முதல் ஸ்லோகம் மனிதனின் துக்கங்களுக்குக் காரணம் என்ன,
அவற்றைக் கண்டு களைவது எப்படி என்பதில் ஆரம்பிக்கிறது.
‘உலகில் துக்கம் என்பது ஒரு விஷயமே இல்லை;
அப்படி இருந்தால் அல்லவா அதை அனுபவிக்க’ என்பதன் சாரம்சமே முதல் நான்கு வரிகள்.
சாங்க்யம் என்னும் இந்தத் தத்துவத்தின் மூலத்தை அளித்தவர் கபிலமுனி.
சாங்க்யம் என்ற சொல்லுக்கு பகுத்தறிதல், ஆராய்தல், எண்ணுதல் என்று பல்வேறு அர்த்தங்கள் உண்டு.
ஒவ்வொரு பொருளும் அதன் இயற்கையான குணத்திலிருந்து வளர்ச்சியடைந்து உருமாறுகிறது.
ஆதியில் வணங்குதல் என்பது இயற்கையை மட்டுமே.
இதனை ஏற்பவர்களும், உருவ வழிபாடுகள் ஆரம்பமான வேத காலத்துக்குப் பிறகு எதிர்ப்பவர்களும்
தமக்கான வாத பிரதிவாதங்களால் சாங்க்யத்தை ஏற்கவும் மறுக்கவும் ஆரம்பித்தனர்.
செவிவழிப் பாடமாக வந்த சாங்கியத்தை அளித்தவரான கபிலமுனியின் நூல் கிடைக்காத போது,
ஈஸ்வர கிருஷ்ணன் சாங்கிய காரிகையை எழுதுகிறார்.
அவரும் தானே இந்நூலின் ஆசிரியர் என்று கூறவில்லை.
சஷ்டி தந்திரம் என்னும் நூலை பின்பற்றியே சாங்கிய காரிகைக்கு பாஷ்யம் எழுதுவதாகக் குறிப்பிடுகிறார்.
பகவத்கீதையின் இரண்டாவது அத்தியாயத்துக்கு சாங்கிய யோகம் என்று பெயர்.
வாசஸ்பதி மிஸ்ரா அவர்களின் சாங்கிய தத்துவ கௌமுதி எனும் நூலும் சாங்கியத்துக்கான விளக்கங்கள் உள்ளன.
கபிலரின் சாங்கியம் உருவ வழிபாடு இல்லாத இயற்கை மட்டுமே மூலம்;
அதிலிருந்து உருமாறி பல்வேறு உருவங்களைக் கொண்டு மாற்றம் ஒன்றே மாறாததாக விளக்குகிறது.
ஈஸ்வர சாங்கியமோ இறைவன் எனும் ஒருவரை பரம் பொருளாகக் கொண்டு
அவனின்றி அணுவும் அசையாது என்ற ஒரு சொல்லில் சாங்க்யத்தை அடக்குகிறது.
காலப்போக்கில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பலர் இதற்கு விளக்கவுரை எழுதி,
உருவ வழிபாடு முறை வந்தபின் ஈஸ்வர தத்துவம் சாங்கியத்துக்குள் புகுந்தது.
இதற்கு ஈஸ்வர சாங்கியம் என்று பெயர்,
மகாபாரதத்தில் சாந்தி பருவத்தில் இந்த சாங்க்யமே உரைக்கப்படுகிறது.
கபிலரின் சாங்கியம் உருவ வழிபாடு இல்லாத இயற்கை மட்டுமே மூலம்;
அதிலிருந்து உருமாறி பல்வேறு உருவங்களைக் கொண்டு மாற்றம் ஒன்றே மாறாததாக விளக்குகிறது.
ஈஸ்வர சாங்க்யமோ இறைவன் எனும் ஒருவரை பரம்பொருளாகக் கொண்டு
அவனின்றி அணுவும் அசையாது என்ற ஒரு சொல்லில் சாங்க்யத்தை அடக்குகிறது.
சாங்கிய காரிகை 72 ஸ்லோகங்களைக் கொண்டது (சிலர் 73 என்று சொல்வதும் உண்டு).
முதல் ஸ்லோகம் மனிதனின் துக்கங்களுக்குக் காரணம் என்ன,
அவற்றைக் கண்டு களைவது எப்படி என்பதில் ஆரம்பிக்கிறது.
‘உலகில் துக்கம் என்பது ஒரு விஷயமே இல்லை;
அப்படி இருந்தால் அல்லவா அதை அனுபவிக்க’ என்பதன் சாரம்சமே முதல் நான்கு வரிகள்.
துன்பம் மூன்று வகைப்படும்.
1. ஆதியாத்மிகம் – நம்மால் நமக்கு ஏற்படுவது
2. ஆதிபௌதிகம் – நம்மை சுற்றி உள்ளவர்களால் / உள்ளவற்றால் ஏற்படுவது
3. ஆதிதைவிகம் – நம் சக்திக்கு மீறிய இயற்கைச் சீற்றங்களால் ஏற்படுவது.
ஆதியாத்மிகம்
நாம் நம் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ துக்கப் படுவது ஆதியாத்மிகம் எனப்படும்.
சரீரத்துக்கு உள்ளே இருந்து துக்கப்படும் மனரீதியான துன்பங்கள்,
சரீரத்தின் வெளியிலிருந்து வரும் உடல் உபாதைகள் ஆகியவற்றை
சரீரம், மானச துக்கங்களாகப் பிரிக்கிறது.
பதஞ்சலி முனி யோக சாஸ்திரத்தில் இந்த உபாதைகளில் இருந்து விடுபட வழிமுறையையும் கூறுகிறார்.
ஆதிபௌதிகம்
நம்மைச் சுற்றியுள்ள உயிருள்ள, உயிரற்றவையால் ஏற்படும் துன்பங்கள்.
உதாரணத்துக்கு நாய் கடித்தல், கீழே விழுதல், விபத்துகள், அதனால் ஏற்படும் துன்பங்கள்
ஆதிதைவிகம்
நம்மால் கட்டுப்படுத்த முடியாத, இயற்கையான அல்லது இயற்கைக்கு மாறான துன்பங்கள்.
உதாரணத்துக்கு கோவிட் தொற்று அதிதைவிகத்தைச் சேர்ந்தது.
இந்த இயற்கையை புரிந்துகொண்டு அதன்படி நம் வாழ்க்கை முறையை அமைத்தால்
இத்துன்பங்களிலிருந்து விலகல் சாத்தியமே.
சாங்கியம் வகைப்படுத்திய இந்தத் துன்பங்களை விலக்கி வைப்பது எப்படி?
இது 25 வகையான தத்துவங்களுடன் வாழ்க்கை தத்துவமாக விளக்கப்படுகிறது.
முக்குணங்களின் கூட்டுக் கலவையால் உருவான இந்த இயற்கையை புரிந்துகொண்டு
அதன்படி நம் வாழ்க்கை முறையை அமைத்தால் இத்துன்பங்களிலிருந்து விலகல் சாத்தியமே.
25 தத்துவங்கள் எவை?
பிரக்ருதி, மூலப்ரக்ருதி, தன்மாத்ரா, மகத், புத்தி, அகங்காரம்,
மனஸ், மூன்று குணங்கள், மகா பூதங்கள், கர்ம இந்திரியங்கள், ஞான இந்திரியங்கள்,
இவை அனைத்துக்கும் காரணமான அவ்யக்தம் எனப்படும்
புருஷா – மூலக்காரணி…
இப்படியான 25 தத்துவங்கள் பற்றியும் அவற்றைப் பிரித்துணர்வது பற்றியும் அறிவோம்.
————
சாங்கியம் இந்தியத் தத்துவங்களில் சிறப்பானதும் முன்னோடியான தத்துவம் ஆகும்.
கடவுள் வெளியே இல்லை உனக்குள்ளே இருக்கிறான் எனும் தத்துவக் கொள்கை.
பிரகிருதி (இயற்கை), புருஷன் (அறிவுள்ள பொருள்) ஆகிய இரு பொருட்கள் பற்றி மட்டுமே பேசுகின்ற சடவாத தரிசனமாகும்.
பரம்பொருள் (இறைவன்) குறித்து எதுவும் கூறப்படவில்லை.
சாங்கியத்தின் பிரகிருதி எனும் உலகத் தோற்றம் (படைப்பு) குறித்தான கருத்துக்களை மட்டும்
அத்வைத வேதாந்திகள் ஏற்றுக்கொள்கின்றனர்.
புருடன் அறிவுள்ள பொருள் என்றும் பிரகிருதி அறிவற்ற சடப்பொருள் என்றும் கூறுகின்றது.
உலகமானது முக்குணங்களின் சேர்க்கையினால் உருவானது என்பது இதன் கருத்து.
இந்நூலில் தத்துவ விசாரணை அதிகம் உண்டு.
நாம் ஆதியில் பிரகிருதி, பிறகு மகத்துவம், பிறகு அகங்காரம், ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள்,
மனம், ஐந்து ஸ்தூல பஞ்சபூதங்கள், ஐந்து சூக்கும பஞ்சபூதங்கள், முக்குணங்கள்
இறுதியில் புருடன் எனும் 28 சாங்கியத் தத்துவத்தில் படைப்பு பற்றி விளக்கமாக கூறுகிறது.
மேலும் ”மூலத்திற்கு மூலம் இல்லையாதலால், அதற்கு `அமூலம்` எனப்பெயர்”
பஞ்ச அங்க யோகத்தால் ஞானம் தோன்றும். அது சுகத்தின் ஞானம்.
சாங்கியம்
மாறுதல், இயக்கம் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டவர்கள் சாங்கியவாதிகள்.
தொடக்க கால சாங்கியத்தில் ஆன்மீகத்தின் சாயல் கூட காணப்படவில்லை
சாங்கியத் தத்துவத்தின்படி எல்லா மாறுதல்களுக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது
பொருள்களின் முதன்மைத் தன்மைதான் என்று பூர்வ சாங்கியர்கள் விளக்கினார்கள்.
“அசித்து பொருள்களான பால் இளம் விலங்குகளுக்கு ஊட்டம் தருவதற்காக இயல்பாக சுரக்கிறது (ஸ்வபாவம் -இயல்பு ).
அசித்துப் பொருளான தண்ணீர் இயல்பாக மனிதகுல நன்மைக்காக ஓடுகிறது.
அதே போன்று அசித்தாக இருப்பினும் பிரதானமாக – இயல்பில் இயங்குகிறது.
இதன் நோக்கம் மனிதனை உயர்ந்த இறுதி நிலைக்கு எடுத்துச் செல்வதாகும்
(புருஷார்த்த சித்தி)” என்று சாங்கியக் காரிகை கூறுகிறது.
இங்கு முதன்மையானது பொருள். முதலில் உருவான பொருள்,
பிரகிருதி என்று பொருளின் முதன்மைத் தன்மையை விளக்கும் சாங்கியக் கொள்கை
முதன்மை காரணவாதம் எனப்பட்டது.
பொருளை முதன்மையானதாகவும், புருசனை இரண்டாவதாகவும் வைத்துக் கொண்டதாலும்
முதன்மை காரணவாதம் எனப்பட்டது.
மூல சாங்கியத்தில் கூறப்பட்ட ‘புருசன்’ என்பது முதன் முதலான பொருளின்,
மூலப் பொருளின் பெருக்கம் தான் எனக் கூறப்பட்டது.
அதாவது மூலப் பிர கிருதி இயக்கமுற்று பலவாக வளர்ச்சியடைவது புருசன் ஆகும்.
மேலும் தொடக்க காலத்தில் முதன்மையற்றது,
இரண்டாவதானது, உதாசீன மானது என்ற பொருளுடையதாக புருசன் என்ற சொல் இருந்திருக்கிறது.
இதனை பிரதானம், பரிணாமம், புருஷ பஹுத்வம் என்று சுருக்கமாக கூறமுடியும்.
கண்களுக்குப் புலனாகும் உலகத்திற்கு அடிப்படை “பொருள்தான்”;
புருசன் உலகத் தோற்றத்திற்கான காரணமல்ல; அது மிகை யானது;
அது வெளித்தோற்றம்தான் என்று பூர்வ சாங்கியம் கூறியது.
தன்னிறைவு கொண்ட, இயங்கியல் தன்மை கொண்டதான முதல் நிலைப் பொருளாக அனைத் தையும்
கண்ணுற்ற நிலையில், இரண்டாவதாக புருசனை ஏற்கவேண்டிய தேவை சாங்கியவாதி களுக்கு ஏன் ஏற்பட்டது?
வேதாந்த வாதிகளை மறுக்கும் நோக்கத்தில் ஏற்பட்டது.
வேதாந்தத்தில் உலக நிகழ்ச்சிகள் அனைத்தும் மாயை; புருசன் தான் இறுதியான உண்மை என்று கூறப்பட்டது.
இது பிரம்ம வாதம்; பிரம்ம காரண வாதம் எனப் பட்டது.
மேலும் இது அனைத்தும் உணர்வின் சாராம்சமே;
உலகத் தோற்றத்திற்கான முதற் காரணமாக உள்ளது பிரம்மமே என்றது.
எனவே நாம் அசேதன காரணவாதத்திற்கும், சேதன காரண வாதத்திற்கும் உள்ள தத்துவப் போராட்டத்தை
சாங்கியத்திற்கும், வேதாந்தத்திற்கும் இடையிலான மோதலில் காண முடிகின்றது.
மேலும் முதன்மை யற்ற, இரண்டாந்தரமான புருஷ் பலவாகும் என்று சாங்கியம் கூறியது.
அதற்கேற்ப வேதாந்தமும் கருத்து முதல் வாத நிலையில் விளக்கும்போது
சத்துவம், ராஜசம், தாமசம் என்று புருச குணங்களை வகைப்படுத்தி பலவாக்கின.
இந்நிலையில், இறுதியாக புருசனைப் முதன்மைப் படுத்தி புருச சூக்தம் நூலெழுந்தது.
வேதாந்தத்தின் வாரிசுகளாக சங்கரரும், மத்துவரும் தோன்றி இதனை வலுப்படுத்தினார்கள்.
சங்கரர் ‘பிரம்ம ஞானம்’ ஒன்றே என்றார்.
அவர் மேலே கண்ட சாங்கியக் காரிகையின் கூற்றை பிரம்ம சூத்திரத்தில் எடுத்தாள்வதுடன்
புருசனின் உயர்ந்த இறுதி நிலை கட்டத்தை (புருசார்த்தசித்தி) கருத்து முதல் வாதத்துக்குரியதாக மாற்றியமைத்துக் கொள் கின்றார்.
இவ்வாறு சாங்கியத்தில் புருசனுக்கு இரண்டாவது இடத்தைக் கொடுத்ததன் பலனாக
நாளடைவில் புருசன் முதலாவது இடத்துக்கு வந்துவிட்டான்.
பிற்கால சாங்கியம் வைதீக நிலையினை அடைந்தது.
ஆனால், பொருளை மட்டுமே உண்மை என்று ஏற்கின்ற உலகாயதம், பூதவாதம் ஆகிய கொள்கைகள்
இன்றும் அதே நிலையில் அறியப் படுகின்றன என்பது அக்கொள்கைகளின் சிறப் பாகும்.
மேற்கண்ட சடங்குகள், அவைதீகர்கள், வைதீகத்திற்கு எதிராக நிகழ்த்திய சடங்குகள் என்பதே உண்மையாகும்.
தமிழர் புகழ் உலகமெங்கும் பரவியுள்ளது என்றால் அதற்கு முக்கிய காரணம் நமது பாரம்பரிய சடங்குகள் முறைதான் காரணமாகும்.
மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நாம் அனைவரும் நமது வாழ்வில் எவ்வளோவோ
விழாக்களையும் சடங்குகளையும் சந்திக்கின்றோம்.
ஆனால் பெரும்பாலும் அந்த நிகழ்ச்சிகள் மற்றும் சடங்குகள் எதற்கு நடத்தப்படுகிறது என்கிறது
இன்றைய சமுதயாதுக்கு நிச்சயம் தெரியாது.
வட நாடுகளில் ஒவ்வொரு திருமணத்திலும் ஐயர் சொல்லும் மந்திரத்திற்கு அர்த்தங்களும் சொல்லுவார்.
ஆனால் அந்த பாரம்பரியம் நமது மண்ணில் இல்லை.
சாங்கிய தத்துவத்தை நிறுவியவர்
சாங்கிய தத்துவத்தை நிறுவிய கபிலர் எழுதிய நூல் எண்ணியம்.
அவர் காலம் கிமு ஐந்தாம் நூற்றாண்டுக்கும் முந்தியது. இவரை விஷ்ணுவின் அம்ச அவதாரமாக வைணவர்கள் போற்றுகின்றனர்.
இந்து மற்றும் பௌத்த மதத்தில் கபிலரின் சாங்கியச் சிந்தனைகள் அதிகம் இடம்பெற்றுள்ளன.
சாங்கியம் கூறும் தன்மாத்திரைகள் அல்லது தத்துவங்கள்
படைப்பிற்கு சாங்கியம் 25 தத்துவங்கள் அல்லது தன்மாத்திரைகளைக் காரணமாகக் கூறுகிறது. அவைகள் பின்வருமாறு:
பிரகிருதி – 1
புருடன்- 1
மஹத் – 1
பஞ்சபூதங்கள் – 5
கர்மேந்திரியங்கள் – 5
ஞானேந்திரியங்கள் – 5
அந்தக்கரணம் – 4
முக்குணங்கள் – 3
உபநிடதம் மற்றும் பகவத் கீதையில் சாங்கிய சிந்தனைகள்
உலக படைப்பு மற்றும் சீவராசிகளின் தோற்றம் குறித்தான சாங்கிய சிந்தனைகள்
உபநிடதம் மற்றும் பகவத் கீதையில் அதிகமாக கையாளப்பட்டுள்ளன.
பகவத் கீதையில் சாங்கியம் என்பதற்கு ஞான யோகம் என்று பொருள்.
பாரத நாட்டுத் தத்துவத்தைப் பற்றி தீவிரமாக அறியத் துடிக்கும் யாராலும்
‘வாசஸ்பதி மிஸ்ரா’ வின் பெயரை எளிதாக மறக்க முடியாது.
அத்வைத வேதாந்தத்தில் “பாமதி ஸ்கூல் ஆப் தாட்” என்பது வாசஸ்பதி மிஸ்ராவின் விளக்கத்தை ஒட்டியே தோன்றியது.
இந்தியாவின் மிகச் சிறந்த கல்வியாளராகவும் தர்க்க சாஸ்திர நிபுணராகவும் போற்றப்படுகிறார் வாசஸ்பதி மிஸ்ரா.
பாரத நாட்டுத் தத்துவ நூல்கள் அனைத்திற்கும் விளக்கம் எழுதி உள்ளார் அவர்.
ஆராய்ச்சியாளர்கள் வாசஸ்பதியை ஆதி சங்கரர், ராமானுஜரின் வரிசையில் வைத்து மதிக்கின்றனர்.
வாசஸ்பதி, மிதிலா நகரில் பீகார் பகுதியில் பிறந்தார்.
அவரே தன் காலத்தை 898 என்று ‘நியாய சூசினி பந்தா’ என்ற தன் நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அது எந்த காலண்டரைச் சேர்ந்தது என்று தெரியாததால்
அவருடைய காலம் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக பொதுவாக கருதப்படுகிறது.
வாசஸ்பதி பல கிரந்தங்களை எழுதி உள்ளார்.
அவற்றுள் மிகப் புகழ் பெற்றது ‘பாமதி’ என்ற நூல்.
வியாச பகவான் இயற்றிய பிரம்ம (வேதாந்த) சூத்திரத்திற்கு ஆதி சங்கரர் பாஷ்யம் எழுதி உள்ளார்.
அந்த பாஷ்யத்திற்கு வாசஸ்பதி எழுதிய விளக்கமே ‘பாமதி’.
வேதாந்தம் என்பது பாரத நாட்டு தத்துவத்தின் ஆறு பிரிவுகளில் ஒன்று.
மற்றவை:
நியாயம் (கௌதமர்),
வைசேஷிகம் (கனாடு),
மீமாம்சம் (ஜைமினி),
சாங்க்யம் (கபிலர்),
யோகம் (பதஞ்சலி).
வாசஸ்பதி மிஸ்ரா எழுதிய பிரம்ம சூத்திர விளக்கத்திற்கு ‘பாமதி’ என்ற பெயர் ஏற்பட்ட வரலாறு
மிதிலா நகரின் நாட்டுப் புற பாடல்களில் மிகச் சுவையாகக் காணப்படுகிறது.
தன் குருநாதரின் கட்டளைக்கு இணங்கி வாசஸ்பதி, பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கம் எழுத முன் வந்தார்.
குருநாதர் தன் மகளான பாமதியை வாசஸ்பதிக்கு மணமுடித்து வைத்து
சிறிது காலத்திலேயே பிரம்ம பதமடைந்து விட்டார்.
எழுத்து வேலையைத் தொடங்கிய வாசஸ்பதியை அப்பணி முழுமையாக ஆக்கிரமித்து விட்டது.
காலம் சென்றதே தெரிய வில்லை. நாட்கள், மாதங்களாக, வருடங்களாக உருண்டன.
ஒரு நாள்…..
ஆதித்யன் மேற்கு திசையில் இறங்கி மறைந்தான். திசை எங்கும் இருள் சூழ்ந்தது.
வாசஸ்பதி ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்.
பரவி வரும் இருள் அவருடைய எழுத்து வேலையைத் தடை செய்ய வில்லை.
சுமார் முப்பது வருடங்களுக்கும் மேலாக எழுதி வரும் பணி அது. தொடர்ந்து எழுதி வரும் மகா க்ரந்தம்
முடிவை நெருங்கி விட்டதாக வாசச்பதிக்குத் தோன்றியது.
இன்றைக்கு எப்படியுமிதனை முடித்து விட வேண்டும் என்ற ஒரே தீவிர சிந்தனையுடன்
சூழ்ந்து வரும் இருளையும் பொருட்படுத்தாமல் எழுதிக் கொண்டே இருந்தார்.
வேலையை முடிக்கும் தீவிர எண்ணத்தால் மாலை சந்தியா வந்தனத்தைக் கூட மறந்தாற்போலிருந்தார்.
உணவு உண்பது பற்றி வேறே கூறத் தேவை இல்லை.
இதை எல்லாம் கவனித்து வந்த பாமதி தன் கணவரின் எழுத்து வேலை இப்போதே முடிந்து விடாது என்பதை உணர்ந்து
உள்ளேயிருந்து இலுப்ப எண்ணெய் விளக்கை எடுத்து வந்து ஏற்றி, கணவரின் அருகில் முக்காலியின் மேல் வைத்தாள்.
காலையில் காட்டிலிருந்து தான் சேகரித்து எடுத்து வந்த பழங்களில் நன்கு பழுத்தவைகளாகத் தேர்ந்தெடுத்து
சுத்தப்படுத்தி ஒரு இலையில் வைத்து அதே முக்காலியின் மேல் ஒரு பக்கமாக வைத்தாள்.
தன் கணவருக்கு பசி எடுக்கையில் ஒரு வேளை அப்பழங்கள் அவர் கண்ணில் பட்டு
அவர் உண்ண வேண்டும் என்பது அவளுடைய விருப்பம்.
வாசஸ்பதி இதொன்றையும் கவனிக்க வில்லை. ஒரே கவனமாக எழுதிக்கொண்டே இருந்தார்.
மாலை இருள் சிறிது சிறிதாக காரிருளாக மாறியது.
தினமும் இவ்வேளைக்கு வாசஸ்பதி எழுந்திருந்து சாயம் சந்தியா வந்தனம்,
பூஜை முடித்து பழங்கள் உண்டு ஓய்வெடுப்பது வழக்கம்.
ஆனால் இன்றோ சந்தியா வந்தனம் கூடச் செய்ய வில்லை.
பூஜையைப் பற்றிய சிந்தனையே இல்லை. உணவைப் பற்றி என்ன சொல்ல?
இரவு மிகவும் நேரமாகி விட்டது. விளக்கில் எண்ணெய் குறைந்து விட்டது.
திரியில் கரி படிந்து ஒளி மங்கத் தொடங்கியது.
அதில் இருக்கும் எண்ணெய்க்கு அவ்விளக்கு இன்னும் ஒரு நான்கைந்து நிமிடங்கள் எரிந்தாலே அதிகம்.
அதன் பிறகு அது அணைந்து விடலாம்.
தன் கணவரின் எழுத்துப் பணி தடைப்பட்டு விடலாம்; அந்த எண்ணம் தோன்றியதும் பாமதியின் உடல் குலுங்கியது.
உடனே சுவாமி அறையிலிருந்து எண்ணெயை எடுத்து வந்து விளக்கில் நிறைய ஊற்றி,
திரியில் படிந்த கரியை விலக்கி விளக்கைப் பிரகாசமாக எரிய விட்டாள்.
வெளிச்சம் திடீரென்று பிரகாசமானதால் வாசஸ்பதியின் கவனம் கலைந்தது.
விளக்கின் பக்கம் பார்வையைச் செலுத்தினார்.
அங்கு ஒரு பெண்ணின் உருவம் அவருக்குத் தென்பட்டது.
விளக்கின் ஒளியை சரி செய்து விட்டு தலையைக் குனிந்தபடி வீட்டிற்குள் செல்லும் ஒரு மாதுவைக் கண்டார்.
“யாரிவள்? விளக்கைப் பிரகாசப்படுத்திய இவள் யார்?”
இக்கேள்வி அவர் தலையைக் குடைய ஆரம்பித்தது.
உள்ளே சென்று கொண்டிருந்த பெண்ணை உத்தேசித்து, “தேவி! நீ யார்?” என்று வினா எழுப்பினார்.
அவள் அமைதியாக “சுவாமி! நான் தங்கள் மனைவி. என் பெயர் பாமதி” என்று பதிலளித்தாள்.
“பாமதியா? என் மனைவியா? நமக்கு திருமணம் எப்போது நடந்தது?”
“முப்பது ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்டன.”
“அப்படியா? இத்தனை நாள் எங்கே இருந்தாய்? உனக்கு உணவு உடை…? வீட்டை எவ்வாறு நடத்தினாய்?”
“அண்டை அயலில் உள்ள பெண்களுக்கு சித்திரம் வரைய கற்றுக் கொடுத்து,
அவர்கள் தரும் தனமோ, பொருளோ கொண்டு சிக்கனமாக வீட்டை நிர்வகித்து வருகிறேன்”
“தேவி…! பாமதி! உண்மையில் இதெல்லாம் எனக்கு வியப்பை அளிக்கிறது.
உன் நடத்தை உன் பெயருக்குத் தகுந்ததாகவே விளங்குகிறது.
உன் அறிவுக் கூர்மையால் வீட்டை நன்கு நடத்தி வருகிறாய்.
அதனால்தான் என்னால் எழுத்து வேலையை முடிக்க முடிந்தது.
உன் உதவி இல்லாவிடில் என்னால் எழுதி இருக்கவே இயலாது.
பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீ ஆதி சங்கரர் எழுதிய பாஷ்யத்திற்கு நான் எழுதியுள்ள இந்த விஸ்தாரமான
வியாக்யானத்திற்கு ‘பாமதி’ என்ற உன் பெயரையே வைத்து, இந்நூலை
உனக்கு அர்ப்பணம் செய்கிறேன்” என்று கூறிய வாசஸ்பதி மிஸ்ரா நூலைத் தன் மனைவியின் கைகளில் கொடுத்தார்.
பாமதி தினமும் போடும ரங்கோலியை கவனித்து பார்ப்பதன் மூலம் அதில் தோன்றும்
ஜாமெட்ரிக் உருவங்களை வைத்து அவரால் பல சூத்திரங்களுக்கு விளக்க மளிக்க முடிந்தது.
வாசஸ்பதி, ‘ஸ்மிருதிக்கு’ எழுதிய சிறப்பான விளக்கத்தால் ‘ஸ்மார்த்த வாசஸ்பதி’ என்று கற்றறிந்தவர்களால் புகழப்படுகிறார்.
அவர் எழுதிய நூல்கள்:
ஆசார சிந்தாமணி,
தன் நிர்ணயா,
த்வைத சிந்தாமணி,
பிபட சிந்தாமணி,
சுத்தி சிந்தாமணி,
வ்யவஹார சிந்தாமணி போன்றவை.
ஹிந்து சட்டங்கள், விவாத சிந்தாமணி போன்ற நூல்களில் மரபு வழிச் சொத்துரிமை, கடன் கொடுக்கல் வாங்கல் ,
கூட்டுத் தொழிலில் லாபப் பங்கீடு, கால்நடை உரிமை, அன்பளிப்பை திரும்பப் பெறும் முறை (Gift resumption),
எல்லை தகராறைத் தீர்ப்பது போன்ற பல சட்ட நுணுக்கங்களைப் பற்றி கச்சிதமாக விளக்கமளித்துளார்.
‘பித்ரு பக்தி தரங்கிணி’ என்ற கவிதை நூலையும்,
‘ஸஹஸ்ர ராதிகா ரானா’ என்ற தத்துவ நூலையும் எழுதி உள்ளார்.
வாச்சஸ்பதிக்கு ‘சர்வ தந்திர ஸ்வதந்த்ரா’ என்ற விருது உள்ளது.
ஏனெனில், நியாயத்தைப் பற்றி எழுதுகையில் தானொரு நியாய வாதியை போலும்,
வேதாந்தத்தைப் பற்றி எழுதுகையில் ஒரு வேதாந்தியைப் போலும் எழுத அவரால் முடிந்தது.
” பசியறியார் ; கண் துஞ்சார்; கருமமே கண்ணாயினார்…” என்றெல்லாம் படித்துள்ளோமே!
அதற்கு ஒரு உதாரணம்.. வாசஸ்பதி மிஸ்ரர்
—————————————-
Leave a Reply