ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-8-3-7-

ஸ்ரீ ஆறாயிரப்படி –8-3-7-

வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-8-3-7-

நான் இப்பாட்டு படா நிற்கச் செய்தே அவன் எழுந்து அருளாது ஒழி கிறது என்னுடைய வ்யஸனம் அறியாமை என்று பார்த்து
ஸ்வ கார்ய அர்த்தமாகப் போகிறாரும் வருகிறாரும் திருப் பரிசாரத்து ஏறப் போகிறாராகவும் அங்கு நின்று வருகிறாராகவும் நிச்சயித்து
அவர்கள் திருப் பரிசாரத்திலே எனக்குத் தாயும் தந்தையாய் என்னைத் தேடிக் கொண்டு இருக்கிற என் திரு வாழ் மார்வற்கு
நிரதிசய தர்சநீய ஸூ தர்சன ஸங்காதி திவ்யாயுதங்களைச் சுமந்து கொண்டு இந்த லோகத்தில் தனியே எழுந்து அருளும் போது
சாயையைப் போலே திரிவான் ஓர் அடியானும் உளன் என்று என் திறம் சொல்லார் -செய்வது என் -என்கிறார் –

—————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –8-3-7-

நான் அங்கு உதவப் பெறாதே அவசன்னன் ஆனால் என்னைப் போலே அஷமதை இன்றிக்கே நிரந்தரமாய் போவது வருவதாய் திரிகிறவர்களில் ஒருவர் ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-திருப் பரிசாரத்து என் ஸ்வாமி நியான பெரிய பிராட்டியார் சந்நிதியில் எம்பெருமானை தருவிப்பாரை பெறுகிறி லோமே-என்கிறார்

வருவார்  செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-8-3-7-

அழகு மிக்கு இருந்துள்ள திரு வாழி யையும் திருப் பாஞ்ச ஜன்யத்தையும் சாதரமாக தரித்துக் கொண்டு ஒரு பார்ஸவத்துக்கு எல்லாம் நிரந்தரமாக பரிவான் ஒரு அநந்ய பரனும் உளன் என்று –

—————————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –8-3-7-

அநந்தரம் கிஞ்சித் கரிக்கைக்குப் பிராட்டியோடே திருப் பரிசாரத்திலே இருக்கிறவர்க்கு உமக்குப் பரிவனாய்
இருப்பான் ஒரு கிங்கரன் உண்டு என்று ஒருவரும் சொல்லு கிறிலர் என்று வெறுக்கிறார்

வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-8-3-7-

வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்-அங்கு நின்றும் வருவார் இங்கு நின்றும் செல்லுவாராகிற அவர்கள்
விலக்ஷண சம்பத்தை யுடைத்தான திருப் பரிசாரத்திலே என்னை அடிமை கொள்ளுகைக்கு ஈடாக எழுந்து அருளி இருக்கிற
திரு வாழ் மார்வற்கு உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு– ஸ்ரீ மானுக்கு வடிவு அழகால் பொருத்தமான
திருவாழியையும் திருச் சங்கையும் தரித்துக் கொண்டு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே -இந்த விபூதியில் உம்மோடே கூட பார்ஸ்வ வர்த்தியாய்க் கொண்டு திரிவான்
அத்விதீயனாய் இருப்பான் ஒரு அடியானும் உளன் என்று
என் திறம் சொல்லார் செய்வதென்-என் இடையாட்டம் சொல்லுகிறிலர்கள் – வருகிறவர்கள் தம்மை அழைத்து வாராமையாலும்
போகிறவர்கள் ஒரு மறு மாற்றம் கேளாமையாலும்
இவர்கள் வரத்தும் போக்கும் தமக்காக வென்று நினைத்துச் சொல்லுகிறிலீர் என்கிறார்
இவர்கள் சொல்லாத அளவில் அவர் அறிந்து அங்கீ கரிக்கைக்கு செய்யலாவது என் என்று வெறுக்கிறார் –

——

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -8-3-7-

இங்கே வந்து திருப் பரிசரத்திலே எழுந்து அருளி இருக்க நான் உதவப் பெறாதே அவசன்னன் ஆனால் ஓர் அடியானும் உளன் என்று அவனுக்கு அறிவிப்பாரையும் பெறுகிறி லோம் என்கிறார் –

வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-8-3-7-

வருவார் செல்வார் –திரு நகரியில் நின்றும் திருப் பரிசாரத்திலே மஹா பாதகமாய் இசங்கா நிற்கும் -ஸ்வ காரியத்தால் த்வரித்து போவாரை நம் தசையை அங்கே அறிவிக்க போகிறார் என்றும் -அங்கு நின்று இங்கே வருவாரே நம்மை அழைக்க வருகிறார் என்றும் இருப்பர் -இயக்கம் அற்று இருக்கிறதன்று கிடீர்
வண் பரிசாரத்து இருந்த -திருப் பரிசாரத்தில் இருப்புக்கு மங்களா சாசனம் பண்ண வேணும்
என்-திரு வாழ் மார்வற்கு-அதுக்கு மேலே பிராட்டியோட்டை சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ண வேணும் -பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா-என்ற இளைய பெருமாளை போலே தொடர்ந்து அடிமை செய்ய வேண்டும் படி யாயிற்று இங்குத்தை இருப்பு
என் திறம் சொல்லார் -என் இடையாட்டம் ஒருவரும் சொல்லுகிறிலர்கள்
என்-திரு வாழ் மார்வற்கு-என் ஸ்வாமி நி சந்நிதி யாகையாலே சொன்ன வார்த்தை விலை செல்லும் கிடீர்
செய்வதென்-இதற்கு என்னால் செய்யலாவது என் –அங்கு சென்றால் சொல்லும் பாசுரம் என் என்னில்
உருவார் சக்கரம் சங்கு சுமந்து-அழகு மிக்கு இருந்துள்ள ஆழ்வார்களை சாதரமாக தரித்து என்னுதல் -திரு மேனிக்கு எல்லாம் வேறு ஆபரணம் வேண்டாதே தானே ஆபரணமாக போரும்படியான ஆழ்வார்கள் என்னுதல் -இங்கு -ஒரு நாடாக பரியும் தேசம் இ றே அது -பரிவாரும் இன்றிக்கே இருக்கும் தேசத்திலே
உம்மோடு-ஒருபாடு உழல்வான்-இடைவிடாதே ஒரு பார்ஸ்வத்தை பற்றி திரிவான் -ஒரு பார்ஸவத்துக்கு இளைய பெருமாள் உளர் இ றே
ஓரடியானும் உளன் என்றே–அநந்ய பரனாய் இருப்பான் ஒருவன் உளன் என்று -ச மஹாத்மா ஸூ துர் லப-என்று கை வாங்கி இருப்பர் –ஒருவன் உளன் என்று என் திறம் சொல்லார் -செய்வது என் –

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –8-3-7-

வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-8-3-7-

ஸ்ரம மனம் சூழும் ஸுகுமார்ய பிரகாசம் ஆய்ச்சேரியிலே –சூர்ணிகை -173-மனம் சூழும் படி ஸூ குமார்யம் பிரகாசிப்பித்தானே
ஒரே பாசுரம் -மங்களா சாசனம் –
மாயக் கூத்தன் -சாதரரைப் பரிசு அழிக்கும் சேஷ்டித ஆச்சர்யம் குளத்தே கொடி விடும் சூர்ணிகை -173-அங்கேயும் ஒரே பாசுரம் –
உடைய நங்கையார் -பிறந்த திவ்ய தேசம் -ஆய்ச்சேரி
கிஞ்சித் கரிக்கைக்கு பிராட்டி உடன் இருக்க -திரு வாழ் மார்பன் -திரு நாவாய் தனித் தாயார் சந்நிதி அங்கு மட்டும் மலையாள தேசத்தில்
உமக்கு பரிவராக ஒருவர் உள்ளார் என்று சொல்ல -கிஞ்சித் கரிக்கைக்கு –
வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
அங்கு நின்றும் வந்தும் -இங்கு நின்றும் செல்வார் -விலக்ஷண சம்பந்தம் -ஸ்ரீ மானுக்கு
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்-திருப்பதி சாரம் -திரு வண் பரி சாரம்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு-ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-இந்த விபூதியில் பார்ஸ்வத்திலே வர்த்திக்கும்
அத்விதீயன் -என் நிலையை உரைக்க ஆள் இல்லை
வருவார் என்னைக் கூட்டி அவனுக்கு திருக் கல்யாணம் -செய்ய வேண்டாமோ –
அவனை அழைத்து வராமலும் அவன் வார்த்தை கொண்டு வராமலும்
இவர்கள் போக்கு வரத்து தனக்காக என்ற திரு உள்ளம் -இனி -இவர்கள் சொல்லா விடிலும் அவன் அறியும் படி சொல்வது எங்கனம் –
பரிவதே வண்மை என்பதால் திருப்பரி சாரம் என்ற பெயரே நிலைத்து இன்றும் -அங்கே –

இங்கே வந்து திருப் பரிசாரத்திலே எழுந்தருளி இருக்க-
நான் உதவப் பெறாமல் துன்புற்றவனானால்-
ஓர் அடியானும் உளன் -என்று அவனுக்கு அறிவிப்பாரையும் பெறுகின்றிலோம் -என்கிறார்-

வருவார் செல்வார் –
திருநகரி யினின்றும் திருப் பரிசாரத்துக்கு பெருவளியாக இசங்கா நிற்கும் என்றது
இயக்கம் அற்று இருக்கிறது அன்று கண்டீர் -என்றபடி –

அன்றிக்கே
தங்கள் கார்யத்தாலே விரைந்து போவாரை தம் நிலை அறிவிக்கப் போகிறார்கள் என்றும்
அங்கு நின்றும் வருவாரை தம்மை அழைக்க வருகிறார்கள் என்றும் இருப்பார் -என்னுதல் –

வண் பரிசாரத்து இருந்த என் திரு வாழ் மார்வற்கு –
திருப்பரி சாரத்தில் இருப்பவர்க்கு பரிய வேண்டும்–அதற்கு மேல் பிராட்டி உடைய சேர்த்திக்கு பரிய வேண்டும்

அன்றிக்கே
சீதா பிராட்டியார் உடன் கூடிய தேவரீர் மலை அடிவாரத்தில் உலாவும் பொழுது-
நான் தேவரீருக்கு எல்லா நிலையிலும் எல்லா அடிமைகளையும் செய்வேன் ஆக -என்ற இளைய பெருமாளைப் போலே
பவாமஸ்து சஹ வைதேஹ்யா கிரி சாநுஷூ ரம்ஸ்யதே-அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்வபதஸ் சதே -அயோத்யா -31-25
தொடர்ந்து போய் அடிமை செய்ய வேண்டும்படி யாயிற்று இங்கு இருக்கும் இருப்பு -என்னுதல்-

என் திறம் சொல்லார் –
சொன்ன வார்த்தையை கேட்ப்பிப்பார் இல்லாமை சொல்லாது ஒழிகிறார் அல்லீர் கண்டீர் –

என் திரு வாழ் மார்பற்கு –
என் பிராட்டி சந்நிதி ஆகையாலே -சொன்ன வார்த்தை விலை செல்லும் கண்டீர் –
ஸ்ரீ பீடம் -ருக் வேதம் ஸ்ரீ நிவாஸன் –ஸ்ரீ பீடஸ்ய -க்ரீம் கச்ச -என்று சொல்லுமே

அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி தேபிஷ்ட்வா ஸாதயாமசி -ருக்கு -8-அஷ்டகம் -8-அத்யாயம் -13-வர்க்கம் –முதல் ருக்கு மந்த்ரம்
த்வயி அராயி சதி –குழந்தாய் நீ இஹ லோக பரலோக ஐஸ்வர்யம் இல்லாமல் இருந்தாயானால்
த்வயி காணே சதி -நீ வெளிக்கண்ணும் உள் கண்ணும் இல்லாதவனாய் இருந்தால்
த்வயி விக்டே சதி -நீ ஆத்யாத்மீகம் -ஆதி பவ்திக்கம் -ஆதி தைவிகம் -தாப த்ரயங்களால் பீடிக்கப் பட்டு இருந்தாயாகில் —கடம் -தாஹம்
த்வயி ஸதான்வே சதி -புருஷார்த்தங்களை பெற முடியாமல் பிரதிபந்தகங்கள் இருந்தால்
ஸ்ரீம் பீடஸ்ய -திருமகளுக்கு திரு மார்பினால் பீடமாகிய ஸ்ரீ நிவாசனுடைய
கிரிம் -திருமலையைக் குறித்து
ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி கச்ச -ஸ்ரீ நிவாசனுடைய பக்தர்களோடு சென்று சேர்
தேபி -அவர்கள் மூலமாகவே
த்வா ஸ்ரீம் பீடஸ்ய ஸாதயாமசி -நீ ஸ்ரீ நிவாஸனை வேண்டிக் கொள்ள தகுதி பெற்று இருக்கிறாய்-
சமர்பிக்கத் தகுதி பெற்று இருப்பாய் என்றுமாம் –

செய்வதென் –
இதற்கு மேல் என்னால் செய்யலாவது என் -தாங்கள் தங்கள் கார்யத்தின் நிமித்தம் போவார்கள் ஆகில்
நன்று அவர்கள் அங்கு போனால் சொல்லும் பாசுரம் யாது என்ன

உருவார் சக்கரம் சங்கு சுமந்து –
அழகு மிக்கு இருந்துள்ள ஆழ்வார்களை விருப்பத்தோடு தரித்து

அன்றிக்கே
திருமேனிக்கு எல்லாம் வேறு ஒரு ஆபரணம் வேண்டாதே தானே ஆபரணமாக போம்படியான ஆழ்வார்களைத் தரித்து -என்னுதல்

இங்கு –
பரிவர் இன்றிக்கே இருக்கிற இவ் உலகத்தில் –

உம்மோடு ஒருபாடு உழல்வான் –
இடைவிடாதே ஒரு பக்கத்தைப் பற்றி திரிவான்–ஒரு பக்கத்துக்கு இளைய பெருமாள் உளர் அன்றோ

ஓரடியானும் உளன் என்றே –
வேறு பிரயோஜனத்தை கருதாவனாய் இருப்பான் ஒருவன் உளன் என்று -என்றது
அந்த மகாத்துமாவானவன் கிடைத்தற்கு மிகவும் அரிது என்றபடியே –
பஹூனாம் ஜன்ம நாமந்தே ஜ்ஞானவான் மாம் பிரபத்யே-வாசுதேவ சர்வம் இதி ஸ மகாத்மா ஸூதுர்லப -ஸ்ரீ கீதை -7-19-

ஒருவர் இலர் என்று கை வாங்கி இருப்பர்-அது வேண்டா-
ஒருவன் உளன் என்று என் இடையாட்டம் சொல்லுகின்றிலர்கள் -என்கிறார் -என்றபடி –செய்வது என் –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்றே இருக்கும் ஒருவன் உளன் என்று சொல்லார் செய்வது என் –

————————————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading