மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும் இனத்தாரை அல்லாது இறைஞ்சேன்
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று –ஸ்ரீ சொட்டை நம்பிகள் அருளிச் செய்த தனியன் –
இதில் ஆழ்வார் திருவடிகளே-ப்ராபகமும் ப்ராப்யமுமாகிற படியை-அந்வய-வ்யதிரேகங்கள்
இரண்டாலும் தர்சிப்பிக்கிறது
மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும் இனத்தாரை அல்லாது இறைஞ்சேன்
மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணுகை யாவது
திருக்குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைம்மின் –4-10-9-
திருக்குருகூர் அதனைப் பாடி யாடிப் பரவிச் சென்மின்கள் –4-10-2-என்று
ஆழ்வார் உபதேசம் கேட்ட படியே
மனஸ்ஸாலே நினைத்தும்
வாயாலே சொல்லியும் போருகை —
பேணுகை -விரும்புகை –
விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–4-10-9–வி லக்ஷணமாய் சிரமஹரமான நீர் நிலங்களாலே சூழப் பட்டு தர்ச நீயமான திரு நகரியை உளம் கொள் ஞானம் -மானஸ ஞானம் -ஞானம் உதித்து பாஹ்ய இந்த்ரியங்களாலே பாஹ்ய விஷயங்களை க்ரஹிப்பதற்கு முன்பே மானஸ ஞானத்துக்கு இவ் ஊரை விஷயம் ஆக்குங்கோள்—ஞானம் உதித்து, புறத்தே யுள்ள இந்திரியங்களாலே புறப் பொருள்களில் செல்வதற்கு முன்னே, மனக் கண்ணுக்குத் திரு நகரியை விஷயம் ஆக்குங்கோள்.-உளம் கொள் ஞானம் – மானச ஞானம். என்றது, ‘புறத்திலே செல்லாதபடி ஞானத்தை உள் விஷயத்தில் (திருநகரியில்) ஈடுபடும் படியாகச் செய்யப் பாருங்கோள்,’ என்றபடி.பிரயோஜனம் என் என்னில்-உம்மை உயக்கொண்டு போகுறிலே.-அசன்னேவ என்னும் படி -இருக்கிற உங்களை சந்த மேனம் ததோ விது-என்ன பண்ண வேண்டி இருந்து கோள் ஆகில் –நேய மஸ்தி என்கிறபடி தக்தப்படம் போலே இவற்றின் சத்தை சென்று அற்றது என்று இருக்கிறார் –இவனை இருக்கின்றவனாக அறிகிறார்கள்’ என்கிறபடியே, உம்முடைய இருப்பைப் பெற்றுப் போக வேண்டியிருக்கில்.-இல்லாதவனாக ஆகிறான்’ என்கிறபடியே, ‘சென்றற்றது’ என்றே இருக்கிறார் ஆயிற்று இவர்.-மஹாத்மநா – தன்னில் தான் வாசி சொல்லுமத்தனை போக்கிப் புறம்பு ஒரு ஒப்புச் சொல்ல ஒண்ணாத படியான பெருமாளோடே விரோதம் உண்டு; ஆகையாலே, இலங்கையும் இல்லை; இராவணனும் இல்லை; நீங்களும் இல்லை,’ என்று திருவடி கூறினாற்போலே.
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந்தழகாய திருக் குருகூரதனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2—மாடங்களாலும் மாளிகைகளாலும் சூழ்ந்து தர்ச நீயமான திரு நகரி -ப்ராப்ய பூமி என்று தோன்றும் படியாயிற்று இருப்பது–உங்களுக்கு தான் நல்ல தேசம் தேட்டமே; ‘முத்தனாகிற பேற்றினைக் கொடுக்கும் தேசம், என்று தோற்றுகிறதில்லையோ?’ என்றபடி.–அதனைப் பாடி ஆடி – பிரீதியினாலே தூண்டப் பட்டவராய்க் கொண்டு பாடி, உடம்பு இருந்த இடத்தில் இராமல் ஆடி, கிரம மின்றியே கூப்பிட்டுக் கொண்டு. இதனால், –நின்ற ஆதிப்பிரான் என்றது மிகையாய் இருக்கை-விஷ்ணோ ராயத நேவ சேத்-தேசோயம் சர்வ காம துக் -ப்ரீதி பிரேரித்தராய்ப் பாடி -அவ்வளவில் பர்யாப்தி பிறவாமையாலே அக்ரமாகப் புகழ்ந்து -இதுவே யாத்திரையாக வர்த்தியுங்கோள்-இத் தேசம் என்றால் எல்லார்க்கும் தன் திரு உள்ளம் போலே என்று இருக்கிறார்–பகவான் எழுந்தருளி யிருக்கும் ஊரில் வசிக்கக் கடவன்,’ ‘இந்தத் தேசமானது, புண்ணியத்தைக் கொடுக்கக் கூடியது;-விரும்பியன வற்றை எல்லாம் கொடுக்கக் கூடியது.-தேசோயம் சர்வ காம துதூத் – என்கிறபடியே, இது தானே பேறு,’ என்றபடி.-அந்தத் தேசம் என்றால் தம் திரு வுள்ளம் இருக்குமாறு போலே இருக்கும் என்று இருக்கிறார் காணும் எல்லார்க்கும்.பல்லுலகீர்!–தாந்தனாய் சமித்பாணியாய் வந்தவனுக்கு ஹிதம் சொல்லுகிறார் அன்றே-இவை என்ன உலகு இயற்கை -என்று லோகம் அடங்க நோவு படுகிற படியைக் கண்டு சொல்லுகிறார் ஆகையால் எல்லாரையும் காலைப் பிடிக்கிறார்-பரந்தே.–- பெரிய திரு நாளுக்கு வந்து ஏறுமா போலே சர்வதோதிக்கமாக சென்று ஆஸ்ரயிங்கோள்-பல் உலகீர் பரந்து பாடியாடிப் பரவிச் சென்மின்கள் -என்று அன்வயம்
வளந்தழைக்க உண்டால் என்? வாசம் மணந்தால் என்? தெளிந்த கலை கற்றால் என்? சீசீ! – குளிர்ந்த பொழில் தண் குருகூர் வாவிச் சடகோபன் ஊர் எங்கள் வண் குருகூர் என்னாத வாய்.’
—
யத்தி மனஸா த்யாயதி தத் வாஸா வததி -என்னக் கடவது இறே –
இப்படி ஆழ்வார் சம்பந்தம் உடைய தேசத்திலே விருப்பம் உடையவர்களை அடைய பஜித்தேன் –
ஆழ்வார் சம்பந்த சம்பந்திகளை ஒழிய அந்நியரை ஆதரித்துப் பஜியேன்
வண் குருகூர் பேணும் இனத்தாரை
நல்லார் நவில் குருகூர் –திரு விருத்தம் –100- இறே
நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – – 100-நல்லார் நவில் –லோகத்தில் சத்துக்கள் அடைய -ஆழ்வார் ஆழ்வார் -என்னா நிற்கும் இத்தனை –ராமோ ராமோ ராம -இதிவத் -(ராமோத்வைதம் போல் ஆழ்வார் ஒருவரே இங்கு பேசப்படுகிறார் ) சர்வதாபி கதஸ் சத்பி –பெருமாள் சிரமம் செய்து விட்டு ஒரு-நிழலிலே இருந்த அளவிலே – பர சம்ருத்யை ஏக பிரயோஜனாந்தர வர்கள் அதுக்கு உறுப்பான-கற்கைக்காக படு காடு கிடப்பர்கள் –-சமுத்திர இவ சிந்துபி -இப்படி கிடக்கிறது -இவர் குறை-நிரம்புக்கைக்கோ என்னில் –-பண்டே நிரம்பி நிற்கிற கடலை நிரப்புக்கைக்கு அன்றிக்கே ஆறுகள் வந்து புகுருகிறது –-நடுவு தரிப்பு இல்லாமை இத்தனை இறே –
—
இனத்தார்
ஸமூஹமாய் உள்ளவர்கள்
அன்றிக்கே
ஸஜாதீயர் -என்னவுமாம்
இத்தால்
குருகூர் சடகோபன் பாட்டான திருவாய் மொழியிலே அந்வயம் உடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸமூஹத்தை -என்றபடி –
குழாம் கொள் திருக்குருகூர் இறே –2-3-11-
இத்தால்
திருவாய் மொழியில் அதி பிரவணர் ஆனவர்களை ஒழிய அந்நியரை ஆதரியேன் என்றதாயிற்று –
குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
குழாங்களாய் யடியீருடன் கூடி நின்றாடுமினே –2-3-11-வாயும் திரையுகளில் அவசாதத்தே பிழைத்தவர் -என்று இவரை அனுபவிப்பிக்கைக்கு ப்ருந்தபிருந்தைர யோத்த்யாயாம் -என்கிறபடியே வைஷ்ணவ சமூகங்களை உடையதாயிற்று திரு நகரி-அடியார்கள் கூட்டத்தைக் கொண்ட அழகிய திருக் குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர். ஜன ஸ்தானம் அடியறுப்பு உண்ட பின்பு தண்ட காரண்யத்தில் முனிவர்கள் குடி ஏறியது போன்று, ‘வாயும் திரையுகளும்’ என்ற திருவாய்மொழியில் உண்டான நிலையினின்றும் தப்பிய ஆழ்வாரைக் காண வேண்டும் என்னும் பேரவாவோடு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அடையத் திரண்டு வந்து சேர்ந்தார்களாதலின், ‘குழாங்கொள் தென்குருகூர்’ என்கிறார்.
—
இப்படி அந்நியரை அநாதரிக்கைக்கு அடியுடைமை சொல்லுகிறது –
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் -என்று –
தனம் மதீயம் தவ பாத பங்கஜம் -என்கிறபடியே
ஆழ்வார் திருவடிகளைப் பற்றின நமக்கு –
விபூதிஸ் ஸர்வம் -என்னும் படி
தனத்தாலும் ஏதும் குறைவிலேன்-ஒன்றும் குறை உடையேன் அல்லேன் –
விலாஸ விக்ராந்த பர அவர ஆலயம்
நமஸ் யதார்த்தி ஷபணே க்ருத ஷணம்
தனம் மதீயம் தவ பாத பங்கஜம்
கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா—30-வைத்த மா நிதி -திருவாய் மொழி -6-7-11-என்கிறபடியே
எனக்கு ப்ராப்யமுமாய் பிராபகமுமாய் உள்ளத்தை-சர்வ ஸூ லபமுமாய் ஆஸ்ரித வத்ஸ்லமுமாய்
நிரதிசய போக்யமுமான திருவடிகளை –-த்ரிவிக்ரமா பதாந தூளி தானத்திலும் காணப் பெறாத நான்
என்று காண இருக்கிறேன்-விஷயங்களிலே மண்டிக் கிடக்கிற சம்சாரிகள் நடுவே இருக்கிற உமக்கு
நம்மை ஒழியச் செல்லாதபடி புகுர நிருத்தினோமாகில்-ஒன்றும் செய்யாதாரைப் போலே கூப்பிடுகிறது என் -என்ன-கண்ணாலே கண்டு விடாய் தீர இருக்கிற எனக்கு சம்சாரிகளில் காட்டில் ஒரு வ்யாவ்ருத்தி பண்ணித் தர அமையுமோ–ஒரு தேச விசேஷத்திலே சதா தர்சனம் பண்ணப் பெறாதே காண விடாய்த்த எனக்கு கண்ணாலே காண வேணும் –பரம புருஷார்த்தமான திருவடிகளை கண்டு களிப்பது என்றோ என்று அலமருகிறார்-தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே கோவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ-என்றும்-அன்று தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ கண்களே –என்றும் சாஷாத்காரம் பெற பதறி அருளிச் செய்கிறார் –-சஷூஷா—திவ்ய சஷூஸ் ஸூக்களை கொடுத்து அருளினாய் அதே போலே பாவியேனுக்கும் அருள வேணும் – நெஞ்சு என்னும் உட் கண்ணால் காண விரும்புகிறார் –பரமபத பிராப்தியை அபேக்ஷிக்கிறார் என்றுமாம் –
எந்தை சடகோபன்
அன்னையாய் அத்தனாய் -கண்ணி -4-
மாதா பிதா –என்னும்படி-எனக்கு ஜனகரான ஆழ்வார் –
நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவர் ஆதாலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே-4—தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா -என்று பகவத் விஷயத்தில் ஆழ்வார் சொல்லுவது எல்லாம் ஆழ்வார் விஷயத்தில் சொல்லுகிறார் இவர் –
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி
சர்வம் யதேவ நியமேன மதநவ்யாநாம்
ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளாபி ராமம்
ஸ்ரீ மத ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –5—மாதா–உத்பத்திக்கு முன்னே வரம் கிடந்தது பெருகைக்கு வருந்தி பத்து மாசம் கர்ப்ப தாரணம் பண்ணி-பிரசவ வேதனையை அனுபவித்து-அஸூத்திகளையும் மதியாதே பால்ய தசையிலே ஆதரித்து பகவான் ஆனாலும் இவன் புருஷ பாஷணம் பண்ணப் பொறுத்து-அகல இசையாதே அவன் பிரியத்தையே வேண்டும் – மாதாவைப் போலே உபகாரகனாய் இருக்கை –பிதா–அவள் பாத்ர மாத்ரமாம் என்னும்படி உத்பாதகனாய் என்றும் ஒக்க ஹித பரனான பிதாவும்-யுவதயஸ் – இருவரையும் மறந்து விரும்பும் யுவதிகளைப் போலே நெஞ்சுக்கு இனியராய் இருக்கை–தனயா – அவளுடைய யௌவனத்தை அழிய மாறிப் பெற்றவனாய்
பால்யத்தில் ஸூககரனாய் பக்வ தசையில் ரஷகனாய் ஆமுஷ்மிகத்தில் நிரய நிஸ்தாரகனான-புத் -என்னும் நரகத்தை -தாண்டுவிப்பவன் – புத்ரனைப் போல் இருக்கை –விபூதி – விபவம் இல்லாத போது இவை எல்லாம் அசத் சமமாய் இருக்கையாலே-இவற்றை நன்றாக்கும் ஐஸ்வர்யம் போலே உத்தேச்யமாய் இருக்கை –சர்வம் – அனுக்தமான சர்வ போகங்களுமாய் இருக்கை –யதேவ –
அவதாரண்த்தாலே –சேலேய் கண்ணியர்-திருவாய் மொழி -5-1-8- என்று இருக்கும் ஆழ்வார் நினைவு இன்றி இருக்கை –
பாதங்கள்
ப்ராப்த சேஷியானவர் திருவடிகள் –
யாமுடைய பற்று –
தச் சேஷ பூதரான நம்முடைய பற்று –
தகையார் சரணம் தமர்கட்க்கு ஓர் பற்று –10-4-10—
யாமுடைய பற்று இதுவாயிற்று
வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திகை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே–10-4-10-அநந்ய பிரயோஜனர்க்கு அத்விதீயமான அபாஸ்ரயம் -பக்திமான்களுக்கு பல ப்ரதமமாய் உபாயமாய் இருக்கும் -தன்னையே பற்றினார்க்கு அவ்யவஹித உபாயமாம் –தன் திருவடிகளைப் பற்றினார்கட்கு பின்னையும் புறம்பு போய்-ஒரு பற்று தேட வேண்டாதபடியான பற்று–அநந்ய பிரயோஜன பக்திமான்களுக்கும் பலத்தை கொடுப்பவனாய் உபாயமாய் இருக்கும்–தன்னையே பற்றினார்க்கும் நேரே உபாயமாய் இருக்கும் –-தன் திருவடிகளைப் பற்றினார்கட்கு பின்னையும் புறம்பு போய்-ஒரு பற்று தேட வேண்டாதபடியான பற்று-–-தமர்கள் -பக்திமான்களையும் பிரபத்திமான்களையும் குறிக்கும்-
——-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சொட்டை நம்பிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஈஸ்வர முனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாதமுனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply