ஏழாவது அத்தியாயம்
திருவுடைய சிவனுக்கும் (மேருமலையை வில்லாக திருமால் பாணமாகவும்) திருமகளுக்கும் தன் மேனி தந்தவனே/
(கம்சனுடைய குவலாயாபீடம் எனும்) யானையைக் கொன்றவனே/ முதலையை அரிந்த சக்கராயுதத்தை உடையவ?னை/
நல்லோரைக் காப்பவனே! தாமரைப் பாதங்களும் தங்க ஆடையும் உடையவனே! வேங்கடாசலத் திறைவனே! Vil—I1
கேட்பாயாக! அந்த இராச்கதன் வருத்தத்துடன் இவ்விதம் கூறலானான். VII—2
பிரம்மராட்சசன் வரலாறு
சோழவள நாட்டில் ஒரு ஊரில் பதினான்கு கலைகளும் கற்றவனாக இருந்தேன். தருக்க வாதிகளை வாய்ச்சவடாலில்
வென்றேன். வேதாந்திகளைக் குற்றம் சொன்னேன். சுவடிகளை விரிக்கக் சுண்டு சிரித்தேன், புரோகிதர்கள் கற்ற
அறிஞர்கள், நூலாய்வு செய்குநர் அனைவரையும் அவமானப் படுத்தினேன். /11–3
இப்படியாக இருந்து மதயாளைபோலச் செருக்குடன், அரைகுறைப் படிப்பினால் அகங்காரம் கொண்டவனாக, அவிழ்க்கவும்
முடியவும் அயராத வீசம் (கொஞ்சம்) காசுகள் உடைய ரெட்டி.யைப் போல, என் படிப்பே பரம்பிரம்மம் (பேரறிவு) ஆகக்கருதிய
வாறு பெரியோர்களைக் கிளறி, (வாதத்தில், தோற்றாலும் வென்றதாகக் கூறிக்கொண்டு, சில்லரைப் பிரபுக்களை மயக்கி
தட்சிதரைக்கண்டு வேள்வி செய்யும் ஆசை ஏற்பட்டு, பொருள் வேண்டி மதுரைக்குச் சென்று அந் நகரில் VIT—4
(சமூகத்திலிருந்து) வெளியேற்றப்பட்ட (ப௫ிஷ்சாரம் செய்யப்பட்ட) பிராமணனுக்கு (செலவு) குறைந்த பிராயச்
சித்தம் (கழுவாய்) செய்வித்து, பொன்னுக்ீகாக நான் அவன்பந்தியிலமர்ந்து சாப்பிட்டு, வணிகருடைய புரோகிதர்களுடன்
கலந்து திதி நாட்களின் (புண்ணியவாசனம்) அரிசிக்காக சண்டைபோட்டு, சூரிய சந்திர கிரகண காலங்களில் தவம், நீராடல்
முதலியவற்றின் புண்ணியப் பயன்” எல்லாம் செல்வந்தர் வீட்டு வாசலிலேயே தாரை வார்த்துவிட்டு, பச்சை மான்தோல்,
எரும, அடு, பசுச்களிள் தோல் செருப்புகள் பெற ஊரெல்லாம் திரிந்து தருப்பைப் பீண்டச் சோறு (8ீராத்த தினத்துண்டி)
உண்டு கிடைக்காத போது, நட்பற வாடிச் சென்று தென்புலர்த் கார்க்கிடும் உண்டி மிச்சிலையுண்டும், அதுவும் கிடைக்கா
விட்டால், சாப்பாட்டுக் கடைக்காரர்களிடம் இரந்து அரைச் சாப்பாடு,சாப்பிட்டு இதற்கெல்லாம்’ தலையாய துலாபாரதாளம்
பெற்றும் பொருள் சேர்த்தேன்.
(துலாதாளம் – ஈவோர் தம் எடையளவு/ஏதேனும் பொருள்களை தானம் செய்தல்) 971 ..5
இவ்விதம் சேர்த்து ஒரு வைசியனுக்குத் தந்து, மீண்டும் வாங்கி, நான்கு மடங்காக்க, வட்டிக் சுணக்குகள் வைத்து
தானியங்களில் முதலீடு செய்து கணக்கில் சண்டையிட்டு அவன்“தருவேன், தரமாட்டேன்” என்றேதும் கூறாதவனாக இருப்ப,
சபைக்கு முறையிட்டுப் போராடிக் கொண்டிருந்தபோது (திருடன்) ஒருவன் கவனித்து வந்தான். VIT—6
புறச்சேரியில் (பறைச்?சரி) புதிதாகத் தைத்த செருப்புகளை வாங்கி, எண்ணெய் தேய்த்து ஆவரம் இலைகட்டும் விரைவும்,
தாடிமீசை சிரைத்து, வென்னீர் குளியற் கடையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நிலையும், சமையல் செய்பவளின் வீட்டுக்கு
முன்னைவிட அதிகமாக பால், தயிர், நெய், காய்கறிகள்அனுப்பும் முறையும், அடப்பைப் பெட்டி விரிதிது, வெற்றிலை
பாக்குகள் நிறைக்கும் ம௫ழ்வும், (£டனான) பிரம்மச்சாரி தோளில் சுமக்கும் பையில் உலையரிச, வாங்குவதும், என்
மனைவிக்கு நல்ல சேலை வாங்கும் பரபரப்பும், பிற பயணிகளிடம் பயணம் குறித்து கேள்விகள் கேட்டலும் எல்லாம் கண்டு
எனது பயணத்தை அறிந்தவனாக 41]….7
எநிகளோடு சேர்ந்து, ஒரு சிலரை வழிமறித்து (கொள்ளையிட) அனுப்பிவைத்து விட்டு, எல்லோரும் போல
தானும் ஒரு பையைதீ தூக்கிக் கொண்டுவந்து, படுத்தெழுந்ததும் வடக்கே வடக்கே ஒன்று கூறி திசைகாட்டி நடந்தான் 41/8
எழுந்து செல்லவும் விரைந்தெழுந்துகூட வந்தவர்கள் நடக்கவே நானும் மூட்டை முடிச்சுகளை சீடனிடம் தந்து
போகவும், அவன் *இப்படி வருக’ என்று காட்டுப் பாதை காட்டிடவே அவ்வழிச் சென்று ஒரு சிற்றாற்றினைக் கடக்க
இறங்குதலும் (ஈளை) வி௫ல் அடித்தான். VII—9
உடனே, உள்ளங்கை ரேகை காணப்படும் (விடியல்) வேளையில் ஒரு அம்பு முன் வந்து வீழ்ந்தது. இதற்குப் பயணிகள்
நிற்கவே, விர் விர் என்று கற்கள் வந்து விமுந்தன. வழியின்றி சாத்தரீகல் (பயணியராகிய வணிகர்கள் குழு) நிலை குலைந்தனர் 11-10
பிரளய காலத்தில் பெரும் படயுழன்ற முக்கண்ணனின் பரிவாரஙிகளாகிய பூதங்களைப் போன்ற வலிமையோடு
திருடர்கள் சூழ்ந்தனர். உற்பாதங்களைப் போன்ற அவர்கள் கத்தி வீச்சுகள் ஆலகால விஷத்தோடு போட்டியிட்டன. வாள்
வீச்சுக்களை இராகுவெனக் கருதிய சூரியன் பயற்து நிலை குலைந்து போனான். அத்திருடர் கூட்டம் இராக்கதர்களைப்
போல விரைந்து “குத்து குத்து” என்று கூறியவாறு சொல்லும் வில்லும் கடுமையுறச் சுற்றி வளைத்து விட்டனர். 11-11
இவ்விதம் காட்டு மரங்களிடையிருந்து வந்து வில்லை வளைத்துக் கொண்டு சூழ்ந்த ௮க் கருநிற மக்களைக் கண்டு
(பயணியர்) அல்லகல்லோலப்பட்டுச் சிதறியோடினர். VIT—12
“பசை இல்லை (வலிவில்லை) நில்லுங்கள் பாவிகளே?” என்று கூறி இயற்கைக் கருவிகளை (வேள்விக்கருவிகளை) எடுத்
தெறிந்து நிற்பவர்களும், தங்கம் முதலிய முடிச்சுகளை மரத்தில் எறிந்து செப்புச்கம்பி அடிக்குப் பயந்து ஒடியவாறு 3மல்
துண்டை கீழே விட்டோடுபவர்களும், சுமையை இறக்கிவைத்து கட்டாரியை உருவி நின்று ““இங்கெங்கே வருகிறீர்கள்! என்று
அதட்டி எதிர்த்து நிற்பவர்களும், “ஆடையைக் கொண்டு செல்க! தெய்வ (விக்கரக)த்தைத் தொடாதீர்கள்! இது
போனால் பட்டினி கிடக்க வேண்டியதுதான்” என்று தயை பிறக்குமாறு வேண்டிக் கொள்பவர்களும்,
“எங்களிடம் உள்ளத்தைத் தந்து விடுகிறோம்; விலங்குகள்! ஆனால் ஒன்று! பெண்களை மட்டும் தொடாகூர்கள் என்று
பெருமிதத்துடன், சுயமரியாதையும் துணிவும் தோன்றக் கூறி (திருடரீகளை) நிற்கச் செய்து கொள்ளை கொழுப்போரும் ஆக
அப்பயணிகள் விலகிச் சென்றனர்
(தங்கம் முதலிய முடிச்சுகள் மரத்தில் எறிந்து திருடர் கூட்டம் போனபில் தேடி எடுத்துக் கொள்ள சிலர் முனைவர். 11-13
வில்லில் அம்பு தொடுத்தவன் சென்ற வழிப் போகாமல் எதிரீப்பட்டவர்களை பரபரப்புடன் கத்தியாற்குத்தியும் விடாக்
கண்டனாகிய கஞ்சன் போராடவே பெரிதும் துன்புறுத்தாமல் குருதி ஒழுகக் காயம் செய்து கிடைத்த மட்டும் பிடுங்கிக்
கொண்டும் செவ்வியறிந்து (சமயமறிந்து) உருவிக் கொண்டேோடு பலனைப் பின் தொடர்ந்து செல்லாது விட்டுத் தொலைத்தும்,
சேமிப்பு பணம், சொத்து) ஏதுமில்லாமல், வாட்டசாட்டமாக இருப்பவனை சோதிக்குமாறு அப்புறம் அனுப்பிவித்தும், புதரில்
ஒளித்திருப்பவர்களை ஈட்டியால் துழாவுவேன் என்று பயமுறுத்தி வெளிப்படச் செய்து கட்டிய துணிகளையும் அவிழ்த்துக்கொண்டு
தயையுடன் கோவணத் (கெளபீனம்) திற்காக பழைய துணியை கொடுத்து விடுத்தம், செருப்பு அட்டைகள் கூட சோதித்தும்;
தலை முடிகூட ஆய்ந்தும் அத்திருடரிகள் கொள்ளையிட்டனர்.–7-14-
இவ்விதம் அத்திருடர் கூட்டம் கிளர்ந்தெழுந்து அச்சமின்றி பல்விதமாகப் பயணியர் குழுவினைக் கொள்ளையிட்டபோது
ஏற்பட்ட கைகலப்பில், VIT—15
இடையிலிருந்து மார்பு வரை இழுத்துக் கட்டிய கருநிறக் கசிசு மிளிர, பூனைத்தாடி போல வடர்ந்த மீசை வயிறொட்ட
ஊசலாட, நீறுபூயே முகத்தில் வடி கட்டிய மெழுகு பழஞ்சாந்துப் பொட்டெனத் திகழசுண்டு விரலில் பொருந்திக் கடந்த சுரிகை
(கத்தி)யின் ஒளிவீச்சு மிகுந்திருப்ப, நின்ற ஊரிலிருந்துகண் வைத் துக்காத்திருந்த காகமஸ்ரு (காக்காய் மீசையன்) என்னும், ஒரு
பயங்கரமான சண்டாளத் இருடன், தப்பி ஓடிய என்னை தற்செயலாக எப்படியோ பார்த்து விட்டான். ViI—16
கூடவந்த பிரம்மசாரி (மாணி) €டனை விட்டு விட்டு நான் ஓட்டம் பிடிக்கவும், சுரிகையை முழங்கால் சதையில் பாய்ச்சவும்
ழே விழுந்ததும், தொந்தி மேல் இருந்த ஆடையை அவிழ்த்து, பொன் முடிச்சிளைப் பற்றிக் கொண்டான். நான் தராமல்
முரண்டிப் போராட இழுபறியில் அரைஞான் கயிற்றில் பையின் கயிறு இடக்க பை மட்டும் அறுத்துக் கொண்டு, காதிலிருந்த பாம்
படம் அறுத்து, தலையிலணிந்த குல்லாயையும் பிடுங்கிக் கொண்டான், 71…
என் வாயில் சனியிருத்ததால் (சும்மா இருக்காமல்) **அ3ட/பாவி! பக்கத் தூரில் இரந்தும் அயலானா$ூ மிகுந்த துன்பம்
செய்தாய்? இந்தப் பணம் எவ்விதத்திலும் உளக்கு கிட்டாது! இர பார்த்துக் கொள்கிறேன்’ ” என்றன். VII—18
எனவும் அத்திருடன் “QsS மனிதன் நிறையப் பணம் கொள்ளை கொடுத்ததால் கிராமத் தலைவனையும் அரசனையும்
கண்டு (பிடித்துக் கொடுத்து) விடுவான்! * என்று அஞ்சியவனாக குறையுயிரையும் போக்க “எண்ணி, மீண்டும் வர, மேல் வரும்
மக்களும், திருடர் குழுவும் ,காண்பரென்று அஞ்சியவாறு ஓடும் வேகத்தில் என்னைத் தாறுமாறாகக் குத்தி விட்டுச் சென்றான்.
அப்போது, அருகே பெருவழியில் வற்து கொண்டிருந்த மக்களில் என் மனைவியின் சகோதரன் (மைத்துனன்) கூடவந்து பயணியர் கொள்ளையடிக்கப்பட்ட செய்தியறிந்து, என்னைத் -தேடி வந்து என்னைக் கண்டு, தான் ஒருவனே மிகவும் நலிந்து டந்த என்னைக் காலடியில் வைத்துச் சுமந்து கொண்டு, என்னை வைது கொண்டே சென்றான். VII—20
கொக்குவால் கத்தியால் வெட்டப்பட்ட காயத்தை விரலால் மேல் சதையை மூடிப் பிடித்து தையல் போட மருத்துவரைத் தேடுபவர்களும், மண்டையில் சிறிய காயத்தில் பழந்துணி எரித்த மையைத் திணித்துக் கொண்டு வீடுகட்குச் சென்று கஞ்ச, கூழ் கேட்டுத் திரிபவர்களும்,
தாம்பட்ட பாட்டினைச் சொல்லவும் இரங்கிய உள்ளமுடை யோரால் இகழித்துத் தந்த உடையணிந்து ஈவாரை வாழ்த்து
வாரும் கொள்ளை போன சாக்கில் இருந்தத.ம் இல்லாததுமான செல்வத்தைப் பறிகொடுத் தாகச் சொல்லி உறவினர் வீடு
கட்குப் படை எடுப்போரும், ஆகிய பயணிகள் கூட்டம் நிறைந்த
வர்களின் வழியே என்னை என் மைத்துனன் கொண்டு வந்து இத்த மர நிழலில் இறக்கி வைத்துவிட்டு இவ்வாற்றில் தண்ணீர்
குடிக்கச் செல்லவும் நோவின் மிகுதியால் என் மூச்சும் நின்று விடவே, அவன் திரும்பி வருவதற்குள் நான் இந்த(பிரம்ம
ராட்சச) உருவினை அடைந்தேன். 41-21
சண்டையில் ஓடோடி. வந்து என் காயத்தை (உடலை) காயப் (புண்) படுத்தி அச்சுறுத்திய அந்த “காக்கை மீசையன்*
எனும் சண்டாளனின் பயங்கரத் தோற்றம் கண்ணில் கட்டி விட்டாற் போல இருந்ததால், நான் இறக்கும் தறுவாயில் அவ்
வுருவைக் கண்டதால் எனக்கு இந்த பயங்கரமான அவ்வுருவமே வாய்த்தது. *கைசிக கானம் பாடிய பயன் தந்து இந்த உருவை
நீக்குவாயாக” £” என்று வேண்டவும், அவன் (தாசரி) நான் பயன் அறியேன்! திருமாலின் திருமுகவிலாசமே பயன் ஆகும்,
கட்டளைக்கும் தொண்டுக்கும் பய குறித்து எண்ணுவது பக்தர்
களாகிய (பிரபன்னர்கட்கு) எமக்கு உண்டோ? செய்வினைப் பம் பிறவிக்கு வித்தாகும், ஆதலில் அதனைத் தர அஞ்சு
கேன் பகவானே காப்பாற்றுவான்! ஆறுதல் அடைக” என்று கூறிய வாய்ச் சொல் வாயிலிருக்கும் போதே அந்த பிரம்ம ராட்சசன் VUI—22
தியஜ்யன்தே களேபரம் தம்தம் மேவைதி கெளன்தேய, சதா தத்பாவ பாவித’ * எனும் தை (18-6) கூற்றுப்படி இறக்கும் போது எதை
நினைப்பாரோ அவ்வுருவடைவரீ என்பது நமது மரபி. சண்டாளனை நினைத்தவாறு இறந்ததால் சோம சர்மன்
சண்டாள பிரம்ம ராட்சசனாளனான் என்பது குறிப்பு)
நுண்ணீயதாகத் தலையில் மூன்று பாகம் மழித்து ஒருபாகம் குடுமியுடன் கூடியவனாகவும், பனிபோல் Danes ட்டம் நூல்
(பூணூல்) அணிந்தும், புனிதப் பன்னிரு நாமங்கள் ஆகிய கொடிகளுடன் துளசி, தாமரைக் கொட்டை மாலைகள் அணிந்தும்,
கெளபீனம், அரைஞாண், காவியுடைகளுடனும் நீர் நிறைந்த கமண்டலத்துடனும் கையில் திவ்வியப் பிரபந்நச் சுவடி.
யூடனும் துவய அனுசந்தானத்துடன் கூடிய பிரம்மதேஜசடனும், பாகவதத் திருவுடையவளனாக புகைமண்டலத்திலிருந்தெழும்
தீக்கொழுற்து (சுவாலை) போல அந்த (ராட்சச) மேனியை நீக்கி, பார்த்துக் கொண்டிருக்கும் போதே வைணவனாக
அச்சோமசரீமா நின்றான். (இராட்சச சரீரம் புகைக்கும், புதியவைணவ சரீரம் இச்சுடருக்கும் உவமை, நெற்றி கேசவன், வயிறு நாராயணன்,
நெஞ்சு மாதவன், கழுத்துக்குமி கோவிந்தன். வயிற்றின் வலப்புறம் விஷ்ணு, தோள் நடுவே மதுசூதனன், கழுத்தின்
மேல் திரிவிச்சரமன், வயிற்றின் இடப்புறம் வாமனன், இடத்தோள் ஸ்ரீதரன், கழுத்தின் புறம் ஹ்ருஷிகேசம் பத்ம
நாபம், தாமோதரம்”* என்ற நாமமுடைய திருமாலினை உருவ௫ூத்து பன்னிரு நாமங்கள் (துவாதச புண்ட்ரம்) போடுவது
வைணவ மரபு ஆகும்.) 41-23
இவ்விதம் பாகவதரின் பரிசய (அறிமுக)த்தின் பெருமையால் அந்தணனாதல் மட்டுமன்றி பாகவதத் திருவினையும் அடைந்து,
உப்பு சிந்தி இருமடங்கு ஆவது போல மிக்க மகிழ்ச்சியுற்று, தன் உருவுக்கேற்ப மரபுப் படி அந்த தாசரிக்கு வணக்கம்
செலுத்தினான். (உப்பு மண்ணில் சிந்தினால் அம்மண்ணும் உப்பாவது போல என்ற உவமை கூறப்பட்டது.) 11-04
கடத்தற்கரிய பிறவியாகிய தாமரையிலையில் தண்ணீராகத் திகழ்பவனே வெல்க/
இசைச் சக்கரவர்த்தியே வெல்க! திருமால் கதைகளின் சுவை யுணர்ந்த நாவினையுடையவனே வெல்க!
தத்தவ ஐயங்களைக் களைந்தெரியும் பண்ணரிவாள் போன்றவனே வெல்க/ வெல்க/
தன்பெருமையை வெளிக்காட்டாமல் மறைக்கும் சான்றோய் வெல்க
ஆசாரியரின் திருவடிகளே சரணாகக் கொண்ட அண்ணலே
வெல்க! சொன்ன சொல் திலைநிறுத்த உடலைத் துரும்பென மதித்த
தூயனே வெல்க/ இறைவன் கட்டளையை மேற்கொண்டொழுகும் இனியனே வெல்க/
எல்லா உயிர்களையும் சமமெனப் பாவித்து அருள் உள்ளம் கொண்ட அறவோனே வெல்க!
பிறதெய்வங்களைப் பெரிதெனக் கருதும் சாத்திரங்களைக் . கேளாத சாந்தனே வெல்க]
எட்டுவித பக்தி லட்சணங்களையுணர்ந்து திருமாலடி.யார்
தம் இருவடித் தாமரைகட்கு தும்பியாசிய தொண்டர்க்கடியனே வெல்க/ VIT—25
என்றிவ்விதம் பாராட்டி, வலம் வற்து, மறு பிறவி வாரா திருக்கும் வழிதேடி, மனை, மனைவி, முதலிய சுகநிகளில் பற்றின்றி, பதரிகாரன்யம் முதலாய திருமாலின் திவ்விய தே௪ங் கட்கு அடிக்கடி தீர்த்தயாத்திரை செய்து, . பரமபதமான மோட்சத்தை அடைந்தான்.
இப்புண்ணிய சரிதத்தை, வராக அவதாரமெடுத்த காலத்தில் பூமிதேவி (நிலமகள்) :*எனக்குச் செய்யும் கைங் கரியங்களில் பாடுவதே சிறந்த பயன் தரும்** என அறிந்து கொண்டவளாய் அவளே பாடுவதில் விருப்புற்று உன் மகளாகப் பிறந்து, இனந்தோறும் பிரிவு எனும் பரிவு காட்டி எனது கதை களைப் பொருளாழம் மிக்க பாசுரங்களால் பாடி.ப்பர வி பொழுது போக்குகிறாள் அன்றி வேறொன்றுமில்லை/
என்ன தவம் செய்கிறாள் என்று கேட்டாய்! இதைவீடப் பெரிய தவம் வேறு என்ன இருக்கிறது. எல்லாம் நலமாக
முடிவுறும்! திருவரங்கத்திற்கு அரங்களனைச் சேவிக்க அவளையும் அமைத்துக் கொண்டு செல்க/ என்று (திருமால்) கூறவும் (பெரியாழ்வார்) பிரசாதம் (அருள்) என்று வணங்கி தங்கப் பல்லக்கில் கோதையை இருத்தி பரிசாரிகர்களும் பாகவதர்களும் சூட வர மகிழ்வுடன் பயணம் புறப்பட்டார், 11-26
கோதை திருவரங்கம் பெருமானை வணங்குதல்
சென்று, விரஜாநதி என்னும் (காவேரி) பெயருடைய சஹ்ய (குடகு) மலையிலிருந்து பிறந்த நதிக்கரையின் நந்தவன மரக்
கூட்டங்களின் இலைச் சந்துகளுடாகக் காணப்படும் ஏழு பொற் பிராகாரங்களின் கலசங்களாகிய சுடர் விளச்குகள் சம்பகப்
பூக்கள் ஆக, பாவரிகளாகிய வண்டுகள் விலகும் திருவரங்கத்தைக் கண்டான்.
(௪ம்பகப் பூக்கள் கண்டால் வண்டுகள் அகல்வது போல இப்பிராகாரங்களைக் கண்டால் பாவம் அசலும் என்பது குறிப்ப
சோழநாட்டு நங்கையரின், செஙிகழுறீர்ப்பூச் செரு$£ய கூந்தலில் மொய்க்கும் யாழிசை முரலும் வண்டுகளின் ஓசையும்,
கவேரன் மகள் (காவேரி) உடைய அன்னங்களின் மென் குரலும் சுமந்து வரும் இளங்காற்று , விரதியாகிய விட்டு சித்தனின்
களைப்பிளைப் போக்கியது. 1.26
அவன் (பெரியாழ்வார்) பாவங்களைப் போக்கும் காவிரிப் புனித நீரில் நீராடி, நண்பகல் நோன்புகள் முடித்து, புளலாடிப், பொலங்கலன் அணிந்த மகளை அழைத்துக் கொண்டு, வைணவர்கள் குழாம் புடைசூழச் சென்று 4//–69
பாதச் சலங்கை ஒலி கேட்டதுமே, களிறுகட்கொதுங்குவது போன்றே காரிகையருக்கும் ஒதுங்கி, (பிச்சையாக) தமக்கிட்ட சைப்பிடி. மாணிக்கங்களை, இல்லறத்தானின் ஆரத்தியிலுள்ள இர.த்தினங்களோடு கலக்குமாறு வாயிலிலே சொரிந்து விட்டு,
(அரிசியன்றி மணிகளை ஏற்றுக் கொள்ளார் என்பது கருத்து)
மலர் முதலியவற்றின் மணத்தையும், ஒவ்வொரு மனையிலும் கோயிற் படையலுக்கான உண்டிகளிள் மணம் போலவே
முகராதவாறு மூச்சடைத்துக் கொண்டும்
(கோயில் பிரசாதமான படையல் இருமால் நுகராத முன்பு தாம் நுகர்தல் கூடாதெனமூச்சடிக்கிச் செல்வர் என்பது கரத்து.)
நடனம், பாட்டு முதலிய திருமால் துதிகளை, கிளி, பூவைகள் கூறுவதைக் கேட்பது போல அரை மனதோடு கேட்டும்,
(நடனம், கதம் விரும்பாரேனும் திருமால் துதிகள் ஆதலின் கிளியின் பேச்சுப் போல அசைமனத்துடன் கேட்டனர்)
மாளிகை மேற் கூரையிலுள்ள மணிகளின் வண்ணங்கள் தம் வெண்துகிலில் பிரதிபலித்து பன்னிறம் காட்ட அதனை
வெறுத்து விரைந்து அரிசி சேட்கும் இல்லங்களை அடையும் பற்றற்ற பாகவதர்கள் திரிவதால் வெள்ளைத் தீவினை ஓத்த
அந்த திருவரங்கத்தை அடைந்தார்.
(பெண்கட்கொதுங்கும் பற்றற்ற பாகவதர்கள் வெண் டுகலால் வெண்மையுற்ற திருவரங்கம் வெள்ளைத் தவெனப்
பொலியும் என்பது கருத்து) VII—30
கோபுரக் குகைகள் வரையுலவும், சந்திரபுட்கரணி (தெப்பம்) நீர்த்துளிகளை அளைந்து, பனித்த, வெம்மை நீக்கும் இளங்
காற்று, மேல் கட்டிலுள்ள மணிச் சலங்கைகளையசைவித்து மெல்லோசையாகய, உரையாடலில் நலம் விசாரிக்கவும் ஆறு
பிரகாரங்களைக் கடந்து சென்று, (ஏழாம் பிரகாரத்தில்) அப்போது விரைவுற்ற தேவர்களை சண்டன் எனும் துவார பாலகன் (வாயிற் காப்போன்] செவ்வியன்றென அதட்டும் உள் வாசலில் VII—31
பிரம்பைக் கையில் பிடித்து, மணியரங்கில், சித்திரக் கம்பள விரிப்பின் மேல், வெண்டாமரைக் கண்ணன் உருவம் பொறித்த
மோதிரமணிந்த விரல் மிளிர, இரு புறமும் சிறிதே வணகிகயெ வாறசையாதுள்ள யாளை முகத்தினர் நாரற்றவர் பணிந்து நிற்ப,
அமர்நீதுள்ள விஷவச்சேனர் (சேனை முதலியார்) தமைக் கண்டு (பெரியாழ்வார்) வணங்கவும், அவரும் பக்தியுடன் அன்பு
செய்தார். ் VIJ—32
இந்திரனின் இடியேற்றினையறியாத பொன்மலை (மேரு போன்ற இறகுகளின் ஒளிவீச்சு வானமும் நாற்றிசையும் பரவிதீ
இகழ்ந்து இளவெயில் காயும்படி நின்ற வேதசொருபனாகய கருடனை வணகிகிகி காணவும் (கருடனும்) மீண்டும் (தன்னை)
வணங்கக் சண்டாளன். VN—33
பின்னர் அக்கருடனிடம் விண்ணப்பம் செய்து அனுமதி பெற்று, நான்கு தோளுடையவர்களும், முகல் வண்ணத்தினரும்,
தாமரைக் சுண்ணரும், மின்பசுந்துகிலுடுத்தியவரும், தளிமாலையணிந்த மார்பினரும், தஇிருமாலின் பிரதி பிம்பமாகக்
காணப் படுபவருமான அருகணைந்துள்ள நம்மாழ்வார் முதலிய மூக்தார்களைச் சேவித்து, அவர்களால் ஆதரிக்கப் பெற்றவராய்சி சென்று; மிகப் பரந்த மணிமிடைந்த தரண்களும், பொற்கலசங் களும், அணி செய்யப் பெற்று, சித்திர விதானத்தில் தொங்கும்
பல்வகைப் பூச்சரங்களும் முத்துக் கோவைகளும்; வெண் ‘ சாமரைகளும், அகழ் புகையும் மண்டிய கருவறை நடுவே, சந்திர
காநீதமேடையில் கால் முதலாகுஅவ்வவ்வவயவங்கள் பொருந்திய தருமன் முதலான நித்திய சூரிகள் அமர்ந்த மன்றம் அமைந்ததும்
அமர்ந்த மன்றம் அமைந்ததும், ஒனி௰௦௰யமான, வீரிந்த, கரய, ஆசனத்தில், மணம் நாடிய வண்டுகளின் கூட்டம் மொய்க்கும்
தாமரையின் பொன்னிறத்துக்கு கடன் வழங்கும் தன்மைத்தாய், அகன்ற பொகுட்டென அமைந்த மேடையின் கண், பாழ்
கடலுக்கு மூல காரணமான பூத தன்மாத்திரை போல, பாத
ரசமும், பளிங்கும், சந்தனமும், நிலவும், வெண்டாமரையும், மாசுறும்படியான தன் மேன்மையான ஒளிமிக்க ஆ௫ுசேடனின்
உடலில் தலையணையம்ிீது, கேழூர (தோள்வளை)யின் மணி ஒளி படிந்த முழங்கையை ஊன்றி, முனிவர்களின் மனத்துட் பொங்
கும் பக்திர௪சம் கழுவியதால் மிகுந்த செம்மையுற்றதோ எனுமாறமைந்த செங்கை, கன்னதில் ஊன்றியவாறு, கற்பகமரத்தின்
பூக்களால் மூடப்பட்ட. அதிசேடனின் சட்டையே படுக்கை விரிப்பாகக் கொண்டு, ஒரு சாய்த்துப் படுத்துசி உடக்ின்றவனும்,
களிற்றினைத் துன்புறுத்திக் கடினமான தன் கைச் சக்கரத்தால் கண்டிக்கப்பட்ட மகரம் (முதலை) வணங்கத் தகுந்த சாயுச்சியம்
(தன்னோடிணைதல்) பெற்றதோ எனப்படுமாறு, கன்னத்தின் மேற் காணப்படும் மணிகுயின்ற மகர குண்டலங்களின் பிரதி
பலிக்கும் ஒளிவீச்சின் எழில் மிக்க மகரந்தம் ஒழுகும் முகத் தாமரையுடனும், எழில் பெற்றவனும்,
இமையாத பாரிவையால் முயன்றது நோக்கும்போது
மிக்கெதுர்ப்படும் வெள்ளியெனப் பொலியும் வெண்ணிற ஒளி வெள்ளத்தில் மூழ்கிக் கண் கசசி செய்யும் பேரொளிப் பிழம்
பாகிய தனது மங்கள உருவினை, தனது உருவு, அருவும் ஆய மூர்த்தியாகக் காட்டுமாப்போலே ஒளிர்பவனும், தனதிரு சண்
களாகிய சூரிய சந்திரர்கள் தத்தம் மளைவியராகிய இருளும்
நிழலும் தம்முடன் கலந்திருத்தல் போலம் காட்டும் கருவிழியும் வெணவிழியும் செவ்வரிபடாந்த கண்ணிலமைகளும் கூடி செந்தா
மரை இதழ்கள் பரப் 4னாற் போலக் காணப்படுகின்ற நோக் கெழில் உடையவனும்) பந்தரக மலரை வென்ற இதழ்களின்
செம்மை எனும் சாக்கிட்டுப் பிறந்த அக்கினியும், அவன்துணைவனான வரயுவை இணைவீத்தாகத் தோன்றும் எள்பூப்
போன்ற எழில் நாசி, திகழ்பவனும், வயிற்றில் பிறந்த வெண்மை யான ஓளிமிக்க தாமரையைக் கண்டு, சற்திரன் என ஐயுற்று,
பெரிய இடத்சைச் சார்ந்துள்ளதால் அவன் (சந்திரன்) உடன் பிறநிதவளான திருமகளிடம் இராகு தன் பகையை நீக்குமாறு : பொன் வலயமாகிய லஞ்சம் கொடுத்து இறைஞ்சுவது போல இருமாலின் பாதங்களை ஒற்றும் கேயூரமும் (தோள்வளை)
வளையலும் அணிந்த திருமகளின் தோள்கள் தன் தொடைகளில் மிளிரும்படியாக அமைந்தவனும், மார்பிடத்தில் வைத்த
இணையற்ற கெளஸ்துப மணியின் ஒளிச்சுடர் பட்டு தாமரை
யாள் மேனி எழிலோ எனத் ததந்த தூயதாய திருமறுவும், (ஸ்ரீவத்சம்). கொண்டு கண் விருந்தளிப்பவனும் கஸ்தூரி மானின்
உந்தி மணம் நாடி வந்த வண்டுகள் கூட்டமோ எனுமாறு திகழும் கரும்பசுந்துமாய் மாலை (வனமாலிகை) அணிந்து எழில் பெற்றவனும்,
மாயச்சிங்கமாகி, கனகளைக் களன்றுயிர் கவர்ந்த பின்னர் மீண்டும் மானுட உருத் தாங்கும்போது, மறந்துபோய் இடை
மட்டும் அப்படியே இருக்கும்படி விட்டுவிட்டது போல நுண்ணிடை கொண்டெழில் மிக்கவனும் கடிதடத்தில் உதய
இரியில் உதித்தெழும் இளஞாயிற்றின் பொன்வெயில் பொலிவு தோன்றும் அரையின் மென்மையால் வெளித்தோன்றும் தொடை
களின் நுண்மை வெளிய காணப்பட்ட தங்கம். புட்பராகம். வைடூரியம் குயின்ற தூண் இணைகள் போலச்சிறிது கருவண்ணங்
காட்டிய தொடையிணைகளையுடையவனும், திரிவிக்கரம னாூய உருவங்கொண்டபோது, சினந்து வானுற வளர்த் தபோது
உடன் பரப்பினது விரைவால் சுற்றிவந்த மணிமயமான சுவர்க்க லோகத்தின் பொற்பிராகார வளையமோ என மிளிரும் கழல்
சூடியதால் பிறந்த ஒளி மிக்குடையதாஇியும், ஆலம்பழத்தின்எழிற்கோலங்கொண்ட கணைக்காலும், எதிர்காலத்தில்தான்
எடுக்கும் கூர்மாவதாரத்திற்கு (ஆமைப்பிறப்பு) முன்னோடியாகஅமைந்ததோ எனத் தகைய இளம் ஆமையின் வளமார்ந்த
எழிலை நகும் முழங்காலுடனும் செங்கழுமீர்போவ்ற மென்மை யுடன் உள்ளங்கால் அமைய, மின்னும் விண்மீன்களின் ஒளியை
வென்ற நகங்களின் நிலவினால், அன்பர்களின் இதயத்- இருட்டினை நீக்கிெயவாறும். ஏர் வச்சிராயுதம் முதலிய ரேகை
களையுடையதும், திருமகளின் முலைக் குவட்டிலெழுதிய குங்குமத் தொய்யில் படிந்து சிவந்ததுமான திருவடிகளால்,
மூவகை (அத்யாத்மிகம், ஆதி தைவிகம், ஆதி பெளதிகம்)த்துயரீகளைக் கெடுத்து அருள் செய்பவனாயும் உள்ள, ஸ்ரீமத்
நாராயணன், புராண புருஷன், புருடோத்த மன், பிரணுதார்த்திகரன் (சரணடைந்தார் துன்பம் நீக்குவோன்) வாசுதேவன்,
இருடீகேசன், ஈசனால் வணங்கப்படுவோன், வீடணனுக்குநாடளித்துக் காத்தவன், மன்மதனின் தந்ைத, திருவரங்கத்துறை
பவன் என்னும் இத்தகைய பெயர்களைப் பூண்ட திருமாலைக்கண்டு, தன்னுடன் வந்த பாகவதர்சளுடனும் தானும், தன்
மகள் (சூடிக்கொடுத்த சுடரீக்சொடி) தானும், பயபக்தியுடன்பணிந்திறைஞ்சி, ஐய ஐய கோஷமிட்டு, சாட்டாங்கமாக வீழ்ந்து
வணங்கி, நின்று தலை மேற்கைகூப்பியவாறு இவ்விதம்துதித்தார்। 411-034
பிரம்மதேவனின் அழிவற்ற செல்வப் புதையலானவனே சரணம்! இட்சுவாகு குலப் புண்ணிய ராசியானவனளே[ சரணம்.
குபேரனின் உடன் பிறந்தவனுடைய (விபீஷணன்) குலதேவ தையே! போற்றி. வணங்கப் பெற்ற சிவன் முதலாய தேவர்
களையுடையவனே[ வணக்கம், : VII—35
சர்வேசனும், எல்லாம் தானேயான எம்பெருமானும் எல்லையற்றவனும், காணற்கியலாதவனும் எல்லா உலற்கும் ஆதார
மானவனும், அணுவுக்கும் அணுவாயமைந்தவனும், ஆதாரமற்றவனுமாகிய நித்திய சத்தியப் பொருளாகிய உன்னை வணங்கு
ஹேன்,. VII-—35
நாராயணன், பூமி முதலான பெரும் பொருள்களைவிட விஞ்சிய பெருமையுடையவனை பரமபுருடன், ஆ௫ய உன்னைப்
புகழ்ந்து விழைந்து சரணுறுகன்றேன். 11-37
பிரம்மன், வன் முதலாக 740 உலகும் படைதீதுப் பாது காத்து அழிக்கும் முத்தொழிற் பெருமைக்குறைவிடமான
நித்தியனும், எல்லாப் பூதங்களிலும் இருப்பவனும் அப்பாலுக் கப்பாலமைந்த பெரியவனாகிய தின்னை வணங்குகின்றேன் —VII—38
(தேஹேற்திரியங்களுக்கப்பாற்பட்ட) பரபுருஷன் (ஜீவன்) தனக்கும் மேலானதத்துவம் (ஈஸ்வரன்) ஆனவனும், பரமான்மா வானவனும், வீடு பேற்றுக்காக எப்போதும் யோடயர்களால் போற்றப்படுபவனும்; எவனிடம், (சத்துவம், ராஜசம், தமஸ்) முக்குணங்களாகிய பிரகிருதி தத்துவங்களின் தொழிற்பாடுகள்
அடங்கிக் கடச்குமோ அந்த நிர்மலனை எல்லா பூதங்கட்கும் முற்பட்டவளை, தூயவனான மாயவனை, எங்கும் பரந்துள்ள இறைவனை, கலை, நிமிடம் மதலிய காலக் சணிதங்களை இயக்குபவனை, மறைந்துறையும் இறைமைத் தத்துவத்தை, எல்லாம் க௨ற்த கடவுளாயினும் பெயருக்குப் பரமேசுவரன் எனப் பெயரிட்டழைக்கப்படும் விஷ்ணுவாகிய உன்னை நிளைந்து போற்றுகிறேன். VIT—-39
என்றிவ்வாறு, பரம்பொருளாகிய சொரூபத்தினையும் தேவர்கள் வணங்கும் திவ்விய அவதார லிலைகளைப் புகழ்ந்தும் போற்றியிசைப்ப, கெளஸ்துப மணி அணிந்த திருமால், கருணை
யொழுகுங் கடைக் கண்களால் அப்பெரியாழ்வாரைக் கண்டு, நலம்நாடி உசாவியபின், வளையணிகள் மெல்ல ஒலிப்ப திருவடித் தாாமரைகட்கு மலர் சொரிந்து இறைஞ்சி நிற்கும் பெண்டிர்கட். கெல்லாம் பெரும் பேரணியாஃப் பெரும் பேறுற்ற பேதையாம்
கோதையாகியசூடிக்கொடுத்த ஈடர்சிகொடியின் எழிலும் இளமை நலனும் உட்குறிபோடுணரிந்து கண்டு தன் மனத்துள் ViIT—40
இவளது பார்வை, எதிர்ப்பட்டதாலன்றோ திருமகள் மைந்தன் (மன்மதன்) தனக்குப்போரின்வெற்றிக்கொடிபெற்றிலங் கினான்.
(இவள் மீன் விழியாள் என்றும் மன்மதன் Sows Oars, யோன் என்றும் கருத்து) .
இவளது இடை, (கொடிபோல) அசைந்தாடுவதாலன்றோ
வசந்தன் காலூன்ற முடிந்தது. . ; (இவள் இடை கொடி போன்றது. கொடிகளால் வசந்த சாலம் நிலை பெறுகிறது என்பது கருத்து)
இவளது மென் முலைகள் வளர்ந்ததாலன்றோ இரதி தேவி யின், கின்னரி (சிறுவீணை)யின் நாதத்திற்கு எழில்மிக்கது.
(இவள் முலை கின்னரி (சுரைக்காய்) போன்றது என்பது கருத்து) – இவளது முகம் ஓளிர்வதாலன்றோ கலை மகளின்
(வாகனமாகிய) அன்னப் பேடுவிற்கு கூடு (இல்லம்) கிடைத்தது.
(அன்னம் உறையும் இல்லம் தாமரை. இவள் முகம் தாமரை என்பது கருத்து) . ற் .. இவள் egdangse watgier QaCor வளர்ப்பு
மயிலுக்கு மயக்கம் கிட்டியது. . . த (குருஙிகூற்தல் முகில் ற அதுல் மயில் மகிழ்ந்து மயக்கமுற் என்பது கருத்து து
பகத அள கப் எழில் மிச்கராலன்றோ தேனீச்கட்குதாகம் இரிந்திட மேட்டு நில விளைச்சல் கிடைத்தது. _
(பாதங்கள் தாமரைகள், ஆதலின். தேனிக்கள் தாரம் அலையாமல் அருகிலேயே விளைச்சல் பெற்றன என்பதுகருத்து) 11-41
என்ற ஆர்வத்துடன் திருமால் காமம் கைமிகத்தான் அந்தப்புரத்தில் அற்நங்சையைச் சேர்த்து, ஒரு பொய்யான
(மாயநநிகை) நங்கையை (கோதையைப் போன்றே)ச் செய்து, அவர்கள் இருப்பதாகவே கருதச் செய்திருப்ப, VIT—42
அரிச்சசர்சளால் ஸ்ரீபாத தீர்த்தப் பிரசாத பரிவட்டகிகளைதிதரச் செய்து தம் விடுதிக்கு அனுப்பி வைக்கவும், கோயிலிலிருந்து
புறப்பட்டு மாயநங்கையைப் பல்லக்கில் வைத்து இல்லம் போந்து பல்லக்குத் இரை விலக்கப் பார்க்க அங்கற் நநிகையைக் காணாது 37.43
ஒ. கொடுமை! திருவரங்கத்தான் அனியாயமாக என் மகளைக் கைப்படுத்தக் கொண்டான்! அவையோர் இந்த
மெலிந்த அந்தணனைப் பாரீரே!’ £ என்று துயர்க்கடலில் வீழ்ந்து கண்ணீர் மிகத் தழுதழுத்த குரலில் முறையிட்டு தோளுயர்த்திய
வாரது கூறினான். VII—44
மிகுந்த காதல் உடையவனானால், திருமணம் செய்து கொடுக்க மாட்டேனா? உடல் பொருள் ஆவி, வீடு, சுற்றம்,
செல்வம், பயிர் எல்லாம் நான் சம்பாதித்ததா? எல்லாம் அவனது பக்தர்கட்கு சமர்ப்பணம் செய்வதற்குத்தானே! அந்தோ?
விந்தை என்னே! இச்சிறுமி பெரிதா? (கேட்டால் தர மாட்டேனா) என்னைச் ூறுமைப் படுத்தினால் தன்னை மெச்சுவார்களோ?’ * VUI—45
கவன், பிரம்மன், இந்திரன் முதலானோர் உன்னைச் சேவிப்பவர்கள் ஆதலினால், உன்னை ஒன்றும்
மாட்டார்கள்! (கண்டிக்கும் இறமையற்றவரீகள்) என்:பதால் திடையற்ற (சுதந்திரமுடைய) வனாய் உள்ளாய் என்பதாஃம்
இிநீதியை மீறலாமா? உலகங்கள் எல்லாம் உன்னுடையதாளாலு உன்னருகே அருள்மிக்க அம்மை (திருமகள்) இல்லையா?
பாகவதர்கள் இல்லையா? என் பக்கம் அவர்களாவது கூற மாட்டார்களா?” VII—46
ஏற்கனவே அத்திருமகளஞும், நிலமகளும், நப்பின்னை (நீளாதேவி)யும் இருக்க, உனக்கு இந்த விரத நிட்டைகளை
யுடைய மெல்லியல்பால் மனம் என்ன சொல்வது? ஏழையாக ஏன்னைப் பித்தனாக்குவதற்காகச்
செய்த பகீசாசமேயன்றி, (இவளிடம் திருமகளிடம் இல்லாத) புதியதென்ன கண்டாய்? உலகில் ஆற்றின் வளைவுகளையும்
நீரீ்ப்போக்குகளையும் எவரால் திருத்த முடியும்?
(நதியின் வளைவுகளைத் திருத்த முடியாதது போலவே, பெரியவரீசளின் நடத்தைகளையும் மாற்ற முடியாது என்பது கருத்து.) 11-47
என்றிவ்வாறு அந்தணாளன் (பெரியாழ்வார்) முறையிடவும், பாகவதரின் துயர் கண்டு அஞ்சிய பரந்தாமனும், அவரது அறியா
மையைக் கண்டு எள்ளுவான் (கேலி செய்வான்) போலத் தோன்றும்படி மகர குண்டலமணிந்த எழிற்கன்னங்களில் இளநகையரும்
இவ்விதம் கூறினான். ViI—48
“(வயதுக் கோளாறினால்) பெரிய ஆழ்வாரே? முதுமதி தப்பினாய் போலும்! உமது மகளை வீட்டில் பாதுகாப்பாக வைத்து
விட்டு வந்து (நாலுபேர் அறிய) பகிரங்கமாக வெறும் வசை புராணம் பாடுகிறாய்/ வீட்டில் இன்னொரு தடவை ஆராய்ந்து பாரீத்து அந்நந்கையில்லாவிட்டால் வைவாயாச/ அறிவு மயக்கம் உறாமல் போய்ப் பாரீப்பாயாக।! VIT—49
எனலும் **என்னப்பனே! ஆய்விட்டதா? (உன் காரியம் ஆ௫ விட்டது போலும்) என்று கூறி எம் துயர் தீர்த்தனை! ஏதறி
வோம்! ௮ருள் கூர்ற்தனை! வெல்க/’* என்று பரவி, கண்ணீர் அடக்கிக் கொண்டு வீட்டிற்கு விரைந்து ஏஏனார்” 4711-50
(சென்று) வணங்கிய மகளின் ௨ச்சி மோந்து ஆனறந்தகண்ணீர் சொரிய, கைகளால் முதுகை நீவி “என் தாயே! உன்னைக் கண்
டேனல்லவா?* * என்று ம௫ழ்ந்து இல்லத்துறைந்தனன் ViI—51
திருவரங்கத்தான். பிரம்மா, வன், சரஸ்வதி, பார்வதிஆகியோரை தனக்குப் பெண் கேட்குமாறு பணிக்கவும், அவரீ
களும், சேனை முதலியை உடன் கொண்டு வரவும், பெரியாழ்வார் பரபரப்புடன் வரவேற்று VIl—52
சேனை முதலி முதியோரை மரியாதையுடன் விருந்தோம்பி, தகுந்த ஆசனங்களை அளித்து அமர்ந்த அவர்களிடம் வந்த கார
ணம் அறிந்து மகிழ்ச்சி மிக்க உள்ளத்தினனாக இவ்விதம் கூறி னான். 9411-53
சேனை முதலி சிவன்! பிரம்மன் முதலானவர்களே/ நற்பேறுற்றவனானளேன்[ அவனுக்கு (இருமாலுக்கு) இக் கன்னியைத்
தற்து பிருகு முனிவனும் கடலும் பெற்ற பெருமையையுற்றேன்.
(எனினும்) இவ்விதம் கேட்டுப் பெறுவது முறைதானா? (லட்சுமி பிருகு முனிவர்க்கும் கடலுச்கும் மகளாகப் பிறந்தாள்) Vil—54
கேட்பீராக! கொடுக்கத் தகுந்ததே! எளிய மனிதர்கள் இத்.தச் சம்பந்தப் பொருத்தத்தைப் பாரீத்து (தானாக) சுமந்து
வற்து கொடுத்தான் என்று சொல்லமாட்டாரீகளா? ஆதலின் எநிகள் ஊருக்கு வந்தால் மகளைத் தருவேன். Vif—S55
திருமால் ஆளுமையில் பரமேசுவரனே எனினும், தன்னடி
யிழைஞ்சுவார்பால் தயவுடையவன் ஆதலினால், உங்கள் விருப்பம் நிறைவேற்றுவான். தானே கட்டுவித்த மாமனார் வேடத்தை
பூண்ட எமக்குப் பெருமை சேர்ப்பது அவனுக்கே பெருமையாகும்.VIT— 56
எனலும், சென்று (திருமாலிடம் சேனை முதலி முதலானோர்) விண்ணப்பிக்கவும், அருளொழுகு உள்ளத்தானாகிய
அகிலாஸ்டேசுவரனாகிய திருமால் ௧௫ட வாகனதிதிலைறி,பிரம்மா, முதலிய தேவர்கள் தத்தம் வாகனங்களில் ஏறிச் சூழ்ந்து
வரவும். VII—57
சேனை முதலி முன்னேவர, வான வீதியில் வரிசை வரிசையாக வரும் “மக்களின் அணிகளும், வாளும், வஜ்ராயுதமும்,
கோடானுகோடிச் சூரியர்களின் ஒளியை திசை முழுதும் பரப்ப ViI—58
ஸ்ரீவில்லிப்புத்தாருக்குச் சென்று, விசுவகருமா மணிமயமாகக் கட்டிய விடுதியில், அந்த முதன் முதல் மணமகன் இருந்தான்.
தேவமகளிர் மஞ்சள் முதலான குளியலுக்கான மஙிகலப் பொருள்களைக் கொணர்ந்தணி செய்ய மணமகன் ஆக, தேவதுந்துபிகள்
தாரதர்முதலிய வேதமுனிவர்கள் இசை முழங்க, வெள்ளியொத்தவெண் முகில்கள் பொழியும் அமுததாரையில் அபிஷேகம் செய்ய
ப்பட்டவனாய், முத்துமாலையுடன் கெளஸ்துப மணியும்,அணிந்த சங்கொத்த கழுத்தினளாயும், மகர குண்ட லம், மகுடம்
முதலான அணிகள் அணிந்தவனாய், சந்தனம் பூசப்பெற்றவனாய், பொன்னாடையணிந்தவனாய், துளசி, கற்பகமலர்
மாலைகள் பூண்ட மார்புடையவளாய், இருக்கவும், அங்கு(ஆண்டான் இருந்த இடத்தில்) அதற்கு முன்பே இல்லம் புகுந்து,
பரபரப்புடன் (திருமண ஏற்பாடுகளில்) முனைந்தவனாசுப் பெரியாழ்வார் இருந்தார் VUH—59
மலைமகள், கலைமகள் முதலிய தேவ மகளிர்கள் சிதாராமர் களின் இருமண விழாப்பாட்டுக்களைப் பாடினர், 4917-60
வைபவத்துடனும், அன்புடனும் ஏகாவளி, சரக்விணி எனும் தோழியர் இருபுறமும் இருந்து சாமரை வீச, மஞ்சள் நீரால்
விருப்புடன் அந்நங்கையை மணமகள் ஆக்கும் தவமுதுமகளிர்கள் வாழ்த்துரைபுடன் நலுங்கு வைத்தனர், VII—61
இவ்விதம் இருமணச் சடங்குகள் நடத்தி மணமலி என்ணெய் தலையில்பூசி கூந்தலை சந்தன தைலத்தால் தேதய்த்து
பொற்குடத்தில் குளிர்ந்த . பன்னீர் கொணர்ந்து நீராடச் செய்த பின்னர், அந்த உலகநாயகி (ஆண்டாள்)க்கு தேவமாது ஒருத்தி ViI—02
ஈரம் புலர்த்தி, மென்துகில் புனைந்து, மணிபீடத்தில் அமர்த்தினாள். அந்நங்கையின் ஒளிர்மென் நீள் கூந்தலை புலர்த்தி நறும்
புகையிட்டாள் மற்ழொருத்தி, மற்றொரு மான்விழியாள் அன்புடன் கொண்டை போட்டாள். Vil—63
செம்பஞ்சுக் குழம்பு (தொய்யில்) ஏற்கனவே சிவந்த பாதந்கங்கட்குப் பூசினாள் ஒருத்தி, மற்றொருத்தி மெல்லடி விரலில்
மெட்டி புளைந்தாள். சிலம்பு அணிவித்தாள் ஒருத்தி. குஞ்சம்வைத்து பொற்சரிகைக் கரையையுடைய வெண்துகில் எழிலுற
அணிவித்தாள். மற்றொருத்தி, இடையில் பொன்மணி மேகலையும் கழுத்தில் முத்து மாலையும் அணிவித்தாள். இன்னொருத்தி,
வளையல்கள், தோள்வளை, கைச்சரம், மோதிரம் முதலியன அணிவித்து கம்மல் மூக்குத்தி சுட்டி முதலியனவும் கொண்டு
கோலம் புளைந்தாள். VII—064
அந்நங்கையின் இளிமிச்க கண்கட்கு மை தீட்டி, மெய்யில் கஸ்தூரி பூசி, உச்சிப் பொட்டு வைத்து, கூந்தலுக்கு செங்கழுநீர்ப்
பூக்கள் சொருக வேறு ஒருத்தி அணி செய்வித்தாள், ViJ—65
இவ்விதம் ஒப்பனை செய்திருப்ப இலக்கினம் (முகூரீதிதம் நெருங்கியதென்று, விண்ணப்பிக்கவும், பாம்பணைப் பள்
கொண்ட பெருமாள், பன்னிரு சுடர்களும் (துவாதச ஆதித்தி யர்கள்) இவட்டிகளாக ஒளிர, விண்மீன் கூட்டம், முத்துகி
கோவையாக, திங்களஞ் செல்வன் குடை (ஆலலவட்டம்)யாக அமைய, கடலரசன் (வருணன்) செங்கமழுநீர்ப் பூபிதழ்களுடன்
அநிகாடியில் சாண நீர் தெளிப்ப, இயற்கை (மாயை)த்தாய், வரனர மகளிருடன் கூடி பரிசம் ஏற்பாடு செய்ய, ௮க்கினிதேவன்,
அஇற்புகை சளறச் செய்ய, மழைக் கடவுள் (மு௫ற் குலம்) மேற் – கட்டு (விதானம்) இடவும் தொன்முது மறைகள், ஓதுவார்களாய்
விருதுகள் வாசிக்க, நாரத சனந்தனர் முதலானோர் மங்கல இசையால் மனங்குளிர மகிழ்வித்திட கருடன் மத யானையபோல
மணி குயின்ற பொற்பீடத்தைச் சுமக்க, தெய்வீக வைபவத்துடன் சென்று, பர மானந்தத்துடன், பாகவத சிரேட்டனாகய
பெரியாழ்வார் பக்தியுடன் வணங்கி, வரவேற்க. வாகளத்திலிருந் திறங்கெய இரு மால், சேனை முதலியார் கைலாகுகதரவும் வாயிற
போந்ததும் ஆங்கு நங்கையர் கழுவிய ஸ்ரீபாத தீர்த்தத்தற்ன மேன் 3மல் வீழ்ந்து தேவர், சித்தர், குழுக்கள் ந௱ன்முந்தி நான்
முந்தி என வந்து நிலத்தில் சலமில்லாதவாறு பிடித்தப் பருகலம், புகுந்து, ஆங்குள பொற்பீடத்தில் அமர்ந்து, அவன் மீண்டும்
பொற் செம்புகளால் தங்கத் தாம்பாளத்தில் வைத்த தாமரை போன்ற மெல்லடித் தலிர்களைக் கழுவி, சோட சோபசாரங்
களுடன், மதுபர்க்கம் (வெல்லம் கலந்ததயிர்) தரவும் பெற்று அப்பெரியாழ்வார் இல்லக் இழத்தியுடன் தாரை வார்த்துத் தர
௮ச்கன்னியை (ஆண்டாளை)க் கைப்பிடித்தான் , 11-66
பின்னர், பொன்முலாம் பூசிய வேலைப்பாடுடைய முத்துக்கள் கோர்த்த கருவண்ணக் சகுரைய/டைய பெருந்திரையை,
இறக்கி, முகூர்த்தம் வரவும் தேவலோகப் பெரியோர்கள், மணமக்களின் மென்மையான கைகளில் வெல்லமும் சீரகமும்
தரவே, மிக்க ஆர்வமுடன் கண் ஒளி பாய்ந்துராய (ஒருவரை ஒருவா்) கண்டனர். VII—67
பின், கோதை, திருவரநகிகநாதனின் திருமுடியில் முதலில் முத்துக்களை மங்கள அக்ஷ்தை (தலப்ராலு) சொரியவே, அவள்
விரல் தளிர்கள் பட்டுப் புளசமுற்று வியர்ப்புற்ற இருமாலின் உடவில் செறிற்துதிரீந்த வியர்வைத் துளிகள், மழைத் துளிகளாக வும், முத்துக்கள் ஆலங்கட்டிகளாகவும்: முடலிலிருந்து பெய்துஒளியுடன் மிளிர்வது போலத் தோன்றியது.
(திருமால் கருவண்ணயாதலின் கார்மு௫லாகவும் வியர்வைத் துளிகள் மழைத் துளிகளாகவும், முத்துக்கள் ஆலங்கட்டிக்ளாகவும்
உ.வமிக்கப்பட்டன. தெலுங்கு நாட்டுத் திருமணச் சடங்கில் வெல்லமும், €ரகமும், ஒருவர் கையில் ஒருவர் வைத்தக் கொண்டு
தலைகளைத் தொடுவதும், பின் தலப்ராலு எனும் அரிசியை ஒருவர் தலையில் ஒருவர் சொரிதலும் இங்கு வருணிக்கப்
பட்டுள்ளன. தலப்ராலு என்பது தலையிற் பெய்யும் அரிச என்பது பொருள்) ViI—68
நங்கை யிரு செங்கைசளாலும் தலையரிசி வாரி எடுத்த போது, ஏந்திள வனமுலைகள்பால் ஏந்தல் திருமால் வீரைந்து
,கண்போடவே, அதைப் பார்த்து நாணங் கொண்டு தோள்சளை மேலே தூக்காமலேயே கை முனையால் மேலே விழுமாறு எறிந்த
வாறு சொரிந்தாள், VII—69
இருமால் அச்செல்வீயின் கழுத்தில் மங்கல நாண் (மங்கல சூத்திரம்) கட்டினான். அவளது உடல் புளகமுற்றது, நங்கையும்
நாயகனும் ஒருவரை ஒருவர் கரங்களில் கங்கணம் சுட்டினர். Vil—70
நங்கையால் விரகமுடன் பொரி வேள்வி (லாஜஹோமம்)செய்வித்து சப்தபதி (ஏழடிகள்) நடத்தச் செய்தான்.
நநிகையுடன் வடமீன் (அருந்ததி நட்சத்திரம்) கண்டனன், பிரம்ம ருத்திரரீ முதலிய தேவர்கள் படைத்த காணிக்கைகளை
அருளோடேற்றுக் கொண்டு, அன்போடு அனுப்பி வைத்தான்.
தனது திருவரங்க நகருக்கு மிகுந்த சிறப்புடன் நங்கையை அழைத்துச் சென்று, காவேரிக் கரையில் சந்தனமரச் சோலை
களில் கருங்கூந்தலாளைக் கொஞ்சிக் குலாவி மன்மதப் பேரரசின் ஆட்சியளித்து அருளுடன் அகல உலகமும் பரிபாலித்து
வருகிறான். Vil—71
கோளனேரியின் கரையில் மளங்கவரும் முழைகளிலிருந்து வந்த சந்தனம், முல்லை மலர்களை தழுவிய மந்தமாருதம் அசைவித்த
வனமாலை (துள? மாலையை) உடையவனே! தூய கருவண்ணத் துடல் எழிலால் வானத்தை வென்றவனே/ ஆய்ச்சியர்தம்
மனத்தை தளிரீவிக்கும் வேய்ங் குழல் இசைவாணனே[ VII—-72
சக்கிராயுதத்தால் தேவ விரோதிகளைக் கண்டித்தவனே! (கருடற்) பறவை வாகனனே! உந்தியில் எழுந்த பெருந்தாமரை
மாலரகிய தொன்னை பில் நிறைந்த தேன் எனும் வெள்ளத்தில் பிரம்ம தேவனை நீர் மனிதன் போலத் திகழச் செய்தவனே! VU—73
வாலியைக் கொன்றவனே/ தாமரைக் கண்ணனே! மலை மகளால் புகழப் படுபவை! தோளில் ‘ வில் அமைந்தவேே!
நெற்றிக் கண்ணன் நான்முகன் இந்திரன் முதலானோர் தம் -மகுடங்களின் மணியொளியாற் கோலங்கொண்ட அடியிணை
களையுடையவனே! 4171-74
இஃது நீல மலையில் நீல வண்ணத்துகில் புளைந்தவனான பலராமனும், சுபத்திரையுடன் கூடியுள்ள குவளை மலர் வெல்ற
கண்களையுடைய கண்ணனின் கருணைக் கடைக் கண்களின் அருளால் தோள் வலிமையுடன் தோ ழற்சடிக்கப்பட்ட கடகாதிபதி
யாகிய கஜபதி மன்னர்களை அஞ்சச் செய்த கஇருஷ்ண3தவராய மன்னரால் உருவாக்கப்பட்ட *ஆமுக்த மால்யத* எனும்
காவியத்தில் ஏழாவது அத்தியாயம் இனிய செய்யுட்களுடன் நிறைவுறும்.
(நீலமலை என்பது பூரி ஜகந்நாத க்ஷேத்திரமாகும். இங்கு கண்ணன், பலராமன், சுபத்திரை மூவரும் இணைந்திருக்கும்
சன்னதியைக் காணலாம். தனது தங்கையுடன் தங்கியிருக்கும் இறப்பு இந்தத் தலத்திற்குண்டு. அது கடகம் (ஒரிசா) பகுதி
யாதலின் அதனைவென்ற இருஷ்ணதேவராயர் அப்பகுதி திருமாலையை வழிபட்டு இச்செய்யுள் யாத்த சிறப்பும்
ஆமுக்த மால்யத’ முற்றும்
—————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ கிருஷ்ணதேவராயன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply