ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-–2-8-9-

ஸ்ரீ ஆறாயிரப்படி –2-8-9-

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9-

ஆஸ்ரித அர்த்தமாகத் தன்னுடைய சர்வ அந்தராமித்வத்தை ப்ரத்யக்ஷமாக்கி யருளின எம்பெருமானுடைய
சர்வேஸ்வரத்வ மஹிமை ஒருவர்க்கு ஆராய நிலமோ -ஆனபின்பு இங்கனே இருந்த இவனை ஆஸ்ரயியுங்கள்-என்கிறார் –

————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –2-8-9-

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9-

எம்பெருமானுடைய சர்வகத த்வத்தை இசையாதார் இசையை வேண்டும்படியாக ஸ்ரீ பிரகலாத ஆழ்வானுக்காக அபேஷா சமகாலத்திலே
தூணிலே வந்து தோற்றி அருளின ஸ்ரீ நரசிம்ஹத்தின் உடைய பெருமை ஒருவராலும் ஆராயும் அளவு அல்ல -என்கிறார் -வீய -முடிய –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி –2-8-9-

அநந்தரம் -அவனுடைய ஆஸ்ரித ஸுசீல்ய அதிசயம் அபரிச்சேதயம் -என்கிறார் –

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9-

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து–சர்வம் வ்யாபியா ஸ்திதா -என்கிறபடியே சர்வ நிர்வாஹகனான சர்வேஸ்வரன் –
ஸர்வதா ஸந்நிஹிதன்–என்ற புத்ரனை கோபித்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப–இவ்விடத்தில் இல்லை என்று தான் அறுதியிட்ட தூணை ஹிரண்யன் தட்ட
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய -என் சிங்கப்பிரான்-அத்தூணிலே அக்காலம் தன்னிலே
ஹிரண்யன் நசிக்கும் படி தோற்றின என்னுடைய நரஸிம்ஹ ரூபியான மஹா உபகாரகனுடைய
பெருமை யாராயும் சீர்மைத்தே –ஆஸ்ரித பக்ஷபாத மஹாத்ம்யம் நெஞ்சால் பரிச்சேதித்து ஆராயும் தன்மைத்தோ-

——————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -2-8-9-

சகல பதார்த்தங்களிலும் ஒருவனே பரிசமாப்ய வர்த்திக்கும் -என்றால் இது கூடுமோ என்ன-
-அநுபூத அம்சத்தில் சம்சயத்தை பண்ணினால் ஹிரண்யன் பட்டது படுவர்கள் என்கிறார் –

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9-

எங்கும் உளன் கண்ணன் –
சர்வேஸ்வரன் சர்வகதன் என்றான் -இதுவாயிற்று அவன் சொன்ன தப்பு –
மயா ததாமிதம் சர்வம் ஜகத் அவ்யக்த மூர்த்தி நா -என்றும்
நத தஸ்தி விநாயத் ஸியாத் மயா பூதம் சராசரம் -என்று அவன் தானே சொன்னதை யாயிற்று இவன் சொல்லிற்று –
என்ற மகனைக் காய்ந்து
இவ்வர்த்தத்தை சத்ருக்கள் சொல்லிலும் ஆதரிக்க வேணும்
இவன் பருவத்தாலும் சம்பந்தத்தாலும் ஏதேனும் ஒன்றை சொல்லிலும் ஆதரிக்க வேணும் –
இப்படி இருக்க அதிக்ருத்யனாய்
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
சர்வகதன் -என்று நீ சொன்னவன் இங்கும் உண்டோ என்று தான் இருந்த தூணைத் தட்ட
அளந்து இட்ட தூண் இ றே
தனக்கேற இல்லை என்று சம்பிரதி பன்னமான தூண் இ றே –
அங்கு அப்பொழுதே
அத் தூணிலே பிரதஞ்ஞா சமயத்திலே
அவன் வீயத் தோன்றிய-
சீற்றத்தோடே வந்து தோற்றிய தோற்றரவிலே பிணம் ஆனான்
என்-சிங்கப்பிரான் –
ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு உதவினது தமக்கு உதவிற்றாய் இருக்கிற படி
பெருமை யாராயும் சீர்மைத்தே –
பரத்வம் -சிலரால் அறியும் அளவே –

—————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –2-8-9-

நீர் சொன்னது அனுபபன்னமாய் இருந்ததீ-ஒரு வஸ்துவே அநேக பதார்த்தங்களில் குறைவற வியாபித்து இருக்கும் என்றால்
இது கூடுமோ என்ன கெடுவிகாள்-அவன் சர்வகதத்வத்தை இசையாத இரணியன் பட்டது படாதே கிடி கோள்-என்கிறார் –

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9-

ஆஸ்ரித சுசீல்ய அதிசயம் -அபரிச்சின்னம்
எங்கும் உளன் கண்ணன் -சர்வேஸ்வரன் -சர்வ வியாபகன் -நிர்வகிப்பவன் -சர்வத்ர சந்நிஹிதன்
என்ற மகனைக் காய்ந்து இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப -அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய-என் சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே-மகா உபாகாரம் செய்து அருளிய -ஆஸ்ரித பஷபாதி என்ற பெருமை
பக்த அபசாரம் பொறுக்க மாட்டானே -நெஞ்சால் அறுதி இட்டு அறிய முடியாதே

எங்கும் உளன் கண்ணன்-
இதுவாயிற்று அவன் சொன்ன தப்பு -சர்வேஸ்வரன் சர்வ கதன் என்றான்
மயா இதம் சர்வம் ததம் -ஸ்ரீ கீதை -9-4-எங்கும் உள்ளேன் -சர்வத்துக்கும் பீஜம் –அனைத்துக்கும் அந்தராத்மா என்றானே –
ந ததஸ்தி விநா யத் ச்யான்மயா மயா பூதம் சராசரம் –ஸ்ரீ கீதை -10-39–என்று அவன் சொன்ன வார்த்தை யாயிற்று இவன் தான் சொல்லிற்று –
பூமியில்- தண்ணீரில்- ஆகாசம்- வெளிச்சம் -திக்கில்- திர்யக்கில் -சத் அசத் -இருக்கிறார் என்னலாம் இல்லை என்னலாம் –
உனக்கு உள்ளும் எனக்கு உள்ளும் உளான் சர்வத்ர அஸ்தி சதா அஸ்தி -என்றானே இவன் –
என்ற மகனைக் காய்ந்து
இவ்வர்த்தத்தை சத்ருவே சொன்னாலும் கேட்ட போதே காலில் விழ வேண்டும் வார்த்தை சொல்லிற்று
பிரமாண விருத்தமான அர்த்தத்தைச் சொல்லிலும் கொண்டாட வேண்டும்படி யாயிற்று சம்பந்தம்
பருவத்தாலும் கொண்டாட வேண்டும்
பள்ளியில் ஓதி வந்த -பள்ளி ஓதும் பருவத்தில் உள்ளவை அடைய கொண்டாட்டமாய் இருக்கும்
அதுக்கு மேலே தன் சிறுவன் -தன் வயிற்றில் பிறந்தவன் வார்த்தை மிகவும் பிரியமாய் இருக்கும்
வாயில் ஓர் ஆயிர நாமம் -அதுக்கு மேலே திரு நாமத்தைச் சொல்லிற்று
தமது பிள்ளை ஒன்றே சொன்னாலும் -ஆயிரம் -ஆயிர சமம் என்றுமாம் –
ஒள்ளியவாகிப் போந்த -இவை ஒன்றுமே இல்லை யாகிலும் சொன்ன போதே இனிமை தான் கொண்டாட வேணும்
ஆங்கு அதனுக்கு ஒன்றும் ஓர் பொறுப்பு இலனாகி -அசஹ்ய அபசாரம் இறே
அந்ய உத்கர்ஷம் அசஹ்யம் -பிறர் நல்லது எனக்கு பிடிக்காதது அசஹ்ய அபசாரம் –
பிள்ளையைச் சீறி -திரு நாமம் சொன்னதே ஹேதுவாக புத்திரன் அன்று என்று விட்டான் அவன்
திரு நாமம் சொன்னவர்களோடே தமக்கு எல்லா உறவும் உண்டாக நினைத்து இருக்கையாலே இவர் பிள்ளை என்கிறார்
பிள்ளையைச் சீறி வெகுண்டு —
மகனைக் காய்ந்து –
வயிற்றிலே பிறந்தவனே இருக்கச் செய்தேயும் திரு நாமம் சொல்லப் பொறுக்க மாட்டாமே சீறினான் யாயிற்று –
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
எங்கும் உளனாகில் நீ சொல்லுகிறவன் இங்கு இல்லையே இரானே என்று தூணை அடித்துக் காட்டினான்
அளந்திட்ட தூணை அவன் தட்ட -முன்பே நரசிம்ஹத்தை வைத்து நட்ட தூண் என்ன ஒண்ணாதே
தானே தனக்கு பொருந்தப் பார்த்து நறுக்கி நட்ட தூண் ஆகையாலே
அவன் தட்ட -பெரியாழ்வார் திருமொழி -1-7-9-வேறே சிலர் தட்டினார்கள் ஆகில் கையிலே அடக்கிக் கொண்டு வந்து தூணிலே
பாய்ச்சினார்கள் -என்னவுமாம் இறே -தானே யாயிற்று தட்டினானும்
அங்கு அப்பொழுதே
அத் தூணிலே அடித்த இடத்திலே -அவனுடைய பிரதிஜ்ஞ்ஞா சம காலத்திலே
அவன் வீயத் தோன்றிய
தன் தோற்றரவிலே அவன் பிணமாம் படி தோற்றின
அதிர்த்துக் கொண்டு புறப்பட்ட போதை அட்ட ஹாசமும் -நா மடித்துக் கொண்ட உதடும் -நெற்றியது கண்ணும்--உச்சியது புருவமுமாய்க் கொண்டு-
தோற்றின போதே பொசுக்கின பன்றி போலே உருகினான் ஆயிற்று பொன்னன் ஆகையாலே
என் சிங்கப்பிரான் பெருமை-
ஆஸ்ரித வர்க்கத்துக்காக நரசிம்ஹமாய் உபகரித்தவனுடைய பரத்வம்
யாராயும் சீர்மைத்தே –
இன்று சிலரால் ஆராயும் படி இருந்ததோ –

———————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading