கப்யாஸ ஸ்ருதியின் பொருள் விளக்கம்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

கம்பீராம்பஸ் ஸமுத்பூத-ஸும்ருஷ்ட நாள- ரவி கர விகஸித புண்டரீக தலாம
லாயதேக்ஷ :*

கம்பீராம்பஸ்ஸமுத்பூதமாயும், ஸும்ருஷ்டநாளமாயும், ரவிகரவிகஸித
மாயுமிருக்கிற புண்டரீகத்தை எம்பெருமானுடைய திருக்கண்களுக்கு உவமை
யாகச் சொல்லுவது பொருத்தமென்று எம்பெருமானாருடைய திருவுள்ளத்திலே
தோன்றினது

திவ்யப்பிரபந்தங்களில் அவர் ஆழ அவகாஹித்திருந்ததனாலேயே.
ஆழ்வார்கள் எம்பெருமானுடைய திருக்கண்ணழகைப்பற்றிப் பேசுமிடங்களில்
மேலே காட்டிய மூன்று விசேஷங்களையும் வெகு அற்புதமாகப் பேசியுள்ளார்கள். 

கம்பீராம்பஸ் ஸமுத்பூத புண்டரீக] ஜல மென்றும் அம்புஜமென்றும்-அம்போஜமென்றும் நீரஜமென்றும் பேர்பெற்ற புண்டரீகமானது நீரில் நின்று முண்டாகாமல் மற்றொன்றினின்று உண்டாக ப்ரஸக்தியில்லாமையாலே அம்பஸ் ஸமுத்பூத” என்றதன் கருத்து, நீரை விட்டுப் பிரியாமலிருக்கையைச் சொல்லுவதேயாம்.

‘தாமரையை அலர்த்தக்கடவ ஆதித்யன்தானே நீரைப் பிரிந்தால் அத்தை யுலர்த்துமாபோலே” என்கிற ஸ்ரீவசனபூஷண ஸ்ரீஸூக்தியும், “கமலம் ஜலாதபேதம் சோஷயதி ரவிர் ந தோஷயதி” என்கிற ப்ரமாணமும் இங்கே அநுஸந்தேயம். நீரைவிட்டுப் பிரியாமலிருக்கிற தாமரைபோன்ற திருக்கண்களை யுடையவன் என்றதாயிற்று.

நீரார் கமலம் போல் செங்கண்மாலென்றொருவன்”-என்கிற சிறிய திருமடற் பாசுரத்திலும்‘அழறலர் தாமரைக் கண்ணன்” (58)என்ற திருவிருத்தப் பாசுரத்திலும் ஆழ்வார்கள் திருவுள்ளம் பற்றிய அர்த்த மென்றே இஃது எம்பெருமானாரால் ஆதரிக்கப்பட்டது. ‘நீரார் கமலம் போல்” என்றவிடத்தில் (நீரார்) என்ற விசேஷணம் எதுகை யின்பத்திற்காக மாத்திரம் இடப்பட்டதன்று. ” அழறலர் தாமரைக் கண்ணன்” என்றவிடத்து நம்பிள்ளை யீட்டில் கப்யாஸ ஸ்ருதி ஸ்பஷ்டமாகவே உதாஹரிக்கப்பட்டுள்ளது. அவ்விடத்து ஸ்ரீஸூக்தி வருமாறு-” அழறலர் தாமரைக் கண்ணன்) அழற்றிலே நின்றலர்ந்த தாமரைப் பூப் போலே யிருந்துள்ள திருக் கண்களை யுடையவன். யதா கப்யாஸம் புண்டரீக மேவ மக்ஷிணீ.என்னக் கடவதிறே.” இங்கு வாதி கேசரியின் ஸ்வாபதேச வுரை வருமாறு- அழறு என்று அளறு; நீரிலும் சேற்றிலும் நின்று அலர்ந்து செவ்வி மாறாத தாமரை போன்ற கண்ணை யுடையவனென்ற படி

நீரார் கமலம் போல் செங்கண் மால் -என்று ஒருவன் –ஒரு தடாகம் பரப்பு மாறத் தாமரைப் பூத்தால் போலே திருக் கண்கள் –ஒரு தடாகத்தை ஒரு தாமரையே கண் செறியிட அலர்ந்தால் போலே ஆயிற்று வடிவடையக் கண்ணாய் இருந்தபடி –கமலம் போல் செங்கண் -என்கையாலே குளிர்த்தி மென்மை நாற்றம் விகாசம் எல்லாம் சொல்லுகிறது 

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரே இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே – 58-

ஆக, நீரார் கமலம்போல் செங்கண் மாலென்றொருவன்’ என்ற சிறிய திரு
மடற் பாசுரத்தையும், அழறலர் தாமரைக் கண்ணன்’ என்ற திருவிருத்தப் பாசு
ரத்தையும் “தண்பெருநீர்த்தடந்தாமரை மலர்ந்தாலொக்குங் கண் பெருங் கண்
ணன் ‘ என்கிற திருவாய் மொழிப் பாசுரத்தையும் திருவுள்ளம்பற்றியே கம்பீராம்
பஸ்ஸமூத்பூத’ என்ற விசேஷணத்தை ஸ்வாமி யிட்டருளினாரென்பது பொருத்த
மாக முடிந்தது.

பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன்
நம் ஆவி உண்டு எழ நண்ணினான்-9-5-9-குளிர்ந்த பெரிய நீரை யுடைய பொய்கையிலே தாமரைப் பூ அலர்ந்தால் போலேயாய் அவ்வளவு இன்றிக்கே பெரிய கண்களை யுடைய கிருஷ்ணன்

[ஸும்ருஷ்டநாள புண்டர்க] நீரை விட்டுப் பிரிந்த தாமரைக்கு சோபையில்லாதது போலவே நாளத்தை விட்டு நீங்கின தாமரைக்கும் சோபையில்லாமையாலே தாமரைக்கு நாளத்திலிருப்பும் அவச்ய வக்த யமாயிற்று. இதுவும் ஆழ்வாரருளிச் செயலிலுள்ளது. திருவிருத்தத்தில் “வன்காற்றறைய’ என்கிற பாட்டிலே “எம்பிரான்தடங்கண்கள் – மென்கால் கமலத் தடம் போல் பொலிந்தன” என்றருளிச் செய்யப்பட்டிருக்கிறது. கமலத்திற்கு இடப்பட்டிருக்கிற ‘மென்கால்’ என்னும் விசேஷணத்திற்கு ‘மெல்லிய நாளத்திலே யிருக்கின்ற’ என்பது பொருள்.(நாளமாவது தண்டு). கமலத்திற்கு அது கால் போன்றிருத்தலால் கால்என்னுஞ் சொல்லால் குறிக்கப்பட்டது. நாளமென்கிற பொருளையே பூருவர்களும் உரை செய்துள்ளார்கள். ஆக இந்த திவ்ய ஸூக்திக்குச் சேர (ஸும்ருஷ்டநாள) என் றருளிச்செய்யப்பட்டது.

வன் காற்றறைய வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த
மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும்
என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த
தன் பால் பணிந்த என் பால் எம்பிரான் தடக் கண்களே
-42-மென் கால் கமலம் என்றது –
ஆபி முக்ய ஸூசகமான மானஸ ப்ரபத்தியையும் பொறாத அவனுடைய ஸுவ்ஹார்த்தம்–ஸூஹ்ருத் பாவம்-வன் காற்று -பூர்ண பிரபத்தி அறைகை –ஆர்த்த பிரபத்தி )மென் கால்
ஒரு முகத்திலே சாய்கைக்கு அடியான தண்டில் மார்த்தவத்தை யுடைய-கமலத் தடம் போல்
தாமரைத் தடாகம் போலே-பொலிந்தன-அழகினுடைய அபி விருத்தியை யுடையவாயின –இவ் விடத்தில் கண்களுக்குக் காற்றாவது அப்ரதிஹத கதியான கிருபா ப்ரேரிதமாகை –
(தடங்கல் இல்லாத சீதளமான திருக்கண்கள் திருக்கச்சி நம்பி )ஒருங்கே மறிகை யாவது
ஆழ்வார் பக்கலிலே ஒருபடிப்பட்ட ஆபி முக்யத்தை உடைத்தாகை-கிடந்து அலரு கையாவது
இவைரை விஷயீ கரிக்கையாலே கண்ணுக்கு விகாஸம் உண்டாகை-மென் காலாவது
இக் கடாக்ஷத்துக்கு மூலமாய்கிருபா கார்யமான சித்த மார்த்தவம் (ஸுஹார்த்தம்)-கமலத் தடம் என்று நிறத்தாலும் குளிர்த்தியாலும் பரப்பாலும் போக்யமாய் இருக்கை-பொலிவாவது
காலம் மாறி மலரும் தடம் -போது செய்யாத்- திருக்கண் அழகுக்குப் போலி அல்லாத மிகுதியைச் சொல்லுகிறது –(இதுவோ குவியாமால் எப்போதும் மலர்ந்தே -மாறாமல் -போது செய்யாமல் இருக்குமே )-ஊர்த்தவ லோகங்களும் என் காலுக்கு அளவு போராது நீங்கள் காணுங்கோள் என்று தத் தத் தேச வாசிகளுக்கு உபதேசிப்பாரைப் போலே ஒண் மிதியில் புனலுருவி -திருநெடும் தாண்டகம் என்கிற பாட்டின் படியே ஊர்த்வ லோகங்கள் அடைய வியாபாரித்து-த்ரை விக்ரம அபதானத்தாலே அசாதாரணமான ஸம்பந்தத்தை அறிவித்த ஸ்வாமியினுடைய பெரிய திருக்கண்கள்

ரவிகரவிக“த புண்டரீக.) தாமரை நீரிலிருந்தாலும் நாளத்திலிருந்தாலும் ஸூர்ய கிரணங்களால் அலர்த்தப்பட்ட நிலையில்தான் எம்பெருமானுடைய திருக்கண்களுக்கு ஒப்பாகு மாதலால் இந்த விசேஷணமும் ஆவச்யகமாயிற்று.இதுவும் ஆழ்வாரருளிச் செயலிலுள்ளது. திருவாய்மொழியில் (5-4-9) “செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வன்” என்றுள்ள பாசுரம் இங்கே கொள்ளக்கடவது.இவ்விடத்து ஈட்டிலும் கப்யாஸ ச்ருதியை உதாஹரித்தருளி யுள்ளார். இதில்(செஞ்சுடர்த் தாமரை) என்பதற்கு செவ்விய சுடரையுடைய தாமரை என்று பொருளாகிறது. அச்செவ்விய சுடர் அதற்கு எங்ஙனம் வந்ததென்னில், அதற்கு முன்னடியில் ‘அஞ்சுடர வெய்யோன்’ என்று ஸூர்யனை ப்ரஸ்தாவித் திருக்கையாலே தததீநமென்று காட்டப்படுகிறது. ஆக ஸூர்ய ப்ரகாசமடியாக வந்த செவ்விய சுடரை யுடைய தாமரைப் பூப்போன்ற திருக்கண்களை யுடையவன் என்றதாயிற்று.இந்த ஸ்ரீக்தியைத் திருவுள்ளம்பற்றியே, “ரவிகரவிகளித புண்டரீக” என்றருளிச் செய்தது. “செந்தண்கமலக்கண் சிவந்த வாயோர் கருநாயிறு அந்தமில்லாக் கதிர் பரப்பி அலர்ந்த தொக்குமம்மானே” என்கிற திருவாய்மொழிப் பாசுரமும் இங்கு யோஜிக்க வுரியது.( ‘செங்கமலம் அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லால் அலராவால்” என்கிற பெருமாள் திருமொழிப் பாசுரமும் இங்கு நினைக்கத்தக்கதுஆனால் அப்பாசுரத்தில் திருக்கண் ப்ரஸ்தாவ மில்லாமையுணர்க.]

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–தன்னுடைய தோற்றத்தில் இருளை போக்கி துக்க நிவ்ருத்தியை பண்ண வல்ல ஒளியோடு கூடின ஆதித்யனுடைய அழகிதான உதய ஸூ சகமான தேரும் தோன்றுகிறது இல்லை-இத்தசையில் புண்டரீ காஷனான ஸ்ரீ யபதியும் வருகிறிலன் –சிவந்த ஒளியை யுடைய தாமரைப் பூ போல் இருக்கிற திருக் கண்களை யுடைய ஸ்ரீ யபதியும் வருகிறிலன் -இந்த துர்த்தசையிலே குளிர நோக்கிக் கொண்டு இருவருமாய் வர ப்ராப்தமாய் இருக்க அது கிட்டிற்று இல்லை -ஆதித்யன் உதித்தாலும் ராத்திரி வர சம்பாவனை யுண்டு -அஸ்தமியாத ஆதித்யன் வருகிறிலன் -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்ன கடவது இறே

‘கப்யாஸம் புண்டரீகமேவ மக்ஷி ” என்கிற உபநிஷத்வாக்யத்திற்கு விவரணமாக ஸ்வாமியருளிச்செய்த கம்பீராம்பஸ் ஸமுத் தேத்யாதி திவ்யஸுக்தியில் “புண்டரீகதளாமலாயதேக்ஷண என்றிருக்கின்றதன்றோ? மூல ச்ருதியில்
புண்டரீகமேவ மக்ஷி” என்றிருக்கிறதேயொழிய வேறில்லை; உள்ள மூலத்திற்குச்சேர “புண்டரீகக்ஷிண என்றிவ்வளவே அருளிச்செய்திருக்க வேண்டும்; அதிகப்படியாக மூன்று பதங்களைச் சேர்த்திருக்கிறார். (1) தள . (2) அமல. (3) ஆயத. என்னுமிந்த மூன்று சொற்கள் எந்த ஆதாரத்தைக் கொண்டு ஸ்வாமியாலருளிச் செய்யப்பட்டனவென்று விசாரம் செய்யுமளவில், ஆழ்வார்களின் திவ்யஸூக்திகளை ஆதாரமாகக் கொண்டுதானென்று நிர்ணயிக்க ப்ராப்தம்.-ஆழ்வார்கள் ‘தாமரைக்கண்ணன்‘ என்று சிலவிடங்களிலும் “தாமரைத்தடங்கண்ணன்” “கமலத்தடங்கண்ணன்” “கமலத்தடம் பெருங்கண்ணன்” என்று பல விடங்களிலுமருளிச் செய்து போருகிறார்கள்-வடமொழிலுள்ள லகரமும் ளகரமும் தன்மொழியில் டகரமாக மாறுபடுவதுமுண்டு; “லடயோரபேத: ”என்கிற நியாயம் ஸம்ஸ்க்ருத சாஸ்த்ரஜ்ஞர்களுமிசைந்ததே. தமிழர்கள் எழுத்துப்போலி யென்பர்கள். ஏவஞ்ச, ” பத்ரம் பலாசம் சதனம் தளம் பர்ணம் சது: புமாந்”என்ற அமர கோசத்தில் படிக்கப்பட்ட தலமென்கிற வடசொல்லே தமிழில் தட மென்றாயிற்று என்று திருவுள்ளம் பற்றிய எம்பெருமானார் கமலத்தடங்கண்ணன் தாம்ரைத் தடங்கண்ணன்‘ என்னுமிடங்களிலே மன்னும் பொருளிலே தட மெனவந்ததென்று கொண்டு “புண்டரீகதள”என்றருளிச்செய்தார். தடமென்னுஞ் சொல்லுக்கு விசால மென்கிற பொருளும் தடாகமென்கிற பொருளும் தள மென்கிற பொருளும் ஆங்காங்கு வியாக்கியான கர்த்தாக்களால் ஆதரிக்கப்படு கின்றன. “நீலத்தடவரைமேல் புண்டரீக நெடுந்தடங்கள் போல…. எம்பிரான் கண்ணின் கோலங்களே” என்ற திருவிருத்தப் பாசுரத்தில் தடமென்பதற்கு தடாகமென்பது பொருள்.

நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே
-39-நீல ரத்ன மயமான பெரிய மலையின் மேலே தாமரையை யுடைத்தான நெடிய தடாகங்கள் போலே-பொலிந்து
தாமரைத் தடாகம் போலி சொல்லும் படி அழகு விஞ்சி-எமக்கு எல்லா இடத்தவும்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் -திருவாய் -7-7-1-என்கிறபடியே
ஸர்வ பிரதேசத்திலும் பிரகாசியா நின்றன-பொங்கு முந்நீர் ஞாலப் பிரான்-கிளம்பின முன்னீரை யுடைய லோகத்துக்கு ஸ்வாமி யானவன்–இத்தால்-ஆற்று நீர் ஊற்று நீர் வர்ஷ ஜலத்தாலே கடல் முந்நீர் ஆனால் போலே-அர்த்த காம அபிமான நீர்மையாலே (ஸ்வ பாவத்தால் ) விஞ்சின ஜகத்தை-ஜிதந்தே புண்டரீகாக்ஷ -ஜிதந்தா ஸ்தோத்ரம் -1-என்னும்படி
போக ப்ரதனாயக் கொண்டு தன் கண் அழகாலே தோற்பித்த ஸ்வாமியானவன் என்றபடி-விசும்புக்கும் பிரான்-வெளி நாடான நித்ய விபூதிக்கும்-தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -திருவாய் -2-6-3-என்கிறபடியே தன் கண் அழகாலே போக பிரதனாய்க் கொண்டு நிர்வாஹகனானவன் என்கிறது

“கமலக் கண்ணன் ….அமலங்களாக விழிக்கும்” என்கிற நம்மாழ்வார் பாசுரத்தை யுட்கொண்டே“புண்டரீகதளாமல்.. ஈஷண” என்றார் ஸ்வாமி. கீழே காட்டிய பாசுரங்களையும் “கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்டவப்பெரியவாய கண்கள்’ என்கிற அத்தீயான திருப்பாணாழ்வார் பாசுரத்தையுமநுஸந்தித்துக் கொண்டே “புண்டரீக… ஆயதேக்ஷண: என்றார்.

——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading