ஸ்ரீ ஆறாயிரப்படி –1-9-1-
இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-
ஸ்வ சங்கல்ப க்ருத நிகில ஜகத் உதய விபவ லயனாய் சர்வ ஜகத் ஆத்மபூதன் ஆனவன் என்னோடு ஸம்ஸ்லேஷிக்கையில் உள்ள
அபி நிவேசத்தாலே என்னை வசீகரிக்கைக்காக என்னுடைய சூழலிலே வந்து புகுந்தான் -என்கிறார் –
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -1-9-1-
ஜகத்தின் உடைய ஸ்ருஷ்டி யாதி ஹேதுவாய் சர்வ அந்தராத்மா தயா நின்று -அவற்றுக்கு தாரகனாய் -ஸ்ரீ யபதியாய் -பரம ரசிகனாய் –
எனக்கு போக்ய பூதனாய் -எனக்கு நாதனாய் உள்ள -கிருஷ்ணனானவன்
என் தனக்கு தன்னோட்டை சம்ச்லேஷ ரசத்தை தந்து அருளுகைக்காக என்னுடைய பர்யந்தங்களிலே வந்து வர்த்தியா நின்றான் என்று ஹ்ருஷ்டராகிறார் –
இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ண பிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-
சேதன அசேதனங்கள் எல்லாவற்றையும் சம்ஹரித்து
தன்னுடைய தலையாலே அவற்றை உண்டாக்கி
அவற்றினுடைய ரக்ஷணத்தையும் பண்ணுமவன்
———
ஸ்ரீ பன்னீராயிரப்படி –1-9-11-
முதல் பாட்டில் -சர்வ காரணத்வ சர்வ அந்தராத்மத்வத்தாலே சர்வ ஸ்மாத் பரனாய் சர்வ ஸூலபனான
ஸ்ரீ யபதி-என்னுடைய பரிசரத்திலே ஆதூர வர்த்தியாகா நின்றான் -என்கிறார் –
இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-
இவையும் அவையும் உவவையும் -அந்திகஸ்தமாயும் -தூரஸ்தமாயும் -ஆதூர விப்ரக்ருஷ்டமாயும் உள்ள அசேதனங்களும் –
இவரும் அவரும் உவரும்-எல்லாவித சேதனரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்—எல்லாம் ஸம்ஹ்ருதி சமயத்திலே தன்னுள்ளே ஆம்படியாகவும் ஸ்ருஷ்ட்டி சமயத்தில் உண்டாக்கியும்
ஸ்ருஷ்டமானவற்றுக்கு ஆபத்துக்களை போக்கி அபிமதங்களைக் கொடுத்து ரக்ஷிக்குமவனுமாய்
அவையுள் தனி முதல் எம்மான் -அவற்றினுள்ளே அந்தராத்மாவாயுமுள்ள சஹாயாந்தர நிரபேஷ காரணமுமாய் ஸ்வாமியுமாய்
கண்ணபிரான் என்னமுதம்-ஸ்ரீ கிருஷ்ணனாக ஸுலப்யத்தைக் காட்டி -எனக்கு போக்ய பூதனாய் –
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –அத்தாலே தானும் ரசிகனானவன் -ஸ்ரீ மஹா லஷ்மியோடே கூட என்னுடைய சூழலிலேயானான் –
—————————
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -1-9-1-
ஜகத் காரண பூதனனாய் -சர்வ அந்தராத்மாவாய் -ஸ்ரீ யபதியாய் இருந்துள்ள கிருஷ்ணனானவன் –
என்னுடைய பர்யந்தத்தை விட்டு போக மாட்டாத படியானான் -என்கிறார் –
இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ண பிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-
இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும் -எவையும் யவரும் –
முதல் திருவாய் மொழியில் நாம் அவன் என்கிற பாட்டில் சொன்ன சேதன அசேதனங்களை மூன்று வகையாலே சொல்லுகிறார்
முதல் திருவாய் மொழிக்கு பின்பு தமக்குப் பிறந்த வைஸத்யத்தால் பாசுர பரப்பு அற சொல்லுகிறார்
இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும் –
பார்ஸ்வஸ்தமாயும் -தூரஸ்த்தமாயும் – அதூர விப்ரக்ருஷ்டமாயும் -உள்ள சேதன அசேதனங்களை சொல்லுகிறது
எவையும் யவரும் –
இப்படி களாலே திரட்டப்பட்ட சேதன அசேதனங்களையும்
தன்னுள்ளே ஆகியும் –
சதேவ -என்கிறபடியே -தான் -என்கிற சொல்லுக்கு உள்ளே யாம்படி இவற்றை சம்ஹரித்தும்
ஆக்கியும் –
தன்னுடைய தயையாலே அவற்றை ஸ்ருஷ்ட்டித்தும்
காக்கும் –
ஸ்ருஷ்டமான அவற்றை ரக்ஷித்து அருளும்
அவையுள் தனி முதல்-
அவற்றின் பக்கலில் அந்தராத்மாவாய் –
தான் ஒருவனே நிர்வாஹகானாய் -நிற்கும்
எம்மான்-
தன் விபூதி விஷயமாக உண்டான ஓரத்தைக் காட்டி என்னை அநந்யார்ஹன் ஆக்கினவன்-
கண்ண பிரான் –
இப்படிப் பட்டவன் முகம் தோற்றாத படி மறைய நிற்கை அன்றிக்கே கண்ணுக்கு விஷயமாக வந்து நிற்கும் உபகாரத்தைச் சொல்கிறது
என்னமுதம் –
தேவர்கள் அதிகாரிகளான அம்ருதத்தில் காட்டில் வியாவ்ருத்தி
சுவையன் –
ரசிகன் -அவ்வமுதத்தில் காட்டில் வியாவ்ருத்தி -அதுக்கு போக்த்ருத்வம் இல்லையே
திருவின் மணாளன் –
இவருடைய அமிர்தம் ஒரு மிதுனம் ஆயிற்று
என்னுடைச் சூழல் உளானே –
பிராட்டி அகலகில்லேன் -என்னுமவன் என் பர்யந்தத்திலே வர்த்திக்குமது தன் பேறாக இரா நின்றான் –
திருவின் மணாளன் –
ரசிகத்வத்துக்கு-சிரமம் செய்த இடம் என்னுதல் –ரசிகத்வத்துக்கு விஷயம் அவள் என்னுதல் –
என்னுடைச் சூழல் உளானே –
என்னுடைய பர்யந்தத்திலே வர்த்திகைக்கு அடி -பிராட்டி -என்னவுமாம்
யஸ்ய ப்ரஸாதே சததம் ப்ரஸீ தேயு ரிமா பிரஜா -ச ராமோ வான ரேந்த்ரஸ்ய பிரசாத நபி காங்ஷதே -என்கிறபடியே –
——————————
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி -1-9-1-
ஸ்ருஷ்ட்யாதி -‘படைத்தல் முதலான முத் தொழில்கட்கும்-ஹேது பூதனாய் – காரணனாய்-சர்வ அந்தராத்மாவான –
எல்லா உயிர்கட்கும் உள் உயிராய் இருக்கின்ற ஸ்ரீ கிருஷ்ணனானவன் என்னுடைய-பர்யந்தத்தை – எல்லையை விட்டுப்
போக மாட்டாதபடி ஆனான்,’ என்கிறார்.
‘ஆயின், இறைவனுடைய மேன்மை உருவம் குணம் இவற்றை அனுபவிக்கின்ற இவர்,
‘இவையும் அவையும்’ என்பது முதலாக அவனுடைய செல்வங்களைப் பேசி அனுபவிப்பதற்குக் காரணம் என்னை?’ எனின்,
இவர்க்கு அவனுடைய குணங்களை அனுபவிப்பதோடு விபூதியை அனுபவிப்பதோடு ஒரு வேற்றுமை இல்லை.
முதல் திருவாய்மொழியிலே பரக்க அனுபவித்த இவை-விசதமாய் – வெளிப்படையாய் இருக்கையாலே
இங்குத் திரள அனுபவிக்கிறார்.
‘அவையுள் தனி முதல், கண்ணபிரான்’ என்பவற்றை நோக்கி அவதாரிகை அருளிச் செய்கிறார்-
—————-
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
அவையுள் தனி முதல் -கண்ணபிரான் -என்னுடைச் சூழல் உளான் -என்கிற பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –
சாத்ம்ய போக பிரதத்வ ரூப குண அனுபவம் பண்ணுகிற இவர் விபூதி அனுபவம் பண்ணுகிறது என் என்ன –
குண அனுபவ பிரகரணத்தில் ஹேயமான விபூதியைச் சொல்லுகிறது
ததீயத்வ ஆகாரத்தாலே அவன் குணங்களோபாதி அனுபாவ்யமாகையாலே –
ஆயின் நாம் அவன் -1-1-4-என்கிற பாட்டில் போலே பரக்க அனுபவியாது ஒழிகிறது புனருக்திக்கு பரிஹாரமாதல்
————————–
இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
யவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என் அமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழலுளானே–1-9-1-
இவையும். . .யவரும்-
இதனால் சித்தின் கூட்டத்தையும் அசித்தின் கூட்டத்தையும் தொகுத்துச் சொல்லுகிறார்,
தன்னுளே ஆகியும்-
‘இவையும் அவையும்’ என்று இங்ஙனம் பிரித்துப் பேச ஒண்ணாதபடி.சதேவ – ‘அவன் ஒருவனே’ என்கிறபடியே,
தான் என்கிற சொல்லுக்குள்ளே ஆகும்படி தன் மேலே ஏறிட்டுக் கொண்டு தரித்து இருந்த படியைச் சொல்லுகிறார்.
ஆக்கியும்-
பஹுஸ்யாம் ‘பல பொருள்களாக விரிகிறேன்’ என்கிறபடியே, தன் பக்கலிலே நின்றும் பிரித்து,
பெயர் உருவம் அடையத் தக்கவாறு அவற்றைச் செய்தும்,
காக்கும்-
உண்டாக்கிய பொருள்களை ஈரக்கையால் தடவிக் காக்கின்ற படி.
அவையுள் தனி முதல்-
இதனால், உண்டாக்கிய பொருள்கள் தொழில் செய்தல் தொழில் செய்யாமைகட்குத் தகுதியாம்படி அவற்றுள்
அந்தராத்துமாவாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறார்.
‘ஆயின், அந்தராத்துமாவாய் நிற்கும் இந்நிலை ‘ஆக்கியும்’ என்று படைத்தலைக் கூறிய போதே அடங்காதோ?’ எனின்,
தத் அநு ப்ரவேஸ்ய ‘படைத்து அவற்றுள் அநுப்பிரவேசித்தார்’ என்கிறபடியே,
இவற்றுடைய -வஸ்துத்வ நாம பாக்த்வங்களுக்கு -அவை பொருளாதலுக்காகவும் பெயர் அடைதலுக்காகவும்
பண்ணும் அநுப் பிரவேசத்தைச் சொன்னார் அங்கு;
இங்கு அவற்றிற்குக் கூறப்படும் பெயர் இறைவனாகிய தன் அளவில் வந்து முடியும்படியாக நிற்கும் நிலையைச் சொல்லுகிறார்;
ஆதலின், அடங்காது என்க.
எம்மான் –
தன் விபூதி விஷயமாகத் தனக்கு உண்டான ஓரத்தைக் காட்டி, என்னைத் தனக்கே உரிமை ஆக்கினவன்.
கண்ண பிரான் –
‘இப்படி இருக்கிறவன்தான் யார்?’ என்னில், ஸ்ரீ கிருஷ்ணன்.
இனி, கண்ணபிரான் என்பதற்கு, ‘கண்களுக்குத் தோன்றித் திருவருள் செய்கின்றவன்’ என்று கூறலுமாம்.
என் அமுதம்
தேவர்கள் அதிகாரிகளாய் இருக்கிற அமிருதத்தில் வேறுபாடு.
சுவையன்-
பரம ரசிகன்; அவ்வமிருதத்திற்குச் சுவையை நுகருந்தன்மை இல்லையே!
திருவின் மணாளன் –
இவருடைய அமிருதம் ஒரு மிதுனம் ஆயிற்று. இதனால், மேற்கூறிய சுவைக்கு ஊற்றுவாய் அருளிச் செய்கிறார்.
(என் அமுதம் திருவின் மணாளன்’ என்று கூட்டி, ‘இவருடைய அமிருதம் ஒரு மிதுனம் ஆயிற்று’ என்கிறார். மிதுனம்-இரட்டை.
‘சுவையன் திருவின் மணாளன்’ என்று கூட்டி ‘இதனால் மேற்கூறிய சுவைக்கு ஊற்றுவாய் அருளிச்செய்கிறார்’ என்கிறார்.)இ
என்னுடைச் சூழல் உளானே-
ஸ்ரீ பெரிய பிராட்டியார் ‘அகலகில்லேன் இறையும்’ என்னப் பிறந்தவன், என் பக்கத்தில் வாழ்தல் தன் பேறாக வாழ்கின்றான்
(‘திருவின் மணாளன் என்னுடைச் சூழலுளான்’ என்று கூட்டி, பாவம் அருளிச் செய்கிறார் ஸ்ரீ பெரிய பிராட்டியார்’ என்ற வாக்கியத்தால்.).
யஸ்ய யா பிரஸாதே சததம் ப்ரஸீதே யுரிமாஸ் பிரஜா ச ராமோ வாநரேன் த்ரஸ்ய பிரசாதம் அபி காங்ஷதே ‘எந்த ஸ்ரீ இராமனுடைய
திருவருளால் இம் மக்கள் எப்பொழுதும் தெளிந்த மனத்தை யுடையவர்களாய் இருக்கின்றார்களோ, அப்படிப்பட்ட ஸ்ரீ இராமன்
ஸ்ரீ சுக்கிரீவனுடைய அருளை நல்ல மனத்துடன் விரும்புகிறான்,’ என்றும்,
லோக நாதா புரா பூத்வா ஸூக்ரீவம் நாதம் இச்சதி – ‘தம்மை ஒழிந்தார்க்கு எல்லாம் நாதனாய் இருக்கும் ஸ்ரீ ராமர்,
ஸ்ரீ சுக்கிரீவனை நாதனாக விரும்புகிறார்’ என்றும், கூறப் படுகின்றவாறே,
‘ஆகியும் ஆக்கியும் காக்கும் தனி முதல் எம்மான்’ ஆகிய இறைவன், என்னை விட்டுப் பிரிதற்கு மனம் இன்றி
என் அருகிலேயே தங்கி இருக்கிறான் என்பார்,‘என்னுடைச் சூழலுளானே’என்கிறார்.
—————
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
இவையும் அவையும் -அது இது இத்யாதிக்கு ஸங்க்ரஹம் –
இவரும் அவரும் -நாம் அவன் இத்யாதிக்கு ஸங்க்ரஹம் –
தன்னுள்ளே ஆகியும் -என்றது தன்னுள்ளே யாம்படி பண்ணியும் என்றபடி —
சம்ஹாரத்தை முற்படக் சொன்னது ஸ்ருஷ்ட்டி அப்யயபூர்விகை யாகையாலே
ஆக்கியும் -ஸ்ருஷ்ட்டித்தும் என்றபடி-
ஸ்ருஷ்டிக்குப் பிற்பாடு -அவையுள் தனி முதல் -அத்விதீய காரணமாவது
சர்வ அந்தராத்மா என்னுமதுக்கு ஹேது –அநு பிரவேசத்தைச் சொன்னபடி –
ஸ்ருஷ்டியர்த்த அநு பிரவேசம் என்றும் ஸ்திதி யர்த்த அநு பிரவேசம் என்றும் த்வி விதம்
வஸ்துத்வ நாம பாக்த்வங்களுக்காக முன்னது -வாசக சப்தம் தன்னளவில் பர்யவசிக்கும் படியைச் சொல்கிறது இங்கு
கண்ணா பிரான் -ஸ்ரீ கிருஷ்ணனாய் அவதரிக்குமவன் என்றும் கண்ணுக்கு விஷயமாய் உபகரிக்குமவன் என்றும்
சுவையன் திருவின் மணாளன் -என் அமுதம் திருவின் மணாளன்-இரண்டாலும்
வாக்யத்வ யுக்தமான புருஷகாரத்வ உபேயத்வங்களைச் சொன்னபடி –
சூழலிலே வந்தான் என்னாமல் சூழலில் வந்து உளன் ஆனான் -என்று தோற்ற சூழல் உளானே -என்று அருளிச் செய்கிறார் –
திருவின் மணாளன் என்னும் அளவும் பரத்வம் அனுசந்தேயம் -என்னுடைச் சூழல் உளானே -ஸுலப்யம் அனுசந்தேயம்
இதுக்கு த்ருஷ்டாந்தம் லோக நாதஸ்ய ஸ்வஸ்ய ஸூ க்ரீவ நாதத்வம் இச்சதி -லோக நாத புரா பூத்வா-
—————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply