ஸ்ரீராமஜெயம் நான்காவது -கிஷ்கிந்தாகாண்டம் அனுமார் மறைந்து நின்று யோசித்தல் சவாரி சொன்ன வழிபிடித்து ராமனும் தம்பியும் நடக்கத் தான்கண் டேகிக் கவலைகொண்டு சுக்ரீவன் விட அனுமான் மறைந்துநின்று கருதிப்பார்த்தான் தவவடிவர் வரிசிலையர் புரிசடையர் இளங்குமரர் தருமசீலர் இவர் எவரோ என்று சொல்லிக் கண்ணுவான் யோசனையால் எண்ணுவானே கண்ணிகள் 1. இன்னார் இனியார் என்று என்னசெய்தேன் இவர்கள் தெரியேனே - புண்ணியம் வரத்தானே வந்து 2. இங்கே என் கண்ணின் முன்னே கங்கை உதித்தாற்போலே உதித்தாரே குதித்தாரே 3 காளைப் பருவத்திந்த வேளைக்குத் தக்கவேஷம் காட்சிதந்தாரே கொண்டுவந்தாரே இவர் 4. தேவர்க்கும் தேவர் இவர் மூவர் இவர் இரண்டு என்று சொல்லவோ அவர் பேர்கள் அல்லவோ சிலாக்கிய வான்கள் இவர் 5. அசங்காத பலர்உள்ள பசும்புல் தேயநடவா பாக்கியவான்கள் 6. எல்லா வல்லமையும் கல்லாக் கலைகளெல்லாம் தங்கள் செய்யஉரியோர் இவர் சற்றபெரியோர் ஒன்றை விடுத்தார் இங்கே அடுத்தார் பூணுகிறாரே காணுகிறாரே இவர் கொண்டயடையோர் எண்ணம்உடையோர் 7. பிராண சஞ்சீவி போலே திராணியால் அதைத் தேடி 8. அடைவான மூப்பிளமை உடலும் நிழலும் போலக் 9 . வளைத்த வில்லும் அம்பும்கைக் ளைத்த பேர்களைக் கைதூக்கும் 10. கல்லும் முள்ளும் மல்லிகை செல்லக் குளிருதையோ 11. குவடும் காடும் செடிக இவரைக் கண்டுபேயும் கண் 12. பறவைகளும் கரைந்து சிறகை விரித்து மேலே மலர்போலே இவர் விழிமேலே ளும்புரியுதே - அய்யோ சொரியுதே முகம் வாடுதே - இவர்க்கு பந்தல்போடுதே அனுமார் ஸ்ரீராமருக்கு வரலாறு கூறுதல் மாசகல இந்தவண்ணம் எண்ணிச்சின்ன வன்னிவடி வுடன் நின்றான் நீஆர்பிள்ளாய் பேசெனவே வாயுமகன் அனுமான் என்பேர் பெருமலையில் வாலியினால் சுக்கிரீவன் ஆசகல ஒளிந்திருப்பான் தேவரீரை அறிந்துவர என்னைவிட்டான் வந்தேன் என்னத் தாசரதி சுக்ரீவன் எங்கே என்று தான் சொல்ல வணங்கி அனுமான் சொல்வானே பல்லவி அவன் சுக்ரீவன் பேர் நீ சொன்ன போதே சகுர்தம் அல்லவோ சுகுர்தம் ( சுக்) அநுபல்லவி தற்காலத்திலே பாலால் முலைவிம்மத் தாயானவள் பிள்ளை பேர் சொல்லி அழைத்தாற்போல் ( சுக் ) சரணங்கள் 1 . பட்ட மரந்துளிர்க்கும் உங்கள் வச னத்தாலே பரிந்தீரோ அவனுக்குப் பயம்உண்டோ னிமேலே வெட்டுணி வாலி என்னும் கோடைகொண் டொருக்காலே வெதும்பிய பயிர்க்கொரு மேகம் இறைத் தாற்போலே ( சுக் ) 2. படைத்த புவியும் சொந்தமனைவி தன்னையும் பதைக்கிறான் செடியில்லா கொடிபோலவே துவண்டு அடைக்கலம் தந்தால்உமக் கனந்தம் பலன்கள் உண்டு ஆர்க்குக் கிடைக்கும் உங்கள் அருமைக் கனிவாய் கொண்டு ( சுக் ) 3. பலமிக்க வாலியெனும் தறிதும்புக் காளையிலே பருத்தி பட்டபாடெல்லாம் பட்டோமோ நீளையிலே மலையிற்று மயிரிலே தொங்குகிற வேளையிலே வந்திரே என்ன தவம் செய்தோம் முன் நாளையிலே ( சுக் ) 4. கோரவாலி விடுக்க வந்தீர் இன் கொண்ட எங்களை ஆண்டுகொள்வ ஆரென்று கேட்கிலுமை என்ன சொல் அடியேனும் அவனாலே அனுப்பவந் றென்னசங்கை துமதுபங்கு வேனங்கே தேனே இங்கே ( சுக் ) அனுமார் தேற்றச் சுக்கிரீவன் சரணடைதல் அனுமான் இப்படிச்சொல்ல அயோத்தி தன்னில் அய்யன் உதித்தது முதலாச் சீதைபோன மனவேதை கடைசியா நடந்தவாறே வருந்தி யிளையோன் சொல்ல அறிந்து கொண்டான் கனமான விசுவரூபங் காண்பித்தான் கவிக்குலவேந் தனனயும் காண்பிப்பேன் என்று தனதாம் தன் அரசனுடனேபோய் எல்லாம் சாற்றினான் அவன் கவலை மாற்றினானே கண்ணிகள் ராமலட்சு அவர் தம்மை மறுசுகந்தேடுமோ பிரியவும் கூடுமோ 1. குணசம்பிரம தீரர் மணர் என்றிருவீரர் மணமா அடுத்தவர்க்கு க்ஷணமாகிலும் விட்டுப் 2 . கண்டேன் கண்டேனே கொண்டேன் கொண்டேனே புண்டரீகக் கண்ணனே மண்டலீ தனவனே ஆனந்தம் நல்ல அந்தமூர்த்தி தம்பிவாய்த்தவன் 3. சத்துரு என்பது துடைத்தோர் மித்திரன் கையம்பு வெற்றி மருவு கீர்த்தி சித்தி பெறும் அயோத்தி விசுவா படைத்தோர் வெகு மேவியகுணசீலர் தெசரதராசன்பாலர் அம்புபோட விழுந்தாளே அகலிகை எழுந்தாள் சாபமும் ஒழிந்தாளே 4. குடிலத்தாடகை மேலே ஒடிப்பட்ட மரம்போலே அடிபட்டவுடன் அந்த சடிதிக்குள் கௌதமர் 5. ஒடுக்கி ஒடுக்கிச் சொன்னாலும் அடக்கப்போமோ என்னாலும் மிடுக்குடன் உருத்திர எடுத்தாற்போல் எடுத்தானே ராமன் கீர்த்தியை மிதிலையில் தடக்கைவில்லறிந்தானே ஒடித்துவிட்டெறிந்தானே 6 மாமணம் நிறை வேற்றி ராமன் கெருவம்மாற்றி கோமுடி தன்னைராமன் நாமெல்லாம் ஈடேற 7. முன்னே விராதன்மடிந்தான் பின்னே கரனும் முடிந்தான் வன்மாரீசனுக்கும் பொன்மான் செத்த இடம் பரசு அயோத்தி கொடுத்தானே தம்பிக்கங் நடந்து வந்தானே இங்கே ராமன் அம்பாலே இதுவல்லாமல் வாளிதொடுக்கலாச்சே புல்லுமுளைத்துப் போச்சே கவந்தனை இவரே அமுதம் எழுந்தாற்போலே கிடைக்குமோ இதுபோலே 8. எடுப்புள்ள பெரியோரே அடித்தாரே எதிர் நேரே அடுக்களை கிணற்றிலே கிடைத்தாரே ஒருவர்க்குக் 9. அலைவாய்த் துரும்பெனவே மலைபோல் விசாரம்தின்னவே பலநாளிலும் பட்ட நலமாக வாலிக்கொரு நித்தம் நித்தம் மெத்த மெத்த பாடெல்லாம் விண்டோமே நமனையும் கண்டோமே 10. ராசன் மகனே ஏன்டா யோசனை பண்ண வேண்டா ஈசுரன் உன்பங்கில் பூசைசெய்தாய் என்றிப் வரந்தரும் இருந்தானே இருந்தானே போதல்லோ தெரிந்தேனே 11. சுகம் கண்டு மேவலாமே முகங்கண்டாற் பாவம்போமே புகுந்தவர் சேவைகாணப் இகபரம் இரண்டிலும் அவர்மலர் சுக்கிரீவா புத்திமுத்தியும் தரும் எதுநினைந்தாலும் வரும் 12-க்கதை அன்று வீறி சிக்கீரீவன் மனந்தேறிப் அக்கணம் ஒருமனதாகவே மைக்கடல் வண்ணன் ராமனை அனுமான் சொல்ல புறப்பட்ட துணிந்தானே வந்துபணிந்தானே 13. பணிந்தவன் தன்னைப்பார்த்து ரகுநாயகன் அணிந்த கண்கிருபை பூத்துச் சுக்கிரீவா பிணங்கும் வாலிக்கு வில்லும் பிடித்தேன் என்றெடுத்தேனே இணங்கும் உன்னைரட்சிப்பேன் என்றுனக கொடுத்தேனே ஸ்ரீராமர் சுக்கிரீவனுக்கு ஆதரணை சொல்லல் சரணமென இப்படியே சுக்ரீவன் சொல்லச் சாமி அபயங்கொடுத்தான் அனுமான் தானும் முரணுள வாலிக்கும்ஓர் அரக்கனுக்கும் முன்புசண்டை வரலாலே தம்பி தன்னை உரனழித்து மண்ணையும் பெண்ணையும் கைக்கொண்டே ஓட்டிவிட்டான் இவனிங்கே ஒதுங்கினான்உன் பரமெனவே தாரம் எடுத்ததையே எண்ணிப் பாவிப்பான் ரகுராமன் கோவீப்பானே கண்ணிகள் 1. சுக்கிரீவா உன் மனக்கிலேசங்கள் எனக்கே ஆம் அது தீரடா க்காலத்தில் முடுக்காம் வாலியை வதைக்க நீயது பாரடா 2. பெருவாலிக்குள் தலைசாயக்கணை பிசகாதப்படி தொடுக்கிறேன் அரைநாழிக்குள்ளே முடிசூடிப்புவி அரசாளக்குடை கொடுக்கிறேன் 3. துடுக்கா மனைவியை எடுத்தான் எனஉரை கொடுத்தாய் அவனை இந் நேரமே கெடுத்தேன் அவன் முடி பொடிக்காவிடில் வில்லை எடுத்தாள்வதில் என்ன சாரமே 4 -உடைந்தே சரண் என அடைந்தோர்களை முற்றும் தொடர்ந்தா தரித்திட வேணுமே கடும்போரினிலே கைவிடும் போதினில் இந்த உடம்பால் என்பயன் காணுமே சீதை ஆபரணங்களைக் கண்டு ஸ்ரீராமர் இரங்கல் அண்ணல் ராகவன் சுக்கிரீவனுக் கிவ்வாறே அனுக்கிரகித்து வாலி சோதனைக்கு வேண்டி வண்ணமரா மரம் ஏழும் அம்பால் எய்து வழியிலே துந்துபிதன் எலும்பைக் கண்டு திண்ணன்எனும் தம்பியினால் கிளப்பி விட்டுத் தேரினிலே போம் சீதை முடிந்து போட்ட துண்ணெனும் ஆபரணங்கள் காட்டக்கண்டு துடிக்கின்றான் சாமிகுறை படிக்கின்றானே கண்ணிகள் 1. நின்று தெரிந்து குலமடந்தையர் தக்களைக் கொண்டீரோ - இல்லையோ கணவன் இருந்தும் உடைமை எறிந்த பெண்களைக் கண்டரோ 2 அரசிலே மணிமுடி சுமந்துஉல கங்கொள் சிரசிலே முடி சுமந்தொரு பெண்பழி நாடினேனே -- ஐயையோ சூடினேனே மரபில் 3. தசரதன் தபசுகள் புரிந்துவ ரும்பாலன் ஆனேனே ஐயையோ மிசைபடும் சுவையுள கரும்பில் வெறும்பூ ஆனேனே 4. வாரிதி தந்தவர் கங்கை அழைத்தவர் வந்தேனே ஐயையோ பாரியை ஆனாலும் ரட்சணை செய்யப் படாமல் மெலிந்தேனே 5. மங்னக எனைப் பார்க்க நான் முகச் சோடைக்கு மாற்றிட்டுத் தீர்ப்பேனோ - ஐயையோ அங்கிங்கும் பார்த்தேன் வனம் பார்த்தேன் இனி ஆர் முகம் பார்ப்பேனோ 6. வீண்பணிதி ஏதுக்கார் என்னைமீட்பவர் மேல்என் றறிந்தாளோ ஐயையோ ஆண்பிள்னை அல்லநான் பெண்பிள்ளை என்றெண்ணி அணியை எறிந்தாளோ 7. அவளுக்கு நானும் எனக்கவளும் பூட்டும் பூண்பேனோ - ஐயோ அவள் பவளக் கனிவாயும் முத்து நகையும் நான் பரிந்தென்று காண்பேனோ ஆரங்கள் 8. ப்ணிதி இங்கிது சனகி அங்கம் நி றைந்திடச் சேர்வேனேர் குணசௌந்தரிய மலர்முகங் கண்டு கண்களி கூர்வேனேர் ஐயோ அவள் 9. குலந்தரும் கொடியுடன் தவஞ்செய்து போந்தேன் என்பேனோ லங்கையில் விட்டு வெறுங்கையாய் வந்து சேர்ந்தேன் என்பேனோ ஐயையோ 10 . இல்லாளை விட்டு வல்லாண்மை பேசி இன்னம் இருந்தேனே - ஐயையோ புல்லாளைச் செய்து கொல்லையிலே வைத்தாற் போலே இருந்தேனே ஸ்ரீராமனுக்குச் சுக்கிரீவன் துணிவு கூறல் இந்தவித மாக ராமச் சந்திரன் மனம் நோகும் வேளை தொந்தம் உளசுக்கிரீவ னுந்துணிவு செப்பு வானே பல்லவி எதுக்கு இந்தவி சாரம் எதுக்கித்தனை தூரம் ( ஏது ) அநுபல்லவி போதும் பிரமாண்டம் அப் சீதையைக் கொண்டுவந்து புறம் போய் வருகிறேன் செணத்தில் தருகிறேன் ( ஏது ) சரணங்கள் 1. தருமராமரம் எய்தாய் துந்துமி எலும்பை தம்பியாலே எறிந்தாய் சாமி கருதினது தருவேன் என் பலன் உன்பலன் களும் நீயே அறிந்தாய் ராவணன் ஒருபது தலைகளும் உன் கணைபோலத் தருகிறேன் தருகிறேன் தேவியைக்கைமேலே 2. மின்பணி காட்டி உனக்கு நான் இந்த வேதனை காட்டினேன் - சாமி நின் பெருங் கவலையை நீக்க வேணும்சும்மா நேரம்பா ராட்டினேன் - சாமி என்குறை முடிக்கிற தென்ன இதற்குமுன்னே உன்குறை முடிக்கிறேன் ஒருநிமிஷத்திற் சொன்னேன் ( ஏது ) 3. சுத்தர் ஆகிய மூவர்க்கும் தேவர்க்கும் சூழுமோ படைக் என்படை மெத்த உண்டுவரும் வெற்றியும் தரும் இனி மேலென்னமுக வாட்டம் உற்றசீதையை உதவுகிறேன் இது நிதானம் கற்றுக்கற்றுச் சொல்லி என் காரியமல்லவோ பிரதானம் ( ஏது ) ஸ்ரீராமரை வாலி நிந்தித்தல் ராமனை இந்தப்படி சுக்கிரீவன் தேற்ற நல்லனுமான் வாலியைக் கொன்றிப்போதிந்தக் கோமகன் சுக்கிரீவன்மு + சூட்டிஎல்லாம் கூடும் என்றான் சுவாமியுமங் கிசைந்தான் அப்பால் பூமகன்வா லியும் தம்பி தானும் சண்டை போடயிலே அய்யன் அம்பு போடச்சாய்ந்து பேய்முகனாய் வாயில் வந்த தெல்லாம் வாலி பேசுவான் ராகவனை ஏசுவானே பல்லவி ஏனிந்த மதிகுறித்தாய் எடுத்தென்மேல் மறைந்துவாளி ஏன் தெறித்தாய் ( ஏனி ) அநுபல்லவி மானபூஷணனான தசரதன் உன்னைப்பெற்று வரங்கள் தந்தது நல்லாய் குரங் கைக்கொல்லவோ சொல்லாய் ( ஏனி ) சரணங்கள் 1. நரர்க்கும் வானவர்க்கும் உண்டோதொந்தம் - முன்பின் ஞாதி வழக்குண்டோ சொல் அநு பந்தம் அரக்கன் அழிவு செய்தால் பல வந்தம் ஆயுதம் இல்லாரை அடிப்பதோஉன் சந்தம் அதுவுமல்லாமல் ஆண்மை சொல்லாமல் எதிரில் நில்லாமல் என்னை வெல்லாமல் ( ஏனி ) 2. வலிய மரங்கள் ஏழும் தொளைத்தாயே - அந்த வலிமையிருந்தும் எனக் கிளைத்தாயே கலிராசன் போல் வந்து முளைத்தாயே காட்டில் மறைந்து வில்லைகாணாமல் வளைத்தாயே காரியம் இதுசுத்தக் கபடம் உனைப்பெற்ற சூரியகுலம் மெத்தத் துலங்கும் அடபித்த ( ஏனி ) 3. தன்மம் வளர்க்கவந்த ரகுராமா - பரதன் தனக்கு மூத்தபிள்ளை நீயாமா உன்மனது தான் என்ன மிகநோமா - வாலி உயிரைக்கொண்டால் சீதை ஒழிந்த துயரம்போமா உனக்கு ஞாயமோ என்உபாயமோ எனக்கபாயமோ என்னமாயமோ ( ஏனி ) வாலி குற்றங்களை அவனுக்கு ஸ்ரீராமர் விரித்தல் இன்னை வாலி சொல்ல இராகவன் அவனை நோக்கி மின்னையும் கொண்டாய்தம்பி மேதினி தனையும் கொண்டாய் பின்னையும் கொல்லவர்மம் பிடித்திட்டாய் அதனைக் கொண்டே உன்னைநான் கொல்லொணாதோ உரை என்றான் உரை என்றானே பல்லவி வடிப்பம் வடிப்பமாய்ப் பேசிக்கொள்ளாதே வாயை மூடடா ஏண்டா துள்ளாதே அடா வாலி உன் ( வடி ) அநுபல்லவவி கடத்தடா ஈதெல்லாம் பணம் அடா கடை ஆயிரங்கால் அரைக்கால் கட்டடா ( வடி ) சரணங்கள் 1. பிலந்தனிலே நீ புகுந்த போதில்உன் பின்பல னாமிவன் தொடர்ந்ததும் பேய் அறைகின் றாற்போலே நீ அரைய இவன் பின்வாங்கிக் கொண் டிடைந்ததும் தலந்தனிலே அபவாதமாகத்தம்பி தாரத்துக்கும் உனக்கும் நடந்ததும் சாபத்தாலே நீ ஏறாமலைமேலே தப்பித் தவறியிவன் அடைந்ததும் சொல்லாமல் ( வடி ) 2. வார்த்தைக்கு மாத்திரம் குரங்குரூபம் நீதி வகையும் தொகையும் சொல்லி நிறைக்கிறாய் மனதாரச்செய்த வினைபோமோ வீண் வார்த்தைகள் ஏன் சொல்லி இறைக்கிறாய் மூத்தவன் தம்பி தாரம் என்றறிந்தும் முறைபிசகி நிறை குறைக்கிறாய் மூடன் போலே வாயாடுகிறாயடா முழுப்பூ சனிக்காயும் சோற்றிலே மறைக்கிறாய் ( வடி ) 3. அம்பும் கையுமாய் எதிர் நின்றால் உன் தன் அபயம் என்று வருவாய் என் ஆராகிலும் நொந்த பேராகிலும் அடுத் தாரைக் கெடுக்கல் ஆமோஎன் குடிக்கு தம்பித் துரோகி உன்னைச் சித்திரவதை செய்யத் தகுமே நான் பிடித்த பிடிக்கு தர்மத்துக் குள்ளும் பாவத்துக்குப் புறம்புமாய் சரத்தாலே கொல்லத் தொடுத்தேன் இந்தப் படிக்கு ( வடி ) ஸ்ரீராமரை வாலி வரங்கேட்டுக் கொள்ளல் மழைநிறத்து ராமனிந்த வாறு சொல்ல வாலியும்சம் மதித்தான் இப்பால் பழையதொரு நினைவு கொண்டான் அறிந்துமறி யாமலும் நான் பதறிச் சொன்னேன் தழையும்மகன் சுக்கிரீவன் அனுமன் உனதடைக்கலம் என் சாமி என் தன் பிழை பொறுப்பாய் எனச்சொல்லிக் கூசுவான் மனுவொன்று பேசுவானே பல்லவி சாமி ரகுராமா இவர்கள்உள் தஞ்சம் ரகுராமா ( சாமி ) அநுபல்லவி ஆம் இவாரல் என்னகாணும் ஆகிலும் ராசாங்கம் வேணும் நீமாத்திரம் வெல்ல நினைத்தாற் காரியம் அல்ல ( சாமி ) சரணங்கள் 1. எனது மகன் அங்கதன் தான் உனதுபகையை வாட்டுவான் ராட்சத குலங்களை உபேட்சை இல்லாமல் மாட்டுவான் அனுமந்தன் உன் தன் கோதண்டம் எனவிசயங்கள் காட்டுவான் அந்தராவணனை என்போல் தொம்தொம் தொம் என்றாட்டுவான் ( சாமி ) 2. அந்தத்தில் உன் தனைக்காணத் தந்தானே இது அல்லாதே அநித்தியம் தனக்கும் நித்தியம் எனக்கும் தந்தானே இப்போதே என் தம்பி சுக்கிரீவன் பிழைதந்தாலும் கிருபை என்மேல் தொடுத்த அம்பை எடுத்தவன் மேலே விடாதே தொடாதே ( சாமி ) 3. நெடுந்தவம் ஏதோ என் சீவன் விடும்போது கண்டேன்உன் காட்சி நினைக்கொணாப் பரமபதம் எனக்கல்லவோ காணி யாட்சி அடங்கலும் ரட்சிக்கவந்து தொடங்கின நீசர்வ சாட்சி ஆளில்லாப்படை வெட்டுமோ ஐயா உணக்குண்டோ தாட்சி ( சாமி ) வாலி சுக்கிரீவனுக்கு மதிசொல்லுதல் இன்னவாறு சாமிதன்னை இரங்கி வரங்கொண் டிடும் வாலி பின்னை இளைய சுக்கிரீவன் பெருமான் முகத்தை மிகநோக்கிச் சொன்னேன் இதுநீ கேளென்றான் சுவாமிராமன் இவன் பணியை எந்நேரமும் செய்என அவனை இரந்தான் தனக்கோர் வரந்தந்தான் பல்லவி ஆதிதேவனே ஸ்ரீராமன் என்று அறிசுக்கி ரீவனே ( ஆதி ) அநுபல்லவி வேதசாஸ்திர புராணம் எல்லாம் கூடி விரிப்பதும் இவனே சொல்லத் தரிப்பதும் இவனே நல்ல ( ஆதி ) சரணங்கள் 1. அடைவுடன் இவன்கையில் விழமுத்தி நித்தியம் பணி விடை செய்தாற் குறைவுண்டோ உனக்கிது வேயல்லோ பத்தியம் வேறே தொடரும் தெய்வங்கள் என்பதெல்லாம் சும்மா சொல்வதேநி மித்தியம் ஒன்றும் தடையில்லாப் பிரம்மாதிக் கிர்த்தியம் எல்லாம் தப்பாதிவன் கிர்த்தியம் அப்பா சொன்னேன்சத்தியம் (ஆதி ) 2 -எங்கும் ஐயன் மதி அரசு கொண்டதில் மதங்கொண்டு மயக்கம் பண்ணாதே எதிர் இல்லா என்னைக் கொன்றான் இவன்போலே நண்ணாதே உதவியை அடிக்கடி எண்ண வேணும் ஒழிக்க ஒண்ணாதே சிதறி இவன் ஓர் மனிதன் ஆம் என்று திருக்கான புத்தியை ஒருக்காலும் எண்ணாதே நன்றி ( ஆதி ) 3. அகலாமல் அணுகாமல் சாமியை அனுதினமும் சுற்றி - இவன் மகிழ்வாக இட்ட வேலைகள் செய்து வருவதே இதைத் இகழாது கொண்டால் இதுவேசித்தி இது வல்லோ வெற்றி சொல்லி உருகுவ தேன் இனி சகல பாக்கியமும் உருவாய் பரமபதமும் பெறுவாய் இதுவே புத்தி ( ஆதி ) வாலி இறந்தபின் தாரை புலம்பல் வாலி இந்த வரங்கொண்டு வளர்வை குந்த பதம்சேர்ந்தான் வேலின் நெடுங்கண் உளதாரை மின்னற்கொடிபோ லேகணவன் பாலில் விழுந்தாள் வானரபூ பதியே கெதியார் எனக்கென்று மேலில் விழுந்தாள் நெடுமூச்சு விடுத்தாள் புலம்பத் தொடுத்தாளே கண்ணிகள் 1. மன்னவனே எங்கள் வாலியே நல்ல வானர இன்னவேளை இந்தமரணம் உனக்கென்று இருந்ததோ தலைவிதியே 2. இறவாமருந்தையும் தருவாயே நீ எப்படி இறந்தாயோ மறவாதேசிவ பூசைசெய்கின்ற வழிபாடு மறந்தாயோ 3. ஆனைக்கும் அடிசருக்கும் துள்ளிவிழல் ஆகா தென்றேனே சேனைத்துரையே நான்உன்னைக் கொடுத்திங்கே தெருவிலே நின்றேனே பூபதியே 4. என்னுயிர் நீ ஆனால்உன்மேலே பாய்ந்தகணை என்மேலே பாயாதோ உன்னுயிர் நான் ஆனால் உன்னுயிரோ டென்னுயிர் கூட மாயாதோ 5. விந்தைமனிதன் கைக்கு நீயும் விழுவாயோ வேறொருவாலி உண்டோ என் தன் உயிர் இன்னம் இருக்குதே ஐயோ என்னைப் போல் நீலி உண்டோ 6. மறைந்துராமன் கணைதொடுக்காமல் உன்மேல்வழக்குத் தொடுத்தாலே குறைந்திடாக்கடல் கடைந்த முதமும் நீ கொடுப்பாயே கைமேலே 7. செய்நன் றியரோ கால தூதர் என்னதேவரோ மறுபேரோ ஐயையோ அவர்க்கமுதமும் உன்னைப்போல் யார் இனித் தருவாரோ 8. நான் அடி உன் தன் பிராணநாதன் என்ற நம்பிக்கை பொய் போமோ வானரம்பையர் மேலாசை கொண்டெனைமறந்து விட்டோடல் ஆமோ 9. வன்னமேருமுதல் மலையில் உன் கால் வைத்த வடுவுகள்இனிப் போச்சே நின்னை மறைந்தம்பு போட்டராகவன் நீதிக்குவடு வாச்சே 10. மருந்தமுதுதந்த சாமிவந்தான் என்று மகிழ்ந்துதேவர் கண்டாரோ விருந்தமுது செய்யாய் என்றே உன்னைவேண்டி எதிர் கொண்டாரோ ஸ்ரீராமர் சுக்கிரீவனுக்கு ராஜநீதி கூறுதல் கொம்பனையாள் தாரைஇவ்வா றகன்றாள் அங் கதன் ஐயன் கூர்வாட் கொண்டான் தம்பிஇளை யவன்கையால் முடிசூட்டச் சுக்கிரீவன் தரித்துக் கொண்டான் பின்புரகு ராமனிரு பதத்தினில்வந் தவன்பணிந்தான் பிறகு சாமி அம்புவியை ஆளும்வகை தெருளுவான் புத்தி சொல்லி அருளு வானே பல்லவி ( அர ) அரசுசெய் வதென்ன எறிந்துபோட்ட தல்லடா சுக்ரீவா அநுபல்லவி நிருபன் என்றே போதே கெர்வம் மெத் தகாணும் நெருப்பாறும் மயிர்ப்பாலமுமா நடக்கவேணும் ( அர ) 1. கோல மன்னவருக்குச் சதுரங்கம் - செங் கோலைப் போலத்தருமோ உத்துங்கம் நாலு திசைக்குள்ள ஆதங்கம் - தீர்த்து நடத்தவல்லவன் அல்லோ துரைசிங்கம் ஆலகால துஷ்டர் உறவென்று துள்ளாதே அனுமானைப் போல் ஒத்த அமைச்சரை விள்ளாதே காலந்தெரிந்த பெரியோர்களைத் தள்ளாதே கால்போகா இடத்திலே தலையிட்டுக் கொள்ளாதே ( அர ) 2. மங்கையர் களுடனே சூட்சி கொண்ட மன்னவர்க் கவமானம் காணி யாட்சி எங்கள் இடத்தில் அந்த அத்தாட்சி இதைவிட இனிவே றேன்சாட்சி உங்கள் வாலியும் மங்கைய ரால்முனை சிந்த உருண்டானே அறிந்தாயே முந்த முந்த செங்கோல் கோணினால் எங்கும்கோணும் அந்த தேசத்து நன்மைதுன்மை ராசருக்கல்லோ இந்த ( அர ) 3. பண்ணிய தீமையி னால் ஒரு கூனி என்னைப் பரதேசி ஆக்கினாளே அவ எண்ணி எளியவரை அது சரியா எதிரிட்டுக் கொண்டால் அதுவே உண்மையாக இன்னம் உறிதி சொல்வேன் இப்போது ஒருத்தர் செய்தஉதவியை மறக்கில் அதுவே தீது மண்ணில் இருந்து வழக்கோரம் சொல் மயிரைப் பிளந்து விவகாரங்களை ( அர ) தானி போல் நீ ஆனி லொண்ணாது ஸ்ரீராமர் கார்காலம் சீதையை நினைந்து இரங்கல் மாமகுடம் புனைந்தசுக்கிரீ வனுக்கிவ் வாறே மதி சொல்லி மதங்கமுனி மலையின்மேலே ஏமமழைக் காலமெல்லாம் இருந்துசீதை எண்ணத்தால் ரகுராமன் வண்ணம் மாறிக் காமலர்ச்சோ லையைமயிலைக் குயிலை மானைக் கானகத்தைப் பார்த்து விரகாக்கினி யாலே வேமுருகும் வெண்ணெயைப் போல் கரைந்துசிந்தை விலங்குவான் தனியேதான் கலங்குவானே கண்ணிகள் 1 . மான்கள் பழிகொண்டீர் பொன் மான் உருவாய் என்னைவந்து கெடுத்தீர் நான் அறியாத விதனங்கள் கொடுத்தீர் கான்காள் வழிசொல்வீர் இரு கண்ணை விட்டுத் திரிவார் உண்டுயிர்போலப் பெண்ணைவிட்டுப் பிரிவார்களு முண்டோ 2. மயில்காள் ஒன்று சொல்வீர் சொல்ல வாயில்லையோ உங்கள் சாயலை நேர்தரு சேயினழ யானவள் போயதெவ்வாறோ குயில்காள் ஒன்று கூறீர் சொன்னால் குற்றமுண்டோ என துத்தமியாகிய பத்தினி சானகி எத்திசைபோனாள் 3. கிளிகாள் உரையீரோ ஒரு கேள்வி கேளீர் படுபாவிகளே என தாவியை நேர் தரு தேவிவராளோ அளிகாள் கிருபை இலையோ உவந் தாடுகிறீர் உயிரோடுயிரானவள் ஓடுகையாள் உயிர் வாடுகிறேனே 4. காலமே அவ காலமே என் தன் காதலியாகிய சீதை பிரிந்திட நீதுணையாகிய தோதகம் ஏதோ கோலமே என்ன கோலமே வெகு கொச்சையும் ஆய்மிகு லச்சையுமாய் உயிர் வைச்சிடவோ இனி லட்சுமணாசொல் ஸ்ரீராமரை லட்சுமணர் தேற்றல் வெம்பியே ராமன் இந்த விதம் சொல்லி இரங்கும் போதில் எம்பிரானே ஈதென்ன ஈதென்ன கோலம் சாமி உம் பெருமையைநீ காணாய் உருகிறாய் என்று சொல்லித் தம்பிதான் துன்பமெல்லாம் தணிவிப்பான் துணிவிப்பானே பல்லவி சாமி ஏதையா இந்தவேதை சாமி ஏதையா ( சாமி ) சரணங்கள் ராமா ஆமர் ( சாமி ) வேறேது தாதோ (சாமி ) அடு நாடு ( சாமி ) 1. பூமி உள் ளோர்க்கெல்லாம் ஆதார நீமனதில் இப்படி நினைத்திடல் 2. சங்கை ஏன்உனக்குச் சமானம் உன்கையில் கோதண்டம் ஒன்றுபோ 3. அடிப்பாரோ ராட்சதர் அதிகமோ கடிக்கும் என்று ஏறிக்கலங்குமோ 4. உன்மகிமை அறியாய் உருகிறாய் பிர்ம்மாதி தேவர்க்கும் பிழைப்பினி 5. உதவி செய் வோர்க்கிடை யூறுண்டோ பதறாதிருந்தல்லோ படுத்திட 6. அனுமாதிகள்பல அறியாயோ நினைவு கலங்கினால் நிற்குமோ இங்கே எங்கே ( சாமி ) ( சாமி ) காணும் வேணும் *சாமி பூமி 7 . சொன்னேன் குறையில்லை சுகம்இனி மீதே அன்னை சீதையும் வரல் ஆச்சுதிப் போதே (சாமி ) சுக்கிரீவன் தாமசங்கண்டு ஸ்ரீராமர் கோபித்தல் மதிமானான தம்பியிந்த வகையே சொல்ல ராமச்சந்திரன் இதிலே தெளிந்தே சானகிபோய் இருக்கும் இடமெவ் விடங்காணேன் சதியால் நமது சுக்ரீவன் சரற்காலமும் போய் வரக்காணேன் விதியால் அவனை அழையென்றே விடுத்தான் கோபம் எடுத்தானே பல்லவி வருகிறானோ வாரானோ சுக்கிரீவன் மனதை அறிந்து வாராய் தம்பி அதுபல்லவி திருகுசொன்னால் அவன் குலம் ஒன்றும் வெட்டுவேனே சித்திரத்தினும் குரங்கை வைத்தெழுத ஒட்டுவேனோ ( வரு ) 1. தருணத்தில் உதவியை மறந்தானே மதங்கொண்டு தண்ணீரும் முக்காற்பிழை பொறுக்கும் அல்லவோ கண்டு மரபுக்குச் சற்றே இன்னம் பார்க்க வேணுமே பண்டு வாலியைக்கொன்ற அம்புபோல் ஆயிரம் அம்புகள் உண்டு 2. கரத்தாலே அபயம் கொடுத்தவன் தன்னை வன்னம் கனகசிங் காதனத்தில் வைத்தோமே மின்ன சரற்காலம் போனவுடன் வருகிறேன் என்று சொன்ன சத்தியம் மறந்தவனைச் சித்திரவதை செய்தால் என்ன ( வரு ) 3. அரிய மராமரங்கள் தொளைத்த ராமன்வில்லை அறிவாயோ அறியாயோ என்று கேள் ஒருமசகம் இவனை அடிப்பதற் கென்ன தொல்லை உண்மையாக எனக்கவன் சம்மதி தெரிய இல்லை ( வரு ) ஒரு சொல்லை சுக்கிரீவன் மதுபானத்தை நிந்தித்தல் சாமிஇந்தப் படியுரைக்கத் தம்பியும் கிஷ்கிந்தையிற் போய் ஆமனுமான் தாரையைக் கண்டது சொன்னான் அவராலே கோமகன் சுக்ரீவன் இளங்குமரன் வரவறிந்து கெட்டேன் மாமதுஉண் டென்றுரைவான் சொல்லிக் கரைவானே பல்லவி மதுவே உன்னாற்கெட்ட திதுவே ( மது ) அநுபல்லவி புதுமை நான்பாவ சுக்கிரீவன் எய்த பூமிதந்தானுக்குச் சாமிதுரோகம் செய்த ( மது ) சரணங்கள் ( மது ) ( மது ) 1. சாமி என்றங்கதன் கூவி எனைத் தட்ட தொட்டதும் விட்டதும் நானறியேன் முட்ட பாமரனாய் உன்னைக் குடித்தேனே பொட்ட பஞ்சமா பாதகன் ஆனேன் கடை கெட்ட 2. பித்தாம் உடம்புக்கு மத்தும் புறப்படும் பெண் என்றும் தாயென்றும் தெரியாம லேவிடும் குத்திரம் ஆம் நரகத்தினி லேயிடும் சூடித்தவன் அடுத்தவன் எடுத்தவனும் கெடும் 3. குன்றாத வாலியை வென்று பிறந்தேனே கோதண்ட தீக்ஷாகுருவாற் சிறந்தேனே ஒன்றா அவன் செய்த நன்றி துறந்தேனே உன்னைக் குடித்தேனே என்னை மறந்தேனே 4. வையகம் தந்து மதிதந் தெனையாள வைத்தானை எண்ணாமல் வைத்தாய் பழிமூள ஐயையோ நான் சொன் காலஞ்சற் றேநீள ஆகாமற் போனேனே ஓகோ சண்டாள லட்சுமணர் சுக்கிரீவனை இடித்தல் மன்னனாம் சுக்கிரீவன் மதுவினால் மயங்கிவிட்டேன் என்னவே சுருக்காய்வந்தான் எதிர்கண்டதம்பி சொல்வான் சொன்ன நாள் தவறி இந்த துடுக்குநீர் செய்தீர் சிந்தை இன்னம் ஏதென்று கோபம் எழுகின்றான் மொழிகின்றானே பல்லவி சுக்கிரீவரேநான் வந்தகாரியம் இதுகாண் வந்த காரியம் இதுகாண் ( வந்த ) அநுபல்லவி வந்த காரியம் இது வாலியைக் கொன்ற அப்போது வருவேனென்று வணங்கி ராகவனுக்கன்று மழைநாட்போய் தந்துரை ஆடி அகந்தைகள் மூடி இருந்ததை நாடி அறிந்திட ஓடி ( வந்த ) சரணங்கள் 1. அங்கென்சாமி நொந்திருக்க அதுகண் டென் நெஞ்சை உருக்க அலைந்தலைந் தென்கால் பெருக்க அசந்துங்கள் ஊரை நெருக்க வங்குவாசலைப் பிடித்தேன் அடைத்தகல்லைத் துங்கிசமாக இடித்தேன் வானரங்களை அங்கங்கோட அடித்தேன் தாயைக்கண்டு உங்காரவார்த்தை படித்தேன் அவள் சொன்னது இங்கிதோ வருவார் ஏன்இனிஇந்த விசாரம் என்றாள்பிறகே தங்கியவாள் அனுமானும் வந்தான் அந்தநேரம் யாம்உம்மடிமை உங்கள்உதவி மறவோம் என்றான் உபசாரம் நீரும் மெய்போலே எங்கோமான் மலர்க்னக தொட்டீர் இருமாசம் தவணை இட்டீர் ஏன்காணும் வாராமல் விட்டீர் எப்புடிநினைவு கெட்டீர் இங்கிதமாகிய வங்கம்முறிய விங்களம் நீர் செய்த சங்கையை அறிய (வந்த ) 2. அஷ்டலெட்சுமிக்கும் அன்னை ஆகிய சனகிமுன்னை அகலவிட்ட சாமி தன்னை அறிந்தும் அவனாலே பின்னை விட்டூரம் சூழ வைத்தீரே சொன்னநாளில்வந் தெட்டாமல் தாழ வைத்தீரே ராட்சதர் இன்னும் நெட்டாகவாழ வைத்தீரே தேவரை எல்லாம் பொட்டாகவீழ வைத்தீரே இந்தசாமிக்கும் எட்டிய பலசாலிகள் இருந்தால் அங்கேசேரும் பிரம்மாதிதேவர் மட்டிலும் ஓர்திசை எட்டினில் வீரர் எல்லாரும் வரட்டும் சிங்கக் குட்டிகள் முன்னே நரிக்குட்டிகள் ஆக்குவேன் பாரும் பிறகாகிலும் சட்டமான தளத்துடனே நீர்வாரும் அணுகெட்டாமல் அட்டி செய்வாலியை முட்ட அடித்து வெகு ராச்சியம்கட்ட அரசு மணிமுடியிட்ட ஆண்டவன் உரைக்கப்பட்ட கட்டளை என்கிற மட்டுகள் தாண்டி தட்டிய உங்களை வெட்டிட வேண்டி ( வந்த ) 3. கர்த்தன் உண்டபின் உச்சிட்டங் கொண்டுண்பதே என் அதிருஷ்டம் காய்கனி நீர் தந்தால் இஷ்டம் காணுமோ இதென்ன கஷ்டம் புத்திதான் எங்கே போச்சோ ஐயனைப் பசியில் வைத்தும்நான் உண்ப தாச்சோ ஐயையோ உங்கள் பத்தி எல்லாம் மேற் பூச்சோ சகாயத்துரோகம் கற் ) வர்க் கித்தனை பேச்சோ என் அண்ணனான உத்தமனுக்குத்துணை மற்றுண்டோ ஒருவரைக் கொண்டு கோதண்டம் தன்னை றேவளைக்குமுன் செத்தானே வாலியும் பண்டு அவனைக் கொன்ற அஸ்திரம் போல் இன்னம் அஸ்திரம் அனேகங்கள் உண்டு தெரிந்திருந்தும் இத்தனை நீர் செய்ததென்ன இளக்காரம் கண்டுகாரியங் கொள்ளச் சுற்றி நீரே பிரியாமல் துரோகபுத்தி அறியாமல் சொன்ன நாளைக் குறியாமல் தோஷம் என்று அறியாமல் சத்தியமோ சொல் அசத்தியமே தான் முற்றிலும் நாடி இடத்தனி யே நான் ( வந்த ) சற்டே வானரப்படைத் தலைவர்களும் படைத் தொகையும் அடல்சேர் தம்பி இது சொல்ல அறிந்தேன் அடியேன் புத்தியென்று உடனே சுக்கிரீவன் சாமி உபயபாதம் வந்து கண்டான் விடவே போன தூதர்களில் வீரர் சேர அணி அணியாக் கடல்போல் வந்து ராகவனைக் கண்டார் சேனவ கொண்டாரே கண்ணிகள் 1. சதவலி படைகள் ஒரு பத்துகோடி - சுசே ஷணன்படைகள் பத்து நூறா யிரங்கோடி பதுமமுகன் பதினால் நூறா யிரங்கோடி - தீர்க்க பரதன் இட பன்ஓரா யிரங்கோடி 2 . பனசன படைகள் பன்னீரா யிரங்கோடி - நீலன் படைகளும் பதினையா யிரங் கோடி அனுமன் இருப்பத்தையா யிரங்கோடி போரில் அட்சயன் படைமுப்பத்தையா யிரங் கோடி 3. தசமுகன் படைமுப்பதா யிரங்கோடி நல்ல சாம்புவன் ஆயிரத்தறு நூறு கோடி மதிது மிந்தன் நூறு நூறா யிரங்கோடி அந்த மயிந்தன் இருபதா யிரங்கோடி 4. கேசரிபடை ஐம்பதா யிரங்கோடி மிக்க கெவையாட்சன் படை ஆ யிரங்கோடி வீசுதுன் முகன் இருநூறா யிரங்கோடி வந்த விருபாக்ஷன் ஒன்பதா யிரங்கோடி 5. குமுதன் படை நாற்பத்தெண்ணா யிரங்கோடி கூட்டும் படைகள் நூறா யிரங்கோடி சமுகப்படை இந்தப்படி கூடிக்கூடி வரச் சாமிகண்டு மகிழ்ந்தானே கொண்டாடி சாப் புவந்தன் அனுமானரத் துதித்தல் மிக்கான கவி ஏழு பத்து வெள்ளம் வீரரொடு சாமிகண்டான் சுக்ரீவன் தான் தெற்கான வழி சொல்ல ராமன் தானும் சீனதஉருச் சொல்லிதருமோ திரமும் பெற்றான் பிக்கான மலைகளும்நா டுகளும் தேடிப் பிலம்புகுந்து கடந்துசம்பா தியின் . சொல்லாலே நளன் கைக்கான மயேந்திரம் சேர் அனுமான் தன்னைக் கதி செய்வான் சாம்புவனும் துதிசெய்வானே கண்ணிகள் 1. ஏதுகாணும் சும்மா அறிந்தும் அறியார் போல் இருக்கிறீர் ஆஞ்ச ஓது மேன் வெண்ணெய் இருக்க நெய்தேடு வோமோ வாத்ராசன் சேயரே போலவே சாலவே 2 . காதலால் நல்ல காலம் பிறந்தது காணாது கண்டவர் சீதை சேதிசம் பாதி வாயினால் தெரிந்து கொண்டோ மே 3. துணியுமேன் உமக்கிலங்கை தான் என்ன தூரமோ கடல் அணுவும் மகமேரு ஆகும் மேருவும் அணுவாம் உமக் கென்ன தூரமோ பாரமோ செல்லுமே 4 , வருத்தம் ஏன் இலங்கையும் உம்முடவாலால் மாட்டி இழுத்தாலும் திருத்தம் என்னபேச்சு விளக்கிருக்கத் தீ தேடுவோமோ நாங்கள் சொல்லுமே மேவினீர் 5. ஒருத்தராய்ப் பிரம்ம தேவன் பட்டமும் உமக்கென்றே புகழ் குருத்துக் குழந்தையில் சூரியன் தேர் நிலை குலைய எதிர்கொண்டு 6 . வாசவன் கைவச்சி ராயுதத்தால் ஓர்பால் மயிரும் உதிராத தேசம்மேல் எந்த ஆயுதங்களாலும் சிந்தை கலங்காத 7. இயற்கையால் எந்த வேஷம் எடுக்கினும் எடுக்கவே வல்ல வீரரே சூரரே தேவரே செயித்திடாதபஞ் சேந்திரியங்களையும் செயித்திடும் மானு பாவரே 8-நாளையே ஓதும் சுக்ரீவன் ஆக்கினை தெரியுமே உயிரை வைப்பானோ காதுக்கிடுவது முகத்துக் கழகெங் களைரட்சிப்பீர் இந்த வேளையே கூடுவீர் 9. எட்டுத்திக்கின் அப்புறத்தினிலே கங்கை இருக்கினும் பாய்ந்து கொட்டைப் பாக்குப் போல் எட்டுமலையையும் தொட்டெ டுத்துவிளை யாடுவீர் 10. அமைத்த சாமிமோ திரத்தைப் பிடித்தீரே ஆர்க்குண்டிந்த அதி உமக்கில்லாப் பொறி எமக்கு வந்ததோ உரைப்ப தேன் உப காரமே சாரமே அனுமார் கடல் தாண்ட இசைதல் பாட்டில் உரைக்கும் அங்கதன் முன் படித்துச்சாம்பன் துதி செய்யக் கேட்ட அனுமான் மிசுநாணிக் கேளீர் அடியேன் தனைப் பொருட்டாக் கூட்டிநீர் எவு தலாலே எங் கோமான் அருளும் உமதருளும் ஈட்டும் சிறையால் சுடல்கடப்பேன் என்றான்புலனை வென் னே கிஷ்கிந்தாகாண்டம் முற்றிற்று . சக்கரவர்த்தித்திருமகனார் திருவடிகளே சரணம் . --------------------- நான்காவது கிஷ்கிந்தா காண்டம் ( கம்பராமாயணம் ஒப்புமைப் பகுதி ) அனுமார் மறைந்து நின்று யோசித்தல் எய்தினார் சவரி நெடிதேய மால்வரை எளிதின் நொய்தின் ஏறினர் அதனின் நோன்மைசால் கவியரசு செய்வதோர்கிலன் அனையர் தெவ்வராம் எனவெருவி உய்தும் நாம் என விரைவின் ஓடினான் மலை முழையின் அஞ்சனைக்கொரு சிறுவன் அஞ்சனக்சிரி அனைய மஞ்சனைக் குறுகி ஒரு மாணவப் படிவமொடு வெஞ்சமத் தொழிலர் தவமெய்யர் கைச்சிலையர் என நெஞ்சயிர்த்து அயல்மனறய நின்று கற்பினின் நினையும் தேவருக்கொரு தலைவர் ஆம்முதல் தேவர் எனின் மூவர்மற்றிவர் இருவர் மூரிவில் கார் இவரை யாவர் ஒப்பவர் உலகில் யாதிவர்க் கரியபொருள் கேவலத் திவர் நிலைமை தேர்வது எக்கிழமை கொடு சிந்தையில் சிறிது துயர் சேர்வுறத் தெருமரலின் நொந்தயர்த்தவர் அனையர் நோவறச் சிறியர் அலர் மந்தரத்து அமரர் அலர் மானிடப் படிவர்மயர் சிந்தனைக்குரிய பொருள் தேடுதற்கு உறுநிலையர் தருமமும் தகவும் இவர்தனம் எனும் தகையர்வரு கருமமும் பிறிதோர் பொருள்கருதியன்று அதுகருதின் அருமருந் தனையது இடைஅழிவு வந்துளது அதனை இருமருங்கினும் நெடிது துருவுகின்றனர் இவர்கள் கதம்எனும் பொருண்மையிலர் கருணையின் கடலனையர் இதமெனும் பொருளலதுஓர் இயல்புணர்ந்திலர் இவர்கள் சதமன் அஞ்சுறு நிலையர் தருமன் அஞ்சுறு சரிதர் மதனன் அஞ்சுறு வடிவர் மறலி அஞ்சுறு விறலர் என்பன பலவும் எண்ணி இருவரை எய்த நோக்கி அன்பினன் உருகுகின்ற உள்ளத்தன் ஆர்வத் தோரை முன்பிரிந் தனையர் தம்மை முன்னினான் என்னநின்றான் தன்பெருங் குணத்தால் தன்னைத் தானலது ஒப்பிலாதான் [ அனுமப்படலம் 1 , 4 9 ] அனுமார் ஸ்ரீ ராமருக்கு வரலாறு கூறுதல் இவ்வகை எண்ணி ஆண்டவ் இருவரும் எய்த லோடும் செவ்வழி உள்ளத்தானும் தெளிவுற எதிர்சென் றெய்தி கவ்வையின் றாக நுங்கள் வரவு எனக் கருணையோனும் வெவ்வழி நீங்கியோய் நீ யார் என விளம்பலுற்றான் மஞ்செனத் திரண்ட கோலமேனிய மகளிர்க் கெல்லாம் நஞ்செனத் தகையதாகி நளிர் இரும் பணிக்குத் தேம்பாக் கஞ்சமொத் தலர்ந்த செய்ய கண்ணயான் காற்றின் வேந்தற்கு அஞ்சனை வயிற்றில் வந்தேன் நாமமும் அனுமன் என்பேன் இம்மனல இருந்து வாழும் ஏரிகதிர்ப்பருதிச் செல்வன் செம்மலுக் கேவல் செய்வேன் தேவ நும் வரவு நோக்கி விம்மலுற் றனையான் ஏவ வினவிய வந்தேன் என்றான் எம்மலைக் குலமும் தாழ இசைசுமந் தெழுந்த தோளான் எவ்வழி இருந்தான் சொன்ன கவிக்குலத் திறைவன் யாங்கள் அவ்வழி அவனைக் காணும் அருத்தியால் அணுசு வந்தேம் இவ்வழி நின்னை உற்ற எமக்குநீ இன்று சொன்ன செவ்வழி உள்ளத்தானைக் காட்டுதி தெரிய என்றான் இரவிதன் புதல்வன் தன்னை இந்திரன் புதல்வன் என்னும் பரிவிலன் சீறப்போந்து பருவரற்கு ஒருவனாகி அருவியங் குன்றில் என்னோ டிருந்தனன் அவன்பால் செல்வம் வருவதோர் அமைவின் வந்தீர் வரையினும் வளர்ந்த தோளீர் ஒடுங்கலிவ் உலகம் யாவும் உவந்தன உதவி வேள்வி தொடங்கினர் முற்றும் முற்றத் தொல்லறம் துணிவர் சான்றோர் கொடுங்குலப் பகைஞனாகிக் கொல்லிய வந்த கூற்றை நடுங்கினர்க் கபயம் நல்கும் அதனினும் நல்லதுண்டோ எம்மையே காத்திர் என்றற் கெளிதரோ இமைப்பிலாதோர் தம்மையே முதலிட்டு ஆன்ற சராசரம் சமைந்த ஆற்றல் மும்மை ஏழ்உலகும் காக்கும் முதல்வர் நீர் முருகற்செவ்வி உம்மையே புகல்புக்கேமுக் கிதின்வரும் உறுதியுண்டோ யாரென விளம்புகேன் நான் எங்குலத் தலைவற்கும்மை வீரநீர் பணித்திர் என்றான் மெய்ம்மையின் வேலிபோல்வான் வார்கழல் இளையவீரன் மரபுளி வாய்மை யாதும் சோர்விலன் நிலைமை எல்லாம் தெரிவுறச் சொல்லலுற்றான் [ அனுமப்படலம் 14-16 , 20 , 22 -25 ] அனுமார் தேற்றச் சுக்கிரீவன் சரணடைதல் சூரியன் மரபிற் றோன்றிச் சுடர்நெடு நேமி ஆண்ட ஆரியன் அமரர்க்காக அசுரரை ஆவியுண்ட வீரியன் வேள்வி செய்து விண்உலகோடும் ஆண்ட காரியல் கருணை அன்ன கண்ணகன் கவிகைமன்னன் புயல் தரு மதத்தின் கோட்டுப்புகர்மலைக் கிறையை ஊர்ந்து மயல் தரும் அமரர்யாரும் மடி.தர வரிவிற் கொண்ட இயல் தரும் புலமைச் செங்கோல் மனுமுதல் எவரும் ஒவ்வாத் தயரதன் கனகமாடத் தடமதில் அயோத்தி வேந்தன் அன்னவன் சிறுவனால் இவ் ஆண்டகை அன்னை ஏவ தன்னுடை உரிமைச் செல்வம் தம்பிக்குத் தகவின் நல்கி நன்னெடுங் கானஞ் சேர்ந்தான் நாமமும் இராமன் என்பான் ந்நெடும் சிலைவலானுக்கு ஏவல் செய் அடியென் யானே [ அனுமப்படலம் 26-28 ] மேலவன் திருமகற் குரைசெய்தான் விரைசெய்தார் வாலிஎன் றளவிலா வலியினான் உயிர்தெறக் காலன் வந்தனன் இடர்க் கடல் கடந்தனம் எனா ஆலம் உண்டவனின்று அருநடம் புரிகுவன் வேலிகல் சினவு தாடகை விளிந்துருள வில் கோலி அக்கொடுமையாள் புதல்வனைக் கொன்று தன் காலியல் பொடியினால் நெடியகற்படி வமாம் ஆலிகைக் கரியபேர் உருவளித் தருளினான் நல்லுறுப் பமையும் நம்பியரில் முன்னவன் நயந்து எல்லுறுப் பிரியபேர் எழுசுடர்க் கடவுள் தன் பல்லிறுத்தவன் வலிக்கு அமைதியம்பகம் எனும் வில்லிறுத் தருளினான் மிதிலைபுக் கனையநாள் தெவ்விரா வகைநெடுஞ் சிகைவிரா மழுவினான் அவ்விரா மனையும் மாவலி தொலைத் தருளினான் இவ்விரா கவன் வெகுண்டு எழும் இரா அனையன் ஆம் அவ்விரா தனை இராவகை துடைத்தருளினான் ஆயமா நாகர் வாழ் ஆழியானே அலால் காயமான் ஆயினான் அவனோ காவலா நீயமான் நேர்தியால் நிருதமாரீசனாம் மாயமா னாயினான் மாயமானாயினான் முனைவரும் பிறரும் மேல் முடி வரும் பகலெலாம் னையர்வந் துறுவர் என்று இயல்தவம் புரிகுவார் வினையெனும் சிறைதுறந்து உயர்பதம் விரவினார் எனையர் என்றுரைசெய்கேன் இரவிதன் சிறுவனே மாயையால் மதியிலா நிருதர்கோன் மனைவியைத் தீயகான் நெறியின் உய்த்தனன் அவள் தேடுவார் நீஐயா தவமினழத் துடைமையால் நெடுமனம் தூயையா உடையையால் உறலினைத் துணிகுவார் [ நட்புக்கோட்படலம் 2 , 6 , 7, 9 , 11 , 13 , 14 ) ஸ்ரீராமர் சுக்கிரீவனுக்கு ஆதரனண சொல்லல் எனநினைந் தினைய எண்ணி இவர்கின்ற காதல் ஓதக் கனைகடல் கரை நின்றேறாக் கண்ணிணை களிப்பநோக்கி அனகனைக் குறுகினான் அவ் அண்ணலும் அருத்திகூரப் புனைமலர்த் தடக்கை நீட்டிப் போந்தினி திருத்தி என்றான் ஆயதோர் அவதியின் கண் அருக்கன் சேய் அரசைநோக்கித் தீவினை தீயநோற்றார் என்னின் யார் செல்வ நின்னை நாயகம் உலகுக்கெல்லாம் என்னலாம் நலமிக்கோயை மேயினென் விதியே நல்கின் மேவலாகாதென் என்றான் முரணுடைத் தடக்கை ஒச்சி முன்னவன் பின்வந்தேனை இருள் நிறப் புறத்தின் காறும் உலகெங்கும் தொடராகிக் குன்று அரணுடைத் தாகி உய்ந்தேன் ஆருயிர் துறக்கலாற்றேன் சரணுனைப் புகுந்தேன் என்னைத் தாங்குதல் தருமம் என்றான் நாலு வேதமாம் நவையில் சாலியின் வேலி யன்னவன் மலையின் மேலுளான் சூலி தன்னருள் துறையின் முற்றினான் வாலி என்றுளான் வரம்பில் ஆற்றலான் கழறு தேவரோடு அவுணர் கண்ணினின்று உழலும் மந்தரத்து உருவு தேயமுன் அழலும் கோள் அரா அகடு தேய்விடச் சுழலும் வேலையைக் கடையும் தோளினான் நிழலும் நீருமாய் நெருப்பும் காற்றுமென்று உலைவில் பூதம்நான் குடைய ஆற்றலான் அலையின் வேலைசூழ் கிடந்த ஆழிமா மலையின் நின்றும் இம்மலையின் வாவுவான் கிட்டுவார் பொரக் கிடைக்கின் அன்னவர் பட்ட நல்வலம் பாகம் எய்துவான் எட்டு மாத்திரத்து இறுதி நாளும் உற்று அட்ட மூர்த்திதாள் பணியும் ஆற்றலான் மெய்க்கொள் வாலினால் மிடல் இராவணன் தொக்க தோளுறத் தொடர்ப் படுத்த நாள் புக்கி லாதவும் பொழி அரத்த நீர் உக்கி லாதவும் உலகம் யாவதோ அன்னவன் எமக்கு அரசனாக என்று இன்னவன் இளம்பதம் இயற்றுநாள் முன்னவன் குலப்பகைஞன் முட்டினான் மின்னெயிற்றுவாள் அவுணன் வெம்மையான் முட்டி நின்றவன் முரண் உரத்தின் நேர் ஒட்ட அஞ்சி நெஞ்சுலைய ஓடினான் வட்ட மண்டலத்து அரிதுவாழ் வெனாப் எட்டரும் பெரும்பிலனும் எய்தினான் எய்துகாலை அப்பிலனுள் எய்தி யான் நொய்தின் அங்கவற் கொணர்வென் , நோன்மையோய் செய்தி காவல்நீ சிறிது போழ் தெனா வெய்தின் எய்தினான் வெகுளி மேயினான் அன்ன நாளில் மாயாவி அப்பிலத்து இன்ன வாயினூடு எய்தும் என்னயாம் பொன்னின் மால் வரைப் பொருப் பொழித்து வேறு உன்னு குன்றமெலாம் அடுக்கினேம் ஒளித்த வன்உயிர்க் கள்ளை உண்டுளம் களித்த வாலியும் கடிதின் எய்தினான் விளித்து நின்றுவே றுரைபென்றா இருந்து : அளித்த வாறு நன்று இளவலார் எனா பற்றி அஞ்சலன் பழியின் வெஞ்சினம் முற்றி நின்ற தன் முரண்வலிக் கையால் எற்றுவான் எடுத்தெழுதலும் பிழைத்து அற்றம் ஒன்று பெற்று இவன் அகன்றனன் உருமை என்றிவற் குரியதாரமாம் அருமருந்தையும் அவன் விரும்பினான் இருமையும் துறந்து இவன் இருந்தனன் கருமம் ஈங்கிது எம்கடவுள் என்றனன் ஈரம் நீங்கிய சிற்றனவ சொற்றனள் என்ன ஆரம் வீங்குதோள் தம்பிக்குத் தன் அரசுரிமைப் பாரம் ஈந்தவன் பரிவிலன் ஒருவன் தன் இளையோன் தாரம் வௌவினன் என்ற சொல் தரிக்குமா றுளதோ உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி விலகும் என்னினும் வில்லிடை வாளியின் வீட்டித் தலைமையோடு நின் தாரமும் உனக்கின்று தருவென் புலமையோய் அவன் உறைவிடம் காட்டு என்று புகன்றான் [ நட்புக்கோட்படலம் 20 , 23 , 25 , 37 40 , 48 , 50 - 52 , 57 , 59 , 64 , 67 , 69 , 71 , 72 ] சீதை ஆபரணங்களைக்கண்டு ஸ்ரீராமர் இரங்கல் ஏகவேண்டும் இந்நெறி என இனிது கொண்டேகி மாகம் நீண்டன குறுகிட நிமிர்ந்தன மரங்கள் ஆகஐந்தினோ டிரண்டின் ஒன்றுருவநின் அம்பு போகவே என் தன் மனத்திடர் போம் எனப்புகன்றான் ஆயமாமரம் அனைத்தையும் நோக்கிநின்றமலன் தூய வார்கணை துரப்பதோர் ஆதரம் தோன்ற சேய வானமும் திசைகளும் செவிடுறத் தேவர்க்கு ஏய்வினாத தோர் பயம்வர சிலையில்நாண் எறிந்தான் ஏழுமாமரம் உருவிக்கீழ் உலகம் என்றிசைக்கும் ஏழும் உண்டுபுக்குருவிப்பின் உடனடுத்தியன்ற ஏழிலா மையால் மீண்டதவ் இராகவன் பகழி ஏழுகண்டபின் உருவுமால் ஒழிவதன் றின்னும் [ மராமரப்படலம் 1 , 12 , 16 ) அண்டமும் அகிலமும் அடைய அன்று அனலிடைப் பண்டு வெந்தன நெடும்பசை வறந்திடினும் வான் மண்டலம் தொடுவது அம்மலையின்மேல் மலை எனக் கண்டனன் துந்துபிகடலனான் உடலரோ முட்டிவான் முகடு சென்றளவி இம்முடையுடல் கட்டிமால் வரையை வந்துறுதலும் கருணையான் இட்டசாபமும் எனக்குதவும் என்று இயல்பினின் பட்டவா முழுதும் பரிவினால் உரை செய்தான் கேட்டனன் அமலனும் கிளந்த வாறெலாம் வாட்டொழில் இளவலை இதனை மைந்த நீ ஓட்டென அவன்கழல் விரலின் உந்தினான் மீட்டது விரிஞ்சன் நாடுற்று மீண்டதே [ துந்துபிப்படலம் 1 , 14 , 15 ] உழையரின் உணர்த்துவதுளது என்றுன்னியோ குழைபொரு கண்ணினாள் குறித்தது ஓர்ந்திலம் மழைபொரு கண்ணிணை வாரியோடுதன் இழைபொதிந் திட்டனள் யாங்கள் ஏற்றனம் தெரிவுற நோக்கினன் தெரிவை மெய்யணி எரிகனல் எய்திய மெழுகின் யாக்கை போல் உருகினன் என்கிலம் உயிருக்கு ஊற்றமாய்ப் பருகினன் என்கிலம் பகர்வதென் கொல்யாம் நல்குவது என் இனி நங்கை கொங்கையைப் புல்கிய பூணுமக் கொங்கை போன்றன அல்குலின் அணிகளும் அல்கு லாயின பல்கலன் பிறவும் அப்படிவம் ஆனவே விட்டபேர் உணர்வினை விளித்த என் கெனோ அட்டன உயிரை அவ் அணிகள் என்கெனோ கொட்டின சாந்தெனக் குளிர்ந்த என்கெனோ சுட்டன என்கெனோ யாது சொல்லுகேன் மோந்திட நறுமலர் ஆன மொய்ம்பினில் ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன சாந்தமு மாய் ஒளிதழுவப் போர்த்தலால் பூந்துகி லாய அப்பூவை பூண்களே ஈர்த்தன செங்கண்நீர் வெள்ளம் யாவையும் போர்த்தன மயிர்ப்புறம் புளகம் , பொங்குதோள் வேர்த்தன என்கெனோ வெதும்பினான் என்கோ தீர்த்தனை அவ்வழி யாது செப்புகேன் விலங்கெழில் தோளினாய் வினையினேனும் இவ் இலங்குவில் கரத்திலும் இருக்கவே அவள் கலன்கழித் தனள் இது கற்பு மேவிய பொலன் குழைத் தெரிவையர் புரிந்துளோர்கள் யார் வாள்நெடுங் கண்ணிஎன் வரவு நோக்கயான் தாள் நெடுங் கிரியோடும் தடங்கள் தம்மொடும் பூணொடும் புலம்பினென் பொழுது போக்கி இந் நாண்நெடும் சிலைசுமந்து உழல்வென் நாணிலேன் விரும்பெழில் எந்தையார் மெய்ம்மை வீயுமேல் வரும்பழி என்றுயான் மகுடம் சூடலேன் கரும்பழி சொல்லியைப் பகைவன் கைக்கொள் பெரும்பழி சூடினென் பிழைத்தது என்னரோ கலன் காண்படலம் 3-9 , 20 , 21 , 25 ] ஸ்ரீராமருக்குச் சுக்கிரீவன் துணிவுகூறுதல் தாங்கினேன் இருத்தி இத் துயரம் தாங்கலா ஏங்கிய நெஞ்சினன் இரங்கி விம்முவான் வீங்கிய தோளினாய் வினையினேன் உயிர் வாங்கினென் இவ்வணி வருவித்தே எனா அயனுடை அண்டத்தின் அப்புறத்தையும் மயர்வற நாடி.என் வலியும் காட்டியுன் உயர்புகழ்த் தேவியை உதவற் பாலெனால் துயருழந்தயர்தியோ சுருதி நூல்வலாய் திருமகள் அனைய அத்தெய்வக் கற்பினாள் வெருவரச் செய்துள வெய்யவன் புயம் இருபதும் ஈர் ஐந்து தலையும் நிற்கஉன் ஒருகணைக் காற்றுமோ உலகம் ஏழுமே ஈண்டுநீ இருந்தருள் ஏழொடு ஏழ்எனாப் பூண்டபேர் உலகங்கள் வலியின் புக்கு இடை தேண்டி அவ்வரக்கனைத் திருகித் தேவியைக் காண்டியான் இவ்வழிக் கொணர்வல் காவலோய் என்னுடைச் சிறுகுறை முடித்தல் ஈண்டொரீஇப் பின்னுடைத் தாயினும் ஆக பேதுறும் மின்னிடைச் சனகியை மீட்டு மீள் துமால் பொன்னுடைச் சிலையினாய் விரைந்து போய் என்றான் [ கலன் காண்படலம் 11-14 , 18 ஸ்ரீராமரை வாலி நிந்தித்தல் அவ்விடத்து ராமன் நீ அழைத்து வாலி ஆனதோர் வெவ்விடத்தின் வந்து போர் விளைக்கும் ஏல்வைவேறு நின்று எவ்விடத்துணிந் தமைந்ததென் கருத்து இதுஎன்றனன் தெவ்வடக்கும் வென்றியானும் நன்று இதென்று சிந்தியா எடுத்துப்பாரிடை எற்று வென் பற்றி என்றிளவல் கடித்தலத்தினும் கழுத்தினும் தன்னிரு கரங்கள் மடுத்து மீக்கொண்ட வாலிமேல் கோலொன்று வாங்கித் தொடுத்து நாணொடு தோளுறுத்து இராகவன் துரந்தான் கார்உண் வார்சுவைக் கதலியின் கணியினைக் கழியச் சேரும் ஊசியின் சென்றது நின்றதென் செப்ப நீரும் நீர் தரும் நெருப்பும் வன்காற்றும் கீழ் நிவந்த பாரும் சார்வலிபடைத்தவன் உரத்தை அப்பகழி கண்ணுற்றான் வாலிநீலக் கார்முகில் கமலம் பூத்து மண்ணுற்று வரிவில் ஏந்தி வருவதே போலும் மாலை புண்ணுற்றது அனையசோரி பொறியொடும் பொடிப்ப நோக்கி எண்ணுற்றாய் என் செய்தாய் என்றேசுவான் இயம்பலுற்றான் வாய்மையும் மரபும் காத்து மன்உயிர் துறந்த வள்ளல் தூயவன் மைந்தனேநீ பரதன் முன் தோன்றினாயே தீமைதான் பிறரைக் காத்துத்தான் செய்தால் தீங்கன்றா மோ தாய்மையும் அன்றி நட்பும் - தருமமும் தழுவி நின்றாய் கோவியல் தருமம் உங்கள் குலத்துதித்தோர் கட்கெல்லாம் ஓவியத் தெழு தொண்ணா உருவத்தாய் உடைமையன்றோ ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்தபின்னை திகைத்தனை போலும் செய்கை அரக்கர் ஓர் அழிவு செய்து சுழிவரேல் அதற்கு வேறோர் குரக்கினத் தரசைக் கொல்ல மனுநெறி கூறிற்றுண்டோ இரக்க மெங் குகுத்தாய் என்பால் எப்பிழை கண்டாயப்பா பரக்கழி இது நீபூண்டால் புகனழயார் பரிக்கற் பாலார் கூட்டொருவரையும் வேண்டாக் கொற்றவ பெற்ற தாதை பூட்டிய செல்வம் ஆங்கே தம்பிக்குக் கொடுத்துப் போந்து நாட்டொரு கருமம் செய்தாய் எம்பிக்கில் வரசைநல்கிக் காட்டொரு கருமம் செய்தாய் கருமம்தான் இதன் மேலுண்டோ அறைகழல் அலங்கல் வீரர் ஆயவர் புரிவதாண்மை துறை என லாயிற்றன்றே தொன்மையின் நன்னூற்கெல்லாம் இறைவநீ என்னைச் செய்த தீதெனின் இலங்கை வேந்தன் முறையல செய்தா னென்று முனிதியோ முனிவிலா தாய் இருவர் போர் எதிருங்காலை இருவரும் நல்லுற்றாரே ஒருவர் மேல் கருணை தூண்டி ஒருவர் மேல் ஒளிந்து நின்று வரிசிலை குழைய வாங்கி வாயம்பு மருமத் தெய்தல் தருமமோ பிறிதொன்றாமோ தக்கிலது என்னும் பக்கம் வீரம் அன்று விதியன்று மெய்ம்மையின் வாரம் அன்று நின் மண்ணினுக்கு என் உடல் பாரம் அன்று பகையன்று பண்பழிந்து ஈரம் இன்றி இதுஎன் செய்த வாறரோ நூலியற்கையும் நுங்குலத் துந்தையர் போலியற்கையும் சீலமும் போற்றலை வாலியைப் படுத்தாய் அலை மன் அற வேலியைப் பிரித்தாய் விறல் வீரனே தாரம் மற்றொருவன் கொளத்தன் கையில் பார வெஞ்சிலை வீரம் பழுதுற நேரும் அன்று மறைந்துநி ராயுதன் மார்பின் எய்யவோ வில்லிகல் வல்லதே ( வாலி வதைப்படலம் 10 , 63 , 64, 81 , 82 , 84 , 85 , 87-90 , 95 , 96 ] வாலி குற்றங்களை அவனுக்கு ஸ்ரீராமர் விரித்தல் பிலம்புக்காய் நெடுநாள் பெயராய் எனப் புலம்புற் றுன்வழிப் போதலுற்றான் தனை குலம்புக்கு ஆன்றமுதியர் குறிக்கொள் நீ அலம்பொன் தாரவனே அரசு என்றலும் பற்றி ஆன்ற படைத்தலை வீரரும் முற்றுணர்ந்த முதியரும் முன்பரும் எற்றும் நும்மரசு எய்துவையாம் எனக் பொற்ற நன் முடி கொண்டதிக் கோதிலான் கொல்ல லுற்றனை உம்பியைக் கோதவற்கு இல்லை என்பதுணர்ந்தும் இரங்கலை அல்லல் செய்யல் உனக்கபயம் பிழை புல்லல் என்னவும் புல்லலை பொங்கினாய் அன்ன தன்மை அறிந்தும் அருளலை பின்னவன் இவன் என்பதும் பேணலை வன்னிதான் இடும் சாப வரம்புனடப் பொன்மலைக்கவன் நண்ணினான் போகலை ஈரம் ஆவதும் இற்பிறப் பாவதும் வீரம் ஆவதும் கல்வியின் மெய்ந்நெறி வாரம் ஆவதும் மற்றொருவன் புணர் தாரம் ஆவதைத் தாங்கும் தருக்கதோ தருமம் அன் றிது எனும் தனகத்தன்மையும் இருமையும் தெரிந்து எண்ணலை எண்ணினால் அருமை உம்பி தன் ஆருயிர்த் தேவியை பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ தக்க இன்ன தகாதன இன்னவென்று ஒக்க உன்னலர் ஆயின் உயர்ந்துள மக்களும் விலங்கே மனுவின் நெறி புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே மூன்புநின் தம்பிவந்து சரண்புக முறையிலோயைத் தென்புலத் துய்ப்பென் என்று செப்பி னன் செருவில் நீயும் அன்பினை உயிருக்காகி அடைக்கலம் யானும் என்றி என்பது கருதி அண்ணல் மறைந்து நின்றெய்த தென் றான் ( வாலி வதைப்படலம் 98 , 100 , 102 , 104 , 105 , 107 , 118 , 123 ) ஸ்ரீராமரை வாலி வரங்கேட்டுக் கொள்ளல் கவிகுலத் தரசுமன்னன் கட்டுரை கருத்துட் கொண்டான் அவியுறு மனத்தனாகி அறத்திறன் அழியச் செய்யான் புவியிடை அண்ணல் எண்பதெண்ணினில் பொருந்த முன்னே செவியுறு கேள்விச் செல்வன் சென்னியின் இறைஞ்சிச் சொன்னான் தாயென உயிர்க்கு நல்கித் தருமமும் தகவும் சால்பும் நீயென நின்றநம்பி நெறியினின் நோக்கும் நேர்மை நாயென நின்றஎம்பால் நவையற உணர லாமே தீயன பொறுத்தி என்றான் சிறியன சிந்தி யாதான் ரந்தனன் பின்னும் எந்தை யாவதும் எண்ணல் தேற்றாக் குரங்கெனக் கருதி நாயேன் கூறிய மனத்துக் கொள்ளேல் அறந்தைவெம் பிறவி நோய்க்கும் அருமருந் தனைய அய்யா வரந்தரும் வள்ளால் ஒன்று கேளென மறித்தும் சொல்வான் மற்றின உதவி யுண்டோ வானினும் உயர்ந்த மானக் கொற்றவ நின்னை என்னைக் கொல்லிய கொணர்ந்து தொல்லைச் சிற்றினக் குரங்கி னோடும் தெரிவுறச் செய்த செய்கை வெற்றரசு எய்தி எம்பி வீட்டரசு எனக்கு விட்டான் ஓவிய உருவ நாயேன் உளதொன்று பெறுவ துன்பால் பூவியல் நறவம் மாந்தி புந்திவே றுற்ற போழ்தில் தீவினை இயற்று மேனும் எம்பிமேல் சீறி என் மேல் ஏவிய பகழி என்னும் கூற்றினை எவல் என்றான் அனுமன் என்பவனை ஆழி ஐய நின்செய்ய செங்கைத் தனுவென நினைதி மற்று என் தம்பி நின் தம்பி யாக நினைதிஓர் துணைவர் இன்னோர் அனையவர் இலை நீ ஈண்டவ் வனிதையை நாடிக் கோடி வானினும் உயர்ந்த தோளாய் (வாலிவதைப்படலம் 124-126 , 131 , 132 , 135 வாலி சுக்கிரீவனுக்கு மதிசொல்லுதல் என்றவற்கியம்பிப் பின்னர் இருந்தனன் இளவல் தன்னை வன்றுணைத் தடக்கை நீட்டி வாங்கினன் தழுவி மைந்த ஒன்றுனக் குரைப்ப துண்டால் உறுதியஃதுணர்ந்து கோடி குன்றினும் உயர்ந்த தோளாய் வருந்தலை என்றுகூறும் நிற்கின்ற செல்வம் வேண்டி நெறிநின்ற பொருள்க ளெல்லாம் கற்கின்ற இவன் தன் நாமம் கருதுவ இவனைக் கண்டாய் பொற்குன்ற மனனய தோளாய் பொதுநி.அற தலைமை நோக்கின் ஏற்கொன்ற வலியே சாலும் இதற்கொன்றும் ஏது வேண்டா மதவியல் குரங்குச் செய்கை மயர்வொடு மாற்றி வள்ளல் உதவியை உன்னி ஆவி உற்றிடத் துதவு கிற்றி பதவியை எவர்க்கும் நல்கும் பண்ணவன் பணித்த யாவும் சிதைவில செய்து நொய்தின் தீவரும் பிறவி தீர்தி அரசியல் பாரம் பூரித்து அயர்ந்தனை சுழாது ஐயன் மரைமலர்ப் பாதம் நீங்கா வாழுதி மன்னர் என்பார் எரிஎரனற் குரியார் என்றே எண்ணுதி எண்ணம் யாவும் புரிதி சிற்றடினமக்குற்றம் பொறுப்பர் என்றெண்ண வேண்டா பாலமை தவி i நீ என் சொல் பற்றுதி யாயின் தன்னின் மேலொரு பொருளும் இல்லா மெய்ப்பொருள் வில்லும் தாங்கிக் கால் தரை தேயநின்று கட்புலக் குற்றதம்மா மால் தரும் பிறவி நோய்க்கு மருந்து என் வணங்கு மைந்த என்னுயிர்க் குறுதி செய்தான் என்பதைஇன்றயும் எண்ணாது உன்னுயிர்க் கிறுதி செய்தி இவற்கமர் உற்ற துண்டேல் பொன்னுயிர்த் தொளிரும் பூணாய் போதுதி நிலைனம நோக்கி மன்னுயிர்க் குறுதி செய்வான் மலாடி சுமந்து வாழ்தி ( வாலிவதைப்படலம் 136 , 138 , 141 , 142 , 153 , 1541 வாலி இறந்தபின் தாரை புலம்பல் வாலியும் ஏக யார்க்கும் வரபிலா உலகில் இன்பம் பாலியா முன்னர் நின்ற பருதிசெய் செங்னக பற்றி ஆவிலைப் பள்ளி யானும் அங்கத னோடும் போனான் வேல்விழி தாரை கேட்டு வந்தவன் மெய்யில் வீழ்ந்தாள் வரைசேர் தோளிடை நாளும் வைகுவேன் கரைசோர் இடர் வேலை கண்டிலேன் சேர் ஆருயிரே என்உள்ளமே அரைசே யானிது காண அஞ்சினேன் நறிதம் நல்லமிழ் துண்ண நல்கலின் பிறியா இன்னுயிர் பெற்ற பெற்றிநாம் அறியாரோ நமனார் அது அன்றெனின் சிறியாரோ உபகாரம் சிந்தியார் அணங்கார் பாகனை ஆசைதோறும் உற்று உணங்கா நாள் மலர் தூய் உள்ளன்பினால் ணங்காக் காலம் இரண்டொடு ஒன்றினும் வணங்காது . இத்துணை வைகவல்லையோ நையா நின்றனென் யானிருந்து இங்ஙன் மெய்வா னோர் திரு நாடுமேவினாய் ஐயா நீஎனது ஆவி என்பதும் பொய்யோ பொய் உரையாத புண்ணியா எந்தாய்நீ அமிழ்தீய யாமெலாம் உய்ந்தேம் என்று உபகாரம் உன்னுவார் நந்தா நாள்மலர்சிந்தி நண்பொடு வந்தாரோ எதிர் வானுளோர் எலாம் சொற்றேன் முந்துற அன்ன சொல் கொளாய் அற்றான் அன்னது செய்கலான் எனா உற்றாய் உம்பியை ஊழி காணும் நீ இற்றாய் யானுனை என்று காண்கெனோ நீரும் மேருவும் நீ நெருங்கினால் மாறோர் வாளியுன் மார்பை ஈர்வதோ தேறேன் யானிது தேவர் மாயமோ வேறோர் வாலி கொலாம் விளிந்துளான் அருமைந் தற்றம் அகற்றும் வில்லியார் ஒருமைந் தற்கும் அடாதது உன்னினார் தருமம் பற்றிய தக்கவர்க் கெலாம் கருமம் கட்டளை என்றல் கட்டதோ . ( தாரை புலம்புறு படலம் 1 , 4 , 6 , 7 , 9 , 11 , 13 , 14 , 16 ) ஸ்ரீ ராமர் சுக்கிரீவனுக்கு ராஜநீதி கூறுதல் பொன்மா மௌலி புனைந்து பொய்யிலான் தன்மானக் கழல் தாழும் வேலையில் நன்மார்பிற் றழுவுற்று நாயகன் சொன்னான் சொல்லின் முற்றிய எல்லையான் வாய்மைசால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும் தீமைதீர் ஒழுக்கின் வந்த திறத்தொழில் மறவரோடும் தூய்மைசால் புணர்ச்சி பேணித்துகளறு தொழிலையா சேய்மையோ டணிமையின்றித் தேவரின் தெரியநிற்றி புகையுடைத் தென்னின் உண்டு பொங்கனல் அங்கென்றுன்னும் மிகையுடைத்துலகம் நூலோர் வினையமும் வேண்டற் பாற்றே பகையுடைச் சிந்தை யார்க்கும் பயனுறு பண்பின் தீரா நகையுடை முகத்தையாகி இன்னுரை நல்குநாவால் தேவரும் வெஃகற் கொத்த செயிரறு செல்வம் அஃதுன் காவலுக்குரிய தென்றால் அன்னது கருதிக் காண்டி மேவரும் இனிய நண்பர் அயலவர் விரவார் என்றிம் மூவகை இயல்பினார்க்கும் முனைவர்க்கும் முயல்க முன்னே செய்வன செய்தல் யாண்டும் தீயன சிந்தியாமை வைவன வந்தபோதும் வசையில் இனிய கூறல் மெய்யன வழங்கல் யாவும் மேவின வெஃகல் இன்னம உய்வன வாகித்தம் மோடு உயர்வன உவந்து செய்வாய் சிறியர் என் நிகழ்ந்து நோவு செய்வன செய்யல் மற்று இந் நெறியிகழ்த் தியானோர் தீனம இழைத்தலால் உணர்ச்சி நீண்டு குறியதாம் மேனியாய கூனியால் (தவவுத்தோளாய் வெறியன எய்தி நொய்தின் வெந்துயர்க்கடலில் வீழ்ந்தேன் மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம் என்றால் சங்னசுயின்றுணர்தி வாலி செய்னகயால் சாலும் இன்னும் அங்கவர் திறத்தினானே அல்லலும் பழியும் ஆதல் எங்களிற் காண்டியன்றே இதற்குவேறுவ னமயுண்டோ நாயகன் அல்லன் நும்மை நனிபயந்து எடுத்து நல்கும் தாய் என இனிது பேணித் தாங்குதி தாங்குவாரை ஆயது தன்மையெனும் அறவரம்பு இகவாவண்ணம் தீயன வந்தபோது சுடுதியால் தீமையோரை இறத்தலும் பிறத்தல் தானும் என்பன இரண்டும் யாண்டும் திறத்தினி நோக்கின் செய்தவினைதரத் தெரிந்த அன்றே புறத்தினி உரைப்பதென்னே பூவின்மேல் புனிதற்கேனும் அறத்தினது இறுதி வாழ்நாட் கிறுதி அஃது அறிதி அன்ப ( அரசியற்படலம் 6 , 8-15 ] ஸ்ரீராமர் கார்காலம் கண்டு சீதையை நினைந்து இரங்கல் தன்னகைச் சனகியைப் பிரிந்த ஏந்தல்மேல் மன்மதன் மலர்க்கணை எய்தினான் என பொன்னெடுங் குன்றின் மேல் பொழிந்த தாரைகள் மின்னொடும் துவன்றின மேகராசியே வாரேர் முலையாளை மறைக்குநர்வாழ் ஊரே அறியேன் உயிரோ டுழல்வேன் நீரே உடையாய் அருள்நின் இலையோ காரே எனதாவி கலக்குதியோ வெப்பார் நெடுமின்னின் எயிற்றை வெகுண்டு எப்பாலும் விசும்பின் இருண் டெழுவாய் அப்பாதக வஞ்ச அரக்கரையே ஒப்பாய் உயிர்கொண்டாவது ஓவலையோ அயில்ஏய் விழியார் விளைஆர் அமுதின் குயிலேய் மொழியார்க் கொணராய் , கொடியாய் துயிலேன் ஒருவேன் உயிர்சோர்வு உணர்வாய் மயிலே எனை நீவலியா டுதியோ மழை வாடையொடு ஆடி வலிந்துயிர்மேல் நுழைவாய் மலர்வாய் நொடியாய் , கொடியே இழைவாள் நுதலாள் இடைபோல் இடையே குழைவாய் எனது ஆவி குழைக்குதியே விழையேன் விழைவானவை மேன்மையில் நின்று இழையேன் உணர்வு என்வயின் இன்மையினால் பிழையேன் உயிரோடு பிரிந்தன ரால் உழையே அவர்எவ் உழையார் உரையாய் பயில்பாடக மெல்லடி பஞ்சனையார் செயிர் ஏதும் இலாரொடு தீருதியோ அயிராது உடனே அகல்வாய் அலையோ உயிரே கெடுவாய் உறவு ஓர்கிலையோ அருவினை அரக்கர் என்ன அந்தரம் அதனில் யாரும் வெருவர முழங்குகின்ற மேகமே மின்னுகின்றாய் தருவல் என்றிரங்கினாயோ தாமரை மறந்த தையல் உருவினைக் காட்டிக் காட்டி ஒளிக்கின்றாய் ஒளிக்கின்றாயால் [ கார்காலப் படலம் 14 , 51-56 , 60 ] ஸ்ரீ ராமரை லெட்சுமணர் தேற்றுதல் காலம் நீளிது காரும் மாரியும் வந்தது என்ற கவற்சியோ நீலமேனி அரக்கர் வீரம் நினைந்த ழுங்கிய நீர்மையோ வாலிசேனை மடந்தை வைகிடம் நாடவாரல் இலாமையோ சாலும் நூலுணர் கேள்விவீர தளர்ந்த தென்னை தவத்தினோய் மறை துளங்கினும் மதிதுளங்கினும் வானும் ஆழ்கடல் வையமும் நிறைதுளங்கினும் நிலை துளங்குறு நிலைமை நின்வயின் நிற்குமோ பிறைதுளங்குவ அனையபேரெயிறு உடையபேதையர் பெருமைநின் இறைதுளங்குறு புருவவெஞ்சிலை இடைதுளங்குற இசையுமோ மறையறிந்தவர் வரவுகண்டுமை வலியும் வஞ்சகர் வழியொடும் குறையவென்றிடர் களைவென் என்றனை குறை முடிந்தது விதியினால் இறைவ அங்கவர் இறுதிகண்டினிது இசைபுனைந் திமையவர் கள்தாம் உறையும் உம்பரும் உதவிநின்றருள் உணர்வழிந்திடல் உறுதியோ காது கொற்றம் நினக்கலாது பிறர்க்கெவ்வாறு கலக்குமோ வேதனைக் கிடமாதல் வீரதையன்று பேதைமையாம் அரோ போது பிற்படல் உண்டிதோர்பொருள் அன்று நின்று புணர்த்தியேல் யாதுனக் பலாதது எந்தைவருந்தல் என்று இயம்பினான் பைந்தொடிக்கு இடர்களை பருவம் பையவே வந்தடுத்துளதினி வருத்தம் நீங்குவாய் அந்தணர்க் காம் அறம் அரக்கர்க் காகுமோ சுந்தரத் தனுவலாய் சொல்லு நீ என்றான் ( கார்காலப்படலம் 64 , 65 , 67 , 68 , 101 ) சுக்கிரீவன் தாமசம் கண்டு ஸ்ரீராமர் கோபித்தல் அன்ன காலம் அகலும் அறவினில் முன்னை வீரன் இளவலை மொய்ம்பினோய் சொன்ன எல்லையின் ஊங்கினும் தூங்கினான் மன்னன் வந்திலன் என் செய்த வாரரோ பெறலருந் திருப்பெற்று தவிப் பெருந் திறம் நினைந்திலன் சீர்மையின் தீர்ந்தனன் அறம் மறந்தனன் அன்பு கிடக்க நம் மறம் அறிந்திலன் வாழ்வின் மயங்கினான் நன்றி கொன்று அருநட்பினை நார் அறுத்து ஒன்றும் மென்மை சிதைத்து உரைபொய்த்துளார்க் கொன்று நீக்குதல் குற்றத்தில் தங்குமோ சென்று மற்றவன் சிந்தையைத் தேர்குவாய் வெம்பு கண்டகர் விண்புக வேரறுத்து இம்பர் நல்லறம் செய்ய எடுத்தவில் கொம்பும் உண்டு அருங் கூற்றமும் உண்டுங்கள் அம்பும் உண்டு என்று சொல்லுநம் ஆணையே நஞ்சம் அன்னவரை நலிந்தால் அது வஞ்சம் அன்று மனுவழக் காதலால் அஞ்சில் அம்பதில் ஒன்றறி யாதவன் நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய் ஊரும் ஆளும் அசும் உம் சுற்றமும் நீரும் ஆளுதிரே எனின் நேர்ந்த நாள் வரும் வாரலிரே எனின் வானரப் பேரும் மாளும் எனும் பொருள் பேசுவாய் இன்னும் நாடுதும் இங்கிவர்க்கும் வலி துன்னினாரை எனத் துணிந்தார் எனின் உன்னை வெல்ல உலகொரு மூன்றினும் நின்னலாற் பிறர் இன்மை நிகழ்த்துவாய் நீதியாதி நிகழ்த்தினை நின்றது வேதியாத போது வைகுண்டவன் சாதியா தவர் சொல் தரத் தக்கனை போதியாதி என்றான் புகழ்ப் பூணினான் ( கிட்கிந்தைப்படலம் 1 8 ] சுக்கிரீவன் மதுபானத்தை நிந்தித்தல் நளன் இயற்றிய நாயகக் கோயிலுள் தளமலர்த் தகைப்பள்ளியில் தாழ்குழல் இளமுலைச்சியர் ஏந்தடி தைவர விளைதுயிற்கு விருந்து விரும்புவான் உறவுண்ட சிந்தையானும் உரை செய்வான் ஒருவற்கின்னம் பெறலுண்டே அவரால் ஈண்டு யான் பெற்றபேருதவி உற்றது இறலுண்டே எண்ணின் தீர்வான் இருந்தபேரிடரை எல்லாம் நறவுண்டு மறந்தேன்காண நாணுவல் மைந்தஎன் றான் ஏயின நறவலால்மற்று ஏழைமைப் பாலதென்னோ தாயிவள் மனைவி என்னும் தெளிவின்றேல் தருமம் என்னாம் தீவினை ஐந்தின் ஒன்றாம் அன்றியும் திருக்கு நீங்கா மாயையின் மயங்குகின்றாம் மயக்கின்மேல் மயக்கும் வைத்தாம் அளித்தவர் அஞ்சும் நெஞ்சின் அடைத்தவர் அறிவின்மூழ்கிக் குளித்தவர் இன்பதுன்பம் குறைத்தவர் அன்றி வேரி ஒளித்தவர் உண்டுமீண்டு இவ்வுலகெலாம் உணரஓடிக் களித்தவர் எய்திநின்ற கதி ஒன்று கண்டதுண்டோ வஞ்சமும் களவும் பொய்யும் மயக்கமும் மரபில்கொட்பும் தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும் களிப்பும் தாக்கும் கஞ்சமெல் லணங்குந்தீரும் கள்ளினால் அருந்தினாரை நஞ்சமும் கொல்வதல்லால் நரகினை நல்காதன்றே ஐயநான் அஞ்சினேன் இந்நறவினின் அரியகேடு கையினால் அன்றியேயும் கருதுதல் கருமம் அன்றால் வெய்யதாம் மதுவையின்னம் விரும்பினேன் என்னின் வீரன் செய்யதாமரைகள் அன்ன சேவடி சிதைக்க என் [ கிட்கிந்தைப்படலம் 18 , 88 , 89 , 92 , 94 , 96 ] லட்சுமணர் சுக்கிரீவனை இடித்தல் கோளுறுத்தற்கு அரிய குரக்கினம் நீள் எழுத் தொடரும் நெடுவாயிலை தாளுறுத்தித் தடவரை தந்தன மூளுறுத்தி அடுக்கின மொய்ம்பினால் காவல் மாமதிலும் கதவும்கடி மேவும் வாயில் அடுக்கிய வெற்பொடும் தேவு சேவடி தீண்டலும் தீண்டரும் பாவமாம் எனப் பற்றழிந் திற்றவால் நீரெலாம் அயல் நீங்குமின் நேர்ந்து யான் வீரன் உள்ளம் வினவுவல் என்றலும் பேரநின்றனர் யாவரும் போர்கலாத் தாரை சென்றனள் தார்குழலா ரொடும் தாமரை வதனம் சாய்த்துத் தனு நெடுந் தரையில் ஊன்றி மாமியர் குழுவின் வந்தான் ஆம்என மைந்தன் நிற்ப பூமியில் அணங்கனார் தம் பொது விடைப் புகுந்து பொற்றோள் தூமன நெடுங்கண் தாரை நடுங்குவாள் இனைய சொன்னாள் ஆர்கொலோ உரை செய்தார் என்று அருள்வரச் சீற்றம் அஃகப் பார்குலாம் முழுவெண்டிங்கள் பகல் வந்த படிவம்போலும் ஏர்குலாம் முகத்தினாளை இறைமுகம் எடுத்து நோக்கித் தார் குலாம் அலங்கல் மார்பன் தாயரை நினைத்து நைந்தான் சேனையும் யானும் தேடித் தேவியைத் தருவென் என்று மானவற் குரைத்த மாற்றம் மறந்தனன் அருக்கன் மைந்தன் ஆனவன் அமைதிவல்லை அறிஎன அருளில் வந்தேன் மேனிலை அனையான் செய்கை விளைந்தவா விளம்புகென்றான் வந்தடி வணங்கிநின்ற மாருதி வதனம் நோக்தி அந்தமில் கேள்வி நீயும் அயர்த்தனை ஆகுமன்றே முந்தின செய்கை என்றான் முனிவனும் முளைக்கும் அன்பான் எந்தை கேட்டருள்க என்ன இயம்பினன் இயம்ப வல்லான் மறந்திலன் கவியின் வேந்தன் வயப்படை வருவிப்பாரைத் திறந்திறம் ஏவி அன்னார் சேர்வது பார்த்துத் தாழ்ந்தான் அறந்துணை நுமக்குத்தான் தன் வாய்மையை அழிக்குமாயின் பிறந்திலன் அன்றே ஒன்றோ நரகமும் பிழைப்பதன்றால் மாருதி மாற்றம் கேட்ட வரைபுரை வயிறத் தோளான் தீர்விடைனை சென்று நின்ற சீற்றத்தான் சிந்தை செம்தான் ஆரியன் அருளின் தீர்ந்தான் அல்லன் வந்தடுத்தசெல்வம் பேர்வரிதாகச் செய்த சிறுமையான் என்னும் பெற்றி ஒன்றுமோ அரணம் அன்று இவ் வுலகமும் பதினால்உள்ள வென்றிமா மலையும் ஏழேழ் வேலையும் எண்ணவேயாய் நின்றதோர் அண்டத்துள்ளே எனினது நெடிய தன்றோ அன்று நீர் சொன்னமாற்றம் தாழ்வித்தல் தருமம் அன்றால் தாழ்வித்தீர் அல்லீர் பன்னாள் தருக்கிய அரக்கர் தம்மை வாழ்வித்தீர் இமையோர்க் இன்னல் வருவித்தீர் மரபின் தீராக் கேள்வித்தீ யாளர் துன்பம் கிளர்வித்தீர் பாவந்தன்னை மூள்வித்தீர் முனியாதானை முனிவித்தீர் முடிவின் என்றான் இயைந்த நாள் எல்லை நீ சென்று எய்தலை செல்வம் எய்தி வியந்தனை உதவிகொன்றாய் மெய்யிலை , என்னவீங்கி உயர்ந்தது சீற்றம் மற்று அது உற்றது செய்யத் தீர்ந்து நயந்தெரி அனுமன் வேண்ட நல்கினன் நம்மை இன்னும் ( கிட்கிந்தைப்படலம் 32 , 35 , 42 , 47 , 50 , 53 , 60 , 64. 67 , 72 , 73 , 80 ] வானரப் படைத்தலைவர்களும் படைத்தொகையும் ஆனை ஆயிரம் ஆயிரத் தெறுழ் வலியமைந்த வானராதிபர் ஆயிரர் உடன் வர வகுத்த கூனல்மாக் குரங்கு ஐயிரண் டாயிரகோடித் தனையோடும் அச்சதவலி என்பவன் வந்தான் ஊன்றி மேருவை எடுக்குறும் மிடுக்கினிக்குரிய தேன் தெரிந்துண்டு நெளிவுறு வானரச்சேனை ஆன்றபத்து நூறாயிரகோடி யோடமையத் தோன்றினான் வந்து அசேடணன் எனும் பெயர்த்தோன்றல் ஈறில் வேலையை இமைப்புறும் அளவினிற் கலக்கிச் சேறுகாண்குறும் திறல் கெழு வானரச்சேனை ஆறெண்ணாயிரகோடி அது உடன்வர அமிழ்தம் மாறிலா மொழி உருமையைப் பயந்தவன் வந்தான் ஐம்பதாய நூறாயிர கோடி எண்ணமைந்த மொய்ம்பு மால்வரை புரை நெடுவானம் மொய்ப்ப இம்பர் ஞாலத்தும் வானத்தும் எழுதிய கீர்த்தி நம்பனைத் தந்த கேசரி கடல் என நடந்தான் மண்கொள் வாளெயிற்று ஏனத்தின் வலியின வயிரத் திண்கொள் மால்வரை மயிர்ப் புறத்தன எனத் திரண்ட கண்கொள் ஆயிரகோடியின் இரட்டியின் கணித்த எண்கின் ஈட்டங் கொண்டு எறுழ் வலித்தூமிரன் இறுத்தான் முனியுமாம் எனின் அருக்கனை முரணற முறுக்கும் தனிமை தாங்கிய உலகையும் சலம்வரின் குமைக்கும் இனைய மாக்குரங்கு ஈரிரண் டாயிர கோடி அனிகம் முன்வர ஆன் பெயர்க் கண்ணன் வந்தடைந்தான் தனிவரும் தடங்கிரி எனப் பெரியவன் சலத்தால் நினையும் நெஞ்சிற உரும் என உருக்குறு நிலையன் பனசன் என்பவன் பன்னிரண்டாயிர கோடிப் புனித வெஞ்சின வானரப் படைகொடு புகுந்தான் இடியும் மாக்கடல் முழக்கமும் வெருக்கொள இசைக்கும் முடிவில் பேருறுக்குடையன விசையன , முரண கொடிய கூற்றையும் ஒப்பன பதிற்றைந்து கோடி நெடிய வானரப் படை கொண்டு புகுந்தனன் நீலன் மாகரத்தன உரத்தன வலியன நிலைய வேகரத்த வெங்கண் உமிழ் வெயிலன மலையின் ஆகரத்தினும் பெரியன ஆறைந்து கோடி சாகரத் தொடும் தரீ முகன் என்பவன் சார்ந்தான் தளைத்து வேறொரு மாநிலம் வேண்டுமென்றி ரங்க முளைத்த முப்பதினாயிர கோடியின் முற்றும் விளைத்த வெஞ்சினத்து அரியினம் வெருவுற விரிந்த அளக்க ரோடும் அக்கவலன் என்பவனும் வந்தடைந்தான் ஆயிரத் தறுநூறு கோடியின் கடை அமைந்த பாயிரப் பெரும்படை கொண்டு பாவையின் திரையின் தாயுருத் துடனே வரத் தடநெடு வரையை ஏய் உருப்புயச் சாம்பன் என் பனும் வந்திறுத்தான் வகுத்த தாமரை மலரயன் நிசிசரர் வாழ்நாள் உருத்த தீவினை பொருவதோர் பெருவலியுடையான் பருத்த பத்து நூறாயிரப் பத்தினின் இரட்டி தொகுத்த கோடி வெம்படை கொண்டு துன்முகன் தொடர்ந்தான் இயைந்த பத்து நூறாயிரப் பத்தெனும் கோடி உயர்ந்த வெஞ்சின வானரப் படையொடும் ஒருங்கே சயந்தனக் கொரு வடிவெனத் திறல் கொடு தழைத்த மயிந்தன் மல்கசகோ முகன் தன்னொடும் வந்தான் கோடி கோடி நூறாயிரம் எண் எனக் குவிந்த நீடுவெஞ்சினத் தரியினம் இருபுடை நெருங்க மூடும் உம்பரும் இம்பரும் பூமியில் மூழ்கத் தோடலர்ந்த தார்க்கிரிபுரை துமிந்தனும் தொடர்ந்தான் கறங்குபோல் வனகாற்றினும் கூற்றினும் கடிய பிறங்கு தெண்டிரைக்கடல் புடை பெயர்ந்தெனப் பெயர்வ மறங்கொள் வானம் ஒன்பது கோடி எண்வகுத்த திறங்கொள் வெஞ்சினப் படைகொடு குமுதனும் சேர்ந்தான் ஏழின் ஏழுநூறாயிர கோடி என்றிசைந்த பாழி நன்னெடுந் தோள்கிளர் படை கொண்டு பரவை ஊழி பேரினும் உலைவில உலகினில் உயர்ந்த பூழி விண்புகப் பதுமுகன் என்பவன் புகுந்தான் ஏழும் ஏழும் என்றுரைக்கின்ற உலகங்கள் எவையும் தாழும் காலத்தும் தாழ்விலாத் தடவரைக் குலங்கள் சூழும் தோற்றத்த வலிகொள் தொள்ளாயிர கோடிப் பாழி வெம்புயந்து அரியொடும் இடபனும் படர்ந்தான் தீர்க்கபரதனும் வினதனும் சரபனும் திரைக்கும் மால்கருங்கடற்கு உயர்ந்துள மைம் முகத்து அனிகம் ஆர்க்கும் எண்ணருங்கோடி கொண்டண்டமும் புறமும் போர்க்கும் பூழியில் மறைத முறையினின் புகுந்தார் கையஞ்சாயுதம் உடைய அக் கடவுளைக் கண்டு மெய்யஞ் சாதவன் மாதிரம் சிறிதென விரிந்த வையம் சாய்தரத் திரிதரும் வானரச்சேனை ஐயஞ்சாயிர கோடிகொண்டு அனுமன்வந் தடைந்தான் நொய்தின் கூடியசேனை நூறாயிரகோடி எய்ததேவரும் என் கொலோ முடிவு என்பது எண்ண மையல் சிந்தையால் அந்தகன்மறுக்குற்று மயங்க தெய்தச்சன் மெய்த்திருநெடுங் காதலன் சேர்ந்தான் கும்பனும் குலச் சங்கனும் முதலினர் குரங்கின் தம் பெரும்படைத் தலைவர்கள் தரவந்த தானை இம்பர் நி றவர்க் கெண்ணரிது இராகவன் ஆவத்து அம்பெனும் துணைக்குரிய மாறுரைப்பு அரிது அறவே இன்னசேனையை முடிவுற இருந்திவன் நோக்கிப் பின்னை காரியம் புரிதுமேல் நாள்பல பெயரும் உன்னி செய்கைமேல் ஒருப்படல் உறுவதே உறுதி வீரனைக்கை தொழுது ளையவன் செப்பும் என்ன , யாவது எவ்வுலகத்தினின் இங்கிவர்க் கியற்றல் ஆவது ஆகுவது அரியதொன்றுள தெனல் ஆமே ? தேவ , தேவியைத் தேடுவது என்பதுசிறிதால் பாவம் தோற்றது தருமமேவென்றது இப்படையால் ( தானைகான்படலம் 2 22 , 37 , 30 சாம்புவந்தன் அனுமாரைத் துதித்தல் அவனும் . அண்ணல் அனுமனை ஐயநீ புவனம் மூன்றும் நின் தாதையின் புக்குழல் தவன வேகத்தை ஓர்கிலை தாழ்ந்தனை கவனமாக் குரங்கின் செயல் காண்டியோ தென் திசைக்கண் இராவணன் சேண் நகர் என்றிசைக் கின்றதென் அறிவு இன்னணம் வன் திசைக்கு இனி மாருதி நீயலால் வென்றிசைக் குரியார் பிறர் வேண்டுமோ ( நாடவிட்டபடலம் 5 , 7 ] மேலை விரிஞ்சன் வீயினும் வீயா மிகைநாளீர் நூலை நயந்து நுண்ணி துணர்ந்தீர் நுவல் தக்கீர் காலனும் அஞ்சும் காய்சின மொய்ம்பீர் கடன்நின்றீர் ஆலம் நுகர்ந்தான் என்ன வயப்போர் அடர்சிற்பீர் வெப்புறு செந்தீநீர் வளியாலும் விளியாதீர் செப்புறு தெய்வப் பல்படையாலும் சிதையாதீர் ஒப்புறின் ஒப்பார் நின் அலதில்வீர் ஒருகாலே குப்புறின் அண்டத்தப்புற மேயும் குதிகொள்வீர் நல்லவும் ஒன்றோ தீயவும் நாடி நவைதீரச் சொல்லவும் வல்லீர் காரியம் நீரே துணிவுற்றீர் வெல்லவும் வல்லீர் மீளவும் வல்லீர் மிடல் உண்டே கொல்லவும் வல்லீர் தோள்வலி என்றும் குறையா தீர் மேருகிரிக்கும் மீதுறநிற்கும் பெருமெய்யீர் மாரிதுளிக்கும் தாரையிடுக்கும் வரவல்லீர் பாரை எடுக்கும் நோன்மை வலத்தீர் பழியற்றீர் சூரியனைச் சென்றொண்கையகத்தும் தொடவல்லீர் அறிந்திறத்தா றெண்ணி அறத்து ஆறு அழியாமை மறிந்துருளப் போர் வாலியை வெல்லும் மதிவல்லீர் பொறிந்திமை யோர்கோன் வச்சிரபாணம் புகமூழ்க எறிந்துழி மற்றோர் புன்மயிரேனும் இழவாதீர் போர்முன் எழுந்தால் மூவுலகேனும் பொருள் ஆகா ஓர்வில் வலங்கொண்டு ஒல்கலில் வீரத்துயர் தோளீர் பாருலகெங்கும் பேரிருள் சீக்கும் பகலோன்முன் தேர்முன் நடந்தே ஆரிய நூலும் தெரிவுற்றீர் நீதியில் நின்றீர் வாய்மையமைந்தீர் நினைவாலும் மாதர் நலம் பேணாது வளர்ந்தீர் மறை எல்லாம் ஓதி உணர்ந்தீர் ஊழி நடந்தீர் உலகீனும் ஆதியயன்தா னேஎன்யாரும் அறைகின்றார் அண்ணல் அம்மைந்தர்க் கன்புசிறந்தீர் அதனானே கண்ணி உணர்ந்தீர் கருமம் நுமக்கே கடன் என்னத் திண்ணிதமைந்தீர் செய்து முடிப்பீர் சிதைவின்றால் புண்ணியம் ஒன்றே என்றும் நிலைக்கும் பொருள் கொண்டீர் அடங்கவும் வல்லீர் காலமதன்றேல் , அமர்வந்தால் மடங்கல் முனிந்தா லன் னவலத்தீர் மதிநாடித் தொடங்கிய தொன்றோ முற்றும் முடிக்கும் தொழிலல்லால் டெங்கெட வெவ்வாய் ஊறுகிடைத்தால் இடையாதீர் மி ஏகி எம்பி நல்கி சைகொள்வீர் ஓகை கொணர்ந்தும் மன்னையும் இன்னல் குறைவில்லாச் சாகரம் முற்றும் தாவிடும் நீர் இக்கடல் தாவும் வேகம் அமைந்தீர் என்று விரிஞ்சன் மகன் விட்டான் ( மயேந்திரப்படலம் 9 - 17 , 19 ] அனுமார் கடல்தாண்ட இசைதல் நீயிரே நினைவின் முன்னம் நெடுந்திரைப் பரவை ஏழும் தாய்உலகனைத்தும் வென்று தையலைத்தருதற் கொத்தீர் போய் இது புரிதி என்று புலமைதீர் புன்மை காண்டற்கு ஏயினீர் என்னின் என்னின் பிறந்தவர் யாவர் இன்னும் முற்றும்நீர் உலகம் முற்றும் விழுங்குவான் முழங்கி முந்நீர் உற்றதே எனினும் அண்டம் உடைந்து போய் உயர்ந்ததேனும் இற்றைநும் அருளும், எம்கோன் ஏவலும் இரண்டுபாலும் கற்றை வார் சிறைகளாகக் கலுழனின் கடப்பல் காண்டீர் . கிஷ்கிந்தா காண்டம் முற்றிற்று . ஸ்ரீ ராமஜெயம் ----------------- ஐந்தாவது சுந்தர காண்டம் அனுபர் கடல் தாண்டப் பாய்தல் பாய்ந்திடு சிறுபிள்ளை ஆம்பொழு தொரு தினம் மாங்கனி ஆமெனவே சாய்ர் திடு கதிரெதிர் பாய்ந்தவன் நெடுகிய கடல்களும் நிலைபிசகித் தோய்த்திட வடவரை சாய்ந்திட விசுவசொரூபம் எடுத்தனுமான் நாம்துதி பேசும் யேந்திரம் ஏறியண் ணாந்தெதிர் பாய்ந்தனனே .
பல்லவி
மயேந்திரம் ஏறிப்
பாய்ந்தானே அனுமான்
போந்தானே அனுமான் ( பாய்ந் )
அநு பல்லவி
பாய்ந்தொரு மூவுல
மாய்ந்திடமேவுகு
கேந்தியராவணன்
லாந்தகன் எனவே ( பாய் )
சரணங்கள்
1. கேசவ ராகவ
வாசக மானது
மோச் நிசசார்
வீசியவால் எம
பூசித னே எனும்
நேசம் விடாமல்
நாசம தாய்விட
பாசம் தாகப்
முட்ட உரங்கிழி
திட்டுகள் தெரிய
எட்டு மறும் பொடி
நட்டணை ஆகப்
2. வட்ட நெடுங்கடல்
பட்டு மறைந்திடு
நெட்டை நெடுங்கிரி
பட்டுதி ரும்ப்டி (பாய் )
3. எடுத்தொரு ராகவன்
இடுக்கிய காதிலே
மிடுக்குள ராட்சதர்
இடிக்கிணை யாகவே
கொடுத்தகை மோதிரம்
மடற்குளே யடக்கி
நடுத்தலை மேல் விழும்
திடுக்கென ஓடிப் (பாய் )
4. அண்டர்கள் முனிவர்கள்
மண்டிய மருமலர்
விண்டல ரவி சசி
குண்டலம் எனமுக
கண்டதிசயமொடு
கொண்டனர் பொழிய
மண்டலம் இருசிறு
மண்டலம் அசைய ( பாய் )
5. சுமந்திடு தாயுரை
சுமந்து விசுவரூபம்
அமிழ்ந்திய கடல்படு
திமிங்கிலம் விசையினில்
சுமந்தவன் ஈரடி
சனமந்ததி னாலே
திமிங்கில மொடுதிமி
மிதந்திட மேலே
( பாய் )
6. அந்தமலையில் உள்
நொந்து திசைதிசைபி
முந்து கொடி முடிபி
இந்து ணையடிகள்
தந்தி கரடிபுலி
த்த அவை வெருள
ளந்து பளபளென
தைந்து கிளம்பி ( பாய் )
இலங்கணி வதை
வாரவிஸ்வ ரூபமுடன் பாய்ந்தான் வார்த்தை
மைநாகற் குனரத்தான் மத்தியில் அங்கார
தாரை எனும் அரக்கி தடல் பிடுங்கிக் கொண்டான்
தலங்கு லுங்க இலங்கை முன்னே குதித்தான் அங்கே
காரமுள்ள அரக்கி இலங் கணிதான் ஆல
காலம் என வடவாசற் காவற் காரி
ஆரடா என் றதட்டி வந்தாள் அனுமான் கையால்
அறை கொண்டாள் கொண்டளவே தரை கண்டாளே
பல்லவி
இலங்கணி மடிந்தாளே அனுமன் கையால்
பலங்கெட முடிந்தாளே ( இலங் )
அநுபல்லவி
சலங்கொள் ஈரிரண்டு தலையும் விரித்துக் கொண்டு
அலங்கோல மாய்ப்புரண்டு அலறி உளறிப் பண்டு
(இலங் )
சரணங்கள்
1. பதைப்பி னாலே எட்டுக்
பாரமலை போல் எழுந்
அதட்டி அதட்டி ஆயுத
அத்தனையும் பொடியா
கையும் பறக்கவிட்டுப்
தார் வாரமிட்டு
மெல்லாம் தொட்டுத் தொட்டு
அனுமான்கை அடிபட்டு ( இலங் )
2. பிடிபடாமல் இந்த
பிரம்மா உரைத்தபடி
அடிபட்டுக் கொண்டேன்
ஆட்டுக் குட்டிகள் இந்த
ஊர்காத்திருப்பேன் ஆதி
ஆச்சுதே என் சேதி
போகிறேன் உனக்கினிமீதி
அரக்கர் படை என்றோதி
(இலங் )
3. ஆரும் எதிர்ந்திடாத
என்னை நொடிக்குட்சீறி
அடித்தாயே உன்னை எதிர்ப் பாரில்லைமனந்
தேறி
மாருதியே நமஸ்
காரம் என்று
வணங்கி வடக்குக் கோட்டை வாசல் காவற்
கூறி
காரி ( இலங் )
அனுமார் இலங்கையில் சீதையைத் தேடுதல்
மோதுமிலங் கணினியரா வணன்ப டைக்கு
முதற்பலி யாகக்கொடுத்து முகுர்த்தங் கொண்டு
மாதவனா கியராமன் பாதந் தன்னை
மனங்கொண்டு ராட்சதர்மேல் சினங்கொண் டப்பால்
தூதன் அனு மான்மாட கூடம் சோலை
( இலங் )
சூளிகைமா ளிகையெல்லாம் சுற்றிச் சுற்றி
நாதன்உளம் மகிழ்ந்தருளும் சீதைதன்னை
நாடினான் இலங்கைஎங்கு தேடினானே .
பல்லவி
தேடித் திரிந்தானே சீதாதேவி
தன்னை யனுமானே
( தேடி )
அநுபல்லவி
ஆடிப் பறக்கின்ற
அலங்கக் கொத்தளம் தங்கும்
காற்றும் நுழையாத
இலங்கைப் பட்டணமெங்கும்
சரணங்கள்
1 -வாரரைச்சோலை மந்திரச்சாலையும்
மலர்ச்சோலையும் சா
வடிகளும்
தோரண மேடையும் பூமலர் ஓடையும்
துலைளும் தலை வாசற்
படிகளும்
தேரடி. சளும் சொர்ணப் போரடிகளும் செந்நெற்
சேர் அடிசளும் மதில்
அடிகளும்
கீரைவிரை புகுதா வளைகளும் தொ ளைகளும்
கெடிகளும் செடிகளும்
காடிகளும்
காரியர் காவல் இருக்கும்
சிறைகளும்
நாடகசாலையும் நவரத்ன
அறைகளும்
ஏராளமாக் கோலம் எழுதிய
தறைகளும்
ஏசாந்தஸ் தலமும் தண்ணீர்ப்படித் துறைகளும்
இடுக்குகளும் இருட் டொடுக்குகளும் இருட்டுறி
அடுக்குகளும் மூனல முடுக்குகளும் பாய்ந்து
( தேடி )
2. மலை நிகராகிய உப்பரீகைகளும்
மாடமும் கூடமும்
பலபல புரவியின் வெள்ளமும் பள்ளமும்
பாதாளம் செல்லும்
புரைகளும்
கொலைசெயும் அரக்கர் கிடைகளும் நடைகளும்
குங்கும நீராற்றங்
கரைகளும் நலமுள சந்தியும் பந்தியும் நாற்பத்து
நாலுலட்சம் வீதி
நிரைகளும்
அலைகடலாகிய அகழியும்
கேணியும்
ஆயிரம் வெள்ள அரக்கர்தங்
காணியும்
தலைஎடுப்பாக உயர்ந்த அட்
டாணியும்
சத்திரச் சாலையும் ஒத்ததிட்
டாணியும்
தடத்திலும் முனிவர்கள் மடத்திலும் பெண்கள் செய்
நடத்திலும் புகைபோகா இடத்திலும் போய்ப் பாய்ந்து
( தேடி )
3. மைந்நாக மலைபோலே தூங்கும் கும்பகர்ணன்
மனையிலும் சூழ்ந்த கொட்
டகையிலும்
பொன்னா ரணிமார்பன் இந்திரச் சித்திருக்கின்ற
புதுமனையிலும் சூ
ளிகையிலும்
மெய்நாளும் பேசும் விபீஷணன் வீட்டிலும்
வீட்டில் ஓமகுண்ட
வகையிலும்
பின் அதி காயன் அட் சயன் தேவாந்தகன்
பேரான மாடமா
ளிகையிலும்
வண்ணக் கிளிகள் வளர்
பஞ்சரத்திலும்
வானவர்தானவர் பணி
நகரத்திலும்
அன்னை மண்டோதரி வாழும்
தரத்திலும்
அவளும் அரக்கனும் சேர் அந்தப்
புரத்திலும்
அணில் எனவே தொத்தி அணியணியாய் ஒற்றி
அணைகளெல்லாம் தத்தி அணு அணுவாய்ச் சுற்றித் (தேடி )
அனுமார் இராவணனைக் கண்டு கோபித்தல்
இலகும் அரக் கனையும் மண்டோதரியும் கண்டே
இவளேசா னகி ஆவாள் எனஉள் ஏங்கி
நிலைகலங்கி முகத்தொழுகு கோட்டு வாயும்
நெடுமூச்சும் கண்டிவளோர் அரக்கி என்றே
மலர்விழியில் அறைந்துகா தினிலே கையை
வைத்துடனே அரிகரீ என்று சொல்லிப்
பலபலயோ சனையனுமான் எண்ணி எண்ணிப்
பாவிப்பான் ராவணன்மேல் கோவிப்பானே
பல்லவி
இந்த ராவணனைக் கண்டு சும்மா போனால்
என்ன அனுமான் நானே
( இந்த )
அநு பல்லவி
அந்தராமத் துரோகி இவன்பலம் குறியேனோ
ஆத்திநார் கிழித்தாற்போல் கிழிக்க நான் அறியேனோ
சரணங்கள்
1. புவியடங்கலும்
கிட்டவே மண்டோதரி
புலம்பும் ஓனச
முட்டவே கண்டவர்கள்
எவரும் கெக்கலி
கொட்டவே வாலினாலே
இழுத்துப் பிடித்துப் பொட்டவே
கட்டி
இறுக்கிறேன் தோள் ஓடிய முறுக்கிறேன் தலைபத்தும்
அறுக்கிறேன் தேங்காய்போல நொறுக்கிறேன் அல்லாமல்
( இந்த )
2. பன்னக சாலை
திருட்டுவேஷம்
பண்ணி இலங்கை மட்டும் கொண்டு வந்தான்
அன்னையைச் சிறையில்
வைத்த பாவி
அரக்கன்என் எதிர்ப் பட்டும் கன்னத்தில்
அடிக்காமலும் கைகளை ஒடிக் காமலும் நெஞ்சிலே
இடிக்காமலும் என் கோபம் முடிக்காமலும் போவேனோ
( இந்த )
3. காலனுக்குப்
களுக்கும் உண்டதி
மேலினி ஏன் வி
வேலைக் கிதுவே
காரம்
காரம்
சாரம்
ஆகுமேதேவர்
விறுதாவாய்
சாமி சொந்த
நேரம் - இப்போது
வல்லவேணும் இவனைக் கொல்லவேணும் என் பேரைச்
சொல்லவேணும் பிறகு செல்லவேணும் அல்லாமல்
( இந்த )
அனுமார் சீதையைக் காணாததால் இரங்குதல்
மாதரசைத் தேடவென்று தூதனாக
வந்த இடத்திந்தரா வணனைக் கொன்றால்
பேதகமாம் இவனுயிரை வாங்க வீரன்
பிரசண்டகோ தண்டமே தக்கதென்று
போதுளதாம ரையிலைமேல் தண்ணீர்ப் போலும்
புதையல் இழந் தவர்போல அனுமான் ஏங்கிச்
சீதைதனைக் காணாமல் ராம மந்திரம்
செபிக்கின்றான் வெளியில் வந்து தவிக்கின்றானே .
கண்ணிகள்
1. இந்த இலங்கைநகர் எழுநூறு யோசனை
எங்கெங்கும் போய்த்தேடி
கந்தமலர்க்குழ ளாள் என் தாய் சீதையைக்
கண்ணிற் காணாமல் வாடி
னேனே
2. பாராத இடமில்லை தாயாம் சீதையைப்
பாதகன் செய்ததென்ன
தீராத நெஞ்சுக்குத் தெய்வமே துணை நான்
செய்யும் வகைதானினி
ஏதோ
தானோ
3. அற்பராகும் இந்த வஞ்சனை அரக்கர் செய்
அதர்மம் தானே மெய்
எப்படி யாகிலும் தர்மமே தலைகாக்கும்
என்பதெல்லாம் பொய்
தானோ
4. நாடிச் சேதி கொண்டு வருவேன் என்றுசாமி
ராமன் சொல்லுவான் என்றல்
போச்சே
தேடி வருவேன் என்று விருது கூறிவந்து
செடியிலே நுழைந்தாற்போல்
ஆச்சே
5. மேட்டுக்குப்பையைப் போலே இலங்கைப் பட்டணம் எங்கும்
வேருடனே கெல்லு
வேனோ
காட்டும் என் தாயை என்று ராட்சதப் பயல்களைக்
கையாற் பிசைந்து கொல்லு
வேனோ
தேனே
6. விலங்காமல் தவணை சொல்லிவந்த நாளெல்லாம்
வீணே திரிந்து குறைத்
சலந்தனிலோ இந்த நிலந்தனிலோ நாக
தலந்தனிலோ மறைத்
தானே
வேதமே
7. உலகில் எந்தக் காரியமும் ஒருதரம் ராமா என்றால்
உடன்கூடும் என்றுமல்லோ
பலதரம் ராமா என்றும் எனக்கிந்தக் காரியம்
பலியாத தென்னவி
னோதமே
றாளோ
8. ஆனை தன் பலந்தன்னை அறியாது போலே தேவி
ஆராரைக் கைகுவிக்கி
பூனைமுன் கிளிபோலே எவர்கள் முன்னே என் தாய்
புலம்பிப் பரிதவிக்கி
றாளோ
சாடவோ
9. வாதைப் பட்டரக்கர் முட்டைப்போலே நசுங்க
மலைமலையாப் பிடுங்கிச்
சீதையைக் காட்டும் மட்டும் கிட என்று ராவணனை
வாலாலே மாட்டியிழுப்
பாடவோ
அனுமார் சீதையைக் காணுதல்
கொண்டலெனும் அனுமான் இப் படி.கலங்கிக்
கோலிழந்த குருடனென நின்றான் முன்னே
மண்டியதோர் அசோசுவனம் கண்டான் தாவி
வந்ததிலோர் மரத்திருந்தான் அந்த வேளை
அண்டரிய ஒருமுலையர் பத்துக்கையர்
அரிமுகத்தர் பரிமுகத்தர் அனேகம் பேர்கள்
கண்டகவல் லரக்கியர்கள் நடுவிலே ஓர்
கருக்கண்டான் சீதைதிரு உருக் கண்டானே .
பல்லவி
சீதையைக் கண்டானே
அனுமான்
செடிமேல் நின்று
சேவையைக் கொண்டானே
அனுமான்
( சீதை )
அநுபல்லவி
ஆதவன் காணாத இலங்கை மடுவிலே
அரக்கியர் என்கின்ற புலிக்கூட்டம் நடுவிலே
( சீதை )
சரணங்கள்
1. தாயிவள் தாயிவள்
நிலைவரமே சாமி
தனக்கும் இவள் மெத்தம
னோகரமே
தீயையும் சுடுமிவள்
சரித்திரமே தெய்வ
தெய்வங்களுக்குமிவள்
மீசரமே .
சாயும் சந்திர சூரிய வம்மிசமும் பெருக்கும்
தனியாம் தருமமும் இனிமேலல்லோ செருக்கும்
ஏய அடையாளங் கண்டேன் அஞ்சேனொரு வருக்கும்
என்று செல்லரித்தாலும் இருந்திடத்தே இருக்கும் (சீதை )
2. தேவிக்குத் தாயென்பர்
அல்லோ
பூமி - அவன்
திடத்தையும் வென்றாள் இந்த அபி சாமி
பாவி அரக்கர்க்
கிவள் கால
நேமி இதைப்
பார்க்கப் பெற்றான் இலையே என் சாமி
பூவிளந் துகில்மேல்
அழுதழுதழுது மொய்த்த
புனல் தானே முலைத்தட
அனலாலே
சேவலைத் தேடுமிளம்
பெடைபோலே மெத்தத்
திகைத்துத் திகைத்து வடமுகத்திலே முகம் வைத்த
(சீதை )
3. இருஷிகட்கு மகிமை
என்ன
இவள்
ரா ம - மூர்தசீ
வனத்தைக்
சா குபோலே வற்றிப்
பொசிப்பை
தான் செய்யும் தவமே மகிமை
உண்டு
வற்ற
கண்டு
கொண்டு
விண்டு - அம்மை
ஒரு சூரியன் முன்னே
மதிபோலிந்த வல்லி
உவமைகொண்டாள் அரக்கர் ஒழிய எவர்க்கும் நல்லி
திருவே இவள் அந்த
அரியகோதண்ட வில்லி
செயமினி சாமிகாரியம் பயமில்லை என்று சொல்லி
(சீதை )
சீதாதேவி திரிசடையோடு முறையிடல்
அனுமனிந்தப் படிசீதை தனை மரத்தி லிருந்து கண்டான்
அப்பால் அந்த
வனிதையும் தாமரையிலைமேல் தண்ணீராய்த் திரிசடைதன்
வதனம் பார்த்தாள்
கனமுளஎன் சிறைநீக்கிச் சாமிமுகந் தனைக்காணக்
கடவேனோ நான்
உனதுமதி ஏதென்றே உருகுவாள் அமைசொல்லி
உருகுவாளே
கண்ணிகள்
திரிசடையே
1. ஐயோ நானொரு பெண்பிறந்த கதையை
ஆருடனே சொல்லுவேன்
தெய்வமும் நீ பெற்ற தாயும் நீ அல்லாமல் வேறு
திக்குண்டோ கேளாயம்மா
திரிசடையே
திரிசடையே
2. மங்கைமார் கொண்ட கணவனைப் பிரிந்தால்
மனையிலும் இருப்பாரோ
எங்கெங்கும் வசையாச்சே கேட்பவர்
என்னென்று பழிப்பாரோ
திரிசடையே
திரிசடையே
3. கடலிலே இந்த இலங்னக இருக்குதென்று
காகுத்தர் அறியாரோ
தொடரும் என் சேதி அவர்க்குச் சடாயுராசர்
சொல்லாமல் இறந்தாரோ
திரிசடையே
4. துணையாக வேவைத்த கொழுந்தனை அவர் பின்னே
தூரப் போகச் சொன்னேனே
திரிசடையே
கணவனார் மெத்த நீலிஇவள் என்றென்னைக்
கை நழுவ விட்டாரோ
திரிசடையே
திரிசடையே
5. சூத்திரம் செய்து ராட்சதன் இவன் என்னைக்
கொண்டுவந் தானல்லோ
இத்தனை நாளவன் தின்று விடுவானென்றே
எண்ணித் திரும்பினாரோ
திரிசடையே
திரிசடையே
6. அரசில்லா அந்த நாடு காடாச்சுதென்று
ஆலோசனை செய்து
பரதனும் தாய்மாரும் வந்து அழைக்க அவர்
பதியிலே போய்விட்டாரோ
திரிசடையே
7. சனகராசன்வில் ஒடித்தவன் முன் எறிந்த
தடந்தோளை என்று காண்பேன்
திரிசடையே
கனமுடனேப ரசுராமன் வில்லைப் பறித்த
கைகளை என்று காண்பேன்
திரிசடையே
8 வைத்த போதிலும் கைகை பின்னே அந்த அரசை
வாங்கிய போதிலும்
திரிசடையே
சித்திரச் செந்தாமரை மலரைப் போலே மலர்ந்த
திருமுகம் என்று காண்பேன்
திரிசடையே
9. கொழுந்தி நான் என்றும் குசுனுக்குத்தாம் தோழரென்று
கூறினதும் பொய்போமோ
திரிசடையே
எழுந்து செல்லும் விராதன் துதியை மனமகிழ்ந்த
இரக்கமும் போய்விட்டதோ
திரிசடையே
10. கரதூஷணர் பதினாலாயிரந்தேரும்
கணத்திற் பொடி செய்தாரே
திரிசடையே
சரவேகமும் கையும் மெய்யுமென்னிருவிழி
தம்மில் நிற்கின்ற தையோ
திரிசடையே
திரிசடையே
11. வல்லபேருக்குப் புல்லும் ஆயுதமென்ற
வழக்கச் சொல்லைப் போலத்
புல்லினாற் காக்கைக் கண்டோற் கண் கொடுத்த
புண்ணியரைக் காண்பதென்றோ
திரிசடையே
12. சற்றும் வைத்துப் பாராமல் பாவிராவணன் வார்த்தை
தணல் போல் இறைக்கிறானே
திரிசடையே
பத்துத்தலையும் பனங் காய்போல் விழுந்துருளப்
பார்ப்பதெந் நாளோநான்
திரிசடையே
13. பாயும் கைகளும் என்னைப் பார்க்குங் கண்களு மிந்தப்
பழிவார்த்தை சொல்லும் வாயும்
திரிசடையே
பேயும் பெருங்கழுகும் நாயும் நரியும் பிச்சுப்
பிடுங்கித் தின்னக் காண்பேனோ
திரிசடையே
14 . குடிமகனிந்திரசித்தன் கொழுந்தனால் பட்டானென்ற
கூக்குரல் என்று கேட்பேன்
திரிசடையே
அடியற்ற மரம் போல்மண் டோதரி ராவணன் முன்
அலறி விழக்காண்பேனோ
திரிசடையே
15. பேயாம் அரக்கனையும் சேனைகளையும் என்றன்
பிராணநாதர் கொல்வாரோ
திரிசடையே
தாயேஉன் அப்பன் வீடுபாற்கடல் போலே பொங்கித்
தழைக்க நான் காண்பேனோ
திரிசடையே
16. இடதுகண் துடிப்பதும் இடதுதோள் துடிப்பதும்
ஏதோ அறிகிலேனே
திரிசடையே
டது செவியிலொரு வண்டுவந்தூதக் கண்டேன்
என்ன சொல்லடியம்மா
திரிசடையே
திரிசடையே
17. வந்தசாமிமுன் மிதிலையில் என்கை தொட
வரக்கண்ட குறியிவை
அந்தநாளிற் குறி இந்தநாளிலும் கண்டேன்
அதிசயம் ஏதோ அம்மா
திரிசடையே
சீதாதேவிக்குத் திரிசடை கனாநிலை உரைத்தல்
கோதைமனம் தளர்ந்திந்தக் குறிகுணங்கள் சொன்னளவில்
தூதுவன் இப்போதுனக் கோர் சுபாவத்தைச் சொல்லுவன்காண்
காதலியே நானும் நல்ல கனவுகண்டேன் கேள் எனவே
சீதைமனம் தேறியிடத் திரிசடையும் சொல்வாளே
பல்லவி
என்கனவைக் கேளாயம்மா
- சானகியம்மா
ஏனுனக்குக் கவலையம்மா
( என் )
அநு பல்லவி
மங்களம் உனக்குண்டாமே வல் அரக்கன் வாழ்வுபோமே
( என் )
சரணங்கள்
1. சுந்தரி மண்டோதரி வெறுந்தலையைச் சீவினாள்
அந்திடத்திலே அவள் விழுந்தழுது கூவினாள்
இந்தமன்னன் வீடுவிட் டெழுந் தொருபெண்
தாவினாள்
என் தகப்பன் வீட்டில் அவள்
வந்து கந்து
மேவினாள் ( என் )
2. பூவுகளெல்லாம் கரிக
ளாக்கருகவும் கண்டேன்
கோவில்களெல்லாம் மெழுகு போலுருகவும் கண்டேன்
பேய்வகையும் ஓரிகளும்
மேபெருகவுங் கண்டேன்
ராவணன் எண்ணெய்த்தலை யோடேவருகவும் கண்டேன் ( என் )
3. பத்து முடி ராவணனைக்
கொத்துட னே கொல்லவோ
வைத்தசிறை விட்டமரர் சொஸ்தமொடு செல்லவோ
உத்தமியுன் பத்தினி
மகத்துவம் என்ன
சொல்லவோ
இத்தனையும் லங்கைக் கனர்த்தம் என்ப தல்லவோ ( என் )
சீதாதேவி பக்கல் ராவணன் குறையிரத்தல்
திரிசடையிப் படி சொல்லச் சனகி கொஞ்சம்
தெளிந்தளவில் இது நல்ல வேளை என்றே
மரம்உறையும் அனுமானும் குறுகும் போதில்
மகுடம் ஒருபத்தும் மின்ன மாதராட
அருகினிற்கட் டியம்போட அந்த ராவில்
அரக்கன்வந்தான் அருந்ததிக்கும் தெய்வமாகும்
கருணைவல்ல சீதைமுன்னே தான்ஏ தோதோ
கரைக்கின்றான் பல் கெஞ்சி உரைக்கின்றானே
கண்ணிகள்
1 .. என்ன செய்வேன் நான் என்ன செய்வேன் நான்
என்னசெய் வேன் மிதிலை
அன்னமே
மன்மதன் கணையாலே பட்டுவிழுவேன் என்று
மலரயன் வகுத்தானோ
முன்னமே
2. அங்கம் நையவும் விட்டுப் பெண்கள் வையவும் காமன்
அம்பா லெய்யவும் சிந்தை
நோகவோ
திங்கள் சுடவும் பனை அன்றில் சுடவும் வீசும்
தென்றல் சுடவும் வெந்து
போகவோ
3. ஆலைக்கரும்பு போலும் வேலைத்துரும்பு போலும்
ஆசை வலையிற்சிக்கி
மாயவேர்
மாலைக்கும் காலைக்கும் ஊண்உறக்கம் இல்லாமல்
வரவர நாளுக்குநாள்
தேயவோ
4. அந்தூதும் நெல்லானேனே நொந்து நொந்து போனேனே
அனுக்கிரகம் நீ செய்ய
வேணுமே
சந்தோஷமாகப் பாராய் என் தன் கவலை தீராய்
சாஷ்டாங்க தெண்டனிட்டேன்
காணுமே
5. மறக்குமோ உனதாசை வார்த்னதான்ற ருளாயோ
வானோர் பழிக்சநின்று
கூசவோ
பிறக்கும் பிற குந்தலை முனறக்கெல்லாம் ராவணனோர்
பெண்ணால் இறந்தானென்று
பேசவோ
6. பதியும் உனதெனது நீதியும் உனது சொன்னேன்
வணங்குமென் கவலையைத்
தீர்த்திடாய்
நானே உன்னைப் பணிந்தால் பதினால் உலகுக்கும் நீ
நாயகி ஆமல்லோ
பார்த்திடாய்
7. கண்ணும் கருத்தும் நீயே மன்மதன் செய்யும் போனரக்
காட்டிலும் நல்லதெம்
வானதயே
எண்ணந்தப்பிப் போனேனே நாயிலும் பேயானேனே
எனக்கொரு புத்தி சொல்லாய்
சீதையே
சீதாதேவி இராவணனை இடித்தல்
மிண்டாளன் அரக்கனிந்த வீண்வார்த்தை சொல்லச் சொல்ல
கண்டாளன் சனகியுமென்றன் காகுத்தன் சரத்தினாலே
உண்டான தெல்லாம் தோற்க ஊழிவந் தடுத்ததையோ
சண்டாளன் எனக் கோபித்துத் தள்ளுவாள் விள்ளுவாளே .
பல்லவி
ராட்சதப் பதரே துன்மார்க வார்த்தைகள்
ஏற்குமோ போடா ராட்சதப்பதரே
( ராட் )
அநு பல்லவி
காட்சியா
தாழ்ச்சி
வாழ்ச்சி
சாட்சி
என்னைப்
ஆம்பழி
வீணிலே
பார்க்காதே - இந்த
ஏற்காதே உன்
போக்காதே - அர
தோற்காதே
ஆனதைத்
( ராட் )
சரணங்கள்
1. கிளைக்கும் மூன்று லோகமும் செலுத்தும் உன்கோலும் உன் தன்
கீர்த்தியும் ஏன்
தொலைக்கிராய் - கெருவத்தாலே
வெளிக்கப் கீர்த்தியாகப் பாவபுண்ணியமும் பாராமல்
விருதாவிலே ஏன்
குலைக்கிறாய் - ஆகாசமட்டும்
அளக்கும் இருப்புத் தூணைச் செல்லரிக்குமோ இத்தை
அறியாமல் ஏன்
மலைக்கிறாய் அக்கினிதன்னில்
குளித்துத் தவங்கள் செய்து பெற்றவரத்தை யெல்லாம்
கொஞ்சத்தில் ஏன்
கலைக்கிறாய் அடசண்டாளா
வளர்த்திய வார்த்தைகள் படியாதே
திணல்
ஒளிக்கமுன் தானையில் முடியாதே --
என்னை
இளக்கார மாக்கிடத் துணியாதே -எரி
விளக்கினில் பூச்சிபோல் மடியாதே
( ரா .. )
2. காயத்துடன் பிறந்த தங்கை மூக்கும் முலையும்
காதும் அறுக்க
விடுத்தாய் வெளி நில்லா தென்
நாயகற் சஞ்சியந்த மாயமான் பின்னெதிரிட்டு
நாய்போற் பதுங்கி அடுத்தாய் - நமன் போலும் உன்
தீயரூபத்தைக் கண்டு மூர்ச்சையாய்ப் போன என்னை
தீண்டாமல் மண்ணோ டெடுத்தாய் கொல்வேன் என்றுமேல்
பாயும் சடாயுவாலே பூனைவாய் எலிபோல்உன்
பவிஷெல்லாம் பறி
கொடுத்தாய் - அடசண்டாளா
தாயிவள் எனமனம்
யேயே இம்மாத்திரம்
தீயுரை சொன்ன நாக்
வாயிலும் புழுவரச்
அறியாதோ போட்டா
தெரியாதோ என்னனத்
கெரியாதோ
சொரியாதோ
பத்து( ராட் )
3. குதிக்கிறாய் சும்மாப் போமோ இப்பாவம் பின்னுக்கொன்று
கோடியாய் வந்து
வாய்க்குமே உன் செல்வமெல்லாம்
செதுக்கிற அரம்போல் என் பொறுமை ஆகிறதர்ம
தேவதை தானே
தேய்க்குமே உன் குலந்தன்னை
மதிக்கா எட்டினயக் கூடி இலவுந்தீபட்டாற் போலென்
வயிற்றெரிச்சலே
தீய்க்குமே என்பிராணநாதர்
விதிக்கும் பாணம் உன் தன் தலையைப் பனங்குலை போல்
வெட்டி வெளியிற்
சாய்க்குமே அட சண்டாளா
அதற்குள்ளே துள்ளிச்
பனதப்பினால் ஒன்றும்
மதத்தினால் கெட்டுப்
கொதிக்கும் நரகத்தில்
சாகாதே - இந்த
ஆகாதே வாய்
நாளைக்
மூழ்காதே
போகாதே
சீதாதேவி தனியே புலம்பல்
சானகி இப் படிவைய அரக்கன் சீறீத்
தான்நடந்தான் அரக்கியரைக் கலைக்கச் சொன்னான்
ஆன துகண் ட் - னுமானும் இவனை இங்கே
அடிப்பெனென்று கையொடுகை பிசைந்தான் அப்பால்
2 -தானொருமந் திரம் செபித்தான் மாதரெல்லாம்
சவம்போல உறங்கிவிட்டார் அந்தவேளைக்
கானகத்தில் இளங்குழந்தை போலே சீதை
கரங்குவாள் தனியே தான் இரங்குவாளே ,
கண்னிகள்
1. தேற்றுவாரில்லை ஆற்றுவா ரில்லை தெய்வமே என்ன செய்குவேன்
ஏற்றும் அரக்கியர் வார்த்தை இடும்பைவிட்டு எந்தநாள் இனி உய்குவேன்
அந்த வினைக்கிந்த இலங்கையிலே பொல்லா அருஞ்சிறையில் விழுந்தேனே
3. தம்பிமார் அன்னைமார் எல்லாரையும் தவிக்கவிட்டு வந்தபோதே
என்பொருட்டில் அவர்க்கிங்கே வரமனம் ஏன்வருமோ வாராதே
4. நிறைதவ சுக்குக்குறை இவளென்று நினைந்துகை
விடுவாரோ
பறையர் ஊரிலே சிறையிருந்த என்னைப் பரிந்துகை தாடுவாரோ
5. தாழ்வு செய்தேனோ தெய்வமே என்பதன் சாமிநெஞ்சை உருக்காயோ
பாவி உயிரே என்சாமி திருமுகம் பார்க்கும் மட்டும்
இருக்காயோ
6. ஏதுகாண் இவர் அரக்கிமார்களோடே இந்தப் பேரிடுவான் ஏனோ
நாதன்பிரியவும் இன்னம் இருந்தேனே நானல்லோ அரக்கிதானே
7. தந்தை சனகனும் இந்த வினைகண்டு தன்னுயிரும் பிழைப்பானோ
அந்த இளைய கொழுந்தனும் என்னை அருமைசொல்லி அழைப்பானோ
8. புல்லும் பூமியும் உள்ளமட்டும் இந்த பொல்லாப்பழி சிறந்தேனே
சொல்லுவார் சொல்லும் வசைக்கெல்லாம் ஒரு தோதகிபெண்
பிறந்தேனே
அனுமார் ஸ்ரீராமரை வருணித்தல்
அன்னையெனும் சனகியிவ்வா றழுது வாடி
ஆவி இனி வைத்திரேன் என்று பிராணன்
தன்னைவிட நினைத்தொருபூஞ் செடிக்கீழ் வந்தாள்
சாமி அனு மானுமுன்னே வணங்கிக் கொண்டு
என்ன தசரதராமன் தூதன் நானே
எங்கெங்கும் தேடினேன் அனுமான் என்பேர்
சொன்னபடி சொல்லவந்தேன் சாமிரூபம்
சொல்லுவேன் என்றெடுத்துச் சொல்லுவானே
பல்லவி
அந்தராம சவுந்தரியம் என்னால்
அறிந்து சொல்லப் போமோ அம்மா
( அந்த )
அநுபல்லவி
கந்தம் மேவும் அர
விந்தமலரும் அவர்
காலுக்கு நிகராமோ கைக்குத்தான் சொல்லப்போமோ
( அந்த )
சரணங்கள்
1. உருண்ட மணிமுழங் காலுக்குவமையவர்
உடைய அட்சய தூணி
ஏற்குமே
திரண்ட பெருந்தொடை இரண்டுக்கும் எட்டுத்
திசையானை துதிக்கையும்
தோற்குமே
வரிந்தமர வுரிஇடையும் நடையுங்கண்டோர்
மனதையெல்லாம் உருக்கி
வார்க்குமே
தரந்தர மாயுல கிருந்த வயிற்றுக்குச்
சரிசொல்லக் கூடுமோ
யார்க்குமே
விரிந்தமார் புக்கினண பூமியகலங்
காணும்
விளங்கும் கழுத்துக்குநேர் இளங்கமுகே பூணும்
பரந்த புசங்களுக்கு மேருமலையே
நாணும்
பார்க்கப் பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேணும்
( அந்த )
2 . அதி செயமுடன் பளபளென்றில குகண்
ணாடிநி கர்த்தக
போலமும்
மதிகள் ஒருசத கோடிக்கு மேலான
மங்கள மலர்முகக்
கோலமும்
கதியென்றெடுத்தவர்க்கு பதியும் நிதியும் தரும்
கருணா நயனவி
சாலமும்
குதிகொளும் பவளவாயும் சிறு நகையும்
குருமந்தகாசவி
லோலமும்
புதுமலையினில் விழும் பொன்னருவி
யைப்போலும்
பூமணிமார்பினிற் புரளுமுப்
புரிநூலும்
எதிரில்லாதகோ தண்டமும்
ஒருகாலும்
எழுத வேண்டுமென்றால் ஆமோமன்
மதனாலும் ( அந்த )
3. பெருத்த தாமரை இலைபோ லே ஒளி
பெருகிய மேனிச்சிங்
காரமும்
வரித்த சிந்துர ரேகையும் புருவமும்
வளர்ந்த நெற்றிவிஸ்
தாரமும்
பருத்த திருமுடி வேணியும் வேணியில்
பசுந் துளவமலர்
ஆரமும்
தரித்த திருவாழி கொடுத்துன் சேதியை
தனியே என்னுடன் சொன்ன
சாரமும்
திருத்திச் சொல்ல ஒருவாயில்லை
தெரிந்தும் தெரியாமலும் சொன்னேன் நீ பொறுப்பாயே
ஒருக்காலே உண்டவர் மகிமை நீ
அறிவாயே
உனக்குத் தெரியும் வேதம் தனக்குத் தெரியும்தாயே ( அந்த )
சீதாதேவி லட்சணியை தெரிசித்தல்
நாட்டிலே இந்தவண்ணம் ராமர்க்குள்ள
நற்குறியெல் லாம் சொன்னான் நாடுவிட்டுக்
காட்டிலே நடந்ததுவும் சுருங்கச் சொன்னான்
கரதலா கமலம்போல் அனுமான் பின் ன
ஆட்டிடும் பசியாலே விழுந்தோர் கையில்
அண்டர்உல கத்தமுதம் ஈந்தாற் போல
நீட்டினான் திருவாழி அதனைக் கண்டாள்
நிசங் கண்டாள் சீதைபர வசங் கொண்டாளே
ஒருவாயே
பல்லவி
கொண்டாளே
சாமிமோதிரம்
கண்டாளே
( கொ )
அநுபல்லவி
எண்டிசை போற்றிய
என் அனு மானிட
இலங்கா புரத்திலே
பொன்னிரு கரத்தாலே
( கொ )
சரணங்கள்
1. கந்தமலர்க்குழல் மேலே சூடி
கண்ணுக் குக்கலத்தண்
ணீர்விட்டு
காணக் கிடைத்ததே கார்த்திகை பிறைபோலே
கண்டேனே என்று
முறைபட்டு
அந்தராம மந்திரம் எழுதிய
அடையாளமோ
திரந்தொட்டு
அணைத்து முலைமேல் இணைத்துடம் பிலே
அடங்கா மகிழ் ச்சிகொண்டடிக்கடி முத்தமிட்டு ( கொ )
2. எரிந்தபசியால் வருந்தும் நாகம்முன்
இழந்த மணிதனை
அடுத்தாற்போல்
ஏதினிமேல் வாராதென் றொழிந்தவர்
எறிந்த உடைனமயைக் கண்
டெடுத்தாற்போல்
பெருந்தரையிலொரு கால்மேலே நின்று
பிள்ளை பெற்று மலடி
படுத்தாற்போல்
பின்னும் முன்னும் தோன்றாமல் தவிக்கிற
பிறவிக்குரு டனுக்குத் தெய்வம் கண் கொடுத்தாற்போல் ( பொ )
3. சிந்தாகுலம் விண்டேன் உன்
திருவாக் தால் என்
குறையாற்றி
தீயராவணப் பாவிஊரிதைத்
தேடிவந்தா யே என்
மனந்தேற்றி
தந்தாயே என் சீவனை உனக்கினித்
தருவதென் னஇதற்
கெதிர்மாற்றி
தாயும் தந்னதயும் குருவும் தெய்வமும்
சகலமும் நீயே என் றனுமானை வாழ்த்தி
( கொ )
அனுமார் சீதை பிரிந்தபின் நடந்த செய்திகளை அவளுக்கு விவரித்தல்
கண்டுதிரு வாழியினால் மகிழ்ந்த சீதை
கடல்பாய்ந்த விசுவரூபத்தைக் காட்டக்
கொண்டு மகிழ்ந் தாள் பின்னும் அனுமா னேநான்
கோணாமல் மானுக்காய் நெடுந்தூரத்தில்
மண்டு ரகுவீரன்போய் மீண்ட வாறும்
வந்திளையோ னுடன்கலந்த வாறும் நீதான்
பண்டுபழகிய வாறும் சொல்வாய் என்னப்
படிக்கின்றான் அவள் குறையை முடிக்கின்றானே
பல்லவி
( கேள )
கேளம்மா சொல்லுவேன் - முன் உள்ளதெல்லாம்
கேளம்மா சொல்லுவேன்
அநுபல்லவி
நீளமான் அனமாரீசன் மறைந்து நின்றுடனே
உயிர்க் கொன்றுடனே
மீளவே ரகுவீரன் வந்து சேர்ந்தபின்
( கேள )
சரணங்கள்
வாடி
தேடி
1. இனம் பிரிந்த மான்போலே என் தாயே உன்னை
நாடி
உணும் கனிகாய்சளும்போய் உலைவாய் மெழுகாய்
அனந்தம் காடும் மலையும் ஆறெங்கும் தேடித்
தனந்தனியே புலம்பித் தம்பியாலுயிர்
வனந்தனில் வந்து சடாயுவினால்மதி தேறவே ராவணன்
முனைந்ததெல்லாம் சொல்லியவன் உயிர்வானம் ஏறவே அந்நேரம்
சினந்து கவந்தனைக் கொன்று சவரிமொழி கூறவே
உன் தன்னை
நினைந்து நினைந்தறி வானது போய்த்தடு மாறவே நாயேனும்
பணிந்திட வேதன தடியருள்
பணிகளும் மணிகளும் வகைவகை நோக்கித்
துணிந்திடும் வாலியை மாட்டினன்
சுக்ரீவனை முடி சூட்டினன்
பின்னே
( கேள் )
ஆக்கிப்
முன்னே
2. அறிகிற தூதர் தம்மை அந்தந்தத் திசையில்
ஏவி
நெறியே தெற்குத் திசைக்கு நீபோ என்றென்னைக் கூவி
பொறியே ஆரும் மோதிரம் கைபோட்டதுதந்து தேவி
குறிகுணம் எல்லாம் சொல்லக் கொண்டு தென்திசை தாவி
முறைமுறையே வெகு தேசமெல்லாம் அலைந் தெட்டினேன் - என்னோட
பிறகு செல்வானர வாராதிரு மென்று தட்டினேன் - அந்நேரம்
தரையிலிருந் தாகாசமளவும் போய்
முட்டினேன் - மயேந்திர
பருவதமேல் நின்று பாய்ந்திலங்காபுரி கிட்டினேன் - கோட்டைக்குள்
குறுகுறென நடக்கிற வேளையிலெதிர்
கொண்டிடும் லங்கணி தொண்டையும் மண்டையும்
நெற நெறெனநெரிந் திடவே ஊர்விட்டு
நீங்கினள் ஆவியை வாங்கினன் நானே
( கேள )
3. அகழும் இலங்கை யெல்லாம் அணு அணுவாகச் சுற்றி
தகைசேரும் மத்திட்ட தயிர் போலவே என்
புத்தி
நிகழும் வேளையில் ராமநேசம் வந்தது
பற்றி
மகிழவே நான் அசோக வனத்தில் வந்தேனே
ஒற்றி
வகையுடனே ராவணன் வந்துன் எதிர்படித்ததும் - சண்டாளா
அகல நில்லடா என்று நீ வாய்மேல் அடித்ததும் அம்மாஉன்
முகமலர்மேல் இருகண்ணால் முத்துகள் வடித்ததும்
சகலமும் அறிவேன் உனதிடதுபுேறம் துடித்ததும் இதெல்லாம்
பகலவன் முன்பனி ஆய்விடும் மெய்யே
பாவி அரக்கர்கள் வாழ்வதும் பொய்யே
செகமுழு திலும் ஒரு திருவுள மேபொது
தேன்மொழியே அம்மா என்வரலாறிது
( கேள )
அடியேன்
அனுமார் சீதாதேவியை வரங்கேட்குதல்
சொல்லி இந்த வகையனுமான் பின்னும் என் தன்
தோள்மேலே எழுந்தருள்வாய் அங்கே பாய்வேன்
அல்லதிலங்கை யோடெடுப்பாய் எனினும் செய்வேன்
அரக்கரை வேர்பிடுங்கெனினும் கணத்திற் செய்வேன்
பல்லரக்கர் சிறையினிலே கண்டான் மீட்கப்
பயப்பட்டான் உயிரைக் காப்பாற்றினான் என்று
எல்லவரும் சொலப் போகேன் தாயேசீதை
ஏதென்றான் இதற்குவகை ஓதென்றானே
அனுமாருக்குச் சீதை மறுமொழி கூறுதல்
எண்ணி அனுமானிந்த வார்த்தை சொல்ல
எனை ஒருவரும் தொடப்போ காது கண்டாய்
மண்ணதைத் தொட்டரக்கன் எனை எடுத்தான் கண்டாய்
வலியகோதண்டபதி அவர்பேர் கண்டாய்
நண்ணி என்றன் சிறை அவரே மீட்டிடாமல்
நடைத் தூதன் மீட்டால் எப்படியாம் கண்டாய்
கண்மணியே மகனே என்றவனை நெஞ்சம்
கரைக்கின்றாள் சீதை கனிந்துரைக் கின்றாளே
பல்லவி
இம்மாத்திரம் செய்வாய் அனுமானே - என்னை வேண்டி நீ
ம்மாத்திரம் செய்வாய் அனுமானே
அநுபல்லவி
சும்மாவிட்டு விட்டாலே தோஷம் உண்டு தன் மேலே
சரணங்கள்
1. வேடிக்கைக்கோ பிடித்தார்
வில்லு - அவர்க்கிந்த ஊர்
ஈடோ இதெல்லாம் ஒரு சில்லு - நான் சபித்தாலும்
காடாகாதோ இலங்கைக்
கல்லு - துணிந்தவர்க்குப்
பாடோ பிராணன் என்ன ஓர் புல்லு - அந்தூதிப் போட்டுக்
கூடுமாத்திரம் இருந்த
நெல்லு - போலே ஆனேனே
ஓடிப்போய் சாமி முன்னே நில்லு - அவருடனே
கூடவே அயோத்திக்குச்
செல்லு - என்னை எங்கென்று
தேடும் மாமியார்க்கு நான்
தெண்டனிட்டேன் என்று சொல்லு
( இம்மா )
குருவார்த்தையாக உன்மேற் பாரம் - போட்டுச் சொல்கிறேன்
ஒருமாதம் நிற்கும் என் சரீரம் - கல்யாணம் செய்த
பெருநாளில் என்மனைவி
சாரம் - அறிந்துகைமேல்
பரவசம் சொன்னாரே விஸ் தாரம் - அத்தை நம்பி நான்
வருவாரல்லோ இத்தனை
தூரம் - என்றிருந்ததை
தெரியாமல் ஊர்க்குப்போம் அந்நேரம் நீயும் கூடப்போய்
அருகே நான்சொன்ன உப
சாரம் சொன்னபின் கங்கைக்
கரைக் கண்டால் சீதை கடனும்
கழிக்கச் சொல்வாய் உப காரம்
( இம்மா )
3. ஆதியில் பொன் மானுக்கா
வாது
சொன்ன துண்டந்த
வேதைபொறுக்கச் சொல் என் மீது பெண்களுக்கெல்லாம்
பேதைமை என்பதுவி
டாது - அதுகொண்டென்ன
வேதன் சொன்ன சாபம் பொல் லாது - என்னை ராவணப்
பாதகன் அணுகக்கூ
டாது - என்று திரிசடை
மாதா உரைத்தாள் பயம் ஏது - என்றிருந்தாலும்
மேதினிவாய் மூடப் போ
காது - ஆகையினாலே
சீதாராமன் தன் பேரைச்
செலுத்தச் சொல்வாய் இப் போது
( இம்மா )
அனுமார் சீதாதேவிக்குத் திடம்கூறல்
வடித்துவடித் தன்னையிந்த வார்த்தை சொல்ல
மாருதியும் நகைசெய்வான் விழல் கூளத்தை
இடிப்பதுபோல் அரக்கர் தம்மை இடிக்கச் சேனை
எழுபதுவெள்ளமும் சேரும் எனது தோள்மேல்
அடித்தலம் கொண்டென்சாமி சேர்வார் தம்பி
அங்கதன் தோள் மேற்சேர்வார் அவர் அம்பாலே
பொடிப்பொடியாய் ராவணனும் தரையில் சேரும்
போரும்வரும் பாரும் எனப் புகலுவானே
பல்லவி
எட்டு நாளையிலே பாரும் - அம்மா
ராவணன் பேரும் இவன் ஊரும்
( எட்டு )
அநு பல்லவி
( எட்டு )
இஷ்ட காலம் வந்த திரங்க வேண்டாம் நீரே
எப்போதும் போலே ராமர் இடத்தினிற் சேருவீரே
முட்டாத வானரர்கை தொட்டே கல்லெறிந்து
முட்டாள்கள் துஷ்டர்கள்
கட்ட பலிஷ்டர்கள்
இட்டிடுகட்டுகள் ஒட்டுகள் கெட்டபின்
நெட்டுள்பட்டண மட்டி அரக்கியர்
கட்டிய பொட்டுகள் தொட்டறு பட்டிடும்
சரணங்கள்
1. மலர் தலை உலகெலாம்
வாழ
மண்மேல்
மண்டோதரி அலறி
எங்கும்
அலகையும் நாயும் வந்து
காவல்
அரக்கியர் உனது வெள்
ளாட்டிகள் போலே
தாழ
அந்தர துந்துமி இந்திரன் அறைந்திட
என் தன் முகுந்தன் நெடுந்தளம் வந்தபின்
உன் தன் வருந்திய சிந்தை மகிழ்ந்திட
இந்த இலங்கை அழிந்திடும் விந்தையை
வீழ
( எட்டு )
மிதக்க
2. ஆகா ராட்சதப் பிரேதம்
மேலே
ஆகுமே ரெத்தங்கடல்
போலே
அதில்
காகங்கள் மூழ்கி ஒருக்
காலே - மாதர் கண்ணீரால் அந்தரத்தம்
கழுவிப் போமேஅப்
பாலே
கங்கிலும் வங்கிலும் நுங்கு தலங்களும்
மங்கையர் தங்கி டங்கொள் அரங்கிலும்
அங்கிலும் இங்கிலும் எங்கிலும் எங்கள் கு
ரங்கு நெருங்கி இடுங்கல கங்களை
( எட்டு )
3. ஆனை சேனைகளை நான் சாட குரங்கால்
அரக்கர் தலையெல்லாம் பந்தாட ஒருவர்
போனவழி போகாமல்
ஓட இந்தப்
பொல்லா ராவணன் வாழ்க்கை
எல்லாம் தம்பியைக் கூட
புத்திரர் மித்திர களத்திர இனத்தவர்
சுற்றி வயிற்றில் அடித்து விழத்தலை
பத்தும் நரித்திரள் தத்தி இழுத்திட
வித்தகன் அஸ்திரம் அறுத்திடும் வெற்றியை
( எட்டு )
சீதாதேவி அனுமாருக்கு அடையாளம் ஈதல்
உன்னித்தான் அனுமன் இந்த உறுதிசொல்ல மனந்துணிந்தாள்
வண்ணமுள்ள அணிசூடா மணிகொடுந்தாள் சாமி அவள்
என்ன சொன்னாள் எனக்கேட்கில் ஏதுரைப்பாய் எனச் சீதை
சொன்னபடி அடையாளம் சொல் என்று சொல்வாளே
பல்லவி
( அனு )
அனுமானே சாமிக்கிந்த
அடையாளம் சொல் ஐயா
அநுபல்லவி
சனகி இலங்கைச் சிறையினில் தன்னுயிரைத்தானே தின்று
மனதில் ராமாமுர்த சீவனம் செய்திருக்கிறாள்
என்று
( அனு )
1. உலகறிய நகரைவிட்டுக் கோட்டைவாசல் கடக்குமுன்னே
ஓங்குவனம் எங்கே என்று நான் கேட்க - நேரே
தாலை தூரம் வழிநடந்தாய் சமர்த்து நீ என்று சொல்லி
துளிரான வாய்மலர்ந்து குளிரநகை செய்தாரே
2. தாழ்வில்லா நகர்நீங்கி வருகிற பேர் எல்லோரும்
தனித்தனியே துணிவு சொல்லி அனுப்பினார் பொய்யோ
( அனு )
சூழும் அந்த வழிநடுவே வேள்வி செய்ய வேணுமென்று
தொடங்கும் வேதியனாசை அடங்கப்பசு கொடுத்தார் ஐயோ ( அனு )
கனமான கங்கைக்கரை வன வேடன் முன் எங்களைக்
காட்டியிவர் ஆரென்று நீ கேட்டாயே குகனே
உனது தம்பி எனது தம்பி உன் கொழுத்தி இவள் நானும்
உன் ஆசைத் தோழன் என்று சொன்னாரே மகனே ( அனு )
4. உளத்தில் மறுமாதர் குறிக்கேன் என்றந்தரங்கம்
உரைத்தார் என் சாமிக்கது கருத்தில் உண்டுதானே
வளர்த்த கிளியும் மானும் தளர்ச்சி இல்லாதபடி
வைத்திருக்கச் சுமந்திரருடன் பத்திரமாகச் சொன்னேனே ( அனு )
5. ஒருநாள் என்மேற் பாய்ந்த காக்கைதனை நோக்கிப் புல்லால்
ஒருகணை விட்டார்இதென்ன தெரியாது போச்சோ
சரணம் என்றது வீழ இருவிழிக்கும் ஒரு மணியாய்
தாமே கொடுத்தாரே அந்த மானமுந்தான் எங்கே போச்சோ ( அனு )
அனுமார் அசோகவனம் அழிக்குதல்
முந்தித்தாய் சீதைசொன்ன அடையாளங்கள்
முறைகொண்டான் அனுமந்தன் நிறை கொண்டங்கே
சிந்தித்தான் ராமலட்சு மணரை எங்கள்
சேனையுட னேகொண்டு வருவேன் வந்தால்
பந்தித்த ராவணனும் படையும் காலன்
படைக்காவார் தாயே நீ பாரென் றோதி
வந்தித்தான் அச்சூடா மணியைக் கொண்டான்
வழிக்கொண்டான் அசோகவனம் அழிக்கின்றா னே
பல்லவி
அடித்தானே அசோகவனம் தன்னை
முடித்தானே அனுமான்
( அடி )
அநுபல்லவி
அடித்தானே அருங்காய் கனிகளை
ஒடித்தானே அரை நொடிக்குள் விசுவரூபம்
பிடித்தானே அந்த ராவணன் கீர்த்தியை
குடித்தானே கையைக் கொட்டி தொடைதட்டிக் கொண்டு ( அடி )
சரணங்கள்
சிலமரங்கள்
கைகளை
சிலமரங்கள் - வேர்பிடுங்கிச்
1. ஆடச்சேயும் அசையச்சேயும்
அறுந்தன
மூடச்சேயும் முறுக்கச்சேயும்
முறிந்தன
சாடச்சேயும் தாவச்சேயும்
தறிந்தன
பாடச்சேயும் பாயச்சேயும்
பறிந்தன
சிலமரங்கள் - கொண்டாட்டம்.
சிலமரங்கள்
வெகுவெகு
கோடானு கோடிகளாக் கொம்பும் கொடியுமாகக்
குறைத்தான்
சிலமரத்தை பெருகிய
நீடாழி முகட்டிலே அணைபோலே கிடக்க
நிறைத்தான்
சிலமரத்தை - தேவர்கள்
வாடாமல் ராட்சதர்கள் பாராமல் வெளியெங்கும்
மறைத்தான்
சிலமரத்தை
வாரிவாரி
ஏடாகூட மாலங்கைத் தெருக்கள் தெருக்கள் எல்லாம்
இறைத்தான்
சிலமரத்தை இப்படி
மேடென்றும் காடென்றும் தெரியாமல் முடிய
விசைகொண் டெறிந்தமரம் திசைதிசை போய்ப்படிய
மாடங்களும் அரக்கர் கூடங்களும் இடிய
மதிள் இலங்கை வீடெல்லாம் சிதறிப் பொடி பொடிய
( அடி )
2. அடிக்கடிமரம் ஒடிக்கும் ஓசையில்
அண்டமும்
வயிறுளைக்க அதுகண்டு
எடுத்தராட்சதப் பெரும்படைக்கடல்
எங்கெங்கும்
ஓடிவளைக்க
சினமுடன்
கடுத்தரதகச துரகபதாதிகளை
காலனும்
கண்டுகளைக்கத் திசைதிசை
பொடுக்கெனப் பள்ளத்திலே பிணம்பிணமா அடித்துப்
திடுக்கெனக் கருந்தூளி செந்தூளியாக
சேடனும்
முடியிளைக்க வந்தளவில்
தடுக்காமல் மரத்தின்மேல் மரங்களா வீட்டெறிந்து
சதைத்தான்
சிலபடையை - மரம்பிடுங்கிப்
புதைத்தான்
சிலபடையைத் தேர்களை
ஒடுக்கி மளமளென் நொறுக்கி நொறுக்கிவிழ
உதைத்தான்
சிலபடையை - மீன்குலம்
வெடுக்கென்வே பிடுங்கி நடுக்கடலிலே தூற்றி
விதைத்தான்
சிலபடையைக் - கையினாலே
அடுத்தவர் ஆயுதத்தைப் பறித்துப் பற்றி பற்றி
அழுகல் வெற்றிலைபோலே குழைய எற்றி எற்றி
வடுப்பட வாலாலே சுருக்கிச்
சுற்றி சுற்றி
வயிற்றுக் குடல்களெல்லாம் வாயில் வரக் குத்தி குத்தி
( அடி )
பறவைகள்
அதுசமயத்துக்கு மரங்கள் வாய்த்ததே
அய்யனுக்குக்
கொண்டாட்டம் -- என் சொல்லப்
பதியில் புகுந்ததே பருந்து காசும்முதல்
ஆட்டபாட்டம் - மண்டைகளைச்
சிதறுத் தேங்காய் போலே உடைத்தும் சாமிக் குண்டோ
சிறிதாகிலும்
வாட்டம்
ராவணன்
ததியில் அனுமானுக்கு உதவியா வளர்த்தானே
தன்னுடைய பெருந் தோட்டம் அங்கங்கே
குதிரைமேல் ஆனைவிழத் தேர்மலைபோல் விழக்
குழிந்ததே பெரும் பள்ளம் பள்ளத்திலே
எதிரிடும் ஆறுபோலே பெருகிக் கரைபுரளி
எடுத்ததே ரத்த வெள்ளம் - 4 சிபோகக்
கதியில்லா நரிகளும் நாயும் பேயும் உண்டு
களித்ததே தங்கள் உள்ளம் - குரங்கென்று
விதிமோசம் ஆகவந்தோம் நமக்கிவன் எமன் என்ன
விட்ட தரக்கர்
கள்ளம் -
கிடைக்காத
புதுவிருந் திதுவென்று மெத்த மெத்த
பூதங்கள் நடமிடப் பிணநாற்றமும்
வேதாள்
மீள
எதிர் எதிர் அரக்கியர் அழுகைக் குரல்கள் நீள
எண்பதினாயிரம் கிங்கரர்களும்
மாள்
சம்புமாலிவதை
கெடி கொண்ட வளமும் அந்தக் கிங்கரர் களும் போய் மாளி
முடிகொண்ட அரக்கன் கோபம் மூண்டிட எழுந்த சேனை
வடிகொண்ட கடல்போல் பட்டமண்கிடந்திடும் இருப்புத்
தடிகொண்ட அனுமான் கையால் சம்புமா லியும்பட்டானே
பல்லவி
அனுமான் னகயால்
மடிந்தானே சம்புமாலி
முடிந்தானே சம்புமாலி
அநுபல்லவி
அடங்காத ரகுநாதன் விடும் குணமுள்ள தூதன்
நெடுங்கிரி எனமண்டு தடங்கையால் அறை கொண்டு
மடங்கிய வாயிலே முடங்கிய குடல் எழ
தொடங்கிய உதிரமும் குடங்குட மாவீழ
( படிநி )
சரணங்கள்
1. நறுக்குவேன் இதுவொரு செருக்களத் தினிலேறி
அரக்கர் படைக்கடலை
இருப்புலக் கையினாலே
2. நீலப் பெரிய கடல்
மேலிட்ட நிருதிரை
சோனலக் சுரும்புகளை
வாலுக்கும் அனுமந்தன்
குரங்கென எதிர்ப்பட்டு
பெருக்கவே கணைதொட்டு
நெருக்கி நெருக்கி யிட்டு
அரைக்கச்கொடுத்து விட்டு ( மாடிந் )
போலத் திரண்டு மொய்த்து
கோலிப்பொருத வைத்து
ஆலைக்கிடுவ தொத்து
காலுக்கும் ஒப்பு வித்து ( மாந் )
ஏதும் விடாமற் கொல்ல
வீதியெங்கெங்கும் செல்ல
5. மோதி வரும்படையை
மாதர் அழுதழுது
பர்திக் ராவணன்
காதினில் இட வல்ல
தூதர் குரங்கிது பொல்
லாதென்றலறிச் சொல்ல ( மடிந் )
பஞ்சசேனாதிபதிகள் அட்சதன் இவர்கள் வதை
பாய்ந்தசம் புமாலியிந்த விதத்திற்பட்டான்
பஞ்சசேனாதியரும் படையும் மூண்டார்
தோய்ந்தவர் தங்களையும் கணத்தினுள்ளே
தோரணகம் பத்திலிருந் தனுமான் கொன்றான்
காய்ந்தசினத் துடன்பன்னீ ராயிரம் பேர்
காதகரும் நாலுலட்சம் காளை மாரும்
ஏய்ந்தபடைகளும் கொண்டக்ஷதனும் தேர்மேல்
ஏறினான் மாருதிமேற் சீறினானே
பல்லவி
வந்தானே ராவண்கா தகன் அனுப்ப அக்ஷதன் மிகுத்திடப்படை
தந்தானே தோரணகாலிமுன் மிகச்சமுத்திரம் வளைத்த தொப்பென
மதகரிகள் பரிகள்
ரதநிரைகள் வரவும்
வருக் வருகஎன
நாகவதூதன்
கண்டானே அண்டகடாகமும் வெடித்திடக் கடுகடுத்தகெர்ச்சனை
கொண்டானே கொண்டிடிபோலவே குதித்தரக்கரை இருப்புலக்சையில்
அடிகள் முடிகள் பல கொடிகள் தடிகள் பொடி
பொடிகள்பட விசிறி வாலதை வீசி
வளைத்தோடியும் வாரி அடித்தும் தெரித்தும் விக்கிட் முறித்தும் வீரர்கள்
தலைக்கேதலை மோதி நெரித்தும் சரித்தும் டிஅப்படை தொடுக்கும் வாளிக
தவிடு பொடிகள்பட உதறி உதறி எறி
சருகும் உமியுமென
ஊதிய போது
காலால் உதைபட்ட பேர் சிலர் கடிக்குள்ளேசிலர் பிடிக்குள்ளே சிலர்
தோள
ளால் அரைபட்டபேர்சிலர் தொடைக்குள்ளேசிலர் இடைக்குள்ளேசிலர்
கரம் அற்ற பேர்களும் சிரம் அற்ற பேர்களும்
கதியற்ற பேர்சளும் ஆகியே விழ
அறைவன்ஓர் அறைக்குளே பல கோடிவீரர்கள் வீரர்மேல்விழ
எறிவான் ஓர் எறிக்குளேபல கோடிதேருதேரின் வீரர்மேல்விழ
அதிரதர் மகரதர் சமரதர் சிதறிட
அதலகுதல மொடு
சேனைகள் மாளத்
தெரிந்தானே அட்சதன்ஊதிய செம்புபோலவே ரண்டுகண்களும்
எரிந்தானே அக்கணமே செல அம்புமாரி பிரசண்டமாகவே
தெரித்தனுமனுடல் இருக்கும் மயிர் முனை
முறுக்கில் மறையவும் அந்தமாருதி
தலைமேலும் தோளிலும் மார்பிலும் முகத்திலும் கொலுவிருக்கும் தோரண
நிலைமேலும் தாளிலும் வாளிகள் தொடுக்கவும் குலைகுலைந்து ராகவ
சரணம் அதைமனதில் ஒருமையொடுகருதி
விறுவிறென விசையில்
ஓடிவந்தெதிர்
அடுத்தானே அட்சதன் ஏறிய ஆயிரம்பரிரதத்தை ஓர்கையில்
எடுத்தானே விட்டெறி போதினிலே இறங்கிமுன் எதிர்க்கவேபிறகு
அவனை இவன் அறைய வனை அவன் அறைய
அவனி டுகவசமும்
வில்லும் வாளியும்
ஒடித்தானே பல்லொடு குண்டலம் உதிர்ந்திடச் செவிகலங்க ஓரடி
அடித்தானே கையினில் அங்கவன் நெடுங்கழுத்தினை மடங்க மாருதி
உதறவருபடைகள் கதற நிருதன் முது
குரைபட உரைபட ராசவீதியில்
நிலத்தோடே தேய அரைத்துக் கரைக்க அட்சதன் மாயவே சிலர்
தலத்தோடே ரூபம் மறைத்துப் பசுக்களாம் என மேய்குவார் சிலர்
நிணத்திலே சிலர் பிணத்திலே சிலர்
நெளித்தபேர்சிலர்
ஒளித்த பேர்சிலர்
வண்டாகி மறைந்தபேர் சிலர் மான்களென வெளிப்பாய்ந்த பேர்சிலர்
மண்டோதரி முன்பினிலே அடி சாய்ந்தமர மென வீழ்ந்த பேர் சிலர்
மலைந்த போரினில் ஒழிந்த தூதுவர்
இலங்கை நாதன் முன்
வீழ்ந்த பேர் சிலர்
அனுமாரை இந்திரசித்து எதிர்த்தல்
வீரராம் அரக்கரும் அட்சதனும் இந்த
விதம் அனுமான் கையாலே அதமாய்ப் போனார்
ஓரமாத் தூதரும் ராவணன் முன்ஓடி
உன் மகனும் நமனுலகம் உற்றான் என்றார்
நாரடா எனக் குரங்கைக் கிழிப்பேன் என்று
நாற்பது வெள்ளம் சேனை யுடனே வந்தான்
ஆரடா குரங்கேநீ ஆரடா என்
றதிர் கண்டான் இந்திரசித் தெதிர் கொண்டானே
அனுமார் இந்திரசித்தோடு பொருதல்
எதிர்கொண்ட இந்திர சித்தோ டெழும்பின அரக்கர் சேனை
கதி கொண்ட உகாந்தநாளில் கடல் எனவளைப்பக்கண்டான்
மதிகொண்ட அனுமான் கையில் வல்லிருப் புலக்கை கொண்டு
குதி கொண்டான் எமனைப்போலே கூடினான் சாடினானே
பல்லவி
அனுமந்தன் அடித்தானே - இந்திரசித்தன்
மனம் நொந்து துடித்தானே
( அனு )
அநு பல்லவி
அனுமந்தன் அடித்தீர்னே முனை கொண்டு பிடித்தானே
அரக்கர் படையைக் கண்டு இருப்புலக் எகயைக் கொண்டு ( அனு )
சரணங்கள்
1. கட்டும் என்ற பேரையும் கிட்டுமென்ற பேரையும்
கறுவிவந் தோரையும்
மொறுவிவந் தோரையும்
கைப்படை போய்மாள்
உதைத்தான் சிலபேர்களைக்
குப்பால் குப்பலாக
வதைத்தான் ரைநிரையா
கரிகள் மேற் பரிகளும் பரிகள் மேற் கரிகளும்
கால்ள் மேல் தேராளும் தேராள்மேல் காலாளும்
கண்பொறி கலங்க
இறைத்தான் - சிலபேர்களை
மண்களில் அழுந்த
மறைத்தான் கடல் கடந்த
காலால் அனேகம்பேரை வாலால் அனேகம்பேரை
கையால் சிலபேர்களை
மெய்யால் சிலபேர்களை
கசக்கி மூளைகள்
பொழிந்தான் - கரும்பு போலே
நசுக்கிச் சாறுகள்
பிழிந்தான் ரக்கியர்க்கு
கணவனைக் குமரனைத் துணைவனைத் தெரியாமல்
கதையில் அடித்துடலைச் சிதையப் பொடித்து பெருங்
சாற்றில் பஞ்சென
ஊதினான் - சிலரைத் தேங்காய்க்
சீற்றுக் கீற்றாக
மோதினான் எண்ணிறந்தோர்கள்
கரம் அற்றும் சிரம் அற்றும் உரம் அற்றும் வரும்ரத்தம்
கண்டிட மெல்லாம் புரள மண்டை மண்டை ஆய்உருள் ( அனு )
2. முட்டி வரும் தேரையும் கிட்டிவரும் தேரையும்
முடுகிவரும் தேரையும் கடுகிவரும் தேரையும்
முன்னசயால் வாரித் தூக்கினான் தறையில் மோதிச்
செங்கற் பொடிபோல்
ஆக்கினான்
ஆனைப் படையை
மொத்தியும் குத்தியும் வாலால் சுற்றியும் எற்றியும் வாரி
மூட்டுப் பூச்சிபோஸ் மடித்துக் கூட்டங் கூட்டமா அடித்து
முட்டு முட்டா
அடுக்கினான் - கோட்டையும் லங்னகப்
பட்டணமும்
நடுக்கினான் - அந்நகர்வீதி
முகப்பும் கோபுரங்களும் வகுப்பும் தாவரங்களும்
முத்துமாட்டங்களும் தேய்ந்து சித்திர கூடங்களும் சாய்ந்து
முடிய வீசி
நொறுக்கினான் - கோடைக் காலத்தில்
இடிபோலவே
உருக்கினான் அடித்தடித்து
மூலையும் குதிரைமலர்ச் சோலையும் குதிரை நடைச்
சானலயும் குதிரையலை வேலையும் குதிரையாக
முறை முறையாச்சாய்து விட்டான் - காலால் எற்றித்
தரையிலே தேய்த்து விட்டான் அரக்கர்திலை
மூளையும் சனதயும் வண்ணக் காளியும் கூளியும் உண்ண
முழுதும் பேய்க்குலம் ஆ . கழுகும் காக்கையும் பாட
( அனு )
அம்ரவே
3. அங்குசமும் தோட்டியும் கங்கிலியும் ஈட்டியும்
அஸ்திரமும்சூலாயுதமும் ஸ்திரமும் வேலாயுதமும்
அரக்கர் விடுத்து
மொய்க்கவே அதெல்லாம் அய்யன்
பெருத்த புயத்தில்
தைக்கவே
தைத்தனவ எல்லாம்
அழுந்தத் தோரணம் மேலே குழந்தைச்
சூரியன் போலே
அட்டகாச மதுபண்ணி இஷ்டராகவனை எண்ணி
மதித்தானே பட்டவை எல்லாம்
உமிபோலே
உதிர்த்தானே ராவணன் மகன்
அடுத்தபடைகளிலும் விடுத்தபடைகளிலும்
தொடுத்தபடைகளிலும் பிடித்தவன்மேல்பட
அள்ளியே
தெறித்தானே சிலபடையைச்
சுள்ளி போல்
முறித்தானே அரக்கியர்கள்
அழுவாரும் தெய்வத்தைத் தொழுவாரும் வீடுவிட்
டெழுவாரும் அரக்கன் முன் முவாரும் தலைவிரித்
தலங்கோலம்
ஆனாரே
எல்லாரும் பேய்க்
குலம் போலே
போனாரே - இந்தப்படியா
அடிப்பாரும் குரங்கைக் கட்டிப் பிடிப்போம் என்ன வேகிட்டி
ஆர்ப்பரவத்துடள் வந்த நாற்பது வெள்ளமும் சிந்த ( அனு )
அனுமார் பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்டல்
அனுமான் பின்னையும் இந்திர சித்தம் பெல்லாம்
அடித்து வில்லை ஒடித்துச்சா ரதியை மாட்டி
மனமாம் தேரையும் வீசி மரத்தால் மோதி
மண்டைகலங் கிடஅடித்தான் அரக்கன் அப்பால்
சனமான் பிரம்மபா சத்தை வீசிக்
கட்டினான் ஐம்பதினாயிரம்பி சாசர்
இனமாக இழுக்க இலங்கையில் உள்ளோர்கண்
டேசுவார் மாருதியைப் பேசுவாரே
கண்னிகள்
1. வந்தது குரங்கு வந்ததிந்திரசித்தன்
வலையில் மாட்டி என்பார்
சிலபேர்
இந்த ஊருக் கெமனாகக் கோலங் கொண்
டிருந்த குரங்கிது என்பார்
சிலபேர்
2. வினைக்குரங்கு வந்ததெனச் சொல்லி ராவணன்கை
வெகுமானம் கொள்வார்
சிலபேர்
தனக்கென்றிருக்கை யாலே சமயத்துக் காய்ச்சுதிந்த
சதுமுகாஸ் திரம் என்பார்
சிலபேர்
3. அந்தச் சிவனே சீதைக்காக இலங்கை தன்னை
அழிக்கவந்தான் என்பார்
சிலபேர்
தந்தையை அண்ணனை மகனைக் கொன்ற பழி
தந்து போடா என்பார்
சிலபேர்
4 . மணவாளனைக் கொன்ற இவனைக் கொன்றால் ஒழிய
வர்ங்கோம் மங்கிலியம் என்பார் சிலபேர்
கணையாம் பாசத்தால் முகத்தில் வாட்டமில்லை
சபட்டுக் குரங்கி தென்பார்
சிலபேர்
5. அகப்பட்ட குரங்கிதை விட்டால் இலங்னக நகர்க்
சனர்த்த காலம் என்பார்
சிலபேர்
நகத்தாற் கிள்ளுவதைக் கோடாலியால் வெட்ட
நமக்கு முடியுமோர் என்பார் சிலபேர்
6. இங்கே இர்திரசித்துப் பிடியா விட்டால் இன்னம்
என்ன செய்யுமோ என்பார் சிலபேர்
தங்னக மூக்கும் போன தகப்பனுக்கு மூக்கு
தந்தானே மகன் என்பார்
சிலபேர்
இராவணன் கொலுவில் வீற்றிருத்தல்
முனைசேர் அரக்கர் இவ்வாறு முறையிட்டலறச் சேனைசுற்றி
இனமாய் வளைக்க மலைபோலே இலங்கை அழித்த குரங்கிதென்றே
அனுமான் தனைக்கொண்டிந்திர சித்தன் அங்கேவிட எங்கேயென்று
புனைமா முடிராவணன் கண்டு பொரிந்தான் கொலுவில் இருந்தானே
பல்லவி
வீரசூர ராவணன் கொலுவீற்றிருந்தானே
( வீர )
அநு பல்லவி
பேராத ரத்தின சிங்கா சனம் மேலே சொர்ண
பீடத்தில் மைந்நாக மலைபோலே துன்ன
என்ன
சாருதயம் சேர்பத்து சூரியர்கள்
தலைபத்திலும் பத்து மகுடங்கள்
மின்ன
( வீர )
சரணங்கள்
1 . லாவ
தாவ
நடமாடும் ரம்பையும் ஊர்வசியும் அபி
நயங்காட்டி மயில்போலு
கடல்போலே மேளதாளங்கள் அண்ட
கடாகம் மட்டும் சென்று
அடடா இந்திராவாடா சந்திரா வாடா என்
றவசரக் காரர்கள்
வடவாக்கினியான விரகாக்கினிதீர
வந்து மேகம் பனிநீர்
கூவ
தூவ
சுடர்மணி மண்டபம் அண்டகூடமதைத் தொடவே
தொடைநடுங்கி அமரரெல்லாம் நெடுமூச்சுவிடவே
முடிகளொடு முடிமோதி அடியிணை புண்படவே
மூவுலகத் துள்ளோரும் சேவடிக்கும் பிடவே
( வீர )
2. எப்போதென்று முகம் திரும்பிய வர்க்கெல்லாம்
ரிஷிகள் வந்து தலை
நீட்ட
தப்பா எட்டானைக் கொம்பொடித்தது பதினாறு
சந்திரன் போல் மார்பிலே
காட்ட
வைப்பாகிய நாகராசாக்கள் மாணிக்க
மாலை கொண்டடிமேலே
வெப்பான துர்முகன் முதலான மந்திரிகள்
விநய யோசனைகள்பா
சூட்ட
ராட்ட
முப்பத்து முக்கோடி தேவரும் கொண்
முதலான தும்புரு நாரதர்கீதம்
பாட
கற்பகம் மென்மலர்மாரி குப்பைகள் போலே
போட
கட்டியம் சொல்ஓசை திசை எட்டிலும் மேலே ஓட
( வீர )
கூச
3. இனமாம் மேகங்கள் புகைபோல் ஒதுங்கிக்கொண்
டிரைச்சல் இடாமலே
புனைமாமுக லட்சுமிகரந் துடைப்பார் போலப்
பூவையர் கவரிகள்
வீச
எனைநாடினான் எனைப்பார்த்தான் வார்த்தை சொன்னான்
என்றியக்கர் சந்தோஷம்
பேச
தினம் ஊழியத்துக்கு வரும் தெய்வப் பெண்களை
சிறுக்கியர் போல் அரக்கியர்கள்
ஏச
முனை பெரும் அட்சதன் வீழ்ந்த மனவேனத
கூடி
மூத்தமகன் செயித்துவந்த கீர்த்தியைக் கொண்டாடி
அனுமான் வருகிற வார்த்தை தனையே
நாடி .
அடிக்கடி சீதையை எண்ணி துடித்துடன் மனம்
வாடி
( வீரர்
அனுமானை ராவணன் வினாவுதல்
இருந்த ரா வணன் முன்பாக இருந்தமா ருதியை நோக்கி
பெருங் குரங்குருவாய் வந்தாய் பிரமன்மால் சிவன் விட்டாரோ
வருந்தி வானவர் விட்டாரோ மனத்துள கபட்டை எல்லாம்
தெரிந்திட விட்டாஎன்று சீறுவான் கூறுவானே
பல்லவி
இங்கே வந்தநீ
ஆரடா குரங்கே
ஆரடா குரங்கே
( ஆர )
அநுபல்லவி
ஆரடா குரங்கே அறிவாயோ லங்கையை
வாரசிங் காசனம்போல் - வால் இட் டென்னிலும்
மேல் இட்டிருக்கிறாய்
( ஆர )
சரணங்கள்
1. அச்சம் இல்லாமல் அடங்கிச் சொல்லாமல்
நிச்சய வனகிங்கிரர் நிறுத்தனில்லாமல்
நிசாசரர்களும்
அசோக வனமும்
திசா திசையில் விழ வீசிஎறிந்தநீ
( ஆர )
2 கம்பத்தின் மேலே
காலனைப் போலே
செம்பு மாலியையும் சேனாதிபரையும் கொன்றொருக்காலே
சிட்சைசெய் வேனென்று கட்சியுடனே வந்த
அட்சதனைக் கூட பட்சணம் செய்தநீ
( ஆர )
3. நிந்தனை சீச்சி
நீயொரு பூச்சி
இந்திரசித்தன் உன்னோ டெதிர்த்ததென்ன கண்காட்சி
இடிக்கவோ கட்டி அடிக்கவோ
பல்லாற்
கடிக்கவோ ரத்தம் குடிக்கவோ நீ
( ஆர )
4. மறைந் தொருகர்மம் வகுத்தஉன் மர்மம்
அறிந்தல்லோ கொல்லவேணும் அதற்குள் கொல்லல் தர்மம்
அல்லடா நெஞ்சு
கல்லடா நிசம்
சொல்லடா பொட்டெனச் சொல்லடாநீ
( ஆர )
அனுமார் இராவணனுக்கு விடையும் மதியும் கூறல்
அடல் இரா வணன் இந்த வார்த்தை சொல்ல
அரன் அயன்மால் விடுக்க வந்தேன் அல்லகண்டாய்
மடமயில் சீதையைத் தேடி வந்தேன் கண்டாய்
வந்திடத்தில் உனைக்காண வேண்டி உன்ஊர்
இடமுடைய அசோகவனம் அழித்தேன் கண்டாய்
இராகவன் தூதுவன் நானே நீபிழைக்கக்
கெடல்அரிய புத்திகேள் கண்டாய் என்றே
கிளம்புவான் அனுமன் எதிர் விளம்புவானே
பல்லவி
ராமசாமி தூதன் நான்
அடா - அட்டராவணா
அனு மானடா
( ராம )
நானடா என்பேர்
அபயல்லம்
மாமலர் தலைவாசனும் கயிலாசனும் ரிஷிகேசனும்
மறைந்துநின்று தந்தநான் அல்லடா
புறம்பே நின்று வந்த நான் அல்லடா
( ராம )
சரணங்கள்
1. கொடுத்த வரமும் தனமும் கனகமும் வீணிலே ஏன் போக்கிறாய்
குடிக்கும் பாலை ஐயையோ கமர் வெடிக்குளே ஏன் வார்க்கிறாய்
துடுக்குடன் பரஸ்திரி செனங்களைத் தொடர்ந்தேன்பழி ஏற்கிறாய்
தூக்கி ஏறவிட் டேணியை வாங்கும் தூர்த்தர் வார்த்தையைக்
கேட்கிறாய்
மீதே
போதே
சீதை
( ராம )
தடைபடாமல்என் அய்யன்கால்
சரண்என்றால் பிழைப்பாயே இப்
அடக்கஉன் தரம் அல்லடா
அவன் இவன்விட வந்தான் என்
னாதே
2. காலமும் பலமும் தெரியாமல் குதிக்கிறாய் என்ன
காமத்தாலே தர்மபுத்தியை கடக்கிறாய் இது உ
சாலமோ கேடு காலமோ அடாஉனக்கும் தெய்வச
தங்கை மூக்கறுப் புண்டதல்லவோ சண்டாளா இது
மாயமோ
பாயமோ
காயமோ
ஞாயமோ
வாலியும் போனான் உன்னைச் சிறை வைத்த
வாலும் போய்விட்டது அஞ்சாதே மெத்த
சீலராகவன் அம்பால் அவன்
சேதியை நீயறி யாயோடா
செத்த
பித்த
( ராம )
3. கீதம் தெரிந்தும் வேதம் தெரிந்தும் பாதகங்களைச் சூழ்கிறாய்
கெடுமதி கண்ணுக்குத் தோன்றாமல் படுநரகத்தில் மூழ்கிறாய்
மாதர் மோகத்திலே துவண்டு தாழாதவரைத் தாழ்கிறாய்
மயக்கமோ கைக்குள் விளக்கைப் பிடித்துக்கிணற்றிலே ஏன் வீழ்கிறாய்
ஆதிமூர்த்திதானே
மாகவந்தான் அரக்
சீதையை விட்டுப்பிழை
சேதியைச் சொன்னேன் வீர
உத்தண்ட
கரைமண்ட
அடாகண்ட
கோதண்ட
( ராம )
இதுவுமது
பல்லவி
பிழைக்க என்றால் வாடா - நான் சொன்ன
பேச்சைக் கேளடா மூடா
( பிழை )
அநுபல்லவி
பழிக்கெல்லாம் நீதானே
ஆளா
படைத்துக் கொண்டாயோ சண் -
டாளா
( பிழை )
சரணங்கள்
1. வேதன் முதல் விண்ணோர்கள்
விஷ்ணுவே புவனமெல்
கோதண்ட ராமன் எனும்
குதித்தானே சரத்தால் உன்
குறைநீங்க -- ஆதி
லாம் தாங்க
பேர்ஓங்க - வந்து
உயிர்வாங்க
ஆதவன் முன்இருள்
வனுக்குக் கொம்புத்தேன்
சீதையாம் தெய்வம் உனக்
திருட்டுப் புத்தி தலைக்
கிட்டுமோ முட
எட்டுமோ அந்த
கொட்டுமோ இந்தத்
கட்டுமோ தப்பி ( பிழை )
2. வினை செய்வதற்கும் செய்யும்
விடுங்கணை ஒன்றுனக்குப்
இனிதா நான் சொல்லுவதெல்
இணக்கம் இல்லாத உன்
வகைஏதோ ராமன்
போதாதோ
மிக
லாம் தீதோ - சற்றும்
னுடன் வாதோ
போய் அடா
பாவி
வாய் அடா
அந்த
தாய் அடா
தீயடா
அவள்
தப்பி
( பிழை )
உனது தங்கை கொங்கை
உனக்கி தன் மேலென்ன
சனகி உலகெல்லாம் தார்
னே உன்குலம்சுடும்
3. புவிமேல் உன்னை வென்ற
புடைத்தானே பரசுராமன்
தவனையும் வென்றரகு
அவளை விட்டால் நீலங்கைக்
தவறில்லாத வரத்தோ
தந்தவில்லுக்குன் சேனை
எவர்களுக்கும் ஏழை
எனக்கு மிஞ்சும் வானரர்
கார்த்தவீரன் விழப்
எனும்சூரன்
எதிர்த்
குல தீரன்
தேவி
கதிகாரன்
டகஸ்தியமுனி முன்னம்
வெய்யிற்பனி அங்கே
ஆனதனி
நான்
அனேகர் இனி
தப்பி பிழை )
அனுமானரக் கொல்லாமல் ராவணனை விபீஷணர் விலக்குதல்
போதரவா அனுமனிந்த புத்தி சொல்லப்
பொங்கிய வாளரக்கண்விழிப் பொறிகள் சிந்தி
நீதிவசனம் குரங்கே நீயோ சொல்வாய்
நேத்தியிது நேத்தியிது என்று சீறிப்
பாதகரால் இவனைவெட்டும் என்றான் ஆங்கே
பணிந்துவிபீஷணன் அண்ணேன் பாவம் கண்டாய்
தூதரைக்கொல் லுவதென்று ஞாயம் சொல்லித்
துலக்குவான் ராவணனை விலக்குவானே
பல்லவி
இவனைக் கொல்லுவேன் என்று - நீ எழுந்தது மெத்த
இகழ்ச்சிடா அண்ணேன்
( இவ )
அநுபல்லவி
( இவ )
1 -போதோ
தவந்தானே மிகுந்த இலங்கேசனே அந்த
சாதி மனிதன் சொந்தத் தூதுவன் என்றுவந்த
துசங்கட்டும் கீர்த்திக்கு
அழிவுவந்ததிப்
தூதனைக் கொல்வேனென்று துடிக்கிறாய் என்ன
சூதோ
கொசுவைப் பொருட்டாஎண்ணி கருடன் எதிர்ப்ப
குரங்கை நீ எதிரிட்டால் புறம்பெங்கும் நகை யாதோ
தேதோ
( இவ )
2 -தாமே
அந்நாள் நம் தங்கையைக் கொல்லாமல் நரர்
அவர்பலம் வெளியாக அனுப்பின தறிந்
தோமே
இந்நாள் நமதுபலம் வெளியாம் என்றெண்ணி
இந்தக் குரங்கைக் கொன்றால் எங்கெங்கும் வசை ஆக
நாமே
ஆமே
( இவ )
3 -பொறுக்காக் கோபம் வந்தாலும் குரங்கை கொல்வதோ சாத்தி
புலிபசித் தாலும் என்ன புல்லைத்தின்னுமோ
நத்தி
அறிக்கை செய்தேன் இனி நீயே அறிவாய்
புத்தி
ஆக்கினை செய்தப்பாலிதை அகற்றுவதுவே வெற்றி
( இவ )
அனுமார் வாலில் தீசுடாமல் அக்கினியை சீதை வேண்டல்
தம்பிவி பீஷணன் சொல ராவணனும் கேட்டான்
தையலார் தாலியிலே கயிறில் லாமல்
வம்புபடு கயிறெல்லாம் முறுக்கிச் சுற்றி
வாலிலே கிழிசுற்றித் தீயை இட்டான்
முன்பிருநூ றாயிரம்பேர் இழுத்தோர் வீழ
முனைத் தெழுந்த அனுமந்தன் தனைத்தொடாதே
பொன்பொறிபோ லேயிருப்பாய் நெருப்பே என்று
போற்றுவாள் சீதை சொல்லி ஆற்றுவாளே
பல்லவி
அக்கினி பகவானே - வருத்தாதே
அனுமானை நீதானே
( அக்கி )
அநு பல்லவி
திக்கு வேறில்லை நீயே திக்கு , புடவை சோர்ந்தால்
கைக்குண்டோ உபசாரம் காக்க உனது பாரம்
( அக்கி )
சரணங்கள்
1. இத்திசைவந்தானே என் பிராணேசன்கை முத்திரை தந்தானே
சத்தியமாகச் சர்வ
சாட்சிநீ தானே யானால்
பத்தினி மார்க்குள் மேலாம் பத்தினிநானே ஆனால்
( அக்கி )
2. விவரித்துள்ளது சொல்லவோ னதுமித்திரன் தவபுத்திரன்
இவனல்லவோ
கவலை அரக்கர் இரு கண்ணுக்கெல்லாம் நெருப்பாய்
இவனுடைய வாலுக்குமாத்திரம் மலர்போல் இருப்பாய் ( அக்கி )
3. தன்மத்தைக் குறியாயோ ராமதூதன் என்றின்னமும் அறியாயோ
முன்னாள் என்சாமிகையை உன்னால் அல்லவோ தொட்டேன்
இந்நாளும் நான் அவர்கை இணங்க வைப்பாய் கும்பிட்டேன் ( அக்கி )
அனுமார் இலங்கையைக் கொளுத்துதல்
கோடையிலே கசங்குகிற மலர்போற் சீதை
குழைந்து குழைந்திவ்வாறு புலம்பி ஏங்கி
வாடயிலே அக்கினியும் பயந்து செம்பொன்
மலர் போல வேயிருந்தான் நாலுதிக்கும்
ஆடரங்கும் சாலையும் மூலைகளும் தோப்பும்
அரசிருப்பும் திண்ணைகளும் படுக்கை வீடும்
மாடமும் கூடமும் இலங்கை எங்கும் வாலை
வளர்த்தினான் அனுமந்தன் கொளுத்தினானே
பல்லவி
பற்றிக் கொண்டது
சுற்றிக்கொண்டது
அனுமான் இட்ட அனல்
லங்கையை
( பற்றி )
வெற்றிப்பெண் சானகி உறைமரம் ஒன்றும்
விட்டுநீங்கித் திசை எட்டும் ஓங்கி முட்டி
( பற்றி )
சரணங்கள்
நாறவே
1. எடுத்தபொற்கோ
புரங்களும் மலர்
படுத்த பூஞ்சப்
பரங்களும் எரி
அடுக்களையும் தா
வரங்களும் சுவர்
கொடுத்த மணியுத்
தரங்களும்
உன்னதஉப்
பரிகையும்
- தங்கத்தாலே
மின்னிய கொடி
வகையும்
ஆனை சேனை
மன்னும் விமானத்
தொகையும் - நவரத்தினம்
பொன்னறைகளும்
குகையும் - திகுதிகென
கொண்டல் கொண்டலாப் புகை ஏறவே - அத்தை
கண்டவர் சீவன்வீட்டு
மாறவே அவர்
பெண்டுபிள்ளைகள் பழி
கூறவே பெண்கள்
கொண்டைகள் எல்லாம்சுறு
உருவங்கள் தாறுமா றாப் பருவங்கள் வேறுவேறா
அருசெங்கும் கீறுகீறாத் தெருவெங்கும் நீறுநீறாய்
( பற்றி )
2. மூதெயில் வளைந்து
சொலிக்கவே படும்
வாதை கண்டமரர்
சலிக்கவே - சொல்லும்
வேதசாஸ்திரங்கள்
கெலிக்கவே - எங்கள்
சீதை சொன்னபடி
பலிக்கவே
சாகரங்களும்
குறைய புகைப்படலம்
ஆகாயம் மட்டும்
நிறைய்
பாதாளத்தில்
நாகரும் கூட
இறைய ராவணனும்
மேகதலத்தில்
மறைய லங்கையிலே
கிணற்று நீரும் சுண்டி
வற்றவே
செத்த
பிணத்தின் வெடிநாற்றங்கள் சுற்றவே வாலை
வணங்கி எழுந்தெழுந்து
மெத்தவே - செந்
தணல் பொறியாக் அய்யன் ஏற்றவே
புரவி எல்லாம் உவிய நிருதாரல்லாம் அவிய
எரிஎரியாக் கவிய கரிகரியாக் குவிய
( பர் )
புகைச்
3. கைக்குழந்தைசளைப்
போடுவார் -- பெற்ற
மக்களை விட்டுவிட்
டோடுவார் -
சிக்கினிலே தள்ள
மாடுவார்
மிக்க அரக்கியர்
வாடுவார்
மலர்ச்சோலை பொரிந்த
தென்பார்
ராவணின்
கொலுக் கூடம் எரிந்த
தென்பார் வீட்டின் மேல்வீடா
நிலத்தோடே சரிந்த
தென்பார் வெட்டவெளியாத்
தலைக்கடை தெரிந்த
தென்பார் தவி தவித்து
வேலைக்குள் ஓடி.விழச்
சொல்லுவர் பெண்கள்
மூலைக்கு மூலைவாயை
மெல்லுவார்
அனல்
மேலிட்டி டாமற்குழி
கெல்லுவார்
அனுமான்
வாலுக்குத் தெண்டனென்று சொல்லுவார்
மாடகூடம் அனேக கோடி கோடி நீறாக
மேடுமேடாகிப் போகக் காடுகாடாகி வேக
(பற்றி )
வானர வீரர்கள் திருப்புகாலையில் மதுவனம் அழித்தல்
அக்கினினிய இலங்கையில் இவ் வாறிட்டுச் சீதைநிலை
அறிந்து போற்றி
பைக்கட்டல், வாய் எடமநாசம் தனைக்கண்டான் சேனைகளை
வணங்கிக் கொண்டான்
புக்கது சொல் அனுடானும் அங்கத்தும் சேனைகளும்
போய்ச் சுக்கிரீவன்
தக்கமது : வனங்கண்டு நிலைப்பட்டார் மதுவை உண்ணத்
தலைப்பட் டாரே
பல்லவி
வான வீரரெல்லாம் பாய்ந்தாரே
- மது
வனமெல்லாம் கொள்ளையிட்டு மேய்ந்தாரே
( வான )
அநுபல்லவி
வர்னும் சூரியபக
தானத்தினில் மிகுந்த
வானும் தெரியா அந்த
தேனும் கனியும் சிந்த
( வான )
கனியும்
கனியும்
தேன்
கனியும் - சுவை
கனியும்
கையால்
பறிக்கத் - திசைதிசை
தெறிக்க வழிமேல்
வந்தடைக்கவே
மும் புடைக்கவே
( வானர )
1. திரள்தான மாங்
சினிப்ழுத்த தேங்
உருகு கதலிப் பூங்
ஒழிபடா விளாங்
திருகித் திருகிப்
பெருகிப் பெருகித்
வரும் இளைப்பினால்
இருவிலாப் புற
2. வாயிலே அளிப்பார்
வாயிலே தெளிப்பார்
வாயிலே விளிப்பார்
வாயிலே துளிப்பார்
ஈக்கள் மொய்த்தாற்
இரைச்ச லிட்டொருக்
வாயிலே மதுவை வழியக்
ஒயநின்றவரை உறுமி
3. இந்திரன் வாலிக்கிட்ட
இதிலே சுக்கிரீவர்க்கு
வந்து புகுந்து கட்டல்
மதுவை எல்லாம் குடித்
அந்தவேளை ததிமுகன்
அடித்தானே அங்கதன்
எந்த ஆணை ஆக்கினைக்கும்
தந்தம் இச்சையில் தடை
சிலபேர்
தேன்
சிலபேர்
அலபேர் கடை
சிலபேர்
போலே மொய்த்து
காலே - பெரு
கு தட்டிக் கொண்டு
அதட்டிக் கொண்டு
( வானர
என்று
தோட்டம் - இப்ப
நாட்டம்
ஒட்டம்
- போலும்
தாட்டம் செய்ய
எதிர்க்க அவனை
பதைக்க - சொல்லும்
நில்லாமலே
இல்லாமலே
( வா: )
சீனதனயத் தேடப் போனவர்களைக் குறித்து ஸ்ரீராமர் இரங்கல்
இப்புறம் ராம சாமி
தெற்கினில் போன பேரைர்
எப்படிக் காணு
வேனே
எனக்குறை கூறு வானே
கண்ணிகள்
1. திக்குத் திக்காச் சீதையைத் தேடி. நெர்ந்தாரோ * எந்த
திக்குக்களிலும் காணாமல் எங்கே வாடி . வந்தாரோ
2. தெற்குத் திசையில் போனோரைக் காணேன் கண்ணாலே
அடா
சுக்கிரீவர்நான் ஏதுக்கின்னம் இருந்தேன் மண்மேலே
3. கன்னி சீதை இறந்தாளே என்னப்
என்ன சொல்வோம் என்றுசீவன் தன்னை
பட்டாரோ இத்தை
விட்டாரோ
ஆனோரோ
- உன் தன்
போனாரோ
4. நாள் கணக்கை எண்ணி எண்ணி ஏக்கம்
ஆக்கினைக்குப் பயந்துதல * நோக்கிப்
J. மற்றொரு லோகத்தைச் சுற்றித் தேடு
வைத்த அரக்கரோ டேபோர்
கின்றாரோ - சிறையில்
கின்றாரோ
செல்வாரோ இங்கே
சொல்வாரோ
6. தென்முமே முரமாக இன்னம்
என் முகத்தில் சீதை சேதி என்ன
7. தன்வரவு பார்க்கும் : என்னைத் தளரப்
என் வயிற்றில் என்றுவந்து பாலை
8. கவனல ஏன் அனுமனிருக்கக் காரியம்
அவனா லாகாத காரியம்பின் ஆரால்
பட்ர்ப்பானே
வார்ப்பானோ
அனுமான்
போகுமோ
அய்யோ
ஆகுமோ
ஸ்ரீராமருக்கு அனுமார் சீதையின் இருப்புக் கூறல்
வண்டே போல் மனஞ்சுழல இந்த வண்ணம்
மடலேபோல் சுக்கிரீவ னுடனே சொல்லிக்
கொண்டே தென் முகத்தினிலே முகத்தை வைத்துக்
குறித்து ராகவன் இருந்த சபைக்கு முன்னே
பண்டே அங்கதன் முதற் சேனைகள்பின் செல்லப்
பறந்து வந்து கரங் குவித்துப் பணிந்து கண்டேன்
கண்டேன் சீதையை என்று கூவிக் கூவிக்
கதிகொண்டான் அனுமன் வந்து
அனுமன்வந்து குதி கொண்டானே
( கண் )
( கண் )
கண்டேன் கண்டேன் சீதையைக்
கண்டேன் ராகவா
அனுபல்லவி
அண்டருங் காணாத இலங்காபுரத்திலே
அரவிந்த வேதாவைத் தரவந்த மாதாவை
சரணங்கள்
1. காவி விழிகளில் உன்
உருவெளி மின்னக்
கனிவாய் தனிலேஉன் திருநாமமே பன்ன
ஆவித்துணையைப்
பிரிந்த மட அன்னம்
ஆனாள்நான்
சொல்லுவ தென்ன
பூவைத் திரிசடை
தித்தம்ரித்தம் சொன்ன
புத்திவழியே தன்
புத்திநினல மன்னப்
பாவி அரக்கியர்
காவல் சிறைதுன்னப்
பஞ்சு படிந்தப
ழஞ்சித்திரம் என்ன
2. பனிக்கால வாரிசம்
போல நிறங்கூசிப்
பகல் ஒரு யுகமாகக்
கழித்தாளே பிரயாசி
நினைத் தங்கே ராவணன்
அந்நான் வரச் சீசி
நில்லடா சன்
டாளா என்றேசி
தனித்துத்தன் உயிர் தன்னைத் தான்விட மகராசி
சாரும்பொழுது காணும் சமய மிதுவே வாசி
( கண் ,
னித்தா மதம் செய்யல்
ஆகாதென்றிடர் வீசி
ராமஎன்றெதிர் பேசி
ராமராம ராமா
( கண் )
3. அடல்சேரும் வாலியை
வானுலகிலே கூட்டி
அவனியைச் சுக்கிரீவன்
ஆளமுடி சூட்டி
உடனே நீ தூதுபோ
என்றசொல் அமுதூட்டி
உன் எழில்
பாராட்டி
விடவந்த அனுமந்தன்
நான் என்று சீராட்டி
விவரம் சொல்ல உயிர்கொண் டிருக்கிறாள் சீமாட்டி
திடமா லட்சுமணன் செய்த பர்னசாலை வீட்டில்
தேவாதி தேவா உன் திருவாழிதனைக் காட்டி
(கண் )
ஸ்ரீராம சீதாதேவி சூடாமணி கண்டு மகிழ்தல்
பணியனுமான் இது சொல்லிப் பாவை உத வியசூடா
மணியடையா ளங்கொடுத்தான் வள்ளலிரா கவன் கண்டான்
அணிஉடலம் புளகித்தான் அகங்குளிர்ந்தான் முகம் மலர்ந்தான்
துணியும் அந்த மணிவாங்கித் துதித்தான்சம் மதித்தானே
சூடாமணிகண் டபோதே - சாமிக்கு வந்த
சுகமே அனந்த சுகம்
( சூடா )
அநுபல்லவி
வாடி அனுமான் சொல்ல ஆடி முட்டமுட்ட
நாடிச் சீதையம்மை
சூடி வரவிட்ட
( சூடா )
1. அமல மாமணிதன்னை
அமுர்த சஞ்சீவிபோல்
கமலக் னகபோறிபிடித்
கதிர்கண்ட பனிபோல்
கண்ணிரண்டும்
எண்ணங்களும்
வாங்கினான் உயிர்செய்
தாங்கினான் -
சீதை
தோங்கினான் கவலை
நீங்கினான் - கண்டு
குளிர்ந்தான் - மேல்வரும்
தெளிந்தான் அத்த
( சூடா )
மடித்து வாயிதழ்
மயிர்ப் புளகம்
பொடிக்கத்துடி
புத்தி சொல்லிப்
போர்க்குச் செல்லும்
சேர்க்கச் சொல்லும்
கடித்தான் - மேனி
பொடித்தான் வேர்வை
துடித்தான்
அனுமான்
படித்தான்
சேனையை
என்றான் அடிக்கடி
என்றான்
இப்படி
( சூடா )
ஓடவே
கீர்த்தி
3. அரக்கராம் இருளெல்லாம்
ஆனபயிர் வளர்ந்து
விரித்தரம்பையர் கீதம்
வீசும் பூமலர் எங்கும்
மேனிபூ
வானிபூ
தர்மம்
கூடவே
பாடவே தேவர்
மூடவே
வரவர
ரிக்கவே துர்க்காப
ரிக்கவே அந்த
( சூடா )
ஸ்ரீராமர் தென்சமுத்திரக் கரையைக் காணுதல்
இந்தவண்ணம் சாமி மனம் மகிழ்ந்து தேறி
இலங்கையைப் போய் வளைத்திடவே சேனைசூழ
அந்த அனுமான் மேலேதானும் , தம்பி
அங்கதன் தோள் மேலும் எழுந்தருளிச் சென்று
தொந்தமுள்ள படைத்தலைவர் முன்னும் பின்னும்
சூழ்ந்துவரச் சுக்கிரீவன் அருகேநின்று
முந்திவழி காட்டியிட ராமச்சந்திரன்
முறை கொண்டான் தென் கடலின் கறைகண்டானே
சுந்தரகாண்டம் முற்றிற்று
சக்கிரவர்த்தித் திருமகனார் திருவடிகளே சரணம் .
-------------
ஐந்தாவது
சுந்தரகாண்டம்
( கம்பராமாயண ஒப்புமைப் பகுதி )
அனுமார் கடல் தாண்டப் பாய்தல்
ஆண்டகை ஆண்டவ் வானோர் துறக்கநா டருகிற் கண்டான்
ஈண்டிது தான் கொல் வேலை இலங்கையென்று ஐயம் எய்தா
வேண்டரு விண்ணா டென்னும் மெய்ம்மைகண் டுள்ளம் மீட்டான்
காண்டரு கொள்கை உம்பர் இல்லெனக் கருத்துட் கொண்டான்
மொய்யுறு செவிகள் தாவி முதுகுற முறைகால் தள்ள
மையறுவிசும் பினூடு நிமிர்ந்தவா லதியமஞ்சின்
மெய்யுறத் தழீஇய மெல்லென் பிடியொடும் வெருவலோடும்
மையுற மரங்கள் பற்றிப் பிளிறின களிநல் யானை
பொன்பிறழ் சிமயக்கோடு பொடியுறப் பொடியும்சிந்த
மின்பிறழ் குடுமிக் குன்றம் வெரிந்உற விரியும் வேலை
புன்புற மயிரும் பூவாக் கண்புலம் புறத்து நாறா
வன்பறழ் . வாயிற்கௌவி வல்லியம் இரிந்த மாதோ
மாவொடு மானும் மண்னும் வல்லியும் மற்றும் எல்லாம்
போவது புரியும் வீரன் விசையினாற் புணரி போர்க்கத்
தூவின கீழும்மேலும் தூர்த்தன சுருதியன்ன
சேவகன் சீறா முன்னம் சேதுவும் இயன்ற மாதோ
இடுக்குறு பொருள்கள் என்னாம் எண்டிசை சுமந்த யானை
நடுக்குற விசும்பிற் செல்லும் நாயகன் தூதன் நாகம்
ஒடுக்குறு காலை வன்காற்று அடியொடும் ஒடித்த அந்நாள்
முடுக்குறக் கடலிற்செல்லும் முத்தலைக் கிரியும் ஒத்தான்
கொட்புறு புரவித் தெய்வக் கூர்நுதி குலிசத்தாற்கும்
கட்புலன் கதுவலாகா வேகத்தான் கடலும் மண்ணும்
உட்படக் கூடிஅண்டம் உறஉள செவியின் ஒற்றைப்
புட்பக விமானந்தானவ் இலங்கைமேல் போவதொத்தான்
தடக்கைநா லைந்து பத்துத் தலைகளும் உடையான் தானே
அடக்கிஐம் புலன்கள் வென்ற தவப்பயன் அறுதலோடும்
கெடக்குறி யாகமாகம் கிழக்கெழு வழக்கு நீங்கி
வடக்கெழுந் திலங்கை செல்லும் பருதிவானவனும்ஒத்தான்
வெளித்துப்பின் வேலைதாவும் வீரன்வால் வேதம் ஏய்க்கும்
அளித்துப்பின் அனுமன் என்றோர் அருந்துணை பெற்றதாயும்
களித்துப்புன் தொழில்மேல் நின்ற அரக்கர் கண்ணுறுவரா மென்று
ஒளித்துப்பின் செல்லும்கால பாசத்தை ஒத்ததன்றே
ஓசனை உலப்பிலாத உடம்பமைந் துடைய என்னத்
தேசமும் நூலும் சொல்லும் திமிங்கில கிலங்களோடும்
ஆசையை உற்றவேலை கலங்க அன்று அண்ணல் யாக்கை
வீசிய காலின்வீந்து மிதந்தன மீன்க ளெல்லாம்
[ கடல் தாவுபடலம் 1 , 5 , 6 , 19 , 23 , 25 , 28 , 33 , 37 ]
இலங்கணிவதை
இந்நாகம் அன்னான் ஏறிக் கால்என ஏகும் வேலைத்
திந்நாக மாவில்செறி கீழ்த்திசைக் காவல் செய்யும்
கைந்நாகம் அந்நாள் கடல் வந்ததோர் காட்சிதோன்றக்
கைந்நாகம் என்னும் மலை வானுற வந்ததன்றே
நீர்மேற் படரா நெடுங்குன்று நிமிர்ந்து நிற்றல்
சீர்மேற் படராதென சிந்தை உணர்ந்து செல்வான்
வேர்மேற்பட வன் தலை கிழ்ப்பட தூக்கி விண்ணோர்
ஊர்மேற் படரக் கடிது உம்பரின் மீதுயர்ந்தான்
ஈண்டே கடிதேகி இலங்கை விலங்கல் எய்தி
ஆண்டான் அடிமைத் தொழிலாற்றி என் ஆற்றல் கொண்டே
மீண்டால் நுகர் வென் நின்விருந்து எனவேண்டி மெய்ம்மை
பூண்டானவன் கட்புலம்பின்பட முன்புபோனான்
வெங்கார் நிறப்புணரி வேறேயும் ஒன்று அப்
பொங்கார் கலிப்புனல் தரப்பொலிவ தேபோல்
ங்கார் கடத்திர்எனை என்னா எழுந்தாள்
அங்கார தாரை பெரிது ஆலாலம் அன்னாள்
திறந்தாள் எயிற்றையவள் அண்ணல் இடைசென்றான்
அறந்தான் அரற்றியது அயர்த்தமரர் எய்த்தார்
இறந்தான் எனக்கொடு ஓர் இமைப்பதனின் முன்னம்
பிறந்தான் எனப் பெரிய கோளரி பெயர்ந்தான்
( கடல்தாவுபடலம் 39 , 42. 51. 63 , 70 )
நாணாளும் தான் நல்கிய காவல் நனிமூதூர்
வாணாள் அன்னாள் போவதின் மேலே வழிநின்றாள்
தூணாம் என்னும் தோளுடையானைச் சுடரோனைக்
காணாவந்த கட்செவி என்னக்கனல் கண்ணாள்
எல்லாம் உட்கும் ஆழி இலங்கை இகல் மூதூர்
நல்லாள் அவ்வூர் வைகுறை ஒக்கும் நயனத்தாள்
நில்லாய் நில்லாய் என்றுரை நேரா நினையாமுன்
வல்லே சென்றாள் மாருதிகண்டான் வருகென்றான்
கொல்வாம் அன்றேல் கோளுறும் இவ்வூர் எனல் கொண்டாள்
வெல்வாய் நீயேல் வேறி எனத்தன் விழிதோறும்
வல்வாய் தோறும் வெ நுகனல் பொங்க மதிவானில்
செல்வாய் என்னா மூவிலை வேலைச் செலவிட்டாள்
அடியா முன்னம் அங்கையனைத்தும் ஒருகையால்
பிடியா என்னே பெண் இவள் கொல்லின் பிழை என்னா
ஒடியா நெஞ்சத்து ஓரடிகொண்டான் உயிரோடும்
இடியேறுண்ட மால்வரை போல் மண்ணிடை வீழ்ந்தாள்
ஐயகேள் வையம் நல்கும் அயனருள் அமைதியாக
எய்தியிம் மூதூர் காப்பென் இங்கைமா தேவி என்பேர்
செய்தொழில் இழுகினாலே திகைத்திந்தச் சிறுமை செய்தேன்
உய்தி என்றளித்தியாயின் உணர்த்துவல் உண்மை என்றாள்
எத்தனைக் காலம் காப்பல் யானிந்த மூதூர் என்று அம்
முத்தனை வினவினேற்கு முரண்வலிக் குரங்கொன்றுன்னைக்
கைத்தலம் அதனாற்றீண்டிக் காய்ந்த அன்றென்னைக் காண்டி
சித்திர நகரம் பின்னைச் சிதைவது திண்ணம் என்றான்
அன்னதே முடிந்ததைய அறம் வெல்லும் பாவம் தோற்கும்
என்னும் தியம்பவேண்டும் தகையதோ இனிமற்றுன்னால்
உன்னிய எல்லாம் முற்றும் உனக்கும் முற்றாததுண்டோ
பொன்னகர் புகுதி என்னாப் புகழ்ந்தவள் இறைஞ்சிப் போனாள்
( ஊர்தேடுபடலம் 73 , 79 , 85 , 89 , 91 93 ]
அனுமார் இலங்கையில் சீதையைத் தேடுதல்
ஆத்துறு சாலைதோறும் ஆனையின் கூடந்தோறும்
மாத்துறு மாடந்தோறும் வாசியின் பந்திதோறும்
காத்துறு சோலைதோறும் கருங்கடல் கடந்த தாளான்
பூத்தொறும் வாவிச் செல்லும் பொறிவரி வண்டிற் போனான்
யக்கியர் அரக்கிமார்கள் நரகியர் எஞ்சில் விஞ்சை
முயல்கறை இலாத திங்கள் முகத்தியர் முதலினோரை
மயக்கற நாடியேகும் மாருதி மலையின் வைகும்
கயக்கமில் துயிற்சிக் கும்பகருணனைக் கண்ணிற்கண்டான்
குறுகி நோக்கி மற்றவன் தலை ஒருபதும் குறித்த
இறுகுதிண்புயம் இருபதும் இவற்குஇலை என்னா
மறுகி ஏறிய முனிவெனும் வடவை வெங்கனலை
அறிவெனும் பெரும்பரவை யம்புனலினால் அவித்தான்
மாடகூடங்கள் மாளிகைஒளிகை மகளிர்
ஆடரங்குகள் அம்பலம் தேவர் ஆலயங்கள்
பாடல் வேதிகை பட்டிமண்டபம் முதல்பலவும்
நாடிஏகினன் இராகவன் ராகவன் புகழ் எனும் நலத்தான்
மணிகொள் வாயிலில் சாளரத் தளங்களில் மலரில்
கணிகொள் நாளத்தில் காலெனப் புகையெனக் கலக்கும்
நுணுகும் வீங்கும் மற்றவன் நிலை யாவரே நுவல்வார்
அணுவில் மேருவில் ஆழியான் எனச்செலும் அனுமன்
ஏந்தல் இவ்வகை எவ்வழி மருங்கினும் எய்திக்
காந்தள் மெல்விரல் மடந்தையர் யாரையும் காண்பான்
வேந்தர் வேதியர் மேலுளோர் கீழுளோர் விரும்பப்
போந்தபுண்ணியன் கண்ணகன் கோயிலுட் புக்கான்
பளிக்குவேதிகைப் பவளத்தின் கூடத்துப் பசுந்தேன்
துளிக்கும் கற்பகப் பந்தரில் கருநிறத் தோர்பால்
வெளித்து வைகுதல் அரிதென அவர் உருமேவி
ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான் தனையுற்றான்
முந்தரம் பையர் முதலினர் முழுமதி முகத்துச்
சிந்துரம் பயில் வாய்ச்சியர் பலரையும் தெரிந்து
மந்திரம் பலகடந்து தன்மனத்தின் முன்செல்வான்
இந்திரன் சிறையிருந்த வாயிலின் கடை எதிர்ந்தான்
வளையும் வாளெயிற் றரக்கனோ கணிச்சியான் மகனோ
அளையில் வாளரி யனையவன் யாவனோ அறியேன்
இளைய வீரனும் ஏந்தலும் இருவரும் பலநாள்
உளைய உள்ளபோர் இவனொடும் உளதுான உணர்ந்தான்
இன்னராம் பெரும்படைத்தலைவர்கள் இருக்கைப்
பொன்னின் மாளிகை ஆயிரகோடியும் புக்கான்
கன்னிமாநகர்ப் புறத்து அகன்கரந்துறை காண்பான்
சொன்ன மூன்றினுள் நடுவணது அகழியைத் தொடர்ந்தான்
கரிய நாழிகை பாதியில் காலனும்
வெருவி ஓடும் அரக்கர்தம் வெம்பதி
ஒருவனே ஒரு பன்னிரு யோசனைத்
தெருவு மும்மை நூ றாயிரம் தேடினான்
ஆயபொழுதம் மதிலகத்து அரசர் வைகும்
தூயதெரு ஒன்றோடு ஒருகோடி துருவிப்போய்த்
தீயவன் இருக்கை அயல்செய்த அகழ் இஞ்சி
மேயது கடந்தனன் வினைப்பகையை வென்றான்
[ ஊர்தேடுபடலம் 99 , 119 , 129 , 131-134 , 136 , 139 , 143 , 155 ,
-அனுமார் இராவணனைக் கண்டு கோபித்தல்
போரியற்னக இராவணன் பொன்மனை
சீரியற்கை நிரம்பிய திங்களா
தாரகைக் குழுவின் தழுவித் தொடர்
நாரியர்க் குறைவாம் இடம் நண்ணினான்
ஆயவிஞ்சையர் மடந்தையர் உறைவிடம் ஆறிரண்டமைகோடித்
தூயமாளிகை நெடுந்தெருத் துரூவிப்போய் தொலைவில் மூன்றுலகிற்கும்
நாயகன் பெருங் கோயிலை நண்ணுவான் கண்டனன் நளிர் திங்கள்
மாயநந்திய வாள்முகத் தொருதனி மயன்மகள் உறை மாடம்
ன்ன தன்மையின் எழில்மணி விளக்கங்கள்
எழில்கெடப் பொலிகின்ற தன்ன தின்னொளி
தழைப்புறத் துயில்வுறு தைய லைத் தகைவில்லான்
அன்னளாகிய சானகி இவள் என அயிர்த்து அகத்தெழு வெந்தீ
துன்னும் ஆருயிர் உடலொடு சுடுவது ஓர் துயருழந்திவை சொன்னான்
மானுயர்த் திருவடிவினள் அவள் , இவள் மாறுகொண்டனள் கூறின்
தானியக்கியோ தானவர் தையலோ ஐயுறுந்தகையானாள்
கானுயர்த்த தார் இராமன் மேல்நோக்கிய காதல் காரிகையார்க்கு
மீனுயர்த்தவன் மருங்குதான் மீளுமோ நினைந்தது மிகை என்றான்
குழவி ஞாயிறு குன்றிவர்ந் தனையன குருமணி நெடுமோலி
இழைகளோடு நின்றிள வெயில் ஏறித்திட இரவெனும் பெயர் வீய
முழைகொள் மேருவின் முகட்டிடைக் கனகனை முறுக்கிய முரண்சீயம்
தழைகொள் தோளொடு தலைபல பரப்பிமுன் துயில்வதோர் தகையானை
கண்டனன் காண்டலோடும் கருத்தின் முன் காலச்செந்தீ
விண்டன கண்கள் கீண்டு வெடித்தன கீழும் மேலும்
கொண்டதோர் உருவம் மாயோன் குறளினும்குறுக நின்றான்
திண்தலை பத்தும் தோள்கள் இருபதும் தெரிய நோக்கி
தோளாற்றல் என்னாகும் மேல்நிற்கும் சொல் என்னாம்
வாளாற்று கண்ணாளை வஞ்சித்தான் மணிமுடியென்
தாளாற்றலால் இடித்துத் தலைபத்தும் தகர்த்தின் றென்
ஆளாற்றல் காட்டேனேல் அடியேனாய் முடியேனே
நடித்து வாழ் தகைமையதோ அடினமதான் நன்னுதலைப்
பிடித்து வாழ் அரக்கனார் யான்கண்டும் பிழைப்பாரோ
ஒடித்துவான் தோளனைத்தும் தலைபத்தும் உதைத்துருட்டி
முடித்திவ்வூர் முடித்தால் மேல்முடிவதெலாம் முடிந்தொழிக
என்றூக்கி எயிறுகடித்து இருகரனும் பிசைந்தெழுந்து
நிறூக்கி உணர்ந்துரைப்பான் நேமியோன் பணியன்றால்
ஒன்றூக்கி ஒன்றிழைத்தல் உணர்வுடைமைக் குரித்தன்றால்
பின் தூக்கின் இதுசாலப் பினழபயக்கும் எனப் பெயர்ந்தான்
{ ஊர்தேடுபடலம் 165 , 193 , 197 , 199 , 205 , 216 , - 219 ]
அனுமார் சீதையைக் காணாததால் இரங்குதல்
ஆலம்பார்த் துண்டவன்போல் ஆற்றலமைந்துளர் எனினும்
சீலம்பார்க்க உரியோர்கள் எண்ணாது செய்பவோ
மூலம்பார்க்குறின் உலகைமுற்றுவிக்கும் முறைத்தெனினும்
பாலம்பார்த் திறைவேலை கடவாத கடல்ஒத்தான்
இற்றைப் போர்ப் பெருஞ்சீற்றம் என்னோடு முடிந்திடுக
கற்றைப் பூங்குழலாளைச் சிறைவைத்த கண்டகனை
முற்றப்போர் முடித்தது ஒருகுரங்கென்றால் முனைவீரன்
கொற்றப் போர்ச்சிலைத் தொழிற்குக் குறைவுண்டாம் எனக்குறைந்தான்
என்றெண்ணி ஈண்டினியோர் பயனில்லை என நினையாக்
நன்றன்ன தோளவன்றான் கோமனைபிற்படப் பெயர்ந்தான்
இன்றெண்ணி உன்னுவான் அந்தோ இந்நெடுநகரில்
பொன்துன்னும் மணிப்பூணாள் இலளென்ன பொருமுவான்
கொன்றானோ கற்பழியாக் குலமகளைக் கொடுந்தொழிலால்
இன்றானோ எப்புறத்தே செறித்தானோ சிறை சிறியேன்
ஒன்றானும் உணரகிலேன் மீண்டினிப்போய் என்னுரைக்கேன்
பொன்றாத பொழுதெனக்கிக் கொடுந்துயரம் போகாதால்
கண்டுவரும் என்றிருக்கும் காகுத்தன் கவிகுலக்கோன்
கொண்டுவரும் என்றிருக்கும் யானிழைத்த கோளிதுவால்
புண்டரிக நயனத்தான் பாலினியான் போவேனோ
விண்டவரோடு உடன்வீயாது யான்வாளா விளிவேனோ
கண்ணிய நாள் கழிந்துளவால் கண்டிலமால் கனங்குழையை
விண்ணடைதும் என்றாரை ஆண்டிறுத்தி விரைந்தயான்
எண்ணியது முடிக்கிலேன் யான் முடியா திருப்பேனோ
புண்ணியம் என்றொருபொருள் என்உழைநின்றும் போயதால்
ஏழுநூறு ஓசனை சூழ்ந்து எயில்கிடந்த இவ்இலங்கை
வாழுமா மன்னுயிர் யான்காணாத மற்றில்லை
ஊழியான் பெருந்தேவி ஒருத்தியுமே யான்காணேன்
ஆழிதாய் இடராழி இடையேவீழ்ந்து அழிவேனோ
வல்லரக்கன் தனைப்பற்றி வாயாரக் குருதியுகக்
கல்லரக்கும் கரதலத்தால் காட்டென்று காண்கேனோ
எல்லரக்கும் அயில் நுதிவேல் இராவணனும் இவ்வீரும்
மெல்லரக்கின் உருகி உக வெந்தழலான் வேய்கேனோ
வடித்தாய்பூங் குழலாளை வானறிய மண்ணறிய
பிடித்தான் இவ் அடலரக்கன் எனும்மாற்றம் பிழையாதால்
எடுத்தாழி இலங்கையினை இருங்கடலிட் டின்றிவனை
முடித்தாலே யான் முடிதல் முறைமன்ற என்றுணர்வான்
( ஊர்தேடுபடலம் 220 , 221 , 223 228 , 231 ]
அனுமார் சீதையைக் காணுதல்
மாடுநின்ற அம்மணிமலர்ச் சோலையை மருவி
தேடி இவ்வழிக் காண்பனேல் தீரும் என்சிறுமை
ஊடுகண்டிலேன் எனின் பின்னர் உரியதொன்றில்லை
வீடுவேன் மற்றிவ் விலங்கல்மேல் இலங்கையை வீட்டி
அவ்வயின் அரக்கியர் அறிவுற் றம்மவோ
செவ்வையில் துயில் நமைச் செகுத்ததீதென
எவ்வயின் மருங்கினும் எழுந்து வீங்கினார்
வெவ்வயில் மழுஎழு சூலவெங்கையார்
விரிமழைக் குலங்கிழித்து ஒளிரும் மின் எனக்
கருநிறத் தரக்கியர் குழுவிற் கண்டனன்
குருநிறத் தொருதனிக் கொண்டல் ஆம் எனத்
திருவுருப் பொலியும் ஓர் செல்வன் தேவியை
கடக்கரும் அரக்கியர் காவல் சுற்றுளாள்
மடக்கொடி சீதையாம் மாதரே கொலாம்
கடல்துணை நெடியதன் கண்ணின் நீர்ப்பெருந்
தடத்திடை இருந்ததோர் அன்னத் தன்மையாள்
என் அரும் உருவின் அவ் இலக்கணங்களும்
வள்ளல் தன் உரையொடும் மாறுகொண்டில
கள்ளவா ளரக்கள் அக்கமலக் கண்ணனார்
உள்ளுறை உயிரினை ஒளித்து வைத்தவா
மூவகை உலனகயும் முறையின் நீக்கிய பாவி
தன் உயிர்கொள்வான் இழைத்த பண்பிதால்
ஆவதே ஐயம்இல் அரவீன் நீங்கிய
தேவனே அவன் இவள் கமலச் செல்வியே
வீடினதன்றறன் யானும் வீகலேன்
தேடினென் கண்டனென் தேவியே எனா
ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து
ஓடினன் உலாவினன் உவகைத் தேனுண்டான்
[ காட்சிப்படலம் 1 , 55 , 59 - 63 ]
சீதாதேவி திரிசடையோடு முறையிடல்
அரிது போகவோ விதிவலி கடத்தல் என்றஞ்சிப்
பரிதி வானவன் குலத்தையும் பழினயயும் பாரா
சுருதிநாயகன் வரும்வரும் என்பதோர் துணிவால்
ருதிமாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள்
ண்டிலன் கொலாம் இளவலும் கனைகடல் நடுவண்
உண்டிலங்கை என்றுணர்ந்திலர் உலகெலாம் ஒருப்பான்
கொண்டிறந்தமை அறிந்திலராம் எனக்குழையா
புண்திறந்ததில் எரிநுழைந் தாலெனப் புகைவாள்
மாண்டுபோயினன் எருவைகட் கரசன் மற்றுளரோ
யாண்டை என் நிலை அறிவுறுப்பார்கள் இப்பிறப்பில்
காண்டலோ அரிது என்று என்று விம்முறும் கலங்கும்
மீண்டுமீண்டுபுக் கெரிநுழைந்தா லென மெலிவால்
என்னைநாயகன் இளவலை எண்ணலா வினையேன்
சொன்ன வார்த்தைகேட் டறிவிலள் எனத் துறந்தானோ
முன்னைஊழ்வினை முடிந்ததோ என்றென்று முறையால்
பன்னிவாய் புலர்ந்துணர்வு தேய்ந்தாருயிர் பதைப்பாள்
அருந்தும் மெல்லடகு ஆரிட அருந்தும் என்றழுங்கும்
விருந்து கண்டபோ தென்னுறுமோ என்று விம்மும்
மருந்தும்உண்டுகொல் யானுற்ற நோய்க்கென்று மயங்கும்
இருந்த மாநிலம் செல்லரித்திடவும் ஆண்டெழாதாள்
வன்கண் வஞ்சனை அரக்கர் இத்துணைப் பகல்வையார்
தின்பர் என் இனிச் செயத்தக்கது என்று தீர்ந்தானோ
தன்குலப் பொறை தன்பொறை எனத் தண
என்கொல் எண்ணுவேன் என்றுடங் கிராப்பகலில்லாள்
பெற்றதாயரும் தம்பியும் பெயர்த்தும் வந்தெய்திக்
கொற்ற மாநகர்க் கொண்டிறந்தார்களோ குறித்துச்
சொற்ற ஆண்டெலாம் நிறைந்தன்றி அந்நகர் துன்னான்
உற்றதுண்டெனாப் படருழந்துறாதன உறுவாள்
முரன் எனத்தகும் மொய்ம்பினோர் முன்பொருதவர்போல்
வரனும் மாயமும் வஞ்சமும் வரம்பில வல்லோர்
பொரநிகழ்ந்ததோர் பூசலுண்டாம் ? எனப்பொருமா
கரன் எதிர்ந்தது கண்டனள் ஆம் எனக் கவல்வாள்
தெம்மடங்கிய சேணிலம் கேகயர்
தம்மடந்தை உன் தம்பிய தாம்என
மும்மடங்கு பொலிந்த முகத்தினன்
வெம்மடங்கலை உன்னி வெதும்புவாள்
மெய்திருப்பதம் மேத்வென்ற போதினும்
இத்திருத்துறந் தேகு என்ற போதினும்
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்
தேங்கு கங்கைத் திருமுடிச் செங்கணான்
வாங்குகோல வடவரை வார் சிலை
ஏங்கு மாத்திரத் திற்றிரண்டாய்விழ
வீங்கு தோளை நினைந்து மெலிந்துனாள்
இன்னல் அம்பர வேந்தற்கியற்றிய
பன்னலம் பதினாலாயிரம் படை
கன்னல் மூன்றில் களப்படக் கால்வளை
வில்நலம் புகழ்ந்து ஏங்கி வெதும்புவாள்
ஆழநீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக் கெம்பிநின் தம்பிநீ
தோழன் மங்கை கொழுந்தி எனச்சொன்ன
வாழி நண்பினை உன்னி மயங்குவாள்
உரங்கொள் தேமலர்ச் சென்னி உரிமைசால்
வரங்கொள் பொன்முடி தம்பி வனைந்திலன்
திரங்கு செஞ்சடை கட்டிய செய்வினைக்கு
இரங்கி ஏங்கியது எண்ணி இரங்குவாள்
பரித்த செல்வம் ஒழியப் படரும் நாள்
அருத்தி வேதியற்கு ஆன்குலம் ஈந்தவன்
கருத்தின் ஆசை கரையினமை கண்டிறை
சிரித்த செய்கை நினைந்தழும் செய்கையால்
மழுவின் வாளினன் மன்னரை மூவெழு
பொழுதின் நூறிப் புலவுறு புண்ணின் நீர்
முழுகினான் தவ மொய்ம்பொடு மூரிவீல்
தழுவும் மேன்மை நினைந்துயிர் சாம்புவாள்
ஏகவாளி அவ்இந்திரன் செம்மல் மேல்
போக ஏவி அதுகண்பொடித்த நாள்
காகம் முற்றும் ஓர்கண்ணல வாகிய
வேக வென்றியைத் தன் தலைமேற் கொள்வாள்
வெவ்வி ராதனை மேவரும் தீவினை
வவ்வி மாற்றரும் சாபமும் மாற்றிய
அவ்இராமனை உன்னித் தன் ஆருயிர்
செவ்விரா துணர் வோய்ந்துடல் தேம்புவாள்
நலந் துடிக்கின்றதோ நான்செய்தீவினைச்
சுலந் துடித்தின்னமும் தருவதுண்மையோ
பொலந்துடி மருங்குலாய் புருவம் கண்முதல்
வலந்துடிக்கின்றில வருவதோர்கிலேன்
முனியொடு மிதிலையில் முதல்வன் முந்து நாள்
துனி அறு புருவமும் தோளும் நாட்டமும்
இனியன துடித்தன ஈண்டும் ஆண்டென
நனிதுடிக் கின்றன ஆய்ந்து நல்குவாய்
மறந்தனென் இதுவுமோர் மாற்றங் கேட்டியால்
அறந்தரு சிந்தைஎன் ஆவி நாயகன்
பிறந்தபார் முழுவதும் தம்பி யேபெறத்
துறந்து கான்புகுந்தநாள் வலந்துடித்ததே
நஞ்சனையான் வனத்து இழைக்க நண்ணிய
வஞ்சனைநாள் வலம் துடித்த வாய்மையால்
எஞ்சல ஈண்டுதாம் இடந் துடிக்குமால்
அஞ்சல் என்றிரங்குதற்கு அடுப்பதுயா தென்றாள்
[ காட்சிப்படலம் 9 , 12 29 , 32 - 35 ]
சீதாதேவிக்குத் திரிசடைகனா நிலையுரைத்தல்
துயில் இலையாதலின் கனவு தோன்றல
அயில்விழி ஒருகனவு அமைய நோக்கினேன்
பயில்வன பழுதில பரிவின் ஆண்டன
வெயிலினும் மெய்யன விளம்பக் கேட்டியால்
எண்ணெய்பொன் முடிதொறும் இழுகி ஈறிலாத்
திண்ணெடுங் கமுதை பேய்பூண்ட தேரின் மேல்
அண்ணல் அவ்இராவணன் அரத்த ஆடையன்
நண்ணினன் தென்புலம் நவையில் கற்பினாய்
மக்களும் சுற்றமும் மற்றுளோர்களும்
புக்கனர் அப்புலம் போந்ததில் லையால்
சிக்கற நோக்கினென் தீய இன்னமும்
மிக்கன கேட்க என விளம்பல் மேயினாள்
ஆண்டகை இராவணன் வளர்க்கும் அவ்வனல்
ஈண்டில பிறந்தவால் இனங்கொள் செஞ்சிதல்
துண்டரு மணிவிழக்கழலும் தொல்மனை
கீண்டதால் வான ஏறு எறியக் கீழைநாள்
பிடிமதம் பிறந்தன பிறங்கு பேரியும்
இடியென முழங்குமால் இரட்டல் இன்றியே
துடியுடை முகிற்குலம் இன்றித் தாவில்வான்
வெடிபட அதிருமால் உதிரும் மீன் எலாம்
விற்பகல் இன்றியே இரவு விண்டற
எற்பகல் எறிந்துளது என்னத் தோன்றுமால்
மற்பக மலர்ந்த தோள் மைந்தர் சூடிய
கற்பக மாலையும் புலவு நாறுமால்
திரியுமால் இலங்கையும் மதிலும் திக்கெலாம்
எரியுமால் கந்தர்ப்ப நகரம் எங்கணும்
தெரியுமால் மங்கல கலசம் சிந்தின
விரியுமால் விளக்கினை விழுங்கு மாலிருள்
தோரணம் முறியுமால் துளங்கிச் சூழிமால்
வாரணம் முறியுமால் வளத்த வான்மருப்பு
ஆரண மந்திரத்தறிஞர் நாட்டிய
பூரண குடத்துநீர் நறவு நாறுமால்
விண்தொடர் மதியினைப் பிளந்து மீனெழும்
புண்தொடர் குருதியின் பொழியுமால் மழை
தண்டொடு திகிரிவாள் தனுவென் றின்னன
மண்டமர் புரியுமால் ஆழிமாறுற
மங்கையர் மங்கலத்தாலி மற்றையோர்
அங்கையின் வாங்குநர் எவரு மின்றியே
கொங்கையின் வீழ்ந்தனகுறித்த ஆற்றினால்
இங்கிதன் அற்புதம் இன்னும் கேட்டியால்
மன்னவன் தேவி அம்மயன் மடந்தை தன்
பின்னவிழ் ஓதியும் பிறங்கி வீழ்ந்தன
துன்னரும் சுடர்சுடச் சுறுக்கென்று ஏறிற்றால்
இன்னல் உண்டு எனுமிதற் ஏது என்பதே
என்றனள் இயம்பிவேறு இன்னும் கேட்டியால்
ன்றிவண் இப்பொழுது இயைந்ததோர் கனா
வன்றுணைக் கோளரி இரண்டு மாறிலாக்
குன்றிடை உழுவையம் குழுக்கொண்டீண்டியே
உரம்பொரு மதகரி உறையும் அவ்வனம்
நிரம்புற வளைந்தன நெருக்கி நேர்ந்தன
வரம்பறு பிணம்படக் கொன்று மாறிலாப்
புரம்புக இருந்ததோர் மயிலும் போயதால்
ஆயிரம் திருவிளக் கமைய மாட்டிய
சேயொளி விளக்கமொன் றேந்திச் செய்யவள்
நாயகன் திருமனை நின்று நண்ணுதல்
மேயினள் வீடணன் கோயில் மென்சொலாய்
பொன்மனை புக்கஅப் பொருவில் போதினில்
என்னை நீ உணர்த்தினை முடிந்ததில் என
அன்னையே அதன்குறை காண்என் றாயிழை
இன்னமும் துயில் கென இருகை கூப்பினாள்
சீதாதேவிபக்கல் இராவணன் குறையிரத்தல்
என்றிவை இனையன எண்ணி வண்ணவான்
பொன்திணி நெடுமரப்பொதும்பர் புக்கு அவன்
நின்றனன் அவ்வழி நிகழ்ந்தது என்எனின்
துன்றுபூஞ் சோலைவாய் அரக்கன் தோன்றினான்
தந்திரி நெறியில் தாக்குறு கருவி தூக்கினர் எழுவிதச் சுதியின்
முந்துறு குணிலொடு இயைவுறு குறட்டில் சில்லரிப் பாண்டிலில் முறையின்
மந்தர கீதத்து இசைப்பதம் தொடர வகையுறு கட்டளை வழாமல்
அந்தர வானத்து அரம்பையர் கரும்பின் பாடலார் அருகுவந் தாட
ஆயிடை அரக்கன் அரம்பையர் குழுவும் அல்லவும் வேறயல் அகல
மேயினன் பெண்ணின் விளக்கெனத் தகையாள் இருந்துழி ஆண்டவள் வெருவிப்
போயின உயிரளாம் எனநடுங்கிப் பொறிவரி எறுழ்வலி புகைக்கண்
காய்ச்சின உழுவை தின்னிய வந்த கலையிளம் பிணைஎனக் கரைந்தாள்
அவ்விடத்து அருகெய்தி அரக்கன் தான்
எவ்விடத்து எனக்கின்னருள் ஈவது
நொவ்விடைக் குயிலே நுவல்க என்றனன்
வெவ்விடத்தை அமிழ்தென வேண்டுவான்
ன்றிறந்தன நாளை இறந்தன
என் திறம் தரும் தன்மையிதால் , எனைக்
கொன்று இறந்தபின் கூடுதியோகுழை
சென்றிறங்கி மறந்தரு செங்கணாய்
உலகம்மூன்றும் ஒருங்குடன் ஓம்பும் என்
அலகில் செல்வத்து அரசியல் ஆணையில்
திலகமே உன் திறத்து அனங்கன் தரு
கலகமல்லது எளிமையும் காண்டியோ
பூந்தண் வார்குழல் பொன் கொழுந்தே புகழ்
ஏந்து செல்வம் இகழ்ந்தனை இன்னுயிர்க்
காந்தன் மாண்டிலன் காடுகடந்து போய்
வாய்ந்து வாழ்வது மானுடவாழ்வன்றோ
நோற்கின் றார்களும் நுண்பொருள் நுண்ணிதின்
பார்க்கின் றாரும் பெறும்பயன் பார்த்தியேல்
வார்க்குன்றாமுனல என்சொல் மவுலியால்
ஏற்கின் றாரொடு உடன்உறை இன்பமால்
பொருளும் யாழும் விளரியும் பூவையும்
மருள நாளும் மழலை வழங்குவாய்
தெருளும் நான்முகன் செய்தது உன்சிந்தையின்
அருளும் மின் மருங்கும் அரிதாக்கியோ
ஈண்டுநாளும் இளமையும் மீண்டில
மாண்டு மாண்டு பிறிதுறும் மாலைய
வேண்டுநாள் வெறிதே விளிந்தால்இனி
யாண்டு வாழ்வது இடருழந்து ஆழ்தியோ
மூவெனக்கு உயிர்க்கு எய்தினும் எய்துக
குழைமுகத்துநின் சிந்தனை கோடினால்
பழகநிற்புறும் பண்பிவை காமத்தோடு
அழகினுக்கு இனியாருளர் ஆவரே
தேவர் தேவியர் சேவடிகை தொழும்
தாவில் மூவுலகின் தனிநாயகம்
மேவுகின்றது நுங்கண் விலக்கினை
ஏவர் ஏழையர் நின்னின் இலங்கிழாய்
குடிமை மூன்றுலகும் செய்யும் கொற்றத்து என்
அடிமை கோடி அருளுதியால் எனா
முடியின் மீது முகிழ்த்துயர் கையினன்
படியின் மேல்விழுந்தான் பழிபார்க்கலான்
[ காட்சிப்படலம் 73 , 86 , 94 , 97 , 99 105. 109 , 110 ]
சீதாதேவி இராவணனை இடித்தல்
காய்ந்தன சலாகையன்ன உரைவந்து கதுவா முன்னர்
தீய்ந்தன செவிகள் உள்ளம் திரிந்தது சிவந்த சோரி
பாய்ந்தன கண்கள் ஒன்றும் பரிந்திலள் உயிர்க்கும் பெண்மைக்கு
ஏய்ந்தன அல்லவெய்ய மாற்றங்கள் இனையசொன்னாள்
மேருவை உருவல்வேண்டின் விண்பிளந்து ஏகல் வேண்டின்
ஈரெழு புவனம்யாவும் முற்றுவித்திடுதல் வேண்டின்
ஆரியன் பகழிவல்லது அறிந்திருந்து அறிவிலாதாய்
சீரிய அல்ல சொல்லித் தலைபத்தும் சிந்துவாயோ
அஞ்சினை ஆதலான் அன்றுஆரியன் . அற்றம் நோக்கி
வஞ்சனை மானொன்றேவி மாயையால் மறைந்து வந்தாய்
உஞ்சனை போதியாயின் விடுதியுன் குலத் துக்கெல்லாம்
நஞ்சினை எதிர்ந்தபோது நோக்குமே நினது நாட்டம்
பத்துள தலையும் தோளும் பலபல பகழிதூவி
வித்தகவில்லி னாற்கு திரு விளையாடற்கு ஏற்ற
சித்திர இலக்கமாகும் அல்லது செருவில் ஏற்கும்
சத்தியைப் போலும் மேனாள் சடாயுவால் தரையில் வீழ்ந்தாய்
தோற்றனை பறவைக்கன்று துள்ளுநீர் வெள்ளம் சென்னி
ஏற்றவன் வாளால் வென்றாய் அன்றெனின் இறத்தி யன்றே
நோற்ற நோன்புடைய வாழ்நாள் வரமிவை நுனித்தவெல்லாம்
கூற்றினுக் கன்றே வீரன் சரத்திற்கும் குறித்ததுண்டோ
பெற்றுடை வாளும் நாளும் பிறந்துடை வரனும் பின்னும்
மற்றுடை எவையும் தந்த மலரயன் முதலோர் வார்த்தை
விற்றொடை இராமன் கோத்து விடுதலும் விலக்குண் டெல்லாம்
இற்றிடைந் திறுதல் மெய்யே விளக்கின் முன் இருளுண்டாமோ
குன்று நீ எடுத்தநாள் தன் சேவடிக் கொழுந்தால் உன்னை
வென்றவன் புரங்கள் வேவத்தனிசரம் துரந்தமேரு
என்றுணைக் கணவன் ஆற்றற்கு உரணிலாதிற்று வீழ்ந்த
அன்றெழுந் துயர்ந்த ஓசை கேட்டிலை போலும் அம்மா
மலைஎடுத் தெண்டிசை காக்கும் மாக்களை
நிலை கெடுத்தேன் எனும் மாற்றம் நேரும்நீ
சிலைஎடுத் திளையவன் நிற்கச் சேர்ந்திலை
தலை எடுத் தின்னமும் மகளிர்த் தாழ்தியோ
ஏழைநின் ஒளிந்துரை இன்னதாம் என
வாழிஎங் கோமகன் அறிய வந்தநாள்
ஆழியும் இலங்கையும் அழியத் தாழுமோ
ஊழியும் திரியும் உன்னுயிரொடு ஓயுமோ
வெஞ்சின அரக்கரை வீய்த்து வீயுமோ
வஞ்சனை நீசெய வள்ளல் சீற்றத்தால்
எஞ்சலில் உலகெலாம் எஞ்சும் எஞ்சுமென்று
அஞ்சுகின் றேனிதற்கு அறனும் சான்றரோ
அங்கண்மா ஞாலமும் விசும்பும் அஞ்சவாழ்
வெங்கணாய் புன்தொழில் விலக்க உட்கொளாய்
செங்கண்மால் நான் முகன் சிவன் என்றே கொலாம்
எங்கள் நாயகனையும் நினைத்தது ஏழைநீ
மானுயர் இவரென மனங்கொண் டாயெனின்
கானுயர் வரை நிகர் கார்த்த வீரியன்
தானொரு மனிதனால் தளர்ந்துளான் எனின்
தேனுயர் தெரியலான் தன்மை தேர்தியால்
இருவர் என்றி கழ்ந்தனை என்னின் யாண்டு எல்லை
ஒருவனன்றே உலகழிக்கும் ஊழியான்
செருவரும் காலை என் மெய்ம்மை தேர்தியால்
பொருவருந் திருவிழந்து அநாயம் பொன்றுவாய்
கடிக்கும் வல்லரவும் கேட்கும் மந்திரம் களிக்கின்றோயை
அடுக்கும் ஈது அடாது என்று ஆன்ற ஏதுவோ டறிவுகாட்டி
இடிக்குநர் இல்லைஉள்ளார் எண்ணியது எண்ணி உன்னை
முடிக்குநர் என்றபோது முடிவன்றி முடிவதுண்டோ
[ காட்சிப்படலம் 111 , 113--124 , 132 ]
சீதாதேவி தனியே புலம்பல்
போயினன் அரக்கன் பின்னை பொங்கரா நுங்கிக்கான்ற
தூயவெண் மதியம்ஒத்த தோகையைத் தொடர்ந்து சுற்றித்
தீயவல்லரக்கி மார்கள் தெழித்திழித்து உரப்பிச்சிந்தை
மேயினவண்ண மெல்லாம் விளம்புவான் உடன்றுமிக்கார்
[ காட்சிப்படலம் 147 ]
காண்டற் கொத்த காலமும் ஈதே தெறுகாவல்
தூண்டற் கொத்த சிந்தையினாரும் துயில் கில்லார்
வேண்டத்துஞ்சார் என்றொரு விஞ்சை வினை செய்தான்
மாண்டற்குற் றாராம் என எல்லாம் மயர்வுற்றார்
கருமேகம் நெடுங்கடல் கா அனையான்
தருமே தமியேன் எனாருயிர்தான்
உருமேறு உமிழ்வெஞ்கிலை நாண் ஒலிதான்
வருமே ? உரையாய் வலியார் வலியே
வாரா தொழியான் எனும் வன்மையினால்
ஓராயிர கோடி இடர்க்கு உடையேன்
தீராய் ஒரு நாள்வலி சேவகனே
நாரா யணனே தனிநாயகனே
தருவொன்றிய கானடைவாய் தவிர்நீ
வருவென் சில நாளினில் மாநகர் வாய்
இருவென்றனை இன்னருள் தான் இதுவோ
ஒருவேன் தனி ஆவியை உண்ணுதியோ
பேணும் உணர்வே உயிரே பெருநாள்
நாணின் றுழல்வீர் தனிநாயகனைக்
காணும் துணையும் கழிவீர் அலீர் நான்
பூணும் பழியோடு பொருந்துவதோ
பொறை இருந் தாற்றி என் உயிரும் போற்றினேன்
அறையிருங் கழலவற் காணும் ஆசையால்
நிறையிரும் பல்பகல் நிருதர் நீள் நிகர்
சிறையிருந் தேனை அப் புனிதன் தீண்டுமோ
பிறன்மனை எய்திய பெண்ணைப் பேணுதல்
திறனலது என்றுயிர்க் கிறைவன் தீர்ந்தனன்
புறனலர் அவனுறப் போது போக்கியான்
அறனலது ஆற்றுவேன் என் கொண்டாற்றுகேன்
வருந்தலில் மானமா அனையமாட்சியர்
பெருந்தவம் மடந்தையர் முன்பு பேதையேன்
கருந்தனி முகிலினைப் பிரிந்து கள்வரூர்
இருந்தவள் இவள் என ஏசநிற்பெனோ
[உருக்காட்டுப்படலம் 1 , 3 , 6-9 , 11 , 14 , 17 , 191
அனுமார் ஸ்ரீராமரை வர்ணித்தல்
ஆதலான் இறத்தலே அறத்தின் ஆறெனா
சாதல் காப்பவரும் என் தவத்தின் சாம்பினார்
ஈதலா திடமும் வேறில்லை என்றொரு
போதுலாம் மாதவிப் பொதும்பர் எய்தினாள்
கண்டனன் அனுமனும் கருத்தும் எண்ணினான்
கொண்டனன் துணுக்கம் மெய் தீண்டக் கூசுவான்
அண்டர் நாயகன் அருள் தூதன் யான்எனா
தொண்டைவாய் மயிலினைத் தொழுது தோன்றினான்
படி உரைத் தெடுத்துக்காட்டும் படித்தன்று படிவம் பண்பின்
முடிவுள உவமமெல்லாம் இலக்கணம் ஒழியும் முன்னர்
துடியிடை அடையாளத்தின் தொடர்வையே தொடர்தி என்னா
அடிமுதல் முடியின் காறும் அறிவுற அனுமன் சொல்வான்
சேயிழைத் தாமரை என்று சேண்உளோர்
ஏயினர் அதன் துணை எளியதில்லையால
நாயகன் திருவடி குறித்து நாட்டுறின்
பாய்திரைப் பவளமும் குவளைப் பண்பிற்றால்
தளங்கெழு கற்பகமுகிழும் தண்துறை
இளங்கொடிப் பவளமும் கிடக்க என் அவை
துளங்கொளி விரற்கெதிர் உதிக்கும் சூரியன்
இளங்கதிர் ஒக்கினும் ஒக்கும் ஏந்திழாய்
சிறியவும் பெரியவுமாகித் திங்களோ
மறு இல பத்துள அல்ல மற்றினி
எறிசுடர் வயிரமோ திரட்சி எய்தில
அறிகிலென் உகிர்க்குயான் உவமமாவன
பொருந்தில நிலனொடு போந்து கானிடை
வருந்தின எனினது நூலை மாறுகொண்டு
இருந்தது நின்றது புவனம் யாவையும்
ஒருங்குடன் புணர அஃது உரைக்கற் பாலதோ
தாங்கணைப் பணிலமும் வளையும் தாங்குநீர்
வீங்கணை பணிமிசை மேகம் அன்னவன்
பூங்கணைக் காற்கொரு பரிசுதான் பொரு
ஆம்கணைக்கு ஆவமோ ஆவது அன்னையே
அறங்கிளர் பறவையின் அரசன் ஆடெழில்
பிறங் கெருத்தணைவன பெயரும் பொற்புடை
மறங்கிளர் மதகரிக் கரமும் நாணின
குறங்கினுக் குவமை இவ்வுலகில் கூடுமோ
வலஞ்சுழித் தொழுகுநீர் வழங்கு கங்கையின்
பொலஞ்சுழி என்றலும் புன்மை பூவொடு
நிலஞ்சுழித் தெழுமணி உந்திநேர் இனி
இலஞ்சியும் போலும் வேறுஉவமையாண்டரோ
பொருவரு மரகதப் பொலன் கொள்மால்வரை
வெருவுற விரிந்து உயர் விலங்கல் ஆகத்தைப்
பிரிவற நோற்றனள் என்னின் பின்னை அத்
திருவனின் திருவுளார் யாவர் தெய்வமே
நீடுறு கீழ்த்திசை நின்ற யானையின்
கோடுறு கரம்எனச் சிறிது கூறலாம்
தோடுறு பலரெனச் சுரும்பு சுற்று அறாத்
தாள்தொடு தடக்கைவே றுவமை சாலுபோ
பச்சிலைத் தாமரை பகல்கண்டால் எனக்
கைச் செறிமுகிழ் உகிர் கனகன் என்பவன்
வச்சிரயாக் கையை வகிர்ந்தவன் தொழில்
நிச்சயம் அன்றெனின் ஐயம் நீக்குமே
திரண்டில ஒளியில் திருவின் சேர்வில
முரண்டரு மேருவில் முரியமூரி நாண்
புரண்டில புகழ் இல பொருப்பென்று ஒன்றுபோன்று
இரண்டில் புயங்களுக்கு உவமம் ஏற்குமோ
கடற்படு பனிலமும் கன்னிப் பூகமும்
மிடற்றினுக் குவமை என்றுரைக்கும் வெள்ளியோர்க்கு
உடன்பட ஒண்ணுமோ உரகப் பள்ளியான்
இடத்துறு சங்கம் ஒன்றிருக்க எங்களால்
அண்ணல் தன் திருமுகம் கமலம் ஆம் எனின்
கண்ணினுக் குவமை வேறு யாது காட்டுகேன்
தண்மதி ஆய்என உரைக்கத் தக்கதோ
விண்ணுடல் பொலிந்தது மெலிந்து தேயுமால்
ஆரமும் அகிலும் நீவி அகன்றதோள் அமலன் செவ்வாய்
நாரம் உண்டலர்ந்த செங்கோள் நளினம் என்றுரைக்க நாணும்
ஈரமுண்டமுதம் ஊறும் இன்னுரை இயம்பா தேனும்
மூரல்வெண் முறுவல்பூவாப் பவள மோ மொழியற்பாற்றே ?
முத்தங்கொல்லோ முழுநிலவின் முறியின் திறனோமுறை அமுதச்
சொத்தின்துள்ளி வெள்ளியினம் தொடுத்த கொல்லோ துறையறத்தின்
வித்து முளைத்த அங்குரங்கொல்வேறே சிலகொல்மெய்ம் முகிழ்த்த
தொத்தின் தொகை கொல் யாதென்றுபல்லுக் குவமை சொல்லுகேன்
எள்ளாநிலத் திந்திரநீலத் தெழுந்த கொழுந்து மரகதத்தின்
வள்ளாமுழுமா நிழற்பிரம்பும் வேண்டவேண்டும் மேனியதோ
தள்ளாஓதி கோபத்தைக் கௌவவந்து சார்ந்ததுவும்
கொள்ளா வள்ளல்திரு மூக்கிற்கு உவமைபின்னும் குணிப்பாமோ
பனிக்கச்சுரத்துக் கரன் முதலோர் கவந்தப்படையும் பல்பேயும்
தனிக்கைச்சிலையும் வானவரும் முனிவர் குழுவும் தன அறனும்
இனிக்கட்டழித்த தரக்கர் குலம் என்னும் சுருதிஈரிரண்டும்
குனிக்கக் குனித்த புருவத்துக் குவமம் நீயே கோடியால்
வருநாள் தோன்றும் தனிமறுவும் வளர்வும்தேய்வும் வாளரவம்
ஒருநாள் கௌவும் உறுகோளும் இறப்பும் பிறப்பும் ஒழிவுற்றால்
இருநாற் பகலின் இலங்குமதி அலங்கலிருளின் எழில்நிழற்கீழ்ப்
பெருநாள் நிற்பின் அவன் நெற்றிப் பெற்றித்தாகப் பெறுமன்னோ
நீண்டுகுழன்று நெய்த்திருண்டு நெறிந்து செறிந்து நெடுநீலம்
பூண்டுபுரிந்து சரிந்துகடை சுருண்டு புகையும் , நறும்பூவும்
வேண்டும் அல்ல எனத்தெய்வ வெறியேகமழும் நலுங்குஞ்சி
ஈண்டுசடையாயின தென்றல் மழைஎன்றுரைத்தல் இழிவன்றோ
புல்லல் ஏற்ற திருமகளும் பூவும்பொருந்தப் புவி ஏழும்
எல்லையற்ற நெடுஞ்செல்வம் எதிர்ந்த ஞான்றும் அஃதின்றி
அல்லல்ஏற்ற கானகத்தும் அழியா நடையை இழிவான
மல்லல் ஏற்றின் உளதென்றால் மத்தயானை வருந்தாதோ
[உருக்காட்டுப்படலம் 21 , 22 , 38 58 ]
சீதாதேவி லட்சணியைத் தரிசித்தல்
மீட்டும் உணர வேண்டுவன இல்லை என மெய்ப்பேர்
தீட்டியது தீட்டரிய கெய்கையது செவ்வே
நீட்டிதென நேர்ந்தனன் எனா நெடியகையால்
காட்டினன் ஓராழி அதுவாள் நுதலிகண்டாள்
இறந்தவர் பிறந்த பயன் எய்தினர் கொல் என்கோ
மறந்தவர் அறிந்துணர்வு வந்தனர் சொல் என்கோ
துறந்த உயிர் வந்திடை தொடர்ந்தது கொல் என்கோ
திறந்தெரிவ தென்னை கொல் இந்நன்னுதலி செய்கை
இழந்தமணி புற்றரவு எதிர்ந்ததெனல் ஆனால்
பழந்தனம் இழந்தன படைத்தவரை ஒத்தாள்
குழந்தையை உயிர்த்த மலடிக்குவமை கொண்டாள்
உழந்துவிழி பெற்றதோர் உயிர்ப்பொறையும் ஒத்தாள்
வாங்கினள் முலைக்குவையில் வைத்தனள் சிரத்தரல்
தாங்கினள் மலர்க்கண்மிசை ஒற்றினள் தடந்தோள்
வீங்கினள் மெலிந்தனள் குளிர்ந்தனள் வெதுப்போடு
ஏங்கினள் உயிர்த்தனள் இது இன்னதெனல் ஆமோ
போக்கும் முலைவைத்துற முயங்கும் ஒளிர் நன்னீர்
நீக்கிநிறை கண்ணிணை ததும்ப நெடுநீளம்
நோக்கும் நுவலக்கருதும் ஒன்றும் நுவல் கில்லாள்
மேக்கு நிமிர்விம்மலள் விழுங்கலுறுகின்றாள்
நீண்டவிழி நேரிழைதன் மின்னின் நிறமெல்லாம்
பூண்டதொளிர் பொன்னனைய பொம்மல்நிறம் மெய்யே
ஆண்டகைதன் மோதிரம் அடுத்த பொருளெல்லாம்
திண்டளவில் வேதிகை செய் தெய்வமணி கொல்லோ
இருந்து பசியால் இடர் உழந் தவர்கள் எய்தும்
அருந்தும் அமுதாகியது அறத்தவரை அண்மும்
விருந்தும் எனல் ஆகியது வீயும்உயிர் மீளும்
மருந்தும் எனலாகியது வாழி மணியாழி
இத்தகைய ளாகி உயிர் ஏமுற விளங்கும்
முத்தநகை யாள்விழியின் ஆலிமுலை முன்றில்
தத்தியுக மென்கு தலை தள்ள உயிர் தந்தாய்
உத்தம எனா இனைய வாசகம் உரைத்தாள் தூதாய்
மும்மையாம் உலகந்தந்த முதல்வற்கும் முதல் வன்
செம்மையால் உயிர்தந்தாய்க்குச் செயல் என்னால் எளியதுண்டோ
அம்மையாய் அப்பனாய அத்தனே அருளின் வாழ்வே
ம்மையே மறுமைதானும் நல்கினை இசையோ டென்றாள்
பாழிய பணைத்தோள் வீர துணையிலேன் பரிவு தீர்த்த
வாழிய வள்ளலே யான் மறுவிலா மனத்தேன் என்னின்
ஊழியோர் பகலாய் ஓதும் யாண்டெல்லாம் உலகம் ஏழும்
ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்றென இருத்தி என்றாள் [ உருக்காட்டுப்படலம் 68-72 ]
அனுமர் சீதை பிரிந்தபின் நடந்த செய்திகள் அவளுக்கு விவரித்தல்
உழைக்குலத் தீயமாய உருவு கொண்டுறுதல் செய்தான்
மழைக்கரு நிறத்து மாய அரக்கன் மாரீசன் என்பான்
இழைத்தட மார்பத்தண்ணல் எய்யப்போய் வையம் சோர்வான்
அழைத்தபொய்ச் குரலின் ஓசை மயக்கியது உன்னை அம்மா
இக்குரல் இளவல் கேளாதொழிக எனஇறைவன் இட்டான்
மெய்க்குரல் சாபம் பின்னைவிளைந்தது விதியின் வெம்மை
பொய்க்குர லின்று பொல்லாப் பொருள் பின்பு மயக்கும் என்பான்
கைக்குரல் வரிவில்லானும் இளையவன் வரவு கண்டான்
கண்டபின் இளையவீரன் முகத்தினாற் கருத்தை ஓர்ந்த
புண்டரிகக்கணானும் உற்றது புகலக்கேட்டான்
வண்டுறை சாலைவந்தான் நின் திரு வடிவு காணான்
உண்டுயிர் இருந்தான் இன்னல் உழப்பதற்கேது ஒன்றோ -
தேண்டிநேர் கண்டேன் வாழி தீதிலன் எங்கோன் ஆகம்
பூண்டமெய் உயிரேபோகப் பொய்யுயிர் போல நின்ற
ஆண்டகை நெஞ்சில் நின்றும் அகன்றிலை அழிவுண்டாமோ
ஈண்டுநீ இருந்தாய் ஆண்டங்கு எவ்வுயிர் விடும் இராமன்
அந்நிலை யாய அண்ணல் ஆண்டு நின்று அன்னைநின்னை
துன்னிரும் காணும்யாறும் மலைகளும் தொடர்ந்து நாடி
இன்னுயிரின்றி ஏகும் இயந்திரப் படிவம் ஒப்பான்
தன்னுயிர் புகழ்க்குவிற்ற சடாயுவைவந்து சார்ந்தான்
எவ்வழி ஏகியுற்றான் யாண்டையான் உறையுள்யாது
செவ்வியோய் கூறுகென்னச் செப்புவாள் உற்ற செவ்வி
வெவ்விய விதியின் கொட்பால் வீடினன் கழுகின்வேந்தன்
எவ்விய வரிவிற் செய்கை இருவரும் இடரின் வீழ்ந்தார்
அயர்த்தவர் அரிதின் தேறி ஆண்தொழில் தாதைக்கு ஆண்டுச்
செயத்தகு கடன்மை யாவும்தேவரும் மருளச் செய்தார்
கயத்தொழில் அரக்கன் தன்னை நாடிநாம் காண்டும் என்னா
புயல்தொடு குடுமிக்குன்றும் கானமும் கடிதுபோனார்
கன்மத்தை ஞாலத்தவர் யார்உளரே கடப்பார்
பொன்மொய்த்த தோளான் மயல் கொண்டு புலன்கள் வேறாய்
நன்மத்தம் நரகத்தயல் சூடிய நம்பனேபோல்
உன்மத்தன் ஆனான் தனை ஒன்றும் உணர்ந்திலா தான்
போதாயின போதுன் தண்புனல் ஆடல் பொய்யோ
சீதாபவளக் கொடியன்னவள் தேடிஎன்கண்
நீதாதருகிற் றிலையேல் நெருப்பாதி என்னா
கோதாவரி யைச்சினங்கொண்டனன் கொண்டல் ஒப்பான்
வந்தான் இளையானொடு வானுயர் தேரின்வைகும்
நந்தாவிளக்கின் வரும் எம்குலநாதன் வாழும்
சந்தார் தடங்குன்றினில் தன்னுயிர்க் காதலோனும்
செந்தா மரைக்கண்ணனும் நட்டனர் தேவருய்ய
உண்டாயதும் உற்றதும் முற்றும் உணர்த்தி உள்ளம்
புண்தான் என நோயுற விம்முறு கின்றபோழ்தின்
எண்தான் உழந்திட்டதும் ஏந்திழையாங் கள் காட்டக்
கண்டான் உயர் போ தமும் பேதமும் காண்கிலா தான்
அயர்வுற்று அரிதின் தெளிந்து அம்மலைக் கப்புறத்தோர்
உயர்பொன்கிரி உற்றுளன் வாலி என்று ஓங்கல் ஒப்பாள்
துயர்வுற்றவ் இராவணன் வாலிடைப் பண்டு தூங்க
மயர்வுற்ற பொருப்பொடு மால் கடல் தாவிவந்தான்
ஆயானைஓர் அம்பினால் ஆருயிர் வாங்கி அன்பின்
தூயான் வயின் அவ்வரசு ஈந்தவன் சுற்று சேனை
பேயாய் வருவாய் எனவிட்டனன் மேவுகாறும்
ஏயான் இருந்தான் இடைத்திங்கள் இரண்டிரண்டும்
பின்கூடியசேனை பெருந்திசை பின்னவாக விற்கூடு நுதல்திரு
நின்னிடை மேவஏவித் தெற்கூடுருவக் கடிது ஏவினன் சேர்ந்தது
என்ன முற்கூடிய கூறினன் காலம் ஓர் மூன்றும் வல்லான் சுட்டினன்
நின்றனன் தொழுதகையினன் விட்டுயர் தோளினன்
விசும்பின் மேக்குயர் எட்டரு நெடுமுகடெய்த நீளு மேல் முட்டும்
என்றுருவொடு வளைந்த மூர்த்தியான் முழுவதும் இவ்வுருக் காண
முற்றிய குழுவிலது உலகுஇனிக் குறுகுவாய் என்றாள் எழுவினும்
எழில்இலங்கு இராமன் தோள்களைத் தழுவின ளாம் எனத் தளிர்க்கும் சிந்தையாள்
ஆண்டகை அனுமனும் அருளதாம் எனா
மீண்டனன் விசும்பெனும் பதத்தை மீச்செல்வான்
காண்டலுக் கெளியதோர் உருவு காட்டினான்
தூண்டலில் விளக்கனாள் இனைய சொல்லினாள்
[உருக்காட்டுப்படலம் 74-78 , 81 , 82 , 84 , 85 , 90 , 92- 94 , 99 , 107 , 108
அனுமார் சீதாதேவியை வரங்கேட்குதல்
கேட்டியடியேனுரை முனிந்தருளல் ; கேளான்
வீட்டியிடுமேல் அவனை வேறல் வினையன்றால்
ஈட்டிஇனி என்பல இராமன் எதிர் நின்னைக்
காட்டி அடிதாழ்வென் அதுகாண்டி இதுகாலம்
பொன்திணி பொலங்கொடி என்மென்மயிர் பொருந்தித்
துன்றிய புயத்தினிது இருக்க , துயர்விட்டாய்
இன்றுயில் விளைக்க ஓர் இமைப்பின் இறைவைகும்
குன்றிடை உனைக்கொடு குதிப்பென் இடைகொள்ளேன்
அறிந்திடை அரக்கர் தொடர்வார்கள் உளராமேல்
முறிந்து திர நூறி என் மனச்சினம் முடிப்பேன்
நெறிந்த குழல் நின் நிலைமை கண்டும் நெடியோன்பால்
வெறுங்கை பெயரேன் ஒருவராலும் விளியாதேன்
லங்கையொடு ஏகுதிகொல் என்னினும் இடந்தென்
வலங்கொள் ஒரு கைதலையில்வைத்து , எதிர் தடுப்பான்
விலங்கினரை நூறிவரி வெஞ்சிலையினோர் தம்
பொலங்கொள்கழல் தாழ்குவென் இது அன்னை பொருளன்றால்
அருந்ததி உரைத்தி அழகற்கருகு சென்றுன்
மருந்தனையதேவி நெடுவஞ்சர் சிறைவைப்பில்
பெருந்துயரினோடும் ஒருவீடுபெறு கில்லாள்
இருந்தனள் எனப்பகரின் என் அடிமை என்னாம்
புண் தொடர் வகற்றிய புயத்தினொடு புக்கேன்
விண்டவர் வலத்திதையும் விரித்துரை செய்கேனோ
கொண்டுவரு கிற்றிலென் உயிர்க்குறுதி கொண்டேன்
கண்டுவரு கிற்றிலென் எனக்கழறுவேனோ
இருக்கும்மதில் சூழ்கடி இலங்கையை இமைப்பின்
உருக்கி எரியால் இகல் அரக்கனையும் ஒன்றா
முருக்கி நிருதக்குலம் முடித்து வினைமுற்றிப்
பொருக்க அகல்க எனனினும் அது இன்று புரிகின்றேன்
இந்து நுதல் நின்னொடிவண் எய்தி இகல்வீரன்
சிந்தையுறு வெந்துயர் தவிர்ந்து தெளிவோடும்
அந்தமில் அரக்கர்குலம் அற்றவிய நூறி
நந்தலில் புவிக்கண் இடர் பின்களை தல் நன்றால்
வேறினி விளம்ப உளதன்று விதியால் இப்
பேறு பெற என்கண் அருள் தந்தருளுபின் போய்
ஆறுதுயர் அஞ்சொல் இளவஞ்சி அடியன்தோள்
ஏறுகடி தென்று தொழுது இன்னடி பணிந்தான் ( சூடாமணிப் படலம் 2 10 ]
சீதை அனுமாருக்கு மறுமொழி கூறல்
அரியதன்றுநின் ஆற்றலுக் கேற்ரதே
தெரிய எண்ணினை செய்வதும் செய்தியே
உரியதன்றென ஓர்கின்ற துண்டு அதுஎன்
பெரிய பேதைமைச் சில்மதிப்பெண் மையால்
வேலையின் இடையே வந்து வெய்யவர்
கோலி நின்னோடு வெஞ்சரம் கோத்தபோது
ஆலம் அன்னவர்க்கல்லை , ஏற்கு அல்லையால்
சாலவும் தடுமாறும் தனிமையோய்
அன்றியும் பிறிதுள்ள தொன்று ஆரியன்
வென்றி வெஞ்சிலை மாசுணும் வேறினி
நன்றி என்பது என்வஞ்சித்த நாய்களின்
நின்ற வஞ்சனை நீயும் நினைத்தியோ
கொண்ட போரின் எம் கொற்றவன் விற்றொழில்
அண்டர் ஏவரும் நோக்கஎன் ஆக்கையைக்
கண்டவா ளரக்கன் விழி காகங்கள்
உண்ட போதன் றியான் உளெனவனோ
வெற்றிநாணுடை வில்லியர் விற்றொழில்
முற்ற நாணில் அரக்கியர் மூக்கொடும்
அற்ற நாணினர் ஆயின போதன்றிப்
பெற்ற நாணமும் பெற்றியதாகுமோ
பொன் பிறங்கல் இலங்கை பொருந்தலர்
என்பு மால்வரை ஆகிலதே எனின்
இற்பிறப்பும் ஒழுக்கும் இழுக்கமில் கற்பும்
யான்பிறர்க் கெங்ஙனம் காட்டுகேன்
அல்லல் மாக்கள் இலங்கைய தாகுமோ
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லி னாற்சுடுவேன் அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசென்று வீசினேன்
ஏறு வேறும் உண்டுஉரை கேளதுமெய்ம் மையோய்
சேவகன் மேனியல்லால் இடை ஆறும்
ஐம்பொறி நின்னையும் ஆண் எனக் கூறும்
இவ்வுருத் தீண்டுதல் கூடுமோ
தீண்டினான் எனின் இத்தனைச் சேண்பகல்
ஈண்டுமோ உயிர்மெய்யின் இமைப்பின் முன்
மாண்டு தீர்வென் என்றே நிலம்வன் கையால்
கீண்டு சொண்டெழுந் தேகினான் கீழ்மையான்
மேவுசிந்தையில் மாதரைமெய் தொடின்
தேவு வன் தலை சிந்துகநீ எனப்
பூவில் வந்த புராதனனே புசல்
சாவம் உண்டென தாருயிர் தந்ததால்
அன்ன சாவம் உளதென ஆண்மையான்
மின்னும் மோலியன் மெய்ம்மையன் வீடணன்
கன்னி என்வயின் வைத்த கருணையான்
சொன்ன துண்டு துணுக்கம் அகற்றுவான்
ஆயதுண்மையின் யானும் அதன்றெனின்
மாய்வென் மன்ற அறம்வழுவா தொறும்
நாயகன்வலி எண்ணியும் நான்உடைத்
தூய்மையும் காட்டவும் இத்துணை தூங்கினேன்
ஆண்டுநின்றும் அரக்கன் அகழ்ந்து கொண்டு
ஈண்டு வைத்தது இளவல் இயற்றிய
நீண்ட சாலையொடு நிலைநின்றது
காண்டி ஐயநின் மெய்யுணர் கண்களால் தீர்விலேன்
இது ஒருப கலும்சிலை வீரன் மேனியை மானும்
இவ்வீங்குநீர் நார நாள்மலர்ப் பொய்கையை நண்ணுவேன் சோரும்
ஆருயிர் காக்கும் துணிவினால் ஆதலான் அதுகாரியம் அன்று ஐய
வேத நாயகன்பால் இனி மீண்டனை போதல் காரியம் என்றனள் பூவை அக் கோதி லானும் னையன கூறினான் ( சூடாமணிப் படலம் 12 26 )
அனுமார் சீதாதேவிக்குத் திடம் கூறல்
சின்னாள் நீயிடர் தீராதாய் இன்னா வைகலின் எல்லோரும்
நன்னாள் காணுதல் நன்றன்றோ
உன்னால் நல்லறம் உண்டானால் புளிக்கும் கண்டகர் புண்ணீருள் குளிக்கும் பேய்குடையுந் தோறும் ஒளிக்கும் தேவர் உவந்துள்ளம் களிக்கும் நல்வினை காணாயோ ஊழியின் இறுதியின் உரும் எறிந்தென கேழ்கிளர் சுடுசுணை கிழித்த புண்பொழி தாழிருங் குருதியால் தரங்க வேலைகள் ஏழும் ஒன்றாக நின்று இரைப்பக் காண்டியால் சூலிரும் பெருவயிறு அலைத்துச் சோர்வுறும் ஆலியம் கண்ணியர் அறுத்து நீத்தன வாலியும் கடக்கரும் வனப்ப வானுயர் தாலியம் பெருமலை தயங்கக் காண்டியால் விண்ணின் நீடிய நெடுங்கழுதும் வெஞ்சிறை எண்ணின் நீளிய பெரும் பறவை ஈட்டமும் புண்ணின் நீர்ப்புணரியில் படிந்து பூவையர் கண்ணின் நீர் ஆற்றினில் குளிப்பக் காண்டியால் புரையுறு புன்தொழில் அரக்கர் புண்பொழி திரையுறு குறுதியாறு ஈர்ப்பச் செல்வன வரையுறு பிணம்பெரும் பிறக்கம் மண்டின கரையுறு நெடுங்கடல் தூர்ப்பக் காண்டியால் 378 வினையுடை அரக்கராம் இருந்தை வெந்துக சனகி என்று ஒரு தழல் நடுவண் தங்கலான் அனகன்கை அம்பெனும் அளவில் ஊதையால் கனகம் நீடிலங்சைநின் றுருகக் காண்டியால் தாக்கிகல் இராவணன் தலையில் தாவின பாக்கியம் அனையநின் பழிப்பில் மேனியை நோக்கிய கண்களை நுதி கொள் மூக்கினால் காக்கைகள் கவர்ந்து கொண்டு உண்ணக்காண்டியால் மேலுற இராவணன் அழிந்து வெள்கிய நீலுறு திசைக்கரி திரிந்து நிற்பன வாலுற அனையவன் தலையை வௌவிவில் காலுறு கணைதடிந்து இடுவ காண்டியால் நீர்த்தெழு ( எணயழை எழங்க நீலவான் வேர்த்த தென்றி டைபிடை வீசும் தூசுபோல் போர்த்தெழு பொலங்கொடி இலங்னக பூழியொடு ஆர்த்தெழு கழுதிரைத்து ஆடக் காண்டியால் செப்புறல் என்பல தெய்வ வாளிகள் இப்புறத் தரக்கரை முருக்கி ஏகின முப்புறத்து உலகையும் முடிக்க மூட்டலால் அப்புறத்து அரக்கரும் அவியக் சாண்டியால் ஈண்டொரு திங்கள் இவ் இடரின் வைகுதல் வேண்டுவ தன்றுயான் விரைவின் வீரனைக் காண்டலே குறைபினும் காலம் வேண்டுமோ ஆண்டகை இனிஒரு பொழுதும் ஆற்றுமோ சூடாமணிப்படலம் 52-56 , 58 63 , 65 , 661
சீதாதேவி அனுமாருக்கு அடையாளம் ஈதல்
சேறி ஐய விரைந்தனை தீயவை எல்லாம்
வேறியான் இனி ஒன்று விளம்பு வென் கூறுகின்றன
முன்குறியுற்றன கோமாற்கு ஏறும்
என்றிவை சொல்லினள் ன்சொல் இசப்பாள்
நாகம் ஒன்றிய நல்வரையின்தலை மேல்நாள்
ஆகம் வந்தெனை வள்ளுகிர் வாளின் அளைந்த
காகம் ஒன்றை முனிந்து அயல் கல்எழுபுல்லால்
வேகவெம்படை விட்டது மெல்ல விரிப்பாய்
என்னொரு இன்னுயிர் மென்கிளிக்கு யார் பெயர் ஈகேன்
மன்ன என்றலும் மாசறு கேகயன்மாது என்
அன்னை தன் பெயர் ஆக என அன்பினொடு அந்நாள்
சொன்ன மெய்ம்மொழி சொல்லுதிமெய்ம்மை தொடர்ந்தோய் -
சூடையின் மணி கண்மணி ஒப்பது தொல்நாள்
ஆடையின்கண் இருந்தது பேரடையாளம்
நாடிவந் தெனதின் னுயிர் நல்கினை நல்லோய்
கோடி என் கொடுத்தனள் மெய்ப்புகழ் கொண்டாள் ( சூடாமணிப்படலம் 76-78 , 83 ]
வந்தெனைக் கரம் பற்றிய வைகல்
வாய் ந்த இப்பிற விக்கிரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்
தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய் ( சூடாமணிப்படலம் 34 ]
அனுமார் அசோகவனம் அழிக்குதல்
ஈனமுறு பற்றலரை எற்றி எயில் மூதூர்
மீனநிலையத்தின் உறவீசி விழிமானை
மானவன் மலர்க்கழலில் வைத்துமிலன் என்றால்
ஆனபொழுது எப்பரிசின் நான் அடியன் ஆவேன்
என்று நினையா இரவி சந்திரன் இயங்கும்
குன்றம் இருதோளனைய தன்னுருவு கொண்டால்
அன்றுலகு எயிற்றிடைகொள் ஏனம் எனலானான்
துன்றுகடி காவினை அடிக்கொடு துகைத்தான்
முடிந்தன பிளந்தன முரிந்தன
நெரிந்த மடிந்தன
பொடிந்தன மறிந்தன முறிந்த
இடிந்தன தகர்ந்தன
எரிந்தன கரிந்த ஒடிந்தன ஓசிந்தன
உதிர்ந்தன பிதிர்ந்த வேரொடு மறிந்த சில
வெந்த சில விண்ணில் காரொடு செறிந்தசில
காலினொடு வேலைத் தூரொடு பறிந்தசில
தும்பியொடு வானோர் ஊரொடு மலைந்தசில
உக்கசில நெக்க அலைந்தன சுடல் திரை
அரக்கர் அகல் மாடம் குலைந்துக டி -ந்தன
குலக்கிரி ளோடு மலைந்து பொடி யுற்றன
மயங்கி நெடுவானத்து உலைந்துவிழும் மீனினொடு
வெண்மலர் உதிர்ந்த புள்ளினொடு வண்டும் ஞிமிறும்
கடிகொள் பூவும் கள்ளும் முகையும் தளிர்களோடு
இனியகாயும் வெள்ளநெடு வேலையிடை மீனம் என விழுங்கித் துள்ளின
மரன்பட நெரிந்தன துடித்த வேனில்விளை யாடுசுடரோனின் ஒளிவிம்மும்
வானினிடை வீசிய இரும்பணை மரத்தால் தானவர்கள் மாளிகை தகர்ந்து பொடியாய
வான இடியால் ஒடியும் மால்வரைகன் மான வேங்கை செற்று மராமரம் வேர்பறித்து ஓங்கு கற்பகம் பூவொடு ஒடிந்துராய் பாங்கர் சண்பகப்பத்தி பறித்து அயல் மாங்கனிப் பணைமட்டித்து மாற்றியே
சந்தனங்கள் தகர்ந்தன தாள்பட இந்தனங்களின் வெந்தெரி சிந்திட
முந்தனகன் வசந்தன் முகங்கெட் நந்தனங்கள் கலங்கி நடுங்கவே
காமரம் களிவண்டு கலங்கிட மாமரங்கள் மடிந்தன மண்ணொடு
தாம் அரங்க அரங்கு தகர்ந்துக பூமரங்கள் எரிந்து பொரிந்தவே
ஆனைத் தானமும் ஆடல் அரங்கமும் பானத் தானமும் பாய்பரிப் பந்தியும்
ஏனைத்தார் அணி தேரொடும் இற்றன கானத் தார்தரு அண்ணல் கடாவவே
பெரியமா மரமும் பெருங் குன்றமும் விரிய வீசலின் மி - னெடும்
பொன்மதில் நெரிய மாடம் நெருப்பெழ நீறெழ இரியல் போன இலங்கையும் எங்கணும் என்றனர்
அரக்கிமார்கள் வயிறலைத்து இரியல்போகி குன்றமும் உலகும் வானும் கடல்களும் குலையப் போனார் நின்றதோர் சயித்தங்கண்டான் நீக்குவல் இதனை என்னா தன் தடக் கைகள் நீட்டிப்பற்றினன்
தாதைாப்பான் விட்டனன் இலங்கைதன் மேல் விண்ணுற விரிந்த மாடம் பட்டன கொடிகளான பகுத்தன பாங்குநின்ற சுட்டன பொறிகள் வீழத் துளங்கினர் அரக்கர் தாமும் கெட்டனர் வீரர் அம்மா பிழைப்பரோ
கேடு சூழ்ந்தார் சொல்லிட எளியதன்றால் சோலையைக் காலின்கையின் புல்லொடு துகளும் இன்றிப் பொடிபட நூறிப் பொன்னால் வில்லிடு வேரம் தன்னை வேரொடு வாங்கிவீச சில்லிடம் ஒழியத் தெய்வ இலங்கையும் சிதைந்த தென்றார் ( பொழிலிறுத்தபடலம் 2 , 8 , 9 , 10 , 12 , 16 , 19 , 25 - 27 , 37 , 39 , 49 , 54-57 ]
பனியுறு செயலைசிந்தி வேரமும் பறித்ததம்மா
தனியொரு குரங்கு போலாம் நன்று நம் தருக்கு என்கின்றார்
இனியொரு பழிமற்றுண்டோ இதனின் என்று இரைத்துப் பொங்கி
முனிவுறு மனத்தின் தாவி முந்துற முடுகுகின்றார்
மழைகளும் மறிகடலும்போய் மதமற முரசும் அறைந்தார்
முழைகளின் இதழ்கள் திறந்தார் முன்புகை கதுவ முனிந்தார்
பிழையில படஅரவின் தோள் பிடர்உற அடியிடுகின்றார்
கழைதொடர் வனம்ஏரியுண்டா லெனஎறி படைநர் கலந்தார்
பறைபுரை விழிகள் பறிந்தார் படியிடை நெடிது படிந்தார்
பிறைபுரை எயிறும் இழந்தார் பிடரொடுதலைகள் பிளந்தார்
குறையுயிர் சிதறநெரிந்தார் குடரொடு குருதி குழைந்தார்
முறைமுறை படைகள் எறிந்தார் முடையுடல் மறிய முறிந்தார்
புடையொடு விடுகனலின் காய் பொறியிடை மயிர்கள் புகைந்தார்
தொடையொடு முதுகு துணிந்தார் கழிபடுகுருதி சொரிந்தார்
படையிடை ஒடிய நெடுந்தோள் பறிதரவயிறு திறந்தார்
டையிடை மலையின் விழுந்தார் இகல்பொரமுடுகி எழுந்தார்
புதைபடஇருளின் மிடைந்தார் பொடியிடை நெடிதுபுரண்டார்
விதைபடும்உயிரர் விழுந்தார் விளியொடு விழியும் இருந்தார்
கதையொடும் முதிரமலைந்தார் கணையொழி சிலையர் கலந்தார்
உதைபட உரனும் நெரிந்தார் உயிரொடு குருதிஉமிழ்ந்தார்
அயலயல் மலையொடறைந்தான் அடுபகை அளகை அடைந்தார்
வியலிடம் மறையவிரிந்தார் மிசையுல கடைய மிடைந்தார்
புயல் தொடு கடலின் விழுந்தார் புடைபுடை சிதைவொடு சென்றார்
உயர்வுற விசையின் எறிந்தான் உடலொடும் உலகு துறந்தார்
எடுத்த அரக்கரை எறிதலும் அவர்உடல் எற்றக் கொடித் திண்மாளிகை இடிந்தன மண்டபம்குலைந்த தடக்கை யானைகள் மறிந்தன கோபுரம் தகர்ந்த பிடிக்குலங்களும் புரவியும் அவிந்தன பெரிய தத்தம் மாடங்கள் தம்உடலால் சிலர் தகர்த்தார் தத்தம் மாதரைத் தம்கழலாற் சிலசமைத்தார் தத்தம் மாக்களைத் தம் படையால் சிலர் தடிந்தார் எற்றி மாருதி தடக்கைகளால் விசைத்தெறிய
வந்தகிங்கரர் ஏயெனும் மாத்திரை மடிந்தார்
நந்த வானத்து நாயகர் ஓடினர் நடுங்கிப்
பிந்து காலினர் கையினர் பெரும்பயம் பிடரின்
உந்த ஆயிரம் பிணக்குவைமேல் விழுந்துளைவார் (கிங்கரர்வதைப்படலம் 11 , 23 , 26 , 27 , 28 , 29 , 41 , 42 , 551
சம்புமாலி வதை -
கூம்பின கையன் நின்ற குன்றெனக் குவவுத் திண்தோள்
பாம்பிவர் தறுகண்சம்புமாலி என்பவனைப் பாரா
வாம்பரித் தானையோடு வளைத்து அதன்மறனை மாற்றித்
தாம்பினின் பற்றித்தந்து என் மனச்சினம் தணித்தி என்றான்
ஆண்டுநின் றரக்கன் வெவ்வேறணி வகுத்து அனிகந்தன்னை
மூண்டிரு புடையும் முன்னும் முறைமுறை முடுக ஏவித்
தூண்டினன் தானும்திண்டேர் தோரணத் திருந்த தோன்றல்
வேண்டியது எதிர்த்தான் என்ன வீங்கினன்
விசயத்திண் தோள் ஐயனும் அமைந்து நின்றான்
ஆழியான் அளவில் ஆற்றல் நெய்சுடர் விளக்கின் தோன்றும்
நெற்றியே நெற்றியாக மொய்மயிர்ச் சேனை பொங்க முரணயில்
உகிர்வாள் மொய்த்த கைகளே கைகளாகக்கடைக் கூழை திருவாலாக எறிந்தன
எய்தன இடிக்கும் உரும் என்னச் செறிந்தன படைக்கலம் இடக்கையின் சிதைத்தான் முறிந்தன தெறும்கரி முடிந்தன தடந்தேர் மறிந்தன பரிநிரை வலக்கையின் மலைந்தான் கரிகொடு கரிகளைக் களப்படப் புடைத்தான் பரிகொடு பரிகளைத் தலத்திடைப் படுத்தான் வரிசிலை வயவனர வயவரின் மடித்தான் நிரைமணித் தேர்களைத் தேர்களின் நெரித்தான்
கானேகாவல் வேழக்கணங்கள் கதவாள் அரிகொன்ற வானே எய்த தனியேநின்ற மதமால் வரைஒப்பான் தேனே புரைக்கண் கனலே சொரிய சீற்றம் செருக்கினான் தானே ஆனான் சம்புமாலி காலன் தன்மையான் சலித்தான் ஐயன் கையால் எய்யும் சரத்தை உகச்சாடி ஒலித்தார்
அமரர் கண்டார் ஆர்ப்பத் தேரின் உள்புக் குக் கலித்தான் சிலையைக் கையால் வாங்கிக் கழுத்தினிடையிட்டு வலித்தான் பகுவாய் மடித்துமலைபோல் தலைமண்ணிடைவீழ புக்கார்
அமரர்பொலந்தார் அரக்கன் பொருவில் பெருங்கோயில் விக்கா நின்றார் விளம்பல் ஆற்றார் வெருவி விம்முவார் நக்கான் அரக்கன் நடுங்கல் என்றான் ஐயநமரெல்லாம் உக்கார் சம்புமாலி உலந்தான் ஒன்றேகுரங் கென்றார் ( சம்புமாலிவதைப்படலம் 1 , 20 , 21 , 25 , 30 , 41 , 47 50 ) 384
பஞ்சசேனாபதிகள் அட்சதன் இவர்கள் வதை
கைபரந்தெழு சேனையும் கடலிடைக் கலந்தார்
செய்கை தாம்வரும் தேரிடைக் கதிர்எனச் செல்வார்
மெய்கலந்த மாநிகர்வரும் உவமையை வென்றார்
ஐவரும் பெரும்பூதங்கள் ஐந்தும் ஒத்தமைந்தார்
உற்றுடன் றரக்கரும் உருத்துடற்றினர் செற்றுற நெருக்கினர் செருக்கும் சிந்தையார்
மற்றையர் வரும்பரிசு இவரை வல்விரைந்து எற்றுவென் எனஎழு அனுமன் ஏந்தினான் உலந்தது தானை உவந்தனர் உம்பர் அலந்தலை யுற்றது அவ் ஆழி இலங்கை கலந்தது அழுங்குரலின் கடலின் ஓதை வலந்தரு தோளவர் ஐவரும் வந்தார் நெய்தலை உற்றவேற்கை நிருதர் அச் செருவில் நேர்ந்தார் உய்தலை உற்றுமீண்டார் ஒருவருமில்லை உள்ளார் கைதலைப் பூசல் பொங்கக் கடுகினர் காலன்உட்கும் ஐவரும் உலந்ததன்மை அனைவரும் அமையக் கண்டார் [பஞ்சசேனாபதி வதைப்படலம் 14 , 31 , 4
உற்றான் இந்திர சித்துக்கிளையவன் ஒருநாளே பலர்உயிர் உண்ணக் கற்றானும் முகம் எதிர்வைத்தான் அது கண்டார் விண்ணவர் கசிவுற்றார் எற்றாம் மாருதிநிலை என்பார் இனி இமையா விழியினை இவை ஒன்றோ பெற்றாம் நல்லது பெற்றாம் என்றனர் பிறிதியாது எதிர் எதிர் செறிகின்றார் எய்தான் வாளிகள் எரிவாய் உமிழ்வன ஈரேழ் எதிரவை பார்சேரப் பொய்தான் மணி எழு ஒன்றால் அன்றது பொரியாய் உதிர்வுற வடிவாளி 385 வெய்தாயின பலவிட்டான்
வீரனும் வேறோர் படையிலன் மாறாவெங் கைதானே பொருபடையாகத் தொடர் காலார் தேரதன் மேலானான் ஒருகையால் அவன் வயிரத்திண்சிலை உற்றுப் பற்றலும் உரவோனும் இருகையால் எதிர்வலியாமுன் அது இற்று ஓடியது இவர்பொன் தோளின் சுரிகையால் அவன் உருவிக் குத்தலும் அதனைச் சொல் கொடுவரு தூதன் பொருகையால் இடை பிதிர்வித்தான் முறி பொறி ஓடும்படி பறியாவே வாளாலே பொரலுற்றான் இற்று அது மண்சோரமுனம் வயிரத்தின் தோளாலே பொரமுடுகிப் புக்கு இடை தழுவிக் கோடலும் உடல் முற்றும் நீளார் அயில் என மயிர் தைத்திடமணி நெடுவால் அவன் உடல் நிமிர்வுற்று மீளாவகை புடைசுற்றிக் கொண்டது பற்றிக் கொண்டனன் மேலானான் பற்றிக் கொண்டவன் வடிவாள் எனஒளிர் பல்லிற்றுக நிமிர்படர் கையால் எற்றிக் கொண்டலின் எதிர்நின்று மிழ்சுடர் மின்னின் இனம் விழுவன என்ன முற்றிக் குண்டலம் முதலாம் மணிஉக முழைநால் அரவு இவர் குடர்நால கொற்றத் திண்சுவல் வயிரக் கையொடு குத்திப் புடைஒரு குதிகொண்டான் நீத்தாய் ஓடின உதிரப்பெருநதி நீராகச் சிலைபாராக போய்த்தாழ் செறிதசை அரிசிந்தினபடி பொங்கப் பொருஉயிர் போகாமுன் 386 மீத்தாம் நிமிர்சுடர் வயிரக் கைகொடு பிடியா விண்ணொடு மண்காணத் தேய்தான் ஊழியின் உலகேழ் தேயினும் ஒருதன் புகழ் இறை தேயாதான் புண்தாள் குருதியின் வெள்ளத் துயிர்கொடு புக்கார் சிலர் சிலர் பொதிபேயின் பண்டாரத் திடையிட்டார் தம்உடல் பட்டார் சிலர் சிலர் பயம் உந்தத் திண்டாடித் திசையறியா மறுகினர் சென்றார் சிலர் சிலர் செலவற்றார் கண்டார் கண்டதொர் திசையே விசைகொடு கால்விட்டார் படைகை விட்டார் மீனாய் வேலையை உற்றார் சிலர் சிலர் பசுவாய் வழிதொறும் மேய்வுற்றார் ஊனார் பறவையின் வடிவானார் சிலர் சிலர் நான் மறையவர் உருவானார் மானார் கண் இள மடவாராயினர் முன்னே தங்குழல் வகிர்வுற்றார் ஆனார்சிலர் சிலர் ஐயா நின்சரண் என்றார் நின்றவர் அரி என்றார் [ அட்சயன்வதைப்படலம் 32 , 33 , 35 40 ] அனுமாரை இந்திரசித்து எதிர்த்தல் விருத்தம் - 20 அவ்வழி அவ்வுரை கேட்ட ஆண்டகை வெவ்விழி எரியுக வெகுளி வீங்கினான் எவ்வழி உலகமும் குலைய இந்திரத் தெவ்வழிதர உயர்விசயச் சீர்த்தியான் ஏறினன் விசும்பினுக் கெல்லை காட்டுவ ஆறிரு நூறுபேய் பூண்ட ஆழித்தேர் கூறின கூறின சொற்கள் கோத்தலால் மீறின நெடுந்திசை பிளந்த தண்டமே 331 வேல் திரண்டனவும் வில்லுமிடைந்தவும் வெற்பென்றாலும் கூறிரண்டாக்கும் வாள்கைக்குழுவையும் குணிக்கல் ஆற்றேம் சேறிரண் டருகுசெய்யும் செறிமதச்சிறு கண்யானை ஆறிரண் டஞ்சு நூற்றின் இரட்டித்தேர்த் தொகையும் அஃதே ( பாசப்படலம் 1 , 3 , 6 ] -
அனுமார் இந்திரசித்தொடு பொருதல்
ஈண்டிவை நிகழ்வுழி இரவிதேர் எனத் தூண்டுறு தேரின் மேல் தோன்றும் தோன்றலை மூண்டுமுப் புரம்சுட முடுகும் ஈசனின் ஆண்டகை வனைகழல் அனுமன் நோக்கினான்
அக்காலை அரக்கரும் யானையும் தேரும்மாவும்
முக்கால் உலகம் ஒருமூன்றையும் வென்றுமுற்றிப்
புக்கானின் முன்புக்கு உயர் பூசல் பெருக்கும்வேலை
மிக்கானும் வெகுண்டோர் மராமரம் கொண்டு மிக்கான்
சிகை எழும் சுடர்வாளிகள் இராக்கதர் சேனை
மிகைஎழும் சினத்து அனுமன்மேல் விட்டான் , வெந்து
புகை எழுந்தன எரிந்தன கரிந்தன போத
நகை எழுந்தன குளிர்ந்தன வானுளோர் நாட்டம்
இச்சிரத்தையைத்தொலைப்பேன் என்று இந்திரன் பகைஞன்
பச்சிரத்தம் வந்தொழுகிட வானவர் பதைப்ப
வச்சிரத்தினும் வலியன வயிரவான் கணைகள்
அச்சிரத்தினும் மார்பினும் அழுத்தலும் அனுமான்
நீண்ட வீரனும் நெடுந்தடக் கைகளை நீட்டி
ஈண்டு வெஞ்சரம் எய்தன எய்திடா வண்ணம்
மீண்டு போய்விழ வீசிஆங்கவள் , மிடல் தடந்தேர்
பூண்ட யேயொடு சாரதி தரைப்படப் புடைத்தான்
ஊழிக்காற்றன்ன ஒருபரித்தேர் அவண் உதவ
பாழித் தோளவன் அத்தடந்தேர் மிசைப் பாய்ந்தான்
ஆழிப்பல்படை அனையன அளப்பருஞ் சரத்தால்
வாழிப் போர்வலி மாருதி மேனியை மறைத்தான்
உற்றவாளிகள் உரத்தடங்கின உகஉதறாக்
கொற்ற மாருதி மற்றவன் தேர்மிசைக் குதித்துப்
பற்றிவன் கையால் பறித்தெழுந்து உலகெலாம் பலகால்
முற்றிவென்றபோர் மூரிவெஞ்சிலையினை முறித்தான்
முறிந்த வில்லின் வல்லோசைபோய் முடிவதன் முன்னர்
மறிந்து போரிடை வழிக்கொள்வான் வயிர வாட்படையால்
செறிந்த வான்மலைகளைச் சிறகறச் செயிரா
எறிந்த இந்திரன் இட்ட வான்சிலையினை எடுத்தான்
நூறு நூறு போர்வாளி ஓர்தொடைகொடு நொய்தின்
மாறில் வெஞ்சினத்து இராவணன் மகன்சிலை வளைத்தான்
ஊறுதன் னெடுமேனியில் பலபடஒல்கி
ஏறுசேவகன் தூதனும் சிறிதுபோ திருந்தான்
உய்த்தவெஞ்சரம் உரத்தினும் கரத்தினும் ஒளிப்ப
கைத்த சிந்தையன் மாருதி நனிதவக் கனன்றான்
வித்தகன் சிலைவிடுகணை விசையினும் கடுகி
அத்தடம்பெரும் தேரொடும் எடுத்தெறிந் தார்த்தான்
கண்ணின் மீச்சென்ற மை இடைகலப்பதன் முன்னம்
எண்ணின் மீச்சென்று ஏறுழ்வலித்திறலுடை இகலோன்
புண்ணின் மீச்சென்று பொழிபுனல் பசும்புலால் பொடிப்ப
விண்ணின் மீச்சென்று தேரொடும் பார்மிசை வீழ்ந்தான்
விழுந்துபார் அடையாமுனம் மின்எனும் எயிற்றான்
எழுந்து மாவீசும் பெய்தினன் இடையவன் படையில்
செழுந்திண் மாமணித் தேர்க்குலம் யாவையும் சிதைய
உழுந்து பேர்வதன் முன் நெடுமாருதி உதைத்தான் [ பாசப்படலம் 23 , 27 , 33 , 42 46 , 50 - 52 ]
அனுமார் பிரமாஸ்திரத்தால் கட்டுண்டல் விருத்தம் -
பூவும்பூநிற அயினியும் தீபமும் புகையும் தாவில்
பாவனையால் கொடுத்து அருச்சனை சமைத்தான்
தேவுயாவையும் உலகமும் திருந்திய
தெய்வக் கோவில் நான்முகன் படைக்கலம் தடக்கையில் கொண்டான்
தணிப்பரும் பெரும்படைக்கலம் தழல்உமிழ் தறுகண்
பணிக்குலங்களுக்கு அரசினது உருவினைப் பற்றித்
துணிக்கஉற்று உயர் கலுழனும் துணுக்குறச் சுற்றிப்
பிணித்தது அப்பெரு மாருதி தோள்களைப் பிறங்க
திண்ணென் யாக்கையைத் திசைமுகன்படை ‘ சென்றுதிருக
அண்ணல் மாருதி அன்று தன் பின் சென்ற அறத்தின்
சண்ணின் நீரொடும் கனகதோ ரணித் தொடும்கடைநாள்
தண்ணென் மாமதி கோளொடும் சாய்ந்தெனச் சாய்ந்தான்
குரக்கு நல்வலம் குறைந்தது என்று ஆவலம் கொட்டி
இரைக்கும் மா நகர் எறிகடல் ஒத்தது எம்மருங்கும்
திரைக்கும் மாசுணம் வாசுகிஒத்தது தேவர்
அரக்கர் ஒத்தனர் மந்தரம் ஒத்தனன் அனுமான்
வந்திரைத்தனர் மைந்தரும் மகளிரும் மழைபோல்
அந்தரத்தினும் விசும்பினும் திசைதொறும் ஆர்ப்பார்
முந்திஉற்ற பேர்உவகைக்கு ஓர்கரையிலை மொழியின்
இந்திரன் பிணிப்புண்டநாள் ஒத்தது அவ் இலங்கை [ பாசப்படலம் 54 , 56 , 57 , 60 , 62 )
எய்யுமின் ஈருமின் எறிமின் போழுமின்
கொய்யுமின் குடரினைக்கூறு கூறுகள்
செய்யுமின் மண்ணிடைத் தேய்மின் தின்னுமின்
உய்யுமேல் இல்லை நம் உயிர் என்று ஓடுவார்
நச்சடை படைகளால் நலியும் ஈட்டதோ
வச்சிரஉடல் மறிகடலின் வாய்மடுத்து
உச்சியின் அழுத்து மின் உருத்ததன்றெனின்
குச்சிடை இடுமெனக் கிளக்கின்றார் சிலர்
ஓங்கலம் பெருவலி உயிரின் அன்பரை
நீங்கலம் இன்றொடு நீங்கினாம்பினி
ஏங்கலம் இவன்சிரத்து இருந்தலால்திரு
வாங்கலம் என்றழும் மாதரார்பலர்
திண்டிறல் அரக்கர் தம் செருக்குச் சிந்துவான்
தண்டலில் தன்னுருக் கரந்ததன் மையான்
மண்டமர் தொடங்கினன் வானரத்து உருக்
கொண்டனன் அந்தகன்சொல் என்றார்பலர்
கயிலையின் ஒரு தனிக் கணிச்சி வானவன்
மயிலியல் சீனதயின் கற்பின் மாட்சியால்
எயிலுடைத் திருநகர் சிதைப்ப எய்தினன்
அயிலெயிற் றொருகுரங்காய் என்பார் பலர் ( பிணிவீட்டுபடலம் 1 , 3 , 5 , 13 , 15 ]
இராவணன் கொலுவிற்றிருத்தல்
தலங்கள் மூன்றிற்கும் பிறிதொருமதி தழைத்தென்ன
அலங்கல் வெண்குடைத் தண்ணிழல் அவிர் ஒளிபரப்ப
வலங்கொள் தோளினான் பண்ணின்றும் வானுற எடுத்த
பொலங்கொள் மாமணி வெள்ளியங் குன்றெனப்பொலிய
மரகதக் கொழுங்கதிரொடு மாணிக்க நெடுவாள்
நரகதேயத்துள் நடுக்குரு இருளையும் நக்க
சிரம் அனைத்தையும் திசைதொறும் திசைத்தொறும் செலுத்தி
உரகர்கோன் இனிதரசு வீற்றிருந்தனன் ஒப்ப ஏகநாயகன்
தேவியை எதிர்ந்ததன் பின்னை நாகர்வாழ் இடம் முதல் என நான்முகன்
வைகும் மாகமஈல் விசும்பீறு எனநடுவண வரைப்பில் தோகை மாதர்கள்
மைந்தரின் தோற்றினர் சுற்ற மாறளாவிய மகரந்த நறவுண்டு மகளிர்
வீறளாவிய முகிழ்முலை மெழுகிய சாந்தின் சேறளாவிய
சிறுநறுஞ் சீகரத் தென்றல் ஊறளாவிய கடுவென உடலிடை கடுவென உடலிடை நுழைய திங்கள் வாணுதல் மடந்தையர் சேயரிகிடந்த அங்கயத் தடந்தா மரைக்கு அலரியோன் ஆகி வெங்கண் வானவர் தானவர் என்றிலர் விரியாப் பொங்கு கைகளாம் தாமரைக்கு இந்துவே போன்று
இருந்த எண்டிசைக்கிழவனை மாருதி எதிர்ந்தான்
கருந்திண் நாகத்தை நோக்கிய கலுழனின் கனன்றான்
திருந்து தோளிடை வீக்கிய பாசத்தைச் சிந்தி
உருந்து நஞ்சு போல்பவன் வயின்பாய் வென் என்றுடன்றான் [பிணிவீட்டுப்படலம் 44 , 48 , 49 , 50 ]
அனுமாரை ராவணன் வினாவுதல்
நோக்கிய கண்களால் நொ றில் கனற்பொறி
தூக்கிய அனுமன் மெய்ம் மயிர் சுறுக்கொள்
தாக்கிய நகையொடும் தவழ்ந்த வெம்புகை
வீக்கிய அவனுடல் விசித்த பாம்பினே அன்ன
ஓர் வெகுளியன் அமரர் ஆதியர் துன்னிய துன்னலர்
துணுக்கம் சுற்றுற என் இவண் வரவுநீ யாரை என்றவன்
தன்மையை வினாயினான் கூற்றின் தன்மையான் நேமியோ
குலிசியோ நெடுங்கணிச்சியோ தாமரைக் கிழவனோ
தறுகண் பல் தலைப் பூமிதாங் கொருவனோ பொருது
முற்றுவான் நாமமும் உருவமும் கரந்து நண்ணினாய் ( பிணிவீட்டுபடலம் 63-68 )
அனுமார் இராவணனுக்கு விடையும் மதியும் கூறல்
சொல்லிய அனைவரும் அல்லன் சொன்ன அப்
புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலென்
அல்லியங் கமலமே அனைய செங்கண் ஓர்
வில்லிதன் தூதன்யான் இலங்கை மேயினேன்
அனையவன் யாரென அறிதியாதியேல்
முனைவரும் அமரரும் மூவர் தேவரும்
எனையவர் எனையவர் யாவர் யாவையும்
நினைவரும் அருவினை முடிக்க நின்றுளோன்
மூலமும் நடுவும் ஏறும் இல்லதோர் மும்மைத் தாய
காலமும் கணக்கும் நீத்த காரணன் கைவில் ஏந்தி
சூலமும்திகிரி சங்கும் கரகமும் துறந்து தொல்லை
ஆலமும் மலரும் வெள்ளிப்பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான்
அன்னவற் கடிமைசெய்வேன் நாமமும் அனுமன் என்பேன்
நன்னுதல் தன்னைத்தேடி நாற்பெருந்திசையும் போந்த
மன்னரில் தென்பால்வந்த தானைக்கு மன்னன் வாலி
தன்மகன் அவன் தன் தூதன் வந்தனென் தமியேன் என்றான்
அஞ்சலை அரக்க பார்விட்டந்தரம் அடைந்தான் அன்றே
வெஞ்சினவாலி மீளான் வாலும் போய் விளிந்ததன்றே
அஞ்சன மேனியான் தன் அடுகணை ஒன்றால் மாழ்கித்
துஞ்சினன் எங்கள் வேந்தன் சூரியன் தோன்றல் என்றான்
தூது வந்தது சூரியன் கால்முளை
ஏது ஒன்றிய நீதி இயைந்தன
சாது என்றுணர் கிற்றியேல் தக்கன
கோது இறந்தன நின்வயிற் கூறுவாம்
போய்இற்றீர் நும்புலன் வென்று போற்றிய
வாயில் தீர்வரிதாகிய மா தவம்
காயின் தீர்வருங்கேடு அருங்கற்பினாள்
தீயின் தூயவளைத் துயர் செய்ததால்
திறம் திறம்பிய காமச் செருக்கினால்
மறந்து தத்தம் மதியின் மயங்கியார்
இறந்து இறந்து இழிந்து ஏறுவதேயலால்
அறம் திறம்பினர் யாருளர் ஆயினார் .
சை தன்மையினில் பிறர் இல்லினை நச்சி நாளும் நரையுற நாணிலன்
பச்சைமேனி புலர்ந்து பழிப்படூஉம் கொச்சை ஆண்மையும் சீர்மையிற் கூடுமோ
புரம்பிழைப்பருந் தீப்புகப் பொங்கியோன்
நரம்பிழைத்த நின்பாடலின் நல்கிய
வரம்பிழைக்கும் மறைபிழை யாதவன்
சரம்பிழைக்கும் என்றெண்ணுதல் சாலுமோ
ஈறில் நாண்உக எஞ்சலில் நற்றிரு
நூறி நொய்தினை ஆகி நுழைதியோ
வேறும் இன்னும் நகையாம் வினைத்தொழில்
தேறினார் பலர் காமிக்கும் செவ்வியோய்
ஆதலால் தன் அரும்பெரும் செல்வமும்
ஓதுபல் கிளையும் உயிரும் பெறச்
சீதையைத்தருக என்று எனச் செப்பினான்
சோதியான் மகன் நிற்கெனச் சொல்லினான் [வீட்டுப்படலம் 86 , 88 , 91 , 94 , 98 , 99 , 101 ]
அனு மானரக் கொல்லாமல் ராவணனை விபீஷணர் விலக்குதல்
என்னும் மாத்திரத்து ஈண்டெரி நீண்டுக
மின்னும் வாளெயிற்றன் சினம்வீங்கினான்
கொல்மின் என்றனன் கொல்வியர் சேர்தலும்
நில்மின் என்றனன் வீடணன் நீதியான் அந்தணன்
உலகம்மூன்றும் ஆதியின் அறத்தின் ஆற்றல் தந்தவன்
அன்புக்கான்ற தவநெறி உணர்ந்து தக்கோய் இந்திரன்
கருமம் ஆற்றும் இறைவன் நீ இயம்பு தூது வந்தனென்
என்ற பின்னும் கோறியோ மறைகள் வல்லாய்
பூதலப் பொருப்பின் அண்டப் பொகுட்டினுள் புறத்துள் பொய்தீர்
வேதமுற்றியங்கு வைப்பின் வேறுவேறிடத்து வேந்தர்
மாதரைக் கொலைசெய்தார்கள் உளர் எனவரினும் வந்த
தூதரைக்கொன்று ளார்கள் யாவரே தொல்லை நல்லோர்
பகைப்புலன் நணுகி உய்த்தார் பகர்ந்தது பகர்ந்து பற்றார்
மிகைப்புலன் அடக்கி மெய்மை விளம்புதல் விரதம் பூண்ட
தகைப்புலக் கருமத்தோரைக் கோறலின் தக்கார் யார்க்கும்
நகைப்புலன் பிறிதொன்றுண்டே நங்குலம் நவையின்றாமே
முத்தலை எஃகன்மற்றை முராந்தகன் முனிவன் முன்னா
அத்தலை நம்மைநோனா அமரர்க்கும் நகையிற்றாமால்
எத்தலை உலகும் காக்கும் வேந்த நீவேற்றோர் ஏவ
இத்தலை எய்தினானைக் கொல்லுதல் இழுக்கம் இன்னும்
இளையவள் தன்னைக் சொல்லாது இருசெவி மூக்கொடீர்ந்து
விளைவுரை என்றுவிட்டார் வீரராய் மெய்ம்மை ஓர்வார்
களைதியேல் ஆவிநம்பால் இவன்வந்து கண்ணின் கண்ட
அளவுரை யாமல் செய்தியாதி என்று அமையச் சொன்னான் (பிணிவீட்டுப்படலம் 105 , 107-111 ]
அனுமார் வாலில் தீசுடாமல் அக்கினியைச் சீதை வேண்டல்
நல்லது உரைத்தாய் நம்பி இவன் நவையே செய்தான் ஆனாலும்
கொல்லல் பழுதே போயவரைக் கூறிக் கொணர்தி கடிதென்னா
தொல்லை வாலை மூலமறச் சுட்டுநகரைச் சூழ்போக்கி
எல்லை கடக்க விடுமின்கள் என்றான் நின்றார் இரைத்தெழுந்தார்
மண்ணிற்கண்ட வானவரை வலியின் கவர்ந்த வரம்பெற்ற
எண்ணற்கரிய ஏனையரை இகலின் பறித்த தமக்கியைந்த
பெண்ணிற்கிசையும் மங்கலத்தில் பிணித்தகயிறே இடைபிழைத்த
கண்ணிற் கண்டவன்பாசம் எல்லாம் இட்டுக்கட்டினார்
வேந்தன் கோயில் வாயிலொடு விரைவிற்கடந்து வெள்ளிடையில்
போந்து புறம் நின் றிறைக்கின்ற பொறைதீர் மறவர் புறஞ்சுற்ற
ஏந்து நெடுவால் கிழிசுற்றி முற்றும்தோய்த்தார் இழுதெண்ணெய்
காந்து கடுந்தீக் கொளுத்தினார் ஆர்த்தார் அண்டம் கடிகலங்க
ஆர்த்தார் அண்டத்தப் புறத்தும் அறிவிப்பார்போல் அங்கோடிங்கு
ஈர்த்தார் முரசம் எற்றினார் இடித்தார் தெழித்தார் எம்மருங்கும்
பார்த்தார் ஓடிச் சானகிக்கும் பகர்ந்தார் அவளும் உயிர்பதைத்தாள்
வேர்த்தா லுலந்தாள் விம்மினாள் விழுந்தா ளழுதாள்
வெய்து பிர்த்தாள் தாயே அனைய கருணையான் துணையை
ஏதும் தகவில்லா நாயே அனைய வல்லரக்கர் நலியக் கண்டால் நல்காயோ
நீயே உலகுக் கொருசான்று நிற்கேதெரியும் கற்பதனில்
தூயேன் என்னின் தொழுகின்றேன் எரிபே அவனைச் சுடல் ! என்றாள் [ HE வீட்டுபடலம் 112 , 115 , 118 , 121 , 122 ]
அனுமார் இலங்கையைக் கொளுத்துதல்
மற்றினிப் பலஎன் வேலை வடஅனல்புவி அளாய
கற்றைவெங் கனலிமற்றைக் காயத்தீ முனிவர்காக்கும்
முற்றுறு மும்மைச் செந்தீ முப்புரம் முருங்கச் சுட்ட
கொற்றவன் நெற்றிக் கண்ணின் வன்னியும் குளிர்ந்தவன்றே
வெற்பினால் இயன்ற அன்ன வாலினை விழுங்கி
வெந்தீ நிற்பினும் சுடாது நின்ற நீர்மையை நினைவில்நோக்கி
அற்பின்றார் அறாதசிந்தை அனுமனும் சனகன் பாவை
கற்பினால் இயன்ற தென்னப் பெரியதோர் களிப்பன் ஆனான்
துன்னலர் புரத்தை முற்றும் சுடு தொழில் தொல்லை யோனும்
பன்னின பொருளும் நாணப் பாதகர் இருக்கை பற்ற
மன்னனை வாழ்த்திப் பின்னை வயங்கெரி மடுப்பென் என்னா
பொன்னகர் நேதன்போர் வாலினைப் போகவிட்டான் [ பிணிவீட்டுபடலம் 124, 126 , 130
கொடியைப் பற்றி விதானம் கொளுத்தியே
நெடிய தூணைத் தழுவி நெடுஞ்சுவர்
முடியச் சுற்றி முழுதும் முறுக்கிற்றால்
கடிய மாமனை தோறும் கடுங்கனல்
வாசல் இட்ட எரிமணி மாளிகை மூசமுட்டி முழுதும் முருக்கலால்
ஊசலிட்டென ஓடி உலைந்துளை பூசலிட்ட இரியல் புரமெலாம்
வானத்தை நெடும்புகை மாய்த்தலால் போனதிக் கறியாது புலம்பினார்
தேனகத்த மலர்பல சிந்திய கானகத்து மயில் அன்ன காட்சியார்
நீலம் நின்ற நிறத்தன கீழ்நிலை மாலின் வெஞ்சின யானையை மானுவ
மேல் விழுந்தெரி முற்றும் விழுங்கலால் தோலுரிந்து கழன்றன
தோல் எலாம் பொடித் தெழுந்த பெரும்பொறி போலவன் இடிக்
குலங்களின் வீழ்தலும் எங்கணும் வெடித்தவேலை வெதும்பிட
மீன்குலம் துடித்து வெந்து புலர்ந்துயிர் சோர்ந்தவால் பருகுதீ மடுந் துள்ளுறப் பற்றலால் அருகு நீடிய ஆடகத் தாரைகள் கி வேலையின் ஊடுழக்குற்றன
திருகு பொன்னெடுந் தண்டின் திரண்டவால் த பூக்கரிந்து முறிபொறியாய் அடை நாக்கரிந்து சினைநறும் சாம்பராய் மீக்கரிந்து நெடும்பணை வேர்உறக் காக்கரிந்து கருங்கரி யானவே
தளைகொளுத்திய தாவெரி தாமணி முளைகொளுத்தி முகத்திடை மொய்த்தபேர்
உளைகொளுத்த உலந்துலை வுற்றன வளைகுளப்பின் மணிநிற வாசியே
எழுந்து பொற்றலத்து ஏறலின் நீள் புகைக் கொழுந்து சுற்ற உயிர்ப்பிலர் கோளுற
அழுந்து பட்டுளர் ஒத்து அயர்ந்தார் அழல் விழுந்து முற்றினர்
கூற்றை விழுங்குவார் கோசிகத் துகில் உற்ற கொழுங்கனல் தூசின் உத்தரி கத்தொடு சுற்றுரு வாசமைக்குழல் பற்ற மயங்கினார் பாசிழைப் பரவைப்படர் அல்குலார் பஞ்சரத்தொடு பசுங்கிளி வெந்துபதைப்ப அஞ்சனக் கண்ணின் அருவிநீர் முலைமுன்றில் அலைப்ப குஞ்சரத்தன்ன கொழுநரைத் தழுவுறும் கொதிப்பால் மஞ்சிடைப் புகும்மின் னென புகையிடை மறைந்தார்
அகருவும் நறுஞ்சாந்தமும் முதலிய அனேகம் புகரில் நல்மரத்து உறுவெறி உலகெலாம் போர்ப்பப் பகரும் ஊழியில் கால வெங்கடுங் கனல்பருகும் மகர வேலையின் வெந்தன நத்தன வனங்கள் கரிந்து சிந்திடக் கடுங்கனல் தொடர்ந்து உடல்கதுவ உரிந்த மெய்யினர் ஓடினர் நீரிடை ஒளிப்பார்
விரிந்த கூந்தலும் குஞ்சியும் மிடைதலின் தானும் எரிந்து வேகின்றது ஒத்தது எறிதிரைப் பரவை மருங்கின்மேல் ஒருமகவு கொண்டு ஒருதனிமகவை அருங்கையாற் பற்றி மற்றொருமகவு பின் அரற்ற நெருங்கி நீண்டிடு நெறிகுழல் சுறுக்கொள நீங்கிக் கருங்கடல் தலை வீழ்ந்தனர்
அரக்கியர் கதறி வில்லும் வேலும் வெம்குந்தமும் முதலிய விறகாய் எல்லுடைச் சுடர் எனப் புகர் எஃகெலாம் உருகித் தொல்லை நன்னிலை தொடர்ந்த பேருணர் வன்ன தொழிலால் சில்லி உண்டையின் திரண்டன படைக்கலத் திரள்கள் நீரைவற்றிடப் பருகி மாநெடுநிலந் தடவித் தாருவைச் சுட்டு மலைகளைத்தழல் செய்து தனிமா மேருவைப்பற்றி எறிகின்ற கால வெங் கனல்போல் ஊரை முற்றுவித்து இராவணன் மனைபுக்கது உயர்தீ சூழும்வெஞ்சுடர் தொடர்ந்திட யாவரும் தொடரா ஆழிவெஞ்சினத்து ஆண்தொழில் இராவணன் மனையில் ஊழிவெங் கனல்உண்டிட உலகமென்றுயர்ந்த ஏழும் வெந்தென எரிந்தன நெடுநிலை ஏழும் அனைய காலையில் அரக்கனும் அரிவையர் குழுவும் புனைமணிப்பொலி புட்பக விமானத்துப் போனார் நினையும் மாத்திரை யாவரும் நீங்கினர் நினையும் வினையிலா மையின் வெந்ததவ் விலங்கல் மேல் இலங்கை
( இலங்கை எரியூட்டுபடலம் 1 , 2 , 5 , 8 , 10 , 11 , 16-19 , 21. 23 27, 28 , 29 , 32 , 35 , 37 ]
வானரவீரர்கள் திரும்புகாலையில் மதுவனம் அழித்தல் -
மைந்நாகம் என்னநின்ற குன்றையும் மரபின் எய்தி
கைந்நாகம் அனையோன் உற்றது உணர்த்தினன் கணத்தின் காலை
பைந்நாகம் நிகர்க்கும் வீரர்தன் நெடு வரவு பார்க்கும்
கொய்ந்நாகம் நறந்தேன் சிந்தும் குன் றிடைக் குதியும் கொண்டான்
தேனொடு கிழங்கும் காயும் நறியன அரிதின்தேடி
மேல்முறை வைத்தேம் அண்ணல் நுகர்ந்தனை மெலிவு தீர்தி
மானவாண் முகமே நங்கட்கு உரைத்தது மாற்றம்
என்று தாம் நுகர் சாகமெல்லாம் முறைமுறை சிலவர் தந்தார்
வாலிகாதலனை முந்தை வணங்கினன் எண்கின் வேந்தை
காலுறப் பணிந்து பின்னை கடன் முறை கடவோர்க்கெல்லாம்
ஏலுறஇயற்றி ஆங்கணிருந்து இவணிருந்தோர்க்கெல்லாம்
ஞாலநாயகன் தேவி சொல்லினள் நன்மை என்றான் [ திருவடி தொழுத படலம் 2 , 5 , 7 ]
அங்கதன் தன்னை அண்மி அனுமனும் இருகை கூப்பி
கொங்கு தங்கு அலங்கள் மார்ப் நின்னுடை குரக்குச் சேனை
வெங்கதம் ஒழிந்து சால வருந்தின வேடை ஓடி
இங்கிதற் களித்தல் வேண்டும் இறாலுமிழ் பிரசம் என்றான்
நன்றென அவனும் நேர்ந்தான் நரலையும் நடுங்க ஆர்த்துச்
சென்றுறு பிரசந்தூங்கும் செழுவனம் அதனினூடே
ஒன்றின் முன் ஒன்று பாயும் ஒடிக்கும் மேன்பிரசமெல்லாம்
தின்றுதின் றுவகை கூரும் தேன் நுகர் அளியின் மொய்த்தே
முனியுமாம் எம்மை எங்கோன் என்றவர் மொழிந்து போந்து
கனியும் மாமது வனத்தைக் கட்டழித் திட்டதின்று
நனிதரு கவியின் தானை நண்ணலார் செய்கை நாண
இனிஎம்மால் செயலின் றென்னா ததிமுகற் கியம்பினாரே
கேட்டவன் யாவரே அம் மதுவனம் கேடு சூழ்ந்தார்
காட்டிர் என்றெழுந்தான் அன்னார் வாலிசேய் முதலகற்றோர்
ஈட்டம் வந்திறுத்ததாக அங்கதன் ஏவல் தன்னால்
மாட்டின கவியின் தானை மதுவளர் உலவை ஈட்டம் ( மிகைப்பாடல்கள் 11 - 3 , 4 , 7 , 8 ]
சீதையைத் தேடப்போனவர்களைக் குறித்து ஸ்ரீராமர் இரங்கல்
குறித்தநாள் இகந்தன குன்றத் தென் திசை
வெறிக்கருங் குழலியை நாடல் மேயினார்
மறித்திவண் வந்திலர் மாண்டுளார் கொலோ
பிறித்தவர்க் குற்றுள தென்னை பெற்றியோய்
மாண்டனள் அவள் இவள்மாண்ட வார்த்தையை
மீண்டவர்க் குரைத்தலின் விளிதல் நன்று எனாம்
பூண்டதோர் துயர்கொடு பொன்றி னார்கொலோ
தேண்டினர் இன்னமும் திரிகின் றார்கொலோ
கண்டனர் அரக்கரை கறுவு கைம்மிக
மண்டமர் தொடங்கினார் வஞ்சர் மாயையால்
விண்டலம் அதனில் மேயினர் கொல் வேறு இலாத்
தண்டலில் நெடுஞ்சிறைத் தளைப்பட்டார் கொலோ
கூறின நாளவர் இருக்கை கூடலம்
ஏறல் அஞ்சுதும் என இன்ப துன்பங்கள்
ஆறினார் அருந்தவம் அயர்கின் றார்கொலோ
வேறவர்க் குற்றதென் விளம்புவாய் என்றான் ( திருவடிதொழுதபடலம் 17 - 20 ]
ஸ்ரீராமருக்கு அனுமார் சீதையின் இருப்புக் கூறல்
என்புழி அனுமனும் இரவி என்பவன்
தென்புறத் துளன் எனத் தெரிவ தாயினான்
பொன்பொழி தடக்கையப் பொருவில் வீரனும்
அன்புறு சிந்தையன் அமைய நோக்கினான்
எய்தினன் அனுமன் எய்தி ஏந்தல் தன்
மொய்கழல் தொழுகிலன் முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன் கையினன்
வையகம் தழீஇ நெடி திறைஞ்சி வாழ்த்தினான்
கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்
தெண்டிரை அலைகடல் இலங்கைத் தென்னகர்
அண்டர் நாயக இனித் துறத்தி ஐயமும்
பண்டுள துயரும் என்று அனுமன் பன்னுவான்
உன் பெருந்தேவி என்னும் உரிமைக்கும் உன்னைப் பெற்ற
மன்பெரு மருகி என்னும் வாய்மைக்கும் மிதிலைமன்னன்
தள்பெருந்தனயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள்
என் பெருந் தெய்வம் ஐயா இன்னமும் கேட்டி என்பான்
உன்குலம் உன்னதாக்கி உயர்புகழ்க் கொருத்தியாய
தன்குலம் தன்னதாக்கித் தன்னைத் தனிமை செய்தான்
வன்குலம் கூற்றுக் கீந்து வானவர் குலத்தை வாழ்வித்து
என்குலம் எனக்குத் தந்தாள் என் இனிச் செய்வதெம் மோய்
விற் பெருந் தடந்தோள் வீர வீங்குநீர் இலங்கை
வெற்பில் நற்பெருந் தவந்தளாய நங்கையைக் கண்டேன் அல்லேன்
இற்பிறப் பென்பதொன்றும் இரும்பொறை என்பதொன்றும்
கற்பெனும் பெயரதொன்றும் களிநடம் புரியக்கண்டேன்
கண்ணினும் உளை நீ தையல் கருத்தினும் உளை நீ வாயின்
எண்ணினும் உளைநீ கொங்கை இணைக்குவை தன்னின் ஓவாது
அண்ணல் வெங்காமன் எய்த அலரம்பு தொளைத்த ஆறாப்
புண்ணினும் உளை நீ நின்னைப் பிரிந்தமை பொருந்திற்றாமோ
வேலையுள் லங்கை என்னும் விரிநகர் ஒருசார் விண்தோய்
காலையும் மாலைதானும் இல்லதோர் கனகக் கற்பச்
சோலையங் கதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய
சாலையில் இருந்தாள் ஐய தவம் செய்த தவமாம்
தையல் தையலை வணங்கற் கொத்த இடைபெறும் தன்மை நோக்கி ஐய ,
யான் இருந்த காலை அலங்கல் வேல் இலங்கை வேந்தன்
எய்தினன் இரந்துகூறி இறைஞ்சினன் இருந்த நங்கை
வெய்துரை சொல்லச் சீறிக்கோறல் மேற்கொண்டு விட்டான்
ஆயிடை அணங்கின் கற்பும் ஜயநின் அருளும்
செய்ய தூய நல் லறனும் என்றிங்கினையன தொடர்ந்து காப்ப
போயினன் அரக்கிமாரைச் சொல்லுமின் பொதுவின் என்றாங்
கேயினன் அவரெலாம் என்மந்திரத் துறங்கி யிற்றார்
அன்னதோர் பொழுதில் நங்கை ஆருயிர் துறப்பதாக
உன்னினள் கொடிஒன் றேந்திக் கொம்பொடும் உறைப்பச்சுற்றி
தன்மணிக் கழுத்திற் சாத்தும் அளவையில் தடுத்துநாயேன்
பொன்னடி வணங்கிநின்று உன்பெயர் புகன்ற போழ்தில்
அறிவுறத் தெரியச்சொன்ன பேரடை யாளம் யாவும்
செறிவுற நோக்கி நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை
முறிவற எண்ணி வண்ண மோதிரம் காட்டக் கண்டாள்
இறுதியின் உயிர் தந்தீயும் மருந்தொத்தது அனையது எந்தாய்
வாங்கிய ஆழிதன்னை வஞ்சர்ஊர் வந்ததாம் என்று
ஆங்குயர் மழைக்கண்ணீரால் ஆயிரம் கலசம் ஆட்டி
ஏங்கினள் இருந்ததல்லால் இயம்பலள் எய்த்தமேனி
வீங்கினள் வியந்ததல்லால் இமைத்திலள் உயிர்ப்பு விண்டாள் ( திருவடிதொழுதபடலம் 21 , 22 , 25 , 26 , 28 , 29 , 30 , 31 , 32 , 37 , 38 , 39 , 41 , 4
ஸ்ரீராமர் சீதாதேவி சூடாமணி கண்டு மகிழ்தல் கொச்சகம் -
பையயப் பயந்தகாமம் பரிணமித் துயர்ந்து பொங்கி
மெய்யுற வெதும்பி உள்ளம் மெலிவுறு நிலையைவிட்டான்
ஐயனுக்கு அங்கிமுன்னர் அங்கையால் பற்றும் நங்கை
கையெனல் ஆயிற்றன்றே கைபுக்க மணியின் காட்சி பொடித்தன
உரோமம் போந்து பொழிந்தன கண்ணீர் பொங்கித் துடித்தன
மார்பும் தோளும் தோன்றின வியர்வின் துள்ளி மடித்தது
மணிவாய் ஆவி வருவது போவதாகித் தடித்தது
மேனிஎன்னே யார்உளர் தன்மைதேர்வார் ( திருவடிதொழுதபடலம் 47 , 48 )
ஸ்ரீராமர் தென்சமுத்திரக் கரையைக் காணுதல்
எழுகவெம் படைகள் என்றான் ஏஎனும் அளவில் எங்கும்
முழுமுரசு எற்றிக் கொற்ற வள்ளுவர் முடுக்கமுந்திப்
பொழிதிரை அன்னவேலை புடைபரந்த தென்னப் பொங்கி
வழுவலில் வெள்ளத்தானை தென்திசை வளர்ந்ததன்றே
அந்நெறி நெடிது செல்ல அரிக்குலத் தரசனோடும்
நல்நெறிக்குமரர் போகநயந்து டன் புணர்ந்த சேனை
இந்நெடும் பழுவக் குன்றில் பகலெலாம் இறுத்த பின்னர்ப்
பன்னிரு பகலிற்சென்று தென் திசைப் பரவை கண்டார் [ திருவடி தொழுதபடலம் 50 , 52 ]
என்றுரைத் தெழுந்தவேலை மாருதி இருகை கூப்பிப்
புன்தொழிற் குரங்கெனாது எள்தோளிடைப் புகுதி என்னா
தன் தலைபடியிற் றாழ்ந்தான் அண்ணலும் சரணம் வைத்தான்
வன் திறள் வாலிசேயும் இளவலை வணங்கிச் சொன்னான்
நீ இனி என்றன் தோள்மேல் ஏறுதி நிமல என்ன
வாய்புதைத் திறைஞ்சி நின்ற வாலிகா தலனைநோக்கி
நாயகற் கிளையகோவும் நன்றென அவன்றன் தோள்மேல்
பாய்தலும் தகைப்பில் தானை படர்நெறிப் படர்ந்ததன்றே [ மிகைப்பாடல்கள் 49 -- 2 , 3 ] 403
———————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply