ஸ்ரீஅதர்வண வேதம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி-ஸ்ரீ அதர்வண வேத சாரமாகும் –

(ஸ்ரீ அதர்வண வேதம் –5977-மந்த்ரங்கள் கொண்டது
உச்சிஷ்டே நாம ரூபம் ஸோஷிட்டே லோக அஹித –சர்வ சேஷி -அனைத்துக்கும் ஆதாரம்
ஸ்ருஷ்டித்தவைகளுக்கு நாமம் ரூபம் அருளி உள் புகுந்து தரிக்கிறான்
கஸ்மை தேவயா ஹவிஷா விதேம–601-மந்த்ரம் -என்று கேட்டு
அவனே உபய விபூதி நாதன் -தேஜோ மயன் –
ஆனந்த மயன் -பரம புருஷார்த்தமும் அவனே

ஸர்வான் காமான் பூரேத்யாபவன் பிரபவான் பவான் ஆஹுதி ப்ரோ விதார்ததஸ்திதி பாணோ பபதஸ்யதி -566-
அபீஷ்டங்கள் அனைத்தும் அருளுபவன் -சர்வருக்கும் சமாஸ்ரயணீயன் -சர்வாத்மா -பரஞ்சோதி -சர்வசக்தன் -சனாதனன் –

தோஷோ காய ப்ருஹத் காய த்யுமத்தேஹி அதர்வண ஸ்துதி தேவம் ஸவிதாரம் 1291-
இரவும் பகலும் அவன் கீர்த்தி உயர்ந்த குரலில் பாடி அவனது பரஞ்சோதி ரூபத்தையும் சர்வ காரணத்தையுமே சிந்தித்து இருப்போம்

ஸோ அக்னி சே உ ஸூர்ய ச உ ஏவ மஹாயமே –ரஸ்மி பிர் நாப ஆப்ருதம் மஹேந்திர யேத்யாவ்ருத சர்வ அந்தர்யாமித்வம் -3695-
அவனே அக்னி -ஸூர்யன் -சர்வ நியாமகன் -சர்வ ஸ்வாமி -அனைத்து உள்ளும் புகுந்து நிர்வகிக்கிறான் –

தம் இதம் நிகதம் ஸஹ ச ஏஷ ஏக ஏகாவ்ருத்யேக ஏவ ய ஏதம் தேவம் ஏகாவ்ருதம் வேத – (3710)
பரமாத்மா -புருஷோத்தமன் -சர்வ சக்தன் -ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்-
தானே தன்னை ஆழ்வாராதிகளுக்குக் காட்டிக் கொடுக்கிறான் –அவர்கள் திரு உள்ளத்தில் ஆதித்ய மண்டல வர்த்தி போல்
பரஞ்சோதி ரூபத்துடன் அவர்களுக்கு காட்சி கொடுத்து அருளுகிறான் – 5035
அவனே பரமாத்மா பரஞ்சோதி என்று காட்டி அருளி மயர்வற மதி நலம் அருளுகிறான் –5185

பூரித இந்த்ர வீர்யம் -5048-நீயே உபய விபூதி நாதன் -அடியோமை பரம புருஷார்த்தம் அருளி உன் தாள் இணைக் கீழ் இருத்தி அருள்வாய்

ய ஏக இத்தவ் யஸ் சர்ஷ நீநா மீந்த்ரம் — 5208–சகல அபீஷ்ட வரதன் -ஸத்ய ஸங்கல்பன் -சர்வ சக்தன் -சர்வஞ்ஞன்-
இது கொண்டு தேவாதி தேவன் பேர் அருளாளன் ஸத்ய ஸங்கல்பன் -ஸநாதனன் –
ஸத்யம் ஞானம் – அநந்தம் -ப்ரஹ்மம் -ஜகதாரகன் -ஜகத் காரண பூதன் –
ஸமஸ்த த்ரிவித காரணன் -இத்யாதிகளை சொல்லும் மந்த்ரம் –
அவனை ஆஸ்ரயிப்போம் )

————-

அதர்வண வேதம் பிரம்மவேதம் எனப்படும்.
இது 731 பாடல்களைக் கொண்டு 20 பகுதிகளாக உள்ளது.
இது உச்சாடனம் மாந்த்ரீகம் போன்றவற்றால் தீய சக்திகளையும் எதிரிகளையும் வென்று
உலகத்தில் வெற்றி பெறும் வழிகளைக் கூறுவது எனலாம்.
சில்ப வேதம் அதர்வண வேதத்தின் உபவேதமாகும். இது கட்டடக் கலையை விவரிக்கின்றது.

அதர்வண வேதத்தின்   கடைசி காண்டங்கள் – அதாவது பத்தொன்பதாவது, இருபதாவது காண்டங்கள் — ரிக் வேத செய்யுட்களை மீண்டும் கூறுகின்றன.

பத்தொன்பதாவது காண்டம், பாடல் 53, 54 ( சூக்தங்கள் 569 , 570 ; தலைப்பு-காலன் )

தமிழில் காலன் என்றால் யமன்; காலம் என்றால் நேரம்.

இரண்டும் நம்மை விழுங்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாள் நமக்குக் கழிந்தால், யமனுடைய வீட்டுக்குப் போக தயார் ஆகிறோம் என்று பொருள்.

அதர்வண வேதத்தில்  ஸூரியனுடன் சவாரி செய்யும் முனிவர்கள் பற்றிய குறிப்பு வருகிறது . வியாக்கியனக்காரர்கள் அங்கு வாலகில்யர் என்னும் குள்ள முனிவர்கள் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் புறநானூற்று வரி அப்படியே உள்ளது.

சுடரொடு திரிதரும் முனிவரும்” என்பது சிலப்பதிகார வரி. “சுடரொடு கொட்கும் அவிர்சடை   முனிவரும்” என்பது புறநானூற்று வரி . (பாடல் 43) இதை எழுதியவர் பெயர் நரசிம்மன். அதாவது தாமப்பல் கண்ணன்

ஓம்  வஜ்ர நகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி

தன்னோ நரசிம்ஹ ப்ரசோதயாத் — என்பது நரசிம்ம காயத்ரி  மந்திரம்

இதில் தீக்ஷ்ண தம்ஷ்ட்ர  என்பதன் தமிழ் ஆக்கமே “தாமப்பல் “. கண்ணன் என்பது அவர் பெயர் அல்லது குடும்பப் பெயர் என்றும் கொள்ளலாம் .

முதல் துதி ஸூரியனைப் போற்றுகிறது. இதில் ஸூரிய ஒளியில் காணப்படும் 7 வண்ணங்கள் 7 குதிரைகளாக வருணிக்கப்படுகின்றன. இதை நாம் வானவில் ஏற்படுகையில் காண்கிறோம். சூரிய ஒளியை  PRISM  பிரிஸம் என்னும் முப்பட்டைக் கண்ணாடி வழியே பாய்ச்சினாலும் தெரியும் .

முதல் துதியின் முதல் மந்திரத்தில் அறிஞர்களான கவிகள் அவனில் ஏறுகிறார்கள் எல்லா புவனங்களும் அவனுடைய சக்கரங்கள் “– என்ற வரிகள் வருகின்றன. ஏனைய ஒன்பது மந்திரங்களில் இன்னும் பல அறிவியல் தகவல்கள் உள்ளன..

அல்ட்ரா வயலெட் கிரணங்களைத் தடுத்து நிறுத்தும் ஓசோன் வளி மண்டலம (OZONE LAYER, Ultra Violet Rays)  போன்றவர்களாக இருக்கலாம் . இப்பொழுது அவர்கள் “காலத்தில் பயணம் செய்யும் முனிவர்கள்” என்ற பொருளும் தொனிப்பதை TIME TRAVELLERS உணர்கிறேன் .

கால யந்திரம் – டைம் மிஷின் TIME MACHINE NOVEL BY H G WELLS  — என்ற கதையை சுமார்  நூறு ஆண்டுகளுக்கு முன்னரே எழுதினார். அது முதற்கொண்டு மனிதன், பழைய காலத்துக்குப் பயணம் செய்ய முடியுமா? வருங்காலத்துக்குப் பயணம் செய்து எதிர்காலத்தைப் பார்க்க முடியுமா ?என்றெல்லாம் விவாதித்து வருகிறான். இதில் இந்துக்களுக்குத் தெளிவான கருத்து உள்ளது.

கடந்த காலத்தில் நடந்தவற்றைப் பார்க்க முடியும் ; குறிப்பாக நம் உடலுக்குள் நம் PREVIOUS BIRTH STORIES முன் பிறவிக் கதைகள் ஒரு பிலிம் சுருள் FILM ROLL போல சுருட்டி வைக்கப்பட்டுள்ள்ளது என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். நம் புராணக் கதைகளும் இதையே புகலும் . சிலப்பதிகாரத்தில் கூட சாமி வந்து ஆடும் பெண்மணி, கண்ணகி, கோவலன் ஆகியோரின் முற்பிறப்பு வரலாறுகளைக் கூறுவதைக் காண்கிறோம்.

சுந்தரரும் அப்பரும் “காலத்தில் பயணம்” TIME TRAVEL  செய்து இறந்த பையனையும் பெண்ணையும் மீட்டு  வந்ததையும் எழுதியுள்ளேன். அவர்கள் இப்போது என்ன வயதுடன் இருப்பார்களோ அப்படி வளர்ந்த நிலையில் திரும்பி வந்தார்கள் என்று சேக்கிழார் பாடுகிறார்; 1000 ஆண்டுகளுக்கு முன்னர் பாடியது. ஆக இந்துக்கள் சொல்லுவது காலம் என்பது வட்டவடிவமானது CYCLICAL. அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை. ஆனால் ஐன்ஸ்டைன் EINSTEIN போன்ற விஞ்ஞானிகள் காலம் என்பது நேர்கோட்டில் பயணம் செய்கிறது என்கிறார்கள். நாம் சொல்லுவதே சரி என்பதை அவர்கள் விரைவில் ஒப்புக் கொள்ளுவர். மேலும் தேவர்கள் ஒளி வடிவில் (DEVA= LIGHT) இருப்பதால் ஒளியின் வேகத்தில் செல்வதோடு மனோ வேகத்திலும் (Speed of Thought) செல்ல முடியும் என்பது இந்துக்களின் கண்டு பிடிப்பு.

ஒளியின் வேகத்தில் ஒருவர் பயணம் செய்தால் அவர்களுக்கு என்றும் 16 வயது; அதாவது நித்திய மார்க்கண்டேயன் என்று ஐன்ஸ்டைன் சொல்கிறார். ஆனால் அந்த வேகத்தில் பயணம் செய்ய முடியாது என்பதும் அதை மிஞ்சவே முடியாதென்பதும் அவர் தம் துணிபு. ஆனால் நாம்,  அதை மிஞ்ச முடியும் எதிர்காலத்தைச் சென்று பார்ப்பதோடு அதில் தலையிடவும் முடியும் என்கிறோம்.

பகவத் கீதையின்   விஸ்வரூப தரிசனக் காட்சியைப் படித்தவர்களுக்கு இது தெள்ளிதின் விளங்கும். அர்ஜுனன், தனது எதிரிகளைக் கொல்லுவதற்கு முன்னமே, அவர்கள் கொல்லப்பட்டு கிருஷ்ணனின் வாயில் புகுவதைக் கிருஷ்ணன் காட்டுகிறார். ஆக எதிர்காலத்தில் நடக்கப்போவதைக் காணலாம்.

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள்,  அரியலூரில் காவிரி வெள்ளத்தில் முழு ரயிலும் அடித்துச் செல்லப்போவதை அறிந்து,  எம் எஸ் சுப்புலட்சுமி அந்த ரயிலில் போகவேண்டாம் என்று தடுத்ததை   உலகமே அறியும் . மைக்கேல் ஜாக்சன் தற்கொலை, பிரேமதாச  குண்டு வெடியிப்பில் உடல் சிதறி அழிதல் — இவற்றை முன்னரே அறிந்த சத்ய சாய்பாபா — அவர்களை பார்க்க மறுத்ததையும் பத்திரிக்கைகளில் நாம் படிக்கிறோம்.

இந்திரா காந்தியின் துர் மரணத்தை அறிந்த காஞ்சி பரமாசார்ய சுவாமிகள், அவரைப்      பார்க்க மறுத்தார். ஆனால் சுவாமிகளின்  பரம சீடரான இந்திய ராஷ்ட்ரபதி ஆர். வெங்கடராமன் வேண்டியதன் பொருட்டு சந்தித்தார். அப்போதும் அவர் போக்கு சரியில்லை என்றே சுவாமிகள் எச்சரித்தார் ; காஞ்சி மடத்துக்கு கொடுமை இழைத்த ஜெயலலிதாவின்  பயங்கர, பரிதாபச் சாவினை முன்னரே அறிந்த சங்கராச்சார்யார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்  , ஜெயலலிதாவுக்கு எதிரான ஆபிசார யக்ஞத்தை (தீயில் மிளகாய் போட்டு மந்திரம் சொல்லி எதிரியை ஒழிக்கும் வேள்வி) தடுத்து நிறுத்தினார்.

அவர்களுக்கு எதிர்காலத்தில் நடக்கப்போவது தெரியும். ஆனால் பெரும்பாலும் அதைத் தடுத்து நிறுத்த மாட்டார்கள் . ஏசுவுக்கு தான் அகால மரணம் அடையப்போவது தெரிந்து 13-ஆவது ஆள் காட்டிக் கொடுப்பான் என்கிறார். ஆயினும் “ஏ தேவனே, ஏ தேவனே என்னை ஏன் கைவிட்டீர் (ஏலி, ஏலி லாமா சபக்தானி ) என்று சாதாரண மனிதன் போல சிலுவையில் கதறினார்.

நாரத மகரிஷி பற்றிய குறிப்புகள் தமிழில் முதல் தடவையாக சிலப்பதிகாரத்திலும், சம்ஸ்க்ருதத்தில் அதர்வண வேதத்திலும் வருகிறது. த்ரி லோக சஞ்சாரியான அவர் மனோ வேகத்தில் பல உலகங்களுக்குச் சென்று வந்ததை இந்துக்கள் எல்லோரும் அறிவர் .

எல்லா வேதங்களும் கி.மு.3102 ஐ ஒட்டி வியாசரால் நான்காகப் பகுக்கப்பட்டவையே; அதாவது இற்றைக்கு 5100 ஆண்டுகளுக்கும் முன்னரே 4 வேதங்களும் இருந்தன.
சங்க காலம் முதல் தமிழர்கள் சொல்லுவது நான்மறை; அதாவது 4 வேதங்கள். ஆனால் மனு முதலானோர் சில இடங்களில் த்ரயீ வேத = மூன்று வேதம் என்பதால் வெள்ளையர்களுக்கு சிறு குழப்பம்; அவர்களுக்கு தமிழும் தெரியாது. ஆகையால் அதர்வண வேதத்தை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பர்; உண்மையில் அதர்வண வேதம் என்பது அன்றாடம் பயன்படும் மருத்துவம், தாயத்து, பேய் ஓட்டல், விஷங்களை இற க்கல், தாய் மொழி, தாய் நாடு, “பூமி என்னும் அன்னை”, எதிரிகளை ஒழிப்பது எப்படி என்பது பற்றிப் பேசுவதால் அதைச் சமயச் சடங்குகள் பற்றிப் பேசும் மூன்று வேதங்களுடன் சேர்க்காமல் பேசினர்.
வேத விற்பன்னர்களின் ஆயுதம் அதர்வண வேதம் என்று அகத்தியர் சொல்லுவார். கோபத பிராமணமோ எனில் நான்கு வேத புரோகிதர்களும் யாக யக்ஞங்களில் கலந்து கொள்வதைக் குறிப்பிடுகிறது. ஆகையால் வெளிநாட்டினர் சொல்வதை நம்ப வேண்டியதில்லை.
அதர்வண வேதத்தில் 6000 மந்திரங்கள் 760 துதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்படும் சில அபூர்வ தாவரங்கள் அரிதானவை. அவைகளைத்தான் தாயத்துகளாக அணிந்து வந்தனர்.
அதர்வண வேதத்தை 20 காண்டங்களாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு காண்டத்திலும் எது சம்பந்தமான மந்திரங்கள் உள்ளன என்ற இந்தப் பட்டியலைப் பார்த்தாலேயே நம் முன்னோர்களின் சிறந்த நாகரீகமும் உயர்ந்த சிந்தனையும் உடையவர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்கும்.
1-ம் காண்டம்:-
முதல் காண்டத்தின் முதல் மந்திரமே வாசஸ்பதி என்னும் வாக் (பேச்சு) தேவனையும் வசோஸ்பதி என்னும் செல்வ தேவனையும் வணங்கும் மந்திரம் ஆகும்.
கல்விக்கான மந்திரங்கள்
வெற்றிக்கான மந்திரங்கள்
எதிரிகளை அழிப்பதற்கான மந்திரங்கள்
நோயை அகற்றுவதற்கான மந்திரங்கள்
தண்ணீர் தேவதை பற்றிய மந்திரங்கள்
வரங்களைப் பெறும் மந்திரங்கள்
தர்மம் தொடர்பான மந்திரங்கள்
இதில் உள்ளன. ஒவ்வொன்றிலும் 4 மந்திரங்களைக் கொண்ட
35 துதிகள் முதல் காண்டத்தில் காணப்படுகின்றன.
—-
2-ம் காண்டம்:-
இதில் ஒவ்வொன்றிலும் 5 மந்திரங்களைக் கொண்ட 36 துதிகள் காணப்படுகின்றன.
நோயைக் குணப்படுத்தும் மந்திரங்கள்
ஜங்கிடா மணி என்னும் தாயத்து மந்திரங்கள்
அக்னி, இந்திரன், பரப் பிரம்மம் பற்றிய துதிகள்
இந்தக் காண்டத்தில் இருக்கின்றன.
ஜங்கிடா மணி என்னும் தாயத்துக்கான தாவரம், மரம் என்ன என்பது யாருக்கும் தெரியாது!
————
3-ம் காண்டம்:-
ரிக் வேதத்தில் இடம்பெற்ற வசிஷ்ட மஹரிஷியின் முக்கிய மந்திரம், கொஞ்சம் மாறுதல்களுடன் இதில் உள்ளது. இது செல்வத்தை வேண்டும் மந்திரமாகும்.
எதிரிகளத் தோற்கடிப்பதற்காக்ன மந்திரம்
தேச ஒற்றுமைக்கான மந்திரம்
பட்டாபிஷேக மந்திரம்
பர்ண மணி என்னும் அபூர்வ தாயத்து மந்திரம் — இந்தக் காண்டத்தில் இருக்கின்றன.
பர்ண மணி என்னும் தாயத்துக்கான தாவரம், மரம் என்ன என்பது யாருக்கும் தெரியாது!
இதில் ஒவ்வொன்றிலும் 6 மந்திரங்களைக் கொண்ட 31 துதிகள் காணப்படுகின்றன.
——-
4-ம் காண்டம்:-
இதில் ஒவ்வொன்றிலும் 7 மந்திரங்களைக் கொண்ட 40 துதிகள் காணப்படுகின்றன.
ரிக் வேதத்தில் உள்ள யார்? என்னும் மந்திரம் இதில் இடம்பெறுகிறது. யார் என்றால் சம்ஸ்கிருதத்தில் க:– இது பிரம்மாவுக்கும் பெயர்! அதாவது ஓரெழுத்துச் சொல். இதை வைத்து யாரை வணங்குவது என்று மந்திரம் முழுதும் திரும்பத் திரும்ப வரும்.
இதில் அதிசய ஒற்றுமை என்ன வென்றால் தமிழ் “க” பிராமி லிபியிலிருந்து வந்தது. அந்த “க” பிராமியில் சிலுவை வடிவில் இருக்கும். அது எகிப்தில் கடவுளைக் குறிக்கும் சித்திர எழுத்து. ஆனால் வெறும் சிலுவையாக இல்லாமல் இரு புறமும் கைகளை உயரத் தூக்கிய மனிதன் போல மேல் நோக்கிய கோடுகளுடன் இருக்கும்.
விஷத்தை அகற்றும் மந்திரம்
எதிரிகளை நாடு கடத்தும் மந்திரம்
பலத்தை அதிகரிக்கும் மந்திரம்
தூக்கமின்மையை அகற்றும் மந்திரம்
சங்கு கிழிஞ்சல்களைக் கொண்டு தாயத்து செய்யும் மந்திரம்
மரங்கள், மழையை நோக்கி உச்சரிக்கும் மந்திரங்கள்
மூலிகைகள் பசுக்களை நோக்கி உச்சரிக்கும் மந்திரங்கள்
பாவங்களைப் போக்கும் மந்திரங்கள்
புழுக்களை அகற்றும் மந்திரங்கள்
சக்தியை அதிகரிக்கும் மந்திரங்கள்
————-
5-ம் காண்டம்:-
இதில் ஒவ்வொன்றிலும் 12 மந்திரங்களைக் கொண்ட 31 துதிகள் காணப்படுகின்றன.
குஸ்ட, சிலாச்சி, லக்ஷா மணி என்னும் தாயத்து மந்திரங்கள்
இவை என்ன தாவரம் என்பது பற்றி தகவல் கிடைக்கவில்லை.
வெற்றிக்கான மந்திரங்கள்
பிரம்மன் பற்றிய மந்திரங்கள்
எதிரிகளை ஒழிக்கும் மந்திரங்கள்
பிராமணர்கள், பசுக்களைப் போற்றும் மந்திரங்கள்
எதிரிகளை ஒழிக்கும் மந்திரங்கள்
ஆன்மீக பலத்தை உயர்த்தும் மந்திரங்கள்
ஆயுளை அதிகரிக்கும் மந்திரங்கள்
டாமாரங்களை அடித்து எதிரிகளை பயமுறுத்தும் மந்திரங்கள்
ஒரு அபூர்வ பசுவை வைத்திருப்பது பற்றி அதர்வணுக்கும் வருணனுக்கும் இடையே நடக்கும் சுவையான சம்பாஷணை,
பிராமணனின் மனைவி கடத்தல் பற்றிய செய்தி
பிராமணர்களை ஒடுக்கும் கொடுமை
ஆகியனவும் உள்ளன.
போர் முரசுக்குச் சொல்வது போன்ற இரண்டு மந்திரங்கள்.
————
6-ம் காண்டம்:-
இதில் ஒவ்வொன்றிலும் 3 மந்திரங்களைக் கொண்ட 142 துதிகள் காணப்படுகின்றன.
அமைதிக்கான மந்திரங்கள்
வளையல்கள் பற்றிய மந்திரங்கள்
‘ரேவதி’ தாயத்து பற்றிய மந்திரங்கள்
சவிதா, இந்திரன் போற்றும் மந்திரங்கள்
எதிரிகளை ஒழிக்கும் மந்திரங்கள்
பாம்பு விஷத்தை இறக்கும் மந்திரங்கள்
————-
7-ம் காண்டம்:-
இதில் 118 துதிகள் காணப்படுகின்றன.
நீண்ட ஆயுளைத் தரும் மந்திரங்கள்
தாய் நாடு பற்றிய மந்திரங்கள்
தாய் மொழி பற்றிய மந்திரங்கள்
ஜனநாயக சட்டசபை பற்றிய மந்திரங்கள்
ஆத்மா பற்றிய மந்திரங்கள்
சரஸ்வதி மந்திரங்கள்
கணவன்– மனைவி நல்லுறவு பற்றிய மந்திரங்கள்
————-
8-ம் காண்டம்:-
இதில் ஒவ்வொன்றிலும் 26 மந்திரங்களைக் கொண்ட 10 துதிகள் காணப்படுகின்றன.
பேயை ஓட்டும் மந்திரங்கள்
ராக்ஷசர்களை விரட்டும் மந்திரங்கள்
விராஜ்- விராட் என்னும் தேவதை பற்றிய மந்திரங்கள்
இறந்துகொண்டிருக்கும் மனிதனை எழுப்பும் குளிகை பற்றிய மந்திரங்கள்
———–
9-ம் காண்டம்:-
ஒன்பதாம் காண்டத்தில் பத்து துதிகள் இடம்பெறுகின்றன.
இதில் விருந்தினரைப் போற்றும் நீண்ட மந்திரம் உளது.
அஸ்வினி தேவர்களின் இனிமையான உதவி பற்றிய மந்திரமும் உளது.
ரிக் வேதத்தில் முதல் மண்டலத்திலுள்ள தீர்கதமஸ் என்ற முனிவரின் மிகவும் புகழ்பெற்ற மந்திரம் இங்கே இடம்பெறுகிறது இதில்தான் “கடவுள் ஒருவரே; அறிஞர்கள் அவரை வெவ்வேறு பெயரிட்டு அழைக்கின்றனர்” என்ற புகழ் பெற்ற வாசகம் வருகிறது.
இது தவிர கிருஹப் ப்ரவேச மந்திரம்
நோய்களைத் தடுக்கும் மந்திரம்
பசுக்கள், காளைகளைப் பற்றிய மந்திரங்கள்
ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன.
——–
10-ம் காண்டம்:-
இதில் ஒவ்வொன்றிலும் 25 மந்திரங்களைக் கொண்ட 10 துதிகள் காணப்படுகின்றன.
கேன (யாரால், எதனால்) என்ற கேள்வி மந்திரமும்
பிரபஞ்சத்தைத் தாங்கும் ஸ்கம்ப (தூண்) என்ற மந்திரமும்
பரப் பிரம்மம், பசுக்களைப் போற்றும்
விஷத்தை அகற்றும் ராக்ஷசர்களை விரட்டும் மந்திரங்கள் ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன
——–
11-ம் காண்டம்:-
பதினோராம் காண்டத்தில் 10 துதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் சராசரியாக 31 மந்திரங்கள் இருக்கும்.
மூன்றாவது துதி உரைநடையில் இருக்கிறது. பாலில் சோறு பொங்கும் விஷயம் இது. எட்டாவது துதி, பல கடவுளரின் தோற்றம் பற்றியும் மனிதனின் படைப்பு பற்றியும் பாடுகிறது.
எதிரிகளை அழிப்பதற்கான மந்திர உச்சாடனங்கள், கடைசி இரண்டு துதிகளில் இடம்பெறும்.
ருத்ரனைப் பற்றிய நீண்ட துதி இருக்கிறது.
பிரம்மசர்யத்தின் சிறப்பு
உணவு தானியம் பற்றிய பிரார்த்தனை
பிரம்மனைப் பற்றிய மந்திரங்கள்
இந்தக் காண்டத்தின் சிறப்பு
———
12-ம் காண்டம்:-
தாய்நாடு பற்றிய அருமையான நீண்ட கவிதை
காச நோயைத் தடுக்கும் மந்திரம்- இந்தக் காண்டத்தின் சிறப்பு
பன்னிரெண்டாம் காண்டத்தில் 5 துதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் சராசரியாக 60 மந்திரங்கள் இருக்கும்
இரண்டாவது துதி அந்திம யாத்திரை பற்றியது. இதன் பாதிப் பகுதி ரிக்வேதத்தில் (10-18) இருந்து எடுக்கப்பட்டது. ஒரு பிராமணனிடமிருந்து பசுவைத் திருடினால் என்ன பாவம் வரும் என்பதை 4, 5 துதிகளில் காணலாம்.
———–
13-ம் காண்டம்:-
பதிமூன்றாம் காண்டத்தில் 4 துதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் சராசரியாக 47 மந்திரங்கள் இருக்கும்
சிவப்பு (ரோஹித) வர்ணத்தைப் போற்றும் துதிகள் இதில் அடங்கும். சிவப்பு வர்ணம் என்பது சூரியனையும் அக்னியையும் குறிக்கும்.
அந்திமக் கிரியை பற்றிய மந்திரங்களைக் கொண்ட காண்டம்
——–
14-ம் காண்டம்:-
இரண்டே துதிகள்; ஆனால் மொத்தம் 139 மந்திரங்கள். கல்யாணம், சாந்தி முகூர்த்தம் தொடர்பான விஷயங்கள் உள; ரிக் வேத துதி 10-85 சில மாறுதல்களுடன் காணப்படும்.
———
15-ம் காண்டம்:-
இதில் 18 துதிகள் உள. உரைநடையில் உளது. புரியவில்லை என்று வெள்ளைக்காரர்கள் எழுதியுள்ளனர். இதில் விராத்தியர்கள் எனப்படும் நாடோடிப் பிராமணர்கள் பற்றி உளது. அவர்கள் யாக யக்ஞாதிகளைச் செய்யாதவர்கள்; சித்தர்கள் போல!
பரமாத்மனைப் போற்றும் மந்திரங்களும் உண்டு
———–
16-ம் காண்டம்:-
இதில் 9 துதிகள் உள. பெரும்பாலும் உரைநடை. தாயத்துகள், குளிகைகள் பற்றிய அதிசய விஷயங்கள் நிறைய உள்ளன.
———–
17-ம் காண்டம்:-
ஒரே துதி! ஆனால் 30 மந்திரங்கள். இந்திரனைக் குறித்த துதியில் விஷ்ணு, சூரியன் ஆகியோருடன் அவரை ஒப்பிடுவர். மனிதர்கள், மிருகங்கள் ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் நலன் வேண்டும் துதி!
வெற்றிக்கான பிராத்தனை மந்திரங்கள்.
———-
18-ம் காண்டம்:-
நாலே துதிகள்; ஒவ்வொன்றிலும் சராசரி மந்திரங்கள் 70; அந்திமக் கிரியைகள், திதி முதலியன இதில் அடக்கம். பல துதிகள் ரிக் வேத துதிகள்- சில மாறுதல்களுடன்.
முதல் துதி யமா-யமி உரையாடல்.
———-
19-ம் காண்டம்:-
72 துதிகள்; ஒவ்வொன்றிலும் சராசரி மந்திரங்கள் 8. பல இடைச் செருகல் இருப்பதாக வெள்ளையர் கணிப்பர். தாயத்துகள், குளிகைகள் பற்றிய பகுதிகளும் உள. ரிக்வேத புருஷ சூக்தம் 10-90 கொஞ்சம் மாறுதல்களுடன் காணப்படும்.
நதிகள், தண்ணீர், பரமாத்மன் பற்றிய மந்திரங்கள்
28 நட்சத்திரங்கள் பற்றிய மந்திரங்கள்
அமைதி, சமாதான மந்திரங்கள்
இதன் சிறப்பு அம்சங்கள்
————-
20-ம் காண்டம்:-
இருபதாம் காண்டம்தான் கடைசி காண்டம்; இதில் 143 துதிகள் உண்டு. பெரும்பாலும் இந்திரனைப் பற்றிய ரிக் வேத துதிகள்; குண்டபா பிரிவு (127-136) மிகவும் வியப்பான மந்திரம்- வயிற்றைச் சுற்றியுள்ள 20 உறுப்புகள், நாளங்கள், சுரப்பிகள் பற்றீயன. பல பாடல்கள் விடுகதை போன்றவை. அசுரர்களை விடுகதை போட்டே தோற்கடித்தனர் கடவுளர்.
இது போன்ற சிந்தனைகள் இந்த வேதம்— அறிவாளிகளின் வேதம்— என்பதைக் காட்டும். முதல் துதி வாக் (பேச்சு) பற்றி துவங்கியது. இப்படிப்பட்ட அறிவு தொடர்பான செய்திகளை சுமேரிய, எகிப்திய துதிகளில் காணமுடியாது. விருந்தினரைப் போற்றும் உயரிய பண்புகள், சத்தியத்தைப் போற்றும் கொள்கைகள் இவைகள் வெளிநாட்டுச் துதிகளில் இல்லை. இவை எல்லாம் பாரத சிந்தனையின் முன்னேற்றமடைந்த நிலையைக் காட்டும்.
அதர்வண வேத பாடல்களும் யாக தேவதைகளை போற்றுகின்றன.  உதவிகளை கேட்கின்றன அதே நேரம் தெய்வங்கள் தரும் உதவி என்பது மனித உடல்களின் அவஸ்தைகளை தவிர்ப்பதாக இருக்க வேண்டுமே தவிர கஷ்டங்களை ஏற்படுத்துவதாக இருக்க கூடாது என்று தெளிவாக வலியுறுத்துகிறது.  ஆத்மாவானது செயல்பட வேண்டுமென்றால் சரீரம் என்பது அவசியம் தேவை ஆத்மாவை தாங்கி நிற்கும் உடல் உயிர் இல்லாவிட்டால் இயங்காது உடலின் இயக்கம் நின்று விட்டால் அதாவது உடலும் உயிரும் தனித்தனி ஆகிவிட்டால் ஆத்மாவால் எதையும் செய்ய முடியாமல் போய்விடும் எனவே உடம்பு என்பது அவசியமான பொருள் என ரிஷிகள் கருதினர்.  எனவே அவர்கள் உடம்பை நோய்களிடமிருந்தும் மற்ற அபாயங்களிலிருந்தும் பாதுகாத்து பத்திரப்படுத்த வேண்டும் என்கின்ற கருத்துகளை முதன்மையாக வைத்து பாடல்களை இயற்றினர். அத்தகைய பாடல்களின் தொகுப்பு தான் அதர்வண வேதமாகும். இந்த வேதத்தில் 5987 பாடல்கள் உள்ளன.  இந்த பாடல்களில் நோய்களிலிருந்து மனிதனை பாதுகாக்கும் படி வேண்டுகின்ற பாடல்களே மிகுதியாக உள்ளது.

அதர்வண வேதம் சொல்லும் காரணம்

சத்தியம், தவம், தீட்சை , வேள்வி ருதம் ஆகியன இருப்பதால்– அதாவது இந்த குணத்தை மதிக்கும் பண்புடையார்  இருப்பதால் உலகம் இன்றும் அழியாமல், கீழே விழாமல் இயங்குகிறது

கடலுள் மாய்ந்த இளம்பெரும் வழுதி என்ற பாண்டிய மன்னன் இந்திரர் அமிழ்தம் என்ற ரிக் வேத சொற்களை  அப்படியே பயன்படுத்தியதைக் கவனிக்க வேண்டும். அவனோ க்ஷத்ரியன் ; பிராமணன் அல்ல. ஆயினும் ரிக் வேத சொற்களை அப்படியே பயன்படுத்தியுள்ளான் .

அதர்வண வேத முதல் மந்திரத்தில் உள்ள ‘சத்யம் இந்தியாவின் தேசீய சின்னத்தில் இருக்கிறது. ருதம் என்ற சொல்லும் இருக்கிறது. இவை இரண்டும் முக்கியமானவை; ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.

கிறிஸ்தவப் பெண்கள் ரூத் RUTH என்று பெயர் வைத்துக்கொள்வார்கள்; ஆண்களில் பலர் இன்றும் சத்யமூர்த்தி என்றெல்லாம் பெயர் வைத்துக் கொள்வதைக் காண்கிறோம் ருதம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து  ரிதம் RHYTHM , ட்ரூத் TRUTH என்ற இரண்டு சொற்கள் இன்றும் ஆங்கிலத்தில் உள்ளன. அதாவது தாள லயம்- ஒழுங்கு விதி = RHYTHM

உலகமே வாய்மையாலும், ஒரு விதி முறையாலும்தான் இயங்குகிறது. மோட்டார் வேய் MOTOR WAY யில் 130 மைல் வேகத்தில் செல்கிறோம்.; நான் திடீர் என்று நிறுத்தினால் என் பின்னால் வரும் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி 20, 30 பேர் உயிர் இழப்பார்கள். எதிர் திசையில் வருபவன், குடித்துவிட்டு , எனது பாதையில் காரை ஓட்டினால் என் காரில் உள்ளவர்களும் அதற்குப் பின்னால் வருவோரும் உயிர்தப்ப மாட்டார்கள். சாலையைக் கடக்கும் போதும் நாம் கணக்குப்போட்டு கடக்கிறோம் . ஆனால் கார் ஓட்டுபவன் ருதம் RHYTHM  என்பதைப் பின்பற்றாவிட்டால் நம் கதி- சகதி – ஆகிவிடும்

இந்த உண்மையும் ருதமும் (SATHYA AND RUTHAM) வேதத்தில் ஆயிரக்கணக்கான இடங்களில் வருகின்றன. உலகில் வேறு எந்த இடத்திலும் இதைக் காண முடியாது. 5 வயதுப் பையன் , குரு குலப் பள்ளியில் நுழைந்தவுடன் வாத்தியார் சொல்லிதத்தரும் முதல் பாடம் “சத்யம் வத = உண்மையே பேசு ;  அடுத்தது தர்மம் சர” = தருமம் செய்

முதல் மந்திரத்தில் வரும் ‘தபோ’ என்பது தமிழில் ‘தவம்’ ஆகும்

இந்த தவத்தை அப்படியே ஸம்ஸ்க்ருதச் சொல்லாகவே 2000 ஆண்டுகளாக தமிழர்கள் பயன்படுத்தி வருகின்றனர்!!

அதர்வண வேதம் முழுவதும் மூலிகை மர்மங்களும் அதிசயங்களும் விரவிக் கிடக்கின்றன . அவைகளைக் கண்டுபிடித்து உலகிற்கு அளிப்பது இந்துக்களின் கடமை.

அதர்வண வேதம்- நாலாவது காண்டம்- துதி 17 (சூக்தம் 119)- தலைப்பு கேடும் குறையும்

பாடலின் பொருள் : இந்த துதியானது மந்திர குணமுள்ள ஒரு மூலிகையை நோக்கி இசைக்கப்படுகிறது . நோய்கள் தாக்காமல் இருக்கவும் நோயாளிகளைக் குணப்படுத்தவும் உதவும் மூலிகை இது. பெயர் அபாமார்கன் – சுக்கிரன்- வனஸ்பதி ; இதை நாயுருவி என்று  அழைப்பதாக விக்கிப்பீடியா தகவல் கூறுகிறது

xxxx

இந்த துதியில் எட்டு மந்திரங்கள் உள்ளன

முதல் மந்திரம்

மருந்துகளின் மஹாராணியே ! வெற்றி கொடுப்பவளே ! உன்னை நான் பிடிக்கிறேன் ; ஓஷதியே ! ஒவ்வொருவருக்கும் (உதவ) ஆயிரம் சக்தி உடையவளாக செய்துவிட்டேன் .

மந்திரம் -2

நிச்சய வெற்றிதரும், சாபம் அழிக்கும்,மஹத்தான , மீண்டும் திரும்பும் உன்னை வேண்டுகிறேன்; அது எங்களைக் காக்கட்டும்; இதுவே பிரார்த்தனை

3

எங்களுக்குச் சாபம் இட்டவள் அல்லது தீய , கொலைகார எண்ணத்தை மனதில் கொண்டவள் அல்லது என் குழந்தைக்கு  தீங்கிழைப்பவள், அவள் கருத்தரித்துள்ள அவள் குழந்தையையே விழுங்கட்டும்

4.

சுடாத பானையில் அல்லது நீலம்- சிவப்பாகும் வரை சுட்ட பானையில் , சமைக்காத மாமிசத்தில்  அவர்கள் என்ன சூனியம் வைத்திருந்தாலும் அதைக்கொண்டே அவளை அழித்துவிட்டு

5

கெட்ட கனவு, அரக்கர், இராக்கதர், பிசினாறி , தீய பெயருள்ளவள், தீய நாற்றம் உடையவள் — ஆகிய அனைவரையும் விரட்டுகிறோம்

6

அபா மார்க்கனே , உன்னைக்கொண்டு —-   பசிப்பிணி மரணம், தாகத்தால் /வறட்சியால் ஏற்படும் மரணம், , குழந்தைகள் இழப்பு, கால்நடைகள் இழப்பு ஆகியவற்றை துடைத்தது அழிக்கிறோம்

7.

இந்த மந்திரத்தில் ,மேற்கூறிய விஷயத்துடன்,  உடல் உறுப்புகளின் செயல் குறைவு ஆகியவற்றையும் சேர்த்துள்ளனர்.

ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்பில் உடல் உறுப்பு இழப்பு என்பதற்குப் பதிலாக சூதாட்டத் தோல்வி என்று தவறாக மொழிபெயர்த்துள்ளனர்

8

வளரும் மூலிகைகளின் மன்னன் அபா மார்கன் ; அதை வைத்து இந்த நோயாளிக்கு ஏற்பட்ட அனைத்து வியாதிகளையும் நீக்குகிறோம்.

இது எட்டு மந்திரங்களின் சாராம்சம்

அதர்வண வேதத்தில் ஏராளமான மாயா ஜால , இந்திர ஜால விஷயங்கள் உள்ளன. ஒரு மந்திரம் மனிதனை எவருக்கும் தெரியாமல் இருக்க வைக்கும் வித்தை பற்றிப் பேசுகிறது இன்னொரு மந்திரமோ இந்த மூலிகை கையில் இருந்தால் வருங்கலத்தை உறைக்க முடியும் என்கிறது. ஆனால் என்ன ஏமாற்றம். மூ லிகையின் பெயரைச் சொல்லாமல் அது, இது என்று மட்டுமே ரிஷி பாடுகிறார். இருந்தபோதிலும் இதில் பல சுவையான விஷயங்கள் தெரிய வருகின்றன.

இந்த மூலிகைப் பாடல் அதர்வண வேதத்தின் நாலாவது காண்டத்தில் 20ஆவது பாடலாக (சூக்தம் 122) அமைந்துள்ளது. தலைப்பு ஓஷதி

முதல் மந்திரமே விடுகதை போல அமைந்துள்ளது.

அவன் இங்கு பார்க்கிறான்; அவன் பின்னால்  பார்க்கிறான்;அவன் தூரம்  பார்க்கிறான்;அவன்  பார்க்கிறான்;வானத்தை பூமியை வானத்துக்கு அப்பாலும் பார்க்கிறான் ஓ, தேவியே அவன் பார்க்கிறான்”.

அதர்வண எட்டாம் காண்டம் சூக்தம் 440 ல் உள்ள அதிசய விஷ்யங்களைக் காண்போம்

இந்த சூக்தத்தின் தலைப்பே ஒளஷதங்கள் !
இந்த துதியில் 28 மந்திரங்கள் உள்ளன.
28 மந்திர துதியில் ,23ஆவது மந்திரம்

“வராஹம் (பன்றி) செடியை அறியும் ; கீரி சிகிச்சைச் செடியை அறியும் ; கந்தர்வர்களும், சர்ப்பங்களும் அறியும் மூலிகைகளை நான், இப்புருஷனின் துணைக்காக அழைக்கிறேன்”

24 ஆவது மந்திரம் “கருடன் அறியும் ஆங்கிரஸ ஒளஷதிகளையும் , சுபர்ணன் அறியும் தேவ சிகிச்சைகளையும் பறவைகள், ஹம்ஸங்கள் (அன்னம்), வன விலங்குகள் அறியும் அனைத்தையும் இப்புருஷனின் துணைக்காக அழைக்கிறேன்” .
25 ஆவது மந்திரம் ,
“ஆடு மாடுகள் புசிக்கும் மூலிகைகளை துணைக்கு அழைக்கிறேன்” —
என்று சொல்வதிலிருந்து ரிஷி முனிவர் எந்த அளவுக்கு பறவைகள், மிருக்கங்களைக் கவனித்து இருக்கிறார்கள் என்பது புலப்படும்.
இது நோய்வாய்ப்பட்ட ஒருவரைக் காப்பதற்காக பாடப்பட்டது போலத் தோன்றினாலும் மூலிகைகைகளின் பெருமையையே அதிகமாகப் பேசுகிறது!

அதர்வண வேதம், ஆறாவது காண்டம், துதி 19; சூக்தம் எண்  192

1.தேவர்கள் என்னைத் தூய்மை செய்க!

மானிடர்கள் என்னை அறிவால் தூய்மை செய்யட்டும்!

உலகிலுள்ள எல்லாப் பொருட்களும் என்னைத்  தூய்மைப் படுத்தட்டும்!

தூய்மை செய்பவன் / பவமானன்  என்னைத்  தூய்மைப்  படுத்தட்டும் !

2.விவேகம் பெறவும்சக்தி பெறவும்நீண்ட ஆயுள் பெறவும்அசைக்கமுடியாத பாதுகாப்பு பெறவும் என்னைத்  தூய்மைப்  படுத்தட்டும் !

3.ஸவித்ரு தேவனே சோம ரஸத்தை நசுக்கிப் பிழிவதாலும் வடிகட்டுவதாலும் சுத்தப்படுத்துமாறு   தூய்மைப்  படுத்துக

அதர்வண வேதம்; காண்டம் 6; துதி 18; சூக்தம் 191

தலைப்பு – பொறாமை ; ஈர்ஷ்யா விநாசனம்

1.பொறாமை எண்ணம் முதலில் வந்தவுடனே, அதற்கான மூலத்தை, பொறாமையினால் ஏற்படும் வயிற்று  எரிச்சலை — இருதயக் கனலை – அணைக்கிறோம்

2.பொறாமை மனம் படைத்தவனின் மது மென்மையாகட்டும் ; பூமிக்கு உணர்ச்சி இல்லை; செத்துப்போனவனை விட உணர்ச்சியற்றது பூமி. அது போல பொறாமை மனது மிருது ஆகட்டும் .

3.உனது பொறாமை என்னும் சூடான காற்று /எரிச்சல், தோல் பையிலிருந்து வெளியேறும் காற்றுப்போல வெளியே செல்லட்டும்

மூன்றாவது மந்திரத்தில் உள்ள உவமை பொறாமைக்குப் பொருத்தமான உவமை. சம்ஸ்க்ருதத்தில் பொறாமையை இருதயக் கனல் (HEART BURN) என்று வருணித்தார் புலவர். தமிழில் இருதயம் என்ற உறுப்புக்கு சொல்லே கிடையாது; என் நண்பன் HEART OPERATION  ஹார்ட் ஆபரேஷன் செய்து கொண்டான் என்பதை தமிழில் சொல்லவே முடியாது; ஆகையால் வயிற்று எரிச்சல் STOMACH BURN என்போம். அதற்கேற்ற உவமை கொல்லன் துருத்தி (த்ருதி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து பிறந்தது ) அதிலிருந்து எப்பாடி சூடான காற்று வெளியேறுமோ அப்படி உன் பொறாமைத் தீயை வெளியேற்று(வேன் ) என்கிறது மந்திரம்.

அதர்வண வேதம் தொடாத SUBJECT சப்ஜெக்ட்டே  இல்லை.

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading