மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர் நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கி இயலும்
ஊழ் வினையும் வாழ் வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழின் இசை வேதத்து இயல் –இதுவும் ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த தனியன்
ஸ்ரீ பதிஸ் சேதனஸ் யாஸ்ய ஹேதுத்வேந ஸமாஸ்ரித
அநிஷ்ட ஹானிம் இஷ்டஸ்ய ப்ராப்திஞ்ச குருதே ஸ்வயம் –என்று
சகல வேத ஸங்க்ரஹமான திரு பத த்ரயத்தாலும் ப்ரதிபாதிக்கப் படுகிற அர்த்த பஞ்சகத்தை
திருமாலால் அருளப்பட்ட சடகோபன் –8-8-11-என்னும்படி
ஸ்ரீ யபதியான ஸர்வேஸ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார் அருளிச் செய்த திருமாலவன் கவியான –திரு விருத்தம் –48-
திருவாய் மொழி பிரபந்தம் ப்ரதிபாதித்த பிரகாரத்தை இத் தனியனிலே சொல்லித் தலைக் கட்டுகிறது –
திருவாய் மொழியாகிற திவ்ய பிரபந்தம் ஸ்ரீ பதிஸ் சேதனஸ் யாஸ்ய ஹேதுத்வேந ஸமாஸ்ரித அநிஷ்ட ஹானிம் இஷ்டஸ்ய பிராப்திஞ்ச குருதே ஸ்வயம் -என்று ஸ்ரீ யபதியானவன் சேதனனுக்கு உபாயத்வேந ஆஸ்ரிதனாய்க் கொண்டு அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்டமான ஸ்வ ப்ராப்தியையும் தானே பண்ணிக் கொடுக்கும் என்று அநு யாயியான மஹா வாக்யார்த்தத்தை ப்ரதிபாதிக்கிறது –இப் பிரபந்தம் சர்வ சாஸ்த்ர சார உப ப்ரும்ஹணம் பண்ணுகிறது ஆகையால் -சகல வேத சாஸ்த்ர தாத்பர்யமான அர்த்த பஞ்சகமும் இப் பிரபந்தத்தினுடைய மஹா வாக்யார்த்தத்திலே அந்தர்பூதம்-
ஸ்ரீ பதி -என்று ப்ராப்யமான ப்ரஹ்மத்தினுடைய ஸ்வரூபமும்–சேதனஸ்ய என்று பிரத்யாகாத்ம ஸ்வரூபமும்-‘ஹேதுத்வேந -என்று உபாய ஸ்வரூபமும்-அநிஷ்ட ஹானிம் -என்று பிராப்தி விரோதி நிவ்ருத்தியும்-இஷ்டஸ்ய ப்ராப்திம் -என்று பிராப்தி பல வாப்தியுமான அர்த்த பஞ்சகமும் ஸூசிதம் ஆகிறது –இப் பிரபந்தத்தில் முதலிட்டு நாலு பத்தாலே சித்த ரூபமான பராவராத்ம யாதாம்யத்தை ப்ரதிபாதிக்கிறது – முடிவிட்டு நாலு பத்தாலே ஸாத்ய ரூபமான அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தியை ப்ரதிபாதிக்கிறது – நடுவிட்டு இரண்டு பத்தாலே சித்த ஸாத்ய ரூபமான நிர்பய உபாய வரணத்தை ப்ரதிபாதிக்கிறது -ஸித்தமான உபாயத்தினுடைய வரணம் ஸாத்யம் என்று கருத்து –அதில் சித்த ரூபமான பராவராத்ம யாதாம்யா ப்ரதிபாதிதமான முதல் நாலு பத்தில் –முதல் பத்தும் இரண்டாம் பத்தும் ப்ராப்யமான பர ஸ்வரூபத்தை பிரதிபாதிக்கிறது – மூன்றாம் பத்தும் நாலாம் பத்தும் ப்ராப்தாவான பிரத்யாகாத்ம ஸ்வரூபத்தை ப்ரதிபாதிக்கிறது – அஞ்சாம் பத்தும் ஆறாம் பத்தும் பிராப்தி உபாய ஸ்வரூபத்தை பிரதிபாதிக்கிறது – ஏழாம் பத்தும் எட்டாம் பத்தும் பிராப்தி விரோதி நிவ்ருத்தியை பிரதிபாதிக்கிறது – ஒன்பதாம் பத்தும் பத்தாம் பத்தும் பிராப்தி பல சித்தியை பிரதிபாதிக்கிறது —அதில் முதல் பத்து பரனான சேஷியினுடைய ரக்ஷகத்வத்தையும் –
இரண்டாம் பத்து போக்யத்தையும் சொல்லுகிறது –
மூன்றாம் பத்து பகவத் ஏக சேஷ பூதனான ஆத்மாவினுடைய தத் ஏக அநுபவத்தையும்
நாலாம் பத்து தத் ஏக பிரியத்வத்தையும் சொல்லுகிறது –
அஞ்சாம் பத்து நிர்பாயமான உபாய விஷத்தையும்
ஆறாம் பத்து தத் வரண பிரகாரத்தையும் சொல்லுகிறது –
ஏழாம் பத்து அநிஷ்டமான விரோதி பிரகாரத்தையும்
எட்டாம் பத்து தன் நிவ்ருத்தி பிரகாரத்தையும் சொல்லுகிறது –
ஒன்பதாம் பத்து பல பிரகாரத்தையும் பத்தாம் பத்து ததவாப்தி பிரகாரத்தையும் சொல்லுகிறது –
ஆக இவ் வர்த்த பஞ்சகத்தினுடைய அவாந்தர அர்த்த பேதத்தாலே இப் பிரபந்தத்திலே பத்துப் பத்துக்கும் வாக்யார்த்தம் சொல்லிற்று ஆயிற்று –அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -பிரவேசம் –
தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன் ஓராயிரத்துள் இப்பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11-ப்ரஹ்ம ருத்ர பிரமுகரான சர்வாத்மாக்களுக்கும் நிர்வாஹகனாய் -சர்வேஸ்வரனான ஸ்ரீ யபதியாலே – அருளப் பட்ட சடகோபன்-மயர்வற மதி நலம் அருளினன்-என்கிறபடியே கிருபைக்கு விஷய பூதரான ஆழ்வார் -இவ்வருளுக்கு வாய்த்தலை பிராட்டி -என்கை-
மெல்லியல் ஆக்கைக் கிருமி குருவில் மிளிர் தந்தாங்கே
செல்லியசெல் கைத்துலகை என் காணும் என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமாலவன் கவியாது கற்றேன்
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டு பண்டே-48 —திருமாலவன் கவி –-அவனும் பிராட்டியுமான சேர்த்தி போலே அவனும் கவியும் பொருந்தி -அவன் முன்னுருச் சொல்லி கொண்டு போக நான் பின்னுருச் சொல்லிக் கொண்டு வந்த அவ்வளவே – நான் என் உணர்வால் கவி பாடினேன் அல்லேன் -என்பதை யாது கற்றேன் -என்கிறார்-நான் என் வசம் இழந்து பக்தி பரவசப் பட்டு வாய்க்கு வந்த படி பாடினேன் அவ்வளவே –
மிக்க இறை நிலை–யாவது
இறை நிலை உணர்வு அரிது -1-3-6-என்னும் படியான சர்வ ஸ்மாத் பரத்வம்
தம் ஈஸ்வராணாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதா நாம் பரமஞ்ச தைவதம்
நாராயண பரஞ்சோதி
தத்வம் நாராயண பர
மனிசர்க்குத் தேவர் போலே தேவர்க்கும் தேவாவோ –8-1-5-
தேவ தேவனே -3-6-2-
பரஞ்சோதி நீ பரமாய் –3-1-3-
மிகுஞ்சோதி -2-2-5-
முழுதுண்ட பரபரன் –1-1-8-
வானோர் இறை –1-5-1-
கழி பெரும் தெய்வம் –திரு விருத்தம் –20-
பெரும் தெய்வம் -4-6-2-
பெரிய அப்பனை பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை –8-1-11-
திருவுடை அடிகள் -1-3-8-
திரு மகளார் தனிக் கேள்வன் பெருமையுடைய பிரானார் –1-6-9-
திரு மா மகள் கேள்வா தேவா –6-10-4-
என்றும் சொல்லப்படுகிற சர்வ ஸ்மாத் பரனை ஆயிற்று -மிக்க இறை என்கிறது –
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6–ஈஸ்வரன் ப்ரஹ்ம ருத்ரர்களோடு ஒக்க தன்னை சங்கோ சித்து நிற்கையாலே ஈஸ்வரன் இன்னான் என்று அறிகை அரிது-சர்வேஸ்வரன் பிரமனுக்கும் சிவனுக்கும் அந்தராத்துமாவாய் அவர்களைச் சரீரமாகக் கொண்டு தான் சரீரியாய் நிற்கிற நிலை அறியப் போகாது.
ஆருயிரேயோ ! அகலிடமுழுதும் படைத்திடந்துண்டு மிழ்ந்த ளந்த
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்தடைத்துடைத்த
சீருயிரேயோ !மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5-ஐஸ்வர் யத்தாலும் கௌரவத்தாலும் மநுஷ்யர்களில் காட்டில் தேவர்கள் உத்க்ருஷ்டராய் இருக்குமா போலே அவற்றால் தேவர்கள் மனுஷ்யஸ்தாநீயராம் படி சர்வாதிகன் ஆனவனே -சர்வாதிகனான நீ வேண்டாவோ ஹித சிந்தனை பண்ணும் போது
மூவர் ஆகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சாவம் உள்ளன நீக்குவானைத் தடங் கடற் கிடந்தான் தன்னைத்
தேவ தேவனைத் தென்னிலங்கை எரி எழச்செற்ற வில்லியைப்
பாவ நாசனைப் பங்கயத் தடங் கண்ணனைப் பரவுமினோ.–3-6-2–அங்கே கிடக்கிறது ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீயன் ஆகைக்காக -அவர்கள் அபேக்ஷிக்க வந்து அவதரித்த படி –அங்கே கண் வளர்ந்து அருளுகிறது தேவர்களுக்கு ஸமாச்ரயணீயனாய் மனுஷ்ய சஜாதீயனாய் வந்து திருவவதாரம் பண்ணி அருளினாலும்-மனுஷ்யரைக் காட்டில் தேவர்கள் விலக்ஷணராய் இருக்கிறாப் போலே தேவர்களைக் காட்டிலும் வி லஷணன் ஆனவனை-அன்றியே, ‘நித்தியசூரிகளால் ஏத்தப்படுகின்றவனை’ என்னலுமாம்.
பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி யின்மையில் படியோவி நிழல்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –3-1-3–தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி-அழகாலே எல்லாரிலும் மேம்பட்டு மிக்கு இருக்கையாலே உன்னைத் தவிர மற்று ஒரு பரஞ்சோதி இல்லாமையால் ஒப்புக்கு இன்றிக்கே வர்த்தியா நிற்கையாலும் இப்பிரபஞ்சத்தை எல்லாம் உன் சங்கல்ப மாத்திரத்தாலே ஸ்ருஷ்டிக்கையாலே ஜகத் காரணத்வ ப்ரயுக்தமான உத்க்ருஷ்ட தேஜஸையும் உடையையாய் ஆஸ்ரித ஸூலபன் ஆனவனே –நீர்மையைப் பார்த்தால் பசுக்களோடும் பொருந்தும்படியாய் இருக்கை–ஸூலபதையால் வந்த தேஜஸ்ஸூம் உன்னது-அழகுக்கு மேற்பட்டார் இல்லாமையால் அழகால் வந்த தேஜஸ்ஸூம் உன்னது-லோகத்தில் உபமான ரஹிதர் நீயே யாகையாலே உபமான ராஹித்யத்தால் வந்த தேஜஸ்ஸூம் உன்னது-ஜகத் காரணத்வ ப்ரயுக்தமான தேஜஸ்ஸூம் உன்னது–
தகும் சீர்த் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேலறிவார் யவரே –2-2-5-ஸ்ருஷ்ட்ருத்வ சக்தி யுக்தமான தன்னுடைய சங்கல்பத்தின் உள்ளே-தனி முதல் -பிரகிருதி என்றும் சொல்லுவர்–ஐஸ்வர்யங்களால் மிக்கு இருந்த தேவர்களையும் மற்றும் உள்ள பதார்த்தங்களை எல்லாம் படைக்க தகும் என்னும் இடத்தை தெரிவியா நின்றுள்ள திருக் கண்களை உடையனாய் –அவ் வழகாலே என்னை அடிமை கொண்டு அருளினை எம்பெருமானே பர தத்வம் இவன் ஒழிய வேறு சில ஈஸ்வரர்கள் உண்டு என்னும் இடத்துக்கு பிரமாணம் இல்லை—வைதிக –க — தஸ் யோத்பத்திர் நிரூப்யதாம்–பரம்பொருளான விஷ்ணுவினிடத்தில் பத்தி இல்லாதான் ஒருவன் எல்லாச் சாஸ்த்திரங்களின் பொருள்களையும் அறிந்தவனாய் இருப்பினும், அவனிடத்தில் பிராமணத் தன்மை இல்லை; அவன் பிறவியினை ஆராய்தல் வேண்டும்,’ என்பது பத்ம புராணம்.-பரஞ்சோதி ரூபசம்பத்த்ய–நாராயண பரஞ்சோதி -என்று நாராயண அனுவாக ஸித்தமான பரதத்வம்-ஸ்வாபாவிகாநவதிகாதிஶயேஶித்ருத்வம் நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக: க: | ப்ரஹ்மா ஶிவஶ் ஶதமக: பரம: ஸ்வராடிதி ஏதே’பி யஸ்ய மஹிமார்ணவ விப்ருஷஸ்தே ||--ஶ்லோகம் 11 – நாராயணனே! உன்னுடைய பெருமைக் கடலில் ஒரு திவலையைப் போன்றவர்களே (கர்மத்துக்கு வசப்பட்ட) ப்ரஹ்மா, சிவன், இந்திரன் ஆகியோரும், இந்த தேவதைகளை விடச் சிறந்தவர்களான, கர்மத்துக்கு வசப்படாத முக்தாத்மாக்களும்; உன்னுடைய இயற்கையான மற்றும் எல்லை யில்லாத பெருமையை உடைய ஐஸ்வர்யத்தை (ஆளுமையை) எந்த வைதிகன் பொறுக்க மாட்டான்?)
சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –1-1-8–ஈஸ்வரனாலும்-அவன் காட்டிய வழியை யுடைய ப்ரஹ்மாவாலும் ஸ்ருஷ்டமான பதார்த்தங்களில் ருத்ரனால் சம்ஹார்யம் ஆவது ஏக தேசம் –
சம்ஹர்த்தாவான ருத்ரன் தன்னையும் -அவனுக்கு நிலம் அன்றிக்கே இருந்துள்ள மஹதாதிகளையும் அகப்பட சம்ஹரித்தவன் –அவன் காட்டின வழியாலே ஏகதேச சிருஷ்டியையும் ஏக தேச சம்ஹாரத்தையும் பண்ணுகையாலே அஸ்மத் தாதிகளைக் காட்டில் பரராய் இருக்கிற ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு நிலம் அல்லாத சிருஷ்டி சம்ஹாரங்களைப் பண்ணுகையாலே அவர்களுக்கும் பரன் என்றவாறு -ப்ரஹ்மாதிகள் அதிகாரி புருஷர்களாக இருக்கையாலே நம்மைக் குறிக்க அவர்கள் பரராய் இருப்பது ஒன்று உண்டு இறே–பர பரானாம் (‘உயர்ந்தவர்கட்கு எல்லாம் உயர்ந்தவன் இறைவன்,’ )என்கிறபடியே, அவர்கள் தங்களுக்கும் பரனாய் இருக்குமவன். ‘மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவா, ‘என்னைக் கடவது இறே
வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே –1-5-1-ஏழ் உலகுக்கும் முதலாய் உள்ள அவரவரும் அமரர்களுக்கு நாயகனை-நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய் இருந்துள்ளவனை-
சின்மொழி நோயோ கழி பெருந்தெய்வம் இன்ன-இந்நோய் இது என்று
இன்மொழி கேட்கும் இளந்தெய்வம் அன்று இது வேல! நில் நீ
என் மொழி கேண்மின் என்னம்மனை மீர் ! உலகு ஏழும் உண்டான்
சொல் மொழி மாலை யம் தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே –20–-கழிய மிக்க பெரும் தெய்வம் –அவ் வருகு இல்லாத தெய்வம் –பதிம் விஸ்வஸ்ய-என்றும்-பதிம் பதீனம் -என்றும் தமீஸ்வரணாம் பரமம் மஹேஸ்வரம்-என்றும் – அவ்விஞ்ஞாதம் விஜா நதாம்-என்றும்-யதோ வாசோ நிவர்த்தந்தே -என்றும் – உபபாதிக்கிற பிரமாணங்களுக்கும் அவ்வருகாய் இருக்கை-
திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம்
இசைப்பின்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது
திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர்
இசைக்கிற்றீர் ஆகில் நன்றேயில் பெறுமிது காண்மினே –4-6-2–வானோர் தலை மகனாம் சீராயின தெய்வ நன்நோய் இது – கம்பீர பரமோ தேவ –என்கிறபடி அபரிச்சின்னமாய் சர்வாதிகமான தெய்வம் அடியாக வந்தது இது பர தேவதை அடியாக வந்தது–
பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11-பெரிய வப்பனைப் -உபய விபூதிக்கும் நிர்வாஹகன் ஆனவனை-
பிரமனப்பனை-சதுர்தச புவ நேஸ்வரனுக்கு ஜனகனானவனை
உருத்தி ரனப்பனை-அவனுக்கு புத்ரனாய் -அவன் தன்னளவிலும் மிகைத்து திரிகிற ருத்ரனுக்கு உத்பாதகனானவனை -க இதி ப்ராஹ்மணோ நாம
முனிவர்க்குரிய வப்பனை-முனிவர் என்கிறது ஸநகாதிகளை-அவர்களுக்கு கேவலம் ப்ரஹ்ம பாவநையாய் இருக்கையாலே உரிய வென்று -அணுமை சொல்கிறது
யமரரப்பனை -தேவர்களுக்கு உத்பாதகனானவனை
உலகுக்குகோர் தனியப்பனை தன்னை-இப்படி பிரித்து சொல்லுகிறது என் -சகல லோகங்களுக்கும் ஏக நிர்வாஹகன் ஆனவனை -இப்போது இவை சொல்லுகிறது என் என்னில் நிதி எடுத்தவன் இன்னது கண்டேன் இன்னது கண்டேன் -என்னுமா போலே ஸ்வரூபத்திலும் குணத்திலும் அதி சங்கை பண்ணின போது இழந்தாராய் இருந்தவற்றை லபிக்கையாலே இவற்றைப் பிரித்து பேசுகிறார் –முனிவர்க்கு உரிய அப்பனை என்கிறது ஆஸ்ரித பவ்யத்தையை சொல்கிறது-
நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினையுடனே
மாளும் ஒரு குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே –1-3-8—நாள் தோறும் வேணும் என்று ஒரு விதி அன்று –அபர்வணி கடல் தீண்டல் ஆகாது என்னுமா போலே இதுக்கு நிஷித்தமாய் இருப்பதொரு காலம் இல்லை என்கை -அபிமதமான நாள் தோறும்-நமக்கே கூறப்பட்ட ஸ்ரீ மானான ஸ்வாமியினுடைய சர்வ ஸமாச்ரயணீயமாய் போக்யமுமான திருவடிகளை ஆஸ்ரயிக்கில்–ஸ்ரீ மானான ஸ்வாமியானவனுடைய
நம் -என்று அஜாயமானோ பஹூ தா விஜாயதே -என்று அவதாரத்தை பிரஸ்தாபித்து – ஹ்ரீச்சதே லஷ்மீச்ச பத்ன்யௌ-என்று பிரமாண பிரசித்தமான ஸ்ரீ யபதியை தமக்கு பிரகாசிப்பித்த படியை அருளிச் செய்கிறார் –-‘சர்வேஸ்வரனை அடைந்தானாகில், அவன் பலனைக் கொடுக்கிறான்; பிராட்டியைத் துணையாகப் பற்ற வேண்டுகிறது என்?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘அவனை அடையும் இடத்தில், இவன் குற்றம் பாராதே தன் நிழலிலே இவனை வைத்து, அவன் பக்கல் முகம் பெற்றவாறே குற்றத்தைப் பொறுப்பிக்கும் அவள் முன்னாகப் பற்றல் வேண்டும்’ என்று கூறி, ‘நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி’ என்னா நின்றது கண்டீரே’ என்று அருளிச்செய்தார் பட்டர்.
தரும வரும பயனாய –திருமகளார் தனிக் கேள்வன்
பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1-6-9–உபநிஷத் பிரசித்தமான பரம புருஷார்த்தங்களைத் தரும் பெரிய பிராட்டியாருடைய குணாதிகனாய் யுள்ள நாயகன் – ஸ்ரீ யபதித்வ நிபந்தனமான பெருமையை யுடையராய் -ஆஸ்ரித அனுக்ரஹ ஸ்வபாவராய் -அவர்களுடைய புண்ய பாப ஸ்வரூபமான கர்மங்களைப் போக்கும் ஸ்வபாவரானவர்-தர்மத்தின் யுடைய பரம பிரயோஜன ரூபமான திரு மகளார் என்றுமாம் –அத்விதீயனான வல்லபன்-ஸ்ரீ யபதித்வ நிபந்தனமான பெருமையை யுடையவர்-ஆஸ்ரித அனுக்ரஹமே ஸ்வரூபமாய் உள்ளவர் – புண்ய பாப ரூபமான கர்மங்களைப் போக்குவர் –
ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள்மேல்
தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திருமா மகள் கேள்வா!
தேவா! சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே.–6-10-4–விரோதி நிராசனம் பண்ணிற்று -பிராட்டிக்கு இனிதாகைக்காக என்று கருத்து—பர்த்தாரம் பரிஷஷ்வஜே -என்று அவளுக்காக வாயிற்று செய்தது –ந கச்சின் ந அபராத்யதி என்னும் அவளும் கூடக் கூட்டுப் படும்–அஸூர நிரசனம் பண்ணுகையால் வந்த வீர ஸ்ரீ யாலே விளங்கா நின்றுள்ளவனே-அப்போதை வீர ஸ்ரீ யாலே வந்த ஒளியை யுடையவனே –விரோதியைப் போக்கி பிராட்டி அங்கீ காரம் பெற்ற புகர் என்றுமாம் –“தம் த்ருஷ்ட்வா ஸத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம் பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்தாரம் பரிஷஸ்வஜே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 30 : 39.–தம் ஸதருஹந்தாரம் த்ருஷ்டவா – வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டும்படியான அழகினை யுடையவரை,-எதிரிகளை வென்ற வீரக் கோலத்தோடே கண்டாள்.-ஸத்ருஹந்தாரம்-தம் திருமேனியிலே ஒரு வாட்டம் வாராமே, அவர்களைக் குற்றுயிராக்கி விடுவதும் செய்யாதே, துண்டித்து அடுக்கினவரை.–முன்பு திருவயோத்யையில் இருந்த நாள், ‘இவர் வேட்டைக்குச் சென்ற விடத்தே இன்னபடியும் இன்னபடியும் பொருதார், இன்ன புலியைக் குத்தினார், இன்ன சிங்கத்தைக் குத்தினார்’ என்றாற்போலே உறவினர்கள் சொல்லக் கேட்கு மத்தனை அன்றோ;
இங்குப் பூசலுக்குப் புகுகிறபோதே பிடித்து மேலுள்ள செயல்கள் அடங்கலும் கண்டாள்.
மஹர்ஷீணாம் ஸு காவஹம் – இருடிகளுடைய விரோதிகளைப் போக்கி அவர்களுக்குக் குடியிருப்புப் பண்ணிக் கொடுத்தவரை.தங்கள் தவத்தின் வலிமையால் வெல்லலாயிருக்க, தங்கள் பாரத்தைப் பெருமாள் தலையிலே பொகட்டு முறை உணர்ந்து கொண்டிருக்கு மவர்களுக்கு.
கர்ப்ப பூதா: தபோதநா:--தந்தாம் கைம்முதல் அழியமாறாதே இருக்குமவர்கள்-தபோதனராய் இருக்கச்செய்தே கர்ப்ப பூதராயிருப்பர்கள். என்றது,-தந்தாமுக்கென்ன இயற்றி-யத்னம் – உண்டாயிருக்கச் செய்தே, கர்ப்பாவஸ்தையில் தாய் அறிந்து ரக்ஷிக்குமத்தனை அன்றோ; அப்படியே அவனே அறிந்து ரக்ஷிக்க இருக்குமவர்கள் என்றபடி-அநுகூலர்களை ரக்ஷித்தலும் பிரதிகூலர்களை அழித்தலும் இவளுக்குப் பிரியமாகச் செய்யுமவை அன்றோ.
பபூவ – பதினாலாயிரம் முருட்டு இராக்கதர்களோடே தனியே நின்று பொருகிற இதனைக் கண்டு
அஞ்சி ‘இது என்னாய் விளையுமோ?’ என்று சத்தை அழிந்து கிடந்தாள்; இப்போது உளள் ஆனாள்.
பூ – ஸத்தாயாம். ஹ்ருஷ்டா –-சத்தை உண்டானால் உண்டாமதுவும் உண்டாயிற்று.
வைதேஹீ –-உபாத்தியாயர்கள் பெண் பிள்ளைகளுக்குச் செவி ஏற்றாலே ஓத்து போயிருக்குமாறு போலே, வீரவாசி அறியும் குடியிலே பிறந்தவள் அன்றோ.
அன்றிக்கே, ஒரு வில்லு முறித்த இதற்கு உகந்து என்னைக் கொடுத்த எங்கள் ஐயர்,
பதினாலாயிரம் பேரைத் தனியே நின்று பொருது முடித்த இதனைக் கண்டால் என்படுகிறார் தான் என்னுதல்!
பர்த்தாரம் – முன்பு, இவர் சுகுமாரர் ஆகையாலே ‘குழைசரசகு’ என்றும்,
‘ஐயர் நம்மை இவர்க்கு நீர்வார்த்துக் கொடுக்கையாலே நாம் இவர்க்குச் சேஷம்’ என்றும் அணைத்தாளத்தனை; ‘ஆண்பிள்ளை’ என்று அணைத்தது இப்போது.
பரிஷஸ்வஜே – இராவணனுக்கு ஒத்தவர்களாய், அவன் மதித்த வீரத்தையுடையவர்களாயிருப்பார் பதினாலாயிரம் பேரும் விட்ட அம்புகள் முழுதும் இவர் மேலே பட்டு, கண்ட இடமெல்லாம் யுத்த வடுவாய் அன்றோ திருமேனி கிடக்கிறது;-அவ்வவ் விடங்கள் தோறும் திருமுலைத்தடத்தாலே வேது கொண்டாள்.
திரு மங்கை நின்று அருளும் தெய்வம் -இரண்டாம் திரு -57-
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன்–முதல் -64 –
திருவில்லாத் தேவரை தேறேன்மின் தேவு -நான்முகன் -53–என்னக் கடவது இறே
இது வாயிற்று பர ஸ்வரூபம் –
திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும்
கருமம் கடைப்படிமின் கண்டீர் -உரிமையால்
ஏத்தினோம் பாதம் இரும் தடக்கை எந்தை பேர்
நாற்றிசையும் கேட்டீரே நாம்–57—பெரிய பிராட்டியார் –இறையும் அகலகில்லேன் -என்று கொண்டு
நித்ய கடாஷத்தைப் பண்ணி நித்ய வாசம் பண்ணுகிற சர்வேஸ்வரனை –அவ்யபிசாரியான லஷணம்-லஷ்மீ பத லாஷைக லஷணம் –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -1-9- திருவடிகளிலே செம்பஞ்சு மார்விலே காணில் அவனே பரதேவதை -ஜகத் காரணத்வாதி அப்ரயோஜகம்-திருவில்லாத் தேவர் -நான்முகன் -53-
ஸ்ரீ யபதி நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதா ந-என்று கீதா பாஷ்யம் – கல்யாண குணங்களுக்கு முன்னே எடுக்கையாலே நிரூபக தர்மம் –
நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழரோடு
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் வியவேன்
திரு மாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என் மேல் வினை —–64–ஸ்ரீ யபதி யைக் கண்டு அல்லது விஸ்மயப் படேன் -(வியத்தல் விஸ்மயத்தல் ) -ஸ்ரீ யபதியினுடைய ஐஸ்வர்யம் ஒழிய வேறு சிலரது கண்டால் விஸ்மயப் படேன்—அவனை அல்லது வேறு சிலரை தெய்வம் என்று ஆஸ்ரயணீயர் என்று கொண்டு ஸ்துதியேன் – வியவேன்-திரு மாலை-ஸ்ரீ யபதியினுடைய ஐஸ்வர்யத்தை அர்த்த வாதம் என்று இரேன்(பரன் திறம் அன்றி மற்று வேறே தெய்வம் இல்லையே -பிரகாரமாக நாட்டினான் தெய்வம் எங்கும் )
கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்த
னல்லால் ஒரு தெய்வம் நான் இலேன் –பொல்லாத
தேவரைத் தேவர் அல்லாரைத் திரு இல்லாத்
தேவரைத் தேறேல்மின் தேவு-53–தயா சத்யம் சௌசம் ச ராஷசானாம் ந வித்யதே -என்று அறிவு கேடர் எல்லாரும் திரண்ட இலங்கையைக் கட்டழித்த காகுத்தனை ஒழிய வேறு ஒரு தேவதையைத் தஞ்சமாக யுடையேன் அல்லேன்-காணிலும் உருப்பொலார்-திருச்சந்த விருத்தம் -69-என்கிறபடியே விரூப தேவதைகளை –அல்லாத தேவதைகளை -தேவதைகள் என்ன ஒண்ணாதவர் என்றுமாம் –அஸ்ரீகரான தேவதைகளை தேவதைகளாகத் தேறாதே கொள்ளுங்கோள்-
—
மிக்க இறை நிலையாவது
ஸுலப்யத்துக்கு அவ்வருகு இல்லாதபடி முடிந்த நிலமான ஆஸ்ரய பரதந்த்ரத்தோடே நிற்கிற
அர்ச்சாவதாரம் என்கை –-அத்தை ஆயிற்று
எளிவரும் இயல்வினன் –1-3-2- இத்யாதியில் சொன்னது – இது இறே ஈஸ்வர ஸ்வரூப யாதாத்ம்யம் –
எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2–பத்துடை அடியவர்க்கு -என்று -சோபாதிகம் அன்று இவன் எளிமை -ஜலத்துக்கு சைத்யம் போலே ஸ்வ பாவ சித்தம் எளிமையை இயல்வாக யுடையவன்-தன்னிடத்து அன்புடையார் மாட்டுத் தானும் அன்புள்ளவனாய் இருத்தல் ஒரு குணம் அன்று ஆதலின், அதனை மறுத்து, ஈண்டு ‘எளிவரும் இயல்வினன்’ என்கிறார். எல்லார்க்கும் ஒவ்வொரு காலத்தில் எளிமை கூடும்; இவனுக்கு எளிமை ஸ்வரூபம் என்பதனைத் தெரிவிப்பதற்கு ‘எளிவரும் இயல்வினன்’ என்கிறார் என்றபடி.
—
மெய்யாம் உயிர் நிலை–யாவது
உருவியந்த இந்நிலைமை –1-3-6-
எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் –1-2-10-
உணர்வைப் பெற ஊர்ந்து–8-8-3-
நின்ற ஒன்றை –8-8-4-
உயிர் வீடு உடையான் –1-2-1- என்றும்
ப்ரக்ருதே பரனாய்
ஞான ஆனந்த ஸ்வரூபனாய்
ஞான குணகனாய்
நித்யனாய்
ஈஸ்வரனுக்கு சரீரவத் பரதந்த்ரனான படியைச் சொல்லுகிறது
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6-தான் அணு பரிமாணனாய் இருக்க -ஸ்வ ஜ்ஞானத்தாலே பத்துத் திக்கையும் வியாபித்து இருக்கும்
வாலாக்ர சதபா கஸ்ய -இத்யாதி –-ஆகையாலே ஜடமான அசித்தில் காட்டில் வியந்து -வேறுபட்டு இருக்கும்-உருவு -என்று பத பேதமான போது -இயத்தல் -கடத்தலாய்-கடந்து இருக்கும் என்னவுமாம்
வேறுபாடு தான் பிரகாரித்வ பிரமாத்ருத்வ நியந்த்ருத்வங்களாலே-வின்நிலைமை -சந்நிஹிதனான ஆத்மாவினுடைய ஸ்த்திதி–உருவிற்காட்டில் வேறு பட்டிருக்கிற இந்நிலைமை. உண்டு – இந்த ஆத்துமாவினுடைய ஸ்வரூபம்.-இனி,உருவு இயந்த என்று பிரிக்கப்படும்போது, இயத்தல் – கடத்தலாய், உருவிற்காட்டில் கடந்திருக்கும் – வேறுபட்டிருக்கும் என்னுதல்.-ஆக, இரண்டாலும் அறிவு இல்லாத சரீரத்தைக் காட்டிலும் வேறுபட்டிருக்கிற ஆத்துமாவினுடைய ஸ்வரூபம் என்பது பொருளாம்.
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10-எண் பெருக்கு-இத்தால் -ஜீவ அனந்யத்வத்தைச் சொல்கிறது
அந் நலத்து –
கல்யாணமான ஜ்ஞானாதி குணங்களை யுடைத்தாகை-நலத்து’ என்கிற இதனால், இவ்வஸ்துக்கள் தாம் ஞான குண ஆஸ்ரயமாக-இருக்கக் கடவது இறே பிரணவத்தில்-த்ருதீய பதமான மகாரத்தாலே ஞான குண ஆஸ்ரயமுமாய் ஞாதாவாயுமாய் இருக்கும் என்று சொல்லிற்று இறே
ஒண் பொருள்
ஸ்வயம் பிரகாசமாய் இருக்கை–அசைதன்யம் அசித்திக்கு ஸ்வ பாவமாய் நிற்கச் செய்தே வஸ்து தான் ஜடமுமாயும் அசம்ஞாவத்துமுமாயும் இருக்கும் இறே-அங்கண் அன்றிக்கே வஸ்து தான் ஸ்வஸ்மை ஸ்வயம் ப்ரகாசகமுமாய் தர்ம பூத ஞானமானதுவும் விஷயங்களைக் கிரஹித்து தன்னையும் அறிவிக்கக் கடவதாய் இருக்கும் அத்தைப் பற்றிச் சொல்கிறது –-இதனாலே இரண்டு அடை மொழிகளைக் கொடுத்து -நலம் -என்றும் ஒண் என்றும் அருளிச் செய்கிறார்
ஈறில
நித்தியமாய் இருக்கை –இப்படிப் பட்ட ஆத்மா வர்க்கத்தையும்–‘ஈறு இல’ என்பதனை ‘ஈறு இலவான ஒண்பொருள்’ என்றும், ‘ஈறு இலவான வண்புகழ்’ என்றும் அன்வயித்துக் கிடக்கும்-ஈறு இலவான ஒண் பொருளையும், ஈறு இலவான வண் புகழையும் உடையன் ஆகையாயிற்று ‘நாராயணன்’ யாகையாகிறது –பாவத்க மங்கல குணா ஹாய் நிதர்சனம் ந -( ‘தேவரீருடைய குணங்கள் அன்றோ எங்களுக்குஎடுத்துக்காட்டாய் இருக்கின்றன?’ )என்கிறபடியே, தன்னுடைய கல்யாண – நற்குணங்களைப் போன்று, இவ்வுயிர்களும் நித்தியமுமாய்ப் பிரகாரமுமாய் இருக்கும் என்பதனைத் தெரிவித்தபடி.-குணங்களை நிதர்சனமாகச் சொல்லிற்று –-ஆக, நித்தியரான த்ரிவித -மூவகைப்பட்ட சேதனரையும், நித்தியமான கல்யாண குணங்களையும் உடையவன் நாராயணன் என்பதாயிற்று.
வண் புகழ் –கல்யாண குணங்களையும் யுடையனாய் இருக்கை
ஈறில -என்று குணங்களுக்கு விசேஷணம் ஆகவுமாம்
நாரணன் – நித்ய சித்த கல்யாண குணங்களோ பாதி ஜீவ சமூஹத்தையும் ஸ்வ அதீனமாக யுடையவன் ஆகையாலே -நாராயணன்
திண் கழல் சேரே —இப்படிப்பட்ட சம்பந்த ஜ்ஞானம் முன்னாகப் பற்றினாரை ஒருகாலும் விடாத திருவடிகளை ஆஸ்ரயி –இத் திருப் பாசுரத்தால் ஸ்ரீ திரு மந்திரத்தை அர்த்தத்தோடு அருளிச் செய்கிறார்.
ஸ்ரீ ஆழ்வான் இப்பாட்டளவும் வரப் பணித்து இப் பாட்டு இது, இத் திருப்பாசுரம் திருமந்திரத்தின் பொருள் என்பதற்கும்
மந்திரத்தின் பொருள் ஆசாரியன் பால் கேட்டல் வேண்டும் என்பதற்கும் ஐதிஹ்யம் ஆம்.
ஸ்ரீ ஆழ்வாருடைய முந்தின வார்த்தை,கௌரவத்திலே நோக்கு; பிந்தின வார்த்தை, இனிமையிலே நோக்கு.
வந்தவாறே ‘இத்தையும் உங்கள் ஆசிரியர் பக்கலிலே கேட்டுக் கொள்ளுங்கோள்,’ என்ன,
ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ சீராமப் பிள்ளையும் எழுந்து போகப் புக்கவாறே, அவர்களை அழைத்து,
‘இன்ன போது இன்னார் இருப்பார்; இன்னார் போவார் என்று தெரியாது; இருந்து கேளுங்கோள்,’ என்று
ஸ்ரீ திரு மந்திரத்தை உபதேசித்து, இப்பாட்டை நிர்வகித்து
‘இப்பாட்டை இதற்கு அர்த்தமாக நினைத்திருங்கோள்,’ என்று பணித்தார்.
உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3-–இவை ஹேயம் என்னும் அறிவை நான் பெறும்படி நடத்தி -தேரூர்ந்து என்னுமா போலே -இவை அபுருஷார்த்தம் என்னும் உணர்வு யுண்டு -மயர்வற்ற மதி -அத்தை நான் உடையேனாம் படி பண்ணி–சமர்த்தனான ராஜா பிச்சை எடுக்க -தானே தேரை ஒட்டிக் கொண்டு போவது போலே -அன்றிக்கே விஜயாவாகமான அர்ஜுனன் ரதம் -பார்த்த சாரதி ஒட்டிக் கொண்டு -சாரதி பரமாத்மா -ரதி நாம் -அவன் தானே ஒட்டி பீஷ்மாதிகள் சாமர்த்தியம் எல்லாம் பழுதாம் படி -அவை சாரம் அல்ப சாரம் என்று தள்ளினால் போலே –சரீரம் -ரதம் -ஏக தேசம் ஹிருதயம் -இருந்து ஞானத்தை நடத்தினான் –-இறவேறி–இற ஏறி -முடிய ஏற்றி என்னுதல் –-ப்ரக்ருதி ப்ராக்ருதங்கள் அபுருஷார்த்தம் என்னும் அளவே அன்றிக்கே முடிய போய் –ஞானானந்த ஸ்வரூபனாய் -நித்யனாய் -ஸ்வதஸ் ஸூ கியாய் இருக்கிற அளவும் செல்ல அறிவித்து-அவ்வளவிலும் பர்யவசியாதே -என்னைச் சொல்லும் சொல்லாலே தன்னைச் சொல்லலாம் படி தனக்கு பிரகார தயா சேஷம் என்னும் இடத்தைக் காட்டித் தந்தான் -அஹம் புத்தியும் அஹம் சப்தமும் தன்னளவும் செல்லும் படி பிரகார தைக வேஷமாய் இருக்கிறபடியைக் காட்டித் தந்தான் –தச் சப்தம் குண விசிஷ்ட வாசி யானாவோ பாதி -த்வம் -சப்தமும் -அசித் விசிஷ்ட ஜீவ அந்தர்யாமி யாம் அளவும் காட்டக் கடவது இறே –தத் -சப்தம் -குணங்களோடு கூடின இறைவனை காட்டுவது போன்று- த்வம் -சப்தமும் சரீரத்தோடு கூடின ஆத்மாவுக்குள்-அந்தர்யாமியாய் இருக்கிற சர்வேஸ்வரன் அளவும் செல்லக் கடவது அன்றோ –
தத் -அவன் — த்வம் -நீ — அஸி -ஆகிறாய்–போலே என்கிறார்–இரண்டும் ப்ரஹ்மம் -விசேஷணங்கள் தானே மாறி இருக்கும்-விசேஷ்யம் ஒன்றே -இது தானே சாமாநாதி கரண்யம் -விசிஷ்டாத்வைதம்–
யானும் தானாய் ஒழிந்தானை யாதும் யவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற வொன்றை யுணர்ந்தேனே–8-8-4--என் சரீரத்திலும் பிராணனிலும் ஞானத்திலும் வ்யாப்தமான விலக்ஷணமான ஆத்மாவை தனக்கு சரீரமாக யுடையவனை அறியப் பெற்றேன் –நின்ற ஓன்று -என்கிற ஆத்ம ஸ்வரூப வாசியான சப்தம் ––இந்த ஜீவாத்மா ஸ்வரூபத்துக்கு பற்றுக் கோடாய் இதனை சரீரமாக உடைய-பரமாத்மா அளவும் சென்று அவனைக் காட்டுகிறது-
ஜீவாத்மா ஸ்வரூபத்தை காட்டும் அச் சொல் தன்னளவில் நிற்பது அல்லாமையால்-பகவானைக் காட்டும் அளவாய் அன்றோ இருப்பது–ஆஸ்ரயமான பிரகாரி பர்யந்த அபிதானம் பண்ணுகிறது -ஸ்வ நிஷ்டம் அல்லாமையாலே பகவத் பர்யந்தமாய் இறே இருப்பது -ஆத்மாவினுடைய போக்யத்தை யாகில் சொல்லுகிறது -காரணத்வம் சொல்லுகிறது என் என்னில் –விமுகரான அவர்களை கர்ம அனுகுணமாக ஸ்ருஷ்டித்து விட்டான் – ஐஸ்வர்ய காமரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு ஐஸ்வர்யங்களைக் கொடுத்து அதிகாரங்களை நடத்திக் கொடுத்தான் –என்னளவில் இவ்வாத்மா தனக்கு அநந்யார்ஹமாய் போக்யமாய் இருக்கிறபடியை காட்டித் தந்தான் என்கிறார் -நின்றனர் இருந்தனர் பாசுரம் போலே இஸ் சாமானாதி கரண்யத்துக்கு விசேஷண அம்சமான போக்யதையில் தாத்பர்யம் -வையதி கரண்யத்துக்கும் நாட்டார் சொல்லுகிற சுத்த பேதம் அன்று பொருள் -சாமானாதி கரண்யத்துக்கும் ஸ்வரூப ஐக்கியம் அன்று பொருள் –யாதும் யவர்க்கும் முன்னோனை–என்று தொடங்கி –என்-ஊனில் உயிரில் உணர்வினில்-நின்ற ஒன்றான – -யானும் தானாய் ஒழிந்தானை-யுணர்ந்தேனே-என்று அந்வயம் –
வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்மினே –1-2-1-உம் உயிரை விடும் இடத்தில் உறவில்லா நிலத்தில் அன்றிக்கே உடையவன் பக்கலிலே இட இசையுங்கோள் –உம்முயிர் வீடுடை யானிடை -என்று அமைந்து இருக்க-வீடு செய்து-என்று அனுபாஷிக்கிறது=விடுகை தானே பிரயோஜனம் போந்து இருக்கை
ராஜ புத்திரன் சிறையில் கிடந்தால் முடி சூடுவதிலும் சிறை விடுகை தானே பிரயோஜனமாய் இருக்கும் இறே-உம்முயிர் வீடுடை யானிடை
1-உங்கள் ஆத்மாவையும் சரீரத்தையும் உடையவன் பக்கலிலே உங்கள் ஆத்மாவை தனக்கு சரீரமாக உடையவன் பக்கலிலே என்னுதல்
2-உங்கள் ஆத்மாவை விடும் இடத்தில் உடையவன் பக்கலிலே என்னுதல்
3-மோஷ ப்ரதன் பக்கலிலே என்னுதல்
வீடு-விடுகையை -சமர்ப்பிக்கையை
செய்ம்மினே-இசையுங்கோள் -அவன் நினைவு நித்தியமாய் இருக்க நீங்கள் இசையாமல் இறே இழந்து போந்தது –யமோ வைவஸ்வதோ ராஜா யச்தவைஷ ஹ்ருதி ச்த்தித-தே நசேதவிவா தஸ்தே மா கங்காம் மா குரூன்கம –
—
மெய்யாம் உயிர் என்கையாலே
ஸத்யஞ்ச–என்றும்
உள்ளதும் -1-2-4- -என்றும் –
மெய்ம்மையை —திருமாலை –38-என்றும் –
சொல்லுகையாலே ப்ரக்ருதி ஸ்வபா வத்திலும் காட்டில் ஆத்ய ஸ்வரூப நித்யத்வம் சொல்லிற்று –
அன்றிக்கே
மெய்யாம் உயிர் நிலை -என்கையாலே
யஸ்ய ஆத்மா சரீரம் -என்கிறபடி
உள்ளவதன் உரு –சரீர சரீரி பாவம் சொல்லிற்று ஆகவுமாம்
உயிர் நிலை யாவது
மெய்ம்மையை மிக உணர்ந்து —திருமாலை –38- என்கிறபடியே
தம் அடியார் அடியோங்கள் –3-7-10-என்றும்
தொண்டன் சடகோபன் –7-1-11-என்றும்
சிறு மா மானிசராய் என்னை ஆண்டார் -8-10-3- என்றும் –
ததீய பர்யந்தமான நிலை — இது இறே ஸ்வ ஸ்வரூப யாதாத்ம்யம் –
இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே –1-2-4-நச்வரமான அசேதனத்தின் ஸ்வ பாவமும் –
ஏக ரூபனான சேதனன் படியும் இன்றிக்கே இருக்கும் அவன் ஸ்வ ரூபம்-இல்லது என்று துச்சத்வம் இத்யாத்வங்களை சொல்லுகிறது அன்று -நச்வரதையைச் சொல்லுகிறது-உள்ளது என்று அஸ்தித்வ மாத்ரத்தை சொல்லுகிறது அன்று -நித்யதையைச் சொல்லுகிறது-அவன் ஸ்வரூபம் தான் இருக்கும் படி என் என்னில் அசங்க்யேய கல்யாண குணங்களை யுடைத்தாய் இருக்கும் –-எல்லையில்லா அந்நலத்தை யுடைத்து -என்னுதல் எல்லையில்லா அந்நலம் -என்னுதல்–
மேம் பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம் பரிசறிந்து கொண்டு ஐம் புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே–38-மெய் -என்கிறது ஆத்மாவை –மெய் -எனபது ஆத்மாவைக் காட்டுமோ -என்னில் —சத்யஞ்சா ந்ர்தஞ்ச சத்ய மவபவத் -என்கிற ஸ்ருதி சாயையால் அருளிச் செய்கிறார் – சத்ய சப்தம் அசத்திய வ்யாவர்த்தியை சொல்லுகிறது அன்று ஆத்ம ஸ்வரூபத்தின் நித்யதையைச் சொல்லுகிறது –மெய்ம்மை -என்று முழுச் சொல்லாய் – பிரத்யக் விஷயத்தைச் சொல்லுகிறது – கைம்மை பொய்ம்மை -என்னுமா போலே–ஆக-மெய்ம்மை -என்று –
மெய்யான தன்மை -என்றபடி –மிக உணர்ந்து –தேகமே ஆத்மா என்று இருக்கும் லோகாயதிகன் அளவன்றிக்கே –தேகாதிரிக்தமாய்-ஸூயமாய் இருக்கும் ஆத்மா என்னும் மீமாம்சகன் அளவன்றிக்கே
ஜ்ஞானம் ஆகந்துகம் -என்னும் வைசேஷிகன் அளவன்றிக்கே –1-ஸுவயம் பிரகாசனாய்-2-நித்யனாய்-3-ஜ்ஞான குணகனாய்-4-அணு வாய்-5-ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷமாய்-6-அது தான் ததீய சேஷத்வ பர்யந்தமாக உணருகை – அதாவது ஆத்மாவை உள்ளபடி உணருகை –
அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.–3-7-10-—தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம் –‘அந்தப் பரம்பொருள் ஈசுவரர்களான சிவன் முதலியோர்களுக்கும் மேலான ஈசுவரன்’ என்கிறபடியே, சேஷித்வத்துக்கு அவனுக்கு அவ்வருகு இல்லாதா போலே-சேஷத்வத்துக்கு தமக்கு அவ்வருகு இல்லாத படி அதன் எல்லையில் நிற்கிறார்-தம்முடைய ருசிக்கு அவதி உண்டாய் மீண்டார் அல்லர்
சந்தஸ் ஸூ முடிய வேண்டுகையாலே மீண்டாராம் அத்தனை –ஐஸ்வரியத்தை ஆசைப்பட்டவர்கள் தம்மோடு ஒத்த இனத்தாரில் ஏற்றத்தை ஆசைப்பட்டு, க்ஷத்திரியர்க்கு மேலே ஆசைப்பட்டு, இந்திர பதத்தை ஆசைப்பட்டு, பிரஹ்மாவின் அளவில் ஆசைப்படுமாறு போன்று, இவரும் இவ்வருகில் எல்லையை ஆசைப்படுகிறார்.–இவ்வாறு ‘சண்டாள சண்டாளர்களாகிலும் – எம் அடிகளே’ என்று கூறுதல் உலக நடைக்கு மாறுகோடல் அன்றோ?’ எனின் ‘இப்படி வைஷ்ணவர்களை விரும்பினால் இது உலக மரியாதைக்குச் சேராதிருந்ததாகில், ஆழ்வார் விரும்பியதை நம்பினவர்களாகிறோம்,’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர். லௌகிக விருத்தம் ஆனாலும் ஆழ்வார் திரு உள்ளப்படி நடந்தோம் ஆவோம் என்றபடி –
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்துக் கெடுக்குமப்
புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே.–7-1-11—நான் எனக்கு என்னப் பண்ணும் இந்திரிய வஸ்யத்தைக்கு அஞ்சி சேஷத்வத்தின் எல்லையில் தாழ நிற்கிறார்–விஷயங்களையும் இந்திரியங்களையும் நினைத்த நெஞ்சாரல் தீர, சேஷத்துவத்தினுடைய எல்லை நிலத்திலே போய் நிற்கிறார்; தாபத்தாலே வருந்தினவன் மடுவிலே தாழ இழியுமாறு போலே.
உறுமோ பாவியேனுக்கு இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்ந்த எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே-8-10-3-–ஸ்ரீ வாமனனுடைய ஸுந்தர்ய சேஷ்டிதாதிகளிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்-ப்ரபாவங்களைப் பார்த்தால் -பரிச்சேதிக்கப் போகாதே -வடிவைப் பார்த்தால் நம்மோடு ஒக்கச் சொல்லலாம் படி இருக்கை –சர்வேஸ்வரன் மனுஷ்ய சஜாதீயனாய் முகம் கொடுத்து கொண்டு இருக்குமா போலே யாயிற்று இவர்களும் -சிறுமை பெருமை யாகிற விருத்த தர்ம த்வய சமாவேசம் ஏக வ்யக்தியில் கூடுமோ -என்று பட்டர் ஆழ்வானைக் கேட்க -நம்மோடு ஓக்க அன்ன பானாதிகள் தாரகம் என்னலாய்-பகவத் விஷயத்தில் அவகாஹனம் பார்த்தால் -நித்ய ஸூ ரிகளோடு ஒப்பார்கள் என்னலாம் படி இருக்கிற -ஆண்டான் -அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஸ்ரீ கோவிந்த பெருமாளார்-இவர்கள் காண் சிறு மா மனுசர் ஆகிறார் -என்று பணித்தான் -என்னை அடிமை கொண்டவர்கள் –கண் வட்டத்தில் சஞ்சரியா நிற்க -அவர்களைத் தவிர்ந்து —நறு மா விரை நாள் மலரடிக் கீழ்—உறுமோ பாவியேனுக்கு–இவருடைய கண்ணி நுண் சிறுத் தாம்பு இருக்கிற படி -ஸ்ரீ மதுரகவிகளுக்கும் அடி இது இறே -பொய் நின்ற ஞானம் தொடங்கி முனியே நான்முகன் அளவும் அனுவர்த்தித்த விடத்து ஆழ்வார் தமக்கு பிரயோஜன ரூபமாக சொன்ன பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கு அடிமையே தமக்கு தஞ்சமாக பற்றினார் -யான்யஸ்மாகம் ஸூ சரிதாநி -என்ன கடவது இறே –
—
தக்க நெறி–யாவது–அத்யந்த பரதந்த்ர ஸ்வரூபத்துக்கு அனுரூபமான உபாயம்
அல்லாதது
தகாத நெறியாய் இறே இருப்பது –-நெறி காட்டி நீக்குதியோ –பெரிய திரு –6-என்னக் கடவது இறே –
நீ யம்மா காட்டும் நெறி –பெரிய திரு –5-
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் –9-1-10-
நெறி காட்டி நீக்குதியோ நின் பால் கருமா
முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈதுரையாய்
என் செய்தால் என் படோம் யாம் —6—நின் பால் நெறி காட்டுகை என்றும் நீக்குகை என்றும் பர்யாயம்
(தொழுதால் எழலாம் -தொழுகையும் எழுகையும் பர்யாயம் )நீ உன் கார்யத்தைச் செய் என்பது விட நினைத்தாரை இறே-ஏஷ பந்தா விதர்ப்பாணா மேஷ யாதி ஹி கோஸலவான் (பாரதம் )-என்று
தன்னுடனே கிடந்த தமயந்தியை உடுத்த புடவையில் ஒரு தலையை அறுத்து வழி இது –இங்கனே போ -என்று விட்டால் போலே இறே தன் பக்கலிலே ந்யஸ்த பரனானவனை உன் ஹிதத்துக்கு நீயே கடவை -என்கை–
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ
மற்றையர் ஆவாரும் நீ -பேசில் -எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த
நீ யம்மா காட்டும் நெறி —-5––அயோக்கியன் என்று அகன்ற என்னுடைய விரோதத்தைத் தவிர்த்த படி
பூதனையால் வந்த இடரை நீக்கினால் போலே இறே –
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10—கிருஷ்ணனை ஒழிய வேறு சரணம் ஆவார் இல்லை என்னும் இவ்வர்த்தத்தை ஸ்தாபிக்கைக்காகவும் -அதுக்கு உறுப்பாக பூ பாரத்தை போக்கி அருளுகைக்கும் ஸ்ரீ மதுரையிலே வந்து திருவவதாரம் பண்ணினான் -உங்களுடைய ஆத்மாத்மீயங்கள் எல்லாம் சேஷியாயும் ஸூலபனானாயும் உள்ள அவன் திருவடிகளிலே சேஷத்வேன த்ருடமாக சமர்ப்பியுங்கோள் – உண்டேல்-என்கிறது ஸ்வ பஷத்தால் இல்லை -அவர்களுடைய அந்யதா பிரதிபத்தியாலே வந்தன உண்டாகில் என்கை –-எண்ண வேண்டா-அவனது நம்மதோ என்று விசாரிக்க வேண்டா -உங்களோடு உங்கள் உடைமையோடு வாசி யற அவனுக்கே சேஷம்
அதாவா-உங்களுக்கு சாத்யமானவை எல்லாம் சாதித்து தருவான் அவன் ஒழிய வேறு இல்லை -சமிதை பாதி சாவித்ரி பாதி யாய் உங்கள் தலையிலும் சிறிது கிடக்கிறது அன்று -அவனே நிரபேஷ உபாயம் -என்றுமாம் –தானே உபாயம் உபேயம் நிலை நிறுத்த ஸ்தாபிக்க அவதரித்து -பூ பாரம் நீக்கி -இது வந்த இடத்தில் செய்த -தர்ம சமஸ்தானம் அர்த்தமாக – நீங்கள் நினைத்து இருப்பதை திருத்தமாக அவன் இடம் சமர்ப்பியுங்கோள் –பலம் எதிர்பார்க்காமல் –கர்மம் செய்து -சர்வம் ஸ்ரீ கிருஷ்ணாப்பரணம் அஸ்து-
உபாய உபேய பாவம் நிலை நிறுத்தப் பட்டு நிற்க-தானே புகலிடம் -என்னும் உண்மையை-நிலை நிறுத்துவதற்காக அவதரித்த ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளைப் பற்றுமினோ –என்கிறார்–உங்களுடைய பாரத்தில் நீங்கள் செய்ய வேண்டுமவை அனைத்தும்- உங்கள் தலையில் கிடக்கின்றன அல்ல –எல்லாம் அவன் பக்கலிலே கிடக்கின்றன–
சரீர ரக்ஷணம் சரீரிக்கே பரம் இறே
மாஸூச
என்னுடம்பில் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ -என்று இறே அவன் வார்த்தை
எம்மை ஆளும் பரமரே –3-7-1- என்று ததீய சேஷத்வம் ஸ்வரூபம் ஆனால்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பர் –3-7-7-என்றவர்களே உபாயமாகவும் வேணும் இறே –
தக்க நெறி-ததீய உபாயமாகவுமாம் –-உபாய யாதாத்ம்யம் இதுவே இறே –
பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மை ஆளும் பரமரே.–3-7-1--ஒன்றன் மேல் ஒன்றாக நிரந்தரமாய் வருகிற ஜென்மங்களில் அவகாசம் தோறும் என்னை அடிமை கொள்ளும் ஸ்வாமிகள்-நின் பன் மா மாய பல் பிறவி -என்று நிந்தித்த ஜன்மத்தையும் அனுமதி பண்ணுகிறார் ததீய சேஷத்வ ரசத்தாலே
பரமரே.– முன்பு அவனை பரமர் என்றீர் – இங்கே இவர்களை பரமர் என்னா நின் றீரே -என்ன
அனுபாவ்ய குண ஆதிக்யத்தாலே சொல்லிற்று அங்கு இங்கு அக் குணத்துக்கு தோற்றவர்களை சொல்லுகிறது தத் சம்பந்தம் ஒழிய சொல்லில் பகவத் சம்பந்தம் அற்றதாம் –எவரேலும்’ எனின், அமையாதோ? ‘பயிலுந் திருவுடையார்’ எனல் வேண்டுமோ?’ எனின், அந்தச் சம்பந்தம் ஒழியச் சொல்லில் பகவானுடைய சம்பந்தம் அற்றதாம்.-குண க்ருத தாஸ்யம் -அவன் இடம் பாகவதர்கள் பண்ண –நான் ஸ்வரூப பிரயுக்த தாஸ்யம் இவர்கள் பக்கல் என்கிறார்–
சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.–3-7-7-ததீய சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வத்தை தந்து —பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருத்தலை எல்லையாகவுடைய பகவானுக்கு அடிமைப்பட்டிருத்தல் ஆகிற செல்வத்தை உண்டாக்கி-–அத்தை யாவதாத்மபாவி நடத்தக் கடவ விச்வஸ நீயர் –நமக்கு அவன் திருவடிகளில் கைங்கரியத்தை உயிர் உள்ள வரையிலும் நடத்தக்கூடிய நம்பத்தக்கவர்கள்;--முதலிகள் என்றுமாம் –
—
தடையாகித் தொக்கி இயலும் ஊழ் வினை–யாவது-ஊழ்மை –பழமை
வினை -கர்மம்-விரோதியாய்த் திரண்டு வர்த்திக்கிற ப்ராரப்த கர்மம் -என்கை –
முன் செய்த முழு வினை –1-4-2-
பாரமாய பழ வினை –அமல –4-என்னக் கடவது இறே
பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் –திரு விருத்தம் –1-
அவித்யா கர்மா வாஸனா ருசி ப்ரக்ருதி சம்பந்தம்
பகவத் ஸ்வரூப திரோதாநகரி இறே தேகம்–
என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே –1-4-2—அநாதி கால சஞ்சிதமான பாபத்தாலே -பாபம் சாவதியாதல் -பாபம் பண்ணின காலம் சாவதி யாதனால் அன்றோ என் கையில் என்னைக் காட்டித் தருவது-–அவற்றுள் ஏதேனும் அகஞ்சுரிப்பட்டது உண்டோ? ‘இன்று’ என்றபடி,
அதாவது, ‘காலம் ஒரு வரையறைக்குட் பட்டிருந்து, அக்காலங்களில் நான் செய்து போந்த பாவங்களும்
ஒரு வரையறைக்குட் பட்டிருப்பின் அன்றோ என்னால் போக்கிக் கொள்ள முடியும்?’ என்பதாம்.
‘ஆயின், அத்தகைய தீவினைகளை யுடைய நீர் இறைவனைச் சார்தல் எவ்வாறு முடியும்?’ எனின்,
இறைவனால் அத் தீவினைகளைப் போக்க ஒண்ணாது ஒழியின் அன்றோ நான் இழக்க வேண்டுவது?
இங்கே ‘ஒரு முழுக்காலும் இரண்டு முழுக்காலும் போகாது காண்–இதிகாசம் -பட்டர் திருக் கோட்டியூரிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே -தெற்கு ஆழ்வானும்-கோளரி ஆழ்வானும் என்று இருண்டு திருப்பதியார் உண்டு-கோளரி ஆழ்வான் சதாசார பரனாய் இருக்கும் -தெற்கு ஆழ்வான் மேல் எழத் திரியும்-ஒரு விசேஷ திவசத்திலே இருவரும் சேர்ந்த அளவிலே கோளரி ஆழ்வான் தெற்கு ஆழ்வானை இன்று ஆகிலும் ஒரு முழுக்கு இட மாட்டாயோ -என்ன –என்னுடைய பாபம் தெற்கு ஆழ்வார் கையில் திரு ஆழி யாலே போக்கப் போமது ஒழிய ஓர் இரண்டு முழுக்கால் போம் அதன்று காண் என்ன அத்தைக் கேட்டு இவனை மேல் எழ விசாரித்தோமே-என்று வித்தராய் அருளினார் பட்டர் –
பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன்
வாரமாக்கி வைத்தான் வைத்த தன்றி யென்னுள் புகுந்தான்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான் திரு
ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே —–5-சர்வ சக்தியான சர்வேஸ்வரனே தள்ளும் இடத்திலும் ஒரு நிலை நின்று தள்ள வேண்டும்படி யிருக்கை –-சம்ஹரிப்பதும் நரகத்திலேயாய் -ஸ்ருஷ்டிப்பதும் நரகத்திலேயாய் இருக்கை-காலம் அநாதி –-ஆத்மாவோ நித்யன்-அசித் சம்சர்க்கமும் உண்டு இறே –-இக் காலம் எல்லாம் கூடக் கூடு பூரித்தாதாய் இருக்கும் இறே – சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்று அவன் தானே தள்ள வேண்டும்படி இருக்கை-வானக் கோனை கவி சொல்ல -வல்லேன் என்கிறபடியே – மலக்கு நா வுடைய நம்மாழ்வாரும் வகை சொல்ல மாட்டாதே –தொன் மா வல் வினைத் தொடர் -என்று திரளச் சொன்னாப் போலே -இவரும் பாரமாய -என்கிறார் –கால தத்வம் உள்ளதனையும் ப்ராயாச்சித்தம் பண்ணினாலும் கழிக்க ஒண்ணாத படி உபசிதமாய்க் கொண்டு அநாதி காலம் நடக்கிற சம்சாரிக கர்ம கலாபத்தை கர்மத்தின் உடைய கனத்தினாலே அல்ப சக்தனான தான் சமபாதித்ததாய் இருக்கச் செய்தேயும் –-வகை சொல்லப் போகாதபடி இறே இருப்பது –சர்வ சக்தியான அவன் போக்கும் போதும் வகையில் போக்கப் போகாது -தொகையில் போக்கும் -இத்தனை வகையான தான் சதுர்வித தேக ப்ரேவேசத்துக்கு ஹேதுவாய் இருப்பனவும் – பரிக்ரஹ தேகத்தில் பிறக்கிற ருசிக்கு அடியாய் இருப்பனவும் – விஷய ப்ராவண்யத்துக்கு அடியாய் இருப்பனவும் – தேவதாந்தரங்களுக்கு உத்தேச்யம் என்று இருக்கும் புத்திக்கு அடியாய் இருப்பனவும் – ஈஸ்வரனைப் பற்றி நிற்க பிரயோஜனாந்தரன்களைப் கொண்டு அகலுகைக்கு ஹேதுவாய் இருப்பனவுமாக ஒரு சுமையாய் இறே இருப்பது-அதுக்கு மேலே விஹித அனுஷ்டானத்தாலும் நிஷித்த அசரணத்தாலும் பாப கர்மாக்களோட்டை சஹவாசத்தாலுமாக த்ரி விதமாய் இறே இருப்பது – அவை தான் மானஸ வாசிக காயிக ரூபேண த்ரி விதமாய் இறே இருப்பது –யத் ப்ரஹ்ம கல்ப நியுதா நுபவேப்ய நாச்யம் தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஜந்துரிஹ ஷணார்த்தே-என்கிறபடியே பல அநந்தயத்தை -பாரமாய -என்கிறதாகவுமாம் –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1–-அநாத்மநி ஆத்ம புத்தி -அஹங்காரம்–அந்யதா ஞானம்–பிரகிருதி ப்ராக்ருதங்களைப் பற்றிய ஞானம்-தேகத்துடன் -அனுபந்தி -சம்பந்தி -புத்ராதிகள் பற்றிய ஞானம்-ஸ்வர்க்காதிகள் -ஆத்ம அனுபவம் என்று தப்பாக புரிதலும்-அஸ் வேஸ்ய புத்தியையும் –பொய்யான விஷயங்களைப் பற்றி நிற்கையாலே-நஸ்வரம் விஷயமாகக் கொண்ட அறிவு -எப்பொழுதும் மாறும் அசேதனத்தைப் பற்றிய ஞானம்-த்யாஜ்யம் என்று அறிய வேண்டும்–அநித்யமானதை நித்யம் என்றும்-அபோக்ய மானதை போக்யம் என்றும் -அஸ்திரமானதை ஸ்திரம் என்றும் -அல்பமானதை நிறைவாக என்றும்–நாஸ்தி -என்றால் அஸ்தி யாக இருந்து நாஸ்தி ஆவது-தத்வ தர்சிகள் நிர்ணயம் அசத்துக்கு பாவம் வராது -சத்துக்கு அபாவம் வராது –இப்படி யதார்த்த -ஒருபடிப்பட உள்ளதால் –உத்பத்தி விநாசாதி யோகத்தாலே அஸத்ய ஸப்த வாஸ்யமான அசேதன விஷயத்தில் ஆத்ம ஞானமும்–ஸ்வரூப அந்யதா ஞானம் -விபரீத ஞானம் -தேஹாத்ம அபிமானம்-ஸ்வ பாவ அந்யதா ஞானம் -அந்யதா ஞானம் -பரதந்த்ரனான தன்னை ஸ்வ தந்த்ரனாக நினைக்கை-உத்தேசியத்தை ஒழிந்த அர்த்த ஞானங்கள் அனைத்தும் அஞ்ஞானம்-காண்கின்ற ப்ரக்ருதி பொய் என்னலாமோ என்னில்-சூன்யவாதியைப் போலேயாய் என்கிறது அன்று-மாயாவாதி போலே துச்சம் என்கிறது அன்று-ஆத்மாவைப் போலே ஒருபடிப் பட்டு இராமையாலே-ஆத்மா ஏக ரூபமாய் இருக்கும் இறே-அநாத்மன்யாத்மா புத்தியையும் -சொல்லுகிறது – ஜடமாய் இருக்கும் தனக்கு ஞானமும் பாரீர்-பரிணாமம் இல்லாத ஆத்மா பரமாத்மா பற்றிய ஞானமே ஸத்யம் -அதுவே அஸ்தி -ஷட் பாவ விகாரம்-அஸ்தி பிறக்கிறது மாறுதல் வளர்ந்து தேய்ந்து முடிதல்–சம்சார பிரக்ருதியைப் பொய் என்கிறது –நின்ற
இது தான் என்றும் ஒக்க நிலை நின்ற படி -அழுந்தின படி –ஞானமும்-ஜடமாய் இருப்பதுக்கு தனக்கு – ஞானம் என்பது பாரீர் -இதுக்கு ஞானம் என்ற பெயரா-தேஹாத்ம அபிமானம் அஞ்ஞானம் தானே–பொல்லா ஒழுக்கும்-ஞான கார்யமான விருத்தம் அனுஷ்டானம் உண்டாகில்–ஞானம் இல்லையாகில் நல்ல அனுஷ்டானமும் இருக்காதே–அஹம் சர்வம் கரிஷ்யாமி–குருஷ்வமாம் அநு சரம் என்று இருக்கும் ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தம் இன்றியே கண்டது அடைய அஹம் என்று இருக்கை-பொய் நின்ற ஞான அனுகுணமான பர த்ரவ்ய அபஹாராதி சாரித்ரமும் -(துராசாரங்கள் என்றபடி )அழுக்கு உடம்பும் –
இதுக்கு எல்லாம் அடியான ஹேயமான சரீரமும்–மகா பாரதம் எல்லாம் கூளமும் பலாப்பிசினும் போலே
பிரகிருதி புருஷ விவேகம் பண்ண மாட்டிற்று இல்லை-இவர் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே மூன்று பதத்தாலே பிரகிருதி புருஷ விவேகம் பண்ணி அருளினார்–இந் நின்ற நீர்மை –
இப்படி நிலை நின்ற ஸ்வபாவம் –உதிரக் கூறை காட்டுகிறார் -என்று அம்மாள்–ஏஹீ பஸ்ய சரீராணி -ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ருஷிகள் பெருமாளுக்கு ராஷசர் தின்ற உடம்பை காட்டினால் போலே-
பிரகிருதி தின்ற ஆத்மாவைக் காட்டுகிறார் -ஆளவந்தார்–ஆழ்வார் பிறர் படியை காட்டுகிறார்-அம்மாள் நிர்வாஹம்-தம் படியைக் காட்டுகிறார் -ஆளவந்தார் நிர்வாஹம்—இது ஒரு வெட்டு -பொய் நின்ற ஞானம்-இது ஒரு வெட்டு – பொல்லா ஒழுக்கம் இது ஒரு வெட்டு -அழுக்கு உடம்பு–ஆச்சார்யன் உபதேசத்துக்கும் கேளாதே பிரமாணங்களாலும் பேதிக்க ஒண்ணாதே இதுவே ஸ்வரூபம் என்னலாம் படி இருக்கை–தேவரீர் திருவடிகளுக்கு இட்டுப் பிறந்த இஜ் ஜன்மம் தப்பாமே பட்டேன் இது என்று கருத்து –இவற்றிலே நிலை நின்று போந்த வாஸனா ருசிகள் ஆகிற ஸ்வ பாவ விசேஷத்தை
(நின்ற நீர்மை விட்டுப் பிரியாத ஸ்வ பாவங்கள் )-அநாதி காலம் பரம புருஷார்த்தத்தை இழந்து சம்சாரத்தில் அகப்பட்டுக் கிடந்த இதில் அநு தாபம் தோற்றும் படி(நீர்மை )
விரோதி ஸ்வரூப யாதாத்ம்யம்
அஹங்கார –மமகாரங்கள்
யானே என்னை அறிய கிலாத யானே என் தனதே என்று இருந்தேன் –2-9-9-
நீர் நுமது என்ற இவை வேர் முதல் மாய்த்து –1-2-3-
பீஜம் ஏதத் த்விதா ஸ்திதம்
முன்னமே –திரு விருத்தம் –95-
என்னும்படி அநாதியாய்ப் போருவது –
யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9—என் இழவு பகவத் க்ருதமல்ல –-மத் பாபமே -பரதன் -மந்தரை கைகேயி தயரதன் கௌசல்யை பெருமாள் இல்லை தானே என்றால் போலே-க்யாத-பிராஜ்ஞ-சத் வ்ருத்த -சங்கே -மத் பாப சம்ஷபயாத் -இழந்தேன் சீதை -என்றால் போலே-அவனுக்கு கலக்கம் இல்லாமையால் -தன்னைத் தருகைக்கு எதிர் சூழல் புக்கு திரிய -நான் என்னை முடிய சூழ்த்துக் கொண்டேன்–ராஜ புத்ரன் வேடன் கையிலே அகப்பட்டு தன்னை வேடனாக பிரதிபத்தி பண்ணுமா போலே -சர்வேஸ்வரனுக்கு பிரகார பூதனான என்னை அறியாதே–தேஹாத்ம அபிமானத்தாலே என்னை அவனுக்கு பிரகாரம் என்று அறிந்திலேன்–ஈஸ்வரோஹம் என்று இருந்தேன்-இவன் நான் என்றால் ஈஸ்வரனுக்கு கிட்ட அரிதாய் இறே இருப்பது–நானும் எனக்கு உரியேன் இன்றிக்கே இருக்க எனக்கு ஒரு உடைமையும் உண்டாக நினைத்து இருந்தேன்-தேகத்தை ஆத்மாவாகவும் -ஈஸ்வர விபூதியை என் உடைமை யாகவும் இந்த விபரீத அஞ்ஞானமே யாய் இருந்தேன்-இப்படி ஸ்வரூபம் நசித்துக் கிடைக்க அனுதாபம் இன்றிக்கே க்ருதக்ருத்யனாய் இருந்தேன்-அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருக்கை பிராப்தமாய் இருக்க ஒரு கார்யம் இல்லாதாரைப் போலே இருந்தேன்-இப்படி நெடுநாள் போருகிற இடத்திலே ஒரு நாள் அனுதாபம் பிறக்கவுமாம் இறே – அது அன்றிக்கே க்ருதக்ருத்யனாய் நிர்ப்பரனாய் –இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே -இருந்தேன்–தீ வினையேன் வாளா விருந்தேன்-ஒரு கார்யம் இல்லாதாரைப் போலே கை ஒழிந்து இருந்தேன் –-முடிந்தேன் -என்றால் போலே இருக்கிறது இறே-ஒரு நாள் இழவே போந்திருக்க அநாதி காலம் இழந்து போந்தேன்
நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர் மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லே–1-2-3—அனர்த்த கரமான அஹங்கார மமகாரங்களை
நான் என்னது -என்னும் அர்த்தத்தை பிறர்க்கு உபதேசிக்கப் புக்கால் -நீங்கள் என்றும் உங்களது என்றும் இறே சொல்லுவது-அதாகிறது -அனாத்மயாத்மா புத்தியும் அஸ்வே ஸ்வ த்வய புத்தியும்
நான் என்னது — என்னில் நா வேம் இறே—ஈண்டு அதிகாரம் பிறர்க்கு உபதேசிக்கும் முன்னிலை இடமாதலின், ‘யான், எனது’ என்னும் தன்மைப் பெயர்களை ‘நீர் நுமது’ என முன்னிலையாக அருளிச் செய்கிறார்.-அன்றிக்கே – செருக்கினைப் புலப்படுத்தும் அச் சொற்களைத் தாம் தம் திருவாயால் கூறுதற்கு, அஞ்சி‘நீர், நுமது’ என்கிறார் எனலுமாம்; ‘கூறின், நாக்கு வேம்,’ என்பது கருத்து.–நன்று ‘என் உடைமை’ என்னுமது வேணுமாகில் தவிருகிறேன்; ‘நான்’ என்னுமது தவிரும்படி என்?’ என்னில்,
இவன் ‘அஹம்’ என்றால், இராவணன் முதலியோர் ‘நான்’ என்றாற்போன்று பிறருடைய நானைத் தவிர்த்துக் கொண்டு அன்றே இருப்பது? சரீரத்தில் அஹம் புத்தி பண்ணிப் போருமது தவிர வேணுமே!-அனாத்மன்யாத்ம புத்திர்யா அச்வேஸ் வமிதி யாமினி அவித்யாதரு சம்பூதி பீஜமேதத் த்விதாஸ்திதம்-என்று (‘உயிர் அல்லாத சரீரத்தில் உயிர் என்ற புத்தியும், தன்னைச் சார்ந்தன அல்லாதவைகளில் தன்னுடையவை என்னும் புத்தியும், அறிவின்மையாகிற மரம் தோன்றுவதற்கு இரண்டு விதைகளாய் இருக்கின்றன’, ) என்று சம்சார பீஜமும் —அச்யுதாஹன் த்வாச்மீதி சைவ சம்சார பேஜஷம் –‘அடியார்களை நழுவ விடாத அச்சுதனே! நான் உனக்கு அடியவனாய் இருக்கிறேன் என்று நினைக்கும் அறிவானது, பிறப்பினை மாற்றுதற்கு மருந்தாக இருக்கின்றது’,_)என்று பரிஹாரமும் –-சொல்லிற்று இறே –இவற்றை சவாசனமாகப் போக்கி-இது அக்னி நா சிஞ்சேத்-போலே துஷ்கரம்-இவை நேராக விடும் போது பகவத் விஷயத்தைப் பற்றி விட வேணும்-அவனைப் பற்றும் போது இவற்றை விட்டு அல்லது பற்ற ஒண்ணாது-ஆகையாலே இதரே தராஸ் ராயக்ரச்தம்-ஆனால் இதற்குப் பொருள் என் -என்னில் -ஆச்சார்ய சேவையாலும் சாஸ்திர அப்யாசத்தாலும் இவை அபுருஷார்த்தம் என்று அத்யவசிக்கை-இரண்டு வ்ருஷம் சேர நின்றால்-ஒன்றிலே குட்டமிட்டுப் பெருங்காயத்தை வைத்தால் மற்றையது நிற்க இது க்ரமத்தால்-உலர்ந்து போமா போலே -இந்த ஜ்ஞானம் பிறந்தால் இவை ஸ்வ கார்யம் செய்ய மாட்டாது –பீஜான் யக் ந்யுபதக்தானி -இத்யாதி-ரஷகன் அவசர ப்ரதீஷனாய் இருக்க இவன் பக்கலிலே விலக்காமை யுண்டானால் விரோதி போகைக்கு தட்டில்லை என்கை –ஆதலால்,ரக்ஷகனானவன் – அளிக்குமவன்-அவசர பிரதீஷகனாக – ‘எப்போது பாதுகாப்போம்’ என்று சமயத்தை எதிர் பார்த்துக் கொண்டிருக்க, இவன் பக்கல் விலக்காமை உண்டானால் விரோதி போகத் தட்டு இல்லை என்கை.
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – -95–யாதேனும் ஓர் ஆக்கையில் புக்கு –ஏதேனும் ஒரு சரீரத்தில் பிரவேசித்து –அது தண்ணிய ஸூ கர-ஜன்மாவில் (ஸூ கர -பன்றியாய் )ஜனித்தாலும் –மம அயம் தேக -என்று அதிலேயே அபிமானித்து – அங்கே-உண்டானவத்றோடு சில சம்பந்த விசேஷங்களும் –அவை தன்னை விட மாட்டாமையாலேயாய்-போரா நிற்கும் ஆயிற்று –ஆக்கை -என்கையாலே-உபசயாத்மகம் என்று தோற்றுகிறது-(தேகம் வளர்ந்து -சரீரம் தேய்ந்து )புக்கு –சேதனனுக்கு அசித் சம்சர்க்கம் ஸ்வதா உள்ளது ஓன்று அன்று –-கர்ம நிபந்தனம் என்கை –அங்கு ஆப்புண்டும் –-கர்ம வாசனையாய்- ருசி வாசனையாய் -அதிலே பத்தனாய் இருக்கும் –இது தண்ணிது என்று ஆசார்ய உபதேசாதிகளாலும் –சாஸ்திர வாசனையாலும் – பிரத்யஷத்தாலும்-அறியா நிற்கச் செய்தே –இத்தை விடில் செய்வது என் என்று துணுக் துணுக் என்னா நிற்கும் –ஆப்புண்டும் –சிநேகத்தைப் பண்ணியும் –ஆப்பு அவிழ்ந்தும் –கர்மம் அடியாக வந்தது என்று அறியாதே –அவன் தான் இதிலே இலை அகலப் படுத்தா-நிற்கும் –கர்ம ஷயம் வந்தவாறே=அது தான் குலைந்து கொடு நிற்கும் இறே –மூதாவியில் –இத்தால் பழைமையை நினைக்கிறது-ஆவி -என்று பிராணனாய் –அசித் விசேஷமாய் பிராணனாய் இருக்கையாலே-இப்போது ஸூஷ்ம சரீரத்தை ஆவி என்கிறது –இது தன்னை பிரகிருதி கார்யம் என்பாரும் உண்டு –பிரகிருதி அம்சம் என்பாரும் உண்டு –இது தான் மோஷ தசை அளவும் அனுவர்த்திக்குமது —சேதனனுடைய கமந ஆகமநாதிகளுக்கும் உடலாய் இருக்கும் –தடுமாறும் –பஞ்சாக்னி வித்தையில் சொல்லுகிறபடியே மேகங்களில் புக்கு –-வர்ஷ முகத்தாலே-பூமியிலே பதித்து –அந்த முகத்தாலே புருஷன் பக்கலிலே அந்வயித்து –சுக்ல சோணித ரூபத்தாலே -ஸ்த்ரி பக்கலிலே-சங்க்ரமித்து – இப்படி தடுமாற்றமாய் இருப்பது –இச் சேதனனுக்கு புக்க புக்க இடம் எங்கும் தடு மாற்றமே உள்ளது –அத்தை தான் அறிந்த இடமும் அறியாத இடமுமாய் இருக்கும் –உயிர் –ஜ்ஞான ஆனந்த லஷணமாய்- நித்தியமான வஸ்து கிடீர் இப்படி படுகிறது –இப்படி தடுமாறி சம்ஸரிக்கிறது என்று தொடங்கி என்றால் –முன்னமே –அநாதியாய் போருகிறது ஆயிற்று –அதனால் –அந்த வாசனையே உபாத்யாயராக –முன்னமே யாகையாலே –ஆழ்வார்தாமே திருவாய்மொழியில்
‘சோர்ந்தே புகல்கொடாச் சுடரை யரக்கியை மூக்கீர்ந்தாயை, அடியேனடைந்தேன் முதல் முன்னமே’ என்றருளிச் செய்கிறார்; அசித் ஸம்பந்தத்தின் அநாதித்வத்தைத் தெரிவிக்கிற அப்பாசுரத்தில் ‘முதல் முன்னமே’ என்றதையும் குறிக்கொள்க.‘எதந்நிமித்தம் முன்னமே முதலமுன்னமேயான அசிதயநாநாதி ஸம்பந்தங்கள்” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸூக்தியும் ஸ்மரிப்பது.
இது தான் அனுகூலர் பக்கல் அநாதாரத்தைப் பிறப்பிக்குமதாய் இருக்கும் – அது தான் தேஹ ஆத்ம பிரம மூலமாகையாலே ஸ்ரீ வைஷ்ணவர்கள் திறத்தில் ஜென்ம நிரூபணத்தில் மூட்டி -அநர்த்தத்திலே பர்யவசிக்கும் – அதிலே ஓன்று அவர்கள் பக்கல் ஜென்ம நிரூபணம் –ஸ்ரீ வசன பூஷணம் –195-என்றார் இறே –
மன் பக்கல் சேவிப்பார்க்கு அன்பு செய்வார் சென்ம நிரூபணமும் ஆவிக்கு நேரே அழுக்கு -ஸப்த காதை –5- என்று ஆயிற்று அதன் குரூரம் இருப்பது –
அமரவோரங்கம் இத்யாதி –திருமாலை–
அவற்றில் ஓன்று தான் அவர்கள் பக்கல் ஜன்ம நிரூபணம் –195-ஜன்ம நிரூபணம் ஆவது நிக்ருஷ்ட குலங்களிலே யவதீர்ணரான பாகவதர்களை பகவதீயத்வ பிரயுக்தமான மஹாத்ம்யத்தைப் பாராதே நிகர்ஷ புத்யா தத்தம் ஜன்மங்களை நிரூபிக்கை-மீனாகவும் ஆமையாகவும் வராஹமாகவும் -அவதாரம் போலே இந்த பாகவதரும் –எக் குற்றவாளர் -ஏது பிறப்பு ஏது இயல்வு —எக் குலத்தார் — அக் குற்றம் அப் பிறப்பே அவ் வியல்வே -நம்மை ஆள் கொள்ளுமே –ராமானுஜர் திருவடிகளைப் பற்றி பின்பு இவை இருக்காதே –
என் பக்கல் ஓதினார் இன்னார் எனும் இயலவும்
என் பக்கல் நன்மை எனும் இயல்வும் –மன் பக்கல்
சேவிப்பார்க்கு அன்புடையோர் சன்ம நிரூபணமும்
ஆவிக்கு நேரே அழுக்கு—-5-பதிம் விச்வச்ய-என்றும் ஜகத் பதீம் -என்றும் நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -என்றும் இறைவா -என்றும் சொல்லுகிறபடியே சர்வ ஸ்வாமியான எம்பெருமான் பக்கலிலே
சிநேக பூர்வ அநு த்யானம் பக்திரித்யபி தீயதே பஜ இத்யேஷ தாதுர் வை சேவாயாம் பரி கீர்த்தித –
என்னும்படியாக சிநேக பூர்வகமாக நித்ய சேவை பண்ணுமவர்களுக்கு நடையா வுடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் -என்கிறபடியே பரம ஸ்நேஹிகளாய்க் கொண்டு அசேஷ சேஷ வ்ருத்திகளிலும் அந்விதராய் சஹஜ தாஸ்யத்தை யுடைய ராய் இருந்துள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் இடத்திலே வைஷ்ணவோத்பததி சிந்தனம் மாத்ரு யோநி பரீஷா யாஸ்துல்ய மா ஹூர்மநீஷிண-என்று
மாத்ரு யோநி பரிஷை யோடு ஒக்க சாஸ்த்ரங்களில் சொல்லப் படுகிற ஜன்ம நிரூபணமும்-ஜன்ம நிரூபணம் ஆவது –ஜாதி நிரூபணம்-இது குற்றத்துக்கும் இழவுக்கும் உப லஷணம்–பகவத் பக்தி தீபாக் நிதக்த துர்ஜாதி கில்பிஷா -இத்யாதி களாலே தத் ப்ரபாவத்தாலே விச்வாமித்ரனுக்கு ஷத்ரியத்வம் நிவ்ருத்தமானாப் போலே பகவத் பிரசாதத்தாலே துர்ஜாதி நிவ்ருத்தமாம் என்று சொல்லுகையாலே
அவர்கள் பக்கல் ஜன்ம நிரூபணம் -அதஸ்மிம்ச்தத் புத்தியாய் இறே இருப்பது –அன்புடையோர்
நிதி யுடையோர் -என்னுமா போலே இதுக்கு மேற் பட்டு இருப்பதோர் சம்பத்து இல்லையே அன்புடையோர் சன்ம நிரூபணம் –ஆவிக்கு நேரே அழுக்கு- மற்றையார் இடத்தில் ஜன்ம நிரூபணம்
யதா வஸ்த்தித்த வஸ்து விஷயம் ஆகையாலே அழுக்கு அன்று போலே காணும் –அஞ்சு பொருளும் அளித்தவன் பால் அன்பிலாமை நித்தியமான ஆத்மவஸ்துவுக்கு நேர் கொடு நேர் நாசகம் ஆனால் போலே என் பக்கல் ஓதினார் இன்னார் எனும் இயல்வு -முதலான இம் மூன்றும் ஆத்மாவுக்கு நேர் கொடு நேர் நாசகம்-
அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்கள் ஏலும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மா நகர் உளானே –43–நுமர்களைப் – தேவரீர் அபிமானத்துக்கு உள்ளே அடங்கி பிராப்ய பிராபகங்கள் தேவரீரே என்று அத்யவசித்து – உடையவனே உடைமைக்கு நிர்வாஹகன் – உடைமையை விநியோகம் கொள்ளுவானும் அவனே என்று இருக்குமவர்களை –பழிப்பர் ஆகில்-பகவத் பிரபாவத்தை அஹங்காரத்தாலே விஸ்மரித்து – அவர்கள் உடைய ஜன்ம மாத்ரத்தையே புத்தி பண்ணி – தங்களைக் காட்டில் குறைய நினைப்பார்கள் ஆகில் –பழிப்பாகிறது -குற்றம் –-அதாகிறது-பகவத் அபசாரங்களில் தலையான அபசாரம் – உகந்து அருளின நிலங்களிலே த்ரவ்ய மாத்ரத்தையே புத்தி பண்ணி குறைய நினைக்குமா போலே வைஷ்ணவர்கள் ஜன்ம மாத்ரத்தையே புத்தி பண்ணி குறைய நினைக்கை-பழிப்பர் ஆகில்– கொண்டாடுகையே யாய்த்து பிராப்தம் – அஹங்காரம் ஆகிற ஒரு முசலவன் -பேய்-ஏறி பிரமித்த போது இறே-அவர்களைக் குறைய நினைப்பது –இப்படி கூடிற்று ஆகில் –நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே –காலாந்தரே தேசாந்தரே தேகாந்தரே -அன்று அந்த ஷணத்திலே அவ்விடத்திலே–புனிதம் அன்றே -என்ற நன்மையாலே
தீமை வரும் இடத்தில் விளம்பம் இல்லை –அவர்கள் தாம் புலையர் போலும் – அத் தேகத்தோடு சண்டாளர்கள் ஆவார்கள் – த்ரிசங்குக்கு ப்ராஹ்மன சாபத்தாலே கழுத்திலே வீர சங்கிலி தானே வாரானாப் போலே இவனுக்கும் மார்வில் இட்ட பூணூல் தானே வாராய் விடும் –தாம் புலையர் –
கீழ் சொன்ன ஜன்மாதிகளில் உத்கர்ஷங்கள் அபிமான ஹேது வாகையாலே அவை தானே இவர்களுக்கு அநர்த்த ஹேது வாய் விட்டது –ஜாதி சண்டாளனுக்கு ஒரு காலத்திலே வைஷ்ணவன் ஆகைக்கு அதிகாரம் உண்டு – இவன் உயர வேறித் தானே விழுந்தவன் ஆகையாலும் பாகவத அபசாரம் ஆகிற மகா பாபத்தை பண்ணினவன் ஆகையாலும் அவனிலும் தண்ணியன் கர்ம சண்டாளன் இறே –பிள்ளை பிள்ளை ஆழ்வானுக்கு ஆத்ம ஹிதம் சொன்ன சமனந்தரத்திலே
ஆழ்வான் பணித்த வார்த்தையை ஸ்மரிப்பது –அரங்க மா நகர் உளானே –ந ஷமாமி கதாசன -என்ற
தேவரீர்க்கு இறே -பாகவத அபசாரத்தின் தண்மை தெரிவது –கர்ம யோக உபாய நிஷ்டர்க்கு ஸ்வ கதமான உபாயாந்தரங்களில் ந்யூநாதி ரேகங்களைப் பற்றி இருக்கலாம் –பகவத் சம்பந்தம் கொண்டு பெற இருக்கிற பிரபன்னனுக்கு பாகவத அபசாரம் ஆகிறது பகவத் சம்பந்தத்தை அறுக்கும் ஆகையாலே பெறவில்லை –பெறுகைக்கு அவர்கள் சம்பந்தமே அமைகிறாப் போலே
இழக்கைக்கும் அபசாரமே அமையும்—ஆகையால் பிரபன்னனுக்கு பயப்பட்டு நோக்க வேண்டுவது
தேவதாந்தர சம்பந்தமும் பாகவத அபசாரமும் –ஆகும் பகவத் விஷயத்தில் ஒரு ஆனுகூல்யம் பண்ண வேண்டுவது இல்லை –இவை இன்றிலே ஒழிந்தவனுக்கு ஈஸ்வரன் ஸூ லபனாம் –
—
வாழ் வினை-யாவது
வாழ்வை -என்றபடி –
வாழ் வினை -என்று முழுச் சொல்
வாழ்வாவது
நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சியைப் பெற்று –3-2-4-
வாழ்வு எய்தி ஞாலம் புகழ வாழ்வர் –3-3-11-என்றபடி –
சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே –3-2-4-சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்-எல்லாவற்றையும் சூழ்ந்து இருக்கிற ஞான பிரபையை யுடைத்தான ஸ்வயம் பிரகாச ஸ்வரூபனாய் -சர்வ காலத்திலும் விகாசமும் சங்கோசமும் இன்றிக்கே சர்வ பிரதேசத்திலும் பரிபூர்ணமாக வியாபித்து
ஊரை வளைத்து ஒருவனைப் பிடிக்குமா போலே என்னை அங்கீ கரித்த ஸ்வாமியே உன்னை ஒழிந்த ஸமஸ்த விஷயங்களிலும் கால் தாழ்கை தவிர்ந்து ப்ராப்தனான உன்னுடைய போக்யமான திருவடிகள் இரண்டின் கீழே பரதந்த்ரனாய் வாழும் வாழ்க்கையை இதுக்கு முன் அன்வயித்து அறியாத நான் பிராபிக்கும் பிரகாரத்தை அவதார முகத்தாலே என் முன்னே வந்து நின்று அருளிச் செய்ய வேணும்-வ்யாப்தமான ஸ்வரூபத்தால் போராது என்று கருத்து –சாயா வா சத்துவம் அநு கச்சேத்–வா ஸூ தேவா தருச்சியா –என்னக் கடவது இறே–அந்தர்யாமித்வத்தால் ஒண்ணாது – வந்து அவதரித்து உன் குண சேஷ்டிதங்களாலே புறம்பு போகாத படி பண்ணிச் சேர்த்து அருள வேணும் –வந்தே –அது தானும் முகம் தோற்றாத படி நின்று அருள வொண்ணாது;-என் கண்களுக்கு இலக்காம்படி இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைப் போன்று, எனக்காக ஓர் அவதாரத்தை பண்ணியே யாகிலும் வந்தருள வேண்டும்.
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழிற் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ்இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே.–3-3-11-–ஸ்ரீ வாமனான தன்னுடைய குண சேஷ்டி தாதிகளாலே லோகத்தை அடைய அடிமை கொண்ட திருவேங்கடமுடையானை பரம்பி இருந்த திருச் சோலையாலே அலங்க்ருதமான திரு நகரியை உடைய ஆழ்வார் அருளிச் செயலான ஒப்பு இல்லாத ஆயிரத்து இப்பத்தும் வல்லவர் இஜ் ஜகத்தில் உள்ளார் இவனைப் புகழ பெற்று க்ருதார்த்தர் ஆனோம் என்று புகழும் படி இத் திருவாய்மொழியில் தாம் மநோ ரதித்தால் போலே அடிமை செய்யப் பெறுவர்-உலகம் அளந்த பொன்னடி -என்று திருவேங்கடமுடையானை ஸ்ரீ வாமனனாக சொல்லக் கடவது-வரையாது ஒழி கையாலும்-ஜகத்தை அடைய திருவடிகளின் கீழே சேர்த்துக் கொள்ள நிற்கிற நிலையாலும் –இவருக்கு அடிமையில் மநோ ரதத்தில் பரப்போ பாதி போருமாயிற்று-திருச் சோலையில் பரப்பு –இப்பத்து ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யத்தை சொல்லுகையாலே ஒப்பு இல்லாத பத்து-இவர் பிரார்த்தித்த கைங்கர்யத்தை பெற்று சிறியார் பெரியார் என்று இன்றிக்கே தம் தாம் பேறாக புகழும் படி அடிமை செய்யப் பெறுவர்கள் –இருந்ததே குடியாக எல்லாரும் பிரீதியோடே புகழ்வார்கள்,’ என்பார், ‘ஞாலம் புகழ வாழ்வர்’ என்கிறார்–
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –2-9-4-
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் -10-3-9-
என்று அவன் உகந்த படியே செய்து ஆனந்திக்கை –
எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-இருந்து கொள்ளும் கார்யம் சொல்லுகிறது –
சேஷ சேஷிகள் கலந்தால் சேஷ பூதனுக்கும் வருவதொரு ரசம் உண்டு இறே-அப்படியே அன்றியே நீ உகந்த அடிமை கொண்டு அருள வேணும்-ஸ்ரக் சந்த நாதிகளைப் போலே-தனக்கே சேஷமாக என்னைக் கொள்ளும் இது-கீழ் முன்னிலையாய் போரச் செய்தே தனக்கே என்கிறது – முகத்தைப் பார்க்கில் நோக்கிலும் ஸ்மிதத்திலும் துவக்குண்டு அத்தாலே நிஷ்கர்ஷம் குலையும் என்று கவிழ்ந்து இருந்து கையோலை செய்து கொடுக்கிறார் – எனக்கே ஆடச்செய் -என்கிற இடம் -அந்நிய சேஷத்வத்தை தவிர்க்கிறது-தனக்கே யாக என்கிற இடம் -தன்னோடு தனக்கு உள்ள அன்வயத்தைத் தவிர்க்கிறது–கோல -நெஞ்சம் நிறையும் -நிறைந்த சோதி நெடு வெள்ளம் ஆழ்ந்து போவேனே -நோக்கும் ஸ்மிதமும் சுழி யாறு பட்டு ஆழ்த்துமே- அப்பாஞ்ச ஜன்யமும் பல்லாண்டு போலே இங்கும்
வங்கி புரத்து நம்பி திருமாளிகையில் மேல் கோட்டையில் ராமானுஜர் கையோலை இன்றும் வைத்து மகிழ்கிறார்கள் –
உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம் எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9–உனக்கு அபிமதைகளாய் விலக்ஷணைகளாய் யுள்ள அவர்களோடே திரிந்து -நாங்கள் எங்களோடு சம்ச்லேஷித்ததில் காட்டிலும் மிகவும் இனியோம் ஆவுதோம்—எங்களை போல் அன்றிக்கே -நீ உகக்கும்படியான விலக்ஷணைகளோடு சஞ்சரித்து -அவர்களோடே பரிமாறப் பெற்றிலோம் என்று திரு உள்ளத்தில் யுண்டான விடாயால் வந்த துக்கம் கெடும் தோறும் –நீ வேறே சிலரோடு சம்ச்லேஷிக்க தரியாது இருக்கும் பெண்மை வேண்டோம் –புறம்புள்ளாரைப் போல் அன்றியே -உன் உகப்பே பிரயோஜனமாக நாங்கள் -மிகவும் உகப்புதோம்-மிகுதி எதில் காட்டில் என்னில்-எங்களோடு கலக்குமதில் காட்டில் -என்னுதல்–உன்னில் காட்டில் நீ உகந்தவர்களை உகப்புதோம் -என்னுதல் –உன்னைத் தனித்து உகப்பாள் மூக்கறைச்சி அன்றோ -சூர்பணகை அன்றோ –-ததீயர் சேஷத்வம் ஞானம் உடையவர்கள் அன்றோ -அவனும் ததீயாரும் சேர்ந்ததே புருஷார்த்தம் –
அன்றிக்கே
அவன் அடியார் நனிமாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே -என்கிறபடியே
அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை —10-9-11-
என்றும் சொல்லுகிற பரம ப்ராப்யம் ஆகவுமாம் –
இதுவே இறே ப்ராப்யத்தின் எல்லை நிலம் –
தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7–ஒப்பில்லாத அழகிய புகழே காலம் உள்ளதனையும் நிற்கும் படியாக ஸ்ருஷ்ட்டி உன்முகனாய் -பஹுஸ்யாம் -என்று சங்கல்ப் பிக்கிற பர ப்ரஹ்மம் ஆகிற பரம காரணமாய் லோகங்களை எல்லாம் உண்டாக்கின ஒப்பில்லாத பெரிய தைவத்தினுடைய தளிர் போலே இருக்கிற திருவடிக் கீழ் புகுகையை தவிர்ந்து – ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய மிக்க வேண்டற்பாடு யுடைத்தான சம்ச்லேஷ ஸூ கமே நாள் தோறும் நமக்கு வாய்க்க வேணும் –நாளும் வாய்க்க -நாள் தோறும் வாய்க்க வேணும் என்னுதல் -பகவத் பிராப்தி யுண்டானாலும் இதுவே வாய்க்க வேணும் -என்னுதல் – நங்கட்கே–புருஷார்த்தத்தில் சரமாவதியை அர்த்தித்த நமக்கு -அவனை அணைக்க வேண்டா -அவன் காலைத் தலையிலே வைக்க அமையும் -என்னுமா போலே –
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11–பிராட்டியோடே கூட எம்பெருமான் தானும் வந்து எதிர் கொள்ள –அயர்வறும் அமரர்கள் -என்றுமாம் -திருமா மணி மண்டபத்திலே பரம ப்ராப்யரான அயர்வறும் அமரர்கள் நடுவே ஆனந்த நிர்ப்பரராய்க் கொண்டு இருந்தமையை-அந்தமில் பேர் இன்பத்து –யவாதாத்ம பாவியாய் நிரதிசயமான ஆனந்தத்தை யுடையராய்க் கொண்டு -ஆனந்த நிர்ப்பரராய்க் கொண்டு –சம்சாரத்தில் துக்கத்துக்கு எல்லை யுண்டாகில் யாய்த்து -அஸ் ஸூகத்துக்கு அவதி சொல்லலாவது –-அடியரொடு இருந்தமை––அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -2-8-10–-என்று ஆசைப் பட்ட படியே இருந்தமையை -அவர்களும் தங்களுக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு துணை தேடி இறே இருப்பது
—
ஓதும் குருகையர் கோன் யாழின் இசை வேதத்து இயல் —
இந்த அர்த்த பஞ்சகத்தையும் ஓதுகையாவது –
ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் –இத்யாதியில்
முந யஸ்ய மஹாத்மநோ வேத வேதார்த்த வேதிந வதந்தி –என்கிறபடியே —
சடகோப முனியான இவர் ஸ்ரீ ஸூக்தியும்
இமையோர் அதிபதி அடியேன் மனனே பொய் மயர்வு பிறந்து அருளினன் விண்ணப்பம்
தொழுது எழு என்று பஞ்சகத்தையும் இறே அடியிலே யாயிற்று சொல்லிற்று –ஆச்சார்ய ஹ்ருதயம் –212–
ரஹஸ்யத்துக்கு ஓர் எழுத்தும் அதுக்கு ஓர் உருவம் போல் ஆனவற்றிலே
இமையோர் அதிபதி அடியேன் மனனே பொய் மயர்வு பிறந்து அருளினன் விண்ணப்பம் தொழுது எழு
என்ற பஞ்சகத்தோடே அவித்யாதி ஸ்வரூப ஸ்வபாவ ஆத்மேஸ்வர பந்த ரஷண க்ரம குண விக்ரஹ விபூதி யோக ததீய அபிமான உபதேச விஷய அந்ய உபதேச ஹேத்வாதிகளும் சங்க்ருஹீதம் —சூரணை -212-திரு விருத்தம் -திரு வாய் மொழி ஆகிய பிரபந்தங்களுக்கு ஸங்க்ரஹங்களான முதல் பாட்டுகளில் –1-இமையோர் அதிபதி-அதாவது- இமையோர் தலைவா-என்றும் , அயர்வறும் அமரர்கள் அதி பதி -என்றும் ,ஸூரி சேவ்யமாய் -சர்வாதிகமாய் இருக்கும் –பர ஸ்வரூபத்தையும் –2-அடியேன் மனனே--அதாவது– அடியேன் -என்றும் , என் மனனே -என்றும் சேஷ பூதமாய் -பரி சுத்த அந்த கரணமாய் இருக்கும் –ஸ்வ ஸ்வரூபத்தையும் –3-பொய் மயர்வு--அதாவது–-பொய் நின்ற ஞானமும் ,பொல்லா ஒழுக்கும் , அழுக்கு உடம்பும் -என்றும் , மயர்வு -என்றும் ,அவித்யாதிகளான விரோதி ஸ்வரூபத்தையும் –4-பிறந்து அருளினன்-அதாவது-உயிர் அளிப்பான் என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் -என்றும் ,
மதி நலம் அருளினன் -என்றும் , லோக ரஷண அர்த்தமாக அநேக அவதாரங்களைப் பண்ணின சர்வேஸ்வரனுடைய கிருபையே உபாயம் என்று –உபாய ஸ்வரூபத்தையும் –5-விண்ணப்பம் தொழுது எழு -என்ற பஞ்சகத்தோடே-அதாவது- செய்யும் விண்ணப்பம் -என்றும் , தொழுது எழு -என்றும் சேஷி விஷயத்தில் கரண த்ரயத்தாலும் பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம் என்று பல ஸ்வரூபத்தையும் —ஆக இவ் வர்த்த பஞ்சகத்தையும் ஸங்க்ரஹேண சொல்லி அவ்வர்த்த பஞ்சகத்தோடே கூட இந்த இரண்டு பாட்டிலும் அவித்யாதி ஸ்வரூப ஸ்வபாவங்கள் முதலான வர்த்த விஸேஷங்களும் ஸங்க்ருஹீதமென்கிறார் மேல்-
உயர் திண் அணை ஓன்று
பயில் ஏறு கண் கரு
வீடு சொன்னால் ஒரு கொண்ட
நோற்ற நாலும்
எம்மா ஒழிவில் நெடு வேய் –என்கிற
இருபதிலே விசதமாக்கி எண்பதிலே பரப்புகையாலே அஞ்சையும் என்று இறே
ஆச்சார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூ க்திகள் –
மூன்றில் சுருக்கிய ஐந்தையும்-உயர் திண் அணை ஓன்று-பயில் ஏறு கண் கரு
வீடு சொன்னால் ஒருக் கொண்ட-நோற்ற நாலும்-எம்மா ஒழிவில் நெடு வேய்
என்கிற இருபதிலே விசதமாக்கி எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும் — அருளினன் வீடு பெற்ற என்கையாலே ஐந்திலும் இரண்டையும் தொழுது களித்தேன் சொல்லுப் பெற்றேன் பணி செய்
என்கிற முக்த லஷண வ்ருத்தியாலே இரண்டில் ஒன்றையும் இதுக்கு பிரமேயம் என்னும் —211-((மூன்று -திருவிருத்தம் -திருவாசிரியம் பெரிய திருவந்தாதி -/இவற்றில் சுருக்கிய ப்ரமேயம் -ஐந்து -அர்த்த பஞ்சுகம் – இத்தை இருபதில் விசதமாக்கி-என்பதில் பரப்பி)அதாவது-மந்த்ர ஸ்லோககங்களில் -சங்கரஹேன உக்தங்களான அர்த்த விசேஷங்களை-த்வயத்திலே விவரிக்குமா போலே – பூர்வ பிரபந்த த்ரயத்திலும் சங்கரஹேன சொல்லப் பட்ட அர்த்த பஞ்சகத்தையும் –ஸ்ருதி சாயையாலே அந்வய ரூபேண -ஸ்வ அனுபவ முகத்தாலே — பரத்வத்தில் பரத்வத்தை பிரதி பாதித்த -உயர்வற உயர் நலமும் —1-1- இதிகாச புராண பிரக்ரியையாலே –அந்வய வ்யதிரேகங்கள் -இரண்டாலும் பர உபதேச முகத்தாலே அவதாரத்திலே பரத்வத்தை பிரதி பாதித்த -திண்ணன் வீடும் –2-2- மோஷ பிரதத்வ கதனத்தாலே பரத்வத்தை பிரதி பாதித்த -அணைவது அரவு அணையும் –2-8- அர்ச்சாவதாரத்திலே பரத்வத்தை பிரதி பாதித்த -ஒன்றும் தேவும்-4-10- -ஆகிற நான்கு திரு வாய் மொழியாலும் பர ஸ்வரூபம் –பகவத் சேஷத்வதிலும் தத் காஷ்டையான பாகவத சேஷத்வமே ஆத்மாவுக்கு உத்தேச்யம் என்று
பிரதி பாதித்த –பயிலும் சுடர் ஒளியும் —3-7- சேஷத்வ பஹிர் பூதங்களான ஆத்மாத்மீயங்கள் த்யாஜ்யம் என்கிற வ்யதிரேகத்தாலே சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் என்று பிரதி பாதித்த -ஏறாளும் இறையோனும்-4-8- பகவானுக்கு இவ் ஆத்ம வஸ்து பிரகார தயா சேஷமாய் -ப்ரக்ருதே பரமாய் -ஞான ஆனந்த லஷணமாய் இருக்கும் என்பதை பிரதிபாதித்த -கண்கள் சிவந்தும் –8-8- அந்ய சேஷ பிரசங்கமும் – அசஹ்யமாம் படி அதின் அனந்யார்ஹத்வத்தை பிரதி பாதித்த -கரு மாணிக்க மலையும் -8-9–ஆகிற நான்கு திரு வாய் மொழியாலும் ஸ்வ ஸ்வரூபமும்-—பகவத் வ்யதிரிக்த விஷயங்களை பற்றுகைக்கு உடலான அஹங்கார மம காரங்கள் த்யாஜ்யம் என்ற –வீடு முன் முற்றவும் –1-2-
அசேவ்ய சேவை த்யாஜ்யம் என்ற -சொன்னால் விரோதமும் –3-9- ஐஸ்வர்ய கைவல்யங்கள் த்யாஜ்யம் என்ற -ஒரு நாயகமும் –4-1- சரீர சம்பந்த நிபந்தனமாக வரும் பரிக்ரஹங்கள் த்யாஜ்யம் என்கிற -கொண்ட பெண்டிரும் –9-1- ஆகிய நாலு திரு வாய் மொழிகளும் விரோதி ஸ்வரூபம் —நோற்ற நோன்பு இலேன் –என்று ஆகிஞ்சன்ய பூர்வமாக -ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்–என்ற நோற்ற நோன்பும்–5-7–களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன்–என்று அநந்ய கதித்வ பூர்வகமாக -கழல்கள் அவையே சரணாக கொண்ட -என்ற -ஆரா அமுதும் –5-8- வைகலும் வினையேன் மெலிய -என்று பக்தி பாரவச்யம் முன்னாக – நம் பெருமான் அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் -என்ற -மானேய் நோக்கும் –5-9- எனது ஆவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற -என்று தரித்து நின்று அவன் குணங்களை அனுசந்திக்க மாட்டாத சைதில்யம் செல்லா நிற்க –நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாள் தோறும் ஏக சிந்தையனாய் -என்ற -பிறந்தவாறும்–5-10- -ஆகிற நாலு திரு வாய் மொழியாலும் உபாய ஸ்வரூபமும் —தனக்கேயாக -என்று கைங்கர்யத்திலே ஸ்வார்த்தா நிவ்ருத்தியை அபேஷித்த –எம்மா வீடும் —2-9- சர்வ கால விசிஷ்டமான சகல சேஷ வ்ருத்திகளையும் பண்ண வேணும் என்று பாரித்த-ஒழிவில் காலமும் —3-3- அதுதான் பாகவத கைங்கர்ய பர்யந்தமாக வேணும் என்று மநோ ரதித்த –நெடுமாற்கு அடிமையும் –8-10- அது தன்னில் பர சம்ருத்யேக பிரயோஜனத்தை சொன்ன -வேய் மரு தோளிணையுமாகிற–10-3- நாலு திரு வாய் மொழியாலும்-பல ஸ்வரூபமாய் –அது தன்னையே விஸ்தரிக்கையாலே – அர்த்த பஞ்சகமே -இப் பிர பந்தத்துக்கு பிரமேயம் என்றும் –
குருகையர் கோன் யாழின் இசை வேதம் ஆவது –
ஸம்ஸ்க்ருத வேதம் போலே தான் தோன்றி இன்றிக்கே
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபன் -என்னும்படி
ஆழ்வாராலே அருளிச் செய்யப்பட அதிசயத்தை உடையதாய் —
யாழின் இசையே –5-3-6- என்று கான ஸ்வரூபியான ஸர்வேஸ்வரனை ப்ரதிபாதிக்கையாலே
பண்ணார் பாடல் –10-7-5- பண்புரை இசை கொள் வேதம் –ஆச்சார்ய ஹ்ருதயம் –50- என்னலாம் படி
பண் கொள் ஆயிரம் –3-6-11- என்று சாம வேதம் போலே சரசமாய் இருக்கை –
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- -துஷ் ப்ராபங்களான வேதங்களை – தர்ம சாஸ்திரம் இதிஹாச புராணங்கள்-மீமாம்ஸா நியாயங்கள் என்னும் இவற்றின் உதவி இன்றி எளிதில் பொருள் காண ஒண்ணாமை பற்றி –எய்தற்கு அரிய மறைகளை-பிரவணம் போலே சுருங்கி இருத்தல்-வேதம் போலே பரந்து இருத்தல் -செய்கை அன்றிக்கே -ஆயிரம் பாட்டாகவும்-அது தான் சாரமாகவும்-ஸ்திரீ பாலர்களுக்கும் கற்கலாம் படியான பாஷையிலே செய்து அருளுகைக்கு லோகத்திலே வந்து அவதரித்து அருளினவராய் -பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிய சடர்க்கு பிரதிபடராய் இருக்கையாலே – ஸ்ரீ சடகோபர் -என்னும் திரு நாமத்தை உடையவரான ஆழ்வாரை–ஆயிரம் என்ற ஒரு சங்கையுடன் கூடி இருப்பதாய் -உயர்வற உயர்நலம் -என்று தொடங்கி -உயர்ந்தே -என்னும் அளவும் – ஆதி மத்திய அவசானங்களிலே – ஸ்ரீ பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் – சேதன அசேதன ரூப ஸ்வபாவங்களையும் – சேதனருடைய சம்சார பந்த ஹேதுக்களையும் – தந் நிவர்தன உபாயமான தத் விஷய ப்ரீதி ரூபாபன்ன ஞானத்தையும் – ஜகத் காரண வஸ்து நாராயணனே என்று -தேவதாவஸ்து விசேஷ நிர்த்தாரணத்தையும் – அவனுடைய சமஸ்த கல்யாண குணாத் மகத்வத்தையும்
அநந்த கருட விஷ்வக்சேநாதி திவ்ய சூரி பரிசர்யமான நளினனாய்க் கொண்டு நின்ற படியையும் –
தாம் அனுபவித்த படியே எல்லாரையும் அனுபவிப்பைக்காக -தம்முடைய நிர்ஹேதுக பரம கிருபையாலே – லவ்கிகரைக் குறித்து உபதேசித்த படியையும் – தம்முடைய அபிநிவேசம் எல்லாம் தீரும்படி அவனை ப்ராபித்த படியையும் -விசதமாக பிரதிபாதிப்பதாய் – ஸ்வா ர்த்தத்தை எல்லாம் ஸூஸ்பஷ்டமாகவும் ஸூக்ரஹமாகவும் தெறிவிக்குமதாய் – அத ஏவ அத்யந்த சுலபமாய் -பக்தாம்ர்தம் -தொண்டர்க்கு அமுதுண்ண சொல் மாலைகள் –என்னும்படி அநு போக்தாக்களுக்கு அத்யந்தம் போக்யமாய் -நடை விளங்கு தமிழான -த்ரமிட பாஷையாலே – ஸ்ரீ திருவாய் மொழி என்கிற பிரபந்த ரூபேண -வேதம் அளவற்றது -இன் தமிழ் ஆயிரம் என்னும் அளவு பட்டது –
வேதத்தின் பொருளைத் தன்னுள் கொண்ட பிரணவம் மூன்றே எழுத்துக்களைக் கொண்டது ஆதலின் மிக சிறியது – இது அங்கனம் அன்றிக்கே -ஆயிரம் கவியாய் -விரிந்து -தெள்ளத் தெளிய வேதப் பொருளை உணர்த்துவது – வேதத்தின் பொருளைக் காண்பதற்கு இதிஹாச புராணங்கள் -மீமாம்ச நியாயங்களின் உதவியை நாட வேண்டி இருக்கிற படியால் இடர்ப் பட நேரிடுகிறது – இது தமிழ் ஆகையாலும் அளவு பட்டமையாலும் இனிது பொருள் படும்படியாய் இருக்கிறது – தெரிய சொன்ன ஆயிரம் –என்றது காண்க –இப்பாசுரம் ஸ்ரீ மதுர கவி ஆழ்வாரை பற்றியதாலின் அவர் அருளிச் செய்த
அரு மறையின் பொருள் ஆயிரம் இன் தமிழ்ப் பாடினான் -என்பதை அடி ஓற்றின படி –இவ் உலகத்திலே உயிர் இனங்கள் மீண்டும் மீண்டும் பிறந்து உழலா வண்ணம் காக்க வேண்டும் என்னும் நோக்கம் கொண்டு ஈண்டு வாரா வழிக் கண் தலைப் படுமாறு அருமறை கூறும் மெய்ப் பொருளை ஆயிரம் இன் தமிழால் காட்டுவதற்காகவே அவதரித்து அருளினார் -என்கிறார் – ஸ்ரீ சடகோபனுடைய அவதாரம் -ஸ்ரீ திருவாய் மொழி பாடுவதற்காகவே -எனபது கருத்து–
கீழ் உலகில் அசுரர்களை கிழங்கு இருந்து கிளராமே
ஆழி விடுத்தவருடைய கருவழித்த வழிப்பனூர்
தாழை மடலூடு உரிஞ்சித் தவள வண்ண பொடி அணிந்து
யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே – 4-8- 6-யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் – அந்த ஹர்ஷ பிரகர்ஷத்தாலே – யாழ் ஓசை போல் இருக்கிற இனிய இசையை உடைய
வண்டின் உடைய திரள் ஆனவை பாடுகைக்கு அடிக் கொண்டு தென தென என்று ஆளத்தி வையா நிற்கும் அரங்கமே
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-பண் சேர்ந்து இருந்துள்ள பாடலையுடைய இனிய கவிகளை-பண் மிக்கு இருந்துள்ள பாடல் -புஷ்ப்பம் பரிமளத்தோடே அலருமா போலே -திருவாய் மொழி அவதரித்த போதே பண் மினுங்கி யாய்த்து இருப்பது–பண்ணோடு சேர்ந்த பாடல்-ஆர்தல் -சேர்தல் -மிகுதல்-அன்றிக்கே-மலரானது மணத்தோடு மலருமாறு போன்று-பண்ணும் இசையும் மிகுந்து இருந்த பாடல் -பண் -ஸ்வரம் – –இன் கவி–பண்ணுக்கு ஆஸ்ரயமான கவி தானே இனிதாய் இருக்கை –இசையும் பண்ணும் ஒழியவே-சக்கை -தொக்குக் கழிந்த சுளை போலே கவி தானே இனியதாய் இருக்குமாயிற்று –
கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.–3-6-11-வண்டுகளின் நினைவை ஒழிய அவற்றின் மிடற்று ஓசை பண்ணாய் விழுந்தால் போலே பகவத் குண அனுபவம் வழிந்த
பேச்சுக்கள் விழுக் காட்டாலே பண்ணோடு கூடி இருந்த படி-பண்கொள் சோலை – வண்டுகளின் மிடற்று ஓசையாலே பண் மிக்கிருந்துள்ள சோலை; –முக்கோட்டை போலே காணும் சோலை இருப்பது.
முக்கோட்டை–கான ஸ்தானம் -கவி பாடுகைக்கு ஹேது -விநாயகர் ஆலயம் போலே வண்டுகள் உள்ள சோலை என்றவாறு-திருத் தொலை வில்லி மங்கலம் ஆழ்வாரை பாட வைத்த முக்கொட்டை
திருக்கண்ண புரம் திருமங்கை ஆழ்வாரை பாட வைத்த முக்கொட்டை
—
இதனுடைய வேத சாம்யம் எல்லாம் ஆச்சார்ய ஹ்ருதயத்தில் விசதமாக அருளிச் செய்துள்ளார் —
அதிலே கண்டு கொள்வது –
எவ்வுலகத்து எவ்வெவையும் என்கையாலே வேதம் பஹு விதம்-39-அதாவது ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வவையும் -திருவாய்-3-1-6–என்கையாலே வேதம் ஆனது அத்யேதாக்கள் உடைய பேதத்தாலும் ,லோக பேதத்தாலும் பஹுவிதமாய் இருக்கும் என்கை .. ஆகையால் அதிலே இதுவும் ஒரு விதம் என்ற கருத்து-இதில் சமஸ்க்ருதம் திராவிடம் என்கிற பிரிவு ருகாதி பேதம் போலே-40-அதாவது
இப்படி பஹு விதமான இவ் வேதத்திலே சமஸ்க்ருத வேதம் திராவிட வேதம் என்கிற பிரிவு சமஸ்க்ருதாம் சந்தன்னில் ருக் வேதம் ,யஜுர் வேதம் சாம வேதம், அதர்வண வேதம் ,என்கிற பிரிவு போலே என்கை ….-இத்தால் வேத ராசி ஒன்றாய் இருக்க செய்தே ,சமஸ்க்ருத பாஷா ரூபம் ஆனவது தன்னிலே ருகாதி ரூபேண பல படியாய் பிரிந்தால் போலே பாஷா பேதேநவும் இப்படி பிரிந்து இருக்கும் என்ற படி-செந்திறத்த தமிழ் என்கையாலே ஆகஸ்யமும் அநாதி-41-அதாவது செம் திறத்த தமிழ் ஓசை வட சொல் ஆகி-திரு நெடும் தாண்டகம் -4- – -என்று (ஓசை -சொல் என்ற அர்த்தத்தில் இங்கு -ஸ்தான பிரமாணத்தாலே) சமஸ்க்ருததோடே சஹபடிதமும் , ப்ரதமோக்தமும் ஆகையாலே அகஸ்த்ய பிரகாசிதமான மாத்ரம் கொண்டு ஆகஸ்த்யம் என்று சொல்லப் படுகிற திராவிடமும் அநாதியாய் உள்ளது என்கை .-இத்தால் அநாதித்வம் சமஸ்க்ருத திராவிட சாதாரணம் என்றது ஆய்த்து-வட மொழி மறை என்றது தென் மொழி மறையை நினைத்து இறே-42-அதாவது மறை-என்று கேவல வேத வாசி சப்தத்தாலே சொல்ல அமைந்து இருக்க -வட மொழி மறை -திருவாய் -8-9-8–என்று சமஸ்க்ருத வேதம் என்றது -திராவிட வேதம் உண்டு என்று நினைத்திறே என்கை -பிரதி கோடி இல்லாத போது இப்படி விசேஷிக்க வேண்டியது இல்லை இறே என்று கருத்து–வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் )
அங்க உபாங்கங்கள் போலே இந் நாலுக்கும் இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும் மற்றை எண்மர் நன் மாலைகளும்– (இருமை -பெருமை -)அதாவது ருகாதி வேத சதுஷ்டயத்துக்கும் சீஷா வியாகரண நிருக்த சந்த கல்ப ஜோதிஷங்கள் ஆகிற ஆறு அங்கங்களும் மீமாம்ச நியாய புராண தர்ம சாஸ்த்ராத் உப அங்கங்கள் எட்டுமாய் இருந்துள்ள பதினாலும் போலே- (ஆதி -ஆயுர்வேதம் காந்தர்வ வேதம் அர்த்த வேதம் தனுர் வேதம் )இந்த திராவிட வேத சதுஷ்டயதுக்கும் இரும் தமிழ் நூல் புலவன் நங்கை யாளன்–பெரிய திருமொழி -1-7-10- -என்று ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற திராவிட வேத சாஸ்த்ரத்தை கரை கண்ட ஞான ஆதிக்கத்தை உடையரான திரு மங்கை ஆழ்வார் உடைய கலியன் வாயொலி செய்த பனுவல் -பெரிய திருமொழி -1-4-10–என்று சாஸ்திர ரூபங்களான பிரபந்தங்கள் ஆறும்- மற்றை ஆழ்வார்கள் எண்மர் உடையவும் விலஷணமான பிர பந்தங்களும் என்கை ..-ஆக –சீஷாயாம் வர்ண சிஷா பத சமதிகமோ வ்யாக்ரியா நிர்வசோப்யாம் சந்தஸ்
சந்தச் சிதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யோதிஷம் ரெங்கநாத ,கல்ப அனுஷ்டான
முக்தம் ஹ்யுசித கமிதயோர் நியாய மீமாம்ச யோஸ் ஸ்யாத் அர்த்த வ்யக்தி
புராண ஸ்ம்ருதிஷூ ததனுகாஸ் த்வாம் விசின் வந்தி வேதா -ஸ்ரீ ரெங்கராஜ உத்தர ஸ்தவம்-18- –என்கிற படியே அவை அந்த வேத சதுஷ்டயத்துக்கும் உபகார அங்கங்களாய் இருக்குமா போலே
இவையும் கீழ் சொன்ன படியே இத வேத சதுஷ்டயத்துக்கும் உப அங்கங்களாய் இருக்கும் என்றது ஆய்த்து —
சகல வித்யாதிக வேதம் போலே இதுவும் திவ்ய பிரபந்த பிரதானம்-44-அதாவது அங்கானி வேதாஸ் சத்வாரோ மீமாம்ச நியாய விஸ்தர புராணம் தர்ம சாஸ்த்ரஞ்ச வித்யா ஹ்யேதாச் சதுர்தச —என்று
சக படிதமாய் இருக்க செய்தே ,ஸ்வ அங்கோ உபாங்களான சகல வித்யைகளிலும் ,ஸ்வ வைபவத்தால் மேலாய் இருக்கும் வேதம் போலே ஸ்ரீ திவ்ய பிரபந்தங்களிலும் சகபடிதமாய் இருக்க செய்தே
ஸ்வ அங்க உபாங்களான சகல ஸ்ரீ திவ்ய பிரபந்தகளிலும் ஸ்வ வைபவத்தாலே இதுவும் மேலாய் இருக்கும் என்கை—வேத நூல் இரும் தமிழ் நூல்-ஆக்ஜை ஆணை-வசையில் ஏதமில் சுருதி செவிக்கு இனிய ஓதுகின்றது உண்மை பொய்யில் பாடல் பண்டை நிற்கும் முந்தை அழிவில்லா என்னும் லஷணங்கள் ஒக்கும்-45—அதாவது வேத நூல் பிராயம் நூறு – திருமாலை -3- என்ற அத்தை வேத சாஸ்திரம் என்றால் போலே இத்தையும் -இரும் தமிழ் நூல் புலவன்-பெரிய திருமொழி -1-7-10–என்று பெரிய திராவிட சாஸ்திரம் என்கையாலும்
அத்தை — ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமை ஆக்ஜை -பாஞ்சராத்ரம் –என்று பகவத் ஆக்ஜை ரூபமாக சொன்னால் போலே இத்தை -ஆணை ஆயிரம் -திருவாய்-6-3-11–என்று தத் ஆக்ஜா ரூபமாக சொல்லுகையாலும் ,
அத்தை -வசையில் நான் மறை –பெரிய திருமொழி-5-3-2- என்று விப்ரலம்பாதி தோஷ ரகிதம் என்றால் போலே , இத்தையும் -ஏதமில் ஆயிரம்-திருவாய்-1-6-11- -என்று நிர்தோஷமாக சொல்லுகையாலும் ,
அத்தை-சுடர் மிகு சுருதி-திருவாய்-1-1-7- -என்று ஸ்ரூயதே இதி ஸ்ருதி -என்கிறபடியே பூர்வ பூர்வோச்சாரண கிரமத்திலே சரவண இந்திரியத்தாலே கிரகிக்க படுமதாய் சொன்னால் போலே ,
இத்தையும் -கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே -திருவாய்-10-6-11 -என்று ஸ்ராவ்யமாய் சொல்லுகையாலும் ,
அத்தை -வேத நூல் ஓதுகின்றது உண்மை-திருச்சந்த -72- -என்று சொல்லும் அதில் ஒரு பொய் இல்லை என்றால் போலே , இத்தையும் -பொய்யில் பாடல்-திருவாய்-4-3-11–என்று அசத்திய கந்த ரகிதம் இல்லை என்கையாலும்,
அத்தை பண்டை நான்மறை -பெரிய திருமொழி-5-7-1–என்று அநாதியாகவும் நிற்கும் நான்மறை-திருவாய்-6-5-4- -என்று -அநதினத்தவம்-அழிவில்லாததாகவும் சொன்னால் போலே இத்தையும் முந்தை ஆயிரம் -திருவாய்-6-5-11- அழிவில்லா ஆயிரம் -திருவாய்-9-7-11-என்று அநாதியாய் அழிவற்று இருக்குமதாய் சொல்லுகையாலும் இந்த லஷணங்கள் எல்லாம் இரண்டுக்கும் ஒக்கும் என்கை-சொல்லப் பட்ட என்ற இதில் கர்த்ருத்வம் ஸ்ம்ருதி அத்தை ஸ்வயம்பூ படைத்தான் என்றது போலே–46-அதாவது சடகோபன் சொல்லப் பட்ட ஆயிரம்–திருவாய்-8-10-11–என்று இதில் ஸ்ரீ ஆழ்வாருக்கு சொன்ன கர்த்ருத்வம்-அநாதி நிதனா ஹ்யேஷா வாகுத் ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா -என்று-(அநாதி அநிதன -பண்டை நின்ற வேதத்தை ) ஸ்ம்ருதி அந்த வேதத்தை-( ஜகத்தை-) பிரம்மா சிருஷ்டித்தான் என்று சொன்னாவோ பாதி என்கை-
ஸ்வயம்பு சிருஷ்டித்தான் என்னாதே–படைத்தான்-என்றது முன்னம் திசை முகனை தான் படைக்க மற்றவனும் முன்னம் படைத்தனன் நான் மறைகள்-பெரிய திருமடல்-10 -என்று ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியையும் தர்சிப்பைக்காக ..
அநாதி நிதானமான சந்தர்ப்பம் பிரம்மாவின் வாக்கில் நின்றும் ஆவிர்பவித்த மாத்ரம் கொண்டு ,பிரம்மாவுக்கு அதில் சொன்ன கர்த்ருத்வ உபாதி இதிலும் ஸ்ரீ ஆழ்வாருக்கு சொன்ன கர்த்ருத்வம் ஆகையால் இத்தால் ,இதன் நித்யத்வ அபௌருஷேயத்வ ஹானி வாராது என்று கருத்து-
நால் வேதம் கண்ட புராண ரிஷி மந்த்ர தர்சிகளை போலே இவரையும் ரிஷி முனி கவி என்னும்-47-அதாவது நால் வேதம் கண்ட புராண ரிஷி–நால் வேதம் கண்டானே -பெரிய திருமொழி-8-10-1–என்னும் படி ஈஸ்வரன் தான் அடியிலே செய்தால் போல் நாலு வேதங்களையும் சாஷாத் கரித்து அஷ்டா தச புராணம் கர்த்தா சத்யவதீ ஸுத-என்கிற படி அஷ்டாதச புராணங்கள் உடைய ஆநு பூர்வியையும்
தர்சித்துச் சொன்ன வேத வியாச பகவானை சொல்லுகிறது நால் வேதம் கண்டான் -என்கிற இடத்தில் ஸ்வேன ரூபேண நின்று தர்சித்தமை அன்றிக்கே வியாச ரூபேண நின்று தர்சித்தமை தன்னை சொல்லுகின்றது இவருக்கு கருத்தாகவுமாம் ..சங்கீர்ண புத்தயோ தேவா பிரம ருத்ர புரஸ்ஸர சரண்யம் சரணம் ஜக்மு நாராயண மநாமயம்..தைர் விக்ஜ்ஞாபித்த கார்யஸ்து பகவான் புருஷோத்தம அவதீர்னோ மகா யோகி சத்யவத்யாம் பராசராத் என்றும் கிருஷ்ண த்வைபாயனம் வியாசம் வித்தி நாராயண பிரபும் -என்றும் பகவத் ஏவச அவதாரயா பகவான் தானாக சொல்லக் கடவதிறே..-இப்படி இருந்துள்ள ஸ்ரீ வேத வியாச பகவானை வேதங்களின் பூர்வ சித்த அனுபூர்வியை தர்சித்து சொன்ன படியாலே தர்சநாத் ருஷி மனந சீலோ முனி கவி கிராந்த தர்சீ-என்கிற வர்தங்களை நினைத்துக் கொண்டு ஸ்ரூயதாம் சிம்ஹனா தோயம் ருஷேச்தச்ய மகாத்மனா தர்மேச அர்த்தேச கர்மே ச மோஷே ச பரதர்ஷப -என்றும் ஏவம் விதம் பாரதம் து ப்ரோக்தம் ஏன மகாத்மனா சோயம் நாராயணஸ் சாஷாத் வியாச ரூபீ மகா முனி –என்றும் சஷால் லோகான் பாவ்யமான கவி முக்ய பராசர்ய-என்றும்
ருஷி முனி கவி என்றும் சொல்லிற்று இறே-மந்த்ர தர்சிகள் ஆனவர்களை பூர்வ ஸித்த சந்தர்ப்பத்தை
சாஷாத் கரித்து சொன்னவர்கள் என்னும் இடம் தோற்ற நம ருஷிப்யோ மந்த்ர க்ருத்ப்ய -என்றும்
பகவான் சௌனக முனி -என்றும் இத்யாதிகளாலே ருஷி முனி என்று சொல்லிற்று இறே .
இவர்கள் விஷயத்திலும் கவி சப்த பிரயோகம் உண்டாகில் வந்த ஸ்தலங்களிலே கண்டு கொள்வது ..ஆக இப்படி இவர்களை சொன்னால் போலே த்ராவிடமான இதின் பூர்வ ஸித்த அனுபூர்வியை சாஷாத் கரித்து பேசின இவ் ஆழ்வாரையும் – ருஷிம் சுஷாமஹே கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவோதிதம்
சகஸ்ர சாகாம் யோத்ரா ஷீத் த்ராவிடீம் ப்ரஹ்ம சம்ஹிதாம் –என்றும் சடகோபம் முனிம் வந்தே சடானாம் புத்தி தூஷகம் , அஞ்ஞானம் ஜ்ஞான ஜனகம் திந்திரிணீ மூல சம்ஸ்ரயம் -என்றும் உலகம் படைத்தான் கவி யாயினேற்கு -திருவாய்-3-9-10–என்றும் முன்பு உண்டான சந்தர்ப்பத்தை தர்சிப்பித்து பேசினவர் என்னும் இடம் தோற்ற ருஷி என்றும் ,முனி என்றும் ,கவி என்றும் சொல்லும் என்கை –.படைத்தான் கவி
என்ற போதே இதுவும் யதா பூர்வ கல்பனம் ஆமே-48-அதாவது உலகம் படைத்தான் கவி -என்கையாலே
ஒன்றில் ஒன்றி உலகம் படைத்தான் -என்கிற படியே ஒருப் பட்டு மேன்மேலும் லோக சிருஷ்டியை பண்ணும் இடத்தில் சூர்யா சந்திர மசவ் ததா எத பூர்வ மகல்பயத்––தைத்ரியம்-என்கிற படியே
ஸ்ருஷ்ட்டி தோறும் சந்திர சூர்யாதி சகல பதார்த்தங்களையும் யதா பூர்வ கல்பனமாய் வருமா போலே திராவிட வேதமான இப் பிரபந்தமும் ஸ்ருஷ்ட்டி தோறும் யதா பூர்வ கல்பனமாய் வரும் என்று தோன்றும் இறே என்கை ..
—
விண் மீது இருப்பாய் –6-9-5–என்கிற பாட்டிலே பர ஸ்வரூபம் காணலாம் –
ஆத்ம ஸ்வரூபம் -அடியார்ந்த வையத்திலே –3-7-10-காணலாம்
உபாய ஸ்வரூபம்–உழலையிலே -5-8-11- காணலாம் —
விரோதி ஸ்வரூபம் –அகற்ற நீ வைத்த –5-7-8- என்கிறதிலே காணலாம்
பலம் -உற்றேனிலே —-10-8-10-உணரலாம்
அர்த்த பஞ்சக ஞானத்தாலே இறே
அந்தமில் பேர் இன்பத்து இன்புறுகையும் -என்று அறுதி இட்டு அருளிற்று –
விண்மீ திருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடற்சேர்ப்பாய்!
மண்மீ துழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!
எண்மீ தியன்ற புறஅண் டத்தாய்! எனதாவி
உண்மீ தாடி உருக்காட் டாதே ஒளிப்பாயோ!–6-9-5—பகல் ஓலக்கம் இருந்து கறுப்பு உடுத்துச் சோதித்து காரியம் மந்தரித்து வேட்டையாடி-ஆராமங்களிலே விளையாடும் ராஜ நீதி ஆதும் சோராமல் செங்கோல் நடாவுகிற பாரளந்த வென்னும் முடிக்கு உரிய இளவரசுக்கு விண் மீது என்கிற ஐந்திலும் காணலாம் -சூர்ணிகை –157–விண் மீது இருப்பாய் –திருவாய் -6-9-5–என்று-வைகுண்டே து பரே லோகே ஸ்ரியா ஸார்த்தம் ஜகத் பத்தி ஆஸ்தே விஷ்ணு ரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் சஹ-என்கிற படியே
பகல் கண்டேன்–இரண்டாம் திருவந்தாதி-81–என்கிற ஒரு பகலான பரம பதத்திலே – ஒண்டொடியாள் திரு மகளும் தானுமாய்–திருவாய்-4-9-10- நித்ய முக்தர் சேவிக்க ஓலக்கம் இருக்கையும் –இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் -என்று–யமாத்மா ந வேத -என்கிறபடியே –வ்யாப்த பதார்த்தங்களுக்கு தெரியாத படி அந்தர்யாமியாய் –உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் அறிகையும்-திருமாலை-34 —கடல் சேர்ப்பாய் -என்று-பாற் கடல் யோக நித்தரை செய்து சேதன ரஷோ உபாயங்களை சிந்திக்கையும் –
(மந்த்ர ஆலோசனையைச் சொன்னபடி ),அனந்தரம்-மண் மீது உழல்வாய் -என்று ரக்ஷண அர்த்தமாக வந்து அவதரித்து-களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டையாடி வருவான்–நாச்சியார்–14-9–என்கிறபடியே
ஆஸ்ரித விரோதி துஷ்ட சத்வ நிரசனமாகிற வேட்டை யாடுகையும் -(விபவத்தைச் சொன்னபடி)-மலை மேல் நிற்பாய் -என்று –விரோதி நிரசன ஸ்ரமம் ஆர நிரதிசய போக்யங்களான –-ஆராமம் சூழ்ந்த கோவில்-சிறிய திருமடல் -71- என்றபடி –திரு மலை முதலான தேசங்களிலே ரசோத்தரமாக வசிக்கையும்
ஆகிய இவை ஐந்திலும் காணலாம் என்கை–
அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.–3-7-10-தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம் -என்று சேஷித்வத்துக்கு அவனுக்கு அவ்வருகு இல்லாதா போலே சேஷத்வத்துக்கு தமக்கு அவ்வருகு இல்லாத படி அதன் எல்லையில் நிற்கிறார்-தம்முடைய ருசிக்கு அவதி உண்டாய் மீண்டார் அல்லர்-சந்தஸ் ஸூ முடிய வேண்டுகையாலே மீண்டாராம் அத்தனை –இவ்வாறு ‘சண்டாள சண்டாளர்களாகிலும் – எம் அடிகளே’ என்று கூறுதல் உலக நடைக்கு மாறுகோடல் அன்றோ?’ எனின் ‘இப்படி வைஷ்ணவர்களை விரும்பினால் இது உலக மரியாதைக்குச் சேராதிருந்ததாகில், ஆழ்வார் விரும்பியதை நம்பினவர்களாகிறோம்,’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர். லௌகிக விருத்தம் ஆனாலும் ஆழ்வார் திரு உள்ளப்படி நடந்தோம் ஆவோம் என்றபடி –
உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–5-8-11-ஊழலை கோத்தால் போலே இருக்கிற எலும்புகளையுடைய பேய்ச்சி முலையிலே உகப்பாலே அவளை ப்ராணாபஹாரம் பண்ணின விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணனுடையவையாய்-தமக்கு உபாயமாக முன்பு பிரகாசிப்பித்த திருவடிகளையே அபிமத சித்திக்கு உபாயமாக புத்தி பண்ணிக் கொண்ட திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வாரானவர்
அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகர்க் கதிர் மணிமாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே!–5-7-8-அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்–சர்வசக்தியான நீ, உன்னை உகவாதார் அகன்று போம்படிக்குத் தகுதியாக,
“தைவீஹி ஏஷா குணமயீ மம மாயா துரத்யயா மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே” – ஸ்ரீகீதை, 7:14.“என்னுடைய மாயை தாண்ட முடியாதது” என்று கொண்டு வைத்த. ஸ்லோகம் -பிரகிருதி -இந்திரியங்கள் பிரகிருதி கார்யம் தானே -அதனால் சொல்லிற்றுஅத்யாச்சர்யமான செயல்களை யுடைத்தாய் ஒருவரால் தப்ப ஒண்ணாதே இருக்கிற ஐந்து இந்திரியங்களும் -நீ வேண்டாதாரை யகற்ற வைத்தாய் என்னும் இடம் வ்யக்தமாக அறிந்தேன் -மயர்வற மதி நலம் அருள பெற்றவன் ஆகையால் அழகிதாக அறிந்தேன் -யுகாவாதாரை யன்றோ யகற்றுவது -உமக்கு என் என்ன – அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்-அவை அபுருஷார்த்தம் என்று அறிந்த என்னையும் -புக்கால் கால் வாங்க ஒண்ணாத சப் தாதி விஷயங்களில் தள்ளுகிறாய் என்று அஞ்சா நின்றேன் -உன்பக்கல் ந்யஸ்த பரனான என்னையும்-என்றுமாம் -நீர் அஞ்சக் கடவீரோ என்ன -விளம்ப ஹேது இன்றிக்கே இருக்க விரோதி கிடைக்கையாலே அஞ்சா நின்றேன்-
உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10—கெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போலே கிட்டிக் கொடு நின்றேன் –ப்ரீதி ப்ரேரிதனாயக் கொண்டு -திருவாய் மொழி பாடி -உன் திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன் – –சாதகமாய் மேல் -சாத்தியமாகச் சொல்லுகிறது அன்று -இரண்டும் ஏக காலத்திலே உள்ளதாகையாலே –இது தானே மாறி மாறி யாவதாத்ம பாவியாகச் செல்லுகை இறே –பு நரா வ்ருத்தி இன்றிக்கே ஒழிகை யாவது -மீளாது ஒழிகை -விதி போலே இருக்கிறதன்றே –இவ்வனுபவம் ஸ்வரூப அனுரூபம் என்கிறது -இத்தலைக்கு சேஷத்வமும் தேவர்க்கு சேஷித்வமும் இறே ஸ்வரூபம் -இவர் அபேக்ஷித்த படியே செய்கிறோம் என்ன -ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –
—
எண் பெருக்கு அந்நலத்திலும் –1-2-10-
எனக்கே ஆட் செய் –2-9-4-
ஒழிவில் காலம் –3-3-1-
வேங்கடங்கள் –3-3-6-
சீலமில்லா –4-7-1-
களைவாய் –5-8-8-
ஞாலத்தூடே –6-9-3-
என்கிற பாட்டுக்களிலும் —
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10–எண் பெருக்கு-இத்தால் -ஜீவ அனந்யத்வத்தைச் சொல்கிறது-அந் நலத்து –-கல்யாணமான ஜ்ஞானாதி குணங்களை யுடைத்தாகை-ஒண் பொருள்
ஸ்வயம் பிரகாசமாய் இருக்கை-ஈறில நித்தியமாய் இருக்கை –இப்படிப் பட்ட ஆத்மா வர்க்கத்தையும்
வண் புகழ் –-கல்யாண குணங்களையும் யுடையனாய் இருக்கை-ஈறில -என்று குணங்களுக்கு விசேஷணம் ஆகவுமாம்-நாரணன் – நித்ய சித்த கல்யாண குணங்களோ பாதி ஜீவ சமூஹத்தையும் ஸ்வ அதீனமாக யுடையவன் ஆகையாலே -நாராயணன் –திண் கழல் சேரே — இப்படிப்பட்ட சம்பந்த ஜ்ஞானம் முன்னாகப் பற்றினாரை ஒருகாலும் விடாத திருவடிகளை ஆஸ்ரயி –நம் ஆசாரியர்கள்,-ஸ்வரூப அனுசந்தானத்துக்கு ஈடாய் இருக்கிற இதனுடைய அர்த்த அனுசந்தானம் மோக்ஷ சாதனம் – என்று தாங்களும் நினைந்து, தங்களைக் கிட்டினார்க்கும் உபதேசித்துக்கொண்டு போந்தார்கள்.
ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-இப்பாசுரத்தால், ப்ராப்ய பிரதானமான -கைங்கரியப் பிரதானமான திருமந்திரத்தின் பொருளை அருளிச்செய்கிறார்:
‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’ என்னுமிதனால்,
சதுர்த்தியில் -நான்காம் வேற்றுமையின் பிரார்த்தனையைச் சொல்லுகிறது;
‘நாம்’ என்னுமிதனால், -பிரணவ ப்ரதிபாத்யமான -பிரணவத்தாற்சொல்லப்படுகின்ற இவ்வாத்துமாவினுடைய சொரூபத்தைச் சொல்லுகிறது;
‘இது,சப்த – சொல்லின் சுபாவத்தைக் கொண்டு சொன்னோம்’ என்று அருளிச் செய்தருளின வார்த்தை.
‘தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கு’ என்றதனால், நாராயண பதத்தின் பொருளை அருளிச்செய்கிறார்;
சௌலப்யமும் வடிவழகும் ஸ்வாமித்துவமும் எல்லாம் – நாராயண பதத்திற்குப் பொருள்.
பிராப்த விஷயத்தில் செய்யும் கைங்கரியமே பிராப்யமாகும்.(‘பிராப்த விஷயத்தில் கைங்கரியமிறே ரசிப்பது’ (முமுக்ஷூப்படி, 173.)பிராப்தவிஷயம் – வகுத்த விஷயம். பிராப்யம் – பலம்.
ஆக, ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற திருமந்திரத்தில் ‘ஓம் நாராயணாய’ என்ற பதங்களின் பொருள் இப்பாசுரத்தில் சொல்லப்பட்டன; இங்குச் சொல்லப்படாத ‘நம’ பதத்தின் பொருளை ‘வேங்கடங்கள்’ என்ற பாசுரத்தில் அருளிச்செய்வர்.)
வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந் தார்கட்கே.–3-3-6—வேங் கடங்கள்-கடம் என்று கடனாய் ருண த்ரயத்தை சொல்லுகிறது-மெய் மேல்வினை முற்றவும்,–தேஹ உபாதிகமான கர்மங்களும் அடங்க நசிக்கும் –என்று ஆளவந்தார் –-உத்தர பூர்வாகங்கள் நசிக்கும் இது மெய் -என்று எம்பெருமானார்
உத்தராகத்துக்கு விநாசம் சொல்லுகிறது நாச பர்யாயமான நைஷப்பல்யத்தை பற்றி இரண்டும் இவனை ஸ்பர்சியாது என்கை –-மெய் என்கிறது துஷ்ட காரண பிரசங்கம் உள்ள ப்ரத்யக்ஷம் போல் அன்றிக்கே நிர்த்தோஷ சாஸ்த்ர சித்தம் என்கை -ஆனால் கர்த்தவ்யம் என் என்னில்-தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,- தாங்கள் தங்களுக்கு நன்று என்று இருந்த அடிமைகளை செய்ய அமையும்
நன்று என்று இருக்கிறது என் என்னில்-வேங்கடத்து உறைவார்க்கு –-சதுர்த்தியில் பிரார்த்தனையைச் சொல்கிறது-நம – தனக்காய் இருக்கும் இருப்பை கழிக்கிறது-என்னல்–யுக்தி மாத்திரமே அமையும்
வருணனுக்கு தொடுத்த அம்பை மருகாந்தரத்திலே விட்டால் போலே –-இவ்விடத்தில் பட்டர் மொட்டைத் தலையன் விஷயமான இதிகாசம் –-ஆம்-ஸூசகம்-கடமை-பிராப்தம்-அது சுமந் தார்கட்கே.– இக் கோட்டை எல்லாம் சுமந்தார்கட்க்கு என்று என்று ஆழ்வார் கருத்தால் யாதல்-இது தானே குவாலாய் இருக்கும் பகவத் அபிப்ராயத்தாலே யாதல் பூயிஷ்ட்டாம் தே நம உக்திம் விதேம-
சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.–4-7-1-‘நாராயணன்’ என்கையாலே, இறை நிலை சொல்லிற்று; ‘சிறியன்’ என்கையாலே, உயிர்நிலை சொல்லிற்று; ‘வாராய்’ என்கையாலே, உபாயம் சொல்லிற்று; ‘காண’ என்கையாலே, பலம் சொல்லிற்று; ‘செய்வினையோ பெரிதால்’ என்கையாலே, விரோதி சொல்லிற்று; ஆக, ஐந்து பொருள்களும் இத்திருப்பாசுரத்திலே சொல்லப்பட்டன.–ப்ராசாங்கிகம் -த்வயார்த்தம் விவஷிதம்-ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி -ஞான சக்தியாதிகள் –உத்தர வாக்யார்த்தம்--நாராயணா -ஆஸ்ரயண சௌகர்யர்ய ஆபாதக -வாஸ்தல்யாதிகள்-பூர்வ வாக்யார்த்தம்
ஞாலம் உண்டான் -ரஷகம் -சப்த சாமர்த்தியத்தால் ஸ்ரீ மத் பதார்த்தமும்-கோல மேனி -சரண –திருவடி -சப்தார்த்தம்-வாராய் -சரண உபாயம் சப்தார்த்தம்-கை தலை பூசல் இட்டால் — கிரியா பிரபத்யே பிரபதனம்-பதில் கதௌ தாது -காலம் தோறும் -மகா விஸ்வாசம்-பிரகர்ஷனே பர்த்யே- பிரபர்த்யே
யான் -உத்தம அதிகாரி -அஹம் – என்று என்று -பூர்வ உத்தர வாக்யமும்– கிரியா பதம்–வர்த்தமானம் –
காண –சதுர்த்யந்தமான பிராப்யம் -ஆய – செய்வினையோ பெரிது –நமஸ் -அவித்யாதி கழி உண்ணும்
களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8—களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்-உன்னைப் பிரிந்து படுகிற துக்கத்தை போக்கிலும் போக்கு -தவிரிலும் தவிரு -வேறு ரக்ஷகரை யுடையேன் அல்லேன் -நீ உன் கார்யம் செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு என் தலையில் குறை இல்லை -த்வம் ஏவ உபாய பூதோ மே பவ-என்கிற அம்சத்தில் குறை இல்லை –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்கிற உன் கூறு செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு -துக்க நிவ்ருத்தி உம்ம தான பின்பு கிருஷியும் உம்மை தாக வேண்டாவோ என்ன-துக்கி யாகைக்கு கிருஷி பண்ணின நான் நிவர்த்தகன் ஆகவோ -ஒரு சக்தி கிருத்யத்தை நான் செய்யவோ
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!-பார்த்த இடம் எல்லாம் வாயான திரு ஆழியை ஆயுதமாக யுடையவனே -கை கழலா நேமியானாக இருக்கிறது என்னுடைய துக்க நிவ்ருத்திக்கு அன்றோ -அதுக்கும் மேலே திருக் குடந்தையில் வந்து ஆச்சர்யமான அழகோடு கண் வளர்ந்து அருளுகிறது எனக்கு அணித்தாக வாக வன்றோ சக்தி வைகல்யம் சொல்ல ஒண்ணாது -ஸூ லபன் அன்று என்ன ஒண்ணாது –நீ “மாம்” என்றதன் பின் இவ்வருகுள்ள ஏற்றமெல்லாம் பாராய். இதனால், அவதார தசையிலும் அர்ச்சாவதாரம் சுலபம் என்றபடி.-ருசியுதபாதகன் அன்று என்ன ஒண்ணாது
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது-சரீரமானது கட்டுக் குலையா என் பிராணனும் சரீரத்தை விட்டுப் பேரக் கடவ போதாயிற்று இப்போது -அங்கணம் அன்றியே அந்திம ஸ்ம்ருதியை அபேக்ஷிக்கிறார் ஆனாலோ என்னில் -அந்திம ஸ்ம்ருதி ஒழிய சித்தி இல்லாத அதிகாரி அல்லாமையாலே அத்தை சொல்லுகிறது அன்று -இவன் பக்கல் இது இல்லாத போது அவன் அஹம் ஸ்மராமி என்கையாலே விஸ்லேஷ வியசனத்தால் சரீரமும் தளர்ந்து பிராணனும் சரீரத்தை விட்டுப் போம் தசையாயிற்று இப்போது என்கை
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.– அபேக்ஷிதம் பெற்றிலனே யாகிலும் என் அபேக்ஷித்துக்கு உன் திருவடிகளை பற்றின பற்று நெகிழாமல் பண்ணி அருள வேணும் -அனுபவம் பெறாமையாலே அதுக்கு அடியானை உபாய அத்யாவசாயம் குலைகிறதோ என்று அஞ்சி இது குலையாத படி பார்த்து அருள வேணும் என்கிறார் –ஒருங்க -ஒருபடிப்பட –
ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!
கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3–இன்னும் தளர்வேனோ –-“ஒரு மிதுநம் எனக்குப் பேறு” என்று அறிந்த பின்பும் தளருமத்தனையோ? ‘நீ ரக்ஷகன்’ என்று அறியாதொழிதல், ‘வேறு எனக்கு ரக்ஷகமுண்டு’ என்றிருத்தல்,‘லக்ஷ்மிக்கு நாயகனாயுள்ள வஸ்து பிராப்யம்’ என்று அறியாதொழிதல்,-அனுபவமும் எனக்கு -‘எனக்கு நான் உரியேன்’ என்று இருத்தல் செய்தேனோ இழக்கைக்கு; ருசி பிறந்த பின்பு இழக்கவோ?–“அவ-ரக்ஷணே” -(காப்பான் )அன்றோ தாது. ரக்ஷிக்குமிடத்தில், எல்லா வகையாலும் ரக்ஷிக்க வேண்டும்; அது தான் எல்லாக் காலமும் ரக்ஷிக்க வேண்டும்; அப்படி ரக்ஷிக்குமிடத்தில் எல்லாரையும் ரக்ஷிக்கிறவனாக வேண்டும்;இப்படி வரையாதே ரக்ஷிக்குமிடத்தில், “குற்றம் செய்யாதார் ஒருவரும் இலர்” என்னுமவளும், “என்னடியார் அது செய்யார்” என்னுமவனும்கூட ஆயிற்று; ஆகையாலே, அகாரம், மிதுநத்துக்கு வாசகமாயிற்று–ஏவம் அஷர ரூபம் காரணத்வம் -ரக்ஷணம் தாது சேஷித்வம் பத ரூபம் – ஸ்ரீ வாஸ்ய சக்தி -மூலம் -உஜ்யதே பரமாத்மா.-“ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும் காப்பானே” என்கையாலே, எல்லா வகையாலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று; “சாலப் பலநாள் யுகந்தோறும்” என்கையாலே, எல்லாக் காலத்திலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று; “உயிர்கள்” என்கையாலே, சர்வ ரக்ஷகத்வம் சொல்லிற்று;‘கோலத் திருமாமகளோடு உன்னைக் கூட’ என்கையாலே, திருமகள் கேள்வனே பிராப்யம் என்றது.-அகாரத்தின் விவரணமான திருமந்திரத்தின் பொருளும்-அர்த்த பஞ்சகமும் – சொல்லுகிறது;
“கோலத் திரு மா மகளோடு உன்னை” என்கையாலே பிரஹ்ம ஸ்வரூபம் சொல்லிற்று;
“அடியேன்” என்கையாலே, ஜீவாத்ம ஸ்வரூபம் சொல்லிற்று;
‘உயிர்கள் காப்பான்’ என்கையாலே, உபாயம் சொல்லிற்று;
‘உன்னைக் கூட’ என்கையாலே, பலம் சொல்லிற்று,
‘உன்னைக் கூடாதே – தளர்வேனோ’ என்கையாலே விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று.
திரு மந்த்ரத்திலும் காணலாய் இருக்கும் —
அகாரத்தாலும்
மகாரத்தாலும்
ரக்ஷகனையும் ரஷ்யத்தையும் சொல்லி
சதுர்த்தியாலும்
உகாரத்தாலும்
ரக்ஷண ஹேதுவான பிராப்தியும் பலத்தையும் சொல்லுகிறது –
ச விபக்தி கதமான நாராயண பதத்திலே
சர்வ ஸ்மாத் பரன் திருவடிகளிலே கைங்கர்யத்தைச் சொல்லுகையாலே
திருமந்திரம் –அர்த்த பஞ்சக ப்ரதிபாதகம் என்னும் இடம் ஸ்பஷ்டம் இறே
ஆகையாலே திருவாய் மொழியிலே பிரதிபாதிக்கிற அர்த்தம் எல்லாம் அர்த்த பஞ்சக ப்ரதிபாதகமான
திருமந்த்ரார்த்தம் என்னத் தட்டு இல்லை
ஸ்ரீ பதி ஸ சேதனஸ் யாஸ்ய –பன்னீராயிரப்படி பிரவேசம்
என்கிற ஸ்லோகத்தில் அருளிச் செய்த அர்த்த பஞ்சகமும்
இதில் இரண்டு பத்தாலே ஒரோர் அர்த்தம் ப்ரதிபாதிக்கப் படுகிறது -என்று
திருவாய் மொழியின் பிரவேசத்தில் ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்தார் இறே
திலதம் உலகுக்கான திரு வேங்கடத்தானை
அலகில் புகழ் அந்தாதி ஆயிரமும் -உலகில்
உரைத்தான் சடகோபன் உத்தமர்கள் நெஞ்சில்
விரித்தான் பெரும் பூதூர் வேந்து-
——-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சொட்டை நம்பிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஈஸ்வர முனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாதமுனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply