அம்மங்கியம்மாள்
வெம் மா பிளந்தான்றன்னை’ என்பதற்கு, ‘ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் யார்?’ என்றால், இன்னான் என்கிறது என்று அம்மங்கி அம்மாள் நிர்வஹிப்பர். கேசி பட்டுப்போகச் செய்தேயும் தம் வயிறு எரித்தலாலே ‘வெம்மா’ என்கிறார் இவர். 1‘நன்றாகத் திறந்த வாயையுடையவனும் மஹாபயங்கரமானவனுமான அந்தக் கேசி என்னும் அசுரன், இடியினாலே தள்ளப்பட்ட மரம் போலே கண்ணபிரானுடைய திருக்கையாலே இரண்டு கூறு ஆக்கப்பட்டவனாய்க் கீழே விழுந்தான்,’ என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம். கேசி வாயை அங்காந்துகொண்டு வந்த போது, சிறு குழந்தைகள் துவாரம் கண்ட இடங்களிலே கையை நீட்டுமாறு போலே, இவன் பேதைமையாலே அதன் வாயிலே கையை நீட்டினான்; முன்பு இல்லாதது ஒன்றைக் கண்ட காட்சியாலே கை பூரித்துக் கொடுத்தது; கையைத் திரும்ப வாங்கினான்; அவன் இருபிளவாய் விழுந்தான் என்பது.
தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த – இதற்கு, ‘மோஹித்தவள் சிறிது தெளிந்தவாறே, மோர்க்குழம்பு குடித்தாள், தரித்தாள், கண்விழித்தாள், வார்த்தை சொன்னாள்,’ என்பார்களே அன்றோ?’ அது போன்று காணும்,’ என்று அம்மங்கி அம்மாள் பணிப்பர். 2பின்பு பிறந்த மிகுந்த மயக்கத்தாலே பிறந்த உணர்த்தியைக் குவாலாகச் சொல்லுகிறது. மேல் ‘சீலம் இல்லாச் சிறியன்’ என்னும் திருவாய்மொழியாகையாலே, உணர்ந்து கூப்பிட வேண்டுமளவே பிறந்தது
ஆளவந்தார்
என்னது ஆவியும் உன்னது; உன்னது ஆவியும் என்னது – என்னுடைய ஆவி உன்னது; உன்னுடைய ஆவி என்னது. என் சொரூபம் நீ இட்ட வழக்கு; உன் சொரூபம் நான் இட்ட வழக்கு. இவ்விடத்தை ஆளவந்தார் அருளிச் செய்கையில் இருந்த முதலிகளிற்சிலர், 2‘இவ்வாத்துமாவின் சொரூபம் அவன் இட்ட வழக்கு என்பது கூடும்; அவன் சொரூபம் இவன் இட்ட வழக்காவது என்?’ என்று கேட்க, ‘இவன் தன்னை அவனுக்கு ஆக்குவான் என்ற அன்று கர்மம் தடைசெய்யவும் கூடும்; சர்வேசுவரன் தன்னை இவன் இட்ட வழக்கு ஆக்கும் அன்று தடைசெய்பவர் இலர்; ஆன பின்பு, அதுவே நிலை நிற்பது. மேலும், ‘இவன் சொரூபம் அவன் இட்ட வழக்கு ஆகக் கூடுமோ?’ என்று இதிலே காணும் சந்தேகிக்க வேண்டுவது,’ என்று அருளிச்செய்தார்.
எம்பார்
கோவை வாயாள்’-எல்லாத் தேசத்திலும் எல்லாக் காலத்திலும் உண்டான அவன் படிகள் எல்லாம் இப்போதே பெற்று அனுபவிக்க வேண்டும் என்று விடாய்ப்பார் ஒருவரைப் பெறுகையாலே, இவர் உயிர் வாழ்வினையே இறைவனாகிய தனக்கு எல்லாமாம்படி இருக்கிற தன் காதல் குணத்தைக் காட்டிக் கொடுக்கக் கண்டு, இவரும் எல்லாம் பெற்றாராய் அனுபவிக்கிறார். சர்வேசுவரனுடைய ‘பாலனாய் ஏழுலகு’ இத்திருவாய்மொழி.-‘மேல் திருவாய்மொழியாகிய ‘பாலனாய் ஏழுலகில்’ ஆழ்வாருடைய காதற்குணம் சொன்னாற்போலே, இத்திருவாய்மொழியில் ஆழ்வார் பக்கல்
சர்வேசுவரனுக்கு உண்டான காதற்குணம் சொல்லுகிறது’ என்றபடி.
(உலகத்தில் ஒருவர் ஒருவரிடத்தில் ஒன்றை விரும்பினால், விரும்பப்பட்டவர்கள் விரும்பினவர்களுக்கு விரும்பிய பொருளுக்குப் போலியான வேறு ஒரு பொருளைக் கொடுத்து, விரும்பிய பொருளை மறக்கச் செய்வதும் உண்டு; அன்றி, ‘அதனையே கொடுக்கிறோம்’ என்று சொல்லி அவர்கள் விருப்பத்தை அடக்குவதும் உண்டு; அன்றி, அதனையே கையில் கொடுத்து, அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதும் உண்டு; ஆக, இம்மூன்று வகையினையும் முறையே காட்டுகிறார், ‘எம்பார்’ என்று தொடங்கி. ‘-வேறு ஒரு குணத்தை’ என்றது, காதற்குணத்தை.)
இதுதனக்கு மூன்று படியாக நிர்வஹிப்பர்கள் நம் முதலிகள்; எம்பார், “அம்புலி அம்மானைப் பிடித்துத் தரவேண்டும்’ என்று அழுத குழந்தைக்குத் தேங்காயைக் கொடுத்து அழுகையை ஆற்றுவாரைப்போலே, வேறு ஒரு குணத்தைப் பிரகாசப்படுத்தி அனுபவிப்பிக்க அனுபவிக்கிறார்,’ என்று அருளிச்செய்வர். திருமலை நம்பி, ஒருவன் ஒன்றை விரும்பினால், அவனும் அது செய்வானாய்த் தலை துலுக்கினால், பின்பு பின்னில் இழவு தோன்றாதே அன்றோ இருப்பது? ஆகையாலே, அவனும் ‘அப்படிச் செய்கிறோம்’ என்ன, மேல் உண்டான இழவு மறந்து, எல்லாம் பெற்றாராய் அனுபவிக்கிறார்,’ என்று அருளிச்செய்வர். 1ஸ்ரீ கௌசல்யையார், பெருமாள் வனத்திற்கு எழுந்தருளுகிற போது, ‘ஒரே புதல்வனையுடைய நான் உம்மைப் பிரிந்திருக்க மாட்டேன்! கூட வருவேன் இத்தனை!’ என்ன, ‘ஆச்சி, நீர் சொல்லுகிற இது தர்மத்திற்கு விரோதம் கண்டீர்,’ என்று முகத்தைப் பார்த்து ஒரு வார்த்தை அருளிச்செய்ய, இழவை மறந்து மங்களாசாசனம் பண்ணி மீண்டாரே அன்றோ?’ 1ஸ்ரீ கிருஷ்ணன், ‘மாசுச – சோகத்தைக் கொள்ளாதே’ என்று ஒரு வார்த்தை அருளிச் செய்ய, அருச்சுனன், 2‘சந்தேகங்கள் எல்லாம் நீங்கினவனாய் நிலைத்து நிற்கிறேன்; உனது வார்த்தையின்படி செய்கிறேன்,’ என்று தரித்தானே அன்றோ? பட்டர், ‘முக்காலத்தில் உள்ளவற்றையும் இப்போதே பெறவேண்டும் என்று விடாய்த்த இவர்க்கு அப்படியே அனுபவிக்கலாம்படி, 3கால சக்கரத்தன் ஆகையாலே, கால வேறுபாட்டிற்குரிய காரணங்களைக் கழித்து, நிகழ்காலத்திற்போலே அனுபவத்திற்குத் தகுதியாகும்படி காலத்தை ஒரு போகி ஆக்கிக்கொடுக்க அனுபவிக்கிறார்,’ என்று அருளிச் செய்வர்.
தீர்ப்பாரை’மேல் திருவாய்மொழி ‘வீற்றிருந்து ஏழுல’ காயிருக்க, (எல்லையில்லாத பிரீதியாய்,)அதனை அடுத்த இத்திருவாய்மொழி, ‘தீர்ப்பாரையாம் இனி’யாய் (எல்லை இல்லாத துக்கமாயிருக்கிறதே!)இருப்பதே! எம்பார், மேல் திருவாய்மொழியையும் இத்திருவாய்மொழியையும் அருளிச் செய்து, ‘மோருள்ளதனையும் சோறேயோ? மேல் திருவாய்மொழியில் அப்படிக் கரை கடந்ததான பிரீதியோடே சென்றது; இத்திருவாய்மொழியில் இப்படி மயக்கத்தோடே தலைக்கட்டிற்று; இதற்கு இருந்து அடைவுசொல்லுவேனோ? இதற்கு அசங்கதிரேவசங்கதி,’ என்று அருளிச்செய்வாராம்.இதற்குக் கருத்து
யாது?’ என்ன, ‘மேலெல்லாம் கலவிக்கும் பிரிவுக்கும் ஒருபடி சங்கதி சொல்லிக் கொண்டு போந்தோம்; இதிலே வந்தவாறே மேடும் பள்ளமுமாயிருந்தது; இது என்னாலே சொல்லலாயிருந்ததோ இதற்கு அசங்கதிரேவ சங்கதி?’ என்று அருளிச் செய்வாராம் என்றபடி.
நண்ணாதார்’-முன்னுரை-உடம்பு வேண்டா; உயிர் வேண்டா,’ என்று இவற்றை வெறுத்துப் பார்த்தார், தாம் ‘வேண்டா’ என்றவாறே தவிரும் என்று நினைந்து. அவை தவிர்ந்தன இல்லை. ‘ஒன்றனைப் பெறுகைக்கு மாத்திரமே அன்றி முடிகைக்கும் உன் தரவு வேண்டுமாகில் அதனைத் தந்தருளவேண்டும்,’ என்கிறார் இத்திருவாய்மொழியில். 2இந்த அமங்கள வார்த்தையைத் திருமுன்பே விண்ணப்பஞ் செய்ய வேண்டும்படியாகக் காணும் இவர் இவ்வுலக வாழ்வினை வெறுத்தபடி.(பகவானைப் பிரிந்து பிரிவாலே நோவுபடுகிற பிரகரணத்தோடு, உலக யாத்திரையை நினைத்து, ‘இதனைக் கண்டிராதபடி என்னை அங்கீகரிக்க வேணும்,’ என்று கூறுகிற இது பொருந்தாதே?’ என்ன, அதற்கு இரு வகையாகச் சமாதானம் கூறுகிறார்,) 3எம்பார், ‘உன்னைப் பிரிந்திருந்து படுகிற துன்பத்தின் அளவு அன்று, உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கிற இம்மக்கள் நடுவே இருக்கிற இருப்பால் படுகிற துன்பம்; இதனைத் தவிர்த்தருள வேண்டும் என்கிறார்,’ என்று அருளிச்செய்வர்–கதையைக் கையிலேயுடையவனாய் நான்கு மந்திரிகளோடு-உயர எழுந்தான்,’ என்கிறபடியே, இராவணனோடு பொருந்தாமை பிறந்த பின்பு நெருப்புப்பட்ட தரையில் கால் பாவாதாப்போலே அவ்விடம் அடி கொதித்துப் போந்தான் ஆயிற்று. இத்தால், ஒருவன் ‘பகவானிடத்தில் பகைமை கொண்டு அதிலே நிலைநின்றான்’ என்று அறிந்தானாகில் தன்னைக் கொண்டு அகல அன்றோ அடுப்பது என்பது போதருகின்றதன்றோ?
இரண்டாவது ஆழ்வான் நிர்வாஹம் : ‘ஆழ்வான் நிர்வாஹத்துக்குக் கருத்து, ‘கண்ணாளா! கடல் கடைந்தாய்!’ என்று அவன் குணங்களையும் சொல்லி,
‘நண்ணாதார் முறுவலிப்ப’ என்று சமுசாரிகளுடைய இழவையும் அநுசந்தித்து, ‘இவை என்ன உலகியற்கை?’ என்று, ‘நீ இப்படிக் குணாதிகனாயிருக்க
இவர்கள் யாத்திரை இருந்தபடி என்!’ என்று விண்ணப்பம் செய்ய, அவனும், ‘இதனை விட்டு உம்முடைய பலத்தை நீர் கண்டுகொள்ளும்’ என்று
அருளிச்செய்ய, ‘ஆனால் இவர்களோடு சேர்ந்திருத்தல் தகாத காரியம்; இவர்கள் நடுவில் இராதபடி திருவடிகளிலே சேர்த்துக்கொண்டருளவேணும்,’
என்று பிரார்த்திக்கிறார்,’ என்பது. இவர் நிர்வாஹத்தில், ‘கண்ணாளா! கடல் கடைந்தாய்!’ என்பன போன்ற குண அநுசந்தானங்கள் எல்லாம் பிறர்பொருட்டு எனக் கொள்க
எம்பார், ‘சிலர் எல்லா வேத சாஸ்திரங்களும் கைவரப் பெற்று வைத்து, ‘பரதத்துவம் இன்னது’ என்று அறுதியிடமாட்டாதே, ‘சேம்புக்குக் கூராச் சிற்றரிவாள் உண்டோ? நமக்கு வணங்கத் தகுந்தவர் அல்லாதார் உளரோ?’ என்று கண்ட இடம் எங்கும் புக்குத் தலை சாய்த்துத் தடுமாறி நிற்க, எம்பெருமானார் தரிசனத்தில் எத்தனையேனும் கல்வி இல்லாத பெண்களும் மற்றைத் தெய்வங்களை அடுப்பிடு கல்லைப் போன்று நினைத்திருக்கிறது, இந்த ‘ஒன்றுந் தேவும்’ என்ற திருவாய்மொழி உண்டாகையினாலே அன்றோ? என்று அருளிச்செய்வர்;
ஐயன் திருக்குருகைப் பெருமாள் அரையர்
உணங்கல் கெட – இவளுடைய உணங்குதல் கெட; ‘இவள் இளைப்புத் தீர’ என்றபடி. கழுதை – பேயை, கழுது – பேய். உதடு ஆட்டம் கண்டு என் பயன் – நீங்கள் ஆடும் கள்ளும் பிரார்த்தித்துக் கொடுக்க, அது அதனை உண்ணும் போது அதனுடைய உதடு ஆடுகிறபடியைக் கண்டிருப்பதனால் என்ன பயன் உண்டு?’ என்று ஐயன் திருக்குருகைப் பெருமாள் அரையர் நிர்வஹிப்பர். 1‘கழுது பேயும் பரணும்’ என்னக்கடவதன்றோ?
சிற்றாள் கொண்டார்
கடல் வண்ணா – 4இந்த உலக வாழ்க்கையின்படி அன்றிக்கே அனுபவிக்கலாவதும் ஒரு படி உண்டே. இவர்கள் துக்கத்தை நினைத்தலால் வந்த துன்பம் தீரச் சிரமஹரமான உன் வடிவைக் காட்டியருளாய். அடியேனைப் பண்டே போல் கருதாது – ‘பொய்ந்நின்ற ஞானம்’ என்ற பாசுரத்தில் ‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்ற அளவாக என்னைத் திருவுள்ளம் பற்ற ஒண்ணாது. ‘என்னை?’ எனின், பகவத் விஷயத்தில் மூழ்கிச் சொல்லுகிற சொல், மற்றைய விஷயங்களினுடைய தோஷங்களைப் பார்த்துச் சொல்லுகிற சொற்களைப் போன்று இராதே அன்றோ? 5சிற்றாள் கொண்டார், இவர்க்காகில் இது சேர்க்கை பல்லி போலே பணியன்றோ என்று இருக்க ஒண்ணாது,’ என்கிறார் என்றாராம்.
சேர்க்கைப்பல்லி – நிலைப்பல்லி, ‘சேர்க்கைப் பல்லி ஓர் இடத்திலேயே பலகால் சொல்லிக் கொண்டிருக்கும்; அந்தப் பல்லி போலே, இவர்க்கும் இது பணி அன்றோ?’ என்று இருக்க ஒண்ணாது என்கிறார் என்றபடி.
சொட்டை நம்பி
தன்தனக்கு இன்றி நின்றானை’ என்பதற்கு, எம்பெருமானார் தெற்கே எழுந்தருளின நாளிலே, ஆளவந்தார் மகனார் சொட்டை நம்பி அருளிச்செய்த வார்த்தை: ‘தன்தனக்கு என்றது, தானான தனக்கு என்றபடி. ஒரு படிக்கு ஒப்பு இன்றிக்கே இருக்கிறது பரத்துவத்தில் அன்று; 6‘என்னை நான் மனிதனாகவே நினைக்கிறேன்,’ என்கிறபடியே, அவதரித்து மனிச்சு ஏறிட்டுக்கொண்டு நிற்கிற நிலையிலே’என்றாராம்
தனக்கு’ என்னாது, ‘தன்தனக்கு’ என்றதற்குக் கருத்து -தன்தனக்கு – அவதரித்து அடியார்க்குப் பரதந்திரனாயிருக்கிற தனக்கு. தன் தனக்கு – தானான தனக்கு; தானான தன்மையாவது, தனக்கேயுரிய ஆகாரம்; அதாவது, ‘ஆஸ்ரித பாரதந்திரியம்’ என்றபடி.
திருமலை நம்பி
வேறு ஒரு குணத்தைப் பிரகாசப்படுத்தி அனுபவிப்பிக்க அனுபவிக்கிறார்,’ என்று அருளிச்செய்வர். திருமலை நம்பி, ஒருவன் ஒன்றை விரும்பினால், அவனும் அது செய்வானாய்த் தலை துலுக்கினால், பின்பு பின்னில் இழவு தோன்றாதே அன்றோ இருப்பது? ஆகையாலே, அவனும் ‘அப்படிச் செய்கிறோம்’ என்ன, மேல் உண்டான இழவு மறந்து, எல்லாம் பெற்றாராய் அனுபவிக்கிறார்,’ என்று அருளிச்செய்வர்.
நஞ்சீயர்
உலகம் முழுதையும் தன் திருவடிகளின்கீழே இட்டுக்கொள்ளும்படி பெரிய வடிவையுடைய திருவுலகு அளந்தருளின சர்வேசுவரன்’ என்று நினைத்து, ‘இங்ஙனே வாராயோ?’ என்று அழைப்பாள். இது, பிள்ளான் நிர்வாஹம். அங்ஙன் அன்றிக்கே, 1சீயர், ‘மலை பேரமாட்டாதே பல கால் மழை பெய்கையாலே அழுக்கு அற்றுப் பசுகு பசுகு என்று இருக்குமே? அதனைக் கண்டு, ‘அவன் குற்றமுடையவன் ஆகையாலே நாணங் கொண்டு, வந்து கிட்ட மாட்டாமையாலே பச்சைப் படாத்தை இட்டு முட்டாக்கிட்டு நிற்கிறான்,’ என்று, ‘யானைக் கூட்டத்துக்குக் கதவு இடில் அன்றோ உமக்கு நாண வேண்டுவது? இங்ஙனே போரீர்,’ என்னா நின்றாள்,’ என்று பணிப்பர்,
ஐந்தாந்திருவாய்மொழி – ‘வீற்றிருந்து’-மேல் திருவாய்மொழியிலே அப்படி விடாய்த்தவர், ‘இனி என்ன குறை எழுமையுமே?’ என்னப் பெறுவதே! 2மேல் ‘பொய்ந்நின்ற ஞானம்’ தொடங்கிக் ‘கோவைவாயாள்’ என்ற திருவாய்மொழி முடிய, ‘மண்ணையிருந்து துழாவி’ என்னுந் திருவாய்மொழியில் உண்டான விடாய்க்குக் கிருஷி செய்தபடி. அப்படி விடாய்க்கும்படி செய்த கிருஷியின் பலம் சொல்லுகிறது இத்திருவாய்மொழியில். 3‘பேற்றுக்கு இதற்கு அவ்வருகு சொல்லலாவது இனி ஒன்று இல்லை. 4‘சூழ்விசும்பு அணி முகில்’ என்ற திருவாய்மொழிக்குப் பின் இத்திருவாய்மொழியாகப் பெற்றது இல்லையே!’ என்று அருளிச்செய்வர் நஞ்சீயர்.
அஞ்ஞான தசையிலும் பொருள்களின் தன்மையால் தாரகம் என்பதற்குச் சம்வாதம் காட்டுகிறார், ‘-இராவணன் மாயா சிரசைக் காட்டின போது பிராட்டியும் மற்றைப் பெண்களைப் போன்று சோகித்துக் கண்ணநீர் விழவிட்டாளாய் இருந்தது; 5இதற்கு அடி என்? இது கேட்ட போதே முடிய அன்றோ தக்கது?’ என்று சீயரைக் கேட்க, ‘அவதாரத்தில் மெய்ப்பாட்டாலே ‘மெய்’ என்றே சோகித்தாள்; ஞானம் இன்றியிலே பிழைத்திருப்பதற்குக் காரணம் அவருடைய உளதாம் தன்மையாகையாலே உளளாயிருந்தாள்; இவ்வர்த்தம் மெய்யாகில் உளளாம் தன்மையும் இல்லையாம்,’ என்று அருளிச்செய்தார்.
அணி மானம் தடவரைத் தோள் – 6‘எல்லா ஆபரணங்களையும் அலங்கரிக்கத் தக்க திருத்தோள்கள்’ என்கிறபடியே, ‘ஆபரணத்துக்கு ஆபரணமான தோள்’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.
கவராத மடநெஞ்சால் குறை இலமே – வடிவில் சுவட்டை அறிவித்து என்னை அனுபவிப்பியானாகில், பணிவையுடைய நெஞ்சால் என்ன காரியம் உண்டு? 4நஞ்சீயர் இவ்விடத்திலே அருளிச்செய்வது ஒரு வார்த்தை உண்டு; ‘பூசுஞ்சாந்து என் நெஞ்சமே’ என்கிறபடியே, அன்று அப்படியே இத்தை விரும்பினவன் இன்று இப்படியே உபேக்ஷிக்கையாலே, ‘நாயகன் வரவு தாழ்த்தான்’ என்று அவன் முன்னே சாந்தைப் பரணியோடே உடைப்பாரைப் போலே, ‘என் நெஞ்சு எனக்கு வேண்டா என்கிறாள்’
பரமபதத்திலும் சமுசாரிகள் படுகிற துக்கத்தை நினைத்துத் திருவுள்ளத்தில் வெதுப்போடேயாயிற்று எழுந்தருளியிருப்பது,’ என்று பட்டர் அருளிச்செய்ய, ‘பண்டிதர்’ என்கிறவர், ‘ஆச்சானும், பிள்ளையாழ்வானும் 2இத்தைக் கேட்டுப் பரமபதத்திலே ஆனந்தத்தால் நிறைந்தவனாய் இருக்கிற இருப்பிலே திருவுள்ளத்திலே ஒரு வியசனத்தோடே இருந்தான் என்கை உசிதமோ என்கிறார்கள்,’ என்று வந்து விண்ணப்பஞ்செய்ய, 3‘‘மனிதர்களுக்குத் துக்கம் வருகின்ற காலத்தில் தானும் மிகவும் துக்கிக்கின்றான்’ என்றது, ‘குணப் பிரகரணத்திலேயோ, துக்கப் பிரகரணத்திலேயோ?’ என்று கேட்கமாட்டிற்றிலீரோ? 4இது குணமாகில், ‘குணம்’ என்று பேர் பெற்றவற்றில் அங்கு இல்லாதது ஒன்று உண்டோ?’ என்று அருளிச்செய்தார்.
நம்பிள்ளை
இதனை ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருவுள்ளம் பற்றுங்கோள்’ என்று பிள்ளை அருளிச்செய்வர். என்றது, ‘இது கண்கூடாகக் காண்பது போன்று இச்சரீரம் நீங்கிய பின்னர் அதுவும் காண அன்றோ நாம் புகுகிறது! 1இனி எத்தனைநாள்?’ என்றபடி. ஆக 2மூன்று திருவாய்மொழிகளாலும் (வீடுமின் முற்றவும்’, ‘சொன்னால்
விரோதம்’, ‘ஒரு நாயகமாய்’ என்ற மூன்று திருவாய்மொழிகளாலும்)இப்படிப் பரோபதேசம் செய்த இது, சமுசாரிகள் திருந்துகைக்குக் காரணம் ஆகாமல். 3அத்தாலும் தமக்குப் பகவானிடத்திலே விடாய் பிறந்தபடி சொல்லுகிறார் இதில்.
பெரியாழ்வார் திருமகளார்க்கும் விசேடித்து ஜீவனமாய் இருப்பது ஒன்றே அன்றோ இது? ‘பூங்கொள் திருமுகத்து மடுத்து ஊதிய சங்கு ஒலியும், சார்ங்கவில் நாண் ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்றுகொலோ!’ என்பது நாய்ச்சியார் திருமொழி. 3என்றது, ‘ஸ்ரீ ஜனகராஜன் திருமகளுக்கும் உருக்குமிணிப்பிராட்டிக்கும் உண்டான விடாய் தனக்கு ஒருத்திக்கும் உண்டாகையாலே, அவர்கள் இருவரும் பெற்ற பேற்றை நான் ஒருத்தியும் ஒருகாலே பெறவேண்டும்,’ என்கிறாள் என்றபடி. 4‘இது, பட்டர் அருளிச்செய்ய நான் கேட்டேன்’ என்று நம்பிள்ளை அருளிச்செய்வர்.
பட்டர்
பணிமின் திருவருள் என்னும் அணி மென் குழலார்’ என்று 2முன்புள்ள முதலிகள் நிர்வஹிப்பர்கள்; இவர்கள் நிர்வாஹத்தில் ‘என்னும்’ என்னும் எச்சம் ‘குழலார்’ என்னும் பெயருக்கு அடைமொழி. பட்டர், அங்ஙன் அன்றிக்கே, ‘திருவருள் பணிமின் என்னும்’ என்னும் இதனை ‘இன்பக் கலவி அமுது உண்டார்’ என்றதனோடே சேர்த்து அருளிச் செய்வர். பணிமின் திருவருள் என்னும் – தான் இராச்சியத்தை அவர்களுக்குப் 3படுக்கைப்பற்று ஆக்கி, அவர்களைப் படுக்கையிலே வைத்துத் தான் தாழ நின்று ‘திருவுள்ளத்தில் கிடக்கிறதை அருளிச்செய்யலாகாதோ?’ என்னும்; 4தன்னைத் தொழுது வணங்குகின்றவர்கள் புறம்பே உண்டே? இனி. இன்பச் சுவையாவது, தான் இவர்களுக்குத் தாழ நிற்கையே அன்றோ?
பட்டர், ‘முக்காலத்தில் உள்ளவற்றையும் இப்போதே பெறவேண்டும் என்று விடாய்த்த இவர்க்கு அப்படியே அனுபவிக்கலாம்படி, 3கால சக்கரத்தன் ஆகையாலே, கால வேறுபாட்டிற்குரிய காரணங்களைக் கழித்து, நிகழ்காலத்திற்போலே அனுபவத்திற்குத் தகுதியாகும்படி காலத்தை ஒரு போகி ஆக்கிக்கொடுக்க அனுபவிக்கிறார்,’ என்று அருளிச் செய்வர்.
வெம் மா பிளந்தான் தன்னை – ‘ஆற்றல் மிக்கு ஆளும்படி சொல்லுகிறது’ என்று பட்டர் அருளிச் செய்யும்படி. ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், இவ்வுலகங்கள் அனைத்தையம் உடையவன் ஆனால், இருந்த இடத்தே இருந்து, ‘தஹபச – கொளுத்து அடு’ என்று நிர்வஹிக்கையன்றிக்கே, இவர்களோடே ஒரே சாதியையுடையனாய் வந்து அவதரித்து, இவர்கள் செய்யும் பரிபவங்களை அடையப் பொறுத்து, களை பிடுங்கிக் காக்கும்படியைச் சொல்லுகிறது என்றபடி.
ஸ்ரீ விபீஷணாழ்வானைப் புகுரவொட்டேன்!’ என்றார் மஹாராஜர்; ‘இவன் புகுராவிடில் நாம் உளோம்ஆகோம்,’ என்கிறார் பெருமாள்; ‘இப்படி இருவரும் மாறுபடுதற்குக் கருத்து என்?’ என்று நஞ்சீயர் கேட்க, ‘இருவரும் ‘சரணமாகப் பற்றினவர்களை விடோம்!’ என்று மாறுபடுகிறார்கள் காணும்,’ என்பது பட்டர் அருளிச்செய்த வார்த்தை. என்றது, ‘சுக்கிரீவம் சரணம் கத:’ என்றதனை நடத்தப் பார்த்தார் மஹாராஜர்; ‘ராகவம் சரணம் கத:’ என்றதை நடத்தப் பார்த்தார் பெருமாள்,’ என்றபடி.
ஆழ்வீர்! நம்மை ஒரு கவி சொல்லும்,’ என்றால், அப்போதே கவி சொல்லிச் சமையும்படியாக வல்ல எனக்கு,’ என்கிறார் என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும்படி. அங்ஙனன்றிக்கே, பட்டர், ‘என்னாகியே, தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி’ என்கிறபடியே, சர்வேசுவரன் கவி பாடினான். ஆகையாலே, கவி பாடத் தட்டு இல்லை; அவன் அங்கீகரித்துத் திருக்கண்களாலே குளிர நோக்கி, ‘நீர் ஒரு கவி சொல்லும்,’ என்றால் ‘பிரீதியாலே உடை குலைப்படாமல் தரித்து நின்று சொல்ல வல்லேனான எனக்கு’ என்று அருளிச்செய்வர்.
பெரியாழ்வார் திருமகளார்க்கும் விசேடித்து ஜீவனமாய் இருப்பது ஒன்றே அன்றோ இது? ‘பூங்கொள் திருமுகத்து மடுத்து ஊதிய சங்கு ஒலியும், சார்ங்கவில் நாண் ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்றுகொலோ!’ என்பது நாய்ச்சியார் திருமொழி. 3என்றது, ‘ஸ்ரீ ஜனகராஜன் திருமகளுக்கும் உருக்குமிணிப்பிராட்டிக்கும் உண்டான விடாய் தனக்கு ஒருத்திக்கும் உண்டாகையாலே, அவர்கள் இருவரும் பெற்ற பேற்றை நான் ஒருத்தியும் ஒருகாலே பெறவேண்டும்,’ என்கிறாள் என்றபடி. 4‘இது, பட்டர் அருளிச்செய்ய நான் கேட்டேன்’ என்று நம்பிள்ளை அருளிச்செய்வர்
பிள்ளான்
பெருமையைக் கண்டவாறே, ‘உலகம் முழுதையும் தன் திருவடிகளின்கீழே இட்டுக்கொள்ளும்படி பெரிய வடிவையுடைய திருவுலகு அளந்தருளின சர்வேசுவரன்’ என்று நினைத்து, ‘இங்ஙனே வாராயோ?’ என்று அழைப்பாள். இது, பிள்ளான் நிர்வாஹம். அங்ஙன் அன்றிக்கே, 1சீயர், ‘மலை பேரமாட்டாதே பல கால் மழை பெய்கையாலே அழுக்கு அற்றுப் பசுகு பசுகு என்று இருக்குமே? அதனைக் கண்டு, ‘அவன் குற்றமுடையவன் ஆகையாலே நாணங் கொண்டு, வந்து கிட்ட மாட்டாமையாலே பச்சைப் படாத்தை இட்டு முட்டாக்கிட்டு நிற்கிறான்,’ என்று, ‘யானைக் கூட்டத்துக்குக் கதவு இடில் அன்றோ உமக்கு நாண வேண்டுவது? இங்ஙனே போரீர்,’ என்னா நின்றாள்,’ என்று பணிப்பர்,
பிள்ளையமுதனார்
ஏமாற்றம்’ என்பதே ஒரு சொல்லாய், அதாவது, துக்கமாய், ‘துக்கித்துக் கிடந்து கூப்பிட்டு’ என்னுதல். ‘ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்’ என்னக் கடவதன்றோ? அன்றிக்கே, ‘ஏ’ என்பது தெளிவு; ‘மாறுகை’ என்பது அழிகை; அதாவது, ‘தெளிவு அழிகை’ என்று பிள்ளை அமுதனார் பணிப்பர்.
வங்கிபுரத்து நம்பி
மேகலையால் குறை இல்லா மகள் – 2‘உஷைக்குக் கூறை உடை அழகியதாய் இருக்கும் போலே காண்’ என்று அருளிச்செய்வராம் வங்கிப்புரத்து நம்பி.மற்றையோர் உடையில்லாதவர்களோ? இவளை ‘மேகலையால் குறையில்லா’ என்கிறது என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘
தமிழ்ப்புலவர்
கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும் பெரிய கோலம் தடம் கண்ணன்’ என்பதற்கு, ‘திருமேனியில் கறுத்த நிறத்தாலே வந்த அழகுக்கு மேலே அதற்குப் பரபாகமான திருக்கண்களிலே அஞ்சனத்தை இடுகின்ற’ என்னலுமாம். இனி, ‘கரி’ என்று யானையாய், அத்தால் நினைக்கிறது குவலயாபீடமாய், குவலயாபீடமானது, அம்மேனி மிசை – அழகிய திருமேனியிலே, வெளிய – சீற. ‘நீறு சிறிதே இடும் – பொடியாக்கும்’ என்றார் ஒரு தமிழ்ப்புலவர்.
இல் பெறும் – ‘ஆத்துமாவுக்கு இருப்பிடமாய் இருக்கின்ற சரீரத்தைப் பெறும்’ என்னுதல். அன்றிக்கே. ‘இல்லக்கிழத்தியாகப் பெறுவாள்’ என்றாராம் தமிழ்ப் புலவர் ஒருவர். இல் – மனைவி. அன்றிக்கே, ‘ஏயில்பெறும்’ என்று கொண்டு, 2பண்ணை வென்ற இன்சொல் மங்கையாகையாலே( பண்ணை வென்ற இன்சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக் கண்ண நின்ன வண்ண மல்ல தில்லை என்னும் வண்ணமே’ என்பது, திருச்சந்த விருத்தம், 105.)இவள் வார்த்தை சொல்லுவாள் என்னுதல்; ஏயில் – இசை. 3‘இனியள், இனிய வார்த்தையைப் பேசுகின்றவள்’ என்னக்கடவதன்றோ? ஆக, ‘சரீரத்தைப் பெறும்’ என்னுதல்; ‘இல்லக்கிழத்தியாம்’ என்னுதல்; ‘வார்த்தை சொல்ல வல்லளாம்’ என்னுதல்.
அணி – ஆபரணம். மானம் – அளவு; நீட்சி. அன்றிக்கே, ‘அணி என்று அழகாய், மானம் என்று பெருமையாய், அணி பெருகிய தோள்’ என்றார் ஒரு தமிழ்ப்புலவர். 1அதனாலும், ‘ஆபரணத்துக்கு ஆபரணம்’ என்கிறபடியாய் இருக்கை.-தமிழ்ப்புலவர் கூறிய பொருளால், அழகின் மிகுதியைச் சொல்லி,
ஆபரணத்தின் அழகையும் விஞ்சியிருக்கும் என்பதனைத் தெரிவித்தபடி. இந்தப் பொருளாகிலும் சீயர் அருளிச்செய்த பொருளே சித்திக்கும் என்கிறார்,
‘அதனாலும்’ என்று தொடங்கி. ‘அதனாலும்’ என்றது, ‘அணி பெருகிய தோள் என்ற பொருளாலும்’ என்றபடி.
அமிழிமைத் துணைகள் கண்ணுக் கணியென அமைக்கு மாபோல்
உமிழ்சுடர்க் கலன்கள் நங்கை யுருவினை மறைப்ப தோரார்,
அமிழ்தினைச் சுவைசெய் தென்ன ஆழகினுக் கழகு செய்தார்;
இமிழ்திரைப் பரவை ஞாலம் ஏழைமை யுடைத்து மாதோ!’கம்ப. கோலங்காண் பட. 3)
பூணுக் கழகளிக்கும் பொற்றொடியைக் கண்டக்கால் நாணுக்கு நெஞ்சுடைய நல்வேந்தர்’(நளவெண்பா)
———————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply