ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஆளவந்தார் வணங்குகிறார்.
தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஸ்லோகம் -4-
ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.
————-
ஸ்ரீ பாகவதம் 10 ஸ்கந்தம் போல் இங்கும் ஐந்தாம் அம்சம் பூர்த்தியாக ஸ்ரீ கிருஷ்ண அனுபவம் 13 அத்யாயம் -14 ஸ்லோகம் -ஸரத் காலம் -சந்திரோதயம் -அல்லி மலர் இரவில் மலரும் -வாசனை மநோ ஹரமாக இருக்கும்
கண்ணனுக்கே ஆமது காமம் –
ஷீரம் சக்கரை ஏவ நம்பி மூத்த பிரானும் கண்ணனும்
சேர்ந்தே இருப்பார்கள்
விநா ராமேண -தனித்து சென்று புல்லாங் குழல்
நாராயணீயம் -இது வாய் அம்ருதம் பருகிற்றே -மாமன் உதடு பட்ட -வாலியும் இத்தைக் கொண்டே –
கஷ்டங்களையே ஊதித் தள்ளி மங்களம் அளிப்பவன் வேணுகான கிருஷ்ணன்
அந்த வேணுகானத்தைக் கேட்டு ஆய்ச்சியர் அனைவரும் பரவசமடைந்து மாளிகைகளைத் துறந்து பரபரப்புடன் ஸ்ரீகிருஷ்ணன் இருக்குமிடந்தேடி விரைந்து சென்றார்கள். அவர்களில் ஒருத்தி கண்ணனின் குழலிசையை உற்றுக்கேட்டு, அவனையே நினைத்துக் கொண்டிருந்தாள். மற்றொருத்தி அருகில் சென்று கிருஷ்ணா கிருஷ்ணா! என்று ஆவலோடு அழைத்துக்கொண்டும் வேறொன்றும் பேசமுடியாமல் நாணத்தோடு நின்றாள். வேறு ஒருத்தி கிருஷ்ணனிடம் கொண்ட அன்பு மிகுதியினாலே, ஒன்றும் தெரியாதவளாய் பக்கம் நின்றாள்.
ஒரு பெண், தன் மாளிகையிலிருந்து வெளியே வரும்போது அங்கே தன் மாமனாரைப் பார்த்தாள். பயந்தாள். கண்ணனிடம் போகமுடியாததால் கண்களை மூடிக்கொண்டு, தன்மயமாய், அந்தக் கோவிந்தனைத் தியானஞ் செய்து கொண்டிருந்தாள். மற்றொருத்தி கண்ணனிடத்திலேயே சித்தம் பற்றியிருப்பதாலுண்டான ஆனந்தத்தால், புண்ணியங்களும் அவளையடையாமற் போனது பற்றிய பெருந் துக்கத்தால் பாவங்களும் மாளப்பெற்றவளாய் பரப்பிரம்ம சொரூபியாய், ஜகத்காரணமான அவனையே சிந்தித்து, மூச்சடக்கி முக்தியை அடைந்தாள். இவ்விதமாகத் தன்னைச் சூழ்ந்த கோபியர்களுடன் ராஜ கோபாலன் ராஸக்கிரீடை என்ற உற்சவத்தில் குதூகலமாய் இருந்தான்.
கண்ணில் நிற்பவன் கண்ணன்-சிந்தயந்தி-நினைப்பவள் -இதுவே நிரூபகம் இவளுக்கு
வாசல்படி -மேல் வர -நடைபாதை ரேழி -கூடம் அடியார் சேர்க்கை -சமையல் மனம் பக்குவம் -பூஜை -வழிபட்டால் முற்றம் முக்தி கிட்டும்
அங்கனா மணிகினி யம்புஜ பாணிகி மங்களாவதிகினி மங்களம் … கோவிந்தா மாதவா யாதவ குல நந்தனா
மாலைப்பூசல் -மாலையும் வந்தது மாதவன் வரவில்லையே
வேய் மரு தோளிணை மெலியுமாலோ மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்கா
காமரு குயில்களும் கூவுமாலோ கண மயிலவை கலந்து ஆலுமாலோ
ஆமருவின நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் யாயிரம் ஊழி யாலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ தகவில்லை தகவிலையே நீ கண்ணா –10-3-1-
மறைய -நிதானம் அடைந்து தேட -அனுகாரம்-அருகில் இருக்கும் உணர்வு கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
சாரங்க பாணி தளர் நடை நடவானோ -நடந்து காட்டி
காளியனாக ஒருத்தி -தலையிலே நடமாடி -பக்த பாத தூளி பெற்ற பாக்கியவதி
சேறு செய்யும் தொண்டர் சேவடி செழும் சேறு -பாத தூளி என் சென்னிக்கு அணிவேனே
காளியன் தலையாக இருந்து வைக்கக் கொடுத்து வைக்க வில்லையே -கூரத்தாழ்வான்
மார் தட்டி நாம் அனுபவிக்கிறோம் என்று இருந்தீர்கள் நான் அப்படி இல்லை கூட்டிப்போனான்
எனக்காக பூ சூட்டினான் என்று நினைக்க விட்டுப் போனான்
இன்னும் ஒரு கோபியைக் கூட்டிப்போனான் -கையைப் பிடித்து
இழுத்து போன கால் அடிசுவடு
ஹஸ்த ஸம் ஸ்பர்சம் -கிடைத்த பாக்யம் -நினைத்தேன் விட்டுப்போனான்
மார் தட்டுவதைக் கழித்து மார்க்க சீர்ஷம் வருவது துர்லபம்
திரு நாமங்களை சங்கீர்த்தனம் பண்ணினால் வராமல் இருக்க முடியாதே-பட்டுப் பீதாம்பரம் அணிந்து சேவை சாதிக்க –
சாத்மிக்கவும் மறைந்தான் என்றுமாம்
அன்பு நிலைத்து இருக்கவே பிரிவித்துயர் கொடுத்தான்
lock down பக்தி உபன்யாசங்கள் மிக்கு இருந்ததே
நமது பக்தி வளரவே –
கூடி இருந்து அனுபவிக்கவே
பின்னாலே இருப்பது அடிச்சுவடு
முன்னாலே தோன்றிக் காட்டி அருளுவானே
ராச நடனம் -ஒரே கண்ணன் நடுவில் இதில்
பாகவதம் கோபிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு கண்ணன்
இவர்கள் கை பிடிக்க -கண்ணன் ஒவ்வொருவர் கைகையும் ஏக ஏக பிடித்து கண்ணை மூடி மெய் மறந்த இருக்க கோத்து விட்டானாம்
இவன் நிலவையையும் அல்லியையும் கண்ணன் பாட
இவர்கள் எல்லாமே கண்ணனாகவே நினைத்து ஆட
பராசரர் மைத்ரேயருக்குச் சொல்ல -சங்கை அவருக்கு வர –
கிருஷ்ணனே அதர்மம் செய்யலாமா -அவன் செய்வதே தர்மம் -நமக்குத்தான் வேதம் சாசனம் பண்ண வேண்டும்
நித்ய ப்ரஹ்மச்சாரி -உத்தரை கர்ப்பம் -பரீக்ஷித் -கரிக்கட்டை -தாண்டி காட்டினான்
இவனைப்பார்த்து பின் செய்வார்கள் -அவன் செய்வதை நாம் செய்யப்பார்ப்பது கூடாதே
விஷம் சிவன் உண்ணுவதோ -காளியன் தலையில் நடமாடுவது கோவர்தனம் தூக்குவதோ முடியாதே
செய்வதை ரசிக்க வேண்டும்
சொல்வதை செய்ய வேண்டும்
ராமன் அனுஷ்டித்துக் காட்டியவரையே செய்ய வேண்டும்
கோபிகள் செய்தவை பாபம் ஆகாதோ என்றால் -ஆத்ம ஸ்வரூபம் -அனைவருக்கும் அந்தர்யாமி -அனைவருமே அவனுக்கு சரீரம் தானே
கேட்பவர் மனம் அருவறுப்பு ஆகுமே என்றால் -ஜீவாத்மா பரமாத்மாவுடன் அனுபவம் என்று உணர வேண்டும்
அஷ்டபதி முதல் ஸ்லோகம் -ராதா -குழந்தை -நந்தகோபன் -விருத்தாந்தம் விளக்கும்
நினைத்தால் 2 வயசாகவும் 20 வயசாகவும் தமர் உகந்த உருவம் கொள்பவன் அன்றோ
ஸ்ரீஜயதேவரின் புகழ்பாடும் தியான ஸ்லோகங்களுக்கு பின்னர், முதல் ஸர்கத்தில்
“மேகைர் மேதுர மம்பரம்“ என்று தொடங்கும் முதல் ஸ்லோகம்
“காரிருள் கவ்வுகிறது–.வானில் மேக மூட்டம் காணப்படுகிறது,குழந்தை கிருஷ்ணன் அச்சப் படுகிறான்,அவனை வீட்டில் கொண்டுபோய் சேர்”
இவ்விதம் நந்த கோபன் உத்திரவுப்படி, செல்லும் வழியில், யமுனை நதிக்கரையில் புதர்களின் இடையே
ராதாவும் மாதவனும் புரிந்த கேளிக்கைகள் ஜயமடையட்டும் என்று மங்களா சாஸனம் செய்து கவிதையைத் தொடங்குகிறார்,
12.இவ்விடம் குழந்தை என்று கண்ணன் அழைக்கப் பட்டு மேலும் ராதையோடு கேளிக்கை புரிந்தான்
என்று கூறியதிலிருந்தும் கண்ணனுனடய வயது மிகக் குனறவு என்பது ஊர்ஜிதமாகிறது.
அவன் ராஸ லீலா கேளிக்கை எல்லாம் தன் பத்து வயதிற்குள் முடித்து விட்டான் என்றும் கூறப்படுகிறது.
இதிலிருந்து ராஸலீனல ஒரு தெய்வீகக் கேளிக்கை எனறு சந்தேகமறத் தெரிகிறது.
மேலும் “பய க்ருத் பய நாசன:” என்று பயத்தை உண்டாக்குபவனும்,அப் பயத்தை அழிப்பவனும் அவனே என்றிருக்க
கண்ணன் பயப்படுகிறான் என்ற விவரிப்பு, கண்ணன் குழந்தை ரூபத்தை ஏற்றது மட்டுமல்லாது,
அக் குழந்தைக்குறிய குணங்கனளயும் வெளிப்படுத்தி யுள்ளான் என்பது தெளிவாகிறது,
ஸ்ரீ நாராயண தீர்த்தரும் அவர் அருளிச் செய்த ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியில்
ராஸக்ரீனட
34.7வது தரங்கத்தில்,கோபிகைகள் ஸம்ஸாரத்தில் வெறுப்பு ஏற்பட்டு அதனிடம் இருந்து விடுதலை அடையவே
ஸ்ரீ கிருஷ்ணனிடம் புகலிடம் அனடந்தோம்,.எனக் கூறிய பின் ராஸ க்ரீனட விவரிக்கப் படுகிறது.
ஆயர்பாடியிலுள்ள மங்கையர் அநேக ஆயிரம் பிறவிகளில் செய்த தவத்தால் கோப ஸ்த்ரீ என்ற
இந்தப் பிறவியில் ஸச்சிதானந்த வடிவான ஸ்ரீ கிருஷ்ணனின் திவ்ய தர்ஸனம்
பெற்று பிறவியின் பயனை அனடந்தனர் என்று கூறுகிறார்.(7வது தரங்கம் ஸ்லோ .4) .
வனவாச ராமர் திருச்சேறை சேவை உண்டே
தாடி இல்லையே-ஜடாமுடி சங்கல்பித்துக் கொண்டான் -பிரம்மாவுக்கு வெள்ளைத்தாடி உண்டே அவன் அப்பனுக்கு இல்லையே
அங்கங்கள் அழகு மாறி இருப்பதைக் கண்டு ஆலிங்கனம் செய்ய விரும்பிய தண்டகாரண்ய ரிஷிகள் பிரார்த்தித்த படியால் இந்த லீலைகள் -கேட்டபடி அனுக்ரஹம் செய்பவன் அன்றோ
இப்படி ஐந்து கேள்விகளுக்கும் சமாதானம்
மேலும் இரண்டு கேள்விகளுக்கும் பதில்கள் உண்டே
இவன் ஒருவனே புருஷோத்தமன் -மற்றவர் ஸ்த்ரீ பிராயர்
பெண்கள் வீட்டுக்கு திரும்பினார்களா –
போனார்கள் -இவர்கள் போய் வந்ததே அறியாமல் இருந்தார்கள்
இவர்கள் வடிவத்தில் இவர்கள் விட்ட வேலைகளை இவனே செய்தானாம்
சிசுபாலன் முக்தி இவர்களுக்குச் சொல்ல வேண்டுமா
ராதை போல் அனைத்தும் கண்ணனே -ஒரு சாரார் -ஆழ்வார்கள் போல்வார்
புதிதாக வரும் சாரார் கன்னிப்பெண்
திருமணம் -நாராயணனை அறிந்து உபாயாந்தரம் -சரணாகதி
மூவருக்கும் ஒரே பலன் -ரஸ க்ரீடை இத்தையே காட்டும்
போக சாம்ய பிரதத்வம்
நமக்கும் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் போல்
கௌஷீகம் ப்ரஹ்ம வித்யை சொல்லுவதையே காட்டும்-சேஷ பூதன் ஒரே அடையாளம் நாமம் ரூபம் வாசி இருக்காதே அங்கு
பலன் -உலகியல் காமம் வராதே -மனசில் அழுக்கு போகுமே -காஞ்சி மஹா பெரியவர் காட்டி அருளினாராம் –
சந்நியாசி தினமும் இத்தை பாராயணம் பண்ண வேண்டுமாம்
அதி மானுஷ ஸ்தவம் -இத்தை கீர்த்தனம் செய்வது பரம பாவனம் என்று காட்டி அருளுகிறார்
————————–
13. ராஸக் கிரீடை
இந்திரன் வணங்கிச்சென்ற பிறகு கோபாலர்கள் வந்து கோவர்த்தன பர்வதத்தையெடுத்த ஸ்ரீகிருஷ்ணனை நோக்கி, அப்பா கிருஷ்ணா! இப்போது நேரிட்ட பெருமழையிலிருந்து எங்களையும் பசுக்களையும் காத்தாய்! உன் செயல்கள் அற்புதமானவை! ஏனென்றால் கோவர்த்தன மலையை நீ குடையாகப் பிடித்திருக்கிறாய். உனது பிறப்போ தாழ்ந்த இடைக்குலம் தண்ணீரில் காளிங்க சர்ப்பராஜனை அடக்கியதும் பனங்காட்டில் தேநுகாசுரனை அழித்ததும் கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்ததுமாகிய உனது பாலிய லீலைகள் எங்கள் இதயங்களில் சந்தேகம் ஏற்படுத்தியுள்ளன மிகவும் பராக்கிரமமுள்ளவனே! சத்தியம், சத்தியம்! ஸ்ரீ ஹரியின் திருவடிகளின் மேல் ஆணை! நீ மனிதனல்ல? ஓ கிருஷ்ணா! பெண்டுகள் சிறுவர்கள் முதலிய இந்த ஆய்ப்பாடியில் இருப்பவர்கள் யாவருமே உன்மீது அன்பு கொண்டிருப்பதும், சகல தேவர்களும் ஒன்று கூடிச் செய்தாலும் செய்யமுடியாத உன் காரியங்களும் பாலியத்திலேயே இத்தகைய வீரம் இருப்பதும் இழிவான எங்கள் குலத்தில் உனது பிறப்பும் எங்களுக்குச் சந்தேகத்துக்கு ஏதுவாக இருக்கின்றன. நீ தேவனோ, தானவனோ, யக்ஷனோ, கந்தர்வனோ, யாரோ தெரியவில்லை யாராயிருந்தால் என்ன? நீ எங்களுக்கு உறவுமுறையானவன் உனக்குத் தண்டமிடுகிறோம் என்று வணங்கினார்கள்.
கிருஷ்ணன் சிறிது நேரம் மவுனமாக இருந்தான். பிறகு அவன் நட்புக்கோபத்துடன் ஓ, கோபாலரே! உங்களுக்கு ஏன் இந்த விசாரணை? என்னிடத்தில் அன்பிருந்தால், நான் உங்களுக்குக் கொண்டாடத் தக்கவனாக இருந்தால் நீங்கள் உறவினனாக நினையுங்கள்! நான் தேவனுமல்ல; கந்தர்வனுமல்ல நான் உங்கள் உறவினனாகப் பிறந்தவனேயன்றி வேறன்று ஆகையால் நீங்கள் வேறுவிதமாக சிந்திக்கவேண்டாம்! என்றான். அதன்பிறகு ஆயர்கள் மவுனமாகச் சென்றனர். பிறகு கண்ணன் அந்தக் கூதிர்ப் பருவத்தில் வானம் நிர்மலமாக இருப்பதையும், பாலைப் பொழிவது போல நிலவு காய்வதையும், திசைகள் யாவும் மணம் கமழும் மலர்கள் மலர்ந்திருப்பதையும் கடாட்சித்து, முன்பு தான் வரமளித்தவாறு கோபியரோடு சேர்ந்து கிரீடிப்பதற்குத் திருவுள்ளம் கொண்டு, தமையனோடு செல்லாமல் தனியாகவே வனத்துக்குச் சென்றான். பெண்களின் மனதைக் கவரும் விதமாகவும் இன்னது என்று சொல்லவுங்கூடாத இனிய தொனியோடு தாரமும் மந்திரமுமான ஓசை வேற்றுமைகளின் முறைப்பாடுடைய புல்லாங்குழலை எடுத்துக்கண்ணன் ஊதினான். அந்த வேணுகானத்தைக் கேட்டு ஆய்ச்சியர் அனைவரும் பரவசமடைந்து மாளிகைகளைத் துறந்து பரபரப்புடன் ஸ்ரீகிருஷ்ணன் இருக்குமிடந்தேடி விரைந்து சென்றார்கள். அவர்களில் ஒருத்தி கண்ணனின் குழலிசையை உற்றுக்கேட்டு, அவனையே நினைத்துக் கொண்டிருந்தாள். மற்றொருத்தி அருகில் சென்று கிருஷ்ணா கிருஷ்ணா! என்று ஆவலோடு அழைத்துக்கொண்டும் வேறொன்றும் பேசமுடியாமல் நாணத்தோடு நின்றாள். வேறு ஒருத்தி கிருஷ்ணனிடம் கொண்ட அன்பு மிகுதியினாலே, ஒன்றும் தெரியாதவளாய் பக்கம் நின்றாள்.
ஒரு பெண், தன் மாளிகையிலிருந்து வெளியே வரும்போது அங்கே தன் மாமனாரைப் பார்த்தாள். பயந்தாள். கண்ணனிடம் போகமுடியாததால் கண்களை மூடிக்கொண்டு, தன்மயமாய், அந்தக் கோவிந்தனைத் தியானஞ் செய்து கொண்டிருந்தாள். மற்றொருத்தி கண்ணனிடத்திலேயே சித்தம் பற்றியிருப்பதாலுண்டான ஆனந்தத்தால், புண்ணியங்களும் அவளையடையாமற் போனது பற்றிய பெருந் துக்கத்தால் பாவங்களும் மாளப்பெற்றவளாய் பரப்பிரம்ம சொரூபியாய், ஜகத்காரணமான அவனையே சிந்தித்து, மூச்சடக்கி முக்தியை அடைந்தாள். இவ்விதமாகத் தன்னைச் சூழ்ந்த கோபியர்களுடன் ராஜ கோபாலன் ராஸக்கிரீடை என்ற உற்சவத்தில் குதூகலமாய் இருந்தான். அதற்கு ஏற்றாற்போல சரத்கால நிலவும் பொழிந்து கொண்டிருந்தது. இவ்விதமாக கண்ணன் ராஸக்கிரீடை செய்தருளி வேறொரு இடத்திற்கு எழுந்து சென்றபோது யாதவக் கன்னியரெல்லாம் கூட்டமாகக் கூடி, கண்ணனின் திருவிளையாடல்களிலேயே மனம் லயிக்க அந்தப் பிருந்தாவனத்தின் நடுவில் திரிந்து ஒருத்தியிடம் மற்றொருத்தி பிதற்றிக் கொண்டிருந்தார்கள். ஒருத்தி தோழியரே! கேளுங்கள்! நான்தான் ஸ்ரீ கிருஷ்ணன் ஆதலால் நான் லலிதமாய் நடக்கிறேன் பாருங்கள் என்று நடந்து காட்டினாள். மற்றொருத்தி நீயல்லடி கண்ணன்! நானே கண்ணன். என்னுடைய பாடலைக்கேள்! என்றாள். வேறு ஒருத்தி ஏ துஷ்டனான காளியனே; ஓடாதே நான் கிருஷ்ணன். உன்னைப்பிடிக்கிறேன் என்று தன் தோள்களைத் தானே தட்டித் தன் கையையே சர்ப்பத்தைப் போல் பிடித்து நின்றாள் மற்றொருத்தி நீங்கள் மழைக்கு அஞ்சவேண்டாம். இதோ இந்தக் கோவர்த்தனகிரியை நான் குடையாகப் பிடிக்கிறேன் என்றாள்.
இவ்விதமாக இடைச்சியர் எல்லாம் கண்ணனின் திருவிளையாடல்களைச் செய்துகொண்டு மெய்மறந்த நிலையில் பிருந்தாவனத்தில் திரிந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு பெண் தரையைப் பார்த்து, அங்கத்தில் புளகாங்கிதம் உண்டான, அருகில் இருந்தவர்களை நோக்கி, தோழியரே பாருங்கள்! இங்கே துவஜம், வஜ்ரம், கமலம் அங்குசம் முதலிய இரேகைகளையுடைய கண்ணனது திருவடித் தாமரைகளின் சுவடுகள் இருக்கின்றன, இவற்றைப் பார்க்கும்போது, அவன் விளையாட்டோடு விநோதமாக நடந்திருக்கிறான் என்று தோன்றியது. இன்னும் பாருங்கள், மகாபுண்ணியம் செய்த எவளோ ஒருத்தி அவனுடன் கூடச் சேர்ந்து, மதத்தினால் மெல்லச்சென்றிருக்கிறாள். ஏனென்றால் இதோ பக்கத்தில் அவனுடைய அடிச்சுவடுகளும் நெருங்கிச் சிறியவைகளாகக் காணப்படுகின்றன; அடியே, இங்கே கண்ணன் உட்கார்ந்து பூப்பறித்திருக்கிறான். அதனால் தான் அவனுடைய திருவடிகளின் நுனிமட்டும் இங்குப் பதிந்துள்ளன. இதோ பாருங்களடி! இங்கே கண்ணன் உட்கார்ந்து அம்மலர்களால் ஒருத்தியை அலங்கரித்திருக்கிறான். அவளோ முற் பிறவியில் ஸ்ரீமந் நாராயணனை நன்றாக ஆராதித்திருக்கிறாள். இதோ பாருங்கள்! இங்கே அவன் பூப்புணர்ந்தவளை விட்டுவிட்டு, இந்த வழியாகப் போயிருக்கிறான். இங்கே ஒருத்தியின் அடிச்சுவடுகள் நுனியழுந்தியவையாகக் காணப்படுகின்றன. ஆகையால் அவள் முன்னே சென்ற கண்ணனைச் சேரும் பொருட்டு நிதம்பபாரத்தால் வருந்தி விரைவாக நடந்திருக்கிறாள். பாங்கியரே! இங்கே ஒருத்தி அவன் கைமேல் கை வைத்துக்கொண்டு அவன் கூடவே நடந்திருக்கிறாள். அதனால்தான் இங்கே அந்த மங்கையின் காலடி வைப்புகள் நீண்டிராமல் சிறிது நெருங்கி அசுவாதீனமாக இருக்கின்றன. அடியே இங்கே பாருங்களடி அந்த வஞ்சகக் கண்ணன் அந்த மங்கையின் கையை ஸ்பரிசித்தது மாத்திரமேயன்றி, வேறு ஸ்பரிசம் எதுவும் செய்யாததால், அந்த மங்கை அவமானப்பட்டு ஆசையற்றுத் திரும்பி விட்டதாகக் காலடிச் சுவடுகள் எடுத்துக்காட்டுகின்றன. அடியே, இங்கே பாருங்களடி இங்கே கண்ணனின் காலடிச் சுவடுகள் மிக விரைவாக வைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் அவன் இங்கே யாரோ ஒருத்தியை, நீ இங்கேயே இரு! நான் சீக்கிரமாகப்போய் நாமிருவரும் கூடுவதற்கு ஏற்ற இடத்தைப் பார்த்துக்கொண்டு வந்து சேருகிறேன்! என்று சொல்லிவிட்டு நழுவிப் போயிருக்கிறான் என்று தோன்றுகிறது. பாங்கியரே ! இதற்குமேல் அவன் சுவடு காணப்படவில்லை. ஆகையால் அவன் மற்றையோர் புகமுடியாத இடத்துக்குப் போய் இருக்கிறான். ஆகையால் திரும்புங்களடி! என்று சொல்லி, கன்னியர் யாவரும் கண்ணனை இனிக் காண்பது அரிதென்று மனம் மயங்கி, யமுனையாற்றின் கரையில் உட்கார்ந்து அவனது சரிதங்களைப் பாடிக்கொண்டிருந்தார்கள்.
அப்படிப்பட்ட சமயத்தில் கண்ணன் அங்கு வந்தான். அவன் வந்ததும் கன்னியரெல்லாம் களிப்படைந்தனர். அவர்களில் ஒருத்தி கிருஷ்ண கிருஷ்ண என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தாள். மற்றொருத்தி புருவங்களை நெறித்து கண்களாகிய வண்டுகளால் கண்ணனது முகாரவிந்தத்தைப் பானஞ் செய்தாள். வேறு ஒருத்தி கண்ணனைக் கண்டதும் கண்களை மூடிக்கொண்டு, அவனது திவ்விய ரூபத்தையே தியானித்துக் கொண்டிருந்தாள். இப்படியாகத் தன்னைக் காதலித்துப் பல வகையான சேஷ்டைகள் செய்தவண்ணம் தன்னைச் சூழ்ந்து நிற்கும் அப்பெணகளில் சிலரிடம் கண்ணன் இனிமையாகப் பேசியும் சிலரைக் கை தீண்டுவதாலும் சமாதானம் செய்தான். பிறகு கலக்கமின்றித் தெளிவுடன் இருந்த அப்பெண்களோடு ராஸக்கிரீடை செய்யலானான். அம்மங்கையர் அனைவரும் கண்ணனைவிட்டு அகலாமல் அருகிலேயே ஒட்டியொட்டி இருந்ததால், வட்டமாக அமையவேண்டி ராசமண்டல கோஷ்டி அமையவில்லை. எனவே கண்ணன் அப்பெண்கள் ஒவ்வொருத்தியின் கையைப் பிடிக்க அந்தச் சுகத்தில் பரவசமாய் ஒவ்வொருத்தியும் கண்களை மூடிய நிலையில் மெய்மறந்து நிற்கும் போது கண்ணன் அவளவள் கையை மற்றொருத்தியின் கையோடு சேர்த்து, அவர்களை வட்டமாக நிறுத்தினான். அப்போது எல்லாப் பெண்களும் ஆனந்தப் பரவசத்தால் கண்ணனுடைய கையைத் தான் பிடித்திருப்பதாக நினைத்தார்களே தவிர மற்றொரு பெண்ணின் கையைப் பிடித்திருப்பதாக நினைக்கவில்லை. கண்ணனோ, விரைவாகப்பாயும் லாகவத்தால், யாவருக்கும் அருகிலிருப்பது போலவே காணப்பட்டான். பிறகு சரத்கால வர்ணனைப் பாட்டும், அதற்குத் தாளமாக கன்னியரின் கைவளையல்களின் குலுக்கலும் சேர்ந்து ராஸக்ரீடை விளங்கியது. ஆயினும் கண்ணன் மட்டுமே சரத் காலத்துச் சந்திரனையும் நிலவையும் ஆம்பல் மலர்ந்த தடாகங்களையும் பாட கோபியர்கள் கண்ணனது திருநாமம் ஒன்றையே பாடினார்கள். இப்படிப் பாடிச் சுற்றிவரும்போது, ஒருத்தி கங்கணங்கள் ஒலி செய்யும் தன்கையை கண்ணனின் தோள்மீது பதித்தாள். மற்றொருத்தி, யானைத் துதிக்கை போன்ற தோளுடைய கண்ணனை இறுகக்கட்டிக் கொண்டு முத்தமிட்டாள். இன்னும் ஒருத்தி கண்ணனின் தலையோடு தன் தலையைச் சேர்த்து அவன் தோள்களைக் கட்டிக்கொண்டாள். இவ்விதம் ஒவ்வொருத்தியும் ஆனந்தித்த வண்ணம் கண்ணனைப் பிரியாமல் இருந்தார்கள். தன்னைப் பிரிந்தால் ஒரு கணமும் ஒரு கோடி வருடமும் போலத் தோன்றும்படி அப்பெண்களுக்கு ஆனந்தத்தை வளர்த்துக் கொண்டு ஸ்ரீகிருஷ்ணன் ராசக்ரீடை செய்தான். கோபிகா ஸ்திரீகள் அனைவரும் தன் தன் தாய்தந்தையராலும் உடன்பிறந்தாராலும் தடுக்கப்பட்டாலும் அவர்களை லட்சியம் செய்யாமல் இரவு நேரங்களில் கண்ணனிடம் வந்து சேர்ந்து அவனிடம் மிகவும் அன்போடு ரமித்திருந்தார்கள். கண்ணனும் மனுஷ்ய அவதாரத்துக்கேற்ப, இளமைக்குரிய சாபல்யத்தைப் பெருமைப்படுத்திக் கொண்டு, இரவுகள் தோறும் அக்கோபியருடன் ரமித்து வந்தான்.
மைத்ரேயரே! தருமத்தை ஸ்தாபிக்க அவதாரஞ் செய்த எம்பெருமான் தரும விரோதமான இத்தகைய காரியஞ் செய்யலாமா? இதனால் கோபிகா மங்கையருக்குப் பாதகம் உண்டாகாதோ என்று நீங்கள் கேட்பீர் எம்பெருமான், தன்னைச் சேர்ந்தோரின் சகல பாவங்களையும் போக்கடிக்கும் படியான தூய்மையோன் அந்த மங்கையரும், வேதாந்த நிர்ணயப்படி அன்பு செலுத்த வேண்டிய இடத்திலேயே தங்கள் அன்பைச் செலுத்தினார்கள். ஆகையால் அவர்களுக்கு சகல பாவ நிவர்த்தியுண்டாயிற்றே தவிர பாபம் சம்பவிக்கவில்லை. எம்பெருமானுக்கோ தேவர்களுக்கு உண்டாவது போன்ற பாவபந்தம் உண்டாவதில்லை. ஏனென்றால், நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்சபூதங்கள் எப்படி எல்லாப் பிராணிகளிலும் வியாபித்துள்ளனவோ, அதுபோலவே அக்கோபிகா ஸ்திரீகளிடத்திலும் அவர்களின் கணவரிடத்திலும் ஏனைய ஆன்ம கோடிகளிடத்திலும் வியாபித்திருக்கும் பரமாத்மாவாகையால், கண்ணனுக்கும் புதியதொரு பந்தம் வந்ததில்லை என்பதை அறிவீராக!
————————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Related
This entry was posted on January 27, 2023 at 6:58 pm and is filed under ஸ்ரீ விஷ்ணு புராணம், ஸ்ரீ விஷ்ணு புராணம் -, Puraanankal. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply