ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-6-3-3-

ஸ்ரீ ஆறாயிரப்படி –6-3-3-

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகரில் சூழ்சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
புகர்கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே.-6-3-3-

நகர ஜன பஜ் ஞான அஜ்ஞ்ஞான தமஸ் பிரகாச அவ நிபவந ஸர்வ நியந்தாவாய் இருக்க சிகர மாடங்கள் சூழ்
திரு விண்ணகர் சேர்ந்த பிரானுடைய
நிரவதிக காருண்யம் அல்லது மற்று உஜ்ஜீவன உபாயம் இல்லை என்று தமக்கு
உஜ்ஜீவன உபாயமான காருண்ய புண்யத்தை அநு பவிக்கிறார் –

——

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-3-3-

நகரமும்  நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகரில் சூழ்சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
புகர்கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே.-6-3-3-

திரு விண்ணகர் சேர்ந்த பிரானுடைய கல்யாண குணங்களை ஒழிய ஒருவருக்கும் உத்தாரகம் இல்லை என்கிறார் -நகரமும் நாடுகளும்-சிறுமை பெருமையாலே விரோதம் சொல்லிற்று / நிலனாய் விசும்பாய்ச் -ரூபியான நிலனும் அரூபியான விசும்புமாய் / புகர்கொள் கீர்த்தி-என்றது திரு நாட்டில் காட்டில் திரு விண்ணகரிலே புகுந்த பின்பு அவனுடைய கல்யாண குணங்கள் நிறம் பெற்ற படி –

———–

ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-3-3-

அநந்தரம் ஞான அஞ்ஞான அநு பந்தி பதார்த்தங்களை விபூதியாக யுடைய சர்வேஸ்வரனுடைய
உஜ்ஜவலமான குண ப்ரத்தையை ஒழிய வேறு ஒருவருக்கும் உத்தாரகம் இல்லை என்கிறார் –

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகரில் சூழ்சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
புகர்கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே.-6-3-3-

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்-விசேஷ ஞான பிரசுரமான நகரமும் அவிசேஷஜிஞ்ஞா பிரசுரமான நாடும் –
தத் ஆகார ஹேதுவான ஞானமும் மௌக்த்யமுமாய் –
நிகரில் சூழ்சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்-அந்த ஞான அஞ்ஞான சாம்யத்தை யுடைத்தாய் ஒப்பு இன்றிக்கே
பரந்த ப்ரகாசமுமாய் தமஸ்விதமான இருளுமாய் இருளுக்கு சதானமான பூமியும் பிரகாச ஸ்தானமான ஆகாசமுமாய்
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்-சிகரங்களை யுடைத்தான மாடங்கள் சூழ்ந்த திரு விண்ணகரிலே
பொருந்தி வர்த்திக்கிற சர்வேஸ்வரனுடைய
புகர்கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே.-உஜ்ஜ்வல்யத்தை யுடைத்தான குண ப்ரதையை ஒழிய
சர்வருக்கும் உஜ்ஜீவன ஹேதுவான ஸூஹ்ருதம் இல்லை –

——

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-3-3-

திரு விண்ணகர் அப்பனுடைய கல்யாண குணங்களை ஒழிய வேறு ஒருவருக்கும் உத்தாரகம் இல்லை என்கிறார்  –

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகரில் சூழ்சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
புகர்கொள் கீர்த்தி அல்லால்இல்லை யாவர்க்கும் புண்ணியமே.-6-3-3-

நகரமும் நாடுகளும் –
சிறுமை பெருமையால் வந்த விரோதம் ஆதல் -நாகரிகர் போக பிரதானராய் உத்க்ருஷ்டராய் இருப்பார்கள் -நாட்டில் உள்ளார் அபக்ருஷ்டராய் தேஹ தாரண மாத்திரமே பிரயோஜனமாய் இருக்கும்மா தாழ்வு உண்டு -அத்தால் வந்த விரோதம் ஆதல் –
ஞானமும் மூடமுமாய்-ஞாதாக்களும் அஞ்ஞருமாய்
நிகரில் சூழ்சுடராய் இருளாய்
ஒப்பு இன்றிக்கே சூழப் பட்ட பரப்பை யுடைத்தான தேஜசாய் -அதற்கு எதிர்தலையான தமஸாய்
நிலனாய் விசும்பாய்ச்-கடினமான பூமியாய் -அச்சமான ஆகாசமாய்
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
சிகரங்களை சேர வைத்தால் போலே இருக்கிற மாடங்கள் சூழ்ந்த திரு விண்ணகரிலே நித்ய வாசம் பண்ணுகிற உபகாரகன்
புகர்கொள் கீர்த்தி அல்லால்இல்லை யாவர்க்கும் புண்ணியமே.
ஸத்பாவமே இ றே பரம பதத்தில் உள்ளது –அந்தகாரத்தில் தீபம் போலே புகர் பெற்றது -இங்கே இ றே கீர்த்தி -மின்னிடை மடவாரிலே இறாய்த்த நமக்கே அன்றியே இதில் இழியாதார்க்கும் கீர்த்தி யல்லது உஜ்ஜீவன சாதனம் இல்லை –

——

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-3-3-

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகரில் சூழ் சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்
சிகர மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்தபிரான்
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே.-6-3-3-

ஞான அஜ்ஞ்ஞான அனுபந்தி பதார்த்தங்கள் விபூதி சர்வேஸ்வரன் உஜ்ஜ்வலமான குணங்களே உத்தாரகம் –
நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்-விசேஷஜ்ஞ்ஞர் உள்ள இடம் நகர் -அவிசேஷஜ்ஞ்ஞர் உள்ள இடம் நாடு –
தத் தத் ஆகார ஞானம் மூடமும்
நிகரில் சூழ் சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்-ஒப்பு இல்லாத -பிரகாசம் -இருட்டுமாய் -இருளுக்கு ஸ்தானம் பூமியுமாய்
பிரகாச ஸ்தானம் ஆகாயம் சிகர மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்-பொருந்தி வர்த்திக்கும்
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே.-ஔஜ்ஜ்வல்யம் உடைய குண ப்ரதை
யாவர்க்கும் புண்ணியமே-யாவர்க்கும் உஜ்ஜீவன ஹேதுவான ஸூஹ்ருதம் இல்லை

நகரத்திலுள்ளவர்களும் நாட்டிலுள்ளவர்களுமாகி, அறிவும் அறியாமையுமாகி, ஒப்பு இல்லாமல் பரந்திருக்கின்ற ஒளியாகி இருளாகி,
நிலமாகி ஆகாசமாகி, சிகரங்களையுடைய மாடங்கள் நிறைந்துள்ள திருவிண்ணகர் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி யிருக்கின்ற
எம்பெருமானுடைய ஒளி பொருந்திய கீர்த்தியே யல்லாமல் எத்தகையார்க்கும் உய்வு பெறுதற்குரிய புண்ணியம் வேறு இல்லை.
ஆய் ஆய் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் என்க. பிரானுடைய கீர்த்தியல்லால் யாவர்க்கும் புண்ணியம் இல்லை என்க. புகர் – ஒளி.

திருவிண்ணகர் அப்பனுடைய கல்யாண குணங்களை ஒழிய
ஒருவர்க்கும் பிழைத்தற்குரிய வேறு வழி இல்லை என்கிறார்.
(நன்னகர் பிராப்யம் புண்யம் பிராப்பகம் )

நகரமும் நாடுகளும் –
போகமே மிக்கிருப்பாராய் இன்பம் நுகர்ந்திருக்கும் நகரத்திலுள்ளார்,
பயிர்த் தொழில் செய்து கொண்டு தேக யாத்திரையை நடத்திக் கொண்டிருக்கும் நாட்டிலே யுள்ளார்.
அன்றிக்கே,
அளவிற்கு உட்பட்டனவா யுள்ளவையும், அளவிற்கு உட்படாதனவா யுள்ளவையும் என்னலுமாம்.

ஞானமும் மூடமுமாய் –
பொருள்களின் தன்மைகளை உள்ளபடியே அறியக் கடவதான ஞானமும்,
அதனை மாறுபாடாக எண்ணக் கூடியதான அறியாமையும்.

நிகர் இல் சூழ் சுடராய் இருளாய் –
உபமானம் இல்லாததாய்க் கொண்டு எங்கும் பரந்து நிற்கிற ஒளியாய்,
அதற்கு எதிர்த்தட்டான இருட்டாய்.

நிலனாய் விசும்பாய் –
உருவத்தோடு கூடிய பூமியாய், உருவம் இல்லாத ஆகாசமுமாய்.
அன்றிக்கே,
கடினத் தன்மையையுடைய பூமியும், இலேசான ஆகாசமும் என்னலுமாம்.

சிகர மாடங்கள் சூழ் திரு விண்ணகர் சேர்ந்த பிரான் –
மலைகளின் சிகரங்களைக் கொண்டு வந்து வைத்தாற் போலே இருக்கிற மாடங்களாலே
சூழப்பட்ட திருவிண்ணகரிலே பொருந்தி நிற்கிற உபகாரகன்.

புகர் கொள் கீர்த்தி யல்லால் –
பரம பதத்தில் புகழ் மழுங்கி யாகாதே கிடப்பது.
அங்கு உள்ளாரில் தன்னில் குறைந்தார் இலரே!

மம ஸாதர்மியம் ஆகதா:” என்பது. ஸ்ரீ கீதை, 14 : 2.-4“
என்னுடைய உருவம் முதலானவற்றிற்குச் சமானமான உருவம் முதலானவற்றை அடைந்தவர்கள்” என்றும்
“பூர்ண சாம்யத்தை அடைகிறான்”-நிரஞ்ஜன: பரமம் ஸாம்யம் உபைதி” இது, முண்டகோபநிடதம்.- என்றும்,
“தம்மையே ஒக்க அருள் செய்வார்” -பெரிய திருமொழி, 11. 3 : 5.-என்றும் சொல்லுகிறபடியே,
தனக்குச் சமானமாயுள்ளவர்களாய் அன்றோ அங்குள்ளார் இருப்பது.
குறைவாளர்க்கு முகங் கொடுத்தால் அன்றோ புகழ் நிறம் பெறுவது.

யாவர்க்கும் புண்ணியம் இல்லை –
எல்லார்க்கும் உய்வு பெறுதற்கு வழி அது வல்லது இல்லை.
தாம் தாம் தேடிக் கொள்ளுமவை எல்லாம் கழுத்துக் கட்டியாமத்தனை.
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில் அவன் வர, ‘வேண்டா’ என்று முடிந்து போகப் புக்காரன்றோ.
இவன் பார்க்கும் உபாயம் இவனுக்கும் கழுத்துக் கட்டியாம்.
அவன் காட்டும் உபாயம் அவனுக்கும் காற் காட்டாம். –
போகு நம்பி சொன்னாலும் போக முடியாத கால் கட்டு அன்றோ
இது வன்றோ உபாயத்தில் அடிப்பாடு.-பரகத ஸ்வீகார பெருமை

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading