ஸ்ரீ ஆறாயிரப்படி –4-5-10-
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-
நிகில ஜெகன் நிஹரண- உத்கரண-சயன -ஸ்தான -ஆசன -சம்ஸ்லேஷாதி ஸ்வ கீரை திவ்ய சேஷ்டிதங்களாலும்
ஸ்வ அசாதாரண திவ்ய ஸுந்தர்யத்தாலும்-ஸ்வ கீய திவ்ய ரூபத்தாலும் தனதே உலகு என நின்றான் றன்னை
திருவாய் மொழி பாடுகைக்கு ஒரு மஹா பாக்யம் பண்ணினேன்
பகவத் ஸ்வரூப ரூப குண விபூதி யாதாம்ய ப்ரதர்சகமாய்-அதி மதுரமாய் -அதி ரமணீய ஸுந்தர்யமாய் அதி மதுர ஸ்வரமாய் இருந்த
இத்திருவாய் மொழியை எம்பெருமானுக்கு நல்லராய் இருப்பார் கேட்டால் என் படுவாரோ என்கிறார் –
————
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –4-5-10-
தாம் பாடுகிற கவிகளின் இனிமையை தாம் அனுசந்தித்து எம்பெருமானுக்கு நல்லராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
இவற்றைக் கேட்டால் எங்கனே இனியராய் இருக்கிறாரோ என்கிறார் –
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-
உண்டும் உமிழ்ந்தும் -இத்யாதி
உண்பது உமிழ்வது தொடக்கமாக உண்டான திவ்ய திவ்ய சேஷ்டிதங்கள் எல்லா வற்றாலும் கண்டபடியால்
தனக்கே சேஷம் இஜ் ஜகத்-என்று சொல்லும் படி நின்ற சர்வேஸ்வரனை
கொண்ட கோலத்தோடு வீற்று இருக்கை யாவது -எல்லாருடைய மன நயன ஹாரியாம் படி ஒப்பித்து வீற்று இருக்கை
மணம் கூடுகையாவது -பூமிக்கு அபிமானியான பிராட்டியோடே சம்ச்லேஷிக்கை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.-
திருவாய்மொழி பாடுகைக்கு பாக்யம் பண்ணினேன் –
வண்தமிழ் -ஆகையாவது -எம்பெருமானை உள்ளபடி காற்றவற்றாகை
இன்ப மாரியே.–இன்பத்தை உண்டாக்கும் மேகம் –
————
ஸ்ரீ பன்னீராயிரப்படி –4-5-10-
அநந்தரம் வியாப்ய விஷய ரக்ஷண அர்த்தமான மநோ ஹாரி சேஷ்டிதங்களை யுடையவனை
ஆஸ்ரிதர்க்கு ஆனந்தாவஹமாம்படி கவிபாட பாக்யம் பண்ணினேன் -என்கிறார் –
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்–பிரளய ஆபத்தில் திரு வயிற்றிலே வைத்தும் -அநந்தரத்திலே உமிழ்ந்தும்
அந்நிய அபிமானம் போம்படி அளந்து திருவடி கீழே இட்டும் -அவாந்தர பிரளயத்தில் ஸ்ரீ வராஹ ரூபியாய் இடந்து எடுத்தும்
கடற்கரையிலே கிடந்தும் -ராவண வத அநந்தரம் தேவர்களுக்கு காட்சி கொடுத்து நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்–மீண்டு வந்து திரு அபிஷேகம் பண்ணின திருக் கோலத்தோடே எழுந்து அருளி இருந்தும்
நித்ய உத்சவமாம் படி ஸ்ரீ பூமிப் பிராட்டியோடே ஸம்ஸ்லேஷித்து ராஜ்ஜியம் பண்ணியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை–இப்படி ப்ரத்யக்ஷ ஸித்தமான சேஷ்டித பிரகாரங்களாலே
பிராமண நிரபேஷமாக லோகம் தனக்கே சேஷம் என்று நாடாகச் சொல்லும்படி நின்ற சர்வேஸ்வரனைப் பற்ற
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–விலக்ஷணமாய் சர்வாதிகாரமான திராவிட பிரபந்தத்தை நிர்மிகைக்கு-
அவனுடைய அங்கீ காரமாகிற புண்யத்தைப் பண்ணினேன்
அவனுக்கு அடியாராக பாகவதருக்கு இப்பிரபந்தம் ஆனந்த வர்ஷியான மேகமாய் இறே இருக்கிறது –
———
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -4-5-10-
அவன் சேஷ்டிதங்கள் அடங்க என் சொல்லுக்குள்ளே யாம்படி கவி பாட வல்லேனாய் ப்ராப்த விஷயத்திலே வாசிகமான
அடிமை செய்யப் பெற்ற அளவன்றிக்கே-ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆனந்தாவஹன் ஆனேன் -என்கிறார் –
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
பிரளய ஆபத்தில் திருவயிற்றிலே வைத்து நோக்கியும்
திருவயிற்றிலே இருந்து நெருக்கு படாத படி வெளி நாடு காண உமிழ்ந்தும்
மஹா பாலி போல்வார் பருந்து இறாஞ்சினால் போலே பறித்துக் கொண்டால் எல்லை நடந்து மீட்டும்
பிரளயம் கொண்ட பூமியை மஹா வராஹமாய் அண்ட புத்தியில் செல்ல முழுகி எடுத்துக் கொண்டு ஏறியும்
பஹும் புஜக போகாய முபத்தாயாரி ஸூ தன-அஞ்சலிம் பிராங்முக க்ருத்வா ப்ரதிசிஷ்ய மஹோததே -என்று கிடந்த கிடையிலே
லங்கை குடி வாங்கும் படியாக ஒரு கடல் ஒரு கடலோடேசீறி கிடந்தால் போலே கடற்கரையிலே கிடந்த படி
அவஷ்டப்யச்ச திஷ்டந்தம் ததர்ச தநு ரூர்ஜிதம்-என்று நின்ற நிலை
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும்
உடஜே ராம மாஸீனம் -என்று இருந்த இருப்பதால் –
ஷாத்ரமான ஒப்பனையோடே பதினோராயிரம் ஆண்டு இருந்த இருப்பதால்-
மணம் கூடியும்-
பதினோறாயிரம் ஆண்டு பூமியை ரஷிக்கையாலே பூமிக்கு அபிமானியான பிராட்டி விரும்பி அணைக்க அவளோடு சம்ச்லேஷித்தும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை–
பிரமாணம் கொண்டு அறிய வேண்டாதே-அநாத்யனுபவமே கொண்டு இவனது என்று அறியலாய் இருக்கை –
ஒருவன் ஒரு க்ஷேத்ரத்தை திருத்துவது எரு இடுவது க்ருஷி பண்ணுவது ஆகா நின்றால் இது இவனது என்று அறியலாம் இ றே
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு
திருவாய்மொழி பாடுகைக்கு பாக்யம் பண்ணினேன் –
வண்தமிழ்-ஆவது பழையதாகச் செய்தவை இவர் பேச்சாலே இன்று செய்த செயல் போலே ஸ்பஷ்டமாய் இருக்கை
சிர நிர்வ்ருத்தம் அப் யேதத் ப்ரத்யக்ஷம் இவ தர்சிதம்
அடியார்க்கு இன்ப மாரியே.
ப்ராப்த விஷயத்தில் அடிமை செய்யப் பெற்ற இதுவேயோ
இது ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆனந்தாவஹமும் ஆயிற்று-
இன்ப மாரி-
இன்பத்தை உண்டாக்கும் மேகம்
இது எனக்கு இருக்கிறபடி கண்டால் உகக்கிறவர்களுக்கு எங்கனே இருக்கிறதோ என்கை
தொண்டர்க்கு அமுது உண்ண சொல்மாலைகள் சொன்னேன் –
———
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –4-5-10-
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-
வியாப்ய விஷய ரஷண அர்த்தமான மநோ ஹார சேஷ்டிதங்கள்
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்-கிரியா பதங்கள் எல்லாம் -வைத்து -கடந்தது அளந்தது –
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் -மீண்டு வந்து திருப் பட்டாபிஷேகம் செய்து அருளி
மணம் கூடியும்-நித்ய உத்சவமாய் -திருக்கல்யாணம்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை-சேஷ்டித பிரகாரங்கள் மூலம் –பதிம் விச்வச்ய -பிரமாணம் –
சேஷம் -காட்ட -பிரமாணம் வேண்டாமே –
தனக்கே சேஷம் நாடாகச் சொல்லுமே
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.-
அருள் மாரி-கலியன் -திராவிட பிரபந்தம் -விலஷணம்-சர்வாதிகாரம் –
பாட அவன் அங்கீ காரம் ஆகிய புண்ணியம் பெற்றேனே –
பாகவதர்களுக்கு ஆனந்த வர்ஷி –
எண்ணில் அடங்காத சேஷ்டிதங்களை எண்ணிப்பாடின இவற்றுக்குள் அடங்கும் -அகடிகடநா சாமர்த்தியம்
பிரளய காலத்தில் உலகத்தையெல்லாம் புசித்தும், பிரளயம் நீங்கியவுடனே வெளி நாடு காண உமிழ்ந்தும், திரிவிக்கிரமனாய் அளந்தும்,
வராக அவதாரமாய் இடந்து எடுத்தும், கடற்கரையிலே கிடந்தும், இலங்கையில் போர் முடிந்த பின்பு தேவர்களுக்குக் காட்சியளித்து நின்றும்,
மீண்டு வந்து மகுடாபிஷேகம் செய்த திருக்கோலத்தோடு வீற்றிருந்தும், இராச்சிய பரிபாலனம் செய்தும் போந்த காரியங்களைக்
கண்கூடாகப் பார்த்த தன்மையால் இந்த உலகமெல்லாம் தனக்கே உரிமைப்பட்டவை என்று சொல்லும்படி நின்ற சர்வேசுவரனைப் பற்றி
வளப்பமான தமிழ்ப்பிரபந்தத்தைச் செய்வதற்குப் புண்ணியத்தைச் செய்தேன்;
இப்பிரபந்தமானது அடியார்க்கு இன்பத்தையுண்டாக்கும் மேகமாகும்,’ என்கிறார்.
‘மணங்கூடியும் செய்து போந்த காரியங்களைக் கண்ட ஆற்றால்’ என விரித்துக்கொள்க.
அவன் செயல்கள் அடங்க என் சொல்லுக்குள்ளேயாம்படி கவி பாட வல்லேனாய், வகுத்த சர்வேசுவரனிடத்திலே வாசிகமான அடிமை
செய்யப்பெற்ற அளவன்றிக்கே, ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஆனந்தத்தையுண்டாக்கக் கூடியவனாகவும் பெற்றேன்,’ என்கிறார்.
உண்டும் –
பிரளய ஆபத்திலே திருவயிற்றிலே வைத்து நோக்கியும்.
உமிழ்ந்தும் – திருவயிற்றிலேயிருந்து நெருக்குப்படாதபடி வெளி நாடு காணப் புறப்பட விட்டும்.
கடந்தும் – மஹாபலி போல்வார் பருந்து இறாஞ்சினாற் போலே பறித்துக்கொண்டால் எல்லை நடந்து மீட்டும்.
இடந்தும் – பிரளயம் கொண்ட பூமியை மஹாவராஹமாய் அண்டப் பித்தியிலே செல்ல முழுகி எடுத்துக்கொண்டு ஏறியும்,
கிடந்தும் – என்றது,
‘பகைவர்களை அழிக்கின்ற ஸ்ரீராமபிரான் பாம்பின் உடல் போலே இருக்கிற திருக்கையைத் தலையணையாகக் கொண்டு, கிழக்கு
முகமாகக் கையைக் கூப்பிக்கொண்டு கடலை நோக்கிச் சயனித்தார்,’ என்கிறபடியே, கிடந்த கிடையிலே இலங்கை குடி வாங்கும்படியாக,
ஒரு கடல் ஒரு கடலோடே சீறிக் கிடந்தாற்போலே கடற்கரையிலே கிடந்தபடியைத் தெரிவித்தவாறு.
நின்றும் –
‘கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற ஸ்ரீ ராமபிரானைத் தாரையானவள் கண்டாள்,’ என்கிறபடியே, நின்ற நிலை
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் –
‘பர்ணசாலையில் எழுந்தருளியிருப்பவரும் சடை மரவுரி இவற்றைத் தரித்தவருமான ஸ்ரீ ராமபிரானை ஸ்ரீ பரதாழ்வான் பார்த்தார்,’ என்கிறபடியே,
இருந்த இருப்பாதல்; க்ஷத்திரியர்களுக்குரிய ஒப்பனையோடே பதினோராயிரம் ஆண்டு இருந்த இருப்பாதல்.
மணம் கூடியும் –
பதினோராயிரம் ஆண்டு தன் படுக்கைப் பற்றான பூமியைக் காப்பாற்றுகையாலே ஸ்ரீ பூமிப்பிராட்டி அணைக்க, அவளோடே கலந்தும்.
கண்ட ஆற்றால் உலகு தனதே என நின்றான் தன்னை –
பிரமாணங்கொண்டு அறிய வேண்டாமல், தொன்று தொட்டு வருகின்ற அனுபவம் கொண்டு,
‘இவனுக்கே உரிமை’ என்று அறியலாய் இருக்கை; என்றது, ஒருவன் ஒரு நிலத்தைத் திருத்துவது கமுகு வைப்பது
எரு இடுவதாய்க் கிருஷி பண்ணாநின்றால், ‘இது இவனது’ என்று அறியலாமே அன்றோ?’
ஒத்தி நிலத்தில் கமுகு வைக்க மாட்டார்கள் —
‘பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே,’ –திருவாய். 6. 3 : 5.-என்னக் கடவதன்றோ?
வண் தமிழ் நூற்க நோற்றேன் –
திருவாய்மொழி பாடுகைக்குப் பாக்கியம் செய்தேன். தன்னைச் சொன்ன மாத்திரத்தில் எல்லாப் பலன்களையும்
கொடுக்கக் கூடியதான உதார குணத்ததாய் இருத்தலின், ‘வண்தமிழ்’ என்கிறது.
அன்றிக்கே.
இது முன்னே நடந்ததாயிருந்தாலும் இப்பொழுது நேரிற்கண்டது போல இருக்கின்றது,’ என்பது போன்று,
லவ குசர்கள் பாட பாட நடந்த ராம சரித்ரம் மக்களுக்கு விளங்கினது போலே –
பழையதாகச் செய்தவை இவர் பேச்சாலே இன்று செய்த செயல் போலே விளக்கமாய் இருத்தலின், ‘வண்தமிழ்’ என்கிறது என்னுதல்.
‘கண்டவாற்றால்’ என்று நேரில் பார்ப்பதாய் இருக்கிறதே அன்றோ?
அடியார்க்கு இன்பமாரியே –
சர்வேசுவரனைக் கவி பாடப் பெற்ற இதுவேயோ? இது, வைஷ்ணவர்களுக்கு ஆனந்தத்தை உண்டாக்கக் கூடியதாகவும் ஆயிற்று.
இன்பத்தையுண்டாக்கும் மேகம் ஆதலின், ‘இன்பமாரி’ என்கிறது.
‘இது எனக்கு இருக்கிறபடி கண்டால், இது உகக்குமவர்களுக்கு எங்ஙனே இருக்கிறதோ!’ என்கை.
‘தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்,’ என்றாரே அன்றோ?
————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply