தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-10-1-1-
பகைவர்களை அழிக்கும் தன்மையனான-காள மேகம் அல்லது துணை இல்லை –என்று அவனைப் பற்றுகிறார் –பிரதி கூல நிரசன ஸ்வ பாவன் நிரதிசய போக்யன் -தவிர நமக்கு சகாயம் வேறு கதி இல்லை
நாளும் மேவி–இவருடைய குஹ்யதே ரங்க யாத்ரே -அகலகில்லேன் இறையும்-இருக்கும் படி நன்கமர்ந்து நின்று –இவ் ஊரில் வசித்தலை ஒழிய-வேறு ஒரு பிரயோஜனத்தை கணிசியாதே-இது தானே பிரயோஜனமாய் நின்று –
———–
இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே--10-1-2-
இன்பத்துக்கு காரணமான ஒப்பனையும்-உய்வு பெறுவதற்கு காரணமான திருப் பெயர்களையும் உடையவனுடைய திருவடிகளை அல்லது காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும்- வேறு புகல் உடையோம் அல்லோம் –என்கிறார்
அவனடி நிழல் தடம் அன்றி யாமே –அவனுடைய திருவடி நிழல் ஆகிற பொய்கையை ஒழிய-நாம் வேறு ஒரு கதியை உடையோம் அல்லோம் –
———
அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே-10-1-3-
அகில ஜகத் ரக்ஷண-ஸ்வ பாவம்-மூன்று உலகங்களையும் காப்பாற்றுகின்ற இறைவன்-எழுந்து அருளி இருக்கின்ற திரு மோகூரை நம்முடைய எல்லா துக்கங்களும் கெடச் சென்று அடைவோம்-என்கிறார் –நமது இடர் கெடவே ––ஆவார் ஆர் துணை -திருவாய் மொழி -5-1-9-என்று-இருக்கிற நம்முடைய துன்பம் கெடும்படியாக-
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட – பிரமன் சிவன் இவர்களோடு கூட தேவ சாதி முழுவதும் வந்து அடைய- அநந்ய பிரயோஜனர்களைப் போலே-தங்கள் பிரயோஜனம் கை புகுரும் அளவும்–நின்று-அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி--தப்பாக பாடினாலும் பொறுப்பார் -கண்ணன் கழலிணை –நாரணமே -எப்படி சொன்னாலும் பலம் -அதே போலே-வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர் –
அவர்களுடைய பகைவர்களை வென்று-அவர்களுக்கு இடமான மூன்று உலகங்களையும் காப்பாற்றி-அதுவே யாத்திரையாக-தொழிலாக இருக்குமவன் வந்து வசிக்கிற நகரம் ஆயிற்று —
——-
இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்
இடர் கெட வடி பரவுதும் தொண்டீர் வம்மினே–10-1-4-
சுடர் கொள் சோதியைத் –ஆபத்து வந்த காலத்திலேயே யாகிலும் நம் பாடே வரப் பெற்றோமே என்று-பேர் ஒளிப் பிழம்பாய் இருக்கிறவனை
அன்றிக்கே-மிக சிறந்த அழகினை உடையவன் ஆகையால்-அவ் வழகினை அனுபவிக்கும் அதுவே பிரயோஜனமாக உள்ளவனைக் கண்டீர் துக்கத்தைப் போக்குமவனாக நினைத்து என்னுதல் –
தேவரும் முனிவரும் தொடர –-தேவர்களும் இருடிகளும்-ஈச்வரோஹம் -என்று இருப்பாரும்
செல்வத்தின் நிமித்தம் முயற்சி செய்கின்றவர்களும் –சாப அனுக்ரகங்களைச் செய்ய வல்ல முனிவர்களும்-என்றுமாம்
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் –வேறு பிரயோஜனங்களை கருதாதவர்களை-அநந்ய பிரயோஜனரை-அடிமை கொள்ளுகிறவன் கண்டீர் –பிரயோஜநாந்த பரர்களுக்காக முகம் கொடுக்கைக்காக-திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளிகிறான்-
தன் ஸ்பர்சத்தால் வளரா நின்றுள்ள திரு வநந்த ஆழ்வான்-ஆதலின் –படர் கொள் பாம்பு -என்கிறார் –தன்னுடைய சேர்க்கையாலே-சர்வஞ்ஞனானவனை அறிவற்றவரைப் போன்று நித்தரைக்கு இடம் கொடுக்கும்படி பண்ண வல்லவனான திரு வநந்த ஆழ்வான் ஆதலின் –பள்ளி கொள்வான் -என்கிறார்-
————–
தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்
எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே–10-1-5-
அசேஷ ஜன சம்ச்லேஷ ஸ்வ பாவன் -த்ரிவிக்ரமன் வர்த்திக்கும் –கொண்ட கோயிலை –
திரு உள்ளத்தாலே ஏற்ற கோயில்-திரு மோகூரை அடைந்து அனுபவிக்க வாருங்கோள்-
நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன் –-தனக்கு மேல் ஓன்று இல்லாத பேர் ஒளிப் பிழம்பாய்-மூன்று விதக் காரணமும்-தானே யானவன்-தஸ்ய மத்யே வஹ்னி சிகா அணி யோர்த்த்வா வியவச்தித்த நீலதோயதா மத்யஸ்தா வித்யுல்லேதேவ பாஸ்வர-நீவார சூகவத் தன்வீ பிதாப ஸ்யாத் தநூபாமா -என்றும் சதைவ சோமய இதம் அக்ரே ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம் -என்றும் -என்கிற-பிரமாண சித்தியைப் பற்றி –நம் -என்கிறார்
அன்றிக்கே தம் வடிவு அழகினையும்-தமப்பனான தம்முடைய சம்பந்தத்தையும் நமக்கு அறிவித்தவன் -என்னுதல் –
இங்கு ஆடுதும் கூத்தே –அங்கு சென்று-அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்-அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத – என்று களிக்கும் களிப்பினை-இங்கே களிப்போம்
————
கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே–10-1-6-ஆத்தன்-சப்த பிரயோகம் -நடு பாசுரம்-ஆப்ததமன் -ஆஸ்ரிதர் விசுவாசம் உடன் பற்ற
தாமரை யடி யன்றி –நம்பத் தகாதவனாய் இருப்பினும்-விட ஒண்ணாத தாயிற்று திருவடிகளின் இனிமை –மற்று இலம் அரணே –பாது காப்பவர்களாக வேறு சிலரை உடையோம் அல்லோம் —தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே-இனிமை இல்லை யாகிலும்-விட ஒண்ணாதபடி-புறம்பு புகல் இல்லை -என்கிறார் -என்றபடி –
குண க்ருத தாஸ்யம் மட்டும் இல்லாமல் –ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் உண்டே -அநசூயை சீதை பிராட்டி சம்வாதம் —
———-
மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே-10-1-7-
நம்மை பாது காத்தல் தனக்கே உரியதாய்-அகில ஜகத் ஸ்ரஷ்டாவான சர்வேஸ்வரன் –அப ஏவ -பெரிய நீர் படைத்து -வர்த்திக்கும் -அனுகூல வ்ருத்திகளை பண்ண-சுற்றி நாம் வலம் செய்ய– நம் துக்கம் -வழித் துணை இல்லை என்கிற நம் துன்பம் சடக்கென போம் –
——–
துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே-குணங்கள் ரத்னம் மாணிக்கம் முத்து -இத்தை அன்றோ சக்கரவர்த்தி பெற்றான் –திரு மோகூரிலே நின்று அருளினவனான-ஆண் பிள்ளையான-சக்கரவர்த்தி திருமகனை அடைய-நம்முடைய துக்கம் எல்லாம் போம்-வாசத் தடம் போல் வருவான் அன்றோ அவன் தானே –புண்டரீகத் தடாகம் நின்ற சேவை தானே நம்பெருமாள் –
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர்-சர்வேஸ்வரன் அளித்துப் படைத்த-பெயர்களோ பாதி போரும் ஆயிற்று இவர்கள் பிறர்களை துன்புறுத்தி பெற்ற பெயர்கள்-யஞ்ஞ சத்ரு – ப்ரஹ்ம சத்ரு (மேக நாத ஹரி -இந்திர ஜித் வென்ற லஷ்மணன்)-என்பன போன்றவனவே அன்றோ இவர்கள் பெயர்கள் –
மயா த்வம் சம் அநுஜ்ஞாத கச்ச லோகன் அநுத்தமான்-ஆரண்ய -68-30–என்னால் நீவிர் அனுமதிக்கப் பட்டவராய் மேலான உலகத்தை அடைவீராக-என்கிறபடியே –பறவையையும் -ஜடாயுவையும் –வழி நடத்துமவன் அன்றோ
————–
மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும்
துணிக்கும் வல்லரட்டன் உறைபொழில் திரு மோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே–10-1-9-
நமக்கு அரணான திரு மோகூரை நாம் அடையப் பெற்றோம்-என்று தம் லாபத்தை பேசுகிறார்-
மலர்க் கண்கள் –அத் தடாகம் பூத்தால் போல் ஆயிற்று திருக் கண்கள் இருப்பன-மூன்று காலம் -மலர் கண் வைத்த -தன்னடியார் பாசுரம் –முன்பு மலர்ந்த -இன்று மலரும் -நாளையும் மலர இருக்கும்-இங்கே மலர்க் கண்கள் -மலர்ந்த திருக் கண்கள்
அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம்-அவன் வழித் துணையாகப் போம் போது
சிரமத்தை போக்கக் கூடிய வடிவும்-தன் உகப்பு தோற்றின புன் முறுவலும்- கடைக் கண் நோக்கம்-முதலானவைகளையும் உடையவனாய்- ஒரு கல் மதிளுக்கு உள்ளே போமாறு போலே-அச்சம் கெட்டுப்போம்படி ஆயிற்று-தோள் நிழலிலே ஒதுங்கினால் இருக்கும்படி
உறை பொழில் திரு மோகூர் –சிங்கம் வசிக்கும் முழைஞ்சு என்னுமா போலே –
———–
நாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்-10-1-10-
மூ வேழ் உலகும்-உலகினுள் -எல்லாவற்றையும் காக்கின்ற இறைவன் வசிக்கின்ற திரு மோகூரை-நமர்காள் ஆதரித்து-நினைந்து- ஏத்துங்கோள்-திருமோகூர் நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–நம்முடையவர்களே–மூன்று கிரியா பதங்கள்- திருமோகூர் நவின்று-ஊரின் பெயரைச் சொல்லி ஸ்தோத்ரம் பண்ணி -வாக் வியாபாரங்கள் –எண்ணுமின் -மநோ வியாபாரம்-பயிலுதல் -நினைந்து -மேலும் ப்ரீதி பிரேரிராய் ஏத்துமின்—
————
ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு
கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே–10-1-11-
குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் – ஆழ்வார் உடைய குற்றேவல்கள் என்றது-அவன் குடக் கூத்தினை நினைத்து-இவர் நாவினால் பாடுகிற அடிமையிலே மூண்டார் -என்றபடி –
இவை-ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே – இப் பத்தினை கற்க வல்லார்க்கு-உடலை விட்டு உயர் நீங்குகிற காலத்திலேயே-வழித் துணை இல்லை என்று-வருந்த வேண்டாதபடி-காளமேகம் வழித் துணையாம்
————
கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-10-2-1-
கேசவா வென்ன –-அவன் ஒரு விரோதியை போக்கின படியைச் சொல்ல-விரோதி என்ற பேர் பெற்றவை எல்லாம் நசிக்கும்-வார்த்தை மாத்ரமே அமையும் என்பார் –கேசவாவென்னக் கெடும் -என்கிறார் –ஸ்வரூப ரூப குண விபவ நான்கும் இதில் உண்டே பிரம்மா ருத்ர நியாமகன் ஸ்வரூபம் -கேசி ஹந்தா -விபவம் -குணம் -கிலேச நாசன் -ரூபம் கேச பாசம் யுடையவன்–இந்த பிரகரணத்துக்கு சேர கிலேச நாசனே உசிதம்
—————–
இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே–10-2-2-
தீ வினைகள் போகைக்கு சொன்ன-திருப் பெயர் தானே -கேசவா என்ன – ஆயிரம் வகைகளாய் பாது காவலாய் இருக்கும்-என்கிறார் –சர்வாதிகாரம் பிராப்தம் – முன்பே இவனை இச்சித்து -இசைவு பார்த்து இருக்கும் விஷயத்துக்கு இச்சா மாத்திரமே போதுமே –
எழுமையும் ஏதம் சாரா-ஒரு காலமும் பொல்லாங்கு வந்து கிட்டாது –
சாரா -என்றதனால்-அதற்கு அவனும் தானும் நினைப்பிட வேண்டா-இராஜ குல சம்பந்தத்தாலே விட்டு ஓடிப் போம் –
குன்று சேர் மாடம் – பிள்ளை திரு நறையூர் அரையரும் பட்டரும் உள்ளே புக்கு-வலம் வரா நிற்க-நான் சேவித்துப் போந்தேன் – அல்லாதார் எல்லாரும் விரைந்து சடக்கென வாரா நிற்க-இவர்கள் திரு மாளிகைகளையும் திரு கோபுரங்களையும்
கண்களாலே பருகுவாரைப் போலே பார்த்துக் கொண்டு வருகிறபடியைக் கண்டு-
அல்லாதார்க்கும் இவர்களுக்கும் செயல் ஒத்து இருக்கச் செய்தே இவர்களான வாசி இருந்தபடி என் -என்று இருந்தேன் -என்று நஞ்சீயர் அருளிச் செய்வர் –
குருந்து சேர் செருந்தி புன்னை–நித்ய ஸரிகளை சொல்லக் கடவதாய் இருக்க-இங்கே தாவரங்களைச் சொல்லுகிறது என் -என்ன-உகந்து அருளின நிலங்களிலே மேன் மக்களோடு தாவரங்களோடு வாசி இல்லை என்று இருக்கும் உத்தேச்ய புத்தியாலே-
நித்ய ஸூரிகளுக்கு ஆனால் அவ்வருகு போக நினைவு உண்டாகைக்கு தகுதி உண்டு -நினையார்கள் இத்தனை –ஞானத்தின் கார்யமான அன்பின் மிகுதியாலே நினைக்கைக்கும் தகுதி உண்டே அன்றோ–வேறு ஒரு இடத்தில் போக நினைக்கைக்கு தகுதி இல்லை அன்றோ இவற்றுக்கு –
பிள்ளை ஜனநாத ப்ரஹ்மராயர் திரு முடிக் குறையிலே மரம் வெட்டுவியா நிற்க-எம்பார் அருளிச் செய்த வார்த்தையை நினைப்பது –ஈஸ்வர பிரக்ருதியை அழிக்கவோ -மிதுனம் கூட நீர் வார்த்து வளர்ந்தவை அன்றோ –சுரவன் பாக்குகளை -உயர்ந்த பாக்குகளை -சிலவற்றை பட்டருக்கு கொடு வந்து கொடுக்க-அவற்றைக் கண்டு இவை இருந்தபடி என்-திருவருள் கமுகினின்றும் வந்தவையோ -என்று அருளிச் செய்தாராம்
உம்பரூரே-திருப் பெயர்களை நினைப்பார்க்கு-அவ்விடம் தானே உம்பரூர் ஆகும்
அன்றிக்கே-உள்ளுவார் பெருமிடம் உம்பர் ஊர் -என்னவுமாம் –
அவ் உம்பர் ஊர் தானும் நம்பால் விரும்பப் படுவதும் அவன் விடாதே வசிப்பதனால் அன்றோ-அவனே தான் இவ்விடத்தே வசியா நின்றால்-பின்னை இவ்விடமே உத்தேச்யமாக தட்டு இல்லை அன்றோ –
—————
ஊரும் புள் கொடியும் அக்தே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண்ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே-10-2-3-
தீய வினைகள் போகைக்கு அந்நகரத்தை அடைதலே போதியதாம்
ஆயிரம் திரு நாமங்களில் ஏதேனும் ஒன்றைச் சொல்லி-அனுபவியுங்கோள்-
ஊரும் புள் கொடியும் -அந்த திருவடியே –புள்ளினை கூறியது நித்ய ஸூரிகளுக்கும் உப லஷணம் – அநேக சேஷ வ்ருத்திகள் நித்ய ஸூரிகள் அனைவரும் செய்வதற்கு உப லக்ஷணம் –ஏகதா பவதி
சேரும் தண்ணனந்தபுரம்-தானும் உகந்து நித்ய ஸூரிகளும் உகக்கும் இடம் அன்றோ பரமபதம்-இங்கு தன் உகப்பு மாத்ரம் அன்றோ இருப்பது -என்றது இவர்கள் விருப்பு அற்று இருப்பினும் தான் விட மாட்டாதே-காலத்தை எதிர் நோக்கினவனாய் நிற்கிற இடம் அன்றோ
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே-ஸ்ரீ ராம ராமேதி -ராம திரு நாமம் -கேசவ திரு நாமம் -போக்யம் அனைத்தும் என்றவாறு —பள்ளியில் -சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்-நாராயண திரு நாமம் -பிரதானம் அப்ரதானம் வாசி இல்லையே இவற்றுள் –ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும் –9-9-3-அவற்றில் வாய்க்குத் தோற்றிற்று ஒரு திருப் பெயரைச் சொல்லுங்கோள் –மனத்தின் துணையும் வேண்டா -என்பார் –பேசுமின் -என்கிறார் –
————
பேசுமின் கூசமின்றிப் பெரிய நீர் வேலை சூழ்ந்து
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்த புரம்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே–10-2-4-
பற்றுகின்றவர்க்கு ருசி பிறப்பதற்காக-திரு வனந்தபுரத்திலே புக்கு அடிமை-செய்கின்றவர்கள்–எத்தகைய புண்ணியம் செய்தவர்கள் -என்கிறார் –
அன்றிக்கே அவர்கள் புண்ணியம் செய்த படியைப்-பேசுங்கோள் -என்கிறார்
வாசமே கமழும் சோலை –நறு மணமே கமழா நிற்கும் ஆயிற்று சோலை –
சூழப் போந்த சோலையிலே நறு மணம் புறம்பு போகாதபடி-மதிள் இட்டால் போலே யாயிற்று இருப்பது கடல்-கடலில் நாற்றம் மேலிடாதபடி-சோலையின் நறு மணமே விஞ்சி இருத்தலின்-வாசமே கமழும் -என்று ஏகாரம் கொடுத்து ஓதுகிறார் – சம்சார கந்தம் தட்டாத படி -ஸ்வாபதேசம் –
நேசம் செய்து உறைகின்றானை – பரம பதத்தில் தவிர ஒண்ணாமை யாலே இருக்கின்றான் அத்தனை-அப்பரம பதத்தை வசை சொல்லி ஆயிற்று இங்கு வசிப்பது-
பிரதம பரிகரத்துக்கு செங்கல் சீறை வைப்பது போலே அன்றோ பரமபதத்தில் –
துன்புறு கின்றவர்களை பாது காப்பதற்கு உடல் அல்லாத இடமும் ஓர் வசிக்கும் இடம் ஆயிற்றதோ–தர்சனம் சித்ரகூடச்ய மந்தாக்னி யாச்ய சோபனே-அதிகம் புரவாசாச்ச மன்யே தவச தர்சநாத் -அயோத்யா -95-12-என்கிறபடியே இந்த சித்ரகூடத்தில் வசிப்பது அயோத்யா வாசம் விட மேலானது –
நேசம் செய்து உறைகின்றானை பூசனை செய்கின்றார்கள்-புண்ணியம் செய்த வாற்றை கூசம் இன்றி பேசுமின் -எனக் கூட்டலுமாம்- -பாகவதர்கள் பெருமையை கூசம் இன்றி பேசுதல் ஆவது என் என்னில்-பகவத் விஷயம் போலே வாய் வந்த படி சொல்ல ஒண்ணாது-பாகவத விஷயம்
புண்ணியம் செய்தவாறே –-சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி -திரு விருத்தம்-21 -அடிமை செய்கிறவர்களுடைய அடிமையும் ஓர் அடிமை யாயற்றதோ –
ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே ஆயிற்று அவர்கள் –இளைய பெருமாளைப் போலே ஆயிற்று இவர்கள் –-அவன் விட்டுப் போரச் செய்தேயும்-பாரதந்திரியத்தாலே விட மாட்டாதே கிடக்கிறார்கள் இத்தனை அன்றோ –இங்கே அடிமை செய்பவர்கள் பாக்ய சாலிகள் என்கிறார்-
—————
புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-
திரு வனந்த புரத்தை அடையுமவர்கள் நித்ய ஸூரிகள் ஆவார்கள்-ஆகையால் நீங்களும் அடைமின் –நாம் அறியச் சொன்னோம் –அவனாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற நாம்-தேகத்தையே ஆத்மாவாக அபிமானித்து இருக்கிற நீங்களும்-அறியும் படி-
உங்கள் கேட்டினைப் பார்த்துச் சொன்னோம்
புண்ணியம் செய்து –பக்தியைச் செலுத்தி-புண்ணியம் காரணம் -காரியம் பக்தி –
எந்தை நாமம்–இடறினவன் அம்மே என்னுமா போலே-திருநாமம் சொல்லுகைக்கு ஒரு தகுதியைத் தேடிக் கொள்ள வேண்டா-
நஞ்சீயர் பட்டரை-திரு நாமம் சொல்லும் பொழுது பக்தி உடையனாய் சொல்ல வேண்டுமோ -என்று கேட்க- கங்கையில் முழுகப் போமவனுக்கு-வேறு உவர்க் குழியிலே முழுகி போக வேண்டுமோ- மேல் உண்டான நன்மையைத் தருகிற இது-அதிகாரி சம்பத் ஆகிய -தகுதியையும் தர மாட்டாதோ -என்று அருளிச் செய்தாரம் –
இப்பிறப்பு அறுக்கும் –இ -சுட்டு எழுத்து-கண்டதே அன்றோ இதனுடைய இழையீடு -நூலாலே தைத்தல்-இழை இட்டால் போலே இருக்கிற அவயவங்களுடைய சேர்த்தி-கவிழ்ந்து பார்க்கவே அமையுமே இதனுடைய அகவாயை-தன்னைடையே வைராக்கியம் பிறக்குமே –நாம் நன்றாக நினைத்து இருக்குமது அன்று இதன் தன்மை –அல்பம் அஸ்திரம் -ஆகாரம் பிரத்யஷிக்கலாமே –இப்படி தாழ்வு உள்ளதாக அறியப் படுகின்ற இச் சரீர சம்பந்தத்தை அறுக்கும் –-நல்லவர்கள் இதனுடைய தாழ்வினைக் கண்டு இதனைக் கழித்து கோடற்க்கும்-மற்றையோர்கள் இதிலே இனிமை உண்டு என்று நினைத்து கேடு உறுகைக்கும்-உடலாம்படி கர்மங்களுக்கு தகுதியாக இதனை எடை எடுத்து காணும் -நிறுத்து -அறுதி இட்டு -காணும் –ஈஸ்வரன் பண்ணிற்று என்று பட்டர் அருளிச் செய்தார்-அனந்த புரத்து அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமரர் ஆவார்–விரோதியைப் போக்கும் அளவே அன்றியே- விரும்பிய பொருளைப் பெறுகைக்கும்-திரு வனந்த புரமே-அடையத் தக்க தலம் -என்கிறது
————
அமரராய்த் திரிகின்றார் கட்கு ஆதிசேர் அனந்த புரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப் பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே-10-2-6-(அர்ச்சிக்கின்று-மலையாள பாஷை)
ச சைன்ய புத்ர சிஷ்ய-சாத்ய சித்த பூஸூரர்-அர்ச்சனத்துக்கு முக நாபி பாதங்களை-த்வார த்ரயத்தாலே காட்டும் சாம்யம் -அனந்த சயனத்திலே -வியக்தம் -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூக்தி-3-84-
குமரனார் தாதை துன்பம் துடைத்த-சிவன் முதலாயினோர்க்கு துக்கத்தினை போக்குமவனாய் இருக்கும்-கோவிந்தனாரே -பசுக்களுக்கும் ஆயர்களுக்கும் கையாளாய் இருக்கும் கோவிந்தனாரை நாமும் போய் நணுக வேண்டும்-
————
துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும்
படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்
மடைத் தலை வாளை பாயும் வயல் யணி யனந்த புரம்
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாமே–10-2-7-
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் –திருவாசலிலே திரு வலகு திருப் பணி செய்யப் பெற்றால்-சம்மார்ஜனம் திரு அலகு இடுதல் –அடிமை செய்யப் பெற்றால்-கடு வினை களையலாமே –
வினை சேஷத்வ ஞானம் பிறந்தால் –ஸ்வரூபத்துக்கு அனுரூபமான கைங்கர்யத்தை-பெறாமையால் வரும் துயரம் –ஒரு தேச விசேடத்திலே போய் அடிமை செய்யப் பெற்றிலோம் கைங்கர்ய அலாப -நிபந்தமான கடு வினை–அதிசயித துக்கம் களையலாம் –கழுவாயால்-பிராயச்சித்தம் செய்து போக்குமது அன்றே-என்பதால் கிலேசம் என்று இல்லாமல் வினை என்கிறார்
எம் பரமமூர்த்தி-அடியார்க்கு எளியனான சர்வேஸ்வரன்-ஆஸ்ரித பவ்யன் -எம் -சர்வேஸ்வரன் -பரம மூர்த்தி
———————
கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்ட தென்பர் எழில் அணி அனந்த புரம்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்--10-2-8-
நமர்கள்-நம்முடையார் -மாதா பிதா -மத அந்வயானாம் -ஆளவந்தார் -இவர் அவன் இடம் நடமினோ-அதன் படி நடக்க பாருமின் -அனுஷ்டானம் என்றுமாம்-நடமினோ-வழி எல்லாம் உள்ளார் ஸத்காரம் -அர்ச்சிராதி கதி போலே-பாதம் காணநடமினோ நமர்கள் உள்ளீர் —வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற-கரியான் கழல் காண கருதும் கருத்து -9-4-5- என்கிறபடியே-என்று இருக்கும் என்னோடு ஒரு குடல் தொடக்குடையார் அடங்கலும்-போகப் பாருங்கோள் –
கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை-குரூரமான பாபங்கள் -பிராப்தி விளம்ப பிரதிபந்தகங்கள் –இதில் – பாபம் -முன்பு கிலேசம் -ஆய -கைங்கர்யம் -மன்னவர் விதியே -அடைவது உறுதி -அதனால் விளம்பம் என்கிறார் இதில் –
காமனைப் பயந்த காளை-மன்மதனை பயந்த -பிரசவித்தும் காளை இளகிப் பதித்து –சாஷாத் மன்மத மன்மதன் -அவனும் மடல் எடுக்கும் படி அன்றோ இவன் அழகு – –
எழில் அணி அனந்த புரம் –பரம பதத்தில் ஒரு புதுமை செய்ய ஒண்ணாது அன்றோ-
அங்குத்தை காட்டிலும் இங்குத்தைக்கு தன்னேற்றம் இருக்கிறபடி –
திரு அத்த்யயனம் பாடா நிற்க -இதனைக் கேட்டருளி-ஆளவந்தார் –நமக்கு ஆழ்வார் உடன் ஒரு சம்பந்தம் உண்டாக வேண்டும் -என்று-அப்போதே ஸ்ரீ பாதத்தை உடையாரைக் கூட்டிக் கொண்டு-எழுந்து அருளினார்- இத்தைச் செய்தாவது ஆழ்வார் சம்பந்தம் பெறலாம் என்று நாமோ -ஆழ்வார் சம்பந்திகள் என்று இறுமாப்புடன் போவோமே –
நாம் -திருக் கண் வளர்ந்து அருளுகிற அழகில் சுவடு அறிந்து-எவரேலும் அவர் எம்மை ஆளும் பரமர் -8-7-1-என்னக் கடவ நாம் –
————
நாமும் உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான
சேமம் நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்த புரம்
தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு
வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே–10-2-9-
மாய்ந்து அறும் வினைகள் தாமே –இவன் தன்மைக்கு தகுதியான தொண்டிலே சேர-விரோதிகள் அடைய ஒழிந்து போகும்–ப்ராப்தனானவன் -திருவடிகளில் கைங்கர்யம் பண்ண -கைங்கர்யம் பிரதி பந்தகங்கள் போகும் –
————–
மாய்ந்து அறும் வினைகள் தாமே மாதவா வென்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே–10-2-10-
கேசவா தொடங்கி மாதவா -இங்கு -வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை -திரு வனந்த புரத்திலே புக்கு-அடிமை செய்கிறவர்கள் பெருமை-பேச நிலம் அன்று –-அந்தமில் புகழினாரே –அமரர் ஆவார் -என்கிற அளவு அன்றிக்கே-விண்ணுளாரிலும் சீரியரே -ஆவர்
————–
அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11-
நிகமத்தில்-இத் திருவாய் மொழி வல்லார்-திரு நாட்டில் உள்ளாருக்கு-இனியர் ஆவார்-அங்குத்தை அமர மகளிர்கள் உடைய விருப்பத்துக்குப்-பொருளாக இருப்பார் -என்றபடி-
முடியுடை வானவர் முறை முறை எதிர்கொள்ள -10-9-10-என்றதனோடு-வேய் மரு தோள் இணை அணைவர் -என்கிற இதனோடு-வாசி இல்லை-மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே -10-9-10-என்னக் கடவது அன்றோ-சூடகமே -பராபர குருக்கள் பூட்டும் ஆத்ம பூஷணங்கள் -சததம் மாலா ஹஸ்தா -இத்யாதி -அலங்காரம் பெறப் பெறுவர்-
அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை –
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் –கேவலம் பர உபதேசம் ஐந்து -தம்மையும் கூட்டி அருளிய ஐந்தும் -நாமும் நணுக வேண்டும் -கூட்டிக் கொண்டு அருளிச் செய்தவை
அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை –புகழிற்கு ஒரு முடிவு இல்லை ஆயிற்று அவனுக்கு –திரு வனந்த புரத்திலே-எல்லை இல்லாத நற் குணங்களை உடையனாய்-உலகத்திற்கு எல்லாம்-காரணனாய் உள்ளவனை –அடைகின்றவர்களும் அந்தமில் புகழினார்கள் –அடையப் படுகின்றவனும் அந்தமில் புகழினான் காணும் –
பரம பதத்தை விட்டு-திரு வனந்த புரத்திலே வந்து-அடியார்களுக்காக திருக் கண் வளர்ந்து-அருளுகையாலே-பற்றினை விட்டு உகந்து அருளின நிலத்தில் அடிமை செய்கையாலே-புகழிற்கு அந்தம் இல்லை ஆயிற்று இவர்களுக்கு –
இவனுக்கு அடிமை கொள்ளுகையாலே புகழிற்கு எல்லை-இல்லை ஆயிற்று அவனுக்கு-
அவனுக்கு அடிமை செய்கையாலே புகழிற்கு அந்தம் இல்லை ஆயிற்று இவர்களுக்கு-
இந்த உலகத்திலே பிறப்பு இறப்புகளிலே உழன்று திரிகிற-இவனுக்கு புகழ் உண்டாகில் ஆயிற்று-பரம பதத்தில் இருந்தால் அவனுக்கு புகழ் உண்டாவது-
இந்நிலத்தை விட விட இவனுக்கு புகழ் உண்டாமாறு போலே-அந்நிலத்தை விட விட அவனுக்குப் புகழ் உண்டாம்–இருவருக்கும் இரண்டும் கிடைக்காத பேறு ஆம் அன்றோ –
———-
வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ
தகவிலை தகவிலையே நீ கண்ணா--10-3-1-ஆலோ-துக்கத்தின் மிகுதியைக் குறித்தபடி –
தன்னுடைய பிரிவில் இவள் ஆற்றாமை கேட்டார் வாய் கேட்கை அன்றிக்கே-
கைம்மேல் காணலாய் இருக்கிறது காணும் இவள் மெலிவு –தனக்குப் பிறந்த துன்பத்தினை தோழி மாருக்கு சொல்லுமாறு போலே-அவனுக்கு சொல்கிறாள்-கூட இருந்தாலும் பயன் இல்லையே அகவாயிலே பிரிவு உண்டானால்-அதன் கார்யமான மெலிவு பிறந்தன்றி நில்லாதே-தன் தோள்கள் மெலிகிற இதனை -உன்னுடைய தோள்கள் மெலியா நின்றன -என்பாரைப் போலே-சொல்லுகிறாள் காணும்-இவள் தோள் மெலிந்தால் தன்னுடைய அபிமதம் -வருத்தமும் -தனக்கு வந்ததாய் இருக்கையாலும் -வலியுமும்-ஆக -இரட்டிப்பாய் இருக்கும்-மெல்லியல் தோள் தோய்ந்தாய் –திரு நெடும் தாண்டகம் -13-அன்றோ விடாய் ஆறுவது-இருவருக்கும் விடாய் ஆற்ற முடியாதே – -தேவதத்தன் என்றதனோடு வாசுதேவன் என்ற சொல்லோடு-வாசி அறும்படி அவனுக்கு சரீரமாக அன்றோ இவ் உயிர்ப் பொருள் இருப்பது-பர்யவசான விதி -சர்வ சப்த வாச்யன்
போனோம் அல்லோம்-போக நினைத்தோம் அல்லோம்-நாம் கூட இருக்கச் செய்தே பிரிந்தோமாகக் கொண்டு நோவு பட்டு-பார்க்கப் படும் பொருள்கள் எல்லாம் துன்புறுத்தும் படியாக இருப்பதே-இது ஒரு அன்பின் தன்மை இருக்கும் படி என் -என்று-கண்களாலே குளிர நோக்கினான் –தாமரைக் கண்டால் கொண்டு ஈர்தி யாலோ –-நீ நோக்காலே நலிவதில் இன்னம் பசு மேக்கப் போக்கையே நன்று –
————
தகவிலை தகவிலையே நீ கண்ணா
தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச்
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச்
சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால்
வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–10-3-2-
தகவிலை தகவிலையே நீ கண்ணா–நம்மை அருள் இல்லாதவன் -என்பதே –
பிரிய நினைத்தோம் அல்லோம் –பிரிந்தோம் அல்லோம் -என்று இவள் தரித்து இருப்பதற்காக-நெருக்கி அணைத்தான் —இவள் தரிப்பதற்க்காக பலகால் அணைத்து அருள – இச் சேர்க்கையால் ஆய இன்பம் எல்லாம் -நீ நீங்கக் கூடியவன் என்னும் இதனாலே- கனாக் கண்டு விழித்தால் போலே யாய் நோவு படா நின்றேன் -என்கிறாள்
ஆவியின் பரம் அல்ல வேட்கை –அணு அளவிதனா உயிர் பொருளின் அளவன்று காதல் –
என் தன் அளவன்றால் யானுடைய அன்பு -இரண்டாம் திருவந்தாதி -100-என்றாரே அவரும்
உயிரின் அளவன்று ஆயிற்றுக் காதல் –
———–
வீவன் நின் பசு நிரை மேக்கப் போக்கு
வெவ் உயிர் கொண்டு எனது ஆவி வேமால்
யாவரும் துணை இல்லை யான் இருந்து உன்
அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால்
பொரு கயல் கண்ணினை நீரும் நில்லா
சாவது இவ் ஆய்க் குலத்துக்கு ஆய்ச்சி யோமாய்
பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே--10-3-3-
சாவது -இவ் ஆய்க் குலத்துக்கு ஆய்ச்சி யோமாய்பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே-நீ போகிலும் போ-இருக்கிலும் இரு-இத் தனிமை நசிப்பது-இவனுக்கு நான் நூறு பிள்ளை பெற வேண்டும் -என்ற சாவித்ரியை போலே சொல்லுகிறாள் –அன்றிக்கே-தனிமை தானே சாவது-எங்களுக்கு தனிமை என்றும் சாதல் என்றும் இரண்டு இல்லை காண்–தனிமை தானே சாக்காடு -என்றுமாம்
நின்னலால் இலேன் -2-3-7- என்னுமவர் அன்றோ-இறப்பதற்கே எண்ணாது-திரு நெடும் தாண்டகம் -1- என்றாரே அவரும்-சேஷ பூதை-அடிமையாக இருக்கும் எங்கள் உடைய தனி இருப்பு ஒழியட்டும் -தனிமை ஸ்வ பாவம் என்பதால் அதன் முடிவு தங்கள் முடிவு என்கிறாள் கூடி இருந்தால் வாழ்ச்சி பிரிந்தால் வீழ்ச்சி –அன்றிக்கே-தனிமை சாவது-இத் தனிமை சாலப் பொல்லாதது -என்னவுமாம்-ஒரு தலைக் காமம் தனிமை என்றுமாம் –
இவ் ஒருதலைக் காமம் போவது-கைக் கிளைத் தலைவி பொறை அழிந்தால்-எல்லாம் சொல்லப் பெறுவள் அன்றே–
————–
தொழுத்தையோம் தனிமையும் துணை புரிந்தார்
துயரமும் நினைகிலை கோவிந்தா நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி
துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம்
பாவியேன் மனம் அகம் தோறும் உள் புக்கு
அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்–10-3-4-
இவன் போக்கினை நினைத்து நோவு படப் புக்கவாறே –நின் செங்கனி வாயின் கள்வப்
பணி மொழி-உன்னைப் பிரிகைக்கு காரணம் உண்டோ -என்று-இப்புடையிலே தாழ்வோடு சில வார்த்தைகளைச் சொல்ல –இவை அன்றோ என்னை அழிக்கின்றன –என்கிறாள் –பிரிவினை நினைத்து பிரியேன் -என்னும் இது நஞ்சுக்கு சமம் அன்றோ –
இங்கு உள்ளது பொய் ஆலிங்கனமே – பிள்ளை அமுதனார்-ஒரு பசுவின் காலிலே முள் பாய்ந்தால்-ஆயன் தலை காண் சீய்க் கொள்வது -என்பாராம்-
சரீரத்தில் ஓன்று வந்தால் இன்ப துன்பங்கள் அனுபவிப்பது ஆத்மா அன்றோ –அந்தராத்மா இவன் அன்றோ –எம்மைத் துறந்து – அவற்றை விரும்ப விரும்ப-தங்களை துறந்தான் என்று இருக்கிறார்கள் – பசுப் பால் மனம் சுளிப்ப பராங்குச நாயகி தோள் கை விட்டு அன்றோ இவன் இருப்பது
—————-
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ் மல்லிகை வாடை தூவப்
பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது
என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ
அடிச்சியோம் தலை மிசை யணியாய்-10-3-5-வந்தன்றாலோ-வந்தின்றாலோ பாட பேதங்கள்
நான் உன் முன்னம் இருந்து கொண்டு இருக்க-நீ இப்படி படுகிறது என் என்ன –
நீ பசு மேய்க்கக் கடவனான பின்பு நீயும் போனாய் –கண்ணா என்று விளித்து -அவன் தன்னையே-நீ போனாய் என்கிறாள்- அப்படி தெளிவில்லாமல் தவிக்கும் நிலை அன்றோ இவளுக்கு –நீ போனால் நலியக் கடவ மாலைக் காலம் முதலிய பொருள்களால்-நலிவுபடுகிற என்னை நலிவு படா வண்ணம்-செய்து அருள வேண்டும் -அணைக்க என்று நேராகச் சொல்லாமல் அக்ராமமாக -நகர வார்த்தை போல் மூன்று கிரியைகள் பிராத்தனை –
மணி மிகு மார்வினின் –ஸ்ரீ கௌஸ்துபம் நிறம் பெறும்படியான மார்பு -என்னுதல்-
திரு மார்பு அடங்க ஸ்ரீ கௌஸ்துபத்தின் புகரே யாம்படி இருக்கும் -என்னுதல்-
கலவியிலும் கழற்ற ஒண்ணாதபடி அன்றோ கௌஸ்துபம் இருப்பது –இவளுடைய பெண்மைக்கு முலை போலே ஆயிற்று-அவனுடைய ஆண்மைக்கு ஸ்ரீ கௌஸ்துபம்-
புருஷோத்தமன் ஆகும் தன்மைக்கு இலக்கணம் அன்றோ –
உன் போக்கினை நினைக்க நா நீர் வருகிறது இல்லை –அதற்கு மாறாக உன் கையை தலை மேலே வைக்க வல்லையே-நா நீர் வருகைக்கு இவர்களுடைய முந்தரி கைப் பழம் இருக்கிறபடி-ராஜ குமாரர்க்கு நாக்கு வாற்றாமைக்கு பச்சைக் கற்பூரம் போலே- த்வய உச்சாரணம் நம் பூர்வர்களுக்கு-
அணி மிகு தாமரைக் கையை யந்தோ தலை மிசை நீ அணியாய் –ஆபரணத்துக்கு அந்தக் கை போலே ஆயிற்று-இவள் தலைக்கு அந்தக் கை-பாத பங்கயமே தலைக்கு அணியாய் -9-2-2-எனபது-அணி மிகு தாமரைக் கையை யந்தோ
அடிச்சியோம் தலை மிசை அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் -என்பதே-காலைக் கையைப் பிடித்து கார்யம் முற்றுவிக்கப் பார்க்கிறார்கள் –உன் பேற்றுக்கு நீ தானே பிரயத்தனம் பண்ண வேணும் –ப்ரேமையை கை விட்டது நீ செய்த அல்வழக்கு -ராமன் விட்டாலும் ராமானுஜர் விட மாட்டாரே –
—————
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்
ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்
பிடித்து அது நடுவு உனக்கு அரியையரும்
பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம்
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா
மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே–10-3-6-
சென்ற சென்ற இடம் எல்லாம் அபிமதைகள் பலர் உளர் –உனக்கு ஒரு குறை இல்லை-அரிவையர் –தங்கள் பருவத்தாலே துவக்க வல்லவர் பலர் -ஒருவர் இருவரா –பெண்கள் பதினாறாம் ஆயிரவர் –நாங்கள் உன்னைப் பிரிந்து தரிக்க மாட்டு கிற்றிலோம்-ஆதலால் உன் செலவினை எங்களால் பொறுக்க முடியாது –என்கிறாள்-
ஆழி அம் கண்ணா –என்கையாலே-திருக் கண்களாலே குளிர நோக்க வேண்டும் -என்பது போதரும் –உங்கள் கைகளால் தீண்டுதல் வேண்டும் என்று அன்றோ நான் இருப்பது –
எனக்கு போக்கு உண்டோ –போனாலும் உங்களை ஒழிய புறம்பு விஷயம் தான் உண்டோ-என்பது போல் கண்களாலேயே பேசினான்
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு
வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத்
துணை முலை பயந்து என தோள்கள் வாட
மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண
மென் மலரடி நோவ நீ போய்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு
அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே–10-3-7-
நாங்கள் நோவு பட-உன் மெல்லிய திருவடிகள் நோவ பசு மேய்க்கப் போனால்-அங்கு அசுரர்கள் கிட்டினால்-என்னை விளையும்-என்கிறாள்-எமது உயிர் வேம் -என்கையாலே-உனக்கு அது இல்லை என்று தோன்றுமே அன்றோ –இந்த பாடு எல்லாம் எங்களுக்கே –
தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத்-இது காறும் பார்த்து இராத ஓன்று நீ காணலாம்-இப்பொழுது தானே சந்நிஹிதனாக இருக்க நீர் -அதனால் அபூர்வம் -போகாதே காண் -என்கிறாள் –தாமரைப் பூவிலே முத்துப் பட்டது-கண்ணான முத்தே அன்றோ –நேத்ர பூதம் -சாடு -கண்ணிலே தோன்றிய முத்து -சிலாக்கியமான முத்து -கண் மணி போலே
———–
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று
ஆழும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து
கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும்
கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர்
நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-10-3-8-
பிரபல தர விரோதி இதில் ஆரம்பம் -அடுத்த பாசுரம் விளக்கம் –
நீ சென்றால் தீங்கு விளையுமோ என்று அஞ்சா நின்றேன்-உன்னைப் பிரியவும் மாட்டேன்-
பசு மேய்த்தலை வ்யாஜ்யமாகக் கொண்டு-காதலிமார்களை நினைத்து போகிறாய் ஆகில்-
-நீ விரும்பி இருக்கும் அவர்களோடு என் கண் வட்டத்தே சஞ்சரிக்கப் பார் என்ன-
ஆனால் அவர்களை அழைத்து தருவார் யார் என்ன-வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும்- உனக்கு தூது செய் கண்கள்-9-9-9- உளவாக இருக்க புறம்பே பரிகரம் தேடி அழைக்க வேண்டி இருந்ததோ-இனிப் பொருந்தோம் என்று இருப்பார் மரத்தை மாற்றி அவர்களை வசீகரித்து தரும் கண்களும்-அந்நோக்கில் கருத்தினை வெளிப்படுத்தும் வாயும்-அந்நோக்கிலும் முறுவலிலும் நேர் விழிக்க மாட்டாதே நாணத்தாலே கவிழ்ந்தவர்களை-எடுத்துக் கொள்ளும் கைகளும்-தொடுதலாலே தோற்றவர்களை கீழே போகாதபடி தன் செல்லாமையாலே-மேலே ஏறட்டு கொள்கிற பொன்னாடையும்-உனக்கு புறம்பே அழைத்து தருவார் வேண்டி இருந்ததோ-பிடாத்தை விழ விட்டு வடிவைக் காட்ட அமையாதோ-என்கிறாள்
————-
உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன்
திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்
எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு
நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9-இதுவே இத் திருவாய் மொழிக்கு நிதான பாசுரம்
உகக்கும் நல்லவரோடும் உழி தராய்-என்று நான் போகாமைக்கு சொன்ன வார்த்தை இத்தனை ஒழிய-உங்கள் முன்னிலையிலே நான் வேறு பெண்கள் சிலரோடு கலந்து பழகுதல்- உங்களுக்கு விருப்பம் இல்லாதது அன்றோ என்ன –
எங்களோடு கலக்கும் கல்வியால் உண்டாகும் இன்பத்தைக் காட்டிலும்-உன் திரு உள்ளத்தில் பிரியமே எங்களுக்கு மிகப் பெரிய இன்பமாகும்–நாங்கள் வியக்க இன்புறுதும் –புறம்பு உள்ளாரைப் போலே அன்றியே-உன் உகப்பையே பிரயோஜனமாக கொண்டுள்ள நாங்கள் மிகவும் உகப்புதோம் –பிரதான அவன் ஆனந்தம் சொல்லி பின்பு நம் ஆனந்தம்-உன்னிலும் அவர்களிலும் நாங்கள் வியக்க – -நீ உகந்தாரை ஒழிய உன்னை உகக்குமவர்கள் அல்லோம் காண் நாங்கள்–ஆன பின்பு தீமை விளையும் இடத்திற்கு போகாது ஒழிய வேணும்-என்கிறார்கள் –
மூன்றில் சுருக்கிய ஐந்தையும்-உயர் தினை ஒன்று பயில் /ஏறு கண் கரு வீடு /சொன்னால் ஒருக் கொண்ட/நோற்ற நாலும் /எம்மா ஒழிவில் நெடு வேய் –என்கிற இருபதிலே விசதமாக்கி-எண்பதிலே பரப்புகையாலே -ஐந்தையும்
அருளினான் வீடு பெற்ற என்கையாலே ஐந்தில் இரண்டையும்
தொழுது களித்தேன் சொல்லுப் பெற்றேன் பணி செய் என்கிற முக்த லக்ஷண வ்ருத்தியாலே இரண்டில் ஒன்றையும் இதுக்கு ப்ரமேயம் என்னும் -சூர்ணிகை -211-
————-
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ
அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்று உழி தருவர்
தனிமையும் பெரிது உனக்கிராமனையும்
உவத்திலை உடன் திரிகிலையும் என்று என்று
ஊடுற வென்னுடை யாவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே–10-3-10-
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி –ஆமாம் -நீ ஒவ்வோர் இருப்புகளை குலைத்துக் கொண்டு- போந்து அறியாயே-பரம பதத்தில் இருப்பினைக் குலைத்து அன்றோ பசு நிரை மேய்க்கப் போந்தது –அங்கு இருந்தான் ஆகில் என் வயிறு எரிய வேண்டாவே-நாம் பெறுவோம் இழப்போம் -அங்கே இருந்து வந்தது உன்னை கடாக்ஷிக்க அன்றோ என்ன -நாம் பெறுவோம் இழப்போம் -இவனுக்கு ஒரு தீங்கு வாராது ஒழியுமே-இது ஒரு அன்பின் தன்மை இருந்தபடி என் -என்று முறுவல் பூத்தான் –
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே –அதிலே ஈடுபடுகிறார்கள் –அவ்விருப்பு குலைந்து போந்தமை உண்டு-உங்களை விட்டுப் போந்தேனோ-என்று முறுவல் செய்ய-இவர்களும் வாய்க்கரையிலே -அதரத்தில் -அழுந்துகிறார்கள்-இத்தை நம்பி திருவாய்மொழி நிகமிக்கிறார் –பரம பதம் விட்டாலும் உம்மை விடோம் என்றானே –
————
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு
அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர்
வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை
அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன
இவையும் பத்து அவற்றின் சார்வே-10-3-11-
பொருநல் சங்கணி துறைவன் –தாம் இருந்த இடத்தில் மேன்மக்கள் அடங்கலும் வந்து (பவிஷ்யத் எம்பெருமானாரும் பெரிய ஜீயரும்)சேருமாறு போலே ஆயிற்று –திருப் பொருநலில் சங்குகள் வந்து சேரும்படி –
இவையும் பத்து அவற்றின் சார்வே –அவை -என்கிறது 1-மேலே போந்த திருவாய் மொழிகளாய் –அவற்றின் அருகே இதுவும் ஒரு திருவாய் மொழியே-என்ற ஆச்சர்யத்தில் ஆக்கி-ஆயிற்று சீயர் அருளிச் செய்ததும் -9000 படி வியாக்யானம் செய்ததும்
அன்றிக்கே –2-இவையும் பத்து அவற்றின் சார்வே —மேல் திருவாய் மொழிகளுக்கு சொன்ன பலம் இதற்கு பலம்-என்கிறது ஆகவுமாம்-
அன்றிக்கே-3-அவை -என்கிறது-மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை -என்கிறவற்றையாய்-இவையும் அவற்றோடு ஒக்கும் என்னுதல் -என்றது-அதனுடைய பலமே இதற்கும் பலம்-அது பலத்தோடு கூடியதாயின் இதற்குபேறு உண்டாம் -என்றபடியாம் –அவர்கள் நீ போகாதே கொள் -என்ன-அவன் தவிர்ந்து அவர்கள் உடன் கலந்தால் போலே-
இது கற்றாரும் அவனோடு நீங்காத கலவியைப் பெறுவார் –என்றவாறு –
———–
சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே--10-4-1-
சார்வு பிராப்தி தவ நெறி –ஸாத்ய பக்தி-சார்வு -என்றது பேறு- தவ நெறி -என்றது பக்தி மார்க்கத்தை-ஞான விசேஷமான பக்தியை தவம் என்று சொல்லிற்று-வணக்குடைத் தவ நெறி -1-3-5- என்றார் இறே-ஆகையால் இவன் ஒரு வணக்கத்தைச் செய்தால்-இவன் நம்மை நோக்கி குவாலாக வருந்தினான் -என்று-இதனை பெரிய காய கிலேசமாக நினைத்து இருக்கும்-அவன்கருத்தால் சொல்லுகிறது –
வேங்கடத்து உறைவார்க்கு –நம-வென்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே – அங்கமான வணக்கத்தை இட்டு அங்கியான பக்தியைத் தவம் என்ற சொல்லால் சொல்கிறது –அன்றிக்கே-யஸ் சர்வஞ்ஞ சர்வ வித் யஸ்ய ஞானம் அயம் தப -முண்டக உபநிஷத் -என்கிறபடியே-ஞான விசேஷமான பக்தியை தவம் என்று சொல்லிற்று ஆகவுமாம்
தாமோதரன் தாள்கள்-அவனை உகப்பார் அவன் காலைக் கட்டிக் கொள்ளும் இத்தனை அன்றோ-வரத வலி த்ரய -பிரதம விபூஷணி வபூவ –
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்-விலக்ஷண விக்ரகம் -நீர் கொண்டு எழுந்த காள மேகம் – பக்திக்கு கிருஷி பண்ண வேண்டாம் வந்து நின்றால் போதுமே-ருசிக்கு உத்பாதகமுமாய் –வளர்த்து பக்குவம் ஆனால் அனுபவிக்கவும் அந்த அழகே -பிராப்யம்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்-
விக்ரக வை லக்ஷண்யத்துக்கு மேலே -ஸ்வரூப வை லக்ஷண்யம் சொல்கிறது
யாவையும் யாவரும் தானாம் அமை உடை நாரணன் –பிரகார பிரகாரி பாவம் -அத்தையே இங்கு சொல்கிறது
பிருதிவி பஞ்ச பூதங்களை -சொல்லி காரணமான தேவாதி விஷயங்களையும் நினைக்கிறது -இத்தால் லீலா விபூதி உக்தன் என்றும்
கையும் திரு ஆழியும்—சொல்லி நித்ய விபூதியையும் சொல்லி –
———–
பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்
கருமையனே ஆகத் தணை யாதார்க்கு என்றும்
திரு மெய்யுறைகின்ற செங்கண் மால் நாளும்
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே–10-4-2-
மேலே கூறிய சௌலப்யம்-தமக்கு பலித்த படியை-அருளிச் செய்கிறார்-இதனை விட்டு ஒரு தேச விசேடத்தில் போனால் கொள்ளக் கடவ அடிமையை இந்த உலகத்திலே நாள் தோறும் கொள்ளா நின்றான் – அங்குப் போனால் குண அனுபவத்தாலே ஆத்மாவை -சத்தையை-நிர்வகிக்கும்–இங்கு குண ஞானத்தினால் தரிப்பியா நிற்கும் –
செங்கண்-அவளுடைய என்றும் உள்ள சேர்த்தியாலே-மதமுதிதரைப் போலே -சிவந்து – நீர் பாய்ந்த-பயிர் போலே செவ்வி பெற்ற திருக் கண்களை உடையவன் –
திரு மெய் யுறைகின்ற –-என்றாவது வருவான் என்று அன்றோ நித்ய வாசம்-
த்வயத்தில் நித்ய சம்பந்தத்தைச் சொல்லுகிறதே அன்றோ-மத் ப்ரத்யாயர்த்தம் –
————-
ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே–10-4-3-
ஆர்த்தி ஹரத்வம் குணம் பத்தாம் பத்தில் -ருசிக்கு தன்னையே விஷயம் ஆக்கி அருளுகிறார் -பத்துடை அடியவர்க்கு எளியவன் திருவாய் மொழி அர்த்தமே இதிலும் அருளிச் செய்கிறார்-மீள்கின்றதில்லை-மறுவல் இடாதபடி-பிறவிப் பிணியைப் போக்கி-நப்பின்னைப் பிராட்டிக்கு கேள்வன் ஆனவனுடைய திருவடிகளை தலைக்கு அணியாகப் பெற்றேன்–அடியாருக்கு பரதந்த்ரப் பட்டு இருக்கும் அவனுடைய-தன்மைக்கும் ஏதேனும் கண் அழிவு உண்டோ-அவன் ஸ்வா தந்த்ர்யம் தலை எடுத்ததாகில் தன் ஊணை இழக்கிறான்-மண நோக்கம் உண்டவன் அன்றோ -பெரிய திருமொழி -8-10-1-அவனுடைய ஸ்வா தந்த்ர்யம் தலை எடுத்ததாகில்-அடுகுவளம் தடைப் படும் போல் காணும்-
அடுகு -என்று பெட்டி மேல் பெட்டியாய்-வளம் -என்று இனிய பொருளாய்-போனகப் பெட்டி-அடு குவளம் தடைப் படுதல் -நப்பின்னை பிராட்டி கடாஷம் பெறாமை-என் ஜீவனத்தை பறித்தான் ஆகில் தன் ஜீவனத்தை இழக்கிறான் –
ஆரால் குறை உடையம்-ஆரால் -என்கிறார் காணும்-என்றும் ஒரு சேதனனாலே பேறு-என்று இருக்குமவர் ஆகையாலே–எத்தால் -என்னாமல்-அசேதனம் -கர்மாதி உபாயாந்தரங்கள் கூடாதே –
பிறவித் துயர் கடிந்தோம் –பிறவித் துன்பத்தினை ஓட்டினோம் -என்றது –பரம பதத்திலே புகச் செய்தேயும்- ருசி முன்னாக பேறு இல்லாமையாலே-
கடலில் புக்க துரும்பு போலே மீளப் போந்தார்களே அன்றோ-வைதிகனுடைய பிள்ளைகள் –
மயர்வற மதிநலம் அருளினன் -என்று ருசி முன்னாக – அவன் தரப் பெற இருக்கிற நமக்கு-மீண்டு வருதல் என்பது ஓன்று இல்லை என்றபடி –
கடிந்தோம் -என்கிறார் காணும் -இறந்த காலத்தில் திரு மேனி உடன் இருக்கச் செய்தேயும் –
அவன் செய்வானாக ஏறிட்டுக் கொண்ட கார்யத்துக்கு-நிலையாகப் பெற்றேன் -என்ன வேண்டும்படி இருக்கும் அன்றோ –
ஸ்தித அஸ்மி கத சந்தேக கரிஷ்யே வசனம்தவ -ஸ்ரீ கீதை -18-73-நஷ்டோகோ மோஹ – பிரசாததத்தால் இந்த நிலை பெற்றேன் என்றான் –
என் தலை மேல் புனைந்தேனே – துயர் அறு சுடர் அடி தொழுது எழு -1-1-1-என்றும்-
பாத பங்கயமே தலைக்கு அணியாய் -9-2-2-என்றும்- கோலமாம் என் சென்னிக்கு -4-3-6-என்றும்-சொல்லுகிறபடியே-மயிர் கழுவிப் பூச்சூட இருப்பாரைப் போலே இருக்கிற இனிமை சொல்லுகிறது –நின் செம் மா பாத பற்புத் தலை சேர்த்து -2-9-1-என்று வேண்டிக் கொண்ட அதனை-தலையாகப் பெற்று ஸ்ரேஷ்டமாக தலை மேல் பெற்று -கிருதகிருத்யன் ஆனேன்-
————
தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே–10-4-4-
தலை மேல் புனைந்தேன் சரணங்கள் –அமரர் சென்னிப் பூச் சூடப் பெற்றேன்-வேண்டிக் கோடலே அன்றி அத் திருவடிகளை என் தலை மேலே வைத்துக் கொள்ளப் பெற்றேன் – இப் பேறு பெருகைக்கு அவன் முயற்சி பண்ணின படி சொல்கிறது மேல்-
அவன் வண் தடத்தின் உள் கிடந்து-பெரிய திருமடல் -14-தவம் பண்ணிற்று-வண் தடம் -ஏகார்ணவம்-கடலில் கிடந்து -கல் மேல் நின்று -உள்ளில் நின்று கோர மா தவம் செய்தனன் கொல்–என் மனத்தில் இருக்கிற சர்வேஸ்வரனை-ஒருவராலும் பிரிக்க ஒண்ணாது என்று-
அறுதி இட்டு அதனாலே-கிருதகிருத்யனாய் இருந்தேன்-என்கிறார்-1-ஆலின்
இலைமேல் துயின்றான் -2-மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை-திரு வேங்கடத்தில் -ஸ்வயம் பிரயோஜனமாக நித்ய வாசம் செய்து அருளி –3-நெஞ்சுக்குள் பிரதிஷ்டித்தானாக -இருந்த திருக் கோலம் –கிடந்த நின்ற இருந்து அருளிய மூன்று நிலைகளையும் அனுபவிக்கிறார்–இங்கு விலக்குவார் இல்லாமையாலே-ஸ்தாவர ப்ரதிஷ்டையாய் இருந்தான் – –உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் நல் நெஞ்சே -மூன்றாவது நிலை-நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே-கதவு அடைத்து தள்ளினாலும் போக மாட்டானே –இருக்கும் அவனை போனான் என்று அழுத ஆழ்வார் -இப்படி அன்றோ ஆச்வாஸப் படுத்தி மாற்றி -உறுதி குலைக்க முடியாதே -நிச்சயித்து -அதனால் திருப்தியாக –இருந்தேனே-கிருதக்ருத்யன் ஆனேன் –
————
நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை
கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையவன்
மெச்சப் படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன்
நச்சப் படும் நமக்கு நாகத்து அணையானே–10-4-5-
நீரிலே கிடந்தும்-மலை உச்சியிலே நின்றும்-தன் பேறாக தவம் செய்து வந்து-என் நெஞ்சிலே இருக்கையாலே-கைச் சக்கரத்து அண்ணல்-தன்னைப் பற்றினவர்களை ஒரு காலும் கை விடான் –எப்போதும் கை கழலா நேமியான் -இனி ஒரு காலும் விட்டுப் போகான் என்று நிச்சயித்து இருந்தேன் –
கள்வம் பெரிது உடையவன் –மனத்தினைக் கை விடாமையே அன்றிக்கே–இங்கே இருந்து நாம் அறியாது இருக்க- தான் அறிந்ததாகக் கொண்டு அவ்வருகே-குவாலைப் பாரியா நின்றான் -என்றது- பரம பதத்து ஏறக் கொடு போக ஒருப்படுவது-அமானவனை இடுவித்து தீண்ட நினைப்பது-மதி முக மடந்தையரை வரக் காட்டி எதிர் கொள்ளப் பார்ப்பதாய்-குவாலைப் பாரியா நின்றான்-பேசி ருசி வளர்த்து பாட வைத்து -மறைத்து -நாதமுனிகளுக்கு வழங்கி அனைத்துக்கும் திட்டம் போட்டு பாரித்து -பவிஷ்யகார விக்ரகம் கொடுத்து -நாம், அறிந்து கொண்டாடும் படி பாட வைக்கப் பாரியா நின்றான்-
மெய் போலும் பொய் வல்லன் –அர்ஜுனன் முதலாயினோர் பக்கல் இருக்குமாறு போலேயோ-துரியோதனன் முதலாயினோர்கள் பக்கலிலும் இருப்பது –
கார்யத்தில் வந்தால் மெய் செய்வாரைப் போலே-பொய் செய்து தலைக் கட்டுவான் –
நாகத்து அணையானே-நம்மோடு ஒத்தவர்கள் பக்கல் செய்தது அன்றோ நமக்கு எடுத்துக் காட்டு-அநந்யார்ஹத்வம் அநந்ய ப்ரயோஜனர் என்கிற-சஜாதீயம் -நம்முடைய பேற்றுக்கு அடியுமாய்-நம்மோடு ஒத்தவர்களும் ஆனாரோடு செய்யும்படி இது அன்றோ –
———
நாகத்து அணையானை நாள்தோறும் ஞானத்தால்
ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை
மாகத்து இளம் மதியம் சேரும் சடையானைப்
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே-10-4-6-
இன்று வந்து பற்றுமவரையும்-எப்பொழுதும் தன்னைப் பற்றி நிற்கும்-
அவர்களைப் போலே அங்கீகரிக்கும் அவன்-திருவடிகளிலே செருக்கு அற்றவனாய் விழப் பெற்றேன்
நாகத்து அணையானை –-உகந்தாரை படுக்கையாக-கொள்ளுமவன் ஆயிற்று-திருமேனி முழுவதும் ஆஸ்ரிதற்கு கொடுத்து இதிலும் மெய்யன் -அவர்களுக்கு ஏக தேசம் -பொய்யன் –
நாகத்து அணையானை – ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு –நாள்தோறும்-அருள் செய்யும் அம்மானை –ஞானம் -பக்தி–இவனால் எப்போதும் நினைக்கப் போகாதே-
அக் குறை தீர-ஒரே தன்மையான தான் நாள் தோறும் அருள் செய்யும் ஆயிற்று-
———-
பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7-
நம் தடைகளை எல்லாம் தானே போக்கி-அடிமை கொள்ளுமவனை-
நாள்தோறும் அனுபவி -என்று-தன் திரு உள்ளத்தை நோக்கி-அருளிச் செய்கிறார்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே –அனுபவிப்பார்க்கு விரோதிகளையும் போக்கி-திருக் கைக்குத் தானே ஆபரணமாய்-அனுபவிப்பார்க்கு விரும்பத் தக்கதான-வடிவை உடைய திரு ஆழியைக் கையிலே உடையவன் -என்றது –அனுபவத்துக்கும் தானேயாய்-விரோதிகளை அழிப்பதற்கும்-தானே யான கருவியை உடையவன்
————-
ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்--10-4-8-
அவனை அனுபவிப்பாய் என்றவாறே-உகந்த நெஞ்சினைக் கொண்டாடி–முறையிலே நின்று என் வழியே நின்ற நெஞ்சே -நாட்டார்க்கு பந்தமாகா நிற்க -எனக்கு மோக்ஷ ஹேதுவான நெஞ்சே-மறவாது வாழ் கண்டாய் சொல்வதற்கு முன்பு வாழி நெஞ்சே–அவனை இடைவிடாதே அனுபவி–வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்–நெஞ்சே மறவாது நித்ய அனுபவம் பண்ணி வாழப் பார்-
இவ் வாழ்வு நித்யமாக -வாழி என்று வாழ்த்துதலாக வுமாம்=
ஆழியான்-பாது காப்பதற்கு வேண்டிய சாதனங்களை உடையவன் பாது காப்பவனாக வேண்டுமே–ஆழி யமரர்க்கும் அப்பாலான்-அநந்ய பிரயோஜனர்கள் ஸ்வரூபம் ஸ்திதி அனைத்தைக்கும் நிர்வாஹகன் ஆனவன்-பாது காக்குமவனாக வேண்டும் –
ஊழியான்-ஒருக்கால் உளனாவது இலனாவது ஆகா நிற்கிறவனுக்கு-என்றும் உளனானவன் பாதுகாக்க வேண்டுமே-
ஊழி படைத்தான்-இவை இல்லாத அன்று உண்டாக்கினவன் பாதுகாக்குமவனாக வேண்டும்-
நிரை மேய்த்தான்—பாழி யம் தோளால் வரை எடுத்தான்-உண்டான அன்று பாது காப்பவன் ஆகைக்கு-தம்மை பாது காப்பதில் குறைய நின்றனவற்றையும் நோக்குமவன்-
தங்களை காத்துக் கொள்வதில் சம்பந்தம் இன்றிக்கே-அவன் பண்ணும் பாதுகாவலை விலக்காத பசுக்களைக்-காத்தவன்–பாது காப்பவனாக வேண்டும்-
மதிலுக்கு உள்ளே இருப்பாரைப் போலே-அச்சம் கெட்டு இருக்கலாம் படியான-வலியைச் சொல்கிறது -பாழி யம் தோள் -என்று-
அன்றிக்கே-பாழி -இடம் உடைமை ஆகலுமாம்-ஐந்து லஷம் குடியில் உள்ளாறும் இவன் தோள்-நிழலிலே ஒதுங்கினாலும் திரு ஆய்ப்பாடி அளவன்றிக்கே-இன்னமும் பத்து திரு ஆய்ப்பாடிக்கு இடம்-போரும் என்னும் படியான- காக்கும் தன்மையின் துடிப்பு இருக்கும்படியைச் சொல்கிறது-
இருந்தபடியாமாகில் மறந்து காண் -உன்னாலே மறக்கப் போகாதே –
——————-
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9-
இத் திருப் பாசுரத்தில் சொல்லப் படுகிற பிரபத்தியோடு-மாறாடும்படியாக இருக்கிற-பக்தியைச் சொல்லிக் கொண்டு போந்தார் மேல் –உயிரான பாசுரம் -சரம ஸ்லோகம் படி இதனாலே பிரபத்தி சாதன பக்தி ஸாத்ய பக்தி மூன்று நிர்வாகங்கள் பார்த்தோம் -எது முன்னால் –கண்டேன் –கண்டதும் -விண்டே ஒழிந்தன-அடி வுடையராய் இருந்தார் ––சாடு- மூலம் உண்டு -திருவடி கண்டார்–என்று விட்டுப் போயிற்றின -அப்புறம் -மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் என்பதால்-பரம பக்தர்களுக்கு சாஸ்திர நியதி இல்லையே-
கண்டேன் –என்றும் கேட்டே போகக் கூடிய பொருளை-கண்களால் காணப் பெற்றேன் –
தன்னுடைய பிரபத்தி அதன் பலத்தோடு பொருந்தின படியை–அதாவது-நேராக கண்ட படியையைச் சொல்கிறார்-
இதனால் புறக் கண்களால் கண்டது போன்று-ஞானக் கண்களால் கண்டபடியைச் சொன்னபடி –விசத தமமான மானஸ சாஷாத் காரம் –
த்ருஷ்டே பராவரே-கண்டால் போகும் -ஸ்ருதி முண்டகம் –ஆழ்வார் சங்கை இல்லாமல் கண்டேன் –பரன் அவரன்-மேன்மைக்கும் எளிமைக்கும் எல்லை இவனே –பரர்கள் என்று லோகத்தில் உள்ளார் அவரர்கள் போல் – உயர்வற உயர் நலம் -உயர்வு அறும் படி அன்றோ இவனது உயர்வு –
அருளினன் – அதனால் — –ஸாத்ய பக்தி -பெற்று -அதனால் பிரபத்தி -என்றும் நேராக பிரபத்தி என்றும் -பின்பு அவா பெருகி வழிந்து- ஸ்வீ க்ருத சித்த சாதனர்-சித்த வஸ்துவை சாதனமாக ஸ்வீகாரம் பண்ணி-இத்தை -பக்தியை -மார்க்க மதியத்தில் பர ஞானம் -அங்கே பரமபக்தி-சாத்தியமாக இரக்க-பகவத் ப்ரஸாதத்தாலே சாத்தியமான பிராப்திக்கு முன்னே சித்திக்கும் -இத்தையே பகவத் ராமானுஜர் கத்யத்தில் அருளிச் செய்கிறார் –
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக –அந்த சரம ஸ்லோகத்துக்கு இதுவும் கருத்து -என்கிறார்-அடிமை நிலை நின்றதே இருக்குமே-அடிமை நித்தியமான பின்பு அதற்குத் தக்கதான தொண்டும்-நித்யமாகச் செல்லும் படியாக-சரம ஸ்லோகத்தில் இஷ்ட பிராப்தி சொல்ல வில்லை -அநிஷ்ட நிவ்ருத்தி -உபாதி தொலைய இவை தன்னடையே கிட்டுமே-
கிணறு வெட்ட -தண்ணீர் -கிடைக்குமே -ஸ்வரூபம் நித்யம் -மறைந்து இருந்தது -ஸ்வரூப அனுரூப வ்ருத்தியும் கிட்டும் –
மம சஹஜ கைங்கர்யம் -பிரதி பந்தகங்கள் போனால் -தன்னடையே கிட்டும் -இது தான் சேஷத்வம் போலே இயற்க்கை –
—————-
வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திகை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே–10-4-10-
அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற-பிரயோஜனாந்தர பரர்களோடு-தமர்கட்கு ஓர் பற்றே-பக்திமான்களோடு-பிரபத்திமான்களோடு- -வேற்றுமை அற-அவனே உபாயம் -என்று-மேலே கூறியவற்றை எல்லாம்-முடிக்கிறார்- கதி த்ரயஸ்ய மூலம் –ஐஸ்வர்யாதி கைவல்யார்த்தி பகவல் லாபார்த்தி மூவருக்கும் –வகையால் -வேதப் பிரகிரியை படியே-சத் வித்யை -ஸ்வரூபம் உபாஸிக்க-தகர வித்யை -குணம் உபாஸிக்க -உபாசகனுக்கு என்றும் இதுவே —அந்தர்க்கத குணாம் ஸ்வரூப அந்தர்ப்பூத குணாம்-தேவதாமேவ பஜதே -த்யாயதி-என்றபடி-
குண உப சம்ஹார பாதம் -ஸமஸ்த கல்யாண குணாத்மகன் -குணக் கடல் அன்றோ –
ஸ்வரூபம் உபாஸிக்க- குணம் இல்லை – புத்தி ஆரோஹணத்துக்கு குணம் சொல்லிற்று என்பர் அத்வைதிகள் —தகர வித்யையில் சொன்னவனே இவனும் -குணம் விட்டுப் பிரியாதே –அங்குப் போனாலும் சோஸ்நுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மண -குணங்கள் உடன் கூடிய ப்ரஹ்மம் அனுபாவ்யம் -ஆகவே ஸத்வித்யா உபாசகனும் குணத்துடன் கூடிய ப்ரஹ்மத்தையே உபாசிக்கிறான் -எதனால் என்றால் குணங்களை ப்ரஹ்மத்திடம் இருந்து பிரிக்க முடியாதே -பிரபன்னனுக்கு வகையால் -உபாயாந்தரங்களில் -ப்ரயோஜனாந்தரங்களில்-போகாமல் -சரம ஸ்லோகம் படிக்கு என்றபடி –மாதவன் -பிள்ளையை -சின்ன சின்ன குற்றங்களைப் பொறுக்க அவள் உண்டே இதனால் வகையால் -மனம் ஒன்றி -மாதவன் -என்கிறார் –
நாளும் புகையால் விளக்கால் புது மலரால் நீரால் திகை தோறு அமரர்கள் சென்று-இறைஞ்ச நின்ற தகையான் சரணம் –
கால வரையறை இல்லாமலே-ஆராதிப்பதற்கு உரிய பொருள்களுக்கும் வரையறை இல்லாமலே-
தங்களுக்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு-அக்ரமமாக சொல்லி -நீரால் சொல்லி தானே ஆரம்பித்து இருக்க வேண்டும் –
பெரிய திரு நாளுக்கு எல்லா திசைகளிலும் உள்ள மக்கள் வந்து ஏறுமாறு போலே-
பிரமன் முதலான தேவர்கள் வந்து அடையும் படியான தன்மையை உடையவனுடைய திருவடிகள் –
தமர்கட்கு ஓர் பற்றே –
ஓர் பற்று –
தன் திருவடிகளைப் பற்றினார்கட்கு பின்னையும் புறம்பு போய்-ஒரு பற்று தேட வேண்டாதபடியான பற்று-
அநந்ய பிரயோஜன பக்திமான்களுக்கும் பலத்தை கொடுப்பவனாய் உபாயமாய் இருக்கும்-
தன்னையே பற்றினார்க்கும் நேரே உபாயமாய் இருக்கும் –
தமர்கள் -பக்திமான்களையும் பிரபத்திமான்களையும் குறிக்கும்-
————-
பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11-
இத் திருவாய் மொழியைக் கற்றார்க்கு-கிருஷ்ணன் திருவடிகள்-சுலபமாம்- இவன் பிரபத்தியைச் செய்து-உறுதி உடையவனாய்-இருக்கும் அத்தனையே வேண்டுவது –
காப்பாற்றுவதில் அவன் இடத்தில் ஒரு குறையும் இல்லை – இவர்கள் விரோதிகளைப் போக்குக்கைக்கு-தகுதியான மிடுக்கையும் அன்பையும்-உடையவன் -என்பார் –மல் திண் தோள் மால் –இத்தால் ப்ராப்யத்தையும் ப்ராபகத்தையும் சொன்னபடி
ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே –தாமோதரன் தாள்கள் தவ நெறிக்கே சார்வே -என்கிறபடியே-கிருஷ்ணன் திருவடிகளே –இனி அவ் வருகு போய் ஓன்று தேடிப் பற்ற-வேண்டாதபடியான பற்றாகும்- இதையும் பற்றி தாண்டி போய் மற்று ஒன்றைப் பற்ற வேண்டாம் –ஏவ காரம் –
———-
கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–10-5-1-
தோல் புரையே போமதுக்குப் பழுதிலா யோக்யதை -ஒழுகலாறு -வேணும் -மனமுடையீர் என்கிற ஸ்ரத்தையே அமைந்த மர்ம ஸ்பர்சிக்கு – நானும் நமரும் -என்னும்படி -சர்வரும் அதிகாரிகள் –-சூர்ணிகை -18-
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே-அனுசந்திக்கைக்கு யோக்கியமான -மந்த்ர பிரதானம் -வியாபக மந்தரங்களுள் ஸ்ரேஷ்டம்-சார தம காயத்த்ரியில் முன்னோதிய-பிரணவ -நமஸ் -சதுர்த்தி அபேக்ஷிதங்கள் அல்ல -இத்துணையே அமையும் -என்பார் –நாரணமே -எனத்-தேற்றகாரம் கொடுத்து ஓதுகிறார்-நாராயணம்-அதிலும் சுருக்கி –நாரணமே-பக்தியை உடையராய்க் கொண்டு-அவனை நினைப்பார்க்கு-பற்றுக் கோடானா-திருமந்தரம் -இன்னது –-சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் –என்று மேலே சொன்னதனையே இங்கே கண்ணன் கழல் இணை என்கிறார்
பிரிந்து கூடினாரைப் போலே இருக்கிறது காணும்-ஆதலின் –நண்ணும் -என்கிறார் -இத் யுக்த பருஷம் வாக்யம் ராவணம் ராவணா நுஜ-ஆஜகாம முஹூர்த்தேன யத்ர ராம ஸ லஷ்மண-யுத்தம் -17-1-வந்தான் என்பது போலே-ஸூ ஸ்தானம் போலே –இக்கரை ஏறி இளைத்து இருந்தேன் -அக்கரையில் இருந்து அநர்த்தப் படாமல் –
மனம் உடையீர் -என்கிறார் -நிதி உடையீர் -என்னுமாறு போன்று-இதனையே குவாலாக நினைத்து இருத்தலின் –இதனால் -இதற்கு அதிகாரம் தேட வேண்டா-ருசி உடையார் எல்லாரும் அதிகாரிகள் -என்பது போதரும் –
எண்ணும்- திருமந்தரம் -என்னாமல்-நாமம் -என்கிறது-இதற்கு ஒரு அதிகாரி நியதி -அங்க நியதி -வேண்டா-குழந்தை தாயின் பெயரைச் சொல்லுமாறு போன்று அமையும் -என்கைக்காகா –எண்ணும் திரு நாமம் -நினைக்கப் படும் திருப்பெயர் –சுலபமான அநுஸந்திக்கும் திரு நாமம்
அன்றிக்கே –பக்திமான்களைச் சொல்லுகையாலே அது தான் -அது அது –என்னும்படியாய் ரசமாக இருக்கையாலே சொல்லுதல் -என்னுதல் –தேனும் பாலும் — நானும் சொன்னேன் நமரும் உரைமின் –
—————–
நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2-
இரண்டாம் பாட்டிலும் மூன்றாம் பாட்டிலும்-நாராயணன் -என்னும் திருப் பெயரின் உடைய பொருளை அருளிச் செய்கிறார் –குண விபூதி யோகம்-எம்மான் –இது லீலா விபூதிக்கு உப லஷணம்-குற்றம் செய்தது பொறுக்கைக்கு ஒரு உலகமும்-பாரணங்கு ஆளன்-ஸ்ரீ பூமிப் பிராட்டி யைச் சொன்னது நித்ய ஸூரிகளுக்கு உப லஷணம்-பொறுப்பிக்கைக்கு ஒரு உலகமும்-குற்றம் செய்தது பொறுக்கைக்கு ஒரு உலகமும்-பொறுப்பிக்கைக்கு ஒரு உலகமும் -ஆயிற்று –
காரணன் தானே –இவற்றின் உடைய ஸ்வரூபம் ஸ்திதி முதலானவைகள்-தன் அதீனமாய் உடையவனாய் இருக்கையும் – இவற்றுக்கு ஆஸ்ரயம்-இவை தனக்கு ஆஸ்ரயமாக –இவை இரண்டாலும் பலித்தது -பரத்வ சௌலப்யங்கள் அந்தர்யாமித்வமும் -உபாயத்வமும் -உபேயத்வமும்-வாரணம் தொலைத்த காரணன்-என்கிறது திரு அவதாரங்கள் எல்லாவற்றுக்கும் உப லக்ஷணம் –
இரண்டாம் பாட்டிலும் மூன்றாம் பாட்டிலும்-நாராயணன் -என்னும் திருப் பெயரின் உடைய பொருளை அருளிச் செய்கிறார் –
ஏதேனுமாக திரு மந்த்ரத்தை சொல்ல நேர் பட்டவாறே-
முன்னே அர்த்தத்தைச் சொல்லி பின்பு பெயரினைச் சொல்லுதல் –
முன்பே திருப் பெயரைச் சொல்லி பின்பு அர்த்தத்தை சொல்லுதல்
செய்யக் கடவதாய் இருப்பது ஒரு நிர்பந்தம் உண்டு இவர்க்கு-
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் – என்னுதல்
யாவையும் எவரும் தானாம் அமைவுடை நாரணன் -என்னுதல் –
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -என்னுதல் –
நாராயணன் நங்கள் பிரான் அவனே -என்னா -அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் -என்னுதல் செய்வர்-
அந்தர் பஹிஸ்ஸா தத் சர்வம் -நாராயணா
நாராயண பரஞ்சோதி இரண்டு வகைகளும் உண்டே
—————–
தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–10-5-3-
ஸ்வாமித்வ ப்ரயுக்தமான-சர்வேஸ்வரன்-ஸ்வரூபத்துக்கு ஏற்ற-பல வகைப் பட்ட ரஷணங்களை-சொல்லுகிறார்-சர்வம் கலு இதம் ப்ரஹ்ம-தத் த்வம் அஸி-தஜ்ஜலான்-சாந்த உபாசித–இங்கு சொல்லுகிற தாதாத்மியம் -ஓன்று பட்டு இருத்தல் -ஸ்வரூபத்தால் ஐக்கியம் சொல்லுகிறது அன்று-
சரீராத்மா பாவத்தால்-காரண காரிய பாவ -ரஷ்ய ரக்ஷக பாவ-ஆதார ஆதேய பாவ-நியந்தரு நியாந்தா பாவ சம்பந்தம் உண்டே –ஏக பிரகாரி -அபிருதக் சித்த விசேஷணம்
தானே உலகு எல்லாம்–ஏக பிரகாரி-பிரகார பிரகாரி பாவம் -நாராராயணனே நமக்கே-ஏகோ பஹு நாம்
தஜ்ஜலான்-சாந்த உபாசித-
தஜ்ஜத்வ-அந்த பரம் பொருள் இடத்து உண்டாவதாலும் –
தல்லத்வ – அந்த பரம் பொருளில் லயம் அடைவதாலும் –
தத் நத்வ -அந்த பரம் பொருளால் காப்பாற்றப் படுவதாலும்-
இதம் சர்வம் -காணப் படுகிற இவை எல்லாம்
ப்ரஹ்ம கலு -அந்த பரம் பொருள் அல்லவா –
தத் அநத்வம் -உயிர்பித்தல் -காப்பாற்றுதல்-
தஜ்ஜத்வ தல் லத்வங்களில் –
தச் -சப்தம் -சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்ம பரம்
தத் அநத்வத்தில்-தச் சப்தம் கேவல ஸ்வரூப மாத்ரம்-
தானே படைத்து இடந்து-சஹாயாந்தரம் இல்லாமல் ஸ்ருஷ்ட்யாதிகள்
தானே உண்டு உமிழ்ந்து -அபேக்ஷிக்காமல் தன் பேறாக ரக்ஷித்து
தானே ஆள்வானே -சேஷியாந்தரம் இல்லாமல்
தானே உலகு எல்லாம் -இவற்றால் தானே ஸ்வாமி –
இப்படி பல விதமான பாது காத்தலை பண்ணுகையாலே-தானே உலகு எல்லாம் –எல்லா பொருள்கள் எல்லாம் ப்ரஹ்மமாகவே இருக்கின்றன-தானே படைத்து இடந்து தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே –ஆகையாலே-தானே உலகு எல்லாம் -என்கிறது –
சிலந்திப் பூச்சி தானே நூலை கட்டி அழிப்பது போலே -வீட்டைப் பண்ணி விளையாடும் -விமலன்
————-
ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான்
தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே-10-5-4-
ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோவை நர ஸூ நவே-அயனம் தஸ்ய தர பூர்வம் தேன நாராயண ஸ்மிருத -விஷ்ணு புராணம் -1-4-6-தண்ணீர் நரன் என்ற பரம் பொருளின் நின்றும் உண்டாயிற்று- பெரிய நீரைப் படைத்து–அதில் கிடந்தது படைத்து இத்யாதி–ஆதலால் தண்ணீர் -நாரம் -என்று சொல்லப் படுகிறது -என்னும்-ஒரு நிர்வசனம் உண்டே அன்றோ இதற்கு-அவ் வழியாலே திருமந்த்ரத்துக்கு-பொருள் கொண்டு-திரு மந்த்ரத்தைச் சொல்லிக் கொண்டு-மலர்களைக் கொண்டு கை கூப்பி வணங்கி அடையுங்கோள்
ஆள்வான் –இவற்றை முழுதும் அடிமை கொள்ளுமவன் –
ஆழி நீர் ஆள்வான்-அடிமை கொள்ளும் வகை இருக்கும்படி-காரணமான தண்ணீரிலே-
படைத்தலில் நோக்கு உள்ளவனாய்-திருக் கண் வளர்ந்து அருளி –அந் நிலையிலே ஆத்மாக்களை காப்பாற்றியவன் –
நாள்வாய் நாடீரே –நாள் தோறும் வணங்குங்கோள்-அத் திரு வநந்த ஆழ்வான் உடைய பேறு நீங்களும் பெறலாம்-
————
நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு
பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே--10-5-5-நிதானப் பாசுரம் -முக் கரணங்களால் ஆராதனம்
நாடீர் -என்பதனால் –மானசீகம் —நாடீர் நாள் தோறும்-பசித்த போது எல்லாம் உண்ணுமாறு போலே –கால நியமம் இல்லை என்றவாறு —வாடா மலர் இட்டு –காயிகம்–ஆன்மாவாகிய மலர்–பாடீர் –வாசகம் -முக்தர் சாம கானம் பண்ணுமாறு போலே-அவனுடைய திருப் பெயர்களை பக்தி-முன்னாக பாடுங்கோள் –ஆக முக் கரணங்களின் தொழிலையும் சொல்லிற்று –-வீடே பெறலாமே –இப்படிச் செய்யவே ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தியைப் பெறலாம் -அங்கு சூட்டு நன் மாலைகளைக் கொண்டு ஆராதிக்கையும் -அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்னும் பாட்டுமாய் இறே இருப்பது – ஸ்வேன ரூபேண அபிநிஷ்பத்யதே-ஸ்வரூப ஆவிர்பாவம் வந்தாலே முக் கரண கைங்கர்யம் தானே-பாடுகையாகிய வீடே பெறலாமே
————
மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்
பேயார் முலை உண்ட வாயான் மாதவனே–10-5-6-
மேயான் வேங்கடம்-பிற்பாடரான நமக்காக திரு மலையிலே நின்று அருளினான்-அவனை அடையுங்கோள்-என்கிறார்–காயா மலர் வண்ணன் –-துரும்பும் எழுந்து ஆடி-அடிமையில் மீண்டு அல்லது நிற்க-ஒண்ணாதபடியான வடிவு படைத்தவன் –-பேயார் முலை உண்ட வாயான்-பிரகிருதி அழித்து அஹங்காரம் மமகாராம் போலே பூதனை முலைகள்-மாதவனே –நம்முடைய செயலைப் பாராதே-அங்கீ கரிப்பதற்கு அருகே இருப்பாரும் உண்டு
—————-
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே-10-5-7-
வேங்கடத்து உறைவார்க்கு -நம வென்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே -வினை முற்றவும் சாரா–தீது ஒன்றும் அடையா –முன் செய்தவை எல்லாம் அழிந்து விடும் – ஏதம் சாரவே –
இனித் தீய செயல் அடையாது -என்றது-முன் செய்த இரு வினைகளையும் மறந்து விடும் –
இனி செய்வன வற்றில் தன் நெஞ்சு செல்லாது – போய பிழையும் புகு தருவான் நின்றனவும்-தீயினில் தூசாகும் செப்பு –
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்– நாராயண நாமத்தோடே-இதனைச் சேர்த்து சொல்லப் பாருங்கோள்என்று என்று–பூர்வ உத்தர வாக்கியம் -உபாயத்வம் பூர்வ கண்டம் -அவனை உபாயம் இவளை புருஷா காரம் -உபேயத்வம் இரண்டு ஆகாரம்-ஓத -ஒருவர் உச்சாரணம் செய்ய நீங்கள் அநு உச்சாரணம் செய்ய –-ப்ரீதியினாலே தூண்டப் பட்டவர்களாகி அடையவும்-இனிமையோடு திருநாமம் சொல்லவும்-மாட்டாதார் அந்தப்புர பரிகரமானார்-வார்த்தையைச் சொல்லவே-பக்தியை செய்தார் அடையும் பலத்தை-நீங்களும் அடையலாம்
மேலே கூறின திரு மந்த்ரமும்-இப் பாசுரத்தில் சொன்ன ஸ்ரீமத் பதமும்
தனித் தனியே பேற்றுக்கு போதியவாய பின்பு-இரண்டினையும் சேர்த்து சொன்னவர்களுக்கு-பேறு சொல்ல வேண்டாவே அன்றே
மாதவன் என்று என்று-இரட்டித்து சொன்னது-த்வயத்தில் ஸ்ரீ சம்பந்தம் இரண்டு வாக்யத்திலும் உண்டே என்பதால் —எண் பெருக்கில் எண்ணும் திரு நாமத்தின் சப்தார்தங்களைச் சுருக்கி மாதவன் என்று த்வ்யமாக்கி -ஆச்சார்ய ஹிருதய ஸ்ரீ ஸூக்தி பிரகரணம் -4-சூர்ணிகை -10–
ஸ்ரீ மஹா லஷ்மீ விசிஷ்டனானவனுடைய மாதவன் என்கிற திரு நாமத்தை
பூர்வ கண்ட மர்யாதையாலே உபாயத்வேன ஆஸ்ரயணீயன் என்றும்
உத்தர கண்ட மர்யாதையாலே உபேயாத்வேன புருஷார்ய பூதன் என்றும் அனுசந்தித்து
முற்கூற்றால் பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈஸ்வரன் திருவடிகளை உபாயமாக பற்றுகிறது
பிற்கூற்றால் அச் சேர்த்தியில் அடிமையை இரக்கிறது-முமுஷுப்படி -சூர்ணிகை -122
ஆக-திருமந்தரம் த்வயம் இரண்டையும் அனுசந்திக்க வல்லீர் கோளாகில் -என்றது ஆயிற்று
—————
சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன்
பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே--10-5-8-
சர்வ புருஷ போக்ய பூதன் -திரு நாமம் சொல்வார் நித்ய ஸூ ரிகள் சமம்-அதிகாரி நியதி இல்லை-யாரேனுமாக திருப் பெயரை-எப்பொழுதும் சொல்லுவார்-நித்ய ஸூரிகளோடு ஒப்பார்கள்-ஓதுவார் -வர்த்தமானம் எப்பொழுதும் சொல்லிக் கொண்டு இருப்பவர் என்றபடி —-ஆரார் அமரரே –அவர்கள் பிறவிகளில் தாழ்ந்தவர்களாய் இருப்பினும்-அவர்கள் இருந்தபடியே-நித்ய ஸூரிகளோடு ஒப்பர்-அந்த அந்த பிறவிகளோடு இருக்கும் போதே-நித்ய ஸூரிகளோடு ஒப்பார்கள் – ஆஸ்ரயம் ருசி வரபக்திமான்கள் ஏற்றம் அருளிச் செய்கிறார்– ஆரார்-திருப்தராகார் என்றுமாம்
——–
அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே–10-5-9-
தமர்கட்கு எளியானை –அநந்ய பிரயோஜனர்கட்கு சுலபன் ஆனவனை -என்றது –ஒரு குரங்கு ஆகவுமாம்-ஒரு வேடுவச்சி ஆகவுமாம்-ரிஷிகள் ஆகவுமாம்-அவர்களுக்கு எளியனாக இருக்கும் -என்றபடி-அமரத் தொழுவார்கட்கு –ஒரு பயனைக் கணிசியாதே-அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு-தொழுமவர்க்கு –மிக்க சீர் தொண்டர் -திரு மங்கை மன்னன்-அமரா வினைகளே –வேறு பயன்களை விரும்புவதற்கு அடியான-தீ வினைகள் வந்து கிட்ட மாட்டா-
————–
வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம்
சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே–10-5-10-
நினைமின் –சிந்திப்பே அமையும் –உங்கள் மனம் நல்ல நிலையில்-இருக்கும் பொழுது ஒரு கால் நினையுங்கோள் -கைங்கர்ய பிரதிபந்தகங்களும் போம் -ஆனபின்பு அவனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் ––-நெடியானே – எல்லா குணங்களாலும் நிறைந்தவனாய்-கர்மங்கட்கு வசப் படாதவனும் ஆகையாலே- உருவ நினைத்த படியே இருக்கும் அன்றோ அவன் –ஸ்மராமி -நினைத்த படியே -நிகழ் காலம் -இருப்பானே–
——-
நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே–10-5-11-
நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன் –
சர்வேஸ்வரன் திருவருளுக்கு-பாத்திரமாகும் தன்மையரான-ஆழ்வார் -என்றது-
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மான் –4-5-5-என்று
தன் குணங்களையும் செயல்களையும்-பொறுக்கப் பொறுக்க-அனுபவிப்பித்துக் கொண்டு போந்த படியை-நினைத்து ஈடுபட்டார் மேல் –
இப்போது அவன் கொடுத்த அருள் எல்லாம் உண்டு-அறுக்க வல்லார் ஆனார் ஆயிற்று -என்றபடி
ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே –
இப் பத்து தானே இதனைக் கற்றார்க்கு-நெடியான் அருள் சூடும் படியான் -என்றதுவே பேறாக்கும்-
ஈஸ்வரன் கொடுத்த பேறு-ஆழ்வாரால் கொடுக்க மாட்டாமை இல்லை யன்றோ –
———–
அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-
அருள் பெறுவார் அடியார் –-ராஜாக்கள் மகிஷிகளுக்கு விபூதிகளையும் தங்களையும் அவர்கள் அதீனமாக்கி வைப்பாரைப் போலே -ஈஸ்வரன் தன்னை முற்றூட்டாக கொடுத்து அனுபவிக்குமவர்கள் –
தன் அடியனேற்கு -நீக்கமில்லா அடியார் தம் அடியார் அடியார் அடியார் எங்கோக்கள் -என்று இறே தம் ஸ்வரூபத்தை நினைத்து இருப்பது –அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தம் அடியான் -பெரிய திருமொழி -2-6-10-என்கிறபடியே-இதனை ஆயிற்று இவர் தமக்கு ஸ்வரூபமாக நினைத்து இருப்பது –
ஆழியான்–திரு வாழி யாழ்வானை விஷயீ கரித்தாலே போலே விஷயீ கரிக்க நினையா நின்றான் –விடல் இல் சக்கரத்து அண்ணலை மேவல் விடல் இல் -2-9-11–என்கிறபடியே-
கையில் திரு ஆழியை விடல் அன்றோ உம்மை விடுவது -என்னா நின்றான்–ஆஸ்ரிதரை நிரூபகமாக யுடையவன் -என்றுமாம் –
அருள் பெறுவார் அடியார் – தன் அடியனேற்கு-இருவருக்கும் நிரூபகம் இருக்கிறபடி –
இவர் -அருள் பெறுவார் அடியார் தம் அடியார்-அவன் -ஆழியான்- இருவருக்கும் நிரூபகர் அடியார்களே காணும் –
அருள் தருவான் அமைகின்றான் -ஆஸ்ரிதர் எல்லார் பக்கலிலும் பண்ணும் அருளை -என் பக்கலிலே பண்ணுமவனாகச் சமைந்து நின்றான் –அஸ்மா பிஸ் துல்யோ பவது -என்னுமவர்கள் இறே இவர்கள் -ஸ்வதந்த்ரனாகில் தருகிறான் — இனிக் குறை என் என்னில் –
அது நமது விதி வகையே–அது நாம் சொல்லச் செய்வானாக நினைத்து இரா நின்றான் -அது நம்முடைய பாக்யாதி குணம் இறே -என்றாய்த்து பூர்வர்கள் நிர்வாஹம் -இது பிரகரணத்தோடு சேராது -நாம் விதித்த படியே செய்வானாக நினைத்து இரா நின்றான் -என்று அருளிச் செய்தார் எம்பெருமானார் -தன் பக்கல் குறைவற்று இருந்தாலும் இத் தலையில் இச்சை பார்த்து இருக்கும் இறே –சொல் வகையே என்னாதே- விதி வகையே -என்றது -தானே தருமது வித்யதிக்ரமம் -என்று இருக்கை யாலே –விதியை மீறுவதில் பாபத்துக்கு அஞ்சுவாரைப் போலே அஞ்சா நின்றான்-நமது விதி வகையே –
த்வதீய புக்தோஜ்ஜித சேஷ போஜிதா-த்வயா நிஸ்ருஷ்டாத்மா பிரேன யத் யதா
ப்ரீயேன சேனாபதீனா ந்யயேதி தத்-ததா அனுஜாநத்தம் உதார வீஷணை-ஸ்தோத்ர ரத்னம் -42
சேனாபதி முதலியாராலே எந்தக் காரியம் எந்தப்படி-விண்ணப்பம் செய்யப் பட்டதோ
அந்த கார்யத்தை அந்தப் படியே நிறைந்த அருளாலே அனுமதி செய்கின்றவனான உன்னை -என்கிறபடியே
இது பட்டர் தாமே அருளிச் செய்ய நான் கேட்டேன் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்
இருள் தரும் மா ஞாலத்துள் –-நான் அவன் வழியே போகப் பார்த்தேன் -இங்கு உகந்து அருளின நிலங்களும் பாகவத ஸஹவாசமும் உண்டாய் இருக்க அவன் வழியே போக வேண்டுகிறது என் -என்ன -அஞ்ஞான அவஹமான ஸம்ஸாரமாகையாலே-ஞானாதிகனான ப்ரஹ்லாதனையும் எதிரிடப் பண்ணிற்று இறே –
இனி–அவன் கருத்தை அறிந்த பின்பு –
பிறவி யான் வேண்டேன்–வானுயிர் இன்பம் எய்திலென் மற்றை நரகமே எய்திலென் -என்கிற அது நான் வேண்டேன் -இனி ஈஸ்வர அபிப்ராயத்தாலே இருக்கில் இருக்கும் அத்தனை —
மருள் ஒழி நீ –நீயும் என் வழியே போரப் பார் –திரு வாறன் விளையதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடுங்கொல் –என்று உகந்து அருளின நிலங்களில் நசையாலே பிரமித்து ஓன்று உண்டு –அத்தைத் தவிர் –இங்கே உகந்து அருளின இதுக்கு பிரயோஜனம் அங்கே கொடு போகை யன்றோ –
வாட்டாற்றான் அடி வணங்கே–நம்முடைய நலத்தையே விரும்புகிறவன் வழியே போய் அவனை அனுபவிக்கப் பாராய்-நம்மை பரம பதத்துக்கு கொண்டு போக இங்கே வந்து இருப்பவன்-
அடி வணங்கு -என்பது அவனுடைய கருத்துக்கு இணங்கு -நமஸ்காரம் பொருள் இல்லை –
உகந்து அருளின நிலங்களிலே வந்து நிற்கிறது நம்மை அவ்வருகே கொடு போகைக்காக இருக்கும் –நீயும் அவன் நினைவில் போகப் பாராய் – அடி வணங்குகை யாவது -ஈர் அரசு தவிர்க்கை அன்றோ –
இங்கு நமது விதி வகையே
மேல் வாட்டாற்றான் பணி வகையே– வரும்
இரண்டுமே ஒன்றாக இருக்குமே-அவன் பணித்தது இவர் விதி விருப்பம் படியே என்று கொண்டானே –ஏக மதம்-
———-
வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை செய்து அடிமை கொள்ள வேண்டும் -என்று நாம் விரும்ப-அதுவும் கிடக்கச் செய்தே அடிமை கொண்டான் கண்டாயே-இங்கேயே இந்த தேகத்துடன் -அடிமை கொண்டான் கண்டாயே-
பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து –நாம் அடிமை செய்ய-அடைவதற்குத் தடைகளாய்-பலகாலமாக ஈட்டப்பட்ட அவித்யை முதலியவைகள்-எல்லாம் போகப் பெற்ற படியைக் கண்டாயே –பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் படி யன்றோ கவி பாடுவித்துக் கொண்ட படி — கேசவன் எம்பெருமானை -பாட்டாயே பல பாடி-பிரசஸ்த கேசனாய் இருக்கிற அழகைக் காட்டித் தோற்பித்து கவி பாடுவித்துக் கொண்டான் -என்றுமாம் –கேசியை கொன்றால் போல் நம் விரோதிகளை நீக்கி-நம்முடைய அடிமைத் திறத்தினை நிலை நிறுத்தி-நமக்கு ஸ்வாமியாய் உள்ளவனை -என்றபடி –இவை வினை அறுக்க குடித்த வேப்பங்குடிநீர் இது காணும் –
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே –ஒரு காரணம் பற்றி வந்த பந்துக்களை விட்ட அளவேயோ-ஒரு காரணமே இல்லாமல் பந்துவாக இருக்கும் சர்வேஸ்வரனை பற்றவும் பெற்றோம் –விட்டவர்கள் தம்மை வேறு ஒரு தன்மையாலே பற்றுகிறார் காணும் –ஆகாராந்தரம் -நார சப்தத்துக்குள் உண்டே-நாரணனை நண்ணினமே-படுக்கைக்கு கீழே மிகப் பெரிய நிதி கிடக்க-புறங்கால் வீங்கி சாவாரைப் போலே அன்றோ–நாராயணனாக -அந்தர்யாமியாக -இருக்கச் செய்தேயும் நண்ணாமல் இருந்த படி
————-
நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே –10-6-3-
நெஞ்சே – நம்மை அங்கீ கரிக்க வல்லனே-என்று நாம் இருக்க –அவ்வளவு அன்றிக்கே பலிக்கிற படி-என் -என்கிறார்-
இஷுவாகு வம்ச ராகு குல நாயகன் கிடைப்பானோ என்று நாம் இருக்க ராக்ஷஸ குல தம்பி கிடைப்பானோ என்று அன்றோ பெருமாள் இருந்தார் –
நாமங்கள் பல சொல்லி–மேன்மைக்கும் நீர்மைக்கும் போக்யத்தைக்கும் ப்ரகாசகமான பல திரு நாமங்களையும் சொல்லி –
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான்-ரஷ்யம் குறைவற்ற தேசம் ஆகையால் ரக்ஷகனுக்கு சம்பத்து மிக்கு இருக்கும் இங்கு -கைங்கர்யத்துக்கு விச்சேதம் இல்லாமையால் சேஷ பூதனுக்கு சம்பத்து மிக்கு இருக்கும் அங்கு –
மோஷ தானத்தில் பிரணத பாரதந்த்ர்யம்-வளம் மிக்க நதியிலே கரை புரளும் -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூக்தி-சூர்ணிகை -85
ஆவது அழிவது ஆகிற இந்த உலகம் இவருக்கு தரம் அன்று என்று காணும் அவன் நினைவு-
இவர்க்கே கொடுக்கை யாவது -இவர் வேண்டிக் கொண்டவாறே -வழு விலா அடிமையைக் கொடுக்கையே அன்றோ –
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் –இக் காரியங்கள்- நாம் அவன் பாடே செல்லவும்- நாம் அர்த்திக்கவும்-
நாம் அதிலே தவரிக்கவும்- அவன் நினைவு பார்க்கவும் -எண்ணி இருந்த பிரகாரம் அன்றியே
தானே வருகையும் -அபேக்ஷிக்கையும் -த்வரிக்கையும் – நினைவு தான் பார்க்கையுமாக ஆய்விட்டான் –
விதி வகையே -விண்ணுலகம் தருவானாய் -விரைகின்றான் –
இவருக்கு ருசி பிறப்பதற்கு முன்பு தான் எதிர் சூழல் புக்கு விரைந்து திரிந்தான்-
ருசி பிறந்த பின்பு இவர் விரையத் தொடங்கினார்-
அது கண்டு அவனும் இவர் அளவு அல்லாதபடி விரைகின்றான்-அது கண்டு இவர் ஆச்சர்யப் படுகிறார்-உடையவன் அன்றோ உடைமையை பெறுகைக்கு விரைவான் –
————-
என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து
வன்னெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்
மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்
நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-10-6-4-
என்னைக் கொண்டு திருவாய் மொழியைச் சொல்லுவிக்கையாகிற இந்த ஸம்ருத்தியில் காட்டிலும் சீரியதோ திரு நாடு என்கிறார்-என் நெஞ்சத்து உள் இருந்து-
பல காலம் இவ் உலகத்திலே தன்னை ஒழிந்த ஐம் புலன்-இன்பங்களை உகந்து போந்தது என்றாயிற்று-இவர் என் நெஞ்சு -என்று இறாய்க்கிறது
இதில் குணமும் குற்றமும் கிடந்தபடி கிடக்க இவர் -என்னது -என்றதுவே காரணமாக-அவன் மேல் விழா நின்றான்-
இவர் –என் நெஞ்சு -என்று புறம்பே கால் வாங்கா நின்றார்-
அவன் அதுவே காரணமாக உள்ளே போக அடி இடா நின்றான் –
விடாயர் மேலில் நீரை நீக்கி உள்ளே ஆழ முழுகிக் கிடக்குமாறு போலே-நெஞ்சின் உள்ளே புகுந்தார் என்பார்–உள் என்கிறார் – –என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு-புறம்பு ஒரு விபூதி உண்டு என்று நினையாதே ஸ்த்தாவர ப்ரதிஷ்டையாக இரா நின்றான் -பரம பதத்தில் பரிமாற்றத்தை சம்சாரத்திலே உண்டாக்கினான்-அங்கே இல்லாத செல்வத்தையும் இங்கே உண்டாக்கினான் –திருவாய் மொழி உண்டாக்கி – என் முன் சொல்லும் -7-9-2-என்றவற்றையும் ஒன்றாக நினைக்கின்றிலர்-அதனால் மொழிவித்து என்னாமல் மொழிந்து என்கிறார் –படை தொட்டான் –படை எடுத்தான்-படை விட்டான் -என்னப் பெற்றது இல்லை-தான் மேற்கொண்ட குறிக்கோளை குலைத்தான் இத்தனையே –கார்யம் கொள்ளப் பெற்றது இல்லை-–நமக்கு அருள் தான் செய்வானே–நமக்கு அவ் வருளைப் பண்ணியே விடும் –விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் என்ற பேற்றை பண்ணியே விடும் -இது நிச்சிதம் –இசைவுக்கு நீ யுண்டு –இசைவைக் கொண்டு கார்யம் செய்கைக்கு அவனோடு சம்பந்தம் யுண்டு -நம் பேற்றுக்கு குறை யுண்டோ –நெஞ்சு அநு கூலித்தது-அல்லேன் என்கைக்கு நீ உண்டு –ஆவோம் என்கைக்கு அவன் உண்டு –அவனை பிரேரிக்கைக்கு கிருபை உண்டு -காருண்ய ரூபை ஸ்ரீ மகா லஷ்மி உண்டே –நமக்கு அருள் பண்ணியே விடும் –விண்ணுலகம் பேற்றைக் கொடுத்தே தீருவான் –இசைவிக்க அவன் உண்டு –இசைந்த பின்பு கார்யம் முடிக்க சம்பந்தம் உண்டே -நம் பெருமான் –பேறு கிட்டியே தீரும்
————–
வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே-10-6-5-
வான் ஏற வழி தந்த –பரம பதத்தில் பொய் புகுகைக்கு -அர்ச்சிராதி மார்க்கத்தைத் தந்த –
பரமபதத்தை பெறுவதில் காட்டிலும் அவ்வருகே ஒரு பெரும் பேறு என்னும்படி அன்றோ -அர்ச்சிராதி -அடைதல் –போம் வழியைத் தரும் -3-9-3-என்று ஈடு படும்படி அன்றோ அதனுடைய சிறப்பு இருப்பது –
வான் ஏற வழி தந்த-திருநாடு பெற வேணும் என்று அபேக்ஷை யுடையார் எல்லார்க்கும் வான் ஏறுகைக்கு ஈடான உபாயத்தைக் கொடுத்து அருளினான் –ஆறாயிரப்படி–
பணி வகையே –அவன் திரு உள்ளம் ஆனபடியே -என்றது-
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்றதனைச் சொல்லுகிறார் –
பண்டே பரமன் பனித்த பணி வகையே -10-4-9-என்றாரே அன்றோ –
அன்றிக்கே-மரணமானால் -9-10-5- என்றதனை சொல்லிற்று ஆகவுமாம் –
பிள்ளை அழகிய பெருமாள் அரையர் -கிரந்தியைப் பார்த்து -கட்டியை பார்த்து-
திருவரங்க நாதன் திருமாலை திருப் பரிவட்டம் முதலானவை வரவிட்டு அருள-
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே -என்று-கிரந்தியைப் பார்த்து சிரித்து சொன்ன வார்த்தையை நினைப்பது –
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே –திருவடி திருத் தோள்களிலும் -என் தலையிலுமான-இது தவிர்ந்து-என் தலையிலே யாயிற்று-
அவன் இழவுக்கு வெறுக்க வேண்டா அன்றோ –அவன் தானே கொடு வந்து கொடுக்கப் பெற்றவர் ஆகையாலே அன்றோ ஒரு பழு ஏறப் பெற்றது –திருவடி புருஷாகாரமாக பெற்றார் இறே-
————-
தலை மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்
மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–10-6-6-
தாளிணைகள் தலை மேலே –நின் செம் மா பாத பற்புத் தலை சேர்த்து -2-9-1- என்றும்-
பாத பங்கயமே தலைக்கு அணியாய் -9-2-2- என்றும்-
நான் வேண்டிக் கொண்ட படியே அழகிய திருவடிகளாலே தலை அலங்காரமாகப் பண்ணினான் –
என் நெஞ்சிலே நிற்பது-அப்படியே கண்களுக்கு இலக்காம்படி முன்னே நிற்பது-
திருவடிகளை தலை மேலே வைப்பது-ஆகிய இவை எல்லாம் ஒரு காலே செய்யா நின்றான் –சௌபரி ஐம்பது வடிவு கொண்டால் போலேயும்-
முக்தன் இறைவனை அனுபவிக்க பல வடிவுகளைக் கொள்ளுமாறு போலேயும்-
இறைவன் தான் இவரை அனுபவிக்க பல வடிவுகள் கொள்ளா நின்றான் –
எம்பெருமான்-உடமை உடையவனைப் பெற்றால் இருக்கும் அளவு அன்று இ றே உடைமையைப் பெற்றால் உடையவனுக்கு இருப்பது –
மதம் மிக்க கொலையானை மருப்பு ஒசித்தான் –அனுபவத்துக்கு தடைகளாக உள்ளவை அடங்கலும்-குவலயா பீடம் பட்டது படும் இத்தனை –
அவன் இவன் விரோதியைப் போக்க இவன் அனுபவத்தில் சேர்த்தல் தகும் –
குரை கழல்கள் குறுகினமே –ஆபரணத்தின் ஒலி செவிப்படா நின்றது –
தடம் தாமரை கட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -6-9-9- என்று
வேண்டிக் கொண்டது பெற்றோம் –விடாய் தீரும் படி கிட்டப் பெற்றோம் –
————–
குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் மலர் அடி மேல்
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே–10-6-7-
கோவிந்தன் குடி கொண்டான் –அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும்-
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து -பெரியாழ்வார் திருமொழி -5-2-10-
என்கிறபடியே திருவாய்ப் பாடியிலே ஐந்து லஷம் குடிகளோடும் கூடக் காணும் இவர் நெஞ்சிலே புகுந்தது –எம்பெருமான் ச பரிகரமாக வந்து என்னுள்ளே புகுந்து அருளினான் -அத்தாலே என் உடம்பு நிரந்தரமாக த் திருத் துழாய் நாறா நின்றது -என்கிறார் –
மெய்ந் நின்று கமழுமே –கோயில் சாந்து நாறுகிறபடி-என் உடம்பு முழுவதும் எப்பொழுதும் நாறா நின்றது –
அன்றி மற்றோர் உபாயம் என் -8-9-10-என்று தோழி சொல்லியும்-
வெறி கொள் துழாய் மலர் நாறும் -4-4-3- என்று தாயார் சொல்லியும்-போந்த இது-தன் வாயாலே சொல்லும்படி ஆயிற்று –
என் வார்த்தை அறிய வேண்டுமாகில்-
என் உடம்பை மோந்து பார்க்க மாட்டீர்களா -என்பாள் -மெய்ந்நின்று கமழுமே -என்கிறாள்-
செய்த நன்றி தேடிக் காணாதே-கெடுத்தாய் தந்தாய் என்ற-அத்வேஷ ஆபிமுக்யங்களும்
சத் கர்மத்தால் அல்ல -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூ க்தி -சூர்ணிகை 2-22-இங்கு நினைத்தல் தகும்-
———————-
மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–10-6-8-
இறைமைத் தன்மைக்கு அறிகுறியான தார் -அது
நினைத்தது செய்ய முடிக்க வல்ல கருவி அது –
வடிவு அழகு அது –
இப்படி துறை தோறும் தலைமை பெறும்படி இருக்கிறவன்-என் நெஞ்சிலே புகுந்து-பெறாப் பேறு பெற்றானாய் இரா நின்றான் –மிக உயர்ந்த மேன்மையினை உடையனான எம்பெருமான்-திரு வாட்டாற்றிலே வந்து சுலபனாய்-
என் மனத்திலே வந்து புகுந்து-பேர் ஒளியன் ஆகைக்கு -நான் என்ன நன்மை செய்தேன்
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–என்ன நன்மை செய்தேனாக –பெரிய வுடையாரைப் போலே என்னை அழிய மாறினேனோ –திருவடியைப் போலே தனி யிடத்தில் உதவினேனோ –தன்னுடைய ஆஞ்ஞா ரூபமான விஹிதங்களை அனுஷ்டித்தேனோ –என் நெஞ்சில் புகுந்த பின்பு விளங்கினான் என்னும் படி விரும்பிற்று —
———–
திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே–10-6-9-
எல்லாப் பொருள்களாலும் நிறைவு பெற்று இருக்கின்ற தான்-இகழாதே -என் மனத்தினை-
எக்காலத்திலும் விடுகின்றிலன்-ஒருவனுடைய காதல் இருந்தபடி என் –என்று பிரீதர் -ஆகிறார்-ஸ்ரீ யபதியான ஏற்றத்தோ பாதி போருமாய்த்து திரு வாட்டாற்றை கலவிருக்கையாக யுடையவனாகையும் –
புகழ்கின்ற புள்ளூர்தி –புகழ் நின்ற புள்ளூர்தி –
புகழ் எல்லாம் தன் பக்கலிலே கிடக்கும்படி இருக்கிற பெரிய திருவடியை-வாகனமாக உடையவன்
புகழ் அடங்கலும் கிடப்பதுவும் அவன் பக்கலிலே-அதனை உடையவன் -என்கிற இதுவே இவனுக்கு ஏற்றம் –
தனக்கு திவ்ய மஹிஷி சர்வ லோக மகேஸ்வரியான பெரிய பிராட்டியார் –
சேர்விடம் திரு வாட்டாறு –
தன் திருவடிகளில் கைங்கர்ய ஏக ரதித்வமே புகழாக யுடையனாய் இருந்த பெரிய திருவடி -தனக்கு நித்ய வாகனமும்-ஆஸ்ரித விரோதி நிரசன உபகரணமும் –
இங்கனே இருந்து வைத்து என்னுடைய நிகர்ஷத்தைப் பார்த்து என்னை இகழாதே ஒரு க்ஷணம் என்னைப் பிரிவில் தரிக்க மாட்டாத
ஸ்வபாவத்தை யுடையனாய்க் கொண்டு என் நெஞ்சினுள்ளே புகுந்து இருந்து அருளினான் –ஒருவனுடைய குணவத்தை இருக்கும் படியே இது என்கிறார் –
————
பிரியாது ஆட்செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான்
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட் பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே-10-6-10-
பிரியாது ஆட் செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான்
நம்மைப் பிரியாதே நமக்கு அடிமை செய் -என்று அருளிச் செய்து-பிறப்பினையும் போக்கி
நித்யமாக செய்யப் படுகின்ற தொண்டினையும்-எனக்குக் கொடுத்தான் –
1-பிரியாது ஆட் செய்து என்று-எனக்கே ஆட் செய் -என்ன வேண்டும் என்று -நாம்-
எம்மா வீடு -என்ற திருவாய் மொழியிலே வேண்டிக் கொண்டபடியே – செய்தான் –
2-பிறப்பறுத்து-இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று-
பொய் நின்ற ஞானமும் -என்ற பாசுரத்திலே விரும்பியபடியே-பிறப்பினை அறுத்தான்
3-ஆள் அறக் கொண்டான்-தனக்கே யாக என்று எம்மா வீடு -திருவாய்மொழியில் வேண்டிக் கொண்ட படியே ஆள் அறக் கொண்டான் –
கால அவதி இல்லாமல் என்றும்-தனக்கே யாக அற என்றுமாம் –பெரியோர்களை அடைந்தால்-பின்னை அவர்கள் கொள்ளுகிறவன் சிறுமை பார்த்தல்
கொடுக்கிறவன் பெருமை பார்த்தல் செய்யாதே கொடுப்பார்கள்-என்று இங்கனே நாட்டில் ஓன்று உண்டு-அதனை என் பக்கலிலே காட்டினான் –உபய விபூதியிலும் தம்மைப் போலே திருவாய் மொழி பாடப் பெற்றார் இல்லை என்று இருக்கிறார் –தாம் அனுபவிப்பதற்காகவே இறைவன் அவதாரங்கள் என்று இருக்கிறார் இவர்-
————-
காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11-
காட்டித் தன் கனை கழல்கள் –தன் கனை கழல்களைக் காட்டி-நிர்ஹேதுகமாக தன் ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டி –கழல் -திரு மேனிக்கு உப லஷணம்-
ஆரார் வானவர்கள்-இதனைச் சொல்ல கேளா நின்றால்-இன்னம் சொல் இன்னம் சொல் -என்னும் இத்தனை போக்கி-கேட்டவற்றைக் கொண்டு மனம் நினைவு பேரார்கள் ஆயிற்று-நித்ய ஸூரி போக்யதையை அருளிச் செய்கிறார் –
பகவான் உடைய குணங்களை அனுபவித்து-அதற்கு போக்கு விடுகைக்கு பாசுரம் இன்றிக்கே-விம்மல் பொருமலாய் படுமவர்கள்-இப்பாசுரம் கேட்டால் விடார்கள் அன்றோ –
அதற்கு காரணம் என்-
அவனுடைய சீல குணங்களை அனுபவித்தோ என்னில்-இப் பாசுரத்துக்கு தோற்று -என்கிறார் –செவிக்கு இனிய-
கேட்ட போதே இன்பம் பயப்பது -செவி வழியே புக்கு நெஞ்சுக்கு இனிதாகை அன்றிக்கே-செவியில் பட்ட போதே பிடித்து இனிதாய் இருக்கையாலே-
அதற்க்குக் காரணம் என் என்னில் –செஞ்சொல்லே – நினைவும் சொல்லும் செயலும்-ஒருபடிப் பட்டு இருக்கையாலே-சிந்தையினாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே -8-5-11-என்னா-செந்தமிழ் பத்தும் -என்றார் அன்றோ இவர் தாமே –
————
செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட் செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–10-7-1-
செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் –பிரயோஜனம் இல்லாத செவ்வையை யுடைத்தாய்- ஸ்வயம் ப்ரயோஜன ரூபமான சொற்களாலே கவிபாட வல்லவர்கள்
பிரயோஜனத்தைக் கணிசிக்கை கவிக்கு குடிலம் ஆகையாவது –இன் கவி பாடும் பரம கவிகள் -என்றும் –செந்தமிழ் பாடுவார் என்றும் -சொல்லுகிற முதல் ஆழ்வாரைகளை யாய்த்து நினைக்கிறது –பெரும் தமிழன் அல்லேன் -என்னா- வாய் அவனை அல்லது வாழ்த்தாது –என்கிறவர்கள் இறே அநந்ய பிரயோஜனர் –அவன் கையில் உங்களுடைய ஆத்மாத்மீயங்கள் அகப்படாதபடி காத்துக் கொண்டு வாசிகமான அடிமை செய்யப் பாருங்கோள் –அநந்ய ப்ரயோஜனராய் இழிவார்க்கு ஆத்மாத்மீயங்கள் அவனாலே அபஹ்ருதமாய் அவர்ஜனீயம் என்று கருத்து –ஆள் செய்கையாவது கவி பாடுதல் -என்று இருக்கும்-புகழும் நல் ஒருவன் -என்கிற திருவாய் மொழியில் தம்வாசனையாலே–
உயிர் காத்து ஆட்செய்மின் –-உங்களை நோக்கிக் கொண்டு நின்று கவி பாடப் பாருங்கோள்-நீங்கள் உளராய்க் கவி பாட வேண்டுமே-
இத்தலை உண்டானால் அன்றோ அத்தலைக்கு மங்களா சாசனம் செய்யலாவது-
ஆட் செய்மின் -என்கிறார் -கவி பாடுதல் வாக்கினால் செய்யப்படும் அடிமை ஆதலாலே-
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மா மாயன் -9-6-7-அன்றோ –கவி பாட கொள்ளும் வியாஜ்யம் -என்றவாறு –அடிமை கொள்வாரைப் போலே புகுந்து மற்றைப் படியேயாய்-இருக்கும் பலிப்பது–அடிமை பண்ணி -பாது காத்துக் கொள்ளுங்கோள்-
ஆழம் காலிலே இழிந்து அமிழ்வார் அவ் விடத்தே கொண்டைக் கோல் நாட்டுமாறு போலே-
கொண்டைகோல் நாட்டுகிறார் ஆழ்வார் -என்று சிற்றாள் கொண்டான் -பணிப்பர்-
இவ்விடம் பரப்புத் துறை-இவ்விடம் மடு-என்று-நிலவர் எல்லை குறிக்குமாறு போலே-
உடையவர் —உயிர் காத்து ஆட்செய்மின்–இன்னார் உயிர் என்னாமையாலே
அவன் உயிரைக் காத்து ஆள் செய்யுங்கோள் -என்று அருளிச் செய்தது -என்றது
அவன் மேல் விழ தாங்கள் இறாய்க்கையாவது அவன் இழத்தலே அன்றோ-அவன் உயிரைக் காத்தலைச் செய்யுங்கோள் -என்றபடி-அயோக்யதா அனுசந்தானத்தாலே அகன்றால் -சேராமல் அவன் இல்லை நீங்களும் இல்லை –என்னை அழித்துக் கொள்வேன் -திரு மங்கை ஆழ்வார் திரு நெடும் தாண்டகம் -பெருமாளை அழிக்க திட்டம்-ரகஸ்யம் புரிந்து கொண்டான் -தன்னைக் காட்டினான்
நினைதொறும் சொல்லும் தோறும் நெஞ்சு இடிந்து உகும் -9-6-2-என்றும்-
வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை உடையாய் -என்றும்-
சீலம் முதலான குணங்களில் புண்பட்டு அன்றோ இவர் இருப்பது –உங்களை இழத்தற்கு வேண்டிய காரித்தைச் செய்யாதே-அவனுடைய இறைமைத் தன்மையிலே -நியந்த்ருத்வம் -ஐஸ்வர்யம் –இழிந்து கவி பாடப் பாருங்கோள்-
பஸ்யமே யோக ஐஸ்வர்யம் -விஸ்வ ரூபம் காட்டி -ஐஸ்வர்யம் என்றாலே நியந்த்ருத்வம் —
சீல குணத்திலே இழிய நினையீதீர்கோள் –
என்னை உபகரணமாகக் கொண்டு கவி சொல்லுகை என்னும் வ்யாஜத்தினாலே என்னுள்ளே புகுந்து கலந்து –இன்னபடி செய்து அருளினான் -என்று அயர்வறும் அமரர்க்கும் அறிய நிலம் அல்லாத தொரு படி-என் நெஞ்சையும் உயிரையும் தன்னுள்ளே அடக்கி தானேயாம்படி-மாள புஜித்து பரிபூர்ணன் ஆனான் என்கிறார் –
வஞ்சக் கள்வன் மா மாயன் -இத்தலையில் அடிமையை நிலை நிறுத்துவாரைப் போலே புகுந்து-தான் அதனை எறட்டுக் கொண்டு-தலைவனாம் தன்மையை இத்தலையிலே வைத்து-தலைமேல் கொள்வான் -ஆயிற்று –களவு தன்னை களவு காணும் ஆயிற்று – -சேஷத்வம் திருடினான் -கள்வா -ஆத்மபஹாரம் –பிள்ளை பெருமாள் ஐயங்கார்-சேஷித்வம் பட்டம் கொடுத்து இதுவே சேஷத்வம் என்று காட்டிய கள்வன்-எதிர் விழி கொடுக்கும் பாரதந்தர்யம் என்பர் –மா மாயன்-அப்படி அறியச் செய்தேயும் தப்ப ஒண்ணாத படியான-ஆச்சர்யமான செயல்களையும் குணங்களையும் உடையவன் –மையல் ஏற்றி மயக்க உன் முகம் தான் மாய மந்த்ரம் தாம் கொலோ -நாச்சியார் திரு மொழி -2-4-
மாயக் கவியாய் –ஆழ்வீர் உம்மைக் கொண்டு உலகத்தில் நடையாடாத-சில கவிகளைப் பாடுவித்துக் கொள்ளப் பாரா நின்றோம்-அப்படிச் செய்வோம் -என்று ஆயிற்றுப் புகுந்தது
கவி என்று ஒரு காரணத்தை இட்டுக் கொண்டு வந்தான்-காதலி இருக்கும் இடத்தில் -தண்ணீர் -என்று புகுமாறே போலே –
வந்து-வந்தவனும் தானே ஆயிற்று –நான் தான் இருந்த இடத்தே சென்று-
என்னை இட்டு சில கவிகள் பாடுவித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லச் செய்கை அன்றிக்கே-
தானே வந்தான் –அடையத் தகுந்தவனான தானே ஆயிற்று வந்தான்-இதுவன்றோ சீலம் ஆவது –அபி கம்யனாக தான் இருக்க அபிசரித்தான்–
வந்த இடத்தில் அவன் உமக்கு நலிவாக செய்தது என் என்னில் –
என் நெஞ்சும் உயிரும் –நெஞ்சினைக் கூறியது உடலுக்கு உப லஷணம்-உயிர் -ஆத்மா-
வரும் பொழுது நான் இருந்தேன் வந்த பின்பு என்னைக் காண்கின்றிலேன்-
உள் கலந்து –
ஒரு நீராகக் கலந்து –சரீரத்தோடு ஆத்மாவோடு வாசி அற அனுபவிக்கிறான் –
நின்றார் அறியா வண்ணம் –
இச் செயலுக்குத் தலைவரான பிராட்டி திரு வநந்த ஆழ்வான்-திருவடி முதலானார்க்கும் அறிய முடியாதபடி-ஆயிற்று என்னோடு கலந்தது –
இப்படிப் பட்ட காதலோடு கூடிய செயல்களில் நிற்பார் அவர்களே அன்றோ –
அவர்களுக்கும் தெரியாதபடி –ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது -9-6-9- என்னுமாறு போலே –
என் நெஞ்சும் உயிரும் அவை உண்டு –
சரீரம் வேறு உயிர் வேறு என்று நினைத்திலன் -எனக்கு மயர்வற மதி நலம் அருளினவன் -–தேஹாத்ம விவேகம் அறிந்திலன் –
உருவமும் ஆர் உயிரும் உடனே உண்டான் -9-6-5-என்னுமாறு போலே சரீரத்தையும் உயிரையும் ஒரு சேர அனுபவித்தான் –சேதனனுடைய போக்த்ருத்வமும் அசத் சமமாம் படி தானே போக்தாவாய்ப்-பெறாப் பேறு பெற்று-இப்பொழுது தான் – அவாப்த ஸமஸ்த காமனானான்
தானே யாகி –தம்மை காண்கின்றிலர் காணும்-இருவருமாக அனுபவிப்பாரைப் போலே புகுந்து அனுபவிக்கிறவன் தானே யானான்-மற்று ஒன்றைக் காணா -காண்பனவும் -உரைப்பனவும் மற்று ஒன்றி கண்ணனையே கண்ட –திருப் பாண் ஆழ்வார்-தன்னையும் -தன் இருப்பிடம் – பலம் -சொல்லாமல் —
என்னை முற்றப் பருகினான் -9-6-10-என்னுமாறு போலே-இத்தலை இனிய பொருளாய் அற்றதாயிற்று-இத்தலை ஒரு அறிவுடைப் பொருள் என்று தோற்றாதபடி ஆயிற்று செயல் செய்தபடி –பிறருக்கு உறுப்பாய் இருக்குமது ஒழிய-தனக்கு என ஒரு தகுதி இல்லாத அறிவில்லாப் பொருளைப் போன்று செய்தான்-தனக்கேயாக -2-9-4- என்றபடியே கொண்டான்-
இனிய பொருள்களிலும் ஸ்வரூப பேதங்கள் -உண்டாகா நின்றதன்றோ- சந்தனம் மலர் போலே-அவை போன்றதே விட்டது அறிவுடைப் பொருளும்-
சூஷ்ம ஓட்டும் நீரிலே கழுவி-பைந்தொடி மடந்தயரைக் கொண்டு-ஷட்குண ரசாந்தமாக்கி -ஆசார்ய ஹிருதயம் –
தானேயாகி-
ஈர் அரசு தவிர்த்தான் என்பார் -தானேயாகி -என்கிறார்-
இத்தலையை புள் கவ்வப் பண்ணி -செருக்கு அற்றவனாக்கி –தானே தலைவனாய் நின்றான் -என்றபடி-
நிறைந்தானே –அவாப்த சமஸ்த காமன் -எனபது இது காறும் பெயர் மாத்ரமேயாய்-இவரைப் பெற்ற பின்பாயிற்று நிறைந்தவன் ஆயிற்று-இங்கனே இருப்பது அன்றோ சீலமாவது -என்றது-பெரியவன் சிறியவன் இடத்தில் கலக்கும் இடத்தில்-தன் பெருமையும் அவன் சிறுமையும் தோற்றாத படி-புரை அறக் கலக்கை அன்றோ –
அபிஷிஸ்ய ஸ லங்காயாம் ராஷஸேந்த்ரம் விபீஷணம்-க்ருத க்ருத்யா ததா ராம விஸ்வர பிரமுமோதா ஹ -சங்ஷேப ஸ்ரீ ராமாயணம் -85 -என்னுமாறு போலே-
என் நெஞ்சையும் உயிரையும் உள்ளே புக்கு கலந்து அவற்றைப் புஜித்து-என் அபிமானத்தைப் போக்கித் தானே எனக்கு அபிமானியாய் அத்தாலே பூர்ணனானவன் –
————-
தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என்பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக்
கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே–10-7-2-
தானே ஆகி நிறைந்து –ஏவகாரம்-இருவரும் சேர்ந்து செயல் செய்யப் புகுந்து-தானே பெற்றானாய் இரா நின்றான் –தான் போக்தா –
தானே யான் என்பான் ஆகி –யானே என்பான் தானாகி –-எல்லார் இடத்திலும் நிற்கும் நிலை ஒழிய-இவருடைய திரு மேனியில் நிற்கும் நிலையைச் சொல்லுகிறது
நான் என்ற பெயர் அளவேயாய் நிற்கிற நான் -தான் என்னலாம் படி ஆனேன்-
சேஷ பூதன்-என்றவன் சேஷி ஆனேன் -என்றவாறு -அப்ருதக் சித்த விசேஷம் தெரிந்து தானே அவன்-
அஹங்காரத்தால் இல்லை -கடல் ஞாலம் செயதேனும் யானே போலே –
தம்மைத் தடவிப் பார்த்த இடத்தில் காண்கின்றிலர் –அவன் தலையிலே சுமக்க காண்கிற இத்தனை –
எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே--சர்வ ரச -என்கிற பொதுவான நிலை அன்றிக்கே-எனக்கு எல்லை இல்லாத இனியன் ஆனவனே –கொடியேன் பருகு இன்னமுதே -என்கிறபடி-
தன்னைத் தானே துதித்து -என்கிற இடத்தில் தம்மைக் கண்டிலர்-
இங்குத் தாம் உளராகவும்-தமக்கு இனியதாகவும் தோன்றிற்று-
தாம் பாடின கவி கேட்டு -அவன் இனியனாய் இருக்கும் இருப்பு-தமக்கு இனியதாய் இருக்கிறபடி –உபாய பாவத்தில் அந்வயம் இல்லை -உபேயம் -அனுபவத்தில் அந்வயம் உண்டே —
திருமால் இரும் சோலைக் கோனே -யாகி-இரண்டு உலகங்களையும் உடையவனாய் இருந்ததால் வந்த ஏற்றத்துக்கும் அவ்வருகே-
ஓர் ஏற்றம் போலே ஆயிற்று திருமலையை உடையனாய் இருக்கையால் வந்த ஏற்றமும் –
இவரைப் பெற்ற பின்பே காக்கும் தன்மை நிறைந்த தாயிற்று-திருமலையில் வந்து ஆழ்வாரைப் பெற்ற பின்பாய்த்து சேஷித்வம் பூர்ணம் யாய்த்து –
இல்லையாகில் ஸ்ரீ வைகுண்டத்தில் இருப்போடு-திருமலையில் நிலையோடு வாசி அற்று போமோ அன்றோ –
நின்று ஒழிந்தான் –இங்கு நின்ற பின்பு ஆயிற்றுப் பரகு பரகு-வியாகுலம் -அற்றது-க்ருதகிருத்யனாய் இரா நின்றான் –என்னை முற்றும் உயிர் உண்டே –என் உயிரை முற்றும் உண்டே-எங்கும் பரந்து இருக்கிற தான்-அணு அளவிதான ஆத்மாவினை நுகர்தல்-தனக்கு ஏற்றமாம் படி ஆயிற்று இத்தலையான படி –அவன் தன் அபிப்ராயத்தாலே மதித்து இருந்தபடி –தம்மோடு கலந்த பின்பு எம்பெருமானுக்குப் பிறந்த ஸம்ருத்தியைக் கண்டு இனியராய் அனுபவிக்கிறார் –
என்னைப் பெறுகையாலே சர்வேஸ்வரனாய் –என்னை உபகரணமாகக் கொண்டு -தன்னைத் தானே ஸ்துதித்து -எனக்கு நிரதிசய போக்யனாய் -என்னைப் பெற்ற பின்பு திருமலைக்கு நாதனும் ஆனான் –என்னை முற்றும் உயிர் உண்டே–என்னுயிரை ஓன்று ஒழியாமே அனுபவித்து –
————-
என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3-
என் மாய ஆக்கை –என்னுடைய உயிரை அனுபவித்து அவ்வளவிலே தான் தவிருவானாய் இருந்தானோ-மங்க ஒட்டு என்னும் அளவும் அவன் இதனை விட மாட்டாமையாலே உள்ளே புகுரா நின்றான் –இதனுள் புக்கு –புகுந்து என்னாதே புக்கு -என்கிறது அத்தோடு தமக்கு தொற்று அற்று இருக்கிற படி தோற்றுகைக்காக-மங்க வொட்டு-என்று அவன் அனுமதி பார்த்து இருக்கும் இறே –என்றும் அசித்தோடும் முகம் பழகின இவர் இறாய்க்க -ஹேய பிரதி படனானவன் இறே மேல் விழா நின்றான் –
என்னை முற்றும் தானேயாய் –இப்படி உயிர் உடலோடு வாசி அற எங்கும் புக்குப் பரந்து இருக்கையாலே -தானே -என்ன தட்டு இல்லை-காரண கார்ய பாவ்யம் ஆகையாலே-
இவர் -நான் -என்னும் அதனையும் கொண்டான்-இவர் – எனது -என்னும் அதனையும் கொண்டான்-ஈஸ்வரனுக்கும் கூட விளாக்குலை கொண்டு -கபளீ கரித்து-அனுபவிக்க ஒண்ணாத படி ஆனார் ஆயிற்று -என்னுதல்-
சகல பிரகாரங்களை -ஞானம் ஆனந்தம் சேஷத்வம் குணங்கள் போன்றவை முற்றவும் என்றபடி –
திசை கூப்பிச் சேர்ந்த யான் –ஒரு திக்குப் பட அன்றோ இவர் விரும்புவது என்றது –அவனை உகந்து அவ்வழியாலே அவன் விரும்பின தேசத்தை உகந்து-அதனோடு சம்பந்தம்
உடைய திக்கினை உகந்து-இப்படி அவனோடு சம்பந்தம் உடைய சம்பந்திகள் அளவும் உகக்கும்படி கை கழியப் போந்த நான் -என்றபடி –
அவன் தான் இவரை உகந்து-இவருடைய சம்பந்தம் உடைய உடம்பினை விரும்புவது போலே ஆயிற்று-என் எண் தான் ஆனானே -1-9-7-என்றார் அன்றோ அடியிலே –
என் கொல் அம்மான் திருவருளே –அம்மான் திருவருள் என் கொல் –இவர் திறத்தில் எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யாதாரைப் போலே எதனைச் செய்தோம் என்று இரா நின்றான் ஆயிற்று-
இன்னம் போவேனே கொலோ –என் கொல் அம்மான் திருவருளே–இனி எனக்கு ஒரு கந்தவ்ய பூமி யுண்டோ -சர்வேஸ்வரனுடைய பாரிப்புக்கு அவதி என்னோ –விடில் செய்வது என் என்று அதிசங்கை பண்ணினான் அன்பினால் என்கை-
சரமாவதி சேஷம் ஆகையால் -தன்னை விட பிரசங்கம் இல்லை -விடில் என் செய்வது -என்று அதிசங்கை பண்ணினான் அன்பினால் என்கை-
அன்றிக்கே அவனை விரும்பி –அவன் உகந்த தேசத்தை விரும்பி –அத்தோடு சேர்ந்த திக்கை விரும்பும் படி சேஷத்வத்தின் நிலையிலே நிறுத்தினவன்–இதில் காட்டில் வேறு சில ப்ராப்யங்கள் யுண்டாய் அவற்றை உபகரிக்கப் பாரிப்பாரைப் போலே இரா நின்றது -எனக்கு ஒன்றும் செய்திலேனாய் பரகு பரகு என்கிற இதுக்கு அவதி என்னோ -விஷயம் இன்றியே இருக்க பிரமிக்கவும் ஆமாகாதே-
———–
என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4-
தம்முடைய திருமேனியைக் காட்டிலும்-தம்மோடு கலந்து பழகுவதற்கு-
தக்க நிலம் என்று திருமலையில் அவன் வைத்து இருக்கும்-காதல் பெருக்கினை -அருளிச் செய்கிறார்-
நன்கு என் உடலம் கை விடான்-சர்வேஸ்வரன் தன்னைக் கேட்டார்க்கு சொல்லுகிற வார்த்தை இருக்கிறபடி –அத்தை ஆழ்வார் அனுவாதம் செய்கிறார் என்றபடி –
ஆழ்வாரை -நமக்குத் தந்த திருமேனி அன்றோ -என்னா நின்றான் ஆயிற்று –ததீயத்வ ஆகாரத்தால் லீலா விபூதியை உத்தேச்யம் என்று ஆழ்வார் சொல்வது போலே -ஆழ்வார் சம்பந்தத்தால் சரீரமும் அவனுக்கு உத்தேச்யமானது –
ஞாலத்தூடே நடந்து உழக்கி –எத்தனை காலம் உண்டு அவன் இப் பேறு பெருகைக்கு உழன்று திரிகின்றது –எல்லார்க்கும் பொதுவானவனுடைய செயல் எல்லாம் எனக்கு எனக்கு என்று-சொல்லலாம் அன்றோ அடியார் ஆனார்க்கு –இந்திரனுக்கு இழந்த அரசினைப் பெற்றேன் என்னவுமாய்-மகா பலிக்கு -வள்ளல் என்னும் பெயர் பெற்றேன் -என்னவுமாம்சிலருக்கு பொன் பயந்தேன் என்னவுமாய்-மாலாகிப் பொன் பயந்தேன் மன்னன் சரிதைக்கே -திருமங்கை
இவருக்கு எனக்காகச் செய்தான் -என்னவுமாய் இருக்கிறது காணும் –
உவந்த உள்ளதனாய் -கொடையாளி -மகாபலி -இந்திரன் ராஜ்யம் பெற்று உகந்து-ரிஷிகள் காணப் பெற்றோம்-அடியார் கார்யம் செய்தோம் அவன் உகக்க -திருவடி பெறப் பெற்றோம் ஆழ்வார்கள் உகந்து -ஒரே கல்லில் ஐந்து மாங்காய்-சத்யம் விதானம் நிஜ ப்ருத்ய – நரசிம்மன் -அவதாரம் -மெய்ப்படுத்த- பிரகலாதன் வார்த்தை
-ப்ரஹ்மா – வேதங்கள் -ஹிரண்யகசிபு காட்டி -ரிஷிகள் இந்த உருவம் சேவிக்க –
திரு உலகு அளந்து அருளுகை ஒரு வியாஜ்யமாய் -ஆழ்வாரை அனுபவிக்கைக்கு ஏகாந்தமான ஸ்தலம் ஏதோ என்று ஆராய்ந்து திரு மலையிலே நின்று அருளினான் -ஆரியர்கள் இகழ்ந்த தெற்கில் திக்கில் ஒரு ஆபரணம் போலே இருந்துள்ள திருமலையில் வந்து நின்றான் –
நங்கள் குன்றம் கை விடான்-ஆழ்வார் திரு மேனியை பிராப்யமாகவும் நினைத்திரா நின்றான் என்றது-உத்தேச்யம் ஆழ்வார் திருமேனியாய்-அது பெறுகைக்கு ஆயிற்று திரு மலையில் நிலை -என்றபடி –
நண்ணா அசுரர் நலியவே-திவ்ய மங்கள விக்ரகம் இல்லை திருக் கல்யாண குணங்கள் இல்லை என்று பிதற்றும் அசுரக் கூட்டங்கள்-
திருமால் இரும்சோலையில் எம்பெருமான் நின்ற நிலை கண்டவாறே தொலைந்தன –
அப்படியே இவன் ஆழ்வார் திருமேனியில் காதல் இப்படி பட்டது என்று அறிந்தவாறே ஆழ்வார் குறைகளை எண்ணுகிற அசுரக் கூட்டம் தொலைந்தன –
————-
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-
எண்ணா தனகள் எண்ணும் -உபய விபூதி யுக்தனுக்கு இன்னம் விபூதி வேணும் என்றும் -அசங்க்யாத குணகனுக்கு இன்னம் குணம் வேணும் என்றும் மேன் மேலே என எண்ணா நிற்குமவர்கள் –திருவாய் மொழியை தவிர வேறு ஒரு செல்வம் வேண்டா-என்று இதுவே நினைந்து பேர் உவகையராம் தன்மையர் ஆகையால் –நல் முனிவர் –
நன்கு என் உடலம் கைவிடான் -என்னும்-அளவு அன்றிக்கே என் வார்த்தை அளவிலே களியா நின்றான் -இதில் பேசப் படுகிற பரம்பொருளின் உடைய அவதாரம் போலே ஆயிற்று-துதிப் பாடலாகிய இதனுடைய அவதாரமும் –தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் -9-4-9-என்னக் கடவது அன்றோ–இந்த திருவாய் மொழியே அவர்களுக்கு தாரகம் –
யானாய்த் தன்னைத் தான் பாடி –தந்தையானவன் மகனுக்கு பசுவினை நீர் வார்த்துக் கொடுத்து அவன் பக்கலிலே தான் மீள நீர்-ஏற்றுப் பசுவினைப் பெறுமாறு போலே
மகனுக்கு சொற்களைக் கற்பித்து அவன் சொல்லக் கேட்டு தந்தை இனியர் ஆமாறு போலே –தான் பாடினான் ஆகில் ஸ்ரீ கீதையோடு ஒத்துப் போம்-பண்டே பரமன் பனித்த -10-4-9-என்று இவர் அங்கீ கரிக்கையாலே அந்த ஸ்ரீ கீதை தானும் வீறு பெற்றது அன்றோ –
நம்பி திரு வழுதி நாடு தாசர் -அருள் கொண்டாடும் -என்கிற பாட்டிலே
ஸ்ரீ கீதையைக் கற்றான் ஒருவன் காலை நேரத்திலே ஒரு சபைக்குச் சென்றால்-
பலருமாக நாழி அரிசியைக் கொடுத்து நம்ப மாட்டமையாலே-புறத் திண்ணையிலே கிட -என்பார்கள்
திருவாய் மொழியைக் கற்றான் ஒரு விண்ணப்பம் செய்வான் என்றால் சர்வேஸ்வரன் அகப்பட புறப்பட்டு-எதிர் கொண்டு அகம் ஒழித்துக் கொடுத்து-அமுதுபடியும் எடுத்து விட்டு உபசரிப்பார்கள் -என்றாராம் –
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–ப்ரீதிக்குப் போக்கு வீடாக ஆளத்தி வையா நின்றான் -ஏதத் சாம காயன் நாஸ்தே-என்று பகவத் லாபத்தில் ப்ரீதிக்கு போக்குவிட்டு சேஷ பூதன் சொல்லக் கடவத்தை –அவாக்ய அநாதர -என்கிற தான் ப்ரீதி பிரகரஷத்தாலே அந்த பூர்த்தி குலைந்து சொல்லுகிறான் இறே-இக்கவிகள் ஆகிற அம்ருதத்தைப் பருகிக் களித்து அம்ருத பானம் பண்ணின வண்டுகள் போலே தென்னா தெனா வென்று திருமலையில் நின்று பாடி அருளா நின்றான் என்கிறார் –
திரு மால் இரும் சோலையானே-தாம் பாடின கவிகளின் இனிமையை நினைந்தார் –இவை தாம் அடியாக பிறந்தன என்று சொல்லலாய் இருந்தன அல்ல –
இதற்கு அடி என்ன -என்று பார்த்தார் –அவன் தன் நெஞ்சினில் புகுந்து இருந்து பாடுவித்தானாய் இருந்தது-இவரைப் பாடுவித்த முக்கோட்டை-தொலை வில்லி மங்கலமும் இவரது முக்கோட்டை –
———–
திருமால் இரும் சோலையானேயாகி செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–10-7-6-
செழு மூஉலகும் தன்-ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்–கட்டளைப் பட்ட தரை லோக்யத்தையும் அத்விதீயமாக சிறிதான வயிற்றிலே வைத்து -கல்பம் தோறும் கல்பம் தோறும் தலையாக ரக்ஷிக்கும் -பிரளய ஆபத்தில் ஜகத்துக்கு தன்னை ஒழிய செல்லாதாப் போலே என்னை ஒழிய தனக்கு செல்லாத படியாய் இருக்கை –மா -விபரீத லஷணை-
சிவனும் பிரமனும் காணாது அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே –
பிரமன் சிவன் முதலான தேவர்கள் காணப் பெறாமையாலே-எல்லை இல்லாத பக்தியை உடையராய்-திருவடிகளை அடைவு கெட ஏத்த-
அவர்களுக்கு முகம் தோற்றாமே கடக்க நின்று-அருள் செய்கின்ற சர்வேஸ்வரன்-
எனக்கு கண்களுக்கு இலக்காம்படி-திருமலையிலே வந்து நின்று-என்னை அடிமை கொள்ளுகையில் எனக்குப் பெரும் பித்தனாய் என்னைப் பிரிகிறிலன் என்கிறார் —என்னை ஆளுமால் –என்னை அடிமை கொள்ளுகைக்காக பிச்சுத் தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்குமவன் –ப்ரஹ்மாதிகள் பராத் பரன்– என்று அறியாதவர் பிரதிமாஸு அப்ரபுத்தி ஞானம் மலராதவர்களுக்கும் விக்ரக ரூபம்-யோகிகளுக்கு ஹிருதயம் சேவை –வேத வித்துக்களுக்கு அக்னியில் சேவை -ஸுலப்யம் அறிந்தவர் தானே இவனை உணர முடியும் –
————
அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7-
மருள்கள் கடியும் மணி மலை –பேற்றினை அடைவதற்கு தடைகளாக உள்ளவற்றை-அடையப் போக்கும் தேசம் ஆயிற்று-
அன்றிக்கே-
திருமலையை ஒழிந்தது ஒன்றே பெறத் தக்க பேறு-என்று பிறக்கும் புத்தியைத் தவிர்த்து தருமாயிற்று-நிரதிசய புருஷார்த்தமான திருமலை –திரு மாலிருஞ்சோலையே – -என்னலுமாம்-
அது தான் என் என்னில் –
திருமால் இரும் சோலை மலையே –ஸ்வயம் புருஷார்த்தம் திருமலை -என்றதாயிற்று –இம் மலையே தான் நாம் அடையத் தக்க பேறு-என்று திரு மலையைக் கொண்டாடுகிறார்-இதுவே பிராப்தம் என்று –மருள் ஒழி மடநெஞ்சே என்றவர் தாமே திரியட்டும் இதுவே பேறு என்கிறாரே-
———–
திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-
இரண்டு திருமலைகளிலும்-பரத்வத்திலும்-வியூகத்திலும்-பண்ணும் விருப்பம் முழுவதினையும்-இவர் திருமேனி ஒன்றிலும் பண்ணா நின்றான் –உயிரே -மனமே -வாக்கே -கருமமே-என்பவற்றில் உள்ள ஏகாரத்தாலே-அவற்றிலும் முறையால் அன்றியே
கண நேரமும் இடை விடாதே-சௌபரியைப் போலே பல வடிவு கொண்டு நில்லா நின்றான்-கரணங்கள் -காரியம் -கர்த்தா -மூன்றையும் சொல்லி -ஒன்றில் நின்றும் ஒன்றில்- கால் வாங்கிப் போய்-அனுபவிக்கின்றிலன் -என்றபடி –
தலையே உடலே உயிரே மனமே வாக்கே கருமமே -ஒவ் ஒன்றிலும் -ஒரு மா நொடியும் பிரியான் –இரண்டு திருமலையை சொன்னது உகந்து அருளினை திவ்ய தேசங்களுக்கும் உப லக்ஷணம் –
என் ஊழி முதல்வன் ஒருவனே –என் இடத்தில் காதலை உடையவன் ஆகைக்காக-காலத்தாலே அறியப் படுகின்ற எல்லா பொருள்களுக்கும்-காரணமான ஒப்பற்றவன் –
அழிவு காலத்தில் -சேதன அசேதனங்கள் எல்லாவற்றிற்கும்-தன்னை ஒழிய செல்லாதவாறு போலே ஆயிற்று-
இவர் திருமேனி ஒழிய தான் செல்லாத படி இருக்கிறபடி –பிரணயித்தவத்துக்கு தாரணம் என்றவாறு –கார்ய காரண உபய அவஸ்தா சித் அசித்துக்கள் யுடைய சத்தை தன் அதீனமாம் படி இருக்கிறவன் -தன்னுடைய சத்தை என் சரீர அதீனமாம் படி இரா நின்றான் -இவனும் ஒருவனாய் இருக்கிறானே –
————-
ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை
வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–10-7-9-
பிரளய ஆபத்துக்களில் இவற்றுக்குத் தன்னை ஒழிய-நிலைத்து இருத்தல்-இல்லாதாவாறு போலே – தான் இவரை ஒழியில்- தரிக்க மாட்டானாய் இரா நின்றான் –
வாழி மனமே கை விடேல் –மனமே நான் சொல்லுகிற இந்நன்மை உனக்கு மாறாதிடுக-
அவன் இப்படி நம் பக்கலிலே மேல் விழுந்து விரும்புகையாகிற-நன்மைக்கு எல்லாம் காரணம் -திருமலை -ஆயிற்று –
இதனை ஒருகாலும் கை விட நினையாதே காண் -என்கிறார் -தம் திரு உள்ளத்தைப் பார்த்து –அவனும் தன் திரு உள்ளத்தைக் குறித்து –ஆழ்வாரைத் தந்தது அவருடைய திருமேனியாய் இருக்கும் –திருமால் இரும் சோலை தானே ஆழ்வார் திருமேனி -நீயும் அதனை ஒருகாலும் விடாதே காண் -என்றான் –பிரானே அங்கன் ஒண்ணாது -இதனைத் தவிர வேண்டும் -என்று நிர்பந்திக்கிறார் –
உடலும் உயிரும் மங்க ஓட்டே –உடலும் உயிரும் மங்கும்படி இசைய வேண்டும் –ஒட்டு -இசைதல் –இது அத் திருமலையைப் போன்று பற்றத் தகுந்தது ஓன்று அன்று –சாலவும் விடத் தக்கதாய் இருப்பது ஓன்று –உமக்கு வைராக்யம் வந்தது போலே எனக்கு ராகம் வந்தது -என்றான் –
இதனை மங்க இசைய வேண்டும் –மங்க ஒட்டு -என்கையாலே-ஆழ்வார் அவன் இசைவாலே தான் இத்தனை காலம் இருந்தார் -கர்ம சேஷத்தால் அல்ல -அவனது இச்சையால் தானே –ஆழ்வார் இங்கே எழுந்து அருளி இருந்த இருப்பு பிராரப்த கர்மத்தால் அன்று -பகவத் இச்சையாலே தானே -என்கிறது –நன்கு என்னுடலம் கை விடான் –என்றார் இறே –
————-
மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-
திரு மால் இரும் சோலை மேய நங்கள் கோனே –திருமலையில் நின்று சேஷித்வம் காட்டி அருளிய நீ பேற்றினையும் தந்து அருள வேண்டும் -என்றபடி –
பரமபதம் கலவிருக்கையாய் இருக்க அவ்விடத்தை விட்டு-நீ திருமலையில் வந்து முற்பாடனாய் நிற்கிறது–நான் சொன்னபடி கார்யம் செய்வதற்காக அன்றோ –
நீ நினைத்தபடி செய்யப் பார்த்தாய் ஆகில் பின்னை அவ் இருப்பிலே என்னை அழைத்துக் கொள்ளாயோ- திருமலையிலே வந்து நின்று என்னுடைய சேஷத்வத்தையும்-உன்னுடைய சேஷித்வத்தையும்-எனக்கு அறிவித்தவனே –
மங்க ஒட்டு உன் மா மாயை-வெண்ணெய் பால் உண்டு வெறும் கலத்தை உடைத்தீரே -அது போலே செய்ய வேண்டும் –
இது விடத்தக்கது இது கொள்ளத் தக்கது என்னும் வேறுபாட்டினை நாம் அறியகில்லோம்-
அறிந்த நீர் விடத் தக்கது என்பதனை எனக்கு இன்னது என்று சொல்லிக் காணீர் -நான் கழித்து தர -என்றான்-சேதனன் கர்மத்தால் ப்ரக்ருதி யாத்மா விவேகம் பண்ண மாட்டாதாப் போலே இவர் பக்கல் வியாமோஹம் அவன் பிரகிருதி யாத்மா விவேகம் பண்ண ஓட்டுகிறது இல்லை – ஒரு கர்மம் செய்தது செய்ய மாட்டாமை இல்லை அன்றோ கழி பெரும் காதல் –
அது போலும் அன்றிக்கே -இது நிலை நிற்குமது அன்றோ–சதுர் விம்சதி தத்தவாத்மிகையான பிரக்ருதியினுடைய ஹேயதையை அவனுக்கு உணர்த்தி -இத்தை விரும்பாதே போக்கி யருள வேணும் -என்கிறார் –
—————-
மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-
அவன் செய்கிறோம் என்று தலை துலுக்கினால்-பின்னைப் பெற்றதாய் இருக்கத் தட்டில்லையே –தானே தானே ஆனானைத் –ஆத்மாவிலும் ஆத்மாவோடு சம்பந்தப் பட்ட பொருள்களிலும்-எனக்கு உண்டான ஆசையைத் தவிர்த்து-
தானே அபிமானத்துக்கு விஷயம் ஆனவனை-
அன்றிக்கே
மகத்து முதலானவற்றின் உருவமான இச் சரீரத்தினை-ஒழித்து அருள வேண்டும் என்று சொன்ன இப்பத்தும்
அன்றிக்கே
மான் ஆங்காரத்து இவை பத்து -என்பதற்கு-பெரிய செருக்கோடு சொன்ன இப்பத்தும் -என்னுதல் –
பராங்குச ப்ருங்க ராஜம் -வண்டுகள் தேனை குடிக்கும் -ஆழ்வார் உடைய கமலப் பாதங்களில் தேனை அருந்தும் எம்பெருமானார் –
இத் தலையில் இரக்கும் தன்மை ஒழிய தானே-இரப்பாளனுமாய்-இதனை விரும்புகின்றவனும் தானே ஆனான் -என்னுதல் –
பிராப்தாவும் பிராபகனும் பிராப்திக்கு உகப்பானும் தானே ஆனான் என்றவாறு –
திருமால் இரும் சோலை மலைக்கே–திருமலையே உத்தேச்யமாகச் சொல்லிற்று -அழகரைச் சொன்னவிடம் ஆநு ஷங்கிகம் —கற்பகத் தருவினை சொன்னதைப் போன்று-
திருமலையில் உள்ளன அடங்க உத்தேச்யமாக கடவன அன்றோ-
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே -பெருமாள் திருமொழி -4-10 என்றும் சொன்னார்கள் அன்றோ –திருவேங்கடமுடையானாகவும் ஆவேன் என்றவாறு –
—————-
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1-
என்ன –மனத்தின் துணையும் இல்லை காண்-வார்த்தை மாத்ரமே என் பக்கலில் உள்ளது-
இவன் அடியவனாய் இருந்தான் ஆகில்-
உபாயம் ஆகும் தன்மை நம் பக்கலிலேயாய் இருந்ததாகில்-
இவனுடைய பேறு நம் பேறாக இருந்ததாகில்-
அறிவுடைய சேதனன் என்கிற வேறு பாட்டுக்கு -வார்த்தை மாத்ரம் உண்டாயிற்றாகில் –
இதற்கு அவ்வருகு கொண்டு கார்யம் என் -என்று இருக்குமவன் அன்றோ-
ராவணன் தம்பிக்கு மித்ர பாவமே அமையும் என்று இருக்கிறவன் -இவருக்கு உக்திக்கு அவ்வருகு ஓன்று வேணும் என்று இருக்குமோ –சேஷத்வம் ஸ்வரூபம் ஆகில் -உபாய பாவம் நம் தலையிலே கிடந்ததாகில் -அத்வேஷம் உண்டாகில் -நம் பேறாக விஷயீ கரிக்கைக்கு உக்திக்கு அவ்வருகு உண்டோ -என்று இரா நின்றான் அவன் –
வாயால் சொன்னதுக்கு அடி நெஞ்சில் உள்ளதா என்று பார்ப்பவன் அல்லன் –
கை விடும் பொழுது – தானே பார்ப்பான் -உளம் தொட்டு -பார்ப்பவன் –
இது தான் ஒரு மலை அன்றோ அவனுக்கு -என்ன ரசோக்தி –வார்த்தையை இல்லை என்ன ஒண்ணாது இறே அவனுக்கு-யுக்தியே பாரமாக நினைப்பவன் –நம வென்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே –இதற்கு அடி ஆராயுமவன் அல்லனே-
ஆக –இவருக்கு ஓன்று இல்லை என்னவுமாய்-அவனக்கு இது ஓன்று உண்டு என்னவுமாம் படி-இருக்கிறது இது தானே-பலத்துக்கு சத்ருசமாக ஒன்றும் இல்லை என்று இவர் -அவன் யுக்தி என்றாலே மனசால் சொல்லி இருப்பான் என்று எண்ணுபவன் அன்றோ –
மனத்தோடு படாமல் சொன்னது தன்னை-மனத்தோடு பட்டதாக்கிக் கொடுப்பாரும் அருகே உண்டு என்பார் –திருமால் –என்கிறார் –
வந்து –அவன் வருவதே -என்று இவர் ஆச்சர்யப் படுவதாய் நிற்க-நீர் வேட்கை கொண்டவன்-
தண்ணீர் இருந்த இடத்தை வரும் அத்தனை அன்றோ என்றாயிற்று அவன் வார்த்தை-
என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –நிறைய -ஐம் புல இன்பங்களுக்கு இடம் இல்லாத படி புகுந்தான்-என் நெஞ்சிலே பாழ் தீரப் புகுந்தான் –எல்லாருக்கும் அடையப் படுபவனாக இருப்பவன் காண்-என்னை அடையத் தக்கவனாக கொள்ளுகிறான்-
இரண்டாம் அடியில்- திரு மால் என்றது -புருஷகாரத்தின் தன்மையைச் சொல்லிற்று-
நான்காம் அடியில் –திருமால் -என்றது -த்வயத்தில் பின் வாக்யத்தில் கூறப் பட்ட-திருமகள் சம்பந்தத்தை சொல்லுகிறது –
———-
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே–10-8-2-
தான் சர்வேஸ்வரனாய் வைத்து-என்னோடு கலக்கப் பெறாமையாலே குறைவாளனானவன்-இன்று வந்து-நிர்ஹேதுகமாக என் மனத்தின் கண் புகுந்து-நிறைவாளன் ஆனான்-
பேரேன் என்று –பேரேன் -பேரேன் -என்னா நின்றான் ஆயிற்று
நீ போவுதியோ இருப்புதியோ -என்று கேட்பாரும் இன்றிக்கே-உதாசீனராக – இருக்கச் செய்தே-
இங்கு பிராட்டி தன் விஷயத்தில் -அகலகில்லேன் இறையும் -சொல்லும் வார்த்தையை-என் விஷயத்தில் சொல்லா நின்றான்-
நான் போகேன் போகேன் -என்று சூழ்த்துக் கொடா நின்றான் ஆயிற்று-தன்னை ஐயப் படுவாரும் இன்றிக்கே இருக்க-
அடங்கப் பிடித்தேனே –இப்படி அபி நிவிஷ்டனாய் இருக்கிறவனை பூர்ணன் ஆக்கினேன்-அவனுடைய நிறைந்த அங்கீகாரத்துக்கு பாத்ரம் ஆனேன் –
பிரளயத்தில் அகப்பட்ட உலகத்தை எடுக்கை யாவது-பின்னையும் இவ் உலக வாழ்வினைப் பூண் கட்டுகை அன்றோ-
பரம பதத்தளவும் செல்ல நடத்த பெறாமையாலே குறைப் பட்டு அன்றோ கிடப்பது –
நாம் எல்லாம் செய்தோம் என்று அவன் தெகுட்டும்படி செய்து கொண்டேன் –
அவன் என்னை அவ்வளவும் கொண்டு போம் படி நான் உடன் படுகையாலே-அவனுடைய பெரும் காதல் தீர்ந்ததாயிற்று-
—————
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3-
பிடித்தேன் –தலை மேலே தாள் இணைகள் -10-6-6-என்று-அவன் திருவடிகளை தலை மேல் கொண்டு வந்து வைக்கையாலே
அவற்றை உரக்கப் பிடித்துக் -கெட்டியாக பிடித்துக்-கொண்டேன் –ஐம்புல இன்பங்களின் கால் கடையிலே துவண்டு போந்தவர்-அவன் திருவடிகளில் கிட்டிக் கொடு-நிற்கக் கண்ட இத்தனை-ஸ்வயம் பிரபா புலத்தில் புக்க முதலிகளைக் கண்ணைச் செம்பளிக்கச் சொல்லி அவன் கரையிலே ஏற விட்டால் போலேயும் -ஸ்ரீ மதுரையில் உறங்கினவர்கள் ஸ்ரீ மத் த்வாரகையிலே விழித்தால் போலேயும் இப்படி திருப்பேரான் அடி சேர்வது எனக்கு எளிது ஆவதே -என்று களிக்கிறார்-
பிறவி கெடுத்தேன் –பிறவியை மறுவல் இடாதபடி போக்கினேன் –ஸ்தூல சரீர விமோசனம்–மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை –மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை மடித்தேன் –சூஷ்ம சரீர விமோசனம் –
இவ் உலக வாழ்கையில் நிற்கைக்கு அடியான மாயை உண்டு -மூல பிரகிருதி-அதனைத் திரிய விடுவித்தேன்-நிவர்த்தம் ஆக்கினேன் –
சூஷ்ம சரீரத்தின் நாசம் சொன்னபடி –தொடருகிற பாம்பினைத் திரிய விடுவிப்பாரைப் போலே-
எம்பெருமானார் -உலாவி அருளுகிறவர் முடியப் போகாதே-நடுவே மீண்டு அருள-
எம்பார் கதவினை ஒருச்சரித்து-திருமால் இரும் சோலை ஆகாதே திரு உள்ளத்தில் ஓடுகிறது-என்ன-ஆம் அப்படியே -என்று அருளிச் செய்தார் –
————–
எளிது ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே–10-8-4-
எளிது ஆயினவாறு –அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரைப் பெற்றால் -கரியதோர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தது அன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து—- -இரண்டாம் திருவந்தாதி -22-பெறுதற்கு அரியனான பகவானை பெறுதலும் எளிதாகும் –எங்கே கண்டோம் -என்றால்
கரியது ஒரு வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தன்றே-தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து –அவன் தானே அரை குலையத் தலை குத்திய-மடுவின் கரையிலே விழ அன்றோ யானை பெற்றது –புண்டரீக மகரிஷி பெற்றார் -கைகளால் கடல் நீரை இரைக்கப் புக்கு-
அரியதான பகவல் லாபம் -சக்தி யோகம் -ஸூ ரக்ஷண அர்த்தமாக இவன் பண்ணும் பிரவர்திகளை மாற்றி-நம்மை பெறுக அவன் முயல்வானாக இருக்க –-எளிது ஆயினவாறு -என்று என் கண்கள் களிப்பக் – காண்பதற்கு அரிய விஷயம் இங்கனே எளிது ஆவதே என்று-காணக் கருதும் என் கண்ணே -9-4-1-என்கிறபடியே விடாய்த்த கண்கள் களிக்கும் படி –
தனக்கு திரு நாட்டுக்கு கொடுப்பானாய் இருக்கிற எம்பெருமானுடைய படியை -நீர்மையை –அனுசந்தித்து -இங்கனே எளிதாவதே -என்று என்னுடைய இந்த்ரியங்களோடே கூடக் களித்த மனசை யுடையேனாய்க் களியா நின்றேன்–கரணங்களும் களிக்க நானும் களியா நின்றேன் – -என்கிறார் -இப்படி திருப்பேரிலே தான் எழுந்து அருளி இருக்கிற இருப்பை எனக்கு காட்டித் தந்து அருளின இவன் இனித் திருநாட்டையும் தந்து அருளும் என்கிறார்–-களிது ஆகிய சிந்தையனாய்க் –களித்த மனத்தினை உடையனாய் -என்றது–நெடியானே என்று கிடக்கும் என் மனம் களிக்கப் பெற்றது-8-8-1- என்றபடி-
களிக்கின்றேன் –கூவியும் காணப் பெற்றேன் -8-8-7-என்று நானும்-களியா நின்றேன்-
உறுப்புகளும் தாமும் ஒக்க விடாய்த்தவர்-உறுப்புகளும் தாமும் ஒக்க களிக்கப் பெற்றார் –முடியானேயில் தாமும் தம்முடைய கரணங்களும் விடாய்த்த படி சொல்லிற்று -இங்கு தாமும் தம்முடைய கரணங்களும் களித்த படி சொல்லுகிறது-
————–
வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5-
வானே தருவான் எனக்காய் –எனக்கு வானே தருவானாய் –இங்கே வைத்து கார்யம் கொள்ளும் அதனையும் தவிர்ந்தான் –இன்னம் ஒரு பிரபந்தம் இடுவித்துக் கொள்ளுகையும் தவிர்ந்தான்-
வானே -ஏவகாரம்-பிரமன் முதலாயினோர்கள் குடி இருப்பும்-இவருக்குத் தரம் அன்று -என்று அதனையும் தவிர்ந்தான்-எனக்காய்-இவ் உலகுள் உழன்று திரிகின்ற எனக்கு-நித்ய சூரிகள் இருப்பை தருவானாக –
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று –ஊனேய் குரம்பை இதனுள் -இன்று -புகுந்து -செஞ்சொல் கவியின் பிரமேயம் -–இவ் உடம்போடு உம்மைக் கொடு போக வேண்டும் -என்று-விளம்பித்தேன் ஆகில் இதனை ஒழியக் கொடு-போகப் பார்த்த பின்பு-ஆறி இருப்பேனோ -என்னா நின்றான்-ஆத்மாவுக்கு இருப்பிடமாய் இருக்கும் சரீரத்தில்-மேல் எழக் கலக்கை அன்றிக்கே-விடாயர் மடுவிலே புகுமாறு போலே புகா நின்றான் –
எனது உடலே அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே-ஒரு மா நொடியும் பிரியாதே இதனுள் புகுந்து நின்றான் –
தானே-கர்மங்களுக்கு கட்டுப் படாதவனான தானே –இவர் பல காலம் தேகத்தினை விரும்பி விட மாட்டாதே போந்தார்-இப்போது இவருக்கு தன் பக்கலில் ருசி பிறந்தவாறே-
இதனோடு தொற்று அல்லாத தானே-இதிலே வந்து புகுரா நின்றான் –
அவனைப் போலே முன்னடி தோற்றாது ஒழியில் அன்றோ இவர்-இச் சரீரத்தின் தண்மையைக் காணாது ஒழிவது-
இதன் தண்மையை நினைந்து –இதனுள் -என்கிறார் –காதல் கண்ணை மறைத்தது அவனுக்கு- இவர் மயர்வற மதி நலம் அருள பெற்றவர் அன்றோ
தானே-
புகுகிற போது தானே யாய்-பின்னர் நானும் அவன் செய்யும் கார்யத்துக்கு அனுகூலமாக இருந்தேனோ –
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே –தேன் மிக்க பொழிலை உடைத்தான-திருப் பேர் நகரை உடையவன் காண்-என்னுடைய சரீரத்திலே புகுந்து
கண நேரமும் விட மாட்டாதே ஒழிகிறான்-என்ன குறை உண்டாய் இப்படிப் பட்டான் –
——————–
திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6-
இன்று வந்து –இவ்வத்மாவுக்கு நேற்று ஒரு நினைவு இன்றிக்கே இருக்க-வந்து கொடு நிற்கக் கண்ட இத்தனை –
அமுதம் உண்டு களித்தேனே –விஷ உணவினை உண்டு நரகத்துக்குப் போகா நிற்க-
நடுவே நின்று களிக்கை அன்றிக்கே -அமுதம் உண்டு களித்தேனே —
அவனுடைய கொண்டாட்டம் ஆகிற அமுதத்தை உண்டு களித்தேனே –என்னுதல் –
ஒரு நாளைக்கு ஒரு நாள் அவனுக்கும் ஸ்ப்ருஹணீயனாய்-அவனுடைய குணங்கள் ஆகிற அமுதத்தை உண்டு களித்தேன்-என்னுதல்-களித்தேனே –
நாவல் இட்டு உழி தருகின்றோம் -என்கிறபடியே-செருக்காலே களிக்கிற களிப்பே அன்றோ இது-நமன் முதலானோர் தலைகளிலே அடி இட்டுக் களிக்கப் பெற்றேன்-ஷிபாமி என்று அவனுடைய அவன் உபேக்ஷைக்கு இலக்காகாதே -அவன் பஹு மானத்துக்கு இலக்கானால் -ப்ரீதி உள் அடங்காது இறே -தனக்கு வர்த்தித்து அருளலாம் கோயில்கள் -அநேகம் யுண்டாய் இருக்க -ஓர் இடம் இல்லாதாரைப் போலே -இருப்பேன் என்று பிரார்த்தித்திக் கொண்டு என்னுடைய ஹிருதயத்திலே நிர்ஹேதுகமாகப் புகுந்தான் என்று ப்ரீதர் ஆகிறார் –
————–
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-
தொண்டு உகளித்து –தொண்டாலே உகப்புத் தலை மண்டை இட்டு –
அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்-முடிவிலே -தொழும் சொல்லுப் பெற்றேன் -அனுபவ ப்ரீதி தலை மண்டையிட்டால் -அதன் மேலே நம என்று புத்தி பூர்வகமாக சொல்லும் சொல்லைப் பெற்றேன் -நம இத்யேவ வாதின -இறே -அதாவது ப்ரீதி வழிந்த சொல்லாலே திருவாய் மொழி பாடி அடிமை செய்யப் பெறுகை –
கண்டு களிப்ப –மெய் கொள்ளக் காண விரும்பும் என் கண்கள் என்று விடாய்த்த கண்கள் கண்டு களிக்கும் படியாக –
கண்ணுள் நின்று அகலானே –நான் போகச் சொல்லினும் கண் வட்டத்தில்-நின்றும் அகலுகின்றிலன்-
ஐம் புல இன்பங்களில் ஆசை உள்ளவர்கள் போகச் சொன்னாலும்-தூணைக் கட்டிக் கொண்டு போகாதவாறு போலே –
இப்படி அவனை அனுபவித்து களிக்கப் பெற்ற எனக்கு-மேல் ஒரு குறை உண்டோ –
———-
கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-
கண்ணுள் நின்று அகலான் –எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு விஷயம் ஆகா நின்றான் -என்றது –சதா பஸ்யந்தி -எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு-வேறு தனக்கு ஒரு உலகம் உண்டு என்று இருக்கின்றிலன் -என்றபடி –
கருத்தின் கண் பெரியன் –உபய விபூதி நாதனாய் இருத்தலால் வரும்-வேறு ஒன்றிலே நோக்கு உள்ளவனாய் இருத்தல் முழுதும் தீர்ந்து
இவரை அவ்வருகே கொண்டு போகையிலும் -ஆதி வாஹிகரை ஏவுகையிலும்-
வீடு திருத்த -தான் முற்பாடனாய்க் கொண்டு போகையிலும் -பாரியா நின்றான் –
அன்றிக்கே -நம் கார்யத்தில் இவன் விரைகிறபடி நம்மால் எண்ணி முடியும் அளவு அன்று -என்னுதல் -என்றது –இவ்வளவினன் -என்று எண்ண முடியாதவன் -என்றபடி –இது தான்- எவனுக்கு அறியப் படாதது -என்கிற –ஸ்வரூபத்தால் -பொது நோக்கால் அன்று -பின்னர் எதில் எண்ணில்-நம் கார்யத்தில் இங்கனே இருக்கும்--என் மனத்துப் புகுந்தான் -என்றதனோடு சேர வேண்டும் அன்றோ -கருத்தின் கண் பெரியன் -என்கிற இதுவும்
எண்ணில் நுண் பொருள் -தாம் தாமே எண்ண நினைப்பார்க்கு துர்க்க்ரஹமான வஸ்து -ஏழிசையின் சுவை தானே-எண்ணாமல் இருக்க ஒண்ணாத போக்யதையைச் சொல்லுகிறது -சப்த ஸ்வரங்கள் இறே பிரதானம் –
என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –சக்யா லோபயிதம் ந அஹம் ஐஸ்வர்யேண நநேநவா-அனன்யா ராகவேண அஹம் பாஸ்கரேண பிரபா யதா -சுந்தர -21-15- பிராட்டி போலே பிரிக்க ஒண்ணாதபடி புகுந்தான்–எனது ஆவியுள் கலந்த -8-8-4- என்னுமாறு போலே-
அறப் பெரியவன் ஆனவன் இப்படி நம் பக்கல் மேல் விழக் கூடுமோ -என்று தாமும் ஐயம் கொண்டார்- அதற்கு வேறு போக்கடி கண்டிலர்-திண்ணம்-சர்வேஸ்வரன் ஒரு சம்சாரி ஹிருதயத்திலே இப்படி மேல் விழக் கூடுமோ -என்று சங்கிக்க வேண்டாம் -இது த்ருடம் —திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே-இன்றே புகுந்தான் -செறிந்து புகுந்தான் -திண்ணம் புகுந்தான் – நிர்ஹேதுகமாக -நிச்சயமாக திரும்பிப் போகாத படி புகுந்தான் –
————-
இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-
இன்று என்னை அங்கீ கரிக்கைக்கும் முன்பு-என்னை பாராமுகம் செய்தமைக்கும் காரணம் என் என்று கேட்க வேண்டி இருந்தேன் –இது தனக்குத் தானே சிந்தித்தலில் நோக்கு –
அன்றிக்கே
சர்வேஸ்வரன் தன்னை பரமபததுக்கு கொடு போகையில்-விரைகிறபடியைக் கண்டு
இன்று என் அளவு அல்லாதபடி விரைகிற தேவர்-இதற்கு முன்பு பல காலம் விட்டு ஆறி இருந்தமை எங்கனே என்று அவனைக் கேட்கிறார் -என்னவுமாம் –
அன்றிக்கே
மூன்றாவது அவதாரிகை அதி சங்கையிலே நோக்கு – இப்படி விரைகிறமை மெய்யாகில் முன்பு விட்டு ஆறி இருக்கக் கூடாது -என்கிறார்-
ஓன்று எனக்கு அருள் செய்ய –முன்பு கை விட்டதற்கு காரணம் சொல்லவுமாம் –இன்று என்னை அங்கீகரித்ததற்கு காரணம் சொல்லவுமாம்- ஒன்று சொல்ல மற்றவற்றுக்கு விரோதிக்கும் -நிர்ஹேதுக விஷயீ காரத்துக்கு ஹேது பிரஸ்னம் பண்ணில் சர்வஞ்னுக்கும் உத்தரம் இல்லையே –
இன்று என்னைப் பொருள் ஆக்கி –அசேதனத்தைப் போலே இருந்த என்னை-ஒரு பொருளாம் படி செய்து-பொருள் அல்லாத என்னை -5-7-8- என்றாரே” அன்றோ -தன்னை-
தன்னை –
பெரு மக்களால் விரும்பத் தக்கவனான தன்னை –
என்னுள் வைத்தான் –
பிறர்க்கு இடம் இல்லாதபடி தன்னை-முற்றூட்டாக என்னுள்ளே கொடு வந்து வைத்தான் –
அன்று –என்று அவன் திருவருளைப் பெறுவதற்கு-முன்புள்ள நாள்கள் எல்லாவற்றையும் சொல்கிறார் –
இன்று -என்கிறது-மயர்வற மதி நலம் அருளப் பெற்ற அதற்கு பின்புள்ள காலத்தை`–
உணர்த்தல் உற்றேன் என்ற இவரே
அடுத்த பாசுரத்தில் உற்றேன் உகந்து பணி செய்து -என்று சமாதானம் அடைகிறார்-
ஆகையால் அவன் விடை கூறாது ஒழிந்தது போதருதலால்-அது தன்னை விரித்து பேசுகிறார்
இது நாம் சொல்ல வேண்டுமோ -நீர் அறியீரோ -என்றான் –
அடியேன் அறியேன் -சர்வஞ்ஞனான நீயே அருள வேண்டும் -என்றார்
ஆனால் நாம் உம்முடைய நெஞ்சில் புகுந்த காலத்தில் உடன் பட்டு இருந்தீர் -அதனாலே காணும் -என்றான்
ஓம் அது தான் உண்டோ –யான் ஒட்டி என்னுள் இருத்துவம் என்றிலன் –1-7-7-என்றார்
அது இல்லை யாகிலும் புகுந்த பின்பு நம்மை விரும்பினீரே -என்றான்
மருவித் தொழும் மனமே தந்தாய் -2-7-7-என்கிறபடியே அதுவும் தேவர் செய்த இத்தனை -என்றார் –
ஓம் காணும் அது இல்லை யாகிலும் நம்மை விரும்பும் போது நம்மோடு கூட வேறு விஷயங்களை விரும்பாது இருந்தீரே -என்றான் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -2-7-8-என்கிறபடியே அதுவும் தேவரே அன்றோ செய்தது -என்றார் –
இவை ஓன்று இன்றே யாகிலும் நாம் தந்த மதி நலத்தை வளர்த்துப் போந்தீரே -என்றான்-
காதல் கடல் புரைய விளைவித்த கார் அமர் மேனிக் கண்ணன் -5-3-4-என்கிறபடியே-
அதுவும் தேவர் அன்றோ செய்தது -என்றார்
இப்படி இவர் முடியத் தொடர்ந்தவாறே-பெரும் கடல் மண்டினாரைப் போலே போக்கற்றான் –
இதற்கு ஈஸ்வரன் சொன்ன விடை தான் என்ன-என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க –
இவர் தலையிலே ஒரு பழியினை ஏறட்டு-பல காலம் இழந்து இருந்த நாம் சொல்லுவது என் -என்று நாணம் உற்றவனாய்-காலாலே தரையைக் கீறி நிற்கும் இத்தனை போக்கி-வேறு விடை உண்டோ என்று அருளிச் செய்தார்-
மாமியர் குழுவில் வந்தான் ஆம் என மைந்தன் நிற்ப -கம்பர் -தாரை முன்னால் இளைய பெருமாள் நிலை –
தாமரை வதனம் சாய்த்து, தனுநெடுந் தரையின் ஊன்றி,
மாமியர் குழுவின் வந்தான் ஆம் என, மைந்தன் நிற்ப,
பூமியில் அணங்கு அனார்தம் பொது இடைப் புகுந்து, பொன்தோள்
தூமன நெடுங்கண் தாரை, நடுங்குவாள், இனைய சொன்னாள்.
அதாவது -முன்பு ருசி இல்லாமையாலே -என்ன மாட்டான்-
இப்பொழுது சாதனங்களைச் செய்கையாலே -என்ன மாட்டான்-
ஆனால் பின்னை ஈஸ்வரனுக்கு உயர்வு தாழ்வுகளுடன்-படைத்தல் -அருள் அற்று இருத்தல் முதலிய குற்றங்கள் வருதல்-வைஷம்யம் நைர்கருண்யம் வருமே –
எல்லார்க்கும் மோஷத்தை கொடுக்க வேண்டி வருதல் செய்யாதோ என்னில் -அது செய்யாது-சர்வ முக்தி பிரசங்கம் வருமே –
அடியிலே வெறுப்பின்மையும்-இச்சையும் பிறப்பதற்கு தான் கிருஷி பண்ணி-அது பக்குவமாம் அளவும் பார்த்து இருப்பவன் ஆகையாலே –அதிகாரி விசேஷணம் -ருசி –
கேட்டதற்கு அவன் மறுமாற்றம் சொல்லக் காணாமையாலே-
அறிந்தோம் -இதற்கு காரணம் இங்கனே ஆக வேண்டும் என்று பார்த்தார்-
தன்னுடைய ரஷணம் வெறுப்பிற்கு விஷயமாகி தவிர்ந்து-விலக்காத சமயம் பார்த்திருந்தான் ஆதல்-
தன்னை ஒழிந்த வற்றில் சாதனா புத்தி தவிரும் அளவும் பார்த்து இருந்தான் ஆகில் ஆக அடுக்கும் -என்று பார்த்தார் –
ஆனால் இதனை அவன் உத்தரமாக அருளிச் செய்யாதது என் என்னில்-
அறிவு காரணமாக வருகிற வெறுப்பின்மையை சாதனம் என்ன மாட்டானே-
உபாயமாக இருக்கும் தன்மை தன் தலையிலே ஆயிற்று-
பல காலம் இவர் தலையிலே பழி இட்டு இருந்த நாம் எதனைச் சொல்லுவது-என்று பேசாதே இருந்தான் –
ப்ரசீதந்து பவந்த மே ஹ்ரீ ஏஷா ஹி மமாதுலா-யத் ஈத்ருசை அஹம் விப்ரை உபஸ்தேயை உபஸ்தித -ஆரண்யம் -10-9- என்னால் அடையத் தக்கவர்களான இப்படிப் பட்ட-அந்தணர்களால் நான் அடையப் பட்டேன் என்பது எனக்கு-மிக்க நாணமாய் இருக்கிறது
என்கிறபடியே பிற்பாட்டுக்கு நாணமுற்று நிற்குமவன் அன்றோ-
இவர் தாம் -லஜ்ஜித்த அவனை -எடுத்து வைத்து வார்த்தை சொல்லும்படி ஆயிற்று அவன் நிலை-
அறிவு பற்றி வருகின்ற ருசி தான் ஸ்வரூபத்தின் வேறுபாடு ஆகாதே-
சைத்தன்ய பிரயுக்தமான ருசி -ஸ்வரூபத்துடன் சேர்ந்தது -உபாயம் ஸ்வரூபம் உடன் சேராதே -பற்ற வேண்டுமே –
நீர் பெற வேண்டிய பேற்றினை பெற்றீர் ஆகில் அதுவே அமையாதோ -என்ன-அதுவே அமையும் -என்கிறார்-
தேங்காய்க்கு இளநீர் புக்க வழி ஆராய்ந்தோ-விடாய்த்தவன் இள நீர் குடிப்பது-வரவாறு ஒன்றி இல்லை -வாழ்வு இனிதானதே என்றாரே –
பசியும் ருசியும் உபாயம் ஆகாதே -அனுபவத்துக்கு வேண்டிய அதிகாரி விசேஷணம் தானே-
————
உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-
இவர் கேட்ட இதற்கு காரணம் காணாமையாலே-விடை அளித்தால் அற்றவனாய்-உமக்கு மேல் செய்ய வேண்டுவது என் -என்ன- ப்ரீதி முன்னாக அடிமை செய்யப் பெற்றேன் இதுவே இன்னம் வேண்டுவது -என்கிறார்-கைங்கர்ய பிரதி சம்பந்தியான அவன் திருவடிகளில் அடிமை செய்வதும் -கைங்கர்யம் செய்வதும் பிராப்தம் –
அவன் தானே செய்தான் என்னுமன்று அவனுக்கு வைஷம்ய நைர்க்ருண்யமும் சர்வ முக்தியும் பிரசங்கியாதோ -என்னில் -இத்தலையில் ருசியை அபேக்ஷித்துச் செய்கையாலே அவனுக்கு அது தட்டாது -அது ஹேது வென்று ஈஸ்வரனுக்கு உத்தரம் ஆனாலோ என்னில் -அது உபாயமாக மாட்டாது -பல வ்யாப்தமானது இறே உபாயம் ஆவது –இந்த ருசி அதிகார ஸ்வரூபம் ஆகையால் தத் விசேஷணமாம் அத்தனை -உபாயம் சஹகாரி நிரபேஷம் ஆகையாலும் இந்த ருசி உபாயம் ஆக மாட்டாது –இது உபாயம் அல்லாமையாலே இவர்க்கு இல்லை என்ன-சர்வ முக்தி பிரசங்கம் நீங்குவதற்காக அவனுக்கு உண்டு என்னவுமாம் –
உகந்து பணி செய்ய உன பாதம் பெற்றேன் –ப்ரீதியினால் தூண்டப் பட்டவனாய்க் கொண்டு-திரு வாய் மொழி பாடி-உன் திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன்-
உகந்து பணி செய்கை சாதனமாக-மேல் சாதனத்தால் அடையக் கூடிய பேற்றினைச் சொல்லுகிறது அன்று–இரண்டும் ஒரே காலத்திலே உள்ளன ஆகையாலே-
ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் –இது தானே மாறி மாறி உயிர் உள்ள அளவும் செல்லுகையே அன்றோ வேண்டுவது- மீண்டு வருகை இன்றி ஒழிகை யாவது -மீளாது ஒழிகை-சம்பந்தம் இல்லாததாக இருக்கிறதோ என்னில்-
எந்தாய் –இவ் வநுபவம் ஆத்மாவோடு கூடியது என்கிறது –ஸ்வரூப பிராப்தம் –
இத்தலைக்கு அடிமையும்-தேவர்க்கு ஏவும் தனமையை உடைய தலைமைத் தன்மையும் அன்றோ ஸ்வரூபம்–இவர் விரும்பிய போது அவனும் செய்கிறோம் என்ன-ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –
———–
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11-
நல்லார் பலர் வாழ்-திருவாய் மொழி கேட்டு வாழும் -தொழுவதும் எழுவதும் ஒன்றே போலே
திருவாய் மொழி கேட்டு பாடுவதே வாழ்வே-நல்லார் நவில் குருகூர் -திரு விருத்தம் -100-திருச் சங்கணித் துறை சத்வ குணம் உள்ளார் சேரும் திரு நகரி –ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் அனைவரும் சேர்ந்து அருளிய குருகூர் அன்றோ
இத் திருவாய் மொழியினை கற்க வல்லவர்கள்-இட்ட வழக்கு பரம பதம் -என்கிறார் –
இவர்களும் உடையவர் போலே ஆவார்கள் என்றவாறு –வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே-பொன் சூழ் விசும்பு ஹிரண்மயமான விஷ்ணோ பரமம் பதம் -ஆளுவார்கள்-பாகவதர்கள் தாங்களே நிர்வாகராக நடத்துவது பரமபதம்
இவை பத்தும் வல்லார் தொண்டர் – இப்பத்தினை கற்க வல்லவர்கள்-செஞ்சொற் கவிகாள் 10-7-1- -என்கிறபடியே-வாக்காலே அடிமை செய்யும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
ஆள்வது சூழ் பொன் விசும்பே--எல்லை இல்லாத தேஜோ மயமான பரம பதத்தை-ஆயிற்று ஆளுவது-இஷ்ட பிராப்தி – இத் திருவாய் மொழியைக் கற்றவர்கள் சென்றால்-
ஆண்மின்கள் வானகம் -10-9-8-என்று ஆயிற்று-அங்கு உள்ளார் சொல்லுவது-
ஆர்த்தி ஹரத்வம் -பத்தாம் பத்து – சக்தி பிராப்தி பூர்த்தி -முன் மூன்று பதிகங்களில்
திருப் பேர் –பேரில் மணாளனை ஒரு நாள் சுற்றம் கடைசியில் அங்கும் -திவ்ய தேச பதிகங்கள் முற்றும் இத்துடன் –
————–
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ் கடல் அலை திரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1-
திரு நாட்டுக்குப் போக உபக்ரமிக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்ட ப்ரீதி அதிசயத்தாலே ஸ்தாவர ஜங்கமங்கள்-கடல் முகில் விகாரம் அடைந்ததை அருளிச் செய்கிறார் -இவன் போக்க்குக்கு அடியான அவன் வரவில் இருந்த விகாரத்தை ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்லிற்றே -இவன் போகும் பொழுது கர்ஜிப்பதற்குச் சொல்ல வேண்டாவே- -அபிமானிகளான இந்த்ரன் வர்ணன் பர்ஜன்யன் என்றுமாம்–ஏழ் பொழிலும் வளம் ஏந்திய-உபகரணங்களை சமர்ப்பித்ததன என்றும் புதுக் கணித்தன என்றும்-
என் அப்பன்-எனக்கு பரம பந்து வானவன் -இவர்களோடு நிருபாதிக சம்பந்தம் அவனுக்கு உண்டானால் -அவனோடு சம்பந்தம் உள்ளவை எல்லா வற்றுக்கும் ஆதரிக்க வேண்டி இருக்கும் இறே -ராஜ புத்ரன் போகா நின்றால் ராஜ சம்பந்தம் யுடையார்க்கு எல்லாம் அங்கீ கரிக்க வேண்டுமா போலே –வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே-வாழ் புகழ் நாரணன் -ஆஸ்ரிதரை வாழும் படி பண்ண வற்றான கல்யாண குணங்களை யுடைய சர்வேஸ்வரன் –அவன் தன்னைக் கண்டாலோ என்னில் –தமரைக் கண்டு –என் ஸ்வாமி உடைய -பரம பந்து -நிருபாதிக சம்பந்த -சம்பந்திகளையும் –ஆத்ம பந்து -ஆதரிக்க வேண்டி இருக்கும்-யாரையும் எள்ளி நடையாடக் கூடாதே -பகவத் சம்பந்தம் வெட்டக் கூடாதே -சம்பந்தம் சாதாரணம் –-தாழ்ந்தவர்கள் என்று கீழ் நோக்கி பார்க்கக் கூடாது –
பிரகிருதி மண்டலம் முழுவதும் ஆர்பரித்தவாறு-ராஜா புத்ரன் போகா நின்றால்-ஆனந்தமாக -செய்ய வேண்டுமே –-சர்வேஸ்வரன் ஆழ்வார் சம்பந்திகளை பின் தொடர்ந்து விஷயீ கரிப்பானே -அவன் கேட்க்கும் என்னும் பீதியாலோ என்னில் –உகந்தே– ப்ரீதி ப்ரேரிதராய் —இப்படி சர்வ லோகங்களும் மங்களமான செயல்களை செய்தன -என்கிறார் –
————-
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில் பூரண பொற் குடம் பூரித்தது -உயர் விண்ணில்-நிர்ஹேதுகமான சேஷியாய் இருக்கின்றவனுடைய-அடியார்களைக் கண்டு
நல்ல நீரை உடையனவான மேகங்கள் ஆனவை- உகப்பாலே உயர்ந்த ஆகாசத்திலே பூர்ண கும்பங்களாக-சமைந்தன –முற்பட கண்டு உகந்தன- பின்பு அவை தானே பூர்ண கும்பங்கள் ஆயின -என்கை-ஒரு கால் வாத்திய ஒலியைச் செய்தோம் -என்று இருக்கின்றன இல்லை –
அன்றிக்கே-ஆகாசத்தில் சஞ்சரிக்கின்றவர்களான தேவர்களாலே-ஆகாசம் எல்லாம் பூர்ண கும்பம் வைக்கப் பட்டன —என்றுமாம் –முகில் ஒருமை ஜாதி பரம் -முகில்கள் அனைத்தும்
நீரணி கடல்கள் நின்றார்த்தன-நீராலே அணியப்பட்ட கடல்கள்-ஒரு கால் ஆடினோம் என்று இராமல்-உவகையால் எப்பொழுதும் ஆர்த்துக் கொண்டன –தொழுதனர் உலகே-உலகு -உயர்ந்தோர் மாட்டே –சத்ர சாமர பாணிஸ்து-என்கிறபடியே ஹர்ஷத்தாலே எல்லா அடிமைகளும் செய்யா நின்றார்கள் –
————–
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இரு மருங்கு இசைத்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு என்று வந்து எதிரே–10-9-3-
ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார் -கை படைத்த பிரயோஜனத்தைப் பெற்றோம் -என்று-
தூபத்தையும் நல்ல மலர் மழையையும்-பொழிந்து-தொழா நின்றார்கள் –அவன் திரு உலகு அளந்து அருளின நினைவைப் பயன் உடையதாகச் செய்தவர்கள் என்று ஆயிற்று-அவர்கள் ஆதரிக்கிறது –திருவடியால் தீண்டி சம்பந்தம் கொடுத்து தன்னிடம் சேர்த்துக் கொள்ள பட்ட பலன் அன்றோ இவர்கள் அங்கு செல்வது –வேறு தேசத்திற்கு சென்று இருந்த அரசன் தன் தேசத்திலே புகுமாறு போலே-அங்கு நின்றும் பிரிகதிர் பட்டு போந்தாராய் இருக்கிறபடி –ஆஜகாம -ஸ்ரீ விபீஷணன் பெருமாள் இடம் -சேர்ந்தால் போலே –அக்கரை -அநர்த்தம் சம்சாரம் இக்கரை -ஸ்ரீ வைகுந்தம்
இரு மருங்கு இசைத்தனர் முனிவர்கள்-இங்கே எழுந்து அருள வேணும் என்று இரண்டு அருகும் நின்று சொன்னார்கள் முனிவர்கள் –முனிவர்கள் என்று வாங் நியமம் தவிர்ந்தமைக்கு ஸூ சகம் – மௌனத்துக்கு விஷயம் புறம்பே இறே என்று இருந்தார்கள் –வழி இது வைகுந்தர்க்கு என்று-பிரசித்தமாக இருந்தாலும் இவர்கள் சொல்வது தங்கள் ஸத்காரம் பெற –
————-
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4-
இமையவர் என்றது -இயற்கையைச் சொன்னது அன்று–தோப்பு சமைக்கையில் உண்டான விரைவாலே கண் விழித்து இருக்கிற படியைச் சொல்கிறது–இளைய பெருமாள் அடிமை செய்வதற்கு உறுப்பாக உறங்காமல் இருந்தது போன்று –-இவர்கள் அங்கே புக்கு தங்குகிறார்கள் அன்று – தங்கள் தங்கள் ஸ்வரூப லாபத்திற்கு தொண்டு செய்கிற படி அன்றோ இது–அரசர்கள் ஒரு கால் கண்டு சிரித்து அழகிது என்று புகைக்காக மாநாவி சமைப்பாரைப் போலே-மஹா நவமி அன்று ராஜா துவாரம் அலங்காரம் பண்ணுவாரைப் போலே –கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்-துவாதச ஆதித்யர்கள் -நிலை விளக்கு போலே-தேஜஸ் கை காட்டி -அடுத்து அடுத்து நின்று -கிரணங்கள் ஆகிற கை –
மாதவன் தமர்க்கே-பிராட்டி யினுடைய புருஷகாரம் மூலமாக பற்றியவர்கள்-
பிராட்டி முன்னாக அடிமை செய்வதற்கு வாரா நின்றார்கள்-என்று ஒப்பிக்கிறபடி –விரி என்பதால் -அலங்காரம் மாற்றி -என்றவாறு-திருமகள் கேள்வனுடைய ஒப்பனை அழகிலே அகப்பட்டு-அடிமை புக்கவர்களுக்கு -என்னுதல்-
மிளகு ஆழ்வான் படை வீட்டிலே அகரத்துக்கு -அக்ரகாரகதுக்கு – செல்ல-
நீ ஆந்தராளிகன்-சம்சாரியும் இன்றி முக்தனும் இன்று நடு நிலையாளன் – -உனக்கு பங்கு இல்லை -என்ன- நன்மையில் குறை உண்டாய்ச் சொல்லுகிறீர்களோ அன்றோ -என்ன-
நன்மையில் குறை இல்லை -இது அன்றோ கரணம் என்ன-
நம் நெஞ்சில் இல்லையாகிலும் இவர்களால் ஸ்ரீ வைஷ்ணவன் என்று கை விடப் பெற்றோமே அன்றோ – என்று புடைவையை முடிந்து எறட்டுக் கூத்தாடினார்-
————
மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5-
வானவர்–வருண இந்த்ர ப்ரஜாபதிகள் ஆகிற ஆதி வாஹிக தலைவர்களானவர்கள்-வேத நல் வாயவர் -அவ்விடங்களில் கர்மஜ தேவராய்-வேத உச்ச்சாரணத்தாலே விலக்ஷண முனிவரானவர்கள்-ஜ்யோதிஷ்டோமாதி யாக ஸித்தமான தங்கள் ஸம்ருத்தியைக் கொடுத்தார்கள் என்கிறார் –மேலே உள்ள லோகங்களிலே-வைதிகராய்க் கொண்டு யாகங்களைச் செய்கின்றவர்கள்-தங்கள் யாகங்களின் பலன்களை-இவர்கள் திருவடிகளிலே சமர்ப்பித்தார்கள் –விருப்பம் இல்லாதவராய் போகின்ற இவர்களுக்கு- தம் தம் அதிகாரங்களைக் கொடுப்பார் -பாடுவார்-யாகங்களின் பலன்களை சமர்ப்பிப்பார் ஆகிறார்கள்-தங்கள் தங்கள் விருப்பத்தாலே –
—————
வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6-
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று –சர்வேஸ்வரனுக்கு அடியவர்களான நீங்கள்-
இவ்விடத்தை ஆளீர் கோள்-என்று ஆயிற்று துதிப்பது – நதேரூபம் நசாகார நாயுதானி ந சாஸ்பதம்-ததாபி புருஷாகார பக்தாநாம் தவம் பிரகாசச -ஜிதந்தா -5-பக்தர்களுக்காகவே என்றோ அன்றோ இருப்பது – ஆளுகைக்கு குறை என் என்பார்கள் –பொன்னுலகு ஆளீரோ புவனி எல்லாம் ஆளீரோ என்றார் அன்றோ
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே-வேறு தேசத்துக்கு போன குழந்தையை தாய் மார்-குளிரப் பார்க்குமாறு போலே–ஓளியை உடையைவாய அழகிய கண்களாலே குளிர நோக்கின்படி-இங்குப் பகவான் உடைய சம்பந்தமே காரணமாக நீசராலே-பரிபவம் செய்யப் பட்டவன்-சரீரத்தை விட்டு பிரிந்த காலத்தில் தங்களுக்கு மேலே ஒருவர் இல்லாதாரான-தேவர்கள் கொண்டாடும்படி அன்றோ இவன் பேறு-ஸத்கார பூர்வகமாக தேவ ஸ்த்ரீகள் உகந்து ஸ்ரீ வசனங்களை ஆசீர் வசனங்களை பண்ணினார்கள் என்கிறார் –இவர்களைக் கண்ட ப்ரீதி அதிசயத்தினாலே இவர்கள் தங்கள் வரப் புகுகிற மங்களத்தில் காட்டில் மேற் பட்டதொரு மங்களம் இல்லாமையால் ஆழியான் தமரான நீங்கள்
ஆண்மின்கள் வானகம் என்று இது தன்னையே மங்களமாக ஆசாசித்தார்கள் என்கிறார் –
———-
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தையன் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-(குடந்தையன் கோவலன் -குடந்தை என் கோவலன் பாட பேதங்கள்)
தங்கள் எல்லைக்குள்ளில் புகுந்த அளவால் மனம் நினைவு பிறவாமையாலே
தொடர்ந்து புகழ்கின்றார்கள் ஆகையால் –எங்கும் தொடர்ந்து -என்கிறார் –தம் தாமுடைய லோகங்கள் அன்றியே-லோகாந்தரங்களிலும் தொடர்ந்து தொடர்ந்து ஸ்துதித்தார்கள் என்கிறார் –அவர்கள் தாம் சடக்கென போகிற இதற்கு அடி என் என்னில் –
தாங்கள்-
கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்ற சங்கம் -திரு விருத்தம் -47 -என்றும்
காண்பது எஞ்ஞான்று கொலோ -5-9-4- என்றும்
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் என்னும் -9-8-7-என்றும்
உடன் கூடுவது என்று கொலோ-8-9-10-என்றும் இருக்கையாலே-
கிளர் ஒளி மணி முடி-குடந்தையன் கோவலன் குடி அடியார்க்கே-பரத்வன்- ஷீராப்தி நாதனாகவும்- ஸ்ரீ கிருஷ்ணனாகவும் -அந்தர்யாமியாகவும் -அர்ச்சாவதாராமாகவும்
ஆவிர்பவித்து பட்ட பாடு எல்லாம் பலித்ததே -நீர்மை சொல்லப் பட்டது –
அவன் சென்று பண்ணின கிருஷியின் பலம் அன்றோ என்று அன்றோ ஸ்தோத்ரம் செய்வார்கள் –ஆதி ராஜ்யம் -கோள் சொல்லிக் கொடுக்கும் -நீர்மையில் தோற்று சந்தானமாக எழுதிக் கொடுத்த அடியவர்கள் அன்றோ இவர்கள் –
அடியார்களை தொடர்ந்து எங்கும் ஸ்தோத்ரம் சொன்னார்கள் என்றபடி-
குடந்தையன்-தொடக்கமும் –சூழ் புனல் குடந்தையே தொழுது -ஆறு பிரபந்தங்களும் இவனுக்கே -இதனால் தானே திவ்ய பிரபந்தம் கிடைக்க மூல கர்த்தா –திராவிட ஸ்ருதி தர்சனகாயா–
———
குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-
இவ் உலகங்கட்கு எல்லாம் அவ்வருகே-பரமபததுக்கு புறம்பாக- நித்ய ஸூரிகள் இவர்களை-எதிர் கொள்ளுகிறபடியை-அருளிச் செய்கிறார் –
குடந்தை எம் கோவலன் குடி அடியார் -என்றார் மேலே – குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு -என்றது இங்கே – இதற்கு கருத்து என் என்னில்
இவர்கள் அவதாரங்களைப் பற்றினவர்கள்–இவர்கள் உகந்து அருளின நிலங்களைப் பற்றினவர்கள் என்று ஆயிற்று அவர்கள் சிறப்பிப்பது –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -3-3-10- என்றும்-சொல்லுகிறபடியே- தங்களுக்கு உத்தேயர் ஆனவர்களுக்கு உத்தேச்யர் ஆகிறார் அன்றோ இவர்கள்-
வடிவுடை மாதவன் –தங்கள் வரவால் உண்டான உவகையாலே புதுக் கணித்த-வடிவை உடைய-திருமகள் கேள்வன்
வைகுந்தம் புகவே –பரம பதத்தில் புகுகைக்காக-வந்து கிட்டினார் -என்றவாறே
தனக்கும் பிராட்டிக்கும் வடிவு இட்டு மாறினால் போலேயாம் -என்றபடி-
வைகுந்தம் புகவே மாதவன் வடிவுடை ஆனார்கள் -என்றபடி -திருவா மாலா வாசி தெரியாதபடி மாறினால் போலே –
————-
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-
பரமபதத்தில் சென்று திரு வாசலில்-முதலிகளால் உபசரிக்கப் பட்டவர்களாக-
அங்குள்ள நித்ய ஸூரிகள்-பரம பதத்தில் வருவதே –இது என்ன புண்ணியத்தின் பலம் –என்று ஈடுபட்டார்கள்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று –ஸ்ரீ வைகுண்ட நாதன் உடையார் எங்கள் உடைய ஸ்வாமிகள்–எங்கள் பதத்தினைக் கைக் கொள்ள வேண்டும் -என்று ஆயிற்று அவர்கள் பாசுரம் –
பயிலும் திரு உடையீர் எவரேலும் அவர் எம்மை ஆளும் பரமர் -2-7-1- என்ற இவரைப் போலே ஆயிற்று -அங்கு உள்ளாறும் இருப்பது -என்றது
திருவாசலில் முதலிகள் எதிரே வந்து உபசரித்து கையைக் கொடுத்து-கொண்டு புக்கு தங்கள் கைப் புடைகளிலே இருத்தி திருக் கையில் பிரம்பையும் கொடுப்பார்கள் -ஆயிற்று -என்றபடி –
சென்று புகுகிற வர்களுக்கும் அடிமை வேலையே உத்தேச்யம்-
அங்கு இருக்கிற வர்களுக்கும் அடிமை வேலை செய்தலே தொழில் ஆகையாலே-
கைங்கர்யமே உத்தேச்யம் கைங்கர்யமே யாத்திரை என்றவாறு -இவர்கள் கொள்ளுவதும் அது-–புகுத -என்றது -புகுதுக –என்றபடி –
வைகுந்தத்து அமரரும் முனிவரும் –பகவத் குண அனுபவ ஜெனித நிரதிசய ப்ரீதி காரித சர்வ பரிசர்ய ஏக போகரான அமரரும்
பகவத் குண அனுபவ ஜெனித ப்ரீதியாலே அப்ரக்ருதிங்கதராய் ஒரு பிரவ்ருத்தி பண்ணுகைக்கு ஷமர் இன்றியே இருக்கும் முனிவரும்-ஸ்ரீ பரத ஆழ்வானையும் இளைய பெருமாளையும் போலே-குண நிஷ்டரும் கைங்கர்ய நிஷ்டரும் –
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே –கடலிலே உள்ள நீர் மலையிலே ஏறக் கோத்தால் போன்று-இப்பிறவியிலே உழன்று திரிகின்றவர்கள்–பரம பதத்தில் புகுரும்படிக்கு ஈடாக-புண்ணியத்தை பண்ணுவதே -என்று ஆழம் கால் பட்டார்கள் –
————–
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-
விதி வகை புகுந்தனர் என்று —வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -என்று இவர்கள் சொல்லுகிற வார்த்தை அன்று என்று-வேறு சிலர் –இவர்கள் இங்கே வந்து புகுரப் பெற்றது-
நாம் செய்த புண்ணியத்தின் பலம் அன்றோ -என்பர் -என்றது-
விஷயங்கள் நடை யாடுகிற இவ் உலகத்தில் இருந்து வைத்து-வேறு பயனைக் கருதாதவராய் –பகவானுடைய குணங்களை அனுபவிக்கிற மகா புருஷர்களாய்-விண்ணுளாரிலும் சீரியர் எனப்படுகிற-இவர்கள் வந்து புகுரப் பெற்றது நாம் செய்த புண்ணியத்தின் பலம் என்றோ என்பார்கள் என்றபடி –
மேலே –வைகுந்தம் புகுவது -என்றார் –இங்கு புகுந்தனர் -என்கையாலே தங்கள் புண்யத்தைக் காட்டுகிறது –
பாங்கினில் பாதங்கள் கழுவினர் –இவன் பிறப்பு இறப்புகளில் உழன்று திரிந்து போந்த ஒருவன்-நாம் சம்சாரத்தின் வாசனை தீண்டப் பெறாதவர்கள்-என்ற வாசி வையாதே-
இவனை சிங்காசனத்திலே உயர வைத்து-அவர்களுக்கு பாங்காக தாங்கள் இருந்து-திருவடிகளை விளக்குவார்கள் –
சிஷ்யர்கள் ஆகவுமாம் புத்திரர்கள் ஆகவுமாம் -பகவத் சம்பந்திகள் கௌரவம் பண்ணப் படுபவர்கள் -நீராடப் போதுவீர்- பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் –
கண்ணபுரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்னப் பெறுவரோ
பராசர பட்டர் ஸ்ரீ பாத தீர்த்தம் திருத் தாயார் ஆண்டாள் ஸ்வீகரித்துக் கொண்டாளே
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–தேசாந்திரம் போன பிரஜை வந்து கிட்டினால் தாய் முகம் குளிர்ந்து இருக்குமா போலே ஹர்ஷத்தாலே பூர்ண சந்திரனைப் போலே இருக்கிற முகங்களை யுடையவர்கள் வந்து எதிர் கொண்டார்கள் –இவர்களைக் கண்டு ப்ரீதைகளாய்
அந்த ப்ரீதி அதிசயத்தினாலே சரத்காலத்தில் பரிபூர்ண சந்த்ர மண்டல சத்ருசமான திரு முக மண்டலங்களை யுடையரான பெரிய பிராட்டியாரும் ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டியாரும் தங்களுடைய நித்ய பரிசாரிகைகளோடே கூட தங்களுக்குப் பரம தனமான ஸ்ரீ சடகோபனும் நல் சுண்ணமும் நிறை கூட விளக்கமும் மற்றும் மங்களமான சத்கார உபகரணங்களை எல்லாம் ஏந்திக் கொண்டு வந்து எதிர் கொண்டார்கள் என்கிறார் –
———
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-
வந்தவர் எதிர் கொள்ள –அவர் வந்து எதிர் கொள்ள –வடிவுடை மாதவன் -அவர் -பிராட்டி யோடு கூட எம்பெருமான்-தானே வந்து எதிர் கொள்ள –
அந்தமில் பேர் இன்பத்து-அநந்த ஸ்திர பலம் -இது -அல்ப அஸ்திர பலம் அது என்றவாறு-அடியரொடு இருந்தமை –அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -2-8-10 என்று ஆசைப் பட்டபடியே இருந்தமை –அவர்களும் தங்களுக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு துணை தேடி இறே இருப்பது –அந்தமில் பேர் இன்பத்து குருகூர்ச் சடகோபன்-ஆழ்வாருக்கும் கொள்ளலாம்
இவை வல்லார் முனிவரே –இப் பத்தினை கற்க வல்லார்-அப் பரம பதத்திலே பகவான் உடைய குணங்களை அனுபவித்து-அவற்றிலே ஈடுபட்டவராய்-
அதற்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாதே-இருக்குமவர்களைப் போலே ஆவார்கள்- இங்கேயே முக்தர்களைப் போலே ஆவார்கள் –சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே-ஆயிரத்து பத்து –இங்கு இவை பத்தும் சொல்லாமல் -பர பக்தி தசையில் -அப்படி
————-
முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-
நிர்ஹேதுகமாக-உன்னுடைய வனப்பு முதலானவற்றையும் காட்டி-உன்னை ஒழிய செல்லாதபடி என்னைச் செய்து பொறுக்கக் கூடாததான இவ் உலகத்தில் என்னை வைத்து நீ சென்று பண்டு போலே ஒரு குணத்தை அனுபவிப்பிக்க- விட ஒண்ணாது-என்கிறார்-
முனியே-பஹுஸ்யாம் என்று மஹதாதி விசேஷாந்தமான ஜகத் ஸ்ருஷ்ட்டியைப் பண்ணுவதான மாநஸமான சங்கல்பத்தை யுடையையாய் இருந்துள்ள சர்வாதிகனே –தஜ்ஜலான்–அவனே படைக்கப் படுகிறான் -அவனே படைக்கிறான் -அவனே பாதுகாக்கின்றான் அழிக்கின்றான்-அவனே பாதுகாக்கப் படுகின்றான்–ஸ்தூல சூஷ்ம சேதன அசேதன விசிஷ்டம் -ப்ரஹ்மம் – விசேஷணம் மாறி விசேஷ்யம் ஒன்றாக இதம் சர்வம்-கரண களேபர விதுரமாய் அசித் கல்பமாய் – ஸோஸ்ய நஸா பன்னமாய்-சதேவ -என்று தன்னைச் சொல்லும் செயலாலே சொல்லும்படி ஸூஷ்ம அவஸ்தையை -பஜித்துக் கிடக்கிற அன்று –ச ஏகாகீ நரமேத -என்கிறபடி இவற்றினுடைய நோவை அனுசந்திக்கிற இருப்பைச் சொல்லுகிறது-சர்வேஸ்வரனும் தானும் இவற்றைப் பிரிந்து அசித்தைப் போன்ற தன்மை உடன் இருந்தான் என்பதை சொல்கிறது-முனிதல் கோபித்தல் – -என்றுமாம் —எனக்கு ருசியைப் பிறப்பிக்கைக்காக நாம ரூபங்களை உன் பேறாகத் தந்து பண்ணின கிருஷி பலித்து உன்னால் அல்லது செல்லாமையை உண்டாக்கிக் கொண்டு நீ கை விடப் பார்த்தாயா –என்றுமாம் –முனியே-அம்மே -என்பாரைப் போலே-ஆசைப்பட்ட எனக்கு இன்று உதவல் ஆகாதோ -நீ நினைக்கும் அன்றோ உதவல் ஆவது- நான் நினைக்கும் அன்று உதவல் ஆகாதோ -உன்னை ஒழிய ஒரு புகல் இல்லாதவருக்கு உதவுமவன் அன்றோ-
நான்முகனே-என்கிற இது -விசேஷமான சதுர்முகன் அளவிலே பர்யவசிக்கிறது அன்று -அவனுக்கு அந்தர்யாமியான அவன் அளவும் செல்லுகிறது-சேதனன் ஸ்வ சரீரத்தைக் கொண்டு தன் நினைவாலே கமன கமன ஆகமனாதி சேஷ்டிதங்களைப் பண்ணுமா போலே -ஸ்வ சரீர பூதனான சதுர்முகனைக் கொண்டு ஸ்வ சங்கல்பத்தாலே தேவாதி சதுர்முக ஸ்ருஷ்டியைப் பண்ணுகிறான் -ஸர்வேஸ்வரனே-இதனால் இவன் நினைத்த அன்று ஏதேனும் கொண்டு கார்யம் கொள்ள வல்லவன் -என்பதனைத் தெரிவித்த படி –
இருந்து படைக்கும் ஆசனத்தைப் போன்றவன் பிரமன் – அசேதன பொருள்களான மகத்த முதலான தத்வங்களைக் கொண்டு படைத்ததோடு- அறிவுள்ளவனான பிரமனைக் கொண்டு படைத்ததோடு வேறு பாடு இல்லை அவனுக்கு –சேதன பொருள்கள் -அசேதனப் பொருள்கள் என்று தம்மில் தாம் வேற்றுமை உண்டாகிலும்–அவனைக் குறிக்க பரதந்த்ரம் ஆகும் இடத்தில் இரண்டும் ஒக்கும் –ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய –
அழிக்கின்றவனையும் அழிக்கின்ற சர்வேஸ்வரனுக்கு சரீரமாய் இருக்கிற சிவன் உடைய
முக்கண் -என்ற பெயராலே -அவனில் வேறாய் -அவனுக்கு அந்தராத்மாவாய் இருக்கும் எம்பெருமானையே விளிக்கிறது –அப்பா – என்கிற சொல் உபகாரத்தைக் காட்டுகிறது-படைத்தலைக் காட்டிலும் அழித்தல் உபகாரமே அன்றோ – நான்கு நாள்கள் கழித்து படைத்தாலும் ஆத்மா கிடக்கும்–சடக்கென அழிக்கா விட்டால் ஆத்மாவை இழக்க வேண்டும்படி தீம்பிலே ஆயிற்று கை வளர்வது –
ஏகோஹவை நாராயண ஆஸீத் -ந ப்ரஹ்ம ந ஈசான நேமே தயாவா ப்ருத்வி-ந நஷத்ராணி ந ஆப ந அக்னி ந சோம ந சூர்யஸ்- ஏகாகி நரமேதி -தஸ்ய த்யானாத்தஸ்ய தஸ்ய ஏகாகத்யா ந சேந்த்ரியாணி — அனபுனரேவ நாராயணஸ் அத்யம் காமம் மனஸா த்யாலீத-தஸ்ய த்யாநாத் தஸ்தஸ்ய லலாடாத் ஸ்வேத அபதத் தா இமா ஆப தத் ஹிரண்மயம் அண்டம் அவ்வத் -தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ ஜாயதே-என்ற மகா உபநிஷத் வாக்யத்தை நினைப்பூட்டுதல் செய்கிறது – முனியே நான் முகனே முக் கண் அப்பா -என்கிற இந்த விளி வாக்கியம்-ஏக த்வம் அஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா சம்ஹாரக ததா-அத்யஷஸ் சானுமந்தாச குணமாயா சமாவ்ருத -ஜிதந்தா-நீ ஒருவனே உலகத்தை படைக்கிறவனும்-அப்படியே உலகத்தை அழிக்கின்றவனும் ஆகின்றாய் -என்றபடி-சிருஷ்டி ஸ்திதி அந்தகரனீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகம்-ஸ சம்ஜ்ஞானம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தனா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-23–படைத்தல் காத்தல் அழித்தலைச் செய்கிற-பிரமன் விஷ்ணு சிவன் என்ற பெயர்களை- பகவானான அந்த ஜனார்த்தனனே அடைகிறான் –
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே-தாமரை பூத்தது ஒரு மாணிக்கம் புன் முறுவல் செய்தாப் போலே ஆயிற்று வடிவு இருப்பது–இதுவும் ஒரு வியாவ்ருத்தி இருக்கிற படி-பிரமனுக்கும் சிவனுக்கும் நடுவே தான் இட்சுவாகு குலத்தாரோடும் யது குலத்தாரோடும் ஒத்த தரத்தனாய் கொண்டு திரு அவதாரம் செய்தாப் போலே-ஆதி தேவனாய் -விஷ்ணு -என்னும் திருப் பெயரை உடையவனாய்-தனது உருவத்தினாலேயே திரு அவதாரம் செய்து காப்பாற்றும் படியைச் சொல்லி விளிக்கிறது- நான் முகனே முக்கண் அப்பா –என்கிற இடத்தில் கண்களை செம்பளித்துக் கொண்டு போய் விசேடியத்திலே இளைப்பாறினார்–இங்கு விசேஷணமே தம் குறிக்கோள் ஆனபடியைச் சொல்கிறது -காத்தலானது தானே தண்ணளி செய்து செய்ய வேண்டுவது ஓன்று ஆகையாலே வேறு ஆள் இட ஒண்ணாது
ஆள் இட்டாலும் வேறு சிலரால் காப்பாற்ற ஒண்ணாது–-என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே –என்று-ஆழ்வார்கள் திரு மேனிக்கு அப்பால் போக அறியார்கள்–முறுவலும் கண்ணுமாய் இருபத்தொரு மாணிக்க மலை போலே யாய்த்து வடிவு இருப்பது -முறுவலையும் தப்பினாரையும் -அகப்படுத்த வற்றான கண் –
முனியே என்று சமஷ்டி ஸ்ருஷ்டியையும் –நான் முகனே என்று வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டியையும் –முக்கண் அப்பா சம்ஹாரத்தையும் –கரு மாணிக்கமே -பாலனத்தையும் அருளிச் செய்தார்
என் கள்வா-நான் அறியாமே இவ் வழகைக் காட்டி வஞ்சித்து என்னை அடிமை கொண்டவனே-சர்வேஸ்வரனுக்கும் தனது பொருளை களவு கொண்டு கொள்ளும் படிக்கு ஈடாக அன்றோ-இவனுடைய –என்னின் -உரம் இருப்பது–பண்டே உன் தொண்டாம் பழ உயிரை என்னது என்று-கொண்டேனைக் கள்வன் என்று கூறாதே -திவ்ய கவி -உன்னதமான ஆத்ம வஸ்துவை அபஹரித்துக் கொண்டு இருக்கிற என்னை விஷயீ கரிப்பதே –நான் அபஹரிக்கைக்கு அடி -கர்மம் -நீ அபஹரிக்கைக்கு அடி வடிவு அழகு –உடையவன் உடைமை பெற்றாலும் அபகாரம் என்னும் படி யாய்த்து ஸ்வாதந்தர்யம் வயிரம் பற்றின படி -நிர்ஹேதுகமாக உன் வடிவு அழகைக் காட்டி என்னை விஷயீ கரித்தவனே -என்று ஆழ்வான் நிர்வாஹம் –
தனியேன் ஆர் உயிரே –என் இசைவு இன்றிக்கே என்னை அங்கீ கரித்த அளவேயோ –
உன் சுவட்டினை அறிவித்து-பிரிந்தாலும் முடியாதபடி குணங்களின் தோற்றரவாலே உளேன் ஆம்படி செய்தவனே-இவ் உலக மக்களோடு பொருந்தாமையும்-பரமபதத்திலே புகப் பெறாமையும்-நோக்கித்- தனியேன் -என்கிறார் –உன்னைப் பிரிந்து பொருந்தாத இவ் உலகத்தில் இருக்கின்ற எனக்கு உயிருக்கு காரணமாய் உள்ளவனே
இனி–சம்சாரத்தின் தண்மையை அறிந்த அளவன்றிக்கே முக்த ப்ராப்த தேசத்தையும் சாஷாத் கரிப்பித்து -உன் சுவட்டை அறிவித்த பின்பு –இனி ஒரு குண ஆவிஷ் காரத்தாலே பெற்றேனாகப் பண்ணி என்னை வஞ்சியாதே கொள்-இது 19 வைத்து இனி -3 தடவை 17 தடவை -இன்னும் ஒரு இனி தான் உண்டு –இனிப் பண்டு போலே உன்னுடைய குண சேஷ்டிதாதிகளை என் நெஞ்சிலே காட்டி வஞ்சித்து என்னை ஒன்றும் மறப்பிக்க ஒண்ணாது –இனி மெய்யே வந்து கலந்து அருள வேணும் -என்று கொண்டு தம்முடைய அபேக்ஷிதம் செய்து அல்லது எம்பெருமானுக்குத் திரு நாட்டிலும் கூட இருக்க ஒண்ணாத தொருபடி
பெரிய ஆர்த்தியோடே பெரும் கூப்பீடாகக் கூப்பிடுகிறார் –
நான் போகல் ஒட்டேன் -நானே அறிவேன் -என்ற கை பறியாலே பறித்த அறிவு அன்றிக்கே நீயே காட்டக் காணப் பெற்ற நான் விஸ்லேஷிக்க ஓட்டேன் —போகல் ஒட்டேன் –வரும் போது உன் ஸ்வா தந்த்ர்யத்தால் வரலாம் அத்தனை -அல்லது-போம் போது உன் கார்யம் உன்னதோ – இவர்க்கு இப்படி சொல்லல் ஆகிறது -சர்வஞ்ஞன் அறிய தமக்கு உண்டான விரைவாலேயும்- விரும்பிய அளவில் இவர் கார்யம் செய்யப் பெறாத பிற்பாட்டுக்கு-
ப்ரசீநந்து பவந்த மீ ஹ்ரீ ஏஷா ஹி மமதுலா-யத் ஈத்ருசை அஹம் விப்ரை உபச்தேயை உபஸ்தித -ஆரண்ய -10-9- நான் அடையத் தக்கவர்களான இப்படிப் பட்ட அந்தணர்களால்-நான் அடையப் பட்டேன் என்னும் இது எனக்கு- மிகவும் நாணமாய் இருக்கிறது -நீங்கள் என்னுடைய தவறினைப் பொறுத்து அருள வேண்டும் -என்று- நாணம் கொள்ளுபவன் ஆகையாலும் அன்றோ –
ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–உன்னை அறிவதற்கு முன்பு த்யாஜ்யமான விஷயங்களைக் காட்டி அதுவும் அமையும் என்னப் பண்ணினாய் -உன்னை அறிந்த பின்பு குணங்களை ஆவிஷ் கரித்து அதுவும் அமையும் என்னப் பண்ணினாய் –என்னையே -அங்கன் செய்ய வேண்டுகிறது என் என்ன –ஏஹி பஸ்ய சரீராணி -என்கிறபடியே விரஹம் தின்று சேஷித்த உடம்பைக் காட்டுகிறார் –அங்கு சரீர மாத்ரம் -அவர்களுக்கு-இவருக்கு ஆத்மாவின் நாசம் அன்றோ –
——————-
மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-
அவனுக்கும் மறுக்க ஒண்ணாத படி-பெரிய பிராட்டியார் திரு ஆணை இடுகிறார் – உன் திரு –நித்யைவ ஏஷா ஜகத்மாதா விஷ்ணோ ஸ்ரீ அநபாயிநீ-யதா சர்வகதா விஷ்ணு ததைவ இயம் த்வ்ஜோத்தம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-17-விஷ்ணுவுக்கும் செல்வமாய் இருப்பவள் -என்கிறபடியே–உலகத்துக்கு எல்லாம் செல்வம் அவன் -அவனுக்கும் செல்வம் இவள் –
அன்றிக்கே
விஷ்ணுவுடைய திரு -என்றபடி-உன்னுடைய செல்வம் -என்னுதல்-
திருவுக்கும் திருவாகிய செல்வா -பெரிய திருமொழி -7-7-1-என்றும்-
ஸ்ரிய ஸ்ரீயம் பக்த ஜனைக ஜீவிதம்-சமர்த்ததம் ஆபத்சகம் அர்த்தி கல்பகம் -ஸ்தோத்ர ரத்னம் -45
தாம் ஸ்ரீ இதி த்வத் உபசம்ஸ்ரயநாத நிராஹூ-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -29
திருமகளாலே சர்வேஸ்வரன் தெய்வத் தன்மையை அடைகிறான் –
யாவர் ஒருவனுக்கு அந்த ஜனக ராஜன் குலத்தில் பிறந்த பிராட்டி மனைவியாய் இருக்கின்றாளோ-அவருடைய ஆற்றல் அளவிட்டு அறியக் கூடாததாய் இருக்கிறது -என்கிறபடியே-
ஆதாரப் பிரதானமாய் இருத்தல்-ஆதேயப் பிரதானமாய் இருத்தல் –
ஆதேயத்துக்கு ஆதாரத்தை ஒழிய உளதாம் தன்மையும் இல்லை-
நிரூப்யத்துக்கு நிரூபகத்தை ஒழிய ஸ்வரூபத்தின் நிலை இல்லை –
ஒன்றை ஓன்று ஒழியில் ஸ்வரூபம் நிலை பெறுதல் இல்லை –
தன் ஆகத் திரு மங்கை தங்கிய திரு மார்வன் -நாச்சியார் திருமொழி -8-4-
தான் உளன் ஆகைக்காக -தன் சத்தை பெறுகைக்காக-நித்ய யுவதியான பெரிய பிராட்டியார் நித்ய வாசம் செய்யும்-வீறு உடைய திரு மார்பு –
சிரஞ்ஜீவதி வைதேஹி யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷணா-யுத்தம் -66-10-பிராட்டியைப் பிரிந்தால் ஒரு கண நேரமும் உய்யேன் என்கிறபடியே –ஸ்ரத்தாயா -லஷ்மயா -தேவத்வம் ஈஸ்வரத்வம்-அடைகிறான் -ஆதார பிரதான்யம் -சர்வ ஆதாரம் ஈஸ்வரன் -பரிமளம் புஷ்ப்பம் இடமும்– ஒளி ரத்னம் -ஆதேயம் பிரதான்யம் -இங்கு மட்டும் சமப் பிரதான்யம் -என்றவாறு – -தன்னாகத்து திருமங்கை தங்கிய சீர் மார்பன் —ஆதார நிரூபக பிரதான்யம் இரண்டும் சொல்லி–ஆகத்து திருமங்கை -அவளுக்கு பிரதான்யம் -தங்கிய சீர் மார்பன் -அவனுக்கு பிரதான்யம் –-மற்றையோர்க்கு எல்லாம் உன்னுடைய ஆணை-உனக்கு நீ உகந்தார் இடும் ஆணை-அத்தனை அன்றோ –நின் ஆணை -திரு ஆணை-என்று இருவரையும் ஓக்கச் சொல்லவுமாம் -மயாச ஸீதயா சைவ சப்தோ அஸி ரகு நந்தன -என்கிறபடியே –
மார்வத்து மாலை –-கேவலம் செல்வமாய் இருக்கை அன்றிக்கே-திரு மார்புக்கு அலங்காரமாய் இருக்கை –-மார்புக்கு அலங்காரம் அவள்-அவளுக்கு அலங்காரம் மார்பு –நங்கை-வடிவு ஒழிய-மற்றை ஸ்வரூபம் குண விபூதிகளும் -அவளாலே என்கை-திருவாளனுக்கு திரு இல்லாதவர் ஒப்பு ஆகார் அன்றோ –வாசம் செய் பூங்குழலாள் –
நாற்றத்துக்கும் நாற்றம் கொடுக்கும் குழல்–சர்வகந்த -என்பவனுக்கும் நாற்றம் கொடுக்கும் குழல்–சர்வ கந்த -என்னும் ஏற்றம் அவனுக்கு இத் தலையாலே காணும் அவனுக்கு வந்தது-ஸ்ரத்தாயா அதேவ அஸ்னுதே தேவன் ஆனான் என்பர் ரஸோக்தியால் –
திரு ஆணை நின் ஆணை கண்டாய் – திருவினுடைய ஆணை காண் – என் கார்யம் செய்து அல்லது இட்ட அடி பேர ஒண்ணாதபடி உனக்கு இட்ட ஆணை –எல்லார்க்கும் அறப் பெரியவன் ஆகையாலே மற்றையோர்க்கு எல்லாம் உன்னுடைய ஆணை- உனக்கு நீ உகந்தார் இடும் ஆணை அத்தனை அன்றோ –
மாதரம் ரஷ கைகேயீம் மா ரோஷம் குரு தாம் ப்ரதி-மயா ச சீதாயாசைல சப்த அஸி ரகுநந்தன -அயோத்யா 118-27–ஒ பரதனே தாயான கைகேயியைக் காப்பாற்று-அவள் இடம் கோபம் வையாதே–மயா ச சீதாயா-என் மேலும் சீதை மேலும் ஆணை -என்ற பெருமாள் போலே-இங்கேயும்-பெரிய பிராட்டியார் ஆணை-நின் ஆணை -காண் -என்கிறார்
உமக்கு பாரதந்த்ர்யம் ஸ்வரூபம் ஆனால் தலைவன் செய்த படி கண்டு இருக்கும் அத்தனை காணும் -என்ன–அடியவன் உளனாய் கண்டு இருக்க வேண்டுமே -உயிர் வேறு இன்றி -என்று–தம்முடைய இல்லாமையை விவரிக்கிறது மேல் இரண்டு அடிகளாலும்-மேலில் பாட்டுக்களாலும்-பாரதந்த்ர்யம் ஸ்வரூபம் ஆனால் வேறு நிற்றலும் வேறாகத் தோன்றலும் உண்டோ -என்கிறார்–கண்கள் சிவந்து -2 1/2 பாட்டுக்கள் -பரமாத்மா ஸ்வரூபம் -மேலே 7 1/2 பாட்டுக்கள் ஜீவாத்மா ஸ்வரூபம் பிரித்தால் போலே-இங்கும் மேலே 8 1/2 பாசுரங்கள் -என்றவாறு –
நேசம் செய்து –-பெரிய பிராட்டியார் பக்கலிலும் செய்யாத அன்பை என் பக்கலிலே செய்து –
நான் அன்பு செலுத்த இருந்தாயோ-என் விடாய்க்கு அடி உன் விடாய் அன்றோ-ஈஸ்வரஸ்ய அஸ்ய ஸுஹார்த்தம் முதல் படி அன்றோ –
உன்னோடு என்னை –உன்னை அறிந்தாயோ-என்னை அறிந்தாயோ –-உயிர் வேறின்றி ஒன்றாகவே – உயிர் வேறுபாடு இல்லாதபடி அன்றோ என்னை அங்கீ கரித்தது-உன்னது என்னதாவியுமஎன்னது உன்னதாவியும் -4-3-9-என்னும்படி-என்னைப் பிரித்துக் காண ஒண்ணாதபடி அன்றோ நீ தலையாலே சுமந்தது–தலை தடுமாறாக செயல் புரிந்தது -கலவிக் காலத்தில் என் ஸ்வரூபம் நீ இட்ட வழக்காயும் உன் ஸ்வரூபம் நான் இட்ட வழக்காயும் படி அன்றோ -நீ செய்த செயல் – தலை தடுமாறி பரிமாறினாய் –தட்டு மாறின சீலம் திருக் காட்கரை அப்பன் –சூரியன் பிரபை என்று பிரித்து சொல்லும் படி அங்கு –இங்கு உயிர் வேறு இன்றி -விசத தமமாகப் பண்ணி -அன்றோ கலந்து –
கூசம் செய்யாது கொண்டாய் –சர்வஞ்ஞனான நீயும் வாசி வைத்துக் கலக்க அறிந்திலை-என் பக்கல் உள்ள தாழ்மையைப் பாராதே அங்கீ கரித்தாய் – முதலிலே என்னுடைய முன்னைய செயல்களைப் பாராதே மதி நலம் அருளினாய்–பின்பு -வளவேழ் உலகில் -நான் தாழ்ந்தவன் என்று அகல-என்னை என் வழியில் விடாதே–உன் செல்லாமையும் காட்டிச் சேர்த்துக் கொண்டாய்-இப்படி அன்று நீ செய்திலை யாகில் இன்று வருந்த வேண்டா ஆயிற்று –
1-சாஸ்த்ரங்களால் அறிவிக்கும் அளவு போராது-
2-குணங்களை அனுபவிக்கும் அளவாலே போராது-
3-உட் கண்ணால் காணலும் போராது –
4-உன்னைக் கிட்டி அனுபவிக்கும் படி செய்ய வேண்டும் –
வர வேண்டும் கூவ வேண்டும் -நடை அழகைக் காண வேண்டும் -மிடற்று ஓசையை கேட்க வேண்டும் -கைங்கர்யம் கொள்ள வேண்டும் –
அந்தோ –தன்னை ஒழியச் செல்லாமையை-தானே விளைத்து-கூப்பிட வந்து முகம் காட்டாது ஒழிவதே-
—————
கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-
கூவிக் கொள்ளும் அளவும் போராது-வந்து கூவிக் கொள்ள வேண்டும் -என்பார் –
வந்து -என்கிறார் –ஆற்றாமை மிக்காலும் நான் வந்து கிட்டுகை முறைமை அன்று-
உனக்கு தாழ்ச்சியுமாம் -என்கிறார் –எழுதும் என்னும் இது மிகை -9-8-9- என்பவனுக்கு-
நாம் செல்லுதல் என்னும் அது பொறுக்க முடியாதது -என்னும் இடம் சொல்ல வேண்டாவே அன்றோ–வருகை -அவனுக்கே உரியதாய் இருக்கிறபடி-அந்தோ – உனக்கு நிறம் அன்று என்று நான் சொல்ல வேண்டுவதே –
என் பொல்லாக் கருமாணிக்கமே--நீ அழைத்த போது கண்டு இருக்கல் ஆயிற்றே- நீ நீ அன்றிக்கே இருந்தாய் ஆகில்-க்ரமத்தில் அழைக்க நினைத்தாய் ஆகில் -அழகைக் காட்டி -உனக்கே உரியவன் ஆகும்படி செய்தது என்-ஸ்வரூபத்தை பார்த்து ஆறி இருக்க வேண்டாமோ -என்னில்அது செய்யும் இடத்தில் நான் உன்னை ஒழிய உளனாக வேண்டுமே–ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் – பற்றுக் கொம்பு வரையறை செய்யப் பட்டதாய் இருக்கிறபடி–கொடி -கொள் கொம்பை ஒழிய நிற்க வற்றோ-வேரை அறுத்து படர் என்றால் படருமோ என்றபடி –என் உயிர் பிழைப்பதற்கு காரணமாய் இருப்பது ஓன்று உன்னை ஒழிய வேறு ஓன்று காண்கின்றிலேன் –ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு -என்று சொல்லாதவர்களுக்கும்-உதவுமவன் அன்றோ நீ –சொல்ல அறியாமையாலே-பிரமன் முதலாயினோர்கள் சொல்லார்கள் –-நித்ய ஸூரிகள் யான் எனது என்ற பற்று இல்லாதவர்கள் ஆகையாலும்- புதிதாக சொல்ல வேண்டாமையாலும் சொல்லார்கள்-
உம்பர் அந்த அதுவே –அவர்களுக்கும் மேலான நித்ய ஸூரிகட்கும்-அப்படிப் பட்ட-உபய லிங்க விசிஷ்டனாய் -எளிதில் அடையத் தக்க பொருளாக இருப்பவனே-ஸூ பாஸ்ரயமான திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன் –சதா பஸ்யந்தி ஸூரய -பிரமாண பிரசித்தியைச் சொல்லுகிறார்-அயர்வறும் அமரர்களுக்கு பரம ப்ராப்யன் ஆனவனே –அது -என்று-நித்ய ஸூரிகளோடு- பிரமன் முதலாயினர்களோடு- வேறுபாடு அற நிர்வாஹகனாய் இருக்கிற-
நீ வந்து என்னைக் கூவிக் கொள்ளாய் –
இப் பாட்டால் -கீழும் மேலும் சொல்லுகிற சாமா நாதி கரண்யத்துக்கு நிபந்தனம் காரிய காரண பாவம் என்னுமத்தை அருளிச் செய்தார் யாய்த்து – சர்வம் கல்விதம் ப்ரஹ்ம —
—————
உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-
ஓ ஒவ் ஒரு இடத்திலும் -சேர்த்து-ஆர்த்தி மிக கூப்பிடுகிறார்-பொறுப்பை நிர்வகிக்கத்த பின்பு -ஓர் ஒன்றே ரஷிக்க ஹேதுவான பின்பு அநாதரிப்பது —உம்பர் அம் தண் பாழேயோ –-மஹான் முதலிய காரணங்களுக்கு எல்லாம் காரியம் ஆகையாலே மேலாய் –-தன்னுடைய ஒரு கூற்றாலே கார்ய வர்க்கத்தை பிறப்பிக்க வற்றான ஆற்றலை உடைத்தாய்–வியக்கத் தக்க பரிணாமத்தை உடையதாய்- ஆத்மாக்களுக்கு போகத்தையும் மோஷத்தையும் விளைத்துக் கொள்ளலாம்-நிலமாய் இருந்துள்ள மூல பிரக்ருதிக்கு நிர்வாஹகன் ஆனவனே-உம்பர் அம் தண் பாழ் -என்கிற இதனால்-ஆத்மாக்களுக்கு சரீரமாய் -அவ் வழியாலே ஈஸ்வரனுக்கு சரீரம் ஆகை அன்றிக்கே யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிர்த்வி சரீரம் – ஆத்மாக்களுக்கு வேறு பட்டதான அசேதனப் பொருள்களுக்கும்-அவனை ஒழிய நிர்வாஹகர் இல்லை என்பதனை தெரிவித்த படி–
பாழேயோ -என்கிற இதனால் சுத்த பேதம் கொள்ளுகிற மீமாம்சகரையும்–-ஸ்வரூபத்தால் தாதாத்மியம் கொள்ளுகிற மாயாவாதிகளையும் அழிக்கிறது –நுட்பமான சித் அசித்துக்களை சரீரமாக உடையவன் காரணம் ஆகையாலே-காரணனாய் உள்ள நிலை சொல்லிற்று–இதனால் விசேஷணத்துக்கு முதன்மை சொல்லும் நியாய வைசேடிக மதங்களும்–விசேஷணதுக்கு பொய்மை கூறும் மாயாவாதி மதங்களும்-ஆழ்வாருக்கு உடன்பாடு அன்று -என்றதாயிற்று
நீயேயோ -என்கிற இதனால்–ஆத்மாவை ஒழிய சரீரத்துக்கு நிலை இல்லாதது போலே-
ஈஸ்வரனை ஒழிய ஆத்மாவுக்கு நிலை இல்லை என்றது ஆயிற்று –
ஆடையின் வெண்மை -படஸ்ய ஸுக்லயம் -வெண் தன்மை –நிஷ்கர்ஷகம்-வெண் ஆடை -அநிஷ்கர்ஷகம்-வை வைஷிகா நிஷ்கர்ஷகம்-சுக்ல பட -வெண் ஆடை சொல்லாமல் ஆடையின் வெளுப்பு-நியதி –நிஷ்கர்ஷகம்-கந்தம் பிருத்வி மண்ணில் மணம்-தர்மத்தை மட்டும் சொல்லும் தர்மியை சொல்லாதே
பிரகாரி பிரகார சம்பந்தம் -காரிய காரண சம்பந்தம் -நீயே பாழ்–சர்வம் கல் இதம் ப்ரஹ்மம் –
நீ ஆத்மா தத் தவம் அ ஸி –அதனுள் மீசை நீயே யோ-ஜகத் வியதிரிக்த விஷயங்களில் -நிஷ்கர்ஷம் தர்மம் தர்மம் சொல்லும் தர்மியை சொல்லாதே – பூவின் மணம் -மணத்தை தானே குறிக்கும் பூவைக் குறிக்காதே–பகவத் விஷயத்தில் நிஷ்கர்ஷமான சொல்லும் அவனையே குறிக்கும் –நீ பிரகிருதி பாழ் சொல்லலாம் -என்றவாறு –-பிரகிருதி சப்தம் அவன் அளவில் பர்யவசிக்கும் –சர்வ சப்த வாச்யத்வம் –என் உடம்பு நாம் சொல்ல வேண்டும் -அவன் நானே உடம்பு -சொல்லலாம்-சரீர ஆத்ம பாவத்தால் – ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் காரணம் -என்றவாறு –
நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்மம் -அத்வைதிகள் –
விசேஷண பிரதான்யம் சொல்லும் வைசேஷிகர் –
நீ என்பதற்கு தானே ஆழ்வார் பிரதான்யம் என்கிறார் –
பொய் இல்லை -விசேஷணம் உண்டு என்கிறார் -ஆகையால் இரண்டு மதங்களையும் கண்டனம் பண்ணி அருளுகிறார் –
அம்பரம் நற் சோதி –ஆகாசமும் சிறப்புடைத்தான ஒளியும்–இவை இரண்டும் மற்றைய பூதங்களுக்கும் உப லஷணம்-அதனுள் பிரமன் அரன் நீ –-பஞ்சீக்ருதமான ஐம் பெரும் பூதங்களால் உண்டான-அண்டங்களிலே வசிக்கிற பிரமன் சிவன் முதலாயினார்களும்-நீ இட்ட வழக்கு -என்கிறது –-உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ –
தேவர்களையும் மற்றும் உள்ளாரையும் படைத்த முனியாய்-பிரசித்தமாய் இருப்பவனும் நீ-
பிரமன் அரன் நீ -என்ற ஒற்றுமை தன்மை-கார்ய காரண தன்மை அடியாய் வந்தது-
பரம் பொருளின் இடத்தும் உண்டானவை-அவனால் அழிக்கப் படுகின்றவை -காக்கப் படுகின்றன–ஆதலால் காணப் படுகின்றன இவை எல்லாம் ப்ரஹ்மம் அல்லவா -என்னுமாறு போலே–எல்லா பொருள்களையும் கர்மங்கட்கு தகுதியாக படைப்பதற்கு-
அவர்கள் செய்த முன் கர்மங்களை நினைக்கும் அவன் -முனி ஆகிறான்-ஸ்தூலமான சித்தியும் அசித்தையும் சரீரமாக உடையவன் என்பதனாலே-காரியமாம் தன்மை சொல்லிற்று ஆயிற்று – சதேவ ஏக மேவ அத்விதீயம் நீயே தான் காரணமும் காரியமும் -சாந்தோக்யம் தமிழ் செய்த மாறன் –
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே – என் கார்யத்தை நீயே செய்வதாக ஏறிட்டுக்கொண்டு-அதனை விட்டு-அசேதனப் பொருளை பொகடுமாறு போலே பொகட்டாய்-என்னுதல்-
அன்றிக்கே –
எல்லாவற்றையும் நிர்வஹிக்கிற நீ-என் ஒருவனையும் என் கார்யம் செய்வேனாகப் பார்த்து-
உன் பக்கல் நின்றும் போர விட்டு விரும்பாமல் இருந்தாய் -என்னுதல்-
என்னை--உன்னால் அல்லது செல்லாத என்னை–போர விட்டாய்–அவன் பக்கலில் நின்றும் பிரி கதிர் பட்டு போந்தாராய் இருக்கிறபடி-குணம் நடையாடாத தேசத்திலே தள்ளினாய் -என்கிறார்-
———-
போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-
நீ –படைப்பே தொடங்கி-இவ்வளவும் வரப் புகுர நிறுத்தின நீ -என்றது-
ஞானத்தாலும் ஆற்றலாலும் நிறைவுற்று இருக்கிற நீ -என்னுதல் என்றது-
ஆள் பார்த்து உழி தரும் நீ -நான்முகன் அந்தாதி -60-
எதிர் சூழல் புக்கு திரியும் நீ -2-7-6-என்றபடி
பேற்றினைப் பெறுவது இறைவனாலே–அறிவு இல்லாத கர்மங்களின் கூட்டத்தால் அன்று – என்னும் இடம் தோற்றுகைக்காக –எத்தைக் கொண்டு என்னாதே -ஆரைக் கொண்டு -என்கிறார் – ப்ரஹ்மம் தானே பல பிரதன் -அசேதன கிரியா கலபரங்கள் இல்லையே –என்னது என்கைக்கு ஒரு கர்ணாதிகள் இல்லை-நான் என்கைக்கு ஒரு ஸ்வ தந்த்ரனான கர்த்தா இல்லை-இது வேறு உண்டோ என்று கருத்து –-ஆரைக் கொண்டு எத்தை என்கிற இரு உக்தியாலே விஷண்ணராகிறார்–
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரைஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –நெருப்பினால் நன்கு காய்ச்சப் பட்ட இரும்பு-காய்ச்சல் தீர நீரை முற்றும் உண்ணுமாறு போலே என் ஆத்மாவை முற்றும் உண்ணுவதற்காக- எனக்கு உன்னுடைய எல்லை இல்லாத இனிமையைக் காட்டி-என்னை அடிமைப் படுத்தினாய் –
என் விடாய் தீரக் கலந்தாய் -என்று இருந்தேன்-உன் விடாய் தீரவாய் இருந்ததே அன்றோ -என்றது உனக்காக அன்றோ உன்னைக் காட்டிற்று -என்றபடி-
அன்றிக்கே
உயிரை என்ற இரண்டாம் வேற்றுமையை முதல் வேற்றுமையாகக் கொண்டு-
என் ஆர் உயிர் ஆனது உன்னை ஆரப் பருக -என்னவுமாம்-
அப்போது காய்ந்த இரும்பு அக் காய்ச்சல் தீரும்படி-நீரைப் பருகுமாறு போலே- என் ஆர் உயிர் ஆனது என் தாபம் எல்லாம் தீரும்படி- உன்னை அனுபவிக்க எனக்கு பண்டு எல்லை இல்லாத-இனியன் ஆனவனே -என்றுமாம் –
————-
எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-
எனக்கு ஆரா அமுதமாய் -தேவ ஜாதியினுடைய உப்புச் சாறு அன்றிக்கே –சதா ஸேவ்யமுமாய்-நித்ய ஸூரிகள் எல்லாரும் கூட அனுபவிக்கும் உன்னை -சம்சாரியான எனக்குத் தந்தாய் –எனது ஆவியை –-என்னுடையது என்னுமதுவே காரணமாக- காதலியின் அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே-என் உடம்பை விரும்பினாய் –இன்னுயிரை –பகவான் உடைய அபிப்ராயத்தாலே–தவதவ நாறுகிற படி –தவ -பாரதந்த்ர்யம்-மற்றொரு தவ -உரிச் சொல்
அன்றிக்கே-செவ்வாய் கிழமை மங்கள வாரம் என்னுமா போலே –சரீரத்தோடு சேர்ந்து இருக்கையாலே தண்ணிது -என்று சொல்கிறார்
இனி உண்டு ஒழியாய்–நீ இவ்வளவு புகுர நிறுத்துகைக்கு நான் துணை செய்தது உண்டோ –திருவிருத்தம் தொடங்கி அனுபவித்தாயே –உன் கார்யத்துக்கு உன்னை வேண்டிக் கொள்ள வேண்டுமோ-இவருடைய அமுதத்துக்கு அனுபவிக்கும் தன்மை உண்டு காணும் –போக்த்ருத்வம் உண்டே –
ஈஸ்வரனுக்கு நிருபாதிக போக்த்ருத்வமும்-சேதனனுக்கு போக்யத்வமும் இறே ஸ்வாபாவிகம் –-அதனுடைய அனுபவ ஜெனித ப்ரீதியாலே வருகிற பர்யவாசநம் இ றே சேதன போக்த்ருத்வம் -ஈஸ்வர போக்யத்வமும்-ஆகை இறே ஸ்வரூபத்தை நிர்த்தேசித்து இவனுடைய போக்யத்வத்தையும் ஈஸ்வரனுடைய போக்த்ருத்வத்தையும் சொல்லி
சைதன்ய ப்ரயுக்தமான பர்யவசாநத்தாலே சேதன போக்த்ருத்வத்தையும் ஸ்ருதி சொல்லி முடித்தது-அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத என்று –
இவ்வாத்மாவையும்-இதனுடைய சரீரத்தையும் விரும்புகை உனக்குச் சேருமோ-
நீ உகந்தாருக்குச் சேருமோ –
புண்டரீகக் கண்-அக்காயா தாமரை பூத்துக் கனியப் பழுத்தால் போலே ஆயிற்று–திரு மேனியும் திருக் கண்களும் திருப் பவளமும் -இருப்பது-பிராட்டி விரும்பும் துறைகள் அல்லவோ இவை-
உனக்கு ஏற்கும் கோலம் -என்று-அவ் அழகினை இங்கே ஏறிடுகிறார் -நியாயாதிதேசம் –
அதிதேசம் -ஏறிடுதல்-ஸ்வரூப அதிதேசம் இல்லை இங்கு -முற்றுவமை இல்லை-
நியாய அதிதேசம் -அது போன்று இது -சிறப்புடைத்து –காயம் பூ பொருந்தாதே ஹிரண்ய வர்ணை அன்றோ -அதனால் பெருமை பொருந்தும் -அவனைப் போன்ற அழகு உடையவள் என்றபடி —
கோலம் மலர்ப் பாவைக்கு அன்பா -என் அன்பேயோ--அவள் பக்கல் அன்புடையவன் -என்று தோற்றி இரா நின்றது- தம் பக்கல் -அன்பு என்றும் -அது உடையவன் என்றும்-தெரிக்க போகிறது இல்லை – ஞானத்தை உடையவனை ஞானம் என்ற சொல்லால் கூறுவது போன்று- தத் குண சாரத்வாத் து தத் வ்யபதேச ப்ராஜ்ஞவத் -சாரீரக மீமாம்சை-2-2-20-
————-
கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-
இறுதி இனி -வராஹ அவதாரம் சொல்லி நிகமிக்கிறார்–ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -திரு விருத்தத்திலும் -நிகமித்தார்
கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ –பிராட்டி பக்கல் உள்ள அன்பின் மிகுதியாலே-அந்த அன்பே காரணமாக அவளால் அங்கீ கரிக்கப் பட்ட- என் பக்கலிலே மிக்க அன்புள்ளவன் ஆனவனே–ரிஷிகளை ரக்ஷித்து அன்றோ பிராட்டியால் ஆலிங்கனம் பெற்றார் பெருமாள்
பட்டர் தம்முடைய அந்திம தசையில் அருளிச் செய்த வார்த்தை-
பெரிய பிராட்டியார்க்கு அன்பன் ஆகையாலே-அவளால் அங்கீ கரிக்கப் பட்ட நமக்கும் அன்பனாம் என்று-இப்பாட்டினை-நம்முடையார் த்வயத்தின் அர்த்தத்தோடு அனுசந்திப்பார்கள் -என்பது -என்று ஜீயருக்கு அருளிச் செய்தார் – திரு மால் என்னை ஆளும் மால் -10-7-5-என்னும்படியே- தம்முடைய அன்புக்கு அடி சொல்லுகிறார் –அந்தப்புரத்தைச் சார்ந்தவன் அன்றோ –என் அன்புக்கு அடி இல்லையோ –
திருவுக்கு பரிகரமான என்னிடமும் மால் -மால் நடுவில் -திரு என்னை இரண்டு பக்கமும் –
திரு மால் இடம் பேசி இருவருமாக என்னை ஆள்வார்கள் -கைங்கர்யம் கொள்ளுவார்கள் -என்றபடி –
கோல வராகம் – மாசு உடம்பில் நீர் வாரா நின்ற நிலை அன்றோ-இவருக்கு ஆலத்தி வழிக்க விஷயம் ஆயிற்று-அவன் அழிவுக்கு இட்ட வடிவிற்கே அன்றோ இவர் ஆலத்தி வழிக்கிறது-
மாசுடம்பின் நீர் வாரா மானமிலா பன்றி இவர் கண்ணுக்கு கோலா வராஹம் -ஆலத்தி எடுக்கும் படி –பிரணயித்துவுக்கு நமஸ்காரமாகுமே அலங்கரித்து வந்தால் -தாம் தாமான படியில் வரக் கூடாதே -ராஸிக்யம் பூர்த்தி –
உன்னைப் பெற்று இனி போக்குவனோ –ஸ்ரீ பூமிப் பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-என்னை பெறுகைக்கு செய்து-
என்னைக் கிட்டப் பெற்ற பின்பு-உன்னைப் போக விடுவேனோ–நீ செய்த செயலின் பலத்தால் சேர்ந்த நான்-கைப்பட்ட செல்வத்தை விடத் தக்கவனோ-
————–
பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயாப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8–
பெற்று இனிப் போக்குவேனோ உன்னை –ஓர் அச்சு இல்லாக் காசாய் போகிற்றாகில் போகிறது-என்று இருக்கிறேனோ- அன்றிக்கே-உன்னை நீ அறியாயோ -என்னுதல்
மிக மிகத் தாழ்ந்தவனாய் இருந்த எனக்கு-மிகவும் தாரகனான உன்னைப் பெற்று வைத்து-
இனி நான் உன்னை விடுவேனோ-உன்னை என் தனிப் பேர் உயிரை –வரில் போகடேன் -கெடில் தேடேன் -என்று-இருக்கிற ஆத்மாவின் அளவேயோ–உன்னை நீ அறியாயோ–உலகங்கட்க்கு எல்லாம் ஓர் உயிரேயோ -8-1-5-என்கிறபடியே- எல்லா ஆத்மாக்களுக்கும் ஆத்மாவான உன்னை ––என் தனிப் பேர் உயிரை -என்றது தம்மில் வேறுபாடு –கைவல்யத்தில் இருந்து மாறுபாடு –உயிராய்– நல்வினை தீ வினைகளைச் செய்கிற ஆத்மாவுக்கு-நிர்வாஹகனாய்- அந்த இரு வினைகளைச் செய்கிறவன் தான் உனக்கு உரியவன் அன்றாகில் அன்றோ உன்னை விடலாவது –அனுஷ்டாதாவும் உன் ஆதீனம் —அனுஷ்டாதா கர்மம் கர்ம பலன்கள் -பிரகிருதி த்யாஜ்யம் ஆகிய சம்சாரம் உன்னை ஒழிய வேறு இல்லையே –
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-
நீ வியாபியாது இடம் உண்டாகில் அன்றோ விடுவது -வியாப்பியங்கள் அறியாத படி அன்றோ நின்றாய்
கண்ணுக்கு விஷயம் ஆனாய் ஆகில் பிழையேனோ -மறைந்து அன்றோ உள்ளாய்
அல்லாதாருக்கு வெளியிடாமல் இருந்து என் முதல் தனி வித்து –
அறிவித்து அருளி -பிரதம ஸூ ஹ்ருத் நீ அன்றோ –
நான் ஓர் அடி விட நின்றேன் ஆகில் ஆறி இருப்பேன் –
————-
முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9-
எங்கும் வந்து முகம் காட்டலாம்படி- உலகத்தை உருவமாகக் கொண்டு இருக்கும்-இருப்பைக் காட்டித் தந்தோம் அன்றோ -என்ன- அது உகந்தார்க்கும் உகவாதார்க்கும் பொதுவாய் இருந்தது- வேறு உருவம் இல்லையாகில் அன்றோ-அதுவே அமையும்-என்று ஆறி இருக்கலாவது- பரம பதத்தில் வேறுபாட்டோடு கூடியதாய்-எல்லாம் நிறைந்ததாய் இருக்கும் இருப்பை-காண வேண்டும் –என்கிறார் –
முதல் -நிமித்த காரணம்-
தனி -துணைக் காரணம்-
வித்து -முதல் காரணம்-
முதல் தனி உன்னை –முதன்மை பெற்றவனாய்-ஒப்பற்றவனாய்-குணம் விபூதி முதலியவற்றால் நிறைந்து இருக்கின்ற நீயான உன்னை–தனி -சஹகாரி வேண்டாதவன் – ஸூய ரக்ஷணம் – அவனது உணவை பறித்தால் போலே –எனை நாள் வந்து கூடுவன் நான் –என்று வந்து கூடுவேன்--அவன் கொடுத்த ஞானத்தாலே ஸ்வரூபத்தை-உணர்ந்தாருக்கு-
தன்னை பிராட்டிமாரோடே சேர்ந்து பேசலாம் படியாய் இருக்கையால் –வந்து கூடுவேன் – -என்கிறார்–நான் -பரம பதத்தில் சுவடு அறிந்த நான் -என்றது–உனக்கு உரியதான விக்ரகத்தை காண ஆசைப் பட்ட நான் -என்றபடி-
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உரு வாழ் பாழ் ஆய் –முதல்-முதன்மை பெற்றதாய்-தனி-உபமானம் இல்லாததாய்-அங்கும் இங்குமான மகத்து முதலான தத்வங்கள்-முழுவதிலும் எங்கும் ஒக்கப் பரந்து- ஆத்மாக்களுக்கு போகங்களையும் மோஷத்தையும்-விளைக்கும் விலை நிலமாக-இருக்கிற மூலப் பகுதிக்கு ஆத்மா ஆனவனே-
நடுவில் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் எழுந்து அருள-மீண்டும் அவதாரிகையும்-வியாக்யானமும் அருளுகிறார் –மூன்று ஸ்ரீ யபதி படி -ஆரம்பத்திலும் இங்கே போலே பலர் வர மீண்டும் அருளிச் செய்தால் போலே -இங்கும் வந்தார்கள் சாத்துமுறை அன்று —
முதல் தனி வித்தேயோ –
முதல் -நிமித்த காரணம்-
தனி -துணைக் காரணம்-
வித்து -முதல் காரணம்-
முழு மூ உலகு ஆதிக்கு எல்லாம் –-மூ உலகு என்கையாலே- கிருதகம்- அக்ருதகம்-கிருதகாகிருதகம் – என்று-மூன்று வகைப்பட்ட அண்டத்தைச் சொல்லுகிறது-
கல்பாந்தக காலத்தில் அழிவதும் அழியாததும் -அழிந்தும் அழியாமலும் இருப்பதும் –மகர் லோகம் -நெருப்பால் கதுவப் படும் -மேலே போவார்களாம் –
இத் துணையும் லீலா விபூதியோடு கூடி இருக்கிற இருப்பை சொல்லிற்று –
நித்ய ஸூரிகளுக்கு இனியனாய் இருக்கும் வடிவு அழகினை-கண்டு அனுபவிக்க வேண்டும் என்கிறார் மேல்-
உன்னை-பரமபதத்தில் எழுந்து அருளி இருக்கும் நிலையைச் சொல்லுகிறது-
உன்னை என்ற அளவில் பரமபதத்தில் எழுந்து அருளி இருக்கும் நிலையைக் காட்டுமோ என்னில் –காட்டும்-
ஒண் தொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்க கண்ட சதிர் -4-9-10-என்கிறபடியே-
அவனையும் அவளையும் சொல்லவே பரமபதமும் அடங்கிற்றே அன்றோ–
ஸ்ரீ தேவி பூமா தேவி நடுவில் நின்ற நிலையை அன்றோ இந்த பதிகத்தில் சொல்லிக் கொண்டே வருகிறார் –
உன்னை-முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ –8-1-1-என்று ஐயுறும்படி இருக்கும் திரு முடியும்-
மாயன் குழல் –7-7-9-என்னும்படியான திருக் குழலும்-
கோளிளைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்-
கோளிளைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்-
கோளிளை யாவுடைய கொழும் சோதி வட்டம் கொல் -7-7-8-என்னும்படியான-அழகிய திருமுகமும்-
நாய்ச்சிமார் உடைய திருக் கரங்களின் ஆபரணங்களால் அடையாளம் செய்யப் பட்டதாய்-கனக வளையா முத்ரா – கமுகினுடைய இளம் கழுத்தையும் சங்கையும் ஒத்ததாய் இருந்துள்ள திருக் கழுத்தும்-
கற்பகம் கா அன்ன நற் பல தோள்களும் -6-5-8-
பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாக -என்றும் அனுபவித்துக் கொண்டு-
இருக்கச் செய்தேயும் அகலகில்லேன் -என்று அவள் பிச்சேற்றும் படி -லஷ்மீ லலித க்ருஹம் -கௌஸ்துப ஸ்வஸ்தி தீபம் —
குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பும் -1-8-10-
உள்ளத்துள் நின்று நிலாவுகின்றதே -அமலனாதி பிரான் -4–என்கிறபடியே
நித்யர் முக்தர் இவர்கள் உடைய உள்ளங்களிலே அழகு செண்டு ஏறுகிற -வையாளி கண்டு அருளும் –திரு உதர பந்தமும்-
வனப்பாகிற வாரிதி இத்தலப் பட்டு சுளித்தால் போல் இருக்கிற திரு உந்தியும்-தாமோதரத்வம் பிரதம தர விபூஷணம் —
ஒரு அடை மொழி இட வேண்டாதே -அல்குலும் -5-5-8- என்னும்படி இருக்கிற அல்குலும் -சிற்றிடையும்-
மாலைக் காலத்தில் தோன்றுகிற செந் நிறத்தாலே அழகு பெற்ற ஆகாசம் போலே இருக்க-
திரு அரை பூத்தால் போல் இருக்கிற –அந்தி போல் நிறத்தாடையும் –
வாழை மரம் முதலானவற்றைப் போன்ற கம்பீரமான திருத் தொடைகளும்-
தாமரை நாளம் போலே -பிராட்டி மார் தீண்டுவதால் மயிர் செறித்து-முட்களோடு கூடிய திருக் கணைக் கால்களும்-
சங்கு-சக்கரம் கற்பகம் கொடிதாமரை அங்குஜம் வஜ்ரம் ஆகிய-அடையாளம் பண்ணப் பட்டதாய் – நாய்ச்சிமாரும் கூட கூசித் தொட வேண்டும்படி மெல்லடியாக –
தேனே மலரும் -என்கிறபடி எல்லை இல்லாத இனியவான திருவடிகளையும் உடையையாய்-
ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருந்து அருளுகிற உன்னை –
எனை நாள் வந்து கூடுவன்-என்று வந்து கிட்டக் கடவேன்–மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே பிராட்டிமாரைப் போன்று பேசலாய் இருக்கிறபடி–நான்-அவ் வடிவு அழகினைக் காண ஆசைப் பட்ட நான்-
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழ் ஆய் – முதன்மை பெற்றதாய்-உபமானம் இல்லாததாய்-அங்கும் இங்குமான மகத் தத்துவங்கள் முழுவதிலும் பரந்து-
மக்களுக்கு போகங்களையும் மோஷத்தையும் விளைத்துக் கொள்ளுகைக்கு ஈடான-கருநிலமாய் உள்ள மூலப் பகுதிக்கு ஆத்மாவாய்- ஆய் -சரீர ஆத்மா காரண கார்ய நிபந்தமான சாமா நாதி கரண்யம் –
முதல்-மூலப் பகுதியை நோக்க -தான் முதன்மை பெற்றதாய்-நியமிக்க கூடியதாய்- தனி-உபமானம் இல்லாததாய்–சூழ்ந்து- மூலப் பகுதியிலும் மூலப் பகுதியால் ஆன பொருள்களிலும் பரந்து –-அகன்று ஆழ்ந்து உயர்ந்த –பரந்து இருக்கும் இடத்தில்-ஞானத்தாலே பத்து திக்குகளிலும் பரந்த-முடுவிலீயோ –அளவிட்டு அறிய முடியாததான-ஆத்மா தத்வத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே-முடிவு -என்பது அழிவினைக் குறிப்பதாகக் கொண்டு–சரீரத்தை போன்று அழிந்து போவது அன்றிக்கே-என்றும் உள்ளதான ஆத்ம தத்துவம் -என்னவுமாம் –
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்-முழு உலகு ஆதிக்கு எல்லாம் முதல் தனி வித்தாய்-முதல் தனிச் சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவிலியாய்-இருக்கிற முதல் தனி உன்னைக் கண்டேன்- பரம பதத்தில் நித்ய ஸூரிகளுக்கு இனியனாய் இருக்கிற-உன்னை எனை நாள் வந்து கூடுவேன் நான்-
காரண கார்யங்கள் ஆன இரண்டு நிலைகளை உடைய-சித்துக்கும் அசித்துக்கும் நிர்வாஹகனாய்-இருக்கிற இருப்பைக் காட்டி அனுபவிப்பித்த இவ்வளவும் போராது-யுன்னை யுன்னை--உனக்கே உரிய விக்ரகத்தை உடையவனாய்-பரம பதத்தில் இருக்கும் இருப்பைக் கண்டு-அனுபவிக்க வேண்டும் -என்றதாயிற்று-
———–
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-
இவர் வேண்டிக் கொண்ட படியே- எல்லா வற்றாலும் நிறைந்தவனாய் கொண்டு வந்து கலந்து அருளக் கண்டு- அளவிட முடியாததான மூலப் பகுதி தத்வத்தாலும்-ஆத்ம தத்வத்தாலும்- உன்னுடைய நினைவின் உருவமான ஞானத்திலும்-பெரியதான என் விடாய் எல்லாம் தீர-வந்து -என்னோடு -கலந்தாய்- என்னுடைய விருப்பமும் ஒருபடி முடியப் பெற்றது-என்கிறார் – இனி இல்லை -என்னும்படி என்னை விடாய்ப்பித்து-அதற்கு அவ்வருகான விடாயை உடையனாய்க் கொண்டு-என்னோடு வந்து கலந்து- உன்னுடைய விடாயும் ஒரு படி நீங்கியதே -என்கிறார்–துயர் ஆறு சுடர் அடி -அறுக்கும் அறும் சுடர் அடி -இரண்டு நிர்வாகம் போலே –ஆழ்வார் விடாயைத் தீர்த்து அவன் விடாயும் தீர பெற்றான் என்று நிகமிக்கிறார் ––ஈஸ்வரனை ஒழிய ப்ருதக் ஸ்திதி இல்லையே
அப்ரஹ்மாத்மக தத்வம் இல்லையே -அதனால் இவற்றை சொல்கிறார் அவனையே சொல்லலாம் படி –
மக்களுக்கு புருஷார்த்தத்தை விளைத்துக் கொள்ளலாம் நிலமான-மூலப் பகுதிக்கு ஆத்மா ஆனவனே –அதற்குள்ளும் பரந்து-அதனைக் காட்டிலும் பெரியதாய்-அதனை ஏவுகின்றது ஆகையாலே மேலாய்- விகாரம் முதலானவைகள் இல்லாமையாலே சிறந்ததாய்-
மலர்ந்த ஒளி உருவமான ஆத்மா வஸ்துவுக்கும்-ஆத்மா ஆனவனே –
பேறு பெறுகிற இப்பொழுது-மூலப் பிரக்ருதியையும் ஆத்மாவையும் சொல்லுகிறது-
கீதையில் ஆத்மாவை -சர்வ கதம் -வெல்வேறு ஜீவாத்மாக்கள் -மூலம் வியாப்தி -என்றபடி –
தம்முடைய காதல் பெரியவற்றிலும் பெரியது என்கைக்காக –
அவற்றுக்கும் ஈஸ்வரனை ஒழிய-தோன்றுதல் நிலைத்தல் இல்லாமையாலே அவ்வளவும் சொல்லுகிறது –சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ – சுடர் இன்ப ஞானமேயோ -ஞானத்துக்கு இருப்பிடம் ஆனவனே-
சுடர் -சங்கல்ப ரூபமான -தடை இல்லாததால் சுடர் என்கிறார்-
அவை இரண்டினையும் தன்னுள் அடக்கிக் கொண்டு-அவற்றுக்கு நிர்வாஹகனான-நினைவின் உருவகமாய்- சுகத்தின் உருவமான ஞானத்தை உடையவனே என்று-நினைவின் உருவமான ஞானத்தினைச் சொல்லுதல்-
அன்றிக்கே
சுடர் ஞான இன்பமேயோ என்று-ஒளி உருவனும் -இன்பத்தின் உருவனும் ஆனவனே -என்று எம்பெருமானைச் சொல்லுதல் – அனுகூல ஞானமே ஆனந்தம் –
சூழ்ந்து – மேலே கூறிய மூன்று தத்துவங்களையும்-விளாக்குலை கொண்டு –அதனில் பெரிய –அவை குளப்படியாம் படி பெரிதான –-என் அவா –என்னுடைய காதலை-அறச் சூழ்ந்தாயே- அதனிலும் பெரிய உன் காதலைக் காட்டி வந்து கலந்தாயே –என்னுடைய கூப்பீடும் ஒருபடி ஒவும்படி பண்ணிற்றே-
பரதனை மடியில் ஏற்றுக் கொண்டு மகிச்சி உற்றவராய் தழுவினார் -என்கிறபடியே-மீண்டு புகுந்து- ஸ்ரீ பரத ஆழ்வானை மடியிலே வைத்து-உச்சியை மோந்து உகந்து-அணைத்தால் போலே -ஆயிற்று- இவருடைய விடாய் கெடும்படி கலந்தது –
அற –வஸ்து அல்பம் -என்கிறார் அபாவம் என்கிறார் இல்லை -சங்கல்பம் தடுக்க முடியாத ஞானம் –-அனுகூலமானதால் ஆனந்தம் –ஆஸ்ரயம் ஞானமேயோ-ஞானத்துக்கு ஆஸ்ரயம் ஞாதா என்றவாறு –மேரு மலை மேல் கீழே உள்ள கடுகு பார்த்து அல்பம் என்னுமா போலே -அல்பத்தவம் என்றவாறு –ஓ அதிசயம் ஒவ் ஒரு இடத்திலும் அடி தோறும் ஹ்ருஷ்டர் ஆகிறார் -பேர் ஆனந்தம் பெற்றார் –
————-
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-
நிகமத்தில்-அகில ஹேய பிரத்யநீகனாய்-கல்யாண குண ஏக நாதனாய்-
ஞான ஆனந்தஙகளே வடிவு உடையவனாய்-உயர்வற உயர்நலம் உடையவனாய்-
வனப்பு முதலாயின வற்றுடன் திவ்ய மங்கள விக்ரகத்தை உடையவனாய்-
அளவிறந்த திவ்ய ஆபரணங்களை உடையவனாய்-
திருமகள் மணமகள் ஆய்மகள் மூவருக்கும் நாயகனாய்-
அஸ்தானே பயசங்கை செய்யும் நித்யசூரிகள் -திரு வநந்த ஆழ்வான் -பெரிய திருவடி
எப்பொழுதும் அடிமை செய்யும் திருவடித் தாமரைகளை உடையவனாய்-
ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்து அருளி இருப்பவனாய்-சர்வேஸ்வரனாய்-
தன்னாலே ஏவப்படும் பரமன் முதலாயினவர்கட்கும் அந்தராத்மாவாய்-
தன்னைக் காண வேண்டும் என்று விடாய் கொண்டு அடைகின்ற அடியவர்கள் விடாய்-தீரக் கலக்கும் தன்மையான எம்பெருமானைக் காண வேண்டும் என்று கூப்பிட்டு-
அவனைப் பெற்று துக்கம் அற்றவராய்-எல்லா தடைகளும் நீங்கினவராய்-
ஆழ்வாரின் பக்தியின் தூண்டுதலால் பிறந்த-ஆயிரம் திருவாய் மொழியும்-அவற்றில் வைத்துக் கொண்டு- மேலே கூறிய படி அன்றிக்கே பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படி-
பரமபக்தியால் பிறந்த அந்தாதியான-இத் திருவாய்மொழி வல்லார்-
சம்சாரத்தில் பிறந்து வைத்தே-அயர்வறும் அமரர்களோடு ஒப்பர்-என்கிறார்-
அவா அறச் சூழ் அரியை – விரும்பியவற்றை எல்லாம் அருளும் சர்வேஸ்வரனை –தம்முடைய காதல் கெட வந்து கலந்த படியாலே- ஒரு அடைவு கொடாதே அது தன்னையே சொல்கிறார் –-அவா அறச் சூழுகையாவது– தன்னைக் காண வேண்டும் என்னும் விடாய் உள்ள-அடியவர்களின் விடாயை தீர கலக்கை –
அயனை அரனை அலற்றி--தன்னுடைய ஏவல் ஆள்களான பிரமன் சிவனுக்கும் அந்தராத்மாவானவனை–அயனை அரனை -என்கிற சாமாநாதி கரண்யத்தால்-
பிரமன் சிவன் போல்வார் ஈஸ்வரர் ஆவார்களோ என்னும் மக்கள் கொள்ளும் ஐயத்தை அறுக்கிறார்–அவர்களுடைய ஸ்வரூபம் ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி எல்லாம் சர்வேஸ்வரன் அதீனமாய்- இருப்பதாலே அவர்களுக்கு பாரதந்த்ர்யமே ஸ்வரூபம் –தலைவர்களாய் இருக்கும் தன்மை அவர்கள் செயல்கள் காரணமாக வந்த இத்தனை –
இச் சாமாநாதி கரண்யத்தை அறியும் தன்மை இன்றியே எளியராய் இருப்பார்-அறியத் தகும் முறையிலே கூறப்படும் வகைகளும் உண்டு-அவை
அயனை அரனை அவா அற்று-அரியை அலற்றி-வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் -ஒரு வகை –
அயனை அரனை அவா அறச்-சூழ் அரியை அலற்றி-வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் –மற்று ஒரு வகை-
அலற்றி அவா அற்று வீடு பெற்று –-கூப்பிட்டு அவனைப் பெற்று எல்லா தடைகளும் நீங்கியவர்-ஆகையாலே துக்கம் இல்லாத ஆழ்வார் அருளிச் செய்த-
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரம் –-பக்தியின் தூண்டுதலாலே பிறந்த ஆயிரம்-
இவருடைய அவா -மைத்ரேய பகவான் ஸ்தானத்திலே நிற்கிறது ஆயிற்று –
ஸ்ரீ பராசர பகவான் ஸ்ரீ விஷ்ணு புராணம் அருளியது மைத்ரேய பகவான் தூண்டுதல் போலே –அன்றிக்கே-அவா உபாத்தியாராக நடத்த -நடந்த ஆயிரம் –என்னுதல்-
ஆழ்வாருக்கு பிறகு நூறாயிரம் கவிகள் பேரும் உண்டானார்கள்- அவர்கள் கவிகளோடு கடல் ஓசையோடு வாசி அற்று-அவற்றை விட்டு இவற்றைப் பற்றுகைக்கு அடி-
இவருடைய காதல் பெருக்கு வழிந்து புறப்பட்ட சொல் ஆகை அன்றோ –-பக்தர்களுக்கு ஹிதமாக-பராங்குசர் அருளிச் செய்தவை –
முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து-தரிக்க ஒண்ணாத படியான-பரம பக்தியால் பிறந்த தாயிற்று-இத் திருவாய்மொழி-இந்த அவாவிற்கு உதவிற்றிலன் ஆகில்-ஈஸ்வரனுக்கு சைதன்யம் இன்றிக்கே ஒழியும் –
சூழ் விசும்பு அணி முகில் -என்ற திருவாய் மொழிக்கு முன்பு-பர பக்தியாலே சென்றது –
சூழ் விசும்பு அணி முகில் -என்ற திருவாய் மொழி -பர ஞானத்தால் சென்றது
இத் திருவாய்மொழி -பரம பக்தியாலே –
பகவானுடைய திருவருள் பாதியும்-தாங்கள் பாதியுமாக சொல்லுமவர்களுக்கு-
சரீரத்தின் முடிவிலே இப் பரபத்தி முதலானவைகள் உண்டாகும்-
இவர் அடியிலே மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே-எழுந்து அருளி இருக்கும் போதே உண்டாயின –கர்மத்தாலும் ஞானத்தாலும் உண்டாகின்ற பக்தியினுடைய இடத்திலே–சர்வேஸ்வரனுடைய திருவருள் நிற்க – அது அடியாக பிறந்த-பரபக்தி பர ஞான பரம பக்திகள் அன்றோ இவரது –
அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே –இதனை அறிந்தவர்கள்-இவ் உலகத்தில் பிறந்து வைத்தே-நித்ய சூரிகளோடு ஒப்பர் –பிறந்தே உயர்ந்தார் –சர்வேஸ்வரனுடைய அவதாரம் போன்றதாம்-இவர்களுடைய பிறப்பும் –பிறக்க பிறக்க அவனுக்கு உதகர்ஷம் உண்டானாப் போலே -அனுக்ரஹ நிபந்தனம் சர்வேஸ்வரன் அவதாரம் —
பக்தி பூர்வகமாக பிறந்த பிரபந்தம் -பரமபக்தி அளவும் –வேதத்துக்கும் பரிக்ரகம் கிடைத்ததே ஆழ்வார் வாயனவாய் ஆனதால்-பொற்குடம் ஆனதே சர்வரும் அனுபவிக்கும் படி –
———————————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply