ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-–1-9-இவையும் அவையும் -பிரவேசம் –

ஸ்ரீ ஆறாயிரப்படி —

இப்படி எம்பெருமான் என்னோடு ஸம்ஸலேஷித்து அருளினான் -என்கிறார் –

————–

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –

தன்னுடைய விபூதி ஸ்ரவணத்தாலே-சஞ்சாத பக்திகனாய் -ஏவம் விதனான தன்னை -சாஷாத் கரித்து அனுபவிக்க வேணும் -என்ற
அர்ஜுனனுக்கு அதுக்கு ஈடான திவ்ய சஷூஸ் ஸைக் கொடுத்து அருளி -அதி விஸ்மயகரமான வைஸ்வ ரூப்பியத்தைக் காட்டி
அவனை உஜ்ஜீவிப்பித்து அருளினால் போலே
சர்வேஸ்வரனாய் –
ஸ்ரீ யபதியாய்-
பரம ரசிகனாய் –
ஆழ்வார் பக்தியில் துவக்குண்டு -அவரோடு ஏக ரசனான எம்பெருமான்
கீழில் திருவாய் மொழியில் சொன்ன ஆர்ஜவ குண அனுசந்தானத்தாலே பிறந்த பக்த்ய ஆரோக்யத்தை உடைய ஆழ்வாருக்கு
மஹிஷீ பரிஜா நாதி ரூபத்தாலே பல வகைகளாலும் தனக்கு போக்தாக்கள் ஆனவர்களுக்கு நிரதிசய போக்யமான தன்னுடைய படிகளைக் காட்டி
அவர்கள் எல்லோரோடும் கூட சம்ச்லேஷிக்கும் சம்ச்லேஷத்தை
அநாதிகாலம் தாம் இழந்த இழவு எல்லாம் தீரும் படி -சர்வ இந்த்ரியங்களாலும் -சர்வ காத்ரங்களாலும்
யதா மநோ ரதம் தமக்கு ஸாத்மிக்கும் படி தம்மோடு சம்ச்லேஷிக்க-அத்தை அனுபவித்து ப்ரீதர் ஆகிறார் –

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –

ஒன்பதாம் திருவாய் மொழியில் இப்படி ஆர்ஜவ குணத்தை யுடைய சர்வேஸ்வரன் -பொய் கலவாது என் மெய் கலந்தான் –1–8–5–என்றும்
என் எண் தான் ஆனான் -1–8–7-என்றும் கீழ் சொன்ன க்ரமத்திலே தன்னுடைய குண விக்ரஹ மஹிஷீ பரிஜன விபூதி சேஷ்டிதங்களோடே கூட இவரோடு
பரிபூர்ணமாக ஸம்ஸ்லேஷித்து அனுபவிக்கப் பார்த்து -இவர் வெள்ளக் கேடாய் உடை குலையப் படில் செய்வது என் என்று பார்த்து சாத்மிக்க சாத்மிக்க
புஜிப்பிப்பானாக -1-இவர் பரிசரத்திலே வர்த்திப்பது –2-இவருக்கு அந்திகஸ்தனாவது -3-கூட நிற்பது –4-இவர் சரீரத்தில் ஒரு பக்கத்திலே யாவது –
-5-ஹிருதய பிரதேசத்தில் ஆவது -7-தோள்களில் சேர்வது -8-நாவிலே நிற்பது -9-கண்ணுக்குள்ளே யாவது -10-நெற்றியிலே யாவது -11-உச்சியிலே யாவதாகக்
கொண்டு க்ரமத்திலே போகம் தலை மண்டையிடும் படி சாத்மிக்க சாத்மிக்க ஸம்ஸ்லேஷித்த படியை அருளிச் செய்கிறார் –

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி –

விபூதி ஸ்ரவணத்தாலே-சஞ்சாத பக்திகனாய் -தன்னை -காண வேணும் -என்ற
அர்ஜுனனுக்கு – திவ்ய சஷூஸ் ஸைக் கொடுத்து -வைஸ்வ ரூப்பியத்தைக் காட்டி
அனுபவிப்பித்து அருளினால் போலே
சர்வேஸ்வரனாய் –
ஸ்ரீ யபதியாய்-
பரம ரசிகனாய் –
கீழ் சொன்ன ஆர்ஜவ குண அனுசந்தானத்தாலே பெரு விடாய்ப் பட்ட ஆழ்வார் பக்தியில் துவக்குண்டு
அவரோடு ஏக ரசனானவன்
மஹிஷீ பரிஜா நாதி ரூபத்தாலே பல வகைகளாலும் தனக்கு போக்தாக்கள் ஆனவர்களுக்கு நிரதிசய போக்யன் ஆனால் போலே
அநாதிகாலம் இவர் இழந்த இழவு எல்லாம் தீரும் படியும் -ஸாத்மிக்கும் படியாக -சர்வ இந்த்ரியங்களாலும் -சர்வ காத்ரங்களாலும் சம்ச்லேஷிக்க
அத்தை அனுபவித்து ப்ரீதர் ஆகிறார்

——————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –

கீழ் திருவாய்மொழியில் இறைவனுடைய ஆர்ஜவ குணத்தை அநுசந்தானம் செய்தார்;
இப்படி அநுசந்தித்தார் திறத்தில் ஸ்ரீ சர்வேஸ்வரன் இருக்கும்படியை அருளிச் செய்கிறார் இத் திருவாய்மொழியில்-
ஸ்ரீ சர்வேஸ்வரனாய் ஸ்ரீ திருமகள் கேள்வனாய்ப் பரம ரசிகனாய் இருக்கிற இறைவன்,
ஸ்ரீ ஆழ்வார் பத்தியிலே துவக்குண்டு இவரோடே கலந்து -ஏக ரசனாய் -இனிமையில் ஒன்று ஆனான்;
ஸ்ரீ ஆழ்வாரானவர் மேற்கூறிய ஆர்ஜவ குண அநுசந்தானத்தால் இறைவன் பக்கல் பெரிய விடாயை உடையவர் ஆனார்;
இறைவன், ‘இது நமக்கு நல்ல வாய்ப்பாய் இருந்தது’ என்று பார்த்து, அருச்சுனன்,
‘விபூதி ஸ்ரவணத்தாலே விபூதிமான் ஆனவனைக் காண வேண்டும்’ என்று விரும்ப,
‘அதற்கு உறுப்பாக-திவ்யம் ததாமி தே சஷூ – உனக்கு ஞானக் கண்களைக் கொடுக்கிறேன்’ என்கிறபடியே,
திவ்வியமான கண்களைக் கொடுத்து, உலகமே உருவமாக இருக்கும் தனது தன்மையைக் காட்டியது போன்று,
இவ் வாழ்வார்க்கும் தன்னை அனுபவிக்கைக்கு ஈடான  விடாயைப் பிறப்பித்துப்
ஸ்ரீ பரம பதத்தில் உள்ளாரோடு பரிமாறுவது போன்று பரிமாறக் கோலித் தன்னை அனுபவிப்பிக்கிறான்.
அதாவது, ஸ்ரீ பிராட்டிமாரோடு பரிமாறுவது, தேவியர் என்னும் முறையாலே;
ஸ்ரீ திருவடியோடு பரிமாறுவது, வாகனம் என்னும் முறையாலே;
ஸ்ரீ திருவனந்தாழ்வானோடு பரிமாறுவது, படுக்கை என்னும் முறையாலே.
இப்படி  அவர்களோடு ஒவ்வொரு முறையாலே பரிமாறும் பரிமாற்றங்கள் எல்லாம் இவர் ஒருவரோடு பரிமாறுகிறானாய்,
அது தன்னையும் குளப்படியிலே கடலை மடுத்தாற்போன்று அன்றி,(குளப்படி-மாடு முதலியவற்றின் குளம்பு படிந்த சுவடு)-
(‘என்னுடைச் சூழலுளான்’, ‘என்னருகலிலான்’ என்பன போன்று அருளிச் செய்வதால் )பொறுக்கப் பொறுக்கப் பரிமாற,
இவரும் அவனை  எல்லா இந்திரியங்களாலும் எல்லா உறுப்புகளாலும் தாம் விரும்பியவாறே நுகர்ந்து,
(‘என் நெஞ்சினுளான்’, ‘என் கண்ணிலுளான்’ என்பனவற்றை நோக்கி, ‘எல்லா இந்திரியங்களாலும்’ என்கிறார்,
‘ஒக்கலையான்’, ‘நெற்றியுளான்’ என்பனவற்றை நோக்கி, ‘எல்லா உறுப்புகளாலும்’ என்கிறார்.)
அந் நுகர்ச்சியால் உண்டான பிரீதியாலே அவன் குணங்களைப் பேசி அனுபவிக்கிறார்.

இத் திருப் பதிகத்தில் வருகின்ற முதல் பாசுரத்தினை நோக்கி,
‘சர்வேஸ்வரனாய்த் திருமகள் கேள்வனாய்ப் பரம ரசிகனாய்’ என்கிறார்.
‘தனி முதல் எம்மான்,’ ‘என் அமுதம் சுவையன்,’ ‘திருவின் மணாளன்’என்பவற்றை நோக்குக.

—————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

வ்ருத்த அனுவாத பூர்வகமாக சங்கதி அருளிச் செய்கிறார் -சாத்ம்ய போகப் பிரதத்வம் அருளிச் செய்கிறார் என்றபடி –
இருதலைக் காமம் உண்டானால் போகம் இனிதாய் இருக்கும் என்று திரு உள்ளம் பற்றி
ஆழ்வார் இடத்தில் சர்வேஸ்வரனுக்கும் சர்வேஸ்வரன் இடத்தில் ஆழ்வாருக்கும் உண்டான அபிநிவேசத்தை அருளிச் செய்கிறார்
திருவின் மணாளன் -சர்வேஸ்வரனாய் / சுவையன் -பரம ரசிகன் /
துவக்குண்டு -ஈடுபட்டு -அன்யோன்ய பிராவண்யம்/ சர்வாங்க சம்ச்லேஷத்தை அடியிலே பண்ணாமைக்கு
திருஷ்டாந்தம் காட்டி அருளுகிறார் -அர்ஜுனன் இத்யாதியால் –
விடாயைப் பிறப்பித்து -என்றது பக்தி ரூபா பன்னம் ஞானம் -தரிசன சாமானாகாரம் க்ருத்வா -தத் அனுகுண த்வாராதிசயம் –
அமலங்களாக விழிக்கும்
பிராட்டிமாரோடு-என்றது ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே -என் நெஞ்சில் உளானே /
தோளிணையான் -திருவடி ஓக்க /
சூழல் உளான் என்று தொடங்கி-உச்சி உளானே -என்றது முடிவாயத் தலைக் கட்டுகையாலே
பொறுக்கப் பொறுக்க என்கிறது -சாத்மிக்க சாத்மிக்க -என்றபடி
சர்வ இந்த்ரியத்தாலும் என்றது -நெஞ்சின் உளான் -நாவின் உளான் -கண்ணின் உளான் -இத்யாதியைப் பற்ற
சர்வ காத்ரத்தாலும் -என்றது-ஓக்கலையான் -தோளிணையான் -உச்சி உளான் -நெற்றி உளான் இத்யாதியைப் பற்ற
அவனைப் பேசி என்றது அவனுடைய குணங்களை பேசி என்றபடி

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading