ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம்-10-

ஸ்ரீ ராமானுஜ பத்திரிகைகளில் (214/217/224/226/229/232-235/237-242/244/245/இருந்து திரட்டிய அமுத ஸ்ரீ ஸூக்திகள்

ஸ்ரீமதுபயவே. யோகி. பார்த்தஸாரதி ஐயங்கார்ஸ்வாமி.-இம்மஹான் லக்னோ(Lucknow) மஹா நகரத்தில் பெரிய உத்யோக பதவியில்அமர்ந்திருந்த காலத்தில் சக்ரவர்த்தி திருமகன் கனவிலே ஸேவை ஸாதித்துத் திருவயோத்தியில் ஸன்னிதி ப்ரதிஷ்டை செய்யும்படி நியமிக்க, அந்த நியமனத்தை சிரஸாவஹித்து அயோத்யையில் கோலாகாட் என்று ப்ரஸித்தமான ஸரயூதீரத்தில் தாக்ஷிணாத்ய ப்ரக்ரியையிலே திவ்ய ஸன்னிதி நிர்மாணம் செய்வித்து ப்ரதிஷ்டை பண்ணியிருப்பது ப்ரஸித்தமான விஷயம்-இந்த ஸன்னி
தியை அம்மாஜீமந்தீர் என்றே வடநாட்டினர் வழங்குவர். சிங்கம்மாவின் திருநாமம் அம்மாஜீ
யென்பது, இந்த அம்மா தம் முடைய வாழ்நாளைப் பெரும்பாலும் இந்த ஸன்னிதியிலேயே கழித்தார்.-பகவத் விஷயத்திலும் ரஹஸ்ய வியாக்கியானங்களிலும் இந்த அம்மாவுக் கிருந்த ப்ரஜ்ஞை அமோகமானது. ஒருநாள் தவறாமல் ப்ரவசனம் செய்து கொண்டிருந்ததை
நேரில் பலகால் அனுபவித்திருக்கிறேன்.

நம் தேவப்பெருமாளுக்கு வைசாக மஹோத்ஸவத்தில் நடைபெறும் கருடோத்ஸவமே உலகமுழுது முணர்ந்தது. ஆனி ஆடி இவ்விரண்டு மாதங்களிலுங்கூட இரண்டு கருடோத்ஸவங்களுண்டு. இவ்விரண்டும் இரவில் நடைபெறுவது, மாடவீதிகளில்
மட்டுமே நடைபெறுவது ஆனிகருடன் பெரியாழ்வாருடைய வருஷத் திருநக்ஷத்ர மஹோத்ஸவ நிமித்தமாக நடைபெறுவதால் ஸம்ப்ரதாயைதிஹ்ய நிபந்தனமானது. ஆடி
கருடன் கஜேந்திரமோக்ஷோத்ஸவமென வழங்கப்பெறும்
.இவ்வுத்ஸவம் நம்பெருமாள் ஸன்னிதியில் சித்திரைப் பௌர்ணமியில் நடைபெற்றுவருகிறதாம். சில திவ்ய தேசங்களில் நக்ஷத்திரத்தை நிமித்தமாகவைத்து இது நடத்தப்பட்டு வருகிறது. தேவப்பெருமாள் ஸன்னிதியில் நியமேந ஆடிமாதத்துப் பெளர்ணமியில்தான் நடந்து வருவது.ஹஸ்திகிரி மாஹாத்மியமென்று ப்ரஸித்தமான இந்த ஸன்னிதியின் புராணத்தில் கஜேந்திரமோக்ஷ வி ருத்தாந்தம் இங்கே நடைபெற்றதாகவுள்ளது. துரகஸவநவேத்யாம் சியாமலோ ஹவ்யவா : என்றும் *ஹைரண்யகர்ப்ப யமேத ஹவிர்ப்புஜம் த்வாம்
என்றும் வேதாந்தவாசிரியர் பணித்தபடி நான்முகனுடைய அயமேத வேள்வியில் அவதரித்
தவர் தேவப்பெருமாள். அது க்ருத யுகத்தில். அந்த யுகத்தில் அப்பிரமனுடைய திருவாராதனம்; இரண்டாவதான த்ரேதாயுகத்தில் கஜேந்த்ராழ்வானுடைய திருவாராதனம்:
மூன்றாவதான த்வாபரயுகத்தில் ப்ருஹஸ்பதியின் திருவாராதனம். நிகழுமிந்த கலியுகத்தில் திருவனந்தாழ்வானுடைய திருவாராதனம் – என்று இவ்வடைவு புராணவிதிதம். இப்படிஒவ்வொரு யுகத்தில் ஒவ்வொருவர் திருவாராதனம் செய்து போருவதற்குரிய இதிஹாஸமும் ஹஸ்திரி மாஹாத்மியத்தில் விசதம். த்ரேதாயுகத்தில் கஜேந்திராழ்வானுக்குச் செய்தருளின அனுக்ரஹமொன்று மட்டும் இங்ஙனே மஹோத்ஸவமாகக்கொண்டாடப்பட்டு வருகின்றது.

“க்ரா :நஷ்டோ பவது; கஜேந்த்ர; ரக்ஷிதோ பவது” என்று திருவுள்ளத்திலே நினைப்பிட்டால் ஆகாத துண்டோ?-முதலையின் மீது திருவாழியாழ்வானைப் பிரயோகித்துக் காரியங்கொண்டதாக “க்ராஹம் சக்ரேண மாதவ:” “ஆனையின் துயரம் தீரப்புள்ளூர்ந்துசென்று நின்றாழிதொட்டானை “‘ இத்யாதி ப்ரமாணங்களாலறிகிறோம். அந்தத் திருவாழியாழ்வான்” கருதுமிடம் பொருது கைநின்ற சக்கரத்தன்’‘ என்று நம்மாழ்வாரருளிச் செய்தபடியே தான் நொடிப்பொழுதில் காரியம் ஸாதித்து வரவல்லவன்; அத்திருவாழியாழ்வானைத் திருநாட்டிலிருந்தே ஏவினால் எளிதாசுக் காரியமாகாதோ? எம்பெருமான் தானே பதறியோடிவந்தது எதற்காக?-இக்கேள்வியை நம்மாழ்வார் எம்பெருமானை நோக்கிக் கேட்டு ஸமாஹிதரான படியை அவ்வாழ்வார்தாமே திருவாய்லொழியில் (3-1-9.) *மழுங்காத வைநுதிய சக்கர நல்வலத்தையாய் என்கிற பாட்டிலே வெளியீட்டருளினார். இதில் முதலடியாலும் மூன்றாமடியாலும் திருவாழியாழ்வானுடைய சக்தியையும் ஸங்கல்பரூப ஜ்ஞானத்தின் சக்தியையும் பரக்கப்பேசி, (புள்ளூர்ந்து தோன்றினையே ] இவற்றாலே காரியங் கொள்ளாதே கருடா டனாய்ச்சென்று மடுவின்கரையிலே சேர்ந்தாயே, இந்த பிரயாஸம் எதற்காக? என்று ஆழ்வார் கேட்டதற்கு, எம்பெருமான் ஆழ்வாருடைய திருச்செவியிலே (தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தேர் றினேன் என்றான். அதுகேட்டுப் பரமத்ருப்தியடைந்த ஆழ்வார் அதைத் தம் திருவாக்காலே அநுவதித்த ளினார். இப்போது கேள்விக்கு என்ன ஸ மாதானம் வந்ததென்னில்: கஜேந்திராழ்வான் தன்னெதிரே வந்து நின்ற பகவானை நோக்கி “நாஹம் களேபரஸ்யாஸ்ய த்ராணார்த்தம் மது து !, கரஸ்த கமலாந்யேவ பாதயோரர்ப்பிதும் தவ ” என்றான். (அதாவது) என்றேனுமொருநாள் அழிந்தே போகக்கூடியதான இவ்வுடலுக்காக நான் கரையவில்லை; எம்பெருமானே! உன்னை ஸேவித்து உனது பொற்றாமரையடிகளிலே இத்தாமரை மலர்களைப் பணிமாறுவதற்காகவே கரைந்தேனென்றவாறு. இப்படிப்பட்ட ஆவல்கொண்ட பக்தசிகாமணிகளின் ஆசையை ஸங்கல்பத்தினால் தலைக்கட்ட முடியாதன்றோ. திருவாழியையிட்டு முதலையைத் துணிக்கலாமேயொழிய (மேலேசொன்ன) கஜேந்திரனாசையைத் தலைக்கட்டப்போமோ? நேரில் வந்து நின்று திருனியைக் காட்டியே அன்பர்களைக் காக்க வேண்டும் என்னும் சீரிய பொருளை ஆழ்வார் இப்பாசுரத்திலே அமைத்துவைத்தார்.

“பாஷ்யகாரர் இதுகொண்டு ஸூத்ரவாக்யங்களொருங்கவிடுவர் ” என்ற ஆசார்யஹ்ருதய சூர்ணையின்படி அருளிச் செயலைக்கொண்டே ஸூத்ரார்த்தமொருங்கவிட்டருளும் பாஷ்யகாரர் மேலே விவரித்த பாசுரத்தை ஸ்ரீபாஷ்யத்தில் மிக நல்லவிடத்தில் பொருந்தவைத்தார். எங்கேயென்னில்; அந்தரதிகரண ஸ்ரீபாஷ்யத்தில் இந்த மஹாநிதியுள்ளது. அங்கு பரம புருஷனுக்கு சரீரஸம்பந்தம் கிடையாதென்று பூர்வபக்ஷவாதத்தில் ப்ரஸக்தமானதை ஸ்வாமி கண்டிக்குமிடத்து ஸ்ரீ ராமக்ருஷ்ணாதி விபவாவதாரங்களில் சரீரபரிக்ரஹம் பகவான் செய்தருளுகிறபடியை நிரூபித்து வருகையில் * பரித்ராணாயஸாதூநா மித்யாதி கீதா வசனத்தை யெடுத்துக்காட்டி “ஸாது பரித்ராணமேவ உத்தேச்யம்:ஆ நுஷங்கிகஸ் து துஷ்க்ருதாம் விநாச : ஸங்கல்ப மாத்ரேணாபி ததுப்பத்தே ” என்றருளிச்செய்தார். எம்பெருமான் அவதாரம் செய்தருளுவது ஸாதுக்களை ஸம்ரக்ஷிப்பதற்காகவும் துஷ்டர்களைத் தொலைப்பதற்காகவுமானாலும் ஸாதுக்களை ஸம்ரக்ஷிப்பதொன்றே உத்தேசயம்; துஷ்டர்களைத் தொலைப்பதென்பது ஸங்கல்ப மாத்திரத்தினாலும் ஆகக் கூடியதாதலால் அது ஆநுஷங்கிகமேயொழிய ப்ரதானமன்று என்பது மேலெடுத்துக்காட்டியஸ்ரீ பாஷ்ய ஸ – க்தியின் பொருள். துஷ்டர்களைத் தொலைப்பது ஸங்கல்ப ஸாத்யமாகிறாப்போலே ஸாது பரித்ராணமும் ஸங்கல்ப ஸாத்யமாகக் கூடாதோ? ‘ஸாதவோ ரக்ஷிதாபவந்து’ என்று பகவான் ஸங்கல்பிக்க முடியாதோ?; தாராளமாக முடியுமே. அப்படியிருக்க துஷ்க்ருத் விநாசநமே ஸங்கல்பஸாத்யமென்றும் ஸாதுபரித்ராணம் ஸங்கல்ப ஸாத்யமன்று என்றும் ஸ்ரீ பாஷ்யகாரர் எதுகொண்டு ஸாதித்தாரென்று ஆராயுமளவில்,மேலே விவரித்த ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியைக்கொண்டே ஸாதித்தாரென்று அறுதியிடத்தட்டில்லை.உதாஹரித்த திருவாய்மொழிப்பாசுரத்தில் “தொழுங்காதல் களிறு” என்றதைஜீவநாடியாகப்பிடித்து கீதாபாஷ்யத்திலேயே ஸாதுபதத்தை ஆச்சர்யமாக விவரித்தருளினார் ஸ்வாமி. அவ்விடத்துப் பங்க்திகள் பரமபோக்யமானவை; கண்டபாடம்செய்து நித்ய மநுஸந்திக்கத்தக்கவை; “ஸாதவ:- உக்தலக்ஷணதர்மசீலா வைஷ்ணவாக்ரேஸரா : மத்ஸமாச்ராயணே ப்ரவ்ருத்தா … மத்தர்சநேந விநா ஸ்வாத்மதாரண போஷணாதிகம் அலபமாநா : கூணமாத்ரகாலம் கல்பஸஹஸ்ரம் மந்வாநா: ப்ரசிதிலஸர்வகாச்ராபவேயுரிதி மத்ஸ்வரூப சேஷ்டி தாவலோகந ஆலா பாதிதாநேந தேஷாம் புரித்ராணாய்…”இத்யாதி. ஆழ்வார்கள் எம்பெருமானைக்காணாமல் தாங்கள்படும் அலமாப்பை வெளியிட்டருளின பாசுரங்களை மொழிபெயர்க்கும் வண்ணமாகவன்றோ இந்தஸ்ரீஸூக்திகன் அவதரித்துள்ளன. இப்படிப்பட்ட ஸாதுக்களிலே கஜேந்திராழ்வானை யுமொருவனாகக்கொண்டு நேரேயோடி வந்து காத்தருளினனெம்பெருமான். ஆதிமூலமே !என்று களிறு கதறினது திருநாட்டில் செவிப்பட்டவாறே நடந்த செய்திகளையும் அப்பெருமானுக்குண்டான பதற்றத்தையும் ‘என்னுடைய பக்தனை ஒரு நீர்ப்புழுவின் வாயிலே துடிக்கவிட்டுக் கேட்டேன் கெட்டேன்’ என்று முடிமேல் மோதிக்கொண்ட படியையும் பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் தேவீஹஸ்தாம்புஜேப்ய: அதந்த்ரித சமூபதிப்ரஹிதஹஸ்தம் யம் பச்யந்விச்வதுர்யாம் * ஸ்ரீரங்கேசய சரணம் மமாஸி* என்கிற நான்கு சுலோக ரத்னங்களினால் மிகவற்புதமாகவருளிச் செய்தார். இவை ஒரு தட்டாயும். ஆழ்வான் ஸ்ரீவைகுண்டஸ்தவத்திலருளிச்செய்த *விச்வம் தியைவ விரசய்ய இத்யாதியச்லோகத்தில் *ஆஜக் ஷஸ் தவ கஜோத்தமப்ரும்ஹிதேந பாதம் பராமம்ருசுஷோபி சகா மநீஷா என்கிற உத்தரார்த்தம் ஒரு தட்டாயுமிருக்கும்படியை ஆரேயரிகிற்பார்*கஜ ஆகர்ஷதே தீரே என்னும்படியான-ஸ்வப்ரவ்ருத்தியில் அவனிருந்தான்; அது பகவத் ப்ரவ்ருத்திக்கு விரோதியாயிருந்தது.-அத்தகைய ஸ்வப்ரவ்ருத்தி கழிந்தவாறே பகவத் ப்ரவ்ருத்தி ஏற்பட்டது.-“பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வப்ரவ்ருத்தி நிவ்ருத்தி: ப்ரபத்தி:”–

பெரும்பாலும் ச்லோகந்தோறும் ஆழ்வாரருளிச்செயற் பொருள்களையே அமையவைத்திருப்பதுதான் ஸ்தோத்ரரத்னத்தின் ஏற்றகிற்கு ஏற்றகாரணம்.அதுதன்னில் “ஸக்ருத் த்வதாகார விலோகாசயா த்ருணீக் தா நுத்தமபுக்தி க்தி :, மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய க்ஷணேபி தே யத்விரஹோதிதுஸ்ஸ : ” என்கிற சுலோகம் நிகரற்றது.இதில் முதலிரண்டு பாதங்கள் நம்மாழ்வாருடையபடியை நிரூபிப்பன. நான்காவதுபாதம் அவ்வாழ்வார் திறத்திலே எம்பெருமானிருந்தபடியை நிரூபிப்பது. இதைச் சிறிது-உபபாதிக்கிறேன் ஸஹ்ருதய ரஸிகமணிகளின் திருவுள்ளவுகப்புக்காக. [ஸ ருத்த்வதாகாரவிலோக ஆசயா.] ஒருநாள் காணவாராயே என்றும் கூராராழி வெண்சங்
கேந்திக் கொடியேன்பால் வாராய் ஒருநாள்*
என்றும் விண்ணப்பம் செய்தபடியைத்
தெரிவிக்கிறது.(த்ருணீக்ருத அநுத்தமபுக்தி முக்திபி:] எம்மாவீட்டுத் திறமும்
செப்பம்”
என்றதிலே எல்லாமடங்கும். ஆக ஆழ்வார்படி சொல்லிற்றாயிற்று. இனி
[யத்விர : க்ஷணேபி தே துஸ்ஸஹ:) என்ற நான்காவதுபாதம் மிகமிக ஆழ்ந்து நோக்கத் தக்கதாகவுள்ளது. இந்த ச்லோகம் … த்ருணீக்ருதாநுத்த புக்தி முக்திநாமஹாத்மநா என்று ஏகவசநாந்தமாகவே யிருக்கலாம்.ஆளவந்தாருடைய திருவுள்ளம்அதுதான். ஆனாலும் ப வசனாந்தமாக இட்டருளினது கராந்தி சைலியென்றேகொள்ளவேணும். இங்கு மஹாத்மசப்தத்தால் நம்மாழ்வாரொருவரே விவதராகிறார்.எம்பெருமானுடைய பிரிவு ஆழ்வார்க்கு அஸஹ்யமென்பதற்குப் பலபல பாசுரங்கள்கிடைக்கும். ஆழ்வாருடைய பிரிவு எம்பெருமானுக்கு அஸஹ்யமாகிறதென்று இங்குச் சொல்லப்படுகின்றதே, இதற்கு ஏதேனும் பிரமாணம் கிடைக்குமோ? ஆழ்வார் தாம் வாய்விட்டுப் பாசுரங்கள் பாடினவராகையாலே இவருடைய ஆற்றாமையை இவர் பாசுரங்கள் கொண்டு அறியலாம். எம்பெருமான் ஒரு பாசுரமும் பாடினவனல்லனே;அவனுடைய ஆற்றாமையை அறிவதற்கு மூலமில்லையே; அப்படியிருக்க எதுகொண்டு ஆளவந்தார் இங்கு “க்ஷணேபி தே யத்விர : அதிதுஸ்ஸஹ:” என்று அருளிச்செய்தாரென்று ஆராயவேண்டும். இவ்வாராய்ச்சி மிக அவசியமான தன்றோ. இதற்குப் பல வழிகளில் ஸமாதானம் சொல்லலாம். முக்கியமான ஸமாதானம் கேளீர்

ஆழ்வார். அல்லாவியுள்கலந்த ” வென்று தம்முடைய நைச்சியத்தைக்காட்டி ‘ஐயோ ! பொருளல்லாத வென்னோடே இப்படி கலந்து ஏக தத்வமென்னலாம்படிகிடக்கிறானே! ‘ என்று தலைசீய்த்துப்பேசினார். அதிலிருந்து எம்பெருமானுக்கு ஒரு கலக்க
முண்டாயிற்று: ஆழ்வார் *வளவேழுலகு பதிகத்திற்போலே நைச்சியமநுஸந்திக்கத் தொடங்கிவிட்டாரே! நம்மை விட்டிடுவர் போலிருக்கிறதே! இவரைப் பிரிந்து நாம் எப்படி தரிப்பது! என்று நைந்து கிடந்தான்; அதனையறிந்த ஆழ்வார் அவனுக்கு அபய ப்ரதானம் பண்ணுகிறார் . உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே என்று. எம்பெருமான் (கீதையில் ) சரமச்லோகத்தில் (மா சுச 🙂 என்று சொல்லி நம்முடைய சோக நிவ்ருத்தி பண்ணினதுபோல இப்பாசுரம் ஆழ்வார் எம்பெருமானுக்கு (மாசுச :)சொல்லுவது – என்று வியாக்கியானம் செய்தருளுகிறார்கள். திருவாய்மொழி நூற்றந்தாதியில் இது ஸுவ்யக்தமாகக் காணலாம்; அவ்விடத்துப் பாசுரம் வருமாறு:- “வைகுந்தன் வந்து கலந்ததற்பின் வாழ்மாறன், செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து-நைகின்ற தன்மைதனைக் கண்டு உன்னைத் தான் விடேனென்றுரைக்க, வன்மை யடைந்தான் கேசவன்’‘ என்பதாம் மாறன் செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து எம்பெருமான் நைந்தானென்றும், அதுகண்டு ஆழ்வார் அவனைத் தேற்றினாரென்றும் நம் ஆசாரியர்கள் நிர்ஹிக்குமிது மூலத்திற்கு மிகவும் இணங்கியதே யல்லது ஏறிட்டுரைக்குமதன்று. ஆக, எம்பெருமானுடைய விச்லேஷம் ஆழ்வார்க்கு அஸஹ்யமென்பது எப்படி ப்ரமாண ஸித்தமோ அப்படியே ஆழ்வாருடைய விச்லேஷம் எம்பெருமானுக்கு அஸஹ்யமென்பதும் ப்ரமாண ஸித்தமே யென்று கண்டுகொள்க. இப்புடைகளிலே ஆளவந்தார் அருளிச் செய்வதெல்லாம் அருளிச்செயற்கடலில் அவருக்கிருந்த அவகா நாதிசயத்தைக் கையிலங்கு நெல்லிக்கனியாகக் காட்டி நிற்கும்

ஆளவந்தாருடைய தனியன் யத்பதாம்போருஹத்யாநவித்வஸ்தாசேஷகல்மஷ வஸ்துதாம் உபயாதோஹம் யாமுநேயம் நமாமி தம் என்பது. இஃது எம்பெருமானார்அருளிச் செய்தது. ஸ்வாமியருளிய கீதா பாஷ்யத்திற்கு மங்களச்லோகமாகவும் அமைந்துள்ளது இது. ஆளவந்தாருடைய திருவடிகளைச் சிந்தைசெய்து தாம் ஸத்தை பெற்றுதாகக் கூறியுள்ளது இதில் ஆளவந்தாருடைய இரண்டு திருவடிகள் மட்டுமன்று இங்குவிவக்ஷிதம். மொத்தம் பதினான்கு திருவடிகள் இங்கு உத்தேசயமாகத் தெரிவிக்கப்படுகிறது. எங்ஙனே யென்னில்: ஆளவந்தாருடைய இரண்டு திருவடிகள் தெரிந்ததே.சிஷ்யர்களைத் திருவடியென்றே வழங்குவது ஸம்பிரதாயமாகையாலே, பஞ்சாசார்ய பதாசரிதரான ஸ்வாமிக்கு ஆசார்யார்கள் ஐவரும் ஆளவந்தாருடைய திருவடிகளே யாதலால் இவர்களும் இங்கு விவதர்கள்.இவர்களது திருவடிகள் பத்து, ஆளவந்தார் கொண்டாடின திருவடிகளும் யத்பதாம் போருஹ சப்த சிவதமேயாகக் குறையில்லை.–மாதா பிதா யுவதய * என்கிற சுலோகத்திலே ” ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுலாபிர மம் ஸ்ரீமத் தத் அங்க்ரியுகளம்” என்று போற்றப்பட்ட இரு திருவடிகள் நம்மாழ்வாருடையவை. ஆகப் பதினான்கு திருவடிகளைத் தாம் தியானித்து ஸத்தை பெற்றதாகச்லோகரசநா நைபுண்யம் ஸ்வாமிக்கே அஸாதாரணமானது.

தேவப்பெருமாளுக்கு அருளிச்செயல்பித்தர் என்று ஒரு ய பதேசமுண்டு.
அதனால்தான் திருவரங்கம் பெரிய கோயிலிலிருந்து திருவரங்கப் பெருமாளரையர் இங்கே வந்து தேவப்பெருமாளை அருளிச்செயல்கானத்தினால் மயக்கி வசப்படுத்தி நம் இராமானுசனைத்தந்தருளவேணும்’ என்று வரம்பெற்று எம்பெருமானாரைக் கோயிலுக்கு எழுந்தருளப்பண்ணிக் கொண்டுபோனது, அந்தஸம்பவமில்லையாகில் ஸகல ஆசாரியர்களும்பெருமாள் கோயிலிலன். றோ மண்டிக்கிடப்பர்கள். “ஸ்ரீரங்கச்ரியம் அநுபத்ரவா மநுதிகம் ஸம்வர்த்தய” ”அடியார்கள் வாழ அரங்கநகர் வாழ” என்கிற மங்களா சாஸனங்கள் நமது காஞ்சீபுரிக்கன்றோ பொலிவு பெற்றிருக்கும். தேவப்பெருமாள் எம்பெருமானாரை யிழந்தது அருளிச்செயல்வியாமோஹத்தினால்தான் என்பது ப்ரஸித்தமான விஷயம். அந்த வியாமோஹத்தை இற்றைக்கும் காட்டி வருகிறன் நம் பேரருளாளன்.

அமுதனின் அமுதம்

அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல் இராமாநுசன்.

அரங்கன்செய்ய தாளிணைகள் பேர்வின்றிப் பெறுத்தும் இரர்மாநுசன்

அரங்கன் மலரடிக்கு ஆள் உற்றவரே தனக்கு உற்றவராய்க் கொள்ளும் உத்தமன் இராமாநுசன்.

அருமுனிவர் தொழுந்தவத்தோன் இராமாநுசன்

அருள்சுரந்தெல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும் பொருள் சுரந்த இராமா நுசன்.

அற்புதன் செம்மை இராமாநுசன்.

அறம்சீறும் உறுகலியைத்துரக்கும் பெருமை இராமாதுசன்

அறுசமயச் செடியைத் தொடரும் மருள்செறிந்தோர் சிதைந்தோடவந்து
இப்படியைத்தொடரும் இராமாநுசன்.

இராமாயணமென்னும் பத்திவெள்ளம் குடிகொண்ட கோயில் இராமாநுசன்.

இருள்கொண்ட வெந்துயர்மாற்றித் தன்னீறில் பெரும்புகழே தெருளும் தெருள்தந்த இராமாநுசன்

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கனென்று இவ்வுலகத்து அறஞ்செப்பும்
அண்ணல் இராமாநுசன்

இன்புற்ற சீலத்து இராமாநுசன்.

ஈட்டிய சீலத்து இராமா நுசன்.

ஈன்கவிகளன் பால் மயல்கொண்டுவாழ்த்தும் இராமாநுசன்.

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகந்தொறும்புக்குநிற்கும் குணந்திகழ்கொண்டல்
இராமா நுசன்.

உணீர்வின் மிக்கோர் தெரியும் வண்கீர்த்திஇராமாநுசன்.

உண்மைநன் ஞானமுரைத்த இராமாநுசன்.

உயிர்கள் மெய்விட்டு ஆதிப்பரனோடொன்றாமென்று சொல்லுமவ்வல்லலெல்லாம் வாதில்வென்ற இராமாநுசன்.

உலகோர்களெல்லாம் நண்ணருஞானம் தலைக்கொண்டுநாரணற்காமாறுவந்த
அண்ணல் இராமாநுசன்.

ஊழி முதல்வனையே பன்னப்பணித்த இராமாநுசன்

எண்ணருஞ்சீர் நல்லார் பரவும் இராமாநுசன்.

எனக்குற்ற செல்வம் இராமாநுசன்.

ஒள்ளிய நுல் கற்றார் பரவும் இராமாநுசன்.

காசினியோர் இடரின்கண் வீழ்ந்திடத்தானும் அவ்வொண்பொருள்கொண்டு அவர்பின்படருங்குணன் இராமாநுசன்.

கார்கொண்ட வண்மை இராமாநுசன்.

காரேய்கருணை இராமாநுசன்.

கீதையின் செம்மைப்பொருள் தெரியப் பாரினில் சொன்னஇராமாநுசன்.

கீர்த்திப்பயிரெழுந்து விளைந்திடும் சிந்தை இராமாநுசன்.

குறையல் பிரானடிக்கீழ்விள்ளாத அன்பன் இராமாநுசன்.

கொண்டலனையவண்மை ஏரார்குணத்து இராமாநுசன்.

கொல்லிகாவலன் சொல்பதிக்கும் கலைக்கவிபாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமாநுசன்.

கொள்ளக்குறைவற்றிலங்கிக் கொழுந்துவிட்டோங்கிய வள்ளல் இராமாநுசன்.

சடகோபனைச் சிந்தையுள்ளே பெய்தற்கிசையும் பெரியவர் சீரை உயிர்களெல்லாம்
உய்தற்குஉதவும் இராமாநுசன்

சலியாப்பிறவிப் பவம்தரும் தீவினைபாற்றித்தரும் இராமாநுசன்.

சீரரங்கத்து ஐயன் கழற்கணியும் பரன்தாளன்றி ஆதரியாமெய்யன் இராமாநுசன்.

சீலங்கொள்நாதமுனியை நெஞ்சால் வாரிப்பருகும் இராமாநுசன்

செம்மைநூற் புலவர்க்கு எண்ணருங்கீர்த்தி இராமாநுசன்.

செறுகலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்தெடுத்தளித்த அருந்தவன் இராமாநுசன்.

ஞானமென்னும் நிறைவிளக்கேற்றிய பூதத்திருவடித்தாள்கள் நெஞ்சத்து உறையவைத்தாளும் இராமாநுசன்,

தண்டமிழ்செய்தநீலன்தனக்கு உலகில் இனியான் இராமாநுசன்.

தமிழ்த்தலைவன் பொன்னடி போற்றும் இராமாநுசன்,

தவம்தரும் செல்வும்தகவும்தரும் தீதிலிராமாநுசன்.

தன்னை எய்தினர்க்குத் தன்தகவென்னும் சரண்கொடுத்து வானம் கொடுக்கும்

திக்குற்ற கீர்த்தி இராமா நுசன் இராமாநுசன்.

திசையனைத்தும் ஏறும்குணன் இராமாநுசன்.

திருவாய்மொழியின் மணந்தரும் இன்னிசை மன்னும் இடந்தொறும்
புக்குநிற்கும் குணம்திகழ் கொண்டல் இராமாநுசன்.

துயரகற்றி உயக்கொண்டு நல்கும் இராமாநுசன்.

தெரிவுற்ற கீர்த்தி இராமாநுசன்

தென்குருகைப்பிரான் பாட்டென்னும் வேதப்பசுந்தமிழ்தன்னை தன்பத்தியென்னும் வீட்டின்கண்வைத்த இராமாநுசன்.

தென்னத்தியூரர் கழலிணைக்கீழ்பூண்ட அன்பாளன் இராமாநுசன்.

தென்னரங்கன் கழல் சென்னிவைத்துத் தானதில் மன்னும் இராமாநுசன்

தென்னரங்கள் தொண்டர் குலாவும் இராமாநுசன்

நம் தலைமிசையே பொங்கிய கீர்த்திஇராமாநுசன்.

நல்தவர் போற்றும் இராமாநுசன்.

நல்லன்பர் மனத்தகத்தே எப்போதும் வைக்கும் இராமாநுசன்.

நல்வேதியர்கள் தொழுந்திருப்பாதன் இராமாநுசன்.

நினைவார் பிறவியை நீக்கும் பிரான் இராமாநுசன்.

பண்டருமாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாயமதமாய் விண்டிட
மெய்ம்மைகொண்ட நல்வேதக் கொழுந்தண்டமேந்திக் குவலயத்தே மண்டிவந்தேன்ற இராமாநுசன்.

பரந்தாம மென்னும் திவந்தரும் தீதில் இராமாநுன்,

பல்கலையோர் தாம்மன்னவந்தஇராமாநுசன்.

பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன்தாள் பேராதஉள்ளத்து இராமாநுசன்.

பல்லுயிர்க்கும் விண்ணின்தலைநின்று வீடளிப்பான் இராமாநுசன்

பழியைக்கடத்தும் இராமாநுசன்

பாரதப்போர் முடியப் பரிநெடுந்தேர் விடுங்கோனை முழு துணர்ந்த அடியர்க்கு அமுதம் இராமாநுசன்.

பாவு தொல்ர் எதித்தலை நாதன் இராமாநுசன்.

ின்னைதன் காதலன்பாதம் நண்ணாவஞ்சர்க்கரிய இராமாநுசன்

புகழ்ப்பாண்பெருமாள் சரணாம்பதுமத்தாரியல் சென்னி இராமாநுசன்

புண்ணியர்தம் வாக்கில் பிரியா இராமாநுசன்.

புவனமெங்கும் ஆக்கியகீர்த்தி இராமாநுசன்.

புன்மையிலோர் பகரும்பெருமை இராமாநுசன்

பூமன்னுமாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த பாமனது
மாறன் அடிபணிந்துய்ந்த இராமாநுசன்.

பெருவினையைக் கிட்டிக்கிழங்கொடு தன்னருளென்றும் ஒள்வாளுருவி வெட்டிக்களைத்த இராமாநுசன்.

பொய்கைப்பிரான் மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ்தன்னையும் கூட்டி ஒன்றத்திரித்தன்றெரித்த திருவிளக்கைத்
தன் திருவுள்ளத்தே இருந்தும் பரமன் இராமாநுசன்

பொய்தவம்போற்றும் புலைச்சமயங்கள் நிலத்தவியக்
கைத்த மெய்ஞானத்து இராமா நுசன்.

பொய்யைச்சுரக்கும் பொருளைத்துறந்து இந்தப்பூதலத்தே
மெய்யைப் புரக்கும் இராமாநுசன்.

பொருவரும் சீர் ஆரியன் செம்மை இராமாநுசன்.

பொன்னரங்க மென்னில் மயலேபெருகும் இராமாநுசன் .

போற்றரும் சீலத்து இராமாநுசன்

மழிசைக்கிறைவன் இணையடிப்போது அடங்குமிதயத்து இராமாநுசன்

மன்பல்லுயிர்கட்சிறைவன் மாயனெனமொழிந்தஅன்பன் அனகன் இராமாநுசன்.

மாமலரான்புணர்ந்தபொன்மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும் குணந்திகழ்கொண்டல் இராமாநுசன்

மாயவன் தன்னை வணங்கவைத்தகரணம் உமக்கன்றென்று
உயிர்கட்கு அரணமைத்த இராமாநுசன்.

மிக்கநான்மறையின் சுடரொளியால் கலியிருளைத்துறந்த இராமாநுசன்.

யமுனைத்துறைவன் இணையடியாம் கதிபெற்றுடைய இராமா நுசன்.

வலிமிக்கசீயம் இராமாநுசன் கலிமிக்க செந்நெல் கழளிக்
குறையல் கலைப்பெருமான் ஒலிமிக்கப்பாடலை உண்டு உள்ளந் தடித்து அதனால் வலிமிக்கசீயம் இராமாநுசன்.

வாணன் பிழைபொறுத்த தீர்த்தனையேத்தும் இராமாநுசன்.

வாமனன் சீலன் (வாமன துல்ய சீலன்)

வேதத்தின் உச்சிமிக்கசோதியை நாதனென அறியாது உழல்கின்ற தொண்டர்பேதமை தீர்த்த இராமா நுசன்.

வைகுந்தம், வேங்கடம், மாலிருஞ்சோலை தன்னொம்
மாயன் வந்திருப்பிடம் இராமாநுசன்.

காவியத்தையே முந்துறமுன்னம் எடுத்துக்கொள்ளுகிறோம். அதில் முதல் சுலோகம்
“‘வாகர்த்தாவிவ ஸம்ருக்தெள ” என்பது. ‘உபமா காலிதாஸஸ்ய ‘ என்றபடி உவமை
கொடுத்துப் பேசுவதில் நிகரற்றவராகப் புகழ்பெற்ற காலிதாஸ கவிவரர் தமது காவி
யத்தை உவமையிலேயே ஆரம்பம் செய்தார். ‘நித்யயுக்தர்களான பார்வதீ பரமேச்வரர்
களைத் தொழுகின்றேன்’ என்று சொல்ல விரும்பிய கவி அவர்களின் நித்ய யோகத்திற்குநிதர்சனங்காட்டப் புகுந்து “வாகர்த்தாவிவ”என்றிட்டது மிகவும் சுவைக்கத் தக்கது.-‘சொல்லும் பொருளும் சேர்ந்திருப்பது போல என்றதை நாம் ஊன்றி ஆராயவேண்டும். சொல்லும் பொருளும் ஒன்றைவிட்டொன்று பிரியாமலிருப்பன என்பதை நாம் அறியாமலில்லை. அறிந்த விஷயமும் ஒருவர் எடுத்துக் காட்டின பின்பே நமது நெஞ்சில் நன்றாகப் பதிகின்றது. காளிதாஸர் கொடுத்துள்ள அருமையான பல உவமைகளுள் இது மிகச்சிறந்ததென்று அடியேன் இளமையிலேயே கிரஹித்தது.

ஸ்ரீ பாஷ்யத்தில் ஸ்வாமி அதிகமாக உதாஹரிக்கிற வேதாந்த வாக்யங்களுக்கு அடியேன் கணக்கெடுத்து, * ஸர்வம் கல்விதம் ஸத்யம் ஜ்ஞாநம் தத்த்வமஸி ஸதேவ ஸோம்ய* இந்த நான்கு வாக்யங்களே அடிக்கடி உதாஹரிக்கப் படுமவை யென்றும், இவற்றினுள் * ஸதேவ ஸோம்ய* என்பதுதான் மிக அதிகமாக உதாஹரிக்கப் படும தென்றும் ஸுவ்யக்தமாக எடுத்துக் காட்டியுள்ளேன் அடியேனுடைய ஸ்ரீ பாஷ்யப் பதிப்பில் உண்மையில் இந்த வாக்யம் வேதாந்த விசாரத்தில் தலையானதென்பதை வேதாந்திகள் அறிவர்கள். இந்த வாக்யத்தின் உண்மையானவடிவத்தை குருகுல க்கிஷ்டர்கள் மட்டுமே தெரிந்து கொண்டிருப்பர்கள். லோகத்தில் ‘ஸோம்ய ‘ என்கிற பதம் அப்ரஸித்தமாய் ‘ஸௌம்ய’ என்பதே ஸுப்ரஸித்தமாயிருப்பதால் ‘ஸதேவ ஸௌம்ய’ என்றே பண்டித பாமரவிபாகமற வேதாந்த பண்டிதம் மந்யர்கள் சொல்லி வருவது. அழகான அப்பா ! என்று வியாக்கியானமும் பண்ணுவர்கள்.ஸோம்ய! என்பது ஸதேவச்சுருதியில் மட்டுமன்று; மற்றும் பலவற்றிலும் சேர்ந்து வருவது. எங்கும் இவர்களுக்கு மருளே.

பெரிய திருமொழியில் திருநறையூர்ப்பாசுரமொன்றில் (6-7-4.) மென்மலர்மேல் களியாவண்டு கள்ளுண்ணக்காமர்தென்றல் அலர்தூற்ற, நளிர்வாய்முல்லை முறுவலிக்கும் நறையூர்நின்ற நம்பியே* என்றவிடத்துப் பெரியவாச்சான்பிள்ளை நுட்பமாக வருளிச்செய்ததொரு சுவைப்பொருளை அடியேனுடைய திவ்யார்த்ததீ கையில் விவரித் தெழுதியிருக்கின்றேன். மூலத்தில் கள்ளுண்ணஅலர்தூற்ற- முறுவலிக்கும்’ என்றவற்றில் என்ன இருக்கிறதென்று போய்விடாமல்ஆழ்ந்து பார்க்கவேணும். திருநறையூரின் சோலைவளம் சொல்லுகிறதிங்கு. ஒரு பக்கத்தில்வண்டுகள் களித்து மதுபானம் பண்ணுவதும், மற்றொரு பக்கத்தில் தென்றல் காற்று வீசிமலர்களை யுதிர்த்துத் தூற்றுவதும், இன்னொரு பக்கத்தில் முல்லைப்பூக்கள் மலரத்தொடங்குவதுமாயிருக்கின்ற தென்று சோலையின் நிலைமை சொல்லியிருக்கின்றதத்தனை
இங்கே சொற் சேர்க்கைஅமைந்த அழகு அற்புதம். [கள்ளுண்ண- அலர்தூற்ற லௌகிக சந்நிவேசம் உணர்த்தியவாறு-முறுவலிக்கும்.] வண்டு கள்ளுண்டதாம். தென்றல் அலர்தூற்றிற்றம். முல்லை
முறுவலித்ததாம். இதிலிருந்து ஸ்புரிக்கு மதுகேளீர். வண்டு என்று ஒரு ஸ்ரீ வைஷ்ண
வனைச் சொன்னபடியாய் அவன் ஏதோ விதிவசாத் மதுபானம் பண்ணிவிட்டான். அதைக்
கண்ட (தென்றலென்கிற ) ஒருவன் இன்னான் மதுபானம் பண்ணினான்’ என்றுநாட்டிலே அலர்தூற்றப் புறப்பட்டான். இவ்விரண்டையுங்கண்ட (முல்லை யென்கிற )ஒரு ஸாத்விகன் ‘ஏதோ விதிவசத்தால் ஒருவன் மதுபானம் பண்ணிவிட்டால் அதைப்பற்றி இப்படியும் ஒருவன் அலர்தூற்ற வேணுமோ? இவ்விருள் தருமாஞாலத்தில் இதுஸஹஜந்தானே யென்று வாளாவிருக்கலாகாதோ வென்று தனக்குள்ளே சிரிக்கிறானாம்.எப்படிப் பட்டவனுக்கும் தவறுசெய்ய நேர்ந்துவிடுவது இயல்பென்றும், அதைப்பற்றிப்
பழி தூற்ற நருவதும் இயல்பென்றும், இதுவொரு ப்ரமாதமா? இதை ப்ரகடனம் செய்ய
வேணுமாவென்று சில மஹான்கள் நினைப்பது முண்டென்றும் உலகரீதியை யுணர்த்தினபடியாகின்றதென்று பெரியவாச்சான்பிள்ளை ஸூசிப்பித்த விநோதார்த்தம்.

தேசிகன் நிகம்பரிமல்மென்று மிக வீரிவான வியாக்யானம் அருளிச்செய்தாரென்றும்அது லுப்தமாய்விட்டதென்றும் சிலர் சொல்லுகிறார்கள். தேசிகனிடத்தில்ஸ்ரீ வைஷ்ணவர்கள் சென்று எல்லா க்ரந்தங்களுக்கும் அத்யத்புதங்களான வியாக்யானங்களை இயற்றுகின்ற தேவரீர் திவ்யப்ரபந்தங்களுக்கும் ஒரு அத்யத்புதமானவியாக்யானம் இயற்றவேணுமென்று பிரார்த்தித்ததாகவும், அதற்கு தேசிகன் சோழியன் யாவற்றையும் சுவைத்துவிட்டான், நமக்கு சக்கையே காணுமுள்ளது-என்றருளிச்செய்ததாகவும் சிலர் சொல்லுகிறார்கள். இங்கு சோழியனென்பதால் பெரியவாச்சான்பிள்ளையைக் குறிப்பிட்டாரென்று கொள்க.பரமகாருணிகரான பெரியவாச்சான்பிள்ளை நாலாயிர திவ்யப்ரபந்தத்திற்கும் வெகு அழகான மதுரமான கம்பீரமான வியாக்கியானத்தை அருளிச்செய்திருக்கிறபடியினாலே நாம் அதற்கு உரை இயற்றவேண்டிய அவசியமில்லை என்று ஸாதித்தார் என்பதே அவ்வாக்யத்தின் கருத்து.’

திருவாய்மொழியில் நம்மாழ்வார்விடும் தூதுகளிலே மூன்றாந்தூது பொன்னுலகாவீரோ புவனிமுழுதாளீரோ!” என்று தொடங்குவது. அங்குபுள்ளினங்காள்! விளையாட்டியேன் நானிரந்தேன் என்றுள்ளது. இது எவ்வளவு ஆச்சரியமான ஸ்ரீ ஸூக்தி தெரியுமோ ?நானிரந்தேனென்கிற இரப்பு [யாசனை தூது போகைக்கன்று, பொன்னுலகையும் புவனிமுழுவதையும் ஆள்வதற்கு. ஆசார்யனுக்கு உபய விபூதியையுங் கொடுத்தாலும் பர்யாப்தமாகாது என்கிற அர்த்தத்தையன்றோ இங்கு ஆசார்யர்கள் காட்டியருள்வது. இத்தகைதானஆசார்ய ப்ரபாவத்தை வெளியிட வேணுமானால் கசடறக்கற்ற கல்விச்செல்வர்களன்றோ முன்வர வேண்டும். கலையறக்கற்ற மாந்தர் என்று தொண்டரடிப்பொடிகளும் கலையிலங்குமொழியாளர் என்று திருமங்கை மன்னனும் பணித்தபடி ஞானக்கலைகளெல்லாம் நாவினுள்நின்று மலரநின்றமாஞானிகளன்றேஎழுத முற்பட வேண்டும்.

திருவாய்மொழியில் (9-3-11) ஓராயிரமாய்ப் பதிகத்திற்குப் பலச்ருதி பாசுரத்தில் “இவைபத்தினின்பாலர் வைகுந்தமேறுதல் பான்மையே” என்றவிடத்தில் இவைபத்தினின் பாலர் –இப்பதிகத்தோடே ஏதேனுமொருவழியாலே அந்வய முடையவர்கள் என்றுள்ள வியாக்கியானங்களை யநுஸரித்து அடியேன் திவ்யார்த்த தீபிகையில்எழுதியிருக்கிறேன்-“ இப்பாசுரங்களைக்கண்ட பாடமாக்கிச் சொல்லுவதோ, அர்த்தா நுஸந்தானம் பண்ணுவதோ, பிறர் அநுஸந்திக்கக் கேட்டிருப்பதோ, திருவாய்மொழி ஸேவிக்குமிடத்தில் இருந்து உறங்குவதோஇப்படிப்பட்டவற்றில் ஏதேனுமொன்றைச் செய்பவர்களும்..’ என்று -டில்லியில் உயர்ந்தபதவியில்வாழ்ந்தமஹாமேதாவியான ஸர் K.S. கிருஷ்ணன் ஸ்வாமி இதைக்கடாக்ஷித்து அடியேனுக்கு (எழுதினார்)- நான் காஞ்சீபுரத்தில் மணவாளமாமுனிகளின் மஹோத்ஸவம் ஸேவிக்க ஆசையோடுவந்து ஒருவாரம் தங்கியிருந்தபோது அங்கு ஆச்சர்யமாக நடக்கிற திருவாய்மொழி ஸேவையை யனுபவிக்க வேணுமென்றே கோஷ்டியில் தவறாது அந்வயித்து வந்தேன்; ஆனால் அடியேன் பாபப்ராசு யத்தாலே கோஷ்டியில் இருந்தபடியே நித்ரைதான் செய்ய நேர்ந்தது;ஆனாலும் வைகுண்ட ப்ராப்திக்கு ஒருவிதமான கைம்முதலுமில்லாதிருக்கும் அடியேனுக்கு ஒரு கைம்முதல் கிடைத்துவிட்டதென்று இன்று உள்ளம் பூரிக்கிறேன்’ என்றெழுதினார்.

ஆசார்யஹ்ருதயத்தில் “பகலோலக்கமிருந்து கறுப்புடுத்துச் சோதித்துக் காரியம் மந்தரித்துவேட்டையாடி ஆராமங்களிலே விளையாடும் ராஜநீதி ” இத்யாதியான ஆச்சரியமான சூர்ணையில்அரசர்களின் ரீதியையும் எம்பெருமானுடைய ரீதியையும் ஒப்பிட்டு உபபாதித்தருளுகிறார்.அந்த ராஜநீதி [அரசனுடைய ப்ரகாரம்] எம்பெருமானுக்குப்போலே ஆசார்யர்களுக்குமுண்டு.அரசன் துஷ்ட ஸத்வநிரஸநார்த்தமாக வேட்டையாடுவதுபோலே எம்பெருமானும் காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளுமுடன்மடிய வேட்டையாடி வருவானென்கிறபடியேஆச்ரிதவிரோதி நிரஸனமாகிற வேட்டையாடினன். ஆசாரியர்களும்* ப்ரதிவாதிவாரணப்ரகடாடோபவிபாட க்ஷமா என்று ஆளவந்தாரருளிச் செய்தபடியும், தற்கச்சமணரும் சாக்கியப்பேய்களும் தாழ்சடையோன் . சொல்கற்ற சோம்பரும்.. நீசரும்மாண்டனர் என்று அமுதனார்)அருளிச்செய்தபடியும், மாயிமதங்கஜமஸ்தக கோடீபாடநபாடலபாணிதலோ ய:, க்ருத்யடவீகுஹரேஷ ஸமிந்தே ஸ ப்ரதிவாதி பயங்கரஸிம்ஹ: என்று அஸ்மத் குல கூடஸ்தரைநோக்கி தச்சிஷ்யர் பணித்தபடியும் வேட்டையாடுவதையும் மேற்கொண்டேயுள்ளார்கள். நம்மாழ்வார்பொலிக பொலிகவில் இடங்கொள் சமயத்தையெல்லாம் எடுத்துக்களைவனபோலே,தடங்கடல் பள்ளிப்பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்என்று வேட்டையாடுமவர்களுக்கும் பல்லாண்டு பாடியருளினர்.

பெரியவாச்சான்பிள்ளை பெரிய திருமொழி வியாக்கியானத்திலருளிய ஓர் அற்புதமான விஷயம் கேளீர். திருநாங்கூர்த்திருவெள்ளக் குளப்பதிகத்தின் பலச்ருதி பாசுரத்தில் ‘ கலியன் சொன்னமாலை வல்லரென வல்லவர் வானவர்தாமே” என்றுள்ளது வல்லரென வல்லவர் -” இவர்கள் பெரிய திருமொழிப் புலவர்கள் என்று பிறர் கொண்டாடும்படி நன்றாக அதிகரிக்கவல்லவர் “ என்பது இதற்கு அர்த்தம். இங்குப் பெரியவச்சான் பிள்ளை ஸாதிப்பது பாரீர்-[” வல்லரென வித்யாதி.) தங்களுக்குப் போய்த்தில்லையாகிலும் பிறர் போமென்னும் படியாக;வல்லவர்கள்” என்கிறார். அதாவது, ‘வழவழ அத்யாபகர்களென்று சிலருண்டு; அவர்கள் ஸேவா காலத்தில் தனியாக அகப்பட்டுக் கொள்ளமாட்டார்கள்; நிபுணர்கள் நால்வர் ஐவர் இருந்து ஸேவிக்குமிடத்திலே சேர்ந்து கொண்டு அவர்கள் வாயைப் பார்த்துக் கொண்டே கத்துவர்கள் அதைக் காண்பவர்கள் மருமமறியாதே அவர்களையும் மஹா நிபுணர்களாகக் கொண்டாடிவிடுவர்கள். பெரிய வாச்சான் பிள்ளை காலத்திலும் இங்ஙனே சிலரோ பலரோ இருந்தார்கள்போலும். அதனால் “தங்களுக்குப் போய்த்தில்லையாகிலும் பிறர்போமென்னும்படி வல்லவர்கள் “என்றருளிச் செய்தார். தங்களுக்கு நிரூடியில்லாவிட்டாலும் பிறர் கொண்டாடிவிட்டால்போதும் என்று நினைப்பவர்களே உலகில் மலிந்துள்ளார்கள் என்று காட்டவே பெரிய வாச்சான் பிள்ளை அங்ஙனே ஸ்ரீ ஸூக்திவிந்யாஸம் செய்தருளிற்று. மணவாள மாமுனிகள் விம்சதியில் -வருத்த்யா பசுர் நரவபு : என்கிறச்லோகத்திலே “வஞ்சநபரோத்ர யதீந்த்ர ! வர்த்தே.என்று ஸாதித்திருப்பது உண்மையில் தம்மைப்பற்றியன்றே; அஸ்மதாதிகளின் படியை யன்றோ தம்மிடத்தில் ஏறிட்டுக்கொண்டு ஸாதிக்கிறபடி. நைச்சியாநு ஸந்தானமாகப் பலர் பலவாறு பேசியிருந்தாலுங்கூட இங்ஙனே ஸாதித்தவர் மாமுனிகள் தவிர மற்றருமில்லை . பிறருடைய ப்ரசம்ஸைக்குப் பர்யாப்தமான யோக்யதை தம்மிடத்தில் இல்லை யாயிருக்கச் செய்தேயும் பிறர் எல்லை கடந்து புகழும்படி காட்டி வஞ்சிக்க வல்லவர்கள் உலகிலுளரென்று காட்டினபடி.

திருவாய் மொழியில்(3-9) சொன்னால் விரோதப்பதிகத்தின் ஈட்டுப்ரவேசத்திலே விலவறச்சிரிக்கும்படி பணித்திருக்கக் காணாநின்றோம். அவ்விடத்து ஸ்ரீ ஸூக்திகேளீர்-” கவி பாடி ஒரு ப்ரயோஜனம் பெறாதொழிகை யன்றிக்கே கவி பாட்டுண்கிறவனுக்கு இல்லாத நன்மைகளையிட்டு ‘இருமருங்கும் துய்யான்’ என்னுமாபோலேயிறே கவி பாடுவது, அதனால் வருவதென்னென்னில் உத்பத்தியிலே சில குறைகளுண்டாயிருக்குமே இவன் தனக்கு, மறந்தவற்றையிறே இதுகேட்ட நாட்டார் நினைப்பது. ஆக அவனுடைய தோஷங்களை வெளியிட்டு அவ்வழியாலே அவத்யாவஹராய்.” இத்யாதி. நம்பிள்ளை சாஸ்த்ரார்த்தங்களை அத்புதமாக அருளிச் செய்வது போலவே யன்றோ லௌகிகார்த்தங்களையும் அருளிச் செய்வது. மேலே காட்டிய ஸ்ரீ ஸூக்திகளின் பொருளைச் சிறிது விவரிக்கிறேன். ஒரு மஹா ப்ரபு தன்னைக் கொண்டாடிக் கவிபாடும்படி ஒரு கவிக்குக் கட்டளை யிட்டான்; அவனும் ஏதே காசு கிடைக்குமென்று சில கவிகளை யியற்றிக் கொணர்ந்தான். பிரபு நம் பெருமை பலருமறிய ரசுரமாக வேண்டாவோ வென்று பெருந்திரளைக் கூட்டி வாசிக்கச் சொன்னான் கவியை ; அவன் வாசித்துப் போகையில் “இருமருங்கும் துய்யான்” என்று வாசித்து அதை விளக்க வுரை தந்து விவரிக்கிறான்.( இருமருங்கும் துய்யான் உபயஸந்ததியிலும் பரமபாவனன். தாய் பிறந்த வர்க்கத்திலும்.தந்தை வர்க்கத்திலும் ஒருவிதமான அபவாதமுமில்லாமல் பரம பவித்திரமான ஸந்ததி யென்று பொருள் விவரிக்கிறான், இதை வானம் பிளக்கக் கத்துகிறான் கவி. பாட்டுண்கிற பிரபுவுக்கு உபய வர்க்கத்திலும் அபவாதங்கள் மலிந்திருந்ததுண்டு. அது இந்தக் கவிக்குத் தெரியாது ஸர்வ ஸாதாரணமாகக் கொண்டாடுகிற முறையில் கொண்டாடிக் கவியியற்றி விட்டான்.அதை வாசித்து விவரிக்கும்போது பிரபுவுக்கு இருமருங்கிலும் ஏற்கெனவே யிருந்து சிலர்க்குத் தெரிந்தும் மறந்தும் பலர்க்குத் தெரியாமலுமிருந்த அபவாதங்களை ச்ரோதாக்களில் சிலர் ஸ்மரிக்க நேர்ந்தது. தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்குக் காதோடு தெரிவிக்கிற முறையில் ஸதஸ்ஸிலேயே ப்ரஸ்தாவம் வலிதாக விளைந்துவிட்டது. பிரபு இதைத் தெரிந்து கொண்டான். வெட்கம் தாங்க முடியவில்லை. ஏதோ வியாஜங் காட்டி எழுந்து போய்ப் பள்ளியறையில் தாளிட்டுக்கொண்டு கிடந்துறங்கினான். கவி இங்குமங்கும் தேடியலைந்து ஏமாற்ற மடைந்தோமே யென்று வருந்திச் சென்றானாம் அந்யதீயாந்குணாந் அந்யதரத்வஸ்தோதிரோப்ய பணிதி : என்று ஆழ்வானும், அந்யத்ர அதக்குணேக்தி* என்று பட்டரும் ஸாதித்துள்ளபடி ஏறிட்டுப் புகழ்வதென்பது பல படியாலும் பொல்லாங்கே யாகும்; ஆனாலும் பிறர் சிலாகித்துச் சொல்லு மவற்றாலும் எழுதுமவற்றாலும் உள்ளங்கனிந்து போவது உலக வியல்பு.

ிவ்யப்ரபந்த பரீக்ஷ-மூவெழுத்துப் பரீக்ஷையென்பது இதிலுமுண்டு(கநீபோ) என்றால் உடனே (ஆநிரைமேய்க்கநீபோதி) என்னவேணும் நடந்த தொன்றைக் கேளுங்கள்.(மானது ) என மூவெழுத்தைச் சொல்லி எங்கிருக்கிறதென்று கேட்டார்.-(அபிமானதுங்கன் செல்வனைப்போல-(மானப) என்றால் (அபிமானபங்கமாய் வந்து) என்கிற திருப்பாவையை உடனே சொல்லவேணும்.-இத்தகைய சப்த பரீக்ஷையிருக்கட்டும், அர்த்தாநுஸந்தானத்தில் மிகமிக உட்புகுந்த பரீக்ஷைகள் ஆச்சரியமானவையுண்டு.ஆழ்வார்களில் பெரியாழ்
ரெரொருவரே கையாண்ட பதம் எது? என்று கேட்டவுடனே கும்மாயம்
என்பது
பெரியாழ்வாரும் ஆண்டாளுமே கையாண்டபதம் எதுசொல்லு? என்று கேட்டால் குப்பாயம், பாணித்தல் என்பது. பெரியாழ்வாரொருவரே பேசின கதைஎது? என்று கேட்டால். *சீமாலிகனவனோடு * மல்லிகை மாமாலை கொண்டுள்*ஆமையாய்க் கங்கையாய்மன்னர் மறுகள் மருமகன் தன் சந்ததியை என்பது.இத்தகைய பரீக்ஷைகள் ஒன்றிரண்டு வகையல்ல; நூறு வகைகளுண்டு.

      —————–

      ஸ்ரீ ராமாநுஜன் – 217-பராபவ தைமீத்திற்காக ஸஞ்சிகை 1-10-12-1966-ல் வெளியிடப்பட்டது.-ஸ்ரீ ராமாநுஜனுக்குப் பத்தொன்பதாம்பிராயப் பிறப்பு.

      “கெருடாழ்வான் தனது மூக்கில் ஒரு வடவிருக்ஷத்தின் முறிந்த கிளையைக் கெள்விக்கொண்டும்.வலது திருக்கையில் ஒரு யானையையும் இடது இருக்கையில் ஒரு கூர்மத்தையும் தூக்கிக்கொண்டு செல்லுகிறபடி: முறிந்த கிளையில் நான்கு ரிஷிகள் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள்; கீழே ஜலாசயமொன்றிருக்கிறது. பக்கத்தில் ஒரு வடவிருக்ஷம்நிற்கிறது. இவ்விதமாகக் கல்லில் செதுக்கியுள்ள பிம்பம் திருக்குறுங்குடியில் இருப்பதாகக் குறிப்பிட்டு-கருடபஞ்சாசத்தில் பதினெட்டாவது சுலோகம்
      *ஸாந்த்ரக்ரோதா நுபந்தாத் இத்யாதியை யெடுத்துக்காட்டி
      -“ஸ்ந்தேஹ ப்ரகாசக
      ஸ்வாமி குறித்தவையெல்லாம் இதில் வருகின்றன; தடாகம், வ்ருக்ஷம், கூர்மம், யானை
      ஆகிய இவற்றின் நிர்தேசமுள்ளது.
      தலைகீழாகத்தொங்கும் ரிஷிகளைப்பற்றி இந்த
      ஈலோகில் இல்லை–மஹாபாரதம் ஆதிபர்வாவில் கருடஜனனம் விஸ்தாரமாகக் கூறப்படுமிடத்தில் 29, 30 அத்யாயங்களையும், ஸ்ரீ ராமாயணம் ஆரண்யகாண்டம் முப்பத்தைந்தாவது ஸர்க்கத்தையும் விவரித்துக் காட்டியுள்ளார்கள்-கருத்மான் தனது பிதாவான கச்யபரால் காட்டப்பட்ட ஏரியில் ஒரு யானையையும் ஆமையையும் தனக்கு ஆஹாரமாகக் கொள்ள அவைகளைத் தூக்கிக்கொண்டு (ரௌஹிண மென்னும்) ஒரு ஆலமரத்தின் கிளையிலுட்கார, அது முறிந்துவிழ, கிளையில் தொங்கிக்
      கொண்டிருந்த வாலகில்யர்களென்னும் மஹர்ஷிகளைக் காப்பாற்றுவதற்காகக் கிளையோடு பறந்தான்–
      என்கிற விருத்தாந்தத்தை (மேலே நிர்திஷ்டரான) ஜயதேவசர்மா விளக்கியுள்ளார்.

      பாஷ்யகாரருடைய சிஷ்ய ஸம்ப்ரதாயங்களில் ஒன்றிலும் அர்த்த விரோதமில்லை, வாக்ய யோஜநாபேதமேயுள்ளது: தேசகாலாவஸ்தா விசேஷங்களாலே வரும் அநுஷ்டாந வைஷம்யம் சாஸ்த்ராநுமதம்.”-ஸம்ப்ர தாயபரிசுத்தி-நன்னடுவேயுள்ள ஸ்ரீஸுக்தி-தேசிகரஹஸ்யங்களில் ரஹஸ்யமாத்ருகயென்பது ஒரு சிறு ரஹஸ்யம், அதன் முடிவில் ஸ்வாமியின் ச்லோகம்- “ரஹஸ்யமாத்ருகா ஸேயம் வேங்கடேச விபச்சிதா, விசுத்த தேசிகவதா ரங்கதாம் வ்யலிக்க்யத.‘என்றுள்ளது. இங்கே ஸ்வாமி தமக்கு “விசுத்த தேசிகவதா” என்கிற விசேஷணம் எதற்காக இட்டுக்கொள்ளவேணும். மத்யமதீபயாயோ (அதவா) ப்ராஸாத தீபந்யா யேந முன்னும் பின்னும் அவயிப்பதற்காக ரங்கதாம்நி என்பதை இடையிலேயிட்டு, “விசுத்த தேசிகவதா வ்யலிக்க்யத” என்றருளிச்செய்திருக்கையாலே, ரங்கதாம்நி விசுத்ததேசிகவதா- ஸ்ரீரங்கத்திற்கெழுந்தருளி அங்கே விசுத்த ஸம்ப்ரதாய நிஷ்டரான ஆசாரியரை அடிபணியப்பெற்றவராலே, ரங்கதாம் வ்யலிக்க்யத- (இந்த ரஹஸ்யம்)-ஸ்ரீரங்கத்திலும் காஞ்சியிலும் திருவஹீந்திரபுரத்திலும் மற்றும் பலவிடங்களிலும் எழுந்தருளியிருந்து கொண்டு பல பல நூல்களை யருளிச் செய்திருக்கிறார். இன்னவூரிலிருந்துகொண்டு இன்னநூலை யெழுதினேனென்று ஒன்றிலுமருளிச் செய்திருக்கவில்லை. ப்ரக்ருத ரஹஸ்யக்ரந்தம்மிகச்சிறிது; இரண்டு பக்கமேயுள்ளது. இந்தச் சிறுநூலுக்கு முன்னும்பின்னும் பலபெரிய நூல்களிருக்கின்றன அவையெல்லாம் எவ்விடத்திலிருந்துகொண்டு எழுதப்பட்டனவோ அவ்விடத்திலிருந்து கொண்டே இச்சிறுநூலும் எழுதப்பட்டதென்பதில் யார்க்கும் ஸந்தேஹமோ விவாதமோ இராது,

      ஸ்வா மி நிகமாந்தமஹாகுரு திருவரங்கம் பெரிய கோயிலில், அக்காலத்தில் ஆசார்ய பதவியில் அமர்ந்து நல்லடிக்காலமென்னும்படி வாழ்ந்துகொண்டிருந்த நல்லாசிரியர்களின் திருவடிநிழலில் ஒதுங்கி வர்த்திக்கவேணுமென்கிற மநோரதத்துடனே அங்கேற எழுந்தருள, அப்போது அங்கு நிலைகுலைந்திருந்ததனால் வானியாற்றின் கரைக்கு எழுந்தருளி ஸ்ரீரங்கஸ்ரீ அநுபத்ரவமாக வேணுமென்று அருளிச்செய்த அபீதிஸ்தவத்கில் *நிரஸ்தரிபுஸம்பவே க்வசந ரங்கமுக்க்யே விபோ! பரஸ்பரஹிதைக்ஷிணாம் பரிஸரேஷு மாம் வர்த்த என்று, [ கோயிலில் விரோதி வர்க்க க்ஷயமுண்டாகி, பரஸ்ரஹிதைஷிகளான மஹான்களின் நிழலிலே வாழ வைத்தருளவேணுமென்னை] என்றுபிரார்த்தித்துக் கொண்டிருக்க, அந்த ப்ரார்த்தனை நிறைவேறி ஸ்ரீரங்கம் நிஷ்கண்டகமாகி அங்கேறவந்து சேர்ந்து, ஏற்கெனவே மநோரதித்திருந்தபடியே மஹான்களின் திருவடிநிழலிலே யொதுங்கி வாழ்ந்தார்.-அங்கேஸ்வாமி தாம் அருளிச்செய்த பகவத்த்யாரு ஸோபானத்தின் முடிவிலே-“ரங்காஸ்தாநே ரஸிகமஹிதே ரஞ்ஜிதாசேஷசித்தே வித்வத்ஸேவாவிமலமாஸா வேங்கடேசேந”–“ஸ்ரீரங்கத்தில் வித்வான்களை யடிபணிந்து மனத்தூய்மைபெற்றே”னென்று அருளிச்செய்கிறார்.-ஸ்வாமி தம்முடைய பல க்ரந்தங்களில் பலபல அர்த்தங்களைப் பெரிய வாச்சான் பிள்ளையின் ஸ்ரீஸுக்திகளைத் தழுவியே யன்றோ அருளிச் செய்திருக்கிறார்.

      ஜ்ஞா வைராக்யராசயே* என்றவிடத்தில் வாரிராசி:, ஜலராசி: இத்யாதி ஸ்தலங்களிற் போல ஜ்ஞாநவைராக்யங்களுக்கு ராசியாயிருப்பவர் என்கிற பொருளே எல்லார்க்கும் தோன்றக்கூடியது. இது ஸங்கதமான பொருளேயன்றி அஸங்கதமான பொருளன்று,இவ்வகைப் பொருளை முந்துறப் பணித்தார் தேசிகன்; இங்கே பெரியவாச்சான்பிள்ளை பஹுவ்ரீஹியை விவக்ஷித்து, ராசியென்பதற்கு ஸமூஹப் பொருளைக் கொண்டு ஜ்ஞாந ஸமூஹங்களையும் வைராக்ய ஸமூஹங்களை யுமுடையவர் என்றுரைத்து, ஜ்ஞாநமும் வைராக்யமும் ஒன்றாயிருக்க ராசியென்னலாமோவென்று சங்கித்துக்கொண்டு ‘பகவத்ஸ்வரூபாதிகள் ஜ்ஞான விஷயங்களாகையாலே பல; த்யாஜ்ய விஷயங்களும் பல வாகையாலே வைராக்யங்களும் பலவென்று சொல்லலாம்’ என்று அருளிச் செய்திருக்கிறார்.தேசிகன் பாஷ்யத்தில் இதை அப்படியே மொழி பெயர்த்திருக்கிறார். மேலே அகாத பகவத் பக்திஸிந்தவே என்றவிடத்திலும் பக்திக்குக் கடலாயிருப்பவர் என்று பொருள் கொள்ளாமல், காதல் கடல் புரைய விளைவித்த காதல் கடலின் மிகப்பெரிதால் இத்யாதி திவ்ய ஸூக்திகளுக்குச் சேர பக்தியைக் கடலாக ரூபித்து அகாதமான பகவத் பக்தி ஸிந்துவை யுடையவர் என்று உரைத்தார் பெரியவாச்சான் பிள்ளை; தேசிகன் அதைத் தழுவி “பக்திம் வா ஸிந்துத்வோ ரூபயித்வா பஹுவ்ரீஹி: என்று பணித்தார்.

      ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே “என்றவிடத்தில் லோகே என்பதற்கு (ஸம்ஸாரி ஜநே) என்று முதலில் ஸாமா யமாகப் பொருள் பணித்த தேசிகன் (லோகே -சாஸ்திரத்தில்) என்றுள்ள பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தை ஸேவித்து அப்படியே யருளிச்செய்தார். வசி வதாந்யோகுணவாந் என்ற ச்லோகத்தில் அநுபவிக்கப்பட்ட பன்னிரண்டு திருக்குணங்களையும் விவரித்தருளாநின்ற தேசிகன் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தையே ப்ராயேண மொழிபெயர்த்திருக்கின்றார்.

      “(ஸமர்த்தம்] அளவுடையரான நித்யஸூரிகள் அனுபவிக்கும் தன்னை நித்ய ஸம்ஸாரிகள் அநுபவிக்குமிடத்தில் ஆற்றநல்ல வகை காட்டுமம்மானை என்கிறபடியே ஸாத்மிக்கஸாத்மிக்க அனுபவிப்பிக்கும் ஸாமர்த்த் யத்தையுடைய” என்றருளிச் செய்தார். உண்மையில் எம்பெருமானுக்கு இதுதான் அற்புதமான ஸாமர்த்தியம். இப்பங்க்கிகளை ஸேவித்த தேசிகள் இவ்வர்த்தத்தை மிகவும் ரஸித்து இதை அப்படியே மொழி பெயர்த்தவர் போல “ஆச்ரிதாநாம் ஸாத்யபோக ப்ரதா ே என்று அருளிச்செய்தார். ஸாத்ம்ய என்கிற ஸம்ஸ்க்ருதபதம் சிறிது அபூர்வ மானது சரகஸுச்ருதாதிகளிலேகையாண்டது. நம் ஆசார்யர்களின் திவ்யக்ரந்தங்களில் தான் இந்த பதம் விசேஷமாகக் காணப்படும். திருவாய்மொழியில் (1-9.) இவையு மவையுமுவையும் என்கிற பதிகத்தில் எம்பெருமான் ஆழ்வார்க்கு ஸ்வாநுபவத்தை ஸாத்மிக்க ஸாத்மிக்கக் கொடுத்தருளினதாகப் பெரீயவாச்சான்பிள்ளை அவதாரிகை யிட்டருளினர்; அதை யநுஸரித்து தேசிகன் த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்காவலியில்-“விபுமநுபுபுஜே ஸாத்ம்ய போகப்ரதாநாத்” என்றருளிச் செய்தார். அந்த ப்ரயோகத்தையே இங்கும் செய்தருளியுள்ளார்.

      கரியமேனிமிசை வெளிய று சிறிதேயிடும், பெரிய கோலத் தடங்கண்ணன் (4-5-6)* என்ற
      திருவாய்மொழிப் பாசுரத்தைப்பற்றி அர்த்தவிசாரம் செய்யப்புகுந்து “சக்ஷஷி
      தத்தாரணம் தத்ர விஹிதமிதி அஞ்ஜநபரத்வமாஹுராசார்யா:
      ” என்று எழுதியுள்ளார்
      தேசிகன். இங்கு ஆசார்யா: என்கிற சொல்லால் பெரியவாச்சான்பின்ளையையே விவக்ஷிக்
      கிறாரென்பது அசைக்க முடியாதது. ஏன்? மேலேகுறித்த பாசுரத்திற்குப் பிள்ளானுடைய
      ஆறாயிரப்படி வியாக்கியானம்:- நீலமேக நிபதிவ்ய ரூபோசித திவ்யாங்கராகத்தாலே
      அநுலிப்தனாய், அதிவிசாலமாயதிரமணீயமா யிருப்பதொரு தாமரைத் தடாகம்போலே
      யிருந்த திருக்கண்களையுடையனாய்”
      என்பது. இதனால், வெளியநிறு என்பதற்கு
      திவ்யாங்கராகமென்னும் பொருள் கொள்ளப் பட்டதென்பதும், ‘கரியமேனிமிசை வெளிய
      நீறு சிறிதேயிடும்’ என்கிற முதலடியானது எம்பெருமானுக்கு விசேஷணமாகக்
      கொள்ளப்பட்டதென்பதும் நன்கு விளங்கிற்று.
      பெரியவாச்சான்பிள்ளையினுடைய
      வியாக்கியானத்தில் அருளிச்செய்திருக்கும் விதமாவது பிள்ளானருளிச்செய்த விதத்திற்
      காட்டில் மிக வேறுபட்டது. ‘வெளிய நீறு’ என்பதற்கு அஞ்ஜா சூர்ணமென்று
      பொருள் கொள்ளப்பட்டது, [வெளியம் – அஞ்ஜனம்.] “கரியமேனிமிசை வெளியநீறு
      சிறிதேயிடும்’ என்கிற முதலடி எம்பெருமானுக்கு விசேஷணமாகக் கொள்ளப்படாமல்
      ‘பெரியகோலத் தடங்கண்ணன்’ என்றதன் ஏகதேசமான திருக்கண்களுக்கு விசேஷண
      மாகக் கொள்ளப்பட்டது. ‘திருக்கண்களின் கரிய விழியினுடைய கறுத்த நிறத்தின்
      மேலே அஞ்ஜாசூர்ணத்தை யிடப்பெற்ற திருக்கண்களையுடையவன்’ என்னும் தாத்பரியம்
      பெரியவாச்சான்பின்ளை முதலானாருடைய வியாக்கியானங்களில் மாத்திரம் காண்கிறது
      .

      நப்பின்னையை ‘அறுபதமுரலும் கூந்தல்‘ என்ற சொல்தொட்ரால் திருமங்கையாழ்
      வார் குறித்தனர். அப்பிராட்டியையே நம்மாழ்வார் வம்பவிழ் கோதை’ என்ற சொல் தொட
      ரால் குறிக்கின்றனர்.-அங்கு எப்படி அன்மொழித் தொகையோ இங்கும் அப்படியே அன்
      மொழித்தொகை தான் [பஹுவ்ரீஹி ஸமாஸமே]-வட மொழியில் மொழிபெயர்க்க வேணுமானால் எங்ஙனேயாக வேணுமென்பதை விவேகிகள் விமர்சிப்பது, கருத்துவகையில் நீளார்த்தம் என்றும், சொல்வடிவத்தின்மேல் ‘ஸுரபிமால்யாலங்க் கலலநார்த்தம்’ என்றும் மொழிபெயர்க்கலாமே யல்லதுவேறுவிதமாக மொழிபெயர்க்கத் தகுதியில்லை. தேசிகர் கோதார்த்தமென்று மொழிபெயர்த்திருப்பதாக த்ரமிடோப நிஷத் தாத்பர்யாவளியில் பாடம் காண்கிறது.-தேசிகருடைய ஞானத்திற்குக் குறை கூற
      வொண்ணாது; இங்குப் பாடப்பிறழ்வு நேர்ந்திருப்பதாகக்கொள்வது தவிர வேறுபுகலில்லை.
      -திருநாட்டிலிருந்து சிலவித்வான்கள் திரும்பி வந்தாலும் கோதார்த்த மென்பதை ஸமர்த்திக்க ஒருபடியாலும் முடியாதென்பது திண்ணம். சேவடி மேலணி செம்பொற்றுழாயென்றே கூவுமால் கோள்வினையாட்டியேன் கோதையே என்றும், கோலந்திகழ் கோதையென் கூந்த லுக்கே என்றுமுள்ள திருவாய்மொழிப் பாசுரங்களைக்கொண்டு, தமிழறிவற்ற சிலர், நம்மாழ்வார்க்கும் கோதை யென்கிற திருநாமமுண்டு காணும் என்று சொல்வதுண்டு: அது போலநப்பின்னைக்கும் கோதை யென்றும், கோதா என்றும் திருநாம முண்டென்று சில பாரரர்களின் செவியிலே ஏகாந்தமாகப் பேசிக்கொண்டுபோது போக்கலாமத்தனை யன்றிவேறொன்றும்
      செய்யலாகாது. யாதவாப்யுதயத்தில் நீலா என்றே ஸ்வாமியாதித்தது.

      ஆச்வாஸ்ய வாக் அம்ருதவ்ருஷ்டிபி: ஆதிதேயாந்
      தைதேய பார நமிதாம் ப்ருதிவீஞ்ச தேவீம்
      ப்ராதுர்புபூஷுர் அநகோ வஸுதேவ பத்ந்யாம்
      பத்மாபதி: ப்ரணிததே ஸமயம் தயாயா:-ஸ்ரீ யாதவாப்யுதயம்–முதல் சர்க்கம்-99-

      இவ்வாறு தேவர் குழாம்களைத் தனது அமுதம் பொழியும் வாக்குகளால் ஸமாதானப்படுத்தி,
      அஸுரர்களின் பாரத்தினால் கூனியிருக்கும் பூமாதேவியையும் ஆச்வாஸப்படுத்திவஸுதேவ பத்னியிடம் பிறக்கத் திருவுள்ளம் கொண்டு ச்ரியப்பதியான எம்பெருமான் தயையின் சங்கேதத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.-(ஆவிர்புபூ 🙂 என்றவுடனே(அநக:) என்றொரு விசேஷணமுள்ளது. தோஷமற்றவன் என்பது இதன் பொருள், அகிலஹேயப்ரத்ய கனென்றபடி.. எம்பெருமானுக்கு தோஷமில்லாமையை அந்தந்த பிரகரணங்களுக்குத்தக்கபடி உபபாதிக்க வேண்டும். ப்ரக்ருதத்தில். ஆவிர்புபூஷு:- அவதரிக்கத் திருவுள்ளம் பற்றினான் என்று சொல்லி, உடனே அநக:-அவத்யமில்லாதவன் என்றமையால், அஸ்மதாதிகளின் பிறப்புக்கு நல்வினை தீவினைகளாகிற கருமங்காரணமாகிறாப் போலே பகவானுடைய அவதாரத்திற்கும் கருமம் காரணமாகிறதோவென்று சங்கிக்க நேருமன்றோ.அவ்விதமான பிறப்பாகில் அது அவத்யமேயாகுமன்றோ. பகவான் கருமம் காரணமாக வன்றிக்கே கேவலம் கருணையே காரணமாக அவதரிக்கின்றானாகையாலே அத்தகைய அவத்யத்திற்கு அவகாசமில்லையென்பது இங்கு விவதம், அலங்கார சாஸ்த்ரத்தில் பரிகர மென்று ஓர் அலங்காரம் சொல்லிற்று, அலங்கார: பரிகர; ஸாபிப்ராயே விசேஷணே என்று அதன் லக்ஷணமும் சொல்லிற்று. ஒருகருத்தோடு விசேஷணமிட்டால் அங்கு பரிகராலங்கார மென்றபடி. இவ்வலங்காரமே ஆசிரியரால் இங்கு உத்தேசிக்கப்பட்டது அதை ஆசிரியர் தாமே நான்காவது பாதத்தினால் (*பத்மாபதி: ப்ரணிததே ஸமயம் தயாயா: என்பதனால்) விளக்கியருளினர். ஆக அநக: என்பதற்கு கர்ம வச்பனாகிப் பிறவாதவனாகையாலே கர்மவச்யத்வமாகிற தோஷமில்லாதவன் என்பதேஇங்கு ஆசிரியர் திருவுள்ளம் பற்றின பொருளாகும்.வியாக்கியான கர்த்தாவான அப்பய கர் இங்கு”அருக:-நிரவத்ய; தத்தத் கரீமாதுரோதிதயா வைஷம்யநைர்க்ருண்ய தோஷரஹிக:- என்றெழுதியுள்ளார். அவரவர்கள் செய்யும் புண்யபாபரூப கருமங்களையொட்டிப் பலன் கொடுப்பவனாகையாலே வைஷம்ய னைர்க்ருண்ய
      மாகிற தோஷமில்லாதவன் – என்பது இந்த வாக்கியத்தின் பொருள். -இங்கு ஸ்ருஷ்டிப்ரஸ்தாவமில்லை, அவதாரப்ரஸ்த்ாவமேயுள்ளது, இதற்குச் சேர ‘கர்மவச்யத்வமாகிற தோஷமற்றவன்’ என்னும் பொருளே பொருந்தும். மற்றுமிப்புடை யிலே வேறுவகையான பொருளும் பகரலாமேயல்லது வைஷம்ய நைர்க்ருண்ய தோஷமற்றவன் என்னும் பொருள் ஸர்வாத்மநா இங்கு அப்ரஸக்தம்.

      நந்த3: ச தீவ்ரேண ப4யேந ஸத்4ய: ஸமேத்ய பச்யந் அநக4ம் குமாரம்
      தேநைவ தஸ்ய த்ரிஜகந் நியந்து: ப்ராயுங்க்த ரக்ஷாம் பரமார்த்த2வேதீ3 (
      ஸ்ரீமத் பாகவதம் 10/7/12-17)-4-6-

      நந்தகோபனும் மிக்க பயத்துடன் உடனே வந்து குழந்தை குசலமாய் விபத்தின்றி இருப்பதைக் கண்டு மகிழ்ந்தான்.ஆயினும் இதன் பின் என்ன நேருமோ என்றஞ்சி சாஸ்திரத்தில் நல்ல தெளிவு பெற்றிருப்பதால் காப்பு அனுஷ்டித்தான்.-இங்கு தீக்ஷிதர் வியாக்கியானம் செய்திருப்பதாவது “பகவாநேவ ஸர்வஸ்ய ரக்ஷக இதி பரமம் அர்த்தம் அவகச்சந் நந்த என்பதாக, ‘எம்’பெருமானே ஸர்வர க்ஷகனென்)கிற உண்மையையுணர்ந்தவரான நந்தகோபர்’ என்பது இதன் பொருள். இது ப்ரக்ருதத்திற்குச் சேர்ந்ததன்ற கையாலே விரஸமான பொருளென்ன வேண்டும். இங்குச் சுவைமிக்க பொருள் கேளீர், [பரமார்த்த வேதி ] எம்பெருமான்தானே ஸர்வரக்ஷகனாயிருக்சச் செய்கேயும் தனக்குப் பிறர் செய்யும் ரயிைனால்தான் ரக்ஷணமுண்டாகுமென்று நினைப்பனனென்கிற பரமார்த்தத்தை யுணர்ந்தவர் நந்தகோபர் என்றபடி.-திருவாய்ப்பாடியில் விதிகளிலே ஸ்வைரவிஹாரம் பண்ணித்திரிகிற கண்ணபிரானை நோக்கி யசோதைகூறுகின்றாள்- *காப்பாருமில்லை கடல்வண்ணாவுன்னைத் தனியேபோய் எங்குந்திரிதி என்று. காக்குமியல் வினன் கண்ணபெருமானென்று யசோதை அறிந்திருக்கக்கூடும், ஆயினும் கடல் வண்ணா!-என்னும்படியான வடிவழகைக் கண்டவாறே அவனுடைய ரக்ஷகத்வத்தை மறந்து ரஷ்யனே இவனென்று ப்ரதிபத்திபண்ணியன்றோ ‘காப்பாருமில்லை கடல் வண்ணாவுன்னை‘ என்றாள்.

      விச்வாநி விச்வாதி4க சக்திர் ஏக நாமாநி ரூபாணி ச நிர்மிமாண:
      நாமைக தே3ச க்3ரஹணேபி மாது: ப3பூ4வ க்ருஷ்ணோ ப3ஹுமாந பாத்ரம்-4-16-

      உலகுக்கெல்லாம் மேலான சக்தி யுடையவனாய் ஒருவனாகவே எல்லா உருவங்களையும் பெயர்களையும் உலகில் கொண்டவனான-அப் பெருமான் தாய் யசோதையின் பெயரை முழுமையும் சொல்ல இயலாமல் தடுமாறிய போது-(யசோதா என்னாமல் சோதா என்ற்படி) அதை எல்லாரும் கொண்டாட விளங்கினான்.-ீக்ஷிதர் இங்கு வியாக்கியானிப்பதாவது
      மாது; யசோதாயா: நாமை தேசக்ரஹணேபி அஹோ மாதுர் நாம க்ருஹ்ணாத்தி வாத்ஸல்ய
      வதாம் பந்தூநாம் சீலாகாவிஷய: அபூத் இத்யர்த்த:”
      என்று, இவ் விடத்திற்கு இதுவா பொருள்;;மாதுர் பபூவ க்ருஷ்ணோஸு ப மாநபாத்ரம்’ என்றுள்ள மூலத்தை அந்தோ! ஓடித்திட்டாரே.-மாது: நாமைகதேச க்ரஹணேபி” என்று அஸ்தாநே அந்வயங்காட்டி, சீலோகத்திலில்லாத ‘பந்துநாம்’ என்னுமொருபதத்தை அநாவசீயகமாகக் கொண்டு கூட்டி “வாத்ஸல்யவதாம் பந்தூநாம் சலாகாவிஷயோபூத்” என்று முடித்திருப்பது விர மென்பதை விவேகிகள் உணர்வார்கள்,

      ஆநீதம் அக்3ரே நிஜப3ந்த4நார்த்தம் தா3மாகி2லம் ஸம்ஹிதம் அப்யபூர்ணம்
      நிரீக்ஷ்ய நிர்விண்ணதி4யோ ஜநந்யா: ஸங்கோச சக்த்யா ஸ ப3பூ4வ ப3ந்த்4ய:-4-34-

      தன்னைக் கட்டிப் போடுவதற்கு தன் முன்னிலையில் இணைத்துக் கொண்டு வரப்பட்ட அத்தனைக் கயிறும் தன்னைக் கட்ட போதுமானதாக இல்லாமல் செய்துவிட்டான். அப்போது சோர்வும் நிர்வேதமுமான நிலையினை அடைந்த தன் தாயினைப் பார்த்து தனது குறுக்கிக் கொள்ளும் திறமையினாலே கட்டுப்பட்டவனாக ஆனான்.-வெண்ணெயிலாசையென்பது வியாஜம், கட்டுண்டிருந்து தன்னுடைய அத்யந்தஸௌலப்ய குணத்தைக்காட்டியுகக்க வேணுமென்பது முக்கியமான ஆசை. திருநாட்டில் காட்டமுடியாத இத்தகைய திருக்குணங்களைக் காட்டுதற்கேயன்றோ முக்கியமாக இங்குத் திருவவதரித்தது. ஆக கட்டுண்டுகிடக்கையாகிற பெருங் குணத்தைக் காட்டவேண்டியேகளவு செய்தான். பிறரிடம் கேட்டு வாங்கியுண்டானாகில் கட்டியடிக்க ப்ரஸக்தியில்லையன்றே.-கண்ணனுடைய சிறுச்சேவகங்கள் பலவிதம். சில சமயங்களில் களவு செய்துவிட்டுத் தாய்க்குப்
      பிடி கொடாமலே தாயெடுத்த சிறுகோலுக்கு உளைந்தோடி என்கிறபடியே ஓடிப்போவது
      முண்டு; தாய்கையில் பிடிபட்டும் அவளால் கட்டமுடியாதபடி செய்து கொள்வதுமுண்டு.
      அதற்காகக் கண்ணன் வீட்டிலுள்ள கயிறுகளைத் துண்டு துண்டாக அறுத்து வைத்திட்டுக்
      களவு செய்யப்புகுவான். அப்போது யசோதையின் கைக்கு வேணுமென்றே அகப்படுவான்.
      அவள் இவனை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மற்றொருகையால் கயிறுகளை யெடுக்கப் போவள்;ஆழ்வார்கள் பலரும் *கட்டுண்டிருந்தானென்றும் உரலோடாப்புண்டிருந்தானென்றுமே அருளிச்செய்தார்கள், மதுரகவிகள் ஒருவரே கண்ணிநுண்சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன்என்று, தன்னைத்தானே கட்டுண்டவனம்படி செய்து கொண்டானென் ார். அதையடி.
      யொற்றியாயிற்று ஆசிரியர் இங்ஙனே ச்லோகமிட்டபடி, ‘தம் பந்த’ என்னதே ஸ
      பபூவ பத்ய:’ என்ற சொல்லழகு சாண்க.-யசோதை நீளமாக வைத்திருந்த கயிறு ஸம்ஹிதாவஸ்தை. கண்ணன் அதைத் துண்டு துண்டாக்கினது பதாவஸ்தை. யசோதை அந்தத் துண்டுகளைப் பிணைத்தது க்ரமாவஸ்தை அது பர்யாயேண ஸம்ஹிதாவஸ்தைக்கு வந்துவிடுமன்றோ அப்படி செய்தும் எட்டம் போத வில்லையென்பது [தாமாகிலம் ஸம்ஹிதமபி] என்பதில் உள்ளுறையும் மருமம். க்ரதிதம் என்றோ ப்ரக்ரதிதம் என்றோ கூறாமல் ஸம்ஹித மென்ற ஆசிரியர்க்கு இந்த விவரணமன்றோ பரமபோக்யமாகும். வேதவைதேசிகரென்று ப்ரஸித்தரான தீக்ஷிதர்க்கு இது நிலமன்றே.

      விவித4 முநிகணோபஜீவ்ய தீர்த்தா விக3மித ஸர்ப்பக3ணா பரேண பும்ஸா
      அப4ஜத யமுநா விசுத்4தி3ம் அக்3ர்யாம் சமித ப3ஹிர்மத ஸம்ப்லவா த்ரயீவ-4-126

      பற்பல வகையான முனிவர்களுக்கு உபயோகமுள்ள தீர்த்தத்தை உடையதாய் ஸர்ப்பக் கூட்டங்களே இல்லாமல் பரம்புருஷனால் ஆக்கப்பட்டதாய் இருக்கும் யமுனை வெளி மதங்களின் தொல்லை இல்லாத மறை போல சிறந்த தூய்மையை பெற்றுவிட்டது.-ஆசார்ய ஸார்வபௌமரான ஸ்வாமி ராமாநுஜர் செய்தருளின செயலையே கண்ணபிரான் செய்த செயலுக்கு உவமையாகக் காட்டியருளினர். எங்ஙனே யென்னில், ஐந்தலை வாய்நாகமாகிய காளியன் யமுனையாற்றைக் கலக்கிக் கெடுத்ததானது-விஷவாக்குக்களான புறமதத்தவர்கள் மனம் போனபடியெல்லாம் கூறும் தவ ன பொருள்களாலே வேதங்களைக் கெடுத்தபடியாம். அந்தக் கெடுதியைக் கண்ணபிரான் நீக்கி எழுனையை எல்லாரும் இனிமையாகப் பருகும்படி செய்ததானது-ஸ்வாமி ராமாநுஜர், பிறர் கூறின தவன பொருள்களை யகற்றி நல்ல பொருள்களை வெளியீட்டு வேகத்தை ஸத்துக்களுக்கு உபஜீவ்யமாக ஆக்கினபடியாம். யமுனையாற்றின் ஸ்தானத்தில் வேதம் கொள்ளப்பட்டது; காளியன் ஸ்தாநத்தில் குதர்க்கவாதிகள் கொள்ளப்பட்டார்கள்: கண்ணனுடைய ஸ்தானத்தில் ஸ்வாமி யெம்பெருமானார் கொள்ளப்பட்டார்.ஐந்து விகமான துர்வாதங்களாலே பரமார்த்த காசத்தை விளைவிக்கின்றனர், எங்ஙனே யென்னி : (1) ஈச்வரனென்று ஒருவனைக் கொள்வது கூடாது; ஈச்வரனேயில்லை-என்பது ஒரு குத்ஸிதவாதம். (2) ஈச்வரனுளனென்று இசைக் தாலும் அவன் அநுமாநத்தினால் ஸித்திப்பானேயன்றி சாஸ்திரத்தால் எத்திப்பவனல்லன் என்பது மற்றொரு குத்தவாதம், (3) சாஸ்திரங்களைக் கொண்டே ஈச்வரனை அங்கீகரித்தும் அவனுக்குக் குணங்களும் விக்ரஹமும் வீபூதியும் இல்லை யென்பது வேருெரு குத்ஸிதவாதம்.
      (4) ஈச்வரன் ஒருவனே யென்பதில்லை. பல ல ஈச்வரர்களு ரென்று பல தெய்வங்களுக்கு
      ஈச்வரத்வம் காட்டி வாதித்தல் இன்னுமொரு குத்தவாதம். (5) பிரபஞ்சமே கிடையாது, எல்லாம் சூனியம் என்று ஸரீன் சூன்யலாதம் பண்ணுகை ஸர்வோத்துங்கமான குத்தவாதம்.-ஆக இப்படிப்பட்ட ஐவகையான அபார்த்த வாதங்களினால் வேதத்தைக் கெடுத்த குதர்க்க வாதிகள் காளிய ஸ்தானத்திலே கொள்ளப்படுவது பொருந்தும். இக்கெடுதல்களையெல்லாம் நம் ஆசார்ய ஸார்வபௌமரி ஸதர்த்த நிரூபணங்களினாலே போக்கி யருளினர்.-வாய்த்த காளியன்மேல் நடமாடிய கூத்தனார் ஆ என்று சூடிக்கொடுத்த சுடர்க்கொடி பணித்தபடி காளியன் தலையிலே கண்ணபிரான் அடியிட்டு நடனம் புரிந்தாப்போல, ஸ்வாமி யெம்பெருமானாருடைய ஸம்பந்த ஸம்பந்தமுடைய நாம் நாவலிட்டு உழிதருகின்றோம் நமன்தமர் தலைகள் மீதே என்று தொண்டரடிப்பொடி யாழ்வாரருளிச் செய்த கணக்கிலே யமகிங்கரர்களின் தலையிலே அடியிட்டுக் கூத்தாடப் பெறுவோம். “ததயமததுர்மதஜ்வலிதசேசஸாம் வாதிநாம் சீடிஸ்ஸுநிஹிதம் மயா பத மதக்ஷிணம் லக்ஷ்யதாம்” என்ற யதிராஜஸப்ததிஸூக்தியும் காண்க.

      கோதா ஸ்துதியில் சூடிக்கொடுத்த சுடர்க் கொடியின் திருக்குழற் பெருமையைப் பல சுலோகங்களிற் பேசியிருந்த லும் “தாதஸ்து தே மது பித: ஸ்துதிலேசவச்யாத்’ என்கிற பத்தா
      வது சுலோகம் மிகமேம்பட்டது.-தாதஸ்து தே மது பித ஸ்துதி லேச வஸ்யாத் கர்ணாம்ருதை ஸ்துதி சதைர நவாப்த பூர்வம் த்வன் மௌலி கந்த ஸூபகா முபஹருத்ய மாலாம் லேபே மஹத்தர பதாநுகுணம் பிரசாதம் –10–உன்னுடைய தகப்பனாரோ என்னில் -செவிக்கு இனிய பாசுரங்கள் பாடும் படி –அபிமான தாதைகள் எல்லா ஆழ்வார்களும் இவர் மட்டுமே பெரியாழ்வார் -அபிநவ தசாவதாரங்கள் -தமிழ் வேத த்ருஷ்டாக்கள் –மஹா பதம் அனைவருக்கும் இருந்தாலும் -இவருக்கு மஹத்தர பதம்

      இதில் இரண்டாவது பாதத்தை “கர்ணாம்ருதை: ஸ்துதிசதை:’ என்று வ்யஸ்தமாக ஓதிவருகிறர்கள். இது புராதன பாடமன்று, –கர்ணாம்ருதைஸ்துதிசதை::” என்று ஸமஸ்தமாகவே ஆசிரியர் பணித்தது. அது பஹுவ்ரீஹிகரீப்பமான பதமென்பதை யுணராமல் இங்கு கர்மதாரய ஸமாஸமென்றெண்ணி ஸமஸ்தமாயிருப்பதிற்காட்டிலும் வ்யஸ்தமாயிருப்பகே யுக்கதரமென்றெண்ணி“கர்ணாம்ருதை: ஸ்துதிசதை:” என்று திருத்தி விட்டார்கள்.-“கர்ணாம்ருதாநி ஸ்துதிசதாநி யேஷாம் தே-கர்ணாருதஸ்துதிசதா:, தை: என்று விக்ரஹமாகக்கடவது. கர்ணாம்ருதமான ஸ்துதி சதங்களைப் பாடின மற்றை யாழ்வார்களாலும்-[நம்மாழ்வாராலுங்கூட] அடையப்படாததான அநுக்ரஹத்தை இவ்வாழ்வார் பெற்றார் என்பது இங்கு விவக்ஷிதம், இன்கவிபாடும் பரமகவிகளென்று சிறப்பித்துக் கூறப்பட்ட முதலாழ்வார் களுக்கும் பாலேய்தமிழரிசைகாரர் பத்தர்பரவுமாயிரம் தொண்டர்க் கமுதுண்ணச் சொன் மாலைகள் சொன்னேன் என்றும் சொல்லுகிறபடியே கர்ணாம்ருதஸ்துதி தெதிகளைப்பாடின நம் மாழ்வார்க்கும், மற்றும் இத்தகையரான திருமழிசைப்பிரானுக்கும் குலசேகரப் பெருமாளுக்கும் கிடைக்காததான அநுக்ரஹத்தை ஆண்டாள் குடிக்களைந்தமாலையை யுபஹரித்தது காரணமாக இவ்வாழ்வார் பெற்றார் என்பதுதான் இன்சுவைமிக்க பொருள்.-்வ்யஸ்தமான பாடத்தில் பிரபலமான வொரு அநுபபத்தியுமுண்டு; பெரியாழ்வார் தம்முடைய திவ்யஸூக்திகளை யெல்லாமருளிச் செய்தபிறகே ஆண்டாள் குடிக்களைந்த மாலையை வடபெருங்கோயிலுடையானுக்கு ஸமர்ப் பித்ததாக வ்யஸ்தபாடத்தில் ஏற்படும். அது அஸங்கதம், பெரியாழ்வார் திருமொழியில் (2-2-6) பின்னனைய நுண்ணிடையார் விரிகுழல்மேல் நுழைந்தவண்டு, இன்னிசைக்கும் வில்லிபுத்தூரினிதமர்ந்தாய்! என்கிற பாசுரத்தில் ஸ்சிதமான இதிஹாஸம் முற்பட்டதே யொழியப் பிற்பட்டதன்று; பிற்பட்டிருந்தாலொழிய வ்யஸ்தமானபாடம் பொருந்தாது.

      ஸுபாஷிதநீவியில் இன்சுவைமிக்க பொருளொன்று.. “ஏகயைவ குரோர் த்ருஷ்ட்யா த்வாயாம் வாபி லபேத யத். ந தத் திஸ்ருபிரஷ்டாபிஸ் ஸஹஸ்ரேணாபி கஸ்யசித்.”-என்கிற இந்த சுலோகம் ஆசார்ய கடாக்ஷத்தினுடைய பெருமேன்மையை விளக்கத் தோன்றியது. ஆசார்யனுடையஉட்கண்ணாகிய ஒரு கண்ணினாலோ, வெளிக்கண்ணாகிய இரண்டு கண்களாலோ அடையக்கூடியபேற்றை மூன்று கண்களாலும் அடைய முடியாது, ;எட்டுக் கண்களாலும் அடைய முடியாது. ஆயிரங் கண்களாலும் அடைய முடியாது. என்பது
      மூலத்தின் பொருள்.-இந்திரன் ஸஹஸ்ராக்ஷனேயாகிலும் இந்த ஸ்தலத்தில். அவனை ஸ்மரிக்க ஒளசித்யமில்லை, ப்ரக்ருதச்லோகத்தில் ஞானவிகாஸத்தைப் பண்ணுகை யென்னும் விஷய மன்றோவிவக்ஷிதமாகவுள்ளது சதுர்முகப்ரஹ்மா ஸரஸ்வதீவல்லபனாய் நால்வேதக்கடலையும் கரைகண்டவனாகையாலே ஜ்ஞானலிகாஸனத்தில் அவனுக்கு ப்ரஸக்தியுண்டு பரமசிவன் ஸர்வஜ்ஞனென்று போபெற்றவைைகயாலும், சசாத் ஜ்ஞானம லிச்சேத் என்று சொல்லப்பட்டிருப்பதனாலும், நம்மாழ்வாரும் திருவாய் மொழியில் நுண்ணுணர்வின் லோர் கண்டத்தம்மான் + என்று ஞாளச்சிறப்பைக் காட்டியருளிச் செய்திருக்கையாலும் அவனுக்கும் ஜ்ஞான விகாஸனத்தில் ப்ரஸக்தியுண்டு. இந்த பத்ததியில் இந்திரன் நினைவுக்கு ரை ப்ர ஸக்தியே கிடையாது.-ஸஹஸ்ரசீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ:என்று புருஷஸூக்கத்திலும்தோள்களாயிரத்தாய் முடிகளாயிரத்தாய் துணைமலர்க் கண்களம்யிரத்தாய்* என்று திருவாய் மொழியிலும் ஆயிரந், திருக் கண்களை யுடையவனாகச் சொல்லப்பட்ட, ஸ்ரீமநாராயணனே இங்குப் பொருளாகத்தகும், ஆசார்ய கடாக்ஷத்தாலே உண்டாகும்பேறு திரிமூர்த்திகளின் கடாக்ஷத்தாறுமுண்டாகாது என்று சொல்லுவதே இங்கு ஆசிரியர்க்கு உத்தேச்யமானது. இதுவே ரஸவ்த்தரம்.

      ஹம்ஸஸந்தேசகாவ்யத்தில் “நித்யாவாஸம் வ்ருஷபமசலம் ஸுந்தராக்க்யஸ்ய விஷ்ணோ……பாதோ திவ்யம் பசுபதிஜடாஸ்பர்சசூர்யம் விபாதி” என்கிற சுலோகத்திற்குத்
      தாத்பர்யமெழுதி வெளியிட்ட தேசிகபக்கம்மங்ய பண்டிதர்கள் திருமாலிருஞ்சோலை மலையில் பெருகும் நூபுரகங்கையானது அழகருடைய திருவடிச் சிலம்புகளிலிருந்து வருகின்ற கங்கை யேயானாலும் பகவானாகிற பசுபதியினுடைய சிரஸ்ஸ்பர்சமாகிற சுத்தியேற்றம் இதற்கில்லை யென்று தேசிகன் நூபுரகங்கையினுடைய நிஹீ தையைப் பேசுகிறார்” என்றெழுதி-அங்குப்பெருகுகிற சிலம்பாறென்கிற நூபுர கங்கையானது ஒன்றான கங்கையிற் காட்டிலும் புனிதமானதென்று கொண்டாடப்படுகிறது. கங்கைக்கு பசுபதிஜடாஸ்பர்ச மாற்ற ஒரு குறையுண்டு; நூபுரகங்கைக்கு அக்குறைதானும் கிடையாதென்று புகழ்ச்சியே இங்குள்ளது.-தேசிகனுடைய தேஹளீசஸ்துதியில் 12, 13ம் லோகங்களை யநுஸந்தித்தால் இப்பொருள் அஸங்கதமென்று எளிதாக
      அறுதியிடலாகும். ஸத்குர்வதாம் தவ பதம் சதுராநத்வம் பாதோதகஞ்ச சிரஸா வஹதாம்
      சிவத்வம் *என்றும், * பாதஸரோஜகஸ் தே மக்காகிநீ விகலிதா மகரந்ததாரா……புண்யா
      பபூவ புரசாஸநமௌலியாலா +
      என்றும் அந்தகரந்தத்திலுள்ளதன்றோ. வரதராஜ பஞ்சாசத் திலும் விமலே யஸ்யபாதோதகேந வித்ருதே சிவா பவந்தி என்று சமகாரமாகவும் அருளிச்
      செய்தார். இவற்றுக்கெல்லாம் சிகரமாக ஸ்தோத்ரபாஷ்யத்தில் கஸ்ய பாதோதகே ஸ
      சிவஸ் ஸ்வசிரோத்ருதே
      என்றவிடத்தில் அபார்த்த நிரஸபூர்கைமாகம் யதார்த்தமான
      பொருள் நிலை நாட்டப்பட்டுள்ளது. அங்கு முடிவான ஸ்ரீஸுக்தி “அத ஏவ ஹரஸ்ய
      காத்ரஸம்ஸ்பர்சாத் பவித்ரத்வமுபாகதா இத்யத்ராபி ஹரஸ்ய சுத்திப்ரரத்வம் உபாகதேதி
      போத்தவ்யம்”
      என்றுள்ளது. இத்தனை ஸ்ரீஸுக்திகளுக்கு விருந்தமாக எழுதியுள்ள பொருள் ஆதரணியமாகுமா?

      இருபத்தேழு நக்ஷத்திரங்களுக்குள் இரண்டு நக்ஷத்திரங்களே சிறந்தவை- திருவாதிரையும் திருவோணமும்.இந்த இரண்டு நக்ஷத்திரங்களுக்குத்தான் (திரு) இயற்கையிலேயே கூடியுள்ளது. திருவோணத்தைப்பற்றி இப்போது சொல்லுகிறோம். ச்ரவணா நக்ஷத்ரம் விஷ்ணுர் தேவதா” என்று வேதமாகை யாலே விஷ்ணு நக்ஷத்ரமென்பது முதற்பெருமை பொய்கையாழ்வாரஸ் தரித்தநக்ஷத்ரமென்பது இரண்டாவது பெருமை. பிள்ளை லோகாசாரியர் அவதரித்ததென்பது மூன்றாவது பெருமை நிகமாந்தமஹாகுரு அவதரித்ததென்பது நான்காவது பெருமை

      கரதல ஆமல கீக்ருத சத் பதா – சுருதி வதம்சித ஸூ ந்ருத ஸூ க்தய
      திவச தாரக யந்தி சமத்சரான் – யதி புரந்தர சப்ததி சாதரா –இந்த நூலைப் பாராயணம் செய்பவர்களுக்கு அவர்கள் மேற்கொள்ள வேண்டிய மார்க்கமானது உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவாகப் புலப்பட்டு விடும் அவர்களின் சொற்கள் அனைத்தும் வேதங்களின் தலைகளில் வைக்கப்படும்-மேலும் அவர்கள் செய்வது-யதிராஜருடைய சித்தாந்தத்தின் மீது பொறாமை கொண்ட அனைவரையும் பகல் நக்ஷத்ரம் போன்று ஒளி குன்றும்படி செய்வார்கள்-யதிராஜஸப்ததியின் முடிவில் “கரதலாமலகீக்ருத” இத்யாதிச்லோகத்தில் ஸத்கதா என்பது பாடமேயல்லது ஸத்பதா; என்பது பாடமன்று, ஸத்கதையாவது-சிறந்த ஐதிஹ்யங்கள். இந்த ஸப்ததியில் பலச்லோகங்களில் சிறந்த ஐதிஹ்யங்கள் கையிலங்கு நெல்லிக்கனியாம்படி ஸ்வாமி செய்தருளியிருப்பதனால் அதைக்காட்டினபடி. ஸ்த்பதா: என்கிறபாடம் ஒருபடியாலும் சேராது, அடுத்த விசேஷணம் *ச்ருதிவதம்ஸித ந்ருதஸூக்தய: என்பது, இங்கு. ச்ருதியென்பதற்கு வேதமென்கிற பொருள் முக்கியமன்று காது என்கிற பொருளே முக்கியம்,-“யதீபுரந்தரஸப்ததிஸாதரா:” என்பது விசேஷ்யபதமாதலால் இந்த ஸப்ததியை ஆதரித்து ஓ துமவர்கள் நல்ல ஐதியங்களைக் கரதலாமலகமாகக் காண்பார்கள்; இதிலிருந்து பல மெய்யுரைகளைப் பெரியார் எடுத்துக்கூற காதுகுளிரக் கேட்பார்கள் என்றபடி, ஸ்வபலாத் உத்த்ருதயாதவப்ரகாச * என்பதிலே ஸ்வாமி யெம்பெருமானார் யாதவப்ரகாசரை உஜ்ஜீவிப்பித்த ஐதிஹ்யம் ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. வந்தே தம் யமிநாம் துரந்தரமஹம் என்றச்லோகத்தில் தத்தம் யோ தயாஸுதாம்புநிதிநா பீத்வா விசுத்தம் பய: காலே ந: கரிசைலக்ருஷ்ணஜலத: காங்க்ஷா திகம் வர்ஷதி* என்றதில் எம்பெருமானார் சாலக் கிணற்றினின்று நித்யம் திருமஞ்சனம் கொணர்ந்து ஸமர்ப்பித்துக்கொண்டிருந்த ஐதிஹ்யம் பெரியார் எடுத்துக்கூறக் கேட்கலாகிறது.

      யதா பூத ஸ்வ அர்த்தா யதி ந்ருபதி ஸூக்திர் விஜயதே
      ஸூதா சந்தோஹ அப்தி ஸூ சரித விபக்தி ஸ்ருதிமதாம்
      கதா த்ருப்யத் கௌதஸ்குத கலஹ கோலா ஹல
      ஹத த்ரிவேதீ நிர்வேத ப்ரசமன வி நோத பிரணயிநீ-ராமானுஜரின் படைப்புகள் வெற்றியைக் கூறுகின்றன

      அவை மேற்பரப்பில் தோன்றும் உண்மையான பொருளைக் கொண்டுள்ளன;;இதனால் ஒரு நேர்மை பாதுகாக்கப்படுகிறது;அவை அமிர்தக் கடல் போல் செயல்படுகின்றன;வேதங்கள் செய்த தவத்தின் பலனாக அவை விவரிக்கப்படுகின்றன;தவறாக வழிநடத்தப்பட்ட மத அமைப்புகளின் தொழில் முறை போட்டியாளர்-சர்ச்சை வாதிகளால் ஈடுபடும் செயலற்ற வாதங்களால் கிழித்தெறியப்பட்ட வேதங்களின் துக்கத்தை அவை துடைத்தழிக்கின்றன-வேதங்களின் வருத்தங்களை போக்கி அருளி இன்பம் உண்டாக்குவதில் ஆர்வம் கொண்ட ராமானுஜரின் இந்தப் படைப்புகள் வெற்றி பெறட்டும்!-இதில் “கௌதஸ்குதகலஸ கோலாஹலஹத த்ரிவேதீ நிர்வேதப்ரசமா விநோதப்ரணயி * என்றவிடத்தில் ‘த்ரிவேதீ’ என்பதற்கு ருக்யஜூஸ்ஸாமங்களாகிற மூன்று வேதங்களென்று அர்வாசீநர்கள் கூறும் பொருள் எடுத்துக் கழிக்கவும் தகாதது.உண்மைப்பொருள் கேண்மின், த்ரயாணாம் வேதாதாம் ஸமாஹார:- த்ரிவேதீ என்கிற ஸமாஸத்தில் விப்ரதிபத்தியில்லை. மூன்று வேதங்கள்ளாவன- மூன்று ச்ருதிகள், பேதச்ருதி,அபேதச்ருதி, கடகச்ருதி – என்னுமிவையே அவை க்ஷரம் ப்ரதாநம் அம்ருதாக்ஷரம் ஹர:< *த்வா ஸுபர்ணா இத்தியாதிகள் பேதச்ருதிகளெனப்படும், *ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம்* ஐ தாத்ம்யமிதம் ஸர்வம்- தத் த்வமஸி இத்தியாதிகள் அபேதச்ருதிகளெனப்படும். * யஸ்ய ப்ருதிவீ சரீரம்…… யஸ்யாத்மா சரீரம்” இத்யாதிகள் கடக ச்ருதிகளெனப்படும்.-ஸங்கல்ப ஸூர்யோதயத்தில்(2-94) மிதோ பேதம் தத்வேஷ்வபிலபதி பேதச்ருதி: எ ன் கிற சுலோகத்தினால் ஸ்வாமி தாமே இவ்வர்த்தத்தை விளக்கி யருளினபடியால் *த்ரிவேதி நிர்வேதப்ரசமரம் ஏவம்விதமாகத்தான் ஸ்வாமிக்கு விதமன்பதை நிர்மத்ஸரர்களான ப்ராமாணிகர்கள் இசைந்திடுவர்கள், ரஹஸ்யத்ரயஸார-ப்ரதாநப்ரகிதந்த்ராதிகாரத்தில் “யத்யேதம் யதி ஸார்வபௌமககிதம் ……. . இத்யாதி ச்லோகரத்நமருளிச் செய்த ஸ்வாமி திருவுள்ளத்திற்கு வேறுவகையான அர்த்தம் அபி மதமாவதற்கிடமில்லை.

      லிப்சே லஷ்மண யோகி ந பதயுகம் ரத்த்யா பராக சடா
      ரஷா ஆரோபண தன்ய ஸூரி பரிஷித் சீமந்த சீமா அந்திகம்
      பிஷா பர்யடன ஷணேஷூ பிபராஞ்சக்ரே களத் கில்பிஷா –
      யத் வின்யாச மிஷேண பத்ர மகரீ முத்ராம் சமுத்ர அம்பரா- ச்லோகரத்னம்
      ஸ்வாமிக்குத் திருப்பாவை ஜீயரென்னுக் திருநாமத்தை விவரிக்க அவதரித்தது.-
      ராமானுஜர் சன்யாசியாக வேண்டிய உணவைப் பெறுவதற்காக, ( மது கரம்  ) தனது அன்றாட வழக்கத்தில் நடக்கும்போது , ​​ அவருடைய பாதங்கள் பூமித் தாயின் மீது ஆழமாகவும் தெளிவாகவும் இருக்கும். கடலை ஆடையாகக் கொண்ட பூமி இப்போது தன்னை அதிர்ஷ்டசாலியாகவும் புனிதமாகவும் கருதுகிறது. அவரது திருவடிகளில் உள்ள கொடி மீன் போன்ற சிஹ்னங்கள் மூலம் தூய்மை பெருகிறதே பலரும் இந்த பாத தூளிகளைத் தலையால் தரித்து தங்களுக்கு ரக்ஷையாக எண்ணி மகிழ்கிறார்கள்-நித்ய ஸூரிகள் கூட இதைப் போற்றுவார்கள்,-அவர்களைத் தங்கள் முன் தலையில் தாங்குவார்கள் என்று நான் கூறுவேன்.-அந்த பாதங்களை என் தலையில் சுமக்க ஏங்குகிறேன்.

      நியாஸதிலகத்தில் (ச்லோ. 21ல்) *தேசிகேந்த்ரோ தயாலு:*-என்கிற பாடபரிஷ்காரம்,-*அந்தோநந்தக்ரஹணவசகோ யாதி ரங்கேச யத்வத் பங்குர் நௌகாகுஹர
      நிஹிதோ நீயதே நாவிகோ, புங்க்தே போகாந் அவிதிதந்ருபஸ் ஸேவகஸ்ய அர்ப்பகாதி:
      த்வத்ஸம்ப்ராப்தௌ ப்ரபவதி ததா தேசிகேந்த்ரோ தயாலு:. என்றிருந்தபாடம்
      ‘தேசிகோ மே தயாலு:’ என்று மாறுபட்டுள்ளது. உண்மைப் பாடத்தின் உபபத்தியை
      விவரிக்கக் கேண்மின். இந்த ச்லோகத்திற்கு அடுத்ததான உக்த்யா தநஞ்ஜயவிபீஷண
      இத்யாதி ச்லோகத்தில் ‘லக்ஷ்மணமுநே:‘ என்று எம்பெருமானாருடைய நிர்தேசம்
      ஸ்பஷ்டமாகவுள்ளது. அதற்குமுந்தின இந்த ச்லோகத்திலும் ‘தயாலு: தேசிகேந்த்ர:
      என்று அந்த எம்பெருமானாரே நிர்தேசிக்கப்படுகிறார். இந்த ச்லோகத்ற்கு அடுத்த
      ச்லோகம் உபபாதகமென்பது முன்னம் குறிக்கொள்ளத்தக்கது, நாமெல்லாரும் பகவத்
      ப்ராப்தி பெறுதற்கு எம்பெருமானாரே கடவர் என்கிற அர்த்தமே இவ்விரண்டு ச்லோகங்
      களுக்கும் உயிரான விஷயம். ரஹஸ்யத்ரயஸாரத்தில் அதிகாரி விபாகாதிகாரத்தில்-அந்தோருந்தக்ரஹணவசக: என்னுமிந்த லோகத்தைப் பூர்த்தியாகவெழுதி “என்று
      யா திலகத்திலே சொன்னோம் ” என்றருளிச் செய்கிறார். இதற்குமுன்னும் பின்னுமுள்ள
      வாக்யங்கள் நல்ல தெளிவு பிறப்பிப்பன, -ப்ரக்ருதமான அந்தோநந்தக்ரஹண* என்கிற ச்லோகத்தில் மூன்று பாதங்களில் மூன்று தருஷ்டாந்தங்கள் இடப்பட்டன. குருடனுக்குக் கண் தெரிந்தவன் வேணு மென்கிற ப்ரதமத்ருஷ்டாந்தத்தினால் தேசிகேந்த்ரருடைய ஜ்ஞானபூர்த்தி சொல்லிற்று. நொண்டிக்கு நாவிகனுடைய உதவிவேணுமென்கிற த்விதீயத்ருஷ்டாந்தத்தினால் ஆசார பூர்த்தி சொல்லிற்று. இனி த்ருதீய த்ருஷ்டாந்தத்தினால் என்ன சொல்லப்படுகிறதென் று நோக்கவேணும், ஒரு மஹாப்ரபு வினிடத்தில் ஸேவை செய்த அமாத்யனுடைய ஸஞ்சித த்ரவ்யராசியினால் அவனுடைய புத்ரபௌத்ர நப்த்ரு பரம்பரைகள் நெடுங்காலம் வாழ்ந்து வருவதுபோல என்கிற இந்த த்ருஷ்டாந்தம் எதற்காக இடப்பட்டது? ப்ரபுவின் ஸ்தானத்திலே ஸ்ரீரங்கநாதனும், அமாத்யனுடைய பதவியில் எம்பெருமானாரும், அபத்யபரம்பராஸ்தானத்தில் அஸ்மதாதிகளும் கொள்ளப்பட்டாலொழிய இந்த த்ருஷ்டாந்தம்-பொருந்தாதன்றோ ரங்கப்ரபுவினிடத்தில் பகவத்ராமாநுஜஸசிவர் ஸேவை செய்து
      என்ன ஸம்பாதித்துச் சேமித்துவைத்தார்? என்று கேட்பார்க்கு விடை யிறுப்பதன் ே
      அடுத்தச்லோகம், அதில் “லக்ஷ்மணமுநே பவதா விதீர்ணம் வரம்” என்பது
      உயிரானது, முதலியாண்டான் பாசுரமாக முன்னேயெடுத்துக் காட்டினதில் எம்பெரு
      மானாரோடு ஸாக்ஷாத் ஸம்பந்த மின்றிக்கே அத்யந்த வயவஹித ஸம்பந்தமுடையாரும்
      உத்தீர்ணராக முடியுமோ? என்கிற சங்கைதோன்ற அதற்குப் பரிஹாரமாகவன்றோ
      *புங்க்தே போகாந் அவிதிதங்ருபஸ் ஸேவகஸ்ய அர்ப்பகாதி:* என்கிற த்ருஷ்டாந்த
      மிட்டருளிற்று. இதில் (அவிதிதந்ருப:) என்கிற விசேஷணம் எதற்காக இடவேணும்?
      அஜஹல்லக்ஷணையினாலே (அவிதிதஸேவக🙂 என்று மன்றோ இங்குக்கொள்ளப்பட
      வேண்டும். ராஜஸேவை செய்த அமாத்யனுடைய ஸந்ததியார் உதாரனான ராஜாவையும்
      பார்த்திருக்கவேண்டியதில்லை. ஸேவகனான அமாத்யனையும் பார்த்திருக்க வேண்டியதில்லை-சேமித்துவைத்த பொருளினாலே அவிச்சி நபரம்பரையாய் ஜீவனம் நடைபெறுகிறது.-அப்படியே எம்பெருமானார் கொண்டவரத்தினாலே அவருடைய ஸம்பந்த ஸம்பந்த ஸம்பந்திகளுக்கும் உஜ்ஜீவனம் இடையறாது நடந்து வருகிறது என்பதே இங்கு
      ஆசிரியர்க்கு விவக்ஷிதமாதலால் (தேசிகேந்த்ரோ தயாலு:) என்கிற ப்ராசீடு பாடமே
      ப்ரிக்ராஹ்யம், உடையவர் தனியனில் தயைகஸிந்தோ: என்றதை நோக்கி (தயாலு🙂
      என்றது.

      ————

      ஸ்ரீ ராமாநுஜன் – 224-பலவங்களு ஆவணி மாதத்திற்காக 6-8-67ல் வெளியிடப்பட்டது.

      பகவத் கீதையில் பத்தாவது அத்தியாயத்தில் (ச்லோ, 5) “அஹிம்ஸா ஸமதா “
      என்ற விடத்தில் ஸமதா என்பதை விவரித்தருளாநின்ற நமது பாஷ்யகாரர். “ஸமதா ஆத்மநி ஸுஹ்ருத்ஸு விபபேக்ஷ ச ஸ்மமதித்வம் ‘‘ என்று உரைத்தருளினார். அங்கு காத்பர்ய சந்த்ரிகையில் நிகமாந்த மஹாகுரு *ஸமமதி ராத்ம ஸுஹ்ருத்விபக்ஷபக்ஷே
      இதி பகவத்பராசரவச மிஹ தத்தத்பதை: ஸ்மாரிதம் என்றருளிச் செய்தார்.
      ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் (8-7-20) நசலதி நிஜவர்ணதர்மதோ ய; ஸமமதி ராத்ம
      கூஹ்ருத் விபக்ஷபக்ஷே, ஈஹரதி ஈச ஹந்தி கிஞ்சிதுச்சை: ஸிதமநஸம் தமவேஹி விஷ்ணுபக்கம் என்றுள்ள சுலோக ரத்நமே இங்கு எடுத்துக் காட்டப்பட்டதாயிற்று.
      இதில் *ஸமமதிராத்மஸுஹ்ருத் விபக்ஷபக்ஷே* என்கிற இரண்டாவது பாதம் முக்கிய
      மாகக் கணிசிக்கத் தக்கது. தன்னிடத்திலும் தன் நண்பர்களிடத்திலும் தன் பக்கலில்
      பகை பாராட்டுமவர்களிடத்திலும் ஒரு நிகரான பத்தியை யுடையவனாயிருப்பவன்
      எவனோ அவனே ஸ்ரீ வைஷ்ணவன் என்று இதனால் தெரிவிக்கப்படுகின்றது.

      திருவிருத்தத்தில் (54) வீகஞ்சிறகால்பறத்திர், விண்ணாடும் நுங்கட்கெளிது, பேசும்படி அன்னபேசியும் போவது, நெய்தொடுவுண்டேசும்படி அன்னசெய்யுமெம் மீசர் விண்ணோர்பிரானார்மாசில் மலரடிக்கீழ் எம்மைச்சேர்விக்கும் வண்டுகளே என்கிற பாசுரம் வண்டுவிடு தூ து. இதில் “விண்ணோர்பிரானாரடிக்கீழ் எம்மைச் சேர்விக்கும்” என்று வண்டுகளுக்கிட்ட அடைமொழியினால் சங்கையுதிக்க இடமறுக்கப்பட்டதாயிற்று. இந்தப் பாசுரத்தையும், உபாப்யாமேவபக்ஷாப்யாம் ஆகாசே பணம் கதி:, ததைவ ஜ்ஞாநகர்பயம் ப்ராப்யதேபுருஷோத்தம: என்கிற சுலோகத்தையும் அடி யொற்றி ஆசார்ய ஹிருதயத்தில் “சேர்ப்பாரைப் பக்ஷிகளாக்கி ஜ்ஞான கர்மங்களைச் சிறகென்று குரு ஸப்ரஹ்மசாரி புத்ரசிஷ்ய ஸ்ராசு பேசும்.”, என்கிறது சூர் அவதரித்த-அஞ்சிறைய மடநாரையில் கடலாழி நீர் தோற்றி, அதனுள்ளே கண் வளருது-மடலாழியம்மானைக் கண்டக்காலிது சொல்லி என்று அருளிச் செய்கையாலே அப்பதிகம்-வ்யூஹநிலையில் தூ துவிடுவதாகும். *கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண்வளருகை தானே வ்யூஹாவஸ்தை யென்பது.- வைகல்பூங்கழிவாயில் *மாநில் போரரக்கன் மதீன் நீறெழ்ச் செற்று உகந்த ஏறு சேவகனார்க்கு* என்று இலங்கை யெரித்த இராமபிரானிடம் செல்லும்படி தூாது
      விடுகையாலே அப்பதிகம் விபவாவதாரத்தில் தூதுவிடுவதாகும். ராமாவதாரம் விபவாவ
      தாரங்களுள் ஒன்றதலால். இப்பதிகம் மலைநாட்டிலுள்ள திருவண்வண்டூர்த் திருப்பதி
      விஷ்யமாகையாலே இது அர்ச்சாவதாரத்தில் தூதுவிடுகிறபடியல்லவோ வென்று சற்றிக்க
      வேண்டா: மேலே யெடுத்துக்காட்டிய பாசுரத்தின் பண்பு நோக்கி ‘இது விபவாவதாரத்தில் விடும்தூது’ என்கை மிகப் பொருந்தும்,-பொன்னுலகானீரில் பரத்வத்திலும் அந்தர்யாமித்வத்திலும்  தூது விடப்மிடுவதாக விளங்குகின்றது.-மாமதுவார் தண்டுமாய்முடி வானவர்இகாளை துவோ தஞ்சுவறென்ன வேண்டும-எங்குச் சென்சிறுங்கண்டு இதுவோதர் றென்மினே என்னும் பாசுரமுள்ளது, அப்பெருமான் எங்தேன்னேதெண்ணித்துக் கொண்டு கிடந்தாலும் அங்கும் புகுந்து சொல்லுமற்றுந்தூ துவிடப்படுமைதல அந்தர்யாமித்னத்தில்தூதும் இப்பதிகத்திலேயே காலாயிரா ன்றது.-“எங்கானலகங்கழிவாயென்னும் பதிகத்தில் திருமுழிக்களத்தார்க்கே ஊன்று திருமுழிக்கள மென்ற திருப்பதியில் தூதுவிடுகையாலே இப்பதிகம் அர்ச்தாவதாரத்தில் தூதுவிடுவதாகும், ஆசு, தூதுவிடும் பதிகங்கள் நான்குக்கும் எம்பெருமானுடைய பர வ்யூஹ லிபவாந்தர்யாமி அர்ச்சாவதார நிலைகள் ஐந்தும் விஷய மென்பதுவிளக்கப்பட்டது.-“தம்பிழையுஞ் சிறந்தசெல்வமும் படைத்தபரப்பும் தமரோட்டை வாஸமும் மறப்பித்த க்ஷமா தீக்ஷா ஸாரஸ்ய ஸௌந்தர்யங்களையுணர்த்தும் வ்யூஹ விபவபரத்வத்வயார்ச்சைகள் தூ துநாலுக்கும் விஷயம்” என்ற ஆசார்யஹ்ருதயசூர்ணையில் (156) அற்புதமாக அடங்கி யிருக்குமாறு காண்க.

      *அஜ் : ஸுகமாராத்ய: ஸகதரபாராத்யதே விசேஷஜ்:, ஜ்ஞாநலவதுர்விதக்தம் ப்ரஹ்மாபி நரம் ந ரஞ்ஜயதி.*-உலகத்கிலுள்ள அதிகாரிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். (1) ஒன்றுமறியாத மூடர்கள். (2) எல்லாம் நன்கு தெரிந்த விசேஷ வித்துக்கள். (3) ஸ்வல்பம் தெரிந்து எல்லாம் தெரிந்துவிட்டதாக நினைத்துக் கொக்கரிக்குமவர்கள் என மூவகை. இவர்களுள், ஒன்றுமறியாத மூடர்களை எளிதில் தெளிவிக்கமுடியும். ஏனென்றால், அவர்கள் நல்லாரிடத்து நல்லது தெரிந்துகொள்ளவேணுமென்கிற விருப்ப முடையவர் களாதலால், இவர்களுக்கு மேற்பட்டவர்களான விசேஷ வித்துக்களை தருப்திபடுத்துவது. மிகவும் எளிது. அவர்கள் பரம ரஸிகர்களாகையாலே அன்னவர்களோடு பேசுவது பரம ரஸமாயிருக்கும். சொல்லுகிற விஷயங்களை மிகவும் ரஸமாகவும் எளிதாகவும் அவர்கள் க்ரஹிக்க வல்லவர்களாதலால் அவர்களை ஆராதிப்பது மிகவெளிது.-மூன்றாமவர்களாகத் தெரிவிக்கப்பட்டவர்களுண்டே? அவர்களைத் தெளிவிக்க ப்ரஹ்ம்வாலுமாகாது. 

      தோஷமென்பது இரண்டுவகை, செய்கைகளில் காணும் தவறுகள் ஒருவகையான
      தோஷம். *மாம்ஸாஸ்ருக்பூய விண்மூத்ர ஸ்நாயு மஜ்ஜாஸ்த்தி ஸங்குலமான அழுக்
      குடம்பில் *தீண்டாவழும்புஞ் செந்நீரும் சீயும் நரம்பும் செறிதசையும் வேண்டா நாற்றம்
      என்னப்பட்டவை மற்றொருவகையான தோஷம். கடோபநிஷத்தில் [2-4-12]
      அங்குஷ்டமாத்ர: புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி, ஈசாநேர பூதபவ்யஸ்ய ந ததோ
      விஜுகுப்ஸதே என்றுள்ள ருக்கானது சரீர தோஷங்களும் எம்பெருமானுக்கு போக்ய
      மாகின்றன வென்பதைக் காட்டிநின்றது இவ்விடத்திற்கு பாஷ்யமுரையாநின்ற ரங்க
      ராமாநுஜஸ்வாமி “பூதபவ்யேச்வரத்வாதேவ வாத்ஸல்யாசயாத் தேஹகதாநபி
      தோஷாந் போசுயதயா பச் தி இத்யர்த்த: ” என்றுரைத்தார். வேதாந்தவாசிரியர்
      வரதராஜபஞ்சாசத்திலே *ஒள தந்வதே மஹதி ஸத்மநி பாஸமாநே சலாக்க்யே ச திவ்ய
      ஸதநே தமஸ: பரஸ்மிந், அந்த கலேபரமிதம் ஸுஷிரம் ஸு க்ஷ்ம்ஜாதம் கரிச!கதம் ஆதரணாஸ்பதம் தே? * [பரமபதம் முதலிய சிறந்த ஸ்தானங்களை யெல்லாம் இகழ்ந்
      திட்டுப் பரம் ஹேயமான பாவியேனுடலை போக்யமாகக்கொண்டு வர்த்திக்கிறயே]]
      என்றார். இப்படிப்பட்ட தோஷ போக்யத்வமே வாத்ஸல்யமென்று இந்த ச்லோகத்தின்
      வியாக்கியானத்திலும் கரூர் பெரியார் வரைந்தார். இந்த தோஷ போக்யத்வத்தை
      *மங்கவொட்டுன் மாமாயை” என்கிற பாட்டிலே ஆழ்வாரும் விளங்கவுரைத் தருளினர்.
      மிகமிக அருவருக்கத்தக்கதான தேஹ தோஷங்களேபோக்கியமாகிற தென்று உபநிஷதாதி
      ஸித்தமாம்போது, செய்கைத் தவறுகளான தோஷங்கள் ப்ரீதியின் கனத்தால்போக்கிய
      மாகின்றன வென்னும் விஷயத்சில் வீப்ரதியத்தி ஸர்வாத்மநா அப்ரஸக்கம்.-தயாசதகத்தில் யிதிஷ்டதி அபராதசதை: அபூர்ணகு :* என்றும் *ஆலிஹ்ய தாந் நிரவசேஷம் அலப்ததருப்தி:* என்றும் *ப்ரபலவ்ருஜி ப்ராப்ருதப்ருதாம் என்றும் நம் நிகமாந்தகுரு பணித்தவை ஸ்ரீவசனபூஷணத்தின் ப்ரதிச்சந்தம், ப்ராப்ருத மென்று உபஹாரத்திற்குப் பெயர்: “தோஷமே பச்சையாக” என்கிற ஸ்ரீவசனபூஷணமல்லது வேறு மூலமில்லையிதற்கு, 

      யாதவாப்புதயத்தில் பன்னிரண்டாவது ஸர்க்கம் ருக்மிணிப் பிராட்டி விஷயமானது, அதில் 1, 2,-ச்லோகங்களினால் ஸாக்ஷாத்ஸ்ரீ மஹாலக்ஷ்மியே ருக்மிணிப் பிராட்டியாகத் திருவவதரித்ததாய்ச் சொல்லி உடனே மூன்றாவது சுலோகம், “சிகண்டகம் நிஷ்ப்ரதிமம் ச்ருதீநாம் ச்ருங்கார லீலோபம விச்வக்ருத்யம், அதீயதே தந்மிதுநம் ஸ்வபாவாத் அந்யோந்ய ஜீவாது மாந்ய போக்யம்” என்பதாகவுள்ளது, இதற்கு மேலுள்ள சுலோகங்களெல்லாம் ருக்மிணிப் பிராட்டியை மட்டுமே நோக்கியவை. முதலிரண்டு லோகங்களும் அப்படிப்பட்டவை. இடையில் மூன் ாவதான ச்லோகமொன்று மட்டும் மிதுநம் என்கிற நிர்தேசத்தையுட்கொண்டு தோன்றியுள்ளது. இந்த ச்லோகத்தில், *ச்ருங்கார லீலோபம் விச்வக்ருத்யம் என்பதற்கு வியாக்கியான மென்னவென்றால், “ச்ருங்கார லீலாவத் அநாயாஸ் ஸாத்ய-விநோத ரூப-ஜகத்ஸ்ருஷ்டி ஸம்ஹாரா திக்ருத்யம்” என்பதேயாம்.இப்படிப்பட க்ருத்யத்தைப் பிராட்டியினிடத்தில் தனியாக இட்டுப் பேசுவதற்குத் திருவுள்ளமில்லாமையினாலேயே தேசிகன் மிதுநம் என்கிற பதத்தை ப்ரயோகித்து இடையிலே இந்தவொரு சுலோகத்தை விலக்ஷணமாக அமைத்தார். முன்னும் பின்னும் பிராட்டியை மாத்திரமே குறித்து ச்லோகங்களை யருளிச்செய்து போருகிறவர் இவ்வொரு ச்லோகத்தில் மிதுநம் என்று இருவரையும் சேர்த்தருளிச் செய்ததை உற்று நோக்கினால் ஐகத்ஸ்ருஷ்டி ஸ்திதிகளில் பிராட்டிக்குத் தனிப்பட அந்வயமில்லையென்று தேசிகன் நிச்சயித்திருப்பது திடமாகும்.

      ஸ்ரீஸ்துதியீலும், *யத்ஸங்கல்பாத் பவதி கமலே யத்ர தேஹிந்யமீஷாம் ஜந்ம
      ஸ்தேமப்ரலயரசநா ஜங்கமாஜங்கமாநாம; தத் கல்யாணம் கிமபி யமிநாம ஏகலக்ஷ்யம்
      ஸமாதௌ பூர்ணம் தேஜ: ஸ்புரதி பவதீபா தலாக்ஷாரஸாங்கம்
      என்கிற இவ்வொரு
      சுலோகமே போதும் பிராட்டி விஷயத்தில் தேசிகன் திருவுள்ளத்தை உள்ளபடி யுணர,
      பிராட்டியை ஸ்துதிக்க இழிந்தவர் பிராட்டி யினிடத்துள்ளதைன்றே பேசவேண்டும்.
      *ஜங்கமா ஜங்கமாநாம ஜந்ம ஸ்தேமப்ரலயரசநாம் இந்திரே! த்வம் சுரோஷி* என்று
      லோகமியற்ற அருயில்லையே, இப்படிச் சொன்னாலன்றோ பிராட்டியின் ஸ்துதியாகும்,
      உண்மையில் இவளிடத்திலில்லாததை இருப்பதாகவைத்து எங்ஙனே கவிபண்ணுவர்?
      கூரத்தாழ்வான் முதலான பூர்வாசார்யர்கள் ஆபவர்க்கி பதம ஸர்வஞ்ச குர்வந்ஹரி:
      யஸ்யா வீக்ஷ்ய முகம் ததிங்கிதபராதீநோ விதத்தே
      இத்யாதியாக அருளிச்செய்ததைப்

      ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரத்திலும் பரிபூர்ணப்ரஹ்மாநுபவாதிகாரத்தில் “ஈச்வரனுக்கு ச்சத்ரசாமராதிகளைப் போலே லஷ்ணமாகச் சொன்னஜகத்காரணத்வ மோசுப்ரதத்வஸர்வாதாரத்-ஸர்வநியந்த்ருத்வ-ஸர்வ சேஷித்வ-ஸர்வசரீரித்வ-ஸர்வசப்தவாசியத்வ ஸர்வ வேதவேத்யத்வ-ஸர்வலோகசரண்யத்வ-ஸர்வபலப்ரதத்வ-லக்ஷ்மீஸஹாயத்வாதிகள் ப்ரதிநியதங்கள்” என்றருளிச்செய்யப்பட்டது, இந்த மஹாவாக்கயத்தில் ஜகத்காரணத்வத்தை முந்துறச்சொல்லி முடி வில் லக்ஷ்மீஸஹாயத்வத்தைச் சொல்லியிருக்கையாலே, லக்ஷ்மியினிடத்தில் லக்ஷ்மீஸஹாயத்வம் எப்படி அஸம்பாவிதரோ அப்படியே ஜகத்காரணத்வமும் அவளுக்கு அஸம்பாளித மென்றும் இவையெல்லாம் பரப்ரஹ்மத்திற்கே பொருந்துமென்றும் காட்டப்பட்டதாயிற்று. இப்படியருளிச் செய்ததும் ஸ்ரீ பாஷ்யத்தில் விநதவிவித பூதவ்ராதரக்ஷைக என்றவிடத்து சீருத ப்ரகாசிகையில் “ஜகத்காரணத்வ மோக்ஷப்ரதத்வே ஹி ாஜ் : ச்சத்ரசாமரவத் ப்ரஹ்மண: அஸாதாரண சிஹ்தம்.” என்றருளிச் செய்திருப்பதைப் பின்பற்றியதே. மு வாஹக போகத்தில் ஆதியென்ற விடத்தும் இப்படியே தானுள்ளது, நியாய ஸித்தாஞ் ஜரு ஜீவபரிச்சேதத்திலுப்படியேதான். இவ்விஷயத்தில் மிகத்தெளிந்த ஞானமுடையவர் நம் தேசிகன்.

      ரஹஸ்யரத்நாவளியென்று ஒரு சிறு ரஹஸ்யம். அதில் “ஸ்ரீமானை நாராயண னொருவனுமே ஸர்வ ஜீவர்களுக்கும் தஞ்சம்……ஸர்வ ஸ்வாமிநியாய் ஸர்வேச்வரனுக்கு சேஷமாய் ஸஹதர்மசாரிணியான பெரியபிராட்டியார் – இத்தலையில் வாத்ஸல்யாதிசயத்தாலும் அத்தலையில் வால்லப்யாதிசயத்தாலும்
      புருஷகாரமாய்க்கொண்டு இஜ் ஷர்களுக்குத் தஞ்சமாகீருள்”
      என்றருளிச்செய்து, இதை
      ரஹஸ்யரத்காவளி ஹ்ருதயமென்கிற அடுத்த ரஹஸ்யத்தில் தாமே விவரித்தருளினார்.
      உண்மையில் விவரணாபேக்ஷையேயில்லாத வாக்யமன்றோவிது. இப்படி நிஸ்ஸந்தேஹமாகவருளிச் செய்தவிடங்கள் ஒன்றிரண்டல்ல: பலபலவிடங்களுண்டு. சதுச்ச்லோகியில்மூன்றாவது லோகத்தின் பாஷ்யத்தில் “மோ ப்ரதே பகவதி முமு ணாம் கடகதயா ஏஷாஷ்டbb ஸர்வஸம்மதம்” என்றருளிச் செய்ததொன்று போதுமே, “எம்பெருமான்தான் மோக்ஷமளிப்பவன்; அதனைப் பெறுவிப்பவளாகமாத்திரம் பிராட்டி இரா நின்ள்ளி’என்பது இந்த ஸம்ஸ்கிருத ஸ்ரீ ஸக்தியின் கருத்து, அதற்கு மேலுள்ள ஸ்ரீ ஸூக்திகளும் பிராட்டிக்கு உபாயத்வமில்லையென்பதையே நிலைநாட்டுவன.

      இங்கு உடலக்ஷணத்வம் கொண்டாலும் விசேஷணத்வம் கொண்டாலும் வாபி சிறிதுமில்லையென்பதை சாஸ்த்ரஜ்ஞர்கள் உணர்வர்கள்.-பிராட்டிக்குப் புருஷகாரத்வமுண்டு என்று இசைந்தான பின்பு அவளுக்கு உபாயத்வமுமுண்டு என்று வாய்திறக்க வழியே கிடையாது. உபாயத்வமாவது-தானே கொடுக்கசக்தி யுடைத்தாகை. அஃதிருக்குமாகில் புருஷகாரக்ருத்யத்தில் நின்று துவள வேண்டியப்ரஸக்தியே கிடையாதாகையால் நவீனர்களின் உத்வேலப்ரஸங்கமெல்லாம் தொலைந்தன

      திருவாழி திருச்சங்குகளினால் இலச்சினை பெறுகையாகிற சக்கராங்கனத்தையே ஸமாச்ரயண மென்று உலகம் க்ரஹித்திருக்கின்றது உண்மையில் ஸமாச்ரயணமென்பது அவ்வளவே யன்று. ” ஆசார்யனை ஆச்ரயித்து ஆவன் மூலமாக எம்பெருமானை யடி பணிதல்” என்னும் பொருளதான ஸமாச்ரயணமென்கிற சொல்லானது ஆசார்யனால் பெறுவிக்கப்படுகிற பேறுகளுக்கெல்லாம் ஸசகமாக நிற்கின்ற து. ஆசார்யனால் க்ரூதக்ருத்யனாகச் செய்விக்கப் பெறுகையே ஸமாச்ரயணமெனப்படுகிறது பகவதாச்ரயணத்தில் பர்யவளித மாகிறது-“தாப: புண்ட்ரஸ் ததா நாம மந்த்ரோ யாகச்ச பஞ்சம:, அமீ பாமஸம்ஸ்காார்: பாரமைகாந்த்ய ஹேதவ:” என்று யாவருமறிந்த ச்லோகமானது-நான்காவதான மந்த்ரஸம்ஸ்காரமாவது திருமந்த்ரம் த்வயம் சரமச்லோகம் என்கிற ரஹஸ்யத்ரயத்தை உபதேசிக்கப் பெறுகை, ஐந்தாவதான யாகமாவது ‘யஜ-தேவபூஜாயாம்‘ என்கிற தாதுவிலிருந்து தேறுகிற யாகசப்தம் திருவாராதனத்தைச் சொல்லுகிறதாகையாலே பகவதாராதனத்திற்கு அதிகாரம் பெறுகை,-ஸ்ரீமத்
      ரஹஸ்யத்ரய ஸாரத்தில் க்ருதக்ரூத்யாதிகாரத்திலே-“அநாதிகாலம் ஆஜ்ஞாதிலங்கனமடியாகவுண்டான பகவந்நீக்ரஹத்தாலே ஸம்ஸரித்
      துப்போந்த நமக்கு அவஸரப்ரதீக்ஷையான பகவத்க்ருபையடியாகவுண்டான ஸதா
      சார்ய கடாக்ஷவிஷ காரத்தாலே வந்த த்வயோச்சாரணநூச்சாரணத்தாலே ப்ரபத்
      த்யநுஷ்டாநம் பிறந்த பின்பு சரண்ய ப்ரஸாதநங்களில் இதுக்குமேல் ஒன்றில்லா
      மையாலே நிக்ரஹ ஹேதுக்களையெல்லாம் க்ஷமித்துத் தீர்ந்த வடியவர்தம்மைத்
      திருத்திப் பணிகொள்ளவல்ல ஸர்வசேஷியான ச்ரிய:பதி தன்பேருகத்தானே ரக்ஷிக்
      குமென்று தேறி நிர்ப்பரனாயிருவென்கை, இது மா சுச: என்கிற சரண்யவாக்யத்
      திலும் தீர்ந்த பொருள்.”
      -என்றுள்ள வாக்கியங்கள் நிஸ்ஸந்தேஹவிபர்யயமாக உண்மைப் பொருளை யுணர்த்துகின்றன-நம்முடைய குலகூடஸ்தரான எம்பெருமானார்க்கு ஸ்ரீரங்கநாதனிடமிருந்து விசேஷித்து வரமும் கிடைத்திருக்கிறது. அதையும் தேசிகனே யாஸத்திலகத்தில் “ச்ருத்வா வரம் தத பந்தமதாவலிப்தே” என்பதனால் நன்கருளிச் செய்துள்ளார், ந்யாஸதிலகத்தில் அந்தோருந்த க்ரஹணவசக: என்கிற சுலோகத்தில் மூன்றாவது பாதமும், அதற்கடுத்ததான உக்த்யா தநஞ்ஜய ச்லோகத்தில் லக்ஷ்மணமுநேர் பவதா விதீர்ணம் சருத்வா வரம்”

      உலகமேத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லையென்று மண்டினார் உய்யலல்லால் மற்றையார்க்கு உய்யலாமே” என்ற பாசுரத்தை மிகவும் பாவகர்ப்பமாக அருளிச்செய்துள்ளார். இதில் மற்றையார் என்று கரித்தது கருமமே கண்ணா யிருப்பவர்களை, அர்ச்சாவதார ரளிகர்கள் உஜீவிக்கலாகுமே த ர ஸ்மார்த்த கர்டிகலாபங்களிலே ஊன்றிப் போருமவர்கள் உற்விக்கப்போகாதென்று வாய்விட்டு அருளிச்செய்திருக்கிருர்,-“வர்ணதர்மிகள் தாஸவ்ருத்திகளென்று துறைவேறிடுவித்தது” என்பது ஆசார்ய ஹ்ருதய திவ்யஸூக்தி,-பட்டர் ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்திலே “ஸ்ரீரங்கபாலாகர்மடா;” என்று மிகவழகியவொரு ஸ்ரீஸ்- க்தி யருளியுள்ளார். இதனால், கோவிலைக்காப்பதே நித்யகர்மாநுஷ்டானமென்று காட்டியருளினாராயிற்று. ஆனாலும் ச்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா என்கிறபகவத் வசனத்தையும் குறிக்கொண்டு அவர்ஐ யங்களான நித்ய நைமித்திக கருமங்களை விடாது அனுட்டித்துப்போருகிறோம். “ஜாத்யாச்ரம தீஷைகளில் பேதிக்கும் தர்மங்கள் போலே அத்தாணிச் சேவகத்தில் பொதுவானது நழுவும்” என்பது ஆசார்ய ஹ்ருதய திவ்யஸூக்தி, அவ்விடத்கிலே விசதவாக்சிகாமணிகளின் வியாக்கியானம் ஸேவிப்பது.

      ———————–

      ஸ்ரீ ராமானுஜரின் அர்ச்சாமூர்த்தி திருமலையில் ஏற்பட்டது கி. பி. 1057ல்! ஞானமுத்திரைக்குப் பல காரணங்கள் கூறப் பட்டிருந்தாலும், அவைகளுள் முக்கியமானது ஸ்ரீராமானுஜர் ஸமர்ப்பித்த திருவாழி திருச்சங்குகளைத் திருவேங்கடமுடையான் அங்கீகரித்ததே. இக்காரணத்தினால்தான் திருப்பதியிலுள்ள ஸ்ரீ கோவிந்தராஜன் ஸந்நிதியிலும், சக்கரவர்த்தி திருமகன் (பெரியரகுநாதன்) ஸந்நிதியிலும் கூட ஞானமுத்திரையுடனேயே ஸ்ரீ ராமானுஜர் ஸேவைஸாதிக்கிறார்.-ஸ்ரீவைஷ்ணவர்களுக்குமே வெகு முக்கியமானவை. தினந்தோறும், த்ரிகாலமும்
      சந்தியாவந்தன முடிவில் அனுஸந்திக்கப் படுமவை. பெருமாள் கோயிலுக்கு (காஞ்சீ
      புரத்திற்கு) அடுத்துள்ள ஸ்ரீ ராமானுஜரின் அவதாரஸ்தலமாகிய ஸ்ரீபெரும்பூதூரிலும்
      ஸ்ரீரங்கத்திலும், திருமலையிலும், திருநாராயணபுரத்திலும் உள்ள ஸ்ரீ ராமானுஜரின் திவ்ய
      மங்கள விக்ரஹங்கள் ஸ்வாமியின் ஜீவிய காலத்திலேயே பக்தர்களின் அவாவினால்
      ஏறியருளப் பண்ணப்பட்டவை. இவைகளை எல்லா ஸ்ரீ வைஷ்ணவர்களுமே, “தாமுகந்த
      திருமேனி” “தமருகந்த திருமேனி,’ “தாமான திருமேனி ‘ “அனந்தாழ்வானுக்கான
      திருமேனி ‘
      ‘ என்றென்று கொண்டாடி வருகிறார்கள்

      அவனைவிட்டகன்றுயிராற்றகில்லா அணியிழையாச்சியர்மாலைப்பூசல்*
      அவனைவிட்டகல்வதற்கேயிரங்கி அணிகுருகூர்ச்சடகோபன்மாறன்*
      அவனியுண்டுமிழ்ந்தவன்மேலுரைத்த ஆயிரத்துள்ளிவைபத்துங்கொண்டு அவனியுளலற்றிநின்றுய்மின்தொண்டீர் அச்சொன்னமாலைநண்ணித்தொழுதே.-9-9-11

      இதில் முன்னிரண்டடிகளின் முதலில் அவனை என்று பதம்; பின்னிரண்டடி களின் முதலில்
      அவனி என்று பதம்.-‘அவனையுண்டுமிழ்ந்தவன் மேலுரைத்த-எல்லாவற்றையும் உண்டு உமிழ்கிறவன் அவனொருவனேயென்று நினைத்திருந்தோம்; அவனையும் உண்டு உமிழ்கிறவன் வேறொருவன் இருக்கிறான் போலும்–

      ————-

      ஸ்ரீ ராமாநுஜன்- 229-பலவங்களு தைமீ 1968 ஜனவரிமீ வெளியிடப்பட்டது.

      உண்மையில் நெஞ்சு தம்மிற்காட்டில் வேறுபட்டதன்றுதான்; ஆனாலும் * மந ஏவ மநுஷ்யாணாம்காரணம் பந்தமோக்ஷயோ என்று நூற்களில் மனத்திற்கு ஒரு ப்ராதான்யம் கொடுக்கப் பட்டுள்ளது. நம்மாழ்வார் திருவாய்மொழியில் *நெஞ்சமே! நல்லைநல்லை யுன்னைப்பெற்றால்என்செய்யோம்” என்றருளிச் செய்கிறார். *முயற்றிசுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே!இயற்றுவாயெம்மொடு நீகூடி” என்றேபெரிய திருவந்தாதியைத் தொடங்குகின்றார்.நெஞ்சைத் தூதுவிடுவதும் ப்ரஸித்தமாகவுள்ளது. வட நூலாரும் * நபும்ஸகமிதி ஜ்ஞாத்வாதாம் ப்ரதி ப்ரேஷிதம் மந;, தத் து தத்ரைவ ரமதே ஹதா : பாணிநிநா வயம்* என்றுவிநோதமாகக் கூறுகின்றார்கள். இதெல்லாம் சமத்காரசாலியான வார்த்தைப்பாடு என்பர்-நமது வேதத்தில் இரண்டாவது காண்டத்தில் ஐந்தாவது ப்ரச்நத்தில் வாக்குக்கும்மநஸ்ஸுக்கும் ஒரு விவாதமேற்பட்டதாக உபாக்கியானமொன்று ஓதப்பட்டுள்ளது.அதனைச் சுருக்கமாகக் கேளீர்: (வாக்ச மநச்ச ஆர்த்தீயேதாம்] வாக்கும் மநஸ்ஸும்விவாதப்பட்டன. என்னவென்று? என்னில்; [அஹம் தேவேப்யோ ஹவ்யம் வஹாமீதிவாக் அப்ரவீத்] தேவதைகளுக்கான ஹவிஸ்ஸை நான் வஹிக்கிறேனென்று வாக்குஉரைத்தது. [அஹம் தேவேப்ய இதி ம :] மநஸ்ஸும் அவ்விதமாகவே சொல்லிற்று.விவாதம் ஓயவில்லை; [தௌ ப்ரஜாபதிம் ப்ரச்நமைதாம்] விவாதசாந்திக்காக இருவரும்ப்ரஜாபதியிடம் சென்று முடிவுகூற வேணுமென்று கேட்டார்கள். (ஸோப்ரவீத்ப்ரஜாபதி :] கேட்கப்பட்ட ப்ரஜாபதி முடிவு சொன்னார். என்ன சொன்னாரென்னில்(தூதீரேவ த்வம் மநஸோ : யத் ஹி ம ஸா த்யாயதி தத் வாசா வ தீதி.] வாக்கே!மநஸ்ஸுதான் மேன்மை பெற்றது; அதற்கு நீ பணிவிடை செய்யக் கடமைப்பட்டிருக்
      கிறாய்: மனஸ்ஸு நினைப்பதைத் தானே வாக்கு சொல்லமுடியும் என்று. இதற்குமேலும் கதை சிறிது செல்லுகின்றது. அது நிற்க, மனஸ்ஸுக்கு ஒரு ப்ராதாந்யமுள்ளதென்பதை மட்டும் இந்த உபாக்கியானத்தினாலுணர்க.

      “ஸ்ரீமத் பராங்குச பதாம்புஜ பருங்கராஜம்” என்று வண்டாக அருளிச்செய்ததின் பொருத்தங்களை நிரூபிப்போம். வண்டு மதுவரத (மென்று பேர் பெற்றிருக்கும். தேன்தவிர வேறொன்றைக் கொள்ளாது என்றபடி, அதுபோல,-உளங்கனிந்திருக்குமடியவர் தங்களுள்ளத்துளூறிய தேன்* என்றும் தேனை நன்பாலைக் கன்னலையமுதை* என்றும் எனக்குத் தேனே பாலே கன்னலே யமுதே* என்றும் பலவிடங்களிலும் தேனாகச் சொல்லப்பட்ட எம்பெருமானையே விரும்பி மற்றொன்றைக் கண்ணெடுத்தும் பாராமல் பகவதநுபவத்தையே விரதமாகக் கொண்டிருந்தவர் எம்பெருமானார் . வண்டினங்கள் காமரங்களிசைபாடும் * என்றும், யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும்* என்றும், வரிவண்டுதேதென வென்றிசைபாடும் என்றும் பணித்தபடியே வண்டுகள் யாழினிசைபோன்ற இசைகளைப் பாடுவதுபோல் *பண்ணார்பாடல் * யாழினிசைவேதம். என்னப்பட்ட திருவாய்மொழியின் கானத்தையே போது போக்காக வுடையராயிருந்தவர் ஸ்வாமி.”தமிழ்மறைகளாயிரமும் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன்” “பண்டருமாறன் பசுந்தமிழானந்தம் பாய்மதமாய் விண்டிட வெங்களிராமானுசமுனிவேழம்’ என்றவை காண்க. வண்டு வடமொழியில் சஞ்சரீக மென்று பேர் பெற்றிருக்கும்; ஓரிடத்தில் தங்கியிராது: மதுவுள்ளவிடமெங்கும் பறந்து திரியுமது. அதுபோல் ஸ்வாமிதாமும் ஸ் ரங்கம் கரிசைலமஞ்ஜாகிரிம் தார்யாத்ரி ஸிம்ஹாசலெள ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ் ச பதரீநாராயணம் நைமிசம்,ஸ்ரீமத்த்வாரவதீ பரயாக மதுராயோத்யா கயா: புஷ்கரம் ஸாலக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே ராமாநுஜோயம் முநி: என்கிறபடியே *பதியே பரவித்தொழுந்தொண்டர்களில் தலைவராயிருந்தார். வண்டு எந்த ஸமயத்தில் எங்குச் செல்லவேணுமென்று நினைத்தாலும் தட்டுத் தடங்கலின்றியே புகுந்து ரமிக்கும்: ஸன்னிதியில் கர்ப்பக்ருஹங்களினுள்ளும் எம்பெருமான் திருமுடிமீதும் தாராளமாகப்
      புகக் காணுகின்றோம். அதுபோல, பின்னிட்ட சடையானும் பிரமனு மிந்திரனும்
      துன்னிட்டுப் புகலரிய என்னும்படி திருவாசல்களிலே ஸேவாபரரானவர்கள் நிறைந்து
      தலை நுழைக்கவொண்ணாதபடி நெருக்க, மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடுநாள்” என்னும்படியவதரித்தருளின எம்பெருமானார் கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான எந்த திவ்யதேசங்களிலும் தடையும் சங்கையுமின்றிக்கே அதிகாரச் செல்வத்துடனே உள்ளே புகுந்து ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலா வடிமைசெய்து வாழ்ந்தவர்
      . வண்டு சோலைகளிலேயே சுழலமிடும்; எம்பெருமானார் தாமும் *ஆராமஞ் சூழ்ந்தவரங்கம்* சிந்து பூ மகிழுந்திருவேங்கடம் விரையார்பொழில் வேங்கடம் என்னும்படியாகச் சோலைகள் மிக்க தலங்களிலேயே சுழலமிட்டவர்.-இப்படி மற்றும் பல பொருத்தங்களும் காண்க.-வண்டுக்கு த்விரேப மென்று பெயர்: இரண்டு ரேபங்களையுடையது என்றபடி. ரேபமாவது ரகரம். வண்டுக்கு வாசகமான (ப்ரமர) சப்தத்தில் இரண்டு ரேபமிருப்பதால் இது பற்றியே (வண்டு) தவிரேபமெனப்பட்டது, ஸ்ரீ ராமாநுஜராகிற வண்டானது தன்னிடத்தில் இரண்டு ரேபமில்லையேயென்கிற குறையைத் தீர்த்துக் கொள்வதற்காகவே வாவர முனிகளாக மற்றோரவதாரம் செய்தருளின்படி ராமா நுஜத்திருநாமத்தில் ஒரு ரேபமேயாய், வரவர முனிதிருநாமத்தில் இரண்டு ரேபமிருக்கும்படி கண்டுகொள்வது.

      மணவாளமாமுன்களின் திருவடிகளைப் பணிந்து உய்ந்தவரான எறும்பியப்பாவின் பெருமையைச் சொல்லவந்த ஒரு ச்லோகம் உலகில் ப்ரஸித்தமானது; அதாவது -“சடரிபுரேக ஏவ கமலாபதிதிவ்ய கவி: மதுரகவிர் யதா ச சடஜிந்முநிமுக்க்யகவி:, யதிகுலபுங்கவஸ்ய புவி ரங்கஸுதா கவிராட் வரவரயோகிநோ வரதராஜகவிச் ச ததா.’ என்பதாம். இதன் பொருள் யாதெனில், திருமகள் கொழு னான ஸர்வேச்வரனைக் கலிபாடித் துதித்தவர்களுள் நம்மாழ்வார் எப்படி சிறப்புப் பெற்றவரோ, அந்த நம்மாழ்வாரைக் கவிபாடித் துதித்தவர்களுள் ஸ்ரீ மதுரகவிகள் எப்படி சிறப்புப் பெற்றவரோ, எம்பெருமானாரைக் கவிபாடித் துதித்தவர்களுள் திருவரங்கத்தமுதனார் எப்படி சிறப்புப்பெற்றவரோ, அப்படியே மணவாளமாமுனிகளைக் கவிபாடித் துதித்தவர்களுள் எறும்பியப்பா சிறப்புப் பெற்றவர் என்பதாம். உண்மையில், எம்பெருமானாருடைய திருக்குணங்களைப் புகழ்ந்து பேசப்பிறந்த நூல்களுள் திருவரங்கத்தமுதனார் திருவாய்மலர்ந்தருளிய இராமானுச நூற்றந்தாதிக்கு இணையானது எதுவுமில்லையென்று சபதமிட்டுரைப்பர் பெரியோர். சொல்நோக்கும் பொருள்நோக்கும் தொடைநோக்கும் நடைநோக்குமாகிய எந்நோக்கும் மிக அற்புதமாக வன்றோ நூற்றந்தாதியில் அமைந்துள்ளது.

      —————————-

      ஸ்ரீ ராமாநுஜன் – 237, 238.-கீல சளு புரட்டாசி, ஐப்பசி 1968 ஸெப்டம்பர்அக்டோபர் வெளியீடு

      திருப்பாவையில் ஒருத்தி மகனாய் பாசுரத்தில் “கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன்வயிற்றில்” என்றுள்ளது. நாச்சியார் திருமொழியில் (14 -7) *பொருத்தமுடைய நம்பியையென்னும் பாசுரத்தில் “கருத்தைப் பிழைத்துநின்ற அக்கருமாமுகிலைக் கண்டீரே” என்றுள்ளது. இங்கு ‘கருத்தைப் பிழைப்பித்துநின்ற‘ என்பது கிடையாது. ஆகிலும்
      இரண்டிடத்திலும் ‘கருத்தைப் பிழைப்பித்து’என்றே ஸேவித்துவருவது பெரும்பான்மை,

      திருவாய்மொழியில் (4-10-10) உறுவ்தாவதெத்தேவு மென்கிற பாட்டினீற்றடியில் “குறிய மாணுருவாகிய நீள்குடக்.” என்றுள்ளது. பெரியதிருமொழி அஞ்சாம்பத்து முதற்பாட்டினிரண்டாமடியில் “குறியமாணியுருவாயகூத்தன்” என்றுள்ளது. இங்கு “குறியமாணுருவாகிய ‘ என்று கிடையாது; விருத்தத்திற்குப் பொருந்தவும் மாட்டாது. ஆனாலும் இரண்டிடத்திலும் ‘குறியமாணுருவாகிய-என்றே ஸேவித்து வருகிறார்கள். திருத்தினாலும் திருந்தாதார் பலர்

      புள்ளின் வாய் கீண்டானென்பது பலவிடங்களில் வருகிறது. முதல் திருவந்தாதியில் *ான்ற முலைத்தலை நஞ்சுண்டென்னும் பாட்டில் ‘பொருதுடைவு கண்டானும் புள்வாய் கீண்டானும்’ என்றுள்ளதேயொழிய ‘புள்ளின்வாய் கீண்டானும்’ என்று கிடையாது. (அதில் பெரிய பிழையுண்டு.) ஆனாலும் “புள்ளின்வாயென்றேஓதிவருகிறார்கள். “அகலிடத்தையாராய்ந்து அது திருத்தலாவதே “

      பெரிய திருமொழியில் (11 -2-10) வென்றி விடையுடன் என்கிற பாட்டின் இரண்டாமடி “மன்றில் மலிபுகழ் மங்கைமன் கலிகன்றி சொல்” என்றுள்ளது. மேலே(11-8-10) * குன்றமெடுத்தாநிரை காத்தவன் * என்கிற பாட்டின் இரண்டாமடி”மன்றில்புகழ் மங்கைமன் கலிகன்றி சொல்” என்பதேயன்றி இங்கு (மலி) கிடையாது.-அந்த விருத்தம் வேறு, இந்த விருத்தம் வேறு. இவ்விடத்திற்கு (மலி) சேராது. ஆயினும் பெரிய திருமொழியின் சாத்துப் பாசுரமானவி னில் (மலி) சேர்த்தே பலர் ஓதிவருகின்றனர்.

      ‘தெரியில்’ என்று ஒரு சொல்; ‘ தெரியல்’ என்று வேறொரு சொல்.தெரியில்
      என்பதற்கு ‘தெரிந்தால்’ என்று பொருள். ‘தெரியல்’ என்பதற்குமாலையென்று பொருள்.
      திருப்பாவை முப்பதாம் பாட்டில் அணி புதுவைப் பைங்கமலத்தண் தெரியல் பட்டர்
      பிரான்’
      என்பது உள்ள பாடம். இங்கே தெரியிலுக்கு ப்ரஸக்தியே கிடையாது. ஆனாலும் தெரியில் என்று ஸேளிப்பவர்களே மலிந்துள்ளார்கள

      திருப்பாவை யிரண்டாம் பாட்டில் *தீக்குறளை சென்றோதோம் * என்ற
      விடத்தில்-‘தீக்குறளைச் சென்றோதோம்’ என்று அழுத்தம் திருத்தமாக துமவர்களே மலிந்துள்ளார்கள்-நாயகனாய் பாசுரத்தில்-ஆயர் சிறுமியரோமுக்கு* என்றவிடத்தில் ‘ஆயர் சிறுமையரோம் உமக்கு’ என்று ஸேவிப்பவர்கள் இன்னமும் எத்தனை பேருளர்-திருப்பாவை
      முதற்பாட்டில் *ஏரார்ந்த கண்ணியசோதை என்றவிடத்தில் – “ஏரார்ந்த கண்ணீர் அசோதை ” என்றே ஸேவிப்பது வழக்கம்.

      1-படுத்தார்-2. தடுத்தார் 3. கொடுத்தார்–4. எடுத்தார் 5.விடுத்தார்-6.அடித்தார்.7. இடித்தார். 8. முடித்தார்.

      1-அரவணை மேல் படுத்தார். (அராவணைப் படுத்தபாயல் பள்ளிகொள்வது.
      ( திருச்சந்த விருத்தம்.)-2பெரு மழையைத் தடுத்தார்-(கடுத்தார்த்தெழுந்த பெருமழையைக் கல்லொன்றேந்தி யினறிரைகாத் தடுத்தான் (பெரிய திருமொழி.).3-(நமக்கு) ஆக்கை கொடுத்தார்.(ஆக்கைகொடுத்தளித்த கோனே குணப் பரனே (நான்முகன் திருவந்தாதி )4. (குடக் கூத்தாடக்) குடங்களை யெடுத்தார்(குடங்களெடுத்தேறவிட்டு. (பெரியாழ்வார் திருமொழி.)-.5. அரக்கியின் மூக்கை விடுத்தார்.(அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான்* (பெரிய திருமொழி ) 6.தண்டாலடித்தார் (அருளென்னுந் தண்டாலடித்து (பெரிய திருவந்தாதி.)7. மாடமிடித்தார்.(இலங்கைக்குழாநெடுமாடமிடித்தபிரானார் (திருவிருத்தம்)-8.கவராக முடித்தார்(சுகவராக முடித்து* ( பெரிய திருமொழி.) 9. துள்ளித் துடித்தார் (*சோப்பூண்டு துள்ளித் துடிக்கத்துடிக்க (பெரியாழ்வார்)10. அரவில் நடித்தார்.(குதிகொண்டரவில்நடித்தாய் (நாச்சியார்).

      படைத்து புடைத்து அடைத்து மிடைத்து துடைத்து.-நளிர்நீர் கடலைப் படைத்து. *புடைத்திடுதிகீளாதே * கடலையடைத்தரக்கர் குலங்களை மிடைத்திட்டெழுந்த * துடைத்திட்டவரைத்தனக்காக்க.

      ஒன்று இரண்டு மூன்றுநான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது
      பத்து நூறு ஆயிரம் கோடி கிடுகிடுவென்று பாசுரங்கள் சொல்லு.

      “ஒன்றெனப் பலவென்* இரண்டு கூறு செய்துகந்த சிங்கமென்ப
      துன்னையே.* மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால். புனற்கணின்ற நான்குமாய்
      ஐந்துமைந்துமைந்துமாய்” ஆறினோடொரு நான்குடை நெடுமுடி. ஏழுமாமரம்
      துளைபடச் சிலை வளைத்து. ‘எட்டுமெட்டுமெட்டுமாய்* ஏ னோடொரொன்பதாய்
      பத்துடையடியவர்க்கு’ இனநூறுபிணம்* ஆயிரம் பைந்தலைய பல கோடி நூறாயிரம்.

      ஒருவன் இருவர் மூவர் நால்வர் ஐவர் அறுவர் எழுவர் எண்மர்
      பதின்மர். பதினொருவர் பன்னிருவர் நூற்றுவர் ஆயிரவர் …. ஆலோசியாமல் சொல்லு.

      ஒண் சங்கதை வாளாழியானொருவன். இருவரவர் முதலுந்தானே. மூவராகியவொருவனை. ஆலநிழற்கீழறநெறியை நால்வாக்கு” அடவரும் படைமங்க
      ஐவர்கட் காசி* மக்களறுவரைக் கல்லிடைமோத . பொருள்கையுண்டாய்ச் செல்லக்
      காணில் போற்றியென்றேற்றெழுவர்ச் எண்மர் பதினொருவர் ஈரைம் பதின்மர்
      தாள்சாய * எண்மர் பதினொருவர் ” ஈரறுவர் * நூற்றுவரும் பட்டழிய* பதினாறாமாயிரவர் *

      ஞாயிறு திங்கள் செவ்வாய புதன் வியாழன் வெள்ளி-சொல்லு பாட்டுக்களை.

      எல்லையில் சீரிள ஞாயிறு திங்கள் சேர்மாடத்திருப்புளிங்குடி
      செவ்வாய்க்கிளி நான்மறைபாடு புதமிகு விசும்பில்* வியாழமுறங்கிற்றுந வெள்ளி
      யெழுந்து, [சனியும் கண்டுபிடித்துச் சொல்லுவேன்.

      ஐயா கையா பொய்யா மையா செய்யா வையா நெய்யா
      எய்யா- சொல்லு கிடுகிடுவென்றுபாசுரங்களை.

      *ஐயாவுன்னையறிந்துகொண்டேன் சுரிசங்க மேந்தும் கையா
      *பொய்யாவுன்னைப் புறம்பல பேசுவ மையார்கண்மடவாய்ச்சியர்* செய்யாராரலிரை
      கரு வையார் சுடராழி* நெய்யாராழியுஞ் சங்கமும் நின்கழல் எய்யாதேத்த*

      சரண்சுருண் திரண் அரண் இரண்இருண் மரண் மருண் கரண்
      புரண்-தாமதியாமல் சொல்லுவாயா?

      கண்ணனல்லாலில்லை கண்டீர் சரண்– சுருண்டிருண்ட குழல்தாழ்ந்த
      முகத்தான்* திரண்டெழுதழை மழை* இல்லை கண்டீரரணே* இரண்டும் போயிரண்டின்
      வீடு.* இருண்ட குழல்* மரணாயமன்னுயிர்கட்கெல்லாம். மருண்டுமான் கணங்கள்-கரண்டமாடு பொய்கையுள் புரண்டு வீழவாளைபாய்*

      கோன்தேன். கூன்வான் தான்மான் ஆன்- இவையெல்லாம்
      எம்பெருமானைப்பற்றியே சொல்லவேண்டும். சொல்லு பாசுரங்களை

      *கோனே குறுங்குடியுள் குழகா அடியவர் தங்களுள்ளத்துளூறிய
      தேன். கூனாயதோர் கொற்றவில்லொன்று கையேந்தி. வானே மாநிலமே. தானாய
      வெம்பெருமான். அம் மானாழிப்பிரான் ஆனா னானானை.

      உண்டான் கண்டான் எண்டான் விண்டான் கொண்டான்
      மண்டான் பண்டான் – சொல்லு பாசுரங்களை
      .

      மாமலர் மங்கை மணநோக்க முண்டான். (உண்டானேழ்வையம்)
      நால்வேதம் கண்டானே * ஒரெண்டானுமின்றியே.விண்டான் விண்புக. கோயில்
      கொண்டான்” மண்டான் சோர்ந்ததுண்டேலும்* பண்டானுய்யவோர்.

      ஆசார்ய கோஷ்டியில் திருக்கச்சிநம்பி யாறுவார்த்தை
      ப்ரஸித்தமாகத் தெரியும்; ஆழ்வார்கள் கோஷ்டியில் ஆறுவார்த்தை தெரியுமா?

      தெரியும்; சொல்லுகேன் கேட்டருளாய். 1. வதுவைவார்த்தை.2-நெய்யுண் வார்த்தை. 3. வெண்ணெய்வார்த்தை 4. நடந்த நல்வார்த்தை.5-மெய்ம்மைப் பெருவார்த்தை. 6. தொலைத்தவார்த்தை. (இவற்றுக்குப் பாசுரங்கள்)
      வதுவைவார்த்தையுளேறு பாய்ந்ததும்— நெய்யுண்வார்த்தையள னை கோல்கொள்ள
      ஆய்ச்சியாகியவன்னையாலன்று வெண்ணெய்வார்த்தையுள் . சேனையை நாசஞ் செய்திட்டுநடந்த நல்வார்த்தை. செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த் மெய்ம்மைப்
      பெருவார்த்தை.* *வன்குடி மடங்கவாளமர் தொலைத்தவார்த்தை.

      இந்த ஆறு வார்த்தைகள்தானா? வேறொரு வார்த்தையுமில்லையா?

      கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல் கருநிறச் செம்மயிர்ப்பேயை
      வஞ்சிப்பதற்கு விடுத்தானென்பதோர் வார்த்தையுமுண்டு என்று பெரியாழ்வார்
      ஸாதிக்கிறார் : ஆனால் அது எம்பெருமானைப்பற்றிய வார்த்தையன்று, திருப்பாவை
      சாத்து முறையில் அங்கப்பறைகொண்ட வார்த்தை. என்றும், உபதேசரத்தின மாலையில் முன்னோர் மொழிந்த பாசுரத்தில் இது சுத்தவுபதேசபரவார்த்தை என்றும்
      சேவிப்பார் பலருளர். அப்படிப்பட்ட அபத்த வார்த்தைகள் பலவுமுண்டு,நான்றியேன்

      இரும்பு, செப்பு, வெள்ளி, வெண்கலம், பொன், தங்கம் –
      இவற்றைக்கொண்டபாட்டடி சொல்லவேணும்
      .

      இரும்பு அனன்றுண்ட நீர் செப்போது மென்முலை வெள்ளியார்
      பிண்டியார் போதியார்* வெண்கலப் பத்திரம் *பொன்போல் மஞ்சன மாட்டி.
      தங்கத்தானா மேலும்தங்கு.

      இந்த வார்த்தையைக் கேள்; இதிலுள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் பாசுரம் பாட்டடியாகவே எடுத்துச் சொல்லவேணும். “கண்ணா என்னை இசைவித்து எனக்கு உன்னுடைய திருவடி யைக் காட்டி அருளாது மண்ணில் தள்ளிய வேதனை செய்கின்றவாறு என்கொல் சொல்லு = இப்பதங்களைக்கொண்ட பாட்டடிகள் சொல்லுவாயாக.

      கண்ணா நான்முகனைப் படைத்தானே என்னை வருகவென் இசை
      வித்தென்னையுன் தாளணைக்கீழ்* எனக்கு நல்லரணை* உன்னுடைய விக்கிரமம்
      திருவடியை நாரணனை காட்டி நீ கரந்துமிழும் அருளாதொழிவாய் மண்ணில் பிறந்து மண்ணாகும் தள்ளித் தளர் நடையிட்டு* வேதனை வெண்புரி நூல்னை* செய்கின்ற
      கிகியெல்லாம்* ஆறுசடைக்கரந்தான்” என்செய்யுமூரவர் கவ்வை. கொல்லையென்பர்
      கொலோச சொல்லுவன் சொற்பொருள். ஸ்வாமிந் திருப்திதானா?

      தோட்டம் கிணறு வீடுவாசல் முற்றம் இடைகழி புழைக்
      கடை கூடம் மாடம் மாளிகை படி தூண் கம்பம் சுவர் கதவு தாம்பு அரங்கு. உரல்
      உலக்கை குடை செருப்பு துணி சிற்றாடை கூறை. கூடை, ஆடை -இவற்றுக்குப்
      பாசுரங்கள் சொல்லு பார்ப்போம்

      தோட்டமில்லவள் கிணறுமிவையெல்லாம்* உம்முயிர்வீடுடையான்
      நெறிவாசல் தானேயாய் முற்றம் புகுந்து முறுவல் கோவலிடை கழியேபற்றி” உங்கள் புழைக்கடை கூடந்தோறும் மாட மாளிகை சூழ் படியிடை மாடத்து* இரணியன்
      தூண்புடைப்ப கம்பமாகளிறஞ்சி” சுவரார் கதவின்புறமே கதவுமனமென்றும்
      தாம்பேகொண்டார்த்ததழும்பு அரங்கின் மல்லரைக்கொன்று எத்திறமுரலினோடு
      உழுவதோர் படையுமுலக்கையும் கொற்றக் குடையாக ஏந்தி நின்ற செருப்புங் கொடாதே துணிமுன்புநால செய்ய நூலின் சிற்றாடை கூறையுடுக்குமயர்க்கும்
      தொடையொத்த துளபமுங்கூடையும் பொலிந்து ஆடையுடுப்போம்

      கடல் குளம் ஏரி ஆறு கழனி சோலை பாலை- இவற்றுக்குப் பாசுரங்கள் சொல்லு
      கடல் கொண்டெழுந்தது வானம்’ திருவெள்ளக் குளத்துளண்ணா
      கோனேரிவாழுங்குருகு* ஆறெனெக்குநின்பாதமே குளனார் கழனிசூம்* திருமாலிருஞ் சோலை சுவைத்துமிழ்பாலை

      மரம்செடி.கொடி வேர் நார் பூ காய் கனி பழம் தண்டு. தாது
      தளிர்மாலை- இவற்றுக்குப் பாசுரங்கள் சொல்லு பார்ப்போம்
      .

      சேண்சினை யோங்குமரம்” செடியாயவல்வினைகள் ‘ கொடியார் மாடக் கொளூர். வேர்முதல்மாய்த்து நாராரிண்டைநாண்மலர் பூம்புனல் காவிரி காயோடு
      நீடு. கனிசேர்ந்திலங்கு* தயிர்ப்பழஞ்சோற்றொடு தண்டொடு சக்கரம் தாதிலகு பூத்தெளித்தால் தளிர்புரையுந்திருவடி * சூட்டு நன்மாலை

      ஈ எறும்பு கிரிமி நாய் நரி கழுதை யானை சிங்கம் குரங்கு
      வேங்கை ஆளி-இவற்றுக்குப் பாசுரங்கள் சொல்லு.

      ‘ ஈயினாலரிப்புண்டு மயங்கி நெய்க்குடத்தைப்பற்றியேறுமெறும்புகள்
      போல் மெல்லியலாக்கைக்கிரிமீ* நாயேன் நாய் கூழைவாலால் அரிகாண் நரியாய்* காய்சினத்தகழுதும் கதமாக்கழுதையும்*ஆறாமத யானை சிங்கமதாயவுணன்.
      *குரங்குகள் மலையை தூக்க கொலைவாய்ச்சின வேங்கைகள் ஆளியுங்கோளரியும்

      அன்னம் கொக்கு குருகு குயில் மயில் கிளி புறா குருவி கோழி
      காக்கை செம்போத்து பல்லி தேள் பாம்புநண்டு வண்டு நாரை முயல்- சொல்லுவையா?

      மென்னடையன்னம் கொக்கினங்காள் குருகினங்காள் கோனேரி வாழுங்குருகாய் குயிலாலும் வளர்பொழில் சூம் கணமாமயில்காள் மென்கிளிபோல் மிகமிழற்றும் பவளக்கொழுங்காலபைங்கால் புறவம் கரிய குருவிக்கணங்கள் கோழி
      கூ வென்னுமால் கரையாய் காக்கைப் பிள்ளாய் திருத்தாய் செம்போத்தே* பல்லியின்
      சொல்லும் சொல்லா விடத்தேளெறிந்தாலேபோல* பாம்போடொரு கூரையிலே*
      நண்டையுண்டுநாரைபேர வண்டுகளோவம்மின் கூர்வாய்நாரை * ஏரார் முயல்விட்டு*

      இப்புதிய கேள்விகளைக்கேள். இரந்து இறந்து, துரந்து
      துறந்து, பரந்து பறந்து, கரந்து கறந்து, நிரந்து நிறைந்து,= கரை கறை, குரை குறை,
      நிரை நிறை, இரை இறை, உரை உறை, திரை திறை, சொரி சொறி, பொரி பொறி
      குரு குறு, செரு செறு, மரு மறு, பொரு பொறு, தரு தறு, கரி கறி, அரி அறி,
      வேராக வேறாக,நீரா நீ ,பேரா பேற, சீரா சீறா, மாரன் மாறன் மாரி மாறி= இந்த
      வாசிகளைக்கண்டு கிடுகிடுவென்று பாசுரங்கள் சொல்லுவாயா?

      இரந்துரைப்பதுண்டுவாழி – கண்டுகோளீறந்துநின்ற பெருமாயா சரங்களைத் துரந்து-துறந்தெம்மைவிட்டவை * பரந்து பொன்னிரந்து நுந்தி-
      *பறந்தோடி கரந்தெங்கும் பரந்துளன்- பாலைக்கறந்தடுப்பேற ஏறு
      மெறும்புகள்போல் நிரந்து- நீங்காத செல்வம் நிறைந்து = கரையெடுத்த சுரிசங்கம்
      கறைய மூக்குடை *குரைகடல் கடைந்த- யானோர்குறைவிலனே* ஆநிரைமேய்க்கநிறைபுக ழேத்தியும் அன்னமிரைதேர் – இறையுன்னுமினீரே* உரைகொள்இன்
      மொழியாள்- உறைமார்பா* திரைகொள்பௌவத்து – உய்ம்மின் திறைகொணர்ந்து*
      பிளிறிச்சொரிய – சென்றணார் சொறிய பொரி முகந்தட்ட சக்கரத்தின் கோயிற்
      பொறியாலே* குருவில் மிளிர்தந்து -குறுந்தடி நெடுங்கடல் சென்று செருச்செய்யும் – பள்ளச் செறுவில் மருவுந்தமனகனமும்-திருமறுமார்பன் பொருமா நீள்படை –
      பொறுக்கொணா தருதுயரம்- தறுகண்வேழம் மறுக* கலையுங்கரியும்- கறியுங்கலத்த
      தரிசியும் அரியுருவாகி – அறிகிற்பன். வேராகவே விளையும் வீடு -வேறாக வேத்தியிருப்
      பாரை* நீராயுருகும்- வேறானார் நீறாக. பேராப்பிதற்றா-பேறாகக்கொள்வனே* சீரால
      சோதை – சீறாவெறியும் மாரனார்வரி வெஞ்சிலை -மாறனில் மிக்குமோர் தேவுமுளதே.
      அருள்மாரியரட்டமுக்கி மாறி மாறிப்பல

      நெல் அரிசி உப்பு புளி காரம் மதுரம் பருப்பு நெருப்பு அடுப்பு
      அவரை துவரை எள்கொள்ளு சோறு சாறு குழம்பு கூழ் கூட்டு நெய் பால் தயிர் நீர்
      மோர் உண்டுகளித்தேன் = கிடுகிடுவென்று பாசுரங்கள் சொல்லு.

      “வரம்பற்ற கதிர்ச்செந்நெல்* கலத்ததரிசியும்* மூழையுப்பறியாத
      தென்னும்” புண்ணில் புளிப்பெய்தால் மானாங் காரமனங்கெட* மதுரமாவண்டுபாட*
      சிறு பருப்பு நெருப்பு வேண்டிச்சென்று* பாலைக் கறந்தடுப்பேற* அவரைப்பிராயம்
      துவரைப்பிரானுக்கே காரெள்ளினுண்டை* கொள்ளென்று கிளர்ந்தெழுந்த
      நல்லதோர் சோறும்* மதுரக்கொழுஞ்சாறு* தலைக்கணத்துக்கள் குழம்பு பைங்கூழ்கள்
      கூட்டுதி ன்குரைகழல்கள் நெய்யாராழியும் பாலோட முதன்ன? சீரார்தயிர்கடைந்து *தெண்ணீர்ப்பொன்னி மோரார்குடமுருட்டி * அமுதமுண்டு களித்தேனே . ஸ்வாமீ
      ஸரிதானா ?

      குடம் சட்டி பானை அகல் கலசம் கிண்டி கிண்ணம் கடாரம்
      கடாய் குண்டான் – பாசுரங்களைச் சொல்லு கிடுகிடுவென்று.

      வாங்கக் குடம் நிறைக்கும் சட்டித் தயிரும் பானையில் பாலைப்பருகி
      அகல்கொள் வையமளந்த கலசத்தை நிறைத்தாப்போல் மலர்கிண்டியதன்மேல்*
      பிள்ளை தன்கையில் கிண்ணமேயொக்க கடாரத்தில் பூரித்து* உலகேழுங்கழியக்கடாய்
      அங்குண்டானைக் கண்டாய்ச்சியுரலோடார்க்க

      அப்பம் அவல் வடாம்தோசை வட சீடை பொரி லட்டு பேணி
      சிற்றுண்டி எள்ளுண்டை முருக்கு சீயம்.

      அப்பங்கலந்த சிற்றுண்டி* நான் அவலப்பந்தருவன் ” அன்னனைய
      பொற்கு வடாம்* விலங்கல் வேயின தோசையுமாய்* திரிகின்றது வட மாருதம். இலட்டுவத்தோடு சீடை பொரிமுகந்தட்ட கன்னலிலட்டுவத் பேணிச் சீருடை*
      அப்பங்கலந்த சிற்றுண்டி காரெள்ளினுண்டை* முருக்கிலங்குகனி “அதனால் வலிமிக்க
      சீயம்

      [முரண்தொடைக்கேள்விகள்] வாரான் வருவான், தாரான் தருவான்,
      செய்வோம் செய்யோம், ஆவோம் அல்லோம், கூறுவன் கூறேன், கூடுவன் கூடலன்,
      நாடுவன்நாடேன். பாடுவன் பாடேன்.

      காகுத்தன்வாரானால்-கை தொழவீதிவருவான் தாரான் தருமென்று- இன்று விண்ணுக்கலம் தருவானாய் நாமாட்செய்வோம்- செய்யாதன செய்யோம்.
      உற்றோமேயாவோம் யாமுமக்கேதொன்றுமல்லோம் பல்லாண்டு கூறுவனே- கூறேன் நெஞ்சு தன்னால் இனிவந்து கூடுவனே -அல்லாரொடுங்கூடலன்* நின்னடியே
      நாடுவன்-நாடேனுன்னையல்லால். *நின்புகழேபாடுவன்- பாடேன் தொண்டர்தம்மை.

      ஆடி ஓடி கூடி பாடி சாடி நாடி. சூடி வாடி, இவையெல்லாம்
      எம்பெருமானுடைய செயல்களாகவே காட்டவேணும்]

      ஆடியசைந்து ஆய்மடவாரொ காற்றில் கடியனாயோடி கூடிக்
      குரவைபிணை* குழலாலிசைபாடி பாகனைச்சாடிப்புக்கும் நாடி யென்றனுள்ளங்கொண்ட் கார்க்கோடல் பூச்சூடி வருகின்ற வருகையில் வாடிய பிள்ளை கண்ணன்

      மேலே குறித்த சந்தைகனை எம்பெருமான் செய்கையாக்கிப்
      பாசுரங்கள் காட்டினது போல் அவற்றையே பிறருடைய செய்கையாகவைத்துப்
      பாடின பாசுரங்கள் காட்டு.

      ஆடி யாடியகங்கரைந்து ஓடி யோடிப் பல பிறப்பும் பிறந்து கூடிக் கூடியற்றார்களிருந்து பாடிப்பாடியோர் பாடையிலிட்டு நாடினேன் நாடிநான் சூடுந்துழாயலங்கல் சூடி நாம் வாடினேன்வாடி *

      ாசுரத்தின் அடியில் பரீக்ஷை ; கன்றுகள் சொல்லு என்றவாறே (கன்று
      களோடச் செவியில்) என்ற பாசுரத்தைச் சொல்லநினைத்து (கன்றுகளோட்) என்று சொல்லத்தொடங்கும் போதே. பரீ கர் () அல்ல என்பரேல் கன்றுகளில்லம் புகுந்து என்னவேணும். மற்றொன்று கேண்மின். பரீக்ஷகர் (மூவராகிய) என்றவாறே மாணாக்கர் மேலே (ஒருவனை) என்று சொல்லத் தொடங்கினால்,பரீக்ஷகர் உயிரெழுத்
      தன்று என்பரேல் (முவராகிய மூர்த்தியை) என்ன வேணும். முதலது பெரியதிருமொழிப் பாசுரம். இரண்டாமது திருவாய்மொழிப் பாசுரம்.

      உ ருக எங்கு வருகிறது? உறுக எங்கு வருகிறது? என்று கேட்டார்.’உருகவைத்த குடத்தொடு’ உண்டு : ‘உறுக, கிடையாது என்றேன்.-பெரிய திருமடலில் ‘பொன்னனையார் பின்னும் திருவறுக’ என்றெடுத்துக்காட்டினார். பரமானந்தமடைந்தேன். இது ஐம்பத்திரண்டு வருடங்களுக்கு முன்பு.

      கோயில் திருமலை திருமால்கோயில் கோபுரம் தோரணம் மதி
      மண்டபம் வாவி எம்பெருமான் ஆழ்வார் எம்பெருமானார் (அல்லது) உடையவர்
      மணவாளமாமுனி பல்லாண்டிசைப்ப எஞ்ஞான்றும் வாழியரோ-இவற்றுக்குப்
      பாசுரங்கள் சொல்லி முடித்திடு

      கோயிற்பிள்ளாயிங்கே போதராயே திருமலையதுவே அடைவது திறமே . கிருத்திவந்துலகாண்ட திருமால்கோயில்” கொடியணி நெடுமதில் கோபுரம் கொடித்தோன்றுந் தோரணவாசல் கல்லுயர்ந்த நெடுமதிள் சூழ்* துன்று மணிமண்ட
      பங்கள் வாவித் தடஞ்சூம் எம்பெருமானென்செய்கேனோ* ஆசைப்பட்டாழ்வார்
      பலர் இணங்கு திருச்சக்கரத் தெம்பெருமானார் உழைக்கன்றேபோல நோக்க
      முடையவர் * பள்ளிகொள் மணவாளர்* மாமுனிவேள்வியைக்காத்து* பாண்டேன் வண்டறையுங் குழலார்கள் பல்லாண்டிசைப் எஞ்ஞான்று மெங்கு மொழிவற* வாழியரோ முழுநீர் கில் வண்ணன்.* [பரமானந்தம்; இப்போது இவ்வளவு போதும்.

      வடமொழியில் ஆகாராந்தமான பதங்கள்
      தென்மொழியில் ஐகாரவீற்றதாக மாறுமென்று நன்னூலில் கூறப்பட்டது. “ஆவீறு
      ஐயும்” என்பது நன்னூற்சூத்திரம். ஸீதா நீளா யசோதா பார்யா ஜடா கங்கா யமுநா…
      இத்தகைய வடசொற்கள் ஆயிரம் உதாரணம்.–ஸீதையை ஸீதா என்பது போல,-நப்பின்னையை நப்பின்நா என்னாலாமா?-தேவரீர் சொன்னது பிசகு. ஸீதா என்பதுதான். முதலில் ஏற்பட்டது; அது வடசொல். அதைத் தமிழ் விதிப்படி ஸீ தையென்கிறோம்.-சீதை மணளா! என்றும், சீதை வாயமுதமுண்டாய்என்றும் ஆழ்வார்கள் ஸாதிப்பது ஸீதா என்கிற ஆகாராந்தமான சொல்ஸ்வதஸ் ஸித்தமாக இருப்பதனாலே.-ஸ்வதஸ் ஸித்தமான சொல் என்றால் அது ஸம்ஸ்க்ருதச் சொல்லாக இருக்கவேணும்.-அது ஸ்வத ஆகாராந்தமாகவே யிருக்கவேண்டும். அப்படிப்பட்ட சொல் தமிழில் ஐகாராந்தமாக ஆகும்; பீடா- பீடை; சாகா-சாகை; சிகா – சிகை, நர்மதா – நர்மதை… இவைபோல்வன-ஸம்ஸ்க்ருதச் சொல்லைத் தமிழாக்கு வதுண்டேயொழிய, தமிழ்ச் சொல்லை ஸம்ஸ்க்ருதமாக்குவதென்பது ஐம்பூத்வீபே கிடையாதுணோ. அதைத் தென்னாலிராமன் ஸம்ஸ்க்ருதமென்பர்கள், நப்பின்னா என்று ஸம்ஸ்க்ருதபகம் ஸ்வதஸ் ஸித்தமாக இல்லையே. பின்னை நப்பின்னை என்றுதானே யுள்ளது. இச்சொற்களை வடமொழியில் ஆகாராந்தமாக மாற்றுவது பரிஹாஸ்யமே. சென்னையை சென்னா என்றாக்கலாமா? என்று கேட்டீரே, அதுவும் அஸம்பாவிதமே-சென்னபுரீ, செந்நாக் யபுரீ என்னலா மேயொழிய சென்னா என்னக்கூடாது.

      சென்னையில் மயிலாப்பூரை மஹிலாபுரியென்கிறார்கள். *ஒப்பவரில்லா மாதர்கள்
      வாழும் மாடமாமயிலை
      * என்ற ஆழ்வார் பாசுரம் மஹிலாபுரியென்பதற்கு வியாக்கியானமாக அமைந்தது. இதைத் தெரிந்துகொள்ளாமல்,பெண்ணையை பண்ணா என்றாக்குவது போல மயிலையை மயிலா என்றாக்கி மயிலாபுரீ என்று ஒருவர் ப்ரயோகித்தால் பரிஹாஸ்யரேயாவர்.

      எருதேழடர்த்து மணந்துகொள்ளப்பட்ட மனைவிக்கு நப்பின்னையென்பது தென்மொழித் திருநாம மென்றும்,நீளா என்பது வடமொழித் திருநாமமென்றும் தேறி நின்றது. ஆழ்வார்கள்
      எருதேழடர்த்த கதையைக் கூறுமிடங்களில் பெரும்பாலும் நப்பின்னையை வெளிப்படை)
      யாகக் கூறாது பொதுப் பெயர்களாலேயே கூறியுள்ளார்கள். “காம்பணைதோள்
      பின்னைக்கா ஏறுடனேழ் செற்றதுவும்” “பின்னைபொருட்டு ஆன்வென்றானூர் “
      என்றிங்கனேயுள்ள பாசுரங்கள் மிகச்சிலவே. “மின்னினன்ன நுண்மருங்குல் வேயேய்
      தடந்தோள் மெல்லியற்கா, மன்னுசினத்த மழவிடைகள் ஏழன்றடர்த்த மாலதிடம்”
      “கொடி பேரிடையாள் பொருட்டாக,வன்தாள் விடை யேழன்றடர்த்த ”பந்தணைந்த
      மெல்விரலாள் பாவை தன் காரணத்தால் வெந்திறலேறேழும் வென்ற வேந்தன்”
      என்றிங்கனேயுள்ள பாசுரங்கள் மிகப்பல
      . மேலேயெடுத்துக் காட்டியுள்ள பாசுரங்களில்
      நப்பின்னையென்கிற சிறப்புப்பெயர் இல்லை, பொதுப்பெயரேயுள்ளது. இருந்தாலும்
      எருதேழடர்த்தவாற்றைச் சொல்லியிருக்கையாகிற ஸம்பிவ்யாஹார பலத்தினால்
      நப்பின்னையென்கிற சிறப்புப் பொருள் கிடைத்தே தீருகின்றது. திரு மங்கையாழ்வார்
      திருவெழு கூற்றிருக்கையில் “அறுபதமுரலுங் கூந்தல் காரணம், ஏழ்விடையடங்கச்
      செற்றனை”
      என்றருளியுள்ளார். இங்கு ‘ஏழ்விடையடங்கச்செற்றனை’ என்பதற்கு
      ஏழெந்துகளைக் கொன்றாயென்று பொருள். அதற்கு முன்னேயுள்ள ‘அறுபதமுரலுங்
      கூந்தல் காரணம்’என்பதற்கு என்ன பொருளென்று விமர்சிக்கவேணும். அறுபத்
      மென்று வண்டுக்குப் பெயர். வண்டுகள் ரீங்காரம் செய்யப்பெற்ற கூந்தல் என்ற
      தாயிற்று. இச்சொல்தொடர் அன்மொழித்தொகை (பஹுவ்ரீஹீ ஸமாஸம்] பெற்றது:
      ஆதலால் வண்டுகள் முரலப்பெற்ற கூந்தலையுடையவள் என்று பொருள் பட்டு நிற்கும்.-இப்படி திருமங்கையாழ்வாருடைய திருவாக்கில் அறுபதமுரலுங் கூந்தல்
      காரணம்’
      என்று அவதரித்திருப்பதுபோல நம்மாழ்வாருடைய திருவாக்கிலும் “வம்பவிழ்
      கோதை பொருட்டா மால்விடையேழுமடர்த்த”
      என்கிற பாசுரம் அவதரித்துள்ளது.
      சொல்வடிவத்தில் வாசியுள்ளதேயன்றி கருத்தில் சிறிதும் வாசியில்லை. நப்பின்னைக்காக
      எருதேழடர்த்து வாற்றையே இவ்வாழ்வாருமருளிச் செய்கிறார். நப்பின்னையை ‘அறுபத்
      முரலும் கூந்தல்’ என்ற சொல்தொடரால் திருமங்கையாழ்வார் குறித்தனர். அப்பிராட்டி
      யையே நம்மாழ்வார் ‘வம்பவிழ் கோதை’ என்ற சொல் தொடரால் குறிக்கின்றனர். அங்கு
      எப்படி அன்மொழித் தொகையோ இங்கும் அப்படியே அன்மொழித்தொகைதான்
      (பஹுவ்ரிஹிஸமாஸமே] இதை ஒருபோதும் மறக்கலாகாது. நறுமணம் புறப்படுகின்ற
      பூமாலையையுடையவள் என்பது சப்தார்த்தம். கோதையென்கிற தமிழ்ச் சொல்லுக்குப்
      பூமாலையென்பதும், கூந்தலென்பதும் பொருள். பூமாலையென்கிற பொருளிலேயே
      பெரும்பான்மையான பிரயோகம்காண்கிறது. “வம்பவிழ் கோதைபொருட்டா” என்ப
      தற்கு பரிமள ப்ரசுரமான பூமாலையை யணிந்துள்ளவளுக்காக மால்விடையேழுமடர்த்தவ
      னென்றதாயிற்று. அவள் யாவலென்னில் நப்பின்னைப் பிராட்டியென்பது அர்த்தாத்
      ஸித்தம்.

      அல்லியம்பூமலர்க்கோதாய்- பூங்கோதையாய்ச்சி- கள்ளவீழ்கோதை-
      கோலந்திகழ்கோதை- அல்லியங்கோதை – கோதை நறுமலர் மங்கை மார்பன்- கோதைவேலைவர்க்காய் ..ஆண்டாள் திருவாக்கில் வருகிற கோதைக்கும்,
      மேலே நீர் சொன்ன இடங்களில் வருகிற கோதைக்கும் வாசியுண்டா?-நன்றாக வாசியுண்டு. ஸ்வா மி தேசிகனால் கோதாஸ்துதியில் துதிக்கப்படுகிற கோதா எ கிற ஆண்டாள் அவளுடைய திவ்யப்பிரபந்தங்களில் கோதையெனப்படுகிறாள்; மற்ற விடயங்களில் வருகிற கோதைக்கு அவளைப் பொருளாகக் கொள்வதற்கு ப்ரமேயமில்லை; கூந்தல் என்றும் மாலை யென்றும் இரு பொருள்களுண்டே: அப்பொருளில்தான் பிரயோகம். இதைத் தெரிந்து கொள்ளாமல் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் இருக்க முடியுமோ?-ஆண்டாள் தவீர மற்றையோர் திருவாக்கில் கோதையென்னுஞ் சொல் எங்குவந்தாலும்ஸரி,அதற்கு கூந்தல்
      என்றோ பூமாலையென்றோ இரண்டத்தொன்றுதான் பொருள். இதில் ஸந்தேஹமே
      வேண்டாம். கோதையென்கிற பெயர் ஆண்டாள் தவிர எந்த வ்யக்திக்கும் கிடையாது.

      கம்பர் சடகோபரந்தாதியில் கூட்டங்கள்தோறும் குருகைப்பிரான் குணங் கூறுமன்ப ரீட்டங்கள் தோறு மிருக்கப்பெற்றேம் என்றதும், உடனே “இருந்தெம் முடைய நாட்டங்கள் தோறும் புனல்வந்து நாலப்பெற்றேம் என்கிறார் : இந்தப் பாசுரத்தைக்கொண்டே கம்பர் பட்டருடைய பகவத்விஷய ப்ரவசனகோஷ்டியில் அந்வயித்திருந்தவரேயல்லது நாதமுனிகள் காலத்தவரல்லர் என்று அடியேன் அறுதி யிட்டுரைப்பது. மற்றும் பல சான்றுகளில் இதுவொரு தலையான சான்று.

      திருமங்கையாழ்வார் திவ்யதேசங்களில் தமக்குக் கிடைத்த சரவணானந்தத்தைத் தமது திருமொழியில் அருளிச் செய்துவைத்திருக்கிறார். திருக்கோவலூரில் * மண்டபமொண் தொளியணைத்தும் வாரமோத என்கிறார். தொளியென்று தெருவுக்குப் பெயர். *ரத்த்யா ப்ரதோளிர் விசிகா என்ற அமரகோசத்தில் (ப்ரதோளி) யென்பது உபஸர்க்கம் நீங்கித் தொளியென்று கிடக்கிறது. வீதிகள் தோறும் வாரமோதக் கண்டாராழ்வார். வேதத்தில் வாரஞ் சொல்லுவதென்று ஒரு ப்ரக்ரியையுண்டு: பதசர்ச்சை என்பது. இவ்வாழ்வார் தாமே தேரழுந்தூர்க்கு எழுந்தருள, அங்குக் கிடைத்த ச்ரவணானந்தத்தை ‘‘முதுநான் மறை வீதிதொறும் அலையாருங்கடல்போல் முழங்கும் தென்னழுந்தை” என்ற பாசுரத்தினால் வெளியிட்டருளினார்.-குலசேகராழ்வார் அரங்கத்தரவணையிற் பள்ளிகொள்ளுங்கோவை அந்தமிழி னின்பப்பாவோடே ஸமாநாதிகரித்து அரங்கனை அருளிச்செயல் மூர்த்தியாகவே பணித்தார்

      பெரியாழ்வார் திருமொழியில் *சீதக்கடலுள்ளமுதன்னதேவகி என்கிற திருமொழி தொடங்கி கீலைக் குதம்பை பதிகம் முடிய இருநூற்றிருபது பாசுரங்களினால் பெரியாழ்வார் காட்டியருளின க்ருஷ்ணத்ருஷ்ணையை க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வமென்று பேர்பெற்ற நம்மாழ்வாரும் காட்டிற்றிலர் *அல்வழக்கொன்றுமில்லா வணிகோட்டியர்கோன் அபிமான துங்கன்செல்வன்* என்றும் “நளிர்ந்தசீலன் நயாசலன் அபிமான துங்கன் நாடொறும் தெளிந்தசெல்வன்* என்றும் பேசும்படி தம்முள்ளத்தைக் கொள்ளைகொண்ட செல்வநம்பி
      வாழ்ந்தது திருக்கோட்டியூரிலாதலால் அந்தத் திருக்கோட்டியூரையே க்ருஷ்ணாவதார
      க்ஷேத்ரமாகச் சிந்தைசெய்து அவதாரகாலத்து ஸம்ப்ரமங்களை அற்புதமாகப் பேசி வருகையில் கிடக்கில் தொட்டில் கிழியவுதைத்திடும், எடுத்துக்கொள்ளில் மருங்கை யிறுத்திடும், ஒடுக்கிப்புல்கில் உதரத்தே பாய்ந்திடும், மிடுக்கிலாமையால் நான்மெலிந்தேன் நங்காய்!’
      என்ற பாசுரம் அவதரித்த அழகை என்சொல்லுவோம். மேற்பதிகங்களிலே “அசோதை முன்சொள்னபுற்றரவல்குலசோதை நல்லாச்சி – கற்பித்தமாற்றம் என்றாப் போலே இந்ஙனே அசோதை சொ னாள்’ என்னவேண்டியிருக்க, அவ்வண்ணம் சொல்ல மாட்டாதே * மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய் என்று யசோதையின் தாதாத்ம்பத்தை ஆழ்வார் நொடிப்பொழுதில் அடைந்த விசித்திரம் நெஞ்சால் நினைப்பரிதே. கோபஜன்மத்தை ஆஸ்தானம் பண்ணின் வீறு இதுவன்றோ அரவணையாய் ஆயரேறே!* போய்ப்பாடுடைய* தன்னேராயிரம் அஞ்சன வண்ணனை சீலைக்குதம்பை என்னுமிந்த ஐந்து திருமொழிகளும் அடைந்திருக்குமழகை பக்தர்கள் ஆயுள் முழுவதும் அநுபவிக்கலாமே. “கண்ணா! கடல்வண்ணா! நின்தந்தையும் தாழ்த்தான், கஞ்சன் கடியன், பித்தனே! உன்னைக் காப்பாருமில்லை தனியே போய் எங்குந்திரிதி ” – என்னுமிந்த வார்த்தைகள் யசோதையின் வாக்கிலே வந்ததாக “சீராலசோதை திருமாலைச் சொன்னசொல்” என்று ஆழ்வார் ஸாத்தித்தாலும் யசோதைக்கு இத்தகைய பொங்கும் பரிவு இருந்ததுண்டா? என்று அடியேன் சிந்தித்துப் பார்த்தேன் .இருந்திராதென்றே அறுகியிட்டது எல்பாவிநெஞ்சு; ஆழ்வார் தம்முடைய பொங்கும் பரிவை அசோதையின் மேலிட்டுக் காட்டினாரத்தனை யேயென்று திண்ணமாக வெண்ணுக.ஒப்புயர்வற்ற இத்தகைய பரிவன்றோ இவ்வாழ்வாரைத் தலைநீர்ப்பாட்டிலே பல்லாண்டு பாடுகையிலே மூட்டிற்று. இந்தப் பரிவேயன்றோ இவரைப் பெரியாழ்வாரென்னப் பண்ணிற்று. இதனை உள்ளபடி தெரிவிக்கின்ற உபதேசரத்தினமாலைப் பாசுரம் அப்போது ஒரு நூறு வருடங்களுக்குமுன்பு திருவவதரித்திருந்ததாகில் “கோதை சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு ஸமர்ப்பித்ததனால் பெரியாழ்வாராயினர் ” என்கிற (கோதாஸ்துதி -10) உல்லேகம் தோன்றியிராதே. ஜடாயுமஹாராஜர் யாமோஷதிமி வாயுஷ்மந் என்று மங்களாசாஸனம் பண்ணிப் பெரியவுடையாரென்று பேர்பெற்றதை நினைப்பது.“மங்களா சாசனத்தில் மற்றுள்ளவாழ்வார்கள் தங்கள் ஆர்வத்தளவு தான்ன்றிப்-பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர்ப் பட்டர்பிரான் பெற்றன் பெரியாழ்வாரென்னும் பெயர்.

            ——————-

            ஸ்ரீராமாநூஜன் 242-1969 பிப்ரவரி கீலக மாசிமீ

            ஸ்ரீமத் பராங்குச பதாம்புஜப்ருங்கராஜம்*-நம்மாழ்வார் திருவிருத்தத்தில் வண்டுகளை விளிக்கும்போது வீசுஞ்சிறகால் பறத்தீர் ” என்னும் பாசுரத்தில் விண்ணோர் பிரானார் மாசில் மலரடிக்கீழ் எம்மைச் சோவிக்கும் வண்டுகளே என்றருளிச்செய்துள்ளார். எம்பெருமான் திருவடிகளிலே அஸ்.மதாதிகளைக்கொண்டு சேர்க்குந்திறமை எம்பெருமானார்க்கேயுள்ளது.-வண்டுகள் சிறகால் பறப்பது போல ஸ்வாமி யெம்பெருமானார் ஞானமனுட்டான மென்னுமிவற்றால் உயர்கதியடை பவர். *உபாப்யாமேவ பக்ஷாப்யாமித்யாதி-வீ சுஞ்சிறகால் பறத்தீர் * என்றவுடனே “விண்ணாடும் நுங்கட்கு எளிது என்றமையால் பரமபதமும் ஸ்வாமி யெம்பெருமானார்க்கு அதீனமான பொருள் என்பது காட்டப்பட்டது. ஸ்வாமியின் திருவடி ஸம்பந்தம் பெழுதவர்கள-்-வண்டுகளோ வம்மின், நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூவுண்டுகளித்துழல்வீர் “ என்பது. பூக்களானவை நீரிலும் நிலத்திலும் மரங்களிலும் புஷ்பிக்குமவை. தாமரை செங்கழுநீர் முதலானவை நீர்ப்பூக்களாம். மல்லிகை முல்லை முதலானவை நிலப்பூக்களாம். வகுளம் பாதிரி பாரிஜாதம் முதலானவை மரப்பூக்களாம். இவற்றில் தேனைப்பருகும் வண்டுகள்.
            எம்பெருமானார்பக்ஷத்திலோ வென்னில்; நீர்ப்பூ என்பது வீராப்திசாயியான வ்யூஹ
            பகவானைச் சொல்லி அவனிடத்துத் தோன்றிய பாஞ்சராத்ர சாஸ்த்ரங்களைக் கூறும்;

            நிலப்பூ என்பது நிலத்திலவதரித்திருந்த ஸ்ரீராமக்ருஷ்ணாதி விபவாவதாரங்களையும், நிலத்தில் நித்யமாக அமர்ந்திருக்கின்ற அர்ச்சாவதாரங்களையுஞ் சொல்லி, வி வாவதாரபரங்களான இதிஹாஸ புராணங்களையும் அர்ச்சாவதாரபரங்களான திவ்ய ப்ரபந்தங்களையும் அநுபவித்துக் களிப்பவர் ஸ்வாமி யெம்பெருமானார் என்றவாறாம் * மரத்திலொண்பூ வென்று எட்டாநிலத்திலுள்ள பரமபதநாதனைச் சொல்லி வேதவேத்யே பரே பும்ஸி என்கிறபடியே பரம புருஷ ப்ரதிபாதகமான வேதங்களைச் சொல்லி அவற்றையநுபவிப் பவரெம்பெருமானார் என்று காட்டும்.

            வண்டுக்கு சஞ்சரீக மென்று. பெயர்; எப்போதும் திரிந்து கொண்டே யிருப்பது என்று பொருள், ஸ்வாமி யெம்பெருமானாரும் *ஸ்ரீரங்கம் கரிசைலமஞ்ஜ
            கிரிம் தார்ஷ்யா த்ரிஸிம்ஹாசலௌ ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீநாராயணம்
            நைமிசம், ஸ்ரீமத் த்வாரவதீ ப்ரயாக மதுராயோத்யாகயாபுஷ்கரம் ஸாலக்ராமகிரிம்
            நிஷேவ்ய ரமாதே ராமா நு ஜோயம் முனி
            : என்கிறபடியே * உலகமேத்துங்கண்டியூரரங்கம்
            மெய்யம் கச்சி பேர்மல்லை யென்றுமண்டி பதியேபரவித் தொழுந்தொண்டராயிருந்தவர்.

            வரிவண்டு தேதெனவென்றிசைபாடும் என்றும்,தென்னாதெனாவென்று வண்டுமுரல் என்றும் ஆழ்வார்கள் அருளிச்செய்தபடியே தே, தே என்று முரலும்
            வண்டுகள். (அஹங்கார) மமகாரமுள்ளவர்கள் மே மே என்பர்கள். அது நீங்கினவர்கள்
            தே தே என்பவர்கள். தவ, தவ. என்றபடி வெண்பல் தவத்தவர்
            ” என்ற திருப்பாவைப்
            பாசுரத்தில் (தவ, தவ) என்பவர்கள் தவத்தவர்களாக விவக்ஷிதர்களாதலால் அங்ஙனே
            மமகாரமற்றவர்களில் தலைவர் ஸ்வாமி யெம்பெருமானார் என்க.திருமங்கையாழ்வார் திருநறையூர்ப் பதிகத்தில் *வம்பவிழும் சண்பகத்தின் வாசமுண்டு மணிவண்டு வகுளத்தின் பலர்மேல்வைகு’ என்கிற பாசுரத்தினால் வண்டுமகிழமலர்மேல் வைகியிருப்பதாகப் பாடினர். ஸ்வாமி யெம்பெருமானாரோவென்னில்;
            *யஸ்ய ஸாரஸ்வதம் ஸ்ரோதோ வகுலாமோதவாஸிதம் (யதிராஜஸப்ததி] என்கிற
            படியே மகிழமலரின் நறுமணங்கமழும் திருவாய்மொழியில் வைகியிருப்பவர். நூற்றந்தாதியயில் *உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகந்தொறும், திருவாய்மொழியின் மணந்தருமின்னிசை மன்னுமிடந்தொறும் புக்குநிற்குமிராமானுசன்’ என்ற பாசுரம் இங்கு
            அநுஸந்திக்கவுரியது.

            வண்டுகள் சோலைகளிலும் தடாகத்திலும் மொய்த்துக்கொண்டிருக்கும்.
            எம்பெருமானாராகிற வண்டு *வண்டின முரலுஞ்சோலை மயிலினமாலுஞ்சோலை
            கொண்டல் மீதணவுஞ்சோலை குயிலினங்கூவுஞ்சோலை அண்டர்கோனமருஞ்சோலை
            யணிதிருவரங்கத்திலும், தாமரைநீள் வாசக்கடமென்றும், தயரதன்பெற்றமரதகமணித்
            தடமென்றும் ப்ரஸித்தமான ஹரிஸரஸ்ஸிலும்
            மொய்த்துக்கொண்டிருந்தமை ப்ரஸித்தம்.வண்டு எங்குப் புகவேணுமானாலும் தடையொன்றுமின்றியே புகும்.
            எம்பெருமானுடைய கர்ப்பக்ருஹத்தினுள்ளும் திருமேனியின் மேலும் தட்டுத்
            தடங்கலின்றியே புகும். எம்பெருமானாராகிற வண்டும் அப்பனுக்குச் சங்காழி
            யளித்தருளும் பெருமாள்* என்னும் மூதுரையின்படியே திருவேங்கடமுடையானுக்குத்
            திருவாழி திருச்சங்கு அளித்தருள நுட்பமானவழியாலும் நுழைந்தமை
            ப்ரஸித்தம்.

            முதன் முதலாக அடியேன் சென்னையில் திருப்பாவை யுபந்யாஸம் தொடங்கினது 1980 ஆம் ஆண்டில்.-ருஜவாயிருக்குந்தன் மைஆர்ஜவமெனப்படும்.அதாவது மநோவாக்காயங்கள் [மனமொழிமெய்கள்] வெவ்வேறுன் חיר டிருக்கையறிக்கேஒருபடிப்பட்டிருக்கை. இதற்கு எதிரிடையானகுணம் கெளடில்யமெனப்படும்.மனம் செய்கைஉரை ஒன்றிகில்லாமை கெளடி ல்யமாகும். *மநஸ்யந்யத் வசஸ்யந்யத்கர்மண்யந்யத் துராத்மநாம், மநஸ்யேகம் வசஸ்யேகம் கர்மண்யேகம் மஹாத்மநாம் என்றதை இங்கு நினைப்பது. * கரணத்ரஸாரூப்யம் இதி ஸௌக்க்யரஸாயநம்* என்றார்வேதாந்த தேசிகன். ஸத்யத்திற்காட்டிலுமுயர்ந்தது ஆர்ஜவமென்கிறவிது.

            மூன்று மூன்று விஷயங்களாக எடுத்து அடுக்கிப் பேசினவை . 1. தத்வம் ஹிதம் புருஷார்த்தம். 2. சித்து அசித்து ஈச்வரன்-3. வேதம் இதிகாசம் அருளிச்செயல். 4. பரத்வம் அவதாரம் அர்ச்சை 5-மானஸம் வாசிகம் காயிகம். 6. கர்மம் ஞானம் பக்தி – ஜனகர் ஜடபரதர், ப்ரஹ்லாதன். 7. பூ: புவ: ஸுவ: 8. திருமந்த்ரம் த்வயம் சரமச்லோகம். 9. வதரி, விஷ்ணுலோகம் திருத் தேர்த்தட்டு. 10 தாரகம் போஷகம் போக்யம் உண்ணுஞ்சோறு பருகும்நீர் தின்னும் வெற்றிலை 11. ஸ்வரூபம் உபாயம் உபேயம். 12. பராங்குசர் பரகாலர் யதிவரர் 13.ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் . 14. ஆண்டாள் மதுரகவி எதிராசன்.15.பாலேப் தமிழர் இசைகாரர் பத்தர். 16. நின்றவாறு இருந்தவாறு கிடந்தவாறு -ஊரகம் பாடகம்-வெஃகணை – ஸ்ரீவைகுண்டம் வரகுணமங்கை திருப்புளிங்குடி. 17. அநந்யார் ஹ சேஷத்வம் அநாயசரணத்வம் அநந்யபோக்யத்வம். 18. முமு க்கள் முக்தர் நித்யர். 19. மடி தடவாத சோறு சுருநாறாதபூ சுண்ணாம்புபடாதசாந்து – விதுரர் மாலாகாரர் கூனி..

            ”இத்தம் சதமலங்காரா ” என்றபடி நூறு வகையாகவுள்ள அர்த்தாலங்காரங்களில்
            ஸமாஸோக்தி, அப்ரஸ்துத ப்ரசம்ஸை, ப்ரஸ்துதாங்கிரம் என்கிற மூன்று அலங்
            காரங்களைப் பற்றி முன்னம் பேசுகிறோம்.-“ஸமாஸோக்தி: பரிஸ்பூர்த்தி: ப்ரஸ்துதே அப்ரஸ்துதஸ்ய சேத்” என்பது ஸமாஸோக்தியலங்காரத்தின் லக்ஷணம். கவி ப்ரக்ருதமான வொரு செய்தியைக் குறித்துப் பேசுகையில்சொற்செறிவால் அப்ரக்ருதமான ஒரு செய்தியும் தோன்ற நின்ல் அங்கு ஸமாஸோக்தியலங்காரமாகும். ”முன்புஒருபுறம்மேடா
            யிருந்த இடமெல்லாம் இப்போது பள்ளமாயிற்று; மற்றொருபுறம் பள்ளமாயிருந்த
            விடமெல்லாம் மேடாயிற்று” என்கிறானொருவன். இவ்விஷயம் அவனுக்குப்ரக்ருதம்; இதிலிருந்து அப்ரக்ருதமான வொரு விஷயம் தோன்றுவது காணலாம்; அதாவது. ‘தனிகனாயிருந்தவன் தரித்ரனாகிறான்; தரித்ரனாயிருந்தவன் தனிகனாகிறான்‘ என்று. ஆகவே இங்கு ஸமாஸோக்தியலங்காரம்.—அப்ரஸ்துதப்ரசம்ஸை.”அப்ரஸ்துதப்ரசம்ஸா ஸ்யாத்ஸா யத்ர ப்ரஸ்துதாச்ரயா” என்பது இவ்வலங்காரத்தின் லக்ஷணம். பிரக்ருதமான வொரு செய்தியைத்தோற்றுவிப்பதற்காகவே அப்ரக்ருதமான வொரு செய்தியைக் கவி வருணிப்பது அப்ரஸ்துதப்ரசம்ஸாலங்காரமாகும். ‘பறவைகளில் மழைத்தெய்வத்தையன்றி மற்றெவரையும் எதிர்பாராத சாதகபக்ஷிதான் சிறந்தது‘ என்றன் ஒரு கவி அவனுக்கு இவ்விஷயம் விவக்ஷிதமன்று; ‘எம்பெருமானிடத்திலன்றி மற்றெவரிடத்திலும் பல்லைக் காட்டாத பரமைகாந்தியே சிறந்தவன்’ என்பதைச் சொல்ல விரும்பி, . ப்ரபந்நேசாதகந்யாய:* என்ற மூதுரையை மனத்திற்கொண்டு அப்ரக்ருதமான சாதகபக்ஷி ப்ரசம்ஸையைச் செய்தான் கவி. ஆகவே இங்கு அப்ரஸ்துதப்ரசம்ஸை.–ப்ரஸ்துதாங்குராலங்காரம்.-“ப்ரஸ்துதேந ப்ரஸ்துதஸ்ய த்யோதநே ப்ரஸ்துதாங்குர!” என்றுஇவ்வலங்காரத்திற்கு லக்ஷணம் கூறப்பட்டுள்ளது. கவி வருணிப்பதும் ப்ரக்ருதமான செய்தி; அதிலிருந்து தோற்றுகின்ற வொரு செய்தியும் ரகருதமானது;இப்படிப்பட்டவிடத்தில் ப்ரஸ்துதாங்குராலங்காரமாம். இநற்கு சந்த்ராலோகத்தில் காட்டியுள்ள உதாரணம் யாதெனில்; * கிம் பருங்க! ஸத்யாம் மாலத்யாம் கேதக்யா கண்டகேத்தயா ‘ என்பது. இது வண்டை நோக்கி ஒரு காமினிசொல்லுவது.வண்டே! நல்ல மாலதீபுஷ்பமிருக்க முள் நிறைந்த தாழையைஏன் விரும்புகிறாய்?’‘ என்பது இதன் பொருள். இதில் வாச்யார்த்தத்திற்குமேல்வயங்கயார்த்தமொன்றுகண்டறியவேணும். வாசயார்த்தம் தெரிந்ததே.வயங்க்யார்த்தம் அபாயமற்ற மனைவியிருக்க அவளைவிட்டு அபாயம் மிக்க வேற்றுமாதரிடத்தில் விருப்பங்கொண்ட கணவனை நோக்கிக் காதலி சொல்லுவதாம்.
            ஆக இவ்விரண்டு பொருளும் ப்ரக்ருதமே யென்றும், ஒன்று ப்ரக்ருதம்,மற்றென்று அப்ரக்ருதம்’ என்பது கிடையாதென்றும் கொள்ளப்படுகிறது.

            முத்ராலங்காரமென்றும் ஒன்றுண்டு-ச்யார்த்த ச நம் முத்ரா ப்ரக்ருதார்த்தபரை: பதை: என்பது அதன் லக்ஷணம். சிலசில பதங்களையிட்டு கவி ஸூசிப்பிக்க நினைத்த (வேறு ) அர்த்தத்தை ஸுசிப்பித்தல் முத்ராலங்காரமென்றபடி. ஒருவரை ஸ்துதிசெய்துகொண்டு போகையில் நக்ஷத்ரத்தையோ ஸம்வத்ஸரத்தையோ வருத்தத்தையோ ஸூசிப்பிக்க விரும்பி அதற்கு அநுகுணமான பதத்தையோ பதங்களையோ ப்ரயோகிப்பர்கள் கவிகள்; அங்கு முத்ராலங்காரமாகும். திருப்பாவையில் இவ்வலங்காரமும் பலவிடங்களில் நன்கு தோன்ற நின்றது.-பலவிடங்களில் நீராட்டம் ப்ராஸ்தாவிக்கப்படுகிறது. ஆய்ச்சிகள் நீராடுமிடமான நீர்நிலைக்குச் சென்றார்க ளென்று கண்டிலோம். வியாக்க்யாதாக்களான பெரியவாச்சான்பிள்ளை முதலான பூருவாசாரியர்கள் ‘நீராடவென்னுமித்தால் இவர்கள் நினைக்கிறது க்ருஷ்ணஸம் ச்லேஷம். தமிழரும் கலவியைச் சுனையாட லென்றார்கள். ஏஷ ப்ரஹ்மப்ரவிஷ்டோஸ்மிக்ரீஷ்மே சீதமிவ ஹ்ரதம் … என்றும் சொல்லிற்றிறே” என்றருளினர். இதுவன்றியும், ஆண்டாள் தன்னை நிர்தேசிக்குமிடங்களிலெல்லாம் * பட்டர்
            பிரான் கோதை என்றும் * புதுவையர்கோன் விட்டுசித்தன்கோதை * என்றும்
            தனக்கு ஆசார்யஸம்பந்தத்தை நிரூபகமாக்கியே நிர்தேசித்தவளாகையாலே
            தான் ஆசார்யாபிமானத்தில் பழுத்தவளென்பதைப் பாசுரந்தோறும் காட்டியிருப்
            பதுங்காண்கி ோம்.
            நீராட என்னும் ஸ்ரீஸுக்தியாலே கரசரணஸரோஜே காந்தி மந்நேத்ரமீநே ச்ரமமுஷி புஜவீசிவ்யாகுலே அகாதமார்க்கே ஹரிஸரஸி விகாஹனம் தெரிவிக்கப்படுவதுபோல, (திருவிருத்தத்தில்) காலை நன்ஞானத்துறை படிந்தாடிக் கண்போது செய்து * என்று ஆழ்வாரருளிச்செய்தபடியே ஞானத்துறையான ஸதாசார்யத்துறையில் படிந்து குடைந்தாடுவதும் தெரிவிக்கப்படுகிறது. அதற்கும் அநுகுணமாகவேயன்றோ பதப்ரயோகங்கள் அற்புதமாக அமைந்துள்ளன. வாய்திறக்கும்போதே மார்கழி யென்று தொடங்கின ஆண்டாளின் உட்கருத்தை உய்த்துணரவேணும்-மார்கழி என்கிற இது மார்க்க சீர்ஷ மென்ற வடசொல்லின் விகாரம்.
            மிருக சீர்ஷ நக்ஷத்திரத்தோடு கூடிய பெளர்ணமாளியுள்ள மாதம் மார்க்கசீர்ஷ
            மாஸம் என்றபடி. மாஸப்பெயர்கள் ஸௌரமாநரீதியிலும் சாந்த்ரமாநரீதியிலும் வழங்கப்படுகினறன. மேஷம் விருஷபம் மிதுநம் இத்யாதி வயபதேசங்கள் ஸௌரமாநரீதி. சைத்ரம் வைசாகம் ஜ்யேஷ்டம் இத்யாதி வ்யபதேசங்கள்சாந்த்ரமாநரீதி.சித்திரை வைகாசி இத்யாதிகளான தமிழ் வழக்குக்களும் சாந்தரமா நஸம்ஜ்ஞையையே அநுசரித்தவை; சித்ரா நக்ஷத்ரமும் பெளர்ணமாஸியும்ஒன்று கூடினால் சைத்ரம்; விசாகா நக்ஷத்ரமும் பௌர்ணமியும் ஒன்று கூடினால்வைசாகம். மேல் ஒவ்வொன்றையும் இப்படியே பார்த்துக் கொள்வது. இவ்வகையில், மிருகசீர்ஷ நக்ஷத்ரமும் பெளர்ணம் ஒன்று கூடினால் மார்க்கசீர்ஷமெனப்படுகிறது. நக்ஷத்ர திதிகளின் வருத்தி ஹ்ராஸங்களுக்கு ஏற்ப[நாழிகையேறுதல்குறைதல்களுக்குத் தகுதியாக ] முன் நக்ஷத்ரமோபின் நக்ஷத்ரமோ (பெளர்ணமியோடு) கூடு தலுமுண்டு. அதைப்பற்றிச் சிந்தை வேண்டா மார்க்கசீர்ஷமென்ற
            வட சொல்லின் பொருளிலேயே மார்கழி யென்ற தமிழ்ச்சொல்போந்ததென்று
            நிரூபிக்கப்பட்டதாயிற்று. இப்பொருள் தவிர மற்றொரு பொருளும் மார்க்கசீர்ஷமென்னுஞ் சொல்லுக்கு ஸம்பாவிதமே. அதாவது, (மார்க்க- சீர்வு) என்றுஇரண்டுசொல்வடிவங்களாகக் கொண்டு மார்க்கங்களில் தலையானது என்று கொள்வது.சீர்ஷமென்று தலைக்குப் பெயர். மார்க்கமென்றது உபாய மென்றபடி,உபாயங்களில் தலையானது என்றதாயிற்று. கர்ம ஜ்ஞான பக்தி ப்ரபத்திகளுக்கும்மேலே ஆசார்யாபிமானம் என்பது தலையான உபாயமாருக்கும்.*சுொல்லை யரக்கியை மூக்கரிந்திட்டகுமரனார் சொல்லும் பொய்யானால், நானும்பிறந்தமை பொய்யன்றே என்பது ஒருபாசுரம். நல்லவென் தோழி ! நாகணைமிசை நம்பரர், செல்வர் பெரியர் சிறுமானிடவர் நாம் செய்வதென்? வில்லிபுதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை, வல்லபரிசுவருவிப்பரேல் அது காண்டுமே என்பது மற்றொரு பாசுரம். இவ்விரண்டு பாசுரங்களினாலும் ஆண்டாள் தனக்கு ஆசாரியன் வழியாகவே பேறு என்னுமிடத்தைஅறுதியிட்டிருக்கின்றாள். கொல்லையரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் – சக்ரவர்த்திதிருமகனார்; அவருடைய சொல்லாவது “நத்யஜேயம் கதஞ்சந இத்யாதிகள்;அவை பொய்யானாலுங் கூட, [நானும் பிறந்தமை பொய்யன்றே நான் பெரியாழ்வார் வயிற்றிற் பிறந்தது பொய்யன்றே, எனக்குண்டான ஆசார்யஸம்பந்தம் பழுதாய்விடுமோ? ஒருகாலுமாகாது என்றபடி. இனி, வில்லிபுதுவைவிட்டுசித்தர் தங்கள்
            தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அதுகாண்டுமே”
            என்றபாசுரம் ஸ்ரீவசநபூஷணத்தின் முடிவில் ஆசார்ய நிஷ்டைக்குச் சார்பாக உதாஹரிக்கப் பட்டுள்ளது.-அங்கு மணவாள மாமுனிகளின் வியாக்சியானம் ஸேவிப்பது ஆகவிப்படி ஆண்டாள் கடைப்பிடித்த சரமோபாயத்தையே திருப்பாவையில் உயிர்நிலையான பொருளாக வைத்துப் பேசுகி ாள். அதற்கு ஸூசகம் மார்க்க-சீர்ஷ பதபர்யாயமான மார்கழி என்னும் முதற்சொல்.-வா தேவ சப்தத்திற்கு தத்தித வருத்தியாலே வஸுதேவாத்மஜனென்னும் பொருள் தேறியிருக்கவும் பட்டர் வாஸு’, தேவ என்கிற பதங்களுக்கு ஸமாஸமாகவுங் கொண்டு பாஷ்யமிட்டது போல்,இங்கும்,மார்க்க – சீர்ஷஎன்கிற பதங்களு கு ஸமாஸமாகக்கொள்வதில் குறை யொன்று மில்லை யென்க.

            நாராயணனே நமக்கே பறைதருவான் * என்று ஸ்பஷ்டமான சொல்லை யிட்டுத்ொடங்கி வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை * என்று ஸ்பஷ்டமான சொற்களையிட்டுத் தலைக்கட்டியிருக்க ஆசார்ய பரமான அர்த்தத்தை எப்படி ஏறிடக்கூடும்! என்று திகைக்கவேண்டா; ஸா ாந் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்யமயீம் தநும், ம நாந் உத்தரதே லோகாந் காருண்யாத் சாஸ்த்ர பாணி நாக என்றும், * பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து என்றும்,*சேமங்குருகையோ செய்ய திருப்பாற்கடலோ, நாமம் பராங்குசமோ நாரணமோ?தாமம். துளவோ வகுளமோ தோளிரண்டோ நான்குமுளவோ பெருமானுனக்கு? என்றும் இங்ஙனேயுள்ள பல பிரமாணங்களை யநுஸந்தித்தால் ஏறிட்டுரைக்கும் கிலேசம் சிறிதுமில்லையென்றுணரலாம்-வங்கக் கடல்கடைந்த வென்கிற உபஸம்ஹாரத

            திற்குங் கேளீர். (வங்கக்கடல் கடைந்த ] ச்ருதிஸாகரமும் த்ராவிட வேதஸாகரமுமாகிற கடல்களைக் கடைந்தவர் ஆசாரியர். இங்கே ‘ மறைப்பாற் கடலைத் திருநாவின் மந்தாத்தால்
            கடைந்து, துறைப்பால்படுத்தித் தமிழாயிரத்தின் சுவையமிழ்தம், கறைப் பாம்பணைப் பள்ளியான் அன்பரிட்டங் களித்தருந்த நிறைப்பான் கழலன்றிச் சன்மவிடாய்க்கு நிழலில்லையே
            * என்ற பிள்ளைப்பெருமாள் பாசுரமுணரத்தக்கது.
            [மாதவனை]மஹாதபஸ்வியென்றபடி.(கேசவனை ] குதிரை வடிவங் கொண்டுவந்த
            கேசியென்னு மஸுரனொருவனைக்கொன்று கண்ணன் கேசவனாயினன். இந்திரியங்களாகிற பல குதிரைகளை நிரஸித்து ஆசாரியர் இத்திருநாமம் பெறுவர்
            ஜிதேந்த்ரியரென்கை
            . இப்படிப்பட்ட ஆசார்யரைப்பணிந்தவர்கள்யாரென்னில்;
            (திங்கள் திருமுகத்துச் சேயிழையார் ] ஆசார்ய ஸந்நிதானத்திலிருந்து கரஹிக்கப்பட்ட தாபஹரங்களான அர்த்தங்களினால் ஸௌம்யமான திருமுகமண்டலத்தை
            யுடையவர்களாய் ஆத்ம குணங்களாகிற பூஷணங்களாலே பூஷிதராகப் பெற்றவர்கள்.கோபிகள் கண்ணனிடத்திலே பேறுபெற்றப்போலே சிஷ்யர்கள் ஆசார்ய
            ஸந்நிதியிலே பேறு பெற்றார்களென்க
            . ஆக இவை ஸ்தாலீபுலாகந்யாயேந
            தெரிவித்தவத்தனை வேதமனைத்துக்கும் வித்தாகுங் கோதை தமிழ் ஐயைந்து மைந்து மறியாத மானிடரை வையஞ்சுமப்பதும் வம்பு” என்று துணிந்து கூறும்படியான பெருமை வாய்ந்த திருப்பாவையில் தோண்டத் தோண்டச் சுரக்கும் பொருள்கள் அபரிமிதமாகத் திகழ்வதுபற்றியே எம்பெருமானார் திருப்பாவை ஜீயர்என்று பரஸித்தியுண்டாம்படி இதிலே யீடுபட்டார். * நாயகனாய் பாசுரத்தில் ஒவ்வொரு சொல்லும் முத்ராலங்காரரீ தியில் எம்பெருமானாரை நிஸ்ஸந்தேஹமாக நினைவூட்டுமது.

            [நாயகனாய்நின்ற] ஆசார்ய கோஷ்டியில் நடுநாயகமாக நிற்பவர் எம்பெருமானார் என்று காட்டுகிறபடி. ”அமுநா தபநாதிசாயி பூம்நா யதிராஜேந நிபத்த நாயகஸ்ரீ:?” என்ற யதிராஜ ஸப்ததிஸுக்தியும் காண்க.[நந்தகோபன்.] எம்பெருமானைப் புத்திரனாகப் பெற்ற விஷயத்தில் எம்பெருமானார்க்கு நந்தகோபனோடு ஸாதர்மியம். யதிராஜ ஸம்பத்குமாரனென வழங்கப்படுகிற செல்வப்பிள்ளையை.க்ருஷ்ணகிசோர ஸ்தானீயனாகக் கொள்க. [உடைய] ஸ்வாமிக்கு உடையவரென்று வழங்குந் திருநாமத்தை ஸ சிப்பித்தபடி. (கோயில் காப்பான்) கோயிலென்கிற சொல்திருவரங்கம் பெரிய கோயிலை மட்டும் சொல்லுவதாகவுங் கொள்ளலாம்; மற்றும் பல கோவில்களையும் சொல்லுவதாகவுங் கொள்ளலாம்.

            செல்வம் முற்றும் திருத்திவைத்தான் வாழியே * என்றும் ஸ்ரீமந் ஸ்ரீரங்கச்ரிய மநுபத்ரவாம் அநுதிநம் ஸம்வர்த்தய என்றும் சொல்லுகிறபடியே திருவரங்கச் செல்வத்தைக் காத்தருளினவரென்கை மன்னிய தென்னரங்காபுரி மாமலைமற்று முவந்திடுநாள் * என்கிறபடியே ஸகல திவ்ய தேசங்களையும் உத்தரிப்பித்தவர் ஸ்வாமியே யாதலால் கோயில்களைக் காத்தருளினவரென்பதும் பொருத்தமே. (கொடித்தோன்றுந் தோரண வாசல் காப்பானே!] * கொடியணி நெடுமதில் கோபுரம் குறுகினர் * என்றும் * நெடுவரைத் தோரணம் நிறைத்தெங்குந்தொழுதனருலகே ‘ என்றும் சொல்லுகிறபடியே கொடியும் தோரணமுமான வாசல்- பரமபதவாசல், அதுதன்னையும் ஸ்வாமி யெம்பெருமானார் தம்முடைய ஆளுகையிலே வைத்துக் கொண்டிருப்பவரென்கை.எம்பெருமானார் திருவருளைப் பெருதவர்களுக்கு அந்தவாசலிற்புகுவது அரிது என்கிற ப்ரஸித்தியைக் காட்டினபடி. [மணிக்கதவம் தாள் திறவாய்] மணியாவது ரத்னம். நவரத்னமென்று சொல்லப்படுவதனால் ஒன்பது ரத்தனங்கள் என்று ப்ரஸித்தம் . நவரத்னம் போன்ற ஒன்பது திவ்யகரந்தங்களை ஸ்வாமிபணித்தருளினார். ஸ்ரீபாஷ்யம்,வேதாந்த தீபம் வேதாந்த ஸாரம், வேதார்த்தஸங்க்ரஹம்,கீதாபாஷ்யம், சரணகதி கத்யம் ஸ்ரீரங்ககத்யம், ஸ்ரீவைகுண்டகத்யம், நித்யம் என்று ஒன்பது திவ்ய கரந்தங்களையே இங்கு மணிக்கதவ மென்கிறது. கதவு எப்படி பதார்த்தங்களுக்கு ரக்ஷகமோ அப்படியே இந்த திவ்ய கரந்தங்களும் மறைப் பொருள்களுக்குச் சேமக் காப்பாக அமைந்தவை யாதலால் கதவென்றது மிகப்பொருத்தம்.(கதவு, கதவம்-இவை பர்யாயமே.) இந்த கரந்தங்களிலுள்ள பொருள்களை நாங்கள் அநுபவிக்கும்படி செய்தருளவேணுமென்பது தாள் திறவா யென்றதன் கருத்து. “ஆயர்சிறுமியரோ க்கு மணிக்கதவம்தாள் திறவாய்” என்று அந்வயிப்பது. அறிவிலிகளான எங்களுக்குப் புரியும்படி யருளிச் செய்யவேணு மென்கை

            மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் ] எம்பெருமான் தன்னுடைய சாஸ்த்ரங்களிலே முன்னமே தேவரீரைப்பற்றிச் சோதிவாய் திறந்துபணித்துள்ளானென்று கருத்து. கலௌ ராமாநுஜஸ் ஸ்ம்ருத: * கலெள கக்சித்பவிஷ்யதி * உபதேக்ஷயந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்வதர்சிந: * இத்யாதிப்ரமாணங்களை இங்கே அநுஸந்திப்பது.

            லக்ஷ்மீ: புருஷகாரத்வே நிர்திஷ்டா பரமஷிபி: இத்யாதி பகவச்சாஸ்த்ரவசனங்களில் மலிந்துள்ளது.-ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் பாடலாகப் பெரியாழ்வார் திருமொழியில் ஒரு
            பாசுரமும், நாச்சியார்திருமொழியில் ஒரு பாசுரமுமேயுள்ளது. பெரியாழ்வாரருளிய பாகரத்தில் ஆண்டாள் பெருமையும், ஆண்டாளருளிய பாசுரத்தில்பெரியாழ்வார் பெருமையும் [வ்யஞ்ஜநாவருத்திமுறையில்] அறியக்கிடப்பதுஆய்ந்துணரத்தக்கது. பெரியாழ்வார் வில்லிபுத்தூரைப்பாடின பாசுரம் “மின்னனையநுண்ணிடையார் விரிகுழல்மேல் நுழைந்த வண்டு. இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் ” என்பது. இங்கு கட்கண்ணோடு உட்கண்ணையும் செலுத்தவேணும்.-மின்னனைய நுண்ணிடையார்என்று க்ருசோதரியென்றேற்றம் பெற்ற ஸ்த்ரீயைச் சொல்லுகிறது; ஸாமா ய நாமமான விதனை விசேஷ நாமமாகக்கொண்டு ஆண்டாளே இங்கு விவக்ஷிதையெனக்கொள்க. அவளுடைய குழல்மேல் ஒரு வண்டு நுழைந்ததாம். திருவாய்மொழியில் தூவியம்புள்ளுடைத் தெய்வவண்டு என்னப்பட்ட எம்பெருமானாகிற வண்டு காதல் கொண்டது என்கை. கூந்தலா
            னது வண்டை யிழுக்கும்; இவளோ அலகவி நிஹிதாபிஸ் ஸ்ரக்பிராக்ருஷ்டநா தா.

            நாச்சியார் திருமொழியில் *மென்னடையன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் என்கிற பாசுரம் ஆண்டாள் வில்லிபுத்தூரைப் பாடினது. இதில்ஹம்ஸவ்ருத்தாந்தம் கூறப்படுகின்றது. அன்னமதாயிருந்து அங்கு அறநூ லுரைத்த என்றார் கலியன். பின்னிவ்வுலகினில் பேரிருள் நீங்க அன்று அன்னமதானானே அருமறை தந்தானே என்றார் பெரியாழ்வார் தாமே. இருள் நீங்க வேதமுரைக்கத் தோன்றிய அவதாரம் ஹம்ஸாவதாரம் .இந்தவுலகிலிருள் நீங்க வந்து உதித்த ஆழ்வார்களில் “ப்ராஹ வேதாந்அசேஷாந்” என்றும் “வேண்டிய வேதங்களோதி” என்றும் சொல்லுகிறபடியே வித்வத்ஸதஸ்ஸில் வே தமோதினது தவிர வேதப்ராதுர்ப்பாவ விசேஷமான திவ்யப்ரபந்தத்தையுமருளிச் செய்து ”வேதப்பயன் கொள்ளவல்ல விட்டு சித்தன்” என்று தம்வாக்காலும் பேசிவைத்தார். ஆகவே மென்னடையன்ன மென்றது பெரியாழ்வாரை.
            ஆசார்ய ஹ்ருதயத்திலும் ஹம்ஸஸ்வாபதேச சூர்ணையில் பெரியாழ்வாரைக்
            காண்பது அவர் விளையாடுவதாகச் சொன்னது “க்ரீடார்த்தமபி யத் ப்ரூயுஸ் ஸ
            தர்ம: பரமோ மத ”
            என்கிற வசனத்தை நினைவூட்டும்.-ஆக ஆண்டாள் பெருமையைப் பெரியாழ்வாரும், பெரியாழ்வார் பெருமையை ஆண்டாளும் வெளியிட்டவாறு காட்டப் பட்டதாயிற்று.

            பந்தடித்தவர்கள் இன்னாரின்னாரென்பதைப் பாசுரங்கள்காட்டி நிரூபிக்கக் கேளீர். *நப்பின்னைப் பிராட்டி பந்தடித்தது பந்தார்விரலியென்கிற திருபபாவையினாலும், பந்தணைந்தமெல்விரலாள் பாவை யென்கிற (2- 2-4) பெரிய திருமொழியினாலும் விளங்கிற்று. பெரியபிராட்டியார் பந்தடித்தது பந்திருக்கும் மெல்விரலாள் பாவைபனிமலராள் என்கிற (2-2-9) பெரிய திருமொழியினால் விளங்கிற்று. த்ரெளபதி பந்தடித்தாளென்பது பந்தார் விரலாள்பாஞ்சாலி என்கிற 6-7-8) பெரிய திருமொழியினால் விளங்கிற்று. பராங் குசநாயகிக்கும் பந்துக்குமுள்ள ஸம்பந்தம். திருவாய்மொழி (6-7-3) பாசுரத்தி னால் விளங்கிற்று.பரகால நாயகி முன்பு பந்தடித்துக்கொண்டிருந்தாளென்பது பந்தோடுகழல்மருவாள் (5-5-9) பெரிய திருமொழியினால் விளங்கிற்று.பொதுவாகப் பெண்டுகள் பந்தடிப்பது (4-2 7) பெரிய திருமொழியினால் விளங்கிற்று.

            [அர்த்தபஞ்சகத்தில் முதலது பரஸ்வரூபம்] ஸகல கத்துக்களுக்கும்காரண பூதனாயிருக்கையும். ஸர்வாத்ம ரகனாயிருக்கையும், பரவ்யூஹவிபவாந்தர்யாமி அர்ச்சாரூபேண பஞ்ச ரகாரமாக அவஸ்திதனாயிருக்கையும் பரஸ்வரூபமாகும்.
            “ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் யதோ வா இமாநிபூதாநி ஜாயந்தே. அஜாயமாநோ ப தா விஜாயதே ஸ உ ச்ரேயாந் பவதி ஜாயமா ந: பிதா புத்ரேண பித்ருமாந்யோ நியோநௌ* இத்யாதி வேதோப நிஷத்துக்கள் தெரி வித்தகட்டளையிலே ஆண்டாளும் நந்தகோபன் குமரன் அசோதை யிளஞ்சிங்கம் நாராயணனே நமக்கேபறைதருவான்*நாற்றத்துழாய்முடி நாராயணன் நம்மரல்போற்றப்பறைதரும் புண்ணியன் ‘ என்றிவை முதலான பல பல திவ்யஸூக்திகளால் பரஸ்வரூபத்தை விவரித்தருளினாளாண்டாள் .பரஸ்வரூப விவரணமில்லாத பாசுரம் திருப்பாவையில் தேடியெடுக்க வேண்டியதாயிருக்கும்.[ அர்த்தபஞ்சகத்தில் இரண்டாவது ஸ்வஸ்வரூபம்.) யஸ்யாஸ்மி ந தம் அந்தரேமி *யோஹமஸ்மி ஸ ஸந்யஜே* இத்யாதி வேதவாக்கியங்கள் ஸ்வஸ்வரூபப்ரதிபாதகங்கள் என்னுமிடத்தை பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவ- உத்தரசதகத்தில் (மூலத்திலேயே) காட்டியுள்ளார். சேஷத்வம் – அநந்யார் சேஷத்வம், அசித்வத்பாரத்ந்த்ர்யம் ஸ்வஸ்வரூபமாகும் . இது தன்னை ஆண்டாள் (நாம்,நாமும், நாங்கள், நாங்களும்,*உன்றன்றோடுற்றேமேயாவோம் மாற்றாருனக்கு வலிதொலைந்துன் வாசற்கணாற்றாது வந்துன்னடி பணியுமா அபிமானபங்கமாய் வந்து தலைப்பெய்தோம் “இத்யாதி பாசுரங்களாலே சுருக்கமும் பெருக்கமுமாகப் பேசிவைத்தாள். [அர்த்தபஞ்சகத்தில் மூன்றாவது உபாயஸ்வரூபம்.] * தஸ்மாத் யாஸமேஷாம் தபஸாம் அதிரிதமாஹ தஸ்மாத் அபி வத்யம் பிரபன்னம்: நப்ரதிப்ரயச்சந்தி (காண்டம் 6, பிரச்நம் 5. இருமுறை) இத்யாதி வேதோபநிஷத்வாக்யங்கள் ப்ரபத்தியையே தஞ்சமாகக் காட்டிக் கொடுத்தன. ஆண்டாளும் * உன்பொற்றாமரையடியே போற்றும் தொழுதுவாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க உன்னை யருத்தித்து வந்தோம் இத்யாதி பாசுரங்களினால் இதனைக் காட்டி யருளினாள்.

            [இனி அர்த்தபஞ்சகத்தில் நான்காவது புருஷார்த்தஸ்வரூபம். எம்பெருமானார் தரிசனத்தில் நித்யகைங்கரியமேபரம புருஷார்த்தமாகக் கொள்ளப்படுகிறது.-இதனை வேதாந்தங்கள் சரீராத்மபாவ ரதிபாதனமுகத்தாலே (அதாவது யஸ்யாத்மா சரீரம்-இத்யாதி முகத்தாலே] தெரிவித்தன. சரீரமானது ஜீவாத்மாவுக்குத் தானுள்ளவரையில் ஸகல கரண க்ராமங்களாலும் கைங்கரியமே செய்து கொண்டிருக்கும்படியை நாம் ப்ரத்யக்ஷமாகக் காண்கிறோம். எம்பெருமானார் அருளிச் செய்த சரீர லக்ஷணத்தில் (*யஸ்ய சேதனஸ்ய யத் தரயம் ‘ இத்யாதியில் “தச் சேஷதைகஸ்வரூபம்” என்றுள்ளது காண்க. ‘அகிஞ்சித்கரஸ்ய சேஷத்வா பபத்தி: “நாகிஞ்சித்குர்வதச் சேஷத்வம்” இத்யாதிகளும் காண்க. இதனை ஆண்டாள் *உனக்கேநாம் ஆட்செய்வோம்’ என்று தலையாகத் தலைக்கட்டினாள்.(இனி ஐந்தாவது – விரோதிஸ் வரூபம்.) திருநாட்டிலும், நம: நம, என்று சொல்லிக் கொண்டு விரோதி நிவ்ருத்தியையே வேண்டுகின்றார்கள். பட்டர் அஷ்ட ச்லோகியில் ப்ரபலதரவிரோதி ப்ரஹாணம் * என்றது ஆண்டாளுடைய மற்றை நங்காமங்கள் மாற்று* என்ற பாசுரத்தை யுட்கொண்டேயென்பது குருமுகமாக உணரத்தக்கது.

            நம்மாழ்வார் பகவானுடைய முககாந்தியை “முடிச்சோதியாய்உனது முகச்சோதி மலர்ந்ததுவோ” (எம்பெருமான் திருமுடியில் கிரீடமென்பதை யணிந்துகொண்டிருந்தும்
            அதன் பொருத்த மிகுதியைக்கண்ட ஆழ்வார் திருமுகமண்டலத்தின் சோதியே கிரீடமாகக் காண்கிறதோவென்று உல்லேகித்தபடி.) இவ்வழகிய உல்லேகத்தை தமிழ் பாஷை
            தெரியாதவர்களும் அனுபவிக்கும்வண்ணம் அப்படியே ஸம்ஸ்கிருத ச்லோகத்தில் வைத்து
            பட்டர் என்ற ஆசாரியர் தாம் அருளிய ஒரு ஸ்தோத்ரத்தில் “கிரீடசூடரத்னராஜிராதி
            ராஜ்ய ல்பிகா, முகேந்துகாந்திருன்முகம் தரங்கிதேவ ரங்கி
            :” என்றார்.நம்மாழ்வாரின் பாசுரத்திற்கு இந்த ச்லோகம் நேரான மொழிபெயர்ப்பு.-இம்மாதிரியே திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழியில் தசாவதாரத்தை வருணிக்கும் சந்தர்ப்பத்தில் மத்ஸ்யாவதாரத்தைப்பற்றிக் கூறுகையில் ஒரு அபூர்வ தமிழ் விருத்தத்தில் பாசுரம் அமைத்துள்ளார். அது வருமாறு:
            நிலையிடமெங்குமின்றி நெடுவெள்ளமும்பர் வளநாடு மூடஇமையோர் தலையிடமற்றெமக்கோர் சரணில்லையென்ன அரணாவனென்னுமருளால்
            அலைகடல்நீர்குழம்ப அகடாடஒடி அகல்வானுரிஞ்சமுதுகில்
            மலைகளை மீதுகொண்டுவருமீனைமாலை மறவாதிறைஞ்சென் மனனே
            . என்பது-இப்பாசுரத்தையே கூரத்தாழ்வான் தமது ஸுந்தரபா ஸ்தவத்தில் மேலே பாசுரத்தின் விருத்தத்தையேயமைத்துக் கூறுகிறார்:-
            ப்ரளயஜநீரபூர பரிபூரிதஸ்வநிலயா வஸன்னவதன
            ப்ரமதசாண்யபூத சரணார்த்திநாகி சரணம்பவன் ஸ்வக்ருபயா !
            சலதுததீரிதாம்பு கலுஷீக்ரியாட்ய கமனஸ்வப்ருஷ்டவித்ருதா
            கண்ட
            சலக்குல ஏவு மீனதனுரத்ர ஸுந்தரபுஜோ வநாத்ரிநிலய:
            என்று.

            திருவாய்மொழியில் (6-9-8) அறிவிலேனுக்கருளாய் என்கிற பாட்டிலே அறிவாருயிரானாய் என்னுமிடத்திற்கு ஆறாயிரப்படியில் பிள்ளான் ஜ்ஞானிகளுக்கு உயிரானவனே! என்கிற பொருள்மட்டுமே அருளிச்செய்திருக்கவும், நம்பிள்ளை திருவடிகள் * ஞாநீ து ஆத்மைவ மேமதம்* என்கிற கீதாவசனத்தை யெடுத்துக்காட்டி ‘அறிவாரை உயிராகவுடையவனே! என்னும் பொருளையுமருளியுள்ளார்கள். அதை ஸேவித்ததுமுதல் அவ்வர்த்தம் என்னுள்ளத்துள் தேனூறித்தித்தித்திருக்கின்றது. “என்ன துன்னதாவியிலே அறிவாத்மாவென்று அவன் மதம்தோன்றும்” என்கிற ஆசார்யஹ்ருதய திவ்ய – க்கியும் சிந்கைதன்னுள் நீங்காதிரா நின்றது. ஆகவே * பக்த ஜநைக ஜீவிதம் ” என்றவிடத்தில் அதையெல்லாம் நினைத்தே-ஞாநீத்வாத்மைவ மே மதம் என்கிற ப்ரமாணத்தை யுமுதாஹரித்தேன்.-தேசிகர்-யதிராஜஸப்ததியில் ஆளவந்தாருக்கு நானிட்ட சுலோகம் உனக்குத் தெரியுமே, [விகாஹே யாமுநம் தீர்த்தம் ஸாது ருந்தாவநேஸ்திதம், நிரஸ்த ஸ்மகஸ்பர்சே யத்ர க்ருஷ்ண: க்ருதாதர:*] என்பது. இது ச்லேஷாலங்காரத்தில் வைத்துப் பேசினது. (யத்ர க்ருஷ்ண: கருதாதர🙂 என்ற சரமசரணத்தில் கருஷ்ண: என்பதற்கு யமுநாதீர்த்தபக்ஷத்தில் கண்ணனென்கிற பொருள்பொருந்திற்று -யாமுநாசார்ய பக்ஷத்திலும் அந்தப் பொருளையே கொள்வதானால்,நீரஸமான அது என்னுடைய கவித்வமாகுமோ? நாநார்த்தஸம்ச்ரயமாக இருக்க வேண்டாவோ? பெரியவாச்சான்பிள்ளையின் தனியன் ஸ்ரீமத் க்ருஷ்ணஸமாஹ்வாய இத்யாதியன்றோ ? (யத்ர க்ருஷ்ண: க்ருதாதர:) என்றவிடத்தில் க்ருஷ்ணஸமாஹ்வரான பெரியவாச்சான்பிள்ளையையன்றே விவத்திருக்கிறேன். யாமுநார்யாநுக்ருஹீதமான ஸ்தோத்ரரத்னத்திற்கு அற்புதமான வியாக்கியானத்தை யருளிச்செய்யும் முகத்தாலே அவரிடத்தில் ஆதரம் காட்டினவர் க்ருஷ்ண ஸமாஹ்வரான பெரியவாச்சான்பிள்ளையே யன்றோ? இப்பொருளைவிட்டால் வேறு பொருள் ஏற்குமோ?

            ————–

            ஸ்ரீராமாநுஜன் 244-ஸ்ரீ வைஷ்ணவ ஸர்வஸ்வம்–—நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கைமீர்கள்! இதோரற்புதம் கேளீர் * என்று ஜம்பூத்வீபத்தில் வஸிக்கும் நங்கைகளே ! இந்தஅற்புதமொன்று கேளீர் என்கிறார். திருவாய்ப்பாடியில் நிகழ்ந்த நிகழ்ச்சியைச் சொல்லும்போது, கோகுலத்திலுள்ளீர்களே! என்றோ,பூதலத்திலுள்ளீர்களே !என்றோ சொல்லவேண்டி யிருக்க, ஜம்பூத்வீபத்திலுள்ளவர்களே! என்று விளித்தது எதனாலே? பரம பவித்திரமான இந்த த்வீபத்தில் பிறந்தமையாலன்றோ இதை யநுபவிக்கவும் கேட்கவும் பாக்கியம் பெற்றீர்கள்! என்று குறிக்கொள்விக்கிறபடி. ஜம்பூத்வீபத்தினுள்ளும் பரத கண்டத்திலே நாம் பிறவிபெற்றதுண்டே இது முதன்மையான நன்மை. இதுதன்னிலும் க்ரிமிக்ட பசுபதங்காதி ஜன்மங்களிலன்றிக்கே * மானிடப்பிறவியந்தோ! மதிக்கிலர் * என்று மங்கையர்கோன் மதிக்கும்படியான துர்லப மாநுஷ யோநியிலே பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம். அந்த மானிடப் பிறவியிலும் ஸ்வாத்யாய ப்ரவசனங்களுக்கு உரித்தல்லாத அவைதிக யோனிகளிலே புகவிடாமல் வேத வேதாந்த வேதாங்கங்களை ஓதுவதற்கு நிலமான அந்தணர் குலத்திலே நம்மைத் தோற்றுவித்தனன் அபார கருணாநிதி.அதுதன்னிலும் * த்ருச்யம் மித்த்யா த்ருஷ்டிகர்த்தா ச மித்த்யாதோஷோ மித்த்யா என்னும்படி எல்லாம் பொய் என்பாருடைய திரளிலே புகவிடாமல் சு பொய்யைச் சுரக்கும் பொருளைத் துறந்து இந்தப் பூதலத்தே மெய்யைப் புரக்கு மிராமானுசன் என்று அமுதனார் அருளிச் செய்தபடியும், + யதாபூதஸ்வார்த்தா பதிந்ருபதி ஸூக்திர் விஜயதே * என்று வேதாந்த வாசிரியர் விளம்பினபடியும் ஸத்யார்த்த ப்ரகாசகரான எம்பெருமானாருடைய தரிசனத்திலே நம்மைப் பிறப்பித்தனன் பரம காருணிகன். இவ்வளவுக்கும் மேலாக, கருவிலே இறத்தல், பிறந்ததும் மறைதல், சில நாட்களிருந்து சாதல், பிணிபசிகளால் வருந்தி வாணாளை வீணாளாகக் கழித்தல் முதலிய வருத்தங்களின்றிக்கே வேத நூற் பிராயம் நூறிலே பெரும் பகுதியை ஆனந்த மயமாகச் செல்லவைத்தனன் அருட்கடலான அமலன்.-நமக்கு. மணவாளமா முனிகளின் திருவடிகளிலும் திருமொழிகளிலும் பக்திச் செல்வமுண்டாகா விடினும் அத்வேஷ நிலையையாவது அருள்செய்ய வேணும் அருளாளன்” என்று நெஞ்சார வேண்டி நிற்பது நன்று.

            தேவப்பெருமாள் விஷயமாக வேதாந்தவாசிரியர் பணித்த வரதராஜ பஞ்சாசத்தில் ஒரு சுலோகத்தில் “ஸத்யம் சபே வாரணசைலநாத ! வைகுண்ட வாஸேபி ந மேபிலாஷ: என்றுள்ளது அனைவருமறிந்தது. ” தேவப்பெருமாளே ! ஆணையிட்டுச் சொல்லுகிறேன்,-மண்ணிலிது போலுநகர் இல்லையென வானவர்கள் தாம் மலர்கள் தூய் நண்ணியுறைகின்ற நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே * என்ற திருமங்கை யாழ்வார் திருமொழியினால்நித்யஸூரிகள் திவ்ய தேசானுபவத்தை விடமாட்டாதே இந்நிலத்தே போருகிறார்க ளென்பதை அறியா நின்றோமிறே.

            மணவாள மாமுனிகளுக்கு யதிவரபுநரவதார பூதரென்னும் ப்ரஸித்திதொன்று தொட்டு விளங்கி வருகின்றது. எம்பெருமானாரே மீண்டும் மணவாளமாமுனிகளாகத் திருவவதரித் தருளினரென்றபடி. இதற்குரிய உபபத்திகள் பலவுண்டு. அதை முன்னம் ச்லோக ரூபேண விஜ்ஞாபித்துப் பின்னை வியாக்கியானமிட்டு விளக்குகின்றேன்.

            வ்யாக்க்யாநக்ரந்ததாநாத் பரிவதநகதாகந்தவைதேசிகத்வாத் நாநாசாஸ்த்ரார்த்தப்ருந்தப்ரசுரபணிதி : ப்ராஜ்ஞஹ்ருத்ரஞ்ஜகத்வாத்,
            பூர்வாசார்யோ திராகாத் சடரிபுமு சாட்ஸூக்திஸம்வர்த்தகத்வாத்
            பீடாதீசப்ரதிஷ்டாபநக்குதிகர த் திவ்யதேசாபிமாநாத்.
            பணிராஜாவதாரத்வாத் ஸ்ரீரங்க ஸ்ரீவிவர்த்தநாத்,
            யதீந்த்ரப்ரவணஸ் ஸாக்ஷாத் யதீந்த்ரோ பாஷ்யக்ருத் த்ருவம்.

            வ்யா க்யாநக்ரந்த தாநாத். பெரும்பாலும் வியாக்கியானங்கள ருளிச்செய்வதிலேயே ஊக்கம் எம்பெருமானார்க்கும் மாமுனிகளுக்குமொக்கும் ; ஸ்ரீபாஷ்யம்வேதாந்த தீபஸாரங்கள், கீதாபாஷ்யம் என்னு மிவை வியாக்கியான க்ரந்தங்களேயன்றே. மாமுனிகளின் வியாக்கியான கரந்தங்களும் ப்ரஸித்தங்கள். வேதார்த்தஸங்க்ரஹம் கத்யத்ரயம்-என்று சில மூலக்ரந்தங்களும் ஸ்வாமி ஸாதித்தது போலேமாமுனிகளும் யதிராஜ விம்சதி உபதேசரத்தினமாலை முதலிய மூலக்ரந்தங்களுமருளிச்செய்தது ப்ரஸித்தம்.

            பரிவதநகதாகந்த வைதேசிகத்வாத். பரிவதநமாவது பரீவாதம்; நிந்தையென்றபடி. அஸ்தாநே நிந்தாபரிஹாஸங்களை நிரப்பி நூல்களெழுதுவாரு மு ரே;அங்ஙனம் நிந்தையையோ பரிஹாஸத்தையோ அணுவளவும் புகவிடாமல் பரமபவித்திர ஸ்ரீஸூக்திகளையருளுந்தன்மை ஸ்வாமிக்கும் மாமுனிகளுக்குமே யொக்கும்.

            நாநா சாஸ்த்ரார்த்தப்ருந்தப்ரசுரபணிதிபி: ப்ராஜ்ஞருத் ரஞ்ஜகத்வாத் -தொட்ட தொட்ட விடமெங்கும் பலபல சாஸ்த்ரார்த்தத் திரள்களே மலிந்தஸ்ரீஸூக்திகளினாலே பண்டிதர்களின் உள்ளத்தை உகப்பிக்குந்தன்மை ஸ்வாமிக் கும் மாமுனிகளுக்குமே யொக்கும்.

            பூர்வாசார்யோக்திராகாத். எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யம் தொடங்கும்போதே” பகவத் போதாயந க்ருதாம் விஸ்தீர்ணாம் ப்ரஹ்மஸூத்ரவ்ருத்திம் பூர்வாசார்யாஸ்ஸஞ்சிக்ஷிபு:, தந்மதாநுஸாரேண ஸத்ராக்ஷராணி வ்யாக்க்யாஸ்யந்தே”-என்றருளிச் செய்து பூர்வாசார்ய ஸூக்திகளில் தமக்குள்ள அபிநிவேசாதிசயத்தை விளங்கக் காட்டியருளினார். மாமுனிகளும் முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு * முன்னவராம் நங்குவர் மொழிகள் உள்ளப் பெற்றோம் முழுதும் நமக்கவை பொழுதுபோக்காகப் பெற்றோம்* இத்யாதிகளாலே தமக்குள்ள பூர்வாசார்யஸூக்தி பஹுமானத்தைக்காட்டியருளினதோடு நில்லாமல். தம்முடைய வியாக்கியான க்ரந்தங்களைப் பூர்வாசார்ய ஸ க்திமயமாகவே அவதரிப்பித்தருளினார்.

            சடரிபுமுநிராட்ஸூக்தி ஸம்வர்த்தகத்வாத். ஸ்வாமியின் வாழி திரு நாமத்திலே மாறனுரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியே என்று ஓதா நின்றோம். *ஆய்ந்த பெருஞ்சீரார் சடகோபன் செந்தமிழ் வேதத்தரிக்கும் பேராதவுள்ளம் பெற – ஏய்ந்தபெருங் கீர்த்தி யிராமானுச முனிதன் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன்+ என்று அக்காலத்து சிஷ்யவர்க்கங்கள் பணிக்கக் காணாநின் றோம். இதுபற்றி மாமுனிகள் திறத்திலே சொல்லவேணுமோ? சேற்றுக் கமலவயல் சூழரங்கர் தம் சீர்தழைப்பப் போற்றித்தொழு நல்லவந்தணர்வாழ விப்பூத லத்தே,மாற்றற்ற செம்பொன் மணவாளமாமுனி வந்திலனேல், ஆற்றில் கரைத்த புளியல்லவோ தமிழாரணமே என்ற வொரு பாசுரம்போதுமே.

            பீடாதீசப்ரதிஷ்டாபநக்ருதி கரணாத் ஸ்வாமி எழுபத்து நான்கு ஸிம் ஹாஸநாதீபதிகளை ஸ்தாபித்தருளி அவர்கள் வழியாக தர்சந நிர்வாஹம் செய் தருள்வது ஸுப்ரஸித்தம், சுல மீநாதாக்க்ய ஸிந்தெள சடரிபுஜலத இத்யாதி ச்லோக ரத்னத்தினாலும் இது ஸூவ்யக்தம். மாமுனிகளும் “திரமாக திக்கஜங்களிட்டருளும் பெருமாள்” என்கிறபடியே அஷ்ட திக் கஜாசாரியர்களை ஸ்தாபித் தருளி அவர்கள் வழியாக தர்சந் நிர்வாஹம் செய்தருள்வது நாடு நகரமும் நன்கறிந்தது.

            திவ்யதேசரபிமாநாத் = ( இதற்கு இரண்டு வகையாகப் பொருள் )-மன்னியதென்னரங்காபுரி மாமலை மற்றுமுவந்திடு நாள்* என்றும், ஸ்ரீரங்கம் கரிசைல மஞ்ஜநகிரம் தார்யாத்ரி ஸிம்ஹாசலௌ…. ஸ்ரங்கேசஜயத்வஜோ விஜயதே ராம நுஜோயம் முநி; என்றும் சொல்லுகிறபடியே ஸ்வாமி ஸகல திவ்ய தேசங்களிலும் அபிமானம் காட்டியருளினவர், மாமுனிகளும் +அடைவுடனே திருப் பதிகள் நடந்த வேர்வையாறவோ என்கிறபடியே திவ்யதேசயாத்திரைகள் செய்தருளி அவற்றில் அபிமானம் காட்டியருளின்படி ஸுப்ரஸித்தம். (அதவா) திவ்ய தேசாபிமாந மாவது-திவ்ய தேச ச்ரேணியில் சேராதிருந்த ஸ்தலத்தை திவ்யதேசமாக அபிமானித்தல் ஸ்வாமி திருநாராயணபுரத்திற்கு ஒரு நாயகமாய் என்கிற திருவாய்மொழியை ஸமர்ப்பித்து அத் தலத்தை திவ்யதேசமாக அபிமாநித்தருளினதும், மாமுனிகள் ராஜம னார் ஸன்னிதிக்கு தீர்ப்பாரையாமினி* என்கிற திருவாய்மொழியை ஸமர்ப்பித்து அப்பதியை திவ்யதேசமாக அபிமானித் தருளின
            தும் அநுஸந்தேயம். (+ வண்துவராபதிமன்னனை.)

            பணிராஜாவதாரத்வாத்ஸ்வாமி சேஷாவதாரமென்பது ஸுப்ரஸித்தம்.-கருடவாஹன பண்டிதர் பணித்த திவ்யஸூரி சரிதத்திலும், வடுகநம்பி பணித்த யதிராஜ வைபவத்திலும் மற்றும்பல பிரபந்தங்களிலும் இது விசதம். மாமுனிகள்,-வரவரமுநி சதகத்திலே துந்தோதந்வத்தவனமதுரம் சுந்தஸத்வைகரூபம் ரூபம் யஸ்ய ஸ்புடயதிதராம் யம் பணீந்த்ராவதாரம் * என்றருளிச்செய்தபடியும் மற்றும் சரித்ர ப்ரஸித்தியின் படியும் திருவனந்தாழ்வான் திருவவதாரமென்பது ஸுவ்யக்தம்.

            ஸ்ரீரங்க ஸ்ரீவிவர்த்தநாத் = ஸ்வாமி + தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்திவைத்தான் வாழியே + என்று எண்டிசை பும் வாழ்த்துகிற டியும், கோயியலொழுகு முதலானவற்றில் காண்கிற இதிஹாஸ விஸ்தாரப்படியும் ஸ்ரீரங்கஸ்ரீயை வளர்த்தருளினவர் என்பது விச்வவிதிதம். மாமுனிகள் திறத்து மிங்ஙனமே யன்றோ? “அரங்கநகர்வாழ இன்னுமொரு நூற்றாண்டிரும்’ என்றன்றோ நிச்சலும் வாழ்த்துகின்றதுலகம்.ஆக இத்தன்மைகளாலே, யதீந்த்ரப்ரவணஸ் ஸாக்ஷாத் யதீந்த்ரோ பாஷ்ய க்ருத் திருவம்-யதீந்த்ரப்ரவணரென்று திருநாமம் பெற்ற மணவாளமாமுனிகள் ஸாக்ஷாத் எதிராசரே யென்னத் தட்டில்லை யென்றதாயிற்று. இங்ஙனே நிர்வஹிக்கக் கூடிய உபபத்திகள் மற்றும்பலவுள.

            *யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை என்கிற சுருதியின் படியே முன்னிருந்த ஆநுபூர்விமாறாமல் அப்படியே நான்முகனுக்கு உபதேசிக்கிறான். ஆகவே வேதசப்தராசிகளுக்கு ஆதியும் அந்தமும் இல்லை யென்னத்
            தட்டில்லை. ஸ்வாமி பாஷ்யகாரர் தேவதாதிகரண ஸ்ரீபாஷ்யத்திலே “ஏததேவ சவேதஸ்ய அபெளருஷேயத்வம் நித்யத்வஞ்ச ; யத் பூர்வபூர்வோச்சாரண க்ரம ஐநித ஸம்ஸ்காரேண தமேவ க்ரமவிசேஷம் ஸ்ம்ருத்வா தேநைவ க்ரமேண உச்சார்யமாணத்வம் “என்றருளிச் செய்திருப்பது இங்கே அநுஸந்தேயம்.-இதை பட்டர் ஸ்ரீரங்க ராஜஸ்தவ -உத்தரசதகத்திலே ” ஸம்ஸ்காரம் ப்ரதிஸஞ்சரேஷு நிததத் ஸர்க்கேஷு தத்ஸ்மாரிதம் ருபம் நாம ச தத்த
            தர்ஹநிவஹே வ்யாக்ருத்ய ரங்காஸ்பத!, ஸு ப்தோத்புத்த விரிஞ்ச பூர்வஜநதாம்
            அத்யாப்ய
            ” என்று சுலோகமாக்கியருளினார்.

            நித்யத்வம் நிரூபித்தனா லேயே அபௌருஷேயத்வமும் நிரூபிக்கப்பட்டதென்று கொள்ளலாம்.–வேதாந்த வாசிரியர் யதிராஜஸப்ததியின் முதல் ச்லோகத்தில் ஆசார்ய பரம்பரையில் முதல்வனான ஸர்வேச்வரனைத் துதிக்குமிடத்தில் * ப்ரவக்தா ச்சந்தாம்,
            வக்தா பஞ்சராத்ரஸ்ய யஸ் ஸ்வயம்
            * என்று பணித்துள்ளார். பகவான் பாஞ்ச
            ராத்ர சாஸ்திரத்திற்கு ஸ்வயம் வக்தா வென்றும், வேதங்களுக்கு ப்ரவசன கர்த்தா
            வென்றும் இதில் சொல்லிற்று. இதனால் ஸர்வேச்வரன் கூட வேதகர்த்தாவல்லன் |
            என்பது விளங்கும்.-ஓலைப்படா ப்ரமாணம், என்றே இதனைப் பூருவர்கள் வழங்கியுள்
            ளார்கள்.ை.அதனாலேயே வேதங்கள் மானிடர்க்கு இயற்கையாக நேரக்கூடிய
            இருள் மருள் மறப்பு வஞ்சனை முதலான எவ்வகைக் குற்றமுமற்று விளங்க நின்றன.-யஸ்ய வேதச்ச வேதீச விச்சித்யேதே த்ரிபூருஷம், ஸவை துர்ப்ராஹ்மணோ ஜ்ஞேயஸ் ஸர்வ்கர்ம பஹிக்ருத என்னும் வசனத்தை யுற்று நோக்கி ப்ராஹ்மணர்களாய்ப் பிறந்தவர்கள் வேதாத்யயனத்தில் விருப்பங்கொள்ள ப்ராப்தம்.

            நம்முடைய வேதத்தில் ஸம்ஹிதையிலும் ப்ராஹ்மணத்திலும் (‘அந்தவாந் அந்நாதோ பவதி) என்கிற வாக்யம் சேர்ந்தாப் போலவும் சிறிது பிரிந்தாப் போலவும் அத்யயநம் செய்யப்பட்டு வருகிறது. தைத்திரீய யஜுஸ் ஸம்ஹீதை யில் இரண்டாவது காண்டம் இரண்டாம் ப்ரச்நத்தில் (“அக்நயே அந்நவதே புரோடாச மஷ்டாகபாலம் நிர்வபேத்“) என்று தொடங்கியுள்ள வாக்கியம் *அந்நவாநேவ பவதி என்று முடிவடைகிறது. உடனே * “அக்நயே அந்நாதாய புரோடாச மஷ்டாகபாலம் நிர்வபேத்” + என்று தொடங்கும் வாக்யம் “அந்நாத
            ஏவ பவதி”
            என்று முடிவடைகிறது. மூன்றாவது காண்டம் நான்காவது ப்ரச்நத்தில் “அக்நீளோமீயா மாலபே ” என்று தொடங்கும் வாக்யம் ( அந்நவா நேவாந்நாதோ பவதி“) என்று முடிவடைகிறது.தைத்திரீயோபநிஷத்தில் (“அந்நவாந்- அந்நாதோபவதி” என்று ஓதப்படுவது ஸுப்ரஸித்தம். ஆக இந்த வாக்யங்களில் அந்நவானாகக் கடவேன் என்கிற ஒரு ப்ரார்த்தனையும், அந்நாதனாகக் கடவேன்! என்கிற மற்றொரு ப்ரார்த்தனையும், அந்நதுவானாகிறான் என்கிற ஒரு பலச்ருதியும் அந்நாதனாகிறா னென்கிற மற்றொரு பலச்ருதியும் காண்கிறது.-(அந்நவாந்) என்பதற்கு அன்னத்தை யுடையவன் என்று பொருள்.
            (அந்தாதா) என்பதற்கு அன்னத்தை யுண்பவன் என்று பொருள். உலகில் பிறப்பவர்கள் அன்னத்தை விரும்புவது உண்பதற் காகத்தானே. அதற்காகத் தனிப்பட்ட ஒரு ப்ரார்த்தனையும் பலச்ருதியும் வேணுமோ!-அன்னமுள்ளவர்க ளெல்லாரும் அன்ன முண்பவர்களாய் மிருக்கிறார்களென்பது கிடையாது.-பலவகைப் பேச்சுக்களைக் கேட்டிருக்
            கிறோம். முன்னோர்களும் இதை யறிந்தே “போஜ்யம் போஜந சக்திச்ச நால்பஸ்யத்பஸ பலம்” என்றார்கள். போஜ்ய வஸ்துக்கள் புஷ்கலமாயிருந்து போஜன சக்தியும் வாய்ப்பது அருந்தவப்பயன் என்றபடி.-தைத்திரீயோப நிஷத்தில் ஆனந்தவல்லியில் பரப்ரஹ்மத்தினுடைய ஆனந்தத்தைப் பேச அடியிட்ட வேதபுருஷன் முந்துற முன்னம் மநுஷ்யானந்தத்தைப் பேசவெழுந்து “ஸைஷாநந்தஸ்ய மீமாம்ஸா பவதி” என்று தொடங்கி ஓதுகையில் (ஆசிஷ்டோ த்ரூடிஷ்டோ பலிஷ்ட ) என்று இவற்றையும் மநுஷ்யா
            னந்தங்களில் சேர்த்து ஓதிற்று. இங்கு (ஆசிஷ்ட்ட ) என்பதற்கு பாஷ்யகாரர்கள் பல பொருள்கள் எழுதுகின்றார்கள். அவற்றுள்ஒரு பொருள் {“ஆசிஷ்ட்ட:-அசநசீல:” நன்றாக உண்பவன் என்றபடி ; இத்தால் உடலில் ரோகமொன்றுமில்லாமை சொன்னபடி-என்று விவரணம் செய்யப்பட்டுள்ளது. ஆக, கிடைத்த அன்னத்தை நோய் நொடியில்லாமல் பரிபூர்ணமாக அநுபவிக்கப் பெறவேண்டியதும் முக்கியமாதலால் அன்னவான் என்றதோடு நிறுத்தாமல் “‘அந்நாதா ” என்றும் சொல்ல வேண்டியதாயிற்று.இது லௌகிகரீதியில் தெரிவிக்கப்பட்ட பொருள். இனி பரப்ரஹ்ம விஷயமான ஒரு சுவைப் பொருளை யறிவிக்கிறோம். ‘‘அந்நம் ‘ப்ரஹ்மேதி’ வ்யஜாநாத்)என்கிற ச்ருதியின்படி அன்னம் என்பதற்குப் பரமபுருஷன் என்று பொருள்.அந்நவாந் என்பதற்குப் பரம புருஷனைப் பெறுகிறவனென்று பொருள்; அந்நாதஎன்பதற்கு பெற்றபரமபுருஷனை நன்கு அநுபவிப்பவ னென்று பொருள். இவை யிரண்டும் ஒரு வ்யக்தியினிடத்தில் ஸம்பவிப்பது அரிதாதலால் இவற்றின் ஸாமா நாதிகரண்யத்தை வேதம் ஆசீர்வதிக்கின்றது.-” நந்தன் பெற்றனன் நல்வினையில்லா நங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே “-என்று தெய்வத் தேவகி புலம்பினது ப்ரஸித்தமன்றோ-பவிக்கப்படும் பொருளெல்லாம் அன்ன சப்த வாசயமாகும். அதை யநுபவிப்பது இருவகைப்படும். தான் உண்பதும் பிறர்க்கு வழங்குவதுமாம். க்ருபணர்எனப்படுமவர்கள் தாமும் அனுபவியாமல் பிறர்க்கும் வழங்காமல் நிலத்தில் புதைத்து வைப்பார்களன்றே.”விபவோதாந ஸம்பத்திர் நால்பஸ்ய தபஸ: பலம்” என்று இதையும் அருந்தவப் பயனாகச்சொல்லி வைத்தார்கள் மேலையோர். ஆக, அன்னப்ராப்திக்குமட்டும் ஸாதனானுஷ்டானம் பண்ணவேண்டாமல் அன்னாதத்வத்திற்கும் அதுபண்ணவேண்டியிருக்கையாலே வேதபுருஷன் ஓதினது உரியதேயென்று தலைக்கட்டினோமானோம்.

            .ஸஹஸ்ர நாம ராமாயணம்.-“ராமாவதாரதமென்றால் பட்டர் போர பக்ஷபதித்திருப்பார்” என்று நம் ஆசார்ய கோஷ்டியில் ஸுப்ரஸித்தமாகையாலே ஸ்ரீராம பக்ஷபாதியான பட்டர் தம்முடைய ஸஹஸ்ரநாமபாஷ்யத்தில் *ராமோ விராமோ விரத * இத்யாதி திருநாமங்களுக்கு முன்னே ‘ பரர்த்தி பரமஸ்பஷ்ட “ என்னுமிடத்தில் ” அத ம்ருதஸஞ்ஜீவ நம் ராமசரிதம் ” என்றருளிச் செய்துள்ளார். (பரர்த்தி } என்கிற திருநாமம் முதலாக ம்ருதஸஞ்ஜீவினயான ராமகதை சொல்லப்படுகிறது என்றபடி. பரர்த்தி, பரம ஸ்பஷ்ட துஷ்டா புஷ்ட: சுபேக்ஷண ராம விராமக விரத மார்க்க நேய நயஅநய?, வீர சக்திமதாம்ச்ரேஷ்ட: தர்ம: தர்மவிதுத்தம:- என்கிற பதினாறு திரு நாமங்களும் ராம சரித்திரங்களைத் தெரிவிப்பனவாகத் திருவுள்ளம் பற்றினபடி. இத்திருநாமங்களை விவரிக்கும் முகத்தால் ஸ்ரீராம குணநுபவம் செய்கிறேன். ஆகவே இக் கட்டுரைக்கு ‘ஸஹஸ்ர நாம ராமாயணம்’ என்று மகுடமிட்டேன்.

            பரர்த்தி – ‘ பரா ருத்தி யஸ்மிந் ஸ3 பரர்த்தி = ருத்தியாவது ஸம்ருத்தி மிக்க ஸம்ருத்தியை யுடையவனென்றபடி-செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர் *செல்வம் மல்கி யவன்கிடந்த திருக்கோளூர் *செல்வம் மல்கு தென்திருக்குடந்தை* என்றாப்போலே யருளிச் செய்கிறார்கள் ; இவ்விடங்களில் கல்யாணகுண ஸம்ருத்தியையே முக்கிய மான செல்வமாக வியாக்கியானித்தருளுகிறார்கள்.’ பவாந் ஸர்வத்ரைவ து அக ணி மஹாமங்கலகுண?” என்று ஆழ்வானருளிச்செய்தபடி எம்பெருமானுடைய ரூபங்களெல்லாவற்றிலுமே குணபூர்த்தி குறையற்றிருந்தாலும் ஸ்ரீராமாவதார மொன்றில் தான் குணபெளஷ்கல்யம் விசேஷித்துக் காணலாயிருக்கும்.-ஸ்ரீராமாயணத்தின் உபக்ரமமே குணங்களைப் பறறின வினாவிடை.-[பஹவோ ந்ருப! கல்யாணு : புத்ரஸ்ய ஸந்தி தே] மஹாப்ரபோ! உம்மிடத்தில் ஒரு குறைகண்டு சொன்னேமல்லோம்; நீர் பெற்ற பிள்ளை குணாநாமாகரோ மஹான் என்னும்படி யிருக்கையாலே அவன் கோற் கீழே வாழ வேணுமென்னு மாசையொழிய வேறில்லை என்றார்கள்.-காண்டந்தோறும்ராம குணங்கள் ஸர்க்கம் ஸர்க்கமாக ஒவ்வொருவர் முகமாய்ப் பேசப்படுகையாலே-இப்படிப்பட்ட குணஸம்ருத்தியையிட்டுப் பரர்த்தி என்கிறது. இனி ” பரேஷாம் ருத்திரேவ (ஸவஸ்ய) ருத்தி: யஸ் ” என்று கொண்டு பர ஸம்ருத்தியே பேறாயிருப்பவன் இராமன் என்றுங் கொள்ளத்தகும்.-”த்வயி கிஞ்சித் ஸமாபந்நே கிம் கார்யம் ஸீ தயாமம் என்றவிடம் பரஸம்ருத்தியையே பேணுமவர் பெருமாள் என்பதற்கு முக்கியமான சான்றாகும்.

            பரம ஸ்பஷ்ட: * ந சக்ஷஷா பச்யதி கச்சநைநம் * ந மாம்ஸ சக்ஷ ரபீவிக்ஷதே தம் * என்றேனும் கட்கண்ணால் காணாதவவ்வுரு * இத்யாதிப்படியே ஒருவர் கண்ணுக்கும் காணவொண்ணாதிருந்த வடிவத்தை அனைவரும் கண்டுகளிக்கும்படி மிகவும் ஸ்பஷ்டமாக்கிக் கொடுத்தவ னென்கை. ஆழ்வான் அதிமாநுஷஸ்தவத்தில் (10) ” ோதீயஸோபி ஹி ஜநஸ்ய க்ருதே க்ருதீ த்வம் அத்ராவதீர்ய நநு லோசந்கோசரோபூ ” என்றருளிச் செய்ததை இங்கே அநுஸந்திப்பது . பரம ஸ்பஷ்டா என்பதற்கு- பரமத்வம் ஸ்பஷ்டமாயிருக்கப் பெற்றவர் என்கிற பொருள் பட்டருடைய பாஷ்யத்தில் விளங்குமது. ‘பரத்துவத்தை யொளித்து வந்து அவதரித்திருக்கச் செய்தேயும் அது சிலர்க்கு ஸ்பஷ்டமாக விளங்கா நின்ற தென்பதை ஸ்ரீராமாயணத்தினாலறிகிறோம். பெருமாளுடைய வநவாஸ ப்ரஸங்கத்தில் கிலேசப்படா நின்ற கௌஸல்யாதேவியைத் தேற்றுகின்ற ஸுமித்திரை “ஸூர்யஸ்யாபி பவேத் ஸூர்ய தைவதம் தேவதாநாஞ்ச” இத்யாதியாலே பெருமாளுடைய பரத்துவத்தைத் தான் ஸ்பஷ்டமாகக் கண்டறிந்து பேசுகிறாள். இராவணன்மாண்ட பிறகு ப்ரேத பூமியிலே வந்து புலம்புகின்ற மந்தோதரி *வயக்தமேஷ மஹாயோகீ பரம த்மா ஸநாதந, அநாதி மத்யநிதந தமஸ் பரமோ தாதா சங்கசக்ர கதாதர:.ஸ்ரீவத்ஸவக்ஷா நித்யஸ்ரீ: அஜய்யச் சாச்வதோ திருவ: மா நுஷம் ரூபமாஸ்தாய விஷ்ணுஸ் ஸத்ய பராக்ரம்:*இத்யாதியாலே பெருமாளுடைய பரத்துவத்தை அதிஸ்பஷ்டமாகக் கண்டு பேசுகிறாள். பம்பாதீரத்தில் முதன்முதலாகப் பெருமாளைக் காணவந்த திருவடி “ஆயதாச் ச ஸூவ்ருத்தாச் ச பாஸவ: பரிகோபமா, ஸர்வபூஷண பூஷார்ஹா: கிமர்த்தம் நவிபூஷிதா.? *‘ என்று கேட்கிறார். இங்கு ஆயதெள ச ஸு வ்ருத்தெள சபா அ தே பரிகோபமௌ‘ என்று த்வி வசனமாக சுலோகம் கூடுமதாயிருக்க பஹு வசனமிட்டுச் சொன்னதுபற்றி கோவிந்தராஜர் எழுதுகிறார்.- ஹநுமதோ பக்தத்வேந் தஸ்ய சதுர்ப்புஜவேஷேண திருச்யோபவத்” என்று (அதாவது) திருவடி பரம பக்தராகையாலே அவர்க்கு நிஜ ரூபத்தைக்காட்டினாரென்றபடி . அன்றியும் ஸமுத்ர சரணாகதி ப்ரகரணத்தில் பெருமாள் தலையணையாக வைத்துக் கொண்ட பா வைவருணிக்கின்ற வான்மீகி முனிவர் “புஜை: பரமநாரி ம் அபிம்ருஷ்ட மநேகதா” என்கிறார். இங்கு பரமநாரிகளாகச் சொன்னது ஸ்ரீதேவீ பூதேவீ நீலாதேவிகளை யென்று வியாக்கியானம். ஆகவே வான்மீகி முனிவரும் பெருமாளுடைய பரத்வ வேஷத்தை ஸ்பஷ்டமாகக் கண்டவரென்று விளங்கும். ஆக இவ்வளவால் பெருமாளுடைய பரம ஸ்ஷ்டத்வம் நிரூபிதமாயிற்று.

            துஷ்ட=ஸந்துஷ்ட: என்றபடி. பெருமாளுடைய அவதாரத்தைப் பேசுகின்ற நம்மாழ்வார் *நாட்டில் பிறந்து படாத்னபட்டு மனிசர்க்காய் * என்கிறார்.”கர்மவச்யர்களான ஸம்ஸாரிகளும் படாத கஷ்டங்களை யெல்லாம்பட்டு” என்கிறார்கள் வியாக்க்யாதாக்கள். துக்க ஸம்வேதநாயைவ ராமே சைதந்ய மாஹிதம்”[உத்தரராமசரிதே.] என்று பெருமாள் தாமே சொன்னதாக பவபூதிகவி யெழுதுகிறார். இவற்றால் பெருமாளுடைய திருவுள்ளம் ஸந்தோஷமற்றிருக்கும் போலுமென்று நினைக்க இடமுள்ளது. உண்மை அப்படியில்லை. ஸம்ஸாரிகளின் ஸமுஜ் ஜீவனார்த்தமாக வந்து அவதரிக்கப் பெற்றோமிறே யென்று திருவுள்ள முகந்தே யிருப்பர்.முடி புனைந்து நாட்டையாளப் பாரித்திருக்கையில் சடை புனைந்து மரவுரி யுடுத்துக் காட்டுக்குச் செல்ல நியமனம் பெற்றபோது எவ்வளவோ துக்கமாகத் தானே யிருந்திருக்குமென்று பலர் நினைக்கக் கூடும். அப்போதும் பரம ஸந்தோஷத்தையே யாயிற்று பெருமாள் கொண்டது. ராஜ்யம் வா வநவாஸோ வா வநவாஸோ மஹோதய? ” என்றவரன்றோ பெருமாள். இவ்விடத்தில் கம்பருடைய வாக்கு மிக வற்புதமானது. ” இப்பொழு தெம்மனோரால் இயம்புதற்கெளிதோ? யாரும் செப்பருங் குணத்திராமன் திருமுகச் செவ்வி நோக்கின், ஒப்பதே முன்பு பின்பு வாசக முரைக்கக் கேட்ட, அப்பொழுதலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா.” என்பது அவருடைய ஆச்சரியமான செய்யுள். வனவாஸக் கட்டளை பெறுவதற்கு முன்னே இராமபிரானுடைய திருமுக மண்டலம் தாமரை போன்றிருந்ததாம்; அக்கட்டளை பெற்றவாறே அத்திருமுகம் அப்போதலர்ந்த செந்தாமரையை வென்றிட்டதாம். கொடிய வனம் போக நேர்ந்ததே யென்று சிறிதும் சோகியாமல்,புண்ணிய புனல்களாடவும் புண்ணிய புருஷர்களைத் தொழவும் வாய்ப்பு கிடைத்தமைக்குப் பரம ஸந்தோஷ மெய்தினானென்கை. உத்ஸவேஷ ச ஸர்வேஷ பிதேவ பரிதுஷயதி * என்று பௌர ஜனங்கள் நேரில் கண்டு சொன்னபடியே தனது நாட்டிலுள்ளவர்களுக்கு நேரும் ஸந்தோஷத்தைத் தன்னுடைய ஸந்தோஷமாகக் கொண்டு மகிழ்பவன். ” அபிஷிச்ய விபீஷணம் விவர ப்ரமுமோத ஒற” என்கிற படியே அன்பர்களை ஸந்தோஷப்படுத்தித் தான் ஸந்தோஷாதிசய மடைபவன்…..

            புஷ்ட = கீழே துஷ்டஎன்கிற திருநாமத்தினால் சொன்ன ஸந்துஷ்டதையை நன்கு நிலைநாட்டுகின்றது இந்தத் திருநாமம். தான் அடையும் ஸந்தோஷம் வடிவிலே காணலாம்படி யிருப்பவன். உள்ளத்தின் மகிழ்ச்சி உடலிலே தெரியும்’ என்பராதலால் ஹ்ருதய தமான ஸந்தோஷத்தைத் திருமேனி கோட்சொல்லித்தரக் கடவதாயிருக்கும். வனவாஸக் கட்டளை ப்ராப்தமானது “வநவாஸோமஹோதய ” என்று சொன்னது க்ருத்ரிமமென்று நினைக்கவொண்ணாதபடி திருமேனி புகர்த்துக் காட்டுமென்கை. வனவாஸம் ப்ராப்தமாவது பரம ஸந்தோஷத்திற்கே ஹேதுவென்று சொன்னதைச் சிறிது சோதிக்குமளவில் அது அஹ்ருதயோக்தியே யொழிய ஸஹ்ருதயோக்தி யன்றென்று அறுதியிடலாமா யிருக்கும்.(எங்ஙனேயென்னில்) மேலே ஆரண்யகாண்டத்தில் ஸ்தாவியோகம் நேர்ந்தபோது துக்கபரவசராய்க் கதறுகின்ற பெருமாள் *ராஜ்யாத் ப்ரம்சோ வநே வாஸோ நஷ்டாஸ்தா ஹதோ த்விஜ : ஈத்ருசீயம் மமாலக்ஷ்மீ: நிர்தஹேதபி பாவகம் என்று சொல்லிப் புலம்புகிறார். ‘ஐயோ! ராஜ்யத்தை யிழந்தேனே! காட்டிலே வந்து வளிக்கவும் நேர்ந்ததே!’ என்று சொல்லுவது வநவாஸோ மஹோதய;, என்றதற்கு நேர்முரணல்லவா? வனவாஸக்கட்டளை ஸந்தோஷகரமா யிருந்தால் ‘ராஜ்யாத்ப்ரம்ச:’ என்றும் வநேவாஸ: என்றுஞ் சொல்ல வாயெழும்புமோ? ஈத்ரு இயம் மமஅலக்ஷ்ம் ‘ என்று ராஜ்ய ப்ரம்ச வனவாஸங்களை தெளர்ப்பாக்ய மாகவன்றோசொல்லுகிறார். இவை பொருந்தும்படி எங்ஙனேயென்று விசிகித்ஸை பண்ணுவார்கள்-இதற்கு நம்பிள்ளை யருளிச்செய்வது பாரீர்;*ராஜ்யநாசோபகர்ஷதி* வநவாஸோ மஹோதய:* என்று சொல்லிப் போந்தவற்றை இப்போது அனர்த்தமாகச் சொல்லுகிற தென்னென்னில்,ஆச்ரித ஸம்ச்லேஷத்துக்கும் ரிஷிகளை நோக்குகைக்கு மென்றிறே போந்தது; அத்தோடே விரோதிக்கையாலே சொல்லுகிறார். பிராட்டியைப் பிரிகையாலும் பெரியவுடையாரை யிழக்கையாலும் இவற்றுக்கு அடியானவையும் இப்போது அனர்த்தமாகத் தோற்றின்படி .”என்பது நம்பிள்ளை ஸ்ரீஸூக்தி. (இதைச் சிறிது விவரிக்கிறேன்) வனத்திற்குப் புறப்படும்போது எதனால் ஸந்தோஷமென்னில்: பிராட்டியோடு ஏகாந்தவாஸம் பண்ணப் பெறுவோம், பரம்பாகவதர்களோடே ஸஹவாஸம் பண்ணப்பெறுவோம் என்றிங்ஙனே பாரித்ததனால் ஸந்தோஷமுண்டாயிற்று. பாரித்தபடியே பேறு கிடைத்து வந்தது. வைதேஹி! ரமஸே கச்சித் சித்ரகூடேமயா ஸ என்று வாய் வெரும்படி பிராட்டியோடே கூடியிருந்து குளிரப்பெற்றது .இஹ வத்ஸ்யாமி ஸெளமித்ரே! ஸார்த்தமேதேந ப ா என்று ஐடாயு மஹாராஜருடைய சிறகின் தீழே யொதுங்கி வர்த்திக்கவும் பெற்றது.இந்த நிலைமையில் “ஹா ஹந்த ஹந்த நலிநீம் கஜ உஜ்ஜஹார” என்னும்படியாகப் பிராட்டியைப் பிரியவும் ஜடாயுமஹா ராஜரை அறவே யிழக்கவும் நேர்ந்தது. இந்த துக்கம் சொல்லுவித்த வார்த்தையன்றோ” ராஜ்யாத் ப்ரம்சோ வநே வாஸ :” என்பது. இதனால்காட்டுக்குப் புறப்படும் போதே ஸந்தோஷமில்லாமல் வருந்தியே புறப்பட்டதாக எண்ணத்தகுமோ? பரம குதூஹலத்தோடு மஹோத்ஸவம் ஸேவிக்கத் திருவேங்கடமலை சென்றவர் அங்கு இடமும் சோறும் தண்ணீரும் பெறாமல் அப்பன் ஸேவையும் பெறாமல் வெய்யிலிலும் மழையிலும் பரிதபித்துக் கிடக்க நேர்ந்ததென்று கொள்வோம்; அப்போது’ஏதுக்கு வீட்டைவிட்டு இங்கே வந்து வருந்துகிறோம்!’ என்று தளர்ந்தால் இதனால் ஊரைவிட்டுப் புறப்படும்போதிருந்த குதூஹலத்தை இல்லைசெய்யவொண்ணுமோ? இலங்கை சென்ற திருவடி அசோகவனத்தில் பிராட்டியைக் கண்டவாறே “அநயாஹீந; ப்ரபு:, தாரயதி ஆத்மநோ தேஹம் ந சோகேந அவஸ்ததி’ என்று சொன்னது பெருமாளை கர்ஹிக்குமாபோலே யிருந்தாலும் (புஷ்ட ) என்னுமிந்தத் திருநாமத்தை வியாக்கியானம் பண்ணுமாபோலவே யிராநின்றது. வாடாமல் வதங்காமல் புஷ்டராகவே யிருக்கிறார் பெருமாள்’ என்று காட்டினபடியாகக் கொள்ளலாம். இல்லையாகில் ஜீவதி’ என்று மூன்றெழுத்தோடே முடிக்கலாமே; ”தாரயதி ஆத்மநோ தேஹம் ‘ என்ற விரிவு தேஹபுஷ்டியை அந்தரங்கமாகக் காட்டவே போலும்

            சுபேக்ஷண : =பெருமாளுடைய திருக்கண்ணழகிலே யீடுபட்டவர்கள் சக்ரவர்த்தியும் சபரியும் திருவடியுமாவர்கள். ‘என் வேள்வியைக்காக்க உன் பிள்ளையைப் போரவிடாய்’ என்று விச்வாமித்ர முனிவன் வேண்டினபோது *ஊந: ஷோடசவர்ஷோ மே ராமோ ராஜீவலோசந: * என்று விடையிறுத்த சக்ரவர்த்தியின் கருத்துகள் பலவுண்டு; அவற்றுள் ஒரு கருத்து இக்கண்ணழகனை விட்டுப் பிரிந்து எங்ஙனம் தரித்திருப்பேனென்கை: சபரி தன்னாசரமத்தேறப் போந்து பெருமாளைக் கண்டவாறே சக்ஷ ஷ தவ ஸெளம்யேந பூதாஸ்மி ரகுநந்த ! * என்று அவருடையகண்ணழகிலே தான் ஈடு பட்டமையைத் தெரிவித்துக்கொண்டாள்.இவற்றுக்கெல்லாம் மேம்பட்டது திருவடியின் வார்த்தை. அதாகிறது] ரா ம: கமலபத்ராக்ஷஸ்ஸர்வஸத்வமநேரஹர *) திருவடியோடு ஸம்பாஷணை செய்யும் பிராட்டி “ யாநிராமஸ்ய சிஹநாநி.. தாநி பூயஸ் ஸமாசக்ஷ்வ ந மாம் சோக : ப்ரத யதி‘ என்றுபெருமாளுடைய அடையாளங்களைச் சொல்லும்படி கேட்டவாறே முந்துறமுன்னம்” ராம: கமல பத்ராக்ஷ: “ என்றான். அக்கண்ணழகு செய்யுமது என்? என்ன;
            [ ஸர்வஸத்வமநோஹர: ] பிராணிகளென்று பேர்பெற்றாரெல்லாருடையவும் நெஞ்சைக்
            கொள்ளை கொள்ளுமதாயிற்று அவ்வழகு என்கிறார் திருவடி. இங்கே விமர்சிக்கவேணும்; திருவடி பெருமாளுடைய கண்ணழகை ஓருபெரியநகரத்திலே கண்டாரல்.லர் .நிர் நமானதொரு வனத்திலே ஒரு மூலையிலே கண்டுவைத்து ‘ஸர்வஸத்வ
            மநோஹர :
            , என்று எதுகொண்டு சொல்லிற்றென்று ஆராயவேணும். இங்கு நம்
            பிள்ளை யருளிச் செய்வது, “திர்யக் ஜாதீயனாய்ப் பணையோடு பணைதத்தித் திரிகிற
            என்னுடைய நெஞ்சையும் அபஹரித்ததே”
            என்று. இத்தால் பெருமாளுடைய
            கண்ணழகு ஸர்வ ஸத்வமநோஹர மென்னுமிடம் கைமுதிக ந்யாஸித்தமென்கை. இதைக்கணிசித்தே கம்பர், அனுமன் இராமபிரானைக் காணும் போதே “ மஞ்செனத்திரண்ட கோலமேனிய!. மகளிர்க்கெல்லாம் நஞ்செனத் தகையவாகி நளிரிரும்பனிக்குத் தேம்பாக், கஞ்சமொத்தலர்ந்த கண்ண!” என்று கூறினதாகப் பாடினர்.

            (சுபேக்ஷண 🙂 இதற்கு பாஷ்யமருளிச்செய்யாநின்ற பட்டர் “ஸ்வகர்த்ருகம் ஸ்வகர்மகஞ் சி தர்சநம் அதிசுபம் அஸ்ய” என்பதோர் அர்த்தமு மருளிச்செய்கிறார். இராமனைப் பிறர் காண்பதும் இனிது, இராமன் பிறரைக் காண்பதும் இனிது என்றதாயிற்று. ஈக்ஷண சப்தமானது கண் என்கிற பொருளையும், காண்கையென்கிற பொருளையும் காட்ட வல்லது. கண் என்கிற பொருளைக்கொண்டு கீழே விவரணம் செய்தேன். இப் போது காண்கை யென்கிற பொருள்கொண்டு விவரிக்கிறேன். [*யச் ச ராமம் ந பச்யேத் து யஞ்ச ராமோ ந பச்யதி. நிந்திதஸ் ஸ வஸேல்லோகே ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே ] (ஸ்ரீ ரா. அயோ. 17-14 ) இராமனைக் காணாதவனும் இராமனால் காணப்படாதவனும் உலகில் நிந்திக்கப்பட்டவனாவன்; உலகத்தார் நிந்திப்பது கிடக்கட்டும்; தன்னைத்தானே நிந்தித்துக் கொள்ளவேண்டியதுமாகும் என்றபடி. இதனால் இராமனைக் காண்பதுபோல இராமனால் காணப்பெறுவதும் புருஷார்த்தமென்று தேறுவதால் சுபேக்ஷண: என்பதற்கு இருவகைப் பொருளையும் பட்டர் திருவுள்ளம் பற்றினது சாலச் சிறக்கும். இந்த சுபேக்ஷண மஹார்த்த ப்ரஸ்தாவத்தில், அசோகவனத்தில் புலம்பாநின்ற பிராட்டி “ தம் பத்மதலபத்ராக்ஷம் ஸிம்ஹ விக்ராந்த காமிநம். தந்யா பச்யந்தி மே நாதம் க்ருதஜ்ஞம் ப்ரியவாதிநம்.” என்று சொன்ன விந்த சுலோகமும் சிந்தைசெய்யத் தக்கது. இதில் பத்மதளபத்ராக்ஷ மென்றுள்ளது. இங்கு பத்ம தளமென்றோ பத்மபத்ரமென்றோ ஒன்று சொன்னால் போதும்; ” பத்ரம் பலாசம் ச்சதனம் தளம் பர்ணம் ச்சத : புமாந்” என்ற அமரகோசத்தின்படி தளம் பத்ரம் என்பன பர்யாயமே யாதலால் தளபத்ராக்ஷ மென்று இரண்டையும் கூட்டிச் சொன்னது புநருக்தமாகாதோவென்று சிலர் சங்கிப்பதுண்டு. சங்கை யுக்தமானதே. இங்குப் பெரியார் கூறும் ஸமாதானம் சுவை மிக்கது. வடமொழியில் அக்ஷமென் கிற சொல்லுக்கு ” அக்ஷமிந்த்ரிய காயயோ:” என்கிற நிகண்டின்படி கண்ணென் றும் வடிவென்றும் இருபொருள்களுள்ளமை ப்ரஸித்தம். இரட்டுறமொழிதலென் னும் தமிழ் மரியாதையினால் பத்மதளபத்ராக்ஷ மென்றவிவ்விடத்தில் அக்ஷபதத்திற்கு இவ்விரண்டு பொருள்களையுங் கொண்டு ‘பத்மதளம்போன்று விசாலமான கண் ணழகுடையவர், பத்மபத்ரம் போன்ற [தாமரையிலை போல் பசுமையுள்ள ] திரு மேனியையுடையவரென்றதாகக் கொள்ளக்கடவது .நம்மாழ்வார் திருவாய்மொழி யில் * செக்கமலத்தலபோலுங் கண்கைகால் செங்கனிவாய், அக்கமலத்திலை போலுந்திருமேனி * என்றருளிச்செய்தது மேலே விவரித்த பொருளைத் திருவுள்ளம் பற்றியே.

            ராம:- ரமதே’ இதி ராம: ரமு- ரீடாயாம் என்று தாதுவாகையாலே விளையாடுபவன் என்று பொருள்படும்.” த்வம் ந்யஞ்சத்பிருதஞ்சத்பி கர்மஸூத்ரோப பாதிதை ஹரே! விஹரஸி க்ரீடாகந்துகைரிவ ஐந்துபி ‘ என்று நாரத முனிவர் கூறினபடியே, சிறுவர்கள் பந்துகளைக் கொண்டு விளையாடுமாபோலே எம்பெருமான் பிராணிகளை வைத்துக்கொண்டு விளையாடுகிறான். பந்தானது வெளுப்பு நூல் கருப்புநூல் சிவப்பு நூலாகிய மூன்றுநிற நூல்களாலே கட்டப்பட் டிருப்பது போல பிராணிகளும் ஸத்வரஜஸ்தமஸ்ஸுக்களாகிற மூன்று நிறமுள்ள குணங்களமைந் திருப்பர்கள். பந்தானது விஹாரகாலத்தில் மேலே போவதும் கீழே விழுவதுமா யிருப்பது போல, பிராணிகளும் ” தே தம் புக்த்வா ஸ்வர்க்க லோகம் விசாலம் ஷீணே புண்யேமர்த்யலோகம் விசந்தி’ என்கிறபடியே மேலே போவதும் கீழே விழுவதுமாயிருப்பர்கள். இங்ஙனே விளையாடும் பரமபுருஷன் இராமனாகத் திருவவ
            தரித்து “ராமஸ் து ஸீதயா ஸார்த்தம் விஜஹார பஹு ரு தூந்” என்றுவான்மீபேசும்படி பிராட்டி யொருத்தியோடே விளையாடினான். “ ராமஸ் ஸ ஸீதயாஸார்த்தம் ” என்னாதே (ராமஸ்து) என்றது ஸாபிப்ராயம். (து) என்னு மவ்யயம் வ்யாவ்ருத்தியைச் சொல்லும். இதுவரையில் பெருமாள் பித்ரு சுச்ரூஷையிலும் தர்மப்ரவர்த்தனத்திலும் தேவதா ஸாமாராதனத்திலும் புகழ்படைத்திருந்தவர்-இப்போது பிராட்டியோடே சேர்ந்தவாறே வேறுபட்டார். சருங்கார கேளிகளிலே பரம ரஸிகரன்று புகழ்பெற்றபடியைச் சொல்லுகிறது.

            அன்றியே, ராம்:- ராமதே என்பதற்கு உள்ளம் குளிரப் பெறுபவரென்பதும்
            பொருளாகையாலே அப்பொருளைக் கொண்டு அநுபவிப்பதும் பாங்கு. அன்பர்
            களோடு கலக்கப் பெற்றும் அன்பர்களின் காரியத்தைத் தலைக்கட்டியும் உள்ளம்
            குளிருபவர் பெருமாள். குஹேந ஸஹிதோராம ராமன் குஹனோடு சேர்ந்தானென்று
            இதற்குப் பொருளன்று; குஹேந ஸஹிதஸ் ஸந்ராம குஹனோடு சேர்ந்த பின்பு
            ராமனானானென்றே ஆசாரியர்களருளிச் செய்வது. குஹனோடு சேர்ந்து உள்ளங்
            குளிர்ந்தா னென்கை. மற்றோரிடமுங் காணலாம்; (க்ருத க்ருத்யஸ் ததா ராம
            *அபிஷிச்ய சா லங்காயாம் ராக்ஷஸேந்திரம் விபீஷணம். கருதக்ருத்யாஸ் ததா ராம *

            விபீஷணாழ் வானுக்கு முடிசூட்டித் தன் காரியம் தலைக்கட்டிற்றாக நினைத்து [ தா
            ராம ]
            அப்போது தான் ரதியை யடைந்து ராமனாயின னென்கை. பெருமாள்
            செய்தருளின ஒவ்வொரு காரியமும் அவர் தம்முடைய திருவுள்ளத்தைக் குளிரச்
            செய்ய வல்லதே யாயிற்று. குஹஸுக்ரீவ மாருதி வி ஷணதிகள் பக்கலிலே
            காட்டின அனுக்ரஹ விசேஷத்தினால் திருவுள்ளம் குளிர்ந்தது போல, தா காதா
            கேயவிராத கரதூஷண ராவணதிகள் பக்கலிலே காட்டின நிக்ரஹத்தினாலும்
            ஆசரித விரோதிகள் தொலையப் பெற்றோமென்று திருவுள்ளம் குளிர்ந்திருக்கக்
            குறையில்லை. ஆக, ரமதே இது ராம ‘ என்கிற வ்யுத்பத்தியினால் ஸ்ரீராமாயணத்தில்
            பல ப்ரகரணங்கள் ஸங்க்ருஹீதங்களாகும்.

            அன்றியே ராம : ரமயதீதி ராம ‘ என்கிற வ்யுத்பத்தியும் பொருந்தும். தன்னைக் காண்பவர்களையும் தன் சரிதை கேட்பவர்களையும் மகிழ்விப்பவர் பெருமாள்.உலகத்தில் அதிகாரிகள் வெவ்வேறு பட்டிருப்பர்களாதலால் ஒரே குணத்தினால் எல்லாரையும் ஏக ரூபமாக மகிழ்விக்க முடியாது.” ஸத்யேந லோகந் யதி தீநாந்தாநேந ராகவ;. குரூந் சுச்ஷயா வீர தநுஷா யுதி சாத்ரவாந்.’ என்றாப்போலே ஒவ்வொருவர் பக்கலிலே ஒவ்வொரு குணத்தைச் செலுத்தி மகிழ்விப்பது ஸ்ரீ ராமாயண ப்ரஸித்தம். ஸௌசீல்யம் ௌலப்யம் ஸெளந்தர்யம் பொறுமை தயவு வாத்ஸல்யம் வீரம் என்றிவை முதலான பல திருக்குணங்கட்குக் கடலாயிருக்கின்ற பெருமாள் திருநாட்டிலே விலை செல்லகில்லாத திருக்குணங்களை விலை செல்லச் செய்வதற்காகவே இம்மண்ணுலகில் வந்து அவதரித்தபடியினால் அத்திருக்குணங்களிலே அவரவர்களை யீடுபடுத்தி மகிழ்விக்கச் சொல்ல வேணுமோ? குஹப்பெருமாளை ஸௌசீல்யத்தாலே மகிழ்வித்தான் ஸௌசீலய மென்பதும் சீலமென்பதும் பர்யாயம். தன் மேன்மை பாராதே தண்ணியரோடும் கலந்து பரிமாறுகை சீல குணத்தின் காரியம். இக்குணத்தினால் காரியங் கொண்டது தான் ஸ்ரீ ராமாயணத்தில் அதிகம். ஸௌந்தர்ய ஸௌகுமார்யங்களாலே தண்டாகாரண்ய வாஸிகளான மஹர்ஷிகளை யீடுபடுத்தினது பெரியதன்று. காதும்மூக்குமறுப்புண்டு கதறி யழுதுகொண்டே சுரதூஷணாதிகளிடம் செல்லலுற்ற சூர்ப்பணகை” தருணெள ரூபஸம்பந்நௌ ஸுகுமாரெள… புண்டரீக விசாலாக்ஷெள சீரக்ருஷ்ணாஜிநாம்பரெள, கந்தர்வராஜ ப்ரதிமௌ பார்த்திவ வ்யஞ்ஜநாந்விதெள “என்று சொல்லிச் சொல்லிப் புலம்பும்படி செய்ததே சிறப்பு. இங்ஙனே ஓரோ குணங்களைக் கட்டி ஒவ்வொருவரையும் ரமிப்பித்தது பன்னியுரைக்குங்காற் பாரதமாம்.

            விராம 1-ரமய திராம:’ என்கிறாப்போலே ‘விரமயதீதி விராம? என்றாகும்.
            வீராமமாவது ஓய்வு: (1) பிறருடைய செளர்யவீர்ய பராக்ரமங்களை ஓயச் செய்பவர்
            (2) பிறருடைய வாதத்தை ஓயச் செய்பவர் என்று இருபொருள் கொள்ளலாம்.
            முந்தின பொருளைப்பற்றி விசேஷமாக விவரணம் காட்ட வேண்டியதுண்டோ?
            ப்ரஹ்மாஸ்வம்பூச் சதுராநநோ வா ருத்ரஸ் த்ரிநேத்ரஸ் த்ரிபுராந்தகோ வா, இந்த்ரோ மஹேந்த்ரஸ் ஸுரநாயகோ வா த்ராதும் நசக்தா யுதி ராமவத்யம்-என்ற திருவடியின் வார்த்தை யொன்றே போதும். பிறருடைய வாதத்தை ஓயச் செய்பவர்-என்ற இரண்டாவது பொருளுக்குச் சேரச் சிலவிடங்களை யெடுத்துக்கா ட்டுதும். ஆரண்ய காண்டம் ஆறாவது ஸர்க்கத்தில், தண்டாகாரண்யவாளிகளான முனிவர்கள் அரக்கர்களினால் தங்களுக்கு நேரிட்ட கஷ்டங்களை இராமபிரானிடம் விஜ்ஞாபித்துச் சரணமடைந்தபோது இராமன் அம்முனிவர்களுக்கு அபயமளித்த வரலாறு வருணிக்கப்பட்டது. பிறகு ஒன்பதாவது ஸர்க்கத்தில் ஸ்தா பிராட்டி இராமபிரானை நோக்கித் தர்க்கித்துப்பேசினாள். (அதாவது) நீர் முனிவேடம் பூண்டு காட்டுக்கு வந்திருக்கிறீர்; புண்ணிய புனல்களாடிச் சுகமாக அயோத்திசென்று சேரவேண்டியது பிராப்தம். அப்படியிருக்க நீர் முனிவர் முன்னிலையில் பரஹிம்ஸை செய்வதாகப் பிரதிஞை செய்தது எனக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. க்ஷத்ரியர்
            களுக்கு இது தருமமானாலும் இப்போது நீர் க்ஷத்ரிய தருமத்தைக் காக்கவேண்டிய நிலைமையில் இல்லாதபடியாலும்,”தாழிருஞ்சடைகள் தாங்கித் தாங்கருந்தவம் மேற்கொண்டு” காட்டுக்கு வந்திருப்பதாலும் ஆயுதங்களைக்கொண்டு செய்யுஞ்செயலை நீர் நெஞ்சாலும் நினைக்கவே தகாது ‘ உமக்குத் தெரியாததொன்றுமில்லை;உமக்கு நான் தருமம் உபதேசிக்க வந்ததாக நினைக்கவேண்டா; திருத்தம்பியாரோடும் ஆலோசித்து யுக்தமானபடி செய்யக்கடவீர்- என்றுரைத்தாள். இதைக் கேட்ட இராமன் (பத்தாவது ஸர்க்கத்தில்) அந்த ஸீதா பிராட்டியின் வாதத்தைஓயச் செய்திருப்பதைக் காணவேணும். அதில் ஸரமான விஷயம் இவ்வளவே.-அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா ஸீதே! ஸலக்ஷ்மணாம், ந ஹி பரதிஜ்ஞாம் ஸம்ச்ருத்ய ப்ராஹ்மணேப்யோ விசேஷத:* இத்யாதிகளைச் சொல்லி அவளுடைய வாதத்தை விராமமடையச் செய்தனனென்பது. வாலி ”அரக்கரோரழிவுசெய்து கழிவரேல் அதற்கு வேறோர் குரக்கினத்தரசைக் கொல்ல மனுநெறி கூறிற்றுண்டோ?” என்றாப்போலே சில வாதங்களைச் செய்தபோது பெருமாள் அவன் வாயினாலேயே க்ஷமைவேண்டும்படி செய்து அவனை விராமமடையச் செய்ததும்
            இங்ஙனே பலவுங் காண்க.

            [விரத = தம்முடைய ஸமீசீன வாதங்களாலே பிறருடைய வாதங்களை விராமமடையச் செய்யுமாற்றல் விராம; என்ற கீழ்த்திருநாமத்தில் அநுபவிக்கப்பட்டது.பிறருடைய ஸமீசீன வாதங்களாலே தாம் விராமமடைவதும் விதண்டாவாத வைதேசிகரான பெருமாள் பக்கலிலே காண்பதுண்டு. தாம் பிடித்ததே பிடிவாத மாக இராமல் “யுக்தியுக்தம் வசோ க்ராஹ்யம்” என்று கொண்டு தம்முடைய வாதத்திற்கு விச்ராந்திக்கொள்பவர் பெருமாள். அல்லது, காரண விசேஷத்தாலே தாம் நிக்ரஹிக்கப் புகுந்தாலும், உடனே நன்மை கண்டு நிக்ரஹத்தில் நின்றும் விரக்தராகி அநுக்ரஹோந்முகராமவர் என்பதையுங் கொள்ளலாம். இவ்விரண்டையும் அடைவே விவரிக்கிறேன். அயோத்தியா காண்டம் இருபத்தாறாம் ஸர்க்கத்தில் இராமபிரான் தாய் தந்தையர் சொற்படி காட்டுக்குச் செல்ல நேர்ந்ததை ஸ்தா பிராட்டியிடங்கூறி அவளை நகரத்திலேயே வாழுமாறு திட்டம் செய்ய, (ஸர். 27) அதற்குபிராட்டி தன்னையும் உடனழைத்துச் செல்லுமாறு நிர்ப்பந்திக்க, (ஸர். 28) அவளுக்கு இராமன் காட்டின் கொடுமைகளைக்கூறி ‘நீ காட்டுக்கு வரவே தகாது;என்று வலிதாகத் தர்க்கித்தான். அதற்குமேல் பிராட்டி (29, 30 ஸர்க்கங்களில்) பிரணயாரோஷம் தலையெடுத்து “ராமா! உன்னிடத்தில் அழகு மட்டுமேயுள்ளது;அதைக்கண்டு அனைவரும் மயங்கிவிடுகிறார்கள்; உனக்கு ஆண்மையென்பது சிறிதுமில்லை; என்னொருத்தியைக் காக்க முடியாமல் என்னை நிறுத்தி நீ காட்டுக்குப் போனாயென்று என் தந்தையார் கேள்விப்பட்டாராகில் ‘ஹா! புருஷவேஷம் பூண்டுவந்த வொரு பெண்பிள்ளைக்கா என் மகளைக் கொடுத்தேன்! ‘ என்று மிகவும் மனம் நொந்து கொள்வர்; என்னைக் கட்டிலே காக்கமாட்டாத கா புருஷனா நீ? என்று இனைய பலவும் சொல்லித் தர்க்கிக்க, இராமன் தன்னுடைய பிடிவாதத்தில் நின்றும் விரதனாகி அவளையும் உடனழைத்துச் செல்ல இசைந்தனன்.

            காரண விசேஷத்தாலே நிக்ரஹிக்கப்புகுந்து நிக்ரஹத்தில் நின்றும் ஓய்ந்த படியையும் இரண்டிடங்கொண்டு காட்டுவோம். கிஷ்கிந்தா காண்டத்தில் (ஸர்.30) ஸுக்ரீவ மஹாராஜர் வர்ஷாகாலத்திலே பெருமாள் ஒய்வு கொடுத்ததை வியாஜமாகக் கொண்டு விஷயபோகங்களிலே ஊன்றிக்கிடக்க. காலம்கடந்தும் படைகளைத் திரட்டிக்கொண்டு வாராமையைக்கண்ட பெருமாள் சீறிச்சிவந்து நிக்ரஹிக்கத் திருவுள்ளம்பற்றினபடியை இளையபெருமாள் முகமாகத் தெரிவிக்கவெண்ணி ” ந ச ஸங்குசித: பந்தா யேந வாலீ ஹதோ கத: ” மா வாலிபதமந்வகா; ”« ஹநிஷ்யாமி ஸபாந்தவம் ” இத்யாதிகளைச் சொல்லி அச்சமுறுத்தினார். ஸுக்ரீவன் குடும்பத்தோடு மாண்டுவிட்டானின்று என்றே நினைக்கும்படியாயிருந்தது. இந்த பிரபலமான நிக்ரஹ ஸங்கல்பம் என்னாயிற்று? “ராம ஸுக்ரீவயோரைக்யம் தேவ்யேவம் ஸமஜாயத” என்று பிராட்டி பக்கலிலே திருவடி சொல்லும்படியாகவன்றோ ஆயிற்று” வாநராணாம் நராணாஞ்ச கதமா த் ஸமாகம்:?” என்று பிராட்டி திருவடியைக் கேட்டாள். பணைத்த்தித்திரிகிற குரங்கினங்களுக்கும் புருஷோத்தமர்களுக்கும் சேர்க்கையுண்டானபடி எங்ஙனேயென்று கேட்டாள். அதற்குத் திருவடி சொன்னது, வெறும் ஸமாகமமன்று; ராமனும் ஸுக்ரீவனும் ஏகதத்வமென்னும்படி யாகவன்றோ குழைந்தார்களென்று. ஆக, நிக்ரஹத்தில் நின்றும் ஓய்ந்தபடியாலே விரதனென்றது ஓக்கும். மற்றோரிடம் யுத்தகாண்டத்தில் ஸமுத்ர சரணாகதி ப்ரகரணமாகும்.”பா ம் புஜக போகாபமுபதாயாரி ஸுதந்: ‘ அஞ்ஜலிம் ப்ராங்
            முக: க்ருத்வா ப்ரதிசிச்யே மஹோததே:”
            என்னும்படி கடலரசனை வழிவேண்டி மூன்றுநாள் தரைக்கிடை கிடந்தார் பெருமாள். அவனோ முகங்காட்டிற்றிலன்;*சாபமாநய ஸௌமித்ரே சராம்ச்ச ஆசீவிஷோபமாந், ஸாகரம் சோஷயிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா : * என்று பலவுஞ்சொல்லி உலகில் ஜலதத்வமே யில்லா தபடி செய்துவிடுகிறேனென்று சீற்றத்தினெல்லையில் நின்றார் பெருமாள்.பிறகு என்னாயிற்று? அக்கடலரசன் சிறிது ஆபிமுக்க்யம் காட்டினவாறே ஸமுத்ரராஜனே! இவ்வம்பு உனக்காகத் தொடுத்ததன்று; உன் பகைவர்மேலேவிடத் தொடுத்ததத்தனை ; உன் பகைவர்களைக் கட்டிக் கொடு’ என்று கூறி அவன் காட்டிக்கொடுத்த திருமகுல்யமென்கிற விடத்திலே அம்பைச் செலுத்தி அநுக்ரஹ சீலராகி நிக்ரஹத்தில் நின்றும் விரதராயினர். (யுத்தகாண்டம் ஸர்க்கம் 22காண்க… . மேலே ராவணனோடு முலமான யுத்தம் நடக்கும்பொழுது அவன்-சால சாபஞ்ச முமோச வீர:* என்னும்படி கமாண்டு நின்றவாறே ” கச்சஅநுஜாநாமி “ என்று சொல்லி விடை கொடுத்துப் போகவிட்டு அப்போது யுத்தத்தில் நின்றும் விரதரானார் பெருமாள்- என்பதும் இங்கு (விரத 🙂 என்னும் திருநாமத்தின் பொருளாகக் கொள்ளத்தகும்.

            மார்க்க:= மார்க்யதே’ இதி மார்க்க; மார்க்கணமாவது தேடுதல். தேடப்படுகிறவர் என்றபடி. தேடுகிறவர் என்கிற பொருளும் பொருந்தும். தேடப்படுகிறவர் என்னும் பொருளை முன்னம் விவரிப்போம். வேதாந்தங்களிலே “ஸோந்வேஷ்ட ய :” என்றுஓதியுள்ளது. பகவான் தேடத் தகுந்தவன் என்றபடி. இந்தச் சுருதியையடியொற்றியே திருமங்கையாழ்வார் “நான்மறைகள் தேடியோடுஞ் செல்வன்” என்றும். ” நான்மறைகள் தேடியென்றுங் காணமாட்டாச் செல்வன்என்று மருளிச்செய்தார். உத்தர ஸ்ரீராமாயணத்திலே ‘சம்பூகவதம் என்றொரு
            கெட்டம்.தவம்புரியத் தகாத ஜாதியிலே பிறந்தானொருவன் தண்டகார ணியத்திலே கொடுந்தவம் புரிய,அதனாலே அயோத்தியில் ஒரு அந்தணனுடைய குழந்தை இறந்துபோக, அந்த சூத்ரதபஸ்வியைக்கொன்றாலன்றி இந்த பிராமண சிசு உயிர்பெறாதென்றறிந்த பெருமாள் அவனை வதைக்கத் திருவுள்ளம்பற்றிக் கையுங்கத்தியுமாகத் தண்டகாரணியத்திற்கெழுந்தருளுகிறார். (பெருமாள் திரு மொழியில் செறிதவச் சம்புகன் தன்னைச் சென்று கொன்று செழுமறையோ னுயிர்மீட்டு என்றநுஸந்திககப்பட்ட கதை இது.) காடேறச் செல்லாநின்ற பெருமாள் ”சம்புகனென்கிற சூத்திரன் தம் புறானாமே; எங்கே எங்கே?”என்று கேட்டுக்கொண்டே அவனைத் தேடிக்கொண்டு செல்லுகின்றார்; சென்று அவனையணுகினபோது அவன் சொல்லுகிறான்* அந்வேஷ்டவ்யோ யதஸி புவைநர் லோசுநாதச் சாண்ய மாம் அந்விஷ்யந்…” [உத்தரராமசரிதே பவபூதி: என்றான். உலகர்களாலே தேடத்தக்கவனாக வேதங்களில் சொல்லப்படுகிற மஹாப்ரபுவே, நீ என்னைத் தேடிக்கொண்டு வந்தனையே, நான் எவ்வளவு பாக்யசாலி! என்றான்.இங்கு கர்த்தரியர்த்தம் கர்மணியர்த்தம் ஆகிய இரண்டு பொருளும் காணலாம். மாரீச மாயா ருகத்தை வதைத்து மீண்டபின் பாணசாலையில் பிராட்டியைக் காணாமல் அவளைத் தேடிக்கொண்டு திரிந்தது, தனுகபந்தனுடைய சொல்லின்படி சபரியையும் ஸுக்ரீவனையும் தேடிப்போந்தது என்னுமிவற்றையும் கொள்ளலாம். மார்க்க: என்பதற்கு வழியாயிருப்பவன், வழிகாட்டுபவன் என்கிற பொருள்களுங்கொள்ளலாம். வழியென்றாலும் நெறியென்றாலும் பரியாயம்.நம்மாழ்வார் பெரிய திரு வந்தாதியில் *நெறிகாட்டி நீக்குதியோ? என்கிற பாசுரத்தில் உபாயமென்னும் பொருளில் நெறியென்னுஞ் சொல்லைப் பிரயோகித்திருப்பதனால் மார்க்க; என்னும் வடசொல்லும் உபாயவாசகமாகக் குறையில்லை. முகுந்தமாலையில் “கரசரண ஸரோஜே காந்திமந் நேத்ரமீநே ச்ரமமுஷி புஜவீசிவ்யாகுலே அகாதமார்க்கே,ஹரிஸரஸி விகாஸ்ய…” என்ற சுலோகத்தில் ‘அகாதமார்க்கே என்றவிடத்தில் மார்க்க சப்தம் உபாயார்த்தமாகவே பிரயோகிக்கப்பட்டுள்ளது. ‘உபாயோபேயத்வே ததி தவ தத்வம் ந து குணௌ” என்று ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் பட்டர் அருளிச்செய்தபடி எம்பெருமானுக்கு உபாயத்வம் ஸ்வரூபமாகையாலே உபேய பூதனான தானே உபாயமுமாயிருக்கும்படியைச் சொல்லிற்றாகிறது. ராவண வதமான பிறகு பிரமன்வந்து செய்யும் துதியில் “சரண்யம் சரணஞ்ச த்வாம் ஆஹுர் திவ்யா மஹர்ஷய: “ என்றதனால் மூதலிக்கப்பட்ட அர்த்தமேயன்றோ இது. இனி, வழிகாட்டுகிறவன் என்னும் பொருளுக்கு ஸமந்வயம் பெரியவுடையார் (ஐடாயு) பக்கலிலே காணலாம். *மயா த்வம் ஸமநுஜ்ஞாத: கச்ச லோகாந் அநுத்தமாந்* என்று சொல்லிச் சடாயுவுக்கு வைகுந்தத்தேற வழிகாட்டினவரன்றோ பெருமாள். * யா கதிர் யஜ்ஞ சீலாநாம் * இத்யாதியாகச் சொன்ன ராம வாக்யத்தில் (கதி 🙂 என்பதற்கு மார்க்க மென்பது தானே பொருள். பகவத் கீதையில் (8-86) *சுக்ல க்ருஷ்ணே கதீ ஸ்யேதே” என்றவிடத்தில் கதிசப்தார்த்தம் மார்க்கமேயன்றே.

            நேய = நாயகனென்னும் பொருளதான தேதாவென்னுஞ் சொல்லுக்கு எதிரான சொல் (நேய ) என்பது. கட்டளையிடுபவனை நேதா என்போம்; கட்டளை யிடப் பெறுபவனை (நே ) என்போம். ” யஸ்ய விச்வ உபாஸதே ப்ரசிஷம் யஸ்ய தேவா:”என்று வேதமோதியுள்ளபடியும், * ஆணை மெய்பெற நடாய தெய்வம் மூவரில் முதல்வனாகி (திருவாசிரியம்) என்று ஆழ்வாரருளிச் செய்தபடியும்* மனிசர்க்குத் தேவர்போலத் தேவர்க்கும் தேவனாகிய தான் ஸகலதேவர்களையும் கட்டளையிட்டுப் பணிகொள்ளத் தக்கவனாயிருந்து வைத்தும் பிறர் தன்னைக் கட்டளையிடும் படியாக வாயிற்று ஸ்ரீராமாவதாரம் செய்தருளிற்று. விச்வாமித்ர முனிவன் தான் ஒரு வேள்வி செய்வதாகத் தொடங்கி அதனை இடையூறின்றி நிறைவேற்றுதற் பொருட்டுத் தசரதமன்னவனிடம் வந்து இராமனைத் தருகவென்று இரந்தனன்.அதற்கு மன்னவன் உடன்படவில்லை. அரக்கார்களோடு போர்புரியத்தக்க பருவமின்றிக்கே மிக இளையவனான என் சிறுவனை நான் உம்மோடுகூட அனுப்பமாட்டேனென்றனன். அதற்கு முனிவன் மன்னவனை நோக்கி இவனது பெருமையை நீ அறிந்திலை; அறப்பெரியோனான இவனை மிகச் சிறியவனாக நீ நினைத்திருக்கிறா யத்தனை ; வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் என்று வேதம் பேசின பெருமைவாய்ந்த மஹாபுருஷனன்றோ இவன்; இவனை உள்ளபடியே யானறிவேன்; நான் மட்டுமல்ல;இதோ உன்னெதிரில் வீற்றிருக்கின்ற நற்றவமாமுனிவர்களும் நன்கறிவர்கள் என்று இனைய பலவுஞ்சொல்லி ஸ்ரீராமலக்ஷ்மணர்களைக் கொண்டு சென்றான்.தந்தையாரிடம் இங்ஙனே முனிவன் பேசின பேச்சுக்களை யெல்லாம் ஏகாந்தமாகக் கேட்டுக் கொண்டிருந்த இராமபிரான் ‘சேஷபூதனாய்ப் பரதந்திரனாய்ப் பிறக்க வேணுமென்று ஆசைப்பட்டு வந்து பிறந்த நம்மைப் பரமாத்மாவென்று வெளி யிட்டுவிட்டாரே! இது நமது நினைவுக்குத் தகுதியன்றே; மேலும் இந்த விச்வாமித்திரர் இதுவரையில் எத்தனையோ அரியபெரிய வேள்விகளையும் தவங்களையும் இயற்றியிருக்கிறார்; அப்போது ஒருவரையும் துணைவேண்டினவரல்லரிவர்; இப்போது இவர் மிகச் சிறிதாகச்செய்ய நினைத்திருக்கிற ஆறு நாளைய வேள்விக்குத் துணை வேண்டிவந்தது வெறுமனல்ல; நம் தந்தையார் சதுரங்க பலத்தோடு தாம் வந்து அவலீலையாக வேள்வியைக் காத்துத் தருவதாகச் சொல்லவும் அதையும் மறுத்து நம்மையே வேண்டிக் கொணர்ந்த விம்முனிவர்க்கு ஏதோ விசேஷமான தொரு கருத்து இருக்க வேண்டும். நம்மை ஏவிக் காரியங்கொள்ள நினைத்தே (அதாவது நாம் ஆசைப்பட்ட சேஷத்வத்தை உலகமறியச் செய்யக் கருதியே) நம்மை வேண்டிக் கொணர்ந்தார் போலும்’ என்று மருமமறிந்துகொண்டு இராமன் அம் முனிவரிடம் கைகூப்பி ஒன்று விண்ணப்பஞ்செய்தான் – இமௌ ஸ்ம முதிசார்தூல!கிங்கரௌ ஸமுபஸ்திதௌ, ஆஜ்ஞாபய யதேஷ்டம் வை சாஸநம் கரவாவ கிம்” என்றான். இதன் பொருளாவது. முநிஸார்வபௌமரே! நானும் என் தம்பியான லக்ஷ்மணனும் உம்முடைய கட்டளைப்படி நடந்துகொள்ள வந்தவர்கள் ; எப்போதும் உமது அருகிலேயே யிருந்து நீர் நியமிக்கும் குற்றேவல்களைச் செய்ய நாங்களிருவரும் காத்திருக்கிறோம்; நீர் கூசாமல் எங்களுக்கு எவ்விதமான கட்டளையுமிடலாம்;உமக்கு என்ன பணிவிடை செய்யப் பெறுவோமென்று எதிர்பார்த்திருக்கிறோமென்பதாம். ஆக, ஆஜ்ஞாபகனான தான் ஆஜ்ஞாப்யனாகைக்கு ஆசைப்பட்டது தான் (நேய ) என்பதனால் தெரிவிக்கப்பட்டதாகிறது.

            நய= அந்யாந் ஸர்வாந் ஸ்வயம் நயதீதி நய;. பிறருடைய கட்டளையைத்தான் எதிர்பார்த்து அப்படியே நடத்துகொள்வதாகக் கீழ்த்திருநாமம் காட்டிக்கொடுத்தது. பதிம் விச்வஸ்யாத்மேச்வரம் என்று ஓதப்படுகிற பகவானுக்கு அந்த நேயத்வம் [ஆஜ்ஞாப்யத்வம்] ஸ்வேச்சையினாலாயது; நிருபாதிகமாகவுள்ள தன்மையைச் சொல்லுமிடத்து ஸர்வநிர்வாஹகத்வமேயன்றோ அஸாதாரணமாகச் சொல்லுகிறது . இராமபிரான் தன்னைப்பற்றித் தன்வாக்காலே சொல்லிக்கொள்ளும்போது ஆத்மாநம் மாநுஷம் ம யேராமம் தசரதாத்ம ம் இத்யாதியாக எங்ஙனே சொல்லிக்கொண்டாலும், பிறர் சொல்லும்போது அவனுடைய பெருமையைப் பரக்கச் சொல்லியிருக்கவில்லையா? * சரண்யம் சரணஞ்ச த்வாம் ஆஹுர் திவ்யா மஹர்ஷய: – ஜகத் ஸர்வம் சரீரம் தே.-இத்யாதி யாவன்றோ-பிரமன் சொல்லிவைத்தது. ஆகவே (நேய ) என்கிற கீழ்த்திருநாமத்திற்கு எதிர்த்தட்டான (நேதா) என்னுந் திருநாமத்தின் அர்த்தமே (நய ) என்பதிலுள்ளதென்று கொள்ளலாம். அன்றிக்கே, நயதீதி நய:-கொண்டு போகிறவன் என்றபடி.இராமபிரான் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளும்போது தான் ஒருவனாக எழுந்தருளவில்லையே; “அன்று சராசரங்களை வைகுந்தத்தேற்றி* என்று ஸ்ரீகுலசேகரப் பெருமாளருளிச் செய்தபடியே சராசரங்களையுமன்றோ உடன் கொண்டு சென்றது (இதனைச் சிறிது விவரிப்போம்;) முனிவன் வேண்டத் திறல்விளங்கு மிலக்குமனைப் பிரிந்தான் தன்னை* என்று குலசேகரர் பணித்தபடியே இளையபெருமாளை விட்டுப் பிரிந்ததனால் தரிக்கமாட்டாமல் மிகவும் கிலேசமடைந்த இராமபிரான் ராஜ்யத்தைவிட்டு எழுந்தருளத்தொடங்கியபோது அயோத்யா நகரத்து உயிர்களெல்லாம் பெருமாளைச் சரணமடைந்து ‘தேவரீர் எங்குச் சென்றாலும் அடியோங்களையும் கூடவே அழைத்துக்கொண்டு செல்லவேண்டும்’ என்று பிரார்த்திக்க. ஸ்ரீராமன் அவர்களது பத்திப்பெருங்காதலைக் கண்டு அப்படியே யாகட்டும்’ என்றருளிச்செய்து அனைவரையும் தன்னைப் பின்தொடர்ந்து வருமாறு பணித்தருளிப் பயணப்பட்ட வளவிலே. அந்நகரத்திலிருந்த மனிதர்களேயன்றி விலங்கு பறவை முதலிய அஃறிணையுயிர்களும் அகமகிழ்ந்து பெருமாளைப் பின் செல்ல,இங்ஙனம் பலரும் புடைசூழ பகவான் ஸரயூநதியில் இறங்கித் தன்னடிச் சோதிக்கெழுந்தருளும்போது தம்மிடத்து இடையறாத அன்புகொண்டு பின்பற்றிச் சரயுவில் மூழ்கி உடம்பைத்துறந்த எல்லாவுயிர்கட்கும் பிரமலோகத்திற்கு மேற்பட்டதாய்ப் பரமபதம்போலவே மீட்சியில்லாததான ஸாந்தானிக மென்னும் உலகத்தையளித்தனரென்பது இதிஹாஸம். இங்ஙனே நயனம் பண்ணின படியைக் காட்டும் (நய 🙂 என்கிற திருநாமம். வராஹ சரமச்லோகத்தில் ”அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்” என்று சொன்னவரேயன்றோ.

            அநய:=இதற்கு பாஷ்யத்தில் பட்டர் அருளிச்செய்திருக்கும் ரஸவத்தரமான பொருளை முன்னம் விவரிக்கிறேன். ” அய : சுபாவஹோ விதி:; ஸ: அஸ்மசத் அந்யோ
            ஜகதாம் தாஸ்தி இதி அநய:
            ” என்பது பகவத்குணதர்ப்பண ஸ்ரீஸூக்தி. அமரகோசத்தில் “அயர் சுபாவஹோ விதி:” என்னப்பட்டது. நன்மைபயக்கும் செயலுக்கு அயமென்று பெயர்; இராமனைக் காட்டிலும் நன்மை செய்வார் வேறுயாருமிலர்வன்பது தாற்பரியமாகத் தேறும். ஸ்தோத்ரரத்னத்தில் அநுத்தமம் பாத்ரமிதம்தயாயா : என்றவிடத்தில் ‘அநுத்தமம் என்பதற்குப்போல இங்கு ‘அநய?’ என்பதற்கும் பஞ்சமீ பஹுவ்ரீஹிஸமாஸம் பொருத்த முடையதேயாம். தீங்கிழைப்பவர்களுக்கும் நன்மை புரிவதையே தன்மையாகக் கொண்டவரன்றோ பெருமாள்.-*நஸ்மரத்யபகாராணம் சதம யாத்மவத்தயா, கதஞ்சிதுபகாரேண க்ருதேநைகேந துஷ்யதி என்றன்றோ அயோத்யாவாஸி ஜனங்கள் ராமகுணகீர்த்தநம் பண்ணிற்று.-மேலெடுத்த சுலோகத்தில் [கதஞ்சிதுபகாரேண] என்றதன் பொருளை ஆழ்ந்து அறியவேணும். பிறர் செய்வது உண்மையில் உபகாரமன்று; அவர்கள் செய்தது அபகாரமாகவேயிருந்தாலும் கதஞ்சித் உபகாரமாக ஆக்கிக்கொள்ளப் படுகின்றதென்கை.-இதனை ஸ்ரீவசனபூஷணத்தில் (4-1) “நன்மையென்று பேரிடலாவதொரு தீமையுங் காணாதே. .தனக்கேற இடம் பெற்றவளவிலே என்னூரைச் சொன்னாய் என்பேரைச் சொன்னாய் என்னடியாரை நோக்கினாய் அவர்கள்விடாயைத் தீர்த்தாய் அவர்களுக்கொதுங்க நிழலைக் கொடுத்தாய்’ என்றாப்போலே சிலவற்றையேறிட்டு மடிமாங்காயிட்டு ..” இத்யாதி திவ்ய ஸூக்திகளாலறிக. இப்படியாக ஏறிட்டு அநுக்ரஹித்தது ராமாவதாரத்திலுண்டோவென்னில்; ஓரிடம் காட்டுவோம். ஆளவந்தார் ஸ்தோத்ரரத்னத்தில் வாயஸரக்ஷணத்தை யருளிச்செய்யுமிடத்து “தாத் ருசோ வாயஸஸ்ய ப்ரணத இதிதயாலு: ‘ என்றருளிச்செய்தார். இங்கு “ப்ரணதஸ்யவாயஸஸ்ய தயாலு* என்னாதே[ப்ரணத இதி தயாலு ; என்றதன் உட் கருத்தையறிந்து ஸ்தோத்ர பாஷ்யத்தில் பணித்திருப்பது – தயார்த்ரபுத்த்யா ப்ரணதத்வேந பரிக் ருஹ்ய இத்யர்த்த: ‘ என்று. அதாவது, ப்ரணதியை யுத்தேசித்துக்காகம் வந்ததில்லை; எங்குந்திரிந்து செயல் மாண்டு புகலிடமற்று வந்துவிழுந்ததத்தனை. அந்த வீழ்ச்சி யையே ப்ர ணதியாகக்கொண்டு பெருமாள் காத்தருளினர் என்கை. விபீஷண அபயப்ரதாந ப்ரகணத்தில் “ந த்யஜேயம் கதஞ்ச “ என்றது இங்கு சிகரமாக நினைக்கத்தக்கது.

            அதவா, அநய : என்பதற்கு ‘ந வித்யதே நய; யஸ்மிந்ஸ:’ என்று கொண்டு நயமில்லாதவர் என்கிற பொருளுங்கொள்ளலாம்.நயமாவது நீதி: இராமனை நீதி யற்றவரென்று சொல்லலாமோ கோபிகள் கண்ணனை நோக்கி “நீரிலே நின் றயர்க்கின்றேம் நீதியல்லாதன செய்தாய்” என்கிறார்கள். அப்படி இராகவனை நோக்கி யாரும் சொன்னதில்லையே; வாலி போல்வார் சொல்வது பரமார்த்தமாகக் கொள்ளத் தகுமோ? என்று சங்கை தோன்றும். அநியாயமான செய்கையைச் செய்பவரென்று பொருளன்று. நீதியாவது நியதி; இராமபிரானுடைய செயல் ஒரு நியதியிலே [வ்யவஸ்தையிலே] அடங்குமதன்று என்று தாற்பரியங் கொள்க. (இதன் விவரணம் கேண்மின்.) பரமபூஜ்யரான பரத்வாஜ மஹர்ஷியின் ஆச்ரமத்திலே அமுதுசெய்தாரென்று கேள்விப்படுமாபோல சபரி கையாலே அமுது செய்தருளினாரென்றுங் கேள்விப்படுகிறோம். விச்வாமித்ரமுனியை நாதராகக் கொண்டாரென்று கேள்விப்படுமாபோலே *ஸுக்ரீவம் நாதமிச்சதியென்றும்-ஸுக்ரீவம் சரணம் கத?* என்றும் கேள்விப்படுகிறோம். இப்படியாக ஒரு நியதி யில்லையாயிற்று ராமகாரியங்களில்.ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் ‘ பகவதி பரத் வாஜே புக்திஸ் ததா சபரீகரே” இத்யாதி பணித்திருப்பதைக் கொண்டு ரஸிக ஹ்ருதயங்கமமாக நிர்வஹிக்கும்படி இது.

            வீர = பகவானுடைய திருக்குணங்களில், வீர்யம், செளர்யம், பராக்ரமம் என மூன்று குணங்கள் சேர்த்து அநுஸந்திக்கப்படுவதுண்டு. இம்மூன்று சொற்களுக் கும் பொருளில் வாசியில்லைபோல் தோன்றினாலும் வாசியுண்டு.எதிரிகளின் சேனை எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் அதைக்கண்டு அஞ்சாமை (1), அந்தச் சேனை யினுள்ளே ஒருவனாகவே புகுந்து எதிரிகளை அநாயாஸமாகக் கொன்று முடிக்கும் வல்லமை (2), அப்படிச் செய்யுமளவில் தனக்குச் சிறிதளவேனும் பங்கம் நேராத படி ஸகலவித பங்கங்களும் எதிரிகளுக்கே சாரநிற்றல் (3), என்றிங்ஙனே மூன்று வகையான ஆற்றல்கள் பெரும் போர் வீரர்களுக்கு இருக்க வேண்டியவை யுண்டு. இம்மூன்றையுஞ் சொல்லும் சொற்களாக வீர்ய செளர்ய பராக்ரம சப்தங்களைக் கொள்ளலாம். இங்கு வீர: என்று வீர்யமொன்று மாத்திரமே சொல்லப்பட்டிருந்தாலும் மற்றை யிரண்டும் உபலக்ஷணமாகக் கொள்ளத்தக்கன அல்லது உள்ள சொல்லிலேயே (அதாவது வீர: என்ற சொல்லிலேயே) அம்மூன்று பொருள்களையும் சேர அநுஸந்தானம் செய்யவுமாம். ஸ்ரீராமாயணத்திலும், மற்றும் இராமபிரானைப்பற்றிப் பேசும்பல நூல்களிலும் இராமனை வீரனென்றும் சூரனென்றும் ”பராக்ரமசாலியென்றும் பாராட்டிக்கூறுவது விசேஷமாகக் காணத்தக்கது. இராமனுக்கு மஹாவீரனென்றே ஒரு திருநாமமுண்டு. “ஐயஜய மஹாவீர!” என்றே ரகுவீரகத்யத்தின் தொடக்கம். வீரராகவனென்றே ஒரு திவ்யதேசத்தில் திருநாமம்பெற்று விளங்குகின்றமை ப்ரஸித்தம். பவபூதிமஹாகவி மஹாவீரசரிதமென்றே பெயரிட்டு நூலியற்றினான். ஆழ்வார்கள் இராமனது செயலைச் சொல்லி வீரனென்றே வாய் வெருவுவர்கள்; “இலங்கை மன்னனைந்தொடைந்து பைந்தலை நிலத்துகக் கலங்க கூன்று சென்று கொன்று வென்றிகொண்ட வீரனே! ””மாறுசெய்த வாளரக்கன் நாளுலப்ப அன்றிலங்கை நீறு செய்து சென்றுகொன்று வென்றிகொண்ட வீரனுர் என்றுமுள்ள (திருச்சந்த விருத்தம் பாசுரங்கள் காண்க. இவை யெல்லாவற்றிலுங்காட்டிலும் எதிரி கையாலே விடுதீட்டென்னுங் கணக்கிலே இராவணனே வியந்துபோற்றும் வீரியம் இராமனுக்குள்ளது. (வால்மீகி. யுத்த. 106-6] “சத்ரோ:ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரஞ்நீயஸ்ய விக்ரமை:” என்பது இராவணனுடைய மொழி. இராமனை ப்ரக்க்யாத வீர்யனென்று இராவணன் தன்வாயினால் போர்க்களத்திற் சொல்லுவதானது அந்த வீர்யத்தைத் தான் மிக நன்றாக வநுபவித்தத்னாலன்றோ! ‘விக்ரமை:ரஞ்ஜநீயஸ்ய” என்றும் அடுத்தபடியே சொல்லுகிறான். இங்ஙனே சொல்லும்படியாக இராமன் செய்தவீரச்செயல்கள் பலபல விருப்பினும் ஒன்றெடுத்துக் காட்டுவோ மிங்கு. யுத்த காண்டத்தில் தொண்ணூற்று நான்காம் ஸர்க்கம் காண்க. அங்கு மூலபலம் திரண்டவன்று இராமனுடைய அதிமாநுஷப் போர்வல்லமையைப்பேச வான்மீகி முனிவரும் தடுமாறுகின்றார். “ச்சிந்நம் பித்தம் சரைர் தக்கம் ப்ரபக்நம் சஸ்த்ரபீடிதம்.பலம் ராமேண தத்ருசுர் ந ராமம் சீக்ரகாரிணம்” என்று, இராமனால் பலவாறு தகர்ப்புண்ட அரக்கரது சேனைகளைக் கண்டார்களொழிய பம்பரமாகச் சுழல்கின்ற இராமனை ஒருவரும் காணமாட்டிற்றிலர் என்கிறார். மேலே *தே து ராமஸஹஸ்ராணி ரணே பச்யந்தி ராக்ஷஸா * என்று ஆயிரக்கணக்காண ஸ்ரீராமமூர்த்திகளைக் கண்டார்களென்கிறார்.உடனே புந; பச்யந்தி காகுத்ஸ்தம் ஏகமேவ மஹாஹவே என்று, அந்தப் போர்க்களத்தில் இராமனொருவனையே கண்டார்களென்கிறார் . இராமனைக் காணவேயில்லை யென்பது, ஆயிரக்கணக்காண ராமர்களைக் கண்டார்களென்பது, ஒரு ராமனையே கண்டார்களென்பது – ஆகவிப்படி ஒன்றோடொன்று சேராத வண்ணம் பேசும்படியாக வன்றோ பெருமாள் மிக விசித்திரமான போர்த்தொழில் நிகழ்த்திற்று.-திருவாய்மொழியில் (8-6-3) ஒருவரிருவரோர் மூவரென நின்று, உருவு கரந்து உள்ளுந்தோறும் தித்திப்பான் என்ற பசுரத்திற்குப் பூருவாசாரியர்கள் பொருள் நிர்வஹித் திருக்கிறவிதம் இதர பண்டிதர்களின் புத்திக்குச் சிறிதும் எட்டமாட்டாதது. ஒருவரிருவரோர் மூவரென நின்றதும் உருவு கரந்ததும் எப்போதென்று தெரிந்து கொள்ளமுடியாதபடி ஆழ்வாருடைய பாசுரம் தோன்றியுள்ளது. இதற்குக் கீழ்ப்பாட்டு செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை உருக் கெடவாளிபொழிந்த வொருவனே என்று முடிந்திருக்கிறது. மேற்பாட்டின் முன்னடிகட்குக் கீழ்ப்பாட்டின் பின்னடிகளோடு அந்வயமென்று கண்டு உரை செய்தருளியுள்ளார்கள். இங்குப்பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் இவை காண்மின்- ஒருவரிருவரோர் மூவரென நின்று உருவுகரந்து-உருக்கெடவாளி பொழிந்தவொருவன் என்று கீழோடே அந்விதமாகக்கடவது.மூலபலம் சாம்படி அருளுகிறவன்று முந்துற ஒருவனாய்த்தோற்றி, சாரிகையில் வேகம் மிகமிக இருவரும் மூவருமாய்த்தோற்றி, வேகம் மிக்கவாறே இந்த்ரிய ஸம்யோகத்துக்கு இடமில்லாதபடியாகையாலே ரூபக்ரஹணம் அரிதாகி உருக்கெட வாளிபொழிந்த வொருவனென்று அந்வயம். வ்யாபரித்த சடக்காலே ரூபம் கண்ணுக்குப் பிடிபடாதொழிகை” என்று. இதனால் இராமனது வீரம் வாசாமகோசர மென்றதாயிற்று.

            சக்திமதாம் ச்ரேஷ்ட = அபரிமித சக்தியுக்தனென்கை. இராமன் மஹாசக்திமானாயிருக்கும் போது இராவணனை ஒரு நொடிப்பொழுதில் கொன்றிருக்கலாமே அங்ஙனங்கொல்லாது வெகு ப்ரயாஸங்கள் பட்டதாகத் தெரிகிறதே. அஃது என்?என்று சிலர் கேட்கக்கூடும்.கேண்மின்; ” பொல்லாவரக்கனைக் கிள்ளிக்களைந்தானை”<என்று ஆண்டாளும் “சதுரமாமதிள் சூழிலங்கைக் கிறைவன் தலைபத் துதிரவேரட்டி ஓர்வெங்கணையுத்தவன்” என்று திருப்பாணாழ்வாரு மருளிச்செய்தபடியே ராவண ஸம்ஹாரத்தைப் பெருமாள் அவலீலையாகவேதான் செய்தார். அதில் ஐயமொன்று மில்லை. எப்படியாவது ராவணன் உடன்பட்டுவழிபட்டு உஜ்ஜீவிக்கவும் ஜீவிக்கவும் ப்ராப்தமாமோ? ” என்கிற நசை பெருமாளுக்கு இருந்தமையினாலேயே அவனை ஸம்ஹரிப்பதில் காலதாமதம் செய்யப்பட்டதென்கிற தத்துவம் உணரத்தக்கது.இராவணனைக் காட்டிலும் பன்மடங்கு வலிமைமிக்கவனென்று ப்ரஸித்தி பெற்றிருந்த வாலியை அநாயாஸமாக முடித்தவர் பெருமாள். (ஸுந்தரகாண்டம் ஸர்.51 ச்லோ.11 திருவடி இராவணனுக்கு ஹிதோபதேசம் செய்கையில் *த்வயாவிஜ்ஞாதபூர்வச் ச வாலீ வாதரபுங்கவ:, ராமேண ஹதஸ் ஸங்க்யே சரேணைகேந வாநர: * என்று,அப்பா ராவணா! வாலியென்கிற வாநரேச்வரரை ஏற்கெனவே நீ அறிவாயன்றோ;அவர் இராமனால் ஒரே அம்பினால் முடிக்கப்பட்டார்காண்’ என்கிறார். அன்றியும் இராவணனைப் பலவாறு பங்கப்படுத்தியவன் கார்த்தவீரியார்ஜுனன்; அன்னவனைப் பரசுராமன் தனது கோடாலிப்படையினால் ஆயிரங்கைகளையும் வெட்டிக் கொன்றவன். அப்பரசுராமன் இராமபிரானிடம் பட்டபாடு தெரிந்ததே.இத்தகைய ஒப்புயர்வற்றை ஆற்றல்பெற்ற இராகவன் இராவணனைச் சங்கரிக்கச் சிரமப்படவேணுமோ? சிரமப்பட்டதாகக் கதையிலே கண்டால் ஸத்யஸங்கல்பனும் மஹாவீரனுமான இராமன் எதற்காக இப்படிச் சிரமப்பட்டாரென்று ஆராய ேண்டுமன்றோ சூர்ப்பணகை மூக்கறுப்புண்டு ஜனஸ்தானத்திலிருந்த தன் தமையனாகிய கரனிடஞ்சென்று செய்தியறிவித்துப் புரண்டழுது அவனுக்குக் கோபத்தையுண்டாக்க. அவன் பதினாலாயிரம் ஸேனாதிபதிகளையும் ஸேனைகளையும் இராமனோடு போர்புரியவனுப்ப, இராகவன் அவர்களத்தனை பேரையும் தாம் ஒருவராகவே கொன்று வென்றிட, பிறகு கரந்தானே நேரில் வந்து எதிர்க்க-இராமன் “ அஸஹாயசூர! என்று ரகுவீரகத்யத்தில் விளிக்கும்படியாக லக்ஷ்மணனையும் துணைகொள்ளாமல் ஏகாகியாய் அவனது தலையை யறுத்திட்டதும் ப்ரஸித்தம். ‘சதுர்தச ஸஹஸ்ராணி ரக்ஷஸாம் பீமகர்மணம், ஏகச்ச ராமோ தர்மாத்மா கதம் யுத்தம் பவிஷ்யதி!” என்று வயிறு பிடித்த மஹரிஷிகளும் வியக்கும்படி அவலீலையாகவன்றோ நீறு செய்தது. அத்தகைய பேராற்றல்பெற்ற பெருவீரனுக்கு இராவணன் ஒரு பதார்த்தமோ? ஒரேயடியில் அவனைத் தொலைக்கமாட்டாமையில்லை; எவ்வகையினா லாவது அவன் அபிமுகனாக வருகிறானோவென்று பார்த்திருந்தாரத்தனை.

            தர்ம = ஸ்ரீராமபிரானை ஸாக்ஷரத் தர்மமாகச் சொல்லியிருப்பது பலவிடங் களில். இராவணன் இலங்கையிலிருந்து பஞ்சவடிக்கு ஓடிவந்து ஸ்தாபஹாரத் திற்குமாரீசனைத் துணைவேண்டினபோது அவன் ராவணனுக்குப் பலவாறு ஹிதோப் தேசங்கள் செய்கிறான். அதனிடையில் (ஆரண்.37-13) *ராமோ விக்ரஹவாத் தர்ம:* என்றான். ‘கைகால் முளைத்து நடையாடும் தருமம் இராமன்’ என்று ஆஸுர ப்ரக்ருதியான மாரீசன் சொல்லுகிறான். ராவணவதானந்தரம் இலங்கையிலே வந்து துதிக்கின்ற தேவவர்க்கத்தில் பிரமன் *பவாந் நாராயணே தேவ: *என்றபின் *லோகா நாம் த்வம் பரோ தர்ம: * என்றான். கீதையில் “தர்மஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்ப வாமியுகேயுகே’ என்று தர்மஸ்தாபனத்திற்காகத் தான் அவதரிப்பதாகச் சொன்ன பரமபுருஷன் *ஸர்வதர்மாந்பரித்யஜ்ய* என்று ஸகல தருமங்களையும் விடும்படி சொன்னது கூடாது; விட்டுவிடு என்றதோடு நிற்காமல் “மாமேகம் சரணம் வ்ரஜ” என்று தன்னைப் பற்றச் சொல்லுகையாலே ஸாக்ஷாத் தர்மம் தானே யென்கிற தத்துவம் வெளியிடப்பட்டதாகிறதன்றோ. நாம் சிரமப்பட்டு ஸாத்திக்க வேண்டிய தர்மம் ஸாத்ய தர்மமெனப்படுகிறது. அங்ஙனன்றிக்கே எப்போதும் ஸித்தமாயிருக்கிற தர்மம் எம்பெருமான். ஸாத்யதர்மம் அபாய பஹுளமென்றும், ஸித்ததர்மம் நிரபாயமென்றும் அறியத்தக்கது. தசரதசக்ரவர்த்தி ஸ்ரீ ராம பிரானைப் பிள்ளையாகப் பெறப்பெற்றபாக்யசாலியாயிருந்தும் ஒரு தெளர்ப்பாக்ய முடையனாயினன். ஆஸர ப்ரக்ருதியான மாரீசனுக்குத் தெரிந்த தத்துவம் அந்தோ! அவனுக்குத் தெரியாமன்றோ போயிற்று. *ராமோ விக்ரஹவாந் தர்ம.* என்று அவன் சொன்னபடி வடிவெடுத்த ஸித்த தர்மமான இராமனோடு கூடினன்றோ வாழ்வதை விட்டு ஆபாஸ தர்மமான ஸத்ய வசனத்தைப் பற்றி நின்று இழந்தா அம்மன்னவன். முமு ப்படியில் ஸர்வதர்மாந் பரித்யஜ்ய * என்றவிடத் தில் “சக்ரவர்த்தியைப் போலே இழக்கைக்குறுப்பு” என்றவிடத்து மணவாளமாமுனி களின் ஸ்ரீஸூக்திரத்னங்களை அநுபவிப்பது. க்ருஷ்ணாவதாரத்தில் ததி பாண்ட னுடைய கதையை அறியாதாரில்லை: தாயெடுத்த சிறு கோலுக்கு உளைந்தோடி சொல்லி வந்த கண்ணனை மறைத்திட்டுவைத்து ‘உன்மகன் இங்கில்லை’ என்று பொய் ஸபரிகரமாக மோக்ஷம் பெற்றுப் போனான்; தசரதன் ஸத்யவாதியென்று
            ஸாக்ஷாத் பேர்படைத்து நரக பாயாயமான ஸ்வர்க்கத்தையே பெற்று நின்றான். ராமனே தர்மமென்று அறியப் பெறாத்தனாலான தன்றோவிது.-பெருமாள் பிராட்டியோடு கூடியிருந்தகாலத்தில் செய்தவுபந்யாஸங்களில் சிறந்தவுபந்யாஸமாக வொன்றைத் திருவடியிடம் சொல்லுகிறாள் பிராட்டி-(ஸ ந்தர 38-41.) *ஆந்ருசம்ஸ்யம் பரோ தர்ம த்வத்த ஏவ மயர ச்ருத * என்று.ஆந்ரு சமஸ்யமாவது இரக்கம்; அதுதான் பரமதர்மமென்று பெருமாள் உபந்யளிப்பது வழக்கமாம். ‘கருணையே வடிவெடுத்தவன் காகுத்தன்‘ என்று ப்ரஸித்தம். தசாவதார ஸ்தோத்ரத்தில் இச்சாமீந விஹாரகச்சபேத்யாதி ச்லோகத்தில் ஒவ்வோரவதாரத்தையும் ஒவ்வொரு விசேஷணமிட்டுச் சொல்லிவருகையில் இராமனைக் கருணாகாகுத்ஸ்த! என்று கூறியிருப்பது குறிக்கொள்ளத்தக்கது. வாலிவதமான பிறகு *ஸஞ்ஜாத பாஷ்ப: பரவீர ஹந்தா ராமோ மு ர்த்தம் விமநா பபூவ* என்னும்படி நின்ற பெருமாளைக் கருணாகாகுத்தனென்றுதானே சொல்லவேண்டும், 

            16. தர்மவிதுத்தம்:. தர்மஜ்ஞர்களில் தலைவன் இராமபிரான் என்றவாறு. தர்
            மத்தை நன்கறிந்தவனென்கை. ஆண்டாள் கண்ணபிரானுக்குத் *தருமமறியாக்
            குறும்பனென்று பிருதுசாத்தினாள். அதற்குநேர்மாறாக இராமபிரான் தர்மஜ்ஞர்களில் தலைவனாயிருப்பன். பிராட்டி இராவணனுக்கு ஹிதமுபதேசித்தருளுங்காலத்தில்* விதிதஸ் ஸ ஹி தர்மஜ்ஞ:* என்று பெருமாளை தர்மஜ்ஞரென்று கூறியிருப்பது ப்ரஸித்தம். அவள் திருவுள்ளம்பற்றின தருமம் இன்னதென்பதை அவள்தானேஅடுத்தபடியாகக் கூறுகின்றாள் *சரணாகத வத்ஸல:* என்பதனால், சரணாகதர்களிடத்திலே
            அன்பு பூண்டிருப்பதுதான் பெருமாள் கடைப்பிடித்த தருமமென்றும் அதை அவர்
            நன்கறிந்தவரென்றும் சொல்லிற்றாயிற்று. நன்கறிந்தவரென்றால் அறிந்திருப்பதுமட்டும் பொருளன்று. அறிவுக்குப் பயன் அனுட்டானமாதலால் அந்த தருமத்தைநன்கு அனுட்டிப்பவர் என்கிறவரையில் பொருளாகத் தேறும். ஸ்ரீராமாயணத்தில்சரணாகதி செய்தவர்கள் யார் யார்? அவரவர்களிடத்திலே பெருமாள் காட்டினவாத்ஸல்யம் எத்தகைத்து? என்று விமர்சிக்கவேண்டும். இதற்குமுன் சரணாகதியாவது என்? என்கிற விமர்சம் மிக முக்கியமானது. ஸாரமாகத் தெரிவிப்போமிங்கு.-சரணாகதியென்றாலும் ப்ரபத்தியென்றாலும் ஒன்றே.நூற்கொள்கையை ஆய்ந்து ஆழ்ந்துபார்க்குமளவில் ” பகவத் ப்ரவருத்திவிரோதி ஸ்வப்ரவருத்திநிவ்ருத்திதான் ரபத்தியாகத் தேறுகிறது” என்கிற பூர்வாசார்ய ஸித்தாந்தமே தஞ்சமாகும். கஜேந்த்ராழ்வான் ப்ரபந்தன், த்ரெளபதி ப்ரபந்மை என்கிறோம். இவர்கள் பக்கலிலே மேலே சொன்ன லணந்தான் ஸமந்விதமாகும். ‘கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ ஆகர்ஷதே ஜலே” என்னும்படியாக கஜேந்திராழ்வான் தன்னைத்தான் காப்பாற்றிக் கொள்வதாக ஸ்வப்ரவ்ருத்திபரனாயிருக்கு மளவும் அவன் மீது பகவானுடைய கருணை ப்ரஸரிக்கவில்லை. அந்த ப்ரவருத்தி ஓய்ந்தவாறே அரை குலையத்தலைகுலைய ஓடிவரும்படியான பதற்றம் எம்பெருமானுக்கு உண்டாயிற்று த்ரெள
            பதியினிடத்திலும் இத்தன்மையே பார்க்கலாம்.” இரு கையும் விட்டேனோ த்ரெளபதியைப் போல” என்னும்படியான நிலைமை அவளுக்கு உண்டான பின்புதான்அவள் ரக்ஷை பெற்றாள். தன்மானத்தைத் தானே காத்துக்கொள்வதாக முயன்றுதன் சேலையைத் தான் இறுகப்பிடித்துக் கொண்டிருந்த நிலைமையுண்டே அதுதான்பகவத் ப்ரவருத்தி விரோதியான ஸ்வப்ரவருத்தியாயிருந்தது. அது கழிந்தவுடனேயன்றோபுடவை சுரக்கும்படியான பகவத் க்ருபை தோன்றிற்று. இந்த மருமத்தைஸ்ரீராமாயணத்திலே காட்டுகிறேன் காண்மின்; காகம் சரணாகதி செய்ததாகச்சொல்லப்படுகிறது. அந்த சரணாகதியின் தன்மையை விமர்சித்துப் பார்த்தால்,மேலே விவரித்த ரீதிதான் தேறும். *ஸ தம் நிபதிதம் பூமெள * என்றபடி எங்கும்தரிப்பற்று வந்து நிலத்திலேவிழுந்தமை யுண்டே,அதுவே யன்றோ அவனுடைய சரணாகதியாக ஆசாரியர்களால் நிஷ்கர்ஷிக்கப்பட்டது. அவனுக்கும் ரக்ஷணம் நேர்ந்தது.காகத்தினுடையதான இந்நிலை ராவணனுக்குமுண்டு; பிரபலமான யுத்தம் நடைபெறுகிற காலத்திலே *யோ வஜ்ரபாதாசநி. சசால் சாபஞ்சமுமோச வீர:* என்னும்படியான நிலைமை ராவணனுக்கு உண்டாயிற்று. அப்போது பெருமாள்• கச்சாநுஜாதாமி-புறப்பட்டுப்போ, விடைதருகிறேன்” என்று சொல்லி விட்டருளின துண்டே, அது தத்கால ரக்ஷணத்தில் சேர்ந்ததேயாகும். ஆத்யந்திகரக்ஷணமே
            பண்ணவேணுமென்கிற திருவுள்ளமும் பெருமாளுக்கு இருந்ததுண்டு; அவன் விதி
            வசத்தாலே மீண்டும் யுத்தத்திலே மூண்டு பகவத் பரவ்ருத்தி விரோதி ஸ்வப்ரவ்
            ருத்தி நிஷ்டனாகித் தொலைந்து போனான். அவனுக்கும் ரஷணமே செய்தருளினார்
            பெருமாள் என்பது ஸ்ரீ ராமாயணத்தில் அந்தரங்க பரமார்த்தம். அவனுக்கு சரம
            ஸம்ஸ்காரம் பண்ணமாட்டேனென்று பிடிவாதமாயிருந்த விபீஷணாழ்வானை நிர்ப்
            பந்தப் படுத்தி அது செய்யுமாறு கட்டளையிட்ட பெருமாள் ‘அவனுடைய தேஹத்திற்கு நன்மை செய்ய நினைத்த நமது நினைவு நிறைவேறாதொழிந்தாலும் அவனுடைய ஆத்மாவுக்காவது நன்மை செய்யப்பெற்றோமே!’ என்று மகிழ்ந்தபடியை
            நினைப்பது.*மரணாந்தாநி வைராணி நிர்வருத்தம் ந: ப்ரயோஜநம், க்ரியதாமஸ்ய
            ஸம்ஸ்கார: யதா ஹ்யேஷ ததா மம * என்கிற பெருமாளுடைய சுலோகத்திற்கு நம்பிள்ளையின் ரஸகனமான வியாக்கியானத்தை நமது அபூர்வ ராமாயணத்திலே
            நாம் விசதீகரித்திருப்பது காண்க.

            தேவர்களும் அசுரர்களும் யுத்தம்செய்கையில் வெற்றி பெற்ற தேவர்கள் அசுரர்களிடமிருந்து முத்தும் மணியுமான சிறந்த பொருள்களைக் கொள்ளைகொண்டு அவற்றைக் காப்பாற்றும் பொருட்டு அக்நி தேவனிடம் வைத்தார்கள்.மீண்டு மொருகால் நமக்குத் தோல்வி விளைந்தால் அப்போது இவை நமக்கு ஆபத்தனமாயிருக்கு மென்றெண்ணிவைத்தார்கள். அவற்றை அக்நிதேவன் தானே கொள்ளை கொள்ள வெண்ணி அப்பால் நெகிழத் தொடங்கினான். அதையறிந்த தேவர்கள் அப்பொருள்களை மீட்டுக்கொள்ள வேண்டிப் பின்தொடர்ந்தோடினார்கள் . ஓடி பலாத்காரமாகப் பிடுங்கினபோது அக்நிதேவன் அழுதான்; அதனால்அவனுக்கு ருத்ரனென்கிற பெயருமுண்டாயிற்று. (ரோதிதீத ருத்ர – என்று நிர்வசனம் அவன் அழுத கண்ணீர் கீழே விழுந்து அது வெள்ளியாக ஆயிற்று.-கண்ணீரின் விகாரமான வெள்ளியானது தக்ஷிணைக்குத் தகாதது. எவன் யஜ்த்தில் வெள்ளி நாணயத்தை தக்ஷிணையாகக் கொடுக்கிறானோ அவனுடைய இல்லத்தில் வருஷத்திற்குள் ரோதன நிமித்தமுண்டாம். ஆதலால் யஜ்ஞத்தில் வெள்ளிநாணயத்தை தக்ஷிணையாகக் கொடுக்கக் கூடாது.
            மேலே விவரித்த வேத வாக்யத்தில் “ரஜதம் ஹீரண்யம்பவத்” என்றும்“ரஜதம் ஹிரண்யம் அதக்ஷிண்யம்” என்று மிருக்கையாலே ரஜத மென்கிற வெள்ளியும், ஹிரண்யமென்கிற பொன்னும் தக்ஷிணைக்கு அநர்ஹமென்று சிலர் சொல்லுவர்கள். அது தவறு. ஹிரண்யமென்பது தனத்திற்குப் பொதுவான வாசகம்.-ரஜதரூபமான தனம்’ என்று அர்த்தமேயொழிய, வெள்ளியும் பொன்னும் என்று அர்த்தமன்று. இங்கு வித்யாரண்ய பாஷ்யபங்க்தி வருமாறு -“ரஜதரூபம் தநம் அபவத்; அத்ர ஹிரண்ய சப்தஸ்ய தநலாமாய வாசித்வாத் ரஜதம் ஹிரண்யமிதி அவிருத்தம்,”-என்று. பட்ட பாஸ்கரருடைய கருத்தும் இதுவே யாகும். வேதத்தில் “ஹிரண்யம் தக்ஷிணா என்று நூறிடங்களில் வருகிறது; அங்கெல்லாம் ஸ்வர்ணமென்றே பொருள். இக்காலத்தவர்கள் பெரும்பாலும் ஸ்ரார்த்தத்திலுங் கூட நோட்டை [காகிதத்தை] வைத்து தக்ஷிணை கொடுப்பது ஒரு விதத்தில் நலமேயாம்.

            முதலஷ்டகத்தில் (1) இரண்டாமநுவாகம் க்ருத்திகாஸ்வக்மாததீத * இத்யாதி. உலகில் நாம் நக்ஷத்ர பரிகணநை பண்ணும்போது ‘அச்விநி பரணி க்ருத்திகை’ என்று கணக்கிட்டு வருகிறோம். வேதத்தில் க்ருத்திகையே முதலாக வெடுக்கப்படுகிறது. ‘முகம் வா ஏதந் நக்ஷத்ராணாம். யத் க்ருத்திகா” என்று இந்த அநுவாகத்தில் ஸ்பஷ்டமாகச் சொல்லப்படுகிறது. ஸம்ஹிதையில் நாலாவது காண்டத்தில் எல்லா நக்ஷத்திரங்களையும் வரிசையாக ஓதிவருமிடத்து ‘க்ருத்திகா நக்ஷத்ரமக்ர் நேவதா” என்று இதுவே முதலிடப் பட்டது. “அக்நீர் ந பாது க்ருத்திகா-இத்யாதிகளுங் காண்க. இப்படி யிருக்க லோகத்தில் க்ருத்திகைக்கு ப்ரதமகண நம்வாராமைக்கு ஹேது வென்னென்னில், அதுவும் இவ்வநுவாகத்திலேயே ஸூசிதமாகிறது; [அதோ கலு. அக் நக்ஷத்ரமித்யபசாயந்தி. க்ருஹாந் ஹ தாஹுகோ பவதி.-கீழே இந்த நக்ஷத்திரத்திற்குச் சிறப்புச் சொல்லப்பட்டு, அதற்கு மாறாக இப்போது இழிவு சொல்லப்புகுவதால் (அதோ கலு) என்பது அதற்கு அவதாரிகை யாகும்.என்ன இழிவு? என்னில் பெரியார்கள் அக்நி நக்ஷத்ரமென்று இழிவு கூறுகின்றார்கள். அந்த நக்ஷத்ரத்திலே செய்யும் செயல் யஜமாநனுடைய வீட்டைக்
            கொளுத்தி விடும் இந்த தேவதை இதை யிட்டே லோகத்தில் இந்த நக்ஷத்ரத்திற்கு ப்ரதம பரிகணநை இல்லை போலும். வேறு காரணமுமிருக்கலாம்.

            நாலாவதநுவாகத்தில் *ஸக்குதாச்சிந்நம் பர்ரூர்ணாம்ந்து ஸ்யோநம்என்கிற மந்த்ரம் படிக்கப்படுகிறது. இது பித்ருதர்ப்பணம் செய்கிறவர்களுக்கெல்லாம் கண்டபாடமான மந்திரம். இதன் பொருளாவது ஒரே தடவை கிள்ளப்பட்டதர்ப்பம் ; பஞ்சுபோல் மெல்லியது. ஸுககரமானது. இப்படிப்பட்ட தர்ப்பமே! உன்னைப் பித்ருக்களுக்காகப் பரப்புகிறேன். இங்ஙனம் பரப்பப்பட்ட தர்ப்பத்தில் என்னுடைய பித்ருபிதாமஹப்ரபிதாமஹர்கள் தம்தம் அநுசரர்களோடு கூட ற்றிருக்கக் கடவர்கள் என்கை.

            காடகம் மூன்றாவது ப்ரச்நத்தில் * பிதா புத்ரேண பித்ர்மாந் யோநியோநௌ.
            நாவேதவிந் மநுதே தம் ஹந்தம் ப் + என்று பகவானுடைய விபவாவதாரம் ஓதப் பட்டது. இவ்விரண்டு வாக்யங்களின் பொருளாவது-எம்பெருமான் ஸர்வலோகபிதா ; அவன் ஒருவர்க்கும் மகனாகத் தகுந்தவனல்லன்; ஆனாலும் தனக்குப் புத்ர ப்ராயரானவர்களையே பிதாவாகக் கொண்டு எந்நின்ற யோனியுமாய்ப் பிறக்கிறான். வேதமோதாதவர்கள் அவன் பெருமையை யறியகில்லாரென்கை..

            மணவாள மாழனிகள். ‘ ஸ்வாமி எம்பெருமானாரான பூர்வாவதாரத்திலருளிச்செய்தவை ஒன்பது திவ்ய க்ரந்தங்கள்; அவற்றுக்கிரட்டிப்பாகப் பதினெட்டு க்ரந்தங்கள் இவ்வவதாரத்திலருளிச்செய்தவை 1. முமுக்ஷப்படி வியாக்கியானம்,-2. தத்வத்ரைய வியாக்கியானம். 3. ஸ்ரீவசநபூஷண வியாக்கியானம், 4. ஆசார்ய ஹ்ருதய வியாக்கியானம், 5.பெரியாழ்வார் திருமொழி வியாக்கியானம் (நானூறு பாசுரங்களுக்கு] 6. இராமாநுச நூற்றந்தாதியுரை, 7. உபதேச ரத்தினமாலை .8 திருவாய்மொழி நூற்றந்தாதி, 9ஆர்த்திப்பிரபந்தம், 10. ஞானஸார ப்ரமாணயோஜநை, 11. ப்ரமேய ஸாரப்ரமாண யோஜநை, 12. யதிராஜவிம்சதி,13. தேவராஜ மங்களம், 14. கீதாதாத்பர்ய தீபம் (லுப்த்தம்). 15. திருவாராதனப்ரயோகம். 16. ஈட்டு ப்ரமாணஸங்க்ரஹம். (இப்போதுஅச்சிடப்பட்டிருப்பதல்ல.)
            17.ரஹஸ்ய ப்ரமாண ங்கரஹம். 18. திவ்யதேசங்களாசாஸன மாலிகை

            ஜோஸீமட்டிலிருந்து 19 மைல் தூரத்திலுள்ளது ஸ்ரீபதரி காச்ரமம். ஊருக்கு பத்ரீநாத் என்று பெயர். இது மிகச் சிறிய வூரே. கங்கையின் கரையிலேயே ஸ்ரீபதரீநாதன் திவ்ய ஸந்நிதியுள்ளது. ஸந்நிதி மிகப் பெரிதுமன்று; மிகச் சிறிதுமன்று.* நர நாரணனா யுலகத்து அறநூல் சிங்காமை விரித்தவனெம்பெருமான் * என்று திருமங்கையாழ்வாரும், “தானே சிஷ்யனுமாய் ஆசார்யனுமாய் நின்று திருமந்த் ரத்தை வெளியிட்டருளினான் ” என்று பிள்ளை லோகாசார்யரும், திருமந்த்ரத்தை ஸ்ரீபதரி காச்ரமத்திலே….. பிரகாசிப்பித்தான் என்று மணவாள மாமுனிகளும் அருளிச்செய்தபடியே எம்பெருமான் நாராயண மூர்த்தியாய் விபவாவதாரஞ் செய்தருளின விடமென்கிற ஒப்புயர்வற்ற ஏற்றம் பெற்றது இந்த திவ்வியதேசம். இப்பெருமை பற்றியே இத்தலம் உத்தேச்யம். ஸந்நிதியில் ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளி யிருக்கிறார். ஸாளக்ராம சிலாமயமாய் பத்மாஸநபந்தமுள்ளதாய் யோகமுத்ரையோடு கூடின இரண்டு திருக்கைகளை யுடையதான திருமூர்த்தி (ஸ்ரீமந்
            நாராயணன்] நடுவில் ஸேவை ஸாதிப்பது. இடபுறத்தில் நரநாராயண சிலாமூர்த்திகள். வலபுறத்தில் கருத்மான், குபேரன்.-மலைநாட்டு நம்பூரிகள் திருவாராதனம் ஸமர்ப்பிக்கிறார்கள். அர்ச்சகர்களை* ராவல் • என்று இங்கு வழங்குவர். தினப்படியாய் காலையில் திருமஞ்சனம் வெகு விபவமாக நடைபெறுகின்றது. 

            இங்குத் தீர்த்தமாடுவதற்கு எம்பெருமான் தானே பரம க்ருபையுடன்பண்ணி வைத்திருக்கிற ஸௌகரியம் அற்பு மானது. ஸந்நிதி யெதிரில் தப்த குண்டமென்று ஒரு சிறு குளமுள்ளது. அதில் இரவும் பகலு மோய்வின்றி உஷ்ணதீர்த்த தாரை அமோகமாகப் பெருகிக் கொண்டே யிராநின்றது. அதிலிருந்து வெளியிற்பெருகிச் செல்லுகின்றது. இந்த தீர்த்தம் பெருமாளுடைய திருவடி வாரத்தில் நின்றுமே பெருகுவதாகத் தோன்றுகிறது. அடியார்களின் பங்குக்காக அக்நி பகவானுக்கு ஸ்ரீமந் நாராயணன் தானே கட்டளையிட்டு இங்ஙனே நடத்தி வருகிறபடி-ஸந்நிதியின் ஸமீபத்திலேயே ப்ரஹ்மகபாலமுள்ளது. அதில் பிண்டப்ரதான முறைகளும் நடைபெற்று வருகின்றன. மலையின் ஒரு சிறு பாறையே கபா
            லத்தின் ஆக்ருதியாகக் காண்கிறது. இத்தலத்தில் முக்கியமான தீர்த்தங்கள் ஐந்து-
            தப்த குண்டம், நாரதகுண்டம், கூர்மதாரா, ப்ரஹ்லாத தாரா, ரிஷிகங்கா என்பவை.
            கூர்மதாரையின் தீர்த்தமே பெரும்பாலும் இவ்விடத்தில் அன்னபானங்களுக்குக்
            கொள்ளப்படுகிறது. தப்தகுண்ட தீர்த்தம் வாயினுட் செல்லாது. நியதமாக வதரியில் வாழ்பவர்கள் ப்ரஹ்லாததாரையில் நீராடுகிறார்கள். இது ஆரோக்யமாளிப்பதாம், இந்த தீர்த்தம் அநுஷ்ணாசீதம்

            கோமதீ த்வாரகை யென்றும் பேடீத்வாரகை யென்றும் டாகோர்த்வாரகை
            யென்றும் இப்படி பலவிடங்களை த்வாரகையாக வ்யவஹரித்து வருகிறார்கள்.
            ஆனாலும் த்வாரகை யென்று உலகமெல்லாம் வழங்குவது கோமதீத்வாரகையேயா
            கும்.நைமிசாரணியம், லக்னெள முதலானவிடங்களில் ப்ரவஹிக்கிறகோம நதியானது இவ்விடத்தில் ஸன்னிதி யருகேயுள்ள ஸமுத்ரத்தில் ஸங்கமமடைகிறபடியால்
            இவ்விடத்தை கோமதீத்வாரகை யென்று வ்யபதேசிக்கிறார்கள். இந்த நதியின் தீர்த்
            தம் மற்றவிடங்களில் மதுரமாயிருந்தாலும் இங்கு ஸமுத்ர ஸம்பந்தம் ஒரு யோஜநைதூரம் ஏற்பட்டதனால் அங்கிருந்தே க்ஷார லிலமாய்விட்டது. த்வாரகாநாதனுடைய ஸன்னிதி வெகு புராதனமாயும் அற்புத சிற்பங்களமைந்ததாயும் ஸர்வேந்த்ரியாகர்ஷகமாயும் காண்கிறது. சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும் துவராபதி என்ற ஆண்டாளுடைய மங்களாசாஸனம் மிகப் பொருத்தமாகக் காண்கிறது.

            *வைதேஹி ஸஹிதம்ஸுரத்ருமதலே ஹைமே மஹாமண்ட்பேமத்யேபுஷ்பகமாஸநே மணிமயே வீராஸநேஸூஸ்திதம், அக்ரே வசயதி ப்ரபஞ்ஜஸுதே தத்வம் மு ப்ய: பரம் வ்யாக்க்யாந்தம்பரதாதிபி: பரிவ்ருதம் ராமம் பஜேச்யாமலம்* என்கிறவொரு சுலோகம் அநுஸந்திக்கப் பட்டுவருவது உலகப் பிரஸித்தம். இந்த சுலோகத்தில் சொல்லப்படுவதென்னவென்றால்,ஸ்ரீராமபிரான் ஒரு மஹாமண்டபத்தில் ஸ்தாபிராட்டியோடும் பரதலக்ஷ்ண சக்ருக்நாதிகளோடும் கூடியிருக்கையில் எதிரே ஸ்ரீ ராமாயணத்தைத் திருவடிவாசிக்கையில் அங்குக் குழுமியிருந்த முனிவர்களுக்கு ஸ்ராமபிரான்தானே ஸ்ரீ ராமாயண தத்வார்த்தத்தை விளக்கி யருளினதாகச் சொல்லப் படுகிறது.

            —————————————————————————–

            ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
            ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
            ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

            Leave a Reply


            Discover more from Thiruvonum's Weblog

            Subscribe now to keep reading and get access to the full archive.

            Continue reading