ஸ்ரீ ஆறாயிரப்படி –10-9-11-
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-
சர்வேஸ்வரனாய் ஸ்ரீ யபதியாய் இருந்த எம்பெருமான் தானும் வந்து எதிர் கொள்ளத்
திரு மா மணி மண்டபத்திலே சென்று
அந்தமில் பேரின்பம் விளையும்படியாக அயர்வரும் அமரர்களோடே கூடத் தாம் இருந்தமையைச் சொன்ன
இத்திருவாய் மொழியை வல்லார்
அந்தமில் பிரின்பத்து அடியரோடு இருக்கப் பெறுவார் என்கிறார் –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-9-11-
நிகமத்தில் இத்திருவாய் மொழி அப்யஸிக்க வல்லார் வைகுந்தத்து முனிவரோடு ஒப்பர் -என்கிறார் –
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-
வந்தவர் எதிர் கொள்ள--பிராட்டியோடே கூட எம்பெருமான் தானும் வந்து எதிர் கொள்ள –அயர்வறும் அமரர்கள் -என்றுமாம் -திருமா மணி மண்டபத்திலே பரம ப்ராப்யரான அயர்வறும் அமரர்கள் நடுவே ஆனந்த நிர்ப்பரராய்க் கொண்டு இருந்தமையை -மிகவும் பூத்த பொழிலொடு கூடின திரு நகரியை யுடைய ஆழ்வாருடைய உக்தியாய் சந்தோ ரூபமான ஆயிரம் திருவாய் மொழியிலும் –
———
ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-9-11-
அநந்தரம் இத்திருவாய் மொழிக்குப் பலமாக பகவத் அனுபவத்தை அருளிச் செய்கிறார் –
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து–ஸ்ரீ மஹா லஷ்மீ ஸஹாயரான அவர் தாமே வந்து
எதிர் கொள்ள திரு மா மணி மண்டபத்திலே
வந்தவர் எதிர் கொள்ள என்று -பிரதானரான விஷ்வக் சேனாதிகள் ஆகவுமாம்
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை-முடிவின்றியே அபரிச்சின்னமான ஆனந்தத்தை யுடைய
ஸூ ரிகளோடே கூடி இருந்த பிரகாரத்தை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்–பூங்கொத்து அலருகிற பொழிலை யுடைய திரு நகரிக்கு
நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்ததாய்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–சந்தஸ்ஸூக்களான வ்ருத்த பேதங்களை யுடைய ஆயிரத்தில்
இப்பத்தையும் அனுசந்திக்க வல்லவர்கள் பரமபதத்தில் பகவத் குண மனன சீலராவார்கள்
சந்தஸ்ஸூக்கள் என்று வேதமாகவுமாம்
இது கலி விருத்தம் –
—————
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-9-11-
நிகமத்தில் இத்திருவாய் மொழி அப்யஸிக்க வல்லார் வைகுந்தத்து முனிவரோடு ஒப்பர் -என்கிறார் –
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-
வந்தவர் எதிர் கொள்ள--பிராட்டியோடே எம்பெருமான் தானே வந்து எதிர் கொள்ள -அப்ராக்ருதரான அயர்வறும் அமரர்கள் என்றுமாம் –
மா மணி மண்டபத்து-ஆனந்த மயமான திரு மா மணி மண்டபத்திலே –
அந்தமில் பேர் இன்பத்து –யவாதாத்ம பாவியாய் நிரதிசயமான ஆனந்தத்தை யுடையராய்க் கொண்டு -ஆனந்த நிர்ப்பரராய்க் கொண்டு –சம்சாரத்தில் துக்கத்துக்கு எல்லை யுண்டாகில் யாய்த்து -அஸ் ஸூகத்துக்கு அவதி சொல்லலாவது –
அடியரொடு இருந்தமை––அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -என்று ஆசைப் பட்ட படியே இருந்தமையை -அவர்களும் தங்களுக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு துணை தேடி இ றே இருப்பது –கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்--நித்ய வசந்தமான சோலையை யுடைத்தான திரு நகரியை யுடைய ஆழ்வார் அருளிச் செய்த –போக்கிலே ஒருப்பட்ட வாறே திரு நகரி தொடங்கி சோலை செய்தால் போலே இருக்கை –
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–சந்தங்களை யுடைத்தான ஆயிரம் என்னுதல் -சந்தோ ரூபமான ஆயிரம் என்னுதல் -இப்பத்தையும் அப்யஸிக்க வல்லார் அத்தேசத்திலே பகவத் குண அனுபவம் பண்ணி -அதிலே வித்தராய் அதுக்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாதே இருக்குமவர்களைப் போலே யாவர் –
————
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-9-11-
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-
பகவத் அனுபவம் பலம் -மனன சீலர் முனிவர் -பகவத் அனுபவம்
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து-வந்து அவர் எதிர் கொள்ள -பெருமாளும் பிராட்டியும் சேர்ந்து -லஷ்மீ ஸஹாயர் அவரே –
பிரதான விஷ்வக் சேனர் முதலானோர் என்றுமாம் –
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை-நித்ய முக்தர்கள் உடன் இருந்தமையை -முடிவு இல்லாதவாகவும் அபரிச்சின்னமானவாகவும் -இருந்த பிரகாரத்தை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்-பூ கொத்து -திரு நகரிக்கு நிர்வாகர்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே-ஆயிரத்து பத்து -இங்கு இவை பத்தும் சொல்லாமல் -பர பக்தி தசையில் -அப்படி
விருத்தம் பேதங்கள் உண்டே வெண்பா பா இனம் போல்வன -இவை இந்த பத்தையும் அனுசந்திக்க வல்லார்
-வைகுந்தது அமரர் முனிவர் -குண நிஷ்டர் -குண மனன சீலர் ஆவார்கள்
சந்தஸ் -வேதம் ஆகவுமாம் -தமிழ் வேதரூபம் என்றவாறு –
நிகமத்தில்
இத் திருவாய் மொழியைக் கற்றவர்-நித்ய சூரிகளோடு ஒப்பர்-என்கிறார்-
வந்தவர் எதிர் கொள்ள –
அவர் வந்து எதிர் கொள்ள –
வடிவுடை மாதவன் -அவர் -பிராட்டி யோடு கூட எம்பெருமான்-தானே வந்து எதிர் கொள்ள –
அன்றிக்கே –
இந்த பிரகிருதி சம்பந்தம் இல்லாத -நல் வேதியர் -அயர்வறும் அமரர்கள் எதிர் கொள்ள -என்னவுமாம் –
மா மணி மண்டபத்து –
ஆனந்த மயமான திரு மா மணி மண்டபத்திலே –
அந்தமில் பேர் இன்பத்து –
அநந்த கிலேச பாஜநம் சம்சாரம் –எல்லை இல்லாத கிலேசங்களுக்கு எல்லாம் எதிர் தட்டே அன்றோ –
இந்த உலக வாழ்க்கையில் சுகம் என்று மயங்கும் இத்தனையே உள்ளது துக்கமேயாம்-
பாண்டு ஒருவன் மேல் -மான் உருக் கொண்ட மனைவி உடன் சேர்ந்த முனிவன் -மேல் அம்பை விட-சாபம் -கொடுத்து –
இவ் உலக வாழ்க்கையில் ஆயிரம் கூற்றில் ஒரு கணம் ஆயிற்று சுகம் உள்ளது-
அதனையும் அனுபவிக்க ஒட்டிற்று இல்லையே -என்றானே அன்றோ –ரிஷிகளையும் மயக்கும் படி அன்றோ ஐம்புலன் இன்பங்கள் –
பர்வத பரமாணு வாசி இதனால் தானே -ரிஷிகள் -ஆழ்வார் -பெரியாழ்வார் -ஆண்டாள் -மதுரகவி ஆழ்வார் —
அநந்த ஸ்திர பலம் -இது -அல்ப அஸ்திர பலம் அது என்றவாறு –
அடியரொடு இருந்தமை –
அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -2-8-10 என்று ஆசைப் பட்டபடியே இருந்தமை –
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்-
எப்பொழுதும் மலர்களை உடைத்தான சோலையாலே-சூழப் பட்ட-திரு நகரியை உடைய ஆழ்வார் அருளிச் செய்த –
போக்கிலே ஒருப்பட்ட வாறே திரு நகரியே தொடங்கி போலே காணும் சோலை செய்வது -அலர் –
அந்தமில் பேர் இன்பத்து -ஆழ்வாருக்கும் கொள்ளலாம்
சந்தங்கள் ஆயிரத்து –
விருத்தங்களை உடைத்தான ஆயிரம் -என்னுதல்
சந்தோ ரூபமான -வேதத்தின் உருவான ஆயிரம் -என்னுதல் –
இவை வல்லார் முனிவரே –
இப்பதத்தினை கற்க வல்லார்-
அப் பரம பதத்திலே பகவான் உடைய குணங்களை அனுபவித்து-அவற்றிலே ஈடுபட்டவராய்-
அதற்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாதே-இருக்குமவர்களைப் போலே ஆவார்கள்- இங்கேயே முக்தர்களைப் போலே ஆவார்கள் –
வகுள மாலை -சாத்தி -சேஷத்வ ஸூ சகம் -குறவன் கொண்டை -கிளி கொண்டை நித்யம் சாத்தி சேவை சாதிப்பார் –
குறட்டில் எழுந்து அருளி -கொட்டு வந்ததா -என்பர் -ஆச்சர்யமான உத்சவம் –
நாலாயிரம் -ஸ்ரீ வசன பூஷணம் -ஆச்சார்ய ஹிருதயம் பெண்கள் நித்ய அனுசந்தானம் ஆழ்வார் திருநகரியில்
-ஞானம் பிரேமம் மிக்கு -ஆழ்வார் மேலே வெய்யில் படாமல் –
——————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply