ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -97-எழுவதுவும் மீண்டு படுவதும் பட்டு –பரிவதில் ஈசனை -1-6-

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

கழிய மிக்கதோர் காதல் -வளர்ந்த அவஸ்தை கால பரம் ஸம்ஸார பரம் இரண்டும் -எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க் கழிவதும்- கல்ப காலம் ஆயிரம் சதுர்யுகம் பிரம்மா இருந்தும் வீண் அன்றோ -இவற்றைக் கண்டும் -எள்ளி நகையாடாமல் இருக்கப் போமோ -கால கோலம் கண்டும் இருக்கப் போமோ –உலக விஷயம் பார் அதில் புத்தி செலுத்தி பொழுது போக்கலாம் என்ன
கண்டு கண்டு என்கிறாள் -கண்டேன் -இவற்றின் நிலையைக் கண்டு சமாதானம் ஆக மாட்டேன் என்கிறாள்-பண்டைய திருமாலைக் கண்டு -காதல் பிறந்து -வளர்ந்து – இருக்குமே-பகவான் ஸ்வாராதன்-பரிவதில் ஈசனை -1-6—ஈடும் யெடுப்புமிலீசன் -மாடு விடாது என் மனனே-பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே –1-6-3-மனம் விடாது -கண்கள் அவனையே காணும் அங்கு உண்டே

அவதாரிகை–பெரும் கிறியானை அல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே –என்றும் –நின் கண் வேட்கை எழுவிப்பனே -என்றும் –இவ் விஷயத்திலே இங்கனே கிடந்தது அலமாவா நின்றீர் –
இவ் விஷயத்தில் கை வைக்கில் உமக்காகவும் பிறர்க்காகவும் கிலேசந் தவிராதாய் இரா நின்றது –
அல்லாதார் கண்டீரே – புறம்புள்ள விஷயங்களிலே நெஞ்சை வைத்து –அவற்றாலே உண்டு உடுப்பது-கண் உறங்குவதாய் கொண்டு போது போக்குகிறபடி –அப்படியே நீரும் நம் பக்கலிலே நின்றும்-நெஞ்சை புறம்பே மாற்றி போது போக்க வல்லீரே என்ன – அவர்கள் உன்னை-அறியாமையாலே -என்கிறார் –

நின் கண் வேட்கை எழுவிப்பனே -என்று ஜகத்தைத் திருத்துகையிலே இவர் ஒருப்பட்ட பிரகாரத்தைக் கண்ட பார்ஸ்வஸ்த்தர் இவர் பகவத் அனுபவம் பண்ணப் பரகு பரகு என்னாதே ஜகத்திலே கண் வைக்கப் பெற்றோம் இறே என்று ஸந்துஷ்டாராக-அத்தைக் கண்டவர் அஸ்திரமான ஸம்ஸாரத்தை அகலத் தேடுமது ஒழிய அநுபவத்திலே ப்ராவண்யம் உடையோருக்கு அனுபாவ்ய விஷய பிரகாசம் ஸங்கோசிக்குமோ என்று அருளிச் செய்கிறார் –(எம்பார் -இருளே காண வில்லையே என்றார் அன்றோ)

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-எஞ்ஞான்று தலைப்பெய்வன் என்பது தவிர்ந்து
ஸூக ஸூபத்தராய் இரீர் என்று பகவத் அபிப்ராயமாக தெளி விசும்பில் உள்ள இமையோர்கட்க்கு எல்லாம் இதுவே ஸ்வ பாவமாய் இருக்க அவர்களில் ஒருவரான எனக்கு அது உண்டோ என்கிற
அபிப்ராயத்தால் இவ்வர்த்தத்தை ஸ்வ ஸித்தாந்தஸ்த்தரிலும் அறிய அருளிச் செய்கிறார் இதில்

எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே –
– 97-தலைவனைப் பிரிந்து தூக்கம் இல்லாமல் தலைவி வருந்துதல் –

எழுவதும்–ஸூர்யன் உதிப்பதையும்
மீண்டே படுவதும்–மறுபடி அஸ்தமிப்பதையும்.
பட்டு–இங்ஙனம் நிகழ்ந்து
எனை ஊழிகள்–எத்தனையோ காலங்கள்
போய் கழிதலும்–சென்று கழிவதையும்
கண்டு கண்டு–பார்த்துப் பார்த்து
எள் கல் அல்லால்–வருந்துதலே யல்லாமல்
இமையோர்க்கள் குழாம்-தேவர்கள் கூட்டம்–தொழுவதும் வணங்குவதையும்–சூழ்வதும் -(பரிவாரமாகச், சூழ்ந்து கொள்வதையும்.
செய்–செய்யப் பெற்று
தொல்லை மாலை–ஆதியந்த மில்லாதவனான திருமாலை
கண் ஆர கண்டு–கண்கள் த்ருப்தி யடைய ஸேவித்து
கழிவது ஓர் காதல் உற்றார்க்கும்–(அவன் பக்கல்) மிக்க தொரு வேட்கையைப் பொருந்தினவர்க்கும்-உம்மைத் தொகை -தோழி சொல்ல இவள் பதில் என்பது தேறும்
கண்கள் துஞ்சுதல்–கண்ணுறக்கம் கொள்ளுதல்
உண்டோ–உள்ளதோ? (இல்லை என்ற படி.)

பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கு என்று -உரிமையுடன்
ஓதி யருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு——6–சீலவானே யாகிலும் ஸ்ரீ யபதியான பரி  பூர்ணனானவன் பெருமைக்கு ஈடாக ஷூத்ரனாய் ஷூத்ர உபகரணான இவனால் பச்சை இட்டு ஆஸ்ரயிக்கப் போகுமோ ஸ்ரீ யபதித்வம் -இத்தலையில் குற்றம் பாராமல் அங்கீ கரிக்கும் நீர்மைக்கு உடலாகையாலும்
பரிபூர்ணத்வம் -இத்தலையில் குற்றம் பாராமல் பெற்றது கொண்டு சந்தோஷிக்கைக்கு உடலாகையாலும் ஆஸ்ரியிப்பார்க்கு பத்ர புஷ்பாதிகளால் ஸ்வ ஆராதன் என்கிற பரிவதில் ஈசனனில் அர்த்தத்தை –பரிவதில் ஈசன் படியை -இத்யாதியால் அருளிச் செய்கிறார் –இப்படி உபதேசிக்கையாலே
இந்த லோகத்தில் அறிவிலிகள் ஆனவர்கள்-பிறவியை அகற்றுவித்தார் –-இஜ் ஜகத்தில் அஞ்ஞர் உடைய ஜன்ம சம்பந்தத்தை ஸுவ ஸூக்தியாலே நிவர்த்திப்பித்தார் – ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே – என்றத்தை பின் சென்ற படி –

எழுவதும் -இத்யாதி –இதுக்கு இரண்டு படி–(சம்சாரி பரமாகவும் கால பரமாகவும் ) உத்பன்னமாவதும் -அனந்தரத்திலே நசிப்பதும் –-உத்பன்னமாய் சில நாள் கடுக ஜீவித்து -பின்னை நசிப்பதுமாய் இறே இருப்பது —ஜாயஸ்வ ம்ரியஸ்வ -என்கிறபடியே-உத்பத்தி ஷணமே விநாச லஷணமாய் இருப்பன சிலவும் –கல்பாதியிலே உண்டாய் கல்ப அந்தத்திலே விநாசமாய் இருப்பார் சிலருமாய் இறே இருப்பது அவை எல்லாம் ஒரு போகியாக தோற்றுகிறது  ஆயிற்று இவர்க்கு –கண்டு கண்டு எள்கல் அல்லால்-
இப்படி இருக்கிற இவற்றினுடைய அஸ்தைர்யாதிகளைக் கண்டால்-இகழலாய்  இருக்கும் – உன் பக்கலில் கை வைத்தார்க்கும் விடப் போமோ –எள்கை யாவது-இகழுகை–அவற்றில் விரக்தர் ஆகலாம் இறே அவற்றின் தோஷ தர்சனம்-பண்ணினவாறே –எழுவதும் இத்யாதி –உதிப்பது அஸ்தமிப்பது –இப்படி அநேக நாள் சென்று கழிய காணா நின்றாலும்-எள்கல் அல்லால் -ஈடுபடுத்தும் இத்தனை போக்கி-நாள் சென்றது என்றால் நெஞ்சை வாங்கலாயோ -உன் படி இருப்பது –இப்போது எள்கையாவது -இரங்குகை  -அதாவது ஈடுபடுகை -(கீழே இகழ்வது அர்த்தம் -இங்கு இரங்குதல் ஈடுபடுதல் )-இவை சதோஷமாய் இருக்கையாலே விடலாம் –விலஷண விஷயமுமாய்-அதிலே பாவ பந்தம்-உண்டானால் ஆறி இருக்கப் போமோ –எப்பொழுதும் நாள் திங்கள் –திருவாய் மொழி – 2-5 4- – இத்யாதி –இமையோர் இத்யாதி –உன்னை ஒழிய வேறு ஒன்றில் நெஞ்சு வைக்கக் கடவர் அன்றிக்கே இருந்துள்ள நித்ய ஸூரிகள் உடைய திரளானது – நித்ய அஞ்சலி புடா ஹ்ர்ஷ்டா -என்கிறபடியே-தொழுது –நம புரஸ்தாத் அ தப்ருஷ்ட தஸ்தே (ஸ்ரீ கீதை 11-அத்யாயம்)-என்கிறபடியே முன்னே வருவது பின்னே வருவதாய்–மொய்த்து –இப்படி செய்து போகையே யாத்ரை யாம்படி பழைய னான சர்வேஸ்வரனை –கண்ணாரக் கண்டு – காத்ரைஸ் சோகாபி கர்சிதை ஸம்ஸ் ப்ருசேயம் (ஸூந்தர-40)  -என்கிறபடியே காண-வேணும் என்கிற ஆசை கண்டவாறே தீரும் இறே – மேல் வருமது விஷயாதீநமான காதல் இறே –உற்றார்க்கும் –காதல் முருக்கு கொளுந்தினார்க்கும் (திடமாக இருந்தார்க்கும் )-உண்டோ இத்யாதி –ஸ்வ தந்த்ரனான பெருமாள்  உறங்கினார்  என்று  கேட்டோம் இத்தனை போக்கி- அவரை அனுவர்த்தித்துப் போன இளைய பெருமாளுக்கு கண் உறங்கிற்றோ –பகவத் விஷயத்தில் கை வைத்தார் இதுக்கு முன்பு கை உறங்கினார் உண்டு என்று யாரேனும்-கேட்டு அறிவார் உண்டோ –

எம்பெருமானை கண் களிப்பைக் கண்டு முடிக்க வேணும் என்று அன்புற்ற நித்ய ஸூரிகள்-இமைக்க மாட்டார்களே-உலகப் பொருள்களை இகழ்ந்து எம்பெருமானையே சேவித்து காலம் கழியும்படியான ஆசை கொண்டார்க்கு அவனை உபேக்ஷிக்க காரணம் இல்லையே-பூர்ண அனுபவம் செய்யும் ஆழ்வாராதிகளுக்கு ஞானம் குவியாதே-கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே -கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே –-காதல் உற்றார்க்கு எள்கல் அல்லால் –கண் துஞ்சல் உண்டோ -என்று அன்வயம்-ஸ்வ தந்தரரான பெருமாள் உறங்கினார் என்று கேட்க்கும் அத்தனை போக்கி இளைய பெருமாளுக்கு கண் உறங்கிற்றோ-பகவத் விஷயத்தில் கை வைத்தாரில் இதுக்கு முன் கண் உறங்கினார் என்று கேட்டு அறிவார் உண்டோ-கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -அன்றோ-தொல்லை மால் -சம்ச்லேஷம் பழையது என்றவாறு -அநாதியான வியாமோஹம் கொண்டவன் -என்றும் அனைத்துக்கும் பழைய பெரியவன் என்றுமாம் –பகவத் ஸ்வரூபத்தை முழுவதும் ஸாக்ஷாத்கரிக்க விரும்பித் தொடங்கினார்க்குக் காலம் முடிந்துபோவதேயன்றி
அவ்வநுபவம் முடிந்து கண்வாங்குந் தன்மையில்லையென்று ஆழ்வார் அன்பர்க்கு அருளிச் செய்கிறார்.-ஸூர்யன் உதிப்பதும் மீண்டும் அஸ்தமிப்பதுமாய் இப்படியே நாள் திங்கள் நோக்கி இரங்குதலே யன்றி நித்யஸூரிகள் எப்பொழுதும் கைகூப்பிக்கொண்டு கைங்கர்யம் பண்ம் பொருட்டு சூழப்பெற்ற அநாதியான எம்பெருமானைக் கண் களிப்பக் கண்டு முடிக்க வேணுமென்பதோர் ஒப்பற்ற அன்பைக் கொண்டு நிற்பவர்களுக்கு அவன் பக்கல் வைத்தகண் வாங்கி இமைக்க இடமுண்டோ வென்கிறார்.–இப்பாட்டுக்கு மற்றொருபடியாகவும் பொருளுரைப்பா; எழுவதும்- பிறப்பதும், மீண்டேபடுவதும்- பிறந்தவளவிலே இறப்பதும்,-பட்டு- பிறந்து, எனை ஊகளள் போய்க்கழிவதும்- பலகாலம் கழித்து இறப்பதுமான உலகத்துப் பொருள்களை, கண்டு கண்டு- பாரத்துப் பார்த்து என்கல் அல்லால்- அவற்றை இகழ்வதல்லாமல்… எம்பெருமானைச் சேவித்துக் காலங்கழியும்படியானதோர்
ஆசையில் நின்றார்க்கு அவனை உபேக்ஷிக்கக் காரணமில்லை- என்று. எம்பெருமானைப் பூர்ணாநுபவஞ் செய்யக் கருதி ஆழ்ந்தவர்கட்கு ஞானம் குவியாது என்பதும் தோன்றும்.-வான்களாகி நாள்கள் செல்லும்படியைக் கண்டு ‘ஐயோ! காலமெல்லாம் வீணாய்க் கழிந்து போகிறதே,
பகவத்ஸாக்ஷாத்காரம் நமக்குக் கிடைக்கவில்லையே!’ என்று மனம் நொந்து கொண்டிருக்கலாமேயொழிய. ‘எம்பெருமானைக் கண்ணாரக் கண்டாயிற்று, நமது காதல் தீர்ந்துவிட்டது’ என்று க்ருதக்ருத்யராகப் பெறும் நாள் உண்டாவதரிது என்றதாயிற்று.
கண் ஆர் – கண்படைத்த பயன்பெற. ‘கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே கண்ணிமைத்துக் காண்பார்தங் கண் ணென்னகண்ணே’ (சிலப்பதிகாரம் – ஆய்ச்சியர் குரவை என்றார் பிறரும் )
காதலுற்றார்க்கு என் கலவல்லால் கண் துஞ்சுதலுண்டோ’ என்று அந்வயிப்பது. பகவத் விஷயத்தில் ஆசைவைத்திட்டால் உள்ளதனையும் உருகிக் கிடக்கவேணுமத்தனையன்றி நிர்வ்ருதியாய்க் கண்ணுறங்கப் பெறுவதில்லை காணும்.-இங்கே நம்பிள்ளை யீடுகாண்மின்;- ‘ஸ்வதந்தாரான பெருமாள் உறங்கினாரென்று கேட்குமித்தனை போக்கி அவரை அநுவர்த்தித்துப் போன இளைய பெருமாளுக்குக் கண்ணுறங்கிற்றோ? பகவத் விஷயத்திலே கைஸவத்தாரில் இதுக்கு முன் கண்ணுறங்கினாருண்டென்று கேட்டறியவாருண்டோ?”

கிளவித்துறை வகையில் இப்பாசுரத்தை, நாயகனைப் பிரிந்து துயில் கொள்ளாத நாயகி இரங்கியுரைக்கும் பாசுரமாகக் கொள்க.-திருமாலாகிய நாயகனைக் கண்டு கூடிப்பிரிந்து அந்த விரஹாரத்தில் “கங்குலும் பகலுங் கண்துயிலறியாள்” என்றபடி-அல்லும் பகலும் சிறிதும் தூக்கங்கொள்ளாது வருந்துகிற (பராங்குச) நாயகி தன்னைத்தேற்ற முயல்கிற தோழிக்குக் கூறியது இது என்ற கொள்ளலாம்.-தோழி தேற்றுகிற விதம் யாதெனில்,‘நாயகனைப் பிரிந்த நிலைமையில் இப்படி அலற்றுவாருண்டோ?-பலவகைப்பட்ட உலகப் பொருள்களைக் கண்டுகொண்டு பொழுதுபோக்கி ஒருவாறு ஆறித் துயில்கொள்ளும் நாயகிகள் உலகத்திலில்லையோ?
அவர்களைப் போலே துயிர் கொண்டிருக்கலாமே’ என உலகியல் கூறி ஆற்றலுற்றானி தோழி; அன்னவளை நோக்கி இத் தேவாதிதேவயான புருஷோத்தமன் பக்கல் அன்புவைத்தவர்களும் துயில் கொள்ளக்கூடுமோ வென்று கூறி மறுத்தவாறு-இன்ப நுகர்ச்சிக்கு உரியகாலம் வீணேகழிதலைச் சிந்தித்து சிந்தித்து மனந்தளர்வதல்லாமல் கண்துயில்கொள்ள அவகாசமுண்டோ வென்றவாறு.
‘இமையோர்கள் குழாம் தொழுவதுஞ் சூழ்வதுஞ்செய்’ என்ற விசேஷணத்தினால்- தன்னால் காதலிக்கப்பட்ட நாயகனுடைய சிறப்பு விளக்கப்பட்டதாம். ‘தொல்லைமால்’ என்றதனால் தனக்கும் அந்த நாயகனுக்கும் நேர்ந்த பழக்கம் நெடுநாளையது என்று குறிப்பிடப்பட்டதாம்.
‘தொல்லை மால்’ என்றதற்கு ஜீவாத்மாக்களிடத்தில் அநாதியாகவுள்ள வ்வயாமோஹ முடையானென்றும் எல்லாவற்றுக்கும் பழமையான பெரியோனென்றும் பொருள் கொள்வர்.

எழுவதும்-உத்பன்னமான பிரகாரத்தையும்-மீண்டே படுவதும்-உத்பத்தி தசையிலே மற்றைப்படியே நசிக்கிற பிரகாரத்தையும்-படு எனை யூழிகள் போய்க் கழிவதும்-உத்பன்னமாய் அநேக காலம் சென்று முடிகிற பிரகாரத்தையும்–இங்கு பட்டு என்று-முத்துப் பட்டு என்னுமா போலே உத்பத்தியைச் சொல்லுகிறது–கண்டு கண்டு எள்கல் அல்லால்-இப்படி அல்ப கால உத்பத்தி விநாசத்தையும்
சிர கால உத்பத்தி விநாசத்தையும் பிரதி க்ஷணம் அபரோக்ஷித்து நெகிழுமது ஒழிய–இமையோர்கள் குழாம் தொழுவதும் சூழ்வதும் செய்-அஸ்க்கலித (நழுவாத குறையாத )ஞானரான ஸூரிகளுடைய சங்கமானது-நித்ய அஞ்சலி பந்தத்தையும் கைங்கர்ய பரராய்க் கொண்டு பரிசர ஸேவையையும் பண்ணா நிற்கிற–தொல்லை மாலைக்-இவ் வாத்மாவின் பக்கல் அநாதியான வாத்சல்யத்தை யுடையவனை-மால் என்று-பெரியவனாய் -ஸ்வாமித்வத்தைச் சொல்லிற்று ஆகவுமாம்–கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும்-கண்கள் நிறையும்படி அனுபவித்துக் காலம் கழியும்படி
அத்விதீயமான ஆசையிலே நின்றவர்களுக்கும்–உண்டோ கண்கள் துஞ்சுதலே – அவன் பக்கல் வைத்த கண்கள் செம்பளிக்கைக்கு விரகுண்டோ–பகவத் அனுபவ அபிநிவிஷ்டரானார்க்கு ஞான ஸங்கோசம் பிறக்க விரகு இல்லை என்று கருத்து –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-கண் உறங்கிற்றோ பகவத் விஷயத்தில் கை வைத்தாரில் இதுக்கு முன் கண் உறங்கினார் உண்டு என்று கேட்டு அறிவார் உண்டோ

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்எழுவதும்-ஆதித்யாதி கிரஹங்கள் உதிப்பதும்–மீண்டே-உதய கார்யம் கழிந்தவாறே–படுவதும் அஸ்தமிப்பதும்-படு எனை யூழிகள் போய்க் கழிவதும்-சதுர் முகர் செத்து அநேக கல்பங்களாகக் காலம் கழிவதும்–கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்ஸதா பஸ்யந்தி ஸூரய-ருக்வேதம் -என்கிறபடியே இதுகளை எல்லாம் அவரோக்ஷித்துக் கண்டு ஐயோ என்ற ஆர்த்த ஹ்ருதயம் ஒழிய நித்ய ஸூரி சங்கத்துக்கு கண் துஞ்சுதல் உண்டோ என்று அந்வயம்–இமையோர்க்கு விசேஷணம் தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் -என்பதுதொல்லை மாலை-அநாதியாக த்ரிவித ஆத்ம வர்க்கத்தில்-ஆதேயத்வ சேஷத்வ ஸ்வா யத்த சத்தாஸ்தேம ப்ரயத்ன பலத்வங்களால் ஸ்வ தேஹமாகவே விபூதி த்வயத்திலும் எப்போதும் மால் செய்யுமவனை ஸதா கண்டு கொண்டு ஸ்வா பாவிக ஸர்வ ஸாஷாத் காரம் உள்ளவர்களாய் என்றபடி-கண்ணார-யாவத் தர்மபூத ஞான வியாப்தியும்-திவ்ய விக்ரஹங்களில்-தொழுவதும் -அடிமை செய்வதும்-நம புரஸ்தாதத ப்ருஷ்ட தஸ்தே –ஸ்ரீ கீதை -11-40–சூழ்வதும்-சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே –திருப்பல்லாண்டு -12–யேந யேந ததா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி -பரம ஸம்ஹிதை -என்றபடி செய்து கொண்டு-கழிவதோர் காதல் உற்றார்க்கு
காலம் கழியக் கழிய அத்விதீயமான அன்பும் ஆர்வமும் வளர்ந்து வருமவர் களானவர்களுக்கு–உண்டோ கண்கள் துஞ்சுதலே –கண்கள் துஞ்சுதல் உண்டோ-அவர்களில் தலைவனான எனக்கு அது இல்லை என்பது கை முத்ய ஸித்தம் என்று அபிப்ரேதம்-

தாத்பர்யம்–இதில் சம்சாரிகள் பகவத் விஷயம் விட்டு சுகமே ஜீவித்து உள்ளார்களே-அதே போல் நீரும் அவனை நினைந்து அடையாமல் வருந்தி இருப்பது தவிர்ந்து ஸம்ஸாரிகளைப் போல் இருக்கலாகாதோ என்ன-சம்சாரம் தான் அஸ்திரமாய் பல தோஷங்களை யுடையதாக அன்றோ காண்கிறோம்-ஆகவே இப்படிச் செய்யப் போகாதே சம்சாரத்தில் பிறந்த உடனே மரிப்பதுமாகவும்
நெடு நாள் இருந்து மரிப்பதாகவும் அன்றோ இருக்கிறது-நிலை நின்ற சுகமே இல்லையே
இப்படி நிலையற்ற -மற்றும் உள்ள தோஷங்கள் பார்த்தால் இப்படி இருக்கப் போமோ-அஸ்ப்ருஷ்ட சம்சார -அசங்குசித ஞானரான நித்ய ஸூரிகளும் -நித்தியமான சகலவித கைங்கர்யங்கள் செய்து கொண்டே இருந்தாலும் கண்ணாரக் கண்டு கொண்டே இருந்தாலும் இப்படியே இவை நிலை பெற்று இருக்க பிரார்த்திக்கும் படி இருக்குமே அன்றோ ஒரு ஷணமும் கண் உறங்காமல் இருக்க அன்றோ அடுக்குமே – நான் எவ்வாறு கண் உறங்குவேன் என்கிறார்

1-6–பரிவதில் ஈசனைப் பாடி பிரவேசம்

முதல் திருவாய்மொழியிலே, அவன் -சர்வ ஸ்மாத் பரனாய் -எல்லாரினும் அறப் பெரியவனாய் இருக்கிறபடியை அனுபவித்தார்;
இரண்டாந் திருவாய்மொழியிலே, ‘இப்படிப் பரனானவனை பஜியுங்கோள் வழிபடுமின்,’ என்றார்,
மூன்றாந்திருவாய்மொழியிலே, அப் பஜனத்துக்கு -அவ்வழிபாட்டிற்கு உறுப்புகளாக அவனுடைய எளிமையையும்,
நான்காந் திருவாய்மொழியிலே, அவனுடைய -அபராத சஹத்வத்தையும் பொறை யுடைமைக் குணத்தையும்,
ஐந்தாந்திருவாய் மொழியிலே, -அதற்கு உறுப்பாக -அவனுடைய சீல குணத்தையும் அருளிச்செய்தார்;
‘இவை எல்லாம் உண்டாயினும், -பரிமாற்றத்தில் அருமை இருக்குமாகில் பசை இல்லை அன்றே?’ என்ன,
‘அது வேண்டா; ஸ்வாராதன் – எளிதில் ஆராதிக்கத்தக்கவன்’ என்கிறார் இத் திருவாய்மொழியில்.திரவிய நியதி இல்லை, கால நியதி இல்லை, அதிகாரி நியதி இல்லை;
இப்படி இருக்கையாலே இறைவனை ஆஸ்ரயணீயம் ஸூகரம் அடைதல் எளிது; ஆதலால்,-ஆஸ்ரயியுங்கோள் – ‘அடைமின்’ என்கிறார்.பொருள்களின் உயர்வு தாழ்வு பார்க்கின்றான் இல்லை; இடுகிறவன் நெஞ்சில் ஈரமே பார்க்கிறான்;தூய்மையான மனம் ஒன்றுமே வேண்டுவது-எல்லாருடைய தொழில்களையும் காலாலே கொள்ளப் பிறந்தவன்,
இவன் காலாலே போகட்டவற்றையும் அவன் தலையாலே சுமப்பான்-செவ்வக் கிடப்பு உண்டாயினும் மஹிஷீ ஸ்வேதத்துக்கு ஆள் இட ஒண்ணாதது போன்று,
அவ் வேலைகளைத் தானே செய்வான்

இப்படி ஸீலவான் ஆகிலும் ஸ்ரீ யபதியாகையாலே அவாப்த ஸமஸ்த காமனான பூர்ணணை ஆராதிக்கும் இடத்தில் தத் அனுரூபமான உபகரணாத்ய பாவத்தாலே துஷ்கரமாகில் செய்வது என் -என்று கூச வேண்டாத படி பூர்த்தி தானே ஆபி முக்கியமே பற்றாசாக அங்கீ கரிக்கைக்கு உறுப்பாகையாலே ஆஸ்ரயணம் ஸூகரம் என்று ப்ரதிபாதிக்கைக்காக–1- ஆராதனை உபகரண ஸுகர்யத்தையும் –2–ஆராதகனுடைய அதிகார ஸுகர்யத்தையும் —3-அதிகாரி விஷயத்தில் ஆராத்யன் தோஷ குணம் பாராமையும் தன் பெருமை பாராதே அங்கீ கரிக்கும் பந்த விசேஷத்தையும்
4–அநந்ய ப்ரயோஜன விஷயத்தில் ஆதார அதிசயத்தையும்–5- அவர்களுக்கு அத்யந்த போக்யனாம் படியையும்—6-அநிஷ்ட நிவர்த்தகனானவனுடைய ஆஸ்ரயணம் காலஷேப பிரகாரம் என்னும் இடத்தையும்-7- அஞ்சலி மாத்திரத்தாலே அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும் பண்ணும் என்னும் இடத்தையும்–8-அநிஷ்டத்தை அவிளம்பேந நிவர்த்திப்பிக்கையையும் சொல்லி– ஸ்வ ஆராதையை உபதேசிக்கிறார் –

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே 
–1-6-1-

பரிவது இல் –துக்கம் இல்லாத.–பக்ஷ பாதம் இல்லாத’ –ஹேயப்பிரத்ய நீகன்-உப லக்ஷணத்தால் கல்யாண குண யோகமும் அருளிச் செய்தாராயிற்று.பிரி வகை இன்றி –
பிரிகையாகிற வகை இன்றி; அதாவது, -உன் பெருமை மாசு உணாதோ?’ என்று அகல வகை இட்டுக் கொண்டு அகலாமல் என்றபடி.-

செதுகை யிட்டுப் புகைக்க அமையும்; கண்ட காலி இடவும் அமையும்,’ என்று அருளிச் செய்வர்-ஸ்ரீ பட்டர் –கூடாது என்று சாஸ்த்திரங்கள் விதிக்கின்றனவே!’ என்று ஸ்ரீ நஞ்சீயர் கேட்க,
அவனுக்கு ஆகாது என்கிறது அன்று; பறிக்கிற அடியார் கையில் முள்பாயும் என்பதற்காகத் தவிர்த்தன காணும்!  ‘கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும், முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்’ என்று இறைவனுக்கே உரிய திருத் துழாயோடு -விசஜாதீயங்களை -அதற்கு வேறுபட்ட பூக்களையும் ஒரு சேர எடுத்துத் ஸ்ரீ திருமங்கை மன்னன் அருளிச் செய்கிறது கண்டீரே! இதனால், இறைவன் பொருளில் ஏற்றத் தாழ்வு -த்ரவ்ய தாரதம்யம் -பார்ப்பது அன்று என்பது விளங்குமே!-அப்ராக்ருத த்ரவ்யம் -பிரகிருதி சம்பந்தம் இல்லாத பொருள்தான் வேண்டும் என்று இருந்தானாகில், ‘புள்ளாய் ஓர் ஏனமாய்’ அவதரிப்பானோ! ஸ்ரீ வைகுண்டத்தில் இரானோ?’ என்று அருளிச் செய்தார்.
பின்னர் ஸ்ரீ ‘நஞ்சீயர்’வராக புராணம் பார்த்துக்கொண்டு வரும்போது  ‘ஸ்ரீ வராக நாயனார்க்கு முத்தக்காசை அமுது செய்விப்பது’ என்று அதில் கூறப் பட்டிருத்தலைக் கண்டதும் ‘இது என்ன மெய்ப்பாடு தான்!’ என்று போர வித்தராய் – மிகவும் ஈடுபட்டவரானார்.

உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாகக் கொள்ளோமே – இப்படி அநுஸந்தியாதாருடைய ஹிருதயத்தை நினைத்திரோம் – நாங்கள் பதின்மரும் என்று தம்மை ஒழிந்த ஆழ்வார்களும் –

———–

மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்கு
எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே
 –1-6-2-

ஆஸ்ரயிக்குமவனுக்கு த்ரவ்யத்தில் குறை பார்த்து அகல வேண்டா -என்றார் முதல் பாட்டில் –நான் அதிகாரி அல்லேன் -என்று அகல வேண்டா -என்கிறார் இதில்-

மது வார் தண் அம் துழாயான்-
‘‘புரிவதுவும் புகை பூவே’ என்றார் கீழே -;
‘மதுவார் தண் அம் துழாயான்’ என்கிறார் இங்கு; இது சேரும்படி என்?’ எனின்,
பூவாகில் மதுவோடே கூடியல்லது இராமையாலே சேரும்’ என்று சொல்லுவர்கள்;
‘வதுவார் தண் அம் துழாயான்’ என்று பாடமான போது சாலப் பொருந்தும்;
வதுவை-மணம்; ஆர்தல் -பூர்ணம் –
வதுவை -வது- என்று கடைக்குறைந்து நறு நாற்றத்தை யுடைய -துழாய் என்றுமாம் –
இது தமிழர் போரச் சேரும் என்பர்-

மதுவார் தண் அம் துழாயான்’என்கையாலே, -சர்வாதிகன் -எல்லாரினும் அறப்பெரியவன் என்பதனைத் தெரிவித்தபடி, 
‘முதுவேத முதல்வன்’ என்கையாலே, பரிபூர்ணன் என்பதனைத் தெரிவித்தபடி.
இவ்விரண்டும் -ஸ்வாராதன் – எளிதில் ஆராதிக்கத் தக்கவன் என்பதற்கு உறுப்புகள்.

இப்படி விலஷணன் ஆனவனுக்கு நான் அடிமை செய்கை அயோக்யன் என்று பாராதே அந்தரங்க வ்ருத்தியோடே பஹிரங்க வ்ருத்தியோடே வாசி இன்றிக்கே-தம் தம்முடைய அநர்ஹத்தையைப் பாராது -எல்லா வ்ருத்தியும் செய்யக் கடவனாகை ஆட்செய்கைக்கு அதிகாரம் –

————–

ஈடும் யெடுப்புமிலீசன் -மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே –
1-6-3-

அவனுடைய இஸ் ஸ்வபாவத்தை அனுசந்தித்து -நினைந்து, தாம் அதிகரித்த காரியத்தை பரோபதேசத்தை-மறக்கும்படி தம்முடைய மனம் வாக்குக் காயங்களுக்கு அவன் பக்கல் உண்டான -ப்ராவண்யத்தை -அருளிச் செய்கிறார்-தனித்தனி =என் என் என் -என்று கரண த்ரயத்தாலும் தம்முடைய உகப்பு தோற்றுகிறது –ஏகாரம் -விடாது பாடும் -ஆடும் -என்னும் வினைகளுடன் கூடிக் கிடக்கிறது –

———–

அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன்
பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே 
–1-6-4-

தம்முடைய மனம் வாக்குக் காயங்கட்கு அவன் பக்கல் உண்டான-ப்ராவண்யம் –காதாசித்கமாய் விடுகை இன்றிக்கே – ஒரு காலத்தில் தோன்றி மறைதல் இன்றி,
நித்திய ஸூரிகளைப் போலே யாத்திரையான படியைச் சொல்லுகிறார்.-பிணங்கி அமரர் பிதற்றும் குணம் கெழு கொள்கையினான் – தாம் தாம் அகப்பட்ட குணங்களைச் சொல்லி, ‘நான் முந்துறச் சொல்ல, நான் முந்துறச் சொல்ல’ என்று பிணங்கி நித்திய ஸூரிகள் ஜன்னி சுரம் வந்தவர்களைப் போன்று அடைவு கெடக் கூப்பிடுகிற குணங்கள் வந்து சேருகைக்கு இருப்பிடமானவன்.சர்வேஸ்வரனான எம்பெருமானை நான் அனுபவித்து ப்ரீதி அதிசயத்தாலே தைவா விஷ்டரைப் போலே அக்ரமமாக நின்று ஆடி அவனை வணங்கி அடிமை செய்யும் இதுவே ஸ்வ பாவமாகப் பெற்றேன் -என்கிறார் –

———–

கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான் –
விள்கை விள்ளாமை விரும்பி –உள் கலந்தார்க்கு ஓர் அமுதே 
—1-6-5-

திரியவும் தாம் அதிகரித்த கார்யத்தே போந்து -அவன் அநந்ய பிரயோஜனருக்கு நிரதிசய போக்யனாம் என்கிறார் –ஈடும் எடுப்பும் இல் ஈசன் -என்ற இடம் ஸ்வீகார சமயத்தில் குறை பாரான் என்றது -இங்கு பரிமாற்றத்தில் தரம் இட்டுக் கொள்ளான்-என்கை –விள்கை -பிரயோஜனங்களைக் கொண்டு விடுகை-விள்ளாமை -அநந்ய பிரயோஜனம் ஆகை
விரும்பி -ஆதரித்து உள் கலந்தார்க்கு-இவனையே பிரயோஜனமாகப் பற்றி இவனுடனே ஒரு நீராக கலந்தவர்களுக்குஓர் அமுதே –அத்விதீயமான அமிர்தமாய் இருக்கும் -ஆராவமுது இறே –

————

அமுதம் அமரர்கட்கு ஈந்த -நிமிர் சுடராழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீள் கடலானே 
–1-6-6-

அவன் படி இதுவாக இருக்க, அவனை விட்டு-பிரயோஜனாந்தரத்தை – வேறு பலன்களைக் கொண்டு அகலுவதே!’ என்று-ப்ரயோஜனாந்தர பரரான – வேறு பலன்களை விரும்பிய தேவர்களை நிந்திக்கிறார்.நிமிர் சுடர் ஆழி நெடுமால்-இவருடைய அமிர்தம் இருக்கிறபடி. 
‘நால் தோள் அமுதே’ அன்றோ இவர்க்கு அமுது?  அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்’ என்கிறபடியே, கையுந்திருவாழியுமாய் அன்றோ அவருடைய அமிருதம் இருப்பது?ஸ்ரீ நம்பி திருவழுதி நாடு தாசர், ‘இத்தேவ சாதி வெறும் மரையோ? ‘உப்புச் சாறு கிளருவது எப்போதோ?’ என்று கவிழ்ந்து பார்த்துக் கிடப்பதே இவன் அழகையும் இனிமையையும் விட்டு!’ என்பராம்.‘கடலான்’ -‘தன் வாசி அறியாது இருப்பார்க்கும் எழுப்பிக் காரியங் கொள்ள லாம்படி கண் வளர்ந்தருளுகிறான் என்றபடி. 
தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பலபரப்பி’ என்கிறபடியே, கண் வளர்ந்தருளுகைக்குத் தகுதியான பரப்பை யுடைத்தாய், ஸ்வ சந்நிதானத்தாலே – தனது ‘சம்பந்தத்தாலே அலைகள் கொந்தளிக்கிற கடல் என்பார், ‘நிமிர் திரை நீள் கடலான்’என்கிறார். ‘மாலும் கருங்கடலே என் நோற்றாய்?’ என்பது ஸ்ரீ பொய்கையார் திரு வாக்கு.தன்னையே ப்ராப்யமாகப் பற்றி விடாதவர்களுக்குத் தன்னையே போக்யமாகக் கொடுக்கும் –அல்லாதார்க்குத் தன்னை ஒழிய ப்ரயோஜனாந்தரங்களைக் கொடுக்கும் –

————–

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே
 –1-6-7-

அவன் போக்யதை நெஞ்சில் பட்டால் -பிராப்தி அளவும் செல்ல சக்கரவர்த்தி திருமகனுடைய வீர சரிதத்தை அனுசந்தித்து காலத்தைப் போக்குங்கோள் என்கிறார்

நாள் கடலைக் கழிமின் – இறைவனுடைய போக்யதை -இனிமை நெஞ்சிலே பட்டால், அவனை அடைவதற்கு முன்பு இடையிலே யுள்ள நாள்கள் ஒரு கடல் போன்று தோன்றும் ஆதலின், ‘நாள் கடல்’ என்கிறார்.
இனி, இதற்குச் ‘சக்கரவர்த்தி திருமகனை அடைந்து -சம்சார துரிதத்தை -பிறவிப் பெருங்கடலைக் கழித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறலுமாம்.

————-

கழிமின் தொண்டீர்காள் கழித்துத் தொழுமின் அவனைத் தொழுதால்
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம் தருமே 
–1-6-8-

சக்கரவர்த்தி திருமுகனை ஆஸ்ரயித்து விஷய ப்ராவண்யத்தைத் தவிரவே
ப்ராப்தி பிரதிபந்தகங்களை போக்கி நித்ய கைங்கர்யத்தை தரும் என்கிறார் –

வழி நின்ற வல்வினை மாள்வித்து – இவ் வாத்துமாவுக்குச் ஸ்வரூபத்தோடு கட்டுப்பட்டதோ-ஸ்வரூப அனுபந்தியோ – என்னும்படி பொருந்தி யிருக்கிற கொடிய கர்மங்களை வாசனையோடே போக்கி.
இனி, ‘வழி நின்ற வல்வினை’ என்பதற்கு ‘நடுவே நின்று,-பகவத் பிராப்தியை – பகவானை அடைதலைத் தடை செய்கிற -நிரோதிக்கிற -கர்மங்கள்’என்று பொருள் கூறலுமாம்.

அழிவு இன்றி ஆக்கம் தரும்-ந ச புநரா வர்த்ததே ‘மறுபடியும் மீண்டு வருகின்றான் இலன்’ என்கிறபடியே, மீண்டு வரும் தன்மை இல்லாத மோக்ஷத்தைத் தரும் –கைங்கர்யம் தரும் -இவ்வர்த்தத்தில் சம்சயம் இல்லை –

—————

தரும வரும பயனாய -திருமகளார் தனிக் கேள்வன்
பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1
-6-9-

தன்னைப் பற்றின மாத்ரத்தில் இது எல்லாம் செய்து அருளக் கூடுமோ -என்னில் தரும வரும பயனாய -திரு-தருமத்தினுடைய-பரம – மேலான பிரயோஜனந்தான் ஒரு வடிவு கொண்டாற் போன்று இருக்கின்ற ஸ்ரீ பெரிய பிராட்டியார்  -ந கச்சின் ந அபராத்யதி -என்னுமவள் அருகே இருந்து தருவிக்கும் என்கிறார் –திருமகள் கேள்வன் ஆகையாலே வரும் ஏற்றம் உள்ளது இவன் ஒருவனுக்குமே ஆதலின், ‘தனிக்கேள்வன்’ என்கிறார்.ஆஸ்ரித அனுக்ரஹமே ஸ்வரூபமாய் உள்ளவர் –

————

கடிவார் தீய வினைகள் -நொடியாரும் அளவைக் கண்
கொடியாவடு புள்ளுயர்த்த-வடிவார் மாதவனாரே
 –1-6-10–

அவள் பொறுப்பிக்க பொறுக்கும் இடத்தில் விளம்பம் இல்லை -அரை ஷணத்தில் பொறுப்பர் -இப்படி அவனும் அவளும் குற்றங்களைப் போக்குவது எத்தனை காலம் கூடி?’ என்னில்,‘தன் திருவடிகளிலே தலை சாய்த்த அளவிலே’ என்கிறார் –மாதவனார்-பிராட்டி அருகே இருந்து போக்குவிக்க ஆயிற்றுப் போக்குவது.-ஒருதலை ஜென்மம் -ஒருதலை மரணம் -நடுவே ஆதி வியாதிகள் -இவை செய்த குற்றங்களைப் பார்க்கக் கடவதோ-
குற்றம் கண்டில் விபூதியாக விட வேண்டாவோ -பொறுத்து அருளீர் என்றால் –
அவளுக்காகப் பொறுத்தோம் -என்னும் அத்தனை –பெரிய திருவடியை விஷயீ கரிக்குமா போலே இன்று ஆஸ்ரயிப்பாரை விஷயீ கரிக்கும் ஸ்வபாவர் –

————-

மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்த
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே 
–1-6-11-

மாத்ரு சம்ரக்ஷணம் அழகிது ‘மாதாவைப் பேணுதல் அழகிது’ என்னுமாறு போன்று,
பகவத் ஸமாச்ரயணம் எளிது – ‘பகவானை அடைதல் எளிது’ என்று உபதேசிக்க வேண்டுகிறது –இத் திருவாய்மொழியைக் கற்க வல்லார்கள் உபதேசம்-நிரபேஷமாக- இல்லாமலே சம்சார சம்பந்தம் அற்றுப் பகவானுடைய அனுபவமே யாத்திரையாம்படி இருக்கிறவர்களோடே கூடி அனுபவிக்கப் பெறுவர்கள் ஆதலின், ‘ஓத வல்லார் பிறவார்’ என்கிறார்-பகவத் அனுபவத்துக்கு மேட்டு மடையான சம்சாரத்தில் பிறவார் 

கவி பாடுகிறவனுக்கும்-கவி பாட்டு உண்கிறவனுக்கும்-கவிக்கும் உள்ள மூன்று குற்றத்தையும் தீதும் -அவமும் -ஏதமும் – என்றும் சொல்லுவர் –ஸ்ரீ பட்டர், ‘ஏதம் இல் ஆயிரம்’ என்று பிரபந்த லக்ஷணம் கூறிய போதே,- த்ரிவித தோஷ ராஹித்யம் – முக்குற்றங்கள் இல்லாமையும் சொல்லியதாம்; இனி, தீதும் அவமும் என்பன செய்வன என்?’ என்னில்,
‘சடகோபன் மாதவன் பால் தீது அவம் இன்றி உரைத்த’ என்று கூட்டிப் பொருள் கொள்க,’ என்று அருளிச் செய்தார்.
அதாவது, தீதாவது, ‘நான்-ஸ்ரீ யப்பதி திருமகள் கேள்வன் அல்லனோ!’ என்று தன் மேன்மையைப் பார்த்துக் கடக்க இருக்குமது.
அவமாவது, ‘ஆஸ்ரயிக்கிறவன் அடைகின்றவன் நித்திய சம்சாரி அல்லனோ!’ என்று இவன் சிறுமையைப் பார்த்துக் கைவிடுமது.
இவை இல்லாமையைச் சொன்ன இப் பத்து என்றபடி.-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading