ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
அழகிய உருவகம் கொண்ட பாசுரம் -துறையடைவு-தலைவி இளம் பிறை கண்டு தளர்தலைக் கண்டு தோழி இரங்கல் –இரவைக் கண்டு ஆற்றாமல் தலைவி தளர தோழி இரங்கி பேசும் பாசுரம்
ரக்ஷகத்தின் -சால்பின் தகைமை கொலாம் -நன்றாக இருக்கிறதே – ஆகாசத்தில் சஞ்சரிக்கும் வெண் திங்கள் என்னும் தேவப் பசு சுரபி பாலாகப் பொழிய – சந்திரன் கிரணங்கள் -நிலவைச் சுரக்க -அமுதம் போன்ற கலைகள்-வால் வெண் -மிகவும் வெளுத்த நிலாவாகிற பாலை-உலகம் என்னும் பாத்திரம் நிறையும் படி பொழிகின்றன-அம்ருத கலைகளைப் பெற்று நாம் ஆனந்தம் படுவது போல் -தேவப்பசு பாலைச் சுரந்து – காணாத ஒன்றுக்கு காணும் சந்திரன் த்ருஷ்டாந்தம் –-உலகம் எல்லாம் மகிழ இவள் மட்டும் தளர்ந்து இதுக்கு நேராக எதிர் கோஷ்ட்டி பரிதி வட்டம் -ஸூரியன் -போலும் ஆழி -ஆயிரம் ஸூர்யன் போல் -இதுவும் வட்டம் அதே போல் – பற்றிய பிரான் -உபகாரகன் -ரக்ஷகத்வ ஸ்வபாவம் இதுவோ – தர்மமே உரு எடுத்த இவளை ரக்ஷிக்காமல் இது என்ன தர்ம ஹானி -திருத்தாயார் -தோழி பாசுரம்-வேய் மரு தோள் இணை -10 -3 -இதன் விவரணம் -காலைப் பூசல் – ஒரே படுக்கையிலே இருக்க -பசு மேய்க்கப் போந்தானாகவே -தோள் மெலிய அவனுக்கு இவளை விட ப்ராவண்யம் மிக்கு –-இவள் தோள் மெலிவைக் கண்டு போந்தானாகவே அவனும் நினைத்து –-எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல் -இந்தப்பாசுரத்திலும் பசு சுரக்கும் பால் – வர்ணாஸ்ரமம் தாய் சொல்படி -அதுவும் காரணம் இல்லை-உன் தன் திரு உள்ளம் இடர் தோறும் -பெண்மை ஆற்றோம் -அவர்களைக் கூட்டி என் முன்னே –
களை அற்ற கைங்கர்யம் –செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு -ஸூவ போக்த்ருத்வம் ஒழிக்க வேண்டுமே –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு—அவதாரிகை –நிலவு போய் முடிய நின்று பாதகமாய் —போய் என்றது மிகுதியாய் –-அத்தாலே இவளும் நோவு பட்டு -மோஹித்து கிடக்க – இத்தைக் கண்ட திருத் தாயார் -தர்ம ஹானி கிடீர் -என்று கூப்பிடுகிறாள் – பிறை யுடை மாலைக்கு ஆற்றாத தலைவியின் தளர்ச்சிக்குப் பாங்கி இரங்கல்-
இப்படி விஷய வைலக்ஷண்ய ஞானம் மிகவும் நடக்க அனுபவ யோக்ய காலத்தில் போக ஸித்தி இல்லாமையாலே பிறந்த தளர்த்தியைக் கண்ட ஸூஹ்ருத்துக்கள் நொந்து உரைத்த பாசுரத்தை நிலவு விஞ்சும்படியான மாலைக்கு ஆற்றாத் தலைவி தளர்த்தி கண்டு இரங்கின பாங்கி வார்த்தையாலே
அருளிச் செய்கிறார் –(இருள் -அனுபவம் பெறாமல் நலிய அதுக்கும் மேல் ஸ்வரூப ஞானம் -நிலவு போல் -அறிவு பெற்றாலும் -பக்தி முத்த -அனுபவம் பெறாமல் – இப்படி வைலக்ஷண்யம் அறிந்தாலும் -இழந்து தவிக்கிறோம் -என்று மேலும் துன்பம் பட்டத்தைக் கீழே பார்த்தோம் )
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-ரக்ஷகத்வ ஸ்வபாவமாமதோ இதோ வெண் திங்களாகிற ஸூரபி பால் வெண் நிலாவாகிற முதிர்ந்த பாலை எங்கும் சுரக்கப் பண்ணுகையாலும் இந்த முதிர்ந்த மாலையாலும் தனியாட்டி தளர்ந்ததுவே தம் பொழில் ஏழையும் ரக்ஷகத்வ ஸ்வ பாவமாய் என்னை நலியா நின்றான் என்று தளருகிற தலைவி பாசுரத்தால் அருளிச் செய்கிறார் இதில்
வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும்
பால் விண் சுரவி சுர முதிர்மாலை பரிதி வட்டம்
போலும் சுடர் ஆழிப் பிரான் பொழில் ஏழும் அளிக்கும்
சால்பின் தகைமை கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே – 73-தலைவி இளம் பிறை கண்டு தளர்தலைக் கண்டு தோழி இரங்கல் –
விண்–ஆகாயத்தில் நின்று
வால் வெள் நிலவு–மிகவும் வெளுத்த நிலாவாகிய
பால்-பாலை
உலகு ஆர சுரக்கும்–உலகமெங்கம் நிறையும்படி சுரந்து சொரிகிற
வெண் திங்கள் என்னும் வெளுத்த சந்திரனாகிய
சுரவி–பசுவினது
சுர–சுரம்பு
முதிர்–மிகப்பெற்ற
மாலை–மாலைப்பொழுதிலே
தமியாட்டி தளர்ந்தது–(நாயகன் வாராமையாலே) தனிமையையுடைய இவள் தளர்ச்சியை யடைந்த தன்மை
பரிதிவட்டம் போலும்–இத் திங்களொளியை விழுங்க வல்ல ஸூர்யமண்டலம் போலும் ஒளியையுடைய
அடல் அழி–வலிய சக்கராயுதமுடைய
பிரான்–அத்தலைவன்
ஏழ்பொழில்–ஏழுவகைப்பட்ட லோகங்களையும்
அளிக்கும் சால்பின் தமைகை கொல் ஆம்–ரக்ஷிக்கிற அமைவின் பெருமையா?
வால் வெண் நிலா -இத்யாதி –இவள் நலிவைக் கண்டு -அவன் ரஷகத்வத்திலேயும் அதி சங்கை பண்ணுகிறாள் –வலியதாய் –வெளுத்த நிறத்தை உடையதாய் –நிலவாகிற பாலை -(அம்ருத கலையைச் சொன்ன வாறு ) லோகமடைய நிரம்பும்படி -சுரக்கிற வெளுத்த நிறத்தை உடைய சந்தரன் ஆகிற ஆகாசத்தில் உண்டான ஸூரபி யானது – சுரக்கிற சுரப்பு போய் –முதிர்ந்த ராத்திரி -வெண் -திங்கள் என்னும் வெண் சுரவியானது வால் வெண் நிலா வாகிற பாலை உலகாகிற தாழி நிறையும் படி சுரக்கிற சுரப்பு முதிர்ந்த மாலையிலே –விண் சுரவி –இப் பிரளயம் தன் பக்கல் தட்டாதபடி உயரத்திலே நிற்கை –(விரஹ தாபம் பிரளயம் – வெக்காயம் சந்திரனையும் ஸூரபியையும் பாதிக்காதே )-பரிதி வட்டம் இத்யாதி –இந்நிலவுக்கு பகை உண்டு கிடீர் இங்கே -என்கிறாள் –ஆதித்ய மண்டலம் போல் இருக்கிற சுடரை உடைத்தாய் – எப்போதும் உத்தோன்முகமாய் –ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் திரு ஆழியை கையிலே உடைய மகோ உபகாரகன் –பொழில் ஏழும் அளிக்கும் சால்பின் தகைமை கொலாம்-
பூமி அடைய ரஷித்து போருகிறவனுடைய ரஷகத்வ ஸ்வ பாவமோ இது –பொழில் ஏழையும் அளிக்கிற சால்புண்டு -மகா புருஷத்வ மரியாதை –அதின் ஸ்வ பாவம் இருந்த படியோ -இது –அவன் ரஷகனாக –
அவன் கை பார்த்து இருப்பார்க்கு அழகிதாக ஜீவிக்கலாய் இருந்தது –பிரளய ஆபத்து வந்தாலும் அவன் உளன் என்று அழகிதாக விஸ்வசிக்கலாய் இருந்தது –கையும் திரு ஆழியுமாய் இருந்து -ரஷித்து போந்தபடி இதுவோ –முன்பு பண்ணிப் போந்த ரஷகத்வத்துக்கு நமஸ்காரம் –தமியாட்டி தளர்ந்ததுவே –
அசாதாரண பரிகரம் படுகிறபடி கண்டால் –விபூதி மாத்ரமாய் -ரஷ்ய கோடியிலே அந்வயித்து இருப்பார்க்கு அழகிதாக ஜீவிக்கலாய் இருந்தது –(தனி -நிகர் அற்ற -ஒருத்தி என்றுமாம்-கருதும் இடம் பொருதும்-சக்கரமே பிரிய வேண்டி இருக்க ரக்ஷிக்கும் கோஷ்ட்டியில் உள்ள அவன் பாடும் இதுவேயாய் இருக்க நமக்கு இப்படி இருக்கச் சொல்ல வேண்டுமோ )தமியாட்டி என்கிறாள் இறே –-தாயாரான தானும் கூட இருக்கச் செய்தே-அவள் கருத்தை அநுவர்த்தித்து -அவனை ஒழிந்தார் அடங்கலும் கழுத்துக் கட்டி அவன் ஒருவனுமே துணை என்று இறே இவள் இருப்பது –அந்திம சமயத்தில் யம படர் சூழ நின்றார்கள் என்னா அவர்கள் துணை ஆகார்கள் இறே –க்ரம ப்ராப்தி அமையும் என்று ஹிதம்-சொல்லுவார் பாதகராம் இத்தனை இறே –(பேற்றுக்குத் த்வரை -அவன் வை லக்ஷண்யம் பார்த்து இருக்கும் இவளுக்கு பேறு தப்பாது என்று துணிந்து இருக்கச் சொல்வதும் பாதகம் தான் அன்றோ
நல்கித் தான் காத்து அளிக்கும் –நல்கத்தான் ஆகாதோ வினையேற்கே நாரணனைக் கண்டக்கால் -பேறு தகுமோ )வால் வெண்ணிலவு வுலகார்ச் சுரக்கும் வெண் திங்கள் என்னும் பால் விண் சுரவி
சுர முதிர் மாலையிலே -தமியாட்டி தளர்ந்தது – பரிதி வட்டம் போலும் சுடர் அடல் ஆழிப் பிரான்- பொழில் ஏழு அளிக்கும் சால்பின் தகைமை கொலாம் –
நிலாவின் இடத்து பாலின் தன்மையையும் -அதை வெளியிடும் அம்ருத கிரணான சந்திரன் இடத்து பால் சுரக்கும் பசுவின் தன்மையையும் ஏறிட்டுச் சொல்வது ரூபக அலங்காரம்-அரும் தவன் சுரபியே ஆதி வானமா விரிந்த பேருதயமே மடி வெண் திங்களா -வருந்தலின் முலை கதிர் வழங்கு
தாரையாய்ச் சொரிந்த பால் ஒத்தது நிலவின் தோற்றமே -கம்பர் –விண் சுரவி சுர-தெய்வப்பசு சுரப்பி –
உரிய காலத்திலே பேறு கை புகாமையாலே ஞான விளக்கமும் பாதகமாக ஆழ்வார் தளர்ச்சியைக் கண்ட பாகவதர்கள் நொந்து அருளிச் செய்யும் பாசுரம் – பிரான் பொழில் ஏழும் அளிக்கும்-சால்பின் தகைமை கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே-ஸ்வாபாவிகமான சர்வ ரக்ஷகத்வமும் இவர் பால் கிடையாது ஒழிவதே– -பாட பேதம் –பிறைபடை மாலைக்கு ஆற்றாத தலைவியின் தளர்ச்சி கண்டு தோழி இரங்கிக் கூறும் பாசுரம் இது.-மாலைப்பொழுதுக்கும் இளம்பிறைக்கும் வருந்தும்படி இவளைத் தனியே விட்டிருத்தல் உலக முழுவதும் ரக்ஷிக்கும் அவனுடைய பெருந்தன்மைக்குச் சிறிதும் ஏழாது என்கிறாளாயிற்று.-ஆகாசத்தில் நின்றும் மிகுந்த வெளுத்த நிலாவாகிய பாலை உலகமெங்கும் நிறையச் சுரந்து சொரிகிற சந்திரனாகிய காமதேநுவின் சுரப்பு அதிகரித்திருக்கின மாலைப் பொழுதிலே இத் தலைவி தனிமைப்பட்டுத் தளர்ந்திருப்பதானது-ஆழியங் கையவன் அனைத்துலகங்களுயும் காத்தருளுந் திறத்துக்குப் பொருந்துமோ? (பொருந்தாது) என்றவாறு.
நிலாவினிடத்துப் பாலின் தன்மையையும்,அதனை வெளியிடுகிற அம்ருத கிணனான சந்திரனிடத்துப் பால்சுரங்கும் பசுவின் தன்மையையும் ஏற்றிக்கூறினது ரூபகாலங்காரம். (கம்பராமாயணம் சுந்தரகாண்டம் – ஊர் தேடு படலம் 56.) “அருந்தவன் சுரபியே ஆதிவானமா,விரிந்த பேருதயமே மடிவெண்டிங்களா, வருத்தலின் முலைக்கதிர் வழங்கு தாரையாச், சொரிந்த பாலொத்தது நிலவின் தோற்றமே” என இவ்வர்ணனைப் பிறவிடத்துஞ் சிறிது வேறுபடக் கூறப்பட்டிருக்குமாறு காண்க.
உலகு ஆர்ச்சுருக்கும்- உலகமாகிய தாழி நிறையும்படி சுரக்குமென்க. விண்சுரவி- தெய்வப்பசு, ஸுரபி: என்னும் வடசொல் சுரவியெனத் திரிந்தது.-சுர- சுரப்பு; முதனிலைத் தொழிற்பெயர். பரிதி- வடசொல் (பொழிலேழனிக்கும்) பொழில்- உலகம்.-இனி, பொழில்- சோலையுமாம்; உலகங்களை எம்பெருமானுடைய சிங்காரப் பூந்தோட்டமென்ப; “பிரான் பெய்த காவுகண்டீர் பெருந்தேவுடை மூவுலகே” 6-3.5) என்பர் திருவாய்மொழியிலும்,–
இப்பாட்டுக்கு ஸ்லாபதேசப் பொருளாவது: உரிய காலத்தில் பேறு கைபுகாமையாலே ஞானவிளக்கமும் பாதகமாக ஆழ்வார் அடைந்த தளர்ச்சியைக் கண்ட அன்பர்கள் நொந்து உரைத்த வார்த்தையாம்.
(பிரான பொழிவேழளிக்குஞ் சால்பின் தகைமை கொலாம் தமிபாட்டி தளர்ந்ததுவே)
எம்பெருமானுக்கு இயல்பான ஸ்வாக்ஷகத்வமும், இவ்வாழ்வார் திறத்தில் நிகழா கொழிவதே! என்று சங்கித்தபடி. ‘சால்வின்’ என்றும் பாடமுண்டாம். வால் வெள்- ஒருபொருள் பன்மொழி.–“நிலவுகார” என்றவிடத்து, ‘நிலவு’ என்னாமல் ‘நீல’ என்றும் பிரிக்கலாம்;-“குறிய தன் கீழ் ஆக்குறுதலுமதனோடு, உகர மேற்றலுமியல்புமாந் தூக்கின்” என்ற நன்னூல் அறிக.
வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும் பால் விண் சுரவி சுர முதிர்மாலை
மிகவும் வெளுத்த நிலவை லோகம் நிறைய சுரவா நிற்பதாய் வெள்ளைத் திங்கள் என்று சொல்லப்படுவதான விண்ணில் பால் பசுவினுடைய சுரப்பு முதிரா நிற்கிற மாலையிலே-பரிதி வட்டம் போலும் சுடர் ஆழிப் பிரான்-இத் திங்கள் ஒளியை விழுங்குவதான ஆதித்ய மண்டலம் போலே ஒளியை உடைத்தாய் ஆஸ்ரித விரோதி நிரசன ஸீலமாய் யுத்த காலத்தில் பரிகரமாக திருவாழியை யுடையனாய்த் தன்னைப் பற்றினார்க்கு உபகாரகனானவன்–பொழில் ஏழும் அளிக்கும் சால்பின் தகைமை கொலாம்-லோகம் ஏழையும் ரக்ஷிக்கிற அமைவு யுடைமையின் பெருமையாகக் கூடும் இறே-தமியாட்டி தளர்ந்ததுவே-தாம் வாராமையாலே தனிமையை உடையளான இவள் தளர்ந்தது என்று நொந்து உரைத்தாள் யாயிற்று–இத்தால்-அனுபவ யோக்ய காலத்திலே அநுபாவ்ய விஷய வைலக்ஷண்யம் அடியாக ஞான பிரகாசம் அதிசயித்து நடக்க அனுபவ ப்ரதாநம் பண்ணாமையாலே
ஸ்வாபாவிகமான ரக்ஷகத்வமும் அகிஞ்சித் கரமாம் படி இருந்ததீ என்று ஸூஹ்ருத்துக்கள் சங்கித்து உரைத்தாராயிற்று
வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும் பால் விண் சுரவி சுர முதிர்மாலை
வெண் திங்கள் என்னும் விண் சுரபி உலகார வாழ் வெண்ணிலவு என்ற முதிர்ந்த பால் சுரக்கும் முதிர் மாலை என்று அந்வயம்
முதிர்ந்த மாலையில் வெளுத்த சந்த்ரனாகிற ஆகாசத்தில் உள்ள ஸூரபியானது லோகங்கள் எல்லாம் நிறையும்படி வான் -மிகவும் வெளுத்த நிலாவாகிற முதிர்ந்த பாலை சுரக்குமாயிற்று முதிர்ந்த மாலை பால் சுரக்கும் காலமாகையாலே அற முதிர் மாலை யாயிற்று-பரிதி வட்டம் போலும் சுடர் ஆழிப் பிரான் பொழில் ஏழும் அளிக்கும் சால்பின் தகைமை கொலாம்-பரிதி வட்டம் -ஆதித்ய மண்டலம்-தேஜஸ்ஸில் அத்தைப் போன்றதாய் யுத்தத்தில் அசூரரைத் தொடருமதான திருவாழியால் அவர்களை நிரசித்தும்
கையும் திருவாழியுமான அழகை நமக்கு காட்டியும் உபகரிக்கிறவனுடைய விஹாரணா ராமமான ஸப்த லோகங்களுக்கும் ரக்ஷகனானவனுடைய சால்பு ரக்ஷண சாமர்த்தியம் அதின் தகைமை -அதனுடைய விஜ்ரும்பணம்–கொலோ–ஆமதோ–தமியாட்டி தளர்ந்ததுவே-தம்மால் தனிப்பட்டவள் அத்யாவசந்நை யாமதுவே ஜகத் ரக்ஷண விஜ்ரும்பணம் ஆமதோ –
ஸ்வாபதேசம் இத்தால் இவருடைய தசா விபாகத்தை கண்டார்க்கு அவனுடைய ரஷகத்வத்தையும் அதி சங்கை பண்ண வேண்டும்படியான நிலையை சொல்லுகிறது-தமியாட்டி -தமி -தனியாய் -அத்வதீயை —தனி -யாய் ஒருத்தி என்னுதல்-இப் பிரளயம் -இவளுடைய விரகம்-
தாத்பர்யம் –இதில் பூர்ண சந்த்ரனைக் கண்டு நலியும் தலை மகளைக் கண்டு தாயார் நாயகனான சர்வேஸ்வரனை வெறுத்து ஷோடச கலா பரிபூர்ண சந்த்ரன் ஆகாசத்தில் மத்யம் வந்து அமுத கிரணங்களை உலகு எங்கும் வியாபிக்கச் செய்து அதி ரம்யமான இரவில் நாயகனான சர்வேஸ்வரன் வந்து உதவாமல் துன்புறுத்த அவனும் திருக்கையில் ரஷ்ய பரிகரமான வட்ட வடிவமான ஒளிப் பிழம்பு போன்ற திருச் சக்ரமும் ஏந்திக்கொண்டு உலக எழும் ரசிப்பவன் என்று விருதூதிக் கொண்டு இவளை உபேக்ஷிப்பது தகுந்ததாய் இராதே -என்கிறாள் –
10-3-வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ-ப்ரவேஸம்-
திரு வனந்த புரத்திலே புக்குப் பாரித்த படியே அடிமை செய்யப் பெறாமையாலே -அதி சங்கை ––ஐயப்பட வேண்டும்படியாய் வந்து விழுந்தது –
ஸ்ரீ வைஷ்ணவர்களும் தாமுமாய் அடிமை செய்ய வேண்டும் என்று பாரித்தார் –
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்-காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -என்னுமவர் ஆகையாலே –
பாரித்த படியே அந்நகரிலே போய் புக்கு அடிமை செய்யப் பெற்றிலர் –
1-அந்நகரிலே அப்போதே சென்று சேரப் பெறாமையாலும்–
2-பாரித்த படி அடிமை செய்யப் பெறாமையாலும்-
-பல காலம் பிரிந்து போன வாசனையாலும் -திருவிருத்தம் -95-
3-தொன்று தொட்டு வருகின்ற சரீரத்தின் சேர்க்கையை நினைந்து அஞ்சின அச்சத்தாலும்-
4-சர்வேஸ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யத்தை நினைந்து அஞ்சின படியாலும் -அதாவது –
சிசுபாலனுக்கு தன்னைக் கொடுத்தும்-ஸ்ரீ பரத ஆழ்வான் வளைப்பு கிடக்க மறுத்து மீண்டு போரும்படியும் அன்றோ-ஸ்வா தந்த்ர்யம் இருப்பது -அதனாலும்
5-இனி–சர்வேஸ்வரன் தானே வந்து அங்கீ கரிக்கைக்கு ஈடான பக்தி தமக்கு இல்லை என்று இருக்கையாலும்
இன்னம் இவ் உலகில் வைக்கில் செய்வது என் -என்னும்-அச்சத்தாலே துன்புற்றவராய்
-தமக்குப் பிறந்த நிலை வேறுபாட்டினை-ஒரு பிராட்டி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்-
காலைப் பூசல் –கீழும் மேலும் இரண்டு திருவாய் மொழிகளில் பர உபதேசம் –
அச்சம் நீங்குதற்கு உடலான இவை தாமே அன்றோ இப்போது-இவர்க்கு அச்சத்துக்கு காரணங்கள் ஆகின்றன –
1-இப்போதே அந்நகரிலே சென்று சேரப் பெற்றிலோம் -என்று இருக்க வேண்டா –
அவனை நினைந்தால் காலாழும் நெஞ்சழியும் -பெரிய திருவந்தாதி -34-என்கிறபடியே
பத்தியினால் பரவசப் பட்ட காரணத்தால் இப்போது அடி இட மாட்டாதே ஒழிகிறார் ஆகையாலே-
2-அடிமை செய்யப் பெற்றிலோம் என்று அஞ்ச வேண்டா –
புகழும் நல் ஒருவன்-என்கிற திருவாய் மொழியின் படியே
இருந்த இடத்தே இருந்து ஏதேனுமாக சொன்னவற்றையே-தனக்கு அடிமையாகக் கொள்ளும் தன்மையன் ஆகையாலே
இன்று நினைத்தவற்றையும் செய்தவற்றையும் எல்லாம் தனக்கு அடிமையாக-நினைத்து இருக்குமவன் அன்றோ அவன் –
3-இனித் தமப்பன் பகையாக அவனிலும் இவன் அண்ணியன்-என்று வர நின்ற பிரகலாதன் அன்றோ-முடிவில் வந்து எதிர் இட்டான்-
ஆக-மயக்கம் கொண்டவனுக்கு பிறந்த தெளிவு போலே-இச் சரீரத்தோடு சேர்ந்து இருக்கிறவனுக்கு பிறக்கும் ஞானத்தினை நம்ப ஒண்ணாது என்றே அன்றோ
இவர் தாம் இச் சரீர சம்பந்தத்தை நினைந்து-தேறேல் என்னை -2-9-10-என்று அஞ்சிற்றும் –அங்கண் அஞ்ச வேண்டா –
முடியானே -என்ற திருவாய் மொழியிலே கூறப் பட்ட உறுப்புகளை உடையவர் ஆகையாலே-
4-அவனுடைய ஸ்வா தந்த்ர்யத்தை நினைத்து அஞ்ச வேண்டா–சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாசுச -ஸ்ரீ கீதை -18-66-எல்லா பாபங்களில் நின்றும்
உன்னை விடுவிக்கிறேன்-நீ துக்கப் படாதே -என்கிறபடியே –பாபங்களைத் துண்டித்துக் கொண்டு போகைக்கும் உடலாய் இருக்கையாலே ..
5-பக்தி தமக்கு இல்லை என்று இருக்க வேண்டா -பிரபத்தியை உபாயமாக பற்றினவர் ஆகையாலே –
நாராயணாயா – ஏக நிஷ்டை யில் இருந்தால் எத்தை செய்தாலும் கைங்கர்யம் -யோ யோ ஜல்ப -ஜபம் -தது தியானம் —
பிரகலாதன் போலே இவருடைய கரணங்கள் பிராகிருத போகங்களில் இல்லையே –
நெடு நாள் பிரிந்து -போன வாசனை-முடியானே கரணங்கள் உடையவர் -பிரகிருதி சம்பந்தம் நினைத்து அஞ்ச வேண்டாம் என்பதை
அத்தால் வந்த பிரிவையும் கண்டு அஞ்ச வேண்டாம் என்றபடியும் ஆகுமே –
இனி –ச உத்தம புருஷ சதத்ரபர்யேதி ஜஷத் கிரீடன் ராமமான-
ஸ்த்ரீபிர்வா யானைர்வா ஜ்ஞாதிபிர்வா நோபஜனம் ஸ்மரன் இதம் சரீரம் -சாந்தோக்யம் -8-12-3-என்கிறபடியே
இதனை நினையாதபடியான சாஷாத் காரம் இல்லாமல் படுத்துகிற பாடே அன்றோ இது –
நேரே கண்கூடாக காண்கிற காட்சியும் பயன் இல்லாததாய்-கூட இருக்கச் செய்தே பிரிந்தான் -என்று மயங்கும்படி
பிரிவால் வந்த வாசனை மேற்கொள்ளுகிறது அன்றோ-தகுதி கிடந்து படுத்துகிற பாடே அன்றோ-
கெடும் இடரில் பிரத்யக்ஷ சாமானாகாரம் கிட்டிற்றே -வைகுந்தம் கிட்டினால் போலே -என்றாரே -எதற்காக துன்பப் பட வேண்டும்
பிரத்யக்ஷமும் அகிஞ்சித் கரமாய் கூட இருக்கச் செய்தே பிரிந்தான் என்று அதி சங்கை
பிரிந்தான் என்று இவள் உடம்பு மெலிய -அத்தைக் கண்டு அவனும் பிரிந்தோமோ என்று அவனும் நினைக்கும் படி
-இப்படி இருவரும் ஊமத்தங்காய் தின்றால் போலே மயங்கி
கலப்பார் பிரிவார் என்கிற வாசனை மேலிட –யோக்யதை கிடந்து படுத்தும் பாடு இது -சரீரம் இருப்பதால் -விஸ்லேஷ ஹேது அன்றோ சரீரம் –
அதி சங்கை பிராந்தி கார்யம் இல்லை -மயர்வற மதி நலம் அருளப் பெற்றதால் —
மயர்வற மதிநலம் அருளினன் – என்கிறபடியே-பகவானுடைய திருவருளால் கிடைத்ததாய்-
பரபக்தி ரூபமாய்-ருசி கார்யமாய்-இருக்கிற இருட்சி இருக்கிறபடி அன்றோ இது –
இனி ஈஸ்வரனுக்கு கால் நடையாடாதது ஒரு தேசத்தில்-இவரை வைத்து அதனைப் போக்கலாம் அத்தனை –
கலந்து பல நாள் பிரிந்து போந்தாள் ஒரு பிராட்டியாய்-அவ் வாசனையாலே
கிருஷ்ணன் கூடி இருக்கச் செய்தேயும் -நீ கண்ணா -என்கிறாள் இங்கே –
இவன் பண்டு பிரிந்து போந்த விடியில் காலமும் வந்து அக்காலத்துக்கு அடைத்த காற்றுக்கள் அடிக்கையாலும் -வாடை தூவ –
குயில்கள் கூவுகையாலும்-மயில்கள் ஆலிக்கையாலும்-காடு எங்கும் ஒக்க கன்றுகளும் பசுக்களும் பரக்கையாலும்-இக்காலத்தில் அவன் போகை தவிரான்
பசுக்களை ஒரு தலையாக காப்பாற்றுமவன் ஆகையாலே அவற்றை விட்டு நம்மோடு இருப்பான் ஒருவன் அல்லன் –
ஆனபின்பு அவன் போனான் -என்று-கூட இருக்கச் செய்தேயும் அவன் பிரிவினை நிச்சயித்து-
இன்னுயிர் சேவல்-மல்லிகை கமழ் தென்றல்-தொடக்கமான திருவாய் மொழிகளில்
அவன் முன்னம் இல்லாமையால் பட்ட துக்கம் முழுதினையும் அவன் கண் முகப்பே படுகிறாள்-
எல்லா வற்றையும் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்த-அவனாலும் போக்க ஒண்ணாதபடி ஆயிற்று இவ் வாபத்து-
அதாவது-போனானாய் வருகிறவன் அல்லன்-போக நினைத்தானாய் தவிருகிறவன் -அல்லனே -என்றபடி –
இப்படி நோவு பட்டு-நீ பசு மேய்க்கப் போதலை நிச்சயமாக தவிராய்-
நீ போதல் எனக்கு விருப்பம் இல்லாத கார்யம் ஆகையாலே உன் செலவினை விலக்க வேண்டும் என்று நினையா நின்றேன்-
இதற்கு நா நீர் வருகிறது இல்லை
அதற்கு மாற்றாக-உன் கையை என் தலையிலே வைக்க வேண்டும் –அணி மிகு தாமரைக் கையை –
நீபசு மேய்க்கப் போகாது ஒழிய வேண்டும்-வீவ நின் பசு நிரைமேய்க்கப் போக்கு –
தீங்கினை விளைக்கக் கூடிய காட்டில் நீ பசு மேய்க்கப் போனால் அங்குள்ள-அசுரர் இராக்கதர்கள் முதலியோர்களால் என் வருகிறதோ –
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் –என்று அஞ்சா நின்றேன் –என்கிறாள் –
அஞ்சன வண்ணனை -பெரியாழ்வார் திருமொழி –என் செய்யப் பிள்ளையை போக்கினேன் ஏ பாவமே -தாயார் பாசுரம் –
இனி-மாதா பிதா ப்ராதா நிவாஸ சரணம் சூக்ருத் கதி நாராயணா -சுபால உபநிஷத் -என்கிறபடியே
அவன் எல்லா வகையான உறவுமாய் இருப்பதைப்போன்று –
இத்தலைக்கும் சம்பந்த ஞானம் பிறந்தால் எல்லா பிரிவுகளும் உளவாய் இருக்கும் அன்றோ –அதனால் இவளும் தாய் போலே படுகிறாள் என்றவாறு –
யதா யதா ஹி கௌசல்யா தாசிவச்ச சகீவச-பார்யாவத் பைநீவச்ச மர்த்ருவச்ச உபநிஷ்டதே -அயோத்யா -18-68-
ஸ்ரீ கௌசல்யார் சகரவர்த்திக்கு-வேலைக்காரி தோழி மனைவி உடன் பிறந்தவள் தாய் ஆகிய இவர்களைப் போன்று இருந்தாரே -என்கிறபடியே –
ஆனபின்பு–நீ செல்லில் நான் உளளாக மாட்டேன் -என்று-இப்படி நோவுபட-அவனும் இவை முழுதினையும் நினைந்து -நான் போகிறேன் அல்லேன் -என்று
தன் போகாமையை இவள் நெஞ்சிலே படுத்தி தரிப்பிக்க-தரிப்பததாய் -செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவு –தலைக் கட்டுகிறது -இத் திருவாய் மொழியில்-
இதனால்
திரு மந்த்ரத்தில் கூறிய அடிமைத் தன்மையின் எல்லை இருக்கிறபடியைத் தெரிவித்தபடி-
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் -அவனுக்கே உறுப்பாக பயன் கொடுக்கை -தானே அடிமைத் தனத்தின் எல்லை-
எம்மா வீடு -திருவாய் மொழியில்-தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -என்று அறுதி இட்டது ஓன்று உண்டே அன்றோ –
அதனை அழிக்கிறதாயிற்று இங்கு –என்னைக் கொள்ள வேண்டும் என்றே அன்றோ அங்குச் சொல்லிற்று-
என்னோடு கலக்கவுமாம்-வேறு சிலரோடு கலக்கவுமாம் –அங்குத்தைக்கு குறை தீரும் அத்தனை வேண்டுவது என்கிறது இங்கு-
அங்கு -எனக்கு என்ற இடம் புருஷார்த்தம் ஆகைக்கு சொன்ன இத்தனை அன்றோ –
உனக்கே நான் ஆட் செய்வோம்-அது அறிவில்லா பொருளின் வேறுபாட்டுக்கு உடலாம் இத்தனை-
இவன் தான் எனக்கு என்னாத அன்று புருஷார்த்தம் ஆகாது-அவன் தான் விரும்பி கார்யத்தை செய்யவும் தொடங்கான்-
உனக்கு நல்லவரோடும் உழி தந்து -உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் எம் பெண்மை யாற்றோம் –
தாதார்த்தம் -அத்தலைக்கே உறுப்பாக -தாதர்த்த சதுர்த்தி லுப்த சதுர்த்தி -பகவான் பிரயோஜனம் பிரதானம் -எம்மா வீட்டிலும் இதுக்கு ஆதிக்யம் –
மூன்றாம் திருவாய் மொழியில் -கீழே -திருவனந்த புரத்திலே அடிமை செய்யப் பாரித்தவர்
அவிம்பலேன -கிட்டப் பெறாமையாலே -அவனுடைய
போக்யத்தையும்
ப்ராப்ய பாவமும்
அடிமை கொள்ளப் பாரித்து இருக்கிற படியும்
புத்திஸ்த்தமாம் படி ஹ்ருதய ஸந்நிஹிதனாய் இருக்கச் செய்தேயும்
சீக்ர ப்ராப்தியில் இச்சையால் த்வரிக்கும் படியான ஸுபாக்ய அதிசயத்தை யுடையானாகையாலே -அவனுடைய
புண்டரீகாக்ஷத்வத்தையும்
அர்ஜனீய சம்ச்லேஷத்வத்தையும்
அசகாய ஸ்வ பாவத்தையும்
ரமணீய ஸுலப்யத்வத்தையும்
ஆகர்ஷக திவ்ய அவயவத்தையும்
அசாதாரண நாயகத்வத்தையும்
ஆச்ரித ஜன போக்யத்வத்தையும்
அனுசந்தித்து விளம்பம் பொறாமையால் விஸ்லேஷத்தை அதி சங்கித்து
ஏவம் பூதனான நீ என்னை அகலாது ஒழிய வேணும் என்று அபேக்ஷித்து தமக்குப் பிறந்த ஆர்த்தியை
அவன் சந்நிதியில் விண்ணப்பம் செய்த பிரகாரத்தை
ஸ்ரீ கிருஷ்ணனோடு ஸம்ஸ்லேஷித்து ப்ரபாத சமயத்திலே அவனுடைய பிரிவை சங்கித்து அஞ்சினாள் ஒரு கோபிகை –
சந்தியில் பாதகங்கள் நலிவு செய்யா நிற்கும் என்னை நீ ஆஸ்வசிப்பித்துக் கொண்டு இருக்கவும் வேணும் –
போன இடத்தில் ஆஸூரா ப்ரக்ருதிகள் வரில் என் ஆமோ என்று அஞ்சா நின்றேன் -என்று
திருவாய்ப்பாடியில் பெண்கள் எல்லார்க்குமாகச் சமைந்தவனுடைய போக்கை விலக்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
——
வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ
தகவிலை தகவிலையே நீ கண்ணா--10-3-1-ஆலோ-துக்கத்தின் மிகுதியைக் குறித்தபடி –
தன்னுடைய பிரிவில் இவள் ஆற்றாமை கேட்டார் வாய் கேட்கை அன்றிக்கே-
கைம்மேல் காணலாய் இருக்கிறது காணும் இவள் மெலிவு –தனக்குப் பிறந்த துன்பத்தினை தோழி மாருக்கு சொல்லுமாறு போலே-அவனுக்கு சொல்கிறாள்-கூட இருந்தாலும் பயன் இல்லையே அகவாயிலே பிரிவு உண்டானால்-அதன் கார்யமான மெலிவு பிறந்தன்றி நில்லாதே-தன் தோள்கள் மெலிகிற இதனை -உன்னுடைய தோள்கள் மெலியா நின்றன -என்பாரைப் போலே-சொல்லுகிறாள் காணும்-இவள் தோள் மெலிந்தால் தன்னுடைய அபிமதம் -வருத்தமும் -தனக்கு வந்ததாய் இருக்கையாலும் -வலியுமும்-ஆக -இரட்டிப்பாய் இருக்கும்-மெல்லியல் தோள் தோய்ந்தாய் –திரு நெடும் தாண்டகம் -13-அன்றோ விடாய் ஆறுவது-இருவருக்கும் விடாய் ஆற்ற முடியாதே – -தேவதத்தன் என்றதனோடு வாசுதேவன் என்ற சொல்லோடு-வாசி அறும்படி அவனுக்கு சரீரமாக அன்றோ இவ் உயிர்ப் பொருள் இருப்பது-பர்யவசான விதி -சர்வ சப்த வாச்யன்
போனோம் அல்லோம்-போக நினைத்தோம் அல்லோம்-நாம் கூட இருக்கச் செய்தே பிரிந்தோமாகக் கொண்டு நோவு பட்டு-பார்க்கப் படும் பொருள்கள் எல்லாம் துன்புறுத்தும் படியாக இருப்பதே-இது ஒரு அன்பின் தன்மை இருக்கும் படி என் -என்று-கண்களாலே குளிர நோக்கினான் –தாமரைக் கண்டால் கொண்டு ஈர்தி யாலோ –-நீ நோக்காலே நலிவதில் இன்னம் பசு மேக்கப் போக்கையே நன்று –
————
தகவிலை தகவிலையே நீ கண்ணா
தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச்
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச்
சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால்
வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–10-3-2-
தகவிலை தகவிலையே நீ கண்ணா–நம்மை அருள் இல்லாதவன் -என்பதே –
பிரிய நினைத்தோம் அல்லோம் –பிரிந்தோம் அல்லோம் -என்று இவள் தரித்து இருப்பதற்காக-நெருக்கி அணைத்தான் —இவள் தரிப்பதற்க்காக பலகால் அணைத்து அருள – இச் சேர்க்கையால் ஆய இன்பம் எல்லாம் -நீ நீங்கக் கூடியவன் என்னும் இதனாலே- கனாக் கண்டு விழித்தால் போலே யாய் நோவு படா நின்றேன் -என்கிறாள்
ஆவியின் பரம் அல்ல வேட்கை –அணு அளவிதனா உயிர் பொருளின் அளவன்று காதல் –
என் தன் அளவன்றால் யானுடைய அன்பு -இரண்டாம் திருவந்தாதி -100-என்றாரே அவரும்
உயிரின் அளவன்று ஆயிற்றுக் காதல் –
———–
வீவன் நின் பசு நிரை மேக்கப் போக்கு
வெவ் உயிர் கொண்டு எனது ஆவி வேமால்
யாவரும் துணை இல்லை யான் இருந்து உன்
அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால்
பொரு கயல் கண்ணினை நீரும் நில்லா
சாவது இவ் ஆய்க் குலத்துக்கு ஆய்ச்சி யோமாய்
பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே--10-3-3-
சாவது -இவ் ஆய்க் குலத்துக்கு ஆய்ச்சி யோமாய்பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே-நீ போகிலும் போ-இருக்கிலும் இரு-இத் தனிமை நசிப்பது-இவனுக்கு நான் நூறு பிள்ளை பெற வேண்டும் -என்ற சாவித்ரியை போலே சொல்லுகிறாள் –அன்றிக்கே-தனிமை தானே சாவது-எங்களுக்கு தனிமை என்றும் சாதல் என்றும் இரண்டு இல்லை காண்–தனிமை தானே சாக்காடு -என்றுமாம்
நின்னலால் இலேன் -2-3-7- என்னுமவர் அன்றோ-இறப்பதற்கே எண்ணாது-திரு நெடும் தாண்டகம் -1- என்றாரே அவரும்-சேஷ பூதை-அடிமையாக இருக்கும் எங்கள் உடைய தனி இருப்பு ஒழியட்டும் -தனிமை ஸ்வ பாவம் என்பதால் அதன் முடிவு தங்கள் முடிவு என்கிறாள் கூடி இருந்தால் வாழ்ச்சி பிரிந்தால் வீழ்ச்சி –அன்றிக்கே-தனிமை சாவது-இத் தனிமை சாலப் பொல்லாதது -என்னவுமாம்-ஒரு தலைக் காமம் தனிமை என்றுமாம் –
இவ் ஒருதலைக் காமம் போவது-கைக் கிளைத் தலைவி பொறை அழிந்தால்-எல்லாம் சொல்லப் பெறுவள் அன்றே–
————–
தொழுத்தையோம் தனிமையும் துணை புரிந்தார்
துயரமும் நினைகிலை கோவிந்தா நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி
துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம்
பாவியேன் மனம் அகம் தோறும் உள் புக்கு
அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்–10-3-4-
இவன் போக்கினை நினைத்து நோவு படப் புக்கவாறே –நின் செங்கனி வாயின் கள்வப்
பணி மொழி-உன்னைப் பிரிகைக்கு காரணம் உண்டோ -என்று-இப்புடையிலே தாழ்வோடு சில வார்த்தைகளைச் சொல்ல –இவை அன்றோ என்னை அழிக்கின்றன –என்கிறாள் –பிரிவினை நினைத்து பிரியேன் -என்னும் இது நஞ்சுக்கு சமம் அன்றோ –
இங்கு உள்ளது பொய் ஆலிங்கனமே – பிள்ளை அமுதனார்-ஒரு பசுவின் காலிலே முள் பாய்ந்தால்-ஆயன் தலை காண் சீய்க் கொள்வது -என்பாராம்-
சரீரத்தில் ஓன்று வந்தால் இன்ப துன்பங்கள் அனுபவிப்பது ஆத்மா அன்றோ –அந்தராத்மா இவன் அன்றோ –எம்மைத் துறந்து – அவற்றை விரும்ப விரும்ப-தங்களை துறந்தான் என்று இருக்கிறார்கள் – பசுப் பால் மனம் சுளிப்ப பராங்குச நாயகி தோள் கை விட்டு அன்றோ இவன் இருப்பது
—————-
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ் மல்லிகை வாடை தூவப்
பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது
என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ
அடிச்சியோம் தலை மிசை யணியாய்-10-3-5-வந்தன்றாலோ-வந்தின்றாலோ பாட பேதங்கள்
நான் உன் முன்னம் இருந்து கொண்டு இருக்க-நீ இப்படி படுகிறது என் என்ன –
நீ பசு மேய்க்கக் கடவனான பின்பு நீயும் போனாய் –கண்ணா என்று விளித்து -அவன் தன்னையே-நீ போனாய் என்கிறாள்- அப்படி தெளிவில்லாமல் தவிக்கும் நிலை அன்றோ இவளுக்கு –நீ போனால் நலியக் கடவ மாலைக் காலம் முதலிய பொருள்களால்-நலிவுபடுகிற என்னை நலிவு படா வண்ணம்-செய்து அருள வேண்டும் -அணைக்க என்று நேராகச் சொல்லாமல் அக்ராமமாக -நகர வார்த்தை போல் மூன்று கிரியைகள் பிராத்தனை –
மணி மிகு மார்வினின் –ஸ்ரீ கௌஸ்துபம் நிறம் பெறும்படியான மார்பு -என்னுதல்-
திரு மார்பு அடங்க ஸ்ரீ கௌஸ்துபத்தின் புகரே யாம்படி இருக்கும் -என்னுதல்-
கலவியிலும் கழற்ற ஒண்ணாதபடி அன்றோ கௌஸ்துபம் இருப்பது –இவளுடைய பெண்மைக்கு முலை போலே ஆயிற்று-அவனுடைய ஆண்மைக்கு ஸ்ரீ கௌஸ்துபம்-
புருஷோத்தமன் ஆகும் தன்மைக்கு இலக்கணம் அன்றோ –
உன் போக்கினை நினைக்க நா நீர் வருகிறது இல்லை –அதற்கு மாறாக உன் கையை தலை மேலே வைக்க வல்லையே-நா நீர் வருகைக்கு இவர்களுடைய முந்தரி கைப் பழம் இருக்கிறபடி-ராஜ குமாரர்க்கு நாக்கு வாற்றாமைக்கு பச்சைக் கற்பூரம் போலே- த்வய உச்சாரணம் நம் பூர்வர்களுக்கு-
அணி மிகு தாமரைக் கையை யந்தோ தலை மிசை நீ அணியாய் –ஆபரணத்துக்கு அந்தக் கை போலே ஆயிற்று-இவள் தலைக்கு அந்தக் கை-பாத பங்கயமே தலைக்கு அணியாய் -9-2-2-எனபது-அணி மிகு தாமரைக் கையை யந்தோ
அடிச்சியோம் தலை மிசை அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் -என்பதே-காலைக் கையைப் பிடித்து கார்யம் முற்றுவிக்கப் பார்க்கிறார்கள் –உன் பேற்றுக்கு நீ தானே பிரயத்தனம் பண்ண வேணும் –ப்ரேமையை கை விட்டது நீ செய்த அல்வழக்கு -ராமன் விட்டாலும் ராமானுஜர் விட மாட்டாரே –
—————
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்
ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்
பிடித்து அது நடுவு உனக்கு அரியையரும்
பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம்
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா
மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே–10-3-6-
சென்ற சென்ற இடம் எல்லாம் அபிமதைகள் பலர் உளர் –உனக்கு ஒரு குறை இல்லை-அரிவையர் –தங்கள் பருவத்தாலே துவக்க வல்லவர் பலர் -ஒருவர் இருவரா –பெண்கள் பதினாறாம் ஆயிரவர் –நாங்கள் உன்னைப் பிரிந்து தரிக்க மாட்டு கிற்றிலோம்-ஆதலால் உன் செலவினை எங்களால் பொறுக்க முடியாது –என்கிறாள்-
ஆழி அம் கண்ணா –என்கையாலே-திருக் கண்களாலே குளிர நோக்க வேண்டும் -என்பது போதரும் –உங்கள் கைகளால் தீண்டுதல் வேண்டும் என்று அன்றோ நான் இருப்பது –
எனக்கு போக்கு உண்டோ –போனாலும் உங்களை ஒழிய புறம்பு விஷயம் தான் உண்டோ-என்பது போல் கண்களாலேயே பேசினான்
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு
வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத்
துணை முலை பயந்து என தோள்கள் வாட
மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண
மென் மலரடி நோவ நீ போய்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு
அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே–10-3-7-
நாங்கள் நோவு பட-உன் மெல்லிய திருவடிகள் நோவ பசு மேய்க்கப் போனால்-அங்கு அசுரர்கள் கிட்டினால்-என்னை விளையும்-என்கிறாள்-எமது உயிர் வேம் -என்கையாலே-உனக்கு அது இல்லை என்று தோன்றுமே அன்றோ –இந்த பாடு எல்லாம் எங்களுக்கே –
தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத்-இது காறும் பார்த்து இராத ஓன்று நீ காணலாம்-இப்பொழுது தானே சந்நிஹிதனாக இருக்க நீர் -அதனால் அபூர்வம் -போகாதே காண் -என்கிறாள் –தாமரைப் பூவிலே முத்துப் பட்டது-கண்ணான முத்தே அன்றோ –நேத்ர பூதம் -சாடு -கண்ணிலே தோன்றிய முத்து -சிலாக்கியமான முத்து -கண் மணி போலே
———–
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று
ஆழும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து
கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும்
கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர்
நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-10-3-8-
பிரபல தர விரோதி இதில் ஆரம்பம் -அடுத்த பாசுரம் விளக்கம் –
நீ சென்றால் தீங்கு விளையுமோ என்று அஞ்சா நின்றேன்-உன்னைப் பிரியவும் மாட்டேன்-
பசு மேய்த்தலை வ்யாஜ்யமாகக் கொண்டு-காதலிமார்களை நினைத்து போகிறாய் ஆகில்-
-நீ விரும்பி இருக்கும் அவர்களோடு என் கண் வட்டத்தே சஞ்சரிக்கப் பார் என்ன-
ஆனால் அவர்களை அழைத்து தருவார் யார் என்ன-வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும்- உனக்கு தூது செய் கண்கள்-9-9-9- உளவாக இருக்க புறம்பே பரிகரம் தேடி அழைக்க வேண்டி இருந்ததோ-இனிப் பொருந்தோம் என்று இருப்பார் மரத்தை மாற்றி அவர்களை வசீகரித்து தரும் கண்களும்-அந்நோக்கில் கருத்தினை வெளிப்படுத்தும் வாயும்-அந்நோக்கிலும் முறுவலிலும் நேர் விழிக்க மாட்டாதே நாணத்தாலே கவிழ்ந்தவர்களை-எடுத்துக் கொள்ளும் கைகளும்-தொடுதலாலே தோற்றவர்களை கீழே போகாதபடி தன் செல்லாமையாலே-மேலே ஏறட்டு கொள்கிற பொன்னாடையும்-உனக்கு புறம்பே அழைத்து தருவார் வேண்டி இருந்ததோ-பிடாத்தை விழ விட்டு வடிவைக் காட்ட அமையாதோ-என்கிறாள்
————-
உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன்
திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்
எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு
நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9-இதுவே இத் திருவாய் மொழிக்கு நிதான பாசுரம்
உகக்கும் நல்லவரோடும் உழி தராய்-என்று நான் போகாமைக்கு சொன்ன வார்த்தை இத்தனை ஒழிய-உங்கள் முன்னிலையிலே நான் வேறு பெண்கள் சிலரோடு கலந்து பழகுதல்- உங்களுக்கு விருப்பம் இல்லாதது அன்றோ என்ன –
எங்களோடு கலக்கும் கல்வியால் உண்டாகும் இன்பத்தைக் காட்டிலும்-உன் திரு உள்ளத்தில் பிரியமே எங்களுக்கு மிகப் பெரிய இன்பமாகும்–நாங்கள் வியக்க இன்புறுதும் –புறம்பு உள்ளாரைப் போலே அன்றியே-உன் உகப்பையே பிரயோஜனமாக கொண்டுள்ள நாங்கள் மிகவும் உகப்புதோம் –பிரதான அவன் ஆனந்தம் சொல்லி பின்பு நம் ஆனந்தம்-உன்னிலும் அவர்களிலும் நாங்கள் வியக்க – -நீ உகந்தாரை ஒழிய உன்னை உகக்குமவர்கள் அல்லோம் காண் நாங்கள்–ஆன பின்பு தீமை விளையும் இடத்திற்கு போகாது ஒழிய வேணும்-என்கிறார்கள் –
மூன்றில் சுருக்கிய ஐந்தையும்-உயர் தினை ஒன்று பயில் /ஏறு கண் கரு வீடு /சொன்னால் ஒருக் கொண்ட/நோற்ற நாலும் /எம்மா ஒழிவில் நெடு வேய் –என்கிற இருபதிலே விசதமாக்கி-எண்பதிலே பரப்புகையாலே -ஐந்தையும்
அருளினான் வீடு பெற்ற என்கையாலே ஐந்தில் இரண்டையும்
தொழுது களித்தேன் சொல்லுப் பெற்றேன் பணி செய் என்கிற முக்த லக்ஷண வ்ருத்தியாலே இரண்டில் ஒன்றையும் இதுக்கு ப்ரமேயம் என்னும் -சூர்ணிகை -211-
————-
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ
அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்று உழி தருவர்
தனிமையும் பெரிது உனக்கிராமனையும்
உவத்திலை உடன் திரிகிலையும் என்று என்று
ஊடுற வென்னுடை யாவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே–10-3-10-
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி –ஆமாம் -நீ ஒவ்வோர் இருப்புகளை குலைத்துக் கொண்டு- போந்து அறியாயே-பரம பதத்தில் இருப்பினைக் குலைத்து அன்றோ பசு நிரை மேய்க்கப் போந்தது –அங்கு இருந்தான் ஆகில் என் வயிறு எரிய வேண்டாவே-நாம் பெறுவோம் இழப்போம் -அங்கே இருந்து வந்தது உன்னை கடாக்ஷிக்க அன்றோ என்ன -நாம் பெறுவோம் இழப்போம் -இவனுக்கு ஒரு தீங்கு வாராது ஒழியுமே-இது ஒரு அன்பின் தன்மை இருந்தபடி என் -என்று முறுவல் பூத்தான் –
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே –அதிலே ஈடுபடுகிறார்கள் –அவ்விருப்பு குலைந்து போந்தமை உண்டு-உங்களை விட்டுப் போந்தேனோ-என்று முறுவல் செய்ய-இவர்களும் வாய்க்கரையிலே -அதரத்தில் -அழுந்துகிறார்கள்-இத்தை நம்பி திருவாய்மொழி நிகமிக்கிறார் –பரம பதம் விட்டாலும் உம்மை விடோம் என்றானே –
————
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு
அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர்
வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை
அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன
இவையும் பத்து அவற்றின் சார்வே-10-3-11-
பொருநல் சங்கணி துறைவன் –தாம் இருந்த இடத்தில் மேன்மக்கள் அடங்கலும் வந்து (பவிஷ்யத் எம்பெருமானாரும் பெரிய ஜீயரும்)சேருமாறு போலே ஆயிற்று –திருப் பொருநலில் சங்குகள் வந்து சேரும்படி –
இவையும் பத்து அவற்றின் சார்வே –அவை -என்கிறது 1-மேலே போந்த திருவாய் மொழிகளாய் –அவற்றின் அருகே இதுவும் ஒரு திருவாய் மொழியே-என்ற ஆச்சர்யத்தில் ஆக்கி-ஆயிற்று சீயர் அருளிச் செய்ததும் -9000 படி வியாக்யானம் செய்ததும்
அன்றிக்கே –2-இவையும் பத்து அவற்றின் சார்வே —மேல் திருவாய் மொழிகளுக்கு சொன்ன பலம் இதற்கு பலம்-என்கிறது ஆகவுமாம்-
அன்றிக்கே-3-அவை -என்கிறது-மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை -என்கிறவற்றையாய்-இவையும் அவற்றோடு ஒக்கும் என்னுதல் -என்றது-அதனுடைய பலமே இதற்கும் பலம்-அது பலத்தோடு கூடியதாயின் இதற்குபேறு உண்டாம் -என்றபடியாம் –அவர்கள் நீ போகாதே கொள் -என்ன-அவன் தவிர்ந்து அவர்கள் உடன் கலந்தால் போலே-
இது கற்றாரும் அவனோடு நீங்காத கலவியைப் பெறுவார் –என்றவாறு –
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply