ஸ்ரீ ஆறாயிரப்படி –6-2-9-
உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9-
தன்னை எம்பெருமான் இப்படி வளைக்கச் செய்தேயும் அவனைக் கடாஷியாதே இருந்து தன் தோழிமாரோடு கூடச்
சிற்றில் இழைத்துச் சிறு சோறிட்டு விளையாடா நிற்க
இவளுடைய கடாக்ஷம் அல்லது தனக்கு ஆத்ம தாரணம் இல்லாமையால் ஏதேனும் ஒரு படியால்
இவள் நம்மைக் கடாக்ஷிக்க அமையும் -என்று பார்த்து
இவள் தன்னைப் பார்த்து அருளும்படியாக இவளுடைய சிற்றிலைத் தன்னுடைய திருவடிகளாலே அழித்து அருள –
இவளும் அவனுடைய திரு முகத்தைப் பார்த்து அவனுடைய திருக் கண்களின் அழகாலே வசீக்ருதையாய்
உன் பக்கலுள்ள ப்ரீதி அதிசயத்தாலே நெஞ்சு உருகிக் கொண்டு
உன் தாமரைத் தடம் கண் விழிகளாகிற வலையிலே நாங்கள் அகப்படுகைக்காக
எங்கள் சிற்றிலும் யாமடு சிறு சோறும் உன் திருவடியால் அழித்து அருளினாய் –
நாங்கள் விளையாடுகிற படியைக் கண்டு உகந்து கொண்டு
நிற்க மாற்றிற்று இல்லை -ஒன்றும் கிருபை இல்லை யாகாதே -என்று கொண்டு
தன்னுடைய அத்யாவசாயத்தை எம்பெருமான் தன் அழகாலே அழித்ததாக அவனை இன்னாதாகிறாள் –
————
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-2-9-
உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9-
எம்பெருமான் தன்னை போக ஒட்டாது ஒழிய -அவனைக் கடைக் கணியாது இருந்து தானும் தோழிமாரும் சிற்றில் இழைக்கை தொடக்கமான லீலா விநோத வியாஜத்தாலே-அந்நிய பரைகளாய் இருக்க -இவளுடைய வீஷி தாதிகளை ஒழிய தான் தரிக்க ஷமன் அல்லன் ஆகையால் -இவள் கடாஷிக்கைக்காக இவளுடைய சிற்றிலையும் சிறு சோற்றையும் தன திருவடிகளாலே சிதற -சிற்றில் அழித்த சீற்றத்தாலே-தன்னுடைய சங்கல்பத்தை மறந்து –அவன் முகத்தை பார்த்து -அவன் கண் அழகிலே ஈடுபட்ட பிராட்டி -நாங்கள் ப்ரீதி அதிசயத்தாலே நெஞ்சு உருகி தாமரைத் தடாகம் போலே மநோ ஹரமான உன்னுடைய திருக் கண்களின் நோக்காகிற வலையுள்ளே அகப்படும்படி பண்ணுகைக்காக எங்களுடைய சிற்றிலையும் -நாங்கள் அடுகிற சிறு சோற்றையும் உன் திருவடிகளாலே அழித்து அருளினாய் -எங்களுடைய லீலா விநோதங்களை கண்டு ப்ரீதனாய் உன்னுடைய முக ஒளி திகழ முறுவல் செய்து -நின்றிலை -இங்கனே செய்தவிடம் தக்கோர்மை செய்தாய் அல்ல என்று சொல்லி எம்பெருமானோடு சம்ச்லேஷியின் என்று தான் பண்ணின சங்கல்பத்தையும் அவன் தன்னுடைய ஸுந்தரியாதிகளாலே சிதிலம் ஆக்கின படியைச் சொல்லி அவனை இன்னாதாகிறாள் –
———————
ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-2-9-
அநந்தரம் இவன் தகைந்தவாறே கடக்கப் போய்ச் சிற்றில் இழைக்க -நம்மை அநு வர்த்தித்துப் போகாதே அநாதரித்தார்கள்
என்கிற சீற்றத்தால் சிற்றிலை அழிக்க
நாங்கள் உன் முக சோபையைப் பார்த்திருந்து சிற்றில் இழையாதபடி இத்தை அழித்தாயே
என்று இன்னாதாகிறாள்
உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9-
உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்–அகவாயில் உகப்பாலே நெஞ்சானது
உள்ளுருகி உன் தாமரை போலே இருக்கிற பெரிய திருக் கண்ணினுடைய பார்வைகளாகிற
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;– தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–வலைக்குள்ளே அகப்படுத்துகைக்காக எங்கள் சிற்றிலையும் –
நாங்கள் அடுகிற சிறு சோற்றையும் கண்டு உன்னுடைய திரு முகத்தில் ஓளி திகழும் படி முறுவல் செய்து பார்த்துக் கொண்டு
நில்லாதே உன் திருவடிகளாலே அழித்தாய்-இதில் ஓர் இரக்கமறச் செய்தாய்
இத்தால் ஆஸ்ரிதருடைய லீலா விபூதியில் பாரிப்பை அழிக்கும் என்னும் இடம் தோற்றுகிறது
——
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-2-9-
போக ஓட்டேன் என்றால் நினைத்த பரிமாற்றம் பெற்றால் அன்றோ இவனுக்கு பிரயோஜனம் உள்ளது -ஒரு தேச விசேஷத்திலே முக்தர் சம்சாரிகளோடு உறவு அற்று இருக்குமா போலே அந்நிய பரதை பண்ணுவோம் -என்று சிற்றில் இழைக்க தொடங்கினார்கள் -இவர்களுடைய வீஷிதாதிகளை ஒழிய தனக்கு செல்லாமையாலே இவர்கள் கடாஷிக்கைக்காக சிற்றிலையும் சிறு சோற்றையும் தன திருவடிகளாலே அழித்தான்-அத்தாலே இவர்களுக்கு சீற்றம் பிறந்து தங்கள் சங்கல்பத்தை மறந்து அவன் முகத்தை பார்த்து சொல்லுகிறார்கள் –
உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9-
உகவையால் நெஞ்ச முள்ளுருகி
பிரிந்து நெஞ்சை புண் படுத்துகையால் வந்த உருகுதல் ஒழிய -எங்கள் உகவையால் நெஞ்சம் உள்ளுருகி
உன் தாமரைத் தடம்கண் விழிகளின்-அகவலைப் படுப்பான் –
தாமரைத் தடாகம் போலே மநோ ஹரமான உன்னுடைய கண்ணிலே நோக்கு ஆகிற வலையுள்ளே அகப்படுத்துகைக்காக -த்ருஷ்ட்டி பந்தத்தாலே இ றே அநந்யார்ஹம் ஆக்குவது –
அழித்தாய் உன் திருவடியால்;
உன் சிற்றில் அழிக்க வேண்டும் பரிகரம் அமையாதோ இதுக்கு -ஜகத் உபஸம்ஹாரம் பண்ணுவது சங்கல்பத்தாலே இ றே -சங்கல்பத்தாலே யாதல் -கையாலே யாதல் அழிக்கல் ஆகாதோ
தகவு செய்திலை;
நிர்த்தயர் செய்வதைச் செய்தாய் -பிரிந்த போதே பிரணயித்தவம் போயிற்று இ றே -நீர்மை யுடையார் செய்வதுவும் செய்திலை-நான் செய்த குறை என் என்ன –
எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு-நின்-முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே-
எங்கள் லீலைகளைக் கண்டு ப்ரீதனாய் -நின் முகத்தில் ஒளி திகழ முறுவல் செய்து நிற்க -நாங்கள் சிற்றிலை தொட்டுக் கொண்டு இருந்து கடைக் கண்ணாலே உன்னைப் பார்த்துக் கொண்டு இருக்க வைத்திலையே -முழுக்க பார்க்கில் எல்லோரையும் பாதி யுமாமே -பிரணயியைப் பார்ப்பது கடைக் கண்ணாலே இ றே -உன்னுடைய லீலை போலே என்று இருந்தாயோ எங்களுடைய லீலையை –கர்மா நிபந்தம் ஆகையால் த்யாஜ்யம் இ றே இது -உன்னோடே சம்ஸ்லேஷியன் என்று நான் பண்ணின சங்கல்பத்தை அழகாலே அழித்தாய்-லீலைகளைத் திருவடிகளாலே அழித்தாய் என்று இன்னாதாகிறாள்-
———
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-2-9-
உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம் கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறு சோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9-
இவன் தகைந்தவாறே நகன்று போக -அநு வர்த்தித்து போகாமல் -காலால் சிற்றிலை அழிக்க –
நீ உன் முக சோபையைப் பார்க்காமல் -நல்லது கண்டால் பொறுக்க மாட்டாமல் -லௌகிகர் நல்லது பிரயோஜ நாந்தரம் -தானே –
தன் விபூதியும் தன்னையும் மட்டும் அழிக்காமல் -அது தானே அநந்ய பிரயோஜனம்
உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம் கண் விழிகளின் -அகவாயில் உகவையால் -ஆனந்தமாக
அக வலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;-எங்களை அகப்படுத்திக் கொள்ளாமல்
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்-எங்கள் சிற்றிலையும் சோற்றையும் அழிக்க
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே-பார்த்துக் கொண்டு நிலாதே -நின் முகம் உளவாகில் நோக்கிப் போ என்றாள்-
தகவு நியாயம் இறக்கம் இல்லாமல் ஆஸ்ரிதர் உடைய லீலா விபூதி ஆதாரம் அழிக்கும்
மகிழ்ச்சியாலே மனமானது உருகும்படியாக, உனது தாமரை போன்ற விசாலமான திருக் கண்களின் பார்வையாகிற வலைக்குள்ளே அகப்படுத்துவதற்கு,
எங்களுடைய சிற்றிலையும் யாங்கள் சமைக்கின்ற சிறு சோற்றினையும் பார்த்துக் கொண்டு நினது முகத்தின் ஒளி திகழும்படியாகப் புன்முறுவல்
செய்து கொண்டு நின்றாய் இல்லை; உன் திருவடியால் அழித்தாய்; அதனால் தக்க காரியத்தைச் செய்தாயில்லை.
நெஞ்சம் உள் உருக, கண்டு திகழ முறுவல் செய்து நின்றிலை; சிற்றிலையும் சிறு சோறும் உன் திருவடியால் அழித்தாய்; தகவு செய்திலை என முடிக்க.
உருக என்பது, உருகி எனத் திரிந்து நின்றது. வலை அகப்படுப்பான் முறுவல் செய்து நின்றிலை என்க. அகவலைப் படுப்பான் என்பதனை,
வலை அகப்படுப்பான் எனப் பிரித்துக் கூட்டுக. பிரித்துக் கூட்டாது, நின்றவாறே பொருள் கோடலுமாம்.
முற்றிலைப் பந்தைக் கழங்கைக் கொண்டோடினை முன்னும், பின்னும்
அற்றிலை தீமை, அவை பொறுத்தோம்; தொல்லை ஆலினிளங்
கற்றிலை மேற்றுயில் வேங்கடவா! இன்றுன் கான்மலரால்
சிற்றிலைத் தீர்த்ததற்குப் பெரு வீட்டினைச் செய்தருளே.- என்ற அருமைத் திருப்பாசுரம்
இங்கு நினைவிற்கு வருகின்றது. திருவேங்கடத்தந். 97.
“இவன் ‘போகவொட்டேன்’ என்று வளைத்துக் கிடந்ததற்குப் பிரயோஜனம் உள்ளது
இவன் நினைத்தபடி பரிமாறப் பெற்றால் அன்றோ? ஒரு தேச விசேடத்திலே முக்தர் சம்சாரிகளோடு உறவு அற்று
இருக்குமாறு போன்று இவன் முகம் பாராதே இருக்கிறோம்” என்று அறுதியிட்டுப் பேசாதே இருந்தார்கள்;
பின்னர், நாம் இங்ஙனம் இருப்பின் இவன், ‘தன்னை நினைத்துக் கொண்டிருந்தோம் என்று இருப்பான்’ என்று
‘வேறு ஒன்றிலே நோக்குள்ளமை தோற்றச் சிற்றில் இழைப்போம்’ என்று இழைக்கப் புக
‘என்னைப் பாராதே இருப்பது மன்றிக்கே வேறு ஒன்றிலே சிறிது நோக்குள்ளவர்களாகவும் இருப்பதே’ என்று
சிற்றிலையும் சிறு சோற்றினையும் தன் திருவடிகளாலே அழிக்க, அதனாலே அவர்களுக்குச் சீற்றம் பிறந்து,
தாங்கள் கொண்ட கொள்கையை மறந்து அவன் முகத்தைப் பார்த்துச் சொல்லுகிறார்கள்.
அவனுடைய விருப்பம் நிறைவேறுவதற்கும் சாதனம் திருவடிகள் காணும்.
அடி யுடையார்க்கெல்லாம் சாதித்துக்கொள்ளலாமே.
அவனுக்கு அபிமதம் திருவடியால் பெற்றானே -அடி -ஐஸ்வர்யம் -திருவடி
உகவையால் நெஞ்சம் உள் உருகி –
வாராய்! உன் செயல் பயன் இல்லாத செயல் காண்;
பிரிந்து நெஞ்சினைப் புண்படுத்துகையாலே வந்த உருகுதல் ஒழிய,
எங்களுக்கு உகவையால் நெஞ்சம் உள்உருகப் பண்ணவன்றோ நீ பார்த்தது; அது செய்யப் போகாது.
உன் தாமரைத் தடம் கண் விழிகளின் அக வலைப் படுப்பான் –
பகல் கண்ட குழியிலே விழவிட்டு அகப்படுத்துவான்;
திருஷ்டி பந்தத்தாலே யன்றோ தனக்கே உரிமையாக்குவது.
தாமரையைப் போலே வாசனையையும் குளிர்த்தியையும் சிவப்பையுமுடைத்தாய், அநுபவிக்கின்றவர்களால்
உண்டறுக்க ஒண்ணாத இன்ப மிகுதியை யுடைய திருக்கண்களின் நோக்காகிற வலையுள்ளே அகப்படுத்துகைக்காக.
அகவலை –
வலைக்குள்ளே.
அன்றிக்கே,
அகவிய வலை -என்றுமாம்;
கண்ணென்னும் நெடுங் கயிறே அன்றோ, நாய்ச்சியார் திரு. 14 : 4.-. 6‘
கண்ணிலே அகப்பட்டால், ஜன்னி ஜு ரத்தாலே பீடிக்கப்பட்டவர்களைப் போலே பிதற்றுமித்தனை அன்றோ.
“தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலை மகனை”-திருவாய்.2. 6 : 3.-என்பதன்றோ மறை மொழி.
உன் திருவடியால் அழித்தாய் –
தன் சிற்றிலை அன்றோ சங்கல்பத்தால் அழிக்கலாவது;
இவர்களுடைய சிற்றிலைத் தொட்டு-ஸ்பர்சத்தால் மட்டுமே அழிக்க வேணுமே;
உன் சிற்றில் அழிக்கும் பரிகரம் அமையாதோ இதற்கு? உலகத்தை அழிப்பது சங்கல்பத்தாலே அன்றோ.
அடியவர்களுக்குத் திருவடிகள் உத்தேசியமாமாறு போன்று காதலிமார்கட்கும் உத்தேசியமாய் அன்றோ திருவடிகள் இருப்பன.
அழித்தாய் –
வெறும் சிற்றிலை அன்று காண் நீ அழித்தது;
எங்கள் அக வாயையும் நீ அழித்தாய் காண்;
சிற்றிலோடு எங்கள் சிந்தையையும் சிதைத்தாய் காண்.முற்றத்தூடு புகுந்து” என்ற
நாய்ச்சியார் திருமொழி திருப்பாசுரம் அனுசந்தேயம். 2 : 9.- 6
காலாலே சிற்றிலை அழித்து, கண்ணாலே எங்கள் எண்ணங்களையும் அழித்தாய் காண் என்கிறார்கள்.
தகவு செய்திலை –
கிருபையுடையார் செய்வதைச் செய்திலை.
பிரிந்த போதே அன்புடைமை போயிற்றே யன்றோ; இனிக் கண்ணுடையார் செய்வதும் செய்திலை என்னுதல்.
கண் படைத்ததற்குப் பிரயோஜனம் நல்லது கண்டு கொண்டிருத்தலன்றோ?
உன் முகத்தன கண்கள் அல்லவே? -இது,நாய்ச்சியார் திருமொழி, 2 : 5.-
‘நான் செய்த குறை என்?’ என்ன,
எங்கள் சிற்றிலும் யாம் அடு சிறு சோறும் கண்டு நின் முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலை –
உன் படைப்பினைப் போன்று கொள்ளத் தக்கதாகாததோ எங்கள் படைப்பு? கொள்ளத் தக்கதன்றோ?
‘என்னுடைய படைப்புக் கொள்ளத் தகாததாயினவாறு என்? உங்கள் படைப்புக் கொள்ளத் தக்கதாயினவாறு என்?’ என்னுமே அவன்;
உன்னுடைய படைப்புப் போன்று நெருப்பும் காற்றும் அன்னலும் துன்னலுமாக விட்டுக்
கருமங்கட்குத் தகுதியாகப் படைக்கப்பட்டதோ இது?
வண்டல் நுண்மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப்பட்டுப் படைக்கப்பட்ட தன்றோ இது.
அன்னல் – வெயில். துன்னல் – சிறு திவலை. ‘வண்டல்’ என்று தொடங்கும்
இவ்விடத்தில் “குண்டு நீர் உறை” என்ற நாய்ச்சியார் திருமொழி,திருப்பாசுரம் அநுசந்தேயம். 2 : 3.
நீ அடு சிறு சோறு
நிர்மால்யத்தைப்போன்று புறம்பு ஒருவர்க்கு உண்ணலாகாது; நீயே உண்ணுமத்தனை;
நாங்கள் அடு சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி இருந்து
உண்ணு மத்தனை யன்றோ என்பார் ‘யாம் அடு சிறு சோறும்’ என்கிறார்கள்.
‘கண்டு நின்முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே’ என்றதனால்
எங்களுடைய லீலா விநோதங்களைக் கண்டு பிரீதனாய், உன்னுடைய
முக ஒளி திகழப் புன்முறுவல் செய்து நிற்க மாட்டிற்றில்லையே;
இங்ஙன் செய்தவிடம் தக்கோர்மை செய்தாயல்லையே என்று தங்களுடைய இன்னாமையைத் தெரிவிக்கிறார்கள்.
தகவு செய்திலை –
நாங்கள் சிற்றில் இழைக்கிறோமாகப் பாவித்துக் கடைக் கண்ணாலே உன் முக ஒளியையும் முறுவலையும்
கண்டு கொண்டிருக்க வொட்டிற்றிலையே? முழுக்கப் பார்க்கில் எல்லாரையும் போன்றவர்களாவோமே?
காதலனைப் பார்ப்பது கடைக் கண்ணாலே யன்றோ?
எங்ஙனே பாராதே இருந்து சிற்றில் இழைத்தார்கள் தாம்!
எய்ய வில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும் மெய் விளை விடத்து முதலையம் விட லுற்றாள்
ஐயனை யகத்து வடிவேயல புறத்தும் கை வளை திருத்துபு கடைக் கணி னுணர்ந்தாள்.- என்றார் கம்பநாட்டாழ்வார்.
——————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply