ஸ்ரீ ஆறாயிரப்படி –8-3-8-
என்றே என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-8-3-8-
அவன் சர்வஞ்ஞன் அல்லனோ -அறிந்து அருளாமை யுண்டோ நினையாமை யல்லது என்று பார்த்து
என்னை உன் ஏரார் கோலத் திருவடிக் கீழ் நின்றே ஆட்செய்யும்படி நீ விஷயீ கரித்து அருள நினைப்பது தான் என்று -என்று
அபேக்ஷித்து பின்னையும் அபேக்ஷிதம் செய்து அருளாது ஒழிந்தவாறே
நான் ஒரு உபாய அனுஷ்டானம் பண்ணாமையால் ஆகாதே அபேக்ஷிதம் செய்து அருளாது ஒழிகிறது -என்று பார்த்து –
உன்னுடைய கிருபையால் நிர்ஹேதுகமாக சர்வ லோகத்தையும் அளந்து அருளினால் போலே
அடியேனுடைய அபேக்ஷிதம் செய்து அருளாய் என்கிறார்-
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –8-3-8-
உன் திருவடிக்கு கீழ் என்னை நிலையாளாக கொள்வது என்று -என்று எம்பெருமானை ஆழ்வார் கேட்க்கிறார் –
என்றே என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-8-3-8-
அழகு மிக்கு இருந்துள்ள ஒப்பனை திருந்தின திருவடிக் கீழ் -சங்கு சக்கராதி திவ்யாயுத தரனாய் -ஸ்ரீ யபதியாய் -குல பர்வதங்கள் ஏழையும் -ஏழு த்வீபங்களையும் -ஏழு கடல் சூழ்ந்த பூமியையும் -எல்லா வற்றையும் நின்ற நிலையிலே அநாயாசேன அளந்து அருளின நீண்ட திருவடிகளையும் உடையையானவனே
நினைத்தது முடிக்க வல்லவனே -என்று கருத்து -லோகங்களை எல்லாம் அளந்த சிரமம் தீர அடிமை செய்யப் பெறுகிறிலேன் -என்றுமாம் –
———
ஸ்ரீ பன்னீராயிரப்படி –8-3-8-
அநந்தரம் அகில வஸ்து சம்ச்லேஷ ஸ்வ பாவனான நீ உன் திருவடிகளிலே நான்
அடிமை செய்யும்படி அங்கீ கரிப்பது என்று என்கிறார்
என்றே என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-8-3-8-
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும் நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-சப்த குல பர்வதங்களையும் –
சப்த த்வீபங்களையும் சூழ்ந்த அவ்வோ சமுத்ரங்களையும் பூமியாதியான சப்த லோகங்களையும் முழுக்க
நின்ற நிலையிலே நின்று கவடடித்துக் கொண்ட நெடிய திருவடிகளை யுடையனாய் –
அந்த சேஷித்வ ஸூ சகமான திருவாழியை யுடையனாய் ஸ்ரீ யபதியானவனே
என்றே என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ் நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்–உனக்கு சேஷ பூதனாய் பரிவனாய்
இருக்கிற என்னை ஸூ குமாரனாய் போக்ய பூதனான உன்னுடைய அழகு விஞ்சின திரு ஆபரண சோபையையும் யுடைத்தாய் –
ஸ்வாபாவிக ஸுந்தர்ய விசிஷ்டமான திருவடிகளின் கீழே -ஒரு காலும் பிரியாதே நின்று
உன்னுடைய ஸ்ரீ யபதித்தவ ஸுகுமார்யாதிகளுக்கு ஈடாக மங்களா சாசனம் பண்ணி அடிமை செய்வேனாம் படி
நீ கொண்டு அருளி உன் திரு உள்ளத்தால் அங்கீ கரித்து இது முழுக்க நிர்வகிப்பதாக நினைத்து அருளுவது தான் என்றாய் இருக்கிறது –
கொண்டு அருள நினைப்பது என்றும் சொல்லுவர்
என்றெல் -என்றதில் எல் அசை
——
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -8-3-8-
பிறரை விடீர்-உன் திருவடிக் கீழ் பரிகைக்கு நிலையாளாக என்னை கொள்வது என்று என்று அவன் தன்னையே கேட்க்கிறார் –
என்றே என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-8-3-8-
என்றே -உம்முடைய கார்யம் செய்கிறோம் என்ன -அது தான் என்று -என்கிறார்
என்னை -உனக்கு பரிந்து அன்றி உளனாகாது இருக்கிற என்னை
உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ்-உன் அழகு மிக்க ஒப்பனை திருந்தின திருவடிகளின் கீழே -மங்களா சாசனம் பண்ணி அல்லது நிற்க ஒண்ணாத திருவடிகள் என்கை –
நின்றே ஆட்செய்ய -தேஹிமே தாதாமித-என்று பிரயோஜனத்தை கொண்டு போகை அன்றிக்கே -விடாதே நின்று அடிமை செய்ய
நீ கொண்டருள-நான் கிடந்தானை கண்டு ஏறுகை அன்றிக்கே அடிமை செய்வான் என்று திரு உள்ளத்திலே கொண்டு அருளி
நினைப்பது தான்-நின்றே ஆடச்செய்ய -நினைப்பது தான் -அவன் நினைவுக்கே பல வ்யாப்தி உள்ளது -அபி நிவேசம் அப்ரயோஜம் என்று இருக்கிறார்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்-நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே––
வண் பரிசாரத்து இருந்த என்று எழுந்து அருளி இருக்கிற இருப்பு தனக்கே பரிய வேண்டி இருக்க -அதி மானுஷமான செயல்களை செய்தால் மங்களா சாசனம் பண்ணியே நிற்க வேண்டாவோ -சப்த குல பர்வதம் என்ன -சப்த த்வீபம் என்ன -அவற்றைச் சூழ்ந்த சப்த சமுத்திரம் என்ன இப்படி ஏழு வகைப் பட்ட பூமியை அடைய நின்ற நிலையிலே நின்று அளந்து கொள்ளும் படி நீண்ட திருவடிகளை உடையையாய் கையும் திரு வாழி யுமான ஸ்ரீ யபதியே-சங்க சக்ராதி திவ்யாயுத தரனாய் -ஸ்ரீயப்பதியாய் வைத்து காடுமோடையுமான பூமியை ஸூ குமாரமான திருவடிகளைக் கொண்டு அளந்துள்ள சிரமம் தீர சிசிரோபசாரம் பண்ணப் பெறுவது என்று காண் -என்கை -அரியன செய்ய வல்ல நீ நான் உன் திருவடிகளைக் கிட்டி அடிமை செய்யும் படி நினைத்து அருள வேண்டும் என்றுமாம் –
———
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –8-3-8-
என்றே என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-8-3-8-கொண்டு அருளி -பாட பேதம் –
அடிமை செய்யும் படி அங்கீ கரிப்பது என்றோ
கொண்டு அருளி -பாட பேதம் –
என்றே என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ்–பரிந்து கொண்டு -சேஷத்வ ஞானம் கொண்ட என்னை
ஸுகுமார்ய சோபை கொண்ட -ஸ்வ பாவிக ஸூந்தர்ய திருவடிக்கு கீழே
நின்றே ஆட் செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்-பிரியாமல் இருந்து -ஸ்ரீ யபதித்தவ ஸுகுமார்யத்துக்கு ஏற்ற
மங்களா சாசனம் பண்ணி அடிமை செய்யும் படி அங்கீ கரித்து -சங்கல்பித்து -என்றாக–என்று நினைவில் கொள்ளப் போகிறாய்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்-குல பர்வதங்கள் –ஏழு கடல்கள் -பூமி முதலான லோகங்கள்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-திருவடிக்கு கீழ் இட்டுக் கொண்டு -சர்வேஸ்வர ஸூ சகம் திரு வாழி
பிறரை விடீர்–
உம் திருவடிக் கீழ் பரிகைக்கு நிலை ஆளாக என்னைக் கொள்வது என்று–அவனைக் கேட்கிறார்-
சர்வஞ்ஞன் -மடி பிடித்துக் கேட்க்கிறார் –
என்றே –
உம்முடைய கார்யம் செய்கிறோம் அன்றோ -என்ன
அது தான் என்று என்கிறார் –
என்னை-
உன்னிடத்தில் பரிந்து அன்றி உளேன் ஆகாது இருக்கிற என்னை –
உன் ஏரார் கோலத் திருந்து அடிக் கீழ் –
அழகு மிக்க -ஒப்பனை திருந்தின உன் திருவடிகளின் கீழே -என்றது
மங்களா சாசனம் செய்து அல்லது நிற்க ஒண்ணாத திருவடிகள் -என்றபடி-
நின்றே ஆட் செய்ய –
எனக்கு கொடுப்பாய் உனக்கு கொடுக்கிறேன் -என்று பிரயோஜனைத்தைக் கொண்டு போகை- அன்றிக்கே
தேஹிமே ததாமி தே -யஜூர் வேதம் –எழுவார் விடை கொள்வார் போலே இல்லாமல் –விடாமல் அடிமை செய்ய
நீ கொண்டருள –
நான் கிடந்தானைக் கண்டு ஏறுகை அன்றிக்கே–அடிமை செய்வான் என்று திரு உள்ளத்தே கொண்டு அருள-
நினைப்பது தான் –
அவன் நினைவிற்கே பலத்தோடு சம்பந்தம் உள்ளது–தம்முடைய காதல் பலத்துக்கு காரணம் அன்று என்று இருக்கிறார் –
பேற்றுக்கு உபாயம் அவன் நினைவே -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் –
வண் பரிசாரத்து இருந்த -என்ற எழுந்தருளி இருக்கிற இருப்பு தனக்கு பரிய வேண்டி இருக்க–
மனிச செயல்களுக்கு அப்பால் பட்ட செயலைச் செய்தால்–மங்களா சாசனம் செய்து நிற்க வேண்டாவோ -என்கிறார் மேல்-
இருந்த திருக் கோலம் -ஈரடிக்கு பாடினால் மூவடிக்கு -பாட வேண்டாவோ –இருந்தவனுக்கு பாடினால் நடந்தவனுக்கு பாட வேண்டாவோ
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும் நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-
ஏழு குல மலைகள் என்ன – ஏழு தீவுகள் என்ன – அவற்றைச் சூழ்ந்து இருந்துள்ள ஏழு கடல்கள் என்ன-
இப்படி ஏழு வகைப் பட்ட பூமியை அடைய நின்ற நிலையிலே நின்று அளந்து கொண்டு அருளும்படி–
நீண்ட திருவடிகளை உடையையாய்-கையும் திருவாழியுமான திருமகள் கேள்வனே -என்றது –
சங்கு சக்கரம் முதலிய திவ்ய ஆயுதங்கள் உடைய திருமகள் கேள்வனாய் வைத்து-காடும் ஓடையுமான பூமியை முழுதும் நின்ற நிலையிலே–
மெல்லிய திருவடிகளைக் கொண்டு–அளந்த சிரமம் தீரக் குளிர்ந்த உபசாரம் செய்யப் பெறும் நாள் என்று -என்றபடி-
மேலைத் தண் மதியும் -கதிரவனும் தடவவோடு -அங்கும் சிசிரோபசாரம் -கீழே கதிரவன் தோற்றும் மேலைத் தண் மதி என்பதால் –
அன்றிக்கே
அரியன செய்ய வல்ல நீ–நான் உன் திருவடிகளை கிட்டி நின்று அடிமை செய்யும்படி-நினைத்து அருள வேண்டும் -என்கிறார் -என்றலுமாம்-
உன் திருவடிக்கு கீழே பரிகைக்கு நிலை ஆளாக அடியேனைக் கொள்ள வேண்டும் -என்று என்று நாள் குறித்து அருள வேண்டும்
————————————————————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply