ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-–1-4-2-

ஸ்ரீ ஆறாயிரப்படி –1-4-2-

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே
–1-4-2-

பின்னையும் அந்த நாரைகள் போகாது இருந்தவாறே சில குயில்களை நோக்கி தன் அழகாலே என்னைத் தோற்பித்து அடிமை யாக்கினவனுக்கு நீங்கள் என் திறம் சொன்னால்
தான் என் செய்யும் -என்று சொல்ல அவையும் போகாது இருந்த இடத்தில் சொல்லும் வார்த்தை கேட்டுப் போகைக்கு நின்றனவாகக் கொண்டு
என்னுடைய ஜன்மாந்தர பாபத்தாலே உன் திருவடிகளில் அடிமை செய்கைக்குப் பண்டு பாக்யம் பண்ணப் பெற்றிலேன் –
இனி உன் திருவடிகளை நான் அகன்று போம் அத்தனையோ என்று சொல்லுங்கோள் என்கிறார் –
—————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -1-4-2-

இரண்டாம் பாட்டில் சில குயில்களைக் குறித்து எம்பெருமான் பக்கலில் சென்றால் விண்ணப்பம் செய்யும் பாசுரத்தைச் சொல்கிறாள் –

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக் குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே
–1-4-2-

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய் என் செய்யும் உரைத்தக்கால்
விஸ்லேஷ தசையில் -ஆத்மாத்மீயங்கள் எல்லாம் உள்ளது என்பாரைப் போலே சச்நேஹமாக நோக்கின நோக்கையும்
இத்தலையை தோற்ப்பிக்கையாலே மிகவும் மேணானிப்பையும் உடையவனாய் இருந்தவனுக்கு –
சம்ச்லேஷ தசையில் சச்நேஹமாக நோக்கின நோக்காலே என்னை அடிமை கொண்டவனுக்கு என்றுமாம்
அத்யார்த்தையான என்னுடைய தூதாய் எனக்காக ஒரு வார்த்தை அங்கே அறிவித்தால் உங்களுக்கு என்ன சேதம் உண்டு
சிலவருடைய ஆர்த்திக்கு உதவுகை கிடைப்பது ஒன்றோ -என்று கருத்து –

இனக் குயில்காள் நீரலிரே-
எங்களைப் போலே பிரியாதே கூட இருப்பது நீர்மைக்கு நீங்களாவது –

முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல் முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ –
அநாதிகாலம் சஞ்சிதமான மகா பாபத்தாலே திருவடிக் கீழ் அந்தரங்க வ்ருத்திகள் பண்ணுகைக்கு ஈடான பாக்யத்தை
பண்டு பண்ணாத நான் அகன்றே போம் இத்தனையோ
தந்தாமுக்கு என்ன ஓன்று இல்லாதார் தய நீயர் அன்றோ -என்று கருத்து

விதியினமே —
பாவியோம்
விதி இன்னம் என்றுமாம் –

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி -1-4-2-

அநந்தரம் கீழ்ச் சொன்ன நாரைகளில் காட்டில் திரளாகையாலே கார்யகரங்கள் என்று நினைத்து
சில குயில்களை என்னுடைய புண்டரீகாக்ஷன் பக்கல் தூதாக வேணும் என்று அபேக்ஷிக்கிறாள் –

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே
–1-4-2-

இனக்குயில்காள் நீரலிரே–திரளான குயில்காள்–ஸ்ராவ்யமான வாய் வீட்டையுடைய நீங்கள் அல்லீர்களோ–
என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்–எனக்கே தம்மை ஸ்வம் மாக்கித் தந்த சிவந்த தாமரை போலும் கண்ணை யுடையராய்
பின்பு எனக்கு எட்டாமல் உயர்ந்து இருக்கிற சர்வாதிகருக்கு என்னுடைய தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் –வார்த்தை சொன்னால் என்ன தப்புச் செய்யும்
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்-செய்ய –முன்பு செய்த பூர்ண பாபத்தாலே ஸ்லாக்யமான திருவடிகளிலே அந்தரங்க வ்ருத்தி பண்ணுகைக்கு
முன் முயலாதேன் -இனம் –அகல்வதுவோ விதி –முன்புத்தை சாதனத்தில் முயலாத நான்– இன்னம் –அகல்வதுவோ அறுதி இட்டது –

இவ்விடத்தில் கடகருடைய யுக்தி மாதுர்யமும் சமவாயமும் ஸூசிதம் –

—————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -1-4-2-

இரண்டாம் பாட்டில்
சில குயில்களைக் குறித்து அவன் பக்கல் சென்றால் சொல்லும் பாசுரத்தைச் சொல்லுகிறாள் –
நாரைகளைத் தூது போக வேணும் என்று அர்த்தித்தாள்-அவை போனால் சொல்லு வார்த்தையை சில குயில்களைக் குறித்துச் சொல்லுகிறாள்
அந்ய துபக்ராந்தம் அந்யதா பதிதமாய் இருந்ததீ -என்னில் -இவ்வசங்கத பாஷணம் பண்ணிற்று இளலாகில்
விஷய வை லஷண்யத்துக்கு நமஸ்காரம் இறே

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக் குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே
–1-4-2-

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு –
விஸ்லேஷ தசையிலே தான் வரும் தனையும் இவள் தரித்து இருக்கைக்காக -ஆத்மாத்யீங்கள் எங்கேனும் கிடக்கிலும்
உன்னது அன்றோ என்கிற வார்த்தையாலே என்னுடையவர் என்கிறாள்
ஐஸ்வர்யத்தாலும் வாத்சல்யத்தாலும் கலவியாலும் சிவந்த திருக் கண்களை யுடையவர்
இவை எல்லாம் இவள் அனுபவித்தவை இறே
முதல் திருவாய் மொழியிலே ஐஸ்வர் யமும் -மூன்றாம் திருவாய் மொழியிலே வாத்சல்யமும் இத் திருவாய் மொழியிலே கலவியும் –

பெருமானார்க்கு –
ஸ்வ பாவிகமான பௌஷ்கல்யத்துக்கு மேலே தன்னைத் தோற் பித்தத்தால் வந்த மேணானிப்பைச் சொல்லுகிறாள் –
சம்ச்லேஷதசையிலே ச்நேஹகமாக நோக்கி -அந் நோக்காலே என்னை அடிமை கொண்டவனுக்கு என்றுமாம் –

என் தூதாய்
அந் நோக்குக்கு இலக்காய்-இன்று வெறும் தரையான என் தூதாய்

என் செய்யும் உரைத்தக்கால்
அவனோடு கூட்டச் சொல்லுகிறேனோ -ஒரு வார்த்தை சொன்னால் என்ன சேதமுண்டு -ஆர்த்த ரஷணம் சிலருக்கு கிடைப்பது ஒன்றோ

இனக் குயில்காள் –
இனமாய் இருப்பார்க்கு -தனியாய் இருப்பாரைக் கூட்ட வேண்டாவோ

நீரலிரே-
நானும் அவனும் சேர இருந்த போது -போது போக்கக் கடவர்கள் அல்லீர்களோ –
நீர்மைக்கு நீங்கள் என்னும் அத்தனை அன்றோ -என்னவுமாம்
போனால் சொல்லும் பாசுரம் அறியாமல் இருக்கிறவனவாகக் கொண்டு சொல்லுகிறாள் –

முன் செய்த முழு வினையால் –
அநாதி கால சஞ்சிதமான பாபத்தாலே -பாபம் சாவதியாதல் -பாபம் பண்ணின காலம் சாவதி யாதனால் அன்றோ என் கையில் என்னைக் காட்டித் தருவது
இதிகாசம் -பட்டர் திருக் கோட்டியூரிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே -தெற்கு ஆழ்வானும்-கோளரி ஆழ்வானும் என்று இருண்டு திருப்பதியார் உண்டு
கோளரி ஆழ்வான் சதாசார பரனாய் இருக்கும் -தெற்கு ஆழ்வான் மேல் எழத் திரியும்
ஒரு விசேஷ திவசத்திலே இருவரும் சேர்ந்த அளவிலே கோளரி ஆழ்வான் தெற்கு ஆழ்வானை
இன்று ஆகிலும் ஒரு முழுக்கு இட மாட்டாயோ -என்ன -என்னுடைய பாபம் தெற்கு ஆழ்வார் கையில்
திரு ஆழி யாலே போக்கப் போமது ஒழிய ஓர் இரண்டு முழுக்கால் போம் அதன்று காண் என்ன
அத்தைக் கேட்டு இவனை மேல் எழ விசாரித்தோமே-என்று வித்தராய் அருளினார் பட்டர் –

திருவடிக் கீழ் குற்றேவல் முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ-
திருவடியின் கீழ் அந்தரங்க வ்ருத்தி பண்ணுகைக்கு ஏற்கவே ப்ரவர்த்திக்க பெறாத நான் அகன்றே போம் அத்தனையோ –
முன் செய்ய முயலுகை யாவது -அதுக்கு ஈடான பாக்யத்தைப் பண்ணுகை
க்ரியதாமித மாம்வத -என்றும் – முகப்பே கூவிப் பணி கொள்ளாய் என்றும் சொல்லுகிறபடியே கண் வட்டத்தில் நின்று
பண்ணுகைக்கு ஈடாக முயலாத நான் அகன்றே போம் இத்தனையோ என்றுமாம்
தந்தாமுக்கு என்ன ஓன்று இல்லாதார் தய நீயர் அன்றோ என்று கருத்து
த்வத்க்ருபா சங்கு சந்தீ-என்னக் கடவது இறே –

விதியினமே
விதி என்று பாபமாய் -விதியை யுடையோம் –பாவியோம் என்றபடி
கீழே முழு வினை என்று சொல்லிற்றே-என்னில் மகா பாபத்தைப் பண்ணின பாவியோம் என்றபடி
பாவமே செய்து பாவியானேன் -என்னக் கடவது இ றே
அன்றிக்கே
எங்கள் தலையில் குற்றத்தை இசைந்த பின்பும் அகலும் அத்தனையோ -என்றுமாம்
இனம் -இன்னம் -விதி -உன் கருத்து

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி -1-4-2-

சில நாரைகளைத் தூது போகல் வேண்டும் என்று இரந்தாள் கீழ் ;
அங்குப் போனால் சொல்லும் பாசுரத்தைக் குயில்களுக்குச் சொல்லுகின்றாள் இங்கு:
அந்யா துபக்ராந்த மன்யதா பதிதம் (‘தொடங்கியது ஒன்று, முடிந்தது வேறு ஒன்று,’ )என்கிறபடியே வந்து விழுந்தது.
‘இப்படிக் கலங்கலாமோ?’ எனின், இத்தனையும் கலங்கிற்றிலளாகில் இவள் பிரிந்த பொருளுக்கும்
நாட்டார் பிரிந்த பொருளுக்கும் வேற்றுமை யின்றி ஒழியுமே,
இப்படிக் கலங்கப் பண்ணாத அன்று குணங்களால் குணாதிக விஷயத்துக்கு நமஸ்காரமாமித்தனை அன்றோ?

——————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

இவள் கலங்கிற்றிலள் ஆகில் இவள் ப்ரேமத்துக்கும் விஷய வைலக்ஷண்யத்தைக்கும் கொத்தையாகும் –
அவன் ஸூந்தர்யத்துக்குக் கொத்தை -அவன் குணாதிக்யதைக்கும் கொத்தை –
நமஸ்காரமாம் அத்தனை -என்றது தேசாய் தஸ்மை நம-என்கிற இடத்தில் போலே
பரித்யாகமே யாய் விடும் அத்தனை -என்றபடி –

——————————

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக் குயில்காள்! நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ்க் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே?
–1-4-2-

என் பெருமான்-
என் -பிரிந்த சமயத்திலும் ‘என்னுடையவன்’ என்று கூறலாம்படி காணும்
கலக்கிற சமயத்தில் அவன் இவள் இட்ட வழக்காய் இருந்தபடி.
அன்றி, பிரிகிற காலத்தில் தான் வருமளவும் இவள் தரிக்கைக்காக
‘இது எங்கே இருக்கில் என், எங்கே போகில் என்? உன்-சரக்கு அன்றோ பொருள் அன்றோ?’ என்று கூறிப் பிரிவானாதலின்,
அதனை நோக்கி, ‘என்பெருமான்’ என்கிறாள் ஆகவுமாம்.

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு –
‘பிரிவில் திருக் கண்கள் சிவந்திருக்குமோ?’ என்னில், ஸ்வாபாவிகமான ஐஸ்வர்யத்தாலும் சிவந்திருக்கும்;
ஸ்வகீய வஸ்துக்கள் – தனக்குரிய பொருள்கள் பக்கலுள்ள-வாத்சல்யத்தாலும் – அன்பினாலும் சிவந்திருக்கும்;
மது பான மத்தரைப் போலே -கட் குடியர்களைப் போன்று இவளோடு கலந்த கலவியாலும் சிவந்திருக்கும்;
அன்றி, பிரிவாலே அரையாறுபட்டுச் சிவந்திருக்கும்.
‘ஆயின், இவற்றை எல்லாம் பிரிந்திருக்கும் இவள் கண்டாளோ?’ எனின்,
இவற்றை எல்லாம் இவள் அனுபவித்தவள் அன்றோ?
எங்கே அனுபவித்தாள்?’ எனின்,
முதல் திருவாய் மொழியிலே ஐஸ்வரியம்,
மூன்றாந் திருவாய்மொழியிலே வாத்ஸல்யம்,
இத் திருவாய்மொழியில் கலவியும் பிரிவும்.

பெருமானார்க்கு-
பிரிகிற போது கண்ணாலே நோக்கி இவளைத் தனக்கே உரிமை யாக்கிப் போன-அநந்யார்ஹையாக்கி-படி.
(இங்கே இச் சொல்லுக்குத் தலைவன் என்பது பொருள்.)
அன்றி, தலைவன் தனக்கு இயற்கையில் அமைந்த ஐஸ்வரியத்தோடு இவள் இடத்துள்ள குணங்களாகிய செல்வத்தையும்
உடன் கொண்டு சென்றவனாதலின், இரட்டித்த செல்வத்தினையுடையவன் என்பாள், ‘பெருமான்’ என்கிறாள் எனலும் அமையும்.
(இங்கே ‘பெருமான்’ என்பதற்குச் ‘செல்வத்தாலே பெரியவன்’ என்பது பொருள்; அதாவது, இரட்டித்த செல்வத்தையுடையவன் என்பதாம்.)

என் தூதாய் –
அவனோடே கலந்து பிரிந்து வெறுந்தரையாய் இருக்கின்ற எனக்குத் தூதாய்.
அதாவது, ‘கடலேறி வடிந்தாற் போலே காணும் கிடக்கிறேன்,’ என்றபடி,

உரைத்தக்கால் என் செய்யும்-
உரைத்தால் என்ன தீமை உண்டாம்?
‘அவனைக் கொடுவந்து சேர்க்கச் சொல்லுகிறேனோ? ஒரு வார்த்தையைக் கூறின் என் செய்யும்?’ என்பாள்,
‘உரைத்தக்கால் என் செய்யும்?’ என்கிறாள்.
இத் தொடரில், சென்று கூறின்,
அதற்குக் கைம்மாறாக அவன் உபய விபூதிகளையுந் தரினும் தருவான் என்ற குறிப்புப் பொருளும் தோன்றும்.

இனம் குயில்காள் –
என்னைப் போன்று தனித்திருக்கின்றீர்கள் அன்றே?

நீர் அலிரே –
நீர்மைக்கு நீங்கள் அன்றோ? (இங்கு நீர் என்பது, நீர்மை என்ற சொல்லின் விகாரம்; நீர்மை-தன்மை)
அன்றி, இதற்கு, ‘யானும் தலைவனும் சேர்ந்திருக்கும் போது கேட்டவற்றிற்கு எல்லாம் விடை பகர்ந்து வந்த நீங்கள்,
அவன் பிரிந்தவாறே வேறு சிலர் ஆனீர்களோ?’ என்று கூறலுமாம். (இங்கு ‘நீர்’ என்பது, முன்னிலைப் பெயர்.)

முன் –
நான் பாபம் பண்ணிப் போந்த காலம் ஓர் எல்லையுடன் கூடியதோ?-சாவதியோ – ‘அன்று’ என்றபடி.
இதனால், சென்ற காலம் அனைத்தையும் குறிக்கிறாள்.

செய்த –
சங்கற்பித்துவிட்ட அளவேயோ? அன்று; சரீரத்தால் செய்தது என்றபடி.

முழு வினையால்-
அவற்றுள் ஏதேனும் அகஞ்சுரிப்பட்டது உண்டோ? ‘இன்று’ என்றபடி,
அதாவது, ‘காலம் ஒரு வரையறைக்குட் பட்டிருந்து, அக்காலங்களில் நான் செய்து போந்த பாவங்களும்
ஒரு வரையறைக்குட் பட்டிருப்பின் அன்றோ என்னால் போக்கிக் கொள்ள முடியும்?’ என்பதாம்.
‘ஆயின், அத்தகைய தீவினைகளை யுடைய நீர் இறைவனைச் சார்தல் எவ்வாறு முடியும்?’ எனின்,
இறைவனால் அத் தீவினைகளைப் போக்க ஒண்ணாது ஒழியின் அன்றோ நான் இழக்க வேண்டுவது?
இங்கே ‘ஒரு முழுக்காலும் இரண்டு முழுக்காலும் போகாது காண்-
தெற்காழ்வார் கையில் திருவாழியாலே வினையை அறுத்துக் கொண்டு போகில் அத்தனை ஒழிய,
ஒன்று இரண்டு முழுக்கால் போகாது காண் நான் பண்ணின பாபம்,’ என்று
ஸ்ரீ திருக்கோட்டியூரிலே ஸ்ரீ தெற்காழ்வான் ஸ்ரீ கோளரியாழ்வானுக்குத் தீர்த்தத் துறையிற் சொன்ன
வார்த்தையை நினைவு கூர்வது.

திருவடிக்கீழ் குற்றேவல் –
திருவடிகளிலே கிட்டி அந்தரங்கத் தொண்டுகளைச் செய்வதற்கு,
‘தலைவி பிரிந்து வருந்துகிறவள் ஆதலின், ‘அவனைச் சேர்வதற்கு’ என்னாது
‘திருவடிக்கீழ்க் குற்றேவல்’ என்கிறது என்னை?’ எனின்,
அந்தணர் பிச்சு ஏறினாலும் ஒத்துச் சொல்லுமாறு போன்று, இவர் பிராட்டியானாலும் மார்பால் அணைக்க நினையார்;
திருவடிகளில் அணையத் தேடும் அத்தனை.

முன் செய்ய முயலாதேன்-
முற் பிறவிகளிலே நோலாத நான்.
இனி இதற்கு,’‘இந்தக் காரியத்தைச் செய் என்று என்னை நியமிக்க வேண்டும்,’ என்று இளைய பெருமாள் கூறியது போன்று,
க்ரியதாம் இதி மாம் வத (‘இன்னதைச் செய்’ ) என்று ஏவத் திருமுன்பே அடிமை செய்ய முயலாத நான் என்று பொருள் கூறலுமாம்.

முன் செய்ய முயலாதேன் இனம் அகல்வதுவோ விதி-
திருவடிகளிலே அடிமை செய்கைக்குத் தக்கது ஒரு சாதனத்தை என தலையால் பண்ணாத நான் அகன்றே போம் இத்தனையோ?
இனம்-‘இன்னம்’ என்பதன் விகாரம்./ விதி-நியாயம்.
‘எங்கள் அபிமதம் பெறுகைக்கு எங்கள் பக்கல் ஒரு நன்மை இல்லாத பின்பும் தாழ்க்கும் இத்தனையோ?’ என்கிறாள் என்று
ஸ்ரீ பிள்ளை திருநறையூர் அரையர் பணிப்பர்.

இனி, ‘அகல்வதுவோ விதியினமே? என்பதனை,
‘விதியினம் அகல்வதுவோ?’ என்று மாறிக் கூட்டி, முதல் இல்லாதார் அன்றோ பலிசை இழப்பார்!
அவன் தானே முதலாக இருக்கும் கோஷ்டி -கூட்டமன்றோ இவர்கள் கூட்டம்?’ என்று பொருள் கூறலுமாம்;

விதியினம்
புண்ணியத்தை யுடையோம்.
‘களை கண் மற்று இலேன்’ என்றும்,
‘உன் சரண் அல்லால் சரண் இல்லை’ என்றும்,
மைத்து எழுந்த மாமுகிலே பார்த்திருக்கு மற்றவை’ என்றும்,
‘நெறிவாசல் தானேயாய் நின்றானை’ என்றும்,
‘விழிக்குங் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால்’ என்றும்,
‘வாழுஞ் சோம்பர்’ என்றும்
இப்படிகளிலே அன்றோ இவர்கள் கோஷ்டியில் வார்த்தைகளும் இருக்கும்படி?

இனி ‘விதியினம்’ என்பதனை ‘விதியினன்’ என்றதன் திரிபாகக் கொண்டு,
அதற்கு, ‘பாபத்தையுடையேனான நான்’ என்று பொருள் கூறி,
நான் அகல்வதுவோ – ‘பாவத்தையுடைய நான் அகன்றே போமதுவோ?’ என்று கூறலும் ஒன்று.
விதி – பாபம். ‘
ஆயின், மூன்றாமடியில் ‘முழுவினையேன்’ என்றவள் ஈண்டும் ‘பாவியேன்’ என்று கூறல்,
கூறியது கூறலாகாதோ?’ எனின் ஆகாது;
‘தீய வினைகளைச் செய்த தீ வினையேன்’ என்கிறாள்.
‘பாவமே செய்து பாவியானேன் என்றார் ஸ்ரீ மங்கை மன்னனும்.

———————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

எங்கனே அனுபவித்தாள் -கணக்கறு நலத்தனன் -வாத்சல்யம் –
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவேன் -ப்ரத்யக்ஷ சாமானாகார மானஸ சாஷாத்கார ரூப சம்ஸ்லேஷம்-
வெஞ்சிறைப் புள்ளுயர்த்தார்க்கு -சேர்த்தியலே ராஜ்ய கார்யம் எல்லாம் கிடக்க ஓர் அபலை பக்கலிலே இப்படி சக்தனாய்
இருக்கலாமோ என்று எடுத்துக் கொண்டு போனானே –
பிரிவாற்றாமையாலே புரிந்து பார்த்ததால் கண்கள் சிவந்து இரட்டிப்பாய் இருக்குமே –
பெருமானார்க்கு -இரண்டு அர்த்தங்கள் -கண்ணாலே நோக்கி அநந்யார்ஹய் ஆக்கி –
சர்வ ஸ்வ அபகாரம் பண்ணிக் கொண்டு போகையால் வந்த பெருமை
ஒடுக்கு மாட்டாவது-மாட்டை ஒடுக்குகையாய் -மாடாவது தனமாய் -அத்தை முட்டுக்கு கோல் கொள்ளுகை
அதவா- நிமித்த தனம் ஸ்த்ரீ தனம் -நாண் மடம் அச்சம் முதலானவற்றைக் கொண்டு அன்றோ போகிறது –

என் செய்யும் -உபய விபூதியும் தங்களுக்கு கிஞ்சித் கரிக்க என்று இருக்கின்றமை -பொன்னுலகு ஆளீரோ-இத்யாதி –
நீர்மை -கிருபை -நீர்மையால் பிரசித்தர் அன்றோ –
முழு வினை -சாகல்யமும் மஹத்வமும் விவஷிதம்
முன் -ஏற்கவே -சந்நிதியில் -/ விதி -சங்கல்பம் -நியாயம் -புண்ணியம் –
அனந்தன் மேல் கிடந்த எம் புண்ணியனை உடையோமாய் வைத்தும் அகல்வதோ
உன் கடைத்தலை வாழும் சோம்பர் அன்றோ
இருந்து வாழும் -அவ்விருப்பே வாழ்ச்சி -உன் பக்கலிலே ந்யஸ்த பரராய் ஸ்வ ஹிதத்திலே சோம்பினவர்கள் –
உபாயம் சர்வேஸ்வரன் யானால் பின்பு போகமே உள்ளதாகையால் ஸ்வ ஹிதத்தில் சோம்பி இருக்கும் இருப்பு
தானே வாழ்ச்சியான இருப்பாய் இருக்கும் என்றபடி -நெடும் சோம்பரை வ்யாவர்த்திக்கிறது –
இழந்த கால விஷய சோகமும் -த்வரையும்-ததேக ரஷ்யத்வ அத்யாவசாயமும் -ஆகிஞ்சன்ய அநந்ய காதவங்களும் ஸூசிதம்

————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading