மற்று (166)
பொருள் தாயம் இலேன் எம்பெருமான் உன்னை பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு – 3-1-7-நாலாயி:229/3
என்னுடைய நாதனானவனே- இப்படி தீம்பனான உன்னைப் பிள்ளையாகப் பெற்ற குற்றம் ஒழிய இவ் ஊரில் உள்ளார் என்னோடு காறுகாறு என்ன – எவர்களோடும் ஓரர்த்த தாயம் உடையேன் அல்லேன் –
———–
ஞாலத்து புத்திரனை பெற்றார் நங்கைமீர் நானோ மற்று ஆரும் இல்லை – 3-3 1- –-நாலாயி:244/4-
பிள்ளை வாசி அறியும் குண பூர்த்தி உடையவர்களே-லோகத்தில் புத்ரனை பெற்றவர்களில் — நல்ல பிள்ளையை பெற்றவள்-என்று சொல்ல தக்கேன் நானே –-மற்று ஒருவரும் இல்லை –என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனை பெற்ற வயிறு உடையாள் -என்று
கொண்டாடப் பட்டார் என்னை ஒழிய மற்று ஒருவர் உண்டோ -என்கை –(கௌசல்யா ஸூ பிரஜா -அங்குஇவன் இருந்த திருவயிற்றையும் கொண்டாடி இங்கு-நோன்பு நூற்றதையும் சேர்த்து இங்கேயே தானே-மூன்று ஜென்மம் திருச்னி ஸூதபா –அடுத்து அதிதி காஸ்யபர் வாமனன் – இப்பொழுது இங்கு )
———–
மற்று ஒருவர்க்கு என்னை பேசல் ஒட்டேன் மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால் – 3-4-5-நாலாயி:258/3-
இப்படிப் பட்டவனுக்கு ஒழிய -வேறு ஒருவர்க்கு என்று -என்னை சொல்ல ஒட்டேன் –
நீங்கள் நினைத்து இருக்கிறது செய்யல் ஆவது இல்லை –-நீங்கள் வாய் விடில் நான் முடிவன்-மனிடர்வர்க்கு என்று பேச்சு படில் வாழகில்லேன்(நாச்சியார் 1-5-) -என்னுமா போலே சொல்லுகிறாள் –இப்படி இவள் சொன்னவாறே -இவள் தன் நினைவை இவள் வாயாலே கேட்கைகாக எவனுக்கு ஒழிய என்று நீ சொல்லுகிறது -என்ன –மாலிரும் சோலை எம் மாயற்கு அல்லால் -என்கிறாள்- ஸ்ரீ கிருஷ்ணனுக்கு -என்னாதே -இப்படி சொல்லிற்று
இவனுக்கு ஓரடி உடைமையை சொல்லுகைக்காக – அடி உடைமை சொல்லும் போது –ஒரு கோத்ர சம்பந்தம் சொல்ல வேணும் இறே(கோத்ரம் -மலை என்றும் அர்த்தம் )ஸ்ரீ மால் இரும் சோலை போலே என்னையும் தன்னை அசாதாரணை ஆக்கிக் கொண்ட ஆச்சர்ய சக்தி உக்தனுக்கு ஒழிய என்றபடி –ஸ்ரீ திரு ஆய்ப்பாடியிலும் காட்டில் ஸ்ரீ திரு மால் இரும் சோலை அவனுக்கு அசாதாரண தேசம் போலே காணும்-அவதார காலம் இத்தனையும் இறே அங்கு
நித்ய சந்நிதி இங்கே இறே-
————-
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் வேறொருவரோடு என் மனம் பற்றாது – நாலாயி:434/3
நின் கண் மற்று அல்லால்-மற்று-விழிக்கும் கண்ணிலேன்-உன்னுடைய கடாஷம் ஒழிய -வேறு நோக்குகைக்கு (ரஷிக்கைக்கு ) ஒரு மறு விழி உடையேன் அல்லேன் –-உன்னை ஒழிய வேறு ஒரு ரஷகரை உடையேன் அல்லேன் –நம்மைப் போலே ரஷகருமாய் -போக்யருமாய் -இருப்பார் உண்டானால் –பற்றக் குறை இல்லையே என்ன –வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது –குண க்ருத தாஸ்யம் அன்றிக்கே – ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் ஆகையாலே -புறம் போகாது–
—————
மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை-12-1-நாலாயி:617/1
மற்று –வேறாய் இருந்தீர்கட்கு -என்னுதல் –மற்று –உரைப்பது எல்லாம் -என்று மேலே கொடு போய்-அந்வயித்தல்-இருந்தீர்கட்கு அறியலாகா –ஏக தேச வாசமே போராது காணும் கோள்-
எனக்கு ஓடுகிற தசை அறிகைக்கு-இருந்தீர்கட்கு–நான் இருந்த தேசத்திலே நீங்களும் இருந்தி கோள் என்னா-எனக்கு ஓடுகிற தசை உங்களால் என்னை அறியப் போகாதே –
உரைப்பது எல்லாம் – அங்கே சென்று கிட்ட ஆசை உடைய எனக்கு – நான் சென்று சேராமைக்கு உறுப்பாகச் சொல்லும் வார்த்தை எல்லாம்-மற்று –உரைப்பது எல்லாம் –
அவனோடு கிட்டாமைக்குச் சொல்லும் வார்த்தை எல்லாம்-ஊமையரோடு செவிடர் வார்த்தை-என் தசையை அறியாத உங்களுக்கு தோற்றினபடி சொல்லுகைக்கு பரிகரம் இல்லை-எனக்குக் கேட்கைக்கு பரிகரம் இல்லை-ஊமைக்கு வ்யவஹார யோக்யதை இல்லை-செவிடர்க்கு கேட்கைக்கு யோக்யதை இல்லை-செவிடரோடு ஊமையர் வார்த்தை என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்-
————
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள்-தன் – நாலாயி:688/3-
அவனே ரஷகன் என்னும் அத்யவசாயம் உண்டானாலும் -பேறு தாழ்த்தால் அவனை
வெறுக்க வேண்டும் பிராப்தி உண்டு இறே சேதனன் ஆகையாலே –
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -என்று அசித் சாமானமாக பாரதந்த்ர்யத்தைச் சொல்லி வைத்து-எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே –என்கிறது புருஷார்த்த சித்தி சேதனனுக்கு ஆக வேண்டி இறே –
அவனைக் குறித்து சேதன அசேதனங்கள் இரண்டுக்கும் பாரதந்த்ர்யம் அவிசிஷ்டமாய் இருக்கச் செய்தே புருஷார்த்த சித்தி இவனுக்கு உண்டாகிறது சேதனன் ஆகையால் இறே அரிந்து போக வேண்டும் சினத்தை யுடையாளாய்க் கொண்டு-வளர்த்த தாய் -என்னாதே-ஈன்ற தாய் -என்றத்தாலே பிராப்தம் சொல்லிற்று-அகற்றிடினும் என்கையாலே அகற்றுகை அசம்பாவிதம் -என்கிறது-ஈன்ற தாய் -என்கையாலே
பெறுகைக்கு நோன்பு நோற்கையும்-பத்து மாசம் சுமக்கையும் -பிரவச வேதனை படுகையும்
என்கிற இவை எல்லாம் உடையவள் -என்கை-அகற்றிடினும் –
இப்படி பெறுவதுக்கு முன்புள்ள வெல்லாம் துக்கமும் பட்டவள் ஆகையாலே
வருகிறதை நினைக்குமது ஒழிய அகற்ற நினையாள் இறே
அவள் தான் அகல விடினும் –
இத்தால் சொல்லிற்று யாய்த்து -நிருபாதிக தேவரீர் கை விடிலும் வேறு எனக்கு புகழ் இல்லை என்கிறார் –மற்று அவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி –
இவள் கோபித்து விட்டாலும் வேறு ஒருவருடைய அருளை அபேஷியாது இறே பிரஜை –
அதுக்கு அடியான பிரேமத்துக்கு அவதி உண்டாகில் இறே கோபத்துக்கு அவதி உள்ளது –
ஸ்நேஹம் இல்லாமையாலே கோபமும் இல்லை இறே பிறருக்கு –
ஸ்ரீ நம்பி திரு வழுதி வள நாடு தாசரை ஸ்ரீ முதலியாண்டான் கோபித்து கையாலும் காலாலும் துகைத்து
இழுத்தவாறே திண்ணையிலே பட்டினியே ஒரு நாள் போகாதே கிடந்தார் –
ஸ்ரீ ஆண்டான் மற்றை நாள் அமுது செய்யப் புகுகிறார் -அவன் செய்தது என் என்று கேட்ட வாறே
பட்டினியே வாசலிலே கிடந்தான் என்று கேட்டு அழைத்து -நீ போகாதே கிடந்தது என் -என்ன –
ஒரு நாள் ஒரு பிடி சோறிட்டவன் எல்லா படியாலும் நிந்தித்தாலும் வாசல் விட்டுப் போகிறது இல்லை –
ஸ்ரீ நாத நான் எங்கே போவது -என்றார்
————
மைத்து எழுந்த மா முகிலே பார்த்திருக்கும் மற்று அவை போல் – 5-7–நாலாயி:694/2
கார் காலத்திலே வர்ஷியாதே மேகங்கள் மறுத்த காலத்திலும் -பைம் கூழ்கள்-உண்டு -பயிர்கள் –ஆகாசத்திலே கறுத்த மேகங்களைப் பார்த்து இருக்கும் அத்தனை அல்லது
நீர் நிலம் தேடித் போக வறியாதாப் போலே-
———
புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத மற்று அவை போல் – -5-8-நாலாயி:695/2-
ஜல ராசி எல்லாம் திரண்டு ஒளியை உடைத்தாய் -பார்த்த இடம் எங்கும் பரந்தோடி-ஆழ்ந்த கடலிலே சென்று புக்கு அல்லது புறம்பு நிற்க மாட்டாத ஆறுகள் போலே –
சமுத்திர இவ சிந்துபி என்னுமா போலே இவை புக்கால் கடல் நிறையும் இல்லையாகில் குறைப்படுகிறதும் அன்று இறே- இவற்றுக்கு புறம்பு தரிப்பது அரிதாய் இறே புகுகிறன-
———–
மற்று ஆரும் பற்று இலேன் என்று அவனை தாள் நயந்து -5-10– நாலாயி:697/2-
இதுக்கு என்று வந்திருக்கிற நீ என்னை உபேஷித்தாயே யாகிலும்-வேறு ஒரு புகலில்லை-நான் அநந்ய கதி என்று -அவன் திருவடிகளை ஆசைப்பட்டு-பிரதிபஷத்தை பக்க வேரோடு வாங்க வற்றான வென்றியை உடைய வேலையையும் சேனையையும் உடைய ஸ்ரீபெருமாள் சொன்னவை –-பிரதிபஷத்தை வெல்லுகைக்கு ஈடான பரிகரம் உடையரானார் போலே யாய்த்து – ஸ்ரீ பகவத் ப்ராப்திக்கு பரிகரமாக-இவருடைய அநந்ய கதித்வத்வமும்-
————-
கரு மலர் கூந்தல் ஒருத்தி தன்னை கடை கணித்து ஆங்கே ஒருத்தி தன் பால்
மருவி மனம் வைத்து மற்று ஒருத்திக்கு உரைத்து–6-5-
இவள் பக்கலிலே கண் செல்லா நிற்க வேர் ஒருத்தி பக்கலிலே – அவளை அல்லது அறியோன் என்னும் படி மனஸை அங்கே வைத்து –மனஸ் ஸூ அவள் பக்கலிலே இருக்கச் செய்தே வேறே ஒருத்திக்கு அடியேன் -என்று சொல்லி –
————–
மன்னி அவளை புணர புக்கு மற்று என்னை கண்டு உழறா நெகிழ்ந்தாய் – நாலாயி:705/2
எக்காலத்தில் இடம் குறித்து விட்டான் என்று தெரியாது – அவள் அங்கே குடில் கட்டி காத்துக் கிடக்கிறது -அவளோடு சம்ச்லேஷிக்கப் புக்கு-ஒரு மஹா பாரதத்தை பாரித்துக் கொண்டு புக்கு இவளைக் கண்டவாறே கலங்கி எழுந்து இருந்தான் –
—————
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே – 10-8-நாலாயி:747/4-
ஸ்ரீ பிராட்டியோடு கூட பிரிந்த பிரிவு எல்லாம் மறக்கும் படி இனிது அமர்ந்து அருளிய
ஐஸ்வர்யம் உடையவன் தன்னை-ராஜ்ஜியம் பண்ணி இருக்கிறவன் திருவடிகளைக் கொடுக்கை யாகிற ராஜ்ஜியம் ஒழிய அதற்கு எதிர்த்தட்டாக ஸ்வ தந்த்ர்யத்தைப் பார்க்கும் ராஜ்யத்தை ராஜ்யமாக வேண்டேன் –
——-
உறைவானை மறவாத உள்ளம்-தன்னை உடையோம் மற்று உறு துயரம் அடையோம் அன்றே –10-9– நாலாயி:749/4-
இப்படிப்பட்ட சௌலப்யத்தை அநவரத பாவனை பண்ணி இருக்கிற நமக்கு –
ஸ்ரீ எம்பெருமானை அனுபவிக்கப் பெற்றிலோம் என்கிற இழவு இனி இல்லை –
————–
பற்றி உற்று மற்று அதன் மருப்பு ஒசித்த பாகன் ஊர் – திருச்சந்த விருத்தம்-52-நாலாயி:803/2
மதியாதே சென்று பற்று -நாலு காலுக்கும் உள்ளான அதன் உடலிலே புக்கு நுழைந்து அதுக்கு மேலே அதின் ஹிம்ச பரிகரமான கொம்பை அநாயேசேந முறித்த பாகன்
வர்த்திக்கிற தேசம் –
———-
ஓதுகின்றது உண்மை அல்லது இல்லை மற்று உரைக்கிலே – -72-நாலாயி:823/4-
ஸ்ரீ பூமி சஹிதன் பிரம்மாவுக்கு உத்பாதகன் ப்ரஹ்ம உத்பன்னன் ருத்ரன் என்று
வேதாக்ய சாஸ்திரம் ஓதுகிற அர்த்தமே சத்யம்-அதுக்கு புறம்பாக ஓர் அர்த்தம் சொல்லில் அது அசத்யம் – ஸூபர்ண வைகுண்ட சம்வாதே – யத்தத் பத்ம மபூத் பூர்வம் யத்ர ப்ரஹ்மா வ்யஜாயதே ப்ரஹ்மணச்சாபி சம்பூதச் சிவ இத்யவதார்யதாம் சிவாத் ஸ்கந்தஸ் சம்பபூவ ஏதத் ஸ்ர்ஷ்டி சதுஷ்டயம் -இத்யாதி –
—————
வள்ளலாரை அன்றி மற்று ஒர் தெய்வம் நான் மதிப்பனே – -88-நாலாயி:839/4-
உதாராஸ் சர்வ ஏவைத -என்கிற ஔ தார்யத்தை எனக்கு பிரகாசிப்பித்தவனை ஒழிய
அநந்ய பிரயோஜனனாய்-அநந்ய சரண்யனனாய் இருந்துள்ள நான் வேறு ஒரு தெய்வத்தை ஆஸ்ரயணீயமாக நினைப்பேனோ –
————
இலங்கு பாதம் அன்றி மற்று ஒர் பற்று இலேன் எம் ஈசனே – -90-நாலாயி:841/4-
இருட்டு மிக்கதனையும் விளக்கு ஒளி வீறு பெறுமாபோலே குறைவாளர்க்கு முகம் கொடுக்கையாலே விளங்கா நின்றுள்ள திருவடிகளை ஒழிய வேறு ஜீவன உபாயத்தை உடையேன் அல்லேன்-
———
கண் அலால் ஒர் கண் இலேன் கலந்த சுற்றம் மற்று இலேன் –91- நாலாயி:842/3-
லோகாநாம் த்வம் பரோ தர்ம -என்கிற தேவரீரை ஒழிய வேறு ஒரு நிர்வாஹகரை உடையேன் அல்லேன் – தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சம் -என்கிறார் –
நத்வா குர்மி தசக்ரவ பச்ம -என்று-பிராட்டிக்கு சக்தி உண்டாய் இருக்க ப்ராப்தி இல்லாதே-தவிர்ந்தாள் –எனக்கு சக்தியும் இல்லை என்கிறார்-நெஞ்சுக்கு பொருந்தின பந்து வர்க்கத்தை வேறு உடையேன் அல்லேன் –உத்பாதகரான மாதா பிதாக்கள் தைவம் ரஷிக்கிறது என்று காட்டில் விட்டுப் போனார்கள்-வளர்த்தவர்களை -பிதரம் மாதரம் தாரான் -என்கிறபடியே நான் விட்டேன் –ப்ராதா பர்த்தா ச பந்துச்ச பிதாச மம ராகவ -என்கிறபடியே சர்வ பந்தும் தேவரீரே என்கிறார் –பிராட்டிக்கு தனி இருப்பிலே திருவடி வந்து முகம் காட்டினார்-அப்படியே இருப்பதொரு குளிர்ந்த விழியும் தேவரீரை ஒழிய எனக்கு இல்லை என்கிறார்-
—————-
மறந்திடாது மற்று எனக்கு மாய நல்க வேண்டுமே -98- நாலாயி:849/4
சம்சாரத்தில் நான் பட்ட துக்கத்தையும் என்னுடைய பூர்வ வ்ர்த்தத்தையும்
தேவரீருடைய ஸ்வா தந்த்ர்யத்தையும் பார்த்து விஸ்மரியாதே – அபேஷா மாத்ரத்தையும் சம்பந்தத்தையும் பார்த்து – விரோதி நிரசனத்திலே அசக்தனான எனக்கு -தன்நிவ்ர்த்தி பூர்வகமாக புருஷார்த்தத்தை தந்து அருள வேணும் –மற்று -என்கிறது விரோதி நிவ்ர்த்தி சமநந்தரத்தில் லபிக்குமது ஆகையாலே-மாய ––மமமாயா -என்கிறபடியே சம்சார சக்கரத்தை அறுத்து -நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாக்க வல்ல ஆச்சர்ய சக்தி உக்தனே-
———–
ஊர் இலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை – ஸ்ரீ திரு மாலை-29 -நாலாயி:900/1-
இவை இன்றிக்கே ஒழிந்தால் கண் பழகி இருப்பார் ஒரு பந்துக்கள் உண்டோ -வென்னில்
அதுவும் இல்லை என்கிறார் -திவ்யதேசவாஸிகளோடு உறவு இருக்குமாகில்
பந்து க்ருத்ய பரிபாலனத்துக்காகச் சிலகாலம் அங்குப் போகவும் அதடியாக பகவத்ஸேவை கிடைக்கவும் ப்ரஸக்தியுண்டு; அப்படிப்பட்ட உறவினர்களும் எனக்கில்லை.-
————-
அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:923/4
அண்டம் ஆகாசம் -அந்தரத்து அமரர் இவர்கள்- -அந்தரம் அண்டம் ஆகாசம் பர்யாயம் –
கேசவன் தமர் அல்லர் இவர்கள் -இவர் உள்ள இடம் வைத்தே இவர்களை –
பகவத் பக்தர்களை -கைங்கர்யம் இட்டும் அவனை இட்டும் -நிரூபகம் –
மாதவன் தமர் என்று -விதி வகை புகுந்தனர் -என்பதே நிரூபகம் -வாழ்ந்த இடம் கொண்டு இல்லையே –
இவர்கள் தங்கள் வாழ்ந்த இடம் கொண்டு செருக்கி இருப்பவர்கள் என்றவாறு
இவர்களை வஸ்த்வய இடம் வைத்து -பிரபன்னர் அநந்ய பிரயோஜனர்களை -கேசவன் தமர் -போல –
நந்தகோபாலன் கோவில் காப்பான்- தொண்டர் அடி பொடி-மண்டம் குடியார் இல்லை-கேசவன் தமர்-
மாதவன் தமர் -விதி வகை புகுந்தனர்-பகவத் பக்தர்களுக்கு பக்தி கைங்கர்யம் கொண்டே பெயர்-
தேவர்கள்- தேவ பட்டணம் உசத்தி என்று அந்தரத்து அமரர்கள் வர்த்திக்கும் இடத்தை இட்டு சொல்லும் இத்தனை-
திரு வேங்கடமுடையான்-தேசத்து இட்டு சொல்வது போல ஸ்வாதந்த்ர்யம் அகங்காரம் இவர்களுக்கும் உண்டு என்பதால்/-
—————–
கண்ட கண்கள் மற்று ஒன்றினை காணாவே – நாலாயி:936/4-
இவர் –கடலிலே குழப்படி உண்டாமா போலே -பூர்ணம் -என்கிறபடியே பெரிய பெருமாள் பாடே எல்லாம் இல்லையோ -ஆன பின்பு எனக்குப் பெரிய பெருமாளை ஒழிய வேறு ஒருவரை அனுபவிக்க ச்ரத்தை யில்லை -எனக்கு உண்டானாலும் அவரை யநுபவித்த என் கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்கிறார் –பாவோ நான்யத்ர கச்சதி -போலே கண்களுக்கு பச்சை இட்டாலும் வேறு ஒரு அர்ச்சாவதாரம் அவதார விசேஷம் இவற்றை இப்படி விரும்பி போக்யம் என்று கருதாது-காட்சி ஒழிய வேறு ஒரு பலம் சொல்லா விட்டது பலமும் காட்சியாகையாலே முக்த ப்ராப்யம் என்று ஒரு தேச விசேஷத்திலே போனாலும் சதா பஸ்யந்தி -இறே-தம்மைச் சொல்லுதல் பாட்டுக்கு சங்க்யை சொல்லுதல் செய்யில் கரை மேலே நின்ற அல்லாத ஆழ்வார்களோ பாதி யாவர் -அஸ்தமி தான்ய பாவமாம்படி அழகிலே ஈடுபட்டுத் தம்மை மறந்தார்-நோ பஜனம் ஸ்மரன்நிதம் சரீரம் -என்கிறபடியே முக்த ப்ராப்யமான புருஷார்த்தத்தை அனுபவித்தார் என்கையாலே எல்லாம் அவன் சொல்லேயாய் விட்டது –என் உள்ளம் கவர்ந்தான் -என்கையாலே சித்த அபஹாரம் பண்ணின படியைச் சொன்னார் –கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்கையாலே த்ருஷ்ட்ய அபஹாரம் பண்ணின படியைச் சொல்லுகிறார்-பலம் -சதா பஸ்யந்தி -யாகையாகில் அது இங்கே சித்திக்கையாலே பலத்துக்கு பலம் வேணுமோ என்று சொல்லிற்று இலர்-இந்தக் கண்கள் புறம்பே சிலவற்றை காண வேண்டுவது இங்கே சில குறை வுண்டாகில் அன்றோ
1-இவர் பக்கல் ஔதார்யம் இல்லை என்று போகவோ –
2-வடிவில் பசை இல்லை என்று போகவோ –
3-சௌசீல்யம் இல்லை என்று போகவோ –
4-நெஞ்சுக்கு பிடித்து இருந்தது இல்லை என்று போகவோ –
5-மேன்மை இல்லை என்று போகவோ –
6-சௌலப்யம் இல்லை என்று போகவோ –
7-போக்யதை இல்லை என்று போகவோ –
8-அனுபவத்தில் குறை உண்டு என்று போகவோ
பெரிய பெருமாள் திரு மேனியிலே திருமலை முதலாக் கோயில் கொண்ட அர்ச்சாவதாரங்களிலும் ராம க்ருஷ்ண வாமன வட பத்ர சயநாதிகளிலும் உள்ள போக்யதை எல்லாம் சேர அநுபவித்து இவ்வாபி ரூப்யத்திலே ஈடுபட்ட என் கண்கள் மற்றும் பர வியூஹ விபவாதிகளான திருமேனிகளை எல்லாம் சேரக் காட்டினாலும் ஸ்தநந்தயத்துக்கு போக்யாந்தரங்கள் ருசியாதாப் போலே -பாவோ நாந்யாத்ர கச்சதி -என்கிறபடியே அவை ஒன்றும் ருசியாது என்கிறார் ஆகவுமாம் இது இவருடைய அநந்ய பிரயோஜனத்வ காஷ்டை யிருக்கிறபடி-
————-
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி – நாலாயி:938/3-
வேண்டா என்கிறேன் அன்று-வ்யுத்பத்தி இல்லாமை-பாவோ நான்யத்ர கச்சதி -அன்யத்ர என்றால் போலே மற்று அறியேன் என்கிறார்-விட்ட விஷயத்தின் பேர் சொல்லாமைக்கு-ஆழ்வாரை ஒழிய வேறு ஒரு ஆஸ்ரயணீய வஸ்து உண்டு என்று அறியேன் –சாஸ்திர வாசனையாலே யாதல் –ஆச்சார்ய உபதேசத்தால் ஆதல் -சொல்லுகிறார் அல்லர் –
உபகாரகரான ஆழ்வார் திருவடிகளில் பாவ பந்தத்தாலே சொல்லுகிறார் –
மெய்ம்மையே என்ற இடம் அன்வயத்தாலே சொன்னார் -தேவு மற்று அறியேன் -என்கிற இடம் வ்யதிரே கத்தாலே சொல்லுகிறார்-மற்று அறியேன் என்கிறது எத்தை என்னில் -கீழ் விட்டவற்றை எல்லாம் என்கிறார்-ஐஸ்வர்யம் என்ன -ஆத்மலாபம் என்ன -அவற்றை விட்டு பகவல் லாபத்தளவிலும் நில்லாதே அதின் எல்லையான ஆழ்வார் அளவும் போந்தவர் ஆகையாலே அவற்றை எல்லாம் நினைக்கிறார் –சாஸ்திரம் காட்டித் தந்தது அன்றோ தெய்வம் ஆவது -அது தானே ஆச்சார்ய தேவோ பவ என்று விதித்ததே-தேவதா வ்யுத்பத்தி யுள்ள விடத்தே யன்றோ தேவதா பிரதிபத்தி உள்ளது-ஆகையாலே நான் தேவதையாக வ்யுத்பத்தி பண்ணிற்று ஆழ்வாருக்கு மேற்பட இல்லை-
—————
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே – -1-3-10–நாலாயி:977/4-
ஸ்ரீ பரம பதம் அல்லது அவர்க்கு ஆட்சி அறியோம் என்னுதல்
அன்றிக்கே-நீள் விசும்பு என்கிறது ஸ்ரீ பரம பதமாய்-அது அல்லால் மற்று ஓர் அண்டம் அவர்க்கு ஆட்சியாக அறியோம் என்னுதல் –
———
பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள் தன் பெரு முலை சுவைத்திட பெற்ற – நாலாயி:–1-4-5–982/1
யசோதை பிராட்டி உடைய வடிவைக் கொண்டு-வந்த பூதனை உடைய மடியிலே இருந்து –
அதுக்கே மேலே அவளுடைய பெரிய முலையையும் உண்டிட(அஹங்காரம் மமகாராம் -காம க்ரோதங்கள் போலே)
———
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே – -1-10-8-நாலாயி:1045/4-
திருமலையை வாஸஸ் ஸ்தானமாக உடைய – நப்பின்னை பிராட்டிக்கு வல்லபன்
என்னும் இடத்துக்கு ஸூஸகம் இறே இது -இதர நிர பேஷனான அவன்-அநந்ய கதியாய் கொண்டு-என் பக்கலில் வந்து புகுர ஸா பேஷனான நான்-அவனை விட்டுப் போவேனோ –
————–
ஓதிலும் உன் பேர் அன்றி மற்று ஓதாள் உருகும் நின் திருவுரு நினைந்து – -2-7-5-நாலாயி:1112/1
முதல் தன்னில் வார்த்தை சொல்லாதே இருக்கும் போதே –பெரியது சொன்னாலோ-ஐயர் ஆய்ச்சி என்னத்தை தவிர்ந்தாள்-
—————–
தேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால் சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில் – 2-8-8-நாலாயி:1125/2-
முந்நீர் மடந்தை என்று-பெரிய பிராட்டியார் ஆகவுமாம்–ஸ்ரீ பூமி பிராட்டியார் ஆகவுமாம் –
(முந்நீரில் பிறந்த மடந்தை -முந்நீர் சூழ்ந்த மடந்தை )-ஸ்ரீ பூமி பிராட்டியார் ஆன போது அவ்விடத்தில் அதிருகிற சங்கம் என்றது ஆகிறது – பெரிய பிராட்டியார் ஆனபோது அவர் இருக்கிற விடத்துக்கு மற்றை இடத்திலே அதிருகிற சங்கம்-ஓர் இடத்தில் நின்றால்
மற்றை இடத்தை இப்பால் என்னக் கடவது இறே –இவருடைய நிறத்தை பார்க்கில்
காவி போலேயும் கடல் போலேயும் இரா நின்றார் –
———-
அஞ்சுவன் மற்று இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1126/4
இவர் சொல்லுகிற வார்த்தை தான் பொல்லாது அல்ல இறே-ஆகிலும் அவரையும் நம்மையும் பார்த்தவாறே அஞ்சா நின்றேன்-அப் பெரியவனுக்கு இவ்வாற்றாமை
உண்டாகக் கூடுமோ என்று அஞ்சா நின்றேன்
————
மற்று எல்லாம் கைதொழ போய் வயல் ஆலி புகுவர்-கொலோ -3-7-8– நாலாயி:1215/4-
தாயான குற்றத்தாலே எனக்கு ஒருத்திக்கும் இறே தொழ ஒண்ணாதது
அல்லாதார்க்கு எல்லாம் தொழுது பின்னே போகலாம் இறே-(எல்லாம் பந்தும் பூவையும் கூட தொழும் படி)தன்னை காண்பார்க்கு காட்சிக்கு கொடுக்க இடம் உள்ள தேசத்தில் புகுமோ
அங்கன் அன்றிக்கே எல்லா போகங்களும் உண்டாம் படியான தேசம் என்னவுமாம்-
உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும் உடனே சுவைத்தான் இடம் ஓங்கு பைம் தாள் – 3-8-6–நாலாயி:1223/2
விஷம் ஆகையாலே வேறு சிலர் உண்டார் இல்லை இறே –அப்படிப் பட்ட முலை –விஷத்தை வாங்குகை அன்றிக்கே அது ஆஸ்ரயமான பிராணனையும் கூட ஒரு காலே அமுது செய்தவன் வர்த்திக்கிற தேசம் –
———
வான் நாடும் மண் நாடும் மற்று உள்ள பல் உயிரும் –4-1-3-– நாலாயி:1250/1-
பரம பதமும் சம்சாரமும்-அவ்வவ தேசங்களே அன்றிக்கே அவற்றில் உண்டான பல ஆத்மாக்களுக்கும் தான் என்ற சொல்லுக்கு உள்ளே தனக்கு பிரகாரமாய் அடங்கும்படி இருக்கிற சர்வேஸ்வரன்-தானும் குடும்பமுமாய் கல நெல் ஜீவிப்பான் ஒருவனை
உனக்கு என்ன வேணும் என்றால் – எனக்கு கல நெல் வேணும் -என்னும் இறே
தன் அபிமானத்துக்கு உள்ளே அடங்குகையாலே அப்படியே தானே அதுக்கு எல்லாம் அபிமானியாய் இருக்கிற சர்வேஸ்வரன்
————-
வாளை ஆர் தடம் கண் உமை பங்கன் வன் சாபம் மற்று அது நீங்க – -4-2-8-நாலாயி:1265/1
மிக்க ஒளியை உடைத்தாய்-பரந்து இருந்துள்ள கண்களை உடைய தேவிக்கு தன் உடம்பில்
ஒரு பார்ஸ்வத்தைக் கொடுத்துக் கொண்டு இருக்கிற தேவன் உடைய வலிய சாபம் நீங்க-லோக குருவுமாய்-பிதாவுமாய் இருக்கிற வனுடைய தலையை ஒரு ஹேது இன்றிக்கே இருக்க அறுக்கையாலே ஒன்றால் பரிகரிக்க அரிதாம் படியான பாதகமானது அவனை விட்டுப் போம் படியாக ரக்த ஸ்பர்சம் ஒன்றும் இன்றிக்கே
வெறும் அஸ்தியேயாய் இருக்கிற தலை ஓட்டிலே -மூளை ஆர் எலும்பானது பூரணமாய் இருக்கும் படியாக – பிஷையை முன்பு அருளின மகா உதாரனானவன் வர்த்திக்கிற தேசம்
————-
மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்று அவர் தம் காதலிமார் குழையும் – 4-4-1–நாலாயி:1278/1
த்விஷத் அன்னம் ந போக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜயேத்-என்று
பாண்டவர்களுக்கு சத்ருக்களான துர்யோ நாதிகளை நீங்கள் என் சத்ருக்கள்
உங்கள் சோறும் எனக்கு உண்ணல் ஆகாது-உங்களுக்கு என்னை புஜிப்பிக்கலும் ஆகாது -என்று அருளிச் செய்த படி-தனக்கு மாற்றாரான துர்யோ நாதிகள் உடைய
ரத்னங்களாலே சமைக்கப் பட்ட முடியும் மிடுக்கும் திக் விஜயம் பண்ணிப் பெற்ற மதிப்பும்-சந்தமல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப- என்னும்படி
அவர்கள் ஸ்திரீகள் உடைய மங்கள ஸூத்ரமும்-
———–
தையல் நல்லார் குழல் மாலையும் மற்று அவர் தட முலை -5-4-2– நாலாயி:1379/3
குழலிலே பூக்களை வைத்து முலையை குங்குமத்தால் அலங்கரித்து இருந்துள்ளவர்கள் படுக்கையை விட்டு ப்ரஹ்ம முகூர்த்தத்தில் ஸ்நாநார்த்தமாக இழிவார்கள்-குழலிலே மாலையும் குங்குமுமாய்க் கலங்கி ஓடா நிற்கும் யாய்த்து –நல்லார் -என்கையாலே வெள்வரைப் பதன் முன்னம் துறை படிந்து -என்கிறபடியே சாத்விக காலத்திலே துறை படிந்தமை நன்மை –
————–
ஆயிரம் துணிய அடல் மழு பற்றி மற்று அவன் அகல் விசும்பு அணைய -5-7-6– நாலாயி:1413/2-
திரண்டு இருந்துள்ள தோள்கள் ஆயிரமும் துணியும்படியாக யுத்தத்திலே கையிலே மழுவைத் தரித்து மற்று அவன் உண்டு -சஹஸ்ர பாஹ் வர்ஜுனன் – ஸ்வ ஹஸ்த வதத்தாலே வீர ஸ்வர்க்கத்தை பிராபிக்க –
———-
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து – 5-8-1-நாலாயி:1418/1
மற்று அவர்க்கு –-அவனுக்கு அதுக்கு மேலே –இன்னருள் சுரந்து – இவ் விஷயீ காரத்துக்கு மேலே இனிய அருளைச் சுரந்து இன்னருள் – தன் பேறான அருள்-சுரந்து – வத்ச சகாசத்தில் தேனு வானது ஷீரத்தை சுரக்குமா போலே குணங்களைச் சுரந்து –
—————
வாத மா மகன் மர்க்கடம் விலங்கு மற்று ஓர் சாதி என்று ஒழிந்திலை உகந்து – 5-8-2-நாலாயி:1419/1-
வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி –மற்றோர் சாதி-விலங்கு-மற்கடம்-வாத மா மகன்-மற்றோர் சாதி– விஷயீ காரத்துக்கு நிகர்ஷத்தை முன்னிடுகிறவோ பாதி
கைங்கர்யத்துக்கும் நிகர்ஷத்தை முன்னிட வேணும் இறே – விசஜாதியர் நிகர்ஷம் சொல்லும் போதும் -மற்றோர் சாதி -என்ன அமையும் இறே-நிகர்ஷம் முன்னிட்டு
ஏழை ஏதலன் கீழ் மகன் உத்தர உத்தர நிகர்ஷ ஆதிக்யம் வேண்டுமோ என்னில்
அதே போல் இங்கும் வாத மா மகன் அகங்கார ஹேது எனவே இறுதியில்-
———
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற மற்று அது நின் சரண் நினைப்ப – நாலாயி:1420/2
மற்றது –பின்னை அந்த ஆனை யானது-கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹா ஆகர்ஷதே ஜலே -என்கிறபடியே-அநேக காலம் முதலை நீருக்கு இழுக்க-ஆனை கரைக்கு இழுக்க நோவு பட்டு மிடுக்கு அற்றது அஹங்காரம் இறே பல ஹானிக்கு அடி – அத்தைப் பொகட்டு ஈஸ்வரனைப் பற்றினவாறே பலவானாம் இறே – (பலம் அற்றுப் போய் திருவடி பற்றுகிறோம் என்று தவறாக நினைக்கிறோம் வில்லை கீழே போட்டதும் ராவணன் வீரன் -வெறும் கை வீரன்
அஞ்சலி பரமாம் முத்ரா )-
———
ஏதலார் முன்னே இன் அருள் அவற்கு செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் – 5-8-8-நாலாயி:1425/3
உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் –-உன் மக்கள் இவர்களே -என்று தேறும்படியாக அவயவப்படியே கொடு வந்து கொடுத்தாய் –
—————
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு அடியேன் அறிந்து உலகம் – 5-8-9-நாலாயி:1426/3
வளம் கொள் மந்திரம்-அழகாதல் –சஞ்சாரித்வமாதல் –வளம் ஆகிறது சகல பல பிரதனான ஈஸ்வரனைப் போலே எல்லார் பக்கலிலும் சஞ்சரிக்கை-கர்மாதிகளுக்கு உபகாரகமாய்
பிரபன்னனுக்கு ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கி அக்கரைப் படுத்தும் இறே-மற்று அவர்க்கு அருளிச் செய்தவாறு –அவனுக்கு திரு மந்த்ரத்தை உபதேசித்து ததீய சேஷத்வத்தை உண்டாக்கின படி குறும்பறுத்த நம்பி யோடு சேர்த்து விட்ட படியைச் சொல்லுகிறது (பணிப்பூவும் -முடி மன்னவன் -அனுவர்த்தித்தானே -நாயனார் )பதி வ்ரதையோடு உண்டான ஏகாந்தத்தில் அனுபவத்தை திரளிலே வெளியிடுவாரைப் போலே
தானும் நானும் அறிய அனுபவித்த இத்தை இங்கன் வெளியிடுவதே திருவேங்கடமுடையான் அலவலை யாகாதே என்கிறார் இறே –(அலவலை–பஹு ஜல்பம் ஓட்டை வாய் உளறுவது )
———-
மற்று ஓர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்து –6-3-5– நாலாயி:1472/1
மநோ ரத சமயத்திலும் வேறு ஒரு ஆஸ்ரயணீய வஸ்து உண்டாக நினையேன்-சர்வாதினகாய் இருக்கிற் உன்னை விலக்காமை மாத்ரத்தாலே என்னுடைய ஹிருதயத்திலே வைத்து ஓர் அலாப்ய லாபம் பெற்றேன் –
————
உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்று ஓர் – 6-3-6–நாலாயி:1473/3
நெஞ்சாலே அசந்நேவ-என்கிறபடியே அசத் கல்பனாய் உரு மாய்ந்து போன நான்
இப்போது உஜ்ஜீவிக்கும் படி தேவரை அனுவர்த்தித்தேன் –
இவ் வாத்மாவுக்கு நீயே சேஷி உன்னைக் குறித்து இவ்வாத்ம வஸ்து அத்யந்த சேஷம் -என்கிற முறையாலே –தத்வம் இருந்தபடி அல்லது பிரதிபத்தி பண்ணக் கடவது அல்லாத
படியான பின்பு வேறு சிலரை ஆஸ்ரயணீயனாக நினைத்து இரேன் –இப்படி திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதனான உன்னை ஒழிய பரதத்வமும் அறியேன் –
(பர ப்ரஹ்மம் பர தத்வம் பர தேஜஸ் பர ஆத்மா அனைத்தும் நாராயணனே )
————-
கூறேன் நெஞ்சு-தன்னால் குணம் கொண்டு மற்று ஓர் தெய்வம் – 6-3-7–நாலாயி:1474/3
நான் ஒரு அநந்ய கதி -என்கிறார் இதர தேவதைகளை வாயாலே பேசேன் –
அவ்வளவே அன்றிக்கே நெஞ்சால் அவற்றுக்கு ஒரு ஆதிக்யம் உண்டாக நினையேன்
ஆபாத ப்ரதீதியிலே அவற்றுக்கு ஒரு உத்கர்ஷம் உண்டாய்த் தோற்றிற்று ஆகிலும் அத்தை விஸ்வசியேன் –சர்வாதிகனாய் இருக்கிற நீ திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதன் ஆனாய்-நீயே ஆஸ்ரயணீயன் என்று அறிவித்த பின்பு இனி உனக்கு விபூதி பூதரானார் பக்கல் பரத்வ பிரதிபத்தி பண்ணேன் –
————-
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்று ஓர் நெஞ்சு அறியான் அடியேனுடை – –7-3-3–நாலாயி:1570/1
பிரதம ஸ்வீகாரத்துக்கு முன்பு தாம் இட்டது ஒரு பச்சை உண்டாய் அதுக்கு உபகரித்தான் ஆகில் இறே இந்நாள் என்னல் ஆவது – அங்கன் ஓன்று இல்லாமையாலே பிரதம ஸ்வீகாரத்தை -வந்த நாள் -என்னும் இத்தனை யாய்த்து சொல்லல் ஆவது –ஆவா சந்த்வஹ மிச்சாமி -என்கிறபடியே என்னுடைய ஹிருதயத்தை தனக்கு இடமாக்கிக் கொண்டான் –
(நீர் காட்டும் இடத்தில் குடிசை கட்டி வாழ பெருமாள் ரிஷிகள் இடம் பிரார்த்தித்து போல் )திருவடி -திரு வநந்த வாழ்வான் தொடக்க மானவர் பக்கலிலும் போவானாய் இருக்கிறிலன்-
அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து -பெரியாழ்வார் -5-4-8–என்றும்
இட வகைகள் இகழ்ந்திட்டு -பெரியாழ்வார் –5-4-10–என்றும்
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் என்று ஒழிந்தன கொல்-என்றும்
சொல்லுகிறபடியே இவர் உடைய திரு உள்ளம் ஒழிய வேறு ஓர் இடம் உண்டாக நினைத்து இருக்கிறிலன் –பின்னை அவ்வோ இடங்களிலே இவன் இல்லையோ என்னில்
சௌபரி பல வடிவு கொண்டு அனுபவித்தால் போலே
இதுக்கு அவ்வருகு இல்லை என்னலாம் படி அவன் முகம் கொடுத்துக் கொண்டு இருந்த படி –
(இளம் கோயில் கை விடேல் என்று இவர்கள் பிரார்த்திக்கும்படி )
————–
அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – –7-7-2-நாலாயி:1609/4
வேதங்களாலே சொல்லப்படுகிற ஆதிக்யத்தை யுடைய சர்வாதிகனே –வேறேயும் சில ரஷகரும் யுண்டாய் -அவர்கள் ரஷிக்கிறார்கள் என்று – உனக்கு ஆறி இருக்க ஒண்ணாது கிடாய் – அநந்ய கதியான நான் உன் திருவடிகளை ஒழிய வேறு ஒரு புகலை யுடையேன் அல்லேன் –அநந்ய கதிகளை நோக்குகைக்கு அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –
————–
ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – 7-7-3-நாலாயி:1610/4-
நிருபாதிக பந்துவே உன் திருவடிகளை ஒழிய வேறு ஒரு புகல் யுடையேன் அல்லேன் –அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே – நிருபாதிக பந்தம் தோற்ற வந்து நிற்கிறவனே-
———–
வரனே மாதவனே மதுசூதா மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண் – 7-7-4–நாலாயி:1611/2
தன்னை அழிய மாறியும் அடைந்தாரை நோக்கும் துணை உன்னை ஒழிய
வேறு ஒருவரை யுடையேன் அல்லேன் –
————-
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – 7-7-5–நாலாயி:1612/4-
அண்டத்துக்கு நிர்வாஹகனானவனே-அன்றிக்கே இடையருக்கு நிர்வாஹகனானவனே என்றுமாம் –ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கும் இடையருக்கும் பசுக்களுக்கும் உதவியது போல்
பிற்பாடாருக்கும் உதவவே இங்கு வந்து நிற்கிறது —
————
ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – –7-7-6–நாலாயி:1613/4-
கலௌ கிருதயுகம் தஸ்ய -என்ன ஒண்ணாதோ யுனக்கு –காலம் நீ இட்ட வழக்கு அன்றோ –
உன் திருவடிகளை ஒழிய வேறு ஒன்றை அறியேன் (யார் உள்ளத்தில் கோவிந்தன் உள்ளானோ அவனுக்கு கலி யுகத்தில் க்ருத யுகம் வந்தது போல் இல்லை என்றால் கிருதயுகத்தில் கலி யுகம் போலவே )அந்த கிருஷ்ணாவதாரத்தில் பிற்பட்டாருக்கும் இழவாமைக்கு அன்றோ நீ இங்கே வந்து நிற்கிறது –
——————
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால் – 8-1-1-நாலாயி:1648/2
மற்று அவனுக்கு ஆபரணம் – ஆபரணத்துக்கு ஆபரணமாய் இருப்பன-தோள் நாலும் என்னா நின்றாள் –திவ்ய ஆயுதங்களை அனுசந்தித்த இது அவ்வாயுதங்களின் வழியே -அவற்றைத் தரித்து இருக்கும் திருத் தோள்கள் அளவும் கொண்டு போய் மூட்டிற்று –
(சம்ஸ்லேஷத்துக்கு முன்னால் ஆயுதமாக தோற்றும் பின்பு ஆபரணமாகவே தோற்றும் முன்பே பார்த்தோம் )புறம்பு ஓர் இடத்திலும் போக வேண்டாத படி இறே விஷயம் தான் இருப்பது – சர்வ பூஷண பூஷார்ஹா -என்று ஆபரணங்களுக்கும் ஆபரணமாகைக்கு அர்ஹமாய் இறே தோள் தான் இருப்பது-ஆயுதங்களை ஆபரணமாக சொல்லிற்று இறே
ஆயுதங்கள் அபாஸ்ரயமுமாய் ஆகர்ஷகமுமாய் இருக்குமா போலே தோள்களும் அபாஸ்ரயமுமாய் ஆகர்ஷகமுமாய் இருக்கிற படி – (எடுத்த பிரமாணம் பூஷணங்களுக்கே ஆயுதங்களுக்கு இல்லையே என்று சங்கை வர இவள் இவற்றை ஆயுதமாகவே பார்க்க வில்லையே )மற்று -எனபது -துல்ய விகல்பங்களை இறே – (துல்ய -ஒரே பெருமை உள்ளவை -விவஸ்திதம் -சமம் இல்லாதவை -இப்படி இரண்டு விகல்பங்கள் )
கீழே திவ்ய ஆபரணங்களைச் சொல்லி -இங்கே -மற்று -என்கையாலே –
தோள்களும் ஆபரணமாக இருக்க வேணும் இறே –
திவ்ய ஆத்மா குணங்களிலும்
திவ்ய ஆத்மா ஸ்வரூபத்தில் காட்டிலும் அனுபாவ்யமாய் இருப்பது திவ்ய விக்ரஹம் இறே
ஸூபாஸ்ரய ப்ரகரணங்களில் த்யேயமாக சொல்லுகிறதும் அது தன்னையே இறே –
(தோள் நான்கே -ஏவகாரத்துக்கு இங்கு விளக்கம் -த்யேயம் ஸ்ரீ பதி ரூபமே -)தந்தாமுடைய தபஸ்ஸாலே ஷீண பாபரான ருஷிகளைப் போலே அன்றிக்கே
பகவத் பிரசாதம் அடியாக ஜ்ஞானம் பிறந்த ஆழ்வார்கள்
திவ்ய விக்ரஹம் அல்லது அறியார்கள் இறே –
————
பொரு வரை முன் போர் தொலைத்த பொன் ஆழி மற்று ஒரு கை என்கின்றாளால் – –8-1-2-நாலாயி:1649/2-
இக் கைக்கு வில்லானால் மற்றக் கை ஒழிந்து இருந்தது -என்று நான் ஆறி இருக்கிறேனோ – பிரணயிநி களுடைய விரோதியைப் போக்கி நோக்குமதுவே யாய்த்தான் ஆறி இருக்கிறேனோ – நாட்டுக்காக வந்த நலிவை போக்கினதுவும் இல்லையோ எனக்கு -என்கிறாள் – சிறகு எழுந்து பொருது கொடு திரிகிற மலைகளை பண்டு யுத்தத்திலே முடித்த அழகிய திருவாழி யன்றோ மற்றைக் கையிலே எடுத்திருக்கிறது –இந்தரனுக்கு தம்பியாய் உபேந்திர மூர்த்தியாய் வளர்ந்து அருளுகிற காலத்திலே அவற்றின்-பர்வதங்களின்- பஷங்களை திருவாழி இட்டு சேதித்தனாகச் சொல்லக் கடவது இறே –
———–
ஆயன் மாயமே அன்றி மற்று என் கையில் வளைகளும் இறை நில்லா – —8-5-3–நாலாயி:1690/1-
கிருஷ்ணன் பிரிகிற போது -பிரியேன் -பிரியில் ஆற்றேன் -என்று பிரிந்து போனான் –
அங்கன் இன்றிக்கே இவை சடக்கென பிரிந்து கொடு நின்றது – (ஆயன் மாயத்துக்கும் மேல் அன்றோ இவற்றின் மாயம் )அனு ராகேண சைதில்யம் உபயாந்த்யா ஸூ கரேஷூ வலயான்யபி ஆஸூ–(ஸ்ரீ விஷ்ணு புராணம் 5-18)-என்னுமா போலே ஆஸூ சைதில்யம் உபயாந்தி –கடுகப் பிரிந்து கொடு நிற்கக் கண்ட இத்தனை –கைப் பட்டார் அடைய விட்டுப் போகிற காலம் ஆகாதே –(கைப் பட்டார்-வளையல்களும் உற்றாரும் )
——–
வரு தேவர் மற்று உளர் என்று என் மனத்து இறையும் கருதேன் நான் கண்ண புரத்துறை யம்மானே – –—8-10-2– நாலாயி:1739/3-
பிரளயம் வந்த போதாக உன் வயிற்றிலே போய்ப் புக்கு நீ வெளிநாடு காணப் புறப்பட விட்டவாறே நான் ஆஸ்ரயணீயன் என்று வருவதொரு தேவதை உண்டாக நான் அறியேன் –
(அகில காரணம்-அத்புத காரணம் -நிஷ் காரணம் -என்றதும் கஜேந்திர ஆழ்வானை ரக்ஷிக்க வந்தவர் உங்கள் தேவனோ )பிரளய ஆபத்தை பரிஹரித்து இன்று ஆஸ்ரயணீயன் என்னும் இடம் தோற்ற நீ வந்து சந்நிஹிதனாக நான் எங்கனே வேறு சிலரை ஆஸ்ரயணீயன் என்று இருக்கும் படி – சம்சார பிரளயத்தை பரிஹரிக்கைகாக இறே நீ இங்கே வந்து நிற்கிறது –
—————
மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே — 8-10-3–நாலாயி:1740/3-
தேவதாந்தர ஸ்பர்சம் உடையாரோடு எனக்கு ஒரு சம்பந்தமும் இல்லை –அவர்களை விட்டு உன் அளவில் நின்றவனும் அல்லேன் –நீ சொன்ன முதல் வார்த்தைக்கு அர்த்தமாக
நான் நினைத்து இருப்பது இது -என்கிறார் –(நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் தானே முதல் வார்த்தை-திரு மந்த்ரம் என்றது ஆயிற்று )அது அநேக அர்த்தங்களைச் சொல்லிற்றே யாகிலும் அதில் எங்குமாக நான் அறுதி இட்டு இருக்கும் அர்த்தம் அனந்யார்ஹ சேஷத்வம் – அது தான் ததீய சேஷத்வ பர்யந்தமாய் அல்லது இராது –ததீய சேஷத்வ பர்யந்தமாகப் போனால் தான் பகவத் அநந்யார்ஹத்வம் சித்திக்கும் –
அவன் திரு உள்ளம் உகக்கும் படி நடக்க வேண்டுமே –அவன் திரு உள்ளம் உகப்பே பிரயோஜனம்-
—————–
மற்று ஆரும் பற்று இலேன் ஆதலால் நின் அடைந்தேன் – -8-10-5-நாலாயி:1742/2-
நான் வேறு சிலரை பந்துக்கள் என்று நினைத்து இருப்பது இல்லை –ஐயோ இவனுக்கு புறம்பு ஒருவரும் இல்லை -என்பாரையும் உடையேன் அல்லேன் – புறம்பு ஒருவரும் இல்லை யாகில் நீர் உண்டே என்ன நானும் எனக்கு கழுத்துக் கட்டி – (கழுத்தில் கல்லைக் கட்டி குளத்தில் விழுவது போல் அன்றோ நானே எனக்கு உதவுவது )ஆதலால் நின் அடைந்தேன்-நிராலம்பநாய் விழுமவனுக்கு ஒரு தரையிலே விழ வேணுமே- சதம் நிபதிதம் பூமௌ -( காகாஸூரன் விழுந்தால் போல் )
————-
என் கொங்கை மூத்திடுகின்றன மற்று அவன் தன் மொய் அகலம் அணையாது வாளா – –9-5-9–நாலாயி:1796/3-
அவனும் வந்து அணையவும் பெற்றாலும் கழிந்த பருவத்தை மீட்க ஒண்ணாதே
காணக் காண செவ்வி அழியா நின்றது ஆயிற்று –நமே துக்கம் பிரியா தூரே –வயோஸ் யாஹ்யாத் அதி வர்த்ததே -என்னுமா போலே அவனுடைய ஸ்ப்ருஹநீயமான மார்வோடே அணையப் பெறாதே வ்யர்த்தமே இருந்து செவ்வி அழியா நின்றது ஆயிற்று –
முன்னிருந்து மூக்கின்று (பெரிய திருமடல் )-என்னக் கடவது இறே –
கண்ணுக்கு இலக்காய் இருந்து காணக் காண செவ்வி அழியா நின்றது ஆயிற்று –
—————
சிலையால் இலங்கை செற்றான் மற்று ஓர் சின வேழம் கொலையார் கொம்பு கொண்டான் – —9-6-10-நாலாயி:1807/1
அங்கன் ஓர் ஆயுதமும் இன்றிக்கே வெறும் கை உடனே போய் மிக்க சினத்தை உடைத்தாய் –கொன்று கொடு திரிகிற குவலயா பீடத்தின் உடைய கொம்பை அனாயாசேன முறித்து –
அவ்விரண்டு அவதாரத்திலும் பிற்பட்டாருக்கு இழக்க வேண்டாத படி நித்ய வாஸம் பண்ணுகிற திருக் குறுங்குடி-
———-
காவலன் இலங்கைக்கு இறை கலங்க சரம் செல உய்த்து மற்று அவன் ஏவலம் தவிர்த்தான் – —9-10-6–நாலாயி:1843/1-
ஈஸ்வரனோடு ஒக்க நானும் காவலன் என்று திக் பாலர்களைத் தவிர்த்து ஜகத்துக்கு ரஷகன் தானேயாய் இலங்கைக்கு நிர்வாஹகன் மலங்கும்படி சரங்களை செல்ல நடத்தி –ராவணன் உடைய -எய்ய வல்லார் என்னோரோடு ஒப்பார் இல்லை என்னும் மிடுக்கை தவிர்த்து
அச் செயலாலே என்னை அடிமை கொண்டிருக்கும் உபகாரகன் ஆனவன் –
—————-
மாலை நறும் குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை -10-7-2– நாலாயி:1909/2-
ரஷகத்துவத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவனை ஒழிய செய்ததுக்கு நிவாரகர் இல்லாதவனை ஒழிய(நிரங்குச ஸ்வ தந்த்ரன் அன்றோ ) இது செய்யக் கடவார் இல்லை –
—————
மற்று பல மா மணி பொன் கொடு அணிந்து – —10-8-5–நாலாயி:1926/2
சுற்றும் குழல் தாழ-மயிர் முடித்து அதில் ஈடுபடாமையாலே குழலைப் பேணாதே வந்தான் ஆயிற்று –சுரிகை அணைத்து-உகப்பாருக்கும் உகவாதாருக்கும் கருவி ஒன்றாயிற்று –
சத்ருக்களை இரு துண்டமாக விட்டு முடிக்கும் அனுகூலரை அழகாலே கொல்லும்-
(திவ்ய ஆயுதங்கள் திவ்ய ஆபரணங்களாக இருக்குமே அனுகூலருக்கு )ஆபரண கோடியோடு ஒக்க சொல்லுகையாலே அதுவும் அழகுக்கு உடலாம் இத்தனை –
பெரு விலையனான ரத்னங்களை உடைத்தான திரு வாபரணங்களைச் சாத்தி –
———–
தலை இட மற்று எமக்கு ஓர் சரண் இல்லை என்ன அரண் ஆவன் என்னும் அருளால் – –11-4-1-நாலாயி:1982/2(தலை இடம் அற்று என்றுமாம் –)
மேலாய் இருப்பதொரு இருப்பிடம் அற்று எங்களுக்கு ரஷகர் இல்லை யென்ன –நான் உளனாய் இருக்க நீங்கள் அஞ்ச வேணுமோ – நான் ரஷகனாய் இருக்கிறேன் – என்னும் படியான கிருபையாலே –
———–
துணைநிலை மற்று எமக்கு ஓர் உளது என்று இராது தொழுமின்கள் தொண்டர் தொலைய – 11-4-9-நாலாயி:1990/1
நமக்கு வேறே ஒரு துணை உண்டு என்று இராதே தொழும் கோள் –பகவத் விஷயத்தில் ருசி உடையீர் –
———–
போய் இருக்க மற்று இங்கு ஓர் புது தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற – —11-6-6-நாலாயி:2007/3
நாம் கொடுத்த கரணங்களைக் கொண்டு நம்மைப் பற்றப் பாராதே புறம்பே போயிற்றன-என்று வெறுத்து போய் இருக்க – அங்கே புதுசாக இருக்கிற தேவதைகளை கொண்டாடுகிற தொண்டீர் – (தன்னை வணங்க வைத்த கரணம் இவை -இராமானுஜர் காட்டிக் கொடுக்க )அசேதனமாய் இருப்பது ஒன்றை வெந்நீர் ஆட்டுதிரோ – செய்ய மாட்டாத கிருபை அற்றீரே –
——————
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து என் – திரு நெடும் தாண்டகம்–24–நாலாயி:2075/3-
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி -என்று இறே மேன்மைக்கு எல்லை –
வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு -என்ற பெரியாழ்வாரைப் போலே காணும் இவர்களும் மங்களா சாசனம் பண்ணுகிறபடி –என் கையைப் பிடித்த கையும் என் காலைப் பிடித்த கையும்
——–
வண்ணத்தான் மார்பு இடந்த மால் அடியை அல்லால் மற்று
எண்ணத்தான் ஆமோ இமை –முதல் திருவந்தாதி-பாசுரம் -31 – நாலாயி:2112/3,4
சிறுக்கன் உடைய விரோதியைப் போக்கி அவன் பக்கல் வ்யாமுக்தனாய் இருந்துள்ள வனுடைய திருவடிகளை ஒழிய ஷண காலம் வேறு ஒன்றை என்னலாமோ -தமப்பன் பகையாக சிறுக்கனுக்கு உதவின குணம் புறம்பு ஒன்றை எண்ண ஒட்டுமோ-
——–
தமர் உகந்தது எ பேர் மற்று அ பேர் தமர் உகந்து —44 – நாலாயி:2125/2-
ரூபத்துக்கு மேலே மற்றும் திரு நாமங்களும் அவர்கள் உகந்ததாய் இருக்கும்-கஞ்சனூரிலே வண் துவரைப் பெருமாள் என்று ஒருத்தன் தன் நாயனாரை-சதங்கை யழகியார் -என்று திரு நாமம் சாத்தினான் – அந் நாயனார் ஸ்வபனத்திலே சதங்கையும் தானுமாய் அவன் முன்னே நின்றாடினார்-நாயனை -நீர் ஆர் -என்று கேட்க – நான் சதங்கை யழகியார் -என்றாராம்-எங்கள் ஆழ்வார் பாடே ஆயர்தேவு சென்று நாவற் பழம் வேண்ட -நீ யார் -என்ன
நான் ஜீயர் மகனான ஆயர் தேவு -என்ன ஜீயரைக் கண்டு உம்முடைய பிள்ளை குடி இருக்க வொட்டுகிறிலன் -என்றார் –
———-
பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது – —60–-நாலாயி:2141/3-
ரஷணத்துக்குப் பரிகரமான திரு வாழியைக் கையிலே உடையவனான உபகாரகனை யல்லது –கடல் சூழ்ந்த பூமியானது வேறு அறியாது சிறியாரோடு பெரியாரோடு வாசியறத் தம்தாமுடைய ரஷணம் தாம் தாம் அறியார்கள்-அவனே அறிந்து ரஷிக்கும் அத்தனை -என்றபடி
————–
ஆவான் தானே மற்று அல்லால் புன காயாம் – –89–நாலாயி:2170/2-
எனக்கு ஒப்பாக வல்லார் ஒருவர் உண்டோ-என் தான் ஈஸ்வரன் உமக்கு ஒப்பாக மாட்டானோ -என்னில் சர்வேஸ்வரன் தான் தனக்கு ஒப்பாம் இத்தனை போக்கி எனக்கு ஒப்பாக வல்லனோ –அதாகிறது-சேஷ பூதனாய் இப் பேறு பெற்றான் ஒருவன் அல்லனே
என்னைப் போலே ஒருவன் பிரசாதத்தால் வந்த ஏற்றம் உண்டோ அவனுக்கு-
———–
மற்று இவை ஆ என்று வாய் அங்காந்து முற்றும் –94– நாலாயி:2175/2-
தன் பக்கலிலே சேர்ந்து கிடக்கிறதான ஏழு உலகங்களையும் –மற்றிவையா வென்று வாய் அங்காந்து – அவையாகிறன இவை தான் என்று வாயை அங்காந்து காட்டினான் ஆய்த்து
தத பஸ்ய மஹம் சர்வம் தஸ்ய குஷு மகாத்மான -பார ஆரண்ய காண்டம் -191-123 -என்னும்படியே-அன்றிக்கே -வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை -திருவாய்மொழி -8-7-9-என்னக் கடவது இறே-
————-
தானத்தால் மற்று அவன் பேர் சாற்றினால் வானத்து –2- நாலாயி:2183/2-
அசாதாராணமான நாராயணாதி நாமங்களை – விபூதி யோகத்தைப் பற்றின நாமங்களை –பக்தியாலே உணர்ந்த படியே சொன்னால் –பிரமன் ருத்ரன் இந்திரன் வாயு ஆகாசம் போன்றவை அவனுடைய விபூதிகளைக் காட்டி -சரீரீ யான அவன் அளவும் பர்யவசிக்குமே-அத்யந்த பக்தி யுக்தஸ்ய ந ஸாஸ்த்ரம் நைவ ச க்ரம -என்றபடி முறை கெடக் கூப்பிட்டால்
அல்லது அறிந்த அளவு சொல்லுதல்-தானம் – ஸ்தானம் -பக்தி ஸ்தானம்-மற்று – இதைக் காட்டிலும் வேறான குண யோகத்தை காட்டும்-
————-
மாரி யார் பெய்கிற்பார் மற்று – 16--நாலாயி:2197/4-
காட்டில் திடரை கல்லிக் குளமாக்கும் அது ஒழிய வர்ஷத்தை இவனால் பெய்விக்கப் போமோ-இத்தால் ருசி மாத்ரம் இவன் தலையிலே உண்டாம் இத்தனை ஒழிய
ப்ராப்தி இவனால் உண்டாக்கிக் கொள்ளப் போமோ என்றது ஆயிற்று -(பெரிய திருமலை நம்பி நிர்வாஹம் இது -ருசி -குளம் வெட்டுவது -மழை பெய்வது ப்ராப்தி )அன்றிக்கே
ஏரியாம் வண்ணம் இயற்றுமது-மற்று வர்ஷிப்பிக்குமது இரண்டும் செய்யப் போமோ -என்னவுமாம்–ருசி உத்பாதகனும் தானே-கூரத்தாழ்வான் நிர்வாஹம்-பிராப்தியைப் பண்ணிக் கொடுப்பவனும் தானே என்னவுமாம்
———
மற்று ஆர் இயல் ஆவார் வானவர் கோன் மா மலரோன் – ––17--நாலாயி:2198/1-
மற்று ஆஸ்ரயணீயர் ஆவார் ஆர் –லோகத்தில் பிரதானனான இந்த்ரனோடு கூடின ப்ரஹ்மாதிகள் இறே அவர்களும் அவனை ஆஸ்ரயித்து இறே தம்தாமுடைய அபிமதங்கள் பெறுகிறது இந்த்ரன் ப்ரஹ்மா நேர் கொடு நேர் ஆஸ்ரயிகப் போகாதே பாடே பக்கே சென்று வணங்கும் ஆஸ்ரயண பிரகாரங்களை உடையனாவனை-
————–
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் —38–– நாலாயி:2219/3-
நமக்கு என்றும் அனுபாவ்யம் ஸ்ரீயபதி என்னும் நெஞ்சைப் படைத்தது அம் மிதுனத்துக்கு வாசகமான சப்தத்தை சொல்லுகை வாக் இந்த்ரியத்துக்கு ஒத்து ஆவது-ந பிபேதி குதஸ் சந -தைத்ரியம் -பரம புருஷனைப் பற்றி இருப்பவன் எத்தைக் கண்டும் பயப்பட மாட்டான்
சேதனர் அனைவர்க்கும் அறிந்த நிலையோடு அறியாத நிலையோடு வாசி இல்லாமல் நிரந்தரமான பற்றுக் கொம்பு தானே அவன் எல்லாக் காலத்திலும் அவனே தாரக போஷக போக்யம் -உபாயம் உபேயம் என்ற துணிந்த மனத்துடன் மாதவன் ஸ்ரீ தரன் போன்ற இம் மிதுனத்தின் பெயரைச் சொல்வதே நாவுக்கு ஓதத் தக்கது -புருஷார்த்தமாக அவளும் ப்ராப்யமாக அவனும் ப்ராபகமாக மிதுனமும்-
——–
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால் – —47--நாலாயி:2228/3-
சேதன அர்க்க அனுபாவ்யமான குணங்களை உடைய சேஷியை –மற்று நீங்கள் அனுசந்திக்கும் படி எல்லாத்தையும் உணர்ந்து காலை தொழுது எழுமின்-மற்று எல்லாம் இதி பாடாந்தரம்-
—————
மதி கண்டாய் மற்று அவன் பேர்-தன்னை மதி கண்டாய் ––51– நாலாயி:2232/2-
கண் வளருகைக்கு போரும்படி பெரிதான திருப் பாற் கடலிலே நின்றும் பேர்ந்து
பின்னை அத்தை கடைவதும் செய்து நீரை உடைத்தான கடல் போலே இருக்கிறவனுடைய
திரு நிறத்தை அனுசந்தி-
————
மண் அளந்த பாதமும் மற்று அவையே எண்ணில் – -9-நாலாயி:2290/2-
கண்ணிலும் ஸ்பர்சத்திலும் தோற்று விழும் திருவடிகள் –காடும் ஓடையுமான பூமியை யளந்ததுவும் பூவைக் கொண்டே –எண்ணில்- ஆராய அரிது -என்கை- எண்ண ஒட்டாதே கலக்குமே அழகு –
————
பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே மற்று அவன்-தன் நீண் நெடுங்கண் காட்டும் நிறம் – -55-நாலாயி:2336/3
பாண ஜாதியாக லஜ்ஜித்து ஒடுங்கும் படிக்கு ஈடாக வண்டுகள் ஆனவை சப்தியா நின்றுள்ள பங்கயமே காட்டும் –எத்தை என்னில் – மற்றவன் தன் நீண் நெடுங்கண் காட்டும் நிறம் –அவனுடைய மற்றை நீண் நெடும் கண்ணில் உண்டான நிறத்தை –
அவனுடைய பரிச்சேதிக்கப் போகாத கண்ணின் உடைய நிறத்தைக் காட்டா நின்றது –
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் -திரு விருத்தம்-45-
—————-
இலை துணை மற்று என் நெஞ்சே ஈசனை வென்ற -8- நாலாயி:2389/1
ஒன்றுக்கு ஓன்று சேராதே கொத்தான பத்துத் தலையை யுடைய ராவணனதான
அப்ரவிஷ்டமான லங்கையைக் கிட்டி யழித்த கூரிய அம்பை யுடையவன் துணை யல்லது
நம்முடைய குறையில் நமக்கு சாபேஷை இல்லை –
—————-
ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்று அவரை – நாலாயி:2399/3
சாத்தி இருப்பார் ஆகிறார் –வல்ல பரிசு வரிவிப்பரேல் -என்று-பெரியாழ்வார் பக்கலிலே ந்யஸ்த்த பரராய் இருக்கும் ஆண்டாள் போல்வார்-தவம் -ஸூஹ்ருதம்–ஸ்ரீ வைஷ்ணவர்களை ஆபாஸ்ரயமாகப் பற்றும் – ந்யஸ்த பரராய் -சரம அதிகாரிகளுடைய தபஸ்ஸூ வெல்லும் –கையைப் பற்றி அபேக்ஷித்தால் மறுக்கலாம் காலைப் பற்றி அபேக்ஷிக்க மறுக்க முடியாது அன்றோ-அடியார்கள் திருவடி ஸ்தானம் அன்றோ சித்திர் பவதி வா நேதி சம்சயோ அச்யுத சேவிதாம் ந சம்சயோ அஸ்தி தத் பக்த பரிசர்யார தாத்ம நாம் –பரமார்த்தம் இப் பாசுர தாத்பர்யம்-பெரியாழ்வார் -ஆண்டாள்-நம்மாழ்வார் -மதுரகவி ஆழ்வார்-ராமானுஜர் -வடுக நம்பி-உண்ட போது வார்த்தை உண்ணாத போது ஒரு வார்த்தை -பேசுவாரை சிரித்து இருப்பாரே இவர்கள்-
————
வயிர வழக்கு ஒழித்தாய் மற்று – நாலாயி:2406/4
வயிரம் வைரம் -சத்ருத் தன்மை – வயிர வழக்கு -எதிரியாய் இருக்கும் முறை-அஹங்காரமான தன்மை-ஒரு உபாயத்தாலே வைரத்தை புஜித்து அத்தாலே மிடுக்கனாக அபிமானித்து இருக்கிற மகா பலி உடைய சாத்ரவ முறையைத் தவிர்த்து- மகாபலி பக்கலில் நின்றும் ராஜ்ஜியம் மீட்டுக் கொடுத்து உபகரித்தாய்-
—————
மற்று தொழுவார் ஒருவரையும் யான் இன்மை -–26- நாலாயி:2407/1
நான் உன்னை ஒழிய வேறே ஒருவரையும் ஆஸ்ரயணீயராக உடையேன் அல்லேன்
இதற்கு ஆள் பிடித்துத் தொழுவித்துக் கொள்ளும் -சாதகன் என்பதைக் காட்டும் ஜடையும் தானுமாய் சாதன அனுஷ்டானம் பண்ணிப் போகும்-நெருங்கின ஜடையையுடைய ருத்ரன் ஸாக்ஷி-
——–
தனக்கு ஆவான் தானே மற்று அல்லால் புன காயா_வண்ணனே –51- நாலாயி:2432/2
ஈஸ்வரன் தனக்கு ஒருவன் ரஷகன் உண்டு என்று-இராமையாலே
அவனும் எனக்கு ஒப்பு அன்று –ஸர்வேஸ்வரனும் தான் தனக்கு ஒப்பாமது ஒழிய எனக்கு ஓப்பான் அல்லன் என் புத்திக்கு பரமபதம் எல்லாம் கூடத் தான் விலை யாகுமோ-சம்சாரத்தில் எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிற-எனக்கு-
விரோதி இல்லாத தேசத்திலே இருக்கிறவர்கள்-என்னோடு ஒப்பரோ –ப்ராப்ய ஏக பரராய் இருக்கும் அவர்கள் இடம் ப்ராபக-உபாய – பாவம் விலை செல்லப் பெறாமல்
குமரி இருந்து போம் அத்தனையே –
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே–திரு விருத்தம் –79-
இனி யாவர் நிகர் அகல் வானத்தே –திருவாய் –4-5-8-
நினைக்கும் நெஞ்சு உடையேன் எனக்கு இனி யார் நிகர் நீள் நிலத்தே –திருவாய் –6-4-7-
எனக்கு இவ்வுலகம் நிகரே –திருவாய் –6-4-2-
ஒருவர் நம் போல் வருங்கேழ்பவர் உளரே -திரு விருத்தம் —-44-
பகவத் சம்பந்தம் அடியாக வரும் அஹங்காரம் உபாதயமே –
———-
மாந்தராய் மாதுவாய் மற்று எல்லாமாய் சார்ந்தவர்க்கு – நாலாயி:2464/2
அனுக்தமான எல்லாவுமாய்(போக்ய போக்ய உபகரணமாய் போக்ய ஸ்தானமாய் போக்ய பிரதானனுமாய் -ஸ்ரீ மத்தாய் )
———-
பொழுது எனக்கு மற்று அதுவே போதும் கழி சினத்த – –85–நாலாயி:2466/2-
நாங்களும் எல்லா கார்யம் செய்து- பகவத் நாம சங்கீர்தனமும் பண்ணுகிறிலோமே-என்ன-
எனக்கு ராம வ்ருத்தாந்தம் கிடக்க வேறு ஒன்றுக்கு-போது போராது-அந்ய பரதை அறும்படிக்கு இடம் யறும் படி ஹ்ருதயத்தில் சன்னிஹிதராய் இரா நின்றார்
ஆகையாலே மிருத சஞ்சீவனமான ராம குணங்களிலே அகப்பட்ட எனக்கு நித்ய க்ருத்யம்
பழையவனாய் சர்வாதிகனான சக்ரவர்த்தி திருமகனுடைய திரு நாமங்களை அபிநிவேச பர வசனாய்க் கொண்டு
வாயாரப் பாடுகை ஏத்துகை
லௌகிகரான உங்களில் வியாவ்ருத்தமான எனக்கு மற்று உள்ள காலங்கள் எல்லாம் அதுக்கே நேரம் போதும்
எங்கள் தம் யுடையவர் திருக்கை அருளை ராமருடைய அருளைப் பெற இரக்கும் எங்களுக்கு
அந்நிய பரதை பண்ணுவது எங்கனே என்கிறார்-
என்று பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்ததாக அருளிச் செய்யும் படி
—————
வாழ்வார் வரும் மதி பார்த்து அன்பினராய் மற்று அவற்கே – நாலாயி:2471/3
திருவேங்கடமுடையான் விஷயமாக அநேக புஷ்பங்களைச் சோதித்து ஸமர்ப்பித்தவர்களே
அத்யாதிக மஹிமையுடன் இருந்து பரமபதத்தைப் பரி பாலநம் செய்ய வேண்டுவார்கள் ஆவார்-ஸர்வேஸ்வரன் திரு உள்ளத்தில் இருப்பதைச் செவ்வையாய் அறிந்து ப்ரீதி யுக்தராய் அந்த ஸர்வேஸ்வரனுக்கே அடிமை செய்யும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தாஸரான
பாகவதர்கள் இன்னம் அதிகமாக ஸூ கிப்பார்கள் —யதோ உபாசனம் பலம் -என்கிறபடியே
பகவத் ஸமாஸ்ரயணத்தாலே பகவானைப் பெறுவார்-பாகவத் ஸமாஸ்ரயணத்தாலே பாகவதர்களைப் பெறுவார் என்கிறது இப் பாட்டு-
————-
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் எவர்க்கும் – -43-நாலாயி:2520/3-
சம்சாரிகளுக்கு அவ் வருகே சர்வேஸ்வரன் பக்கலிலே உத்பத்தி ஸ்தானத்தை உடையவனுமாய் – அவனாலே லப்த ஞானனுமாய் இருந்துள்ள பிரம்மா தொடக்கமானவர் –
அதுக்கு அவ் வருகான முக்தர் –நித்யர் –இவர்களுக்கு மநோ ரதத்துக்கு நிலமோ ?-
எனக்கு உபகாரனான அவன் உடைய எழிலின் பிரகாரம் –யானைக்கு குதிரை வைப்பாரைப் போல் நித்யர்களுக்கும் இவனது அழகு-உயர்வற உயர் நலம் உடையவன் அன்றோ இவன்-
————
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா —85- நாலாயி:2562/3
முதலிலே ஸ்லாக்யமாய்-உபமான ராஹித்யத்வத்துக்கு–மாற்று அற்ற பொன் போலே இருக்கிறவனே
————-
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே –94- நாலாயி:2571/4
ஊரில் பசுக்கள் வந்து-புகுரப் புக்கால் எப்படி சம் ப்ரமிக்கும் அந்த சம் ப்ரம ஹேது இன்னது என்று அறியாதே – குருட்டுப்-பசுவும் சம் ப்ரமியா நிற்கும் இறே – அப்படி யானும் சொன்னேன் – அளவுடையார் சொல்லும்-விஷயம் அன்றோ – நாம் என் -என்று பாராதே -நானும் பாசுரத்தை சொன்னேன் –இதுக்கு மேற்பட பர தந்த்ரனுமாய் -பக்தி பரவசுமான நான்-அடைவு பட ஒன்றைச் சொல்லி தலைக்கட்ட வல்லேனோ –அன்றிக்கே
அயோக்யா அனுசந்தானம் பண்ணி அகலுகிற நான் அங்குத்தைக்கு சத்ருசமாக ஒன்றைச் சொல்லித் தலைக் கட்ட வல்லேனோ –
————-
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா எவர்க்கும் –99- நாலாயி:2576/3-
ஷயியான பலத்தை அனுபவிக்கிறவர்கள் தங்களுக்கே அன்றி – அநந்த ஸ்திர-பலத்தை அனுபவிக்கிற நித்ய ஸூரிகளுக்கும் அவன் வேணும் – அவர்களுக்கும் அனுபவத்துக்கு தங்கள் சத்தை-வேணுமே -தேக யாத்ரைக்கு அவ்வருகு அறியாதே – ஸ்தூவோஹம் க்ருசோஹம்-என்று இருக்கிற மனுஷ்யாதிகளுக்கும் வேண்டும் சம்விதானம்
பண்ணிக் கொடுக்கைக்கும் அவனே வேணும்-ஜ்ஞானாதிகரையும் அதற்க்கு குறைய நின்றாரையும் ஒக்க எடுக்கையாலே இத் தலையில் உண்டான அறிவு அசத் சமம் என்கை –
————
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே -7– நாலாயி:2584/9-
இப்படி இவற்றை திரு வயிற்றிலே வைத்து தான் முகிழ் விரியாதே பவனாய் இருபத்தொரு ஆலந்தளிரிலே கண் வளர்ந்த நம்முடைய ஆச்சர்ய சக்தி யுக்தனை ஒழிய-இப்படிப்பட்ட ஆச்சர்ய யோகத்தைச் சொல்லுகிறது – பெரு மா மாயன் -என்று-அவனை ஒழியப் புறம்பே கால் காணித் தெய்வம் உடையோமோ நாம்-பகவத் ப்ராவண்யம் க்ரமத்தில் பிறக்கவுமாம் –
இவனுக்கு முந்துற வேண்டுவது தேவதாந்த்ர ஸ்பர்சம் அறுகை இறே – இது உண்டானால் யோக்யதை கிடைக்கும் இறே-ஆகவே ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே ?–என்று அருளிச் செய்து நிகமிக்கிறார்-
—–
இகழ்வோம் மதிப்போம் மதியோம் இகழோம் மற்று
எங்கள் மால் செங்கண்மால் சீறல் நீ தீவினையோம் – -—2–நாலாயி:2586/2,3
மற்று -என்கிறது-புகழோம் என்கிறதில் காட்டில் இகழ்வோம் என்றதினுடைய பிரிவைக் காட்டுகிறது-மற்று இகழ்வோம் என்ற படி (வாக் வியாபாரத்தில் மாறி மானஸ வியாபாரம் என்கிறது )-
————
என்னின் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று
எண்_இல் மிகு புகழேன் யான் அல்லால் என்ன – -4–நாலாயி:2588/1,2
ஆஸ்ரயத்தில் (ஆத்மாவில் ) அடங்காத புகழை யுடையேன் யானே யன்றோ-தன் வடிவை எனக்கு சர்வ ஸ்வ தானம் பண்ணி ஸூலபனாய் அளவிறந்த சீலத்தை யுடைய ஸர்வேஸ்வரனுக்கு அதிசயத்தைப் பண்ணப் பெற்று இருக்கிற என்னில் காட்டில் மிக்க புகழை யுடையார் யார் –ஈசன் வானவருக்கு –நீசனேன் நிறை ஒன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே-இங்கு சீலம் காட்டிய பரஞ்சோதி-
——————
அவன் ஆம் இவன் ஆம் உவன் ஆம் மற்று உம்பர் – நாலாயி:2620/1
திருப்பாற்கடல் நாயகன் -துர்லபனாய் இருக்கும்-அர்ச்சாவதாரம் ஸூல பனாய் இருக்கும்
அப்படியே இருக்கும் -உம்பர் மேலாய் -பரமபத நாதன் இப்படியே இருக்கும்-அதுக்கு மேலாய் இருக்கும் என்று சம்சயித்துக் கை விடப் பாராதே-ஆஸ்ரித பாரதந்தர்யமே அவனுக்கு ஸ்வரூபம் என்று தெளிந்து ஸூலபனான கிருஷ்ணனுக்கே அற்றால்-அவனே எவனேலுமாம்-யஸ்ய மந்த்ரீ ச கோப்தா ச ஸூஹ்ருச்சைவ ஜனார்தன -என்னும்படியே
இவனுக்கு எல்லாப்படியும் ரக்ஷகனாம்-
வாய்ப்போ இது ஒப்ப மற்று இல்லை வா நெஞ்சே – 40–நாலாயி:2624/1
இத்தோடு ஒக்கும் நேர் பாடு மற்று இலை நெஞ்சே-அயோக்யன் என்று அகலுகை யாகிற கொடிய நரகத்தில் புகுவியாதே கொள்-பெற்ற தாய் வேஷத்தைக் கொண்டு வந்த பேயினுடைய உயிரைப் பாலோடே கலசி யுண்டு அவள் உயிரை முடித்தவனை
வாழ்த்துகை நமக்கு மிடுக்கு-வாழ்த்துகையிலே துணி என்றுமாம்-
————–
கண் அவா மற்று ஒன்று காண் உறா சீர் பரவாது –52- நாலாயி:2636/3
கண்ணுக்கு அவா ஊண் பாவித்து உண்டானதோர் உருவம் காண்பான்-அது ஒன்றும் காண்கை செய் -என்று காண்கை நாணி வேறே ஓன்று காணாமையே முடியும்-
————
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ அவர்க்கு – -53-நாலாயி:2637/3
உன் புகழிலே தங்குகிற சிந்தையில் காட்டில் இனிதோ நீ போரப் பொலியச் சொல்லிக் கொடுக்கிற பரமபதம் ஸித்தத்துக்கு இடை நிற்குமோ ஸாத்யம்-இதுக்கு அது யுக்தி ஸாரமே காரணம்-
—————
நின் அன்றி மற்று இலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர் -77– நாலாயி:2661/3-
உரைக்கப் படுவது எல்லாம் உன்னை ஒழிய வேறே ஒருவர் இல்லை
துணையாக உரைக்கப்படுவது எல்லாவற்றிலும் உன்னை ஒழியத் துணை இல்லை -துர்த் தசையில் மா ஸூச என்று நற் சொல்லு சொல்லும் அத்தனை
————
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று – நாலாயி:2674/3-
இத்தை லபிக்கும் சம்பத்தை வுடையவர்கள் இதுக்கு கலா மாத்ரமான தர்ம அர்த்தங்கள் இரண்டையும் லபித்தாராகக் கடவர்-சாத்தியத்தை லபித்தவர்கள் -சாதனத்தையும் அனுஷ்டித்தாராக கடவது இறே-இவற்றுக்கு சீர்மை யாவது -இதுக்கு சாதனம் ஆகையாலே
ஒரூருக்கு போகவென்று ஒருவன் மனோரதித்தால் அவ் ஊரிலே அவனைக் கண்டால் நடுவு பட்ட வழியும் வந்தானாகக் கடவது இறே-அறிவில் குறைந்த யாரோ சிலர் நிலையான மோஷம் என்று மற்று ஒரு புருஷார்த்தம் இருப்பதாகச் சொல்லுவார்கள் –
அல்ப அஸ்தரம் என்று இப் புருஷார்த்தங்களை தூஷித்து ஆனந்தா வஹமாய் -அந்தமில் பேரின்பமாய் நிலை நின்ற புருஷார்த்தம் உண்டு என்பார்கள் –
இப்படி காண ஒண்ணாதே அவர்கள் வசஸ் சமுத்ரத்திலே கேட்டுப் போம் இத்தனை என்கை –ஆரானும்-என்கையாலே -அவ்யப தேச்யருமாய் அவ்யுத்பன்னருமாய் சிலர் -என்கை
————–
வாராது மாமை அது கண்டு மற்று ஆங்கே – நாலாயி:2681/2-
நிறம் வரும் என்கைக்கு ஹேது இன்றிக்கே இருக்கச் செய்தே நிறம் வந்ததில்லை -என்றாள் இறே – என் ஆற்றாமை கண்டால் நிறம் தானே வர வேணும் -என்று இருக்கிறாள் காணும்-தங்களை அழியாது இருக்கச் செய்தே மூதறிவாட்டிகள் ஆனவர்கள் சொல்லுகிறார்கள்-
————–
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது மற்று
ஆராலே கல் மாரி காத்தது தான் ஆழி நீர் – நாலாயி:2684/6,7
ஒருத்திக்காக -உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து-இப்படி அரியன செய்து கைக் கொள்ளுமவன் இவளை நோவு பட்டு இருக்க விடான் பசிக் கோபத்தாலே இந்த்ரன் வர்ஷிக்க -அவ்வர்ஷம் நோக்கப் பட்டது ஆராலே அவ்வர்ஷத்திலே அகப்பட்ட இடையராலும் பசுக்கலாலுமோ –இத்தால் தன்னால் வந்த நலிவும் தானே பரிஹரிக்கும் என்றபடி –
————
வாராய் எனக்கு என்று மற்று அதன் மத்தகத்து – நாலாயி:2688/3-
முதலிகள் இலங்கையை எனக்கு எனக்கு என்றால் போலே கிடீர்-தன்னேராயிரம் பிள்ளைகளும் காளியனை -எனக்கு எனக்கு -என்று நின்றபடி – அவர்கள் நடுவே எனக்கு வாராய் என்றான் –மற்றதன் மத்தகத்து –அக்காளியன் பணத்திலே-சீரார் திருவடியால் பாய்ந்தான் –பிராட்டி திரு முலைத் தடங்களில் வைத்துக் கொள்ளும் கூச வேண்டும்படி இருக்கிற திருவடிகளைக் கொண்டு விஷ த்ருஷ்டியான பணத்திலே பாய்ந்தான்
வடிவிணை யில்லா மலர்மகள் மற்றை நிலை மகள் பிடிக்கும் மெல்லடி இறே –
——–
தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கென மற்று – நாலாயி:2695/4-
இவளுக்கு சர்வேஸ்வரன் அடியாக வந்த நோயாகிறது தீரில் செய்வது என் -என்று
அவர்கள் பயப்படுகிறார்களாக கருதி –தீரா நோய் -என்கிறாள் காணும் – இப்போது தீரா நோய் -என்கிறது பக்தியை இறே –யாவதாத்மா பாவியான நோய் இறே-ப்ராப்தி தசையிலும் அனுவர்த்திக்கும் இறே-தென்றலும் சிறு துளியும் பட்டால் போலே இருக்கிறது காணும் தனக்கு இனிதான படி-என்றும் இந்நோய் கொண்டால் ஆகாதோ இவள் புகுந்து இப்படி பரிஹாரம் சொல்லப் பெறில்-இந்நோவு பேராயிரம் உடையான் அடியாக வந்தது -என்று சொன்னாள் கட்டுவிச்சி-என்னைப் பெற்ற தாயாரும் -தேவதாந்திர ஸ்பர்சம் இல்லை இறே -என்று பலகாலும் கேட்டு –
——-
தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் நான் அவனை – நாலாயி:2696/3,4
அபேஷிதம் ஆனவை தானாகச் செய்யாது ஒழிந்தாலும் காலைக் கட்டியாகிலும் செய்வித்துக் கொள்ள ப்ராப்தி இல்லையோ -என்று இப்படி தோழிமார்க்குச் சொல்லி-தேவதாந்த்ரமான நாய் தீண்டிற்று இல்லை இ றே -என்று தானே தெளிந்து நிர்ப்பரை யானாள் –எம்பெருமானோடே சம்பந்தம் உடைய இவளுக்கு நான் கரைய வேணுமோ என்று
தளப்பம் அற்றாள்-
———-
ஊரார் உகப்பதே ஆயினேன் மற்று எனக்கு இங்கு – நாலாயி:2701/1
தங்கள் அபிமத சித்தி சாதன அனுஷ்டானத்தாலே என்று இருக்குமவர்களைப் போலே
என் அபிமதத்துக்கும் நான் உத்சாஹிக்கும் படி யானேன் –அவனாலே பேறு என்று இருந்த இவள் கண்டாயே உண்டபடி இவளைப் போலே உண்ணும் அத்தனை அவன் கை பார்த்து இருந்தவர்கள் -என்பார்களே -அவர்கள் –என்நெஞ்சம் எனக்கு உதவாது இருக்க
வேறு நமக்கு இங்கு உசாத் துணை உண்டோ –மற்று இல்லை -என்கையாலே இன்னமும் அவனே வந்து ஆராயில் ஆராயும் அத்தனை -என்கை-அவ்வருள் அல்லன அருளும் அல்ல -என்றும்-வையகத்துய்ப் பல்லார் அருளும் பழுது -என்றும் இறே இவர்கள் தாங்கள் அறுதி இட்டு இருப்பதும்-
————–
ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே மற்று எனக்கு இங்கு – நாலாயி:2705/3
அப்படி அவன் பின்னே போனவளை ஊரார் கொண்டாடின வித்தனை யல்லது பழி சொன்னார் உண்டோ –இத் துணிவுக்கு புறம்பான வார்த்தை சொல்லிக் கற்பிப்பார் எனக்கு நாயகர் அல்லர்-பயிலும் திரு வுடையார் யாவரேலும் அவர் கண்டீர் பயிலும் பிறப்பிடை தோறு எம்மை யாளும் பரமரே -என்று இருக்கும் நிலை தவிர்ந்தேன்-இத் துணிவுக்கு உடன்பட்டார் எனக்கு நாயகர்-க்ரம ப்ராப்தி பொறுக்க வேணும் -என்று இருப்பார் எனக்கு நாயகர் அல்லர் – அன்னை என் செய்யில் என் ஊர் என் சொல்லில் என்-
————
முன்னம் திசைமுகனை தான் படைக்க மற்று அவனும் – நாலாயி:2715/5-
அச் செவ்விப் பூவிலே நாலு பூ தோன்றினால் போலே-சிருஷ்டி காலத்திலேயே சதுர்முகனைத் தான் உண்டாக்க –மற்றவனும்- இவன் சிருஷ்டித்த அநந்தரம்-இவனோ ஈஸ்வரன் -என்று மசக்குப் பாலிடலாம் படி பெருத்த அந்தச் சதுர முகனும் –முன்னம் படைத்தனன் நான்மறைகள் –அந்தச் சதுர முகனும் முன்பு உண்டாக்கின நான்மறைகள் என்றால் போலே இருக்கிறது-சர்வேஸ்வரன் இவ் வேத அஷர ராசியை
ஸூ ப்த பிரபுத்த ந்யாயத்தாலே முன்புத்தை ஆநு பூர்வியை ஸ்மரித்துச் சொல்லும் என்று
வேதத்தின் உடைய அபௌ ருஷேயத்வம் சொல்லா நிற்க இவன் சிருஷ்டித்தான் -என்னில் பிரமாண விருத்தமாம் இறே-
இனித் தானே
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை -என்று சொல்லுகிற்றவற்றோடும் விரோதிக்கும் இறே-ஆனால் பின்னை என் சொல்லிற்று ஆகிற்றது என்னில்
இன்னான் தன் பிதாவின் பக்கல் படைத்த த்ரவ்யம் இன்னதனை -என்னுமா போலே
அந்த ப்ரஹ்மாவும் சர்வேஸ்வரன் பக்கல் அதிகரித்த நாலு வேதங்களும் -என்றபடி-
பிறந்து படைத்தான் -என்னக் கடவது இறே பெற்றத்தை –
————–
மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான் – நாலாயி:2749/4
நாட்டில் ஒருவரை ஒழியாமே எழுதிக் காட்ட இது வன்று இது வன்று என்று போந்து
கிருஷ்ணன் பக்கலிலே வந்தவாறே இவன் ஒரு பார்வையாய் இருந்தான் -என்று -பின்பு
அநிருத்தனைக் கண்ட வாறே இவன் இறே என்ன
இவனாகில் அரியனோ- என்று அப்போதே யோக பலத்தாலே போய்ப் படுக்கையோடு பீட்கன்றாக எடுத்துக் கொண்டு வந்து வைத்தாள் –மற்று அவனோடு – இவளுக்கு ஸ்வப்னத்தில் கண்டு பிறந்த ச்நேஹம் எல்லாம் அவனுக்கு இவளைக் கண்டவாறே பிறந்தது-இருவர் காலிலும் விலங்கிட்டு வைக்கவும் அனுபவிக்கப் பெற்று இலர்களோ –மற்றிவை தான் என்னாலே கேட்டீரே – மடலூர என்று ஒருப்பட்டு அது தானும் மாட்டாத படி துர்பலையாய் இருக்கிற என்னைக் கொண்டு-இவை கேட்க இருக்கிறிகோள் இறே
————
நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே – நாலாயி:2759/2
நல நறு வாசம் உண்டு –அத்யந்த விலஷணமாய் செவ்வி அழியாத பரிமளம் –தனக்காகக் கண்டது அன்றிக்கே பிறர்க்காக கண்ட வஸ்து பிறர்க்கு ஆகப் பெறாதே தானே நின்று –
———–
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும் – நாலாயி:2767/10
தேஜோ பதார்த்தங்கள் எல்லாம் தன்னினுடனே சுழல மலைத் திரிந்தாங்கு இன்னமுதம் வானவரை யூட்டி அவருடைய –யாவதாத்மபாவியான தாரித்ர்யம்-பிரயோஜனாந்தர பரர்க்கும் அகப்பட –மற்றன்றியும்-பிரதாபத்துக்கு எதிர்த்தட்டான தாழ்வுகள் பேசுகிறது –
————–
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும் – நாலாயி:2769/4-
ஸூ க்ர பகவான் உள்ளிட்டார் – நெஞ்சுருக்கி -புலன் கொள் மாணாய் -திருவாய் மொழி -1-8-6- ராஜாவே -என்ன-திரியப் பார்க்க-மூவடி -என்ன-என்னன்புது -என்ன மண் -என்ன-ஆர் காலாலே -என்ன-என் காலாலே -என்ன-பெரியதொரு காலாலே கொண்டாலோ -என்ன
என் அபேஷை அன்றோ நீ செய்யக் கடவது -என்ன-பேசாது இருந்தான்-இவன் பேச்சை கேட்க்கைக்காக-இவனும் ஈண்டென தாராய் -என்று வாய் விட-அவ்வாய் விட்டத்தைக் கண்ட மகா பலியும் இட்டு மாறினால் போலே-வேறு ஒருவன் ஆனபடியாலே -மற்றவனும் -என்கிறது –
———–
தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்று இவைதான் – நாலாயி:2789/1
தனக்கு ஒப்பார் இன்றிக்கே பெரிய மலை போலே இருக்கிற வடிவை யுடைய தாடகையை-
ஸ்திரீ வதம் பண்ணிற்று -என்று மடியைக் கோத்துப் பிடித்து கேட்டால்-ஒரு பார்ப்பான் சொல்லச் செய்தேன் -என்று ஆயிற்றுச் சொல்லுவது-இது பட்டர் அருளிச் செய்யக் கேட்டேன் -என்று பிள்ளை அருளிச் செய்வர்-மா முனி-அவன் ஒருவன் படி இருந்த படி என்-ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் உடைய ஆற்றாமைக்கு உதவ கடுகக் கொடு சென்றவன் கையும் மடலுமாய் இருக்கிற என் ஆற்றாமைக்கு உதவக் கொடு வராது ஒழிவதே –
——–
மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மற்று உளார் தரமோ – -39-நாலாயி:2829/2
அஞ்ஞான யுத்தமான க்ரூர துக்கங்களை நீக்கித்–தம்முடைய நித்தியமாய் நிரவதிகமான கல்யாண குணங்களையே அறியும்படி யான அறிவைத் தந்து எம்பெருமானார் செய்யும் ரஷைகள்-நெஞ்சே -மற்று உண்டான வர்கள் செய்யும் அளவோ –ராமனும் கண்ணனும் அருளாதவற்றை அன்றோ ராமானுஜர் அருளுகிறார் நமக்கு-
தென்னரங்கர் தமக்காமோ தேவியர்கட்காமோ சேனையர்கோன் முதலான சூரியர்கட்காமோ
மன்னிய சீர் மாறனருள் மாரி தனக்காமோ மற்றும் உள்ள தேசிகர்கள் தங்களுக்குமாமோ
என்னுடைய பிழை பொறுக்க யாவர்க்கு முடியும் எதிராசா வுனக்கு அன்றி யான் ஒருவர்க்கும் ஆகேன் – என்று இவ் அர்த்தத்தை ஜீயரும் அருளிச் செய்தார்-
——————
பேறு ஒன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அ பேறு அளித்தற்கு —ஆறு ஒன்றும் இல்லை மற்று அ சரண் அன்றி என்று இ பொருளை -– 45- – நாலாயி:2835/1
ஆசார்யத்வம் ஸ்ரீ எம்பெருமானார் இடத்திலே தானே வ்யவஸ்த்திதமாய் இருக்கையாலும்
அவருடைய திருவடிகளே பிராப்யம் என்று நிஷ்கரித்து அருளினார் –வகுத்த சேஷியான தேவரீருடைய திருவடிகளே புருஷார்த்தம் என்று இருக்கிற-நமக்கு அத் திருவடிகளை ஒழிய வேறு ஒரு பிராப்யம் இல்லை –
———-
படியில் பிறந்தது மற்று இல்லை காரணம் பார்த்திடிலே – நாலாயி:2841/4
ஸ்ரீ எம்பெருமானார் இந்தப் பூமியில் வந்து அவதரித்து -என்னை ஆளுகைக்காக –
ஆராயில் வேறு ஒரு காரணம் இல்லை –இவ்வமுதம் இப்படியில் பிறப்பதற்கு காரணம் அதன் கருமம் அன்று-ஸ்ரீ ஸ்வாமி இந்த லோகத்தில் அவதரித்து -திவ்யம்- அமுதம்- அருளிற்று என்னை அடிமை கொள்ளுகைக்காக–வேறு ஒரு ஹேதுவும் இல்லை..
—————
வாக்கு உரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே – நாலாயி:2846/4
லோகம் எங்கும் வ்யாபிக்கும்படி பண்ணின கீர்த்தியை உடைய எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு மேலுள்ள காலம் வேறு ஒரு விஷயத்தை என்னுடைய வாக்கானது கீர்த்தியாது – என்னுடைய மனஸ்சானது-ஸ்ம்ரியாது –முற் காலத்தில் எல்லாம் அசத்ய பாஷணத்தையும் -அசத் கீர்த்தனத்தையும் – பண்ணிக் கொண்டு போந்த என் வாக்கானது -எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு -அவருடைய திவ்ய குணங்களையே கீர்த்தியாய் நிற்கும் இத்தனை ஒழிய – வேறு ஒன்றை கீர்த்திக்க மாட்டாது –முற் காலம் எல்லாம் பாப சிந்தனையே பண்ணிக் கொண்டு போந்த என் மனசானது -அவரை ஆஸ்ரயித்த பின்பு –
அவருடைய திவ்ய குணங்களிலே ஈடு பட்டு சர்வவிதா அவை தன்னை மனனம் பண்ணிக் கொண்டு இருக்கும் இத்தனை ஒழிய வேறு ஒன்றை ஸ்மரிக்க மாட்டாது என்று அருளிச் செய்தார் ஆய்த்து-வகுத்த ஸ்ரீ எம்பெருமானார் திறத்தே விளைந்த ஈடுபாட்டுடன் திகழ்வது கண்டு –பேருவகை கொண்டு உறவு பாராட்டி – என் வாக்கு -என் மனம் -என்று அவற்றை தனித் தனியே கொண்டாடுகிறார் –
———
மற்று ஒரு பேறு மதியாது அரங்கன் மலர் அடிக்கு ஆள் – நாலாயி:2847/1
அரங்கன் மலர் அடிக்கே ஆளுகையே பேறு-அடிகள் நிரதிசய போக்யமாய் மலர் போன்று இருத்தலின் ஆளுறுகை பெரும் பேறாயிற்று – திரு வரங்கத்தில் அரங்கன் திருவடி வாரத்தில் பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம்-மற்ற புருஷார்த்தங்கள் புருஷார்த்தமாக மதிக்கத் தக்கன அல்ல என்று ஆளுற்றவர் கருதுகின்றனர் -திருவரங்கத்தில் அரங்கனுக்கு ஆளுறுகை தவிர்ந்து பரம பதத்தில் பர வாசுதேவனுக்கு ஆளுறுகை நேரினும் -அதனையும் மதிக்கிலர் என்னும் கருத்தில் –மற்றொரு பேறு மதியாது –
பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதைமையே – நாலாயி:2847/4
எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு முன்பு அநாதி காலமே தொடங்கி ஆவிர்பூதமாய் இருக்கிற என்னுடைய -தேகாத்ம – பிரமமும் ஸ்வ ஸ்வா தந்த்ர்யா பிரமமும்-அந்ய சேஷத்வ பிரமமும் -அநுபாய உபாயத்வ பிரமமும் -எங்கே சென்றது கண்டிலேன் –பெற்றனன் என்று கூறி -மீண்டும் பெற்ற பின் என்று அநுவாதம் செய்கையாலே இதனது பெறாப் பேறாம் தன்மை புலப்படுத்தப் படுகிறது –
——————
ஓதி மற்று எல்லா உயிரும் அஃது என்று உயிர்கள் மெய்விட்டு – நாலாயி:2848/2
ப்ரஹ்மமே விலஷணம் என்று வேதாந்த வாக்யங்களாலே பிரதிபாதித்து –
தத் வ்யதிரிக்த சமஸ்த ஜீவர்களும் அந்த ப்ரஹ்மம் தானே என்று -இப்படி தத்தவ நிர்ணயத்தை பண்ணி – மோஷ நிர்ணயம் பண்ணுகிற அளவிலும் –
அப்படிப்பட்ட ஜீவ வர்க்கங்கள் அடங்கலும் தேஹாத் யுபாதி விநிர்முக்தமானவாறே -ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி – பரஞ்சோதி ரூப சம்பந்த்ய ஸ்வேன ரூபேணபி நிஷ்பஷ்யதே -இத்யாதி ஸ்ருதிகளுடைய தாத்பர்யத்தை அறிய மாட்டாதே – அவற்றுக்கு காரண பூதனான சர்வ ஸ்மாத் பரனோடே ஏகீபவித்து இருக்கும் என்கிற
அபார்த்தத்தை சொல்லும் –
————–
அரண் அங்கு அமைத்திலனேல் அரண் ஆர் மற்று இ ஆருயிர்க்கே – -67-நாலாயி:2857/4
அருமையான இவ் ஆத்மா அழியாது காக்க வேறு எவரும் இலர்
——–
திண்மை அல்லால் எனக்கு இல்லை மற்று ஓர் நிலை தேர்ந்திடிலே – நாலாயி:2863/4
ஸ்ரீ எம்பெருமானாரே ரஷகர் என்று அத்யவசித்து இருக்கும் பலம் ஒழிய –
திண்மை -திண்ணிமை -அதாவது-மிடுக்கு –நன்றாக கொண்டு நிரூபித்து பார்த்தால் -என்னுடைய ஞானமும் ப்ரேமம் தொடக்கமான வேறு சிறிதும் எனக்கு இல்லை –
அகிஞ்சனனாய் அநந்ய கதியாய் இருக்கிற எனக்கு தாரகமாய் மாட்டாது என்று
தம்முடைய பாரமை காந்த்யத்தை யருளிச் செய்தார் ஆய்த்து –
பொருத்தப்படாது எம் இராமாநுச மற்று ஓர் பொய்ப்பொருளே – -78-நாலாயி:2868/4
எனக்கு அஞ்ஞா தாஜ்ஞாபனம் பண்ணி உபகரித்து அருளின எம்பெருமானாரே –தேவரீர் அறிவித்த யதார்த்த ஜ்ஞானம் ஒழிய அதற்க்கு புறம்பாய் இருப்பதொரு அயதார்த்தமான அர்த்தத்தையும் -ஜீவாத்மா பர ப்ரஹ்ம ஐக்யமடைதல் -அது தனக்கு உரிய ஸ்வ தந்திரப் பொருளாய் இருத்தல் –பிரரான தேவர்களுக்கு உரியதாய் இருத்தல் -போல்வன––வலியப் பொருத்தினாலும் பொருந்தாது –ஞானம் புக்க-இடத்தில் அஞ்ஞானம் புகுர வழி இல்லை என்றது ஆய்த்து –
———
மாந்தகில்லாது இனி மற்று ஒன்று காட்டி மயக்கிடலே – நாலாயி:2890/4
இப்படியான பின்பு வேறு ஒரு விஷயத்தை காட்டி மோகிப்பிக்க வேண்டா –
மயக்கம் -மோகம் –பகவத் விஷயத்தை என்று சொல்ல அருவருத்து மற்று ஓன்று காட்டி –என்று சொல்லுகிறார் காணும் –மற்று ஒரு விஷயத்தை பிரசங்கிப்பதும் செய்ய வேண்டா என்கிறார் –பல நீ காட்டிப் படுப்பாயோ இன்னம் கெடுப்பாயோ – நெறி காட்டி நீக்குதியோ-என்று நம் ஆழ்வாரும் இவ்வர்த்தத்தை பிரதம பர்வத்தில் அனுசந்தித்து அருளினார் இறே –தெளி தேனுக்கு மாற்றாக காட்டும்மற்று ஓன்று மது சூதநனின் தேனே மலரும் திருப்பாதம் -என்பது ஸ்ரீ அமுதனார் உட் கருத்து .-ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளின் இனிமையை உணர்த்தி என்னை மயக்கி விடக் கூடாது என்கிறார் .-இதனால் தமது சரம பர்வ நிஷ்டையை வெளி இட்டு அருளினார் ஆயிற்று .
————–
மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று எத்தாலும் கருமம் இன்றி-2-7-6- – நாலாயி:3080/1
விரோதி நிரசன ஸ்வபாவன் ஆனவனை ஒழிய வேறு சிலரைத் தஞ்சமாக வுடையேன் அல்லேன் என்றாயாயிற்று இவர் இருப்பது-அந்த உக்திக்குச் சேர்ந்த அனுஷ்டானம் உண்டாய் இருக்கும் ப்ராப்ய ஆபாசங்களிலும் பிராபக ஆபாசங்களிலும் நெகிழ்ந்து -அவனை ஒழிந்த எல்லா வற்றாலும் ஒரு பிரயோஜனம் இன்றிக்கே இருப்பர்-
———–
நீந்தும் துயர் பிறவி உட்பட மற்று எ எவையும் – 2-8-2-நாலாயி:3089/1-
நீந்தும் – என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தால் கடக்க அரிதான துக்கத்தை விளைப்பதான ஜனனம் தொடக்கமான மற்றும் உண்டான அபஷய விநாசாதிகளையும் கடத்தும் –நீந்திக் கொண்டே இருக்கிறோமே –
————
ஓவா துயர் பிறவி உட்பட மற்று எவ்எவையும் – நாலாயி:3092/1
கீழே நீந்தும் துயர்ப் பிறவி -என்கிறார் -அங்கே யானைக்கு துயர் விட்டுப் போனதே அது போலே இல்லாமல் இதிலே ஒரு கால் விட்டுப் பிடிக்குமதுவும் இல்லை-உச்சிவீடும் விடாதே துயரை விளைக்கக் கடவதான ஜன்மம் தொடக்கமான மற்றும் உண்டான ஐந்துக்கும்-ஷட்பாவ விகாரம் என்கிறார் –
————
சேண் பால வீடோ உயிரோ மற்று எ பொருட்கும் – நாலாயி:3095/3
உயர்த்தியே ஸ்வபாவமாக உடைத்தான பரம பதம் என்ன -முக்தாத்மா ஸ்வரூபம் என்ன -மற்றும் உண்டான தேவாதிகள் என்ன -இவற்றை உடைத்தான-
————-
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும் – நாலாயி:3097/2
ஈரப் பாடுடையரான தேவர்கள் நடுவாக மற்றும் உண்டான திர்யக்காதிகளும்
———
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன் – நாலாயி:3106/1,2
மற்று எக் காலத்திலும் இது தன்னையும் வேண்டா என்கிறார் -என்பர் ஆளவந்தார்
எக்காலம் என்றது -எல்லாக் காலத்திலும் என்றபடி-ஜ்வர சந்நிபதிதர் -ஒரு கால் நாக்கு நனைக்க -என்னுமா போலே–இது பொருள் அழகியது –இவ் வாழ்வாருடைய பிரக்ருதிக்குச் சேராது–பெறிலும் பெறாது ஒழியிலும் சிறுகக் கோல மாட்டார்–பின்னை இது ஒழிந்த மற்று ஒன்றையும் வேண்டேன் –எக்காலத்திலும் ஈது ஒன்றும் ஒழிய மற்று ஒன்றும் வேண்டேன் என்கிறார் –என்று எம்பெருமானார்-
———-
பரஞ்சோதி நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்று ஓர் பரஞ்சோதி –3-1-3- நாலாயி:3123/1
உன்னை ஒழிய வேறொரு பரஞ்சோதிஸ்ஸூ இல்லாமையாலே உபமான ரஹிதனாய்க் கொண்டு வர்த்தியா நின்றுள்ள பரஞ்சோதிஸ்ஸூ நீ
———-
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணை கீழ் – –3-2-4–நாலாயி:3135/3-
யாதானும் பற்றி’ என்கிறபடியே,-உன்னை ஒழிந்த விஷயங்களில் பிராவண்யத்தைத் தவிர்ந்து-உன்னை ஒழிந்த ஸமஸ்த விஷயங்களிலும் கால் தாழ்கை தவிர்ந்து-வகுத்த விஷயமுமாய் போக்யமுமாய் இருக்கையாலே- ப்ராப்தனான உன்னுடைய போக்யமான திருவடிகள் இரண்டின் கீழே -உன் திருவடிகளிலுண்டான கைங்கரியத்தை.-பரதந்த்ரனாய் வாழும் வாழ்க்கை-
—————
தயரதற்கு மகன்-தன்னை அன்றி மற்று இலேன் தஞ்சமாகவே – -3-6-8–நாலாயி:3183/4
மற்று என்று பகவத் வியக்த்ரந்தரங்களை நினைக்கிறார்-போக்யத்தை பற்ற இவர் இடம் -மற்றவர்கள் பாவனத்வம் -இவரையே அனுபவிக்க ஆழ்வார் –-பாவனே சர்வ லோகானாம் -அகஸ்த்யர் சொல்லி உள்ளாரே -அகஸ்த்யரும் நம்மாழ்வார் உடன் ஒத்தார் -அவர் பாவனத்வத்துக்கும் இவர் ஒழிய இல்லை என்கிறார்-எம்பெருமானார் திருவாராதனம் பண்ணிப் போருவது வெண்ணெய்க்காடும் பிள்ளையாய் இருக்கும்.-இங்ஙனமிருக்கவும், ஒரு நாள் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் சக்கரவர்த்தி திருமகனை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்து கொடுத்தாராய் அவரைப் பார்த்து, இந்த ‘என் ஒருவனையே சரணமாகப் பற்று’ என்று தேவையிடாதார் எழுந்தருளினார்,’ என்றாராம்.
————
ஓர் ஆயிரம் பேரும் உடைய பிரானை அல்லால் மற்று யான் கிலேன் – –3-9-7–நாலாயி:3215/2
ஜமபில என்று ஒரு சந்தஸியிலே வைத்து கவி பாட ஒண்ணாதாய் இருக்கை இன்றிக்கே கவி பாடுகைக்கு விஷயமான குண சேஷ்டிதங்களுக்கு வாசகமாய் அசங்க்யேயமான திரு நாமங்களை உடையவனை ஓராயிரம் –ஓர் ஒன்றே கவி பாடுகைக்கு விஷயம் போந்து இருக்கும் படி அத்விதீயமாய் இருக்கை-பிரானை – அவற்றை எனக்கு பிரகாசிப்பித்த மஹா உபகாரகனை-அல்லால்,மற்று யான்கிலேன்;-வேறு சிலரை கவி பாடுகைக்கு நான் ஷமன் அல்லேன்-
—————
மனை-பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்று கண்டிலம் –4-1-4- நாலாயி:3234/3-
வாழ்ந்த மனையிடம் -மருங்கு -பார்ஸ்வம் -அற-இரண்டுக்கும் பேதம் தெரியாதபடி
கனக்க ஜீவித்தான் ஆகில் அசலிட்டு பார்வஸ்த்தர்க்கும் அநர்த்தமாம் பெரு மரம் விழும் போது அருகு நின்றவற்றையும் நசிப்பிக்கும்-நசிக்குமது ஒழிய ஸ்திதரராய் இருப்பார் ஒருவரையும் கண்டிலோம்-
————-
உய்வு உபாயம் மற்று இன்மை தேறி கண்ணன் ஒண் கழல்கள் மேல் – நாலாயி:3263/1-
இவர் சர்வேசுவரனுடைய காதல் குணத்தைப் பேசத் தொடங்கியது, பேசித் தலைக்கட்ட வல்லவராய் அன்று;-இஃது ஒழியத் தரிக்கைக்கு உபாயம் இல்லை என்று தெளிந்து.-
——————
அணிய முயலின் மற்று இல்லை கண்டீர் இ அணங்குக்கே – நாலாயி:3291/4-
இவளை பெறுகைக்கு வேறு பரிஹாரம் இல்லை –இவ் வப்ராக்ருத ஸ்வபாவைக்கு மற்று ஓன்று பரிஹாரம் ஆகாதே -இதுவே பரிஹாரம் ஆம்படி அன்றோ இவள் வைலக்ஷண்யம்
——————-
உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாஅள் அவனை அல்லால் – நாலாயி:3295/1
தன் நெஞ்சாலே மதித்து வேறு ஒரு தெய்வத்தைத் தொழுது அறியாள் இவள்.-வேறு ஒன்றை தேவதை என்று மதித்தல் தொழுதல் செய்யுமவள் அல்லள்-
————
நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால் – நாலாயி:3325/2-
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம-வேறு ஸ்வ தந்திரமாய் இருபத்தொரு பதார்த்தம் இல்லாத படி சர்வத்தையும் பிரகாரமாகக் கொண்டு நீ பிரகாரியாய் நிற்கையாலே -நேஹா நா நாஸ்தி கிஞ்சன –சரீரத்தில் வந்த துக்கங்கள் சரீரி போக்குமா போலே எனக்கு வரும் துக்கங்கள் போக்குகை உனக்கே பரம்-அவனைத்தவிர விஷயமும் கருவியும் இல்லையே
அவனைக் கொண்டு அவனையே பார்க்க வேண்டும்-வேறு ஓன்று கொண்டு வேறு ஒன்றையும் பார்க்க முடியாதே –
————–
பரன் திறம் அன்றி பல் உலகீர் தெய்வம் மற்று இல்லை பேசுமினே – நாலாயி:3332/4-
ஸ்வதந்திரமாய் இருபத்தொரு தெய்வம் இல்லை -தேவதைகளுடைய ஸ்வரூப நிஷேதம் பண்ணுகிறார் அல்லர் -ஈஸ்வர விபூதி யாகையாலே ஸ்வாதந்தர்ய நிஷேதம் பண்ணுகிறார்
அவனுக்கு பிரகாரம் என்று ஆச்ரயிக்கில் அவனுடைய ஆசிரயணீயத்திலே புகும்
ஸ்வதந்த்ர புத்தி பண்ணில் ஸ்வதந்திரமாய் இருப்பது ஓன்று இல்லை –எவர்கள் பிதிரர்களையும் தேவர்களையும் அக்கினியோடு கூடிய பிராமணர்களையும் பூஜிக்கிறார்களோ, அவர்கள் எல்லா ஆத்மாக்களுக்கும் அந்தரியாமி யாயிருக்கிற விஷ்ணுவையே பூஜிக்கிறார்கள்,’
—————
போற்றி மற்று ஓர் தெய்வம் பேண புறத்திட்டு உம்மை இன்னே – நாலாயி:3335/1-
மற்றோர் தெய்வம் – அருச்சுனா! எவர்கள் வேறு தேவர்களிடத்தில் பத்தி யுடையவர்களாய்க் கொண்டு சிரத்தையோடு பூஜிக்கின்றார்களோ, அவர்களும் என்னையே விதி முன்னாக அன்றியே பூஜிக்கின்றார்கள்,-உங்களுடைய ஆச்ரயணத்தில் ஒரு குறை இல்லை -அப்ராப்தம் ஆனதுவே குறை-
———–
ஓடிஓடி பல பிறப்பும் பிறந்து மற்று ஓர் தெய்வம் பாடி ஆடிப் பணிந்து – நாலாயி:3336/1
ஈஸ்வரனை ஒளியும் அத்தனையே வேண்டுவது -ஆரேனுமாக அமையும்-இப்படி அநாதியாகத் தொடர்ந்து போதருகிற பிறவிகளிலே ஒரு பிறவி ஒழியாமல் மற்றைத் தேவர்களை அடைக்கலமாக அடைந்து போந்தீர்கள்;அது செய்கிற விடத்தில் முக் கரணங்களாலும் செய்தீர்கள்; ஆதலால், பற்றுகிற தன்மையில் குறையால் பலியாது இருந்தது அன்று;
———-
உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி – நாலாயி:3343/1-
ஹிருதயத்தில் உள்ளன வேறு சில உளவாக -அந்த கரணம் பிராகிருத விஷய ப்ரவணமாய் இருக்க –
————
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்று இலேன் – நாலாயி:3425/1-
உன்னைப் பிரிந்து படுகிற துக்கத்தை போக்கிலும் போக்கு -தவிரிலும் தவிரு -வேறு ரக்ஷகரை யுடையேன் அல்லேன் -நீ உன் கார்யம் செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு என் தலையில் குறை இல்லை -த்வம் ஏவ உபாய பூதோ மே பவ-என்கிற அம்சத்தில் குறை இல்லை –அஹமஸ் அபராதானாம் ஆலய அகிஞ்சன அகதி – “த்வம்ஏவ உபாயபூதோ மே பவ இதி ப்ரார்த்தநாமதி:”என்றது,-சரமஸ்லோக பூர்வார்த்த பிரதிபாத்ய அதிகாரியின் செயலில் குறை இல்லை என்றபடி.–அறிவிப்பே அமையும் –-சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்கிற உன் கூறு செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு -துக்க நிவ்ருத்தி உம்ம தான பின்பு கிருஷியும் உம்மை தாக வேண்டாவோ என்ன-துக்கி யாகைக்கு கிருஷி பண்ணின நான் நிவர்த்தகன் ஆகவோ -ஒரு சக்தி கிருத்யத்தை நான் செய்யவோ-
————-
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் மற்று இவள் தேவதேவபிரான் என்றே – நாலாயி:3496/3-
ஸ்தபதை யானால் போலே இருக்கும் -வியாபார க்ஷமை இன்றியே இரா நின்றாள் -ஸ்தப்தோ சாஸ் யுத தாமாதேச மபிராஷ்ய -என்கிறபடியே பரிபூர்ண ஞானரைப் போலே இரா நின்றாள்-வேறு இவள் வார்த்தை சொல்லப் புக்காள் ஆகில் -இங்கே கண்டாலும் அயர்வரும் அமரர்கள் அதிபதி இங்கே வந்து ஸூலபனானான் -என்றாயிற்று இவள் புத்தி பண்ணுவது-
————–
பேர்த்து மற்று ஓர் களைகண் வினையாட்டியேன் நான் ஒன்று இலேன் – நாலாயி:3536/1-
உங்களை ஒழிய வேறு ஒரு நிர்வாஹகரை உடையேன் அல்லேன் -கடகர் பக்கலிலும் அநந்ய கதித்தவமே ஆவிஷ்கரிக்கக் கடவது-தன் பரிகரங்களிலே ஒன்றைக் கொண்டு போது போக்குகிறாள் என்னும் நிலையும் குலைந்தது.-வெறுமையை முன்னிடுமத்தனை அன்றோ ததீயர் பக்கலிலும். உங்களை ஒழிய வேறு ஒரு ரக்ஷகரை யுடையேன் அல்லேன்.
ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் -வெறுமை முன்னிட்டே -ஆச்சார்ய அபிமானத்துக்கு –
ஸ்வ அபிமானம் குலைத்த நமக்கு -பரதந்த்ரன் அபிமானமே உத்தாரகம் –
ஆச்சார்ய உபதேசம் எதிர் பார்த்து அவன் கார்யம் செய்ய இவர் அதுவும் இல்லாமல் அருளுவாரே –மற்றிலேன் என்னாமல் மற்று ஓன்று இலேன் என்பதற்குத் தாத்பர்யம் மேலே –பிராட்டிக்கு இலங்கைக்குள்ளே ஒரு திரிசடையாகிலும் இருந்தாள்;-காட்டிலே விட்டுப் போந்த தனிமையிலே ஒரு வால்மீகி பகவானாகிலும் இருந்தான்; கணவன் பொகட்டால் ஒரு தந்தையாகிலும் உண்டாக வேணுமன்றோ? அங்ஙனம் ஒருவரும் இலர் என்பாள் ‘ஓர் களை கண்’ என்கிறாள்.-
————–
மண்ணுள் என்னை பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால் –-–7-1-6- நாலாயி:3566/2-
இந்திர வஸ்யத்தையை போக்காக கடவ நீ யும் உபேக்ஷித்தால் எல்லா அநர்த்தமும் படுத்தாவோ –விழுந்து தரிக்கும் பூமியான நீயும் விட்டால் -காகாசுரன் -ரக்ஷித்தாயே –
இரட்சகனான நீ விட்டிலையாகில், மஹாராஜர் வாலியை வென்றாற்போலே நானும் இந்திரியங்களை வெல்லேனோ?’-நாமி பலம் அங்கு நாம பலம் தொண்டர் அடிப் பொடி ஆழ்வாருக்கு –‘அந்த மனத்தினை அடக்குதல் காற்றை அடக்க முடியாதது போலச் செய்ய முடியாத காரியமாக நான் நினைக்கிறேன்,’ என்றான் அன்றோ? என்றது,
‘தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸூதுஷ்கரம்’-என்பது, ஸ்ரீகீதை, 6:34.
‘காற்றை ஓரிடத்தில் கட்டிவைக்கில்,’ அன்றோ மனத்தினை நியமிக்கலாவது?’ என்றபடி.இந்திரியங்களை அடக்குதல் அரிது’ என்று சொல்லுகிறாயாகில் நம் பக்கலிலே மனத்தினை வை’ என்று அருளிச் செய்த நீயும் விட்டால்’ என்னலுமாம். – மத் பர -என்று அர்ஜுனனுக்கு சொல்லி அருளினாய் –
————-
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னை – நாலாயி:3658/2-
ஆராயாதே கொடுக்கில் கொடுக்கும் அது ஒழிய ஆராய்ந்து பார்க்கில் அதுவும் அவனதாய் இருக்கும்-பிரத்யுபகாரம் பண்ணி யல்லது நிற்க மாட்டாத தசையில் -உபகாரத்தை அனுசந்தித்து ஆத்ம சமர்ப்பணத்தில் இழிவர்-ஸ்வரூபத்தை உணர்ந்து அத்தை அநு சயிப்பர் -எனது ஆவி தந்து ஒழிந்தேன் -என்னா -எனது ஆவி யார் யான் ஆர் என்றார் இ றே -மயா சமர்ப்பித்த-என்னா அதவா கின்னு சமர்ப்பயாமிதே -என்ன கடவது இ றே -பிராந்தி சமயத்தில் ஆத்மசமர்ப்பணம் போலே போலே இருப்பது ஓன்று இ றே -பண்ணின உபகாரத்துக்கு பிரதியுபகாரம் பண்ணின இதுவும் –சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக பிரதமத்தில் ஆத்ம சமர்ப்பணம் பண்ண கடவன் -ஸ்வரூபத்தை உணர்ந்தால்-அவனத்தை அவனதாக இசையும் அத்தனை -இவை இரண்டும் ஞானம் பிறந்தார்க்கு பேற்று அளவும் அனுவர்த்திக்க கடவதாய் இருக்கும் –
———-
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்று ஒன்று இலமே – நாலாயி:3666/4
அவன் கடகன்; திருவாறன்விளையே பிராப்பியம்.-பிராப்பியனானவன் வந்து எழுந்தருளி யிருக்கும் தேசம் ஆகையாலே அவனுடைய சம்பந்தத்தாலே-அத் தேசமும் பிராப்பியம் என்கைக்குத் தட்டு இல்லை.-ஓர் அறப் பெரியவன் உபாயமாய்ப் பலத்தைக் கொடுக்கிறவனாக வேணுமே:-ஆகையாலே, அவன் உபாயம்; அத் தேசம் பிராப்பியம்.-வேறு ப்ராப்ய ப்ராபகங்கள் மாறாடக் கடவோம் அல்லோம்-சரண் –
————-
அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகல் இரும் பொய்கையின்வாய் – நாலாயி:3667/1–
உன் திருவடிகளை அல்லது வேறு ஒரு பற்று உடையேன் அல்லேன் என்று. என்றது,
புறம்பே சிலர் இரட்சகராக மயங்கி இருக்குமதுவும் தவிர்ந்து,-கஜ ஆகர்ஷதே என்கிற ஸ்வ சாமர்த்தியம் கார்யகரம் ஆகாத அளவிலே உன் திருவடிகளை ஒழிய வேறு பற்று உடையேன் அல்லேன் என்கிறாள்-தான் தன்னை இரட்சகமாக நினைத்திருக்குமதுவும் தவிர்ந்து.‘மனத்தால் எண்ணிற்று’ என்கையாலே, ‘கூப்பிடுங்காரியகரமாம் எல்லையுங்கழிந்தது-அவனைப் பார்த்தால் தானும் அல்லாதாரைப் போன்று புறம்பாய்க் கடக்க நிற்கும்படியாய் அன்றோ சம்பந்தம் இருக்கும்படி?-ஆகைச் சுட்டி அன்றோ பிரணவத்தில் நடுப் பதம் கிடக்கச் செய்தே அன்றோ திரு மந்திரத்தில் நடுப் பதம் ஜீவிக்கிறதும்?-ஆகைச் சுட்டி’ என்றது, ‘தன்னுடைய இரட்சணத்தில் தனக்குச் சம்பந்தம் இல்லாமையாலே அன்றோ?’ என்றபடி.
பிரணவத்தில் நடுப்பதம், உகாரம், திருமந்திரத்தில் நடுப்பதம் ‘நம:’என்பது, ‘இத்தால் (உகாரத்தால்) தனக்கும் பிறர்க்கும் உரித்தன்று என்கிறது.’
‘நமஸ்ஸூ, ந என்றும், ம: என்றும் இரண்டு பதம்.’ ‘ம:என்கிற இத்தால் தனக்கு உரியன் என்கிறது. ‘ந’ என்று அத்தைத் தவிர்க்கிறது.’-65-
‘ஆக, நம: என்கிற இத்தால், தனக்குரியன் அன்று என்கிறது,’
ஈஸ்வரன் தனக்கே யாயிருக்கும்; அசித்துப் பிறர்க்கே யாயிருக்கும்;
ஆத்துமா தனக்கும் பிறர்க்கும் பொதுவாயிருக்கும் என்னும் முற்பட்ட நினைவு;
அங்ஙனன்றிக்கே அசித்துப்போலே தனக்கேயாக எனைக் கொள்ள வேணும் என்கிறது நமஸ்ஸால்’ –91.என்பன போன்ற சூத்திரங்களைஇங்கு அநுசந்திக்கத் தகும். முழுக்ஷூப்படி, திருமந்திரப் பிரகரணம்
———–
தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரண் இல்லை என்று எண்ணி தீர்த்தனுக்கே – நாலாயி:3670/1
தன் அழகைக் காட்டி புறம்புள்ள பற்றை யறுத்தவனுக்கே யாகத் துணிந்த பின்பு-வேறு ஒரு தஞ்சம் இல்லை என்று அனுசந்தித்து-பாஹ்ய ருசியை தவிர்த்தவனுக்கே துணிந்த திரு உள்ளத்தை உடையராய்–இன்னார்க்குத் தீர்த்தன் என்னாமையாலே தன்னினின்றும் வேறுபட்டவர்க்கு எல்லாம் தீர்த்தன் ஆயிற்று.-தீர்த்தமாவது, தான் பரிசுத்தமுமாய், தன்னைத் தீண்டினாரையும் பரிசுத்தராம்படி செய்யுமதாயிற்று.-அவனை ஒழிய இரட்சகர் இலர் என்று தெளிந்தார் ஆயிற்று.-
—————
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட்செய்வார் – நாலாயி:3671/1-
உன் அழகுக்கும் பெருமைக்கும் தகுதியான தேவிமாராவார் – – உனக்கு நிரதிசய சம்பத் ரூபையான ஸ்ரீ லஷ்மியும் -ஸமஸ்த விபூத்ய அபிமானியான பூமியும் – அதுக்கும் மேலே பின்னையும் இவர்களோடு கூட இருக்கிற நீ ஏவ -நியோயிக்க கைங்கர்யம் பண்ணுவார்கள் நித்ய ஸூரிகள்-அவனும் அவளுமான சேர்த்தியிலே எடுத்துக் கை நீட்டுவார் நித்யஸூரிகள்-கைங்கர்யம் உத்தேச்யமானவோ பாதி ஏவிக் கொள்ளுகையும் உத்தேச்யம் என்கை -க்ரியதாம் இதி மாம் வத –-மற்று -என்று துல்ய விகல்பத்தை யாயிற்று -திருமுலைத் தடத்தில் அணைந்தால் பிராட்டிமார்க்கு உள்ள இனிமை -அச் சேர்த்தியில் கைங்கர்யம் பண்ணப் பெறுகையாலே இவர்களுக்கு உண்டாம் -ரமமாணா வநேத்ர்ய -ஸ்வரூப அனுரூபமாய் இறே-ஸூகங்கள் இருப்பது -வேதம் வல்லார்களைக் கொண்டு என்கிறபடியே அவர்களும் புருஷகார பூதராய் இறே இருப்பது-
————
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை – நாலாயி:3695/2
வாளும் வில்லும் கொண்டு பின்னே செல்லுகைக்கு இளைய பெருமாள் மாத்திரம் ஒருவர் உண்டானாலோ –பின் செல்வார் மற்றில்லை -என்கிறது-பரிவரான நீர் அவற்றுக்கு அன்றோ -என்று தம்மை ஏவுகைக்காக-
—————
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால் யாவர் மற்று என் அமர் துணையே -8-4-2-–– நாலாயி:3705/4
அவதாரங்கள் போல் தீர்த்தம் பிரசாதியாதே நித்ய வாஸம் பண்ணுகிற வூர் –-சர்வ காரண பூதனானவன் -என்னுதல் -எனக்கு சத்தா ஹேதுவானவன் என்னுதல் -பிரஜைக்கு பிரத்யா சன்னையாய் வர்த்திக்கும் தாயை போலே -என் சத்தையை நோக்கிக் கொண்டு இருக்கிறவன் –-இவனை ஒழிய வேறு எனக்கு சேர்ந்த துணை இல்லை -அல்லாதார் கழுத்து கட்டி யாதல் -துணை என்று பேராய்-ஆபத்தில் கூட விழுதல் செய்யும் அத்தனை -என்கை –
——————
திகழும் மணிக்குன்றம் ஒன்றே ஒத்து நின்றான் புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே – நாலாயி:3741/4-
என் உள்ளே வந்து புகுந்து-பெறாப் பேறு பெற்றவனாய் நிலை பெற்று புகர் உடையானாய்-கால் வாங்கிப் போக மாட்டாதே விளங்கா நின்றுள்ள ஒரு ரத்ன மலை போலே நின்றான் –-விளங்கா நின்றதொரு நீல மலை போலே என்னுள்ளே நின்ற இம் மஹா குணத்தை அல்லது மற்று ஒரு புகழை ஒரு புகழாக மதியேன் —என்னுடைய இந்திரிய வஸ்யத்தையை தவிர்த்த குணத்தையும் இனி நான் ஒரு சரக்காக நினைத்து இரேன்-
——————–
பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்க – நாலாயி:3742/1-
பேறுகளில் வேறே கனத்தது ஒரு பேற்றினை-எனக்கு தந்து விட்டால்-பின்னை யார்க்கு அவன் தன்னைக் கொடுக்கும் – பின்னை இப் பொருள் கடிதாக கை கொள்வார் உளரோ-கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல் திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே –என்றது இவ் வேப்பங்குடி நீரை புறம்பு பருகுவார் உளரோ -என்றபடி-வ்யதிரேக லக்ஷணை பரம போக்யம் என்றவாறு –
———–
அ வாய் அன்றி யான் அறியேன் மற்று அருளே – நாலாயி:3743/4
அவ்விடம் அன்றி -ஸ்மிதம் பண்ணிக் கொண்டு இருந்த இருப்பு அல்லது –காந்த ஸ்மிதா-என்று ஸ்வரூபத்தை சொல்லி ஜாத ஹாஸா-என்றது இறே -அப்போதைய ஹர்ஷத்தால் உண்டான விக்ருதி என்னும் இடம் தோற்ற -மற்று உண்டான அருளை நான் அறியேன் -இதுவே அமையும் -மற்று ஒன்றும் வேண்டா என்கை –
————
அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார் – நாலாயி:3744/1
மற்று அருள் அறியேன்-வேறு ஒரு அருளும் அறியேன் –
—————-
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பிலனவும் பழுதேயாம் ––8-8-3-– நாலாயி:3750/3
விஷய ஞானமும்-பஞ்ச விருத்தி பிராணனும் -பிராணன் – அபானன் -உதானன் – சமானன் விதானன் -ஐந்து பிராணனான உயிர் –சரீரமும் –மற்று உலப்பு இல்லனவும்-மற்றும் எல்லை இல்லாதனவான மகத்து முதலான-மூலப் பகுதியின் விகாரங்களும் –மூலப் பகுதியும் –இவை எல்லாம் தாழ்ந்தவை என்னும்படியான-அறிவை நான் பெறும்படி நடத்தி –அன்வர்த்த பிரயோஜன தேர் ஊருமாரு போலே -என்றது-இவை புருஷார்த்தங்கள் அல்லாதவை என்னும் உணர்வு உண்டு -மயர்வு அற்ற மதி-அதனை நான் உடையேனாம்படி செய்து -என்றபடி-
————–
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை – நாலாயி:3781/2-
சந்நிதியில் ஸ்நேஹிக்கும் அது ஒழிய -என்னுதல் -கையிலே த்ரவ்யம் கண்ட போது அத்தைப் பற்றி ஸ்நேஹிக்குமது ஒழிய -என்னுதல் –காணாத போது மெய்யான ஸ்நேஹம் ஒன்றும் இல்லை -என்னுதல் -ஸ்நேஹமும் அதிர்க்கு எதிர் தலையான துவேஷமும் இல்லை என்னுதல் -ஸ்நேஹமும் அதுக்கு அடியான பந்தமும் இல்லை என்னுதல்-
——————–
மதுர போகம் துற்றவரே வைகி மற்று ஒன்று உறுவர் – நாலாயி:3785/2-
போக யோக்யதை போனவாறே அவர்களால் த்யஜிக்கப் படுவார்கள் -போக யோக்யதையான யவ்வனமும் கை தொடுமானமான அர்த்தமும் மாண்டாலும் இவனுக்கு ச்ரத்தை மாறாது இறே -இவன் மேல் விழ அவர்கள் நிஷேதிக்க இவன் படும் எளிமைகளை வாயாலே அருளிச் செய்ய மாட்டாமையாலே-பேதை பாலகன் அது ஆகும் -யுவனம் சொல்லாமல் -போலே –- மற்று ஓன்று -என்கிறார்-
—————-
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே – –9-1-10--நாலாயி:3790/4
உங்களுக்கு சாத்யமானவை எல்லாம் சாதித்து தருவான் அவன் ஒழிய வேறு இல்லை -சமிதை பாதி சாவித்ரி பாதி யாய் உங்கள் தலையிலும் சிறிது கிடக்கிறது அன்று -அவனே நிரபேஷ உபாயம்-உங்களுடைய பாரத்தில் நீங்கள் செய்ய வேண்டுமவை அனைத்தும்-
உங்கள்தலையில் கிடக்கின்றன அல்ல –எல்லாம் அவன் பக்கலிலே கிடக்கின்றன-
———–
ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து – 9-1-11-நாலாயி:3791/1-
அவனை ஒழிய வேறு ப்ராப்ய ப்ராபகங்கள் இல்லை என்று அத்யவசித்து-சதுரம் -என்ற பாட்டில் -மதுர போகம் -உபேயம் என்றும் -மற்று ஒன்று இல்லை -உபாயம் அவனே -என்றத்தை அத்யவசித்து –
—————
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே – நாலாயி:3804/4-
பிரதானரோடு அபிரதானரோடு வாசி யற சேதன அசேதனங்களும் அவன் அதீனமே-ப்ரஹ்மாதிகள் -ஈஸ்வரோஹம் -என்று இருக்கையும் -அவர்களை ஆஸ்ரயிப்பாருமாய் செல்லா நிற்க நீர் அவனே என்றது என் கொண்டு என்னில் -மயர்வற மதிநலம் அருள பெற்றதால் அறிந்தேன் -என்கை –
————-
ஆத்தன் தாமரை அடி அன்றி மற்று இலம் அரணே –10-1-6-– நாலாயி:3896/4-
நம்பத் தகாதவனாய் இருப்பினும்-விட ஒண்ணாத தாயிற்று திருவடிகளின் இனிமை –-வேறு சிலரை ரக்ஷகமாக யுடையோம் அல்லோம் -போக்யத்தை இல்லை யாகிலும் -அநாப்தன் ஆகிலும் புறம்பு புகல் இல்லை என்கை –குண க்ருத தாஸ்யம் மட்டும் இல்லாமல் -ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் உண்டே -அநசூயை சீதை பிராட்டி சம்வாதம் —
————-
மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனிமுதலா – நாலாயி:3897/1
இவனை ஒழிய வேறு ரக்ஷகர் இல்லை
————–
மற்றுத்தான் (2)
வண்டு அறா பூவை தான் மற்றுத்தான் கண்ட நாள் – நாலாயி:2633/2
கண்ட நாள் உபமானங்களைக் கண்டால் உபமேயம் என்று நம்மை விட்டு நெஞ்சு ஓடா நின்றது-மேகத்தை – கறுத்த மலையை -கடலை -கூரிய இருளை -வண்டு மாறாத பூவை -என்கிற வ்ருக்ஷத்தைக் கண்ட போது –காருருவம் காண்டோறும் நெஞ்சோடும்
(மாற்றுக் கார் உருவம் என்று கூட்டி அருளிச் செய்கிறார் )அனுக்தமான கருத்த பூங்குவளை நீலம் காயா இத்யாதி காணும் தோறும் என்றுமாம்-வடிவு கண்டால் இதுக்கு அவன் அன்று காண் -என்று கேட்டு அறிந்தாலும் பின்னையும் கண்ட போது எல்லாம்
விண்-தன் மேல் தான் மண் மேல் தான் விரி நீர் கடல் தான் மற்றுத்தான்
தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே – நாலாயி:3720/3,4
மற்றுத் தான்-தூணிலே வந்து தோற்றினால் போல் ஆதல் -ஆனைக்கு உதவ வந்து தோற்றினால் போலே யாதல் தோற்றவுமாம்-உன் திருவடிகளில் கைங்கர்யத்தில் ஆசை கொண்ட யான்-எனக்கு உய்விடமான திருவடிகளைக் காண –பல நாள் வேண்டும் -என்று நிர்பந்திக்கிறேனோ-என் ஆத்துமா கிடக்கைக்கு ஒரு நாள் வந்து தோற்றி அருள வேண்டும்-
———————–
மற்றது (2)
பற்று அலால் ஒர் பற்று மற்றது உற்றிலேன் உரைக்கிலே – நாலாயி:838/4
உன் திருவடிகளை அபாஸ்ரயமாக இருக்கும் அது ஒழிய எனக்கு வேறு ஒரு
அபாஸ்ரய ஸ்பர்சம் இல்லை –உறுதல் -தீண்டுதல்-உரைக்கிலே – தேவதாந்தர ஸ்பர்சம் இல்லை என்று சொல்லுகையும் எனக்கு அவத்யம் -என்கை –
—————-
மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே – நாலாயி:3340/4
சிலர் அர்த்திக்க வன்றிக்கே தம் அபி நிவேசத்தாலே அருளிச் செய்த இப்பத்தையும் அப்யஸிக்க வல்லார் கையது மீட்சி இன்றி வைகுந்த மா நகர்-நச புனராவர்த்ததே என்கிற பரமபதமும் அவர்களுக்கு ஸூலபம்-பகவத் பரத்வ ஞானமே பிரயோஜனம் போரும்-ஞான பல ரூபமான பரிமாற்றத்துக்கு ஏகாந்த தேசமும் அவர்களுக்கு ஸூலபம்
மற்றது என்று சம்சாரத்துக்கு ப்ரத்ய நீகமான தேசம் என்னுதல் -அவ்யயமாகக் கிடத்தல் -பாஹ்ய குத்ருஷ்டிகள் இல்லாமையால் உபதேசிக்க வேண்டாதே அனுபவமே யாய் செல்லும் தேசத்திலே புகப் பெறுவர்
மற்றதுவும் (1)
மால் தான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும் பேறாக கொள்வனோ பேதைகாள் நீறாடி – நாலாயி:2408/1,2
காண வல்லேனான எனக்கு- இது ஒழிய வேறு ஒன்றை பேறாக கொள்வேனோ –
—————–
மற்றவர்க்கு (1)
நீதி ஆகிய வேத மா முனியாளர் தோற்றம் உரைத்து மற்றவர்க்கு
ஆதியாய் இருந்தாய் அணி ஆலி அம்மானே – நாலாயி:1196/3,4
அதில் மந்திர ரூபமானவற்றைக் காணக் கடவராய் இருக்கிற ருஷிகளுடைய உத்பத்தி
இவற்றைச் சொல்லி எல்லாருக்கும் ஒக்க காரண பூதனாய் இருக்கிறவனே
————–
மற்றவர்க்கும் (1)
வந்திக்கும் மற்றவர்க்கும் மாசு உடம்பின் வல் அமணர் தமக்கும் அல்லேன் – நாலாயி:1582/1
பௌத்தர்களும்-வந்தே -என்றால் போலே சொல்லுவார்கள் போலே காணும் –
மற்றவன் (2)
வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர் தலத்தை ஊன்றினாய் —25- நாலாயி:776/1,2
சத்ருவானவன் –சம்பந்தம் ஒத்து இருக்க –மற்றவன் -என்கிறது -ஆஸ்ரித சத்ருவே தனக்கு சத்ரு என்னும் நினைவாலே
————–
பாதம் அடைவதன் பாசத்தாலே மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு – நாலாயி:3692/1
திருவடிகளை கிட்டுகையில் உண்டான விருப்பத்தாலே புறம்பு உண்டான வலிய பற்றுக்களை அடியோடே விட்டார்
இது வாயிற்று இத் திருவாய் மொழியில் சொல்லிற்று ஆயிற்று-என்றது-
புறம்பு உண்டான பற்றுக்களை அற்று திருவடிகளை ஆசைப் பட்டவர் அல்லர் –
மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -மூன்றாம் திருவந்தாதி -14 என்றபடியே-
திருவடிகளின் பற்றாலே -ஒரு காரணம் பற்றி வந்த புறம்பு உண்டான பற்றினைத் தவிர்ந்தவர் -என்றபடி
————–
மற்றவனோடு (1)
கன்னி தன்-பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர் – நாலாயி:2749/3
உஷை ஸ்வனப்பித்திலே கண்டவனைச் சித்ரலேகை எழுதிக் காட்டி
இவள் பக்கல் அவனை அவன் தான் அறியாமே கொடு வந்து வைத்தபடி –
——————–
மற்றவையும் (1)
மாசு_இல் குடிப்பிறப்பும் மற்றவையும் பேசில் – நாலாயி:2291/2
குற்றம் அற்ற பிறப்பும் -அநுக்தமான அவையும் -நிரவதிகமான சம்பத்தும் -அழகிய ரூப ஸ்ரீயும் -குற்றம் அற்ற பகவத் ப்ரத்யாசத்தியால் வரும் ஆபி ஜாத்யமும்–
மற்றும் சொல்லிச் சொல்லாத நன்மைகளும்-
—————–
மற்றாரும் (1)
மற்றாரும் அஞ்ச போய் வஞ்ச பெண் நஞ்சு உண்ட – நாலாயி:1891/3
அங்கு அருகும் உறவு முறையாய் இருப்பார் ஒருவரும் இன்றிக்கே லோகத்திலும் உறவு முறை இன்றிக்கே இருக்கிற மற்றுள்ளார் எல்லாரும் அஞ்சும்படியாக போய் –
———————-
மற்றும் (44)
மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும்
பலர் குலைய நூற்றுவரும் பட்டு அழிய பார்த்தன் – நாலாயி:119/1,2
தனித் தனியே எண்ணி முடியாமையாலே மற்றும் இவர்களோடு ஒக்க விகல்பிக்கலாம்படி இருப்பர் அநேகர் என்கிறார் –பதினோர் அஷோகினியானால் அதில் எத்தனை சூரர் உண்டாய் இருக்கும் – ஆகையால் சமுச்சயித்து சொல்லும் இத்தனை –
———————–
மண்ணும் மலையும் மறி கடல்களும் மற்றும் யாவும் எல்லாம் – -4 -1-9 –- நாலாயி:336/1
சர்வ ஆதாரையான பூமியும் -அது தனக்கு ஆதாரமான பர்வதங்களும் -பூமிக்கு ரஷகமாக சூழ்ந்து திரை மறிகிற சமுத்ரங்களும் -மற்றும் உண்டான சர்வ பதார்த்தங்களுமான இவை எல்லா வற்றையும்
————-
மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும் ஆகாசமும் ஆகி நின்றாய் – -4-10-6-நாலாயி:428/2
பூமியோடு ஜலமும் அக்னியும் வாயுவும் ஆகாசமும் மாயிறே ஜகத் காரண பூத பஞ்சகமுமாய் –மற்றும்-கார்ய ரூபமான ஜகத்து-ஆகி நின்றாய்-தானும் -நீ -என்கிற சொல்லுக்குள்ளே அடங்கும்படி உனக்கு பிரகாரமாக – இவற்றுக்கு பிரகாரியாக கொண்டு நின்றவனே-இத்தால்-சர்வ காரண பூதனாய்–சர்வ பிரகாரயாய் -இருக்கையாலே உனக்கு விதேயம் அல்லாதது ஒன்றும் இல்லை இறே – ஆன பின்பு இந்த யமபடரால் வந்த நலிவை நீயே மாற்ற வேணும்-
—————–
எருத்து கொடி உடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இ பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை -5-3-6– நாலாயி:458/1,2
அறிவு கேட்டுக்கு எல்லை நிலமான ரிஷபத்தை த்வஜமாக உடைய ருத்ரனும் –
காரணா கருளக் கொடியானே –சம்சார காரணமான அவித்யை போக்குகையிலே கொடி கட்டினான் என்கையாலே –இவன் கொடி ஞான ஹீனமான கொடி என்கையாலே தாமச தேவதை என்கிறது-அவனுக்கு பிதாவாய்- அமரர்க்கும் அறிவியந்து -என்கிறபடியே
ஞானம் உடைய பிரம்மாவும்-த்ரை லோக்யதுக்கு ராஜாவான இந்திரனும்–மற்றும் –-முமுஷுகளாக பாவித்து இருக்கிற தேவ ஜாதியும் –ஒரு சேதனரும் இஜ் ஜன்மம் ஆகிற வியாதிக்கு ஒவ்ஷதம் அறிவார் இல்லை-
————
மாமிமார் மக்களே அல்லோம் மற்றும் இங்கு எல்லாரும் போந்தார் –3-8– நாலாயி:531/1
ஒருராக நோற்கப் போந்த இடத்தில் வெறும் மாமியார் மக்களாய் இருப்பார்களோ –அவர்களைப் பெற்ற வர்களும் உண்டாய் இராதோ – நீ நினைத்தவர்கள் அல்ல காண் இங்குப் போந்தார்–உனக்கு கூச்சு முறை உடையார் எல்லாரும் போந்தார்கள் காண் –
—————
அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை அமரர்கள்-தம் குழுவும் அரம்பையரும் மற்றும்
தெளி மதி சேர் முனிவர்கள்-தம் குழுவும் உந்தி திசை திசையில் மலர் தூவி சென்று சேரும் – நாலாயி:652/1,2
வண்டுகள் படிந்த அரவிந்தத்தின் மேலே இருக்கிற ப்ரஹ்மாவும்-அவன் மகனான ருத்ரனும் –அவர்களோடு சஹ படிக்கப்பட்ட இந்த்ரனும் -இவர்களுடனே-அவர்கள் மூவரையும் ஒழிந்த தேவர்கள் திரளும்-ரம்பை முதலான அப்சரஸ் ஸூக்களும்-ப்ரஹ்ம பாவனையாகச் சொல்லும் சனகாதிகள் திரளும்-
—————
நல் தவத்து நாதனோடு மற்றும் உள்ள வானவர் ––87-– நாலாயி:838/2-
ஸ்வர்க்கத்துக்கு நிர்வாஹகரான இந்த்ரனோடே திரு நாபி கமலத்தை பிறப்பாகவும் ஸ்தாநமாகவும் உடையனாய் துஷ்கரமான தபச்சாலே சதுர் தச புவன ஸ்ர்ஷ்டாவுமாய் அதுக்கு நிர்வாஹகனான ப்ரஹ்மாவோடே ஹவிர்பாகபுக்குக்களான சகல தேவதைகள் – சம்ப்ரதிபன்ன ஷேத்ரஞ்ஞரான தேவர்களோடும் இந்த்ரனோடும் கூட
ப்ரஹ்ம ருத்ரர்களைச் சொல்லிற்று -அவர்களோபாதி இவர்களும் ஷேத்ரஞ்ஞர் என்று தோற்றுகைக்காக-
—————-
மற்றும் ஓர் தெய்வம் உண்டே மதி இலா மானிடங்காள் –திரு மாலை-9 நாலாயி:880/1
நான் சொல்லுகிற இவனை ஒழிய வேறு ஒரு ஆஸ்ரயணீய தத்வம் உண்டே –
ஈஸ்வரோஹம் -என்று இருப்பார் உண்டானாலும் ஆஸ்ரயணீயனுமாய் பிராப்தனமுமாய் இருப்பன் வேறு ஒருவன் இல்லை – யே த்வந்ய தேவதா பக்தா -என்று அந்யராக விறே இவன் சொல்லும் போதும் சொல்லுவது –அவர்களும் -அவர்களுக்கு அந்தர்யாமியாய் உள்ள என்னையே எம்பெருமான் அந்தர்யாமியாய் இருக்கிறார் என்ற உனர்வுடன் யாகாதிகளைச் செய்ய வேண்டும்-கட்டைக் குடியனாய் சிறிது போதைக்கு போலியாய் நின்று பின்னை விவேகித்தால் கழிக்கலாவது ஓன்று இல்லை –இவனோடு சமானமாய் இருப்பார் உண்டோ என்று கேட்கிறார் அல்லர் –கிம் -ஷேபார்த்தம் ஆதல்ஏழு உலகு மீ பாவம் செய்து அருளால் அளிப்பார் யார் -என்றால் அவன் -என்று எதிரிகளுக்கு உத்தரமாம் படி ஸூபிரசித்தமான அர்த்தம் என்கிறார் ஆதல் சம்ப்ரதிபன்னமான அர்த்தத்தை ஒருவராலும் இசையாது ஒழிய ஒண்ணாது இறே –
———
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும் – -1-1-9-நாலாயி:956/3-
மற்றும் தந்திடும்-இவனுக்கு ஹிதமாய் இவன் அறியாதனவற்றை தானே கொடுக்கும் –
இவன் கார்யம் தான் அறிந்தானோ -நாம் அன்றோ கடவோம் என்று தானே கொடுக்கும் –
கோவிந்த ஸ்வாமி தன்னைக் கண்ட அநந்தரம் நாம் கூடப் போரும் -என்று அவன்
முன்புத்தை நினைவை அறிந்து- நீ இங்கே இருந்து சிறிது நாள் அனுபவித்து வா -என்று போனான் இறே-
———
மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம் – 2-10-1—நாலாயி:1138/1
மேகங்கள் சஞ்சரியா நிற்பதாய் பூமிக்கு ஆணி அடித்தாற் போலே இருக்கிற மலைகள் ஏழும்
இதுக்கடைய அகழி போலே சூழ்ந்து கொடு நிற்கிற கடல்கள் ஏழும் இவற்றுக்கு அடைய அவகாசம் பிரதானம் பண்ணுகிற ஆகாசமும் இவற்றுக்கு ஆதாரமான பூமியும்
இவற்றுக்கு உட்பட்ட அநுக்தமான சர்வ பதார்த்தங்களும் –
( உம்மைத் தொகை –தனித்தனியே பிரதானம் உள்ளவை என்பதைக் காட்டவே )
————–
திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும்
படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னை பங்கயத்து அயன் அவன் அனைய – 4-3-3-நாலாயி:1270/1,2
மற்றும் -படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னைப் மற்றும் அனுக்தமான தேவ திர்யக் ஸ்தாவரங்களுமாய்க் கொண்டு விஸ்த்ருதனாய் நின்றவனை-தத் த்ருஷ்ட்வா ததேவ அநு பிராவிசத் -இத்யாதிப் படியே இவற்றை அடைய உண்டாக்கி இவற்றின் உள்ளே தான் அனுபிரவேசித்து அத்தாலே இவை எல்லாம் தான் என்னலாம் படி நிற்கிறவனை
தத்வமஸி ஸ்வேதகேதோ –அயமாத்மா ப்ரஹ்ம-ப்ரஹ்ம தாஸா-என்றும் சொல்லுகிறபடியே ( அப்ருத் சித்த விசேஷணமாய் )
—————
வங்கம் ஆர் கடல்கள் ஏழும் மலையும் வானகமும் மற்றும்
அம் கண் மா ஞாலம் எல்லாம் அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை – நாலாயி:1429/1,2
மரக் கலங்களை கடல்களுக்கு ஏற்றமாக சொல்வது உண்டே – மிக்கு இருக்கும் கடல்கள் ஏழும் பூமிக்கு ஆணி அடித்தால் போல் குல பர்வதங்கள் அவற்றுக்கு அவகாச பிரதானம் பண்ணும் ஆகாசமும் இவற்றை வேலியாக கொண்ட பூமிப் பரப்பு முழுவதையும் பிரளய காலத்தில் திரு வயிற்றில் வைத்து ரக்ஷித்து உள்ளே கிடந்தது தளர ஒண்ணாது என்று நிதியை விழுங்கி உமிழ்ந்து பார்ப்பாரைப் போலே உமிழ்ந்து வெளி நாட காண என்னுடைய ஸ்வாமி-
————-
மற்றும் ஓர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு – -8-10-3-நாலாயி:1740/1
தேவதாந்தர ஸ்பர்சம் உடையாரோடு எனக்கு ஒரு சம்பந்தமும் இல்லை –அவர்களை விட்டு உன் அளவில் நின்றவனும் அல்லேன் –அனந்யார்ஹ சேஷத்வம் – அது தான் ததீய சேஷத்வ பர்யந்தமாய் அல்லது இராது –அவன் திரு உள்ளம் உகக்கும் படி நடக்க வேண்டுமே –அவன் திரு உள்ளம் உகப்பே பிரயோஜனம்-இது அன்றோ நீ இங்கே வந்து இருந்து ஓதுவித்த அர்த்தம் –
———–
மாலவன் மா மணி_வண்ணன் மாயம் மற்றும் உள அவை வந்திடா முன் – —9-5-3–நாலாயி:1790/3-
பெரியவன் என்று கை வாங்க ஒண்ணாதே –மேல் விழுந்து பெற வேண்டும்படியான வடிவைப் படைத்தவன் –அவன் விபூதியில் ஆச்சர்யமான பாதக பதார்த்தங்களுக்கு எண்ணில்லை –அன்றில் -தென்றல் -கடலோசை -என்றால் போலே சொல்லுகிறவற்றுக்கு ஒரு எண்ணில்லை இறே –
———–
மண் நாடும் விண் நாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம் – நாலாயி:2008/1
பூமியும் ஸ்வர்க்கமும் தேவர்களும் அசுரர்களும் மற்றும் உண்டான பதார்த்தங்களும்
எல்லாம் கூட –உண்ணப் போகாது என்று தகைய ஒண்ணாது என்று பெரு வெள்ளம் உண்ணாத படிக்கு ஈடாக தான் விழுங்கி உய்யக் கொண்ட-
—————–
தேவரையும் அசுரரையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும் – நாலாயி:2011/1
————–
மனத்து உள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான் எனை பலரும் – -28–-நாலாயி:2209/1,2
விவஷிதர் எல்லாம் (வேத புருஷனும் வைதிகர்களும் )அயர்வறும் அமரர்கள் அதிபதி என்ன
பிரசித்தனானவன் ஜகத் ரஷணதுக்காக திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து கிருஷ்ணனாய் அவதரித்து விரோதி நிரசனம் பண்ணி வருவது போவதாக ஒண்ணாது என்று
திருமலையிலே வந்து நின்ற தேவாதி தேவன் என்றும் பரிச்சேதிக்கப் போகாத பரப்பை உடைத்தான கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறவன் –என் நெஞ்சை விரும்பி புறம்பே போகிறிலன்–
—————-
மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி மகிழ்ந்தது – நாலாயி:2213/1,2
என்னுடைய மனஸ் தத்வம் மநோ ரதித்து-அத்யவசித்து ஸ்ரீயபதி யானவனுடைய திருவடிகளைப் போற்றி மகிழ்ந்தது-மற்றும் என்றது வாக்கும் என்றபடி
———–
வகையால் மதியாது மண் கொண்டாய் மற்றும்
வகையால் வருவது ஒன்று உண்டே வகையால் – நாலாயி:2406/1,2
நல்ல உபாயத்தாலே அவனை ஒரு சரக்காக மதியாதே பூமியை வாங்கிக் கொண்டாய்-வெறும் இவ் வுபாயத்தாலே சித்திப்பது ஓன்று யுண்டோ –
அங்கன் அன்றிக்கே – ஈச்வரனான எனக்கு ஏற்கப் போருமோ என்று நினையாதே அழகைக் காட்டி மஹாபலி மதியைக் கெடுத்து இருந்த அவ்விரகாலே-மண்ணை அளந்து கொண்டு இந்த்ரனுக்குக் கொடுத்தாய் -என்றுமாம்-
—————
ஞால பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான் – நாலாயி:2516/3-
முன் சொன்ன லீலா விபூதியிலும் அந்தர் பவியாதே நித்ய விபூதியிலும் புகப் பெறாதே
தன் குணங்களில் ப்ரவணரான முமுஷுக்களுக்கு
பாஹிமாம் புண்டரீகாக்ஷ -ஜிதந்தே -8- என்கிறபடியே-தனது கடாக்ஷ விசேஷத்தாலே உபாய பூதனாய் ரக்ஷிக்குமவன்-
—————
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய் – நாலாயி:2946/2
வானோர் பலரும் தேவ ஜாதியும் முனிவரும் மந்திர சூத்ர த்ரஷ்டாக்களான மகார்ஷிகளும்
மற்றும் மற்றும் மனுஷ்ய திர்யக்குகளும் முற்றுமாய் அனுக்தமான ஸ்தாவராதிகளும்
இவை எல்லாவற்றையும் உண்டாக்குகைக்காக ஆய்-என்கிறது பஹூச்யாம் -என்றால் போலே –
——–
மாயன் என் நெஞ்சின் உள்ளான் மற்றும் எவர்க்கும் அதுவே -1-9-6- நாலாயி:2992/1
இது என்ன பெறாப் பேறு -ஆச்சர்ய பூதனானவன் என் நெஞ்சைப் பற்றி வர்த்திக்கை யாகிற இது என்ன சேராச் சேர்த்தி-மற்றும் யவர்க்குமதுவே–புறம்பு யாரேனும் இது பெற்றார் உண்டோ –
————–
மனிசரும் மற்றும் முற்றுமாய் மாய பிறவி பிறந்த – -3-5-6-நாலாயி:3170/1
மற்றும் -என்கிறது தேவர்களை -முற்றும் என்கிறது திர்யக் ஸ்தாவரங்களை-தேவர்கள் மனிதர்கள் விலங்குகள் தாவரங்கள் இவற்றின் நடுவே அவதரித்தவனாய்’ என்கிறபடியே,
மனிதர் தேவர்கள் சொல்லப்படாத விலங்கு தாவரங்கள் எல்லாமாய்.-குப்ஜா மரமாகவும் –ஆச்சரியமான பல அவதாரங்களை எடுக்குமவன். கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாய் இருந்து கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களும் பிறக்கமாட்டாத பிறவிகளிலே பிறக்கின்றானாதலின், ‘மாயப்பிறவி’ என்கிறது.-ஒரு காரணமும் இல்லாமல் காரணமுடையார்க்கும் அவ்வருகே பிறக்க வல்லவன்’ என்பதாம்.
—————
வையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய் —3-6-1- நாலாயி:3176/2
வையம்’ என்றது, பூமியை. ‘வானம்’ என்றது, மேலே உள்ள உலகங்களை. ‘மனிசர்’ என்றது, வையத்தில் உள்ளாரை-‘தெய்வம்’ என்றது, வானத்தில் உள்ளாரை. ‘மற்றும்’ என்றது, விலங்கு பறவை தாவரங்களை.-மீண்டும், ‘மற்றும்’ என்றது, அவற்றுக்குக் காரணமான ஐம்பெரும்பூதங்களை.-மீண்டும் மற்றும் என்றது, அவை தமக்கும் காரணமான மகான் முதலிய தத்துவங்களை. ‘முற்றும்’ என்றது, மேற்கூறியவை எல்லாவற்றையும்.
‘முற்றுமாய் வெளிப்பட்ட இவற்றை,
————-
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய் —–3-6-5-– நாலாயி:3180/2
எரியும் தீயோடு இரு சுடர் – பிரகாசமான சூர்யா சந்திர-தெய்வம் -ஆஸ்ரயித்து -மழை-வருணன் – -அபிமத சித்தி-மற்றும் மற்றும் முற்றுமாய் -ஆஸ்ரயிக்கும் -மனுஷ்யர்-அவர்களை நம்பிய திர்யக்குகள் –இத்தை நாம் தானே வருத்துகிறோம் சொல்லலாம் படி அவன் தோற்றம் -சரீரியாய் -ஜகதாகாரன்-
———-
புடை ஆர் பொன் நூலினன் பொன் முடியன் மற்றும் பல்கலன்––3-7-4- – நாலாயி:3190/2-
‘தேர் கடவிய பெருமான்’ என்கிறபடியே, அடியார்கட்கு ஆட்செய்கைக்கு முடி கவித்திருக்கின்றவன்; பொன் முடி – அழகிய முடி.-ஒரு நூலைப் பற்றி நின்றவர்களை அதுதானே ஒரு தலை சேர்த்து விடுகை நிச்சயம் அன்றோ?
மற்றும் பல் கலன் நடையாவுடை – வேறு விதமான திரு ஆபரணங்களையும் இயற்கையாக உடையவன்;ஒரு தலை சேர்ந்தால் பின்னை எல்லாம் வேண்டினபடி அனுபவிக்கலாம் அன்றோ? மின்மினி பறவா நிற்கிறதாதலின், ‘மற்றும் பல் கலன்’ என்கிறார்.
அன்றிக்கே,-‘அளவு இறந்தன ஆகையாலே முடியச் சொல்லமாட்டார்;
ஆசையாலே, சொல்லாதொழிய மாட்டார்; இதுவன்றோ படுகிற பாடு!’ என்னுதல்.
————
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா —-4-10-1-– நாலாயி:3330/1
தேவ ஜாதியும் அவர்களுக்கு இருப்பிடமான லோகங்களும் மனுஷ்யாதிகளான ஆத்மாக்களும் அண்டத்துக்கு அடியான மஹதாதிகளும் ஒன்றும் இல்லாத அன்று
ஒன்றும் தேவும் என்று தேவாதி காரியங்களுக்கு காரணத்திலே லயத்தை சொல்லுகிறது என்று ஒரு தமிழன் சொன்னான் –காரியத்துக்குக் காரணத்திலே இலயமாகச் சொல்லுகையாலே, காரணனாய் இருக்கிற தன் பக்கலிலே சென்று ஒன்றுகின்ற தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று’ என்னவுமாம். -நாம ரூபங்கள் இல்லாமல்
சதேவ -சத்தாகவே இருக்கும் –அழிந்து போகாதே -சதேவ சோம்யே-‘சத்து ஒன்றே இருந்தது’ என்னக் கடவது அன்றோ?
அல்லாதார் ரஷிக்கும் பொழுது கைம் முதல் -கொண்டு பண்ணுவது போலே இல்லாமல் -ஆகிஞ்சன்யம் -ஒன்றையே-பச்சையாகக் கொண்டு ரஷிக்கும் சர்வேஸ்வரன் அன்றோ இவன்-
————
வலிந்து வாது செய்வீர்களும் மற்றும் நும் தெய்வமும் ஆகி நின்றான் –4-10-5- நாலாயி:3334/2
உங்களோடு நீங்கள் ஆஸ்ரயிக்கிற தேவதைகளோடு வாசி அற ஆத்மதயா நின்றான் ஈஸ்வரன் அத்தேவதைகளுக்கு உத்கர்ஷம் சொல்லும் போதும் அவற்றினுடைய ஸ்வரூப ஸ்திதியாதிகள் இவன் அதீனம் ஆகையால் இவனுடைய பரத்வத்தை இசையை வேணும் -ருத்ரனுடைய அதி மானுஷம் பகவாதத்தாம பாவத்தால் என்றது இறே
விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்ய-அதர்வ சிரசில் ருத்ரன் தன்னுடைய சர்வாத்ம பாவம் சொல்லுகைக்கு அடி-சோந்தராதந்தாரம் ப்ராவிசத் -என்ற பரமாத்மா அநு பிரவேசத்தாலே என்று ஸ்ருதி தானே பரிஹரித்தது
அஹம்மனுரபம் ஸூ ரயச்ச-மத்தஸ் சர்வம் அஹம் சர்வம் -என்கிற உபாசகர் பக்கலிலே பரத்வ சங்கை பண்ணினால் யாயிற்று -ருத்ரன் பக்கல் பரத்வ சங்கை பண்ணலாவது
————–
விளம்பும் ஆறு சமயமும் அவை ஆகியும் மற்றும் தன்-பால் – நாலாயி:3338/1
பேச்சே போக்கி உள்ளீடான அர்த்தம் ஒன்றும் இன்றிக்கே இருக்கிற பாஹ்ய சமயங்கள் ஆறும் -பிரமாணம் அனுகுணம் சுஷுக தர்க்கங்களாலே யுக்தி சாரமேயாய் இருக்கை-மற்றும் அவற்றோடு ஒத்த குத்ருஷ்டிகளும் -தமோ நிஷ்டாஹி தாஸ் ஸ் ம்ருதா
தன்பால்-அளந்து காண்டற்கு அரியன் ஆகிய-தன்பக்கல் வந்தால் அவர்கள் இல்லை என்கைக்கும் -இவ்வளவு என்று பரிச்சேதிக்கைக்கும் ஒண்ணாத படி இருக்கும் -இல்லை என்னும் போது இன்னது இல்லை என்ன வேணும் -அதாகிறது இவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகள் பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிஸால்யமாய் இருக்கும் என்கை –
—————-
உறுவது ஆவது எ தேவும் எ உலகங்களும் மற்றும் தன்-பால்–-4-10-10- – நாலாயி:3339/1-
எல்லா தேவதைகளும் அது தேவதைகளுக்கு போக ஸ்தானமான எல்லா லோகங்களும் -மற்றும் உண்டான சேதன அசேதனங்களும்-
————–
வானே மாநிலமே மற்றும் முற்றும் என் உள்ளனவே – 5-1-2--நாலாயி:3342/4-
யஸ் யைதே தஸ்ய தத்தனம் -என்கிறபடியே விபூதியும் தான் இட்ட வழக்கு ஆயிற்று –ச விபூதிகனாய்க் கொண்டு உள்ளே புகுந்தான் – வானே மா நிலமே -பஞ்ச பூதங்களுக்கும் உப லக்ஷணம்
மற்றும் -அவற்றின் கார்யமான அண்டங்களும்
முற்றும் -நித்ய விபூதியும்
என்னுள்ளனவே.-நித்ய ஸூ ரிகள் செல்லாமை பார்த்து அங்கே இராதே லீலா விபூதி அழிந்த படி பார்த்து இங்கே புகுந்தான்-உபய விபூதியில் உள்ள நிர்வாஹமும் என் பக்கலிலே இருந்து பண்ணும் அத்தனையாய் விட்டது-
—————-
உரவு நீர் பொய்கை நாகம் காய்ந்ததும் உட்பட மற்றும் பல – நாலாயி:3484/2
வலியை யுடைத்தான நீர் -விஷத்தால் பாதகமான வலி யாதல் -முது நீர் ஆகையால் வலிய நீர் ஆதல் —உரவு-விஷம் என்னுதல் -வலிய என்னுதல் –
நாகங் காய்ந்ததும் -பெண்களோட்டை ஜலக் க்ரீடைக்கு விரோதி என்று காளியனை ஓட்டினதுவும் –
உள்பட மற்றும்பல-இவை முதலான சேஷ்டிதங்களுக்கு தொகை இல்லை
பிறந்த வாற்றில் பல ஹானியால் சொல்ல மாட்டிற்று இலர்
இங்கு ப்ரீதி பிரகர்ஷத்தாலே தரித்து சொல்ல மாட்டாது ஒழிகிறார்-
—————
வாச பூம் குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல –6-4-2-– நாலாயி:3485/2-
பசு மேய்த்த விடாய் தீருவது நப்பின்னை பிராட்டி தோளோடு அணைந்தாயிற்று -நப்பின்னை பிராட்டி முக்தமான அழகிய திருக் கண்களாலே குளிர நோக்கி அழகிய திருக் குழலில் பரிமளத்தாலே திருமேனியை வாசிதமாக்கி -பசு மேய்த்து வந்த சிரமம் தீர -பர்த்தாராம் பரிஷஸ் வஜே–என்கிறபடியே அணைக்க அவள் தோளோடு கலந்ததும்
மற்றும் பல-மற்றும் உண்டான பிராட்டிமாரோடு கலந்த படி
——————–
உயர் கொள் சோலை குருந்து ஒசித்ததும் உட்பட மற்றும் பல ––6-4-6– நாலாயி:3489/2-
ஓங்கி தழைத்து இருந்துள்ள குருந்தை முறித்ததுவும் -தர்ச நீயமான ஸ்தாவர வேஷத்தைக் கொண்டு வந்த மஹா ஸூரனை முடித்ததுவும்-உட்பட மற்றும்பல கன்றாயும் விளாவாயும் வந்த அஸூரர் முதலாக -வேறும் நிரசித்தவை அநேகங்கள் -இந்த திர்யக் ஸ்தாவரங்களை நித்ய ஸூ ரிகள் கைங்கர்யத்துக்காக பரிக்ரஹிப்பார்கள் -இங்கு பிராதிகூல்யத்துக்கு உறுப்பாக கொண்ட வடிவுகள் இ றே -இதுக்கு பாப பிராசர்யம் அடி -அதுக்கு இச்சை அடி –
————
வாணன் ஆயிரம் தோள் துணித்ததும் உட்பட மற்றும் பல -6-4-8– நாலாயி:3491/2-
அபிராப்த விஷயத்தில் அஞ்சலி பண்ணினத்துக்கு பிராயச்சித்தம் பண்ணுவாராய்ப் போலே பாணனுடைய பாஹு வனத்தை சேதித்ததும் -உஷை பித்ருஹீனை யாகாமைக்காக இறே கொல்லாது ஒழிந்தது-உட்பட மற்றும்பல
பாணனை ரக்ஷிக்கிறேன் -என்று ஏறட்டுக் கொண்டு பசலும் குட்டியும் தானுமாக முதுகிட்டுப் போன படியும் -கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜானோ த்வாம் புருஷோத்தமம்-என்று முதுகிலே அம்பு தைத்த பின்பு சர்வேஸ்வரனாக அறிந்த படியும் -வேறும் அநேகம் –
————
உலக்க தேர் கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும் பல –6-4-9- நாலாயி:3492/2-
தமஸ்ஸூ க்கு அவ்வருகே செல்ல முடியாத தேரைக் கொண்டு சென்ற ஆச்சர்யமும் —உலக்க – முடிய / கார்ய ரூபமான தேரைக் காரண த்திலே கார்ய ஆகாரம் குலையாமல் நடத்தின ஆச்சர்யம்-உட்பட மற்றும்பல-வைதிக புத்திரர்களை இத்தேசத்தில் நின்றும் கொடு போருகையும்-போன செவ்வியில் கொடு வந்து சேர்க்கையும் -பிரதாசாவனத்துக்கு மாத்யந்தினசவத்துக்கு முன்னே இது அடங்கச் செய்கையும் –
———-
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன் – நாலாயி:3602/3
அதற்கு மேலே மழை பெய்யக் கடவதான மேகம்,-மழையாலே உயிர் வாழக் கூடிய ஆத்துமாக்கள், மழையைத் தோற்றுவிக்கின்றவர்களான தேவர்கள், மற்றும் உண்டான திரியக்குத் தாவரங்கள் முதலானவைகள்.
———–
கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ – நாலாயி:3605/1-
ஒருவன் ஒன்றைக் கற்பது -அப்போதை இனிமைக் காதல் -விபாகத்தில் புருஷார்த்தத்தை தரும் என்றாதல் இ றே -பிரியவாதீச பூதா நாம் என்றும் -ராமோ ராமோ ராம இதி -என்றும் -லோகா நாம் த்வம் பரோ தர்ம -என்றும் -ராமோ விக்ரஹவான் தர்ம -என்றும் பிரிய ஹிதங்கள் இரண்டும் ஒரு தலைத்த விஷயமாய் -நிலாத் தென்றல் சந்தனம் தண்ணீர் போலே பரார்த்தமாய் இருக்கிற விஷயத்தை ஒழிய -அதிகரிப்பார் புறம்பேயும் ஒன்றை அப்யசிப்பாரோ -அநர்த்த கரம் என்றாலும் விட ஒண்ணாத பிரிய விஷயமாய் -அபிரியம் ஆனாலும் விட ஒண்ணாத படி பத்த்யமான இவ்விஷயத்தை ஒழிய வேறு ஒன்றை அப்யஸிக்கக் கடவதோ –மற்றும் என்று -தேவதாந்தரங்களை சொல்லுகிறது அன்று -பரத்வத்தையும் அவதாரங்களையும் சொல்லுகிறது -பாவோ நான்யத்ர கச்சதி –
————-
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ – நாலாயி:3607/1-
செவி யுடையார் கேசி ஹந்தாவினுடைய கீர்த்தியை ஒழிய வேறு ஒன்றைக் கேட்பரோ -பிரிய ஹிதங்களுக்கு ப்ரகாசகமாய் இருபத்தொரு சப்தத்தை கேட்க வேணும் என்று இருப்பார் –கற்கை யாகிறது -சாஸ்திரத்தில் அர்த்தத்தை வுயுத்பத்தி பண்ணுகை -கேட்க்கை யாகிறது அறிவுடையார் பக்கலிலே பிரிய ஹிதங்களை கேட்டு அறுதி இடுகை
மற்றுங் கேட்பரோ?-ராமாவதாரத்தில் இழிவார்க்கு அவர் பக்கல் உத்தேச்ய புத்தியைக் கொண்டு இழிய வேணும் -ப்ராதிகூல்யமே பரிகரமாக தன்னை கொடுத்த அவதாரம் இறே இது -வெளிச்சிறந்த காலத்திலே இறே ராமாவதாரம் -கலிகாலம் பிரத்யா சன்னமாய் இருக்கிற காலத்திலே இறே கிருஷ்ணாவதாரம் –
——————
துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவும் மற்றும்
படைத்த எம் பரம மூர்த்தி பாம்பு_அணை பள்ளிகொண்டான் – நாலாயி:3908/1,2
சம்ஹரிக்கை -அப்யய பூர்விகை யாய் இறே ஸ்ருஷ்ட்டி இருப்பது -கிருஷ்ண ஏவ ஹி லோகா நாம் —லோகத்தையும் தேவ ஜாதியையும் மற்றும் உண்டான ஆத்மாக்களையும் யுண்டாக்கினவன் -இவை அதிப்ரவ்ருத்த மான வன்று சம்ஹரித்து -பின்பு புருஷார்த்த உபயோகியான கரணங்களைக் கொடுத்து ரஷித்த-வெம் பரம மூர்த்தி-ஆச்ரித பவ்யனான சர்வேஸ்வரன் –
————
மற்றுமாய் (2)
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய் – நாலாயி:3482/2
சுழல்வன நிற்பன -ஸ்தாவர ஜங்கமங்கள்-மற்றுமாய் -அநுக்தமான சர்வமுமாய்-சொல்லப்படாதன எல்லாமாய். ‘மற்றும்’ என்றது சொல்லப்படாதனவற்றைத் தழுவுகின்றது.-
அநுக்த சமுச்சயம்–அவை அல்லனுமாய்-தத் கத தோஷைரஸம்ருஷ்டனாய் இருக்கை-அவற்றுக்கு அந்தர்யாமியாய் நிற்கச்செய்தே அவற்றின் தோஷங்கள் தட்டாதபடி நிற்பான் என்று-மூவுலகங்களுமாய் அல்லனாய்-6-3-6- சொல்லப்பட்டதே அன்றோ; இனி, இங்கு என்? என்னில்,-அவற்றிற்கு வரும் அவஸ்தைகளை யுமுடையனல்லனாய் நிற்பன் என்பதனைத் தெரிவித்தபடி.-அவை: சேதனனிடத்தே உள்ள சுக துக்கங்களும், அசேதனத் திடத்தேயுள்ள வளர்தல் முதலானவைகளுமாம்.-அகர்ம வச்யத்வம் அங்கே சொல்லி – அவற்றுக்கு வரும் அவஸ்தைகள் – பாப புண்ய ரூப கர்மங்களுக்கு வரும் சுக துக்கங்களும் அல்லன் என்கிறார் இங்கே–
———–
தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் – நாலாயி:3638/3
காரியங்களில் வந்தால் மாதா உபகரித்த உபகாரம் அன்று இறே தமப்பன் உபகரிப்பது -அவன் உபகரிப்பதும் அன்று இறே பிரஜைகள் உபகரிப்பது -அவர்கள் உபகரிக்குமது அன்று இறே மற்றை பந்துக்கள் உபகரிப்பது –-முற்றுமாய்-அநுக்தமாய் ஸ்வ சம்பந்தியாய் உள்ள சேதன அசேதனங்களுக்கு நிர்வாஹகன் ஆனவனே –
—————
மற்றே (2)
ஏசு அறும் நும்மை அல்லால் மறுநோக்கு இலள் பேர்த்து மற்றே – நாலாயி:3535/4-
கிலேசப் படா நின்றாள் என்னுதல் -பிறர் ஏசும் எல்லை கடந்தாள் என்னுதல் -நும்மை அல்லால் மறு நோக்கு இலள் பேர்த்து மற்று -என்று கீழில் பாட்டோடு சேரக் கடவது -நும்மை அல்லால்-பேர்த்து -மற்று மறுநோக்கிலள் -உம்மை ஒழிய வேறு குளிர பார்ப்பார் இல்லை -சகீ பிஸ் ஸூ க மாஸ்வ -என்று குண கீர்த்தனம் பண்ணி ஜீவிக்கும் எல்லையும் கழிந்தது –இப் பாசுரத்திற்கு முடிபு-சென்ற பாசுரத்திலே யாதல், மேல் வரும் பாசுரத்திலே யாதல் கொள்க.-தமிழர், வினை, எச்சமாய்க் கிடக்கிறது என்று சொல்லுவர்கள். என்றது,
‘மறு நோக்கிலள், பேர்த்து மற்று, என்று சொல்லுவாய்’ என்னுமித்தனையும் இட்டுச் சொல்ல வேண்டும் என்றபடி.-
———–
புரவு ஆர் கழனிகள் சூழ் திருப்புலியூர் புகழ் அன்றி மற்றே – நாலாயி:3767/4
வேத கோஷமும் வேதார்த்த விசார யுக்தர் கோஷமும் -அலர்ந்த தாமரை பொய்கைகளாலே அலங்க்ருதமான வயலுமான திருப் புலியூர் புகழ் அன்றி மற்று பரவாள் இவள் நின்று இராப்பகல்-அவ் ஊரில் உள்ளார் உடைய வேத ஒலியும்-வேத விசாரம் செய்கின்ற ஆரவாரமும்-அவ் ஊரில் இனிமையுமே அன்றோ இவள்-அடைவு கெடச் சொல்லா நிற்பது-
————–
மற்றேல் (1)
மற்றேல் ஒன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே – நாலாயி:1036/2-
ப்ராப்திக்கு ஈடான உபாய விஷய ஞானம் இல்லை –
அஹமஸ்ம் யபராதாநாம் ஆலய -அகிஞ்சனன் அகதி –ப்ரார்தனா மதி சரணாகதி
————–
மற்றை (11)
மற்றை கண் கொள்ளாமே கோல் கொண்டுவா மணி_வண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:178/4
ஆன பின்பு சொன்னது செய்யாமையாலே உன்னைச் சீறி மற்றைக் கண்ணையும் பரியாதபடியாக விரைந்து கோல் கொண்டு வா-நீல ரத்னம் போன்ற வடிவை உடையவனாய் ஸ்வா தந்த்ர்யத்தில் பூர்ணனானவனுக்கு ஓர் கோல் கொண்டு வா –
———————
மற்றை நம் காமங்கள் மாற்று ஏலோர் எம்பாவாய் – நாலாயி:502/8-
நாங்கள் எங்களுக்கு என்று இருக்கிற அதுவும்-நீயும் -இவர்களுக்கு என்று இருக்கும் அதுவும்-இவை இரண்டும் விரோதி யாகையாலே அத்தைத் தவிர்த்து தர வேணும் -என்கிறார்கள் –ஆட் கொள்ளும் இடத்திலே எங்களுக்கு ஒரு இந்திரிய சாபல்யம் நடக்கும் –
அந்த ஸுந்தர்ய ரூபமான அந்தராயத்தையும் பரிஹரிக்க வேணும் – (நடை அழகைப் பார்க்காமல் கைங்கர்யம்-அப்பாஞ்ச ஜன்யம் )ஸ்வரூபத்துக்கு விரோதியான அஹங்கார கர்ப்பமான அடிமையும் அபுருஷார்த்தம் இறே-நாங்கள் செய்கிற அடிமை கண்டு நீ உகந்தால்- அவ் வுகப்பு கண்டு உகக்கமது ஒழிய போக்த்ருத்வ பிரதிபத்தியும் மதீயத்வ பிரதிபத்தியும் போஜனத்துக்கு க்ரீமி கேசங்கள் போலே பொகட வேண்டும்படி
விரோதமாய் இறே இருப்பது – அந்த விரோதிகளையும் தவிர்த்து தந்து அருள வேணும் என்கிறார்கள் –மற்றை நம் காமங்கள் மாற்று -என்கிறதாலே பல விரோதியைக் கழிக்கிறது
————–
திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர் மிசை மேல் அயனும் வியப்ப – நாலாயி:1118/1
சம்ஹாரத்துக்கு இவன் கடவன் ஆனால் தான் சிருஷ்டிக்க கடவனாய் இவனுக்கும் ஜனகனாய் திரு நாபி கமலத்திலே அவயவதாநேந பிறந்து இதர விசஜாதீயமான ஜென்மத்தை உடையன் ஆகையாலே அஜன் என்று சொல்லப்படுகிற ப்ரஹ்மாவும்-
———-
கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொல் பொருள் தானும் மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள்செய்து நீண்ட – நாலாயி:1122/1,2
வேதத்தில் உபரிதன பாகத்தையும் வேதாந்த ஸூத்ரங்களையும்-பூர்வ பாகமும்-அவற்றை உப ப்ரும்ஹிக்க கடவ இதிகாசங்களும்-கல்ப ஸூத்தரமும்-பதங்களை நிர்வஹித்துக் கொடுக்கக் கடவ வ்யாகரணமும்-அர்த்த விசாரம் பண்ணக் கடவ மீமாம்சையும்-இவற்றில் சொல்லுகிற சாதனங்களை அனுஷ்டித்தாருக்கு ப்ராப்யமாக சொல்லுகிற பூமிகளும்
————-
ஒரு மகள் ஆயர் மடந்தை ஒருத்தி நில_மகள் மற்றை
திருமகளோடும் வருவான் சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1176/3,4
கண்ணனை சொல்வதால் இங்கே நீளா தேவி முதல் மற்றை திரு மகள் கடைசியில் காளமேகம் போலே இருக்கும் வடிவையும் கையில் திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் உடையனாய் பெரிய மிடுக்கை உடைய ப்ரஹ்மாதிகள் சூழ்ந்து
சேவிக்க சப்த லோகத்தில் உள்ளாறும் திருவடிகளில் விழுந்து ஏத்த பிராட்டிமார் மூவரோடும் கூட வருமவன்-
—————
மற்றை அமரரும் எல்லாம் வந்து எனது உச்சியுளானே – -1-9-10–நாலாயி:2996/4
ஒரு கலையோடு கூடிய சந்திரனைச் சடையிலே தரித்துச்-ஸூக பிரதானனாய் -ஸூகத்தில் மிகுந்தவனாய் இருக்கிற சிவபெருமானும்-அவனுக்குத் தந்தையான பிரமனும்.-தேவர்களை மெய்க்காட்டுக் கொண்டிருக்கிற இந்திரனும்.-மற்றும் உண்டான தேவர்களும் எல்லாம்-தேவர்கள் தன்னைப் பெறுகைக்கு இப்படித் தடுமாறா நிற்க, என்னைப் பெறுகைக்கு அவற்றை எல்லாம் தான் பட்டு வந்து, என் உச்சியிலுள்ளவன் ஆகின்றான்.
இராசாக்கள் அந்தப் புரத்தில் ஒரு கட்டினின்றும் மற்றைக் கட்டு ஏறப் போகா நிற்க, அந்தரங்கர் நடுவே முகங்காட்டித் தம் காரியங்கொண்டு போமாறு போன்று,
இறைவன் இவர் திரு நெற்றியினின்றும் திரு முடி ஏறப் போகா நின்றால் பிரமன் முதலான தேவர்கள் நடுவே முகங்காட்டித் தங்கள் காரியம் கொண்டு போவர் ஆதலின்,
‘அமரரும் எல்லாம் தொழா நிற்க வந்து எனது உச்சிளானே-என்று அருளிச் செய்கிறார் –
————–
கரும் சோறும் மற்றை செம் சோறும் களன் இழைத்து என் பயன் – நாலாயி:3289/2
தாமஸ அன்னமும் -அத்தோடு தோள் தீண்டியான ராஜஸ அன்னமும்-இராஜச தாமச தேவதைகளுக்கு அவ்வத்தெய்வங்கள் வந்து தங்கியிருக்கும் இடங்களிலே
இராஜசமாயும் தாமசமாயுமுள்ள சோற்றினைக் கொண்டு இடச் சொல்லுகிற முறையிலே இட்டால் என்ன பிரயோஜனம் உண்டு? பிரயோஜனம் இல்லாமை மாத்திரமேயன்று; அழிவோடே முடியும்.-
————
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றை தெய்வம் நாடுதிரே – நாலாயி:3330/4-
புத்ரன் விமுகன் ஆனாலும் முகம் பார்க்குமோ என்ற பெற்ற மாதா நசை பண்ணி நிற்குமா போலே தன்னை உண்டாக்கின உபகாரகன் சந்நிஹிதனாக நிற்க –ஆசயா யதிவா ராம -புனஸ் சப்தா பயேதி தி -என்றால் போலே நாம் கொடுத்த கரணங்களைக் கொண்டு –
ந நமேயம் என்னாதே வணங்குதல் விலக்காது ஒழி தல் செய்வார்களோ -என்று அவசர பிரதீஷனாய் நின்ற படி-லோகம் அடங்க கும்பிடுவாரும் கும்பீடு கொள்வாருமாய் ஆழி மூழையாய் செல்லா நிற்க -இவர் ஒருத்தரையும் காண் கிறிலர் யாயிற்று அப்ரஹ்மாத்மகமாய் இருபத்தொரு வஸ்து இல்லாமையால்
நாடுதிரே –தேடித் திரியும் அத்தனை ஒழிய ஆஸ்ரயணீயரைக் கிடையாது
ப்ராப்தனாய் ஸூ லபனாய் ஸ்வாராதனான இவனை விட்டு -அப்ராப்தமாய் துர்லபராய் துராதரராய் ஆராதித்தாலும் பலிப்பது ஓன்று இன்றிக்கே இருக்கிறவர்களை தேடித் திரிகிறிகோளே -என்று ஷேபிக்கிறார்-
—————-
மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றை தெய்வம் விளம்புதிரே – -4-10-8-நாலாயி:3337/4
சர்வாதிகனாய் -ஜகத் காரண பூதனானவன் திரு நகரியிலே ஸூ லபனாய் நிற்க
மிக்க– ஆஸ்ரயண காலத்தில் ஆஸ்ரயிப்பித்துக் கொண்டு பல வேளையில் வேறு ஒருவன் வாசலிலே கொடு போக வேண்டும் படி குறைவாளன் இன்றிக்கே இருக்கை –
மற்றைத் தெய்வம் -நாரங்களிலே ஒன்றை ஈஸ்வரன் என்று பற்றவோ -பிரகாரமாய் கொண்டு அல்லது வஸ்துத்வம் இல்லாதவற்றை பிரகாரியாக பிரமிக்கிறி கோள் இறே
விளம்புதிரே!–இவனை ஒழிய வ்யவஹார யோக்யமாய் இருப்பது ஓன்று இல்லை என்று இருக்கிறீர் –
————–
வான் உயர் இன்பம் எய்தில் என் மற்றை நரகமே எய்தில் என் எனினும் – -–8-1-9–நாலாயி:3679/2-
சம்சாரத்தில் உண்டான சேதன அசேதனங்களுக்கும் என்னோபாதி உன்னோட்டை பிராப்தி உண்டு -நான் நீ இட்ட வழக்காய் இருக்கிறவோபாதி சகல பதார்த்தங்களும் நீ இட்ட வழக்கு –
யானால்-அர்த்த ஸ் திதி இதுவான பின்பு –வானுயரின்பம் யெய்திலென்-இச் சேஷத்வ ஞானத்தோடு திரு நாட்டிலே போய் நிரதிசய ஆனந்தத்தை பெற்று இருக்கில் என் -உயர் இன்பம் -நிரதிசய ஆனந்தம் –மற்றை நரகமே யெய்திலென் –ஸூ கத்துக்கும் சேஷத்வ ஞானத்துக்கும் எதிர்தலையான சம்சாரத்திலே இருக்கில் என் -சேஷ வஸ்து வானால் சேஷியினுடைய எல்லைக்கு உள்ளே -அவன் செய்தபடி செய்கிறான் -என்று இருக்குமது ஒழிய அவனை நிர்பந்திக்கக் கடவன் அல்லன் என்பதோர் அர்த்தமும் உண்டு-
————–
வடிவு இணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல் அடியை – நாலாயி:3801/3
இவ்வடிவில் வந்தால் ஒப்பு இல்லை -பகவத் தத்துவமும் ஒப்பன்று -தஞ்சேயம் அஸி தேஷணா-என்று ஏற்றமாய் நின்றது இறே-மற்றை நிலமகள்-அப்படிப்பட்ட நில மகள் -ஏவம் பூதை -என்னும் அத்தனை-அவர்களும் திருவடிகளைப் பிடிக்கப் புக்கால்-பூத்தொடுவாரைப் போலே-கன்றி விடுமோ -என்று கூசித் தொட வேண்டும்படி ஆயிற்று மிருதுத் தன்மை இருப்பது –
——————–
மற்றையார் (2)
பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே – நாலாயி:666/4-
அவர்க்கு பக்திமான்களாய் பக்தி கார்யமான பித்தேறித் திரிகிறவர்கள் -பித்தர் அல்லர்கள் –மற்றையார் முற்றும் பித்தரே–இந்த பக்தி கார்யமான பித்தர் அல்லாதவர்கள் அடைய பித்தரே –இக் கலக்கம் இல்லாதே தெளிந்து இருக்கும் ஸ்ரீ சனகாதிகளே யாகிலும் அவர்களே பித்தரே –
————-
மற்றையார் ஆவாரும் நீ பேசில் எற்றேயோ – நாலாயி:2589/2-
ஒரு பாத்ரத்திலே இட்டு வைக்குமவை போலே தரிக்கும் அளவே இறே இவளது
உத்பாதகன் பிதாவே இறே ஹிதமே சிந்தித்து இருக்கும் பிதாவும் எனக்கு நீயே-மற்றையர் யாவாரும் நீ – ஸரீரம் ஏவ மாதா பிதரவ் ஜனயத (ஆபஸ்தம்ப ஸூத்ரம் )-என்று இருவரும் கூட சரீரத்துக்கு உத்பாதகர் அத்தனை இறே ஆத்மாவுக்கு நன்மை பார்க்கும் ஆசார்யனாயும் நீயே-மாதா நாராயண பிதா நாராயண-மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ அதிதி தேவோ பாவ-கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத தாயும் தந்தையும் நீயே-அன்னையாய் அத்தனாய் -ஆச்சார்ய பரம்-உத்க்ருஷ்ட ஜென்மம் ஞானப்பிறவி-அன்னை குடி நீர் அருந்தி -ஆர்த்தி பிரபந்த பாசுரம் -நமக்காக தாமே சரணாகதி ஸ்வாமி –
—————-
மற்றையார்க்கு (1)
மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யல் ஆமே – நாலாயி:2050/4
அவனூரான உலகம் ஏத்தும்-திருக் கண்டியூர்-கோயில்-திரு மெய்யம்-திருக் கச்சி
திருப் பேர்-திருக் கடல் மல்லை –என்றும்-மண்டினார் உய்யல் அல்லால்–அவன் உகந்து அருளின இத் திருப் பதிகளிலே நெஞ்சு மண்டினவர்கள் உய்யல் அல்லது-மற்றை யார்க்கு உய்யலாமே –அல்லாதார்க்கு உஜ்ஜீவிக்க விரகு உண்டோ –
————–
மற்றையோர்க்கு (1)
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை-தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம் – நாலாயி:1072/2
நெஞ்சுக்கு இனிய துணையாய் இருக்கிற பதுமத்தலர் மகள் உண்டு – தாமரைப் பூவை உத்பத்தி ஸ்தானமாக உடைய பெரிய பிராட்டியார் அவளுக்கு இன்பனானவன் –எல்லார்க்கும் ஸ்ப்ருஹணீயையாய் இருக்கிற பெரிய பிராட்டியார் தான் -அகலகில்லேன் -என்று விரும்பி வர்த்திக்கும்படி அவளுக்கு ஸ்ப்ருஹணீயனானவன் –சர்வேஸ்வரனான தனக்கும் கூட பொறைக்கு உவத்தாய் இருக்கிற பூமிப் பிராட்டியாருக்கு வல்லபனானவன் –
(புவிக்கு இல்லாமல் புவி தனக்கும் என்பதால் -பொறுமைக்கு இவள் சம்பந்தமே காரணம் )தன்னையே துணையாக உடையாளான ஆயர் பாவை உண்டு -நப்பின்னை பிராட்டி –
அவளுக்கு ஸ்வாமி யானவன் – (சர்வேஸ்வரன் -நீர் வார்த்து கொடுத்துப் பெற்றான் -இவளையே -ஆகவே தன் துணை இவளுக்கு விசேஷணம் )இப்படி இருக்கையாலே
அல்லாதார் எல்லார்க்கும் வலிய துணை யானவன் –
—————
மற்றொருத்திக்கு (1)
மருவி மனம் வைத்து மற்றொருத்திக்கு உரைத்து ஒரு பேதைக்கு பொய் குறித்து – நாலாயி:700/2
நெய்தது இருண்டு பூவை உடைத்தாய் இருக்கிற மயிர் முடியை உடையாள் ஒருத்தியை –
தான் அவள் மயிர் முடியில் தோற்றமை தோற்றச் சிறாங்கணித்துப் பார்த்து —
நேராக பார்த்தான் ஆகில் இறே போது நோக்கு என்று இருக்கலாவது –இவள் பக்கலிலே கண் செல்லா நிற்க வேர் ஒருத்தி பக்கலிலே – அவளை அல்லது அறியோன் என்னும் படி மனஸை அங்கே வைத்து –மனஸ் ஸூ அவள் பக்கலிலே இருக்கச் செய்தே வேறே ஒருத்திக்கு அடியேன் -என்று சொல்லி –சொன்ன வார்த்தையை விஸ்வசித்து -அகவாய் அறியாதாள் ஒரு முக்தைக்கு இன்ன இடத்திலே போய் நில்லு – நான் அங்கே வருகிறேன் என்று இடம் குறித்து-மயிர்முடி அலைதிகுலைதியாய் பேணாதே போக யோக்யதையாய் இருப்பாள் ஒருத்தி யோடு சம்ச்லேஷித்து-அதுவும் மித்யா பரி ரம்பணம் -அதாவது -பொய்யே தழுவுகை –
—————
மற்றொருவர் (1)
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே – நாலாயி:3218/4
காலம் என்னும் ஒரு பொருள் உள்ள அளவும் வேறு சிலரைக் கவி பாடத் தகுமோ?
‘நன்று; இப்படிப் பலத்தது அவன் சன்மம் கழிப்பான் எண்ணி ஒன்றி ஒன்றி உலகம் படைத்ததே காரணமாம் ஆகில்,
பின்னை எல்லார்க்கும் பலிக்க வேண்டாவோ?’ என்னில், இறைவனுடைய நினைவு தானும் சென்று சென்று ஆகிலும் என்பதே அன்றோ?
ஒரு நாளிலேயே பலிக்குமது என்பது இன்றே? ஆகையால், பலிக்கப் பலிக்கக் காணுமித்தனை. இனி, ‘என்றும் என்றும் உலகம் படைத்தான்
கவி ஆயினேற்கு மற்று ஒருவர் கவி ஏற்குமே,’ என்று கூட்டி, ‘இனி, மேல் பலவாக உள்ள காலம் எல்லாம் இச்சரீரமுள்ளதனையும்
இதுவே வாழ்க்கையாக இருந்து, மேல் ‘மேல் சொல்லப்போகிற சாமத்தைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்றும்,
‘அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம்’ என்றும் பாடப் புகுகிற எனக்கு, பகவானுக்கு வேறுபட்டிருக்கிற பொருள்களைப் பற்றிக்
கவி பாடுகை போருமோ?’ என்னலுமாம்.
வேறு சிலர்க்கு நான் கவியாகத் தகுமோ?’ என்னுதல்.
அன்றிக்கே, ‘வேறு சிலர் கவியிலே நான் சேர்தல் தகுமோ?’ என்னுதல்
கவி ஆயினேற்கு மற்றொருவர் கவி ஏற்குமே?’ என்பதற்கு இரு வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்: முதற்பொருள், ‘இறைவனைப்
பாடுதற்கு அமைந்த புலவனாகிய யான் வேறு சிலரைப் பாடும் புலவனாதல் கூடுமோ?’ என்பது. இப்பொருளில் ‘கவி’ என்பது
ஆழ்வாரைக் குறித்தது. இதனையே, ‘அவன் எதிர் சூழல் புக்கு’ என்று தொடங்கிச் சிலரைக் கவி பாடத் தகுமோ?’ என்பது முடிய
அருளிச்செய்கிறார்.இரண்டாவது பொருள், ‘அவனைப் பாடுகின்ற பாடல்களைக் கொண்டு வேறு சிலரைப் பாடுதல் கூடுமோ?’ என்பது.
இப்பொருளில் ‘கவி’ என்பது,பாடல் அல்லது பிரபந்தம் என்பதனைக் குறிக்கும். இப்பொருளையே, ‘பலவாக உள்ள காலமெல்லாம்’ என்று
தொடங்கிக் ‘கவி பாடுகை போருமோ?’ என்பது முடிய அருளிச்செய்கிறார்.
—————-
மற்றொருவர்க்கு (2)
என்னுடைய திருவரங்கற்கன்றியும் மற்றொருவர்க்கு ஆள் ஆவரே – நாலாயி:413/4
இச் செயலுக்கு தோற்று அடிமை புக்கு எழுதிக் கொடுக்கிறார்-மற்று ஒன்றினை காணா -என்கிறபடியே ஸ்ரீ பெரிய பெருமாளை ஒழிய வேறு ஒருத்தர்க்கு ஆளாவாரோ-ஆகையால் சிதகுரைத்தார் ஸ்ரீ ரெங்க நாயகியாரும் நன்று செய்தார் -என்று மன்றாடினார் ஸ்ரீ பெரிய பெருமாளாயும்-இருந்தது இறே -அன்றே தந்தையும் தாயும் ஆவார் -ஸ்ரீ திருவரங்கத்துள் ஓங்கும் ஒளி உளார் தாமே இறே-ஆட்கொள்வான் அமருமூர் அணி அரங்கம் -என்று
ஆட்கொள்வார் ஸ்ரீ பெரிய பெருமாள் இறே-அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா -(பெரிய திருமொழி -11-8 )-
————
ஆவானும் தான் ஆனால் ஆர் இடமே மற்றொருவர்க்கு
ஆவான் புகாவால் அவை – நாலாயி:2626/3,4
பாரிடம் ஆவானும் தானானால் ஜகத்தாகிறான் ஈஸ்வரன்-ரஷ்ய ரக்ஷக பாவாதி ஸம்பந்தங்களாலே ஐக்யம்-ஸ்வரூபத -அன்று-ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம (சாந்தோக்யம் )-என்று (ப்ரதிஜ்ஜை சொன்னால் போலே )-பிரபஞ்சத்துக்கு ப்ரஹ்மத்துக்கும் ஐக்யத்தைச் சொல்லி-தஜ்ஜலாநிதி (தஜ்ஜ -தல்ல -தத்தனு இதி )-என்று ஹேது சொன்னால் போலே –ஜகத்தில் இச் சேதனர் வேறே ஒருவனுக்கு சேஷம் ஆவான்-உண்டு உமிழ்ந்த தொழில்கள் வேறே ஒரு வியக்திக்கு ஆகா-
————–
மற்றொருவரை (1)
ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே – நாலாயி:3181/4
எம்வானவர்ஏற்றையே-நித்ய ஸூ ரிகளுக்கு எல்லா போக்யமும் தானே யாய் இருக்குமா போலே–எனக்கும் ஆகி நின்றான்.-அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.– கால தத்வம் உள்ள தனையும் வேறே சிலரை உத்தேச்யமாக உடையேன் அல்லேன் –காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும். அவன் நித்தியசூரிகள் பக்கலிலே இருக்கக்கடவ இருப்பை என் பக்கலில் இருக்க,-நான் வேறொன்றை இனிய பொருளாக நினைத்திருப்பேனோ? அவர்கள் அவனை ஒழிய வேறொன்றை இனிய பொருளாக
நினைக்கில் அன்றோ நான் வேறொன்றை இனிய பொருளாக நினைப்பது?
————–
மற்றொன்றின் (1)
சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லா தன்மை தேவபிரான் அறியும் – நாலாயி:3669/1
திருவாறன் விளை ஒழிய வேறு ஒன்றில் ப்ராப்ய புத்தி இல்லை என்னும் இடம் சர்வேஸ்வரன் அறியும்-நெஞ்சானது பரம பதம் என்று பேச்சு தன்னையும்-ப்ரசங்கமும் -நினையாதது சர்வேஸ்வரன் அறியும். தன்மை – சுபாவம்.-பரம பதம் என்ற பெயர் சொல்லுதலுங்கூடத் தமக்கு விருப்பமின்மையின், ‘மற்று ஒன்று’ என்கிறார்.-
—————–
மற்றொன்று (4)
சொல்லி உய்ய போகல் அல்லால் மற்றொன்று இல்லை சுருக்கே – நாலாயி:3786/4
அங்கே வந்து அவதரித்தவனுடைய சீரிய புகழையே –வாயாலே சொல்லி பிழைத்து போமது ஒழிய –புறம்பே நின்று பரக்க-காடுகைக்கலாவதுண்டு -வாய் கைக்கும் படி வர்ணித்தல் –
வாய்க்கு கேடாக சொல்லுதல் -இத்தனை போக்கி-சுருங்க ஒரு பாசுரத்தாலே சொல்லலாவது இல்லை-
————-
மற்றொன்று இல்லை சுருங்க சொன்னோம் மாநிலத்து எ உயிர்க்கும் -9-1-7- நாலாயி:3787/1-
இத்தோடு ஓக்க வேறு எண்ணலாவது இல்லை -என்னுதல் -இப்போது இத்தைச் சொல்லி வேறு ஒரு போது வேறு ஒன்றை சொல்லுகிறான் என்று இருக்க வேண்டா என்னுதல் –ஒரே மருந்து ஒரு வைத்தியர் -ஒரே ரகஸ்யம் – த்வய மந்த்ரம் -பிரபத்தி பட இத்துடன் எண்ண வேறு ஒன்றும் இல்லையே –
—————–
காளமேகத்தை அன்றி மற்றொன்று இலம் கதியே – நாலாயி:3891/4
வழி போம் போது முன்னே ஒரு காளமேகம் வர்ஷித்திக் கொண்டு போக பின்னே போமா போலே ஸ்ரமஹரமாய் இ றே இருப்பது -சர்வகந்த -என்கிற விஷயம் ஆகையால் -அவ்வாஸ நாற்றத்தை அனுபவித்திக் கொண்டு போம் அத்தனை -யன்றி மற்று ஓன்று இலம் கதியே--அவனை ஒழிய வேறு கதி உடையோம் அல்லோம் -வேறு ஒருவரை ரக்ஷகமாக உடையோம் அல்லோம் -இராஜாக்கள் போகும் போது முன்னே மேகம் நீர் விடுமா போலே- முன்னே காளமேகம் வனப்பாகிய அமிருதத்தை-பெய்து கொண்டு போக- பின்னே அக்குளிர் வாசத்தை அனுபவித்துப் போகலாம்படி-இருக்குமாயிற்று விண்ணீல மேலாப்பு -மேக ஜாதி நீர் -விடுமே -ராஜாக்கள் வரும் முன்னே-மார்க்க பந்து சைத்யம் மோஹனத்தே மடு விடும் -சூர்ணிகை -182-
————-
இலம் கதி மற்றொன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின் – நாலாயி:3892/1
எம்மைக்கும் –மற்று ஓன்று—இலம் கதி–இவ்வார்த்தை ஒரு ஜன்மத்துக்கு அன்றிக்கே எல்லா ஜென்மத்துக்கும் இதுவே வார்த்தை -என்கை –எம்மைக்கும்–எப்பிறப்புக்கும் -எல்லாக் காலங்களிலும் என்றபடி –இவ்வார்த்தை ஒரு பிறவியில் அன்றி-எல்லா பிறவிகளிலும் இதே வார்த்தை –எல்லா காலத்துக்கும் இது ஒழிய-வேறு துணை உடையோம் அல்லோம் –
———-
மற்றோர் (5)
பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்ப்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன் – நாலாயி:456/2
அவன் அடி நிழல் தடம் -( 10-1-2 )-என்னக் கடவது இறே –வாஸூதேவ தருச்சாயை ஒழிய வேறு நிழல் உண்டோ-மூச்சு விடுகைக்கு ஓரிடம் காண் கிறிலேன் உன் திருவடிகளை ஒழிய
—————
இல்லை காண் மற்றோர் இறை – நாலாயி:2644/4
ஸம்ஸார ஸம்பந்தம் அறுமைக்கு எங்குப் புக்காலும் அவனை ஒழிய ஆஸ்ரயணீய தத்வம் இல்லை-அவனை அநு வர்த்தி-ஸ்வ தந்த்ரமாய்க் கெடிலும் கெடு –
——————
நீயும் நானும் இ நேர்நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன் – 1-10-6-நாலாயி:3003/1,2
அந்தப் புள்ளின் பின் போன நீயும், உன்னைத் துணையாக வுடைய-பரிகரமாக – நானும்.-பலத்தை அனுபவம் பண்ண இருக்கிற நாம் இப்படி விலக்காதே இருக்கில்.
இனி, இதற்கு–ந நமேயம் – ‘நான் ஒருவர்க்கும் உரியவன் அல்லேன்’ என்னும் மாறுபட்ட எண்ணம் இன்றிக்கே ஒழியில் என்று கூறலுமாம்.-நிஷித்த அநுஷ்டானம் பண்ணி அகல விடுதல், தன்னை ஒழியப் பிரயோஜனத்தைக் கொண்டு அகல விடுதல்,
அயோக்கியதாநுசந்தானம் பண்ணி அகல விடுதல்,
வேறொரு சாதனத்தை மேற் கொள்ளச் செய்து அகலவிடுதல்,
முன்பு பண்ணின பாவத்தின் பலத்தை அனுபவம் பண்ண அகல விடுதல்
செய்ய விட்டுக் கொடான்.
——————
கழல்கள் அன்றி மற்றோர் களைகண் இலம் காண்-மின்களே – நாலாயி:3482/4
நித்ய வாசம் பண்ணுகிற உபகாரகன் திருவடிகள் அல்லது வேறு புகல் இல்லை -மாம் ஏக சரணம் வ்ரஜ -என்கிறவன் அன்றிக்கே -திருவடிகள் தானே தஞ்சம் என்கை-அவன் திருவடிகளை ஒழிய வேறு ரக்ஷகத்தையுடையோம் அல்லோம்.
“என்னையே சரணமாகப் பற்று” என்னுமவன் அன்றிக்கே,
திருவடிகள் தாமே தஞ்சம் என்பார் ‘கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம்’ என்கிறார்.
“மா மேகம் சரணம் வ்ரஜ”-என்பது, ஸ்ரீ கீதை, 18 : 66.-இது அர்த்த வாதம் சொல்லுகிறேன் அல்லேன்; நீங்களும் பாருங்கோள் என்கிறார்.-ஆசன பத்மத்திலே அழுத்தின திருவடிகள் –
அவன் விட்டாலும் அவள் விட மாட்டாள் -இருவரும் விட்டாலும் விடாத திண் கழல் –
ததீய சேஷத்வமே திண்மை-
————-
அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல் – நாலாயி:3768/1
வேறு மற்று ஓர் உபாயம் உண்டோ –
இவள் -அழகியதாய்-குழிந்த திருத் துழாய் நாறுகைக்கு –இராச புத்திரனை அணையாதார்க்கு கோயில் சாந்து
நாறுகைக்கு விரகு உண்டோ –
என் உடம்பாதல்-உங்கள் உடம்பாதல்-திருத் துழாய் நாறுகின்றதோ –
அம்தண் துழாய் கமழ்தல் –என்கிறதற்கு –
அங்கீ காரத்துக்கு அறிகுறியாய் இருக்கிறது -என்பது-உள்ளுறை பொருள் -ஸ்வாபதேச பொருள
—————————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply