ஸ்ரீ ஆறாயிரப்படி –1-9-3-
அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-
ஹேயப்ரத்ய நீக கல்யாண அனவாதிக அசங்க்யேய குண விசிஷ்டானாய் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் நிரதிசய ஸுந்தர்ய ஸுகந்த்ய ஸுகுமார்ய
லாவண்ய யவ்வநாத் அபரிமித கல்யாண குண பரிபூர்ணனாய் பெரிய திருவடியை திவ்ய வாஹனமாக யுடையவனாய் -ஸ்ரீ யபதியாய் இருந்த எம்பெருமான்
என் அருகே வந்து பின்னை ஒருபடியால் என்னோடு ஸம்ஸ்லேஷித்து விட்டிலன் –சர்வ பிரகாரத்தாலும் ஸம்ஸ்லேஷியா நின்றான் -என்கிறார் –
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி-1-9-3-
மஹிஷீ பிரப்ருதிகள் ஒரோ வகைகளால் தன்னோடே சம்ச்லேஷ ரசம் பெறுமா போலே அன்றிக்கே
எல்லா வகைகளாலும் உள்ள சம்ச்லேஷ ரசத்தை எனக்குத் தந்து என்னை ஒரு காலும் விடாதபடி யானான் -என்கிறார் –
அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-
அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன் -கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன் –
ஹேய ப்ரத்ய நீக-கல்யாண மஹா குணனாய் -அயர்வறும் அமரர்கள் உடைய ஸ்வரூப ஸ்திதி யாதிகளுக்கும் -போஷண -ஆதிகளுக்கும்-காரணமாய்
கறுத்து நெய்த்து விலக்ஷணமான திரு உடம்பில் நிறத்தை உடையான்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன் -ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –
தன்னுடைய விஷயீ காரத்தாலே-பிறந்த ஹர்ஷ ப்ரகரஷத்தாலே பற்றி நின்றுள்ள திருச் சிறகை உடைய பெரிய திருவடி மேலே
ப்ரீதனாயக் கொண்டு ஏறுவதும் செய்து பெரிய பிராட்டியாருக்கு நாயகன் என்னும் வைலக்ஷண்யத்தை உடையான்
அருகல் -ஷயிக்கை
——
ஸ்ரீ பன்னீராயிரப்படி -1-9-3-
அநந்தரம் -என்னோடே கூடி நின்று பஹு முகமாக ரசிப்பியா நின்றான் -என்கிறார் –
அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-
அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்-அபஷயாதி தோஷ ரஹிதமாய் -சதாஸ் ஸ்தித்தவத்தால் நித்தியமாய் -அபரிச்சின்னமான குணங்களை யுடையனாய்
நித்ய ஸூரிகளுக்கு சத்தாதி ஹேது பூதனான பிரதானனாய் –
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்–மிகவும் கருகின -நீல ரத்னம் போலே -நன்றான திருமேனி நிறத்தை யுடையனாய் –
அவ்வடிவுக்குப் பரபாகமாம் படி சிவந்த தாமரை போன்ற திருக் கண்களை யுடையனாய் –
பொருசிறைப் புள்ளுவந்தேறும் -செறிந்த சிறகை யுடையனான பெரிய திருவடியை மிகவும் விரும்பி -மேற் கொள்ளக் கடவனாய் –
பூ மகளார் தனிக் கேள்வன்-பூவில் மனம் வடிவு கொண்டால் போலே போக்ய பூதையான ஸ்ரீ மஹா லக்ஷ்மிக்கு -அத்விதீய போக்தா வானவன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –என்னோடே கூடி நின்று ஒரு வழியால் உள்ள இனிமையை தந்து தவிருகிறிலன்-
ஹேய ப்ரத்ய நீகமாய்-ஸமஸ்த கல்யாண குணாத்மகனான ஸ்வரூப வைலக்ஷண்யமும்- நித்ய ஸூரி நிர்வாஹகத்வ ரூபமான மேன்மையும்-விலக்ஷண விக்ரஹ யோகமும் —
புண்டரீகாக்ஷத்வமும் -கருட வாஹனத்வமும் -ஸ்ரீ யபதித்வமும்–ஆகிற பரத்வ சிஹ்னங்களாய் யுள்ள அறு சுவையும் -தாரா நின்றான் -என்று கருத்து –
அருகல் என்று குறையாய் –ஷயம் -என்றபடி –
————
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -1-9-3-
மஹிஷீ ப்ரப்ருதிகளோடு ஒரோ வகையில் இறே பரிமாறுவது-அங்கண் ஓர் அளவிலே தலைக்கட்டுகிறிலன் என் பக்கலில் என்கிறார் –
அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-
அருகலிலாய பெரும் சீர்
ஹேய ப்ரத்ய நீக கல்யாண மஹா குணன்-அருகல் -ஷயம் -அதாகிறது குற்றம் –இல் இல்லாத –
அருகல்-கேடு -துர்பிக்ஷம் என்னவுமாம் –ஆய -ஆன -அருகலிலான -நன்றான
பெரும் சீர் -நிஸ் ஸீமமாய்-நிஸ் சங்க்யமாய் இருக்கை
அமரர்கள் ஆதி முதல்வன் –
அக் குண அனுபவமே யாத்ரையான நித்ய ஸூ ரிகளுடைய சத்தாதிகளுக்கும் தாரகாதிகளுக்கும் ஹேது வானவன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் –
அவர்கள் சதா தர்சனம் பண்ணுகிற வடிவு இருக்கிற படி
கறுகி நெய்த்து நன்றான திரு மேனியின் நிறத்தை உடையவன்
செந்தாமரைக் கண்ணன் –
அகவாயில் தண்ணளிக்கு பிரகாசகமாய் இருக்கும் திருக் கண்களை உடையவன் –
பொருசிறைப் புள் –
ஸ்வ விஷயீ காரத்தால் பிறந்த ஹர்ஷ ப்ரகரஷத்தாலே பதறா நின்றுள்ள திருச் சிறகை யுடையவன்
உவந்தேறும்-
ஒரு வினைக்காக அன்றியிலே-ஸ்வயம் பிரயோஜனமாய் இருக்கை –
உவந்து ஏறும்
அவனுக்கு உள்ள பிரியம் அன்று ஈஸ்வரனுக்கு உள்ளது –
பூ மகளார் –
பரிமளம் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கும் படியான பாக்யத்தை யுடையவள்
தனிக் கேள்வன் –
அத்விதீய நாயகன் -என்னும் வை லக்ஷண்யத்தை யுடையவன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் –
ஒரு வகைப் பட்ட ரசத்தை அனுபவிப்பித்து விடுகிறிலன் –
நித்ய ஸூ ரிகள் எல்லார் பக்கலிலும் பண்ணும் ஓரத்தை என் பக்கலிலே பண்ணா நின்றான்
என்னோடு உடனே-
நித்ய விபூதி நிர்வஹணமும் இங்கே இருந்து -என்னும் படி என்னை விடுகிறிலன் –
————
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி -1-9-3-
ஸ்ரீ திருவடி ஸ்ரீ திருவானந்தாழ்வான் ஸ்ரீ பிராட்டிமார் தொடக்கமானவரோடு ஒரோ வகையாலே பரிமாறுமவன்
என்னளவில் ஒரோ வகையிலே பரிமாறி விட மாட்டுகிறிலன் -என்கிறார் –
———————-
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
பொரு சிறைப் புள்ளு வந்து ஏறும் பூ மகளார் தனிக்கேள்வன் -இத்யாதிகளைக் கடாக்ஷித்து அவதாரிகை –
இவர்களைச் சொன்னது ஸ்ரீ திருவனந்த ஆழ்வானுக்கும் உப லக்ஷணம்
———————-
அருகிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நல் மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொரு சிறைப் புள்ளு வந்து ஏறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-
அருகிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
அருகல்-குறைகை -கேடு -அது இல்லாமை அருகிலாய -குறைவின்றிக்கே /ஆய -ஆன-நன்றான
ஹேய ப்ரத்ய நீகமுமாய் -கல்யாணை கதாநமுமான -நிரவதிக குணங்களை யுடையவனுமாய்
அக் குணங்களை நித்ய ஸூரிகள் சதா அனுபவிக்கப் பண்ணுமவனாய்
அவர்கள் சத்தாதிகள் தன் அதீனமாம்படி இருக்கிறவன்
கருகிய நீல நல் மேனி வண்ணன்
கறுத்து நெய்த்துப் பேச்சுக்கு அவ் விஷயமாம் படி விலக்ஷணமான திருமேனியில் நிறத்தை யுடையவன்
விலக்ஷணமான திரு மேனியில் கறுத்து நெய்த்த நிறத்தை யுடையவன்
அவர்களை சதா அனுபவம் பண்ணி வைக்கும் போது படி விடும்படி
செந்தாமரைக் கண்ணன்
அகவாயில் குணங்களுக்குப் பிரகாசகங்களான திருக் கண்களை யுடையவன்
பொரு சிறைப் புள்ளு வந்து ஏறும்
ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீ பெரிய திருவடியை மேல் கொள்ளுவதாக நினைத்து வா என்று அழைத்தால் –
அவனுடைய அங்கீகாரத்தால் உண்டான ஹர்ஷத்தாலே பெருக்காறு சுழித்தால் போலே சுழித்துத்
தன்னில் தான் பொரா நின்றுள்ள சிறகை யுடையனாய்க் கொண்டு ஆயிற்றுத் தோன்றுவது –
அவனும் நாம் இவனை மேல் கொள்ளப் பெற்றோமே என்று திரு உள்ளத்திலே ப்ரீதியுடன் ஆயிற்று மேல் கொள்ளுவது
பூ மகளார் தனிக்கேள்வன்
புஷ்பத்தில் பரிமளம் வடிவு கொண்டால் போலே இருப்பவளாய் -போக்யத ஏக வேஷையான ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு
வல்லபன் என்றால் -இப்படிப்பட்ட ஐஸ்வர்யத்துக்கு இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதபடி இருக்கிறவன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே
அவர்களோடே பரிமாறுமா போலே ஒரு வழியால் வந்த ரசத்தைத் தந்து விடுகிறிலன்
என் அளவில் நித்ய ஸூரிகள் எல்லார் பக்கலிலும் பண்ணும் ஆதரத்தை என் பக்கலிலே பண்ணா நின்றான்
உடனே
இவன் ஒரு விபூதிமான் -அந்ய பரன் என்று தோற்ற இருக்கிறிலன்-
நித்ய விபூதியில் கேள்வியும் இங்கே இருந்தாம் அத்தனை
தண் தாமம் செய்து -என்று நித்ய விபூதியில் பண்ணும் விருப்பத்தைப் பண்ணினார் என்றார் கீழில் திருவாய் மொழியில்
இதில் அவ்விபூதியில் உள்ளாரோடு பரிமாறும் படியை என் ஒருவனோடு பரிமாறினார் -என்கிறார் –
—————-
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
அருகல்-என்பது குறைகையாய் -அத்தாலே ஹேயம் என்னுதல்/ அன்றிக்கே கேடாய் -அநித்யம் என்னுதல்
குணத்துக்கு குறையாவது ஒரு குணத்தை அனுபவியா நிற்க திருப்தி பிறக்கை யாதல் –
குணத்திலே ஸ்ப்ருஹையைப் பண்ணுதலாகிற குறையாதல்-
பெரும் சீர் -நிரவதிக குணங்கள் –
ஆதி -அமரர்களால் குண விசிஷ்டத்வேந ஸ்வீகரிக்கப் படுமவன் -சத்தா நிர்வாஹன் –முதல்வன் -போக நிர்வாஹன் –
ஆதி -ஸ்திதி பிரவ்ருத்திகளையும் சொல்லுகிறது என்றுமாம் –
தாரகாதிகள் -ஆதி சப்தம் -போஷக போக்யங்களைச் சொல்லுகிறது
கருகிய -நீலம் -நல் -மூன்றும் நிறத்துக்கும் விசேஷணங்கள்-/ நல் என்றது மேனிக்கும் விசேஷணம் –
படி -ஜீவனமும் திரு மேனியும் –
பொரு சிறை உவந்து ஏறும் -பாவங்களுக்கு வாக்ய த்வயம் அருளிச் செய்கிறார் –
பொரு சிறை -ஸ்ரீ திருவடியின் உகப்பு -உவந்து ஏறும் ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய உகப்பு –
—————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply