ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-8-7-

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-8-7-

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-

என்னுள் அடங்காதே பொங்கிப் புறப்படுகிற பரம பத்தி அவசான ரூபமாய் –
இவ்வாத்மாவினுடைய பகவத் சேஷத்வ ப்ரதிபாதகமான திரு மந்திரத்தினால் ப்ரதிபாத்யமாய் இருந்த பகவத் கைங்கர்ய
ஏக ரதித்வத்தைப் பெற்ற நான் கண்கள் ஆர அளவும் நின்று கண்டு களிக்கும் படியாகத்
திருப்பேரான் என் கண்ணுள் நின்று அகலான்-
இப்படி அவனை புஜித்துக் களிக்கப் பெற்ற எனக்கு இனிமேல் அநவாப்தவ்யமாய் இருபத்தொரு ப்ராப்யம் உண்டோ என்கிறார் –

—————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-8-7-

தமக்கு உண்டான கார்த்தார்த்த்யத்தை அருளிச் செய்கிறார் –

உண்டு  களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-

மேலான தாஸ்ய ரசம் பெருகினால் -அதன் முடிவில் ஆற்றாமை சொல்லும் -நம-என்கிற சொல்லைச் சொல்லப் பெற்றேன் -வண்டு களிக்கிற பொழில் சூழ்ந்த திருப் பேரான்-நான் கண்டு க்ருதார்த்தனாம் படி கண்ணுள்ளே நின்று அகலுகிறிலன்-இப்படி அவனை புஜித்துக் களிக்கப் பெற்ற எனக்கு இனி குறை யுண்டோ –

———————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-8-7-

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-8-7-

தமக்கு உண்டான கார்த்தார்த்த்யத்தை அருளிச் செய்கிறார் –

உண்டு  களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-

உண்டு களித்தேற்கு –ஞான அனுபவத்தால் களிக்கப் பெற்ற எனக்கு -இதுக்கு மேலே ஒன்றுமே வேண்டா -இதுவே அமையும் என்னும் படி ஞான அனுபவம் தானே இனிதாய் இ றே இருப்பது –
உம்பர் என் குறை -மேலே என்ன குறை யுண்டு –உம்பர் -மேல் –
மேலைத்தொண்டு உகளித்து –மேலான தாஸ்ய ரசம் அதிசயித்து -யேந யேந தாதா கச்சதி -என்கிற ரசத்தை அனுபவித்து -சேவாச்ச்வ வ்ருத்தி -என்கிற இது இ றே கீழான தாஸ்யம் –
அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்-முடிவிலே -தொழும் சொல்லுப் பெற்றேன் -அனுபவ ப்ரீதி தலை மண்டையிட்டால் -அதன் மேலே நம என்று புத்தி பூர்வகமாக சொல்லும் சொல்லைப் பெற்றேன் -நம இத்யேவ வாதின -இ றே -அதாவது ப்ரீதி வழிந்த சொல்லாலே திருவாய் மொழி பாடி அடிமை செய்யப் பெறுகை –
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்-வண்டுகள் மது பானம் பண்ணி களிக்கிற பொழில் சூழ்ந்த திருப் பேரிலே வர்த்திக்கிறவன் -ஞானாதிகரோடு திர்யக்குகளோடு வாசி அறக் களிக்கும் தேசம் –
கண்டு களிப்ப –மெய் கொள்ளக் காண விரும்பும் என் கண்கள் என்று விடாய்த்த கண்கள் கண்டு களிக்கும் படியாக –
கண்ணுள் நின்று அகலானே--நான் போகச் சொல்லிலும் கண் வட்டத்திலும் நின்றும் போகிறிலன் -விஷய பிரவணரை போகச் சொன்னாலும் தூணைக் கட்டிக் கொண்டு போகாதாப் போலே -இப்படி அவனை அனுபவித்துக் களிக்கப் பெற்ற எனக்கு இனி மேல் ஒரு குறை யுண்டோ –

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-8-7-

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-

நித்ய அனுபவம் பண்ணும் படி சந்நிஹிதன் -அனுபவிப்பதால் மேல் என்ன வேண்டும்
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்-தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
அதிகமான தாஸ்யம் -முடிவிலே நம தொழுகைக்கு வாசகம் சொல்லப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்-வண்டுகள் மது பானம் பண்ணி
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே -கண்டு ஹர்ஷிக்கும் படி -கண்ணுக்கு விஷயம் ஆன பின்பு

அவனுடைய ஆதாரத்தால்-தமக்கு குறை இல்லாமையை-அருளிச் செய்கிறார் –

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை –
இப்படி அனுபவித்துக் களிக்கப் பெற்ற-எனக்கு ஒரு குறை உண்டோ –
மயர்வற மதிநலம் அருளப் பெற்று-
அவனுடைய குணங்களை அனுபவித்த எனக்கு மேலே வேண்டுவது ஓன்று உண்டோ -என்கிறார் –
ஞானத்தை அடைந்த பிறகு -அவ்வருகில் உள்ள பரம பதத்தை-பெற்றிலோம் என்று வருவது ஒரு குறை உண்டோ –
உம்பர் -என்றது -மேல் -என்றபடி –

மேலைத் தொண்டு உகளித்து –
மேலான அடிமை இன்பம் மிகுந்து-
யேன யேன தாதா கச்சதி தேன தேன சஹ கச்சதி – பரம சம்ஹிதை –
பரம் பொருள் எந்த எந்த வழியில் செல்கிறானோ அவ்வவ் வழியிலே உயிரும் செல்கிறது –என்கிற இன்பத்தை அனுபவித்து –
சேவா ஸ்வவ்ருத்தி ஆக்யாதா தஸ்மாத் தாம் பரிவர்ஜயேத் – மனு ஸ்ம்ருதி -4-4-8
ஒருவனுக்கு அடிமையாக இருப்பது இழிந்த செயல் -என்றது போல் அன்றே –ஸ்வரூப அனுரூபமாக உள்ளதன்றோ இது –
தொண்டு உகளித்து –
தொண்டாலே உகப்புத் தலை மண்டை இட்டு –

அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்-
அந்தி தொழும் -என்கையாலே பலம் சொல்லிற்று
கைங்கர்ய ஏக ரச இன்பம் மிகுந்தால் -அதனுடைய முடிவிலே நம -என்று சொல்லுகின்றவர்கள் -என்று
மனம் அறியச் சொல்லுவது ஓன்று உண்டு-அப் பாசுரத்தைச் சொல்லப் பெற்றேன் –
முக்தாநாம் லஷணம் ஹி ஏதத் ஸ்வேத த்வீப வாஸிநாம்-பத்தாஞ்சலி புட ஹ்ருஷ்டா நம இதி ஏவ வாதின -பாரதம் மோஷம் -என்கிறபடியே –
அந்தி தொழும் -சரம நிலை -நம -பிராப்ய-விரோதி -ஸூ போக்துத்வ புத்தி -தவிர -கைங்கர்யம் செய்யும் பொழுது
எப்போதாவது வரலாம் என்பதால் எப்பொழுதும் ஸ்வேத தீப வாசிகள் சொல்லிக் கொண்டே இருப்பார்
யவாதாத்மபாபி -மற்றை நம் காமங்கள் மாற்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமே
மேலைத் தொண்டு –
அதாவது-ப்ரீதி வழிந்த சொல்லாலே திருவாய்மொழி பாடி-அடிமை செய்யப் பெறுகையைத் தெரிவித்த படி –

வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான் –
வண்டுகள் தேனைக் குடித்துக் களிக்கிற பொழிலாலே சூழப்பட்ட திருப் பேரிலே வசிக்கிறவன் -என்றது –
ஞானத்தாலே மேம்பட்டவர்களோடு-திர்யக்குகளோடு வாசி அறக் – களிக்கும் தேசம் -என்றபடி –

கண்டு களிப்ப –
மெய் கொள்ள காண விரும்பும் என் கண்கள் -3-8-4-என்று-விடாய்த்த கண்கள் கண்டு களிக்கும் படியாக –

கண்ணுள் நின்று அகலானே –
நான் போகச் சொல்லினும் கண் வட்டத்தில்-நின்றும் அகலுகின்றிலன்-
ஐம் புல இன்பங்களில் ஆசை உள்ளவர்கள் போகச் சொன்னாலும்-தூணைக் கட்டிக் கொண்டு போகாதவாறு போலே –
இப்படி அவனை அனுபவித்து களிக்கப் பெற்ற எனக்கு-மேல் ஒரு குறை உண்டோ –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading