ஸ்ரீ விஶ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம் – ஸ்ரீ ஆதி ஶங்கர பகவத் பாதர் அருளியது – பாகம் 1-

குரு (வியாஸ) வணக்கம்:

க்ருஶ்ண த்வைபாயனம் வ்யாஸம் ஸர்வ லோக ஹிதே ரதம்|

வேதாப்ஜ பாஸ்கரம் வந்தே ஷமாதி நிலையம் முனிம்||

அனைத்து உலகிற்கும் (அனைத்துலக மக்களுக்கும்) நன்மையையே வேண்டுபவரே! வேதமெனும் தாமரைக்கு (அதை மலர்விக்கும்) கதிரவன் போன்றவரே! பற்றற்று தவ நெறியில் நிலைத்திருப்பவரே! க்ருஷ்ண த்வைபாயனர் என்ற வ்யாஸரே! உம்மை வணங்குகிறேன்!!

ஸஹஸ்ர மூர்த்தே: புருஶோத்தமஸ்ய ஸஹஸ்ர நேத்ரானன பாத பாஹோ:|

ஸஹஸ்ர நாம்னாம் ஸ்தவனம் ப்ரஶஸ்தம் நிருச்யதே ஜன்ம ஜராதி ஷாந்த்யை||

ஆயிரக்கணக்கான முகங்களும், ஆயிரக்கணக்கான கண்களும், ஆயிரக்கணக்கான கை கால்களும் ஆயிரக்கணக்கான உருவங்களும் கொண்ட புருஷோத்தமனான பகவானின் ஆயிரம் திருநாமங்கள் கொண்ட, புகழ் வாய்ந்த, (ஸ்ரீ விஶ்ணு ஸஹஸ்ரநாமமெனும்) துதிக்கு, பிறப்பு மற்றும் மூப்பென்னும் பிணிகளைப் போக்க, இந்த விளக்கவுரை (பாஷ்யம்) எழுதப்படுகிறது.

——————–

ஶுக்லாம் பரதரம் விஶ்ணும் ஸஶிவர்ணம் சதுர்புஜம் |

ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஶாந்தயே ||

வெண்மையான (தூய்மையான) ஆடை தரித்தவரும், எங்கும் நிறைந்திருப்பவரும், வெண்மதியைப் போன்ற நிறமுடையவரும், நான்கு கரங்கள் உடையவரும், புன்சிரிப்புடன் கூடிய மலர்ந்த முகத்தை உடையவருமான பகவானை நமது துயர்களைத் தீர்க்க தியானிப்போம்.

வ்யாஸம் வஶிஶ்ட நப்தாரம் ஷக்தே பௌத்ரம் அகல்மஷம் |

பராஶராத்மஜம் வந்தே சுக தாதம் தபோ நிதிம் ||

வஶிஶ்டரின் கொள்ளுப் பேரரும், ஷக்தியின் பேரரும், பராஶரரின் புதல்வரும், சுகரின் தந்தையும், மாசுகளற்றவரும், தவத்தில் சிறந்தவருமான முனிவர் வியாசரை வணங்குகிறேன்.

வ்யாஸாய விஶ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஶ்ணவே |

நமோ வை ப்ரஹ்மநிதயே வாஶிஶ்டாய நமோ நம: ||

வியாஸரே விஶ்ணு வடிவானவர்; அந்த பகவான் விஶ்ணுவே வ்யாஸராக அவதரித்தார். பர ப்ரஹ்மத்தை உள்ளபடி அறிந்தவரும், அந்த பர ப்ரஹ்மமே ஒரு நிதியாய் திரண்டார் போன்ற வடிவினரும், வஶிஶ்டரின் குலத்திலே தோன்றிய வியாஸரை நான் மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.

அவிகாராய ஶுத்தாய நித்யாய பரமாத்மனே |

ஸதைக ரூப ரூபாய விஶ்ணவே ஸர்வ ஜிஶ்ணவே ||

எவ்வித மாறுபாடுகளும் அற்றவராய், தூய்மையானவராய், என்றும் (எக்காலத்தும்) நீங்காது இருப்பவராய், எப்பொழுதும் (மாறுபாடில்லாத) ஒரே வடிவத்தை உடையவராய், அனைத்தையும் வெல்பவரான அந்த பரமாத்மா விஶ்ணுவை (த்யானிக்கின்றேன்).

யஸ்ய ஸ்மரண மாத்ரேன ஜன்ம ஸம்ஸார பந்தனாத் |

விமுச்யதே நமஸ்தஸ்மை விஶ்ணவே ப்ரப விஶ்ணவே ||

ஓம் நமோ விஶ்ணவே ப்ரப விஶ்ணவே

எவரை நினைத்த மாத்திரத்தில் பிறப்பு இறப்பென்னும் இந்த தளைகளிலிருந்து ஒருவர் விடுபடுகிறாரோ, அந்த பகவான் விஶ்ணுவிற்கு எனது வணக்கங்கள். அந்த பகவான் விஶ்ணுவிற்கு மீண்டும் மீண்டும் எனது வணக்கங்கள்.

—————

வைசம்பாயனோ ஜனமேஜயமுவாச:

ஶ்ருத்வா தர்மானஷேஷேன பாவனானி ச ஸர்வஶ: |

யுதிஷ்டிர: ஷாந்தனவம் புனரேவாப்யபாஷத||

 தர்மான் அப்யுதய நி:ஷ்ரேயஸோத்பத்தி ஹேதுபூதான் சோதனாலக்ஷணான் அனைத்து மங்களங்களையும் அதிகரிக்க வல்லதும்  அஷேஷேன கார்த்ஸ்ன்யேன முழுமையாக (ஒன்றும் குறைவின்றி) பாவனானி பாபக்ஷயகரானி தர்மரஹஸ்யானி பவித்ரமானதும் பாவங்களை அழிக்க வல்லதுமான தர்ம ரஹஸ்யங்களை ச ஸர்வஷ ஸர்வ ப்ரகாரை: அனைத்தும் ஷ்ருத்வா யுதிஷ்டிரோ தர்மபுத்ர: தர்மபுத்ரனான யுதிஷ்டிரன் ஷாந்தனவ ஷந்தனுசுதம் பீஷ்மம் ஸகல புருஷார்த்த சாதனம் ஸுக ஸம்பாத்யம் அல்ப ப்ரயாசம் அனல்ப ஃபலம் அனுக்தமிதி க்ருத்வா ஷந்தனு புத்திரரான பீஷ்மரிடம் கேட்டறிந்த பின்பும், அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய அடையத்தகுந்த அனைத்தையும் அளிக்கவல்லதும் (இவ்வுலக மற்றும் அவ்வுலக) இன்பத்தை தரவல்லதும் எளிமையானதும் ஆனால் மிகச்சிறந்த பலன்களை கொடுக்க வல்லதுமான எந்த ஒரு உபாயத்தையும் பீஷ்மர் கூறவில்லை என்று கருதியதால் புன: பூய மறுபடியும் (யுதிஷ்டிரன்) ஏவ அப்ய பாஷத ப்ரஶ்னம் க்ருதவான் அவரிடம் (பீஷ்மரிடம்) கேள்விகள் கேட்டார் ||1||

வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் கூறுகிறார்:-கேட்பவரின் மனதை தூய்மை படுத்த வல்லதும், பாவங்களை போக்க வல்லதுமான அனைத்து தர்மங்களையும் முழுமையாக (பீஷ்மரிடமிருந்து) கேட்டறிந்த பின்னரும், யுதிஷ்டிரர் மீண்டும் ஷந்தனுவின் புதல்வரிடம் (பீஷ்மரிடம், பின்வருமாறு) கேள்விகளைக் கேட்டார்.

2. யுதிஷ்டிர உவாச:
கிமேகம் தைவதம் லோகே கிம்வாப்யே கம் பராயணம்|
ஸ்துவந்த: கம் கமர்ச்சந்த: ப்ராப்னுயூர் மானவா: ஶுபம்||யுதிஷ்டிரர் கூறுகிறார்:
உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்? எவர் எவர் அடையத்தகுந்த இலக்காவார்? மக்கள் நன்மை அடைய யாரை துதிக்க வேண்டும்? யாரை வழிபட வேண்டும்?இந்த முதல் ஸ்லோகத்தில் நான்கு கேள்விகளை யுதிஷ்டிரர் கேட்கிறார். அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.1. முதல் கேள்வி – கிமேகம் தைவதம் லோகேகிமேகம் தைவதம்: தேவ இத்யர்த்த: ஸ்வார்த்தே தத்தித ப்ரத்யய விதானாத்
இங்கு ‘தேவன்’ (கடவுள்) என்பதைக் குறிக்கவே ‘தைவதம்’ என்ற சொல் பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது.லோகே லோகன ஹேதுபூதே ஸமஸ்த வித்யாஸ்தானே உக்தம் ‘யதாஞ்யா ப்ரவர்தந்தே ஸர்வே’ இதி ப்ரதம: ப்ரஶ்ன:

அனைத்து வித்யைகளிலும் ஞான ஸ்வரூபமாய் விவரிக்கப்படும் ஒரே கடவுள் யார்? ‘யவருடைய ஆணையினால் அனைத்து ஜீவ ராசிகளும் படைக்கப்படுகின்றன’ என்று அவரைப் பற்றி குறிப்பிடுகின்றனர். இது முதல் கேள்வியாகும்.

இந்த நிறத்தில் உள்ளவை ஸ்ருதி (வேதம் மற்றும் உபநிஶத்) வாக்யங்கள். 

கிம்வாப்யேகம் பராயணம்: அஸ்மின்லோகே ஏகம் பராயணம் ச கிம்? ஒரே ஒப்புயர்வற்ற இலக்கானவர் யார்? அதாவது இந்த உலகத்தின் (உலக மக்களின்) ஒரே இலக்கு – அடையப்படக்கூடிய இடம் / இலக்கு யார்?

பரம் மிகச்சிறந்த அயனம் சென்று ப்ராப்தவ்யம் அடையக்கூடிய ஸ்தானம் இலக்கு யஸ்மின் நிரீக்ஷதே கருதப்படுவது (யாதெனின்) –

“பித்யதே ஹ்ருதய க்ரந்திஷ் சிந்த்யதே ஸர்வ ஶம்ஶயா| க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மின் த்ருஷ்டே பராவரே||  ](முண்டக உபநிஶத் 2.2.8)”

முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:–“காரணமாகவும், கார்யமாகவும் விளங்குகின்ற அந்த ப்ரஹ்மத்தை அறிவதனால் இதயத்திலுள்ள அறியாமை என்னும் முடிச்சானது அவிழ்க்கப் படுகிறது. அனைத்து சந்தேகங்களும் நீக்கப் படுகின்றன. ஜீவாத்மாவின் அனைத்துக் கர்மங்களும் நாசமாகின்றன”

இதி ஶ்ருதே: ஹ்ருதய க்ரந்திர் பித்யதே|–என்ற ஸ்ருதி வாக்கியத்தின் படி யாரை உணர்ந்தறிவதன் மூலம் நம் மனதிலுள்ள ஐயப்பாடுகள் அனைத்தும் விலகுகின்றன (ஐயப்பாடுகள் என்னும் முடிச்சுகள்  அவிழ்ந்து போகின்றன)?

யஸ்ய விஞ்ஞான மாத்ரேண ஆனந்த லக்ஷணோ மோக்ஷ: ப்ராப்யதே யாரை அறிந்த உடனேயே ஆனந்த மயமான முக்தி (மோக்ஷம்) கிடைக்கிறதோ,

யத் வித்வான்ன விபேதி குதஸ்ஶ யாரை அறிந்தவன் எந்த பயமும் கொள்வதில்லையோ 

யத் ப்ரவிஶ்டஸ்ய ந வித்யதே புணர் பவ: எவருக்குள் (முக்தி அடைந்து அத்விதீயமாய்) ஐக்கியமானவர் மீண்டும் பிறப்பதில்லையோ 

யஸ்ய ச வேதனாத் ததேவ பவதி,  ‘ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி (முண்டக உபநிஶத் 3.2.9)’ இதி ஶ்ருதே:| ‘எவன் ப்ரஹ்மத்தை அறிகிறானோ, அவன் ப்ரஹ்மமாகவே மாறி விடுகிறான்’ என்ற வேத வாக்கியத்தின் படி யாரை அறிவதின் மூலம் மனிதன் அவராகவே (அறியப்படும் பொருளாகவே) மாறி விடுகிறானோ

யத் விஹாயாபர: பந்தா ந்ருணாம் நாஸ்தி, ‘நான்ய: பந்தா வித்யதேSயனாய (ஸ்வேதாஶ்வதர உபநிஶத் 9.15)’ இதி ஶ்ருதே:| ‘மோக்ஷத்திற்கு வேறொரு வழி இல்லை’ என்ற ஸ்வேதாஶ்வதர உபநிஶத் வாக்கியத்தின் படி எவரை விடுத்து மனிதனுக்கு (முக்தி அடைய) மற்றொரு வழியில்லையோ

ததுக்தமேகம் பராயணம் லோகே யத்தத் கிமிதி த்விதீய: ப்ரஶ்ன: | இவ்வாறு உலகத்தின் ஒரே பரம இலக்காக (மார்கமாக) கூறப்படுபவர் யார்? இது இரண்டாவது கேள்வி.

3. மூன்றாம்  கேள்வி – ஸ்துவந்த: கம்

4. நான்காம் கேள்வி – கம் அர்ச்சந்த:

கம் கதம் தேவம் எந்த தெய்வத்தின்

ஸ்துவந்த: குண ஸங்கீர்த்தனம் குர்வந்த: ஸ்துதி – அதாவது குண கீர்த்தனம் செய்வது மற்றும்

கம் கதம் தேவம் எந்த தெய்வத்திற்கு 

அர்ச்சந்த: பாஹ்யமாப்யந்தரம் சார்ச்சனம் பஹுவிதம் குர்வந்த: பல வழிகளால் அர்ச்சனம் அதாவது உள்ளும் (மனதினுள்ளும்) புறமும் (வெளி புலன்களான கை கால் வாக்கு முதலியவற்றாலும்) வழிபாடு செய்வதால்

மானவா மனு ஸுதா: மனிதர்களுக்கு 

ஶுபம் கல்யாணம் ஸ்வர்காதி ‍ஃபலம் 

ப்ராப்னுயு: லபேரந்நிதி சுபம் – அதாவது சுவர்க்கம் முதலிய நற்பலன்கள் கிடைக்கின்றன? 

புன: ப்ரஶ்னத்வயம் இவை மற்றும் இரு கேள்விகளாகும்.

கோ தர்ம: ஸர்வ தர்மானாம் பவத: பரமோ மத: |

கிம் ஜபன் முச்யதே ஜந்துர் ஜன்ம ஸம்ஸார பந்தனாத் ||

(யுதிஷ்டிரர் கூறுகிறார்):-எது அனைத்து தர்மங்களிலும் மிக சிறந்ததென்று தாங்கள் (பீஷ்மர்) கருதுகிறீர்கள்? யாரை ஜபிப்பதால் (நாம சங்கீர்த்தனம் செய்வதால்) மக்கள் ஜன்ம, ஸம்ஸார தளைகளிலிருந்து விடுபடுகிறார்கள்?

5. ஐந்தாம் கேள்வி – கோ தர்ம ஸர்வதர்மானாம் பவத: பரமோ மத:

கோ தர்ம: பூர்வோக்தலக்ஷண: முன்சொன்ன (தர்மம் என்றால் என்னவென்ற) அடையாளங்கள் பொருந்திய

ஸர்வ தர்மானாம் ஸர்வேஷாம்  தர்மானாம் மத்யே அனைத்து தர்மங்களிலும்,

பவத: பரம: ப்ரக்ருஶ்டோ (பீஷ்மராகிய) தாங்கள் மிக சிறந்த தர்மம்

மத: அபிப்ரேத என்று எதை கருதுகிறீர்கள்?

இதி பஞ்சம: ப்ரஶ்ன: இது ஐந்தாவது கேள்வியாகும்.

ஆறாம் கேள்வி –  கிம் ஜபன் முச்யதே ஜந்துர் ஜன்ம ஸம்ஸார பந்தனாத்

கிம் ஜபன் கிம் ஜப்யம் ஜபன் உச்சோபாம்ஷுமானஸலக்ஷணம் ஜபம் குர்வன் யாரை (மூன்று வகையான) ஜபம்* செய்வதால் 

ஜந்து: ஜனனதர்மா பிறப்பையடைந்த ஒரு ஜீவன்

அனேன ஜந்து ஷப்தேன ஜபார்ச்சனஸ்தவநாதிஷு யதா யோக்யம் சர்வ ப்ரானினாமதிகாரம் சூசயதி இங்கு ‘ஜந்து’ என்ற சொல்லினால் ஜபம், அர்ச்சனம் மற்றும் ஸ்லோகங்களில் (மனிதர்கள் மட்டுமல்லாது) அனைத்து ஜீவராசிகளுக்கும் தத்தம் தகுதியைப் பொறுத்து உரிமை உள்ளது என்று குறிப்பிடப் படுகின்றது 

ஜன்ம ஸம்ஸார பந்தனாத் ஜன்ம அஞ்ஞான விஜ்ரும்பிதானாம் அவித்யாகார்யானாமுபலக்ஷணம் ‘ஜன்ம’ என்ற சொல் அஞ்ஞானத்தினால் உண்டாகும் அறியாமையைக் குறிக்கின்றது. ‘ஸம்ஸாரம்’ என்பது அந்த அறியாமையின் மற்றொரு பெயராகும்*

ஸம்ஸாரோSவித்யா தாப்யாம் ஜன்ம ஸம்ஸாராப்யாம் யத்பந்தனம் தஸ்மாத் ஜன்ம-ஸம்ஸார-பந்தங்களிலிருந்து விடுபடுகிறான்?

முச்யதே முக்தோ பவதீதி இந்த ஜன்மம் மற்றும் ஸம்ஸாரத்தின் தளைகள், அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவை ஜபம் செய்வதால் எவ்வாறு உடைக்கப்படுகின்றது 

ஷஷ்ட: ப்ரஶ்ன: இது ஆறாவது கேள்வியாகும் |

முச்யதே ஜன்ம ஸம்ஸார பந்தனாதிதீதமுபலக்ஷணம் இதரேஷாம் ஃபலானாமபி ஏதத் க்ரஹணம் மோக்ஷஸ்ய ப்ராதான்யக்யாபனார்த்தம் |

‘ஜன்ம-ஸம்ஸார வடிவான பந்தத்திலிருந்து எப்படி விடுதலை கிடைக்கிறது?’ என்று கேட்பது மோக்ஷத்தின் முக்கியத்துவத்தை குறிப்பதற்கேயாகும். மோக்ஷத்தை சொல்வதன் மூலம் மற்ற பலன்களும் இதற்குள் அடங்கும் என்பது இதன் உட்பொருள்.

கிமேகமிதி ஷட் ப்ரஷ்னா: கதிதா: | தேஷு பாஷ்சாத்யோSநந்தரோ ஜப்யவிஷய: ஷஷ்ட: ப்ரஷ்னோSனேன ஸ்லோகேன பரிஹ்ரியதே |

இங்கு (யுதிஷ்டிரர்) ‘ஒரே கடவுள் யார்?’ என்று தொடக்கமாக கேட்ட ஆறு கேள்விகளில், கடைசி ‘யாரை ஜபம் செய்யவேண்டும்’ என்று கேட்கப்பட்ட ஆறாம் கேள்விக்கு முதலில் இந்த கீழ்க்கண்ட ஸ்லோகத்தின் மூலம் (பீஷ்மர்) விடையளிக்கிறார்.

ஸ்ரீபீஷ்ம உவாச:

ஜகத்ப்ரபும் தேவதேவமனந்தம் புருஶோத்தமம் |

ஸ்துவன்னாமஸஹஸ்ரேன புரு: ஸததோத்தித: || 

(பீஷ்மர் கூறுகிறார்):–உலகின் நாயகனாய், கடவுட்கெல்லாம் கடவுளாய், எல்லைகளற்று இருப்பவனான, பரம் பொருளை, எவனொருவன் (அந்த பரம் பொருளின்) ஆயிரம் திவ்ய நாமங்களை சொல்லி அன்றாடம் வழிபடுகின்றானோ அவன் அனைத்து துயரங்களிலிருந்தும் விடுபடுகின்றான்.

ஸர்வேஷாம் பஹிரந்த: ஷத்ரூனாம் பய ஹேதுர் பீஷ்ம: அனைத்து உள் மற்றும் புற எதிரிகளை பயமடைய செய்வதால் பீஷ்மர் என்று பெயர் பெற்றவரான தேவ வ்ரதர் 

மோக் ஷதர்மாதீனாம் ப்ரவக்தா ஸர்வஞ்ய: அனைத்தும் அறிந்தவர் மற்றும் மோக்ஷ தர்மத்தை போதிக்க வல்லவரும் ஆவார்

ஜகத் ஸ்தாவர ஜங்கமாத்மகம் தஸ்ய உலகிலுள்ள அனைத்து ஸ்தாவரம் (அசையாதன) மற்றும் ஜங்கமம் (அசைவன) ஆகியவற்றின் 

ப்ரபு ஸ்வாமினம் ஸ்வாமியானவரும்

தேவதேவம் தேவானாம் ப்ரஹ்மாதீனாம் தேவம் ப்ரஹ்மாதி தேவர்களுக்கும் தேவனானவரும்

அனந்த தேஷத: காலதோ வஸ்துதஷ்சாபரிச்சின்னம் தேசம் (இடம்), காலம் மற்றும் வஸ்து (பொருள் அல்லது உருவம்) ஆகிய எல்லைகள் அற்றவரும்,

புருஷோத்தமம் க்ஷராக்ஷராப்யாம் கார்யகாரணாப்யாமுத்க்ருஷ்டம் கார்ய காரண ரூபமாய் அழியும் மற்றும் அழியாதன அனைத்திற்கும் மேற்ப்பட்டவருமான புருஷோத்தமனின்

நாம ஸஹஸ்ரேன நாம்னா ஸஹஸ்ரேன குணங்களை குறிக்கும் ஆயிரம் திருநாமங்களையும், 

ஸ்துவன் குணான் சங்கீர்த்தயன் சங்கீர்த்தனம் 

ஸததோத்திதோ நிரந்தரமுத்யுக்த: தினமும் செய்யும் மனிதன் அனைத்து துயரங்களிலிருந்தும் விடுபடுகின்றான்.

புருஶ பூர்ணத்வாத் புரி ஶயனாத்வா புருஶ:–பூர்ணமானதாகவும், புரி என்று சொல்லப்படும் உடலுக்குள் சயனித்து (உறைந்து) இருப்பதாலும், ஜீவாத்மாவிற்கு ‘புருஶன்’ என்ற பெயர் உண்டு.

‘ஸர்வ து:காதிகோபவேத்’ இதி ஸர்வத்ர சம்பத்யதே ||–அடுத்து வரும் ஸ்லோகத்திலுள்ள ‘ஸர்வ து:காதிகோபவேத்’ – ‘அனைத்து துயரங்களிலிருந்தும் விடுபடுகின்றான்’ என்ற தொடரை பீஷ்மர் கூறும் அனைத்து விடைகளிலும் (ஸ்லோகங்களிலும்) சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும்.

உத்தரேன ஸ்லோகேன சதுர்த்த: ப்ரஶ்ன: சமாதீயதே–அடுத்த ஸ்லோகத்தால் நான்காவது கேள்விக்கு விடையளிக்கப்படுகிறது.

தமேவ சார்ச்சயன்நித்யம் பக்த்யா புருஶமவ்யயம் |

த்யாயம் ஸ்துவன்னமஸ்யம்ச்ச யஜமானஸ்தமேவ ச ||

அந்த பிறப்பு இறப்பற்ற பரம புருஶனை எப்பொழுதும் உள்ளும், புறமும், பூஜிப்பவனும், முக்கரணங்களாகிய வாக்கு (துதித்தல்), மனம் (தியானித்தல்) மற்றும் உடலால் (நமஸ்கரித்தல்) வணங்குபவனும் அனைத்து துயரங்களிலிருந்தும் விடுபடுகின்றான்.

தமேவ சார்ச்சயன் பாஹ்யார்ச்சனம் குர்வன் புறமாலும் (வாக்கு மற்றும் உடலாலும்) பூஜிப்பதாலும்

நித்யம் சர்வேஷு காலேஷு அனைத்து காலங்களிலும் 

பக்திர் பஜனம் தாத்பர்யம் தயா பக்த்யா பக்தி நிறைந்து

புருஶமவ்யயம் விநாஷக்ரியாரஹிதம் அந்த பிறப்பு, இறப்பு மற்றும் அழிவற்ற பரமபுருஶனை

தமேவ ச த்யாயன் ஆப்யந்தரார்சனம் குர்வன் உள்ளாலும் (மனதாலும்) அவரை த்யானிப்பதாலும்

ஸ்துவன் பூர்வோக்தேன முன்னர் கூறிய (சஹஸ்ரநாமம் போன்ற துதிகளால்) 

நமஸ்யன் நமஸ்காரம் குர்வன், பூஜாஷேஷ பூதமுபயம் ஸ்துதிநமஸ்காரலக்ஷணம் முறையான பூஜையால் துதிப்பதாலும் நமஸ்கரிப்பதாலும் 

யஜமான: பூஜக: ஃபலபோக்தா அந்த பூஜையின் பலனை அனுபவிக்கும் எஜமானன் (பூஜிப்பவன்) அனைத்து துயரங்களிலிருந்தும் விடுபடுகின்றான்

அதவா, அர்ச்சயன்னித்யனேனோபயவிதமர்ச்சனமுச்யதே அல்லது இப்படியும் நாம் புரிந்து கொள்ளலாம்: ‘அர்ச்சயன்’ என்ற சொல்லால் உள்ளும் (மனதாலும்) புறமும் (வாக்கு, உடலாலும்) செய்யப்படும் இருவகை அர்ச்சனைகள் குறிக்கப்படுகிறது

த்யாயம் ஸ்துவன்னமஸ்யம்ஸ்ச்சேத்யனேன மானசம் வாசிகம் காயிகம் சோச்யதே  ‘த்யாயன்’, ‘ஸ்துவன்’, ‘நமஸ்யம்’ இவற்றால் முக்கரணங்களாகிய மனம், வாக்கு, உடலால் செய்யப்படும் பூஜைகள் குறிக்கப்படுகிறது.

த்ருதீயம் பிரஶ்னம் பரிஹரதி உத்தரைஸ் த்ரிபி: பாதை:–அடுத்த மூன்று பாதங்களால் மூன்றாவது கேள்விக்கு விடையளிக்கப்படுகிறது.

அநாதிநிதனம் விஶ்ணும் ஸர்வலோக மஹேஶ்வரம் |

லோகாத்யக்ஷம் ஸ்துவன்னித்யம் ஸர்வது:காதிகோபவேத் ||

அநாதியானவரும், எங்கும் வ்யாபித்திருப்பவரும், அனைத்து உலகங்களுக்கும் நியமன அதிகாரிகளுக்கும் ஸ்வாமியான, மஹேச்வரரான, இந்த உலகத்தை ஆள்பவரான அந்த பரம்பொருளை எப்பொழுதும் துதிக்கும் மனிதன் (ஆத்யாத்மிகம், ஆதிதைவிகம், ஆதிபௌதிகம்) ஆகிய மூவகை துயரங்களிலிருந்தும் விடுபடுகின்றான்.

அநாதி நிதனம் ஷட் பாவ விகார வர்ஜிதம் உருவாதல், பிறத்தல், வளர்தல், மாறுதல், தேய்தல், அழிதல் ஆகிய ஆறு வகை விகாரங்களற்றபடியால் ‘அநாதியானவரும்’

விஶ்ணும் வ்யாபன ஷீலம் எங்கும் வியாபித்திருப்பதால் ‘விஶ்ணு’ என்று அழைக்கப்படுபவரும்

ஸர்வம் லோக்யதே இதி லோகோ த்ருஷ்யவர்கோ லோகஸ்தஸ்ய நியந்த்ருணாம் ப்ரஹ்மாதீநாமபீஷ்வரத்வாத் ஸர்வலோக மஹேஶ்வர: தம் கண்ணுக்கு தெரியும் (மற்றும் தெரியாத) அனைத்து பதார்த்தங்களுக்கும், இந்த உலகிலுள்ள அனைத்து பதார்த்தங்களுக்கும் நியாமகராக விளங்கும் பிரம்மா முதலானோருக்கும் ஸ்வாமியான படியால் ‘அனைத்து உலகத்திற்கும் மஹேச்வரன்’ என்று அழைக்கபடுபவரும்

லோகம் த்ருஷ்ய வர்கம் ஸ்வாபாவிகேன போதேன சக்ஷாத்பஷ்யதீதி லோகாத்யக்ஷ: தன் இயற்கையான ஞானத்தால் அனைத்தையும் அறிகின்றபடியால் அனைத்துலகங்களிலும் ஆளுமை செலுத்த வல்லவருமான அந்த பரம்பொருளை

தம் நித்யம் நிரந்தரம் எப்பொழுதும்

ஸ்துவன் ஸர்வது:காதிகோபவேத் இதி த்ர்யானாம் ஸ்தவனார்ச்சனஜபானாம் சாதாரணம் ஃபலவசனம் துதிப்பதின் மூலம் மனிதன் அனைத்து துயரங்களிலிருந்தும் விடுபடுகின்றான். இவ்வாறு இங்கு துதித்தல், அர்ச்சனை செய்தல் மற்றும் ஜபம் செய்தல்ஆகிய மூன்றிற்கும் ஒரே பலன் உரைக்கப்பட்டுள்ளது.

ஸர்வான்யாத்யாத்மிகாதீனி து:கான்யதீத்ய கச்சதீதி ஸர்வது:காதிகோ பவேத் ஸ்யாத்.

(இவ்வாறு துதிப்பதால் ஒருவன்) ஆத்யாத்மிகம் (தன் கர்மவினைகளால் ஏற்படும் துயரங்கள்), ஆதிபௌதிகம் (புயல், மழை போன்ற இயற்கை உபாதைகளால் ஏற்படும் துயரங்கள்), ஆதிதைவிகம் (நம்மை சோதிக்கும் பொருட்டு தேவதைகள் ஏற்படுத்தும் துயரங்கள்) ஆகிய மூவகை துயரங்களையும் முழுமையாக தாண்டுகிறான் அல்லது மூவகை துயரங்களிலிருந்தும் முழுமையாக விடுபடுகின்றான்.

புனரபி தமேவ ஸ்துத்யம் விஶிநஶ்டி–இதுவரை கூறப்பட்ட துதி, ஜபம் மற்றும் பூஜைக்கு உரியவரான அந்த பரம்பொருளின் விஶேஶணங்கள் (சிறப்பான லட்சணங்கள், அடுத்த ஸ்லோகத்தில்) மீண்டும் உரைக்கப்படுகிறது.

ப்ரஹ்மண்யம் ஸர்வ தர்மஞ்யம் லோகானாம் கீர்த்தி வர்த்தனம் |

லோக நாதம் மஹத் பூதம் ஸர்வபூத பவோத்பவம்||

எவரொருவர் உலகத்தை படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கும், பிராமணர்கள், தவம் மற்றும் வேதங்கள் (ஸ்ருதிகள்) ஆகியவற்றிற்கும் நன்மையை விரும்புபவரோ, அனைத்து தர்மங்களையும் அறிந்தவரோ, அனைத்து ஜீவராசிகளின் புகழை  அதிகரிப்பவரோ, அனைத்துலகையும் ஆள்பவரோ, மிக வுயர்ந்த உண்மை யானவரோ, அனைத்திற்கும் உற்பத்திஸ்தானமாய் விளங்குபவரோ அந்த பரமேஸ்வரனை துதிப்பதின் மூலம் மனிதன் அனைத்து துயரங்களிலிருந்தும் விடுபடுகின்றான்.

ப்ரஹ்மண்யம் ப்ரஹ்மணே ஸ்ரஶ்ட்ரே ப்ராஹ்மணாய தபஸே ஶ்ருதயே ஹிதம் எவரொருவர் உலகத்தை படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கும், பிராமணர்கள், தவம் மற்றும் வேதங்கள் (ஸ்ருதிகள்) ஆகியவற்றிற்கும் நன்மையை விரும்புபவரோ,

ஸர்வான் தர்மான் ஜானாதீதி ஸர்வ தர்மஞ்ய அனைத்து தர்மங்களையும் அறிந்தவரோ, 

தம் லோகானாம் ப்ராணிநாம் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும்,

கீர்த்தய: யஶாம்ஸி ஸ்வ ஶக்த்யானு ப்ரவேஶேன, வர்தயதீதி தம் தன்னுடைய சக்தியால் பிரவேசித்து (உள்நுழைந்து) அவற்றின் புகழை (கீர்த்தியை) அதிகரிப்பவரோ 

லோகைர்நாத்யதே லோகானுபதாபயதே ஶாஸ்தே லோகானாமீஶ்ட இதி வா லோகநாத: தம் அனைத்துலக ஜீவராசிகளாலும் ப்ரார்த்திக்கபடுபவரோ, அவற்றை ஆள்பவரோ,

மஹத் ப்ரஹ்ம விஶ்வோத் கர்ஶேண வர்த்தமானத்வாத் மஹத் பூதம் பரமார்த்த ஸத்யம் தன்னுடைய அபரிமிதமான சக்தியினால் முக்காலங்களிலும் (குறிப்பாக எதிர்காலத்திலும்) இருப்பதால் மிகவுயர்ந்த உண்மையானவரோ 

ஸர்வ பூதானாம் பவ: ஸம்ஸாரோ யத் ஸகாஶாதுத்பவதீதி ஸர்வ பூத பவோத்பவ: தம் எவருடைய இருப்பின்மூலமே அனைத்து ஜீவராசிகளின் உற்பத்தியும் ஸம்ஸாரத்தின் உற்பத்தியும் உண்டாவதால் அனைத்திற்கும் உற்பத்திஸ்தானமாய் விளங்குபவரோ அந்த பரமேஸ்வரனை துதிப்பதின் மூலம் மனிதன் அனைத்து துயரங்களிலிருந்தும் விடுபடுகின்றான்.

பஞ்சமம் பிரஶ்னம் பரிஹரதி (கோ தர்ம ஸர்வ தர்மானாம் பவத: பரமோ மத:)

இப்பொழுது, “பீஷ்மர் அனைத்து தர்மங்களிலும் சிறந்ததாக எதைக் கருதுகிறார்” என்ற ஐந்தாவது கேள்விக்கு விடையளிக்கப்படுகிறது.

ஏஶ மே ஸர்வதர்மானாம் தர்மோSதிகதமோ மத: |

யத் பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்சேன்னர: ஸதா||

அனைத்து தர்மங்களிலும் பகவான் வாசுதேவரை பக்தியுடன் துதிகளாலும், அர்ச்சனைகளாலும் எப்பொழுதும் தொழுவதையே சிறந்த தர்மம் என்று நான் (பீஷ்மர்) கருதுகிறேன்.

பீஷ்மரின் பதில்: துதிகள் மற்றும் அர்ச்சனைகள் நிறைந்த நாம ஸங்கீர்த்தனமே சிறந்த தர்மம்.

ஸர்வேஷாம் சோதனாலக்ஷணானாம் தர்மானாமே (வேதங்கள் மற்றும் ஸ்ருதிகளில் உரைக்கப்பட்டுள்ள) விதிமுறைப்படியுள்ள அனைத்து தர்மங்களிலும்,

வக்ஷ்யமானோ   தர்மோSதிகதமோ சிறந்த தர்மமாக

இதி மே மம நான்

மத: அபிப்ரேத: கருதுகிறேன்

யத் பக்த்யா தாத்பர்யேன உள்ளன்புடன் பக்திபூர்வமாக

புண்டரீகாக்ஷம் ஹ்ருதய புண்டரீகே ப்ரகாஶமானம் வாஸுதேவம் அனைவரின் இதய கமலத்திலும் வீற்றிருக்கும் தாமரைக் கண்ணனான பகவான் வாஸுதேவரை

ஸ்தவைர் குண ஸங்கீர்த்தன லக்ஷணை: ஸ்துதிபி: (அந்த பகவானது) திருநாமங்களை போற்றும் துதிகளால்

ஸதார்சேத் ஸத்காரபூர்வகமர்சனம் கரோதி எப்பொழுதும் அர்ச்சனை மற்றும் விதிப்படி பூஜை

நர: மனுஷ்ய ஒரு மனிதன் செய்வதையே 

இதி யத் ஏஶ தர்ம இதி ஸம்பந்த: சிறந்த தர்மமாக (நான் கருதுகிறேன்).

அஸ்ய ஸ்துதி லக்ஷணஸ் யார்ச்சனஸ் யாதிக்யே கிம் காரணம்? உச்யதே இந்த துதிகள் வடிவான அர்ச்சனை அதிக முக்கியத்துவம் பெறுவதன் காரணம் என்ன? பதில் பார்ப்போம்.

ஹிம்ஸாதி புருஶாந்தரதிரவ்யாந்தர தேஶ காலாதி நியமான(அ)பேக்ஷத்வம் ஆதிக்யே காரணம் |

(இந்த துதிகள் வடிவான அர்ச்சனையில்) (ஜீவ)ஹிம்சை போன்ற பாப கர்மங்களுக்கு இடமில்லை. மற்றும் மனிதர், திரவியங்கள், இடம், காலம் போன்ற நியமங்களும் இல்லை

ஜப யக்ஞத்தின் (நாம ஸங்கீர்த்தனத்தின்) ஏற்றம்:

இன்னார் இந்த இடத்தில இந்த பொருளை கொண்டுதான் கடவுளை துதிக்கவேண்டும் என்பதில்லை. அனைவரும் எப்பொழுதும் துதிக்கலாம்துதி வடிவான வழிபாட்டின் (நாம ஸங்கீர்த்தனத்தின்) மேன்மையை விளக்கும் ஒரு சில இதிஹாஸ, புராண மற்றும் ஸ்ம்ருதி வாக்கியங்களை ஆச்சார்யாள் மேற்கோள் காட்டுகிறார். 

த்யாயன் க்ருதே யஜன் யஞ்யைஸ் த்ரேதாயாம் த்வாபரேS(அ)ர்ச்சயன் |

யதாப்னோதி ததாப்னோதி கலௌ ஸங்கீர்த்தய கேஶவம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.2.17)

விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: க்ருத யுகமான சத்ய யுகத்தில் தியானத்தாலும் தவத்தாலும், திரேதா யுகத்தில் யாக யஞ்யங்களாலும், த்வாபர யுகத்தில் பூஜைகள் செய்வதாலும் மனிதனுக்கு என்ன பலன் கிடைத்ததோ அதே பலனை கலியுகத்தில் கேசவனான பகவான் கிருஷ்ணரின் நாம சங்கீர்த்தனம் செய்வதாலேயே அடைந்து விடுகிறான்.

ஜப்யேனைவ து ஸம்சித்யேத் ப்ராஹ்மணோ நாத்ர ஷம்ஷய: |

குர்யாதன்யன்ன வா குர்யான்மைத்ரோ ப்ராஹ்மண உச்யதே || (மனு ஸ்ம்ருதி 2.87)

மனு ஸ்ம்ருதியில் கூறப்பட்டுள்ளது: இதில் எந்தவித சந்தேஹமும் இல்லை – ஒரு பிராஹ்மணன் எந்த கர்மங்களை செய்கிறானோ அல்லவோ, அவன் (நாம) ஜபத்தால் மட்டுமே பூர்ண சித்தி யடைகிறான். எனவே தான், பிராஹ்மணன் ‘மைத்ர’ (அனைவரின் மித்திரன் அல்லது நண்பன்) என்று அழைக்கப் படுகிறான்.

ஜபஸ்து ஸர்வ தர்மேப்ய: பரமோ தர்ம உச்யதே |

அஹிம்சயா ச பூதானாம் ஜபயஞ்ய: ப்ரவர்த்ததே || (மஹாபாரதம்)

மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து தர்மங்களிலும் ஜபமே மிகச்சிறந்த தர்மமாக கருதப்படுகிறது. ஏனெனில், ஜப யஞ்யம் பிராணிகளை ஹிம்ஸிக்காமலேயே பூரணமடைகிறது.

யஞ்யானாம் ஜப யஞ்யோஸ்மி (ஸ்ரீமத் பகவத்கீதை 10.25)

பகவானும் கீதையில் கூறுகிறார்: யஞ்யங்களில் நான் ஜப யஞ்யம்…

ஏதத் ஸர்வமபிப்ரேத்ய ‘ஏஷ மே ஸர்வ தர்மானாம் தர்மோSதிகதமோ மத:’ இத்யுக்தம் ||8||

மேற்சொன்ன (இதிஹாச புராண) கருத்துக்களை ஆராய்ந்துதான் பீஷ்மர் ‘இந்த (ஜபம் துதி முதலான நாம ஸங்கீர்த்தனமாகிய) தர்மமே அனைத்து தர்மங்களிலும் மிக சிறந்தது’ என்று கூறுகிறார்.

த்விதீயம் பிரஶ்னம் ஸமாதத்தே (கிம்வாப்யேகம் பாராயணம்)  –

இப்பொழுது, “ஒரே ஒப்புயர்வற்ற இலக்கானவர் யார்? அதாவது இந்த உலகத்தின் (உலக மக்களின்) ஒரே இலக்கு – அடையப்படக்கூடிய இடம் / இலக்கு யார்?” என்ற இரண்டாவது கேள்விக்கு ஸ்ரீபீஶ்மாச்சார்யார் விடையளிக்கிறார்.

பரமம் யோ மஹத்தேஜ: பரமம் யோ மஹத் தப: |

பரமம் யோ மஹத் ப்ரஹ்ம பரமம் ய: பராயணம் ||

எவரொருவர் அனைத்திலும் உத்தமமான (ஞான) ஒளி மயமானவரோ, எவரொருவர் அனைவரையும் ஆள்பவரோ, எவரொருவர் பரப்ரஹ்மமோ, அவரே பரமமான இலக்காவார்.

(எவரொருவர்) பரமம் ப்ரக்ருஷ்டம் உத்தமம்-மஹத் ப்ருஹத் மிகப்பெரிய (அல்லது மிகச்சிறந்த)-தேஜ: சைதன்யலக்ஷணம் ஸர்வாவபாசகம் ஞான ஒளி மயமான(வரோ),

யேன ஸூர்யஸ்தபதி தேஜசேத்த: | (தைத்ரிய பிராஹ்மணம் 3.12.9)

எவருடைய ஒளியினால் பிரகாசிக்கப்பட்டு சூரியன் ஒளிவிடுகின்றானோ

தத் தேவோ ஜ்யோதிஶாம் ஜ்யோதி: (ப்ரஹதாரண்யக உபநிஶத் 4.4.16)

அவரை தேவர்கள் ஒளிகளுக்கெல்லாம் ஒளியாக (வணங்குகிறார்கள்)

ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்திரதாரகம் (முண்டக உபநிஶத் 2.2.10)

அந்த ப்ரஹ்மத்தை சூரியனால் விளக்க இயலாது (சூரிய ஒளி கொண்டு அறிய இயலாது) நிலவும், நக்ஷத்திரங்களும் விளக்க இயலாது.

இத்யாதி ஶ்ருதே இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் வாக்யங்களாலும்

யதாதித்யகதம் தேஜ: (ஸ்ரீமத் பகவத்கீதை 15.12)

சூரியனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும்

இத்யாதி ஸ்ம்ருதேஶ்ஸ்ச இது போன்ற ஸ்ம்ருதி வாக்கியங்களாலும் இது விளங்குகிறது.

பரமம் தப: தபத ஆக்ஞாபயதீதி தப: எவரொருவர் அனைவரிலும் சிறந்த ஆணை செலுத்துபவரோ (அல்லது ஆள்பவரோ),

ய இமம் ச லோகம் பரம் ச லோக(க்ம்) ஸர்வாணி ச பூதனை யோSந்தரோ யமயதி (ப்ருஹதாரண்யக உபநிஶத் 3.7.1)

எவரொருவர் இந்த உலகத்திலும், பரலோகத்திலும் மற்றும் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் அந்தர்யாமியாக இருந்தது ஆட்சி செலுத்துகிறாரோ

இத்யந்தர்யாமி ப்ராஹ்மணே ஸர்வ நியந்த்ருத்வம் ஶ்ரூயதே இந்த ஸ்ருதி வாக்கியத்தின் மூலம் அந்தர்யாமி ப்ராஹ்மனத்தில் அவர் அனைவரையும் ஆட்சி செய்பவர் என்பது கூறப்பட்டுள்ளது.

பீஶாஸ்மாத்வாத: பவதே பீஶோதேதி ஸூர்ய: | பீஶாஸ்மா தக்னிஶ்ஸ் சேந்த்ரஸ்ச ம்ருத்யுர் தாவதி பஞ்சம: (தைத்ரிய உபநிஶத் 2.8.1)

இத்யாதி தைத்ரியகே தைத்ரிய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளபடி

இவரிடம் உள்ள பயத்தினாலேயே (இவரது ஆணைக்குக் கட்டுபட்டே) காற்று வீசுகிறது, இவரிடம் உள்ள பயத்தினாலேயே சூர்யன் உதிக்கிறது, இவரிடம் உள்ள பயத்தினாலேயே அக்னி, இந்திரன் மற்றும் ஐந்தாவதுதான ம்ருத்யு தேவதை ஆகியவர்கள் (தத்தம் வேலைகளை செய்ய) ஓடுகிறார்கள்.

தபதீஶ்ட இதி வா தப: தஸ்யைஶ்வர்யம் மனவச்சின்னமிதி மஹத்வம் அனைவரையும் ‘தபிக்கிறார்’ அல்லது ஆள்கிறார் எனவே அவரை ‘தப’ என்று அழைக்கிறார்கள். மற்றும் அவரது ஐஸ்வர்யமானது (சக்தியானது) அளவிடமுடியாதது எனவே அவர் ‘மஹத்’, மிகப்பெரியவர் என்று அழைக்கப்படுகிறார்.

ஶ ஸர்வேஶ்வர: (மாண்டுக்ய உபநிஶத் 6) அவரே ஸர்வேஸ்வரன்

இத்யாதி ஶ்ருதே இது போன்ற வேத வாக்கியங்களிலும் இதுவே கூறப் பட்டுள்ளது.

(அவர்) பரமம் ஸத்யாதி லக்ஷணம் ப்ரஹ்ம ஸத்யம் முதலான (குணங்களினால்) விளங்குவதினால் ‘ப்ரஹ்மம்’ என்று அழைக்கப்படுகிறார்

மஹநீயதா மஹத் பரமம் ப்ரக்ருஷ்டம் புனராவ்ருத்தி ஷங்கா ரஹிதம் தனித் தன்மை வாய்ந்ததும் (அங்கே அடைந்தபின் இந்த பூமியில் மீண்டும் பிறப்பெடுத்து) திரும்பிவருதல் முதலிய சந்தேகங்கள் அற்றதும்

பராயணம் பரம் அயனம் பராயணம் உன்னதமான இருப்பிடமானதால் (அதற்கு) ‘பராயணம்’ என்று பெயர்.

பரம க்ராஹனாத் ஸர்வத்ர அபரம் தேஜ: ஆதித்யாதிகம் வ்யாவர்த்யதே| ஸர்வத்ர யோ தேவ இதி விஷேஷ்யதே ச – இந்த ஸ்லோகத்தில் எல்லாவிடத்திலும்  ‘பரம’ என்ற சொல் உபயோகிக்கப்பட்டுள்ளதால் சூர்யன் முதலிய வேறு ஒளிமயமானவைகள் ஒதுக்கப்படுகின்றன. எல்லாவிடத்திலும் (நாராயணனான) அந்த கடவுளின் சிறப்பு கூறப்பட்டுள்ளது –

யோ தேவ: பரமம் தேஜ: பரமம் தப: பரமம் ப்ரஹ்ம பரமம் பராயணம் ஸ ஏகம் ஸர்வ பூதானாம் பராயணமிதி வாக்யார்த்த:

எந்த கடவுள் மிகச்சிறந்த ஒளியானவரோ, மிகச்சிறந்த ஆளுனரோ, மிகச்சிறந்த ப்ரஹ்மமானவரோ மற்றும் மிகச்சிறந்த இலக்கனவரோ (இருப்பிடமானவரோ) அவரொருவரே அனைத்து ஜீவராசிகளும் சென்றடையும் சிறந்த இருப்பிடமாவார். இந்த ஸ்லோகத்தின் அர்த்தம் இதுவேயாகும்.

இதானீம் ப்ரதம ப்ரஶ்னஸ் யோத்தரமாஹ (கிமேகம் தைவதம் லோகே) –

இப்பொழுது “உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?” முதல் கேள்விக்கு விடையளிக்கிறார்.

பவித்ரானாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம் |

தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோவ்யய: பிதா ||

எவரொருவர் பவித்ரமான (புனிதமான) பொருட்களை காட்டிலும் புனிதமானவரோ, மங்களத்தை (சுகத்தை) அடையும் வழியாகவும் அதை தந்தருள்பவராகவும் மங்களமே உருவெடுத்தது போல பரமானந்த வடிவினராய் இருப்பவரோ, தனது பரமமான ஒளியாலே அனைத்து தேவர்களுக்கும் தெய்வமாக இருப்பவரோ, அழிவற்றவரோ, அனைத்தும் (அனைவரும், அனைத்து ஜீவராசிகளும்) தோன்றுவதற்குக் காரணமாக இருப்பவரோ, அவரே (அந்த நாராயணனே) முழு முதற் கடவுளாவார்.

பவித்ரானாம் பவித்ரம் பாவநானாம் தீர்த்தாதீனாம் பவித்ரம் | யார் பவித்ரமான (புனிதமான) பொருட்களை காட்டிலும் புனிதமானவரோ, அதாவது அனைவரையும் புனிதபடுத்தகூடிய புண்ணிய தீர்த்தங்கள் முதலானவைகளைக் காட்டிலும் புனிதமானவர்|

ஏன் பகவானை புனிதமானவைகளைக் காட்டிலும் புனிதமானவர் என்கிறோம்? அதற்கு ஆச்சார்யாள் இரண்டு காரணங்களை அளிக்கிறார். ஒன்று, தன்னை த்யானிப்பவர், தரிசிப்பவர், வழிபடுவோர், நினைப்போர் ஆகிய அனைவரின் பாவங்களையும் அடியோடு அழிக்கிறார். இரண்டாவது, நமது கர்ம வினைகளை  அதன் வேரான அறியாமையோடு (அஞ்ஞானம்) அழிக்கிறார்.

பரமஸ்து புமான் பரமபுருஶனான பரமாத்மா த்யாதோ தன்னை த்யானிப்பவர் த்ருஷ்ட: தரிசிப்பவர் கீர்த்தித: (அவரது புகழை) பாடுபவர் ஸ்துத: துதிப்பவர் ஸம்பூஜித: பூஜிப்பவர் ஸ்ம்ருத: ஸ்மரிப்பவர் (அவரை நினைப்பவர்) ப்ரணத: மற்றும் வணங்குபவர்களின் பாப்மன: ஸர்வாநுன்மூலயதீதி அனைத்து பாவங்களையும் அடியோடு அழிக்கிறார் பரமம் பவித்ரம் எனவே அவர் புனிதமானவைகளைக் காட்டிலும் புனிதமானவர்.

ஸம்ஸாரபந்தஹேதுபூதம் (பிறப்பு இறப்பென்னும் இந்த) ஸம்சார பந்தம் உருவாவதற்கு காரணமாயுள்ள புண்யா(அ)புண்யாத்மகம் கர்ம புண்ய பாப கர்மங்கள் தத்காரணம் சாஞானம் (ச அஞ்ஞானம்மற்றும் அந்த கர்மங்கள் உருவாவதற்குக் காரணமாயுள்ள அறியாமை (அஞ்ஞானம்) ஸர்வம் ஆகிய அனைத்தையும்  நாஷயதி ஸ்வயாதாத்ம்யஞானேனேதி தனது ஸ்வரூப ஞானத்தின் மூலம் அழிப்பதினால் வா பவித்ரானாம் பவித்ரம் அவர் புனிதமானவைகளைக் காட்டிலும் புனிதமானவராவார்.

இனி பகவானின் மேன்மை, அவரிடம் நாம் கொள்ளும் பக்தியின் ஏற்றம், நாம ஸங்கீர்த்தனத்தின் பெருமைகள் ஆகியவற்றை விளக்கும் பற்பல இதிஹாஸ, புராண, ஸ்ருதி மற்றும் ஸ்ம்ருதி வாக்கியங்களை மேற்கோள் காட்டுகிறார் ஆதிசங்கரர்.

ரூபமாரோக்ய மர்தாம்ச்ச போகான் சைவானுஷங்கிகான் |

ததாதி த்யாயதோ நித்ய மபவர்க ப்ரதோ ஹரி: ||

பகவான் ஸ்ரீ ஹரியானவர் தன்னை த்யானிப்பவர்களுக்கு முக்தியை அளிப்பதோடல்லாமல், அழகு, ஆரோக்கியம், செல்வம் மற்றும் இடைவிடாத உலக இன்பங்களையும் அளிக்கிறார்.

சிந்த்யமான: ஸமஸ்தானாம் க்லேஷானாம் ஹானிதோ ஹி ய:|

ஸமுத்ஸ்ருஜ்யாகிலம் சிந்த்யம் சோSச்யுத: கிம் ந சிந்த்யதே ||

எவரொருவர் தன்னை த்யானிப்பவர்களின் அனைத்து துன்பங்களையும் அழிக்கின்றாரோ, மற்ற சிந்தனைகளை யெல்லாம் தவிர்த்து, அந்த அச்யுதரை மட்டும் ஏன் சிந்திக்க கூடாது?

த்யாயேன் நாராயணம் தேவம் ஸ்நானாதிஷு ச கர்மஷு |

ப்ராயச்சித்தம் ஹி ஸர்வஸ்ய துஷ்க்ருதஸ்யேதி வை ஸ்ருதி: || (ஸ்ரீ கருட புராணம் 1.230.28)

ஸ்ரீ கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து ஸ்ருதிகளும் இவ்வாறு கூறுகின்றன: குளித்தல் முதலான அனைத்து (நித்ய) கர்மங்களையும் செய்யும் பொழுது பகவான் ஸ்ரீ நாராயணனை த்யானிக்க வேண்டும். இதுவே, நாம் அன்றாடம் செய்யும் தீய – பாப செயல்களுக்கு பரிகாரமாகும்.

ஸம்ஸார சர்ப்ப சந்தஷ்ட நஷ்ட சேஷ்டைகபேஷஜம் |

கிருஷ்ணேதி வைஷ்ணவம் மந்த்ரம் ஷ்ருத்வா முக்தோ பவேன்னர: ||

ஸம்ஸாரம் என்னும் பாம்பு தீண்டி மயக்கமுற்றிருக்கும் மனிதருக்கு ஒரே மருந்தானது ‘கிருஷ்ண’ என்னும் விஶ்ணுவின் திருநாமமாகும். இதை கேட்ட மாத்திரத்தில் ஒரு மனிதன் (ஸம்ஸாரமென்னும் பாம்பின் விஷத்திலிருந்து) விடுபடுகின்றான்.

கிமேகம் தைவதம் லோகே?”, “உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?” என்ற முதல் கேள்விக்கு பீஷ்மாச்சார்யார் விடையளிக்கிறார். அதற்கு உரை அளிக்கையில் ஆசார்யாள் பகவானின் மேன்மை, அவரிடம் நாம் கொள்ளும் பக்தியின் ஏற்றம், நாம ஸங்கீர்த்தனத்தின் பெருமைகள் ஆகியவற்றை விளக்கும் பற்பல இதிஹாஸ, புராண, ஸ்ருதி மற்றும் ஸ்ம்ருதி வாக்கியங்களை மேற்கோள் காட்டுகிறார்.

அதிபாதக யுக்தோSபி த்யாயன் நிமிஷ மச்யுதம் |

பூயஸ் தபஸ்வி பவதி பங்க்தி பாவன பாவன: ||

எப்பேர்பட்ட பாவங்களை செய்தவரும் ஒரு நிமிடம் (தூய மனதுடன்) பகவான் அச்யுதரை த்யானிப்பதின் மூலம் (தானும் புனிதமடைவதுடன்) மிகபெரிய தபஸ்விகளையும், வேதங்களை கற்ற சிறந்த பிராமணர்களையும் புனிதமாக்குகிறான்.

ஆலோட்ய ஸர்வ சாஸ்த்ராணி விசார்ய ச புன: புன: |

இதமேகம் சுநிஷ்பன்னம் த்யேயோ நாராயண: ஸதா || (ஸ்ரீ லிங்க புராணம் 2.7.11)

ஸ்ரீ லிங்க புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து சாஸ்திரங்களையும் கற்றறிந்து, மீண்டும் மீண்டும் விசாரம் செய்து பார்த்ததில், பகவான் ஸ்ரீமன் நாராயணனை அன்றாடம் த்யானிப்பதே அவை அனைத்தின் (அனைத்து சாஸ்த்ரங்களின்) முடிவான கருத்தாகும்.

ஹரிரேக: ஸதா த்யேயோ பவத்பி: சத்வ ஸம்ஸ்திதை: |

ஓமித்யேவம் ஸதா விப்ரா: படத த்யாத கேஶவம் || (ஸ்ரீ ஹரி வம்சம் 3.89.9)

ஸ்ரீ ஹரி வம்சத்தில் கூறப்பட்டுள்ளது: ஒ ப்ராம்மணோத்தமர்களே! நீங்கள் ஸத்வ குணத்தில் நிலைபெற்று பகவான் ஸ்ரீ ஹரியை மட்டும் த்யானியுங்கள். நீங்கள் எப்பொழுதும் ‘ஓம்’ (என்ற பிரணவ மந்திரத்தை) ஜபித்து ஸ்ரீ கேசவனை த்யானியுங்கள்.

பித்யதே ஹ்ருதய க்ரந்திஷ் சிந்த்யதே ஸர்வ ஷம்ஷயா|

க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மின் த்ருஷ்டே பராவரே|| (முண்டக உபநிஶத் 2.2.8)

முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: காரணமாகவும், கார்யமாகவும் விளங்குகின்ற அந்த ப்ரஹ்மத்தை அறிவதனால் இதயத்திலுள்ள அறியாமை என்னும் முடிச்சானது அவிழ்க்கப்படுகிறது. அனைத்து சந்தேகங்களும் நீக்கப்படுகின்றன. ஜீவாத்மாவின் அனைத்துக் கர்மங்களும் நாசமாகின்றன

யந் நாம கீர்த்தனம் பக்த்யா விலாபன மனுத்தமம் |

மைத்ரேயாசேஷ பாபானாம் தாதூனாமிவ பாவக: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.8.20)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: ஹே மைத்ரேயா!! நெருப்பானது எவ்வாறு தங்கம் முதலிய தாதுக்களில் உள்ள அசுத்தங்களை களைகிறதோ, அவ்வாறே, (அந்த ஸ்ரீமன் நாராயணனின்) அவரின் பக்தி பூர்வமான நாம சங்கீர்த்தனம் (அவ்வாறு துதிப்பவனின்) அனைத்து பாவங்களையும் சிறந்த முறையில் களைகிறது.

அவஶேனாபி யந் நாம்னி கீர்த்திதே ஸர்வ பாதகை: |

புமான் விமுச்யதே த்ய: ஸிம்ஹத்ரைஸ்தைர் வ்ருகைரிவ||–(ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.8.19)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அவரது திருநாமங்களை (நாம சங்கீர்த்தனம் செய்கிறோம் என்ற நினைவில்லாமலேயே) அனிச்சையாக கூறுபவனுக்குக் கூட அவனது சகல பாவங்களும் அவனைவிட்டு சிங்கத்தைக் கண்டு ஓநாய்கள் பயந்து ஓடுவதைப்போல ஓடிவிடுகின்றன.

த்யாயன் க்ருதே யஜன் யஞ்யைஸ் த்ரேதாயாம் த்வாபரேSர்ச்சயன் |

யதாப்னோதி ததாப்னோதி கலௌ சங்கீர்த்தய கேஶவம்–(ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.2.17)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: க்ருதயுகமான சத்யயுகத்தில் தியானத்தாலும்-தவத்தாலும், திரேதாயுகத்தில் யாக யஞ்யங்களாலும், த்வாபரயுகத்தில் பூஜைகள் செய்வதாலும் மனிதனுக்கு என்ன பலன் கிடைத்ததோ அதே பலனை கலியுகத்தில் கேசவனான பகவான் கிருஷ்ணரின் நாம சங்கீர்த்தனம் செய்வதாலேயே அடைந்து விடுகிறான்.

ஹரிர் ஹரதி பாபானி துஶ்ட சித்தைரபி ஸ்ம்ருத: |

அனிச்சயாபி ஸம் ஸ்ப்ருஶ்டோ தஹத்யேவஹி பாவக: || (ஸ்ரீ ப்ருஹன் நாரத புராணம் 1.11.100)

ஸ்ரீ ப்ருஹன் நாரத புராணத்தில் கூறப்பட்டுள்ளது: எவ்வாறு தெரியாமல் தீண்டினாலும் நெருப்பானது சுடுமோ, அவ்வாறே, பகவான் ஹரியை த்யானிப்பதால் துர்புத்தி யுடையவனின் பாவங்கள் கூட அழிக்கப் படுகின்றன.

ஞானதோ(அஞ்)ஞானதோ வாபி வாஸுதேவஸ்ய கீர்த்தனாத் |

தத் ஸர்வம் விலயம் யாதி தோயஸ்தம் லவணம் யதா ||

எவ்வாறு நீரில் இட்ட உப்பானது (அந்த நீரில்) கரைந்து விடுகின்றதோ, அவ்வாறே, அறிந்தோ அறியாமலோ பகவான் ஸ்ரீ வாசுதேவரை (நாம சங்)கீர்த்தனம் செய்வதால் அனைத்து பாவங்களும் கரைந்து விடுகின்றன.

யஸ்மின் ந்யஸ்தமதிர்ன யாதி நரகம் ஸ்வர்கோSபி யச் சிந்தனே

விக்னோ யத்ர நிவேஶிதாத்ம மனஸோ ப்ராஹ்மோSபி லோகோSல்பக:|

முக்திம் சேதஸி ய: ஸ்திதோsமலதியாம் பும்ஸாம் ததாத் யவ்யய:

கிம் சித்ரம் யதகம் ப்ரயாதி விலயம் தத்ராச்யுதே கீர்த்திதே||–(ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.8.57)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: விஶ்ணுவிடம் மனதை ஒருமுகப்படுத்தியவன் நரகத்தை அடைவதில்லை; அப்படிப்பட்டவனுக்கு ஸ்வர்க லோகம் கூட இடையூறாகவே தோன்றும்; எவனுடைய மனதும் ஆத்மாவும் விஶ்ணு மயமாகவே உள்ளதோ அவனுக்கு பிரஹ்ம லோகம் கூட துச்சமாகவே இருக்கும்; ஏனெனில், தூய உள்ளம் படைத்தோரின் ஹ்ருதயத்தில் குடி கொள்ளும் பிரபு ஸ்ரீவிஶ்ணு அவர்களக்கு முக்தியையே அளிக்கிறார். அப்படிப்பட்ட அச்யுதரை த்யானிப்பதால் பாவங்கள் அழிந்து போவதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது?

ஷமாயாலம் ஜலம் வஹ்னேஸ்தமஸோ பாஸ்கரோதய: |

ஷாந்தி: கலௌ ஹ்யகௌகஸ்ய நாமசங்கீர்த்தனம் ஹரே: ||

நெருப்பை அணைப்பதற்கு தண்ணீரைப் போலவும், இருளை போக்குவதில் சூரியனைப் போலவும், கலியுகத்தில் பாபத் திரள்களை ஸ்ரீ ஹரி நாம சங்கீர்த்தனம் போக்குகிறது.

ஹரேர் நாமைவ நாமைவ நாமைவ மம ஜீவனம் |

கலௌ நாஸ்தயேவ நாஸ்தயேவ நாஸ்தயேவ கதிரன்யதா || —(ஸ்ரீ ப்ருஹன் நாரத புராணம் 1.41.15)

ஸ்ரீ ப்ருஹன் நாரத புராணத்தில் கூறப்பட்டுள்ளது: ஹரி நாமமே, ஹரி நாமமே, ஹரி நாமமே எனது வாழ்க்கையாகும். இதை தவிர கலியுகத்தில் வேறு புகலிடம் இல்லவே இல்லை, இல்லவே இல்லை, இல்லவே இல்லை.

ஸ்துத்வா விஶ்ணும் வாஸுதேவம் விபாபோ ஜாயதே நர: |

விஶ்ணோ: ஸம்பூஜநான் னித்யம் ர்வ பாபம் ப்ரனஶ்யதி ||

எங்கும் நிறைந்துள்ள பகவான் வாசுதேவனான ஸ்ரீ விஶ்ணுவை நித்யம் துதிப்பதால் ஒரு மனிதன் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றான். பகவான் ஸ்ரீ விஶ்ணுவை தினமும் பூஜை செய்வதன் மூலம் அனைத்து பாவங்களும் அழிகின்றன.

ஸர்வதா ஸர்வகார்யேஷு நாஸ்தி தேஶாம் அமங்கலம் |

ஶாம் ஹ்ருதிஸ்தோ பகவான் மங்களாயதனோ ஹரி: ||–(ஸ்ரீ ஸ்கந்த புராணம் 5.3.157.7)

ஸ்ரீ ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது: எவரொருவரின் ஹ்ருதயத்தில் அனைத்து மங்களங்களுக்கும் இருப்பிடமான பகவான் ஸ்ரீ ஹரி வாசம் செய்கிறாரோ, அவருக்கு எந்த ஒரு காரியத்திலும் (செயலிலும்) அமங்களங்கள் ஏற்படுவதில்லை.

நித்யம் ஸஞ்சிந்தயேத்தேவம் யோக யுக்தோ ஜனார்தனம் |

ஸாஸ்ய மன்யே பரா ரக்ஷா கோ ஹினஸ்த் யச்யுதாஶ்ரயம் ||

மனதை ஒருமுகபடுத்தி பகவான் ஸ்ரீ ஜனார்தனனை த்யானிக்கவேண்டும். இதுவே அனைவருக்கும் மிகச்சிறந்த காப்பாகும் (ரக்ஷையாகும்). எவரொருவர் பகவான் ஸ்ரீ ஹரியை சரணடைந்துள்ளாரோ (பகவான் ஸ்ரீ ஹரியால் காக்கப்படுகிறாரோ), அவருக்கு யார் என்ன துன்பம் விளைவிக்க முடியும்?

கங்கா ஸ்நான ஸஹஸ்ரேஶு புஶ்கர ஸ்நான கோடிஶு |

யத் பாபம் விலயம் யாதி ஸ்ம்ருதே நஶ்யதி தத்தரௌ (தத் ஹரௌ||–(ஸ்ரீ கருட புராணம் 1.230.18)

ஸ்ரீ கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது: ஆயிரம் முறை கங்கையில் புனித நீராடுவதாலும், கோடி முறை புஶ்கரத்தில் புனித நீராடுவதாலும் எவ்வளவு பாபங்கள் கழியுமோ, அவ்வளவு பாபங்கள் பகவான் ஸ்ரீ ஹரியை நினைப்பதால் (த்யானிப்பதால்) அழிகிறது.

முஹுர்த்தமபி யோ த்யாயேந்நாராயணம் அனாமயம் |

ஸோSபி ஸித்திம் அவாப்னோதி கிம்புனஸ்தத்பராயண: ||

எவரொருவர் அழிவற்ற பகவான் ஸ்ரீ நாராயணனை ஒரு முஹூர்த்த காலம் மட்டுமே தியானம் செய்கிறாரோ, அவரும் அனைத்து ஸித்திகளையும் அடைகிறார்; பிறகு, பகவான் ஸ்ரீ நாராயணனை எப்பொழுதும் சரணடைந்துள்ளாரோ அவரைப் பற்றி (அவர் அடையும் பலன்களைப் பற்றி) என்னவென்று கூறுவது?

ப்ராயச்சித்தான் யசேஶானி தப: கர்மாத்மகானி வை |

யானி தேஶாம் அஶேஶானாம் கிருஷ்ணானுஸ்மரணம் பரம் ||-(ஸ்ரீ விஶ்ணு புராணம் 2.6.39)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: தவம் மற்றும் கர்ம முறைகளாக கூறப்பட்டுள்ள அனைத்து வகை ப்ராயசித்தங்களைக் காட்டிலும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை த்யானிப்பதே (நமது பாவங்கள் தொலைவதற்கான) மிகச்சிறந்த ப்ராயச்சித்தமாகும்.

(இந்த ஸ்லோகம் ஸ்ரீ விஶ்ணுபுராணத்தின் மிகச்சிறந்த ஸ்லோகமாகக் கருதப்படுகிறது. இந்த ஸ்லோகம் அனைவராலும் நித்ய பாராயணம் செய்யத்தக்கதாகும்).

கலி கல்மமத்யுக்ரம் நரகார்த்தி ப்ரதம் ந்ருணாம் |

ப்ரயாதி விலயம் ஸத்ய: ஸக்ருத்யத்ராபி ஸம்ஸ்ம்ருதே || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.8.21)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த கலி யுகத்தில் நரகத்தை அடைவிக்க வல்ல எப்பேர்பட்ட கொடிய தோஷங்களும், பகவான் ஸ்ரீ ஹரியை ஒரு முறை நினைப்பதின் (த்யானிப்பத்தின்) மூலம் அழிந்து விடுகின்றன.

ஸக்ருத்ஸ்ம்ருதோSபி கோவிந்தோ ந்ருணாம் ஜன்மஷதை: க்ருதம் |

பாபராஶிம் தஹத்யாஶு தூலராஶிமிவானல: ||

எவ்வாறு நெருப்பானது பஞ்சுப்பொதிகளை உடனே எரித்து விடுமோ, அவ்வாறே நூற்றுக் கணக்கான ஜன்மங்களாய் சேர்த்து வைத்த பாபக் கூட்டங்கள் பகவான் ஸ்ரீ கோவிந்தனை ஒரு முறை நினைப்பதின் (த்யானிப்பத்தின்) மூலம் எரிக்கப்படுகின்றன.

யதாக்னிருத்ததஷிக: கக்ஷம் தஹதி சானில: |

ததா சித்தஸ்திதோ விஶ்ணுர் யோகிநாம் சர்வ கில்பிஷம் ||-(ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.7.74)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: எவ்வாறு காற்றுடன் கூடிய நெருப்பானது உயர உயர எழுந்து வைக்கோல் பொதிகளை எரித்து விடுமோ, அவ்வாறே பகவான் ஸ்ரீ விஶ்ணு யோகிகளின் ஹ்ருதயத்தில் வீற்றிருந்து அவர்களின் அனைத்து தோஷங்களையும் அழிக்கிறார்.

ஏகஸ்மின்னப்யதி க்ராந்தே முஹூர்த்தே த்யான வர்ஜிதே |

தச்யுபிர் முஷிதேனேவ யுக்தமா கிரந்திதும் ப்ருஷாம்||

திருடர்களால் நமது பொருட்கள் திருடப்பட்டால் எவ்வாறு துக்கப்பட்டு அழுவோமோ, அவ்வாறு (பகவான் ஸ்ரீ ஹரியை) த்யானிக்காமல் ஒரு முஹூர்த்தம் நேரம் கழிந்தாலும் அழுது வருந்த வேண்டும்.

ஜனார்தனம் பூத பதிம் ஜகத் குரும் ஸ்மரன் மனுஷ்ய: ஸததம் மஹாமுனே |

து:க்கானி ஸர்வான் யபஹந்தி ஸாதயத்யசேஷ கார்யாணி ச யான்ன பீப்ஸதே ||

ஹே மஹா முனியே!! அனைத்து ஜீவராசிகளுக்கும் பிரபுவும், அனைத்துலகத்திற்கும் குருவானவருமான பகவான் ஸ்ரீ ஜனார்தனனை நித்தம் த்யானிப்பதன் மூலம் ஒரு மனிதர்கள் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபடுவதோடல்லாமல், அவரவர்கள் ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

ஏவமேகாக்ரசித்த: ஸன் ஸம்ஸ்மரன் மதுசூதனம் |

ஜன்ம ம்ருத்யு ஜராக்ராஹம் ஸம்ஸாராப்திம் தரிஷ்யதி ||

இவ்வாறு ஒருமித்த மனதோடு பகவான் ஸ்ரீ மதுசூதனனை த்யானிப்பதால் ஒரு மனிதன், பிறப்பு, இறப்பு மற்றும் மூப்பு போன்ற முதலைகள் நிறைந்திருக்கும் ஸம்ஸாரம் எனும் பெருங்கடலைத் தாண்டுகிறான்.

கலாவத்ராபி தோஷாட்யே விஷயாஸக்தமானஸ: |

க்ருத்வாபி ஸகலம் பாபம் கோவிந்தம் ஸம்ஸ்மரண் சுசி: ||

இந்த தோஷங்கள் நிறைந்த கலியுகத்தில், ஒரு மனிதன், விஷயசுகத்தில் மனதை லயிக்க விட்டு பாவங்களை புரிந்திருந்தாலும், பகவான் ஸ்ரீ கோவிந்தனை த்யானிப்பத்தின் மூலம் தூய்மை அடைகிறான்.

வாசுதேவே மனோ யஸ்ய ஜபஹோமார்ச்சனாதிஷு |

தஸ்யாந்தராயோ மைத்ரேய தேவேந்த்ரவாதிகம் ஃபலம் ||(ஸ்ரீ விஶ்ணு புராணம் 2.6.41)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: ஹே மைத்ரேயா!! எவரொருவரின் மனது ஜபம், ஹோமம் மற்றும் அர்ச்சனை ஆகிய செயல்களை செய்யும் பொழுது பகவான் ஸ்ரீ வாசுதேவரிடம் ஒருமுகப்படுத்தப்பட்டுள்ளதோ, அவர்களுக்கு (பகவானை த்யானிப்பதற்கு இடையூறாக இருக்குமென்பதால்) தேவேந்திர பதவி கூட இடராகவே தோன்றும்.

லோகத்ர்யாதிபதி மப்ரதிம ப்ரபாவமீஷத் ப்ரணம்ய சிரஸா பிரப விஶ்ணுமீஷம் |

ஜன்மாந்தர ப்ரளய கல்ப ஸஹஸ்ர ஜாதமாஷு ப்ரணாஷமுபயாதி நரஸ்ய பாபம் ||

ஆயிரம் மஹாகல்பங்களிலும், பிரளயங்களிலும், ஜன்ம ஜன்மங்களிலும் செய்த பாவங்கள் கூட, மூவுலகின் ஸ்வாமியும், தன்னிகரில்லா சக்திபடைத்தவரும், அனைவரையும் ஆள்பவரான பகவான் ஸ்ரீ விஶ்ணுவை சிறிது நேரம் தலை வணங்குவதாலேயே அழிந்து விடுகின்றன.

ஏகோSபி க்ருஷ்ணஸ்ய க்ருத: ப்ரணாமோ தசாஷ்வமேதாவப்ருதேன துல்ய: |

தசாஷ்வமேதி புனரேதி ஜன்ம கிருஷ்ண ப்ரணாமி ந புனர் பவாய ||–(மஹா பாரதம், ஶாந்தி பர்வம் 47.90)

மஹாபாரதம் ஶாந்திபர்வத்தில் கூறப்பட்டுள்ளது: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை ஒரு முறை வணங்குதல், பத்து அஸ்வமேத யாகங்கள் புரிந்து, முடிவில் (அந்த யாகத்தின் முடிவில் அவப்ருத ஸ்நானமாக) குளிப்பதற்கு சமமானது. அதிலும் பத்து அஸ்வமேத யாகங்களில் (அந்த யாகத்தின் முடிவில் அவப்ருத ஸ்நானமாக) குளிப்பவனுக்குக்கூட மறுஜென்மம் உண்டு; ஸ்ரீ கிருஷ்ணரை வணங்குபவர்களுக்கு மறுஜென்மம் இல்லை.

அதஸீபுஷ்ப ஶங்காஷம் பீத வாஸஸம் அச்யுதம் |

யே நமஸ்யந்தி கோவிந்தம் ந தேஷாம் வித்யதே பயம் ||-(மஹா பாரதம், ஶாந்தி பர்வம் 47.91)

மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது: ஆளிபூவைப்போல (கருநீல) நிறம்படைத்தவரும், மஞ்சள்வர்ண பட்டாடை உடுத்தி யிருப்பவருமான பகவான் ஸ்ரீ அச்யுதன் கோவிந்தனை யார் வணங்குகிறார்களோ, அவர்களுக்கு எந்த வித பயமும் இல்லை.

ஷாட்யேனாபி நமஸ்கார: ப்ரயுக்தஸ் சக்ரபாணயே |

ஸம்ஸார ஸ்தூல பந்தானாமுத்வே ஜனகரோ ஹி ஸ: ||

சக்ரபாணியான பகவான் ஸ்ரீ விஶ்ணுவிற்கு (மனதில் பக்தியின்றி) தவறான எண்ணத்தோடும் கர்வத்தோடும், செய்யப்படும் நமஸ்காரங்கள் கூட ஸம்ஸாரம் என்னும் மரத்தின் வேரை வெட்டிவிடும்.

இத்யாதிஸ்ருதிஸ்ம்ருதீதிஹாஸபுராண வசனேப்ய: |(இத்யாதி ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராண வசனேப்ய:)

இப்படிப்பட்ட வேத, ஸ்ம்ருதி, இதிஹாஸ, புராண வாக்கியங்களிலிருந்து (பகவான் ஸ்ரீ விஶ்ணுவும், அவரது நாம ஸங்கீர்த்தனமும் புனிதமானவைகளைக் காட்டிலும் புனிதமானவர்  -புனிதம் என்பது நிரூபணமாகிறது).

“கிமேகம் தைவதம் லோகே?”, “உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?” என்ற முதல் கேள்விக்கு விடையாக பீஷ்மாச்சார்யார், 

“பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம் |

தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோவ்யய: பிதா ||”-என்று கூறுகிறார்.

இப்பொழுது அந்த ஸ்லோகத்தின் “மங்களானாம் ச மங்களம்” தொடங்கி மீதமுள்ள பதங்களுக்கு ஆச்சார்யாள் உரை அளிக்கிறார்.

மங்களானாம் ச மங்களம் மங்களம் சுகம் சுகம் மங்களம் என்று கூறப்படுகிறது தத் ஸாதனம் அதை அடையும் வழியாகவும் தஞ்ஞாபகம் ச அதை தருபவராகவும், தேஷாமபி பரமானந்த லக்ஷணம் பரம் மங்களமிதி அவர் மங்களமே உருவெடுத்தது போல பரமானந்த வடிவினராய் இருப்பதால் மங்களானாம் ச மங்களம் (பகவான் ஸ்ரீ விஶ்ணு) மங்களமானவைகளை காட்டிலும் மங்களமானவர் என்று அழைக்கப்படுகிறார்.

தைவதம் தேவதானாம் ச தேவானாம் தேவ: அனைத்து தேவர்களுக்கும் தேவர், த்யௌதனாதிபி: ஸமுத்கர்ஷேண வர்த்தமானத்வாத் தனது ஒளி (ப்ரகாசம்) முதலியவற்றால் அனைவரை காட்டிலும் மேலானவர்.

பூதானாம் ய: அவ்யய: வ்யயரஹித் அழிதலற்றவரும் பிதா ஜனகோ யோ தேவ: அனைத்து ஜீவராசிகளையும் தோற்றுவித்தவருமான கடவுளே, ஸ ஏகம் தைவதம் லோக இதி வாக்யார்த்த: இவ்வுலகில் ஒரே முழுமுதற் கடவுளாவார் என்பதே இந்த வாக்கியத்தின் பொருளாகும் (இதுவே யுதிஷ்டிரன் கேட்ட ‘கிமேகம் தைவதம் லோகே’ என்ற முதல் கேள்வியின் விடையாகும்).

ஏகோ தேவ: ஸர்வபூதேஷு கூட: ஸர்வவ்யாபி ஸர்வபூதாந்தராத்மா |

கர்மாத்யக்ஷ: சர்வபூதாதிவாஸ: சாக்ஷி சேதா கேவலோ நிர்குணச்ச || (ஸ்வேதாஷ்வர உபநிஶத் 6.11)

ஸ்வேதாஷ்வர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவர் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் மறைந்து இருக்கிறாரோ, எங்கும் நிறைந்து இருக்கிறாரோ, அனைத்து ஜீவராசிகளின் உள்ளுறையும் ஆத்மாவாக இருக்கிறாரோ, (அந்த ஜீவராசிகளின்) கர்மங்களை (கர்மங்களின் பலன்களை அளிப்பதன் மூலம்) நிர்வகிக்கிறாரோ, அனைத்து ஜீவராசிகளையும் நிலைநிறுத்துகிறாரோ, அனைத்திற்கும் சாட்சியாக இருக்கிறாரோ, அனைவருக்கும் தன்னுனர்வைத் தருகிறாரோ, அந்த நிர்குணமானவரே ஒரே தெய்வமாவார்.

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்

யோவை வேதாம்ஸ்ச ப்ரஹினோதி தஸ்மை |

தம்ஹ தேவம் ஆத்ம புத்தி ப்ரகாஶம்

முமுக்ஷுர்வை ஶரணமஹம் ப்ரபத்யே || (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.18)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவர் முதலில் நான்முகக் கடவுளான ப்ரஹ்மாவை படைத்து அவருக்கு வேதங்களை உபதேசித்தாரோ (அளித்தாரோ), எவர் நமது ஆத்மஞானத்தை ஒளியூட்ட வல்லவரோ, அந்த தெய்வத்தை முக்தியை விரும்பும் நான் சரணடைகிறேன்.

‘சேயம் தேவதைக்ஷத’ (சாந்தோக்ய உபநிஶத் 6.3.2)

‘ஏகமேவாத்விதீயம்’ (சாந்தோக்ய உபநிஶத் 6.2.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ‘அந்த ஆதி முழு முதற்கடவுள் நினைத்தார்’; ‘அவர் இரண்டற்ற ஒருவராவார் (அத்விதீய)’

நனு கதம் ஏகோ தேவ: ஜீவ பரயோர்பேதாத்?

கேள்வி: ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறுபட்டவர்கள்; அவ்வாறிருக்க, கடவுள் ஒருவரே என்று எவ்வாறு கூறமுடியும்?

ந பதில்:அப்படி கூற இயலாது.

(ஆதி சங்கரர் தானே இந்த கேள்வியைக் கேட்டு, இதன் விடையாக தனது அத்வைத கொள்கையின் சாரத்தை கூறுகிறார். அத்வைதமாவது ‘ப்ரஹ்ம ஸத்யம், ஜகன் மித்யா, ஜீவோ ப்ரஹ்மைவ நாபர:’ – ‘ப்ரஹ்மம் ஒன்றே உண்மை. இவ்வுலகம் மற்றும் அதில் காணப்படும் அனைத்தும் கானல் நீர் போல் நிலையற்றது. ஜீவாத்மாவிற்கும், பரமாத்மாவிற்கும் வேறுபாடு கிடையாது. இரண்டும் ஒன்றே. அந்த ப்ரஹ்மத்தை தவிர இரண்டாவது தத்துவமே இல்லை என்பதாகும்).

‘தத்ஸ்ருஷ்டா ததேவானுப்ராவிஷத்’ (தைத்ரிய உபநிஶத் 2.6)

தைத்ரிய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: தானே அவற்றை படைத்து, அதனுள் பிரவேசித்தார்

‘ஸ ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆனகாக்ரேப்ய:’ (ப்ரஹதாரண்ய உபநிஶத் 1.4.7)

ப்ரஹதாரண்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ‘அவர் இந்த உடலில் நகம் முதற்கொண்டு (தலை வரை) எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார்’

இத்யாதி ஸ்ருதிப்யோSவிக்ருதஸ்ய பரஸ்ய புத்தி தத்வ்ருத்திசாக்ஷித்வேன பிரவேஷஷ்ராவணாதபேத: |

இந்த ஸ்ருதி வாக்கியங்கள் ‘மாறுதலற்ற அந்த பரமாத்மாவே புத்தி மற்றும் அதன் விரிவான இந்த சரீரத்தில் சாக்ஷி ரூபமாய் உள்நுழைந்து, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்’ என்று கூறுகின்றன. எனவே, ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் வேற்றுமை கிடையாது (இரண்டும் ஒன்றே).

ப்ரவிஷ்டானாமிதரேதரபேதாத் பராத்மைகத்வம் கதமிதி சேத்?

கேள்வி: உள்நுழைந்தார் என்றால் (உள்ளே இருப்பதான) ஜீவத்மாவும்(சாட்சியாக உள்நுழைந்த) பரமாத்மாவும் ஒன்று என்று எவ்வாறு கூறுவது?

ந பதில்:அப்படி அல்ல

‘ஏகோ தேவ: பஹுதா சந்நிவிஷ்ட:’ (தைத்ரிய ஆரண்யகம் 3.14)

தைத்ரிய ஆரண்யகத்தில்  கூறப்பட்டுள்ளது: ஒருவரே கடவுள்; அவரே பலவாறாக நிலை பெற்றிருக்கிறார்.

‘ஏக: சன் பஹுதா விசார:’ (தைத்ரிய ஆரண்யகம் 3.11)

தைத்ரிய ஆரண்யகத்தில்  கூறப்பட்டுள்ளது: அந்த ஒருவரே பலவாறாக எண்ணப்படுகிறார்.

‘த்வமேகோSஸி பஹுனனுப்ரவிஷ்ட:’ (தைத்ரிய ஆரண்யகம் 3.14)

தைத்ரிய ஆரண்யகத்தில்  கூறப்பட்டுள்ளது: தாங்கள் ஒருவரே பலவற்றிலும் உள் நுழைந்திருக்கிறீர்

இத்யேகஸ்யைவ பஹுதா பிரவேஷஷ்ரவணாத் பிரவிஷ்டானாம் ச ந பேத: |

இந்த ஸ்ருதி வாக்கியங்களில் ஒருவரே பலவாறாக மாறி, பலவற்றின் உள்நுழைந்தார் என்று கூறப்படுகின்றது. எனவே, உள்நுழைந்த பரமாத்மாவிற்கும், உள்ளே உறையும் ஜீவாத்மாவிற்கும் வேறுபாடுகள் கிடையாது.

‘ஹிரண்யகர்ப்ப:’ (ரிக் வேதம் 10.121.1) இத்யஷ்டௌ மந்த்ரா: |

ரிக் வேதத்தில் ‘ஹிரண்யகர்ப்ப:’ என்று தொடங்கி எட்டு மந்திரங்கள் உள்ளன.

‘கஸ்மை தேவாய’ (தைத்ரீயகம்)

இத்யத்ர ஏகார லோபேநைகதைவத பிரதிபாதக ஸ்தைத்ரீயகே |

‘கஸ்மை தேவாய’ என தொடங்கும் தைத்திரீயக ஸ்ருதியிலும் (இந்த வாக்கியத்தின்) தொடக்கத்தில் ஏகாரம் மறைந்து இருக்கிறது (அதாவது அந்த ஸ்ருதியில் கஸ்மை என்பதற்கு பதில் ஏகஸ்மை என்று பொருள் கொள்ள வேண்டும்)எனவே, இந்த மந்திரமும் ஒன்றே தெய்வம் என்றே கூறுகின்றன.

அக்னிர்யதைகோ புவனம் பிரவிஷ்டோ ரூபம் ரூபம் பிரதிரூபோ பபூவ |

ஏகஸ் ததா ஸர்வ பூதாந்தராத்மா ரூபம் ரூபம் பிரதி ரூபோ பஹிச்ச ||–கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது:

எவ்விதம் உலகில் உள்ள ஒரே நெருப்பானது ஒவ்வொரு பொருளிலும் அப்பொருளின் உருவமாகத் தோன்றுகிறதோ, அவ்விதம் எல்லா ஜீவர்களுக்குள்ளும் இருக்கும் ஒரே ஆத்மா ஒவ்வொரு உடலிலும் அந்த உடலின் வடிவில் தோன்றுகிறது. வெளியேயும் உள்ளது.

வாயுர்யதைகோ புவனம் பிரவிஷ்டோ ரூபம் ரூபம் பிரதி ரூபோ பபூவ |

ஏகஸ் ததா ஸர்வ பூதாந்தராத்மா ரூபம் ரூபம் பிரதி ரூபோ பஹிச்ச ||–கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது:

எவ்விதம் உலகில் உள்ள ஒரே வாயுவானது ஒவ்வொரு பொருளிலும் அப்பொருளின் உருவமாகத் தோன்றுகிறதோ, அவ்விதம் எல்லா ஜீவர்களுக்குள்ளும் இருக்கும் ஒரே ஆத்மா ஒவ்வொரு உடலிலும் அந்த உடலின் வடிவில் தோன்றுகிறது. வெளியேயும் உள்ளது

ஸூர்யோ யதா ஸர்வ லோகஸ்ய சக்ஷூர்னலிப்யதே சாக்ஷுஷைர் பாஹ்யதோஶை: |

ஏகஸ் ததா ஸர்வ பூதாந்தராத்மா ந லிப்யதே லோகது:கேன பாஹ்ய: ||–கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது:

அனைத்து உலகிற்கும் கண்ணாக விளங்கும் சூரியன், (அந்த ஒளியை கொண்டு பார்க்கப்படும்) பார்வையில் உள்ள குறைகளாலும் வெளியே (காட்சிப் பொருட்களில்) உள்ள குறைகளாலும் எவ்வாறு பாதிக்கபடுவதில்லையோ, அவ்விதம், எல்லா ஜீவர்களுக்குள்ளும் இருக்கும் ஒரே ஆத்மா உலகத்தினுடைய துன்பங்களால் பாதிக்கப்படுவதில்லை. (அந்த ஆத்மா) அனைத்தையும் கடந்தும் உள்ளது.

ஏகோ வஷீ ஸர்வ பூதாந்தராத்மா ஏகம் ரூபம் பஹுதா ய: கரோதி |

தமாத்மஸ்தம் யேSனுபஶ்யந்தி தீராஸ்தேஶாம் ஶாஸ்வதம் நேதரேஶாம் ||–கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது:

எந்த ஒன்று அனைத்தையும் தன வசத்தில் வைத்துள்ளதாகவும், எல்லா ஜீவர்களுக்குள்ளும் ஆத்மாவாக இருந்துகொண்டும் தன்னுடைய ஒரு ரூபத்தை பலவாறாக வெளிப்படுத்துகிறதோ, அந்த ஆத்மாவை உடலில் வெளிப்படுவதாக எந்த தீரர்கள் அறிகிறார்களோ, அவர்களுக்கு நிலையான ஸுகம் கிடைக்கிறது. மற்றவர்களுக்கு இல்லை.

நித்யோ நித்யானாம் சேதனஸ் சேதனானாம் ஏகோ

பஹூனாம் யோ விததாதி காமான் |

தமாத்மஸ்தம் யேSனுபஷ்யந்தி தீராஸ்

தேஶாம் ஶாஸ்வதீ நேதரேஶாம் || (கடோபநிஷத் 2.2.9 – 2.2.13)-கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது:

எந்த ஒன்று அழிவனவற்றுள் அழியாததாகவும், உயிரினங்களுக்குள் உயிராகவும் அனைவருடைய ஆசைகளையும் பூர்த்தி செய்கிறதோ, அந்த ஆத்மாவை உடலில் வெளிப்படுவதாக எந்த தீரர்கள் அறிகிறார்களோ, அவர்களுக்கு நிலையான அமைதி கிடைக்கிறது. மற்றவர்களுக்கு இல்லை.

இதி காடகே (அக்னிர்யதைகோ தொடக்கமாக) இவ்வாறு கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

ப்ரஹ்ம வா இதமக்ர ஆஸீதேகமேவ ததேகம் ஸன்ன வ்யபவத் (ப்ருஹதாரண்யக உபநிஶத் 1.4.11)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஆரம்பத்தில் அந்த ப்ரஹ்மம் ஒன்றே இருந்தது. தனித்து இருந்ததினால் அந்த ப்ரஹ்மம் கர்மங்களை புரியவில்லை.

நான்யததோSஸ்தி த்ரஷ்டா (ப்ருஹதாரண்யக உபநிஶத் 3.7.23)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அதை (அந்த ப்ரஹ்மத்தை) தவிர பார்ப்பதற்கு எதுவும் இல்லை

இத்யாதி ப்ருஹதாரண்யகே இவ்வாறு ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

அனேஜதேகம் மனஸோ ஜவீய: (ஈசாவாஸ்ய உபநிஶத் 4)

ஈசாவாஸ்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த ஆத்ம தத்துவம் சலனமற்றது. அனைவருக்குள்ளும் ஒன்றாக இருக்கிறது. மனத்தைக் காட்டிலும் வேகமாக செல்கிறது.

தத்ர கோ மோஹ: க: சோக ஏகத்வமனுபஶ்யத: (ஈஶாவாஸ்ய உபநிஶத் 7)

ஈஶாவாஸ்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஒருமையைப் பார்க்கின்ற அவருக்கு மோகம் எது? சோகம் எது? (ஒருமையைப் பார்க்கின்றவனாகவும் உண்மையை அறிபவனாகவும் உள்ளவனுக்கு எப்பொழுது எல்லா உயிரினங்களும் ஆத்மாவகவே ஆனதோ, அப்பொழுது அவருக்கு மோகம் எது? சோகம் எது?)

இதி ஈஶாவாஸ்யே இவ்வாறு ஈஶாவாஸ்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸின்னான்யத்கிஞ்சன மித் (ஐத்ரேய உபநிஶத் 1.1)

ஐத்ரேய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஆரம்பத்தில் இந்த ஆத்மா (ப்ரஹ்மம்) ஒன்றே இருந்தது; வேறு எந்த (செயல் புரியும்) வஸ்துவும் இல்லை.

ஸர்வேஶாம் பூதானாமந்தர: புருஶ: ஸ ம ஆத்மேதி வித்யாத் (ஐத்ரேய ஆரண்யகம் 3.4.10)

ஐத்ரேய ஆரண்யகத்தில் கூறப்பட்டுள்ளது: இவ்வாறு அறிந்துகொள்வாய் – அனைத்து ஜீவராசிகளிலும் உள்ளுறையும் புருஶனே எனக்குள்ளும் ஆத்மாவாக இருக்கிறார்.

ஏகம் ஸத்விப்ரா பஹுதா வதந்தி (ரிக் வேத ஸம்ஹிதா 1.22.164.46)

ரிக் வேத ஸம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது: அந்த (ப்ரஹ்மம்) ஒன்றையே ப்ராஹ்மணர்கள் (ப்ரஹ்மத்தை உணர்ந்தவர்கள்) பலவாறாகக் கூறுகிறார்கள்.

ஏகம் ஸந்தம் பஹுதா கல்பயந்தி (ரிக் வேதம்)-ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த (ப்ரஹ்மம்) ஒன்றையே பலவாறாக (இருப்பதாக) கற்பனை செய்கிறார்கள்.

த்யாவாபூமி ஜனயன்தேவ ஏக: | (ரிக் வேதம்)-ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த கடவுள் ஒருவரே இந்த உலகம் மற்றும் ஸ்வர்க்கத்தை உருவாக்கினார்.

ஏகோ தாதார புவனானி விஷ்வா  (ரிக் வேதம்)-ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது: அவர் தானே அனைத்து உலகங்களையும் தாங்குகிறார்.

ஏக ஏவாக்னிர்பஹுதா ஸமித்த: (ரிக் வேதம்)-ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது: பலவகையாய் எரியும் நெருப்பானது ஒன்றே (அதைப்போல பலவாறாக தெரியும் ப்ரஹ்மமும் ஒன்றே)

இதி ரிக்வேதே (ஆத்மா வா இதமேக தொடக்கமாக) இவ்வாறு ரிக்வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஸதேவ ஸோம்யேதமக்ர ஆஸிதேகமேவாத்விதீயம் (சாந்தோக்ய உபநிஶத் 6.2.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஹே ஸோம்ய!! தொடக்கத்தில் அந்த (ப்ரஹ்மம்) ஒன்றே இருந்தது

இதி சாந்தோக்யே இவ்வாறு சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

ஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வமாஸ்தித: |

ஸர்வதா வர்த்தமானோSபி ஸ யோகி மயி வர்த்ததே || (ஸ்ரீமத் பகவத்கீதை 6.31)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: ஒருமையில் நிலைகொண்டவனாய் எல்லா உயிர்களிடத்திலுமுள்ள என்னை தொழுவோன், யாங்கணும் சென்றபோதிலும், அந்த யோகி என்னுள்ளேயே இயலுகிறான்.

வித்யா வினய ஸம்பன்னே ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி |

சுனிஸ்ஶைவ ஶ்வபாகே ச பண்டிதா: ஸமதர்ஶின: || (ஸ்ரீமத் பகவத்கீதை 5.18)

ஸ்ரீ பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்: கல்வியும் விநயமும் நன்கு கற்ற பிராமணனிடத்திலும், பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும், நாயை தின்னும் புலையனிடத்தும், பண்டிதர் சமபார்வையுடையோர்.

அஹமாத்மா குடாகே ஸர்வபூதாயஸ்தித: |

அஹமாதிஶ்ச்ச மத்யம் ச பூதானாமந்த ஏவ ச || (ஸ்ரீமத் பகவத்கீதை 10.20)

ஸ்ரீ பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்: அர்ஜுனா!! உயிர்களனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா நான். அவ்வுயிர்களின் ஆதி நான், இடையும் அவற்றின் இறுதியும் யானே

யதா பூதப்ருதக்பாவமேகஸ்தமனுபஶ்யதி |

தத ஏவ ச விஸ்தாரம் ப்ரஹ்ம ஸம்பத்யதே ததா || (ஸ்ரீமத் பகவத்கீதை 13.30)

ஸ்ரீ பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்: பலவகைப்பட்ட பூதங்கள் ஒரே ஆதாரமுடையன என்பதை அறிவானாயின், அப்போது, அதனின்றும் விஸ்தாரமான ப்ரஹ்மத்தை அடைகிறான்.

ஸர்வதர்மான்பரித்யஜ்ய மாமேகம் ரணம் வ்ரஜ |

அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஶ்யாமி மா ஶுச: || (ஸ்ரீமத் பகவத்கீதை 18.66)

ஸ்ரீ பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்: எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு. எல்லா பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப் படாதே.

இதி கீதோபநித்ஸு இவ்வாறு ஸ்ரீ பகவத் கீதையில் (கீதோபநிஶத்தில்) பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

அதன் தொடர்ச்சியாக ஹரிவம்ஶம், ஸ்ரீவிஶ்ணு புராணம் போன்ற இதிஹாஸ, புராண நூல்களிலிருந்தும், மனு ஸ்ம்ருதியிலிருந்தும்    சில மேற்கோள்களை இன்று காண்போம்.

ஹரிரேக: ஸதா த்யேயோ பவத்பி: ஸத்வ ஸம்ஸ்திதை: |

ஓமித்யேவம் ஸதா விப்ரா: படத த்யாத கேஶவம் || (ஸ்ரீ ஹரி வம்ம் 3.89.9)

ஸ்ரீ ஹரி வம்த்தில் கூறப்பட்டுள்ளது: ஒ ப்ராம்மணோத்தமர்களே! நீங்கள் ஸத்வகுணத்தில் நிலைபெற்று பகவான் ஸ்ரீ ஹரியைமட்டும் த்யானியுங்கள். நீங்கள் எப்பொழுதும் ‘ஓம்’ (என்ற பிரணவ மந்திரத்தை) ஜபித்து ஸ்ரீ கேசவனை த்யானியுங்கள்.

ஆஸ்ச்சர்யம் கலு தேவானாமேகஸ்த்வம் புருஶோத்தம |

தன்யச்சாஸி மஹா பாஹோ லோகே நான்யோSஸ்தி கஸ்ஶன || (ஸ்ரீ ஹரி வம்ஶம்)

ஸ்ரீ ஹரி வம்த்தில் கூறப்பட்டுள்ளது: ஒ புருஷோத்தமா!! அனைத்து தேவர்களைக் காட்டிலும் தாங்கள் ஒருவரே ஆச்சர்யமானவராவீர். ஒ நெடுந்தோளுடையவனே!! அனைத்துலகிலும் தங்களுக்கு சமமானவரோ மேம்பட்டவரோ ஒருவரும் இல்லை.

இதி ஹரிவம்ஶே | இவ்வாறு ஹரி வம்சத்தில் கூறப்பட்டுள்ளது.

பவதி மனோர்மாஹாத்ம்யக்யாபினீ ஸ்ருதி: யத்வை கிஞ்ச மனுரவதத்தத்பேஷஜம் (தைத்ரிய சம்ஹிதை 2.10.2)

‘மனு கூறிய அனைத்தும் (மனிதர்களுக்கு) மருந்து போன்றதாகும்’ என்ற ஸ்ருதி வாக்கியம் மனுவின் மேன்மையை கூறுகிறது.

மனுனா சோக்தம் அந்த மனுவானவர் (மனுஸ்ம்ருதியில்) கூறுகிறார்:

ஸர்வபூதஸ்தமாத்மானம் ஸர்வபூதானி சாத்மனி |

ஸம்பஶ்யன்னாத்மயாஜீ வை ஸ்வாராஜ்யமதிகச்சதி || (ஸ்ரீ மனு ஸ்ம்ருதி 12.91)

ஸ்ரீ மனு ஸ்ம்ருதியில் கூறப்பட்டுள்ளது: அனைத்து ஜீவராசிகளிலும் உள்ளுறைந்திருக்கும் தனது ஆத்மாவையும், அனைத்து ஜீவராசிகளையும் தனது ஆத்மாவிற்குள் உறைவதை அறிந்து ஆத்ம யக்ஞம் செய்யும் மனிதன் (ப்ரஹ்ம சாயுஜ்யம் எனும்) விடுதலையை அடைகிறான்.

ஸ்ருஶ்டி ஸ்தித் யந்தகரனீம் ப்ரஹ்ம விஶ்ணு ஶிவாத்மிகாம் |

ஸ ஸம்ஞாம் யாதி பகவானேக ஜனார்தன: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.2.66)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த பகவான் ஜனார்தனர் ஒருவரே படைத்தல், காத்தல் மற்றும் அழித்தலை புரியக்கூடிய பிரம்மா, விஶ்ணு, மற்றும் சிவன் ஆகிய மூன்று வடிவங்களையும், பெயர்களையும் கொள்கிறார்.

தஸ்மான்ன விஞ்ஞானம்ருதேSதி கிஞ்சித் க்வசித் கதாசித் த்விஜ வஸ்து ஜாதம் |

விஞ்ஞானமேகம் நிஜ கர்ம பேதாத் விபின்னசித்தைர்பஹுதாப்யுபேதம் ||

ஞானம் விஶுத்தம் விமலம் விஶோகமசேலோபாதி நிரஸ்தசங்கம் |

ஏக: ஸதைக: பரம: பரே: ஸ வாஸுதேவோ ந யதோSஸ்தி கிஞ்சித் ||–(ஸ்ரீ விஶ்ணு புராணம் 2.12.43 – 2.12.44)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: இதனால் ஓ ப்ராமணனே!! அறிவை தவிர மற்றொரு வஸ்து எப்பொழுதும் இருந்ததில்லை. இந்த ஒரு அறிவே (தத்தம்) கர்மங்களின் வேறுபாடுகளால் வெவ்வேறு மனது படைத்தவர்களுக்கு வேறு வேறாகத் தெரிகிறது. அந்த அறிவானது சுத்தமானதாகவும், அப்பழுக்கற்றதாகவும், துன்பங்களற்றதாகவும், பேராசை முதலிய (தீய) குணங்கள் கலவாததாகவும் இருக்கிறது. அந்த ஒரே உண்மையானது அனைத்திலும் சிறந்த பரமேஸ்வரன் ஸ்ரீ வாஸுதேவனாவார். அவரைத் தவிர வேறொன்றும் இல்லை.

யதா ஸமஸ்ததேஹேஶு புமானேகோ வ்யவஸ்தித: |

ததா ஹி கோ பவான் ஸோSஹமித்யேதத்விஃபலம் வச: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 2.13.91)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து உடல்களிலும் உள்ளுறையும் ஆத்மா ஒன்றே எனும்போது, நான் யார்? நீ யார்? எனும் கேள்விகள் வீணானவையாகும்.

சிதநீலாதி பேதேன யதைகம் த்ருஷ்யதே நப: |

ப்ராந்த த்ருஶ்டிபிராத்மாபி ததைக: ஸன்ப்ருதக் ப்ருதக் ||

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: எவ்வாறு (தோற்ற மயக்கத்தால்) ஒரே ஆகாயமானது வெண்மை, நீலம் போன்ற பல்வேறு நிறங்களில் தோற்றமளிக்கிறதோ, அவ்வாறே, மயக்கத்தினால் மனிதர்களுக்கு ஒரே ஆத்மாவானது பலவாறாகத் தோற்றமளிக்கிறது.

ஏக: ஸமஸ்தம் யதிஹாஸ்தி கிஞ்சித்ததச்யுதோ நாஸ்தி பரம் ததோSன்யத் |

ஸோSஹம் ஸ ச த்வம் ஸ ச ஸர்வமேததாத்மஸ்வரூபம் ||

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: இங்கே (இவ்வுலகத்தில்) அனைத்தும் பகவான் ஸ்ரீ அச்யுதரே. அவரைத் தவிர மற்றொன்று இல்லை. நானும் அவரே, நீயும் அவரே; அனைத்துமே அவரது ஆத்ம ஸ்வரூபமே. எனவே வேறுபாடுகளை நீக்குவாயாக.

இதீரிதஸ்தேன ஸ ராஜவர்யஸ்தத்யாஜ பேதம் பரமார்த்ததிருஶ்டி: | (ஸ்ரீ விஶ்ணு புராணம் 2.16.22 – 2.16.24)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: இவ்வாறு (ஜடபரதரால்) உபதேசிக்கப்பெற்று, உயர்ந்த உண்மையை அறியபெற்றவரான அரசரில் சிறந்தவர் (ரஹூகுணர்) வேறுபாடுகளை துறந்தார்.

யமனோக்தம் (ஸ்ரீ விஶ்ணு புராணத்தில்) யமன் கூறுகிறார்:

ஸகலமிதமஹம் ச வாஸுதேவ: பரமபுமான் பரமேஶ்வர: ஸ ஏக: |

இதி மதிரசலா பவத்யனந்தே ஹ்ருதயகதே வ்ரஜ தான் விஹாய தூராத் ||–(ஸ்ரீ விஶ்ணு புராணம் 3.7.32)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் (யமன் தனது கிங்கரர்களிடம்) கூறியது: இங்கு அனைத்தும், நான் உட்பட, அந்த ஒரே பரம்பொருளான பகவான் ஸ்ரீ வாசுதேவரே ஆவோம். எவரொருவர், இந்த (அனைத்தும் வாசுதேவரே என்ற) திட நம்பிக்கையுடன், தனது ஹ்ருதயத்திற்குள் உறையும் பகவான் ஸ்ரீ அனந்தருடன் ஒன்றி விடுகின்றனரோ, அவர்களை விட்டு நீங்கள் தூர ஒதுங்கிச் செல்லுங்கள்.

யதாஹ வஸுதா ஸர்வம் ஸத்யமேவ திவௌகஸ: |

அஹம் பவோ பவந்தஸ்ச ஸர்வம் நாராயணாத்மகம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 5.1.30)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் (பிரம்மா தேவர்களைப் பார்த்துக்) கூறியது: ஒ தேவர்களே!! பூமாதேவி கூறிய அனைத்தும் உண்மையே. நான், மகாதேவர் (பரமசிவன்) மற்றும் நீங்கள் அனைவரும் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் வடிவங்களே ஆவோம். அவரது சக்தியானது பாதிக்கப்படுபவர்களிலும், பாதிப்பவர்களிலும் ஏற்ற, இறக்கத்துடன் தெரிகின்றது.

பவானஹம் ச விஶ்வாத்மன்னேக ஏவ ஹி காரணம் |

ஜகதோSஸ்ய ஜகத்யர்த்தே பேதேனாவாம் வ்யவஸ்திதௌ || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 5.9.32)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பலராமரைப் பார்த்துக்) கூறியது: ஒ பிரபஞ்சத்தின் ஆத்மாவே (பலராமனே)!! தாங்களும், நானும் இந்த பிரபஞ்சத்தின் ஒரே காரணம் ஆவோம். இந்த பிரபஞ்சத்திற்காகவே நாம் வெவ்வேறு உருவத்தில் பிறந்துள்ளோம்.

த்வயா யதபயம் தத்தம் தத்தத்தமகிலம் மயா |

மத்தோ விபின்னமாத்மானம் த்ரஶ்டும் நார்ஹசி ங்கர || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 5.33.47)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பரமசிவனைப் பார்த்துக்) கூறியது: எவருக்குத் தாங்கள் அபயம் (பாதுகாப்பு) அளித்துள்ளீர்களோ, அவர்களை நானும் காக்கிறேன். ஹே சங்கரரே!! தங்கள் தங்களை என்னிடமிருந்து வேறாக எண்ணாதீர்கள்.

யோSஹம் ஸ த்வம் ஜகச்சேதம் ஸாதேவாஸுரமானும் |

அவித்யாமோஹிதாத்மான: புருஶா பின்னதர்ஶின: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 5.33.47)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பரமசிவனைப் பார்த்துக்) கூறியது: நான் எதுவாக இருக்கிறேனோ, தாங்கள், மற்ற தேவர்கள், மனிதர்கள் உட்பட உலகனைத்தும் அதுவாகவே உள்ளது. எந்த மனிதனுடைய புத்தியானது அறியாமையால் கலக்கமடைந்துள்ளதோ, அவனே அனைத்தையும் வெவ்வேறாகப் பார்க்கிறான்.

இதி ஸ்ரீ விஶ்ணு புராணே இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக ஹரிவம்ஶம் மற்றும் ஸ்ரீ பவிஶ்யோத்தர புராணத்தில் பரமசிவன் மும்மூர்த்திகளின் ஐக்கியத்தைப் பற்றி கூறியுள்ள சில மேற்கோள்களை    காண்போம்.

விஶ்ணோரண்யம் து பஶ்யந்தி யே மாம் ப்ரஹ்மானமேவ வா |

குதர்க்க மதயோ மூடா: பஶ்யந்தே நரகேஶ்வத: || (ஸ்ரீ பவிஶ்யோத்தர புராணம்)

ஸ்ரீ பவிஶ்யோத்தர புராணத்தில் பரமசிவனார் கூறுகிறார்: எவரொருவர் என்னையும், ப்ரஹ்மாவையும் பகவான் ஸ்ரீ விஶ்ணுவிடமிருந்து வேறாகப் பார்க்கிறார்களோ, அந்த ஏமாற்றும் எண்ணம் கொண்ட மூடர்கள் தாழ்ந்த நரகத்தில் வீழ்ந்து துன்பப்படுவார்கள்.

யே ச மூட துராத்மானோ பின்னம் பஷ்யந்தி மாம் ஹரே: |

ப்ரஹ்மாணம் ச ததஸ்தஸ்மாத் ப்ரஹ்மஹத்யாஸம் த்வகம் || (ஸ்ரீ பவிஶ்யோத்தர புராணம்)

ஸ்ரீ பவிஶ்யோத்தர புராணத்தில் பரமசிவனார் கூறுகிறார்: மற்றும் எந்த துர்புத்தி படைத்த ஒருவன் என்னையும் ப்ரஹ்மாவையும் பகவான் ஸ்ரீ விஶ்ணுவிடமிருந்து வேறாகப் பார்க்கிறானோ அவனுக்கு ப்ரஹ்மஹத்திக்கு சமமான பாபம் வந்தடைகிறது.

இதி ஸ்ரீ பவிஶ்யோத்தர புராணே மகேஶ்வரவசனம் இவ்வாறு ஸ்ரீ பவிஶ்யோத்தர புராணத்தில் பரமசிவன் கூறுகிறார்.

ததா ச ஹரிவம்ஶே கைலாஸ யாத்ராயாம் மகேஶ்வர வசனம் மற்றும் ஸ்ரீ ஹரி வம்சம் கைலாஸ யாத்திரையின் பொழுது பரமசிவன் கூறுகிறார்.

ஆதிஸ்த்வம் ஸர்வபாவானாம் மத்யமந்த்ஸ்ததா பவான் |

த்வத்த: ஸர்வமபூத் விஶ்வம் த்வயி ஸர்வம் ப்ரலீயதே || (ஸ்ரீ ஹரி வம்ஶம் 3.88.52)

ஸ்ரீ ஹரி வம்ஶத்தில் பரமசிவனார் கூறுகிறார்: அனைத்து ஜீவராசிகளின் தொடக்கம், நடு மற்றும் கடைசி தாங்களே (தங்களிடமிருந்தே அனைத்தும் பிறக்கின்றன, வளர்கின்றன, மற்றும் தங்களிடமே அனைத்தும் முடிவில் லயமடைகின்றன). இந்த உலகம் அனைத்தும் தங்களிடமிருந்தே தோன்றி தங்களிடமே லயமடைகிறது.

அஹம் த்வம் ஸர்வகோ தேவ த்வமேவாஹம் ஜனார்தன |

ஆவயோரந்தரம் நாஸ்தி ஶப்தைரர்தைர்ஜகத்ரயே || (ஸ்ரீ ஹரி வம்ஶம் 3.88.60)

ஸ்ரீ ஹரி வம்ஶத்தில் பரமசிவனார் கூறுகிறார்: ஒ ஜனார்தனா!! எங்கும் நிறைந்திருக்கும் தேவனே!! நானே தாங்கள், தாங்களே நான். மூவுலகம் அனைத்திலும் நம்மிருவருக்கும் சொல்லிலும் (பெயரிலும்), பொருளிலும் ஒரு வித வேறுபாடும் இல்லை.

நாமானி தவ கோவிந்த யானி லோகே மஹாந்தி ச |

தான்யேவ மம நாமானி நாத்ர கார்யா விசாரணா || (ஸ்ரீ ஹரி வம்ஶம் 3.88.61)

ஸ்ரீ ஹரி வம்ஶத்தில் பரமசிவனார் கூறுகிறார்: ஒ கோவிந்தா!! இந்த உலகத்தில் தங்களுக்கு என்னவெல்லாம் பிரபலமான திருநாமங்கள் உள்ளனவோ அவை அனைத்தும் என்னுடையதும் கூட. இதில் ஆராய்வதற்கு ஒன்றுமில்லை.

த்வதுபாஸா ஜகன்னாத சைவாஸ்து மம கோபதே |

யஸ்ச த்வாம் த்வேஶ்டி போ தேவ ஸ மாம் த்வேஶ்டி  ந ஸம்சய || (ஸ்ரீ ஹரி வம்ஶம் 3.88.62)

ஸ்ரீ ஹரி வம்ஶத்தில் பரமசிவனார் கூறுகிறார்: ஒ கோபதியே!! ஒ ஜகன்னாதனே!! யார் தங்களை வழிபடுகின்றனரோ, அவர்கள் என்னையும் வழிபடுகின்றனர். எவரொருவர் தங்களை வெறுக்கின்றனரோ, அவர்கள் என்னையும் வெறுக்கின்றனர். இதில் எந்த சந்தேஹமும் இல்லை.

த்வத்விஸ்தாரோ யதோ தேவ ஹ்யஹம் பூதபதிஸ்தத: |

ந ததஸ்தி விபோ தேவ யத்தே விரஹிதம்  க்வசித் || (ஸ்ரீ ஹரி வம்ஶம் 3.88.63)

ஸ்ரீ ஹரி வம்ஶத்தில் பரமசிவனார் கூறுகிறார்: ஒ தேவனே!! ஏனெனில் பூதபதியான நானும் தங்களுடைய விரிவாக்கமேயாவேன். எனவே ஒ எங்கும் நிறைந்திருக்கும் தேவனே!! எங்கும் எதிலும் தங்களைத் தவிர்த்ததொரு பொருள் வேறெதுவும் இல்லை.

யதாஸீத் வர்த்ததே யச்ச யச்ச பாவி ஜகத்பதே |

ஸர்வம் த்வமேவ தேவேஶ வினா கிஞ்சித் த்வயா ந ஹி || (ஸ்ரீ ஹரி வம்ஶம் 3.88.64)

ஸ்ரீ ஹரி வம்ஶத்தில் பரமசிவனார் கூறுகிறார்: ஒ ஜகத்பதியே!! ஒ தெய்வங்களுக்கும் தெய்வமே!! எது இருந்ததோ, எது இருக்கிறதோ, எது (எதிர்காலத்தில்) இருக்குமோ, அவை அனைத்தும் தாங்களே. தங்களை தவிர்த்து மற்றொன்று எதுவும் இல்லை.

இத்யாதிவாக்யான்யேகத்வப்ரதிபாதகானி மேற்சொன்ன அனைத்து (புராண, ஸ்ருதி) வாக்யங்களும் அனைத்தும் ஒன்றே என்ற ‘ஏகத்வத்தை’ விளக்குகின்றன.

அபி ச மேலும்

ஆத்மேதி தூபகச்சந்தி க்ராஹயந்தி ச (பிரஹ்ம ஸூத்ரம் 4.1.3)

ப்ரஹ்ம ஸுத்திரத்தில் கூறப்பட்டுள்ளது: (பரமாத்மாவை) ஆத்ம ஸ்வரூபத்தாலேயே அறியவும் அடையவும் முடியும்

ஆத்மேத்யேவம் சாஸ்த்ரோக்தலக்ஷண: பரமாத்மா ப்ரதிபத்தவ்ய: | இந்த ஸுத்திரத்தில் ஆத்மா என்பது வேதங்களால் அறியப்படும் பரமாத்மாவையே குறிக்கின்றது |

ததா ஹி பரமாத்ம ப்ரக்ரியாயாம் ஜாபாலா ஆத்மத்வேனைவைனமப்யுகச்சந்தி – மேலும் ஜாபால சாகையை (பிரிவை) பின்பற்றுபவரும் பரமாத்மாவை குறிக்கையில், ‘த்வம் வா அஹமஸ்மி பகவோ தேவதே அஹம் வை த்வமஸி’ ‘ஹே பகவானே!! ஹே தேவனே!! தாங்களே நான், நானே தாங்கள்’

இதி என்று கூறுவதன் மூலம், அவர்களும் (ஜாபால சாகையை சார்ந்தவரும் பரமாத்மாவை) ஆத்ம ஸ்வரூபமாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ததான்யேSபி மேலும்,

யதேவேஹ ததமுத்ர யதமுத்ர ததன்விஹ (கடோபநிஷத் 2.1.10)

கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: எது இங்கு ஜீவனாக உள்ளதோ அதுவே அங்கு ப்ரஹ்மமாக உள்ளது. எது அங்கு ப்ரஹ்மமாக உள்ளதோ, அதுவே இங்கு ஜீவனாக உள்ளது.

ஸ யஸ்சாயம் புருஶே| யஸ்சாஸாவாதித்யே | ஸ ஏக: (தைத்ரீய உபநிஶத் 2.8.12)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எந்த ஒரு ஆனந்தம் மனிதனிடத்தில் உண்டோ அந்த ஆனந்தமும், எந்த ஒரு ஆனந்தம் ஹிரண்யகர்பரிடம் உண்டோ, அந்த ஆனந்தமும் ஒன்றே.

ததாத்மானமேவாவதேஹம் ப்ரஹ்மாஸ்மீதி (ப்ருஹதாரண்ய உபநிஶத் 1.4.10)

ப்ருஹதாரண்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அப்பொழுது அவர் தன்னை ப்ரஹ்மமாக இருப்பதாக உணர்ந்து, ‘நானே ப்ரஹ்மம் (அஹம் ப்ரஹ்மாஸ்மி)’ என்று கூறினார்.

ததேதத் ப்ரஹ்மாபூர்வமன பரமனந்தரம் அபாஹ்யமயம் ஆத்மா ப்ரஹ்ம (ப்ருஹதாரண்ய உபநிஶத் 2.5.19)

ப்ருஹதாரண்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த ப்ரஹ்மம் காரணம், காரியம் அற்றது. இதன் உள்ளும் புறமும் (இந்த ப்ரஹ்மத்தைத் தவிர) ஒன்றும் இல்லை. இந்த ஆத்மாவே ப்ரஹ்மம்.

ஸ வா ஏ மஹானஜ ஆத்மாஜரோSமரோSம்ருதோSபயோ ப்ரஹ்ம (ப்ருஹதாரண்ய உபநிஶத் 4.4.25)

ப்ருஹதாரண்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த உயர்ந்த பிறப்பு, நரை, மூப்பு, மரணம், பயம் அற்ற, அழிவற்ற ஆத்மா ப்ரஹ்மமாகும்.

இத்யேவமாதய ஆத்மத்வோபகமா த்ரஶ்டவ்யா: | மேற்கூறியவை போன்ற, ப்ரஹ்மத்தை ஆத்மாவாகவே ஏற்றுக்கொண்டுள்ள பல வேத வாக்கியங்கள் ஆராயத்தக்கவையாகும்.

க்ராஹயந்தி ச போதயந்தி சாத்மத்வேனேஶ்வரம் வேதாந்த வாக்யாணி – மேலும் (கீழே கூறப்பட்டுள்ள) பல வேத வாக்கியங்கள் பரம்பொருளை (பரப்ரஹ்மத்தை) ஆத்மாவாகவே விவரிக்கின்றன.

 த ஆத்மாந்தர்யாம்யம்ருத: (ப்ருஹதாரண்ய உபநிஶத் 3.7.3.23)

ப்ருஹதாரண்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: உனக்குள் உறையும் இந்த ஆத்மா அழிவற்றது.

யன்மனஸா ந மனுதே யேனாஹுர்மனோ மதம் | ததேவ ப்ரஹ்ம தவம் வித்தி நேதம் எதிதமுபாஸதே (கேனோபநிஷத் 1.5)

கேனோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: எதை மனதால் ஒருவன் அறிவதில்லையோ, எந்த சைதன்யத்தால் மனம் அறியப்படுகிறது என்று கூறுகிறார்களோ, அதையே ப்ரஹ்மமாக நீ அறிவாயாக. எந்த இந்த தேவதையை ஸாதகர்கள் த்யானிக்கிறார்களோ, அது ப்ரஹ்மம் அல்ல.

தத்ஸத்யம் ஸ ஆத்மா தத்வமஸி (சாந்தோக்ய உபநிஶத் 6.8.16)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அதுவே (ப்ரஹ்மமே) உண்மையாகும். அதுவே ஆத்மாவாகும். அந்த ப்ரஹ்மமே நீ (தத்வமஸி).

இத்யேவமாதீனி – இவ்வாறு (பல வேத வாக்கியங்கள் பரம்பொருளை ஆத்மாவாகவே விவரிக்கின்றன).

நானு ப்ரதீகதர்ஷனமிதம் விஶ்ணு ப்ரதிமான்யாயேன பவிஶ்யதி|  

கேள்வி: (இவ்வாறு ஆத்மாவை பரமாத்மாவாக நினைப்பது) விஶ்ணுவின் உருவத்தை விஶ்ணுவாக கருதி வழிபடுவதற்கு சமமாகும்.

ததயுக்தம், கௌநத்வபிரஸங்காத், வாக்யவைரூப்யாஸ்ச |  

பதில்: இவ்வாறு கூறுவது பரமாத்மா ஒரு உருவத்திற்கு கட்டுப்பட்டதாக கூறுவதாகும். இது சாஸ்திர வாக்கியத்திற்கு விரோதமானதாகும்.

யத்ர ஹி ப்ரதீகத்ரிஶ்டிர் அபிப்ரேயதே ஸக்ருதேவ தத்ர வசனம் பவதி | எங்கெல்லாம் உருவத்தைப் பற்றி கூறப்பட்டுள்ளதோ அங்கே பரமாத்மாவுடன் ஒரு வழி உறவுதான் (அதாவது பரமாத்மா இதுவாக இருக்கிறார் என்று) கூறப்பட்டுள்ளது.

யதா – உதாரணமாக,

‘மனோ ப்ரஹ்ம’ (சாந்தோக்ய உபநிஶத் 3.18.1) மனம் ப்ரஹ்மம்

‘ஆதித்யோ ப்ரஹ்ம’ (சாந்தோக்ய உபநிஶத் 3.19.1) சூரியன் ப்ரஹ்மம் இதி.

இஹ புன: ஆனால் இங்கோ,

த்வமஹமஸ்மி அஹம் வை த்வமஸி நீ நானாக இருக்கிறாய். நானே நீயாக இருக்கிறேன். இத்யாஹ | இவ்வாறு,

அத: ப்ரதீகஸ்ருதிவைரூப்யாதபேதப்ரதிபத்தி: | ஜீவாத்மா, பரமாத்மாவுடன், இரு வழி (இரண்டுமே ஒன்றிலிருந்து ஒன்று வேறானது அல்ல) பரஸ்பர ஒற்றுமை தோன்றக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு வேதம் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வகையில் கூறுவதால், பரமாத்மாவும், ஜீவாத்மாவும் அபேதம் (அதாவது இரண்டும் ஒன்று) என்று கூறுவது விளங்கும். மேலும்,

பேததிருஷ்ட்யபவாதாச்ச | (ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வெவ்வேறு என்று கூறும்) பேதங்களை மறுப்பதன் மூலமும் இது (பரமாத்மாவும், ஜீவாத்மாவும் ஒன்று என்பது) தெளிவாகிறது. (இவ்வாறு பேதங்களை மறுக்கும் வேத வாக்கியங்கள்) எவை எனில்,

அத யோSன்யாம் தேவதாமுபாஸ்தே அன்யோSஸாவன்யோSஹமஸ்மீதி ந ஸவேதயதா பஶு: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 1.4.10)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவனொருவன் தான் வேறு, தான் வழிபடும் தெய்வம் வேறு என்ற எண்ணத்தோடு கடவுளை வழிபடுகின்றானோ, அவன் மிருகத்திற்கு சமமானவன் (மிருகங்களைப் போல குறைந்த அறிவுடையவன்).

‘ம்ருத்யோ: ஸ ம்ருத்யுமாப்னோதி ய இஹ நானேவ பஶ்யதி’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.4.19)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவனொருவன் இங்கு (ப்ரஹ்மத்திற்கும் மற்றதற்கும்) வேறுபாடுகளைக் காண்கின்றானோ அவன் மறுபடியும் மறுபடியும் மரணங்களை அடைகிறான் (அதாவது முக்தி அடையாமல் மீண்டும் மீண்டும் இந்த ஸம்ஸாரத்தில் பிறந்து இறக்கிறான்).

யதோதகம் துர்கே வ்ருஶ்டம் பர்வதேஶு விதாவதி | ஏவம் தர்மான்ப்ருதக்பஶ்யம்ஸ்தானேவானுவிதாவதி (கடோ உபநிஶத் 2.1.14)

கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: எவ்விதம் மலையில் பெய்த நீர் மலைப்பகுதிகளில் ஓடி மறைகிறதோ, அவ்விதம் ஜீவர்களை வேறுபாட்டுடன் பார்ப்பவன் அவற்றை தொடர்ந்து சென்று மடிகிறான்.

த்விதீயாத் வை பயம் பவதி (ப்ருஹதாரண்யக உபநிஶத் 1.4.2)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (ப்ரஹ்மத்தைத் தவிர்த்து) இரண்டாவது ஒன்றைக் காணும்பொழுது நிச்சயமாக பயம் உருவாகிறது.

யதா ஹ்யேவைஶ ஏதஸ்மின்னுதரமந்தரம் குருதே | அத தஸ்ய பயம் பவதி | தத்வேவ பயம் விதுஶோ மன்வானஸ்ய (தைத்ரீய உபநிஶத் 2.7)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எப்பொழுது இந்த அஞ்ஞானி இந்த ப்ரஹ்மத்தில் சிறிய வேற்றுமையைப் பார்க்கிறானோ, அப்பொழுது பயம் ஏற்படுகிறது. கற்றறிந்தும் ப்ரஹ்ம ஞானத்தை அடையாதவனுக்கு அந்த ப்ரஹ்மமே பயத்திற்கு காரணமாகிறது.

ஸர்வம் தம் பராதாத்யோSன்யத்ராத்மன: ஸர்வம் வேத (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.4.6)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவனொருவன் அனைத்தையும் (அனைவரையும்) ஆத்மாவிலிருந்து வேறாகப் பார்க்கிறானோ, அவன் அனைவராலும் ஒதுக்கப்படுகிறான்.

இத்யேவமாத்யா பூயஸி ஸ்ருதிர்பேதத்ருஶ்டிமபவததி | இவ்வாறு (மேலே கொடுக்கப்பட்டுள்ள மற்றும்) பல ஸ்ருதி வாக்கியங்கள் (ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வெவ்வேறு என்று கூறும்) பேதங்களை நிந்திக்கின்றன (மறுக்கின்றன).

ததா மேலும்,

ஆத்மைவேதம் (ஆத்மா ஏவ இதம்) ஸர்வம் (சாந்தோக்ய உபநிஶத் 7.25.2)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இங்கு அனைத்தும் ஆத்மாவே

ஆத்மனி விஞ்ஞாதே ஸர்வமிதம் விஞ்ஞாதம் பவதி

இதம் ஸர்வம் யதயமாத்மா (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.4.6)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஆத்மாவை அறிவதன் மூலம் இந்த அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். இங்கு என்ன உள்ளதோ அது அனைத்தும் ஆத்மாவே.

ப்ரஹ்மைவேதம் (ப்ரஹ்ம ஏவ இதம்) விஶ்வம் (முண்டக உபநிஶத் 2.2.11)–முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இங்கு அனைத்தும் ப்ரஹ்மமே.

இதி ஸ்ருதி இவை ஸ்ருதி வாக்கியங்கள் (பேதங்களை மறுக்கிறது).

ததா ஸ்ம்ருதிரபி ஸ்ம்ருதிகளும் கூறுகின்றன –

யஞ்ஞாத்வா ந புனர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்டவ |

யேன பூதான்யஶேஶேன த்ரஶ்ஷ்யஸ்யாத்மன்யதோ மயி || (ஸ்ரீ பகவத்கீதை 4.35)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: அந்த ஞானம் பெறுவதனால், பாண்டவா, நீ அப்பால் இவ்வித மயக்கமெய்த மாட்டாய். இதனால் நீ எல்லா உயிர்களையும், மிச்சமின்றி நின்னுள்ளே காண்பாய். அப்பால் அவற்றை என்னுள்ளே காண்பாய்.

க்ஷேத்ரக்ஷேத்ரஞேஷ்வரைகத்வம் ஸர்வோபநித் ப்ரஸித்தம் த்ரக்ஷ்யஸீத்யர்த்த: அனைத்து உபநிஶத்களிலும் கூறியுள்ளப்படி ஜீவாத்ம, பரமாத்ம ஐக்கியத்தை உணர்வாய் என்பதே இதன் (மேற்கண்ட பகவத் கீதை ஸ்லோகத்தின்) அர்த்தமாகும்.

ஸர்வபூதேஶு ஏனைகம் பாவமவ்யயமீக்ஷதே |

அவிபக்தம் விபக்தேஶு தஞ்ஞானம் வித்தி ஸாத்விகம் || (ஸ்ரீ பகவத்கீதை 18.20)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: பிரிவுபட்டு நிற்கும் எல்லா உயிர்களிலும் பிரிவற்ற நாசமற்ற ஒரே இயல்பை காணும் ஞானம் சாத்வீகமென்றறி.

இதி அத்வைதாத்மஞானம் சம்யக்தர்னமித்யுக்தம் பகவதாபி |  இவ்வாறு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் (ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று) என்ற அத்வைத ஞானமே சரியானதென்று கூறுகிறார். தஸ்மாதாத்மன்யேவேஶ்வரே மனோ ததீத |  எனவே ஆத்ம ஸ்வரூபமான அந்த ஈஸ்வரனிடத்திலேயே நமது மனதை ஈடுபடுத்த வேண்டும்.

பூதாத்மா சேந்தரியாத்மா ச ப்ரதானாத்மா ததா பவான் |

ஆத்மா ச பரமாத்மா ச த்வமேக: பஞ்சதா ஸ்தித: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 5.18.50)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: ஜீவ ராசிகள், இந்த்ரியங்கள், மூல பொருட்கள் மற்றும் ஜீவாத்மாவிற்குள் உள்ளுறையும் ஆத்மாவாகவும், பரமாத்மாவாகவும் ஆகிய இந்த ஐந்து நிலைகளிலும் தாங்களே நிலைபெற்றுள்ளீர்கள்.

இதி ச  என்று (ஸ்ரீ விஶ்ணு புராணத்தில்) கூறப்பட்டுள்ளது.

அதவா பஹுனைதேன கிம் ஞாதேன தவார்ஜுன |

விஷ்ட்ப்யாஹமிதம் க்ருத்ஸ்னமேகாம்ஶேன ஸ்திதோ ஜகத் || (ஸ்ரீ பகவத் கீதை 10.42)

ஸ்ரீ பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது: அன்றி, இதைப் பலவாறாக தெரிவதில் உனக்கு பயன் யாது அர்ஜுனா? எனது கலையொன்றால் இவ்வையகத்தை நிலை நிறுத்தியுள்ளேன்.

இதி ச  என்று (ஸ்ரீ பகவத் கீதையில்) கூறப்பட்டுள்ளது.

அவித்யோபாதிபக்ஷ்யேSபி ப்ரமாண வாத: ஸமஸ்தி (அத்வைதத்திற்கு மாற்றான) அவித்யை ஒரு உபாதி என்று கூறும் ப்ரமாண வாதத்திலும் கூட இவ்வாறு கூறப்பட்டுள்ளது:

ஏக ஏவ மஹானாத்மா ஸோSஹகங்காரோSபிதீயதே |

ஸ ஜீவ: ஸோSந்தராத்மேதி கீயதே தத்வசிந்தகை: ||

அந்த ஒரே பெரியதான ஆத்மாவையே அஹங்காரம் என்று கூறுகிறார்கள். தத்வ ஞானத்தை அறிய விழைபவர்கள் இதையே (அந்த ஒரே ஆத்மாவையே) அனைத்து ஜீவராசிகளிலும் உள்ளுறையும் அந்தராத்மாவாக வர்ணிக்கிறார்கள்.

ததா விஶ்ணு புராணே ஸ்ரீ விஶ்ணு புராணத்திலும்,

விபேதஜனகேSஞானே நாமாத்யந்திகம் கதே |

ஆத்மனோ ப்ரஹ்மணோ பேதமஸந்தம் க: கரிஷ்யதி || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.7.96)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: வேறுபாடுகளை கற்பிக்கும் (அஞ்ஞானம்) அறியாமை அழிந்தபிறகு, ஆத்மாவிற்கும் ப்ரஹ்மத்திற்கும் இல்லாததான ஒரு பேதத்தை யார் கூறுவார்கள்?

பராத்மனோர்மனுஶ்யேந்திர விபாகோSஞானகல்பித: |

க்ஷயே தஸ்யாத்மபரயோர்விபாகோSபாக ஏவ ஹி || (ஸ்ரீ விஶ்ணு புராணம்)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: ஒ அரசனே! ப்ரஹ்மத்திற்கும், ஜீவாத்மாவிற்கும் பேதம் இல்லை. அந்த பேதத்தை உருவாக்குவது அஞ்ஞானமே. அந்த அஞ்ஞானம் அழிந்த பிறகு, பேதமும் மறைந்து விடுகிறது.

இதி (ஸ்ரீ விஶ்ணு புராணத்திலும்) இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

விஶ்ணுதர்மே ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில்,

யதைகஸ்மின் கடாகாசே ரஜோதூமாதிபிர்யுதே |

நான்யே மலினதாம் யாந்தி தூரஸ்தா: குத்ரசித் க்வசித் || (ஸ்ரீ விஶ்ணு தர்மம்)

ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது: ஒரு குடத்தில் இருக்கும் ஆகாசமானது (வெளியானது) அந்த குடத்தில் இருக்கும் மாசுகளால் தூய்மை இழந்தாலும், (அந்த குடத்தின் வெளியே இருக்கும்) பரந்த ஆகாசமானது இதனால் மாசடைவதில்லை. அதைப்போலவே, ஒரு உடலினுள் இருக்கும் ஜீவாத்மாவானது, (அஞ்ஞானத்தினால் தூண்டப்பட்ட) இருமைகளால் பாதிக்கப்பட்டாலும், அதனால் மற்ற ஜீவாத்மாக்கள் பாதிக்கப்படுவதில்லை.

இதி (ஸ்ரீ விஶ்ணு தர்மத்திலும்) இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

உபநித் வாக்யங்களைக் கொண்டு ஜீவ-ப்ரஹ்ம அபேதத்தை ஆச்சார்யாள் விளக்குவதைக் காண்போம்.

ப்ரஹ்மயாஞ்யவல்க்யே ப்ரஹ்மயாஞ்யவல்க்யத்திலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது,

ஆகாஶமேகம் ஹி யதா கடாதிஶு ப்ருதக்பவேத் |

ததாத்மைகோSப்யநேகேஶு ஜலாதாரேஶ்விவாம்ஶுமான் ||-(ப்ரஹ்மயாஞ்யவல்க்யம்)

ப்ரஹ்மயாஞ்யவல்க்யத்தில் கூறப்பட்டுள்ளது: எவ்வாறு ஒரே ஆகாயமானது குடம் முதலிய வெவ்வேறு உபாதிகளில் வெவ்வேறாகப் பிரதிபலிக்கிறதோ, எவ்வாறு ஒரே சூரியனானது, நீர் நிறைந்த பாத்திரங்களில் பிரதிபலிக்கிறதோ, அதைப் போலவே, ஒரே ஆத்மாவானது, பற்பல உபாதிகளால், வெவ்வேறாகத் தோற்றமளிக்கிறது.

க்ஷராத்மானாவீஷதே தேவ ஏக: (ஶ்வேதாஶ்வதர உபநிஶத்)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த ஒரே கடவுளானவர் அழியக்கூடிய வஸ்துக்களையும் (அதாவது அசேதன பொருட்களையும்), (அழியாத சேதனனான) ஆத்மாவையும் ஆள்கிறார்.

இதி ஶ்வேதாஶ்வரே இவ்வாறு ஶ்வேதாஶ்வர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

சாந்தோக்யே சாந்தோக்ய உபநிஶத்திலும்,

ஸ ஏகதா பவதி (சாந்தோக்ய உபநிஶத்) அது ஒன்றாகவே இருக்கிறது

இத்யாதி | என்று கூறப்பட்டுள்ளது.

ஸ தத்ர பர்யேதி அது எங்கும் பரந்து வ்யாபித்திருக்கிறது.

ஸ வா ஏ ஶ ஏதேன தைவேன சக்ஷுஷா மனஸைதான் காமான் பஶ்யன் ரமதே  அது (அந்த ஆத்மாவானது, ப்ரஹ்மமானது) தனது இந்த திவ்ய கண்களால் மனதின் மூலமாக, இந்த போகங்களை பார்த்து, அனுபவிக்கிறது

பரோSவிக்ருத ஏவாத்மா ஸ்வாத்மாயம் ஜீவ: (பிறப்பு, தேய்தல், இறப்பு முதலிய) விகாரங்கள் அற்ற அந்த பரமாத்மாவே நமது உள்ளுறை ஜீவாத்மாவாகும்.

இதி ஶ்ருதே இவ்வாறு வேதங்களிலும் கூறப்பட்டுள்ளது.

ஸ ஏஷ இஹா ப்ரவிஶ்ட: அது இங்கேயே (அனைத்திலும்) உள்ளுறைந்திருக்கின்றது.

இதி ப்ருஹதாரண்யகஸ்ருதி: | இவ்வாறு ப்ருஹதாரண்யக ஸ்ருதியிலும் கூறப்பட்டுள்ளது.

ஆத்மேத்யேவோபாஸீத (ப்ருஹதாரண்யக உபநிஶத்)

அது ஆத்மாவாகும்; இவ்வாறு அதை உபாஸிக்கவேண்டும்

ததேதத்ப்ரஹ்மாபூர்வம் (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.5.11)

அந்த ப்ரஹ்மம் (தன்னைப் படைத்ததான மற்றொரு) காரணமற்றது

நான்யோSதோSஸ்தி த்ரஶ்டா நான்யோSதோSஸ்தி விஞ்ஞாதா (ப்ருஹதாரண்யக உபநிஶத் 3.7.23)

(அந்த ஆத்மா, ப்ரஹ்மத்தைத் தவிர) பார்ப்பவர் வேறொருவர் கிடையாது; அறிபவரும் வேறொருவர் கிடையாது

ஸ வா ஏஶ மஹானஜ ஆத்மா யோSயம் விஞ்ஞானமய: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.4.22)

அந்த பிறப்பற்ற ஆத்மா அறிவு மயமானது

அத யோSந்யாம் தேவதாமுபாஸ்தே (ப்ருஹதாரண்யக உபநிஶத் 1.4.10)

எவர் மற்ற தேவதைகளை வழிபடுகின்றனரோ

ஏததாத்ம்யமித ஸர்வம் (சாந்தோக்ய உபநிஶத் 6.8.7)

இவை அனைத்தும் ஆத்மாவின் உருவமேயாகும்

இத்யாதி இவ்வாறு மேலும் ஸ்ருதிகளில் கூறப்பட்டுள்ளது.

நிஸ்சரந்தி யதா லோஹபிண்டாத்தப்தாத்ஸ்ஃபுலிங்கா: |

ஸகாஶாதாத்மநஸ்தத்வத் ப்ரபவந்தி ஜகந்தி ஹி ||

எவ்வாறு நன்கு சுடப்பட்ட இரும்பிலிருந்து தீப்பொறிகள் வெளிவருகின்றனவோ, அவ்வாறே ஆத்மாவிலிருந்து பல்வேறு உலகங்கள் தோன்றுகின்றன.

இதி யாஞ்யவல்க்யே இவ்வாறு யாக்ஞவல்க்ய ஸ்ருதியில் கூறப்பட்டுள்ளது.

அஜ: சரீரக்ரஹநாத் ஸ ஜாத இதி கீர்த்யதே |

அந்த பிறப்பற்றவரே சரீரத்தை ஏற்பதால் பிறப்பதாகக் கூறப்படுகிறார்.

இதி ப்ராஹ்மே இவ்வாறு ப்ரஹ்மபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஸர்ப்பவத்ரஜ்ஜூகண்டஸ்து நிஶாயாம் வேஶ்மமத்யக: |

ஏகோ ஹி சந்த்ரோ த்வௌ வ்யோம்னி திமிராஹதசக்ஷுஶ: ||

இரவின் இருட்டில் மயங்கிய கண்களையுடையவனுக்கு, எவ்வாறு கயிறும் பாம்பு போல தோற்றமளிக்கிறதோ, எவ்வாறு இரண்டு நிலவுகள் தெரிகின்றனவோ…

ஆபாதி பரமாத்மா ச ஸர்வோபாதிஶு ஸம்ஸ்தித: |

நித்யோதித: ஸ்வயம்ஜ்யோதி: ஸர்வக: புருஶ: பர: ||

அவ்வாறே எங்கும் நிறைந்துள்ள, சுயப்ரகாசமுடைய ஒரே பரமாத்மாவானவர், அறியாமையால் மயங்கியவனுக்கு, பற்பல பொருட்களில் பலவாறாகத் தெரிகிறார்.

அஹங்காராவிவேகேன கர்தாஹமிதி மன்யதே |

(மேலும் அவ்வாறு அறிவு மயங்கியவன்) அஹங்காரத்தால் விவேகம் இழந்து தானே செயல் புரிவதாக நினைத்துக்கொள்கிறான்.

இதி இவ்வாறு மேலும் கூறப்பட்டுள்ளது.

ஏவமேவாயம் புருஶ: ப்ராஞ்யேநாத்மனா | ஸம்பரிஶ்வக்த:

(ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.3.21)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இவ்வாறு இந்த புருஶன் அறிவுடைய ஆத்மாவுடன் சேர்வதால்…

ஸதா ஸோம்ய ததா ஸம்பன்னோ பவதி (சாந்தோக்ய உபநிஶத் 6.8.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஒ ஸௌம்யா!! அப்பொழுது அவன் உண்மையுடன் ஒன்று சேர்கிறான்

இதி இவ்வாறு மேலும் கூறப்பட்டுள்ளது.

ஏவம் இவ்வாறாக (நமக்கு விளங்குவது என்னவென்றால்):

ஸ்வமாயயா ஸ்வமாத்மானம் மோஹயன் த்வைதமாயயா |

குணாஹிதம் ஸ்வமாத்மானம் லபதே ச ஸ்வயம் ஹரி: ||

பகவான் ஸ்ரீ ஹரியானவர், தனது மாயையாலே தன்னையே மோஹமடைய செய்துகொண்டு, பலவகை உருவத்தில், தனது குணங்களால் தன்னையே அனுபவித்துக்கொள்கிறார்.

ததா மேலும்,

க்ஷேத்ரஞ்யம் சாபி மாம் வித்தி (ஸ்ரீ பகவத்கீதை 13.2)

எல்லா க்ஷேத்திரங்களிலும், க்ஷேத்ரக்ஞ்யன் நானே என்றுணர்

உத்க்ராமந்தம் ஸ்திதம் வாபி (ஸ்ரீ பகவத்கீதை 15.10)

அவன் புறப்படுகையிலும், நிற்கையிலும், உண்ணுகையிலும், குணங்களைச் சார்ந்திருக்கையிலும், அவனை மூடர்கள் காண்பதில்லை.

அஞ்ஞானேனாவ்ருதம் ஞானம் (ஸ்ரீ பகவத்கீதை 5.15)

அஞ்ஞானத்தால் ஞானம் சூழப்பட்டிருக்கிறது.

அவ்யக்தாதிவிஶேஶாந்தமவித்யாலக்ஷணம் ஸ்ம்ருதம்

மேலும் ஸ்ம்ருதிகளில் கூறப்பட்டுள்ளது: பெயர், மற்றும் உருவமற்ற மூலப் ப்ரக்ரிதி முதல், ஐம்பூதங்களால் ஆக்கப்பட்ட அனைத்து பொருட்கள் ஈறாக, அனைத்தும் அறியாமையின் வெளிப்பாடாகும்.

ஆஸீதிதம் தமோபூதம் (மனு ஸ்ம்ரிதி 1.5)

மனு ஸ்ம்ரிதியில் கூறப்பட்டுள்ளது: இவை அனைத்தையும் முதலில் (அறியாமை என்னும்) இருள் சூழ்ந்திருந்தது.

வாசாரம்பணம் (சாந்தோக்ய உபநிஶத் 6.1.4)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து வேறுபாடுகளும் பெயரளவில் மட்டுமே உள்ளன

யத்ர ஹி த்வைதமிவ பவதி ததிதர இதரம் பஶ்யதி | யத்ர த்வஸ்ய ஸர்வமாத்மைவாபூத் தத் கேன கம் பஶ்யேத் தத் கேன கம் ஜிக்ரேத் (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.4.14)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எங்கு இருமைகள் உள்ளனவோ அங்கேதான் ஒருவர் மற்றொன்றைப் பார்க்கிறார். எங்கு அனைத்தும் ஆத்மா என்ற ஒன்றே உள்ளதோ அங்கு யார் எதை பார்க்க முடியும், எதை நுகர முடியும்?

யஸ்மின் ஸர்வாணி பூதான்யாத்மைவாபூத் விஜானத: |

தத்ர கோ மோஹ: க: சோக ஏகத்வமனுபஶ்யத: (ஈசாவாஸ்ய உபநிஶத் 7)

ஈசாவாஸ்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஒருமையைப் பார்க்கின்றவனாகவும் உண்மையை அறிபவனாகவும் உள்ளவனுக்கு எப்பொழுது எல்லா உயிரினங்களும் ஆத்மாவகவே ஆனதோ, அப்பொழுது அவருக்கு மோகம் எது? சோகம் எது?

யத்ர நான்யத் பஶ்யதி நான்யத் விஜானாதி (சாந்தோக்ய உபநிஶத் 7.24.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எங்கு மற்ற எதையும் காணவும் அறியவும் முடியாதோ.

பேதோSயமஞானநிபந்தன:

கதோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: இங்கே அறியாமையின் காரணத்தால் வேறுபாடுகள் தோன்றுகின்றன

நேஹ நானாஸ்தி கிஞ்சன (கதோபநிஷத் 2.1.11)

கதோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: இங்கு வேற்றுமை எதுவும் இல்லை

ம்ருத்யோ: ஸ ம்ருத்யுமாப்னோதி ய இஹ நானேவ பஶ்யதி (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.4.19)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவனொருவன் இங்கு (ப்ரஹ்மத்திற்கும் மற்றதற்கும்) வேறுபாடுகளைக் காண்கின்றானோ அவன் மறுபடியும் மறுபடியும் மரணங்களை அடைகிறான் (அதாவது முக்தி அடையாமல் மீண்டும் மீண்டும் இந்த ஸம்ஸாரத்தில் பிறந்து இறக்கிறான்).

விஸ்வதஸ்சஶு: (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 4.4.19)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த பரப்ரஹ்மத்திற்கு) எங்கும் கண்கள் இருக்கின்றன.

யோனிமதிதிஶ்டத்யேகோ விஶ்வானி ரூபாணி யோநிஶ்ஸ்ச ஸர்வா:

யார் அந்த மூலத்தில் நிலைபெற்றிருக்கின்றாரோ அவரே (அந்த பரப்ரஹ்மமே) அனைத்து ரூபங்களும் யோனிகளும் ஆவார்.

அஜாமேகம் லோஹிதசுக்லகிருஶ்ணாம்

பஹ்வி: ப்ரஜா: ஸ்ருஜமானாம் ஸுரூபா: |

அஜோ ஹ்யேகோ ஜுஶமானோSனுஶேதே

ஜஹாத்யேனாம் புக்தபோகாமஜோSன்ய: || (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 4.5)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: சிவப்பு, வெண்மை, கருமை நிறம் படைத்த பிறப்பற்ற ஒன்று தன்னைப் போலவே பலவற்றை ஸ்ருஷ்டிக்கிறது. அதன் அருகே பிறப்பற்ற ஒன்று படுத்துக்கிடக்கிறது. மற்றொரு பிறப்பற்ற ஒன்று அதை (அந்த சிவப்பு, வெண்மை, கருப்பு நிறமுள்ளதை) அனுபவித்துவிட்டு அதனை துறந்து சென்றது.

தேவாத்மஶக்திம் விததே

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த திவ்யமான ஆத்ம சக்தியை த்யானித்தார்கள்

ந து தத்த்விதீயமஸ்தி ததோSன்யத் விபக்தம் யத் பஶ்யேத் (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.3.23)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த ஷுஷுப்தி நிலையில் ஆத்மாவைத்தவிர) இரண்டாவதான ஒரு பொருள் இல்லை. அங்கே அவன் (அந்த ஜீவாத்மா) எதையும் காண்பதில்லை, ஆனாலும் அனைத்தையும் காண்கிறான்.

ஏகோ ஹி ருத்ரோ ந த்விதீயாய தஸ்து: (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 3.2)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ருத்ரர் ஒருவரே. (அவரைத்தவிர) மற்றொருவர் இல்லை.

இத்யாதி  இவ்வாறு (புராணங்கள் மற்றும் உபநிடதங்களில் கூறப்பட்டுள்ளது).

கௌடபாத காரிகை, ஸ்ரீ விஶ்ணு புராணம் மற்றும் சில உபநித் வாக்யங்களைக் கொண்டு ஜீவ-ப்ரஹ்ம அபேதத்தை  விளக்குவதைக் காண்போம்.

மனோத்ருஶ்யமிதம் த்வைதம் யத்கிஞ்சித் ஸசராசரம் |

மனஸோ ஹ்யமனீபாவே த்வைதம் நைவோபலப்யதே || (கௌடபாத காரிகா 3.32)

கௌடபாத காரிகையில் கூறப்பட்டுள்ளது: இங்கு பல்வேறான மாற்றங்களாகத் தெரியும் அனைத்தும் மனத்தால் கற்பிக்கப்பட்டவைகளாகும். மனம் தனது கற்பனைகளிலிருந்து ஒடுங்கி லயமடையும் பொழுதும் இந்த வேற்றுமைகளும் மறைந்து விடுகின்றன.

ப்ரபஞ்சோ யதி வித்யேத நிவர்தேத ந ஸம்ஶய: |

மாயாமாத்ரமிதம் த்வைதம் அத்வைதம் பரமார்த்தத: || (கௌடபாத காரிகா 1.17)

கௌடபாத காரிகையில் கூறப்பட்டுள்ளது: இதில் சந்தேகம் வேண்டாம். இங்கு பிரபஞ்சமாக தெரியும் அனைத்தையும் மனத்தால் நீக்கிவிட முடியும் (அனைத்தும் மனதின் கற்பனையே). ஏனெனில், இரண்டாகத் தெரியும் (வெவ்வேறாகத் தெரியும்) அனைத்தும் மாயையின் வடிவங்களாகும். (ஜீவாத்மாவும், பரமாத்மாவும்) ஒன்றே என்ற அத்வைதமே உண்மையாகும்.

யதா ஸ்வப்னே த்வயாபாஸம் ஸ்பந்ததே மாயயா மன: |

ததா ஜாக்ரத்த்வயாபாஸம் ஸ்பந்ததே மாயயா மன: || (கௌடபாத காரிகா 1.17)

கௌடபாத காரிகையில் கூறப்பட்டுள்ளது: எவ்வாறு கனவில் பலவற்றை மனம் கற்பனை செய்கிறதோ, அதைப்போலவே, விழித்திருக்கும் பொழுதும் மாயையின் வசப்பட்டு பலவற்றை மனம் கற்பனை செய்கிறது.

இத்யாதி கௌடபாதே இவ்வாறு கௌடபாத காரிகையில் கூறப்பட்டுள்ளது.

தர்கேணாபி ப்ரபஞ்சஸ்ய மனோமாத்ரத்வமிஶ்யதாம் |

த்ருஶ்யத்வாத் ஸர்வபூதானாம் ஸ்வப்னாதிவிஶயோ யதா||

நாம் காணும் அனைத்தும் கனவில் காணும் உருவங்கள் போலவேயாகும். எனவே, ஒரு வாதத்திற்காக உலகமும், வெவ்வேறு பொருள்களும் உண்டு என்றாலும், அதுவும் மனதின் கற்பனையேயாகும்.

த்விதீயாத் வை பயம் பவதி (ப்ருஹதாரண்யக உபநிஶத் 1.4.2)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (ப்ரஹ்மத்தைத் தவிர்த்து) இரண்டாவது ஒன்றைக் காணும்பொழுது நிச்சயமாக பயம் உருவாகிறது.

ஞாதே த்வாத்மனி நாஸ்த்யேதத் கார்யகாரணதாத்மன: |

ஆத்மாவை அறிந்த பிறகு அந்த ஆத்மாவின் காரண காரியங்கள் அனைத்தும் (அதன் தேவை முடிந்துவிடும் என்பதால்) நின்று விடும்.

ஏகோ தேவ: ஸர்வபூதேஶு கூட: (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.11)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: கடவுள் ஒருவரே. அவர் அனைத்து ஜீவராசிகளிலும் மறைந்துள்ளார்.

அஸங்கோ ஹ்யயம் புருஶ: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.3.15)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: கடவுள் ஒருவரே. அவர் அனைத்து ஜீவராசிகளிலும் மறைந்துள்ளார்.

இதி ச இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

விஸ்தார: ஸர்வபூதஸ்ய விஶ்ணோ: ஸர்வமிதம் ஜகத் |

த்ரஶ்டவ்யமாத்மவத்தஸ்மாதபேதேன விசக்ஷணை: ||

(ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.17.84)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த உலகம் அனைத்தும் பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் பல்வேறு தோற்றங்களே ஆகும். எனவே, அறிவுடையவர்கள் தமக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் வேறுபாடுகள் காணமாட்டார்கள்.

ஸர்வத்ரதைத்யா: ஸமதாமுபேத ஸமத்வமாராதனமச்யுதஸ்ய ||–(ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.17.90)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: ஹே தைத்யர்களே (அசுரர்களே)!!! வேற்றுமைகளை கைவிடுங்கள். மற்றவரிடம் வேற்றுமை பாராமையே பகவான் அச்யுதரை வழிபடுவதாகும்.

ஸர்வபூதாத்மகே தாத ஜகன்னாதே ஜகன்மயே |

பரமாத்மனி கோவிந்தே மித்ரா(அ)மித்ராகதா குத: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.18.37)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: தந்தையே!!! பகவான் கோவிந்தர் எல்லா ஜீவராசிகளிலும் நிறைந்துள்ளார். அவரே இந்த ப்ரபஞ்சமாக உள்ளார். அவரே பரமாத்மா. அவரிடம் நட்போ விரோதமோ கொள்ளுதல் என்ற பேச்சிற்கே இடமில்லை (ஏனெனில் அனைத்தும் அவராகவே உள்ளபோது நண்பன் எது, விரோதி எது? இரண்டாவதான ஒன்று இருந்தால் தானே இவ்வாறு தோன்றும்?).

இதி விஶ்ணுபுராணே இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

அத்வைத தத்துவத்தின் மஹா வாக்யங்கள் என்று கருதப்படும்  சாந்தோக்ய மற்றும் ப்ருஹதாரண்யக உபநிஶத் வாக்யங்களுடன் மற்ற பிற மேற்கோள்களையும் உதாஹரித்து அத்வைத ஸாரத்தை விளக்குவதைக் காண்போம்.

தத்வமஸி (சாந்தோக்ய உபநிஶத் 1.4.2)-சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த ப்ரஹ்மமே நீ.

அஹம் ப்ரஹ்மாஸ்மி (ப்ருஹதாரண்யக உபநிஶத் 1.4.10)-ப்ருஹதாரண்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: நானே ப்ரஹ்மம்

இதம் ஸர்வம் யதயதாத்மா (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.4.6)-ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இங்கே எவையெல்லாம் உள்ளதோ (மனத்தால் காட்சிகளாகக் கற்பிக்கப்பட்டுள்ளதோ) அவை அனைத்தும் ஆத்மாவே.

அயமாத்மா ப்ரஹ்ம (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.5.19)-ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த ஆத்ம ப்ரஹ்மமே

தரதி ஶோகமாத்மவித் (சாந்தோக்ய உபநிஶத் 7.1.3)-சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஆத்மாவை அறிபவன் சோகத்திலிருந்து விடுபடுகின்றான்.

தத்ர கோ மோஹ: க: ஶோக: ஏகத்வமனுபஶ்யத: (ஈஶாவாஸ்ய உபநிஶத் 7)-ஈஶாவாஸ்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஒருமையைப் பார்க்கின்ற அவருக்கு மோகம் எது? சோகம் எது? (ஒருமையைப் பார்க்கின்றவனாகவும் உண்மையை அறிபவனாகவும் உள்ளவனுக்கு எப்பொழுது எல்லா உயிரினங்களும் ஆத்மாவகவே ஆனதோ, அப்பொழுது அவருக்கு மோகம் எது? சோகம் எது?)

இத்யாதி ஸ்ருதிஸ்ம்ருதீதிஹாஸபுராணலௌகிகேப்யஸ்ச | இத்தகைய வேத (ஸ்ருதி), ஸ்ருதி, இதிஹாஸ, புராண வாக்கியங்களிலிருந்தும், (லௌகிக) உலகியல் அறிவிலிருந்தும் (ஆத்மாவும், பரமாத்மாவும் ஒன்று என்ற அத்வைதம்) தெளிவாகிறது.

ஸித்தேர்SதேSபி வேதஸ்ய ப்ராமாண்யமேஶ்டவ்யம் |  நன்றாக ஸ்தாபிக்கப்பட்ட விஷயங்களிலும் (ப்ரஹ்ம ஞானம்) வேதங்களை பிரமாணமாகக் கொள்ளவேண்டும்.

ஸ்வபக்ஷஸாதனைரகார்யமர்தஜாதமாஹ சேத் |

ததா பரோSபி வேத சேச்ருதி: பராத்மத்ருங் ந கிம் ||

தங்களது கொள்கையை விளக்கும் பொழுது மீமாம்ஸகர்கள் (மறைமுகமாக) வாக்கியங்கள் (வார்த்தைகள்) செயலைத் தவிர மற்ற அறிவை கொடுக்கும் என்றும், அதைப் படிப்பவர்களும் அவ்வாறே புரிந்து கொள்வார்கள் என்றும் கூறுகிறார்கள். அப்படியெனில் வேதங்கள் (அவற்றின் வாக்கியங்கள் மூலம்) பரமாத்மாவைப் பற்றிய ஞானத்தை தரவல்லன என்று நிரூபணம் ஆகின்றதல்லவா?

இத்யபியுக்தைருக்தம் | இவ்வாறு கற்றறிந்த பெரியோர்கள் கூறுகின்றனர்.

அன்யான்விதஸ்வார்த்தே பதானாம் ஸாமர்த்யம் ந கார்யான்விதஸ்வார்த்தே, ததா ஸத்யர்த்தவாதானாமனன்வய-ப்ரஸங்காத் அன்வயபுத்தே: ஸ்துதித்வாத் | ந ஹி பவதி

பொருட்களை (பதார்த்தங்களை) விளக்கும் சொற்களும், காரியத்தை விட காரணமாகிய பொருளையே சிறப்பாகச் சொல்கின்றன (உதாரணமாக “பசுவைக் கொண்டு வா” என்று கூறும்பொழுது கொண்டு வருதலாகிய செயலானது பசு என்ற பதார்த்தத்தைக் கொண்டே சிறப்பு பெறுகிறது). அவ்வாறு இல்லாதிருப்பின் (அதாவது சொற்கள் காரியங்களைக் கூறுமாயின்), மீமாம்சகர்களின் அர்த்தவாதங்கள் (காரியத்தை செய் அல்லது செய்யாதே என்று கூறும் வாக்கியங்கள்) அர்த்தமற்ற அலங்கார சொற்களாகி விடும்.

வாயவ்யம் ஶ்வேதமாலபேத பூதிகாமோ வாயூர்வை க்ஷேபிஶ்டா தேவதா

இதி | ராகஸ்யைவ ப்ரவர்த்தகத்வம், ந நியோகஸ்ய |

“செல்வத்தை விழைபவர் வாயு பகவானுக்கு வெள்ளை நிற மிருகத்தை பலியிட வேண்டும். ஏனெனில் வாயு அதி வேகமாக செல்லக்கூடிய தேவதையாவார்”. இந்த வாக்கியத்தில் ‘இதை செய் (வெள்ளை மிருகத்தை பலியிடு)’ என்ற ஆணை ஒருவரை செயல்புரிய தூண்டுவதில்லை. அவரவரின் (ஸ்வர்க்கத்தை அடையவேண்டும், மிகுந்த செல்வத்தை அடையவேண்டும் போன்ற) விருப்பங்களே ஒருவரை செயல்புரிய தூண்டுகின்றன.

ததா ச ஸ்ருதி: மேலும் ஸ்ருதி வாக்கியங்களும் இவ்வாறு கூறுகின்றன:

அதோ கல்வாஹு: காமமாய ஏவாயம் புருஶ இதி ஸ யதா காமோ பவதி தத்க்ரதுர்பவதி யத்க்ரதுர்பவதி தத் கர்ம குருதே யத் கர்ம ததபிசம்பத்யதே |

இந்த மனிதன் ஆசையே உருவானவன் என்று கூறப்படுகிறது. அவன் எதை விரும்புகிறானோ அதை அடைய உறுதி கொள்கிறான். அந்த உறுதியினால் செயல் புரிகிறான், எந்த செயலைப் புரிகின்றானோ அதற்கேற்ப பலாபலன்களை அடைகின்றான்.

ததா ச ஸ்ம்ருதிரபி – மனுஸ்ம்ருதியிலும்,

அகாமஸ்ய க்ரியா காசித் திருஶ்யதே நேஹ கஸ்யசித் |

யத் யத்தி குருதே கர்ம தத்தத் காமஸ்ய சேஶ்டிதம் || (மனுஸ்ம்ருதி 2.4)

இந்த உலகில் ஆசையின்றி எவரும் செயல் புரிவதில்லை. எந்த எந்த கர்மம் செய்யபடுகின்றதோ அவை அனைத்தும் ஆசையின் விளைவாகவே செய்யப்படுகின்றன.

இதி – இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

காம ஏ க்ரோத ஏ (ஸ்ரீ பகவத்கீதை 3.37)

இஃது விருப்பமும் சினமும்

இதி – இவ்வாறு (ஸ்ரீ பகவத்கீதையில்) கூறப்பட்டுள்ளது.

அன்யபராணாமபி மந்த்ரார்த்த வாதானாம் ப்ராமான்யம் அங்கீகர்த்தவ்யம் | தேஶாம் அப்ராமான்யகதநேன உரகத்வம் கதவான்னஹுஷ: | தத்கதம்?

எனவே மற்ற அர்த்த வாதமான விஷயங்களைக் கூறும்பொழுதும், மந்திரங்களின் ப்ரமாணத்தை (அதிகாரத்தை) நாம் ஒற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், அவற்றை ஏற்றுகொள்ள முடியாது என்று கூறிய நஹுஷன் ஒரு பாம்பாய் பிறந்தான். இது எவ்வாறு?

ருயஸ்து பரிஶ்ராந்தா வாஹ்யமானா துராத்மனா |

தேவர்யோ மஹாபாகாஸ்ததா ப்ரஹ்மர்யோSமலா: || 8

பப்ரஸ்சு: ஸம்யம் தே து நஹும் பாபசேதஸம் |

ய இமே ப்ரஹ்மணா ப்ரோக்தா மந்த்ரா வை ப்ரோக்ஷனே கவாம் || 9

ஏதே ப்ரமாணம் பவத உதாஹோ நீதி வாஸவ |

நஹுஶோ நீதி தானாஹ ஸஹஸா மூடசேதன: || 10

பாப சிந்தனை உடைய நஹுஶனால் பல்லக்கை சுமக்குமாறு நியமிக்கப் பட்ட தூய்மையான குணம்படைத்த முனிவர்கள், ப்ரஹ்மரிஷிகள் மற்றும் தேவ ரிஷிகள் களங்கமான மனம் படைத்த அந்த நஹுஶனைப் பார்த்து தங்களது சந்தேகத்தைப் பற்றி விளக்கம் கேட்டனர். ‘ஹே இந்த்ரனே! வேதங்களில் பசுக்களை ப்ரோக்ஷிப்பதர்க்கு (மந்திர நீரைத் தெளித்து தூய்மை படுத்துவதற்கு) உரிய மந்திரத்தை தாங்கள் ப்ரமாணமாக ஏற்கிறீர்களா?’ அதற்கு அந்த மந்த புத்தியுடைய நஹுஷன் ‘இல்லை’ என்று பதிலுரைத்தான்.

ருய ஊசு: –

அதர்மே ஸம்ப்ரவ்ருத்தஸ்த்வம் தர்மம் ச விஜிக்ருக்ஷஸி |

ப்ரமாணமேததஸ்மாகம் பூர்வம் ப்ரோக்தம் மஹர்ஷிபி: || 11

அந்த முனிவர்கள் பதிலுரைத்தனர்: நீ அதர்மத்தின் வழி சென்று, தர்மத்தை துறக்க விரும்பிகிறாய். முற்காலத்தில் மஹரிஷிகள் அந்த மந்திரத்தை ப்ரமாணமாகக் கொள்ளவேண்டும் என்று எங்களுக்கு போதித்துள்ளனர்.

அகஸ்த்ய உவாச –

ததோ விவதமான: ஸன் ருஷிபி: சஹ பார்த்திவ: |

அத சாமஸ்ப்ருஷன்மூர்த்த்னி பாதேனாதர்மபீடித: || 12

அகஸ்த்யர் கூறினார்: அப்பொழுது அந்த ரிஷிகளுடன் விவாதம் செய்த வண்ணம் அதர்மம் தலையெடுத்து அந்த நஹுஷன் எனது தலையின் மீது அவனது காலை வைத்தான்.

தேனாபூத்ததசேதா: ஸ நி:ஸ்ரீகஸ்ச ஷசீபதே: |

ததஸ்தமஹமுத்விக்னமாவோசம் பயபீடிதம் || 13

ஹே இந்த்ரனே! இதனால் அவனது நற்புத்தி தொலைந்து அவனது செல்வங்கள் அவனை விட்டு விலகிச் சென்றன. புத்தியிழந்து பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்த அந்த நஹுஷனைப் பார்த்து நான் இவ்வாறு கூறினேன்.

யஸ்மாத் பூர்வை: க்ருதம் மார்கம் மஹர்ஷிபிரனுஷ்டிதம் |

அதுஷ்டம் தூஷயஸி வை யச்ச மூர்த்ன்ர்யஸ்ப்ருஷ: பதா || 14

யச்சாபி தவம்ருஷீன்மூட பிரஹ்மகல்பான் துராசதான் || 15

வாஹான் க்ருத்வா வாஹயஸி தேன ஸ்வர்காத்தபிரப: |

த்வம் ஸ்வபாபபரிப்ரஷ்ட: க்ஷீனபுண்யோ மஹீபதே || 16

தஸவர்ஷஸஹஸ்ராணி ஸர்ப்பரூபதரோ மஹீம் |

விசரிஷ்யஸி தீர்னஸ்ச்ச புன: ஸ்வர்கமவாப்ஸ்யஸி || 17

(அகஸ்த்யர் கூறுகிறார்) அடே மூடனே! நீ பல காலமாய் மஹரிஷிகளால் உபதேசிக்கப்பட்டு, கடைபிடிக்கப்பட்டு வரும் தூய்மையான வழிமுறைகளை தவறென்று உரைத்தாய், எனது தலை மீது உனது கால்களை வைத்தாய், எவரை காண்பதுவும் மிகக்கடினமானதோ அத்தகைய உயர்ந்த மஹரிஷிகளை உனது பல்லக்கை சுமக்கச் செய்தாய். எனவே, ஒ அரசனே! இந்த குற்றங்களுக்காக, நீ உனது பாபங்களால் பீடிக்கப்பட்டு, உனது புண்ணியத்தையும் ஒளியையும் இழந்து, ஒரு பாம்பின் வடிவம் எடுத்து பூமியில் பத்தாயிரம் ஆண்டுகள் உழல்வாய். (பத்தாயிரம் ஆண்டுகளுக்கு) பின்னர் உன் சாபம் தீர்ந்து பிறகு ஸ்வர்கத்தை வந்து அடைவாய்.

இதி ஸ்ரீமஹாபாரதே – இவ்வாறு ஸ்ரீமஹாபாரதம் உத்யோக பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.

அத: ஷ்ரத்தேயமாத்மஞானம் எனவே ஆத்மஞானத்தை நம்பிக்கையுடன் ஒத்துக்கொள்ளவேண்டும்.

அஶ்ரத்ததானா: புருஷா தர்மஸ்யாஸ்ய பரந்தப |

அப்ராப்ய மாம் நிவர்த்தந்தே ம்ருத்யுஸம்ஸாரவர்த்மனி || (ஸ்ரீ பகவத் கீதை 9.3)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: பகையைச் சுடுவோய்! அறத்தில் நம்பிக்கையில்லாத மனிதர் என்னை எய்தாமே மீட்டும் நரக ஸம்ஸார பாதைகளில் மீளுகின்றனர்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீ பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

ஐதரேயகே ச,

ஏஷ பந்தா ஏதத்கர்மைதத்ப்ரஹ்மைதத்ஸத்யம் தஸ்மான்ன ப்ரமாத்யைத்தன்னாதீயான்ன ஹ்யத்யாயன்பூர்வே யேSத்யாயம்ஸ்தே பராபபூவு: (ஐத்ரேய ஆரண்யகம் 2.1.1)

ஐத்ரேய ஆரண்யகத்தில் கூறப்பட்டுள்ளது: இதுவே வழி, இதுவே கர்மம், இதுவே ப்ரஹ்மம் மற்றும் இதுவே உண்மையாகும். எனவே, இதைவிட்டு பிறழவோ, இதை துறக்கவோ வேண்டாம். முற்காலத்தில், இதை துறந்தவர்கள் தத்தம் வழியினின்று தவறினர்.

ததுக்தம்ருஶிணா ரிஷிகளும் இவ்வாறு கூறுகின்றனர்,

ப்ரஜா ஹ திஸ்ர அத்யாயமீயுர்ன்யன்யா அர்கமபிதோ விவிஶ்ரே | ப்ருஹத்ததஸ்தௌ புவனேஶ்வந்த: பவமானோ ஹரித ஆவிவே: (ஐத்ரேய ஆரண்யகம் 2.1.4)

ஐத்ரேய ஆரண்யகத்தில் கூறப்பட்டுள்ளது:

மூன்று வகையான மனிதர்கள் தர்மத்தை துறந்தார்கள். மற்றவர்கள் அக்னி, அனைத்துலகங்களின் மத்தியில் இருக்கும் கதிரவனையும், உபாசித்தனர். பிறகு உலகை தூய்மைபடுத்தும் காற்று (வாயு) வீசத்தொடங்கியது (சிலர் அந்த வாயுதேவனை உபாசித்தனர்).

ப்ரஜா ஹ திஸ்ரோ அத்யாயமீயுரிதி யா வை தா இமா: பிரஜா: திஸ்ரோSத்யாயமீயுஸ்தானிமானி வயாம்ஸி வங்கா வகதாஶ்சேரபாதா: | (ஐத்ரேய ஆரண்யகம் 2.1.5)

ஐத்ரேய ஆரண்யகத்தில் கூறப்பட்டுள்ளது:

மூன்று வகையான மனிதர்கள் தர்மத்தை துறந்தார்கள். எந்த மூன்று வகையான மனிதர்கள் தர்மத்தை துறந்தார்களோ, அவர்கள் பறவைகளாகவும், மரம், மூலிகைச் செடிகளாகவும், பாம்புகளாகவும் பிறப்பெடுக்கிறார்கள்.

இதி ஸ்ருதம் |  இவ்வாறு ஸ்ருதி கூறுகிறது.

வங்கா வனகா: வ்ருக்ஷா: | ‘வங்கா’ என்பது வனங்களில் வளரும் மரங்களாகும்.

வகதா: ஒஷதயச்ச | ‘வகதா’ என்பது மூலிகைச் செடிகளாகும்.

இரபாதா உர:பாதா: ஸர்பாதய: | ‘இரபாதா’ என்பது ‘மார்பையே கால்களாகக் கொண்ட பிராணிகளாகும்’, அதாவது பாம்புகளாகும் (பாம்புகள் ஊர்ந்து செல்வதால் அவற்றின் மார்பு பிரதேசமே அவற்றின் கால்களாகும்).

ததா ச ஈஶாவாஸ்யே அவித்வன்னின்தார்த்தே மந்தர: – மேலும், ஈசாவாஸ்ய உபநிஶத்தில் (தர்மத்தை பற்றிய) அறிவற்றவரை குறைகூறும் மந்திரம் இவ்வாறு உள்ளது –

அசுர்யா நாம தே லோகா அந்தேன தமஸாவ்ருதா: |

தாக்ம்ஸ்தே ப்ரேத்யாபிகச்சந்தி யே கே சாத்மஹனோ ஜனா: ||
(ஈஶாவாஸ்ய உபநிஶத் 3)

ஈசாவாஸ்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

தங்களை அழித்துக்கொள்கின்ற மனிதர்கள் எவர்களோ, அவர்கள் அசூர்யா என்ற பெயருடைய அடர்ந்த இருளால் மூடப்பட்ட எந்த லோகங்கள் உண்டோ, அந்த லோகங்களை மரணத்திற்குப் பின் அடைகிறார்கள் (இங்கு லோகம் என்னும் சொல்லை சரீரத்தைக் குறிப்பதாகவும், அவர்கள் அசுர பிறப்பை அடைவார்கள் என்றும் கொள்ளலாம்).

அஸந்நேவ ஸ பவதி | அஸத்ப்ரஹ்மேதி வேத சேத் ||
(தைத்த்ரிய உபநிஶத் 2.6)

இதி தைத்த்ரியே

தைத்த்ரிய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

எவனொருவன் ப்ரஹ்மத்தை பொய்யென்று நினைக்கின்றானோ அவன் தனது உண்மை தன்மையை இழக்கின்றான்.

ததா ஷகுந்தலோபாக்யானே

யோSன்யதா சந்தமாத்மானமன்யதா ப்ரதிபத்யதே |

கிம் தேன ன க்ருதம் பாபம் சோரேணாத்மாபஹாரினா ||

ஷகுந்தலோபாக்யானத்தில் கூறப்பட்டுள்ளது:

எவனொருவன் எங்கும் நிறைந்துள்ள ஆத்மாவை பலவென்று நினைத்து தனது ஆத்மாவை அழிக்கின்றானோ, அந்த திருடனால் எந்த பாபம் தான் செய்யப்படவில்லை?

இத்யலமதிப்ரசங்கேன – (நான் கூறவந்ததை கூறிவிட்டேன்) இனி மேற்கொண்டு பேசுவதற்கு எதுவுமில்லை.

ஸஹஸ்ரநாமஜபஸ்ய அனுரூபம் மானசஸ்நானமுச்யதே – ஸஹஸ்ரநாம ஜபம் நமது உள்ளத்தை (ஆத்மாவை) தூய்மைபடுத்தும் ஸ்நானமாக வர்ணிக்கப்படுகிறது.

யஸ்மின் தேவாஸ்ச்ச வேதாஸ்ச பவித்ரம் க்ருத்ஸ்னமேகதாம் |

வ்ரஜேத்தன்மானஸம் தீர்த்தம் தத்ர ஸ்னாத்வாம்ருதோ பவேத் ||

அதுவே மானச தீர்த்தம்; மனதின் ஸ்நானம். எங்கு நீராடுவதால் தேவர்களும் வேதங்களும் புனிதமும், பூர்ணத்வமும், ஒருமையும் அடைகின்றார்களோ (அடைகின்றனவோ), அங்கு நீராடுவதால் அமரத்தன்மை கிடைக்கும்.

ஞானஹ்ருதே த்யானஜலே ராகத்வேமலாபஹே |

ய: ஸ்னாதி மானஸே தீர்த்தே ஸ யாதி பரமாம் கதிம் ||

எவனொருவன் ஞானம் எனும் குளத்தில், த்யானம் என்னும் நீரால் நிறைந்த அந்த மனமென்னும் தீர்த்தத்தில் நீராடுகிறானோ, அவன் (தன் மனத்திலிருக்கும்) விருப்பு வெறுப்பென்னும் அழுக்குகளை களைந்து பரமகதியை அடைகிறான்.

ஸரஸ்வதி ரஜோரூபா தமோரூபா களிந்தஜா |

ஸத்வரூபா ச கங்கா ச ந யாந்தி ப்ரஹ்ம நிர்குணம் ||

ஸரஸ்வதி (நதி) ரஜோமயமானது, யமுனை தமோமயமானது மற்றும் கங்கை ஸத்வமயமானது. அதாவது (அவை குண சேர்க்கையுடன் இருப்பதால்) அவை (அவற்றில் நீராடுபவனை) நிர்குண ப்ரஹ்மத்திடம் அடைவிக்க முடியாது.

ஆத்மா நதி ஸம்யமதோயபூர்ணா ஸத்யஹ்ருதா ஷீலதடா தயோர்மி: |

தத்ராவகாஹம் குரு பாண்டுபுத்ர ந வாரினா ஷுத்யதி சாந்தராத்மா ||

ஆத்மாவே நதியாகும், புலனடக்கம் அதிலுள்ள நீராகும்; சத்தியமே ஆழமாகும்; நன்னடத்தையே அதன் கரைகளாகும்; கருணையே அதிலுள்ள அலைகளாகும்; ஹே பாண்டுபுத்ரனே!! இந்த (ஆத்ம) நதியில் நீராடுவாயாக. (மற்ற நதிகளிலுள்ள) வெறும் நீரினால் ஆத்மா தூய்மையடையாது.

இதி மஹாபாரதே – இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

மானசம் ஸ்நானம் விஶ்ணுசிந்தனம்

பகவான் ஸ்ரீவிஶ்ணுவை த்யானிப்பதே நமது மனத்திற்கும் ஆத்மாவிற்கும் ஸ்நானமாகும்.

இதி ஸ்ம்ருதௌ – இவ்வாறு ஸ்ம்ருதியில் கூறப்பட்டுள்ளது.

ஜப்யேனைவ து ஸம்ஸித்யேத்  ப்ராஹ்மனோ நாத்ர ஸம்ஷய: |

குர்யாதன்யன்ன வா குர்யான்மைத்ரோ ப்ராஹ்மன உச்யதே ||

இதில் சந்தேஹமே இல்லை! ஜபத்தினால் மட்டுமே ஒருவன் பிராமணத் தன்மையை அடைகிறான். மற்ற கர்மங்களை செய்தாலும் செய்யாவிட்டாலும், அவன் ஜபத்தினால் மட்டுமே தூய்மை அடைகிறான். அதனால், ஒரு பிராமணன் ‘மைத்ர’ (அனைவரின் நண்பன்) என்று அழைக்கப்படுகிறான்.

இதி மானவம் வசனம் – இவ்வாறு மனு ஸ்ம்ருதியில் (2.87) கூறப்பட்டுள்ளது.

ஜபஸ்து ஸர்வதர்மேப்ய: பரமோ தர்ம உச்யதே |

அஹிம்ஸயா ச பூதானாம் ஜபயஞ்ய: ப்ரவர்த்ததே ||

அனைத்து தர்மங்களிலும் ஜபமே மிகச்சிறந்த தர்மமாக கருதப்படுகிறது. ஏனெனில், ஜபயஞ்யம் பிராணிகளை ஹிம்ஸிக்காமலேயே பூரணமடைகிறது.

இதி – இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

யஞ்ஞானாம் ஜப்யஞ்ஞோSஸ்மி | (ஸ்ரீமத் பகவத் கீதை 10.24)

யக்ஞங்களில் நான் ஜபயக்ஞ்யம்

இதி ஸ்ரீகீதாயாம் – இவ்வாறு ஸ்ரீமத் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது.

அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோSபி வா |

ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தர: சுசி: ||-(ஸ்ரீ பத்ம புராணம் 9.80.12)

ஸ்ரீ பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-தூய்மையாக இருக்கின்றானோ அல்லவோ, அவன் எத்தகைய நிலையில் இருந்தாலும், தாமரைக்கண்ணன் பகவான் ஸ்ரீ விஶ்ணுவை நினைத்த மாத்திரத்திலேயே ஒருவன் உள்ளும் புறமும் தூய்மையடைகிறான்.

இத்யாதி – இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

யதேகம் தைவதம் ப்ரஸ்துதம் தஸ்யோபலக்ஷணமுச்யதே – (மேலே) எந்த ஒரு கடவுளைப் பற்றி கூறப்பட்டதோ, அவரது குணதிசயங்களை (பீஷ்மர்) வர்ணிக்கிறார்.

யத: ஸர்வாணி பூதானி பவந்த்யாதியுகாகமே |
யஸ்மிம்ஸ்ச ப்ரளயம் யாந்தி புனரேவ யுகக்ஷயே || 11 ||

யத:, ஸர்வாணி, பூதானி, பவந்தி, ஆதியுகாகமே |

யஸ்மின், ச, ப்ரளயம், யாந்தி, புன:, ஏவ, யுகக்ஷயே ||

எவரிடமிருந்து, கல்பத்தின் தொடக்கத்தில் ஜீவராசிகள் தோன்றினவோ, அவரிடமே (அந்த முழுமுதற் கடவுளான ஸ்ரீமன்நாராயணனிடமே) கல்பத்தின் முடிவில், மஹாபிரளயத்தில் சென்று லயமடைகின்றன.

யத: யஸ்மாத் எவரிடமிருந்து ஸர்வாணி பூதானி பவந்தி உத்பவந்தி அனைத்து ஜீவராசிகளும் தோன்றினவோ ஆதியுகாகமே கல்பாதௌ கல்பத்தின் தொடக்கத்தில் (அதாவது முதல் யுகமான க்ருத யுகத்தில்) கல்பத்தின் தொடக்கத்தில் முதல் யுகமான க்ருத யுகத்தில் யாரிடமிருந்து அனைத்து ஜீவராசிகளும் தோன்றினவோ |

யஸ்மிம்ஸ்ச ப்ரளயம் விலயம் (கல்பம், யுகம் முடிவில்) ப்ரளய காலத்தில் யாந்தி விநாஶம் கச்சந்தி அழிவை அடைகின்றனவோ புன: பூய:, மறுபடியும் ஏவ இத்யவதாரணார்த்த:, நான்யஸ்மின்னித்யர்த்த: இங்கு ஏவ என்பதன் அர்த்தம் எந்த ஒருவரிடமிருந்து அனைத்தும் தோன்றியதோ அந்த ஒருவரிடமே லயமடைகிறது, வேறொருவரிடம் இல்லை, யுகக்ஷயே மகாப்ரளையே மஹாப்ரளய காலத்தில் | மஹாப்ரளய காலத்தில் எவரிடம் (எவரிடமிருந்து தோன்றியதோ, அவரிடமே) அனைத்தும் சென்று லயமடைகிறதோ |

சகாரான்மத்யேSபி யஸ்மிம்ஸ்திஷ்டந்தி | (இந்த ஸ்லோகத்தில் வரும்) ‘ச’காரத்தின் அர்த்தம் என்னவெனில், (கல்ப, யுக தொடக்கம், மற்றும் ப்ரளயத்தின்) இடையினிலும் அவரிடமே நிலைபெற்று இருக்கின்றன என்பதாகும்.

யதோ வா இமானி பூதானி ஜாயந்தே யேன ஜாதானி ஜீவந்தி யத் ப்ரயந்த்யபிஸம்விஷந்தி|| (தைத்ரிய உபநிஶத் 3.1)

ஸ்ரீ தைத்ரிய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:-எதனிடமிருந்து இந்த ஜீவராசிகள் தோன்றுகின்றனவோ, எதனால் வாழ்கின்றனவோ, இறப்பவை எதனை சென்றடைகின்றனவோ…

தஸ்ய,  லோகப்ரதானஸ்ய, ஜகன்னாதஸ்ய, பூபதே |

விஶ்ணோ:, நாமஸஹஸ்ரம், மே, ஶ்ருணு, பாபபயாபஹம் ||

ஹே பூவுலகின் அரசனே (யுதிஷ்டிரனே)! மேற்சொன்ன இத்தகைய லக்ஷணங்களால் குறிப்பிடப்படும் அந்த ஒரே முழுமுதற் கடவுளும், அனைத்து உலகங்களும் தோன்றுவதற்குக் காரணமாகவும், ஞானத்தினால் அறியப்படுபவரும், அனைத்துலகின் ஸ்வாமியும், மாயைகள் அற்றவரும், எங்கும் நிறைந்துள்ளவருமான, பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் – “நமது தீவினையால் உருவான பாபங்களைப் போக்குவதும், சம்ஸார பயத்தைப் போக்குவதுமான” – ஆயிரம் திருநாமங்களை என்னிடமிருந்து கேட்பாயாக; (அவற்றை நீ) ஒருமித்த சிந்தையுடன் க்ரஹித்துக் கொள்வாயாக.

தஸ்ய ஏவம் லக்ஷணலக்ஷிதஸ்ய ஏகதைவஸ்ய மேற்சொன்ன இத்தகைய லக்ஷணங்களால் குறிப்பிடப்படும் அந்த ஒரே முழுமுதற் கடவுளும் 

லோகப்ரதானஸ்ய லோகனஹேதுபி: வித்யாஸ்ஸ்தானை: பிரதிபாத்யமானஸ்ய அனைத்து உலகங்களும் தோன்றுவதற்குக் காரணமாகவும், ஞானத்தினால் அறியப்படுபவரும்,

ஜகன்னாதஸ்ய ஜகதாம் நாத: ஸ்வாமி மாயாஷபல: பரமாத்மா நிர்லேபஸ்ச தஸ்ய அனைத்துலகின் ஸ்வாமியும், மாயைகள் அற்றவரும்,

பூபதே மஹிபால பூவுலகின் அரசனே

விஶ்ணோ: வ்யாபனஷீலஸ்ய எங்கும் நிறைந்துள்ளவருமான, பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் 

நாமஸஹஸ்ரம் நாம்னாம் ஸஹஸ்ரம் ஆயிரம் திருநாமங்களை 

பாபபயாபஹம் அஶுபகர்மக்ருதம் பாபம் ஸம்ஸாரலக்ஷணபயம் சாபஹந்தீதி, நமது தீவினையால் உருவான பாபங்களைப் போக்குவதும், சம்ஸார பயத்தைப் போக்குவதுமான

த்வம் மே மத்த: ஶ்ருணு என்னிடமிருந்துக் கேட்பாயாக ஏகாக்ராமணா பூத்வாவதாரயேத்யர்த்த: ஒருமித்த சிந்தையுடன் அதை நீ க்ரஹித்துக் கொள்வாயாக

ஏகஸ்யைவ ஸமஸ்தஸ்ய ப்ரஹ்ணோ த்விஜஸத்தம |  

நாம்னாம் பஹுத்வம் லோகானாமுபகாரகரம் ஶ்ருணு ||–ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

இருபிறப்புடையோரில் சிறந்தவனே (அந்தணனே)!! எங்கும் நிறைந்துள்ள அந்த ஒரே பரப்ரஹ்மத்தின் பல திருநாமங்கள் உலகிற்கு (உலக மக்களுக்கு) நன்மை தருவனவாகும். அவற்றை கேட்பாயாக!!

நிமித்தக்தயோ நாம்னாம் பேதின்யஸ்ததுதீரனாத் |

விபின்னான்யேவ சாத்யந்தே ஃபலானி த்விஜஸத்தம ||-ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

இருபிறப்புடையோரில் சிறந்தவனே (அந்தணனே)!! இந்த திருநாமங்களை வெவ்வேறாக உச்சரித்துத் த்யானிப்பதர்க்கு அவற்றின் (வெவ்வேறான) நிமித்த சக்திகளே காரணமாகும். எனவே, ஒவ்வொரு நாமத்திற்கும் அதன் நிமித்த சக்தியை பொறுத்தும், த்யானிப்பவரின் தன்மையை பொறுத்தும் வெவ்வேறான பலன்கள் கிடைக்கின்றன.

யச்சக்தி நாம யத்தஸ்ய தத்தஸ்மின்னேவ வஸ்துனி |

சாதகம் புருஶவயாக்ர சௌம்யே க்ரூரேஶு வஸ்துஶு ||

ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

ஹே மனிதர்களில் புலி போன்றவனே!!! ஒவ்வொரு திருநாமத்திற்கும் உள்ள சக்தியானது, (த்யானிப்பவரின்) மன நிலையை பொறுத்து மென்மையான அல்லது கடினமான உருக்கொள்கிறது.

இதி விஶ்ணுதர்மவசனாத்யத்யபி பரஸ்ய ப்ரஹ்மண: ஶஶ்டிகுணக்ரியாஜாதிரூடீனாம் ப்தப்ரவ்ருத்திஹேதுபூதானாம் நிமித்தக்தினாம் ஸ அஸம்பவ:

இந்த விஶ்ணுதர்மோத்தர புராணத்தின் வாக்கியத்தின் படி, (நிர்குண, நிர்விஷேஷன) பரப்ரஹ்மத்தை உறவு, குணம், செயல், ஜாதி மற்றும் குறிப்பு சொற்கள் (போன்ற நாமங்களால்) மூலம் விவரிக்க இயலாது.

ததாபி ஸகுணே ப்ரஹ்மணி ஸவிகாரே ச ஸர்வாத்மகத்வாத்தேஶாம் ப்தப்ரவ்ருத்திஹேதூநாம் ஸம்பவாத் ஸர்வே ப்தா: பரஸ்மின் பும்ஸி வர்தந்தே ||

ஆயினும் பரப்ரஹ்மம் அனைத்துமாய் இருப்பதனால் சகுண ப்ரஹ்மத்தை இத்தகைய நாமங்களால் விவரிக்க இயலும். அனைத்தும் ப்ரஹ்மமேயாதலால், அனைத்தும் நாமங்களும் அந்த ஒப்பற்ற பரம்பொருளையே குறிக்கும்.

தத்ர அவற்றுள் எந்தெந்த திருநாமங்களை கூறுகிறார் என்பதை பீஶ்மாசார்யார் அடுத்த ஸ்லோகத்தில் விளக்குகிறார்.

யானி நாமானி கௌணானி விக்யாதானி மஹாத்மன: |

ரிஶிபி: பரிகீதானி தானி வக்ஷ்யாமி பூதயே || 13 ||

யானி, நாமானி, கௌணானி, விக்யாதானி, மஹாத்மன: |

ரிஶிபி:, பரிகீதானி, தானி, வக்ஷ்யாமி, பூதயே ||

(அந்த பரப்ரஹ்மத்தின் திருநாமங்களுள்) அவரது குணங்களினின்று தோன்றியதும், (அந்த குணங்களை வர்ணிக்கும் திருநாமங்களுள்) மிகவும் புகழ் பெற்றதும், (அவ்வாறு குணங்களை வர்ணித்தும், பிரசித்தி பெற்றதுமான திருநாமங்களுள்) மந்திர சித்தி பெற்ற முனிவர்களாலும் மற்றும் பகவானின் அவதாரங்களை வர்ணிக்கும் புராணக்கதைகளில் பாடபெற்றதும், நான்கு வித புருஷார்த்தங்களையும் அளிக்கவல்லதான திருநாமங்களை, (அந்த புருஷார்த்தங்களை) அடைவிக்கும் பொருட்டு உனக்கு நான் உபதேசிக்கிறேன்.

யானி நாமானி கௌனானி குண ஸம்பந்தீனி குணயோகாத் ப்ரவ்ருத்தானி தேஶு ச யானி (அந்த பர ப்ரஹ்மத்தின்) குணங்களினின்று தோன்றியதும்

விக்யாதானி ப்ரஸித்தானி (அந்த குணங்களினின்று தோன்றிய திருநாமங்களில்) மிகவும் புகழ் பெற்றதும்,

ரிஶிபி: மந்த்ரைஸ்தத்தர்ஶிபிஶ்ஸ்ச (அவ்வாறு குணங்களை வர்ணித்தும், பிரசித்தி பெற்றதுமான திருநாமங்களுள்) மந்திர சித்தி பெற்ற முனிவர்களால்

பரிகீதானி பரித: ஸமந்தத: பரமேஶ்வராக்யானேஶு தத்ர தத்ர கீதானி மஹாம்ஸ்சாஸாவாத்மேதி பகவானின் அவதாரங்களை வர்ணிக்கும் புராணக்கதைகளில் பாடபெற்றதும் மஹாத்மா தஸ்யாசிந்த்யப்ரபாவஸ்ய அந்த மஹாத்மாவின் நினைத்தற்கரிய பெருமைகளை

தானி வக்ஷ்யாமி பூதயே புருஶார்த்தசதுஷ்ட்யஸித்யை பூதயே புருஶார்த்த சதுஷ்ட்யார்தினாமிதி நான்கு வித புருஷார்த்தங்களையும் அளிக்கவல்லதான திருநாமங்களை, (அந்த புருஷார்த்தங்களை) அடைவிக்கும் பொருட்டு உனக்கு நான் உபதேசிக்கிறேன்.

மஹாத்மா

யச்சாப்னோதி யதாதத்தே யச்சாத்தி வியாநிஹ |

யச்சாஸ்தி சந்ததோ பாவஸ்தஸ்மாதாத்மேதி கீர்த்யதே || (லிங்க புராணம் 1.70.96)

ஸ்ரீ லிங்க புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-அந்த புருஶன் ஸுஷுப்தி தசையில் ப்ரஹ்மத்தை உணர்கிறான், ஸ்வப்ன தசையில் இந்த்ரியங்கள் இல்லாமலே விஷய சுகத்தை அனுபவிக்கிறான் மற்றும் ஜாக்ரத தசையில் (இந்த்ரியங்களோடு) விஷயங்களை அனுபவிக்கிறான், இவ்வாறு எப்பொழுதும் அவன் நிகழ் காலத்திலேயே இருப்பதால் அந்த புருஶனை ஆத்மா என்று அழைக்கிறார்கள்.

இதி வசனாதயமேவ மஹாநாத்மா இந்த லிங்க புராண வாக்யத்தின் மூலம் அந்த பரப்ரஹ்மமே மஹாத்மா என்று அறியப்படுகிறார்.

ரிஶிர் நாம்னாம் ஸஹஸ்ரஸ்ய வேத வ்யாஸோ மஹாமுனி: |
சந்தோனுஶ்டுப்  ததா தேவோ பகவான் தேவகி ஸுத: ||
இந்த ஸஹஸ்ரநாமத்தை நமக்கு அளித்தவர் மஹா முனிவரான (தபஸ்வியான) வேத வ்யாஸர். இதை (ஒரு ஸ்லோகத்திற்கு எட்டு பதங்களைக் கொண்ட) அனுஶ்டுப் சந்தத்தில் அமைத்துள்ளார். இந்த ஸ்தோத்ரத்திற்கு உரிய தெய்வம் தேவகி ஸுதனான பகவான் க்ருஶ்ண பரமாத்மா ஆவார்.
விஶ்ணு ஸஹஸ்ரநாமமாக இருப்பினும், இதை நேரடியாக கேட்டு, ஆமோதித்தவர் பகவான் ஸ்ரீக்ருஶ்ணன் ஆவார்.

அம்ருதாம்ஸூத்பவோ பீஜம் ஶக்திர் தேவகி நந்தன: |
த்ரிஸாமா ஹ்ருதயம் தஸ்ய ஶாந்த்யர்த்தே வினியுஜ்யதே || 
இந்த ஸ்லோகம் ந்யாஸத்தை விளக்குவதாக அமைந்துள்ளது. ஸஹஸ்ரநாமத்திலுள்ள சில திருநாமங்களை பீஜ ஆகியவற்றை குறிப்பதாக இந்த ஸ்லோகம் உரைக்கிறது. ந்யாஸம் மற்றும் இந்த ஸ்லோகங்களுக்கு பெரியவர்களிடம் அர்த்தத்தை கேட்டு தெரிந்து கொள்வோமாக.

விஶ்ணும் ஜிஶ்ணும் மஹாவிஶ்ணும் ப்ரபவிஶ்ணும் மஹேஶ்வரம் |
அநேக ரூப தைத்யாந்தம் நமாமி புருஶோத்தமம் ||

எங்கும் நிறைந்துள்ளவரும், அனைவரையும் வெல்பவரும், மஹேஸ்வரனும், பற்பல வடிவெடுத்து (அல்லது பற்பல வடிவம் கொண்ட) அஸுரர்களை அழிப்பவரும், புருஷோத்தமனுமான பகவான் மஹாவிஷ்ணுவை நான் வணங்குகிறேன்.

விஶ்ணும் – எங்கும் நிறைந்திருப்பவரே- பொதுவாக விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்துள்ளவர் அல்லது எங்கும் வியாபித்துள்ளவர் என்று பொருள்.

ஜிஶ்ணும் – அனைவரையும் வெல்பவரே. பகவான் அன்பு மற்றும் அழகினால் அடியவர்களையும், பராக்ரமத்தால் அசுரர்களையும் வெல்கிறார்

மஹாவிஶ்ணும் – மகாவிஷ்ணுவே!!

ப்ரபவிஶ்ணும் – அனைவரையும் அடக்கி ஆள்பவரே. (ப்ரபவிஷ்ணு என்றால் அனைவரின் மேலும் ஆதிக்கம் செலுத்துவது. பகவான் ப்ரஹ்மா முதலானோரையும் அடக்கி ஆள்கிறார்)

மஹேஶ்வரம் – ஒப்புயர்வற்ற இறைவனே. ஸஹஸ்ரநாமத்தில் ‘பூதமஹேஸ்வர:’ என்ற திருநாமத்தில், இந்த பதத்திற்கு  ‘மஹான்’ (ஒப்புயர்வற்ற, சிறந்த) ‘ஈஸ்வரன்’ (இறைவன் அல்லது ஆள்பவர்) என்று விளக்கம் அளித்துள்ளார்.

அனேக ரூப தைத்யாந்தம் – பற்பல வடிவெடுத்து (அவதரித்து) அசுரர்களை அழிப்பவரே. பகவான் வராஹ, நரசிம்மர் போன்ற பல்வேறு வடிவெடுத்து அசுரர்களை அழிக்கிறார். அல்லது, இதை வேறுவிதமாகவும் பொருள் கொள்ளலாம் – வண்டிக்குள் இருந்த அசுரன் (சகடாசுரன்), காற்று வடிவில் இருந்த அசுரன் (த்ருணாவர்த்தன்), காக்கை வடிவ அசுரன் (காகாசுரன்), பாம்பு வடிவெடுத்த அசுரன் (அகாசுரன்), கழுதை / நரி வடிவில் வந்த தேனுகாசுரன், கொக்கு வடிவில் வந்த பகாசுரன் என்று பல்வேறு வடிவெடுத்து வந்தாலும் அசுரர்களை பகவான் அழிக்கிறார்

நமாமி – உம்மை வணங்குகிறேன்

புவனேஶ்வரம் – இந்த பிரபஞ்சத்தின் தலைவரே!

எங்கும் நிறைந்திருப்பவரே, அனைவரையும் வெல்பவரே, அனைவரையும் அடக்கி ஆள்பவரே, ஒப்புயர்வற்ற இறைவனே, பற்பல வடிவெடுத்து (அவதரித்து) அசுரர்களை அழிப்பவரே, இந்த பிரபஞ்சத்தின் தலைவரே, மகாவிஷ்ணுவே!! உம்மை வணங்குகிறேன்.

ந்யாஸம்:
அஸ்ய ஸ்ரீவிஶ்ணோர் திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய… என்று தொடங்கும் இப்பகுதி ந்யாஸம் என்று அழைக்கப்படும்.

த்யானம்

க்ஷீரோர் தன்வத் ப்ரதேஸே ஸுசிமணி விலஸத் ஸைகதே மௌக்திகானாம் | 
மாலா க்லுப்தாஸனஸ்த ஸ்படிக மணிநிபைர் மௌக்திகைர் மண்டிதாங்க: |
ஶுப்ரைரப்ரைரதப்ரைருபரிவிரசிதைர் முக்த பீயூஶ வர்ஶை: |
ஆனந்தீன: புநீயாதரிநளின கதா ஶங்க பாணிர் முகுந்த: ||   

க்ஷீரோதன்வத்ப்ரதேசே – திருப்பாற்கடலில்

ஶுஶிமணி விலஸத் – அழகிய மணிகளின் ஒளியால் (நிறைந்த)

ஸைகதே – மணற்பரப்பில் (பாற்கடலின் கரையில்)

மௌக்திகானாம் மாலாக்லுப்தா – முத்து மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில்

ஸ்படிகமணி நிபைர் மௌக்திகைர் – ஸ்படிகத்திற்கு ஒப்பான முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட

மண்டிதாங்க:- அவயவங்களை உடையவரும்

ஶுப்ர: – தூய (வெண்மையான)

அப்ர: – மேகங்கள்

அதப்ரை: – பொழியும்

முக்தபீயூஶ வர்ஶை: – அமுத மழையை

ஆனந்தீ – மகிழ்பவரும்

ந: புநீயாத் – என்னை புனிதமாக்கட்டும்

அரி – ஆழிப்படை (சக்ரம்)

நளின – தாமரை

கதா – கதை

ஶங்கபாணிர் – சங்கு ஆகியவற்றை கைடலில் தாங்கியவருமான

முகுந்த:- பகவான் முகுந்தர்

வைரம் போன்று மின்னும் மணல் துகள்களைக் கொண்ட பாற்கடலின் கரைகளிலே, உயர்ந்த முத்து மலைகளால் அலங்கரிக்கப்பெற்றவரும், அவருக்கு மேலே சூழ்ந்துள்ள வெண்மேகங்கள் அமுத மழையைப் பொழியவும், ஆனந்தமே வடிவானவரும், தனது திருக்கரங்களில் கதை, சங்கு மற்றும் சக்கரங்களை ஏந்தியவரும், அனைவருக்கும் முக்தியை அளிப்பதால் முகுந்தன் என்று பெயருடையவருமான பகவான் (ஸ்ரீமந்நாராயணன்) நம்மை புனிதப்படுத்தட்டும்.

பூ: பாதௌ யஸ்ய நாபிர் வியதஸு: (அ)நில சந்த்ர ஸூர்யௌ ச நேத்ரே |
கர்ணாவாசாஸ் ஶிரோத்யௌர் முகமபி தஹநோ யஸ்ய வாஸ்தேயம் அப்தி |
அந்தஸ்தம் யஸ்ய விஶ்வம் ஸுர நர கக கோ போகி கந்தர்வ தைத்யை: |
சித்ரம்ரம்ரம் யதேதம் த்ரிபுவன வபுஶம் விஶ்ணும் ஈஶம் நமாமி ||
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய |

எங்கும் நிறை பரம்பொருளாம், அனைவர்க்கும் ஈசனாம் பகவான் விஷ்ணுவை மூவுலகின் வடிவிலே தியானிக்கின்றேன். (இந்த விராட் வடிவில்) பூமியே அவரது திருவடிகளாக, சுவர்க்கம் அல்லது ஆகாயமே அவரது நாபியாக (தொப்புள் பகுதி), திங்களும், கதிரவனும் அவரது இரு திருக்கண்களாக, திசையே அவரது காதுகளாக, சூரியமண்டலமே அவரது தலையாக, அக்னி அவர் வாயாக (அல்லது முகம் என்றும் கூறுவர்), கடல்கள் அவரது வயிறாக (உள்ளது). அவருக்குள் தேவர்கள் (ஸுரர்), மனிதர்கள் (நர), கக (பாம்புகள்), கோ (பசுக்கள், கால்நடைகள்), கந்தர்வர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய அனைவரும் சஞ்சரிக்கின்றனர்.

பூ:பாதௌ – பூமியே அவரது திருவடிகள். இந்த பூமியில் வாழும் நாம் அனைவரும் ஏற்கனவே அவரது திருவடிகளில் தான் இருக்கிறோம். அதை உணர்ந்து தவறிழைக்காது வாழ்ந்தாலே போதும். அதுவே தவம். வேறொன்றும் வேண்டாம்.

யஸ்ய நாபிர்வியதஸுரநில: – எவருடைய (அவரது) தொப்புள் பகுதியே தேவர்கள் சஞ்சரிக்கும் ஆகாயம்

சந்த்ரஸூர்யௌ ச நேத்ரே – பகலில் நம்மை காத்து, இரவில் நம்மை மகிழ்விக்கும் சந்திர, சூரியர்களே அவரது இரு கண்கள். இதன் தத்துவம் என்னவென்றால், பகவான் ஒரே நேரத்தில் சூரியன் போன்ற விழியால் நமது பாபங்களை எரிக்கிறார், சந்திரன் போன்ற விழியால் நமது துன்பங்களை போக்கி மகிழ்விக்கிறார் (கதிர்மதியம் போல் முகத்தான் – திருப்பாவை 1). மேலும், சந்திரன், சூரியன் என்ற இரு விழிகளின் மூலம் இரவு, பகல் ஆகிய இரு வேளைகளிலும் நாம் செய்யும் கர்மங்களை அவர் பார்த்துக்கொண்டே இருக்கிறார்.

கர்ணாவாஶா: – அவரது செவிகளே திசைகள். அவருக்கு எல்லாம் கேட்கும். அவருக்குத் தெரியாத இரகசியம் இந்த பிரபஞ்சத்திலேயே கிடையாது

ஶிரோத்யௌர் – த்யௌ எனப்படும் சூரிய மண்டலமே அவரது தலை (சிலர் த்யௌ என்பதற்கு ஆகாயம் என்றும் கூறுவர். இரண்டும் ஏற்புடைய அர்த்தங்களே)

முகமபி தஹனோ – அக்னி அவரது வாயில் இருக்கிறார். தனது கிருஷ்ணாவதாரத்தில் ஒருமுறை பகவான் அக்னியை வாயினால் பருகி தமது இடையர்குல நண்பர்களை காத்தான். அக்னி அவனது வாய்க்குள் அடக்கம் என்பதை ஒரு திருவிளையாடலாகவே காட்டி அருளினான்.

யஸ்ய வாஸ்தேயமப்தி: – கடல்களே அவரது வயிறு

அந்த:ஸ்தம் யஸ்ய விஶ்வம் – அவருக்குள்ளே இந்த உலகமே அடங்கியுள்ளது

ஸுர – தேவர்கள்

நர – மனிதர்கள்

கக – பாம்புகள் (இங்கு பாம்புகள் என்பது ஊர்வனவற்றை குறிப்பது)

கோ – மாடுகள் (இது அனைத்து மிருகங்களையும் குறிக்கும்)

போகி – மகிழ்கின்றன

கந்தர்வ – கந்தர்வர்கள் (இது மனிதர்களை தவிர்த்த, தேவர்களுக்கும்-மனிதர்களுக்கும் இடையிலுள்ள மற்ற இனத்தவர்களை குறிக்கும்)

தைத்யை: – அசுரர்களை

சித்ரம் – பல்வேறு (இவ்வாறு பல்வேறு வகையான ஜீவன்களும்)

ரம்ரம்யதேதம் – ரமிக்கின்றன (இன்புறுகின்றன)

த்ரிபுவன வபுஶம் – இத்தகைய மூவுலக வடிவினரான

விஶ்ணுமீஶம் – அனைவருக்கும் ஈஸ்வரனான பகவான் விஷ்ணுவை

நமாமி – அவரது இந்த விராட் ரூபத்தில் வணங்குகிறேன்.

பகவானை உள்ளபடி தியானிக்க வேண்டுமென்றால் இவ்வாறான விராட் ரூபத்தில் தான் தியானிக்க வேண்டும். ஆனால், இது அனைவராலும் இயலாத காரியம். எனவே தான் அந்த பரம்பொருள் “நமது உள்ளத்திற்கும்” விளங்குமாறு ஒரு எளிய வடிவை ஏற்கிறார்.

இது நற்றிணையில் கடவுள் வாழ்த்து. இந்த செய்யுளின் பொருளுக்கும், மேற்கண்ட தியான சுலோகத்திற்கும் உள்ள ஒற்றுமையை பாருங்கள்.

‘மா நிலம் சேவடி ஆக, தூ நீர் வளை நரல் பௌவம் உடுக்கை ஆக,

விசும்பு மெய் ஆக, திசை கை ஆக, பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக,

இயன்ற எல்லாம் பயின்று, அகத்து அடக்கிய வேத முதல்வன்’ – என்ப-

‘தீது அற விளங்கிய திகிரியோனே.’

நிலமே சேவடி, ஆகாயமே உடல், மதியும், கதிரவனுமே திருக்கண்கள் … அவனே வேத முதல்வன் என்று தெளிவுறக் கூறுகிறார் “பாரதம் பாடிய பெருந்தேவனார்”.

பகவான் வாஸுதேவனான ஸ்ரீ கிருஶ்ணனுக்கு எனது வணக்கங்கள்!!!
ஶாந்தாகாரம் புஜகஶயனம் பத்மநாபம் ஸுரேஶம்
விஶ்வாதாரம் ககனஸத்ருஶம் மேகவர்ணம் ஶுபாங்கம் |
லக்ஷ்மீகாந்தம் கமலநயனம் யோகிஹ்ருத் த்யானகம்யம்
வந்தே விஶ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம் ||

ஶாந்தாகாரம் – அமைதியான வடிவானவரும்

புஜகஶயனம் – பாம்பணையில் பள்ளி கொண்டுள்ளவரும்

பத்மநாபம் – கொப்பூழில் எழுகமல பூவழகர் (உந்தித் தாமரை படைத்தவரும்)

ஶுரேஶம் – சுரர்களுக்கு (தேவர்களுக்கு) ஈஸ்வரன், அதாவது தேவாதி தேவன்

விஶ்வாதாரம் (விஶ்வாகாரம்) – இந்த பிரபஞ்சத்திற்கு ஆதாரமாய் இருப்பவர். விஶ்வாகாரம் என்றும் கூறும் வழக்கம் உள்ளது. இவ்வாறு கூறினால், சென்ற சுலோகத்தில் அனுபவித்தார் போல இந்த பிரபஞ்சமே தனக்கு திருவுடலாக உடையவர்

ககனஶத்ருஶம் – ஆகாயம் போன்றவர் (எங்கும் பரந்துள்ளவர்)

மேகவர்ணம் – கார்மேக வண்ணத்தர் (கண்ணன் என்னும் கருந்தெய்வம்…)

ஶுபாங்கம் – அழகிய அவயவங்களை உடையவர் (என்னரங்கத் தின்னமுதர் குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில் எழுகமலப் பூவழகர்)

லக்ஷ்மீகாந்தம் – திருமகள் கேள்வன்!

கமலநயனம் – தாமரை இதழை ஒத்த திருக்கண்களை உடையவர்

யோகிஹ்ருத்யான கம்யம் – தியானத்தில் திளைக்கும் யோகிகளின் உள்ளத்தாமரையில் வீற்றிருப்பவர்

வந்தே விஶ்ணும் – பகவான் விஷ்ணுவை வணங்குகிறேன்

பவபயஹரம் – சம்சார அச்சத்தை போக்குபவர். ‘புனரபி ஜனனம், புனரபி மரணம்’ என்று ஆச்சார்யாள் கூறியபடி, இந்த சம்சாரத்தில் புல், பூண்டு முதற்கொண்டு தேவராய், அசுரராய், தாவர ஜங்கமமாய், எல்லா பிறப்பும் பிறந்து, நிலையில்லா இன்ப-துன்பங்களில் உழல்பவர்களுக்கு தமது திருவடி நிழல் அளித்து, மீளா இன்பமான முக்தியை நல்குகிறார்.

ஸர்வலோகைக நாதம் – பிரம்மா வாழும் சத்திய லோகம் முதல் பாதாள லோகம் வரையிலும் உள்ள ஈரேழு பதினான்கு உலகங்களுக்கும் ஒப்பற்ற ஒரே இறைவனும் (ஆன விஷ்ணுவை வணங்குகிறேன்)

அமைதியே வடிவானவரும், அரவணை மேல் துயில் கொள்கின்றவரும், நாபியில் (கொப்பூழில்) தாமரையை உடையவரும், தேவர்களின் தலைவரும், இந்த ப்ரபஞ்சத்திற்கே ஆதாரமானவரும்*, ஆகாயத்திற்கு ஒப்பானவரும், நீருண்ட கார்மேக வண்ணரும், அழகிய அங்கங்களை உடையவரும் (மங்களங்களை அள்ளித்தரும் அங்கங்களை உடையவரும்), திருமகள் கேள்வனும், தாமரைக் கண்ணனும், யோகிகளின் இதயத்திற்குள் த்யானத்தால் அடையப்படுபவரும், ஸம்ஸார பயத்தைப் போக்குபவரும், அனைத்துலகின் ஒரே ஒப்பற்ற நாதனுமான பகவான் விஷ்ணுவை வணங்குகின்றேன்.
சிலர் விஶ்வாதாரம் என்பதற்கு பதிலாக விஶ்வாகாரம் என்று கூறுவது வழக்கம். இதற்கு இந்த ப்ரபஞ்சமே வடிவானவரும் என்று பொருள்.
ககனஸத்ருஶம்: ஆகாயத்திற்கு ஒப்பானவர். இதற்கு பல பொருள்கள் கூறலாம். பகவான் ஆகாயத்தைப் போன்று எங்கும் பரந்து, சூழ்ந்திருப்பவர் என்பது ஒரு பொருள். உபநிடதங்களில் பல இடங்களில் ஆகாயம் (ஆகாஶ) என்ற சொல்லிற்கு பகவான் நாராயணன் என்றே பலரும் பொருளுரைத்திருக்கின்றனர்.
மேகஶ்யாமம் பீதகௌஶேயவாஸம் 
ஸ்ரீவத்ஸாங்கம் கௌஸ்துபோத்பாஸிதாங்கம் |
புண்யோபேதம் புண்டரீகாயதாஷம் 
விஶ்ணும் வந்தே ஸர்வலோகைக நாதம்||

மேகஶ்யாமம் – நீருண்ட கார்மேகம் போன்ற மேனிநிறம் கொண்டவரும்

பீதகௌஸேயவாஸம் – உருக்கிய பொன்போன்ற மஞ்சள் பட்டாடையை உடுத்தியுள்ளவரும்

ஸ்ரீவத்ஸாங்கம், கௌஸ்துபோத்பாஸிதாங்கம் – பகவானின் திருமார்பில் அவருக்கென்றே உள்ள இரு அடையாளங்கள், ஸ்ரீவத்ஸம் என்னும் மரு மற்றும் கௌஸ்துபம் என்ற மணி. கௌஸ்துப மணி திருப்பாற்கடலை கடையும் பொழுது அதிலிருந்து தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன

புண்யோபேதம் – புண்ணியமே ஒரு வடிவெடுத்தாற்போல உள்ளவரும் (அல்லது புண்ணியம் செய்தவர்களால் சூழப்பட்டுள்ளவரும்)

புண்டரீகாயதாக்ஷம் – தாமரை இதழ் போன்ற திருக்கண்களை உடையவரும்

ஸர்வலோகைக நாதம் (ஸர்வ லோக ஏக நாதம்) – ஈரேழ் பதினான்கு உலகங்களுக்கும் ஒரே கடவுளான (கிமேகம் தைவதம் லோகே?)

விஶ்ணும் வந்தே – பகவான் விஷ்ணுவை வணங்குகிறேன்

நீருண்ட கார்மேக வண்ணரும், மஞ்சள் பட்டாடை உடுத்தியவரும், ஸ்ரீவத்ஸம் என்னும் மருவை மார்பில் தாங்கியுள்ளவரும், மார்பில் கௌஸ்துப மணியை அணிந்துள்ளவரும், புண்ணியம் செய்தவர்களால் சூழப்பட்டுள்ளவரும், தாமரைக் கண்ணனும், அனைத்துலகின் ஒரே ஒப்பற்ற நாதனுமான பகவான் விஷ்ணுவை வணங்குகின்றேன்.
நம: ஸமஸ்த பூதானாம் ஆதிபூதாய பூப்ருதே |
அநேக ரூப ரூபாய விஶ்ணவே ப்ரபவிஶ்ணவே ||

நம: – வணங்குகிறேன்

ஸமஸ்த பூதானாம் ஆதிபூதாய – அனைத்து பருப்பொருட்களுக்கும் ஆதியானவராய் இருப்பவரும். இந்த ப்ரபஞ்சமாய் நமக்கு தெரியும் அனைத்துமே, மூல பிரகிருதி என்னும் சூக்ஷ்ம சக்தியிலிருந்து தோன்றியவை ஆகும். மூல பிரகிருதி பகவானிடமிருந்து தோன்றுகிறது. எனவே, நாம் காணும் அனைத்திற்கும் ஆதியானவர் பகவானே

பூப்ருதே – இந்த பிரபஞ்சத்தை தாங்குபவரும் (பகவான் ஆதிசேட வடிவில் தனது ஆயிரம் பணாமுடிகளால் இந்த ஈரேழு பதினான்கு உலகங்களையும் தாங்குகிறார். வராஹ அவதாரத்தில் பூமியை தாங்கினார்)

அநேகரூப ரூபாய – பல்வேறு வடிவங்களை ஏற்பவரும் (பகவான் நல்லோரை காக்கவும், தீயோரை தண்டிக்கவும், அறத்தை நிலைநாட்டவும் பகவான் பல்வேறு வடிவங்களில் தோன்றுகிறார்)

விஶ்ணவே – எங்கும் நிறை பரப்ரஹ்மமான விஷ்ணுவை

ப்ரபவிஶ்ணவே – அனைவருக்கும் பிரபுவானவருமான (நான்முகன் முதலானோருக்கும் பிரபு பகவான்)

அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதியாய் (அவை உருவாவதற்குக் காரணமாய்), இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்குபவராய் (பூ என்ற சொல் பொதுவாக பூமியைக் குறித்தாலும், இங்கு பிரபஞ்சம் என்று பொருள் கொள்வதே தகும்) பற்பல வடிவங்களைத் தாங்குபவராய், எங்கும் நிறைந்தவரான பகவான் விஶ்ணுவை நான் வணங்குகிறேன்.
ஸஶங்க ஶக்ரம் ஸகிரீட குண்டலம் ஸபீத வஸ்த்ரம் ஸரஸீருஹேக்ஷணம் |

ஸஹார வக்ஷஸ்தல ஶோபி கௌஸ்துபம் நமாமி விஶ்ணும் ஶிரஸா சதுர்புஜம் |

 |
கையில் நன்மையை பயக்கவல்ல சங்கும், சக்கரமும் ஏந்தியுள்ளவரும், அழகிய கிரீடம் மற்றும் குண்டலத்தை தரித்துள்ளவரும், மஞ்சள் பட்டாடை அணிந்துள்ளவரும், தாமரைக் கண்ணனும், அழகிய மாலைகளாலும், தனது திருமார்பில் கௌஸ்துபம் எனும் மணியாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளவரும், நான்கு திருக்கைகளை உடையவருமான பகவான் விஷ்ணுவை எனது தலையால் வணங்குகிறேன்.
ஸஶங்கசக்ரம் – பாஞ்சசன்யம் என்னும் சங்கத்தையும், சுதர்சனம் என்னும் சக்கரத்தையும் இரு கைகளில் ஏந்தி

ஸகிரீடகுண்டலம் – அழகிய கிரீடம் மற்றும் குண்டலங்களை தரித்துக்கொண்டு

ஸபீதவஸ்த்ரம் – அழகிய மஞ்சள் பட்டாடை உடுத்திக்கொண்டு

ஸரஸீருஹேக்ஷணம் – தாமரை இதழை ஒத்த இரு திருக்கண்களுடன்

ஸஹாரவக்ஷஸ்தலஶோபி கௌஸ்துபம் – திருமார்பில் அழகிய ஆரங்கள் (தங்க மாலைகள்) மற்றும் கௌஸ்துபம் என்னும் மணியை தரித்துக்கொண்டு

நமாமி விஶ்ணும் ஶிரஸா – பகவான் விஷ்ணுவை எனது தலையால் வணங்குகிறேன்

சதுர்புஜம் – நான்கு திருக்கரங்களுடன் அருள்பவருமான

சாயாயாம் பாரிஜாதஸ்ய ஹேம ஸிம்ஹாஸனோபரி

ஆஸீனமம்புதஶ்யாமம் ஆயதாக்ஷம் அலங்க்ருதம் |
சந்த்ரானனம் சதுர்பாஹும் ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷம் 
ருக்மிணீ ஸத்யபாமாப்யாம் ஸஹிதம் ஸ்ரீகிருஶ்ணம் ஆஶ்ரயே ||     

சாயாயாம் பாரிஜாதஸ்ய – பாரிஜாத மரத்தின் நிழலில்

ஹேமஸிம்ஹாஸனோபரி ஆஸீனம் – தங்கமயமான சிங்காதனத்தில் வீற்றிருப்பவரும்

அம்புதஶ்யாமம் – நீருண்ட கார்மேகம் போன்ற மேனி வண்ணம் கொண்டவரும்

ஆயதாக்ஷம் – நீண்ட திருக்கண்களை உடையவரும் (கரிய வாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்டவப்பெரியவாய கண்கள்)

அலங்க்ருதம் – (அழகிய திருவாபரணங்கள் மற்றும் வனமாலை ஆகியவற்றால்) நன்கு அலங்கரிக்கப்பெற்றவரும்

சந்த்ரானனம் – முழுமதியை போன்ற குளிர்ந்த திருமுகத்தை உடையவரும் (நீருண்ட மேகத்தை மேனிநிறத்திற்கு ஒப்புமை கூறிவிட்டு படியால் இங்கு சந்திரனை அதன் குளிர்ந்த தன்மைக்கு ஒப்புமை கூறுவதே தகும்)

சதுர்பாஹும் – (சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரையை ஏந்திய) நான்கு திருக்கரங்களை உடையவரும்

ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷஸம் – ஸ்ரீவத்ஸம் என்னும் மருவுடன் கூடிய திருமார்புடையவரும்

ருக்மிணி ஸத்யபாமாப்யாம் ஸஹிதம் – திருமகளாம் ருக்மிணியும், பூதேவியான ஸத்யபாமையுடனும் சேர்ந்து திருக்காட்சி தரும்

ஸ்ரீகிருஷ்ணம் ஆஶ்ரயே – கண்ணனை நான் சரணடைகிறேன்! இது விஷ்ணு ஸஹஸ்ரநாமமாய் இருப்பினும், இதை நேரடியாக கேட்டு மகிழ்ந்தவர் கண்ணன்–எனவே, இந்த சஹஸ்ரநாமத்திலுள்ள திருநாமங்களை அனுபவிப்பதற்கு முன்னர் கண்ணனின் கழலினைத் தொழுது, அவனையே சரணடைவோம்.

பாரிஜாத மரத்தினடியில் உள்ளதொரு பொன்மயமான ஸிம்மாஸனத்தில் வீற்றுள்ளவரும், நீருண்ட கார்மேகத்தை ஒத்த திருமேனி வண்ணம் கொண்டவரும், நீண்ட, பெரிய திருக்கண்களை உடையவரும், திருமேனி எங்கும் தக்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பெற்றவரும், வெண்மதியைப் போன்ற குளிர்ந்த திருமுகம் உடையவரும், நான்கு திருக்கைகளை உடையவரும், ஸ்ரீவத்ஸம் எனும் மறுவால் அலங்கரிக்கப் பெற்ற திருமார்பை உடையவரும், ருக்மிணீ பிராட்டியாரும், ஸத்யபாமையும் உடனிருக்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரை நான் சரணடைகிறேன்.
ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாமமாய் இருப்பினும், இது ஸ்ரீகிருஶ்ணாவதாரத்தில் தான் நமக்கு  கிடைத்தது. எனவே, ஸஹஸ்ரநாமம் தொடங்கும் முன்பாக பகவான் ஸ்ரீகிருஶ்ணரின் திருவடி தொழுவது உசிதமாகும்.
—————————————————————————————–

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading