ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-9-6-6-

ஸ்ரீ ஆறாயிரப்படி –9-6-6-

எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது
புன் கண்மை எய்திப் புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட் கரை ஏத்துமே-9-6-6-

ஒரு நாள் இங்கனே அவன் வஞ்சனையில் அகப்பட்டால் பின்னை அதில் அகப்படாதே பரிஹரிக்க ஒண்ணாதோ என்னில் –
நாள் தோறும் இவன் மெய்யே அடிமை கொண்டு அருள வருகிறான் என்று எனக்குத் தோற்றும்படி வந்து
அதி சபலமாய் என் ஆத்மாவை அறிவு அழியும்படி புஜித்துப் போம் –
போனவாறே பின்னையும் இவ்வாத்மாவானது ஸ்ரீ என் கண்ணன் நெடும் போதொடு கூட பிரபுத்தமாய் அவனை ஆசைப்பட்டு
என் கண்ணா என் கண்ணா என்று அலற்றி அவன் எழுந்து அருளி இருந்த
திருக் காட்கரையை ஏத்தா நிற்கும் என்கிறார் –

—————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –9-6-6-

என்னை அடிமை கொள்வாரைப் போலே வந்து மிகவும் நலியும் கிருஷ்ணனுடைய வஞ்சனங்களை அவனைக் கண்டவாறே மெய்யென்று இருப்பன் -என்கிறார் –

எம்  கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது
புன் கண்மை எய்திப் புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட் கரை ஏத்துமே-9-6-6-

அவன் வஞ்சகன் என்று ஒரு நால் அறிந்தால் பின்னை தப்பினாலோ என்னில் -எனக்கு பவ்யரைப் போலே இருக்கிற கிருஷ்ணனுடைய வஞ்சனங்கள் எனக்கு மெய்யாய் இருக்கும் —செம்மாய் நிற்கும் என்றது -சேமம் போலே இருக்கும் என்றுமாம் -அதி சபலனானவன் புஜித்த கோதான இவ்வாத்மா மீளவும் உயிர் பெய்து இராப்பகல் -எனக்கு பவ்யனான கிருஷ்ணனே -என்று கூப்பிட்டு அவன் எழுந்து அருளி இருந்த திருக் காட்கரையை ஏத்தா நின்றது  / புன் கண்மை -யாவது -பேகணிப்பு என்றும் சொல்லுவார் –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி –9-6-6-

அநந்தரம் அதி வ்யாமுக்தனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய வியாபாரங்கள் எனக்கு ருஜுவாய் இருக்கும் என்கிறார் –

எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது
புன் கண்மை எய்திப் புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட் கரை ஏத்துமே-9-6-6-

எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்–என் பக்கல் அத்யந்தம் வ்யாமுக்தனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய
முகப்பில் ஒன்றும் முடிவில் ஒன்றுமாம் படியான க்ருத்ரிம வ்யாபாரங்களானவை எனக்கு ருஜுவாயே இரா நின்றன –
எங்கனே என்னில்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது-அவன் வ்யாமோஹத்தாலே சபலனாயக் கொண்டு புஜிக்கையாலே
நிஸ் சாரமான இந்த என் ஆத்மாவானது -அவன் தன்னை சாராபஹாரம் பண்ணினத்தை உபகரித்தானாக நினைத்து
அவனை விட மாட்டாதே
புன் கண்மை எய்திப் புலம்பி இராப்பகல்–என் கண்ணன் என்று அவன் காட் கரை ஏத்துமே-தைன்யத்தை பிராபித்து
எனக்கு பவ்யனானவன் என்று இராப்பகல் பிரலாபித்து அவன் ஸந்நிஹிதனாய் நிற்கிற
திருக் காட்கரையை சொல்லா நின்றது
அம் கண்ணன் -அதி சபலன்
புன் கண்மை -பேகணிப்பாய் தைன்யம் என்றபடி
புல்லிதான கண்மையை எய்தி என்று அல்பம் அறிவு பெற்றது என்றும் சொல்லுவார்கள்

——————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -9-6-6-

அவன் க்ரித்ரிமன் என்று அறிந்தால் அதிலே இருந்து நெஞ்சாறால் படாதே நீர் அகன்றாலோ என்ன  அவனைக் கண்டவாறே அந்த வஞ்சகங்களை  மெய்யென்று இருப்பன் -என்கிறார் –

எம்  கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது
புன் கண்மை எய்திப் புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட் கரை ஏத்துமே-9-6-6-

எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்-எனக்கு பவ்யரைப் போலே இருக்கிற கிருஷ்ணனுடைய வஞ்சனங்கள் எனக்கு செவ்வையாய்த் தோற்றும் -அவன் களவிலே அகப்பட்டாலும் மீள மாட்டாதே -அவன் முகத்தே விழித்த வாறே அது எல்லாம் எனக்கு மெய்யாய் இருக்கும்
அவன் நமக்கு பவ்யன் அன்றோ -என் பக்கல் களவு பரிமாறுமோ -அவன் செய்தது எல்லாம் எனக்கு மெய் -என்றுமாம் –சேமம் போலே இருக்கும் என்றுமாம் –
நம் கண்ணன் கள்வங்கள் -என்று கீழ் முடிய –எம் கண்ணன் -என்று தொடங்குவான் என் -நாம் என்றும் யாம் என்றும் பர்யாயம் ஆகையால் பொருளிசை அந்தாதியாகக் கிடக்கிறது –எம் கண்ணன் கள்வங்கள்-என்ற பாடமாகில் நேரே கிடக்கும் –
அம் கண்ணன் உண்ட -அதி சபலனானவன் அனுபவித்த -அதி பிரவணனானவனை -அம் கண்ணன்-என்ன கடவது இ றே –
என் ஆர் உயிர்க்கோது இது–கோதான என் ஆத்மாவான இது -ஆத்மாவை கோதாம் படியாய்த்து பரிமாறிற்று –
புன் கண்மை எய்தி-பேகணிப்பு -பொல்லா நோக்கை யுடைத்தாய் -என்கை –மீளவும் உயிர்ப்பு பெய்து -என்றும் சொல்லிப் போரும் -ஸ்ருதமும் சப்தார்த்தமும் சேரும் படி என் என்று விசாரித்து -கோதான வாருயிர் பேகணிக்கும் போது மீளவும் உயிர்ப் பெய்ய வேணும் இ றே -என்று பிள்ளை அவிவிரோதேன அன்வயித்து அருளிச் செய்வர்
புலம்பி இராப்பகல்-என் கண்ணன் -என்று அவன் காட் கரை ஏத்துமே-முன்பு எனக்கு பவ்யனான கிருஷ்ணன் என்று அஹோராத்ர விபாகம் இன்றியே கூப்பிட்டு -அவன் வர்த்திக்கிற திருக் காட்கரையையே ஏத்தா நின்றது -ராகவஸ்ய நிவேசனே -என்னுமா போலே –

எம்பெருமான் என்னை அடிமை கொள்வாரைப் போலே வந்து புகுந்து என்னுயிரை மாள நேரே  புஜித்து பின்னையும் புஜியாதானாய் இருக்கும் –

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –9-6-6-

எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது
புன் கண்மை எய்திப் புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட் கரை ஏத்துமே-9-6-6-

அதி வியாமுக்தன் -ருஜுவாய் நேர்மையாய் இருக்கும் –
எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்-அத்யந்த வியாமுக்தன் -கிருத்ரிம வியாபாரங்கள்
எனக்கு நேர்மையாக இருக்கின்றன -எதனால் என்னில்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது–மீதி உள்ள ஆத்ம தத்வம் -காதலன் உண்ட பின்பு மீதி உள்ள கோது-
அழகிய கண்ணன் -பெரிய காதலன் -உண்ட மிச்சம் -சாரம் உண்ட பின்பு – இது தானே உபகாரம்
பரமாத்மா சம்பந்தம் ஏற்படுத்திய உபகாரம் -சாரம் அபகரித்ததால் –
புன் கண்மை எய்திப் புலம்பி இராப்பகல்-புல்லிய தீணா தன்மை -பவ்யன் என்று சொல்லி
புன் கண்மை எய்தி-அல்பம் அறிவு பெற்றது -என்றுமாம் –
என் கண்ணன் என்று அவன் காட் கரை ஏத்துமே-ஸ்துதிக்கும் –

அவன் வஞ்சகன் என்று அறிந்தால்-அதிலே கிடந்தது நெஞ்சாறல் படாமல்-நீர் அகன்றாலோ -என்ன
அவனைக் கண்டவாறே-அவ்வஞ்சகனை மெய் என்று இருப்பன் -என்கிறார் –

எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும் –
எனக்கு அடங்கினவனைப் போல் இருக்கிற-கிருஷ்ணன் உடைய வஞ்சனைகள்-எனக்குச் செவ்விதாகத் தோற்றும்
ஒரு நாள் அவன் களவிலே அகப்பட்டால் பின்னை மீள மாட்டேன் –
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்-காணேன் தவறல்லவை-திருக் குறள் –
அவன் முகத்திலே விழித்தவாறே அவன் செய்யுமவை அடைய-மெய்யாக இருக்கும் எனக்கு –
எனக்குச் செம்மாய் இருக்கும் -என்றதற்கு-எனக்கு சேமமாய் இருக்கும் என்று ஒரு தமிழ் புலவர் பொருள் கூறினார் –

நன்று –
நம் கண்ணன் கள்வங்கள் என்று மேல் திருப் பாசுரத்தில் முடிய-எம் கண்ணன் -என்று தொடங்குவான் என் எனில் –
நாம் என்பதும் யாம் என்பதும் ஒரு பொருள் சொற்கள் ஆகையாலே
பொருளிசை அந்தாதி ஆக இருக்கிறது
மேல் பாசுரத்தில் ஈற்றடியில்-எம் கண்ணன் கள்வங்கள் -என்ற பாடமாகில் நேரே கிடக்கும்

அம் கண்ணன் உண்ட –
மிக்க காதலை உடையனான கிருஷ்ணன் நுகர்ந்த –மிக்க காதலரை -அங்கண்ணர் -என்னக் கடவது அன்றோ –

என் ஆர் உயிர்க்கோது இது –
கோது என் ஆர் உயிர் இது-கோதான என் ஆத்துமாவான இது-ஆத்துமா கோதாம்படி காணும் செயல் புரிந்தது –

புன் கண்மை –
பேகணிப்பு-தீனம் -சிறிய ஞானம் இரண்டு அர்த்தங்கள் –
பொல்லா நோக்கை உடைத்தாய் என்கை-
புன் கண் -புல்லிய அறிவு-கண் -அறிவு-
பட்டர் -இதற்கு -மீளவும் அறிவை அடைந்து-மீள உயிர்ப் பெய்து -என்று ஆயிற்று நிர்வஹித்து போவது
இது தானே சொல்லோடு சேர்ந்து இருக்கிறது இல்லை-
கேட்கப்பட்ட இந்த பொருளோடு -சொல்லும் சேரப் பொருந்தி வழக்காறாம் படி எங்கனே-
என்று ஆராயா நிற்கச் செய்தே -நஞ்சீயர் நம்பிள்ளை உடன் ஆராயா நிற்கச் செய்தே –
கோதான இது மீளவும் புன் கண்மை எய்தும் போது மீளவும்-உயிர்ப் பெய்தது ஆக வேண்டும் அன்றோ –
பொருளின் தன்மையாலே தன்னடையே வரும் என்று-நான் -நம்பிள்ளை -சொன்னேன்-
சீயர் போர உகந்து அருளினார் -என்று அருளிச் செய்வர் –

புலம்பி இராப்பகல் என் கண்ணன் -என்று-
என் கண்ணன் -என்று -இராப் பகல் புலம்பி –
முன்பு எனக்கு அடங்கி இருந்தவனான கிருஷ்ணன் என்று-இரவு பகல் என்ற வேறுபாடு இன்றிக்கே கூப்பிட்டு –

அவன் காட் கரை ஏத்துமே –
அவன் எழுந்து அருளி இருக்கிற திருக் காட் கரையை ஏத்தா நின்றது-
சமா த்வாதச தத்ர அஹம் ராகவச்ய நிவேசனே-புஜ்ஞானா மானுஷான் போகான் சர்வகாம சம்ருத்தி நீ -சுந்தர -33-17-
இராகவனுடைய திரு மாளிகையிலே -என்னுமாறு போலே –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading