ஆங்கு மலரும் குவியும்-

அங்குக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபீ கமலமானது திருக் கையும் திரு ஆழ்வார்களுமான சேர்த்தியைக் கண்டு அலருவது மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் -ஹிரண்யனும் மது கைடபர்களும் முடிந்த பின்பு கண் வளரும் போதை அழகை அனுபவிக்கிறார் -(கீழ் இரண்டு பாசுரங்களுக்கும் இதுக்கும் சங்கதி )

(கவி -நிகழ்வுகளை ஏற்றிச் சொல்வது போல் இங்கும்-தற் குறிப்பு ஏற்று அணி —
பெருமாள் -மிதிலா தேசம் நுழையும் போது ஒல்லை வா என அழைத்தனவே
கோவலன் நுழைய வராதே கொடிகள் அங்கு -இளங்கோ அடிகள் )

(உந்தித்  தாமாரை பரத்வம் ஜகத் காரணத்வம் பொதுவாக சொல்வர்-இங்கு அழகு சவுந்தர்யம்)

ஆங்கு மலரும் குவியும் மாலுந்தி வாய்
ஓங்கு கமலத்தின் ஓண் போது -ஆங்கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி என்றும் பார்த்து  —மூன்றாம் திருவந்தாதி–67-

பதவுரை

மால்–ஸர்வேச்வரனுடைய
உந்தி வாய்–திரு நாபியிலே
ஓங்கு–உயர வளர்ந்த
ஒண் கமலத்தின் போது–அழகிய தாமரைப் பூவானது
கை–அவனுடைய வலத் திருக் கையில்
ஆம்–உண்டான
திகிரி–திருவாழியை
சுடர் என்றும்–ஸூர்யனென்றும்
(ஆங்கை-கை ஆம்)
இடத் திருக் கையிலுள்ள
வெண் சங்கம்–வெளுத்த சங்கை
வானில் பகரும் மதி என்றும்–ஆகாசத்தில் விளங்குகிற சந்திரனென்றும்
பார்த்து–நினைத்துக் கொண்டு
ஆங்கு–எக் காலத்திலே
மலரும் குவியும்–மலர்வதும் மூடிக் கொள்வதுமா யிரா நின்றது.-குவியும் ஆல் -ஆச்சர்யம் என்றுமாம்

(சம்பு காவியம் -வெங்கடாத்ரி கவி
ரமா ஹஸ்த–இத்யாதி
திரிசானு -தப்பு கண்ணில் படும்
விஷ்வாயுசு நல்லதே கண்ணில் படும்
நாபியில் கமலம் -பிராட்டியார் திருக்கையில் லீலா பத்மம்
தேன் சொட்டும் பிள்ளைக்கு-த்யுக முக சிசு -இரண்டு இரட்டை நான் முகன்)

மாலுந்தி வாய்-ஓங்கு கமலத்தின் ஓண் போது —திரு நாபீ கமலத்தில் ஓங்கி இருந்துள்ள அழகியதான தாமரைப் பூ
ஆங்கைத்-திகிரி சுடர் என்றும் –கையில் திரு வாழியை ஆதித்யன் என்றும்

வெண் சங்கம் வானில்-பகருமதி என்றும் பார்த்து–ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை ஆகாசத்தில் விளங்கா நின்றுள்ள சந்திரன் என்றும் பார்த்து-அனுசந்தித்து –

ஆங்கு மலரும் குவியும்-ஆல்-
இரண்டு காலத்திலே பிறக்கக் கடவ அவ்விரண்டு அவஸ்தையானது யுகபத் உண்டாகா நின்றது -ஓர் அவஸ்தையிலே அலருவது குவிவதாக நிற்கும் –

திரு நாபியிலே ஓங்கின தாமரையிலே உண்டான செவ்வி குன்றாத வழகிய பூவானது –அவன் கையில் உண்டான திரு ஆழியை -ஆதித்யன் -என்றும் –மற்றைத் திருக்கையில் உண்டான வெளுத்த நிறத்தை யுடைத்தான சந்தரன் என்று பார்த்து – இப்படி
உத்ப்ரேஷித்துக் கொண்டு –சந்த்ராதித்யர்கள் இருவர் உடைய அவஸ்தையிலும் செய்யக் கடவத்தை இருவரும் கூட ஏக காலத்திலே தோற்றினாப் போலே  இருக்கையாலே
இதுவும் இரண்டு அவஸ்தையிலும்  செய்யக் கடவ கார்யத்தை ஓர் அவஸ்தையிலே செய்யா நிற்கும் –திகிரி மொட்டிக்க ஒட்டாது-வெண் சங்கு மலர ஒட்டாது-நடுவே நிற்கும்-அரும்பினை அலரை-பெரிய திருமொழி -7-10-1–என்னுமா போலே –

——————————————————————

அங்குக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபீ கமலமானது திருக் கையும் திரு ஆழ்வார்களுமான சேர்த்தியைக் கண்டு அலருவது மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் –

திரு நாபீ கமலத்தில் உண்டாய் -உயர வளர்ந்த தாமரையினுடைய செவ்வி குன்றாத அழகிய பூவானது அவனுடைய வலத் திருக் கையிலே உண்டான திரு வாழியை ஆதித்யன் என்றும் –
மற்றைத் திருக் கையிலே ஏந்தின வெளுத்த நிறத்தை யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை
ஆகாசத்தில் வர்த்திக்கிற ஒளியையுடைய சந்திரன் என்றும் உத் ப்ரேஷித்துக் கொண்டு -அக்காலத்திலே அலர்வது மொட்டிப்பதாக நிற்கும் – இது ஓர் ஆச்சர்யம் இருக்கிற படியே என்று அனுபவிக்கிறார்

மாலுந்தி வாய் -என்ற போது-சர்வேஸ்வரனுடைய திரு நாபியில் என்றாகக் கடவது –

அங்கு -அந்தப் பொழுதில் -ஏக காலத்திலே என்றபடி -வானிலே வர்த்திக்கிற ப்ரசித்தனான சந்திரன் -என்னவுமாம் –

(பகரும் மதி -ஒளி விடுபவன் என்றும் ப்ரஸித்தமாகப் பேசப்படும் என்றும்)

(பன்னக ஸார்வ பவ்மன் ந அஹம் -எனக்கும் தெரியாது-ரிஷிகளுக்கும் தெரியாது -குழந்தை ஜன்னி போல் உழன்று-ஸ்ரீ பத்ம நாபன் ஆனந்தமாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறான் -தேசிகன்-இங்கு நாபி கமலம் மட்டுமே -இன்னும் பிரமன் உத்பத்தி இல்லை-திருவட்டாறு போல்)

ஆங்கு மலரும் குவியும்-ஆல்–
இரண்டு காலத்திலே பிறக்கக் கடவ அவ்விரண்டு அவஸ்தையானது யுகபத் உண்டாகா நின்றது –

—————-

(வெள்ளை சரி சங்கோடு –சங்கோடு சக்கரம் பங்கயக் கண் -கண் தாமரை மலர்வதும் குவிவதும் சொல்வர்)

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்! என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும் அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-

திருக் கண்களோடே திவ்விய ஆயுதங்களையும் திவ்விய ஆயுதங்களோடே திருக் கண்களையும் சேர்த்து அனுபவிப்பர்கள்.-தாமரை சூரிய சந்திரன் பார்த்து -சேர்ந்தே அருளிச் செய்வார் -நாடு பிடிக்க பார்க்க ஆழ்வார்கள் தடை -என்றுமாம் –
ஆயுதங்களோடே திருக் கண்களைக் கூட்டுகிறது, தோற்பித்தபடிக்கு;
‘உனக்குத் தோற்றோம்’ என்னப் பண்ணுமன்றோ? கண்களோடு திவ்விய ஆயுதங்களைக் கூட்டுகிறது அழகுக்கு.-ஜிதந்தே புண்டரீகாஷா –-செய்ய கண்ணா செஞ்சுடர் ஆழி-திருக் கண்களை சொல்லியும் ஆழ்வார்களை சொல்லுவதும் உண்டே

————–

என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்! யானினச் செய்வதென்? என்நெஞ் சென்னை,
நின்னிடை யேனல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கும் இருகைக் கொண்டு,
பன்னெடுஞ் சூழ்சுடர் ஞாயிற் றோடு பான்மதி ஏந்தியொர் கோல நீல,
நன்னெடுங் குன்றம் வருவ தொப்பான் நாண்ம லர்ப்பா தமடைந் ததுவே.

எம்பெருமான் ஒரு குன்றமாக வருணிக்கிறாள். அது தன்னிலும் இல்பொருளுவமை (அபூதோபமை) உள்ளது.-ஒரு திருக்கையில், திருவாழியாழ்வானையும், மற்றொரு திருக்கையில் திருச்சங்காழ்வானையும்  எந்தி யிராநின்ற
பச்சை மா மலை போல் மேனியனான எம்பெருமானுக்கு – ஏககாலத்திலே ஸூர்ய சந்திரர்களைத் தன்னிடத்திலே கொண்டதொரு பெரிய மலை ஏற்ற உவமையாம்.
திருவாழியாழ்வானுக்கு ஸூர்யனோடு ஸாம்யமும் திருச்சங்காழ்வானுக்குச் சந்திரனோடு ஸாம்யமும் ப்ரஸித்தம்.

ஆங்கு மலரும் குவியும் மாலுந்திவாய்,
ஒங்கு கமலத்தினொண்போது, ஆங்கைத்
திகிரிசுடரென்றும் வெண்சங்கம், வானிற்
பகருமதியென்றும் பார்த்து. * (மூன்றாந்திருவந்தாதி) என்ற பேயார் பாசுரம் இங்கு நினைக்கத்தக்கது.

———–

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்
தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் ஏந்தி அந்த ஸ்பர்ச்யத்தாலே வளர்ந்த
திருக் கைகளை உடையவனாய் -ஆழ்வார்களிலே வந்து அலை எறிகிற கண்களை உடையவனை-

இளவாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான் -என்று
இவர்களைத் தோற்பித்துக் கொள்ளும் கண் இறே
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்று
அனுபவிப்பாரை பிச்சேற்ற வல்லக் கடவ
திரு ஆழியையும்
திருமேனிக்கு பரபாகமான திரு பாஞ்ச ஜன்யத்தையும்
முற்பட தன்னை எழுதிக் கொடுத்து பின்னை எழுதிக் கொள்கிற திருக் கண்களையும் உடையவனை

பாட
உன் ப்ரீதிக்கு போக்கு விட்டு எங்களையும் உஜ்ஜீவிப்பிக்க

கிருஷ்ணன் கையில் இப்பொழுது ஆழ்வார்கள் உண்டோ -என்னில்-எப்போதும் உண்டு
அது பெண்களுக்கு தோற்றும்-அல்லாதார்க்கு தோற்றாது-இவர்களுக்கு தோற்றத் தட்டில்லை இறே

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்-பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்
கிருஷ்ணன் திரு நாமங்களை பாட –
திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச சன்னியத்தையும் ஏந்தி அந்த ஸ்பர்சத்தால் வந்த
வளர்த்தியை யுடைய திருக் கைகளை யுடையனாய்-ஆழ்வார்களில் வந்து அலை ஏறி கிற திருக் கண்களையும் யுடையனான கிருஷ்ணனை

தாமரைக்கண்ணன் -சுரி சங்கு ஆழி ஏந்தி –(வெள்ளைச் சுரி சங்கோடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் காடாகின்ற -திருவாய் 7-3-1 )

தாமரை மலரவும் மொட்டிக்கவும் இவை இரண்டும் -அங்கு மலரும் குவியும்-கண் நாடு பிடிக்க வளர ஆழ்வார்கள் அளவும் நீண்டு இருக்குமே-ஆராவமுத ஆழ்வான் உத்சவர் இன்றும் சேவித்தால் சங்கு சக்கரம் காதுகளுக்கு அருகிலே இருக்குமே )

கூராழி வெண் சங்கு ஏந்தி
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை
ஆசைப்படப் பண்ணுமதுவும்-அறிவு கெடப் பண்ணுமதுவும் திவ்ய ஆயுதங்கள் யுடைய சேர்த்தியே இறே

பங்கயக் கண்ணானை
முற்பட பெண்களுக்கு தன்னை எழுதிக் கொடுத்து எழுத்து வாங்கப் பண்ணும் கண்கள் –
தூது செய் கண்கள் –
விடவே செய்து விழிக்கும் -(1-7)
கண்களுக்கு அற்றுத் தீர்ந்து –
ஜிதந்தே –
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகன் (2-6)-என்று
உபய விபூதியையும் தோற்பிக்கும் கண் அழகு யுடையவனை –

சந்த்ர ஆதித்யர்கள் சேர உதித்தால் போல் இருக்கிற இரண்டு திவ்ய ஆயுதங்களையும் கண்டு –ஆங்கு மலரும் குவியும் என்கிற-திரு நாபீ கமலம் போலே திருக் கண்களும் அலருவதும் மொட்டிப்பதாகவுமாகா நிற்கும்

கிருஷ்ணன் கையில் ஆழ்வார்கள் யுண்டோ என்னில் – எப்போதும் உண்டு – அது பெண்களுக்குத் தோற்றும் – ஆண்களுக்குத் தோற்றாது

உப ஸம்ஹர-என்றது உகாதார்க்கு கூசி இறே –
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய (1-2-)-என்று
யசோதை பிராட்டி தாலாட்டுகையாலே இவர்களுக்குத் தோற்றத் தட்டில்லை

(பெண்களுக்குத் தோற்றியதுக்கு பிரமாணம்-கம்சனை வதம் செய்யும் வரை மறைக்கச் சொன்னார்களே – இயற்கையாகவே உண்டே )

பாட
உன் ப்ரீதிக்கு போக்கு விட்டுப் பாட –
ஒரு நீர்ச்சாவி போலே கிடக்கிற இத் திரள் உஜ்ஜீவிக்கும் படி வர்ஷியாய்

பங்கயக் கண்ணானைப் பாட
உத்காயாதீநாம் அரவிந்த லோசனம் –
(இந்த பாகவத ஸ்லோகத்திலும் பங்கயக் கண் உண்டே )

நான் உங்களுக்குச் செய்ய வேண்டுவது என் என்ன
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்-பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்-
இவர்கள் இது எல்லாம் சொல்லுகிறது தாங்கள் ஆர்த்தி இறே என்று பார்த்து –
இவர்கள் தரிப்பிக்கைக்காக நாவால் உள்ள கார்யம் கொள்ளுங்கோள் என்ன –
அவன் திரு நாமங்களை பாடு என்கிறார்கள்(வாஸா தர்மம் அவாப்நோதி -திருவடி இடம் பிராட்டி -)

ஏந்தும் தடக் கையன்
பூ ஏந்தினால் போலே திரு வாழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் ஏந்தி
அந்த ஸ்பர்சத்தாலே வளர்ந்த திருக் கை மலர்களை யுடையவனாய் இருக்கை-
(பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை )இன்னார் என்று அறியேன் -இத்யாதி -என்று மதி கெடுக்கும் கையில் திருவாழியையும் சொல்லுகிறது

இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை
இன்னார் என்று அறியேன் –10-10-9-

பங்கயக் கண்ணானை
ஜிதம் தே புண்டரீ காஷ-
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை என்னப் பண்ணும் கண்ணை யுடையவனை –
ஆங்கு மலரும் -இத்யாதி —
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைச் சந்திரன் என்றும் திரு ஆழி ஆழ்வானை ஆதித்யன் என்றும்
திரு நாபீ கமலம் மொட்டிப்பது அலருவது ஆமா போலே கண்ணாகிய தாமரையும் மொட்டிப்பது அலருவதாம்-என்கை –
சந்த்ர ஸூர்யர்களையும் தாமரைப் பூவையும் ஒரு கலம்பக மாலையாகத் தொடுத்தால் போலே இருக்கும்படியைச் சொல்லுகை –

(பத்ம நாபன் கையில் ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து கீழே பார்த்தோம்)

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனைத் துழாய் விரைப்
பூமருவு கண்ணி எம்பிரானைப் பொன்மலையை
நாம் மருவி நன்கு ஏத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட நா அலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே! வள்ளலே!–2-6-3-

ஆங்கு மலரும் குவியும் மாலுந்தி வாய்
ஓங்கு கமலத்தின் ஓண் போது -ஆங்கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி என்றும் பார்த்து  —மூன்றாம் திருவந்தாதி —67-

பங்கயக் கண்ணானை
கண்ணாலே நமனக்கு எழுத்து வாங்கி நம்மை எழுத்து வாங்குவித்துக் கொள்ளுமவன்
தூது செய் கண்கள் இறே-9-9-9-
இள வாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான்-1-7-5-

(ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம
மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9–மாலைப்பூசல் )

(விடுவேனோ என் விளக்கை என்னாவியை
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்
விடவே செய்து விழிக்கும் பிரானையே –1-7-5–விடவே செய்து-தூத்வ கிருத்யம் )

பாட
உன்னுடைய ப்ரீதிக்குப் போக்கு விட்டு எங்கள் வறட்சி கேட்டைத் தீராய் –

ஞானம் உண்டானால் செய்வது என் என்ன –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணனையே பாடேலோ –
திருவாய்மொழி பாடுகையே பிரயோஜனம்
எழுந்திராய் -என்கிறார்கள் –

கண்ணபிரான் திருவவதரிக்கும் போது திருவாழியுந் திருச்சங்குமாகத் தோன்ற, தேவகியார் அதுகண்டு அஞ்சி,-‘அப்பனே! இவ்வாயுதங்களை மறைத்துக்கொள், மறைத்துக்கொள்; எழும் பூண்டெல்லாம் அஸுரமயமாயிருக்கப் பெற்ற
இந்நிலத்தில் இவை விளங்குவதற்குரியனவல்ல’ என வேண்ட; அவன் அங்ஙனமே அவ்வாயுதங்களை உடனே உபஸம்ஹரித்திட்டானென்று இதிஹாஸபுராணங்கள் இயம்பா நிற்க, இவ்வாய்ச்சிகள் அக்கண்ணபிரானைச் சங்கொடு சக்கரமேந்தும் தடக்கையனாகக் கூறுதல் பொருந்துமாறென்? எனில்;

கண்ணபிரான் அவ்வாயுதங்களை மறைத்திட்டது உகவாத பகைவர்கட்காகவே யாதலால்
அவர்களை யொழிந்த மற்றை அன்பர்கட்குத் தோற்றத்தட்டில்லை யெனக்கொள்க;

“நெய்த்தலை நேமியுஞ் சங்கும் நிலாவிய, கைத்தலங்கள் வந்து காணீரே” என்று யசோதைப் பிராட்டி ஆய்ப்பாடியிற் பெண்டுகளை அழைத்துக் காட்டின பாசுரமுங் காண்க.

—————–

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே –
ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே-எங்கள் ஆற்றாமைக்கு
அலருமவை இறே இவை –அர்த்திகளைக் கண்டால் அலருமவை இறே இந்தத் தாமரைப் பூ –

கிங்கிணி வாய்ச் செய்த-அலரவும் மாட்டாதே மொட்டிக்கவும் மாட்டாதே திருக் கண்கள் இருந்த படிக்கு த்ருஷ்டாந்தம் சொல்லுகிறார்கள் –

கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே-ஸ்வாதந்தர்யம் செம்பிளிப்பியா நின்றது –
நப்பின்னை பிராட்டையோட்டை ஸ்பர்சம் அலரப் பண்ணா நின்றது –

இத் தலையில் அபராதம் மொட்டிக்கப் பண்ணும்-அவனுடைய அபராத சஹத்வம் அலரப் பண்ணும் –

கர்ம பாரதந்தர்யம் மொட்டிக்க பண்ணும் ஆஸ்ரித பாரதந்தர்யம் அலரப் பண்ணும்-

காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணா நின்றது ஆர்த்த த்வனி விகசிக்கப் பண்ணா நின்றது –

ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே இவர்கள் ஆற்றாமை கண்டால் அலருமவை யாயிற்று

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே-
இழவு பேறுகள்-அத்தலையிலேயாய் இருக்கிற படி-காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணி பெண்கள் ஆற்றாமை அலரப் பண்ணுகிற படி-பெண்காள் நம்மைக் கிட்டுகையாலே எல்லாம் சபலமாயிற்றோ என்ன – விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளீர்

தத்ர கோவிந்த ஆஸீனம் பிரசன்ன ஆதித்ய வர்ச்சசம் -உத்யோக பர்வதம் –90
(ஆற்றாமை வெப்பம் போக்க ஆஹ்லாத கரம் -சந்திரன் –
சேஷத்வம் அறிந்து முமுஷுவான பின்பும் அந்தகாரம் போக்க ஆதித்யன் குளிர்ந்த வெப்பம் உடைய கிருஷ்ணனை குரு வம்சம் -அனுகூலர்களுக்கு பிரசன்னம் -பிரதிகூலர்களுக்கு வெப்பம் )

————-

செங்கண் –வாத்சல்யத்தாலே சிவந்து இருக்கை – உபமானம் நேர் இல்லாமையாலே உபமேயம் தன்னையே -சொல்லுகிறது ஆகவுமாம் –

செங்கண்-உபமானம் நேர் இல்லாமையால் உபமேயம் தன்னை விசேஷிக்கிறது
பட்டுரையாய் புற்கென்றே காட்டுமால் – உபமானத்தோடே சொல்ல நினைக்கை யாவது அழுக்கு ஆக்குகை இறே-தாமரைக்கு இவன் கொடுத்த நிறம் சிவப்புக்கு ஒப்பாம் அத்தனை அல்லது

செங்கண்
உவமானம் நேரே நில்லாமை உபமேயம் தன்னையே சொல்லப் பெறும்படி

அதீர்க்கம் அப்ரேமதுகம் க்ஷண உஜ்ஜ்வலம்
ந சோரம் அந்தக்கரணஸ்ய பச்யதாம்
அநுப்ஜமப்ஜம் நு கதம் நிதர்சனம்
வநாத்ரி நாதஸ்ய விசாலயோர் த்ருசோ-ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் –43-

அதீர்க்கம் –நீண்ட அப்பெரியவாய கண்கள் -என்றும்
இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானை -என்று பேசும்படி யாகத் திருக்கண்கள்
நீண்டு இருப்பது போலே தாமரை நீண்டு இருக்க வில்லையே -நீட்சிக்குத் தாமரை ஒப்பாக மாட்டாதே

அப்ரேமதுகம் –நீண்ட அப்பெரியவாய கண்கள் பேதைமை செய்தனவே –என்னும் படி பிச்சேற்றும் திறம்
திருக்கண்களுக்கு அல்லது தாமரைக்கு இல்லையே -பிரேம பிரகர்ஷத்தை விலைப்பதில் தாமரை ஒப்பாக மாட்டாதே

க்ஷண உஜ்ஜ்வலம் –எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப் பொழுது
என் ஆராவமுதமே –என்னும் படி நவம் நவமாய் விளங்கா நின்ற திருக்கண்களுக்கு அதி ஸ்வல்ப காலமே
விகாசத்தோடே கூடி விளங்கக் கடவதான தாமரை போய் ஒப்பாக மாட்டாதே

பச்யதாம்-அந்தக்கரணஸ்ய -ந சோரம்–கண்டவர் தம் மனம் வழங்கும் —
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம் –
என்னும்படியான கண்டாருடைய மனத்தைக் கொள்ளை கொள்ளும் திருக்கண்களுக்கு தாமரை ஒப்பாக மாட்டாதே

அநுப்ஜம்–உப்ஜ -ஆர்ஜவே -என்ற தாது பாடம்–ஆர்ஜவம் அற்றது என்றபடி –குடிலமாய் இறே தாமரை மலர் இருப்பது –
ஆக ஆர்ஜவமே வடிவெடுத்த திருக்கண்களுக்கு ஒப்பாக மாட்டாதே

அப்ஜம் –ஆக அதீர்க்கத்வாதி விசிஷ்டமான அப்ஜமானது
வநாத்ரி நாதஸ்ய விசாலயோர் த்ருசோ – கதம் –நு-நிதர்சனம் –அழகருடைய கரியவாகிச் செவ்வரி ஓடி புடை பரந்து
நீண்ட அப்பெரியவாய திருக்கண்களுக்கு எங்கனே த்ருஷ்டாந்தம் ஆகவற்று–ஒரு போதும் ஆக மாட்டாதே
இங்கனம் அருளிச் செய்தவர் கீழே அப்ஜ பாதம் அரவிந்த லோசனம் பத்ம பாணி தலம்–என்றது
ஏதேனும் ஒன்றை த்ருஷ்டாந்தீ கரித்து போது போக்கவே

ஆழ்வாரும் -ஒட்டு உரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வு எல்லாம் பெறும் பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –என்னா நிற்கச் செய்தேயும் ஒட்டு உரைத்து புகழாது ஒழியார் இறே –)

சிறுச் சிறிதே-
ஓர் நீர்ச் சாவியிலே வெள்ளம் ஆகாமே
சாத்மிக்க சாத்மிக்க -என்கை
பிரதம பரிஸ்பந்தமே பிடித்து காண வேணும் -என்றுமாம் –

சிறுச் சிறிதே
குளப் படியில் கடலை மடுக்க ஒண்ணாது இறே –
பொறுக்க பொறுக்க கடாக்ஷிக்க வேணும் –
(அருகில் ஓக்கலையில் –உச்சியில் வந்தானே –
சாத் மிக்க சாத் மிக்க –
பொலிந்து நின்ற பிரான் திரு முடி சேவை பிரசித்தம் )

சிறுச் சிறிதே
பிரதம பரிஸ்பந்தமே பிடித்து அலரும் போதை அளவுகள் எல்லாம்
காண ஆசைப் படுகிறார்கள் ஆகவுமாம்

சிறுச் சிறிதே
ஒரு நீர்ச் சாவியிலே வெள்ளமாகாமை பொறுக்கப் பொறுக்க பிரதம பரிஷ்பந்தமே
பிடித்துக் காண வேணும் என்கை

———–

எம்மேல் விழியாவோ –
கோடை யோடின பயிரிலே ஒரு பாட்டம் -என்னுமா போலே –
சாதகம் வர்ஷ தாரையை ஆசைப் படுமா போலே –
விழியாவோ -என்று தங்கள் மநோரதம் –

எம் மேல் விழியாவோ
கோடையோடின பயிரிலே ஒரு பாட்டம் மழை வர்ஷியாதோ என்னுமா போலே

எம் மேல்
சாதகம் மேக ஜலம் பார்த்து இருக்குமா போலே
கடாக்ஷமே தாரகமான எங்கள் மேலே
இள வாய்ச்சியர் கண்ணினுள் என்று விழிப்பது அங்கே அன்றோ –

அதுக்கு வந்தது என் என்ன

எம் மேல் விழியாவோ
கோடையோடின பயிரில் ஒரு பாட்டம் வர்ஷியாதோ என்னுமா போலே
சாதகம் வர்ஷ தாரையை ஆசைப்படுமா போலே -விழியாவோ -என்று மநோ ரதம்

———–

திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல் –
ப்ரதிகூலர்க்கு அணுக ஒண்ணாமையும்
அனுகூலர்க்கு தண்ணளி மிக்கு இருக்கையும்
அஞ்ஞான அந்தகாரம் போகைக்கும்
உன்னைப் பெறாத விடாய் ஆறுகைக்கும்
என்றுமாம் –
தண்ணளியும் பிரதாபமும் கூடி இறே இருப்பது –

திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போலே
கதிர் மதியம் போல் முகத்தான் என்று ஆசைப்பட்ட படி பேறாக வேணும் என்கிறார்கள்

திங்களும் ஆதித்யனும்
சந்த்ர ஸூர்யர்களுடைய தண்ணளியையும் பிரதாபத்தையும் யுடைய திருக் கண்கள் –
பிரதி கூலர்க்கு அணுக ஒண்ணாது இருக்கையும்
அநு கூலர்க்கு அணுகி அனுபவிக்கலாய் இருக்கையும் –
தத்ர கோவிந்த ஆஸீனம் பிரசன்ன ஆதித்ய வர்ச்சசம் –

திங்களும் ஆதித்யனும்
1-விரஹ தாபம் போக்குகைக்கும்
2-கிடையாது ஒழி கிறதோ என்னும் பயத்தாலே வந்த
அஞ்ஞான அந்தகாரம் போகைக்கும்

அங்கண்
திருக் கண்களுக்கு அவர்களும் உபமானம் ஆகப் போராது இருந்த படி –
சந்த்ரமா மனசோ ஜாத சஷோ ஸூர்ய அஜாயத -என்று
சந்த்ர ஸூர்யர்களுக்கு பிரசாத உஷ்ணங்கள் இவனுடைய சம்பந்தத்தால் இறே –
பல காலும் ராஹு கேதுக்களாலே அபிபூதராய்
க்ஷய வ்ருத்திகளையும் களங்கத்தையும் யுடையரான
அவ்யய சந்திரனும் கார் கால ஆதித்யனும் அன்றே
அதீவ ப்ரிய தர்சனம் என்கிறவனுடைய பார்வைக்கு ஒப்பு –

(ஆகவே அம் கண் என்று விசேஷணம் இட்டு அவற்றையே சொல்கிறார் )

திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
பெறாதார் விடாய் ஆற்றுகைக்கும்
கிடையாதோ என்கிற அஞ்ஞான அந்தகாரம் போகைக்கும்
பித்தம் கழன்று தங்களுக்குத் தண்ணளி மிக்கு இருக்கையும் என்றுமாம் –
பிரதாபமும் தண்ணளியும்
பிரசன்ன ஆதித்ய வர்ச்சசம்(குளிர்ந்த ஆதித்யன் ஒளி மஹாபாரதம் )

—–

அங்கண் இரண்டும் கொண்டு –
சந்திர சூர்யர்கள் கோப பிரசாதங்களுக்கு ஒப்பர் அல்லர் என்கை –
இரண்டும் கொண்டு
முழு நோக்கு பொறுக்கும் அளவானவாறே -இரண்டும் -என்று சொல்கிறார்கள் –

அங்கண் இரண்டும் கொண்டு
கார்கால ஆதித்யனும் நகட்டுச் சந்திரனும் போல் அல்ல
சந்த்ர காந்தாநநம் ராமம் அதீவ ப்ரிய தர்சனம் -(சந்திரன் போல் என்று தப்பச் சொன்னோம் -அதீவ பிரிய தர்சனம் அதுக்காக )
முழு நோக்குப் பொறுக்கும் படியால் உன் அழகிய இரண்டு கண்களையும்
இட்டுப் பார்க்க வேணும் நாங்கள் பிழைக்க -என்கை –

அம் கண்
தாமரைப் பூ என்ற போது விகஸிக்கைக்கு தாமரை ஒப்பு இல்லாதாப் போலே –
கோப பிரசாதங்களை சந்த்ர ஸூர்யர்கள் ஒப்பல்ல-

———–

எங்கள் மேல் –
உன் நோக்குப் பெறாதே உறாவின எங்கள் பக்கல் –

நோக்குதியேல் –
தங்கள் தலையால் கிட்டுவது ஓன்று அன்றே –

இரண்டும் கொண்டு
முழு நோக்கு பொறுக்கும் அளவானவாறே –
இரண்டும் -என்று சொல்கிறார்கள்

எங்கண் மேல் நோக்குதியேல்
உன் நோக்குப் பெறாதே ஒரு நீர்ச் சாவியாய் உறாவின எங்கள் பக்கலிலே

எங்கள் மேல்
அவை இரண்டு கண்ணுக்கும் தங்கள் பக்கலிலே விஷயம் உண்டு –
1-சேர ஒட்டாதார் பக்கலிலே பிரதாபமும்
2-தங்கள் பக்கலிலே தண்ணளியும்

சீற்றத்தோடு அருள் பெற்றவன்(3-6)
ஹிரண்யன் பக்கல் சீற்றம் செல்லா நிற்க
பிரகலாதனுக்கு அனுகூலமாய் இருந்தது இறே கண்ணில் வாத்சல்யம் இருந்த படி

தோற்றக் கேடு அவை இல்ல வன்உடை யான்அ வன் ஒரு மூர்த்தியாய்ச்
சீற்றத் தோடு அருள் பெற்ற வன் அடிக் கீழ்ப் புக நின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல் ஆகி நின்ற எம் வானவர்
ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.(திருவாய்மொழி 3-6-6 )

ஸிம்ஹம் ஆனையோடே பொரா நின்றாலும் குட்டிக்கு முலை கொடுக்குமா போலே -என்று பட்டர் குழவி இடை கால் இட்டு எதிர்ந்து பொரும் -(பெரியாழ்வார்-3-5 )

வழு ஒன்றும் இல்லா செய்கை வானவர் கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட
மழை வந்து ஏழு நாள் பெய்து மாத்தடைப்ப மது சூதன் எடுத்து மறித்த மலை
இழவு தரியாதது ஓர் ஈற்றுப்பிடி இளம் சீயம் தொடர்ந்து முடுகுதலும்
குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -(திருவாய்மொழி-3 -5 -2-)

விழியாவோ -என்று தங்கள் மநோ ரதம் –
நோக்குதியேல் -என்ற இடம் முன்னிலை

நோக்குதியேல்
தங்கள் தலையால் கிட்டுமது அன்றே நோக்குத் தான்

எங்கள் மேல் சாபம் இழிந்து
தங்கள் யாதனா சரீரம் போலேயும்
சாபோபஹதரைப் போலேயும்
விஸ்லேஷ வ்யசனமே படுகிற
எங்கள் துக்கம் –
அனுபவித்தே விட வேண்டுகையாலே -சாபம் -என்கிறது –

அன்றியே
விஷஹாரி ஆனவன் பார்க்க விஷம் தீருமா போலே
அவன் நோக்காலே சம்சாரம் ஆகிய விஷம் தீரும்

ஆகையால்
அங்கண் இரண்டும் கொண்டு
எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழியும்
என்று அந்வயம் –

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலேசெங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ-
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்-
அறைவடத்தில் கிண்கிணி போலே
அர்த்த விகசிகதமான தாமரைப் புஷ்பம் போலே இருக்கிற-சிவந்த திருக் கண் மலர்களை பொறுக்கப் பொறுக்க
உன் கடாஷம் உறாவிக் கிடக்கிற நம் மேல் விழியாவோ –

அதாவது
1-தேகாத்ம அபிமானத்தை நீக்கி -அதுக்கு இசைந்தவாறே
2-ஸ்வ ஸ்வா தந்த்ரிய அபிமானத்தை நீக்கி -அதுக்கு இசைந்தவாறே
3-சேஷத்வத்தை அறிவித்து -அதுக்கு இசைந்தவாறே –
4-அந்ய சேஷத்வ நிவ்ருதியை உண்டாம்படி பண்ணி -அதுக்கு இசைந்தவாறே
5-ஜ்ஞாத்ருத்வ பிரயுக்தமான ஸ்வ ஸ்மிநிஸ்வ சேஷத்வ நிவ்ருத்தியை உண்டாக்கி -அதுக்கு இசைந்தவாறே
6-ஸ்வ ரஷண ச்வான்வயத்தை நிவர்த்திப்பித்து – அதுக்கு இசைந்தவாறே –
7-உபாயாந்தரங்களை விடுவித்து -அதுக்கு இசைந்தவாறே
8-தத் ஏக உபாயனாம்படி பண்ணி -அதுக்கு இசைந்தவாறே –
9-ஸ்வ வியாபாரத்தில் ஸ்வாதீன கர்த்ருத்வ நிவ்ருத்தியைப் பண்ணுவித்து -அதுக்கு இசைந்தவாறே
10-பாரதந்த்ரிய பிரதிபத்தியைப் பிறப்பித்து அதுக்கு இசைந்தவாறே
11-சமஸ்த கல்யாண குண பரிபூர்ணனான தன்னை அனுபவிப்பித்து –
12-அனுபவ ஜனித ப்ரீதிகாரித கைங்கர்யத்தை உண்டாக்கி
13-அக்கைங்கர்யத்தில் ஸ்வ போக்த்ருத்வ புத்தியை தவிர்ப்பிக்கை –

முழு நோக்கு பெறும் அளவானவாறே -என்றது-
இவ்வளவான பாகம் பிறந்தவாறே -என்றபடி –
இப்படி அல்லது
தேகாத்ம அபிமானத்துக்கு-பரம பக்தி உண்டாக்கிலும் உண்டாகாது இறே

அங்கண்-இத்யாதி –
சந்திர சூர்யர்கள் இருவரும் உச்சிப் பட்டால் போலே இருக்கிற
அழகிய திருக் கண்கள் இரண்டையும் கொண்டு –
இவ்வளவான பாகம் பிறந்த எங்களை கடாஷித்தாய் ஆகில் –
அதாவது
பரம பக்தியை உண்டாக்குகை-
அத்தால்
எங்கள் மேல் சாபம் இழிந்து –
மேல்
அவசியம் அனுபாவ்யமாய் இருக்கிற
விஸ்லேஷ வியசனம் தீரும் –
ஆகையால்-உக்த ரீத்யா கடாஷிக்க வேணும் என்று கருத்து –

திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போலே -என்றது அவன் கடாஷம்
சுக ரூபமாயும்
அஞ்ஞான நிவர்தகமாயும்
இருக்கையாலே –

எம் மேல் -செங்கண்
எங்கள் மேல் –
எங்கள் மேல் சாபம்
மூன்று தடவை சொல்கிறார்கள்
ஸ்வரூப விரோதி -கழிந்தவர்கள் -யானே என் தனதே இல்லாமல் யானே நீ என் உடைமையும் நீயே
பிராப்ய விரோதி -கழிந்தவர்கள் -மற்றை நம் காமங்கள் மாற்று
உபாய விரோதி கழிந்தவர்கள் -களைவாய் துன்பம் களையாது ஒளியாய் களை கண் மற்று இலேன் –

செங்கண் :

கழிவிரக்கம் காட்டி கழித்தன போக்கி
அழல விழித்து அகல்விப்பான் — பாழே
பலபல செய்து புகல்அயல் இல்லா
புலையனேர்க்கு அங்கண் அருள்.

அ-கார வாச்ய சமாகமத்துக்கு ஆறு படிக்கட்டு :
ஈஸ்வரஸ்ய ஸௌஹார்த்தம்
எதுர்ச்சா ஸுக்ருதம்
விஷ்ணோர் கடாக்ஷம்
அத்வேஷம்
ஆபிமுக்யம்
சாது சமாகமம்
அதில் நடுவாக உள்ளது விஷ்ணோர் கடாக்ஷம்.
கதிர் மதியம் போல் முகத்தான் என்று தொடங்கி செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாயாவோ என்று
கடாக்ஷ வீக்ஷண்யத்தை பிரார்த்திக்கிற படி இது.
தேய்தல், வளர்தல், ராகு-கேதுவால் பீடித்தல் இவை உள்ள சூரிய-சந்திரர்கள் அவனுடைய திருக் கண்களுக்கு
நேர்கொடு நேர் ஒவ்வார் என்று தெளிந்து, ’செங்கண்’ என்றே சொல்லி
”தத்-தஸ்ய சதுர்சம்” ஆக்குகிறாள். அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்து
என்று பிராப்பிய விரோதி கழிக்கையும்
இனி மேலில் பாட்டுகளில் வெப்பம் கழிந்து கூடி இருந்து குளிர்தலும் சொல்லுகிற படி.
போற்றியாம் வந்தோம் புகழ்ந்து என்று இருப்பதால் இது ஒரு புகழ் மாலை.

கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ – என்பதாக
எம்பெருமான் செங்கண்ணுக்கு உபமானமாக தாமரையை சொல்லுகிறது சாந்தோக்யம் ;
அவனுடைய கண்ணுக்கு உபமானம் இட்டுச் சொல்லுகை என்பது அதனை அழகாக்குமத்தனை.
உபமானம் நேர் நில்லாமையாலே உபமேயம் தன்னை விசேஷிக்கிறது.
தன்னுடை பூர்வபக்ஷ கிரந்த வாசிப்பின் போது இந்த வாக்யத்திற்கு யாதவ பிரகாசர் சொன்ன அபார்தத்தைக்க கேட்டு கலங்கி , பகவத் ராமானுஜர் காட்டுகிற விசேஷார்த்தம் இங்கு நோக்கத்தக்கது :

கப்யாஸம் = கபி + ஆஸம் = சூரிய மண்டலத்தை இருப்பிடமாக உள்ள பிரஹ்மத்தை உபாஸ்யமாக சொல்வது போல,
புண்டரீகம் போலேயான அக்ஷிணியை இருப்பிடமாக உள்ள பிரஹ்மம் உபாஸ்யம் என்கிறது .
கப்யாஸம் என்பதற்கு உபாசன ஸ்தானம் அர்த்தம் என்கிற முதல் யோஜனை இங்கு சேராது.
கபி + ஆஸம் – கபி = குரங்கு பிருஷ்டம் , புண்டரீகம் என்று உபமான துவயமும்;
உயர்ந்த பிரஹ்மத்துடைய திருக்கண்களுக்கு தீன உபமானமும் கூடாது ஆகையால் இந்த இரண்டாவது யோசனையும் தள்ளுபடி.
ஈஷத் விகசித = சிறிதளவு மலர்ந்த என்று பொருளும் சரிப்படாது. அவன் மலங்க விழித்தால் நம்மால் தரிக்கப் போகாது.
அத்தாலேயே ஆண்டாள் செங்கண் சிறுச்சிறிதே சாத்மிக்க சாத்மிக்க எம்மேல் விழியாவோ என்கிறாள்.

ஸ்வாமி எம்பெருமானார் காட்டுகிற அர்த்தமோ ஆழ்வார்கள் திருவாக்கை அடி யொற்றித் தந்த விளக்கமாகும்.-கம்பீரம்பு சமத்பூத (1) ஸுவிருஷ்ட நாள அஸ (2) ரவி கர விகசித (3) புண்டரீக தள அமலஆயத ஈக்ஷணம்-என்பதாக சொல்லுகிற அழகு – ஈதோர் அற்புதம் கேளீர் என்று வாய் வெறுவத் தகும்.

———–—————————

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;
இரு நிலம் கை துழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-

‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;–சங்கு சக்கரங்கள் என்று அவற்றைச் சொல்லி -வந்தால் பண்ணும் அஞ்சலியைப் பண்ணா நிற்கும் –
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;–வந்தால் குளிர நோக்கும் திருக் கண்களை நினைத்து
தாமரை போன்ற திருக் கண் என்றே சொல்லி -அது பெறாமையாலே தளரா நிற்கும் –
இரண்டு ஆழ்வார்கள் அளவும் வந்து அலை ஏறி கிற கண்களின் அழகை இடைவிடாதே சொல்ல நினைத்து தளரா நின்றாள் 

------------
செங்கனி வாயின் திறத்ததாயும்
செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா வறாத
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ!
நாணும் நிறையும் இழந்ததுவே.–7-3-3-

சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் –பிரிந்தால் விரோதியைப் போக்குகைக்குக் கருவியாய்,-வைத்த கண் மாற ஒண்ணாத அழகை யுடைய ஆழ்வார்களைக் கண்டு உகந்தது.

தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும் –தவாஸ்மி–‘உனக்கு ஆகிறேன்’ என்று சொல்லப் புக்கு மாட்டாது ஒழிந்தால், குறையும் தலைக் கட்டின திருக் கண்களுக்கு ஆயிற்று
அநந்யார்ஹமாக எழுதிக் கொடுத்தது. என்றது,-‘பிரிகிற போது நோக்கின நோக்கிலே பிறர்க்கு ஆகாதபடி உஜ்ஜீவிக்கச் செய்தான்’ என்றபடி.

————–

மின்னும் ஆழி அம் கையவன் செய்யவள் உறை தரு திரு மார்பன்
பன்னு நான்மறைப் பல் பொருளாகிய பரனிடம் வரைச் சாரல்
பின்னும் மாதவிப் பந்தலில் பேடை வரப்பிணியவிழ் கமலத்து
தென்ன வென்று வண்டு இன்னிசை முரல் தரு திருவயிந்தபுரமே–3-1-2-

மின்னும் ஆழி இத்யாதி –சர்வேஸ்வர லஷணம் ஆகிறது –திரு ஆழியைக் கையிலே சலியாதே பிடித்தல்-ஸ்ரீ லஷ்மீ பதியாதல்-வேதைக சமைதிகன் ஆதல்-இவை ஆயிற்று இவை மூன்றும் இங்கே உண்டு-மின்னும் ஆழி அம் கையவன்- மேகத்திலே மின்னினால் போலே இருக்கிற திரு ஆழியைக் கையிலே உடையவன் –செய்யவள் உறை தரு திரு மார்பன் –அந்த மின் கொடி தான் பிரதேசாந்தரத்திலே தழுவினால் போலே ஆயிற்று

———–

‘நயனும், வாய்மையும், நன்னர் நடுவும்,
இவனின் தோன்றிய, இவை’ என இரங்க,
புரை தவ நாடி, பொய் தபுத்து, இனிது ஆண்ட
அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழிச் செல்வம் போல்,
நிரை கதிர்க் கனலி பாடொடு பகல் செல,
கல்லாது முதிர்ந்தவன் கண் இல்லா நெஞ்சம் போல்,
பல் இருள் பரத்தரூஉம் புலம்பு கொள் மருள் மாலை–கலித்தொகை 130

நயம், வாய்மை, நடுவுநிலைமை ஆகியவை இவை என நாடி நன்கு ஆராய்ந்து பொய்யை விலக்கி நாட்டை இனிது ஆண்ட அரசனோடு நல்லூழிச் செல்வம் மாண்டுபோனது போல, ஒளிச் செல்வன் கதிரவன் மறையப் பகலும் மறைந்தது. கல்லாது முதிர்ந்தவனின் இரக்கமற்ற நெஞ்சம் போல இருள் பரவிக்கொண்டிருக்கும் மாலைக்காலம்.

—————–

என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள் யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு
பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான் நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-8-2-10-

வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்கும் படி இருக்கிற இரண்டு கையிலும் ஆழ்வார்களைத் தரித்து -பலவாய் தூரப் போய் எங்கும் வ்யாபிப்பனவான ஒளிகளை யுடைய ஆதித்யனோடே கூட அவனோடே ஒத்த தேஜஸ் ஸை யும் வெண்மையையும் உடைய சந்திரனை ஏந்தி அத் தேஜஸ் ஸூ க்களுக்கு பரபகமாய் இதர விஸஜாதீயமாய்-தர்ச நீயமாய் -கண்டார் கண் குளிரும்படி நீலமாய் மற்றும் அனுக்தமான அழகுகளை யுடைத்தாய் -அபரிச்சேதயமாய் இருபத்தொரு மலை நடந்து வருமா போலே யாயிற்று ஆழ்வார்களைக் கொண்டு உலாவும் படி-

———-

அர்ச்சிராதி–த்ருதீய பிரகரணம் –
உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டு -சர்வ ஆஸ்ரய மயமான கோப்புடைய சீரிய சிங்கா சணத்திலே பன்னிரண்டு இதழாய்-நாநா சக்தி மயமான திவ்ய கமலமாய் -அதில் திவ்ய கர்ணிகையிலே புஷ்ப சஞ்சய விசித்ரமான திவ்ய யோக பர்யங்கமாய் –அதின் மேலே அநேகமாயிரம் சந்த்ரர்களை உருக்கி வார்த்தால் போலே குளிர்ந்த புகரை யுடைத்தான திருமேனியை யுடையனாய் –கல்யாண குணங்களுக்கு அந்தம் இல்லாமையாலும் -சர்வ வித கைங்கர்ய பரற்கு எல்லாம் படிமாவாய் இருக்கையாலும் அனந்தன் என்றும் சேஷன் என்றும் திரு நாமத்தை யுடையனாய் -பகவத் அனுபவத்துக்குப் போக்குவீடாகப் பல வாய்த்தலைகளையும் யுடையனாய் – விஜ்ஞான பலங்களுக்கும் சைத்ய மார்த்த்வ சௌரப்யாதி குணங்களுக்கும் கொள்கலமான திருவனந்த வாழ்வான் ஆகிற படுக்கையிலே ராஜதகிரி சிகரத்திலே அநேகமாயிரம் ஆதித்யர்கள் சேர உதித்தால் போலே இருக்கிற பணா மண்டலங்களில் ஜ்யோதிர் மண்டலத்தின் நடுவே –

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading