ஸ்ரீ பன்னீராயிரப்படியின் சீர்மை-

13 ஆம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌ தான்‌ வாதிகேசரி அழகிய மணவாளச்‌ சியரும்‌ திருவாய்‌ மொழிக்குப்‌ பன்னீராயிரப்படி என்னும்‌ உரையை இயற்றினார்- மற்ற நான்கு வியாக்கியானங்கள்‌ திருவாய்‌ மொழிக்கு இருப்பினும்‌ இந்த உரையைக்‌ கொண்டே பதவுரை நிச்சயித்து அறிய வேண்டும்-மாமுனிகள்‌ ஆசாரிய இருதயம்‌ என்னும்‌ தூலுக்கு அருளிய உரையில்‌ சீயர்‌ காட்டிய பன்னீராயிரப்படியிலுள்ள பொருளாட்சிகளைத்‌ தழுவிச்‌ சிறப்பித்துள்ளார்- திருவாய்‌மொழி உரைகளுள்‌ இதுவே முற்றுப்புள்ளி வைத்தாற்‌ போல் அமைந்து விட்டதும்‌ இங்குக்‌ குறிப்பிடத்தக்கது–பிள்ளான்‌, நஞ்சீயர்‌, பெரியவாச்சான்‌ பிள்ளை, வடக்குத்‌ திருவீதிப்‌ பிள்ளை, அழகிய மணவாளச்‌ சீயர்‌ ஆகிய இவ்வைவரையும்‌ ‘திருவாய்மொழியைக்‌ காத்த குணவாளர்கள் என்பர்-, பன்னீராயிரப்படி பதவுரையோடுடு கூடிய பொழிப்புரையாக அமைந்த முதல்‌ உரை

திருமகள்‌ கேள்வனாகிற பெருங்கடலில்‌ நம்மாழ்வாராகிற மேகம்‌ கருணை நீரை முகத்‌ தெழுந்து, நாதமுனிகளாகிற மலையில்‌ பொழிந்திட, அது அங்கிருந்து உய்யக்கொண்டார்‌, மணக்கால்‌ நம்பி ஆகிய இரு அருலிகளால்‌ ஆளவந்தார்‌ என்னும்‌ ஆசாரியரான பேராற்றை யடைந்து, பின்னர்‌ பெரிய நம்பிகள்‌ முதலான ஐந்து ஆசாரியர்‌ களாகிற கால்வாய்கள்‌ வாயிலாக, இராமாநுசராகிய பெரிய ஏரியையடைந்து, அவரிடமிருந்து 74 ஆசாரியர்களாகிற மதகு களால்‌ உயிர்களாகிய பயிர்களின்‌ பொருட்டுப்‌ பாய்கிறது-

இவர்‌ தென்பாண்டிய நாட்டில்‌ ப்ரஹ்ம தேசம்‌ மன்னார்‌ கோவிலில்‌ ஆனி மாதம்‌ சுவாதி நட்சத்திரத்தில்‌ பிறந்தார்‌ என்றும்‌, இவருக்கு வரதராசர்‌, சுந்தர ஜாமாத்ரு முனி (அழகிய மணவாளச்‌ சீயர்‌) என்ற பெயர்கஞம்‌ உண்டு என்றும்‌ அறிய முடிகிறது-ஆனால்‌ இவர்‌ பிறந்த நட்சத்திரம்‌ மகம்‌ என்று யதீந்திர பிரவணப்‌ பிரபாவம்‌ கூறும்‌: மேலும்‌ பன்னீராயிரப்‌ படி குரு பரம்பராப்‌ பிரபாவத்தில்‌ சீயர்‌ மாசி மகத்தில்‌ பிறந்த தாகக்‌ குறிப்பிடப்பட்டுள்ளது.-சீயர்‌ இயற்றிய பகவத்‌ கீதை வெண்பாலின்‌ மூலம்‌ இவர்‌ குலம்‌ சொட்டை என்றும்‌, இயற்‌ பெயர்‌ மணவாளர்‌ என்றும்‌, இதன் பின்‌ இவருக்குச்‌ சொட்டை அழகிப மணவாளமுனி என்ற பெயர்‌ வந்தது என்றும்‌ காண முடிகிறது.”கி. பி. 1242இல்‌ பிறந்து 108 ஆண்டுகள்‌ வாழ்ந்து கி. பி, 1350இல்‌ திருநாட்டை யெய்தினார் என்பர்-அழகிய மணவாளச்‌ சீயர்‌ பெரியவாச்சான்‌. பிள்ளையின்‌ இறுதிக்‌ காலத்தில்‌ பிறந்து , அவரை இருபது வயதிற்குள்‌ ஆஸ்ரயித்து, அவர்‌ மறைவுக்குப்‌ பிறகு, அவர்‌ குமாரரான நாயனாராச்சான்‌ பிள்ளையிடம்‌ அனைத்தையும் அதிகரித்தார்-திருவரங்கம்‌ பெரிய கோயில்‌ அழகிய மணவாளன்‌ அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌. என்னும்‌ ஆசாரியராகவும்‌, திருமலையிலுள்ள திருவேங்கடத்துறை செல்வன்‌ வேதாத்த தேசிகர்‌ என்னும்‌ ஆசாரியராகவும்‌, பெருமாள்‌ கோவில்‌ என வழங்கும்‌ காஞ்சி வரதராஜப்‌ பெருமான்‌ பிள்ளை லோகாசாரியர்‌ என்னும்‌ ஆசாரியராகவும்‌, திருநாராயணபுரத்துத்‌ திருமாலான செல்வநாரணன்‌ வாதிகேசரி அழகிய மணவாளச்‌ சீயர்‌ என்னும்‌ ஆசாரியராகவும்‌ திரு அவதரித்ததாகக்‌ கூறுவர்-சீயரின்‌ தாய்‌ தந்தையர்‌ மன்னார் கோயிலிருந்து மேல்நாடான திருநாராயண புரத்துக்குச்‌ சென்று, அத்தலத்து இறைவனான திருநாராயணப்‌ பெருமாளிடம்‌ பிள்ளை வரம்‌ வேண்டித்‌ துதித்துப்‌ பெற்றார்கள்-துவய மந்திரத்தின்‌ பூர்வ வாக்கியமான (ஸ்ரீமந்‌ நாராயண சரணெள சரணம்‌ ப்ரபத்யே? என்பதற்குப்‌ ‘பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈஸ்வரன்‌ திருவடிகளை உபாயமாகப்‌ பற்றுகிறது? என்று பிள்ளை லோகாசாரியர்‌ அருளிய போதிலும்‌, சீ.பர்‌ தாம்‌ இயற்றிய தத்துவ தீபிகை என்னும்‌ நூலில்‌ “ஸ்ரீமத்‌’ பதத்தைச்‌ சரணெள: என்ற பதத்தோடு சேர்த்துத்‌ திருவோடு கூடிய நாராயணன்‌ திருவடிகளை என்று பொருள்‌ வழங்கி யுள்ளமை அறியத்தக்கது –

சீயர்‌ இயற்றிய நூல்கள் -17-1, தத்துவ தீபம்‌-2. தத்துவ நிரூபணம்‌-3. தத்துவ சங்கிரகம்‌-4. தத்துவ பூஷணம்‌-5. ஞானார்ணவம்‌-6. சாரீரக்கைக்‌ கண்டியம்‌-7. அத்யாத்ம”சிந்தை-8-சதுச்லோகி-9, கீதாசாரம்‌)இவை ஒன்பதும் மணிப்பிரவாள ) 10. தீபப்‌ பிரகாசிகை 11. திருவிருத்த வியாக்கியானம்‌ 12. பன்னீராயிரப்படி 13. இருபத்துநாலாயிரப்படி பிரமாணத்‌ திரட்டு 14. இரகசியத் திரய விவரணம்‌ 15. இரகசிய மணிமாலை-16. தமிழ்க்கனி பிரபந்தம்‌-17. பகவத்கீதை வெண்பா

கி.பி, 1274க்கப்‌ பின்னரே வெகுவிரைவில்‌ திருவாய்மொழிக்கு இவ்வுரை எழுதியிருக்கக்‌ கூடும்‌ என நினைக்க இடமுண்டுஅபய ப்ரதநாமா நமஸ்மத்குருமஹம்‌ பஜே ॥ யத்கடாஷாதயம்‌ ஜந்துரபுநர்‌ ஐந்மதாம்‌ கத: !॥ (ஒரு விலங்காயிருந்த அடியேன்‌, யவருடைய கடாட்சத்தால்‌ மறுபிறவி யில்லாதவனானேனோ,அப்படிப்பட்ட அபயபிரதர்‌ என்னும்‌ பெயருடைய என்னுடைய ஆசாரியரை அடியேன்‌ பத்தி செய்கிறேன் – தத்துவ நிருபணத்தில் இவர் அருளிச் செய்த தனியன்

என்றும்‌ நிலையாயுள்ள பரமாத்ம சீவாத்மாக்‌களின்‌ உண்மை நிலைகளை உணர்த்துகின்ற முதல்‌ நான்கு பத்துக்களில்‌, முதற்பத்தும்‌ இரண்டாம்‌ பத்தும்‌ சீவாத்மாலினால்‌ அடையத்‌ தக்க இறையியல்பை உணர்த்துகின்றன; மூன்றாம்‌ பத்தும்‌ நான்காம்‌ பத்தும்‌ இறைவனை அடைகின்ற ஆன்மாவின்‌ இயல்பை உணர்த்துகின்றன; அஞ்சாம்‌ பத்தும்‌ ஆறாம்‌ பத்தும்‌ தன்னை அநுபவிப்பதற்குத்‌ தானே உபாயமான இறைவனைத்‌ தஞ்சமாகப்‌ பற்றுதலை உணர்த்துகின்றன; ஏழாம்‌ பத்தும்‌ எட்டாம்‌ பத்தும்‌ இறைவனைப்‌ பெறுதற்குத்‌ தடையான பாபங்‌களின்‌ நீக்கத்தை உணர்த்துகின்றன; ஒன்பதாம்‌ பத்தும்‌ பத்தாம்‌ பத்தும்‌ இறைவனை அடைந்து பெறும்‌ பேறு கை கூடுதலை உணர்த்துகின்றன -அவற்றுள்ளே, முதற்பத்து மிகவுயர்ந்த அடிமை கொள்ளும்‌ தலைவனான இறைவனுடைய காத்தற்‌ றன்மையையும்‌, இரண்டாம்‌ பத்து அவனுடைய அநுபவிக்கத்தக்க இனிமையையும் தெரிவிக்கின்றன; மூன்றாம்‌ பத்து திருமாலுக்கே உரிய தொண்டனான ஆன்மா அவனொருவனையே அநுபவிக்கும்‌ அநுபவத்தையும்‌, நாலாம்‌ பத்து இறைவனொருவனையே ஆன்மா தனது அன்புக்கு இலக்காகக்‌ கொண்டமையையும்‌ விளக்குகின்றன; அஞ்சாம்‌ பத்து இறைவனாகிய உபாயத்தின்‌ அபாய மேதுமில்லாத இயல்பையும்‌, ஆறாம்‌ பத்து அவ் வுபாயத்தைப்‌ பற்றும்‌ முறையையும்‌ குறிப்பிடுகின்றன; ஏழாம்‌ பத்து வெறுக்கத் தக்க பாபங்களின்‌ தன்மையையும்‌, எட்டாம்‌ பத்து அப் பாபங்கள்‌ நீங்கும்‌ வகையையும்‌ தெரிவிக்‌கின்றன; ஒன்பதாம்‌ பத்து பெறத்தக்க பேற்றின்‌ தன்மையையும்‌, பத்தாம்‌ பத்து அப் பேற்றினை அநுபவிக்கும்‌ விதத்தையும்‌ கூறுகின்றன

முதல்‌ பதிகம்‌ காக்கும்‌ தன்மைக்கு இன்றியமையாத, எல்லாரையும் விட இறைவனுக்குள்ள உயர்த்தியையும்‌, இரண்டாம்‌ பதிகம்‌ எல்லாராலும்‌ அடையப்படும்‌ தன்மையையும்‌, மூன்றாம்‌ பதிகம்‌ அடைவதற்கு இன்றியமையாது வேண்டிய–அவதாரம்‌ செய்து கண்ணுக்கிலக்காய்‌ நிற்கும்‌ எளி மையையும்‌, நான்காம்‌ பதிகம்‌ தன்னை யடைந்தவர்களின்‌ குற்றங்களைத்‌ தாங்கும்‌ பொறுமையையும்‌, ஐந்தாம்‌ பதிகம்‌ தாழ்ந்தாரோடு தன்‌ பெருமை பாராமல்‌ புரையறக்‌ கலக்கும்‌ நீர்‌மையையும்‌, ஆறாம்‌ பதிகம்‌ ஆராதனைக்‌ கெளியனாம்‌ தன்மையையும்‌, ஏழாம்‌ பதிகம்‌ அவனைப்‌ பற்றுவதிலுள்ள மிக்க இனிமையையும்‌, எட்டாம்‌ பதிகம்‌ பற்றுமவர்களிடம்‌ இறைவன்‌ மன மொழி மெய்களால்‌ ஒருபடிப் பட்டிருக்கையாகிற நேர்மையையும்‌, ஒன்பதாம்‌ பதிகம்‌ பொறுக்கப்‌ பொறுக்கத்‌ தன்னை யநுபவிப்‌பிக்கும்‌ தன்மையையும்‌, பத்தாம்‌ பதிகம்‌ நம்மிடம்‌ எதையும்‌ எதிர்பாராமல்‌ தன்னை நமக்குத்‌ தந்துதவுந்‌ தன்மையையும்‌ சொல்லுகையாலே காக்கும்‌ தன்மையின்‌ நினைவை வெளிப்‌ படுத்திக்‌ காட்டுகிறார்‌ சீயர்‌. இவ்வாறே மற்ற எல்லாப்‌ பத்துக்‌ களுக்கும்‌ சீரிய முறையிலே உரை வகுத்துக்‌ காட்டுவது அவர்தம்‌ பெரிய அறிவாற்றலைப்‌ புலப்படுத்துகிறது –

(அஞ்சிறைய’-1-4)கு இறைவனின்‌ பத்துத்‌ தன்மைகளைக்‌ காட்டி, முடிவில்‌ ஆழ்வாருடைய இயல்பைக்‌ கூறுகிறார்‌. ஆழ்வார்‌– இறைவன்‌ ஒத்த இயல்புகளையும்‌ காட்டுகிறார்‌. இதனால்‌ ஆன்மாவின்‌ இயல்பை உணர்த்துவதாகச்‌ சீயரின்‌ கருத்து அறியமுடிகிறது. சீயர்‌ காட்டும்‌ ஆன்மாவின்‌ இயல்பாவன: இறைவன்‌ தவிர மற்றவர்கட்கு ஆட்படாதிருத்தல்‌; இறைவன்‌ ஒருவனாலேயே காக்கப்படுதல்‌, இறைவன்‌ ஒருவனையே அநுபவித்தல்‌, மேலும்‌ இறைவனுக்கு எல்லா முறையாலும்‌ மனைவி போன்ற அவன்‌ இறைவனின்‌ உடைமைத்‌ தன்மை, ஆத்மாவாகுந்‌ தன்மை, தலைமைத்‌ தன்மை, புருடனாம்‌ தன்மை ஆகியன தம்‌ தன்மைகளாக நினைத்து ஆழ்வார்‌ தலைவி பாசுரத்தாலே இப் பதிகம்‌ உரைத்ததாகச்‌ சீயர்‌ ஆழ்வாரின்‌ அக நினைவைத்‌ தெளிவாகக்‌ காட்டுகிறார்‌.-

குண்டலம்‌! (5.5.2) என்பதற்கு இரு பாடும்‌ இலங்குகிற திருமகர குண்டலங்கங்கள் -என்றும் –தூமுறுவல்‌? (5.3.8) என்பதற்கு விரோதிகளினுடைய பிடிப்பற்றுப்‌ போகையாலே அலட்சியத்தோடே. கூட சிரிக்கையாலே வெளுத்த முறுவல்‌ ஒளி: என்று சிறப்பு விளக்கமும் அடைமொழிகளுக்கு அருளிச் செய்கிறார்-2.3.4.) பாடலுக்குப்‌ பொழிப்புரை கூறிய பின்னர்‌, இறுதிக்கண்‌ கருத்துப்‌ பொருளாக -உனக்கே யடிமை என்றிட்டு எனக்கு சமர்ப்‌ பணத்தில்‌ செய்யப்படு பொருளின்‌ தன்மையுமில்லை, செய்பவன்‌ தன்மையும்‌ இல்லை!” என்று ஆழ்வார்‌ இறைஞ்சுவதைக்‌ காட்டுவர்‌.

சீயர்‌ காலத்துப்‌ பின்னர்‌ எழுந்த முத்துலீரியத்தில்‌ *கோதில்‌ ஓர்‌ பொருளைக்‌ குறித்து ஐயிரண்டு பா எடுத்து உரைப்பது பதிக மாகும்‌? -ஆக ஒவ்வொரு திருவாய் மொழியும் பதிகம் என்றும் பத்து திருவாய் மொழிகள் சேர்ந்தவையும் பதிகம் என்னலாம்-:புகழு நல்லொருவனில்‌’ (3.4) இறைவனின்‌ இட்ட வழக்‌கான அடிமைத்‌ தன்மையில்‌ தமக்குண்டான மிக்க இனிமையாலே பெரிதும்‌ மகிழ்வுற்றார்‌ ஆழ்வார்‌. இதனைச்‌ சொல்லும்‌ வகையில்‌ (மொய்ம்மாம்‌ பூம்பொழிலில்‌ (3.5) இந்த அடிமைத்‌ தன்‌மையின்‌ மிக்க இனிபையைக்‌ கூறுவதாகத்‌ தொடர்பு காட்டுகிறார்‌ .

:கற்பாரில்‌’ (7.5) அவதரித்து அடியார்‌ சொற்படி கேட்ப வனாய்‌ விரோதியைப்‌ போக்குமவனான இறைவனுடைய குணப்‌ பெருமையை நினைக்கிறார்‌. இதனைச்‌ சேர்த்து முன்னுரை வழங்கி, அடுத்த பதிகமான ‘பாமரு மூவுலகில்‌? (7.6) அவனை யொழிய வேறு ஒருவர்‌ தடையைப்‌ போக்குவாரில்லாமையாலே, அவனுடைய ஆண்டான்‌–அடியான்‌ (சேஷி–சேஷ பாவம்‌) தன்‌ மையாலும்‌, ஆர்வத்தாலும்‌, அவனைக்‌ கொண்டு தடையைக்‌ கழித்துக்கொண்டு அவனை அடைவதற்காக மிக்க துக்கப்பட்ட வராய்‌ ஆழ்வரர்‌ கதறுவதாகச்‌ சீபர்‌ தொடர்புபடுத்தி உரைப்பது காணத் தக்கது.

1, சரீர ஆத்ம பாவம்‌ 2. நிர்லாஹ நிர்வாஹ்ய பாவம்‌ 3. ஜந்ய ஜனக பாகம்‌ 4. குண குணி பாவம்‌ 5. உபமாந உபமேய பாவம்‌ 6. விசேஷண–விசேஷ்ய பாவம்‌ 7. கார்ய காரண பாவம்‌-8- நிருப்ய நிரூபக பாவம்‌-ஆகிய ஸம்பந்தங்களின்‌ (இயைபுகளின்‌) அடிப்படையில்‌ சாமாநாதி கரண்ய நியாயத்தில்‌ பல இடங்களில்‌ பொருள்‌ கூறியுள்ளார்‌

பத்துக்‌ குணங்களை ஆசாரிய ஹிருதயத்தில்‌ வெளியிட்டுள்ளார்‌!)1-மேன்மைத்‌ தன்மை (பரத்வம்‌)2-காரணமாம்‌ தன்மை (காரணத்ம்‌) 3-பரந்திருக்கும்‌ தன்மை (வ்யாபகத்வம்‌) 4-இயக்குவிக்கும்‌ தன்மை (நியந்த்ருத்வம்‌)5-கருணையாயிருக்கும்‌ தன்மை (காருணிகத்வம்‌) 6-அடைக்கலமாய தன்மை (சரண்யத்வம்‌) 7-ஆற்றலுடைய தன்மை (சக்தித்வம்‌)(8) உண்மை விரும்பும்‌ தன்மை (ஸத்யகாமத்வம்‌) (9) ஆபத்திலே தோழனாய்‌ உதவும்‌ தன்மை(ஆபத் ஸகத்வம்‌*) துன்பத்தைப்‌ போக்கும்‌ தன்மை (ஆர்த்திஹரத்வம் )

சீயர் அர்த்த பஞ்சக பரமாய் 1-இறைவனுடைய காத்தற்றன்மை (ரக்ஷகத்வம்‌) 2-அவனுடைய அநுபலிக்கத்தக்க இனிமை (போக்பத்வம்‌) 3-திருமாலுக்கே உரிய தொண்டனான ஜீவாத்மா அவனொருவனையே அநுபவிக்கும்‌ அநுபவம்‌ (ஆத்மாவினுடைய ததேகாநுபவத்வம்‌)4-இறைவனொருவனையே ஜீவாத்மா தனது அன்புக்கு இலக்காகக்‌ கொண்டமை (ததேக ப்ரியத்வம்‌)5-இறைவனாகிற உபாயத்தின்‌ அபாயமேதுமில்லாத இயல்பு (நிரபாயமான உபாய வேஷம்‌)6-அவ் வுபாயத்தைப்‌ பற்றும்‌ முறை (உபாய வரண ப்ரகாரம்‌)7-வெறுக்கத் தக்க பாபங்களின்‌ தன்மை (அநிஷ்டமான விரோதி ப்ரகாரம்‌).8-அப்பாபங்கள்‌ நீங்கும்‌ வகை (தந் நிவ்ருத்தி ப்ரகாரம்‌)-9-பேறத்தக்க பேற்றின்‌ தன்மை (பலப்ரகாரம்‌) 10. அப் பேற்றை அநுபலிக்கும்‌ விதம்‌ (ததவாப்தி ப்ரகாரம்‌) என்து ஐம்பொருளை இரண்டிரண்டு பத்துக்களின்‌ பொருளாக்கி அருளிச் செய்கிறார் –

இவர்தம்‌ உரையில்‌ மற்றொரு நிர்வாகத்தையும்‌ காட்டி யுள்ளார்‌. அதாவது, முதலிட்டு நான்கு பத்தக்களாலே-ஒருவருடைய முயற்சியால்‌ உண்டு பண்ணப்‌ படுவதன்‌றியே எப்போதும்‌ நித்தியமாக உள்ள வைகளான –கடவுளாகிய உயர்ந்த ஆத்மாவென்ன ஜீவனென்னும்‌ தாழ்ந்த ஆத்மானென்ன இவர்‌களுடைய உண்மை நிலை தெரிவிக்கப்படுகிறது. முடிலிட்டு நான்கு பத்துக்களாலே இறைவனுடைய முயற்சியால்‌ நிகழ்வன இரண்டு வெறுக்கத்தக்க பாலங்களின்‌ நீக்கமென்ன, ‘ அதன்‌ பின்பு உண்டாகுமதாய்‌ விரும்பத்தக்க இறைவனை யநுபவித்தலென்ன இன்வையிரண்டும்‌ தெரிவிக்கப்படுகின்றன. நடுவிட்டு இரண்டு பத்துக்களாலை எப்போதும்‌ நித்தியமாகவுள்ள இறைவனாகிய உபாயமும்‌ இறைவனருளால்‌ உண்டான ஜீவாத்மாவின்‌ முயற்சியினால்‌ உண்டாக்கத்‌ ‘ தக்கதான இறைவனைத்‌ தஞ்சமாகப்‌ பற்றுதலும்‌ தெரிவிக்கப்படுகின்றன

திரு மந்திரத்தின்‌ வாயிலாகச்‌ சொல்லும்போது முதல்‌ நான்கு பத்துக்களில்‌ *ஓம்‌? என்ற பதத்திலுள்ள மூன்று அக்ஷரங்களான ௮,௨,ம என்பதன்‌ பொருள்களைக்‌ காட்டுகிறார்‌. அடுத்த நான்கு பத்துக்களால்‌ நம: பதத்தின்‌ பொருள்களைக்‌ கூறுகிறார்‌ *நாராயணாய’ என்ற பதத்தின்‌ பொருளைக்‌ கடைசி இரண்டு பத்துக்கள்‌ தெரிவிப்பதாகக்‌ குறிப்பிடுகிறார்

உயர்நலமுடையவன்‌? என்கிற ஸர்வாதிக சேஷித்வத்தாலே எல்லாரைக்‌ காட்டிலும்‌ உயர்ந்த தலைவனாம்‌ தன்மையாலே பிரணவத்தின்‌ பொருளான இறைவனுக்கே ஆட்‌ செய்யும்‌ அடியவனின்‌ கைங்கர்யத்தை ஏற்றுக்‌ கொள்ளும்‌ தலைவனான தன்மையையும்‌, *மதிதல மருவினன்‌! என்று கருணையின்‌ கார்யமாக உதவி செய்யும்‌ தன்மையை நம பதத்தில்‌ சொல்லப்பட்ட “நான்‌ எனக்கு உரியனல்லேன்‌; எம்‌ பெருமானுக்கே உரியேனாகிறேன்‌? என்து கருதும்‌ உபாயத்தின்‌ தன்மையையும் , ‘அமரர்களபதி’ என்று நித்ய ஸுரிகளால்‌ வணங்கப்படுவதாலே நாராயண பதத்தின்‌ பொருளையும்‌ (நித்ய வஸ்துக்களின்‌ திரளுக்கு ஆதாரமாயிருத்தல்‌), (தொழுதெழு? என்று நாராயணாய என்ற பதத்தில்‌ உள்ள *ஆய? என்ற நான்காம்‌ வேற்றுமைப்‌ பொருளான கைங்கர்யத்தையும்‌ சொல்லிற்று
கண்டு கொண்‌டென் கண்‌ணிணையாரக்‌ களித்துப்‌
பண்டை வினை யாயின பற்றோடறுத்துத்‌
தொண்டர்க்‌ கமுதுண்ணச்‌ சொன் மாலை கள்‌ சொன்னேன்‌
அண்டத்‌ தமரர்‌ பெருமானடியேனே”’
(9.4.9)
இதில் என்‌ கண்ணிணை யாரக்‌ கண்டு கொண்டு களித்து என்ற தொடரால்‌ பிரணவத்தின்‌ பொருளான ஸ்வரூப ஞானத்தையும்‌, பண்டை வினையாயின பற்றோடு அறுத்து என்ற தொடரால்‌, நடுவில்‌ நம: பதத்தின்‌ பொருளான விரோதி கழிகையையும்‌, *அண்டத்தமரர்‌ பெருமான்‌! என்பதனால்‌ இறுதிப் பதமான நாராயண சப்தத்தின்‌ பொருளான கைங்கர்யத்தை ஏற்றுக்கொள்ளும்‌ தலைவனின்‌ தன்மையையும்‌, “அடியேன்‌? என்பதால்‌ :ஆய? என்ற நான்காம்‌ வேற்றுமைப்‌ பொருளான கைங்கர்ய வளர்ச்சி விசேஷத்தையும்‌ சொன்னபடி-பாகவதர்கட்கு அடிமையாம் தன்மையைத்‌ தொண்டர்க்‌ கமுதுண்ணச்‌ சொன் மாலைகள்‌ சொன்னேன்‌’ என்ற தொடரால்‌ அறியலாம்-பேற்றியல்பைக்‌ கூறும்‌ பத்தாம்‌ பத்தின்‌ நான்காம் பதிகத்தில்‌ கண்டேன்‌ … பணிவகையே’ (10, 4.5) என்ற பாட்லில்‌ அடிமைத்‌ தன்மையின்‌ உண்மை நிலையை இறைவன்‌ காட்டக்‌ கண்டு, ஆழ்வார்‌ அநுபவிக்கப்‌ பெற்றதாகச்‌ சீயர்‌ உரைப்பர்‌, .இதில்‌ ‘பண்டே பரமன்‌ பணித்த பணிவகையே” தொடருக்குப்‌ **பூர்வ காலத்திலே ஸர்வாதிகனான ஸர்வேஸ்வரன்‌ அருளிச் செய்த மந்த்ர ரஹ்ஸ்ப ப்ரகாரத்திலே -என்று திருவடிகளை நேராகக்‌ கண்டதாகக்‌ கூறுவர்‌. இங்கு இறைவன்‌ உபதேசித்த பெரிய திருமந்திரத்தை மந்திர ரகஸ்யம்‌” என்று சீயர்‌ காட்டிப்‌ பொருள்‌ வழங்குகிறார்

பதச்சேத;: பதார்த்தோக்தி। விக்ரஹோ வாக்ய யோஜநா ஆக்ஷேபஸ்ய ஸமாதாநம்‌ வ்யாக்யாநம்‌ பஞ்ச லக்ஷணம்‌? என்று கூறுவர்‌. அதாவது பதத்தைப்‌ பிரித்தல்‌, பிரித்த பதங்களுக்குப்‌ பொருள்‌ கூறுதல்‌, சேர்ந்து ஒரு பதமாய்‌ இருப்பதைப்‌ பிரித்துக்‌ காட்டல்‌, பதங்களை வாக்கியத்தில்‌ சேர்த்துக்‌ காண்பித்தல்‌, கேள்விகளை எழுப்பி விடையிறுத்தல்‌ ஆகிய ஐந்து இலக்கணங்‌களாகும்-

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே
 –1-2-4-

கீழ் மூன்று பாட்டிலும் பன்மையாலே உபதேசித்து இப் பாட்டுத் தொடங்கி ஒருமையாலே உபதேசிக்கிறது-த்யாஜ்யங்கள் பரஸ்பர விருத்தங்களாய்க் கொண்டு பலவாதலாலும் சத்வாதி குண பேதத்தாலே ருஸ்யாதி விசிஷ்டரான அதிகாரிகள் ஒன்றோடு ஓன்று ஒவ்வாத புத்தி பேதத்தை யுடையராகையாலும் இதர தியாகத்தில் பன்மையாலே உபதேசிக்க வேணும் – பகவத் பஜனத்தில் புத்தி ஐக்யத்தாலும் புருஷார்த்த ஐக்யத்தாலும் அதிகாரி ஐக்கியம் உண்டாகையாலே ஒருமையாலே உபதேசிக்கலாம் –

வருந்தாத–அரும்‌–தவத்த (3.1.5) வருந்தாத வரும் தவத்த இதற்கு *முயற்சியின்றியே பெறுதற்கரிய தவத்தினுடைய பேறு யென்னலாம்படி’ என்று பொருள்‌ கூறுவர்‌. மற்ற உரைகளில்‌ ‘(வருந்தாத வருந் தவத்த? என்று பிரித்துப்‌ பொருள்‌ கூறியது காணத்தக்கது –

மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர், தண் கடல் வட்டத்து உள்ளீரே!–3-5-1-

சொல்லீர்,-தண் கடல் வட்டத்து உள்ளீரே!–-சதுஸ் சஹார பர்யந்த பூமியில் உள்ள நீங்கள் சொல்லி கோளே-இப்பூமியில் பிறந்தது பகவத் அனுபவத்துக்காக என்கை
ப்ரஹ்ம தேசத்தில் அப்பன் பிள்ளையோடு திருவாயமொழி கேட்ட போதை வார்த்தை நினைப்பது –

கண்ணன்‌ குறுங்குடி! (3.9.2)
என்ற இடத்தில்‌ கண்‌. நல்‌ குறுங்குடி என்து பிரித்து, (இடமுடைத்தாய்‌ நன்றான குறுங்குடி என்று பொருள்‌ கூறுவர்‌. இங்குக்‌ கண்‌, நல்‌ என்பனவற்றை ஊருக்கு அடையாக்கி உரை கூறப்‌ பெற்றுள்ளது. மற்ற உரைகளில்‌ கண்ணன்‌ குறுங்குடி! என்றே கொண்டு பொருள்‌ வழங்கியுள்ளனர்–கண்ணன் குறுங்குடி சர்வேஸ்வரன் என்னது என்று அபிமானித்த தேசம்-கண் நல் குறுங்குடி என்று நிர்வஹித்தான் ஒரு தமிழன்–இருபத்து நாலாயிரப்படி

விரும்பிப்‌ பகவரைக்‌ காணில்‌ (4-4-9) என்ற பாடலில்‌ பகவர்‌? என்பதற்கு *அறிவு முதலான குண நிறைவாலே அடியார்களைத்‌ தன்‌ அபிமானத்துக்கு உள்ளாக்கி, காப்பாளராயுள்ள இறை வடிவரான சந்நியாசிகள்‌- என்து சிறப்பாக அடைமொழி கொடுத்து உண்மை நிலையை உணர்த்தியுள்ளார்(ஞானாதி குண பரி பூர்ணராய் சப்தாதி விஷயங்களில் விரக்தரான சன்யாசிகளைக் காணில்-24000படி -ஞானம் பக்தி வைராக்கியம் முதலான குணங்களால் நிறைந்தவர்களாய் இதர விஷயங்களில் விரக்தராய் இருக்கும் துறவிகளைக் காணில்-ஈடு)


எங்ஙனேயோ’
என்ற பாடலில்‌ *சங்கினோடும்‌ நேமி யோடும்‌” (5.5.1) என்பதற்கு *ஆழ்வார்‌ தாம்‌ அடையும்‌ பகவானது தன்மைக்குரிய அடையாளமான ஸ்ரீ பாஞ்ச சந்யத்தோடும்‌ சக்கரத்தோடும்‌ என்று அடை கொடுத்துப்‌ பொருள்‌ கூறுவர்‌ இதனால்‌ சங்கு சக்கரங்கள்‌ இறை யடை யாளங்கள்‌ என அறியலாயின,

“மின்னு நூல்‌”(5.5.2
) என்பதற்கு, **இறை வடிவுக்கு எடுத்துக்‌ காட்டாக பிராமண தேஜஸ்‌ வெளிப்படுத்தும்‌ திருயஜ்‌ஜோபவீதம்‌!? என்று பொருள்‌ உரைப்பார்(மேகத்திலே மின்னினால் போலே இருக்கிற திரு யஜ்ஜோ பவீதமும்-24000 படி மேகத்தில் மின்னியது போன்றிருக்கின்ற திரு யஜ்ஞோபவீதமும்.-ஈடு)

*குரைகழல்‌! (4-3.6): அடியார்களைக்‌ காப்பாற்றும்‌ சிறப்பு தோற்றும்படி ஒலிக்கிற வீரக்‌ கழலை யுடைய திருவடிகள்‌?” இங்குக்‌ கழலுக்கும்‌ அக் கழல்‌ ஒலிப்பதற்கும்‌ அடைமொழியை விரித்துப்‌ பொருள்‌ வழங்குகிறார்


நீள்கழல்‌’ (5.9.4)
கழலுக்கு நீட்சியாவது ‘*எல்லார்‌ தலையிலும்‌ சென்று பொருந்தும்படி வளர்த்தியை யுடைய திருவடிகள்‌
:

போது வாழ்‌ புனந்துழாய்‌’ (3.1.6)-
-போகு புனம்‌ வாழ்‌ துழாய்‌’ என்று மாற்றிப்‌ “பூவை யுடைத்தான தன்னிலத்தில்‌ செவ்லித்‌ துழாயாலே அலங்கரிக்கப்பட்ட’?என்று சிறப்பாகப்‌ பொருள்‌ வழங்குகிறார்


சுமந்து மாமலர்‌ நீர்சுடர்‌ தூபங்கொண்டு”
(1.3.7) “மா? என்பதை மலர்‌, சுடர்‌, நீர்‌, தூபம்‌ ஆகியவற்‌றோடு சேர்த்து, மாமலர்‌, மாநீர்‌, மாசுடர்‌, மாதூபம்‌ சுமந்து கொண்டு? என்று மாற்றி, ”ச்லாக்யமான புஷ்பங்களையும்‌, நன்றான ஜலத்தையும்‌, விலக்ஷணமான தீபத்தையும்‌, அகுரு தூபத்தையும்‌ ஸாதரமாக வஹித்தக்‌ கொண்டு?” என்று உரை வழங்குகிறார் –


“அவனென்றே கிடக்கும்‌? (5.3.5)
… “அவனே என்று கிடக்கும்‌! என்று மாற்றிப்‌ பொருள்‌ கூறுவர்‌ –

உலக முண்ட பெருவாயா வுலப்பில்‌ 8ர்த்தி யம்மானே
நிலவுஞ்‌ சுடர்சூ ழொளி மூர்த்தி நெடியாய்‌ அடியே னாருயிரே
திலத முலகுக்‌ காய்நின்ற திருவேங்‌ கடத்தெம்‌ பெருமானே
குலதொல்‌ லடியே னுனபாதங்‌ கூடு மாறு கூறாயே”
! (6-10-1)
*உலகம்‌! என்ற சொல்‌ அடிப்படையில்‌, (பிரளய ஆபத்திலேயோ காப்பாற்றுவது? பிரிவின்‌ ஆபத்தில்‌ காப்பாற்றலாகாதோ? என்றும்‌, உலகமெல்லாம்‌ ஈடுபடிலோ காப்பாற்றுவது?-அது என்‌ ஒருவனுக்கு உண்டானால்‌ காப்பாற்ற லாகாதோ? என்றும்‌,
துக்கத்தை அறியாதாரையோ காப்பாற்றுவது? துக்கம்‌ அறிந்து கூப்பிட்டாரைக்‌ காப்பாற்றலாகாதோ? என்றும்‌, “இரக்கும்‌ தன்மை இல்லாதாரையோ காப்பாற்றுவது? ஆசைப்பட்டாரைக்‌ காப்பாற்றலாகாதோ? என்றும்
*உண்ட! என்ற சொல்‌ அடிப்படையில்‌,“வயிற்றிலே வைத்தோ காப்பாற்றுவது? வடிவு காட்டிக்‌ காப்பாற்றலாகாதோ?’ என்றும்‌
பெரு” என்ற சொல்‌ அடிப்படையில்‌; “உனது அதிகமான ஆசைக்கு இலக்கானவரையோ காப்பாற்றுவது – உன்‌ பக்கலில்‌ அதிகமான ஆசையுடையாரைக்‌ காப்பாற்றலாகாதோ?’ என்றும்
வாய்‌? என்ற சொல்‌ அடிப்படையில்‌, வாயாலேயோ காப்பாற்றுவது? வார்த்தையாலே காப்பாற்றலாகாதோ? என்றும்‌,
உலப்பில்‌ கீர்த்தி? என்ற சொல்‌ அடிப்படையில்‌, எல்லையற்ற குணங்களை அழிய மாறியா காப்‌பாற்றுவது? அந்தக்‌ குணங்களை அநுபலிக்கும்படி செய்து காப்பாற்றலாகாதோ? என்றும்
அம்மானே’ என்ற சொல்‌ அடிப்படையில்‌, உறவு (ஸ்வாமித்வம்‌) அறியாத உலகையோ காப்பாற்றுவது? உறவறிந்த விஷயத்தை-என்னைக்‌ காப்பாற்றலாகாதோ? என்றும்‌
(நிலவும்‌ சுடர்சூழ்‌ ஒளிமூர்த்தி’ என்ற பதங்களின்‌ அடிப்படையில்‌,-வடிவின்‌ பெருமை யறியாதாரையோ காப்பாற்றுவது? வடிவின்‌ பெருமை அறிந்தாரைக்‌ காப்பாற்றலாகாதோ* என்றும்‌,
*நெடியாய்‌’ என்ற சொல்‌ அடிப்படையில்‌, பெருமை உணராதாரையோ காப்பாற்றுவது? பெருமை உணர்ந்த என்னைக்‌ காப்பாற்றலாகாதோ? என்றும்
*அடியே னாருயிரே‘ என்ற சொல்‌ அடிப்படையில்‌, உன்னைப்‌ பாராதபோது தரிப்பாரையோ காப்‌பாற்றுவது? உன்னைப்‌ பாராத போது தரியாத என்னைக்‌ காப்பாற்றலாகாதோ? என்றும்
திலத முலகுக்காய்‌ நின்ற திருவேங்கடத்தானே! என்த தொடர்‌ அடிப்படையில்‌,-கண்டு பற்றுகைக்கு அறிவில்லாதாரையோ காப்பாற்றுவது? கண்டு பற்றுகைக்கு எளியன்‌ என்று அறிந்தாரைக் காப்பாற்றலாகாதோ? என்றும்
குலதொல்‌ அடியேன்‌! என்ற சொற்களின்‌ அடிப்படையில்‌,-மற்றவர்கட்கு ஆட்பட்டாரையோ காப்பாற்றுவது? மற்றவர்கட்கு ஆட்படாது உனக்கே ஆட்பட்ட அடியாரைக்‌ காப்பாற்றலாகாதோ? என்றும்
உனபாதம்‌! என்ற சொல்‌ அடிப்படையில்‌, வேறொன்றை உபாயமாகப்‌ பற்றினாரையோ காப்பாற்றுவது? வேறொன்றை உபாயமாகக்‌. கொள்ளாமல்‌ உன்னையே உபாயமாகக்‌ கொள்பவரைக்‌ காப்பாற்றலாகாதோ? என்றும்
கூடும்‌’ என்ற சொல்‌ அடிப்படையில்‌,
வேறு பயனைக்‌ கருதுபவர்களையோ காப்பாற்றுவது? வேறு எந்தப்‌ பயனையும்‌ விரும்பாது உன்னையே பயனாக விரும்புபவரைக்‌ காப்பாற்றலாகாதோ என்றும்
ஆறு‘ என்ற சொல்‌ அடிப்படையில்‌, பிரிய தினைப்பாரையோ காப்பாற்றுவது? கூட தினைப்பாரைக்‌ காப்பாற்றலாகாதோ-என்றும்பாட்டிலுள்ள சொற்களின்‌ பின்னணியில்‌ ஆழ்வார்‌ மனத்தே எழுந்த அலமாப்பைத்‌ தொகுத்துக்‌ காட்டுகிறார் –

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை-5-3-3-–நலிய நினைந்து ஊர்ந்து வந்த சங்கடத்தை ஸ்தந்யார்த்தியாய் அழுது நிமிர்ந்த அந்நிய பர வியாபாரத்தால் முறிந்து விழும்படி உதைத்த திருவடிகளை யுடையவனாய் -அது பக்குவ தசையாம் படி
அதி சைஸ அவஸ்த்தையிலே
பேய் முலையை சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்

ஏறேலேமும்‌ வென்று! (2.9.10) என்ற பாடலில்‌ ஆழ்வார்‌ “இறைவனுடைய பளபளப்பான திருவடிகளிலே சடக்கென என்னைச்‌ சேர்த்து வேறு விஷயங்களை நினைத்து வேறு போகும்படி எல்லாக்‌ காலத்திலும்‌ விடாதொழிய வேணும்‌! என்று வேண்டுகிறார்‌. இதற்கு உரை வழங்கிய சீயர்‌ முடியில்‌, விதி நிர்மிதமான இந்த அந்வயத்தைப்‌ பாலநம்‌ பண்ணி விடாதொழிய வேணும்‌ என்று கருத்து” என்பர்‌. இத்தொடரைக்‌ காணும்போது, ஆளவத்தார்‌ அருளிய ஸ்தோத்ர ரத்னத்தின்‌ 51-, “விதிநிர்‌மிதமேத தந்வயம்‌ பகவந்‌ பாலய மாஸ்ம ஜீஷப:* என்ற தொடரை மனத்தில்‌ கொண்டு சீயர்‌ இங்கு இச்சொல்‌லாட்சி செய்து உரை வழங்குகிறார்‌ என அறிய முடிகிறது.-

*வண்ண மாமணிச்‌ சோதியை? (2.7.13,36படி) கண்ணனை? என்ற சொல்லுக்கு ஈட்டில்‌ * அவர்களே அநுபவித்தப்‌ போகாமே, இங்குள்ளாரும்‌ அநுபவிக்கும்படி கிருஷ்ணனாய்‌ வந்து அவதரித்தவனை? என்றே உள்ளது. ஆனால்‌ சீயர்‌ உரையில்‌ இச்சொல்லுக்கு, அடியார்களைத்‌ தானே அநுபவிக்குமவன்‌- என்று புதுமையாகப்‌ பொருள்‌ கூறுவர்‌, இவ்வாறு வழங்குவகற்குக்‌ காரணமாகப்‌ பாடலில்‌ அடுத்த சொல்லான *நெடுமாலை’ என்பதற்கு, *:அதுக்கு அடியான எல்லையற்ற மையல்‌ குணத்தை யுடையவனை! என்று பொருள்‌ வழங்குவர்‌. “அதுக்கு அடியான” என்பது அடியார்‌களைத்‌ தானே அநுபலிப்பதற்குக்‌ காரணமான” என்பதாகும் -அதாவது ஆளவந்தார்‌ சுலோகத்தில்‌ “உன்‌ அருளாலே ஏற்பட்ட இந்த ஸம்பந்தத்தைக்‌ காப்பாற்றிக் கொள்‌; கைவிட வேண்டாம்‌! என்று வேண்டுவதாக உள்ளது.

உய்ம்மின்‌ திறைகொணர்ந்து’ (4.1.2), என்ற பாடலில்‌ இறைவனின்‌ திருமுடியின்‌ தன்மையைக்‌ கூறும்‌ சொல்லான செம்மின்‌ முடி- என்பதற்கு, *தடங்கலற்ற ஒளியை யுடைய (அப்ரதிஹத தேஜஸ்‌) அபிஷேகத்தை யுடைய! என்று புதமையாகப்‌ பொருள்‌ கூறுவர்‌. அதாவது ‘செம்‌’ என்று நேர்மையைச்‌ சொல்லி, அதன்‌ ஒருபடிப் பட்டிருத்தலுக்குத்‌ தடங்கலற்று இருத்தலைச்‌ சொன்னார்‌. ஆனால்‌ ஈட்டில்‌ சிவந்து மின்னா நின்‌றுள்ள முடியை யுடைய! (4 -1-2- 36) என்றே உள்ளது-

ஏனைய உரையாசிரியர்கள்‌ கூறும்‌ பாடங்களிலிருந்துவேறுபட்டு சீயர் தம்‌ உரையில்‌ மேற்கொண்ட பாடங்கள்‌ 77 இடங்களில்‌ காணப்படுகின்றன –காணப்படுகின்றன –*நலங்கழல்‌ வணங்கி! (1, 3 8) என்னும்‌ பழைய பாடத்தை மாற்றி, (நலங்கழல்‌ வணங்கின்‌? என்று பாட பேதம்‌ கொண்டு பொருள்‌ கூறுகிறார்‌ சீயர்‌. இறுதியில்‌ ‘வணங்கி’ என்ற பாடமாய்‌ வணங்க? என்று திருத்திச்‌ சொல்வாரும்‌ உளர்‌ என்று நம்பிள்ளை, பெரியவாச்சான்‌ பிள்ளை ஆதரித்த பாடத்தைச்‌ சுட்டிக்‌ காட்டுகிறார்
*நினைந்து நைந்து? (1.5.1) என்று பழைய பாடத்தைப்‌ பற்றிப்‌ பொருள்‌ கூறிய பின்னர்‌, இனைந்து நைந்தே’ என்று பாடமாய்‌ இனைதல்‌-வருந்துதல்‌ என்றும்‌ சொல்வாரும்‌ உளர்‌ என்பர்‌, இது மற்ற உரைகளில்‌ காணவில்லை, அவ்வாறே, தாளிணை மேலணி” (4.2.1) என்ற பழைய பாடத்தை ஏற்றுப்‌ பொருள்‌ கூறி, ‘காலிணை மேலணி தண்ணந்‌ துழாய்‌’ என்று பாடம்‌ சொல்லுவாருமுளர்‌ என்பர் ‘மொய்ய நீள்‌ குழல் தாழ்ந்த “தோள்களும்‌! (5. 5. 8) என்ற இடத்தில்‌ பழைய பாடமாக உள்ள :மொய்ய நீள்‌’ என்பதைச்‌ சீயர்‌ *மொய் கொள்‌ நீள் குழல்‌? என்று பாடம் கொண்டு, செறிவை உடைத்தாய்‌ நீண்ட குழல்கள்‌? என்று பொருள்‌ தருவர்‌,
அவ்வாறே, *நாடுடை மன்னர்க்குத்‌ தூது செல்‌ நம்பிக்கு? (6.6.4) என்ற இடத்தில்‌ ‘தூது செல்‌ நம்பி‘ என்றே எல்லாரும்‌ ஆதரித்த பழைய பாடத்தைத்‌ தம்‌ பெரிய போதத்தால்‌, ‘தூது செய்‌ நம்பிக்கு’ என்று பாடமாய்க்‌ கொண்டு ‘தூது காரியத்தைச்‌ ‘செய்து காட்டி அத்தாலே நிறைவாளனானவன்‌? என்று உரை நயம்‌ பெற உரைப்பர்‌.
இலக்கண நோக்கில்‌ பாட பேதம்‌ பற்றிக்‌ காணும் போது, *தெண்திரை சூழ்ந்தவன்‌? (7.3. 8) என்றே பழைய பாடமாய்‌ தெளிந்த திரைகளாலே சூழப்பட்டு அவன்‌…” என்று பொருள்‌ வழங்கிய போது, சீயர்‌ தம்‌ மதி துட்பத்தால்‌, ‘தெளிந்த நீர்த் திரையை உடைத்தாகையாலே குளிர்ந்ததாய்‌ (ஸ்ரமஹரமாய்‌) காதலைப்‌ பெருக்க வளைத்தவன்‌…’ என்று பொருள்‌ கொள்வதை நோக்குங்கால்‌, (தென் திரைச்‌ சூழ்ந்தவன்‌’ என்று சகர ஒற்று சேர்த்து உருபும்‌ பயனும்‌ உடன் தொக்க தொகைப்‌ பொருளில்‌ வழங்குவது காணலாம்‌-

திருவாய்மொழி உரை விளக்கம்‌ செய்தவருள்‌ சொல்லிலக்‌கணக்‌ குறிப்புகளோடு முதன் முதல்‌ பாசுரங்களின்‌ யாப்பினைப்‌ பற்றிய அரிய குறிப்பும்‌ தந்தவர்‌ இவரே யாவர்‌. இவர்‌ தரும்‌ யாப்புக்‌ குறிப்புகள்‌, யாப்பருங்கலம்‌, யாப்பருங்கலக்‌ காரிகை, வீர சோழியம்‌, தொல்காப்பிய உரையாசிரியர்கள்‌ கருத்தோடு ஒப்ப வைத்து எண்ணப்‌ பெறுகின்றன இவர் தம்‌ அகப்பொருள்‌ சிந்தனைகள்‌ தொல்காப்பியம்‌, அகப் பொருள்‌ விளக்கம்‌, நம்பி யகப் பொருள்‌ விளக்கம்‌ புறப்பொருள்‌ வெண்பா மாலை பன்னிரு பாட்டியல்‌ ஆகியவற்றின்‌ அடிப்படையில்‌ அமைந்‌திருத்தல்‌ தெளிவு செய்யப் பெறுகின்றன., இவ்வாறு இவர்‌ (தம்‌ பெரியபோதம்‌‘ ஒருவாறு இவ்வியலிலும்‌ நிலை நிறுத்தப்‌ பெறக்‌ காணலாம்‌.

‘அளவியன்ற அந்தாதி ஆயிரம்‌! (1.4.11)-எழுத்துச்‌ சொற்‌ பொருள்‌ யாப்பலங்காரங்களைச்‌ சொல்லுகிற பிரமாணங்களிலே இருப்பதாய்‌ அந்தாதியான ஆயிரம்‌’* (1-4.11) என்றே சீயர்‌ உரை வழங்குவர் –
தணியும்‌ பொழுதில்லை! (4.6.6) என்ற பாடலில்‌ –மணியின்‌ என்பதற்கு *நீல மணியைக்‌ காடடிலும்‌’ என்றது பொருள்‌ கூறி விட்டு, முடிவில்‌ மணியின்‌ என்கிற ஐந்தாம்‌ வேற்றுமை உவமை யாகவும்‌ தகும்‌” என்று குறிப்பிடுவர்‌.
புதுமண முகந்து கொண்டெறியு மாலோ! (9.9 8) என்ற பாடலில்‌ ‘சாந்தினில்‌? என்ற சொல்லுக்குச்‌ –சந்தனத்தைக்‌ காட்டிலும்‌’ என்று பொருள்‌ கூறிய பின்னர்‌, *சாந்தினில்‌ என்று ஐந்தாம்‌ வேற்றுமை ஒப்புச்‌ சொல்லிற்றாக உரைப்பர் –
*நினைப்பான்‌ புகில்‌’ (4.1.4) என்ற பாடலில்‌ *நுண் மணலிற்‌ பலர்‌? என்பதற்கு *துண் மணலிற்‌ காட்டில்‌ அநேகர்‌ என்று பொருள் கூறி, முடிவில்‌, *துண் மணலிற்‌ பலர்‌: என்று ஐந்தாம்‌ வேற்றுமை உவமைப்‌ பொருளாய்‌ துண் மணல் போலே எண்‌ணற்றவை’ என்றும்‌ கூறுவர்‌.
நீள்கடல்‌’ (1.1.7) என்ற பாடலில்‌ *தலையில்‌! என்பதற்குத்‌ *தலையாலே’ என்று பொருள் கூறி அதனை ஐந்தாம்‌ வேற்றுமை யாகக்‌ குறித்துள்ளார்‌.
*ஆனானானாயன்‌? (1.8.8) என்ற பாடலில்‌ ‘என்னில்‌! என்பதற்கு என்று சொல்லுமளவில்‌’ என்று பொருள் கூறிப்‌ பின்னர்‌ என்னில்‌ என்று ஐந்தாம்‌ வேற்றுமையாய்‌, என்னிமித்தமாகப்‌ பிண்ணினவை கணக்கற்றவை’ என்றும்‌ உரைப்பர் –

சூழல்‌ பல பல வல்லான்‌? (1.9.2) என்ற பாடலில்‌ ‘அருகலில்‌’ என்பதற்கு (என்‌ அருகான இடத்தில்‌! என்று ஏழாம்‌ வேற்றுமைப்‌ பொருள்‌ உரைப்பர்‌,
‘அணியனாகும்‌! (9,10.8) என்ற பாடலில்‌. *திருக்கணபுரம்‌? என்ற சொல்லுக்கு, *திருக்கண்ணபுரத்திலே’ என்று கூறி, முடிவில்‌ ‘கணபுரம்‌’ என்று ஏழாம்‌ வேற்றுமை எஞ்சிக்‌ கிடப்பதாகக்‌ கூறுவர்‌.
“என்னில்‌’ (1 8.8) என்று “ஐந்தாம்‌ வேற்றுமையாய்‌ என்‌ காரணமாக (நிமித்தமாகப்‌) பண்ணினவை கணக்கற்றவை (அஸங்க்யாதங்கள்‌)’ என்பர்‌.
*அருகலில்‌? (1.9, 2) என்ற, இடத்தில்‌ ஏழாம்‌ வேற்றுமை என்று சுட்டுவர்‌, ்‌
தாமரைக்‌ கயம்‌! (8.9.9) என்ற இடத்தில்‌ கயம்‌? என்பதற்குப்‌ பரப்பானது” என்று பொருள் கூறி, *தடவும்‌ கயவும்‌ நனியும்‌ பெருமை! என்ற தொல்காப்பிய உரியியல்‌ நூற்பாத் தொடர்‌ சுட்டியுள்ளார் –

ஏகார விடைச்சொல்‌
சீயர்‌ உரையில்‌ தேற்றம்‌, வினா, எண்‌, இசைவு, வியப்பு, விளி, உறுதிப்‌ ‘பொருள்‌, சிறப்புப்‌ பொருள்‌ ஆதிய ஒன்பது பெருளில்‌ வந்துள்ளமை காணலாம்
ஏகாரத் தேற்றப் பொருள் –சேர்ந்தேனே (2. 1. 10)–சோரேலே (2. 3. 5)-கோட்பட்டாயே (2. 1.1)
ஏகார எண்ணுப்‌ பொருள்ஆயேயிவ்வுலகத்து (4. 9.7) என்ற பாடலில்‌ (நோயேமூப்‌ பிறப்பிறப்புப்‌ பிணியே’ என்ற இடத்திலுள்ள ஏகாரத்துக்கு ‘ எண்ணுப்‌ பொருள்‌ தந்து நோய்‌, மூப்பு, பிறப்பு, பிணி என்று தனித் தனியாகக்‌ காட்டுவர் –ஈடும்‌ எடுப்பும்‌” (1. 6. 3) என்ற பாடலில்‌ “ஏகாரம்‌ விடாது பாடும்‌–ஆடும்‌ என்னும்‌ வினைகளோடே கூடிக்‌ கிடக்‌கிறது ‘ என்று எண்ணுப்‌ பொருளில்‌ குறிப்பர் –
ஏகார வெறுப்புப்‌ பொருள் -*எல்லே! (2. 1 3) பரமே? (2 2. 2) ஏ– அன்னே’ (4, 4. 1)
ஏகார வியப்புப்‌ பொருள் -எல்லே’ (5.3. 5)
ஏகார எதிர்மறைப்‌ பொருள் -1யாரே(1. 3.3)அதுவே! (1.9.6)-உளதே! (2. 2.3)-ஏற்குமே’ (3. 9. 10)-ஓன்றே (4, 4.3)
ஏகார விளி-அரியேறே’ (5.8.7) என்ற பாடலில்‌ *பொற்சுடரே, கருமுகிலே, எரியே, பவளக்‌ குன்றே, களையாயே!’ என்ற சொற்‌ களில்‌ ஏகாரத்துக்கு விளி யுருபு தந்து பொருள்‌ வழங்கியுள்ளார் -“எல்லே* (5. 3. 5) விளியாக வந்தது
ஏகார உறுதிப்பொருள்‌-கடலாமே (3. 4. 10)-கண்டேனே (4. 9.9)உளதே (2.3.3)
ஏகாரச்‌ சிறப்புப்‌ பொருள் -“தீர்த்தனுலகளந்த (2. 8. 6) என்ற பாடலில்‌ ‘கிடந்ததே!? என்பதற்கு, *தெளியாது கிடந்த அம்சமுண்டோ’ என்து சிறப்புப்‌ பொருள்‌ வழங்குகிறார் –

, *கடல்‌? (14.10): என்து வந்த இடந்‌தோறும்‌ பெரும்பாலும்‌ இருபத்துநாலாயிரப்‌ படியில்‌ கடல்‌ என்றே பொருள்‌ கூறப்பட்டுள்ளது. ஆனால்‌ சியர்‌ அதற்குப்‌ பொருள்‌ வழங்கும் வகையில்‌’ஸமுத்ரம்‌‘ என்றோ, *ஷீரார்ணம்‌? என்றோ பொருள்‌ வழங்குவர்‌, . அதே போன்று ‘தடம்‌’ (4 5 2) (5.2-4). என்று வந்த. இடங்களில்‌ சிற்சிலவற்றுக்கு *விஸ்தீர்ணமான ‘(பரந்த) என்று வடமொழி ஒசை குன்றாது தமிழ்‌ உருபோடு பொருள்‌ வழங்கியுள்ளார் -“திண்‌’ (1.2.10) என்பதற்கு *ஒருகாலும்‌ விடாத?என்று இருபத்து தாலாலிரப்‌ படியிலுள்ளதை ஸ்திரமான” (நிலையான) என்று வடசொல்லால்‌ குறிப்பிடுகிறார் ஓர்த்த (1.2.11) – ஓர்ந்து சொல்லப்பட்ட –நிரூபிக்கப்பட்ட
தாயோன்‌ -(1.5-3.) தாய் போலே பரிவானவன்‌-மாத்ருவத் வத்‌ஸலன்‌
வாள்‌ (251) – ஒளி உஜ்வலம்‌
அளித்து(7.1.11) பரிபாலநம்‌ பண்ணி-ரக்ஷித்து
இங்ஙனமே பல இடங்களில்‌ உள

வீற்றிருந்தேமுலகும்‌? (4. 3. 1) என்ற பாடலில்‌ ஆற்றல்‌ மிக்காளுமம்மானை? என்ற விடத்தில்‌ ‘ஆளும்‌ ? என்பதற்கு *உள்ளே யிருந்து நடத்தி வருகிற (தியமித்துப்‌ போருகிற)! என்று பொருள்‌ உரைப்பர்‌ சீயர்‌, இச் சொல்லுக்கு ஈட்டில்‌ உள்ளதைத்‌ தமுவியே சீயர்‌ உரைப் பொருளும் அமைந்துள்ளது –
“மாயம்‌ செய்யேலென்னை? (10. 10 12) என்ற பாடலில்‌ அந்தோ? என்ற சொல்லுக்கு ஈட்டிலும்‌, இருபத்து நாலாலிரப்‌ படியிலும்‌, (தன்னை ஒழியச்‌ செல்லாதபடியைத்‌ தானே விளைத்து, தான்‌ கூப்பிட வந்து முகம்‌ காட்டாதொழிவதே என்று கூறியுள்ளதை பின்பற்றிச் சீயரும்‌, ஐயோ! நீயே விரைந்து வந்து செய்யும்‌ காரியத்துக்கு நான்‌ ஆணையிட வேண்டியிருப்‌பதே! என்று நயம்படப்‌ பொருள்‌ வழங்கியுள்ளார்-

இரண்ட மூன்று பொருள்கள்‌ வழங்கிய இடங்கள்‌ உள, அவற்றுள்‌ தாம்‌ உகந்ததாயும்‌ முன்னோர்‌ வாயிலாகக்‌ கேட்டதாயும்‌ உள்ள இரண்டாவது பொ௫ளுக்கு முதன்மை தந்து, அதனை முதற் பொருளாகவே சீயர்‌ உரைத்துள்ளமை காண முடிகிறது
*பூவை வீயாநீர்‌! (4, 3, 1) என்ற விடத்தில்‌ (புஷ்பத்தை அகலாத நீர்‌’ என்று ஈட்டிலும்‌ இருபத்து நாலாயிரப்‌ படியிலும்‌ இரண்டாவது பொருளாகக்‌ கூறியதைச்‌ சீபர்‌ பின்பற்றி உரைத்‌ துள்ளார்
(ஊர்‌ வளங்கிளர்‌! (6, 9, 4) என்ற தொடருக்கு ஊருக்கு வளப்பமாய்‌ உயர்ந்த சோலை’ என்று இரண்டாவது பொருளைப் பின்பற்றிக்‌ சீயர்‌ உரைத்துள்ளது காணலாம்‌.
மேலும்‌ ஈட்டில்‌ காட்டிய முதற்பொருளையும்‌ தழுவிச்‌ சீயர்‌ உரைத்த இடங்கள்‌ உள,-
*காரார்‌ கருமுகில்‌ போல்‌! (2.5. 5) என்பதற்கு “என்னுடைய சேர்க்கையாலே காரார்‌ கரு முகில்‌ ஆனான்‌. என்பர்‌ நம்பிள்ளை, இதனைச்‌ சீயர்‌ தழுலி, (என்‌ நெஞ்சுக்‌ குள்ளே கலந்து அத்தாலே கார் காலத்திலே பூர்ணமான காள மேகம்‌ போலே இருக்கிற என்‌ நாதன்‌! என்று வழங்குகிறார்
தம்‌ சுடர்‌ ஒளி ஒருதனி முதல்வன்‌! (10.1.5)!என்பதற்கு , “நமக்கு அனுபவிக்கத்‌ தக்கதாய்‌ எல்லை யற்ற ஒளியை யுடைத்‌தான பளபளப்பான (தேஜோமய) திவ்விய திருமேனியை யுடைய னாய்‌, உலகுக்கு வினை முதல்‌ காரணம்‌, முதற்‌ காரணம்‌, துணைக் காரணமாகிய மூன்று காரணமும்‌ தானேயாய்‌’ என்று ஈட்டின்‌ முதற் பொருளைத்‌ தமுவி உரைப்பது அறியலாம்
கூட்டி உரை வழங்கும் இடங்களும் உண்டு
:மாதவன் பாற்‌ சடகோபன்‌” (1.611) என்ற பாடலில்‌ *ஓத வல்லார்‌” என்பதற்கு ஈட்டில்‌ *(இத் திருவாய்மொழி யைக்‌ கற்க வல்லவர்கள்‌ (அப்யஸிக்க வல்லவர்கள்‌)! என்றே உள்ளது. ஆனால்‌ சீயர்‌, “ஆசாரியர்‌ வாயிலாகக்‌ கற்க வல்லவர்‌‘ என்று ஆசாரியருக்கு முதன்மை கொடுத்து மேலும்‌ கூட்டி யுரைப்பது புலனாகிறது-
தடம்புனல சடைமுடியன்‌? (4.8,10) என்பதற்கு *மிக்க பரந்த நீரை யுடைய கங்கையைத்‌ தரிக்கிற சடாமகுடத்தை வயடையவனாகையாலே மிக்க சக்திமானாக அபிமாநித்திருக்கிற சிவன்‌? என்று சீயர்‌ உரை வழங்குவர்‌. ஈட்டில்‌, ‘மிக்க நீர்‌ வெள்ளத்தை யுடைத்தான கங்கையைத்‌ தன்‌ சடையில்‌ ஏக தேசத்தில்‌ தரித்திருககையால்‌ வந்த அபிமானத்தை யுடைய ருத்ரனானவன்‌! என்று சடை அணிந்ததால்‌ வந்த ஏற்றத்தைக்‌ காட்டி உரை வழங்கியுள்ளார்‌. ஆனால்‌ சியர்‌, மிக்க சத்தி மானாக! என்ற பதங்களைக்‌ கூட்டி விரித்தரைத்தது காணலாம்-

சீயர்‌ உரையில்‌ ஆளவந்தார்‌. தொடக்கமாகப்‌ பட்டர்‌ வரை முக்கியமாகப்‌ பதினேழு ஆசாரியர்களின்‌ பொருளாட்சிகளைப்‌ பின்பற்றியது காண முடிகிறது. இப்பொருளாட்சிகளைத்‌ திரட்சியாகக்‌ காணும்‌ போது, இராமாநுசர்‌ (எம்பெருமானார்‌) பொருளாட்சியை 17 இடங்களிலும்‌, பட்டர்‌ பொருளாட்சியை 18 இடங்களிலும்‌,! ஆளவந்தார்‌, நஞ்சீயர்‌, எம்பார்‌ ஆகியோர்களின்‌ பொருளாட்சியை ஐந்து இடங்களிலும்‌,மற்றுமுள்ள ஆசாரியர்களின்‌ பொருளாட்சிகளைச்‌ சிறுபான்மையும்‌ கொண்டு உரை வகுத்‌ துள்ளது அறியற்பாலதாது

கண்ணி எனதுயிர்‌* (4.3.5) என்ற பாடலுக்கு அவதாரிகை வருமாறு:
நுகரத்தக்கவனாய்‌ (போக்யனாம்‌)), உடையவனாய்‌ (ஸ்வாமியாய்‌) உதவி செய்பவனாய்‌ (உபகாரகனாய்‌), எளியனான (சுலபமான கண்ணனுக்கு என்னுடைய ஆசை முதலானவைகள்‌ ஆபரணம்‌ முதலான எல்லாமுமாகா நின்றன என்று கூறுகிறார் -இந்தப்‌ பாடலில்‌ ‘சக்கரத்தான்‌‘ என்ற சொற்கொண்டு *அநுபவிக்கத்‌ தக்கவன்‌” என்றும்‌, எம்மான்‌? என்பதைக்‌ கொண்டு ஸ்வாமி‘ என்றும்‌, ‘எம்பிரான்‌! என்பதனால் (உபகாரகன்‌! என்றும்‌, கண்ணன்‌! என்பதால் சுலபன்‌ என்றும்‌ பொருள்‌ வழங்கி அவதாரிகையைச்‌ சிறப்புறச்‌. செய்தமை காண முடிகிறது

ஆட்டியும்‌ தூற்றியும்‌? (7.7.2) என்ற பாடலில்‌, அவதாரிகையில்‌ ** அடியாருடைய பொருளில்‌ மிக்க ஆசையாலே வெண்ணெயைத்‌ திருடினவனான கண்ணன்‌’‘ என்று இறைவனின்‌ தன்மையைக்‌ குறிப்பிடுகிறார் –(ஈட்டிய வெண்ணெயுண்டான்‌! என்ற தொடர்‌ அநுபவித்து அத்தொடருக்குப்‌ பொருத்த மாக அவதாரிகை-

*மானேய்‌ நோக்கின்‌ மடலாளை மார்பில்‌ கொண்டாய்‌ மாதவா” என்ற தொடரால்‌ ‘நித்தியமாக சிபாரிசு செய்யும்‌ சம்பத்தத்தையும்‌?) *கூனே சிதைய வுண்டை வில்‌ நிறத்திற்‌ தெறித்தாய்‌’ என்பதனால்‌ “அடியாரின்‌ குறையைப்‌ போக்கும்‌ நேர்மையை உண்டு பண்ணுவதையும்‌; கோவிந்தா’ என்ப தனால்‌ (காப்பாற்றுவதில்‌ ஆசையையும்‌”, (வானார்‌ சோதி மணி வண்ணா? என்பதனால்‌ ‘பரமபதத்தையும்‌ திருமேனிச்‌ சிறப்பையும்‌! *மதுசூதா என்பதனால்‌ *தடையைப்‌ போக்கும்‌ திறமையையும்‌’ சொல்லியது அறிய முடிகிறது என்கிறார்

ஆழி -பொய்க்குப் பெருநிலை நிற்கும் திருவாழி
இலங்கை -அடியார்கள் விரோதிகளின் இருப்பிடமான இலங்கை
தேவர்கள் -நழுவல் இல்லாத தேஜஸ்ஸையுடைய நித்ய ஸூரிகள்
கழல்கள் -எல்லையற்ற அழகாம்படி நல்ல ஒளியையுடைய வீரக்கழலை யுடைய தன் திருவடிகள்

இளங்குருகே -வேகமாக நடப்பதற்கு உறுப்பான இளமையுடைய குருகே
சுரி சங்கம் -வடிவு தானே எதிரிகளையும் அழித்து அடியார்க்கு அனுபவிக்கதாம்படியான வடிவிலே கோட்டின் சுழற்சியையுடைய பாஞ்சஜன்யம்
நல் நெடுங்குன்றம் -தாதுப்பொருள் பொடிகள் இருக்கும் சிறப்பான தன்மையையுடைய உயர்ந்ததான மலை
தெருள் கொள்ளச் சொன்ன ஓராயிரம் –தத்வ ஞானமானது சேதனர் ஏற்றுக்கொள்ளும்படி அருளிச் செய்த ஒப்பற்ற ஆயிரம்
சொல் நேர்பட்ட தமிழ்மாலை ஆயிரம் -சொல் வாய்ப்பை யுடைத்தாய் த்ராவிட மொழியால் மாலையாகச் சேர்க்கப்பட்ட ஆயிரம்

உணர்ந்துணர்த்து இழிந்தகன்று ! (1.3.6) – ‘உணர்ந்துணர்ந்து‘ என்பதற்கு அறிவும்‌ (ஞாத்ருத்வ) தன்மை யுடையனாகையாலே (ஸ்வபாவனாகையாலே) என்றுமொக்க உணருகையே தன்மை உடையவன்‌ (ல்வபாவமாக வுடையவன்‌) என்று இறையியல்பைச்‌ சீயர்‌ உரையில்‌ காட்டுகிறார் –
*கருத்தின்கண்‌ பெரியன்‌‘ (10-8-8) (பரரிப்பில்‌ பெரியானாயிருக்குமவன்‌-
*சிந்து பூ மகிழும்‌ திருவேங்கடத்து (3.3-2) என்பதற்குத்‌ தூவின விடு பூக்கள்‌ ஸ்வபர்சத்தாலே விகஸிதமாம்படியான திருமலை
*கொய் பூம்‌ பொழில்‌! (4.1.11)—கொய்பப்படும்‌ புஷ்பங்களை யுடைத்தான சோலையை யுடைய.!
*கட்டெழில்‌ தென் குருகூர்‌? (6.6,11) — (அரணழகை யுடைத்தாய்‌ தர்சநீயமான திருநகரி)
*மொய்புனல்‌ பொருநல்‌…வண்டென் குருகூர்‌’ (7.2.11)-“மிக்க ஜலத்தை யுடைய திருப் பொருநலினுடைய, துகிலின்‌ நிறம்‌. போலே பரிசுத்தமான ஜலத்தை யுடைத்தான பர்யந்த பிரதேசத்தை யுடைய யூர்
*செறி பொழில்‌ அனந்த புரம்‌ சேம நன்‌ குடைத்துக்‌ கண்டீர்‌” (10-2.9) செறிந்த பொழிலை யுடைய திருவநந்த புரமானது நன்றான ரக்ஷையை யுடைத்துக் கிடிகோள்‌.?
… பொருதல்‌ சங்கணி துறைவன்‌ வண் தென்குருகூர்‌? (10,3.11) திருப்பொருநலில்‌ சங்குகள்‌ சேரும் துறையை யுடையராய் சம்பத்தை யுடைய அழகிய திருநகரிக்கு நிர்வாஹராய்‌ உதாரரான ஆழ்வாரருளிச்‌ செய்த

வேங்கடத்‌ துறைவார்க்கு நம வென்னலாம்‌ கடமை அது சுமந்தார்கட்கே! (8.3.6)-*(வேங்கடத்தில்‌ நித்ய வாஸம்‌ பண்ணுகிறவர்க்கு (அநந்யார்ஹமாம்படி ஸ்வ ஸ்வாதந்த்தர்ய நிவ்ருத்தி யுக்தமான)) பிறர்க்கு உரித்தாகாது தன்‌ சுயேச்சை அகன்றதோடு கூடிய, மிக்க பாரதந்த்ரியத்தைக்‌ குறிப்பிடுவதாய்‌ (அத்யந்த பாரதந்தர்ப ஸூசகமாய்‌) உரியதாய்‌ * பூயிஷ்டாந்தே.., என்ற ஸ்ருதி ப்ரஸித்தமாயிருக்கிற நமோ வாசகத்தை அதிகாரி விசேஷத் யோதகமாம்படி சுமத்தார்கட்கு

போற்றி மற்றோர்‌ தெய்வம்‌! : (4,10,6) என்ற பாடலில்‌ “மற்றோர்‌ தெய்வம்‌-போற்றி-பேணப்‌ புறத்திட்டு என்று அந்‌ வயிப்பது‘ என்று உரைத்த சீயர்‌ உரை-வேறொரு தேவதையை ஸ்தோத்ரம்‌ பண்ணி ஆதரிக்கும்படியாகத்‌ தனக்குப்‌ புறம்பாக்கி என்று சப்தார்தம்

(வைகுந்தா! (2 6) விற்கு நம்பிள்ளையும்‌ சீயரும்‌ அமைத்த அவதாரிகைகள்‌ இறைவனுடைய பயத்தைப்‌ போக்கினபடியைச்‌ சொன்ன போதிலும்‌, சீயர்‌ ”இறைவனுடைய பயம்‌ பிரிவில்‌ பயம்‌ என்று கொண்டு ஆழ்வார்‌ தன்‌ தாழ்ச்சியால்‌ அகலத்‌ தேடி இத்தைக்‌ குலைக்கில்‌ செய்வதென்‌? என்ற சந்தேகம்‌ இறைவனுக்கு வந்ததாகக் கூறுகிறார்‌. ஆனால் நம்பிள்ளை’அநாதி காலம்‌ எதிர்குழல் புக்குத்‌ திரிந்த வஸ்துவை ஒருபடி அடையப்‌ (ப்ராபிக்க) பெறுவோமோ, இவர்தான்‌ இனி நம்மை விடில்‌ செய்வதென்‌?’ என்று சந்தேகம்‌ கொண்டதாகக்‌ கூறுவர்‌. மேலும்‌ ‘நம்முடைய அளவில்‌ இவன்‌ ஆசை இருந்தபடி என்‌! என்று ஆழ்வாரின்‌ அதிக மகிழ்ச்சியைக்‌ காட்டிச்‌ சீயர்‌ அவதாரிகை அமைத்துள்ளார்‌. ஆனால்‌ நம்பிள்ளை, தன்‌ பேறாக தினைத்து இறைவன்‌ மகிழ்ச்சி அடைந்தான்‌ என்று காட்டுகிறார்‌. இவ்வகையில்‌ சீயர்‌ காட்டும்‌ அவதாரிகையில்‌ வேறுபாடு காண முடிகிறது-

உண்ணிலாகிய! (9.1) பதிகத்தின்‌ ஒவ்வொரு பாடலிலும்‌ அமைந்தள்ள இறைத்‌ தன்மைகளைத்‌ தோற்று வாயில்‌ காட்டியுள்ளார்‌ சீயர்‌, அதாவது; ”விரோதி நிரனைத்துக்கு ஏகாந்தமான ஸம்பந்தாதிகளை யுடைய நீ என்று “எண்ணிலாப்‌ பெரு மாயனே…ஆள்வானே!’ என்று முதல்‌ பாடலின்‌ பின்‌ இரண்டடியின்‌ பொருளைக்‌ காட்டி யுள்ளார்‌. ஆனால்‌ ஈட்டில்‌ இப்‌ பாடலுக்கு அமைந்த தோற்றுவாயைக்‌ காணும்‌ போது பாட்டின்‌ முன்‌ இரண்டடிகளைக்‌ கொண்டு அமைத்ததாக உள்ளது-

திருமேனி யடிகளுக்கு (9,7.4) என்ற பாடலுக்குச்‌ சீயர்‌, அழகாகவே அடிமை கொள்ளுமவர்க்கு என்‌ தூதாய்ச்‌ சென்று”? “உம்முடைய திருமேனியை அவளுக்கு உபகரிப்பீர்‌’ என்று ஒரு வார்த்தை சொன்னால்‌ உங்கள்‌ ஸாருப்யத்தையும்‌ தேச வாசத்‌தையும்‌ தவிர்க்குமோ’? என்று சில மேகங்களைக்‌ குறித்து வார்த்தை சொல்லுவதாகப்‌ பாடலின்‌ நான்கு அடிகளையும்‌ கொண்டு தோற்றுவாய்‌ அமைத்துள்ளார்‌. ஆனால்‌, நம்பிள்ளை உரையில்‌ இப்பாடலுக்கு, ‘சில மேகங்களை நோக்கி, ‘என்‌ வார்த்தையை அவனுக்குச்‌ சொன்னால்‌ உங்களைத்‌ தண்டிக்‌குமோ?”! என்று குறிப்பிட்ட தொடர்‌ கொண்டே தோற்றுவாய்‌ அமைத்துள்ளார்-

நற்பாலுக்கு உய்த்தனன்‌! (7 4.1) என்ற இடத்திற்கு (நல்ல இடமான பரம பதத்திலே வைத்தான்‌! என்று பொருள்‌ வழங்கி யுள்ளார்‌ “பால்‌! என்பதற்கு அகராதி கூறும்‌ பதினொரு பொருள்களில்‌ இடப்‌ பொருளில்‌ சீயர்‌ உரை வழங்கியது மற்ற வியாக்கியானங்களில்‌ தன்மைப்‌ பொருளில்‌ காட்டியதை வேறு படுத்தி பிருப்பதாகும்‌. சீயர்‌ வழங்கிய பொருளை ஆசாரிய ஹ்ருதய தூலில்‌ (ப.95) அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ குறிப்பிட்டுள்ளது

*மார்வகலம்‌? (1.4.7) என்பதற்கு ‘மார்வு- அகலம்‌! என்று பிரித்து *(மார்வத்திலே பெரிய இடத்தை-என்று சீயர்‌ பொருள்‌ வழங்கியுள்ளார்‌. ஆனால்‌ நம்பிள்ளை (மார்வகலம்‌! என்று முழுச்‌ சொல்லாகக்‌ கொண்டு அகன்ற மார்பு என்றே கூறுவர் –கன்மமன்றெங்கள்‌? (6.29) என்ற பாடலில்‌ *நின்மலா’ என்பதற்கு அது தானே பயனாம்படியான ஒளியை யுடையையாய்‌! என்று சீயர்‌ உரைத்துள்ளார்‌. இவ்விடத்தில்‌ ‘அதுதானே பயனாம்படி‘ என்று இப் பாட்டின்‌ முதலடியில்‌ வந்துள்ள *கடல் ஞாலமுண்டிட்ட என்பதன்‌ பொருளைச்‌ சேர்த்து, அது தானே பயனாம்படி! என்று சீயர்‌ உரை நயம்பட உரைத்துள்ளார் –

(தேவர்கள்‌! (9.5.4) என்பதற்கு ( திவு- த்யுதி-ஒளி):*நழுவுதலில்லாத ஞான ஒளியை யுடைய நித்ய ஸூரிகள்‌!! என்று பொருள்‌ கூறுவர் – நம்பிள்ளை ‘நித்ய ஸுரிகள்‌” என்றே குறிப்பிட்டுள்ளார்

உனது அருளே பிரியா: (5,4,7) என்ற இடத்தில்‌ *உன்னுடைய அருளை ஒரு காலும்‌ பிரியாதபடி’ என்று, ‘அருள்‌’ என்பதற்கு இரண்டாம்‌ வேற்றுமைப்‌ பொருளில்‌ உரை வகுத்‌ துள்ளார்‌, ஆனால்‌, மற்ற வியாக்கியானங்களில்‌ *அருளால்‌-என்று மூன்றாம்‌ வேற்றுமைப்‌ பொருளில்‌ வழங்கியுள்ளார்கள் –
திறம்பாமல்‌ மண்‌ காக்தின்றேன்‌! (5,6,5) என்ற பாடலில்‌ ‘திறம்பாத கடல் வண்ணன்‌! என்றவிடத்தில்‌ *திறம்பாத’ என்பதைக்‌ *கடல் வண்ணனுக்கு அடைமொழியாக்கி, மற்ற உரைகளில்‌ உள்ளபடியே, பொருள்‌ கூறிப்‌, பின்னர்‌ *திறம்பாத கடல்‌! என்று (கரை கடவாத கடல்‌ என்றுமாம்‌! என்று கடலுக்கு அடைமொழியாக்குகிறார்‌. இது மற்ற உரைகளில்‌ சொல்லாது விட்டதென அறியமுடிகிறது-
*வல்லினை மாய்ந்தறச்‌ செய்குந்தன்‌” (7.1.7) என்ற தொடருக்கு முதற் பொருள்‌ கூறிய பிறகு, முடிவில்‌ *விரோதியைப்‌ போக்கும்‌ குந்தமாகிற ஆயுதத்தை உடையவன்‌ என்றும் சொல்லுவர்‌‘என்பர் –
*கனியைக்‌ கரும்பினின்‌ சாற்றைக்‌ கட்டியைத்‌ தேனை. யமுதை’ (3.5.6) என்ற தொடருக்குப்‌ பொருள்‌ கூறிய பின்னர்‌, “கனியை” என்று தொடங்கி, தேன்‌ என்‌பதுமளவும்‌, உண்பதாயும்‌, குடிப்பதாயும்‌, கறிப்பதாயும்‌, நக்குவதாயுமுள்ள நால் வகை உண்ணும்‌ தன்மையைச்‌ சொல்லிற்றாகவுமாம்‌’? என்று சிறப்பாகப்‌ பொருள்‌ கூறுவர்‌, இது மற்ற உரைகளில்‌ சொல்லாமல்‌ விட்டதாகும்-

*ஆமிரத்துள்‌’ (14,11) என்பதற்கு உள நிலையை விஎக்குவதான ‘பாவ பந்த ப்ரகாசகமான ஆயிரம்‌! என்று, உள்‌” என்பதற்குப்‌ பொருள்‌ உரைப்பர்‌, ஆனால்‌ மற்ற உரைகளில்‌ *ஆயிரத்துள்‌- என்றே உள்ளது
*ஏற்றின்‌ எருத்த மிறுத்தாய்‌ மதிளிலங்கைக்‌ கோவை வீயச்‌ சிலை குனித்‌தாய்‌ குல நல் யானை மருப்பொசித்தாய்‌?’ (4.5.1) என்ற தொடருக்கு இபற்கையான பொருள்‌ கூறி, முடிவில்‌ துண்‌ பொருளாக முறையே “பிறவியின்‌ ஏழு நிலைமையைப் போக்கினதையும்‌, பத்துப்‌ பொறிகளோடு கூடின கெட்ட மனத்தை அழித்ததையும்‌, இறைவனை அடையத்‌ தடையான அகங்கார மமகாரங்களைப்‌ போக்கினதையும்‌?! என்று ஆழ்வார்‌ மனத்தை மற்ற உரைகளில்‌ சொல்லாது விட்டதன்‌ கீழ்‌ காண முடிகிறது –
*காரிமாறன்‌ சடகோபன்‌” (4.5.11) என்பதற்குக்‌ **காரி என்து பேரான தந்‌தை உறவை யுடையதாய்‌, மாறன்‌ என்னும்‌ குடிப்பேரை யுடைய ஆழ்வார்‌’ என்று பெற்றோர்‌ உறவையும்‌ குடிப் பெயரையும்‌ காட்டி உரைப்பர்‌ சீயர்-

பீடுடை நான்முகனைப்‌ படைத்தானுக்கு” (6,6,4) என்ற தொடருக்கு நம்பிள்ளை, (பதினான்கு உலகங்களையும்‌ படைக்க வல்ல (சதுர்த்தச புவநத்தையும்‌ ஸ்ருஷ்டிக்க வல்ல) பெருமையை யுடைய நான்முகனைப்‌ படைத்தவனுக்கு (சதுர்‌ முகனை ஸ்ருஷ்டித்தவனுக்கு)’‘ என்று உரைப்பர்‌ இதில்‌ நான்முகனின்‌ பெருமையைக்‌ காட்டும்‌ வகையில்‌ சீபர்‌ உரையில்‌, :’படைப்‌புக்குத்‌ தக்க (ஸ்ரஷ்ட்ருத்வாநுரூபமான) ஞானம்‌ முதலான குணப்‌ பெருமையை யுடைய நான்முகனைப்‌ படைத்தவனாய்‌! என்று விளக்கி யுள்ளார்‌; விரிவாக்கி உரைத்துள்ளார்‌. ‘பீடு? என்பதற்குப்‌ பெருமை? என்ற பொருள்‌ நம்பிள்ளை கூறியதை விவரித்து ஞானம்‌ முதலான குணப் பெருமையாகக்‌ கூறுகிறார்‌ சீயர்‌-
“என் நெஞ்சும்‌ உயிரும்‌ உள் கலந்த” (10.7 1) என்பதற்கு. ஈட்டில்‌ ”நெஞ்சென்று உடலுக்கு (தேஹத்துக்கு) உப லக்ஷணம்‌; உயிரென்று ஆத்மா. ஒரு நீராகக்‌ கலந்த; சரீரத்தோடு ஆத்மா வோடு வாசியற மூழ்கா (அவகாஹியா) நின்றான்‌’? என்று உரைப்பர்‌. இதனை நன்கு விளக்கும்‌ வகையில்‌ சீயர்‌, “என்‌ நெஞ்சுள்ளும்‌ உயிருள்ளும்‌ கலந்து?! என்று உள்‌-என்பதை நெஞ்சொடும்‌ சேர்த்து ”உள்ளுறை காட்டுவாரைப்‌ போலே என்‌ நெஞ்சுக்குள்ளேயும்‌ ஆத்மாவுக்குள்ளேயும்‌! என்று விரித்து உரை வழங்குவது குறிப்பிடத்தக்கது –
“என்னை ஆள்வாய்‌? (9.24) என்ற இடத்தில்‌ நம்‌ பிள்ளை, “என்னை அயோக்கியன்‌’ என்று அகலவுமாட்டாதே , பிரிவாற்றாமையாலே முடியவுமொட்டாதே, குண அறிவாலே தரிப்பித்தக் கொண்டு போந்தாய்‌!’ என்று விரிவாகக்‌ கூறுவர்‌. இதனைப்‌ பின்பற்றிச்‌ சீயர்‌ சொல் நயம்‌ கொண்டு சுருக்கமாகத்‌ தேர்ந்த பொருளைக்‌ கூறுவர்‌. அதாவது, உன்னுடைய நீர்மை முதலான குணங்களை வெளிப்படுத்தி என்னை அடிமை கொண்‌டவனே’? என்று பாட்டின்‌ முதலடியிலுள்ள குணங்களைக்‌ கொண்டு உரை வழங்கியது காணலாம்
பேச நின்ற சிவனுக்கும்‌ பிரமன்‌ தனக்கும்‌ பிறர்க்கும்‌ நாயகனவனே” (4.10 4) என்பதற்கு, *போலிப்‌ பிரமாணங்களாலும்‌ காரணப்‌ பெயர்களாலும்‌ ‘ஈஸ்வரன்‌’ என்றது சந்தேகமாகச்‌ சிவனுக்கும்‌, அந்தச்‌ சிவனைப்‌ பிறப்பித்தவனாய்த்‌ தன்னாலே படைக்கப்பட்ட பெரிய உலகையும்‌ உண்டாக்கின பிரமன்‌ தனக்கும்‌, இவர்கள்‌ ஏவிற்றுச்‌ செய்யும்‌ தேவர்களுக்கும்‌, அவர்கள்‌ கீழ்‌ அடங்கிய உலகை ஆளுபவனாய்க்‌ கொண்டு தலைவனானவன்‌’‘ என்று அந்தந்த இடத்திற்கு ஏற்ப அடைமொழி தந்து சீயர்‌ உரை வழங்குகிறார்-

நாணும்‌ நிறையும்‌ கவர்ந்து (5.8.9) என்ற பாடலில்‌ “சேணுயர்‌” என்பதற்கு :விச்வத: ப்ருஷ்டேஷு ஸர்வதா ப்ருஷ்டேஷு” என்ற சாந்தோக்கிய உபநிடதத்‌ (3.13) தொடர்‌ கொண்டு பொருள்‌ விளக்கம்‌ தருகிறார்‌. அதாவது, தனித்தனியாகப்‌ படைத்த பொருள்களுக்கும்‌ கூட்டாகப்‌ படைத்த பொருள்‌களுக்கும்‌ மேலே என்கிறபடியே மிகவும்‌ உயர்ந்த- என்று பரம பதத்துக்கு அடைமொழி காட்ட இத்த உபநிடதத்‌ தொடர்‌ கொண்டு விளக்குகிறார்‌. ஆனால்‌ இந்த மேற்கோள்‌ இப்பாட்டில்‌ மற்ற உரைகளில்‌ இல்லாததாம்
(திருமேனி யடிகளுக்குத்‌ தீ வினையேன்‌ விடு தூதாய்‌ (9.7.4) என்ற பாட்டில்‌ (திருமேனி யடிகளுக்கு-என்ற இடத்தில்‌ *ரூபமேவ அஸ்ய ஏதத் மஹிமானம்‌ வ்யாசஷ்டே‘ என்ற வடிவு தானே ஸர்வாதிகத்வ ப்ரகாசமான சேஷித்வத்தை யுடையவர்க்கு’ என்று வேத காண்டத்திலிருந்து (ப.வே ப்ர.1, பஞ்சாதி) மேற்கோள்‌ காட்டி, இறைவனுடைய வடிவழகை விளக்குகிறார்‌. அதாவது, “இந்த இறைவனுடைய இந்தத்‌ திருமேனியே இவருடைய பெருமையை நன்றாகச்‌ சொல்லுகிறது என்று, “வடிவுதான எல்லாரைக்‌ ” காட்டிலும்‌ உயர்ந்தவனாம்‌ தன்மையை வெளிப்படுத்துவதான தலைவனாம்‌ : தன்மையுடையவர்க்கு- என்று பொருள்‌ வழங்கி யுள்ளார்‌. மற்ற உரைகளில்‌ குறிப்பாக ஈட்டிலும்‌ இருபத்து: நாலாயிரப்‌ படியிலும்‌ வேறு நூலிலிருந்து மேற்கோள்‌ காட்டியது அறியலாம்‌-

இராமானுசர்‌ பொருளாட்சிகள்‌: 17 இடங்கள்‌,
1-அறியாமாமயத்து…வைத்தாயால்‌ (2.3.3)
2-அவதாரிகை (2.7.5)
3-அந் தாமம்‌ வாழ் முடி சங்கு ஆழி நூலாரம்‌ உள2.3.1
4-கிளரொளி இளமை’ அவதாரிகை (2.10)
5-கருமவன்‌ பாசம்‌ கழித்துழன்‌று உய்யவே (2.10.4)
6-இனி வந்து கூடுவன்‌ (3.2.1)
7-எஞ்ஞான்று நாமிருந்து…மேவுதுமே( 3-2-1)
8-கடங்கள் மேல்‌ வினை முற்றவும்‌ வேம்‌ மெய்‌ (3.3.6)
9-ஆதுமோர்‌ பற்றிலாத (3.4.10)
10-தேவார்‌ கோலத்தொடும்‌…அடியேனொடுமானான்‌ (5-1-9)
11-நின்றவாறும்‌ இருந்தவாறும்‌ கிடத்தவாறும்‌ (5-10-6)
12-என்னையும்‌ உளன்‌ என்மின்கள்‌ (6 1.10)
13-மூவுலகாளியே, கடிகமழ் கொன்றைச்‌ சடையனே நான்முகக்‌ கடவுளே (7.2.10)
14-அடியடையாதாள் போல்‌ இவள்‌ அணுகி அடைந்தனள்‌ (7.2.10)
15-இது வல்லால்‌ பொருள் தானெனில்‌ மூவுலகும்‌ பொருளல்ல (8.7.3)
16-புகமும்‌ செழும்கதிர்‌ ஆழி முதலாகப்‌ பொருபடை(8.9.3)
17-அருள்‌ பிழைக்கின்றது என்று பேதுறுவேனே (6-4-3)

பட்டர்‌ பொருளாட்சிகள்‌:
1-பற்றிலனீசனும்‌…(1.2.6)
2-புரிவதுவும்‌ புகைபூவே (1.6.1)
3-தீது அவமின்றி ஏதமிலுரைத்த (1.6.1)
4-ஓடும்‌ புள்ளேறி பதிகம்‌ அவதாரிகை (1.8) 5-பொருமா தீள்படை பதிகம்‌ அவதாரிகை (1.10)
6-இவள்‌அரக்கும்‌ மெழுகும்‌ எரியணை ஓக்கும்‌ (2 4.3)
7-தேவும்‌ தன்னையும்‌ (2.7.4)
8-சிரீதரன்‌ செய்ய தாமரைக் கண்ணன்‌… இருடீகேசன்‌ (2-7-9)
9-வாழ்த்துவார்‌ பலராக (3.1.7)
10-மாசூணா…மழுங்காதே (அவதாரிகை) (3.1.8)
11-சொல் மாலைகள்‌ சொல்லுமாறு அமைக்க வல்லேத்கு (4-5.8)
12-என் கொள்வன்‌.. , கண்ணனே (5-1-4)
13-திரைக்கும்‌ கருங்கடல்‌ வண்ணன்‌ (5.3.11)
14-ஆறெனக்கு நின்பாதமே சரணாகத்‌ தந்தொழிந்தாய்‌ (5 7.10)
15-பணிமின்‌ திருவருள்‌ (4.1.5)
16-போழ்து போக உள்ளகிற்கும்‌ புன்மை இலாதவர்க்கு(9-1-9)
17-மதியாலே (8.7.9)-18-தழை நல்ல வின்பம்‌ தலைப்பெய்து எங்கும்‌ தழைக்கவே (9,5.10)

நஞ்சீயர்‌ பொருளாட்சிகள்‌
1-பெரு நிலங்‌ கடந்த நல்லடிப்போது…வணங்குவன்‌ (13,10)
2-நாடாத மலர் நாடி (1.4,9)
3-சிந்தை மற்றொன்றின்‌ — அவதாரிகை (7.10.10)
4-என்னே என்பாருமில்லை (9.1.3)
5-ஆருயிர்‌ பட்டது (9.6.9)

எம்பார்‌ பொருளாட்சிகள்‌
1-ஆக்கை விடம்பொழுதெண்‌ (1.2.9)
2-தவள வண்ணர்‌ தகவுகளே (2.4.5)
3-அவ்வல்லல்‌ எல்லாம்‌ (3.2.10)
4-வீடும்‌ தரும்‌ நின்‌று நின்றே (3.9,9)
5-நண்ணாதார்‌ முறுவலிப்ப பதிகம்‌ முழுவதும்‌ (4-9)

பிள்ளான்‌ பொ௫ளாட்சிகள்‌
1-ஒட்டுவேனோ (1.7.6)
2-நெடுமாலே என்று கூவும்‌ (4.4.4)
3-எண்ணிலாப்‌ பெரு மாயனே (7,1:1)
4-மங்கிய அருவாம்‌ நேர்ப்பம்‌ வான்புலனிறந்ததும்‌ நீயே (8.1.6)
5-நல் நாடு (8-5.2)
6-தவம்‌ செய்தில்லா வினையாட்டியேன்‌ (9-5-3)

கூரத்தாழ்வான்‌ பொருளாட்சி
1, பிறந்தவாறும்‌ (அவதாரிகை முடிவில்‌) (5.10)

முதலியாண்டான் பொருளாட்சி
1-நெஞ்சினால்‌ நினைப்பான்‌ யவன்‌ . அவனாகும்‌ நீள் கடல் வண்ணன்‌ (3.6.9)

உய்ந்த பிள்ளை பொருளாட்சி
பச்சிலை நீள் கமுகும் பலவும்‌ தெங்கும்‌ வாழைகளும்‌-(5-9-4)
சொட்டை நம்பிகள்‌ பொருளாட்சி’
தன் தனக்கு (4.5.7)

சிற்றாட்கெண்டான்‌ பொருளாட்சி
தெளி விசும்பு திருதாடாத்‌ தீ வினையேன்‌ மனத்துறையும்‌ (9-7-5)

பிள்ளை திருநறையூர்‌ அரையர்‌ பொருளாட்சி
நீசனேன்‌ நிறை ஒன்றுமிலேன்‌ (3.3.4)

வங்கிப்புரத்து நம்பி பொருளாட்சிகள்‌
1-மேகலையால்‌ குறைவில்லா (4.8,9)
2-பால துன்பங்கள்‌… (7.2.7)

பிள்ளை அமுதனார்‌ பொருளாட்சி

அம்மான்‌ ஆழிப்பிரான்‌ அவன்‌ எவ்விடத்தான்‌ யானார்‌? (5.1.7)

அம்மாள்‌ பொருளாட்சிகள்‌
1-தொல்லருள்‌ நல் வினையால்‌ சொலக் கூடுங்கொல்‌ (6.9:10)
2- ஊளி எழ (7.4.4)
3-அல்லல்‌ என்னும்‌ இருள்‌ சேர்தற்கு உபாயம்‌ என்னே (8-5-5)

முன்னோர்கள்‌ பொருளாட்சிகள்‌
1-நிலை வரம்பில (1-3-2)
2-என் கொள்வன்‌ உன்னை விட்டென்றும்‌ (5.1.4)
3-துவளில்‌ மாமணி-அவதாரிகை (24 படி) (65)
4-பின்னை கொல்‌ நிலமாமகள் கொல்‌ ‘ திருமகள் கொல்‌

ஸ்ரீயபதி சேதநஸ்யாஸ்ய ஹேதுத்வேன ஸமாஸ்ரித; அநிஷ்ட ஹாநிம்‌ இஷ்டஸ்ய ப்ராப்திம் ச குருதே ஸ்வயம் –தானாகவே செய்து அருளுகிறான்

என்‌ மாணிக்கச்‌ சோதியை-1.7-3 சாணையிலேறிட்ட மாணிக்கம்போலே-
என்‌ மாயப்பிறவி மயர்வு அறுத்‌தேன்‌- 1-7-3-போகார்த்தமாகப்‌ பால் குடித்தவனுக்‌ குப்‌ பித்தம்‌ தன்னடையே நசிக்குமா போலே
நீர்புரை வண்ணன்‌ -1-8-11-ஒருக்கின விடத்திலே சென்று பாயும்‌ நீரின்‌ செவ்வை போலேபூமகளார்‌-1-9-3-பூவில்‌ மணம்‌ வடிவு கொண்டாற் போல்
என்னுடைய தோளிணை-1-9-6-பெரிய திருவடியை மேற் கொள்ளுமா போலே
காமுற்ற கையற வோட-2-1-3-காமிக்கப்பட்ட போகங்கள்‌ கைப்‌ படாத விழவோடே கூடினாற்‌ போலே
கூத்தனை -2-2-1-வல்லார் ஆடினாற் போலே
ஊனில்வாழ்‌ உயிர்‌ -2-3-1-இந்தளத்திற் தாமரை போலே
செடியார்‌ தோய்கள்‌-2-3-9-ஒன்றோடு ஓன்று மிடைந்து தூசு மண்டினாற் போலே
வாய்மடுத்துப்‌ பருகி-2-3-9-பெரு விடாயன் தண்ணீர் குடித்தாற் போலே
ஆடி ஆடி–2-4-1- வல்லார் ஆடினால் போலே
இசை பாடிப்‌ பாடி–2-4-1- இசையால் பலகாலும் பாடுவாரைப்போலே
கண்ணீர்‌ மல்கி-2-4-1-கரைந்த நெஞ்சு ப்ரவஹிக்குமா போலே
எரியணை யொக்கும்‌-2-4-3- அக்னி ஸாஹஸத்தில் ஓக்க வுருகுமா போலே
வண்டு திவளும்‌ தண்ணந் துழாய்‌-2-4-5- வண்டுகள் மதுபானம் பண்ணி ரஸாயந ஸேவை பண்ணுவாரைப் போலே
இவள்‌ மாழை நோக்கு-2-4-10-இவளுடைய முக்தமான மானின் நோக்குப் போலே-எம்பிரான்‌ -2-7-4-ஊரை வளைத்து ஒருவனைப்‌ பிடிக்குமா போலே
திருத்தி என்னை-2-7-4 – இரும்பைப்‌ பொன்னாக்‌குவாரைப்‌ போலே
என்‌ ஆழி வண்ணன்‌-2-7-12- கடுகிலே கடலை மடுத்‌தால் போலே
எந்தாய்‌ –3-2-4-ஊரை வளைத்து ஒருவனைப்‌ பிடிக்குமா போலே
கூவுகின்றேன்‌ –3-2-8-ஸாதநாதுஷ்டாநம்‌ பண்ணி யிழந்தார்‌ கூப்‌பிடுமா போலே
மணி ஒளி வண்ணன்‌–3-4-3-சாணையில்‌ ஏறிட்ட மாணிக்கம்‌ போலே
சேனை யவத்த -3-5-7-விளக்கு அவித்தாற்‌ போலே
கன்னல்‌ கனியினை -3-6-7-கன்னல்‌ சேர்ந்த கனி போலே
தண்‌ இலங்கை–3-8-2-குளவிக்கூடு போலே
கோலமே–3-8-3- ஓப்பனை ரூபம்‌ தரித்‌தாற்‌ போலே-முரல் திரு வேங்கடத்து -3-9-1-ஆளத்தி வைப்பாரைப்போலே
மணி ஒளி -3-10-2-தகட்டில்‌ அழித்தின மாணிக்கம்‌ போலே
பூகம்‌ சாந்து -4-3-2-கூனியிட்ட சாந்து போலே
புனையும்‌ கண்ணி -4-3-2-ஸ்ரீமாலாகாரர்‌ இட்ட மாலை போலே
இரைத்து -4-3-9-பெருங்கடல்‌ கிளர்ந்‌தால் போலே
ஆலும்‌-4-4-4-மேக ஸந்நிதியில்‌ மயில்‌ ஆலிக்குமா போலே
கோமள வல்லி -4-4-5-கொள்‌ கொம்பில்லாத கொடி போலே
மதுவார் -4-6-3-பாலுமாய்‌ மருந்துமாய்‌ என்னுமா போலே

———————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading