ஸ்ரீ சடகோப நான்மணிமாலை
நானிலத் தேவரும் மாமுடி கோளுறு நாறுமகிழ்
தேனலந் தாரிதை மாமுடி கோளுறுந் தேசிகன்தன்
நான்மணி மாலை உலகவ ருய்ய நவில்வதற்கு
மான்மறைச் சீடன் குருவவன் காப்பாகு மாமுனியே –காப்புச் செய்யுள்-
நால்வகைப்பட்ட நிலங்களிலுள்ள யாவருமே சடகோபன்” என்ற சொல் கேட்டதும் தங்கள் திருக் கரங்களை சிறந்த முடி மேல் கொள்ளுதற்கு உரியவரும், பரிமளம் மிகுத்து தேன் வெள்ளமிடும் மகிழ மலர் மாலையை முடிமேல் கொண்டுள்ளவருமான ஆதி குருவாம் மாறன் (நம்மாழ்வார்) விஷயமான நான்மணிமாலை என்ற நூலை உலகை உய்வித்தல் பொருட்டு, திராவிடவேதத்தின் பொருளை காலட்ஷேப ரீதியில் நம்பெருமாளுக்குணர்த்தி அவனைச் சீடனாக்கிக் கொண்ட மணவாள மாமுனிகளே இதற்குக் காப்பாகும்
வீறுசால் தெய்வ வெறிகொள் துழாய்கமழும்
நாறுநவ நீத முடைநாற்றம் – நாறுமால்
மச்சகந்தம் மாறன்கண் ணன்வியாசன் வந்தவிடம்
நச்சுவது யாரைநெஞ்சே நாம்?–1-
உலகிலுள்ள மற்ற மணங்கள் தனக்கு ஒவ்வாத தெய்வத் தன்மை வாய்ந்த துழாய் மணம் கமழும் குருகூர் நம்பி அவதரித்த இடமும், கண்ணன் வந்தவதரித்த வெண்ணெய் முடநாற்றம் கமழும் ஆயர்சேரியும், வியாசன் வந்தவதரித்த மச்சகந்தம் நாறும் புலைச்சேரியும் இத்தகையவர்கள் அவதரித்த இடம் இத்தன்மையாதனால் நெஞ்சே! இவர்களில் நாம் விரும்பித் தொழுதற்குரியவர் யார்? என்று சொல்வாயாக –
–
நாமே? யியம்புவ நானிலந் தாழ்ந்த வருணமிதை
தாமேந் துதற்கு வராககோ பாலராம் தண்ணியராய்
ஆமா றுலகோர் பிறவிக் கடலாழ்ந் தனத்தமுற
பூமா தவர்ச்செய மாறன் புகுந்த வருணநான்கே–2-
ஒரு காலத்தில் பிரளய வெள்ளத்தில் அழுந்தித் தாழ்ந்த உலகையும், யயாதி சாபத்தால் தாழ்ந்துபோன யது குலத்தையும் மேல் நோக்கி உயர்த்துவதற்கு வராக மூர்த்தியாகவும், கோபால கிருஷ்ணனாகவும், தாழ்ந்து வந்தவதரித்தாற் போன்று, உலகத்தவர்கள் பிறவிக் கடலில் அழுந்திக் கிடக்கின்றவர்களை மெய்யுணர்வைக் கொடுத்து நிலத்தேவராக்குவதற்கு உயர்ந்த மாஞானியாகிய குருகூர்ச் சடகோபன், தாழ்ந்ததென்று உலகம் நினைக்கும் நான்காம் வருணத்தில் வந்தவதரித்த வியப்பை, நாம் சொல்லும் தரமுடையதன்றே? (நெஞ்சே நீ சொல்வாயாக )-
நான்முகன் நான்மறை நாபியா றங்கம் ஒருமுடி யிருகண்மூன் றந்தாதி
நோன்புளம் திருமொழிப் பல்லாண்டு திருமொழி முகங்கழுத் திருபது நூறோடும்
நான்கிரு பதினான் கேழ்பதி னைந்துதோள் நாற்பதைந் தடித்தூள் பத்தாகம்
வானிடந் தோள்பத் தடிஎதி மதுர கவியுடல் உறுப்புபாங் கந்தாமே–3–
நான்கு முகங்களாலே வேதங்களின் கருத்தாக தமிழில் திருவாய்மொழி பாடினவர் நம்மாழ்வார். இவருக்கு நாபியாக வந்தவதரித்தவர் கலியன். இவர் வடமொழியிலுள்ள ஆறுஅங்கங்களையும் தமிழில் பாடிய பிரபந்தங்கள். அதைப் போலவே வடமொழி வேதத்தை தமிழில் பாடியவர்களான பொய்கையாழ்வார் நம்மாழ்வாருக்கு முடி– பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் இரண்டு திருக்கண்கள்– இவர்கள் மூவரும் பாடிய மூன்றந்தாதிகள்– நோன்பென்று நோற்ற திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் நம்மாழ்வாரின் திருவுள்ளம் ஆண்டாள் பாடிய பிரபந்தம். நம்மாழ்வாருக்கு திருமுகமாகிய பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டும் பெரியாழ்வார் திருமொழி. இந்த நம்மாழ்வாருக்கு திருக் கழுத்தாக அவதரித்த திருமழிசை பிரான் இவர் பாடி யருளிய நூற்றிருபது திருச்சந்தவிருத்தம் நான்முகந்திருவந்தாதி தொண்ணூத்தாறும்– நம்மாழ்வாரின். திருத் தோளான குலசேகரப் ‘பெருமாள் பாடிய பெருமாள் திருமொழி நூற்றைந்து. இவர் திரு மார்பான தொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலை நாற்பத்தைந்து திருப்பள்ளியெழுச்சி பத்து. இவர் இடது தோளான திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் பத்து-எம்பெருமானார் இவர் திருவடிகள். இவர் விஷயமாக பதினொரு பாசுரங்கள் பாடியவர் மதுரகவியாழ்வார் இவர் திருமேனி, நம்மாழ்வார் தவிர்த்த மற்ற ஆழ்வார்கள் பாடின பிரபந்தங்கள் உபஅங்கங்களாகும்
—
தாயேத் திரந்திடற் குற்றவர் தங்குரு ஆமா றறிந்துடன் பயில்பவர் சோத்தரி தங்கிளை மாணவர் தாமிவர் சேர்ப்பார் பரிந்துரைத் திரக்கும் பராங்குச நாயகி பறவையாய் பாவணை சிறையறி வொழுக்கும் வீசுஞ் சிறகீர் விண்ணுமக் கெளிதே அஞ்சிறை சேவலோ டாடுவென் றருளீர் கூட்பிகைச் சொல்லீர் குருகினத் தவரே உணர்த்தல் ஊடல் உணர்ந்துறை அன்னம் புணர்த்த பூந் துழாய்முடி பெருமாற் கண்டு புணர்த்தகை யடியேற் பொருட்டுப் போற்றுமின் நன்னலப் புள்ளினம் நான்வினை யாட்டியேன் இரந்தேன் என்முல்லை மேல்சேர் தும்பிகாள் இதுவோ தக்கவா றென்னவே வேண்டும் செங்கால நாராய் குடக்கூத் தென்துதாய் நுங்கால் நுமரோடென் தலைமேல் செழுமிரே கொக்கினங் குருகினந் தக்கிலங் கேளிரே உடன் மாணாக்கர் கேண்மி ஸுயர்குரு இளங்கிளி சிறுபுவாய் யான்வளர் நீரலீர் வினையேன் வளர்சிறு பூவை மீர்காள் இன்னமா ஸணாக்கர் மக்கள்பா லிரந்து பிரிவின் வேட்கை மிகுந்திடப் பெருமான் பால் அணைந்திடுமாப் பரிந்துரை செய்மின்னென்(று) இரந்திடும் பறவை தாள் வீழ்த்து பரிந்தே–4–
பறவைகளைத் தூதுவிடுவதற்கு உள்ளூறைப்பொருள்:-
குருகூர் மாறன் தான் நாயகி பாவத்திலே களவில் கூடி பழிக்கஞ்சி நாணத்தால் பிரிந்து, பிரிவுத்துயர் தாங்காது எம்பெருமான் பக்கல் தூதுவிடுகின்ற பராங்குசநாயகியுடைய சொற்கள் இவைகள். பராங்குச நாயகி நெய்தல் நிறத்து மங்கையாய் அங்குள்ள பறவைகளைக் கண்டு பெருமானைப் பிரிந்த பிரிவாற்றாமையால் பறவைகளைத் தூதுவிடுகின்ற பராங்குச நாயகி, தூது விடுதற்குற்றவர் தனக்கு குருவாகவும் தான் பயிலும் போது உடன் மாணாக்காராகவும் நினைத்து பெருமான் பால் தூது விடுகிறார். பெருமானிடத்தில் செல்வதற்குப் பறவைகளுக்கு இரண்டு இறகுண்டு என்று நினைத்து அவைகளைத் தூது விட, தான் தூது விடுபவர்களுக்கு ஞான ஒழுக்கங்கள் உண்டு. அவை இறைவனை அடைதற்குச் சாதனம் எனக் கருதி, ‘சிறகுகளலே ஆகாயத்தில் பறந்து செல்கின்றவர்களே! பறவைகளாகிய நீங்கள் எம்பெருமானிடத்தில் செல்வது சுலபம். சேவலோடு என் துயரத்தைக் கண்டு ஐயோ! என்று அருள வேண்டும். ‘நீங்கள் பெருமானிடத்தில் சென்று கை கூப்பிச் சொல்லுங்கள் குருகினத்தாவர்களே! உணர்த்தல் உடையவர்களாயும் ஊடல் செய்கின்றவராயும் உணர்ந்து உறையும் அன்னங்களே! தொடுக்கப்பட்ட திருத் துழாய் மாலைகளை முடி மேல் தரித்துக் கொண்டிருக்கும் பெருமானுக்கு அடியேன் பொருட்டு புணர்த்த கையராய் போற்றிச் சொல்லுங்கள். கூடியிருத்தலாலே மிக்க இன்பத்தை அடைந்திருக்கிற புள்ளினங்களே! நான் வினை வயத்தால் பிரிந்து வருந்துகிறேன். ஆதலால் உம்மை இரந்து கேட்கிறேன், முல்லைகளின் மீது சேர்ந்திருக்கும் தும்பிகளே! என்னைப் பெருமானைக் கண்டு பிரிந்து வருந்தும்படி விட்டிருப்பது தக்கதோ? என்று பெருமானைக் கேளுங்கள், சிவந்த கால்களுடைய நாரைகளே! குடக்கூத்தாடிய பெருமானுக்கு காதலன் காதலியின் திறத்தில் வேட்கை மிகுதியால் அவள் தன் எச்சிலை ஆதராம்ருதம் என்று விரும்புவது போல, இவ்வாழ்வார் திறத்துண்டான ஞான பக்தி வைராக்கியங்களின் மிகுதியால் எம்பெருமான் மிக விருப்பமுற்று இந்த ஞான பக்தி வைராக்கியங்கள் வளர்வதற்குக் காரணம் திருமேனி சத்துவ குணத்தாலாயது என்று திருவுள்ளம் பற்றி இவரை திருமேனியோடே திருநாட்டுக்கு எழுந்தருளப் பண்ண வேணும் என்ற திரு உள்ளம் உடையனாய் எம்பெருமான் இவருடைய திருமேனியிலே ஐம்பெரும் பூதம் சேர்க்கை என்ற நினைவில்லாதவனாய், இவர் திறத்துண்டான ப்ரேமையின் மிகுதியால் இவர் திருமேனியில் குரவை துவரைகளில் பற்பல உருவம் கொண்டு பரிமாறியது போலே இவ்வாழ்வார் திருமேனியில் உகந்தருளின நிலங்கள் எல்லாவற்றிலும் பண்ணும் ஆதரத்தோடு வைகுந்த வள நாட்டில் பண்ணும் ஆதரத்தையும் உடையவனாய் இவர் திருமேனியில் புகுந்து, இவர் திருமேனியோடே கொண்டு போக விரைவானாக திருக் கையைப் பற்றி வாரும் என்றழைக்க, ‘இங்குத்தான் விலங்கென்றால் அங்கும் எனக்கு விலங்கா” என்று இவ்வாழ்வார் அவன் திருவடிகளைப் பற்றிக் கொண்டு தன் திருமேனியில் அவன் பண்ணும் ஆதரத்தை கைவிடும்படி விடுவித்துக் கொண்டார். இதனால் பரமார்த்தனுடைய சரீரத்திலே எம்பெருமான் பண்ணும் வியாமோகம் திருமாலிருஞ்சோலை மலையிலே தழைக்கும். “தூது செல்லும் பொருட்டு உமது திருவடிகளை நும் இனத்தவரோ டென் தலை மீதாக்குங்கள். கொக்கினங்களே! குருகினங்களே! பெருமானைக் கண்டு, ‘நான் தகுதியற்றவளா’ என்று கேளுங்கள். உயர்ந்த குருகுகளே நீங்களும் (சப்ரம்மசாரிகளே) கேளுங்கள் இளங்கிளிகளே! சின்னஞ்சிறு நாகனவாய் பறவைகளே! என்னால் வளர்க்கப்பட்ட நீங்களல்லையோ? வினையேன் வளர்த்த சிறு பூவைகாள்! கேண்மின்” என்று இவ்வாறு மாணாக்கர் பாலும் மக்கள் பாலும் பிரிவின் வேட்கையால் துயரமிகந்து ‘பெருமான் என்பால் அணைந்திடுமாறு பரிந்துறை செய்மின்” என்று பறவைகள் தாள்களில் வீழ்ந்து யாசிக்கிறாள் –
பரிந்திங் கிருள்தரும் பாருல குய்யப்
பொருந்துமா மேகம் புகன்றான் – பெருந்தவங்கள்
நீத்துக் கலைதெளியக் கண்டுரை ணவ
வாய்த்தகுரு கூர்வந்தவன்-5-
லீலா விபூதியான இருள்தருமா ஞாலத்தில் உள்ள சேதநர்களை உய்விப்பதின் பொருட்டு இரக்கங்கொண்டு உய்விப்பதற்குப் பொருந்தியதான “மாமேகம் சரணம் வரஜ” என்றெம் பெருமான் சொன்ன வார்த்தைக்குப் பொருந்த தாம் முயன்று செய்யும் (உபாயாந்தரங்களை அறக் கைவிட்டு ஆத்ம பரமாத்ம சொரூபங்களுக்கு) பொருந்தியதான சரணாகதி நிலையைக் கண்டு சொன்ன நியதியை உடையவனானவன் இதற்கு வாய்த்த குருகூர் வந்த பராங்குசனாகும் –
வந்தவன் வேதம் மயக்கும் பொருளைத் தெளிவுறுத்த
அந்தமில் சீரன்பர் கூட்டுணும் ஆயிரம் பா வமுதைத்
தந்தவன் மாலன்பர் தம்படிச் சாயைசார் ஏழ் கீழ்
சந்ததம் நின்றவன் தாளெம்மை என்றும் விளைக்குமாலே–6-
வேதமானது சரீராத்ம சம்பந்த முதலிய காரணங்களால் முரண்படுவது போல் சொல்லும். அர்த்தங்களைத் தெள்ளத் தெளிய சொல்ல வந்த எல்லை காண்பரிய நலமிக்க அன்பர்கள் கூட்டம் கூட்டமாகக் கூடி அனுபவிக்கும்படியாக அமுதமயமான ஆயிரம் பாக்களைத் தந்தவன் சடகோபனாவார். அவர், எம்பெருமானுடைய அடியார்களுக்கு அடியார் என்ற முறையிலே ஏழு தலைமுறைக்கு கீழே போய் நின்றவர் அவருடைய திருவடிகள் என்றும் எமக்கு வியாமோகத்தை உண்டாக்கும் –
மாலேழ் கடலேழ் மலையேழ் உலகேழ் நும்படைப்பு மற்றுளவும்
மாலே எவர்க்கும் அழியக் கடிவான் தனக்குமொரு மால்விளைக்கும்
மாலே!நும்சீர் பரவும் கவியால் நுமக்குமொரு
மால்விளைக்கும் பாலேய் தமிழர் இசையர் பரவும் தமிழ் மறைப் பூட்டினனே–7-
திருமகள் கேள்வனே! தேவரீர் உலகவர் திறத்துண்டான கழிவிரக்கத்தால் ஏழுகடல்களோடும் ஏழுமலைகளோடும் கூடிய ஏழ் உலகங்களும் மற்றும் உண்டானவையும், உங்களுடைய படைப்பு படைத்த உலகத்தில் உண்டான உண்டியே உடையே என உகந்து ஒடும்படியான நீர் விளைத்த மயக்கத்தை அழியும்படி போக்கும் தன்மையுடையவன் குரு கூர்ச் கோபன். இத்தகைய குருகூர் சடகோபனுக்கும் உம்முடைய சொருபம், குணங்கள், திருமேனி முதலாகிய செளந்தர் யத்தைக் காட்டி வியாமோகத்தை விளைத்தீர். இந்த குருகூர்ச் சடகோபன் பாலே போல் இனிக்கும் உன் கீர்த்திகளைப் பாடும் கவிகளால் இனிய இசையில் வல்லவர்களுக்கும் நுமக்கும் இன்ப மயக்கத்தை விளைக்கும் தமிழ்மொழியாம் திருவாய்மொழியை புணைந்து கொடுத்தான் –
பூண்டநாள் பொருவரு சீர்க்கடல் உட்கொளும்
நீண்டதோள் மால்துயில் நீள்கடல் தன்னின்
பூண்டநா ளெல்லாம் நீராடப் புகுமே
திருமால் சீர்க்கடல் உட்பொதி சிந்தையர்
நீலநன் மேனி நின்றநன் நிறமொத்து
திருமால் திருமேனி யோகம் ஒத்து
நினைஅடை முகில்வணன் நிழலீட் டாலே
தீர்த்த கரராய்த் திரிந்துயி ரளிப்பான்
தீதில் நன்னெறி காட்டித் திரிந்து
ஞானமா மடுவை யுடையதும் அன்றி
நீள நினைவுறு நீரை யுடையதும்
ஆசை வெறுப்பாம் அழுக்ககற் றுவ்தும்
ஆன மனத்தில் உளவாம் தீர்த்தத்து
ஆடுவான் எவனவன் மேற்கதி அடைவதும்
எம்பிரான் இலங்கு குணநீர் நிறைந்து
தீங்கின்றி வாழ உலகில் பெய்து
கொடுத்த நினைந்திடா வள்ளல் தன்மையுள்
வெட்கி வெறுத்து கொடுக்கப் பெற்றிலம்
பிறர்தம் நலமே தம்பேறாக
அன்பின் நிறைந்த அன்பன் பாலன்பு
கூறும் அடியவர் உறையில் இடாதவர்புயல்கை மாரி குணந்திகழ் கொண்டல்
போல்வார் மேகம் போல் தந்திடுமே.–8-(அகவற்பா)
பூண்ட நாள் சீர்க்கடலை உட்கொண்டு மழை பெய்ய வேண்டிய காலங்களில், கடலிலே புகுந்து அதில் நீரைப் பருகிப் பொழியும் மேகம் போலே, பூண்ட நாளெல்லாம் புகும் என்றும் திருமால் சீர்க்கடலை உட்பொதிந்த சிந்தனையேன்’ என்றும் சொல்லுகிறபடியே விடிந்த நாளெல்லாம் அவன் கண்வளர்ந்தருள்கிற கடலிலே புகுந்து திருமகள் கேள்வனான அவனுடைய கல்யாண குணக்கடலை உள்ளே அடக்கிக்கொண்டு மேகமானது அவன் திருமேனியோடு ஒத்த நிறத்தை யுடைதாயிருக்குமாப் போலே உள்ளே தியானிக்கப்படுகிற முகில் வண்ணனுடைய நிழலிட்டாலே அவனோடு ஒத்த நிறத்தையுடையதாய், மேகமானது மழை மூலமாக உயிர்களைப் பாதுகாப்பதற்காக விரிந்திருக்கிற ஆகாசப் பரப்பெங்கும் சஞ்சரிக்குமா போலே, பிறப்பு இறப்புகளிலே உழலுகிற ஆன்மாக்களைப் பாதுகாப்பதற்காக உலகத்தை தூய்மை செய்பவர்களாய் உய்யும் வழியைச் காட்டுமவர்களாய், எவ்விடத்தும் திரிந்து கொண்டு ஞானமாசின்ற அறிவினையுடையதும் தியானமாகிற நீரையுடையதும் ஆசை துவேஷம் ஆகிற அழுக்கை யகற்றுவதும் ஆன மனத்தில் உறவாகிய தீர்த்தத்தில் எவன் ஆடுகிறானோ அவன் உயர்ந்த கதியை அடைகிற நான் என்று: மனத்திலுள்ள தீர்த்தத்தைச் சிறப்பித்துச் சொன்ன ஞானமாகிற மடுவைத் தாங்கள் பெய்கிற பகவானுடைய குணங்களாகிற தண்ணீரால் நிறைத்த தீங்கின்றி வாழ நிதி சொரிந்து “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து” என்றும், “வாழ உலகினில் பெய்திடாய்” என்றும், மத்த நிதி சொரிந்து” என்கிறபடியே கேடு சிறிதும் இன்றியே வரும்படி பகவானுடைட குணங்களாகிற நீரைப்பொழிந்து பொழிந்து, கொடுத்தது நினையாதே வெட்கி வள்ளல் தன்மை மிகுதிபினாலே இன்னமும் கொடுக்கப் பெற்றிலோம் செய்தது போருமோ என்று வெட்கி வெளுத்துப்போய் ஒளித்து மேகமானது :மழை பெய்யாத போது வெளுத்துப் போய்க் கண்களுக்கு புலப்படாமல் இருப்பது போலே ஆர்த்தவிசேடங்களை உபதேஸிக்கப் பெறாதே பேறாக போது உடம்பு மறைத்து வெளியே முகம் காட்டாதவர்களாய் கண்டு உவந்து பிறந்த பேறான, மேகமானது தனக்கு என்று காரியம் செய்யாது பிறர்நலத்துக்காகவே கொடுப்பது போன்று, கொடுக்குமிடத்து சிஷ்யர்களின் நிறைவினைக் கண்டு மகிழ்ந்து அந் நிறைவினையே தங்களுக்கு பயனாகக் கொண்டிருக்கும்படியான ஆங்கரும்பிச் கண்ணீ சோர்ந்தன்பு கூ.றும் அடியவர்களான முதலாழ்வார்கள், உருவினா வாள் உறையில் இடாதே முதல் நடு இறுதிகளிலே மாறுபட்டவர்கள் குறையினை கூறுதல் முன்னாக எம்பெருமானுடைய முதன்மையை எடுத்துக் கூறிய திருமழிசைப்பிரான், வள்ளற்றன்மையினையுடைய மேகத்தைப் போன்றவராய் அருளைப் பெய்யும் திருமங்கையாழ்வார், “குணம் திகழ் கொண்டல் இராமானுசன்” என்று குணங்கள் ஒளிவீசும் மேகமாகச் சொல்லும் எம்பெருமானார் போன்றவர்களை குணங்களின் ஒப்புமைக் கொண்டு மேகம் என்று சொல்லும் என்கை, பயனுக்குக் காரணம் இவர்களாகையாலே பயனில் விரைவுத் தோன்றப் பலகாலும் தூதுவிடுவர் என்கை –
தந்திடும் அற்ற களைகணார் தங்கட்கு
அந்தமில் ஆர்வம் அடைந்திடத் – தந்த
உடலம் உருக பெருகும் மதுரம்
குடமுக்கில் வெள்ளங் கொடு –9-
எம்பெருமானையன்றி வேறு கதியற்றவர்க்கு எல்லையில்லா ஆர்வம் பெருகும் வகையில் தந்த உடலம் உருகும்படியாக இனிமை பெருகும் வண்ணம் பேரார்வத்தை திருக்குடந்தையில் பெருவெள்ளம் பெருக தந்திடும்.
கொடுமை யுடைய விருத்தம் இலதாக்கும் எம்பெருமான்
கடுமை யுடன் கழகம் புகவேண்டா போகுநம்பி
திடமா யெதிர்த்திடு நாயகி ஊடல் திருவடியால்
விடச் செய்து விண்ணகர் கோயில் கொள் அப்பனாம் ஒப்பிலானே.–10-கட்டளைக் கலித்துறை
திருவிண்ணகர் கோயில் கொண்ட விருத்த விபூதியனான ஒப்பிலியப்பன் வராமைக் கண்டு, மின்னிடைமடவார் என்ற திருவாய் , மொழியில் பராங்குசனாயகி வைகல்பூங்கழிவாய் என்ற திருவாய்மொழியில் நாயகனாம் எம்பெருமானை குறித்து பிறிவாற்றாமை மீதுற பறவைகளைத் தூதுவிட்டாள். தூதுபோன பறவைகள் போய் சொல்லி அவன் புறப்பட்டு வருவதற்குள் வேட்கையின் மிகுதியாலே பராங்குச நாயகி அவன் திறத்து ஊடல் கொண்டு, அவன் இனி வந்தாலும் அவன் முகத்தில் விழிப்பதில்லை என்று தன் ஆற்றாமையை போக்குவதற்காக சிற்றிலமைத்து பராக்காக பொழுது போக்கும் காலத்தில் எம்பெருமான் வந்தான். வந்தவிடத்தில் பராங்குசநாயகி முகம் கொடாமலிருக்கக் கண்டு, தன்பால் சேர்த்துக் கொள்ள பலவித உபாயங்களைச் செய்தான். அதில் ஒன்று கூட்டமாகக் கூடியிருந்த கழகத்தில் உள்ளே நுழைந்தான். அப்போது பராங்குச நாயகி ‘எங்கள் கூட்டத்தில் புகாதே வெளியேறு’ என்று கடிந்து சொல்ல, இவர்கள் இழைத்து நின்ற கடுந்தன்மை நீங்கி அவனிடம் கலந்துக் கொண்டார்கள். அனைவர்க்கும் உபாயமான திருவடியே அவர்களோடு கூடுவதற்குத் தனக்கும் உபாயமாயிற்று. அஃதன்றி பராங்குசநாயகி ஊடே நின்றிருந்த கடுந்தன்மை நீங்கி இணைந்ததை வியப்பாகக் கொண்டு விருத்த விபூதியனான எம்பெருமானை அடுத்த திருவாய் மொழியில் ஒப்பிலா அப்பனான அவனை மங்களாசாசனம் பண்ணினார் –
–
ஒப்பில்பே ரன்புடையாள் உடன்கூடி உலகிரைக்கும் பழிக்கஞ்சி நாணமுற்றுப் பிரிந்தாள் அந்தோ
இப்பரிசால் ஆற்றாளாய் இழிபுடைய மடப்பத்தால் பறவைகளைத் தூதுவிடற் கிணக்க முற்றாள் செப்பரிய தம் பிழையும் சிறந்த செல்வம் படைப்பலுவல் தமர்கூட்டம் மறப்பிக்க மறந்தா னன்றே
துப்புடைய பொறை விரதம் சுவையமகு இருபரங்கள் வியூகவிப வர்ச்செய் இவை விடைய மன்றே–11--(எண் சீர் கழி நெடிலாசிரிய விருத்தம் )
ஒப்பற்றவளான பராங்குசநாயகி எம்பெருமான் பக்கல் பேரன்புடையவளாய் காதாசித்கமாக அவனைக் கிட்டி நின்றநுபவிக்க உலகவர் பழித்துச் சொல்லும் பழிக்கஞ்சி வெட்கமுற்றுப் பிரிந்தான். அந்தோ பாவம்! பிரிந்த இந்தக் காரண த்தால் ஆற்றாமை மீதூர்ந்து பெண்மையால் இழிவுடைய மடப்பத்தால் பறவைகள் தூது செல்வதற்கு தகுமா? தகாதா? என்ற விவேகமின்றி ஆற்றாமை கை கொடுக்க பறவைகளை தூது விட்டாள் இப்படி இவள் தூது விட அந்தப் பெருமான் இவளை மறந்திருந்தான். அதற்குக் காரணம் குறையுடைய நாயகி செய்யும் பிழையை பொறுத்துக் கொள்ளும் அபராத ஸஹத்வம் என்ற குணம் தனக்கிருப்பதை மறக்கையாலே நாயகியை மறந்தாள். இது, வியூக மூர்த்தியின் பால் அஞ்சிறையமட நாரையில் தூதுக்கு விஷயம். அடியார்களைக் காக்கும் விரதமுடையவனாகையாலே நாயகியை மறந்தான். இது, “வைகல்பூங்கழிவாய்” என்ற பதிகம் இரண்டாம் தூதுக்கு விபவத்துக்கு விஷயம் – “பொன்னுலகாளீரோ” என்ற திருவாய்மொழியில் அந்தர் யாமித்வம் பரத்வம் நிலைகளுக்கு தூதுவிடும்படியாய் அவன் தன் படைப்பின் மீதாகிய ஈடுபாட்டில் நாயகியை மறந்தான். “எங்கானலங்கழிவாய்”” எனத் தொடங்கும் திருவாய்மொழியில் “திருவல்லவாழ்கோயில் கொண்ட” என்ற அர்ச்சாவதார மூர்த்தி அடியார்கள் கூட்டத்தின் இனிமையாலே பாரங்குசநாயகியாகிற தலைவியை மறந்தான். அந்தர்யாமித்வம் பரத்வாமாகிற இவைகள் மூன்று நான்கு தூதுக்கு விஷயம் என்றவாறு –
விடுதற் கரிய பேரழகின் மிக்கவள் புனிதாப் பிரிந்து பொறுக் கிலளாகி நினைவற் றுணங்கினள் தாயர் நுணங்கினர் கட்டுவிச் சியரைக் கதியெனக் கொண்டு இனதென நோயும் மருந்தும் இனதெனீர் முனநாள் முருகற் பற்றினில் முடிக்கிலீர் நீர்மறந் திட்டால் தான்மறந் திடுமே வேலனைக் குறித்து வெறியாடத் தீர்மென மறந்தும் புறந்தொழில் மாய்வளே அந்தோ !
இழப்பர் இதனை முந்துற விடுமின்
துலைவிலி மங்கலம் துணைகொடு காட்டினீர்
வகுத்தவன் வடிவில் மயங்கினள் மீள்வளோ?
இவள்விடாள் தாயீர் நீர்விடும் ஆசை
மணமுரசு அறையீர் செவிப்படின் மாய்வள்
திருப்புலி யூரில் நாயனார் திறத்துக்
கலவி இவட்குள போலும் காண்மின்
அந்தண் துழாய்இவள் கமழ்தலில் அறிந்தனன்
,புனையிழை அணிவும் புதுக்கணிப் பறிமின்
அவைகளால் பிறர்க்கும் தனக்கும் அல்லள்
வகுத்தவன் திறத்துத் தகுந்ததென் றமைமின்
தோழிக்கூற் நிஃதேல் தாய்நிலை சொல்வதென்?
வாடி மெலிந்துபித் தேறியும் மற்றும்
ஏறப் பேசி கட்டிழந் தகன்றும்
சார்வதே வலித்தமை சாதன மென்று
அஞ்சி ஏழில் அவனருள் அல்லதோர்
நெறிபிற தில்லெனல் நிச்சய மாமே?
மகள்பல்கால் ஆள்விட்டு ஆற்றாமை சொல்லி
கண்புதையப் போக்கற் றுறுநெஞ் சுள்ளெழ
கூடுநாள் கூடித் தாழ்த்ததுக் கூடி
உசாத்துணை அற்று சூழவும் பகைமுகம்
செயத்தடை நிலாது புயக்கற் றதனொடும்
மாலையும் காலையும் பூசல் பதினேழ்
விரைதலின் விரைவு தெரிந்த தெளிவே–12( அகவற்பா)
விட்டுப்பிரிய முடியாத அப்பேர்பட்ட அழகின்மிக்கவனாய், தூயவற்றுக்கெல்லாம் தூயனாய் மிக்க பேரழகனாய், கல்வி செல்வம் இவற்றால் பூர்ணனாய் திருமகள் கேள்வனான எம்பெருமான் ஒருக்கால் தோழரோடு வேட்டையாடித் தோழர்களைப் பிரிந்து வந்தானாக. எல்லாவற்றிலும் சிறந்தவளான பராங்குச நாயகி தோழியரோடு பறித்துக் கொண்டிருந்தவள் தெய்வகதியால் தோழியரைப் பிரிந்து தனித்த வந்தாளாக, இப்படித் தனித்து வந்த இருவரும் தெய்வயோகத்தால் ஒருவரை ஒருவர் கண்டு காதலுற்று கூடீன ர்கள். இப்படிக் கூடினவர்கள் உலகவர்கள் நகைப்பார்களே என்று அஞ்சி பிரிந்தார்கள். பிரிந்தவர்கள் ஒருவரை ஒருவர் மறந்ததில்லை. பெரிய பேதமைச் சின்மதிப் பெண்பையாச் பராங்குசநாயகி நினைவு முதிர்ந்து தந்நிலை இழந்து உணர்ச்சியந்றுச் கிடக்கிறாள்.இப்படிக் கிடந்த பராங்குச நாயகியை தோழியரும் தாய்மார்களுப் கண்டு ஒரு மகள் தன்னையுடையவர்களாகையாலே திருமகள் போ6 வளர்த்தவர்கள் ஆற்றாமையால் ஒன்றும் தோன்றாமல் கவலையுற்ற:£ கலங்கினார்கள். அந்தத் தாய்மார்களில் ஒருத்தி குறி சொல்லுகிள் கட்டுவிச்சியைக் கண்டு இந்த நோயின் தன்மை என்ன? இதற்குப் பரிகார: என்ன?” என்று வினவியபோது அவள் “நீங்கள் முன்னொரு காலத்தி வேலனுக்கு ஏதேதோ செய்வதாக பிரார்த்தித்தீர்கள். ஆனால் அந்: பிரார்த்தனை செலுத்தவில்லை. கால நீட்டிப்பால் மறந்து விட்டீர்கள் அதனால் கோபமுற்றவனாய் இந்தப் பெண்ணின் பீதாவேசித்து இந்நின௦ யெய்தும்படி நேர்ந்தது. வேலனைக் குறித்து பூஜை செய்கின்! வெறியாட்டக்காரை அரைத்து வெளியாட வேண்டும்; அர்: ர ர… ட்டம் மதுவாராதனை பஸண்ஈ “வண்டு. இல ச்ச் ளைக் 0 ப்பு ண்ண மேளம்; அதல. ஐன் மடம் ஜ் த. ந்நோயுக்கிடமில்வாதபடி செய்து னிதுகான்” என்ட் கட்டுவிச்சிச் ௦ சொன்னாள். மகள் நிமித்தமாக நீள உருகும் சாய்மார்கு6 தங்கள் குடிமரபின் ஒழுக்கத்துக்கு மாறாக மறந்தும் பறந்தெ:ழாத்தன் ௮ விட்டு, மகளின் நிமித்தமாக கட்டுவிச்சி சொன்ன துக்கிணங்க இசை நட் வெறியாட இறைச்சி, கள், மீன போன்றவற்றை வைத்து வெறியாட்ட।! நடத்தினார்கள். இதை அந்தரங்கத் தோழி கண்டாள். “பெருந்தேவனா எ பெருமான் திறத்தில் ஈடுபட்ட இவளை, இவள் நிலை இன்னதென்றறியா£ வைணவக் குடும்பத்தைத் தூஷிக்க வேண்டும் என்று கட்டுவிச்ஈ சொன்னதை மெய்க் கொண்டு நீங்கள் ஆராயாமல் செய்த இந்த செயலா? பராங்குச நாயகியை இழந்துவிடுவீர்” என்று தோழியானவள் ஆராய்ந் சொல்வது போலச் சொன்னாள். உலகொருங்காக உண்ட பெருந்தேவஃ திறத்தீடுபட்டு சித்தியாமையாலே உணர்ச்சியற்றுக் கிடக்கின்ற பராங்கு, நாயகி உண்மை நிலைமை யுணர்ந்து வெறியாட்டம், களியாட்டம் நம் மரபுக் ஒவ்வாதென விளக்கிவிட்டாள இது, தீர்ப்பாரை என்று தொடங்கு: திருவாய்மொழியின் சாரம். அடுகதபடியாக “‘துவளில் மணிமாடமோங்கும் என்று தொடங்கும் உரையிலே தோழியரும் தாய்மாரும் திருத்தொலைவில்ஈ மங்கலத்தை சேளித்தார்கள். அரவிந்த லோசனஎனக் கண்டபோச நெடுங்கண் இளமானான பராங்குச நாயகி அவன் அழகிலே ஈடுபட்டு அவனை விட்டுப் பிரியமுடியாமல் பேராசையுற்று அங்ஙனே நிற்கின்றாள். தாய்மார் அவளை மீட்கப் பலகால் முயன்றும் முடியவில்லை. இதைக்கண்ட அந்தரங்கத்தோழி (“நலியக்கூடிய பொருள்கள் நலியா நின்றன என்று கூப்பிட்டும் போருகிற பதினேழில் த் வரையும் தெரியும்”. மேற்கூறிய பதினேழு திருவாய் மொழிகளிலே பேற்றிலே பதற்றம். தோன்றும் என்கை.) “சிறப்புடைய பேரழகனைக் கண்டால் இவள் மீளமாட்டாள் என்று நீங்கள் குறிக்கொள்ளாது வலிய அழைத்து வந்து சேவிக்க வைத்துவிட்டீர்கள். அவன் அழகில் ஈடுபட்டு அவனைவிட முடியாதபடி நிற்கிறாள், நீங்கள் இவள் திறத்து ஆசையை துறக்க வேண்டுமே தவிர அவன் திறத்து ஆசையை அவள் துறக்கமாட்டாள் என்றாள். மற்றோர் நிலையில் குட்ட நாட்டுத் திருப்புலியூர் ஆயன் விஷயத்தில் மிக்க பேரழகுக் கண்டு பேரன்புடையவளாகி ஈடுபாடு கொண்ட பருவம் நிரம்பிய இவளை யாருக்கேனும் மணமுடிக்க வேண்டும் என்று சுயம்வரம் கூட்ட மணமுற சறைவிக்க ஆரம்பித்தார்கள். அந்தரங்கத் தோழி, “இவள் ஏற்கனவே குட்டநாட்டுத் திருப்புலியூர் ஆயன் விஷயத்தில் ஈடுபட்டவள்; அவனோடு கலவியுள்ளவன்; அதனால் அவள்மேல் திருத்துமாய் மணம் கவிழ்கின்றது; இவன் பேசுகின்ற பேச்செல்லாம் அவன் திறத்ததுவே; அவனுக்கு நேராக வேண்டும் என்று நினைத்து சிறந்த ஆடை அணிகலன்கள் எல்லாம் அணிந்து கொண்டு புதுக்களிப்புற்றிருக்கிறாள்; ஆதலால் இவளை திருப்புலியூர் ஆயன் திறத்தில் சேர்ப்பிப்பதுதான் தர்மம், அங்ஙனம் இன்றி நீங்கள் நினைப்பது செய்தால் அது அதர்மம்” என்றாள். கருமாணிக்க மலைமேல் மணித்தடத்தாமரை என்று தொடங்கும் திருவாய்மொழியில் அனுபவம். இது தோழி அறத்தொடு நிற்றல் என்ற பிரணவத்தில் ஜீவபரர்கள் சம்பந்தம் சொல்லும் தோழி உரையைச் சேர்ந்த கூற்று.
தாய கூற்று–தலைமகளின் பதற்ற நிலை கண்டு இது சாதநத்தில் மூளுமோ என்றஞ்சும் நிலைதாய பேச்சாகும். ஆடி ஆடி என்று தொடங்கும் திருவாய்மொழியில், வாடிவாடும் என்கிறபடி அடியார்கள் குழாங்களை உடன்கூட பையால் வந்த துன்பத்தாலே கொம்பை இழந்த தளிர்போலே வாடி மெலிந்து என்றும், “பாலனாய் ஏழுலகு” என்று தொடங்கும் திருவாய்மொழியில், “கண்ணன் கழல் துழாய் பொன் செய் பூண்மென்முலைக்கு ” என்கிறபடியே, கை கழிந்தவற்றை ஆசைப்பட்டு மெலிந்து பித்தேரி என்றும். “மண்ணை இருந்து துழாவி என்ற திருவாய் மொழியில், என் பெண்கொடி ஏறிய பித்தே” என்கிறபடியே, ஒப்புமையுள்ள பொருள்களையும் அவனாக நினைத்துக் கிட்டும்படி, பித்தேறி ஏறப்பேசி என்றும், “கடல்ஞானம்” என்ற திருவாய்மொழியில், ஈசன் வந்தேறக் கொலோ என்கிறபடியே ஆற்றாமையாலே இறைவன் ஆவேசித்தானோ-என்னும்படியும் கட்டிழந்த மாலுக்குஎன்ற திருவாய்மொழியில், கற்புடையாட்டி இழந்தது கட்டே என்று பகவானைப் பிரிந்த க்லேசத்தாலே கட்டடங்க இழந்து அகன்று என்றும், உண்ணுஞ்சோறு என்ற திருவாய்மொழியிலே, இன்றெனக்குதவாதகன்ற என்கிறபடி, தன்னைப் பிரிந்து துன்பப்படுகின்ற இன்னிலையிலே எனக்கு உதவாதே போன என் பெண்பிள்ளை என்னும்படியாகவும், “கங்குலும் பகலும்” என்ற திருவாய்மொழியிலே, “சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையலை என்கிறபடி அவனைக் கிட்டி அவன் திருமுன்னரே முடிய வேண்டும் என்று உறுதி பூண்டமை சாதனம் ஆமோ? என்று உபாஸக பரபக்தி தசையில் உண்டாம் வாட்டம் மெலிதல் முதலிய போலே சாதனத்திலே முதலிடுமோ ? என்று மாதா அஞ்சி, அவனையும் வினவ வந்தவர்களையும் மயங்கா நின்றாள். மெலியா நின்றாள், “எந்தன் கோவே” என்று முறையிடுகிற ஏழில், “முறையோ அரவணை மேல் பள்ளிகொண்ட முகில் வண்ணனே ” என்கிறபடி “இவள் பக்கல் உள்ளவை ஒன்றும் உபாயம் அன்று ஆனபின்பு இப்படித் துடிக்கவிட்டிருக்கை உம்முடைய கருணைக்கும் பாதுகாக்கும் தன்மைக்கும் தகுமோ?” என்று கூப்பிடுகின்ற ஏழு திருவாய்மொழிகளிலும் உபாயத்திலே உறுதி தோன்ற பேசும் இது தாய்க் கூற்று-
தெளிவுறுத்தி நான்முகற்கு தென்மறைமால் சொன்னான்
தெளிவின் றிருக்கவே சொன்னான் – தெளிவின்றித்
தேக்கு வடவேதம் தெளிவிக்கும்? தேர்த்தெளிவால்
காக்குமத் தென்மறையே காண்–13-(வெண்பா)
எம் பெருமானானவன் ஒரு நான்முகற்கு (நம்மாழ்வாருக்கு) மயர்வற மதி நலமருளி தென்மொழியாகிற திருவாய்மொழி என்ற திராவிட வேதத்தை தான் சொன்னான். மற்றுமோர் நான்முகனுக்கு மயர்வறமதி நலமருளி கீர்வாணவேதத்தை உபதேசித்தான். இந்நிலையில் பிரம்மாவுக்கு உபதேசித்த வடமொழி மறை உலகவரை தெளிவிக்குமா? என்பது ஐயம். மயர்வற மதிநல மருளிச் சென்ற திராவிட வேதமே உலகவருடைய அறிவின்மையைப் போக்கி மெய்புணர்வை உண்டாக்கி இறைவனடியிலே சேர்த்துக் காக்கும் தன்மையுடையதாகும் –
காணத் தடைசெய் மயர்வைக் கழித்து மதிநலமாப்
பூணும் பொலன்முகம் தன்முகம் ஏழ்பத்து முப்பதிகம்
நாணும் நலங்கொள் மகள்முகம் பத்துடன் ஏழ்பதிகம்
தோணற்றாய் தோழி இருமுகம் வாய்மொழி ஏழுமூன்றே–14--(கட்டளைக் கலித்துறை)
ஐம்பொருளையும் காணவொட்டாமல் தடை செய்கின்ற வினைவழி வந்த உடல்வயத்தால் வந்த அறிவின்மையை எம்பெருமான் கழித்து முழுமெய்ஞானமும் முழுமையான பக்தியும், விட்டு நீங்காதபடி 73 திருவாய்மொழிகள் தோன்றின. நாணத்தை மிகவுடைய தலைமகள் கூற்றாக 27-திருவாய்மொழிகள் தோன்றின. தலைமகளை வலது தோளாக உடைய தாய்முகமாக ஏழுதிருவாய்மொழிகள் தோன்றின. அந்தரங்கத் தோழி முகமாக மூன்று திருவாய் மொழிகள் தோன்றின. ஆக, தன் முகம், தாய் முகம், தலைமகள் முகம், தோழி முகம் ஆக நான்கு முகங்களாக நூறுதிருவாய் மொழிகள் தோன்றின-
மூன்றும் ஐந்தும் அறியா தவர்க்கு உய்யும் வகையை முதலு ரைப்பர்
ஏன்ற குருவின் இன்ன ருளால் இக்கரை சார்ந்தார்க் கின்ப வெள்ளம்
தோன்றா மடுவும் மேடு காணும் துவளறு சீல மாழங் காணா
தான்றன் னருளால் கரை சேர்ப்பார்க்கு உடற்கு றைகாண் சடகோபன் னுண்டே–15-(ஆசிரிய விருத்தம்)
தத்துவங்கள் மூன்றென்றும், முதல் தத்துவம் எம்பெருமான் என்றும், அர்த்த பஞ்சகத்தை அறியாதவர்கட்கு அவற்றை அறிவித்தும், துன்பக் கடலை நீந்தி இக்கரை ஏறி இளைத்திருப்பாருக்கு என்கிறபடியே, பிரபன்னனுக்கு உபாயம் அவனே என்று துணிந்திருப்பார்க்கு க்ருதக்ருத்யனாகையாலே முகில்வண்ண வானத்தவர் சூழ பேரின்ப வெள்ளத்தை முத்தர்க்கு அறிவித்தும், பரமார்த்தனுடைய திருமேனியைவிட இசையாமல் வியாமோகத்தாலே அங்கு கொண்ட போக நினைக்கும் உபய விபூதி நாயகனுக்கு “‘மங்கவொட்டு உன் மாமாயையை” என்ற பாசுரப்படியே விகாரமான தேகதோஷத்தை எம்பெருமானுக்கறிவித்தும், நித்திய தொண்டாற்றும் சுவை மிகுதியாலே எம்பொருமானுடைய ஆச்ரிய பாரதந்தரியத்தால் சீலகுணத்தாலே பரிமாறும் பரிமாற்றத்தாலே சீலகுணம் ஆழங்கால்படுத்தும் என்று நித்தியர்கட்கு அறிவித்தும் போருவர். முழுக்ஷுக்களுக்கு நிச்சயமாக எய்வது பேரின்ப வெள்ளம் என்று உபதேசித்தும், இப்படி நான்கு வித அதிகாரிகளுக்கும் ஆழ்வார் உபதேசம் செய்வர் என்றபடி –
உண்டே? ஆயிரம் கவிகொள் கீதையும் ஆதித்தியன் ஆயிரங் கதிர் பரப்பியும் இராம திவாகரன் இலங்கை யெரித்தும் உள்ளிருள் நீங்கிய தென்பதுளதே? ஊற்றாறா பிறவிக் கடலும் ஒய்ந்ததே? ‘குருகையில் வருமோர் கோதில் வகுள பூடணபாற் கரன் உதிக்க அப்பொழுதே பிறவியாம் பெருங்கடல் இறையும் இலதே போதிற் கமலம் புரையற மலர்ந்தே உள்ளிருள் எனும் அறிவின்மை உலர்ந்ததே இவ்வெலாம் நேர்ந்த இல் வுலகின் புறவே-16-( ஆசிரியப்பா )
திருத்தேர்த் தட்டில் கண்ணன் எம்பெருமான் அருளிய கீதையெனும் ஆயிரம் கவி உதித்தும், ஆதித்தியன் ஆயிரம் கிரணம் பரப்பியும். சக்கரவர்த்தி திருமகன் என்னும் திவாகரன் இலங்கை தகிக்க ஆயிரம் அம்பு எய்வித்தும் உள்ளிருள் என்னும் அஞ்ஞானம் நீங்கியதில்லை. மேன்மேலிருளைச் சுரக்கும் பிறவிப் பெருங்கடல் வற்றவில்லை. திருக்குரு கூரில் வந்துதித்த குறை யாதும் இலாது வகுள பூஷண பாஸ்கரன் உதித்த அந்தக் கணமே பிறவியாம் பெருங்கடல் அல்பம் இன்றி வற்றி இதய கமலம் நன்கு மலர்ந்தது; உள்ளிருள் என்பதான அறிவின்மை உலர்ந்து போயிற்று. இவை யெலாம் நேர்ந்ததால் இவ் வுலகம் இன்புற்றது.
இன்பமாரி இன்பப்பா வீட்டின்பம் இம்மூன்றுள்
பண்பறிவார் யாரே! பயனறிவார் – உண்மை
தரமுயர் மாறன் இசைவேதம் அர்ச்சை
திரிபறிவார் சேர்வர் நரகு–17-(வெண்பா)
இன்பமாரியாம் குருகூர்ச்சட்கோபனையும், இவர் திருவாய் மலர்ந்தருளிய திருவாய் மொழியையும், அர்ச்சாமூர்த்தியை உலோகங்களால் புனையப் பெற்றது என்றும், நான்காம் வர்ணத்தார் என்றும், தமிழ்பாக்கள் என்றும் பண்பறியார் கூறுவர். பண்பறிவார், தொழுகுலத்தோன் என்றும்,உயர்வேதமென்றும், சுத்த ஸத்வ திருமேனி என்றும் காண்பர். இதற்கு மாறுபட அறிவர் நரகம் சேர்வர் என்பதே-
நரகை யொழித்து நன்கழல் சேர்க்கும் அனந்தபுரம்
அருச்சித் தமரர் தலைவன் அயனும் நிலத்தேவர்
ஒருத்தர் தவறா(து) ஒருங்குமூ வாசல் கடைப்பிடித்து
திருத்தம் உறவே சமமாகச் சேவிக்கச் சீர் கொளுமே--18-(கட்டளைக் கலித்துறை)
மலைநாட்டு திருப்பதிகளில் ஒன்றானது திருவனந்தபுரம். அதில் அமரர் கோனாகிய விஷ்வக்சேனர், முதல் வாசல் கடைபிடித்து திருமுடிபக்கம் நின்று சேவித்தும், எம்பெருமான் நாபியில் தோன்றிய பிரமன் இரண்டாம் வாசல் கடைபிடித்து திரு உந்திக் கமலம் சேவித்தும், நிலத் தேவர்கள்: மூன்றாம் வாசல் கடைபிடித்து திருவடிகளைச் சேவித்தும், இப்படிச் சேவித்தாலும் தன் பால் வேற்றுமை இன்றி சமமாக சேவிக்கும் வாய்ப்பினை உடையதாம் –
கொள்ளும் எழுத்தொன்(று) இகுளைஎன உறவில் உணர்த்திகுறை வில் பொருள்
விள்ளும் நமம செவிலியென அருளே நெறிகொள் மிக்கதிடம்
துள்ளும் பதற்றம் மகன்நான்கில் துவளில் போகத் துறுவேட்கை
தெள்ளென் ஞானச் சட கோபன் தெறிக்கும் நால்வர் நான்முகத்தே–19-(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
பிரணவத்தின் அர்த்தமான ஜீவபரர்கள் சம்மந்தத்தைத் தோழிக் கூற்றாகச் சொல்லும். குறைவிலா நிறைபொருள் தரும்படியான நமப்பதம், எம்பெருமான் அருளல்லது வேறு உபாயம் இல்லை என்னுபடியான திட நம்பிக்கையை வலியுறுத்தும் தாய்க்கூற்று. தலைமகனை சேர்ந்தல்லது தரிக்க முடியாத பதற்றமுடைய நாராயணாய என்ற நான்காம் வேற்றுமைப் பொருளைத் தலைமகள் கூற்றாகச் சொல்லும். இப்படித் தோழி, தாயார், தலைமகள் மூன்றோடு பெண் பேச்சாகவும் பேசும் ஆழ்வார் தம் பேச்சாக நான்கு அதிகாரிகளைப் பார்த்து நான்கு முகமாக உபதேசிப்பர் –
என்பெறு தென்ன மலைக்கா துள்ளத்து ஊறிய மதுவிர தமாய் தூமது வாய்கொள் கொண்டு குழல்வாய் வகுளத்தின் சாரமுட் கொண்டு தேனென என்று ஆளம் வைத்துச் சிறுகாலில் லியம்போது குறிஞ்சி மருளறும் காமரம் கந்தாரம் தகைவறப் புக்கு வண்டொத் திருண்ட குழலில் சங்கையற மருவி யருளாத யாமென் றோடிவந்து வாசமே ஊதி வண்டே கரியாய தெய்வ வண்டோடே சேர்விக்கும் சேமம் உடைய நாரதன் முனிவா கனர்தம் பிரான்மார் போல்வார் இவர்களை வண்டு தும்பியாம் பொருளே--20-( அகவற்பா)
அழகிய மலரெலாம் ஊதி நீ என்பெறுதி என்று மீட்க வேண்டும்படி தகாத பொருள்களை இனிய பொருள்களென்று மயங்காதே, இறைவனாகிய தன்னுடைய அழகு சீலம் முதலியவைகளை நினைத்து உள்ளம் கனிந்திருக்கும் அடியார்களுடைய மனத்திலே பகவனாகியத் தேனை விரும்பி அவனையே உணவாக உடைய வண்டு, தாமரை மலரில் இருந்து கொண்டு அதனை விட்டு, அடைவதற்கே அரியதாய் அடைந்தாலும் நாவினை நனைப்பதற்கும் போராதே, தேனை உடைய முள்ளிற் பூவை கண்ணாலும் பாராததைப் போன்று, “தேவரீருடைய தேனே மலரும் திருவடித் தாமரைகளுடைய இனிமையில் மனம் அழுந்திய ஒருவன் மற்றொரு அற்ப இன்பத்தை விரும்ப மாட்டான்” என்கிறபடியே, மற்றொன்றினைப் பிரித்து பாராதே இந்தத் தேனை உண்ணுதலையே விரதமாக உடையராய் பகவானாகிய இனிய பொருளை அனுபவிக்கும் அனுபவத்தாலே பரிசுத்தமாய் வகுள மாலையைத் தரித்த ஆழ்வாருடைய இனிமை பரத்துவம் முதலான வற்றின் இனிமையும் அளவிற்குட்பட்டது என்னும்படியான திருக்குழலில் வைத்த ஒளிமா மலரான வகுளத்தின் தரத்தை எடுத்து அவ்வழியாலே இத்தலையில் இனிமையை அனுபவித்து, இப்படி பகவானுடையவும் பாகவதருடையவும் இனிமைகளை அனுபவித்த செருக்குக்குப் போக்கு வீடாக ஆலத்தி வைத்து, காலங்கட்கு தகுதியான பண்களைப் பாடி, திருவாசல்களிலே சேவிக்க வந்தவர்கள் நிறைந்து தலைப்புகவொண்ணாதபடி நெருக்க தெருவாசல் காப்பர் திருக்கதவு திறக்க வேண்டும் என்று விரும்பிக் கேட்டு, கண்ணையும் மனத்தையும் கவருகின்ற திருவாசலில் அழகில் துவக்குண்ணாதே அதனைக் கடந்து புகவேண்டுகையால் தடையற பாடுவாராக இருக்கின்ற அந்தரங்கத் தன்மையாலும், ஒன்றிலேயே நோக்குடைய மனத்தினை உடைமையாலும், தனக்கு ஒத்த விஷபமுள்ள இடத்திலே சேர்ந்து அச்சமில்லாமல் அவனுடைய அண்மையில் இருப்பவர்களாய், இத்தலையில் துன்பத்தை அவனுக்கு அறிவித்து அவனோடே கூடிவர இராதே முந்துறவே தேடிவர வேண்டும் என்று விரும்பி விட்டபடியே இத்தலையில் துன்பத்துக்குத் தகுதியாக அவன்வரவினை அறிவிக்க, விரைந்து வந்து தங்கள் வரவாலே இத் தலையில் பிறந்த செவ்வியை அனுபவித்து அத்தலையில் தாங்கள் அனுபவித்த இனிமையை தங்கள் வரவாலே இத்தலைக்கு விளக்கிக் கொண்டு தரிக்கச் செய்து, வேத சாகைகளின் மேலேயுள்ள சாரத்தை உட்கொள்ளும் ஆறுபத நிஷ்டர்களாய் இரண்டு சிறகுகளோடு கூடியிருப்பதாலே தடையின்றி எங்கும் செல்லக் கூடியவர்களை முன்னிட்டு அங்கீகரிக்கும் அவனாய், வேதாந்தங்களாலே அறியப்படுமவன் என்று தோன்றும்படி கெருடவாகனனாய் சாரத்தையே எடுக்கின்ற சர்வேச்வரனோடே சேர்விக்கும் பிரம்மமாவனையாகிற சேமத்தையுடைய நாரதன், பகவானுடைய குணங்களை அனுபவித்து போரானந்தமுடையவனாய் அந்த ஆனந்தத்தில் பாடிக்கொண்டும், நடனம் ஆடிக்கொண்டிருக்கும் ஸ்ரீநாரதமாமுனி, லோக சாரங்கமாமுனிகளாலே தாங்கப்படுகையாலே முனிவரென்று கூறப்படுகின்ற திருப்பாணாழ்வார், திருவாய்மொழி இசையினையே தங்களுக்கு இனிய பொருளாகக் கொடுக்கின்ற தம்பிரான்மார் போன்றவர்களை வண்டு தும்பி என்னும் என்கிறபடி.
பொருளில் அடிமையிற் புக்கிலர் ஞாநம்
இருந்தும் இசையார் அழுக்கை – விரும்பியும்
ஏற்பரோ? மாறன் பா மெய்யுணர்ந்தார் ஏலாரே
காற்கடை கொள்ளுவர் காண் –21-(வெண்பா )
தடையற்ற சுவாதீனான பரம் பொருளுக்கு ஆன்மா அடிமை என்பதையும், அந்த அடிமைகளோட தொண்டாற்றுதலையும் அறியாதவனானவனுடைய ஆன்மா அறிவு மயம் ஆனந்த மயனானாலும் மாறன் பாவாகிய திருவாய்மொழி உணர்ந்தோர் இவ் வாத்மாவை வேண்டுமென்றிசைய மாட்டார்கள். இவ் வான்மாவால் தரிக்கப் பெறா அறிவில்லாப் பொருளாம் அழுக்குடம்பை ஏற்க மாட்டார்கள் என்பதை சொல்ல வேண்டிடுமா? அவற்றைக் காற்கடை கொள்வர் –
காண்மின் உலகீர் சனக தசரதர் காசினியில்
பேணும் பிறங்கொளி இலதாம் நந்தன் இவர்கள்குலம்
தோணும் முதலும் இடையும் கடையும் துலங்குவபோல்
நாணுறு நான்கினில் மாறன் எனவரு பாற்கரனே–22-(கட்டளைக் கலித்துறை)
உலகவர்களே! இந்த வியப்பைக் காணுங்கள். ஜனகர் மூத்த மகளான சீதா பிராட்டியும், தசரத சக்கரவர்த்தியுடைய நடுப் பிள்ளையான பரதாழ்வானும், உலகவர் விருப்பத்துக் குரித்தல்லாத குலத்தில் தோன்றிய நந்த கோபனுடைய கடைக் கூற்றுப் பிள்ளையான கண்ணனும் தோன்றி,குலத்தை சார்ந்த குறைகளைப் போக்கி புகழுண்டாக்கினது போல் மாறன் நான்காம் வர்ணத்துத் தோன்றி குலத்துக்குப் புகழும் உலகவருடைய பிறவிச் சிறையும் அறுத்தார் –
பாற்கரன் கதிரின் ஞானமா ந்தம் அடியவன் பாலதோர் நூல்களின் நுகர்பவன் பகர்வே
நூற்களின் சாரமாம் நுவலரு மறையின் உயிர்களாம் நுவல்பர தந்திரன் நுகர்பவன் பரனே
பாற்படா பரன்தன் தன்வழி நுவல்பவை முதற்கடை பகையிவை நான்கும் நமவும் பின்னவே
ஏற்ப திவ்வாறாம் குறை யறக் காண்பார் பரனுயிர் இயல்பை அறிவெனும் கடலெனப் பெறுவரே -23-(ஒன்பதின் சீர்க்கழி நெடில் ஆசிரிய விருத்தம் )
பகலவனுடைய பேரொளியைப் போன்ற ஞான ஒளியும், அவற்றின் காரியமான ஆனந்தமும் உடையவனான இந்த ஜீவன், தான் பரனுக்கு அடியவனாய்த் தொண்டு செயது தொண்டினால் வரும் இன்பம் தனதாகக் கருதுபவன் என்பது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டதாகும். சாஸ்திரங்களின் ஸாரமாய் சொல்வதற்கரிய பெருமைகளைபுடையதான திருமந்திரத்தில், சேதனனை பரதந்திரன் என்றும், இந்தப் பரதந்திர இயல்புக்கு ஏற்ப ஜீவன் செய்கின்ற தொண்டினால் விளையும் இன்பத்தை நுகர்பவன் இறைவனென்றும் சொல்வதாகும் –
நூல்களில் சொன்ன ரீதியில் பரனுக்கு ஜீவனானவன் பரதந்திரன் என்றும் போக்யம் என்றும் கொள்ளாது, சேஷத்துவ போக்த்ருவத்தோடு கூடிய இவ்- விரண்டும் அகங்காரத்தை ஏற்றிருப்பதால் பரன் திருவுளத்திற்கு மாறுபட்டவை. (அவன் உகப்புக்கு மாறுபட்டவை) இவற்றைத் திருமந்திரத்தில் ப்ரணவத்தில் முதல் எழுத்தாகிய அகாரமும் ஈற்றெழுத்தாகிய மகாரமும் சொல்லியிருக்க, பின்வரும் நாராயணாய என்று வரும் நான்காம் வேற்றுமையும் இரண்டாம் பதமான நமசும் சேஷத்வ போக்த்ருத்வத்தை அறத்தள்ளி முதற்சொன்ன அகார மகாரங்களை விட்டு, பின் சொன்ன நமபத ஆய பதங்கள் பின் வந்து பாரதந்த்ரிய போக்யதையை. சொல்லிற்று. இதில் அகங்காரத்திற்கு யோக்யதை இல்லையாயிற்று. இவ்வாறாக பரமாத்மாவின் இயல்பையும் ஜீவாத்மாவின் இயல்பையும் மாறுபடக் காணாது. மேற்சொன்ன ரீதியில் யதார்த்தமாக காண்பவர்களை கண்ணனெம் பெருமான் “ஸமஹாத்மா” என்று சொன்னதாலே, மகாமதியுடைய வன் என்பதால் இவன் கடல் போன்ற பேரறிஞன் எனப்படுவான்-இதை நம்மாழ்வாரும் “தனைக்கேயாக எனைக் கொள்ளுமீதே” என்ற ருளியிருக்கின்றார் -“சேஷத்வ போக்த்ருத்வங்கள் போலன்றே பாரதந்தர்ய போக்யதைகள்” என்று தொடங்கும் ஆசார்ய ஹ்ருதய ஸூத்திரத்தின் அடிப்படையில் அமைந்தவை இவை-
கடல்நீர் உப்புநீர் நித்தம் காணலாம் உவாவில் அன்றித் தொடற் குதவாத போல் நூற்கடல் ஆங்கே கலங்குநீர் நொய்யவாம் தெளிவிலாக் கலங்கல் பருகத் தெளிவிலாது ஐயத் திரியறி வின்மையின் ஆழ்ந்து வேண்டா நாற்ற மிகுமுடல் முகந்து நானென தென்னும் நலமி லுழல்வான் இறையருள் கடைக்கண் இயங்கக் குருகை நேர் வகுள பூஷணன் பாற்கரன் வந்து இன்ப மாரி இயந்ததோர் ஞானத்து வீட்டின்ப வாரி தன் குணநீர் மிசைந் ஆயிரங் கதிரா யிரங் வியமுதின் நிலத்தே யிவரால் நிறைஞா னம்பெரும் புகல்வதோர் புகழே மாறன் தன் வேதமே –-24-(ஆசிரியப்பா)
உப்புத் தன்மை வாய்த்தாய் அந்தக் கடலுக்குள் வசிக்கின்ற மீன் முதலான பொருட்களுக்கொழிய, புறம்புள்ளார்க்கு உள்ளே புகுவதற்கும் அரிதான பவுர்ணமி முதலிய பருவ காலங்களில் ஒழிய ஏனைய காலங்களில் தீண்டத்தகாது என்கையாலே முழுகுதற்குக் கால நியதியை உடைத்தாய் இருக்கிற கடல் நீரானது, மேகம் பருகி மழையாகப் பெய்ய அம்மேகத்தின் சம்பந்தத்தில் கடல்நீரினது உப்புத்தன்மை நீங்கி எப்பொழுதும் எல்லார்க்கும் பயன்படுவத போன்று, வடமொழி மறையானது, பிராமணன் ஆவணிமாதத்திலாவது புரட்டாசி மாதத்திலாவது சாஸ்திரத்தில் சொல்லியபடி உபாகர்மங்களைச் செய்யும் நியமத்துடன் கூடியவனாய் நாலரை மாதங்களில் வேதங்களை அத்யயனம் செய்யக்கடவன். இதற்குப் பிறகு நியமத்துடன் கூடியவனாய் சுக்கில பட்சத்தில் வேதங்களை ஒதக்கடவன். 4 வேதம் 6 அங்கங்கள் உபநிடதங்களையும் கிருஷ்ணபட்சத்தில் நன்றாக அத்தியயனம் செய்யக்கடவன் என்கிறபடியே அத்தியயனம் செய்வதற்கு கால நியதியும், மேல் மூன்று வர்ணத்தாரும் ஒதற்கு அதிகாரிகள் ஆகையாலே, அதிகாரி நியதியையும் உடைத்தாயிருக்கிற நூற்கடல் என்ற வேதம், இவள் வாயனகள் திருந்தவே என்கிறபடியே நம்மாழ்வார் திருவாக்காலே வெளிவந்து கால நியதி அதிகாரி நியதியை வேண்டாத பண்பை அடைந்து கட்டளைப்பட்டவாறே, பெண்களாலும் நான்காம் வர்ணத்தவர்களாலும் அத்யயனம் செய்யத்தக்கது. இதனை அத்தியயனம் செய்யும்வாகட்கு மோக்ஷம் கையில் இருக்கும்படியே. ஒரு காலவரையின்றியே எல்லார்க்கும் எல்லாக் காலமும் கற்பதற்குரியதாம் இந்தத் திருவாய்மொழி. இந்த மறையும் இதன் பயனும் சிறப்புடைவனவாகும். வடமொழி மறை முக்குணமான தோஷத்தைக் குறிக்கொண்டதால் அம்மறை பயின்றவர்கட்கு யதார்த்த ஞானம் வருவது அருமை. ஐய உணர்வு, திரிபுணர்வு, அறிவின்மை இவைகளில் ஆழ்ந்து இதனால் பொல்லா ஒழுக்கு ஒழுகி துர்நாற்றமுடைய உடலெடுத்து, நான் எனதென்னும் அகங்காரமமகாரங்களால் ஆனந்தம் இல்லாத காட்டில் உழல்வாருக்கு வேதம் பிரமாணம், இதைக்கண்ட இறைவன் மனம் வருந்தினவனாய், சேதனர்பால் அருள் பெருகி உண்மை உணர்ந்த நல்லாள் ஒருவனைத் தோற்றி வைக்க வேண்டும் என நினைத்து, அமலங்களால் விழிக்கும் தம்கடைக் கண்களால் நோக்க, அந்நோக்கம் ஜாயமான காலத்தில் அவதரிக்கப்பட்ட இனபமாரியாம் ஆழ்வார் என்ற முகிலானது அர்ச்சாவதாரத்தின் குண நீரைப்பருகி, ஆயிரம் கவியமுதமாக்கி, இதையுண்டவர் நிலத்தேவராய் நிறைஞானம் பெற்று தாங்கள் உய்ந்தார்கள்; உலகை உய்வித்தார்கள். இதனால் மாறன் வேதம் புகழ்வதற்கரியதோர் புகழுடையது.
வேதங்கள் கற்றல் ஒழுகலில் விப்ரராய்
சாதியால் தாழ்த்தி உயர்த்திகள் -ஓதுவர் சந்தங்கள் ஆயிரவர் சாதி பிரித்தறியார்
வந்தனைக்காம் வைணவன் தான் –25-(வெண்பா )
மறைகளை குருமுகமாகக் கற்றறிந்து அறிந்ததின் ஒழுக்கத்தை மேற்கொண்டொழுகலால் பிராமணன் என்ற தகுதியை பெறுவர். இவர், தன் குலத்தை மேலாக மற்றது தாழ்வாகக் கொள்வர். குருகூர் சடகோபன் திருவாய் மலர்ந்தருளிய சந்தங்கள் ஆயிரத்தைக் கற்று வல்லவரானால் வைணவன் என்ற தகுதி பெறுவான். இவன் ஆன்மாவின் உண்மை அறிந்து அனைத்தும் சமமே என்றொழுகுவான்-
தானே உயர் தின்னணை ஒன்று சாற்றினான் நோற்ற நான்கில்
கானேய் பயிலேறு கண்கரு வீடொருக் கொண்ட சொன்னால்
தேனே எம்மா ஒழி வேய் நெடு நான்கில் தெரிபயனும்
ஊனேய் தடைஉயிர் ஆறெம்மான் ஐம் பொருள் ஓர்ந்துரைத்தே –26–(கட்டளைக் கலித்துறை)
மிக்க இறை நிலையும் என்ற தனியனின்படி திருவாய்மொழியில் அர்த்த பஞ்சகம் உள்ளதென்பதை உயர்வற என்றும், திண்ணன் வீடு, அணைவதரவணை, ஒன்றும் தேவு என்றும் தொடங்கும் நான்கு திருவாய்மொழிகளில் பரத்வ தன்மை சொல்லியதாம். பயிலும் சுடரொளி, ஏறாளும் இறையோனும், கண்கள் சிவந்து, கருமாணிக்கம்,என்று தொடங்கும் திருவாய் மொழிகளில் ஆன்மாவின் தன்மையும், வீடுமின், ஒரு நாயகம், கொண்ட பெண்டீர், சொன்னால் விரோதம் என்று தொடங்கும் திருவாய்மொழியில் இறைவனை அடையத் தடை பண்ணும் விரோதியின் தன்மையும் சொல்லிற்று. நோற்ற நோன்பு, ஆராவமுதே, மானேய் நோக்கு நல்லீர், பிறந்தவாறு என்று தொடங்கும் நான்கு திருவாய்மொழியில் பகவானை அடைவதற்கு சாதனத் தன்மையும் சொல்லிற்று. எம்மா வீடு, ஒழிவில்காலம், நெடுமாற்கடிமை, வேய்மரு தோளினை என்று தொடங்கும் திருவாய் மொழிகளில் பரன் திறத்து அடைந்து பெரும்பயனைச் சொல்லிற்று —
ஈதே முடிவில் விடுமுடம்பில் எச்சில் உகக்கும் காதலன்போல்
ஏதும் உடம்பின் குறைகாணான் மாயஆக்கை இதில் புகுந்து
யாதும் உகந்த நிலமாக இவன்திரு மேனிவா னாட்டிருப்பா
பாதம் பற்றி மங்கவொட்டுன் மாயை எனவே விடுவிக்கும் –27-(அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்)
மாலையாக பிறக்கும் பிறவிகளின் உடம்பில் இறைவனருளால் வினைத் தொடர்பு இல்லாததாக இதுதான் கடைசி உடம்பு என்றும், இணி, உடம்பின் தொடர்பு இந்த ஆத்மாவிற்கு கிடையாது என்றும், இந்த நிலையில் இருக்கும் ஆழ்வார், இறைவன் இடத்திலும் அடியார்களின் திறத்திலும் மற்றும் இறைவன் சம்பந்தப்பட்ட எல்லைக் காண்பரீய பிரேமையும் மதிப்பும் உடையவராக ஆகவும், இதைக்கண்ட எம்பெருமான் பல கல்பங்களாக படைத்துக் கொண்டு வருகிற நிலைபில் இந்த ஆழ்வாருடைய பண்புகளைக் கொண்டு, இதுவரைக்கும் படைத்த படைப்பில் இப்படி ஒருவர் இல்லை மேலும் இருக்க முடியாது என்ற திருவுள்ளமுடையவனாய. இவர் திருமேளியில் வாஞ்சையறு, காதலியின் அழுக்கை விரும்பும் காதலன் போல் இவர் திருமேனியில் புகுந்திருந்து, இ வரை இந்தத் திருமேனியோடு பரமபதத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்து, “இந்த ஸ்தூல உடம்போடு கையைப் பிடித்து அழைக்கின்றானே என்று இங்கு தான் அருவருக்கத்தக்கப் பிறவி என்ற சிறை என்றால் அங்குமா?” என்று கலங்கி எம்பெருமான் திருவடிகளைப் பற்றிக்கொண்டு முக்குணத்தோடு கூடிய மாயையின் பரிணாமமாகையாலே இதை விடுவிக்க வேண்டுமென்று ஆழ்வார் பிரார்த்திக்க, திவ்யசூரிகளான இவர்களால் வாழ்த்தப் பெற்ற திவ்ய தேசங்கள் தோறும் செய்யும் பிரேமையை இவருடம்பில் செய்வானாக. இவர் இசையாமல் இறைவனைப் பார்த்து, அருவருக்கத்தக்க மாயை காண் இந்த அழுக்குடம்பு ஆதலால் இதை விடுக்க வேண்டுமென்று திருவடிகளிலே மன்றாட எம்பெருமான் ஆச்ரித பரதந்தரனாய் இசைந்து விடுவித்தான் என்பதாம். இந்த குணம் “மருள்கள் கடியும் மணிமலை திருமாலிருஞ்சோலைமலையே” என்ற பதிகத்தில் காணலாம்.
என்றனை நீஇன்று ஒருபொரு ளாக்கி என்னுள்ளே நின்றனை வைத்தாய் அன்றெனை புறம் போகப் புணர்த்த தென்செய்க? குன்றென திகழ் மாடங்கள் சூழ்ந்த திருப்பேரா ஒன்றெனக் கருள்செய் யுணர்த்த லுற்றேன் என்றே மாறன் நின்றே இயம்ப தலைநிலம் கவிழ்ந்து தரையைக் கீறி இறைவன் இதற்கொரு மாற்றங் காணா கடிமணக் காட்சியில் மந்திரம் மறந்த மறையவன் வாத்திய ஒலியை முழக்கி செய்யச் செய்யும் செய்கை போலே சூழ் விசும் பணிமுகில் தூரியம் முழக்கம் முரசங்கள் வலம்புரி முழக்கம் செய்து அர்ச்சி ராதி கதியைக் காட்ட அமானவர் அடையும் நிலையுங். காட்டி அந்தமில் பேரின்பத் தடியரோ டிருந்தமை இவ்வெலாங் காட்டி இறைவன் ஆழ்வாரை திசைதிருப்பிக் கேட்ட கேள்வியை ‘ மறக்கச் செய்வதில் மாயன் சதுரன் மாறனே! வாரீர் ஓங்காரத் தேரில் ர் ஏறுமென இறைவன் இதமொ ழிந்தானே--28-(ஆசிரியப்பா )
வைராக்கியங்களைக் கண்டு எம்பெருமான், ர அல் கப்பன் திருப்பாற்கடல் முதலான திவ்ய தேசங்களில் பண்ணும் ஆதரத்தையும், அன்பையும் ஆழ்வார் திருமேனி முதலான அவயங்கள். – உறுப்புகள் எல்லாவற்றிலும் செய்து பஞ்ச பூதங்களினுடைய சேர்த்தியாலான ஆழ்வாருடைய திருமேனியை பரமபதத்திற்கு எடுத்துச் செல்ல விரும்பி அவசரப்படுத்துவதைக் கண்ட ஸ்வாமி நம்மாழ்வார், எம்பெருமானைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். எம்பெருமானே! அடியேனை இன்று ஒப்பற்ற வஸ்துவாக்கி-பொருளாக்கி உபயவிபூதிக்கும் நாயகனான உம்மை என்னிடத்தில் இருத்தி, என் இருதய கமலத்தில் வீற்றிருந்து, இவ்வளவு பாரிப்புகளைச் செய்து என்னைச் சூழ்ந்து கொண்டு ஒரு நொடிப் போதும் என்னை விட்டகலாமல் பேரருள் செய்கிறீர். அடியேனைக் கடந்த காலங்களில் மாறிப் மாறி பல பிறப்புகளை எடுத்து அனர்த்தப்படும்படி விட்டு வைத்தது எதுக்காக? இதை யருளிச் செய்ய வேணும்’ என்றார். அதற்கு எம்பெருமான், இவர் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தால், பிறகு வேறு ஒரு கேள்வியைக் கேட்பார். இதனால் இவரிடமிருந்து தப்பிக்கவே முடியாது என அறிந்து, தலை கவிழ்ந்து பூமியை தனது பெரு விரலால் கீற,கல்யாணத்தில் மாங்கல்ய தாரணம் செய்யும் போது சொல்லக் கூடிய மந்திரத்தை மறந்த புரோகிதனைப் போல, திசைத் திருப்புவதில சாதுரியமுடைய எம் பெருமான். “சூழ்விசும் பணிமுகில்” என்ற திருவாய்மொழியில் சொல்லப்பட்ட அரச்சிராதி கதியைக் காட்டி ஆழ்வாருடைய கேள்வியை மறக்கச் செய்தான் –
மொழிபல செப்பம் பிறந்தது முத்தி
வழிபல வாயவிட் டொன்றாம் – சுழிபல
தாழ்த்தும் பொருநைக் குருகைச் சடகோபன் :
வாழ்த்துரைத்த வாய்மொழித் தேன்–29-(வெண்பா )
உலகின் பல மொழிகளும் இயங்குவதால் இறைவன் தொடர்பின் மையால் செப்பமற்றன. திருவாய் மொழி இறையனுபவத்தையே கொண்டிருத்ததலால் மற்ற மொழிகளும் இதைக் கண்டே செப்பமுற்றன. முக்தி மார்க்கங்கள் பலவாக நுல்கள் கூறியதை, பரன் பால் தஞ்சம் அடைவதொன்றே முக்தி மார்க்கமென்று திருவாய்மொழி கூறும். வெள்ளப் பெருக்கால் சுழித்தோடும் பொருனைத் தென்கரையிலுள்ள திருக்குருகூரிலவதரித்த மாறனருளிய திருவாய் மொழியின் செப்பங்களிதுவாம் –
தேனென்றி னிக்கும் சொலக்கேட்க சென்மங்கள் கைத்தழலும்
தானொன்றி தந்தான் கவியா னமையின் புளிகவாது
கானொன்று செவ்வாய் துவர்ப்பாம் கூடிக் களிப்புறு மால்
வானொன்று சீர்த்திரு வாய்பொழித் தேன்கொள் கடலிதுவே--30-(கட்டளைக் கலித்துறை)
சுவை மிக்கதும் சிறப்பு மிக்கதுமான திருவாய்மொழி ஆறுசுவைகளைக் கொண்டதொரு தேன் கடல். “எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்கும்” என்று சடகோபன் வாய்மொழி பண்புரை சாமத்தின் சதோக்யமாகையாலே சொன்ன மாத்திரத்திலேயே தேனுறலின் இனிக்கும். குருமுகமாகக் கேட்கப் பிறவிகளில் விரத்தி யுண்டாக்கிப் பிறவியைக் கடிந்து போக்கும், எம்பெருமான் “ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவியாயினேன் “என்பதனால் உளதாய இன்பம் உள்ளே நிரந்தரமாக நிரம்பி மிடைந்த சொல் தொடையா யிரமாக வழிந்து வந்ததாகையாலே, உள்ளே என்றும் நிற்கும் பராங்குச நாயகி எம்பெருமானைக் கூடிக்களிப்புற்றதால் எம்பெருமான் திருவதரம் துவர்த்துப்பாம். இதில் அறுசுவையும் சொல்லப்பட்டது.-
கடலகடு வகிர்பொருநை காவிரியின் கரையிகந்து கிளை கொண்டோடும்
உடனிகுளை கூறு பல உற்றதாய் பல் கூறுதலை மகள் பல் கூறா
படர் வேட்க்கை தன் கூறோ பல பல கால் விரித்து திருமகள் கேள்வாரி
குடைந்து புகும் குருகூரர் வாய் மொழியாம் குடைந்து பிறகுடைதல் தீர்ந்ததுவே –31–அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் )
கடலின் வயிறு கிழியும்படியாக வேகமாகச் சென்று சங்கமமாகம் தாமிரபரணி, காவேரி என்ற நதிகள் போலே திருவாய்மொழியாம் பெரியதோர் ஆறு கரை கடந்து தோழிக்கூற்று, தாய்க்கூற்று, தலைமகள் கூற்று என்ற பல கிளைகளாலும் பெருகியும் தன் கூற்றோடு சிதிதும் குறையாது கம்பீரமான கடலைக் கிழித்துக் கொண்டு திருவாய்மொழி என்ற ஆறு திருமகள் கேள்வன் என்ற பெருங்கடலிலே சங்கமிக்கும். இத்தகைய குணக்கடலாகிய திருவாய்மொழி என்றதோர் பெரிய தோராற்றில் படிந்து குடைந்து பெருமுத்தாபமும் பிறவிக்கேதமும் தணிந்து சந்ததம் சுகித்துக் கொண்டிருக்கிற யாம், பிரிதொன்றில் தொடர்புக் கொள்ள மாட்டோம் –
வித்தைநல் தாயெனக் கொடுபெறு வித்து பாலும் அமுதுமாம் பரம்பரன் பேர்கொடு வளர்த்தது திருமகள் போன்றென வளர்த்த தஞ்சமாத் தந்தை மற்றைப் பேச்சன்றி
உபய விபூதி நாயகன் நன்கொடு
நாலிரண் டிழைசேர் முப்புரி நாண்கொடு
பிரம சூத்திர பந்தம் பிணைக்க
பரம்புரு டன்தான் பாங்குடன் கைக்கொள
நான்கினில் புக்கு நடுக்கிடக் கும்நாள்
நான்கினைக் கழித்து சூழ்விசம் பின்படி
உடன்வழி சென்று குடைந்துநீ ராடி
வியன்துழாய் அஞ்சனம் நீறுநா னப்பொடி
பீதக வாடை பல்கலன் கொண்டு
நோக்கியர் அலங்கரித்துப் பல் லாண்டு
கவரிசெய் நிறைகுட விளக்கம் ஏந்தி
இளமங் கையர்தாம் வந்தெதிர் கொள்ள
வைகுந்தம் புக்கு வாய் மடுத் துப்பெரும்
களிச்சியா வானவர் போகம் உண்டு
கோப்புடைக் கோட்டுக்கால் கட்டில் மிதித்து
ஆரோ கித்துப் பரதன் அக்ரூரன்
மாருதி இவர்களை அணைதிரு மார்பில்
குருமா மணியா அணையும் பொருளிவள்
மணிவல்லிப்பேச்சி இவள் தன் பரமே –32-(அகவற்பா)
பிரம்ம வித்தையாம் திருமந்திரத்தை இலனென்பது போய் உளனாம் ஞாநப்பிறவியாகப் பெற்று, பாலும் அமுதுமான திருமால் திருநாமங் கொண்டு திருமகள் போலவளர்த்தேன் என்கிறபடியே திருமகளுக்கு ஒப்பாக வளர்த்த ஆசாரியனாகிய தஞ்சமாகிய தந்தையானவன், வினைவழி வந்த பிறவி ஆகிய ஊணஜென்மத்துக் காரணமாகிய தந்ைத போலன்றியே, உபய விபூதிக்கும் தந்தையாயிருந்தும் பந்த மோஷங்களின்ரண்டுக்கும் காரணமான தந்தையைப் போலுமன்றிக்கே ஞானசென்மத்தைக் கொடுத்து மோஷத்துக்கே காரணனாகிய தந்தையாய், எந்த நிலையிலும் கைவிடாதவனாய் உய்விப்பதையே நோக்குகிறவனாய்க் கொண்டு ஆபத்துக்களில் காப்பாற்றுபவனாம் ஆசாரியனாகிய தந்தை. எம்பெருமான் தவிர மற்றவர்க்குப பேச்சுப்படாமல் பரம்புருடன் உகந்து, கைக்கொண்டு போக, அகாரத்தில் நான்காம் வேற்றுமை வழியேயணைந்து இதற்கிடையூறாக ஆத்ம பரமாக்களுக்கு “நண்ணியும் நண்ண கில்லேன் “என்கிறபடியே நடுவே யோருடம்பிற்கிடக்கும் நான்கு நாள் கழித்து, சூழ்விசும்பிற்படியே உடன்வழி சென்று விரஜையில் சென்று குடைந்தாடி என்கிறபடியே, “தெய்வத்தன்மை வாய்ந்த நூறு பெண்கள் மாலைகளைக் கையில் ஏந்தினவர்களாய், நூறு பெண்கள் அஞ்சனத்தைக் கையில் ஏந்தினவர்களாய், நூறு பெண்கள் வஸ்திரத்தைக் கையில் ஏந்தியவர்களாய், நூறு பெண்கள் ஸ்ரீசூர்ணத்தை கையில் ஏந்தின வரகளாய், நூறு பெண்கள் திருவாபரணத்தைக் கையிலேந்தியவர்களாய் மானேய் நோக்கியா ஆன தெய்வப் பெண்கள் எதிரே வந்து முத்தனைய பிரம்ம அலங்காரத்தாலே அலங்கரிக்கின்றார்கள்” என்கிறபடியே, சர்வேச்வரனுக்கு இனிதாம்படி அலங்கரித்து இவர்களிடத்தில் அவர்களுக்குண்டான தொண்டு செய்வதில் உண்டான இச்சைக்கேற்ப திரள நின்று போற்றி பணிமாற அங்குள்ள பெண்கள் மங்கள தீபம் முதலியவற்றை ஏந்திக் கொண்டு எதிரே வந்து உபசரிக்குமாறு போலே புதிய இளமையினை எப்பொழுதுமே இயல்பாக உடையவர்களான வேறு தெய்வம் பெண்கள் சிலர் எதிர் கொள்ள, திருமகள் கேள்வனுடைய பேரின்பத்திற்கு நிலைக்களமான வைகுந்தம் அடைந்து அவனோடே கூடியிருந்து வாய்மடுத்துப்பெருங்களிச்சியாக அடைந்து அடியார் குழாங்களும் அவனுமாக இருக்கிற சேர்த்தியாக முழுமிடறு செய்து நித்திய சூரிகள் அனுபவிக்கிற போகத்தை, ‘ முக்தன் எல்லாக் குணங்களையும் பரமாத்மாவோடு அனுபவிக்கிறான்” என்கிறபடியே எல்லாப் பொருள்கட்கும் புகலிடமான தொன்மை பொருந்திய கட்டிலிலே பாத பிடத்திலே அடியிட்டேறி, பரத அக்ரூர மாருதிகளைத்தழுவிய மணிமிகு மார்பிலே ஸ்ரீபரதாழ்வானையும் அக்ரூரனையும் திருவடியையும் ஆதரித்து அணைத்துக்கொண்ட கெளஸ்துபம் நிறம் பெறும்படியான அழகியதான திருமார்பிலே இறைமைத் தன்மைக்கு அடையாளமாக ஸ்ரீகெளத்துபமணியைப்போன்று இனிய ஒளியுடையதாய்க் கொண்டு அணைகிற ஆன்மாவிற்கு இனியதாய் தனக்குத்தானே அழகியதாய் கொள் கொம்பு பிரியில் தரைப்பட்டுக்கிடக்கும் ‘கொடி போன்றவள்” என்கிற தன் தன்மையோடு கூடியதாய் வரும் பேச்சு வந்தேறியன் று இயல்பாகவே
அமைந்தது-
பரனும் பிறனும் உறைகோயில் ஓங்காரம்
பிறனாக் குருகூர்ப் பிறந்தோன் – பரனிவனில்
வேறிலன் மெய்ம்மைப் பொலிந்து நின்றாசனா
தேறுமெனத் தக்கா னிவன் –33-(வெண்பா )
பரன் என்பது எம்பெருமான், எம்பெருமானுக்கு பிரதியாய் இருப்பவன் ஜீவன் (ஆன்மா). இந்த இருவருடைய பெயரான அகாரமும் மகாரமும் உகாரமும் அகாரத்தாலும், உகாரத்தாலும், சொல்லப்பட்ட பரனுக்கும் பிராட்டிக்கு! மகாரத்தை பெயராக உடைய ஜீவன் இருவருக்கும் அடிமை என் பொருளைத் தருவதாய், இந்த மூன்று எழுத்துக்களும் சேர்ந்தே ப்ரணவம் ஆகையால், திருக்குருகூரில் ஆதிநாதப் பெருமானும் ஆதிநாத வல்லியும் ஆழ்வாரும் ஆகிய மூவரும் உறை கோயில் திருக்குருகூர். இதனால் திருக்குருகூரும் ப்ரணவத்திற்கு நிகரானது. குருகூரில் அவதரித்த நம்மாழ்வார், பரனோடு சொத்தாக ஒத்திருப்பதால் பொலிந்து நின்ற பிரானே ஈசன் என்று ஆழ்வார் அருளியுள்ளதால் “ஈ சேசி தவ்ய” என்கிறபடி உடையவன் உடமை என்று சம்பந்தத்தால் வேறிலர் என தேறுதல் தக்கதாம் –
வன்பெரு வான்முதல் உய்ய உலகம் இனிமையுற என்றும் இவற்றில் இவள்திறத் தென்கோலோ நேர்வதென என்பிக் கின்ற வியூகநட் புண்மை முதன்மையிதே –34-(கட்டளைக் கலித்துறை)
திருவரங்கத் எம்பெருமானுடைய ஐவகை நிலைகளையும் கண் இந்த ஆழ்வார், வடியுடை வானோர் தலைவனே என்றும், கடலிடங்கொண் கடல்வண்ணா என்றும், கட்கிலி என்றும், காகுத்தா கண்ணா என்று! திருவரங்கத்தானே என்றும் ஐந்து நிலைகளை பேசியதி6 அர்ச்சாவதாரத்தில் எல்லா குணங்களும் பூர்ணமாக ஒளிவிடும் என்! இருந்தாலும் இவ்வாழ்வார் இந்த மூர்த்தியிடத்தில் வியூக செளகார்த்த0 (உலகை காத்தல் பொருட்டு சிந்தனை செய்வது) பிரகாசிப்பதாக அருளி செய்கின்றார். திரு வுள்ளம் உகந்து, திருக்கண் வளர்ந்து அருளுகி திருவாளனுடைய திருப்பதியான திருவரங்கம் ஐவகை நிலைகளை வைத்துக்கொண்டு இவள் திறத்து என் சிந்தித்தாய் என்று சொல்லும்ப உலகை காப்பதைப் பற்றி சிந்தனை பண்ணும் குணம் முதன்மையுடையத என்கோலோ இவள் திரத்து முடிகின்றது என்று பாற்கடலில் யோக நித்திள செய்யும் வியூகத்தின் குணமான செளகார்த்தத்தை முதன்மையா உடைத்தாய் இருக்கும் (உடையதாய் இருக்கும்) –
வாமணன் வந்து கோயில் கொண்ட குறியவன்தான் குறுங்குடிக்கண் நாமம் வைணவ நம்பி என்று எதிவரனார் இடப்பெற்று பூமி மூவடி வேண்டி நின்ற பேரழகின் பொலங்கழளால்
ஏமம் மிகுத்து நின்று இரந்த விபவம் இங்கு பூர்ணமே –35-(அறுசீர் ஆசிரியர் விருத்தம் )
விபவ மூர்த்தியான வாமணன் திருக்குறுங்குடியில் அர்ச்சாவதாரமாகக் கோயில் கொண்டிருந்தான். ஒருநாள் உடையவர் என்ற திருநாமம் உடைய இராமாநுஜரைக் கண்டு, “மண்மிசை பிறந்த நாம் பெருக்க முயன்று திருத்த முடியாத இத்நிலவுலகத்தவர்களை எப்படி திருத்தினீர்?” என்று கேட்க, “கேட்கும் கிரமத்தோடு கேட்டால் நான் சொல்லும் கிரமத்தோடு சொல்கிறேன் ” என்று இராமானுஜர் சொல்ல, எம்பெருமான் அவருக்கு ஒரு பீடம் கொடுக்க, இராமாநுஜர் அந்த பீடத்தின் அருகில் கீழ்நின்று தன் வலக்கையை அதன் மீது வைத்துக்கொண்டு பெரிய நம்பிகள் உபதேசிப்பதாக பாவனை செய்து கொண்டு துயத்தை உபதேசஞ்செய்து வைஷ்ணவ நம்பி’ என்று தாஸ்யநாமம் இட்டார். அன்று முதல் வைஷ்ணவ நம்பி என்று பெயர்பெற்றான். அவனேவிபவ அவதாரத்தில் மாபலி இடத்தில் சென்று “என் காலால் மூவடி மண் தா”‘ என்று யாசித்து நின்ற பேரழைக்கண்டு அப்படியே தந்தேனென்று உதக பூர்வமாகக் கொடுத்தான் மாபலி என்பர். இதனால் இந்த விபவ அவதாரத்தில் லாவண்யம் பூர்ணம் –
பூரணம் கண்வலைப் பொருந்தாப் போலிகள் வளர்த் தெடுப்பார்தம் கையில் இருந்து தயிர்நெய் யமாபால் அமுதமுண் டேநீமீர் போற்றி ஓர்வண்ணம் திருந்த நுவலாது என்பிழைக் கும்நீ யலையே நல்வளம் துரப்பன் என்னும் அவற்றுக்கு முகந்து சொல்லை எடுத்துச் சோர்ந்தவாறே கற்பியா வைத்த மாற்றங்கள் கூப்பி வணங்கப் பாடி ஆலியா அழையா பராபி மானத்து ஒதுங்கின அன்றே நம்பிக் கன்பர் தலைமீ தடிப்பொடி உடையவர் உடையார் போல்வார் தன்மை கிளியும்பூவை குயிலும் மயில் எனுமே –36-(அகவற்பா)
“மாதரார் கயற்கண் என்னும் வலையில் பட்டு” என்கிறபடியே பெண்களின் கண்ணாகிற வலையில் அகப்பட்டு அழிந்து போகாமல்; “தாமரைத் தடங்கண் விழிகளின் அகவலைப் படுப்பான்” என்று பூரணனான ஸர்வேச்வரனுடைய தாமரைப் போன்ற திருக்கண்களின் நோக்காகிற வலைக்குள்ளே அகப்பட்டு, இதற்குப் பொருந்தாத மற்றவற்றைப் பொருந்தாப் போலிகளென விட்டு, “வளர்த்தனால் பயன் பெற்றேன் மடக்கிளியை” என்று எடுத்து வளர்த்தவர் கைகளிலிருந்து, “தயிர்ப் பழம் சோற்றொடு பாலடிசிலும் தந்து” என்றும், ‘நெய்யமரின் னடிசில்” என்கிறபடி-உபதேக்ஷயந்திதே ஜ்ஞானம்” அவர்கள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள் என்கிறபடியே காலத்துக் கேற்றவாரும், நிலைமைக் கேற்றவாரும் தாராளமாய் அவர்களுக்கு பகவத் குணங்களாகிற உணவை அநுபவிக்கும்படி செய்து, “போற்றி யானிரந்தேன் புன்னை மேலுறை பூங்குயில்காள்” என்று அவர்களைப் பல்லாண்டு பாடி அவர்களை ஆசாரியனாக பாவித்து, ஆதரித்தாலும், “ஒருவண்ணம் சென்று புக்கெனச் கொன்றுரை யொண்கிளியே” என்று எனக்காக இறைவனிடம் சென்று ஒருவழியாக என் நிலைமையை அறிவி என்றால் அறிவிக்காமல், “என்பிழைக்கும் நீயலையே-நுவலென்ன? நுவலாதே யிருந்தொழிந்தாய்” என்று ‘என்னுடைய ஆற்றாமையைப் பெருமானிடம் சீக்கிரமாய் அறிவியென்றால்’ “சொல் பயிற்றிய நல்வளமூட்டினீர் பண்புடையீரே” ‘எனக்குதவன் பெயரைச் சொல்லாதே என்றால் “கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்” என்கிறபடி எனக்கு உதவாத எம்பெருமானை எனக்கு ஞாபகமூட்டி துன்புறுத்துகிறீர் உம்மை நான் வளர்த்து நல் விஷயத்தில் ஈடுபடும்படி செய்த எனக்கு நல்ல உதவி செய்கிறீர்கள், நல்ல பண்புதான்! என்று அவற்றைக் கடிந்தும்,
“இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்து நின்றும் துரப்பன் ” என்று தன்னை ஆதரித்த சமயத்திலும் அநாதரித்த சமயத்திலும் இன்சொற்களும் வன்சொற்களும் வகுத்த விஷயத்தில் கோபமும் அருளும் பகவத் விஷயத்தில் விநியோகப்படுத்தலாம் என்னும் நினைவாலே உகந்து; சொல்லை எடுத்துத்தொடுப்பதற்கு இயலாமல் சோர்ந்தவாறே- அதாவது, அவன் திருநாமத்தை சொல் என்றால் நெஞ்சாழும் கண்சுழலும் என்றபடி சொல்ல பலமில்லாமையாலே துவள, ஏற்கனவே உமக்கு கற்பித்துள்ளேன் அவற்றைச் சொல்ல என்ன, அந்த கிளிகள் இறைவன் திருநாமத்தைச் சொல்ல “மடக் கிளியை கைகூப்பி வணங்கினாளே “‘ என்று அவற்றைப் பராங்குச நாயகியான தான் கை கூப்பி வணங்கி சந்தோஷ மிகுதியாலே பாடியும் “ஆலியா அழையா” என்கிறபடி ஆனந்தத்தோடே போது போக்குபவர்களாய பராபிமானத்திலே ஆசார்யாபிமானத்திலே ஒதுங்கி “தென்குருகூர் நம்பிக் கன்பன் ” என் கிறபடி, ஸ்ரீமதுர கவிகள் ஆசாரியரான நம்மாழ்வார் விஷயத்தில் அன்பே வடிவாக இருப்பர் “நாவலிட்டுழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே” என்று யமன் போன்றோர் தலைகள் மீது காலடியிடும்படி செருக்கை யுடையராய் பாகவதவர்களுக்குப் பாத தூளி போலே நிரூபித்த தொண்டரடிப் பொடியாழ்வார், ஆழ்வான் ஆண்டான், எம்பார், அருளாளப் பெருமாளெம்பெருமனார் முதலானவர்களை குணத்தை யிட்டு, கிளி, பூவை, மயில், குயில் என்று சொல்லும் என்றுபடி –
குயிலும் மயிலையும் தூதென் றனுப்பி
அயர்வின் விரோதம் அழிக்கும் – பயிற்சி
விருத்தம் ஒழிக்கும் கடனா சாமர்த்யம்
நன்னகரில் வித்தீர் ணம்–37–(வெண்பா)
பாரங்குச நாயகி குயில் முதலான பறவைகளை தூதுவிட, அவைகள் சென்று சொல்லி அவன் வருமளவுக்கும் பொறுக்காத ஆற்றாமை மிகுதியால் பிரணய ரோஷம் உண்டாகி, அவன் வந்தாலும் இனி வேண்டாம் என்று ஊடல் பண்ணி சிற்றிலிழைக்க, அவன் வந்து இவர்களோடு கலப்பதற்குப் பல உபாயம் பண்ணியும் முகம் கொடாதிக்க, இவர்கள் இழைத்த சிற்றிலை தன் திருவடியால் கலைத்தான். அனைவர்க்கும் உபாயமாயிருக்கும் திருவடிகள் தனக்கும் உபாயமாய் பாரங்குச நாயகி “எங்கள் சிற்றிலும் யாமடும் சிறு சோறும் கண்டு முறுவல் செய்து நின்று அழித்தாயே”‘ என்று சொல்லி கூடுவாளாகி, நாம் ஊடிய ஊடலைத் தீர்த்த இவன் முரண்பட்டவை எல்லாம் பொருந்த விடுவான் என்று நினைத்து, திருவிண்ணகர் பெருமானை நல்குரவும் செல்வம் என்று தொடங்கும் திருவாய் மொழியால் விரிவுற வாழ்த்தினார்-
கைய கழிந்தார்க்கு உணவுடன் நீருக்குறு நிதியா
வெய்ய தோராபத் துடன் தோழனுமா விழையுமிவ
னொய்ய உறவினன் தூய்மை நிகரில் புகழுடையோன்
செய்ய நற் பண்புகள் திண்ணம் புகுமூர் பெருமையிதே ? –38-(கட்டளைக் கலித்துறை)
பராங்குச நாயகி இறைவன் திறத்தான விருப்ப மிகுதியால் தன்கையகத்தி ருந்த மற்றைப் பொருட்களெல்லாம் கைகழிய, திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமானே உண்ணுர் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று நிஷ்டை யுடையவளாக பராங்குச நாயகி, ஆபத்துக்குதவும் உடன் தோழனுமாய் எல்லா உறவுகளை! முடையவனாய் விருப்புற்று நிகரில புகழான வாத்சல்ய குணத்தை உடையவனுமாய் உள்ள பெருமானைச் சென்றடைவது என்று, தான் தன் வழியே திருக்கோளூருக்குப் போய்விட, தாயானவள் இன்று எனக்குதவாதகன்றவள் தின்ன மென்னிளமான் புகுமூர் திருக்கோளூரே என்று உலகவற்கு உரைக்கும்படியான பெருமை யுடையவள் –
பெரும்புறக் கடலிது அலைத்தும் ஆழ்ந்தும் ஒடுமிவ் விடங்களில் பெறுவதற் கியல்வில பேதுறுவார்
விருப்புறு விசும்பும் பாற்கடல் கரந்தசில் லிடங்களோ டயோத்தியும் காலமும் தேசமும் சேய்மைத்தே
பருகுபே ராவல்க ளுடையவர்க் கவையிவை இயல்வில பயனில சாககண் டத்துறு முலையேதான்
திருவுடைக் குணங்களால் நிரம்பிய மடுவொடு திருவுடை நிறை நூல் இன்ப மாரி மான மேயம் உயர்ந்ததே–39-(ஒன்பதின் சீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம் )
எம்பெருமான் பர வாசு தேவனாக பரமபதத்தில் இருக்கும் நிலையை பெரும்புறக் கடலென்பார்கள். அந்த மூர்த்தியும் பாற்கடலுள் பள்ளி கொண்டுள்ள வியூக மூர்த்தியும், சேதந அசேதநங்களனைத்திலுட் அந்தர் யாமியாக உறைபவனும், காகுத்தன் கண்ணனாக வரும் அவதார நிலையுமாகிய நான்கு நிலைகளிலும் பகலோலக் கமிருந்து காரியம் மந்திரிந்து கருப்புடுத்தி நகர சோதனை செய்து வேட்டையாடி (ஆராமங்களில் விளையாடும் ராஜநீதி). இவற்றில் பர வாசு தேவ மூர்த்தியும் பாற் கடல் மூர்த்தியும் தூர தேசத்திலிருப்பவர்கள். விபவ அவதார மூர்த்தியுடம் காலங்கடந்தது. அந்தர்யாமித்துவமோ எவராலும் காண முடியாதநிலை. ஆக இந்த நான்கு மூர்த்தி இருந்தும் உலகவர்க்கு காண இயலாது பயனற்றன முதுவேனில் காலத்தில் குளிர்ந்த மடுவில் சம்சார தாபத்தால் தவிக்கப் பெற்றவன், நீர் நசை மிகுந்து பருகுவதற்கு நீரைக் காணாது தவிக்கப்படுவது போன்றும், ஆட்டின் கழுத்தில் உள்ள மூலைக்காம்புகள் போல பயனற்றவை இந் நிலையில் கல்யாண குணங்களால் நிரம்பிய பெருக்காற்று வெள்ளத்தில் தேங்கிய மடுவோடு ஒத்தது அர்ச்சாவதாரம். மேற்சொல்லப்பட்ட நான்கு மூர்த்திகளையும் அறிவதற்குப் பிரமாணமாயிருப்பது, பரவாசுதேவனைச் சொல்லப்பட்டது வேதம், வியூக மூர்த்தியைப் பற்றி பேசுவத பாஞ்சராந்திரம், விபவ அவதாரங்களைப் பேசுவது இதிகாச புராணங்கள் -அந்தர்யாமியைப் பற்றி பேசுவது மனுநீதி என்னும் நூல்கள். காணமுடியாததைப் பற்றி பேசுவதால் மேற்சொன்ன பிரமாணங்கள் நான்கும் குறைவுடையதே. தேங்கிய மடுக்களுக்கு ஈடாக சொல்லப்பட்ட குணங்களால் பூர்ணமான அர்ச்சாவதாரத்தைப் பற்றிப் பேசுவது திருவாய் மொழியாம். பிராமணம் என்பது ஒரு விஷயத்தைச் சான்று காட்டிப் பேசும் நூல். பிரமேயம் அந்த நூலால் சொல்லப்பட்ட விஷயங்களாகும். மேற்சொல்லப்பட்ட நான்கு பிரமாணங்களாலும் பேசிய விஷயங்களை நான்கு மூர்த்திகளும் குறைவுடையனவே. அஞ்சாம் பிரமாணத்தால் பேசப்பட்ட அர்ச்சாவதார மூர்த்தியே உயர்ந்தது. அதே போன்று அந்த மூர்த்தியைப் பற்றி வாழ்த்தி பேசும்படியான திருவாய்மொழியும் உயர்ந்தததேயாம்.
உயர்வற உயர்நலத் தொண்பொருள் பகலிடை அயர்வறும் அமரர்கோன் மூதுவர் தியாகிகள் கணாதிபர் துவார பாலனர் கணத்துடன் சோர்வர செங்கோல் செலுத்திரா சநீதி சனக சநாதி சீரியர் கூட்டத்து காப்புடை காரியம் மந்திரித் தொழுங்குற ஓல்வன அல்லன காணுமி ராசநீதி சீரிய உபய விபூதியில் செய்தியை கருப்புடை உடுத்தி ஒருவரும் காணாது. , உழற்றுஉழன்று காணுமி ராசநீதி மீனம் கூர்மம் வராகம் வீறுசால் நார சிங்கம் நன்மதி வாமனன் மூவுரு வினிரா மன்கண் ணன்கற்கி அரக்க ரசுரர் நாத்திகர் புறத்தோர் வெறுப்பொடு வேட்டையா டுமிரா சந்தி பெருந்தே வுடையமூ வுலகில் பெய்த காவெனும் அரங்க முதலா ராமங்கள் ஒண்டோடி யாளெனும் திரும ளோடு விளையாடு வீவிலி ராச நீதிகள் மனக்கண் கண்டு களிக்கும் வாய்ப்புடை உம்பர் தம் உலகு நமக் கொப்புண்டே? வீவிலம் மிராச நீதிவீ றுடையதே -40-( அகவற்பா)
கதிரவன் ஒளிக்கு முன் மற்றை ஒளிகள் இருந்தும் இல்லையாவது போல, உலகில் மற்றுமுண்டான ஆனந்தமிருக்க இறைவனுடைய ஆனந்தத்திற்கு முன் இல்லையாவது போல் உயர்வற உயர்ந்த ஆனந்தமுடைய பரம்பொருளான பரவாசு தேவனுடைய பேரொளிப்பிழம்பான பரமபதத்தில், அறிவின்மையின் வாசனை கூட இல்லாது நிரந்தரமான பேரறிஞர்களான விஷ்வசேனர் முதலிய நித்யசூரிகள், சம்சாரத்தை அறத்துறந்து விட்டு வானோர்க்குலம் புகுந்த முக்தர்கள், கணாதிபர், துவாரபாலகர், கணம் கணமாக வாழ்த்தி ஸேவிக்கும்படியாக செங்கோல் செலுத்தும்படியான ராஜ நீதி ஒன்று. சனகாதிகள் முதல் ஸ்வேதத்தீப வாசிகள் கூடியிருந்து வாழ்த்தும்படியான பாற்கடலில் மந்திராலோசனை அதாவது ஜகத் ரட்சனை சிந்தனை பண்ணுகின்ற வியூக மூர்த்தி ஒரு ராஜநீதி–கருப்புடை தரித்து நகரசோதனைச் செய்யும் அரசர்கள் போல், தன்னால் வியாபிக்கப்பட்ட பொருளை மறைந்திருந்து நகர சோதனை பண்ணுகிற ஒரு ராஜ நீதி.-மச்சம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனம், மூவுருவின் ராமன், கண்ணன், கல்கி என அவதரித்து அரக்கர், அசுரர், நாத்திகர் மற்றும் புறத்தோர் உலக நலத்தை பாழ்படுத்துவார். இவர்களைச் சினத்தோடு வேட்டையாடும் ஒரு ராஜநீதி -“செய்த திண்மதில் சூழ் திருவிண்ணகர் சேர்ந்தபிரான் பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவ்வுலகு” என்கிறபடி திருவரங்கம் முதலான ஆராமங்களான பூஞ்சோலைகளில் ஒண்டொடியாள் திருமகளும் தானுமாக விளையாடுவது ஒரு ராஜ நீதி. இந்த ராஜ நீதிகளை எல்லாம் சான்றோர்கள் அருளிய நுல்களைக் கொண்டும் ஆசாரியர்கள் உபதேசங்களைக் கொண்டும் மளக்கண்ணால் கண்டு களிக்கும் முழுக்ஷுக்களாகிய எம்போல்வார்கள வாய்க்கப் பெற்றவாகள். இத்தகைய நாம் இருக்கும் இருள்தருமாஞாலத்திற்குத் தெளிவிசும்பு திருநாடு ஈடாகாது என்னும்படியான வீறுடைய ராஜ நீதி ஒன்று –
திருமகள் கேள்வன் திருவருள் நலத்தால் மயர்வற மதிநல மருள
அரும்பொரு எனைத்தும் ஒருங்குடன் அமுத கடமென ஆயிரம் விரித்தான்
குருகையில் வருநல் பிறவியில் துறவிதன் நான்மணி மாலையாம் குளிகை
இருள்தரு ஞாலம் தெருள்தரு விசும்பா வேகடம் செய்வதொன் றன்றே
திருமகள் கேள்வனாகிய ஸ்ரீமந் நாராயணன் தன் திருவருள் வயப்பட்டு தென் திசையில் தன் திருக்கண் பார்வை செலுத்த, ஜாயமான காலத்தில் குருகூர் சடகோபன் மேல் வீழ்ந்து, அதனால் அறிவின்மை அறத்தொலைந்து ப்ரீதி ரூபமான ஞானம் உண்டாகப் பெற்று, திருக்குரு கூரில் வந்தவதரித்த பிறந்த போதே துறந்த சடகோபன் விஷயமாக “நான்மணிமாலை” என்று சொல்லப்பட்ட, ரசகுளிகை இயல்பில் இருந்து இருள்தருமாஞாலமான இந்த லீலாவிபூதியை தெளிவிசும்பாம் நித்திய விபூதியாக மாற்றும் தகுதியுடையதொன்றாதாகும் –
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply