நாராயணன் -3- பிரயோகங்கள் –
உலகளந்த – 3-பிரயோகங்கள் –-
கோவிந்தன் -3- பிரயோகங்கள் –
புண்ணியன்-2-நப்பின்னை -4- பிரயோகங்கள் –
நந்தகோபன் -5- பிரயோகங்கள் –
ஆராய்ந்து -2-பிரயோகங்கள் –புள்-4-பிரயோகங்கள் –
தூயோமாய்-5-பிரயோகங்கள் –
மாயனை -4-பிரயோகங்கள் –
மால்–3–பிரயோகங்கள் –
செல்வம்–6–பிரயோகங்கள் –
கறவை-3-பிரயோகங்கள் –
வந்து-8-பிரயோகங்கள் –
சென்று-4-பிரயோகங்கள் –
நாம்-யாம் -எங்கள் -21-பிரயோகங்கள் –
பறை–10 -பிரயோகங்கள்
நீராட்டம்–6-பிரயோகங்கள்
அடி–6 -பிரயோகங்கள்
பாடி- 18-பிரயோகங்கள் –
எழுந்திராய் -19- பிரயோகங்கள் –
எம்பாவாய் -30– பிரயோகங்கள் –
————–
நாராயணன் -3- பிரயோகங்கள் –
மார்கழி —நாராயணனே நமக்கே பறை தருவான்
கீசு —நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்
நோற்றுச் –நாற்றத் துழாய் முடி நாராயணன் –
1-மார்கழி —நாராயணனே நமக்கே பறை தருவான்–வடிவு அழகைக் கண்டு -வேறு ஒரு விஷயத்தை பற்றிற்றாக வேண்டாதே ப்ராப்த விஷயமாய் இருக்கை –அவனாலும் தன்னை அனுபவிக்கத் தாரேன் என்ன ஒண்ணாது காணும் –இத் தலை வைமுக்யம் பண்ணின வன்றும் தான் ஆபிமுக்யம் பண்ணிப் போருமவன்-(நாரங்களை அயனமாகக் கொண்டவன் உள்ளேயே இருந்து பதி கிடக்கிறான் அன்றோ )நாராயண அநுவாக ஸித்தமான வஸ்து இடைச்சிகளுக்கும் கூட ஸூலபனான படி –தேவதாந்தரங்கள் அறியாத கோப வ்ருத்தர்கள் நோன்புக்கு அங்கமாக ஜெபிக்கும் மந்த்ரமாக உபதேசிக்கையாலே சொல்லுகிறார்கள்-இன்னவும் தன்னுடைய தமப்பன் மார் சொல்லவும் கேட்டு இருக்கும் இறே –கோவர்த்தன உத்தரணாதி அதிமாநுஷ சேஷ்டிதங்களாலே சர்வேஸ்வரத்வம் பெண்களுக்கு தெரியும் படி -யாய் இறே இவ் வவதாரம் தான் இருப்பது –நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால் -என்றும் –நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -என்றும்-திண்ணம் நாரணம் -என்றும்-நாரணனை நன்கு அறிந்தேன்-என்றும்
இவ் வர்த்தத்தில் ரிஷிகளும் நாராயணா சப்தார்த்தம் -என்றும்-ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் -என்றும் ஸ்ருதியும் நாராயண பரம் ப்ரஹ்மம்-என்றும் பல விடத்திலும் சொல்லிற்று-ஓட்டொட்டியாய்-பெண்களை விடாதே இருக்குமவன் –இத்தனை நல்லது நமக்கு கிடைக்குமோ என்னில்-நாம் அல்லோம் -என்று இருக்கும் காலத்திலும் தான் ஆவேன் என்று இருக்குமவன் ஆசைப்பட்ட விஷயமே வகுத்த விஷயமாய் இருக்கிறபடி-சர்வ ஸ்வாமி யானவனே-நம்முடைய அபேஷித சம்விதானம் பண்ணுவான் –சமிதை பாதி சாவித்திரி பாதி அன்றிக்கே-தானே சென்று தலைக் கட்ட வல்லவன் என்கிற- சாதன நைரபேஷ்யம் சொல்லுகையிலே நோக்கு –
2-கீசு —நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்—நாராயணன்–முகம் தோற்றாமே நின்று-
வாத்சல்யத்தாலே ரஷிக்கக் கடவ சர்வேஸ்வரன் –மூர்த்தி –தன்னுடைய சௌசீல்யத்தாலே பிறந்தது-கேசவன் –கண்ணுக்கு தோற்ற நின்று-நம் விரோதிகளை போக்குமவன்-வாத்சல்யத்தையும் – சௌசீல்யத்தையும்- ஆஸ்ரித விரோதி நிரசனத்தையும்–பாடவும்–-கண்ணுக்குத் தோற்றாதே நின்று ரஷிக்கும் சர்வேஸ்வரன் – ஆஸ்ரித வத்சலனாய் இங்கே வந்து அவதீரணன் ஆனான்-அங்கே கேசி வந்து கிட்டினான் காண் என்கிறார்கள்-நிருபாதிக ஸ்வாமியான சர்வேஸ்வரன்-ஆஸ்ரித வத்சலனனாய் கிருஷ்ணனாய் வந்து அவதரித்த இடத்தில் கேசி வந்து நலியப் புக- அவனை கிருஷ்ணன் கொன்றான் காண் –
3-நோற்றுச் –நாற்றத் துழாய் முடி நாராயணன் –அவனுக்கு எங்களைப் போலே கதவு திறக்கப் பார்த்து இருக்க வேணுமோ –வ்யாப்திக்கு பிரயோஜனம் -வேண்டின இடத்தே -ஸ்புரிக்க வல்லனாகை அன்றோ –உகவாதாரையும் விடாதவன் உகந்த உன்னை விடுமோ –அவனுக்கு உன் பக்கல் புகுந்தால் புறப்பட வன்றோ வழி அரிது –ஜீவ த்வார வன்றோ அநு பிரவேசம் –விட்டுப் போகாதார் பேறு வன்றோ இது-உகவாதார்க்கும் சத்தையை நோக்கி உகந்தார்க்கு வத்சலனாய் இருக்குமவன் அன்றோ –ஆசைப்பட்ட உன்னை விடுமோ –
வியாப்திக்கு பிரயோஜனம் வேண்டிய இடத்தே ஸ்புரிக்க வல்லனாகை அன்றோ
(முன்பே எங்கும் வியாபித்து இருந்தாலும் எங்கும் உளன் கண்ணன் என்றதும் ஸ்புரித்துக் காட்டினான் அன்றோ )நாற்றத் துழாய் முடி நாராயணன்-ஆசைப் பட்டாரை ரஷிக்கைக்கு தோள் மாலை இட்டு இருக்கிறவன் அன்றோ(தீஷிதம் விரதம் சம்பன்னம் )–இங்கு மூன்றாவது-நாரங்கள் -ரிங் க்ஷய -அழியாத பொருள்கள் –அழியாத குணக் கடல் நிறைந்தவன்-கீழ் இரண்டும் macro minute -பஹு வ்ரீஹீ தத் புருஷ சமாஹ அர்த்தங்கள் -புறமும் உள்ளும் வியாபித்து –
—————————————————
உலகளந்த – 3-பிரயோகங்கள் –
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நமக்கே பறை தருவான் –
அம்பரமே –அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி –
1-ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நமக்கே பறை தருவான் –ஜகத் ரஷண அர்த்தமாக திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின போது ஆர்த்த ரஷணம் பண்ணப் பெறாமையாலே- பனிப்பட்டு சாய்ந்த மூங்கில் போலேயாய் அது ஆதித்ய கிரணம் பட்டு கிளம்புமா போலே-மகா பலியாலே நோவு பட்ட தேவர்கள் ஆர்த்த த்வனி கேட்ட பின்பு பேர்ந்து வளர்ந்தபடி –பிறர் கார்யம் செய்யப் பெருகையால் வளர்ந்தபடி –சதைக ரூப ரூபாய -என்கிற தத்வம் இறே-சிறுப்பது பெருப்பதாகிறது–சம்சாரிகளுடைய வ்ருத்தி ஹ்ராசாதிகள் கர்ம அனுகுணம் ஆகையாலும்- ஸ்வார்த்தமாகையாலும் – தோஷாய ஆகா நிற்கும் –ஸர்வேஸ்வரன் செயல் பரார்த்தமாகையாலும் கிருபையால் யாகையாலும் குணாயாவாம் அத்தனை இறே –உலகு அளந்த-குணாகுணம் நிரூபணம் பண்ணாதே சர்வ பிராணிகள் பக்கலிலும் திருவடிகளை வைத்த படி –வ்யாப்தியில் வரைதல் இல்லாதாப் போல் ஆய்த்து இதுவும்-வ்யாப்திக்கு கருத்து-இவற்றின் உடைய சத்தையை உண்டாக்குகைகாக – இங்கு இவற்றோட்டை ஸ்பர்சம் தனக்கு தாரகமாக இறே நினைத்து இருப்பது இவற்றுக்கு அபேஷிதம் இன்றிக்கே இருக்கச் செய்தேயும்- உறங்குகிற பிரஜையை அணைத்துக் கொண்டு கிடக்கும் மாதாவைப் போலே இவற்றோடு ஸ்பர்சம் தனக்குத் தான் உகக்கிறான் இறே-இத்தால் அஹங்கார க்ரஸ்தர் ஆனவர்களை மகா பலி அபிமானத்தின் நின்றும் பூமியை மீட்டு தன் திருவடிகளாலே அளந்து தனக்கு சேஷம் ஆக்கிக் கொண்டால் போலே இத்தால்
தனக்கு சேஷம் ஆக்கிக் கொண்டமையை சொல்லுகிறது-உத்தமன்-தன்னை அழிய மாறி ஆகிலும் பிறர் கார்யம் செய்யுமவன் ஆகையாலே உத்தமன் என்கிறது-தனக்காய் இருத்தல் செய்யாதே- தென்றலும் நிலாவும் போலே பிறர்க்கேயாய் இருத்தல் –ந தே ரூபம் ந சாகார–நிஷேதம் தன்னது என்கையைத் தவிர்க்கிறது நமக்கு -அஹமபி ந மம பாகவத ஏவாஹமஸ்மி போலே இவனுக்கும் ந தே ரூபம் –பக்தா நாம் -என்கை-
சர்வாதிகன் -என்கை –தான் நிர்ஹேதுகமாக ரஷிக்கையும்–அது தன் பேறாய் இருக்கையும் –-ஈஸ்வரர்களும் அகப்பட இவன் காலிலே வணங்கப் புகுகையாலே-இவனே பரதத்வம்-தன் திருவடிகளை கிருபையால் தன் பேறாகத் தலைகளில் வைக்கையாலே – ப்ராப்யமும் ப்ராபகமும் தானே –( பர கத ஸ்வீ காரம் )
2-அம்பரமே –அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே-பிரயோஜனாந்த பரரான தேவர்களுக்காக ஆகாச அவகாசம் எல்லாம் அடங்க ஒரு பிரதேச நியதி இல்லாதபடி
ஊடருத்து-விம்ம வளந்த –இத்தால் நிருபாதிக ரஷகன் ஆகையாலே-ரஷகத்வமே விளை நீராக வளர்ந்த படி –உறங்குகிற பிரஜையை-தழுவிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே
இருந்ததே குடியாக எல்லார் தலையிலும் ஊர் எண்ணெய் வார்த்தாப் போலே திருவடிகளை குளிர வைத்தபடி –நமக்கு சிரோ பூஷணமான திருவடிகளை இட்டு காடும் ஓடையும் அளப்பதே இது ஒரு வாத்சல்யமே -என்று வாத்சல்யத்துக்கு தோற்கை –உம்பர் கோமானே –
இச் செயலால் தேவ ஜாதியை எழுதிக் கொண்டவனே-நித்ய ஸூரிகளை என்னவுமாம்
அதாவது நமக்கு சிரோ பூஷணமான திருவடிகளை இட்டு காடும் ஓடையும் அளப்பதே
இது ஒரு வாத்சல்யமே -என்று வாத்சல்யத்துக்கு தோற்கை –
3-அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி –தன் விபூதியை மகாபலி அபஹரிக்க நோவு பட்டு இருக்கிற அன்று-தன்னைப் பிரிந்து நாங்கள் ஆர்த்தியால் நோவு பட்ட இன்று –
ஜகத்தை மகா பலி யினுடைய அபிமானத்தின் நின்றும் மீட்ட அன்று-எங்களுடைய ஸ்த்ரீத்வ அபிமானத்தின் நின்றும் மீட்ட இன்று –நாட்டுக்கு எல்லாம் தன் திருவடிகளை தூளிதானம் பண்ணின அன்று-அழகையும் சீலத்தையும் எங்களுக்கு தூளிதானம் பண்ணின இன்று-
இது இறே ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் வாமனனுக்கும் சாம்யம்-பிராட்டிமார் பூ தொடுமா போலே கூசிப் பிடிக்கும் திருவடிகளைக் கொண்டு-காடும் ஓடையும் அகப்பட அளப்பதே -என்கை –
அன்று எல்லை நடந்து மகாபலி பக்கல் நின்றும்-பூமியை மீட்டுக் கொண்டால் போலே
நடை அழகைக் காட்டி விஸ்லேஷத்தின் நின்றும்-மீட்டுக் கொண்டான் -என்கை –யடி போற்றி-தாங்கள் சொல்லும் அளவில் புறப்பட்டு சுகுமாரமான திருவடிகளைக் கொண்டு
உலாவி அருளின படி – திரு உலகு அளந்து அருளின ஆயாசம் போரும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறார்கள்-திரு உலகு அளந்து அருளின போது இரண்டடி இறே இட்டது –
இப்போது எங்களுக்காக பத்து எட்டு அடி இடுவதே –திரு உலகு அளந்து அருளின அன்று
இந்த்ரன் பிரயோஜனத்தை கொண்டு போனான்-மகா பலி ஔதார்யம் பெற்றுப் போனான்
தாங்கள் அன்று உதவப் பெறாத இழவு தீர திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் என்றுமாம் –அடி போற்றி –உன் சேவடி செவ்வி திருக் காப்பு -என்னுமவர்கள் இறே-கொண்ட கோல குறள் உருவாய் –பண்டு கொண்ட முன் -மூன்று சப்தங்கள்-கொண்ட கோலம் –
இவனே நினைத்தாலும் கொள்ள முடியாத கோலம் யாசிக்க நினைத்த பொழுதே திருமேனி சுருங்கி-கொள்ள வேணும் என்று அவனே நினைத்தாலும் அப்படி கொள்ள முடியாத அழகு–பிரகிருதி சம்பந்த நிபந்தனமான அஹங்காரம் ஜகத்தை ஆக்ரமித்த அன்று – அஹங்கார க்ரஸ்தமான இந்த லோகத்தை அஹங்காரத்தின் நின்றும் மீட்டு தன் திருவடிகளாலே அளந்து தனக்காக்கிக் கொண்டவனே – உன் திருவடிகளுக்கு மங்களா சாசனம் –
——————————————————
கோவிந்தன் -3- பிரயோகங்கள் –
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா
கறைவைகள் –குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
சிற்றம் –இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
1-கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா—ஆந்தனையும் பார்த்தால் – ந நமேயம் -என்பாரை வெல்லும் இத்தனை – அவர்களை வெல்லுமா போலே கூடினார்க்கு தான் தோற்கும் இத்தனை –கூடுவோம் அல்லோம் என்கிற அபிசந்தி இல்லாத மாத்திரத்தில் கூடுவோம் என்ன அறியாதாரையும் ரக்ஷிக்குமவன் அன்றோ-பொருந்தோம் என்னும் துர் அபிமானமும் இன்றிக்கே- ரஷித்தாலும் உபகார ஸ்ம்ருதி இன்றிக்கே இருக்கும் பசுக்களோடு பொருந்துமவனே-எல்லாரையும் வெல்லுவது குணத்தாலே –வில் பிடித்த பிடியைக் காட்டி விரோதிகளைத் தோற்பிக்கும் –அனுகூலரை அழகாலும் சீலத்தாலும் -நீர்மையாலும் -தோற்பிக்கும் –சர்வஞ்ஞரை -எத்திறம் -எண்ணப் பண்ணும் குணம் இறே-தன்னுடைய வடிவு அழகைக் காட்டி கோபிமார்களை ஜெயித்தான்-ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே சர்வ ஸ்மாத் பரனான தன்னுடைய-வை லஷண்யத்தைக் காட்டி ஆழ்வார்களை ஜெயித்தான்
இவை ஒன்றிலும் ஈடுபடாத நம் போல்வாரை ஆழ்வார்-சம்பந்தத்தை வ்யாஜீ கரித்து ஜெயிக்கும் இத்தனை –
2-கறைவைகள் –குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா-எங்களுக்கு அறிவு ஒன்றும் இல்லை என்றோம் அத்தனை போக்கி-எங்கள் புண்ணியத்துக்கு ஏதேனும் குறை சொல்லிற்று உண்டோ –எங்களுடைய அறிவொன்றும் இல்லாமைக்குப் போராதோ உன்னுடைய குறை ஒன்றும் இல்லாமை –எங்கள் குறையாலே எங்களுக்கு இழக்க வேண்டுவது –
உன்னுடைய பூர்த்தியால் ஏதேனும் குறை உண்டாகில் அன்றோ -என்கிறார்கள் –
இப் பள்ளத்துக்கு அம் மேடு நிரப்பப் போராதோ – இப் பாதளத்துக்கு அப் பர்வதம் நேர் என்கை –எங்கள் பக்கல் ஞான வ்ருத்தாதிகள் ஏதேனும் உண்டோ -நாங்கள் இழக்கைக்கு -என்று கருத்து-இத்தால்-உபாய நைரபேஷ்யம் சொல்லிற்று –நிரபேஷமான பரம பதத்தில் வந்தோமோ –எங்களை ஒழியச் செல்லாமையாலே வந்து அவதரித்து எங்களுக்கு கையாளாக இருந்த இடத்தே அன்றோ நாங்கள் அபேஷிக்கிறது –இத்தால்-சௌலப்யம் சொல்லுகிறது-நீயோ தான் சால அறிவுடையாய் இருக்கிறாய் –
உனக்கு ஸ்வரூப ஞானம் யுண்டாகில் ஸூரிகள் நடுவே இராயோ- அவனுடைய அறியாமை இறே நமக்கு பற்றாசு –நீ அயர்வறும் அமரர்கள் அதிபதி என்று உன்னை அறிந்தாய் யாகில் பசுக்களின் பின்னே போகப் பெறுவிதியோ –அவன் தன்னை அறிந்தாலும் பெற விரகு இல்லை –நம்மை அறிந்தாலும் விரகு இல்லை அவன் ஸ்வா தந்தர்யத்தையும் மறந்து
நம்முடைய அபராதத்தையும் மறைக்கை இறே நமக்குத் பெறலாவது –கன்றுகள் மேய்த்து கோவிந்த அபிஷேகம் பண்ணி கோப குலத்திலே கலந்து பரிமாறி காலிப் பின்னே வருகின்ற வேடத்தை எல்லார்க்கும் காட்டி – ஏற்கவே அறிந்து கோவர்த்தனத்தை எடுத்து ரஷித்து போருகையாலே வாத்சல்யாதிகளாலும் ஞான சக்த்யாதிகளாலும் பூர்ணன் ஆனவன் அன்றோ-கடை யாவும் கழி கோலும் கையிலே பிடித்த கண்ணிக் கயிறும் –
கற்றுத் தூளியாலே தூசரிதமான திருக் குழலும் மறித்துத் திரிகிற போது திருவடிகளில் கிடந்து ஆரவாரிக்கிற கழல்கள் சதங்கைகளும் குளிர் முகத்தின் கோடாலமுமாய் நிற்கிற உபாய வேஷத்தை கோவிந்தா என்கிறார்கள் –
3-சிற்றம் –இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா-இன்று ஒரு பிரயோஜனம் கொண்டு போக வந்தோம் அல்லோம் காண் நாங்கள் –யதா ஸ்ருத க்ராஹியாய் இருந்தாய் நீ –தாத்பர்ய ஞானம் பிள்ளையாய் இருந்ததீ –அபிதான விருத்தி ஒழிய தாத்பர்யம் போகாதே இருந்ததீ-லோக சம்வாதத்துக்கு ஓன்று சொன்னோம் அத்தனை என்று இருக்க வேண்டாவோ –அபிமத விஷயம் இருந்த இடத்தே சென்று தண்ணீர் என்றால் தண்ணீரை வார்ப்பார்களோ –சொல்லுகிற வார்த்தையையும் எங்களையும் அறிந்து அன்றோ பரிமாறுவது –நாங்கள் பறை என்றால் வேறு ஒன்றை த்வனிக்கிறது என்று அறிய வேண்டாவோ –எங்களை நீ கொள்ளுவான் அத்தனை ஒழிய நாங்கள் உன் பக்கலிலே உன்னையும் ஒழியவும் கொள்வது ஓன்று உண்டு என்று இருந்தாயோ –கோவிந்தா –
பாவ ஜ்ஞானம் இல்லாத ஜன்மம் இறே-பசுக்களின் பின்னே திரிவார்க்கு பெண்களின் வார்த்தையின் கருத்து தெரியாது இறே –பசுக்களின் பின்னே திரிவார்க்கு அவற்றுக்கு உள்ள ஞானம் இறே உள்ளது –நாலு நாள் எங்களை விட்டுக் கெட்ட கேடு என் தான் –
நீ பசுக்களையே விரும்பி எம்மைத் துறந்தால் இதுவோ பலம்-கோவிந்தா–எங்களையும் எங்கள் ப்ராப்யத்தையும் மறந்தால் போலே உன்னையும் உன் பிறவியையும் மறந்தாயீ-போகு நம்பி (6-2) என்று சொல்ல வர நிற்குமவன் அல்லையோ என்கை பசுக்களின் பின்னே திரிவார்க்குப் பெண்கள் ஸ்ரோத்ரியராகப் போமோ(ஸ்தோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் )
——————————————————
புண்ணியன்-2-
போற்றப் பறை தரும் புண்ணியனால் -10-
உன் தன்னைப் பிறவி பெறும் தனை புண்ணியம் யாம் உடையோம் -28-
1-போற்றப் பறை தரும் புண்ணியனால் -10-வெறுமையே பச்சையாக-இடைச்சிகளும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படியான தார்மிகன் –இவர்களுடைய ஆஸ்ரயணம் உபாயம் அன்று-ருசியாலே-புண்ணியன் –இவர்கள் உபாயம் அவன் தானே இறே -வெறுமையே பச்சையான இடைச்சிகளுக்கும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படி இருக்கிற தார்மிகன்
(நம்முடைய மால் பித்தன் )–புண்ணியனால்1-அத்வேஷம் மாத்திரம் உடையோருக்கு தன்னைப் பெறுகைக்கு ஸூஹ்ருதமும்–2-ருசி ஜனகனும்–3-உபாயமும்–4-ப்ராப்யனுமாய் –இருக்கிறவனாலே –கிருஷ்ணம் தர்மம் சனாதனம்–புண்ணியன் ஆகையாவது –
சர்வ விஷயத்திலும் தண்ணீர் போலே பொதுவாய் இருக்கை யாயத்து –
2-உன் தன்னைப் பிறவி பெறும் தனை புண்ணியம் யாம் உடையோம் -28-நாட்டார் ஆஸ்ரயணீயன் இருந்த இடத்தே போய் ஆஸ்ரயிப்பார்கள்-அவர்களைப் போலேயோ நாங்கள் ஆஸ்ரயணீயனான நீ தானே நாங்கள் இருந்த இடத்தே எங்களோடு சஜாதீயனாய் வந்து அவதரிக்கும் படி அன்றோ எங்கள் உடைய ஏற்றம் –புண்ணியத்தை பற்றினவர்கள் அன்றோ –சித்த சாதனத்தை பற்றினவர்களில் காட்டில் இருந்த இடத்தே சென்று ஆஸ்ரயிக்க வேண்டாத படியான ஏற்றத்தை உடையவர்கள் நாங்கள் – நினைத்த படி விநியோகம் கொள்ளலாம் படி கைப்புகுந்த உன்னை உடையோம் அன்றோ-புறம்பு உண்டான புண்ணியங்களை உன்னாலே பெறலாம் – உன்னைத் தர வல்லது உன்னில் விஞ்சினது இல்லையே-பறை தரும் புண்ணியனே இறே தன்னையும் தருவது –
பிறக்கைக்கு ஹேதுவே இறே தருகைக்கும் ஹேது-எங்கள் புண்யம் முதல் இல்லாதார்க்கு முதலும் பலிசையும் கொடுக்கும் புண்யம் காண்–
———
நப்பின்னை -4- பிரயோகங்கள் –
உந்து –நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்
குத்து –கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா
முப்பத்து —நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
மாலே–கோல விளக்கே
1-உந்து –நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்–ஸ்ரீ கும்பர் மகளே என்னாதே -மாமனாரைச் சொல்லிற்று –அதிலும் இவளுக்கு இது பிரியம் ஆகையாலே-கிருஷ்ணனுக்கு மச்சினியாய் முறையால் பால்யத்திலே இங்கேயே வளருகையாலும் –
இங்கே வாழ்க்கைப் பட்ட படியாலும் –இவர் மருமகள் என்று தன்னை நினைத்து இருக்கையாலும் –இவள் உகக்குமது ஆகையாலும்-இவள் விரும்பி இருப்பது இவருடைய சம்பந்தம் –முக்தனுக்கு சம்சாரம் போலே -இவளுக்கு பிறந்தகம் – புருஷகாரம் ஆவதற்கு கிருபை வேணும் இறே –இப்படிச் சொன்னவாறே திருவாய்ப்பாடியிலே கம்பும் காற்றையும் அகப்பட நந்தகோபாலன் மருமகள் அல்லாதார் உண்டோ-நமக்கு ஏன் என்று பேசாதே கிடந்தாள் அதுக்காக நப்பின்னாய் என்று விசேஷிக்கிறார்கள்-தங்களுடைய கிலேசம் தீர்க்கைக்கும் – தங்களுடைய ஆர்த்தி இவள் நெஞ்சிலே படுத்துகைக்காகவும்
நப்பின்னாய் -என்று பேரைச் சொல்கிறார்கள் –ஹே கிருஷ்ணா ஹே யாதவ ஹே ஸஹ என்று அர்ஜுனன் கிருஷ்ணனை அஸத் கரித்து வார்த்தை சொல்லுமா போலே –
நப்பின்னாய் -என்று சிவிட்க்கு என்கிறார்கள் –
2-குத்து –கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா-திருக் குழலில் ஸ்பர்சத்தாலே கொத்துக் கொத்தாக-அலரா நின்றுள்ள பூவை உடைத்தான குழல்-காலம் அலர்த்துமா போலே-அவனோட்டை பிரணய கலகத்தால் அலருகை –வாசம் செய் பூம் குழலாள் இறே-கேசவனையும் பிச்சேற்ற வல்ல குழலை யுடையவள் –இவள் குழல் வாருகைக்கு அக் காக்கை வருவது-பின்னை மணாளனை என்று இவளோட்டை சம்பந்தம் சொன்னாலாய்த்து-கொங்கையைத் தன மேலே வைத்துக் கிடத்தல் –கொங்கையின் மேலே தன்னை வைத்துக் கிடத்தல் –ந சாஸ்திரம் நைவ ச க்ரம-பர்யா யேண ப்ரஸூப் தாஸ்ச-(மந்தாகினி நதிக்கரையில் மடியில் மாற்றி மாற்றி சயனம் )மலராள் தனத்துள்ளான் –மலைப் பார்ஸ்வத்தைப் பற்றி ஜீவிப்பாரைப் போலே-நப்பின்னை பிராட்டி உடைய- போக உபகரணமான பக்தியை ஸ்வ விஷயத்தில் வைத்துக் கொண்டு அத்தால் விகஸித ஹ்ருதயன் ஆனவனே –
3-முப்பத்து —நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்–பூர்ணை ஆனவளே-பூர்த்தி ஆகிறது –அநுக்த சௌந்தர்ய சமுச்சயம் –சொல்லிச் சொல்லாத ஸுந்தர்யங்கள் எல்லா வற்றாலும் பூர்ணை யானவளே-ஆய்ப்பாடி வளர்ந்த நம்பியினுடைய பூர்த்திக்கும் அடியான பூர்த்தியை யுடையவளே –ஒசிந்த ஒண் மலராள் என்னுமா போலே – சம்ஸ்லேஷத்தால் வந்த துவட்சி -சம்போக ஸ்ரீ உடையவள் –ஸ்ரத்தாயா தேவோ தேவத்வம் அஸ்நுதே-என்னும்படியாய் இருக்கை –அழகு அவளாலே –குணங்கள் அவளாலே –மேன்மை அவளாலே –நீர்மை அவளாலே –நிரூபித்தால் அனைத்தும் அடங்கலும் அவள் தோயலாய் இருக்குமே –பின்னை நெடும் பணை தோள் மகிழ் பீடுடை –பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதல் -1-7-8-செப்பன்ன மென்முலை என்று தொடங்கி
இச் சுழிகளிலே அகப்பட்டவன் தப்பி ஏறினால் இறே நம் கார்யம் செய்வது-இருவரையும் திருத்துவது உபதேசத்தால் உபதேசத்தால் மீளாத போது அவனை அழகாலே திருத்தும் நம்மை அருளாலே திருத்தும் –செப்பன்ன மென்முலை-விஷய க்ராஹகமாய்- விஷய விரஹ அசஹிஷ்ணு வாய் -பகவத் விஷய பக்தியையும்-செவ்வாய்-அவனுக்கு மிகவும் போக்யமான பரம பக்தியையும் -பக்தி பழுத்து கனி போன்ற வாய்-சிறு மருங்குல்-
விஷயாந்தர வைராக்யத்தையும் உடையையாய்-நப்பின்னை நங்காய் திருவே
நப்பின்னை என்கிற திரு நாமத்தை உடையையாய்-நங்காய்-பிராப்யத்வ
புருஷகாரத்வோப யுக்த கல்யாண குண பூர்னையான பெரிய பிராட்டியாரே நீ படுக்கையில் நின்றும் எழுந்திருக்க வேணும் –
4-மாலே–கோல விளக்கே-பாடுவார் எங்கள் முகத்திலே விழித்து நாங்கள் அவர்கள் முகத்தில் விழித்துக் கொண்டு போம்படி தர்ச நீயமாய் இருபத்தொரு மங்கள தீபம் வேணும் -மங்கள தீபத்துக்கு உபய (தன்னையும் அவனையும் )பிரகாசகையான நப்பின்னைப் பிராட்டியையும் கொடுத்தான்–பகவத் அனன்யார்ஹ சேஷத்வத்தை அவனுக்கு அத்யந்தம் மனோஹரம் ஆக்குகிற–பாகவத சேஷத்வ ஞானமும் வேணும் –
———————————————
நந்தகோபன் -5- பிரயோகங்கள் –
மார்கழி –கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபன் குமரன்
நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
அம்பரமே –எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்
உந்து —நந்த கோபாலன் மருமகளே நப்ப்பின்னாய்
ஏற்ற —ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
1-மார்கழி –கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபன் குமரன்–சக்ரவர்த்தி வில் பிடிக்க பிள்ளைகள் வில் பிடித்தால் போலே-இக்குடிக்கு வேலே ஆயுதம்-பிள்ளையைச் சொல்லும் இடத்தில் நின் கையில் வேல் போற்றி -என்று இறே சொல்லுவது –ஸ்ரீ நந்த கோபர் முன்பு பசும்புல் சாவ மிதியாவராய் ஆய்த்து –நம் சிறியாத்தானைப் போலே ஆன்ரு சம்சய பிரதானராய் போருவது –பிள்ளைகள் பிறந்த பின்பு அவர்கள் மேல் உண்டான வாத்சல்யத்தாலே –அவர்களுக்கு என்ன வருகிறதோ -என்று அஞ்சி- வேலைப் புகர் எழ கடைந்து பிடிக்கத் தொடங்கினார் –தொட்டில் கீழே எறும்பு புகுரிலும் சிம்ஹத்தின் மேல் விழுமா போலே சீற்றத்தின் மிகுதியால் உதிரக் கையரானார்-ந ஹிம்ஸ்யாத் சர்வா பூதானி -என்கிற சாமான்ய விதி அக்னீ ஷோமீயம் பஸூ மாலபதே -என்கிற விசேஷத்தில் வாராது இறே-ஸ்வார்த்தமாக செய்யும் அன்று இறே நிஷித்தமாவது அத் தலைக்கு என் வருகிறதோ என்று அஞ்சிச் செய்யுமன்று தர்மமாகக் கடவது –நந்த கோபன் –நந்தாமி பஸ்யன் நபி தர்சநேந தாம் ஜராம்-பிள்ளையைக் கண்ட ப்ரீதியாலே ஆனந்தத்தை உடையவர் என்னுதல்-நாம தேயமாதல் –இப்போது இவரைச் சொல்லுவான் என் என்னில் உத்தேஸ்ய வஸ்துவை நோக்கித் தருபவர் என்னும் பிரீதியாலே நந்த கோபாலா -எழுந்திராய் என்று எழுப்பிக் கார்யம் கொள்ளலாம்படி இறே–இவர்களுக்கு அவர் விதேயமாய் இருப்பது -பிள்ளையைக் கண்டு இளகிப் பதித்து உகப்பு ஒரு வடிவு கொண்டால் போலே இருக்குமவர்
2-நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய–ஸ்ரீ நந்த கோபர் திரு மாளிகைக்கு காவலாய்
எங்களுக்கு நிர்வாஹகன் ஆனவனே –நாயகன் என்று ஸ்ரீ நந்த கோபரைச் சொல்லிற்று ஆகவுமாம் –இவர்களால் பெறுமவன் அன்றோ நாயகன் -ஆவான் –இவனை நாயகன் என்கிறது என் என்ன –பல சித்தி ஆச்சார்யனாலே ஆகையாலே -உபகாரகனை நாயகன் என்கிறார்கள்-பிரதான சேஷியைக் காட்டில் த்வார சேஷிகளே எங்களுக்கு சேஷிகள் என்கிறார்கள் –உந்தம் அடிகள் முனிவர் -என்று பிரசித்தமாம் படி ஸ்வாமிகளாய் நியமிக்கிறார் ஸ்ரீ நந்தகோபர் ஆகையால் உபய விபூதி நாயகனான கிருஷ்ணனுக்கும் நாயகர் ஆகையால்-ஸ்ரீ நந்த கோபரை-நாயகனாய் நின்ற நந்தகோபன் –நந்த கோபனுடைய-
பகவத் அனுபவ ஜனித ஆனந்த நிர்பரனாய்- சம் ஸ்ரீ தர ரஷகனான ஆச்சார்யன் உடைய-நந்த கோபனுடைய கோயில்-கிருஷ்ணன் உகப்பது பாரதந்தர்யம் ஆகையால் –ஸ்ரீ வைகுண்டத்தில் இழவு தீர -ஸ்ரீ நந்த கோபற்குப் பிள்ளையாய்-நந்தகோபன் மகன் -என்று அவரை இட்டுத் தன்னைச் சொல்லும் படி தான் பரதந்த்ரனாய் க்ருதார்த்தனான இடம் ஆகையால் அவர் அபிமானத்தில் இவன் ஒதுங்கினான் என்னும் இடம் தோற்ற
கிருஷ்ணனுடைய கோயில் என்னாதே நந்த கோபனுடைய கோயில் என்கிறது
3-அம்பரமே –எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்-எங்களுக்கு தாரக போஷக போக்யங்கள் எல்லாமான கிருஷ்ணனைப் பெற்றுத் தந்த ஸ்வாமி-எழுந்திராய் –
வாஸூதேவ சர்வம் இதி-உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லா பேறும் தானே யானவன் இறே கிருஷ்ணன் –ஏகைக பல லாபாயா சர்வ லாபாய கேசவ -என்றும் –எங்களுக்கு கிருஷ்ணனை உபகரிக்கையாலே விசேஷித்து எங்களை எழுதிக் கொண்டவனே–நந்தகோபன் குமரன் என்று உம்முடைய ஆன்ரு சம்சயத்தைக் கொண்டு
உம்முடைய பிள்ளை என்று அன்றோ நாங்கள் ஆசைப்பட்டது –வேண்டுவார்க்கு வேண்டுவது கொடுக்கிறவர் ஆகையாலும் –அறம் செய்கிறவர் ஆகையாலும்-எங்களுக்கு ஸ்வாமிகள் ஆகையாலும் நீர் தாம் கோபாலர் ஆகையாலும் ஜீவ லோக ரக்ஷணம்
ஸ்வ ஜன ரக்ஷணம் –ஸ்வ தர்ம ரக்ஷணம் பண்ணாதே உறங்கக் கடவீரோ –இவர் மகன் தூரஸ்தன் ஆனாலும் பேர் சொல்ல புடவை வழங்குகிறதும் –இனிது மறித்து நீரூட்டுகிறதும்
வேண்டு அடிசில் உண்ணும் போதுகளிலே சோறு வாங்கி இடுகிறதும் இவர் வயிற்றில் பிறப்பால் இறே ஹித புத்தி இறே பிதாவின் பக்கலில் உள்ளது –ஆத்ம ஸ்வரூபமான ஈஸ்வர முக விகாசத்தையும் தத் வர்த்தகமான போக்த்ருத்வ புத்தி நிவ்ருத்தியையும் தத்தேதுவான கைங்கர்யத்தையும் ஓர் ஒன்றையோ இவன் கொடுப்பது–தன்னுடைய ஆன்ரு சம்ச்யத்தாலே ஸுவயம் புருஷார்த்தமாக கொடா நின்றுள்ள நமக்கு வகுத்த சேஷியாய்
ஆனந்த நிர்ப்பரனாய் ஆஸ்ரித ரஷகனான ஆசார்யனே -நீ உணர வேணும் –கிருஷ்ணனைப் பெற்று தந்த நீர் குறையும் நாங்கள் பெறும்படி பாரீர் -என்கிறார்கள்–
4-உந்து —நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்–பிரதி பஷத்தைக் கண்டால் பிற்காலியாத தோள் வலியை உடையவன் – நாட்டில் நடையாடாத தோள் வலியன்-இப்போது இவர்கள் உடைய மிடுக்கைச் சொல்லிற்று தங்களுக்கு தனமான இம் மிதுனத்துக்கு காவல் உண்டு என்று தங்கள் பய நிவ்ருத்திக்காக –அங்கோர் ஆய்க் குலம் -என்று கம்சன் படைவீடான ஸ்ரீ மதுரையை நினைத்து அஞ்சினார்க்கு அஞ்ச வேண்டாத ஊர் இறே –நம்முடைய அநீதிகளை நினைத்தால் எம்பெருமான் தோள் வலியை நினைத்து பயம் கெடுமா போலே – கிருஷ்ணன் உடைய தீம்புகளை நினைத்தால் இவருடைய தோள் வலியை நினைத்து பயம் கெடலாய் இருக்கை –கம்சன் மாளிகை நிழல் கீழ் கிருஷ்ணனுக்கு
ஒரு தீங்கு வாராதபடி வளர்க்க வல்ல மிடுக்கை உடையவர் இறே –கிருஷ்ணன் தீம்பை அனுசந்தித்து அஞ்சின பெண்களுக்கு இவர் தோள் மிடுக்கை நினைத்து அச்சம் கெட்டு இருக்கலாய் இருக்கை –நந்தகோபாலன் –ஆனந்த நிர்பரனாய்-ஆஸ்ரித ரஷகனான
ஆச்சார்யன் உடைய ––ஜகத் விலஷணமான-ஞானபலத்தை உடையவனாய் –ஞானக் கை -என்னக் கடவது இறே –அஹங்காரத்துக்கு பிற்காலியாத-ஞான பலத்தை உடையவன்-
5-ஏற்ற —ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்–மிகவும் படைத்தான் –ஸ்ரீ நந்தகோபர்க்கு சம்பத்து ஸ்வயம் ஆர்ஜிதம் ஆகையால் தான் தோன்றியாய் இருக்கும் –இவர் பிறந்து படைத்தது ஆகையால் அடியுடைய ஐஸ்வர்யம் –பதிம் விசுவஸ்ய -என்கிற ஐஸ்வர்யத்தில் காட்டிலும்-ஸ்ரீ நந்தகோபர் ஐஸ்வர்யத்துக்கு இட்டுப் பிறந்தவனே-பரம பதம் போலேயும்
நாராயணத்வம் போலேயும் ஸ்வதஸ் சித்தம் அன்று இறே-கோப குலமும் கோபாலத்வமும்-
நந்தன் பெற்ற ஆனாயனுக்கு அல்லது சித்தியாதே(அந்த இரண்டுக்கும் இந்த இரண்டு
அவை இருந்த சொத்து இவை பிறந்து பெற்ற சொத்து )
——————————————————————
ஆராய்ந்து -2-பிரயோகங்கள் –
கீழ் வானம் –தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்
மாரி- மலை முழைஞ்சில் —சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் –
1-கீழ் வானம் –தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்–நம்மாலே பேறு என்று நாம் வரப் பார்த்து இருக்குமவர்கள்-
நாம் இருந்த இடத்தே வந்தது இவர்கள் செல்லாமை இறே-என்று இரங்கி நமக்கும் உகந்து அருளும் காண் – பிரணயித்வம் போனாலும் ஆர்த்த ரஷணம் தவிருமோ-அனுஷ்டியாது ஒழியுமோ ஆன பின்பு அவன் அருளுக்கு ஹேது பூதையான நீ எழுந்து இராய்-ஆந்ரு ஸம்ஸ்யம் பரோ தர்ம -என்று சொல்லி வைத்தும் அது அனுஷ்டியாதே இருக்குமோ
அவன் பக்கல் ஒரு தட்டில்லை- நம் குறை அத்தனை – கடுகப் புறப்பட வமையும்-என்கிறார்கள் –
2-மாரி- மலை முழைஞ்சில் —சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் –நீங்கள் என் பட்டி கோள்-என் செய்தி கோள் -என்கை-அதாவது
பெண்களை எழுப்புவது –வாசல் காப்பானை எழுப்புவது –ஸ்ரீ நந்த கோபர் உள்ளிட்டாரை எழுப்புவது –நம்மை எழுப்பு –அண்ணரை எழுப்பி மீளவும் நம்மை எழுப்பி போர வியசனப் பட்டி கோளே-என்று திரு உள்ளம் பற்றி கிருபை பண்ணி அருள வேணும் – –எதிர் சூழல் புக்குத் திரியுமவனுக்கு இவை எல்லாம் தன் குறையாகத் தோற்றும் இறே –வந்த கார்யம் -இப்போது சொல்லார் –சிற்றம் சிறு காலைக்கு -29-வைக்கிறார்கள்-
————————————————————
புள்-4-பிரயோகங்கள் –
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்
புள்ளின் வாய் கீண்டானை —புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
1-2-புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்–போது விடிந்தது-பஷிகள் அகப்படக் கிளம்பி இரை தேடித் போகா நின்றன — காண்-பிள்ளைப் பிள்ளை யாழ்வான்-பகவத் சமாஸ்ரயணத்துக்கு அனுகூலமான காலத்தை ஸூசிப்பிக்கிற பஷிகளின் நாதம் அல்லது-இவ்வாத்மாவுக்கு உத்தேச்யம் இல்லை என்று பணிக்கும் —என்று அருளிச் செய்வர்-மார்கழி நீராட வேணும் என்னும் த்வரையும் இன்றிக்கே-வைகி (காலம் தாழ்ந்து )எழுந்து இருக்கில் ப்ரத்யவாயமும் இன்றிக்கே காலம் உணர்த்த உணருமவை அன்றோ புட்கள் –நீங்கள் பிறந்த ஊரில் பஷிகளுக்கு உறக்கம் உண்டோ –காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்-மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ –என்று அன்றோ இருப்பது -ஆண்டாள் பிறந்த ஊரில் பக்ஷிகளுக்குத் தான் உறக்கம் உண்டோ -என்று ஆச்சான் பிள்ளை -இப்போது இவள் புள் என்கிறது -சேர்ப்பாரையில் சொல்லுகிறபடியே-ஞான அனுஷ்டங்களாலே-பகவத் சம்பந்தம் கடகரான பாகவதர்களை ஆகையால் சத்வோத்தரமான காலம் ஆனவாறே சாத்விகரான பாகவதர்கள் –பகவத் குண அனுசந்தான பூர்வகமாக பகவத் கைங்கர்ய ரூபங்களாய்- தத் தத் வர்ண ஆஸ்ரம உசிதங்களான காலிக கர்மங்களை அனுஷ்டிக்கைகாக சர்வவோதிக்கமாக எழுந்து இருந்து புறப்பட்டார்கள் –
2-புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ–புள்ளுக்கு நிர்வாஹகனான பெரிய திருவடி உண்டு –அவனுடைய கோ உண்டு -சர்வேஸ்வரன்
அவனுடைய இல் -என்னுதல்-புள் -என்று பஷியாய்-அத்தாலே பெரிய திருவடியாய் –
அவனுக்கு நிர்வாஹகனானவனுடைய கோயில் -என்னுதல் –சக்கரவர்த்தி திருமகன் திருவவதாரம் பண்ணி-இருந்ததே குடியாக அவன் அழகிலே ஈடுபட்டு செல்லா நிற்க –
சஹா பத்ன்யா விசாலாஷி நாராயண -என்று- அவர் பெரிய பெருமாளை ஆஸ்ரயிக்குமா போலே-கிருஷ்ணனையும் கும்பிடு கொள்கைக்கு ஒரு திரு முற்றம் உண்டு-புள்ளரையன்
அவனுக்கு நிரூபக தர்மம் ராமானுஜம் லஷ்மணம் பூர்வஜம் ச(சீதா பிராட்டி -இருவரையும் மாய மான் பின் அனுப்பிய பின் )அகஸ்திய ப்ராதரம்-நாராயணன் (நாரங்களை வைத்தே இவனுக்கும் )என்னுமா போலே வழியே இழியுமவர்கள் ஆகையால் பெரிய திருவடியை முன்னிடுகிறார்கள்அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே (திரு விருத்தம் -3-)-என்னக் கடவது இறே–புள்ளரையன் கோ -பெரியாழ்வார் ஸூசகம்
3-4-புள்ளின் வாய் கீண்டானை —புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்–பள்ளத்தில் மேயும் பறவை யுருக் கொண்ட கள்ள அசுரன் (பெரியாழ்வார் 2-5-4 )-
கள்ளச் சகடம் -என்னுமா போலே –மேய்க்கிற கொக்கிலே அசுரன் ஆவேசித்து நலியப் புகுந்தான் –பொதுக்கோ -என்று கீண்ட சடக்கைச் சொல்கிறது –இது இவர்களுக்கு ராவண வதம் பண்ணின படி –இத் தலைக்கு அனுமதி இறே வேண்டுவது –விரோதியைப் போக்கி தன்னைக் கொடுக்கை இறே அவன் பணி –இவனுடைய அனுமதியும் அவனுடைய ரக்ஷகத்வமும் ஸ்வரூபத்தில் புகும் அத்தனை(காக்கும் இயல்பினன் இயல்பு -ஸ்வரூபம் தானே -பிரபாவம் அல்ல-அனுமதியும் நமக்கு ஸ்வரூபம் )கர்ம ஞானங்களை சஹகாரியாகக் கொண்டு பக்தி உபாயம் என்று இருக்குமவர்கள் அன்று இறே இவர்கள் –தன்னுடைய அஞ்ஞான அசக்திகளையும்-அவனுடைய ஞான சக்த்யாதிகளையும் சஹகாரியாய்க் கொண்டு அவனே உபாயம் என்று இருக்குமவர்கள் அன்றோ இவர்கள் –புள்ளின் வாய் கீண்டானை –ஸ்வ ஆஸ்ரிதருக்கு ஸ்வ அனுபவ விரோதியான காமாதி தோஷ நிவர்தகனாய்
4-புள்ளும் சிலம்பின காண் –புட்கள் உணர்ந்த மாதரம் அன்றிக்கே-இரை தேடி சிலம்பி போயிற்றன –கீழேயும் புள்ளும் சிலம்பின் காண் -என்றது –அங்கு கூட்டில் நின்றும் சிலம்பின படி சொல்லிற்று-இங்கே கூடி வழியே போம் இடம் எல்லாம் போய் ஆஹாரார்த்தமாக சிதறின படி சொல்கிறது –புள்ளும் சிலம்பின காண் –மற்றுள்ள பாகவதர்களும் த்வரித்துக் கொண்டு போந்தார்கள் –
——————————————-
தூயோமாய்-3-பிரயோகங்கள் –
மாயனை —தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
நாயகனாய் —தூயோமாய் வந்தோம்
தூ மணி மாடத்து
1-மாயனை —தூய பெரு நீர் யமுனைத் துறைவனை –விரஜை போலே போந்த இடத்துக்கு ஒரு ஆறு உண்டானபடி -விட்ட வற்றை (நாட்டை -பரம பதத்தை -நதியை -விரஜையை ) மறக்கும் படியான ஆறு –பரம பதத்தில் நின்றும் வந்து அவதரிக்கைக்கு இவ் வூர் உண்டானால் போலே பரம பதத்துக்கு விரஜை போலே இவ்வூருக்கு இவ்வாறு ––தூய-1-ஸ்ரீ வசுதேவர் எழுந்து அருளுவித்துக் கொண்டு போகிற போது பாங்காக வற்றிக் கொடுத்த படி –2-ஸ்ரீ கிருஷ்ணனும் பெண்களும் மாறி மாறிப் கொப்பளிக்கையால் வந்த தூய்மை ஆகவுமாம் –3-நீரில் தெளிவை சொல்லிற்று ஆகவுமாம்-அடி அறிவார் கூடப் போந்து கருத்து அறிந்து கார்யம் நடத்துமா போலே –திருவடி திருவனந்த ஆழ்வான் போலே கருத்து அறிந்து
அவ் விருளிலே கிருஷ்ணனை எழுந்து அருளுவித்துக் கொண்டு போக முழங்கால் மட்டாக வற்றிக் கொடுத்த சுத்தியைச் சொல்கிறது-யமுனாஞ்சாதி கம்பீராம் நானாவர்த்த சஷாகுலாம் வஸூ தேவோ வஹான் கிருஷ்ணம் ஜானு மாத்ரோத கோயயவ்-என்ற ஸ்ரீவிஷ்ணுபுராண வசநம்-பிராட்டி சரணம் புகவும் ராவண பயத்தால் அஞ்சி இருந்த கோதாவரி போல் அன்றிக்கே கம்சன் மாளிகை நிழல் கீழே வற்றிக் கொடுத்த படி–ப்ராயேண தேவி பவ தீவ்யபதேச யோகாத்
கோதாவரி ஜகதிதம் பயஸா புநீதே|
யஸ்யாம் ஸமேத்ய ஸமயேஷு சிரம் நிவாஸாத்
பாகீரதி ப்ரப்ருதயோபி பவந்தி புண்யா: || .-ஸ்ரீ கோதா ஸ்துதி -12.அம்மா கோதா தேவியே! உன் பெயரை வஹித்த ஸம்பந்தத்தாலும், பாக்யத்தாலும் கோதாவரீ நதி
இவ்வுலகத்தைத் தன் தீர்த்தத்தால் மிகவும் புண்யமாக(சுத்தமாக)ச் செய்கிறாள்.)
2-தூயோமாய் வந்து நாம் – அங்குத்தைக்கு நாம் யோக்யரோ அயோக்யரோ என்று பாராதே-
இருந்தபடியே வந்து –இருந்தபடியே-வருகைக்கு மேற்பட சுத்தி தேட வேண்டா இறே-
ஸ்ரீ மான் என்றது இறே இருந்த படியே வந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வானை-அவனே உபாயம் என்று இருக்கிற நாம்-அவன் வர இருக்கக் கடவ நாம் வந்து-முறை கெட வருவான் என் என்னில்-உபாயத்தில் துணிவு புறப்பட ஒட்டாதது போலே- உபேயத்தில் த்வரை முறை பார்த்து இருக்க ஒட்டாது இறே-தூயோமாய்-இடைச்சிகள் தூய்மை இறே –
தலை இருக்க உடம்பு கழுவியும் -உடம்பு இருக்க தலை கழுவியும் போருவர்கள் இறே
பகவத் சம்பந்தம் ஒழிய தனக்கு ஒரு சுத்தி சம்பதிக்கையாவது அசுத்தனாய் விடுகை இறே –
அவனுடைய சம்பந்தத்தை அனுசந்திக்கை ஒழிய தனக்கு ஒரு சுத்தி இல்லையே –
(தன்னால் வரும் நன்மை விலைப்பால் போலே -அவனால் வரும் நன்மை முலைப்பால் போல் அன்றோ )விபீஷணன் கடலிலே ஒரு முழுக்கு இட்டு இன்று இறே வந்தது –
அர்ஜுனன் யுத்தத்தின் நடுவே முழுக்கு இட்டு இன்று இறே சரம ஸ்லோகம் கேட்டது –
திரௌபதி முழுகி யன்றே பிரபத்தி பண்ணிற்று-தூயோமாய்–அநந்ய பிரயோஜனத்தை சொல்லிற்று ஆகவுமாம்–நாம்–க்ரம பிராப்தி பற்றாத நாம்
3-தூ மலர் – மிக்க சீர் தொண்டர் இட்ட பூம் துளவம்-என்றும் சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி -என்றும்- அநந்ய பிரயோஜனமான பூ விறே—பிரயோஜனத்தை கணிசியாது இட்ட மலர்–பத்ரம் புஷ்ப்பம்-த்ரவ்ய தார தம்யம் பார்ப்பது இல்லை – இடுகிறவன் நெஞ்சிலே ஈரமே பார்ப்பது – எல்லாம் கூட அஸ்நாமி இறே
4-நாயகனாய் —தூயோமாய் வந்தோம்–நாங்கள் ஆராய வேண்டும் படி வந்தவர்கள் அல்லோம் —உனக்கு அங்கன் பயப்பட வேண்டும் படி பாவ தோஷம் இல்லை-எங்கள் தலையிலும் ஒன்றும் கிடக்க வந்தோமும் அல்லோம் –அவனுடைய ரக்ஷையும் அவனுடைய பிரயோஜனமும் ஒழிய-ஸ்வ யத்னமாதல்-ஸ்வ பிரயோஜனமாதல் பற்ற வந்தோமும் அல்லோம் –உபயாந்தரங்களைக் கொண்டு பெறுவாரும் அல்லோம் – பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு அகல்வாரும் அல்லோம் –திருவடி -திருவாழி மோதிரமும் -தன் வடிவும் காட்டாதே மிடற்று ஓசை காட்டி விசுவசித்திப்பித்தால் போலே
இவர்களும் தங்கள் ஆர்த்த த்வனியைக் காட்டுகிறார்கள்-தூயோமாய் வந்தோம் –
பறை என்றது வியாஜ்ய மாதரம்-நாங்கள் அநந்ய பிரயோஜனராய் வந்தோம் –
5-தூ மணி மாடத்து—நிர் தோஷங்களான ரத்னங்களாலே செய்த மாடம் —இவர்கள் விரஹ தாபம் தீர சுபாஸ்ரயமாக அனுசந்திக்கிறார்கள் –துவளில் மா மணி மாடம் -என்று குற்றம் எடுத்துக் கழிக்க வேண்டாத-நன்மையை உடைய மணியாலே செய்த மாடம் –சம்சார கந்தம் உண்டாய் கழிந்த முக்தருக்கும்-அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்யருக்கும் உண்டான வாசி-போந்து இருக்கை –ஆழ்வான் -ஹிதாம்சத்துக்கு ஒரு வைஷ்ணவனுடைய க்ருஹ யாத்திரையை அனுசந்திக்க அமையும் -என்றால் போலே இவர்களும் இவளுடைய மாளிகையின் அழகை அனுபவிக்கிறார்கள்—திருத் தொலை வில்லி மங்கலம்- திரு நறையூர் மணி மாடக்கோயில் -திரு நாங்கூர் மணி மாட கோயில் -இவற்றை விட ஸ்ரேஷ்டம் இவள் இருக்கும் தூ மணி மாடம்
———————————–
மாயனை -4-
மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
மாயனை மன்னு வட மதுரை மைந்தனை–பரம பதத்திலே —விஸ்ருங்கல ஜ்ஞாநிகளான நித்ய ஸூரிகளாலும்-கறை காண ஒண்ணாத பரத்வத்தை உடையவனை –அயர்வறும் அமரரர்கள் அதிபதியாய்க் கொண்டு தன் ஐஸ்வர்ய வ்யாவ்ருத்தி தோற்ற இருக்கும் இருப்பை நினைத்து அது தான் வாசாம் அகோசரம் ஆகையாலே –மாயன் -என்கிறது –கிருஷ்ண அவதாரத்தில் நீர்மை தங்களுக்கு நீர்மை இல்லாமையாலே பரம பதத்திலே அனுபவிக்கக் கோலி அது தானும் நிலம் அல்லாமையாலே எத்திறம் -என்கிறார்கள் –மாயனை –ஒரூருக்கு தன்னைக் கொடுத்த நீர்மை இறே இது-ஒரு நாட்டுக்காக தன்னைக் கொடுத்துக் கொண்டு இருக்கிற நீர்மை யாகையாலே ஏற்றம் உண்டே அங்குத்தைக்கு-அன்றிக்கே நித்ய ஸூரிகளும் நேர் நின்று பார்க்க ஒண்ணாத நிரந்குச ஐஸ்வர்யத்தை உடையவன் கிடீர்- அவதரித்தான் என்று- அவதார சௌலப்யத்தை அனுசந்தித்து- அந்த ஆச்சர்யத்தை சொல்லுவதற்கு முன்பே-ஆழம் கால் பட்டு – எத்திறம் -என்கிறார்கள் -ஆகவுமாம் –மாயனை –ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் –நிரதிசய ஆனந்த பரிபூர்ணனாய் – உபய விபூதி உக்தனாய் – ஸ்ரீ யபதியாய்-ஏகார்ணவம் போலே -நித்ய விபூதியில் இருக்கும் இருப்பைச் சொல்கிறது –
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று—மாமாயன்-ஆச்சர்ய குண சேஷ்டிதங்களாலே அபலைகளான பெண்களை எழுதிக் கொண்டு அவர்களுக்கு இஷ்ட விநியோக அர்ஹமாம் படி பவ்யனாய் இருக்குமவன்-பெண்களுக்கு காணாச் சிறையாய்க் கிடக்குமவன்-மேன்மைக்கும் நீர்மைக்கும் – இரண்டுக்கும் நிதானமான ஸ்ரீ யபதித்வத்துக்கும் வாசகங்களான திருநாமங்களை அநேகம் சொன்னோம் -மஹா மாயன் -172–மாதவன் -73
வைகுண்ட 406
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-மாயனைப் –தன் கையில் அவர்கள் படுமத்தனை-பெண்கள் கையில் பட்டு நமக்குத் தோற்று –அத் தோல்வியால் நம்மை வென்று இருக்குமவனை-குவலயா பீடத்தை அழித்தால் போலே நம்முடைய ஸ்த்ரீத்வத்வ அபிமானத்தைப் போக்கி –மல்லரை நிரசித்தால் போலே –தன் தோளோடு அணைய ஒட்டாத இடையருடைய சங்கல்பத்தை போக்கி எதிரிகள் தனக்குத் தோற்றால் போலே நமக்குத் தான் தோற்று இருக்கிற ஆச்சர்ய பூதனை –
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்—மாயன் –பெண்கள் கோஷ்ட்டியில் தாழ நின்று கையைக் காலைப் பிடித்துப் பரிமாறின படி-எங்களுக்கு இஷ்ட விநியோக அர்ஹனானவன்-எங்கள் கோஷ்டியிலே தாழ நின்று கையைக் காலைப் பிடித்த படி-ஆஸ்ரித பரதந்த்ரனாய்-சுலபனாய்-ஸ்ரமஹரமான வடிவை உடையவனாய்-எம்பெருமான் நென் நேற்றே பறை தருகிறேன் என்று மன பூர்வகமாக சொல்லி வைத்தான் –
—————-
மால்–3-
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும்
நெருப்பன்ன நின்ற நெடுமாலே யுன்னை அருத்தித்து வந்தோம்
மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்
1-நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும்–இடைப் பெண்களும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படியான தார்மிகன் –நம்மால் -நம்முடைய மால் -கைக் கொள்ள துழாய் மேல் வைக்கும் வியா மோஹம் நம்மிடம் வைத்துள்ளவன் -நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் அன்பன் -கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய அன்பேயோ-குழல் இனிது யாழ் இனிது -தம் மக்கள் அழு குரல் இனிது –-கண்ணன் தனது புல்லாங்குழலை விட பக்த நாரதர் வீணை ஒலியை மிக இனியது என்றும் நம் போல்வார் அழுகையையும் ஸ்தோத்ரமாகக் கொள்ளும் மால் அன்றோ
2-நெருப்பன்ன நின்ற நெடுமாலே யுன்னை அருத்தித்து வந்தோம்–ஸ்ரீ வசுதேவர் பக்கலிலும் ஸ்ரீ தேவகியார் பக்கலிலும் திரு உள்ளம் மண்டி –-ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் –காணுமாறு இனி யுண்டு எனில் அருளே என்று அவள் பட்ட இழவுகள் எல்லாம் தீர முலைப் பால் திரு மேனியில் பாய அவளுக்கு நின்று பால சேஷ்டிதங்களைக் காட்டின வ்யாமோஹத்தை அவள் தான் காண்பதற்கு முன்னே மஞ்சங்களில் பெண்கள் கண்டு வாழும் படி வ்யாமோஹ அதிசயத்தை நெடுமாலே என்கிறது –
3-மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்––முன்பு -நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று அபரிச்சேத்யமான மேன்மையையும் நினைத்து இருந்தார்கள் –
இப்போது இத்தலைக்கு -வாத்சல்யமே ஸ்வரூபம் என்று நிலை இட்டார்கள் –
சரணாகத வத்சல -என்று ஸ்ரீ ராமாயணத்துக்கு உள்ளீடான பிரதான குணத்தை பிராட்டி நிலை இட்டாள் மகா பாரதத்துக்கு உள்ளீடான வ்யாமோஹ குணத்தை –மாலே -என்கிற சம்போதனத்தாலே இவர்கள் நிலை இட்டார்கள் –-இவர்கள் பேச்சை கேட்ட பின்பு முந்தியிலும் பெரும் பித்தனானபடி —நாங்கள் தெளிந்து நோன்பு நோற்க வாகிலும் வல்லோம் ஆனோம் –நோற்கவும் ஷமன் அன்றிக்கே நாங்கள் வந்து எழுப்பும் அளவும்
எழுந்து இருக்கவும் மாட்டாதே வ்யாமோஹம் இருந்த படி என் –மாலே –மாலை உடையவனே சொல்லாமல் அன்பே–அன்பு வேற அவன் வேற இல்லை-வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் இவர்–ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் பாரித்து –தான் என்னை முற்ற பருகினான்-இவர் விழுங்க திட–பருகினான் -த்ரவ்ய–வ்யாமோஹம் கண்டு ஆழ்வார் உருக அத்தை பருகினான் –
———
செல்வம்–6-
சீர்மல்கு ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்-1-
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய் –3-
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்
சீர்மல்கு ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்-1-லஷ்மணோ லஷ்மி சம்பன்ன–அந்தரி ஷக்த ஸ்ரீ மான்–சது நாகவர ஸ்ரீ மான்-இங்கு ஐஸ்வர்யமாக சொல்லுகிறது கிருஷ்ண ப்ரத்யாசத்தியை-அதாவது-வழி பாதி வழக்கு பாதி தர்மம் பாதி யாக-பஞ்ச லஷம் குடியில் பெண்களில் இவனால் புஜிக்கப்படாதார்-ஒருவரும் இல்லை-வலி யாகிறது -தன் செல்லாமை-வழக்கு ஆகிறது -மைத்துனமை-தர்மம் ஆகிறது -சம்சயம்-வலி பாதி -வழக்கு பாதி தர்மம் பாதியாக -கிருஷ்ணனால் எச்சில் (அனுபவிக்கப் )படுக்கை -என்னவுமாம் –
தர்மமாவது -ஆந்ரு சம்ஸ்யத்தாலே மனிச்சு கலக்கும் படி-வழக்கு மைத்துனமை கொண்டு கலக்கும் படி-வலியாவது-தன் செல்லாமை கொண்டு மேல் விழும்படி-அஹங்கார ஸ்பர்சமாதல் –தேவதாந்த்ர ஸ்பர்சமாதல் அன்றிக்கே இருக்கை –இத்தால் சொல்லிற்று ஆயத்து- அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்கள் இன்றிக்கே இருக்கை –
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய் –3-ந கச்சின் ந பராத்யதி -என்னும்
அவள் அடியாக வந்த சம்பத் ஆகையால் ஊற்று மாறாத சம்பத்து இறே –-அழிவில்லாத சம்பத்து நிரவதிமாம்படி-சேதனர் உடைய புண்ய பாப அனுரூபமாக படி விடும்-சர்வேஸ்வரன் அடியாக வந்த சம்பத்தாகில் இறே அளவு பட்டு இருப்பது-பகவத் ஸ்பர்சத்தால் வந்த சம்பத் ஊற்று உடைத்தாய் இருக்கும் இறே-ஆகையால் நீங்காத செல்வம் -என்கிறது-ஈஸ்வரன் பார்த்த இடம் போலே சாவதி அன்று இறே இவர்கள் பார்த்த இடம் – புண்யம் அடியாக வருதல் ஈஸ்வர கடாக்ஷம் அடியாக வருதல் செய்யுமவை போல் அன்று–அவனுடைய ஐஸ்வர்யத்துக்கு அடியான கடாக்ஷம் உள்ளவர்கள் இறே இவ்வைஸ்வர்யத்துக்கு அடி–பிற் காலியாமல் குருகுலத்திலே பிரவேசித்து ஸூத்த ஸத்வராய் இருந்து தன்னைப் பற்றினார்க்கு பரம பத நாதனோடு–பரம சாம்யா பத்தியைப் பண்ணிக் கொடுக்கும் சீர்மை உடையனாய்–பிரஜைக்கு முலை போலே சிஷ்யனுக்கு தாரகமான திருவடிகளைப் பற்றி பிரார்த்திக்க உபதேச பாத்ர பூதரான சிஷ்யரை பரி பூர்ணஜ்ஞானிகள் ஆக்குமவர்களாய்
சிஷ்ய விதேயராய்-நிரந்தர பகவத் குணானுபவத்தாலே-பரிபுஷ்டரான ஆசார்யர்கள் உடைய-அவிச்சின்னமான சம்பத்து பரிபூர்ணம் ஆய்த்து –இவர்கள் -கடி மலர்ப் பாவைக்கு ஒப்பு உள்ளவர்கள் அன்றோ
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ–பகவத் குணங்களை ஒரு மடை செய்து-புஜிக்கை யாகிற சம்பத்தை உடைய-நிருபாதிக பார தந்த்ரியம் உடையவளே -நீ -உன்னோடு கூடுவது எங்களுக்கு எல்லா ஐஸ்வர்யமுமான நீ கிருஷ்ண குண அனுசந்தத்தாலே புஷ்கலையான நீ –
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்–தோற்றி மாயும் சம்பத் அன்றிக்கே-நிலை நின்ற சம்பத்து –அதாகிறது –கிருஷ்ணன் திருவடிகளில் நிரந்தர சேவை-லஷ்மணா லஷ்மி சம்பன்ன போலே-கைங்கர்ய லஷ்மி இறே இவ்வாத்மாவுக்கு நிலை நின்ற சம்பத்து –லஷ்மி சம்பன்ன -என்றது-ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே என்கிறபடி-தன் வைஷ்ணவ ஸ்ரீ யாலே ஜகத்துக்கு அடைய-வைஷ்ணத்வம் உண்டாம்படி இருக்கை –கர்மத்தாலே யாதல் –தேவதாந்த்ர பஜனத்தாலே யாதல் வரும் ஐஸ்வர்யம் அந்தவத்தாய் இருக்கும்-பெருமாளை பிரியாத இளைய பெருமாள் உடைய ஐஸ்வர்யம் போலே –-கிருஷ்ணனைப் பிரிய ஷமன் அன்றிக்கே-அவனை நோக்குகிற ஐஸ்வர்யம் இறே நிரந்தர சேவை போலே நிலை நின்ற ஐஸ்வர்யம் –
செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா–கிருஷ்ணன் பின்னே பிறக்க முன்னே பொற்கால் பொலிய இட்டுப் பிறந்த ஸ்ரீ மானே –இளைய பெருமாள் பின் பிறந்து பெற்ற சம்பத்து முன் பிறந்து பெற்றவன் அன்றோ நீ –கிருஷ்ணனையும் பெண்ணையும் சேர விடும் ஏற்றம் உடையவன் அன்றோ நீ –
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்–செல்வத் திருமாலால்-உபய விபூதி ஐஸ்வர்யத்தை யுடைய ஸ்ரீ யபதியாலே-திருத் தக்க செல்வமும் -என்றபடி-செல்வத்துக்கு தகுதியானவள்-உபய விபூதி உக்தனான ஸ்ரீ ய பதியாலே –இப்பாட்டில் உபக்ரமத்திலே பிராட்டி சம்பந்தம் சொல்லி முடிவிலும் சொல்லுகையாலே த்வயத்தில் சொன்ன படியில் இங்கும் சொல்லிற்று என்கை –இங்கு
உத்தர வாக்கியத்தில் ஸ்ரீ மத் சப்தார்த்தம் சொல்லுகிறது-ரகஸ்ய த்வயத்திலும் மறைந்து கிடந்த லஷ்மீ சம்பந்தம் வாக்ய த்வயத்தாலே வெளியாகிறது –பஞ்ச லக்ஷம் பெண்களைப் பெற்ற பூர்ணனான திருமால் -பேற்றுக்கு உகப்பானும் அவனே அன்றோ
———————
கறவை-3-பிரயோகங்கள் –
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
கனைத்து இளம் கற்று எருமை கன்றுக்கு இரங்கி
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து––கறக்கும் பருவமாய் இருக்கச் செய்தே கன்று நாகாய் இருக்கை –முக்தர் பஞ்ச விம்சதி வார்ஷிகராய் கீழ் நோக்கி வயசுஸூ புகுமா போலே இவையும் இளகிப் பதித்து இருக்கும் – அவர்கள் பரத்வ அனுசந்தானத்தாலே –
இவை மனுஷத்தவே பரனான கிருஷ்ணனுடைய கர ஸ்பர்சத்தாலே
கனைத்து இளம் கற்று எருமை கன்றுக்கு இரங்கி-உதாரர் கொடுக்கப் பெறா விட்டால் (துன்பம் )படுமா போலே – ஆஸ்ரிதர் கார்யம் செய்யப் பெறா விட்டால் – ரிணம் ப்ரவ்ருத்தம் -என்னுமா போலே ஈஸ்வரன் –இளம் கன்றான எருமை என்னுதல்-இளம் கன்றை யுடைய எருமை என்னுதல் –இரண்டாலும் பாடு ஆற்றாமை சொன்ன படி-தன் முலைக் கடுப்பு கிடக்க கன்று என் படுகிறதோ -என்று இரங்கி- எம்பெருமான் ஆஸ்ரித விஷயத்தில்-ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி -என்று அவன் படும் பாட்டுக்கு நிதர்சனமாய் இருக்கிறது –எம்பெருமான் ஆஸ்ரித விஷயத்தில் இருக்குமா போலே -(கஜேந்திர மோக்ஷம் )
அவன் எருமை கறவா விட்டால் அவை படும் பாடு நாங்கள் உன்னாலே படா நின்றோம் –
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்–அறிவு கேட்டுக்கு நிதர்சனமான பசுக்கள் –அறியாமைக்குக் கன்று காலி என்கை –ஞாநேந ஹீந பஸூபிஸ் சமாந -இறே
அறிவில்லாதவரை பசுக்களோடு ஒப்பர் என்னக் கடவது -(மா முனிகள் விருத்தத்தில் பசு நர வபுஸ் -பசு பிராயர் )-நாங்கள் தேவரைப் பெருகைக்கு குருகுல வாசம் பண்ணின படி –
இவற்றை அனுவர்த்தித்தோம் -இத்தனை – எங்களைப் பார்த்தால் -பசுக்கள் -வசிஷ்டாதிகளுக்கு சத்ருசமாக போரும் – பசுக்கள் அசுக்காட்டில் -அனுகரிக்கையில் -ஆர்ஜவம் –கறவைகள் பின் சென்று-இவர்கள் சேவித்த ஆச்சார்யர்கள் இருக்கிறபடி-பசுக்களும் வசிஷ்ட பராசராதிகள் கோடியிலே யாய்-எங்கள் இளிம்பு கண்டு சிரித்து
எங்கள் ஆர்ஜவத்தை அநுகரித்து அவை வழி காட்ட அவற்றின் பின்னே திரிந்தோம் சிலர்-காலிகள் பின் சென்று என்னாதே – கறவைகள் பின் சென்று -என்றது தர்ம புத்தயா ரஷித்தது அன்று – பிரயோஜன புத்தயா செய்தது என்கைக்காக –எருதுகள் வறடுகள்
ஈற்று மறுத்தவை ரஷித்து அறியோம் –
————————————————-
வந்து-
தூயோமாய் வந்து -5-
கூவுவான் வந்து நின்றோம் -8-
தேற்றமாய் வந்து திறவேலோ -10-
தோழிமார் எல்லாரும் வந்து நின் முற்றம் -11-
தூயோமாய் வந்தோம் -16-
வந்து எங்கும் கோழி அழைத்தன காண்–சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் -18-
யாம் வந்த கார்யம் ஆராய்ந்து -23-
சிற்றம் சிறு காலே வந்து உன்னைச் சேவித்து -29-
தூயோமாய் வந்து -5-அவனே உபாயம் என்று இருக்கிற நாம்-அவன் வர இருக்கக் கடவ நாம் வந்து-முறை கெட வருவான் என் என்னில்-உபாயத்தில் துணிவு புறப்பட ஒட்டாதது போலே-
உபேயத்தில் த்வரை முறை பார்த்து இருக்க ஒட்டாது இறே-வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -என்று-அவன் வரவை நாம் செய்யக் கடவோம் –உபஸ்தேயை ரூபஸ்தித-என்றும் –பத்ம்யாமபி கமாச்சைவ-என்றும்-இட்ட நாலடிக்கும் புண் பட்டு இருக்குமவன் இறே
கூவுவான் வந்து நின்றோம் -8-தேச பிராப்தியே பிரயோஜனம் போலே -வந்து-போகை தானே உத்தேச்யமாகப் போனால் போலே உன்னைக் கூவுகை தானே பிரயோஜனமாக வந்தோம்-வந்து நின்றோம் –உத்தரம் தீர மாஸாத்ய கஸ்த ஏவ வ்யதிஷ்டித்த –என்னும் படியே
உன் பக்கலிலே வந்து நின்றோம் –கால்கள் தரையிலே பாவி நிற்கப் பெற்றோம்
தேற்றமாய் வந்து திறவேலோ -10-இவர்கள் ஆர்த்தியைக் கேட்டு துணுக் என்று வர புக்காள்- இரண்டாம் நிலத்தில் -மேல் மெத்தையில் -கிடக்கிறவள் ஆகையாலே-தடுமாறாதே தெரிந்து வந்து திற -என்கிறார்கள் –ஊராகத் திரண்டு கிடக்கிறது-படுக்கையில் கிடந்தபடி வாராதே
சதஸ்தையாய் வந்து திற
தோழிமார் எல்லாரும் வந்து நின் முற்றம் -11-இவ்வூர் அடங்க இவளுக்கு தோழிமார் உறவு -இவளுடைய சம்பந்தம் இவள் போல் அனன்ய ப்ரயோஜனராய் அது தான் தோழமை
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெரில் ஓன்று நூறாயிரமாக –
கொண்டத்துக்குக் கைக் கூலி கொடுக்கும் ஜாதி எல்லாரும் வந்து உன்னை ஒழிய வேறு பிரயோஜனம் இல்லாமல் நீயே பிரயோஜனம்
தூயோமாய் வந்தோம் -16-அவள் செய்வதை நாங்கள் செய்தோம்-நாங்கள் ஆராய வேண்டும் படி வந்தவர்கள் அல்லோம் —உனக்கு அங்கன் பயப்பட வேண்டும் படி பாவ தோஷம் இல்லை எங்கள் தலையிலும் ஒன்றும் கிடக்க வந்தோமும் அல்லோம் –
அவனுடைய ரக்ஷையும் அவனுடைய பிரயோஜனமும் ஒழிய ஸ்வ யத்னமாதல்
ஸ்வ பிரயோஜனமாதல் பற்ற வந்தோமும் அல்லோம் – உபயாந்தரங்களைக் கொண்டு பெறுவாரும் அல்லோம் –பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு அகல்வாரும் அல்லோம் –
வந்து எங்கும் கோழி அழைத்தன காண்–சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் -18-வந்து எங்கும் கோழி அழைத்தன காண் –துடை தட்டி எழுப்புவாரைப் போலே-சர்வதோதிக்கமாக கோழி கூவா நின்றன –சத்வோத்தரமான காலம் ஆனவாறே சர்வோதிக்கமாக பாகவதர் எழுந்து இருந்து பகவத் கைங்கர்யார்தமாக ஒருத்தரை ஒருவர் எழுப்பா நின்றார்கள்-வந்து திறவாய் –யந்த்ரத்தாலே திறக்க ஒண்ணாது -உன்னுடைய நடை அழகு காணும்படி வந்து திற –எங்களுக்காக நாலடி வந்தாய் என்னும் தரம் நாங்கள் பெறும்படி வந்து திறக்க வேணும் –நாலடி போய் வந்தாகிலும் திறக்க வேணும்-அவனும் நாங்களும் உன் நடை அழகைக் கண்டு வாழும் படி வர வேணும் –நம்முடைய பிரயத்னத்தை அபேஷியாமல்
நீயே வந்து ஸ்வரூப உபாய புருஷார்த்த விஷய விரோதியான தத் தத் அஞ்ஞானத்தைப் போக்காய்-
யாம் வந்த கார்யம் ஆராய்ந்து -23-அநந்ய பிரயோஜனைகளான நாங்கள் வந்த கார்யம் ஆராய்ந்து அருள வேணும் ––விரஹ துர்பல்யத்தாலே கால் நடை தாராத நாங்கள் அன்றோ வந்தோம்-இன்னம் இரண்டு அடி புகுர நின்ற வாறே – உற்றோமே யாவோம் -என்கிறோம் என்று கார்யம் இன்னது என்னும் இடத்தை கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-சிற்றம் சிறு காலைக்கு வைக்கிறார்கள்
சிற்றம் சிறு காலே வந்து உன்னைச் சேவித்து -29-இரண்டு ஸ்வரூபத்தையும் அழித்தோம்-ஸ்வரூபம் நிலையிட்டவர்கள் இறே(நாராயணனே நமக்கே பறை தருவான் என்றார்களே )
பத்ப்யாம் அபிகமாச்சைவ ஸ்நேஹ சந்தர்ச நேந ச -என்று சொல்லுகையாலே
அவன் இருந்த இடத்தே நாலு அடி இட்டுச் செல்ல இட்ட இட்ட பதம் தோறும் நெஞ்சு உளுக்கும்-பொறுக்க மாட்டான் -என்கை
————–
சென்று-
தீக்குறளைச் சென்று ஓதோம்-2-
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் -8-
செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும் -11-
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று -20-
தீக்குறளைச் சென்று ஓதோம்-2-பிறர்க்கு அநர்த்தரவஹமாக பொய் சொல்லக் கடவோம் அல்லோம்-நம்மில் நாம்-நப்பின்னை நங்காய் -என்றும்-நாயகப் பெண் பிள்ளாய் -என்றும் –
நிர்வாஹகையாக இருந்த படி இதுவோ -என்று வெறுத்து சொன்ன வார்த்தை –
பேய்ப் பெண்ணே -என்றும்-ஒருவருக்கு ஒருவர் இட்டீடு கொண்டு சொன்னவை
கிருஷ்ணன் செவிப் படுத்த கடவோம் அல்லோம்-பிறர் செய்யுமவை அறிவிக்கச் சென்றாலும் அவன் முகத்தில் தண்ணளி கண்டால் அறிவிக்க ஒண்ணாத படி இருக்குமே-சென்று ஓதோம்-அவன் தான் கலந்து நின்று அறியுமாகில் செய்யலாவது இல்லை –
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் -8-விரஹம் தின்று குறைக் கொள்ளியான நம் சரீரத்தை அவன் கண்டு புண் படும்படி அவன் இருந்த விடத்தே செல்லக் கடவோம்-அவன் வர பிராப்தமாய் இருக்க நாம் சென்று – இவர்கள் நம -சொல்லுகையும் அத்தலைக்கு மிகுதியாய் இறே இருப்பது –அத்தலை இத்தலையாய் –அவன் வருகையும் சேவிக்கையும் தவிர்த்தால்-நாம் சென்று சேவிக்கை அத்தனை அன்றோ அப்படி செய்தால் நம் கார்யம் செய்யாது ஒழியுமோ –
செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும் -11- எதிரிகள் வந்தால் பொர இருக்கை அன்றிக்கே -இருந்த இடங்களிலே சென்று பொருகை –அபியாதாப் ரஹர்த்தாச -என்ற
சக்கரவர்த்தி திரு மகனைப் போலே இவர்கள் வீரம் –எதிரிகள் வந்து ஊரை அடை மதிகள் படுத்த வெல்லுகை குற்றம் ஆனால் போலே நாங்கள் வர புறப்படாதே இருக்கை உனக்கு குற்றம் அன்றோ –
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று -20-நோவு வருவதற்கு முன்னே சென்று
ஏற்கவே ரஷிக்க கடவ நீ நோவு பட்டு வந்த எங்களை ரஷிக்க லாகாதோ –நீ சென்று உதவக் கடவ உனக்கு – உன் வாசலிலே வந்த எங்களுக்கு உதவலாகாதோ – உன் பக்கலிலே வருகை மிகை என்னுமவன் அல்லையோ – எழுதும் இன்னுமது மிகையாய் அன்றோ இருப்பது-
——–
நாம்-
நமக்கே பறை தருவான் -1-
நாமும் நம் பாவைக்கு –மலரிட்டு நாம் முடியோம் -2-
நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் -3-
நாங்களும் மார்கழி நீராட -4-
நாம் தூ மலர் தூவித் தொழுது -5-
சென்று நாம் சேவித்தால் -8-
நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால் -10-
நானே தான் ஆயிடுக -15-
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய் -21-
எம் மேல் விழியாவோ –எங்கள் மேல் நோக்குதியேல் –எங்கள் மேல் சாபம் இழிந்து -22-
யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருளேலோ -23-
யாம் பெரும் சம்மானம்–யாம் அணியோம் -27-
புண்ணியம் யாம் உடையோம் –உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -28-
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது –உற்றோமே யாவோம் —
உனக்கே நாம் ஆட் செய்வோம் –நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் -29-
1-நமக்கே பறை தருவான் -1--அத் தலையாலே பேறு என்று இருக்கிற நமக்கு -என்றபடி –
அகிஞ்சநராய்-அவன் கை பார்த்து இருக்கிற நமக்கே -என்றுமாம் –சம்பந்த ஞானம் உடைய நமக்கே –ஸ்வ ரக்ஷணத்திலே அன்வயம் இல்லாத நமக்கே (தருவான் )-நாராயணனே -என்கிற இடத்தில் அவதாரணம் –உபாய நைரபேஷ்யத்தை சொல்லுகிறது –இதில் (நமக்கே )அவதாரணம்-ப்ராப்தாவினுடைய ஆகிஞ்சன்யத்தை அறிவிக்கிறது-அவனுக்கு உபாய பாவம் ஸ்வரூப அந்தர்கதம்- அத்தலையில் நிறைவாலும் அவனே உபாயம் – உடையவனே உடைமையை நிர்வஹிப்பான்-இத்தலையில் குறைவாலும் அவனே உபாயம் –ஸ்வரூபத்தில் உணர்த்தியும் -ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தியும் யுடையவனுக்கே -என்கிறது –
2-நாமும் நம் பாவைக்கு –மலரிட்டு நாம் முடியோம் -2—அத்தலையால் பேறு என்று இருக்கிற நாமும் –நம்மில் நாம் வக்தாக்களும்-ஸ்ரோத்தாக்களுமாக -இருந்தோமே யாகிலும் –
லாப அலாபங்களில்-சம துக்க ஸூகராம் படி இருக்கிற(நப்பின்னைப் பிராட்டியும் கோபிகளில் ஒருத்தியாகவே தன்னை எண்ணிக் கொள்கிறாள் அன்றோ
நாம் அனைவரும் -கண்ணனும் இங்கே )இந்தப் பலம் நமக்கு ஒரு நாள் கை வரவற்றே என்று இருந்த நாமும்(அவனாலே அவனை அடைவோம் என்று விஸ்வசித்து உள்ள நாமும் )நமக்கும் சில க்ருத்ய அக்ருத்யங்கள் யுண்டு –-உபாய உபேயங்கள் அவனே யாகையாலே இவை அவற்றில் புகாது-வேறு ஒன்றைக் கொண்டு போது போக்க ஒண்ணாது –
ருசி கிடந்த இடத்திலே கிடக்க ஒட்டாது –அதனாலே அலமருகிற நாமும் – நாராயணனே உபாயம் என்று அறுதியிட்டு — இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன் -என்று பேற்றை அறுதியிட்டு நாமும்
நம் பாவைக்கு –நம்முடைய நோன்புக்கு--அவனையையும் அவனுடையாரையும் அழிக்கைக்குப் பண்ணும் இந்த்ரிஜித் பிரப்ருதிகள்-பௌண்டரீக வாசுதேவாதிகள் போல்வார் உடைய யாகம் போல் அன்றியே- ததீயரும் அவனும் வாழுகைக்குப் பண்ணும் யாகம் –மம ஸூதா -மமகாராம் அற்றவனையும் சொல்லப் பண்ணுமா போல் நம் பாவை –பிரயோஜனாந்த பரமான நோன்பு அன்றிக்கே(அவனையே பிள்ளையாகப் பெற சக்ரவர்தியாதிகள் செய்த யாகம் -நோன்பு -போல்வனவும் அன்றிக்கே ) கிருஷ்ண விபூதியும் உண்டாக்குகைக்கு பண்ணுகிற நோன்பு –ப்ராப்ய ருசி பரவசராய் நாம் அனுஷ்டிக்கிற நோன்புக்கு-அவனும் அவன் விபூதியும் வாழ்க்கைக்கு பகவத் விஷய மங்களா சாசன பரரான நாம்
நாம் முடியோம் –அவன் தானே வந்து சூட்டில் செய்யலாவது இல்லையே-அப்போது அலர்ந்த செவ்விப் பூவினின்றும் வண்டுகள் கால் வாங்கி-இவள் குழலிலே படியும் படி இறே திருக் குழலில் செவ்வி இருப்பது –தான் மாலை சூட என்று தொடங்கினால் -குறையும் அவன் வந்து சூட்டி அலங்கரிக்கும் இறே அதுக்கு அவனுக்கு அவகாசம் வையோம் என்கை –நாமாய் அனுஷ்டிக்கிற போதும் அவன் கொடுக்க நாம் பரிக்ரஹியாத போதும் ஸ்வ ஸ்தவாந்தர்யம் குலையாமையாலே –அது குலைக்கைக்காக நாமாய் அனுஷ்டியாது ஒழிகையும் வேணும் –அவன் தர நாம் பரிக்ரஹிக்கையும் வேணும் –நாமாய் பகவத பிராப்தி சாதனங்களாக ஞான யோக பக்தி யோகங்கள் இரண்டிலும் அந்வயியாது ஒழிகையே வேண்டுவது-அவன் தானே இவ்வாத்மா வஸ்துவை அனுபவிக்கும் போது-ஞான பக்திகள் இரண்டையும் கொடுத்து –இவற்றை நீ தவிராது ஒழிய வேணும் என்று நிர்பந்திக்கும் போது-நம்மால் செய்யலாவது ஓன்று இல்லை இறே
5-நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் -3-நாங்கள்-திரு நாமத்தை வாயால் சொல்லா விடில் தரிக்க மாட்டாத நாங்கள்-நெஞ்சு காவல் இடுகிற ஊரிலே இது நமக்கு சித்திப்பதே என்று ப்ரீதைகளாய்-தங்களை ஸ்லாக்கிக்கிறார்கள் என்னவுமாம்-பாடி மடி கோலாதே-
இது தானே பிரயோஜனமாக யுடைய நாங்கள் ––பாடி நெய் உண்ணோம் -என்றவர்கள் பாட்டு இறே-இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில்-என்று இருக்குமவர்கள் இறே-என்னையும் கொடுத்து என்னுடைமையும் கொடுத்து என்கிறார்கள்-பேர் பாடா விடில் தரியாத நாங்கள் -உபாய அம்சம் அவனேயானால் தாரகமும் அவனேயாம் அத்தனை இறே
6-நம் பாவைக்கு-ப்ராபகதயா வன்றிக்கே பிராப்ய ருசி இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமல் செய்கிற நோன்புக்கு-நாட்டார்க்கு நோன்பு என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு நம்முடைய-விரஹ தாபம் போக நாம் குளித்தால்-நோன்பு என்ற ஒரு வியாஜ்யத்தை இட்டு கிருஷ்ண சம்ச்லேஷத்தைப் பண்ணினால்-அனுஷ்டானமும் அநநுஷ்டானமும் விகல்பிக்கலாம் படி இருக்கை — அனுஷ்டித்ததாகில் சாதனம் என்று கொள்ள ஒண்ணாதே ப்ராப்ய ருசியால் வந்தது என்கை அனுஷ்டித்தது இல்லையாகில்-அவனே உபாயம் என்கையாலே பலத்தில் அழிவில்லாமை பெறுமதுவும் கிருஷணனேயாய்-பெறுவிப்பவனும் கிருஷ்ணனேயான நோன்பு -என்றுமாம் (நோன்பு -உபாயம் அல்லவே -பெறு வித்தவனுக்கு கைங்கர்ய மாத்திரமே)
7-நாங்களும் மார்கழி நீராட -4-பகவத் கைங்கர்ய ஏக போகரான நாங்களும் -நோன்பு -என்கிற-வ்யாஜ்யத்தாலே- பகவத் சம்ஸ்லேஷத்தைப் பண்ணி மகிழக் கடவோம்-அதாவது-
பகவத் அனுபவ சஹகாரிகள் இத்தனை பேர் உண்டாவதே என்று அவர்களோடு கலந்து-பகவத் அனுபவத்தைப் பண்ணி ஆனந்திக்கை-நாங்களும் கிருஷ்ணனும் சேரக் குளிக்கை உனக்கு கிடைப்பது ஒன்றோ – நாங்கள் உன் வடிவைக் கண்டு த்வனியைக் கேட்டு எங்களுடைய தாபத்தை ஆற்றிப்ரீதிகளாய்க் கொண்டு மார்கழி நீராடுகிறோம் –
இவர்களை யுகப்பிக்கை இறே இவனுக்கு ஸ்வரூபம் ப்ரகர்ஷ இஷ்யாமி யிலே இறே அந்வயம்
நாம் தூ மலர் தூவித் தொழுது -5-க்ரம பிராப்தி பற்றாத நாம்-அவனே உபாயம் என்று இருக்கிற நாம்-உபாயத்தில் துணிவு புறப்பட ஒட்டாதது போலே- உபேயத்தில் த்வரை முறை பார்த்து இருக்க ஒட்டாது இறே-
சென்று நாம் சேவித்தால் -8-ஏஹி பஸ்ய சரீராணி -என்று விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறோம்-மாசுடை யுடம்போடு தலை யுலறி-உபவாச கிருஸாம் தீ நாம்-அவன் நெஞ்சு புண்படுகைக்கு உடலாக-அவன் இருந்த இடத்தே சென்று அவன் செய்வதை நாம் செய்து விடுகிறோம்
நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால் -10–வெறுமையே பச்சையாக யுடைய நம்மால்-இடைப் பெண்களும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படியான தார்மிகன் –நம்மால் -நம்முடைய மால் -கைக் கொள்ள துழாய் மேல் வைக்கும் வியா மோஹம் நம்மிடம் வைத்துள்ளவன் -நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் அன்பன் -கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய அன்பேயோ
நானே தான் ஆயிடுக -15-இல்லாத குற்றத்தையும் சிலர் -உண்டு -என்றால் -இல்லை செய்யாதே இசைகை இறே ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் –ஒருவனுக்கு வைஷ்ணத்வம் ஆவது ஸ்வ தோஷத்தை இல்லை செய்யாதே இல்லாததையும் சிலர் உண்டு என்றால்
அத்தை இசைகையே ஸ்வரூபம் என்னும் வேதார்த்தம் சொல்லிற்று ஆகிறது
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய் -21-பெரியாழ்வாரைப் போலே யன்றோ நாங்கள் வந்தது என்கை-தம்மைப் பேணாதே அத் தலையைப் பேணுமவர்-நாங்களும் எங்களைப் பேணாதே உன் வாசலிலே வந்தோம் என்கை-நாங்களும்-உன்னுடைய நிருபாதிக சேஷித்வத்துக்கு தோற்று-தேகாத்ம அபிமானத்தையும் ஸ்வ ஸ்வாதந்தத்ர்யத்தையும் அந்ய சேஷத்வத்தையும் ஸ்வாதீன கர்த்ருத்வ போக்த்ருத்வங்களையும் பந்துக்கள் பக்கல் சிநேகத்தையும் உபாயாந்தர
உபேயாந்தரங்களையும் விட்டு இவற்றை நீ கொடுத்தாலும் பழைய துக்கத்தை நினைத்து வேண்டோம் என்று உன் திருவாசலிலே வந்து –நீயே சமஸ்தவித பிராப்யங்களும் பிராபகங்களும் என்று உன் திருவடிகளை ஸ்துதித்து மங்களா சாசனம் பண்ணி வந்து ஆஸ்ரயித்தோம் –
எம் மேல் விழியாவோ –எங்கள் மேல் நோக்குதியேல் –எங்கள் மேல் சாபம் இழிந்து -22-எம் மேல் விழியாவோ-கடாக்ஷமே தாரகமான எங்கள் மேலே கோடை யோடின பயிரிலே ஒரு பாட்டம் -என்னுமா போலே –சாதகம் வர்ஷ தாரையை ஆசைப் படுமா போலே – விழியாவோ -என்று தங்கள் மநோரதம் –எங்கள் மேல் –உன் நோக்குப் பெறாதே உறாவின எங்கள் பக்கல் –எங்கண் மேல் நோக்குதியேல்-உன் நோக்குப் பெறாதே ஒரு நீர்ச் சாவியாய் உறாவின எங்கள் பக்கலிலே-எங்கள் மேல்அவை இரண்டு கண்ணுக்கும் தங்கள் பக்கலிலே விஷயம் உண்டு –1-சேர ஒட்டாதார் பக்கலிலே பிரதாபமும்-2-தங்கள் பக்கலிலே தண்ணளியும்-சீற்றத்தோடு அருள் பெற்றவன்(3-6) ஹிரண்யன் பக்கல் சீற்றம் செல்லா நிற்க
பிரகலாதனுக்கு அனுகூலமாய் இருந்தது இறே கண்ணில் வாத்சல்யம் இருந்த படி-ஸிம்ஹம் ஆனையோடே பொரா நின்றாலும் குட்டிக்கு முலை கொடுக்குமா போலே -என்று பட்டர் இளம் சீயம் தொடர்ந்து முடுகுதலும் குழவி இடை கால் இட்டு எதிர்ந்து பொரும் -(பெரியாழ்வார்-3-5 )எங்கள் மேல் சாபம் இழிந்து-தங்கள் யாதனா சரீரம் போலேயும்
சாபோபஹதரைப் போலேயும் விஸ்லேஷ வ்யசனமே படுகிற எங்கள் துக்கம் –
அனுபவித்தே விட வேண்டுகையாலே -சாபம் -என்கிறது –1-ப்ரஹ்ம சாபம் மார்பிலே வேர்ப்பாலே போக்கலாம் –2-துர்வாசாவினுடைய சாபம் மார்பில் இருக்கிறவர்களுடைய கடாக்ஷத்தாலே போக்கலாம்-3-கௌதம சாபம் காலில் பொடியால் போக்கலாம் –
4-தக்ஷ சாபம் ஒரு தடாகத்தில் முழுக்கிட்டு போக்கலாம்-எங்கள் சாபம் போக்குகைக்கு இத்தனையும் வேணும் –-1-வேர்த்து நின்று விளையாடக் காண வேணும்(நாச்சியார் )
2-எங்கள் மேல் நோக்க வேணும்-3-பொடி தான் கொணர்ந்து பூச வேணும் (நாச்சியார் 13)
4-இப்போதே எம்மை நீராட்ட வேணும்
யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருளேலோ -23-அநந்ய பிரயோஜனைகளான நாங்கள்
வந்த கார்யம் ஆராய்ந்து அருள வேணும் –நப்பின்னைப் பிராட்டி பரிகிரமாய் இருக்க-
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம் -என்று அநந்ய கதிகளாக சொல்லுவதே -யாம் வந்த-எங்களை அறிவுதி இறே –நீ வர இருக்குமவர்கள் அன்றோ நாங்கள்
யாம் பெரும் சம்மானம்–யாம் அணிவோம் -27-யாம் பெரும் சம்மானம்-தேவகீ புத்ர ரத்னமான உன் வாசி அறிந்து பற்றி உன்னை ஆச்ரயித்தார்க்கு பேறு தப்பாது என்கிற வ்யவசாயம் யுடைய நாங்கள்-அநாதி காலம் எல்லாராலும் பட்ட பரிபவம் மறக்கும் படி அவள் கொண்டாடும்படி சொல்கிறது –யாம் அணிவோம் –வ்யதிரேகத்திலே-மலரிட்டு நாம் முடியோம் -என்கிறவர்கள் பூண்போம் -என்கிறார்கள் அவனுக்கு இவர்கள் அனுமதி பண்ணுகையே அமையும் -ஆபரணங்களுக்கு அழகு கொடுக்க வல்ல அவயவங்களிலே கிடந்து தானும் நிறம் பெற்று – பூட்டின தானும் நிறம் பெற்று போம்படி வடிவு படைத்த நாங்கள் –யாம் அணிவோம்-ஒருவரை ஒருவர் மாறி மாறி ஒப்பிக்கக் கணிசிக்கிறார்கள் –
புண்ணியம் யாம் உடையோம் –உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -28-புண்ணியம் யாம் யுடையோம் ஸாத்ய தர்மத்தைப் பற்றினோமோ ஸித்தமாய் வடிவுள்ளதொரு தர்மத்தைப் பற்றினோம் -இதுவோ எங்கள் குற்றம் –புண்ணியத்தை பற்றினவர்கள் அன்றோ –சித்த சாதனத்தை பற்றினவர்களில் காட்டில் இருந்த இடத்தே சென்று ஆஸ்ரயிக்க வேண்டாத படியான ஏற்றத்தை உடையவர்கள் நாங்கள் – நினைத்த படி விநியோகம் கொள்ளலாம் படி கைப்புகுந்த உன்னை உடையோம் அன்றோ-அவள் பெற்று (புண்ணியம்) உடையளானாள் – நாங்கள் பிறந்து (புண்ணியம் )உடையோம் ஆனோம் –
அஹோ பாக்யம் அஹோ பாக்யம் நந்த கோப விரஜவ்கசாம் -என்று ஊருக்காக பலித்தது இறே –எங்கள் ஸூஹ்ருதத்தில் பாதக ஸ்பர்சமும் இல்லை –மஹா பாதக ஸ்பர்சமும் இல்லை(உபாயாந்தர சம்பந்த பாதகமும் ஸூவ ப்ரயோஜன பிரபல விரோதியும் இல்லை )உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாது –உன்னோடு உண்டான சம்பந்தம் -உன்னாலும் விட ஒண்ணாது –எங்களாலும் விட ஒண்ணாது – இருவரும் கூட க்ருத சங்கேதர் ஆனாலும் விட ஒண்ணாது –பிரகாரியை ஒழிய பிரகாரத்துக்கு ஸ்திதி உண்டோ –ப்ருதக் ஸ்தித்யாதிகள் இல்லாத வஸ்துவை சக்திமான் என்னா உன்னால் பிரிக்கலாமோ-நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று அடியிலே சொன்னோம் -என்றபடி –நீ சர்வ பிரகார பரி பூரணன் ஆகையாலே-நாங்கள் நித்ய சாநித்யசாபேஷராய் இருக்கிற உறவு -என்றுமாம்- தயா பூர்ணனான உன்னோடு தயநீயதயா பூரணை களான -எங்களுக்கு உண்டான உறவு -என்றுமாம் –உன்னுடைய ஞானவான்களுடைய பந்தம் அல்ல காண் நாங்கள் சொல்லுகிறது —(நாராயண -உறவு இல்லையே நாங்கள் சொன்னது )
இடையிலே வந்த உறவு காண் எங்களது –அறிவில்லாதார்க்கு மறக்கலாம் அந்த உறவு –
அறிவில்லாதவர் இட்டீடு கொள்ளும் உறவு காண் இவ் உறவு-நீ மைத்துனன் நம்பி -(நாச்சியார் )-நாங்கள் மாமியார் மக்கள் -எங்கனே ஒழிக்கும் படி –இங்கு ஒழிக்க ஒழியாது
அங்கு ஒழிக்கலாம் இங்கே ஒழிக்க ஒண்ணாது காண்-ஸ்வ தந்த்ரன் தாழ்ந்த இடத்திலே பண்ணின உறவு போலேயோ பரதந்த்ரரை தாழ நின்று கையைக் காலைப் பிடித்துப் பண்ணின உறவு –
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது –உற்றோமே யாவோம் —
உனக்கே நாம் ஆட் செய்வோம் –நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் -29-குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது –எங்களை–தாஸ்யத்தில் சுவடு அறிந்து –அதில் ருசியும் த்வரையும் விளைந்து-க்ரம பிராப்தி பொறுக்க மாட்டாத படி வந்து மேல் விழுகிற எங்களை-அனந்தர க்ஷணத்துக்கு நாங்கள் இருப்புத்தோம் என்று தோற்றி இருந்ததோ என்று
தங்கள் ஆற்றாமையை அணித்துக் காட்டுகிறார்கள்-சிறிது விட்டுப் பிடிக்க அறியாத எங்களை-ஒரு படுக்கையிலே ஓக்க இருக்க பிரிவதற்கு இரங்கும் எங்களை-ஸ்வரூப ஞானம் யுண்டாய் இசைவும் யுண்டான இன்று நழுவ விடுவுதோமோ-உண்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய்-ஆசையை விளைத்த யுனக்கு அதின் கார்யம் செய்ய வேண்டாவோ-பெரும் பசியராய் இருப்பார் -உண்ணப் புக்கு கலத்திலே கேச லேஸம் கண்டால் பின்னை உண்ணாதே பொகட்டுப் போமா போலே சப்தாதிகள் போக்யாதிகளாய் இருக்கிற எங்களை வடிவு அழகைக் காட்டி உண்ணும் சோறு -முதலானவைகளை எல்லாம் நீ என்னப் பண்ணி-
ஸ்வரூப அனுரூபமான அடிமை தாராதே போகைக்கு உன் தரமோ- என்கை-உன் தரமோ நாங்கள் -நீ தான் உனக்கு உரியையோ என்னை நெகிழக்கிலும் -இத்யாதி -நப்பின்னை பிராட்டி பரிகரம் –ஆணை இட்டவர்கள் பெண் பிள்ளை அன்றோ –உன் தன்னோடு உற்றோமே ஆவோம் –நீ ஸ்வாமியாகவும்-நாங்கள் ஸ்வம் ஆகவும்-இஸ் சம்பந்தம் என்றும் சித்திக்கும் இத்தனையே எங்களுக்கு வேண்டுவது -என்கிறார்கள்-ஒரு உறவைக் குறித்து அதுவாக வேணும் என்னாது ஒழிந்தது எல்லா உறவும் நீயே யாக வேணும் -என்கைக்காக
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நல் மக்களும் – என்னக் கடவது இறே –எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும்-இற்றை அளவிலே போகாது காண் –-இப் பிறவி அளவிலே போகாது காண்-ஆஸ்ரித சஜாதீயனாய்க் கொண்டு நிலை வரம்பில் பல பிறப்பாய் சம்சார மண்டலத்தில் அநேக அவதாரம் பண்ணவுமாம்- அதில் ஒரு நிர்பந்தம் இல்லை –உன் தன்னோடு-நீ பிறவாது இருக்கும் இடத்திலும் பிறந்து திரியும் இடத்திலும்
கூடத் திரியும் அத்தனை-அங்கே உருவார் சக்கரம் சங்கு சுமந்து உன்னோடு திரிகையும் –
செறி வில்லும் செண்டு கோலும் கைக் கொண்டு இங்கே திரியவும் பெறுவோமாக வேணும் –உனக்கே நாம் ஆட்செய்வோம் –சம்பந்தம் ஒத்து இருக்கச் செய்தே-ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே விஸ்லேஷித்து இருக்கை அன்றிக்கே இளைய பெருமாளைப் போலே அடிமை செய்ய வேண்டும் ––உனக்கே –என்ற அவதாரணத்துக்கு கருத்து-நீ உகந்த அடிமை செய்வோம் –உனக்கும் எங்களுக்குமாக இருக்கும் இருப்பைத் தவிர்ந்து-தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்னுமா போலே நீ உகந்த அடிமை யாக வேணும் – அஹங்கார கர்ப்பமான அடிமை புருஷார்த்தம் ஆகாது –ஆட் செய்யும் இடத்தில்-எங்களுக்கு உறவை அறிவித்து அடிமை கொண்டு சாபேஷனாய் நிற்கிற யுனக்குச் செய்ய வேணும்-நாம்
உனக்கு அபிமதம் ஆனத்தை எங்கள் நிர்பந்தம் ஒழிய நீ ஏவ-( நாங்கள் ) -செய்த போது அன்றோ -எங்களுக்கு ஸ்வரூப சித்தி உண்டாயிற்று ஆவது-நங்காமம் –மாற்று
ஆட் கொள்ளும் இடத்திலே எங்களுக்கு ஒரு இந்திரிய சாபல்யம் நடக்கும் –
அந்த ஸுந்தர்ய ரூபமான அந்தராயத்தையும் பரிஹரிக்க வேணும் –
(நடை அழகைப் பார்க்காமல் கைங்கர்யம் அப்பாஞ்ச ஜன்யம் )நாங்கள் செய்கிற அடிமை கண்டு நீ உகந்தால்- அவ் வுகப்பு கண்டு உகக்கமது ஒழிய போக்த்ருத்வ பிரதிபத்தியும்
மதீயத்வ பிரதிபத்தியும் போஜனத்துக்கு க்ரீமி கேசங்கள் போலே பொகட வேண்டும்படி
விரோதமாய் இறே இருப்பது – அந்த விரோதிகளையும் தவிர்த்து தந்து அருள வேணும் என்கிறார்கள் –-இங்கே நமக்கே என்கிற அதிகார ஸ்வரூபம் இரண்டு பட்டாலும் விசதமாகிறதுஅநந்ய போக்யத்வமும் –அநந்ய உபாயத்வமும் –அநந்யார்ஹத்வமும் -இறே ஸ்வரூபம்-(நாராயணாயா -கைங்கர்யமே பிரதானம் என்பதால் அத்தை முதல் காட்டி அருளுகிறார் )
செல்வச் சிறுமீர்காள் –
வையத்து வாழ்வீர்காள் நாமும் –
நாங்கள் நம் பாவைக்கு –
நாங்களும் மார்கழி நீராட –
எம்மை நீராட்டு –
யாம் வந்தோம் –
யாம் பெறு ஸம்மானம்
புண்ணியம் நாமுடையோம் –
நாங்கள் என்பது
எங்களுடையது என்பதாய்
பாட்டுத் தோறும் தங்களை உறைத்துக் காட்டிற்று–
ஸ்வரூபத்திலும்
உபாயத்திலும்
பலத்திலும்
தாங்கள் இருக்கும் இருப்பை வெளியிடா நின்று கொண்டு
நமக்கே என்ற பதத்தை விவரித்த படி இறே –
————————————————————————–
பறை–10 -பிரயோகங்கள்
மார்கழி –நாராயணனே நமக்கே பறை தருவான் –
கீழ் வானம் –பாடிப் பறை கொண்டு
நோற்றுச் சுவர்க்கம் –நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்
நாயகனாய் நின்ற –அறை பறை மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
ஒருத்தி –அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில்
மாலே –சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கூடாரை –பாடிப் பறை கொண்டு
கறவைகள் –இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்
சிற்றம் –இற்றைப் பறை கொள்வான் அன்ற காண் கோவிந்தா
வங்க –அங்கு அப்பறை கொண்ட வாற்றை –
1-மார்கழி –நாராயணனே நமக்கே பறை தருவான் – –நாட்டுக்கு பறை என்று ஒரு வ்யாஜமாய்- தங்களுக்கு அபிமதமான அடிமையை யாய்த்து நினைக்கிறது-நோன்புக்கு உபகரணங்களைப் பறை என்கிறது
அவனோட்டை சம்ஸ்லேஷம் அவர்களுக்குப் பறை -நமக்கு கைங்கர்யம் –
இது இடைச்சிகள் துடைப் பேச்சு -ச கோத்ரிகள் அறியுமத்தனை -( ஸங்கேத பதம் )-உக்கமும் தட்டொளியும் -என்று நாட்டுக்கு ஒரு பேர் சொல்லிக் கிட்டின வாறே
உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்னா நின்றார்கள் இறே –இற்றைப் பறை கொள்வான் அன்று காண் -என்கையாலே–யாவதாத்மா பாவியான அடிமையை நினைக்கிறது
2-கீழ் வானம் –பாடிப் பறை கொண்டு –இதுக்கு முன்பு நாம் பெற்ற ஐஸ்வர்யம் போலேயோ-
இப்பொழுது நாம் பெற புகுகிற ஐஸ்வர்யம்–முன்பு கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் என்று நாட்டாருக்கு தெரியாதபடி நெஞ்சால் கிருஷ்ணனை அனுபவித்து-
அவ் வனுபவ ஜனித ப்ரீதியானது -புறம்பு ஒசியாதபடி அடங்கிப் போந்தோம்-
இப்போது நாட்டார் தாங்களே அனுமதி பண்ணுகையாலே-வாய்க்கால் வெட்டி நெஞ்சிலே கங்கும் கரையும்- அறப் பெருகுகிற கிருஷ்ண அனுபவ ப்ரீதிக்கு போக்கு-அணை வெட்டிவிட்டு கிருஷ்ண குணங்களை நாம் வாயார நினைத்த படி பாடக் கடவோம் –பாடுகையாகிற புருஷார்த்தத்தை லபித்து-
3-நோற்றுச் சுவர்க்கம் –நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்–போற்ற
குடிப் பிறப்பால் வந்தது(வழி வழி ஆட் செய்கின்றோம் )-உபாயம் அல்ல-பறை தரும்
இப்படி பெரியவன் நமக்குப் பறை தருமோ என்னில் – நாராயணன் அன்றோ –போற்றாதார் பாடும் புக்கு இருக்கிறவன் அன்றோ -தரும் என்னவுமாம்-நம்மால் –நம்முடைய மால் -கைக் கொள்ள துழாய் மேல் வைக்கும் வியா மோஹம் நம்மிடம் வைத்துள்ளவன் –நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் அன்பன் -கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய அன்பேயோ-வெறுமையே பச்சையான இடைச்சிகளுக்கும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படி இருக்கிற தார்மிகன்(நம்முடைய மால் பித்தன்)
4-நாயகனாய் நின்ற –அறை பறை மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்–அறை பறை–நோன்புக்கு பறை வேண்டி வந்தோம்–புருஷார்த்தம் வேண்டி வந்தோம் என்ன– என்று தங்கள் மௌக்யம் தோற்ற சொன்னார்கள்
5-ஒருத்தி –அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில்–எங்களுக்கு உத்தேச்யம் செய்ய நினைவாகில் (ஆகில் -கொடுக்க நீ திரு உள்ளம் பற்ற வேண்டுமே உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் )-இவன் எல்லாம் செய்தாலும் அவன் அல்லேன் என்றவாறே
ஸ்வ தந்த்ரனை வளைப்பிட ஒண்ணாதே-இவர்கள் அர்த்தித்தவம் அவன் ஸ்வாதந்தர்யத்தை போக்க மாட்டாதே – ஆகையால் தருதியாகில் என்கிறார்கள்-தாழ்ந்தார் உயர்ந்தாரை திரு உள்ளமாகில் செய் என்னுமா போலே-உன் அழகாலே எங்களை மயக்காதே –செய்து அருளப் பார்த்தாயாகில் -செருக்கு அடியாதே செய்து அருளப் பார்த்தாயாகில்-நெறி காட்டி நீக்குதியோ -கரு மேனி காட்டுதியோ-அழகைக் காட்டி மயக்கி கைங்கர்யம் கொடுக்காமல் – ஸ்வா தந்தர்யத்தாலும் கைங்கர்யம் கொடுக்காமல் எத்தனையேனும் மேலானவர்களை எத்தனையேனும் தாழ்ந்தவர்கள் திரு உள்ளம் ஆகில் செய்து அருள வேணும் -என்று இறே சொல்வது
6-மாலே –சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே–ஒரு மன்று அளவில் த்வநிக்கை அன்றிக்கே எங்கும் கேட்க த்வநிக்கிறது ஒரு பறை வேணும் –மிகவும் த்வநிக்கிற மத்யத்திலே இருக்கிற பறை -என்கையாலே பகவத் அனன்யார்ஹ சேஷத்வ விரோதியான–ஸ்வ ஸ்வா தந்த்ரியத்தையும்–சேஷத்வ சிஹ்னமான கைங்கர்யத்தில் ஸ்வ அதீன கர்த்ருத்வ போக்த்ருத்வங்களையும் -நிவர்ப்பிக்குமதாய் மத்யே இருக்கிற நமஸ் சப்த அர்த்தமான பாரதந்த்ர்ய ஞானமும்-உண்டாக வேணும் என்னும் இடம் சொல்லுகிறது –
7-கூடாரை –பாடிப் பறை கொண்டு—பாடுவதே பறை -ஸ்வயம் பிரயோஜனம்-பாடிப் பறை கொண்டு என்று அடியில் சொன்ன படியே-ஊரார் இசைந்த பறையைக் கொண்டு –ப்ராப்யத்தில் ப்ராபக வியவஹாரம்-பண்ணுகிறார்கள் ஆற்றாமையால் -ஊருக்கு இறே-தங்களுக்கு ப்ராப்யம் இறே-பாடுவதே இவர்களுக்கு ப்ராப்யம் இத்தை உபாயமாக த்வனிக்க ஊராருக்காகப் பாடுகிறார்கள் இப்படி-
8-கறவைகள் –இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்-விலக்காமை பார்த்து இருக்கும் நீ எங்கள் அபேஷிதம் செய்யாய் –சாது பரித்ராணாம் பண்ணுகைக்கு அன்றோ
இங்கு வந்து பண்ணி அருளிற்று –பறை தாராய் என்றவாறே-கோபீ ஜனத்தினுடைய மிகுதி குறை ஆராய்வாய் நீ அன்றோ –இவர்கள் சொல்லுகிறவற்றை ஆராய்ந்து கொடு என்றான்
அருகில் இருக்கிறவளை( நப்பின்னைப் பிராட்டியை)-நீ தாராய்-அவள் தருவது தந்தாள் –
நீ தரும் அத்தைத் தாராய் –உபாய நிஷ்டை அன்றோ அவள் தருவது –மேல் உள்ளது உன் பணி அன்றோ(அஸ்து தே -உபாய அத்யாவசிய அவள் முன்பே கொடுத்தாளே)அஸ்துதே என்று அவள் அது செய்தால் –அஹம் மோக்ஷயிஷ்யாமி -என்னக் கடவ நீ பேசாது இருக்கவோ-நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்-ஸ்வீ காரத்தால் செய்யும் அத்தனையும் நீ செய்து அனுதாபமுமம் அத் தலையிலே யாக வேணும்-ஏகம்-என்றபடியே செய்து அருளாய் -என்கை –உபாயம் தன்னைப் பொறுக்கும்-உபாயாந்தரம் இருவரையும் பொறுக்கும்
இது ஒன்றையும் பொறுக்காதே-
பறை தரு மாலை -சாற்றி அருளுகிறாள்-இறைவா நீ தாராய் பறை–நாராயணனே நமக்கே பறை தருவான்–கீழ் வானம் –பாவாய் எழுந்திராய் பறை கொண்டு-நோற்று —நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால் -கும்பகர்ண நிஹந்தாவான சக்கரவர்த்தி திருமகன் –
மாலே –சாலப் பெரும் பறையே -வாத்திய விசேஷம்-அன்று இவ்வுலகம் அளந்தாய் -பல்லாண்டு பாடுவதே பிரயோஜனம்-இன்று இப்பறை கொள்வான் வந்தோம் –குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது -இதுவே அபேஷிதம்-கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு-வள்ளல் மால் இரும் சோலை மணாளர் பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிடக் கொள்ளுமாகில் –இற்றைப் பறை கொள்வான் அன்று -இன்று மட்டும் இல்லை யாவதாத்மபாவி கைங்கர்யமே அபேஷிதம்-எட்டாம்பாட்டில் -கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு-கூடாரை வெல்லும் சீர் –பாடிப் பறை கொண்டு
பறை கொண்டதாக அன்றோ அருளிச் செய்கிறாள்-அங்கு பாடுகையாகிற உத்தேச்யம் பெற்றதாக கொண்டு –பறை கொண்டு -பறை கொள்ள -என்றே பொருள் அங்கும்-சொல் திரியினும் பொருள் திரியா வினைத்தொகை–நன்னூல் ஸூத்தரம்–இறைவா நீ தாராய் -பறை என்றதன் உட்கருத்தை விவரணம் அடுத்த பாசுரம்
9-சிற்றம் –இற்றைப் பறை கொள்வான் அன்ற காண் கோவிந்தா–இப்போது –
பறை தருவான் -என்றும் –
பாடிப் பறை கொண்டு -என்றும் –
போற்றப் பறை தரும் என்றும் –
அறை பறை என்றும் –
இற்றைப் பறை கொள்வான் என்றும்
பறை தருதியாகில் -என்றும் –
சாலப் பெறும் பறை -என்றும் –
உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு -என்றும் –
நீ தாராய் பறை -என்றும் –
ஒருக்கால் சொன்னால் போலே ஒன்பதில் கால் சொன்ன பறையை இற்றைக்கு கொள்ளுங்கோள் என்று-பறையை எடுத்துக் கொண்டு வாருங்கோள் என்றான் இவர்கள் சொன்ன சமனந்தரத்திலே நோன்புக்கு அங்கமானவற்றை கொண்டு போம் இத்தனை அல்லது வேறு நீங்கள் அடிமை என்று சொல்லுகிறவை எல்லாம் என் -என்று பறையைக் கொடுக்கப் புக –இற்றைப் பறை கொள்வான் அன்று காண் –இன்று ஒரு பிரயோஜனம் கொண்டு போக வந்தோம் அல்லோம் காண் நாங்கள் – யதா ஸ்ருத க்ராஹியாய் இருந்தாய் நீ –கெடுவாய் யதா ஸ்ருத க்ராஹியாய் இருந்தாய் –தாத்பர்ய ஞானம் பிள்ளையாய் இருந்ததீ –அபிதான விருத்தி ஒழிய தாத்பர்யம் போகாதே இருந்ததீ-லோக சம்வாதத்துக்கு ஓன்று சொன்னோம் அத்தனை என்று இருக்க வேண்டாவோ –அபிமத விஷயம் இருந்த இடத்தே சென்று தண்ணீர் என்றால் தண்ணீரை வார்ப்பார்களோ –சொல்லுகிற வார்த்தையையும் எங்களையும் அறிந்து அன்றோ பரிமாறுவது –நாங்கள் பறை என்றால் வேறு ஒன்றை த்வனிக்கிறது என்று அறிய வேண்டாவோ –இன்று ஒரு பிரயோஜனம் கொண்டு போமவர்களோ நாங்கள் –உன்னை அங்கனே விடுவுதுமோ-இவர்கள் சொல்லிற்று கேட்டு -இவர்கள் நம்மை விடார்களாய் இருந்தார்கள் –நம்மைத் தடுத்தும் வளைத்தும் கொள்வர்கள்-என்று –பறையை எடுத்துக் கொள்ளுங்கோள்-என்ன
தேஹி மே ததாமி தே -என்றுஒரு கையாலே கும்பிட்டு ஒரு கையாலே பிரயோஜனம் கொண்டு போமவர்களோ நாங்கள் –
10-வங்க –அங்கு அப்பறை கொண்ட வாற்றை –ஆஸ்ரயணீய ஸ்தலம் இருக்கிறபடி-அங்கு திருவாய்ப்பாடியிலே ஸ்ரீ நந்தகோபருடைய கோயிலிலே நப்பின்னை பிராட்டி கட்டிலிலே திவ்ய ஆஸ்தானத்திலே திவ்ய சிம்ஹாசனத்திலே இருந்த இருப்பில்–நாட்டுக்கு பறை -என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு அடிமை கொண்ட படியை –நாட்டுக்குச் சொன்ன பறையைக் கழித்து –எற்றைக்கும் என்ற பறையை –அப் பரிமாற்றத்திலே நின்று அவனை
ஸர்வ ஸ்வமும் கொண்ட படியை-நீ தாராய் என்கிறபடியே அவன் தரப் பெற்ற படி-கொண்ட பிரகாரத்தை –தங்கள் வெறுமையையும் அவன் பூர்த்தியையும் பந்தத்தையும் முன்னிட்டுத்
தப்புக்கு பொறை கொண்டு ருசியையும் த்வரையையும் காட்டி வளைப்பிட்டு அடிமையை அபேக்ஷித்துக் கொண்ட பிரகாரத்தை –ஆஸ்ரயணீய பலமும் பல சித்தி க்ரமும் சொன்ன படி –மறந்து நில்லாதே நாட்டுக்குப் பறை என்று அடிமை கொண்ட படியை-
—————————————————————–
நீராட்டம்–6-பிரயோகங்கள்
மார்கழி —நீராடப் போதுவீர் போதுமினோ
ஓங்கி –நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
ஆழி –நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
புள்ளின் வாய் –குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
முப்பத்து மூவர் –இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்
மாலே –மார்கழி நீராடுவான்
1-மார்கழி —நீராடப் போதுவீர் போதுமினோ-கிருஷ்ண விரஹத்தால் பிறந்த தாபம் ஆறும்படி குளிக்கை-இத்தால் இவர்கள் நினைக்கிறது -கிருஷ்ணனும் பெண்களும் மாறி மாறி முழுக்கிட –-கிருஷ்ண சம்ச்லேஷம்-தமிழரும் கலவியை –சுனையாடல் -என்றார்கள்-இவர்கள் தங்களுக்கு நீராட -என்று நோயாசை இறே –யமுனா ஜலம் ஒருத்தியுடைய விரஹ அக்னியாலே சுவறுமே-ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோ ஸ்மிக்ரீஷ் மே ஸீதே மிவ ஹ்ரு தம்-என்று பகவத் சம்ச்லேஷத்துக்கு கிரீஷ்ம காலத்தில் குளிர்ந்த மடுவை திருஷ்டாந்தமாக சொல்லிற்று இறே-தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தில் இறே -(10-1)-நீராட –என்றது மாறி மாறித் தங்கள் மெல்லிய தோளில் அவன் தோயவும் -இவர்கள் அவன் மார்பில் தோயவும் இறே(வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் )அதாவது –அப்பன் திருவருள் மூழ்கினாள் -(8-9-5-)-இறே
2-ஓங்கி –நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்–நாட்டார்க்கு நோன்பு என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு நம்முடைய-விரஹ தாபம் போக நாம் குளித்தால்-நோன்பு என்ற ஒரு வியாஜ்யத்தை இட்டு கிருஷ்ண சம்ச்லேஷத்தைப் பண்ணினால்-பேர் பாடி -நீராடினால் –
சம்பந்த ஜ்ஞான பூர்வகமாக-கிருஷ்ண சம்ஸ்லேஷம் பண்ணினால்-பலமும்-பல பிரதாதாவான உலகு அளந்தவன் படியாகை-சாற்றி நீராடினால்–நாட்டுக்கு புண்யம் -நமக்கு விரஹ சமனம்- வ்ருத்த ப்ரக்ருதிபிர் நித்யம் ப்ரயாதி சரயூம் நதீம் -ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே என்கை – ந மே ஸ்நானம் பஹுமதம் -இத்யாதியால் சொல்லுகிறபடியே அவனுடைய விரஹ தாபம் தீரும்–
3-ஆழி –நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்–நாங்கள் காலத்திலே போய் மார்கழி நீராடக் கடவோம்– அதுவும் முன்பே ஊராக நிச்சயித்த தொன்று அன்றோ –நாங்களும் நோன்பு நோற்றோமாய் அந்த நோன்புக்கு பலமான வர்ஷமும் உண்டாய்த்தாய்-
கிருஷ்ணனோட்டை சம்ஸ்லேஷத்தால் மகிழ்ந்து நீராடக் கடவோம்-உனக்கு பிரிய கரமாக புருஷார்த்தமாக – கிருஷ்ணனும் நாங்களும் மகிழ்ந்து குளிக்கிறோம்-நாங்களும் கிருஷ்ணனும் சேரக் குளிக்கை உனக்கு கிடைப்பது ஒன்றோ – நாங்கள் உன் வடிவைக் கண்டு த்வனியைக் கேட்டு எங்களுடைய தாபத்தை ஆற்றி ப்ரீதிகளாய்க் கொண்டு மார்கழி நீராடுகிறோம் – இவர்களை யுகப்பிக்கை இறே இவனுக்கு ஸ்வரூபம்-ப்ரகர்ஷ இஷ்யாமி யிலே இறே அந்வயம் என்னுயிர்க்கு அது காலன்-என்ன வேண்டாவே கிருஷ்ணன் கூட நீராடுகையாலே –
4-புள்ளின் வாய் –குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே–கிருஷ்ண விரஹ ஆற நீராடப் போகாதே நமக்கு கிருஷ்ண விஸ்லேஷம் பிறவாமைக்கும் கிருஷ்ண குணங்களிலே அவஹாகித்து அனுபவிக்கப் பெறாதே-தாங்கள் ஆகையாலே உள்ளே கிடந்தாலும் தங்கள் சம்பந்தத்தாலே (விரஹ தாபத்தால் )கொதிக்கும் என்று அறிகிறிலள்-சரயூமவகாஹதே-என்னுமா போலே (பரதன் ஊரார் வரும் முன் நீராட சரயு போவான் -பெருமாள் லஷ்மணன் பேசி –கோதாவரியில் குள்ளக் குளிர பேசிக்கொண்டது –தாபம் இல்லாம்நாள் லஷ்மணனுக்கு குளிரும் –அவன் அத்யந்த ஸூ குமாரன் அபர ராத்திரியில் எப்படி நீராடுவானோ )-நீராடாதே-பகவத் அனுபவத்தைப் பண்ணாதே –
5-முப்பத்து மூவர் –இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்-எங்களையும் அவனையும் கூட நீராட்ட வேணும் –இவன் முழுக் கூட்டுகைக்காக நிற்கில் முழுக்க அஞ்சுவோம் என்பார்கள் –கையைப் பிடித்துக் கூட முழுகும்-தாரா பித்ரு க்ருதா இதி -என்று பெருமாள் பிராட்டியுடைய சவுந்தர்யாதிகள் கிடக்க பிராட்டியை உகப்பது -ஐயர் பண்ணிய விவாஹம் என்று ஆய்த்து –அப்படியே இவள் தந்த கிருஷ்ணன் என்று இவர்களும் உகப்பார்கள் ஆயிற்று –நீராட்டு மாலை–சாற்றி அருளுகிறாள்-இப்போதே எம்மை நீராட்டு -தாபத் த்ரயம் தீர எம்பெருமானுக்கு தாபம் -நான் அடிமை செய்ய விடாய் நானானேன்– எம்பெருமான் தாம் அடிமை கொள்ள விடாய் தானானான் ஆனதற்கு பின் வெள்ளக் குளத்தே விடாய் இருவரும் தணிந்தோம் –உள்ளக்குளத் தேனை ஒத்து-மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய ஷணம் அபி தே யத் விரஹோதி துஸ் சஹ -ஸ்தோத்ர ரத்னம் -56–ஷூத்ருட் பீடித நிரதநரைப் போலே கண்டு கொண்டு பருகி –ஆச்சார்ய ஹிருதயம்-
6-மாலே –மார்கழி நீராடுவான்–ஊராக சங்கல்பித்த கார்யம் தலைக் கட்டுகைக்காக –மார்கழி நீராடுகைக்கு உப கரணங்கள் வேண்டி வந்தோம்-ஆஸ்திக்யாதிரேகத்தாலே -அங்கி கைப்படத் இருக்கச் செய்தேயும் –அங்கத்தை விடாது ஒழிகிறார்கள் –இவர்கள் சொல்லுமது கேட்க்கைக்காக இத்தை ஷேபித்து இது எங்கே உள்ளது என்று தான் என்றான்-இது இங்கனே அப்ரஸித்தமாய் இருந்ததோ -என்றார்கள் –ஆள் அறிந்து வார்த்தை சொல்லாய்
நாராயணனே நமக்கே பறை தருவான் என்பவருடைய அனுஷ்டானம்-மார்கழி மாசத்தில் நோன்புக்கு அங்கமாக குளிக்கை —இந்நோன்பு தான்–காம்யார்த்திகளுக்கு சாதகமாயும்
நிஷ்காமருக்கு நித்தியமாயும்–பிரபன்ன அதிகாரிகளுக்கு பகவத் கைங்கர்யமாயும் -இருக்கும்-ஆகையாலே பிரபன்ன அதிகாரிகளுக்கு சொல்லுகிற கர்ம த்யாகம்–சாஸ்த்ரோக்தமான ஆகாரத்தாலே அனுஷ்டியாது ஒழிகை ஒழிய கேவலம் அனநுஷ்ட ரூப த்யாகமாகம் அன்று என்றது ஆய்த்து-
—————————————————————
அடி–6 -பிரயோகங்கள்
வையத்து –பையத் துயின்ற பரமன் அடி பாடி
அம்பரமே –செம் பொற் கழல் அடி செல்வா பலதேவா
ஏற்ற –ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே –
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி –-அன்று –கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி-அன்று –கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி –
சிற்றம் –உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
1-வையத்து –பையத் துயின்ற பரமன் அடி பாடி–அவனுடைய ஆதிக்யத்தின் எல்லையை அனுசந்தித்தால்- பின்னை தங்கள் தாழ்ச்சியின் எல்லையில் நிற்கும் இத்தனை இறே-
ஔசித்யத்தாலும் போக்யதையாலும் கிருஷ்ணன் திருவடிகளைப் பாடாதே-
திருப் பாற் கடலில் கண் வளர்ந்து அருளுகிறவனை பாடுவான் என் என்னில் –
இரண்டு இடமும் ஒருவனே ஆகையாலே நோன்பு நோற்க புக்கவர்கள் கிருஷ்ணனைப் பாடா நின்றார்கள் என்று சொல்லாமைக்காக- ஒரு தெய்வத்தின் பேரைச் சொல்லிற்றாக சொல்லுகிறார்கள்-மகிஷிகளோடு அல்லாதாரோடு வாசி யற-சேஷத்வம் சமானமாய் இருக்கையாலே-திருவடிகளைப் பாடி -என்கிறார்கள்-பள்ளி கொள்ளும் இடத்து அடி கூடிட -என்னக் கடவது இறே--அவனுடைய வடிவழகை ப்ரீதி ப்ரேரிதைகளாய்க் கொண்டு பாடி-அவன் சேஷித்வத்துக்கு சமைந்தால் போலே இவர்கள் சேஷத்வத்துக்கு சமைந்த படி
ஸ்தநந்த்ய பிரஜை முலையிலே இறே வாய் வைப்பது -செவ்வடி செவ்வி திருக்காப்பு என்னுமவர்கள் இறே-மடலூர்ந்தால் தலைமை கிடக்கும்-ஸ்வ பாவம் மாத்திரம் அழியும் -ஆர்த்திக்கு உதவிற்றிலன் என்னில் ஸ்வரூபம் அழியும்
2-அம்பரமே –செம் பொற் கழல் அடி செல்வா பலதேவா-கிருஷ்ணன் பின்னே பிறக்க முன்னே பொற்கால் பொலிய இட்டுப் பிறந்த ஸ்ரீ மானே –-இளைய பெருமாள் பின் பிறந்து பெற்ற சம்பத்து முன் பிறந்து பெற்றவன் அன்றோ நீ –லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -என்ற
அவரைப் போலே முன் பிறந்து கைங்கர்ய ஸ்ரீ யைப் படைத்தால் – அவரைப் போல் உறங்காது இருக்கவும் வேண்டாவோ – பெருமாளும் பிராட்டியும் கண் வளரும் போது புறம்பு மதிளாய் நின்று நோக்கும் அத்தனை இறே அவர்-கிருஷ்ணனையும் பெண்ணையும் சேர விடும் ஏற்றம் உடையவன் அன்றோ நீ – சந்தே சைஸ் சாம மதுரை ப்ரேம கர்ப்பை ரகர்விதை ராமேனாச்வா சீதா கோபியோ ஹரினா ஹ்ருத சேதச -என்கிறபடியே எங்களையும் அவனையும் பொருந்த விடுகிற உனக்கு உறங்க விரகு உண்டோ
3-ஏற்ற –ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே –சத்ருக்கள் ஆனவர்கள் உன் மிடுக்குக்குத் தோற்று போக்கடி இல்லாமையாலே உன் திருவடிகளிலே வந்து விழுமா போலே – மாற்றார் தங்கள் வலி மாண்டு வந்து விழுமா போலே-ப்ரஹ்மாஸ்திரம் விட வேண்டும் படி பிராட்டி பக்கலிலே அபராதத்தைப் பண்ணி-த்ரீன் லோகான் சாம் பரிக்ரமய-என்னும் படி அலமந்து-சபித்ரா ச பரித்யக்த -என்னும் படி ஓர் இடத்திலே புகல் அற்று –
தமேவம் சரணம் கத -என்று பெருமாள் திருவடிகளில் விழுந்த காகம் போலே உன் வாசலிலே வந்து உன் காலில் கீழே விழுந்தோம் –அம்புக்குத் தோற்றாரோ பாதி நாங்களும்
குணங்களுக்குத் தோற்று வந்தோம் –அம்பு பிடரி தள்ளாத தள்ள வருவாரைப் போலே
ஸுந்தர்ய குண பலாக்ருதைகளாய் வந்தோம் அம்பு நற் கொலையாகக் கொல்லும் –
குணம் உயிர்க் கொலையாகக் கொல்லும்- வல் வினையேனை ஈர்கின்ற குணங்கள்
4-அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி –தன் விபூதியை மகாபலி அபஹரிக்க நோவு பட்டு இருக்கிற அன்று-தன்னைப் பிரிந்து நாங்கள் ஆர்த்தியால் நோவு பட்ட இன்று –
ஜகத்தை மகா பலி யினுடைய அபிமானத்தின் நின்றும் மீட்ட அன்று-எங்களுடைய ஸ்த்ரீத்வ அபிமானத்தின் நின்றும் மீட்ட இன்று –நாட்டுக்கு எல்லாம் தன் திருவடிகளை தூளிதானம் பண்ணின அன்று-அழகையும் சீலத்தையும் எங்களுக்கு தூளிதானம் பண்ணின இன்று-
இது இறே ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் வாமனனுக்கும் சாம்யம்-பிராட்டிமார் பூ தொடுமா போலே கூசிப் பிடிக்கும் திருவடிகளைக் கொண்டு-காடும் ஓடையும் அகப்பட அளப்பதே -என்கை –
அன்று எல்லை நடந்து மகாபலி பக்கல் நின்றும்-பூமியை மீட்டுக் கொண்டால் போலே
நடை அழகைக் காட்டி விஸ்லேஷத்தின் நின்றும்-மீட்டுக் கொண்டான் -என்கை –தாங்கள் சொல்லும் அளவில் புறப்பட்டு ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு உலாவி அருளின படி திரு உலகு அளந்து அருளின ஆயாசம் போரும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறார்கள்-திரு உலகு அளந்து அருளின போது இரண்டடி இறே இட்டது –
இப்போது எங்களுக்காக பத்து எட்டு அடி இடுவதே –திரு உலகு அளந்து அருளின அன்று
இந்த்ரன் பிரயோஜனத்தை கொண்டு போனான்-மகா பலி ஔதார்யம் பெற்றுப் போனான்
தாங்கள் அன்று உதவப் பெறாத இழவு தீர-திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் –உன் சேவடி செவ்வி திருக் காப்பு -என்னுமவர்கள் இறே-வடிவுக்கு இணை இல்லாத பெரிய பிராட்டியாரும் எடுத்துக் கழிக்கைக்கும் ஒப்பு இல்லாத ஸ்ரீ பூமிப பிராட்டியும்
நாம் பிடுக்கை சாஹசம் என்னும் படியாய் பூத் தொடுமா போலே கூசிப் பிடிக்கும்
மெல்லடிகளைக் கொண்டு இவ்வெவ்விய நிலத்திலே வியாபாரிப்பதே-பிரமாணித்தார் பெற்ற பேறு-என்று உபகார சுருதி பண்ணாத அளவு அன்றிக்கே யுகக்கவும் அறியாத பூமியை திருவடிகளின் கீழே இட்டுக் கொள்வதே-அக் காலத்திலே சிலர் இழவோடே போனார்கள் – சிலர் அப்பன் அறிந்திலேன் என்று ஆணை இடத் தொடங்கினார்கள்
சிலர் பிரயோஜனம் கொண்டு போனார்கள் – அப்போது பரிந்து காப்பிட்டார் இல்லை என்கிற இழவு தீருகிறார்கள்-திசை வாழி எழ -என்கிற அப்போதே பல்லாண்டு இசைக்கை –பிரகிருதி சம்பந்த நிபந்தனமான அஹங்காரம் ஜகத்தை ஆக்ரமித்த அன்று –அஹங்கார க்ரச்தமான இந்த லோகத்தை அஹங்காரத்தின் நின்றும் மீட்டு தன் திருவடிகளாலே அளந்து
தனக்காக்கிக் கொண்டவனே – உன் திருவடிகளுக்கு மங்களா சாசனம் –
5-பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி-காம குரோதங்களை-ஸ்வரூபேண நசிக்கும்படி -உன் திருவடிகளாலே உதைத்தவனே –உன்னுடைய யசஸ் ஸுக்கு பல்லாண்டு –செய்ய பாதமொன்றால் செய்த நின்சிறுச் சேவகமும்-5-10-3-காலை நிமிர்த்த கன்னிப் போர் என்பதால் பல்லாண்டு பாடுகிறார்-கன்னி சேஷ்டித்ததுக்கு பல்லாண்டு பாடுகிறார்கள் –தாயும் உதவாத தசையில் திருவடி உதவினதே புகழ் ஆவது-பெற்ற தாயும் கூட உதவாத சமயத்தில் பெரும் படையாண்டு செய்த செயல்களை கால் கூறாக்கி விட்ட படி – திருக் காலாண்ட பெருமானே –பெருமாள் கைக்கு வில் பிடித்த தழும்பு போலே -கிருஷ்ணன் திரு வடிகளுக்கு சாடுதைத்த தழும்பு ––தழும்பிருந்த சார்ங்க நாண் தோய்ந்த மங்கை,
தழும்பிருந்த தாள் சகடம் சாடி, – தழும்பிருந்த-பூங்கோதையாள் வெருவப் பொன் பெயரோன் மார்ப்பிடந்த, வீங்கோத வண்ணர் விரல்.–
6-அன்று –கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி –விளாவை இலக்காகக் குறித்துக் கன்றை எறி கருவியாகக் கொண்டு எறிவதாக இச்சித்து நடந்த போதைக் குஞ்சித்த திருவடிகளில் வீரக் கழலுக்கும் அக வாயில் சிகப்பையும் கண்டு காப்பிடுகிறார்கள்-கனை கழல் காண்பதற்கு என்று யம வஸ்யத்தைக்கு நிவர்த்தகம் என்று இருத்தல் செய்யாதே
மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –அடி போற்றி -கழல் போற்றி-நீட்டின திருவடிகளுக்கும் குஞ்சித்த திருவடிகளுக்கும்-சூழ்ந்து இருந்து பரிவாரைப் போலே பரிகிறார்கள்
7-சிற்றம் –உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்-மகார்க்கமுமாய்
போக்யமுமாய் பிராப்தமுமாய் இருந்த திருவடிகளிலே –அடியே -என்று
அவதாரணத்துக்கு கருத்து – வேறு ஒரு பிரயோஜனத்துக்கு ஆளாகாது இருக்கை–சூட்டக் கண்ட பூவை விலை மதித்து விற்பாரைப் போலே-கண்டு அனுபவிக்கையே பிரயோஜனமாக இருக்கிற திருவடிகளைப் பெற்று வைத்து வேறொரு பிரயோஜனம் தோற்றும் படியான செயல் செய்த செல்லாமை பாராய்-அடியே –போற்றும்
அங்குத்தைக்கு மங்களா சாசனம் பண்ணி –தனக்கும் ரக்ஷை தேடிக் கொள்ளுகை அன்றிக்கே தன்னை அழிய மாறியும் அத் தலைக்கு நன்மைகளை ஆஸாஸிக்கை–அடியானுக்கு அடியிலே இறே பிராப்தி – அடிச்சியோம் என்கிறவர்கள் கூறாளும் துறப்புக் கூட்டில் போகார்கள் இறே(திருமார்பை ஆசைப்படும் அத்திரு திருவடியை ஆசைப்படும் இத்திரு )–உன் –பொன்–அடி-உலகம் அளந்த பொன்னடி போற்றுவர்களோ – காடுறைந்த பொன்னடி போற்றுவர்களோ நாங்கள்-அவை –உலகம் எலாம் தலை விளாக் கொள்ளுதல் —
வானவர் தம் சென்னி மலர் ஆவுதலாய் இறே அந்தப் பொன்னடிகள் இருப்பது –இது
மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் (பெரிய திருமொழி -5-8 )என்று இறே
இப் பொன்னடி இருப்பது –பொற்றாமரை அடி அன்றோ – சாதனத்வமும் சாத்யத்வமும் பூர்ணமாய் இருக்கை –பாவனத்வமும் போக்யத்வமும் ப்ராப்யமாயும் ப்ராபகமாயும்
பொன்னும் தாமரையும்-தாமரை அன்ன பொன்னார் அடி இறே -(பெரிய திருமொழி 7-3)
தனம் மதீயம் தவ பாத பங்கஜம் -(ஸ்தோத்ர ரத்னம் )-எங்களுக்குப் பொன்னும் பூவும் புறம்பே தேட வேணுமோ –கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை என்று ஆசிரயணீயமும் இதுவே –அவன் தாளிணைக் கீழ் புகும் காதல் -என்று ஆசைப்படுவதும் இதுவே-ஆசானுகுணமாக
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே என்று (திருவாய் -10-4 )
இவர்கள் சென்னிக்கு கோலமாகச் சூடுவதும் இதுவே –பரமன் அடி பாடி –அடி போற்றி –
கழல் போற்றி -என்று முடியச் சொல்லிக் கொண்டு போந்தார் இறே-கண்ணன் தாள் வாழ்த்துமது (பெரிய திருவந்தாதி ) ஸ்வரூப பிரயுத்தமாய் இருக்கும் இறே –-அடியே போற்றும் பொருள் – சூட வந்த பூவுக்கு விலையிடுவாரைப் போலே -உனது பால் என்றுமாம்(அடி -ஸ்வாமி உன்னையே என்றவாறு )உபாய உபேயங்கள் இரண்டும் தானே
ஸ்வீகார மாத்ரத்திலே நிற்கப் போகாமையாலே போற்றுகிற படி-ருசிக்கு அவ்வருகு பட்டால்
பலத்திலே மூளும் அத்தனை-கவிழ்ந்து நிற்கச் செய்தே விண்ணப்பம் செய்கிறது -(முகத்தின் அழகைப்பார்த்தால் கைங்கர்யத்துக்குப் போக ஓட்டாதே )(வந்து உன்னைச் சேவித்து ஸ் வீகாரம் -மேல் உன் பொற்றாமரை அடியே போற்றி -அதுக்குப் பிரயோஜனம் பொருள் இவ்வாறு மூன்றும்)-இவர்கள் அடியே போற்றா நிற்க தான் இவர்கள் காலைப் பிடிக்கக் கணிசியா நின்றான் என்கை அவன் இவர்கள் திருவடிகளை பார்க்க –இது அன்றோ எழில் ஆலி என்னார் தாமே –
————————————————————-
பாடி- 18-பிரயோகங்கள் –
வையத்து –பையத் துயின்ற பரமன் அடி பாடி
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி –
மாயனை –தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
கீசு கீசு என்று –நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
கீழ் வானம் —பாடிப் பறை கொண்டு
தூ மணி –மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று நாமம் பலவும் நவின்று
நோற்றுச் –நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்
கற்றுக் கறவை –முகில் வண்ணன் பேர் பாட
கனைத்து இளம் —மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
உங்கள் –பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்
எல்லே –மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்
நாயகனாய் –துயில் எழப் பாடுவான்
உந்து –உன் மைத்துனன் பேர் பாட
ஏற்ற –போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்
அன்று –என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
ஒருத்தி –திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
கூடாரை –உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு
கறைவைகள் –உன் தன்னைச் சிறு பேர் அழைத்தனவும்
சிற்றம் –உன் பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய் –
வையத்து –பையத் துயின்ற பரமன் அடி பாடி–பாடி –உகந்து -செய்வதே சந்தோஷம்- உபாயம் இல்லையே இதுவே பிராப்தம் -பலானுபவம் இது பரம பதத்தில் நின்றும் சம்சார சேதன சம்ரஷணார்த்தம்–திருப் பாற் கடலிலே அவசர ப்ரதீஷனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகையாலே வந்த குணாதிசயத்துக்கு ஒப்பு இல்லாதவனாய்–திரு அநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து அருளுகையால் வந்த– பரபாக சோபைக்கு ஒப்பு இல்லாதவனாக இருக்கிற எம்பெருமான் உடைய திருவடிகளை ப்ரீதிக்கு போக்கு வீடாக–பாடி போக்யாந்தராங்களிலே அந்வயியோம்–உண்டார்க்கு உண்ண வேண்டா விறே –நீராடி பின்பே- அடி பாட நீராடித் தான் பாட வேண்டும் நியதி இல்லையே -இதுவே பாதேயம் புண்டரீகாக்ஷ திருநாம சங்கீர்த்தனம்
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி –குணங்களுக்கு வாசகமான திரு நாமங்களை ப்ரீதி பூர்வகமாக பாடி –திருநாம சங்கீர்த்தனம் இதிலிருந்து 18 தடவை-ஆர்வத்தால் பாடாதார் பாட்டு என்றும் பாடல்ல -(பெரிய திருமொழி-11-7-4 )–என்று இறே பாட்டுக்கு லக்ஷணம் -உத்தமனை விட உயர்ந்த பேர் -கார்மேனி முதலில் அதை விட உயர்ந்த -பரமன் அடி -அதை விட உயர்ந்த -இங்கு பேர் –
மாயனை –தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க–வாய் படைத்த லாபம் பெற்றோம் என்று திரு நாமத்தைச் சொல்லி –மனஸ் சஹகாரம் இன்றிக்கே -என்றுமாம்-வருவதற்கு மேலே-சொல்லுவதும் செய்தோம் என்று அவனை நோவு படுத்துகை –-என்னவுமாம் –ஏத்து கின்றோம் நா தழும்ப (10-3)-என்று தோற்றவர்கள் பாடுமா போலே–வாயினால் பாடி -என்று அவதார க்ரமம் பாடின படி சொல்லிற்று –
கீசு கீசு என்று –நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ-வாத்சல்யத்தையும் –சௌசீல்யத்தையும்-ஆஸ்ரித விரோதி நிரசனத்தையும் பேசின விடத்திலும்-பின்னையும் இவர்கள் பேச்சே தனக்கு தாரகமாக கிடைக்கையாலே-அவனுடைய விஜயத்தைக் கேட்டு-கேசி வந்து கழியப் புக்கான் என்ற துணுக்கும் கேட்டு
கர வத அநந்தரம் சக்கரவர்த்தி திருமகனை-ஸ்ரீ ஜனகராஜன் திருமகள்-அணைத்தால் போலே நீயும் கிருஷ்ணனை அணைக்க-புறப்படுவாயோ -என்று சொன்னோம் –
அதுவும் உனக்கு கிருஷ்ண விரோதி பயம் தீர்ந்து-மார்பிலே கை வைத்து உறங்கலாம் படி ஆவதே -உன்னைக் கண்டு நாங்கள் வாழும்படி வாய் திறவாய் என்கிறார்கள் –கேசவனைப் பாட -என்றும்-பாடிப் பறை கொண்டு -என்றும் –கீர்த்திமை பாடி -என்றும் -விரோதி நிவர்த்தகம் பாடின படி சொல்லிற்று
கீழ் வானம் —பாடிப் பறை கொண்டு–இதுக்கு முன்பு நாம் பெற்ற ஐஸ்வர்யம் போலேயோ-
இப்பொழுது நாம் பெற புகுகிற ஐஸ்வர்யம்-முன்பு கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் என்று நாட்டாருக்கு தெரியாதபடிநெஞ்சால் கிருஷ்ணனை அனுபவித்து-அவ் வனுபவ ஜனித ப்ரீதியானது -புறம்பு ஒசியாதபடி அடங்கிப் போந்தோம்-இப்போது நாட்டார் தாங்களே அனுமதி பண்ணுகையாலே-வாய்க்கால் வெட்டி நெஞ்சிலே கங்கும் கரையும்-அறப் பெருகுகிற கிருஷ்ண அனுபவ ப்ரீதிக்கு போக்கு-அணை வெட்டிவிட்டு கிருஷ்ண குணங்களைநாம் வாயார நினைத்த படி பாடக் கடவோம் –கிருஷ்ணன் பெண்கள் கிருஷ்ணன் -என்று வாய்க் காவல் இட்டுக் கிடக்கிற வூரிலேஇவ்விரண்டு நாளும் கழிந்தால் அவனை நமக்குத் பாடக் கிடைக்குமோ-ஆஸூர ப்ரக்ருதிகளான ஹிரண்யாதிகள் படை வீடுகள் போலேதிரு நாமம் சொல்லப் பொறார்கள் யாய்த்துபெண்கள் பிரசங்கத்தில் மோஹிப்பர்கள் என்று அவ் விழவு தீரகிருஷ்ண நாம புன புன என்கிறபடி வாயாரத் திரு நாமத்தைப் பாடி-பாடுகையாகிற புருஷார்த்தத்தை லபித்து-
தூ மணி –மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று நாமம் பலவும் நவின்று—மேன்மைக்கும் நீர்மைக்கும் ஸ்ரீ யபதித்வத்துக்கும் ஏகாந்தமான திரு நாமங்களை அநேகம் சொன்னோம் -சஹஸ்ர நாமம் உட்படச் சொன்னோம் –
நோற்று –நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்-இவர்கள் (ஆர்த்திகள்)-அர்த்திகள்- ஆகையாவது போற்றுகை போலே–குடிப் பிறப்பால் வந்தது(வழி வழி ஆட் செய்கின்றோம் )-உபாயம் அல்ல-போற்றுதலே அர்த்தித்தல் -உபாயம் அல்ல -புருஷனால் அர்த்தித்தே -வேண்டியே -பெறுவது தானே புருஷார்த்தம் –அறிவித்தல் பசி உள்ளது என்று காட்டுமா போல் அதிகாரி ஸ்வரூபம்)
கற்றுக் கறவை –முகில் வண்ணன் பேர் பாட–முகில் வண்ணன் –நிறம் -வள்ளல் தன்மையைப் பாட வேண்டும் –வடிவு அழகுக்குத் தோற்று பாடின படி-நாங்களும் உன் பக்கமே நின்று அத்தைப் பெறுகைக்காக-நீ உகக்கும் வடிவு அழகிலும் உதார குணத்திலும் ஈடு பட்டுத் திரு நாமத்தை பாட- –நாங்கள் உன் பஷத்தே நின்று கூட்டம் பற்ற நீ அவன் அழகிலே ஈடுபட்டுப் பாட -உன்னீடுபாடு கண்டு நாங்கள் ஈடுபட்டுப் பாட
கனைத்து இளம் —மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்-கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்று நம்மை நலியும் கிருஷ்ணனுடைய பேரை காற்கடைக் கொண்டு
கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்த நெஞ்சு பதம் செய்யும்படியான சக்கரவர்த்தி திருமகனைப் பாடச் செய்தேயும்- வாய் திறக்கிறது இல்லை -எங்கள் ஆற்றாமை அறிவித்த பின்பும் உறங்க வல்லை யாவதே-ப்ரீதிக்கு போக்கு விட வேண்டாவோ –எங்களுக்காக அன்றிக்கே உன் ஹர்ஷத்துக்காக போக்கு விட வேண்டாவோ
உங்கள் –பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்–உன் ப்ரீதிக்கு போக்கு விட்டுப் பாட –ஒரு நீர்ச்சாவி போலே கிடக்கிற இத் திரள் உஜ்ஜீவிக்கும் படி வர்ஷியாய்-
எல்லே –மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-நம்முடைய தோல்வியையும்
அவனுடைய வெற்றியையும் -தோற்ற பாட –ஏத்து கின்றோம் நா தழும்ப (10-3)-என்று தோற்றவர்கள் பாடுமா போலே-வாயினால் பாடி (5)-என்று அவதார க்ரமம் பாடின படி சொல்லிற்று –கேசவனைப் பாட (7)-என்றும் பாடிப் பறை கொண்டு -என்றும் –
கீர்த்திமை பாடி -என்றும் -விரோதி நிவர்த்தகம் பாடின படி சொல்லிற்று-முகில் வண்ணன் பேர் பாட -என்று வடிவு அழகுக்குத் தோற்று பாடின படி சங்கோடு சக்கரம் ஏந்தும் -என்று திவ்ய ஆயுதங்களும் அவயவ சோபைக்கும் தோற்றுப் பாடின படி-இங்கு (15 )வெறும் கையோடு நின்ற படிக்கும் –தங்களுக்குத் தோற்ற படியையும் பாடுகிறார்கள் –இவ் விஷயத்திலே விஐயம் பிரணயித்தவத்துக்குக் கொத்தையாய் -தோற்க
அத் தோல்விக்கு அவனைப் பாட வேணும் –
நாயகனாய் –துயில் எழப் பாடுவான்-–திருப்பள்ளி எழுச்சி பாட வந்தோம் –அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயே -என்னுமவர்கள் பெண் பிள்ளைகள் இறே இவர்கள் –ச மயா போதிதஸ் ஸ்ரீ மான் -என்று பிராட்டி உறங்குகிற படி கண்டு உகந்தாள்–இவர்கள் உணரும் படி காண ஆசைப்படுகிறார்கள் -பிராட்டி பெருமாள் உறங்குகிற படியைக் கண்டு உகந்தாள் இவர்கள் இவன் உணருகிறபடியைக் காண ஆசைப் படுகிறாள்அவன் உணர்ந்து அருளும் போதை அழகுக்கும் மங்களா சாசனம் பண்ண வன்றோ நாங்கள் வந்தது –பிரயோஜனாந்தர பரர்கள் அன்றோ ஓலக்கத்தில் புகுவார் –அநந்ய பிரயோஜனர் இறே கண் வளர்ந்து அருளுகிற இடத்திலே புகுரப் பெறுவார் –மூன்று உலகும் தம் வயிற்றில்-நெறியாகக் கொண்டு-நின்று ஒழிந்தார் -உடையவன் உடைமையை நோக்குவது முறையாலேயாய்-இருக்கும் அன்றோ
உந்து –உன் மைத்துனன் பேர் பாட–நீயும் அவனும் மைத்துனமை யாடி ஒருவருக்கு ஒருவர் ஒன்றுக்கு ஒன்பது சொல்லி இட்டீடு கொள்ளும் போது உன் பஷத்தில் நாங்கள் நின்று -அவன் தோல்விக்கு வசை பாட அவனுக்கு உள்ளது எல்லாம் சொல்லிக் கொடுக்கைக்கும்
இருவரும் ஒன்றாய்ச் செல்லுமன்று செல்லவும் பிரிந்தால் தாய் பஷத்தில் இறே பிரஜைகள் நிற்பது ––நீயும் அவனும் பந்தடிக்கையில் உனக்கு அவன் தோற்ற தோல்விக்கு அவன் திரு நாமங்களைப் பாட–-பெருமாள் தோல்வியைப் பிராட்டி இளைய பெருமாளுக்கு அருளிச் செய்ய அவர் பிராட்டி பக்ஷத்தில் நின்றால் போலே-நாமும் பலவுடை நாரண நம்பி இறே –
இன்னாள் அடியான் இன்னாள் அடியான் -என்று படைத்த பேருக்கு ஒரு அவதி இல்லை இறே
ஏற்ற –போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்—போற்றுகையாவது -திருப் பல்லாண்டு பாடுகை-பெரியாழ்வாரைப் போலே வந்தோம் –அவர் தன்னைப் பேணாதே
உன்னைப் பேணினாப் போலே-நாங்களும் எங்கள் ஸ்வரூபத்தைப் பாராமல் ஆற்றாமை இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே – வந்தோம்-நசை முடிய ஒட்டாது – ஆற்றாமை இருந்த இடத்தே இருக்க ஒட்டாது இறே –தோற்றார் -போற்றி -என்னும் அத்தனை இறே -புகழ்ந்து –எங்களை தோற்பித்த குணங்களைச் சொல்லி –போற்றி –புகழ்ந்து –வந்தோம்
பெரியாழ்வாரைப் போலேயும் வந்தோம் –அல்லாதாரைப் போலேயும் வந்தோம் –
அன்று –என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்-உன்னுடைய வீர சரித்ரமே ஏத்தி -உன்னை அனுபவிக்கைக்காக –-உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம்
என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன் –என்னுமவர்கள் இறே –(ஏத்துதலே எங்கள் பலம் )நாட்டார் பலம் பெறுவதாக –பலம் ஏத்துகை-பின்பு அபிமதம் ஊரார் ஸம்ருத்தி –உத்தேச்ய பலமும் ஆனு ஷங்கிக பலமும்
ஒருத்தி –திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி-உன் பேர் சொல்லப் பெறாத நாங்கள்
உன் பேர் சொல்ல ஒட்டாதார் முன்னே உகப்போடே பாடி –புள்ளின் வாய் கீண்டானை (கீர்த்திமைப்பாடி )என்று ஊர் எல்லாம் பாடிக் கொண்டு திரிகிறார்கள் இறே-யாம் பாடி-வருத்தமும் தீர்ந்து-வருத்தம் உன்னை நீ கண்டு அறியாயே-பிரிந்தார் படும் பாடு பாராய் -என்கை-சொல்லப் பெறாத நம் வருத்தமும் தீர்ந்து
கூடாரை –உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு-வகுத்த உன்னுடைய பேரை ஸ்வயம் பிரயோஜனமாகப் பாடப் பெறுகையாலே –வாயினால் பாடி( 5 )-என்று உபக்ரமித்தபடி
நா படைத்த பிரயோஜனம் கொள்ளப் பெற்றோம்-பெண்கள் புணர்ப்பே தாரகமாகப் பாடித் திரியும் உன்னைப் பாடுகையே பிரயோஜனம்
கறைவைகள் –உன் தன்னைச் சிறு பேர் அழைத்தனவும்-கோவிந்த அபிஷேகம் பண்ணின பின்பு முதல் திரு நாமம் சொல்லுகை குற்றம் இறே – முடி சூடினவனை தட்டியில் பேர் சொல்லுகைக்கு மேற்பட்ட உண்டோ குற்றம் –இப்போது சிறு பேர் என்று நினைக்கிறது –
நாராயணன் -என்றத்தை – தங்களுக்கு அசாதாரணனாய் இருக்கிறவனை சாதாரணன் என்று சொல்லுகை குற்றம் இறே –அது தன்னை ஒருக்கால் சொல்லி விடாதே –
நாராயணனே என்றும் –நாற்றத் துழாய் முடி நாராயணன் என்றும் –நாராயணன் மூர்த்தி -என்றும் பலகால் சொன்னார்கள் இறே
சிற்றம் –உன் பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய் –பரமன் அடி பாடி –
அடி போற்றி – கழல் போற்றி -என்று முடியச் சொல்லிக் கொண்டு போந்தார் இறே-கண்ணன் தாள் வாழ்த்துமது (பெரிய திருவந்தாதி ) ஸ்வரூப பிரயுத்தமாய் இருக்கும் இறே –
——————————————————-—————————————————
எழுந்திராய் -19- பிரயோகங்கள் –
பிள்ளாய் எழுந்திராய்
பேய்ப்பெண்ணே –நாயகப் பெண் பிள்ளாய் –நீ கேட்டே கிடத்தியோ –
கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய்
உன் மகள் தான் ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ ஏமப் பெரும் துயில் மந்திரப் பட்டாளோ
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய் –கும்பகர்ணனும் தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அரும் கலமே –
பொற்கொடியே புற்றரவல்குல் புனமயிலே –செல்வப் பெண்டாட்டி எற்றுக்கு உறங்கும் பொருள் –
நற்செல்வன் தங்காய்–நீ வாய் திறவாய் –ஈது என்ன பேர் உறக்கம்
போதரிக் கண்ணினாய் –பாவாய் –கள்ளம் தவிர்ந்து கலந்து
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோ –
அடியார் இடம் உண்டான கலவியின் இன்பம் அறியாத கோபிகை
அந்த இனிமையை உணர்ந்தும் உணராத கோபிகை
கண்ணன் தனது தலையினால் தாங்கி ஆதரிக்கும் சீர்மை உடைய கோபிகை
எம்பெருமானே ரட்ஷகன் என்று உணர்ந்து மார்பில் கை வைத்து உறங்கும் கோபிகை
எம்பெருமான் தானும் தனக்கு தாரகமாய் அபிமானித்து இருக்கும் கோபிகை
எம்பெருமான் உடன் இடையறாத தொடர்பு உள்ள மஹா நீயர் குலத்தில் பிறப்புடைய கோபிகை
கிருஷ்ணன் கைங்கர்யத்தில் ஈடுபட்டு தன் தர்மத்தை செய்ய மாட்டாமல் இருக்கும் செல்வனே இருக்கும் கோவலன் தங்கையான கோபிகை
ஞானம் பக்தி வைராக்யங்கள் நிறைந்த கோபிகை
நிறைவும் நிர்வாகத் தன்மையும் நிறைந்த கோபிகை
அடியார்கள் குழாங்களை ஓன்று சேர காணும் ஆசை உடைய கோபிகை -ஆகிய 10 கோபிகைகள்
———-
நந்தகோபாலா எழுந்திராய்
யசோதா அறிவுறாய்
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
பலதேவா உம்பியும் நீயும் உறங்கேல்
மலர்மார்பா வாய் திறவாய்
கலியே துயில் எழாய்
விமலா துயில் எழாய்
மகனே அறிவுறாய்
சுடரே துயில் எழாய்
——————————————–
எம்பாவாய் -30– பிரயோகங்கள் –
மார்கழி –படிந்தேலோ ரெம்பாவாய்
வையத்து –உகந்தேலோ ரெம்பாவாய்
ஓங்கி –நிறைந்தேலோ ரெம்பாவாய் —
ஆழி -மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் ——
வையத்து –உகந்தேலோ ரெம்பாவாய் —
உந்து –மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் –
அங்கண்–மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-
ஒருத்தி –மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் –
வங்கம் -இன்புறுவர் எம்பாவாய் -7
மாயனை –செப்பேலோ ரெம்பாவாய்
புள்ளும் –குளிர்ந்தேலோ ரெம்பாவாய் –
கூடாரை –குளிர்ந்தேலோ ரெம்பாவாய் -2-
கீசு –திறவேலோ ரெம்பாவாய்
கீழ் வானம் -அருளேலோ ரெம்பாவாய் —
மாரி –அருளேலோ ரெம்பாவாய் –
மாலே –அருளேலோ ரெம்பாவாய்–3-
தூ மணி –நவின்றேலோ ரெம்பாவாய்
நோற்றுச் –திறவேலோ ரெம்பாவாய்
கற்றுக் –பொருளேலோ ரெம்பாவாய்
கனைத்து–அறிந்தேலோ ரெம்பாவாய்
புல்லின் –கலந்தேலோ ரெம்பாவாய் –
உங்கள் –பாடேலோ ரெம்பாவாய் —-
மாயனை –செப்பேலோ ரெம்பாவாய் –
தூ மணி –நவின்றேலோ ரெம்பாவாய் –
எல்லே –பாடேலோ ரெம்பாவாய் -3-
எல்லே –பாடேலோ ரெம்பாவாய்
நாயகனாய் –நீக்கேலோ ரெம்பாவாய்
அம்பரமே –உறங்கேலோ ரெம்பாவாய்
உந்து –மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
குத்து –தகவேலோ ரெம்பாவாய்
முப்பத்து –நீராட்டேலோ ரெம்பாவாய்
ஏற்ற –புகழ்ந்தேலோ ரெம்பாவாய்
அங்கண்–மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
மாரி –அருளேலோ ரெம்பாவாய்
அன்று –இரங்கேலோ ரெம்பாவாய்
ஒருத்தி –மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
மாலே –அருளேலோ ரெம்பாவாய்
கூடாரை –குளிர்ந்தேலோ ரெம்பாவாய்
கறவைகள் –பறையேலோ ரெம்பாவாய்
சிற்றம் -மாற்றேலோ ரெம்பாவாய்
வங்கம் -இன்புறுவர் எம்பாவாய்-
ஏல் ஓர் எம்பாவாய் -அனைத்திலும் காதாலே கேட்டு அனுஷ்ட்டித்து சொல்லி வழிபட்டு அனுபவம்
அம்பரமே -மாற்றி– ஓர் எம்பாவாய் -கேட்டது போதும் -அனுஷ்ட்டித்து வழிபட்டு அனுபவம்
வங்க கடல் –எம்பாவாய் -அனுபவத்தை ஆனந்தமாக இருப்பதே கர்த்தவ்யம்
—————
1-பாரோர் புகழ் மாலை –பாரோர் புகழப் படிந்து நீராடப் போதுவீர் போதுமினோ
2-உய்வு மாலை–உய்வுமாறு எண்ணி –
3-செல்வ மாலை –வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம்
4-மகிழ் மாலை-நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து –
5-பிழை மாயும் மாலை –போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்
6-குளிர் மாலை-அரி என்ற பேரரவம் -உள்ளம் புகுந்து குளிர்ந்து
7-தேச மாலை –தேசமுடையாய் -தேசம் -தேஜஸ் இரண்டு பொருளும் விவஷிதம்
8-அருள் மாலை-ஆவா வென்று ஆராய்ந்து அருள் –
9-திரு நாம மாலை –மா மாயன் மாதவன்வைகுந்தன் என்று என்று நாமம் பலவும் நவின்று –
10-தேற்ற மாலை –தேற்றமாய் வந்து திற
11-பொருள் மாலை –எற்றுக்குறங்கும் பொருள் –
12-அறிவு மாலை –அனைத்து இல்லத்தாரும் அறிந்து –
13-கள்ளம் தவிர் மாலை-கள்ளம் தவிர்ந்து கலந்து –
14-பாடல் மாலை –சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் -பங்கயக் கண்ணானைப் பாட –
15-வேறோர் பாடல் மாலை –மாற்றாரை மாற்று அழிக்கும்-
16-நேய மாலை-நேச நிலைக் கதம் நீக்கு
17-உறங்கா மாலை –உம்பியும் நீயும் உறங்கேல்
18-மகிழ்ச்சி மாலை –செந்தாமரைக் கையால் வளை ஒலிப்ப மகிழ்ந்து வந்து திறவாய் –
19-தகவு மாலை –தத்வமஸி க்கு பிறர் கூறும் பொருள் தகுதி அற்றது
20-நீராட்டு மாலை —இப்போதே எம்மை நீராட்டு –
21-புகழ் மாலை-போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து –
22–சாப நிவாரண மாலை –
23-ஆராய்ச்சி மாலை –யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள்
24-இரக்க மாலை –இன்று யாம் வந்து இரங்கு –
25-வருத்தம் தீர் மாலை-வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து –
26-ஆலினிலையான் மாலை –ஆலினிலையாய் அருள் –
27-கூடி இருந்து குளிர் மாலை –
28-பறை தரும் மாலை –இறைவா நீ தாராய்
29-காமங்கள் மாற்று மாலை
30-திருவருள் மாலை-எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்
ப்ரபந்ந அம்ருதம் -ஆண்டான் 30 நாள்களும் நோன்பு நோற்று -அரங்கனை கனவில் திருக்கல்யாண போகம் அனுபவித்த நாளை -நாமும் திருக் கல்யாணம் சேவித்து இன்றும் அனுபவிக்கிறோம் -திருக் கல்யாணம் பங்குனி உத்தரம் நடந்ததையும் ப்ரபந்ந அம்ருதம் காட்டி அருளும் –
————————————————————————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply