோ அநந்தேன ததாஹி லிங்கம்
அதோ :
— ஆகையால்;
அநந்தேந — எல்லை யற்ற (குணங்கவளோடு கூடியவர்);
ததா ₂ ஹி — இவ்வாறே ;
லிங்க₃ம் — (வேதம் சொல்லும் இரண்டு) அடையாளங்கள்(பொருந்துகின்றன).
ஆகையால், ப்ரஹ்மம் எல்லை யற்ற கல்யாண குணங்களோடு கூடியவர் என்பது நிரூபிக்கப் பட்டதால் அவர் குற்றமற்றவர் என்றும் கல்யாண குணக் கடல் என்றும் கூறப்படும் உபய லிங்கம்(இரண்டு அடையாளங்களும்) பொருத்தமானவையே .
இவ்வாறு, பரமாத்மாவை அடைவதில் நமக்கு ஆசையை உண்டாக்குவதற்காக வேத வ்யாஸர் இந்த அதிகரணத்தால் பரமாத்மா குற்ற மற்றவர் என்றும், எண்ணிறந்த அளவற்ற குணங்களை உடையவர் என்றும் நிரூபித்தார்.

(எண்ணில் தொல் புகழ் -வண் புகழ் நாரணன் -அல்லலில் -இத்யாதி அருளிச் செயல்கள் உண்டே)

3.2.6 அஹிகுண்ட₃லாதி₄கரணம் அசேதனப் பொருள் எப்படி ப்ரஹ்மத்தின் வடிவம் ஆகிறது?–அதிகரணத்தின் பின்புலம் –ஸங்கதி- (த்₃வே வாவ ப்₃ரஹ்மணொ ரூபே மூர்த்தம் ச அமூர்த்தம் ஏவ ச ) அதாவது “ப்ரஹ்மத்திற்கு இரண்டு ரூபங்கள் உள்ளன. அவவ மூர்த்தமும் அமூர்த்தமும் ஆகும்” என்று மூர்த்தாமூர்த்த ப்ராஹ்மணத்தில் கூறப்படுகிறது. இதனால், சேதனப் பொருள்களும் அசேதனப் பொருள்களும் ப்ரஹ்மத்தின் ரூபங்களே என்பது தெளிவாகிறது. ஜீவர்கள் ப்ரஹ்மத்தின் ரூபமாக இருப்பது முந்தைய அதிகரணங்களில் நிறுவப்பட்டு விட்டது. ஆகையால், இப்போது அசேதனப் பொருள்கள் எந்த வகையில் ப்ரஹ்மத்தின் ரூபமாக இருக்கின்றன? என்பதையே இந்த அதிகரணம் ஆராய்கிறது.
இந்த ஆராய்ச்சி வெறுமனே அசேதனப் பொருள்களுக்கும் ப்ரஹ்மத்திற்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்வதற்காக மட்டுமல்ல. ப்ரஹ்மம் எந்தத் தோஷமும் இல்லாதவர் என்பதை நிறுவுவதற்கும் இதுவே அடிப்படையாக அமைகிறது. ஏனெனில், அசேதனப் பொருள்களுக்கு மாற்றம், அழிவு, ஜடத்வம் போன்ற பல தோஷங்கள் காணப்படுகின்றன. அவை ப்ரஹ்மத்தின் ரூபங்கள் என்று ஏற்றுக் கொள்ளும் போது, அந்தத் தோஷங்கள் ப்ரஹ்மத்திற்கும் சேர்ந்து விடுமா என்ற சந்தேகம் எழுகிறது. எனவே , அசேதனப் பொருள்கள் ப்ரஹ்மத்தின் ரூபமாக இருக்கும் முறை என்ன என்பதை இந்த அதிகரணம் ஆராய்ந்து, அவற்றின் தோஷங்கள் ப்ரஹ்மத்தை எவ்விதத்திலும் தீண்டுவதில்லை என்பதை நிலை நிறுத்துகிறது.

சம்சயம்- அசேதனப் பொருள்கள் ப்ரஹ்மத்தின் ரூபங்கள் என்று ச்ருதி கூறுகிறது. ஆனால், அவை எந்த வகையில் ப்ரஹ்மத்தின் ரூபங்களாக இருக்கின்றன?
(1) பாம்புக்கும் அதன் சுருண்ட வடிவுக்கும் உள்ள தொடர்பைப் போலவா?
(2) அல்லது, ஒளிக்கும் அதற்கு ஆதாரமான பொருளுக்கும் உள்ள தொடர்பைப் போலவா?
(3) அல்லது, பகுதியும் முழுமையும் கொண்ட தொடர்பு (அம்சம்–அம்சி பாவம்) போலவா?

இந்த அதிகரணத்தில் நிறுவப்படவிருக்கும் அம்சம்–அம்சி பாவத்தாய் அடிப்படையாகக் கொண்டே , முன்னர் கூறப்பட்ட ப்ரக்ருத்யதிகரணம் மற்றும் ஆரம்பணாதிகரணம் ஆகிய அதிகரணங்கணேயும் புரிந்து கொள்ள வேண்டும். ஆகையால், இந்த அதிகரணம் மிகவும் முக்கியமானதாகும்.

முதல் பூர்வபக்ஷம் –
இந்த அதிகரணத்தில் முதல் இரண்டு ஸூத்ரங்களால் இரண்டு பூர்வ பக்ஷங்கள் கூறப்படுகின்றன.

1-— உ ப₄ய வ்யபதே₃சாத் அஹி குண்ட₃லவத்
உ ப₄ய-
-இரண்டும்
வ்யபதே₃சாத்–உபதேசிக்கப் படுவதால்
அஹி– பாம்பு
குண்ட₃லவத்–உருண்ட வடிவம் போல.
“பேதம் (வேறுபாடு), அபேதம் (ஒன்றாயிருத்தல்) ஆகிய இருவகை உபதேசங்களும் ச்ருதியில் இருப்பதால், பாம்புக்கும் அதன் சுருண்ட வடிவுக்கும் உள்ள தொடர்பைப் போலவே உலகமும் ப்ரஹ்மமும் தொடர்புடையவை .
ஒருபுறம், ” (ப்₃ரஹ்மை வேத₃ம் ஸர்வம்) அதாவது “இவ் வனைத்தும் ப்ரஹ்மமே ” என்று ச்ருதி கூறுகிறது. அதே போல், (ஆத்மை வேத₃ம் ஸர்வம்) அதாவது “இவ்வனைத்தும் ஆத்மாவே ” என்றும் ச்ருதி கூறுகிறது. இவ்வகையான வாக்கியங்கள் உலகத்திற்கும் ப்ரஹ்மத்திற்கும் அபேதத்தைப் (ஐக்கியத்தைப் ) போதிக்கின்றன–ஆனால், மறுபுறம் (ஹந்தாஹம்...) என்று படைப்பவராகிய ப்ரஹ்மம் ஸங்கல்பம் செய்வதாக ச்ருதி கூறுகிறது. இவ்வகையான வாக்கியங்கள், படைப்பவராகிய ப்ரஹ்மத்திற்கும் படைக்கப்படும் உலகத்திற்கும் பேதம் இருப்பதை உணர்த்துகின்றன.எனவே , பேதத்தையும் அபேதத்தையும் போதிக்கும் ச்ருதிகள் இரண்டிற்கும் பொருந்தக்கூடிய ஒரு கருத்தை முன் வைப்பதாக பூர்வபஷி கூறுகிறார்.
ஒரே பாம்பு சில சமயங்களில் சுருண்ட நிலையிலும், வேறு சில சமயங்களில் நீண்ட நிலையிலும் காணப்படுகிறது. சுருண்ட வடிவமும் நேரான வடிவமும் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாகத் தோன்றினாலும், அவை இரண்டும் ஒரே பாம்பின் வெவ்வேறு அமைப்புகளே .அதுபோலவே , அசேதனப் பொருள்களும் ப்ரஹ்மத்திலிருந்து வேறுபட்ட பொருள்கள் அல்ல. அவை ப்ரஹ்மத்தின் வெவ்வேறு அமைப்புகள் (ஸம்ஸ்தாந விசேஷங்கள்) மட்டுமே என்று பூர்வ பஷி கூறுகிறார்

அதாவது, பாம்பே சுருண்ட வடிவமாகக் காணப்படுவது போல, ப்ரஹ்மமே பலவிதமான அசேதனப் பொருள்களாகக் காணப்படுகிறார். உலகம் என்று தனியாக வேறு ஒரு பொருள் இல்லை ; ப்ரஹ்மமே பல் வேறு அமைப்புகளில் வெளிப்படுகிறார் என்பதே இந்தப் பக்ஷத்தின் கருத்து.

இரண்டாம் பூர்வபக்ஷம் –
2-ப்ரகாசாச்ரயவத்₃வா தேஜஸ்த்வாத்
வா
-அல்லது
பிரகாச -ஒளியையும்
ஆஸ்ரய- அதற்கு ஆதாரமான பொருளையும் போல
தேஜஸ்த்வாத்தேஜஸ்-என்ற ஒரே ஜாதியைச் சேர்ந்திருப்பதால்.
“அல்லது, ஒளிக்கும் அதற்கு ஆதாரமான பொருளுக்கும் உள்ள தொடர்பைப் போலவே , தேஜஸ் என்ற ஒரே ஜாதியைச் சேர்ந்திருப்தன் காரணமாக, அசேதனப் பிரபஞ்சம் ப்ரஹ்மத்தின் ரூபமாக இருக்கிறது

முதல் பக்ஷத்தின் படி உலகமே ப்ரஹ்மத்தின் அமைப்பு மாறிய நிலை என்று ஏற்றுக் கொண்டால், பேதத்தைப் போதிக்கும் ச்ருதிகளுக்கும், ப்ரஹ்மம் எவ்வித மாற்றமும் அடைவதில்லை என்று போதிக்கும் ச்ருதிகளுக்கும் இடம் இல்லாமல் போய்விடும்.ஆகையால், உலகம் ப்ரஹ்மத்தின் மாற்றமே என்று கூறாமல், இரண்டிற்கும் வேறொரு வகையான தொடர்பு இருக்க வேண்டும் என்று இந்தப் பக்ஷத்தில் கூறப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக ஒளியும் அதற்கு ஆதாரமான பொருளும் கூறப்படுகின்றன.ஒளியும், அதற்கு ஆதாரமான ஸூரியன் போன்ற பொருளும் வேறுபட்டவையாக இருந்தாலும், இரண்டிலும் தேஜஸ் என்ற ஒரே ஜாதி உள்ளது. அந்தப் பொதுவான ஜாதியின் காரணமாக, அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று கூறப்படுகின்றன.
அது போலவே , ப்ரஹ்மத்திற்கும் அசேதனப் பிரபஞ்சத்திற்கும் ப்ரஹ்மத்வம் என்ற ஒரு பொதுவான ஜாதி உள்ளது என்று இந்தப் பக்ஷத்தில் கருதப்படுகிறது. அந்த ஒரே ஜாதியை அடிப்படையாகக் கொண்டே , அசேதனப் பிரபஞ்சம் ப்ரஹ்மத்தின் ரூபம் என்று ச்ருதி கூறுகிறது என்று பூர்வபஷி விளக்குகிறார்

ஸித்தாந்தம் 3- பூர்வ வத்₃வா –
வா
-அல்லது
பூர்வ வத் –முன்பு கூறியது போல.(அம்ச அதிகரணம் -2-3- 7-போல்)
அல்லது, முன்பு ஜீவர்களைப் பற்றி கூறியது போலவே , அசேதனப் பொருள்களும் ப்ரஹ்மத்தின் அம்சங்களாக இருக்கின்றன.”
இந்தப் பக்ஷத்தில், முதல் இரண்டு பக்ஷங்களையும் ஏற்றுக் கொள்ளாமல், வேறொரு விளக்கத்தை ஸித்தாந்தீ வ்யாஸர் கூறுகிறார்.

விட்டுப் பிரியாத தன்மை
முதல் பக்ஷத்தில், உலகமே ப்ரஹ்மத்தின் வெவ்வேறு அமைப்புகள் என்று கூறப்பட்டது.அப்படிக் கொண்டால் ப்ரஹ்மத்துக்கு மாறுபாடுகள் இல்லை என்று சொல்லும் ச்ருதி வாக்கியங்கள் தவறாக ஆகும்.
இரண்டாம் பக்ஷத்தில், உலகத்திற்கும் ப்ரஹ்மத்திற்கும் இடையே பொதுவாக இரண்டிலும் காணப்படும் ஒரே ஜாதி இருப்பதால் தொடர்பு ஏற்படுகிறது என்று கூறப்பட்டது.ஆனால், ப்ரஹ்மத்வம் என்ற ஒரே ஜாதி, சேதனப் பொருள்கள், அசேதனப் பொருள்கள், ஈச்வரர் ஆகிய அனைவரிடத்திலும் இருப்பதாகக் கூறினால், உலகத்திற்குக் காரணமானவரும், உலகத்திற்கு ஆதாரமாக இருப்பவரும், அனைத்தையும் அறிந்தவரும் ப்ரஹ்மமே என்று கூறுவது தவறாக ஆகி விடும், ஏனென்றால் அசேதனமோ , சேதனமோ , ஈச்வரவனோ இப் பண்புகளை உணடயவர்கள் அல்லர்கள்

இதற்கு மாற்றாக, முன்பு ஜீவர்களைப் பற்றி நிறுவப்பட்ட கருத்தையே இங்கும் ஏற்றுக் கொள்ல வேண்டும் என்று கூறுகிறார்.அதாவது, (அம்சோ நாநா வ்யபதேசாத்) (2.3.7.1) மற்றும் (ப்ரகாசாதி₃வத் து நைவம் பர:)(2.3.7.4) என்ற ஸூத்ரங்களில், ஜீவர்கள் ப்ரஹ்மத்திலிருந்து தனியே பிரிந்து நிற்கும் பொருள்கள் அல்ல; ப்ரஹ்மத்தை விட்டு ஒரு போதும் பிரியாத பிரிக்க முடியாத விசேஷணங்கள் (அப்ருதக் ஸித்த விசேஷணங்கள்) என்று நிறுவப்பட்டது.அதி போலவே , அசேதனப் பொருள்களும் ப்ரஹ்மத்திலிருந்து பிரிந்து நிற்கும் பருள்கள் அல்ல. அவையும் ப்ரஹ்மத்தை விட்டு ஒரு போதும் பிரியாத அப்ருதக் ஸித்த விசேஷணங்களே .இந்த வகையில், அசேதனப் பொருள்களும் ப்ரஹ்மத்தின் அம்சங்களாக இருக்கின்றன.

இதனால், பேத ச்ருதிகளுக்கும் அபேத ச்ருதிகளுக்கும் இரண்டிற்கும் இடம் கிடைக்கிறது. விசிஷ்டமான(சேர்ந்த) ஒரு பொருளின் ஒரு பகுதியாக இருப்பதன் காரணமாக, அசேதனப் பொருள்களுக்கும் ப்ரஹ்மத்திற்கும் அபேதம் கூறப்படுகிறது. அதே சமயம், விசேஷணத்திற்கும் விசேஷ்யத்திற்கும் ஸ்வரூபத்திலும், ஸ்வபாவத்திலும் வேறுபாடு இருப்பதால், அவற்றிற்கிடையே பேதமும் கூறப்படுகிறது. மேலும், இந்த விளக்கத்ணத ஏற்றுக் கொண்டால், உலகத்தில் காணப்படும் தோஷங்கள் ப்ரஹ்மத்தைத் தீண்டுவதற்கும் இடமில்லை

மணியில் ஒளியும், பொருளில் ஜாதியும், பொருளில் பண்பும், ஆத்மாவிடம் உடலும் இருப்பது போல் ஜீவர்களும் அசேதனப் பொருள்களும் ப்ரஹ்மத்ணத விட்டு பிரிந்து நிற்காத பண்புகள் ஆனதால் அம்சமாக இருக்கின்றன.

அதிகரணத்தின் தாக்கம்
4-பிரதி ஷேதாச் ச —
ச =
மேலும்
பிரதி ஷேதாச்-மறுத்துக் கூறும் ச்ருதிகள் இருப்பதாலும்.
மேலும், அசேதனப் பொருள்களின் தர்மங்களைப் ப்ரஹ்மத்திடம் மறுத்துக் கூறும் ச்ருதிகள் இருப்பதாலும்”

முந்தைய ஸூத்ரத்தில், அசேதனப் பொருள்கள் ப்ரஹ்மத்தின் அப்ருதக் ஸித்த விசேஷணங்களாக இருந்து, அந்த வகையிலேயே அவருடைய அம்சங்களாக இருக்கின்றன என்பது நிறுவப்பட்டது. அதையே இந்த ஸூத்ரம் ச்ருதி ப்ரமாணத்தால் மேலும் உறுதிப்படுத்துகிறது

(ஸ வா ஏஷ மஹாந் அஜ ஆத்மா அஜர: அமர:) அதாவது “இவரே மகத்தான ஆத்மா ; பிறப்பற்றவர், மூப்பற்றவர், மரணமற்றவர்” என்றும்,
(நாஸ்ய ஜரயா ஏதஜ் ஜீர்யதே ) அதாவது “மூப்பு இவரைத் தீண்டுவதில்லை ” என்றும் ச்ருதி கூறுகிறது. இவ்வாறு, அசேதனப் பொருள்களுக்கு உரிய மாற்றம், மூப்பு, அழிவு போன்ற தர்மங்களைப் ப்ரஹ்மத்திடம் ச்ருதி மறுத்துக் கூறுகிறது. எனவே , அசேதனப் பொருள்கள் ப்ரஹ்மத்தின் பிரிக்க முடியாத அம்சங்களாக இருப்பதே பொருந்தும், பூர்வ பஷி சொன்னது போல் ப்ரஹ்மமே அசேதனமாக மாற முடியாது

ஆக, அசேதனப் பொருள்களும் சேதனப் பொருள்களும் ப்ரஹ்மத்துக்கு விட்டுப் பிரிக்க முடியாத அம்சங்கள் என்று நிரூபிக்கப் பட்டதால், ஸ்ருஷ்டிக்கு முன்னால், ப்ரளயத்தின் போது, காரண நிலையில்,ப்ரஹ்மம் ஸூக்ஷ்ம சேதன–அசேதன விசிஷ்டமாக உள்ளது. கார்ய நிலையில், ஸ்தூல சேதன–அசேதன விசிஷ்டமக உள்ளது. ஸூக்ஷ்மம் என்றால் பெயர் மற்றும் உருவங்களால் வேறுபடாதது. ஸ்தூ₂லம் என்றால் அந்த வேறுபாடுகளை உடையது. எனவே , காரணம் கார்யம் இரண்டுமே ப்ரஹ்மம் தான் என்பதால், கார்யம் காரணத்திலிருந்து வேறுபட்டது அல்ல (காரணாத் கார்யம் அநந்யத்).அதனால் தான், காரணமான ப்ரஹ்மத்தை அறிந்தாலே , அவருடைய விசேஷணங்களாக உள்ள அனைத்து கார்யங்களையும் அறிந்ததாக ஆகிறது. இதையே “ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறியலாம்” (ஏக விஜ்ஞாநேந ஸர்வ விஜ்ஞாநம்) என்று வேதம் கூறுகிறது.

3-2-7-பராதி₄கரணம் ஜகத்துக்குக் காரணமானவர் தான் அடையப் பட வேண்டியவரா?–அதிகரணத்தின் பின் புலம் –ஸங்கதி–
5 ஆவது அதிகரணத்தில் ப்ரஹ்மம் குற்றமற்றவர் என்றும் எல்லா குணங்களையும் உணடயவர் என்றும் கூறப்பட்டது.
6 ஆவது அதிகரணத்தில், அசேதனப் பொருள்களோடு சேர்ந்திருப்பதால் தோஷம் வருமோ என்று கேட்டுக் கொண்டு அது இல்லை என்று நிரூபிப்பதன் மூலம் ப்ரஹ்மம் குற்றமற்றவர் தான் என்பது வலுவூட்டப் பட்டது.
இப்போது 7ஆவது அதிகரணத்தில் ப்ரஹ்மம் எல்லா கல்யாண குணங்களையும் உடையவர் தான் என்பது வலுவூட்டப் படுகிறது

சேதனர்களுக்கும் அசேதனங்களுக்கும் இருக்கும் தோஷங்கள் ப்ரஹ்மத்துக்கு இல்லா விட்டாலும், தன்னை விட உயர்ந்த வேறு ஒரு பொருளைச் சேர்ந்தவராக இருத்தல் என்ற குறை உள்ளதா? என்கிற கேள்வி எழுகிறது. மேலும், அவரைக் காட்டிலும் வேறொரு பொருள் தான் அடைய வேண்டிய பொருளாகவும், அனுபவிக்க வேண்டிய பொருளாகவும் உள்ள தென்றால், ப்ரஹ்மம் எல்லாக் கல்யாண குணங்களையும் உடையவர் என்று கூறவும் முடியாது

ஸம்ஶயம்- இந்த உலகிற்குக் காரணமாகவும், உபாஸிக்கப்பட வேண்டியவராகவும் உள்ள பரம ப்ரஹ்மத்தை விட உயர்ந்த வேறு ஏதாவது தத்துவம் உள்ளதா? அல்லது, இவரே அனைத்தையும் விட உயர்ந்த பரம் பொருளா ?

பூர்வபக்ஷம்-1–பரம் அத: ஸேது-உந்மாந-ஸம்ப₃ந்த₄-பே₄த₃-வ்யபதே₃ஸேப்₄ய:
அத:
— இந்தப் ப்ரஹ்மத்தை விட;
பரம் — உயர்ந்த வேறு ஒரு பொருள்(உள்ளது);
ஸேது — அணை என்றும்;
உந்மாந — அளவுடையது என்றும்;
ஸம்ப₃ந்த₄ — தொடர்பும்;
பே₄த₃ — வேறுபாடும்;
வ்யபதே ₃ஸேப்₄ய: — ஸ்ருதியில் கூறப் படுவதால்-

“இந்தப் ப்ரஹ்மத்தை விட உயர்ந்த வேறு ஒரு தத்துவம் உள்ளது. ஏனெனில், ஸ்ருதி அவரை அணை என்றும், அளவுடையவர் என்றும், வேறு ஒன்றோடு தொடர்புடையவர் என்றும், அதிலிருந்து வேறுபட்டவர் என்றும் கூறுகிறது

பூர்வ பக்ஷியின் யுக்திகள்
1–ஸேது- (அத₂ ய ஆத்மா ஸ ஸேதுர் வித்₄ருதி:)
அதாவது “இந்த ஆத்மாவே அனைத்தையும் தாங்கும் அணையாக இருக்கிறார்” என்று கூறுகிறது.ஸேது என்பது ஒரு கரையிலிருந்து மற்றொரு கரையை அடைய உதவும் பாலம்.எனவே , இந்தப் ப்ரஹ்மத்தைத் தாண்டி அடைய வேண்டிய வேறு ஒரு உயர்ந்த பொருள் இருக்கிறது.
மேலும்,(ஏதம் ஸேதும் தீர்த்வா அந்த₄ஸ்ஸந் அநந்தோ ₄ ப₄வதி), அதாவது “இந்த அணையைக் கடந்தவன் அறியாமையிலிருந்து விடுபடுகிறான்” என்று ஸ்ருதி கூறுகிறது.எனவே , இந்தப் ப்ரஹ்மத்தைத் தாண்ட வேண்டும்- கடக்க வேண்டும் என்று கூறப்படுவதால், அடைய வேண்டிய வேறு ஒரு பொருள் இருக்கிறது-(கூலாந்தர ப்ராப்ய ஹேதுவே ஸேது -அக்கரையை அடைவிக்கும் வழியே ஸேது)

2-உந்மானம்– உந்மானம் என்றால் அளவு படுத்துவது. (சதுஷ்பாத் ப்₃ரஹ்ம ஷோட₃ஶகலம் ப்₃ரஹ்ம), அதாவது “ப்ரஹ்மம் நான்கு பாதங்களையும் பதினாறு கலைகளையும் உடையவர்” என்று ப்ரஹ்மத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவு இருப்பதாக வேதத்தில் கூறப்படுகிறது. அதே சமயம் , அளவில்லாத ஒரு பொருளும் வேதத்தில் சொல்லப்படுகிறது. எனவே , ப்ரஹ்மத்தை விட உயர்ந்த அளவில்லாத ஒரு பொருள் இருக்க வேண்டும்.

3-ஸம்பந்தம்ப்ராப்யம் (அடையப்படுவது) – ப்ராபகம் (அடையும்வழி) என்ற தொடர்பு இந்த ப்ரஹ்மத்துக்கும் வேறொரு பொருளுக்கும் கூறப்படுகிறது (அம்ருதஸ்ய பரம் ஸேதும் த₃க்₃தே₄ந்த₄நமிவாநலம்) என்றும், (அம்ருதஸ்ய ஏஷ ஸேது:) என்றும் கூறுகிறது வேதம்.அம்ருதம் எனப்படும் இலக்கை அடைவிக்கும் வழியாக’ஸேது’ எனப்படும் ப்ரஹ்மம் கூறப்படுகிறது

4-பே₄தம்– வேறுபாடு. (பராத் பரம் புருஷமுபைதி), அதாவது “அனைத்தையும் விட உயர்ந்த புருஷனை அடைகிறான்” என்றும், (பராத்பரம் யந் மஹதோ மஹாந்தம்), அதாவது “பெரியவற்றையும் விட உயர்ந்தது அந்தப் பரம் பொருள்” என்றும் ஸ்ருதி கூறுகிறது.இவ் விடங்களில், பரம் எனப்படும் ஜகத் காரணமான ப்ரஹம்த்தை விட’பரம்’ உயர்ந்தவன் இருக்கிறார் என்று தெளிவாக வேறுபாட்டைக் காட்டுகிறது.

எனவே , உலகிற்குக் காரணமான இந்தப் ப்ரஹ்மத்தை விட உயர்ந்த வேறு ஒரு பரம் பொருள் உள்ளது என்று பூர்வபஷி கூறுகிறார்.

முதல் இரண்டு யுக்திகளை மறுத்தல்-
2- ஸாமாந்யாத் து –
து
-ஆனால்
ஸாமாந்யாத் -ஒற்றுமையால் -பொதுவான தன்மையால்;.
இந்த ஸூத்ரத்தால் முதல் யுக்தியைக் கண்டிக்கிறார். ப்ரஹ்மத்தை “ஸேது” (அணை) என்று ஸ்ருதி கூறுவதால், அவரை விட உயர்ந்த வேறு ஒரு பொருள் உள்ளது என்று பொருள் கொள்ளக் கூடாது. (அத₂ ய ஆத்மா ஸ ஸேதுர்வித்₄ருதி:), அதாவது “இந்த ஆத்மாவே அனைத்தையும் தாங்கும் அணையாக இருக்கிறார்” என்று கூறப்படுவதில், “ஸேது” என்ற சொல்லுக்கு இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம்.
1-ஒற்றுமையின் அடிப்படையில்-எப்படி நீரைக் கட்டுப்படுத்தி இரண்டு நீர் நிலைகள் கலந்து விடாமல் அணை காக்கிறவதோ , அது போலவே ப்ரஹ்மமும் உலகங்கள் ஒன்றொ டொன்று கலந்து விடாமல் காக்கிறார். இதையே ஸ்ருதி, (ஏஷாம் லோகாநாம் அஸம்பே₄தா₃ய), அதாவது “இந்த உலகங்கள் ஒன்றோ டொன்று கலந்து விடாமல் இருப்பதற்காக” என்று ஸ்ருதி.
2-பொதுவான தன்மையின் அடிப்படையில்-“ஸேது” என்ற சொல்லைப் பகுதிகளாகப் பிரித்துப் பார்த்தால் ’ஸிநோதி ப₃த்₄நாதி இதி ஸேது:’ என்ற வ்யுத்பத்தியால் “அனைத்தையும் தன்னுள் கட்டிப் பிணைப்பது” என்ற யௌகிகப் பொருளும் உள்ளது. அந்தப் பொருளிலும் ப்ரஹ்மம் “ஸேது” என்று அழைக்கப் படுகிறார்.

மேலும், (ஏதம் ஸேதும் தீர்த்வா) என்ற இடத்திலும், ’தரணம்’ என்பது தாண்டுதல் அல்ல, அடைதல் தான். அதனால், தாண்டப் பட வேண்டிய ப்ரஹ்மத்தை விட அடையப்பட வேண்டிய வேறு ஒரு பொருள் இருக்க வேண்டும் என்று கூற முடியாது.
3-பு₃த்₃த்₄யர்த: பாத₃வத்-
பு₃த்₃த்₄யர்த:
–தியானத்திற்கு உதவுவதற்காக;
பாத₃வத் “நான்கு பாதங்கள்” என்றதைப் போல
இந்த ஸூத்ரம் இரண்டாவது யுக்தியைக் கண்டிக்கிறது. ஸ்ருதியில் (பாவதா₃ அஸ்ய விஶ்வா பூ₄தாநி), அதாவது “எல்லா உயிர்களும் அவருடைய ஒரு பாதமே ” என்று ப்ரஹ்மத்தை அளவுபட்டவராகச் சொல்வது தியானத்திற்கு உதவுவதற்காகவே ; உண்மையில் அவருக்கு அளவு உண்டு என்பதற்காக அல்ல. (ஸத்யம் ஜ்ஞாநம் அநந்தம் ப்₃ரஹ்ம), அதாவது “ப்ரஹ்மம் அளவற்றவர்” என்று சொல்லிவிட்டு, அவரே தான் ஜகத் காரணம் ஆவார் என்று மேலே வேதம்கூறுகிறது- (தஸ்மாத்வா ஏதஸ்மாத் ஆத்மந ஆகாஶ: ஸம்பூ₄த:), அதாவது “இந்த ஆத்மாவிலிருந்தே ஆகாசம் தோன்றியது”, என்று. எனவே ஜகத் காரணமான ப்ரஹ்மம் அளவுபட்டவர், அளவுபடாத வேறொரு உயர்ந்த பொருள் உள்ளது என்பது தவறு.

இதற்கு எடுத்துக் காட்டு’பாத₃வத்’ என்ற பகுதியில் கூறப்படுகிறது-ஸ்ருதி (மநோ ப்₃ரஹ்வமேத் யுபாஸீத), அதாவது “மனதைப் ப்ரஹ்மமாக உபாஸிக்க வேண்டும்” என்று கூறிய பிறகு,(வாக் பாத₃: ப்ராண : பாத₃: சக்ஷுஸ் : பாத₃: ஶ்ரோத்ரம் பாத₃:), அதாவது “வாக்கு ஒரு பாதம், ப்ராணன் ஒரு பாதம், கண் ஒரு பாதம், காது ஒரு பாதம்” என்று கூறுகிறது. உண்மையில் அணுவாக இருக்கும் மனதுக்கு இவை யெல்லாம் உறுப்புகள் ஆக முடியாதே . உபாஸனைக்காக மட்டுமே கூறப் பட்டுள்ளது.அதே போல, இங்கும் “ப்ரஹ்மத்துக்கு நான்கு பாதங்கள்” என்று கூறப்படுவது உபாஸனைக்காகவே , உண்மையான அளவு அல்ல. -(திருஷ்ட்டி விதி -இஹ லோக பயன்களை அடைய இது போன்ற ஸ்ருதிகள் சொல்லும்)

மூன்றாவது யுக்தியை மறுத்தல்
கேள்வி
– மனம் உண்மையில் அளவில்லாதது. அப்படி யிருக்க, அதை உபாஸனைக்காகவே என்றாலும், “நான்கு பாதங்கள்” போன்ற அளவுகளுடன் ஸ்ருதி எவ்வாறு கூற முடியும்?
ஸித்தாந்தியின் பதில் – 4- ஸ்தா₂ந விஸேஷாத் ப்ரகாசாதி₃வத்
ஸ்தா₂ந விஸேஷாத் —
குறிப்பிட்ட இடங்களுடன் தொடர்பு படுவதால்;
ப்ரகாசாதி₃வத் — ஒளி முதலியவற்றைப் போல.(ஆதி -ஆகாசம் போல்வன)
மனம் உண்மையில் அளவில்லாததாக இருந்தாலும், வாக்கு, ப்ராணன், கண், காது போன்ற குறிப்பிட்ட இடங்களோடு தொடர்பு பட்டதாக இருப்பதால் அவற்றைக் கொண்டு அளவுபட்டது போல் சொல்லப்படுகிறது.
ப்ரகாசாதி₃வத் –ஒளியும் ஆகாசமும் இயல்பாக எல்லை யற்றவையாக இருந்தாலும், அவை ஜன்னல், குடம் போன்றவற்றின் வழியாகத் தோன்றும் போது, அவற்றின் எல்லைக்கு உட்பட்டதாகவே நாம் அவற்றை நினைத்துக் கொள்கிவறாம்.
அதே போல், உபாஸனைக்காக ப்ரஹ்மத்தையும் குறிப்பிட்ட உபாதிகளுடன் தொடர்புபடுத்தி, “நான்கு பாதங்கள்” போன்ற அமைப்புடன் தியானிப்பதில் எந்தத் தவறும் இல்லை . அது ப்ரஹ்மத்தின் உண்மையான அளவை உணர்த்துவதற்காக அல்ல; உபாஸனைக்கு உதவுவதற்காகவே –

5-உபபத்தே : ச –
-மேலும்
உபபத்தே :-பொருத்தமாக இருப்பதால்;.
இந்த ஸூத்ரத்தால் மூன்றாவது யுக்தியைக் கண்டிக்கிறார்.
(அம்ருதஸ்ய ஏஷ ஸேது:)
என்று ப்ரஹ்மத்தை உபாயமாக வேதம் கூறுவதால், அவரை விட வேறொரு உயர்ந்த பொருள் தான் அடையப் படுவதாக இருக்க வேண்டும் என்று சொல்வது பொருந்தாது, தன்னை அடைவதற்கான உபாயமாகத் தானே இருப்பது பொருத்தமானபடியால்

நாயமாத்மா ப்ரவசநேந லப்₄ய: ந மேத₄யா ந ப₃ஹுநா ச்ருதேந|யமேவைஷ வ்ருணுதே தேந லப்₄ய: தஸ்யை ஷாத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்
“இந்த பரமாத்மாவை பேசுவதாலோ , த்யானிப்பதாலோ , கேட்பதாலோ அடைய முடியாது. இந்த பரமாத்மா எந்த பக்தனைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவனால் தான் அடைய முடியும், அந்த பக்தனுக்குப் பரமாத்மா தன் திரு மேனியை வெளிப்படுத்துகிறார்-(சரணாகதி ஒரு பிரார்த்தனை மட்டுமே -கூக்குரல் –நீயே உன்னை அடைவிக்கும் வழியாக ஆக வேண்டும் என்னும் பிரார்த்தனை)

அதே கருத்தை ஆழ்வாரும்,“நெறி வாசல் தானேயாய் நின்றானை “என்று அருளிச் செய்கிறார். அதாவது, அவரே அடைய வேண்டிய இலக்காகவும், அவரே அதனை அடையச் செய்யும் வழியாகவும் இருக்கிறார்.மற்றொரு இடத்தில்,”ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஓழிந்தாய்“அதாவது “எனக்கு உய்வதற்கான வழியாக உன்னுடைய திருவடிகளையே தந்தாய்” என்கிறார்.
எனவே , ப்ரஹ்மமே உபாயமும் (அடைவதற்கான வழியும்) உபேயமும் (அடைய வேண்டிய பொருளும்) ஆவார். ஆகையால், “ஸேது” என்ற சொல்லால் அவரை விட உயர்ந்த வேறு ஒரு தத்துவம் இருப்பதாகக் கொள்ள முடியாது.

நான்காவது யுக்தியை மறுத்தல்
6- ததா₂ அந்ய ப்ரதிஷேதா₄த் –
“அதே போல், வேறு எதுவும் இல்லை என்று ச்ருதி மறுப்பதாலும்”–
இந்த ஸூத்ரத்தால் நான்காவது யுக்தி மறுக்கப் படுகிறது. “பராத் பரம்”, “அக்ஷராத் பரத: பர:” போன்ற வாக்கியங்கள், ப்ரஹ்மத்தை விட உயர்ந்த வேறு ஒரு தத்துவம் இருப்பதைக் கூற வில்லை . ஸ்ருதியே , அவரை விட உயர்ந்த வேறு எதுவும் இல்லை என்று அறிவிப்பதால்.

(ஸர்வே நிமேஷா ஜஜ்ஞிரே வித்₃யுத: புருஷாத₃தி₄) அதாவது “அனைத்தும் அந்த பரம புருஷனிடமிருந்தே தோன்றின” என்று கூறி விட்டு,(ந தஸ்யேஸே கஶ்ஸந தஸ்ய நாம மஹத்₃யஶ:) அதாவது “அவருக்கு மேலாக ஆட்சி செய்யக் கூடியவர் எவரும் இல்லை ” என்று ஸ்ருதி கூறுகிறது.எனவே ஜகத் காரணமான ப்ரஹ்மம் தான் அனைத்திலும் உயர்ந்தது. அதே போல்,” (ந ஹ்யே தஸ்மாத் இதி ந இதி அந்யத் பரமஸ்தி), அதாவது “இவரை விட உயர்ந்த வேறு எதுவும் இல்லை ” என்று தெளிவாக அறிவிக்கிறது.மேலும்,” (பராத் பரம் புருஷமுபைதி தி₃வ்யம்) மற்றும் (அக்ஷராத் பரத: பர🙂 ஆகியவை , அத்ருஶ்யத்வாதி குணகாதிகரணத்தில் (1.2.5) சொன்னபடி பரம புருஷனையே குறிக்கின்றன-

பூர்வ பக்ஷியின் கேள்வி- (தமேவ விதி₃த்வா அதி ம்ருத்யுமேதி நாந்ய: பந்தா₂: வித்₃யதே அயநாய), அதாவது “இந்தப் பரம புருஷனை அறிந்தால் தான் மரணத்தைத் தாண்ட முடியும்; வேறு வழி இல்லை ” என்று வேதம் கூறுகிறது. அதற்குப் பிறகு, “ (யஸ்மாத் பரம் நாபரமஸ்தி கிஞ்சித் யஸ்மாத் நாணீயோ ந ஜ்யாயோ அஸ்தி கஶ்வசித்), அதாவது “அவரை விட உயர்ந்ததும் இல்லை ; அவரை விட சிறியதும் பெரியதும் எதுவும் இல்லை ” என்று ஸ்ருதி உறுதியாக அறிவிக்கிறது.அதற்குப் பின், (ததோ யது₃த்தரதரம் தத₃ரூபம் அநாமயம்। ய ஏதத்₃விது₃: அம்ருதாஸ்தே ப₄வந்தி), அதாவது “அவரை விட எது உயர்ந்ததோ , அது உருவமற்றது குற்றமற்றது; அதை அறிந்தவன் முக்தி அடைகிறான் ” என்று வேதம் சொல்கிறதே . எனவே ப்ரஹ்மத்தை விட உயர்ந்த ஒன்று இருக்க வேண்டுமே ?

ஸித்தாந்தியின் பதில்–“தத: யது₃த்தர தரம்“என்பதற்கு “ப்ரஹ்மத்தை விட உயர்ந்த்து” என்று பொருளல்ல. “அந்த உயர்ந்த பரம புருஷனே உருவ மற்றவரும், குற்ற மற்றவரும் ஆவார்; ஆகையால் அவரை அறிந்தவர்களே அமரத்துவத்தை அடைகிறார்கள்” என்று கூறுகிறது. (தத-ஆகையால் -என்ற பொருளில் -)எனவே , இவ் வனைத்து வாக்கியங்களையும் ஒருங்கிணைத்துப் பார்த்தால், பரம புருஷனை விட உயர்ந்த வேறு ஒரு தத்துவம் உள்ளது என்று கூற முடியாது.அவ்வாறு பொருள் கொண்டால், அந்தப் பகுதியில் ஆரம்பத்தில் கூறப்பட்ட கருத்திற்கும், அதன் பின்னர் வரும் ஸ்ருதி வாக்கியங்களுக்கும் முரண்பாடு ஏற்படும். எனவே , பரம ப்ரஹ்மமே அனைத்தையும் விட உயர்ந்த பரம் பொருள் என்பதே ஸித்தாந்தம் –

ஒத்தாரும் மிக்காரும் இல்லாதவன்
இதுவரை , இந்த ப்ரஹ்மத்தை விட உயர்ந்த பொருள் உள்ளது என்ற வாதத்தில் உள்ள தோஷங்கள் கூறப்பட்டன. இனி, கடைசி ஸூத்ரத்தால், தன் பக்ஷத்தை ஸாதிக்கக் கூடிய யுக்தியைச் சொல்கிறார்
7-அநேந ஸர்வ க₃தத்வம் ஆயாம ஶப்₃தா₃தி₃ப்₄ய:
அநேந
— இந்த ப்ரஹ்மத்தால்
ஸர்வக₃தத்வம்— உலகம் வ்யாபிக்கப் பட்டுள்ளது;(கரந்து எங்கும் பரந்துளன்)
ஆயாம ஶப்₃தா₃தி₃ப்₄ய: — ’வ்யாபகம்’ என்று பொருள் தரும் சொற்கள் முதலியவற்றால்.
ப்ரஹ்மம் எங்கும் நிறைந்திருப்பவர் என்று ஸ்ருதிகள் பல இடங்களில் தெளிவாகக் கூறுகின்றன

(தே நேத₃ம் பூர்ணம் புருஷேண ஸர்வம்), அதாவது “இந்த உலகம் முழுவதும் புருஷனால் நிறைந்துள்ளது“.
யச்ச கிஞ்சித் ஜக₃த் யஸ்மிந் த்₃ருச்யதே ச்ரூயதேபி வா| அந்தர் ப₃ஹிஶ் ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண : ஸ்தி₂த: “இந்த உலகத்தில் உள்ள அனைத்திற்கும் உள்ளும் புறமும் வ்யாபித்து அந்த நாராயணனே இருக்கிறார்”
மேலும், “ஆதி” என்ற சொல்லால், ப்ரஹ்மத்தைத் தவிர வேறு எந்தப் பர தத்துவமும் இல்லை என்று கூறும் ஸ்ருதி வாக்கியங்களும், அனைத்தையும் தாங்குபவர், அனைத்தையும் நியமிப்பவர், அநைத்திலும் வியாபித்து இருப்பவர் என்று கூறும் வாக்கியங்களும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

உதாரணமாக, (ப்₃ரஹ்மை வேத₃ம் ஸர்வம்), அதாவது “இவை அனைத்தும் ப்ரஹ்மமே ” என்றும்,(ஆத்மை வேத₃ம் ஸர்வம்), அதாவது “இவை அனைத்தும் ஆத்மாவே ” என்றும் ஸ்ருதி கூறுகிறது.

இவ்வாறு, ப்ரஹ்மம் அனைத்திலும் வியாபித்து நிறைந்திருப்பவர், அனைத்தையும் தாங்குபவர், நியமிப்பவர், படைப்பவர் என்றெல்லாம் வேதம் பல இடங்களில் கூறுவதால், அவரை விட உயர்ந்த வேறு ஒரு பொருள் இருக்க முடியாது.எனவே , உலகிற்குக் காரணமான இந்தப் பரம ப்ரஹ்மமே அனைத்தையும் விட உயர்ந்த பரம் பொருள், அவரே அடையப் படவேண்டிய இலக்கும் ஆவார் என்பதே இந்த அதிகரணத்தின் ஸித்தாந்தம்.

3-2-8-ப₂லாதி₄கரணம் –நாம் ஆசைப்பட்ட அனைத்துப் பயன்களையும் வழங்குபவர் -அதிகரணத்தின் ஸங்கதி -இந்த அதிகரணத்திற்கு மூன்று வகையான ஸங்கதிகள் கூறப்படுகின்றன.

1–உபாஸனை செய்ய வேண்டும் என்ற விருப்பம் உண்டாவதற்காக, இதுவரை ஜீவாத்மா ஜாக்ரத், ஸ்வப்நம், ஸுஷுப்தி, மூர்ச்சை , உத்க்ராந்தி முதலான எல்லா அவஸ்தைகளிலும் தோஷங்களுடன் கூடியவராக இருப்பது கூறப்பட்டது. அதே சமயம், பரம புருஷர் குற்றமற்றவராகவும், எல்லாக் கல்யாண குணங்களின் இருப்பிடமாகவும், அனைத்தையும் விட உயர்ந்தவராகவும், அடையப்பட வேண்டிய பரம் பொருளாகவும் இருப்பது நிலை நாட்டப்பட்டது. இதற்குப் பிறகு, அந்தப் பரம புருஷனை உபாஸிக்க வேண்டும் என்பதை விளக்குவதற்காக, அவரை உபாஸிப்பவர்களுக்கு, அவரிடமிருந்தே மோக்ஷம் என்னும் பரம பலன் கிடைக்கிறது என்பதை இந்த அதிகரணம் கூறுகிறது–

2–முந்தைய அதிகரணத்தில், உபாஸனைக்கு உதவும் ஒரு முக்கிய அம்சமாக, “ப்ரஹ்மம் அடையப்பட வேண்டிய பரம் பொருள் (ப்ராப்யம்)” என்பது நிறுவப்பட்டது. இப்போது, உபாஸனைக்கு உதவும் மற்றொரு முக்கிய அம்சமாக, “ப்ரஹ்மமே பலன்களை வழங்குபவர்” என்பதும் நிறுவப் படுகிறது. இந்தப் பல ப்ரதத்வம் (பலனை வழங்கும் தன்மை ) ப்ரஹ்மத்தின் கல்யாண குணங்களில் ஒன்றான படியால் இந்த அதைக் கூறும் இந்த அதிகரணம் இந்த பாதத்தில் இடம் பெருவது பொருத்தமானதே –

3-முந்தைய அதிகரணத்தில், (உபபத்தேஶ் ச – 3.2.7.5) என்ற ஸூத்ரத்தில், ப்ரஹ்மம் உபாயமாக (அடைவதற்கான வழியாக) இருக்கிறார் என்பதை ஏற்கனவே நிலை நாட்டப் பட்டதாகக் கொண்டு, அவர் உபேயம் (அடையப் பட வேண்டியவர்) என்றும் கூறப்பட்டது. இப்போது, அந்த உபாயத்வமே ஆராயப்பட்டு உறுதிப் படுத்தப் படுகிறது.

இந்த அதிகரணத்தின் சிறப்பு அம்சம்-எப்படி ப்ரஹ்மமே மோக்ஷத்தை அளிப்பவர் என்று நிரூபிக்கப் படுகிறாரோ , அதே நியாயத்தின் அடிப்படையில், இவ் வுலகிலும் மறுமையிலும் கிடைக்கும் அநைத்து பலன்களையும் அளிப்பவரும் அவரே என்பதும் இந்த அதிகரணத்தில் நிரூபிக்கப் படுகிறது.

ஸம்ஶயம்– ஸ்வர்க்கம், மோக்ஷம் முதலான பலன்கள், கர்மங்களும் உபாஸனைகளும் உண்டாக்கும் அபூர்வத்தால் உண்டாகின்றனவா? அல்லது, கர்மங்களாலும் உபாஸனைகளாலும் ஆராதிக்கப்படும் வாயு முதலான தேவதைகளாலும், இறுதியில் பரம ப்ரஹ்மத்தாலேயே வழங்கப் படுகின்றனவா?

பரமாத்மாவே எல்லாப் பயன்களையும் வழங்குகிறார்-
இந்த அதிகரணத்தில், முதலில் ஸித்தாந்தாம் கூறப்படுகிறது. அதன் பிறகு பூர்வ பக்ஷியின் கேள்வி எழுப்பப்பட்டு, இறுதியில் அதற்கான விடை அளிக்கப் படுகிறது.
1- ப₂லம் அத: உபபத்தே:-
பலம்
-பலன்;
அத: இந்தப் பரம புருஷரிடமிருந்தே
உபபத்தே: பொருத்தத்தால் –
“ஸாஸ்திரத்தில் கூறப்படும் இம்மை மற்றும் மறுமை ஆகிய இரண்டிலும் உள்ள எல்லாப் பலன்களும், இந்தப் பரம புருஷரிடமிருந்தே கிடைக்கின்றன . ஏனெனில், அதுவே பொருத்தமானது.”

பரமபுருஷரே ஸர்வஜ்ஞர்– எந்த ஜீவனுக்கு எந்தப் பலனை எப்போது வழங்க வேண்டும் என்பதையும், அந்தப் பலன் கிடைப்பதற்கு உள்ள தடைகளையும் அறிந்திருப்பவர்.அவரே ஸர்வ சக்திமான்– அனுபவிக்க வேண்டிய பொருள்கள், அவற்றை அனுபவிப்பதற்கான சாதனங்கள் ஆகிய அனைத்தையும் உண்டாக்கவும், பலன் கிடைப்பதற்குத் தடையாக இருப்பவற்றை நீக்கவும் வல்லவர்.அவரே மஹா உதாரர், அதாவது அளவற்ற கருணையும் தாராள மனமும் உடையவர். அறிவும் சக்தியும் இருந்தாலும், கொடுக்க விருப்பமில்லாத ஒருவரால் பலன் வழங்க முடியாது. பகவானுக்கு அக்குறையும் இல்லை .எனவே , யாகம், தானம், ஹோமம் போன்ற கர்மங்களாலும், உபாஸனையாலும் ஆராதிக்கப்படுகின்ற பரம புருஷரே , இம்மையில் கிடைக்கும் பலன்களையும், மறுமையில் கிடைக்கும் பலன்களையும், இறுதியில் மோக்ஷத்தையும் வழங்க வல்லவர்(ஆராதனம் -ராது -பிரிய வர்த்தகம் -மகிழ்விப்பிக்கும் செயல்)

கர்மம் தானாகப் பலனை வழங்க முடியாது. ஏனெனில், கர்மம் அசேதனமானது-அசேதனமான ஒன்று, ஒரு சேதனனால் இயக்கப்படாமல் எந்தச் செயலையும் செய்ய முடியாது.மேலும், கர்மம் க்ஷணத்தில் அழிந்து விடுவது. ஒரு கணத்தில் அழிந்து போகும் ஒன்று, நீண்ட காலத்திற்குப் பிறகு கிடைக்கும் பலனுக்கு காரணமாக முடியாது.ஓட்டை விழுந்த குடத்தால் தண்ணீரை எடுத்துச் செல்ல முடியாதது போல, அழிந்து போன கர்மமும், காலம் கழித்து கிடைக்கும் பலனை உண்டாக்க முடியாது

2–ச்ருதத் வாச் ச –
-மேலும்
ச்ருதத்வாத் –ச்ருதியிலேயே கூறப் பட்டிருப்பதாலும்;.
“மேலும், பரம புருஷரே பலனை வழங்குபவர் என்பது நமது கற்பனை அல்ல; ச்ருதியிலேயே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது

(ஸ வா ஏஷ மஹாந் அஜ ஆத்மா அந்நாத: வஸுதா₃ந:), அதாவது “இந்த மஹத்தான , பிறப்பற்ற ஆத்மாவே அன்னத்தை வழங்குபவர்; செல்வத்தை வழங்குபவர்” என்று கூறுகிறது.இங்கு “அந்நாத:” என்பது அன்னத்தை வழங்குபவர் என்ற பொருளில் மட்டுமல்ல; இம்மையிலும் மறுமையிலும் அனுபவிக்க வேண்டிய எல்லாப் பலன்களையும் வழங்குபவர் என்ற பொருளிலும் வருகிறது.
“வஸுதாந:
” என்பது செல்வத்தாய் வழங்குபவர் என்றும், மேலும் தன்னையே (பரம புருஷரையே ) வழங்குபவர், அதாவது தம்மை அடையச் செய்து மோக்ஷத்தை அருள்பவர் என்றும் பொருள் தருகிறது.

புண்யமா? தெய்வங்களா?
3– த₄ர்மம் ஜைமிநி: அத ஏவ
ஜைமிநி:
–ஜைமிநி முனிவர்;
த₄ர்மம் (யாகம், உபாஸனை முதலிய) தர்மமே (பயனளிக்கிறது என்கிறார்);
அத ஏவ–அதனாலேயே ;
இந்தக் காரணத்தினாலேயே , யாகம், ஹோமம், உபாஸனை ஆகிய தர்மங்களே பலனை வழங்குகின்றன என்று ஜைமிநி கருதுகிறார்.”

உபபத்தி (பொருத்தம்)– உலகத்தில், உழவு, பிடித்து விடுதல் போன்ற செயல்கள், நேரடியாகவோ அல்லது இடை நிலைக் காரணங்கள் மூலமாகவோ , தாமாகவே தங்களுக்குரிய பலனை உண்டாக்குகின்றன என்று காண்கிறோம். அதைப் போலவே , வேதத்தில் கூறப்பட்டுள்ள யாகம் முதலான கர்மங்கள், பலனை நேரடியாக உண்டாக்க இயலா விட்டாலும், அவற்றால் உண்டாகும் அபூர்வம் என்னும் அத்ருஷ்ட சக்தியின் மூலம் பலனை உண்டாக்குகின்றன என்று ஜைமிநி கருதுகிறார்

ஸாஸ்த்ர ப்ரமாணம்-வேதம் – (யஜேத ஸ்வர்க₃காம:) என்று, “ஸ்வர்க்கத்தை விரும்புபவன் யாகம் செய்ய வேண்டும்” என்று விதிக்கிறது. இவ்வாறு, ஸ்வர்க்கத்தை விரும்புபவருக்கு யாகத்தை ஒரு கடமையாக விதிப்பதன் மூலம், யாகமே ஸ்வர்க்க பலனுக்குச் சாதனம் (காரணம்) என்பதை வேதம் உணர்த்துகிறது.யாகம் செய்த உடனேயே ஸ்வர்க்கம் கிடைப்பதில்லை என்பதால், அந்தப் பலன் பின்னர் கிடைப்பதற்கு, யாகத்தால் உண்டாகும் அபூர்வம் என்னும் இடை நிலைக் காரணத்தை ஏற்க வேண்டும்.

4- பூர்வம் து பாதா₃ராயண: ஹேது வ்யபதே₃சாத்
து –
ஆனால்;
பாதா₃ராயண: — வேத வ்யாஸர்;
பூர்வம் -முன்பே கூறப்பட்ட கருத்தையே ஏற்கிறார்;
ஹேது வ்யபதே₃சாத் — வேதத்தில் ப்ரஹ்மமே பயன்களுக்குக் காரணமாக இருப்பவர் என்று உபதேசிக்கப் பட்டிருப்பதனால்-

“யஜ ” என்ற தாது தேவ பூஜை என்ற பொருளைத் தருகிறது. ஆகவே , யாகம் என்பது தேவதைகளை ஆராதிப்பதே ஆகும். அந்த யாகங்களில் ஆராதிக்கப்படும் அக்னி, வாயு முதலான தேவதைகளே அந்தந்த பலன்களுக்கு காரணம் என்று ச்ருதி பல இடங்களில் கூறுகிறது.உதாரணமாக- (வாயுர்வை ஷேபிஷ்டா தே₃வதா வாயுமேவ ஸ்வேந பா₄க₃தே₃யேந உபதா₄வதி, ஸஏவைநம் பூ₄திம் க₃மயதி), என்று, “வாயுவே மிக விரைவாக அருள் செய்பவர். தமக்குரிய ஹவிஸை அர்ப்பணித்து வாயுவை ஆராதிப்பவன், அவராலேயே செல்வமும் வளமையும் அடைகிறான்” என்று கூறுகிறது-

விதி₄(கட்டளை ) வாக்கியத்தில்“ஸ்வர்கத்தை விரும்புபவன் யாகத்தைச் செய்ய வேண்டும்” என்று சொல்வதால், யாகம் ஸ்வர்கத்துக்குக் காரணம் என்று தெரிந்தாலும், அது எவ்வாறு உண்டாக்கப் படுகிறது என்ற ஸந்தேகம் தீர வில்லை . அதை இந்த மேற் சொன்ன வாக்கியம் தீர்த்து வைக்கிறபடியால், இப்படிப் பொருள் கொள்வதே பொருத்தமானது.

எல்லா தெய்வங்களுக்கும் அந்தர்யாமி பரமாத்மாவே
மந்திரங்களும் அர்த்த வாதங்களும் தங்களுடைய நேரடியான பொருளையே குறிக்கின்றன என்பது தேவதாதிகரணத்தில் ஏற்கனவே நிரூபிக்கப் பட்டுள்ளது. ஆகவே , அவற்றை நேரடிப் பொருளை விட்டு விட்டு, ஒரு கர்மத்தைப் புகழ்வதற்காக மட்டுமே கூறப்பட்டவை என்று லக்ஷணையாக எடுத்துக் கொள்வதும், ஸ்ருதியில் எங்கும் கூறப்படாத அபூர்வம் என்னும் ஒரு புதிய தத்துவத்தைக் கற்பனை செய்வதும் நியாயமல்ல

உண்மையில், அக்னி, வாயு முதலான தேவதைகளின் அந்தராத்மாவாகப் பரம புருஷரே இருந்து, அவர்களுடைய ரூபத்தில் ஆராதிக்கப் படுபவராகவும், பலன்களை வழங்குபவராகவும் இருக்கிறார் என்று வேதம் கூறுகிறது. இஷ்டா பூர்தம் ப₃ ஹுதா₄ ஜாயம் ஜாயமாநம் விஶ்வம் பி₃ப₄ர்தி பு₄வநஸ்ய நாதி₄: । ததே₃ வாக்₃நி: தத்₃வாயு: தத் ஸூர்யஶ் ச தது சந்த்₃ரமா: ||
“இஷ்டம், பூர்த்தம் ஆகிய கர்மங்களையும், தோன்றியதும் தோன்றிக் கொண்டிருப்பதுமான இந்த உலகம் முழுவதையும் தாங்குபவர் அவரே . அவரே அக்னி; அவரே வாயு; அவரே ஸூரியன்; அவரே சந்திரன்.”

(புகழும் நல் ஒருவன் என்கோ! பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ! நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ! கண்ணனைக் கூவு மாறே.—–3-4-1–விபூதி வாசகமான சப்தம் விபூதி முகத்தால் அவனுக்கு பிரதிபாதகம் ஆகையாலும் விபூதி விஷயமான சப்தத்தோடு நாராயணாதி நாமங்களோடு வாசி அற்று இருக்கிற படியால் அவற்றைச் சொல்லும் சொல்லாலே சர்வ சப்தங்களாலும் அவனைச் சொல்லி –வாசகமான அடிமையில் பிரவ்ருத்தர் ஆகிறார் –)

அதே போல், ” (யோ வாயௌ திஷ்ட₂ந்), அதாவது “வாயுவினுள் இருந்து அவரை நியமிப்பவர்” என்றும் ஸ்ருதி கூறுகிறது.

ஸ்ம்ருதியிலும் பகவான் கண்ணன் கீதையில் இதையே விளக்குகிறார்–
யோ யோ யாம் யாம் தநும் ப₄க்த: ச்ரத்₃த₄ யார்சிதுமிச்ச₂தி। தஸ்ய தஸ்யா சலாம் ச்ரத்₃தா₄ம் தாமேவ வித₃தா₄ம்யஹம்॥ “எந்த பக்தன் என்னுடைய உடலாக இருக்கும் எந்தத் தேவதையைச் ச்ரத்தையுடன் ஆராதிக்க விரும்புகிறானோ , அவனுக்கு அந்தத் தேவதாயிடத்தில் அசைக்க முடியாத ஸ்ரத்தையை நானே உண்டாக்குகிறேன்.”

ஸ யா ஸ்ரத்₃த₄யா யுக்தஸ் தஸ் யாராத₄ந மீஹதே। லப₄தே ச தத காமாந் மயைவ விஹிதாந்ஹி தாந்॥ “அந்தச் ச்ரத்தை யுடன் அவன் அந்தத் தேவதையின் வடிவில் இருக்கும் என்னையே ஆராதிக்கிறான். அதன் மூலம் அவன் விரும்பிய பலன்களைப் பெறுகிறான். ஆனால், அந்தப் பலன்களை வழங்குவது நானே .”

(அஹம் ஹி ஸர்வ யஜ்ஞாநாம் போ₄க்தா ச ப்ரபு₄ரேவ ச ) “எல்லா யஜ்ஞங்களுக்கும் போ₄க்தா (ஆராதிக்கப்படுபவர்) நானே ; அவற்றின் ப்ரபு₄வும்(பலன்களை வழங்குபவனும்) நானே .”

உலகத்திலும், உழவு முதலான செயல்களால் பலவகையான பொருள்களைப் பெற்று, அவற்றைக் கொண்டு அரசனை நேரடியாகவோ அல்லது அவனுடைய பணியாளர்கள் மூலமாகவோ மக்கள் ஆராதிக்கிறார்கள். அவ்வாறு ஆராதிக்கப்பட்ட அரசனே , தன்னை ஆராதித்த விதத்திற்கு ஏற்ற பலன்களை வழங்குகிறான் என்று காண்கிறோம். அது போலவே , கர்மங்களில் அக்னி, வாயு முதலான தேவதைகள் ஆராதிக்கப்படுவதாகத் தோன்றினாலும், அவர்களுக்குள் அந்தர்யாமியாக இருக்கும் பரம புருஷரே எல்லாப் பலன்களையும் உண்மையில் வழங்குபவர் ஆவார்.

பாதத்தின் சுருக்கம்
ஆதௌ வேதா பிரமாணம் ஸ்ம்ருதிர் உப குருதே ஸேதிஹாசை புராணை
ந்யாயை சார்த்தம் தவ தர்ச்சா விதி முபரி பரிஷீயதே பூர்வ பாக
ஊர்த்வோ பாகஸ் த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாபநைஸ் த்வத் பதாப்தௌ
வேத்யோ வேதைஸ்ச சர்வைர் அஹமிதி பகவன் ஸ்வேன ஸ வியாச கர்த்த -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -உத்தர சதகம் -19 ஸ்லோகம் ––ஶ்ரீ பராசர பட்டர்,

பரமாத்மாவை அறிய வேதமே முதன்மையானப் ப்ரமாணமாகும். இதிஹாஸ புராணங்கள் மற்றும் யுக்திகளின் துணையுடன் ஸ்ம்ருதிகள் இதற்கு உதவி செய்கின்றன. வேதத்தின் முதல் பகுதியான கர்ம காண்டத்தில் பகவானை ஆராதிக்கும் முறைகள் ஆராயப்படுகின்றன. பின்னர் வரும் பகுதி(உபநிஷத்-வேதாந்தம்), பகவானுடைய கல்யாண குணங்கள், ஐஸ்வர்யம், விபூதிகள் ஆகியவை விளக்குவதன் மூலம் அவன் திருவடிகளை அடைவதைக் கூறுகின்றன. “எல்லா வேதங்களாலும் அறியப்பட வேண்டியவர் நானே ” என்று பகவான் தாமே கண்ணனாக கீதையில் உபதேசித்தார்

ஆதௌ -முதலிலே -மற்று ஒரு பிரமாணத்தை எதிர்பாராமல் தானாகவே –
வேதா -வேதங்களானவை-
பிரமாணம்-உண்மை அறிவை யுண்டாக்கும் பிரமாணம் ஆகின்றன –
ஸ்ம்ருதி -மநு முதலானோர் இயற்றிய ஸ்ம்ருதி சமூஹம்
ஸேதி ஹாசை புராணை-இதிஹாசங்களோடு கூடிய புராணங்க ளோடும்
ந்யாயை  சார்த்தம் -பூர்வ உத்தர மீமாம்ஸா நியாயங்களோடும் கூட
உப குருதே-வேதங்களுக்கு பொருள் காணும் விஷயத்தில் உதவுகிறது –
பூர்வ பாக -வேதத்தில் கர்ம காண்டம் என்கிற முற்பகுதி
தவதர்ச்சா விதி முபரி -தேவரீருடைய திரு வாராதன முறையைச் சொல்லும் வழியில்
பரிஷீயதே -தலைக் கட்டுகிறது-
ஊர்த்வோ பாகஸ்-ப்ரஹ்ம காண்டம் எனப்படும் பிற்பகுதி யாகிய உபநிஷத் பாகம்
த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாப நைஸ்-தேவரீருடைய ஸேஷ்டிதங்கள்-குணங்கள் -செல்வங்கள் ஆகிய இவற்றை விளங்கத் தெரிவிப்பதாலே –
த்வத் பதாப்தௌ -தேவரீருடைய திருவடிகளை அடைவதில்
பரிஷீயதே -தலைக் கட்டுகின்றது –
பகவன்-எம்பெருமானே
சர்வை ஸ வேதை -பூர்வ உத்தர பாக ரூபமான எல்லா வேதங்களாலும்
அஹம் -நானே
வேத்ய இதி -அறியப் படுபவன் -என்று
ஸ்வேந -தேவரீர் தாமே
வியாச கர்த்த -ஸ -அருளிச் செய்தும் வைத்தீர் அன்றோ –

இந்தப் பாதத்தில் சொல்லப்பட்ட அர்த்தங்களை ஶ்ரீ வேதாந்த தேசிகன் தனது அதிகரண ஸாராவலியில் இவ்வாறு சுருக்கமாக உரைக்கிறார்
சுத்₃தா₄நந்தே ₃ ததி₃த்த₂ம் சுப₄ கு₃ண ஜலதௌ₄ ஸத்ய நித்யஸ்வதே ₃ ஹே தே₃வீ பூ₄ஷாயுதா₄த்₃யை : அதிஶயிநி கநத்₃ போ₄க₃ லீலா விபூ₄தௌ।
ஸேஷித்வாதா₄ர பா₄வ ப்ரப்ருதி ப₃ஹுவித₄ ஸ்தா₂ஸ்நு ஸம்ப₃ந்த₄ தீ₃ப்தே த்₃ருஷ்டி: ஸ்வர்கா₃ பவர்க₃ ப்ரஸவிதரி ஹரௌ நிர்நிமேஷா ச்ருதிர்ந:॥

தூய ஆனந்த ஸ்வரூபராகவும், எண்ணற்ற கல்யாண குணங்களின் பெருங்கடலாகவும், நித்யமும் உண்மையுமான திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவராகவும், திவ்ய மஹிஷிகள், ஆபரணங்கள், ஆயுதங்கள், ஒளிவிடும் நித்ய விபூதி, லீலா விபூதி ஆகிய அனைத்தாலும் சிறப்புற்றவராகவும், ஸேஷிதத்வம், ஆதாரத்வம், நியமிப்பவரா யிருத்தல் போன்ற எண்ணற்ற ஸம்பந்தங்களால் உலகுடன் தொடர்புடையவராகவும், ஸ்வர்க்கம் முதல் மோக்ஷம் வரை எல்லாப் பலன்களையும் வழங்குபவராகவுமுள்ள ஹரியை அறிய வேதமே குறை யில்லாத ப்ரமாணமாக உள்ளது-

பாவே ₃ஸ்வாப்நார்த₂ ஹேது: தத₃யமிஹ ஸுஷுப்த்யாத்₄ருதி: ஸுப்த கோ₃ப்தா முக்₃தோ₄த்₃ போ₃தா₄தி₃ கர்தா த்வநக₄சுப₄கு₃ண : அசித்₃பி₄ரம்சீ ஸ்வ தே ஹை : பாரம்யஸ்யைக ஸீமா ஸகல பலத₃ இத்யுச்யதே ப₄க்தி பூ₄ம்நே ஸத்யே ஹ்யேவம் கு₃ணா தௌ₃ அத₂ பரப₄ஜநே ரூப பே₄தா₃தி₃ சிந்த்யம்॥
இந்தப் பாதத்தில், கனவில் காணப்படும் பொருள்களைப் படைப்பவர்,ஸுஷுப்தியில் ஆதாரமாக இருப்பவர், உறங்குபவரைக் காப்பவர், மயங்கினவரை எழுப்புபவர், குற்றமற்ற எண்ணற்ற கல்யாண குணங்களை உடையவர், அசித் பொருள்களையும் தமது சரீரமாகக் கொண்டவர், பரத்துவத்தின் எல்லையாக இருப்பவர், எல்லாப் பலன்களையும் வழங்குபவர் பரமாத்மா என்று அவரது மகிமை விளக்கப் படுகிறது, அவரிடம் பக்தியை வளர்ப்பதற்காக.

இப்பாத அர்த்தங்களை சுருக்கமாக ஸ்வாமி தேசிகன் காட்டி அருளுகிறார்

1-சந்த்யாதி கரணத்தில் -ஸர்வேஸ்வரனே ஸ்வப்ன பதார்த்தங்களை படைக்கிறான் என்றும்
2-தத்பாவாதிகரணத்தில் -அவனே ஸூஷ்ப்தி தசையில் ஆதாரம் என்றும்
3-கர்மாநு ஸ்ம்ருதி சப்த வித்யதிகரணத்தில் -உறங்கி விழிப்பவனும் ஒருவனே என்றும்
4-முக்தாதிகரணத்தில் -மூர்ச்சை அடைந்தவனை எழுப்புவான் என்றும் சில சமயங்களில் மரணத்திற்கும் காரணம் என்றும்
5-உபய லிங்க அதிகரணத்தில் -நிர்தோஷன் -கல்யாண குணகரன் என்றும்
6-அஹி குண்டலாதிகரணத்தில் -தனி சரீரமான அசித்துக்களை அம்சமாகக் கொண்டவன் என்றும்
7-பராதிகரணத்தில் எல்லாவற்றையும் விட இவனே சிறந்தவன் என்றும்
8-பலாதிகரணத்தில் -ஸர்வ கர்ம உபாசனங்களுக்கும் இவனே பல பிரதன் என்றும்-அருளிச் செய்து
இந்தக் குணங்களைக் கூறியது ப்ரஹ்ம வித்யா ரூபத்தில் பக்தி ஸித்திப்பதற்காக
யதார்த்தமான குணங்களைக் கொண்டு எம்பெருமானை உபாஸிக்கையில் ரூப பேதங்கள் சொல்ல வேண்டி இருப்பதால் அவற்றைப் பிற மதத்தவர் போலே வ்யவஹாரிகங்கள் என்று சொல்வது பொருந்தாது என்பது ஸூத்ரகாரரின் திரு உள்ளம் –

இனி, உபாஸனத்தின் வேறுபாடுகள் முதலான விஷயங்கள் அடுத்த பாதத்தில் ஆராயப் படுகின்றன.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading