ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-6-4-குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்-ப்ரவேஸம்

ஸ்ரீ ஆறாயிரப்படி —

இப்படி திரு விண்ணகரிலே எம்பெருமானைக் கண்டு அவனுடைய ஸர்வ நியந்த்ருத்வ ஸுசீல்ய ஸுந்தர்யாதி கல்யாண குணங்களை
அநு பாவித்து நிரதிசய ப்ரீதி யுக்தராய் சம்ஹு ராந்தரான ஆழ்வாரைக் கண்டு எம்பெருமான் ப்ரீதனாய் –
பிறந்தவாற்றில் இவருடைய இழவு எல்லாம் தீரும்படி
தன்னுடைய திவ்ய அவதாரம் தொடங்கித் திரு நாட்டில் எழுந்து அருளுகை பர்யந்தமாக நடுவுள்ள
ஸர்வ திவ்ய சேஷ்டிதங்களையும் காட்டி அருளக் கண்டு அநு பவித்து-
தத் அநுபவ ஜெனித நிரவதிக நிரவ்ருதியாலே பரிபூர்ண மநோ ரதனானேன்-என்கிறார் –

————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —

ஸ்ரீ ராம விருத்தாந்தத்திலே திருவடியைப் போலே ஸ்ரீ கிருஷ்ண விருத்தாந்தத்திலே சக்தரான ஆழ்வார் தாம் பிரணய கோபத்தால்
-மின்னிடை மடவாரிலே -எம்பெருமானோடு சம்ச்லேஷிப்பேன் அல்லேன் -என்று மிறங்கின நம்மை –
ஆவேன் என்னப் பண்ணி அருளின உபகாரகத்தை -நல்குரவிலே அனுசந்தித்து –
மாசறு சோதியில் -சேணுயர் வானத்து இருக்கும் என்கையாலே -தூரஸ்தன் என்று இன்னாதான ஆழ்வார்
-அணியவாய் எண்ணி முடிக்க ஒண்ணாதனவாய் உள்ள ஸ்ரீ கிருஷ்ண வ்ருத்தாந்தங்களை காட்டி அருளக் கண்டு
-தொல் அருள் நல் வினையால் சொல்லக் கூடுங்கோல் -என்று மநோ ராதித்த படியே இனிதாகப் பேசி அனுபவிக்கிறார்
பிறந்த வாற்றில்-பல ஹானியால் பேச மாட்டிற்று இலர்
குரவை ஆய்ச்சியரில் -எல்லா சேஷ்டிதங்களையும் தரித்துப் பேசுகிறார்-

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி —

நாலாம் திருவாய் மொழியில் -கீழ் விருத்த விபூதி யோகத்தால் தன் அகடி கடநா சக்தியைக் காட்டி -பல பிரதான சமர்த்தன்
என்கிற பிரதிபத்தியைப் பிறப்பித்த ஸர்வ ஸ்மாத் பரனுடைய ஸூக மத்வ ஸூச நார்த்தமாக
அவனுடைய அனந்த ஸாயித்தவத்தையும்
ஆச்சர்ய ஆகாரவத்தையும்
அதிசயித உஜ்ஜ்வல்யத்தையும்
அப்ராக்ருத விக்ரஹவத்தையும்
அர்த்திகளுக்கு அபேக்ஷிதா கரத்வத்தையும்
அந்நிய அபிமான நிவர்த்தகத்வத்தையும்
அதிசயித போக்ய ஆகாரத்தையும்
அர்த்தியாயும் அபேக்ஷிதம் தலைக் கட்டிக் கொள்ளூம் படியையும்
அசாதாரண சிஹ்ன யோகத்தையும்
பரஞ்சோதி ஸ்வரூபவத்தையும்
அனுசந்தித்து ஏவம் பிரகாரனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய மநோ ஹரியானா அகில சேஷ்டிதங்களையும் இங்கே இருந்து
அனவரத அனுபவம் பண்ணப் பெற்ற எனக்கு ஆர் இனி நிகராவர் என்று ஹ்ருஷ்டராய்க் கொண்டு
அவனுடைய ஸூப ஸூகத்வத்தை ப்ரதிபாதித்து அருளுகிறார் –

———

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி –

பிறந்தவாற்றிலே குணங்களை தரித்து நின்று அனுபவிக்க வல்லனாம் படி பண்ணி அருள வேணும் என்று சரணம் புக்கார்
-திரு வண் வண்டூரில் தூது விட்டார் –
அவன் வரக் கொண்டு மின்னிடை மடவாரிலே ப்ரணய ரோஷத்தால் அகலப் புக்க தம்மைச் சேர விட்ட உபகாரத்தை அனுசந்தித்தார் –
சர்வ நியந்தாவான மேன்மை யுடையவன் என்னை தாழ நின்று பொருந்த விட்டுக் கொள்வதே -என்று உபகார ஸ்ம்ருதியால் ஏத்தினார் –
இதில் ஸ்ரீ கிருஷ்ண அவதார சேஷ்டிதங்களை அனுசந்தித்து ப்ரீதர் ஆகிறார் –
பாவோ நான்யத்ர கச்சதி -என்று திருவடி ஸ்ரீ ராமாவதராத்திலே பிரவணனாய் இருக்குமா போலே இவரும் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் யாயிற்று பிரவணராய் இருப்பது
மாசறு சோதியில் -சேணுயர் வானத்து இருக்கும் –என்று தூரஸ்தன் -என்று இன்னாதாரான இழவு தீர
இந்த லோகத்தில் ஸ்ரீ பிருந்தாவனத்தில் பெண்களோடு பரிமாறின பரிமாற்றத்தைக் காட்டிக் கொடுக்க அனுசந்தித்து ப்ரீதர் ஆகிறார்
மானேய் நோக்கிலே தொல் அருள் நல் வினையால் சொல்லக் கூடுங்கோல் -என்று நாக்கு நீர் வந்து திரு நாமம் சொல்வது என்றோ
என்று ஆசைப்பட்ட இழவு தீர ஸ்ரீ கிருஷ்ண குணங்களை அனுபவித்து பேசி ப்ரீதர் ஆகிறார்
சன்மம் பல பல -விலேயிலும் -ஒரு குறைவிலன் என்றார்
இதிலும் என்ன குறைவு எனக்கு என்றார்
அதுக்கும் இதுக்கும் வாசி என் என்னில் -அங்கு சம்சாரிகளில் காட்டில் வ்யாவருத்தனாகப் பெற்றேன் என்றார்
இதில் குண அனுபவ ப்ரீதி பிரகர்ஷத்தாலே எனக்கு ஒரு குறைவு இல்லை என்கிறார் –

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி —

இத் திருவாய்மொழியில் ஆழ்வார் ஸ்ரீ வால்மீகி பகவானோடு ஒப்பர்.
அவனும் இராமாவதார மல்லது போக்கி அறியான்; அவனுடைய பிரபந்தமும் அப்படியே.
இவரும் கிருஷ்ணாவதாரம் அல்லது அறியார்;
இத் திருவாய்மொழி கிருஷ்ணனுடைய சரிதை ஒழிய வேறு ஒன்றைச் சொல்லாது.

அன்றிக்கே,
“சூரனே! என் எண்ணமானது வேறு இடத்தில் செல்வது இல்லை” என்று கொண்டு
‘பர நிலையும் கூட வேண்டேன்’ –
“ஸநேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:
பக்திஸ்ச நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி”- என்பது, ஸ்ரீராமா. உத். 40 : 16.
என்ற திருவடியைப் போலே யாயிற்று இவரும் கிருஷ்ணாவதாரம் ஒழிய வேறு ஒன்று அறியாதபடி என்னுதல்.

“சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான்” -5-3-9-என்கிறபடியே, கிட்டி நின்று அநுபவிக்கப் பெற்றிலோம் என்கிற இழவு தீர,
பூமியிலே ஆகப் பெற்றது;-அவதரித்து என்றபடி –
“தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங் கொல்?” -5-9-10-என்றே யன்றோ இவர் ஆசைப் பட்டது.
அதாவது,
நா நீர் வந்து திருநாமம் சொல்லுகையாகிறது புண்ணியத்தின் பலமே அன்றோ.

“பிறந்தவாறும்”-5-10- என்ற திருவாய்மொழியில் இவர்க்கு உண்டான இழவு எல்லாம் தீரும்படி
ஸ்ரீ பிருந்தாவனத்தில் நடந்த செயல்களைக் காட்டிக் கொடுக்கக் கண்டு,
அவை இறந்த காலத்தில் நடந்த செயல்கள் போலத் தோற்றுகை அன்றிக்கே,
சம காலத்தில் நடக்கும் செயல் போலே தோற்றக் கிட்டி நின்று அனுபவிக்கிறார்.

“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியிலே, ‘அல்லோம்’ என்று அகன்று முடிந்து போகப் புக்க தம்மை
‘ஆவோம்’ என்னச் செய்து சேரவிட்டுக் கொண்டபடியை நினைத்து,
இப்படி வல்லார் இவன் அல்லது இலர் கண்டீர்-6-3- என்று தலைக் கட்டுகிறாரா யிருக்கிறது.
(இப்படி 5-3- தொடங்கி 6-3 -இவ்வாறு தலைக்கட்டி இத்திருவாய் மொழி என்கிறார் ஆயிற்று )

“சன்மம் பல பல”-3-10- என்ற திருவாய்மொழியிலும் இப்படி இருப்பது ஓர் உவகை உண்டே;
அதற்கும் இதற்கும் வாசி என்? என்னில்,
அங்கு, இதர வியாவிருத்தி மாத்திரத்தால் உண்டான ஞான லாபத்தால் உண்டான உவகை;
இங்கு, அவன், தன் குணங்களை நேரே இவரை நெருங்கி அநுபவிப்பிக்க,
தம் வசப்பட்டவர் அல்லாதபடி அநுபவித்து உவகையராய் வாய் விடுகிறார்.

சன்மம் பல பல-3-10-அவதார சேஷ்டிதங்கள்
பிறந்தவாறும் -5-10 -அவதார சேஷ்டிதங்கள்
6-2/6-4- நேரே சங்கதி -6-3- பிராசங்கிகம்-சேர மாட்டேன் என்றவரை சேர்த்த வ்ருத்த கடநா சாமர்த்தியம் இடைச் சேர்க்கை
4-10-/5-2—நேரே சங்கதி –5-1- போலே – உபகார பரம்பரை சொல்லி அருளியது போலே –

சேஷத்வம் பாரதந்த்ர்யம் மறந்து -இருப்பதே ஆழ்வார் தம் வசம் இல்லை –
எனக்கு நிகர் யார் -ஸ்வாதந்த்ர்யம் தோன்ற அருளிச் செய்கிறார்
கிருஷ்ணானுபவம் இப்படி பண்ண வைக்கிறதே –

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading