ஸ்ரீ மத் பாகவதம் -11-5-ஆழ்வார்கள் திரு அவதார ஸூசகம் -ஸ்ரீமத் பாகவத சாரம்-ஸ்கந்தங்கள் காட்டும் பகவத் கல்யாண குணங்கள்-

கரபா⁴ஜன உவாச
க்ருʼதம்ʼ த்ரேதா த்³வாபரம்ʼ ச கலிரித்யேஷு கேஶவ꞉ .
நானாவர்ணாபி⁴தா⁴காரோ நானைவ விதி⁴னேஜ்யதே .. 20..

க்ருʼதே ஶுக்லஶ்சதுர்பா³ஹுர்ஜடிலோ வல்கலாம்ப³ர꞉ .
க்ருʼஷ்ணாஜினோபவீதாக்ஷான் பி³ப்⁴ரத்³த³ண்ட³கமண்ட³லூ .. 21..

மனுஷ்யாஸ்து ததா³ ஶாந்தா நிர்வைரா꞉ ஸுஹ்ருʼத³꞉ ஸமா꞉ .
யஜந்தி தபஸா தே³வம்ʼ ஶமேன ச த³மேன ச .. 22..

ஹம்ʼஸ꞉ ஸுபர்ணோ வைகுண்டோ² த⁴ர்மோ யோகே³ஶ்வரோ(அ)மல꞉ .
ஈஶ்வர꞉ புருஷோ(அ)வ்யக்த꞉ பரமாத்மேதி கீ³யதே .. 23..

த்ரேதாயாம்ʼ ரக்தவர்ணோ(அ)ஸௌ சதுர்பா³ஹுஸ்த்ரிமேக²ல꞉ .
ஹிரண்யகேஶஸ்த்ரய்யாத்மா ஸ்ருக்ஸ்ருவாத்³யுபலக்ஷண꞉ .. 24..

தம்ʼ ததா³ மனுஜா தே³வம்ʼ ஸர்வதே³வமயம்ʼ ஹரிம் .
யஜந்தி வித்³யயா த்ரய்யா த⁴ர்மிஷ்டா² ப்³ரஹ்மவாதி³ன꞉ .. 25..

விஷ்ணுர்யஜ்ஞ꞉ ப்ருʼஶ்னிக³ர்ப⁴꞉ ஸர்வதே³வ உருக்ரம꞉ .
வ்ருʼஷாகபிர்ஜயந்தஶ்ச உருகா³ய இதீர்யதே .. 26..

த்³வாபரே ப⁴க³வாஞ்ஶ்யாம꞉ பீதவாஸா நிஜாயுத⁴꞉ .
ஶ்ரீவத்ஸாதி³பி⁴ரங்கைஶ்ச லக்ஷணைருபலக்ஷித꞉ .. 27..

தம்ʼ ததா³ புருஷம்ʼ மர்த்யா மஹாராஜோபலக்ஷணம் .
யஜந்தி வேத³தந்த்ராப்⁴யாம்ʼ பரம்ʼ ஜிஜ்ஞாஸவோ ந்ருʼப .. 28..

நமஸ்தே வாஸுதே³வாய நம꞉ ஸங்கர்ஷணாய ச .
ப்ரத்³யும்னாயாநிருத்³தா⁴ய துப்⁴யம்ʼ ப⁴க³வதே நம꞉ .. 29..

நாராயணாய ருʼஷயே புருஷாய மஹாத்மனே .
விஶ்வேஶ்வராய விஶ்வாய ஸர்வபூ⁴தாத்மனே நம꞉ .. 30..

இதி த்³வாபர உர்வீஶ ஸ்துவந்தி ஜக³தீ³ஶ்வரம் .
நானாதந்த்ரவிதா⁴னேன கலாவபி யதா² ஶ்ருʼணு .. 31..

க்ருʼஷ்ணவர்ணம்ʼ த்விஷாக்ருʼஷ்ணம்ʼ ஸாங்கோ³பாங்கா³ஸ்த்ரபார்ஷத³ம் .
யஜ்ஞை꞉ ஸங்கீர்தனப்ராயைர்யஜந்தி ஹி ஸுமேத⁴ஸ꞉ .. 32..

த்⁴யேயம்ʼ ஸதா³ பரிப⁴வக்⁴னமபீ⁴ஷ்டதோ³ஹம்ʼ
தீர்தா²ஸ்பத³ம்ʼ ஶிவவிரிஞ்சினுதம்ʼ ஶரண்யம் .
ப்⁴ருʼத்யார்திஹம்ʼ ப்ரணதபால ப⁴வாப்³தி⁴போதம்ʼ
வந்தே³ மஹாபுருஷ தே சரணாரவிந்த³ம் .. 33..

த்யக்த்வா ஸுது³ஸ்த்யஜஸுரேப்ஸிதராஜ்யலக்ஷ்மீம்ʼ
த⁴ர்மிஷ்ட² ஆர்யவசஸா யத³கா³த³ரண்யம் .
மாயாம்ருʼக³ம்ʼ த³யிதயேப்ஸிதமன்வதா⁴வத்³வந்தே³
மஹாபுருஷ தே சரணாரவிந்த³ம் .. 34..

ஏவம்ʼ யுகா³னுரூபாப்⁴யாம்ʼ ப⁴க³வான் யுக³வர்திபி⁴꞉ .
மனுஜைரிஜ்யதே ராஜன் ஶ்ரேயஸாமீஶ்வரோ ஹரி꞉ .. 35..

கலிம்ʼ ஸபா⁴ஜயந்த்யார்யா கு³ணஜ்ஞா꞉ ஸாரபா⁴கி³ன꞉ .
யத்ர ஸங்கீர்தனேனைவ ஸர்வஸ்வார்தோ²(அ)பி⁴லப்⁴யதே .. 36..

ந ஹ்யத꞉ பரமோ லாபோ⁴ தே³ஹினாம்ʼ ப்⁴ராம்யதாமிஹ .
யதோ விந்தே³த பரமாம்ʼ ஶாந்திம்ʼ நஶ்யதி ஸம்ʼஸ்ருʼதி꞉ .. 37..

க்ருʼதாதி³ஷு ப்ரஜா ராஜன் கலாவிச்ச²ந்தி ஸம்ப⁴வம் .
கலௌ க²லு ப⁴விஷ்யந்தி நாராயணபராயணா꞉ .. 38..

க்வசித்க்வசின்மஹாராஜ த்³ரவிடே³ஷு ச பூ⁴ரிஶ꞉ .
தாம்ரபர்ணீ நதீ³ யத்ர க்ருʼதமாலா பயஸ்வினீ .. 39..

காவேரீ ச மஹாபுண்யா ப்ரதீசீ ச மஹாநதீ³ .
யே பிப³ந்தி ஜலம்ʼ தாஸாம்ʼ மனுஜா மனுஜேஶ்வர .
ப்ராயோ ப⁴க்தா ப⁴க³வதி வாஸுதே³வே(அ)மலாஶயா꞉ .. 40..

தே³வர்ஷிபூ⁴தாப்தந்ருʼணாம்ʼ பித்ரூʼணாம்ʼ
ந கிங்கரோ நாயம்ருʼணீ ச ராஜன் .
ஸர்வாத்மனா ய꞉ ஶரணம்ʼ ஶரண்யம்ʼ
க³தோ முகுந்த³ம்ʼ பரிஹ்ருʼத்ய கர்தம் .. 41..

ஸ்வபாத³மூலம்ʼ ப⁴ஜத꞉ ப்ரியஸ்ய
த்யக்தான்யபா⁴வஸ்ய ஹரி꞉ பரேஶ꞉ .
விகர்ம யச்சோத்பதிதம்ʼ கத²ஞ்சித்³து⁴னோதி
ஸர்வம்ʼ ஹ்ருʼதி³ ஸந்நிவிஷ்ட꞉ .. 42..

நாரத³ உவாச
த⁴ர்மான் பா⁴க³வதானித்த²ம்ʼ ஶ்ருத்வாத² மிதி²லேஶ்வர꞉ .
ஜாயந்தேயான் முனீன் ப்ரீத꞉ ஸோபாத்⁴யாயோ ஹ்யபூஜயத் .. 43..

ததோ(அ)ந்தர்த³தி⁴ரே ஸித்³தா⁴꞉ ஸர்வலோகஸ்ய பஶ்யத꞉ .
ராஜா த⁴ர்மானுபாதிஷ்ட²ன்னவாப பரமாம்ʼ க³திம் .. 44..

த்வமப்யேதான் மஹாபா⁴க³ த⁴ர்மான் பா⁴க³வதான் ஶ்ருதான் .
ஆஸ்தி²த꞉ ஶ்ரத்³த⁴யா யுக்தோ நி꞉ஸங்கோ³ யாஸ்யஸே பரம் .. 45..

யுவயோ꞉ க²லு த³ம்பத்யோர்யஶஸா பூரிதம்ʼ ஜக³த் .
புத்ரதாமக³மத்³யத்³வாம்ʼ ப⁴க³வானீஶ்வரோ ஹரி꞉ .. 46..

த³ர்ஶனாலிங்க³னாலாபை꞉ ஶயனாஸனபோ⁴ஜனை꞉ .
ஆத்மா வாம்ʼ பாவித꞉ க்ருʼஷ்ணே புத்ரஸ்னேஹம்ʼ ப்ரகுர்வதோ꞉ .. 47..

வைரேண யம்ʼ ந்ருʼபதய꞉ ஶிஶுபாலபௌண்ட்³ரஶால்வாத³யோ க³திவிலாஸவிலோகநாத்³யை꞉ .
த்⁴யாயந்த ஆக்ருʼததி⁴ய꞉ ஶயனாஸநாதௌ³
தத்ஸாம்யமாபுரனுரக்ததி⁴யாம்ʼ புன꞉ கிம் .. 48..

மாபத்யபு³த்³தி⁴மக்ருʼதா²꞉ க்ருʼஷ்ணே ஸர்வாத்மனீஶ்வரே .
மாயாமனுஷ்யபா⁴வேன கூ³டை⁴ஶ்வர்யே பரே(அ)வ்யயே .. 49..

பூ⁴பா⁴ராஸுரராஜன்யஹந்தவே கு³ப்தயே ஸதாம் .
அவதீர்ணஸ்ய நிர்வ்ருʼத்யை யஶோ லோகே விதன்யதே .. 50..

ஶ்ரீஶுக உவாச
ஏதச்ச்²ருத்வா மஹாபா⁴கோ³ வஸுதே³வோ(அ)திவிஸ்மித꞉ .
தே³வகீ ச மஹாபா⁴கா³ ஜஹதுர்மோஹமாத்மன꞉ .. 51..

இதிஹாஸமிமம்ʼ புண்யம்ʼ தா⁴ரயேத்³ய꞉ ஸமாஹித꞉ .
ஸ விதூ⁴யேஹ ஶமலம்ʼ ப்³ரஹ்மபூ⁴யாய கல்பதே .. 52..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
ஏகாத³ஶஸ்கந்தே⁴ பஞ்சமோ(அ)த்⁴யாய꞉ .. 5..

—————-

ஸ்ரீமத்பாகவதம் 11ஆம் காண்டம் 5ம் அத்யாயத்தில் கரபஜன மஹரிஷி, நிமி மஹாராஜனுக்கு கலியுகத்தில் எம்பெருமானின் வழிபாட்டுக்கு விரோதமாய் உள்ளவர்கள், அமைதியை இழந்தவர்கள், எம்பெருமானின் நாமங்கள், ரூபங்கள் மற்றும் அவனை அடைவதற்கான உபாயங்கள் ஆகியவற்றை போதனை செய்து வருகிறார். அப்பொழுது ஸாதிக்கிறார்:

க்ருதாதிஷு ப்ரஜா ராஜன் கலாவ்  இச்சந்தி ஸம்பவம் |

கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண-பராயணா: |

க்வசித் க்வசின்  மஹா-ராஜ த்ரவிடேஷு ச பூரிஷ: || 38.

தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்வினீ |

காவேரீ ச மஹா-புண்யா ப்ரதீசீ ச மஹாநதீ ||39.

யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனுஜேஷ்வர |

ப்ராயோ பக்தா பகவதி வாஸுதேவே(அ)மலாஷயா: || 40

அரசே! ஸத்ய யுகம் மற்றும் பிற யுகங்களின் வாசிகள் இந்தக் கலியுகத்தில் பிறவியெடுக்க மிகுந்த ஆவலுடன் உள்ளனர். ஏனெனில் இந்த யுகத்தில் நாராயணின் பக்தர்கள் பலர்  இருப்பார்கள். இவர்கள் பல்வேறு இடங்களில் தோன்றி ஹரியிடம் அளவில்லா பக்தி கொண்டிருப்பார்கள். வேந்தே! இவர்கள் பலவிடங்களில் தோன்றினாலும் குறிப்பாக வளங்கள் நிறைந்த த்ராவிட தேசத்தில் பாய்ந்தோடும் புண்ய நதிகளான தாம்ரபர்ணி, க்ருதமாலா, பயஸ்வினி, மிகவும் புண்யம் வாய்ந்த காவேரி, பிரதீசி, மஹாநதி ஆகிய நதிகளின் கரைகளிலும் மற்றும் மேற்கு நோக்கி பாயும் நதிகளின் கரைகளிலும் அநேகமான பேர்கள் தோன்றுவார்கள். அப்புண்ய நதிகளின் தீர்த்தத்தைப் பருகுபவர்கள் வாசுதேவனின் பரம பக்தர்களாக இருப்பார்கள்” என்று தலைக்கட்டுகிறார்.

இந்த ஸ்லோகத்தை சற்று ஆராய்ந்து பார்த்தால், இங்கே கரபஜன முனி ஆழ்வார்களின் திரு அவதார வைபவத்தை முன்கூட்டியே அறிவிக்கிறார் என்று நன்கு விளங்குகிறது.

த்வாபர-கலியுக சந்தியில் முறையே அடுத்தடுத்த நாட்களில் தோன்றி எம்பெருமானுடைய ஸ்வரூப-ரூப-குண விஷேஷனங்களை அர்ச்சாவதாரங்களில் நன்கு அநுபவித்து மகிழ்ந்து, அதற்கு போக்குவீடாய், அநாதியான தமிழ்பாஷையில் ஸர்வோத்தமமான மூன்று திருவந்தாதிகள் என்றவோர் அதியத்புதமானத் திருவிளக்கை ஏற்றினர் பரம கவிகளாம் முதல் மூன்று ஆழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார். அதன் மூலம் எம்பெருமானின் அர்ச்சாவதார அநுபவத்தை மதுரமான பாசுரங்களிட்டுப் பாடும் மார்க்கத்தைத் துவக்கி வைத்தனர்.

பின்னர் தாம்ரபர்ணியின் கரையில் திருவவதரித்த குருகூர்ச் சடகோபன் அதுவரை வேதாந்தத்திலும் இதிஹாச புராணங்களிலும் இருந்த தெளியாத நிலங்களையும் ஸாமான்யர்களின் அறிவு நிலைக்கு எட்டாத அர்த்தங்களையும் அனைவரும் அநுஷ்டித்து அறிந்துகொள்ளும்படி நான்கு வேதங்களையும் தமிழ் மறையாக்கித் தந்தருளினார். அதே தாம்ரபர்ணியின் கரையில் ஸ்வாமி நம்மாழ்வாருக்கு முன்னரே அவதரித்தவர் அவரின் அத்யந்த சிஷ்யரான ஸ்வாமி மதுரகவியாழ்வார்.  இவர் எழுந்தருளியிருந்த காலத்தில் எம்பெருமான் கண்ணனே இவ்வுலகில் எழுந்தருளியிருந்தான். இருப்பினும் அவனை நேரே சென்றடைந்து ஆச்ரயிக்காமல் ஓர் ஆசார்யன் மூலமாகத் தான் அடையவேண்டும் என்ற துணிவுகொண்டு தக்க ஆசார்யனுக்காகக் காத்துக்கொண்டிருந்தார். ஸ்வாமி நம்மாழ்வார் திருவவதரித்த பின் அவர் திருவடிகளில் ஈடுபட்டு அவர் திவ்ய ஸூக்திகளும் திருவடியுமே தமக்கு உபாயமாகக் கொண்டு அவருக்கு இடைவிடாது நித்யகைங்கர்யங்கள் செய்து ஆசார்ய ஸம்பந்தம் மூலமாகவே பக்தியும் ப்ரபத்தியும் ஸித்திக்கும் என்று நமக்குக் காட்டியருளினார்.

வைகை நதிக்கரையில் அவதரித்தார் பெரியாழ்வார் என்று கொண்டாடப்பட்ட ஸ்ரீ விஷ்ணுசித்தர்.

மச்-சித்தா மத்-கத-ப்ராணா போதயந்த: பரஸ்பரம் கதயந்தஷ் ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச –ஸ்ரீமத் பகவத் கீதை 10-9

என்ற எம்பெருமான் கண்ணனின் திருவாக்குப்படி அவர் ஸதா ஸர்வ காலமும் கண்ணனையே நினைத்து உருகி கரைந்து யசோதா பாவனையில் அவனுக்குத் தொட்டிலிட்டு, நீராட்டி, பூச்சூட்டி, காப்பிட்டு, ஆயர்குல பெண்களாகவும், சிறுமிகளாகவும் நின்று அவன் செய்யும்  தீம்புகளைக் கண்டித்து, ஆயர் குல சிறுவர்களாக இருந்து வெண்ணெயைத் திருடி, பசுக்கள் நிறைந்த கொட்டைகளில் புகுந்து மதுரா நகரின் புழுதிகளில் உருண்டு என்று பருகப் பருகத் தெவிட்டாதப் பாசுரங்களினால் அவனை ஆராதித்து அவனுக்கு பல்லாண்டு பாடியருளினார். அவ்வாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளையான கோதை கண்ணன் மேல் தீராக் காதலும் பக்தியும் கொண்டு, அவனைப் பாமாலையால் அர்ச்சித்தும், பூமாலையைச் சூடிக்கொடுத்தும் அவனையே மணாளனாகக் கரம் பிடித்தாள்.

காவிரி நதிக்கரையில் அவதரித்த தொண்டரடிப்பொடியாழ்வாரும் திருப்பாணாழ்வாரும் அக்கரையில் பள்ளிகொண்டுள்ள ஸ்ரீரங்கநாதனின் அர்ச்சாவதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு பக்தி என்னும் தெவிட்டாத ரஸத்துடன் இசையைக் கோர்த்துப் பாசுரமிட்டு திருவரங்கனின் திவ்ய மங்கள திருமேனியைத்  தமிழ் மாலைகளால் அலங்கரித்தனர். திருக்குறையலூரில் அவதரித்த திருமங்கையாழ்வார் பிற க்ஷேத்ரத்து எம்பெருமான்கள் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டு அவர்களை நேரில் சென்று ஸேவித்து அவ்வனுபவத்தையே நம்மாழ்வாரின் வேதத்தின் ஸாரமான நான்கு பிரபந்தங்களுக்கு உபாங்கங்களாய் ஆறு திவ்யப்ரபந்தங்களை அருளினார்.

எம்பெருமானின் கௌஸ்துப ரத்னத்தின் அம்சமாக தென்மேற்கு திசையில்(திருவஞ்சிக்களம், கேரளா) தோன்றிய ஸ்வாமி குலசேகராழ்வார் தம் ஸ்ரீஸூக்திகள் மூலம் இந்திரியங்களை எம்பெருமானின் விஷயமாகப் ப்ரயோகித்து, அவனைச் சரணடைந்து கைங்கர்யம் பண்ணுவதே ஒரு ஜீவனுக்குத் தலையாய கர்தவ்யம் என்று நிர்தாராணம் பண்ணினார்.

ஸ்ரீமத் பாகவதத்தில் காட்டியபடி கலியுக சந்தியில் அவதரித்த, எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணின் பரம பக்தர்களான முதல் மூன்று ஆழ்வார்கள் அருளிய திருவந்தாதிகளென்னும் தீபமானது உலகத்திலுள்ளவர்களின் அஜ்ஞானம் நீங்கவும், நான்கு வேதங்களின் அந்தத்தில் கூறிய மார்க்கம் ப்ரகாஸிக்கவும் செய்தது. அவர்களுக்குப் பின் திருவவதரித்த ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்கள், அம்முதல் ஆழ்வார்கள் காட்டிய வழியில் சென்று, அவ்விளக்க்கிற்கு மேன்மேலும் எம்பெருமானின் திவ்ய மங்கள அநுபவம் என்னும் நெய்யைச் சேர்த்ததால் இன்றுவரை அவ்விளக்கானது கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு  நம்மிடத்திலுள்ள அஜ்ஞானமென்னும் இருளைப் போக்கிக் கொண்டிருக்கிறது.

—————-

ஸ்ரீமத் பாகவத சாரம்-ஸ்கந்தங்கள் காட்டும் பகவத் கல்யாண குணங்கள்

ஸ்கந்தம் 1–பக்தர்கள் இடம் தோற்பவன் -பீஷ்மர் அம்பு படுக்கையில் -பீஷ்மர் ஸ்துதி
ஸ்கந்தம் -2-ஸாஸ்த்ர பிரதத்வம் அவனே ரிஷிகள் ஆழ்வார்கள் மூலம் வெளியிட்டு அருள்கிறான்
ஸ்கந்தம் -3-பாகவத அபசாரம் பொறுக்காதவன் -த்வாபர பாலகர்கள் சாபம்
ஸ்கந்தம் -4-ஞானம் அளிப்பவன் -துருவ சரித்திரம்
ஸ்கந்தம் -5-பக்தியில் நழுவிய பக்தர்களைக் காப்பவன் -அடுத்த ஜென்மத்தில் னால பக்தர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறக்க வைக்கிறான் -ஜடபரதர் வ்ருத்தாந்தம்
ஸ்கந்தம் -6-நாமம் சொல்ல பாபநாள் போகும் கத்தி பந்து வும் பாரங்கதி கண்டு கொண்டானே
ஸ்கந்தம் -7-பக்தனின் வாக்கை மெய்ப்பிப்பவன் -பிரகலாதன் -நரஸிம்ஹ வ்ருத்தாந்தம்
ஸ்கந்தம் -8-சரணாகதர்க்காக எதையும் -செய்பவன் மஹாபலி -வ்ருத்தாந்தம் வழிபாடு வீண் போகாது -ஸ்ரத்தா அனுகுணம் பலம் -அதிதிக்கு பகவான் வாக்கு உறுதி அளித்தான்
ஸ்கந்தம் -9-நமக்கே தெரியாமல் வரும் ஆபத்துக்களைக் காத்து அருளுவான் -அம்பரீஷர் சரித்திரம்
ஸ்கந்தம் -10- ஆஸ்ரிதர் கர ஸ்பர்சம் -த்ரவ்யம் உகப்பவன் -அடியார்களின் சம்பந்திகளின் மேல் அபிநிவேசம் கொண்டவன் -ராமானுஜர் ஆறு கட்டளைகலில் ஓன்று -அடியார் வாழ வேண்டும்
ஸ்கந்தம்11- பாதுகை தந்து அருளுவான் -உத்தவருக்கு -நாதமுனிகளுக்கு நம்மாழ்வார்
ஸ்கந்தம் -12- பிரபஞ்சம் அவனுக்குள் அடக்கம் அவன் இன்றி யாவரும் யாதும் இல்லை -மார்க்கண்டேயர் ஆலிலை மேல் பாலகனாய் –

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading