ஸ்ரீ ஆறாயிரப்படி –4-5-9-
வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தனை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–4-5-9-
ஸ்வர்க்காதி உபரிதந லோகங்களுக்கும் பிருதிவ்யாதி அதஸ்தன லோகங்களுக்கும் தத் அந்தரவர்த்தி அகில சராசரங்களும் ஆத்ம பூதனாய் –
சங்க சக்ர கதாதரனாய் -ஆஸ்ரித பரித்ராணார்த்தமாக மனுஷ்யாதி ரூபேண அவ தீர்ணனாய்-அதி மநோ ஹர திவ்ய சேஷ்டிதனாய்-
ஸ்ரீ வைகுண்ட நாதனாய் இருந்த எம்பெருமான் தன்னைக் கவி சொல்ல வல்ல என்னோடு ஒக்குமோ –
சர்வேஸ்வரனான எம்பெருமான் தான் -என்கிறார் –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –4-5-9-
அவனுடைய வ்யாபித்தியாவதாரங்களில் எங்கும் புக்கு கவி சொல்ல வல்லேன் என்று ஹ்ருஷ்டராகிறார் –
வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தனை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–4-5-9-
ஸ்வர்க்கம் தொடக்கமான மேலில் லோகங்களிலும் பூமி தொடக்கமான கீழில் லோகங்களிலும் அவ்விடங்களில் எல்லாம் உண்டான
தேவ மனுஷ்யாதி பதார்த்தங்கள் எல்லா வற்றிலும் நிரந்தரமாக வியாபித்து நின்றவனை
சங்கு சக்கர கதா தரனாய்க் கொண்டு அப்ராக்ருத திவ்ய தேகத்தோடே ஆஸ்ரித பரித்ராண அர்த்தமாக மனுஷ்யாதி ரூபேண வந்து
திருவவதாரம் பண்ணி அருளி அதி மநோ ஹரமான குடக்கூத்து முதலான திவ்ய சேஷ்டிதங்களை உடையனான
ஸ்ரீ வைகுண்ட நாதனைக் கவி சொல்ல வல்ல எனக்கு எதிர் உண்டோ –
———
ஸ்ரீ பன்னீராயிரப்படி –4-5-9-
அநந்தரம் -வியாப்தி தசையோடு அவதார தசையோடு வாசியற விளாக்குலை கொண்டு
ஸ்துதிக்க வல்ல எனக்கு சத்ருசம் உண்டோ என்கிறார்
வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தனை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–4-5-9-
வானத்தும் வானத்துள் உம்பரும் -ஆகாச சப்த வாஸ்யமான ஸ்வர்க்கத்திலும்–
உள் வானத்து -ஊர்த்வ ஆகாச வர்த்திகளான -உம்பரும் -உபரிதந லோகங்களிலும்
மண்ணுள்ளும் -பூமிக்குள்ளும்
மண்ணின் கீழ்த் தானத்தும் –பூமியின் கீழ் பாதாள ஸ்தானங்களிலும்
எண் திசையும் -இவற்றில் உண்டான தேவாதி ஜாதி பேதத்தாலும் ப்ராஹ்மணாதி வர்ண பேதத்தாலும் அஷ்ட விதமான பதார்த்தங்களிலும்
தவிராது நின்றான் தனை,–ஒன்றும் நழுவாதபடி வியாபித்து நின்ற ஸ்வரூபத்தை யுடையனாய்
இப்படி முகம் தோன்றாமே நின்று ரஷிக்கை அன்றியே
கூனற் சங்கத் தடக்கை யவனை, –புடையுடைமையாலே கூனியாய் தர்ச நீயமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையுடைய பெரிய திருக்கை யை யுடையனாய்
குடமாடியை,–குடக் கூத்து முகத்தாலே-சர்வ ஜன மநோ ஹாரியான சேஷ்டிதங்களை யுடையனாய் –
இந்நிலையில்
வானக் கோனைக் -நித்ய ஸூ ரிகளுக்கும் அனுபவிக்கும் மேன்மையை யுடையனானவனை
வியாப்தியோடு அவதாரத்தோடு சேஷ்டிதத்தோடு பரத்வத்தோடு வாசியறக் கபளீ கரித்து
கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–கவி சொல்ல வல்ல எனக்கு இனி எதிர் உண்டோ
ஓர் ஓர் ஆகாரத்தை ஸ்துதிக்கப் புக்குப் பிற்காலிக்கும் உபய விபூதியிலும் எதிர் இல்லை என்று கருத்து –
————
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -4-5-9-
அவனுடைய வ்யாபித்தியாவதாரங்களில் எங்கும் புக்கு கவி சொல்ல வல்லேன் என்று ஹ்ருஷ்டராகிறார் –
அங்குள்ளார் பரத்வத்தில் போக்யத்தையிலே கால் தாழ்ந்து இங்கு அறியார்கள் –
இங்குள்ள பராசர்ய பாராசார்யாதிகள் ஒரோ துறைகளில் மண்டி இருப்பார்கள்
இவர் அங்கண் அன்றியே இங்கோடு அங்கோடு வாசி அற பகவத் விஷயத்தில் புகை புக்க இடம் எங்கும் புக்கு
கவி சொல்லி அனுபவிக்க வல்லார் ஆகையால் என்னோடு ஒப்பார் உண்டோ என்கிறார் –
வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தனை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–4-5-9-
வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்-தானத்தும்
ஸ்வர்க்கத்திலும்-அதுக்கு உள்ளாய் பெரிதாய் இருக்கிற மஹர் லோகாதிகளிலும் -பூமியிலும் -கீழ் உண்டான பாதாளாதிகளிலும்
எண் திசையும் தவிராது நின்றான் தனை,
சர்வ தேசங்களிலும் உண்டான தேவாதி சகல பதார்த்தங்களிலும்
ஜாதி போலே வியக்தி தோறும் பரி சாமாப்ய வர்த்திக்கிறவனை
இத்தால் -அணு த்ரவ்யங்களிலும் விபுவான ஆகாசாதிகளிலும் வியாவ்ருத்தி சொல்கிறது –
அனுவுக்கு ஸர்வத்ர வியாப்தி இல்லை -விபு த்ரவ்யத்துக்கு நியன்தருதயா வியாப்தி இல்லை
கூனற் சங்கத் தடக்கை யவனை,
சங்கு சக்கர கதாதரனாய் கொண்டு ஆஸ்ரித பரித்ராண அர்த்தமாக மனுஷ்ய சஜாதீயனாய் வந்து அவதரிக்கும் -ஜாதோ அஸி தேவ தேவேச –
கூனற் சங்கம் -ப்ராஞ்ஜலிம் ப்ரஹவா மாஸீநம் -என்ற இளைய பெருமாளை போலே -பகவத் அனுபவத்தால் வந்த ஹர்ஷத்தாலே ப்ரஹவீகரித்து இருக்கை-
குடமாடியை,
ஊரில் உள்ள எல்லாருக்கும் காட்சி கொடுக்கைக்காக குடமாடின படி
சேஷ்டிதங்கள் எல்லாவற்றுக்கும் உப லக்ஷணம்
வானக் கோனைக்
ஓர் ஊர் அளவன்றியிலே ஒரு நாட்டுக்காக காட்சி கொடுத்து கொண்டு இருக்கிற படி
கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–
இப்படிப் பட்டவனை கவி சொல்ல வல்லேனுக்கு -அகல் வானம் என்று விசேஷிக்க வேணுமோ -உபய விபூதியிலும் எதிரில்லை-
————
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –4-5-9-
வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தன்னை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–4-5-9-
எண் திசையும் தவிராது நின்றான்-வியாப்தி தசை — குடமாடியை,-அவதார தசை -உள்ளடக்கி ஸ்துதிக்க வல்லன்
வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும்-ஸ்வர்க்கம் -உபரிதன லோகம் உள் வானம் -மகாதாதி சித்தர்
மண்ணின் கீழ்த் தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தனை,-வியாப்தி தசை
தேவாதி ப்ராஹ்மனாதி-ஆக எட்டு வகை -தேவர்களில் நான்கு வகை
ப்ராஹமணர் ராஷசர் -ராவணன் -அஷ்ட விதங்களில் சர்வ வியாபகன்
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,-பரம சுலபன் -அவதார தசை -முகம் தொடராமல் ரஷிக்கை அன்றிக்கே
பவ்யமான சங்கத் தாழ்வான்-தர்ச நீயமான –
குடமாடியை-சர்வ ஜன மநோ ஹாரி சேஷ்டிதங்கள்
இந்நிலையில் வானவர் கோன்-என்றபடி –
மனுஷ்யத்வே பரத்வம் -கீதாச்சார்யன் நிலையில் இல்லை குடமாடும் பொழுதே
இத்தை தான் அவர்களுக்கு அபூர்வம் –
வியாப்தி -அவதாரம் சேஷ்டிதம் பரத்வம் -கபளீகரித்து பாட வல்ல எனக்கு யார் நிகர்
இனி மாறுஉண்டோ?–ஒவ் ஒரு ஆகாரம் பாடவும் அதிகாரிகள் இல்லை
‘சுவர்க்க லோகத்திலும் அதற்குள்ளே மேலேயிருக்கின்ற பிரமலோகம் முதலான உலகங்களிலும் பூலோகத்திலும் பூமியின் கீழேயிருக்கின்ற
பாதாளலோகத்திலும் எட்டுத் திக்குகளிலும் நீங்காது பரந்து நிற்கின்றவனும், வளைந்த சிறந்த பாஞ்சஜன்யம் என்னும்
சங்கைப் பெரிய கையிலே உடையவனும், குடக்கூத்தாடியவனும், நித்தியசூரிகளுக்குத் தலைவனுமான சர்வேசுவரனைக் கவி சொல்ல
வல்ல எனக்கு இனி ஒப்பாவார் உளரோ?’ என்கிறார்.
கூன் நல் – கூனல். வான் அம் கோன் – வானக்கோன்; அம் – சாரியை.
‘அவனுடைய எங்கும் பரந்திருத்தல் அவதாரங்கள் முதலான எல்லா நிலைகளிலும் புக்குக்
கவி சொல்ல வல்ல எனக்கு எதிர் உண்டோ?’ என்கிறார்.
நித்தியசூரிகள் தாங்கள் அனுபவிக்கின்ற விஷயத்தில் இனிமையின் மிகுதியாலே வேறு ஒன்று அறியார்கள்;
யாரைக் கண்டால் கண் பார்க்காதோ புத்தி வேறு ஒன்றில் போகாதோ -சுருதி வாக்கியம் –
வேறு ஒரு பிரகாரம் போகாது என்று கொண்டு -ஆழ்வார் –
முத்தர்கள் ‘இந்தச் சரீரத்தை நினையாமலே எங்கும் சஞ்சரிக்கிறார்கள்’ என்கிறபடியே, இவ்வுலக வாழ்க்கையை நினையாமல்
நிற்பர்களாகையாலே, அவர்களும் நித்தியசூரிகளோடு ஒப்பர்கள்;
இங்குள்ள பராசரர் வியாசர் முதலிய முனி புங்கவர்கள் ஒரோ துறையிலே மண்டியிருப்பர்கள்; ‘எங்ஙனே?’ என்னில்,
‘ஸ்ரீ வால்மீகி பகவான் ஸ்ரீ ராமாவதாரமல்லது அறியாதே இருக்கும்.
ஸ்ரீ பராசர பகவானும் ஸ்ரீ வேதவியாச பகவானும் கிருஷ்ணாவதாரமல்லது அறியார்கள்;-கிருஷ்ண த்வைபாயனர் —
ஸ்ரீ சௌனக பகவான் அர்ச்சாவதாரத்திலே ஈடுபட்டவனாய் இருக்கும்;
அங்ஙனன்றிக்கே, சர்வேசுவரனை எல்லா நிலைகளிலும் புக்குக் கவி பாடப்பெற்ற என்னோடு ஒப்பார் உளரோ?’ என்கிறார்.
வானத்தும் –
சுவர்க்கத்திலும்,
வானத்து உள் உம்பரும் –
அதற்குள்ளாய்ப் பெரியதாயிருக்கிற மஹர் லோகம் முதலியவைகளிலும்.
அன்றிக்கே,
‘வானத்தும் வானத்துள் உம்பரும் என்பதற்குச் சுவர்க்கம் முதலான உபரிதனலோகங்களிலும்
அவற்றுக்குள்ளே மேலே இருக்கிற பிரம லோகம் முதலானவைகளிலும் இருக்கிற
பிரமன் முதலான தேவர்கள்’ என்று பொருள் கூறலுமாம்.
மண்ணுள்ளும் – பூமியிலும்,
மண்ணின் கீழ்த்தானத்தும் –
கீழே உண்டான பாதாளம் முதலியவைகளிலும்,
எண்திசையும் –
எட்டுத்திக்குகளிலும்,
தவிராது நின்றான்தன்னை –
அவ்வத்தேசங்களிலும் அவ்வத்தேசங்களிலே இருக்கிற தேவர்கள் முதலான எல்லாப் பொருள்களிலும்,
கடல் கோத்தாற் போலே எங்கும் ஒக்கப் பரந்து நிறைந்து இருக்கிறவனை. இதனால், அணு அளவான பொருள்களிலும்
விபுவாய் இருக்கிற பொருளிலும் வாசி சொல்லுகிறது;
‘எங்ஙனே’ என்னில், அணுவான ஆத்துமா, சரீரம் எங்கும் பரந்திருக்க மாட்டாது;
விபுவான ஆகாயத்திற்கு ஏவுகின்ற தன்மையோடு கூடிப் பரந்திருக்கும் தன்மை இல்லை.
இப்படி எங்கும் பரந்து நிற்கிறவன், பரந்திருக்கப்படுகின்ற பொருள்களோடு ஒக்க வந்து அவதரிக்கும்படி சொல்லுகிறது மேல் :
கூன் நல் சங்கம் தடக்கையவனை –
‘இப்படி அவதரிப்பதுதான் இதரசஜாதீயனாயோ? என்னில், ‘ஆதியஞ்சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த’ என்கிறபடியே,
தன்னுடைய பிரகிருதி சம்பந்தமில்லாத திருமேனியை இதர சஜாதீயமாக்கிக்கொண்டாயிற்று வந்து அவதரிப்பது,’ என்கிறது. என்றது,
‘தேவர்களுக்கும் தேவர்களான நித்திய சூரிகளுக்குத் தலைவனே! சங்கு சக்கரம் கதை இவற்றைத் தரித்தவனாய் வந்து அவதரித்தாய்,’
என்று சொல்லும்படியாயிற்று இருந்தது என்றபடி.
‘அஞ்சலி செய்தவராய் வணக்கத்துடன் இருக்கின்ற’ என்கிற இளைய பெருமாளைப் போலே, பகவானுடைய அனுபவத்தால்
வந்த மகிழ்ச்சியாலே சரீரத்தை வளைத்துக் கொண்டிருப்பவன் ஆதலின், ‘கூனல் சங்கம்’ என்கிறது. என்றது,
‘வாயது கையதுவாக அனுபவிக்கின்றவன் அன்றோ?’ என்றபடி.
‘உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்; கண்படை கொள்ளல் கடல்வண்ணன் கைத்தலத்தே;
பெண்படையார் உன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்; பண்பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே!’-என்ற நாய்ச்சியார் திருமொழிப்
பாசுரத்தை அடியாகக்கொண்டு எழுந்தது.–‘வாயது கையது’ என்பது, சிலேடை.
உரிமை நிலை நாட்டி -வாரணமாயிரம் -இப்பொழுது அத்தை கேட்கிறாள் -கற்பூரம் நாறுமோ –
சங்கரய்யா உன் செல்வம் சால பெரியதே -நிகர் உனக்கு யார் -என்கிறாள்
லீலா விபூதியும் நித்திய விபூதியுமாகிய இரு வகைப்பட்ட உலகங்களும்
வந்து ஒதுங்கினாலும், பின்னையும் கையே விஞ்சி இருக்குமாதலின் ‘தடக்கை’ என்கிறது.
குடமாடியை –
எங்கும் ஒரே தன்மையாய்ப் பரந்து நின்றாற்போலே, ஓர் ஊராகக் காணும்படி குடக்கூத்து ஆடினபடி.
குடக்கூத்தினைக் கூறியது, எல்லாச் செயல்களுக்கும் உபலக்ஷணம்
வானம் கோனை –
ஓர் ஊர் அளவன்றிக்கே ஒரு நாட்டுக்காகக் காட்சி கொடுத்துக்கொண்டிருக்கிறபடி
கவி சொல்ல வல்லேற்கு –
இப்படி இருக்கிறவனை எங்கும் புக்குக் கவி சொல்ல வல்ல எனக்கு.
இனி மாறு உண்டே –
அகல்வானம்’ என்று விசேடித்துச் சொல்ல வேண்டுமோ?
‘நித்திய விபூதி லீலா விபூதிகளாகிற இரு வகைப்பட்ட உலகங்களிலும் எதிர் இல்லை’ என்கிறார்.
————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply