இன்றோ திருஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24
“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம் பராம் கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,
ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,
மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும் வேதங்கள் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ் ஐ ஐந்தும் அறியாதார் வையம் சுமப்பதும் வம்பு
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி
பரமனடி காட்டும் வேதங்கள்
வேதங்கள் அனைத்துக்கும் வித்தாகும் வேதம்
கோதை தமிழ்-
ஐ ஐந்தும் ஐந்தும் -அர்த்த பஞ்சகம் -ஒவ்வொன்றிலும் ஐந்து உண்டே
ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் -இத்யாதி
ப்ரத்யகாத்மா –புபுஷு -முமுஷு -கேவலர் -முக்தர் -நித்யர்–பிள்ளாய் -பேய்ப்பெண்ணே -புபுஷு
தேசமுடையாய் -முமுஷு
கோது காலமுடைய பாவாய் -கேவலர்
துயில் அணை மேல் கண் வளரும் மாமான் மகளே -முக்தன்
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்-நித்யர்
உபாயம் -கர்ம யோகம்- ஞான யோகம் -பக்தி யோகம் -பிரபத்தி -ஆச்சார்ய அபிமானம் -ஐந்தையும்
பல கறந்து -கர்ம யோகம்
நினைத்து -ஞான யோகம்
போதரிக் கண்ணினாய் -பக்தி யோகம்
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர் -பிரபத்தி
நானே தான் ஆயிடுக -ஆச்சார்யர் அபிமானியே இவ்வாறு இருக்க முடியும்
பல ஸ்வரூபம் -தர்மம் அர்த்தம் காமம் கேவலம் பகவத் ப்ராப்தி
தூயோமாய் வந்தோம் -தர்மம்
அம்பரமே தண்ணீரே சோறே -அர்த்தம் -பொருள்
மாதவிப் பந்தல் கீழ் -இன்பம் -போக அனுபவம் -காமம்
தத்வம் அன்று தகவு -கேவலம்
உன் மணாளனையும் தந்து –நீராட்டு -பகவத் ப்ராப்தி-உக்கமும் தட்டொளியும் கைங்கர்ய உபகரணங்கள்
விரோதி -ஸ்வரூப-பரத்வ விரோதி – புருஷார்த்த -உபாய -பிராப்தி
மாற்றாதே வந்து -ஸ்வரூப விரோதி
அபிமான பங்கமாய் வந்து -பரத்வ விரோதி -தேவோஹம் இல்லாமல்
யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் -கைங்கர்யமே புருஷார்த்தம் -ஆகவே புருஷார்த்த விரோதி
உன் சேவகமே ஏற்றிப் பறை கொள்வான் -உபாய விரோதி -நம்முடைய யத்னமே இல்லாமல் -ஏத்துகையே பிரயோஜனம்
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து -அவன் ஆனந்தமே -பிராப்தி விரோதி
ஐ ஐந்தும் -அறிய மேல் ஐந்து-பிரமாண பஞ்சகம் -வதந்தி ஸகல வேதா – இதிஹாச புராணங்கள் முனைய -பாஞ்சராத்ர ஆகமம் -தர்ம சாஸ்திரம் அருளிச் செயல்கள் -மஹாத்மாக்கள் -வாசுதேவ சர்வம் இதி என்று இருப்பவர்கள்
மேலையார் செய்வனகள் -வேதம்
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா -சரித்திரங்கள் -இதிஹாச புராணங்கள்
கானம் சேர்ந்து -தர்ம சாஸ்திரங்கள்
வந்து சேவித்து -ஆராதன முறைகள் -பாஞ்சராத்ர ஆகமங்கள்
முப்பத்தும் தப்பாதே -திவ்ய பிரபந்தங்கள்
வேதம் -முதல் ஐந்தும்
வல்லார்களைக் கொண்டு -இரண்டு பதங்கள் -அடுத்த பத்து
விண்ணோர்கள் -16-20
பெருமான் -21-25
திருப் பாதம் பணிந்து -26-30
தமிழ் மாலை முப்பதும் -தமிழிலே அருளிச் செய்து இருந்தாலும் மீண்டும் தமிழ் என்று அருளிச் செய்து -இனிமையும் நீர்மையும் தமிழ் அன்றோ
————
ஏவ காராம் – 1-தேற்றப் பொருளிலும் -2-இசைவுப்பொருளிலும் -3-உறுதிப்பொருளிலும் -4-சிறப்புப் பொருளிலும் -5 வினாவாகவும் -6-வியப்பாகவும் -7-உயர்ச்சியாகவும் உண்டே
தேற்றப்பொருளில்
நாராயணனே- 1- -சமிதை பாதி ஸாவித்ரி பாதி அன்றிக்கே தானே சென்று தலைக்கட்ட வல்லன் என்கிற உபாயத்தில் விருப்பம் இல்லாமை -உபாய நைரபேஷ்யம் -சொல்வதில் நோக்கு
நமக்கே -2-
முலை வழியே –12- கை வழி தவிர
இசைவுப்பொருளில்
கீழே -22- அந்த ராஜ்யங்களைக் கொடுத்துப் போங்கள் என்றாலும் பழைய எளிவரவை நினைத்து அவை வேண்டா என்று உன் ஸிம்ஹாஸனத்தின் கீழேயே
உறுதிப்பொருளில்
அடியே -29-ஸர்வாத்நா பர்யநு நீயமாநோ யதாநா ஸுமித்ரி ருபைதி யோகம் என்னுமா போலே
சிறப்புப்பொருளில்
உனக்கே -29-நீ உகந்த அடிமை செய்வோம்
வினாப்பொருளில்
வல்லீர்கள் நீங்களே -15-உன் வாசலில் வந்து எழுப்ப -சில்லென்று அழையேன்மின் -என்றது உன்னதன்றோ வெட்டிமை
வியப்புப் பொருளில்
நென்னலே -16 -உன் காலைப் பிடிக்க வேண்டி இருக்கிற இன்று போலேயோ அவன் காலைப் பிடிக்க இருந்த நென்னேற்றும் ஒரு நாளே
அம்பரமே -17 இதுவோ இவன் கற்றது என்னும்படி கொடுக்கை
—————
நாராயணனே
கோவர்த்தன உத்தரணாதி அதிமாநுஷ சேஷ்டிதங்களாலே
சர்வேஸ்வரத்வம் பெண்களுக்கு தெரியும் படியாய் இறே இவ் வவதாரம் தான் இருப்பது –வடிவு அழகைக் கண்டு -வேறு ஒரு விஷயத்தை பற்றிற்றாக வேண்டாதே ப்ராப்த விஷயமாய் இருக்கை –ஆசைப்பட்ட விஷயமே வகுத்த விஷயமாய் இருக்கிறபடி-
அவனாலும் தன்னை அனுபவிக்கத் தாரேன் என்ன ஒண்ணாது காணும் –
இத் தலை வைமுக்யம் பண்ணின வன்றும் தான் ஆபிமுக்யம் பண்ணிப் போருமவன்-குண ஹீனன் ஆனாலும் ஸ்வரூபம் நோக்க வேணும் – வழி பறிக்காரனுக்கும் பசலுக்குச் சோறிட வேணுமே –பசலுக்குச் சோறிடாதவனுக்கும் தன் வயிறு வளர்க்க வேணுமே
சேதன அசேதனங்கள் அவனுக்கு சரீரம் இறேஅவதாரணத்துக்கு கருத்து-சமிதை பாதி சாவித்திரி பாதி அன்றிக்கே-தானே சென்று தலைக் கட்ட வல்லவன் என்கிற- சாதன நைரபேஷ்யம் சொல்லுகையிலே நோக்கு –
—————–
நமக்கே –
அத் தலையாலே பேறு என்று இருக்கிற நமக்கு -என்றபடி –அகிஞ்சநராய்-அவன் கை பார்த்து இருக்கிற நமக்கே -என்றுமாம் –சம்பந்த ஞானம் உடைய நமக்கே –ஸ்வ ரக்ஷணத்திலே அன்வயம் இல்லாத நமக்கே (தருவான் )–ஸ்வரூபத்தில் உணர்த்தியும் -ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தியும் யுடையவனுக்கே -என்கிறது –அவனாலே அவனைப் பெற இருக்குமவர்கள் -அவனாலே அவனைப் பெற இருக்குமவர்கள் –அவதாரணம்-ப்ராப்தாவினுடைய ஆகிஞ்சன்யத்தை அறிவிக்கிறது-நாராயணனே -என்கிற இடத்தில் அவதாரணம் –உபாய நைரபேஷ்யத்தை சொல்லுகிறது –அவனுக்கு உபாய பாவம் ஸ்வரூப அந்தர்கதம்- அத்தலையில் நிறைவாலும் அவனே உபாயம் –இத்தலையில் குறைவாலும் அவனே உபாயம் –நமக்கே பறை தருவான்-உடையவனே உடைமையை நிர்வஹிப்பான்-
ஏவ கார்த்தாலே மிடல் -(வேறே வலிமை )வைக்க வேண்டா என்கை – சணல் கயிறு கண்ட ப்ரஹ்மாஸ்திரம் போலே வேறு ஓன்று காணில் விடும்-
ஏவகாரத்தால்-உபாயாந்தரங்களையும் தன்னையே உபாயமாக பற்றினவர்களுக்கு-ஈஸ்வரன் கர்ம அனுகுணமாக பலம் கொடுப்பான் அத்தனை அல்லது-கிருபா அனுகுணமாக பலம் கொடான் என்னும் இடம் தோற்றுகிறது
நாராயணனே நமக்கே பறை தருவான் என்று -என்று முதலிலே திருமந்திரத்தை எடுத்தாள்-
திருமந்த்ரத்தினுடைய மூன்று பதத்தாலும் மூன்று அர்த்தம் சொல்லுகிறது
முதல் பதம் ஆத்மாவினுடைய ஸ்வபாவிக சேஷத்வத்தைச் சொல்லுகிறது
இரண்டாம் பதம் அதுக்கு எதிர்த்தட்டான அந்நிய சேஷத்வமும் ஸ்வ ஸ்வா தந்தர்யமும் அஸஹ்யமாம் படி சொல்லுகிறது-மூன்றாம் பதம் அந்த சேஷத்வத்தினுடைய சீமையாவது ததீய சேஷத்வ பர்யந்தமாய் இருக்கை -என்கிறது
நீராடப் போதுவீர் என்று -இப் புருஷார்த்தத்துக்கு இதில் இச்சையை உடையவர்களே
அதிகாரிகள் என்று அதிகாரியை ஸங்க்ரஹித்தார்கள்-
நாராயணனே என்று ப்ராபகத்தை ஸங்க்ரஹித்தார்கள்-
நமக்கே என்று உபாய அதிகாரிகளை ஸங்க்ரஹித்தார்கள்-இத்தால்- உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக- அவனையே உபாயமாக பற்றுகை-அதிகாரம் என்றது-ஆய்த்து-
———————-
நாமும் –
அத்தலையால் பேறு என்று இருக்கிற நாமும் –அவனாலே பேறாகிலும் ருசி இருந்த இடத்திலே இருக்க ஒட்டாது இறே – இந்தப் பலம் ஒருநாள் வரையிலே கை வந்ததாக வற்றே -என்று இருக்கிற நாமும் -என்னவுமாம்-நமக்கும் சில க்ருத்ய அக்ருத்யங்கள் யுண்டு – உபாய உபேயங்கள் அவனே யாகையாலே இவை அவற்றில் புகாது வேறு ஒன்றைக் கொண்டு போது போக்க ஒண்ணாது – ருசி கிடந்த இடத்திலே கிடக்க ஒட்டாது –அதனாலே அலமருகிற நாமும் –நாராயணனே உபாயம் என்று அறுதியிட்டு — இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன் -என்று பேற்றை அறுதியிட்டு நாமும்-அனுஷ்டானமும் அனநுஷ்டானமும் உபாய கோடியிலே அன்வயியாது–அநந்ய உபாயத்வமும் அநந்ய உபேயத்வமும் அநந்ய தைவத்மமும்-குலையும்படி பிரவ்ருத்தி காணா நின்றோம் இறே–ஜ்ஞான விபாக கார்யமான அஜ்ஞானத்தாலே வருமவை எல்லாம் அடிக் கழஞ்சு பெறும்- உபாய பலமாய் உபேய அந்தர்பூதமாய் இருக்குமது உபாய பிரதிபந்தகம் ஆகாது-அச்சம் உறுத்திக் கார்யம் கொள்ளப் பார்க்கிறார்கள் இறே –த்வரை இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே -ப்ராப்ய பிரதிபத்தி பண்ணியே ப்ராபக ஸ்வீகாரம் பண்ணுகிறது –ஆறி இருந்தான் ஆகில் பிரதிபத்தி பண்ணிற்று இலனாம் அத்தனை இறே –
————–
பாடவும் நீ கேட்டே கிடத்தியோ –
அவனுடைய விஜயத்தைக் கேட்டு-கேசி வந்து கழியப் புக்கான் என்ற துணுக்கும் கேட்டு
கர வத அநந்தரம் சக்கரவர்த்தி திருமகனை-ஸ்ரீ ஜனகராஜன் திருமகள்-அணைத்தால் போலே நீயும் கிருஷ்ணனை அணைக்க-புறப்படுவாயோ -என்று சொன்னோம் –
அதுவும் உனக்கு கிருஷ்ண விரோதி பயம் தீர்ந்து- மார்பிலே கை வைத்து உறங்கலாம் படி ஆவதே -அழகிதாக உன்னை எழுப்ப வழி பார்த்தோம் – தொடை குத்தி உறக்கினோம் ஆகாதே-பேச்சின் இனிமையைக் கேட்டு இவள் வாய் திறவாதே கிடந்த வாறே
ஜாலக த்வாரத்தாலே பார்த்தார்கள் – அவனுடைய விஜயத்தை அனுசந்திக்கையாலே வந்த புகரை யடைய வடிவிலே காணும் படி கிடந்தாள்
——–
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் –
இவள் வாய் பேசாதே கிடக்கிற இது பொறுக்க மாட்டாமையாலே – மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் -என்கிறார்கள் –வாசல் செம்மினால் வாயும் செம்ம வேணுமோ
ஐஸ்வர்யம் மிக்காள் பந்துக்களை ஏன் என்னலாகாதோ – உடம்பை கிருஷ்ணனுக்கு கொடுத்தால் பேச்சாகிலும் எங்களுக்கு தரலாகாதோ -கண்ணும் செவியும் ஒக்க பட்டினி கொள்ள வேணுமோ – மதுரா மதுரா வாக்யா -என்று இறே இவள் பேச்சு இருப்பது -படு குலை அடித்தால் தண்ணீர் வார்த்தால் ஆகாதோ-போகத்தைத் தடுத்தால் எங்கள் சத்தையையும் அழிக்க வேணுமோ –உன் சரக்குத் தரப் பார்த்திலை யாகில் எங்கள் சரக்கு தந்தால் ஆகாதோ-உன்னுடைய கிருஷ்ணனைத் தாரா விட்டால் எங்களுடைய உன்னைத் தந்தால் ஆகாதோ-த்வத் அனுபவ விரோதியான வாசலை -அஹங்காரத்தை நீக்கி-
எங்களை உன்னை அனுபவிப்பியா விடிலும் நாங்கள் கேட்டு வாழும் படி ஒரு வார்த்தையும் அரிதோ –துளம்படு முறுவல் -இவர்கள் ஜீவனம் –
துளம்படு முறுவல் தோழியர்க் கருளாள் துணைமுலை சாந்துகொண் டணியாள்,
குளம்படு குவளைக் கண்ணிணை யெழுதாள் கோலநன் மலர்க்குழற் கணியாள்,
வளம்படு முந்நீர் வையமுன் னளந்த, மாலென்னும் மாலின மொழியாள்,
இளம்படி யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.2-7-
கும்பகர்ணனும்
பிராட்டியைப் பிரித்த ராஜ துரோகியோடே கூட்டுகிறார்கள்
அவன் ஒருத்தியைப் பிரித்து வைத்து உறங்கினான் -நீ ஊராக பிரித்து வைத்து உறங்குகிறாய்-தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ-எங்களைப் பிரித்து கிருஷ்ண அனுபவம் செய்தது கும்பகர்ணனுடன் ஒக்குமே-ஒருத்தியை பிரித்தான் அவன் -நீயோ எங்கள் அனைவரையும் பிரித்தாயே
——–
பாடவும் -நீ வாய் திறவாய்
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்று நம்மை நலியும் கிருஷ்ணனுடைய பேரை காற்கடைக் கொண்டு கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்த நெஞ்சு பதம் செய்யும்படியான சக்கரவர்த்தி திருமகனைப் பாடச் செய்தேயும்-இத உபரி ம்ருத சஞ்ஜீவனம் ராம வ்ருத்தாந்தம் (பராசர பட்டர் முன்னுரை ராம திரு நாமங்களுக்கு )-என்றத்தைக் கேட்டும் –
ராம வ்ருத்தாந்தம் கேட்டதும் – உறங்குகைக்கு உறுப்பாயிற்றோ–
நினைத்து முலை வழியே நின்று பால் சோர –
கன்றை நினைத்து-பாவன பிரகர்ஷத்தாலே முலையிலே-வாய் வைத்ததாகக் கொண்டு பால் சொரியா நிற்கும்-
முலை வழியே –
கை வழி தவிர – நின்று பால் சோர -நினைவு பாராமையாலே-திருமலையிலே திரு அருவிகள் போலே பால் மாறாதே சொரிகை-இளைய பெருமாள் ஷத்ரிய தர்மமான அக்னி கார்யத்துக்கு-உறுப்பாம் அன்று இறே இவன் எருமைகளை விட்டுக் கறப்பது
அது என் என்னில் கிருஷ்ணனைப் பிரிய ஷமன் அல்லாமையாலே- பிராப்ய விரோதிகளில் நசை அற்ற படி யாகவுமாம்-கன்றை அகல கட்டி வைப்பார்கள் –அத்தை நினைத்து -பாவன பிரகர்ஷத்தாலே – கன்று முலையிலே வாய் வைத்ததாகக் கொண்டு கை வழியும் அன்றிக்கே – கன்றின் வாய் வழியும் அன்றிக்கே முலை வழியே பால் சொரியா நிற்கும் –
———
வல்லீர்கள் நீங்களே –
இன்னம் உறங்குதியோ என்றும் –-வல்லை யுன் கட்டுரைகள் -என்று வெட்டிமை உங்களது அன்றோ -என்ன-உன் வாசலில் வந்து எழுப்ப-சில்லென்று அழையேன்மின் என்றது உன்னதன்றோ வெட்டிமை -என்ன-அது என் குற்றம் அன்று –-அதுவும் உங்கள் குற்றமே
நம்முடைய வார்த்தை கேட்டு உகக்குமிவள்-நம் வார்த்தை அசஹ்யமாம் படி இறே
கிருஷ்ண குணங்களிலே அவஹாகித்தது -என்று உகக்க வேண்டி இருக்க அதிலே தோஷத்தை ஏறிட்ட உங்களது அன்றோ குற்றம் –உங்கள் பாசுரத்தை அனுபவிக்கிற என்னுடைய அனுபவத்துக்கு விரோதியைப் பண்ணி அதுக்கு மேலே என் மேலே பழியாம்படி வார்த்தை சொல்ல வல்ல நீங்கள் அன்றோ சமர்த்தர்கள் -என்ன -நான் உங்கள் வாசலிலே வந்து உங்களாலே படாதது உண்டோ -என்ன-அது சாத்தியம்– இது சித்தம் அன்றோ -பிரத்யஷத்துக்கு அனுமானம் வேணுமோ -என்ன-
நானே தான் ஆயிடுக –
இல்லாத குற்றத்தையும் சிலர் -உண்டு -என்றால் -இல்லை செய்யாதே இசைகை இறே ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் –பிறர் குற்றத்தையும் தன்னுடைய பாப பலம் என்றான் இறே ஸ்ரீ பரத ஆழ்வான்-பரஸ்பர நீச பாவை (ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் )-என்று அன்றோ ஸ்வரூபம் இருப்பது-ஒருவனுக்கு வைஷ்ணத்வம் ஆவது ஸ்வ தோஷத்தை இல்லை செய்யாதே இல்லாததையும் சிலர் உண்டு என்றால் அத்தை இசைகையே ஸ்வரூபம் என்னும் வேதார்த்தம் சொல்லிற்று ஆகிறது-பர ஸ்துதி யோடே ஒக்கும் ஸ்வ நிகர்ஷம்(சொல்லிக் -கொள்வதும் சமமான கர்தவ்யம் பட்டர் சம்பாவனை செய்த ஐதிக்யம் )
அத் தோஷம் என் தலையிலே கிடக்கிறது -உங்களுக்கு இப்போது செய்ய வேண்டுவது என் என்ன-அரை க்ஷணம் தங்களுக்கு அவளை ஒழியச் செல்லாமையாலும் – அவளுக்கு தங்களை ஒழியச் செல்லாமையாலும் சடக்கெனப் புறப்பட்டுக் கொண்டு நில் என்கிறார்கள்
———-
எல்லே இளங்கிளியே –
கிளியை வ்யாவர்த்திக்கிறது -தாங்கள் கிளிகள் -இவள் இளங்கிளி-கிளி இவள் பேச்சுக்கு ஒப்பாம் இத்தனை –-பருவத்துக்கு ஒப்பு அன்று -என்கை-யாழில் இட்டுப் பாடி – அது பண் பட்டு இனிதானவாறே
தம் தாம் மிடற்றிலே மாற்றுவாரைப் போலே தங்கள் பேச்சுக்கு இவள் பேச்சு-திருவான மிடறும் பாட்டும் இருந்தபடி என் தான் – பேச்சில் இனிமை இருந்தபடி – எழுப்புகை சால தர்ம ஹானியாய் இருந்ததீ – பேச்சில் இனிமையாலே -எல்லே -என்று ஆச்சர்யப்படுகிறார்கள்-மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே ––திரு நெடும் தாண்டகம்–15–
ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே-திருவாய்மொழி-9-7-11-
—————
கோயில் காப்பானே –
சிறு பெண்கள் ஆகையாலே-அவன் தொழிலை இட்டு சொல்கிறார்கள் –
இன்னது பிடிப்பான் -என்னுமா போலே-அவனும் உகக்கும்படியாலே சொல்லுகிறார்கள் -இத்தால் – சேஷ வ்ருத்தி பிரயுக்தமான பேரே -இவ் வாத்மாவுக்கு பேர் என்னும் இடம் தோற்றுகிறது-ஸ்ரீ நந்தகோபர் தாழ்த்தார் –கம்சன் வெட்டியன் –காப்பாரும் இல்லை –
என்று நாங்கள் வயிறு எரிந்து இருக்க –எங்கள் வயிறு எரிதல் தீர்க்கிறவன் அன்றோ –உன்னைக் காவலாக வைத்தது உகவாதார் புகுராமைக்கும் உகப்பாரை புகுரா விடுகைக்கும் அன்றோ – ஆன பின்பு அவனை ஆசைப்பட்ட எங்களுடைய ஆர்த்தியையும் ஆராய வேண்டாவோ –
கோயில் காப்பானே என்று ஷேத்ராதிபதியைச் சொல்லி-வாசல் காப்பானே என்று திரு வாசல் காக்கும் முதலியைச் சொல்லிற்று-யாராலே விக்னம் வருகிறதோ என்று பயப்பட்டு எல்லார் காலிலும் விழுகிறார்கள் –சர்வான் தேவான் நமஸ் யந்தி -என்று
தேவதாந்த்ரங்கள் காலில் விழுமவர்கள் பரிவர் காலிலே விழச் சொல்ல வேணுமோ-கொடியும் தோரணமும் அசேதனம் ஆகையால் அழைக்க மாட்டாது –உள்ளுக் கொண்டு புகாது – நீ சேதனனான வாசி நாங்கள் பெற வேண்டாவோ –கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பானே –இவனுடைய ரஷகத்வம் விளங்கா நின்றுள்ள- அகார நாம சப்தார்தங்களைக் காக்குமவனே-கோயில் காப்பானும் -எம்பெருமானாரே
தென்னரங்கம் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
ஸ்ரீ மன் ஸ்ரீ ரங்க ஸ்ரீ ரியம் அனுபத்ரவாம் அனுதினம் சம்வர்த்தய –
மன்னிய தென்னரங்காபுரி மா மலை மற்றும் உவந்திடு நாள் -சகல திவ்ய தேசங்களையும் உத்தரித்து அருளினவர் –கொடியும் தோரணமான வாசல் பரமபத வாசல்
இதுவும் எம்பெருமானார் ஆளுக்குகைக்கு உட்பட்டதே –எம்பெருமானார் திருவடிகளை பெறாதாவர்களுக்கு அரிது என்னும் இடம் காட்டப்பட்டது
நென்னலே –
உன் காலைப் பிடிக்க வேண்டி இருக்கிற இன்று போலேயோ-அவன் காலைப் பிடிக்க இருந்த நென்னேற்றம்-ஒரு நாளே -என்றார்கள் –-ஏகாரத்துக்கு சேர்த்து வியாக்யானம் –திரு முளை யன்று-நேற்று கையார் சக்கரம் என்னுமா போலே-மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்-ஆஸ்ரித பரதந்த்ரனாய்-சுலபனாய் ஸ்ரமஹரமான வடிவை உடையவனாய்
எம்பெருமான் நென் நேற்றே பறை தருகிறேன் என்று மன பூர்வகமாக சொல்லி வைத்தான் –பவிஷ்ய ஆச்சார்யர் அவதாரம் பற்றி நென்னலே வாய் நேர்ந்தாரே ஆழ்வார் –
———
அம்பரமே தண்ணீரே சோறே –புடைவையோடு-தண்ணீரோடு-சோறோடு வாசி அற
வேண்டுவார்க்கு வேண்டுவதெல்லாம் புஷ்கலமாக கொடுக்கை –-ஏவ காரத்தாலே -இதுவோ இவன் கற்றது என்னும்படி கொடுக்கை –கொடுத்து அல்லது தரியாத உம்முடைய வாசலிலே நாங்கள் வந்தது எங்கள் குறை தீர்க்கைக்காகவோ – உம்முடைய குறை தீர்க்கைக்கு நாங்கள் வந்து நிற்க நீர் உறங்குவது என்-தன் பக்கல் கார்யம் கொள்ளுமவர்களை உதார என்று கிருஷ்ணன் சொல்லுவது உம்முடைய வயிற்றில் பிறப்பால் அன்றோ -இவர் மகன் தூரஸ்தன் ஆனாலும் பேர் சொல்ல புடவை வழங்குகிறதும் –இனிது மறித்து நீரூட்டுகிறதும்-வேண்டு அடிசில் உண்ணும் போதுகளிலே சோறு வாங்கி இடுகிறதும் இவர் வயிற்றில் பிறப்பால் இறே ஹித புத்தி இறே பிதாவின் பக்கலில் உள்ளது –-பெற்றாலும் அங்கனேயோ என்று பெறா விட்டாலும் தரிக்கலாமவையோ நீர் கொடுப்பது-அர்த்தித்தவர்களுக்கு ரூப சாதனமான வஸ்திரம் – தாரகமான தண்ணீர் – போஷகமான சோறு – வேண்டுவார்க்கு வேண்டுவது எல்லாம் கொடுக்கிற உமக்கு நாங்கள் வேண்டிற்று எல்லாம் தர வேண்டாவோ –அம்பரமே என்கிற அவதாரணத்தாலே ஓர் ஒன்றையோ இவர் கொடுக்கத் தக்கது என்னும் படி இருக்கையும் – அது தான் புஷ்கயசஸ் ஸூ க்கு கொடுக்கை இன்றிக்கே- பல அபிசந்தி ரஹிதமாகக் கொடுக்கையும் கர்த்தவ்யம் என்கிற பிரதிபத்தியோடே -தன் பேறாக ஆன்ரு சம்சயத்தாலே கொடுக்கையும் –வேண்டுவார்க்கு வேண்டுவது கொடுக்கிறவர் ஆகையாலும் – அறம் செய்கிறவர் ஆகையாலும்–எங்களுக்கு ஸ்வாமிகள் ஆகையாலும்-நீர் தாம் கோபாலர் ஆகையாலும் ஜீவ லோக ரக்ஷணம் ஸ்வ ஜன ரக்ஷணம் – ஸ்வ தர்ம ரக்ஷணம் பண்ணாதே உறங்கக் கடவீரோ –ஆத்மா ஸ்வரூபமான ஈஸ்வர முக விகாசத்தையும் தத் வர்த்தகமான போக்த்ருத்வ புத்தி நிவ்ருத்தியையும்
தத்தேதுவான கைங்கர்யத்தையும் ஓர் ஒன்றையோ இவன் கொடுப்பது என்னும்படி-தன்னுடைய ஆன்ரு சம்ச்யத்தாலே ஸுவயம் புருஷார்த்தமாக கொடா நின்றுள்ள
நமக்கு வகுத்த சேஷியாய் ஆனந்த நிர்ப்பரனாய் ஆஸ்ரித ரஷகனான ஆசார்யனே -நீ உணர வேணும் –
அம்பரம் தண்ணீர் சோறு
பரம ஆகாசம் -விரஜை -அன்னம் ப்ரஹ்மேதி வ்யஜாநாத் -ப்ரஹ்ம அனுபவம் –உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று என்றே-
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே--பெண் பிறந்தார்க்கு எல்லாம் தலையாகப் பிறந்தவளே-பெண்களுக்கு ஒரு குறை வரில்-உன் முகம் அன்றோ வாடுவது
-குல விளக்கே – இக் குலத்துக்கு மங்கள தீபம் ஆனவளே- பெண் பிறந்தார்க்கு எல்லாம் த்ருஷ்டியான விளக்கே-இரண்டுக்கும் கடவ அவன் உணர்ந்தால் ஒன்றுக்கும் கடவ நீ உறங்கக் கடவையோ – வஞ்சிக் கொம்பு போலே இருந்துள்ள ஸ்திரீகளுக்கு எல்லாம் தலையானவளே-கொழுந்தே-பெண்களுக்கு ஒரு குறை வரில் உன் முகம் அன்றோ வாடுவது –நாரீணாம் உத்தமா என்கிற பதம் பெறும் போது அவள் படி உனக்கு உண்டாக வேண்டாவோ-தன்னை நலிகிற ராக்ஷஸிகளுக்கு பவேயம் சரணம் ஹிவ-என்று அவள் சொன்னால் போலே ஆர்த்தைகளாய் வந்த எங்களையும் அஞ்சாதே என்ன வேண்டாவோ –ஆயர் கொழுந்தையும்-ஆய்ப்பாடிக்கு அணி விளக்கையும் – நீ கொழுந்தும் விளக்குமானால் அனுபவிக்கத் தர வேண்டாவோ –எம்பெருமானை பெற்ற ஸ்திரீகளுக்குள் கொழுந்தே இவள்-அதிதி -பெற்ற அன்றே அழுது–கௌசல்யை–தேவகி–அனுபவம் இவளுக்கு தான் -தெய்வ நங்கை எல்லாம் பெற்றாளே-குல விளக்கே -எங்களுக்கு மங்கள தீபம்–பதார்த்த தன்னுடைய தர்சனம் ஹேது போலே–உன்னையும் கண்ணனையும் கொடுக்க
அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த-உம்பர் கோமானே
உறங்குகிற பிரஜையைத் தழுவிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே-இருந்ததே குடியாக எல்லார் தலையிலும் திருவடி களை வைத்தபடி –நிருபாதிக ரக்ஷகன் ஆகையால் ரக்ஷகமே விளைநிராக வளர்ந்த படி-இச் செயலால் தேவ ஜாதியை எழுதிக் கொண்டவனே-சம்சாரிகள் உறக்கம் தீர்க்க அவதரித்த நீ உறங்காது ஒழிய வேணும்
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்
உனக்கு பவ்யனான தம்பியும் -அவனுக்கு பவ்யனான நீயும் உறங்காது ஒழிய வேணும் –உன்னுடைய ஸ்பர்சத்தாலே உறங்குகிறவனும் –அவனுடைய ஸ்பர்சத்தாலே உறங்குகிற நீயும் –அவன் பாரதந்தர்யத்தாலே கட்டிக் கொண்டு கிடக்கும் –இவன் ஆற்றாமையால் கட்டிக் கொண்டு கிடக்கும் –நீ உன் ஸ்வரூபத்தால் பாரதந்தர்யம் கொண்டாட நாங்கள் இழந்தே போம் எத்தனையோ – திரு வனந்த ஆழ்வானுக்கு பாரதந்தர்யம் ஸ்வரூபம் இறே –
சென்றால் குடையும் -இத்யாதி-படுக்கையில் சாய்ந்தார் உறங்கும் அத்தனை போக்கி
படுக்கைக்கு உறக்கம் உண்டோ-அவன் படுக்கையான நீ உணர்ந்து எங்கள் படுக்கையையும் (அயனம் ஆஸ்ரயம் அன்றோ )உணர்த்தி எங்களுக்குத் தாராய்
பாம்பணைப் பள்ளி கொண்ட மாயனார்(திருமாலை )-இப்போது கிடந்தது உறங்க –
நாங்கள் அர்த்திகளாய் வந்து எழுப்பின பின்பு எழுந்து இராதே நாங்கள் பட்டது எல்லாம் நீ எங்கள் வாசலிலே பட விறே புகுகிறாய்
—————–
கலியே –
மிடுக்கை உடையவனே –அபலைகளான எங்களுக்கு உன் மிடுக்கை ஒழிய உண்டோ –
அரணிமையை-கல் மதிள் போலே ஆழ்வார்கள் அருளிச் செயல்களை – உடையவன் -ஒரு மேட்டுக்கு ஒரு பள்ளம் நேரமா போலே உன் மிடுக்குக்கு எங்கள் பல ஹானியும் நேர் அன்றோ –அபலைகளான எங்களுக்கு கிருஷ்ண பலா -என்கிற உன் மிடுக்கு அல்லது உண்டோ –கலி -என்று மிகுதியாய் – சகல தேவதைகளையும் ரஷிக்கையாலே சர்வாதிகனானே–செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா – பாகவத விரோதிகளுக்கு நடுக்கத்தைக் கொடுக்கும் சுத்தி யோகத்தை உடையவனே –இத்தால்-பய நிவ்ருத்தி மாத்ரம் அன்றிக்கே பய ஹேது நிவ்ருத்தியும் ரஷக கார்யம் -என்றது ஆய்த்து –
இப்போதே –
பிற்றைப் போதைக்கு இராத எங்களை –அனந்தர க்ஷணத்தில் ஊராரும் இசையார் –
நாங்களும் ஜீவியோம் –
திருவே –எம்மை நீராட்டு
எங்களையும் அவனையும் ஒரு துறையிலே சேராத போது-நீ திருவாகைக்கு உபாயம் உண்டோ-ஸ்ரீயதே ஸ்ரயதே -என்று இறே ஸ்ரீ யாயத்து – ஸ்வ தந்திரரோடு பரதந்த்ரரோடு வாசி இல்லை – இவள் கை பார்த்து இருக்க வேணும்-உன் மணாளனை எம்மை-உனக்கு ஒருக்கால் எழுதித் தந்து பிரதி க்ஷணம் எழுத்து வாங்குகிறவனை – நீராட்டம் அமைத்து வைத்தேன் -என்று உனக்கும் அவனுக்கும் கூட குளிக்கச் சமைத்த நீரிலே எங்களையும் கூட முழுக்கூட்டு-உன் மணாளனையும் தந்து நீராட்டு என்கிறார்கள்-பிராட்டிக்கு எம்பெருமான் அத்யந்த விதேயன் என்னும் இடம் தோற்றுகிறது –
———
மாற்றாதே பால் சொரியும்-
இட்ட கலம் நிரம்பிற்று –-கலம் இடுவார் இல்லை என்னாக் கண் அடையாது –முலைக் கடுப்பாலே ஊற்று மாறாதே பால் சொரியும் அத்தனை-ஸ்ரீ மைத்ரேய பகவான் கேளாது இருக்கச் செய்தே நல்ல வர்த்தம் இவன் இழக்க ஒண்ணாது என்று
நித்யைவேஷா ஜெகன் மாதா -என்று ரிஷி தான் சொன்னான் இறே
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஸ்ரீ நந்தகோபர்க்கு சம்பத்து ஸ்வயம் ஆர்ஜிதம் ஆகையால் தான் தோன்றியாய் இருக்கும் –
இவர் பிறந்து படைத்தது ஆகையால் அடியுடைய ஐஸ்வர்யம் –பதிம் விசுவஸ்ய -என்கிற ஐஸ்வர்யத்தில் காட்டிலும் ஸ்ரீ நந்தகோபர் ஐஸ்வர்யத்துக்கு இட்டுப் பிறந்தவனே-பரம பதம் போலேயும் நாராயணத்வம் போலேயும் ஸ்வதஸ் சித்தம் அன்று இறே கோப குலமும் கோபாலத்வமும்- -பரம பதத்தில் வந்தோமோ –வசிஷ்டாதிகள் நியமிக்கும் வாசலிலே வந்தோமோ-நந்தன் பெற்ற ஆனாயனுக்கு அல்லது சித்தியாதே-ஆற்றப் படைத்தான் மகனே –அசங்க்யாதமாக ஆர்ஜித்துப் படைத்த-ஆச்சார்யனுக்கு புத்ரவத் விதேயன் ஆனவனே –உன் ஐஸ்வர்யம் இருந்த படியால் எங்களை நினைக்கைக்கு விரகு இல்லை –
ஐஸ்வர்ய செருக்கால் ஆர்த்தவ த்வனி செவிப்பட்டது இல்லை யாகிலும் உன் பிறவியை புத்தி பண்ணி எங்களுக்காக உணராய்-உனக்கும் எங்களுக்கும் உண்டான சம்பந்தத்தால் பெறில் பெறும் அத்தனை என்று-உன் தன்னைப் பிறவி பெறும் தனை -என்று அருளிச் செய்தாள் இறே-நந்த கோபன் குமரன் -முதலில் -இங்கு ஆற்றப்படைத்தான் மகன் -மேல் ஒருத்தி மகனாய் பிறந்து -ஒருத்தி மகனாய் வளர்ந்து–
ஆற்றப்படைத்தான் மகனே -திருவாய்ப்பாடியில் அனைவருக்கும் பொருந்தும்
ஆகவே கண்ணனுக்கே அசாதாரணமான மூன்று அடையாளங்கள் –
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே -கண்டவர் பேச்சைக் கெடுக்காமல் கண்ட எனது பேச்சை கேள் -திருவடி மித்ர பாவேனே -நத்யஜேயம் கதஞ்சன
உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே –
என்றும் ஓலைப் புறத்திலே கேட்டுப் போகை அன்றிக்கே எல்லாரும் காணலாம்படி-
அஜஹத் ஸ்வபாவனாய்க் கொண்டு அவதரித்து – சகல மநுஜ நயன விஷய தாங்கதன் ஆனவனே –சம்சாரிகளைப் போலே பிறக்க பிறக்க கறை ஏறுகை அன்றிக்கே
சாணையில் இட்ட மாணிக்கம் போலே ஒளி விடா நிற்கை-லோகத்தில் தோற்றின பின்பு நிறம் பெற்ற படி –அனுக்ரஹ கார்யம் ஆகையால் பிறக்க பிறக்க ஒளி மிகா நிற்கும்-நிலை வரம்பிலே பல பிறப்பாய் ஒளி வரு முழு நலம் -என்றும் சொல்லக் கடவது இறே –உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே- மனுஷ்யத்தவே பரத்வம்-இந்த லோகத்தில் சஷூர் விஷயமாம் படி அவதரித்தவனாய் சிர காலம் இருந்து தேஷிஷ்டனானவனே- ஆஸ்ரித பஷ பாதம் லோகத்திலே பிரசித்தமாம்படி நின்று தேஷிஷ்டனானவனே–ஆஸ்ரித பாரதந்தர்யத்தால் வந்த ஓவ்ஜ்ஜ்வல்யம்-இன்னார் தூதன் என நின்றான்–ஐவருக்கு அருள் செய்து நின்று பார் மல்கு சேனை அவித்த பரஞ்சுடர் -என்னக் கடவது இறே–பகல் விளக்கு அங்கு –பாற் கடலில் கடல் விளக்கு – இங்கு தானே சுடர் விளக்கு
நாங்களும்
உன்னுடைய நிருபாதிக சேஷித்வத்துக்கு தோற்று-தேகாத்ம அபிமானத்தையும்
ஸ்வ ஸ்வாதந்தத்ர்யத்தையும்-அந்ய சேஷத்வத்தையும் -ஸ்வாதீன கர்த்ருத்வ போக்த்ருத்வங்களையும்-பந்துக்கள் பக்கல் சிநேகத்தையும்-உபாயாந்தர உபேயாந்தரங்களையும் விட்டு இவற்றை நீ கொடுத்தாலும் பழைய துக்கத்தை நினைத்து வேண்டோம் என்று உன் திருவாசலிலே வந்து –
———-
என்று என்றும்
பிரயோஜனம் பெரும் அளவும் சொல்லி பின்னை அது மாறுகிறது அன்றே –
பிரயோஜனத்துக்கு பிரயோஜனம் வேணுமோ -என்று இது தானே பலமாக இருக்குமவர்கள் இறே –பல்லாண்டு என்றால் பின்னையும் பல்லாண்டு என்னும் அத்தனை இறே –
போற்றி என்று ப்ரேமம் அடியாக வந்த கலக்கத்துக்குத் தெளிவு யுண்டாகில் இறே
இச் சொல்லு மாறுவது –அங்கு போனாலும் சூழ்ந்து இருந்து இறே –
வெம்மா பிளந்தான் தன்னை போற்றி (திருவாய் 4-5-வீற்று இருந்து ) என்னக் கடவது இறே சம்சாரிகள் புறம்பும் கொள்ளுவர்கள் -அவன் பக்கலிலும் கொள்ளுவர்கள்
இவள் புறம்பும் கொள்ளாள்-இவன் பக்கலிலும் கொள்ளாள்-ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் — ஆந்தனையும் கை காட்டி புறம்புத்தைக்கும் தானே கொடுக்கும் அத்தனை-(ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டுபவர்கள் அன்றோ -உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் –-)இப்படி பல்லாண்டு பாடுகையே யாத்ரையாய் உன் உடைய வீர சரிதத்தையே ஏத்தி புருஷார்த்தத்தை லபிக்கைக்காக சத்வம் தலை எடுத்த இன்று உன் கை பார்த்து இருக்கும் நாங்கள் வந்தோம் -நீ கிருபை செய்து அருள வேணும் –வீர குணத்துக்கு போலே காணும் இவர்கள் தோற்பது – பந்து நிரோதத்தால் தளர்ந்த அபலைகளுக்கு அவனுடைய விஜயம் இறே பல ஹேது-உன்னுடைய விக்ரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் -என்னும் படியே-வேறு ஒருவருடைய சேவகம் கலந்து ஓதோம்-
திரு விக்ரமனையும் பெருமாளையும் கலந்து அன்றோ ஏத்திற்று அது அவதாராந்த்ரத்தின் செயல் என்று இருக்கிறார்கள் – இவன் பால்யத்தில் செய்ததோபாதி பூர்வ அவஸ்தையும் என்று இருப்பார்கள்-சிலை ஓன்று இறுத்தாய் திரு விக்ரமா திரு வாயர்பாடிப் பிரானே -என்றும் – வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே -காகுத்த நம்பீ வருக இங்கே -என்று தாயார் உட்பட கிருஷ்ணனை அழைப்பது -இப்படியே இறே-இவனுக்கு நாள் ஸ்ரீ வாமனன் பிறந்த நாள் ஆக்கினாள் -(திருவோணத்தான் உலகு ஆளும் என்பர்களே )
எட்டு மாசம் வயிற்றிலே இருந்த இவனை பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட -என்றாள்-
என் மகன் பால்யத்தை மஹாபலி பக்கலிலே சென்று கேட்டுக் கொள் என்கிறாள் –
சார்ங்க பாணி தளர் நடை நடவானோ -என்றாள்-மாணிக் குறளனே தாலேலோ வையம் அளந்தானே என்று தாலாட்டினாள்-ஓங்கி உலகளந்த என்கிறார்கள் -(திருப்பாவை -3)
சார்ங்கம் உதைத்த (திருப்பாவை -4)என்கிறார்கள் –
அனந்தரம் ஆயர் குலத்தினில் தோன்றும் (திருப்பாவை 5 ) என்றார்கள் –
போற்றப் பறை தரும் புண்ணியன் (திருப்பாவை )என்றார்கள்
எழுப்புகிற போது உலகு அளந்த உம்பர் கோமானே (திருப்பாவை )-என்றார்கள் –
————
திருத் தக்க செல்வமும்
ஸ்ரீ யபதித்தவத்தால் வந்த சம்பத்தையும் –-பிராட்டியை எனக்கு என்னும் பெருமை யுண்டாம் போது அவள் ஆசைப்பட்டு மேல் விழும்படி அதுக்கு ஈடான சம்பத் உண்டாக வேணும் இறே –திருவுக்கு தக்க செல்வம்-யஸ்ய சா ஜனகாத்மஜா அப்ரமேயம் ஹி தத் தேஜ-என்கிற படியே
பிராட்டி ஆசைப்படும் சம்பத்து – திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே –
ஸ்ரிய ஸ்ரியம் (ஆளவந்தார் )-ஸ்ரீ மத் ருக்மிணி பிராட்டி திருக் கல்யாணம் பர்யந்தம் ஸ்ரீ மத்
பாகவதம் -பூர்ண அவதாரம் அன்றோ
சேவகமும்
அவ் வைஸ்யர்வத்தைத் காத்தூட்ட வல்ல ஆண் பிள்ளைத் தனமும் –
பிராட்டியுடைய விரோதிகளை பெண்களுடைய விரோதிகளை போக்கி
உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் காத்தூட்ட வல்ல வீர்யம் –
என்று என்றும் உன் சேவகமே ஏத்தி (24 )என்கிற இடத்தில் இரண்டும் உண்டு இறே-ஆற்றப் படைத்தான் மகனே(செல்வமும்) என்றதுவும் – கப்பம் தவிர்க்கும் கலியே (சேவகமும்)என்றதுவும்
வருத்தமும் தீர்ந்து
உன்னைப் பிரிந்து நெடு நாள் பட்ட கிலேசம் எல்லாம் தீர்ந்து – கேவலரைப் போலே துக்க நிவ்ருத்த மாத்திரமே அன்றி இவர்களுக்கு பிரயோஜனம் பாடுகிற போது ப்ரீதிக்கு போக்கு வீடாகை யாலே அனுபவ காலத்தில் அநந்தம் போலே அனுசந்தான சமயத்தில் ஹர்ஷம் கனக்க யுடையோமாய்-வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து-நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் –(பெரியாழ்வார் 5-4 ) உகந்தே உன்னை உள்ளும் என்னுள்ளம் (திருவாய் -9-4-7 )-என்கிறபடி
அனுசந்தான காலத்தில் அனுபவ காலம் போலே இறே இருப்பது
தூய வமுதை பருகி பருகி (திருவாய் – 1-7 )-கிருஷ்ண அனுசந்தானம் தித்திக்கும் இறே –
(மருந்து சாப்பிட்டு விருந்து இல்லாமல் விருந்தேயாக பிறவி போக்கவும் அனுபவத்துக்கும் )-வருத்தம் தீருகைக்கு சேவகம் பாடினார்கள் –
மகிழ்ச்சி பிறக்கைக்கு செல்வம் பாடினார்கள் –-ஸுர்ய வீர்யாதிகள் கிலேச நிவ்ருத்திக்கு உடல் –
ஐஸ்வர்யம் ஆனந்த ஹேது-விரோதி நிவ்ருத்தியும் யாய்த்து –
அபிமத சித்தியும் யுண்டாய்த்து —
———————-
அபிமான-பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே-
அபிமான ஸூன்யாராய் வந்து-சிம்ஹாசனத்தின் கீழே திரள வந்து அணுக்க ஓலக்கமாய் இருக்கை –கீழே-அவதாரணம்(கீழேயே )-அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே போல் –புத்தியால் அநந்யார்ஹ சேஷத்வம் உணர்வதையே இங்கும் சொல்லிற்று-தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து உன் திருவடிக் கீழேயே வாழ்ச்சி–நின் பள்ளிக் கட்டில் கீழே – அந்த ராஜ்யங்களைக் கொடுத்து- போங்கோள் என்றாலும் பழைய எளிவரவை நினைத்து -அவை வேண்டா என்று
உன் சிம்ஹாசனத்தின் கீழே –
நாங்களும்
எங்களுடைய ஸ்த்ரீத்வ அபிமானத்தை விட்டும்-வேறு உண்டான போகங்களையும் விட்டும்
உன்னுடைய குணஜிதராய்க் கொண்டு வந்தோம் –அந்த ராஜாக்களைப் போலே நாங்களும்
அநாதி காலம் பண்ணிப் போந்த தேகாத்ம அபிமானத்தை விட்டு தேகாத்பரனான ஆத்மாவின் பக்கல் ஸ்வா தந்த்ரியத்தையும் விட்டு அநந்ய பிரயோஜனராய் வந்தோம் –நாங்களும் -ஒரு ப்ரஹ்ம அபிமானத்தோ பாதியும் போந்து இருக்கிற ஸ்த்ரீத்வ அபிமானத்தையும் பந்துக்களுடைய நிரோதத்தாலே கிருகங்களை விட்டுப்
புறப்பட ஒண்ணாத அருமையையும் வேறு உண்டான போகங்களையும் விட்டு
அம்புக்கு தோற்றாரோ பாதி உன் அழகுக்குத் தோற்று வந்து புகுந்தோம்
——————
மாலே-இத்தலைக்கு -வாத்சல்யமே ஸ்வரூபம் என்று நிலை இட்டார்கள் –
சரணாகத வத்சல -என்று ஸ்ரீ ராமாயணத்துக்கு உள்ளீடான பிரதான குணத்தை பிராட்டி நிலை இட்டாள்-மகா பாரதத்துக்கு உள்ளீடான வ்யாமோஹ குணத்தை –
மாலே -என்கிற சம்போதனத்தாலே இவர்கள் நிலை இட்டார்கள் –
இவர்கள் பேச்சை கேட்ட பின்பு முந்தியிலும் பெரும் பித்தனானபடி —நோற்கவும் ஷமன் அன்றிக்கே-நாங்கள் வந்து எழுப்பும் அளவும் எழுந்து இருக்கவும் மாட்டாதே வ்யாமோஹம் இருந்த படி என் –வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் -என்கிற அளவு இறே இவர்களது –என்னில் முன்னம் பாரித்து பருகினான் இறே அவனது -(கார் ஒக்கும் காட்கரை அப்பன் )அதனில் பெரிய என்னவா இறே -இவர்களது –-அவா அறச் சூழ்ந்தாயே இறே அவனது –நாராயணனை நமக்கு கிடைக்குமா -என்பது பெண்கள் நினைவு-யது குலத்தில் பிறந்தார்க்குக் கிடைக்கப் புகுகிறதோ என்று அவன் நினைவு
பாஞ்ச சன்னியமே-போல்வன சங்கங்கள் –
இடமுடைத்தாய் உன் திரு மேனிக்குப் பகைத் தொடையாம்படி-பாலைத் திரட்டினால் போலே இருக்கிற நிறத்தை யுடைத்தாய்-ச கோஷா தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத் -என்கிறபடி அன்றிக்கே நின்று முழங்கக் கடவதுமாய்-பல சொல்லி என் -உன் கையில் பாஞ்ச ஜன்யம் போல் இருப்பன பல சங்கங்கள் வேணும் என்கிறார்கள் –இத்தால் –
அனன்யார்ஹ சேஷத்வ ஜ்ஞானம் வேணும் -என்கிறது
சாலப் பெரும் பறையே
எழுச்சிக்கு சங்கு ஊதினால் புறப்பாடுக்கு கொட்ட வேண்டாவோ – பாஞ்ச ஜன்ய த்வனி ஓடின திக்கு எல்லாம் முழங்க வல்ல மிகவும் பெருத்த தொரு பறை வேணும் –பகவத் அனன்யார்ஹ சேஷத்வ விரோதியான–ஸ்வ ஸ்வா தந்த்ரியத்தையும்–சேஷத்வ சிஹ்னமான கைங்கர்யத்தில் ஸ்வ அதீன கர்த்ருத்வ போக்த்ருத்வங்களையும் -நிவர்ப்பிக்குமதாய் மத்யே இருக்கிற நமஸ் சப்த அர்த்தமான பாரதந்த்ர்ய ஞானமும்-உண்டாக வேணும் என்னும் இடம் சொல்லுகிறது –
பல்லாண்டிசைப்பாரே
திருப் பல்லாண்டு பாடிக் கொண்டு போவார் வேணும்-கொட்டிக் கொண்டு புறப்படும் போதே எதிரே நின்று காப்பிடுவார் வேணும் –சத் சஹாவாசம் வேணும் –
கோல விளக்கே
அழகிய விளக்கு -அதாவது மங்கள தீபம் –பாடுவார் எங்கள் முகத்திலே விழித்து
நாங்கள் அவர்கள் முகத்தில் விழித்துக் கொண்டு போம்படி தர்ச நீயமாய் இருபத்தொரு மங்கள தீபம் வேணும் –பகவத் அனன்யார்ஹ சேஷத்வத்தை அவனுக்கு அத்யந்தம் மனோஹர்ரம் ஆக்குகிற பாகவத சேஷத்வ ஞானமும் வேணும் –
கொடியே
கிட்டினார்க்கு விளக்கு பிரகாசிப்பது –-எங்களைக் கண்டு தூரத்திலே வாழும் படி முன்னே பிடித்துக் கொண்டு போம் படி ஒரு கொடி வேணும்-
விதானமே
புறப்படும் போதே பனி தலையில் விழாத படி ஒரு மேற் கட்டி வேணும் –அக் கைங்கர்யத்தில் போக்த்ருத்வ நிவ்ருத்தியும் வேணும்
பறை கறங்க கூத்தாடின போது திரு வரையில் கட்டின பறையையும்-திருப் பல்லாண்டு பாடுகைக்கு -பெரியாழ்வாரையும்-திருப் பல்லாண்டு பாடுகைக்கு-அடியோமோடும் நின்னோடும் என்று திருப் பல்லாண்டு பாடும் பெரியாழ்வாரையும்-பாகவத ஸம்ருத்திக்கு- பொலிக பொலிக -(5-2)என்னும் -நம்மாழ்வாரையும் கொடுத்தான்-விளக்குக்கு -மங்கள தீபத்துக்கு உபய (தன்னையும் அவனையும் )பிரகாசகையான நப்பின்னைப் பிராட்டியையும் கொடுத்தான்-கொடிக்கு -பெரிய திருவடியையும்–விதானத்துக்குத் திரு அவதரித்த அன்று தன் பணத்தை இட்டுக் கவித்துக் கொண்டு போந்த திரு அநந்த ஆழ்வானையும் மேல் கட்டிக்கு -அத்த வாளத்தையும்-கொள்ளுங்கோள்-கோல விளக்கு -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு குல பிரதீபம்–கொடி -சித்தாந்த விஜய த்வஜம்–விதானம் -தொடுத்து மேல் விதானமாய் பௌவ நீரார் அரவணை-
ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபயிதி – என்கிற ஸாம்ய பத்தி மோக்ஷம் சொல்லுகிற பாசுரம்.-ஆறு விஷயங்கள்- –அபஹத -இத்யாதி ஆறும் ஸூசகம்-பிரார்த்தித்தே பெற வேண்டும் -அருள் என்கிறார்கள்-போல்வன சங்கங்கள்
சாலப் பெரும் பறை பல்லாண்டு இசைப்பார் கோல விளக்கு கொடி விதானம் உக்கம்
தட்டொளி என்கிற 8 விஷயங்களை பிரார்த்தித்து அஷ்டவித ஆவிர்பாவத்தை
ஸோஸ்நுதே ஸர்வான் காமாந் ஸஹ பிரஹ்மணா விபஸ்சிதே – என்கிற முக்த போகத்தை கேட்கிறாள்.
———
சூடகமே-
பிரதமத்தில் ஸ்பர்சிக்கும் கைக்கிடும் ஆபரணம்-பரம பிரணயி ஆகையாலே தன தலையிலே வைத்துக் கொள்ளும் கை –-அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் -என்று
இவர்களுக்கு அவன் சொல்லுமா போலே சொல்லி மார்பிலும் தலையிலும் வைத்துக் கொள்ளும் கை இடும் சூடகம் –வெள்ளி வளைக் கை பற்ற என்கிறபடியே –
அநன்யார்ஹைகளாய் பிடித்த கைகளை இறே முதல் ஆபரணம் பூட்டுவது –
(பாணி கிரஹணம் முதல் அன்றோ )-காப்பே
தோள் வளையே
கையைப் பிடித்த அனந்தரம் –-அணைக்கும் தோள்களில் கிடந்து அவன் கழுத்தில் உறுத்தும் ஆபரணம் – அவன் நாண் தழும்பின் சரசரப்பு முலைகளுக்கு உத்தேசியமானவோபாதி-
இவர்களுடைய வளைத் தழும்பும் அவன் தோளுக்கு ஆசையாய் இருக்கும் இறே-திரு இலச்சினையே
தோடே
தங்கள் கைக்கும் தங்கள் தோளுக்கும் ஆபரணம் போல் அன்றே – அவன் தோளுக்குப் பூணும் ஆபரணமும் பூண வேணும் – இவர்களுடைய காதுப் பணியும் செவிப் பூவும் பட்ட விமர்த்தத்தாலே வந்த சோபையைக் கோட் சொல்லும் இறே அவன் தோள்கள் –அவனுடைய கரண பூஷணம் அவன் தோள்களுக்கு ஆபரணம் ஆனால் போலே இவர்களுக்கு காதுப் பணியும் செவிப்பூவும் தோள்களுக்கும் அலங்காரமாய் இறே இருப்பது —திரு மந்த்ரமே-மண்டல ஆகாரமாய் -மந்திர சேஷ விவரிணி யான பிரணவ ஆகாரத்துக்கு த்வதோகமாய் -இருக்கையாலே – திருமந்த்ரத்தை சொல்லுகிறது –
செவிப் பூவே –
அணைத்த திருக் கையில் உறுத்தும் ஆபரணங்கள் போல் அன்றிக்கே
அணைத்த அநந்தரம் ஆக்ராணத்துக்கு (முகந்து பார்க்க )விஷயமான இடம் –மேல் தோன்றிப் பூ- ஆழ்வார் )-த்வயமே-ஸுவயம் போக ரூபம் ஆகையாலே -போக பிரதானமான
த்வயத்தை சொல்லுகிறது –
பாடகமே
அணைத்தால் துவண்டு விழுமிடம் –அணைத்துத் தோற்றவர்கள் விழுந்து பிடிக்கும் காலுக்கு ஆபரணம்-அஸி தேஷணை ஆகையாலே- ஜிதந்தே புண்டரீ காக்ஷ -என்று அவன் தோற்று விழும் இடம்–சரம ஸ்லோகமே-பத்த ரூபம் ஆகையாலே -உபாயாந்தர நிவ்ருத்தி பரமான
சரம ஸ்லோகத்தை சொல்லுகிறது –
திருமந்தரம் -ஆத்ம ஸ்வரூப யாதாம்ய ஞான பரம் ஆகையாலும்
த்வயம் -உத்தர கண்டத்தில் சொல்லுகிற கைங்கர்யத்துக்கு பூர்வ பாவியான பக்தி பிரதானம் ஆகையாலும்
சரம ஸ்லோஹம் த்யாஜ்ய அம்சத்தில் வைராக்யம் பிரதானம் ஆகையாலும்
ஞான பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது –ஞான பக்தி வைராக்யங்கள் மூன்றும்
ஓர் ஒன்றே விஷய பேதத்தாலே -அநேகமாக இருக்கும் இறே- ஆகையால் –பல் கலனும் -என்கிறார்கள் –
சூடகமே பாடகமே
கைத்தலம் பற்ற — திருக்கையால் தாள் பற்ற -கையைக் காலைப் பிடித்து இறே நடுவுள்ளது எல்லாம் நடத்துவது –
சூடகமே -கையில் தோள் வளையே -தோடு -செவிப்பூவே பாடகமே–ஐந்து ஆபரணங்கள் பஞ்ச சம்ஸ்காரம்-திரு ஆபரணங்கள் ஆத்மாவை அலங்கரிக்க
கோவிந்தா உன் தன்னைப் பாடி கூடி இருந்து குளிர்ந்து
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து –காமத் தீயுள் புகுந்து கதுவா நிற்க இராதே –
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தனோடு சாம்யாபன்னைகளாய் இருக்கை –ஆக இரண்டு பட்டாலும் சாம்யா பத்தியும் குண அனுபவமும் ஆகிற இரண்டு அர்த்தமும் சொல்லப் பட்டது ––உன் தன்னைப் பாடி -கூடி –குளிர்ந்து--வாய் பாட–உடம்பு கூட–நெஞ்சு குளிர–கூடிக் –குளிர்ந்து–குள்ளக் குளிர நீரிலே தோயாதே நீர் வண்ணன் மார்வத்திலே தோய வேணும் –நீரிலே தோயாதே–உபாயாந்தரங்களிலே இழியாதே-நீர் வண்ணன் மார்வத்திலே தோய வேணும் –ப்ராப்யத்திலேயே ஆழ்ந்து இருக்க வேண்டும் –ஸோஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்ஸிதா- அஹம் அன்னம் –இத்யாதிப் படியே ஒருவருக்கு ஒருவர் போக்யம் என்கை
முழங்கை வழி வார கூடி இருந்து குளிர்ந்து என்பதின் ஸ்வாரஸ்யம், முக்தபோக அனுபவத்தில் , அன்நாதனாக அவனிருக்க, அன்னமாய் இவர்கள் நின்று, அவனானந்தம் கண்டு இவர்கள் ஆனந்திப்பதையே முழங்கை வழிவார என்கிறாள் .
அனுபவம் நித்யமாய், எப்போதும் நடவா நிற்பதை முழங்கை வழிவார என்று continuous tense ல் அமைத்தமை நோக்கத்தக்கது.-பாலே போல் சீரை அனுபவிக்க முதல் நிலை பசி பர பக்தி. அது இன்னும் அதிகமாக அதிகமாக பரஞான பரம பக்தியாக பழுக்கிறது. அதுபோல அனபவாதிசயமும் விசத, விசத தர, விசத தமமாக பரார்த்த ஆனந்தம்; பரார்த்த கைங்கர்யம்; குணானுபவமே புருஷார்த்தமாக கனிவது சொல்லப்பட்டது.
———–
அறிவொன்றும் இல்லாத
1-அறிவில்லை
2-அறிவு ஓன்று இல்லை
3-அறிவு ஒன்றும் இல்லை-இத்தால் கர்ம ஞான பக்திகள் இல்லை என்கை –நோற்ற நோன்பிலேன்-குளித்து மூன்று-ந தர்ம நிஷ்டோஸ்மி
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா –
எங்களுக்கு குற்றம் சொன்னோம் இத்தனை போக்கி-உன்னுடைய பூர்த்திக்கு குற்றம் சொன்னோமோ-சர்வ நிரபேஷன் -என்கை-இப் பள்ளத்துக்கு அம் மேடு நிரப்பப் போராதோ –
இப் பாதளத்துக்கு அப் பர்வதம் நேர் என்கை – எங்கள் பக்கல் ஞான வ்ருத்தாதிகள் ஏதேனும் உண்டோ -நாங்கள் இழக்கைக்கு -என்று கருத்து-இத்தால் உபாய நைரபேஷ்யம் சொல்லிற்று –1-குறைவு இல்லை-2-குறை ஓன்று இல்லை-3-குறை ஒன்றும் இல்லை-1-எங்கள் புண்ணியம் சாபேஷமும் அன்று –-2-ஸாவதியும் அன்று –-3-பிரபல பாப நிவ்ருத்தமும் ஆகாது-நீ குறைவில்லாமை இருக்க பிரயோஜனம்–குறைவாளரை ஒழிய நீ நிறைவாளனாக எப்படி இருக்க முடியும்-அமுதனார் –நீசதைக்கு -அருளுக்கும் அக்தே புகல் -பழுதே அகலும் பொருள் என் –உன் தன்னோடு-உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது–
நாங்கள் அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம்-நீ குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன்
ஆனபின்பு இப்பிறவி -விதி நிர்மித மேத தன்வயம் -என்கிறபடியே மேடு படக் கண்டது பள்ளத்தை நிரப்ப அன்றோ-உறவை ஒழிக்க ஒழியாதே–பிரகாரத்தை ஒழிய பிரகாரி உண்டோ-ஸ்திதி உண்டோ -பிரகாரம் நம் போல்வார் -பிரகாரி -நன்றாக நான் -நான் இல்லை என்றால் நீ இல்லையே-நாரம் -இருந்தால் நாராயணன்-நடுவில் வந்த–இடையனாய் வந்த உறவை சொன்னோம்–ஜீவாத்மா பரமாத்மா சம்பந்தம் சொல்ல வில்லை-இடைக்குலத்தில் நாங்கள் –இடையிலே வந்த உறவு–இடைத்தனத்தில்–அறிவு இல்லாதவர் மறக்கலாம்
————
கீழ் அடங்க ஒரு அதிகாரிக்கு சம்பவிக்கும் ஸ்வ பாவங்களைச் சொல்லி ஆகிஞ்சன்யத்தையும் ப்ராப்தியையும் முன்னிட்டு அவனே உபாயமாக வேணும் என்று அபேக்ஷித்து ஷாமணம் பண்ணிக் கொண்டு தலைக் கட்டுகிறது –முதல் பாட்டில் சங்க்ரஹேண சொன்ன பிராப்ய பிராபகங்கள் இரண்டையும் மேல் இரண்டு பாட்டாலும் விவரிப்பதாக இப் பாட்டில் பிராபக ஸ்வரூபத்தை விவரிக்கிறார்கள்–
——–
உன் பொற்றாமரை அடியே –
மகார்க்கமுமாய்-போக்யமுமாய்-பிராப்தமுமாய் இருந்த திருவடிகளிலே –அடியே -என்று
அவதாரணத்துக்கு கருத்து – வேறு ஒரு பிரயோஜனத்துக்கு ஆளாகாது இருக்கை-சூட்டக் கண்ட பூவை விலை மதித்து விற்பாரைப் போலே கண்டு அனுபவிக்கையே பிரயோஜனமாக இருக்கிற திருவடிகளைப் பெற்று வைத்து வேறொரு பிரயோஜனம் தோற்றும் படியான செயல் செய்த செல்லாமை பாராய்-அடியே –போற்றும்-அங்குத்தைக்கு மங்களா சாசனம் பண்ணி – தனக்கும் ரக்ஷை தேடிக் கொள்ளுகை அன்றிக்கே தன்னை அழிய மாறியும் அத் தலைக்கு நன்மைகளை ஆஸாஸிக்கை-புத்ர சிஷ்ய தாசாதிகள் தாங்களும் உண்டு உடுத்து
பித்ராதிகளுக்கும் சேஷமாய் இருக்குமா போல் அன்றிக்கே அத் தலைக்கே சேஷமாய் இருக்கும் இருப்பு தனக்கு உஜ்ஜீவனமாய் இருக்கை-உன்னடியே போற்றும்-அடியானுக்கு அடியிலே இறே பிராப்தி – அடிச்சியோம் என்கிறவர்கள் கூறாளும் துறப்புக் கூட்டில் போகார்கள் இறே (திருமார்பை ஆசைப்படும் அத் திரு-திருவடியை ஆசைப்படும் இத் திரு )-உலகம் அளந்த பொன்னடி போற்றுவர்களோ – காடுறைந்த பொன்னடி போற்றுவர்களோ நாங்கள்-பொற்றாமரை அடி அன்றோ – சாதனத்வமும் சாத்யத்வமும் பூர்ணமாய் இருக்கை –பாவனத்வமும் போக்யத்வமும்-ப்ராப்யமாயும் ப்ராபகமாயும்-பொன்னும் தாமரையும்-உன் பொற்றாமரை அடியே-எங்களுக்குப் பொன்னும் பூவும் புறம்பே தேட வேணுமோ –பெண்களுக்கு புறம்பு அந்நிய பரதைகள் யுண்டானால்-கிருஷ்ணன் அவற்றை குலைப்பதும் திருவடிகளாலே-அழித்தாய் உன் திருவடியால் –கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை என்று ஆசிரயணீயமும் இதுவே –அவன் தாளிணைக் கீழ் புகும் காதல் -என்று ஆசைப்படுவதும் இதுவே-ஆசானுகுணமாக-தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே என்று (திருவாய் -10-4 ) இவர்கள் சென்னிக்கு கோலமாகச் சூடுவதும் இதுவே
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம்
திரு நாட்டிலே இருக்க்கவுமாம்-ஆஸ்ரித சஜாதீயனாய்க் கொண்டு சம்சாரத்தில் பிறக்கவுமாம் அதில் ஒரு நிர்பந்தமும் இல்லை-காட்டிலும் படைவீட்டிலும் ஒக்க இளைய பெருமாள் அடிமை செய்தாப் போலே யாக வேணும் –நீ ஸ்வாமியாகவும் நாங்கள் ஸ்வம் ஆகவும்-இஸ் சம்பந்தம் என்றும் சித்திக்கும் இத்தனையே எங்களுக்கு வேண்டுவது -என்கிறார்கள்-ஒரு உறவைக் குறித்து அதுவாக வேணும் என்னாது ஒழிந்தது
எல்லா உறவும் நீயே யாக வேணும் -என்கைக்காக-சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நல் மக்களும் – என்னக் கடவது இறே –அகால கால்யமான-நலமந்த மில்லதோர் நாட்டிலே இருக்கவுமாம் – ஆஸ்ரித சஜாதீயனாய்க் கொண்டு நிலை வரம்பில் பல பிறப்பாய் சம்சார மண்டலத்தில் அநேக அவதாரம் பண்ணவுமாம்- அதில் ஒரு நிர்பந்தம் இல்லை –நீ பிறவாது இருக்கும் இடத்திலும் பிறந்து திரியும் இடத்திலும் கூடத் திரியும் அத்தனை-தேவத்வே தேவே தேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ-(ஸ்ரீ விஷ்ணு புராணம் )என்கிறபடியே நாங்களும் ஒக்கப் பிறந்து விடாதே திரிய வேணும் – இளைய பெருமாள் படை வீட்டிலும் காட்டிலும் ஓக்கத் திரிந்தால் போலே-உற்றோமே யாவோம்-சர்வ வித பாந்தவமும் உன்னோடே யாக வேணும் – பண்டை நாள் திருவாய் -எல்லா உறவின் காரியமும் நீயே)நீ காட்டுக்குப் போக மூச்சடங்கும் உறவு உண்டாக வேணும்(சக்ரவர்த்தி) அசலூரில் வளரப் போகப் பூண்டும் புலம்பும் உறவு உண்டாக வேணும்(தேவகி புலம்பினாள் ) நீ அபிமத விஷயங்களை விஞ்சி விநியோகம் கொண்டால் பொறாது ஒழியில் செய்வது என் என்று வயிறு பிடித்துக் கொள்ளும் உறவு உண்டாக வேணும்(வெண்ணெய் உண்ட பொன் வயிறு என்னாகுமோ யசோதை ) நீ நில்லுங்கோள் என்றால் நீர் பிரிந்த ஜந்துக்களை போலே துடிக்கும் உறவு உண்டாக வேணும் (அக் குளத்தில் மீன் போல் பிராட்டி இளைய பெருமாள் ) நீ பாம்பின் வாயில் விழுந்தாய் என்றால் பிணம் படும் படியான பாந்த்வம் வேணும்(கோகுல சராசரங்கள் ) கழிந்த பிழைகளுக்குக் காப்பிடும் உறவும் வேணும் -எங்கள் வீட்டில் இட்ட ஆசனத்தை ஊன்றிப் பார்க்கும் உறவும் வேணும்(விதுரர் மஹா மதி )-விட்டு அணைக்கத் தேடில் வெளுக்கும் உறவும் உண்டாக வேணும் -(பராங்குச நாயகி )
உற்றோமே
சம்பந்தம் உண்டாய் இருக்கச் செய்தே-பத்து மாசம் பிரிந்து இருத்தல் -(சீதாபிராட்டி )
பதினாலாண்டு பிரிந்து இருத்தல் -(பரதன்)-பதினாறு ஆண்டு பிரிந்து இருத்தல் செய்ய ஒண்ணாது (நம்மாழ்வார்)-ஏழு ஏழு பிறவிக்கும்-இங்கே பிறந்தாலும் ஓக்கப் பிறக்க வேணும்
கிருஷ்ணனும் பெண்களுமாய் புறப்படில் அமையும்-அவனும் எதிர் சூழல் என்று இவர்களைப் பெற வேணும் என்று முற்கோலிப் பிறவா நிற்கும் என்றுமாம்
இளைய பெருமாள் காட்டிலும் படை வீட்டிலும் அடிமை செய்தால் போலே
தேவத்வே தேவ தே ஹேயம் -மனுஷ்யத்வே ச மாநுஷீ (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-ஆக வேணும் என்கிறார்கள்-சம்பந்தம் ஒத்து இருக்கச் செய்தே ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே விஸ்லேஷித்து இருக்கை அன்றிக்கே இளைய பெருமாளைப் போலே அடிமை செய்ய வேண்டும் –உனக்கே –என்ற அவதாரணத்துக்கு கருத்து-நீ உகந்த அடிமை செய்வோம் –
உனக்கும் எங்களுக்குமாக இருக்கும் இருப்பைத் தவிர்ந்து-தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்னுமா போலே நீ உகந்த அடிமை யாக வேணும் – அஹங்கார கர்ப்பமான அடிமை புருஷார்த்தம் ஆகாது –ஆட் செய்வோம்-அரசுக்குப் பட்டம் கட்டி அருகு இருக்க ஒண்ணாது –ஆட் செய்யும் இடத்தில் எங்களுக்கு உறவை அறிவித்து அடிமை கொண்டு சாபேஷனாய் நிற்கிற யுனக்குச் செய்ய வேணும்-உனக்கு அபிமதம் ஆனத்தை எங்கள் நிர்பந்தம் ஒழிய நீ ஏவ-( நாங்கள் ) -செய்த போது அன்றோ -எங்களுக்கு ஸ்வரூப சித்தி உண்டாயிற்று ஆவது-மற்றை நம் காமங்கள் மாற்று -என்கிறதாலே பல விரோதியைக் கழிக்கிறது –
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் – என்றவர்கள் தாங்களே
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது -என்று கைங்கர்யத்தைப் பிரார்திக்கையாலே-கைங்கர்யம் தானும் மங்களா சாசனம் ரூபமான படியாலே
மங்களா சாசனத்துக்கு பலமாக அவன் கொடுக்க வேண்டியதும் இவர்கள் கொள்ள வேண்டியதும் மங்களா சாசனமே என்றது -ஆய்த்து –சிற்றம் சிறுகாலே –போற்றும் பொருள் கேளாய் –என்கையாலே ரஜஸ் -தமஸ் ஸூ க்களாலே கலங்கி தேக அனுபந்திகளான-த்ருஷ்ட பலங்களை-அடியோங்கள் அபேஷித்தாலும் ஹித பரனான நீ
கேள்வி கொள்ளவும் கடவை அல்லை கொடுக்கக் கடவையும் அல்லை – என்றது ஆய்த்து –
1-சத்வ உத்தர காலத்தில் உணருகையும் -(சிற்றம் சிறு காலே)
2-பகவத் சந்நிதி ஏற வருகையும் (வந்து)
3-சேவிக்கையும் ( உன்னைச் சேவித்து)
4-விக்ரஹ அனுபவம் பண்ணுகையும் -(உன் பொற்றாமரை அடியே )
5-தத் சம்ருதியை ஆசாசிக்கையும் -(போற்றும் பொருள் )
6-தன் பக்கலிலே ஆபி முக்யம் பண்ணுவித்துக் கொள்ளுகையும்(கேளாய் )
6-அவதார பிரயோஜனங்களை விண்ணப்பம் செய்கையும் -(பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ )
7-ஆர்த்தியை பிரகாசிப்பிக்கையும் (நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே)
8-திரு உள்ளம் அறிய பலாந்த்ர சங்க நிவ்ருத்தியைக் காட்டுகையும்(இற்றைப் பறை கொள்வான் அன்று)
9-ஸூரிகள் பரிமாற்றத்தை அபேக்ஷிக்கையும் (எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்)
10-ஸ்வரூப விரோதிகளை அறுத்துத் தர வேணும் என்று வேண்டிக் கொள்ளுகையும் (மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ) கைங்கர்ய ருசி யுடையாருக்கு ஸ்வரூபம் இறே –
நாராயணனே நமக்கே தருவான் – என்றது முதல் பாசுரம்.-உனக்கே நாமாட்ச் செய்வோம் – 29 ஆம் பாசுரம். இத்தால் நாராயணனே நமக்கே – உனக்கே நாம் = நாராயணனே உனக்கே நாம் என்றாகிறது.
முப்பதும் தப்பாமே –
இதில் ஒரு பாட்டும் குறையாமே விலை இல்லாத ரத்னங்களாலே செய்த ஏகாவலியிலே
ஒரு ரத்னம் குறைந்தாலும் -நெடும் பாழாய்-இருக்கும் இறே – அப்படியே ஒரு பாட்டு குறையிலும் பேர் இழவாய் இருக்கும் –இங்கு – பிற்பட்ட காலத்திலே -என்னுதல் -சம்சாரத்திலே -என்னுதல்-அப்படியே ஒரு பாட்டு குறையிலும் பேர் இழவாய் இருக்கும் –
1-பகவத் ஆபி முக்கியம் பிறக்கிற கால வைலக்ஷண்யம் அறியாது இருத்தல் –
2-தியாஜ்ய உபாதேயங்களில் நழுவ நிற்றல்
3-பர சம்ருத்ய ஏக பிரயோஜனம் இன்றியிலே ஒழிதல்
4-தேவதைகளையும் நியமிக்கும் படியான ஞானிகள் வைபவம் அறியாது ஒழிதல்
5-ஆஸ்ரயண காலத்திலே ஷீண பாபராம் ஏற்றம் அறிதல் செய்யாது ஒழிய ஒண்ணாது
6-பகவத் விஷயத்தில் முதலடி இட்டாரோடு
7-அவகாஹித்தே சிறிது குலைய நிற்பாரோடு
8-ஸ்லாகாப்ரதானராய் இருப்பாரோடு
9-த்யாஜ்யத்தில் அல்ப ஸ்பர்சம் நடையாடுவாரோடு
10-அனுபவமே நிரந்தரமாக நடப்பாரோடு
11-பாகவத குலத்திலே அந்வயித்தாரோடு
12-கைங்கர்ய நிஷ்டரோடே சம்பந்தம் உடையாரோடு
13-ஸ்வரூப ஞானம் யுடையரோடு
14-வை லக்ஷண்ய அனுசந்தானம் பண்ணி நிர்வ்யாபாரராய் இருப்பாரோடு
15-பக்தியால் கலங்கி நடப்பாரோடு
16-பாகவத பாரதந்தர்ய ஏக நிஷ்டரோடு
வாசி அற உத்தேச்யதா புத்தி குலையாமல் இருக்க வேணும் என்று அறிய வேணும் –
17-பகவத் சந்நிதியில் செல்லும் க்ரமங்கள் அறிய வேணும்
18-புருஷகாரத்தினுடைய ஸ்வரூப
19-ஸ்வபாவங்களும்
20-காரியமும் அறிய வேணும்
21-பகவத் குண வித்தராக வேணும்
22-கடாக்ஷ ஏக தாரகராம் படி பஃன அபிமானராக வேணும்
23-ஆபி முக்கிய பிரார்த்தனம் பண்ண வேணும்
24-மங்களா சாசன பரராக வேணும்
25-அர்த்தித்தவம் தோற்றப் பல் காட்ட வேணும்
26-முமுஷூ தசையில் அபேக்ஷிதம் –
27-முக்த தசையில் போகம் இவற்றில் வாஞ்சை நடக்க வேணும்
28-அதுக்குத் தாங்கள் உபாயாந்தர ஸூன்யத்தையை முன்னிட்டு வேணும்
29-நித்ய கைங்கர்யத்தில் நித்ய அபேக்ஷை நடக்க வேணும்
30-இத்தசை விளைந்தார் பாசுரமே போகமாக வேணும் –
ஆக
திருப்பாவையால் சொல்லிற்று யாயிற்று வேதார்த்தம் –
அதாவது
அவதாரமே சர்வ ஸமாச்ரயணீயம் என்றும்
அவதீர்ணனாவனுடைய வடிவு அழகே ருசி ஜனகன் என்றும்
ருசியுடையார் ப்ராப்ய த்வரையாலே-அவனை மேல் விழுந்து அபேக்ஷிக்கை பிராப்தம் -என்றும்
இவ்விஷயத்தில் இழிவார்க்கு ருசியுடையார் அடங்க உத்தேச்யர் என்றும்
ப்ராப்யம் ஆகிறது -அனுபவ ஜனித ப்ரீதி காரியமாய் யாவதாத்மா பாவியான கைங்கர்யம் என்றும்
தத் சாதனமும் அவன் திருவருளே என்றும் சொல்லிற்று யாயிற்று –
—————
நாச்சியாரும் பெரியாழ்வாரும் வடபெருங் கோயிலுடையானும் கலந்து வாழும் வில்லிபுத்தூர் பொன்னும், முத்தும், மாணிக்கமும் பதித்துச் செய்த அணிக்கு நிகராய் ஒளிர்கின்றது என்று உணர்வோர் உளர்.
குறித்தொருவர் கொண்டாடும் கொள்கைத்தோ கோதை
நிறுத்தவூர் விண்டுசித்தர் நீடூர்–பிறப்பிலியூர்
தாழ்வில்லி புத்தூர்என் றைவர்க்குத் தானிரந்தான்
வாழவில்லி புத்தூர் வளம்-என்று பிள்ளைப் பெருமாளையங்கார் கூறும் கூற்று இதை
நிலை நிறுத்தும். (நூற்றெட்டுத்திருப்பதி அந்தாதி, ப: 108),
சுற்றி நின்று ஆயர் தழைகள் இட சுருள் பங்கி நேத்ரத்தால் அணிந்து
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே பாடவும் ஆடவும் கண்டேன் அன்றிப்பின்
மற்று ஒருவர்க்கு என்னைப் பேசல் ஒட்டேன் மாலிரும் சோலை எம் மாயற்கு அல்லால்
கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக் கொடுமின்கள் கொடீராகில் கோழம்பமே – 3-4-5-
மற்றொருவற் கென்னைப் பேசவொட்டேன் மாலிருஞ்சோலை யெம்மாற் கல்லால்
(பெரியாழ்வார் திருமொழி -3-4-5-
மானிடவர்க் கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்- கண்டாய் மன்மதனே (நாச்சியார் திருமொழி 1-4-3-)
சிந்தூரம் இலங்க தன் திரு நெற்றி மேல் திருத்திய கோறம்பும் திருக் குழலும்
அந்தரம் முழவத் தண் தழை காவின் கீழ் வரும் ஆயரோடு உடன் -வளை கோல் வீச
அந்தம் ஒன்றில்லாத ஆய்ப் பிள்ளை அறிந்து அறிந்து இவ்வீதி போதுமாகில்
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்து பவள வாய் முறுவலும் காண்போம் தோழி 3-4-6- –
மச்சணி மாட மதிள் அரங்கர் வாமனனார்
பச்சைப் பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற
பிச்சைக் குறையாகி என்னுடைய பெய் வளை மேல்
இச்சை யுடையரேல் இத் தெருவே போதாரே—11-4-
ஆண்டாள் வில்லிபுத்தூர் விளக்கு – அணிவிளக்கு – சுற்றும் எரியும் விளக்கு – பெரியாழ்வாரின் குலவிளக்கு – குத்துவிளக்கு – இறுதியில் குன்றின் மேலிட்ட விளக்காக விளங்கியமை. வேயர் பயந்த விளக்காகிய ஆண்டாள், ஆயர் குலத்தில் தோன்றிய கண்ணனாகிய அணி விளக்கின் வனப்பு வீரம், உயர்வு முதலியவற்றால் ஈர்க்கப்பட்டு அவனை அணுகி இறுதியில் அன்னவனோடு கலந்தாள்-கோதை தமிழ்- கோதுஇல் தமிழ் – இன் தமிழ்-‘ வண் தமிழ். பிற ஆழ்வார்களை விஞ்சும் தமிழ். இவருடைய காதல் பள்ளமடையாகும்.
*பேச்சு அரவம் கேட்டிலையோ” என்றது விசேஷமான கருத்தை யுடையது. சேட்பதில் ரஸமில்லை; பேச்சிலிருந்து தோன்றுகிற (அரவம்) த்வனிப் பொருளைக் கேட்டுணர்வது தான் சுவை மிக்கது என்று ஆண்டாளே காட்டியிருக்றாள்-
ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —
—————
————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply