இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-
“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய், மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.
————–
அவதாரிகை –
முதல் பாட்டில் -நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று
சங்கரஹேண சொன்ன-பிராப்ய பிராபகங்களை-
இந்த இரண்டு பாட்டாலே விவரிக்கிறது –
அதில் இப்பாட்டாலே –
நாட்டார் இசைகைக்காக -நோன்பு -என்று ஒரு வ்யாஜத்தை இட்டு புகுந்தோம் இத்தனை –
எங்களுக்கு உத்தேச்யம் அது அன்று –
உன் திருவடிகளில் கைங்கர்யமே -என்று
தங்களுக்கு உத்தேச்யமான புருஷார்த்த சித்திக்கு –
தங்கள் ஆகிஞ்சன்யத்தையும் -பிராப்தியையும் -முன்னிட்டு –
நீயே உபாயமாக வேணும் -என்று அபேஷித்து
இதுக்கு ஷாமணம் பண்ணிக் கொண்டு
பிராப்ய பிரார்தனம் பண்ணித் தலைக் கட்டுகிறது –
மேலில் பாட்டாலே -பிராப்ய பிரார்தனம் பண்ணா நின்றதாகில்
இங்குப் பண்ணுகிறது என் என்னில்
பிராபகம் பிராப்ய சாபேஷம் ஆகையாலே சொல்லுகிறார்கள் –
(மேம் பொருள் ஒரே பாசுரம்
உலகம் உண்ட பெரு வாயா ஒழி வில் காலம் எல்லாம் இரண்டு திருவாய் மொழி
போல் இங்கும் இப்பாசுரம் அடுத்த பாசுரம்
மந்த்ர ரத்னம் த்வயம் அர்த்தம் சொல்ல வந்தவை
ரஹஸ்ய த்வயத்தால் வியக்தம் இல்லாத
ஸ்ரீ சம்பந்தம் இதிலே தானே வியக்தம்
இரண்டு வாக்யத்திலும் ஸ்ரீ முன்னிடுவது உண்டே
முன் வாக்கியம் புருஷகாரமாக பிராட்டியைப் பற்றி சரணாகதி
பின் வாக்யத்தால் மிதுனத்தில் கைங்கர்ய பிரார்த்தனை
பிராட்டியாலே பேறு த்வயத்தாலே )
மார்கழி நீராடுவான் என்று நோன்பை பிரசங்கித்து –
அதுக்கு உபகரணங்களாக இருப்பன சங்கங்கள் முதலானவற்றையும்
சூடகமே தோள் வளையே என்று விரதம் தலைக் கட்டினால் அலங்கரிக்கைக்கும் –
உடுக்கைக்கும்
உண்கைக்கும்
வேண்டுவனவாய் இருப்பன சில உபகரணங்களையும் –
அவனுக்கும் தங்களுக்கும் அக வாயிலே சில நிழல் எழா நிற்க
நாட்டுக்கு மேல் எழுந்தன சில அபேக்ஷித்தார்களாய் நின்றார்கள் –
கீழ் இரண்டு பாட்டிலும் –
அணி யாய்ச்சியார் சிந்தையுள் குழகனார் (நாச்சியார் -4-10 )என்று
இவர்கள் நெஞ்சிலே கலக்குமவன் ஆகையால்
அவன் உங்கள் அபிசந்தி இவ்வளவு என்று தோற்றி இருந்தது இல்லை –
நீங்கள் சொன்னதையும்
இன்னம் மேலும் சொல்லுமவையும் யுண்டாகிலும்
நாம் தரும் இடத்தில்
நீங்கள் நின்ற நிலை தன்னை அறிந்து கொள்ள வேணும் –
பேறு உங்களதான பின்பு நீங்களும் சிறிது யத்னித்து வைக்க வேணும்
அதுக்கு உடலாக நீங்கள் அனுஷ்டித்த உபாயம் ஏதேனும் உண்டோ என்ன –
எங்கள் அளவு கண்டாய்க்கு சில சாதனங்கள் உண்டோ என்று
சொல்லும் படி இருந்ததோ -என்று
தங்கள் ஸ்வரூபம் இருந்த படியை அறிவித்து –
கேவலம் தயா விஷயம் என்னும் இடத்தை திரு உள்ளம் பற்றி
நீ எங்கள் கார்யம் செய்ய வேணும் என்று
தங்கள் உபாய ஸூந்யதையை விண்ணப்பம் செய்கிறார்கள் –
இப் பாட்டில் –
போற்றி யாம் வந்தோம் -(21)
எம் மேல் விழியாவோ -(22)
உன்னை அருத்தித்து வந்தோம் -(25 ) என்று தொடங்கி ப்ராப்ய ருசியை ஆவிஷ்கரித்தார்கள் கீழ்
அந்த ப்ராப்யத்தை பெறுகைக்கு உடலாக
தங்களுடைய ஆகிஞ்சன்யத்தையும்
அவனுடைய உபாய பாவத்தையும் சொல்லுகிறார்கள் இதில் –
யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் (23 ) என்றவாறே
வந்த வருத்தங்களை ஆராயாதே
அக வாயில் ஏதேனும் சில சாதனா அம்சங்கள் உண்டோ என்று ஆராய இழிந்தான்
நின் அருளே புரிந்து இருக்கிற எங்களுக்கு (பெரியாழ்வார் )எடுத்துக் கழிக்கலாம் படியும் சில உண்டு என்று இருந்தாயோ –
இரங்கு என்றும்
அருள் என்றும்
நாங்கள் அபேக்ஷித்த அருளுக்கு பிரதிபந்தமாய்க் கிடப்பன ஒன்றும் இல்லையே என்று
சர்வஞ்ஞன் அறிய
ஒன்றும் இல்லாமையை யாதார்த்தேன அறிவிக்கிறார்கள் –
1-சித்த உபாய ஸ்வீகாரம் பண்ணும் அதிகாரிகளுக்கு பேற்றுக்குக்
கைம் முதலாய் இருபத்தொரு சத் கர்மம் இல்லை என்கையும்
(கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்)
மேலும்
2-யோக்யதை இல்லை என்கைக்கா தங்களுடைய நிஷ்கர்ஷ அனுசந்தானமும் –
(அறிவொன்றும் இல்லாத ஆய்க் குலத்து)
3-மூல ஸூக்ருதமான ஈஸ்வரனுடைய குண பூர்த்தியை அனுசந்திக்கையும்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
4-சம்பந்த ஞானமும் –
(உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது)
5-பூர்வ அபராதங்களுக்கு ஷாமணம் பண்ணுகையும்
(அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச் சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே)
6-உபாய பூதனான ஈஸ்வரன் பக்கலிலே ப்ராப்யத்தை அபேக்ஷிக்கையும்
(இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்-)
இவை ஆறும் அதிகாரங்கள் ஆகையால்
(இல்லை என்பதுக்கு ஏழு விதமாக அருளிச் செய்கிறார்
1-தர்ம நிஷ்டை இல்லை என்று சத் கர்ம ராஹித்யத்தை சொல்லுவார் –
2-நிகர்ஷம் சொல்லுவார் –
3-நிந்தித கர்ம பூயஸ்த்தை சொல்லி மேலும் யோக்யதை இல்லை என்பர் –
4-ஈஸ்வர குண பூர்த்தியை அனுசந்திப்பார்
5-சம்பந்த அனுசந்தானம் பண்ணுவார்
6-பூர்வ அபராதத்துக்கு ஷாமணம் பண்ணுவார்-
7-ப்ராப்யத்தை உபாய பூதனான நீயே தர வேணும் என்று அபேக்ஷிப்பாராய் இறே அதிகாரிகள் இருப்பது )
நோற்ற நோன்பு இலேன் -(திருவாய் )
குறி கோள் அந்தண்மை தன்னை ஒளித்திட்டேன்-(திருமாலை )
குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் -(திருச்சந்த )
நலம் தான் ஒன்றும் இலேன் நல்லதோர் அறம் செய்திலேன் -(பெரிய திருமொழி-1-9)
தர்ம நிஷ்டை இல்லை என்று சத் கர்ம ராஹித்யத்தை சொல்லுவார் –
ராவணோ நாம –
ஜகத்திலே பேர் படைக்கும் படி பர ஹிம்ஸையிலே அதிர நடத்துவதொரு பேர் மாத்ரமாய்ப் போகாதே –
சர்வ விஷயமாக வழி கெட நடந்து பரஹிம்சையே யாத்ரையாய் இருபத்தொரு ஜென்மமாய்
மேலும் திருத்த ஒண்ணாத படி நியாம்யன் அன்றிக்கே இருப்பான்
ஒரு தண்ணியனுக்கு சேஷ பூதனாய் –
அவனாலே தூஷிதமான யுதிரத்திலே சிரகாலம் வாசனை பண்ணிப் பிறந்து முறுகல் தனத்தில்
அவன் என்னைக் கொண்டு நடத்த அநீதிகளில் நடந்து –
அதில் அவனிலும் காட்டில் பிரகாசம் யுடையானாய் இருப்பான் ஒருவன் என்று நிகர்ஷம் சொல்லுவார் –
பொறுத்தேன் புன் சொல் நெஞ்சில் -என்றும் –
எப் பாவம் பலவும் இவையே செய்து என்றும் –
மனத்திலோர் தூய்மை இல்லை -என்றும்
நிந்தித கர்ம பூயஸ்த்தை சொல்லி மேலும் யோக்யதை இல்லை என்பர் –
அரவின் அணை அம்மானே -(திருவாய் )
நம்பி கடல் வண்ணா –
மாயனே எங்கள் மாதவன் (பெரிய திருமொழி-1-9-)–என்றும் –
சரண்யா (ஸ்தோத்ர ரத்னம் )-என்பராய்க் கொண்டும்
ஈஸ்வர குண பூர்த்தியை அனுசந்திப்பார்
உன் அடியனேனும் வந்து என்றும் –
புகல் ஒன்றும் இல்லா அடியேன் என்றும் -சம்பந்த அனுசந்தானம் பண்ணுவார்
நாயினேன் செய்த குற்றம் நற்றமாகக் கொள் என்றும் –
மத் வ்ருத்தம் அசிந்தையித்வா –ப்ரஸீதா -(ஸ்தோத்ர ரத்னம் )-என்றும்
சர்வான் அசேஷத க்ஷமஸ்வ (ஸ்தோத்ர ரத்னம் )என்றும் பூர்வ அபராதத்துக்கு ஷாமணம் பண்ணுவார்-
சன்மம் களையாய் —
உன்னடி சேர் வண்ணம் அருளாய் என்று ப்ராப்யத்தை
உபாய பூதனான நீயே தர வேணும் என்று அபேக்ஷிப்பாராய் இறே அதிகாரிகள் இருப்பது –
ஆகையால் இவர்களும்
1-தங்களுடைய ஆகிஞ்சன்யத்தையும்
2-அயோக்யதையையும் ஆவிஷ்கரித்து
3-உபாய பூர்த்தியையும்
4-தங்கள் ப்ராப்தியையும் முன்னிட்டு –
5-கீழ் சொன்னவற்று எல்லாம் அனுதபித்து க்ஷமை கொண்டு
6-எங்கள் ப்ராப்ய சித்திக்கு நீயே உபாயமாக வேணும் என்று அபேக்ஷிக்கிறார்கள் –
கார்ய நிர்ணய வேளை யாகையாலும்
சர்வஞ்ஞன் சந்நிதி யாகையாலும்
உள்ள படி தீர விட்டுக் கொள்ளாத போது புரை அறாது இறே
நிதாநஞ்ஞனான பிஷக்கின் முன்பு வியாதி கிரஸ்தன் தான் பண்ணின அபத்யங்களை சொல்லி
அந்த வியாதியைத் தீர்த்துக் கொள்ளுமா போலே
ஸ்வ தோஷத்தை ஆவிஷ்கரித்து ஷாமணம் பண்ண வேண்டி இறே பிரபன்னர்க்கு இருப்பது
(மறக்காமல் மறுக்காமல் மறைக்காமல் சொல்ல வேண்டுமே )
புறம்பு அந்த வியாதிக்கு
நிமித்தமும்
பரிஹாரமும்
பரிஹாரம் பண்ணும் பிஷக்கும்
பேஷஜமும்
பத்யமும்
வியாதி சமித்தால் புஜிக்கும் போகமும் பேதித்து இருக்கும் –
இங்கு வந்தால் அப்படி அன்று –
வேவாரா வேட்க்கை நோய் (திருவாய்-2-1)-என்று பிரேம வியாதிக்கு
நிமித்தமும் தானாய்
மாலே மணி வண்ணா என்று கிருஷ்ணன் தானே பரிஹாரம் பண்ணும்
மருத்துவமும் தானாய்
ஆயர் கொழுந்து மருந்தாம் (திருவாய்- 1-7)-என்று
பேஷஜமும் தானாய்
கொழுந்தில் கிழங்கு பத்யமுமாய் –
நோய் விட்டால் புஜிக்குமதுவும் -எங்கள் அமுது என்கிறபடியே
கிருஷ்ணன் தானாய் இறே இருப்பது –
மருந்தும் –அமுதமும் தானே என்று
அம்ருதம் ஒளஷதமாம் படி இருக்கிறது இறே
வியாதி க்ரஸ்தர் -மருந்து -என்று இருப்பார்கள் –
வியாதி ரஹிதர் அமுதம் என்று இருப்பார்கள் –
இங்குள்ளார் நோய்கள் அறுக்கும் மருந்து என்று இருப்பார்கள் –
அங்குள்ளார் போக மகிழ்ச்சிக்கு மருந்து என்று இருப்பார்கள்
நோய் இல்லாதான் ஒருவனும் (அவன் மட்டுமே)தன்னை மருந்து என்று அறியான் –
(நித்ய சம்சாரியும் அறியான் -சம்சாரம் வியாதி என்று எண்ணம் இல்லாதவன் )
தேனில் இனிய பிரானே அரு மருந்து ஆவது அறியாய் (பெரியாழ்வார் -2-7 )-என்னக் கடவது இறே
இப்படி பிரபலமாய் இருபத்தொரு ஒளஷதம் பெற்றால் கடுக பரிஹரித்துக் கொள்ள வேண்டும் என்கையால்
சுத்த பாவராய்
உன்னால் அல்லது செல்லாதாரைப் போலே
எங்களை நிரூபியாதே
திரு முன்பே நின்று சொன்ன வார்த்தையைப் பொறுத்து அருள வேணும்
என்று ஷாமணம் கொள்ளுகிறார்கள்
உபசார புத்தயா பண்ணும் அபசாரங்களையும் ஷமிப்பான் ஒருவன் ஆகையால் இறே
அபத்ய ஸஹ ஒளஷதம் என்றது –
நச்சு மா மருந்தும் (திருவாய்-3-4-நச்சி விரும்பி )இறே
இப்போதே எம்மை நீராட்டு என்று ஆசு கார்யமான ஒளஷதம் ஆகையால்
அப்போதே குளித்து உண்ணப் பண்ணும் இறே –
ஆகையால் கண் அழிவற்ற ப்ராபக ஸ்வீகாரம் பண்ணுகிறார்கள் –
ப்ராபக ஸ்வீகாரம் தான் –
தத் இதர சர்வ உபாய தியாக பூர்வகமாய்த்து இருப்பது –
அவை நின்ற நின்ற அளவுக்கும் ஈடாய் இருக்கும் –
அவற்றில் அதிகரிக்கைக்கு அசக்தனானவன் மாட்டேன் என்றும்
அதிகரித்தே அப் பிராப்தியை யுணர்ந்தவன் விட்டேன் என்றும் –
அறிந்து அதிகரியாதவன் அவை எனக்கு இல்லை என்றும்
அவை அறியாதவன் ருசி வாசனைகளும் இல்லாதவன் ஆகையால்
தான் பூர்ண அதிகாரி என்னும் இடத்தை காட்டினான் ஆகிறான்
ந ஸ ஸாமர்த்யவான் -என்பாரும் உண்டு –
ஸந்த்யஜ்ய என்பாரும் உண்டு –(விட்டேன்)
நோற்ற நோன்பு இலேன் என்பாரும் உண்டு –
மற்றேல் ஓன்று அறியேன் (பெரிய திருமொழி-1-9 )-என்பாரும் உண்டு –
ஆகையால் இறே உபாயம் சர்வாதிகாரம் ஆகிறது –
உபாயாந்தரம் யுடையவனுக்கு அவற்றை விட வேண்டுவான்
என் என்னில்-
பகவத் வியதிரிக்தமாய் இருபத்தொரு ஓன்று உபாயம் ஆக மாட்டாமையாலே-
அவை உண்டானாலும்
இவன் கை பார்த்து இருக்க வேணும் இறே
அவை அஸக்ய கிரியை என்று மீளுதல்
ஸ்வரூபத்தை உணர்ந்து மீளுதல் அத்தனை –
அவை உடையவர்கள் விடுவது
இல்லாதவர்கள் இல்லை என்று அறிவிக்கையுமாய் இறே இருப்பது –
அதில்
இவர்கள் தான்
எங்களுக்கு த்யாஜ்யாந்தரம் இல்லை என்கிறார்கள் –
மஞ்சனக் கொட்டும்
மேல் சங்கும்
போற்றவும் புகழவும்
பகல் விளக்கு பிடிக்கையும்
கொடி எடுக்கையும்
மேல் கட்டி கட்டுகையும்
ஆபரணங்கள் பூண்கையும்
உடுக்கை உடுக்கையும்
அடுகுவளம் எடுக்கையும் இவை எல்லாம் அதிசயித புண்யருடைய வரிசை இறே
ஷூத்ரமான ராஜ போகமன்றே நீங்கள் நினைக்கிறது –
வான் இள வரசு -நம்மோடு கூடி இருந்து
குளிர்ந்து
உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் புஜிக்கும் போது
ஜன்மாந்தர சஹஸ்ரங்களிலே
தபோ ஞான சமாதிகளாலே விளைந்த புண்ய பலமாக வர வேணும் –
அப்படிக்கு நீங்கள் ஏதேனும் செய்தது உண்டோ -என்ன சொல்லுகிறார்கள் –
(வேத சார தமம் –திருமந்திரம்
ஓம் -சம்பந்தம் உறவு ஞானம் -அநந்யார்ஹ சேஷத்வம் -ஸ்வாமி சொத்து சேஷி சேஷ பூதன்
அவன் பிரயோஜனத்துக்காகவே இருக்க வேண்டுமே -அற்றுத் தீர்ந்த நேர்பட்ட -ப்ராப்யத்தில் தெளிவு உண்டாகும்
அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யம் பெற உபாயம் -அவனே என்றும் உணர வேண்டுமே
இதுவே நம-எனக்கு உரித்தவன் அல்லன் -உபாயம் அவனே விளக்கம் நம – நாராயணாயா -அவனுக்கே கைங்கர்யம் விஷயமான விளக்கம்
நம -அனுஷ்டானம் விவரணம் த்வயம் பூர்வ வாக்கியம்
நாராயணாயா விவரணம் த்வயம் உத்தர வாக்கியம்
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் இருந்து வழு விலா கைங்கர்யம் செய்ய வேண்டுமே -உத்தர வாக்யார்த்தம்
இவற்றை விளக்கவே அருளிச் செயல்கள்
உலகமுண்ட பெரு வாயா -அகலகில்லேன் -அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -பூர்வ வாக்யார்த்தம்
ஒழிக்க ஒழியாத ஒன்பது வித சம்பந்தம் உண்டே
மேம்பொருள் -தொண்டர் அடிப்பொடி -நாயக ரத்ன பாசுரம்
காம்பற தலை சிரைத்து -கைங்கர்ய பிரார்த்தனை
மேல் பூர்வ வாக்யார்த்தம்
முன்னும் பின்னுமாக இருவரும்
ஆண்டாள் இதில் நேராக -கறைவைகள் இன்று பூர்வ வாக்யார்த்தம்
சிற்றம் சிறுகாலை உத்தர வாக்யார்த்தம்
கீழ் சாம்யா பத்தி சாயுஜ்யம்
நெடுமாலே -மாலே -சம்பந்தம் 25-26-
கோவிந்தா -மூன்று பாசுரங்கள்
இப்படி கட்டுமானம் உண்டே -ரத பந்தனம் -ஸாஸ்த்ரார்த்த பரம்
ந வேதாந்தாத் த ஸாஸ்த்ரம் ந மதுமதநாத் தத்வம் அகிலம் ந சத்வாத் ஆரோக்யம்-ந த்வய வசனம் ஷேம கரம்
த்வயம் -மந்த்ர ரத்னம்
அநன்ய சரண்யத்வம் -அநந்யார்ஹத்வ சேஷத்வம் -அநந்ய போக்யத்வம் –
நாராயண விஷ்ணு வாஸூ தேவ வியாபக மந்த்ரங்கள் –
திருமந்திரம் பிரதானம் -மந்த்ர ராஜ -மந்த்ராணாம் பரமம் -குஹ்யானாம் குஹ்ய தமம்–
இதன் விவரணம் த்வயமே -மந்த்ர ரத்னம் – த்வயார்த்தம் தீர்த்த சரணாகதி -சார ஸங்க்ரஹம் –
கற்றுக் கறவைகள் -த்வய பூர்வ வாக்கிய விளக்கம் -சரணாகதி பண்ணி –
சிற்றம் சிறு காலை -உத்தர வாக்ய விளக்கம் -புருஷார்த்தம் -கைங்கர்ய பிரார்த்தனை
ந வேதாந்தாத் சாஸ்திரம் -வேதம் ஒன்றே சாஸ்திரம் –
ந மது மதநாத் தத்வம் அகிலம் -அஜிதன் பாற்கடல் கடைந்தவன் -ஹரி கஜேந்திர மோக்ஷம் ப்ரதன் –
தத்வ த்ரயம் -மூன்றும் நித்யம் சத்யம் -மற்றவை அவனுக்கு அதீனம் -அவர தத்வங்கள் -இவன் ஒருவனே பர தத்வம்
ந தேவம் கேஸவாத் பரம் -பரம் திறம் அன்று பல்லுலகீர் மற்ற தெய்வம் இல்லை -சர்வம் சரீரம் பிரகாரம் –
ந ஸத்வாத் ஆரோக்யம் -சத்வ குணம் -சாத்விக ஆகாரம்
நாயகனாய் வெல்லம் போட்ட சக்கரை பொங்கல்
கூடாரை அக்கார வடிசில் பாலால்
கற்று -தத்யோனம்
ந த்வய வசனம் ஷேம கரம்
வேத பாகங்கள் தேகத்தால் பேறு -இத்யர்த்த கர்தவ்யம் –
ஆத்மாவால் பேறு -ஸாம்யம் புத்தி -திருமந்திரம் சொல்லும்
ஈஸ்வரனால் பேறு -சரம ஸ்லோகம் சொல்லும்
பிராட்டியாலே பேறு த்வயம் –
ரஹஸ்ய த்வயத்தால் வியக்தமாகாத பிராட்டி சம்பந்தம் வியக்தம் வாக்ய த்வயத்திலே
சாஸ்த்ர ருசி பரிக்ரஹீதம் திருமந்திரம்
ஈஸ்வர ருசி பரிக்ரஹீதம் சரம ஸ்லோகம்
ஆச்சார்ய ருசி பரிக்ரஹீதம் த்வயம்
இறைவா நீ தாராய் பறை -ப்ராப்ய பிரார்த்தனை -தாராய் -ப்ராபகம் -இதிலே தான் நோக்கம்
பறை விளக்கம் நாளை -ப்ராப்யத்தில் நோக்கம்
அறிவு ஒன்றும் இல்லாத-கர்ம ஞான பக்தி யோகங்கள் இல்லை –
பிறவி பெறும்தனை புண்ணியம் உடையோம் –எங்களைத் தேடி வரும் பாக்யம் படைத்தோம்
இங்கு தமக்கு ஒழிக்க ஒழியாது-கண்ணநீர் பாய்ச்ச வேண்டாத உறவு அன்றோ -நித்யம் அன்றோ -அறியாமை தானே வந்தேறி
அறியாத பிள்ளைகளும் அன்பினால் -மூன்று தப்புக்கள் பண்ணினோம்
நாராயணனே நமக்கே பறை தருவான் ஆரம்பம்
இறைவா நீ தாராய் பறை -இங்கு
நாராயணனே இறைவன் -கோவிந்தன் எளியவன் -கொடுக்க சக்தனோ என்ற சங்கை இல்லாமல் இறைவா
தமேவ சரணம் கத கீதையில் சொன்னதும்-யாரோ எங்கயோ என்று பார்த்த அர்ஜுனனுக்கு மாம் அஹம் காட்டி அருளினான்
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்–முதல் பாகம் கைம்முதல் இல்லை -கர்ம ஞான பக்தி யோகங்கள் இல்லை -ஆகிஞ்சன்யம் சொல்லிற்று
நோற்ற நோன்பு ஆகிஞ்சன்யம் ஆராவமுது -அநந்ய கதித்வம் -உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து-இரண்டாம் பாகம் -மேல் கர்மாதி உபாயாந்தரங்கள் வரவும் யோக்யதை இல்லை
உன் தன்னைப் பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -ஸித்த உபாயம் எங்கள் இடம் உள்ளதே
உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது-சம்பந்தம் திடமாக -ஞானம்
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே-அபராத ஷாமணம்
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்-ப்ராப்ய பிரார்த்தனை -அடுத்த பாசுரத்துக்கு முன்னுரை )
பெண்காள் -நீங்கள் சொன்னவை நாட்டுக்கு –
உங்கள் அபி சந்தி இவ்வளவு என்று தோற்றி இருந்தது இல்லை –
நீங்கள் சொன்னவையும் இன்னும் மேல் சொல்லுமவையும் உண்டாகில்
நாம் தரும் இடத்தில்(சர்வ முக்தி பிரசங்கம் ஆகக் கூடாதே )
உங்கள் பாடே நாமும் சிறிது பெற்றோமாக வேணும் –
அதுக்கு உங்களுக்கு உள்ளது என் -என்ன
உனக்கு உதவுவதாவது எங்கள் பக்கல் ஒன்றும் இல்லை –
நாங்கள் பண்டு தப்பச் சொல்லிற்றின யுண்டாகில் பொறுக்க வேணும் -என்று க்ஷமை கொள்ளுகிறார்கள்
முதல் பாட்டில்,-நாராயணனே நமக்கே பறை தருவான் -1-என்று சங்க்ரஹேண சொன்ன
ப்ராப்ய ப்ராபகங்களை இந்த இரண்டு பாட்டாலே விவரிக்கிறது
இப்பாட்டு உபாய விவரணம்
ப்ராப்ய ப்ராபகங்களை-சொன்னதும் தப்பாக இது முதலில் சொன்ன ப்ராப்யம் என்று புத்தி பண்ணுவோம் என்று அத்தை நிரசிக்கிறார் உடனே
(உபாய பாவத்தில் கிஞ்சித்தும் இல்லை -ப்ராப்ய கைங்கர்யமாக பலவும் உண்டே –
நாம சங்கீர்த்தனம் போற்றுதல் புகழ்தல் போன்ற பலவும் உண்டே
உபாய அத்யவசாயம் உள்ளதோ என்று தேடுகிறான்)
(தருவான் பறை -பறை தருவான்
உபதேச காலம் வேறே -ப்ராப்யத்தின் ஏற்றம் சொல்லி பின்பு உபாயம் சொல்ல வேண்டுமே
அனுஷ்டான வேளையில் உபாயம் காட்டி பின்பு ப்ராப்யம்)
கீழ் அடங்க ஒரு அதிகாரிக்கு சம்பவிக்கும் ஸ்வ பாவங்களைச் சொல்லி
ஆகிஞ்சன்யத்தையும்
ப்ராப்தியையும் முன்னிட்டு
அவனே உபாயமாக வேணும் என்று அபேக்ஷித்து
ஷாமணம் பண்ணிக் கொண்டு தலைக் கட்டுகிறது –
முதல் பாட்டில் சங்க்ரஹேண சொன்ன
பிராப்ய
பிராபகங்கள் இரண்டையும்
மேல் இரண்டு பாட்டாலும் விவரிப்பதாக
இப் பாட்டில்
பிராபக ஸ்வரூபத்தை விவரிக்கிறார்கள்
—————
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்
வியாக்யானம் –
கறவைகள் –
அறிவு கேட்டுக்கு நிதர்சனமான பசுக்கள் –
கறவைகள் –
உங்கள் ஸ்வரூபம் ஏது என்ன -இன்னது என்கிறார்கள் –
பட்டர் அருளிச் செய்யும் பாட்டையும் இங்கே நினைப்பது
(ஸ்தோத்ர ரத்னத்தின் ஞான கிரியா அகிஞ்சன –
ந தர்ம நிஷ்டோஸ்மி போன்ற ஸ்லோகங்கள் இருக்கலாம்)
ந தர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ
நபக்தி மாம்ஸ்த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ’நந்யகதிஶ் ஶரண்ய!
த்வத் பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே ||–ஶ்லோகம் 22 –
கறவைகள்
அறியாமைக்குக் கன்று காலி என்கை –
ஞாநேந ஹீந பஸூபிஸ் சமாந -இறே
அறிவில்லாதவரை பசுக்களோடு ஒப்பர் என்னக் கடவது -(மா முனிகள் விருத்தத்தில் பசு நர வபுஸ் -பசு பிராயர் )
————
பின் சென்று –
நாங்கள் தேவரைப் பெருகைக்கு குருகுல வாசம் பண்ணின படி –
இவற்றை அனுவர்த்தித்தோம் -இத்தனை –
எங்களைப் பார்த்தால் -பசுக்கள் -வசிஷ்டாதிகளுக்கு சத்ருசமாக போரும் –
பசுக்கள் அசுக்காட்டில் -அனுகரிக்கையில் -ஆர்ஜவம் –
கறவைகள் பின் சென்று
1-சாங்க அத்யயனம் பண்ணி -‘
2-அர்த்த ஞானம் பிறந்து –
3-விஹித கர்மங்களை அனுஷ்ட்டித்து –
4-விரோதி பாப ஷயம் பிறந்து –
5-ஸூத்த பாவனாய்
6-ஜிதேந்திரனாய் விஷயங்களின் நின்றும் ப்ரத்யாஹ்ருதமான மனசை ஆத்ம ப்ரவணம் ஆக்கி
7-ஆத்ம யோகம் கை வந்து
8-அந்தர்யாமி அளவும் சென்று
9-அவனுடைய ஸ்வரூபாதிகளை ஸ்ரவண மனனங்கள் பண்ணி
10-அர்ச்சன ப்ரணாமாதி பூர்வகமான நிரந்தரமான தியானத்தை பண்ணி –
இப்படி திரண்ட ஸூஹ்ருதத்தாலே உன்னைப் பெறும் அந்த யோகத்தில் அந்வயிப்பதாக இறே
வேதாந்தங்களில் சொல்கிறது
1-இந்த தர்சன சாமாநாகாரமான நிரந்தர ஸ்ம்ருதிக்கு விஷயமான
2-பகவத் ஸ்வரூப ஞானத்துக்கு காரணமான
3-ஆத்ம அவலோகந ஹேதுவான
4-ஜிதேந்த்ரியத்துவத்துக்கு மூலமான
5-பாப க்ஷய ஹேதுவான
6-விஹித கர்ம அனுஷ்டானத்துக்கு நிமித்தமான –
7-அர்த்த ஞானத்துக்கு சாதனமான
8-சாங்க அத்யயனம்
9-குருகுல வாச சாபேஷமாய் இறே இருப்பது –
அதுக்கு அடியாக நாங்கள் குருகுல வாசம் பண்ணின படியைக்
கேட்டருளல் ஆகாதோ என்கிறார்கள்
கறவைகள் பின் சென்று
இவர்கள் சேவித்த ஆச்சார்யர்கள் இருக்கிறபடி-
அபிஜன வித்யா விருத்தங்கள் மூன்றும் அவதாதமாய் இருப்பாரை இறே ஸேவ்யராகச் சொல்லுகிறது –
திர்யக் ஜென்மம் ஆன படியால் பிறவியும் விபரீதமாய்
ஞான ஹீனரை பசு பிராயர் என்னும் படி ஞானமும் இன்றிக்கே
துராசாராரை ந்ரு பசுக்கள் என்னும் படியாகவும்
பசு சமர் என்னும் படியாகவும்
விருத்த ஹீனங்களும் ஆனவற்றை இறே நாங்கள் ஆச்சார்யர்களாக பிரபத்தி பண்ணுவது
பஹு ஸ்ருதராகையாலே ஞான விருத்தருமாய்
ஞான விருத்தர் பலர் நெடும் காலம் சேவிக்கைக்கும் வீத ராகர் ஆகைக்கும்
வயோ விருத்த ரூபமாய்
ஞான அனுரூபமான சீலத்தாலும் பழுத்து ப்ரஹ்ம வாதிகளாம் படி தத்வ தர்சிகளுமாய்
விபரீதம் சொல்லும் பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிற- பரரை -பிறரை- பிரமாண சரங்களாலே வென்று
பகவான் மனன பரராய்
கர்த்தவ்யங்கள் சோராமல் அனுஷ்ட்டித்து
ஒரு ப்ரஹ்ம நிஷ்டராய் இருப்பாரை ஆச்சார்ய அனுவர்த்தனத்தைச் சொல்லுகிற சாஸ்திரங்களில்
சொன்ன பிரணிபாத
அபிவாதன
பரப்ரஸ்ன சேவைகளில் ஒன்றும் குறையாத படி இன்றே அனுஷ்டித்துக் கொண்டு இறே அறிவுடையார் போருவது –
நாங்கள் கறவைகளை அனுவர்த்தித்தோம் –
அதுக்கு உறுப்பாக உண்ணும் நாளும் இன்றிக்கே உறக்கமும் இன்றிக்கே
பயாநாமபஹாரியை அண்டை கொண்டு அபயங்கதராய்
இளையவர் கலவியின் திறத்தை(பெரிய திருமொழி-1-6) நாணினவர்களை இறே அனுவர்த்தநீயராக சாஸ்திரம் சொல்வது –
ஆஹார
நித்ரா
பய
மைதுனங்களில் அநியதங்களாய் இருக்கும் பதார்த்தங்களை ஆச்சார்யர்களாக வரித்தோம்
இது எங்களுடைய வ்ருத்த சேவை இருந்த படி
கறவைகள் பின் சென்று
அறிவு கேட்டுக்குத் தலையான கன்று காலிகள் முன்னே போக
அவற்றின் பின்னே சென்றாய்த்து இத்தனை காலமும் திரிந்தது
எங்களைப் பார்த்தால்
பசுக்களும் வசிஷ்ட பராசராதிகள் கோடியிலே யாய்
எங்கள் இளிம்பு கண்டு சிரித்து
எங்கள் ஆர்ஜவத்தை அநுகரித்து அவை வழி காட்ட அவற்றின் பின்னே திரிந்தோம் சிலர்
காலிகள் பின் சென்று என்னாதே –
கறவைகள் பின் சென்று -என்றது
தர்ம புத்தயா ரஷித்தது அன்று –
பிரயோஜன புத்தயா செய்தது என்கைக்காக –
எருதுகள்
வறடுகள்
ஈற்று மறுத்தவை ரஷித்து அறியோம் –
பின் சென்று
ப்ராப்ய ருசி யுடையார் அது கை புகுரும் அளவும்
பெரு விடாயர் நீர் நசை யுள்ள இடம் எங்கும் தட்டித் திரியுமோ பாதி
ருசிக்கு வர்த்தகராய் இருப்பார் பின்னே
கலசம் பூர்ணமாதாய பிருஷ்டகோ அநு ஜகாமஹ -என்கிறபடியே
பூர்ண கலாசாதிகளையும் கொண்டு ஸமித் பாணிகளாய்த் திரிதல் –
பிராப்யம் கை புகுந்தால்
பிருஷ்டதஸ் து தநுஷ் பாணி -என்னும் படி
தாய் நாடும் கன்றே போல் பிரிவில் நாக்கு ஓட்டும் படி
வாளும் வில்லும் கொண்டு
பின் தொடர்ந்து அனுவர்த்தித்து திரியக் கடவதாய் இறே இருப்பது –
அதுக்கு உடலாக நாங்கள் உறியும் மழுவும் தடியும் கொண்டு
ஞான பிரதராகவும்
ப்ராப்ய வஸ்துவாகவும் நினைத்துப் பின் சென்றது பசுக்களை –
கறவைகள் பின் சென்று
பசுக்களை மேய்த்து பின்னே திரிந்தாலும்
போய்த் தங்குவது சத்துக்கள் இருக்கும் புண்ய ஷேத்ராதிகள் ஆகில் அழகியது இறே
கோவலூர் சாளக்ராமாதிகள் அயோத்தியை மதுரை கோயில் தொடக்கமான
யூர்கள் கிராமங்கள் ஆஸ்ரமங்கள் தொடக்கமான இவற்றில்
இராத் தங்கினாலும் அழகியது இறே என்ன
பின் சென்று –
பின் என்று தங்கள் குருகுல வாசம் பண்ணுகிறபடி சொல்லுகிறார்கள்
ராவணோ நாம -பரஹிம்சையில் பேர் படைத்தவன்
துர்வ்ருத்த -பேர் மாத்ரமேயாய் சதாசார்யம் உண்டோ என்னில் அதிலும் புரை இல்லை
ராக்ஷஸ -ஜென்மத்தால் வரும் நன்மை யுண்டோ என்னில் அதுவும் இல்லை –
காட்டிலே புக்கு நோக்கினாலும் திருத்தப் போகாது
ராக்ஷஸாதிப -நியாம்யனோ என்னில் –
இவன் தனக்கு எல்லாரும் நியாம்யர்
—————-
கானம் சேர்ந்து –
தம் தாமுடைய வ்ருத்திகளாலே ஒரு நன்மைக்கு உடலாம் மனுஷ்யர் திரியும் நாட்டிலே வர்த்தித்திலோம்-
புல் உள்ள காட்டிலே வர்த்தித்தோம் இத்தனை –
இருப்பாலே நன்மையை விளைவிக்கும் தேசத்திலே வர்த்தித்திலோம்-
காட்டிலே வர்த்தித்தோம் -என்றுமாம் –
சேர்ந்தோம் –
ஊரில் கால் பொருந்தாத படி இ றே காட்டில் பொருந்தின படி –
கானம் சேர்ந்து
என்கிறார்கள் -வஸ்து பூதர் வர்த்தித்தல்
நீ அபிமானித்தல் செய்யும் பிரதேசங்களிலும்
மழைக்கு ஒதுங்கி ஓர் இராத் தங்கியும் அறியோம்
ஒரு கோபாலர் அபிமானத்தில் மழைக்கு ஒதுங்கில் வாரிப் பிடியாக அகப்படும் இறே
கானம் சேர்ந்து
பசுக்களுக்குப் புல்லும் நீரும் உள்ள இடம் தேடி
அவ் விடத்தே நெருங்கிப் போந்தோம் இத்தனை
கானம்
காடுகளில் -தண்ட காரண்யம்-நைமி சாரண்யம் -பத்ரிகாஸ்ரமம் -தொடக்கமான வற்றிலே
நம்முடைய அபிமானம் யுண்டாய் –
சத்துக்களும் ஒதுங்கிப் போருவர்களே என்ன –
ஒரு விசேஷணம் இடாதே
வெறும்-கானம் என்கிறார்களே -இவர்கள் வர்த்திக்கும் காடு –
எவ்வுஞ்சிலை வேடர் காடு இறே -(பெரியாழ்வார் -3-2 )
அடி இடுவார் காலிலே அருவும் -பிருந்தாவனம் ஆகையால் சத்துக்கள் சேரும் இடம் அன்றே
(சேர்ந்து–பதம் – உள்ள அருளிச் செயல்களை காட்டி அருள்கிறார் மேல்)
சென்று சேர்ந்து
பரவிச் சென்மின்களே —
சென்று வணங்குமினோ -என்னும் இடங்களில் சென்று அறியோம் –
சேர்மினீரே-
மணி மாடம் சேர்மின்களே -என்கிற இடங்களில் சேர்ந்தும் அறியோம்
பரன் சென்று சேர் -என்று
உனக்கும் கந்தவ்யமாய் ப்ராப்யமுமாய் யன்றோ அவை இருப்பது
அவற்றில் சென்றும் அறியோம் –
சேர்ந்தும் அறியோம் –
சென்று -சேர்ந்து -என்கையாலே -அவற்றிலே பொருந்தி இருக்கை –
சத்துக்கள் அனுவர்த்தனமும்-
புண்ய க்ஷேத்ர வாசமும் பெற்றிலோம் என்கிற இழவும் இல்லை –
நீங்கள் வைசியர் ஆகையால் கோ ரக்ஷணத்தை வர்ண தர்மத்தில் சில எழுதலாம் –
காட்டில் தங்குகையை வான பிரஸ்தான ஆஸ்ரமத்திலே முதலிட்டு ஆஸ்ரம தர்மம் ஆக்கலாம் –
ஆஸ்ரய அர்த்தமாக பசுக்களை மேய்த்து காடுகளில் தங்குகையும் தர்மமாகச் சொல்ல நிற்கும் –
தபஸ் பரரான ரிஷிகளும் அரண்ய வாசம் பண்ணி அன்றோ தர்மார்ஜனம் பண்ணுவது –
ஆகையால் கர்ம யோகத்தில் அடைக்கலாய் இருபத்தொரு புடை யுண்டே
அவற்றுக்கு என்ன –
கானம் சேர்ந்து
ஊர் கண்டு அறியோம்
—————-
உண்போம் –
வைஸ்யருக்கு -கோ ரஷணம் தர்மம் ஆனால் -தத் அனுரூபமாக காட்டிலே வர்த்திக்கையும்
வான பிரஸ்த ஆஸ்ரமிகளோபாதி தர்ம ஹேது ஆகிறது என்ன –
காட்டில் வர்த்தித்தாலும் -வீத ராகராய் -வான பிரஸ்த ஆஸ்ரமிகளோபாதி
சரீரத்தை ஒறுத்து அவ்வருகே ஒரு பலத்துக்காக வர்த்தித்தோம் அல்லோம் –
கேவலம் சரீர போஷண பரராய் வர்த்தித்தோம் இத்தனை –
இத்தால் –
வ்ருத்தியில் குறை சொல்லிற்று
இது இறே உன்னைப் பெறுகைக்கு நாங்கள் அனுஷ்டித்த கர்ம யோகம்-என்கிறார்கள் –
உண்போம்
அருகிருந்தார் கையில் ஒரு பிடி இட்டு அறியோம் —
அப்போது ஆதித்யம் -அதிதி பூஜை –பண்ணினார்கள் என்று தர்மம் எழுதும்
கானம் சேர்ந்து உண்போம் –
ஒருவர் வாச பூமியிலே புக்கு உண்ணில் –
அங்கே தேவதைகள் இருக்கையாலே யஞ்ஞ சிஷ்டாசானம் பண்ணினி கோளே என்று பிடிக்கும்
பின் சென்று உண்போம்
பிராங்முகத்வாதி நியமம் இல்லை
சென்று உண்போம்
இருந்து உண்ண வேணும் என்கிற நிர்பந்தம் இல்லை
உண்போம்
பசுக்கள் அசையிடாது இருக்குகிலும் நாங்கள் புஜியாது இருப்பதில்லை
உண்போம்
உச்சிஷ்டம் -அபோஜ்யம் -பர்யுஜிதம் தொடக்கமான வற்றில் ஒரு வரம்பு இல்லை
இது எங்களுடைய கர்ம யோகத்தின் நிலை இருந்த படி என்கிறார்கள் –
நாம் காலிப் பின்னே போகிறிலோமோ-(பெரியாழ்வார் -3-3-1)
நாம் காடு வாழ் சாதி ஆகிறிலோமோ-
வேண்டி அடிசில் உண்ணும் போது ஈது என்று பசித்து இருந்து
சோறு பெற்றால் நின்றார் உகப்பும் சிறிதும் நினையாதே
ஆடி அமுது செய்(பெரியாழ்வார் 3-3 ) என்றாலும் குளியாதே-
மந்த்ர விதியில் பூசனைகளையும் விலக்கித் திரியா நின்றோம் -(பெரிய திருமொழி-2-3 )
நமக்கு ஏதேனும் தோஷம் உண்டாகா நின்றதோ என்ன –
உங்களுக்கு ஏச்சுக் கொலோ -என்று
நாங்கள் செவி புதைக்கும் படி நிந்திதமான வார்த்தையைச் சொன்னாயீ என்ன
ஆகில் தேஜோ விசேஷேண ப்ரத்யவாயோ ந வித்யதே -யன்றோ –
ஞானாதிகரான உங்களுக்கு இவை தோஷாவஹமாய் புகுகிறதோ என்ன
கேவலம் உதர போஷண பரராய் இருக்கிற எங்களை
ஞானம் யுடையவர்கள் அன்றோ என்னலாமோ என்கிறார்கள்
இப்போது இவை இல்லை யாகிலும்
ஜன்மாந்தரங்களிலே சத் கர்மங்கள் யுண்டாய் –
அத்தாலே பாப ஷயம் பிறந்து
மநோ நைர்மல்யம் யுண்டாய்
இப்போது ஞானம் பிறக்கவுமாகுமே –
உங்களைப் போலே கோ ரக்ஷணம் பண்ணுகையும் அன்றிக்கே
கோ வதம் பண்ணுகையை பிரயோஜனமாய் –
அது க்ரயித்து
ஜீவியா நிற்கச் செய்தே
தர்ம ஸந்தேஹ நிவர்த்தகனாய் இருந்தான் தர்ம வ்யாதன் அன்றோ –
உங்களைப் போலே அரண்ய வாசம் பண்ணாதே
நகர வாசம் பண்ணா நிற்கச் செய்தே
விதுரன் ஞானாதிகன் என்று பிரசித்தனாய் இருந்தான் –
யதேஷ்ட அன்ன பரனாய் திரியா நிற்கச் செய்தே –
ஆதி பரதன் அத்யாத்ம வித்வானாய் -உபதேஷ்டாவாய் இருந்தானே
இவர்கள் எல்லாம் கிடக்க
உங்களோட்டை பெண்டாட்டி தான் சிரமணி யன்றோ தர்ம நிபுணையாய் இரா நின்றாள்
கர்ம யோகம் இல்லையாகில் ஒழிகிறது –
மோக்ஷ ஹேது வான ஞான பக்தி யுண்டாகில் குறையில்லையே –
அவை வளர வளர
க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா என்கிறபடியே
அவை தன்னடையே குலைந்து விடும் –
பஹு மந்தவ்யைகளான உங்களை நாம் எளிதாக நினைத்து இராமே என்ன
உண்போம்
ரிஷிகளைப் போலே தபஸ்ஸூக்கு அல்ல -அங்கும் வயிறு வளர்க்க -(நைமிசாரண்யம் போல் அல்லவே-உண்ணும் நோன்பு எங்களது )
சேர்ந்து உண்போம்
நடந்து நடந்து உண்ணும் அத்தனை –
எங்களைப் பார்க்க பசுக்கள் வசிஷ்டாதி களோடு ஒக்கும் –
எங்கள் இளிம்பு கண்டால் சிரிப்பன பசுக்கள் ஆயிற்று
க்ருதா நுகாரா நிவ கோபிரார்ஜவே -ஸஹ ஜென்மம்
க்ருஹத்தில் வைக்க வேண்டிய பிரமத்தை காட்டில் வைப்போம் -என்று
பசுக்கள் அசுக் காட்டும் -கேலி பண்ணும் படியாக -ஆர்ஜவம் எங்கள் படி என்கை
இத்தால் கர்ம யோகத்தில் அதிகாரம் இல்லை என்றபடி –
——————
அறிவொன்றும் இல்லாத –
இப்போது இல்லை யாகில் விடுங்கோள்-
விதுராதிகளைப் போலே ஜன்மாந்தர சூக்ருதத்தால் பிறந்த
ஞானம் தான் உண்டோ -என்னில்
அதுவும் இல்லை –
ஒன்றும் –
பகவத் ஞானத்துக்கு அடியான ஆத்ம ஞானமும் இல்லை –
தத் சாத்யமான பக்தியும் இல்லை -என்கை –
பக்தி இல்லை -என்கிறது -பக்தி யாவது ஞான விசேஷம் ஆகையாலே –
இவர்கள் அலமாப்பு பக்தி அன்றோ வென்னில் –
அது ஸ்வரூபம் ஆகையாலே -உபாயமாக நினையார்கள்
ஆக
இத்தால் கர்ம ஞான பக்திகள் இல்லை என்கை –
ந தர்மோஷ்டமி ந பக்திமான்
நோன்ற நோன்பிலேன்
குளித்து மூன்று அனலை ஓம்பும் -இத்யாதி –
இவை அன்றோ அறிவுடையோர் வார்த்தை
அவர்களோடு ஒத்து இருக்கிறார்களோ -என்ன –
அறிவொன்றும் இல்லாத –
என்கிறார்கள் -எங்களை அப்படியோ நினைத்து இருக்கிறது –
நீ நினைத்து இருக்கிற ஞானத்தில் பிரசங்கத்தில் பிரதி ஷேதமும் இல்லை காண்
1-அறிவில்லை
2-அறிவு ஓன்று இல்லை
3-அறிவு ஒன்றும் இல்லை
ஸாஸ்த்ர ஜன்ய ஞானமும் -லௌகிக ஞானமும் -எண்ணும் ஞானமும் இல்லாதவர்கள் -எண்ணிலும் வரும் — எண்ணைச் சொன்னாலும் என்னையே சொன்னதாகவும் -எண் தானும் வேண்டாம் என்னுமவன் –
1-கர்ம யோகத்தில் உண்டான –
2-ஆத்ம யாதாம்ய ஞானம் இல்லை –
3-பக்தி யாகிறது ஞான விசேஷம் ஆகையால்
அந்த ஆத்ம ஞானம் அடியாக
யுன் பக்கல் ஞானம் பிறந்து
நீ உத்தேஸ்யன் என்று புத்தி பண்ணி
உன் பக்கலிலே யுண்டான அனவரத பாவன ரூபமாய் வரும்
பக்தி ரூபா பன்ன ஞானம் இல்லை –
இவை இரண்டுக்கும் அடியான பிரகிருத ஆத்ம விவேகாதிகள்
சம தமாதி சாதன சமபக்தி தொடக்கமானவை யுண்டாய்
முமுஷுவாகைக்கு யோக்யமாய் இருக்கும் அவற்றிலும் ஓர் அன்வயம் இல்லை –
கர்ம யோகம் தானும் ஜீவ பர யாதாம்ய ஞானக பூர்வகமாக இருப்பது அன்றோ என்னில்
தேஹாதிரிக்த ஆத்ம ஞானமும் ஈஸ்வர ஞானமும் கர்ம அங்கமாய் இருக்கும் –
இவ்வளவே அங்கு உள்ளது –
(சேஷ பூதன் என்ற அறிவால் ஞான யோகம் பிரதானம் ஆத்ம ஞானமே முக்கியம் ஸ்ம்ருதி ரூபம்
அவனை பிரதானம் பக்தி யோகம் இதுவும் ஸ்ம்ருதி ரூபம் )
இப்போது தனித்து உபாயமாய் நிற்கும் ஞான யோகத்தையும்
பக்தி யோகத்தையும் இல்லை என்று சொல்கிறது
அறிவு இல்லை என்கிறதும் ஓர் அறிவின் கார்யம் இறே –
பேற்றுக்கு உடலாக தங்கள் தலையால் வரும் அறிவை இவர்கள் இல்லை என்கிறது
அறிவு ஒன்றும் இல்லாத
ஞான தவ்யங்களாய் இருக்குமவை ஒன்றிலும் அறிவில்லை என்று
தந்த்ரேண உபாதானம் பண்ணுகிறார்கள்
உண்போம் அறிவொன்றும் இல்லாத
ஆஹார சுத்தி உண்டானால் அன்றோ ஞானம் பிறப்பது –
ஊணர்க்கும் உண்டோ அறிவு –
ஞானம் உண்டாய்க் கழிந்ததாகவும் கூடுமே –
மேல் உண்டாகைக்கும் யோக்யதை யுண்டே என்ன
அறிவொன்றும் இல்லாத
இஜ் ஜென்மத்தில் ஒரு ஸூக்ருதம் இல்லையாகிலும் ஜன்மாந்தரத்தில்
புண்யத்தைப் பண்ணி அத்தாலே விதுராதிகளைப் போலே
இஜ் ஜென்மத்தில் அறிவுண்டாம் -அது யுண்டோ என்னில் -அதுவும் இல்லை என்கிறார்கள்
ஒன்றும் இல்லாத
ஈஸ்வர ஞானத்துக்கு அடியான ஆத்ம ஞானம் இல்லை –
இத்தால் -ஞான பக்திகள் இல்லை என்கிறது –
பக்திஸ்ச ஞான விசேஷ -என்று பக்தியாவது ஒரு ஞான விசேஷம்
அதுவும் இல்லையாகையாவது –
கீழில் அவை யுண்டாக யுண்டாம் அது ஒன்றாகையாலே இது இல்லை என்னும் இடம் சொல்ல வேண்டா இறே
முதல் தான் இல்லை -இது உண்டாமோ -இவர்கள் அலமாப்பு பக்தி யன்றோ என்னில்
அது ஸ்வரூபமாகையாலே உபாயமாக நினையார்கள் –
இத்தால் கர்ம ஞான பக்திகள் இல்லை என்கை –
அஹம் அஸ்ம்யபராதாநாம் ஆலயோ அகிஞ்சனத்வமேவ உபாய பூத மே பவ இதி பிரார்த்தனா மதி பிரபத்தி -(அஹிர்புத்ய சம்ஹிதை )
நோற்ற நோன்பிலேன்
குளித்து மூன்று
ந தர்ம நிஷ்டோஸ்மி
இவை யன்றோ அறிவுடையார் வார்த்தை -அவர்களோடு ஓத்தி கோள் -என்ன
(கர்மாதிகள் இல்லை என்ற சொற்களே சொல்ல அறியாமல் இவ்வாறே சொல்லும்படி அன்றோ எங்கள் அறிவு)
—————–
ஆய்க் குலத்து –
அறிவு உண்டு என்று சங்கிக்க ஒண்ணாத குலம் –
கீழ் சொன்ன உபாய ஹானி தோஷம் ஆகாதே குணமாம் படியான ஜன்மம் –
எங்கள் ஜன்மத்தைக் கண்டு வைத்து அறிவு உண்டு என்று சொல்லுகிற நீ அறிவு கேடன் -இத்தனை –
ஆனால் விடும் அத்தனையோ -என்ன –
உன் தன்னைப் பிறவி பெறும் தனைப் புண்ணியம் யாம் உடையோம் –
பேற்றுக்கு உடலான புண்யம் இல்லாதார் இழக்கும் அத்தனை அன்றோ வென்ன –
அங்கன் சொல்லலாமோ எங்களை –
புண்யத்துக்கு சோறிட்டு வளர்கிறவர்கள் அன்றோ –
சாஷாத் தர்மமான உன்னை –
ராமோ தர்ம விக்ரவான் –
ஆய்க் குலம்
அறிவில்லாமை ஜென்ம சித்தம் –
எங்கள் பிறப்புக் கண்டாய்க்கு கர்ம ஞான பக்திகள் யுண்டோ என்று கேட்க வேண்டி இருந்ததோ
கீழே இல்லை என்றவை உபேக்ஷையாய் வந்தது அன்று –
யோக்யதை இல்லாமையால் குலைந்தது என்கிறார்கள் –
ஆய்க்குலம்
ராவணன் துர் வ்ருத்தன் என்கைக்கு அடி என் என்ன –
ராக்ஷஸன் என்றால் போலே –
ஏழை ஏதலன் என்கைக்கு அடி என் என்ன –
கீழ் மகன் என்றால் போலே
அறிவில்லாமைக்கு -ஆய்க்குலம் என்கிறார்கள் –
ஒன்றும் அறிவு ஒன்றும் இல்லாத ஒருவரைக் கோபாலர் (பெரியாழ்வார் -3-8 )-என்னக் கடவது இறே –
வ்ருத்த ஹானியை யுணர்ந்து திரிய விடுவிக்க ஒண்ணாத படியாய்த்து இருப்பது ஜென்மம்
யஞ்ஞ தான தபஸ் ஸூக்களுடைய பரிகரங்களுக்கு
விபரீதங்களிலே நடந்த படியால் கர்ம யோகம் இல்லை என்றி கோள்
ஆத்ம ரதியாய் ஆத்ம திருப்தனாய்-இந்த்ரியங்களைத் தேடாமல்
ஆத்ம ஸந்துஷ்டனாய் க்ருதக்ருதனாய் இருக்குமவனுடைய ஞான யோகமும்
அநந்ய பக்தனுடைய பக்தியும் இல்லை என்றீர்கள்
ஆக இரு படியால் பேற்றுக்கு அடியாய் இருபத்தொரு புண்ணிய லேசமும் இல்லை என்றி கோள் –
உங்களுக்கு உள்ளது என் என்ன –
ஆய்க் குலத்துப் பிறவி பெறும் தனை புண்ணியம் யாமுடையோம்
எங்களை என் சொன்னாயே –
சாஷாத் புண்ணியத்துக்கு பாலும் சோறும் இட்டு அன்றோ வளர்க்கிறோம் –
ஆர்ஜித ஸூ ஹ்ருதம் இல்லை என்றோம் அத்தனை போக்கி
அயத்ன சித்த ஸூஹ்ருதம் இல்லை என்றோமோ
சாத்திய ஸூ ஹ்ருதம் இல்லை என்னும் காட்டில்
சித்த ஸூ ஹ்ருதம் இல்லை என்று இருந்தாயோ
உன்னால் ஸ்தாபிக்கப் படுகிற கர்மங்கள் இல்லை என்றோம் அத்தனை ஒழிய
தர்ம ஸ்தாபகனாய்
சாஷாத் தர்மமான யுன்னை இல்லை என்னலாமோ
ஆய்க் குலத்து உன் தன்னை
நீ எங்கள் குடியில் விரும்பி வந்து பிறக்கும் படி அன்றோ எங்கள் ஐஸ்வர்யம்
ஆய்க் குலத்து
நாங்கள் எத்தனையேனும் கை கழியச் செய்தேயும்
நீ அவ்வளவு எல்லாம் வந்து கிட்டின பின்பு
எங்களுக்கு அதிகாரத்தில் குறை யுண்டோ –
எங்கள் இடைக் குலத்தில் நீ வந்து பிறைக்கைக்கு அடியான புண்ணியத்தை நாங்கள் யுடையோம் –
எங்கள் பேற்றுக்கு உபாயமும் நீயே –
அதுக்கு அடியான ஸூஹ்ருதமும் நீயே யாகப் பெற்றோம்
ஆய்க் குலத்து உன் தன்னை
இதிலே நீக்கி முகக்கவோ நீ பிறந்தது –
இவ் வாய்க் குலத்தை வீடுய்யத் தோன்றிற்று உய்ய
இவ் வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே -என்னக் கடவது இறே
(வம்ச குலங்களை உத்தரிக்க வந்த வராஹ கோபாலர் )
நீ ஸூ ஹ்ருதமாய் நின்று இக்குலத்தை எடுக்கைக்கு
ஆண்
பெண்
சட்டிப் பானை ஓன்று யுண்டோ –
உன் தன்னை
ஸூரிகள் அனுசஞ்சரங்களாய் தொடர்ந்து குற்றேவல் செய்கிற யுன்னை
கறைவைகள் பின் செல்லுகிற குலத்திலே பெற்றோம்
தடம் கடல் சேர்ந்த யுன்னை (திருவாய் -3-5 )
கானம் சேர்ந்த குலத்திலே பெற்றோம் –
ஆய்க் குலத்து உன் தன்னை
அநஸ்நன் -என்னும் படி ஓட்டறுத்து உண்ணாதே நிற்கும் உன்னை
உண்போம் என்கிற எங்கள் குலத்திலே பெற்றோம் –
திவ்ய ஞான உபபன்னருக்கு முகம் கொடுக்கிற உன்னை
அறிவு ஒன்றும் இல்லாத குலத்திலே பெற்றோம்
ஆய்க் குலத்து உன் தன்னை
இமையோர் தம் குல முதலான உன்னை(திருவாய் -1-5 ) ஆயர் தம் குல முதலாகப் பெற்றோம்
ஆய்க் குலத்து உன் தன்னை
வெங்கதிரோன் குலத்தில் காட்டில் இக்குலத்துக்கு உண்டான வாசி பாராய் –
நீ பகல் விளக்கான குலமும்
நீ அணி விளக்கான குலமும் ஒக்குமோ
ஆய்க்குலத்து
அதிகாரமே இல்லை –
எங்களைக் கண்டு வைத்து அறிவுண்டோ என்று கேட்க்கிற நீ அன்றோ அறிவு கேடன்-
முதல் இல்லாதவன் பலிசை இழக்கும் என்று சொல்லுகிற படியே
புண்யம் இல்லாதார் இழக்கும் அத்தனை அன்றோ என்ன
உன் தன்னைப்-பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம்-
என் சொன்னாய் -எங்களுக்கோ புண்யம் இல்லாதது –
கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்று
எங்கள் புண்யத்துக்குப் பாலும் சோறும் இட்டு வளர்க்கிறோம் நாங்கள் அன்றோ
உபாய உபேயத்வே ராதிகா தவ தத்துவம் -என்னும்படியான உன்னை
(ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -கண்ணனே புண்யம் தர்மம் -புண்யம் உடையவன் தர்மம் செய்பவன் என்று இல்லையே)
உன்னை -உன்னை சொல்லாமல் உன் தன்னை —எங்கள் பின்னால் வந்தாய்
தடம் கடல் சேர்ந்த உன்னை கானம் சேர்ந்த குலத்தில் -ஆய்க்குலம்
ஏறனைப் பூவனைப் பூமகள் தன்னை
வேறின்றி விண்தொழத் தன்னுள் வைத்து
மேல்தன்னை மீதிட நிமிர்ந்துமண் கொண்ட
மால்தனின் மிக்கும்ஒர் தேவும் உளதே?–2-2-3—உன்னை-சாமான்ய நிர்த்தேசம் -உன் தன்னை -விசேஷ நிர்த்தேசம்
—————
பிறவி பெறும் தனை –
நாட்டார் ஆஸ்ரயணீயன் இருந்த இடத்தே போய் ஆஸ்ரயிப்பார்கள்
அவர்களைப் போலேயோ நாங்கள்
ஆஸ்ரயணீயனான நீ தானே நாங்கள் இருந்த இடத்தே
எங்களோடு சஜாதீயனாய் வந்து
அவதரிக்கும் படி அன்றோ எங்கள் உடைய ஏற்றம் –
புண்ணியம் யாம் உடையோம் –
புண்ணியத்தை பற்றினவர்கள் அன்றோ –
நாமுடையோம்
சித்த சாதனத்தை பற்றினவர்களில் காட்டில்
இருந்த இடத்தே சென்று ஆஸ்ரயிக்க வேண்டாத படியான
ஏற்றத்தை உடையவர்கள் நாங்கள் –
நினைத்த படி விநியோகம் கொள்ளலாம் படி கைப்புகுந்த உன்னை உடையோம் அன்றோ
பிறவி
சென்னாள் தோற்றி(பெரியாழ்வார் -வடமதுரையில்பிறந்த ) என்னும் படி
நீ ஆவிர்ப்பவித்த யாதவ குலமோ இது –
நந்தன் பெற்ற வானாயன்-என்னும் இடம் அன்றோ இது
பெறும் தனை புண்ணியம்
பெறுகைக்கு தக்க பாக்யம் -புண்ணியத்தை உன்னாலே தேடலாம் –
புண்யாம் நாம் அபி புண்யோசவ்-என்கிற
உன்னைப் பெறுகைக்கு தக்க புண்ணியம் வேணும் இறே
புறம்பு உண்டான புண்ணியங்களை உன்னாலே பெறலாம் –
உன்னைத் தர வல்லது உண்ணில் விஞ்சினது இல்லையே
கிருஷ்ணம் தர்மம் சனாதனம் என்கிற சனாதன தர்மம் நீயே இறே –
இத்தை புண்ணியம் என்றால் ஈது அன்று என்பார்(நான்முகன்-72) யார்
வேத வித்துக்கள் சொல்லவோ –
அத்யாத்ம வித்துக்கள் சொல்லவோ –
கர்ம பாக நிஷ்டரும் அன்று என்னார்கள்-
ஞான பாக நிஷ்டரும் அன்று என்னார்கள்-
(ஏஷ வேத விதோ விப்ர ஏஷ அத்யாத்ம வைத்தோ ஜன —
கிருஷ்ணன் தர்மம் சனாதானம் ஸ்லோகார்த்தம் )
பெறும் தனை புண்ணியம்
பறை தரும் புண்ணியனே இறே தன்னையும் தருவது –
பிறக்கைக்கு ஹேதுவே இறே தருகைக்கும் ஹேது
(சம்பவாமி ஆத்ம மாயயா)
வேண்டி வந்து பிறந்ததும் -(திருவாய் 6-4 )
நம்மைப் பெறும்படியான புண்ணியம் –
என்ன நோன்பு நோற்றாள் கொலோ -என்கிற யசோதையுடைய ஒருத்தியது அன்றோ என்ன
பிறவி பெறுந்தனை
நாட்டார் ஆஸ்ரயணீயர் இருந்த இடத்தே போய் ஆஸ்ரயிப்பார்கள் –
நாங்கள் இருந்த இடத்தே எங்களோடு சஜாதீயனாய் ஆஸ்ரயணீயனான நீ வந்து
அர்த்திக்கும் படி அன்றோ எங்களுடைய ஏற்றம் –
எங்கள் புண்யம் முதல் இல்லாதார்க்கு முதலும் பலிசையும் கொடுக்கும் புண்யம் காண்
புண்ணியம் யாம் யுடையோம்
ஸாத்ய தர்மத்தைப் பற்றினோமோ
ஸித்தமாய் வடிவுள்ளதொரு தர்மத்தைப் பற்றினோம் -இதுவோ எங்கள் குற்றம் –
—————
அறிவொன்றும் இல்லை
புண்ணியம் யாம் உடையோம்
என்பதாய்க் கொண்டு வ்யாஹத பாஷணம் பண்ணா நின்றி கோள்-என்ன
கண்டிலையோ –
இது தானே அன்றே அறிவு கேடு
ஆனால் விடும் அத்தனையோ -என்ன
யாமுடையோம்
அவள் பெற்று (புண்ணியம்) உடையளானாள் –
நாங்கள் பிறந்து (புண்ணியம் )உடையோம் ஆனோம் –
அஹோ பாக்யம் அஹோ பாக்யம் நந்த கோப விரஜவ்கசாம் -என்று
ஊருக்காக பலித்தது இறே –
இருந்த ஊரில் இருக்கும் மானிடர் (பெரியாழ்வார் -4-4 )என்கிறபடியே
உங்கள் தபஸ் பலமாக பெற்றி கோள் ஆகிறி கோள் –
நாம் பிறந்த ஊரில் இருக்கைக்கு
புண்ணியம் பண்ணினி கோள் ஆகிறி கோள் என்றான்
உடையோம்
நாங்கள் ஓன்று செய்து ஆர்ஜித்தோம் அல்லோம் –
இந்த ஸூஹ்ருதம் சத்தா நிபந்தனம்
உடையோம்
நாங்கள் செய்ததும் அல்ல –
ஸ்வீகரித்ததும் அல்ல –
இப் புண்ணியத்துக்கு செய்யுமவையும்
ஸ்வீகரிக்குமவையும் பிரதிபந்தகங்கள் இறே
புறப் பகையும் கழிக்க வேண்டா-
உட்ப் பகையும் கழிக்க வேண்டா –
யாமுடையோம்
எங்கள் ஸூஹ்ருதத்தில் பாதக ஸ்பர்சமும் இல்லை –
மஹா பாதக ஸ்பர்சமும் இல்லை
(உபாயாந்தர சம்பந்த பாதகமும்
ஸூவ ப்ரயோஜன பிரபல விரோதியும் இல்லை )
புண்ணியம் நாமுடையோம்
நாட்டில் புண்ணியங்கள் அநேகங்களுமாய்
பிரதி நியதங்களுமாய் இருக்கும் –
எங்கள் புண்ணியம் ஒன்றாய்
அது எல்லார்க்கும் பொதுவாய் இருக்கும்
யாவர்க்கும் புண்ணியம் (திருவாய் -6-3 )என்னக் கடவது இறே
அறிவு ஒன்றும் இல்லை என்பது –
புண்ணியம் நாமுடையோம் என்பதாய்க் கொண்டு
வியாஹத பாஷாணம் பண்ணினி கோள் என்ன
ஓர் ஆஸ்ரயத்தில் யுண்மையும் இல்லாமையும் சொல்லில் அன்றோ வியாஹதி உள்ளது –
அப்ரயோஜனங்களை அன்றோ நாங்கள் இல்லை என்கிறது –
எங்களுடைய அபிமத சித்தி யாதொன்றால் அத்தை இல்லை என்றோமோ –
————-
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா –
எங்களுக்கு குற்றம் சொன்னோம் இத்தனை போக்கி
உன்னுடைய பூர்த்திக்கு குற்றம் சொன்னோமோ
சர்வ நிரபேஷன் -என்கை
எங்களுடைய அறிவொன்றும் இல்லாமைக்குப் போராதோ
உன்னுடைய குறை ஒன்றும் இல்லாமை –
எங்கள் குறையாலே எங்களுக்கு இழக்க வேண்டுவது –
உன்னுடைய பூர்த்தியால் ஏதேனும் குறை உண்டாகில் அன்றோ -என்கிறார்கள் –
இப் பள்ளத்துக்கு அம் மேடு நிரப்பப் போராதோ –
இப் பாதளத்துக்கு அப் பர்வதம் நேர் என்கை –
எங்கள் பக்கல் ஞான வ்ருத்தாதிகள் ஏதேனும் உண்டோ -நாங்கள் இழக்கைக்கு -என்று கருத்து
இத்தால்
உபாய நைரபேஷ்யம் சொல்லிற்று –
குறை ஒன்றும் இல்லாத
எங்களுக்கு அறிவு ஒன்றும் இல்லை என்றோம் அத்தனை போக்கி
எங்கள் புண்ணியத்துக்கு ஏதேனும் குறை சொல்லிற்று உண்டோ –
உண்டானாலும் கழுத்துக்கு கட்டியாம் அவற்றினுடைய இல்லாமை சொல்லுகை
உன்னுடைய அனுக்ரஹத்துக்கு ஹேதுவாம் அத்தனை அன்றோ
எங்கள் தலையால் வருமத்தை இல்லை என்றோம் அத்தனை போக்கி
உன் தலையால் வருமத்தை இல்லை என்றோமோ –
1-குறைவு இல்லை
2-குறை ஓன்று இல்லை
3-குறை ஒன்றும் இல்லை
என்நின்ற யோனியுமாய் பிறந்தும் குறை இல்லாமல் ஆதியம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்தாதால் குறை இல்லாதவன் -வியாபக தோஷம் இல்லாதவன் -ஆஸ்ரிதர் குறைகளைப் போக்கி அருளுவதால் குறை ஓன்று இல்லாதவன் -தோஷங்களையே போக்யமாகக் கொள்ளும் வாத்சல்யத்தால் குறை யொன்றும் இல்லாதவன்
1-எங்கள் புண்ணியம் சாபேஷமும் அன்று –
2-ஸாவதியும் அன்று –
3-பிரபல பாப நிவ்ருத்தமும் ஆகாது-
(1-எதையும் எதிர்பாராமல்
2-எல்லைக்கு உட்படாதது
3-பிரதிபந்தகங்களால் தடுக்க முடியாதே )
1-உத்பத்தியில் சேதனனை அபேக்ஷிக்கும் என்ன வேண்டா சாத்தியம் அல்லாமையாலே
2-பலம் கொடுத்தால் குறையும் என்ன ஒண்ணாது பரம சேதனன் ஆகையால்
3-பிரபல கர்மத்தால் தகைப் படும் என்ன ஒண்ணாது சர்வ சக்தி யாகையாலே
1-நிரபேஷனைப் பற்றாய் —
2-பூர்ணணைப் பற்றாய் –
3-பிரபல பாபங்களை நான் போக்குகிறேன் என்றது வெறுமனேயோ –
குறை ஒன்றும் இல்லாத
ராஜாக்கள் வழி போம் போது மேடு பள்ளம் ஓக்க விட்டு அன்றோ போவது –
பெருமாள் கடலைத் தூர்த்து வானர சேனையை நடத்தினால் போலே
உன் குறைவில்லாமையை எங்கள் குறைவிலே இட்டு நிரவி ஓக்க விட்டுக் கொள்ளும் அத்தனை
எங்கள் அறிவு ஒன்றும் இல்லாமை யாகிற பாழ்ந்தாறு நிரப்புகைக்கு வேண்டும் புஷ்கல்யம் போராதோ யுனக்கு
உன் குறைவில்லாமை எங்கள் அறிவு இல்லாமையை அபேக்ஷித்து அன்றோ இருப்பது –
குறைவாளரை ஒழிய நீ நிறைவாளனாம் படி எங்கனே
ஒரு மேட்டுக்கு ஒரு பள்ளம் நேர் அன்றோ –
(நிகர் இன்றி நீசன் நின் அருள் என் கண் அன்றி புகல் ஒன்றும் இல்லை —
பயன் இருவருக்கும் ஆன பின்பு )
ஆகில் ஒன்றும் இல்லை என்று சொன்ன இடம்
உங்களுக்கு ஸ்வரூப ஞானம் இல்லாமை இறே என்ன
(அதிகாரி விசேஷமும் இல்லையோ என்ன )
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா –
உங்களுக்கு ஒன்றும் இல்லை என்றீர்களே என்ன
உன்னை இல்லை என்றோமோ -என்ன
உங்கள் வெறுமைக்கு-பெருமைக்கு – நாம் செய்வது என் என்ன
ராஜாக்கள் வழி போம் போது மேடு பள்ளம் ஓக்க விடுமா போலே
உன் குறை இல்லாமை எங்கள் குறையிலே இட்டு நிரப்புவது –
பெருமாள் கடலைத் தூர்த்து வழி போனால் போலே
நாரணனே நீ நான் இன்றி இலேன்–பயன் இருவருக்குமே -அமுதனார்
நீ குறைவில்லாமை இருக்க பிரயோஜனம்–குறைவாளரை ஒழிய நீ நிறைவாளனாக எப்படி இருக்க முடியும்
அமுதனார் -நீசதைக்கு -அருளுக்கும் அக்தே புகல் -பழுதே அகலும் பொருள் என் –
நிகரின்ற நின்ற என் நீசதைக்கு -நீசனேன் நிரை ஒன்றும் இலேன்–உன்னுடைய அருளுக்கும் -என்னை விட தாழ்ந்தவன் இல்லையே
பயன் இருவருக்கும் ஆனபின்பு–மா முனிகள் ஆர்த்தி பிரபந்தம் –எனைப் போல் பிழை செய்வார் உண்டோ
உனைப் போலே பொறுப்பார் உண்டோ–மேட்டுக்கு ஒரு பள்ளம் நேர் அன்றோ —
————-
கோவிந்தா –
நீங்கள் என்னைப் பூர்ணனாக பேசின படியால்
வேண்டி இருந்தோமாகில் செய்தல் -இல்லையாகில் தவிர்த்தல் அன்றோ -என்ன
நிரபேஷமான பரம பதத்தில் வந்தோமோ –
எங்களை ஒழியச் செல்லாமையாலே வந்து அவதரித்து
எங்களுக்கு கையாளாக இருந்த இடத்தே அன்றோ
நாங்கள் அபேஷிக்கிறது –
இத்தால்
சௌலப்யம் சொல்லுகிறது
குறைவாளர்க்கு நிறைவாளர் கொடுக்கக் கடவர்கள் என்று
ஓன்று உண்டாகில் அன்றோ
என் பூர்த்தியும் உங்கள் அபூர்த்தியும் சொல்லுவது என்ன
அதுவோ –
கோவிந்தா
நீயோ தான் சால அறிவுடையாய் இருக்கிறாய் –
உனக்கு ஸ்வரூப ஞானம் யுண்டாகில் ஸூரிகள் நடுவே இராயோ-
அவனுடைய அறியாமை இறே நமக்கு பற்றாசு –
நீ அயர்வறும் அமரர்கள் அதிபதி என்று உன்னை அறிந்தாய் யாகில் பசுக்களின் பின்னே போகப் பெறுவிதியோ –
அவன் தன்னை அறிந்தாலும் பெற விரகு இல்லை –
நம்மை அறிந்தாலும் விரகு இல்லை
அவன் ஸ்வா தந்தர்யத்தையும் மறந்து
நம்முடைய அபராதத்தையும் மறைக்கை இறே நமக்குத் பெறலாவது –
குறை ஒன்றும் இல்லா கோவிந்தா
இக் குறை ஒன்றும் இல்லாமை பரத்வத்தில் அன்று –
தாழ நின்ற நிலத்திலே சாம்யா பன்னர்க்கும்-
அவர்களில் சிறியவர்களுக்கும்
அவர்களோடு ஒத்தவர்களுக்கும் முகம் கொடுக்கும் என்கிற குறை அங்கு –
குறை யுண்டு என்னவும் அறியாதாரோடே பொருந்தித் திரிந்தவன் அன்றோ –
உனக்கு இற்றைக்கு விசேஷம் என் –
எங்கள் குறையால் எங்களுக்கு இழக்க வேண்டுவது
உன்னுடைய பூர்த்தியில் ஏதேனும் குறை யுண்டாகில் அன்றோ –
கன்றுகள் மேய்த்து கோவிந்த அபிஷேகம் பண்ணி
கோப குலத்திலே கலந்து பரிமாறி
காலிப் பின்னே வருகின்ற வேடத்தை எல்லார்க்கும் காட்டி –
ஏற்கவே அறிந்து
கோவர்த்தனத்தை எடுத்து ரஷித்து போருகையாலே
வாத்சல்யாதிகளாலும்
ஞான சக்த்யாதிகளாலும் பூர்ணன் ஆனவன் அன்றோ
எங்களுக்கு ஞான வ்ருத்தங்கள் கை புகுந்தது இல்லை –
உனக்கு ஞான சக்திகள் குறைந்தது இல்லை –
கோவிந்தா
மாமேகம் என்றவன் பாசுரம் அன்றோ –
கடை யாவும் கழி கோலும் கையிலே பிடித்த கண்ணிக் கயிறும் –
கற்றுத் தூளியாலே தூசரிதமான திருக் குழலும்
மறித்துத் திரிகிற போது திருவடிகளில் கிடந்து ஆரவாரிக்கிற கழல்கள் சதங்கைகளும்
குளிர் முகத்தின் கோடாலமுமாய் நிற்கிற
உபாய வேஷத்தை
கோவிந்தா என்கிறார்கள் –
(நிறைவினால் குறையில்லா நெடும் பணைத்தோள் பின்னை —
கடை யாவும் கழி கோலும் கையிலே பிடித்த கண்ணிக் கயிறும்-திருவாய் )
பெண்காள் உங்கள் பேற்றுக்கு உடலாக நம் நைரபேஷ்யம் சொல்லா நின்றி கோள் –
குறைவாளர்க்கு நிறைவாளர் கொடுக்கக் கடவர்கள் என்று உண்டோ –
நிரபேஷராய் இருப்பார் ஸ்வதந்த்ரர் அன்றோ –
நீங்கள் சொன்னது தானே இழவுக்கு உடலாய் இருந்ததே
நாம் அல்லோம் என்ற போது கை விடுகைக்கு உடலாய் அன்றோ இருப்பது என்ன
கோவிந்தா
அறிவில்லை என்றிகோளே-என்ன
நீயோ சால அறிவுடையாய் இருக்கிறாய் –
அவிஞ்ஞாதா அன்றோ
உன்னை உணரில் பிறக்க விரகுண்டா-(பிறந்தவாறும்)
கோல் கொண்டு பசுவின் பின்னே திரிய விரகுண்டோ-(வளர்ந்தவாறும் )
(அவிஞ்ஞாதா ஸஹஸ்ராம்ஸூ -அடியார் குற்றம் அறியாதவன் -ஒரே நன்மையை ஆயிரமாகக் கொள்ளுமவன்)
————-
உன் தன்னோடு உறவு –
நீ எங்களுக்கு உறவு அன்றோ –
எங்கள் கார்யம் செய்ய வேண்டாவோ -என்ன
அது கொண்டோ
ஆனால் ஒரு குட நீரோடு போகிறது -என்ன –
உன் தன்னோடு உறவு
உன் பூர்த்தி குலையிலும் பந்தம் குலைய ஒட்டுதியோ-
நீ எங்களுக்கு உறவு அன்றோ –
நீ எங்கள் கார்யம் செய்ய வேண்டாவோ
குடல் துவக்கு உண்டான இடத்தில் ஸ்வா தந்தர்யம் ஜீவிக்குமோ –
(பிதா ச ரஷகஸ் சேஷீ பார்த்தா ஜ்ஞேயோ ரமாபதி
ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம நூதித –என்கிறபடியே-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ நவவித சம்பந்தம் —-
1-அகாரத்தாலே -பிதா புத்திர சம்பந்தம் சொல்லி –
2- அவ -ரஷணே-என்கிற தாதுவினாலே -ரஷ்ய ரஷக சம்பந்தம் சொல்லி –
3- லுப்த சதுர்த்தியாலே -சேஷ சேஷி சம்பந்தம் சொல்லி –
4- உகாரத்தாலே -பர்த்ரு பார்யா சம்பந்தம் சொல்லி –
5-மகாரத்தாலே ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தம் சொல்லி –
6- நமஸ் ஸாலே ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் சொல்லி –
7- நார பதத்தாலே -சரீர சரீரி சம்பந்தம் சொல்லி
8- அயன -பதத்தாலே ஆதார ஆதேய சம்பந்தம் சொல்லி –
9-ஆய -பதத்தாலே போக்த்ரு போகய சம்பந்தம் சொல்லி
ஆக திரு மந்த்ரத்தாலே நவவித சம்பந்தங்களைச் சொல்லித் தலைக் கட்டுகிறது –)
அது கொண்டோ –
ஆனால் அது ஒரு குட நீரோடு போகிறது என்றான்
————
உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாது –
உன்னோடு உண்டான சம்பந்தம் -உன்னாலும் விட ஒண்ணாது –
எங்களாலும் விட ஒண்ணாது –
இருவரும் கூட க்ருத சங்கேதர் ஆனாலும் விட ஒண்ணாது –
இப்படி சொல்லுகிறது என்ன உரப்பு -என்ன –
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே -நீ என்னை அன்றி இலை -என்ற
பிரமாணத்தைக் கொண்டு -என்ன –
அவர்கள் உங்களைப் பெற்றவர்கள் அன்றோ என்ன –
ஆனால் நீ எங்கள் கையிலே தந்த மூலப் பிரமாணத்தில் முதல் எழுத்தைப்
பார்த்துக் கொள்ளாய் -என்கிறார்கள் –
அதாவது
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று அடியிலே சொன்னோம் -என்றபடி –
நீ சர்வ பிரகார பரி பூரணன் ஆகையாலே
நாங்கள் நித்ய சாநித்யசாபேஷராய் இருக்கிற உறவு -என்றுமாம்-
தயா பூர்ணனான உன்னோடு
தயநீயதயா பூரணை களான -எங்களுக்கு உண்டான உறவு -என்றுமாம் –
உறவேல் ஒழிக்க ஒழியாது –
பிரகாரியை ஒழிய பிரகாரத்துக்கு ஸ்திதி உண்டோ –
ப்ருதக் ஸ்தித்யாதிகள் இல்லாத வஸ்துவை சக்திமான் என்னா உன்னால் பிரிக்கலாமோ
ஒழிக்க ஒழியாது
நான் உன்னை அன்றி இலேன் -நீ என்னை யன்றி இல்லை (நான்முகன் )-என்கிற பிரமாணம் கேட்டு அறியாயோ –
நீ எங்கள் கையில் தந்த மூல பிரமாணத்தில்
முதல் வரியில் முதல் எழுத்தை வெட்டுதல் –
எங்கள் கார்யம் தலைக் கட்டல் செய்ய வேண்டாவோ
(அவ ரக்ஷண தாது -அகாரம் இருந்தால் ரக்ஷிக்காமல் இருக்க முடியாதே )
இவை எல்லாம் அறிவு ஒன்றும் இல்லாத உங்களுக்கும் வார்த்தைகள் அல்ல —
உறவு சுற்றம் என்று ஓன்று இலா நமக்குத் தெரியாது என்றான் –
நமக்கு ஒழிக்க ஒழி யாது
உன்னுடைய ஞானவான்களுடைய பந்தம் அல்ல காண் நாங்கள் சொல்லுகிறது —
(நாராயண -உறவு இல்லையே நாங்கள் சொன்னது )
இடையிலே வந்த உறவு காண் எங்களது –
அறிவில்லாதார்க்கு மறக்கலாம் அந்த உறவு –
அறிவில்லாதவர் இட்டீடு கொள்ளும் உறவு காண் இவ் உறவு
நீ மைத்துனன் நம்பி -(நாச்சியார் )
நாங்கள் மாமியார் மக்கள் -எங்கனே ஒழிக்கும் படி –
இது என்ன அன்புது-
நமக்கு சிசுபாலன் மைத்துனன் அன்றோ என்றான்
உன்னுடைய கோவிந்தத்துவத்துக்கு பழிப்பு சொன்னவன் ஆகையால்
அவனை விடாய் –
கோவிந்த அபிஷேகம் பண்ணின வன்று
உன் காலிலே குனிந்த மைத்துனன் கார்யம் எல்லாம்
உன் தலையிலே ஏறிட்டுக் கொண்டு முன் நடந்து செய்திலையோ-அந்த யுறவு காண்
தாழ்ந்த தனஞ்சயர்க்காகி-(பெரியாழ்வார் )
பாலைப் பிராயத்தே பார்த்ததற்கு அருள் செய்த -என்னக் கடவது இறே –
யுத்தார்த்தமாக ஒரு நிமித்தம் கூட்டிக் கொண்டு
அந்த கார்யம் செய்த அநந்தரத்திலே விட்டிலோமோ அதுவும் என்றான்
இங்கு ஒழிக்க ஒழியாது
அங்கு ஒழிக்கலாம்
இங்கே ஒழிக்க ஒண்ணாது காண்-
ஸ்வ தந்த்ரன் தாழ்ந்த இடத்திலே பண்ணின உறவு போலேயோ
பரதந்த்ரரை தாழ நின்று
கையைக் காலைப் பிடித்துப் பண்ணின உறவு –
கோவிந்தா உன் தன்னோடு உறவேல் -இங்கு ஒழிக்க ஒழியாது
உன்னுடைய நாராயணத்தில் உறவு பழம் கிணற்றில் கண் வார வேணுமோ –
எங்களுக்கு இவ் வுறவு போராதோ –
1-அளிக்கின்ற ஆனாயன் ஆகையால் ரஷ்ய ரஷக பந்தமும் உன்னோடே –
2-குன்று குடையா எடுத்த அடிகள் என்று கோவிந்த அபிஷேகம் பண்ணுகையாலே சேஷ சேஷி பாவமும் உன்னோடே
3-ஏசும் படி அன்ன செய்யும் எம்மீசர் (திரு விருத்தம்-54 )ஆகையால் நியன்தரு நியாமிய பாவமும் உன்னோடே –
4-தம்மனை யானவனே -ஆனாயர் தாயவனே -என்று கார்ய காரண பந்தமும் உன்னோடே –
5-என்னுயிர்க் கண்ண பிரான் -என்று நீ உயிராய் நீ விட்டி அகன்ற பின் என்னுயிர் ஆற்ற மாட்டாது
6-நாங்கள் துடிக்கும் படி இருக்கையாலே தாரக தார்ய பந்தமும் உன்னோடே –
7-எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் என்று வியாப்பிய வியாபக சம்பந்தமும் உன்னோடே –
இப்படி உன்னோடே யுண்டான சம்பந்தத்துக்கு எல்லை யுண்டோ –
(விஷ்ணு நாராயணன் போன்று இல்லாமல்
கோவிந்தன் என்றே உள்ள பாசுரங்களைக் காட்டும் அழகு )
கோவிந்தா ஒழிக்க ஒழியாது
நீ கோவர்த்தனம் எடுத்த வாறே வேறு ஒருவனோ என்று சங்கிக்க –
நான் பந்துவாய்ப் பிறந்தேன் உங்களுக்கு வேறு ஓன்று நினையாதே கொள்ளுங்கோள்
என்ற வார்த்தை அமோகம் அன்றோ
ஒழிக்க ஒழியாது
உன்னால் விட ஒண்ணாது –
எங்களால் விட ஒண்ணாது –
உன்னுடைய பந்துக்களால் விடுவிக்க ஒண்ணாது –
எங்களுடைய பந்துக்களால் விடுவிடுவிக்க ஒண்ணாது –
ஊராக சங்கித்தாலும் விடுவிக்க ஒண்ணாது –
நீ துறந்து எம்மை விட்டு அகன்ற இடத்திலும் போய்த்த்தில்லை-(திருவாய் -10-3)
நாங்கள் புள்ளுவம் பேசாதே கழகம் ஏறேல் ( திருவாய் 6-2 ) என்ற இடத்திலும் குலைந்தது இல்லை –
ஊனமுடையன செய்யப் பெறாய் என்ற இடத்திலும் போய்த்த்தில்லை –
இவ்வூர் ஓன்று புணர்க்கின்றதே என்று திரள அவத்யம் சொன்ன இடத்திலும் ஒழிந்த தில்லை
அறிவு ஒன்றும் இல்லாத எங்களுக்கு
குறைவு ஒன்றும் இல்லாத உறவு –
உன் தயா பூர்த்திக்கு
தயநீயதா பூர்த்தி யுண்டான உறவுக்கு அந்யதா சித்தி சொல்ல ஒண்ணாதே –
இப்படி நம்மோடு உறவு சொல்லா நின்றி கோள் –
உங்களை கோபிகைகள் ஆகவும்
நம்மை கோவிந்தனாகவும் சொல்லிற்று இப்போது அன்றோ
நம்மை அடியிலே மர்மத்திலே தொட்டு வைத்து –
மேலும் அதிலே நடந்து வைத்து –
கார்ய காலம் ஆனவாறே
வாலைக் குழைத்து கோவிந்தா என்னா நின்றி கோளே –
என்னாக்கி விடற்கு என்றான் –
உன் தன்னோடு-உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
நாங்கள் அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம்
நீ குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன்
ஆனபின்பு இப்பிறவி -விதி நிர்மித மேத தன்வயம் -என்கிறபடியே
மேடு படக் கண்டது பள்ளத்தை நிரப்ப அன்றோ
(பிரிந்தால் உன் தயை யார் இடம் காட்டுவாய்
நிகர் இன்றி –இருவருக்கும் பயன் ஆனபின்பு)
நாராயணத்வம் ஒழிய தயா பூர்த்திக்கு தயநீயதா பூர்த்தி யுண்டானபடியாகிற உறவு
எனக்கு அறிவுண்டு என்று கண்டால் உங்கள் அறியாமை போயிற்றோ என்னில்
எங்கள் அறிவு கண்டு கார்யம் உண்டோ உன்னோடு விட ஒண்ணாத குடல் துடக்கான உறவு யுண்டாய் இருக்க -என்ன –
உறவு உண்டாய் இருக்கச் செய்தே அன்றோ சிஸூ பாலன் – துர்யோதனாதிகளை விட்டோமே என்ன
உனக்கு விட ஒண்ணாத (மம ப்ராணா பாண்டவ )பாண்டவர்களாகக் கொள்-எங்களை
தங்கள் கர்மம் தாங்கள் செய்கிறோம் என்று இருப்பாரை அன்றோ உனக்கு விடலாவது
எங்கள் கர்மம் உன்னாலே என்று இருப்பாரை உன்னால் விட ஒண்ணாது –
அவர்கள் தங்களாலும் (உன்னையும் உனக்கு ப்ரீதி அர்த்தமாக கர்மங்களையும் )விட ஒண்ணாது என்கை
எங்கள் வெறுமையும் உன் பூர்த்தியும் உணர்ந்து எங்களை விட ஒண்ணுமோ -என்கை –
அறியாத – அநவதானம்(கவனக்குறைவு )
பிள்ளைகளோம் – அஞ்ஞர்
(விஸ்வரூபம் பார்த்த அர்ஜுனன் திகைத்து -ஷாமணம் பிரார்த்தித்து
அஜானதா பிரமாதாத் ப்ரணயே -மூன்றும் அங்கும் உண்டு
இப்பொழுது தான் நாராயணா அறிந்தேன் முன்பு சஹா அடே -)
அன்பினால் உன் தன்னைச்-சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
அன்பு தவிர ஒண்ணாது ஆகையால் ப்ரக்ருதி
பிரகிருதி உபாய புத்தியாகில் இறே தப்பாவது
இம் மூன்றும் குற்றமாக நினைக்க விரகில்லை
மயா ப்ரமாதாத் ப்ரணயேந வாபி –
அன்பினால் உன் தன்னைச்-சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
நாராயணன் என்று கோவிந்த அபிஷேகம் பண்ணிப் பூர்ணனாய் இருக்கிற என்னை சிறு பேர் சொன்னீர்கள் என்ன
நாராயணன் என்கை குற்றமோ என்னில்
நீர்மை சம்பாதிக்கப் போந்த இடத்திலே மேன்மை சொல்லுகை குற்றம் அன்றோ –
அர்ஜுனனைப் போலே பொறை கொள்ளுகிறார்கள்
ஒரு படுக்கையிலே இருந்து கால் தாக்கிற்று கை தாக்கிற்று என்று குற்றம் கொள்ளுவாரைப் போலே
அன்புடையாரைக் குற்றம் கொள்ளப் போமோ -பொறுத்து அருளாய் -என்கிறார்கள்
(அத்வேஷம் மாத்திரம் கீழ் கோவிந்தா
இதில் கோவிந்தா பட்டாபிஷேகம் -அஹம் வோ பாந்தவ ஜாத சொன்னவன் அன்றோ)
உறவை ஒழிக்க ஒழியாதே–பிரகாரத்தை ஒழிய பிரகாரி உண்டோ
ஸ்திதி உண்டோ -பிரகாரம் நம் போல்வார் -பிரகாரி -நன்றாக நான் -நான் இல்லை என்றால் நீ இல்லையே-நாரம் -இருந்தால் நாராயணன்
நடுவில் வந்த–இடையனாய் வந்த உறவை சொன்னோம்–ஜீவாத்மா பரமாத்மா சம்பந்தம் சொல்ல வில்லை
இடைக்குலத்தில் நாங்கள் –இடையிலே வந்த உறவு–இடைத்தனத்தில்–அறிவு இல்லாதவர் மறக்கலாம்
————-
அறியாத -இத்யாதி
கீழ் தாங்கள் நெருக்கின அதுக்கு ஷாமணம் பண்ணுகிறார்கள் –
அறியாத
அநவதாநத்தாலே வந்த அஞ்ஞானம் –
பிள்ளைகள்
பால்யத்தாலே வந்த அஞ்ஞானம் –
அன்பு –
பிரேமத்தாலே வந்த அஞ்ஞானம் –
இந்த ஹேதுக்களால் வந்த அறியாத் தனம் பொறுக்க வேணும் –
ப்ரேமாந்தரைக் குற்றம் கொள்ளுகையாவது –
ஒரு படுக்கையிலே இருந்து -கால் தாக்கிற்று கை தாக்கிற்று -என்கை இறே-
உன் தன்னை -இத்யாதி
கோவிந்தாபிஷேகம் பண்ணின பின்பு
முதல் திருநாமம்
சொல்லுகை குற்றம் இறே
நாராயணன் -என்றார்கள் கீழ் –
நீர்மை சம்பாதிக்கப் போந்த இடத்தே மேன்மை சொல்லுகை குற்றம் இறே –
நாங்கள் செய்த தப்பை பொறுக்கும் அத்தனை அன்றோ என்ன –
சொல்லுகைக்கு ஹேது சொல்லுங்கோள் பொறுக்கிறோம் என்றான் –
அறியாத பிள்ளைகளோம் –
என்கிறார்கள் -இவை எல்லாம் பொறுக்கைக்கு ஹேதுக்கள் இருக்கிற படி –
1-முதலில் அஞ்ஞர் செய்தது பொறுக்க வேணும் –
2-பாலர் செய்தது பொறுக்க வேணும் –
3-ஸ்நேஹிகள் செய்தது பொறுக்க வேணும் –
1-அநவதானத்தாலே (கவனக்குறைவாலே )சொல்லுவது அறிந்திலோம் –
2-பால்யத்தாலே சொல்லுவது அறிந்திலோம் –
3-ப்ரேமத்தால் வந்த விருட்சியாலே சொல்லுவது அறிந்திலோம் –
1-எங்களால் அறிவு கெட்டோம்-
2-பிறவியாலே அறிவு கெட்டோம் –
3-உன்னாலே அறிவு கெட்டோம் –
யாதும் ஒன்றும் அறியாத பிள்ளைகள் இறே நாங்கள் -(நாச்சியார் -2-7 )
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்திலே பிறக்கையாலே அறிவு கெட்டோம் –
அழகு கண்டு என் மக்கள் அயர்க்கின்றது –என்கிறபடியே
உன்னைக் கண்டு மதி கெட்டோம் –
அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடியர் என்கிறபடியே இடையூறை மதி கெடப் பண்ணுமது
பெண்களை மது கெடுக்கச் சொல்ல வேணுமோ –
பித்தர் சொல்லிற்றும் பேதையர் சொல்லிற்றும்
பத்தர் சொல்லிற்றும் பன்னப் பெறுவரோ-என்று பிரசித்தம் அன்றோ –
(கம்ப நாட்டாழ்வார் பாசுரம் -ஆகவே நாயனாருக்கு முன் காலத்தவர் )
அன்பினால்
ப்ரேமாந்தரை குற்றம் கொள்ளுகையாவது –
ஒரே படுக்கையிலே இருந்து கை தாக்கிற்று கால் தாக்கிற்று என்கை இறே
உன் தன்னை
கோவிந்த அபிஷேகம் பண்ணி இருக்கிற யுன்னை –
அநவதா நாதிகளும் அன்பு விளைக்கைக்கு நிமித்தமாய் இருக்கிற உன்னை
இளையோர் விளையாட்டோடு காதல் வெள்ளம் விளைத்த (பெரிய திருமொழி -3-8)-என்று தானே இறே அவற்றுக்கு அடி –
உன் தன்னைப் பிறவி பெறும் தனை
என்றதை போல் அன்று இந்த உன் தன்னை –
அவ்விடத்தில் பெருமை யுடையவன்
தாழ நின்று நீர்மை சம்பாதிக்க வந்த இடத்தில் மேன்மை சொல்லுகை குற்றம் இறே
சிறு பேர்
கோவிந்த அபிஷேகம் பண்ணின பின்பு
முதல் திரு நாமம் சொல்லுகை குற்றம் இறே –
முடி சூடினவனை தட்டியில் பேர் சொல்லுகைக்கு மேற்பட்ட உண்டோ குற்றம் –
இப்போது சிறு பேர் என்று நினைக்கிறது –
நாராயணன் -என்றத்தை –
தங்களுக்கு அசாதாரணனாய் இருக்கிறவனை சாதாரணன் என்று சொல்லுகை குற்றம் இறே –
ஊடினால் சொல்லுமத்தை படுக்கைத் தலத்தில் சொல்லலாமோ –
அந்தப்புர வாசலில் படுகாடு கிடப்பாரை
நாட்டுக்கு கடவன் என்கிறது பிரணயி அல்லன் என்கை இறே –
இவன் உபய விபூதிக்கும் முடி கவித்து ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்குமவன் என்று
சிறிது ஞானம் உண்டாய் இருக்கச் செய்தே இறே
இந்திரன் வந்து பசுக்களை மேய்த்தான் என்று முடி சூட்டிற்று-
(அவனுக்கு கொஞ்சம் ஞானமே ஆகவே அபசாரப்பட்டான்
பின்பு உணர்ந்து பட்டாபிஷேகம் பண்ணி வைத்தான்)
உபய விபூதிக்கும் முடி சூடினத்துக்கு அவ்வருகே ஒரு ஐஸ்வர்யம் இறே இது
நாராயணன் என்கிற பேர் நாராயண பரங்களான ப்ரமாணங்களாகச் சொல்லலாம் –
கோவிந்தா சக்தமான நெஞ்சுடையார்க்குச் சொல்லுகை குற்றம் –
சிறு பேர்
சஹஸ்ர அக்ஷரங்கள்
துவாதச அக்ஷரங்கள் தொடக்கமான பேர்கள் எல்லாம்
அவன் பெயர் எட்டு எழுத்தையும் கண்டவாறே(திருச்சந்த) சிறுகிற்று
அது தான் மூன்று எழுத்துடைய பேரைக்(திருமாலை) கண்ட வாறே சிறுகிற்று –
முழுகி மூக்கைப் புதைப்பார்க்கு யோக்கியமான பேர்
(சாதநாந்தர பரருக்கு தீர்த்தமாடி பிராணாயாமம் செய்வோர்க்கு நாராயண நாமம் )
தீட்டத்தோடே கத்திக் கையராய்த் திரிவார்க்கும்
யோக்கியமான பேரைக் கண்ட வாறே கழிப்பானாய்த்து-
(வேடரும் திருமலையில் கோவிந்தா என்பார்களே )
வாச்யன் சிறுக நின்று நிறம் பெற்றால்
வாசகமும் அப்படியே இறே
சிறு பேர் –
அஷ்டாக்ஷர மஹா மந்த்ரம் என்பார் கலங்கினவர்கள் –
தெளிவுடையார்களுக்கு சிறுத்துத் தோற்றும் இறே இது
மூல நாமமுமாய்
அதி குஹ்யமுமாய்
செவியில் சொல்ல வேண்டும்படி இறே இருப்பது –
பிறந்து பன்னிரண்டும் கழிந்த வாறே பேரிட்டுத் தாலாட்டினவாறே –
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை -என்றும்
நாராயணா அழேல் தாலேலோ என்றும்
அப்போது
செய்தலை நீல நிறத்து சிறு பிள்ளையாகையாலே சொல்லலாம் –
இப்போது பெறும் கண்ணன் இறே
அழைத்தன
அது தன்னை ஒருக்கால் சொல்லி விடாதே –
நாராயணனே என்றும் –
நாற்றத்த துழாய் முடி நாராயணன் என்றும் –
நாராயணன் மூர்த்தி -என்றும் பலகால் சொன்னார்கள் இறே
அழைத்தனவும்
எங்களில் நாங்கள் முதல் நாமத்தை சொல்லி விட்ட அளவு அன்றிக்கே
மூலக் கிழங்கிலே(காரணம் வேர் -பத்மநாபன் )
தட்டச் சொன்னவற்றையும் –
பாழியம் தோளுடை பற்ப நாபன் -என்றார்கள் இறே
உன் தன்னை –அழைத்தனவும்
எங்களை நாங்கள் பிரணயித்வத்தாலே –
பேய்ப் பெண்ணே —
ஊமையோ செவிடோ —
நாணாதாய் –
பண்டே உன் வாய் அறிதும் –
என்று தொடங்கிச் செய்தவற்றையும் பொறை கொள்ள நினைத்தார்கள் –
சர்வான் அசேஷத (கத்யத்ரயம் )-என்ன வேணும் இறே
த்ரிவித கரணங்களால் யுண்டான த்ரிவித அபசாரத்துக்கும் உப லக்ஷணம் –
புகு தருவான் நின்றவற்றில் புத்தி பூர்வகத்துக்கு க்ஷமை கொள்ளுகிறார்கள் –
பகவத் பாகவத விஷயங்களில் உபசார புத்தயா பண்ணும் அபசாரங்களுக்கு க்ஷமை கொண்டு விட வேணும்
ஸூலபனை பரன் என்கிறது தான் அபசாரம் ஆகிற தசை இறே –
குளிர்ந்த தண்ணீரை விநியோகம் கொள்ளுமவனுக்கு காய்ச்சின தண்ணீர் பகை இறே
கிருஷ்ணனுடைய ஆற்றலுக்கு ஈஸ்வரத்தால் வந்த அழல் பகை இறே –
தேவத்வமும் நிந்தை ஆனவனுக்கு ஒளி வரும் -ஜன்மம் -அவதரித்து ஒளி மிக்கு
எத்திறம் உரலோனோடு இணைந்து ஏங்கி இருந்த எளிவே
பேற்றுக்கு பிரயோஜனம் ஆனது புறம்பே கிடக்க
அப்ரயோஜனங்களை கிடந்து ஆராய்கிறது என் என்று
————-
இறைவா –
தன் கை கால் தப்புச் செய்தது என்று
பொடிய -விரகு -உண்டோ –
உடைமையை இழக்கை உடைவன் இழவு அன்றோ –
இறைவா –
பிழைப்பர் ஆகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே –
ஐயர் தடுக்கின் கீழே இருந்து கேட்டு அறியாயே –
நீ இறைவனாகைக்கும் சீறுகைக்கும்-என்ன சேர்த்தி உண்டு –
நீ தாராய் பறை –
விலக்காமை பார்த்து இருக்கும் நீ
எங்கள் அபேஷிதம் செய்யாய் –
சீறி அருளாதே
என்கிறார்கள் –
செய்வுதை எல்லாம் செய்து சீறி அருளாதே -என்ன அமையும் ஆகாதே காண் –
இத் தலையை ஆராயில் சீற வேண்டும்படியாய் இறே இருப்பது -என்ன
பூர்வ வருத்தம் ந ஷமாமிக்கு இலக்கு அல்லவே –
நப்பின்னை பிராட்டியை முன்னிட்டவர்கள் ஆகையால் –
ஸ்ரீ விஸ்வரூபம் கண்ட அர்ஜுனன் நீ என்னோடே மேல் விழுந்து கலசின படியால்
உன் வைபவம் ஒன்றும் அறிந்திலேன் –
அநவதாநத்தாலும்
பிரணயித்வத்தாலும்
விஹார சய்யா ஆசன போஜனங்களிலே பண்ணின
அஸத்காரங்களைப் பொறுத்து அருள வேணும் என்று பொறை கண்டான் அவன் –
ஸுலப்யத்தாலே பரிமாறின தப்புக்களை
பரத்வம் கண்டவாறே பொறை கொண்டான் அவன்
ஸுலப்யத்தைக் கண்டு
பரத்வ புத்திக்கு க்ஷமை கொள்ளுகிறார்கள் இவர்கள் –
பக்தியில் தலையாக நிற்கவுமாம்
அவன் தன்னைப் பற்றவுமாம் –
கிட்டினால் சொல்லுவது இது வாய்த்து
நம்மாலே பேறாம் படியான சம்பந்தம் நம்மோடே உண்டானாலும் –
குற்றத்தைப் பொறுக்க வேணும் என்றாலும்
பல போக்தாக்கள் நீங்களான பின்பு
உங்கள் தலையிலேயும் ஓன்று உண்டாக வேண்டாவோ –
இவர்கள் இன்னது செய்தார்கள்
அவன் இன்னது செய்தான் என்று நாட்டாருக்குச் சொல்லலாவது
ஒரு ஆலம்பனம் வேண்டாவோ என்ன
இறைவா
நீ தருவோம் என்ற வன்று விலக்குகைக்கு உரியார் உண்டோ –
இறைவா
உன் ஸ்வரூபத்தை உணராய் –
எங்கள் தலையிலே கிடந்து நாங்கள் பிரதிபத்தி பண்ணாமையாலே அழித்துக் கொண்ட
சேஷத்வம் போல் அன்றே
உன் தலையிலே கிடக்கையாலே அழிக்க ஒண்ணாத சேஷித்வம் –
அத்தை ஆராய்ந்து எங்களுடைய கார்யத்தைச் செய்யாய்
அத் தலையிலே குறை இன்றியிலே ஒழிய அமையும் இறே –
(அவனாலும் சேஷித்வத்தை அழிக்க முடியாதே
நாம் அநாதி காலம் யானே என்னை அறிகிலாதே
பண்டே பலகாலும் கழித்து அன்றோ உள்ளோம்)
பேற்றுக்கு அத்வேஷம் இறே இத்தலைக்கு வேண்டுவது
பேற்றின் கனத்துக்கு கீழ் விளைந்தது எல்லாம்
அத்வேஷம் மாத்ரமாய் இருக்கும் இறே
இறைவா
வானோர் இறையை நினைத்தன்று -(வள ஏழ் உலகு இறை வானோர் இறை )
ஆய்க் குலமாய் வந்து தோன்றின நம் இறை
கோவிந்தா –இறைவா –ஒழிக்க ஒழியாது –பறை தாராய்
உன்னைப் பார்த்தாலும் கை விட விரகு இல்லை –
எங்களைப் பார்த்தாலும் கை விட விரகு இல்லை
நீ
நான் ரஷிக்கைக்கு நீங்கள் பண்ணின சாதன அனுஷ்டானம் என் என்று கேட்டால்
தேவர் எல்லையில் வர்த்திக்கிறதுக்கு குறை சொல்லப் போமோ என்கிறார்கள் –
அறிவுடையார் -அறிவு ஒன்றும் இல்லாத எங்களுக்கு- விஷய வாச மாத்திரமே அன்றிக்கே
குடல் துடக்கு உண்டானால் ரக்ஷிக்கச் சொல்ல வேணுமோ
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -இறைவா -பறை தாராய்
குண துங்க தயா தவ ரங்க பதே ப்ருசநிம் நமி மஞ்சன முன்னமய-யத பேஷ்யம் அபேஷ்ய
துரஸ்யஹி தத் பரிபூர்ண மீசி துரீச் வரதா (பராசர பட்டர் )-என்னக் கடவது இறே
நோ பே க்ஷணம் மம தாவோஸி தமீஸ்வரஸ்ய -(கூரத்தாழ்வான் )
உன்னுடைய சேஷித்வம் நிலை நிற்க வேணுமாகில் செய்கிறாய் –
சீறாமைக்கு ஹேது இது –
ப்ரேஷ் யஸ்ய ஷமித்வயம்மே (கிஷ்கிந்த)-என்னக் கடவது இறே-
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே (திருச்சந்த)
பறை தாராய்
சாது பரித்ராணாம் பண்ணுகைக்கு அன்றோ
இங்கு வந்து பண்ணி அருளிற்று –
பறை தாராய் என்றவாறே
கோபீ ஜனத்தினுடைய மிகுதி குறை ஆராய்வாய் நீ அன்றோ –
இவர்கள் சொல்லுகிறவற்றை ஆராய்ந்து கொடு என்றான்
அருகில் இருக்கிறவளை( நப்பின்னைப் பிராட்டியை)
நீ தாராய்
அவள் தருவது தந்தாள் –
நீ தரும் அத்தைத் தாராய் –
உபாய நிஷ்டை அன்றோ அவள் தருவது –
மேல் உள்ளது உன் பணி அன்றோ
(அஸ்து தே -உபாய அத்யாவசிய அவள் முன்பே கொடுத்தாளே)
அஸ்துதே என்று அவள் அது செய்தால் –
அஹம் மோக்ஷயிஷ்யாமி -என்னக் கடவ நீ பேசாது இருக்கவோ
(கோவிந்தா)ஸூலபனான நீ தாராய் –
(இறைவா) ஸ்வாமி யான நீ தாராய் –
சர்வ உபாய சாதாரணமான ருசியை உபாயத்தில் செலவு எழுதாதே
சைதன்ய கார்யமான ஸ்வீகாரத்தையும் உபாயத்தில் செலவிடாதே
எங்களால் சாத்தியம் இன்றிக்கே
சித்த ஸ்வரூபனான உன்னையே பார்த்து கார்யம் செய்து அருள வேணும் –
கறைவைகள் இத்யாதி
எங்களை பார்க்கிலும் நீ கார்யம் செய்ய வேணும் –
எங்களையும் உன்னையும் பார்க்கிலும் கார்யம் செய்ய வேணும்
உன்னைப் பாராதே எங்களை பார்த்தாய் யாகில் இழக்கிறோம் –
எங்களை பாராதே உன்னைப் பார்த்தாயாகில் பெறுகிறோம்
ஆன பின்பு எங்களுடைய ரக்ஷணம் உன்னாலே விடலாமா –
எங்களுக்கு வ்ருத்த ஞான ஜென்மங்களால் நன்மை இல்லை என்றோம் –
நீ நன்மைக்கு அடி என்றோம் –
பூர்ணன் என்றோம்
ஸூலபன் என்றோம் –
உன்னோடு எங்களுக்கு குலையாத சம்பந்தம் உண்டு என்றோம் –
எங்கள் தப்புக்கு அனுதபித்தோம் –
பொறை கொண்டோம்
எங்களுக்கு இனி செய்ய வேணும் அம்சம் இல்லை –
இனி உன்னை இழவாமல் கார்யம் செய்யப் பாராய் –
ததஹம் த்வத்ருத-இத்யாதி -(ஸ்தோத்ர ரத்னம்)
எங்களுக்கு பரித்யஜ்யத்வேன விஹிதங்களில் அன்வயம் இல்லை யாய்த்து –
ஸ்வீகாரத்வேன ஹித உபாயமான நீ
ஸ்வீகார நிரபேஷமாகக் கைப் புகா நின்றாய் –
உனக்கு ஞான சக்தியிலும் குறைவற்று இருந்தது –
ப்ராப்தியிலும் குறைவற்று இருந்தது
எங்களுக்கு அஞ்ஞாதிகள் பூர்ணமாக இருந்தது –
குற்றங்களை பார்த்து சீற ஒண்ணாத படி
ஸமஸ்த விரோதிகளையும் போக்குகிறேன் என்றவனாய் இருந்தாய் நீ –
ஆன பின்பு ப்ராப்ய லாப நிமித்தமாக சோகியாதே கொள் என்ற நீ
எங்கள் அபேக்ஷிதத்தை செய்யல் ஆகாதோ என்று
தங்கள் ஆகிஞ்சன்யத்தையும்
யோக்கியதையும் ஆவிஷ்கரித்து
உபாய பூர்த்தியையும்
தங்கள் ப்ராப்தியையும் முன்னிட்டு
பிராமாதிகமாக புகுந்த தப்புக்களுக்கு பொறை கொண்டு
எங்கள் பிராப்ய சித்திக்கு நீயே உபாயமாக வேணும் என்று
கிருஷ்ணனை உபேக்ஷிக்கிறார்கள் -(அபேக்ஷிக்கிறார்கள் பிரார்த்திக்கிறார்கள் )
இறைவா
உன் ஸ்வரூபம் பெற வேண்டாவோ
நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்-
ஸ்வீ காரத்தால் செய்யும் அத்தனையும் நீ செய்து அனுதாபமுமம் அத் தலையிலே யாக வேணும்
ஏகம்-என்றபடியே செய்து அருளாய் -என்கை –
(உபாயம் தன்னைப் பொறுக்கும்
உபாயாந்தரம் இருவரையும் பொறுக்கும்
இது ஒன்றையும் பொறுக்காதே)
ஒழிக்க ஒழியாது
நம்மை உண்டாகில் அன்றோ பழியிட்டு விடலாவது -(பல நீ காட்டிப் படுப்பாயோ நெறி காட்டி நீக்குதியோ)
சீறி அருளாதே
உபாயம் என்று நினையாதே பிரகிருதி வ்ருத்தி என்று கொள்ள வேணும்
இத் தலையால் பற்றும் பற்று சீற்றத்துக்கு விஷயம்
இத் தலைக்கு குறையும் அத் தலைக்கு ரக்ஷையும் ஸ்வரூப ப்ரயுக்தம்
இறைவா
தன் கை கால் தப்பச் செய்தது என்று பொடிவார் உண்டோ
நீ தாராய் பறை
விலக்குகைக்கு ஆள் இல்லை -நீ தரும் அத்தனை –
சீறி அருளாதே -நீ தாராய் பறை -சரீரத்துக்கு வேண்டியது சரீரீ தானே பண்ண வேண்டும் -ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம் -மந்த்ர கிரியா லோபங்களுக்கு பிராயச்சித்தம் -கிருஷ்ண அநு ஸ்மரணம் -அவனது சரீரம் என்ற நினைவே வேண்டியது -சிலர் தப்பாக இதுக்கு கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண நாமம் சொல்லுவார்கள்-
———————
பறை தரு மாலை -சாற்றி அருளுகிறாள்
இறைவா நீ தாராய் பறை–நாராயணனே நமக்கே பறை தருவான்–கீழ் வானம் –பாவாய் எழுந்திராய் பறை கொண்டு
நோற்று —நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால் -கும்பகர்ண நிஹந்தாவான சக்கரவர்த்தி திருமகன் –
மாலே –சாலப் பெரும் பறையே -வாத்திய விசேஷம்-அன்று இவ்வுலகம் அளந்தாய் -பல்லாண்டு பாடுவதே பிரயோஜனம்
இன்று இப்பறை கொள்வான் வந்தோம் –குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது -இதுவே அபேஷிதம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு-வள்ளல் மால் இரும் சோலை மணாளர் பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிடக் கொள்ளுமாகில் –
இற்றைப் பறை கொள்வான் அன்று -இன்று மட்டும் இல்லை யாவதாத்மபாவி கைங்கர்யமே அபேஷிதம்
எட்டாம்பாட்டில் -கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு-கூடாரை வெல்லும் சீர் –பாடிப் பறை கொண்டு
பறை கொண்டதாக அன்றோ அருளிச் செய்கிறாள்-அங்கு பாடுகையாகிற உத்தேச்யம் பெற்றதாக கொண்டு –
பறை கொண்டு -பறை கொள்ள -என்றே பொருள் அங்கும்-சொல் திரியினும் பொருள் திரியா வினைத்தொகை–நன்னூல் ஸூ த்தரம்-
இறைவா நீ தாராய் -பறை என்றதன் உட்கருத்தை விவரணம் அடுத்த பாசுரம்
——————
இப் பிரபந்தத்திலே –
ஊழி முதல்வன் -பற்ப நாபன் -என்று -சேஷத்வ பிரதிசம்பந்தியான சேஷித்வத்தையும் –
உனக்கே -என்கையாலே -உகாரத்தில் அநந்யார்ஹ சேஷத்வத்தையும் –
நாம்-என்றும் –
யாம் -என்றும் –
மகார வாச்யனான ப்ரக்ருதே பரனாய் பகவத் சேஷ பூதனாய் இருக்கிற
ஆத்மாவின் ஸ்வரூபத்தையும் சொல்லுகையாலே
ப்ரணவார்த்தம் சங்க்ரஹீதம் ஆயிற்று –
தூயோமாய் வந்து நாம் –
தூயோமாய் வந்தோம் –
அபிமான பங்கமாய் –
மற்றை நம் காமங்கள் மாற்று -என்கையாலே நமஸ்ஸில் அர்த்தமும் –
கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணன் -என்றும் –
நாராயணன் மூர்த்தி -என்றும்
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் -என்றும் -சொல்லுகையாலே நாராயண சப்தார்த்தமும்-
உலகை ஈரடியால் நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே -என்னக் கடவது இறே
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -என்கையாலே
அதிலே சர்வ வித பந்துத்வமும்
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்கையாலே
சதுர்த்யர்த்தமும் சங்க்ரஹீதம் ஆயிற்று –
ஆக இது திருமந்திர விவரணம் என்றதாயிற்று –
————————–
கறவைகள் பின் சென்று -இத்யாதிகளாலும் –
செய்யாதன செய்யோம் –
உன்னை அருத்தித்து வந்தோம் –
சிற்றம் சிறு காலை வந்து உன்னைத் சேவித்து -என்றும் –
நாராயணன் -என்றும் –
புண்ணியம் நாமுடையோம் என்றும் –
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை -என்று தொடங்கி -தீயினில் தூசாகும் என்றும்
எங்கள் மேல் சாபம் இழிந்து என்றும் –
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து -என்றும் சொல்லுகையாலே
சரம ஸ்லோகார்த்தம் சங்க்ரஹீதம் ஆயிற்று –
ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா
திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்றீர் –
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா –
நகரமருள் புரிந்து இத்யாதி-
பெயரினையே புந்தியால் சிந்தியாது ஓதி உரு வெண்ணும் காந்தியால் ஆம் பயன் அங்கு என் -என்னச் சொல்லக் கடவது இறே –
பாற் கடல் பையத் துயின்ற பரமன் என்கையாலே ஸ்வாமித்வமும்
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்கையாலே எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்த ஸுலப்யமும்-
மாயனை என்று தொடங்கி தாமோதரன் அளவும் -கட்டவும் அடிக்கவும் ஆம்படியான ஸுசீல்யமும் –
குறை ஒன்றும் இல்லா கோவிந்தா என்று கல்யாண குண விசிஷ்ட வஸ்துவான உபாய பூர்த்தியையும்
அறிவு ஒன்றும் இல்லா ஆய்க்குலம் -அறியாத பிள்ளைகளோம்-என்கையாலே அதிகாரி ஸ்வரூபமான ஆகிஞ்சன்யமும் –
தூயோமாய் வந்து நாம் தூய் மலர்கள் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும்
புகு தருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -என்றும் –
வந்து தலைப் பெய்தோம் -என்றும் –
உன்னை அருத்தித்து வந்தோம் -என்றும் -அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும்
தப்பாத உபாயமாக ஸ்வீகரிக்கும் உபாய வரணத்தையும் –
ஆவாவென்று ஆராய்ந்து அருள் –
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் –
இறைவா நீ தாராய் பறை -என்று
அவனுடைய பரகத ஸ்வீகாரத்தின் ஏற்றத்தையும் –
குத்து விளக்கு எரியக் கோட்டுக்கு கால் காட்டில் மேல் -இத்யாதியிலே பர்யங்க வித்யையில் படியே இருவருமாய்
எழுந்து அருளி இருக்கிற சேர்த்தியான வேஷத்தை –
நாற்றத் துழாய் முடி நாராயணன் -என்கையாலும் –
தேவாதி தேவன் என்கையாலும் -உம்பர் கோமானே -என்கையாலும்
இறைவா நீ என்கையாலும் -உத்தர வாக்ய நாராயண பதத்தில் ப்ரதிபாதிக்கிற சேஷித்வமும் –
தட்டொளியும் தந்து உன் மணாளனை -என்கையாலும் –
இப்போதே எம்மை நீராட்டு -என்கையாலும் –
பூ வளரும் திருமகளால் அருள் பெற்று வரும் படியும் –
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து -என்றும் –
பள்ளிக் கட்டில் கீழே -என்றும்
சீரிய சிங்காசனத்து இருந்து -என்றும் –
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி -என்றும் –
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து -என்றும்
மாலே ஆலினிலையாய் அருளாய் -என்றும் –
கூடி இருந்து குளிர்ந்து என்றும் –
நீ தாராய் பறை -என்றும்
சிற்றம் சிறு காலே வந்துன்னைச் சேவித்து -என்று தொடங்கி –
உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று -என்கையாலே
உத்தர சதுர்த்தியில்
கைங்கர்ய உபகரண ஸஹிதமான பல அனுபவ கைங்கர்ய பரம்பரைகளையும் –
கைங்கர்ய பிரார்த்தனையும் –
அவற்றில் களை அறுப்பையையும் –
செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று -என்கையால்
த்வயத்தில் பெரிய பிராட்டியாராலே என்றமதும் சொல்லித் தலைக் கட்டிற்று –
மாதவன் என்று த்வயம் ஆக்கினால் போலே –
மாதவனே என்றும் –
மாதவனை என்றும் இறே -இங்கு இரட்டித்து இருப்பது –
செல்வத் திருமாலால் -என்றும் –
பட்டர் பிரான் கோதை சொன்ன -என்கையாலே இவ்வர்த்தம்
ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் -என்னும் இடம் சொல்லிற்று –
இப்படி குரு பரம்பரா பூர்வகமான த்வயத்தாலே
பேறாக ப்ரதிபாதிக்கிறதாய் இறே திருப்பாவை தான் இருப்பது –
ஆக விறே இதுக்கு வர்த்தகரான உடையவரும்
இத்தை நாள் தோறும் ஆதரித்திக் கொண்டு போந்து அருளிற்று –
ஆகையால் இது ஆண்டாள் அடியாராக யாவர்க்கும் நித்ய அனுசந்தேயமாக நடந்து போருகிறது-
கோப ஸ்த்ரீ குலமதி கோதாய உபதிஷ்ட்டம் க்ருஷ்ணாக்யம் பிரணவம் இவ அதிகாரி ஜப்யம்
தத்ரிம்சத் பரி மித பத்ய மார்க்க சீர்ஷ ப்ராப்தோத் சவ சமயோசிதம் பிரசித்தம் –
எட்டு எழுத்தின் இணைப் பொருளும் இரண்டதனில் பொருளும் இயல் வலித் தேர் அர்ச்சுனனுக்கு இறைவர் தம்மை
தொட்டு உரைத்த மறை அறுதிப் பொருளை எல்லாம் தோன்றும் வகைப் புகழ் வரை துடர் வளைந்து பாட
மட்டவிழும் பொழில் புடை சூழ் முடும்பை வேந்தன் மணாளன் தணவாத மாயன்
கட்டுரையே புதுவையர் கோன் கோதை சொன்ன கவி பாடல் பொருள் தெரியக் காட்டினானே
——————————————————–
28. கறவைகள் :
புறம்புண்டாம் வேத நெறி யாவும் விட்டு
திறம் காட்டும் என் ஒருவன் தாள்கிட்டல் — தேறுமென்
உரைத்த மொழி வழியே கை முதல் வேட்டா
குறையில்லா கோவிந்தன் நாட்டு.
திருமந்திரத்தில் பிறந்து, கிருஷ்ண சரம ஸ்லோகத்தில் வளர்ந்து துவாயார்த்த நிரதராய் வர்த்திக்கை ஸ்வரூபம்.
திருமந்திரம் ஜ்ஞான பிரதானமான மந்திரம் என்றால், சரம ஸ்லோகம் விதி ரஹஸ்யம். துவய மஹாமந்திரம் அனுஷ்டான பரமான மந்திரம்.
திருமந்திரத்தில் ஆத்மாவாலே பேறு என்கிறது.
சர்ம ஸ்லோகத்தில் ஈஸ்வரனாலே பேறு என்கிறது.
துவயத்தில் பிராட்டியாலே பேறுஎன்கிறது.
ஆசார்ய சம்பந்தம் பெற்று ரஹஸ்ய த்ரிய உபதேசமும் பெற்று அனுஷ்டாதாவாய் போருகைக்கு
துவயார்த்தம் நன்றாக நெஞ்சில் பட வேண்டும். அதில் பூர்வகண்ட வாக்கியம் உபாயத்தையும்,
உத்தர கண்ட வாக்கியம் பலம்-புருஷார்த்தத்தையும் சொல்லுகிறது.
இதன் விளக்கமாக அவதரித்த ஆண்டாள் திருப்பாவை பாசுரங்கள் 27, 28 இரண்டும்.
ஆக , கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம் பாசுரம் உபாய சுவீகாரமும், 29ம் பாசுரம்
சிற்றம் சிறுகாலை கைங்கர்ய பிரார்த்தனையையும் சொல்லுகின்றன.
அனன்ய ஸாத்யே ஸாபீஷ்டே மஹா விஸ்வாச பூர்வகம்
ததேக உபாயதா யாஞ்சா –இதி பிரார்த்தனா மதி : சரணாகதி : என்ற கணக்கில்
உபாய ஸ்வீகாரம் தானும் விதி வாக்கியத்தில் சொன்னபடி
மற்ற எல்லா தர்மங்களை விடுகையும்
பகவதாஸ்ரயணமுமாக விட்டவை எல்லாம் அவனேயாகப் பற்றுகையும்
சொல்வதே – கறவைகள் பாசுரம்.
1. கறவைகள் பின் சென்று – ஜாத்யுச்சித கருமம் செய்தீர்களாய் பிராபாந்தரங்களை விடீர்கள் இல்லீகோள் என்ன
கானம் சேர்ந்துண்போம் – கோ ரக்ஷணமாக சென்றோம் அல்லோம். உண்கையே பிரதானமாக சென்றோம்.
எங்கள் ஆசாரியன் மாடு கன்றுகள். பகவானுக்கு கண்டருளப்பண்ணி உண்டீர்கள் போலும் என்ன – அதுவும் இல்லை –
சென்று உண்போம் அத்தால் கர்மாநுஷ்டானம் இல்லை – நீ பரமபதம் விட்டு திருவாய்ப்பாடிக்கு வந்தாயால்,
நாங்கள் விமுக்த்தர்கள் போலே அங்கிருந்து கானம் சென்றமை கண்டீயே என்கிறாள்.
2. அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம் – இதுவரை இல்லையாகிலும், இன்னும் முன்னே சம்பாதிக்க வழியும் இல்லை.
வலக்கை இடக்கை அறியா ஆய்க்குல மாதலால் அறிவில்லாத – ஜ்ஞான யோகம் இல்லாத – அறிவொன்றுமில்லாத –
பக்தி யோகமும் இல்லாத பிள்ளைகளோம். ஆத்தால் ஆர்ஜித ஸுக்ருதம் எதுவும் இல்லை.
3. குறை ஒன்றில்லாத கோவிந்தா! உன்தன்னைப் பிறவி பெறும் தனைப் புண்ணியம் யாமுடையோம் –
அயத்ன சுக்ருதமாக உன்னையே சித்த புண்யமாக உடையோம். நீயோ நிறைவாளன். நாங்கள் ஜ்ஞான பக்திகளில் குறைவாளர்கள்.
4. உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது – இருவருக்குமான சம்பந்தம் தானும் அங்கு ஒழிக்க முடியாது வாஸ்தவம்.
இங்கு ஒழிக்கலாமோ என்னில் நித்யம். அநிவாரியம் .
5. அறியாத பிள்ளைகளும் அன்பினால் உன்தன்னைச் சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே – பூர்வாபதாரங்களுக்கு க்ஷமணம் வேண்டி
6. இறைவா நீ தாராய் பறை – நீ கொடுத்தன்றி எங்களுக்கு நிறக்க வழியில்லை என்கிறாள்.
அஹம் , மத் ரக்ஷண பரம், மத் ரக்ஷண பலம் ஈஸ்வராதீனம் – ஸ்வாமி தேசிகன்.
பிராப்தாவும், பிராப்யமும், பிராப்திக்கு உகப்பானும் அவரே இனி ஆவாரே – ஸ்வாமி பிள்ளை லோகாச்சார்யார்.
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம் என்றது தாழ்குலம், கர்ம ஜ்ஞான பக்கத்தி நெறிக்கு விலக்கான குலம் என்பதல்ல.
இயலாத குலம் என்று பொருள். பிராம்மணர்களாக பிறந்தவர்கள் இயன்றவர்களோ என்னில் ?
அவர்களும் விட்டே பற்றுகைக்கு அசக்தி காரணம் அன்று. ஸ்வரூப பிரயுக்தமே பிரதான ஹேது.
அறிவொன்றுமில்லாத என்பது ஜ்ஞான அனுதயமன்று . சாட்சாத் தர்மமான கோவிந்தா நீயே உபாயாம் என்கிற
வேதாந்த விழுப்பொருள் அறிவு ஆண்டாளுக்கு உண்டான படியாலே .
ந வேதாந்தாது சாஸ்திரம்
ந மதுமதனாது தத்வம் அகிலம்
ந ஸத்வாது ஆரோக்கியம்
ந துவயவசனத : க்ஷேமகரம் — ஸ்வாமி தேசிகன்.
பரித்யஜ்ய என்று விடுகை சொன்னவிடத்து ஆண்டாள் அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம் என்று
கர்ம ஜ்ஞான பக்தி யோகங்களை செய்ய பிரசக்தியே இல்லை. விடுகை என் வந்தது என்று சொல்லி விட்டாள்.அடுத்து
மாம் ஏகம் சரணம் விரஜ – ஸ்ரீமந் நாராயண சரணநௌ சரணம் பிரபத்யே என்று பற்றுகையைச் சொன்ன விடத்து –
உன் தன்னைப் பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாமுடையோம் – என்றது ஸ்வீகாரம் தானும் பரகதமான படிக்கு.
மாம் சரணம் விரஜ அல்ல. மாம் ஏகம் சரணம் விரஜ என்ற விதி வழி கண்ணன் தானே நடத்தி கொடுத்த படியுமன்றோ விது.
மஹா விசுவாசம் அரிது -கலம் எள்ளு கொடுக்காவிடில் கலம் எண்ணெய் கொடுக்கச் சொல்லுவது போல்
பக்தி யோகத்தில் அசக்தனுக்கு பிரபத்தி என்பது
உறவு குண மிகத் துணிவு பெற வுணர்ந்து-மஹா விசுவாசம்-
உகக்கும் அவை யுகந்து உகவா வனைந்தும் ஒழிந்து உறவு குண
மிகத் துணிவு பெற வுணர்ந்து வியன் காவல் என வரித்துச்
சகத்தில் ஒரு புகலில்லாத் தவம் அறியேன் மதிட்கச்சி
நகர்க்கருணை நாதனை நல்லடைக்கலமாய் யடைந்தேனே ––அடைக்கல பத்து -5-
—————
கறவைகள் -இத்யாதி –
ஜ்ஞான ஹீநரான சம்சாரிகளை அனுவர்த்தித்து
சம்சாரத்தைப் பிராப்யமாகப் பற்றி –
தேக போஷண ஏக பரராய்
இருந்தோம்
இது இறே உன்னை நாங்கள் பற்றுகைக்கு அனுஷ்டித்த கர்ம யோகம் –
அறிவொன்றும் இல்லாத –
ஞானமும்
ஞான விசேஷமான -பக்தி யோகமும் -இல்லாத –
ஆய்க்குலம் –
உபயாந்தரங்கள் இல்லாமையாலே
தோஷமாகாத குலத்திலே பிறந்தவர்கள் நாங்கள் –
இத்தால் –
ஜன்ம வ்ருத்த ஞானங்களால் உண்டான நிகர்ஷம் சொல்லுகிறது –
ஆகில் –
புருஷார்த்தத்தை இழக்கும் இத்தனை யன்றோ -என்ன –
புண்ணியம் இல்லாதார் அன்றோ இழப்பது -என்ன
உங்கள் புண்ணியம் ஏது -என்ன –
உன் தன்னை -இத்யாதி –
எங்கள் குலத்தில் அவதரித்த உன்னையே புண்ணியமாக
அநந்ய சாதனரான யாம் உடையோம் –
குறை ஒன்றும் இல்லாத –
எங்கள் அபூர்த்தி ஆராயும்படியாயோ உன்னுடைய பூர்த்தி இருப்பது –
சர்வ நிரபேஷன் அன்றோ நீ என்று கருத்து –
கறைவைகள் இத்யாதி –
இவ்வளவும் தங்கள் உடைய
ஆகிஞ்சன்யத்தையும்
அநந்ய கதித்வத்தையும்
உபாயத்தின் உடைய நைரபேஷ்யத்தையும்
சொன்னார்கள் ஆய்த்து –
குறைவாளர்க்கு நிறைவாளர் குறை தீர்க்க வேணும்
என்கிற நிர்பந்தம் என் என்ன –
அதுவோ –
கோவிந்தா -உன் தன்னோடு உறவு –
எங்கள் குலத்தில் பிறந்த அசரண்ய சரண்யனான -உன் தன்னோடு –
அநந்ய சரண்யரான எங்களுக்கு –
உண்டான ஸ்வ ஸ்வாமி பாவ சம்பந்த நிர்பந்தம் -என்ன
அதுவோ ஒரு குட நீரோடு போகிறது என்ன –
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது –
உன்னோடு நமக்கு உண்டான உறவை ஆராய்ந்து பார்த்தால்
சோபாதிகம் அன்றிக்கே
நம் இருவர் உடையவும் ஸ்வரூபமாய் இருக்கையாலே
அது தானும் நித்யம் ஆகையாலே
சர்வ சக்தியான உன்னாலும் போக்க ஒண்ணாது –
பிராக்ருதரான நம்மாலும் போக்க ஒண்ணாது –
க்ருத சங்கே திகளான இருவராலும் போக்க ஒண்ணாது –
இருள் தரும் மா ஞாலமான இத் தேசத்தாலும் போக்க ஒண்ணாது –
சம்பந்த ஞான ரூபம் ஆகையாலே இதுக்கு விஸ்மிருதி இங்கே வரக் கூடாதோ என்ன
பிறந்த பின் மறந்திலேன் -என்கையாலே வரக் கூடாது
ஆனாலும்
எதோ உபாசனம் அன்றோ பலம்
நீங்கள் நம்மை சிறு பேரிட்டு அழைத்தி கோள்
உங்கள் சிறுமை தீரும்படி -எங்கனே -என்ன
அறியாத -இத்யாதி
அறியாமையாலும்
பால்யத்தாலும்
பிரேமத்தாலும்
உன்னை சிறு பேராலே அழைத்தோமே யாகிலும்
சர்வஞ்ஞனாய்
சர்வ ஸ்மாத் பரனாய்
பிரேம பரவசனான
நீ
சீறி அருளாது ஒழிய வேணும் –
இறைவா சீறி அருளாதே –
சீறினால் வரும் அநர்த்தம் உன்னது அன்றோ –
ஆகையால்
நீ -தாராய் –
அத் தலையில் குறை யன்றியிலே ஒழிய அமையும் இறே –
பேற்றுக்கு அத்வேஷம் இறே இத்தலைக்கு வேண்டுவது
பேற்றின் கனத்துக்கு கீழே விளைந்தது எல்லாம்
அத்வேஷ மாத்ரமாய் இருக்கும் இறே –
இறைவா-
வானோர் இறையை நினைத்தன்று –
ஆய்க் குலமாக வந்து தோன்றின நம் இறை –
——————-
ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —
————————————————————————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply