ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-–2-8-10-

ஸ்ரீ ஆறாயிரப்படி —2-8-10-

சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-

ஸ்வர்க்க அபவர்க்காத் அசேஷ புருஷார்த்தங்களுக்கும் -நரகாத் புருஷார்த்தங்களுக்கும் -இவற்றுக்கு போக்தாக்களான
தேவாதி ஸ்தாவர அந்தமான் சகல ஆத்ம வர்க்கத்துக்கும் தாரகனாய் -பிராண பூதனாய் -நியாந்தாவாய் -ஸ்வ இதர ஸமஸ்த விஸஜாதீய அப்ராக்ருத
மஹா விபூதியை யுடையனாய் நின்ற எம்பெருமானை நான் காணப் பெற்றேன் -என்று கொண்டு ஸ்வ லாபத்தைப் பேசி முடிக்கிறார் –

——————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –2-8-10-

அல்லாதார் செய்யப்படி செய்கிறார் -உபய வித மஹா விபூதிகனாய் இருந்த எம்பெருமானை நான் அனுபவிக்கப் பெற்றேன் என்கிறார் –

சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-

பரமபதம் ஸ்வர்க்கம் நரகம் இவை முடிவாக ஈரப்பாடு உடைத்தான தேவர்கள் நடுவாக மாற்று உண்டான சகல பதார்த்தங்களுக்கும்
-த்ரிவித காரணமும் தானே யாய்க் கொண்டு சர்வ கதனாய்
சம்சாரிகளோடு வியாவ்ருத்தனாய் திரு நாட்டிலே வ்ரஷூகலாவஹம் போலே இருக்கிற
திரு நிறத்தை உடையனாய் என்னை விஷயீ கரித்த கிருஷ்ணனை

——————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –2-8-10-

அநந்தரம் -இப்படி சர்வ பிரகார உபகாரகனாய் -மோக்ஷ பிரதனானவனை நான் அனுபவிக்கப் பெற்றேன் -என்று ஹ்ருஷ்டராகிறார் –

சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-

சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா–புண்ய பாப காரிதமாகை அன்றிக்கே பகவத் கிருபை ஏக ஸாத்யமான
சீர்மையை யுடைய மோக்ஷமும் -புண்ய பாப பல ரூபமான ஸ்வர்க்க நரகங்களும் -மேல் எல்லையாக –
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்–பல பிரதத்வ நிபந்தமான ஈரப் பாட்டை யுடைய தேவர்கள் -சாதனா பலன்களுக்கு நடுவாகவும் –
ப்ரதமபாவியான சாதனாதி ஸமஸ்த பதார்த்தங்களும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற–சஹகாரியுமாய் -நிமித்தமுமாய் -உபாதானமுமாய்க் கொண்டு
ஸர்வத்ர வ்யாப்தனாய் வைத்து -வ்யாப்ய பதார்த்தங்களில் வ்யாவ்ருத்தனாய் நிற்பானாய் –
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –கார்காலத்தில் மேகம் போன்ற வடிவை யுடையனாய்க் கொண்டு
எனக்கு ஸூலபனான கிருஷ்ணனை நான் அனுபவிக்கப் பெற்றேன் -என்று கொண்டு ஸ்வ லாபத்துக்கு ஹ்ருஷ்டராகிறார் –
ஈர்மை கொள் தேவர் -என்று உபய பாவ நிஷ்டர் -என்றுமாம் –

———

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -2-8-10-

வழி பறிக்கும் இடத்திலே தம் கைப் பொருள் கொண்டு தப்புவாரைப் போலே நான் அனுபவிக்கப் பெற்றேன் என்று ஹ்ருஷ்டராகிறார் –

சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-

சீர்மை கொள் வீடு -ச்வர்க்க நரகு ஈறா
சீர்மையை உடைத்தான பரம பதம் -ஸ்வர்க்கம் -நரகம் இவை முடிவாக
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
ஈராக் பாட்டை உடைய தேவர்கள் நடுவாக மற்றும் உண்டான சகல பதார்த்தங்களுக்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
த்ரிவித காரணமும் தானே யாய்
தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிசத்-என்கிறபடியே சர்வ சப்த வாச்யனாய் ஜகதாகாரேண அத்விதீயனாய் நிற்கை
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே
பரமபதத்தில் வர்ஷூ கலாவாஹம் போலே -ஸ்ரமஹரமான வடிவோடே அத்விதீயனாய் எழுந்து அருளி இருக்குமவன்
கிருஷ்ணனாய் எனக்கு உபகரிக்கையாலே நான் அனுபவிக்கப் பெற்றேன் என்கிறார் –

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி —2-8-10-

இவர்களை விடீர் -நாம் முந்துற முன்னம் இவர்களைப் போலே ஆகாதே –அவனை அனுபவிக்கப் பெற்றோம் இறே
என்று ஸ்வ அனுபவ லாபத்தாலே ஹ்ருஷ்டராகிறார் –

சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-

சர்வ பிரகார உபகாரகன் மோஷ ப்ரதன் -வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற கார் முகில் போல் வண்ணன்-அனுபவிக்கப் பெற்றேன்
சீர்மை கொள் வீடு -பகவத் கிருபை ஒன்றாலே பெறக் கூடிய -கர்மங்களால் இல்லாமல்
ச்வர்க்க நரகு-புண்ய பாபம் அடியாக
ஈறா–ஈர்மை கொள் தேவர் நடுவா-பலம் கொடுக்கும் ஈரம் கொண்ட தேவர் -உபய பாவனா நிஷ்டர் -ப்ரஹ்ம கர்ம பாவனை கொண்ட தேவர்கள் –
மற்று எப்பொருட்கும் -பிரதம பாவியான சமஸ்த
வேர் முதலாய் வித்தாய் -சக காரி -நிமித்த -உபாதான
பரந்து தனி நின்ற -வியாப்தன் -அவற்றில் வேறாய் -தனியாய் -நின்ற
கார் முகில் போல் வண்ணன்-மேகம் போன்ற வடிவை
என் கண்ணனை நான் கண்டேனே -சுலபனான கண்ணனை -கண்டு ஸுவ லாபத்தால் ஹிருஷ்டர் ஆகிறார் –

சீர்மை கொள் வீடு சவர்க்க நரகு ஈறா ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும் –
சர்வ பிரகாரத்தாலும் நன்றான பரம பதம் -பரிமித ஸூகமான ஸ்வர்க்கம் -நிஷ்க்ருஷ்ட துக்கமேயான நரகம்
-இவை முடிவாக ஈரப் பாடுடையரான தேவர்கள் நடுவாக மற்றும் உண்டான திர்யக்காதிகளும்
பலம் அனுபவிக்கும் இடங்கள் –பல பிரதா நடுவில் –கர்மங்கள் செய்பவர் ஈறாக அருளிச் செய்கிறார் –
வேர் முதலாய் வித்தாய் –
த்ரிவித காரணமும் தானேயாய்
பரந்து –
தத் ஸ்ருஷ்ட்வா -ததேவ அநு ப்ராவிசத் தத் அநு பிரவிச்ய சச்ச த்யச்சா பவேத் –என்கிறபடியே — தஜ்ஜ தல்ல தன்ன தஜலன –
முந்துற இவற்றை யடைய உண்டாக்கி
பின்னை இவற்றினுடைய வஸ்துத்வ நாம பாக்த்வங்களுக்காக அநு பிரவேசித்து -இப்படி ஜகதாகாரனாய் நின்று –

வித்து –மாறி மரம் ஆகும் -உபாதானம் -சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் உபாதான காரணம்
முதல் -சங்கல்பம் -நிமித்த -சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம்-நிமித்த காரணம்
வேர் -கெட்டியாக இருந்து நிற்கும் சஹ காரி காரணம் -ஞான சக்த்யாதி குண விசிஷ்ட ப்ரஹ்மம்
பரமபததுக்கு காரணத்வம் உண்டோ -நித்யம் அன்றோ
பரம பதம் – நித்யா இச்சா வேஷத்தால் நிமித்த காரணம் -கைங்கர்யம் கொண்டு கொண்டே இருப்பேன்-வேற மாதிரி சங்கல்பம் அங்கே –நித்யா இச்சா விசிஷ்ட ப்ரஹ்மம்-அப்ராக்ருத அசித் சித் ஜீவ விசிஷ்ட ப்ரஹ்மம் -மண்டப கோபுராதிகள் அங்கே-நித்யர்-

தோன்றின போதே வீய்ந்தான் -வீய -அங்கு அப் பொழுதே வீய தோன்றிய
அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப் பொழுதே -நாரணற்கு ஆயினரே
தோன்றிய பின் வியாபாரிக்க வேண்டாம்
சிருஷ்டி சமகாலத்திலே அந்தர்யாமியாகி அநு பிரவேசித்து –

தனி நின்ற கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –
இப்படி ஜகத் சரீரனாய் நின்ற அளவே யன்றிக்கே தன்னுடைய வ்யாவ்ருத்தி தோற்றும்படி
ஸ்ரீ வைகுண்டத்திலே வர்ஷூக வலாஹகம் போலே இருக்கிற அழகிய திருமேனியை யுடையனாய் இருந்து வைத்து கிருஷ்ணனாய்
வந்து அவதரித்து எனக்குக் கையாளனானவனை நான் முந்துற முன்னம் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் -என்கிறார் –
தனி நின்ற
வைகுண்டத்தில் தனித்து உள்ளார் –
தோஷங்கள் தட்டாமல் உள்ளார் என்றுமாம்

———————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading