திருவள்ளுவர் -ஒவ்வையார் இடைக்காடர் மூவரும் சந்திக்க
நீர் செய்த நூல் எத்தகையானது என்று இருவரும் திருவள்ளுவரைக் கேட்க
குறு முனிவன் முத்தமிழும் என் குறளும் நங்கை
சிறு முனிவன் வாய் மொழியின் சேய் –என்றும்
ஐம் பொருளும் நாற் பொருளும் முற் பொருளிற பெய்து அமைத்த
செம் பொருளை எம் மறைக்கும் சேட் பொருளைத் -தண் குருகூர்ச்
சேய் மொழியது என பா சிலர் யான் இவ்வுலகின
தாய் மொழி யது என்பேன் தகைநது-என்றும்–திருவள்ளுவர்-
நேசனைக் காணா விடத்து நெஞ்சாரவே துதித்தலால்
ஆசானை எவ்விடத்தும் அப்படியே -ஆச்சார்யர் ஸ்துதி பற்றி ஒவ்வையார்
சேய் மொழியோ தாய் மொழியோ ஷேப்பில் இரண்டும் ஓன்று அவ்
வாய் மொழியை யாரும் மறை என்ப -வாய் மொழி போல்
ஆய மொழிகள் சால உள எனினும் அம்மொழியின
சாய மொழி என்பேன் யானதகைநது –என்று இடைக்காடர்
வாய்க்கும் குருகைத திரு வீதி எச்சிலை வாரி யுண்ட
நாய்க்கும் பரமபதம் அளித்தாய் அதனால் நாயோடு இந்தப்
பேய்க்கும் இடம் அளித்தால் பழுதோ பெருமாள் மகுடம்
சாய்க்கும் படிக் கவி சொல்லும் ஞானத் தமிழ் கடலே –வடகரையில் இருந்த யோகி
வேதம் தமிழ் செய்த பெருமாள் வந்தார்
திருவாய் மொழிப் பெருமாள் வந்தார்
திரு நகரிப் பெருமாள் வந்தார்
திரு வழுதி வள நாடர் வந்தார்
திருக் குருகூர் நகர் நம்பி வந்தார்
திருக் காரி மாறர் வந்தார்
ஸ்ரீ சடகோபர் வந்தார் ஸ்ரீ பராங்குசர் வந்தார் –என்று மதுர கவிகள் ப்ரபந்ந ஜன கூடஸ்தரான ஸ்வ ஆச்சார்ய வைபவத்தை பல சிஹ்னங்கள் பரிமாற-
சேமம் குருகையோ செய்ய திருப்பாற் கடலோ
நாமம் பராங்குசமோ நாரணமோ -தாமம்
துளவோ வகுளமோ தோள் இரண்டோ நான்கு
உளதோ பெருமான் உனக்கு என்றும்
ஈ யாடுவதோ கருடற்கு எதிரே இரவிக்கு எதிர் மின்மினி யாடுவதோ
நாயாடுவதோ உறுமும் இப்புலி முன் நரி கேசரி முன் நடை யாடுவதோ
பேய் ஆடுவதோ அழகு ஊர்வசி முன் பெருமான் வகுளா பரணன் ஓர்
ஆயிர மா மறையின் தமிழில் ஒரு சொல் பொறுமோ உலகில் கவியே–என்றும்-சங்கப் புலவர்களும் ஆழ்வாரை ஸ்தோத்ரம் பண்ணினார்கள்
ஏழாட் காலமும் பழிப்பு இலாராய் இருப்பர் -எங்கனே என்னில்
திரு வழுதி வள நாடர் என்று ஒருவர் -அவர் பிள்ளை -அறம் தாங்கியார் – அவர் பிள்ளை சக்ர பாணியார் -அவர் பிள்ளை அச்யுதர் –
அவர் பிள்ளை செந்தாமரைக் கண்ணர் -அவர் பிள்ளை செங்கண்ணர் -அவர் பிள்ளை பொற் காரியார் -அவர் பிள்ளை காரியார் –
அவர் திருக் குமாரர் நம் மாறன் –
செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தனித்த தின்று எங்கே கிடக்கும்
அசித்தின் உடன் சித் சம்பந்தித்து -அதன் உடன் உழன்று மாறி மாறி சுழன்று பிறந்து-சுக துக்க அனுபவத்திலேயே கிடைக்கும் என்றும்
சிறியது வயிற்றில் பெரியது பிறந்தால் -அணு ரூபமான ஜீவன் இடம் ஞான விகாசம் உண்டானால்
அத்தை அனுபவ யோக்யமாகக் கொண்டு எங்கே சேரும் என்ன
அத்தைத் தின்று -அகார வாஸ்யனான பர ப்ரஹ்மத்தை அனுபவித்து அவனுடனே சேரும்
அசேதனத்தில் ஆத்மா புகுந்து மாறி மாறி பிறவி சூழலில் உழன்று இருக்கும் என்றும்
அஞ்ஞானத்தில் உழன்று தேகம் போன்ற ஆத்மாவுக்கு கொஞ்சம் ஞானம் ஆச்சார்யர் மூலம் பெற
இதுக்கும் -அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும்
———–
திரு விருத்தம் -திரு-ஸ்ரீ -மேன்மையான விருத்தம் -மேன்மையுடைய விருத்தம் –
விருத்தம் -அன்பு மிக்க செய்திகள் –
திருமகளின் செய்திகள் என்றுமாம்-
ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் அருளிச் செய்த தனியன் –
(ஸ்ரீ ராம பிள்ளை அருளிச் செய்தார் என்றும் –ஸ்ரீ ஆள வந்தார் அருளிச் செய்தார் என்றும் சொல்வர் )
கரு விருத்தக் குழி நீத்த பின் காமக் கடும் குழி வீழ்ந்து
ஒரு விருத்தம் புக்கு உழலுருவீர் உயிரின் பொருள்கட்கு
ஒரு விருத்தம் புகுதாமல் குருகையர் கோன் உரைத்த
திரு விருத்தத்து ஓர் அடி கற்றிரீர் திரு நாட்டகத்தே –
கரு விருத்தம் -கர்ப்பமாகிய ஒவ்வாத குழி என்றும் -கரு இருத்தல் ஆகிய அக்குழி என்றும்
ஒரு விருத்தம் புக்கு -வெறுக்கத் தக்க பொல்லா ஒழுக்கத்தில் புகுந்து என்றும் -உரு விருத்தம் -வடிவம் மிக்கு மூப்பு என்றும்
ஒரு விருத்தம் புகுதாமல்–தீங்கு ஆகிய செயல் ஒன்றும் நிகழாத படி
இத்தால்
இழக்கிறது ஹேயமான சம்சாரம்
பெறுகிறது விலஷணமான பரம பதம்
இதுக்கு உடலாக
சதாச்சார்யன் அருளிச் செய்த ஒரு நல் வார்த்தையை
சத்துக்கள் இடத்திலே அப்யசித்து
நிர்ப் பரனாய் இருக்கக் கடவன்-
என்னும் அர்த்தம் சொல்லிற்று ஆயிற்று –
தாத்பர்யம்
கர்ப்ப -அவஸ்தா துக்க கரம் உழன்று
உங்களுக்கு ஓர் நல் வழி உபதேசிக்கிறேன் கேளுங்கோள்
நீங்கள் முதல் பாசுரம் முதல் ஒரு பாதத்தை அப்யஸித்து தேகாத்ம அபிமானம் விட்டு
நிர்ப்பரராய் இருங்கோள்
இனி உறாமை அறிவிக்க
ஆத்ம வஸ்து -விலக்ஷணம் என்று அறிந்தால் –
ஆழ்வார் அபிமானத்தில் ஒதுங்கி –பரமபதம் கிட்டுவீர் -என்றவாறு –
——–
முன்னுரைத்த திருவிருத்த நூறு பாட்டும்
முறையின் வரும் ஆசிரியம் ஏழு பாட்டும் –முறையின் வரும் அடுத்து அவதரித்த திருவாசிரியம் –
மன்னிய நற்பொருள் பெரிய திருவந்தாதி
மறவாத படி எண்பத்து ஏழு பாட்டும்
பின்புரைத்த தோர் திருவாய் மொழி எப்போதும்
பிழை யற வாயிரத்து ஒரு நூற்று இரண்டு பாட்டும்
இந்நிலத்தில் வைகாசி விசாகம் தன்னில்
எழில் குருகை வருமாறா விரங்கு நீயே –-ஸ்ரீ பிரபந்த சாரம்-6- –வருமாறா –வரும் மாறா -அவதரித்து அருளிய சடகோபனே-நீ அருள் புரிவாயாக என்றபடி –
————-
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1–
விபரீத ஸம்சய அஞ்ஞானத்தை பொய் நின்ற ஞானம் என்கிறார் –பொய்யிலே நின்ற -பொய்யாய் நின்ற என்றபடி
பிறப்பு சூழலுக்கு முதல் காரணம் இதுவே என்பதால் முதலில் கூறப்பட்டது
நின்ற -நெடும் காலமாய்த் தொடர்ந்து நின்ற
யாம் -நமக்காக ஆழ்வார் மன்றாடுகிறார்
உறாமை கேட்டு அருளாய் என்று–கேட்டாலே அருள் செய்து உறாமை ஸித்திக்குமே -அறிவிப்பே அமையும் -என்றவாறு
கேட்பதே அருள் என்றவாறு
உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்
பிறந்தாய் -தூணிலே தோற்றினால் போலேயும்
ஆனைக்குக் கடக்க நின்று ஆவிர்பவித்தால் போலேயும் இல்லாமல்
பன்னிரு திங்கள் மணி வயிறு வாய்த்துத் தோன்ற வேண்டுமோ
மெய் -விண்ணப்பித்து அடைமொழி என்றும் –
மெய் நின்று -திருமேனி காட்டி அருளி -என்றும் -நின்று விரையாது நின்று முடியக் கேட்டு அருள வேண்டும்
அர்த்த பஞ்சகம்-தத்வ த்ரயம்-ரஹஸ்ய த்ரயம்-அனைத்தும் இதிலே உண்டே இதில் உண்டே-
பொய் நின்ற ஞானம் இந்நின்ற நீர்மை -என்கையாலே -விரோதி சொல்லிற்று
என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் -என்கையாலே -உபாயம் சொல்லிற்று
இமையோர் தலைவா -என்கையாலே பிராப்யம் சொல்லிற்று
அடியேன் -என்கையாலே பிராப்தாவைச் சொல்லிற்று
செய்யும் விண்ணப்பம் -என்கையாலே பிராப்தி பலம் கைங்கர்யம் என்று சொல்லிற்று –
ப்ரக்ருதி ப்ராக்ருதங்களைப் பொய் என்பதால் ஆத்மா மெய் என்றும்
ஞானம் என்பதால் ஞாத்ரு ஜேயத்வமும்
ஒழுக்கு என்பதால் கர்த்ருத்வமும்
உடம்பு என்பதால் சரீரத்வமும் தோன்றுமே
—————
செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —-2-தலைவியின் வேறுபாடு கண்ட தோழி வியந்து உரைத்தல் –கோவை வாயாள் -4-3-
சேயரிக் கண் –ஞானம் பக்தியாக முதிர்ந்ததையும்
அழுநீர் துளும்ப அலமருகின்றன -அந்த பக்தி வளர்ந்து மிகுந்தமையையும்
கண்ணன் -கிருஷ்ணன் என்றால் பெண்கள் பக்கல் மேல் விழுபவன் என்பது ப்ரஸித்தம் அன்றோ
அன்பு சூட்டிய -வைத்த என்னாமல் சூட்டிய -என்பதால் -ஆழ்வாரது அன்பு எம்பெருமான் திருவடிகளுக்கு அலங்காரம் என்பதையும்
ஆர்வம் என்பதோர் பூ -பெரியாழ்வார் -3-5-2-
இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே-என்றதால் எம்பெருமான் திருவடிகள் ஆழ்வார் திருமுடிக்கு அலங்காரம் என்பதுவும்
சூழ் குழற்கே-அவனை வசீகரிக்கும் குழல் அழகையும்
சூழ் குழற்கே –
1-சூழ்ச்சியை உடைய குழல்
2-கண்டாரைச் சூழ்த்துக் கொள்ளும் குழல்
3-சுருண்ட குழல் -என்றுமாம்
சூழ் குழற்கு வாழியரோ -என்று அந்வயம்
செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப—ஏகார்ணவம் போன்ற தடாகப்பரப்பு அடங்கலும் விம்மும் படி மிளிர்ந்த கயல்
உபமேயத்தின் வை லக்ஷண்யம் உபமானத்தைத் திருத்திப் பாரிஸ்காரம் செய்ய வேண்டும்படி அன்றோ இருக்கும்
முழுநீர் முகில் வண்ணன்-கழுத்தே கட்டளையாக பெருகின காளமேகம் போன்ற நிறமுடையவன்
————
குழற் கோவலர் மடப் பாவையும் மண் மகளும் திருவும்
நிழற் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்ணம் துழாய்
அழற்போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே—3-பிரிவாற்றாத தலைவி நெஞ்சு அழிந்து உரைத்தல் –வெள்ளைச் சுரி சங்கு -7-3-
அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே-என்பதால் -ஆழ்வார் திரு உள்ளம் வேதத்தை அநு சரித்துச் சென்றது என்றும்
அப்புள் என்கிற சுட்டால் வேதத்தின் மஹாத்ம்யத்தையும்
தழற் போல் சினத்த அப்புள்-என்றதால் வேத பிரமாணம் பற மத நிரஸனத்துக்கு வல்லதாயும் இருக்கும் என்பதையும்
சக்கரத் தண்ணல் –கடவும் –அப்புள் -என்பதால் -அந்த வேதப்பிரமானமும் அவனது அதீனம் என்பதையும்
விண்ணோர் தொழக் கடவும்-என்பதனால் வேத பிராமண பலத்தாலே தேவர்கள் யாவரும் சேஷ பூதர் -இவன் ஒருவனே பரம சேஷீ என்பதையும்
தண்ணம் துழாய் அழற்போல் அடும் சக்கரத் தண்ணல்-என்பதால் அவனது போக்யத்வமும் ஆற்றல் திறமை போன்ற குணங்களும்-ஸம்ஸ்லேஷ தசையில் குளிர்ச்சியும் விஸ்லேஷ தசையில் வெப்பத்தையும் சொன்னவாறு –
நிழற் போல்வனர்-என்பதனால் பிராட்டிமார்க்கும் சேஷத்வம் ஸ்வ பாவிகம் என்பதையும்
குழற் கோவலர் மடப் பாவையும்-என்று நப்பின்னைப் பிராட்டியை முதலில் சொல்வதானால் மேன்மையை விட நீர்மைக்கு உள்ள மேம்பாட்டும்
தனி நெஞ்சம் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல்-என்பதால் ஒப்பற்ற திரு உள்ளம் இந்த நிலை மாறாது நின்று
நிரந்தர அனுபவம் பண்ணுமோ அன்றி நீங்கி விடுமோ என்ற கவலைப்படும் தோன்றுமே –
தழற் போல் சினத்த அப்புள்-சிற்றின்பத்துக்கு அடிமையாய் இருக்கும் ராஜ குமாரனை காலம் கண்ட கிழ மந்திரி கூட்டிச் செல்லுமாப் போல்
தன்னிடம் இருந்து பிரித்துக் கூட்டிச் சென்ற அப்புள் என்றுமாம்
தனி நெஞ்சம் -என்னையும் விட்டு அங்கும் முகம் பெறாமல் தனிப்பட்ட ஸ்வ தந்திரமான நெஞ்சு என்றுமாம் \வேண்டா என்றாலும் மீள மாட்டாத நெஞ்சு
குழற் கோவலர் மடப் பாவையும்-கோவலர்க்கு அடைமொழி என்றும் மடப்பாவைக்கு அடைமொழி என்றும் கொள்ளலாம்
நிழற் போல்வனர்-என்பதால் இவர்கள் அவனைத் தொடர்ந்து பிரியாது இருப்பதையும்
அவனுக்கு குளிர்ச்சிக்கு காரணமாகும் தன்மையும்
இவர்கள் பரதந்த்ரைகளாய் இருக்கும் தன்மையும்
இவர்கள் ஒருவருக்கு ஒருவர் நிழல் போல் இருக்கும் தன்மையையும்
அடியார்களுக்கு இவர்கள் நிழல் போல் இருக்கும் தன்மையையும் சொன்னவாறு
1-ஆஸ்ரிதர் குற்றத்தை பொறுக்கும் பிராட்டி –
2-குற்றம் காண்பான் என் பொறுப்பான் என்-என்று இருக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டி
3-நப்பின்னை பிராட்டி ஷமை தான் ஒரு வடிவாய் இருக்கும் –
1-பெரிய பிராட்டியார் இவனுக்கு சம்பத்தாய் இருக்கும் –
2-ஸ்ரீ பூமிப் பிராட்டி -அது விளையும் தரை
3-நப்பின்னை பிராட்டி அதனை அனுபவிக்கும் போக்தா –
————
தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண்ணம் துழாய்க்கு
இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே —-4- -தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு ஆற்றாது வருந்தி கூறல் –ஓடும் புள்ளேறி -1-8-
பிராமண பூர்வகமாக எம்பெருமான் இடம் சேர்ந்த ஆழ்வார் திரு உள்ளமானது
அப்பெருமானை அடையும் வரையில் வேறே எந்தப்பொருளும் தனக்குப் பிரியமாகாது என்கிறார் –
பகவத் விஸ்லேஷத்தாலே சர்வமும் அஸஹ்யமான படியை அருளிச் செய்கிறார் –
தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது–என்றதால் வேறே பிரமாணத்தை வேண்டாத வேத வழியிலே முந்துறச் சென்று நிலைத்து நின்ற தன்மையையும்
முன்–திருத் துழாய்க்கு முன்னே திருவடி முற்பட்ட படி –
தண்ணம் துழாய்க்கு இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் –என்றதால் வேதவழியில் நல்ல ஞானம் கை வந்தவருக்கு வேறே அறியலாவது ஒன்றும் இல்லை என்பதையும்
தீங்கு விளைவிப்பதாயினும் இனிது போல் பிரமிக்க வைக்கும் பிரகிருதியை பசை அறுக்கும்
தன்மை யுள்ள எம்பெருமானது குண அதிசயத்தோடு சம்பந்தப்பட்ட ஞாபகம் விரைவை யுண்டாக்குவதாயினும்
அப்பெருமானுடன் ஸம்ஸலேஷிக்க அவனது விரைவி வேண்டுமாதலால்
இது வருந்துதல் தகுதி இல்லை என்றதும் சொல்லிற்று ஆயிற்று
தனி நெஞ்சம் -ஒப்பற்ற நெஞ்சம் -கருடாழ்வான் மந்த மாருதம் திருத்துழாய் அனைத்துக்கும் ஈடு கொடுக்க ஒரு மனம் போதுமோ என்றுமாம்
அப்புள்ளால் நெஞ்சு பறியுண்ட பின்பு நாம் உள்ளோமோ இங்கு உனக்கு நலிய-பாவியேன் பல நெஞ்சு படைக்கப் பெற்றிலேன்-
நெஞ்சு இரண்டு உடையோம் அல்லோமே என்றவாறு
துழாய்ப் பனி நஞ்ச மாருதமே–நஞ்சூட்டினால் போல் வந்த மந்த மாருதம்
திருத்துழாயின் குளிர்ச்சியால் குளிர்ச்சி அடைந்த மாருதம் என்றுமாம்
காற்றுக்கும் குளிர்ச்சி ஊட்டும் படி அன்றி திருத்துழாயின் தண்மை
எம்மது ஆவி -நெஞ்சைப்போல் என்னை விட்டு அங்குச செல்ல துணிவு இல்லாத ஆவி -உயிர் என்றபடி
பனிப்பியல்வே –தாபம் தணிக்க வல்ல நீ நெஞ்சு இழந்தாரை படுகொலை செய்யலாமோ-விசஜாதியர் செய்யுமத்தை
சஜாதீயமான நீ செய்யக் கடவையோ-
அவர் -பன்மை–பிரிந்து போனதால் சினத்தால் பன்மை பிரயோகம்
சுவைத்தான் ஒருமை –சுவைத்தான் -சுவை மிக்கு இருந்தது போல் அனுபவித்தான் )–முன்பு தனக்கு செய்த உபகாரத்தை நினைத்து கோபம் தணிந்து ஒருமை இயல்பாக பிரயோகம் -ஒருமை பன்மை மயக்கம்
————
பனிப்பியல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ் ஊர்ப்
பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம் தண் அம் துழாய்
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத் திறத்துக் கொலாம்
பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒரு நான்று தடாவியதே —-5- -வாடைக்கு வருந்தி மாமை இழந்த தலை மகளைக் கண்டு தோழி இரங்குதல் ––மாயா வாமனனே -7-8-
கண் -ஞானம் –
சோரும் தடங்கண்ணி-அன்பு மிகுதியால் இவள் பேர் அறிவும் கலங்கியதே
ஸ்வ எத்ன சாத்தியமான ஜ்ஞானம் அன்றிக்கே-மயர்வற மதிநலம் அருளப் பெறுகையாலே
பரபக்தி பர ஜ்ஞான பரம பக்திகள் ஏக ஷணத்திலே இவர்க்கு உண்டாகையாலே
இங்கே இருக்கச் செய்தே-ஸ்மாரகமாய் நலியும்படி இவருக்குப் பிறந்த ஜ்ஞான வைசத்யம் இருந்த படி –
இங்கு கர்மம் திரோதானம் நமக்கு -சரீர ஆத்ம பாவம் தெளிவாக அங்கு வருமே –
ததீயத்வ ஆகாரம் பார்க்கும் ஞானம் இங்கேயே ஆழ்வாருக்கு
அப்ருதக் சித்த விசேஷணம் -இங்கேயே ஞான விளக்கம் -நிர்ஹேதுக விஷயீ காரத்தால் –அதனால் தான் துன்பப்படுகிறார்
4-4-4-அபி பாகேந த்ருஷ்டத்வாத் –வேறுபடாமல் உள்ளதாகவே காணப் படுகிறது –
அவனுக்கு பிரகாரமாக உள்ளதால் தன்னைத் தனிப்படாமல் உள்ளதாகவே அனுபவிக்கிறான்
பனிப்பியல்வாக உடைய தண் வாடை-இரண்டு அடைமொழிகள் தொழில் பண்பையும் குணப் பண்பையும் காட்டும்
இக்காலம் இவ் ஊர்–காலாந்தரமும் தேசாந்தரமும் இல்லையே -பிரிந்த இக் காலத்திலேயே -பிரிந்து தனித்து இருக்கும் இவ்வூரிலேயே -முன்பு அவ்வாடை இனிதாய் இருந்ததை ஸூசிப்பிக்கும்
மாமைத் திறத்துக் கொலாம்-முன்பு கருடாழ்வார் நெஞ்சை அபஹரித்துப் போனதால் இப்பொழுது வாடை மாமியை அபஹரிக்கவே ஸங்கல்பித்து ஏவினான் என்றவாறு
பனிப்புயல் வண்ணன்–வடிவையும் உதார குணத்தையும் சொன்னவாறு
நெடும் கடல் நிற்பதும் ஞாயிறு காய்வதும் நித்தலும் கால்
ஒடுங்கி நடப்பதும் தண் கார் பொழிவதும் ஊழி தன்னில்
கடும் கனல் பற்றிச் சுடாதே இருப்பதும் தும்பை புனைந்து
அடும் கனல் ஆழி அரங்கேசர் தம் திரு ஆணையினே -ஸ்ரீ திருவரங்கத்து மாலை.–15-
ஒரு நான்று தடாவியதே-நிலை குலையாத செங்கோல் குலைந்ததே -நாம் படும் பாடு இருக்கட்டும் -அவனது ஆணைக்குத் தீங்கு வராமல் ஒழிய வேண்டுமே என்று இரங்குகிறாள்-தடாவியதே–வளைந்ததே -எவகாரம் இரங்கினமை தோற்றும் –
தாய் வார்த்தை என்றும் தோழி வார்த்தை என்றும் கூறலாம்-தடாவியதே-வருத்தம் கலந்த வெறுப்பு சங்கை கவலை தோற்ற ஸ்வரம் -கேள்வி அல்ல
தடாவியதே–கூரத்தாழ்வானை விட்டுப் பிரிய திரு உள்ளம் இல்லாத எம்பெருமானார்
ஈஸ்வரன் ஆணையைப் பேணி பாது காத்தால் போல் அன்றோ இதுவும்
ரக்ஷணத்துக்கு பிராட்டி மாற்றிய இடம் திருவடிக்கு அக்னி சுடக் கூடாதே -ஸீதா பவ -என்றாள் -அன்றோ
இங்கு மூவரும் இருக்க -அவன் இவளை சிஷிப்பதா –
அவன் தனக்கு ஸ்வரூப ஸ்வ பாவங்கள் வேறு பட்டால் அவனைப் பின் செல்லுகிறவற்றைச் சொல்ல வேணுமோ-(தத்துவமும் தகவும் இல்லை -கிருபையும் ரக்ஷகத்வமும் இல்லையே அவனுக்கு )
வீசும்-ஒளிக்க ஒண்ணாத படி போகும் இடம் எல்லாம் தூவா நின்றது என்றும்
வீசும் -இவளுடைய விரஹ அக்னி தன் மேல் படாதபடி கடக்க நின்று வீசா நின்றது என்றும்
வீசும் -தம் தாம் மேல் படாமே இறாய்த்து நின்று எதிரிகளை எய்வாரைப் போல்
துழாய் பனிப்புயல் சோரும்–பனிப்பியல் பாட பேதம் -பனிப்பு இயல் சோரும் -துழாயின் குளிர்ச்சியில் தன்னுடைய தன்மையை இழக்கிறது என்றவாறு
பியல -புயல -மழை -வர்ஷத்துக்குப் பர்யாய பதங்கள்-
அருகே உள்ளார் இப் பெண் நாயகனான சர்வேஸ்வரன் சூடிய திருத்துழாயில் ஆசைப்பட்டு –இது வாயிற்று இவள் செய்த குற்றம் –
பிரகலாதன் எங்கும் உளன் கண்ணன் சொன்னது போல் திருத்துழாயை ஆசைப்பட்டதே இவள் குற்றம்-
பெற வேண்டும் -என்று எண்ணி -கிடைக்காமையால் பெரு மழை போல்-பனிப்புயல் சோரும் தடங்கண்ணி-பனி குளிர்ந்த அர்த்தத்தில் அல்ல-ஆனந்த அஸ்ரு அல்லவே -தர்சநீயமாய் என்றவாறு – தன்னுடைய விசாலமான நேத்ரங்களிலே தாரை தாரையாக கண்ணீர் பெருக்க
ரக்ஷகனான சர்வேஸ்வரன் தனது ஸ்வரூபம் மாறாடிக் கொண்டு -கருணை ரக்ஷகத்வம் இல்லாமல் ஆகவே
தொண்டனான வாயுவும் இவளது சவுந்தர்யம் அழிக்கக் கோலி –
தனது குளிர்ந்த -சீத ஸ்வபாவம் மாறாடிக் கொண்டு உஷ்ண ஸ்வபாவம் அடைந்து -நெருப்பாய்
இப்பொழுது இவ்வூரில் இவள் மேல் அழல் வீசத் தொடங்கிற்று
வாயுவுக்கு வெப்பமும் குளிரும் இருக்கக் கூடாது என்ற சர்வேஸ்வரன் ஆஜ்ஜை கூட
இப்போது இவருக்காக பங்கமாயிற்றே -என்று இன்னாப்பு –
———-
தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
கடாயின கொண்டொல்கும் வல்லி ஈதேனும் அசுரர் மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே–6 -தலைவியின் அழகை தலைவன் வியந்து பேசுதல் –உண்ணும் சோறு -6-7-
நின் கண் வேட்கை எழுவிப்பேன் -என்று அன்றோ இவர் அவதரித்தார்
திருப்புளிய மரம் அருகில் வந்தாலே தப்ப முடியாதே
செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆட் செய்மின் போல்
அஹங்கார மமகாரங்கள் உள்ளார் அருகில் வந்தாலே அவை போகுமே
உயிரை யுடையார் நாராயணன் என்று அறிவார் இல்லையே
அத்தை உணர்த்தவே ஆழ்வார் எம்பெருமானார் அவதாரங்கள்
சம்சாரத்திலே குடியும் தடியுமாய் இருக்க நினைத்தார்
ஆழ்வார் திருப்புளிக்கு கீழே இருக்கும் இருப்பு காணச் செல்லாதே
கொள்ளுங்கோள்-என்கிறது –
மாயப்பிரான் அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ –
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல் நடாவிய கூற்றம்-என்பதால் மிக்க பிரதானமான வேத முதல்வன் மேல் காதல் உண்டாக்கி அநாதி கால கர்மாக்களுக்கு எமனாக உள்ள ஆழ்வார் என்பதும்
கண் -ஞானம் –அதற்கு அம்பை உபமானமாகச் சொல்வதால் பரம்பொருளைத் தப்பாமல் பற்ற வைக்கும் தன்மை உண்டே
வில் -ஞான சாதனம்
தடாவிய அம்பு-வளைந்த அம்பு – -ஞானமாகிய அம்புக்கு வளைவு -விஷயாந்தரங்களில் செல்லுதல்
முரிந்த சிலைகளும்-ஒரு கால் தவறுகை
தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு கடாயின கொண்டு -என்பதால் நிலை பெற்ற ஞான சாதனங்களை யுடைய ஆழ்வார்
இதில் நாயகன் வார்த்தையால் தம்முடைய வைபவத்தைப் பேசுகிறார்
—————
ஞாலம் பனிப்பச் செறித்து நன்னீரிட்டுக் கால் சிதைந்து
நீல வல்லேறு பொரா நின்ற வானமிது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம்
காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே –7 -கால மயக்கு –இன்னுயிர்ச் சேவல் -9-5–
திருமால் கோலம் சுமந்து –கார்காலத்து மேகமும் விளங்கும் மின்னலும் ஸ்ரீ யுடன் சேர்த்தியைச் சொன்னவாறு
கால் சிதைந்து நீல வல்லேறு பொரா நின்ற வானமிது–என்பதால் தமோ ராஜா குனஸ்தர் பரஸ்பர பேதத்தால் மாறுபாடு கொண்டு நெருங்கி உலகம் நடுங்கும்படி மேலிட்டு நடக்கிற இடம் என்றதாயிற்று
நீல வல்லேறு-நீலம் தமோ குணத்தையும் வல் செறுக்கு ரஜோ குணத்தையும் ஏறு -மிடுக்கையும் சொன்னவாறு
அவிவேகம் ஆகிய மேகம் மூடி சம்சாரமாகிய பெரு மழையிலே அகப்பட்டேன் என்னும் ஆழ்வாரை
பார்ஸ்வத்தர் ஆற்றாமை தணிக்க உரைத்தல்
குழறு -நான் வந்த பின்பும் அவன் வரவில்லையே கண்டாயே என்று அவன் குற்றத்தை முன் இடுகிறது
இது கர்ஜிப்பதை பார்த்தால்-நான் வந்த காலத்திலும் உன்னை விட்டுப்பிரிந்து நாயகன் வரவில்லை என்று
துக்கம் விசாரிக்க வந்தது போல் புலம்புகிறது
தண் பூம் காலம் கொலோ வறியேன் -அன்று என்று சொல்லாமல் அறியேன் என்று ஐயப்பாடு தோன்றச் சொன்னது
ஆராய்ந்து கொண்டு சிறிது கால ஷேபம் செய்யலாம் என்பதால்
வினையாட்டியேன் -மத் பாவமே -அவன் இரக்கமின்மையோ உனது ஆற்றாமையோ காலமோ நிமித்தம் அன்று
வினையாட்டியேன் காண்கின்றவே –
1-அவன் உகப்பாரை கை விடுமவன் அன்றே
2-இவளுக்கு ஆசை இல்லாமை அன்று
3-வர வேண்டும் தசை இல்லாமை அன்று
4-பிராப்தி இல்லாமை அன்று –
5-திருமால் -என்றதால் பிராப்தியும் சித்தம்-
காண்கின்ற என் பாபம் இத்தனை இறே
மத்பாபம் ஏவ துர் நிமித்தம் –
இது-மத்ய தீப நியாயப்படி –வானம் கொல் -காலம் கொல் இரண்டுடனும் அந்வயம்
————
காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே —8- -தலைவன் பொருள் வயிற் பிரிதல்-குறிப்பால் அறிந்த தலைவி தோழிக்கு கூறல் –கையார் சக்கரம் -5-1-
காண்கின்றனகளும் –காலைப்பிடித்து -கையைப்பிடித்து அஞ்சலி செய்வது -மனம் தடுமாறுவது போல்வனவும்
கேட்கின்றகளும் –பிரியேன் பிரியில் தரியேன் என்பன போல் சொல்வனவும்
இந்நாள் -என்றதனால் முன்பு இவ்வாறு வரம்பு கடந்த செயல்களும் பேச்சுக்களும் இல்லாமையையும்
பயில்கின்றன-என்றதனால் -இவையே மீண்டும் மீண்டும் பல கால் செய்வதையும் சொல்வதையும் காட்டும்
இது அன்றோ எழில் வாலி என்றார் தாமே -காலைத் தொட்டு இதுவே என்று காட்டினான் வயலாலி மணாளன்
பாண் -மனப் பூர்வகமாக இல்லாமல் வெளிக்குச் செய்யும் ஸ்தோத்ரமாய் –பாண்-ஸ்தோத்ரம் புலமை அர்த்தவாதம் புகழ்ச்சி
பாண் -வண்டுகள் என்றுமாம்
முன்பு நீயே பொருள் என்றவன் –பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே -பரிகாஸமாகச் சொன்னபடி
கூடிய நிலையிலும் பிரித்விக் கருதி இரங்கி அஞ்சினபடி
குன்ற நாடா -குறிஞ்சி நிலத் தலைமகன்
மாண குன்றம் ஏந்தி–வாமன கிருஷ்ண அவதாரங்களை சொன்னவாறு-அது தான் பற்றிய மலை -இது தன்னைப் பற்றிய மலை –
ஆதாரமும் ஆதேயமும் அவனே–அன்று குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவனே இன்று பரன் சென்று சேர் வேங்கடம்-முன்பு கோவர்த்தன ஏந்தி ரஷித்தவன்
இப்பொழுது சர்வ சுலபனாய்-அது ஊருக்காக இங்கு உலகுக்காக
தண் மலை -தாபத்த்ரயங்களைப் போக்கும் மலை
மா மலை -பெரிய திருமலையைச் சொன்னவாறு
வேம் கடம் -பாவங்களை எரித்தலும் -அழிவில்லாத ஐஸ்வர்யங்களை அளித்தலும் -இதுவே இவ்விடத்துக்குச் சாலப் பொருந்தும் –
பாகவத சகவாசம் சமாஹம் இருக்க -அவ்விருப்பு ஒழிய -எம்பெருமான் உள்ள திவ்ய தேசத்துக்கும் போகக்கூடாது என்று
பாகவத ஸஹவாஸ ஸ்லாக்யதையைச் சொன்னபடி
அடியார் அடியார் கூடும் –இது வல்லால் மூவுலகு பெறினும் வேண்டாவே -இப் பாட்டிலும் மேலில் பாட்டிலும் இத்தையே சொல்லிற்று ஆயிற்று
————-
திண் பூஞ்சுடர் நுதி நேமி யஞ்செல்வர் விண்ணாடனைய
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் இவையோ
கண் பூங்கமலம் கருஞ்சுடராடி வெண் முத்தரும்பி
வண் பூங்குவளை மடமான் விழிக்கின்ற மாயிதழே–9- -தலைவன் தலைவியின் நீங்கல் அருமை கூறுதல் -பொலிக பொலிக –5-2-
திண் பூ -இரண்டு அடைமொழிகள் -திருவாழி -திவ்ய ஆயுத திவ்ய ஆபரண கோடியில் அமையும் என்பதைக் காட்டும்-சீரிய சிங்கம் பூவைப்பூ வண்ண போல் இங்கும்
நேமி யஞ்செல்வர்-திருவாழி திருமகள் சேர்த்தி அழகைக் காட்டும்
விண்ணாடனைய — வல்லி–அந்தமில் பேரின்ப திருநாடு போல் சேர்ந்தவர் பிரிய ஒண்ணாமல் எல்லை இல்லாத ஆனந்தம் தரும் கொடி என்றவாறு
வண் பூ மணி வல்லி–மெல்லியதாய் ஓல்கி ஓசையும் தன்மையும் கண் கை கால் முகம் வாய் முதலிய
அவயவங்கள் பலவகை மலர்கள் போல் இருப்பதையும் காட்டியவாறு
திண் பூஞ்சுடர் நுதி நேமி -நான்கு விசேஷணங்கள்-வண் பூ மணி வல்லி -நான்கு விசேஷணங்கள்
யாரே பிரிபவர் தாம்-மனிதத்தன்மை -விவேக ஞானம் உள்ள சேதனர் பிரிவாரோ
மடமான் விழிக்கின்ற–தான் பிரிந்து செல்ல இயலாதபடி அழகியதாய் நோக்கித் தன்னைக் கவரும் தண்மையைச் சொன்ன படி –
இதழ் -கண்ணின் மேல் இமை கீழ் இமைகள்
மா இதழ் -சிறந்த அதரத்தின் தன்மை என்றுமாம்
வண்-தமது திவ்ய ஸூ க்திகள் மூலம் உலகோர் அனைவருக்கும் மதி நலம் அருளினமை
தாமே சொல்லினும் வண் சடகோபன் என்றே அருளிச் செய்வார்
இவையோ கண் -அத்விதீயமான ஞானமுடைமை
பூங்கமலம் கருஞ்சுடராடி-என்றதால் இவரது ஞானம் – செய்யாளான திருமகளையும் மை நிறத்தனான திருமாலையும் இலக்காகக் கொண்ட ஞானம்
வெண் முத்தரும்பி-என்றது இவரது ஞானம் சுத்த ஸத்வ ஞானம் என்றும்
மிதுன அனுபவத்தால் ஆனந்த அஸ்ரு பெருகுவதையும்
பூங்குவளை-என்றும் மாயிதழே என்றும் செம்மையும் பெருமையும் காட்டி அநுராக மிகுதியைக் காட்டும்
மடமான் விழிக்கின்ற-பிரிவாற்றாமை மிக்கு இருப்பதைக் காட்டும் –
எங்களை (எங்களை -என்று மதுரகவி ஆழ்வார் போல் உள்ள அனைவரையும் சொன்னவாறு )
அறியச் செய்யாது ஒழிந்தால் உன்னை அறிய வேண்டாமோ –ஸ்வரூபம் -விக்ரஹம் -உன்னுடைய விக்ரக வைலஷண்யம் நீ அறியாய் –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவரைப் பிரிந்து-தங்களுக்குத் தரிக்க ஒண்ணாமை –mநீரே எல்லாம் எங்களுக்கு மாதா பிதா சர்வம் –
நாத முனி யாமுன முனி ராமானுஜ முனி -முனித்த்ரயம் நீரே அறுதியிட்டார்களே -அதே போல் நாங்களும் என்று
இவருக்கு அறிவித்து அவரைத் தரிப்பித்தமை சொல்லிற்று-பாகவத சம்ஸ்லேஷம் கிட்டிய பின்பு பகவத் ஸம்ச்லேஷம் தேடிப்போவாரோ என்றவாறு
மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர் நுமது
வாயோ அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ அடும் தொண்டையோ அறையோ விதறிவரிதே—10- -தலைவன் தோழியிடம் குறை கூறல் –மதி உடன்படுதல் -நெடுமாற்கு அடிமை -8-10–
கொடிகாள் –தோழிகளையும் கொடியாக ஒப்புச் சொல்லி விளித்தவாறு
நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர்–எனது பிரிவால் நீங்கள் நோவு படுகிறீர் இல்லை -உமது பரவசத்தால் கேட்க்கிறீர் இல்லை என்றபடி
கேட்கின்றிலீர்-கேட்பதே வேண்டுவது –பேற்றுக்கு அறிவிப்பே அமையுமே
கேட்கின்றிலீர் உரையீர்–கேளாதவர்களைச் சொல்லீர் என்றது -ஆசையின் மிகுதி இருந்தபடி –
ஆயோ அடும் தொண்டையோ அறையோ விதறிவரிதே–ஆயுல் இடும் குரலோசையைக் கேட்டு தாமும் கிளியும் ஆழ்ந்த படி
பசும் சாம நிறத்தாலும் செவ்வாயினாலும் இன் சொல்லாலும் கிளி என்று எம்பெருமானையே சொன்னவாறு
இது அறிவு அரிது -கார்யம் தெரிகிறது -காரணம் தெரியவில்லையே என்றபடி
கிளியும் எள்கும் ஆயோ அடும் தொண்டையோ நானும் கிளியும் லஜ்ஜிக்கும் படி சிவந்த தொண்டைப் பழம் போன்ற வாய்
ஆயோ என்ற சொல்லோ-அதரம் மாத்ரமோ
அடும்–துன்பப் படுத்துகிறதே-முடிக்கிறபடி உண்டாய் இருந்தது –
இத்தால் –
ஆழ்வார் உடைய ஆத்மா குணங்களோடு-தேக குணங்களோடு-அவற்றில் ஏக தேசத்தோடு
வாசி அற-ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு உத்தேச்யமாய் இருக்கிறபடி –
வேங்கட வல்லிக் கொடிகாள் -என்கையாலே
திவ்ய தேச வாசமும்-சம்ஸ்லேஷத்தில் தரிக்கையும்-விஸ்லேஷத்தில் தரியாமையும் -ஆகிற இவை –
————
அரியன யாமின்று காண்கின்றன கண்ணன் விண்ணனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவென ஞாலம் எய்தற்
குரியன வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி ஒரோ குடங்கைப்
பெரியன கெண்டைக் குலம் இவையோ வந்து பேர்கின்றவே —11-பிரிவாற்றாத தலைவியின் வேறுபாடு கண்டு தலைவன் உரைத்தல் –மாலுக்கு வையம் -6-6-
கண்ணன் விண்ணனையாய்-தலைவியை நோக்கி விளி -இவளை அடைந்தவர் மீண்டு செல்ல ஒண்ணாமையைச் சொன்னவாறு -தோழியைச் சொன்னதாகவுமாம்
ஞாலம் எய்தற்குரியன –உலகம் முழுவதும் விலையாகப் பெற உரியன என்றும் -உலகம் எல்லாம் பெற விரும்புவதற்கு உரியன என்றுமாம்
ஓண் முத்தும் பைம் பொன்னுமேந்தி -முத்தும் பொன்னும் –கண்ணீருக்கும் பசப்புக்கும் உவமை ஆகு பெயர்-
அஸ்ரு பிந்து –ஒண் முத்து-மேனி வர்ணம்-பொன் -பசலை நிறம்-பைம்பொன் –விரஹ சங்கையால் உண்டான வை வரண்ய
என முன் வந்து பேர்கின்றவே-இப்பொருள்கள் உனக்கு உரியனவே கான் -நீ பொருள் ஈட்ட வேறே எங்குமே போக வேண்டாமே என்று கூறுகின்றன
கெண்டைக் குலம்–குளிர்ச்சியாலும் மிளிர்ச்சியாலும் ஓடுதலாலும் மதமதப்பாலும் கண்கள் கெண்டை மீன் போல்வனவாகுமே
குலக் கெண்டை என்று மாற்றி உயர்ந்த சாதிக் கெண்டை என்றுமாம்–ஞான பரம்பரை-எம்பெருமான் மத்ஸ்ய அவதாரத்தில் ஈடுபட்டு தந மயமானவை அன்றோ இவை
முத்து -முக்த நிலை என்றுமாம் -பத்தர் கூட்டத்தில் முக்தர்–முத்துச் சிப்பியில் முத்து போல் அழகியதாக இருக்கும் படி
இவனோடு கூட ஒரு படுக்கையிலே இருக்கச் செய்தே-பிரிந்தான் என்று நினைத்து
பிரிந்தால் பிறக்கும் காரியமும் பிறந்து செல்லுகிறது –
தலைமகன் வார்த்தையாய் இது இருக்கிறது
பெருமானே ஆழ்வாருடைய ஞான பக்தி வைராக்யங்களை கொண்டாடி பேசும் பாசுரம் இது
நான் உன்னை விட்டுப் பிரிய வல்லேன் அல்லேன்
உபய விபூதியும் கண்டு ஆசைப்படும்படி-அனுபவத்து விஸ்வமயமாகும் படி
கண்ணீர் உகுத்து திரு மேனியும் வை வர்ணம் அடைந்து
ஒவ்வொரு சிறங்கை அளவு உள்ள உன்னுடைய கண்கள் பெரிய இரண்டு மத்ஸ்யங்கள் துள்ளுவது போல்
நின்ற நிலையில் நில்லாமல் சலிக்கிறதே-இது என்ன ஆச்சர்யம்
————
பேர்கின்றது மணியாமை பிறங்கி யள்ளல் பயலை
ஊர்கின்றது கங்குலூழிகளே இதெல்லா மினவே
ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் கண்ணன் தண்ணம் துழாய்
சார்கின்ற நன்னெஞ்சினார் தந்து போன தனி வளமே—12-தலைவன் பிரியப் பெற்ற தலைவி தன் ஆற்றாமை கூறி நெஞ்சொடு கலாய்த்தல் –-மாசறு சோதி -5-3-
இதெல்லாம் -என்றது அன்றில் -தென்றல் -திங்கள் -கடல் -குயில் போல்வன எல்லாம் வருத்தினமை
ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் -பிரதிகூலரை ஆண்மையால் கொல்லும் அனுகூலரை அழகாலே கொல்லும் –
யுகாவாதாரை அணுகி நின்று முடிக்கும் -உகப்பாரை அகல நின்று முடிக்கும் –
கண்ணன் தண்ணம் துழாய் சார்கின்ற நன்னெஞ்சினார் -அவன் சம்பந்தம் பெற்ற திருத்துழாய் உடன் பெரும் சம்பந்தமே பேறு என்று ஈடுபட்ட படி –
சார்கின்ற–கிடைக்கும் கிடையாது என்று விசாரியாதே பதறி விழுந்தமை தோன்றும்
நன்னெஞ்சினார் – தம்முடைய நெஞ்சை நல் நெஞ்சினார் என்பான் என் என்னில்
பிரஜைகளே யாகிலும் பகவத் விஷயத்தில் முற்பாடானார் ஆனாரை இங்கன் அல்லது சொல்லல் ஆகாது –
அலைந்த பரியட்டமும் தாமுமாய்த் திரிகிறார் இறே
பேர்கின்றது மணியாமை பிறங்கி யள்ளல் பயலை ஊர்கின்றது-என்றது அன்பின் மிகுதியால் மெய்ப்பாடு மிக்கப்படியைக் கூறியபடி
சூர்யன் இருளை பரிசாகக் கொடுத்து போனது போல் சரீரம் வெளுத்து வைவர்ணயம் அடைந்தது
மற்றும் உண்டான தென்றல் முதலியவையும் பாதிக்க-இப் பாதகங்கள் எல்லாம் ஒரு இரவு பல கல்பங்களாக பெருகத் தொடங்கிற்றே
நன்னெஞ்சினார்-நெஞ்சுடன் ஸஹவாசத்துக்கு நான் பெற்ற பலனே இது
மணி மாமை என்று தன் நிறத்தைத் தானே கொண்டாடுவான் என் என்னில்
ஒரு நிறமே-ஒரு எழிலே என்று அவன் கொண்டாடும் படிகளை கேட்டிருந்த படியாலே
தனக்குத் தான் அன்றியிலே-அவனுக்குக்காகத் தான் இருக்கையாலும் –
(அத்யந்த சேஷத்வம் -தாதர்த்த சதுர்த்தி அர்த்தம் அறிந்தவர் அவன் கொண்டாடினவற்றைக் கொண்டாட வேண்டுமே )
கீழ் ஆறு பாசுரங்களால் பாகவதர்களைத் தலைமகனாகச் சொல்லி
இதில் பகவானைத் தலைமகனாகப் பேசுவது
பாகவதர் சேர்க்கை பகவத் சேர்க்கையில் மூட்டி பேற்றை முழுமை செய்யும் என்கிறது –
போதயந்த பரஸ்பரம்-பேசி மகிழ்ந்து கேட்டும் மகிழ-இது பெருமாளைத் தானே நினைவூட்டும் அன்றோ
இவர்க்குக் கீழ் உண்டான பாகவத சம்ஸ்லேஷம் பகவத் சம்ஸ்லேஷம் பர்யந்தம் ஆக்கின படி –
———————
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துழாயை துழாவு தண் வாடை தடிந்து
இனி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே-13- -தலைவி பிரிவு மேலிட இருளுக்கும் வாடைக்கும் இரங்கல் –மல்லிகை கமழ தென்றல் -9-9-
இனி வளை காப்பவர் ஆர்-அஸ்தமிக்கும் ஆதித்யன் காக்கவோ -அறிவு அழிக்கிற அந்தகாரம் காக்கவோ -வருத்துகிற வாடை காக்கவோ –வருந்துகிற நான் காக்கவோ
தனி வளர் செங்கோல்-சந்திரன் நக்ஷத்திரங்கள் போன்ற எல்லா தேஜஸ் பதார்த்தங்களும் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்தே இருக்குமே
செங்கோல் -பிரிந்தார்க்கு வருத்தம் தரும் கொடும் கோன்மையை எதிர்மறை லக்ஷணையால் காட்டும்-தானே உஷ்ணத்துக்கு ராஜா என்று இருக்கும் ஆதித்யன்
வீற்று இருந்தது பார் முழுதும்-எதிர்ப்பார் இல்லாத பெருமை -இருளுக்கு உலகம் எங்கும் வீற்று இருப்பதற்கு மாத்திரமே இடமானமாய் தோற்றும்
தழல் வாய்–உஷ்ண கிரணமும் பிரதாபமும் உண்டே
அவிய -மறைய என்னாமல் அவிய என்றது மீண்டும் எழாமல் இரவு நீண்ட இருப்பதைக் காட்டும்
தண் வாடை -முன்பு கலவியில் இன்பம் செய்த நிலை -இப்பொழுது எதிர்மறை லக்ஷணையால் வெவ்விய வாடை யாண்மையைக் காட்டும்
இனி வளை காப்பவர் ஆர்-மறந்தும் புறம் தொழாத அநந்யார்ஹ சேஷத்வத்தை -அவன் சம்பந்தத்தை வளை காட்டுமே-கழல் வளை கழலும் வளையானவே
——–
ஈர்வன வேலும் அஞ்சேலும் உயிர் மேல் மிளிர்ந்து இவையோ
பேர்வனவோ அல்ல தைவ நல்ல வேள் கணை பேரொளியே
சோர்வன நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர்
தேர்வன தைவம் அந் நீர கண்ணோ இச் செழும் கயலே -14- -தலைவன் தலைவியின் அழகைப் பாராட்டுதல் –நலம் பாராட்டு –துவளில் மா மணி மாடம் -6-5-
இவள் கண் அழகிலே ஈடுபட்ட தலைமகன் அவற்றின் வை லக்ஷண்யத்தைப் பேசும் பாசுரம்
ஈர்வன வேலும்–கூர்மையான வேல் போன்ற நோக்கும்
அஞ்சேலும்–மடப்பமும் பிறழ்ச்சியும்–ஆழ்வாரது ஞானத்தின் கூர்மையைச் சொன்னவாறு
உயிர் மேல் மிளிர்ந்து இவையோ பேர்வனவோ அல்ல –உயிரைக் கவரும் அம்பு போல் –நித்தியமான உயிரையும் அழிக்க வல்லன-(மர்ம ஸ்பர்ஸி அழிக்காததை அழிப்பதால் வை லக்ஷண்யம் சொன்னபடி ) ஆழ்வாரது ஞானம் உலகோர் யாவர் இடத்தும் பூரணமான அருளை தவறாமல் கொண்டுள்ளத்தைச் சொன்னவாறு
பேர்வனவோ அல்ல —எடுத்து மீண்டும் குத்தவும் பறிக்கப் போகிறது இல்லையே
தைவ நல்ல வேள் கணை பேரொளியே சோர்வன -மன்மதனின் ஐந்து பாணங்கள் செய்யுமவற்றை இவை இரண்டுமே செய்கின்றனவே
நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர் தேர்வன–ஸ்ரீ வைகுண்டத்தை ஒப்பனவே-அயர்வறும் அமரர்களுக்கு தாரக போஷகமாம் படிவிட்டு இருக்கும் திருமேனி-
தைவம் அந் நீர கண்ணோ–இச் செழும் கயலே -உலகத்து மீன்களில் வ்யாவ்ருத்தி
ஆழ்வாரது ஞானம் மத்ஸ்யாதி அவதாரங்களில் ஆழ்ந்து உள்ளமையையும் சொன்னவாறு
விசும்பூர் தேர்வன-இவ்வுலகோரை வசப்படுத்தி திருத்தி அடையாமல் நித்ய விபூதியையும் வசப்படுத்த தேடுகின்றன -என்றும்
இவள் கண் அந்த தேசம் எனக்கு ஒப்பாகுமோ என்று தேடுகிறதாம்
விண்ணுளாரிலும் சீரியர் -அங்கு உள்ளாரும் இங்கே வந்தார்கள் – அங்கு உள்ளாரும் ஆசைப்படும் கண்கள் அன்றோ
நித்ய முக்தர்களும் ஆசைப் பட்டு நாடுதற்கு உரியன என்றும்
ஆழ்வாரது ஞானம் இவ்வுலக நடையைக் கடந்து மேம்பட்டமையை வியந்து சொன்னவாறு –
இவற்றின் வைலக்ஷண்யத்தைக் கண்டு -நித்ய ஸூரிகளும் ஸ்யாம ஸூந்தர எம்பெருமான் அனுபவம் விட்டு
இவற்றை அனுபவிக்கைக்கா இங்கே தேடிக் கொண்டு வந்தார்கள்
இப்படி முக்தமாக அழகியதாயுள்ள இவை உன்னுடைய கண்ணாய் இருக்குமோ என்று கேட்க்கிறான்
———–
கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–15-தோழி தலைவன் எண்ணம் தெரிந்து அவனை நோக்கி உரைத்தல் –கண்ணன் கழலினை -10-5-
கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்-என்பதனால் எங்கள் கண்களையே வீணாவது கயிற்றையும் வினவ வேண்டுமோ
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை-என்றதால் நாங்கள் உமக்கே அறியோம் என்றும்
அடிக்கழஞ்சு பெறலாம் என்று கொண்டாட்டம்-இவ்வார்த்தை அழகியது என்றும்
கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே-என்பதனால் வ்யாஜமாக வைத்து உமது வரவுக்காக நெடு நாள் காத்து இருக்கிறோம் என்றும்
பயலோ இலீர் –நெடு நாள் பழகினாலும் கண்டு அறியாதது போல் என்றுமே புதியதாக உள்ள அழகுடைமையைச் சொன்னவாறு
இவ்வாறு தோழி தலை மகளது காதலை உரைத்த படி –ஆழ்வாரது ஞானத்தைக் கொண்டாடின படி
களிறு வினவி -இந்திரியங்களை -மத யானைகளைத் தோட்டியால் வசப்படுத்துதல்
நிற்றீர்-ஆழ்வாரது ஞானத்தின் ஈடுபாட்டால் செல்ல மாட்டாமை
அயலோர் அறியிலும்-ஆழ்வார் ஞானம் உதவி இல்லாமல் தாமாகவே இந்திரிய அடக்கம் பண்ணத் தொடங்குவார் அறிந்தாலும்
பகவத் விஷயத்தில் இத்தனை துவரை இல்லாதவரை அயலார் என்கிறாள்-அவர்களில் தனக்கு உண்டான வ்யாவர்த்தி சொல்கிறது
ஈது என்ன வார்த்தை –உபயாந்தரங்களைப் பற்றாத ஆழ்வார் ஞானத்தைக் கொண்டாடின படி
கடல் கவர்ந்த புயலோடு உலாம் கொண்டல் வண்ணன்–குண பூர்த்தி கைம்மாறு கருதாத உதவுதல்-எல்லா உயிருக்கும் இன்றியமையாமல் இருக்கும் அழகிய வடிவம் –
பு ன வேங்கடத்து –அடியவருக்கு எளியனாய் -போக ஸ்தானம்
கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–இந்த போக ஸ்தானத்தை நெடும் காலம் காவலாக இருப்பது பிரபன்னருடைய சேர்க்கையே-வாஸூ தேவா உன் வரவு பார்த்து இருந்தோம் -திருவேங்கட நீர்மையே தாரகமே விளை நீராகக் கொண்ட இந்த பயிர் காக்கிறோம் என்று
வ்யாஜத்தால் உம்மை எதிர்பார்த்து இருந்தோம்
அவயவ பிரதி பத்தி யாதல்-அவயவாந்தர பிரதி பத்தி யாதல் இன்றிக்கே-வெறும் கண்ணுக்கு மேற்பட அறியாது இருந்த படி
(அவயவம்- கண் -ஒன்றிலே இவனுக்கஇதுக்கு மேற்பட்ட அறியான்-கண்களிலும் இரண்டாவது அறியான்
கண்கள் -இரண்டு இவளுக்கு என்று அறியான் –ஆகவே இரண்டாவது வியக்தியைச் சொன்னபடி-ஒரு கண்ணின் அனுபவம் தாண்ட வல்லன் அல்லனே )
———
பல பல ஊழி கள் ஆயிடும் அன்றியோர் நாழிகையை
பல பல கூறு இட்ட கூறாயிடும் கண்ணன் விண் அனையாய்
பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பல பல சூழல் உடைத்து அம்ம வாழி இப்பாய் இருளே–16- -தலைவனைப் பிரிந்த தலைவி தோழியை நோக்கி இருள் வியந்து உரைத்தல் – பயிலும் சுடர் ஒளி -3-7-
கண்ணன் விண் அனையாய்–கால பரிணாமம் இல்லாத பரமபதம் போல் உள்ளீர் நீங்கள் என்றபடி
கண்ணன் விண் அனையாய்–தலை மகள் வார்த்தை ஆன போது-பரம பதத்தில் இருப்பார்க்கு சம்சார வெக்காயம் தட்டாதால் போல
இவ் அவசசாதத்தோடே கூடி இருக்க செய்தேயும் சத்தை கிடக்கிறது உன் சந்நிதி ஆகை அன்றோ ..
கண்ணன் விண் அனையாய்–தோழி வார்த்தை ஆன போது பரம பதத்தில் உள்ளார்க்கு புனர் ஆவர்த்தி இல்லாதா போல ,
உன்னோடு கலந்தார்க்கு உன்னை பிரிகை உண்டோ ?..பிரியில் தாங்கள் உளார் ஆகை என்று ஓன்று உண்டோ ?-
பல பல ஊழிகள்–பல அவாந்தர கல்பத்தை யுடைதான மஹா கல்பங்கள்
நாழிகையை பல பல கூறு இடுதல் -கலை காஷ்டை நிமிஷம் முதலியவற்றால் இனிக்க கூறிட ஒண்ணாது என்னும் படி பங்கிடுதல்
கூடினும் பல பல ஊழிகள் ஓர் நாழிகையைப் பல பல குறித்த கூறாயிடும்
அன்றி நான்கிலும் ஓர் நாழிகையைப் பல பல கூறிட்ட கூறு பல பல ஊழிகள் ஆயிடுமே –
அன்பர்–பிரிந்த நிலையிலும் அன்புடையார் என்னும்படி இருந்தது
கூடிய நிலையில் தலைமகன் காட்டிய அன்பு என்க
அன்பர் -பிரிந்து தரித்து இருக்கப் போகாமையைச் சொல்லுகிறது –
அம்ம -வியப்பும் வருத்தமும்
வாழி -மிக்க வெறுப்பினால் வைத படி -எதிர்மறை இலக்கணை-தாம் நினைத்தபடி வடிவு கொள்ள வல்ல காலத்தின் தன்மையை வியந்து நொந்த படி
இத்தால்–ஆழ்வாருக்கு சம்சாரத்தில் இருப்பு பொருந்தாது இருக்கிற படி-
இப்படி இரவு குறுகியும் நெடுகியும் காலம் கோலோச்சும் சம்சாரம் படுத்தும் பாடு பொறுக்க அரிதாய் உள்ளதே
நான் இப்படி சர்வ காலத்திலும் பாதிக்கப்பட்டே இருந்தேன்-அந்த இரவே வாழட்டும்
———–
இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு வாழியரோ
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூறல் ,அரவணை மேல்
இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல்
இருள் விரி சோதி பெருமாள் உறையும் எறி கடலே–17–தலைவி கடலை நோக்கித் தேர்க் கால் சுவடுகளை அழிக்காதே என்றல் –அணைவது அரவணை மேல் -2-8-
இருள் பிரிந்தார் அன்பர் -அயோத்யா நகர ஜனங்கள் அறிய ஒண்ணாத படி பெருமாள் இரவிலே தேர் ஏறிச் சென்றால் போல் சென்றனர் என்க
அதற்கும் இதற்கும் உள்ள வாசி தற்கால வழியை மறைத்துப் போகாமல் தெரியும் படி போதல்
இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல்-அபூத உவமை -அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு பிராகிருத பதார்த்தங்கள் ஒப்பாகாவே
ஓர் கரு நாயிறு அந்தமில்லாக் கதிர் பரப்பி வளர்ந்தது ஒக்கும் அம்மான் –
இருள் விரி நீல கரு–மூன்றும் ஒரு பொருள் பன் மொழியாய் கொள்ளலுமாம்
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூறல்—இருள் தரும் மா ஞாலத்தில் பாகவத ஸம்ஸ்லேஷ மநோ ரத நெறியைக் குலைத்திடாதே என்று வேண்டியபடி
அன்பர் இருள் பிரிந்தார் காண்–பகல் பட போனார் ஆகில் ஆற்றாமையாலே கடக்க மாட்டாது ஒழிகிற படியும்
அவர் முகத்தில் உண்டான குளிர்த்தியும் ஸ்மிதைதையும் கண்டு தரித்து இருத்தல் ஆகாது —
அவர் தாமும் பகல் போகில்–இவளைக் கண்டு வைத்து கால் நடை தாராது –என்னும் படியே போனார் —
எங்கேனும் போனாரும் சேரும் காலத்திலேயே போனார் —
பதார்த்த தரசனங்களாலே ஆறி இருக்க ஒண்ணாத காலத்திலேயே போனார் –
நான் செய்ய வேண்டுவது என் என்று கேட்க (விஸ்லேஷ வாசனையே இல்லையே இதுக்கு )
தேர் வழி தூரல்–உள்ளது எல்லா வற்றையும் கொடுத்து உஞ்ச விருத்தி பண்ணி ஜீவிப்பாரை போலே ,
அவரை போக விட்டு வழி பார்த்து கிடந்தோம் — இத்தை அழியாதே கொள் என்கிறாள்
(அவனுக்கு நியாமகமான கடல் தனக்கும் நியாமகம் என்று சொல்கிறாள் )
ஓ சமுத்ரமே-நீலக்கரு ஞாயிறு போல்-விஸ்லேஷ துக்கம் அறியாய்-இன்று கூடி இருந்து இரவிலே போனான்
தேர் வழியைப் பார்த்தாகிலும் ஜீவிக்கலாம் என்று இருந்தோம்-அத்தை அழியாதே கொள்
எனக்கு இந்த உபகாரம் செய்தால் நெடும்காலம் சுகிக்கக் கடவாய் -மங்களா சாசனம் பண்ணுகிறாள்-
———–
கடல் கொண்டு எழுந்தது வானம் அவ் வானத்தை அன்றி சென்று
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும்
கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ
கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே –18–கார்காலம் கண்டு வருந்திய தலைவியைப் பார்த்துத் தோழி இரங்கல் –-சூழ் விசும்பணி முகில் -10-9-
கடல் கொண்டு–இது கண்ணுக்கும் கண்ண நீருக்கும் அடைமொழி -கடலை வெற்றி கொண்ட கண் என்றுமாம்
பிரிவாற்றாமை அழிக்க முடியாத நித்ய விபூதியையும் அழிக்கும் படி மிக்கதாய் இருந்ததே
கடலுக்கும் வானத்துக்கும் நடக்கும் பெரும் போர் என்றும்
இது மழை வெள்ளம் அன்று உனது கண்ணீர் வெள்ளமே என்றும்
சொல்லி கால மயக்கு ஆகவுமாம்-ஏழாம் பாசுரம் போல் கால மயக்கு துறையாகும் இதுவும் ..
அது மழை காலம் தொடக்கம் இது முடிவு )-
———–
காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே
மாரிகை ஏறி அறை இடும் காலத்தும் வாழியரோ
சாரிகை புள் ஆர்ந்து அம் தண் துழாய் இறை கூய் அருளார்
சேரிகை ஏறும் பழியாய் விளைந்தது என் சின் மொழிக்கே –19-செவிலி பழிக்கு இரங்குதல் –-பாலனாய் ஏழு உலகு -4-2-
என் சின் மொழிக்கே-என் என்பதால் இது திருத் தாயார் வார்த்தை
காரிகையார்–அழகையே தலைமையாக யுடைய மெல்லியலார்
காரிகையார் நிறை காப்பவர் யார்–பரதந்த்ர -ஆறி இருக்கும் தன்மையை அழியாது காத்திடுவார் உண்டோ
கார் கொண்டு-கோபம் கொண்டு என்றுமாம் -கறுப்பும் சிகப்பும் வெகுளிப் பொருள்
கார் கொண்டு இன்னே மாரிகை ஏறி அறை இடும் காலத்தும் –ஸ்வரூபத்தையும் குண வர்ஷத்தையும் நினைப்பூட்டிக் கொண்டு காலம் நேர்ந்து விரைவை யுண்டாக்கவும்
கை ஏறுதல் -அறை கூவுதல் -வலியப் போருக்கு அழைத்தல்
சாரிகை புள் ஆர்ந்து—சாரிகை வட்டமிட்ட நடை -எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் கொண்டு வர திருவடி உண்டு என்றவாறு
அம் தண் துழாய் இறை கூய் அருளார்–தரிக்க திருத்துழாய் தாரா விடிலும் அன்புடன் கூவி அழைத்தாலும் செய்திலர்-தாமே வரவுமாம் (புள்ளார் )
அழைக்க்கவுமாம் (கூய்)-பேறு அத் தலையாகவே என்று இருந்த படி
முகப்பே கூவிப் பணி கொண்டால் ஆகாதோ-கூவுதல் வருதல் செய்யாமல்
கர்த்ருத்வம் அவனத்துவே-போக்தாவும் அவனே
அது இல்லாமல் போனால் -திருத் துழாய் பிரஸாதம் கொடுத்து அருளக் கூடாதோ
அருளார் -பிரணயி என்று இல்லாவிடில் ஸ்வ பாவிக சம்பந்தம் அடியாக பொதுவான அருளும் செய்திலர்-பிரணயித்வம் தவிர்ந்தால் ஸ்வாமித்வமும் தவிர வேணுமோ ?
சின் மொழி-மிதமாக குளிர்ந்த பேச்சு யுடையவன் -செயல் முழுவதும் அற்று சில சொல் மாத்திரமே சேஷமாக உள்ளது –
சின் மொழி–சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் மொழியாள்-சொல் என சொல்ல மாட்டாத பருவம் கிடீர்–
இப்போது பழி என்பது பகவத் ப்ராவண்யத்தை -அவன் வரக் காத்து ஆறி இருக்காமல் த்வரிப்பதே பழி
ஆஸ்ரிதரை இட்டு தன்னை நிரூபிக்கும் படி அவர்களுக்கு வைத்து கொடுத்த தரம்-
1-பெரிய திரு அடி மேலே போர இருத்தல்–
2-திரு ஆழியை கையிலே உடையன் ஆதல்–
3-பெரிய பிராட்டியாரை எனக்கு என்ன பெறுதல்–
4-திரு துழாயை தனக்கு தாராக உடையன் ஆதல் –இவை இறே சர்வாதிகார லஷணம்
சந்தாந கரணி -விசல்ய கரணி-என்னுமா போலே —(சந்தான கரணி -வெட்டுண்ட காயம் சேர்க்க -புள் -சேர்த்து வைக்கும்
விசல்ய கரணி -அம்பு பட்ட காயம் தீர்க்க -உள்ளத்தில் வலி நீங்க திருத் துழாய் )
————-
சின்மொழி நோயோ கழி பெருந்தெய்வம் இன்ன-இந்நோய் இது என்று
இன்மொழி கேட்கும் இளந்தெய்வம் அன்று இது வேல! நில் நீ
என் மொழி கேண்மின் என்னம்மனை மீர் ! உலகு ஏழும் உண்டான்
சொல் மொழி மாலை யம் தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே –20-துறையடைவு -வெறி விலக்கு -தீர்ப்பாரை யாமினி -4-6-
கழி பெருந்தெய்வம்–இளந்தெய்வம்–பர்வத பரம அணு போல் அன்றோ வாசி-கழி பெரும் ஒரு பொருள் பன் மொழி
இன்மொழி கேட்கும்-இனிய மொழியைக் கேட்டுப் பயன் கொடுக்கும் ஸ்தோத்ர பிரியர்
இன் மொழி –1-அர்த்த ரஹிதமான மொழி –
2-கேட்கும் இளந்தெய்வம் அன்று இது –
தனக்கு இல்லாததை யுண்டாக்கிக் செல்லப் புக்கால்
கேட்டுக் கொண்டாடும் தெய்வம் அன்று இது
கைக்கூலி கொடுத்து கவி பாடுவித்திக் கொள்ளும் தேவதைகள் அன்று
வேல!-முருகக் கடவுளின் வேலைத் தனக்கு அடையாளமாகக் கொண்டு ஆடுதலால் வேலன் எனப்பட்டான்
வேல! நில் நீ-தேவதாந்த்ர சம்பந்தம் யுடையார் புகும் அகம் அன்று காண் இது
வேல –கூராழி வெண் சங்கு ஏந்தி -என்று சொல்லுகிறபடியே கையும் திருவாழியுமாக
காண வேண்டி இருக்கிற இடத்தே நீ கையும் வேலுமாகத் தோற்றுவதே
என்னம்மனை மீர் !–உரிமையும் வாத்சல்யமும் யுடையவர்களே
உலகு ஏழும் உண்டான்–இவள் நோயைப் போக்க உலகம் முழுவதுக்கும் வந்த நோயைப் பரிகரித்தவன் தானே வேண்டும்-ஜகத்துக்காக உண்டான நோய் இவள் ஒருத்திக்குமே உண்டான படியால்-உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட பெரும் தேவன் பேர் சொல்லுகிற இவளைப் பெறுதீரே–5-9-1-
சொல் மொழி மாலை யம் தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே-உள் செல்ல ஒரு மருந்தும் மேல் பூச ஒரு மருந்தும் போல்
செவி வழியே உள்ளே புகும்படி திரு நாம சங்கீர்த்தனமும்
உடுத்திக் களைந்த திருத்துழாய் மாலையைச் சூடுவதும் வேண்டுமே
காக்கும் கடவுளின் திரு நாம உச்சாரணமே ஸகல ரோக சாந்தி கரம்
அவன் சம்பந்தம் பெற்ற திருத்துழாய் சூடுவதே ஆனந்தக்கரமாய் ஆற்றாமையைத் தீர்க்கும்
சூட்டுமின் -பகவத் ப்ரஸாதம் சிரஸா வஹிக்கத் தக்கது என்றவாறு
தேவதாந்த்ர ஸ்பர்சமும்-தத் சம்பந்தி ஸ்பர்சமும் இவருக்கு சத்தயா பாதகமாய் இருந்த படியும்–
பகவத் ஸ்பர்சமும்-பாகவத ஸ்பர்சமும் சத்தயா தாரகமாய் இருந்த படியும் சொல்லுகிறது
————-
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –21–எருதுகளை அடக்கித் திருமணம் செய்யக் கூறுதல் –வீற்று இருந்து ஏழு உலகம் -4-5-
சூட்டு நன் மாலைகள் தூயன–குறை ஒன்றும் இல்லாத திருத்துழாய் மாலை -ப்ரயோஜனாந்தர லேசமும் இல்லாமல் –சாத்துகையே பிரயோஜனம்
மிக்க சீர் தொண்டர் இட்ட–
தொண்டர் -லௌகிக ப்ரயோஜனாந்தரர்
சீர் தொண்டர் -மோக்ஷம் உபாசகர்
மிக்க சீர் தொண்டர் ஸ்வயம் பிரயோஜனம் )
சூட்டு — மாலைகள்-அடியார் அன்புடன் சமர்ப்பித்தவற்றை அவற்றின் எளிமை பாராதே முடி மேல் கொண்டு கொண்டாடுபவன் அன்றோ
சூட்டு நன் மாலைகள்—நல் சூட்டு என்றும் நல் மாலைகள் என்றும் -திரு முடி சூட்டும் திருத்தோள் மாலைகளையும் சொன்னவாறு
ஏந்தி -அவன் திரு உள்ளம் உகந்து ஏற்றுக் கொள்ளும் அளவும் அவகாசம் பார்த்து காத்து நிற்கும் நிலை
கொண்டு வைத்தேன் -இதுவே நம் கர்தவ்யம்-ஏற்றுக் கொள்வது அவன் இச்சை இஷ்ட விநியோக அர்ஹத்வமே ஸ்வரூபம்
நன்னீர் ஆட்டி–அழுக்கு போவதற்கு அல்லாமல் -ஸமஸ்த லோக சேஷிக்குச் செய்யும் பட்டாபிஷேகம்-
பிரயோஜனந்ததுக்கு அன்றி–லோகம் வாழப் பண்ணும் திரு மஞ்சனம்
ஓர் மாயையினால்– அத்வதீயமான ஆச்சர்யம்–தயிரான நிலையைக் கடந்து நெய்யாகும் நிலையில் புகாத வெண்ணெய் போல்
ஸம்ஸார சாகர நிலையை அறிவு என்னும் மத்தால் கடைந்து
பரமபதத்தில் புகப் பெறாமல் நடுவில் நிற்கும் முமுஷுக்கள் உடைய இனிய பக்தியை அனுபவிக்க
பெரிய அபி நிவேசத்துடன் வருவதற்கு ஸங்கல்பித்துக் கொண்டு வந்தமையைச் சொன்னவாறு
வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன் கூட்டிடை ஆடின கூத்து–வெண்ணெய்க்கு போந்த இடத்தே ஸ்திரீ ரத்னத்தை லபித்த படி —விறகுக்கு போந்த இடத்தே விற்பிடி மாணிக்கம் பெற்ற படி –
அடல் ஆயர் தம் கொம்பினுக்கே–பரதந்த்ரமாய் வேறே சரண் இல்லாத ஆத்மாவை அனுபவிப்பதற்காகவே
நம் கொம்பினுக்கே –அக் குலத்தை எல்லாம் உண்டாக்க பிறந்த படி-(ஆயர் பன்மை -கொம்பு ஒருமை -இதுக்கு இந்த பிரமாணம்
இமிலேற்று வன் கூன் கூட்டிடை ஆடின கூத்து–ரஜோ குண வசத்தால் செறுக்குடைய கர்ப்பாதி ஏழு அவஸ்தைகளிலும்
நல்வினை தீ வினை ஆகிய இரண்டையும் எளிதிலே அழித்து அருளினாயே
எம்பெருமான் உடைய பரத்வத்திலும் கிருஷ்ண அவதாரத்து ஸுலப்யத்திலும் ஈடுபட்டவாறு –
ஆழ்வாருக்கு பரத்வத் தோடு-அவதாரத்தோடு வாசி அற நிலமாய் இருந்த படி
திருவாராதனம் விளக்க வந்த பாசுரம்–அமர்ந்து திருவாராதனம் ஏற்றுக் கொள்கிறான்
1-அந்தூபம் தாரா நிற்கவே -அங்கு -ஆஸ்தே -மந்த்ராஸனம்
2-நன்னீராட்டி -ஸ்நாநாசனம்
3-நன்மாலைகள் தூயன ஏந்தி அலங்காராசனம்
4-வெண்ணெய் தொடு உண்ணப் போந்து போஜ்யாசனம்
5-புனர் மந்த்ராஸனம் -இப் பாசுர அனுசந்தானம்
6-ஸய்யாசனம் -நப் பின்னைப் பிராட்டியை அணைக்க –அடல் ஆயர் தம் கொம்பினுக்கே–ஆகவே இப் பாசுரம் நித்ய அனுசந்தானமாகக் கொள்கிறோம்
————
கொம்பார் தழை கை சிறு நாண் எறிவிலம் வேட்டை கொண்டாடு
அம்பார் களிறு வினவுவது ஐயர் ,புள் ளூரும் கள்வர்
தம் பார் அகத்து என்றும் ஆடாதன தம்மிற் கூடாதன
வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ் வான் புனத்தே –22-தோழி தலைவனைக் கேலி செய்தல் –நல் குரவும் செல்வமும் -6-3-
கொம்பார் தழை கை–குறிஞ்சி நிலத்தலைவி -தழையும் கண்ணியும் கையுறையாகக் கொண்டு கொடுத்து காண வேண்டுமே
மரக்கொம்பில் இருந்து பறிக்கப்பட்ட தழை வாட்டம் கண்டு இருக்குமே -தலைவனைப் பிரிந்த தலைவி போல்
இத்தழை இவன் திருக்கை ஸ்பர்சத்தால் தளர்ச்சி பெற்றது போல் தலைவி பெற வில்லையே என்ற இரக்கம் தோற்றும்
சிறு நாண் எறிவிலம்–தழும்பு கூட காணவில்லையே
சிறு நாண் எறிவு -என்று தொழில் ஆகு பெயராகக் கொண்டு வில்லைக் கண்டிலோம் என்றுமாம்
நீ போந்தது ஏன் என்ன -வேட்டைக்கு என்றான்
வில் எங்கே என்ன தழையைக் காட்ட -அது இல்லாவிடினும் அம்பாயினும் உண்டோ என்ன
ஆணையிலே அட்டுக் குளித்தது-(பிரவேசித்தது- போன்ற பல புனைந்துரைகளை நாணம் இல்லாமல்
வேட்கை மிகுதியால் கூறினவன் பணிவை –ஐயர் -என்று உயர் சொல்லால் நகை யாடினபடி
கள்வர்-உயிர்களை அவை அறியாமல் உரிமை கொள்பவர்
தம் பார் அகத்து என்றும் ஆடாதன தம்மிற் கூடாதன -இந்த லீலா விபூதியில் இவ்வாறு இல்லை -அங்கு உண்டோ என்ற தொனி
வம்பார் வினாச் சொல்லவோ–வீண் கேள்விகள் -கேட்டு அறியாத வார்த்தைகள்
எம்மை வைத்தது இவ் வான் புனத்தே-நாங்கள் பெரியோருக்குப் பரதந்த்ரைகள் ஸ்வ தந்த்ரர் அல்ல என்றவாறு
வான் புனத்தே–பரந்த இக் கொல்லையை பாதுகாத்ததற்கு ஒழிய கேட்பார்க்கு விடை சொல்ல அவகாசம் இல்லையே-திவ்ய தேசங்கள் கைங்கர்யத்தில் போது போக்கலாய் உள்ளதே-என்றவாறு-
அபிமத விஷயம் இருந்த இடத்தே -தண்ணீர் -என்று கொண்டு புகுவாரை போலே
கையிலே தழையை முறித்து பிடித்து இவர்கள் இருந்த இடத்தே சென்று ,-இங்கனே ஓர் யானை போந்ததோ என்று-கேட்க
அவர்கள் நாங்கள் புனம் காக்க இருக்கிறோமா-உமக்கு மறு மாற்றம் சொல்ல இருக்கிறோமா என் சொன்னீர் ஆனீர் என்கிறார்கள்–
தழை கொண்டு போகிறது என் என்னில்-ஆஸ்ரயத்தை இழந்த தளிர் வாடுமா போலே காண்
உன்னை பிரிந்து-நான் பட்டது என்று-தன் தசையை அவர்களுக்கு அறிவித்து கொண்டு சொல்லுகிறபடி –
————–
புனமோ புனத் தயலே வழி போகும் அரு வினையேன்
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனமோர் அனைய கண்ணான் கண்ணன் வானாடு அமரும் தெய்வத்
தினம் ஓர் அனையீர் களாய், இவையோ நும் இயல்வுகளே –23-தலைவன் குறை யுற உரைத்தல் – கடல் ஞாலம் செய்தேனும் -5-6-
புனமோ புனத் தயலே வழி போகும்–அவர்கள் அழகைத் தான் காணவும் தனது அழகை இவர்கள் காணவும் தட்டுத் தடுமாறி திரிகிறான்
நீங்கள் புனத்தை விட்டு நீங்காதது போல் எனது மனத்தையும் விட்டு நீங்குகிறீர்கள் இல்லை-பல சரீரம் எடுத்து உம்மை அனுபவிக்க நான் வர
எனது மனத்தையும் காவலாக வைத்தீர்களே- புனம் போல் எனது மனமும் உங்கள் ரக்ஷணத்துக்கே உட்பட்டுக் கிடக்கிறது-பெரிய பிராட்டியார் முழு நோக்கு பெற்றால் பர ப்ரஹ்மம் ஆகிறான் -பட்டர்-
சொல்லீர்–தயை இல்லாதாரைப் போலே மனத்தையும் அபஹரித்ததுக்கு மேலே வார்த்தையும் சொல்ல மாட்டாதே உள்ளீர்கள்
இவையே உங்கள் ஸ்வ பாவங்கள் என்கிறார் –-என் நெஞ்சை வளைக்கையும்-ஜீவனம் இடாது ஒழிகையும்-நெஞ்சை அபகரித்து முகம் கொடாதே இருக்கிற படி-
வழி போகும் –வழி போகுவார்க்கு காட்டிலும் முள்ளிலும் புகலாமோ ?இவர்கள் ஒழிந்த இடம் காடும் முள்ளுமாய் இருக்கிற படி-காடு முள் -உபாயாந்தரங்கள் கர்ம யோகாதிகள்
ஓர் அனைய-ஓர் அனையீர் களாய்,–கண்ணின் சிறப்பு முழுவதுக்கும் தாமரையும் இவர்கள் சிறப்பு முழுவதுக்கும் நித்ய ஸூரி வர்க்கமும்
எல்லாப் படியாலும் உவமை யாவதற்குப் போதாமை விளங்கும்–விண்ணுளாரிலும் சீரியர் அன்றோ-ஓர் என்றது
ஒரு வகைக்கு ஒப்பு என்ற படி –
அதீர்க்கம் அப்ரேமதுகம் க்ஷண உஜ்ஜ்வலம்
ந சோரம் அந்தக்கரணஸ்ய பச்யதாம்
அநுப்ஜமப்ஜம் நு கதம் நிதர்சனம்
வநாத்ரி நாதஸ்ய விசாலயோர் த்ருசோ -ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் –43-
தெய்வத்தினம் ஓர் அனையீர் களாய்–ஆழ்வார் ஒருவரும் நித்ய ஸூரி வர்க்கங்கள் அனைத்துக்கும் மேல் என்றபடி
பிள்ளை திரு நறையூர் அரையர் இப் பாட்டை அநுஸந்தியா நிற்க-ஸீ ல குணம் காட்டும் எம்பெருமான் எங்கும் உண்டாகா நிற்க
திருப்புளிக் கீழ் -அடைந்தேன் -சிக்கினேன்-மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே-
———–
இயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும் ஒரோ குடங்கைக்
கயல் பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,குன்றம் ஒன்றால்
புயல் வாயின நிரை காத்த புள்ளூர்தி கள்ளூரும் துழாய்
கொயல் வாய் மலர் மேல் மனத்தொடு என்னான்கொல் எம் கோல வளைக்கே –24–பிரிவாற்றாத தலைவிக்காகச் செவிலித் தாய் இரங்குதல் –-கரு மாணிக்க மலை -8-9-
எம் கோல வளைக்கே –உடம்பு மெலிந்து வளையல்கள் கழலுமே என்ற கவலை தொனிக்கும் —
எம் –இதனால் இது திருத் தாயார் வார்த்தை
இயல்வாயின வஞ்சநோய்–பால்யாத் பிரப்ருதி ஸூஸ்நிக்த -மாயன் மணி வண்ணன் மேல் மாலுறுகின்றாளே -ஸஹஜ காதல் –
வஞ்சநோய்–வருத்தம் என்றுமாம் –பார்வை அழகாலே வசப்படுத்தி வருத்துவதுமாம் –
வஞ்ச நோய்– சர்வேஸ்வரனாலே வஞ்சிதமான நோய்-(அழகைக் காட்டி -அறியாமல் விஷயாந்தர ப்ராவண்யம் விலக்கியதே வஞ்சனை )
ஊரும் நாடும் உலகும் தன்னைப் போலே -திருவாய்மொழி-6-7-2-
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணா ஓ –திருவாய்மொழி-8-5-6-
என்று சொல்லுகிற படி ,தன்னைக் கண்டார் தன்னைப் போலே யாம் படி வஞ்சித்து கொண்டு என்றும்
கயல்–பருத்து நீண்ட வடிவத்துக்கு உவமை
கயல் பெருநீர் பாய்வன பெருநீர் கண்கள்-என்று இயைத்து கண்ண நீர் வெள்ளத்தில் புரளுகிற கண்கள் என்றுமாம்
பாய்வன பெருநீர்-ஏகார்ணவம் பிரவஹித்தால் போலே இருக்கை
பக்தி ஸ்வ பாவம் இவளுக்கு -ஸஹஜம் – சர்வேஸ்வரன் தனது வடிவு அழகைக் காட்டி அத்தை விருத்தி அடையச் செய்து
நின்ற இடத்தில் நிற்காமல் உலாவி-பெரிய குளத்தில் இரண்டு மீன்கள் போல் இரண்டு கண்களும் விழிகளும் உலாவி
இந்திரன் கல்மழை பொழிய கல் எடுத்து கல் மாரி காத்த கருட வாஹனான ஸ்ரீ யபதி சாத்தி அருளும் திருத்துழாய் ஆசைப்படா நின்றாள்
இது என்னவாய் முடியுமோ என்கிறாள்
————-
எம்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செம்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர்
தம் கோன் உடைய தம் கோன் உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நால் நிலத்தே –25-தலைவன் மாலைக்குத் தலைவி ஆசைப்படுதல் –-மாயக் கூத்தா வாமனா -8-5-
நம் கோன் உகக்கும் துழாய்—அவன் காரியத்தை முன்னின்று தலைக்கட்டிக் கொடுத்து
பிரியத்தை வளர்த்து ஸ்வா தீனப்படுத்தும் திருத்துழாய்
திறல் சேர் அமரர்-தம் கோன் உடைய தம் கோன்-விஷ்வக் சேனருக்கும் சேஷீ
உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்–தேவாதி தேவன்
————
நானிலம் வாய் கொண்டு நன்னீர் அற மென்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் இளம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே —-26-நகர் காட்டல் –மாலை நண்ணி -9-10-
நானிலம் வாய் கொண்டு நன்னீர் அற–நீரும் நிழலும் இல்லாத இடம் பாலை -ஸூர்ய கிரணங்கள் அனைத்து ஈரப்பசையும் கவர்ந்தன என்றவாறு
மென்று கோது கொண்ட வேனிலம் செல்வன் சுவைத்து உமிழ –நானிலங்களிலும் இது அ சாரம் என்றவாறு
சுவைத்து –பசை அறப் பருகின படி
பாலை கடந்த பொன்னே–இப்படிப்பட்ட நிலத்திலும் தலை மகனைப் பிரியாது அவனுடன் வருவதையே ஓர் இன்பமாகக் கருதி
எரிகிற நெருப்பிலே ஓட வைத்த பொன் போலே ஒளி விடும் தன்மையைச் சொன்னபடி —பாலை -சம்சாரம்
விண்ணோர் தொழும் கண்ணன் வெக்கா–திருவிருத்தத்தில் கோயில் திருமலை பெருமாள் கோயில் மூன்றுமே மங்களா ஸாஸனம்-ஸ்ரீ தேசிகன் திருவவதாரம் ஸூசிதம்-இத்தால் என்பர்-
அம் பூம்தேன் இளம் சோலை அப்பாலது –திரு வெக்கா அருகில் உள்ள திருத்தண் கா -விளக்கு ஒளி பெருமாள் சந்நிதி
எப் பாலைக்கும் சேமத்ததே–பாலை லஷணையால் துன்பத்தைக் காட்டும்
எல்லா பாலை நிலங்களால் வந்த வெப்பத்தைப் போக்கி-நமக்கு ரக்ஷகமான தேசம் காண் கிடீர்
இந்நிலம் உண்டாக -இப்பாலை நிலம் மட்டுமே அன்றி இன்னும் பல பாலை நிலங்களையும் கடக்கலாம் அன்றோ
எப் பாலைக்கும் சேமத்ததே-அர்ச்சாவதார திவ்ய தேசம் நித்ய ஸூரிகளும் விரும்பி மீண்டு வந்து நித்ய வாஸம் செய்யும் படி
அதி சமீபமாய் -ஸூலபமாய் -ஸமஸ்த துக்க நிவர்த்தகமாய் -மிகவும் போக்யமுமாய்–ஷேம கரமான புகலிடம் என்றவாறு –
உகந்து அருளின நிலங்களே தெள்ளியார் அனுபவம் கொடுக்கும்-
இத்தால் சம்சாரம் த்யாஜம் என்னும் இடத்தையும்-பகவத் விஷயம் பிராப்யம் என்னும் இடத்தையும் அறிந்த ,இவர்க்கு
பிராப்தி தசை தாழ்ந்த படியாலே ,வந்த ஆற்றாமையை கண்ட-ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
சம்சாரம் சென்று அற்றதாகில்-உகந்து அருளின தேசங்கள் இங்கே ஆகில்-
பிராப்த்திக்கு உள்ளே அன்றோ நீர் நிற்கிறது -என்று ஆற்ற வேண்டும் படி இருக்கிறது-
சரணா கதி விளக்க வந்த பாசுரம்
சம்சார வெக்கை தாங்காமல் சோலைகள் சூழ்ந்த திரு வெக்கா சேர்ந்து சரண் அடைய அருளுகிறார்-
————-
சேமம் செம் கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று
ஏமம் பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்
யாமங்கள் தோறும் எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய ,அவ் வாடை ஈதோ வந்து தண் என்றதே –27-தலைவி மாலை பெற்று மகிழ்தல் –எல்லியும் காலையும்–8-6-
வையம் -பொருள்கள் வைக்கப்படும் இடம்
பாலை நிலத்தில் நடந்து இழைத்த துக்கம் தீரப்பெற்று திவ்யதேசங்களைக் காட்டக் கண்டு ஸூகித்த ஆழ்வார்
அவனால் சாத்தி அருளப்பெற்ற திருத்துழாய் இப்போது குளிர்ந்து ஆனந்தகரமாய் இருக்கக் கண்டு
எம்பெருமான் பிரசாதத்தைப் பெற்ற அளவிலே தாப ஹேதுவான லௌகிக பதார்த்தங்களும் அநுகூலித்த படி
சேமம் செம்கோன் அருளே —இவ் ஆத்மாவுக்கு வகுத்த சேஷியான ஸர்வேஸ்வரனுடைய கிருபையே இதுக்கு ரஷை
அவனே இதுக்கு ரஷையாமோபாதி– இவன் தானும் தனக்கு அநர்த்த அவஹானாய் இருக்கும்-
நம் கண்ணன் தண் அம் துழாய் இத்யாதி — துயில் அமர்ந்த வேந்தின் பாடே நின்றும் பிரசாதம் வந்தது போலே காணும்-
(வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே )-அழகியதாய் ஸ்ரமஹரமான திரு துழாய் மாலையை ஸ்பர்சிக்க —
சர்வாங்க சம்பந்தமாக கலக்க வேண்டா–ஸ்பர்சிக்கவே அமையும்-
———–
தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் வள் வாய் அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா அருளாய்
எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்னவே –28-தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு வருந்துதல் – கங்குலும் பகலும் -7-2-
ஓர் வாடை-அத்விதீயம் -அசஹாயமான தீரத்துடன் வருத்துதல்
அருளாய்–கருணை செய்வாய் என்றும் அருளுகிறாய் அல்ல என்றுமாம்
எண்ணம் துழாவும் இடத்து–மனத்தினால் ஆராய்ந்து நோக்கும் இடத்து என்றுமாம்
உளவோ பண்டும் இன்னன்னவே–ஸ்ரீ சீதாபிராட்டி கஜேந்திரன் திரௌபதி பிரகலாதன் காகாசூரன்
போன்றோர் இடம் இப்படி இரங்காது இருந்தமையைக் கண்டிலோமே
இன்னன்னவே-இன்ன அன்னவே என்பதின் தொகுத்தல் பதம்
கீழ் உண்டான மானச அனுசந்தானம் விஷய வைலஷண்யத்தாலே-அவ் வருகே ருசியை பிறப்பித்து
ருசியின் உடைய அதிசயத்தாலே-பாஹ்ய சம்ஸ்லேஷ அபேஷை பிறந்து ,
நினைத்த படி பரிமாற பொறாமையாலே விஸ்லேஷமாக தலைக் கட்டிற்று.
திரு வெக்காவின் நின்றும் பிரசாதம் வந்தது என்ற அநந்தரத்திலே
உள்ளே புக்கு அணைக்கப் பெறாமையால் வந்த ஆற்றாமை-
திரு அரங்கா – நீ இங்கு வந்து கிடக்கிறது
1-உன்னுடைய கர்ம பல அனுபவம் பண்ணவோ —
2-போக பூமி தேடியோ —
3-ஒரு குறைவாளர் இல்லையாமையோ —
4-ருசி உடையார் இல்லாமையோ —நீ அருளாது ஒழிகிறது என்
அருளாய்– மதி நலம் அருளினன் என்றால் அதன் பயனான துயர் அறு சுடர் அடி தொழுது எழப் பண்ண வேண்டாவோ-
———–
இன்னன்ன தூதெம்மை ஆள் அற்ற பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய் வரும் நீலம் உண்ட
மின்னன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மை கொலோ? குடிச் சீர்மையில் அன்னங்களே –29-தலைமகள் அன்னப் பறைவையை வெறுத்து உரைத்தல் –பொன்னுலகு ஆளீரோ -6-8-
இன்னன்ன தூது -புருஷோத்தமன் இடம் அனுப்பும் தூதுக்கு வேறே ஒன்றுமே ஒப்பு இல்லையே
நவ வியாகரண பண்டிதன் போல்வாரை விடுவதற்கு ஏற்ற தூது
இன்னன்ன தூது-இப்படி பட்ட தூது ,-தரித்து இருந்து விடுகிறது அன்று —
போகத்துக்கு விடுகிறது அன்று ..-சத்தா தாரகமாக விடுகின்ற தூது –
எம்மை -விரைந்து செல்ல பரிகரங்கள்==சிறகுகள் – கொண்ட எம்மை
ஆழ்வாருக்கு தூது செல்லத் தக்க ஞானமும் அனுஷ்டானமும் உண்டே
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய் வரும்–ஸூவ காரியங்களே செய்யப் பயன்படுத்தும் பக்ஷங்கள்
உல்லாசமாக மிதுனமாய் போய் வரும் பொழுதும் என் காரியமும் செய்யலாகாதோ
பெடையொடும்–காதலி யுடன் இருப்பதால் எனது காதலை மறந்தனவே
இரந்தாள் இவள்–தனது பெண்மையும் பாராதே பறவை என்றும் பார்க்காமல் அன்றோ இரக்கிறாள்
இரந்தாள்-அவன் தான் செய்யக் கடவத்தை இவள் செய்த படி ..
அத்தலை இட்டு விடக் கடவது இது இறே இவள் தான் விடுகிறது-
இவள்-அப்ரேமேயம் ஹி தத் தேஜ -ஆரண்ய காண்டம் -37-18-என்னும் இவள் கிடீர்
ஆள் அற்ற பட்டு-வேறே ஒருவரை சுட்டிக்காட்டி விலகச் சந்தர்ப்பம் இல்லை –ஆழ்வாரது அநந்ய கதியைச் சொன்னவாறு
நீலம் உண்ட மின்னன்ன மேனி–கருமை நிறமும் திவ்ய ஒளியும் –என்றும்
மின் உண்ட நீலம் அன்ன மேனி -மின்னல் கொடியை நடுவிலே கொண்ட திருமேனி என்றும்
பெண் தூது செல்லா அன்னன்ன நீர்மை கொலோ?–அனுமன் தூது கண்ணன் தூது ஆடவர்களுக்கே
என்பதால் பெண் பிறந்தாருக்குத் தூது செல்லக் கடவோம் அல்லோம் என்ற எண்ணமோ
குடிச் சீர்மையில் அன்னங்களே–பண்புடைமை தூது உறைப்பான பண்பு -அது இல்லாததால் தனது கருத்தின் படி செய்யாததால் குலத்தையே பழிக்கிறாள்
இப்படி உதவாமல் இருப்பதால் உயர் குடிப்பிறப்பின் பயன் இல்லையே
————
அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே –30-பிரிந்த தலைவி அன்னங்களையும் குருகுகளையும் தூது விடுதல் –-அஞ்சிறைய மட நாராய் -1-4-
தொழுது இரந்தேன்-காயிகமும் வாசகமும் —இவை இரண்டும் மானசத்துக்கு உப லக்ஷணம்-அஞ்சலிக்கு அவ் அருகு இல்லை-என்று இருக்க இரப்பவும் செய்தேன்
கண்ணன் வைகுந்தனோடு–ஸுலப்யமும் பரத்வமும்
நெஞ்சினாரை–அவ்விடத்து சேர்ந்ததால் கௌரவ வார்த்தை
கண்ணன் வைகுந்தனோடு என் நெஞ்சினாரைக் கண்டால்–அவனைக் கண்டாலும் அவனுடன் உண்டான சேர்க்கையால்
செருக்கி இருக்கும் நெஞ்சினாரைக் காண்பது அதி துர்லபம் அன்றோ
என்னைச் சொல்லி–நெஞ்சுக்கு உடையவள் நான் என்பதையும் -எனது உடைமை அது என்பதையும் –
எனக்கு அது இன்றியமையாதது என்பதையும் -நான் தனிமைப்பட்டு தவிக்கிறேன் என்பதையும் சொல்லி
அவர் இடை –புருஷோத்தமனைப் பற்றியதால் உண்டான மேன்மை
இதுவோ தகவு என்று இசைமின்களே–உடைமை உடையதும் உரியதாம் தன்மையோ இது–தத்துவம் –ஸ்வரூபம் புருஷகாரத்வம்
தகவு –ஸ்வ பாவம் கிருபை
செல்வீர்கள் -மறவேல்மினோ -இசைமின்களே–பன்மை பிரயோகம் -இன்னது முன் செல்லும் என்று அறியாமல்
பலவற்றையும் தூது விடுகிறாள் –கண்ணால் கண்டவர் எல்லாரையும் தூது போக விடுகிறாள்–ஓன்று மட்டும் சென்று வரும் அளவும் ஆறி இருக்க வல்லவள் அல்லவே–அவர்கள் நடையிலும் பேச்சிலும் ஈடுபட்டு –செல்வீர்கள் – -இசைமின்களே-என்கிறாள்
அவனை நினைத்து இருப்பதை விட கூடப் பெறாத ஆற்றாமையால் மறந்தே இருப்பதே அமையும் என்று நெஞ்சை மீட்கப் பார்க்கிறாள்
செல்வீர்–திவ்ய தேச யாத்திரை செல்லுவீர்காள்
———–
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல்
அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அம் பொன் மா மணிகள்
திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து வன் தாட்சி மயம்
மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே – –31-தூது செல்லாத மேகங்களைக் குறித்துத் தலைவி இரங்குதல் –-எம் கானல் அகம் கழிவாய் -9-7-
திருமலை யாத்ரைக்குச் செல்லும் ஸ்ரீ வைஷ்ணவர்களை புருஷகாரமாக வரிக்க
அவர்கள் இவருக்கு ஆச்சார்யராக இசையாமல் இருக்க
தமது தலையில் மேல் திருவடிகளையாவது வைத்து அருள பிரார்திக்கிறார்
திரு மலைக்கு போகிற பராக்கிலே பேசாதே-போகிற்றவற்றை கண்டு-சொல்ல மாட்டிகோள் ஆகில்
உங்கள் திரு அடிகளை என் தலையில் வையுங்கோள் என்றால் வைப்புதிகளோ ?
திரு மலைக்கு போவோர் திரு அடிகள் தலையில் வைக்கக் கிடைக்குமோ ?
பகவத் விஷயத்தில் யாரேனுமாக ஓர் அடி முற்பாடாய் இருப்பவர் திரு அடிகள் பரம உத்தேசம் என்கிறார்-
அம் பொன் மா மணிகள்-இவர்களது சிறந்த குணங்களை சொன்னவாறு
வன் தாட்சி-அவன் அடியார்களை ரக்ஷிக்கும் சக்தியை வன்மை என்கிறது
மேகங்கள் -கைம்மாறு கருதாது அருளும் தன்மை
நீலம் உண்ட மின் அன்ன மேனி பெருமான் உலகு—திரு விருத்தம்-29–என்று பரம பதத்தே தூது-
கண்ணன் வைகுந்தன் திரு விருத்தம்-30—அவதாரங்களிலே தூது
அதுவும் சம காலத்தில் உள்ளார்க்காய் பின்னை இல்லை ஆகையாலே- பிற்பாடர்க்கும் அனுபவிக்கலாம் படி
ஸூலபமான திரு மலையிலே திரு வேம்கடம் உடையான் திரு அடிகளிலே மேகத்தை தூது விடுகிறாள்-இது அர்ச்சையில் தூது-
———–
மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருத்தும் தவமா மருள் பெற்றதே –32-துறை யடைவு-தலைவி போலி கண்டு பேசுதல் –வைகல் பூம் கழிவாய் -6-1-
மேகங்களோ உரையீர்–ஓ மேகங்கள் கூறுகின்றீர் இலீர் –மேகங்களும் பல நீரும் பல -மிகுதியைக் காட்டம்
ஓ -என்று வெகு தூரத்தில் இருந்தாலும் கேட்க்கும்படி கூவுகிறாள்-இவை போகிறது இந்த த்வனி கேளாமை என்னுமத்தாலே
அவற்றுக்கு கேட்கும் அளவும் கூப்பிடுகிறாள்
நித்ய ஸம்ஸ்லேஷத்தால் ஸாரூப்யம் பெற்ற நீங்கள்-சாலோக்யம் சாமீப்யம் ஸாரூப்யம் ஸாம்யாபத்தி சாயுஜ்யம் -ஐந்தும் உண்டே-
பகவத் விஸ்லேஷத்தில் போலி கண்டு அல்லது தரிக்க ஒண்ணாமையைச் சொன்னவாறு-
————-
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண் பால்
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
தெருளோம் அரவணையீர் ! இவள் மாமை சிதைக்கின்றதே –33 -தலைவி ஆற்றாமை கண்ட தோழி தலைவனை வெறுத்தல்-ஏறாளும் இறையோனும் -4-8-
அருளார் திருச் சக்கரத்தால்–பிரதிகூல நிரஸனம் போல் அனுகூல ரக்ஷணமும் உண்டே-கிருபையால் பரி பூரணமாய் இருக்கிற படி-மடு அருகில் ஊற்று போலே-
கையும் திருவாழியுமான அழகைக் காட்டி பிரியாமையாலே ரக்ஷிக்கும் நித்ய விபூதியில்
விரோதிகளை இரு துண்டாக்கி ரக்ஷிக்கும் ‘இங்கு உள்ளாரை –
ஆழ்வார் அங்கும் இங்கும் இல்லாதவர் என்ற திரு உள்ளத்தால் உபேஷித்தீரா
இருளார் வினை–அஞ்ஞான இருளோடு கூடிய தொழில்
அரவணையீர் ! -இவள் தறைக்கிடை கிடக்க உமக்குப் படுக்கை பொருந்துவதே -படுக்கைக்கு மேல் விரி வேண்டாவோ
அரவணையீர் ! –இத்தால் நித்ய ஸம்ஸ்லேஷம் அங்கு னுண்டு என்கிறது
இவள் மாமை சிதைக்கின்றதே–பேற்றுக்கு அடி கிருபை-இழவுக்கு அடி கர்மம்
இருந்தாலும் அதீத ஞானத்தால் -பிராப்தி அறிந்து அவன் தலையிலே ஏற்றலாமே –
——–
சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி தன் சீர் அடியால்
உதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது தண்டார்
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற் பால் அதுவே -34-கூடல் இழைத்து வருந்தும் தலைவி நிலையை தோழி தலைவனுக்கு உரைத்தல் –-மின்னிடை மடவார்கள் -6-2-
சீர் அடி–அழகிய பாதம் —சீறடி –பாதம் சிறுத்து இருத்தலும் சீற்றம் கொண்ட அடி
உனது தண்டார் ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய் பதைக்கின்ற–போக்யதையின் ஏற்றம் அறிந்து ஆற்றாமை விஞ்சி உள்ள இவளுக்கு
ஆழியை சீறி —-அவன் வரும் அளவும் ஆறி இருக்க ஒண்ணாமை யாலே கூடல் இழைக்க தொடங்கினாள்–
அது தப்பின படியை கண்டு , நாயகன் தன்னைக் கண்டால் கோபிக்குமோ பாதி கூடலோடே கோபிகிறாள்–
ஆழியை சீறி––இது கூடுகைக்கு ஏகாந்தம் இன்றியே-பிரிகைக்கும் ஒரு புடை உண்டாய் இருக்கையாலே ,-
சீறி உதையா நின்றாள் -என்று பட்டர் நிர்வாகம்
ஆழியை சீறி–நம்பிள்ளை நிர்வாகத்தில் இரண்டாவது ஆழி கடல் -என்று கொண்டு கடல் இடத்து கோபித்தாள் என்பர்
அறியேன் செயற் பால் அதுவே–இவளை பதைப்பிக்கின்ற நீயே இதற்குப் பரிகாரமும் அறிவாய்
அறியேன் செயல் பால் அதுவே– க்ரம பிராப்தியும் -இவள் உடைய த்வரையும் -சாதனம் இல்லை- அப்ரயோகம் –
பலம் அவன் தன்னாலே இருந்த படி-
மாலே– இவளை இப்படி பிச்சேற்றி இவள் பிச்சை கண்டு பிச்சேறி இருகிறவன்-
மாலே -ஞான சக்திகளால் பூரணமான உனக்கு இவளை அபேக்ஷித்து இருப்பது தகுதி அன்று
சர்வஸ்வரனைக் குறித்து திருத் தாயார் பாசுரம்
ஓ ஸ்வாமி நீர் எப்போது வருவாய் என்று இவள் கூடல் அழைக்க ப்ரவர்த்திக்க
இந்த சமுத்திரம் நாயகன் வரவை அறிய ஒட்டுகிறது இல்லை-ஆகையால் இவள் செருக்கு கொண்டு அத்தை உதைத்து-பின்னும்
நீ அணிந்த திருத்துழாய்க்கு ஆசைப்பட்டுத் துடிக்கிறாள்-நீர் எப்பொழுது ரக்ஷிப்பாய் என்று தெரியவில்லை என்கிறாள்-
—————-
பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த
மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை உலகு அளந்த
மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்
சோல்வான் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே –35-மாலைக்கு ஆற்றாமையின் மேல் தலைவி வாடைக்கு இரங்குதல் –-வாயும் திரையுகளும் -2-1-
பகல் இழந்த மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை–கண்ணில் படும் பொருள் எல்லாமே வருத்தும் இயல்பாகவே உள்ளதே
பால் வாய்-இந்த அடைமொழி உபமேயமான பிறைக்கும் உபமானமான பிள்ளைக்கும் கூட்டுக
மேல் பால் திசை பெண்-திசா பெண் பால் சொல் என்பதால் பெண் பத பிரயோகம்
பிறைப் பிள்ளை–சந்திரன் ஆண் பால் -ஆகவே பிள்ளை –திங்கள் அம் செல்வன் போல்
புலம்புறு மாலை–பறவைகள் ஒலியும் -சந்த்ர தர்சனத்தால் கடல் ஓசையும்
பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை–விவேகம் குலைந்து ஆற்றாமை மிக்கு இருப்பதைக் காட்டும்-அழுகிற பெண் மேற்குத் திக்கு பிள்ளையை ஓக்கலையில் கொண்டு புலம்புகிறாள்-சந்த்ரனாகிற முக்த சிசுவை ஓக்கலையிலே கொண்டு
சமுத்திர கோஷம் ஆகிய பெரும் குரலுடன் அழுது புலம்ப வைத்தது
பால் வாய் பிறைப் பிள்ளை–ஞானத்தின் சிறிய பகுதி
பகல் இழத்தல் -விவேகம் குலைந்து
மேல் பால் திசை பெண்-மற்றையோர்க்கு மேன்மையான வழியைக் காட்டும் பாரதந்தர்யம்-மேலைத் திக்கு என்றாலே உத்க்ருஷ்டம் தானே
புலம்புறுதல் –ஆற்றாமை மிகுதல்–
உலகு அளந்த மால்-விமுகர் தலையிலும் திருவடிகளைத் தனது பேறாக வைத்த ஸ்வாமி –
அபி முகையான என்னை ஆள் கொள்ளாது ஒழிவதே என்று ஈடுபட்ட படி
மனம் உடையார்க்கு-தம்மையே படர்கையாக -தம் போல்வாரைச் சொன்னபடி
மனம் உடையார்க்கு–தோழி தாயார் வார்த்தை என்றுமாம் -ஆழ்வார் நிலையைக் கண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அஞ்சுதல்
சத்தை மட்டும் இருக்க-வாடை அத்தையும் சஜாதீயமான ப்ராணனைப் பறிக்கத் துழாவ
திருவிக்ரமன் சாத்தி அருளிய திருத் துழாயில் ஆசைப்பட்டு சவுந்தர்யாதிகளை இழந்து
அதுக்கும் மேலே வாடை மர்மத்தில் புக்கு மிகவும் பாதிக்கிறதே என்று திருத் தாயார் துக்கப்பட்டாள் –
————
துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா
எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –36–துறையடைவு-தோழி தலைவனின் கொடுமையைக் கூறல் – ஆடி ஆடி அகம் கரைந்து -2-4-
அம்மனோ–கொடுமைக்கு அஞ்சிக் கூறும் வார்த்தை
கொடுமைகளே –பன்மை பத பிரயோகம் –விஸ்லேஷம் நீண்ட இருள் -தரிக்க திருத்துழாயும் பெறாது இருத்தல்
இவற்றையே வாய் பிதற்றும்படி விஞ்சிய ஆற்றாமை இவை பற்றி
இலங்கைக் குழா நெடு மாடம் இடித்த பிரானார் பிரானார் கொடுமைகளே-முன்பு இராவணாதிகளை அழித்ததும் தனது பிரபுத் தன்மையை நிலை நாட்டவே ஒழிய-பிராட்டியை ரக்ஷிப்பதற்கு அன்றே என்றவாறு
ஒருத்திக்காகக் கடலை அடைத்து ராமன் என்றும் லஷ்மணன் என்றும் எழுத்து வெட்டின அம்புகளைப் போக விட்டு கூட்டிச் சுவரும் மட்டைத் தெங்குமாக்கி மூலையடியே போகப் பண்ணின இந்த உபகாரகனுடைய நீர்மை எல்லாம் எங்கே குடி போய்த்தோ -என்பர் எம்பார்
இதுவும் அழகியது-ஒன்றாய் உண்டாய் இருக்கலாகாது என்று அஸூ யையாலே அழித்தான் அத்தனை காண் –
ஒருத்திக்காக உதவினன் அல்லன் காண் -என்பர் திருமலை நம்பி –
இத்தால் இவளுடன் முன்பு கூடியதும் வேட்கையால் அல்ல -இவளது நிறையை அழிக்கவே என்றதாயிற்று
இலங்கைக் குழா நெடு மாடம் இடித்த பிரானார்–இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாகப் படை பொருதான் -என்றால் போல் இங்கும்
துழா–பிரிந்த தலைவியின் உயிரைக் கை இட்டுத் தேடுகிறது
சூழ் இருள்–தப்ப ஒண்ணாத இருள்
தண் தராது பெயரா எழா நெடு வூழி எழுந்த விக் காலத்து–தாரை விரும்பியதே வியாஜமாக இவளை வருத்தலே இருள் என்ற கல்பம் தோன்றிற்று
இருள் என்று–வூழி எழுந்த விக்காலத்து–சந்நியாசியாகக் கிட்டி இராவணன் ஆனால் போல் இருளாகக் கிட்டிப் பல கல்பங்கள் ஆனதே
இரங்கார் -கணையாழி கொடுத்து ஆசுவாசப்படுத்தினால் போல் திருத்துழாயும் தரவில்லை-பிரணயித்வம் வேண்டாவாகில்
ஸ்வரூபமும் வேண்டாவோ –(ரக்ஷணம் கிருபை தானே ஸ்வரூபம் )
இக் காலத்தும்–மோஹ அந்தகாரம் உண்டு பண்ணும் காலம் நீட்டித்து தோன்றுகிறதே
இக் காலத்தும்–ஸீதாதா வேண் யுத் க்ரதநம் க்ருஹீத்வா -என்று பிராட்டி தன் திருக் குழலை சிம்சுபா வ்ருக்ஷத்திலே பிணைக்கப் புக்க
தசையாய் இறே இருக்கிறது
சம்சாரிகள் போலவும் சம்சாரிகள் தசை போல் அல்லவே இவளும் இவள் தசையும் ஐந்து வாசிகள் சாதிக்கிறார்
1-அவர்கள் அங்கு கரண களேபர விதுரராய் இறே இருப்பது –இங்கு இவள் சத்தையைப் பற்றி நலிகிற படி –
2-அங்கு பிரகிருதி அளவிலே –இங்கு ஆத்மா அளவிலே –
3-அங்கு நீர் பிரளயம் –இங்கு ராத்திரி பிரளயம்
4-மூர்த்தமான ஜலம் மூர்த்தமான உடம்பை அழிக்கிறது அங்கு – இங்கு அமூர்த்தமான ராத்திரி அமூர்த்தமான ஆத்மாவை அழியா நின்றது
5-அங்கு அவற்றினுடைய ஆபத்து தான் அறிந்ததுவே –இங்கு ஆபத்தையும் அறிந்து-ரக்ஷக அபேக்ஷையும் உண்டாய் இரா நின்றது
———-
கொடும் காற் சிலையர் நிரை கோள் உழவர் கொலையில் வெய்ய
கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அரு வினையேன்
நெடும் காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால் ஓசியும் இடை இள மான் சென்ற சூழ் கடமே –37-நற்றாய் தன் மகள் சென்ற பாலை நிலக் கொடுமையை கூறி இரங்கல் –மண்ணை யிருந்து துழாவி -4-4-
கொடும் காற் சிலையர்–கொலையில் வெம்மை பொருளுக்காகவும் பகமைக்காகவும் வேறே பயனுக்காகவும் இல்லாமல்
துடிப்பு காணும் பொருட்டே கொல்லுதல்
வெய்ய கடுங்கால –பதின் காதம் இருப்பதின் காதம் அவ்வருகே ஒரு ஹிம்சை ஸித்திக்குமாகில்
அவ்வளவும் போய் மீளும்படியான கால் கடுமை யுடையராய் இருப்பவர்கள்
துடி படுங்கவ் வைத்து -ஆராவாரம் பறை ஒலியையும் இனிமையாகக் கொள்ளும் –துடி பாலை நிலத்துப் பறை
நீண் மலர் பாதம்–உலகு அளந்த திருவிக்ரமானது திருவடிகள் -அன்பர்கள் மனத்தில் உடனே சென்றவன் –மலர் மிசை ஏகினான் என்றால் போல்
நீண் மலர் பாதம் –ஆஸ்ரிதர் இருந்த இடத்தளவும் செல்ல தானே வளரும் படி ஸூலபமான திரு அடிகள்–அது தானும் தன் பேறாய் இருந்த படி
சூழ் கடமே–வெம்மையால் துயரை விளைவித்த வழி
இள மான் -பக்தி ரூபா பன்ன ஞானமுடைய ஆழ்வார்
தொடுங்கால் ஓசியும் இடை—பக்தி கார்யமான வைராக்ய முதிர்ச்சி –இடையறாத அன்பின் மேன்மையைச் சொன்னதாகவும்
நிரை கோள் உழவர்–புலன் களுக்கு தீனி போடும் விஷயாந்தர ப்ராவண்யம் விடாதவர்
இளைஞர்–வலிய பஞ்ச இந்திரியங்கள்
ஆழ்வாருக்குப் பிறந்த ஞான பக்தி வைராக்யங்களைக் கண்டு சம்சாரத்தில் இருப்பு துஸ்ஸஹம்
இவள் காடேறப் போனாள் என்று நினைத்த திருத்தாயார் வார்த்தை
இவளுக்காக நான் நெடும் காலம் தவம் செய்து பெற்றேன்-இவளோ ஒசிந்த இடை கொண்டவள்
தனியே ஓர் இடம் போக சக்தி கொண்டவள் அல்லவே-போன இடமோ பெரிய பாலை
வேடர்களும் பயங்கரமாக சஞ்சரிக்க-அவர்கள் பறை ஒலியைக் கேட்டு இவள் என்ன படுகிறாளோ
இது நான் செய்த பாபமே இவற்றுக்கு காரணம்-என்கிறாள்-
————–
கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்
குடமாடி யிம் மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய பெருமான் உரு ஒத்தன நீலங்களே -38-தலைவனைப் பிரிந்த தலைவி போலி கண்டு மகிழ்தல் –-சொன்னால் விரோதம் இது -3-9-
கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள் தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்–தவத்துக்கு ஏற்ற இடத்தை நாடி
அனுபவிக்கக் கடமைப்பட்டனவான தீ வினைகள் எல்லாம் கழிக்கத் தொடங்கி என்றுமாம்
இவற்றுக்கு கால் வன்மை -நீண்ட நாட்களாக நிலை நிற்கும் தன்மை -இடைவிடாது முயற்சியின் ஆற்றலைச் சொன்னவாறு
கடமாயினகள் கழித்து—-தீர்த்த யாத்திரைகள் -எம்பெருமான் பக்கல் செய்ய வேண்டிய ஆராதனைகள் போல்வன செய்தும் என்றுமாம்
பல நாள் –பலம் பெறும் நாள் அளவும்
இம் மண்ணும் விண்ணும் குலுங்க–இத்தை மத்ய தீபமாகக் கொண்டு குடமாடி என்பதுடனும் –வுலகளந்த நடமாடிய-என்பதுடனும் கூட்டலாம்
குடக் கூத்தை விண்ணுலகோரும் கண்டு வியந்தனர் என்றபடி –
வுலகளந்த நடமாடிய பெருமான் –அநா யாஸ மாக லீலா வியாபாரம் என்றபடி –கோட்டங்கை வாமனனாயச் செய்த கூத்துக்கள் போல்
உலகு அளந்து நடமாடிய – இந்திரன் தான் இழந்த பூமியைக் கொண்டு போக –
மகா பலி தன்னது அல்லாததை தன்னது என்று பிரமித்து –
அத்தை கொடுத்தோம் -என்று ஒவ்தார்யத்தை நினைத்து போக –
இவர் திரு உலகு அளந்து அருளின போதை அழகை தம் பேறாக அனுபவித்தார் –
உவந்த உள்ளத்தனாய்-பெருமாளுக்கு தீண்டப்பெற்றோம்-மகா பலிக்கு அவனுக்கே கொடுக்கப்பெற்றோம்
இந்திரனுக்கு இழந்த செல்வம்-ஆழ்வார்களுக்கு சேவை -அழகு அனுபவித்து உகந்து –
பல நாள் தடமாயின புக்கு–தடாகம் போல் குளிர்ந்த எம்பெருமான் ஸ்வரூபாதிகளிலே நீராடுதல்
நீர் நிலை நின்ற–எத்திறம் என்னப் பண்ணும் அவனது ஸுலப்யாதி நீர்மை குணங்களில் ஆழ்ந்து இருத்தல் –
நீர்மையில் ஒற்றுமையால் குடமாடும் கண்ணனையும் உலக அளந்த திரிவிக்ரமனையும் சேர்த்துச் சொல்லிற்று
நீலங்களே—பண்பு ஆகு பெயர் -மலர்களைச் சொன்னபடி –ஸாரூப்யம் பெற்ற முக்தரைச் சொன்னவாறு
குலுங்க -சம்கார காரணன் ந்ருத்யம் ஆகில் இறே லோகம் நடுங்கிற்று என்னாலாவது –
அங்கன் அன்றிக்கே – லோகம் அடைய அச் செயலுக்கு நெஞ்சு உளுக்கின படி –
யோகிகள் யோக அப்யாசம் பண்ணும் போது யோகம் சாத்மிக்கைக்காக-லோக யாத்ரையிலே ஒன்றுவார்கள்—
அது போல் இவரும் பகவத் அனுபவம்-சாத்மிக்கைக்காக லோகங்களில் பதார்த்தங்களின் மேல் கண் வைததார் –
அவையும் பகவத் விஷயத்துக்கு ஸ்மாரகமாய் நலிகிறபடி –-மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே –
இதில் ஆழ்வார் -சர்வேஸ்வரன் ஆஸ்ரிதற்கு ஸாரூப்ய பிரதானம் பண்ணுபவன் ஆகையால்
நமக்கும் ஸாரூப்யத்தை அளிக்கும் என்று அனுசந்தித்து உரைத்த பாசுரத்தை
கரு நெய்தல்களிலே சர்வேஸ்வரனான நாயகன் போலியைக் கண்டு உரைத்த நாயகியின் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்-
———
நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே -39-தலைவனின் உருவம் பற்றித் தலைவி கூறுதல் – ஏழை யாராவி -7-7-
எம்பிரான் கண்ணின் கோலங்களே–ஈற்று ஏகாரம் -பிரிநிலை எவகாரம் -கண் அழகில் ஈடுபட்டாருக்கு மற்ற ஒன்றுமே பொருளாகத் தோன்றாதே
அன்றிக்கே இரக்க மாகக் கொண்டு கண்ணுக்குப் புலப்படும் வடிவு கைகளால் தழுவ எட்டாது நலிகிற படி என்றுமாம்
நீல தட வரை-எம்பெருமானின் கரிய பெரிய திரு மேனிக்கும்
புண்டரீக நெடும் தடங்கள்-அவனது திருக்கண் மலர்களுக்கும்
புண்டரீக -இத்யாதி –அதன் மேல் பூரணமாக தாமரை பூத்த பெரிய தடாங்கள் போலே மிகா நின்றன –
உடம்பு எல்லாம் கண்ணாய் இருக்கிறபடி –
அவ் வவயவம் ஒழிய அவயாந்தரத்தில் போக ஒண்ணாத படி இருக்கிற படி —
ஞாலப் பிரான்–லீலா விபூதி நாயகன்
விசும்புக்கும் பிரான்–நித்ய விபூதி நாயகன் –மற்றும் நல்லோர் பிரான்–இங்கு ஆழங்கால் படாமலும் அங்கு சென்று சேரப் பெறாமலும்
எம்பெருமான் குணங்களில் ஈடுபட்டு இடை நிற்கிற முமுஷுக்களும்
அன்றிக்கே –விசும்பு -தேவ லோகமும் –நல்லோர் -நித்ய முக்தர் -என்றுமாம் –விசும்புக்கும் பிரான் –இவர்களுக்கு ஜனகனான ப்ரஹ்மாதிகளுக்கும் நிர்வாகனானவன்-மற்றும் நல்லோர் பிரான்-நித்ய ஸூரிகளுக்கும் நிர்வாகனானவன்
பொங்கு முந்நீர் ஞாலம் -ஒன்றோடு ஓன்று தடுமாறுகிற ஸாத்விக ராஜஸ தாமஸ குணங்கள் பொருந்திய ஞாலம்
முந்நீர் -ஆற்று நீர் ஊற்று நீர் வேற்று மழை நீர் என்பத்து பொருந்தாது
முந்நீர்-மூன்று செய்கைகள் -மண்ணைப் படைத்து அளித்து அழித்தல்
நீரில் இருந்தே நிலம் பிறந்தது -நீர் இல்லாமல் உலகம் வாழாது -பிரளய நீராலே உலகம் அழியும்
முந்நீர் -பழைய நீர் -ஆதியில் நாராயணன் நீரைப் படைத்தான் அன்றோ
தம் திரு உள்ளம் எம்பெருமான் ஸுந்தர்யத்திலே அகப்பட்டு அநந்யார்ஹமாகி அழிந்த படியைச் சொல்லுகிறது –
அழகிய திருமேனி–அதில் பூத்த திருக் கண்கள்-சகல பிராணிகளையும் உகப்பிக்கும் -அவனான திருக்கண்கள் அழகானது
இந்திரிய நீல மாணிக்க மலை மேல் தடாகங்களில் உள்ள தாமரை மலர் என் பக்கம் சூழ்ந்து எனக்கு காட்டா நின்றது -என்கிறாள் –
———
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய குழாம் விரிந்த
நீல கங்குல் களிறு எல்லாம் நிறைந்தன நேரிழையீர்
ஞால பொன் மாதின் மணாளன் துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே
ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று கொலோ -40-இருள் கண்ட தலைவி தோழியிடம் திருமண விருப்பம் கூறுதல் – மானேய் நோக்கு -5-9-
கோல பகல் களிறு ஓன்று–இயற்கையில் செந்நிறத்தையும் மாலைப்பொழுதில் செவ்வானக் கோலமும் கொண்ட ஸூர்யன்
இயற்கையில் உத்தம லக்ஷணமான செம்புள்ளிகளையும் செயற்கையில் செந்நிற முகப்படாம் அலங்காரம் கொண்ட யானை போல் தோன்றுமே
கோல பகல்–இரவு போல் இல்லாமல் சிறிது ஆறி இருக்கலாமே -ஆகவே கோலப் பகல் -தர்சநீயமான பகல் என்றது –
இந்திரியங்கள் தனி தனியே ஸ்வ விஷயங்களை கிரகிக்கையாலே தரித்து இருக்கலாம் –
பகல் -ஸூரியனுக்கும் கல் மலைக்கும் –கல் எடுத்து கல் மாரி காத்தான்
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய-பக்தி மேலிட்டுச் செவ்வியதான விவேகப் ப்ரகாசம் மறையும்படியாக
களிறு எல்லாம் –இருட்சியாலும் திரட்சியாலும் பன்மை
குழாம் விரிந்த–ஸூ ர்யன் ஒளியால் முன்பு திரள் திரளாகச் சிதறிப் போன
குழாம் விரிந்த நீல கங்குல் களிறு எல்லாம் நிறைந்தன –மோஹ அந்தகாரமே மிகவும் மேல் இட்டது
அடக்கும் அருமையால் களிறு என்கிறது
நிறைந்தன -அணி வகுத்து ஏறுமா போலே மீண்டும் வந்து பேராதே நின்றன —நிரந்தன -பாட பேதம் -கூடுதல்
கல்பங்கள்-ஊழிகள் என்னுமா போலேஇரவைப் பன்மையாக கூறியது நெடுமையால்–பகலை அவ்வாறு இல்லாமல் ஒருமையாலே கூறுகிறார்
ஞால பொன் மாது –ஞாலமாது என்றும் பொன் மாது என்றும்
இன் மணாளன்–இனிய மணாளன்
குழல் சூழற்க்கே–கடை குழன்ற கூந்தல்
மணாளன் துழாய் புனைந்து –மணவாளன் துழாயைச் சூடி-
ராஜ குமரன் புழுகு நெய்யிலே பூவை தோய்த்து சூடுமா போலே-இவன் தான் –சர்வ கந்த சர்வ ரச தத்வம் இறே –
வாசம் செய் பூம் குழலாள் -திருவாய்மொழி -10-10-2-என்று அங்குத்தைக்கும் வாசம் கொடுக்கும் படி இறே இவள் இருப்பது –
அப்படி பட்ட மிதுனமாய் இருக்கும் இருப்பிலே சூடி துகைத்தைதை இறே இவள் ஆசை படுகிறது –
ஞால பொன் மாதின் மணாளன்–அவர்கள் அனுபவம் எமக்கு இல்லையே என்று அழுக்காறு கொண்டபடி
என்று கொலோ-அபேக்ஷை தலை எடுத்தபடி
எம்பெருமானிடம் ஸம் சர்க்கம் உள்ளது ஒன்றால் அல்லது போது போக்க இவருக்குத் தரிப்பது அரிதான படியைச் சொல்லுகிறது
மயர்வற மதி நலம் அருளப்பெற்ற ஆழ்வார் அருளிச் செய்தலாலேயே
கட்டளை கலித்துறை இலக்கணத்துக்கு மாறாக ஏவகார ஈற்று இல்லாமல் ஓங்கார ஈற்று இருந்தாலும்
இதுவும் இலக்கணத்தில் கொள்ளத் தக்கதே என்றபடி –
சர்வாதிகனை கவி பாடின இவளுக்கு ஒரு பகலை கவி பாடும்படி பிறந்த தசையை சொல்லுகிறது-
அருகில் உள்ள பாகவதர்கள் எப்பொழுது சேர்ப்பார்களோ என்று வினவும் பாசுரம்–ஓ சகிகளே
என்னைத் தேற்றுகைக்காக நீங்கள் அலங்கரித்து வந்தீர்கள்-இதனால் நான் தேறவில்லை
ஆஸ்வாசகரமான பகலும் அஸ்தமித்து-எங்கும் இரவாக அநேக வடிவம் கொண்டு நலியத் தொடங்கிற்று
இப்பொழுது எனது பிராணன் தரிக்கும் படி-ஸ்ரீ பூமி வல்லபன் திருத் துழாய் சூட்டி அவன் திருவடிகளில் எப்பொழுது சேர்ப்பார்களோ என்கிறார்
————-
என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ஓங்கு அசுரர்
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்
மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே–41-வாடைக்கு வருந்திய தலைவி வார்த்தை –நீராய் நிலனாய் -6-9-
புன் வாடை–கொடுமை செய்யும் வாடை –மந்த மாருதம் என்றுமாம்
என்றும்–என்பதனால் பல நாளாக தலைவனைப் பிரிந்து வாடைக்கு நோவுகிறாள் என்பது தேறும்
ஓங்கு அசுரர் பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள் –காக்கும் இயல்பினன் அடிமையான அடியேனைக்காத்திடாது ஒழிவதே
ஓங்கு அசுரர்–வர புஜ பலங்களாலே கொழுத்துள்ள அஸுரர் –ஊண் மல்கி -அஹங்காரத்தால் உடல் பெருத்து இருப்பார்களே-அன்றிக்கே- வணங்கா முடியராய் நிமிர்ந்த தலைவராய் உள்ளவர் என்றுமாம்
அருள் அருளாத இந்நாள்-தாய் முலைப் பால் மறுத்த இந்நாள்–
மன்றில் நிறை பழி தூற்றி–இவள் காற்றிலே ஈடுபட வாராது ஒழிவதே -என்று நாயகனையே ஊர் எல்லாம் பழித்த படி-ஆகவே நிறை பழி என்கிறது
பழி -தனது பேற்றுக்குத் தான் த்வரிப்பது-ப்ரவர்த்திப்பது – தானே பழி
வன் காற்று அடுமே–கொல்லும் -மரண அந்தமான் வேதனையைச் செய்யும் என்றபடி
வன் காற்று -கண்ணோட்டம் இல்லாத காற்று -நீர்மை கலவாத காற்று-பெண் கொலை என்றும் பாராமல் நாசப்படுத்துகிறதே
என்றும் புன் வாடை இது கண்டு அறிதும்-எப்பொழுதுமே வருத்தும் தன்மையான இத்தன்மையை முன்பு எங்கும் கண்டிலம்
இவ்வாறு வெம்மை ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் -இந்தத் தன்மையும் குறியும் – வாஸா மகோசரமாய் உள்ளதே
நீராகி கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும் ஏரார் விசும்பில் இருப்பு அரிதாம் படி கதறுகிறார் இதில்
இத்தால்-நெடு நாள் பொருந்திப் போந்த சம்சாரம் தானே பகவத் ப்ராவண்யம் உறைக்க உறைக்க
இதில் பொருந்தாத படியான நிலை பிறந்த படி சொல்லுகிறது –
——–
வன் காற்றறைய வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த
மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும்
என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த
தன் பால் பணிந்த என் பால் எம்பிரான் தடக் கண்களே -42-தலைவி தலைவன் கண் அழகில் ஈடுபட்டு உரைத்தல் – பொரு மா நீள் படை -1-10-
தன் பால் பணிந்த–தன்னிடத்தில் ஈடுபட்ட
மண்ணும் விண்ணும் என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த–தனது பேறாக உடைமைகளை ஸ்பர்சித்த படி
நான் அளக்க புகா நின்றேன் – உங்கள் தலையிலே என் காலை வைக்க புகா நின்றேன் -என்னில்
ந நமேயம்-என்று ஒட்டோம்-என்று ஆணை இடுவார்கள் இறே –
அதுக்காக இது ஓர் ஆஸ்ர்யம் பாருங்கோள் -என்பாரைப் போலே ஆயிற்று அளந்தது –
இத் தலையில் அபிமுக்யம் இன்றிக்கே இருக்க –
தானே அவதரித்து வந்து மேல் விழுந்து எல்லார் தலையிலும் திரு அடிகளை வைக்கும் அவன் இறே
இவர்கள் பேற்றுக்கு தான் கிருஷி பண்ணுமவன் ஆயிற்று –
திருக்கண்களுக்கு –காற்றறைதலாவது தடை இல்லாத நடையையுடைய கருணையாலே தூண்டப்படுதல்
ஓருங்கே மறிந்து கிடந்தலர்ந்தலாவது -எங்கும் பக்கம் நோக்கு அறியாதே ஆழ்வார் பக்கலிலே அபிமுகமாய் நோக்கி மலர்தல்
மென் காலாவது -இந்த அருள் நோக்குக்கு மூலமான திரு உள்ள நெகிழ்ச்சி
கமலத் தடம் –நிறத்தாலும் குளிர்ச்சியாலும் பரப்பாலும் இனியவையாய் இருத்தல்–இத்தால்-பேறு தன்னது என்று தோற்றும் படி ஆயிற்று திரு கண்களில் விகாசம்-
மண்ணும் விண்ணும்–விண்ணும் மண்ணும் மோனைக்கு மிகவும் பொருந்தும்
இத்தால்-சம்சாரிகளில் ஒருவன் ஓரடி வாரா நின்றால்-மித்ர பாவனையே போறும் என்று இருப்பவன் அன்றோ –
அவன் பக்கல் வைத்த கடாஷத்தை மாறிப்- பெரிய பிராட்டியார் பக்கலிலே வைக்க என்றாலும்
அது தான் அரிது ஆம் படி இருக்கை–
திருவடிகளில் சரணம் புகுந்த எனது விஷயத்தில்-திரு உள்ளத்தால் கிருபை உந்த
கடாக்ஷம் – ஸூஹ்ருதம் –-ஸுஹார்த்தம்-இவற்றுள் எது முன்னால் என்று சொல்ல முடியாதே
அவ் வழியாலே வந்து என் மேல் வில் விழுந்து என்னைக் கடாக்ஷித்து-விஷயீ கரித்த குளிர்ந்த அழகிய திருக்கண்கள்
மெல்லிய கொடியில் பூத்த தாமரை தடாகம் போல் திருக்கண்கள் தோன்றுகின்றன என்கிறார் –
————–
கண்ணும் செம் தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியதோர் மால் வரை போன்று மதி விகற்பால்
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் யவர்க்கும்
எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே -43-தலைவனின் வடிவழகு பற்றித் தலைவி கூறல் –-உயர்வற உயர் நலம் -1-1-
கண்ணும் செம் தாமரை கையும் அவை அடியோ அவையே–கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே
ஓ -என்கிற அசை தாமரை ஸர்வதா ஒப்புமை அல்ல என்பதைக் காட்டும்
மதி விகற்பால் கடந்து என்றும் மது விகற்பால் எண்ணும் இடத்ததுவோ-என்றும் இயையும் –மதி விகற்பால்-புத்தி பேதங்களால் –
தமக்கு மட்டும் அல்ல நித்ய ஸூர்யர்களுக்கும் அளவிட ஒண்ணாமையைச் சொன்னவாறு-
அவனாலே மயர்வற மதி நலம் அருளப் பெற்ற-துயர் அறு சுடர் அடி -விளக்கும் பாசுரம் இது
கீழே கண் அழகை அனுபவித்து-அதுவே அவயாந்தரங்களில் சென்று மூட்ட
காட்டவே கண்ட பாதம் போல்-கண்ணையும் சேர்த்து அனுபவிக்கிறார் இதில் –
முற்பட –தடம் கண்கள்-குமுழி நீருண்டார் – இப்போது ஆயிற்று வாத்சல்யமும் செவ்வியும் அனுபவிக்கிறது –
கண் இட்டு கொடுக்க அணைத்த கை –அடியோ அவையே – அணைத்த போதே ஸூக ஸ்பர்சத்தால் துவண்டு விழுந்த எல்லை
வண்ணம் இத்யாதி – எல்லையில் கிடந்தவர்கள் உடைய ஜீவனம் –
பிரஜை முலையிலே வாய் வைத்து தாய் முகத்தை பார்க்குமா போலே -என்று பிள்ளைப் பிள்ளை ஆழ்வான்
பகவத் நிர்ஹேதுக கிருபையால்-இந்த அபரிச்சின்ன மானவற்றையும் அனுபவிக்கப் பெற்றேன் என்கிறார்
——————-
நிறமுயர் கோலமும் பேருமுருவமும் இவை இவை என்று
அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கு அங்கு எல்லாம்
உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி யொன்றும்
பெற முயன்றார் இல்லையால் எம்பிரான் பெருமையே -44-துறையடைவு -தலைவி தலைவன் பெருமை கூறுதல் –-பத்துடை அடியவர் -1-3-
(கீழே திரு நிறம்-இதில் அவன் வைபவம் பெருமை-நிறம் உயர் கோலம் -ஒப்பனையும் இவனைப் பற்றியே நிறம் பெரும் –
ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள் அன்றோ
அற முயல–மிகவும் முயன்றாலும் -முழுவதுமாக அனுபவிக்க முடியாதே-ஞானத்துக்கு மட்டும் விஷயம்-அனுபவம் அவன் கொடுத்தால் தானே உண்டு
எம்பிரான்–தமக்கு விளங்காகி செய்த உபகாரத்வம்
நிறம் -கருமை வெண்மை இத்யாதி-பேரும் –இவ் அழகுக்கு வாசகமான திரு நாமமும் –மகர நெடும் குழைக் காதர் போல –கோலம் -கௌஸ்து பாதிகள்
உரு -ரூப பேதங்கள்
உற–கிட்ட என்று உரைத்து நின்ற எண்பதுடனும் கூட்டுப்பொருள்
நிறமுயர் கோலம்–திருமேனியில் சேர்ந்ததால் நிறம் பெற்ற திவ்ய ஆபரணங்கள்
திருத் தோள்களில் சாத்தினால் தானே ஆபரணங்களுக்கு அழகு-ஆயதா ஆஜான பாஹூ —பாஹவ-ராமஸ்ய தஷிணோ பாஹூ-சர்வ பூஷண பூஷார்ஹா –கிமர்தம் ந விபூஷிதா – கலன் அணியாது -அங்கங்கள் அழகு மாறி -குலசேகரப் பெருமாள் ஆபரணங்களுக்கு அழகூட்டும் பெருமாள் அன்றோ
தன் அருளாலே எனக்கு விஷயமாக்கின உபகாரனுடைய பெருமையை-ஒருத்தரும் கிட்டும்படி முயன்றார் இல்லை-
————
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும்
மறுங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே -45-தலைவி தலைவன் நீரில் உதவியதை நினைந்து உரைத்தல் –ஊனில் வாழ் உயிரே -2-3-
இவ்வகாலம் –குளிர நோக்கி பிரளய உத்தாரணம் -அன்பின் மிகுதியால் இப்போது நடந்தது போல் தோற்றுகிறது
கேழ்பவர்–கேழ பவர் -என்றவாறு -நிறம் பெருமை நன்மை யுடையவர்
தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பு-பழமை செழிப்புடைய அழகிய தப்ப ஒண்ணாத சூழ்ந்த பிறவி
அம் -பொல்லாத எதிர்மறை லக்ஷணை
மட நெஞ்சமே–காலத்தினால் செய்த நன்றியை மறந்த அறிவின்மை பற்றி
ஒருவர் நம் போல்-வரும் கேழ்பவருளரே–ஸாத்விக அஹங்காரம் –எனக்கு எவ்வுலகம் நிகர் என்றும்
எனக்கு இனி யார் நிகர் நீண் நிலத்தே என்றும் –எனக்கு யாரும் நிகரில்லையே –என்றும் பெருமை பாராட்டின படி
இவரைப் போல் தாழ நின்று இப்பேறு பெற்றார் இல்லையே
ஒருங்கே-நம் மேல் வைத்த கடாக்ஷத்தை மாறிப் பிராட்டி தனது பக்கலிலே வைக்க என்றால் அதுவும் அரிதாம் படி யாய்த்து
பிறப்பும் மறுங்கே வரப் பெறுமே— அவன் அருளால் பிறப்பு அற்று முக்திப் பேறு ஸித்திப்பதால்
மறுங்கே வரப் பெறுமே–நமக்கு மட்டும் அன்றி நம்முடையார் எமர் கீழ் மேல் எழு பிறப்பும் மா சதிர் இது பெற்று வாழ்வோம் அன்றோ
இனி நமக்கும்–நம்மைச் சேர்ந்தவருக்கும்–துஸ்சரமாய்–அதி குரூரமான ஜென்ம சூழல் இல்லை
ஸ்வத சித்தமான பரமபதமும் அணித்தானதே-ஆழ்வார் சுற்றத்தார்களில் ஒருவராக ஒதுங்க வேண்டியதே நம் கர்த்தவ்யம்-
————-
மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம் கருதி
விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் அப் பொன் பெயரோன்
தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் விடப் போய்
திட நெஞ்சமாய் எம்மை நீத்து இன்று தாறும் திரிகின்றதே -46-நெஞ்சைத் தூது விட்ட தலைவி இரங்குதல் –அருள் பெறுவார் அடியார் -10-6-
ஓர் கருமம் கருதி—விடவோ–அந்தரங்கரைக் கொண்டு செய்து கொள்ள வேண்டிய கார்யம் என்று நினைத்து விடவோ அமையும்
ஓ -தெரிநிலை என்றும் இரக்கம் என்றும்
விட நெஞ்சை-விடம் நெஞ்சு -கொடிய மனத்தை -உற்றார் -உடையவர் –விடவோ –தூது விடுதல் –அமையுமோ -தகுமோ –
அப் பொன் பெயரோன்–அகரச் சுட்டு –பிரசித்தியைப் பற்றியது–பொன் பெயரோன் -கோப அக்னி பட்டு உருகிற்றே
தட நெஞ்சம்–தேவர்கள் வரத்தை உஊட்டியாக இட்டுத் திரு உகிருக்கு இரை பொதும்படி வளர்ந்த மார்பு
ஓர் கருமம் கருதி விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் –தூது விடாத துணிந்தவர்கள் அதனினும் அத்தைக் கை விடவே அமையும்
போய் திட நெஞ்சமாய்–போகும் பொழுது எனது பிரியவாற்றாமனையை நினைந்து நெகிழ்ந்து கொண்டு இருக்க
அங்கே போன பின்பு அவன் போலவே வன்மை கொண்டுவிட்டதே
திரிகின்றதே–நம்மை அல்லது தஞ்சம் இல்லாதவரைத் தனியே விட்டு விட்டோம் என்ற அனுதாபத்தால்
ஓர் இடத்தில் விழுந்து கிடந்தது என்பது இல்லாமல் தான் நினைத்தபடி திரிந்து கொண்டு இருந்ததே –
இவர் வார்த்தை கேட்டுத் திருந்தின நெஞ்சு-பகவத் விஷயத்திலே அவஹாகிக்க
இம்மாநஸ அனுபவத்துக்கு அநு ரூபமான பாஹ்ய அனுபவத்தில் அபி நிவேசம் பிறந்து
அது கிடையாமையாலே யுண்டான தளர்த்தியாலே சொன்ன பாசுரத்தை
நாயகனான ஈஸ்வரனுடைய விஷயத்திலே நெஞ்சைத் தூதுவிட்ட நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ நரஸிம்ஹமான இடத்தே தூது விடுவான் என் என்னில் –-இரண்டு அவதாரமும் ஆஸ்ரிதர் அர்த்தம் என்கையாலே விடுகிறார் –
————
திரிகின்றது வடமாருதம் திங்கள் வெந்தீ முகத்து
சொரிகின்றது அதுவுமது ,கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம் தண்ணம் துழாய்க்கு வண்ணம் பயலை
விரிகின்றது முழு மெய்யும் என்னாம் கொல் என் மெல்லியற்கே –47–பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு செவிலி இரங்குதல் – நாங்கள் வரி வளை -8-2-
திரிகின்றது–இவளை வருத்தும் செயலில் கருத்தை வைத்து சஞ்சரிக்கிறது
1-வாடையானது -மத்தகஜம் ஆளை கணிசித்து உலாவுமா போலே உலாவா நின்றது –
2-நாயகனுடைய தண்ணளி யற்ற சமயம் பார்த்து நலிவதாக திரியா நின்றது –
3-வாடை யாவது குளிரக் கடவது இறே –அந்த சைத்தியத்தை மாறாடி சுடா நின்றது –
இப்படி மூன்று நிர்வாகங்கள்
வடமாருதம்–இத்தால் சரத்காலம் -ஐப்பசி கார்த்திகை-என்றதாயிற்று
சரிகின்றது சங்கம்-செயற்கை அழகு அழிகிறது -வண்ணம் பயலை விரிகின்றது-இயற்கை அழகும் அழிகிறது
கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றது சங்கம்–இவளது பாரதந்தர்யமும் குலைகிறதே
தண்ணம் துழாய்க்கு வண்ணம் பயலை விரிகின்றது முழு மெய்யும்–இனிமையில் ஈடுபட்டு ஸ்வரூபமும் மாறுபடும் படி ஆற்றாமை விஞ்சினா படி
என்னாம் கொல் என் மெல்லியற்கே –எங்களுக்கு உரிய ஆழ்வாருக்கு இந்த ஆற்றாமை யாதாய் முடியுமோ
இவள் அங்கே- பரமபதம் சென்று-நித்ய அனுபவம் பெற்று ஆனந்திக்க ஆசைப்பட்டு இருக்க
இவற்றின் நலிவாலே இவள் காலம் என்னவாய் ஆகுமோ என்று வெறுத்துப் பேசும் பாசுரமாய்ச் செல்லுகிறது –
————–
மெல்லியல் ஆக்கைக் கிரிமி குருவில் மிளிர் தந்தாங்கே
செல்லியசெல் கைத்துலகை என் காணும் என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமாலவன் கவியாது கற்றேன்
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டு பண்டே-48 –தான் ஆறி இருத்தலை தலைவி தோழிக்கு கூறுதல் –என்றைக்கும் என்னை -7-9–
பல்லியின் சொல்லை நிமித்தமாகக் கொள்ளுதல் மிகப் பழமையான மரபு
கொட்டாய் பல்லிக் குட்டி குடமாடீ யுலகு அளந்த மாட்டார் பூங்குழல் மாதவனை வரக் கொட்டாய் பல்லிக் குட்டி
மெல்லியல் ஆக்கைக் கிரிமி–புழு தொட்டாலே வருந்தும்படியான என்பில் உடம்பு கொண்டது
குரு-புண்ணாதலைக் காட்டும் -வேர்க் குரு சொல்வது போல்
என்னாலும் தன்னைச் சொல்லிய சூழல் திருமாலவன்–நாணம் இழந்து தன் வசம் இன்றி பரவசப்பட்டு அவன் விஷயமாக வாய் பிதற்றும்படி மோஹத்தை உண்டாக்கியவன் –
கவியாது கற்றேன்-கற்பித்து கூறும் சொற்கள்
பல்லியின் சொல்லும்-உம்மைத் தொகை பகுத்துணர்வு இல்லாத ஐந்து வாகிலும் –
என்னாலும் தன்னைச் சொல்லிய–வாய் முதல் அப்பன் எனது நாவில் புகுந்து தன்னைத் தானே பாடிய படி
திருமாலவன் கவி–சொல்லும் பொருளும் தானே யானது போல் கவி பாடுபவனும் பாட்டுடைத் தலைவனும் தானே
1-யாது கற்றேன் -என்னுதல் –2-ஆறு கற்றேன் என்னுதல் –3-அவன் கவி யாது கற்றேன் என்னுதல் –
4-யாதொன்று நான் கற்றது -அது திருமாலவன் கவி -என்னுதல் –என்னே அவனது சர்வ சாமர்த்தியம் என்று ஹ்ருஷ்டராய் அருளிச் செய்கிறார்
———-
பண்டும் பல பல வீங்கிருள் காண்டும் இப்பாயிருள் போல்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம் காள வண்ண
வண்டுந்துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய மண்ணேர் அன்ன ஒண்ணுதலே -49 –தலைவி இருளுக்கு ஆற்றாது தோழியிடம் பேசல் –ஊரெல்லாம் துஞ்சி -5-4-
கண்டும் அறிவதும் கேட்பதும்–கண்டு அறிவதும் கேட்டு அறிவதும்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம்–யாம் கண்டும் இல்லோம் -யாம் அறிவதும் இல்லோம் -யாம் கேட்டும இல்லோம்
காள வண்ண வண்டுந்துழாய் பெருமான்–இருள் அன்ன மா மேனியையும் குளிர்ந்த அழகிய திருத்துழாயையும் காட்டி வருத்தினவன்
மதுசூதனன் தாமோதரன்–அடியார் விரோதி நிரசன சீலனாயும் ஆஸ்ரித பரதந்த்ரனாயும் இருப்பவன்
கடாய–நடத்திய -இங்கு காத்த பெருமான் -அளந்த பெருமான் என்றுமாம்
மண்ணேர் அன்ன ஒண்ணுதலே -நுதலுக்கும் அவளுக்கும் மண்ணேர் அன்ன அடை மொழி
அவன் விரும்பி ரக்ஷிக்கும் -பார் -போலவே இவளும் உண்டும் உமிழ்ந்தும் –மால் செய்த மால் -இத்யாதி போல்
இவளையும் பித்து ஏற்றியவன் -இவளால் பித்து ஏற்றப்பட்டவன் –அவனுக்கு ஸ்ப்ருஹ ணீயையானவள்
மண்ணேர் அன்ன ஒண்ணுதலே –மண் நேர் -திருமண் காப்புக்கு ஏற்ற திரு நெற்றி உடையவள் என்றுமாம்
உண்டும் உமிழ்ந்தும் கடாய மண்ணேர் அன்ன-இவ்விருளிலே நாம் ஜீவித்துக் கிடக்கிற படி
உண்டும் உமிழ்ந்தும் அளந்தும் கடாவி ரக்ஷித்து அருளியவன் வாராமல் இருக்க
தோழி உன்னுடைய சந்நிதான பலத்தால் ஜீவித்து இருந்தேன்
அழகிய நுதலை உடைய தோழீ உன்னைக் காணாமல் இருந்தால்-ஜீவித்ததே இருக்க மாட்டேனே -என்கிறாள்-
———–
ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ கடா கின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே – 50-தலைவன் மீண்டு வருகையைத் தேர் பாகனிடம் கூறல் –கிளரொளி இளைமை -2-10-
ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை–இந்த அழகை இவள் இழந்தால் தன்னால் ஆறி இருக்க ஒண்ணாது -பசப்பு நேர்ந்திட்டால் தன்னாலும் மீட்க ஒண்ணாது
விரைந்து நன் தேர் நண்ணுதல் வேண்டும் –ஆற்றாமை கை விஞ்சும் -நமக்குப் பழி நேர்ந்திடும் -என்று சொல்லி தேர் பாகனை விரைந்து தேர் ஓட்டச் சொல்கிறான்
தேன் நவின்ற விண் முதல் நாயகன் நீண் முடி –ஸர்வ கந்த ஸர்வ வஸ்து -முடி -மயிர் முடி– கிரீடத்துக்கும் ஆகு பெயர்
தேன் நவின்ற நாயகன் -மலைக்கே -என்று இயைத்து தென்னா தெனா என்று வந்து முரல் திருவேங்கடம்-
குளிர் அருவிக்கு த்ருஷ்டாந்தம்- தேன் நவின்ற -விண் முதல் நாயகன் – ஸ்ரீ வைகுண்டநாதனின் நீண்ட கிரீடத்தில் சாத்தின முத்து வாசிகை –
திருமலை வ்ருத்தாந்தத்துக்கு ஸ்ரீ வைகுண்ட படியை திருஷ்டாந்தமாக சொல்லாம் படியாய் ஆயிற்று –
இவருக்கு கண்ணால் காண்கிற இடத்திலும் அவ்விடம் விசதமாய் இருக்கிறபடி –
விண் முதல் நாயகன்–பரமபதம் முதலிய உலகங்களுக்கு எல்லாம் நாயகன்
வாசிகை–மாலை என்றும் -மஞ்சளும் செங்கழுநீரின் வாசிகையும் நாறு சாந்தமும்
——————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே, சடகோப ராமானுஜ ஆச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply