ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் ஷஷ்டியப்த பூர்த்தி திருநட்சத்திரம் !–

யஸ்ய மதுராய ஸூக்தாய நிரயோ அபூத் ஸூராலய
ஆத்மஜம் வரதார்யஸ்ய கிருஷ்ணார்யம் ப்ரணமாமி தம்–ஸ்ரீ அத்தங்கி ஸ்வாமிகள் அருளிச் செய்த தனியன்

நம் குடி வாழ, வழி சொல்லும் வேளுக்குடி ஸ்வாமிகள் 🙏👌🔔🥇🌺🌻🌹🏵🙏
இன்று(17/08/2023) ஆடி மகம்.

பால வாக்அம்ருதவர்ஷி,
ஸ்ரீராமாநுஜ சேவா ஸ்ரீ,
சொல்லின் செல்வர்,
ஸ்ரீவைஷ்ணவப் பேரொளி
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் ஷஷ்டியப்த பூர்த்தி
திருநட்சத்திரம் !

வேளுக்குடி ஸ்வாமிகள் மணி விழா — சிறப்பு வாழித் திருநாமம் 🙏🔔🥁🎺🌺🌹👌👍☘🙏
நாடும் நகரமும் நன்கறிய, நாலாயிரமும் உரைத்தார் வாழியே !

வீடு பெறும், எம்பெருமானார் தரிசனம் விவரித்தார் வாழியே !

நாடெங்கும் திவ்ய திருப்பதிகள், சேவிக்கவைத்தார் வாழியே !

ஏடு உறை தத்துவங்களை, இணைய அலையில் அருளினார் வாழியே !

ஆடி மகத்தில் உதித்த, அருளமுதக் கொடையாளர் வாழியே !

தேடி,செகம் முழுதும் ஞானவேள்வி செய்தார் வாழியே !

பீடுற மணிவிழா,காணும் சொல்லின் செல்வர் வாழியே !

ஈடு இணையற்ற வேளுக்குடி ஸ்வாமிகள் பல்லாண்டு வாழியே !!!

பொதுவான வாழித் திருநாமம் !!!….💐🌸🏵🌹🌼🌻🌺⚘🌷💐

எம்பெருமானார் தர்சனம் தழைக்க வந்தார் வாழியே!
நம்பெருமாள் வைபவம் நாநிலத்தோர் அறிய வைத்தார் வாழியே!
மேம்பொருளையும் மென்மைத் தமிழில் உரைத்தார் வாழியே!
எம்மிடர் கடிய சாத்திரங்களின் சாரத்தை அருளும் வள்ளல் வாழியே!

திவ்ய தேச யாத்திரையை திண்ணம் செய்தார் வாழியே!
அவ்வயோத்தியையும்,கோகுலத்தையும் பக்கத்து ஊராக்கினார் வாழியே!
வையமெங்கும் வைணவத்தை வளர்க்கும் பேரறிஞர் வாழியே!
தெய்வத்துள் தெய்வம் இவர் என்று காட்டிய தேவர் வாழியே!

தொலைக்காட்சியில் தொல்லுலகம் காண்பித்தார் வாழியே!
அலைக்கற்றையில் ஆழ்வார் அமுதம் அள்ளித்தந்தார் வாழியே!
அலைபேசியில் ‘என்பணி’யை உணர்த்தினார் வாழியே!
கலை,காட்சியை விட்டு, கலையிலங்கு மொழியைக் கற்க வைத்த காருண்யர் வாழியே!

சிறுதுளியால்(கிஞ்சித்) பெருவெள்ளம்(பாகவத கோஷ்டி) பாய்வித்தார் வாழியே!
அருளிச்செயல் அமுதம், அகிலமெங்கும் சொல்லும் நம்கால நாதமுனிகள் வாழியே!
இருள்தருமா ஞாலத்தைக் கடக்க அருள்நெறி காட்டினார் வாழியே!
கருவி நின்றோரையும், உருகச் செய்த உத்தமர் வாழியே!

தேடிச் சென்று செகமெல்லாம் ஞானவேள்வி செய்தார் வாழியே!
நாடிக் கைங்கர்யம் புரியக் களம்தந்தார் வாழியே!
ஆடிப்பாடி அநுயாத்ரையில் அந்வயிக்கச் செய்யும் அநு ராமாநுஜர் வாழியே!
ஆடி மகத்தில் அவதரித்த அருளாளர் வாழியே!!

ஊழிமுதல்வன் குணங்களை உகந்துரைத்தார் வாழியே!
சோளிங்கர் தொட்டாசார்யர் சுவாமியின் சீர்மிகு சீடர் வாழியே!
வேளுக்குடி வரதாசார்யர் சுவாமியின் அருந்தவப் புதல்வர் வாழியே!
வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி புகழ் வாழி!வாழி!!வாழியே!!! ”

புகழுக்கு அவ்வருகென்கோ
புவியின் தவப்பயனென்கோ
திகழரங்கன் அருளென்கோ
திருமகள் நல்லாசி என்கோ
நிகழ்வின் மாமுனி என்கோ
நிறைசுடர் ஞானம் என்கோ
மகிழ்மாலை மணம் என்கோ
ஸ்வாமியைக் கூறுமாறே!

செல்லும் வழி தெரியாது சிந்தை தடுமாறும் எம்
அல்லல் களைந்த சற்குரு அடிகளுக்கு பல்லாண்டு

இன்னார் இனையாரென இனம் பிரித்துப் பாராது
தன்னருள் முன்வந்து தந்தமைக்கு பல்லாண்டு

அருமறையின் அடியொற்றி அய்யன் சொன்ன கீதையின்
பொருள் எமக்கு உரைத்த புலமைக்குப் பல்லாண்டு

நேரம் காலம் பாராது நேயமுடன் ஆழ்வார்கள்
ஆரமுதம் உரையுடனே அளித்தமைக்கு பல்லாண்டு

எம்பெருமானார் தரிசனம் எமக்களித்த வள்ளல்
நம் குரு கிருஷ்ணனின்நற்பணிக்கு பல்லாண்டு

தொண்டுக்கு தோள் தந்த துணைநிற்கும் மக்களும்
அண்டமெலாம் புகழோங்கஆயிரம் பல்லாண்டு

ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவன் கதா என்பது போல்
எம் போல் அடியார்கள் அனைவரும் “க்ருஷ்ணா க்ருஷ்ணா” என்று நம் ஸ்வாமிகளின்
உயர்வுகளைப் பற்றியே பேசி க்ருஷ்ணானுபவத்தை தினமும் அடைகிறோம்.
அதிலும் சிறப்பாக 13ஆம் தேதி திருக்கல்யாண வைபவத்தையும் கண்டு களிப்புற்றோம்.

அங்கும் சரி, எங்கும் சரி,
யஶ்ச ராமம் து பஶ்யேத் து யஞ்ச ராமோ ந பஶ்யதி என்பது போல்,
நம் ஸ்வாமியின் கடாக்ஷம் நம் மீது பட்டுவிட வேண்டும் என்று அலையலையாக
நம் ஸ்வாமி மற்றும் அம்மங்கார் திருவடிகளில் வந்து ஸேவித்தோம்.
அவர்களும் ஒருத்தர் விடாது அனைத்து ப்ரஜைகள் மீது தங்கள் திருக்கடாக்ஷத்தை அருளினார்கள்.
அதுவே நம் உஜ்ஜீவன ஹேது.

ஏனெனில்,
அஹம் வேத்மி மஹாத்மாநம் க்ருஷ்ணம் ஸத்யபராக்ரமம் என்று
நம் கோஷ்டியில் அனைவரும் நம் ஸ்வாமி அவதார புருஷர் என்று அறிவோமே.

செல்லும் வழி தெரியாது சிந்தை தடுமாறும் எம்
அல்லல் களைந்த சற்குரு அடிகளுக்கு பல்லாண்டு

இன்னார் இனையாரென இனம் பிரித்துப் பாராது
தன்னருள் முன்வந்து தந்தமைக்கு பல்லாண்டு

அருமறையின் அடியொற்றி அய்யன் சொன்ன கீதையின்
பொருள் எமக்கு உரைத்த புலமைக்குப் பல்லாண்டு

நேரம் காலம் பாராது நேயமுடன் ஆழ்வார்கள்
ஆரமுதம் உரையுடனே அளித்தமைக்கு பல்லாண்டு

எம்பெருமானார் தரிசனம் எமக்களித்த வள்ளல்
நம் குரு கிருஷ்ணனின் நற்பணிக்கு பல்லாண்டு

தொண்டுக்கு தோள் தந்த துணைநிற்கும் மக்களும்
அண்டமெலாம் புகழோங்க ஆயிரம் பல்லாண்டு

யஸ்ய ப்ரவசநேநைவ க்ருஷ்ண ஆஸ்ரிதம் ஜகதபூத்
குரவேஹ் அத்விதீயாய கிருஷ்ணாயாஸ்து மங்களம் 

சோபக்ருத கடக ஸூக்ல த்ருதீயா பவ்ம வாஸரே
மகாயாம் அவதீர்ணாயா கிருஷ்ண வர்யாய மங்களம்

வேதாந்த த்வய வேதித்ரே அபர்யாப்த அம்ருத வர்ஷிணே
வராதார் யாத்ம ஜாயாஸ்து நித்ய ஸ்ரீ நித்ய மங்களம்

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading