பவாம்ஸ்து ஸ ஹ வைதேஹ்யா கிரிஸா நுஷூ ரம்ஸ் யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்வ பதச்ச தே -அயோத்யா -31-25-
பவாம்ஸ்து –
ஸ்ரீ ராமனே -தேவரீரோ
ஸ ஹ வைதேஹ்யா -ஸீதா பிராட்டியாரோடு கூட
கிரிஸா நுஷூ -மலைத் தாழ் வரைகளிலே
ரம்ஸ் யதே-விளையாடுவீர்
அஹம் ஜாக்ரத ஸ்வ பத –
அடியேன் விழித்துக் கொண்டும் தூங்கிக் கொண்டும் இருக்கிற உமக்கு
சர்வம் கரிஷ்யாமி-எல்லா அடிமைகளையும் செய்வேன் –
அவதாரிகை –
ஸ ப்ராது-என்கிற முன் ஸ்லோஹத்தாலே சரணம் புக்கால்
அந்த சரணா கதிக்குப் பலம் கைங்கர்யம் என்று
ஸ பிரகாரமாக பலத்தைச் சொல்லுகிறது இஸ் ஸ்லோகத்தாலே-
திரு அயோத்யையிலே வர்த்திக்கிற காலத்தில் அடிமை பூண்ட என்னோபாதி
அங்கு உள்ளாறும் அடிமை செய்ய –
நானும் விழுக்காட்டிலே அடிமை செய்யப் போந்த என்னை
வனவாசத்துக்கு கூடப் போவேனாக இசைந்த உபகார ச்ம்ருதியாலே
காட்டிலும் சர்வ அவஸ்தையிலும்
சர்வ சேஷ வ்ருத்திகளும் பண்ணக் கடவேன் –
என்னைக் கொண்டு எழுந்து அருளீர் என்கிறார் -என்றுமாம் –
பவாம்ஸ்து –
அடிமை செய்யப் பெறாது ஒழிந்த என்னைப் போல் அன்றியிலே
பூரணன் ஆகையாலே உமக்கு அடிமை கொள்ளா விடினும் செல்லும் –
ஆகிலும் என்னிடம் அடிமை கண்டால் விசேஷம் இ றே-
ஆனாலும் என்னுடைய ஸ்வரூப சித்யர்த்தமாக அடிமை கொண்டு அருள வேணும் –
ஸ ஹ வைதேஹ்யா –
அடிமை செய்யும் இடத்தில்
மிருக வதார்த்தமாக போகுமிடத்தில் சஹகரிக்குமது ஒழிய
பிராட்டியும் தேவரும் கூட எழுந்து அருளி இருக்கும் இருப்பிலே அடிமை செய்யக் கடவேன்-
கிரிஸா நுஷூ ரம்ஸ் யதே
அவளோடே கூடே அடிமை செய்யுமிடத்தில்
பர்ண சாலையில் எழுந்து அருளி இருக்கும் அடிமை செய்யும் அளவன்றிக்கே
ஜலக்ரீடை பண்ணி
மலைத் தாழ் வரைகளிலே ஒருவருக்கு ஒருவர் வெற்றி கொண்டாடி ரசிக்கும் அளவிலும் அடிமை செய்யக் கடவேன் –
த்வாம் அஹ ஸீதா பஹூ வாக்ய ஜாதம் -ஆரண்ய-63-12-என்றால் போலே –
அஹம் –
தாஸ்ய ரசங்களில் யான் ஒருவனாய் அடிமை செய்ய வேணும்
அவ்வவ அவஸ்தைகளில் அதுவே ஸ்வரூபமாக உடையனான நான் –
சர்வம் கரிஷ்யாமி –
மிருக யார்த்தமாகப் போகுமிடத்தில் கையும் வில்லுமாய் அடிமை செய்தும்
காயும் கிழங்கும் கல்லுமிடத்தில் -வெட்டுமிடத்தில் – கநித்ர பிட காதரனாய் -மண் வெட்டியும் கூடையும் சுமந்து –
இதம் மேத்யமிதம் ஸ்வாது -நிஷ்டப்தமித மக் நி நா ஏவ மாஸ்தே ஸ தர்மாத்மா சீதயா சஹ ராகவ -அயோத்யா -96-2-என்னும் இடத்தில்
மாம்ச பசனம் -பக்குவம் -பண்ணியும்
பர்ண சாலா நிர்மாணத்தில்
ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாமிதி மாம் வத -ஆரண்யம் -15-7-என்று ஆஜ்ஞ்ஞாபித்து
எல்லா அடிமை செய்தும்
மலைத் தாழ் வரைகளிலே ஜலக்ரீடை பண்ணும் இடத்தில்,வல்கலை -மரவுரி -பிழிந்து உலர்த்தியும்
ராஷசர் வேட்டையாடும் இடத்தில் காவலாய் இருந்தும்
சர்வ சேஷ வ்ருத்திகளும் பண்ணக் கடவேன் –
ஜாக்ரத ஸ்வ பதச்ச தே-
தேவரும் பிராட்டியும் கண் வளர்ந்து அருளும் போதும்
காட்டில் துஷ்ட சத்வங்களும் -பிராணிகளும் –
துஷ்ட பிரக்ருதியான ராஷச ஜாதியும் கிட்டாத படி
கையும் வில்லுமாய் நோக்கியும்
உணர்ந்து அருளின போது எல்லா அடிமை செய்தும் போரக் கடவேன் –
ப4வாம்ஸ்து ஸஹ வைதே3ஹ்யா கி3ரிஸாநுஷு ரம்ஸ்யதே |
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்3ரத: ஸ்வபதஶ்ச தே ||
பொழிப்புரை:
[ரகு குலத்தை ஆநந்திப்பவராய், மிகுந்த கீர்த்தியும் உடையவரான அந்த லக்ஷ்மணன்
தன் தமையனாரான ராமனின் திருவடிகளை நன்றாகப் பிடித்துக்கொண்டு,
ஸீதா பிராட்டியையும், பெரிய வீரத்தையுடைய ராமனையும் பார்த்து, கீழ்வருமாறு சொன்னார்]
ஶ்ரீராமனே! தேவரீரோ ஸீதாபிராட்டியோடு கூட மலைத்தாழ்வரைகளில் விளையாடுவீர்.
அடியேன், தேவரீர் விழித்துக்கொண்டிருக்கும் போதும், மற்றும் உறங்கிக்கொண்டிருக்கும் போதும்
எல்லா அடிமைகளும் செய்யவேண்டுவேன் ஆகவேண்டும்.
பரமபதத்திலும், திருவயோத்தியிலும் வாழும் போதும் அங்குள்ளார் பலரும் அடிமை செய்ய,
பரமபதத்திலிருந்து தேவரீர் திருவயோத்திக்கு எழுந்தருளிய போது, அடியேனையும் எப்படி அழைத்துப் போந்தீரோ,
அவ்வாறே திருவயோத்தியிலிருந்து வனவாஸம் செய்ய எழுந்தருளும் போதும் அடியேனை கூடவரும்படி அங்கீகரித்த படியால்,
தேவரீருக்கு எல்லா அடிமைகளும் செய்வேன். என்னைக் கூட்டிக்கொண்டு போகவேண்டும்
என்று சொல்வதாக இங்கே பொருள் கொள்ளலாம்.
தேவரீருக்கு அடிமை செய்யாவிடில் அடியேன் உயிர் தரியேன். அடியேனது ஸ்வபாவம் அடிமை செய்வதே.
அது எனது ஸ்வரூபநிரூபக தர்மம். தேவரீரோ நிறைவானவராதலால், அடியேனிடம் அடிமை பெறாவிடினும் உயிர்வாழ வல்லவர் ஆவீர்.
என்னுடைய ஶேஷத்வம் நிலைநிற்பதற்காக தேவரீர் கைங்கர்யம் கொண்டருள வேண்டும்.
காட்டில் மிருகங்களை வேட்டையாடச் செல்லும் நேரங்களில் மட்டுமின்றி,
ஸீதாப்பிராட்டியோடு எழுந்தருளியிருக்கும் இருப்பிலேயும் அடிமை கொண்டருள வேண்டும். மலைத்தாழ்வரைகளிலும், நதிஜலங்களிலும் விளையாடிக் களித்திருக்கும் காலங்களிலும்
இருவருமான சேர்த்தியிலும் அடிமை கொள்ள வேண்டும்.
லக்ஷ்மணா, உன்னை நோக்கி ஸீதாபிராட்டி பல வெற்றி வாக்கியங்களைச் சொன்னாள் என்று
[த்வாமாஹஸீதா பஹுவாக்யஜாதம்; ஆர.கா.63-12] ஒருவருக்கொருவர் வெற்றி கொண்டாடி ரஸிக்கும் போதும் கைங்கர்யம் செய்யக்கடவேன்.
அடிமைச் சுவைகளை நான் ஒருவனே அநுபவிக்கும்படி அடிமை கொள்ளவேண்டும்.
1.வேட்டையாடச் செல்லுமிடத்தில், கையும், வில்லும் கொண்டு அடிமை செய்வதும்,
2. காயும் கிழங்கும் வெட்டுமிடத்தில், மண்வெட்டியும் கூடையும் சுமந்து அடிமை செய்வதும்,
3. உண்ண எழுந்தருளும்போது, உணவினைப் பக்குவம் செய்தும்,
4. பர்ணசாலை கட்டியும்
5.ஜலக்ரீடை பண்ணும்போது, மரவுரியினைப் பிழிந்து உலர்த்தியும்
6. ராக்ஷஸர்களுடன் யுத்தம் செய்யும் போது, பிராட்டிக்குக் காவலாயிருந்தும்,
ஆக இப்படி எல்லா கைங்கர்யங்களுடன் செய்யக்கடவேன்.
தேவரீர் உறங்கும் போதும், காட்டில் துஷ்ட பிராணிகளும், துஷ்ட ஸ்வபாவர்களான ராக்ஷஸர்கள் அணுகாதபடியும்
கையிலே விற்கொண்டு ரக்ஷிப்பேன்.
———————————————————————————————————
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
Leave a Reply