ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
இதுவும் அடுத்த பாசுரமும் கிளவித் தலைவனின் பேச்சு-தலைவியின் கண் அழகு ஸ்லாகித்து பேசும் பாசுரம் இது-அடுத்து இதில் இவ்வளவு ஈடு பாடு கூடாது என்று கழன்று பாங்கன் பேச-அத்தை மறுத்துப் பேசுவது -ஆழ்வாரது ஞானத்தின் சீர்மையைச் சொன்னபடி-நல்லார் நவில் குருகூரான் அன்றோ–இந்த இரண்டுக்கும் நோற்ற நோன்பிலேன் ஆகிஞ்சன்யம் சொல்லும் -உபாயாந்தர சம்பந்தம் இல்லை -ஆறு எனக்கு நின் பாதமே சரணம் அநந்ய கதித்வம் சொல்லும் ஆராவமுது விவரணம் உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ –பதிகங்களும் அடுத்து அடுத்து உள்ளன –ஆழ்வார் ஞானம் –அவன் திருவடியே சரணம் என்று இருந்தும் நமக்கு உபதேசித்தும் அருளிச் செய்த -பாசுரங்கள் இவை-இதுவே புகல் இப் பாசுரம் -வேறே கிஞ்சித்தும் இல்லை-இத்தை விட்டால் வேறே இல்லை அடுத்த பாசுரம் –ஓரோ கருமம் உற்று -உன்னை விட்டு ஒன்றும் ஆற்றகில்லேன் செய்த வேள்வியர் -அங்கு போல்-காதுடன் உசாவி -போதயந்த பரஸ்பரம் -சாஸ்திரம் கேட்டு ஞானி காதுகள் தானே பேசித்தான் ஞானம் வளரும் –செவி அளவு நீண்டு என்றுமாம் –1-கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று-உள்ள கண்கள்–2-ஒரோ கரும முற்றுப் பயின்று செவியொடு உசாவி -உள்ள கண்கள்–3-உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ் உள்ள கண்கள்–4-உற்றமுறாதும் மிளிர்ந்து உள்ள கண்கள் -யெம்மை உண்கின்றவே -என்றவாறு-
அவதாரிகை –தலை மகள் நோக்கி வீடுபட்ட தலைமகன் -அக் கண்கள் தனக்கு பாதகமானபடியை
பாங்கனுக்குச் சொல்லுகிறான் –தலைவி நோக்கின் வாசி கண்டு தலைவன் குறிப்பறிந்து உரைத்தல் –
ஆழ்வாருடைய ஞான வைபவத்தில் ஈடுபட்ட அன்பர் பாசுரத்தை நாயகியின் நோக்கில் அகப்பட்டு உரைத்த நாயகன் பேச்சாலே அருளிச் செய்கிறார்—
இப்படி இவ்வாழ்வாருக்கு பகவத் விஷயத்திலே-எண்ணம் புகுந்து –திரு விருத்தம் -63-என்கிறபடியே
மானஸ அனுபவம் நடக்கிற படியும்-கருக்காய் கடிப்பவர் போல் –திரு விருத்தம் -64-என்று பூர்ண அனுபவம் பெறாமையால் யுண்டான அதிருப்தி நடக்கிற படியையும் கண்டு-(உற்றும் -எண்ணம் புகுந்தது படி -மானஸ அனுபவம்-உறாததும் -கனி இருக்க காய் -உண்ட பூர்ண பாஹ்ய அனுபவம் கிடைக்காமல்)இந்த உபய ஆகார விசிஷ்டமான இவருடைய ஞானத்திலே (கண்ணிலே ) அன்பர் அகப்பட்டு உரைத்த பாசுரத்தை–தலைவி நோக்கின் வாசி கண்டு தலைவன் குறித்து ( விரித்து )யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை-தலைமகள் நோக்கிலே ஈடுபட்ட தலைமகன் ஆக்கங்கள் தனக்கு பாதகம் ஆகிறபடியைப் பாங்கனுக்குச் சொல்லுகிறான்
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–அவதாரிகை-வண்ணம் சிவத்தில் அவள் நோக்கில் அவனுக்கு அகப்பட்ட தலைமகன் அவன் நோக்கின் வாசியை-செங்கண் சிறுச் சிறிதே -திருப்பாவை -22-
என் மேல் செய்த படியைக் கண்டு நாயகன் கருத்து அறிந்த தாயாருக்கும் தோழிமார்க்கும் உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் இதில்
கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று ஒரோ கரும
முற்றுப் பயின்று செவியொடு உசாவி உலகமெல்லாம்
முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே –65 –தலைவியின் கண்கள் கவர்ந்ததைத் தலைவன் கூறல் –
நோற்ற நோன்பாதி யிலேன் உன் தனை விட்டாற்ற கில்லேன்
பேற்றுக்கு உபாயம் உன் தன் பேர் அருளே -சாற்றுகின்றேன்
இங்கு என்னிலை (இது) என்னும் எழில் மாறன் சொல் வல்லார்
அங்கு அமரர்க்கு ஆராவமுது—-47–அப்ரீதியாலே அனுகரித்து தரிக்க வேண்டும்படி அபிநிவேசம் அதிசயித்து செல்லா நிற்கச் செய்தேயும் ஸ்வ அபிமதம் பெறாமையாலே அவசன்னராய்-இப்படி அனுபவ ருசி ரூபமான தம் அபிநிவேசத்தை சாதனமாகக் கருதி அது முற்றினவாறே கார்யம் செய்கிறோம் என்று ஸ்ரீ ஈஸ்வரன் நினைத்து இருந்தானாகா கொண்டு பேற்றுக்கு உறுப்பாக சாஸ்திர சித்தமான கர்மாத் யுபாயங்களிலே-தமக்கு மறந்தும் அந்வயம் இல்லாமையை சொல்லிக் கொண்டு
அவன் அடியிலே காட்டின உபாயம் ஒழிய-(சிலேடை -பாட்டுக்கு அடி -திருவடி) வேறு ஒரு உபாயம் இல்லை -என்று சம்சாரி சம்ரஷண அர்த்தமாக ஸ்ரீ பிராட்டிமாரோடும்-ஸ்ரீ நித்ய பரிகரத்தோடும் கூட ஸ்ரீ வர மங்கையிலே வந்து எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ வான மா மலை திருவடிகளிலே-வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புகுகிற-நோற்ற நோன்பில் – அர்த்தத்தை-அருளிச் செய்கிறார்
நோற்ற நோன்பாதியிலேன்-என்று தொடங்கி -என்கை-சேஷத்வ பாரதந்த்ர்யங்கள் ஆகிற ஆத்ம பூஷணத்தாலே அபிராமராய் இருக்கிற ஸ்ரீ ஆழ்வார் உடைய வுபாய நிஷ்கர்ஷகமான இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார் –அவ்விடத்தில்- அளப்பரிய ஆராமுதை அனுபவிக்கிற ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கு நித்ய அபூர்வமான அம்ருதமாகப் பெறுவார்
கற்றுப் பிணை மலர் –கன்றான மான் –முக்தமான மானுடைய கண் –மலர்க் கண் –மலர் போல் இருக்கிற கண் என்னுதல் –விகசிதமான கண் என்னுதல் –குலம் வென்று –அஜ் ஜாதியாக வென்று–ஒரோ கரும முற்றுப் பயின்று –ஒரோ கார்யத்திலே உற்று –அதிலே நெருங்கி –அதை செவியொடு உசாவி –சர்வ விஷயமாக ஓர் இடத்திலும் பற்று இன்றிக்கே இராமே –ஒன்றிலே துணிந்து –அதிலே நெருக்கி –அத்தை தேசிகரோடே-போத யந்த பரஸ்பரம் -பண்ணுவாரைப் போலே- இவனையே ச விஷயமாக (விசேஷமாக )கடாஷிப்பது –இவன் பார்த்தவாறே கண்ணை மாற வைப்பதா-இருந்தபடி –யான் நோக்கும் காலை –நிலை நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும் (திருக்குறள்) -என்கிறபடியே –உலகம் எல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ் –சர்வ ரஷகனாவன் திருவடிகளில் இருந்து –அவன் எல்லைக்குள்ளே இருந்ததாயிற்று பாதகம் ஆகிறது –உற்றாம் உறாது மிளிர்ந்த –உற்றும் உறாதும் மிளிர்ந்த மாறுபாடுருவும்படி இவனை நோக்குவது –அந் நோக்கிலே பரவசனாய் –இவன் பார்த்தவாறே அந் நோக்கை மாற வைப்பதாக கொண்டு மிளிரா நின்றுள்ள –கண்ணா யெம்மை உண்கின்றவே –கண் என்கிற வ்யபதேசத்தாலே –ஒரு பாதக பதார்த்தம் என்னை நலியா நின்றது –இணைக் கூற்றங்கள் கொலோ அறியேன் -ஆழ்வார் அருளிச் செய்தது போல்-
ஸ்வா பதேசம்-இத்தால்–ஆழ்வார் படியை கண்டவர்கள் இருக்கிற படி இறே இது – கற்றுப் பிணை மலர்க் கண்ணின்-குலம் வென்று -என்கிற இத்தால் கார்ய புத்தி இல்லாத மௌக்த்யத்தை -நினைக்கிறது (அறியாத பிள்ளைகள் போல் ) ஒரோ கருமம்-உற்ற பயின்று -என்ற இத்தால்
பிரபத்தியை சொன்னபடி இறே-இது பின்னை ஜ்ஞான கார்யம் அன்றோ – கீழ் சொன்ன மௌக்த்யத்துக்கு சேர்ந்த படி எங்கனே என்னில் –அதில் கர்த்தவ்யதா புத்தி இன்றிக்கே இருக்கையை நினைக்கிறது –இது தன்னைச் செய்யா நிற்கச் செய்தே –சாதனத்தில் அன்வயியாதே- ஸ்வரூபத்தில் அந்தர்பவித்து இருக்கும் இறே-பிரார்த்தனா மதி சரணாகதி–அறிவும் வேணும்-பற்றினதுவும் உபாயம் இல்லை என்ற அறிவும் வேண்டுமே-அவன் திருவடியே -இசைவித்து அவன் தாளிணைக் கீழ் இருத்துமவன் -ஸ்வீ காரத்தில் உபாய புத்தியுயைத் தவிர்ந்த ஞானம் -ஆழ்வாரது – இது தானே குலமாக வென்ற ஞானம் ப்ரபந்ந ஜன கூடஸ்தர் அன்றோ —கண்ணா இத்யாதி –சொன்ன படியை உடையராய் இருக்கிற(ஞானிகள் அனைவருடைய ஞானங்களையும் விழுங்கிய ஞானம் தானே ஆழ்வாரது )
இருப்பு தான் கண்டவரை ஈடுபடுத்துகிற படியை சொல்லுகிறது –கற்றுப் பிணை மலர்க் கண்ணின் குலம் வென்று இருப்பதாய் – ஒரோ கருமமும் உற்றுப் பயின்று – செவியொடு உசாவினால் போல் இருப்பதாய் – உலகம் எல்லாம் முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ் இருந்து – உற்றும் உறாத மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்ற – என்று அந்வயம் –
தலைவியின் நோக்கில் ஈடுபட்ட தலைவன் பாசுரம் –கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று —இளைய மான் பேடை நோக்கும் நோக்கத்தினும் இவள் நோக்கம் அழகியதாய் உள்ளதே-ஒரோ கரும முற்றுப் பயின்று செவியொடு உசாவி-தான் நாயகியை நோக்காத பொழுது அவள் தன்னை மனத்தில் பொருந்திய காமத் குறிப்பு வெளியாம்பாடி அன்போடு நோக்கியும் தான் நோக்கும் பொழுது அவள் நாணத்தால் எதிர் நோக்காது வேறு ஒரு வஸ்துவை பார்ப்பவள் போலே வேறு இடத்தில் செலுத்தியும்
இப்படி பல கால் விரைவில் நிகழும் பொழுது அவள் கண் பார்வை காதல் அளவும் செல்லுதல் –
தான் கருத்தூன்றியதொரு கார்யத்தைப் பற்றி காதை யடுத்து வினவி-அதனோடு ஆராய்தல் போலும் –
நாயகியின் கண்கள் காது அளவும் நீண்டு விலக்ஷணமாக இருப்பதை வெளியிட்ட வாறு –உற்றமுறாதும் மிளிர்ந்த –குறிப்பு நோக்கை அனுகூலமாகவும் புறம்பு நோக்குவதை பிரதிகூலமாகவும் கொண்டு –உலகமெல்லாம்-முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்– யெம்மை உண்கின்றவே-சர்வ ரக்ஷகனான சர்வேஸ்வரன் விபூதியின் கண் தமக்கு இந்த நலிவு உண்டாவதே –உண்கின்றன -என்னை வசப் படுத்து கின்றன -நலிகின்றன –
கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று–இளைய மான் பேடைகளுடைய மலர்ந்த கண்ணின் ஜாதியை வென்று–ஒரோ கரும முற்றுப் பயின்று-தன்னில் தான் பலகாலும் கிட்டுகையாலே-பர்யாயம் தோறும் ஒரு கார்யத்தைக் கிட்டி அறுதியிடுகிறது என்னலாய்–செவியொடு உசாவி-மாண்டு கர்ணத்து அளவும் செல்லுகையாலே அறுதியிட்ட காரியத்தை ஸ்ரவண இந்த்ரியத்தோடே விசாரியா நின்றது என்னலாய்–உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்-லோகம் அடைய பிரளய ஆபத்தில் ஈடுபடாமல் திரு வயிற்றிலே வைத்து நோக்கியும் நெருக்குப் படாமல் வெளிநாடு காட்டியும் ரஷித்த ஈஸ்வரனுடைய திருவடிகளிலே–உற்றமுறாதும்-உற்றும் உறாதும்-கிட்டினார் கண் போலேயும் கிட்டாதார் கண் போலேயும்–அதாவது உகப்பும் செல்லாமையும் தோற்றி இருக்கை-நாயகனைக் கண்ட உகப்பும் இவனை ஒழியச் செல்லாமையும் தோற்றும்படி பார்வையிலே அறியலாய் இருக்கை–மிளிர்ந்த கண்ணாய்-உகப்பும் செல்லாமையும் மிளிர்தலிலே காணலாம் படி கண் என்று பேராய்-எம்மை உண்கின்றவே-நம்மைத் தனக்குள்ளே யாம் படி க்ரஹியா (க்ரஸியா) நின்றன என்று தன்னை இவள் கண்களுக்கு ஆக்கிக் கொண்டமை சொன்னான் ஆயிற்று-
இத்தால்–கற்றுப் பிணை -இத்யாதியாலே–இவ்வாழ்வாருடைய ஞானம் ஸம்ஸாரம் ஆகிற காட்டிலே திரிகிற முக்தமான ம்ருக பிராயருடைய ஸப்தாதி விஷயங்களிலே விகஸிதமான ஞான ஜாதியை
வென்று இருக்கும் என்றபடி-ஒரோ கரும முற்றுப் பயின்று -என்கையாலே -ஞாதவ்யமான பகவத் ஸ்வரூபாதிகளிலும் ஸ்வரூப விரோதிகளிலும் புருஷார்த்த விரோதிகளிலும் சாதன விரோதிகளிலும்
வ்யவசிதமாய்க் கொண்டு சீலித்த படி–செவியொடு உசாவி –என்கையாலே இவ் வர்த்த நிஷ் கர்ஷங்கள் இதுக்கு நிர்ணாயக ப்ரமாணமான ஸ்ருதியோடே சம்வதித்து இருக்கும் என்றபடி
(ஸ்ருதி சொல்வதை ஸ்ராவ்ய காது இடம் தானே கேட்க வேண்டும் )உலகம் இத்யாதியாலே–
ஸர்வ ரக்ஷகனான ஸர்வேஸ்வரன் திருவடிகளிலே மானஸ அனுபவத்தால் வந்த உறுதலையும்
பாஹ்ய அனுபவத்தால் வந்த உறாமையையும் சொல்லுகிறது-மிளிர்ந்த கண்ணாய் -என்கையாலே
ஸர்வ அவஸ்தைகளிலும் ஞானத்தினுடைய விகாஸம் சொல்லிற்று–எம்மை யுண்கின்றனவே -என்கையாலே-இந்த பிரகாரத்தாலே இவருடைய ஞானம் ஆஸ்ரிதரை வஸீ கரித்த படி சொல்லிற்று ஆயிற்று-
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம் –கற்றுப் பிணை-கன்றான மான் முக்தமான மானினுடைய-மலர் கண்ணின்-மலர் போலே இருக்கிற கண் என்னுதல்-விகஸிதமான கண் என்னுதல்-குலம் வென்று–
அஜ்ஜாதியாக வென்றதாயிற்று-ஒரோ கரும முற்றுப் பயின்று செவியொடு உசாவி-ஒரோ கார்யத்திலே யுற்று அதிலே நெருங்கி அத்தைச் செவியோடே உசாவி ஸர்வ விஷயமாய் ஓர் இடத்திலும் பற்று இன்றியிலே இராதே ஒன்றிலே துணிந்து அதிலே நெருங்கி அத்தை தேசிகாரோடே போதயந்த பரஸ்பரம் –ஸ்ரீ கீதை –10-9-பண்ணுவாரைப் போலே இவனையே ச விசேஷமாகக் கடாக்ஷிப்பது
இவன் பார்த்தவாறே கண்ணை மாற வைப்பதான போது இருந்தபடி–உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்-ஸர்வ ரக்ஷகரானவர் திருவடிகளிலே இருந்து அவர் எல்லைக்குள்ளே இருந்தாயிற்று இவை பாதகம் ஆகிறது–உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணாய்-மாறுபாடு யுருவும்படி இவனை நோக்குவது-அந்நோக்கிலே பரவசனாய் இவன் பார்த்தவாறே அந்நோக்கை மாற வைப்பதாய்
மிளிரா நின்றுள்ள கண்ணாய்–எம்மை உண்கின்றவே-கண் என்கிற வியபதேசத்தாலே ஒரு பாதக பதார்த்தம் என்னை நலியா நின்றது–இத்தால் ஆழ்வார் படியைக் கண்டவர்களுக்கு இருக்கிற படி இறே இது கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று -என்கிற இத்தால் கார்ய புத்தி இல்லாத முக்யத்தை நினைக்கிறது–ஒரோ கரும முற்றுப் பயின்று -என்கிற இத்தால் ப்ரபத்தியைச் சொன்னபடி இறே இது–பின்னை ஞான கார்யம் அன்றோ –கீழ்ச் சொன்ன மௌக்த்யம் இதுக்குச் சேர்ந்த படி எங்கனே என்னில் அதில் கர்தவ்யதா புத்தி இன்றிக்கே இருக்கையை நினைக்கிறது-இது தன்னைச் செய்யா நிற்கச் செய்தே சாதனத்தில் அந்வயியாதே ஸ்வரூபத்திலே அந்தர்பவித்து இருக்கும் இறே-செவியொடு உசாவி உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே-சொன்னபடியே யுடையராய் இருக்கிற இருப்புத் தான் கண்டாரை ஈடுபடுத்தும் படியைச் சொல்லுகிறது-
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று
இள மான் பேடைகளுடைய மலர்க்கண்களை எல்லாம் ஜயித்தாய்–ஒரோ கரும முற்றுப் பயின்று
பரஸ்பர ஸ்ப்ர்த்தை யுள்ளதாய்-தன்னில் தான் பர்யாயத சலிக்குமதாய் ஓர் காரியத்தை எண்ணி அறுதியிடுகிறது என்னவாய்-செவியொடு உசாவி-அறுதியிட்டு கார்யத்தைச் செவியோடே உற்றுப் பேசுகிறது என்னலாய்–உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்-லோகங்களை பிரளயம் வர திருவயிற்றிலே வைத்து ரஷித்தும் அது போக வெளிப்படுத்தி ரஷித்தும்
உபகரித்த அவன் திருவடிகளுக்கு அடிமை செய்ய–உற்றமுறாதும்-கிட்டின அவளாயும் கிட்டாத அவளாயும்–மிளிர்ந்த கண்ணாய்-கடாஷமுள்ள திருக்கண் மலர்களாய்–எம்மை-என்பது -ஸ்வீ யரைக் கூட்டிக் கொண்டு–உண்கின்றவே-எம்மை அனுபவிப்பதாய் ப்ரதிமையைப் பண்ணுமவையாய்
இரா நின்றதுகன் –
ஸ்வாபதேசம் –-கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று–சம்சாரமாகிய காட்டில் -பேதமையுள்ள மிருகம் போலே ஐம்புல வழியில் பரவும் ஞான சாதியை அதிசயித்து உத்க்ருஷ்டமான ஆழ்வார் ஞானம்
ஒரோகரும-முற்றுப் பயின்று-ஆழ்வார் ஞானம் அவன் ஸ்வரூபாதி களில் பொருந்தி உன்று ஆராய்ந்து நிலை பெற்ற ஞானம் செவியொடு உசாவி –செவி -சுருதி -ஆழ்வார் ஞானம் மறைகளு உடன் ஓத்தே இருக்கும் என்றபடி –உலகமெல்லாம்-முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்-உற்றமுறாதும் எண்ணம் புகுந்து -மானஸ அனுபவம் உற்றது –கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே-பூர்ண அனுபவம் இல்லாத -உறாத -இரண்டையும் காட்டிய படி-மிளிர்ந்த கண்ணா -எல்லா நிலையிலும் ஆழ்வார் ஞானம் குவியாது விசாலித்து உள்ளபடி யெம்மை உண்கின்றவே -இப்படிப் பட்ட ஆழ்வார் ஞானம் தம்மை வசப்படுத்திய படி –
தாத்பர்யம்–ஆழ்வாருடைய ஞான வைபவம் -சொல்லும் பாசுரம் நாயகி பேச்சால் அருளிச் செய்கிறார்
இரண்டு கண்கள் என்னை ஈடுபடுத்தி -வேறே எங்கும் செல்ல வேண்டாத படி ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்–மான் பேடைகள் சேர்ந்தாலும் -குலத்தையே வெல்லும் பிரபன்ன ஜன கூடத்ஸ்தர் அன்றோ-அதி ஸூந்தரமாய் சாமான்யம் இல்லாமல் -விலக்ஷணமான கண்கள் நான் வேறே இடம் பார்க்க என்னையே பார்க்கும் நம்பினான் –மடவாரையும் முன் எல்லாம் செம் பொன் மாடத் திருக் கோயில் – திருடப் போனேன் பயன் ஒன்றும் இல்லாமல் பாங்கும் இல்லாமல் இருக்க என்னைத் திருத்திப் பணி காய்ந்து அருளினாரே –நான் திருந்திய பின்பு-இங்கு இல்லாமல் -தன்னுடைச் சோதி புறப்பட்டு போனார்–செவியுடன் ஆலோசித்து -செவியாலேயே ஸ்ருதி சொல்வதைக் கேட்டு நிச்சயித்து-ஆழ்வார் நினைவால் இவர் தமக்கு சிஷ்யன் அல்லர் -தான் ஆச்சார்யர் உடைய ஸஹ சிஷ்யரே என்று திரு உள்ளம் கொண்டவர் அன்றோ -இத்தை அறிய உசாவி ஆலோசித்து-செவி அளவும் நின்று உலாவும் உலகம் அளந்த அவனது திருவடிகள் போல் ரக்ஷகனாய் இல்லாமல் என்னைப் பாதிக்கின்றனவே–மத் பாபமே-ஆழ்வார் -அனுபவம் பகவத் அனுபவத்துக்கும் மேலே அன்றோ-ததீய சேஷத்வ பாரதந்தர்யம் சரம பர்வ நிஷ்டை பெறாமல்-ஆழ்வாரது திருக்கண்கள் துன்பம் கொடுக்கின்றனவே -என்று வருந்திச் சொல்லும் பாசுரம் –
5-7-நோற்ற நோன்பிலேன்-ப்ரவேஸம்–
மேல் திருவாய்மொழியில் அநுகரித்துத் தரிக்கப் பார்த்தார்;
அநுகரித்துத் தரிக்க வேண்டும்படியான கலக்கம் பிறந்த இடத்திலும் வந்து முகங்காட்டிற்றிலன்; இதற்குக் காரணம் என்?
தன் பக்கல் ஆசை சிறிதுடையார்க்குத் தானே வந்து முகங்காட்டிக் காப்பாற்றக்கூடிய சர்வேச்வரன்
நம் பக்கல் ஆறி இருக்கைக்கு நிபந்தனம் என்?’ என்று பார்த்தார்;
இனி இங்ஙனேயாமித்தனை; நம் பிரகிருதி ஸ்வபாவத்தாலே தன்னால் அல்லது செல்லாதபடியாயிருப்பதோர் ஆற்றாமை உண்டாயிருந்தது;
அது நமக்கு ஸ்வரூபம்’ என்று அறியாதே ‘உபாயம்’ என்றிருந்தானாக வேணும் என்று பார்த்து,
தம் கையில் ஒன்று இல்லாமையை அறிவித்து அவன் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.
“ஆற்றகிற்கின்றிலேன்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி. ‘உபாயம் என்றிருந்தானாக வேணும்’ என்றது,
ஆற்றாமையாவது சிநேகமாய், சிநேகத்தை முன்னாகக் கொண்ட தியானம் பக்தி யாகையாலே,
இது உபாயமாகவேணும் என்றிருந்தானாகவேணும் என்றபடி.–
பிரசக்தி -தஸ்ய பிரதி நிஷேதம் -இருந்தால் தானே சொல்ல வேண்டும் –
கடற்கரையின் வெளியில் மஹாராஜரை உள்ளிட்ட முதலிகளோடும், லக்ஷ்மணம் புண்ய லக்ஷ்மணம்” என்பது, ஸ்ரீராமா. யுத். 18:7.-
“புண்ணியத்தையே இலக்ஷணமாகவுடைய இளைய பெருமாள்” என்கிற தம்பியோடுங்கூட எழுந்தருளி யிருக்க,
ராவணோ நாம துர்வ்ருத்தோ ராக்ஷஸோ ராக்ஷஸேஸ்வர: தஸ்ய அஹம் அநுஜோ ப்ராதா விபீஷண இதி ச்ருத:” என்பது, ஸ்ரீராமா. யுத். 17:10.
ஸ்ரீவிபீஷணாழ்வான் “கெட்ட ஒழுக்கத்தை யுடையவன், இராவணன் என்று பிரசித்தி பெற்றவன், அரக்கர்களுக்கெல்லாம் அரசனான
அரக்கன் இருக்கிறான்; நான் அவனுக்குப் பின் பிறந்த தம்பி; விபீஷணன் என்று பிரசித்தி பெற்றவன்” என்று தன்னுடைய தாழ்ச்சியை
முன்னிட்டுக்கொண்டு பெருமாள் திருவடிகளிலே விழுந்தாற்போலே,
இவரும், அவன் கடற்கரையிலே தனி இருந்த இழவு தீர,
பிராட்டிமாரோடும் நித்திய பரிகரத்தோடுங் கூடச் சிரீவரமங்கல நகரிலே திருவனந்தாழ்வான் மேலே எழுந்தருளியிருக்கின்ற
வானமாமலை திருவடிகளிலே, வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புகுகிறார்.
இவர் தாம் என் கொண்டு அவனை வடிம்பிடப் பார்க்கிறது என்னில், அவன் காத்தற்குரிய பொருள்களை விரும்பியுள்ளான்,
காவலனை விரும்புதல் தமக்கு உண்டாயிருந்தது; ஆன பின்னர், இதற்கு மேற்பட சம்பந்தம் உண்டோ? என்று.
நோற்ற நோன்பு -நாலிலும் சரணாகதி -ரகஸ்ய த்வயம் படி-திருமந்தரம் -சரம ஸ்லோகம்
-5-7 முதல் 6-10 நாராயணா –சராணாகதி பூர்வாக கல்யாண குணங்கள் அனுபவம்
6-10- வாக்ய த்வயம் பிரக்ரியை படி சரணாகதி –
ஸ்ரீ வைகுண்ட இருப்பு போலே -சேவை -அமர்ந்த திருக் கோலம் -கூந்தல் –கேள்வன் -வைகுண்ட நாதன் -ஸ்வயம் வ்யக்த ஷேத்ரம்
தோத்தாத்ரி -தெற்கு கோடி வடக்குக் கோடி அமர்ந்த திருக் கோலம் -பத்ரி விசால் -நாராயணன் –
நடுவில் நின்றது -திருவேங்கடம்-ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்களில் -கிடந்தது ஸ்ரீ ரெங்கம் மட்டுமே
நாச்சியார் அனுக்ரகம் -பொன்னடிக்கால் ஜீயர் -பெண்ணாகப் பாவித்து -கனுப்பொடிக்கு
இன்றும் ஸ்வாமி திருமடத்துக்கு -உத்சவம் கண்டு அனுபவிக்கிறார் –
ருசி விவசர்க்குப் பாதமே சரணாக்கும் ஔதார்யம் வானமா மலையிலே கொழுந்து விடும் -சூர்ணிகை -163-
நீசர்களை ரக்ஷிக்க அன்றோ இங்கே வீற்று இருந்து அருளுகிறார் -ரஷ்ய
ரஷக அபேக்ஷையும் இருக்க அடியேன் இழக்கவோ
ஏழாம் திருவாய் மொழியில் -கீழில்- திருவாய் மொழியில் அநுகாரம் ப்ராப்தியோடு தலைக் கட்ட மாட்டாமையாலே
ஆர்த்தியே அதிசயித்து பாவனையால் வந்த அநு கார்த்தாலே அல்பம் ஆஸ்வஸ்தராய் ப்ரசோகம் பிறந்து
இவ்வளவில் தன்னை லபிக்கைக்குத் தானே உபாயமான இவன் முகம் காட்டாது ஒழிந்தது நம்முடைய அநுகார
அர்த்தமான பாவனையை உபாசனமாக நினைத்து
அதனுடைய சரம தசையில் வருகிறோம் என்று என்று விளம்பித்தானாக அதி சங்கை பண்ணி
நம் ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டுக் கொண்டு அபேக்ஷிக்க அவன் ஆபி முக்கியம் பண்ணும் என்று அறுதியிட்டு
ஆகிஞ்சனரும் ஆசைப்படும்படியான அவனுடைய ஆச்ரித சம்ச்லேஷ ஸ்வ பாவத்தையும்
அநிஷ்ட நிவர்த்தகத்வத்தையும்
அதிசயித பரத்வ பிரகாசகங்களான அசாதாரண ஆகாரங்களையும்
ஆஸ்ரித சம்ரக்ஷண பிரகாரத்தையும்
ஆஸ்ரித விரோதிகளை அந்தரப்பேதம் பண்ணும் ஆகாரத்தையும்
ஆஸ்ரித உபகாரத்தால் வந்த உஜ்ஜ்வல்யத்தையும்
அகில சத்தா ஹேதுத்வத்தையும்
ஆஸ்ரித விரோதி அவன் இட்ட வழக்கு என்னும் அத்தையும்
விரோதி நிவர்த்தகத்வத்தால் வரும் விசேஷ உஜ்ஜ்வல்யத்தையும்
விரோதி நிவர்த்தகமான உபாய ப்ரகாஸகத்வத்தையும்
அநு சந்தித்து ஏவம் விசிஷ்டனான நீ உன்னை பிராபிக்கைக்கு ஹேது வான உபாயாந்தரங்களில் அகிஞ்சனாய்
ஆர்த்தனான எனக்கு உன் திருவடிகளே உபாயமாக அபகரித்த இதற்கு என்ன பிரதியுபகாரம் பண்ணுவேன் என்று அலமரும்படி
தமக்குப் பிறந்த ஆசுவாச விசேஷத்தை ஸ்ரீ வர மங்கையிலே ஆசன்னமாக எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ வானமா மலையை நோக்கி விண்ணப்பம் செய்கிறார் –
நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-
என்னுடைய பேற்றுக்குக் காரணமாயிருப்பதொரு கைம்முதல் என்னிடத்தில் இல்லை,-“நோற்ற நோன்பிலேன்”–இல்லாமையாலே ரக்ஷகன் வேண்டும் என்ற விருப்பம் உண்டு;-“ஆற்றகிற்கின்றிலேன்–பரிபூர்ணரான தேவர், காத்தற்குரிய பொருள்களை விரும்புகின்றவராய் இருந்தீர்;-சிரீவரமங்கலநகர் வீற்றிருந்த”--ஆகையாலே, தேவரே என் விருப்பத்தை முடித்தருள வேண்டும் என்கிறார்.
கர்ம யோகத்தில் நிஷ்டையுடையேன் அல்லேன், ஞானயோகத்தையுடையேன் அல்லேன்,மேற்சொல்லிய அவை இரண்டும் உண்டானால் வருமதுவே அன்றோ -பக்தியுடையேனல்லேன்-‘நோன்பிலேன்’ என்ன அமையாதோ? ‘நோற்ற நோன்பிலேன்’ என்ன வேண்டுமோ? என்ன-சாதனங்களைச் சமைய அநுஷ்டித்து, பலத்தோடே கூடியிருப்பதாகப் பார்த்திருக்கலாவது-க்கர்வர்த்தி, ஸ்ரீ வசுதேவரைப் போலே பேற்றுக்கு அடியாக நினைத்திருக்கலாவது ஒன்று இல்லை என்கைக்காகச் சொல்லுகிறார்.‘அறிவிலேன்’ என்னாமல், ‘நுண்ணறிவிலேன்’ என்கிறார். என்றது,
ஆத்ம ஞானம் முன்னாகப் பரம்பொருளின் சொரூபத்தைக் காணும் அளவாக அறியும் அறிவை யுடையேனல்லேன் என்றபடி.
அவை இரண்டும் உண்டானால் வருமதுவே யன்றோ பக்தி; அவை இல்லாமையாலே எடுத்துக் கழிக்கவும் வேண்டாவே அன்றோ.-ஆனால், இதைப் போன்று, ‘கர்மம் இல்லை’ என்ற போதே, ‘ஞானம் இல்லை’ என்பது போதருமே அன்றோ,-அதனை எடுத்துக் கழிக்க வேண்டுவது என்? என்னில், முற்பிறவியில் கர்மங்கள் முடிந்த அளவிலே மரணம் உண்டானால்-அடுத்த பிறவியிலே ஞானம் உண்டாகக் கடவது. ஆயின், பக்தியும் அப்படி ஆனாலோ? என்னில்,-ஞான கர்மங்கள் இரண்டும் உண்டானால்
பக்திஸ்ச ஞான விஸேஷ:” என்றும், “ஞானம் கனிந்த நலம்” என்றும் சொல்லுகிறபடியே,
பக்தி கூடி அல்லது நில்லாது, ஆன பின்பு, இங்கு அப்படி ஆக ஒண்ணாது.
‘உன்னைவிட்டு ஒன்றும் ஆற்றகிற்கின்றிலேன்’ என்று இவர் சொல்லுகிற இது, பக்தி அன்றோ,-“உபய பரிகர்மித ஸ்வ அந்தஸ்ய ஏகாந்திக ஆத்யந்திக பக்தியோ கைகலப்ய:”-என்பது, — ஏகாந்திக அத்யந்திக -அவனைப் பற்றியே இடைவிடாமல் ஆத்ம சித்தி “சிநேகத்தை முன்னிட்ட தியானமானது பக்தி” அன்றோ; ஆன பின்பு, இது உபாயம் ஆனாலோ? என்ன, அங்ஙனம் ஒண்ணாது அன்றோ,
கரும ஞானங்களோடு கூடியுள்ள மனத்தை யுடையவனுக்கு உண்டாகும் பரபக்தி அன்றோ
சாஸ்திரங்களில் சாதனமாகச் சொல்லிப் போருகிறது;
“ஸ்நேஹ பூர்வம் அநுத்யானம் பக்தி: இதி அபிதீயதே பஜ இதி ஏஷதாது: வை ஸேவாயாம் பரிகீர்தித: தஸ்மாத் ஸேவாபுதை: ப்ரோக்தா பக்தி ஸப்தேந பூயஸீ”-இது, அங்ஙன் அன்றிக்கே, அவனுடைய திருவருள் காரணமாக வந்தது ஆகையாலே இது ஸ்வரூபமாமித்தனை.–புராணங்களிலே தனித்தனியே கர்ம ஞானங்களைச் சாதனமாகச் சொல்லுகையாலே சொல்லிற்றாகவுமாம்.-கர்ம ஞான ரஹித்யம் -பக்தி ராஹித்தியம் உப லஷணம் -சாதனம் இல்லை என்றால் சாத்தியம் இருக்காதே-புராண பிரகிரியையில் -கர்ம ஞானம் இல்லை என்றது பக்தியும் இல்லை -என்றவாறு – சாதனம் இல்லா விடில் சாத்தியம் கிட்டாது
உபாயம்’ என்றிருந்தாராகில், ‘ஆகிலும்’ என்கைக்கு இடம் இல்லை.-ஆனால், நீர் இந்நாள் வரை ஆறி இருந்தீரே? என்ன,-இனி--உன்னையும் அறியாதே என்னையும் அறியாதே இருந்த அன்று இழக்க அமையாதோ,-உன் நிறைவும் என் குறைவும் அறிந்த இன்றும் இழக்க வேண்டுமோ?-ஒருவன் கையிலே சோறும் உண்டாய் அவன் இடுவானுமானால்,-காருணிகனாயும் இருந்து –-ஒருவனுக்குச் சோறும் இன்றிக்கே பசியனும் ஆனால் இழக்க வேணுமோ?-இனி –-என் கையிலேயும் ஒன்று உண்டாய் அது சமையும் தனையும் ஆறி இருக்கிறேனோ.-ஸ்வரூபத்தை உபாயத்திலே செலவு எழுதிக் கைவிடப் பார்க்கில் பார்க்குமித்தனை.-அநாதி காலம் மெய் மறந்து இழந்த காலம் போராதோ, நான் மெய்யாக இசைந்த இன்றும் இழக்க வேண்டுமோ?
உன்னை விட்டு-நீயும் என்னைப் போலே இருந்தாயாகில் நான் ஆறி இரேனோ,
நானும் சிறிது செய்து வரவேண்டும்படியோ நீ இருக்கிறது.
அன்றிக்கே,-உயிரை விட்டு உடல் தரிக்கவற்றோ என்னலுமாம்.-ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன் – உன்னுடைய ஸ்வரூப ஞானம் என்னுடைய தாரணத்துக்குக் காரணமாய் இருக்கிறதில்லை.-“அங்ஙனம் அழைத்துக் கொண்டு செல்லும் செயல் அவருக்குத் தக்கதாகும்” என்று ஆறி இருக்கைக்கும் ஒருவழி உண்டே அன்றோ அவளுக்கு.
கடலை அணை செய்யவும் இராவணனை அழியச் செய்யவும் வேண்டாவே அன்றோ இவளுக்கு.
உன்னுடைய போகப் பிராவண்யம் என்னால் ஆறி இருக்கலாயிருக்கிறதோ?
நீ பரம போகியாயிருக்க, என்னால் ஆறியிருக்கப்போமோ?
சம்சாரிகளுடைய இரக்ஷணத்துக்காக நித்திய வாசம் செய்யும் தேசம். பரம பதத்தையும் மறக்கச் செய்யும் தேசம்-வீற்றிருந்த--‘அங்கே இருக்கக்கூடிய நமக்கு, இவ்விருப்பு இருக்க வேண்டா நின்றதே!’ என்னும் வெறுப்போடு அன்றிக்கே,-தட்டியிலிருந்தவன் முடி சூடினாற்போலே தன் வேறுபாடு தோற்ற இருக்கை (அங்கே சிறை இருப்பு போலே அவாக்ய அநாதர )–– அங்குத்தை இருப்பு நித்தியசூரிகளுக்கு ஆனாற்போலே, இவ்விருப்பு எனக்காக அன்றோ இருக்கிறது. சிரீவரமங்கல நகரான அங்கே வீற்றிருந்த எந்தாய்! -பரம பதத்திலே நெடுங்கை நீட்டாக இருந்தாயாகில் நான் தரித்திருக்கலாயிற்றே, எனக்காக வந்த இடத்தை நான் இழக்கவோ.-அங்கே வீற்றிருந்த உனக்கு மிகை அல்லேன் –-காக்கும் பொருள்களைத் தேடிக் கொண்டிருக்கின்ற உனக்குப் புறம்பு அல்லேன்.-உனக்கு மிகையான போது அல்லேனாய் ஆகி விடுவேன்-இத்தால் வரும் பிரயோஜனமும் தேவரீருடையதே.
பால் குடிக்கும் குழந்தையை, பால் குடித்து வயிறு நிறையக் கண்டு உகக்கும் தாயைப் போலே, அடிமையாக இருப்பவன்-ஸ்வரூபம் பெற்று அடிமை செய்கை சேஷிக்குப் பேறே அன்றோ.–ப்ரீதி உன் பக்கலிலே யானால் இழவும் உன் பக்கலிலே யாக வேண்டாவோ –
—————-
அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2-
“நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்” என்று சொன்ன உபாயம் இன்மையை,
இத் திருப்பாசுரத்தில் “அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்” என்று வேறு வகையாக அநுபாஷிக்கிறார் –அங்குற்றேன் அல்லேன் – முக்தர் இந்தச் சம்சாரத்திலே – -உலாவினாற் போன்று சித்த சாதனனாய்த் -பேறு நிச்சயம் என்று உணர்ந்து -திரிகிறேன் அல்லேன்.-இங்குற்றேன் அல்லேன் –-இங்கே இருந்து சாதனங்களைச் செய்கின்றவர்களிலே ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன்.-உன்னை அநுபவித்துச் சம்சாரத்தை நினையாதிருக்கிறேன் அல்லேன்.-உன்னை மறந்து,“அவர் தரும் கலவியே கருதி”அதுவே பேறாக இருக்கிறேன் அல்லேன் -‘உன்னைக் காண வேணும்’ என்னும் ஆசையாலே வலிமை குன்றினவனாய்த் தளர்ந்தேன்.- ஆதலால் சாதனங்களைச் செய்வதற்கு ஆற்றலுடையவன் அல்லேன். இது, பூர்வர்கள் நிர்வாஹம்.
அங்குற்றேன் அல்லேன் – நித்திய சூரிகளோடு கூட அங்கே இருக்கிறேன் அல்லேன்.
இங்குற்றேன் அல்லேன்-சம்சாரிகளைப் போன்று இங்கே உண்டு உடுத்துப் போருகிறேன் அல்லேன்.-இங்ஙனே ஆனால்,-பக்தி பாரவச்யத்தால் -நிரதிசய பக்தியால் – நீ வந்து முகங்காட்டுமளவும்-நடு ஓர் இடத்தில் நிற்கப் பொறாதவனாக இருக்கிறேன். -( எங்குற்றேனும் அல்லேன்-உம்மைத்தொகை )-பிரபந்நர் ஆர்த்தப் பிரபந்நர் என்றும், திருப்தப் பிரபந்நர் என்றும் இரு வகையர்;-அவர்களுள், திருப்தப் பிரபந்நனல்லேன் என்கிறார்
உன்னைக் காணும் அவாவில் -நிரதிசய பக்தியால் -வீழ்ந்து யான் எங்குற்றேனுமல்லேன் –
“காலாழும்”(பெரிய திருவந்.) என்றபடியே, பக்தி பாரவஸ்யத்தாலே அசக்தனான நான்,
மேலும் சாதந அநுஷ்டானத்துக்குத் தக்கவனல்லேன்-சேஷிசெய்தபடி கண்டிருக்கிறோம்” என்று ஆறியிருக்கப் பொறுமை யுடையவனல்லேன் –
ஸ்வரூபம் பிரகாசித்தால், அவன் தலையிலே தள்ளி வைக்கவுங்கடவதாய், அவனும் பிராட்டிமாரைப் போன்று மேல் விழுந்து விரோதிகளையும் போக்கி அணைக்கைக்கு வேண்டும் சம்பந்தம் உண்டாய்க் காணும் இருப்பது-அதற்குப் பிற்பட்டதே? என்ன,
அக்கண்ணழிவு அறுத்துவைத்தாய் அன்றோ-சிரீவரமங்கல நகரிலே, அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்தியவாசம் செய்கின்றாயில்லையோ?
சங்கு சக்கரத்தாய் –-பரிகரம் இல்லையே? என்ன, ஒரோ கைக்குப் படை அன்றோ கூட நிற்கிறது -1-நீ அண்மையிலிருப்பவன் அல்லாமையோ,-நீ சந்நிஹிதன் —
2-நீ ஆற்றலுடையவன் அல்லாமையோ,
3-உனக்குப் பரிகரம் இல்லாமையோ,
4-பரிகரம் தான் கை கழிய நின்றோ,-
சங்கு சக்கரத்தாய் -இதுவே நிரூபகம் – எதனாலே தான் இழக்கிறது?
தமியேனுக்கு – 1- இத்தலையும் குறைவற்றது என்கிறார். ருசி உள்ளதே –
அங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன், -அங்கே சதா பஸ்யந்தி அன்றோ
இங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன். -இங்குள்ளார்க்கு இவ்விஷயத்தை அறியாமையாலே பிரிவு இல்லையே.-தமியேனுக்கு--2-உன்னை ஒழியத் துணை இல்லாத எனக்கு.-தமியேன்–3-பிராட்டியில் வேறுபாடு அங்காகில் ஒரு திரிசடையாகிலும் உண்டே அன்றோ, இங்கு “ஆவார் ஆர் துணை” என்னும்படி அன்றோ தனிமை.
அருளாயே –-என் வெறுமையும் உன் நிறைவும் அறிகைக்கு, நீ அடியில் தந்த அருள் இன்று குடி போயிற்றோ,-அன்று நான் விரும்பாதிருக்க அருளின நீ, விரும்புவதற்குத் தகுதியைப் பிறப்பித்துப் பொகடவோ.-ருசியை உண்டாக்குவார் ஒருவரும், உபாயத்தை அநுஷ்டிக்கிறவர் ஒருவருமாயோ இருப்பது.-நின்னருளே புரிந்திருக்கிற எனக்கு அருளாயாகில் பின்னை யார்க்கு வேறு அருள இருக்கிறாய்.-
————-
கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3-
கைங்கர்யத்து அளவும் வர புகுர நிறுத்தினோம் -அதுக்கு அவிச்சேதம் யுண்டான போது நம் சந்நிதி வேணும் என்று அங்கே இருந்தாய்-அறியேன் ஒரு கைம்மாறே-இவ்வளவு உபகரித்ததுக்கு நான் ஒரு பிரதியுபகாரம் பண்ணினேனாக அறிகிறி லேன்-பிராங் நியாயத்தாலே மேல் உள்ளதும் நீயே செய்யும் அத்தனை-சாஸ்திர பலம் ப்ரயோக்த்ரி-என்கிறபடி பலம் உம்ம தான பின்பு சாதனத்திலும் அந்வயம் வேண்டாவோ என்ன இவ்வளவும் வர இதுக்கு முன்பே நிர் ஹேதுகமாக விஷயீ கரித்த பின்பு நீயே செய்து அருள வேணும்-
———–
மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காயன்று மாயப் போர் பண்ணி
நீறு செய்த எந்தாய்! நிலம் கீண்ட அம்மானே!
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
ஏறி வீற்றிருந்தாய்! உனை எங்கு எய்தக் கூவுவனே?–5-7-4-
கேவலம் கிருபையாலே தாழ்ந்த தலையிலே நின்றாயே –-ஐவர்க்காய் –-அவர்களுக்குத் தன்னை வேண்டியவாறு உபயோகப்படுத்திக் கொள்ள வைத்தபடி.–மாயப்போர் தேர்ப்பாகு–எந்தாய் –-எந்தையே! பாண்டவர்களுக்காகத் துரியோதனாதியர்களை அழித்ததும் தம் பேறாக இருக்கிறபடி.
பிரளயம் கொண்ட இப்பூமிக்கு என்ன தக்கோர்மை இருந்தது நீ செய்வதற்கு?
‘எடுக்க வேணும்’ என்ற விருப்பமும் இல்லாமல், செய்ந்நன்றி யறிதலும் இல்லாமல் இருக்கிற இந்தப் பூமிக்கு உதவி செய்தாயில்லையோ? –அம்மானே –‘உடைமை இழக்க ஒண்ணாது’ என்று, வெறும் உன் கிருபையாலே செய்த இத்தனை அன்றோ.
அநுஷ்டானத்தையும் அநநுஷ்டானத்தையும் விகல்பிக்கலாம்படி தெளிந்திருக்குமவர்கள்.
அநநுஷ்டானம் சாதனம் ஆகாதே அன்றோ. ‘விலக்கிய ஒழுக்கங்கள் நமக்கு இரக்ஷகம் ஆகா’ என்றிருக்குமாறு போன்று,-‘விதித்த ஒழுக்கங்களும் நமக்கு இரக்ஷகம் ஆகா’ என்றிருக்குமவர்கள். ஆனால், இவற்றைச் செய்வது என்?என்னில், சர்வேச்வரனுடைய ஆணையைச் செய்தவன் ஆகிறான்.-சிரீவரமங்கல நகர் ஏறி வீற்றிருந்தாய்-இவனும் அவர்களிலே ஒருவனாய் ஒரு சேரக் குடி ஏறி இருக்கிறபடி. ‘இவர்கள் நடுவே இருக்கப் பெற்றோமே’ என்று பெறாப்பேறு பெற்றனாய் இருக்கிறபடி.—வேறு உபாயங்களாலே அடைய முடியாதவனான உன்னை எங்கு எய்தக் கூவுவன் – நீ இவ்விருப்பு இருக்கைக்கு நான் செய்தது ஏதேனும் சாதனம் உண்டாகில் அன்றோ என்பேற்றுக்கு நான் ஏதேனும் செய்வது. என்றது,-இவ்வளவாகச் செய்த நீ இனியும் உன் கிருபையாலே செய்தருள வேணும்-
———-
எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று
கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!–5-7-5-
அவனாலே பேறு என்றிருக்குமவர் ஆகையாலே’; நீ கைவிட்ட அன்று நான் அநுஷ்டிக்கும்படி,
திருமகள் கேள்வனான உன்னோடு ஒக்க விகல்பிக்கலாம்படி இருந்தேனோ என்கிறார்.
எய்தக் கூவுதல் ஆவதே –நீ எனக்குக் கைப்படும்படியாக விரும்புதல் ஆவதே.
எனக்கு--வலி இல்லாதான் ஒருவன் தலையிலே ஒரு மலையை வைத்தாற்போலே இருக்கிறது காணும் இவர்க்கு.மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவ ஏஷ்யஸி யுக்தா ஏவம் ஆத்மானம் மத் பராயண:” -ஸ்ரீ கீதை, 9: 34-
“என்னை வணங்குவாய்” என்றால்,உபாயாந்தர பக்தி யோகம் விதித்தால் – பின்னர் இல்லை யாவரே அன்றோதான்.-இனி, பிரபலனாயிருப்பான் ஒருவன் அதனைத் தள்ளி ‘அஞ்சாதே கொள்’ என்ன வேண்டுமே அன்றோ,-ஆகையாலே, அவன், பகைவர்களை அழித்த தன்மையை அருளிச் செய்கிறார் மேல்:
எவ்வ தெவ்வத்துளாயும் ஆய் நின்று கைதவங்கள் செய்யும் கருமேனி அம்மானே –-அடியர் அல்லாதார் பக்கல் செய்வதனை, வேறு கதியற்ற வற்றவர்களாயிருக்கின்ற அடியார் பக்கலிலும் செய்யப் புக்கதோ இப்போது.-அங்கு புத்த முனியாய் அவர்கள் நடுவே புக்கு நின்று அவர்களுக்குண்டான வைதிக ஸ்ரத்தை குலைத்தீர் -இங்கு நீயே உபாய அத்யவசாய ஸ்ரத்தை குலைக்கப் பார்க்கிறீர் –கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே –
வசனங்களாலும் யுக்திகளாலும் வஞ்சகங்களைச் செய்து -தன்னுடைய வார்த்தைகளாலே அவர்களைச் சவப்பிராயராக்கி,-வைதிக சிரத்தையைப் போக்கி, அவ்வளவிலும் கேளாதார்க்கு வடிவைக் காட்டி வாய் மாளப் பண்ணினபடி
அம்மானே– சம்பந்தம் ஒருத்திருக்கச் செய்தே, நீ அவர்களை அழியச் செய்தது அடியார்களுக்காக அன்றோ?-உன்னை ஒழிய -ஒரு தெய்வம் உண்டு’ என்று இருக்கின்றவர்களை அழித்ததைப் போன்றதே அன்றோ.
உன்னை ஒழிய -‘ஒரு தெய்வம் இல்லை’ என்றிருக்கிற என்னை ஒன்று செய்யச் சொல்லுகையாவது.
“ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமே” -திருவாசிரியம், 7.-என்றாரே அன்றோ இவர்.
அவர்களுடைய வைதிக சிரத்தையை அழித்தாற்போலே இருக்கிறதாயிற்று,
சித்த சாதனத்தைப் பற்றி இருக்கின்ற தன்மையினின்றும் நெகிழ்த்துச் சாதனத்திலே மூட்டுகிற இது.
அறாச் சிரீவரமங்கல நகர் கைதொழ இருந்தாய் –-அவர்கள் நித்தியவாசம் செய்கிற ஸ்ரீ வரமங்கல நகரிலே அங்குள்ளவர்கள் அடிமை செய்ய, அதுவே தாரகமாக இருந்தாய்.——-அது நானும் கண்டேன் –-ஸ்ரீவைகுண்டத்தைக் கல விருக்கையாகவுடைய நாம் இங்கே வந்து உமக்காக இருக்க, ஒன்றும் செய்திலோமாகச் சொன்னீரே? என்ன,
இருந்தாய், அதில் தடை இல்லை, நான் அநுபவித்த அம்சத்தை இல்லை செய்கிறேன் அல்லேன்;-அநுபவித்த அம்சம் போராமல் படுகிறேன். என்றது, தேவர் செய்தருளின அம்சம் இவ்வளவு உண்டு,-அதில் குறை இல்லை, எனக்கு அவ்வளவால் போராது என்கிறார் என்றபடி.-திருவடிகளில் கைங்கரியமே யாத்திரையாகப் பெற வேண்டும் என்பது அவாய் நிலை.-வாக்ய சேஷமாகத் தலைக் கட்டுகிறது-
————–
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே!
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ உறை
வான மாமலையே! அடியேன் தொழ வந்தருளே.–5-7-6-
வாக்ய சேஷத்தால் சொல்லப்பட்ட கைங்கர்யத்தை விரும்புகிறார் இப்பாசுரத்தில்.—-ஏனமாய் நிலம் கீண்ட – ஆபத்தை அடைந்தவர்கள் அறிவிக்கையும் மிகையாம்படி அன்றோ உன்படி இருப்பது.-காத்தல் ஒருதலையானால் உன்னைப் பேணாதவன் அன்றோ என்றபடி.-சம்சார பிரளயம் கொண்ட என்னை ஸ்ரீ கிருஷ்ணனாய் எடுத்தாய்.-என் அப்பனே-பிரளயத்தாற் கொள்ளப்பட்ட பூமிக்கு உதவி செய்தது தமக்கு உதவி செய்ததாயிருக்கிறபடி.
என் அப்பனே கண்ணா –என்னைக் காப்பாற்றுவதற்கு ஏதேனும் முகம் பண்ண வேண்டுமோ?-கோலம் கொள்ள வேண்டுமோ?-(முகம் – வேறொரு பிரகாரமும்,-வராகத்தினது முகமும். கோலம் – வராகமும், அலங்காரமும்.)
என்றும் என்னை ஆளுடை வான நாயகனே –-தனக்குத் தகுதியானவரோடு இருக்கும்போதும் இவர் இடையாட்டமாயிற்று-ரக்ஷகமே- ஆராய்ந்து போருவது.
இவர் சத்தையே தொடங்கிக் கை தொட்டு நோக்கிக் கொண்டாயிற்றுப் போந்தது.
நித்ய ஸூரிகள் உடன் இருக்கும் பொழுதும் இவர் நினைவே அவனுக்கு-மணி மாணிக்கச் சுடரே –உளரான பின்பு ஓர் ஏற்றம் செய்து கொடுத்தலன்றிக்கே, அடியே பிடித்து நோக்கிக் கொண்டு போந்து,-இச்சை பிறந்தவாறே, அவ்வளவிலே நித்திய ஸூரிகளுக்கு விடும் படியையும் இவர்க்கு விட்டான்.மணி -நீல மாணிக்கம் -பத்ம- ராகம் –-சுடர் -லஷ்மி சமேதத்வாத் -தேஜஸ் -ஸ்வா பாவிக தேஜஸ் —-இரண்டு வித தேஜஸ் உண்டே –அப்ரமேயம் சீதயா உண்டே-ருசி விவசர்க்குப் பாதமே சரணாக்கும் ஔதார்யம் வானமா மலையிலே கொழுந்து விடும் –
அடியேன் தொழ வந்தருளே –சந்நிஹிதனாய் எழுந்து அருளி இருக்கிற படி கண்டேன்-நான் அடிமை செய்து வாழும்படிக்குத் தகுதியாக வந்து தோற்ற வேண்டும்.-நான் அடிமை செய்து வாழும்படிக்குத் தகுதியாக என் முன்னே நடந்து வரவேணும்-என் கண் வட்டத்திலே உலாவி நின்று நீ அடிமை கொள்ள வேண்டும்-நடந்து ஓர் இடத்தில் நின்றால் இளைப்பாற சிசிரோபசாரம் பண்ண வேண்டும் –
—————-
வந்தருளி என் னெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்
முந்தைத் தாய் தந்தையே! முழு ஏழுலகும் உண்டாய்!
செந் தொழிலவர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே.–5-7-7-
‘வந்தருளி என் நெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே’ என்பதற்கு, –சுரத்தாலே அறியும் பொருள் உண்டே –
“பட்டர், ஸ்ரீ புஷ்ப யாகம் அணித்தானவாறே, நஞ்சீயரைப் பலகாலும் இயல் கேட்டருளுவர்;
ஒரு கோடையிலே திருவீதியிலே நீரை விட்டு எழுந்தருளியிருந்து இப் பாட்டை இயல் சொல்லும் என்று சீயரை அருளிச் செய்து, தாம் இதனை அநுசந்தித்திருந்து பின்பு தாமும் இப்பாசுரத்தை இயல் சொல்லி, – சந்நிதியில் உபன்யாச உபயுக்தமாக திருப் பாசுரம் கேட்டு அருளுவாராம் –
இயமம் நியமம் முதலிய கிரமத்தாலே தியானம் செய்யத்தக்க சர்வேச்வரனை மனனம் செய்து புறம்புள்ள பராக்கை அறுத்துஅநுசந்திக்கப் புக்காலும் சுக்கான் பரல் போன்று இருக்கக்கூடிய நெஞ்சுகளைப் பதம் செய்யும்படி, தார்மிகராயிருப்பார்
இவை சில ஈரச் சொற்களைப் பொகட்டுப் போவதே!’ என்று அருளிச் செய்தார்;
நஞ்சீயர், இவ் வார்த்தையை உருத்தோறும் அருளிச் செய்வர்” என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்.
உத்தேஸ்ய வஸ்து இருந்த இடத்து ஏற இவன் தான் போக வேண்டியவனாக இருக்க,
அது பெறாவிட்டால் இருவரும் பாதிப்பாதி வழிதான் வரப்பெற்றார்களோ.
‘வந்தருளி’ என்று நெஞ்சுளுக்கிச் சொல்லுகிறாரன்றோ. -நெஞ்சு உருகி தாழ்ந்த குரலில் —
ஸ்ரீ ஆப்பான் திருவழுந்தூர் அரையர் கையிலே தாளத்தை வாங்கி ‘வந்தருளி, வந்தருளி’ என்று மேல் போகமாட்டாதே பாடுவராம்.
நெஞ்சிடம் கொண்ட’ என்றதனால்-திரவிய குணங்கள் போலே சேர்ந்தான்-அப்ருதக் சித்தம்- என்பதனைத் தெரிவித்தபடி.-திரவியமாக இருக்கச் செய்தேயும் குணங்களைப் போன்று சில பொருள்கள் சேரக் காணா நின்றோமே யன்றோ.-நித்திய ஸூரிகளுக்குத் தலையானவன் அன்றோ நித்திய சம்சாரிகளுக்குத் தலையான என் நெஞ்சு பெறுகைக்குப் பிரார்த்திக்கிறான்
ஒருநாளும் அழியாத மாதா பிதாக்கள் அன்றோ இவர்கள்.-இவைதாம் நோவு படாதொழியப் பெற்றோமே’ என்று இதனைத் தன் பேறாக நினைத்திருப்பான்.-
வேத வேள்வி அறா – வேத ஒலியும் வைதிக கார்யங்களின் கோலாகலமும் மாறாதே செல்லுகை.-பிராப்பிய விரோதியாதல் பிராபக விரோதியாதல் இல்லாமையாலே, நாய்ச்சிமாருடைய கலவியைப் போன்று நித்தியமாய்ச் செல்லா நிற்கும்.
காதலியை அணைக்கிறதற்கு வேறு ஒரு பலம் உண்டாகில் அன்றோ இதற்கு வேறு ஒரு பலம் உண்டாய் அவ்வளவிலே தலைக் கட்டுவது.-சிரீவர மங்கலநகர் அந்தம் இல் புகழாய் –
ஸ்ரீ வைகுண்டத்திலே இருந்தானாகில் புகழுக்கு முடிவு உண்டு போலே காணும்-அடியேனை அகற்றேலே – ஒரு தேசத்திலிருந்து மற்றொரு தேசத்திற்குச் சென்று நீ படைத்த புகழை,
‘வேறு ஒரு கதியும் இல்லாதவனைக் கை விட்டான்’ என்ற பழி ஆக்கித் தலைக் கட்டுவித்துக் கொள்ளப் பாராதே கொள்ளாய்.
’அகற்றேல்’ என்பது, அரைக்கணம் தாழ்க்கப் பொறுக்க மாட்டாமை சொல்லுகிற வார்த்தை.
விளம்பம் பொறாதார் சொல்லப் பெறுவர் போலே காணும்.-இறுக்கி அணைக்க கை நெகிழ அத்தையும் பொறுக்க மாட்டாமல் சொல்லும் வார்த்தை அன்றோ –-இதனுடைய இரக்ஷணத்தில் உன்னை ஒழிய வேறு ஒரு சம்பந்தம் உண்டாய்த் தான் அகற்றுகிறாயோ என்பார் ‘அடியேனை’ என்கிறார்.-வர வேணும் என்கிற நிலையும் போய் அகற்றாது ஒழிய வேணும் என்கிறார்–
————
அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகர்க் கதிர் மணிமாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே!–5-7-8-
உம்மை அகற்றுவதற்குக் காரணம் என்? இங்கு வந்து அண்மையினேனாய் நின்றது உமக்காக அன்றோ? என்ன, அடிமைக்குப் பகையாக இருக்கின்ற ஐம்புல இன்பங்கள் நடையாடுகிற சம்சாரத்திலே வைத்த போதே-என்னை அகற்றினாய் அல்லையோ -உன்னை விரும்பாதார் அகன்று போம்படிக்குத் தகுதியாகச் சர்வேச்வரனான நீ வைத்த-மாய வல் லைம் புலன்கள் –நமக்கே பழியாய் வந்து விளையப் புகா நின்றது’ என்று நீர்மை யுடையார் காரியம் செய்து தலைக் கட்டுவர்கள் என்று நினைத்துச் சொல்லுகிறார்.-பகாசுரனை அழித்தாற்போலே, என் சரீர சம்பந்தத்தைப் போக்கியருளாய் நான் வந்து கிட்டும்படி என்கிறார்.-
————–
புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்த என்
கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி தண் சிரீவர மங்கை
யுள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறு எனக்கே.–5-7-9-
கலியர் சோறு இட்ட நாட்களை எண்ணுமாறு போன்று, பண்டு உபகரித்த படிகளைச் சொல்லுகிறார்.-பகாசுரனை அழித்தாய், இரட்டை மருதமரங்களைப் பொடிபடுத்தினாய், இடபங்கள் ஏழனையும் ஊட்டியாக நெரித்தாய்.-ஒருவர்க்கும் தெரியாத ஆச்சரியமான செயல்களையுடையையாய், அவை எல்லாம் எனக்குத் தெரியும்படி செய்து, என்னை அகப்படுத்திக் கொண்டவனே!-நப்பின்னை பிராட்டிக்கு சர்வ ஸ் வதானம் பண்ணின நிரதிசய போக்யமான வடிவை எனக்குத் தந்தவனே –மற்றவர்க்கு கள்ளன் –மாயவன் -எனக்கு கள்ள மாயவன்
தெள்ளியார் – தங்கள் தங்களுக்கும் சில உண்டேயாகிலும், அவற்றைப் பொகட்டு அவன் கைபார்த்திருக்குமவர்கள்.-இவர்கள் ஞானத்துக்கு விநியோகம் இதுவே அன்றோ-அசோக வனத்திலே தனியிருப்பில் பிராட்டியின் தெளிவினைப் போன்ற தெளிவினை யுடையவர்கள்- நீ வழி தப்பினாலும் ஆஸ்ரிதரை கை விடாமல் உன்னைத் திருத்தும் தெள்ளியார் –நலியா நின்றாலும் தாய் முகமே பார்த்துக் கிடக்கும் குழந்தையைப் போலே,ஸ்ரீ விபீஷணாழ்வான் தெளிவு போன்ற தெளிவினை யுடையவர்கள்-மாதவன் பேர் சொல்லுவதே ஓத்தின் சுருக்கு.-என்றிருக்குமவர்கள்-
எனக்கு உய்யுமாறு அருளாய் அறச்சென்றற்றது கண்டாய்,– ஏஹி பஸ்யாமி சரீராணி போலே -விரஹ தாபம் தின்ற இவர் திருமேனியைக் காட்டுகிறார்-உன் திருவடிகளில் கைங்கர்யத்தைத் தந்தருள வேணும். -கைங்கரியம் என்றும், உய்கை என்றும் இரண்டு இல்லை இவர்க்கு.-விரைந்திலராகில் அவன் வைலக்ஷண்யத்தில் ஞானம் இல்லையாகக் கடவது,-இங்கே கால் பாவிற்றாகில் சம்சாரத்தின் தண்மையில் ஞானம் இல்லையாகக் கடவது.-
ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் –
1–உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம்படி செய்து தந்தாயே என்று பிள்ளான் பணிப்பர்.-ஆறு – வழி. வழி – உபாயம்.
எவ்வாறு நடந்தனை? எம்மிராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே?” என்பது, பெருமாள் திருமொழி, 9 : 2.
“இப் பொய்கைக்கு”என்பது, நாய்ச்சியார் திருமொழி, 3 : 2.– என்னக் கடவதன்றோ.
சரண் – க்ருஹமாய் அத்தால் உபேயம்.-சரண் –வீடு -புகலிடம் -பிராப்யம்-ரக்ஷிதா அர்த்தங்கள்-ஆறு உபாயம் -நின் பாதங்களே உபாய உபேயம் என்றவாறு –
ஏவகாரம்-சரண் ஆகிற நின் பாதமே எனக்கு ஆறு –
கரு முகைப் பூ மாலை சும்மாடு போலே -புருஷார்த்தமாக அனுபவிப்பதை புகல் இல்லாமல் உபாயம் ஆக்குகிறோம்
2-அன்றிக்கே. “இவை இரண்டாலும் உபாயத்தையே சொல்லுகிறது’ என்று பட்டர் அருளிச் செய்வர்.-ஆறு – உபாயம். -நெடுமாற்கு அடிமை -ஒழிவில் காலம் எல்லாம் தானே உபேயம் –
“உபாயே க்ருஹ ரக்ஷித்ரோ : ஸப்த: ஸரணம் இதி அயம் வர்த்ததே ஸாம்ப்ரதம் ச ஏஷ: உபாயார்த்தைகவாசக:” என்பது, பாஞ்சராத்திரம்.
“சரணம் என்கிற இந்தச் சொல்லானது உபாயம், வீடு, காப்பவன் என்ற இம் மூன்று பொருள்களைக் காட்டும்;-இப்போது இந்தச் சரணம் என்ற சொல் உபாயத்தையே சொல்லாநின்றது” என்கையாலே ‘சரண்’ என்பதும் உபாயம்.-ஆக, எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி செய்து தந்தாய் என்றபடி.
பட்டர் நிர்வாஹத்துக்கு “எனக்கு ஆறு தருமிடத்தில், நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்று சொற்களைக் கூட்டிக் கோடல் தகும்.
நின் பாதமே’ என்ற ஏகாரத்தாலே–மாம் ஏகம் – ஏக பதத்தை நினைக்கிறது. -இத்தால் ஸ்வீகாரத்தில் உபாய புத்தியைத் தவிர்க்கிறது –ஆத்ம சமர்ப்பணம் செய்கையாவது, இராஜ மகேந்திரன் படியை எடுத்து ‘என்னது’ என்று கொண்டு பெருமாளுக்குக் கொடுப்பாரைப் போன்று களவு வெளிப்படுதலே அன்றோ.
3-“சரண்-திருவடிகளை; ஆறாக எனக்குத் தந்தொழிந்தாய்; நின் பாதமே, எனது ஆவியும் உனதே” என்று கூட்டி-நின் பாதமே’ என்பதனைச் சபதமாக்கி நிர்வஹிப்பர் ஆப்பான் திருவழுந்தூர் அரையர்.-நின் பாதமே -உன் திருவடிகளில் ஆணை இட்டு சொல்கிறேன் -எனது ஆவியும் உனதே -என்கிறார் என்றபடி –
4-ரஷித்தா-அர்த்தம் அடுத்த பாட்டில் –மேலே அருளிச் செய்வார் –
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!– திருத் துழாய் மாலை சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் – பரிமளிதமாய்-தர்ச நீயமான திருத் துழாய் -நித்ய ஸூரிகளுக்கு அதிபதியானவனே – தேசம் அது –போக்யம் அது -குறைவற்றவர்கள் சாபேஷராய் இருக்கிறார் -நான் எங்கனே யுபகரிக்கும் படி-நீ குறைவாளன் ஆதல் -நான் அகிஞ்சனன் இன்றிக்கே ஒழிதல்-நீ உபகரியாது ஒழிதல் -நான் சேதனன் இன்றிக்கே ஒழிதல் செய்யப் பெற்றதோ-
—————–
தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன்
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே.–5-7-11-
குருகூர்ச் சடகோபன் –-ஸ்ரீகீதையில் வேறுபாடு.-தமப்பன் இல்லாத இழவு தீரச் சக்கரவர்த்திக்குப் பிள்ளையானாற் போன்று, வேதமும் இவர் பக்கல் வந்து பிறந்தது ஆதலின் ‘செய்த ஆயிரம்’ என்கிறது–வேதம் பர தசை போலே -அவதாரம் போலே திரு வாய் மொழி-வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாமல் பகவத் ருசியையுடைய இவரை விரும்பி இருக்கையாலே,-வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாதவராய் இதனை அனுபவிக்க வல்லரானவர்கள் நித்திய ஸூரிகளுக்கு அமுதாவர்.-
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply