பிராட்டியும் ஸ்ரீ விபீஷணாழ்வானும் இராவணனை நோக்கி நலத்தைக் கூறினாற்போன்று இருப்பது ஒன்றேயன்றோ இவருடைய பரோபதேசம்
‘வெந்து அற்ற வீட்டிலே ‘ஒரு கம்பாகிலும் கிடைக்குமோ?’ என்று அவிக்கப் பார்ப்பாரைப் போன்று, நானும் நலத்தைக் கூறுவேன்’ என்கிறார்
ஒரு நாயகமாய் – தனி அரசாக. 3‘உலகங்கட்கு எல்லாம் தலைவன்’ எனப்படுகின்ற சர்வேசுவரனுடைய ஐஸ்வரியத்தைப் 4பௌண்ட்ரகவாசுதேவன் பின்பற்றினாற் போலே பின் பற்றுகிறவாற்றைத் தெரிவித்தபடி.
முந்திரிகை நிலம் உடையவனைப் போலே ஆயிற்று ஆள்வது.
எய்யென எழுபகை எங்கு மின்மையான்
மொய்யெனத் தினவுறு முழவுத் தோளினான்
வையக முழுவதும் வறிஞன் ஓம்புமோர்
செய்யெனக் காத்தினி தரசு செய்கின்றான்.’- என்பர் கம்பநாட்டாழ்வார். (அரசியற்பட. 12)
நினைப்பான் புகின் – நினைக்கப்புக்கால். ‘புகின்’ என்றதனால், 1கடலிலே இழிவாரைப்போல, (கடலிலே இழிவார் நீந்தித் தலைக்கட்ட ஒண்ணாதாப் போலே)நினைத்ததாய்த் தலைக்கட்ட ஒண்ணாதபடியாய் இருக்கிற இருப்பும், தாம் உலக வாழ்வினை நினையார் என்னுமிடமும் தோற்றுகின்றன
மருத்துவர்கள் பிழைத்தாரை எண்ணுமாறு போன்று இறந்தவர்களை எண்ணுகிறது என்? வாழ்ந்தவர்களும் சிலர் இலரோ?’ என்ன, ‘அது இருந்தபடி கேட்கலாகாதோ பின்னை?’ என்கிறார்-அன்று முதல் இன்று அறுதியா வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பதில்லை,’ என்றதனைக் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.
நாழி அரிசி பெற்று வாழப்புக்கவாறே ஒரு வெள்ளாட்டியையும் சம்பாதித்து, ‘முதலியார்’ என்னவும் பண்ணி, ‘அடிசில் உண்ணாநின்றார்’ என்னவும் பண்ணும். ஆர்ந்த பின் – கண்டது அடைய இட்டு வயிற்றினை நிரப்பி, உதிரம் குடித்து வாய்விட்ட அட்டை போலே பெயரவும் திரியவும் மாட்டாதே கிடந்து புரளாநிற்குமே? அவ்வளவிலே இவனிடத்தில் அன்புடையார்களாய் இருப்பார் பெண்டுகள் சிலர் வந்து, ‘உடம்பு பதர் போலே இருந்தது ; இதுகொண்டு எங்ஙனம் காக்கப்படுமவர்களான எங்களை நோக்கப் பார்க்கிறது?’ என்பர்கள் ; அதனைக் கேளா ‘நாம் உண்டிலேமோ!’ என்று இவன் தானும் மயங்கும்
கண்ணை இட்டுக் கண்ணைப் பார்த்தாற்போலே இருப்பது ஒன்று ஆதலின்,(தர்மபூத ஞானத்தாலே ஞான சொரூபனான ஆத்துமாவைப் பார்த்தலைக் குறித்தபடி.) 3‘குறுக’ உணர்வத்தொடு மிக நோக்கி என்கிறார். இதனால், முதல் தன்னிலே ஆத்துமாவின் பக்கலிலே சேர்த்திய மனத்தினையுடையவனுக்கே ஆத்தும அனுபவத்தில் அதிகாரம் உள்ளது என்பதனைத் தெரிவித்தபடி.
எல்லாம் விட்ட – 4திருமகள் கேள்வன் பெரிய திருவடி திருத்தோளிலே தோளும் தோள் மாலையுமாய் வந்து நின்றாலும், சாணகச் சாற்றைப் போன்று சுத்தி மாத்திரத்தையே பற்றிக்கொண்டு, இனிமையிலே நெஞ்சு செல்லாதபடி அதனையும் விடுவது.
இராம விரகத்தில் திருவயோத்தியில் உள்ளார் கூப்பிட்டாற்போலே, தாமும் தம்முடைய உறுப்புகளுமாய்ப் பெருவிடாய்ப்பட்டுக் கூப்பிட்டார், ‘முடியானே’ என்ற திருவாய்மொழியில்;
மற்றைய விஷயங்களினுடைய தோஷங்களைச் சொல்லுதல் முன்னாகப் பகவானுடைய வேறுபட்ட சிறப்பினைச் சொல்லி, ‘அவனைப் பற்றுங்கோள்; மற்றைய விஷயங்களை விடுங்கோள்,’ என்றே அன்றோ அருளிச் செய்தது? அது அவர்கள் திருந்துவதற்குக் காரணமாகாமல் தமக்குப் பற்று மிகுதற்குக் காரணமாயிற்று; 5ஸ்ரீ விபீஷணாழ்வான் இராவணனுக்குச் சொன்ன நலம் அவன் திருந்துவதற்குக் காரணமாகாமல் தான் பெருமாளைப் பற்றுதற்குக் காரணம் ஆனாற்போலேயும், ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் இரணியனுக்குச் சொன்ன நலம் அவன் நெஞ்சிலே படாமல் தனக்குப் பகவானிடத்தில் பத்தி மிகுதற்குக் காரணம் ஆனாற்போலேயும், ‘வீடுமின் முற்றவும்’, ‘சொன்னால் விரோதம்’, ‘ஒரு நாயகம்’ என்னும் இம் மூன்று திருவாய்மொழிகளிலும் பிறரைக் குறித்து அருளிச் செய்த நலம் அவர்கள் திருந்துவதற்குக் காரணம் ஆகாமல், மூன்று களையும் பறித்துச் சங்காயமும் வாரின பயிர் நூறு கிளைகளாகப் பணைத்துப் பலிக்குமாறு போலே தமக்கு அவன் பக்கலிலே காதல் நூறு கிளைகளாகப் பணைக்கைக்குக் காரணம் ஆயிற்று என்றபடி. இவர்களுக்குக் களையாவது, பகவானுக்கு வேறுபட்ட விஷயங்களும், சேவிக்கத் தகாதாரைச் சேவைசெய்து திரிகையும், ஐஸ்வர்யத்தைப் புருஷார்த்தம் என்று இருக்கையும். சங்காயமாவது, பயிர்களின் இடையிடையே முளைத்து, அறியாதார்க்குப் பயிர் போலே தோற்றி, அதனை வாரிப் போகடாத போது நெல் பதர்க்கும்படியாய் இருப்பது ஒன்று. அப்படியே கைவல்யமும்.
கலங்கியிருக்கும் நிலையிலே ‘அண்ணலார்’ என்னக் கூடுமோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், அவன் இளமைப்பருவத்தில் பாதுகாப்பதில் குறிக்கோளாய் இருப்பது போலே ஆயிற்று இவள் மயங்கி இருக்கும் காலத்திலும் முறையில் கலக்கம் அற்று இருந்தபடி.–அண்ணலார் தாள்இணை – அடிமையாக உள்ளவன் பற்றுவது ஸ்வாமியினுடைய திருவடிகளை அன்றோ?
தாள் இணைமேல் அணி தண் அம் துழாய் – இப்படி இவள் ஆசைப்படுகைக்கு 2அடியிலே பச்சையிட்டாள்காணும். பிராஹ்மணன் பிச்சு ஏறினாலும் ஓத்துச் சொல்லுமாறு போன்று, இவளும் அடியில் கற்றுப் பழகியதனையே சொல்லாநின்றாள்–
ஏறிய பித்தினோடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும் – இவள் பிச்சேறி இருக்கிற நிலையிலே, ‘இந்த உலகம் எல்லாம் கிருஷ்ணனாலே படைக்கப்பட்டன,’ என்பாள். 2பிராமணர் பிச்சு ஏறினாலும், ஓத்துச் சொல்லுமாறு போலே இவ்விஷயத்தில் வாசனை இருக்கிறபடி. 3இவள் பிச்சு ஏறிச் சொல்லும் வார்த்தை கேட்கைக்கு, மைத்திரேயர் முதலிய மஹரிஷிகளைப்போலே தொடர்ந்து திரிய வேண்டிக்காணும் திருத்தாயார்க்கு இருக்கிறது.
பெருக்காறு வற்றினாற் போலே ஒருகால் எல்லாரையும் வாழ்வித்துப் போன அவதாரங்களில் உள்ளதனை நான் இப்போது எங்கே தேடுவேன்?’ என்ன, ‘அது தவிருகிறேன்; என்றும் ஒக்க ஓரே தன்மையனாய் இருக்கின்ற பரமபத நிலையன் திருவடிகளில் திருத்துழாய் பெறத் தட்டு என்?’ என்னாநின்றாள் என்கிறாள்.
பிதற்றும் – அந்தக் குணங்களிலே ஈடுபட்டு ஜ்வரசந்நி பதிதரைப்போலே அடைவு கெடக் கூப்பிடா நிற்பர்கள்
கோவலனார் குடக்கூத்தனார் – அவளைப் பெறுகைக்குத் தகுதியான 2குடிப்பிறப்பையும் செருக்கையும் உடையவர். வில் முரித்தாலும் இக்ஷ்வாகு வமிசத்தார்க்கு அல்லது பெண் கொடாத ஜனகனைப் போலே, எருது ஏழ் அடர்த்தாலும் ஆய்க்குலத்தில் குறை உண்டாகில் பெண் கொடார்கள் அன்றே ஆயர்கள்? ஆதலின், அதனை அடுத்துக் ‘கோவலனார்’ என்கிறது.
அவன் சக்கரவர்த்தி திருமகனாய் இருக்கச்செய்தேயும். பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்விய திருமேனியை உடையவனாய் இருப்பது போன்று, அவன் ஏதேனும் ஒன்றாலே வளையம் வைத்தாலும் இவர்களுக்குத் தோற்றுவது திருத்துழாயாயே ஆதலின், ‘இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர் தாள்இணைமேல் அணி துழாய் மலர்’ என்கிறாள்.
சங்கு என்னும் – 2மலையை எடுத்தாற்போலே பெருவருத்தத்தோடே சங்கு என்னும். (என்னும் என்னும்’ என்பதற்கு பாவம், ‘மாலையை எடுத்தாற்போலே’
என்பது.)
சர்வேசுவரனுடைய ‘பாலனாய் ஏழுலகு’ இத்திருவாய்மொழி.
கோவை வாயாள்’ 2இதுதனக்கு மூன்று படியாக நிர்வஹிப்பர்கள் நம் முதலிகள்; எம்பார், “அம்புலி அம்மானைப் பிடித்துத் தரவேண்டும்’ என்று அழுத குழந்தைக்குத் தேங்காயைக் கொடுத்து அழுகையை ஆற்றுவாரைப் போலே, வேறு ஒரு குணத்தைப் பிரகாசப்படுத்தி அனுபவிப்பிக்க அனுபவிக்கிறார்,’ என்று அருளிச்செய்வர். திருமலை நம்பி,
அந்தப் புன்முறுவலுக்குத் தோற்றுத் தன்னை 1அவளுக்கு ஆக்கினான்’ என்றபடி. ஏற்றின் பிடரியை முரித்தான் ஆதலின், ‘எருத்தம் இறுத்தாய்’ என்கிறார். எருத்தம் – கழுத்து. 2அவற்றின் செருக்கிற்குக் காரணம் கழுத்தே அன்றோ? அதனை முரித்தபடி. 3 ‘வீரராய் இருப்பார் எதிரி கையில் ஆயுதத்தை வெறுங்கையோடு சென்று வாங்குமாறு போலே இருப்பது ஒன்றே அன்றோ, இவன் செய்தது? அவைதாம் தலையான ஆயுதத்தோடே அன்றோ நிற்கின்றன?(சிலேடை : தலையிலேயுள்ளதான ஆயுதம்; ஒப்புயர்வற்ற ஆயுதம். ஆயுதம் – இங்குக் கொம்பு.)
தேசமான அணிகலனும் – தனக்கு ஒளியை உண்டாக்குகிற ஆபரணமும். என் கைகூப்புச் செய்கையே – 3சேரபாண்டியன் தம்பிரானைப் (நம்பெருமானுடைய திருப்பதக்கம்)போன்று, அவனுக்கு ஒளியை உண்டாக்கா நின்றது இவருடைய அஞ்சலி
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே – 1தன்னால் படைக்கப்பட்ட பிரமன் முதலானோர்கட்குப் பற்றப்படுமவன் ஆகைக்காகத் திருப்பாற்கடலின் நடுவில் திருவனந்தாழ்வான்மேலே சாய்ந்தருளினவனே! அன்றிக்கே, ‘பயிரைச் செய்து செய்த்தலையிலே குடி கிடக்குமாறுபோன்று, படைக்கப்பட்ட பொருள்களைப் பாதுகாத்தற்காகக் கண்வளர்ந்தருளுகின்றவனே!’ என்னவுமாம்.
இந்திரனுக்கு இராச்சியம் கூறுபட்டாற்போலே இவர்க்கும் அத்திருவடிகளில் அழகு கூறுபட்டதாதலின், ‘குரை கழல்கள்’ என்கிறார். ‘அவனுக்குச் சாதனமானது இவர்க்குச் 3சாத்தியம் ஆயிற்று,’ என்றபடி.(குரை’ என்றது அழகாய், அழகால் வந்த பரப்பைச் சொல்லுகையாலே ‘அழகு கூறப்பட்டது’ என்கிறார்)
என்னது ஆவி மேலது – (தாரகம் முதலானவைகள் என் ஆத்துமாவின் இருப்பு ஆவதே!)இப்படி வேறுபட்ட சிறப்பினையுடைய உன் திருமேனி என் உயிரின் மேலது. நித்தியசூரிகளுக்குப் போக்கியமான திருமேனிக்குத் தாரகம் முதலானவைகள் என் ஆத்துமா ஆவதே! 4‘கலியர் சோற்றின்மேல் மனம்’ என்னுமாறு போலே. 5‘இவர்தாம் ‘அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம் – நான் பரமாத்துமாவிற்கு இனியன்; நான் பரமாத்துமாவிற்கு இனியன்; நான் பரமாத்துமாவிற்கு இனியன்,’ என்று இருக்குமவர் அன்றோ?
ஏர்கொள் ஏழ் உலகமும் துன்னி முற்றுமாகி நின்ற சோதிஞான மூர்த்தியாய் – ‘இவரைப் பெற்ற பிரீதியாலே பரந்து நிறைந்து நிற்றலும் புதுக்கணித்தது என்கிறார்’ என்னுதல். அன்றிக்கே, ‘ஒருவனைப் பிடிக்க நினைத்து அவன் பக்கல் உண்டான ஆசையாலே ஊரை வளைவாரைப் போலே, தம்மை அகப்படுத்துகைக்காகப் பரந்து நிறைந்து இருப்பவன் ஆனான் என்கிறார்’
ஏர்கொள் உலகம்’ என்கிறார். ‘உண்டி உடல் காட்டும்’ என்னுமாறு போலே, 1ஆத்துமா நிறைந்தவாறே சரீரமும் புதுக்கணிக்குமே அன்றோ? (ஆத்துமா – இங்குச் சர்வேசுவரன். சரீரம் – உலகம்.)உலகத்தையே உருவமாக உடையவன் அன்றோ அவன்
நல்ல மேன்மக்கள் இரைத்து ஏத்த யானும் ஏத்தினேன் – ‘நித்திய சூரிகள் பரமபத்தியை உடையவர்களாய்க் கடல் கிளர்ந்தாற்போலே இரைத்துக்கொண்டு ஏத்தக் காண்கையாலே யானும் ஏத்தினேன் அல்லது, யான் ஆற்றலுடையனாய் ஏத்தினேனோ?’ என்கிறார்
மண்ணையிருந்து’0மேல் திருவாய்மொழியில் அவனுடைய காதல் குணத்தை அருளிச்செய்தார்; இத்திருவாய்மொழியில் பிச்சு ஏறினார்; 2இவர்க்கு மேல் திருவாய்மொழியில் பிறந்த கரைகடந்த பிரீதியானது இவருடைய சொரூபமும் அழியும் என்னும்படியாய் இருந்தது; அந்த ரசத்தை அரையாறுபடுத்திப் பொறுக்கும்படி செய்கைக்காக அந்தக் கலவியைச் சிறிது நெகிழ நின்றான் ஈசுவரன். 3ஆனாலும், பிரிந்தது அவனை ஆகையாலே, அது தன் காரியத்தைச் செய்து அன்றி நில்லாதே அன்றோ? ஆகையாலே 4ஆற்றாமை மீதூர்ந்து, செல்வத்திலே பேராசையுள்ள ஒருவன் கிழிச்சீரையைக் கெடுத்தால் அதனோடு போலியான முடிகளை எல்லாம் அவிழ்த்து அவிழ்த்துப் பார்க்குமாறு போன்று, அவனோடு ஒத்த பொருள்களையும் அவனோடு சம்பந்தப்பட்ட பொருள்களோடு ஒத்த பொருள்களையும் அகப்பட அவனாகக்கொண்டும், சம்பந்தப்பட்ட பொருள்களாகக் கொண்டும் மயங்கிக் கிட்டிப் பார்த்து அவன் அன்றிக்கே ஒழிந்தால் மீளவும் மாட்டாதே நோவுபட்டுச் செல்லுகிறது. 1‘வைப்பாம் மருந்தாம்’ என்னும்படியே, இவர்க்குச் சேமநிதி அன்றோ அவன்?
கிழிச்சீரை – பணப்பை. ‘அவனோடு ஒத்த பொருள்கள்’ என்றது, ‘கரும்பெருமேகங்கள்’, ‘உருவுடைவண்ணங்கள்’, ‘விரும்பிப் பகவரைக் காணில்’ என்பன போன்று வரும் பாசுரங்களைத் திருவுள்ளம் பற்றி. ‘அவனோடு சம்பந்தப்பட்ட பொருள்களோடு ஒத்த பொருள்கள்’ என்றது, ‘கோமள ஆன்கன்று,’
‘ஆய்ச்சியர் வெண்ணெய்கள்’, ‘வாய்த்த குழலோசை’ என்பன போன்று வருகின்ற பாசுரங்களைத் திருவுள்ளம் பற்றி. அவனோடு சம்பந்தப்பட்ட
பொருள்களோடு ஒத்த பொருள்களைத் தேடுகிறதற்குக் கருத்து, ‘இவர் பகவானையும் பாகவதர்களையும் உத்தேஸ்யராக நினைத்திருக்குமவராகையாலே, பகவானைப் பிரியுமிடத்துப் பாகவதர்களோடு கூடியாகிலும் தரிக்கலாம் என்று தேடுகிறார்’ என்பது.
துழாவி – இதனால், பித்தத்தால் பீடிக்கப்பட்டவன் சந்தனக் குழம்பினின்றும் கைவாங்க மாட்டாததைப் போன்று இம்மண்ணை 1விடமாட்டாமையும் தோன்றுகிறது. விட்டுக் கைவாங்கினால் விரஹ அக்நியினாலே வேம்-இதனால், ‘சம்பந்தம் கொண்டு விரும்பும் அளவன்றிக்கே, தனக்குத் தாரகமாக இருத்தலினாலும் விரும்புகின்றாள்,’ என்றபடி.
விண்ணைத் தொழுது அவன் மேவும் வைகுந்தம் என்று கைகாட்டும் – 4இறந்த காலத்தில் உள்ளதும் நிகழ்காலத்தில் உள்ளதைப் போன்று தோன்றுமாறு போன்று, வேறு உலகத்தின் செயலும் இங்கே தோன்றா நின்றது. நமக்கு அவ்விடத்திலும் இவ்விடம் அணித்தாய் இருக்குமாறு போன்று, அவர்களுக்கு 5‘அக்கரை, இக்கரை’
பெய்வளையீரே! 3‘பெருவெள்ளத்திலே புறவடி நனையாமலே இருப்பாரைப் போன்று, இவ்வளவிலும் கையும் வளையுமாய் இருப்பதே நீங்கள்!’ என்பாள், ‘பெய்வளையீரே! என்கிறாள். அன்றிக்கே, ‘நீங்கள் வளை தொங்குகைக்குச் செய்த உபாயத்தைச் சொல்ல வல்லீர்களோ, நானும் கைமேல் செய்து பார்க்க!’ என்பாள், அங்ஙனம் விளிக்கின்றாள் என்னலுமாம். (கைமேலே’ என்றது, ரசோக்தி.)
பெய் வளைக்கைகளைக் கூப்பி – 2அவனைத் தொழுவித்துக்கொள்ளும் கருவியையுடையவள் தான் தொழா நின்றாள். அவனைத் தொழுவித்துக் கொள்ளுதற்குப் போலே காணும் கையில் வளை இட்டது. கையில் பிரஹ்மாஸ்திரம் இருக்கப் படும் பாடே இது. ‘வீரக்கழலோடே பட்டுக் கிடப்பாரைப் போலே அன்றோ இவள் கிடக்கின்ற கிடை?’ என்கிறாள் என்றவாறு. ‘ஆயின், பிரிந்திருக்கும் நிலையில் கைகளில் வளையல்கள் உளவோ?’ எனின், ‘கடல் வண்ணன்’ என்றவாறே கழன்ற வளையல்கள் ஒழியச் சரிந்த வளையல்கள் பூரித்தன காணும்.
நையும் – 2தாய் தந்தையர்கள் சேர இருக்க, அவர்கள் அண்மையிலே பசி எடுத்து வருந்தும் குழந்தைகளைப்போலே வருந்தா நின்றாள். ‘புருஷகாரத்தைச் செய்கின்ற பிராட்டி அருகே இருக்கப் பெறாத யான், இனி யார் புருஷகாரமாகப் பெற இருக்கிறேன்?’ என்று வருந்தா நின்றாள் என்றபடி.
நாரணன் என்னும் – 4‘அம்மே!’ என்பாரைப் போலே; 5‘ஸ்ரீமந்நாராயணன்’என்றுகூடச் சொல்ல மாட்டாதே தளர்ந்து, கண்ணீராலே கைகழுவி, பின்னர் ‘நாரணன்’ என்னா நின்றாள்(பெரியோர்கள் ஒரு வைதிக காரியத்தைச் செய்யும்போது முதலில் கையைக் கழுவிக்கொண்டு பின்னை யன்றோ அக்காரியத்தைச் செய்வார்கள்? அப்படியே, இவள் முந்துறக் கண்ணீர்விட்டு, பின்னர் அப் பெயரைச் சொல்லாநின்றாள்,’ என்றபடி.)
நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தான் என்று ஆலும் – 2கெட்டு மழை அன்றிக்கே பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யும் மழையைக் கண்டவாறே, ஒரு காரணம் இன்றியே உயிரை நோக்குமவன் வந்தான் என்று, மயில்கள் கார்காலத்திலே மகிழ்ச்சியினாலே ஆரவாரித்து ஆடுவதைப் போலே ஆடுகிறாள்.
இது என்னாய் விளையக் கடவதோ!’ என்பான் என்?’ என்னும் வினாவிற்கு விடை அருளிச்செய்கிறார்1பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாற்போலே அன்றோ திருத்தாயார்க்கு இருக்கிறது?(பாம்போடு ஒருகூ ரையிலே பயின்றாற்போல் தாங்காதுள்ளம் தள்ளு மென்தாமரைக் கண்ணா!’(பெரிய திருமொழி, பதினோராம் பத்து,)
இவள் பிச்சு ஏறிச் சொல்லும் வார்த்தை கேட்கைக்கு, மைத்திரேயர் முதலிய மஹரிஷிகளைப்போலே தொடர்ந்து திரிய வேண்டிக்காணும் திருத்தாயார்க்கு இருக்கிறது
உருவுடை வண்ணங்கள் காணில் உலகு அளந்தான் என்று துள்ளும் – நீலம் குவளை காயா உருப்பெற எழுதின சித்திரம் இவற்றைக் காணில், நிறமாத்திரத்தையும் ஊனக்கண்ணுக்குத் தோன்றுகிற எளிமைத் தன்மையையும் கொண்டு, குணாகுண நிரூபணம் பண்ணாதே எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைத்தவன் என்று, பசுவின் அருகே கட்டி வைத்த கன்று துள்ளுமாறு போலே பரபரப்போடும் கூடிய செயல்களைப் பண்ணாநிற்கும்.
கேசி வாயை அங்காந்துகொண்டு வந்த போது, சிறு குழந்தைகள் துவாரம் கண்ட இடங்களிலே கையை நீட்டுமாறு போலே, இவன் பேதைமையாலே அதன் வாயிலே கையை நீட்டினான்; முன்பு இல்லாதது ஒன்றைக் கண்ட காட்சியாலே கை பூரித்துக் கொடுத்தது; கையைத் திரும்ப வாங்கினான்; அவன் இருபிளவாய் விழுந்தான்
சொல் மாலைகள் – வாடாத மாலைகள். என்றது, ‘அநசூயை கொடுத்த மாலை போலே செவ்வி அழியாத மாலைகள்’ என்றபடி. ஏற்ற – 1‘ஆராதனத்தைத் தாமாகவே தலையாலே ஏற்றுக்கொள்ளுகிறார்’ என்கிறபடியே, திருக்குழலிலே ஏற்றும்படியாக. (திருக்குழலிலே ஏற்றும்படியாக’ என்றது, ‘சிரசாகத் தரிக்க’
என்றபடி.)
உறை மார்பினன் – பூவிலும் கூசி அடியிடுமவள் பொருந்தி வசிக்கும் மார்வு படைத்தவன். ‘ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் பெருமாளைக் கை பிடித்த பின்பு ஸ்ரீ மிதிலையை நினையாதது போன்று, இவளும் இவன் மார்வில் இனிமை அறிந்த பின்பு தாமரையை நினையாதவள்’ என்பார், ‘உறை மார்பினன்’ என்கிறார்
செய்ய கோலத் தடம் கண்ணன் – சிவந்து காட்சிக்கு இனியனவாய்ப் பரப்பையுடையனவான திருக்கண்களையுடையவன். 2ஓர் இடத்திலே மேகம் மழை பெய்யாநின்றால் அவ்விடம் குளிர்ந்திருக்குமாறு போலே, ‘மைப்படி மேனி’ என்கிறபடியே, சர்வேசுவரனுடைய கரிய மேனியை ஒருபடியே பார்த்துக்கொண்டிருப்பாளே அன்றோ இவள்? இவள் திருக்கண்களிலே அவன் திருமேனியின் நிறம் ஊறி இவள் மைய கண்ணாளாயிருக்கும்; 3‘செய்யாள் திருமார்வினில் சேர்திருமால்’ என்கிறபடியே, மார்பில் இருக்கின்ற அவளை ஒருபடியே பார்த்துக்கொண்டிருக்கையாலே அவள் திருமேனியில் சிவப்பு ஊறி இவன் தாமரைக் கண்ணனாய் இருக்கும்; 4‘இருவர் படியும் இருவர் கண்களிலே காணலாம்; அவன் படி இவள் கண்களிலே காணலாம்; இவள் படி அவன் கண்களிலே காணலாம். இவர்களுடைய கண் கலவி இருக்கும்படியிறே இது.
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீய – ‘அவசியம் அனுபவித்தே தீரவேண்டும்’ என்கிறபடியே, அனுபவித்தால் அல்லது நசிக்கக் கடவன அல்லாத கர்மங்கள் முழுதும் நசிக்க. 1இவ்வுலகத்திலே இருக்கச் செய்தே, இவை முழுதும் அழிந்தன என்று சொல்லலாம்படியாயிற்று, பகவானுடைய அனுபவத்தாலே பிறந்த தெளிவு; ஆதலால், ‘வியன் ஞாலத்து வீய’ என்கிறது. அன்றிக்கே, 2‘பனை நிழல் போலே தம்மை ஒருவரையும் நோக்கிக்கொள்ளுகையன்றிக்கே, ஊரும் நாடும் உலகமும் தம்மைப்போலேயாம்படி தாம் இருந்த உலகத்தில் உண்டான கர்மங்களும் முழுதும் அழிந்தன,’ என்னுதல். அங்ஙனம் அன்றிக்கே, ‘வியன் ஞாலம்’ என்று வேறு ஒரு தேசம் போலே இருக்கச் சொல்லுகையாலே, தாம் ‘வீற்றிருந்து ஏழுலகு’ என்னும் இத்திருவாய்மொழியை அருளிச்செய்கிறது பரமபதத்திலே இருந்து போலே காணும்,’ என்று அருளிச்செய்வர். 3பாவனையின் மிகுதியாலே திருவுள்ளம் பரமபதத்திலேயாய் அங்குற்றாராய்த் தோன்றுகிறபடி. வியன் ஞாலம் – ‘ஆச்சரியப்படத் தக்க உலகம்’ என்னுதல்; ‘பரப்பையுடைத்தான உலகம்’ என்னுதல்.
இசை மாலைகள் – 2‘கருமுகை மாலை’ என்னுமாறு போன்று இசையாலே செய்த மாலை. வாசிகமான அடிமை அன்றோ செய்கின்றது-கருமுகை மாலை’ என்றது, ‘வேறு மலர்கள் கலவாமல், கருமுகை மலர்களாலேயே கட்டப்பட்ட மாலை’ என்றபடி.
தான் எல்லார்க்கும் தலைவனாய் இருந்து வைத்து அருச்சுனனுக்கு எல்லாப் பொருள்களையும் பொறுக்கப்பொறுக்க அருளிச்செய்தாற்போலே, எனக்குத் தன் படிகளைக் காட்ட, கண்டு அனுபவித்து, நான் என்னுடைய தடைகள் எல்லாம் போம்படி திருவாய்மொழி பாடி, எல்லை அற்ற ஆனந்தத்தையுடையவன் ஆனேன்,’ என்கிறார். ஆற்ற – அமைய : பொறுக்கப் பொறுக்க என்றது, 3‘குளப்படியிலே கடலை மடுத்தாற்போலேயன்றிக்கே,-பொறுக்கப்பொறுக்க ஆயிற்றுத் தன் கல்யாண குணங்களை அனுபவிப்பித்தது’ என்றபடி. 1‘இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை’ என்றதன் பின் ‘வீற்றிருந்து ஏழ் உலகு’ என்ற திருவாய்மொழியின் அனுபவத்தை அனுபவிப்பித்தானாகில், நான் உளேன் ஆகேன் ஆன்றோ?’ என்கிறார் என்றவாறு.
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே – வினைகளும் வினைகளின் பயனான பிறவியும், காற்றினைக்காட்டிலும் விரைந்து எரிந்து சாம்பல் ஆயின. 2புதுப்புடைவை அழுக்குக் கழற்றுமாறு போலே, கிரமத்தாலே போக்க வேண்டுவது தானே போக்கிக் கொள்ளப் பார்க்குமன்றே அன்றோ? அவன் போக்கும் அன்று அவனுக்கு அருமை இல்லையே? 3‘வினைப்படலம் விள்ள விழித்து’ என்கிறபடியே, ஒருகால் பார்த்துவிட அமையுமே? 4‘பாப ரூபமான கர்மத்தினுடைய கூட்டங்கள், மேருமலை மந்தர மலை இவைகளைப்போன்று உயர்ந்திருந்தாலும், வைத்தியனைக் கிட்டிக் கெட்ட வியாதி அழிந்து போவது, கிருஷ்ணனை அடைந்து பாவங்கள் அழிகின்றன,’ என்கிறபடியே, வியாதியின் மூலத்தை அறிந்த வைத்தியனைக் கிட்டின வியாதி போலே அன்றோ சர்வேசுவரனைக் கிட்டினால் இவை நசிக்கும்படி?
‘வானோ? மறிகடலோ? மாருதமோ? தீயகமோ?
கானோ? ஒருங்கிற்றும் கண்டிலமால் ;- ஆனீன்ற
கன்றுயரத் தாம்எறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம்
வன்துயரை ஆஆ மருங்கு.’குழந்தை தீம்பு செய்தால் தந்தை தண்டிக்கத் தொடர்ந்தால், தாயின் காலிலே விழுமாறு போலேகாணும், இவன் பூமியிலே விழுந்தது.
கிருபயா – ‘நாம் தொடங்கின கார்யம் பிரபலமான கர்மத்தாலே முடிக்க ஒண்ணாததைப் போன்று, அவரும் கிருபைக்குப் பரதந்திரப்பட்டவர் ஆகையாலே நினைத்த காரியத்தை முடிக்கமாட்டார். அவன் கிருபை விளையும் பூமியைப் பற்றியவன் ஆனான்; அதற்கு மேலே கிருபையும் விளிந்தது; இனி, அவர் எவ்வழியாலே தண்டிப்பார்? ஆகையாலே, எனக்குக் குறை உண்டாகையாவது, பகவானுடைய கிருபை அளவிற்குட்பட்ட விஷயமாக அன்றோ?’ என்கிறார்.
பூவின்மிசை நங்கைக்கும் – நித்திய சூரிகளுக்கும் அவ்வருகாய், ரூப குணத்தாலும் ஆத்தும குணத்தாலும் நிறைந்திருக்கிற பெரிய பிராட்டியார்க்கும். மலரில் மணத்தை வகுத்தாற்போலே இருந்துள்ள மிருதுத்தன்மை
தாய் தந்தையர்கள் குழந்தைகளில் குறைவாளர் பக்கலிலேயன்றோ இரங்குவது? அதனாலே, சமுசாரிகள் முற்பட வேண்டுகிறது,’ என்னுதல்.
கையைக் கூப்பிக்கொண்டு கடலை நோக்கிச் சயனித்தார்,’ என்கிறபடியே, கிடந்த கிடையிலே இலங்கை குடி வாங்கும்படியாக, ஒரு கடல் ஒரு கடலோடே சீறிக் கிடந்தாற்போலே கடற்கரையிலே கிடந்தபடியைத் தெரிவித்தவாறு.
நீங்கள் இவளுக்கு ஓடுகிற நோவும் அறிந்திலீர்கோள்; நிதானமும் அறிந்திலீர்கோள்; பரிஹாரமும் அறிந்திலீர்கோள்; நீங்கள் பரிஹாரமாகச் செய்கிறவை, கருமுகை மாலையைச் செவ்வி பெறுத்த என்று நெருப்பிலே இடுவாரைப்போலே இவளை இழக்கைக்குக் காரணமாமித்தனை; ஆன பின்னர், இவற்றை விட்டு, இக்குடியிலே பழையதாகச் செய்துபோரும் பரிஹாரத்தைச் செய்யப் பாருங்கோள்
என்னிடத்திலேயே வைக்கப்பட்ட பத்தியினாலே, உண்மையாக அறிவதற்கும் பார்ப்பதற்கும் என்னுடைய சொரூபத்தை அடைவதற்கும் தகுந்தவனாய் இருக்கின்றேன்,’ என்கிறபடியே, இது உண்டானால், பின்னை அவன் கைப்பட்டானேயன்றோ? 6இருடிகள் கோஷ்டியில் கலக்கம் அரிதாய் இருக்குமாறுபோலே; இவர்கள் கோஷ்டியில் தெளிவு அரிதாய் ஆயிற்று இருப்பது;உற்ற நன்னோய் இது’ என்ன அமைந்திருக்க, ‘தேறினோம்’ என்கிறது என்?’ என்ன, இதனால், ‘இந்தத் தோற்றந்தானும் அரிது’ என்பது போதருகின்றது’ என்கிறார்
இது காண்மினே – 4வேறு தேவர்களுடைய சம்பந்தமுடையவர்களும் புகுந்து தொடும்படி இராநின்றீர்களே அன்றோ? அதைப் போன்று, நான் சொன்ன பரிஹாரத்தையும் செய்து பார்க்கமாட்டீர்களோ? ஒன்றேயோ பரிஹாரம்? இது நதீமாத்ருகம் போலே பலத்தோடே கூடியிருக்கும்.
இன்னார்க்கு இன்னது பரிஹாரம் என்று ஒன்று இல்லையோ? அது அறிந்து பரிஹரிக்க வேண்டாவோ? முழங்கால் தகர மூக்கிலே ஈரச்சீரை கட்டுமாறு போலே யன்றோ நீங்கள் செய்கிற பரிஹாரம்? ‘வேறு தெய்வங்களின் சம்பந்தம் இவளுக்குப் பொறாது,’ என்று அறிய வேண்டாவோ?’ என்கிறாள்
நீரிலே புக்கு அழுந்தினாரை முகத்திலே நீரைத் தெளித்துப் பரிஹரிக்குமாறு போலே, தேர்ப்பாகனார்க்கு மோஹித்த இவளை, வண் துவராபதி மன்னன் திருநாமத்தைச் சொல்லித் தெளியச் செய்யப் பாருங்கோள்,’ என்பாள், ‘வண் துவராபதி மன்னனை ஏத்துமின்’ என்கிறாள்.
இப்படியிருக்கத் தம் ஆற்றாமைக்கு உதவக் காணாமையாலே, பரமபதத்திலே இருந்தானாகிலும் அவ்விருப்பு நிலை குலைந்து வந்து முகம் காட்டும்படி துக்கத்தாலே நிரம்பியது ஒரு கடல் கை எடுத்துக் கூப்பிட்டாற்போலே, கேட்டார் அனைவரும் நீராகும்படி கூப்பிடுகிறார்.
சேர்ந்து குளிர்ந்த தண்ணீரை விடாயர்க்கு எட்டாமல் வைப்பாரைப்போலே, வேட்டார்க்கு உதவாத தண்ணீர் ஆவதே! 2‘மரகத மணித்தடம்’ என்னப்படுமவன் அன்றோ அவன்? காண – கருமுகை மாலை தேடுவார், சூட அன்றிக்கே, சும்மாட்டைக் கொள்ளத் தேடுவர்களோ? 3கிட்டினாலும் ‘ஸதா பஸ்யந்தி – எப்பொழுதும் பார்த்துக்கொண்டே இருக்கின்றார்கள்’ என்பதே அன்றோ? 4‘காரார் திருமேனி காணுமளவு’மே அன்றோ இங்கும்? ‘அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண’ இத்தனையே அன்றோ?
நன்பகல்’ என்கிறார். 4புறம்பு ஒரு விஷயத்தை அனுபவித்தால், காணாத போது மறந்து வேறு ஒன்றிலேயும் நெஞ்சை வைக்கலாம்படி இருக்குமே அன்றோ? அவனைக் காணப் பெறாமையாலே பாழ் அடைந்த காலம் ஆகையாலே, செவ்வாய்க் கிழமையை மங்களவாரம் என்னுமாறு போன்று ‘நன்பகல்’ என்கிறார்(பிரிவு காலத்திலும் பகவத் சம்பந்தம் மாறாதே இருக்குமோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘புறம்பு ஒரு விஷயம்’ என்று தொடங்கி. ‘இருக்குமேயன்றோ?’ என்றது, ‘அப்படி அன்றிக்கே, இந்த விஷயம் பிரிவு காலத்திலும் மறக்கப் போகாது,’ என்றபடி.)
என்னுடைய ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும் நீக்கம் இன்றி எங்கும் நாள்தோறும் நின்றாய் – 2உன்னைப் பெறுவதற்குத் தடையாக உள்ள என் சரீரத்திலும், பெற இருக்கிற ஆத்துமாவிலும், இவை ஒழிந்த தடையாய் உள்ள உறுப்புகளிலும் விடாதே எங்கும் எல்லாக் காலத்திலும் புக்கு நின்றாய். 3கிழிச் சீரையிலே தனம் கிடக்கப் புறங்கால் வீங்குவாரைப்போலே காணும் இவர் படி.–நீக்கமின்றி எங்கும் நின்றாய், உன்னைக் காண்பான், நாக்கு நீள்வன்,’ என்றதற்கு வியாக்கியாதா தம் அபிப்பிராயமாக அருளிச்செய்கிறார்,
எண் திசையும் உள்ள பூக்கொண்டு – விஷயத்திற்குத் தகுதியாகவும் தம்முடைய ஆசைக்குத் தகுதியாகவும் இருக்க வேண்டுமாதலின், ‘எண் திசையும் உள்ள பூ’ என்கிறார். 1தம்முடைய ஆசைக்குத் தகுதியாக ‘ஆசையில் உள்ளவை எல்லாம் வேண்டும்,’ என்கிறார். அவ்வாசைதான் திக்குப்பட்டே அன்றோ இருப்பது? கலியர் ‘கல அரிசிச்சோறு உண்ண வேண்டும்,’ என்னுமாறு போன்று. இங்ஙனமே அன்றோ கைங்கரிய ருசியுடையார் வார்த்தை இருப்பது?(ஆசை’ என்பது, சிலேடை : ஆசையும் திக்கும் என்பது பொருள். ‘திக்குப்பட்டேயன்றோ’ என்றது, ‘எண்திசையும்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி. அவ்வாசை – அந்தத்திக்கு.)
யசோதைப் பிராட்டி கையும் வெண்ணெயுமாகப் பிடித்துக்கொண்டாற்போலே, கையும் நெய்யார் ஆழியுமாகப் பிடித்துக்கொள்ளவாயிற்று இவர் ஆசைப்படுகிறது.
ஆபத்திற்குத் துணைவனாய் இருக்க, மஹா பாவி ஆகையாலே நான் காணப் பெறுகின்றிலேன். 3‘காணப்பெறாது ஒழிந்தால் மறந்து பிழைக்கலாம்படி நெஞ்சில் பிரகாசிக்காமல் ஒழியத் தான் பெற்றேனோ?’ என்கிறார் மேல் :காணப் பெறாமையாலே அன்பு துக்கத்திற்குக் காரணம் ஆகிறாப்போலே, நெஞ்சில் பிரகாசிப்பதுவும் துக்கத்திற்குக் காரணம் ஆகிறாப்போலே, நெஞ்சில் பிரகாசிப்பதுவும் துக்கத்திற்குக் காரணம் ஆகா நின்றது.
கள்ளியை ‘மஹா விருக்ஷம்’ என்பதனைப் போன்று, தானும் ‘ஈசுவரன்’ என்று இருப்பவனாதலின், ‘இறையோன்’ என்கிறார்.
குற்றம் செய்யாதவர் ஒருவரும் இலர்’ என்கிறவளும் கூட இருக்கச் செய்தே என்னை விரும்பாதிருக்குமாகில், என் உடைமையால் 3எனக்குதான் பிரயோஜனம் என்? மலரில் மணத்தையே வடிவாக வகுத்தாற் போலே இருக்கையாலே ‘மலர் மாதர்’ என்கிறாள்
முத்தன் இவ்வுலக வாழ்க்கையை நினையாதாப் போலே பூவை நினையாமலே வசிக்கும் மார்வு படைத்தவன். 4பிராட்டி பெருமாளைக் கைப்பிடித்த பின்பு ஸ்ரீ மிதிலையை நினைத்தாலாயிற்று, இவள் தான் பிறந்த மலரை நினைப்பது. 5அவள் ‘அகலகில்லேன்’ என்கிற மார்வை நான் இழப்பதே!
பரம்புருடன் – தகட்டில் அழுத்தின மாணிக்கம் நிறம் பெறுமாறு போன்று, திருவனந்தாழ்வான் மேலே சாய்ந்த பின்பாயிற்று ‘அறப்பெரியன்’ என்று தோன்றிற்று
சந்யாசிகள் தந்தாமுக்கு என்ன ஓர் இருப்பிடம் இல்லாமையாலே மாத்திரை தொடக்கமானவற்றைக் கையிலே கூடக் கொண்டு திரிவார்கள் ஆயிற்று; அவர்கள் போன்று பசுக்களுக்குப் புல்லும் நீரும் உள்ளவிடத்திலே தங்குவார்களித்தனையன்றோ இவர்களும்?
கவராத தளிர் நிறத்தால் குறை இலம் – அவன் விரும்பாத பிரமசாரி நிறத்தால் என்ன காரியம் உண்டு? என்றது, 4இராவணனைக் கொன்ற பின்பு பிராட்டி நீராடி எழுந்தருளின போதை நிறம்போலே அவனுடைய வெறுப்புக்கு விஷயமான நிறம் நமக்கு என் செய்ய?’ என்றபடி. 1‘இவளைப் போன்று மற்றைப்பிராட்டிமாரில் இப்படி நிறத்தைப் பற்றிச் சொன்னார் இலரே? முதற்பாட்டில் ‘மணி மாமை குறையிலம்’ என்றாள்; இப்பாட்டில் ‘தளிர் நிறத்தால் குறையிலம்’ என்கிறாள்; இவற்றுக்கு வாசி என்?’ என்னில், அங்கு, ‘மணிமாமை’ என்று அழகையும் மென்மையையும் சொல்லிற்று; இங்கு, நிறத்தைச் சொல்லிற்று. அன்றிக்கே, அங்கு நிறத்தைச் சொல்லிற்றாகில், இங்குச் சேர்க்கையால் உண்டாய அழகிய நிறத்தைச் சொல்லுகிறது.
அவன் கலம்பகன் கொண்டு வளையம் வைத்தாலும் இவர்கள் எடுத்துச் சொல்லுவது திருத்துழாயை இட்டேயாம். 3தனக்கேயுரிய சிறப்புப் பொருள்களைக் கொண்டே அன்றோ கவி பாடுவது? பாண்டியர்கள் மற்றையார் கருமுகை மாலையைக் கொண்டு வளையம் வைத்தாலும், அவர்களுக்கே உரியதான வேம்பு முதலானவற்றையிட்டேயன்றோ கவி பாடுவது?
கவராத அறிவினால் குறை இலம் -அப்படிப்பட்டவன் விரும்பாத அறிவினால் காரியம் உடையோம் அல்லோம். 1பிராட்டியுடைய இரண்டாம் பிரிவிற்கு அடியான வன வாச ஞானம் போலே இருக்கிற இந்த அறிவால் என்ன பிரயோஜனம் உண்டு? 2பிரிவோடே சேரும்படியாய் அன்றோ அது இருப்பது?
குறிய – கோடியைக் காணியாக்கிக் கொண்டாற் போலே, வளர்ந்த போதையிற் காட்டிலும் கவர்ச்சிகரமாய் இருக்கிறபடி
நெற்றியது கண்ணும் உச்சியது புருவமுமாய்க்கொண்டு தோற்றின போது மரத்தினைப் பற்றியுள்ள நெருப்புப் போலே அச்சமாகிய நெருப்பு உள்ளே நின்று எரியப் புக்கவாறே பதஞ்செய்யுமே அன்றோ?
வளர் ஒளிய கனல் ஆழி வலம்புரியான் – 5காவற்காட்டில் துஷ்ட மிருகங்களுக்கு ஊட்டி இட்டு வளர்க்குமாறு போலே, தேவர்களுடைய வரங்களை ஊட்டியாக இட்டு வளர்த்த பையலுடைய மார்பு முழுவதும் திரு உகிருக்கு அரை வயிறாம்படி ஆயிற்றே அன்றோ?
உயிரினால் குறை இல்லா ஏழ் உலகு – கணக்கு இல்லாதவைகளான ஆத்துமாக்கள் நிறைந்துள்ள ஏழ் உலகங்களையும். தன்னுள் ஒடுக்கித் தயிர் வெண்ணெய் உண்டானை – தயிரும் வெண்ணெயும் களவு காணப் புகுகிறபோது, ‘செருப்பு வைத்துத் திருவடி தொழச் செல்லுவாரைப்போலே வேறு ஒன்றற்கு உடலாக ஒண்ணாது,’ என்று எல்லா உலகங்களுக்கும் வேண்டுவனவற்றையெல்லாம் தன் நினைவாலே செய்து, பின்னை ஆயிற்று வெண்ணெய் அமுது செய்தது.
கருவுற்ற மகளிர் வயிற்றிலுள்ள பிள்ளைக்குத் தகுதியாக உணவு முதலானவைகளை உட்கொள்ளுமாறு போன்று உள் விழுங்கின உலகங்கட்கு ஜீவனமாகத் தயிர் வெண்ணெய் உண்டான்’
சர்வேசுவரனிடத்தில் ஈடுபட்டவராய் இருப்பது போன்று, ஐம்புல இன்பங்களில் ஈடுபட்டவராய் அவற்றினுடைய பேறு இழவுகளே லாபாலாபமாம்படி இருந்தார்கள்; அதனைக் கண்டவாறே 2வாளேறுகாணத் தேளேறு மாய்ந்தாற்போலே, தம் இழவை மறந்தார்; இவர்களுடைய துக்கமே நெஞ்சிலே பட்டது
விழு நிதியும் – நினைவின்றிக்கே இருக்கச் செய்தே சருகிலை திரளுமாறு போலே சீரிய நிதி வந்து கைப்புகுருமே;
சோற்றையிட்டுப் பணிகொள்’ என்னுமாறு போலே, ‘கூய்ப் பணிகொள்’ என்கிறார் என்னுதல்.
கொள் என்று கிளர்ந்து எழுந்த பெருஞ்செல்வம் – இவன் தான் விரும்பாதிருக்கச்செய்தேயும் ‘கொள், கொள்’ என்று 2மொண்டெழு பானை போலக் கிளர்ந்து வருகிற எல்லை இல்லாத செல்வமானது. நெருப்பாக – 3‘அடியோடு அழிய’ என்னுதல்; 4அன்றிக்கே ‘தன்னுடைய அழிவிற்குக் காரணமாக’ என்னுதல்.
வெந்நரகம்’ என்கிறார். என்றது, ‘துன்பத்தை இன்பமாக மயங்கும் மயக்கத்தாலாவது இன்பம் உண்டு இங்கு; அங்கு, வடிகட்டிய துக்கமே ஆயிற்று உள்ளது,’ என்றபடி. 1உயிர்க்கழுவில் (உயிரை வாங்கும் கழுமரம்.)இருக்குமவன் நீர் வேட்கை கொண்டு தண்ணீரும் குடித்து நீர் வேட்கை நீங்கினவனாய் இருக்குமாறு போன்றதே அன்றோ இங்குள்ளவை?
நீ நின்றமையால் – நீ இப்படி நின்ற பின்பு. நோயே மூப்பு இறப்புப் பிறப்புப் பிணி என்ற இவை ஒழிய – 3சரீரத்துக்கு வந்தவற்றுக்குச் சரீரியான ஆத்துமா இன்புறுதல் துன்புறுதல் செய்யுமதனைப் போன்று, எனக்கு வந்தவற்றுக்கு இன்புறல் துன்புறல் செய்வாய் நீ ஆம்படி சம்பந்தம் உண்டாய் இருந்த பின்பு, பிறவி காரணமாக வருகின்ற இந்தத் துன்பங்களைக் கழித்து
காட்டி – முன்பு 2தானே தான் ஆம்படி இவற்றை அடையத் தன் பக்கலிலே சேர்த்துச் ‘சத்’ என்னும் நிலையினதான உலகத்தை, 3‘பிரமன் முன்னிருந்தபடியே படைத்தான்,’ என்கிறபடியே, இதனை உண்டாக்கிக் காட்டி. ‘காட்டி’ என்ற சொற்போக்கால், 4‘ஐந்திரஜாலிகரைப் போலே (ஐந்திரஜாலிகர் ஒருவரும் அறியாமல் சில பொருள்களை விழுங்கி அவற்றைப் புறப்பட விடுமாறு போலே’)இதனை உண்டாக்கிக் காட்டுகிறான்
‘செதுகையும் மண்ணையும் நீரையும் கூட்டிக் குயவன் குடம் முதலியவற்றைச் செய்யுமாறு போலே’
உழக்காலே அளக்குமாறு போன்று’
செழுங்குருகூர்ச் சடகோபன் – 5திருவயோத்தியையில் மண்பாடுதானே ஸ்ரீராமபத்தியைப் பிறப்பிக்குமாறு போலே, அவ்வூரில் பிறப்பாயிற்று இவர்க்கு இந்த ஈடுபாட்டிற்குக் காரணம்.(செழுமை’ என்ற அடைமொழிக்குக் கருத்து அருளிச்செய்கிறார்,)
ஒன்றுந்தேவும்’–ஒரு நிலத்திலே ஒரு கூறு உவர்ந்து கிடக்க மற்றைக் கூறு விளைவதும் அறுப்பதுமாய் இருக்குமாறு போலே, நித்திய விபூதியும் நித்தியசூரிகளும் பகவத் அனுபவமே பொழுது போக்காகச், சொல்லாநிற்க, இவ்வுலகமாகிற பாலை நிலத்தில் உள்ளார் சிற்றின்பங்களிலே ஈடுபாடுடையவர்களாய் இவற்றினுடைய லாபாலாபங்களே பேறும் இழவுமாய்ப் பகவானிடத்தில் விருப்பு இல்லாதவர்களாய்த் துன்பப்படுகிற படியை நினைத்து, ‘அவர்களைத் திருத்துவோம்’ என்று பார்த்து, சர்வேசுவரன் உளனாய் இருக்க நாம் இருந்து துன்பப்பட வேண்டுமோ?’ என்று, ‘தேவர் உள்ளீராய் இருக்க, இவர்கள் இப்படி நோவுபட விட்டிருக்கை போருமோ?’ 2இவர்களையும் திருத்தி நல்வழி போக்கவேண்டும்.’ என்று அவன் திருவடிகளிலே சரணம் புக
உதங்கன் வந்து நிர்ப்பந்தித்தாற்போலே, இவரும் நிர்ப்பந்திக்க, ‘சேதநரான பின்பு ருசி முன்பாகச் செய்ய வேண்டும் என்று இருந்தோம் இத்தனைகாணும்; அது கிடக்க, உமக்குக் குறை இல்லையே? உம்மைக் கொடுபோய் வைக்கப் புகுகிற தேசத்தைப் பாரீர்,’ என்று 2பரமபதத்தைக் காட்டிக் கொடுக்க, கண்டு கிருதார்த்தரானார் மேல் திருவாய்மொழியிலே.
எம்பார், ‘சிலர் எல்லா வேத சாஸ்திரங்களும் கைவரப் பெற்று வைத்து, ‘பரதத்துவம் இன்னது’ என்று அறுதியிடமாட்டாதே, ‘சேம்புக்குக் கூராச் சிற்றரிவாள் உண்டோ? நமக்கு வணங்கத் தகுந்தவர் அல்லாதார் உளரோ?’ என்று கண்ட இடம் எங்கும் புக்குத் தலை சாய்த்துத் தடுமாறி நிற்க, எம்பெருமானார் தரிசனத்தில் எத்தனையேனும் கல்வி இல்லாத பெண்களும் மற்றைத் தெய்வங்களை அடுப்பிடு கல்லைப் போன்று நினைத்திருக்கிறது, இந்த ‘ஒன்றுந் தேவும்’ என்ற திருவாய்மொழி உண்டாகையினாலே அன்றோ? என்று அருளிச்செய்வர்;
எல்லாப்பொருள்களையும் படைத்தவனான சர்வேசுவரன், தாய் சந்நிதி ஒழியக் குழந்தை வளராதாப் போலே தன் சந்நிதி ஒழிய இவை வாழமாட்டா என்று பார்த்துத் திருநகரியிலே மிக எளியனாய் நிற்க, ‘வேறே அடையக்கூடிய பொருளும் ஒன்று உண்டு,’ என்று தேடித் திரிகின்றீர்கோளே!’ என்று நிந்திக்கிறார்.
நீர் நாடி வணங்கும் தெய்வமும் – 2இயல்பாகவே அமைந்தது ஓர் உயர்வு இல்லாமையாலே அவைதாம் இறாயாநிற்கச்செய்தே. வசன ஆபாசங்களாலும் யுக்தி ஆபாசங்களாலும் நீங்கள் பொரி புறந்தடவி வருந்திச் சேமம் சார்த்தி வைத்து அடைகின்ற தேவர்களையும். கள்ளரைத் தேடிப் பிடிக்குமாறு போலே தேடிப் பிடிக்க வேண்டி இருப்பவர்களாதலின், ‘நாடி’ என்கிறார். ஆடு திருடின கள்ளர்களே அன்றோ இவர்கள்தாம்? 3அணங்குக்கு அருமருந்து என்று அங்கே ஆடு கட்டினவர்கள் ஆகையாலே, தேடிப் பிடிக்க வேண்டுமே?‘(நீர் நாடி’ என்றதனாலே, அவற்றுக்கு இல்லாதவற்றை நாடி என்று தோன்றுமேயன்றோ! அதனைக் காட்டுகிறார்)
ஆதிப்பிரான் அவன் மேவி உறைகோயில் – 3பரமபதத்தில் தன்னில் குறைந்தார் இல்லாமையாலே, அவ்விடத்தை விட்டு, நல்ல படுக்கையையும் போகத்துக்கு ஏகாந்தமானவற்றையும் காற்கடைக் கொண்டு, குழந்தையினுடைய தொட்டிற்காற்கடையிலே கிடக்கும் தாயைப் போலே, காப்பாற்றுவாரை விரும்புமவர்களான இம் மக்கள் இருக்கிற இடமாகையாலே விரும்பி வசிக்கும் இடம் இவ்விடம் ஆயிற்று.
பரந்தே – 5‘பெரிய திருநாளுக்கு எல்லாத் திக்குகளினின்றும் வந்து ஏறுமாறு போன்று,பல திக்குகளினின்றும் பாடி ஆடிப் பரவிச் சென்மின்கள்.
ஸ்வப்ந லப்தம் – அனுபவம் செல்லா நிற்கச் செய்தே விழித்துப் பார்க்குங்காட்டில் இல்லையாய் இருந்தது; ஆகையாலே, ‘நன்மோக்கம்’ என்கிறது. 1‘உங்களுக்கு இப்போது மறுமாற்றம் சொல்லலாம்படியாக இது ஒன்று உண்டாயிற்று’ என்கிறாராதல்; ஸ்வப்நலப்த தநம் யதா – ‘கனவில் கிடைத்த தனம் போலே போன வழி தெரியாமலே போயிற்று,’ என்கிறாராதல்.
சர்வேசுவரன் தன் சர்வாத்தும பாவத்தைச் சொல்லுமாறு போன்று, (ஸ்ரீ கீதையில் பத்தாவது அத்தியாயத்தில் 20 முதல் 42 முடிய உள்ள
சுலோகங்களைத் திருவுள்ளம் பற்றி.)சிவன், அதர்வ சிரஸ்ஸிலே நின்று, 2தன்படிகளைச் சொல்லி, (அஹம் ஏக: பிரதமம் ஆஸம் வர்த்தாமிச
பவிஷ்யாமிச நாந்ய: கச்சின் மத்தோ வியதிரிக்த இதி’ (அதர்வசிகை) )‘அவன் தானே இங்ஙனம் சொல்லுகைக்கு அடி என்?’ என்று ஐயங்கொண்டு, 3‘ஸ: அந்தராத் அந்தரம் பிராவிசத்’ என்கிறபடியே, ‘பரமாத்தும பிரவேசத்தாலே சொன்னேன்,’ என்றானே.ஸ :- அந்தச் சிவபிரான், அந்தராத் – தேக இந்திரியங்களைக் காட்டிலும் உள்ளே இருக்கிற ஜீவாத்துமாவாகிற தன்னினின்றும். அந்தரம் –
பரமாத்துமாவை, பிராவிசத் – அடைந்தார். என்றது, ‘சிவபிரான் பரமாத்தும பாவத்தை அடைந்தார்’ என்பது கருத்து. ‘அன்றிக்கே, ஸ :- அந்தப்
பரமாத்துமா, அந்தராத் – தேக இந்திரியங்களைக்காட்டிலும் உள்ளே இருக்கின்ற ஜீவாத்துமாவின், அந்தரம் – உள்ளே, பிராவிசத் – பிரவேசித்தார்,’ என்னலுமாம். என்றது ‘பரமாத்துமா சிவபிரான் உள்ளே பிரவேசித்தார்; ஆதலால், பரமாத்தும பாவத்தைச் சிவன் அடைந்தார்,’ என்பது கருத்து.மத்தஸ் ஸர்வம் அஹம் மபிசர்வம் சநாதநே
அஹமேவ அவ்யய: அநந்த: பரமாத்ம ஆத்ம ஸம்ஸ்ரய:’ என்பது, ஸ்ரீ விஷ்ணு புராணம், 1. 19 : 95.கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்’ என்ற திருவாய்மொழி இங்கு அநுசந்தேயம்.
ஒன்றும் பொய் இல்லை – 2மற்றைத் தேவர்கட்குச் சொல்லுகிற உயர்வுகள் ஒன்று ஒழியாமல் பொய்யாய் இருக்குமாறு போலே, பகவான் சம்பந்தமாகச் சொல்லுமவற்றில் ஒன்றும் பொய்யில்லை
இறைமைக்குணங்கள் இலராயினாரை உடையர் எனக் கருதி அறிவிலார் கூறுகிற புகழ்கள் பொருள் சேரா ஆதலின், அவை முற்றுமுடைய இறைவன் புகழே ‘பொருள்சேர் புகழ்’ எனப்பட்டது,’ என்ற பரிமேலழகர் உரை
இவனுடைய சொரூப ரூப குண விபூதிகள் புறம்பான குத்ருஷ்டிகளால் அசைக்கமுடியாதனவாய் இருக்கும்,’ என்றபடி. 1‘அதற்கு அடி என்?’ என்றால், ‘ஆதிப்பிரான்’ என்கிறார். என்றது, 2‘என்னுடைய தாய் மலடி என்ன ஒண்ணாதே அன்றோ?’ என்றபடி.
தாழ நிற்கிற இடத்தில் ஐசுவரியம் தோற்றுமோ?’ எனின், இராஜ புத்திரன் ஓர் ஒலியலை உடுத்துத் தாழ இருந்தாலும் இறைமைத் தன்மையில் குறைந்து தோன்றாதே அன்றோ?
ஆட்கொள்ளுகைக்கு உபாயம் அவன் கையிலே உண்டு போலேகாணும், தான் விருத்தவானாய்க் காணும் இவரை விருத்தியிலே சேர்ப்பித்தது. 6கையில் திருவாழி சேர்ந்தாற்போலே ஆயிற்று இவரும் சேர்ந்தபடி. கெடு மரக்கலம் கரை சேர்ந்தாற்போலே இருத்தலின் ‘சேர்ந்த’ என்கிறார்.
——————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply