ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
பேறு தப்பாது துணிந்து இருந்தும்-பேற்றுக்குத் த்வரித்தும் இருக்கும் ஆழ்வார் –-பெரும் கிறியானின் ஸுலப்யத்திலே ஆழ்ந்து இருந்தமை கீழ் அருளிச் செய்தார் –-இலங்கைக்கு விசேஷணம் -பாசுரத்தில் முதலில் -அருளிச் செய்து -ரக்ஷகன் -எத்தையும் அழிக்க மாட்டானே-இவர்கள் தண்மையை சொல்லி –
ப்ரயோஜனாந்தர பரர்கள் -தங்கள் அபிமதத்துக்காகவே காலை மாலை -ஸ்தோத்ரம் செய்கிறார்கள் –
தினம் தோறும் -காலையிலும் மாலையிலும் -கார்யம் சித்தி பெறவே –-தோள் கண்டார் தோளே கண்டார் போல்வர் அல்லரே –ஆழ்வார் திரு உள்ளம் அவதாரங்களில் ஈடுபட்டு இதில் இவர்களுக்காக இப்படிச் செய்வதே–ஆழி எழ -7–4-இதன் விவரணம்-இதிலும் அவதாரங்கள் ப்ரயோஜனாந்தர்களுக்காக செய்தமை உண்டே-வேந்தற்கு உற்றுழி பிரிதல் -பிரிவாற்றாமை தாங்காமல் சர்வேஸ்வரன் -தேவேந்திரன் பிரார்த்திக்க -சீதா பிராட்டி பிரிந்து வருந்துவது போல் இங்கும் ஈஸ்வரன் அவதரித்து செய்த ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத் அபசாரம் பொறாமை அன்றோ –
அவதாரிகை –பெரும் கிறியானை யல்லால் யடியேன் நெஞ்சம் பேணலதே -என்றாரே தாம் கீழே –
அளவுடையாராய் அதிகாரி புருஷர்களான தேவர்களுக்கும் இதுவும் அன்றிக்கே ஒழிவதே -என்கிறார் –
என் தான் அவர்களுக்கு வந்த குறை என் என்னில் –நாம் எல்லாவற்றையும் அழிய மாற பெற இருக்கிற வஸ்துவை அழிவுக்கு இட்டு வேறே சில பிரயோஜனங்களை கொள்ளா நின்றார்களே -என்கிறார் –வேந்தற்கு உற்று உழிப் பிரிவில் தலைவனைக் குறித்துத் தலைவி இரங்குதல்–
இப்படி அனுபவ அர்த்தமாக இவர் ஆதரித்த படியைக் கண்ட ஈஸ்வரன் நம்மை அபேக்ஷித்தாருக்கு முகம் காட்டாது ஒழிவோமோ-தம் தம்முடைய அபிமத ஸித்தி யர்த்தமாக ப்ரயோஜனாந்தர பரரான தேவர்கள் அகப்பட அபேக்ஷிக்க-வந்து பிறந்து கார்யம் செய்து கொடுக்கிலோமோ என்று-தன் திரு உள்ளக் கருத்தை ஆவிஷ்கரிக்க-உன்னுடைய போக்யமான வடிவை அனுபவிக்க ஆசைப்படாதே சத்ரு நிரஸனம் பண்ணித் தர வேணும் என்று அபேக்ஷிப்பதே என்று அவர்களை பழித்து அருளிச் செய்கிறார்-இதுவும் நாயகி வினைத் தொழிலில் பிரியலுற்ற நாயகனைக் குறித்துக் காணலுற்றுக் கவர்ந்து உரைத்தல் ஆகவுமாம் –
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–அவதாரிகை--தன் நெஞ்சு வேறே ஒன்றை ஆதரியாது என்று அருளிச் செய்தார்-விண்ணோரும் என்னைப் போலே யாகாதே விருத்த ஸ்வபாவர் ஆவதே என்று-வெறுத்து அருளிச் செய்கிறார் இதில்
பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
நாள் நிலந்தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று
காண லுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே – – 92-தலைவனைக் குறித்து தலைவி இரங்குதல் –
பேண் நலம் இல்லா (உன்னை) விரும்பிப் பக்தி செய்தலாகிய நற்குணமில்லாத
அரக்கர்–ராக்ஷஸர்களுடைய
முந்நீர பெரு பதி வாய்–கடலாகிய பெரு நீரணை யுடைய பெரிய மலையிடத்திலுள்ள
நீள் நகர்–பெரிய லங்காபுரியில்
நீள் எரி வைத்தருளாய்—தீப்த்த அக்னி பானம் -ஆகிற நெருப்பு -பெரிய நெருப்பை வைத்து அளித்தருள வேணும்
என்று–என்று சொல்லிப் பிரார்த்தித்து
நின்னை–உன்னை
விண்ணோர்–தேவர்கள்
வைகல்–நாள்தோறும்
மாலையும் காலையும்–இரண்டு சந்தி களிலும்
தான் நிலம் தோய்ந்து தொழுவர்–தங்கள் கால்கள் தரையிலே படும்படி வந்து வணங்குவர்;
(அவர்கள் அங்ஙனம் வணங்குதல் தங்கள் பகையைப் போக்குவிக்கும் பொருட்டே யன்றி)
நின் மூர்த்தி–உனது வடிவத்தின்
பல் கூற்றில்–பல அம்சங்களுள்
ஒன்று–ஒன்றையேனும்
காணலும் ஆம் கொல் என்றே–பார்க்க வேண்டுமென்றோ (அன்று என்றபடி.)
ஆழி வண்ணன் தன் விசயமானவை முற்றும் காட்டி
வாழிதனால் என்று மகிழ்ந்து நிற்க -ஊழிலவை
தன்னை யின்று போல் கண்டு தானுரைத்த மாறன் சொல்
பன்னுவரே நல்லது கற்பார்——64-மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றும் பக்தி அதிசயத்தாலே அவசன்னரான இவர் தளர்த்தியை மாற்றித் தரிப்பைக்கு-பேர் எயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் -என்று பிரஸ்துதமான அவதார சரிதமாய் யுள்ள ஸ்ரீ த்ரி விக்ரமணம் தொடங்கி ஸ்ரீ கோவர்த்தன உத்தாரணம் பர்யந்தமான விஜய பரம்பரைகளை
பத்தும் பத்தாக அவன் காட்டிக் கொடுக்க அத்தை அனுபவித்து ஹ்ருஷ்டராகிற ஆழி எழ சங்கில் அர்த்தத்தை ஆழி வண்ணன் இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -தங்கள் பிரிய ஹிதங்களுக்கு உறுப்பாக ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம் என்று அறிந்து அனுசந்திக்குமவர்களே எல்லாம் அறிந்து அனுசந்திக்குமவர்கள் -என்றது ஆயிற்று-
பேணலம் இத்யாதி —முந்நீர பெரும் பதியை பேணலம் இல்லா அரக்கர் –கடலால் சூழப்பட்டு பல பகுதிகளை உடைத்தான உன் விபூதியை –நீள் நகர் இத்யாதி –உன் விபூதியில் ஏக தேசத்தை அழித்து தர வேணும் என்று சொல்லா நிற்பர்கள் ஆயிற்று –பர ஹிம்சை என்றால் -திரு உள்ளத்துக்குச் சென்று இராது என்று – இரங்குகைக்காக-சொல்லிக் கொடு-வரும் வார்த்தை யாயிற்று –அவர்கள் ஜீவிக்கில் உன் விபூதி ஜீவியாது -என்னா நிற்பர்கள் -(த்யஜேத் ஏகம் குலம் காக்க ஒருவரை நீக்கலாம் ) தேவர்-குணங்களை ஓர் இடத்தில் மனனம் பண்ணி இருக்கிற ருஷிகளையும் –நீர் விரும்பி நோக்குகிற-தேவர்களையும் நலியா நின்றார்கள் என்பர்கள்–பேண லமில்லா –பிறரைப் பேணுகை யாயிற்று
அவன் நன்மையாய் நினைத்து இருப்பது –-பிறரும் ஜீவிக்க -நாமும் ஜீவிக்கக் கடவோம் என்று இரார்கள் –பேணலம் இத்யாதி –அவன் விபூதியை பேணுகை யாகிற நன்மை இல்லாத ராஷசர் உடைய –முந்நீர பெரும் பதிவாய் நீள் நகர் –அஞ்சினான் புகலிடமாய் -துர் வர்க்கம் அடங்கலும் புக்கு ஒதுங்கும்-இடம் ஆயிற்று –கடலை அகழாக உடைத்தாய் இருக்கையாலே சிலராலே பிரவேசிக்க அரியதாய் இருக்கை-கடல் சூழ்ந்த (ஜம்போத் த்வீபத்திலே )மகா த்வீபத்திலே உண்டான –நீள் நகர் –தேவர்கள் உடைய வர பலத்தாலே ஒரு நாளும்-அழியாதபடி -பூண் கட்டின இலங்கையிலே –(லங்காம் ராவண பாலிதாம் -திருவடி மதித்த ஐஸ்வர்யம் ) நீள் எரி வைத்து அருளாய் –தேவதைகள் உடைய வரத்தால் உண்டான-சக்தியையும் அழிக்க வற்றான சராக்நியை பிரவேசிப்பிக்க வேணும் -என்பர்களே–இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர்(-4-2) -என்னக் கடவது இறே –ஒரூரைச் சுட்டுத் தர வேணும் என்பர்கள் –நின்னை –
ஜகத் ரஷணத்தில் தீஷித்து இருக்கிற உன்னை –ஒரு விபூதியாக அழியுமாகில் செய்யலாவது இல்லை இறே -என்று கண்ணும் கண்ண நீருமாய் நின்று இறே-அவர்கள் தன்னையும் அழிய செய்வது –விண்ணோர் –எப்போதும் ஒக்க கண்டு அனுபவிக்கிற அத் தேசத்திலே-வர்த்திக்கிறவர்களும் அன்றிக்கே –நீ அவதரித்து தாழ நின்ற இடத்தில் -மனிச்சில் உண்டான நீர்மை நடமாடும் இங்கே
வர்த்திக்கிறவர்களும் அன்றிக்கே – பரணிலே இருப்பாரைப் போலே ஸ்வர்க்கத்திலே இருக்கிறவர்கள் இறே –கால் நிலம் தோய்ந்து –நிலத்தில் கால் தோய கடவர் அன்றிக்கே இருக்கிற நிலை அழிந்து –பூமியிலே வந்து கிட்டி –தொழுவர்-ந நமேயம் -என்று ராவணனைப் போலே இருக்கும் நிர்பந்தம்-தவிர்ந்து தொழா நிற்பர்கள் –நின் இத்யாதி –தொழுதார் பெரும் பிரயோஜனத்துக்கு தான் தொழுகிறார்களோ –தொழுதால் கண்டு அனுபவிக்கும் வடிவைக் காண்கைக்காக அன்று இறே –
உன்னுடைய விக்ரஹத்தில் உண்டான அழகிலே –அநேகம் கூற்றிலே -ஏக தேசமான – ஒரு நாளைப் புறப்பாடு தான் காண்கைக்காகவோ -அன்று இறே –சக்ருத் வதாகார விலோக நாசயா த்ருணீ க்ருதா நுத்தம புத்தி முக்திபி –(ஆளவந்தார் ) வைகல் மாலையும் காலையுமே –அவ் வடிவைக் காண்கைக்கு அர்த்திப்பார் நேரும் அளவல்ல வாயிற்று இவர்கள் நேருவது –நாள் தோறும் –அது தன்னிலும் -இடைவிடாது தொழுவார்கள் –இத்தால் அநந்ய ப்ரயோஜனர்க்கு நேர்த்தி அற்பமாய் பலம் அநேகமாய் இருக்கும்- பிரயோஜனாந்தர பரருக்கு மாறி நேர்த்தி அநேகமாய் பலம் அற்பமாய் இருக்குமே –வைகல் மாலையும் காலையும் விண்ணோர் கால் நிலம் தோய்ந்து தொழுவர் – நின் மூர்த்தி-பல் கூற்றில் ஒன்றும் காணலும் ஆம் கொலோ என்று இறே -அன்று இறே –அங்கே நித்ய அஞ்சலி புடா – என்று இருக்கையாலே தொழுதார் தொழுத பிரயோஜனம் –(விபீஷணன் -ராக்ஷஸன் என்பதால் கீழ் கால் பாவாது-பூமியில் பற்றுக் கொம்பு ஆகாது)
பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய் நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று உன் பக்கல் அனுவர்த்தனம் ஆகிற நலம் இல்லாத ராக்ஷஸருடைய சமுத்ரமாகிற நீர் அரண் யுடைத்தான ஸூ வேலமாகிற பெரிய பர்வத ஸ்தானத்திலே பெரிய ஓலக்கத்தை யுடைத்தான லங்கையாகிற படை வீட்டிலே பட்டினி கிடக்கிற அக்னியானவன் பசி தீர்ந்து யுண்டு வளரும்படி ப்ரஷேபிக்க வேணும் என்று அபேக்ஷித்து–நின்னை-நிரதிசய போக்ய பூதனான உன்னை–விண்ணோர்-விலக்ஷண போகம் அறிந்து புஜிக்கிறாராக பாவித்து இருக்கிறவர்கள்–தாள் நிலந்தோய்ந்து தொழுவர்-நிலத்திலே தோய்ந்து தாள் தொழுவர் என்று ப்ரணாமத்தைக் காட்டுகிறது-தேவர்களாய் இருக்கச் செய்தே தங்கள் அர்த்தித்து-அத்தாலே-உத்தரம் தீரமாஸாத்வ -யுத்த -17-10-என்று பூமியிலே கால் பொருந்தித் தொழுவர் என்றுமாம்–நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று காண லுமாங்கொல் என்றே-இப்படி பரம உபாயமான பிரணிபாதாதிகளைப் பண்ணுகிறது நிரதிசய போக்யமாய் ஆஸ்ரித அர்த்தமாக நீ பரிக்ரஹித்த நாநா வான விக்ரஹங்களிலே ஓர் அம்சத்தைக் காணலாம் என்றோ -அன்றிலே என்றபடி –போகத்துக்கு ஆசைப்பட்டுக் காலிலே விழுந்தார்களை அறுக்கை தானே செய்யும் என்று கருத்து-வைகல் மாலையும் காலையுமே –-அஹோ ராத்ர விபாக யுக்தமான காலம் உள்ளதனையும் காணலுமாம் கொல் என்று அந்வயம் –
பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய் நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர் தாள் நிலந்தோய்ந்து தொழுவர்-ஸர்வ பூத ஸூஹ்ருத்தான உன்னையே விண்ணில் உள்ளவரான விலக்ஷண ஞான சக்திகரும்-இந்நிலம் நாம் கால் வைப்பதற்கு யோக்யம் அன்று என்று இருக்குமவராய் ஸ்வ பிரார்த்தனைக்காக இந்நிலத்தில் கால் பதிய வைத்தவர்களாய்–நீணகர்-பஹு காலம் தொடங்கிக் கடல் சூழ்ந்த மஹா த்வீபத்தில் உண்டான இலங்கையில்–நீள் எரி-பஹு நாளாகப் பட்டினி இருக்கிற மஹா அக்னியை சரமுகத்தால் பிரவேசிப்பிக்க அருள் செய்ய வேணும் என்று உன்னை பிரார்த்திப்பதே-வைகலும்-எப்போதும்–தொழுவர்-இதுக்காக உன்னைத் தொழவும் வேணுமே–நீள் நகருக்கு விசேஷணம்-பேணல் இத்யாதி-உன் விபூதியைப் பேணவும்-உன்னை அனுவர்த்திக்கவும் ஆகிற நன்மை இல்லாத ராக்ஷஸருடைய ஸமுத்ரமாகிற முந்நீரை யுடைத்தான ஸூ வேலமாகிற பெரிய பர்வத ஸ்தானத்திலே இருக்கிற என்றபடி -இப்படி பர அநர்த்தத்துக்காக உன்னை விண்ணோர் தொழுவர் அத்தனை போக்கி–நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று காண லுமாங்கொல் என்றே மூர்த்தம் ப்ரஹ்ம ததோ அபி தத் ப்ரிய தரம் ரூபம் யதத்யத்புதம் -(சதுஸ் ஸ்லோஹி-4 ) -என்றபடியே உனக்கு நிரதிசய ப்ரியமாய் எங்களுக்கு த்ருஷ்ட்டி சித்த அபஹாரியான பலவகைப்பட்ட
திவ்ய மங்கள விக்ரஹ பேதங்களில் ஒன்றை யாகிலும் காணலாமோ என்றே அல்லவே-ஊரைச் சுட்டுக் தர வேணும் என்றதற்காக அத்தனை—வைகல் மாலையும் காலையுமே –சாயம் ப்ராதஸ் சமயங்களில் -புன புன தொழுவர் என்றபடி –
தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே -என்று இல்லாமல் பிரயோஜனாந்தர பரர்கள் உன்னை சரண் அடைந்து அவர்கள் கார்யம் செய்ய இரப்பதே-அனன்யா பிரயோஜனரான எங்களுக்கு ஒரு பிரயாசமும் படாமல் சேவை சாதிப்பதை உபேக்ஷித்து அவர்களுக்காக உடம்பு நோவக் கார்யம் செய்வதே–நின்னை விண்ணோர்-காணலுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே-நாள் நிலந்தோய்ந்து தொழுவர் -என்று
தான் நாயகன் மூர்த்தியின் பல கூறுகளையும் ஆசைப் பட்டமையை தெரிவிக்கிறார் –நிலம் தோய்ந்து தாள் தொழுவர் -பூமியில் கால் பட அறுவறுப்பவர்கள் தங்கள் காரியத்துக்காக சாஷ்டாங்க
நமஸ்காராதிகளை ஷீராப்தி நாதனுக்கு செய்வார்கள்-உன்னை நோவு படுத்தி கார்யம் கொண்டு போவார்கள் -அன்றி –இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதுமே என்றும்
சென்று அங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி -என்றும் வாயில் தானும் சொல்லுவார்களோ அப்பாவிகள் –அமிர்தம் கிளர்வதையே கீழ் நோக்கிப் பார்க்கும் அப்பாவிகள் –மந்த்ரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான்-தோளும் தோள் மாலையுமான அழகை பார்த்திலரே-காணலுமாங்கொல் என்றே -என்று அல்ல என்றபடி –வேந்தற்குற்றுழிப் பிரிவில் நாயகனைக் குறித்து நாயகி யிரங்கல். வேந்தற் குற்றுழிப் பிரிவாவது- ஒரு வேந்தனுக்கு ஒருவேந்தன்
தோற்றுவந்து சரணமடைந்தால் அவனுக்கு உதவி செய்வதற்காகப் பிரிந்து போதல். பாரங்குச நாயகியாகிய தலைவி ஸர்வேச்வரனாகிய தலைவன் தன்னைப் பிரிந்து போனதற்குக் காரணம், ராக்ஷஸர்கட்குத் தோற்றுவந்து சரணமடைந்து வேண்டிய தேவர்களின் பிரார்ததனையாம் என்று கருதி அவர்களை பழிக்கிறான்.-“தோள் கண்டோர் தோளே கண்டார் தொடு கழற் கமலமன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கைக் கண்டாரு மஃதே”(கம்பராமாயணம், உலாவியற்படலம்) என்றபடி உனது அழகிய திருவடிவத்தில் ஓர் அம்சத்தைக் கண்குளிரக்கண்டு அநுபவிப்பதில் அதிக ஆநந்தமாயிருக்க, தேவர்கள் அதனை ஆசைப்பட்டு வேண்டாமல் உன்காலில் விழுந்து எப்பொழுதும் தங்கள் பகையை
அழித்துத் தரவேண்டுமென்று வேண்டுவதே! என்று அவர்களைப் பழித்து இரங்கினான். அநந்ய ப்ரயோஜநரான எமக்கு ஒரு பிரயாஸமும் படவேண்டாமல் ஸேவை சாதிப்பது மாத்திரமே அருள் செய்யப் போதுமாயிருக்க, எம்மை உபேக்ஷித்து, பிரயோஜநாந்தா பார்க்காக உடம்பு நோவக் காரியஞ்செய்வதே! என்று எம்பெருமானது தன்மைக்கு நொந்துரைத்த் படியுமாம்.
-பேண்நலமில்லாவரக்கர் –தன்னுயிரைப்போலவே பிறவுயிரையுங் கருதி எல்லாப் பிராணிகளும் உய்ந்து வாழ வேண்டுமென்ற எண்ணமில்லாத ராக்ஷஸர். (பிறரை ஹிம்ஸிப்பதே தொழிலாயிருப்பவர்) என்னவுமாம். பதி என்றது இலங்காபுரிக்கு இடமான தவீபத்தை,
பெரும்பதி என்றும், நீணகர் என்றும் கூறியவற்றால், வரபலத்தால் எவராலும் அழித்திட வொண்ணாமை தோன்றும்.-நீளெரி வைத்தருளாய் = இராவணனுக்கு அஞ்சி அகலச் செல்லுந் தன்மையனான அக்நியை அவ்வச்சம் தணிந்து அங்கே அழியாது வளரச் செய்தருளாய் என்று பிரார்த்திக்கிறார்களாம் தேவர்கள்’ இலங்கையை நீறுபடுத்த வேணுமென்கை.
இலங்கையிலுள்ள ராக்ஷஸர்களை வேரோடு அறுத்தொழிக்க வேணுமென்று பிரார்த்தித்தவாறு.” என்றதனால். தான் நாயகனது மூர்த்தியின் பல கூறுகளையுங்காண ஆசைப்பட்டிருக்கின்றமை வெளியிடப்பட்டதாம்.–தாள் நிலந் தோய்ந்து தொழுவர் = பூலோகத்தில் வந்து திருப்பாற்கடலைச் சார்ந்து பரமனைப் பணிந்து வேண்டுவர்.-பூமியில் மநுஷ்ய நாற்றம் நாறுகிறதென்று மூக்கைப் புதைத்துக் கொண்டு மேலே நெடுந்தூரத்தில் நின்றுகொண்டு ஹவிர்ப்பாகங்களைப் பெற்றுப் போகுமயில்வினரான தேவர்கள் தங்களுலகத்தில் இருப்பு குலைந்ததனால் தெய்வத்தன்மை
குலைந்து பூமியிலே கால் தோயவந்து நின்று தொழுவர் என்கிறது. ‘நிலந்தோய்ந்து தாள் தொழுவர்’ என மாற்றி, தரையிலே ஸாஷ்டாங்கமாகப் பணிந்து உன் திருடிகளைச் சேவிப்பவர் என்னவுமாம்.–இப்படி அவர்கள் வைகல் மாலையும் தொழுவது நின் மூர்த்தி பல் கூற்றிலொன்று காலுமாங்கொலென்றே? –உன்னுடைய திருமேனியை நோவுபடுத்திக் காரியங்கொண்டு ஒழிந்து போகப் பார்க்கிறார்களே யன்றி “இலங்கை பாழளாகபவ் படைபெருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே” “சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி” என்று வாயினால் தானும் சொல்வார்களோ அப்பாவிகள். அமுத மெடுத்துக் கொடுக்கக் கடல் கடைந்தருளின காலத்து‘அமுதம் கிளர்வது எப்போதோ’ என்று கீழ்ப்புறமே நோக்கிக் கொண்டிருப்பவர்களேயன்றி ‘மந்தரம் காட்டியன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான்” (நாச்சியார் திருமொழி 9-1) என்னப்பட்ட
அப்பெருமானுடைய தோளுந் தோள்மாலயுமான அழகை ஒரு நொடிப்பொழுதாகிலுங் கண்ணெடுத்துப் பார்த்திலரே பாவிகள்; அன்னவர்க்கேயோ நீ காரியஞ் செய்தருள்வது? ‘நின் பல் மூர்த்தியின் ஒரு கூறும்” என மாறியுரைக்கலாம்.–முந்நீர – குறிப்புப் பெயரெச்சம். ‘என்றே’ என்றவிடத்து ஏகாரம் வினாப்பொருளதாய் எதிர்மறை குறிக்கும். ‘என்று அல்லர்’ என்றபடி.
தாத்பர்யம்--கீழ் அவதார குணங்களை அனுபவித்தார் -இதில் தேவர்கள் பிரார்த்தனையால் அன்றோ
தன் சௌகுமார்யம் பாராமல் இந்த கர்சகமான லோகத்தில் அவதரித்தது என்று அவர்களை வெறுக்கிறார் –இந்த ராவணாதிகள் முந்நீர் அரணாக யுடைய ஒரு தீவில் ஒருவராலும் அணுக ஒண்ணாத இலங்கை என்னும் நகரை நிர்மித்து அதுக்கு ஒருவராலும் அழிய ஓண்ணாமல் வரம் பெற்று –வாசம் செய்து அநேக ஸஜ்ஜனங்களை துன்புறுத்தி அதுக்காக நீ அவதரித்து பானம் கொண்டு அழிக்க உன்னை அனவரதம் பிரார்த்திக்க நீ அவதரித்த இடத்தில் சவுந்தர்யம் அனுபவிக்காமல் இருந்த அவர்களுடைய பாஹ்ய ஹீனைக்கு நான் என் சொல்வேன் என்கிறார் –
7-4-ஆழி எழச் சங்கும் வில்லும் எழ-ப்ரவேஸம்-
மேல் திருவாய்மொழியிலே,(7-3) பகவத் விஷயத்திலே இவர் கவரப்பட்ட மனத்தினை யுடையரானபடி சொல்லிற்று:
மேல் திருவாய்மொழியில் இவர்க்குப் பிறந்த துக்கம், ஒன்றைக் கொடுத்து மாற்றுதல்,
ஒருவராலே நீக்குதல் செய்யுமது ஒன்று அன்றே அன்றோ?
‘இனி இவர்க்குச் செய்யலாவது என்?’ என்று சர்வேஸ்வரன் பார்த்து அருளி ‘ஒன்று கொடுக்கலாவது இதற்கு மேல் இல்லை அன்றோ?
என்று பார்த்துத் தன்னுடைய விஜய பரம்பரைகளைப் பத்தும் பத்தாகக் காட்டிக் கொடுக்கக் கண்டு அனுபவித்து உவகை அடைகிறார்.
நினைத்து அனுபவிக்கவில்லை -கண்டு அன்றோ அனுபவிக்கிறார்-
அவனுக்கு உறுப்பாம் அன்று தம்மையும் வேண்டி. அவனுக்கு உறுப்பு ஆகாத அன்று தம்மையும் வேண்டாத
‘வளவேழ் உலகின்’ என்ற திருவாய்மொழியைப் பாடிய ஆழ்வார் அன்றோ இவர்தாம்!
தம்மை அழிய மாறியும் அத்தலைக்கு நன்மை தேடுமவர் அன்றோ?
இப்படி இவர் தன்மையினை அறியுமவனாகையாலே, தன்னுடைய வெற்றிச் செயல்களைக் காட்டி
இவருடைய இழவு எல்லாம் தீரும்படி சமாதானம் செய்ய அனுபவித்துத் தலைக் கட்டுகிறார்.
இறந்த காலத்தில் உள்ளவை அடங்கலும் சம காலத்திற்போலே கண்கூடாகக் காணலாம்படி செய்து கொடுத்தான்.
அடியிலே இவர்தாம் எல்லாவற்றையும் கண்கூடாகக் காண வல்லராம்படி செய்து கொடுத்தான் அன்றோ?
மயர்வற மதிநலம் அருளின பின்பும் இவ்வளவும் வர வாசனை பண்ணுவித்தானே! ஆகையாலே, இவர்க்கு ஒரு குறையும் இல்லையே!
முதலிலே -திருவடியில் -திரு உலகு அளந்த விருத்தாந்தம் தொடக்கமாக -என்றவாறு
அன்றிக்கே,
மேலே, ‘பேரெயில் சூழ்கடல் தென் இலங்கை செற்றபிரான்’ என்று
இராமாவதாரத்திற்செய்த வெற்றிச்செயல் சொல்லப்பட்டமையாலே,
அவ்வழியாலும் எல்லா அவதாரங்களிலும் உண்டான வெற்றிச் செயல்களை நினைந்து,
இராமாவதாரத்தில் நடத்திய வெற்றிச் செயல்களைக் கண்டு உகக்கும் சக்கரவர்த்தியைப் போலவும்,
கிருஷ்ணாவதாரத்தில் நடத்திய வெற்றிச் செயல்களைக் கண்டு உகக்கும் ஸ்ரீவசுதேவரைப் போலவும்
இவரும் உகந்து பேசுகிறார் என்னுதல்.
‘அஹம் புந;- ‘அஹம்புந: தேவகுமார ரூபம் அலங்க்ருதம் தம் ஸூதம் ஆவ்ரஜந்தம்
நந்தாமி பஸ்யந்நபி தர்ஸநேந பவாமி த்ருஷ்ட்வா ச புநர்யுவேவ’என்பது, ஸ்ரீராமா. அயோத். 12 : 105.
இது, கைகேகியைப் பார்த்துத் தசரத சக்கரவர்த்தி புலம்பிக் கூறுவது.
அஹம் புந–என் தன்மையை அறிந்து என் வழியே போந்த நீ, ‘பெருமாள் காடு ஏறப்போக’ என்றால்
நான் உயிர் வாழ்வேன் என்று சொன்னாயே!
தேவ குமார ரூபம் – அது கிடக்க; இவரையே நீ தான் ‘காடு ஏறப்போக’ என்கிறது?
‘இவர்க்கும் அவ்வளவேயோ?’ என்று சிறியத்தான் கேட்க, ‘கண்ணெச்சில் ஆம்’ என்று
தரம் போராதாரை ஒப்பாகச் சொல்லி இருடி கரி பூசுகிறான் என்றார்.
அலங்க்ருதம் – அதனாலும் வெறும் புறங்காண் ஒரு போலிச் சொல்லலாவது! ஒப்பித்தால் ஒக்கச் சொல்லலாவார் இல்லை.
தம் ஸூதம் – இவனுக்கு இரண்டு படியும் உத்தேசியமாய் இருக்கிறபடி.
ஆ வ்ரஜந்தம் – மலர் மலரும்போது எங்கும் ஒக்கப் பிறக்கும் மலர்ச்சி போலே.
அதுவும் வண்டினை நோக்கி அன்றோ மலர்வது? இவரும் அனுபவிக்கின்றவர்களைக் குறித்தே அன்றோ?
நந்தாமி பஸ்யந்நபி – கண்டபடியே இருக்கச் செய்தே, காணாது கண்டாரைப் போலேயாயிற்று,
நாடோறும் நாடோறும் கணந்தோறும் கணந்தோறும் உகக்கும்படி.
தர்ஸநேந – அணைத்தல், வார்த்தை சொல்லுதல் செய்ய வேண்டா; காட்சியே அமையும்.
கரை புரண்ட அனுபவம் உள்ள இடத்திற்போலே காணும் பிரயோஜனம்,
‘ஸதாபஸ்யந்தி’ அன்றோ?
பவாமி த்ருஷ்ட்வாச புந: யுவேவ-அறுபதினாயிரம் ஆண்டு வயது நிறைந்து கிழவனான சக்கரவர்த்தி,
பெருமாளைக் கண்ட பின்பு, பெருமாளுக்கும் தனக்கும் வாசி தெரியாதபடியானான்.’-
வா போகு–வந்து ஒரு கால் கண்டு அருளி -ஏசல் கண்டு –
‘காமனைப் பயந்த காளை’ என்னுமாறு போலே தன்னை அனுபவிப்பாரையும் தன்னைப் போலே ஆக்கி
உஜ்ஜீவிப்பிக்கும் விஷயம் போலே காணும்.
‘ஸ்ரீவசுதேவர்’ பெரிய திருவிழாவை அடைந்தாற்போலே பிள்ளைகளின் திருமுகங்களைப் பார்ப்பதை அடைந்து,
தமக்கு உண்டாய் இருந்த முதுமை நீங்கி யௌவனம் உடையவரானார்’ என்னும்படி ஆனாரே அன்றோ ஸ்ரீவசுதேவரும்?
‘மஹோத்ஸவமிவ ஆஸாத்ய புத்ராநந விலோகநம்
யுவேவ வஸூதேவ: அபூத் விஹாய அப்யாகதாம் ஜராம்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 20 : 52.
அன்றிக்கே, (இது மூன்றாவது சங்கதி )
‘மேலே, ‘கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன்’ என்று கொண்டு இத்தலையில் தோல்விக்கு
எதிர்த் தலையான அத் தலையில் வெற்றிச் செயல்களை அநுசந்திக்கிறார்’ என்று
பிள்ளை திருநறையூர் அரையர் பணிக்கும்படி-
சூட்டு நான் மாலைகள் தூயன ஏந்தி -கொடுத்துக் கொள்ளாதே கொண்டதுக்கு கைக்கு கூலி கொடுத்து -அமுது செய்திடில் ஒன்றுக்கு
நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளவும் செய்ய வேண்டுமே -வென்று தரும் மேவி கற்பார்க்கு -இந்த திருவாயமொழி –
ஸமஸ்த சரிதங்களைக் காட்டி -ஆழ்வார் ஸமஸ்த துக்கங்களையும் -மகள் தோழி தாயார் தசை துக்கங்களை -தீர்த்து அருளினான் –
வேண்டிற்று எல்லாம் தரும் கோதில மணி வண்ணன் -கனம் குழை இட காது பெருக்குவாராய்ப் போலே விச்வாஸம் பிறப்பித்து
பைய பைய -சிறுச் சிறிதே விழித்து -கோதில் வாய்மையினான் சாந்தீபன் –
மகா க்ரம -கிரமத்தில் ஏத்தி அருளுவான்
இது ஒரு நேர் முக ஒளி பரப்பு -ஆழ்வார் இருந்த இடத்திலே பத்தும் பத்தாக காட்டி அருளுகிறார்
இதற்கு மங்களா சாசனம் பண்ணாமல் இருக்கக் கூடாதே –
நாலாம் திருவாய் மொழியில் –
விஸ்லேஷ ஜெனிதமான ஆர்த்தியாலே பிராப்தி த்வரையை யுடைய இவர் -தம்முடைய
ஆர்த்தி ஹேதுவான பிரபல பிரதிபந்தகங்களைப் போக்குகைக்கு -சர்வ சக்தியான சர்வேஸ்வரனை ஒழிய சமர்த்தர் இல்லை என்று அறுதியிட்டு
அவனுடைய த்ரைவிக்ரம வியாபாரத்தையும்
அம்ருத மதனத்தையும்
பூமி உத்தரணத்தையும்
ஜெகன் நிகரணத்தையும்
பாரத சமர ப்ரவர்த்தகத்வத்தையும்
ஹிரண்ய வாதத்தையும்
லங்கா பங்கத்தையும்
பாண யுத்தத்தையும்
ஜகத் ஸ்ருஷ்ட்டி பிரகாரத்தையும்
கோவர்த்தன உத்தரணத்தையும்
அனுசந்தித்து -ஏவம்வித விஜய ஆபத்தான விசிஷ்டனான சர்வேஸ்வரனுடைய விரோதி நிரசன சாமர்த்தியத்தை
அனுசந்தித்து அருளுகிறார் –
ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்ட வாறே.–7-4-1-
ஆழி எழ –‘ஆயிரக் காதம் பறப்பதன் குட்டி ஐந்நூற்றுக் காதம் சிறகு அடிக் கொள்ளும்’ என்னுமாறு போலே முற்கோலி வளர்ந்தபடி.-சிறகடிக் கொள்ளுகையாவது, பின்பு தூரப் பரப்பதற்குத் தகுதியாம்படி இளமையிலே பயிலுதல்.-அச்சங்கொள்ளுதற்கு இடம் அல்லாத இடத்திலும் பயப்படக் கூடியவர்கள்,-அஞ்சத்தக்க இடத்தைக் கண்டால் வாளா இரார்களே அன்றோ?-பய சங்கை இல்லாத இடத்திலும் அஞ்சும்படி செய்கிறது விஷய வைலக்ஷண்யம் அன்றோ?-துரியோதனன் கோட்டியிலே கிருஷ்ணன் எழுந்தருளின போது அவர்கள் செய்த வஞ்சனத்தைக் கண்டு, அச்சங்கொண்டு, தம்முடைய திருமாளிகையில் படுக்கையையும் தடவிப் பார்த்தாரே அன்றோ ஸ்ரீவிதுராழ்வான்?
கடல் கலங்குவது தன்னளவிலே அன்றோ?-பிள்ளை யுறங்கா வில்லிதாசர் ‘மஹாமதி என்றது, மதிகேடர் என்றபடியோ?’ என்றார்,-பிள்ளை தாம், ‘பெருமாள் எழுந்தருளும் போது எங்கேனும் ஒரு சலனம் பிறக்கில் நம் பிராணனை விடுமத்தனை’ என்று
சொட்டையை உருவிப் பிடித்துக் கொண்டு சேவிப்பாராம்.
நம் முதலிகள் அதனைக் கண்டு, இவரை ‘மஹாமதிகள்’ என்று அழைப்பார்கள்.
அறிவு உண்டாகையாவது, பகவத் விஷயத்தில் அறிவு கெடுகை அன்றோ?
ஆழி எழ –இவன் வளர்ந்தருளுகைக்குக் கணிசித்த படியைக் கண்டு,
‘தனியாக ஒண்ணாத’ என்று அஞ்சித் திருவாழி யாழ்வான் ஒரு கையிலே ஏறினார்.
சங்கும் வில்லும் எழ--தூசி ஏறினவர்கள் போரப்-( புகப் )- புக்கவாறே நின்ற இளவணி கலங்கி மேலே நடக்குமாறு போலே,இளவணி-காலாள்.-மற்றை ஆழ்வார்களும் மற்றைக் கைகளிலே ஏறினார்கள்.(ஆழியும் எழ இல்லையே -ஆகவே இவை இளவணி )
அன்றிக்கே, (பரிவால் முதல் அர்த்தம்)-‘இரை பெறாத இடத்தே இருந்து சீறுபாறு என்னக் கூடியவர்கள் இரையுள்ள இடத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடார்கள் அன்றோ?’ என்னுதல்; இனத்திலே ஒருவன் வாழ்வதனைக் கண்டவாறே உறவினர்கள் கூட்டம் வந்து மேல் விழுமாறு போலே, மற்றைத் திவ்விய ஆயுதங்களும் மேல் விழுந்தபடி என்னுதல்-
திசை அளப்பான் பூவார் அடி நிமிர்த்த போது–ஒரு பூவினைக் கொண்டே அன்றோ காடும் ஓடையும் அளந்து.கொண்டது?-பூவை இட்டுப் பூவை கொண்டான் காணும்.
அப் படுக்கையிலே பொருந்தும் சௌகுமார்யத்தை யுடையவன் இக்காடும் ஓடையுமான உலகத்தினை அளக்கப் புக்கால், இவர்களுக்கு இப்படிப்பட வேண்டாவோ?
அவன் இப்படி அளவா நின்றால் இவர்கள் பேசாது இரார்கள் அன்றோ?’
அன்றே பிறந்து அன்றே வளர்ந்தான் ஒருவனுடைய செயல் அன்றோ இவை அடைய?
ஆகையாலே, பரிகைக்குக் காரணம் உண்டு என்றபடி
முடி பாதம் எழ--திருமுடியளவும் திருவடிகள் கிளர.-‘முடி மேலே பாதம் எழ’ என்றும் சொல்லுவர்கள் நிருத்த லக்ஷணத்துக்காக.-அப்பன் ஊழி எழ –-மஹாபலி தகுதி இல்லாமல் அரசு நடத்துகையால் வந்த பொல்லாக் காலமானது போய், நல்லடிக் காலமாயிற்று;
நல்லடிக் காலம் கிளரும் படியாகவும்.-அப்பன் உலகம் கொண்டவாறே –
‘மஹேபகாரகனான சர்வேஸ்வரன் உலகத்தைக் கொண்ட ஆச்சரியம் இருந்தபடி என்?’ என்னுதல்:-அன்றியே, ‘உலகத்தைக் கொண்ட பிரகாரம் இருந்தபடி என்?’ என்னுதல்.
அப்பன் அப்பன் என்று உவகை அடைகிறாராகவுமாம்.-அப்பன் – ‘இந்திரனுக்கு இராயச்சித்தைக் கொடுத்த செயலாலே எனக்கு ஆத்துமாவைத் தந்தான்’ என்கிறாராகவுமாம்.-
———–
ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர
வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறு பட அமுதம் கொண்ட நான்றே.–7-4-2-
திருப்பாற் கடலைக் கடைந்த ஆச்சரியமான காரியத்தைச் சொல்லுகிறார்.
அஜிதன் -அமிருத மதன பெருமாள் திருநாமம் -எட்டு உருவங்கள் கொண்டாரே
ஹரி கஜேந்திர மோஷ பெருமாள் திருநாமம்-
ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி- கடலிலே மந்தர மலையை நட்டவாறே கடல் கொந்தளித்து, மலை போய்த் தாழ்ந்து கொடுத்தது; -நீரானது தாழ்ந்த விடத்தே ஓடக் கடவதன்றோ?-ஆறுகளானவை மலையைக் குறித்து எதிரிட்டு ஓடுகிற போதை ஒலியானது இவர்க்குச் செவியிலே படுகிறபடி.-இவர்க்கு முக் காலத்திலும் உள்ளன எல்லாம் தெரியும்படி அன்றோ அவன் வெளிச் சிறப்பித்தது?
அரவு ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி – வாசுகியினுடைய உடலைச் சுற்றிக் கடைகிற போதைச் சரசர வென்கிற ஒலியும். (கீழே சல சல என்ற ஒலி ) ஊறு – உடம்பு. சுலாய் – சுற்றி.
கடல் மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி –மந்தர மலையை கொடு புக்கு நட்டுத் திரித்த போது,-கீழ்க் கடல் மேற் கடலாய்க் கிடாய்ப் பாய்ச்சல் போலே-திரையோடு திரை தாக்கிக் கிளருகிற ஒலியும்,
சாறு பட –கடலிலே நீர் கோதாம்படி பிரயோஜனமான அமிருதம் உண்டாக. என்றது,
‘நீரிலே ரசமான பசை பட’என்றபடி.-அன்றிக்கே, சாறு என்று திருவிழாவாய், ‘தேவ சாதிக்குத் திருவிழா உண்டாம்படியாக’ என்னுதல்; சாறு பட – என்றபடி.-
————-
நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ்கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே.–7-4-3-
இவன் பெரிய யானைத் தொழிலைச் செய்யா நிற்கச் செய்தேயும், முன்பு போலே ஒரு குறை அற, உண்பார் உடுப்பாராய்ச் செல்லுகிறபடி. ஆதாரமானவன் கூட நிற்கையாலே இவற்றுக்கு ஒரு குறை வாராதே. ஏழு தீவுகளும் சலித்தன இல்லை: தனது தனது இடத்தில் இருந்தன ஆயின.
நீர்ப் பண்டம் அன்றோ தண்ணீர்? அதுவும் தன் இடத்திலே கிடக்கும்படியாக.
அவற்றின் கடினத் தன்மையும் இதனுடைய நெகிழ்ச்சித் தன்மையும் பயன் அற்றவை;
‘அவன் திருவுள்ளக் கருத்து யாது ஒன்று? அதுவே காரியமாக முடிவது,’ என்கை.
புண்ணியம் பாபம் -பேற்றுக்கு சாதனம் இல்லை -இரண்டையும் தொலைத்து –
அவன் நிர்ஹேதுக கிருபையே மோக்ஷ ஹேது போலே –
மாறுபடுருவத் தைக்கும் படியாகக் குத்தி. அண்ட பித்தியினின்றும் ஒட்டு விடிவித்து எடுத்து ஏறட்டு, எயிற்றிலே எற்றிக் கொண்டு (வியாபரித்த போது )செயல் செய்த போது:-அசையாத பொருள்களோடு அசையும் பொருள்களோடு வாசி யறத் தம் தம் இடத்திலே நின்றன-
————
நாளும் எழநிலம் நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழச் சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே.–7-4-4-
நாளும் எழ –கால நியதி போக.-‘அக்காலத்தில் பகல் இல்லை; இரவு இல்லை; ஆகாயம் இல்லை; பூமி இல்லை; இருள் இல்லை: சூரிய சந்திரர்கள் இல்லை;
வேறு ஒன்றும் இல்லை; பிரஹ்மம் ஒன்றே சமஷ்டி புருஷரூபமாய் இருந்தது,’எழ.-பேர. ஆண்டு என்றும், மாதம் என்றும், நாள் என்றும், கலை என்றும், காஷ்டை என்றும் சொல்லுகிறவை எல்லாம் ஸூரியனுடைய செல்லுதல் வருதலாலே வருகின்றனவை அன்றோ? பாகுபாட்டைச் செய்கிற ஸூரியன் உள்ளே புக்கால் பாகுபடுத்தப் படுகின்ற இவையும் போமித்தனை அன்றோ?
நிலம் நீரும் எழ--காரணங்களோடு காரியங்களோடு வாசி அற உள்ளே புக.
காரியம் உள்ள இடத்தே காரணம் தொடர்ந்து நிற்றலைக் காணா நின்றோம்;
அப்பன் ஊளி எழ--ஒலி உண்டாக. என்றது, ‘ஒவ்வொரு காலத்தில் கலகங்கள் உண்டானால்
நம்முடைய அடைய வளைந்தானுக்குள்ளே புகும் போது திருவாசலில் பிறக்கும் ஆரவாரம் போலே,-திரு வயிற்றிற் புகுகிற போது பிராணிகளுக்கு உண்டான பரபரப்பான ஒலிகள் கிளர’ என்றபடி.-(பசி என்று பன்னீராயிரப்படி )-ஊளி -சப்தம் -உறிஞ்சின ஓசை –எழ -என்றது தோற்ற என்றபடி -லோகத்தை உண்ட படி –
அன்றிக்கே, ‘‘இவற்றை உரிஞ்சுகிற போதை ஒலி காண்!’ என்று நடாதூர் அம்மாள் பணிக்கும்படி’ என்று அருளிச் செய்வர்’-அதனால் நினைக்கிறது, ஈஸ்வரத்வப் பிடரால் அன்றியே பத்தும் பத்தாக அடியார்களைக் காப்பாற்றுதலேயாய் இருக்கிறபடி.-
————-
ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி மன்னர்
ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணள்
ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடைப் பாரதம் கையறை போழ்தே.–7-4-5-
பசளைக் கலம் (பச்சைப்பானை )நெரித்தாற்போலே வருத்தம் இன்றியே நெரித்த படியைப் பற்ற.-வலியைப் போரப் பொலியச் சொல்லி வைத்து,‘ததர்ந்த’ என்கிறார் காணும்,
காணுதற்கு இனிய பாரதம். கை அறை போழ்து –-கையும் அணியும் வகுத்து அங்கோடு இங்கோடு உலாவிப் படை பொருத்தி,-நீங்கள் இன்னபடி செய்யக் கடவீர்கோள்! நாங்கள் இன்னபடி செய்யக் கடவோம்’ என்று கை தட்டி விட்ட போது இந்த ஒலி எல்லாம் உண்டாயின.
காணுடைப் பாரதம் கை அறை போழ்தே--கண் முதலான கரணங்களைப் படைத்ததற்குப் பிரயோஜனம் அற்றை நிலையைக் காண்கை அன்றோ?
சேனையின் தூளியும், கையும் உழவு கோலும் சிறு வாய்க் கயிறும், நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற நிலை அன்றோ அது?
இந் நிலைக்கு உபேயத்துவ மாத்திரமன்றிக்கே, உபாயத்துவமும் உண்டு என்கிறார்,
‘மாம்’ என்று தொடங்கி. ‘கையும் உழவு கோலும், பிடித்த சிறு வாய்க் கயிறும்.
ஸேநா தூளி தூசரிதமான திருக் குழலும், தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற சாரத்ய வேஷத்தை ‘மாம்’ என்று காட்டுகிறான்’ என்பது, முமுக்ஷூப்படி சரம ஸ்லோக ப்ரகரணம், -ஸூ-. 33.-
——————–
போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஓத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே.–7-4-6-
கீழில் பாட்டில் பந்துக்கள் பகையாக வந்து உதவின படி சொல்லிற்று -இதில் ரக்ஷகனான பிதா பகையாக வந்து உதவின்படி சொல்லுகிறது
மலை கீழ்து பிளந்து சிங்கம் ஒத்ததால் –-‘ஒரு மலையைக் கீழே இட்டுக் கொண்டு மேலே இருந்து அதனைப் பிளந்த சிங்கத்தை ஒத்தது’ என்னுதல்.-அன்றிக்கே,-‘கிழித்துப் பிளந்த சிங்கத்தை ஒத்தது’ என்னுதல்.-அன்றிக்கே-‘மகிழ்ந்து பிளந்த சிங்கத்தை ஒத்தது’ -என்னுதல்.-‘இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம்’ திருச்சந்த விருத். 62.
இத்தாலும் சொல்லிற்றாயிற்று,-ஆபத்துக் கனத்ததனையும் கடுக வந்து இரட்சிக்கும் என்கை.-தமப்பன் பகையாக உதவினவன், அவனில் அண்ணியனான தான் தனக்குப் பகையானால் உதவச் சொல்ல வேணுமோ?-‘தனக்குத் தானே அன்றோ பகைவன்?’ என்கிறபடியே-
————-
மாறு நிரைத்திரைக் குஞ்ச ரங்களின்
நூறு பிணம் மலை போற் புரளக் கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே.–7-4-7-
மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் – சாரிகை வந்த சடக்கு, நாலு திசைகளிலும் விட்ட அம்புகள் எதிர் அம்பாய் ஒன்றோடு ஒன்று பொருது-கலார் கலார் என்று ஒலிக்கின்ற ஒலி, கடல் இரைத்தாற்போலே இரா நின்றது.-சாரிகை வந்த சடக்கு, தன்னில் தான் எதிரம்பு கோத்தது காணும். –-அஸ்தரம் –மந்திரித்து –சஸ்திரம் -மந்த்ரம் இல்லா அம்புகள் .
இலங்கை செற்ற நேரே –இலங்கை செற்ற பொழுது. ‘நேர்’ என்பது, ‘நேரம்’ என்று காலத்தைக் காட்டுவதாம்.-‘இலங்கை செற்ற பொழுது மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள்’ என்பது அந்வயம்.-அன்றிக்கே,-இலங்கையைச் செற்ற வாய்ப்பு’ என்னுதல்.-அன்றிக்கே,
‘மாயாப் பிரயோகத்தால் அன்று, செவ்வைப் பூசலிலே நின்று காண் இலங்கையை அழித்தது’ என்னுதல்.-நேர் – நேராக என்றபடி.-அப்போது, ஏகாரம்: தேற்றகாரம். ‘நேர்மையாலே இலங்கை செற்றது’ என்றபடி.-
—————-
நேர் சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே–7-4-8-
கீழ் அசுரர்களை மார்விலே அம்பேற்று ஜெயித்த படி சொல்லிற்று -அவர்களுக்கு ஆபாஸ்ரயமாக வந்த தேவ ஜாதியையும் ஜெயித்த படி சொல்லிற்று இப்பாட்டில் –
கோழிக் கொடி கொண்டான் நேர் சரிந்தான் – மயிலைக் கொடியிலே யுடையனாய்த் தேவ சேனாதிபதியாய் இளமறியாய்த் தூசித் தலையிலே நின்ற சுப்பிரமணியன்
தோற்றரவிலே கெட்டான். ( இளமறி-குட்டிக் குதிரை -இளம் கன்று பயம் அறியாதே )
பின்னும் நேர் சரிந்தான் எரியும் அனலோன் – அவ்வளவிலே நாற்பத்தொன்பது அக்கினிகளும் பெரிய கிளர்த்தியோடே எரிந்து தோன்றின:-49 மருத் கூட்டங்களும் உண்டே -ஜாடராக்கினி வயிற்றுக்குள் அவையும் எல்லாம் பின்னிட்டன.
பின்னும் நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி –-‘மகன் கொடி கட்டிக் கொண்டு சென்று இளிம்பு பட்டான்’ என்று தன் ( எருதுக் )கொடியைப் பொகட்டு வந்து தோற்றின உடனேயே,
கண்ணைப் புதைத்துக் கெட்டு ஓடத் தொடங்கினான்.
அவன் மறைத்துக் கொண்டு போக, இவர், ‘முக்கண் மூர்த்தி கண்டீர்’ என்று கண்ணைக் காட்டிக் கொடுக்கிறார்.-எல்லாம் செய்தாலும் உடம்பில் அடையாளத்தை மறைக்கப் போகாதே அன்றோ?
தன்னோடு ஒக்க ஆறல் பீறலாய் இருப்பது ஒரு தேவதையைப் பற்றி, அரணுக்குள்ளே இருப்பாரைப் போலே திண்ணியனாய் இருந்தானாயிற்று. புருடோத்தமனைப் பற்றி இருப்பாரைப் போலே, கபாலி கந்தரைப் பற்றி நிர்ப்பரனாய் இருந்தான்.
சர்வேஸ்வரனைப் பற்றி ‘எதினின்றும் அஞ்சுகிறான் அல்லன்’ என்று இருப்பாரைப் போன்று எண்ணினான்.
திண் தோள் கொண்ட – ‘உஷை தந்தை அற்றவள் ஆக ஒண்ணாது’ என்று கரத்தைக் கழித்து விட்டான்.-கர பாதை அன்றோ இவனைக் கண்டார் கால்களில் எல்லாம் விழச் செய்தது’ என்று அவனுக்குள்ள கரத்தைக் கழித்து, இறையிலி யாக்கி விட்டான்.-ஆயிரங்கைகளையும் கொண்டு சம்பந்தம் இல்லாத விஷயத்திலே காரியங்கொள்ளுகையாலே அவற்றையே கழித்து விட்டான். அந்தத் தேவதை தானே வந்து, ‘வரம் தந்த நீயே அதனைக் கழிக்கவோ?-(அவரவர் -அந்தராத்மாவாக நின்று அன்றோ நீயே வரம் கொடுத்தாய் )
நீ இவனைக் கொல்லில் என் காலிலே குனிவார் இல்லை இனி’ என்று பல்லைக் காட்டுகையாலே விட்டான்.
இதனால் என் சொல்லியவாறோ?’ எனின், ஈஸ்வரனை ஒழிந்தார் அடங்கலும்,
தாங்கள் உளரான போது காப்பாற்றுகின்றவர்களாகச் செருக்குக் கொண்டு.
ஆபத்து வந்தவாறே இவர்களைக் காட்டிக் கொடுத்துத் தங்கள் தங்களைக் கொண்டு தப்புவர்கள்;
‘எல்லா நிலைகளிலும் தன்னை அழிய மாறியாயினும் அடியார்களைக் காப்பாற்றுவான் சர்வேஸ்வரன் ஆகையாலே, அடையத் தக்கவன் இவனே; அல்லாதார் பற்றத்தக்கவர் அல்லர்,’ என்னும் இடம் சொல்லியபடி.
———–
அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்
அன்று சுடர் இரண்டும் பிறவும் பின்னும்
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே.–7-4-9-
வாணனைத் தண்டித்த அன்று கண்டீர் உலகத்தை உண்டாக்கினான்’ என்று அதனையே பேசுகிறார் என்னுதல்.-பயிர் செய்கையே அன்றே வேண்டுவது? பயிர் அழியாமல் நோக்கின அன்றே அன்றோ – பயிர் செய்ததாவது?
பின்னும் அன்று மழை உயிர் தேவும் மற்றும் – அதற்கு மேலே மழை பெய்யக் கடவதான மேகம்,-மழையாலே உயிர் வாழக் கூடிய ஆத்துமாக்கள்,-மழையைத் தோற்றுவிக்கின்றவர்களான தேவர்கள், மற்றும் உண்டான திரியக்குத் தாவரங்கள் முதலானவைகள்.-அப்பன் –-எல்லாப் பொருள்களையும் தோற்றுவித்தவன்.-
————–
மேய் நிரை கீழ் புக மா புரளச் சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொ ரிய இன
ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே.–7-4-10-
தீ மழை காத்து –கேட்டினை விளைக்க வந்த மழையாகையாலே ‘தீ மழை’ என்கிறார்.
ஆயர்களும் பசுக்களும் அன்றிக்கே அன்று தாமே அன்றோ நோவு பட்டார்?-குன்றம் எடுத்தானே –‘மலையை எடுத்துக் காத்த மஹோபகாரகன்’ என்கிறார்.-பசுக்கள் பக்கலிலும் பெண்கள் பக்கலிலும் கிருஷ்ணன் கிருபை பண்ணுகைக்கு ஹேது -அஞ்ஞத்தையும் பாரதந்தர்யமும் –
‘பசியினால் உண்டான கோபம் ஆறுந்தனையும் மழை பெய்து போவானுக்கு’ என்று ஏழு நாள் அன்றோ மலையைத் தரித்துக் கொடு நின்று நோக்கிற்று?-கல் எடுத்து கல் மாரி காத்தாய் -சொல் எடுத்து பாடுவது அரிதானதே –-சொல் எடுத்து தான் கிளியை சொல் என்று துணை மேலை மேல் சோர்கின்றாள்–
‘இதனால் என் சொல்லியவாறோ?’ எனின்,-அடியவன் தப்பினாலும் தான் பொறுத்துக் காப்பாற்றுவான் என்பதனைத் தெரிவித்தபடி.-குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
ஊணைப் பறித்தோம் உயிரைப் பரிக்கக் கூடாது என்ற உதார குணத்துக்கு பல்லாண்டு –
————
குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11-
குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல் –
கோவர்த்தனத்தை எடுத்துத் தரித்த நீர்மையிலும்-அப்போதை அழகிலும் ஈடுபட்டு இருக்குமவர்களோடே கூடி நின்று-தாமும் பிரீதராய்,-பிரீதிக்குப் போக்கு வீடாகச் சொன்ன பாசுரமாயிற்று.–த்ரிபங்கியாய் நின்ற அழகு –
நன்றி புனைந்து ஓர் ஆயிரம் – சர்வேஸ்வரனுடைய பரத்வ சௌலப்யங்களை வகையிட்டுத் தொடுத்த ஆயிரம் நன்மையாவது,-சம்சாரி சேதனுக்கு, இவனே சர்வ ஸ்மாத் பரன் என்றும், சர்வ சுலபன் என்றும்,-சர்வ சமாஸ்ரயணீயன் என்றும் சொல்லுகை அன்றோ?
அவையே அன்றோ முதல் திருவாய்மொழி தொடங்கி அருளிச் செய்தது?
அன்றிக்கே,-எம்பெருமானுடைய வெற்றிச் செயல்களைத் தொடுத்துச் சொன்ன இப் பத்தும்’ என்னுதல்.
இன்ன வெற்றி விசேஷித்து இல்லாமையால் ஸமஸ்த வெற்றி-
செல்வத்தை விரும்புகிறவனுக்குச் செல்வத்திற்குத் தடையாக வுள்ளனவற்றை-கவனக்குறைவு அசுத்தி பேராசை போன்ற -வென்று கொடுக்கும்;
கேவலனுக்கு -வேறே ப்ரயோஜனமாகிய -விரோதியைப் போக்கிக் கொடுக்கும்;
பகவானைச் சரணம் அடைந்தவர்களில்-உபாசகனுக்கு ஐம்புலன்களையும் வெல்லுதல் முதலியவற்றைச் செய்து கொடுக்கும்;-பிரபந்நனுக்குக் கைங்கரிய விரோதிகளை வென்று கொடுக்கும்.
‘இது தான் ‘குலந்தரும்’ என்கிறபடியே எல்லா அபேக்ஷிதங்களையும் கொடுக்கும்’;
‘ஐஸ்வர்ய கைவல்ய பகவல் லாபங்களை ஆசைப் பட்டவர்களுக்கு அவற்றைக் கொடுக்கும்’;
‘கர்ம ஞான பத்திகளிலே இழிந்தவர்களுக்கு விரோதியைப் போக்கி அவற்றைத் தலைக் கட்டிக் கொடுக்கும்’;
‘பிரபத்தியிலே இழிந்தவர்களுக்கு ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பித்துக் கால க்ஷேபத்துக்கும் போகத்துக்கும்
ஹேதுவாயிருக்கும்’ என்ற வாக்கியங்கள் இங்கு அநுசந்தேயங்கள்.(முமுக்ஷூப்படி. திருமந்திரம். ஸூ18-21.)
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply